வாழ்த்தினால்… வாழலாம்…!

Polaris and sabdharisi mandalam

வாழ்த்தினால்… வாழலாம்…! 

நியூட்ரான் என்ற நிலையில் மிக மிகச் சக்தி வாய்ந்த விஷத் தன்மைகளை இயந்திரத்தின் தன்மை கொண்டு கவர்ந்து அதன் உணர்வை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதைப் பக்குவப்படுத்தி வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.
1.தான் கண்டுபிடித்த அந்த விஷ அலைகளை மக்களுக்குள் பாய்ச்சி
2.அவர்களை எப்படிப் புத்தி பேதமாக்கலாம்…?
3.சிந்தனையை எதன் வழியில் இழக்கச் செய்யலாம்…? என்று கண்டு கொண்டுள்ளார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

ஏனென்றால் மக்களின் சிந்தனைகள் சிதறினால் அந்த நாட்டை எளிதில் தனக்குக் கீழ் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இருந்தாலும் இத்தகைய அறிவு கொண்ட விஞ்ஞானியும் சரி அவன் கண்டுபிடித்து உற்பத்தி செய்த நிலைகளில் வெளிப்பட்ட கசிவுகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அவன் நாட்டிலும் பரவி விட்டது.
1.இதை அவர்கள் முதலில் உணரவில்லை…
2.இப்பொழுது தான் தான் உணரத் தொடங்கியுள்ளார்கள்)

காணாததற்கு பூமி முழுவதும் பரவி இந்தப் பிரபஞ்சத்திலும் அந்த அணுக் கதிரியக்கங்கள் பரவத் தொடங்கிவிட்டது. அதனால் நாம் இன்று வாழும் இந்தப் பூமியே மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறப் போகின்றது.

இதில் சிறிதேனும் மக்களைக் காக்க வேண்டும்… மெய் வழியில் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்…! என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

மனித வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி நஞ்சினை வென்று அதன் உணர்வு கொண்டு மகிழச் செய்து மகிழ்ந்த உணர்வை விளைய வைத்து என்றும் மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகள் பெற்று எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் ஆற்றல் பெற்றது அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமானது.

அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையில் பிறவியில்லா நிலையை அடைந்து நஞ்சினை ஒளியாக மாற்றி என்றுமே பேரொளியாக நம் பூமியின் துருவப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பது தான் துருவ நட்சத்திரம்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி உலக மக்கள் அனைவரும் இருளை அகற்றிப் பேரருள் பெற வேண்டும் என்று வெளிப்படுத்திய உணர்வை ஏற்றுக் கொண்டோர் அனைவரும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களைப் போல நாமும் ஆயுள் கால மெம்பராகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில் இணைவோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தையும் நாம் பெற்று நம்முடன் தொடர் கொண்டோர் அனைவருக்கும் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று ஏங்குவோம்.

தியானம் செய்யும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற்றுப் பேரருளைத் தனக்குள் கூட்டி அவர்களுடைய பார்வையில் இருளை அகற்றிடும் சக்தி பெற வேண்டும் என்று வேண்டுவோம்.

ஒவ்வொரு குடும்பமும் அருள் ஞானக் குடும்பமாக வளர்ந்திட வேண்டும் என்று பிரார்த்திப்போம். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு பெற வேண்டும் என்றும் இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

1.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நிலையாக
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.நாம் இதை ஒரு பிரமாணமாக எடுத்து நமக்குள் அந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்வோம்.
4.நம் ஒவ்வொருவருடைய மூச்சும் பேச்சும் உலக மக்களை இருளில் இருந்து அகற்றச் செய்யும் அருள் உணர்வாக நாம் பெருக்குவோம்.

இந்த முறைப்படி அனைவரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி பெருக்கிய உணர்வுகளை பரப்பச் செய்யும் போது விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவை மாற்றி அமைக்க முடியும்.

ஆகவே நாம் பார்க்கும் குடும்பங்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர்கள் பேரின்பப் பெரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று தியானிப்போம்… தவமிருப்போம்.

உலக மக்கள் அனைவருமே துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் வாழ்த்துவோம்.

“தனுசு கோடி..!” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…!

Image

dhanuskodi - rameswaram

“தனுசு கோடி..!” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…!

 

செடி கொடி மரங்களை எடுத்துக் கொண்டால் மற்ற மரங்களின் அடர்த்தி அதிகமானால் இந்த மணம் பட்டபின் அதனின் வளர்ச்சி குன்றுகிறது. இதனுடைய அழுத்தத்தை மாற்றி விடுகிறது.

மேலை நாட்டில் உருவான சௌண்டால் மரத்தை இங்கு கொண்டு வந்து போட்டோமானால் இதனுடைய வளர்ச்சி ஆன பின் பக்கத்தில் இருக்கும் செடிகளின் வளர்ச்சியைக் குன்றச் செய்கின்றது.

ஏனென்றால் இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

அது போல் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளில் “நல்லது…!” என்று நினைத்தாலும் பிறர் படும் தீமையான நிலையும் பத்திரிக்கை டி.வி வாயிலாகப் படிக்கும் எத்தனையோ சம்பவங்களையும் நண்பர்களுடன் கலந்து உறவாடும் உணர்வுகளையும் நுகர நேருகிறது.

பகைமை உணர்வுகளுடனோ பகைமையற்ற நிலையிலோ நாம் பேசினாலும்
1.நுகர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது
2.இரத்தங்களில் கலந்தால் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுக்கும் அது செல்கிறது.

இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலந்து கலந்து அதற்குத் தக்க இந்த உணர்வு இரத்த ஓட்டங்களில் ஓடும்போது இது அடங்குகிற வரையிலும்
1.நாம் நிறுத்தினாலும் அல்லது வேறொருவருடய நிலையில் எண்ணத்தைச் செலுத்த்னாலும்
2.இது இரத்தங்களில் சேர்த்து எல்லா அணுக்களுக்கும் எதிர்ப்பான உணர்வு வருகிறது.
3.நல்ல அணுக்களுக்கு எதிர்நிலை ஆகிவிட்டால் அந்த அணுக்களின் வளர்ச்சி குன்றுகிறது.
4.வலியோ வேதனையோ அல்லது நோயாக வந்துவிடுகிறது.

அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை எல்லாம் நல்லதாக்கும்படி சொல்கிறேன்.

ஆகவே அந்த அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் சக்தியாக நாம் மாற வேண்டும். இதைத்தான் “நேரமாகி விட்டது…! அதனால் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் (மணலைக்) குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான்…!” என்று காட்டியிருப்பார்கள்.

அதாவது எல்லா உணர்வுகளையும் ஒன்றாகக் குவித்தான் என்று பொருள்.
1.ஒரே நாளில் அல்ல.
2.நம் ஆயுள் முடிவதற்கு முன்னாடி ஒவ்வொரு நிமிடத்திலும் இணைந்து வாழும் உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து
3.வாழ்க்கையில் வரும் கார உணர்வுகளை மாற்றித் “தனுசு கோடி..!” என்ற நிலையில்
4.”முடிவான உணர்வு கொண்டு… அந்த அருள் உணர்வின் தன்மையைப் பெருக்க வேண்டும்…!”
5.அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும். அந்த ஒளியான உணர்வின் தன்மையை நாம் அடைய வேண்டும்.

எந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும் இங்கே இராமேஸ்வரம் வந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையின் நிலைகள் தெரியாதபடி எத்தனையோ வகையான நிலைகளில் பிரித்து விட்டார்கள்.

