இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது

 

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம்… ஆனால் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நாட்டில் மாட்டு வண்டியிலே சாமான்களை ஏற்றிச் செல்கின்றார்கள் சந்தர்ப்பத்தில் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டால் மாடுகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அங்கே அருகில் இருக்கக்கூடிய மக்கள் ஓடிச்சென்று
2.உணவுக்காக அந்த மாட்டினுடைய தசைகளை இரக்கமற்று அறுத்து எடுத்துச் செல்கின்றார்கள்
3.அதிலே அடிபட்ட மனிதனின் தசைகளையும் கூட அறுத்து எடுத்துச் சாப்பிடச் செல்கின்றார்கள்.

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் இப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது,.

இத்தகைய நேரத்தில் இராமாயணத்தில் கூறியது போல நாம் சிறிது காலமே வாழ்க்கை வாழ்கின்றோம்.

1.இதற்குள் நாம் மனதை ஒன்றாக்கி உடலுக்குள் ஒன்றென இயக்கி
2.இந்த உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி
3.உயிருடன் ஒன்றும் உணர்வை ஒன்றாக சேர்த்து
4.அந்த உண்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தும் போது நமக்குள்ளும் வளர்கின்றது… தீமைகளை அகற்றும் சக்தி இந்தப் பூமியிலும் பரவுகின்றது… நம் உடலுக்குள்ளும் அது பெருகுகின்றது.

கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படித் தீமைகளைப் பிளந்ததோ அதே போன்று மனிதர்களாக இருக்கக்கூடிய நாம்
1.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இந்தப் பூமியில் கலந்திருப்பதை அந்த உணர்வைப் பெருக்கி
2.தீமையை நீக்கும் அந்தச் சக்தியை நாம் சுவாசித்து
3.நமக்குள் தீமை புகாது தடுத்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.

விஷ உலகமாக மாறிவரும் வேளையில் இன்று இருக்கக்கூடிய மனிதர்கள் இனிமேல் எப்படி எல்லாம் செயல்படுத்துவார்கள்…? என்று சொல்ல முடியாது.

இந்த உலகையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார்கள் எதிர்பாராதபடி ஒருவருக்கொருவர் ஏவினால்
1.அந்தக் குண்டுகள் வெடித்தால் இந்தப் பூமியில் பரவத்தான் போகின்றது
2.விஷக் கதிரியக்கங்கள் அதிகமாகப்படும் பொழுது சூரியனின் ஒளிக்கதிர்களைத் தடுக்கத்தான் போகின்றது.

அப்படித் தடுத்து நிறுத்தி விட்டால் சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவவில்லை என்றால் துருவத்தில் எப்படிப் பனிப்பாறைகள் உறைகின்றதோ அதைப் போன்று
1.நாம் இருக்கும் இடங்களில் பனிப் பாறைகள் உறைந்து
2.உயிரினங்களே அனைத்தும் மறைந்து போகும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

அப்போது பூமி சூரியனைக் கடந்து விலகிச் சென்றுவிடும். இயக்கச் சக்தி கடந்தால் இந்தப் பிரபஞ்சமே சுக்குநூறாகிவிடும்… பின் பிரபஞ்சம் இல்லை

ஆனால் இங்கே உயிரணுவாகத் தோன்றி
1.வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழும் நிலை பெற்றவர்கள்
2.எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் அழிவில்லாதபடி அவர்கள் வாழுகின்றார்கள்.

அதை நீங்கள் பெற விரும்பினால் அது எளிதில் பெறக்கூடிய சக்தி தான் கடினமில்லை கடும் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டே வந்தால் போதுமானது.
2.அதன்படி வாழ்க்கையே நீங்கள் தியானம் ஆக்கிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை “நாம் ஏங்கிப் பெற வேண்டும்”

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை “நாம் ஏங்கிப் பெற வேண்டும்”

 

உங்களுக்குள் அரும்பெரும் சக்தியான துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறும்படி செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

1.அகஸ்தியன் எப்படித் தாய் கருவிலிருந்தே தீமைகளை நீக்கினானோ அதை நுகர்ந்தறியப்படும் பொழுது
2.நீங்கள் நுகரும் உணர்வுகள் உங்கள் இரத்தத்திலே கருத்தன்மையாக உருவாகி உடல் முழுவதற்கும் பரவச் செய்து
3.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இருளை நீக்கும் அருள் ஒளியைப் பெருக்குவது தான் இது.

அடிக்கடி நாம் சேர்த்து இதைப் பெருக்கிக் கொண்டு வந்தோம் என்றால் எல்லா உறுப்புகளிலும் தீமையை நீக்கும் உணர்வுகள் “அந்த ஒளி என்ற உணர்வின் அறிவுகள்” பெருகுகின்றது.

இந்தத் தியானத்தை கற்றுக் கொண்டவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் கஷ்டப்படுவரையோ சங்கடப்படுபவரையோ வேதனைப்படுவரையோ அவர்கள் உணர்வு நம்மை இயக்காதபடி தடைப்படுத்த வேண்டும். உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

காரம் புளிப்பு உப்பு அதையெல்லாம் சேர்த்துச் சமைத்துச் சுவையாக எப்படி மாற்றிக் கொள்கின்றோமோ அதைப் போன்று சமப்படுத்திக் கொள்ள முடியும்.

நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும்… ஒருவர் கோபப்படுகிறார் என்று பார்த்தோம் என்றால் நமக்கும் அதே உணர்வு தோன்றுகின்றது அவன் மேல் வெறுப்பு வருகின்றது… ஆத்திரம் வருகின்றது.

அந்தக் கோபத்தால் வேதனைப்படுபவரைப் பார்க்கும் பொழுது அந்த வேதனையும் கலந்து வருகின்றது. அந்தக் கோபமும் வேதனையும் நம் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது அத்தகைய உணர்வின் அணுக்கள் உருவாகி விடுகின்றது.

இது உடல் முழுவதும் பரவப்படும் பொழுது நம் உறுப்புகளையும் வீணாக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப் பழகிக் கொண்டால்
2.உங்கள் இரத்தங்களிலே விளைந்து வரும் அந்தத் தீமையான நிலைகளை அடக்க முடியும்.

