துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் விண்வெளியில் உள்ள நஞ்சோ சூரியனோ கோள்களோ ஏனைய எதுவும் மறைக்க முடியாது…!

Image

FIRE MEDITATION

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் விண்வெளியில் உள்ள நஞ்சோ சூரியனோ கோள்களோ ஏனைய எதுவும் மறைக்க முடியாது…!

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். அவர் அப்படித் தெரிந்தாலும்
1.இந்த உலகம் எப்படிப் பித்தான நிலைகள் இருக்கின்றது…! என்று
2.தன் உடலுக்குள் இருக்கும் மறைந்த உணர்வுகளைக் காட்டி
3.அந்தப் பித்தான நிலைகள் நீக்கி அவரின் உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் போதுதான்
4.அவருடைய உண்மையின் நிலைகளை நான் (ஞானகுரு) அறிய முடிந்தது.

அவரைப் பித்தனாகத் தான் நான் பார்த்தேன். ஆனால் அவருக்குள் இருந்த மெய் உணர்வின் தன்மை
1.நம்மைப் பித்தனாக்கும் உணர்வை நீக்கும் உணர்வின் ஆற்றல் கொண்டது என்பதைப்
2.பின்னாடி தான் என்னால் உணர முடிந்தது.

குருநாதர் அவர் பெற்ற மெய் உணர்வை எமக்குள் உபதேசித்து அந்த உணர்வின் தன்மையையைப் பதியச் செய்தார். பதிவு செய்ததை வளர்த்துக் கொண்டேன்.

அவர் கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் தன்மைக்குத் தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்தான் நான் அதன் வழிகளில் வளர முடியும்.
2.நான் தெரிந்து கொண்டேன்…! என்ற நிலைகளில் சொல்லிக் கொண்டிருந்தால்
3.நான் அழிந்து கொண்டு தான் இருக்க முடியுமே தவிர வளர்ந்திடும் நிலை இல்லை.
4.உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும்
5.உயர்ந்த வாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும்
6.நீங்கள் இருள் நீக்கி மெய்ப் பொருள் காண வேண்டும்.
7.மெய் வழியில் நீங்கள் என்றுமே சென்றிட வேண்டும் என்ற இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
8.நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற நிலையில் குருநாதர் ஆணைப்படி
9.அதை வளர்க்கும் நிலைகளிலே வளர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

அது போன்று நீங்களும் உங்களை ஆண்டு கொண்டு இருக்கும் உயிரை ஈசனாக மதித்து அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் நுகர வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் மணங்களை நாங்கள் நுகர வேண்டும். எங்கள் உயிரான ஈசனுக்குள் அந்தச் சக்திகள் படர வேண்டும். அவனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மெய் ஞானிகள் அருள் வழியில் நாங்கள் செல்ல வேண்டும் என்ற இதை எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். மனித நிலைகளிலிருந்து மீண்டு ஒவ்வொருவரும் பிறவியில்லா நிலை எப்படி அடைவது என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் அந்தக் கருத்தினை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்களையும் படைத்தார்கள்.

உலக நிலைகளில் ஒவ்வொன்றும் மோதல் ஆவதை மகாபாரதப் போராகக் காட்டி அது அனைத்தையும் கண் நுகர்ந்து பார்த்து இதிலிருந்து விடுபடும் நிலையை அதே கண்களே நமக்கு வழி காட்டுகிறது என்று கண்ணனைக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் மகாபாராதப் போரைக் கண்ணன் (கண்கள்) தான் வழி நடத்தினான் என்ற உண்மையை உணர்த்துகின்றார்கள். கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் அனைத்தையும் கண்ணன் கீதா உபதேசமாகச் செய்கின்றான் என்றும் அந்தக் காவியங்கள் மூலம் உணர்த்துகின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படு அந்த மெய் ஞானிகளின் அருள் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று நாம் கண்ணனிடம் (கண்களிடம்) வேண்டினால்
1.எட்டா தூரத்தில் விண்ணுலகில் இருக்கும் அந்த மெய் ஞானிகளை எட்டிப் பிடித்து
2.நம் கண்ணின் நினைவலைகள் கொண்டு அந்தச் சக்திகளைக் கவர்ந்து உடலுக்குள் செலுத்தும் பொழுது
3.உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் ஒளியான உணர்வைப் பெறச் செய்கின்றது.

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலங்களையும் அவர்கள் பெற்ற சக்திகளை எந்த நஞ்சின் தன்மையும் மறைக்க முடியாது எந்தக் கோளும் மறைக்க முடியாது. எந்தச் சூரியனும் அதை மறைக்க முடியாது. அவைகளை யாரும் அழிக்க முடியாது. அழியாத நிலைகள் கொண்டது தான் துருவ நட்சத்திரமும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும்.

ஏனென்றால் விண்ணிலிருந்து வரும் அந்த நஞ்சின் தன்மையை அவர்கள் உணவாக எடுத்து ஒளியின் சிகரமாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்.

அவர்கள் பெற்ற அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்து வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நம் உயிராத்மா சென்றாலும் மற்ற நஞ்சின் தன்மை நமக்குள் வந்தாலும் அதை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் நாமும் பெறுகின்றோம். அதாவது
1.எரியும் நெருப்பிற்குள் ஒரு இருள் சூழ்ந்த பொருளைப் போட்டால்
2.அதுவும் பற்றி நெருப்பாக எரிவது போல
3.எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதனை வீழ்த்தி
4.ஒளியின் சுடராகப் பெறும் தகுதியாகப் பெற வேண்டும்.

ஆகவே உயிருடன் ஒன்றிய ஒளியின் சுடராகப் பிரகாசமான நிலைகள் பெற வேண்டும் என்று நீங்கள் உங்கள் எண்ணத்தில் ஆழமாக ஊன்றி அதன் வழியில் வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு உங்கள் அனைவருக்கும் அந்த ஆற்றல்கள் கிடைக்க வேண்டும் என்று நானும் தியானிக்கின்றேன். நீங்களும் அது போல் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாம் சுவாசிக்கும் சுவாசத்திலிருந்து (காற்றிலிருந்து) ஒலி ஒளி உணர்ச்சி எப்படி வருகின்றது…? நாம் ஒன்றை எப்படி அறிந்து கொள்கின்றோம்…?

