தீமைகள் வரும் நேரத்தில் அதை நன்மை பயக்கும் செயலாக மாற்றும் வழி முறை

தீமைகள் வரும் நேரத்தில் அதை நன்மை பயக்கும் செயலாக மாற்றும் வழி முறை

 

நல்ல உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நாம் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தால்… பிறருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல அணுக்களில் அது திரை போட்டு விட்டால் என்ன ஆகின்றது…?
1.நம் சிந்திக்கும் நிலைகளுக்கு அதுவே தடையாக வந்து சேர்ந்து விடுகின்றது.
2.இதைத் துடைக்க வேண்டும்.

அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

என் பார்வை அவர் இருளைப் போக்கும் அருள் சக்தியாக மாற வேண்டும். என் சொல் அவருக்குள் உண்மையை உணர்த்தும் சொல்லாக வரவேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உணர்வின் ஒலிகள் படப்பப்படும் பொழுது நம்மை அவர் எண்ணும் பொழுது “இந்த உணர்வு அவருக்குள் ஊடுருவும்…”
2.எந்த காரணத்தைக் கொண்டு நாம் அந்த நல்லதைச் சொன்னோமோ
3.அவருடைய தீமையான உணர்வுகளுக்குள் இது சேரும் போது அங்கே இது முன்னாடி இருக்கும்.

அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே நமக்கு முன்னணியில் இருக்கும். அருள் உணர்வுகளை எடுத்து அதையே நாம் சொல்லப்படும் பொழுது
1.நாம் சொல்லும் உணர்வுகள் அவனைத் திருத்தும்
2.இல்லை என்றால் நமக்கு முன்னணியில் இருக்கும் “அவர் உணர்வு” நம்மை மயக்கிவிடும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உண்மையைச் சொல்கின்றோம். அவர் தீமையைச் சுட்டிக் காட்டுகின்றோம். தீமையான உணர்வுகள் முன்னிலையில் வருகின்றது அவருக்கு. இந்த உணர்வுகள் முன்னணியில் இருக்கப்படும் பொழுது அவர் அதை மறுக்கின்றார். அவருக்கு அது எதிர் நிலை.

அதாவது
1.தீமையின் உணர்வுக்கு நாம் சொன்ன நன்மையின் உணர்வு அங்கே மறைத்திருக்கின்றது.
2.அவரிடமிருந்து உருவான தீமையான சொல்களை நாம் கேட்டவுடன் நல்ல உணர்வுக்கு இங்கே திரைமறைவாகின்றது.
3.இருவருக்குமே மறைக்கிறது… அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தத் தீமையைத் துடைத்து விட்டு அந்த மகரிஷிகளின் நினைவலைகள் கொண்டு சொல்லாகச் சொல்லப்படும் பொழுது தன்னிச்சையாக அங்கே அவருக்குள் அது ஈர்க்கப்படும்.

பெரிய மனிதர் மாதிரி சொல்ல வந்து விட்டார் என்று முதலில் நினைப்பார்.
1. பின் நாம் வெளிப்படுத்திய அந்த மகரிஷிகளின் உணர்வு சிறுகச் சிறுக அவருக்குள் போகும்.
2.இந்த உணர்வுகள் அங்கே புகுந்து அங்கே ஒரு இக்கட்டான நிலை வரும்.
3.அப்பொழுது பதில் சொல்ல முடியாது திணறுவார்.
4.அன்று அவர் சொன்னது சரியாகப் போய்விட்டது என்று திருப்பத்திற்கு வரும் பொழுது நம்மைத் தேடி வருவார்கள்.

இந்த உணர்வின் தன்மை அங்கே இப்படி முடக்கப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை நிச்சயம் வரும்.

செய்து பாருங்கள்…!

அன்றாட வாழ்க்கையில் “சந்தர்ப்பவசத்தால்…” நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது…?

அன்றாட வாழ்க்கையில் “சந்தர்ப்பவசத்தால்…” நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது…?

 

குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் காலத்தில் நாம் ஒரு காரில் பயணம் செய்கின்றோம் என்றால் நமது காருக்குக் குறுக்கே ஒருவர் திடீரென்று வந்து விட்டால் சடாரென்று காரை நிறுத்திக் குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பு கொண்டு அவரைத் திட்டுகின்றோம்.

இப்படிக் காரின் குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பதுடன் மட்டுமல்லாமல் ஒருவேளை அவர் காரில் அடிபட்டிருந்தால் என்னாவது…? என்ற பயமும் நமக்குள் வருகின்றது.

இது சமயம் காரினுடைய டிரைவரும் சரி… மற்றும் காருக்குள் இருக்கும் மற்றவர்களும் சரி… இதனின் உணர்வுகளை நுகர நேருகின்றது.

காரின் குறுக்கே வந்தவருக்கு ஏதேனும் ஆபத்து வரக்கூடாது என்று எண்ணுகின்றனர். ஆனால் பயத்தின் உணர்வுகளை அவர்கள் நுகர்ந்ததனால் பயத்தின் உணர்வுகள் அவர்களிடத்தில் “ஓம் நமச்சிவாயா…” என்று உடலாக மாறி விடுகின்றது.
1.நமது மனித உடலில் பயத்தின் உணர்வுகளும் அதிர்ச்சியின் உணர்வுகளும் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
2,அதிர்ச்சியான உணர்வுகளைத் தூண்டும் உணர்வுகள் நல்ல அணுக்களில் ஊடுருவி நமது உடலையே நடுங்கச் செய்கின்றது.

அது சமயம் நாம் எதைச் செய்வது…? என்ற சிந்தனை இல்லாதபடி “பிரமை பிடித்தது…” போன்று ஆகி விடுகின்றோம்.

