சாந்தம் கொண்டு செயல்படுவதன் ஆற்றல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

inner peace meditation

சாந்தம் கொண்டு செயல்படுவதன் ஆற்றல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 

எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்த்துத் தான் ஒரு சொல்லின் உணர்வுகளே வருகின்றது…. தனித்து வராது..! அதாவது அதனுடைய சுருதிகள்…!

ஒருவர் சிலர் பேசுவதைப் பார்த்தால் ரொம்பவும் எளிமையாகப் பேசுவார்கள் அதே சமயத்தில் அவர்களிடம் சாந்த குணம் இருக்கும்.

சாந்த குணங்கள் இருக்கிறதென்றால்…
1.மனதில் அந்த உணர்வுகள் ஜாஸ்தி இருக்கும்…
2.எண்ணத்தால் பாய்ச்சுவார்கள்….!
3.இது அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வு.

சில பொருள்களை வெளியிலே பார்த்தால் ஒன்றும் செய்வதில்லை. எடுத்து உள்ளுக்குள் சாப்பிட்டவுடனே குடலுக்குள் போய் அரிப்பைக் கொடுக்கின்றது…. எதிர்மறையாகின்றது.

இதே மாதிரித் தான் ஒரு சிலரின் உணர்வுகள் அதாவது ரொம்ப சாந்தமாக இருப்பார்கள்.
1.சாந்தமாக இருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோம்
2.அங்கே அவர்களுக்குள் எண்ணங்கள் பல விதமாக ஓடும்.
3.ஆனால் அவனுடைய நினைவுகள் வெளிப்படும்… (சொல் வராது)
4.மற்றவரின் உணர்வுகள் அவர்களுக்குள் இது சேராது.
5.மற்றவர் உணர்வின் தன்மைகளைக் கெடுதலாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்
6.ஆனால் இவர்களுடைய நினைவுகள் அதை அடக்கும்.

இப்படி இயற்கையிலே சிலருக்கு விளையும்.

ஆகையினாலே கோடி… கோடி… கோடி… என்பதே மிளகாய்க்குள் காரம் ஆகவேண்டுமென்றால் பல கோடி உணர்வுகள் சேர்த்துத்தான் அந்த ஒரு காரம் ஆகின்றது.

அதே போல் பல கோடி உணர்வுகள் சேர்த்துத்தான் மிளகு ஆகின்றது. ஆனால் அதனுடைய காரம் வேறு..!

எதனுடைய உணர்வு அதிகமாக கூடுகின்றதோ அதற்குத் தக்கவாறு சுவைகள் மாறும்… குணங்கள் மாறும்…. நிறங்கள் மாறும்…!
1;கோபமாகி… அடிக்கடி வேதனையில் இருந்து பாருங்கள்…. ஒரு விதமான நீல நிறமாக இருக்கும்.
2.அதிகமான நிலையில் ரொம்ப இருட்டடைந்த நிலையில் என்ன வாழ்க்கை என்று வெறுப்பான நிலையிலிருந்து பாருங்கள்.. முகம் கருக்கும்.

அதே சமயத்தில் கோபத்தின் உணர்வை அதிகமாக எடுத்துப் பாருங்கள். மற்றவர் உணர்வால் உணர்ச்சிகள் உந்தப்பட்டால் நரம்புகள் எல்லாம் ரொம்ப இறுக்கமாக (TIGHT) ஆகும்.

ஆகவே… எந்த காரணத்தைக் கொண்டும் வெறுப்பு வேதனை கோபம் குரோதம் இதெல்லாம் ஆழத்தில் கொண்டு போய் நம்மைத் தள்ளி விட்டு விடும். குரோதங்கள் வராது அவசியம் தடுக்க வேண்டும்.

கோபம் அதிகமானலும் கூட அடுத்து இந்தக் காரத்தை தணித்து விட்டால் சிந்திக்கும் திறன் வரும்.
1.ஆனால் இந்தக் குரோதம் இருக்கின்றது பாருங்கள்…!
2.எதைச் சொன்னாலும் கேட்காது…
3.தெரிந்து கொண்டேன்…! என்ற நிலையில் நல்லதை யார் சொன்னாலும் எடுக்காது.

ஆகவே… அனைத்தையும் தெரிந்து கொண்டோம் என்ற இந்த நிலைகள் நமக்கு வேண்டாம். தெரிந்து கொண்டே இருக்கின்றோம் என்ற நிலையில்…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.பொருளுக்குள் பொருள்… மூலத்திற்குள் மூலம்… ஓமுக்குள் ஓ…ம்…!

 

பிறர் சொல் நம்மை இயக்காதபடி தடுக்கும் ஒரு பயிற்சி

soul protections

பிறர் சொல் நம்மை இயக்காதபடி தடுக்கும் ஒரு பயிற்சி

ஒருத்தர் உடலில் ஆவி (ஆன்மா) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் நாம் அவரிடம் பேசினால் அங்கே போகாதே… போகாதே…! என்று மற்றவர்களிடமும் சொல்லும்.

