குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து

குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து

 

1.இயற்கையின் உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குக் குருநாதர் எம்மை எத்தனையோ இம்சைப்படுத்தினார்.
2.ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப்படுத்தினார்.
3.எப்படி எப்படியெல்லாம் உணர்வுகள் மாறுகின்றது… உருவாகின்றது
4.சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…?
5.அந்த உயிர் எத்தனை நிலைகளைக் கடந்து வந்தது…?
6.அப்படி உருவாக்கிய உயிரை யாரும் மதிக்கவில்லையே உடலைத்தான் மதிக்கின்றார்கள்.
7.நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…?
8.இதை மக்களுக்கு நீ எடுத்துச் சொல் என்றார் குருநாதர்.

ஆண்டவனுக்கு நீ சேவை செய்கிறாய் என்றால் ஒவ்வொரு உடலையும் அந்த உயிர் ஆளுகின்றது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? அந்த உடல் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்…!

நான் சொல்வதை இந்த அருள் உபதேசங்களை நீங்கள் நுகரப்படும் போது உங்கள் ஆண்டவனுக்கு இந்த உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.

கோவிலிலே பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால்… அந்த நல்ல தெய்வ குணத்திற்குப் பாலாபிஷேகம் செய்கின்றார்கள்

அது போல உங்கள் நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அந்தப் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

ஆனால் வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தால் நடக்கின்றது…?

வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வீர்கள்… அப்போது வேதனை தான் முன்னாடி இருக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்குப் பாலாபிஷேகம் செய்தால் எப்படி இருக்கும்…? விஷத்தில் பாலை ஊற்றினால் அந்தப் பாலும் விஷமாகத்தான் மாறும்.

1.அது போல் நான் கொடுக்கும் வாக்கு பயனற்றதாகப் போய்விடும்.
2.நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கின்றேன்.
3.எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பயனற்றதாக ஆக்கி விடாதீர்கள் என்று.

ஏனென்றால் குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து. அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழகுதல் வேண்டும்.

உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும் அவனை மதித்து அந்த அருளைப் பெற்றால் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.

உடலிலே உபாதைகள் வந்து உறுப்புகள் கேட்டு… அதற்கு வேண்டிய ஆபரேஷனோ மற்றதை எல்லாம் செய்தாலும் கூட அடுத்து நாம் எங்கே செல்கின்றோம்…?

அந்த வேதனை என்ற விஷத்திற்குத்தக்க அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது.

கார்த்திகேயா… தெரியச் செய்கிறது சேனாதிபதி பாதுகாக்கும் சக்தியையும் இந்த உயிர் கொடுத்தது. அதை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் இன்று மனிதன் நாளை எடுத்துக் கொண்டால் நுகர்ந்த வேதனை உணர்வுக்கொப்ப வேறொரு உருவை மாற்றி விடுகின்றது.

இது போன்று குருநாதர் பல நிலைகளையும் என் உடலிலே பாய்ச்சி…
1.கெட்டதை நுகரப்படும் பொழுது உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…? என்று பல மணி நேரம் காட்டினார்.
2.அவஸ்தைப்பட்டுத் தான் அறிய முடிந்தது.
3.அதை மீண்டும் எப்படிச் சரி செய்து கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்ன நிலைகளைத் தெரிந்து
4.அதை நல்லதாக மாற்றி உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.

ஆகவே மகரிஷிகளின் அருல் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலம் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று
1.நீங்கள் எண்ணி எடுத்தால்
2.நான் சொல்லக்கூடிய வாக்கு நிச்சயம் உங்களுக்குள் பயனுள்ளதாக வேலை செய்யும்.

“சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்

“சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்

 

என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என் தொழில் நலமாக இருக்க வேண்டும் என் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் அவர்கள் கல்வியில் ஞானம் பெற வேண்டும் என்று இந்த உணர்வுடனே எம்மிடம் ஆசி பெற வேண்டும்.
1.அப்படி நீங்கள் ஆசி வாங்கினால்
2.அவ்வழி நடக்கும் என்று நான் (ஞானகுரு) உணர்த்தும் போது அந்த அருள் வழி நிச்சயம் நடக்கும்.

அதை விடுத்து விட்டு “சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்.

