இனம் புரியாமல் நம்மை இயக்கும் பயமான பதட்டமான உணர்வின் இயக்கங்களை எப்படி மாற்றுவது…? மன வலிமையை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

Image

everything is perfect

இனம் புரியாமல் நம்மை இயக்கும் பயமான பதட்டமான உணர்வின் இயக்கங்களை எப்படி மாற்றுவது…? மன வலிமையை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

 

உதாரணமாக நாம் ரோட்டிலே நடந்து போய் கொண்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராத விதமாக நமக்கு எதிரிலே தீய செயல்கள் கொண்ட ஒருவன் ஆத்திரத்துடன் மற்றொருவனை அடித்து நொறுக்குகின்றான்.

1.தாக்குண்டவனோ வேதனையுடன் அலறுகின்றான்.
2.அடிப்பவனோ மகிழ்ச்சியாக இருக்கின்றான்
3.இந்த இரண்டு உணர்வுகளும் வெளிப்படுகின்றது… சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது
4.நம் கண்ணோ அவர்களைப் பார்க்கின்றது அவர்கள் உடலைப் படமெடுக்கின்றது
5.அடிப்பட்டவரிடமிருந்து வெளிப்படும் வேதனையைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்த அலைகளை நம் கண்ணின் காந்தப் புலனறிவு ஈர்க்கின்றது
6.ஈர்க்கப்படும் உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரிலே படுகின்றது
7.உயிரிலே படும் போது உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு பயமும் ஆத்திரமும் அவன் படும் வேதனையும் நமக்குள் தோன்றுகின்றது.

நம் உயிருக்குள் பட்ட உடனே அதை நாம் உணர்ந்தறிந்தாலும் அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் சென்று விடுகின்றது. அதாவது அடி வாங்கியவன் பயந்து ஓடிவிட்டாலும் சரி… அல்லது இப்படி ஆகிவிட்டானே…! என்று நாம் “எப்படி எண்ணினாலும்…!” அந்தப் பயம் நமக்குள் வந்து விடுகின்றது.

இப்படி ஒரு தரம் பயமும் ஆத்திரமும் எடுத்து விட்டாலும் அடுத்த கணம்
1.எங்காவது “ஓய்…!”என்று சப்தம் கேட்டால் போதும்…! திடீர் என்று இங்கே திரும்பிப் பார்ப்போம். ஓடுவதற்கு ஆரம்பிப்போம்.
2.ஏதாவதொரு சாமான் “டொப்…” என்று விழுந்தால் போதும். அந்தச் சப்தத்தைக் கேட்டு நாம் செயலிழந்து விடுவோம்.
3.ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற நிலையில் வேகமாக எண்ணினால் போதும்…! நாம் எப்படி வேகமாகச் செய்ய முடியும்…? என்ற பதட்ட நிலை வந்து விடும்.

அடிபட்டுப் பயந்த நிலைகளை ஒரு முறை தான் நாம் பார்த்துச் சுவாசித்தோம். அதைத் துடைக்காமல் விட்டதால் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

இந்தப் பய உணர்ச்சிகள் சிறுகச் சிறுக நம் நல்ல உணர்வுடன் சேர்ந்து நம் செயலில் பதட்டமும் பயமும் அதிகமாகி “நடுக்க வாதமாக…!” வந்து விடுகிறது.
1.நம் செயலில் நடுக்கத்தின் தன்மை வந்து விடுகின்றது
2.நம் எண்ணத்தில் நடுக்கத்தின் தன்மை வந்து விடுகின்றது.
3.நாம் பேசும் சொல்லிலே பய உணர்வுகள் கலந்து விடுகின்றது
4.நம் பேச்சை அடுத்தவர்கள் கேட்டபின் பதிலுக்கு அவர்கள் நம்மைக் கேட்கும் பொழுது அது மிரட்டும் தொனியாக வரும்.
5.(அதாவது நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.. என்னை மிரட்டுகிறானே…! என்ற நிலை தான் நமக்குள் வரும்)
6.ஆக நம்முடைய எண்ணமே நமக்குள் எதிரியாக மாறுகின்றது.

அதை நாம் துடைக்க வேண்டுமல்லவா…? அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைக்கச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த அருள் சக்தி உங்களுக்குள் பதிவாகின்றது. அடுத்து நீங்கள் தனித்துச் சென்றாலும் அந்த எல்லோருடைய ஆசியையும் உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

ஏனென்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ துன்ப நிலைகள் கொண்டு வந்தாலும் அனைவரும் இதைக் கேட்டுணர்ந்து அந்த மகரிஷியின் அருள் ஒளியை நாம் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும்படி செய்கின்றோம்.

தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எல்லோரும் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும். வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும் என்று எல்லோருடைய வாழ்த்து உணர்வுகளும் ஒருக்கிணைந்து பதிவு செய்யும் போது “வலுக் கொண்ட சக்தியாக… ஒரு கூட்டமைப்பாகச் சேர்கின்றது….!”

இவ்வாறு கூட்டு தியானத்தில் பதிவு செய்த இந்த உணர்வின் ஆற்றல்களை நாம் அடிக்கடி எண்ணி எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அசம்பாவிதங்கள் ஏதாவது பார்க்க நேர்ந்தால்… உடனே “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று வானை நோக்கி ஏகி கவர்ந்த உணர்வைக் கண்ணின் நினைவு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும் என்று உடல் முழுமைக்கும் சிறிது நேரம் செலுத்த வேண்டும்.

அப்பொழுது எதிர்பாராது மற்றவர்கள் சண்டையிட்ட உணர்வுகளையோ மற்ற பயந்த உணர்வுகளையோ அதை எல்லாம் நம் உடலிலிருந்து அகற்றி நம்மைச் சுத்தப்படுத்தும் நிலையாக வருகிறது.
1.நம்மை அறியாது இயக்கிய அந்தப் பயமான உணர்வுகளும்
2.பதட்டமடையச் செய்யும் நிலையும் நமக்குள் முழுமையாககத் தணிகிறது.
3.மன பலமும் மன வளமும் தெளிந்த சிந்தனைகளையும் நாம் பெறுகின்றோம்…!

செய்து பாருங்கள் உங்கள் அனுபவம் பேசும்…!

குரு இல்லாத வித்தை ஒரு வித்தையாகாது…! ஏன்…?

Image

Guru maharaj

குரு இல்லாத வித்தை ஒரு வித்தையாகாது…! ஏன்…?

 

பள்ளியிலே நாம் படிக்கிறோம் என்றால் பாடங்களை அங்கே சொல்லாகச் சொல்லி வெறும் பாடமாகப் படிக்கும் நிலைகள் (THEORY) வேறு.

அதே சமயத்தில் நேரடியாக “இன்ன இன்ன செய்கின்றது…!” என்று பாட நிலைகளுடன் அனுபவத்தைக் காட்டி (PRACTICAL) உணரச் செய்யும் நிலைகள் வேறு.

