தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

 

விஞ்ஞான உலகில் இருக்கின்றோம்… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையை உருவாக்குகின்றனர்.

உதாரணமாக நாம் ரோட்டில செல்லப்படும் போது… அந்தப் பக்கம் அழுத்தமாக மிளகாய் நெடி வந்தால் நுகர்ந்தவுடனே அந்த உணர்ச்சிகள் (அதுதான் எலக்ட்ரானிக்)
1.நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நம் நல்ல குணங்களை மாற்றி அந்த நெடி நம்மைத் தும்ம வைக்கின்றது.
2.சிந்திக்கும் தன்மையைக் கூட அந்த இடத்தில் இழக்கச் செய்து விடுகின்றது.

அது எலக்ட்ரானிக்காக மாறுகின்றது. எதன் உணர்வை இந்தச் சூரியனின் “இயக்க அணுக்கள்” கவர்கிறதோ அதை நுகரப்படும் போது அதன் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு தான் அவ்வாறு இயக்குகின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். அந்த உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.

1.சில சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனைப் பார்த்தால் இனம் புரியாது அவர் மேல் வெறுப்பு வரும்… அல்லது சோர்வு வரும்
2.ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது இனம் தெரியாத சிந்தனைகள் வரும்.
3.ஏன்… எதற்கு அவ்வாறு நம் மனம் மாறுகிறது…? என்ற நிலை கூட வந்துவிடும்.

காரணம் மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வினை நாம் சுவாசிக்கப்படும் பொழுது… “நம்மை அறியாமலே இயக்குவதை நாம் அறியவில்லை…” ஆனால் அது நம்மை இயக்கத் தான் செய்கிறது.

விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்குகின்றார்கள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழையில் உருவாக்கி
1.அதிலே காந்தப்புலனும் கெமிக்கலும் கலந்த பின்
2.மோதலின்… அதிர்வு ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ…? அதற்குத் தக்கவாறு அந்த இயந்திரத்தை இயக்கி
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எதிர் நிலை வரும் பொழுது எலக்ட்ரானிக்காக மாற்றி
4.மற்ற அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை எல்லாம் இயக்கத் தொடங்குகிறது.

இதைப் போன்று தான் இந்த உடலான இயந்திரத்தை… பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நாம் நுகரும் பொழுது அதே உணர்வு இயக்கப்பட்டு இனம் புரியாதபடி சோர்வடைகின்றோம்… காண முடியவில்லை.

ஜோதிடம் ஜாதகம் பார்ப்போர் மனிதனைப் பார்த்துப் பார்த்து ஒரு வார்த்தையை வெளிவிட்டு… அடுத்து நம்மிடமிருந்து என்ன வருகிறது…? என்று தெரிந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு “ஒஹோ… நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…” என்று சொல்வார்கள்.

அதையே குறிக்கோளாக இருப்பதால் அவ்வாறு அறிய முடிகின்றது. பிறருடைய உணர்வின் அதிர்வுகளை வைத்துச் சொல்லலாம்.

ஆனால் கஷ்டங்களையும் குறைகளையும் நுகர்ந்து சொல்லப்படும் போது அவர்கள் வாழ்க்கையும் பாழாகும். மந்திரங்களை வைத்துச் சொல்வோரும் இதே நிலையாகி அவர்களும் பாழாகும் நிலைக்கே செல்வார்கள்.

இருந்தாலும்… இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கிறோம். நேரம் ஆகிவிட்டது என்று இராமன் மணலைக் குவித்துப் பூஜிக்கத் தொடங்கினான் என்று இராமாயணத்தில் அதைக் காட்டுகின்றார்கள்.

1.நாம் வளர வளர ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது… உடலின் தரமும் குறைகிறது.
2.அதற்குள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்..

உலக இருளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றுமே ஏகாந்த நிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.அதற்கு நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.பகைமைகள் வந்தாலும் அது நம்மை இயக்காது (முதலில் சொன்னது போல்) நமக்குள் பகைமையாகாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வுகளை மாற்றி
3.நம் பார்வையால் மற்றவருடைய தீமைகள் அகன்று செல்லும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

மற்றவரை நல்வழியில் இயக்கும் அந்த எலக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்று இந்த உணர்வு அவர்கள் உடலுக்குள் சென்று அவருடைய தீமையை அகற்றி நல் உணர்வாக மாற்றிடும் அந்த உயர்ந்த சக்தியாக நாம் பெறுதல் வேண்டும்.

அதாவது நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி நம் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகளை வலுவாக்கி அதைப் “பாதுகாப்புக் கவசமாக” நாம் அமைத்திட வேண்டும்.

தீமை செய்யும் நிலைகள் எதுவாக இருந்தாலும்… அதனுடன் நேரடியாக நாம் மோதக் கூடாது

தீமை செய்யும் நிலைகள் எதுவாக இருந்தாலும்… அதனுடன் நேரடியாக நாம் மோதக் கூடாது

 

இந்த உலகில் யாரையெல்லாம் நாம் சந்தித்திருந்தாலும்… அவர்கள் உணர்வை எதன் வழி நுகர்ந்திருந்தாலும்… நுகர்ந்த உணர்வை நமது உயிர் அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகின்றது.

அனைவரது உணர்வுகளும் நமக்குள் இப்படி வரப்படும் பொழுது
1.அதிலே இருக்கும் தீமைகளிலிருந்து விடுபட…
2.நமக்குள் அறியாது விளையும் அத்தகைய அணுக்களை வலு இழக்கச் செய்ய…
3.அருள் மகரிஷிகள் உணர்வு கொண்டு இருளை அகற்றிடும் சக்தியாக… அந்த வாலியை வென்றிட வேண்டும்.