நாம் அவரிடம் பேசினால் போதும்… நம் உணர்வுகள் பட்டவுடனே… போகாதீர்கள்… போகாதீர்கள்…! என்று சொல்லும். காரணம்… அதற்கு ஆகாது.

அதே உணர்வை நாம் கேட்டோம் என்றால்…
1.மகரிஷிகளின் அருள்சக்தி அது பெற வேண்டும்
2.அது இருள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வு வளர வேண்டும் என்று எண்ணி
4.ஒரு பத்து தடவை செய்துவிட்டு உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

அப்புறம் தன்னாலே மயங்கி விழுந்தாலும் விழும்…. போய் விடும்….! ஏனென்றால் சில சாப அலைகள் ஒருவருக்கொருவர் பாய்ந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது.

அந்த மகரிஷிகள் தனக்குள் கோடி… கோடி… கோடி…! என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள். ஆகவே அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் எடுத்து இதை அவருக்குள் புகுத்த வேண்டும்.

அப்படிப் புகுத்தினோம் என்றால் அவர்கள் உணர்வு நீங்கும். “புகுத்த வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் வலுப் பெறும். இந்த அலைகள் படரும். நம் நினைவு அங்கே மகரிஷிகள் பால் போகும்.

ஆகவே… எதை எடுத்தாலும்… நாம் அந்த விண்ணின் பற்றிற்கே வருகின்றோம்…!

இல்லையென்றால் நம் வாழ்க்கையில் இப்படி இருக்கின்றார்களே…! என்ற இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.

ஆகவே…
1.அந்த விண்ணின் பற்றுடன் ஒவ்வொரு நிமிடத்திலேயும் இதைப்போல எண்ணி ஆத்ம சுத்தி செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இந்த நினைவினை எடுத்து இங்கே கொண்டு வர வேண்டும்.

அதாவது… இங்கே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். எங்கே…?

பயிற்சி:
1.கண்ணின் நினைவினை விண்ணிலிருந்து சிந்தனையை எடுத்துப் பாருங்கள்.
2.அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்ற மாதிரி இருக்கும்
3.செவிகள் கேக்கும்…. இரண்டும் கலக்கும்…. அதை உணர்த்தாது…. வந்தாலும் அது நம்மை இயக்காது.
4.சரி…! என்று எதிர் பதில் சொல்லச் செய்யும்.

அவர்கள் பேச்சை நீங்கள் கேட்கும்போது நேராக மட்டும் அவர்களைக் கண்ணுற்று மட்டும் பார்க்காதீர்கள். (இது முக்கியம்)

சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்தீர்கள் என்றால்
1.அது உங்களை இயக்காதபடி அப்புறம் உங்கள் சொல்லால் சொல்லும்போது அது இயங்கும்.
2.அவர்களை இயக்கி மாற்றிவிடும்….! ஏனென்றால் இந்தப் பதிவுகள் நமக்கு அதிகம் தேவைப்படும்.

 

எது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும்

Eye antenna

எது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும்

தீமையை நீக்கிடும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப இதைச் சொல்வது

என்னடா…! சாமி (ஞானகுரு) திரும்பத் திரும்ப சொல்கின்றார் என்று நினைக்கலாம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகளை ஆழமாகப் பதிவு செய்து விட்டால்
2.மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் உணர்வினை எளிதில் நுகர்ந்து
3.நம் உடலுக்குள் அந்த ஒளிக்கற்றைகள் வரும்போது
4.நமக்குள் தீமைகள் வராது தடுக்கவும் இது உதவும்.

ஆகவே அந்த வலுவான உணர்வை எடுத்து நமக்குள் உருவாக்கி விட்டால்… அது மீண்டும் அது தன்னிச்சையாக நல் மணங்களை நமக்குள் கொண்டு வருவதும்… தீமையில் இருந்து நம்மை விடுபடுவதுமாக… அது நம்மைச் செயலாக்கும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு தான் பிறருடைய வேதனைகளைக் கேட்டறிகின்றோம். நாம் கேட்டறிந்த உணர்வை உயிர் நுகர்ந்த பின் அதே வேதனை என்ற அணுக்களை அது உருவாக்கி விடுகின்றது.

பின் அது தன் உணர்வுக்காக உணர்ச்சிகள் உந்தும்போது அந்த வேதனை உணர்ச்சியே நமக்குள் வருகின்றது. நல்ல எண்ணங்களுக்கு நாம் செல்ல முடிவதில்லை.

தியானத்தில் உட்கார்ந்து இருந்தால் இந்த மாதிரித் தான் இருக்கும்….!

ஆகையினால் பிறிதொன்று நம் உடலுக்குள் வந்து… அந்தத் தீமை விளைவிக்கும் சக்தியாக அது இயங்கிவிடக்கூடாது.

அதிகாலையில் நாம் எப்படி எந்த நிலையில் இருந்தாலும் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிவிட்டு அந்த உணர்வுகளுக்குச் சக்தி ஊட்ட வேண்டும்.

அப்போது அந்த உணர்வுகள் வலுப் பெறும்போது நம் உடலுக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் சக்தி வருகின்றது.