ஆனால் ஒருவர் தான் அறியாது திடீரென்று ஒரு காரின் குறுக்கே வருவதன் காரணம் எதுவென்றால்… அவருடைய குடும்பத்தில் எத்தனையோ பிரச்னைகள் வியாபாரத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் தனக்குத் திரும்பக் கொடுக்க முடியாத நிலைமை அதனால் சஞ்சலமும் சோர்வும் ஏற்பட்டுக் கடன் கொடுத்தவருக்கு நாம் எப்படி நல்லவராக நடந்து கொள்வது…? என்ற சிந்தனையில் செல்வோரும் உண்டு.

அதே சமயத்தில் நம்முடைய வருமானம் இவ்வளவுதான்…! ஆனால் குழந்தைகளுக்குப் பள்ளிக்கு மாத கட்டணம் செலுத்த வேண்டும், அவர்களுக்கு உடை எடுக்க வேண்டும் நாளை என்ன செய்வது…? என்ற நிலையில் குடும்பத்தைக் காக்கும் உணர்வுடன் அவருடைய எண்ணங்கள் சென்று அதே சிந்தனையில் செல்லப்படும் பொழுது
1.எதிரே வரும் வாகனத்தையோ எதிரே வரும் மனிதரையோ அல்லது
2.எதிரே இருக்கும் பள்ளத்தையோ பார்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

இப்படித் திடீரென்று குறுக்கே வரும் மனிதரைக் கண்டதும் காரின் டிரைவர் ஒலியை எழுப்பிச் சடாரென்று பிரேக் பிடிக்கின்றார். இதனால் காருக்குள் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி ஆகின்றது.

அது சமயம் காரின் குறுக்கே வந்தவரை எண்ணும் பொழுது
1,நமது உயிரான ஈசன் அந்த உணர்ச்சிகளை நமது உடல் முழுவதும் சுழலச் செய்து அதன் வழி நம்மை இயக்குகிறது.
2.இதனின் உணர்வின் தன்மை நமது நல்ல அணுக்களின் வலுவை இழக்கச் செய்கின்றது.

நன்கு வசதியுள்ள வேதனையை அறிந்திராத செல்வந்தர்கள் இத்தகைய அதிர்ச்சியான சம்பவங்களைக் காண நேரிடும் பொழுது இதனின் உணர்வுகள் அவர்களிடம் ஆழப்பதிந்து விட்டபின் என்ன ஆகிறது…?

இதனின் உணர்வுகளை மற்றவர்களுடன் உரையாடலில் பகிர்ந்து இதையே எண்ணி இதனின் உணர்வுகளை வளர்ப்பதனால்
1.அவருடைய உடலில் பலவிதமான நோய்களும் உடலில் நடுக்க வாதமும்
2.சிந்திக்கும் தன்மையை இழப்பதும் இனம் புரியாத கோபம் வருவதும்
3.இனம் புரியாத பயம் உருவாவதும் போன்ற நிலைகள் அவரிடத்தில் ஏற்படுகின்றது.

இதே போன்று வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே ஒரு வாகனம் வந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில் இன்னொரு பக்கம் இருந்து ஆடோ மாடோ நாயோ ஏதோ ஒன்று குறுக்கே வரும்.

இதன் மீது மோதாமலிருக்க எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது மறு பக்கம் திருப்பும் பொழுது வாகனம் இரண்டும் எதிர்பாராது மோதலாகின்றது.

ஒரு நாயோ பூனையோ காரின் குறுக்கே வந்துவிட்டால் அதைக் காப்பாற்ற எண்ணிச் சிந்தனையை அதன் மேல் செலுத்தி எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது திடீரென்று வண்டியைத் திருப்புவதால் எதிரே வந்த வாகனமும் இவருடைய வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின்றது.

இத்தகைய விபத்தில் சந்தர்ப்பவசமாகச் சில காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

செல்வந்தராக இருந்து செல்வத்தால் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் இந்த விபத்தால் பயம் கலந்த வேதனையும் அதிர்ச்சியும் அவருள் சேர்ந்து அவரிடத்தில் “மன நோயாக…” மாறிவிடுகின்றது.

இதனால் சிந்தனை செய்யும் பொழுது பலவீனமும் தம் குழந்தைகள் தம் சொல்லைக் கேட்க மறுக்கும் பொழுது அதிர்ச்சியும் பலவீனமான நிலையில் பயமும் தன்னிடத்தில் வேலை செய்பவர்கள் தவறு செய்வதால் அதிர்ச்சியும் பயமும் வருகின்றது.

இதன் தொடர் கொண்டு பலவித நோய்களும் வருகின்றது.

பண வசதி படைத்திருப்பதினால் மனோத்தத்துவ டாக்டரிடம் செல்கின்றனர். ஆனால் மன நோயினால் உணர்வின் தன்மை உடலில் நோயாகின்றது. பின்னர் இதற்கு வேண்டிய மருத்துவமும் பயிற்சியும் செய்கின்றனர்.

1.வாழ்க்கையில் எவ்வளவுதான் செல்வம் படைத்திருந்தாலும்
2.இது போன்று எதிர்பாராத சம்பவங்களால் நுகர்ந்த உணர்வுகள் உடலில் தீமைகளை விளைவிக்கும் நிலையாக விளைந்து விடுகின்றது.

இவ்வாறு சந்தர்ப்பத்தால் நமக்குள் அறியாது சேரும் தீமைகளை எப்படித் துடைப்பது…?

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நம்முள் இணைத்திடல் வேண்டும். ஏனென்றால் மனிதனாகப் பிறந்து தமது வாழ்க்கையில் நஞ்சினை வென்று தீமை தரும் சந்தர்ப்பங்களை மாற்றியமைத்து ஒளியின் சரீரம் பெற்றவர்கள் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.தங்கத்தில் திராவகத்தை ஊற்றியதும் தங்கத்தில் கலந்துள்ள செம்பும் பித்தளையும் ஆவியாகி விடுவதைப் போன்று
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம்முள் இணையும் பொழுது நம்முள் உள்ள தீமையின் உணர்வுகள் ஒடுக்கப்படுகின்றது.