ஒரு நோயாளியின் உணர்வை நாம் அடிக்கடி பதிவாக்கிக் கொண்டால் அல்லது ஒருவன் நமக்குத் தீங்கு செய்கின்றான் என்று அவனை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் அது வாலியாகிறது.

இராமன் வாலியை மறைந்திருந்து தான் தாக்குகின்றான் என்று காட்டியுள்ளார்கள்.
1.பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வருகின்றது.
2.அவ்வாறு வரும் போதெல்லாம்… கஷ்டமோ… தொழிலிலே நஷ்டமோ வந்தால் அல்லது உடலிலே நோயோ வந்தால்
3.அது நமக்குள் வராது மாற்றி அமைக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இருளை அகற்றிய அந்த அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம் இராமன் வாலியை நேரடியாகப் பார்க்கவில்லை. மறைந்திருந்தே தாக்கினான். இந்த வழியினை நமக்குள் எடுத்து அருள் உணர்வினை நமக்குள் சேர்த்து அதாவது
1.தீமை செய்யும் உணர்வுகளுடன் நாம் மோதிக் கொண்டே இருக்காமல்
2.நஞ்சான வாலியைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்.

நாம் எடுக்கும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உயிரிலே பட்டபின் உணர்வின் ஒளியாக எண்ணங்கள் நமக்குள் வருவதும் இந்த உணர்ச்சிகள் உடலை இயக்குவதும் என்ற நிலைகள் கொண்டு… மகரிஷிகளின் உணர்வை எதனுடன் கலக்கச் செய்கின்றோமோ அதுவாக மாற்றுகின்றது.

உதாரணமாக… சாயங்களை எடுத்துக் கொண்டாலும் பல கலவைகள் உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்தியை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அதற்குத் தக்க நிறங்கள் மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அந்த எண்ணங்களை உருவாக்கும் அணுக்கள் அத்தகைய இயக்கங்களை உடலில் செய்து கொண்டிருந்தாலும்
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்து அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினைக் கலந்து விட்டால்
4.நமக்குள் இருக்கும் தீமை செய்யும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது… வாலி என்ற நிலை வலு இழக்கப்படுகின்றது.

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து விழ்த்தினான் என்று காட்டினார்கள். இராமாயணக் காவியத்திலே இராமனைக் கடவுள் என்று சித்தரித்தாலும் “அவன் ஏன் மறைந்திருந்து தாக்க வேண்டும்…?” என்று இப்படியும் வாதம் செய்வார்கள்.

ஏனென்றால்
1.தீமையான உணர்வை நேரடியாகக் காணும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டுகின்றது.
2.ஆனால் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்துவிடுகிறது…
3.அதனின் செயலாக்கங்களைக் குறைத்து விடுகின்றது.

காவியத் தொகுப்பின் மூலம் மனித வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகிறது…? எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…? மனிதன் என்ற நிலையில் அது எந்த வலிமை கொண்டு அவனை மாற்றுகின்றது…? என்று தான் நமக்குக் காட்டினார்கள்.

இத்தகைய பேருண்மையை உணர்த்தப்படும் நிலை தான் கார்த்திகை தீபம்… அண்ணாமலையார் தீபம்…!

1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உடலின் உச்சியிலே… நம் உயிரிலே…
2.அருள் உணர்வினை ஏற்றி வைக்க வேண்டும்… அதை இயக்கச் சக்தியாக மாற்ற வேண்டும்.

இன்றைய உலகம் போகும் போக்கில் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்

இன்றைய உலகம் போகும் போக்கில் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்

 

யாம் சொன்ன ஆத்ம சுத்தியை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி எடுத்து உங்களுக்குள் வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) மாற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றிட முடியும்.
2.குறைபாடுகள் வந்தால் அது இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் மன வலிமையும் வரும்.

உங்கள் அனுபவத்தில் பெறலாம்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் உலக நடப்புகளை இன்று டி.வி. வாயிலாகவோ மற்ற வேறு வகைகளிலோ பார்த்தாலும் அல்லது காதிலே கேட்க நேர்ந்தாலும் அது அனைத்தும் “நம் கண்களுக்குத் தான் வருகின்றது…”

காற்றிலிருக்கக்கூடிய அலைகளை ஆண்டனாக்கள் எப்படிக் கவர்கின்றதோ அதைப் போன்று தான்
1.இன்றைய உலக நடப்புகளையும் நமது கண் ஆண்டனா போன்று கவர்ந்து நம் ஆன்மாவாக்கிச் சுவாசிக்கச் செய்கின்றது.
2.அது உயிரின் காந்தத்தால் கவரப்பட்டு உயிரிலே பட்டு உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

ஆண்டனா கவரும் அலைகளை டி.வி. கவர்ந்து டி.வி.க்குள் நுழைந்த பின் அதற்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் (PARTS) இயக்கி எப்படிப் படமாகச் சப்தமாகக் காட்டுகின்றதோ அதே போல நம் உடல் உறுப்புகளிலும் அத்தகைய உணர்ச்சிகள் ஊட்டப்பட்டு நாம் பார்த்ததைச் செய்ல்படுத்தத் தொடங்கி விடுகிறது.

இதை உடனுக்குடன் நாம் மாற்ற வேண்டும். அதை எப்படியும் நீங்கள் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் நினைவுபடுத்தித் தியான பயிற்சியாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

1.என் குரு அந்தச் சக்தியைப் பெறச் செய்தார்.
2.காரணம் நல்லவர்களுக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகின்றது.
3.நல்லவர்களைக் காக்க வேண்டுமல்லவா…!