1.நான் சொல்வது லேசாக இருக்கலாம்…
2.ஆனால் அனுபவத்தில் வரும்போது கடினமாக இருக்கும்…
3.நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் அது எளிதாகிவிடும்.

புதிதாக ஒருவர் தையல் மிஷினில் உட்கார்ந்து தைக்கத் தொடங்கும் போது… துணியை வைத்தால் கோணல் மாணலாகப் போகும். ஆனால் பழக்கப்பட்டவர்கள் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார்கள்.

காரணம்…. அந்தக் கை பழக்கம்…!

அதைப் போன்று தான் சிறிது நாள் பழகிக் கொண்டால்…
1.நாம் எடுத்துக் கொண்ட அந்த அருள் உணர்வின் தன்மை
2.நமக்குள் அது தன்னிச்சையாக இயக்கும்… நல்வழியும் காட்டும்.

ஆகையினாலே இதை நமக்குள் சக்தி வாய்ந்ததாக உருப்பெறச் செய்வோம். எத்தகைய தீமை வந்தாலும்… நம் கண்ணின் பார்வையில் அந்தத் தீமையான சக்திகளை ஒடுங்கச் செய்வோம்.

 

குருநாதர் கொடுக்கும் “கோடி…கோடி..” என்ற ஒளியான உணர்வின் ஆற்றல் எபப்டிப்பட்டது…?

Eswarpattar blessings

குருநாதர் கொடுக்கும் “கோடி…கோடி..” என்ற ஒளியான உணர்வின் ஆற்றல் எபப்டிப்பட்டது…?

நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்குக் கொடுத்த கோடி…கோடி… என்ற உணர்வுகளை உங்களுக்கும் கொடுக்கின்றோம். அதாவது…
1.தீமையை நீக்கி ஒளியின் தன்மையாக ஆக்கிய அந்தக் கோடி…கோடி என்ற உணர்வின் தன்மையைத்தான்
2.உங்களிடமும் இணைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு)

அந்த உணர்வுகளை நீங்கள் இணைத்துக் கொண்டபின் மற்றவர்களை நீங்கள் பார்த்தால் சில உணர்வுகளை உணர்த்தும். அவர்களைக் கேட்டறிந்து நீங்கள் திருப்பிச் சொல்ல வேண்டியதில்லை.

அப்படிக் கேட்டறிந்து திருப்பிச் சொல்ல வேண்டும் என்றால்… நானே திருப்பிச் சொல்ல முடியாது. அப்படித் திருப்பிச் சொல்லும் நிலை வந்து விட்டால் அது வெறும் “பாட நிலைதான்” ஆகும்.

ஆகவே நாம் ஒருவரைப் பார்க்கப்படும்போதே அவருடைய நிலைகளை நமக்குள் உணர்த்தும்.
1.அப்பொழுது அங்குள்ள தீமை நமக்குத் தெரிய வரும்.
2.அந்தத் தீமை நீக்குவதற்கு என்ன வழி…? என்ற நிலைகளை நாம் எடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று இந்த உணர்வை எடுத்து விட்டால் நமக்குள் தீமை சேராது
1.அந்தத் தீமையை நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.
2.அத்தகைய சொல்லை அங்கே பதிவு செய்து விட்டால்…
3.அவர்கள் அதைக் கேட்டுணர்ந்தால்… அவர்கள் அதைத் திருப்பி எண்ணினீர்கள் என்றால்….
4.அவர்கள் தீமையை அவர்கள் போக்க முடியும்.

நமக்கு அந்த “அறிதல்…” என்ற நிலையில் வரும். அதே போல் யார் நம்மைப் பார்த்தாலும்… அவர்கள் பேச ஆரம்பித்தாலே போதும்…
1.இப்படித்தான்…! என்று நமக்குத் தெரியும்.
2.தெரிந்தவுடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
3.தெரிந்ததை அவர்களிடம் சொல்லக் கூடாது.

வர வர (அவர்கள் பேசப் பேச) நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்…! என்ற அந்த நினைவினைக் கண்ணை வைத்து உற்றுப் பார்க்க வேண்டும்.

சொல்லவே வேண்டியதில்லை. கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள் அவர் சொல்லும்போது நமக்குக் கோபம் வரும்.. உடனே சிந்தனையில் “அருளை எடுத்துப் பாருங்கள்…!”

சரி… அப்படியா…! என்று சொல்லிவிட்டு நீங்கள் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பாருங்கள். இவ்வாறு செய்தாலே…. யாராவது தப்பு சொல்பவர்கள் வந்தாலும் திருப்பித் திருப்பிச் சொல்ல முடியாது

பிரேக்காகும்…! வேண்டுமென்றால் பாருங்கள். இது போய் இடைமறிக்கும். குறைகளைச் சிந்தித்துப் பார்க்கும் பொழுது அங்கே தடையாகும்.
1.அவர்கள் உணர்வு நம்மிடம் வராது
2.நமது உணர்வு என்ன செய்யும்…? அந்தத் தப்பை அடக்கும்…!
3.இது கண்டிப்பாக வேண்டும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் எங்கே குறை கண்டாலும்… அவர்கள் தவறு செய்யவில்லை… அவர்களை அறியாத நிலைகளில் தான் அது வருகின்றது. ஆகவே அங்கே குறைகள் வளரக் கூடாது.