ஏனென்றால் வேதனைப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ நுகர்ந்தால் அவைகள் எல்லாம் இரத்தத்தில் முதலில் கருவாகி முட்டையாகின்றது.

தொடர்ந்து அவர்களை நினைவுக்குக் கொண்டு வந்தால் பருவம் அடைந்து வெடித்துக் குஞ்சாக மாறுகின்றது அதற்குண்டான கருத்தன்மை இல்லை என்றாலும் கூட அந்த விஷத்தின் தன்மை ரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்குச் சென்று அதை வீணாக்குகின்றது.

1.அணுவாக ஆனாலும் சரி அணுவாக ஆகாதபடி அந்த முட்டை அழுகிச் சென்றாலும்
2.அழுகிய உணர்வு ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எந்த உறுப்புகளில் அது சேர்கின்றதோ அதைப் பாழாக்குகின்றது.
3.இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பல விதமான தொல்லைகளைக் கொடுக்கும் அணுக்களாக விளைந்து விடுகின்றது.

அதிலிருந்து விடுபடுவதற்கு உங்களுக்கு துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசித்து அதை உடல் முழுவதும் பரவச் செய்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்து உணர்வினை நினைவூட்டி அதை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு இப்போது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும்
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகளை நேரடியாகச் செலுத்தும் பொழுது உடலுக்குள் அந்த சக்திகள் செல்கின்றது
2.கண் வழி அந்த நரம்பு மண்டலங்கள் வழி சென்று உடல் உறுப்புகளை இயக்குகின்றது
3.அதன் வழி துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் பெருக்கிக் கொள்வதற்குப் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.

தீமைகள் எப்படி உடலுக்குள் ஊடுருவி இயக்குகின்றதோ இதைப் போன்று “கண்ணின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நமக்குள் எல்லா அணுக்களுக்குள்ளும் ஊடுருவச் செய்து” அதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.

1.எந்த அளவிற்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ
2.நிச்சயம் உங்கள் உடலிலே தீமையை நீக்கும் உணர்வின் அணுக்களாக விளைந்து
3.இந்த வாழ்க்கையில் தீமையை நீக்கும் ஞானத்தின் வழி கொண்டு அருள் உணர்வைப் பெருக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை நிச்சயம் அடைய முடியும்

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்

 

அகஸ்தியன் தான் கண்ட உண்மைகள் அனைத்தையும் தன் மனைவி பெற வேண்டும் என்று தன் மனைவிக்குச் சொல்கிறான். அதன் வழி கொண்டு
1.இருவருமே துருவத்தை உற்று நோக்கி அந்த ஆற்றலை நுகரும் பொழுது துருவ மகரிஷியாகின்றார்கள்.
2.துருவத்திலிருந்து வரக்கூடிய உணர்வை தங்களுக்குள் உருவாக்கும் சக்தி பெறுகின்றார்கள்.

துருவத்தின் வழியாக நுகரும் தன்மை வரும் போது 27 நட்சத்திரங்களின் மின்னணுக்களை அது பரப்புகின்றது. அதை உற்று நோக்குகின்றனர். அந்த மின் கதிர்களைத் தங்களுக்குள் அடங்கச் செய்கின்றனர் அவர் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைப் பெறுகின்றது.

ஒரு நட்சத்திரமும் இன்னொரு எதிர்நிலையான நட்சத்திர உணர்வும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் அதனுடன் சேர்ந்து வியாழன் கோளின் கதிரியக்கப் பொறி தாக்கப்பட்ட பின் அனைத்தும் ஒன்றாகக் கலந்து துடிக்கும் நிலை வருகின்றது. அப்போது தான் உயிரணு என்ற நிலை வருகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின் கதிரியக்கங்களை உருவாக்குகின்றது உயிர் எதனை நுகர்கின்றதோ உணர்வுக்கொப்ப கதிரியக்கங்களாக மாற்றுகின்றது அந்த உணர்வை உடலாக மாற்றுகின்றது.

அந்த உணர்வின் தன்மை உறையும் தன்மை பெற்று ஜீவ அணுவாகி அந்த அணுவின் மலம் அந்தந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகளாக உருவாகின்றது.

இதை எல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி தனக்குள் உருவாக்கும் தன்மை பெறுகின்றான். உண்மையின் இயக்கத்தை அறிந்தான். இந்த உணர்வின் ஆற்றலைக் கணவன் மனைவி இருவருமே தங்களுக்குள் பெருக்கிக் கொண்டார்கள்.

எந்தத் துருவத்தில் இருந்து வருகின்றதோ
1.அதன் வழி வரும் நட்சத்திரங்களின் உணர்வனைத்தும் நுகர்ந்து
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை இந்த உயிரைப் போன்றே
3.எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் உணர்வின் அணுக்களாக ஒன்றாக இணைத்தான்.

(மின்னல்) மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அளவில்லாத தூரங்களுக்குப் பரவிச் செல்கின்றது. பல லட்சம் மைல்களுக்கு அப்பால் கூடச் செல்கிறது. அந்த ஒளிக்கற்றைகளை நாம் காண நேருகின்றது உலகம் முழுவதும் பரவுகின்றது.

அதை எல்லாம் வானளாவிய நிலைகள் கொண்டு இருளை நீக்கி பொருள் காணும் நிலையாகக் காணுகின்றனர் அகஸ்தியனும் அவன் மனைவியும். அகண்ட அண்டம் அது எப்படி உருவானது…? என்பதையும் கண்டறிகின்றனர்.

1.நஞ்சினை நீக்கி ஒளியாக மாற்றிடும் அந்த சக்தி இருவரும் பெற்றபின்
2.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்று
3,ஒத்த நிலைகள் கொண்டு ஒன்றாக ஒளியாக இணைக்கின்றனர்.

சூரியன் பல மண்டலங்களில் இருந்து எடுக்கும் விஷத்தன்மைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் மோதப்பட்டு விஷத்தின் தன்மையைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்கச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு விஷம் என்ற உணர்வு தனக்குள் சாடாது தீமைகளை நீக்கி விட்டால்… உயிர் என்ற நிலையில் ஒளி என்ற நிலையை அடையும் பொழுது… இருள் என்ற நிலை வராது தடுத்து ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது.