துளசி இராமாயணம் வால்மீகி இராமாயணம் கம்ப இராமாயணம் என்று இன்னும் எத்தனையோ வகையான இராமாயணங்களாக அவரவர்கள் உணர்வுக்குத் தக்க எழுதி அந்தந்த நாட்டிற்குப் பயன்படுத்தி அவர்கள் அரசுக்கு பயன்படுத்தி விட்டார்கள்.

மனித உடலுக்குப் பின் விண் செல்லும் மார்க்கத்தை மக்களுக்கு யாரும் உணர்த்தவில்லை.

இராமாயணத்தைப் படித்தவர்கள் வீட்டிலெல்லாம் பாருங்கள் சண்டை நிறைய இருக்கும். இதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குள் வெறுப்பும் வேதனையும்தான் அதிகமாகும்.

1.ஏனென்றால் சாந்தமும் ஞானமும் கொண்ட பின்
2.நான் எல்லாமும் சொன்னேன்…@ என்ற நிலையில் பிறருடைய உணர்வு அதிகரிக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் மாற்றிவிடும்.

நாம் பிறருடைய நிலைகளை நுகர்ந்து அறிகிறோம். இல்லை என்றால் அறிய முடியாது. ஆனால் அப்படி அறிந்தாலும் தீமைகள் என்று அறிந்த உடனே உடலுக்குள் தீமைகள் புகுந்து விடாதபடி முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

தங்கத்தில் திராவகத்தை ஊற்றினால் எப்படிச் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறதோ அது போல “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்ற வேண்டும்.

ஒரு நிமிடம் ஏங்கிய பின் லேசாகக் கண்களை மூடி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் பாய்ச்சிப் பழக வேண்டும்.

நாம் ரசம் வைக்கிறோம் என்றால் வெறும் தண்ணீராகத் தான் இருக்கிறது. அதில் காரம் புளிப்பு எல்லாம் சேர்க்கிறோம். எந்த உணர்வைச் சேர்க்கிறோமோ அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது.

அது போல நாம் நுகரும் எல்லா உணர்வுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து சேர்க்கப்படும் போது அருள் உணர்வின் உணர்ச்சிகள் கலந்த அலைகளாக நம் இரத்தங்களில் கலக்கிறது. ஆகவே
1.அந்தப் பேரருளைப் பெற வேண்டும்.
2.என் உடலிலுள்ள அனைத்தும் பேரொளியாக மாற வேண்டும் என்றால் நாம் அதுவாகின்றோம்.

கடலில் திசை அறியாது செல்வோருக்கு வழிகாட்டுவதும் மனித வாழ்க்கையின் எல்லையை அடைய வழிகாட்டுவதும் துருவ நட்சத்திரம் தான்…!

polaris - guide path

கடலில் திசை அறியாது செல்வோருக்கு வழிகாட்டுவதும் மனித வாழ்க்கையின் எல்லையை அடைய வழிகாட்டுவதும் துருவ நட்சத்திரம் தான்…! 

 

அக்காலங்களில் கடலில் செல்வோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தைப் பார்த்துத்தான் பாதை அறிந்து செல்ல வேண்டும்.

இரவாகிவிட்டால் அந்த நட்சத்திரம் எங்கே தோன்றுகின்றதோ வடக்கு கிழக்கு தெற்கு என்ற நிலைகளில் அந்தத் திசைகளை நோக்கிச் செல்ல முடியும்.

அங்கே வழியைக் காட்டும் கை காட்டியோ ரோடுகளோ கிடையாது. தான் வந்த ஊரும்… தான் சென்ற நிலைகளும்.. தான் செல்லும் ஊரும் அது எந்த இடம் என்று கப்பலில் செல்வோர் அதை வைத்துத்தான் அறிகின்றார்கள்.

இன்று விஞ்ஞானிகளோ வடக்கு தெற்கு என்ற நிலையில் பாதரசத்தை விட்டு அதற்குள் ஈர்க்கும் சக்தி கொண்டு இயந்திரத்தின் துணை கொண்டு திசைகளைக் காண்கின்றனர்.

ஆனால் அன்றோ இயந்திரத் துணை இல்லாத அக்காலங்களில் வாழ்ந்தவர்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தைத்தான் உற்று நோக்கி
2.அதனையே எல்லையாக வைத்து வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் “பலர்…!”

மீனவனாக வாழ்ந்த வியாசகரும் கடலில் மீன் பிடிக்கும் சந்தர்ப்பத்தில் புயலில் சிக்கிக் கடலில் வீழ்ந்து உயிருக்காகத் தத்தளிக்கும் பொழுது எந்த மீனைப் புசித்தாரோ அதே மீன் இனமே அவரை முதுகில் சுமந்து கரை சேர்த்துக் காக்கின்றது.

ஒரு மீன் தன்னைக் காத்தது என்ற அந்த ஏக்கத்தில் எண்ணும் பொழுது அவருக்குள் சிக்கப்பட்டதுதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்த பின் தான் அந்த மீனவன் மகாபாரதத்தையும் அதற்குள் கீதாச்சாரத்தையும் வெளிப்படுத்திக் காட்டினார்.

ஏனென்றால் வியாசகருக்கு அந்த ஞானம் எப்படி வந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்காகவும் தான் இதைச் சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதன் மூலம்
2.உங்கள் வாழ்க்கையில் எழும் எத்தகைய வினாக்களுக்கும்
3.நீங்கள் விடைகளைக் காணலாம்.

உங்களிடம் எதிர் நிலையாக வந்து மோதும் உணர்வுகளிலிருந்து விடுபடச் செய்து உங்கள் சிந்தனைகளை அது சீராக்கி உங்களைத் தெளிந்த மனதாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்.

தீமை என்ற உணர்வுகள் உங்களை மோதி அதனின் இயக்கமாக நீங்கள் மாறிடாது
1.உங்கள் உணர்வே உங்களை இயக்கும் நிலையாக
2.உங்களிலே அது வளரும் தன்மையாக நீங்கள் பெறவேண்டும் என்றும்
3.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டிடும் நிலைகள் நீங்கள் பெறவேண்டும் என்பதற்காகத்தான்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றித் தெளிவாக்குகின்றோம்.

நலம் பெறுக… வளம் பெறுக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெறுக…!

உயிரின் துணையால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “ஒளியின் சரீரம் பெறும் வல்லமையைப் பெறுங்கள்…!”

polaris lights

உயிரின் துணையால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “ஒளியின் சரீரம் பெறும் வல்லமையைப் பெறுங்கள்…!”

 

1.வெப்பம் 2.காந்தம் 3.விஷம் இந்த மூன்று நிலைகள் தான் ஆதியிலே உருவானது. வெப்பம் உருவாவதற்கு மூலம் விஷமே தான். விஷத்தின் தன்மை வெப்பமாகி வெப்பத்தின் தன்மை காந்தம் ஆகும்போது உணர்வின் சுழற்சியாகி சூரியனாகும் போது விஷத்தைப் பிரிக்கின்றது.

உணர்வின் தன்மை மற்றவற்றோடு கலந்து ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது சூரியன். இதைப்போல தான் விஷத்தின் தாக்குதலால் ஏற்பட்டது தான் நம் உயிர்.

நாம் நுகரும் உணர்வுகள் அந்த ஒவ்வொரு அணுக்களிலும் விஷம் இயக்கச் சக்தியாக உண்டு.
1.விஷத்தின் இயக்கம் தான் என்றாலும்
2.உணர்வின் சத்து அதிகரித்து
3.அதன் உணர்வின் உணர்ச்சியின் எண்ணங்களைத் தூண்டச் செய்யும் நிலைகளில் தான் அந்த விஷம் இருக்கும்.

இவ்வாறு பல கோடிச் சரீரங்களில் உருபெற்றதும் உரு மாறியதும் இன்று மனிதனாக உருவாக்கியதும் இந்த உயிரின் செயலாக்கங்களே…!

