“மனித உருவைத் தான் முழு முதல் கடவுள்…” என்று ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்கள்… ஏன்…?

“மனித உருவைத் தான் முழு முதல் கடவுள்…” என்று ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்கள்… ஏன்…?

 

“ஆதி மூலம் என்ற உயிரால்” மனிதன் எப்படி உருவானானோ அவன் தான் முழு முதற் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பல கோடி உடல்களைக் கடந்து இந்த மனிதனாக ஆனபின் தான் அந்த நிலை வருகிறது. எப்படி…?

1.சூரியனிலிருந்து வரக்கூடியது (சந்தர்ப்பங்கள்) அது ஒன்றுடன் ஒன்று இணைந்து புதிது புதிதாக மாறுகின்றது
2.அதே சமயத்தில் மனிதனோ புதிது புதிதாக எத்தனையோ வகையான நிலைகளை மாற்றி உருவாக்கிக் கொண்டே உள்ளான்.
3.பயிரினங்களை மாற்றுகின்றான்… தாவர இனங்களை மாற்றுகின்றான்…
4.ஏன்…? எத்தனையோ விதமான உயிரினங்களின் உணர்வுகளையும் மாற்றுகின்றான்…. எல்லா செயலும் செயல்படுத்துகின்றான்.

அப்பொழுது கடவுள் யார்…?

கண்கண்ட தெய்வமும்… கடவுள் என்ற முழுமையான சக்தி பெற்ற மனித நிலைகளில்…
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உருவாக்கினால்
2.தீமையை நீக்கும் கடவுளாக நீங்கள் உருவாகின்றீர்கள்.

யாம் (ஞானகுரு) சொன்ன தியானத்தின் முறைப்படி அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் உங்களுடைய சொல் பிறருடைய தீமையை நீக்கும் தன்மையாக வரும். உங்களுக்குள் தீமை வராது தடுக்கும் சக்தி பெறுகின்றீர்கள்

அதனால் தான் மிருக நிலையிலிருந்து என்று மனிதனாக ஆனானோ அது “முழு முதல் கடவுள்” என்று விநாயகர் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

சிவனின் பிள்ளை என்றும் சொல்வார்கள். நாம் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனிதனாக உடலை உருவாக்கியது. உடலுக்குள் தீமையை நீக்கும் உணர்வுகள் ஆனபின் “தீமையை நீக்கி நன்மையை உருவாக்கும்… அந்தக் கடவுளாக உருவாகின்றது…!”

மனிதன் எப்போது ஆனானோ “அவன் தான் கடவுள்…!”

நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… என்று சொன்னால் வேதனைப்படுத்தும் நிலைகளை ஒருவன் செயல்படுத்தினால்… அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் “அது கடவுளாக வந்து” அந்த வேதனையை நமக்குள் உருவாக்குகின்றது.

ஆனால்… வேதனை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்றால்… வேதனை நீக்கும் கடவுளாக உங்கள் உடலுக்குள் நின்று தீமைகளை நீக்கும்.
1.உலகில் இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை உருவாக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
3.உங்களுக்குள் இந்த ஞானத்தைப் பெற முடியும்.

இன்று ஒன்றும் அறியாது இருக்கலாம்… ஆனால் யாம் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு உண்டு.

அவ்வப்போது இதை நீங்கள் சிந்தனைக்குரியதாக்கி… தீமைகளை நீக்கி உண்மையின் உணர்வை அறியும் ஆற்றல் பெற்று… உங்களையும் காத்து உங்கள் குடும்பத்தையும் காத்து… உலகைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

1.உலகில் உள்ள தீமையின் உணர்வுகள் பூமியில் படராது
2.அது சூரியனால் கவரப்பட்டு அழித்திடும் அதை மாற்றிடும் சக்தியாக
3.உங்களால் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் ஒவ்வொருவரும் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து… சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற்று… சாந்தமும் விவேகத்துடன் வாழ்ந்திட…. “குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்…”

நாற்றமாகும் நம் உடலைத்தான்… ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

நாற்றமாகும் நம் உடலைத்தான்… ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

 

நாம் இப்பொழுது “இது என் உடல்… நமது உடல்…” என்று நினைக்கின்றோம்.
1.நம் உடலுக்குள் எத்தனையோ விதமான உணர்வின் அணுக்கள் உண்டு….
2.அதனின் மலமே நம் உடல்…! அதாவது “அணுக்களின் மலம் தான்” இந்த உடல். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த உயிரான ஈசன் உடலை விட்டுப் போய்விட்டால் இந்த உடலான சிவம் சவமாகி விடுன்றது.

நாம் எண்ணும் உணர்வுகள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டேயுள்ளது. ஆனால் உயிரின் இயக்கத்தால் தான் நாம் இயங்குகின்றோம்.

உயிரின் இயக்கம் இல்லை என்றால் நம் உடலிலுள்ள அணுக்களிலும் இயக்கம் இல்லை.

எத்தகைய உணர்வை நாம் சுவாசித்து இந்த உடலில் வளர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்களின் மலமே நம் உடலாகின்றது.

அந்த அணுக்களின் மலமாக நம் உடலானாலும் இந்த உடலை விட்டு உயிர் சென்று விட்டால் நம் உடலையே தின்னும் அணுக்களாக மாறி விடுகின்றது.

அதாவது…
1.நம் உடலை உருவாக்கிய அதே அணுக்கள் உயிர் வெளியில் சென்றபின்
2.நம் உடலை உணவாக உட்கொள்ளும் அணுவாக மாறிவிடுகின்றது.