ஆகவே உலக நடப்புகளைக் கேட்க நேர்ந்தால் நமக்குள் எத்தனையோ பதட்டமும் பயமும் வருகின்றது. “தியானம் இருந்தேன்…” என்று சொன்னாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வருவதை உடனுக்குடன் சுத்தப்படுத்தவில்லை என்றால்
1.அது உமிழ் நீராக மாறி உடலுக்குள்ளும் சேருகின்றது. எலும்புக்குள் பதிவும் அதிகமாகி விடுகிறது.
2.அதற்குப் பின் உடல் நோயாகவோ மன நோயாகவோ மாறுகிறது.

ஆகவே உலக நடப்புகளைக் கேட்டாலும் அதனை உடனே நமக்குள் மாற்றிப் பழக வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றிய “குறிப்புகளை…” அதிகமாக நாம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

மற்ற உணர்வுகள் பதிவாகாதபடி… அது உமிழ் நீராக உடலுக்குள் செல்லாதபடி மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

ஆத்ம சுத்தியின் முக்கியமான மூலக்கூறு இது தான்…!

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்

 

இரண்டு நண்பர்கள் சேர்ந்திருக்கும் நிலையில் அதிலே ஒரு நண்பன் தவறு செய்தாலும் அதைப் பற்றி நாம் சொல்லப்படும் பொழுது… “கூட இருக்கும் அந்த நண்பன்” அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

காரணம்…
1.அவருடைய உணர்வு அவனுக்குள் அது முன் பகுதியில் வலுவாகச் சேர்ந்திருக்கப்படும் பொழுது
2.நம் உணர்வை நுகர்ந்தவுடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி நம்மைத் தான் குற்றவாளியாகச் சொல்லச் செய்யும்.

அப்போது நாம் நுகர்ந்த உணர்வு… அவன் உணர்வை வலு சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வுகள் அதை ஏற்பதில்லை. இருந்தாலும் நம் ரத்தங்களில் இதைப் போன்ற உணர்வுகள் இணைந்து விடுகின்றது.

இதனால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுக்களுக்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து ஒடுங்குகின்றது.
1.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தி இழக்கின்றது.
2.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் பொழுது ஒடுங்குகிறது… அதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஏற்கவில்லை என்றாலும் உணர்வின் அழுத்தம் அதிகமாகும் பொழுது… கூட கொஞ்ச நேரம் நிலைநிறுத்தி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை.

நாம் எப்படிச் சுவாசத்தின் மூலம் “மூச்சு விடுகின்றோமோ…” அதே மாதிரி
1.அந்த இயக்கத் தொடருக்கு பிரணவம்… அந்த இயக்கம் வேண்டும் என்றால்
2.உடலில் ஏற்படும் உஷ்ணத்தினால் வாயு உண்டாகின்றது… அதனுடைய அழுத்தம் உண்டாகிறது.

சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனைகள் வருகிறது…? எந்தெந்தப் பொருளை அதிகமாகப் போடுகின்றோமோ அந்த மாதிரி வாசனைகள் அதிலிருந்து வருகின்றது.

அது போலத் தான்
1.உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் நெளிகிறது… உடலில் மாறுபட்ட உணர்ச்சிகள் தோன்றும்… இதையெல்லாம் எது இயக்குகின்றது…?
2.நம் உயிர் எலெக்ட்ரிக்காக இருக்கிறது. நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்காக எதிர்நிலையான அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இப்படி எதன் உணர்வை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் ஆகின்றதோ… ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் நம் ரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பல விதமான அணுக்களின் மாற்றங்கள் ஆவதும் நிகழ்கிறது.

நல்லவரிடம் பேசப்படும் பொழுது அதற்குத்த நிலையில் அமைதியாகிறது. ஆனால் அடுத்து ஒரு சண்டை போடுபவர்… வெறுப்பாகத் தாக்குபவர்… திட்டிப் பேசியவர்களின் உணர்வை நுகர்ந்தால்
1.மிகவும் இக்கட்டான நிலைகள் ஆகி இந்த உடலுக்குள் ஒன்றுக்கொன்று போர் முறையாகின்றது.
2.நம் உடலிலே சலனங்களும் சஞ்சலங்களும் ஏற்படுகிரது.

ஆக… நல்ல அணுக்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படும் பொழுது உடல் சோர்வடைகின்றது… உணர்ச்சிகள் மாறுவதையும் பார்க்கலாம்.

எந்த உணர்ச்சியின் தன்மையைக் கூட்டுகின்றோமோ… கண் வழி எந்த உணர்வை அதிகமாக்குகின்றமோ… கண்கள் நுகர்ந்து உயிரிலே மீண்டும் அநத உணர்ச்சிகள் அதிகமாக ரத்த நாளங்களில் சேர்க்கப்படுகின்றது.
1.அதனால் பதட்டமும் பயமும் வருகின்றது… அவர்கள் இருவருக்குள்ளும் எப்படிச் சண்டை போட்டுக் கொள்ளப் போகின்றார்களோ என்று…!
2.சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்தப் பதட்டம் வரும்.

நல்லதைச் சொல்லத் துணிவு வந்தாலும் அவர்களைச் சிந்திக்கும்படிச் செய்யும் பதிலைச் சொல்லத் தெரியாது. அப்போது நம்மை அறியாதபடி பகைமை உணர்ச்சிகள் உடலிலே வந்து விடுகின்றது.

இது அனைத்துமே இரத்தங்களில் தான் முதலில் கலக்கின்றது.

நாம் நுகரும் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவி அதன் வழியே நம்மை வாழச் செய்து… அந்த உணர்வுகளே நம்மை ஆளுகின்றது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு என்ன செய்ய வேண்டும்…?
1.நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்.
2.நம் உடல் முழுவதும் இந்த உணர்ச்சிகளைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியும் சாந்தமும் இயக்க முடிகின்றது.

அந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உயிர் உடலுக்குள் பரவச் செய்து தீமையான உணர்வுகளை அமைதிப்படச் செய்கின்றது.