அப்படிப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றிப் படரச் செய்கின்றது. “அதை மனிதர்கள் நுகர்ந்தால்” இருளை நீக்கி விட்டுப் பொருள் காணும் அருள் சக்தி பெறுகின்றார்கள்.

அந்த அகஸ்தியனைப் போன்ற இவர்களும் வளர்ச்சி பெற்றுப் பிறவி இல்லாத நிலை அடைகின்றார்கள்.

துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட்டது. அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தான் உபதேசத்தின் வாயிலாக
1.உங்கள் நினைவாற்றலைத் துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்வதும்
2.உணர்வின் ஒலிகள் உங்கள் செவிக்குள் உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது
3.கண் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களை நுகரச் செய்வதும்
4.நுகர்ந்த உணர்வை உங்கள் உயிர் அத்தகைய உணர்வைப் பெற்று அதைக் கவரும் அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான்
5.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை நுகரச் செய்து கொண்டுள்ளேன் (ஞானகுரு).

அவ்வாறு நீங்க: நுகரும் உணர்வை உங்கள் உயிர் ஓம் நமச்சிவாய என்று இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தகுதி பெறுகின்றது.

துருவ நட்சத்திரம். எத்தகைய மின்னல்கள் வந்தாலும் ஒளியின் கதிராக அது மாற்றிக் கொள்கின்றது… இருளை அகற்றுகின்றது.

சூரியன் ஒரு காலம் மங்கினாலும் துருவ நட்சத்திரம் என்றுமே மங்காது சூரியன் அழிந்தாலும் அதே சமயத்தில் துருவ நட்சத்திரம் அழியாது… அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழியாது.

அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டு வேகாநிலை கொண்டு எதிலும் அழியாத நிலை கொண்டு ஒளியின் சரீரமாக இருக்கின்றது.

இவை எல்லாம் பல கோடி உணர்வுகளைக் கலந்து கலந்து மனிதன் ஆன பின் இருளை அகற்றி ஒளி என்ற நிலைகள் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி உள்ளான்.

அதை நாம் நுகர்ந்து வளர்த்துக் கொண்டால்
1.அகஸ்தியன் கண்ட உணர்வு நமக்குள் இனணந்து
2.இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை நாம் காத்து
3.இந்த உடலுக்குப் பின் அதைப் பற்றுடன் பற்றி நாம் அங்கே செல்கின்றோம்… பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

“துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபணுவை” நாம் பெற வேண்டும்

“துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபணுவை” நாம் பெற வேண்டும்

 

விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் செல்லும் பொழுது கடவுளை இப்பொழுது நீ காட்ட வேண்டும் என்று கேட்கின்றார்,

கடவுளைக் காட்ட முடியாது… நீ உணரலாம் என்று தான் அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார்…!
1.நீ நுகர்வது உன் உடலுக்குள் நின்று… அது உள் நின்று இயக்கும் கடவுள்தான்
2.அந்த உணர்ச்சியை ஊட்டுவது கடவுள்.
3.கடவுளை நீ உணர்ச்சி மூலமாகத் தான் பார்க்க முடியும்… நீ கண்ணில் பார்க்க முடியாது என்றார்.

அப்பொழுதுதான் விவேகானந்தர் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய பாடத்தையே திருப்பி எடுத்து இவர்களுடைய சுகபோகங்களுக்கு இப்பொழுது மாற்றிக் கொண்டு உள்ளார்கள்.

ஒவ்வொரு ஞானிகளும் தத்துவத்தை உரைக்கின்றனர்.
1.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு
2.பண்பு கொண்ட நிலைகள் உயர வேண்டும் என்று எண்ணு அந்த உணர்வே உனக்கு வழிகாட்டும்
3.அதன் வழியில் உனக்கு நல்வழி காட்டி அன்பை வளர்க்கச் செய்யும்… கடவுளை நீ அங்கே பார்க்கலாம்.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அதே உணர்வு உனக்குள் உள் நின்று இயக்குகின்றது. அது கடவுளாக உன் எண்ணத்தைச் சீர்படுத்துகின்றது… நல்வழி காட்டுகின்றது பகைமை உணர்வுகளை மாற்றுகின்றது… பகைமையற்ற வாழ்க்கையை வாழுகின்றது.

தன் குடும்பத்தில் எப்படிப் பற்று வைக்க வேண்டும் என்றும் அரசியல் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் பக்தி மார்க்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஆலயத்தில் நீ எப்படி பண்புகளை சேர்க்க வேண்டும் என்றும் விவேகான்ந்தர் சொன்னார்.

அதையெல்லாம் படிக்கின்றார்கள் ஆனால் மூலையில் போட்டு வைத்து விடுகின்றார்கள்.

1.கோயிலுக்குச் சென்றால் கடவுளை நீ எப்படி வணங்க வேண்டும்…?
2.தெய்வத்தை நீ எப்படிப் பார்க்கின்றாய்…?
3.கடவுளை ஏப்படி நேசிக்கின்றாய்…?
4.எதன் வழி கடவுள் உன்னை இயக்குகின்றார்…? என்று தெளிவுறக் கூறியுள்ளார் விவேகானந்தர்.

அதையாவது நாம் இன்று எடுத்துள்ளோமா என்றால் இல்லை…!

அவரைப் பற்றிய புத்தகங்கள் பல வரும்… அதன் வழி பிழைப்புக்கு. விவேகானந்தரைப் பற்றிப் பெருமையான பேச்சுகளைப் பேசுவோம் ஆனால் உண்மை நிலைகளில் நாம் கடைபிடிக்கும் தன்மையை இழந்துள்ளோம்.

ஆகவே விஞ்ஞான உலகில் இன்று எங்கோ சென்று விட்டது. மரபு அணுக்களை வைத்து எப்படி எப்படிப் புதிது புதிதாக உருவாக்கலாம் என்று.