இப்படி ஆன அந்த அணுக்களின் மலம் வெளிப்படும் பொழுது நாற்றமாகின்றது.

முதலில் நுகர்ந்த உணர்வின் மணம் அந்த உணர்ச்சிக்கொப்ப நம் உடலாக நல்ல உடலாகின்றது. ஆனால், உயிர் வெளியே சென்று விட்டால் அதே அணு ஜீவ அணுவாக இருப்பது உயிரணுவாக மாறுகின்றது.

உயிரின் துடிப்பால் இயக்கும் அணு “ஜீவ அணு”. அது நுகர்ந்த உணர்வின் மலம் நம் உடலாகும் பொழுது சிவமாகின்றது.

ஆனாலும் இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின் இந்த ஜீவ அணு உயிரணுவாக மாறுகின்றது. உயிரணுவாக மாறிய பின் எந்த ஜீவ அணு நம் உடலை உருவாக்கியதோ அந்த உடலையே உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.

அது உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் உயிரணுவான பிற்பாடு அதன் மலத்தை வெளியிடும் பொழுது நாற்றம் சகிக்க முடியாது. இறந்த பின் உடலிலிருந்து நாற்றம் வருவதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த உடலாக நாம் எந்தெந்த குணத்தை நாம் எடுத்தோமோ அதற்குத்தக்க நம் உடலில் “நல்ல மணங்களாக” இருக்கின்றது. ஆனால்…
1.அதே உடலை இந்த உயிரணு நுகர்ந்து அது உணவாக உட்கொண்டால் நாற்றமாகின்றது
2.நம்மால் பக்கத்தில் இருக்க முடியவில்லை.

எத்தனை வகைச் செடிகளை இது கவர்ந்து அந்த அணுக்கள் அதன் உணர்வின் தன்மையை நம் உயிரணு கவர்ந்து ஜீவ அணுக்களாக மாறியதோ இது உயிர் சென்ற பின் இந்த உடலை இந்த ஜீவ அணுக்கள் உயிரணுக்களாக மாறி அதன் உடலாகிப் புழுக்களாகி விடுகின்றது.

மனிதனுக்குள் எத்தனை விதமன வேதனைகளைப் பட்டோமோ எத்தனை வேதனைப்படுத்தினோமோ எத்தனை துயர்படுத்தினோமோ இந்த உணர்வின் அணுக்கள் புழுவாகி மலமாகும் பொழுது அந்த நாற்றமாக வெளிப்படுகின்றது.

1.இப்படி நாற்றமாகும் உடலைத்தான்…
1.நம் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
3.யாரும் இல்லை என்று மறுக்க முடியுமா?

என் அம்மா என்போம்… அப்பா என்போம்… கணவன் என்போம்… மனைவி என்போம்… அண்ணன் தம்பி தங்கை… இன்னும் என்னென்னவோ சொல்வோம்.

உயிர் வெளியேறி விட்டால்
1.எவ்வளவு நேரம் அந்த உடலை வைத்திருக்கின்றோம்…?
2.”உடலை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…?” என்று தான் உடனே கேட்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் காட்டியது உயிரே கடவுள்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
1.ஆனால் உயிரைப் பற்றி நாம் சிறிதளவாவது… சிறிது நேரமாவது சிந்திக்கின்றோமா…?
2.“அவனுடன் அவனாக” (உயிருடன்) – “அவனாக ஆகும் நிலையை” நாம் எய்த வேண்டும்
3.இதைத்தான் கோவில்களில் மனித உடலைப் பெற்ற நீ… “தெய்வமாக ஆகு…!” என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆனால் நாம் இன்றும் கடவுளைத் தேடிக் கொண்டே தான் இருக்கின்றோம்…!

பிரபஞ்சத்தில் உருவாக்கிய உயிரணுக்கள் அனைத்தும் “நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையட்டும்…”

பிரபஞ்சத்தில் உருவாக்கிய உயிரணுக்கள் அனைத்தும் “நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையட்டும்…”

 

இன்றைய சூழ்நிலையில் இந்தப் பிரபஞ்சமும் சரி… நமது சூரியனும் சரி… நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி…
1.ஏன் நம் உடல்களிலும் அது பரவி… பூமிக்குள்ளும் இது பரவி…
2.பெரும் கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் உருகும் தன்மை கொண்டு சிதறும் தன்மை கொண்டே வருகின்றது. எந்தெந்தப் பூமிகளில் இந்தக் கதிரியக்கங்கள் அதிகமாகின்றதோ… அதனால் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களுக்குள் வெப்பம் அதிகமாகி உருகி விட்டால் அவைகள் சிதறிவிடும்.

அது சிதறி விட்டால் நம் பூமிக்குக் கிடைக்கும் நல்ல சக்திகளும் சிதறிவிடும்.

ஒரு சமயம் அகஸ்தியன்…
1.இந்தப் பூமி நீண்ட நிலையில் நீள வடிவில் வளரும் பொழுது
2.அதை இலேசாகத் திசை திருப்பி ஒரு பக்கம் எடை கூடிக் கவிழாது மாற்றி அமைத்தான்…
3.பூமியைச் சமப்படுத்தினான் ஒரு அகஸ்தியன்.
4.ஆனால் இன்று நாம் பல அகஸ்தியர்களை உருவாக்க வேண்டும்.