ஆனால் “சாதாரண மனிதனின் உணர்வை வைத்து…” அதை அமைதிப்படுத்த முடியாது.

உங்களுக்குள் பதிவு செய்த அந்த மகரிஷிகள் உணர்வை எண்ணி எடுத்து ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் கண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது…
1.ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற அந்த வித்திலே (தீமையான வித்தில்) இணைக்கப்படும் பொழுது
2.கொஞ்சம் கொஞ்சமாக இதனுடைய வலு கூடும் பொழுது அதை அடக்கக் கூடிய சக்தியாக அது மாறுகின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்

 

நீங்கள் ஏதேனும் வேலையாக வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள் அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால்… அது சமயம்
1.அகஸ்திய மாமகரிஷிகளையும்
2.அவர் துருவ மகரிஷியான நிலையையும்
3.துருவ நட்சத்திரமான நிலையையும் இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.

அதனின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணியபின் உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.

இந்த முறையில் நீங்கள் பதிவு செய்யும் ஞான வித்துக்கள் உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று… நீங்கள் எதை எண்ணிப் பதிவு செய்தீர்களோ அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை… அத்தகைய உணர்வின் அணுக்களை இரத்த நாளங்களில் பெருக்குகின்றது.

1.முதலில் கரு முட்டையாகின்றது.
2.பின் அதனின் உணர்வின் தன்மையை எண்ண எண்ண அவைகள் அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.

உதாரணமாக… கோழி முட்டையிட்ட பின் அதை அடைகாத்து அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின் அந்த வெப்பத்தின் துடிப்பு கொண்டு கருவின் துணை கொண்டு குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக வெளி வந்த பின் தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.

இதைப் போன்று
1.இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களை நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும் உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது.
2.அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களில் நினைவுபடுத்தும் பொழுது அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.

அதாவது… நீங்கள் இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… அது உங்களுக்குள் “அடைகாக்கப்படுவது…” போன்றதாகி விடுகின்றது.

கோழி தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து அடைகாக்கின்றது.

அதைப் போன்று நீங்கள் எந்தத் தொழிலுக்குப் போவதாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்
1.அடிக்கடி நினைவுபடுத்தி அந்தச் சக்தியை நீங்கள் பெறும் போது அடைகாப்பது போன்று ஆகி
2. மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்க்கும் திறந் பெறுகின்றீர்கள்.

கோழி தான் இரை தேடும் பொழுது தன் குஞ்சுகளைக் கூவி அழைத்துத்தான் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கிறது.

அதைப் போன்று நமக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் அணுக் கருவாகி விட்டால்
1.இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது
2.நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
3.கண்கள் வழியும் காதுகள் வழியும் உடல் வழியும் நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் கவர்ந்து
4.நமது உடலுக்குள் பரவச் செய்து அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.

நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால் அது நமக்குள் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் “மாமகரிஷி அகஸ்தியன்…” சென்ற பாதையில் செல்லும்.

நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு வெறுப்புகளை நுகர்கின்றோமோ அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம்.

ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில் “ஊழ்வினை…” என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கருவாக உருப்பெற்றுவிடுகின்றது. இப்படிப் பதிவாகி… பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால் அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம்.

அப்படி நுகரும் சக்தி பெற்றபின் அந்த உணர்வுகளை நமது உயிர் உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.

அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு வீரியம் ஊட்டுகின்றது.

1.வேதனைப்படுவோர் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் முதலில் சில காலம் தெரியாது.
2.இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நுகர்ந்தது அடைகாப்பது போன்று அந்த அணுக்கருக்கள் வளர்ந்து விட்டால்
3.குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது தாய் கோழி கூற்று பரப்பித் தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று
4.நமது உயிர் உணர்வின் ஒலி அலைகளை எழுப்பிச் நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு கண்களுக்கும் செவிகளுக்கும் மூக்கிற்கும் உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி அதன் வழி சுவாசிக்கச் செய்து அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.

காலையில் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுதோ தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால் அதை அடைகாத்தது போன்றதாகின்றது.

அவ்வாறு அடைகாத்து அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது
1.நம்மையறியாமலே நமக்குள் அந்த மகரிஷிகள் பால் எண்ணங்கள் செல்லும்.
2.இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் நாம் எண்ணுவதற்கு முன்பே அந்த உணர்வைக் கூட்டி
3.அருள் உணர்வுகளைப் பெறும் அந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ண எண்ண அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து (திரும்பத் திரும்ப நுகரும் உணர்வுகள்) அந்தக் கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் நம்முள் குஞ்சுகளானாலும்
1.அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் போது இவைகளெல்லாம் கருக்களாகின்றன.
2.பின் நினைவாக்கப்படும் பொழுது அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.

இப்படி நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்… ஒவ்வொரு குணத்திலும்… ஒவ்வொரு உணர்விலும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும் (இது முக்கியமானது).

அந்த மகரிஷிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த அரும் பெரும் சக்திகளை நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத்தான் இதை உபதேசிப்பது
2.அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்கு எமது அருளாசிகள்.

தீமைகளைத் தடைப்படுத்தும் வழி

தீமைகளைத் தடைப்படுத்தும் வழி

 

தீய உணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது நம்மிடத்தில் சிந்தித்துச் செயல்படும் தன்மை வருகின்றது. அப்படிச் சிந்திக்கும் தன்மை இல்லையென்றால் பிழை என்ற நிலை உருவாகும்.

பிழை என்ற நிலையில் நண்பர்களுக்குள் சிறிது குறையாகி விட்டதென்றால் பிறகு நீங்கள் குறையத்தான் வளர்க்க முடியுமே தவிர அங்கே நல் உணர்வை எடுக்க முடியாது.