1.ஞானகுரு சொன்ன கருத்துக்களை நாம் பெற்றோமென்றால்
2.அந்த உணர்வுகள் நமக்கு நல்வழி காட்டும் என்ற நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.

“சாமி எல்லாமே செய்து தருவார்” என்று மற்ற சாமியார்கள் பூசாரிகள் செய்வது போன்று இந்தச் சாமியும் செய்து செய்வார் என்று எண்ண வேண்டியதில்லை.

உங்களுக்குள் அருள் ஞான வித்தை ஊன்றுகின்றேன். அது உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

காரணம் உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு ஆலயம். ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நீங்களும் அந்தப் புனிதம் பெற வேண்டும் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதை விடுத்து விட்டு என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது எதிர்த்து வீட்டுக்காரன் இடைஞ்சல் செய்து கொண்டிருக்கின்றான் தொழில் இப்படி நசிந்து கொண்டே இருக்கின்றது குழந்தைகள் நன்றாகப் படிக்கவில்லையே என்று எண்ணினால்
1.என்னுடைய பிரார்த்தனையின் உணர்வுகள் உங்களுக்குள் எப்படி வந்து சேரும்…?
2.நீங்கள் எடுக்கும் உணர்வுகள் நான் பாய்ச்சும் உணர்வுகளை ரிமோட் செய்து குப்பைக்குப் போ என்று தள்ளிக் கொண்டே இருக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் வாக்குகளை நீங்கள் சரியான முறையில் (யாம் சொல்லும் முறைப்படி) நீங்கள் எடுத்துக் கொண்டால்.
1.ஒரு அதிசயத்தக்க அற்புதமான நிலைகளைக் காணலாம்
2.நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில்… உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி உடலுக்குள் பகைமைகளை மாற்றி அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

உடலுக்குள் எண்ணத்தால் ஒன்று சேர்ந்து வாழும் கல்யாணராமா…! என்ற நிலையைத்தான் உங்களுக்குள் இப்பொழுது உபதேசித்து வருகின்றேன்.

இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கி இந்தச் சுவாசம் எடுத்தாலே போதுமானது.

நண்பனாகப் பழகி பகைமை ஆகிவிட்டால் “துரோகம் செய்தான் பாவி… உருப்படுவானா…?” என்று அமெரிக்காவில் இருப்பவனை எண்ணினாலும் இந்த உணர்வுகள் இயக்கி அங்கே புரையோடுகின்றது.

அதைப் போன்று
1.அந்த மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும் என்று தபோவன குருபீடத்தை எண்ணி நீங்கள் எடுத்தாலே போதுமானது.
2.எல்லோருக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் வெளிப்படுத்திய மூச்சலைகள்
3.உங்களுக்குள் எளிதில் கவரப்பட்டு உங்கள் சிரமங்களைப் போக்க முடியும்.

இது உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

நீங்கள் வெளிவிட்ட மூச்சலைகள் எதுவும் விரயமாவதில்லை. அனைவரும் ஒன்று சேர்த்த உணர்வுகள் வரப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று குரு பீடத்தில் நினைவைச் செலுத்தினால்
2.நீங்கள் ஒவ்வொருவரும் இட்ட மூச்சலைகள் அனைத்தும் உங்களுக்குக் கிடைத்து பலருடைய உணர்வுகள் உறுதுணையாக வரும்
3.பகைமைகளை அகற்றச் செய்யும்… உங்களை நலம் பெறச் செய்யும்.

ஆகவே… நோயைப் பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை அருளைப் பெற வேண்டும் இருளை நீக்க வேண்டும். தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்தாலே போதுமானது. இதை எல்லாம் நீங்கள் கடைப்பிடியுங்கள்.

இருந்த இடத்திலிருந்து நீங்கள் தபோவன குரு பீடத்தை எண்ணி உயர்ந்த சக்திகளைப் பெற முடியும். உங்கள் உடலிலே அந்த அருள் உணர்வுகள் பாயும்.

ஏனென்றால் என்னுடைய பிரார்த்தனையே
1.நீங்கள் தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்
3.உங்கள் வாழ்க்கை நலமும் வளமும் பெற வேண்டும் என்று தான் என்னுடைய ஆசைகள் எல்லாம்.