Image

Transaction of our soul

நாம் சுவாசிக்கும் சுவாசத்திலிருந்து (காற்றிலிருந்து) “ஒலி ஒளி உணர்ச்சி எப்படி வருகின்றது…? நாம் ஒன்றை எப்படி அறிந்து கொள்கின்றோம்…?”

 

கெமிக்கல் கலந்த ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்ட நாடாக்களில் விஞ்ஞான அறிவு கொண்டு (CD, MEMORY DRIVES) நம் எண்ணங்களையோ அல்லது பாடல்களையோ பதிவு செய்வதற்காக வேண்டி ஒரு காந்த ஊசியைக் (LASER) கொண்டு அதற்குள் உராயும் உணர்வின் ஒலிகளைப் பதிவாக்குகின்றார்கள்.

பாடல்களையோ மற்ற பேச்சுக்களையோ இப்படித்தான் பதிவு செய்கிறோம். அதிலிருந்து மீண்டும் காந்தப் புலனால் ஈர்க்கப்பட்டு அதற்குரிய சாதனத்துடன் (SCREEN, SPEAKER) இணைத்தால் எதைப் பாடினோமோ அதன் உணர்வாக ஒலி/ஒளி வருகின்றது.
1.அதை வேகமாகச் சுழற்றினால் அதிலிருந்து வெளி வரும் குரலோ இசையோ படமோ மாறுகின்றது.
2.நம் உணர்வுக்கொப்ப சமமாக்கினால் இனிமையாகின்றது.
3.அதே சமயத்தில் வேகம் குறைவானால் அந்தக் குரலின் தன்மை மாற்றமாகின்றது. இதை நாம் பார்க்கின்றோம்.
4.ஆகவே சுழற்சிக்குத் தக்க வெளிப்படும் அந்த உணர்வின் ஒலி அலைகள் மாறுகின்றது.

இவ்வாறு இயந்திரத்தின் துணை கொண்டு நாடாக்களில் பதிவு செய்து ஒலி/ஒளிக் கற்றைகளை வெளிப்படுத்தும் பொழுது இதிலே எந்தக் கெமிக்கல் கலந்த உணர்வினை இயக்குகின்றானோ அந்த அலைகளைப் பரப்புகின்றது.

அதைச் சூரியனின் காந்தப் புலன்கள் இழுத்துக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. காற்றிலே சிற்றலைகளாகப் படர்கின்றது. அதனுடைய இயக்கத் தொடரில் அதைக் கவர்ந்து செயல்படும் ஏரியலை அல்லது ஆண்டென்னாவை வைக்கின்றார்கள்.

ரேடியோவோ டி.வி.யோ அல்லது கம்ப்யூட்டரோ அதற்குள் இந்த ஆண்டென்னாவை இணைத்தவுடன் இதிலுள்ள காந்தப் புலன் கவர்ந்து ட்ரான்சிஸ்டரால் கவரப்பட்டு விட்டால் அது ட்ரான்சாக்சன் செய்து
1.ஒலி/ஒளி அலைகளை மற்ற உணர்வுடன் வடிகட்டித் தனித் தனியாக அனுப்புகின்றது.
2.பேச்சுகளையோ பாடல்களையோ படங்களையோ அதன் மூலம் நாம் பார்க்கலாம்.
3.நம் உயிரும் இதைப் போன்று தான் இயக்குகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப் புலனறிவால் பிறருடைய நிலைகளை நாம் நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வின் அறிவாக
1.நம்மை இயக்கவும் செய்கின்றது
2.நம்மை அறியவும் வைக்கின்றது.

நாம் நுகரும் உணர்வுகள் உயிருக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளில் பட்டவுடன் அது ட்ரான்சிஸ்டரைப் (TRANSISTOR) போன்று ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்கிறது.

அதாவது சுவாசித்த உணர்வுகளுக்குள் (காற்று) இருக்கும் ஒலி… ஒளி அவைகளை வடிகட்டி அந்த உணர்ச்சிகளை ஊட்டி அதைச் சிறுமூளைப் பாகத்திற்கு அனுப்பி மொத்த உடலையும் இயக்குகின்றது.

அதற்குப் பின் நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து அது எந்தக் குணத்தின் உணர்வோ கருவாகி உருவாகி அணுவின் தன்மையாக நம் இரத்த நாளங்களில் சேமித்துக் கொள்கின்றது.

1.இரத்த நாளங்களில் உள்ள அணுக்கள் அதன் பசிக்கு உந்தும் பொழுது
2.அதனின் உணர்ச்சிகள் சிறு மூளைக்கு எட்டப்பட்டு
3.கண் காது மற்ற புலனறிவுகளுக்கு ஆணையிடப்பட்டு
4.மீண்டும் காற்றிலிருந்து அதே இனமான உணர்வுகளைக் கவரச் செய்கின்றது.
5.இப்படித்தான் நம்முடைய சுவாசம் எண்ணம் சொல் செயல் இயக்கம் எல்லாமே இயங்குகின்றது.

மெய் ஞானிகளின் உணர்வை உயிர் வழியாக நாம் கவர்ந்தால் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் இயக்கமாகி அதனின் அறிவாக நாம் மெய் ஞானிகள் கண்ட மெய்யை உணர முடியும்.

அதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானத்தின் அறிவை விஞ்ஞான அறிவுடன் இணைத்துக் காட்டுகின்றோம்.

ஆறாவது அறிவை… “டாக்டராகப் பயன்படுத்தி…!” உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளுங்கள்

Image

sixth and seventh sense

ஆறாவது அறிவை… “டாக்டராகப் பயன்படுத்தி…!” உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளுங்கள்

 

இன்ஜினியருக்காகப் படிக்க வேண்டும்… டாக்டருக்காகப் படிக்க வேண்டும்… அதன் வழியில் செல்வத்தைச் சம்பாரித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற ஆசையில் கல்விச் சாலைகளுக்கு சென்று மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து வாழ வேண்டும் என்று எல்லோருமே செயல்படுத்துகின்றனர்.

அப்படிப் படித்திருந்தாலும் வாழ்க்கையில் வேதனை என்ற நஞ்சு ஊடுருவி விட்டால் உடனே படித்த நிலைகள் அனைத்தும் செயலிழந்து அந்த வேதனையான உணர்வுகளே மிஞ்சி வாழ்க்கை நலிவடைந்து உயிரான்மா நஞ்சு கொண்டதாக மாறுகின்றது.