“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்” என்ற உணர்வுகளை நமது உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின்… யார் தவறு செய்தாரோ அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் நன்மை செய்யும் பண்புகள் பெற வேண்டும் என்று இதனின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது இவை அனைத்தும் நமக்குள் கலவையாகி நமக்குள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது.
1.இதனின் உணர்வுகளை நமது உடலில் உள்ள அணுக்கள் உணவாக எடுத்து
2.மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

“ஒருவர் நல்லவராக வேண்டும்” என்ற உணர்வை நாம் எண்ணும் பொழுது இதனின் உணர்வுகள் நாம் எண்ணியவரின் உடலில் படர்கின்றது.

அதே சமயம் நாம் நுகர்ந்த உயர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் நமது உடலில் சேரப்படும் பொழுது நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள் அதனை அதிகமாகத் தன்னுள் பெறுகின்றன.

இது போன்று நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் வலு சேர்க்கச் சேர்க்க நமக்குள் மனத் தூய்மையும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருளுணர்வுகளும் நம்முள் உருவாகின்றது.

இவ்வுண்மைகள் அனைத்தும் அருள் ஞானிகள் நமக்கு உணர்த்தியவைகள்.

இவைகளைத் தம்முள் அறிந்துணர்ந்து நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கும் நிலையாகவும் பிறவியில்லாப் பெரு நிலை பெரும் நிலையாகவும் தாம் அருள் ஞான நெறி துணை கொண்டு தம்முள் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து வரும் அன்பர்கள் அனைவரும்
1.தம்முள் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாபவினைகள் பாவவினைகள் பூர்வ ஜென்ம வினைகளை அகற்றி
2.மெய்பொருள் காணும் திறன் பெற்று
3.இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் சக்தி பெற்று
4.பெருவீடு பெருநிலை அடையும் நிலையாகப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்

எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்

 

நாம் எந்தத் தவறும் செய்ய வேண்டியதில்லை. ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்து விட்டால் பாசத்தாலே அதை உற்றுப் பார்க்கின்றோம். அவன் அடிபட்டு வேதனைப்பட்டு வெளிப்படுத்தும் மூச்சலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது
1.அந்த உணர்வுகளை நம் சுவாசத்தின் வழி இழுத்துக் கொள்ள நேர்கின்றது.
2.அவன் பட்ட வேதனை நமக்குள் வந்தபின் அவன் அடிபட்ட உணர்ச்சி நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.

காரணம் அவன் வெளிப்படுத்தும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நினைவு கொண்டு அதைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வு எனக்குள் ஊடுருவி வேதனையைத் தூண்டச் செய்து அதைக் காட்டி அவனைக் காக்கும்படிச் செய்கின்றது.

அதே சமயத்தில் அங்கே ஒரு போக்கிரி வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்… அவன் அசுர குணங்கள் கொண்டு இந்தக் குழந்தை அடிபட்டதைப் பார்த்தபின் மகிழ்ச்சி அடைகின்றான். இவனுக்கு இப்படித்தான் வேண்டும் என்று சொல்கின்றான். நல்லதைக் காக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.

ஆனால் அதைப் போல எண்ணம் கொண்டவன் ரோட்டிலே நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராது திடீரென்று ஒரு பஸ் வேகமாக வருகின்றது. இவனை மோதி விடும் என்ற நிலை வரும் பொழுது
1.இவனுக்குள் இருக்கும் அசுர சக்தி என்ன செய்கின்றது…?
2.அவன் என்னை ஏற்றி விடுவானா…? என்று முரட்டுத்தனமாகப் பார்ப்பான்.
3.ஆனால் அந்த பஸ் இவன் மீது மோதி அடித்த பிற்பாடு தான் இவன் உணர்வான்.
4.ஏனென்றால் எதிர்த்து நிற்கும் சக்தி தான் இது… தன்னைக் காக்கும் சக்தி அங்கே இருக்காது.

முரட்டு குணத்தின் தன்மை கொண்டு இரக்கமற்ற நிலைகளைச் செய்யும் பொழுது “அந்த இரக்கமற்ற உணர்வு… இவனைக் காக்க அவன் எண்ணமே உதவாது…!”

ஆனால் பாசத்தால் குழந்தையில் பால் இரக்கப்பட்டு அவன் வேதனையைச் சுவாசித்து உதவி செய்தாலோ… வேதனையான சத்து இங்கே உடலுக்குள் வந்து விடுகின்றது.

இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தை மலமாக மாற்றுகின்றது. கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்றது தான் ஆறாவது அறிவு.

அதைச் செம்மையான நிலைகள் பயன்படுத்துவதற்குத் தான் யாம் சொல்லும் இந்தத் தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அதை உடலுக்குள் கண்ணின் நினைவு கொண்டு நாம் செலுத்தக்கூடிய நிலைதான் ஆத்ம சுத்தி என்பது.

தியானம் என்பது ஒரு நாளைக்கு பத்து நிமிடம் இருந்தால் கூடப் போதுமானது. ஆனால்
1.எப்பொழுது துன்பம் நேருகின்றதோ அந்தத் துன்பம் உடலுக்குள் புகாதபடி
2.அதை நாம் இந்த வாழ் நாள் முழுவதும் சுத்தி செய்து மகரிஷிகள் உணர்வு கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும்

நரசிம்ம அவதாரம் என்பது இதுதான்.

துன்பம் வரும் பொழுது அந்தச் சுவாசம் உடலுக்குள் சென்று அது உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதை உங்களுக்கு வாக்குடன் கூடித்தான் ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எத்தகைய துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கும் பொழுது அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அதை நீங்கள் சுவாசிக்க நேர்கின்றது.

சுவாசிக்க நேரும் பொழுது சங்கடமான எண்ணம் உடலுக்குள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதை இது ஊடுருவி அதை அமிழ்த்துகின்றது.