ஏனென்றால் இயக்கச் சக்தி கொண்ட உயிர் தான் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ
1.அந்த உணர்விற்கொப்ப ரூபங்கள் அமைவதும்
2.அந்த உணர்விற்கொப்ப எண்ணங்கள் உரு பெறுவதும்
3.எண்ணத்தின் தன்மையால் தன் வாழ்க்கை வாழ்வதும்
4.தன்னைக் காட்டிலும் கடுமை கொண்ட உணர்விலிருந்து மீள்வதும்
5.இவ்வாறு பல போர் முறைகள் கொண்டு உணர்வுகள் இரண்டறக் கலந்து ஒன்றை இணைத்து ஒன்றி வாழும் நிலை கொண்டு
6.இவ்வாறு நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.
7.மனித உடல்பெற்ற பின் இந்த நிலை பெற முடியும்.

நம் உடலை உருவாக்கியது உயிரே தான். பல கோடிச் சரீரங்களில் கவர்ந்து கொண்ட உணர்வுகள் மனித ரூபத்தை பெறச் செய்யக்கூடிய திறன் பெறுகின்றது.

இவ்வாறு இந்த உயிரணு நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் உடல் அமைகின்றது என்பதனை அறிந்தவன் அகஸ்தியன். மனிதனாக உரு பெற்ற பின் தன்னுடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு எண்ணத்தால் உயர்ந்ததை நுகர்ந்து தனக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும் என்பதைத் தெளிவாக்குகின்றான் அகஸ்தியன்.

அகஸ்தியன் தன் வளர்ச்சியில் துருவனாகின்றான். துருவன் ஆன பின் துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாகின்றான். தான் கண்டுணர்ந்த நிலைகளை மற்ற மக்களும் அறிந்து அதை நுகரும் திறன் பெறக்கூடிய நிலைக்கு உருவாக்குகின்றான் அந்தத் துருவ மகரிஷி.

1.மனிதனில் உயர்ந்த நிலை பெற்று
2.இன்னொரு சரீரம் பெறாது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அவனின்று (துருவ மகரிஷி) வெளிப்படும் உணர்வுகளை
3.சூரியன் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டு நம் பூமிக்குள் பரவச் செய்து கொண்டேயுள்ளது.

சூரியனால் கவரப்பட்ட உணர்வுகள் வெப்பம் காந்தம் விஷம் என்று இருந்தாலும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் நுகர்வோமென்றால்
1.விஷத்தின் இயக்கத்தை அடக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.விஷத்தை அடக்கும் உணர்ச்சியின் நிலைகளை நமக்குள்ளும் கூட்டி
3.தன்னைத் தான் அறிந்திடலும்
4..தன்னைத் தாக்கும் நஞ்சின் தன்மையில் இருந்து விடுபடுவதும் என்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் முக்கியமான நுண்ணிய உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி உங்கள் வாழ்க்கையில் தெளிவான சிந்தனை கொண்டு உங்களைக் காக்கும் உணர்ச்சிகள் வர வேண்டும் என்பதற்காகத்தான்.

இக்கட்டான நிலைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வரும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் பெற்று தீமைகளை அடக்கிடல் வேண்டும்.

தீமை செய்யும் உணர்வுகளை மாற்றும் சக்தி கொண்டது துருவ நட்சத்திரம். உங்களுக்குள் அதை இணைக்கப்படும் போது ஒவ்வொரு நினைவிலும் இது சேரும்.

ஒரு குழம்பிலே பல சரக்குகளைப் போட்டாலும் காரத்தை இணைக்கும் போது எல்லாச் சரக்கையும் சேர்த்து இதைக் கூட்டி உணர்ச்சியின் தன்மை கொண்டு வருகின்றது.

இதைப்போல தான் தீமை என்ற உணர்வை எப்போது பார்கின்றீர்களோ… கேட்கின்றீர்களோ… நுகர்கின்றீர்களோ… அதை நுகரும் அடுத்த நிமிடம் அது உள் புகுந்து அந்தத் தீமைகள் செய்யாது தடுத்து நிறுத்த வேண்டும்.

தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வுக்கு தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ தியானத்தில் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கச் சொல்கிறோம்.

ஆகவே அகஸ்தியன் சென்ற பாதையில் நாமும் செல்வோம் என்றால் நமது வாழ்க்கையில் இருள் சூழும் நிலையில் இருந்து விடுபட்டு சந்தர்ப்பத்தால் நுகரும் விஷத் தன்மையை அகற்றி ஒளியின் சிகரமாக மாற்றிடும் வல்லமை பெறுகின்றோம்.

விஷ்ணு தனுசைப் பயன்படுத்தும் முறை

vishnu dhanush

விஷ்ணு தனுசைப் பயன்படுத்தும் முறை

 

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் சந்தித்த தீமைகளை எல்லாம் நீக்கி நீக்கி அவ்வாறு வளர்ந்து வந்து தான் தீமைகளை நீக்கும் இந்த மனித உடலைப் பெற்றோம் – “பரசுராமன்…!”

சமப்படுத்தும் உணர்வுகள் இந்த உடலில் சேரும் பொழுது இதற்குப் பெயர் சிவ தனுசு. இந்த உணர்வுகளால் நல்லது செய்யக் கூடிய நிலை வரும்.

நாம் சாப்பிடும் உணவில் மறைந்துள்ள நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகிறது. நல்ல குணங்களை உடலாக மாற்றுகிறது.

இருந்தாலும் ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வை கண் வழி நாம் கவர நேர்கிறது.

கவர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றச் செய்கிறது. உணர்வின் தன்மை உடலாகச் சேருகிறது. அது உடலுக்குள் சென்றவுடன் அவன் உடலுக்குள் செய்த தீங்கின் உணர்வுகள் நமக்குள் சிவ தனுசாக மாறுகின்றது.

1.அவன் தீமை செய்கின்றான் என்ற அந்த உணர்வின் தன்மை நம்மைத் தாக்கி
2.நம்முடைய சமப்படுத்தும் உணர்வை மாற்றுகிறது.
3.இராமாயணத்தை நன்றாக படித்துப் பாருங்கள் தெளிவாகத் தெரியும்.
4.அப்பொழுது பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் சண்டை வருகிறது.

பரசுராமன் சிவ தனுசை எடுக்கின்றான். சீதாராமன் விஷ்ணு தனுசை எடுக்கிறான். விஷ்ணு தனுசு என்றால் என்ன…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி அவன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சீதா. அந்த உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டும் துருவ நட்சத்திரமாக ஆனது.
1.தீமைகளை வெல்லும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்த உணர்வை நமக்குள் எடுக்கும்போது அது விஷ்ணு. தனுசாகின்றது.

சூரியன் ஒளியாக இருப்பவன். அவன் நிலை விஷ்ணு. துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.
1அந்த உணர்வின் தன்மையை நாம் எடுத்து
2.விஷ்ணுவான அந்த ஒளி உணர்வை நாம் எண்ணும் போது
3.இந்த தனுசாக நாம் மாற்ற முடியும். இது விஷ்ணு தனுசு.

இராமாயணத்தை நன்றாக உள்ளே புகுந்து படித்துப் பாருங்கள். நன்றாகத் தெளிவாகத் தெரியும். சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா…?

ஒரு நோயாளியை நாம் பார்க்கிறோம். அவன் உடலில் விளைந்தது சிவ தனுசு. நோயாளியின் உணர்வை நுகர்ந்ததும் நமக்குள் என்ன செய்கிறது…?