கடும் விஷத்தன்மை கொண்ட கதிரியக்கப் பொறிகள் நம் பூமியிலே பரவிக் கொண்டிருப்பதை அகற்றும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும். அத்தகைய ஞானிகளை நாம் உருவாக்குதல் வேண்டும். உருவாக்கினால் இயற்கையிலே அது விளையத் தொடங்கிவிடுகிறது.

நாட்டைக் காத்திடும் நிலையாக… மக்களைக் காத்திடும் நிலையாக… உலகைக் காத்திடும் நிலையாக… பிறவி இல்லா நிலை அடையும் அந்தச் சக்தி பெற
1.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தப் பிரபஞ்சம் நீண்ட நாள் இயக்க வேண்டும்
2.நம் பிரபஞ்சத்தில் உருவாக்கிய உயிரணுக்கள் அனைத்தும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

ஏனென்றால் ஒரு பிரபஞ்சம் ஒளியின் உணர்வானது. அதில் தோன்றிய உயிர் எல்லாவற்றையும் அறியும் தன்மையானது. உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது தான் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவது இல்லை. உடலின் உணர்வுகள் கருகிவிட்டால் கருகிய உணர்வு கொண்ட அடுத்த உடலைப் பெறுகின்றோம். காரணம் உயிர் வேகாநிலை… உடல் சாகாக்கலை…! இன்று நாம் எந்த வேதனையை எடுக்கின்றோமோ சாகக்கலையாக அடுத்த உடலாக மாற்றிவிடும்.

ஆகவே நாம் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். வேகா நிலை அடைதல் வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்திலும்… சரி அகண்ட அண்டத்திலும் சரி…
1.இந்த உயிர் எதிலுமே அழிந்திடாது அருள் உணர்வு கொண்டு விஷத்தை ஒளியாக மாற்றி
2.என்றும் ஏகாந்த நிலையாக வாழும் சக்தியை இந்த மனித உடலிலிருந்து தான் பெற வேண்டும்.

ஆகவே… மறவாதீர்கள் உங்கள் உயிரை…!

1.மனிதனாக்கியது உயிர்
2.மனித உடலை உருவாக்கியது உயிர்
3.அனைத்தையும் தெரிந்து கொண்ட உணர்வைப் பெற்றதும் உயிர்,
4.ஆகவே அவன் நமக்குள் இருக்க அவன் துணை கொண்டே நாம் ஞானிகளுடைய அருள் உணர்வைப் பெறுவோம்
5.நம் உடலில் சேரும் அழுக்குகளை மாற்றிப் பேரருளைப் பெறுவோம்.

உங்களுடைய நினைவாற்றல் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தினால் உங்களுக்கும் நல்லது… ஊருக்கும் நல்லது… உலகுக்கும் நல்லது…!

அகஸ்தியன் தாய் கருவிலேயே எப்படி உயர்ந்த சக்திகளைப் பெற்றானோ அதைப் போன்ற ஞானிகளை உருவாக்கினால் இந்த உலகில் வரும் கடுமையான தீமையிலிருந்து விடுபடவும்… நம்மைக் காக்கவும்… நாம் பிறவி இல்லாத நிலை அடையவும் முடியும்.

ஆகவே பல அகஸ்தியர்களை நாம் உருவாக்குவோம்…!

மதங்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் எங்கே போனார்கள்…? என்று தெரியவில்லை…!

மதங்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் எங்கே போனார்கள்…? என்று தெரியவில்லை…!

 

இந்தக் காற்று மண்டலம் மிகுந்த நச்சுத்தன்மையாகப் பெருகிக் கொண்டிருக்கின்றது என்று ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கின்றேன்.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்களும் அதிலிருந்து வெளிப்படக்கூடிய விஷத்தன்மைகளும் நமது பூமியில் கடுமையாகப் பரவிக் கொண்டுள்ளது.

1.இந்த விஷத்தன்மைகள் மனிதனுக்குள் நுகரப்பட்டு நுகரப்பட்டுத் தாவர இனங்களையும் சாடி
2.நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள்ளும் இந்த விஷத் தன்மைகள் பரவிவிட்டது.
3.மனிதனுடைய சிந்தனையையே அது இழக்கச் செய்து மனிதனுக்கு மனிதன் கொடூரமாகத் தாக்கிடும் நிலை வந்துவிட்டது.

அதே சமயத்தில் நாம் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் அதற்குப் பாதுகாப்பு இருக்கிறதா…! என்றால் அதுவும் கேள்விக் குறி தான்.

செல்வத்தை எடுத்துக் கொண்டு சென்றாலும் பரவாயில்லை… வீட்டில் உள்ளோரையும் கொன்று விட்டு அதன் பின் செல்வத்தை அபகரித்து செல்லும் சூழ்நிலை இருக்கின்றது.

அது மட்டுமல்ல…! மனிதனை மனிதனே கொன்று சாப்பிடும் நிலைகளும் வந்துவிட்டது. தாய்லாந்து ஆப்பிரிக்கா சீனா ரஷ்யா அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இது வந்து விட்டது. “மனித மாமிசத்தை வைத்து விற்பனை செய்யும் ஓட்டல்களும்… கடைகளும் வந்துவிட்டது…”

காரணம்… விஞ்ஞான அறிவுகள் முதிர முதிர “மனிதனுடைய சமுதாயம்… மக்கள் தொகை கூடுகின்றது…” என்று கணக்கிட்டு இந்த வகையிலாவது குறையட்டும் என்று கருச் சிதைவுகள் ஏற்படுத்தப்பட்டு கருச்சிதைவான அந்தச் சிசுக்களை எடுத்து “மாமிசமாக வியாபாரம் செய்து கொண்டுள்ளார்கள்…!”
1.இன்று சிசுக்களைச் சாப்பிடுகின்றனர்…
2.நாளைக்கு மனிதனையே முழுமையாக உட்கொள்வார்கள்.