ஆனால் தீமையை அகற்றிய உணர்வின் தன்மை
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் நுகர்ந்தால்
2.அந்த உணர்வினை நமக்குள் உருவாக்கிப் பகைமையை மாற்றி
3.பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று விநாயகர் தத்துவத்தைக் கூட்டினான் அன்று அகஸ்தியன்.

அந்த மரபணுவை நாம் பெற முடியும்… ஏன் உங்களுக்கு இந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது…?

இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் இந்த பௌர்ணமி நாளன்று ஆன்மாக்களை மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்படி சொல்கிறோம்.
1.மூதாதையர்கள் அங்கே செல்லப்படும் பொழுது “நம்மைக் காத்திட வேண்டும் என்ற மரபணு” நம் தீமையை அகற்றி நம்மைக் காக்கும்.
2.ஒளி நிலை அடைந்த நிலைகள்… பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

ஆனால்… சுட்ட சாம்பலைக் கரைத்து விட்டு மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று விநாயகர் கோயிலுக்குச் சென்று மோட்ச தீபம் காட்டிவிட்டு வருவது அல்ல.‌

மனித உடலுக்குள் வந்த பகைமை உணர்வை மாற்றிவிட்டு ஒளி என்ற உணர்வினை உருவாக்கி அந்த ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் துருவ நட்சத்திரமாக…!
1.அனைவரும் இதை எளிதில் பெற முடியும்
2.அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும்
3.மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும்
4.மெய்ப்பொருள் காண முடியும்… இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஏதோ சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்.

உணர்வின் அழுத்தத்தால் நுகரச்செய்து உணர்வின் அணுக்களை உங்களுக்குள் உருவாக்கிய நிலை கொண்டு அதை வளர்த்துக் கொண்டால் உங்களில் வரும் பகைமையை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை ஊட்டி, இனி பிறவியில்லா நிலை அடையலாம்,

குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம். பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம். பரிவான நிலைகளில் வாழவும் முடியும். பரிவால் வரும் தீமை அகற்றும் வல்லமையும் பெறுகின்றீர்கள்.

ஆகவே…
1.அந்த அகஸ்தியனின் மரபு அணுக்களைப் பெறுவதற்குத் தான்
2.அன்று விநாயக தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் இன்றைய விஷமான உலகிலிருந்து தப்ப முடியும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் இன்றைய விஷமான உலகிலிருந்து தப்ப முடியும்

 

பக்தி கொண்டு எத்தனையோ கடவுள்களை நாம் வணங்குகின்றோம்… நல்ல ஒழுக்கங்களையும் நாம் கடைப்பிடித்திருப்போம்.

ஆக நல்ல ஒழுக்கம் கொண்டு இருப்பினும் எதிர்பாராதபடி தீமையான நிகழ்ச்சியோ சம்பவங்களோ நடந்தால்…
1.அது நம் நல்ல பண்புகளை நல்ல ஒழுக்கங்களைக் கெடுத்து விடுகின்றது…
2.அந்த நேரத்தில் நல்ல குணங்கள் பாழடைந்து விடுகின்றது.
3.அத்தகைய தீங்குகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால்
4.நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
5.அதை எடுத்துக் கொண்டால் உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்… பிறவி இல்லா நிலை அடையலாம்.

உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

இந்தச் சாமி செய்வார்… அவர் செய்வார்… அந்தக் கடவுள் செய்யும்… மந்திரம் செய்யும்…! என்பதையெல்லாம் விடுத்துவிடுங்கள். காரணம் உங்கள் உயிரே ஈசனாக இருக்கின்றான் ஆண்டவனாகவும் இருக்கின்றான். கர்த்தராகவும் இருக்கின்றான் கடவுளாகவும் இருக்கின்றான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை வைத்துத் தான் இந்த உயிரை அழைக்கின்றார்கள். கடவுள் என்று ஒரு உருவத்தை எண்ணியே நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நாம் நுகரும் உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின்
1.உள் நின்று அதை இயக்கச் சக்தியாக மாற்றுவதே கடவுள் என்றும்
2.அந்த உணர்வு தன் இனத்தை மீண்டும் உருவாக்க அது முற்படும் பொழுது அது ஈசன் என்றும்
3.அவ்வாறு இயக்கிய பின் அணுக்களாக உருவாக்கும் பொழுது பிரம்மன் என்றும்
4.அந்த உணர்வின் தன்மை உடலாக்கப்படும் பொழுது சிவம் என்றும்
5.இப்படி தெளிவான நிலைகளில் உண்மைகளை நம் சாஸ்திரங்கள் காட்டியுள்ளன.

அதை நாம் கடவுள் என்று எண்ண வேண்டாம்…!

நம் உட;லுக்குள் இயக்கும் உயிர் தான் கடவுள். உள் நின்று இயக்கும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் நம்மைச் செயல்படுத்துகின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

விஞ்ஞானத்தினால் உலகமெங்கிலும் எத்தனையோ கொடிய விளைவுகள் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது என்ன…?

1.உங்களால் எந்த நேரமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் சக்திகளைப் பெற முடியும்
2.அதற்குண்டான சந்தர்ப்பத்தைத்தான் இந்த உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்
3.ஆகவே அதை நீங்கள் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலைப் பெறுவீர்கள்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்

 

இன்று விஞ்ஞான உலகில் வாழுகின்றோம் ஆனால் அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழ்கின்றோம்.
1.நமது வாழ்க்கையில் வரும் துன்பங்களை எவ்வாறு நீக்குவது…?
2.மனிதனான பின் மகரிஷிகளின் அருள் உணர்வை எப்படிப் பெருக்குவது…?
3.இந்த வாழ்க்கையில் தீமை இல்லாத வாழ்க்கை எவ்வாறு வாழ்வது…? என்பதனை
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளது.

அதன்படி நாம் ஒவ்வொருவரும் காலையில் தவறாது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்,

திருமணமானவர்கள் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அந்த உயர்ந்த உணர்வைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அடிக்கடி பதிவாக்கிக் கொண்டபின்
2.27 நட்சத்திரங்கள் சக்தியைப் பெற முடியும்.