உங்கள் உயிர் கடவுள். அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றேன் இவ்வாறு நான் பிரார்த்தனை செய்யும்பொழுது உங்கள் நினைவுகளை வேறு பக்கம் செலுத்திக் கதவைப் பூட்டிவிட்டால் என்ன செய்வது…?
1.உங்கள் வீட்டை நான் சுத்தப்படுத்த வேண்டும் என்று வருகின்றேன்
2.கதவை மூடிக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்…?

அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அந்த உயர்ந்த நிலை நிச்சயம் ஏற்படும். அருளைப் பெருக்கி இருளைப் போக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே குருநாதர் காட்டிய அருள் வழியின் நோக்கங்கள்.

நாம் தேடி வைத்த எந்தச் செல்வமும் நம்முடன் வருவதில்லை இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. நமக்குச் சொந்தமாக்கப்பட வேண்டியது
1.உயிருடன் ஒன்றி அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.அந்த அழியாச் சொத்தைச் சேர்த்து வாழ்வதே மனிதனின் கடைசி நிலை.

இதை நாம் அனைவரும் பெறுவோம்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்.

முடிவு நிலையில் உள்ள நாம்… “முதல் நிலைக்குச் செல்லும்” பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தப்படுகிறது

முடிவு நிலையில் உள்ள நாம்… “முதல் நிலைக்குச் செல்லும்” பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தப்படுகிறது

 

நம் நிலை சமநிலை பட்டவுடன்… நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் எண்ணத்தை ஒரு நிலையில் குவித்து “எவ்வாண்டவனை வணங்குகின்றோமோ”
1.அந்நிலை கொண்ட அருள் ரிஷியின் ஒளிக் கதிர்கள் நம் உயிராத்மாவுடன் நாம் எடுக்கும் சுவாசமுடன் மோதுண்டு
2.நாம் எடுக்கும் இச்சக்தியின் அருளைக் கூட்டச் செய்கின்றது.

முந்தைய கால புராணங்களிலும் நடைமுறை வாழ்க்கையிலும், ஆண்டவனே வந்து சில நிலைகளைக் கவியாக உணர்த்தியதாக உணர்ந்திருப்பீர்.

பல ஆயிரம் காலங்களாக இம்மனித எண்ண அறிவு வளர்ச்சி கொண்ட நாள் தொட்டே பல ரிஷிகளின் சக்தி நிலை நம் பூமியில் செயல்பட்டு வருகிறது. அந்தந்தக் கால நிலைகளுக்கொப்ப இச்செயல் நிலை கலந்து வந்தது.

இன்றைய மனித ஆத்மாக்களின் எண்ணத்தில் இச்செயற்கை நிலையிலும் ஏட்டு அறிவின் உறவிலும் செயல்படும் நிலையில் பக்தி கொண்டு தன் எண்ணத்தைக் குவித்து… சப்தரிஷிகளின் நிலையுடன் தொடர்பு கொள்ளும் பக்குவ நிலை இக்கலிக்கு வரவில்லை.

இன்றைய நிலையில் கலியின் நிலையில் உணரும் பக்குவமும் இல்லை.

சப்த ரிஷிகளின் நிலையுமே இன்று இக்கலிக்குகந்ததாகத் தான் எவ்வண்ணத்தில் மனித ஆத்மாக்கள் செல்லுகின்றனரோ… அதே வழித்தொடர் கொண்ட சக்தியைத்தான் அவர்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.

கவியிலும் காவியத்திலும் இன்றைய சக்தி நிலையை உணர்த்தி அதை ஏற்கும் பக்குவ ஆத்மாக்கள் சில தான் உள்ளன என்பதனைப் புரிந்தே “கால நிலைக்கேற்ப அருள் ஒளி தான்” அவ்வாண்டவனின் ஜெபம் கொண்டவர்களின் நிலையிலும் செயல்படுகின்றது.

இன்றைய நிலையில் நம் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி
1.இவ்வுலக வாழ்க்கையுடன் நம் வாழ்க்கையை ஜெயித்துக் காட்டிட வேண்டிய பக்குவ நிலை பெறவும்
2.நமக்கேற்படும் அனைத்து நிலைகளில் இருந்து நம் நிலையை உயர்ந்ததாக்கும் செயல் நிலைதான் நமக்கு இன்று தேவைப்படுகின்றது.

அந்நிலை பெறவும்… இயற்கையின் உண்மை நிலையை அறியவும்… நம் எண்ணத்தை அவனிடம் செலுத்தும் பக்குவத்தைத் தான் இன்றைய நம் நிலை இருந்திடல் வேண்டும்.