உலகம் முழுமைக்கும் இது பரவி விட்டது. இத்தகைய உலகில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

1.மதங்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் எங்கே போனார்கள்…? என்று தெரியவில்லை…!
2.மதங்களால் உருவாக்கப்பட்ட சத்தியம் தர்மம் நியாயம் நிதானம் எல்லாம் எங்கே போனது…? என்றும் தெரியவில்லை

படிப்பறிவு அதிகமாக இருந்தாலும் அதைச் சீர்படுத்த ஞானம் தேவை. பொதுவாக… எல்லாவற்றுக்குமே ஞானம் தேவை தான். கொலைகாரனாக இருந்தாலும் திருடனாக இருந்தாலும் அந்த ஞானத்துடன் தான் அந்த வேலையைச் செய்கின்றார்கள்.

1.ஆனால் அருள் ஞானம்…! தீமைகளை அகற்றி நன்மைகள் செய்யும் இந்த ஞானங்கள் தான் மனிதனுக்குத் தேவை.
2.அத்தகைய நிலை இல்லை என்றால் இனி வரக்கூடிய எதிர்காலம்……….!

60 வயதிற்கு மேலே உள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இருபது வயது ஆனவர்களோ அல்லது பிறக்கும் குழந்தைகளுடைய எதிர்காலமோ… “இனி எவ்வாறு இருக்கும்…?” என்று சொல்லவே முடியாது. அந்த அளவில் தான் இன்றைய உலகம் இருக்கின்றது.

மதங்களாலும் இனங்களாலும் உருவாக்கப்பட்ட கடவுள்கள் யாரையும் காப்பாற்றப் போவதில்லை. நம்மை உருவாக்கிய கடவுள்… உயிர் தான் கடவுளாக நம்மைக் காப்பாற்றக் கூடியது.

இன்று மனிதனாக இருப்பவர்கள் நாளை மனிதனாகப் பிறப்பது கஷ்டம். இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத விஷத்தன்மை கொண்ட உயிரினங்களாக உயிர் நம்மை உருவாக்கிவிடும்.

1.உயிரணு தோன்றி புவியின் ஈர்ப்புக்குள் வந்து மனிதனாக வளர்ந்து
2.இருளை நீக்கி ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துப் பழகி
3.உடலுக்குள் சேர்த்து நம் உணர்வுகள அனைத்தையும் ஒளியாக மாற்றப் பழகுதல் வேண்டும்.
4.ஆகவே இன்று நமக்கு நல்ல நினைவு இருக்கும் பொழுது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைச் செயல்படுத்துங்கள்.

“நம் உயிர் ஒரு நெருப்பு…” என்பதை உணர்ந்திருக்கின்றோமா…?

“நம் உயிர் ஒரு நெருப்பு…” என்பதை உணர்ந்திருக்கின்றோமா…?

 

ஒரு நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.
1.நாம் உடுத்திய உடையை அந்த நெருப்பிலே போட்டால்
2.“மனித உணர்வுடன் கலந்து…” இந்தக் கருகிய மணம் வரும்.

ஒரு மனிதன் சட்டையைப் போட்டிருக்கும் போது அவன் நல்ல மனிதனாக இருந்தால் அதைக் கழட்டி நெருப்பில் போட்டுப் பாருங்கள்.
1.கெட்ட நெடி… அந்தக் கருகிய வாசனை வராது
2.நல்ல வாசனைகள் தான் வரும்.

சந்தேகம் இருந்தால் ஒன்றை நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.

ஒரு மணி நேரம் நீங்கள் கோபமாக இருந்து பாருங்கள். அதற்குப் பின் நீங்கள் அணிந்திருக்கும் சட்டையை நீங்களே முகர்ந்து பாருங்கள் அதில் நெடி நிச்சயம் வரும்.
1.ஏனென்றால் நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதுவே உள் நின்று… அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

உதாரணமாக… மிளகாயை நெருப்பிலே போட்டால் என்ன செய்கின்றது…?

இத்தனை பேர் இங்கே கூடி இருக்கின்றோம் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம் அனைவரையுமே இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தை செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!

யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிரின் இயக்கத்தைப் (வெப்பத்தை) பயன்படுத்த நமக்கு ஒரு பயிற்சி தேவை

உயிரின் இயக்கத்தைப் (வெப்பத்தை) பயன்படுத்த நமக்கு ஒரு பயிற்சி தேவை

 

1.உயிரிலே எது பட்டாலும் அதைத்தான் அது இயக்குகின்றது,,, அதைத் தான் இயக்கும்…!
2.அது தன்னிச்சையாக எதுவும் செயல்படுத்தாது

ஒரு நெருப்பை வைத்தோம் என்றால் அது தன்னிச்சையாக சமைக்குமா என்றால் இல்லை. நெருப்பை வைத்து… அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து… அதில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அதைத்தான் அது சமைக்கின்றது.