நம் நல்ல மனமும் இதுவும் இரண்டும் போர் செய்ய ஆரம்பிக்கிறது. அவன் உணர்வை நமக்குள் வளர்த்து இது வெற்றி பெறும். எது…? நாம் சமப்படுத்த எண்ணுகிறோம். அந்த உணர்வின் தன்மை நல்ல குணத்தை எல்லாம் அது சமப்படுத்துகிறது.

சமப்படுத்திய பிறகு இதே விஷத்தின் தன்மை வருகிறது. அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. இந்த விஷத்தின் தன்மை மீண்டும் நுகர்ந்து அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வலிமையாகின்றது.

இந்த மாதிரி உணர்வை வளர்த்தவர்கள் எல்லாம் யாராவது வேதனைப்பட்டாலோ அல்லது சங்கடப்பட்டாலோ அவர்களைப் பார்த்தவுடன் தேடிப் போய் உபகாரம் செய்வார்கள்.

1.அந்த உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது.
2.அப்பொழுது அது சிவ தனுசாக மாறுகிறது.
3.காக்கும் உணர்வுகளை அது செயல்படுத்துகிறது.
4.ஆனாலும் அந்த உடலிலிருந்த வேதனைகளும் சங்கடங்களும் இந்த உடலில் அது வளர்ச்சி அடையப் போகிறது.
(இதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்)

மற்றவர்களுக்கு உதவி செய்தவர்கள் நிலைகளை எல்லாம் கடைசியில் நீங்கள் பார்க்கலாம்.
1.நாம் எல்லோருக்கும் நான் தருமத்தைச் செய்தேன்… நல்லதைத் தான் செய்தேன்.
2.ஆனால் இப்போது நரக வேதனைப்படுகிறேன் என்று சொல்வார்கள்.
3.ஆண்டவன் என்னை இவ்வாறு செய்கிறான்… ஏனோ என்னைச் சோதிக்கின்றான்…! என்று சொல்வார்கள்.

நாம் எதை உற்றுப் பார்த்துக் கவர்ந்தோமோ அது உடலின் தன்மையாக விளைகிறது. ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசித்தது எல்லாம் உடலாக உருவாகிக் கொண்டேயுள்ளது.
1.இதை ஆள்வது யார்…? நம் உயிர் தான் அந்த ஆண்டவன்.
2.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கியது யார்…? நம் உயிரான ஈசன் தான்.

எதன் உணர்வை எடுத்தோமோ மீண்டும் எண்ணும் போது
1.அந்த உணர்வின் செயலாக
2.அந்த குணத்தின் செயலாக
3.அந்த உணர்வின் தன்மையாக நாம் செயல்படும் போது
4.எந்தக் குணத்தை நாம் எடுத்தோமோ அதுவே குருவாக இயக்கும்.
5.உயிர் என்ற உணர்வுகள் நமக்குள் எடுக்கும் போது உயிரே குருவாகின்றது.

உடலுக்குள் இருக்கும் அனைத்தும் குருவாக இருந்தாலும் ஒவ்வொரு குணமும் ஒவ்வொன்றும் அதன் செயலாக்கங்களில் இருக்கும் போது
1.அந்தந்த உணர்வுகளின் குணமே குருவாகிறது… செயல் தெய்வமாகிறது.
2.உணர்வு இறையாகிறது… இறையின் செயலாகும் போது தெய்வமாகிறது.
3.உணர்வின் தன்மை உடலாகும் போது சிவமாகிறது.

சாஸ்திரங்களில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?

ஆகவே எது நடந்தாலும் என்ன குறை இருந்தாலும் “ஈஸ்வரா…”என்று அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவருக்கு/ என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும். அவர்கள் இரத்தம் நாளங்களில் கலக்க வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று தினமும் காலையிலும் இரவு படுக்கச் செல்லும் போதும் இவ்வாறு எண்ணுங்கள்.

காலையில் எழுந்தவுடன் துருவ தியானம் முடிந்தவுடன் கணவன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்றும் மனைவி கணவனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் எண்ண வேண்டும். கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல இவ்வாறு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை. உண்மையான தியானம் இது தான். இருவருடைய உணர்வும் கலந்தால் அந்த அருள் உணர்வுகள் வலுப்பெறும். இணைந்து வாழும் உணர்வுகள் வலுவாக்கப்படும்போது அந்த வலுவின் தன்மை கொண்டு தீமை என்ற உணர்வுகள் வராது தடுக்கும்.

எது நடந்தாலும் இது போல எண்ணிக் கொள்ளுங்கள். அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தார். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை (விஷ்ணு தனுசை) எடுத்தேன். உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேன்.

நீங்களும் “தியானத்தின் மூலம்…” அதைப் பெறவேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன். விஷ்ணு தனுசை எடுத்து இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை வெல்லுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை உருவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள்கால மெம்பராகச் சேர்ந்தவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்…?

LTM - Polaris

துருவ நட்சத்திரத்தின் ஆயுள்கால மெம்பராகச் சேர்ந்தவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்…?

 

சலிப்போ சங்கடமோ வேதனையோ வெறுப்போ வந்தால் அல்லது இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் அதை நாம் பார்க்க நேருகிறது என்றால் உடனே நேரம் நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு பேர் ரோட்டில் சண்டை போடுகிறார்கள். ஒருவன் அடிக்கிறான். அடுத்தவன் ஐய்யய்யோ… அம்மா…! என்று அலறுகிறான். அந்தப் பாவிப்பயல் இவனைப் போட்டு இப்படி அடிக்கிறானே…! என்று அந்த உணர்வுகள் உடனே நம்மைப் பேச வைக்கிறது.
1.நாம் பேசுகிறோமா…? நாம் பேசவில்லை…!
2.அந்த உணர்வு தான் நம்மைப் பேச வைக்கிறது.

அதே சமயம் எதிரி ஒருவன் நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் இப்படி அடி வாங்கிக் கொண்டிருந்தால் என்ன சொல்வோம்…?
1.அவனை அடித்தது சரிதான்…!
2.இன்னும் இரண்டு கொடுக்க வேண்டும்…! என்போம்.

இரண்டு பேர் பேசுகிறார்கள் என்றால் அந்த உணர்வை நாம் ஏற்றுக் கொண்ட பின் ஒருவன் இன்னொருவனைத் துரத்திக் கொண்டு சென்று அடித்தால்
1.தொழிலில் இவன் ஏதோ குறும்புத்தனம் செய்திருக்கிறான் அதனால் தான் அடிக்கிறான்…! என்போம்.
2.அப்போது அடிப்பதைக் கண்டு ரசிக்கிறோம்.

இந்த உணர்வுகள் எங்கே கொண்டு போகிறது…? இந்த உணர்வுகொப்ப அடிப்பதை ரசிக்கின்றது…!

ஆனால் பரிவு கொண்ட மனம் கொண்டவனை அடித்தவுடனே வேதனை என்ற உணர்வை நாம் நுகர்கின்றோம். ஆகவே இந்த நல்ல குணங்கள் “இரண்டு தரத்திலும் கொல்லும்…!” சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா…?

நல்ல எண்ணம் கொண்டு பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத்தான் குருநாதர் என்னைக் காட்டுக்குள் அனுப்பி ஒவ்வொரு நிமிடமும் அறியச் செய்தார்.

1.நாட்டுக்குள் போகும் போது மனித உணர்வுகள் எப்படி இருக்கின்றன…?
2.அந்த உணர்விலிருந்து நீ தப்ப வேண்டுமல்லவா…? என்று
3.அவரைப் போலவே பைத்தியக்காரன் மாதிரி வேஷ்டியைக் கிழிக்க வைத்துச் சில நேரங்களில் போகச் சொல்லுவார்.