மகரிஷிகளின் அருள் ஒளி அங்கு பெற வேண்டும்…. அங்கு மெய்ப் பொருள் காணும் நிலை வரவேண்டும் என்று எப்படொ எண்ணிப் பாருங்கள்.

ஆனால் தப்பாகப் பேசினார்… என்ற குற்றம் சாட்டும் நிலை வந்தால்…
1.அவர் உணர்வு தான் உங்களுக்குள்ளேயும் சேர்ந்து வளர்ந்துவிடும்.
2.உடனே இரண்டு பேருக்கும் சண்டை வரும் நீ பெரியவனா… நான் பெரியவனா…? என்று

தியான வழியில் இருக்கின்றவர்கள் இதை எல்லாம் முதலில் சொன்ன மாதிரி மாற்றி அமைத்துப் பழக வேண்டும். ஏனென்றால் நாம் பேசக்கூடிய இந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தி அலைகளாகப் பரப்பச் செய்கின்றது.

ரேடியோ டி.வி.யில் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதைப் போல ஞான வித்துகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அவ்வப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த எண்ணம் வரும். அப்பொழுது உங்கள் ஆன்மா வலுப் பெறும்.

இருந்தாலும்…
1.தீமைகளை நீங்கள் உணர முடியும். ஆனால் உள்ளுக்குள் விடாது.
2.யாம் சொன்ன முறைப்படி எண்ணி நீங்கள் செய்து பாருங்கள்
3.அந்த அருள் உணர்வுடன் உங்கள் பார்வையை மட்டும் மற்றவருக்குச் செலுத்திப் பாருங்கள்.

பிறரின் குறைகள் நமக்குள் வளராது… அவர்களின் உணர்ச்சிகள் நம்மை இயக்காது… நமது உணர்ச்சிகள் அங்கே ஒடுங்கச் செய்யும்.
1.இல்லை என்றால் கொதிக்கச் செய்யும்
2.இல்லை என்றால் விட்டு விட்டு ஓடி விடுவார்கள்… பயமாகும்…!

 

உயிர் துடிப்பு மாறும் போது நம் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

polaris and soul pulse

உயிர் துடிப்பு மாறும் போது நம் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

இன்று எலெக்ட்ரானிக் கடிகாரத்தின் மூலம் மணிகளைக் காட்டுகின்றார்கள். “அதில் உள்ள எலக்ட்ரானிக்” அதன் குறித்த நிலைகள் வரப்படும்போது அது வந்தவுடனே மணிகளையும் தேதிகளையும் மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

1.ஆனால் அதில் சிறிது நீர் பட்டுவிட்டால் எல்லாம் மறைந்து விடுகின்றது.
2.எதிர்மறையான உணர்வுகளை அங்கே பதியச் செய்யும்போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அதில் உள்ள பேட்டரி சார்ஜ் கம்மியாகி விட்டாலோ தப்பான கணக்கைக் கொடுக்கின்றது.

இதைப் போலத்தான் நம் உயிரின் இயக்கமும்…!

நாம் எண்ணும் சோர்வு சங்கடம் வேதனை போன்ற எண்ண அலைகள் அதிகமாகச் சேர்த்த பின்…
1.நமது உயிர் அந்த உணர்வின் தன்மைகளை இயக்கப்படும்போது
2.இயக்கத்தின் துடிப்பு கம்மியாகின்றது.

அப்படிக் கம்மியாகும்போது உடலின் சுருக்க… அந்த உணர்வுகள் குறையத் தொடங்கி விடுகின்றது. அந்த நேரத்தில் சீரான நிலைகளிலே கணக்கைப் பார்க்க முடியாது. நம்முடைய சொல்லும் சீராகச் சொல்ல முடியாது.

ஏனென்றால் நமது உயிர் “எலெக்ட்ரிக்காக” இருந்து… நுகரும் உணர்வுகளை “எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக)” அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.

1.அதில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ
2.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
3.அந்த உணர்வுகளில் மாற்றங்கள் எதுவோ கண் விழி கொண்டு கலர்கள் மாறும்.
4.வெளி வரும் சொற்கள் கொண்டு உணர்ச்சிகள் மாறும்.
5.அந்த உணர்வின் சத்து கொண்டு உடலில் நிறங்கள் மாறும்.

இந்தத் தியான வழியில் சீராக இருந்தால் நீங்கள் ஒருத்தரைப் பார்த்தவுடனே ஜோசியம் சொல்லி விடலாம். ஆனால் இதைத் தெரிந்து நீங்கள் ஜோசியம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.

ஏனென்றால் இதை “அங்கக்கலை…!” என்று சொல்வார்கள். பார்த்து ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் எலலா உண்மைகளும் வெளியில் வரும்.

உங்களிடம் நான் (ஞானகுரு) சில நேரம் கேள்விகளையும் கேட்பேன். அப்பொழுது பதிலாக உங்களிடம் இருந்து என்னென்ன வருகின்றது…? என்றும் பார்ப்பேன்.