இதைப் போன்று தான்
1.“வெப்பத்தின் உணர்வு கொண்ட நமது உயிர்…”
2.அதில் இருக்கக்கூடிய காந்தம் எதைக் கவர்கின்றதோ சுவாசிக்கின்றதோ
3.அந்த உணர்ச்சியின் செயலே செயல்படுத்துகின்றது
4.அந்த உணர்வுக்கொப்பதான் வாழ்க்கை அமைகின்றது
5.இந்த உணர்ச்சிக்கொப்பதான் நாதங்களை எழுப்புகிறது.
6.உணர்ச்சிக்கொப்பத்தான் எண்ணம் சொல் செயல் என்று இயக்குகின்றது.

உயிரே கடவுள் என்றாலும் மிருக நிலையிலிருந்து ஆறாவது அறிவு கொண்டு மனிதனாக எப்பொழுது முழுமை பெற்றானோ… முழு முதல் கடவுள். தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெற்றவன் என்று விநாயகனைப் போட்டு மனிதனுக்குள் இருக்கும் சக்திகளைக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நீக்கி… தீமைகளை நீக்கிடும் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது உயிர் தான்.

ஆகவே அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்…! அருள் மகரிஷிகளின் உணர்வுகளை யாம் (ஞானகுரு) ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது மீண்டும் அதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறலாம்… தீமைகளை அகற்றலாம்.

இதற்கு பயிற்சி அவசியம் தேவை.

ஒரு தையல் மிஷினில் அமர்ந்த உடனே துணியைத் தைத்து விட முடியுமா…? சமையல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சமைக்கத் தெரியாதபடி உணவைச் சுவையாகக் கொண்டு வர முடியுமா…?

எல்லாக் காய்களையும் போட்டாலும் அது பக்குவப்படுத்தி வைத்தால் தான் அந்தக் குழம்பு ருசியாக இருக்கும்.

வெறும் சோறை ஆக்க வேண்டும் என்றாலும் கூட நெருப்பைத் திகு திகு… என்று எரித்துவிட்டு அதிலே அரிசியைப் போட்டால்
1.அதில் வைக்கக்கூடிய நெருப்பின் அளவுகோல்படி ஒரு பக்கம் அரிசி வேகும்.
2.அடியில் இருப்பது கருகிவிடும். மேலே இருப்பது வேகாது இருக்கும்.
3.கருகிய அரிசி மேலே சென்ற பின் அந்தச் சமையலே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

இந்த நெருப்பின் அளவுகோல் மாறினால் அரிசியின் வேக்காடும் மாறிவிடும்.

“ஆகவே எதிலுமே பக்குவம் தேவை…”

யாம் சொல்லும் இந்த தியானத்தின் மூலம் பக்குவப்படுத்தக்கூடிய முறைகளைப் பழகிக் கொண்டால் தீமைகளை மாற்றி அமைக்கும் பழக்கம் வந்துவிடும்.

தையல் வேலை தெரிந்தவர்கள் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே துணிகளைக் கத்திரித்து அதைச் சீராகத் தைப்பது போன்று
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பயன்படுத்தப் பழகிக் கொண்டால்
2.தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல் இயற்கையாக நமக்குள் வந்துவிடுகிறது

எலக்ட்ரிக்… எலக்ட்ரான்…! எதனின் அழுத்தம் அதிகமாகிறதோ அதன் நிலைக்கே வருகிறது. சங்கடம் சங்கடம் என்ற இந்த அழுத்தம் அதிகமாகி விட்டால் நமக்கு முன்னாடி அதுவே எலக்ட்ரானிக்காக இருக்கின்றது.

தீமை என்ற உணர்வு எலக்ட்ரானிக்காக மாறிவிட்டால் அது நன்மைகளை நமக்குள் விடுவதில்லை. ஆனால் தீமைகளை நீக்கிய அருள் உணர்வுகளை நமக்கு முன்னாடி வைத்து… தீமை என்ற உணர்வு உள்ளே புகாதபடி நன்மையின் உணர்வுகளாக… அந்த எலக்ட்ரானிக்காக மாற்ற வேண்டும்.

உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகரும் உணர்வுகள் சந்தர்ப்பத்தில் நமக்குள் பதிவான நிலை கொண்டு எலக்ட்ரானிக்…
1.வேதனை வெறுப்பு குரோதம் கோபம் என்ற உணர்வின் அழுத்தம் அதிகமானால்
2.மனிதன் எவ்வளவு தான் நல்லது செய்ய வேண்டும் என்று நல்ல உணர்ச்சிகள் ஆனாலும் அதைச் செயல்படுத்த முடியாது போய்விடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை மாற்ற ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… மகிழ்ந்து வாழ்வோம்… பிறவி இல்லா நிலை அடைவோம்.

இது தான் மனிதனின் கடைசி நிலை.

அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா இல்லை அடைந்தானோ… உயிருடன் ஒன்றி ஒளியாக மாறினானோ… அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
1.இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.

உயிரைக் கட்டிப்பிடித்தால் என்ன செய்யும்…?

உயிரைக் கட்டிப்பிடித்தால் என்ன செய்யும்…?

 

இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கின்றேன் (ஞானகுரு). அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் ஒரு கருத்தன்மையாக உருவாக்கச் செய்கின்றேன்.

1.ஒரு கம்ப்யூட்டரில் சேமித்து வைத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்து விட்டேன்
2.எப்போழுது தீமை வருகிறதோ அந்த நேரத்தில் யாம் சொன்ன உபதேசங்களை நினைவுபடுத்தினால்
3.தவறை நீக்கக்கூடிய உபாயம் வரும்.