ஏனென்றால் உயிரான்மாவில் பட்ட நஞ்சினை நீக்கும் திறன் நாம் கல்விச் சாலையில் படித்த படிப்பில் இல்லை.

உதாரணமாக ஒருவர் நோயினால் அவதிப்படுகிறார் என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றோம். நோயிலிருந்து மீட்கத் தன் ஆறாவது அறிவான அந்த டாக்டரை வைத்துத் தான் அவரை அங்கிருக்கும் மருத்துவர் காக்கின்றார்.
1.அதாவது நம்முடைய ஆறாவது அறிவு… என்ற “டாக்டரின்” துணை கொண்டு
2.நாம் எதை எதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோமோ
3.அதைத் தான் நமக்குள் செயல்படுத்தும்.

அத்தகைய ஆறாவது அறிவைத் தெளிவாக்கி அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை அதை வளர்க்கச் செய்யும் நிலைகளுக்குத்தான்
1.நஞ்சினை நீக்கி உணர்வினை ஒளியாக்கிய
2.மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

ஒளியுடன் உயிர் தொடர்பு கொண்ட நிலைகள் கொண்டு நம் உணர்வினை ஒளியாக்குவோம்.

எந்தக் கோள் எதனுடைய நிலைகளில் வந்தாலும் சூரியன் அவைகளை எடுத்து ஒளியின் சிகரமாக மாற்றுகிறது. அதே போல் இருபத்தியேழு நட்சத்திரங்களும் விண்வெளியிலிருந்து வெளி வரும் நஞ்சினை மாற்றி ஒளிக்கதிராக மாற்றி நம் பிரபஞ்சத்திற்குகந்ததாக அனுப்புகிறது.

அதைப் போல் நம் உடல் கோளாக இருந்தாலும் உயிர் சூரியனைப் போன்று தனக்குள் வருவதை இயக்கினாலும் மனிதனுக்குள் எண்ணிய எண்ணங்கள் நட்சத்திரம் போன்று உணர்த்தினாலும்
1.காத்திடும் உணர்வு கொண்ட ஒளியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து
3.பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற சிருஷ்டிக்கும் நிலைகள் கொண்ட
4.நம் ஆறாவது அறிவினைச் செம்மைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரம் விண்ணிலே எட்டாத தூரத்தில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவரும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படர செய்து கொண்டிருப்பதை நமக்கு முன்னாடி சுழன்று கொண்டிருப்பதை நாம் பருகிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் விளைய வைத்து வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலையை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையில் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

ஆகவே ஆறாவது அறிவை நீங்கள் டாக்டராகப் பயன்படுத்தி நஞ்சினை நீக்கிடும் ஆற்றலாக ஒளியினைப் பருகும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பெருக வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

படித்ததனால் வரும் அறிவும் பதித்ததனால் வரும் அறிவும் – “கல்வி அறிவுக்கும் மெய் ஞானத்தின் அறிவுக்கும் உண்டான வித்தியாசம்…!”

Image

Gnana and education

படித்ததனால் வரும் அறிவும் பதித்ததனால் வரும் அறிவும் – “கல்வி அறிவுக்கும் மெய் ஞானத்தின் அறிவுக்கும் உண்டான வித்தியாசம்…!”

 

கல்வித் திறனை வளர்த்துக் கொள்வதற்காக வேண்டிக் கல்விச் சாலைகளுக்குச் செல்கின்றோம்.
1.அதிலே விஞ்ஞானத்தின் மேல் நாட்டம் வரப்போகும் போது விஞ்ஞான அறிவை (SCIENCE) வளர்த்து அதனுள் இணைகின்றோம்.
2.இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலே செல்லும் போது அதன் மேல் கூர்மையாகி அதை (TECHNICAL) வளர்க்கின்றோம்.
3.மருத்துவம் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஓங்கி வரப்போகும் அதை (MEDICAL) வளர்த்துக் கொள்கின்றோம்.
4.விவசாயத்தின் மீது நாட்டம் வரும் பொழுது அதனின் நுட்பங்களைப் படித்து (AGRICULTURE) வளர்த்துக் கொள்கின்றோம்
5.பொருள்களைப் பற்றிய கணக்கீடுகளைத் தெரிய விரும்பும் பொழுது அதற்குள் இணைந்து அதைக் (COMMERCE) கற்றுக் கொள்கின்றோம்

இது எல்லாம் இந்த மனித வாழ்க்கைக்கு உதவும் நிலையே தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் இதைத் தெரிந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்க முடியும் என்று இன்று செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

இருந்தாலும் படித்த நிலைகள் கொண்டு செயல்படும் போது அதிலே சிறிது குறை ஏற்பட்டால் அதனால் வேதனை என்ற நிலைகள் ஒரு சமயம் பட்டுவிட்டால்
1.கண்டுணர்ந்த படித்த விஞ்ஞானத்தின் அறிவு அனைத்தும் வீழ்ந்து விடுகின்றது.
2.பல காலம் படித்துணர்ந்திருந்தாலும் அதிலிருந்து மீள முடியாதபடி சோர்வடையச் செய்து
3.முழுவதும் செயலிழந்த நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள்.

ஆனால் நானோ (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்தான். மூன்றாவது கூட முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் இதைப் பேசுகிறேன் என்றால்
1.குருநாதர் கொடுத்த அந்த மெய் ஞானிகளின் ஆற்றலை
2.அவர் எனக்குள் பதிவு செய்ததை நினைவு கூர்ந்து
3.இந்தக் காற்றில் இருப்பதை என் உயிரின் துணை கொண்டு நுகரும் பொழுது
4.மெய் உணர்வின் அலைகளை ஒலி பரப்பும் எண்ணங்களாக அது என்னைப் பேச வைக்கின்றது.

உதாரணமாக படித்துணர்ந்த நிலைகள் கொண்டு ஒரு பாடலைப் பாடுகின்றனர் என்றால் பாடிய முதலின் தலைப்பு சரியாக வந்தால் அந்த பாடலின் கடைசி வரையிலும் ஒரே சீராக எந்தத் தங்கு தடையுமில்லாது வரும்.