அதைத் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு என்ன நல்ல மாற்றங்களைக் கொடுப்பது…? என்ற நிலையில் சிலதுகளை இணைத்துக் கொடுப்பேன்.

அதாவது உங்கள் சொல்லுக்குள் வேறு ஏதாவது நாம் மாற்றிச் சொல்லும் பொழுது… இந்த உணர்வு வந்தவுடன் உங்களுக்குள் இருப்பதை எல்லாம் கக்கிக் கொண்டே இருப்பீர்கள்.

இந்த அலைகளை தொடர்ந்தவுடன் எந்த அருள் உணர்வை எதை எதை இணைத்து உங்களுக்குள் கலக்க வேண்டும் என்று சொல்லி யாம் கொடுக்கின்றோம்..
1.தமாஷாகச் சொல்வது போல் இருக்கும்…
2.ஆனால் அதற்குள் ரொம்ப விஷயம் இருக்கும்.

அதாவது உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு வழி…!”

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றால் வாத்தியாருக்கு ஒருத்தர் மேல் வெறுப்பாகி விட்டது என்றால் அந்த வெறுப்பின் தன்மையினால் அவர் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லுவார்.

வாத்தியார் அழுத்தமாகச் சொன்னவுடன் அந்த மாணவனுக்குப் பயத்தின் உணர்வு வந்தது…! என்றால் வாத்தியார் என்ன சொன்னாலும் இங்கே அவனுக்குள் பதிவாகாது. ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கத்தின் நிலைகள்.

1.அதே சமயத்தில் பார்வையின் நிலைகள் என்னவாகும்…? இருட்டாகும்… கலர் கறுப்பாகும்.
2.எந்த நல்லதையும் பார்க்க முடியாது.
3.இருள் சூழ்ந்த நிலையாகும். உடலுக்குள் அது நஞ்சாகும்.

ஏனென்றால் நல்ல பொருளுக்குள் நஞ்சு கலந்தால் எப்படியோ அது போல் நல்ல சிந்தனை வராது. விஷத்தின் தன்மை கொண்ட உணர்வாக மாறிவிடும்.

அச்சமயம் பதிவு செய்த நிலைகள் அது சீராக வராது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…!

இது எல்லாம் நமக்குள் மோதும் எதிர்மறையான இயக்கங்களால் வரும் போது ஏற்படும் நிலைகள் தான்…!

 

தங்க நகைகளை அணியும் போது எந்த எண்ணத்துடன் அணிய வேண்டும்…?

golden jewellery

தங்க நகைகளை அணியும் போது எந்த எண்ணத்துடன் அணிய வேண்டும்…?

 

தங்க ஆபரணங்களை நீங்கள் அணிந்திருந்தால் அந்த ஆபரணங்களை எண்ணி… நம்மைப் போன்றே மற்றவருக்கும் இது கிடைக்க வேண்டும்…! என்று எண்ணுங்கள்.

1.அந்தத் தங்கத்தைப் போன்ற நல்ல மனம் எங்களுக்குள் வளர வேண்டும்.
2.எங்களைச் சார்ந்தோர்… எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் “தங்கத்தைப் போன்ற மங்காத மனம்” கிடைக்க வேண்டும்.
3.வாழ்க்கையில் தங்கத்தைப் போன்ற பளிச்சென்ற மங்காத நிலைகள் எல்லோரது மனதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏனென்றால் வெறும் நகையாக மட்டும் தங்கத்தை அணிந்து கொண்டிருப்பதற்கு அல்ல…!

தெய்வங்களுக்குத் தங்கத்தை மாலைகளாகப் போட்டு பல விதமான ஆபரணங்களாக அணிந்து பார்க்கின்றோம் அல்லவா…! அந்தத் தங்கம் எவ்வாறு மங்காது இருக்கின்றதோ… இதைப் போன்று நமது எண்ணங்கள் மங்காது அனைவருடைய அரவணைப்புடன் இருக்க வேண்டும்.

காரணம்… குடும்பத்திற்குள் எல்லோருடனும் நாம் மகிழ்ச்சியாக இருப்பினும் அந்த மகிழ்ச்சிக்குள் சிறிது குறை ஏற்பட்டால் உடனே அவர்கள் மேல் கோபமோ ஆத்திரமோ வேதனையோ ஏற்பட்டு நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள் மறையத் தொடங்குகின்றது.

அப்பொழுது நம் நல்ல எண்ணங்கள் மறையாது இந்தத் தங்கத்தைப் போன்று மங்காது பாதுகாத்திடல் வேண்டும்.

அவர்களுடைய குறை உணர்வுகள் நமக்குள் வந்ததைத் துடைத்துவிட்டு “பளிச்…” என்ற நிலையில் அவர்களுடைய உணர்வும் தெளிந்திட வேண்டுமென்ற எண்ணத்தை நாம் எடுத்து நமக்குள் வளர்த்திட வேண்டும்.

ஏனென்றால் தியானம் என்றாலே இது தான்…! நமக்காக மட்டுமல்ல…!