சந்தர்ப்பத்தில் வேதனையான நிலைகள் வந்தாலும் உடனடியாக ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திந் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வரும்.
1.அந்த இடத்தில் எப்படிச் செயல்பட வேண்டும்…?
2.நாம் எப்படி வாழ வேண்டும்…?
3.இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற நல்ல சிந்தனைகள் வரும்.

ஆனால் இன்று பெரும்பகுதி… ஒருவன் தவறு செய்கிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவு செய்து விட்டால் அவனை எப்படி மடக்க வேண்டும்…? என்று உணர்வு தான் வரும்.

அந்த உணர்வைச் சேர்த்த பின் அவனை இங்கே தட்டலாமா…? அங்கே தட்டலாமா…? என்று கால்குலேசன் பண்ணுவோம்.

பணம் இருப்பதால் தானே எவ்வாறு செய்கின்றான். பணம் வராமல் தடுத்தால் நம்மை எதிர்க்க மாட்டான் அல்லவா… கஷ்டப்படுவான் அல்லவா…! என்று இந்தச் சிந்தனைகள் ஓடுகின்றது.

ஆக… கம்ப்யூட்டரில் ஆணைகள் இடப்பட்ட பின் அது தன்னிச்சையாக இயக்குவது போல் நமது உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. நம் நுகர்வதை எலக்ட்ரானிக்காக மாற்றி
1.ஊழ்வினை என்ற வித்தாக்குகிறது
2.எல்லா ரெக்கார்டையும் சேர்த்து வைக்கிறது.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் படிப்படியாக வளர்ந்து சர்வத்தையும் உருவாக்கும் மனித உடலுக்குள் ஊனாக மாறிவிடுகிறது.

எந்த அணுவின் தன்மை வந்தாலும் அதன் கருத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்… எலும்புக்குள் இருக்கும் ஊன் என்ற வித்து…!

ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வளர்த்து அடுத்துப் பிறவியில்லா நிலையை அடையுங்கள்.
1.நாம் தேடிய சொத்து எதுவும் நம்முடன் வரப்போவதில்லை.
2.உடலையே காக்க முடியாது போகிறது… பின் தேடி வைத்த சொத்தைக் காக்க முடியுமா…?
3.செல்வம் கூடக் கூட வேதனைகள் கூடிக் கொண்டே வரும்
4.வேதனை கூடக் கூட எந்த செல்வத்தைப் பெற முடியும்…? வேதனை என்ற அழுக்குச் செல்வத்தை தான் தேட முடியும்.

ஒரு மிருகமாக ஆகிவிட்டால் செல்வத்தைப் பார்க்க முடியுமா…? அதை பார்த்தாலும் மிதித்து விட்டுத் தான் செல்லும். அதே போலத் தான் வேதனை என்ற உணர்வு அதிகரித்து விட்டால் நாம் மிருக உடலிற்குத் தயாராகி விடுகிறோம் என்று அர்த்தம்.

கடுமையான வேதனைக்கு உள்ளாகும் போது அழகான துணிகளையோ நகை நட்டுகளைப் பார்த்தால் நமக்கு வெறுப்பு தான் வரும். நோயுடன் நீங்கள் படுத்திருக்கும் பொழுது அப்படி அலங்காரம் செய்ய வேண்டும் இப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னாலே நமக்கு எரிச்சலாகும்.

அட… கொஞ்ச நேரமாவது நல்ல சட்டையைப் போடுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்…? போட வேண்டும் என்று சொன்னவர் மீது வெறுப்பு தான் வரும்.

மிருகம் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுத் தான் போகும். ஆகவே இந்த உணர்வின் தன்மை மிருக உடலுக்குத் தான் தயாராகின்றது.

அதைத் தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரம் காட்டுகிறது. ஒரு மனிதனுடைய தவறான நிலையைப் பார்க்கும் பொழுது சித்திரம். அவன் வெளிப்படுத்தும் உணர்வினை நமக்குள் சேர்த்த பின் புத்திரன். உடலில் அணுவாக உருவாகிறது.

புத்திரன் ஆன பிற்பாடு…
1.எந்த உடலில் இருந்து வந்ததோ அதே குணத்தை எடுத்து உடலுக்குள் கொடுத்து நாம் வளர்க்கின்றோம்
2.இதையே வழியாக அமைத்துக் கொண்டு அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு வரும்பொழுது
3.எந்தக் குணத்தை எடுத்தோமோ அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.

எமன் எது மேலே வருகின்றான்…? எருமை மீது…! சிந்தனையற்ற நிலைகள் ஆகும் போது எடுத்துக் கொண்ட பாசக் கயிறு அந்த உணர்வுக்குத் தக்கவாறு எமன் நரகலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றான் என்று தெளிவாகவே நமக்குக் காட்டுகின்றார்கள்.

அப்பொழுதாவது இந்த உண்மையை உணர்கின்றோமா என்றால் இல்லை.

“மார்க்கண்டேயன்…” என்றும் பதினாறாக சிவலிங்கத்தை… உயிரைக் கட்டிப்பிடித்துக் கொள்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.
1.உயிரை கட்டிப்பிடித்தால் என்ன செய்யும்…?
2.எமனால் அவனை இழுக்க முடியவில்லை…

அதாவது…
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக ஆக்கப்படும் பொழுது
2.எவரும் இழுக்க முடியாது என்று அதையும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

துருவ நட்சத்திரமும் சரி சப்தரிஷி மண்டலங்களும் சரி அது என்றும் பதினாறாக அழியாத நிலைகள் கொண்டது. அந்த எல்லையை நாம் அடைய வேண்டும்.