1.அனுபவத்துடன் காட்டும் நிலை வரும் போது பொருள் கண்டுணர்ந்து
2.விரயமற்ற நிலைகளில் செயல்படுத்த முடியும்.
3.ஆனால் வெறும் பாட நிலைகளைப் படித்துவிட்டு வரும்போது
4.அதை அறிந்து கொள்ள வரும் போது விரயங்கள் நிறைய ஆகும்.
5.ஏனென்றால் புதிதாக நான் கண்டுணரப் போகின்றேன் என்ற நிலை வரும் போது அது “குருவற்ற நிலை…!”

ஆகவே வெறும் பாட நிலைகளைக் கற்றபின் யாருடைய துணையும் இல்லாது ஒன்றைச் செய்யும் பொழுது காலமும் விரயமாகும்… பொருள்களும் விரயமாகத்தான் செய்யும்.

அதைப் போன்று தான் மெய் ஞானத்தை உணர வேண்டும் என்றால் அனுபவம் பெறாதபடி குரு துணையில்லாது சென்றால் நாம் போகும் பாதையில் சிறு சிறு தடைகள் பட்டாலும் பிறருடைய சோர்வான எண்ணங்களை நாம் கவரும் போது அந்த மெய் ஒளியைக் காணும் நிலைகள் திறனற்றதாகி விடுகின்றது.

அதற்குத்தான் குரு பலம் வேண்டும் என்று சொல்வது. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய அருள் வழிப்படி
1.அவரை நான் (ஞானகுரு) எண்ணி மெய் ஒளியைப் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் போது
2.அவர் கண்டுனர்ந்து எனக்கு உபதேசித்த உணர்வின் அலைகளை நானும் பின் தொடர்ந்து அதை நுகர நேருகின்றது.
3.நுகரும் போது குருநாதருடைய உணர்வுடன் ஒன்றி அவர் பருகிய மெய் ஞானத்தை நானும் பருக முடிகின்றது
4.அந்த உணர்வின் சத்தை நான் பருகப்படும் போது அந்த உணர்வின் எண்ண அலைகள் எனக்குள்ளும் குவிகின்றது.
5.அதே உணர்வின் எண்ணங்களை நான் வெளிப்படுத்தும் போது இது சூரியனின் காந்த சக்தி கவருகிறது.
6.இப்பொழுது நீங்கள் இதைக் கூர்மையாகப் படித்துணரும் போது அந்த மெய் உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பதிவாகின்றது.

இந்தப் பதிவின் நிலைகளை மீண்டும் நினைவாக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று விண்ணை நோக்கி உணர்வைச் செலுத்தி விண்ணிலிருந்து அதை ஈர்த்து உங்கள் உடலுக்குள் அந்த நினைவலைகளைச் செலுத்தப்படுத்தும் போது அந்த ஆற்றல் உங்களுக்குள் சிறுகச் சிறுகச் சேர்கின்றது.

மெய் ஞானிகளின் உணர்வுகளை குரு பலத்தால் தான் நாம் பெற முடியும். குரு துணையில்லாது விண்ணின் ஆற்றலைப் பெற முடியாது…!

எல்லோருக்கும் நல்லது செய்தேன்… ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்று வேதனைப்படுவார்கள்

ultimate-destination

எல்லோருக்கும் நல்லது செய்தேன்… ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்று வேதனைப்படுவார்கள் 

வாழ்க்கையில் நீ நல்லதைச் செய்ய விரும்புகின்றாய். அப்பொழுது பிறர் செய்யும் தவறைப் பார்க்கப்படும் போது
1.அவர்களுக்காக இரக்கப்பட்டோ அல்லது பரிவுபட்டோ அதை ஏங்கிச் சுவாசித்து
2.பல ஆயிரம் பணத்தையும் பொருள்களையும் கொடுத்து அவர்கள் உடலைக் காத்திட நீ உதவி செய்தாலும்
3.அவர்கள் கஷ்டங்களை எல்லாம் கேட்டுணர்ந்த அந்த விஷத்தின் உணர்வின் தன்மையை
4.நீ துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? என்று என்னிடம் (ஞானகுரு) வினா எழுப்பினார் குருநாதர்.

நீ செய்த உதவிகளுக்கு இந்த மனித வாழ்க்கையில் உனக்குப் புகழ் கிடைக்கும்… பேர் கிடைக்கும்… இரக்கத்துடன் இருப்பதால் “நல்லவர்…!” என்று எல்லோரும் உன்னைப் போற்றுவர்.

ஆனால் அதே சமயத்தில் நீ நலிந்து போகும்போது உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள். அந்த நேரத்தில் நீ வேதனையான நிலைகள் கொண்டு
1.நான் எல்லோருக்கும் நல்லதைச் செய்தேன்…!
2.என்னைக் கவனிக்க யாரும் இல்லை…! என்ற அந்தக் குறையான எண்ணத்தை எடுத்து
3.உன்னை இழிநிலைப்படுத்திக் கொண்டு இருப்பாயே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.

இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் மனிதர்களையே வெறுக்கும் நிலை வந்துவிடுகின்றது. பின் உடலை விட்டுப் பிரிந்து சென்று இன்னொரு மனிதக் கூட்டுக்குள் சென்றாலும் அந்த உடலையும் அழித்துவிட்டு வேதனை என்ற விஷத்தை அதிகமாகக் கூட்டும் நிலை தான் வரும்.

பின் அந்த உடலிலிருந்து வெளியில் சென்றால் அதிகமான விஷத்தை ஏற்றுக் கொண்ட உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று மனிதனல்லாத நிலையைத்தான் அடைய முடியும் என்ற இந்த இயற்கையின் நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக்கினார்.

ஆகவே நாம் நல்லது செய்த நிலைகளைக் காத்திட வேண்டுமென்றால் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படர்ந்து உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திப்போர் அனைவரையும் எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.அந்தக் குடும்பத்தில் உள்ளோர் இன்னல்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும்
5..அவர்கள் வாழ்க்கையில் என்றுமே மகிழ்ந்து வாழ வேண்டும்
6.எங்கள் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என்ற இந்த உணர்வை
7.உங்களுக்குள் செலுத்துவீர்கள் என்றால் இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஆற்றல் மிக்கதாகச் சேர்கின்றது.
8.உடலுக்குள் உயர்ந்த சக்திகளாக இது விளைகின்றது.
9.அதே சமயத்தில் உங்கள் பேச்சும் மூச்சும் மற்றவரை நலம் பெறச் செய்கின்றது.

உதாரணமாக வயலிலே விளையும் காய்கறிகளைப் பறித்து உடனே சமைத்து விடுவது இல்லை.
1.அந்தக் காய்கறிகளைப் பறிப்பவர் ஒருவர்
2.அதைக் கடையில் கொண்டு சென்ற வியாபாரம் செய்பவர் ஒருவர்
3.கடைக்குச் சென்று நாம் அதை வாங்கிக் கொண்டு வந்து
4.பக்குவமாகச் சமைத்து ருசியாகச் சாப்பிடும் நிலைகள் வேறு.

இதை போன்று தான் வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகள் நல்லது கெட்டது என்ற நிலையில் வெளியிலிருந்து வந்தாலும் அதை எல்லாம் மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு பக்குவமாகச் சமைத்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் நிலைக்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியை வழங்குகின்றோம்.