சூரியன் எவ்வாறு பிற கோள்களின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து அதிலுள்ள தீமைகளைக் கழித்துவிட்டு ஒளியின் நிலையாக அது உருப்பெற்று வளர்ந்து கொண்டே இருக்கின்றதோ இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கின்றதோ… இதைப் போல நமது எண்ணங்கள் எப்போதுமே அந்தப் பிரகாச நிலைகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

பிறர் மேல் இருக்கும் குறையோ… குற்றமோ… வெறுப்போ,,, நாம் நுகர்ந்து அறியப்படும்போது… அது நமக்குள் வளராது…
1.அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு பளிச்சிடச் செய்து
2.”தங்கம் கருகாது” எப்படி அதனுடைய உணர்வு என்றுமே ஒளி வீசுவது போல்
3.நம் ஒவ்வொருவருடைய மனதையும் தங்கத்தைப் போன்று மங்காத நிலை பெறச் செய்து
4.நாம் எதிலே ஈடுபட்டாலும் நம் உணர்வுகள் மங்காத நிலைகள் பெறச் செய்ய வேண்டும்.

இதை நாம் வழிப்படுத்த வேண்டும்.

உட்கொள்ளும் உணவுகளில் கலக்கப்படும் விஷத் தன்மைகளை அகற்ற நாம் செய்ய வேண்டிய பயிற்சி

full meals

நாம் உட்கொள்ளும் உணவுகளில் கலக்கப்படும் விஷத் தன்மைகளை அகற்றச் செய்ய வேண்டிய பயிற்சி

 

இன்று நாம் உணவாக உட்கொள்ளும் உணவு வகைகளிலும் சரி… பயிர் செய்யும் பயிர்களிலும் சரி…
1.பல விதமான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தூவப்படும் பொழுது
2.அது செடிகளில் பட்டு அதில் வரும் வித்துகளிலும் கலந்து வருகின்றது.
3.கலந்து வரும் நிலையில் அதைத்தான் உணவாக உட்கொள்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் பொழுது அதுவும் நமக்குள் அணுவாக மாறுகின்றது. எந்த வித்திலே விஷம் கலந்ததோ அந்த விஷத்தையே நாமும் கலந்து நுகர நேருகின்றது.

அப்படி நுகரும் பொழுது விஷ அணுக்களின் தன்மை ஊடுருவி நம் உடலில் “கை கால் குடைச்சல்” போன்ற நோய்களை உருவாக்குகின்றது.

பூச்சிகளைக் கொல்லும் விஷம் கலந்த உணவுகளாக இருந்தாலும்
1.உணவு உட்கொள்ளும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
3.அது இந்த உணவு முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
4.சாப்பிட உட்கார்ந்தவுடனேயே இந்த மாதிரி எண்ணும் ஒரு பழக்கம் வர வேண்டும்.
5.எனக்குள் உடல் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும் என்ற உணர்வுடனே உணவை உட்கொண்டு பழகுங்கள்.

அந்த அருள் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை அகற்றிவிடுகின்றது.

இப்படிச் செய்யவில்லை என்றால் இந்த விஷத் தன்மை உடலில் அதிகமாகச் சேரச் சேர
1.உடலில் புதுவிதமான பல விதமான வருவதும்
2.சில நேரங்களில் சிந்தித்து நாம் பதில் சொல்லும் நிலைகள்
3.அதைச் சீராக சொல்ல முடியாத நிலையாக அதனுடைய நிலைகள் நம்மை மறைத்து விடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.

ஏனென்றால்…
1.காற்றில் இருக்கும் அதே விஷமான உணர்வுகள்
2.எதனுடன் கலந்து எதை நம்முடன் சேர்க்கின்றதோ
3.அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.

அவசியம் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறோம்.

பிறருடைய கஷ்டத்தைக் கேட்டால் “ஆத்ம சுத்தி செய்வதை மறந்து” விட்டுவிடுகின்றோம்

soul-cleaning-dhiyanam

பிறருடைய கஷ்டத்தைக் கேட்டால் “ஆத்ம சுத்தி செய்வதை மறந்து” விட்டுவிடுகின்றோம்

 

நமக்கு வேண்டிய ஒருவர் “கஷ்டம்” என்று நம்மிடம் வந்து சொல்லியிருப்பார். அந்த உணர்வை நாம் கேட்டுக் கொண்டேயிருந்தோம் என்றால் என்ன நடக்கின்றது…?

அவருக்குள் எந்த வகையான அணுக்கள் உருப்பெற்றுக் கஷ்டம் என்ற நிலை வந்ததோ அவரை எண்ணும் பொழுது நமக்கும் அதே கஷ்டமான உணர்வைத் தூண்டுகின்றது.