அதற்கு இந்த ஆத்ம சுத்தி அவசியம் தேவை.

செடி கொடிகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்திகளை எடுத்துக் கொள்கின்றது. பாக்கி நாள் முழுவதும் காற்றில் இருக்கக்கூடிய தன் இனமான சக்திகளை எடுத்துத் தன் இனமாகப் பெருக்கிக் கொள்கின்றது.

இதைப் போல் தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் பெறுவதற்கு நமக்கு அந்த ஆற்றல் தேவை
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

 

ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த வேதனையான உணர்வு தனக்குள் புகாது தடுத்தல் வேண்டும். தடுப்பதற்கு என்ன செய்வது…?

1.தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்.
2.அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
3.ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
4.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டுத் தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… தீமை வராதபடி தடுக்கும் சக்தி பெறுகின்றது.

மற்றவர்கள் துயரப்படுவதை நாம் பாசத்தால் பார்க்கப்படும் பொழுது கண்ணின் கரு விழி அவர்களைக் கவர்ந்து படமாக்குகின்றது. பதிவான பின் கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அந்த உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை உயிரிலே மோதச் செய்கிறது. அப்போது நாம் வேதனையை அறிகின்றோம்.

அதனால் தான் கண்களை… அதாவது “கண்ணனைத் திருடன்…” என்று சொல்வது. எதை எடுத்தாலும் அவன் திருடிக் கொள்வான்.

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்று வரும் பொழுது கண்ணிலே பதிவாக்கிய பின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வடிக்கப்பட்டு உயிருடன் மோதப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சென்று விடுகின்றது.

அவர் வேதனைப்படுகிறார் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆறாவது அறிவு கார்த்திகேயா…! தனக்குள் அது தீமையை விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டபின்
1.தீமையை நீக்கும் சக்தியை… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் ஆறாவது அறிவால் எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அப்போது உள்ளே செல்லாதபடி அதைத் தடைப்படுத்துகின்றது.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்யப்படும் பொழுது
1.கண்களிலும் காந்தம் உண்டு… உயிரிலும் காந்தம் உண்டு…! கவரும் சக்தி கொண்டதுதான்.
2.கண்ணின் நினைவை உயிரிலே மாற்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உயிருடன் உராயப்படும்போது இந்த உணர்வுகள் உள்முகமாகச் செல்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உள்ளே சென்று அது அழுத்தமாகி
5.வெளியிலிருந்து வரக்கூடிய தீமை உள்ளே போகாதபடி அந்தத் தீமையைத் தள்ளி விடுகின்றது.

உடலில் உள்ள அணுக்களைத் தனித்தன்மை கொண்டு “இங்கே அடைத்து வைத்த பின்…” தீமையை ஈர்க்கும் சக்தி குறைகின்றது. பின் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

இப்படித் தள்ளிவிட்டால் நம் ஆன்மாவிலிருந்து “அதனுடைய வேகமான இயக்கத்தைத் தடைப்படுத்துகின்றது…!”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த வலிமையை நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

வலிமையான பின்… யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்… அங்கே உடல் நோய் நீங்க வேண்டும் என்று இப்படி நாம் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

தீமை என்று அறிந்து கொண்ட பின் இப்படி மாற்றி… தனக்குள் அதை உருவாக்கி உயர்ந்த உணர்வின் சொல்லாக நாம் வெளிப்படுத்த வேண்டும்.

1.அதைத்தான் ராமனின் பக்தன் ஆஞ்சநேயன் என்று சொல்வது.
2.இந்த உணர்வுகள் வாயுவாகச் சென்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது.

“நம் இரத்த நாளங்களில்…” அருள் உணர்வைப் பெருக்க வேண்டியதன் அவசியம்

“நம் இரத்த நாளங்களில்…” அருள் உணர்வைப் பெருக்க வேண்டியதன் அவசியம்

 

உதாரணமாக நாம் ஒரு முறை “திடுக்…” என்று பயந்து விட்டால் அதனின் உணர்வின் கரு நம்முள் உருவாகிவிடும். மீண்டும் நினைவு கொண்டால் அது உணர்வின் அணுவாக நமது இரத்த நாளங்களில் விளைந்து நமது உடல் முழுவதும் சுழலத் தொடங்கும்.

அப்படிச் சுழலப்படும் பொழுது
1.உடலில் அந்த அணுக்கள் இணைந்து குஞ்சாகப் பெருகி விட்டால்
2.நம்மையறியாமலேயே “திடுக்…திடுக்…” என அஞ்சும் உணர்வு வரும்.

இதை நீங்கள் அறிய முடியும்.

இவைகளெல்லாம் யாம் உங்களுக்கு நினைவு படுத்துவதற்குக் காரணம் உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிந்து கொள்வதற்குத் தான்.

நமது வாழ்க்கையில் இத்தகைய அஞ்சும் உணர்வோ வெறுக்கும் உணர்வோ தொழில் நஷ்டமோ இவைகளை எண்ணி நுகரும் பொழுது நாம் நுகர்ந்தது அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களில் “கருவாக…” உருவாகிவிடுகின்றது.

உதாரணமாக… தொழிலில் “நஷ்டமாகி விட்டது… நஷ்டமாகி விட்டது…” என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது அடைகாத்தது போன்று ஆகிவிடுகின்றது.

அது உடலில் குஞ்சாக விளைந்து விட்டபின் அவர்களிடம் போய்
1.நீங்கள் நல்லதை எதைச் சொன்னாலும், “எனக்கு நஷ்டம் நஷ்டம்…” என்று தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
2.“நஷ்டத்திலிருந்து மீள வேண்டும்…” என்ற எண்ணங்களே இவர்களுக்கு வராது
3.ஏனென்றால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் அப்படிப் பேச வைக்கின்றது.

கடல் வாழ் மீன்கள் எங்காவது ஒரு துளி இரத்தத்தினுடைய மணத்தை நுகர்ந்து விட்டால் போதும், விரைந்து அந்த இடத்திற்கு வந்துவிடும்.