ஆகவே மெய் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் பெற்று அந்த உணர்வின் ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“காளிங்கராயன்…” என்ற குருவின் மூலம் தான் போகர் ஆற்றல் மிக்க மெய் ஞானியாக ஆனார்

Image

Bhoganathar - kalinanathar

“காளிங்கராயன்…” என்ற குருவின் மூலம் தான் போகர் ஆற்றல் மிக்க மெய் ஞானியாக ஆனார்

 

ஞானியாக வளர்ந்து வந்தவர்கள் யாருமே பாட நிலைகளில் படித்து அந்த நிலையை அடையவில்லை. இராமலிங்க அடிகளை எடுத்து கொண்டால் அவர் கற்றுணர்ந்து வரவில்லை. அருணகிரிநாதரை எடுத்துக் கொண்டாலும் பல மந்திர தந்திரங்களை அவர் கற்று வரவில்லை.

இராமகிருஷ்ண பரமஹம்சரோ வியாசகரோ வான்மீகியோ கொங்கணவரோ இவர்கள் யாருமே பாட நிலையில் கற்று உணர்ந்தவர்கள் அல்ல. இதைப்போல போகரை எடுத்துக் கொண்டாலும் அவரும் பாட நிலையில் கற்றுக் கொண்டவர் அல்ல.

ஒரு சமயம் போகருடைய சிறு வயதில் அவர் தாய் தந்தையை காளிங்கராயன் என்ற நாகம் தீண்டி விடுகின்றது. அதனால் தாய் தந்தையர் இறந்து விடுகின்றனர்.

தாய் தந்தை மீது அதிகமான பாசமாக இருக்கும் போது தாய் தந்தையினுடைய உயிராத்மாக்கள் போகருடைய உடலிலே சேர்ந்து விடுகின்றது.

அப்போது அந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு தாய் தந்தையர்களை விஷத்தில் இருந்து மீட்டுக் கொள்வதற்காக பல உணர்வின் தன்மைகளைத் தனக்குள் அது எடுத்து நுகர்ந்தார்.

நாகம் தன் தாயைக் கொன்று விட்டதே…! என்று போகர் அந்தக் குழந்தைப் பருவத்தில் எண்ணி ஏங்கித் தாய் தந்தையரைக் காத்திடும் எண்ணத்தின் நிலைகள் கொண்டு பலவாறு பல நிலைகளிலே தெளிந்து விஷத்தை முறிக்கும் சக்தியாகத் தாவர இன சத்தின் உண்மை நிலையை உணர்ந்து கொண்டார். அவர் தெரிந்து வரவில்லை குருவாக.

அதாவது காளிங்கராயன் என்பது அந்த விஷத் தன்மையான அந்தப் பாம்பிற்குப் பெயர். அது மிகப் பெரிய பாம்பு. அதனால் தான் போகருக்குக் காளிங்கராயன் குருவாக வந்தது என்று சொன்னது.

1.இத்தகைய கொடிய விஷத்தின் தன்மை வாய்ந்த பாம்பு தாக்கப்படும் போது தான்
2.தன் அன்னை தந்தையைக் காக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்த அவருடைய எண்ணத்தின் ஈர்ப்பிற்குள்
3.விஷத்தை முறித்திடும் தாவர இனங்களைக் கண்டறியும் அறிவாற்றல் அவருக்குள் வளர்ந்து
4.அகஸ்தியனைப் போன்று எண்ணிலடங்காத தாவர இனச் சத்துகளை இவர் நுகர்ந்தறிந்து
5.சிறுகச் சிறுக அவர் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் ஞானங்கள் கொண்டு
6.தன் உடலைக் காத்திடும் நிலையும் நல்ல குணங்களைக் காத்திடும் தன்மையும் அவர் பெறுகின்றார்.

காரணம் இதற்கு முன் விண் சென்ற துருவ நட்சத்திரமும் (அகஸ்தியர்) அதற்குப் பின் சென்றவருடைய உணர்வலைகளும் போகரின் ஈர்ப்பிற்குள் சிக்கப்படும் போது தான் அந்த அறிவின் ஞானம் வருகின்றது.

தாவர இனங்களின் சத்துகளை அவர் அதிகமாக நுகரும் ஆற்றல் கொண்டு அதை அறிந்திடும் எண்ணம் கொண்டு அவைகளை மோகித்ததால் அவருக்குப் “போகன்…!”” என்று பெயர் வந்தது.

எதையுமே அது நுகர்ந்தறிந்து அந்த உண்மையை அறிந்திடும் எண்ணங்கள் அங்கே பிரதிபலிக்கச் செய்கின்றது. அதன் வழியிலே விண் சென்றவர்கள் தான். எல்லாமே சந்தர்ப்பத்தால் தான்.

இவ்வாறு தெரிந்து கொண்ட உணர்வின் தன்மை அவருக்குள் இருந்தாலும் இந்த உடலைக் காத்திடும் நிலையாகத் தான் ஆரம்பத்திலே அவர் பெற்றது.

தாய் தந்தையை விஷம் தாக்க அந்த விஷத்திலிருந்து உடலைக் காத்திடும் உணர்வின் தன்மை அதிகமாக வளர்ந்ததனால் விஷத்தை முறிக்கும் தாவர இனங்களை நுகர்ந்தறிந்து தன் உடலில் இணைக்கப்படும் போது
1.உடலை அழியா வண்ணம் உருவாக்கி
2.அதற்குள் தன் உணர்வின் சக்தியை எப்படிக் காத்திட வேண்டும் என்ற நிலை தான் போகனால் அறிய முடிந்தது.

தன் உடலைப் பல வருடங்கள் காத்து வைத்திருந்தாலும் “சிறைக்குள் அடைபட்ட உயிரணு போல தேங்கி விடுகின்றது…!” என்ற நிலையை உணர்ந்த பின் பிற்காலங்களில் தான் “உடலை விட்டுப் பிரிந்து விண் செல்ல வேண்டும்…!” என்ற நிலைக்கு வருகின்றார்.

1.அந்த நிலையில் பாமர மக்களை அணுகி அவருடைய நோய்களை நீக்கி
2.அவரிடத்திலிருந்து பேரன்பான மூச்சலைகளை போகர் நுகர்ந்து
3.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு
4.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கடைசியில் விண் செல்கின்றார் போகர்.

ஏனென்றால் மிகச் சக்தி வாய்ந்த ஒவ்வொரு ஞானிகளும் இப்படித் தான் வந்தார்கள். ஆனால் அகஸ்தியனுக்கு முன் எவரும் விண் செல்லவில்லை.

அகஸ்தியன் தான் முதலில் துருவத்தை அறிகின்றான். துருவத்தின் நிலைகள் அறிந்த பின் அந்த உணர்வின் தொடர் கொண்டு முதல் மனிதனாக துருவ நட்சத்திரமாக ஒரு உயிராத்மா அடைகின்றது.