எண்ணத்தை ஒருநிலைப்படுத்திக் குவிக்கக் குவிக்க
1.நம் சக்தி அவ் ஆண்டவனிடம் ஐக்கியப்பட்டு
2.உரமாய் அவன் சக்தியை நம்முள் ஊன்றச் செய்து
3.அவனும் நாமும் ஒன்றான நிலையில் நம் உயிராத்மாவும் நம் உடலும் இருந்திடும். இந்நிலையில்
4.நமக்கு ஏற்படும் நம்மைச் சுற்றியுள்ள எந்நிலையும் நம் அருகில் நெருங்காது.

இவ்வுலக மாற்ற நிலை கூடிய விரைவில் ஏற்படப் போவதினால் நம்மை அதி பக்குவப்படுத்தி நாம் செயல் கொண்டிடல் வேண்டும்.

மனித ஆத்மாக்களுக்குத் தான் இந்நிலையில் புகட்டுகின்றீர்; மற்ற ஜீவன்களுக்கு அதன் ஆத்மாவைக் காத்திடும் பக்குவம் எப்படி ஏற்படும்…? என்ற வினாவும் எழலாம்.

இன்றைய நிலையில் எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்பவன் இம்மனிதன் தான். மிருகங்களில் சிலவற்றின் நிலையும் பறவைகளில் சிலவற்றின் நிலையும் சில உயர்ந்த நிலையில் வாழுகின்றன.

இம்மாற்றத்தினால் பறவைகளில் சிலவற்றின் நிலை சிதறுண்ட நிலையில் செயல்படப் போகின்றது. பூமிக்கு மாற்றம் வரும் நிலையில் பறக்கும் பட்சிகளுக்குத் தப்ப முடியாதா…? என்று எண்ணலாம்.

காற்று மண்டலமே மாற்றம் கொண்டுள்ள இந்நிலையில் இப்பொழுதே பறவைகளின் எண்ணச் சிதறலின் வளர்நிலை தொடர்பட்டுவிட்டது. இவ்வுலக மாற்றத்திற்குள்ளேயே பறவைகளின் நிலை மிகவும் குறைந்துவிடும்.

நம் பூமியிலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பறவைகளின் நிலை இருந்ததைக் காட்டிலும் படிப்படியாய் இன்று குறைந்துவிட்டது.

மற்ற ஜீவராசிகளின் நிலையும் ஒரு சில இன வர்க்கங்கள் மிகவும் குறைந்து விட்டதற்குக் காரணமே தாவரங்களை அழித்ததினால் இக்காற்று மண்டலமே விஷத்தன்மை அதிகப்பட்டதிலிருந்து இம்மாற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

1.முந்தைய காலங்களில் வயல்களில் விளையும் கதிர்களைப் பட்சிகளிலிருந்து காக்கத் தக்க நடவடிக்கை இருந்திட்டது.
2.இன்றைய நிலையில் தாவரங்களை புழு பூச்சி இவற்றிலிருந்து காக்கும் நிலைதான் அதிகப்பட்டு விட்டது.

காலங்கள் மாற மாற இன வளர்ச்சியின் நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. இப்பூமியில் கல்கியில் தொடர்ந்து இக்கலி வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் முடிவு நிலைதான் இன்று நாமுள்ள நிலை.
1.முடிவு நிலையில் உள்ள நாம்
2.முதல் நிலைக்குச் செல்லும் பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தும் நிலை.

நல்லவர்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

நல்லவர்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

 

உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றேன் என்றால்…
1.உணர்வின் இயக்கங்கள் மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…?
2.நல்லவன் எப்படிக் கெட்டவனாகினான்…?
3.நல்லது செய்தே பிறருக்குக் கெட்டவனாகின்றான்… நல்லதைச் செய்தே தன் உடல் நலிந்து போகின்றது
4.நல்லவர்கள் குடும்பத்தில் எத்தனை தொல்லைகள் படுகின்றார்கள்…?
5.தவறு செய்யவில்லை… நன்மை செய்தவர்களே பெரும்பகுதி இந்த நிலைக்கு ஆளாகின்றார்கள்.
6.நன்மை செய்தவனுடைய நன்மைகள் வளர வேண்டுமல்லவா..? அதற்கு வேண்டிய உபாயம் தேவையா இல்லையா…?
7.அதன் உணர்வுகளை நீ உணர்த்து… நல்லவரை நல்லவராக்கு
8.தீமைகள் வளரப்படும் பொழுது தீமைகளை அகற்றிடும் வல்லமையால் அவர்களை நல்லவராக்கும் உணர்வினை நீ செயல்படுத்த வேண்டும்
9.இதுவே நீ ஆண்டவனுக்குச் செய்யக்கூடிய சேவை என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் அந்தந்த உடலை ஆளுகின்றது அப்படி ஆளும் அந்த ஆண்டவனுக்கு அந்த உடலில் சிந்தனையுடன் செயல்பட்டு அந்த உயர்ந்த குணங்களை பரப்பும் நிலைகள் பெற வேண்டும்.

அந்த உடலில் உள்ள நல்ல உணர்வுகள் வளர வேண்டும் என்று நீ எண்ணினால் ஒவ்வொரு உயிரான ஆண்டவனுக்கு நீ சேவை செய்கின்றாய்.

ஒவ்வொரு ஈசனுக்கும் உருவாக்கும் தன்மை கொண்டு உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டும் என்றால் உன் உயிரான ஈசன் உனக்குள் அந்த உணர்வினை வளர்க்கின்றது.

இந்த உணர்வினைச் சொல்லும் பொழுது அவர்கள் செவிகளில் விழுந்து இருளை அகற்றும் உணவுர்கள் அங்கே பெருகுகின்றது. ஆகவே உன்னுடைய சேவை எதுவாக இருக்க வேண்டும்…? என்று வினா எழுப்பினார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனின் உயிரையும் ஈசனாக மதி…! அவனால் அமைக்கப்பட்ட உடல் என்பதை ஆலயமாக மதி…! இந்த உணர்வால் நுகரப்பட்ட சிவமென்று அந்த உடலை மதி…!

அந்த உணர்வின் தன்மை கண்கள் வழிகாட்டி மனிதனை உருவாக்கிய கண்களே கண்ணனாகின்றது. வேதனை என்ற உணர்வை அடிக்கடி நுகர்ந்தால் கண்களிலே அது படரப்பட்டுக் கண் நாளடைவில் தெரியாது போகின்றது. கரு விழியில் விஷம் தோயப்படும் போது நல்ல உணர்வை அறியாது போகின்றான்.

கண்கள் பிறக்க எத்தனை உபாயங்களைக் கையாண்டது…? தான் பார்க்க வேண்டும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை எண்ணத்தால் எண்ணி… எண்ணித் தான் முதலிலே கண்கள் உருவானது.

கண்கள் உருவான பின் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வினை வேகமாகக் கூட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கி மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

கண்களால் தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதைத் துடைக்கத் தவறினால் வேதனை என்ற உணர்வுகள் அடிக்கடி கண்ணின் கருவிழிகளிலே பட்டால் அதைக் கவரும் தன்மை ஆகி விடுகின்றது.

அப்போது கருவிழிக்கு இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்கள் விஷத் தன்மையாகி அது பலவீனமானால் கண்கள் தெரியாது போய் விடுகிறது. ஆகவே கண்ணனுக்கே நாம் தீங்கு செய்கின்றோம்.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிரான ஈசன் மனித உடலை உருவாக்கியது
1.நாம் எடுக்கும் உணர்வுகள் சீராகச் செயல்படவில்லை என்றால் இந்த உடலுக்குள் உடலான சிவனுக்கே துன்பம் செய்கின்றோம்.
2.உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் அடிக்கடி வேதனைப்பட்டால் உயிரான ஈசன் வெளியே சென்று விடுகின்றது.

இந்த உடலின் ஆசைக்கு வளர்த்துக் கொண்ட உணர்வுகள்… எதை எதை எல்லாம் எண்ணி வேதனைப்பட்டோமோ விஷத்தின் அணுக்கள் விளைந்து உயிர் வெளியே சென்ற பின் இந்த உடல் சவமாகி விடுகிறது… நீசமாகி விடுகின்றது.

உடல் நீசம் ஆகிவிட்டால் நாற்றமாகிறது… அருகிலே நாம் செல்ல முடிகின்றதா…? செல்வந்தராக இருந்தாலும் பாசத்துடன் வாழ்ந்து இருந்தாலும் உடல் நீசமான பின் அருகிலே நிற்க முடிவதில்லை.