வாழ்க்கையில் எத்தனை சந்தோஷங்களை நாம் அனுபவிக்கின்றோமோ என்றும் பேரானந்தப் பெரு வாழ்வு பெற முடியும். இருளை அகற்றி மகிழ்ச்சி என்ற ஒரு கோட்டையாக அது அமைக்கும்.
1.இந்த உடலில் சந்தோஷம் எப்படி இருக்கிறதோ
2.அதே மாதிரி உணர்வு உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையாக மாறும்.

விஷத்தால் நெருப்பு உருவானாலும்… நெருப்பு அந்த விஷத்தையே ஒளியாக்குகிறது

விஷத்தால் நெருப்பு உருவானாலும்… நெருப்பு அந்த விஷத்தையே ஒளியாக்குகிறது

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கினால் “உங்களை நீங்கள் அறிய முடியும்…”

உயிர் ஒளியாக இருக்கின்றது… நெருப்பிலே மனிதன் குதித்தால் உயிர் அழிவதில்லை… உடல் கருகுகின்றது. ஆனால்
1.அகண்ட அண்டத்தில் விஷத்தின் தன்மை தாக்கி மற்றதைக் கருக்கும் நிலை இல்லை.
2.விஷம் தாக்கித் தான் நெருப்பாக மாறியது
3.நெருப்பாக ஆனபின் விஷத்தைப் பிரிக்கின்றது… இது இயற்கை…!

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் விஞ்ஞான அறிவிலே படித்துக் கொண்டவர்கள். டெக்னிக்கல் (நுட்பம்) என்ற அறிவை வளர்த்துக் கொண்டவர்கள். குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானிகள் சொன்ன உண்மைகளை யாம் நினைவுபடுத்தும் பொழுது உங்களிலே இது ஆழமாகப் பதிவாகும்.

1.பதிவானதை மீண்டும் மீண்டும் நினைவாக்கி
2.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் சக்தியாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் வரவேண்டும்.
3.தீமையான உணர்வுகளை நுகர நேர்ந்தாலும் அதனுடைய வளர்ச்சி உங்களை மாற்ற நேர்ந்தால்
4.அதை உங்கள் நிலைக்கு மாற்றி அமைக்கும் அந்தத் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான்
5.நமது குருநாதர் காட்டிய வழியில் ஆயுட்கால மெம்பராக துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றோம்.

குருவுடன் இணைந்து… துருவ நட்சத்திரத்துடன் இணைந்து… ஆயுள் கால மெம்பராக ஆகும் பொழுது 2000 சூரியக் குடும்பங்களில் விளைந்த உணர்வின் ஆற்றல்களை நீங்கள் பெற முடியும்.

1.ஒரு உயிரணு நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல்களை எப்படி மாற்றி அமைக்கின்றதோ அதைப் போல்
2.உடல் பெறும் உணர்வுகளை மாற்றி உயிர் ஒளியாக இருப்பது போன்று
3.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக மாறும் நிலை தான்.

ஆகவே கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியாக மாறுதல் வேண்டும்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி “துருவ நட்சத்திரமாக ஆன அந்த நிலையை… நாம் அனைவரும் பெற முடியும்… பெற வேண்டும்.

உடலுடன் அல்ல… “உயிரோடு ஒன்றி வாழும்” உணர்வினை வளர்த்தால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை

உடலுடன் அல்ல… “உயிரோடு ஒன்றி வாழும்” உணர்வினை வளர்த்தால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை

 

மனித உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கிறது என்றால் மருத்துவ ரீதியிலே இரத்தத்திலே ஆசிட் ஊற்றிய பின் உடலுக்குள் எந்த அளவு நோய் இருக்கிறது என்பதை அது காட்டுகின்றது.

அதைப் போல துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தநாளங்களில் கலக்கச் செய்தால்
1.நம் உடலில் கோபத்தின் உணர்வுகள் அது எந்த அளவு இருக்கின்றது…? அதை எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும் என்று தெளிவாக்குகின்றது.
2.வெறுப்பு என்ற உணர்வு வரும் பொழுது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அந்தக் கலக்க உணர்வை மாற்றிவிட்டு
3.அதை எவ்வாறு சீர்படுத்த வேண்டும் என்று நமக்குத் தெரிய வருகின்றது… தீமையிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்கின்றது.
4.அதை நாம் எப்படிச் செயல்படுத்துவது என்ற உண்மையின் உணர்வை நாம் அறிய முடியும்.

தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கினால் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி அருள் உணர்வுகளைப் பெருக்கிச் சிந்தித்து செயல்படும் ஆற்றலைப் பெற முடியும். இந்த வாழ்க்கையில் ஏகாந்த நிலை பெற முடியும்.

ஆகவே எத்தகைய தீமைகள் நம் மீது வந்து மோதினாலும் அதை அகற்றப் பழகுதல் வேண்டும். அருள் உணர்வுகளைப் பெருக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக நாம் அமைய வேண்டும்

ஏனென்றால் ஆசையின் நிமித்தம் கொண்டு நமக்குள் பெருக்கிய உணர்வுகள் ஏராளம் ஏராளம் உண்டு. அந்த உணர்வை அடக்க ஒவ்வொரு நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்துப் பழக வேண்டும்.

இதைத் தான் இராமாயணத்தில் கோடிக்கரை என்று காட்டுகின்றார்கள்.