ஆனால் பாடலைப் பாடி வரப்போகும் போது இடைப்பட்ட நிலைகள் மறைந்து விட்டால் பாடலின் முழுமையின் நிலை வராது.
1.மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.
2.(வெறுமனே பாட நிலைகளைப் படித்துக் கொண்டிருந்தால் இந்த நிலையில் தான் இருப்போம்)

அவ்வாறு இல்லாதபடி சீராக்கும் நிலைகளுக்குத்தான் அந்த மெய் ஞானிகள் கண்ட உணர்வின் தன்மையை குருநாதர் எமக்குள் பதிய வைத்தது போன்று உங்களுக்குள்ளும் இதை ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்று இந்த இச்சையில் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இட்ட ஆணைப்படி இந்த எண்ணத்தை நான் சுவாசிக்கும் போது மெய் ஒளியாகப் பரப்புகின்றது எனது உயிர். மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை என் அங்கங்களைக் கிரியையாகச் செயல்படுத்துகின்றது.

அவ்வாறு கிரியை ஆகி வெளிப்படும் போது ஞானத்தின் செயலாகப் என்னைப் பக்குவப்படுத்தும் நிலையும் பக்குவமான நிலைகள் பேசும் நிலையையும் உருவாக்குகின்றது.

இதே ஞானத்தின் உணர்வுகளை நீங்கள் கேட்டுணரும் பொழுது உங்களுக்குள்ளும் ஆழமாகப் பதிவாகின்றது. அந்த பதிவின் நிலைகள் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் சீர்படுத்தும் நிலையாக நிச்சயம் வரும்.

சகோதர உணர்வை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் விண்ணிலே வாழ்வாங்கு வாழலாம்…!

Image

religion

சகோதர உணர்வை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் விண்ணிலே வாழ்வாங்கு வாழலாம்…!

 

மக்கள் அனைவரும் நன்மையைக் கருதி ஏங்கினாலும் மதங்கள் அனைத்தும் நன்மையைப் பற்றிச் சொல்லி இருந்தாலும் தன் மதத்தை மட்டும் காக்கும் நிலையாகவும் தன் இனத்தை மட்டும் காக்கும் நிலையாகத்தான் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

தன்னைக் காத்திடும் நிலைகளைத்தான் உருவாக்கியதே தவிர பிறருடைய நிலைகளைத் தன் சகோதரன் என்ற நிலைகள் உருவாக்கவில்லை. வாயளவிலே “சகோதரர்” என்று பேசிக் கொள்கின்றோம் அவ்வளவு தான்…!

ஆனால் இந்தப் பூமியிலே ஒருவருக்கொருவர் இணைந்து தான் நாம் வாழுகின்றோம். யாரும் இணையில்லாது வாழ்வது இல்லை.

ஒரு தொழிலைச் செய்தாலும் ஒருவருக்கொருவர் நட்பின் தன்மை கொண்டுதான் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றோம். நட்பில்லை என்றால் வியாபாரம் இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் தொடர் கொண்டு தான் இந்த வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

ஒருவருக்கொருவர் பகைமை கொண்டால் மனித வாழ்க்கையை ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்கின்றோம் என்று தான் அர்த்தம். இதைப்போன்ற நிலைகள் இல்லாதபடி நாம் மாற்றிட வேண்டும்.

கடலிலே பெருங்காயத்தைக் கலக்கினால் அதனுடைய வாசம் சிறிது நேரமே இருக்கும். அடுத்த நிமிடம் அந்த மணம் மறைந்து விடுகின்றது.

இதைப்போல உயர்ந்த நிலைகளை நாம் பேசினாலும் கடலைப்போல ஒவ்வொரு நிமிடத்திலும் வேதனையும் வெறுப்பும் உப்புக் கரிப்பது போல நமக்குள் கைப்பான வாழ்க்கையாகத்தான் மனித வாழ்க்கையில் அதிகம் இருக்கின்றது.

நாம் நல்லதை எண்ணினாலும் கடலிலே கரைத்த பெருங்காயத்தைப் போன்றே சிறிது நேரமே அந்த நறுமணங்கள் இருக்கின்றது. அடுத்த கணம் அந்த நறுமணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

1.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல எண்ணங்கள் அனைத்தும் சிறிது நேரத்தில் மறைந்து
2.அடுத்துக் கவலையும் சோர்வும் வெறுப்பும் வேதனையும் படக்கூடிய உணர்ச்சிகளே நமக்குள் தூண்டி
3.நாளை என்ன செய்வது…? என்ற நிலைக்கே ஆளாகிவிடுகின்றோம்.

நல்லது செய்ய வேண்டும் என்று சிறிது நேரம் சிந்திக்கின்றோம். ஆனால் அடுத்த கணம் எப்படி நடக்குமோ…? இது எப்படி நடக்கப் போகின்றது…? என்று தனக்குத் தானே பலவீனமாகி சந்தேக உணர்வுகள் தோன்றி விடுகின்றது.

இதைப்போன்று தான் மனித வாழ்க்கையில் நஞ்சிற்குள் சிக்கப்பட்டு நம்முடைய எதிர்காலத்தையும் அது நசியச் செய்து கொண்டிருக்கின்றது.

இயற்கையில் விளைந்த நெல் மற்ற தானியங்களில் உருவாகும் மணி முத்துக்கள் பயிரிலே இணைந்து வளர்வதற்கு நஞ்சு உதவியாக இருந்தாலும் அதை நம் ஆறாவது அறிவு கொண்டு அகற்றிவிட்டு வேக வைத்துச் சமைத்துச் சுவைமிக்கதாக உருவாக்கி உட்கொள்கின்றோம்.

உதாரணமாக நாம் பொங்கல் வைக்கப்படும் போது அதை வேக வைத்து அந்தப் பொருள்களில் உள்ள நஞ்சினை நீக்கி அதிலே பல நல்ல பொருளைக் கலக்கப்படும் பொழுது மிகுந்த சுவையாகின்றது.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் நம்மை அறியாது ஒரு தொழிலின் நிமித்தம் சிறிது குறைகள் ஏற்பட்டு அதனால் வேதனையான உணர்வை நாம் கவர்ந்தாலும் பொங்கலை எப்படிச் சுவையாக உருவாக்குகின்றோமோ அதைப் போல நமக்குள் பொங்க வைக்க வேண்டும்.
1.அந்த மகிழ்ச்சியின் தன்மை பொங்கி வழிந்து
2.நாம் பிறரைக் காணும் போதெல்லாம் அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் நமக்குள் தோன்ற வேண்டும்.
3.நாம் இடும் மூச்சலைகள் இந்த நாட்டிலே அது படர்ந்து தீமை விளைவிக்கும் நிலைகள் அனைத்தும் அகன்றிட வேண்டும்.
4.ஏனென்றால் நஞ்சின் தன்மை நீக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு.