தொலைவில் இருக்கக்கூடிய மீன்களை அருகே வரச் செய்து அவைகளைப் பிடிக்க விரும்பினால் தூண்டிலில் இரையை வைத்துச் சிறிது ஒலி எழுப்பினால் அந்த மீன்கள் தூண்டில் இருக்கும் பக்கம் வந்துவிடும்.

இதைப் போன்று நமது உடலிலுள்ள உணர்வின் அணுக்கள் உணர்ச்சிகளை எதன் வழி தூண்டுகிறதென்றால் நமது இரத்த நாளங்களின் வழி தான்.

இராமயாணக் காவியத்தில் “இராமன் குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான்…” என்று உரைத்திருப்பார்கள். அதில் குகன் ஆற்றில் படகை ஓட்டி, வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.

1.நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும்
2.நம் எண்ணங்களால் உருவாக்கிய, உணர்வுகள் எதுவோ அவைகள்
3.நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை உணர்த்துவதற்குக் குகனைக் காட்டுகின்றார்கள்.

நமது இரத்த நாளங்களில் நட்புள்ள உணர்வுகளாகச் சேர்த்து விட்டால் “நமக்குள் வெறுப்பை உண்டாக்கும்.. நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம்…” என்பதை உணர்த்துவதற்கு இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.

இப்பொழுது நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வைக் கலந்து விட்டால்… அது நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி… அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது.

1.தீய உணர்வின் அணுக்கள் நல்லுணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும்.
2.ஏனென்றால் அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது நல்ல அணுக்கள் மடியும்.

இதனை உணர்த்துவதற்குத்தான் முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கி அதில் இராமன் குகனை நட்பாக்கினான் என்று காட்டுகிறார்கள்.

அதாவது நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில்
1.அருள் மகரிஷிகளின் உணர்வைக் கருவாக்கி அணுக்களாக விளையச் செய்தால்
2.அது உடலில் பதிந்திருக்கும் பகைமை உணர்வுகளை நீக்கி
3.மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும்.
3.என்றும் அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

விநாயகர் சதுர்த்தி அன்று அருள் மகரிஷிகள் உணர்வுகளை நாம் அனைவருமே நமக்குள் எடுத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆனால்
1.ஏற்கனவே எண்ணத்தால் நுகர்ந்த பிற தீமையான உணர்வுகள் அணுக்களாக இருக்கின்றது.
2.அதைத் தடைப்படுத்தி விட்டால் ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அது பாட்டுக்கே விலகிப் போய்க் கொண்டே இருக்கும்.

இந்தப் பூமியின் சுழற்சியின் தன்மையில் கடலின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கடல் பக்கத்திலே இருந்து பாருங்கள்.
1.அருகில் சென்றோம் என்றால் நம்மை உள்ளே இழுக்கும்.
2.அலைகள் மாறி மாறி வரும் பொழுது மோதி… மறுபடியும் உள்ளே தனக்குள் இழுக்கும்.

இதைப் போன்று இந்த உணர்வின் தன்மை எந்தெந்த மனிதர் பால் எண்ணி எடுத்து வைத்திருக்கின்றோமோ அது வளர்ந்த பின் “அந்த உணர்வுகள்”
1.எதிலும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கும் பக்கம் செல்லாது.
2.அங்கே சென்றால் செவுட்டில் அடித்த மாதிரி அடித்து விலக்கித் தள்ளிவிடும்.

மரம் செடி கொடி அவைகள் வெளிப்படுத்தும் உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாகத் தோன்றி வளர்ந்து வந்தது. ஆனால் தீமையான உணர்வுகள் கலந்து மனிதனுக்குள் விளைந்தது.

ஆகையினால் மனிதனால் உருவாக்கிய தீமையான அலைகள் தாவரங்கள் அருகே அங்கே போகாது போக முடியாது.

விண்ணிலே சூரிய குடும்பத்தில் உருவான கோள்கள் சூரியனின் பிடிப்பில் இல்லை என்றால் திசை மாறிச் சென்று எங்கே போய் மடிகின்றது என்று சொல்ல முடியாது. பெரிய சுழல் இருக்கும்… அதிலே கரைந்து விடும்.

இதைப் போன்று தான் சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் பெரிய கடல்… அது பூமியில் முதலிலே உருவானது. அதிலே கரைந்து தனக்குள் கரைத்து மீண்டும் வெளிப்படுத்தும்.

இதே போல தான் “மனிதர்கள் ஈர்க்காத உணர்வுகள்…” கடலின் ஈர்ப்புக்குள் சென்று மூழ்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத் தான் சதுர்த்தி என்று உருவாக்கப்பட்டு… தீமை செய்யும் உணர்வுகளை இப்படித்தான் கரைக்க வேண்டும் என்று சிலையைப் புறத்தில் காட்டி
1.மக்களுக்குள் விளைந்த தீமையான வினைகளைp பிறர் பால் பற்று கொண்டு எண்ணி எடுத்த உணர்வுகளைத் தனக்குள் பதிவாக்காதபடி
2.அவர்களை நலமாக்க வேண்டும் என்ற உணர்வினை எடுத்துப் பகைமை உணர்வுகள் இங்கே நிற்காது அப்புறப்படுத்த வேண்டும்.

இங்கே யாரும் எடுக்கவில்லை… நாமும் எடுக்கவில்லை… அவர்களும் எடுக்கவில்லை என்றால் நாம் வாழும் இடத்திலே அது நிற்காது.

விநாயகர் சதுர்த்தி அன்று உலக மக்கள் அனைவருமே
1.இது போன்று அருள் உணர்வுகளை ஏகோபித்த நிலையில் எடுத்துப் பகைமை உணர்வுகளை இழுக்கவில்லை என்றால்
2.இது எல்லாம் ஒதுங்கி கடலுக்குள் சென்று அமிழ்ந்துவிடும்.