அதாவது 27 நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று தாக்கும் பொழுது மின்னலாகப் பாய்கின்றது. ஒளிக் கற்றைகள் பலவும் பரவுகின்றது. துருவ நட்சத்திரம் இத்தகைய மின்னல்களை நுகர்ந்து விஷத்தன்மைகளை அடக்கிப் பழகியது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் முதலில் வளர்த்து வலுவாக்கிக் கொண்ட பின்
1.அந்த மின்னலின் உணர்வுகளை நாமும் அடக்கும் பழக்கம் வந்து விட்டால்
2.மின்னல் வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்கள் மிகவும் வீரியமடைகின்றது.
4.அப்படி வீரியமடைந்தால் தீமையான உணர்வுகள் உள்புகாது நம்மைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

அந்த தீமையை நீக்கக் கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை “ஆழமாகப் பதிவு செய்து விட்டால்”
1.மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் உணர்வுகளை எளிதில் நுகர்ந்து
2.நம் உடலுக்குள் அந்த ஒளிக் கற்றைகள் வரும் பொழுது தீமை வராது தடுக்கவும் இது உதவும்.

அத்தகைய வலுவான உணர்வை நமக்குள் உருவாக்கி விட்டால்… அது மீண்டும் தன்னிச்சையாக நல் மணங்களைக் கொண்டு வருவதும் தீமையிலிருந்து விடுபடுவதுமாக அதை நம்மைச் செயலாக்கும்.

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

 

அகஸ்தியன் குழந்தைப் பருவமாக இருக்கப்படும் பொழுது நடந்த நிகழ்ச்சிகள் இது.
1.வானை நோக்கித் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது சூரியனைப் பார்ப்பதும்
2.அதைக் கண்டு சிரிப்பதும் அதில் நடக்கும் மோதல்களைக் காணுவதும் மற்ற பிரபஞ்சங்கள் தெரிவதையும்
3.அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் உற்றுப் பார்க்கின்றான்

நமது குருநாதர் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது அகஸ்தியன் வாழ்ந்த காலங்களில் அவன் இருந்த இடங்களில் இந்த உணர்வலைகள் எப்படிப் பதிந்துள்ளது…? என்று எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

அந்த உணர்வுகளை நுகர்ந்தால்
1.அவன் கண்டதை நாமும் பார்க்கலாம் என்ற நிலைக்காக அந்த உணர்வை நுகரும்படி செய்கின்றார்.
2.வான்வீதியில் நடக்கும் அதிசயங்களை நீ பார்…! என்கின்றார்.

ஏனென்றால் அகஸ்தியன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்… அவன் உணர்வுகள் பூமியில் படர்ந்துள்ளது. சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துள்ளது.

அதை நுகர்ந்து காவியமாகச் சொல்லி கதையாகச் சொல்லி நடந்த நிகழ்ச்சிகளை
1.இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லச் சொல்ல அதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் எனக்குள் வருகின்றது.
2.குருவின் வலு கொண்டு அவர் நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் வரப்படும் பொழுது அதை நான் அறியும் பருவமும் வருகின்றது.

அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை குருநாதர் இப்படித்தான் எனக்குத் தெளிவாகக் கூறினார்.

நாளடைவில்… குழந்தையாக இருக்கும் அகஸ்தியனைக் கையிலே தூக்கிச் சென்றால் கொடூர மிருகங்களிடமிருந்து தாய் தந்தையைக் காக்கும் நிலை வருகின்றது… மற்ற உயிரினங்களும் இவர்களைத் தாக்குவதில்லை.

ஐந்தாவது வயது ஆகும் பொழுது அந்தக் காட்டிற்கே அரசன் ஆகின்றான் புலி சிங்கம் மற்ற மிருகங்கள் ஒடுங்கி விடுகின்றது விஷத்தன்மைகளை ஒடுக்கும் சக்தி வரும் பொழுது
1.அவன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும்
2.கோபம் கொண்டோர் கொதித்தெழும் உணர்வு கொண்டோர் நிலைகளும் அங்கே ஒடுங்கி விடுகின்றது.
3.போர் முறை என்ற நிலையே மாறி விடுகின்றது.

ஏனென்றால் அன்று வாழ்ந்தவர்கள் ஒரு எல்லைக்கு எல்லை மாறி வரும் போது மனிதனுக்கு மனிதன் தாக்கிடும் நிலையே வருகின்றது. அந்த நிலையில் அகஸ்தியன் அதைத் தடுத்து அங்கு இருப்போரைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

இளமைப் பருவத்தில் அவன் அறிந்த உணர்வின் தன்மை வானை நோக்கி உற்றுப் பார்த்து துருவத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்ட பின் அந்த்த் துருவத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றான்.

அதனால் தான் அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் வந்தது. அவனுக்குள் மேலும் மேலும் வலுகொண்ட நிலையாகி எதையுமே அறியும் ஆற்றலாக அறிவின் தன்மை அதிகரிக்கின்றது.

அவன் வானை நோக்கிப் பார்க்கும் பொழுது நமது சூரியநுக்கு 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரும் விஷத்தன்மையை எப்படி கவர்கின்றது என்று அறிகின்றான்.

அதிலே சூரியன் வெளிப்படுத்தும் உணர்வுகள் கவர்ந்து வரும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது மின்னல்களாக மாறுவதும்… இந்தப் பொறிகள் பல பாகங்கள் பரவி ஒளி அலைகளாக மாறுவதும்… மற்ற கோள்களில் இருந்து வரக்கூடியது இதற்குள் கலந்த பின் அணுக்கள் மாற்றப்பட்டு… ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி மாறுகின்றது…? என்பதையும் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது…? என்பதையும் அவன் காணுகின்றான்.

பிரபஞ்சத்திற்குள் சூரியனின் இயக்கத்தன்மை ஏற்பட்டு பூமிக்குள் உருப்பெற்ற மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை அவன் அறிகின்றான்.

இப்படி அறிந்தவன் தனது 16வது வயதில் திருமணமான பின்… தான் இளமைப் பருவத்தில் இருந்து எதை எதையெல்லாம் அறிந்தானோ அவை அனைத்தையும் மனைவிக்குப் போதிக்கின்றான்.