நஞ்சினை நீக்கிடும் உணர்வைத் வளர்த்துக் கொண்ட அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கலக்கச் செய்யும் போது அந்த உணர்வு ஆற்றல் மிக்க நிலையாக நமக்குள் விளைகின்றது. இத்தகைய உணர்வின் எண்ண அலைகள் படரப்படும் போது தீமைகள் அகற்றிடும் நிலையே இங்கே வருகின்றது.

இன்று எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மதத்தோராக இருந்தாலும் அவர்கள் கடை வைத்தால் நாம் அங்கே சென்று நமக்கு வேண்டிய பொருள்களை அங்கு வாங்குகின்றோம். அவர்களுக்கு வேண்டியது இருந்தால் நம்மிடம் வந்து வாங்குகிறார்கள்.
1.இதில் வேற்றுமை இருக்கின்றதா…? இல்லை.
2.இவ்வாறு நாம் வேற்றுமையற்ற நிலைகள் வாழப்படும் போது
3.மற்ற நிலைகளில் ஏன் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும்…?

எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் உலக மக்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

எங்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு பகைமை உணர்வை ஓங்கச் செய்யாது அதைத் தாளச் செய்ய வேண்டும்.

சகோதர உணர்வுகளையும் சகோதரப் பாசங்களையும் ஏற்படுத்தும் நிலைக்குத்தான் மகரிஷிகள் நமக்குப் பல பண்டிகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

ஒட்டு மொத்த நாட்டு மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் தன்னை அறியாத பகைமை வேற்றுமைகளை அகற்றி தெய்வீகப் பண்பை வளர்க்கவும் பண்பின் பெருக்கமாகச் சகோதர உணர்வுகளை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு மாதத்திலும் உருவாக்கப்பட்டது தான் பண்டிகைகள்.

அகண்ட அண்டங்களும் பிரபஞ்சங்கள் எல்லாமே ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.
1.தனித்த சக்தி ஒன்று தான் என்ற நிலையில்
2.அப்படிப்பட்ட ஒரு சக்தி எங்கேயும் இல்லை.
3.ஆகவே சகோதரத்துவத்தை நாம் அனைவரும் வளர்ப்போம்.
4.பகைமையில்லாது எதிர்ப்பில்லாது மகிழ்ந்து வாழ்வோம்.
5.மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று ஏகாந்த நிலை பெறுவோம்.

மெய் ஞானத்தைப் பெறும் வழியில் “நான் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் “நாம் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்

Image

spiritual-unity

மெய் ஞானத்தைப் பெறும் வழியில் “நான் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் “நாம் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்

 

மாமரத்தில் விளைந்த உணர்வின் சத்து மாங்காயாக இருக்கும் போது புளிப்பின் தன்மையாக இருந்து அந்த மணத்தையே வெளிப்படுத்தும். ஆனால் அது மாங்கனியாகும் பொழுது நல்ல மணமாக வெளிப்படுத்துகின்றது.

அதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் வந்த வெறுப்பின் சத்தையும் புளிப்பின் சத்தையும் மெய் ஞானிகள் கனிவாக்கிக் கனியின் தன்மை அடைந்து ஒளியின் சரீரம் பெற்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அந்த உணர்வினை எண்ணும் போது அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய். அதே சமயத்தில் அதைப் பருகும் நிலை அடைந்த நீ
1.உனக்குள் விளைந்த மணமாக அந்த மெய் ஞானிகளின் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கும் போது
2.அந்த உணர்வின் சக்தி உனக்குள் கனிவாகும் – கனியின் தன்மையைப் பெறும் தகுதியாக நீ பெறுகின்றாய்…! என்று குருநாதர் இதைச் சொன்னார்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வின் சக்திகளை “நாம் அனைவரும் பெற வேண்டும்…!” என்ற நிலையிலேயே என்றும் வளர வேண்டும்.
1.“நாம்…!” என்ற ஒருக்கிணைந்த நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலுக் கொண்ட நிலையாக ஆகின்றோம்.
2.”நான்…!” என்ற நிலையில் தனித்துச் சென்றோம் என்றால்
3.மற்றவர்களின் உணர்வின் வலு நமக்குக் கிடைக்காது இழக்கப்படுகின்றது.
4..அப்பொழுது நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது என்று குருநாதர் என்னை எச்சரித்தார்.

எந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பருகினோமோ எதை நாம் கலந்து உறவாடினோமோ அந்த உணர்வின் சத்தை நீ பெற வேண்டும் என்று… நான் எப்படி எண்ணினேனோ…!
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகிறேன். அப்பொழுது நாம் ஆகின்றோம்.

இதைப்போல அனைவருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணும்போது
1.அவர்களுடன் இணைந்தே நீயும் அவர்களாகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்தே உன் தன்மை பெறுகின்றார்கள்.

விண்ணிலிருந்து விஷத் தன்மைகள் பல வந்தாலும் சூரியன் அதையெல்லாம் ஒன்றாக இணைந்து ஒளியாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளியின் சுடராக இயக்குவது போல் உனது உணர்வும் செயல்பட வேண்டும்.
1.மெய் ஞானிகளின் உணர்வை நீ பருகி
2.பருகிய அந்தச் சத்தை அனைவரையும் நீ பெறச் செய்ய வேண்டும்
3.அதனின்று தான் நீ இதைப் பெறுகின்றாய்…! என்று தெளிவாக எமக்கு உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நாம் ஒவ்வொருவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை இந்த உலகில் வாழும் அனைத்து மக்களையும் பெறச் செய்வோம்.

கனியின் தன்மையை அடைந்த அந்த மெய் ஞானிகள் பெற்ற அழியா ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற வேண்டும் என்ற நிலைக்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

சில மலைப் பகுதிகளில் வளரும் செடிகளுக்கு உண்டான “விசித்திரமான ஆற்றல்கள்…!”

Image

Mountain mist

சில மலைப் பகுதிகளில் வளரும் செடிகளுக்கு உண்டான “விசித்திரமான ஆற்றல்கள்…!”