அதாவது… பல உடல்களைக் கொன்று தின்று அதன் உணர்வின் தன்மை கொண்டு எத்தனையோ உடல்களை மாற்றிக் கடைசி நிலையான கோடிக்கரை என்ற இந்த மனித சரீரத்தைப் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை அடக்க வேண்டும்.

நம் உடலில் கோடிக்கணக்கான உணர்வுகள் உண்டு. ஒவ்வொன்றும் அது அது தன் உணவுக்காக உந்தும்.

அப்படி உந்தும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அவைகளைச் சமப்படுத்தி ஒளியாக மாற்றி அது அனைத்தையும் உயிருடன் ஒன்றாக்கப்படும் பொழுது தனுசுக்கோடி.

இதைத் தெளிவாக்குவதற்காக இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி அதைப் பூஜிக்கத் தொடங்குகின்றான் என்று காட்டுகின்றார்கள்.

இந்த உடலில் நாம் இருக்கப்படும் பொழுது…
1.உணர்வின் தன்மையை நமக்குள் இணைந்து வாழும் தன்மையாக
2.உடலுடன் அல்ல… “உயிரோடு ஒன்றி வாழும் உணர்வின் தன்மையை நாம் சேர்ப்பித்தால்…”
3.அடுத்து நமக்குப் பிறவி இல்லை.

இந்த உடலில் குறுகிய காலம் தான் நாம் வாழ்கின்றோம் என்றாலும் அந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் எதைச் சேர்க்க வேண்டும்…? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.சந்தர்ப்பத்தால் வரும் தீமையான உணர்வுகள் நம்மை அடிமை ஆக்காதபடி
2.அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டி அந்தத் தீமைகளை நாம் அடிமையாக்கி
3.தீமை நம்மைக் கவர்ந்திடாது விண் செல்லும் நிலை தான் தனுசுக்கோடி.

காரணப்பெயர் வைத்து இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள் எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடையும் வழிகளை.

உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் பேசுகின்றேன்… உங்களிடம் அல்ல…!

உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் பேசுகின்றேன்… உங்களிடம் அல்ல…!

 

உண்மையான யாகம் எது…?

நமது உயிர் ஒரு நெருப்பு…! நாம் எந்த உணர்வின் தன்மையை இங்கே சேர்க்கின்றோமோ அந்த உணர்வலைகளை உயிர் நமக்குள் பரப்பும். உணர்வின் சொல்லாக வரப்படும் பொழுது பிறருடைய நிலைகளை அங்கே இயக்கும்.

1.ஒரு மயக்கப் பொடியைப் போட்டால் சுவாசித்தால் மயங்கி விடுவோம்
2.நல்ல நறுமணத்தைச் சுவாசித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

இதைப் போன்று நல்ல உணர்வின் (நல்ல குணத்தின்) தன்மையானால் உயிரிலே பட்ட பின் அது நமக்குள் சுழல்கின்றது
1.அந்த உணர்வுகள் சொல்லாக வருகின்றது
2.கேட்போர் உணர்வுகளை இனிமைப்படச் செய்கின்றது
3.நட்பு என்ற நிலைகள் அதனால் வளர்கின்றது… பகைமைகளை மாற்றுகின்றது
4.அருள் உணர்வை நமக்குள் கூட்டுகின்றது
5.பேரின்பத்தைப் பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.

ஆகவே ஞானிகள் காட்டிய ஆலயங்களை நாம் ஒவ்வொருவரும் மதித்துப் பழகுதல் வேண்டும். நம் உடல் தான் ஆலயம் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்க வேண்டும்.

இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்கின்றேன் என்றால் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன் உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன் மனித உடலை உருவாக்கிய நல்ல குணங்களை அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று குரு காட்டிய அருள் வழியில் தான் செயல்படுத்துகின்றேன்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும்… உங்கள் ஆன்மா பரிசுத்தமாக வேண்டும்… நல்ல குணங்கள் இங்கே வளர வேண்டும் என்ற அடிப்படையிலே தான் நான் பேசுகின்றேன்
1.உங்களிடம் அல்ல
2.உங்கள் உயிரான ஈசனிடம்.

அப்போது இந்த உணர்வை நீங்கள் நுகர்கின்றீர்கள். அருள் ஒளி இங்கே பெருகுகின்றது. அது பெருக வேண்டும்… நீங்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் உயிரான ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்ற உணர்வுடனே நான் பேசுகின்றேன்.

அருள் உணர்வைப் பரப்பி உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திடும் நிலையாக செயல்படுகின்றேன். என் ஆன்மாவை நான் தூய்மைப்படுத்திக் கொள்கின்றேன்

நல்லது செய்ய வேண்டும் என்ற நிலையில்
1.நீங்கள் தப்பித் தவறி தவறானதைக் கேட்க நேர்ந்தால் கூட
2.நீங்கள் அதிலிருந்து விடுபட்டு உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுவதால்
3.அது எனக்குள் வருவதில்லை

சூரியன் பல பல உணர்வுகளை எடுத்தாலும் எல்லாவற்றையும் அது எப்படி ஒளியாக மாற்றுகின்றதோ… அது போல் உயிரணு தோன்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிய பின்
1.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்
2.அவனைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய கலர் ஆறு… உணர்வுகள் மோதும் பொழுது… ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு… உணர்வின் தன்மை அறிந்து (வெளிச்சம் – ஒளி) எடுப்பது.

அதைத் தான் ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான் என்று சொல்வது. அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.