இயற்கையின் உண்மை நிலைகள் இவ்வாறாகும் பொழுது நாம் அணுக வேண்டியது யாரை…?
1.அருள் உணர்வுகள் பெற வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை “உயிருடன் ஒன்றச் செய்தால்” இருளை அகற்றும்.
3.இருளை அகற்றினால் மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும்.
4.மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தால்
5.நமது வாழ்நாளில் இருளை அகற்றும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறலாம்

ஆகவே… மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! மனிதனான பின் தீமைகளை நீக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கத் தவமிருக்கின்றேன்

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கத் தவமிருக்கின்றேன்

 

அகஸ்தியன் தாய் கருவிலே நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று அவன் வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.
1.அணுவின் இயக்கத்தை அறிந்தான்… அகஸ்தியன் என்று புகழ் பெற்றான். `
2.அணுவின் இயக்கத்தை அறிந்தான்… விண்ணின் ஆற்றலை உணர்ந்தான் நுகர்ந்தான்… துருவன் ஆனான்.

அகஸ்தியன் திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாகித் துருவ மகரிஷி ஆகின்றான். தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவிக்குச் சொல்லிக் கணவனும் மனைவியும் இருவரும் ஒன்றாக இணைந்து பூமியின் துருவப் பகுதியை நுகர்ந்து… அதன் உணர்வைத் தனக்குள் உருவாக்கி துருவ மகரிஷி ஆகின்றார்கள்.

அவர்கள் இருவருமே ஒன்றி வாழ்ந்து உடலை விட்டுச் சென்ற பின் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து இரு உயிர் ஒன்றாகி நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்றிடும் பேரருள் பேரொளி பெற்றுத் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுவோம்.
2.அதை ஏங்கித் தியானிக்கும் பொழுது நம் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக உருவாகும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி துருவத்தின் எல்லையில் குடி கொண்டு நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக வான் வீதியில் பரவச் செய்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
1.உங்கள் உடலுக்குள் பேரருளை உருவாக்குங்கள் பேரொளியாக உங்கள் உணர்வினை மாற்றுங்கள்.
2.தியானத்தில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் ஒளியான அணுக்களாக உருவாகும்.

அகஸ்தியமா மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெற்று… உங்கள் இல்லற வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி… நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று… உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலை அடைந்து… தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ்ந்து… பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று…
1.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
2.பிறவி இல்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று
3.பிறவியில்லா நிலை அடையும் அருள் வாழ்க்கை வாழ்ந்து
4.பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையில் வாழ்ந்து
5.என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் சக்தி உங்களில் பெற்று என்றும் ஏகாந்த வாழ்க்கையாக வாழ்ந்து
6.ஏகாதசி என்ற பத்தாவது நிலையான நிலையில் முழுமையாகிப் பேரருளுடன் வாழ்ந்து
7.அருள் சக்தி பெற்றிட அருள் வாழ்க்கை வாழ்ந்திட மகரிஷிகளின் அருள் சக்தி உங்களில் பேரருளாக உருவாகி
8.பேரின்பம் பெறச் செய்யும் அருள் சக்தி பெற்றிட “எமது குரு அருள்” உங்களுக்குள் பதிவாகும்.

எமது தியானமே அதுவாகி அதையெல்லாம் நீங்கள் பெற தவம் இருக்கின்றேன்… தவத்தின் பலனை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள்.

பேரின்ப நிலைகளை நீங்கள் பெற்று அனைவருக்கும் பேரின்பம் பெறச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளைந்து உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை நன்மை பெறச் செய்யவும்… உங்கள் பேச்சும் மூச்சும் உங்கள் குடும்பத்தில் அனைவரையும் மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி என்றும் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பேரின்ப நிலை பெற்று… மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து… இருளை அகற்றி மெய்ப்பொருள் கண்டு விஞ்ஞான உலகில் வரும் நஞ்சினை வென்று அருள் உணர்வுகள் உங்களில் விளைந்து… நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று… பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து…
1.பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து முழுமை அடையும் அருள் சக்தி பெற்று
2.எல்லா மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் உறுதுணையாக இருந்து
3.மகரிஷியின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ்ந்திட தவமிருக்கின்றேன் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