 

பெரிய பெரிய மலைகளை எல்லாம் நாம் பார்க்கின்றோம். ஆனால் அதிலே அந்தப் பாறை ஆவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைத் தான் பருகி அதன் அருகிலே எந்த மலை இருக்கின்றதோ அதறகுள் ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது. சில பகுதிகள் அவ்வாறு உண்டு.

அந்தப் பகுதிகளுக்கு மேலே மேகங்கள் படர்ந்து சென்றால் உச்சி மலையாக இருப்பது தனது காந்தப்புலனால் அந்த மேகங்களைக் கவர்ந்து அதற்குள் நீராகச் சுரக்கச் செய்கின்றது.

மலைக்குக் கீழே நீர் இருக்காது. ஆனால் அத்தகைய மலை உச்சிகளில் நாம் நீரைப் பார்க்கலாம். ஏனென்றால்
1.இவையெல்லாம் இந்தப் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும்
2.அதனுள் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்களுக்கொப்ப
3.அதனின் துணை கொண்டு தான் அந்தப் பாறையை அது வளர்க்கின்றது.

அதே சமயத்தில் அந்தப் பாறைக்குள் நீராகக் கலந்து பாறை மீது நீர் ஓடினாலும் அதனின் தன்மை ஆவியாகப் பறந்து வரப்படும் போது அதைப் போல மற்ற செடிகளின் தாவர இனச் சத்துகளின் ஆவிகளும் இது இரண்டும் ஒருக்கிணைந்து அதனின் தன்மை கொண்டு ஓர் செடியாக ஒரு வித்தாக ஒரு கருவாக உருவாகின்றது.

1.அத்தகைய செடிகளை நாம் வேறு எங்கேயாவது ஊன்றினால்
2.அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
3.விண்ணிலே நுண் அணுக்களாகக் கலந்து கொண்டு இருக்கும் நிலையில்
4.துருவப் பகுதியில் இருந்து வரும் அல்லது கடல் நீர்களிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளை
5.சூரியனின் காந்த சக்தி அது கவர்ந்து வைத்திருப்பதைத் தனக்குள் குவித்து
6.மேகங்களாக கூடச் செய்து நீராக வடியச் செய்து அந்த நீரின் சத்தை எடுத்து வளர்த்துக் கொள்கின்றது.

இயற்கையில் சந்தர்ப்பத்தால் பல உணர்வின் அலைகள் மோதி மோதி பல உணர்வின் சக்திகள் கருவாகி இப்படித்தான் பல பல தாவர இனங்களாக உருவாகின்றது.

அன்றைய மெய் ஞானிகள் இதைப் போன்ற தாவர இனத்தின் சத்தை அறிந்துணர்ந்து அந்தச் செடிக்குள்
1.மனிதனைக் காத்திடும் நிலை எவ்வளவு இருக்கின்றது…?
2.மனிதனுடைய நல்ல உணர்வினுடைய வளர்த்திடும் நிலைகள் எப்படி இருக்கின்றது…?
3.மனிதனுடைய சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும் உணர்வின் சத்து செடியிலே எப்படி இருக்கிறது என்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்து
4.அதை நாம் பக்குவப்படுத்திப் பயன்படுத்தும் நிலைகளுக்குக் கொடுத்தனர்.

ஆனால் செடியிலிருந்து வித்தா…? வித்திலிருந்து செடியா…? என்று கேள்விக் குறி போட்டு இன்றும் விஞ்ஞான அறிவில் கண்டு கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

சில பொருள்களை இணைத்து மனிதனுடைய உணர்வுகள் இயக்கப்பட்டு புதுச் செடிகளை மனிதனால் உருவாக்க முடிகின்றது. உருவாக்கியதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
1.ஒவ்வொரு செடியிலும் என்னென்ன உலோகச் சத்துகள் (கால்சியம் இரும்பு) அது எந்த இவ்வளவு இருக்கின்றது…?
2.அதில் மற்ற சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றது…?
3.அதே போல மனித உடலின் தசைகளில் கொழுப்புச் சத்து எவ்வளவு இருக்கின்றது…?
4.உடலில் தாதுக்களும் மற்ற உப்புகளும் எவ்வளவு இருக்கின்றது என்று இதை எல்லாம் அறிந்து கொள்கின்றது இன்றைய விஞ்ஞான அறிவு.

இருந்தாலும் இயற்கையாக உருவாகும் தாவரங்களிலிருந்து நாம் பெறக் கூடிய உணவு வகைகளை அன்று ஞானிகள் நமக்குக் காட்டியிருந்தாலும் அதை விடுத்துவிட்டு செயற்கையாக விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட உணவு வகைகளைத்தான் நாம் இன்று அதிகமாகப் பயன்படுத்துகின்றோம்.

அதனால் இயற்கையின் அந்த மெய் ஞானத்தின் அறிவின் வளர்ச்சிகள் குன்றப்பட்டு மனிதன் சிந்தனைகள் குறைந்து இயந்திரத்தைப் போல இயங்கும் நிலையாக
1.விஞ்ஞானத்தின் வீரியத்தின் செயலாகத்தான் வளர முடிகின்றதே
2.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மை பெற முடியவில்லை.
3.இன்றைய மனிதன் தன்னைக் காக்கும் நிலையும் இல்லை.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறோம்.

சாக்கடை அருகில் உன்னை அமரச் செய்து நான் உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…? என்பதைத் தெளிவாக்கினார் ஈஸ்வரபட்டர்

Image

bhoovarahar

சாக்கடை அருகில் உன்னை அமரச் செய்து நான் உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…? என்பதைத் தெளிவாக்கினார் ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகம் எவ்வளவோ சாக்கடையான நிலைகள் கொண்ட காற்று மண்டலமாக இருக்கின்றது.
1.மனித வாழ்க்கையில் அதை நுகர்ந்து நுகர்ந்து
2.உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நாம் நுகரும் தன்மை அடைந்துள்ளோம்.

ஏனென்றால் விருப்பு வெறுப்பு கோபம் ஆத்திரம் குரோதம் வேதனை என்று பிறர் மேல் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவே இல்லை.

பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் துணை கொண்டு பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வருகின்றது.

நாற்றத்தை எண்ணாது நாற்றத்தை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து நல்லதை நுகரும் நிலையாகப் பெற்ற பின் தான் மனிதனாக உருப் பெறுகின்றது பன்றி.