நண்பர்களுக்குள் தவறு என்று யார் செய்திருந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.சந்தர்ப்பங்களால் நம்மை பிறிதொரு தீமை இயக்கி விடாதபடி
2.நாம் நம்மை முதலில் பாதுகாக்கும் நிலை பெற வேண்டும்.

எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை எண்ணி நுகர்ந்து தீமைகளைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

யாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்…? எப்படித் தீமைகளைத் தடுக்க வேண்டும்…? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.

1.“சாமி சொன்னார்கள்… மறந்து விட்டது” என்று இருக்கக்கூடாது.
2.அருள் உணர்வுகளை உங்களுக்குள் “ஆழமாகப் பதிவு” செய்து கொள்ள வேண்டும்.
3.இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால் ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது அதை நாம் உற்றுக் கேட்கும் பொழுது அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.

ஆனால் பிறர் தான் சொல்லும் கஷ்டத்தைக் கேட்கவில்லை என்றால்
1.“என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார்…!
2.நாம் சொல்கிறோம்… காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறது” என்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

ஆகையினால் வேதனையின் உணர்வுகளைக் கேட்டால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அதனைச் செவியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்… உள்ளே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது.

நம்முடைய எண்ணங்கள் துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளைத் தன்னுள்ளே கவராது.

இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.“நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…?
3.ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்…?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
4.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

ஆகையால் ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போம் என்றால் அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.

அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்… ஆனால் ஈர்க்காது. இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள். அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.
1.யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால்
2.அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.
3.அதன் பிறகு யாம் கோபமாக “போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.

அப்படி யாம் சொன்னால் “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…!” என்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி மடக்கி அனுப்புகின்றோம்.

சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று நீங்கள் சொன்னால், யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால் அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வெண்டுமா…?

யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.

அதைப் போல் மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்…? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக… இரத்தத்தில் அணுவின் கருவாக மாறும்.

ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

தீமைகள் வராது தடுக்க ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்

தீமைகள் வராது தடுக்க ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்

 

மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைத் தம்முள் கவர்ந்து வலுவாக்கும் பொழுது நம்மிடத்தில் தீமை என்ற நிலைகள் அணுகுவதைத் தடுத்து விலக்கிவிடும்.

1.நாம் கவராது விட்டுவிட்ட தீமையின் உணர்வுகள் அனைத்தையும்
2.காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும்.
3.இதனால் நமது பூமியில் பரமாத்மாவாக இருப்பது சுத்தமாகின்றது… நமது ஆன்மாவும் சுத்தமாகின்றது.
4.நமது ஆன்மா சுத்தமாகும் பொழுது நமது உடலில் உள்ள ஜீவான்மாவும் சுத்தமாகின்றது.
5.நமது உயிரான்மா அது ஒளியின் தன்மை பெறுகின்றது.

மெய் ஞானிகளின் அருள் உணர்வைப் பெறுகின்ற பொழுது அது நமக்கு சொர்க்கவாசலாக அமைகின்றது. இதை விடுத்துக் கோவிலுக்குச் சென்று தெய்வத்தைத் தரிசிக்கின்றேன் என்று சொல்லி ஒருவர் மீது ஒருவர் விழுந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்லும் பொழுது நமக்கு வெறுப்பு தான் வரும்.

ஆகவே இது மனிதருக்குகந்த நிலையல்ல… அசுர உணர்வுதான் வரும்.

அதே போன்று கோவிலில் பிரசாதம் கொடுக்கும் பொழுது பாருங்கள். நான் முதலில் பெற வேண்டும் என்று தான் எண்ணுவார்களே தவிர அனைவரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு மனதைக் கட்டுப்படுத்தி அங்கே நிற்கிறார்களா என்றால் இல்லை.

மற்றவர்கள் முதலில் பெறட்டும் என்று நாம் எண்ணும் பொழுது நமது மனம் கொண்டு நாம் இருந்த இடத்திலிருந்தே பெற முடியும்.

அவர்கள் அருகிலே சென்று பெறுகின்றனர். ஆனால்
1.அவர்கள் அருகில் செல்வதற்கு முன்னால் நாம் இருந்த இடத்திலிருந்து உடனடியாகப் பெறுகின்றோம்.
2.இந்த உண்மையை அறிந்து கொள்தல் வேண்டும்.

ஆகவே நமது மனம் பண்பட்டால்தான் நமது குணங்கள் பண்படும். நமது குணங்கள் பண்பட்டால்தான் நமது வாழ்க்கையினைப் பண்படுத்தும் நிலை வரும்.

இவைகளை எல்லாம் யாம் பெற வேண்டும் என்றுதான் எமது குருநாதர் மலை காடு என்று பல இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார்.

அப்படி அழைத்துச் செல்லும் காலத்தில் ஒரு முறை எமக்கு ஒரு பச்சிலையைக் காண்பித்துக் கொடுத்தார். அந்தப் பச்சிலையைக் கையில் கொடுத்து
1.“அதில் உன் உணர்வின் மணத்தை ஓது…
2.எண்ணத்தால் எண்ணி அங்கே போட்டு விட்டு வா…!” என்றார் குருநாதர்.

குருநாதர் சொன்ன முறைப்படி உணர்வின் மணத்தை ஓதிப் போட்டு விட்டு வந்த பின் அந்த பக்கம் புலி ஒன்று வருகின்றது. யாம் அங்கு போட்டிருந்த பச்சிலையை அந்தப் புலி நுகர்ந்த பின் அப்படியே அசையாமல் நிற்கின்றது.

அதே சமயத்தில் மலைக் காட்டுக்குள் “மறதிப் பூடு” என்பதை குருநாதர் எமக்கு காண்பித்தார்.