அதாவது ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்ளவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு இங்கே இடமில்லை. அப்பொழுது அந்த உணர்வுகள் அது பாட்டுக்கே நகர்ந்து சென்று கடலுக்குள் சென்று மூழ்கிவிடும்.

1.விநாயகர் சதுர்த்தி என்றால் தீமைகளை நிறுத்து…!
2.உனக்குள் தீமையின் வளர்ச்சியைத் தடைபடுத்து…
3.அதைக் கரைத்து விடு…! சாஸ்திரப்படி இது உண்மை.

இரவிலே படுக்கைக்குச் செல்லும் பொழுது “ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

இரவிலே படுக்கைக்குச் செல்லும் பொழுது “ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

 

குழந்தைகளை நாம் வளர்க்கின்றோம், நாம் சொன்னபடி அவர்கள் கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது…?
1.நம் பையன் தான்… ஆனால் வெறுப்பின் உணர்வைப் பதிவு செய்து விட்டால்
2.இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருப்பான்…! என்று இந்த உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்.

ஒரு தரம் பதிவாக்கி விட்டால் பல காலம் நான் நாம் அவன் மீது பேரன்பு வைத்திருந்தாலும் ஒரு தடவை எடுத்த இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விடுகின்றது.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெறுப்பின் எண்ணங்களே வரும். அது வளர்ச்சியாகும். அவனை நல்லதாக மாற்றும் நிலைகளே நமக்குள் மாறி விடுகின்றது. அவன் மீது நாம் வைத்திருக்கும் பற்றைத் தான் மாற்றுகிறது.
1.அவன் மீது பற்று கொண்டு…
2.தீமையிலிருந்து அவனை நல்வழிப்படுத்தும் உணர்வு நமக்குள் வராது.
3.காரணம்… உணர்வின் இயக்கங்களில் தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…!

ஆகவே… இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுதெல்லாம் இது போன்ற உணர்வுகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஆத்ம சுத்தி செய்தாலும் கூட
1.தூங்கச் செல்லும் பொழுது குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது நம் நினைவைத் துருவ மகரிஷியுடன் ஒன்றச் செய்து
2.அடுத்து சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து… சப்தரிஷிகளுடன் நாம் இணையச் செய்ய வேண்டும்.

ஒருவர் மட்டும் நாம் குறி வைத்து எண்ணுவதல்ல. பலரும் சேர்ந்துதான் அது ஒன்றாக ஆனது. இது தான் அடிப்படைக்குறி என்றால் ஒன்றை மட்டும் எடுத்து ஒன்றாக எதுவும் இணைந்ததில்லை.

துருவத்தை முதலில் நுகர்ந்து விண்ணிலே ஒளியாகச் சென்றது துருவ மகரிஷி. அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

ஆனால் அவர்கள் அனைத்தும் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள் மகரிஷிகள். மனிதனாக இருக்கும் பொழுது சிருஷ்டித்துக் கொண்டது.
1.இந்த உணர்வை நாம் பருக வேண்டும்.
2.இதையெல்லாம் வலுப்படுத்தி அவர்கள் ஆன நிலையை எடுத்துத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.
(சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டல உணர்வை முதலில் எடுத்துத் தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திர உணர்வை வலுவாக்க வேண்டும்)

அதைப் பெறச் செய்வதற்குத் தான் பௌர்ணமியன்று கூட்டுத் தியானங்களில் எல்லோரும் சேர்ந்து “சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலுவாக்கச் சொல்வது…”

அந்த வலுவை நமக்குள் கூட்டி இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் ஆன்மாவைச் சிறிது நேரமாவது தூய்மைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக… சமைப்பதற்காக வேண்டி பாத்திரத்தை நாம் உபயோகப்படுத்துகின்றோம்… பின் தூய்மைப்படுத்துகின்றோம் ஆனால் அதிலே ஒன்றிய நிலைகள் சில இடங்களிலே அழுக்கு அதிகமாகப் படிந்துவிடும்.

அதை நாம் நீக்க முயற்சித்தால் தேய்க்கத் தேய்க்க பாத்திரமே ஓட்டையாகி விடுகிறது. ஒரு பக்கம் மேடாகி ஒரு பக்கம் தேய்மானமாகி மேடு பள்ளம் ஆகி சமமில்லாத நிலையாகி விடுகிறது.

இதைப் போன்று தான் அவ்வப்போது (அன்றன்று) தூங்கச் செல்லும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்துத் தூய்மைப்படுத்துகின்றோம்.

அதில் சில தொக்குகள் இருந்தாலும்
1.இரவிலே மீண்டும் முழிப்பு வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
2.மறுபடியும் அந்த எண்ணத்தைக் கூட்டித் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் ஆன்மாவிலே அந்த அணுக்களுக்குக் கிடைக்கக் கூடியதைத் தடைப்படுத்தும் போது தன்னாலே மாறிவிடும்.

ஆகவே இரவிலே எப்படி இருந்தாலும் “படுக்கைக்குச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாகி விடக்கூடாது…”

எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாகி விடக்கூடாது…”

 

எந்த மரத்திலிருந்து வித்தாக உருவானதோ அந்த வித்தைப் பூமிக்குள் பதியச் செய்யும் போது அதன் அறிவின் தன்மையாக அதே மரமாக அதை வளர்க்கச் சூரியன் உதவுகிறது.

இதைப் போல் தான் நமது உயிர்
1.உடலுக்குள் எது அணுவின் தன்மையாக உருவானதோ
2.அதற்கு இந்தக் காற்றிலிருந்து அதே இனமான சத்தைக் கவரும்படி செய்து உணவாகக் கொடுத்து வளர்க்கின்றது.