இது பல இலட்சங்களுக்கு முன்பு நடந்தது. இதையெல்லாம் நாம் நுகர முடியாது. ஆனால் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் எடுத்துக் கொண்ட அந்த ஆற்றல்மிக்க சக்தியைத் தெளிவாக எனக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

அவர் சொன்னதை எல்லாம் பெறவேண்டும் என்று எனக்குள் அதைப் பதியச் செய்து கொண்டதனால் அவரைப் பின்பற்றி அவர் எண்ண உணர்வை நினைவு கொள்ளும் போது விண் வெளியின் ஆற்றலை நுகர முடிகின்றது.
1.குருவின் வழியில் யாம் (ஞானகுரு) இருந்ததனால்
2.விண் செல்லும் ஆற்றல் மிக்க அந்தச் சக்தியை அவர் உடலிலிருந்து நானும் அதைப் பருக முடிந்தது.
3.இப்பொழுது உங்களுக்கும் அதைப் போதிக்க முடிகின்றது.

மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”

Image

Divine Guru

மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”

 

பண்டைய கால மாமகரிஷிகள் தங்களுடைய புலனறிவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி பல சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கவர்ந்து தன் உடலிலே விளைய வைத்துக் கொண்டார்கள்.

அப்படி விளைய வைத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு தனக்குகந்த நிலையில் பூமிக்குள் கால சூழ்நிலைகளை மாற்றி மனிதனை இங்கே வாழ வைத்தார்கள். இந்தப் பூமிக்குள் மெய் ஞானத்தையும் பெருக்கினார்கள்.

அன்றைய மகரிஷிகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனக்குகந்ததாக இந்தப் பூமியின் நிலைகளை மாற்றி அமைத்தார்கள்.
1.ஒவ்வொரு கால நிலைகளில் அது மாறினாலும் அதைத் திசை திருப்பி
2.மனிதனுக்குகந்த நிலைகளில் பூமியின் சுழற்சி நிலைகளைச் சீராக்கி அமைத்தார்கள்.

அதாவது சூரியனின் காந்த சக்தி இதைக் கவர்ந்திடாத நிலையில் ஒரு பகுதி அதை மறைக்கப்பட்டு மறு பகுதியில் பூமியைத் திருப்பினான் தனிப்பட்ட மனிதன் – “மகரிஷி…!”

அப்படி அமைக்கப்பட்ட இந்தப் பூமியிலே உருவான மனிதருக்குள் ஞானத்தின் உணர்வுகள் விளைந்தது. அதிலே மெய் ஞானியாக ஆன முதல் மனிதன் தான் அகஸ்தியன். அவன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அவனைப் பின்பற்றிச் சென்ற மகா ஞானிகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் ஒளி சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.

அத்தகைய மகரிஷிகள் வெளிப்படுத்திய வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தும் நாம் சூரியனால் கவரப்பட்டு அந்த உணர்வலைகள் இன்றும் நமக்கு முன் காற்றிலே இருக்கின்றது.

சாதாரணமாக வாழும் மனிதர்கள் நாம் வெளிப்படுத்தும் விருப்பு வெறுப்பு உணர்வுகள் அதிகமானாலும் அதைக் காட்டிலும் வீரிய நிலைகளில் வந்தால் அது எல்லாம் அழிந்துவிடும்.

ஆனால் அந்த மகரிஷிகள் உடலிலிருந்து பெருக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் அழியாத் தன்மைகள் பெற்றது.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நாடாக்களில் பதிவு செய்த படங்களை இயந்திரத்தின் மூலமாகவும் செயற்கைக் கோள் மூலமாகவும் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்கள்.

எந்த டி.வி. ஸ்டேஷனிலிருந்து ஒலி/ஒளிபரப்பு செய்யப்படுகின்றதோ அதே ஸ்டேஷனை வீட்டிலுள்ள டி.வி. யில் பட்டனை அழுத்தித் திருப்பி வைக்கப்படும் போது காற்றிலே மறைந்துள்ள அந்த அலைகளைக் கவர்ந்து நாம் அறியும் வண்ணம் செய்கின்றது.

அதே போல பிறவா நிலைகள் பெற்ற அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர வேண்டும் என்றால்
1.அவர்களை ஒத்த சம நிலைகள் கொண்டு
2.அதாவது அவர்களின் உணர்வின் எண்ணங்கள் கொண்டு எடுத்தால் தான் கவர முடியும்.

அப்படி இல்லையென்றால் நம்முடைய எண்ணம் அதன் அருகிலே செல்லாது. மகரிஷிகளின் ஆக்கமான சக்தி நம் எண்ண அலைகளைத் ஒதுக்கித் தள்ளி அதனுடைய ஆற்றலாகப் பெருக்கும். நம்முடைய நினைவலைகளால் மகரிஷிகளின் உணர்வுகளை ஈர்க்கும் நிலை இல்லாது போய்விடும்.

அந்த மகரிஷிகளின் பேராற்றல்களை ஈர்க்கும் நிலை பெறச் செய்வதற்கே உங்களுக்கு உபதேச வாயிலாக ஞானிகளின் உணர்வுகளைப் பதியச் செய்கின்றோம்.

ஞானிகளைப் பற்றிய பதிவுகள் உங்களுக்குள் அதிகமாக அதிகமாக அவர்களை ஒத்த உணர்வின் எண்ணங்கள் உடலுக்குள் வளர்ச்சியாகி அதை எளிதில் கவர முடியும்.

கட்டிடத்தை ஆறப் போட்டுக் கட்டுவது போல்தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களைச் சிறுகச் சிறுக ஏற்றி உங்களை மிகவும் வலுக் கொண்டவர்களாக ஆக்குகின்றோம்…!

Image

Energetic Meditation

கட்டிடத்தை ஆறப் போட்டுக் கட்டுவது போல்தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களைச் சிறுகச் சிறுக ஏற்றி உங்களை மிகவும் வலுக் கொண்டவர்களாக ஆக்குகின்றோம்…!

 

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்துமே அந்த மெய் ஞானிகளின் ஞான வித்துக்களாக உங்களுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால் ஒரு தரம் சொன்னாலும் அதைச் சொல்லிக் கொண்டே போகும் பொழுது அடுத்து நீங்கள் எண்ணினால் உங்களுக்கு அதனின் நினைவு வராது.

திரும்பச் சொல்லும் பொழுதுதான் இந்த உணர்வின் அலைகள் மீண்டும் உங்களுக்குள் பதிய ஏதுவாகும். பதிந்த பின் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் உங்கள் நினைவுக்கு வர இது உதவியாக இருக்கும்.
1.இப்பொழுது தான் சொன்னார்…!
2.மீண்டும் அதையே திரும்பச் சொல்கிறார் என்று சொல்லி
3.யாம் சொல்வதை விட்டுவிட்டீர்கள்…! என்றால்
3.உங்களுக்குள் ஏற்கும் பக்குவம் குறைவாகி விடுகின்றது.
4.ஒரே நாளில் ஒரே தரம் உபதேசித்தால் (சொன்னால்) அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நிலை இல்லாது போய்விடும்.