இதை உணர்த்துவதற்காக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடைக்கு அருகிலே அமரச் செய்தார்.
1.இந்தச் சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே.
2.நஞ்சை நீக்கிய அருள் ஞானி உணர்வை இங்கிருந்து நீ பெறு…! என்றார்.
3.அருள் ஞானியின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
4.சாக்கடையை நுகர்ந்தாலும் அது அறியத்தான் உதவும்.
5.சாக்கடையின் நாற்றம் உனக்குள் விளையும் சக்தியாக விளையாது.

அதாவது அருள் ஞானிகளின் உணர்வுகள் உனக்குள் வரும் போது இந்தச் வாழ்க்கையில் இருக்கும் சாக்கடையான உணர்வினை நீக்கி மெய்ப் பொருள் கண்டுணரும் சக்தியை நீ பெறுவாய். அதைப் பெறச் செய்வதற்கே நான் உன்னை இங்கே அழைத்தேன் என்றார் குருநாதர்.

சாக்கடைக்கு அருகில் வந்ததும் நீ எதை நுகர்கின்றாய்..? கண்ணால் பார்த்ததும் அந்தச் சாக்கடையை நுகர்ந்து ஐய்யய்ய… ஐய்யய்ய…! என்று எண்ணுகின்றாய். அடுத்து அதை நினைக்கும் போதெல்லாம் உனக்குள் சாக்கடையிம் மணமே வருகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த மணத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணும் போது அதனுடைய உணர்வு உனக்குள் அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணமாக வருகின்றது.

ஆகவே நாற்றத்தைப் பிளந்த அந்த வராகனைப் போன்று வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும்
1.அவர்கள் குறைகள் நீங்க வேண்டும் என்று
2.குறைகளை நீக்கிடும் உணர்வாக நாம் வளர்க்க வேண்டும்.

தெளிந்துணர்ந்து செயல்படும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் வளர்க்கும் போது உடலுக்குள் இது விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அவர்களுக்குள் செலுத்தப்படும்போது அங்கே குறைகளை நீக்கிடும் சக்திகளாகத் தோன்றுகின்றது.

ஆகவே யாரைக் கண்டாலும் எவரைக் கண்டாலும் அங்கு குறைகள் எதுவாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும்…?

மகரிஷிகளில் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு
1.நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
4.இதை எண்ணுவோம் என்றால் நமக்குள் அறிவித்த (குறையான) அந்த உணர்வுகள் மெய்ப் பொருள் காணும் நிலையாக வரும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் கண்டாலும் அதை அறிவிக்க மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து நாம் பயன்படுத்தக்கூடாது.

ஏனென்றால் அறிவிக்கச் செய்யும் நிலையை நாம் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி… “இப்படிச் செய்தான் இப்படிச் செய்தான்…!” என்று எண்ணும் போது நமக்குள் எதைத் தவறென்று காட்டியதோ அதே தவறின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாக வளர்த்துவிடும்.

மனித வாழ்க்கையில் குறை இல்லாது யாரும் நடந்ததில்லை. மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வுகள் வரும் போது அந்த குறையின் உணர்வாக இயக்கப்படும் போது அதில் இருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?

டி.வி,யோ மற்றதோ மூடி மறைத்திருப்பதை நாம் அந்த சுவிட்சைப் போடும் போது அது இயக்கி அங்கே அந்தப் படங்களைத் தெளிவாக நம்மைத் தெரிந்துணரச் செய்கிறது.

அதைப் போல தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்தை நாம் செலுத்தப்படும் போது
1.அது நமக்குள் மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலைகளாக இயக்கி
2.ரிமோட் கண்ட்ரோலாக நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
3.நம்முடைய சொல்லைக் கேட்போருக்கும் அவர்களுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும்.
4.மற்ற தீமைகள் வராதபடி நமக்குள் நல்ல உணர்வைத் தெரிந்து கொள்ளும் நிலையாக வருகின்றது.

நமக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் அந்த நிலையையும் தீமைகள் நமக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்கே குருநாதர் எமக்குச் சாக்கடை அருகே அமரச் செய்து கொடுத்த அந்த உபதேசத்தை உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

மெய் ஞான சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ “அந்த அத்தனை பேரின் வலுவும் நமக்குக் கிடைக்கின்றது…!

Image

Group meditation powers

மெய் ஞான சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ “அந்த அத்தனை பேரின் வலுவும் நமக்குக் கிடைக்கின்றது…!

 

மெய் ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் உடலிலே வந்த தீமைகளை நீக்கி உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண்ணுலகில் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு விண் சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைத்தான் உனக்குள் (ஞானகுரு) பதியச் செய்கிறேன் என்றார் குருநாதர்.

அவ்வாறு பதியச் செய்த நிலைகள் கொண்டு
1.மனித வாழ்க்கையில் உன்னை அறியாது சோர்வடையச் செய்யும்
2.இருளான உணர்வுகளுக்குள் மெய் ஞானியின் உணர்வை இணைத்து
3.மெய் ஞானிகளை நினைவுக்குக் கொண்டு வந்து கவருவேயானால்
4.அந்த மெய் உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை நீ பெறுகின்றாய்.

அந்த உணர்வுகள் உனக்குள் விளைய விளைய உன்னிடமிருந்து வெளிப்படும் அந்த எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் அனைவரது உணர்வுகளில் “ஓ…” என்று ஜீவனாகி “ம்…” என்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.

பிறர் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்…! என்ற ஏக்க உணர்வுடன் வரும் போது
1.அனைத்து உணர்வின் சத்தும் உனக்குள் கிடைத்து நீ வலு பெற்றவனாக ஆகின்றாய்.
2.எத்தனை பேருக்கு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகின்றயோ
3.அத்தனை பேருடைய எண்ண வலுவும் உனக்குள் கிடைக்கின்றது.

அவர்களுக்குள் மெய் உணர்வுகள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் போது அந்த உணர்வுகள் அவர் உடலுடன் இரண்டறக் கலந்து அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் அவருக்குள்ளும் விளைகின்றது.

அந்த ஞானிகளின் உணர்வை அவர்கள் பெற்ற பின் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பதை நீ பார்க்கும் போது அந்த உணர்வின் சத்து கொண்டு உனக்குள் ஒளியாக மாற்றும் நிலை பெறுகின்றாய். அந்த அருள் ஞானிகளின் ஒத்த உணர்வாக அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய்.