முதலில் என்னை சூட் (SUIT) போட்டுக் கொண்டு போடா… என்று சொன்னார். அப்புறம் வேஷ்டியைக் கிழித்துக் கொண்டு போடா… என்று சொன்னார். இதையும் போடச் சொல்லுகிறார். அதையும் போடச் சொல்லுகிறார்.

சூட்டைப் போடுடா…! என்கிறார். நான் (ஞானகுரு) வேண்டாம்… வேண்டாம்…! என்கிறேன்.

கிழிந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு போடா…! என்கிறார். கிழிந்த வேஷ்டியைக் கட்டிய பின் பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

சூட்டைப் போட்டு அதிகாரத்தின் துணை கொண்டு போனால் நீ அஞ்சி… அடுத்தவனையும் அஞ்சச் செய்யும் உணர்வைத் தான் நீ எடுப்பாய். ஆனால்
1.கிழிந்த உடையில் போகும்போது யாரும் உன்னைக் கவனிக்க மாட்டான்…!
2.இந்த உணர்வின் தன்மை வரும் போது… “அவன் உணர்வை நீ அறிய முடியும்…!” என்றார்.

CIDஆக வருபவர்கள் என்ன செய்கிறார்கள்…? பிச்சைக்காரன் மாதிரி உடையணிந்து வந்து ரகசியங்களை எல்லாம் அறிந்து சொல்கின்றனர். இதே மாதிரித் தான் இந்த உணர்வின் இயக்கங்கள்…! என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஆகவே நீ எப்படி இருக்க வேண்டும்…? ஆனால் மற்றதை நீ நுகர்ந்தாலும் அதை நுகர்வதற்கு முன் நீ என்ன செய்ய வேண்டும்…? என்று வினா எழுப்பினார் குருநாதர்.

1.முதலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உனக்குள் வலு ஏற்றிக்கொள்.
2.அந்த வலுவான நிலைகளை ஏற்றுக் கொண்ட பின் தவறு செய்பவர்களை உற்றுப் பார்.
3.உற்றுப் பார்க்கும் போது அதிலுள்ள உணர்வுகளைப் பிரித்து நன்மை தீமைகளைக் காட்டும்.
4.தவறு என்று தெரிந்தால் மறுபடியும் “ஈஸ்வரா…!”என்று புருவ மத்தியில் எண்ணி அதை உள்ளுக்குள் போக விடாது நிறுத்திப் பழகு.

நிறுத்திய பின் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர். அப்பொழுது…
1.அருள் ஒளி என்ற நிலையில் அந்த உணர்வு மகிழ்ச்சியாகிறது.
2.சூட் (SUIT) என்பதைப் பின்னாடி தான் என்ன என்று கொடுக்கிறார்.

ஏனென்றால் ஒருவன் நம்மைத் திட்டினான்… திட்டினான்…! என்ற உணர்வு நமக்குள் இருக்கும் போது அவன் நினைவு வரும்போது அமெரிக்காவிலிருந்தாலும் அது இயக்குகிறது அல்லவா…!

அதே போல் அவனுடைய உணர்வு நமக்குள் இருக்கும் போது அவனை எண்ணினால் அந்தத் தீயதின் உணர்வுகளை எடுத்து நம் நல்ல உணர்வுகளை வீழ்த்தி அதைச் சாப்பிட்டு விடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று எண்ணி உள்ளுக்குள் நிறுத்தி விட்டால் இங்கே தடுத்து (BANDH) விடுகிறது. தீமையை இழுக்கும் சக்தியை இழக்கிறது.

அந்தத் தீயதை இழுக்க முடியாமல் தடை வரும் போது கொஞ்ச நேரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகப் பழக தீமையான உணர்வுகள் விலகிச் செல்கிறது.

நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தீமைகள் விலகி விட்டால் அதைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து எடுத்துக் கொள்கிறது. மறுபடியும் தன் இனமான உணர்வுகளில் கலந்து அது பிரியும்.

ஆகவே எத்தனை வகையான தீமைகளைப் பார்த்தாலும் “ஈஸ்வரா…! என்று சொல்லி
1.எங்கள் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்.
2.எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும்.
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
4.இந்த மூன்று மண்டலத்தையும் நாம் எண்ண வேண்டும்.
5.இரத்தம் ஒன்று… உடல் இரண்டு… அணுக்கள் மூன்று…. இந்த மூன்றிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலக்கப்படும் போது
6.தீமைகள் அனைத்தும் மாறி நம் உடலில் ஒளியான அணுக்களாக உருவாகும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் கால மெம்பராக இருக்கும் நீங்கள் இதை அடிக்கடி செய்து வர வேண்டும். இதை வலுவான உணர்வோடு எடுக்க வேண்டும்.

எந்தத் தீமையான உணர்வும் உங்களுக்குள் வரக்கூடாது. அருள் உணர்வு உங்களுக்குள் வளர வேண்டும். குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் அதை மாற்றிப் பழக வேண்டும். உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஆகவே ஆயுள்கால மெம்பர்கள் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்திரத்துடன் இணைந்து இருக்க வேண்டும்.

அகஸ்தியன் “27 நட்சத்திரத்தின் சக்தியை” ஏன் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டான்…?

dippers

அகஸ்தியன் 27 நட்சத்திரத்தின் சக்தியை ஏன் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டான்…?

 

இயற்கையின் இயக்கத்தின் பல உண்மைகளை அறிந்த அகஸ்தியன் தாவர இனங்களின் உணர்வையும் முழுமையாக அறிகின்றான். பச்சிலைகளைச் சாப்பிடும் போது உடலிலிருந்து அந்தப் “பச்சிலைகளின் மணம் தான்…!” வருகின்றது என்று அறிகின்றான்.

எந்தெந்தப் பச்சிலைகளை வெள்ளாடு சாப்பிடுகிறதோ அதே போல் மான் சாப்பிடுகிறதோ அதற்குத்தக்கவாறு அதனதன் உடல்களிலிருந்து மணங்கள் வருகிறது.

அந்த மணம் வரப்படும் பொழுது அந்த மானையோ ஆட்டையோ கொன்று பிற மிருகங்கள் அதைச் சாப்பிடும் போது அந்த உணர்வின் தன்மை தான் அதன் உடலுக்குள்ளும் சேருகிறது.

அதாவது எதை அதிகமாக நேசித்துச் சாப்பிட்டதோ அதையே தான் தேடும். உதாரணமாக ஒரு புலி மான்களை அடித்துச் சாப்பிட்டது என்றால் அந்த மானைத் தான் அதிகமாகச் சாப்பிடும்.

ஒன்றை ரசித்துப் புசித்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டபின் அந்த அணுக்கள் தான் அங்கு அதிகமாக வளரும். ஆகவே தான் புலி மானை அதிகமாக அடித்துச் சாப்பிடுகிறது. புலி மற்றொன்றைக் குறி வைத்த நிலைகள் இருந்தாலும் அந்த உணவைத் (மானைத்) தேடியே போகும்.

உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசி இருக்கிறது. அந்த மொக்கை அரிசியைத் தான் அவர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
1.அந்த மொக்கை அரிசியை நம்மைச் (தமிழ் நாட்டில்) சாப்பிடச் சொன்னால்
2.இந்த மொக்கை அரிசியை யார் சாப்பிடுவது என்கிறோம்…?
3.நாம் இங்கே சாப்பிடக்கூடிய நைஸ் (சன்னமான) அரிசியை அவர்களைச் சாப்பிடச் சொன்னால்
4.இதை யார் சாப்பிடுவார்கள்…? என்று அவர்கள் (கேரளா) கூறுகிறார்கள்.