மணல் செங்கல் சிமெண்ட் தண்ணீர் எல்லாவற்றையும் போட்டுத்தான் கட்டிடம் கட்டுகின்றோம். ஆனால் சீக்கிரம் கட்டிடத்தைக் கட்டி முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில்
1.ஒரே நாளில் செங்கலை ஏற்றிக் கட்டினால் என்ன ஆகும்…?
2.ஒரே அமுக்காக அமுக்கி எல்லாம் சரிந்துவிடும்.

அதைப் போலத்தான் மெய் ஞானிகள் பெற்ற பேராற்றல்களை உபதேச வாயிலாக உங்களைப் பெறச் செய்யும் பொழுது ஒரேயடியாகக் கொடுக்க முடியாது.

கட்டிடம் கட்டும் சமயம் ஒவ்வொரு இடத்திலும் அதை நிறுத்தி (ஈரம்) உணரும் வரையிலும் பொறுத்திருந்து தான் அடுத்தடுத்து கட்ட வேண்டும்.
1.கட்டிடம் எந்தப் பக்கம் சாய்ந்திருக்கின்றது..?
2.சரியாகக் கட்டியிருக்கின்றோமா..? என்று அதைச் சிந்தித்துப் பார்த்து
3.கட்டிடத்தை ஆறப் போட்டு அதற்குப் பின் மேற் கொண்டு கட்டுவதுதான் சாலச் சிறந்தது.

அதைப் போன்று துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் நிலையாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் வரும் பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் உணர்வின் ஆற்றலாக அதற்குத் தகுந்த மாதிரி ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன். அதைத்தான் “தொட்டுக் காட்டுதல்…!” என்பது.

சில பேர்…
1.நான் அங்கே அவரிடம் போனேன்… அவர் என் முதுகில் தட்டிக் காண்பித்தார்… பிறகு நெற்றியிலே தொட்டுக் காண்பித்தார்…
2.நீ நெற்றியிலே பார்… அங்கே தெரியும்…! என்றார்.
3.அதற்குப் பின் உச்சிக்குக் கொண்டு போ.. அது தெரியும்…! என்றார் என்பார்கள்.

ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் அவர் திட்டியதைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது ஆழமாக உங்களுக்குள் பதிந்து விடுகின்றது. பதிந்த அந்த நிலையை மீண்டும் எண்ணும் பொழுது அந்தக் கோபம் உங்களுக்கு அப்படியே வருகின்றது.

இதைப் போன்று தான் மெய் ஞானியின் அருளாற்றலை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டால் அது உங்களுக்குள் துன்பத்தைப் போக்கும் உணர்வுகளாக வரும். ஆகவே
1.உங்கள் உணர்வுக்குள் ஆழமாக…
2.உங்கள் உள்ளத்திற்குள் தொட்டு…
3.உங்கள் உள்ளத்தைத் தொடும் நிலைகளுக்கு உணர்வுகளை உந்தச் செய்து
4.மெய் ஞானிகளின் உணர்வைப் பதியச் செய்வது தான் “தொட்டுக் காட்டும் முறை…!” என்பது

நீங்கள் எப்பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ உடனடியாகக் காற்றிலே பரவியிருக்கக் கூடிய அந்தச் சக்திகளைச் சுவாசித்து உங்கள் வாழ்க்கையில் வரும் படபடப்பு பயம் வேதனை இதைப் போன்ற நிலைகளைக் குறைத்திட இது உதவும்.

இப்படிச் சிறுகச் சிறுக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் சேர்க்கும் அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சக்தி கூடும். அதனின் துணை கொண்டு எத்தகைய தீமைகளோ துன்பங்களோ சங்கடங்களோ உங்களுக்குள் வராதபடி தடுத்து என்றுமே ஏகாந்தமாக நீங்கள் மகிழ்ந்து வாழ முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானித்தேன்… வரவில்லையே…! என்று எண்ணாமல் சீராக எடுக்கும் பயிற்சியை மேற் கொள்ளுங்கள்…! – மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்

Image

practice makes perfect

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானித்தேன்… வரவில்லையே…! என்று எண்ணாமல் சீராக எடுக்கும் பயிற்சியை மேற் கொள்ளுங்கள்…! – மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்

 

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் ஏங்கி எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் அதை எடுத்தேன்…! வரவில்லை என்று யாரும் எண்ண வேண்டாம்.

ஒரு அழுக்குத் துணியைத் துவைக்கிறோம் என்றால் அழுக்கு முழுவதும் போகும் வரையிலும் அடுத்தடுத்து சோப்பைப் போட்டு நீக்குகின்றோம்.

ஒரு உலோகத்தை உருக்கி அதை ஒரு பொருளாக்க வேண்டும் என்ற நிலையில் (வார்ப்பு – MOULDING) செயல்படுத்தும்போது சரியாக வரவில்லை என்றால் மீண்டும் அதை உருக்கிச் சரியான பருவத்திற்குக் கொண்டு வருகின்றோம். இதைப்போல தான்
1.மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் திரும்பத் திரும்ப எடுத்து
2.ஆத்ம சுத்தி என்ற நிலையில் உள் செலுத்தி
3.மெய் ஞானிகளின் உணர்வைச் சீராக வளர்த்திடும் எண்ண
4.வலுவை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத் தான் தியானமும் அதனின் துணை கொண்டு நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளைக் காற்றிலிருந்து எடுக்கப் பழக்குவதற்கே இந்த ஆத்ம சுத்தி.

தையற் கலையைக் கற்றுக் கொண்டவர்கள் நம்முடன் பேசிக் கொண்டே சீராகச் தைத்து விடுவார்கள். ஆனால் புதிதாகக் கற்றுக் கொள்ளச் செல்பவர்கள் சீராகக் கூர்ந்து கவனித்தாலும் அதை நேராகத் தைக்க முடியாது.

1.கூர்மையான உணர்வை மீண்டும் மீண்டும் அதற்குள் செலுத்தி
2.நம்முடைய உணர்வின் நிலைகளைச் சீராக வளர்த்துக் கொண்டால்
3.அந்த உணர்வில் நாம் வேலை செய்யும் எண்ணமே அது நம்மைச் சீராக அழைத்து செல்லும்.

உதாரணமாக கண் பார்வை இழந்தவர்கள் தன் உணர்வின் ஆற்றலால் சில பின்னல் வேலைகளைப் பின்னிப் பழகுகின்றனர். அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கமே சரியான அளவு கோலைப் பிடித்து அதைப் பின்னச் செய்கின்றது.

1.கண் தெரிந்து நாம் பின்னும் நிலையைக் காட்டிலும்
2.கண்ணற்றவர்கள் அதைப் பழகி அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அழகாகக் கலரையும் இணைக்கின்றனர்
3.தெளிவாக அந்தப் பின்னலையும் உருவாக்குகின்றனர்
4.கண்ணுள்ளவர்கள் கலரைப் பார்க்கின்றோம்… கண்ணற்றவன் தடவிப் பார்த்து அந்த உணர்வின் கலரைப் பார்க்கின்றனர்.

இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் அந்த நிலை பெறுவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்று பழகிக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அதை நீக்க உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் உயிருடன் இணைக்கச் செய்யும் போது அது ஜீவன் பெற்று உங்களுக்குள் அந்தச் சக்தி வளர்கின்றது.

வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறையான உணர்வுகளோ பலவீனமான எண்ணங்களோ உங்களுக்குள் வந்தாலும்
1.அதை மனதில் ஏற்றுக் கொள்ளாது
2.மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
3.அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகளைத் தணித்து
4.மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஓங்கி வளர்க்கச் செய்வதே ஆத்ம சுத்தி.
5.இதுதான் உண்மையான தியானம்…!

முன்னோர்களின் சமாதியைத் தூய்மைப்படுத்தி அவர்களைக் கும்பிடுகின்றோம்…! ஆனால் அவர்களை நாம் மோட்ச நிலை அடையச் செய்கின்றோமா…?

Image

vaikundam

முன்னோர்களின் சமாதியைத் தூய்மைப்படுத்தி அவர்களைக் கும்பிடுகின்றோம்…! ஆனால் அவர்களை நாம் மோட்ச நிலை அடையச் செய்கின்றோமா…?

நம்முடைய முன்னோர்களைப் புதைத்த இடத்தை சமாதியைச் சுத்தப்படுத்தி விட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளைப் படைத்துக் கும்பிட்டுவிட்டு அவர்களை நாம் பூமிக்குத் தான் இழுக்கின்றோம்.

உடலை விட்டுப் போகும் பொழுது அவர்களின் உயிரான்மா சாதாரணமாக எல்லோர் மேலேயும் பற்றாக இருந்து என்றால் யாருடைய ஈர்ப்பும் அதிகமாக இல்லாதபடி மொத்தமாகக் கலந்துவிடும். ஆனால்
1.அவர்களின் சமாதிகளை எல்லாம் சுத்தப்படுத்தி
2.அவர்கள் நினைவுகளை அதிகமாகக் கொண்டு வரும் போது
3.இதிலே யாருடைய எண்ணம் அதிகமாக இழுக்கின்றதோ அவர் இழுத்தவுடனே அவரின் உடலுக்குள் அந்த ஆன்மா போகும்.

அப்படி இல்லை என்றால் உடலை விட்டுப் பிரியும் அந்த ஆன்மா எந்தப் பக்தியின் நிலை கொண்டு எந்த மந்திரத்தைச் சொல்லி உடலுக்குள் விளைய வைத்ததோ
1.இவர்கள் சொன்ன மந்திரத்தை இன்னொருவர் பதிவு செய்து
2.அவர் அதே மந்திரத்தை பல முறைகள் சொன்னவுடனே
3.உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா அவர்கள் ஈர்ப்பிற்குப் போய்
4.அவர்கள் சொன்னபடி எல்லாம் கேட்கும்.

உதாரணமாக நம்முடைய சகஜ வாழ்க்கையில் ஒரு மனிதன் ஏய்… இங்கே வா…!” என்று நம்மை மிரட்டிக் கூப்பிடுகின்றான். அவன் “மோசமான ஆள்…” என்று தெரிகிறது. ஆனால் கூப்பிட்ட பிற்பாடு போகவில்லை… என்றால் ஏதாவது செய்து விடுவான் என்பதால் உடனே போகிறோம்.

அதே சமயத்தில் ஒரு நல்ல மனிதன் நம்மிடம் “கொஞ்சம் இங்கே வந்து விட்டுப் போங்கள்…!” என்பார். பரவாயில்லை… போ..! உனக்கு வேலை இல்லை என்போம்.

அவர் மீண்டும் தம்பி… கொஞ்சம் ஒரு ஐந்து நிமிடம் தான் இருக்க வேண்டும் என்று கெஞ்சினால் “எனக்கு நேரமாகிப் போய்விட்டது… இப்பொழுது என்னால் வர முடியாது…!” என்போம்.

ஒரு முரடான ஆள் நம்மிடம் “டேய் இங்கே வா…! இங்கே நில்…!” என்று அதட்டினால் அந்த உணர்வைப் பதியச் செய்த பிற்பாடு நம் நல்ல உணர்வுகள் எல்லாம் ஒடுங்கி அவர்கள் சொல்வதற்கெல்லாம் கட்டுப்படுகின்றோம். இதே போன்று தான்
1.உணர்வின் அழுத்தங்கள் கொண்டு மந்திர ஒலியால் சில கடினமான ஆவிகளுடைய உணர்வை எடுத்துக் கொண்டு
2.மந்திர ஒலிகளை எழுப்பி உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்களை இழுத்து
3.அவர்களுக்கு வேண்டிய வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இப்போது எப்படி ரேடியோ டி.வி. இயங்குகிறதோ அந்தந்த அலை வரிசைகளில் ஒலி பரப்பாகிக் கொண்டிருப்பதைத் திருப்பி வைத்தவுடன் அப்படியே நாம் பார்த்துக் கேட்டு மகிழ்கின்றோமோ அதே போல மனிதர்கள் நாம் நுகர்ந்து சுவாசிக்கும் பொழுது அந்த உயிரான்மாக்கள் உடலுக்குள் வந்துவிடும்.

உடலுக்குள் வந்தாலும் ஏற்கனவே அந்த உடலிலே விளைய வைத்த அதே நஞ்சினை இங்கேயும் விளைய வைக்கின்றது. இதை மாற்ற அன்றைய நிலைகளில் உண்மையில் சொன்ன முறைகள் எல்லாம் காலத்தால் மறைந்தே போய்விட்டது.

மூதாதையர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நம்மை உருவாக்கி வளர்ப்பதற்காக வேண்டி எத்தனையோ வேதனைகள் பட்டார்கள் பகைமைகளை வளர்த்துக் கொண்டார்கள். பின் நோயால் இறக்கின்றார்கள்.

அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்குள் அறியாது சேர்ந்த
1.அந்த நஞ்சான உணர்வுகள் அனைத்தும் கருக வேண்டும்
2.அவர்கள் மெய் ஒளி அங்கே காண வேண்டும் என்று
3.சப்தரிஷி மண்டலத்திற்கு நாம் உந்தித் தள்ள வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் குலங்களின் தெய்வங்களான முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்த மெய் ஞானிகளின் அருள் வட்டத்தில் இணையச் செய்து பிறவா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை. இன்னொரு உடலுக்குள் வந்து நோயாகவோ பேயாகவோ இயக்குவதில்லை.
1.ஒவ்வொரு ஆத்மாவும் சுத்தமாகின்றது
2.ஒவ்வொரு உயிராத்மாவும் புனிதம் பெறுகின்றது
3.இந்தப் பரமாத்மாவும் தூய்மை அடைகின்றது.
4.இது தான் அன்றைய ஞானிகள் காட்டிய முறை.

ஐகிரி நந்தினி… நந்தித மேதினி… விஸ்வ விநோதினி…!

Image

sri-adi-shankarar

ஐகிரி நந்தினி… நந்தித மேதினி… விஸ்வ விநோதினி…!