1.மனைவி அதைச் செவி வழி கேட்டுப் பதிவாக்கி அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.அதையெல்லாம் காண வேண்டும் என்று விரும்பி அந்த உணர்வுகளைத் தனக்குள் நுகர்கின்றது.
3.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்கின்றனர்.

இரு உணர்வும் சேர்த்து நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வின் அணுவாக உருவாக்கும் தன்மையும்… “ஒளியின் சிகரமாக” உருப்பெறும் அணுவாக ஆகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வரும் நஞ்சின் தன்மையை அவர்கள் கண்டாலும்
1.இருவரும் அதைப் பெற வேண்டும் என்று தங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.மின்னல் வரும் பொழுது எப்படி ஒளிக்கதிர்களாகப் படர்கின்றதோ
3.இந்த உணர்வின் தன்மையைச் சேர்த்து அந்த ஒளிக்கதிர்களை உருவாக்கும் நிலையும்
4.அது எப்படி மின்னும் பொழுது இருளை மறைக்கின்றதோ நஞ்சினை அடக்குகின்றதோ
5.அதைப்போல ஒளியின் உணர்வாக இருவரது உணர்வுகளிலும் இந்த அணுவின் தன்மை உருவாகின்றது.

அப்படி உருப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் சக்திகளைத் தான் உங்களைப் பெறச் செய்து கொண்டே வருகின்றேன் குருநாதர் காட்டிய வழியில்.

நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… விண் சென்ற முதல் மனிதன் துருவ நட்சத்திரமானான்

நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… விண் சென்ற முதல் மனிதன் துருவ நட்சத்திரமானான்

 

பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வின் தன்மையை முதல் மனிதன் அகஸ்தியன்
1.அவனுடைய சந்தர்ப்பம் தன் உடலிலே அது பெருகச் செய்தான்
2.அவனுக்குள் விளைந்த உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து நம் பூமியில் பரவச் செய்து கொண்டுள்ளது.

அதையெல்லாம் நீங்கள் பருகுவதற்குத் தான் “அடிக்கடி அடிக்கடி” அதை ஞாபகப்படுத்துவது.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த உணர்வினை நீங்கள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களும்… அதனின் இயக்கத் தொடர்களில்
1.ஒவ்வொரு நட்சத்திரத்தின் எதிர்மறையான… அதாவது…
2.இரண்டு இரண்டு நட்சத்திரங்கள் (+/-) நெகட்டிவ் பாசிட்டிவ்…
3.ஒன்று வலிமையானது ஒன்று வலிமை இழந்தது…
4.இந்த உணர்வின் தன்மை மோதல் வரும் பொழுது தான்… ”வெல்டிங்”
5.மின்னல் போன்று தன்மை வரப்படும் பொழுது உயிரணுவாகத் தோன்றுகின்றது.

இந்த உணர்வின் இயக்கத்தில்… உயிரணுவின் நட்சத்திர இயக்க ஓட்டத்தை… அதிலே எதனின் வலிமை இருக்கின்றதோ அதைப் போன்று
1.“இந்த 27 நட்சத்திரங்களின் சக்தியை பெற வேண்டும்” என்று
2.அன்று துருவன் நுகர்ந்து கொண்டான்.

ஏனென்றால் பல நட்சத்திரங்கள் இருப்பினும் ஒவ்வொன்றிலும் 27 நட்சத்திரங்களில் “ஒன்று முன்னணியில் இருந்து” மற்றதை அது அடக்கும்.

ஆனாலும் மனித உடல் அல்லாது மற்ற உயிரினங்களில் இந்த நட்சத்திரங்கள் பொருந்தி வராது. காரணம்… நஞ்சு கொண்ட உணர்வின் எதிர் நிலைகள் வருவதனால்…! ஆனால் மனிதனுக்குள்ளோ
1.நட்சத்திர அணுக்களின் தன்மையைத் தனக்குள் சமப்படுத்தி
2.தான் ஒளியின் சுடராக மாற்றும் அறிவின் தன்மை பெற்றது.

ஆகவே அவ்வகையில் ஒவ்வொரு மனித உயிரான்மாவிலும் அந்த நட்சத்திர இயக்கத்தின் தன்மை கொண்டு
1.27 நட்சத்திரங்களின் சக்தியையும் கவர்ந்து மற்ற உணர்வுடன் கலந்து
2.அந்த உணர்வின் தசைகளாக நவக்கோள்கள் என்று நம் உடலின் தன்மையும்
3.அதே சமயத்தில் சப்தரிஷி மண்டலம் – மனித உடல் பெற்ற பின் இந்த உணர்வின் ஒளியாக – ஆறாவது அறிவாக நமக்குள் மண்டலங்களாக அமைத்து
4.ஆறாவது அறிவின் தன்மையைத் தனக்குள் அந்தச் சப்தரிஷி மண்டல உணர்வின் தன்மையை வளர்க்க வேண்டும்… வளர்க்க முடியும்.
(சப்தரிஷி மண்டலம் என்பது நமக்குள் இருக்கும் அனைத்து அணுக்களின் தன்மையும் மண்டலங்களாக அமைகின்றது).

மனிதனின் ஆறாவது அறிவை… சப்தரிஷிகள்… ஏழாவது ஒளியாகப் பெற்றதை நாம் கவர்ந்து
1.நமக்குள் இருக்கும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலிமை பெறச் செய்வதற்கும்
2.இவை அனைத்திற்கும் மூலமாக இருந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியின் தன்மையைப் பெறுவதற்கும்
3.இப்படி “நான்கு ஐந்து கட்டங்களில்” இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் அணுக்களாகப் படரச் செய்து கொண்டுள்ளது.
4.இவை அனைத்தும் ஒருக்கிணைந்து எடுக்கப்படும் போது உங்களுக்குள் அனைத்தையும் சமப்படுத்தும் நிலை பெற்றது.