இவையெல்லாம் அந்தந்த உணர்வுகொப்ப வலிமை கொண்ட உயிரினங்கள் மற்ற சாந்தமான உயிரினங்களைக் கொன்று புசித்தாலும் எல்லாவற்றையும் அது தாராளமாகச் சாப்பிடுவதில்லை. தன் உணர்வுகொப்ப தான் உணவை எடுக்கும்.
1.மற்ற உணவுகள் இருந்தாலும் அவற்றை முகர்ந்து பார்த்துவிட்டுப் போய் விடும்.
2.அதற்குப் பிடிக்கவில்லை என்றால் மற்றொன்றை – அது எதைக் குறி வைத்து தாக்கியதோ அதைச் சாப்பிடும்.
1.இதைப்போல இயற்கையின் நியதிகளை அதனதன் உணர்வுகொப்பத் தான் இந்த இயக்கத்தின் நிலைகளே மாறுகிறது என்பதை அகஸ்தியன் அறிந்தான்.

வெள்ளாடுகளைப் போல நாமும் பச்சையாகக் காய்கறிகளைச் சாப்பிட ஆரம்பித்தோமானால் இப்போது மனிதனாக இருக்கும் நமக்குள் வெள்ளாட்டின் உணர்வுகளின் அணுக்கள் தான் சேரும். வெள்ளாட்டின் ஈர்ப்புக்குள் நாம் போய்ச் சேருவோம்.

மான் அது எதை எதையெல்லாம் சாப்பிடுகிறதோ அதன் உணர்வு கொண்டு அந்தப் பச்சிலைகளை நாம் சாப்பிட ஆரம்பித்தால் (வேக வைக்காமல்) சாப்பிட்டால் அதன் நிலைக்கே போவோம்.

குரங்கினங்களை எடுத்துக் கொண்டால் அது மனித இனமாக இருக்கும். எந்தெந்தப் பச்சிலைகளை அது உணவாக உட்கொள்கிறதோ அதன் மணம் வந்தால் அதன் ஈர்ப்புக்குள் சென்றுவிடும்.

இன்று மனிதனாக உருவாக்கிய பின் “நமது மாற்றங்கள் இப்படித் தான் இருக்கும்…!” என்ற நிலைகளை தெளிவாக அறிந்து உணர்ந்தவன் அகஸ்தியன். அதனால் உணவை வேக வைத்து அது மீண்டும் முளைக்காத நிலையிலே செய்து சாப்பிட்டான் அந்த அகஸ்தியன். “அவனுடைய வளர்ச்சி இது…!”

1.அகஸ்தியன் தன் வாழ்நாளில் உணவை வேக வைத்துச் தான் சாப்பிடுகிறான்.
2.உணவை வேக வைத்துச் சாப்பிட்ட பின் இறந்தால்
3.மறு பிறவிக்கு – அதாவது மற்ற உயிரினங்களின் ஈர்ப்புக்குள் போக முடியாது.

ஏனென்றால் அன்று அகஸ்தியன் வாழ்ந்த இடங்களில் உணவுக்காக மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுவது அந்த மலைவாசிகளுக்குச் சர்வ சாதாரணம்.

ஆகவே மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிட்டு வந்தால் இந்த உணர்வின் தன்மை கொண்டு சென்றால் மீண்டும் பிறவிக்குச் செல்வோம்…! என்று தெளிவாக உணர்ந்து கொண்டான்.

ஆகவே இதை வெல்வதற்காக அன்று அகஸ்தியன் என்ன செய்தான்…?

27 நட்சத்திரங்களின் உணர்வுகளும் மோதும் போது ஒளிக் கற்றையாக மாறி உணர்வின் அணுக்கள் மின் அணுக்களாக மாறும். அதை எடுத்தோம் என்றால் இதை எல்லாம் வேக வைக்கலாம்…! என்று அறிகின்றான்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா…?

நட்சத்திரங்களின் ஆற்றல்கள் மோதி மின்னல்களாக வரும் பொழுது அந்த ஒளிகளை வெள்ளிக் கோள் எடுக்கிறது. “பளீ….ர்ர்ர்…! என்று மின்னல் வருவதை எல்லாம் அந்த வெள்ளிக் கொள் உணவாக எடுக்கிறது. அதே சமயத்தில் மோதியவுடனே விஷம் பிரிந்தே தீரும்.

வீட்டில் விஷமான காய்கறிகளை வேக வைத்துப் பாருங்கள். இந்த விஷம் பிரியும். விஷம் பிரிந்த உடனே என்ன செய்கிறது…?
1.காற்றிலுள்ள எந்த விஷத்தின் தன்மை தாக்கியதோ
2.இதைப் பிரித்துத் தன்னோடு சேர்த்து அது வளர்த்துக் கொள்ளும்.
3.சூரியன் இந்த விஷத்தின் நிலைகளை எடுத்திருந்தால் அதனின் சத்தைப் பிரித்து அதனுடன் இணைக்கும்.

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைக் காட்டுக்குள் கொண்டு போய்க் காட்டுகிறார். பெற்ற அனுபவத்தை எல்லாம் நீங்களு பெற வேண்டும் என்பதற்காகத்தான் (ஞானகுரு) இதைச் சொல்கிறேன்.

இவற்றைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் அதனால் தான் உணவை வேக வைத்துச் சாப்பிட வேண்டும் என்று எண்ணுகிறான்.

மாமிசங்களை வேக வைத்தாலும் என்ன நடக்கிறது…? அதை வேக வைத்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சாறுகளை சூரியன் கவரும். சூரியன் எவ்வழியில் கவர்கிறது…?

எந்தெந்த செடியின் சத்தைக் கவர்ந்து இந்த உடலானதோ அதேபோல இது வெளிப்படும் போது சூரியன் எந்தெந்தச் செடியின் சத்தை எடுத்ததோ அதை இது கவர நேர்கின்றது.
பலவிதமான செடியின் தன்மை வரப்படும் போது
1.இந்த வெள்ளாட்டின் குணங்கள் எப்படி இருக்கின்றதோ
2.இதையும் சேர்த்து ஒரு புது விதமான செடி வரும்.

அதே போல புலிகள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையும் இது உடலிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையையும் சூரியன் எடுத்துக் கொள்ளும்.
1.இந்தப் புலி இது எதையெல்லாம் கொன்றதோ
2.இதைப் போல மற்ற உயிரினங்களின் சத்தை இது கவர்ந்து வைத்திருந்தால்
3.இதைச் சேர்த்து ஒரு புது விதமான உணர்வை எடுக்கும்.

அதாவது அப்போது தாவர இனங்களின் சத்தும் மிருகங்கள் கொன்று பூசித்த உணர்வும் ஒன்றாகப்படும் போது இந்த உணர்வுகள் ஒன்றோடு ஒன்று மோதி மீண்டும் தாவர இனங்களாக மாறும்.

அப்படி உருவாகும் பொழுது…
1.இரத்தம் உறியக்கூடிய தாவரமு…ம் ஒன்றுகொன்று கொன்று புசிக்க கூடிய நிலைகளும்
2.சாப்பிட்டதும் கொல்லக்கூடிய விஷமான தாவரங்களும்
3.இப்படிப் பல விதமான தாவர இனங்கள் உருவாகின்றன என்பதை அகஸ்தியன் தெளிவாக உணர்கிறான்.

ஆகவே இத்தகைய விஷத் தன்மையை எல்லாம் வெல்வது எது…? என்ற நிலையில் தான் அந்த 27 நட்சத்திரத்தின் ஆற்றல்களைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டான்.