இந்த மறதிப் பூட்டினை இலேசாகக் கிள்ளி யாராவது ஒருவரது வீட்டில் போட்டு விட்டு வந்து விட்டால் அல்லது அவர்களது வீட்டின் கதவிடுக்குகளில் வைத்து விட்டாலோ போதும்.

அவர்கள் வீட்டிற்கு வெளியே என்னென்ன செயல்கள் வேலைகள் செய்து விட்டு வீட்டிற்கு வந்தாலும் அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்காது.

இந்நிலையை நாம் ஒருவருக்குச் செய்தால் என்னவாகும்…? நாம் பெரிய மனிதர் ஆகிவிடலாம். இது போன்ற நிலைகள் நாட்டில் நிறைய உண்டு.

குருநாதர் இன்னும் சில வேர்களைக் காண்பித்தார். அந்த வேர்களைக் கையில் வைத்துக் கொண்டால் விஷப் பூச்சிகள் மட்டுமல்ல… புலியும் கூட ஒடுங்கி நிற்கின்றது.

ஏனென்றால் மனித உடலுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டபின் விஷம் கொண்டவைகள் பயப்படுகின்றன. அவைகளுடைய விஷம் ஒடுங்குவதினால் அவைகள் தங்களுடைய வலுவையும் இழந்து விடுகின்றன.

குருநாதர் ஒவ்வொன்றாகக் காண்பித்து இயற்கையின் உண்மையின் நிலைகளை உணர்த்தி எமக்குச் சில ஆசைகளை ஊட்டுகின்றார்.

இவைகளைக் காணும் பொழுது எமக்குள் உடனே அகந்தை வருகின்றது. எவராவது வம்புக்கு வரட்டும்… அவர்களை ஒரு கை பார்ப்போம்…! என்ற எண்ணம்தான் வருகின்றது.

ஆனால் தீமைகள் நமக்குள் வராது தடுக்கும் பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் இல்லை.

அப்பொழுது குருநாதர் தீமைகள் உடலுக்குள் புகாது தடுக்கும் நிலைகள் கொண்டு நல்லுணர்வின் தன்மையை உனக்குள் வலுவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.பிறரை வீழ்த்துவது எளிது.
2.வீழ்த்தும் உணர்வு, திருட்டுத்தனமாக உனக்குள் சென்று விடுகின்றது.
3.வீழ்த்தும் உணர்வை உனக்குள் எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் உள் நின்று என்ன செய்யும்…?
4.அதே தவறைத்தான் செய்ய வைக்கும்.
5.ஆகவே “நான் கொடுத்த சக்தியை நீ இழக்கத்தான் நேருமே தவிர அதை வளர்க்க முடியாது.

ஒருவர் தீமை செய்கிறார் என்றால் அவரைத் தீமையின் உணர்வுகளிலிருந்து மீள வைக்க வேண்டும். அவருக்குத் தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்

“நீ ஏன் அவர்களுக்கு தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்…?” என்று குருநாதர் கேட்டார்.

1.“ஓ…ம் நமச்சிவாய” என்று அவருக்குள் தவறின் உணர்வுகள் இயங்குகின்றது.
2.அவர் செய்யும் தவறின் உணர்வுகளை நீ நுகர்ந்தால் “சிவாய நம ஓ…ம்” என்று அவருடைய தவறின் உணர்வுகள் உனக்குள் வந்து
3.அவர் செய்த தவறையே உன்னையும் செய்யத் தூண்டும் என்று தெளிவாக்கினார்.

ஒவ்வொரு மனிதருடைய உயிரையும் கடவுளாக மதித்தால் அவர்களுடைய உடலைக் கோவிலாக மதித்தால் அவர்கள் செய்யும் தவறின் உணர்வுகள் உனக்குள் வராது என்று எனக்கு உபதேசித்தார்.

இதன் வழி கொண்டு
1.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் தவம் இருப்போம்.
2.அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இந்த உடலுக்குப்பின் “பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம்” நாம் அனைவரும் பெறுவோம்.

மன வலிமையைக் கூட்டித் தீமையை நீக்கும் நிலை

மன வலிமையைக் கூட்டித் தீமையை நீக்கும் நிலை

 

சாதாரணமாக மனிதர் பாம்பினைக் கண்டால் அஞ்சுகின்றார். ஆனால் பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் ஒருவன் ஒரு பாம்பைப் பிடிக்கச் சென்றால் பாம்பு அவனைக் கண்டு அஞ்சுகின்றது. அவன் கையில் ஒரு குச்சி மட்டுமே இருக்கும்.

பாம்பைக் கண்டு நாம் பயப்பட்டோம் என்றால் பாம்பு இந்த உணர்வை நுகர்ந்து “சிர்…” என்று சீறித் தாக்கும்… பயந்த மனிதன் தாக்குகின்றான் என்று உணர்கின்றது.

1.தெளிந்த மனிதன் வலிமையைக் கண்டு “இவன் தாக்குவான்” என்று பாம்பு அஞ்சி ஓடுகின்றது.
2.ஆனால் பயந்தவன் தாக்கும் பொழுது பாம்பும் அஞ்சி இவனைத் தாக்குகின்றது.

வலிமையுள்ளதை நுகர்ந்துணரும் சக்தி பிற உயிரினங்களுக்கு உண்டு. மனிதருக்கும் இந்த அறிவு இருப்பினும் இந்த அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை. ஆதலால் நாம் அறியும் தன்மை இழந்திருக்கின்றோம்.

பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் இந்தப் புற்றுக்குள் பாம்பு இருக்கிறது என்று அறிகின்றான். இவனின் மணத்தை நுகரும் பாம்பு புற்றுக்குள் அஞ்சி ஒடுங்குகின்றது. இவன் தூண்டும் போது வெளி வரும் பாம்பு இவனைத் தாக்குவதில்லை… அஞ்சி ஓடுகின்றது.