துருவ மகரிஷி அந்த 27 நட்சத்திரங்களின் சக்திகளையும்… நவக்கோள்கள் உமிழ்த்தும் சக்திகளையும்… தனக்குள் கவர்ந்து ஆதியிலே அதனின் உணர்வை விளைய வைத்தவர்.

ஆனால் அவை அனைத்தும் விளைந்து வந்ததைச் சூரியன் தனக்குள் படைத்து ஒளிக் கதிர்களாகப் பரப்புவதை (பாதரசம் – வெயில்)
1.துருவன் கண் கொண்டு நேரடியாக உற்றுப் பார்த்து
2.அந்த ஒளிக் கதிரின் அணுக்களை தன் உயிருடன் ஒன்றிய ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டவன் – முதல் மனிதன் அவன்.

1.வானஇயலில் தோன்றிய சக்திகள் புவிஇயலுக்குள் வந்து
2.உயிரியல் மாற்றங்களாகி மனிதனாக வளர்ச்சி ஆகி
3.புவியின் மாற்றத்திலிருந்து விடுபட்டு மீண்டும் வானியில் உணர்வுகளைத் தனக்குள் நுகர்ந்து
4.ஒளியின் சுடராக இன்றும் சுழன்று கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளான்
5.நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… முதல் மனிதன் துருவன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.

அதனின்றி வெளி வரும் உணர்வினை நாம் பெற்றோமென்றால் அவனைப் போன்றே ஒளியின் தன்மையைப் பெற முடியும். அவன் சென்ற எல்லையை நாமும் அடைய முடியும்.

அதற்கே குரு வழியில் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள்

துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள்

 

தீமையின் உணர்வுகளைச் சமப்படுத்தி அதை ஒளியாக மாற்றும் அந்த அறிவின் ஞானமாக மாற்றிடும் நிலைகளுக்காகத் தான்… அன்று சைவ சித்தாந்தம் மகரிஷிகளால் உருவாக்கப்பட்டது.

மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கின்றோம். அது தனது உணர்வின் தன்மையை மூச்சலைகளாக மாற்றும் பொழுது
1.அதற்குள் இருக்கக்கூடிய கந்தகத்துடன் உராய்ந்து
2.ஒளிக்கற்றைகளாக மின்னி வெளிச்சத்தை ஊட்டுகின்றது.

அதைப் போன்று தான் மகரிஷிகளும் விண்ணிலிருந்து வரும் உணர்வை அடக்கி ஒளியாக மின்னிக் கொண்டிருக்கின்றார்கள்… ஒளிக்கறைகளை உமிழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

நமது வாழ்க்கையில் இருள் சூழும் நிலைகள் வரும் பொழுது… அந்த இருளை மீட்டிடும் நிலையாக நாம் நம்முடைய ஒவ்வொரு அணுக்களிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இணைக்க வேண்டும்.

அதாவது இருள் சூழ்ந்த நிலையை நீக்கிவிட்டு உட்பொருளை நாம் அறியும் சக்தியாக அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறுதல் வேண்டும்.

எப்பொழுதெல்லாம் சங்கடமும் வேதனையும் தோன்றுகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
1.அதை மாற்றியமைத்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அதனுடன் இணைத்து விட்டால்
2.தீமையின் உணர்வு தனக்குள் வராதபடி தடுத்து அதற்குள் உட்பொருளை அறியும் அறிவின் ஞானமாக நமக்குள் வளரும்.

மனிதனான பின் இதைத்தான் கார்த்திகேயா என்பது…! பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி வளர்ச்சி அடைந்த அந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றி அமைத்து அதற்குத் தக்க ரூபங்களை மாற்றி அந்த உணர்வின் எண்ணங்களால் இன்று மனிதனாக உருவாக்கி வைத்துள்ளது நமது உயிர்.

ஆகவே… எதனையும் அறிந்திடும் செயலாக்கங்கள் மனித உடலுக்குள் உண்டு. ஆறாவது அறிவைச் சீராகச் செயல்படுத்திய மனிதன் தான் விஞ்ஞானியாக ஆகின்றான்.

அதைச் சீராகச் செயல்படுத்தும் மெய் ஞானி தன் உணர்வின் தன்மை கொண்டு உடலின் மாற்றத்தை உருவாக்கி… ஒளியாக மாற்றிடும் நிலையாகப் பிறவி இல்லாத நிலை அடைகின்றார்.

வானவியல் புவியியல்… அதாவது
1.வானிலே விளைந்த அணுக்களின் தன்மை புவியியலாக மாற்றப்படும் பொழுது தாவர இனங்களாக மாறுகின்றது
2.தாவர இனங்களாக மாற்றிய உணர்வின் தன்மையை உயிரணு நுகரப்படும் பொழுது உயிரியலாக மாறுகின்றது.

உயிரியலின் தன்மை தனக்குள் மாற்றப்படும் பொழுது
1.விண்ணுலகில் உயிரணுக்களின் மின் அணு போன்று தீமைகளை நீக்கி
2.தீமையற்ற உணர்வுகளைத் தனக்குள் வளர்த்தவர்கள் தான் மகரிஷிகள்.

மின்மினிப் பூச்சி தான் நுகரும் உணர்வின் தன்மை கொண்டு “வெளிச்சத்தை உருவாக்கி” இரை தேடிச் சென்று அந்த உணர்வினை அது வளர்க்கின்றது. அதைப் போன்று தான்
1.துருவ மகரிஷி தனக்குள் ஒளியின் சரீரமாக ஆகி வளர்ந்து இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஒளி அலைகளாக இன்றும் வெளிப்பட்டுக் கொண்டுள்ளது… நமக்கு முன் பரவிக் கொண்டுள்ளது.

உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் உற்றுப் பார்த்து அவனுக்கு வேண்டிய உதவிகளை நாம் செய்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் படரப்படும் போது இருள் சூழ்ந்து விடுகிறது.

அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து அதை அடக்கி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

மின்மினிப்பூச்சி தன் ஒளிக் கதிர்களைப் பாய்ச்சி
1.மற்ற எதிரிகளிடம் இருந்து தப்பி
2.தாவர இனங்களில் விஷத்தன்மையான அணுக்களை விலக்கிவிட்டு
3.தான் எந்த இடத்தில் உணவாகத் தேடியதோ அதைத் தெளிவாக எடுத்து அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக விளையும்.