27 நட்சத்திரத்தின் சக்தியை அப்படி எடுத்த அந்த அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான். அந்த ஆற்றலை நாம் பெற்றால்
1.நாமும் ஒரு ஒளியான நட்சத்திரமாக
2.துருவ நட்சத்திரமாக நிச்சயம் ஆக முடியும்.

மரண பயத்தையும்… பதட்டத்தையும்… அகற்றக்கூடிய உபாயங்கள்

Polaris protection

மரண பயத்தையும்.. பதட்டத்தையும்… அகற்றக்கூடிய உபாயங்கள் 

பாம்போ மற்ற உயிரினங்களோ ஒரு தரம் ஒன்று எதிர்த்துத் தாக்கி விட்டால் அதைக் கண்டு அஞ்சும்.

ஒரு நாய் குரைத்துக் கொண்டு கடிக்க வருகிறதென்றால் ஒரு கல்லை எடுத்து அதை நீங்கள் எறிந்தீர்கள் என்றால் அடுத்த முறை உங்களைக் கண்டாலே அது குரைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விடும்.

ஆனால் அதே சமயத்தில் அந்த நாய் வரும் போது எதிர்த்துத் தாக்குமோ…? என்ற எண்ணத்தில் நீங்கள் ஐய்யய்யோ… ஐய்யய்யோ…! என்று ஓடினால் விரட்டி கொண்டு வரும். நம் உணர்வுக்குத்தக்க நுகர்ந்த பின் அது தாக்கும் நிலைகள் வருகின்றது.

கல்லைக் கொண்டு அடித்தால் இந்த உணர்வு வலியான பின் “நம்மைத் தாக்குபவன்” என்ற உணர்வு கொண்டு அஞ்சி ஓடுகிறது.

இதைப்போன்ற இயற்கையின் நியதிகளை நாம் தெரிந்து கொண்டால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் வலுவான உணர்வை எடுக்கப்படும் போது தீமையான உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

தீமைகள் வரும் சமயம் பயமானால்… “ஈஸ்வரா…!” புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அங்கே புருவ மத்தியில் சேர்த்து அடைத்துப் பழக வேண்டும்.

1.அப்படிச் சேர்த்து விட்டால்
2.உயிரில் பட்டு அந்தப் பய உணர்வு நமக்குள் உள் செல்லாதபடி
3.மன உறுதி கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று
4.சிந்தித்துச் செயல்படும் சக்தி வலுவாக வரும்.

உதாரணமாக காட்டுக்குள் செல்லும்போது வழியில் நரி இருக்கிறது என்று நாம் அதைக் கண்டு பயந்து ஓடினால் துரத்தும். அப்படித் துரத்தும் சமயம் நாம் வேகமாக ஓடி வரும் பொழுது ஒரு மரத்தின் அருகில் வந்து “சடார்…!” என்று விலகி விட்டால் போதும்.

குருநாதர் சொன்ன முறைப்படி நான் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லும் பொழுது இதே போல ஒரு சமயம் யானை என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. மற்றொரு சமயம் புலி என்னை துரத்திக் கொண்டு வருகிறது. இதெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

புலி வேகமாக வந்த பின் “நேராக… மரத்தை நோக்கி ஓடு…” என்றார் குருநாதர். நேராக ஓடிய பின் “டப்…” என்று திரும்பிக் கொள்…! என்றார். அவர் சொன்ன மாதிரி நான் செய்ததும் வந்த வேகத்தில் மரத்தில் முட்டிக் கொண்டது புலி.

அதே மாதிரி இன்னொரு சமயம் யானை எம்மைக் குறி வைத்துத் துரத்துகிறது. நேராக மரத்தை நோக்கி நேராக ஓடி “டபக்..” என்று விலகி நான் அடுத்த மரத்தின் பக்கம் ஓடியவுடனே யானை வந்த வேகத்தில் பிரேக் (BRAKE) போட முடியாதபடி மரத்தில் போய் முட்டுகிறது.

இதே போல பல நிலைகள். இவையெல்லாம் மனிதனால் செய்யக் கூடிய நிலைகள்.

மரத்திலே இரண்டு முறை முட்டிய உடனே யானை சோர்ந்து போகிறது. விரட்டிப் பார்க்கிறது… இரண்டு அடி பட்ட உடனே தன்னாலே விலகி விடுகிறது. இந்த உணர்வின் இயக்கங்கள் மனிதனானவன் தன்னைக் கொன்று விடுவான்…! என்று எண்ணுகிறது.

தனி ஒரு யானையாக இருந்தால் மனிதனை விரட்டுகிறது. யானை கூட்டமாக இருந்தால் மனிதனை விரட்டாது. ஆனால் அது பயமில்லை. பயத்தால் தாக்குவது தான் யானை.

அதிலிருந்து வந்தவர்கள் தான் நாம். ஆகையினால் “மனிதன் அனைத்தும் அறிந்தவன்…!” என்று உணர்வின் அலையால் மற்ற உயிரினங்கள் அறிந்து கொள்ளும் சக்தி வருகின்றது.

1.ஒரு உயிரினம் மற்றதை எப்படித் துரத்துகிறது…?
2.நாம் எப்படி அஞ்சி ஓடுகின்றோம்…?
3.நுகர்ந்து விட்டால் அந்தப் பயமான அதிர்ச்சியான உணர்வுகள் நம் உடலுக்குள் என்ன செய்கிறது…?
4.இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன…? என்று
அதையெல்லாம் அனுபவத்தில் அறிந்து கொள்வதற்காகத்தான் நமது குருநாதர் காடு மேடு மலைகளிலெல்லாம் அலையச் செய்து இயற்கையின் உணர்வுகளை அறிந்துணரும்படி செய்தார்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?

1.இவையெல்லாம் அறிவால் அறிந்து…
2.உணர்வால் பதிவாக்கி…
3.அந்த உணர்வின் தன்மையை மீண்டும் எண்ணும்போது அந்த உணர்ச்சிள் கிளர்ந்து
4.நம்மைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்க நம்மைச் செயல்படுத்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

 

நமக்குள் பொங்கச் செய்ய வேண்டிய சக்தி

Pongalo pongal

நமக்குள் பொங்கச் செய்ய வேண்டிய சக்தி…!

தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்தால் தண்ணீர் அந்த நிறத்தின் தன்மையாக முழுமையாக இருக்கிறது. அதற்குள் சிறிதளவு (நல்ல) தண்ணீரை மீண்டும் ஊற்றும் போது அதே நிறமாகத் தான் தெரிகிறது.

ஆனால் அதிகமாக நல்ல நீரை ஊற்ற ஊற்ற அந்த நிறம் மாறுகிறது.

அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. அதிலே இந்த நன்னீரை விட விட அழுக்கு தண்ணீர் பொங்கி வெளியே வருகிறது. நல்ல நீர் சேரச் சேர,,, சேர… அழுக்கின் தன்மை குறைந்து முழுவதும் நல்ல நீராக வருகின்றது.

இதைப் போலத் தான் நுகர்ந்தது (சுவாசிப்பது) உயிரிலே படும் போது உணர்வாகின்றது. உடலுக்குள் செல்லும் போது உடலில் உள்ள எதிர் அணுக்கள் அதை மாற்றப்படும் போது அது எப்படி ஆகிறது…?

ஏனென்றால் அதனுடைய வலு அது.

அதைக் குறைக்க வலுவான உணர்வுகளை அதிகமாகச் சுவாசிக்கும் போது அது எப்படி அடங்குகின்றது…?
1.சுவாசித்ததை முதலில் எதிர்க்கிறது.
2.ஆனால் அதைக் காட்டிலும் வலிமையானதை அதிகமாக்கி விட்டால் குறைகிறது.

“சொல்வது புரியவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உன்னுடைய உடலில் எப்படி உரு மாறுகிறது என்பதனை அனுபவ ரீதியாகக் கொடுத்தார்.