 

நாம் பூமியினுடைய இயக்கத்தில் இருக்கின்றோம். பூமி நம்மை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்கிறது.
1.சூரியனுடைய ஈர்ப்பில் பூமி இருக்கும் பொழுது பூமியினுடைய வட பகுதி தென் துருவம்.
2.பூமி விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றலை வட துருவத்தின் வழியாக அது இழுக்கிறது.

தென்னை மரம் பூமியின் ஆற்றலை எடுக்கிறது, இது தென் துருவம். இந்தப் பூமிக்குள் இருக்கக்கூடிய வெப்பத்தின் தணல்களை இழுக்கின்றது.

கீழே தென் துருவமாக இருக்கின்றது. ஆனால் அதே சமயம் வட துருவம் அது மேலே இருக்கக்கூடிய அலையின் தன்மையைத் தனக்குள் ஆகாரமாக எடுத்து வளர்கின்றது. அது இல்லை என்றால் தனக்குள் வேறொன்றுமில்லை.

இதைப் போன்றுதான் ஒவ்வொரு உயிரணுவும் தெற்கு விட்டம் இருந்து தான் இயங்கும். அதாவது
1.காந்தப் புலன்கள் வடக்கும் தெற்கும் அல்லது தெற்கும் வடக்கும் ஒன்றை ஒன்று ஈர்க்கும்.
2.வடக்கும் வடக்கும் அல்லது தெற்கும் தெற்கும் வைத்தால் இழுக்காது விலக்கிவிடும். அல்லது மிதக்கச் செய்யும்.

இதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே நாம் எந்தப் பிடிப்பில் இருக்கின்றோம்…? பூமியின் ஈர்ப்பலைகளுக்குள் இருக்கின்றோம். இங்கு காந்த சக்தி இல்லை என்றால் என்ன செய்வோம்…? மிதப்போம்…!

சந்திர மண்டலத்தின் ஈர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் மனிதர்கள் அன்று அதற்குள் இறங்கும் பொழுது எப்படி உருண்டார்கள்…! என்று பார்த்திருப்பீர்கள்.

ஆகவே எத்தகைய நிலைகள் விண்ணிலே படர்ந்தாலும் ஆவியினுடைய தன்மைகளாகத் தான் அது பரவி இருக்கின்றது. ஏகமாக இருக்கும் அதனின் நிலைகளில் “தனித்த திசை இல்லை…!” அதே போல
1.நம் உடலுக்குள் எண்ணிலடங்காத பல உணர்வுகள் இருந்தாலும்
2.எந்தத் திசையினுடைய நிலைகளில் நாம் இருந்தாலும்
3.நம் உடலுக்குள் சுவாசத்தின் வழியாக எடுக்கும் நிலைகள் கொண்டு அது கிழக்காகின்றது.
“ஐகிரி நந்தினி…!” என்கிற போது ஒரு அணுவின் தன்மைக்குள் ஐந்து உணர்வின் இயக்கம்.
1.வெப்பம் – உருவாக்கும் சக்தி
2.காந்தம் – ஈர்க்கும் சக்தி
3.விஷம் – இயக்கும் சக்தி
4.மணம் – 1,2,3 சேர்ந்து பிறிதொன்றைக் கவர்ந்தது
5.உணர்வு – 1,2,3 கவர்ந்த மணத்தை அங்கே இயக்கமாக்குகின்றது… உணர்ச்சி.

உதாரணமாக நாம் சூரியனிலிருந்து வருவதை அந்த வெயிலாகக் காண்கின்றோமே அது எல்லாமே பாதரசம் தான். அதாவது வெப்ப காந்த அலைகள்.

அதிலே காந்தம் என்பது ஈர்க்கும் சக்தி கொண்டது. அதாவது ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் சக்தி. எதிர் நிலையான மரபுகளைச் சேர்த்தவுடன் சூடாகும். அவ்வாறு சூடாகும் பொழுது ஒரு பொருளின் தன்மையை தனக்குள் வளர்க்கும்.

அதை வளர்த்தபின் இந்தப் பாதரசம் ஆவியாக மாறும். வெப்பத்தின் தன்மை ஒரு பொருளுக்குள் சூடானவுடன் அது ஆவியாக மாற்றிச் செல்கின்றது.

ஒரு வெப்ப காந்தத்தினுடைய நிலைகள் காந்தம் தனக்குள் ஈர்த்து ஒரு பொருளின் தன்மையை எடுத்துக் கொண்டாலும் நீருக்குள்ளும் அந்தக் காந்த சக்தி உண்டு. காந்த சக்தி இல்லையென்றால் நீரைத் தனக்குள் அணைத்துக் கொள்ளாது. (அதாவது காந்தம் இல்லை என்றால் அந்த நீரும் நீரும் சேராது)

அதைப் போல வெப்பம்… “நெருப்பு” ஒன்றை உருவாக்கவும் ஒன்றை மறைக்கவும் செய்யும். இந்த வெப்பத்திற்கு இரு நிலை. ஒரு செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை இந்த வெப்ப காந்தம் தனக்குள் எடுத்து அந்த மணத்தை வெளிப்படுத்துகின்றது.

அதே சமயம் செடியின் மணத்தை நாம் சுவாசிக்கும் பொழுது (அதற்குள் இருக்கும் வெப்ப காந்தம் கவர்ந்த உணர்வின் சக்தி) நம் உடலுடன் இணைந்து வெப்பமாகும் பொழுது உணர்வின் தன்மை நம்மை இயக்குகின்றது.

ஒரு அணுவின் தன்மை இயக்கம் ஐந்து. ஒரு மனிதனுடைய ஐந்து புலனறிவு கண் காது மூக்கு வாய் உடம்பு. இந்த பூமிக்கும் புலனறிவு ஐந்து தான்.

ஆனால் புத்தக வடிவில் சாஸ்திரத்தைக் கற்றுக் கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்…? அண்டம் பிண்டம் அது இது என்றெல்லாம் சொல்வார்கள்.

அன்றறைய ஞானிகள் நாதத்தினுடைய நிலைகள் ஒவ்வொன்றையும் அவர்கள் பிரித்துக் காட்டினார்கள். ஆதிசங்கரர் ஐகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வ விநோதினி என்றார்.
1.ஒரு அணுவிற்குள்ளும் அந்த ஐந்து தான்.
2.நீ எடுத்துச் சுவாசிப்பதும் ஐந்து புலனறிவுதான்.
3.நீ சுவாசித்த உணர்வின் தன்மை உயிருக்குள் பட்டவுடன்
4.சூடான நிலைகள் கொண்டு திருப்பி அதை இயக்குவதும் ஐந்து தான்.

“ஐகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ விநோதினி நந்தினிதே”
என்று சொல்லும்போது ஐந்து புலனறிவுகள்.