என் குடும்பத்தில் பல தொல்லைகள் வருகின்றது… எனக்கு வியாபாரம் மந்தமாக இருந்தது… அதிலே குறைபாடுகள் வந்தது… என் உடலிலே நோயாக மாறி விட்டது என்று அவர் சொல்லச் சொல்ல
1.நாம் அதைக் கேட்டால்
2.அதே உணர்வின் அணுக்கள் விளளைந்து விட்டால்
3.நம்மை அறியாமலே “கஷ்டமாக இருக்கின்றது: என்று சொல்ல வந்துவிடும்.
4.நம் வியாபாரத்திலும் அவருக்குண்டான நிலை நமக்கும் மாறிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணுங்கள். விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.அது எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
3.குறைந்தது ஒரு ஐந்து நிமிடமாவது எண்ண வேண்டும்.

இப்படி வலுப்படுத்திக் கொண்ட பின் கஷ்டம் என்று நம்மிடம் சொன்னவரைப் பார்த்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவீர்கள்
2.இனி உங்களுக்குக் “கஷ்டம் இல்லை…!” என்று சொல்லிப் பழகுங்கள்.

ஆகவே நம் வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் அடுத்த கணம் இந்த முறைப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கஷ்டப்படுபவர்கள் சொல்லும் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் இரத்தநாளங்களில் கலக்கின்றது. ஆனால் அதிக நேரம் கேட்டுக் கொண்டிருந்தோம் என்றால் இது அதிகமாக நமக்குள் சேர்ந்துவிடும்.

ஒரு ஐந்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அதை இரத்தங்களில் அதிகமாகக் கலக்கச் செய்தல் வேண்டும்.
1.அப்பொழுது இதனுடைய வலு அதைக் குறைக்கும்.
2.இதைத் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கி அவனை வீழ்த்தினான்…! என்று சொல்வது.

ஆகவே ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மையை நாம் அதிகமாகச் சேர்த்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.நமக்குள் படும் உணர்வுகள் – அவர்கள் பட்ட வேதனையோ அவர்கள் பட்ட கஷ்டங்களோ
2.நமக்குள் வளராது தடுக்கும்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் பழக வேண்டும்.

அருள் ஞானிகளைப் பற்றிய உபதேசம் சொல்கிறோம். கேட்டுக் கொண்டே இருப்போம். இருந்தாலும் மற்றவர்கள் சொல்லும் கஷ்டத்தைக் கேட்க ஆரம்பித்ததும் இதை விடுத்து விட்டு
1.அவர்களுடன் ஒன்றியே… நாமும் பேச ஆரம்பித்துவிடுவோம்.
2.அவர்கள் உணர்வுகள் இங்கே பட்ட பின் ஆத்ம சுத்தி செய்வதையே மறந்து விடுவோம்
3,இப்படியும் அடிக்கடி ஆகின்றது.

ஆகையினால் ஒவ்வொரு நொடிக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும். எல்லா நேரத்திலும் நம் நினைவோடு இதை எடுத்து வலுப் பெறச் செய்ய வேண்டும் (முக்கியமானது).

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் தீமைகளை நீக்குவதே… “நம்முடைய பழக்க வழக்கமாக” இருக்க வேண்டும்

deleting evils

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் தீமைகளை நீக்குவதே… “நம்முடைய பழக்க வழக்கமாக” இருக்க வேண்டும்

 

குருநாதர் சொர்க்கம் அடைந்த வைகுண்ட ஏகாதசி நாளில் அவர் நினைவின் தன்மை கொண்டு வரும் பொழுது
1.அவர் எப்படி எல்லாம் பேரன்பைப் பெற்றாரோ பேரொளியாக ஆனாரோ
2.அதைப் போல நாமும் ஆக வேண்டும்…! என்று ஆசைப்படுங்கள்.. இச்சா சக்தி…!

“தீமையை நீக்கிய குருவின் உணர்வில்…” இச்சைப்பட்டு அதை நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டு அது கிரியையாகும். அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் செயலாக்குகின்றது.

பின் அந்தக் குருவின் ஞான வழிப்படி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி. அந்த ஞானத்தின் வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

சிறிது காலம் கொஞ்சம் பழகிக் கொண்டால் போதும்…!

உதாணமாக… சில விளையாட்டுகளை விளையாடுகின்றார்கள். கேரம் போர்ட் விளையாட்டில் அதற்கென்று ஒரு காயை வைத்துக் குறி பார்த்துத் தள்ளி மற்ற காய்களைத் தள்ளுகின்றார்கள்.

அது எல்லாம் அனுபவம் தான்…!

பழகாத நாம் அதைத் தட்டினால் எங்கேயோ போகின்றது. ஆனால் பழகியவர்கள் தட்டினால் ஒர் காயை வைத்து மூன்று நான்கு காயைக் கூடத் தள்ளிக் கொண்டு போகின்றது. ஏனென்றால் அவர்களுடைய அனுபவம் இது.

இதைப் போல்.. நம் அனுபவத்திலே எதைக் கொண்டு வர வேண்டும்…?

1.நாம் பல தவறுகள் செய்தாலும் அந்தத் தவறுகளைத் தள்ளி விட்டு
2.மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து நல்ல ஞானத்தைப் பெருக்க வேண்டும்.

நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் சிறிது காலம் அனுபவித்துப் பாருங்கள்.