இதைப் போன்று தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக “ஒளியின் நிலைகளாக ஜொலித்துக் கொண்டு” இந்தப் பிரபஞ்சத்திற்குள் வருவது அனைத்தையுமே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளார்.

அதிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகளை சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து பரவச் செய்கின்றது.
1.அதை யாரெல்லாம் உற்று நோக்குகின்றார்களோ…
2.அதைப் பெற வேண்டும் என்று பதிவு செய்து அந்த ஆற்றலைப் பருக எண்ணுகின்றார்களோ…
3.அவர்கள் அனைவரும் அதைப் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.

எத்தகைய வேதனையோ அல்லது நஞ்சான உணர்வுகளோ வந்தாலும்… அதனால் அவதிப்படுவோருக்கு நாம் உதவி செய்தாலும்… அந்த உணர்வினைத் தனக்குள் கவராது “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் இணைக்கப்படும் பொழுது” இருளை நீக்கி… தனக்குள் பொருள் காணும் நிலைகளுக்கு “அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சமப்படுத்தும் எண்ண வலிமையை உருவாக்கும்…!”

ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளை நாம் நுகர்தல் வேண்டும்…
2.உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

 

நாம் எத்தனையோ கோடித் தவறுகளைப் பார்த்தாலும் அந்தந்த சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் செலுத்தித் தூய்மைப்படுத்தி இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத்தான் இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள். நாம் பல கோடி உடல்களில் மற்றொன்றைக் கொன்று தின்று இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் கோடிக்கரையாக வந்திருக்கின்றோம்… தனுசு கோடி.

தீமை என்று தெரிந்த பின்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் விஷ்ணு தனுசு.
2.உயிரைப் போன்றே உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்குதல் வேண்டும்.
3.எத்தனை கோடி விதமான உணவுகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அத்தனையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஏனென்றால் கோடிக்கணக்கான (எண்ணிலடங்காத) உணர்வுகளையும் ஒளியாக மாற்றி அமைத்தது அந்தத் துருவ நட்சத்திரம். அதன் உணர்வை அவ்வப்பொழுது நமக்குள் எடுத்துத் தீமைகளை நீக்குதல் வேண்டும்.

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லும் பொழுது ஒருவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்
1.உள்முகமாக இந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.வேதனைப்படும் உணர்வு நமக்குள் வலுவாகச் சேர்வதற்கு முன் அதைத் தடுத்து நிறுத்திவிட்டு
2.வேதனைப்படுபவனுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்க வேண்டும்
3.அவன் அவன் நலமாக வேண்டும் என்று எண்ணிச் சொல்லிவிட வேண்டும்.

அவன் உணர்வு நமக்குள் வராது…!

அதே போன்று இரண்டு பேர் கொடூரமாகத் தவறு செய்கின்றார்கள். சண்டையிடுகின்றார்கள். அதைப் பார்த்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். அவர்களுடைய தவறுகள் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்… அந்த உணர்வுகள் உள் புகுவதில்லை.

1.பின் அந்த உணர்வை ஈர்க்காது ஒதுக்கிவிட்டு
2.அவர்கள் இருவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் பண்புடன் வாழும் தன்மையும் பெற வேண்டும் என்று
3.நாம் விலகி விட வேண்டும்… அந்தத் தீமை நமக்குள் விளையாது.

ஏனென்றால் தவறு செய்கின்றார்கள் என்றால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது கேட்காமல் இருக்க முடியாது.

ரோட்டிலே செல்லும் போது ஒரு வாகனம் வேகமாக வருகிறது என்றால் பார்த்தவுடனே “பயம்” என்ற நிலை வந்து விலகுகின்றோம்.

பார்க்கின்றோம்… பஸ் திடீரென்று நம் பக்கமாகத் திரும்புகின்றது. அந்த அதிர்ச்சியின் வேகத்தில் நாம் ஒதுங்கி விடுகின்றோம்.
1.அப்படி அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால்
2.நாம் அங்கிருந்து விலக முடியாது.

அதிர்ச்சியை ஊட்டுவது எது…?

அதன் வேகத் தொடரை நம் கண் நுகர்ந்து உயிரிலே மோதப்படும் போது உணர்ச்சிகள் தெரிய வருகின்றது. ஆனாலும் அடுத்து அதிர்ச்சியின் தன்மை கூட்டி உடலில் பதட்டமாகி வேகமாக விலகிச் செல்ல வைக்கின்றது.

விலகிச் சென்றாலும் அதிர்ச்சியின் உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சேர்ந்து விட்டால் அடிக்கடி பய உணர்வும் மற்ற நிலைகளும் ஏற்பட நேர்கின்றது.

பயம் அதிகமானால் சிந்திக்கும் தன்மை கூட சில நேரங்களில் முடியாது போய் விடுகின்றது. இப்படி…
1.நம் சந்தர்ப்பம் நாம் நுகர்ந்த நிலைகள் நம் இரத்தங்களிலே மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.
2.சந்தர்ப்பத்தில் தப்பினாலும் அடுத்த கணமே… ஈஸ்வரா என்று
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அந்த அதிர்ச்சியின் உணர்வைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இப்படி வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகள் நமக்குள் வரும்…! அதை அதை அவ்வப்பொழுது தடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மாற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அதுதான் “தனுசு கோடி…”

ஆகவே… உயிரின் தன்மை ஒளியாக்கிய அந்த உணர்வை… அந்தந்த நேரத்தில் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் தீமை சேராதபடி தடுத்து நிறுத்துகின்றோம்.

உடலில் விளைந்த அந்த உணர்வுகள் கொண்டு
1.“இந்த உயிர்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டதால் நேராக நம்மை அங்கேயே அழைத்துச் செல்கின்றது.
2.தொக்கிய உணர்வின் அணுக்களை அங்கே தூய்மைப்படுத்தி விடுகிறது

அப்போது ஏகாந்தமாக… எத்தகைய எதிர்ப்பும் இல்லாது என்றும் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்…!