நாம் சுவாசிக்கும் இந்த உணர்வின் தன்மைகள் எந்த குணத்தைக் கொண்டு சுவாசிக்கின்றோமோ அதே உணர்வின் தன்மை தன் உயிருடன் சேர்க்கப்படும்போது “விஸ்வ விநோதினி”

“ஐகிரி நந்தினி” நம் உடலைச் சுற்றி வருகின்ற சுவாசத்தை நாம் சுவாசித்தவுடன் நாம் உயிரின் நிலைகளில் சுவாசித்து நம் உயிரில் பட்டவுடன் அதே ஐந்து உணர்வுதான் அது ஒன்றுக்குள் ஒன்று சேர்த்தவுடன் இந்த உணர்வின் தன்மை தனக்குள் இயக்குகின்றது என்று பாடினார்.

இவர்கள் என்ன செய்தார்கள்..? ஆதிசங்கரர் பராசக்தியைப் பற்றிப் பாடினார். ஆதிசக்தியைப் பற்றிப் பாடினார் என்று அவருக்குப் பின்னாடி வேள்விகளையும் யாகங்களையும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பதைக் கார்த்திகைப் பெண்கள் என்று ஆறு சக்தியாகக் காட்டப்பட்டு ஒவ்வொரு சக்தியினுடைய நிலைகள் மனிதருக்குள் எவ்வாறு செயல்படுகிறது..? என்று ஞானிகள் காட்டினார்கள்.

மனிதனுடைய ஆறாவது அறிவின் இயக்கத்தையும் தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சக்திகளையும் அது எவ்வாறு என்று உணரச் செய்வதற்காக ஞானிகள் காட்டியிருந்தாலும்
1.ஆறு பெண்களுக்குச் சக்தியாக குழந்தைகளாகப் பிறந்து
2.அது ஒன்றாகச் சேர்த்து அது கார்த்திகேயனாக வளர்ந்தான் என்பதைத்தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர
3.மெய் உணர்வின் அலையை அந்த ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை எடுத்துக் கொள்ளவில்லை.

அந்த உண்மைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) இப்பொழுது இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அகஸ்தியன் மின் கதிர்களை நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான் – அவன் பெற்ற சக்திகளை அவன் சகாக்கள் பெற்றுச் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

Image

உரைகல்

அகஸ்தியன் மின் கதிர்களை நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான் – அவன் பெற்ற சக்திகளை அவன் சகாக்கள் பெற்றுச் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

 

பிறந்த பின் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் அகஸ்தியன் வானை நோக்கிப் பார்க்கின்றான். மின்னல்கள் பல வழியில் தாக்குகின்றது. அதை உற்றுப் பார்த்த அந்தக் குழந்தையோ
1.அந்த மின் கதிர்களின் உணர்வை தனக்குள் நுகர்ந்து அதை அடக்கும் வலிமை பெறுகின்றது.
2.சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்களை நுகருகின்றான்.
3.மின் அணுக்களைப் போன்று தன் உயிரின் அணுக்களை மாற்றும் தன்மை வருகின்றது.

புழுவை ஒரு குளவி கொட்டினால் அதனின் விஷத் தன்மைகள் பாய்ந்து புழுவின் உணர்வுகள் மாற்றமடைந்து புழுவை வளர்த்த அந்த உயிர் குளவியின் உணர்வை நுகர்ந்து குளவியாக உருமாறுகின்றது.

இதைப் போலத் தான் தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது தாய் உற்றுப் பார்த்த உணர்வின் தன்மை கருவிலே விளைந்து அகஸ்தியன் பிறந்தபின் மின்னல்களையும் சூரியனிலிருந்து வரும் விஷத் தன்மைகளையும் கருக்கிவிட்டுத் தன் உடலிலிருக்கும் அணுக்களை எல்லாம் ஒளிக் கதிர்களாக மாற்றும் நிலை வருகின்றது.

ஒரு மின் மினிப் பூச்சியை எடுத்துக் கொண்டால் அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதன் இயக்கத் தொடரில் மின் ஒளிகளை அது தன் உடலிலிருந்து வெளிப்படுத்தும்.

அது போன்று அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களும் நஞ்சை ஒடுக்கி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.

அவன் குழந்தையாகத் தவழ்ந்து வரும் போது அவன் அருகிலே வரும் பாம்பினமோ கொசு இனமோ விஷ வண்டுகளோ மிருகங்களோ யானைகளோ இவன் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைக் கண்டு அஞ்சுகின்றது… ஒடுங்குகிறது… இவனைத் தீண்டுவதில்லை… இவன் அருகிலே வருவதற்கு அஞ்சுகின்றது. அதனுடைய விஷத்தின் வலிமையையும் இழக்கின்றது.

இதை உற்றுப் பார்த்த அன்று வாழ்ந்த மக்கள் இது கடவுளின் பிள்ளை என்று இவரை வணங்கத் தொடங்குகின்றனர்.

குளவி கொட்டியபின் புழுவினுடைய தன்மைகள் மாறி அது குளவியானபின் மீண்டும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல ஒரு கூட்டை அமைத்து தன் இனத்தைப் பெருக்குகின்றது.

அதே போல அகஸ்தியனுக்குள் இருக்கும் உணர்வுகள்
1.நஞ்சை ஒடுக்கிடும் உணர்வின் அறிவை அவனுக்கு ஊட்டி
2.இதன் வழி கொண்டு அவன் அரும் பெரும் சக்திகளை எல்லாம் பெறுகின்றான்.

மிருகங்கள் இவனைத் தாக்குவதில்லை என்ற நிலைகளை அறிந்த பின் அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது படைகள் போன்று அவன் பின்னாடி மக்கள் செல்கின்றனர்.
அவன் கடவுளின் அவதாரம் இவன் காட்டு அரசன் என்று அவனைப் போற்றித் துதிக்கும் நிலையும் வணங்கும் நிலையும் அக்காலங்களில் வருகின்றது.

தன் ஐந்தாவது வயதிற்குள் பூமிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எவ்வாறு கிடைக்கின்றது…? இது எப்படி விளைகின்றது..? எதன் வழி விளைகின்றது என்று அவன் அறிகின்றான்.

அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் உணர்வின் தன்மை ஒளியாகச் சூரியன் எவ்வாறு பிறந்ததென்ற உணர்வையும் அறிகின்றான். அவன் கண்ட உண்மையை அக்கால மக்களிடம் வெளிப்படுத்துகின்றான்.

அக்கால மக்கள் அவன் சொல்வதின் உணர்வை அறியாத நிலை வரும் பொழுது அகஸ்தியன் உணர்ச்சியின் தன்மையைக் கூட்டி இயற்கையின் இயக்கத்தை ஜாடையாகக் காட்டி அதன் வலிமையைக் காட்டுகின்றான்.

ஐந்தாவது வயதில் பூமியின் துருவத்தை உற்று நோக்கி அதிலிருந்து வரும் விஷத் தன்மையை நுகர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் அணுத் தன்மையைத் தனக்குள் வளர்க்கிறான்.

அகண்ட அண்டத்தின் நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அவன் உணர்கிறான்.

அணுவின் இயக்கத்தை உணரும் பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.

இந்தப் பேருண்மைகள் அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன் அருகில் உள்ள மற்ற சகாக்களுக்கும் சொல்கிறான்.

அவனின்று வெளிப்பட்ட உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நகர்ந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.
1.அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
2.அவனுடைய சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.அந்த அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.