சாமி செய்ய முடியாததை…
சாமியார் செய்ய முடியாததை..
கடவுள் செய்ய முடியாததை..
“உங்களுக்குள் கடவுளாக நின்று..” தீமைகளை அகற்றும் அருள் சக்தியாக இது விளையும்.

ஜோதிடம் செய்யாததை…
ஜாதகம் செய்யாததை… இதை எல்லாம்
இந்த உணர்வு உங்களுக்குள் செய்யும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையில் தீமையை நீக்கும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.

கஷ்டம் என்ற உணர்வை உங்களுக்குள் விடாதீர்கள்…!

அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி

good-is-blissful

அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி

 

பிறருடைய வேதனையான உணர்வை நாம் சுவாசித்தால் உடலுக்குள் வளராதபடி அதைப் பிரித்திடல் வேண்டும். பிரிக்கக்கூடிய சக்தி அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உண்டு.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உணர்வினைச் செலுத்த வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும். இப்படி நுகர்வது அனைத்துமே முதலில் நம் இரத்த நாளங்களுக்குள் தான் சேர்கின்றது.

தீமையான உணர்வின் வளர்ச்சி கொண்ட நிலையில் உறுப்புகள் செயலிழந்திருந்தாலும் இதைக் கண்ட பின் அந்த உணர்வுக்குள் கிளர்ந்து எழுகின்றது.

அறியாத நிலைகளில் நமக்குள் அப்படிப் பதிவான தீமைகள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
1.அப்பொழுது காற்றிலிருக்கும் தீமைகளை அதிகமாக நுகர நேருகின்றது.
2.அந்த உணர்ச்சிகளை நாம் எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ உடலும் மாறுபடுகின்றது… சொல்லும் செயலும் மாறுபடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால் அந்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால் மண்ணிலே ஒரு நல்ல பொருள் விழுந்தால் உடனே நீரை விட்டு அதைக் கழுவிக் கொள்கின்றோம். இதைப் போல் பிறருடைய தீமையின் உணர்வுகள் நம் உடலில் இரத்தங்களில் கலந்தால் அதன் வீரியத்தைத் தணிக்க “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இங்கே உபதேசிக்கும் பொழுது
1.உங்கள் கண்கள் என்னை (ஞானகுரு) உற்றுப் பார்க்கின்றது.
2.உபதேசிக்கும் சொல்லின் உணர்வுகள் அந்தச் செவியிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவலைகளைப் பதிவாக்குகின்றது.
4.உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிடும் அலைகளை ஆன்மாவாக மாற்றுகின்றது.
5.மாற்றிய உணர்வுகள் உயிரிலே படுகின்றது… இந்த உணர்ச்சிகளை உடலிலே பரவச் செய்கின்றது…. இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இந்த உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… இரத்த நாளங்களில் கலக்கக் கலக்க…
1.உங்கள் உடலில் தீமையை விளைவிக்கும் உணர்வுகளுக்கு
2.இந்த இரத்தநாளங்களின் வழியாக உயர்ந்த உணர்வுகள் போகும் பொழுது அதனுடைய தணிவுகள் ஏற்படுகின்றது.

நல்ல குணங்கள் இருக்கப்படும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அது இரத்தத்தில் சுழலப்படும் பொழுது நல்ல அணுக்களுடைய நிலைகள் அதை நுகர மறுக்கின்றது.

அப்பொழுது இயக்கச் சக்தி குறைகின்றது…. உடல் சோர்வடைகின்றது. இப்படிச் சோர்வடையப்படும் பொழுது நல்லதை நினைக்கும் திறன் இழக்கப்படுகின்றது,

இப்படிச் சோர்வடையும் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் உணர்வின் தன்மை நாளடைவில் அதிலே பழகி விட்டால் எது எடுத்தாலும் அந்தச் சோர்வு தான் வரும்.

மட்டன் சாப்பிடாதவர்கள் இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் பிறகு “கொஞ்சம் மட்டும் சாப்பிடலாம்…” என்ற உணர்வு தோன்றும். ஒரு காயை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வார்கள். பின் அதைச் சுவையாக்கி விட்டால் சரி… இப்பொழுது சாப்பிடலாம்…! என்பார்கள்.

இதைப் போன்று இந்த உணர்வுகள்…
1.எதனின் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உனர்வின் தன்மை
2.அங்கே அந்த உணர்ச்சிகளைத் தூண்டத்தான் செய்யும்.

ஆனால் இதைப் போன்ற நிலைகளை அதை அடக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் பலவித கோணங்களில் உங்களுக்கு இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.

தீமைகள் எப்படிச் சாடுகின்றது..? தீமைகளை அகற்றும் வழி என்ன…? என்பதைத் தான் கலவையாக்கி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை உங்களுக்குள் இணைத்து இணைத்துப் பதிவாக்குகின்றோம்.

1.தீமைகளை அகற்றிய உணர்வைக் கலந்தே உங்களுக்குள் கொடுத்திருப்பதனால்
2.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது
3.உங்களுக்குள் எத்தகைய பகைமையும் தீமையும் துன்பமும் வளராது தடுக்க இது உதவும்.