எந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் கூட்டப்படும் பொழுது “அந்த உணர்வின் அலையாக நமக்குள் மாறுகின்றது…”

1.யார் வேதனைப்படும்படியான சொல்லை நம்மிடம் சொல்கின்றார்களோ நம் ஆன்மாவாக அது மாறும் பொழுது
2.மறைந்திருந்து இந்த மகரிஷியின் உணர்வு அதைத் தாக்குகின்றது.

வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை… மறைந்திருந்தே தாக்குகின்றார்.

ஒருவன் வேதனைப்படும் சொல்களைச் சொல்லப்படும் போது அவனை நேரடியாக நீங்கள் பார்த்தால் என்ன ஆகும்…?
1.வேதனை என்பது வலிமையானது
2.நல்ல குணங்களை எல்லாம் வலு இழக்கச் செய்துவிட்டு அந்த உணர்வின் இயக்கத்திற்கே நம்மைக் கொண்டு செல்லும்.

பாவிப் பயல் இப்படிச் சொல்கிறான் பார்…! நான் ஒன்றுமே சொல்லவில்லை… இவன் இப்படிச் செய்கின்றானே…! என்று என்ன தான் சொன்னாலும் “அது எப்படி நீங்கள் ஒன்றுமே சொல்லாமல் அவர் உங்களைச் சொல்வார்…?” என்று அடுத்தவர்கள் கேட்பார்கள்.

சும்மா இருக்கும் போது யாராவது சொல்வார்களா…? என்று இதே சொல் வரும். இராமன் அம்பை எய்தானென்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான்.

நாம் எதனைக் கலந்து சொல்லாகச் சொல்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே கலந்து அதன் வினாவாக மீண்டும் எழும்பும்.

எவ்வளவு தான் “நான் தவறே செய்யவில்லை…” என்று சொன்னாலும் தவறு செய்யாமல் யாராவது உங்களைச் சொல்வார்களா…? என்பார்கள். எதனை உருவாக்கி எந்தச் சொல் அம்பாகப் பாய்கின்றதோ அந்த சொல்லின் நிலைகள் இப்படித்தான் வரும்.

ஒரு கம்ப்யூட்டரில் எதை ஆணையிட்டு அதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்கும்படிச் செய்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை பதிவாக்கப்படும் பொழுது
1.மீண்டும் அது எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் வலுக் கொண்டு “மற்றதைத் தனக்குள் பிரித்துக் காட்டும்…”
2.அதைப் போன்று தான் உயிர் நாம் சுவாசித்த உணர்வின் சொல்லை எலக்ட்ரானிக்காக மாற்றி விட்டது என்றால்
3.அதே இடம் வரும் பொழுது அது மாற்றும்.

அதாவது… ஒரு மனிதனின் எண்ண வலு நமக்குள் அதிகமாகி விட்டால் அது வாலியாக மாறி விடுகின்றது. நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழக்கப்படுகிறது.

இதைத்தான் வாலியை எவரொருவர் நேரடியாகப் பார்க்கின்றார்களோ அந்த வலுவிலே சரி பகுதி அவனுக்குச் சென்று விடும் என்று “இவ்வளவு காரண காரியத்தோடு…” சாஸ்திரங்களை நமக்குக் காட்டி உள்ளார்கள் ஞானிகள்.

ஒருவன் வேதனைப்படும்படி சொல்லைச் சொன்னால் நம் நல்ல குணங்கள் வலு இழந்து விடுகின்றது அல்லவா…!

அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த உணர்வினைத் தனக்குள் ஏற்றி அந்த வேதனை நம்மைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று உங்கள் கையிலே அதை ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாக ஆகிவிடக்கூடாது…”

உயிரால் வளர்க்கப்பட்ட மனிதன் நீ. எனவே அவனிடமே வேண்டி அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த மெய்ஞானியின் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
2.அதுவாகவே ஆகின்றோம்… நாம் ஞானியாகின்றோம்.

எதிரி எங்கே இருக்கின்றான்…?

எதிரி எங்கே இருக்கின்றான்…?

 

ஒவ்வொரு மனிதனும் தான் தவறே செய்யவில்லை என்றாலும் திடீரென்று மற்றவர்கள் எதையாவது சொல்லிவிட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது… அவரவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு…!

அப்படிப் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… என்னை இப்படிச் சொன்னானே…!” என்ற உணர்வுகள்
1.நமக்குள் அது எதிரியை வளர்த்துக் கொண்டே வருகின்றது.
2.நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை.
3.நல்ல குணங்கள் வலு இழக்க நாமே காரணமாகின்றோம்.

ஆகவே அந்த நல்லதைக் காப்பதற்குத்தான் தத்துவ ஞானிகள் சாதாரண நிலையிலும் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தார்கள். இது அகஸ்தியனால் காட்டப்பட்டது.

1.அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் பெறுவதற்காக இம்முறையை வகுத்தான்.
2.அவன் துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
3.எத்தகைய தீமையைக் கண்டுணர்ந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவர் திட்டி விடுகின்றார் என்றால்… இதே உயிர் தான் இழுத்து இந்த உணர்வினை உணர்ச்சிகளாக இயக்கி… செயலுக்குக் கொண்டு வருகின்றது. இதே உயிர் தான் அதை அணுவாகவும் மாற்றி விடுகின்றது.

அவன் எவ்வளவு வேதனைப் படும்படிச் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது. இது தான் விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… விஷ்ணுவுக்கு பிறந்த பிரம்மா அதை உருவாக்குகின்றார். அதாவது வேதனை என்ற விஷத்தின் தன்மை உருவாகி விடுகின்றது. அது தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… எந்த வேதனையை உருவாக்கும்படிச் சொன்னானோ அதனால் உருவான உணர்வுகள் பிரம்மனாக தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றதனால் “அந்த ஞானத்தின் வழிகளில் செயல்படும்…!”