நாம் நல்லவர்களாக இருப்பினும் மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த குறையான உணர்வுகள் நல்ல குணங்களுக்குள் கலந்து விடுகின்றது.

அதைக் குறைக்க வேண்டும் என்றால் நமக்குள் பொங்க வேண்டியது எது…?
1.நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பொங்கச் செய்து (அதிகமான அளவில் கூட்டி)
2.நமக்குள் வந்த இருளைத் தணியச் செய்ய வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் உணர்வின் அறிவைக் கூட்ட வேண்டும்

அப்பொழுது வெகு தொலைவிலிருந்து வரும் இருள்களையும் அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுகின்றோம். அந்தத் துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கிறது.

வெகு தொலைவில் வரும் உணர்வுகளைப் பலவீனப்படுத்தி உணர்வின் ஒளியாக மாற்றி ஒளியின் உடலாக இருந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வினை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.உயிர் ஒளியாக இருக்கிறது
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாம் பெறுகின்றோம்.

 

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்
1.அந்தத் துருவ தியான நேரத்தில்
2..பொங்கும் மங்கல உணர்வின் தன்மையை நினைவு படுத்தி
3..நீங்கள் எங்கே இருந்தாலும்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்று
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிரார்த்தனை செய்து கொண்டேயிருக்கின்றேன்

அந்த நேரத்தில் நீங்களும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தப் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று சிறிது எண்ணினாலும் அந்த நறுமணங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துத் தீமையை விளைவிக்கும் நிலைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக உருவாக்கும் போது கல்கி.

1.உயிர் ஒளியாக இருக்கிறது
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் வழி முறை

Bramha - creation

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் வழி முறை 

அகஸ்தியன் தாய்க் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் நஞ்சை வென்றிடும் சக்திகளை அவன் பெற்றான்.

அதன் வழில் நஞ்சை நீக்கும் ஆற்றல்கள் அவன் உடலுக்குள் வளர்கின்றது. அவன் ஒருவரிடம் வளர்ந்தது மட்டுமல்லாதபடி திருமணம் ஆனபின் தன் மனைவியிடமும் அதையெல்லாம் சொல்லுகின்றான்

அவர்கள் இருவரும் அருள் உணர்வுகளை எடுக்கும் போது நஞ்சை வென்றிடும் உணர்வின் அணுக்கள் இருவர் உடலிலும் விளைகின்றது.

நஞ்சை வென்றிடும் உணர்வுகளை இருவரும் வளர்க்கப்படும் போது பேரண்டத்திலிருந்து வரும் எத்தகைய கடும் விஷமாக இருந்தாலும் அதை ஒடுக்கி ஒளியாக மாற்றும் தன்மையாக வருகின்றார்கள்.

ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக ஆகின்றார்கள்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ் நாளில் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றினானோ இதைப்போல நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நினைத்த மாத்திரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கவர கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவர் சண்டை இடுகின்றார் என்றால் உணர்வின் வேகம் அந்த வலிமை வருகின்றது.

எனக்கு இப்படித் “துரோகம் செய்தான் பாவி…! என்றால் அமெரிக்காவில் இருந்தாலும் இந்த உணர்வுகள் புரையோடி உணவு உட்கொள்ளும் போது நிலையை மாற்றிவிடும். நுரையீரலுக்குள் போனால் மரணம் கூட சம்பவிக்கும்.

வாகனம் ஓட்டும் போதோ தொழில் செய்யும் போதோ “துரோகம் செய்தான்…” என்று எண்ணினால் இந்த உணர்வு சிந்திக்கும் தன்மையைச் செயலிழக்கச் செய்து அங்கே எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றது.
1.அப்போது அவர்களுக்கு அங்கே நஷ்டம்.
2.இங்கே நினைக்கும் பொழுது இவருக்கும் நஷ்டம்.

அதே சமயத்தில் “நண்பன் எனக்கு நல்ல சமயத்தில் உதவி செய்தான்…!” என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. இவனுக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது,

அங்கே விக்கல் ஆகும் போது “யாரோ நினைக்கின்றார்கள்…” என்று அங்கேயும் நல்ல செயலை உருவாக்குகின்றது.

நல்ல குழந்தை என்று மெச்சிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் படிக்கப் போன இடத்தில் ஒரு மாதமாக நமக்குத் தகவல் வரவில்லை என்றால் “என்ன ஆகிவிட்டதோ…?” என்று இங்கே வேதனைப்படுகின்றோம்.

யாருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றதோ வேதனைப்பட்டு மீண்டும் நினைவை அவர்கள் பால் பாய்ச்சப்படும் போது அந்த குழந்தையின் உடலிலே விஷத்தின் தன்மை பாய்ந்து அங்கே சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது.

தொழில் செய்து கொண்டிருந்தால் தவறிழைத்துக் குற்றவாளி ஆக்கிவிடும். வெளியிலே நடந்து செல்லும் போது சிந்தனை தவறி மேடு பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுகச் செய்துவிடும் ஆக்ஸிடென்டும் ஆகும்.

இதெல்லாம் எங்கிருந்து வருகின்றது? இயற்கை எப்படி நம்மை மாற்றுகின்றது? என்று அந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்ந்து கொண்டால் அதை நம்மால் மாற்றியமைக்க முடியும். பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.

சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வு வரும் போது உயிர் அதை பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டிக்கின்றது.

ஆனால் ஆறாவது அறிவு கொண்டு வேதனையை நீக்கும் உணர்வைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால் தீமைகளை அகற்றும் உணர்வுகள் நமக்குள் சிருஷ்டியாகும். இது சந்தர்ப்பம்.

இதைப் போன்ற சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரொளியான உணர்வுகளைக் கலந்து கலந்து அடிக்கடி உபதேசிக்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று தியானித்துத் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் கணவன் எண்ண வேண்டும் அதே போல தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் எண்ண வேண்டும்.

கணவன் மனைவி இரு உணர்வும் கருவாக்கி ஒளியின் அறிவாக மாற்றி நஞ்சை வென்றிடும் சக்தியை இப்படிக் கூட்டிக் கொள்ள முடியும்.

ஞானகுரு உபதேசித்த அருள் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றால் நம் தீமைகள் போக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வர வேண்டும். ஆனால்
1.குருநாதர் செய்வார்…,
2.”அவர் தான் செய்து தர முடியும்…!” என்று எண்ணினால் இது பிழையாகும்.

ஒரு செடியின் தன்மையை உருவாக்கிக் கொடுத்து நீரை ஊற்றி அதை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கொடுக்கின்றோம்.

1.குருநாதரே செடியையும் வளர்த்துக் கொடுப்பார் என்று சொன்னால்
2.அது எப்படி இருக்கும்…!

ஏனென்றால் குழந்தை மீது உள்ள பாசத்தால் “உணர்வுகள் ஒன்றாகும்போது…” நீங்கள் எண்ணி எடுக்கும் வேதனை உணர்வுகள் அது குழந்தையைத் தாக்கி அங்கே தீமையை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் உங்கள் உடலிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருக்கின்றேன்.

நான் எண்ணுகின்ற மாதிரி நீங்களும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் இது உங்களுக்குள் அரும் பெரும் சக்தியாக உருவாகும்.

1.உங்கள் எண்ணத்தால் தான் உங்களைக் காக்க முடியும்.
2.நான் காப்பாற்றுவேன் என்று சொன்னால் நான் கடவுள் அல்ல.
3.உங்கள் உயிர் தான் கடவுள்.

ஆகவே குருநாதர் சொன்னபடி  “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும்” என்று எண்ணி அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்