1.இவன் பாம்பை எளிதில் பிடித்துக் கவட்டையில் போட்டுப் பாம்பு உயிருடன் இருக்கும் பொழுதே, பாம்பின் தோலை உரிக்கின்றான்.
2.இத்தகைய உணர்வுகள் பாம்பு பிடிப்பவனிடத்தில் இருப்பதால் அவனிடமிருந்து வெளிப்படும் மணத்தைப் பாம்பினம் காண்கிறது.
3.ஆகவே அவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.
4.சாதாரண மனிதனைக் கண்டால் சீறித் தாக்குகின்றது… எதிர்த்து நிற்கின்றது.

இதைப் போன்றுதான் வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வுகள் எத்தனையோ நம்மிடத்தில் வருகின்றது.

நாம் அன்பும், பண்பும் பரிவும் கொண்டு பிறருடைய கஷ்டங்களை நோய்களைக் கேட்டறிந்து உபகாரம் செய்தாலும் நாம் கேட்டறிந்த உணர்வுகள் “ஓ…ம் நமசிவாய…” என்று நம் உடலாக மாற்றுகின்றது. அதுவே வினையாகின்றது… வினைக்கு நாயகனாக அதன் வலுவைக் காண்பிக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே இது போன்ற தீமைகளிலிருந்து எங்ஙனம் நாம் விடுபட வேண்டும்…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு இயந்திரத்தை உருவாக்கும் இஞ்சினியர் அந்த இயந்திரத்தில், எங்கெங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும்…? எங்கெங்கே வலிமை தேவை…? என்பதைக் கணக்கிட்டு உலோகத் தன்மையின் வலிமையையும் இயந்திரத்தில் ஏற்படும் உராய்வையும் கணக்கிட்டு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

ஆனால்… இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்கும் பொழுது உலோகக் கலவையில் வலு சிறிது குறைவாக இருக்கும் பொழுது இயந்திரம் நொறுங்கி விடுகின்றது.

பின் எதனால் இப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கின்றார். சிந்தித்து இயந்திரத்திற்குண்டான வலிமையைக் கூட்டுகின்றார். இதனைத் தொடர்ந்து சரியான ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

1.இதைப் போன்று தான் ஞானத்தின் நிலைகள்…!
2.தீமை என்று ஒன்று வரும் பொழுது நாம் அருள் ஞானிகளின் உணர்வை நம்முள் பதிவாக்கினால்
3.உடனே சிந்தனை தூண்டப்பட்டுத் தீமைகளை அகற்றும் தன்மை நம்மிடத்தில் உருவாகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அது நம்முள் விஷத்தின் தன்மையை அடக்கி
2.நம்மிடத்தில் சிந்திக்கக்கூடிய மன வலிமையைக் கூட்டுகின்றது.

இத்தகைய ஆற்றலை நீங்கள் பெற்றால் தான் உங்களுடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும். உங்கள் வாழ்க்கையைச் சீராக்க முடியும்.

பேரருள் பேரொளி பெறும் நிலையாகத் தனக்குள் அருள் ஒளியின் உணர்வின் தன்மையைக் கூட்டும் பொழுது அதன் உணர்வின் அலைகளை நீங்கள் பெற்று இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை…! என்ற நிலையை அடைந்திட முடியும்.

இதை உணர்ந்து ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் தம்முள் நஞ்சினை வென்று பேரருள் பெற்று பிறவியில்லா நிலை பெறும் அருள் சக்தி பெற்று பிறவியில்லா நிலை என்ற அருள் வாழ்க்கை வாழ்ந்து இவ்வாழ்க்கையில் பிறவியில்லாப் பெருநிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

யாரையும்… எதையும்… எப்பொழுதும் துன்புறுத்தக் கூடாது… நாம் கல்யாணராமனாக வேண்டும்

யாரையும்… எதையும்… எப்பொழுதும் துன்புறுத்தக் கூடாது… நாம் கல்யாணராமனாக வேண்டும்

 

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம். வேதனைப்படுபவர்களையும் சங்கடப்படுபவர்களையும் கோபப்படுபவர்களையும் ஏமாற்றுபவர்களையும் பார்க்கின்றோம்.

இத்தனை உணர்வுகளையும் சுவாசித்து உயிரிலே பட்டபின் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று சதாசிவம் ஆகிக்கொண்டே இருக்கிறது.. அதாவது உயிர் நம் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…?

1.காலையிலிருந்து இரவு வரை சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்தத் தீமையான உணர்வுகளை மறந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைச் சேர்த்துச் சிவமாக்கி
3.எல்லோருக்கும் நல்ல நிலைகள் கிடைக்க வேண்டும் என்ற உணர்வை நம் உடலாக்க வேண்டும்.
4.அப்படி ஒன்று சேர்த்தால் ஒன்று சேர்த்து வாழும் அதுதான் கல்யாணராமா…!
5.நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஏன்றைக்குமே சந்தோசமாக இருக்கும்.

ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். கலந்து கொண்டோர் அனைவரும் அவரவர்கள் திறமையைக் காட்டுகின்றார்கள். திறமையைக் காட்டிச் சீதாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று விரும்புகின்றார்கள்.

ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?

தீமை செய்யும் அந்தக் காண்டீபத்தையே ஒடித்து விடுகின்றான்.
1.காண்டீபம் என்பது உடலில் விளைந்த தீமையான உணர்வுகள் தான்.
2.அதை ஒடிப்பது என்பது சாமானியமானது அல்ல… இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அந்தத் தீமை செய்யும் காண்டீபத்தை இராமன் ஒடிக்கின்றான். அப்பொழுது சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான். அரவணைக்கப்படும் பொழுது கல்யாணராமன் ஆகின்றான்.
1.உங்கள் மீதுள்ள வெறுப்பான குணத்தை நான் நீக்கி விட்டால் இரண்டு பேருடைய எண்ணங்களும் ஒன்றாகின்றது…
2.அப்பொழுது மகிழ்ச்சி வருகின்றது கல்யாணராமா…!