இயற்கையின் உண்மை நிலைகளை நாம் கண்டு கொள்ள இவ்வளவு கருத்துடன் இதைக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஒரு விஷச் செடி காற்றிலிருந்து தன் இனமான விஷத்தையே நுகர்ந்து விஷச் செடியாக வளர்கின்றது.

அதைப் போல் உடலில் உருவான அந்த வேதனைப்படச் செய்யும் அணு…
1.எந்த மனிதன் வேதனைப்படச் செய்தானோ அவனின்று வரும் இந்த உணர்வை நமக்குள் அதைக் கிளர்ந்து சுவாசித்து
2.அதனுடைய மலத்தை நம் உடலிலே இடும்பொழுது தான் நல்ல அணுக்களுக்கும் அது வேதனை தாங்காது
3.அதனுடைய செயலைக் குறைக்கச் செய்து உடலிலே நோயாக வருகிறது.

என்னை வேதனைப்படச் செய்கின்றான்… அவனை விடுவேனா…? என்று கோபத்துடன் பதிலுக்குச் செய்தாலும் விஷத்தன்மையான அணுக்கள் மீண்டும் அவர்களை எண்ண எண்ண நோயாகவே விளைகின்றது.

அப்பொழுது எதிரி எங்கே இருக்கின்றான்…?
1.நமக்குள் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோம்…
2.நம்மை மறந்து விட்டோம் என்ற நிலை தான் வருகின்றது.

குருநாதர் எனக்கு இதை அனுபவபூர்வமாகக் கொடுத்ததனால் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் அதன் வழி தியானித்தல் வேண்டும்.
1.எத்தகைய வேதனைப்படும் நிலைகள் வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

அதன் பின் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வராது நாம் இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.

நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி

நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி

 

நாம் கெட வேண்டும் என்று யார் எண்ணினார்களோ அவர்களை நாம் எதிரியாகக் கருதும் பொழுது “எதிரியைத்தான்…” உடலுக்குள் வளர்க்கின்றோம்.

இதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் காட்டிய விநாயகர் தத்துவத்தின்படி
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நல்ல குணங்களுக்கு ஊக்கச் சக்தியைக் கொடுப்பதும்
2அவர்கள் தீமையான உணர்வுகளைச் சொல்லும்போது மகரிஷிகள் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும் என்றும் சொல்வது.

காரணம் கண்களிலே பார்த்தது நமது ஆன்மாவாகின்றது. சுவாசித்த பின் உயிரிலே படுகின்றது… அந்த உணர்வு இயக்கப்படும் பொழுது ஜீவணுவாக மாறுகின்றது.

முதல் அணு உருவாகி விட்டாலும் அடுத்த நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

ஏனென்றால்
1.கண் இப்படி முன்னாடி வருவதை எடுத்து அதன் வழி நேரடியாகப் பேசுகின்றது.
2.ஆனால் கண்களால் மகரிஷிகள் உணர்வை எண்ணி அதை எடுத்து இடைமறித்து உயிரிலே (புருவ மத்தியிலே) இணைக்க வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். காரணம் என்ன என்றால் மறந்து விட்டுத் தீமைகளை எப்படி மாற்றுவது…? என்று தெரியவில்லை என்று திரும்பக் கேட்பாரும் உண்டு.

அதனால்தான் ஞாபகப்படுத்துவது…!

வாழ்க்கையில் வரும் தீமைகளை இடைமறித்து அருள் ஞானிகள் உணர்வை உள்ளே செலுத்தப்படும் பொழுது தீமைகளை அகற்ற முடிகின்றது.

தங்க நகைகளைச் செய்கின்றோம்… செம்பு வெள்ளியை அதனுடன் இணைத்துத்தான் செய்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றிச் சுத்தப்படுத்துகின்றோம்.

1.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிய “அந்த வலுப்பெற்ற உணர்வுகள் மகரிஷிகளுடையது…”
2.அதை நாம் நுகர்வதற்குத் தான்… பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் “தியானம்…”

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இது தியானம். மகரிஷிகள் அருள் சக்திகளை உடலுக்குள் செலுத்தச் செலுத்த உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது உரம் ஆகின்றது.

1.பிறர் செய்த தீமைகள் நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்பு அந்த மகரிஷியின் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.தீமையான அணுவாக அது வளர்வதற்கு முன் “அந்த அணுவையே…” நமக்குச் சாதகமான நிலைகளாக மாற்றிவிடும்.
3.தீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்யும் பொழுது “ஒவ்வொன்றிலும் நமக்கு வலுப்பெறுகின்றது…”

இரண்டு தரம் கெட்டதைக் கேட்டோம் அல்லது சொன்னோம் என்றால் நல்லது செய்வதை அது தடைப்படுத்துகின்றது. ஆனால் அதே சமயத்தில் அது போல் ஆன பின் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை இணைத்து விட்டால்
1.அந்த அணு நம் வழிக்கே இணைந்து வருகின்றது.
2.அப்பொழுது நம்மைக் காக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது.

அதற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் நமக்குள் எதை வினையாக்க வேண்டும்…? வினைக்கு நாயகனாக எதை இயக்க வேண்டும்…? என்று கேள்விக்குறி போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

உதாரணமாக… வேதனைப்படும் நிலையாகி விட்டால் அது வேதனையை அதிபதியாக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது. அந்த அணுவின் செயலாக்கங்களையே கொண்டு வருகின்றது.

அதே சமயம் இதை அடக்கிய மகரிஷிகள் உணர்வை அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அந்த அணுவிற்குள் ஞானியின் உணர்வுகள் அதிபதியாகத் தொடங்கி விடுகின்றது.
2.பின் ஒளியான அணுக்களாகவே உருப்பெறத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் நாம் அந்த மெய்ஞானியின் உணர்வை வினையாக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
1.நாம் யாரையுமே எதிரியாக ஆக்குவதில்லை.
2.நமக்குள் எதிர்மறையான அணுக்களும் உருவாகாது
3.ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் உருவாகின்றது… மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.