ஆகவே கூட்டமைப்பாக எல்லோருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற நிலைக்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வுகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

அந்தத் தெளிந்திடும் நிலை பெற்ற மெய் ஞானியின் நிலைகளை ஒவ்வொருவரும் உடலுக்குள் செலுத்தும் போது அவர்கள் ஒளிச் சரீரம் பெற்றது போல அனைவரது உணர்வும் அது ஒளி பெறும் தகுதியாக விளைகின்றது.

உயிரை நாம் காண முடியவில்லை…! உணரத்தான் முடிகின்றது…!

Image

lord-shiva-amarnath

உயிரை நாம் காண முடியவில்லை…! உணரத்தான் முடிகின்றது…!

 

பூமியில் உருவான ஓர் கடலைச் செடியின் மீது சூரியனின் வெப்ப காந்தங்கள் (வெயில்) தாக்குகின்றது. அப்படித் தாக்கப்படும் போது அது கொதிப்பாகி செடி தனக்குள் உறைந்தது போக மீதத்தை ஆவியாக கடலைச் செடியின் மணங்களாக வெளிப்படுகின்றது.

அத்தகைய மணங்களை இந்த வெப்ப காந்தங்கள் கவர்ந்து அணுக்களாக மாறுகிறது. அந்த அணு கடலைச் செடியின் மணத்தைத் தாங்கிய இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அத்தகைய கடலைச் செடியின் மீது சந்தர்ப்பத்தில் ஒரு உயிரணு படுமேயானால்
1.கடலைச் செடியிலிருந்து வெளிவரும் மணத்தை
2.உயிரணுவில் இணைந்த காந்தம் தனக்குள் கவர்ந்து
3.உயிரணுவுடன் இணைக்கப்படும் போது அது ஜீவனாகின்றது.

அந்தக் கடலைச் செடியின் மணம் உயிரணுவிற்குள் மோதும் பொழுது ஜீவனாகி ஆவியாகி மீண்டும் அதனுடன் உறையும் தன்மை வருகின்றது.

பாலைக் காய்ச்சிய பின் எப்படி அதன் மீது எப்படி ஆடை விழுகின்றதோ அது போல கடலைச் செடியின் மணம் (சத்து) உயிரணுவிற்கு மேல் ஆடை போன்று உறைந்து விடுகிறது.
1.ஆகவே அதற்குள் இந்த உயிரின் அறிவு அடைபட்டுவிடுகின்றது.
2.அதனால் தான் சூட்சமமாக இருக்கும் உயிரணுவை (உயிரை) நாம் பார்க்க முடியவில்லை.
3.மின் அணுவாகத்தான் பார்க்க முடியும்.
4.அதனின் நுண்ணிய நிலைகள் வரப்படும் போது அந்த உயிரின் நுண்ணணுக்களையும் நாம் காண முடியாது.
5.ஏனென்றால் அதுவும் சூட்சமத்தின் இயக்கத் துடிப்பு கொண்டது.

அதே மாதிரி ஒரு தாவர இனச் சத்தின் மணத்தைச் சூரியனின் வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் அந்த மணத்தைக் கவர்ந்து கொண்ட அணுக்களின் தன்மை படர்ந்து வரப்படும் போது அதிலே எதிர்பட்டு நாம் சென்றால் அதைச் சுவாசிக்கும் பொழுது
1.ஏதோ ஒரு மணம் வருகிறது என்று நாம் அறிய முடிகின்றது.
2.அப்படி அறிந்தாலும் ஒரு விஷத் தன்மை கொண்ட செடியிலிருந்து வந்த மணமாக அது இருந்தால்
3.அதை நாம் சுவாசிக்கும் பொழுது அது நமக்குள் ஜீவன் பெற்று நம் நல்ல அணுக்களைச் செயல் இழக்கச் செய்கின்றது.
5.நாம் மயங்கி விழுந்து விடுகின்றோம்.

ஏதோ கெட்ட வாசனை வருகின்றது என்று அறிந்த நிலையில் மயங்கி விழுந்து விடுகின்றோம். அதாவது அதனுடைய இயக்கச் சக்தி அதிகமாகி நம் நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது. இதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

அதே போல ஒரு நறுமணமான மணத்தை நாம் நுகரப்படும் போது அந்த நிமிடம் நாம் சுவாசிக்கப்படும் பொழுது ஏதோ நல்ல வாசனையாக வருகிறது…! என்று அறிந்து கொள்கின்றோம்.

இப்படி இத்தனை மணங்களைச் சுவாசித்துத் தனித் தனியாக நாம் உணர்ந்தாலும் அது எவ்வாறு… எங்கிருந்து வந்தது…? என்று நம்மால் அறிய முடிவதில்லை.

இதைப் போலத் தான் ஒரு உயிரணு தாவர இனச் சத்தின் மணத்தை நுகரப்படும் போது அது உறைந்து புழுவின் உடலாக உருவாகின்றது. அப்பொழுது உயிர் அந்த உடலுக்குள் மறைந்து விடுகின்றது.

1.அதாவது சூட்சம நிலைகளில் நாம் காண முடியாத அந்த மணத்தை நுகர்ந்து
2.இந்த உயிரணு தன்னுடன் உறையச் செய்து
3.அதற்குள் உயிர் உள்ளடங்கி விடுகின்றது.

உயிரின் இயக்கம் ஈசன். ஆகவே ஈசன் என்ற இயக்கம் அது உள்ளடங்கி தான் இழுத்துக் கொண்ட சக்தியை உடலாகப் போர்த்திக் கொள்ளும் போது சிவமாக… உருவமாக நமக்குத் தெரிகின்றது.

அப்பொழுது உயிரின் இயக்கமான ஒளியின் சக்தி உடலுக்குள் மறைந்து விடுகின்றது.
1.ஒளியான உயிர் இருளான உடலுக்குள் மறைக்கப்பட்டு
2.உடலாகச் சிவமாகத் தோன்றுவதைத் தான் சிவன் இராத்திரி என்று
3.ஞானிகள் காரணப் பெயராக வைக்கின்றார்கள்.

உயிரின் தன்மை உடலான சிவத்திற்குள் ஆகும் போது அந்த உயிரின் தன்மை அதற்குள் நின்று மறைந்து விடுகின்றது. இது தான் சிவன்ராத்திரி.