என் உடலில் இருக்கும் தீமைகளை நீக்கிவிட்டு உங்கள் மீது இருக்கும் வெறுப்பை நீக்கி பின் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லும் பொழுது அந்த உணர்வுகள் உடலில் ஒன்று சேர்ந்து வாழ்கின்றது.

இந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் கோவிலை அமைத்துள்ளார்கள் ஞானிகள்.
1.எண்ணங்களை எப்படி நுகர வேண்டும்…?
2.அந்த எண்ணங்கள் அனைத்தையும் எவ்வாறு ஒன்று சேர்க்க வேண்டும்…?
3.பகைமை வளராதபடி எவ்வாறு தடுக்க வேண்டும் என்று உருவம் அமைத்து அருவ நிலைகளை நமக்குக் காட்டியுள்ளார்கள்.

கோவிலுக்குச் சென்று நாம் இப்படி நினைக்கின்றோமா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

 

குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எமக்குள் பெறச் செய்ததைப் போன்று உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை யாம் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால்
1.உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்கும்.
2.புதிதாகத் தீய வினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின் அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால்தான் வளரும். நான் வித்தை ஊன்றி விட்டேன் என்று சும்மா இருந்தால் வளருமா…?

அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்து விட்டோம் என்றால் அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும்.

எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.

அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி ஒளியின் உடலாகத் தாம் பெற்றார்.
1.அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் பெறக்கூடிய தகுதி பெற்றால்
2.அகஸ்தியரைப் போன்று நாமும் நமது உடலில் உள்ள அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றியமைக்க முடியும்.

நம்மிடம் உள்ள முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதுத் தீய வினைகள் நமக்குள் சேராமல் தடுத்து நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.

பிறிதொரு உணர்வை நாம் நுகர்ந்து கொண்டபின் நமது உணர்வுகள் என்ன செய்கின்றது…? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின் நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது வெறுப்போ அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது…?

இதெல்லாம் நமது உடலில் உள்ள “உணர்வுக்கொப்பத்தான் வரும்” என்பதனை நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர வேண்டும். தெரிந்து தெளிந்து வாழ்ந்திடும் வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம்.
1.நமக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.நம்மை வெறுப்படையச் செய்வது எது…?
3.வெறுப்பான பின் குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது…?
4.அந்த வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை நாம் அனுபவப்பூர்வமாகக் கொண்டு வர வேண்டும்.

இத்தனையும் யாம் கஷ்டப்பட்டுத்தான் தெரிந்து கொண்டோம்.
1.கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குத்தான் உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லிப் பதிய வைக்கின்றோம்.
2.தீமைகளை நீக்கும் சக்தியை நீங்கள் பெறுவதற்காகத் தான் யாம் உபாயங்களைக் கூறுகின்றோம்.
3.யாம் அப்படிச் செய்து விடுவோம்… இப்படிச் செய்து விடுவோம்…! என்று சொல்லவில்லை.

உதாரணமாக… பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால் கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால் விபத்தைப் பார்த்ததின் உணர்வு அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

அடுத்த முறை அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே…? என்று தேடிப் பிடித்துப் போய்ப் பார்ப்பார்.
1.ஆக பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும்
2.அடுத்த முறை அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால் இல்லை.
3.ஏனெனில் ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு உணவு தேவை.
4.நாம் சும்மா இருந்தாலும் அது நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

நாம் எத்தகைய நிலைகளை வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி… பரிவுடன் பார்த்தாலும் சரி… அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

உதாரணமாக… குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவது ஒன்றைக் கண்டால் அடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. இருந்தாலும்…
1.பின்னாடி அதனின் நினைவு வரும் பொழுது அந்தக் குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும்.
2.திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது.

ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும் மன வலிமை கொண்டு “என்ன…? ஏது…!” என்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.

குழந்தைப் பருவத்தில் அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால் அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

அதே சமயத்தில் குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால் அது அதனிடத்தில் ஆழப் பதிந்து விடுகின்றது. மீண்டும் அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.

வேதனை போன்ற மற்ற உணர்வுகளைப் பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது
1.பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள் நம்மிடத்தில் பதிவதில்லை.
2.வேதனையான குணத்தின் உணர்வே நமக்குள் நினைவில் வரும்.

குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில் தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வே அதிகமாக வரும்.
1.அதுவே முன்னனியில் நிற்கும்
2.குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும்… தீயதையும் பதிவு செய்து கொள்ளும்.
3.வளரும் பருவம் கொண்ட சரீரங்களில் இந்த நிலை.

மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் பதிவு செய்து கொண்டு அடுத்தடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால் அந்தச் சக்தி நமக்குள் வரும்.

நமக்கு நோய் என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு “மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான்…” அந்த நோயே நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.

1.ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களையும் தத்துவங்களையும் கேட்க நேரும் பொழுது
2.நமது கவலைகள் வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும்.
3.அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.

ஏனென்றால்… வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர்களிடத்தில் நல்ல உணர்வுகள் எதுவும் பதியாது.

இந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால் இந்த உடலில் இருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

ஆகவே நமது வாழ்க்கையில்
1.நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டுத் தியானங்களை வலுப்படுத்தி
2.அதன் மூலம் ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியான சக்திகளை நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் சத்தாகச் சேர்ப்போம்.

நாம் அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று தொழில் வளம் பெற்று உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.