எம்முடைய உபதேசத்தின் சாரம்

எம்முடைய உபதேசத்தின் சாரம்

 

இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வெல்லாம்
1.துருவ நட்சத்திரத்துடன் உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்து
2.இந்த உணர்வினை நீங்கள் நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் கருவாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பது.
3.இதை நீங்கள் ஏங்கி சுவாசித்தாலே போதுமானது
4.ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

நமது வாழ்க்கையில் தவறு செய்தவரையும் தீமை செய்பவரையும் உற்று நோக்கி… அவர்கள் பேசும் உணர்வைச் செவிகளிலே கேட்கப்படும் பொழுது அதே உணர்வு கொண்டு “இப்படிப் பேசுகின்றார்கள்” என்று நுகர்ந்தால் அதுவும் தியானம்தான்.

இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தீமை செய்யும் நிலையாக அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் அணுவாக மாற்றிவிடும்.

ஆனால் இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினைச் சொல்லாகச் சொல்லும் பொழுது
1.செவிகளில் இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அதைக் கவர்ந்து
2.கண்ணின் காந்தப் புலனறிவு கொண்டு அதை நம் ஆன்மாவாக மாற்றி உயிரான ஈசனிடம் கொடுக்கப்படும் பொழுது
3.இந்த உணர்வின் தன்மை அதாவது பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா ஆக நமக்குள் மாறி அதன் உணர்வு கொண்டு நம் உடலாகிறது.

இதனின் உணர்வை வளர்த்துக் கொண்டால் உயிரான்மாவுடன் சேர்த்து அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மை பேரருள் என்ற உணர்வின் ஆன்மாவாக அந்த உணர்வின் அணுத் தன்மை அடைகின்றது.

அவ்வாறு அடையச் செய்யத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு எப்படிக் காட்டினாரோ… அதே வழிப்படிதான் உங்களுக்குள் அது பெருகவும் அதே உணர்வினைச் செவி வழி உணர்ச்சிகளை உந்தும்படி செய்து கண் வழி அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரச்செய்து ஜீவான்மாவாக மாற்றி அதன் உணவுக்காக அதே உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அதை ஏங்கி வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி நஞ்சினை வென்று பேரருள் பெற வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வாகச் சொல்கின்றேன்.

செவி வழி உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அந்த அரும்பெரும் சக்தி அதை நீங்கள் நுகர்ந்து பேரானந்த நிலை பெறும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன்.
1.கருத்தினைக் கூர்ந்து கவனித்து அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்து அறிவதோடு மட்டுமல்லாதபடி
2.அறியச் செய்யும் மகரிஷிகளின் பேராற்றல் மிக்க உணர்வினை உங்களுக்குள் உருவாக்கவே இந்த உபதேசம்.

நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

 

மனிதனால் விடப்பட்ட தீய அணுக்களின் தன்மை தாவர இனங்களில் பட்டிருந்தால் அதிலே விஷ கிருமிகள் உருவாகித் தாவர இனங்களைத் தின்றுவிடும்.

ஆனால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் மேகங்களில் கலக்கச் செய்து அது மழையாகப் பொழிந்து
2.அந்த நீர் பூமியிலே பொழிந்து செடிகளில் பட்டால் செடியில் வரும் மணத்தை நுகர்ந்து அணுவாகி
3.அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்து அதனுடைய மலம் செடிகளில் படும்பொழுது உரமாகும்.

ஆகவே அடிக்கடி நாம் மகரிஷியின் அருள் சக்திகளை மேகங்களுடன் கலக்கச் செய்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நாம் தியானித்து வருதல் வேண்டும்.

தியான வழிகளில் எடுத்து நாம் இதைச் செய்தோம் என்றால் மற்ற விஷக் கிருமிகள் தாவர இனங்களுடன் படரப் படும்பொழுது அதைச் செயலற்றதாக்க முடியும்.

ஏனென்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவிரவாதம் சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகள் தொடர்ந்து இந்தக் காற்றிலே படரப்படும் போது தான் அத்தகைய கிருமிகள் உருவாகின்றது.
1.நீங்கள் வேதனையுடன் ஒரு செடிக்கு நீரை ஊற்றிப் பாருங்கள்… இந்தச் செடி கருகிவிடும்
2.நீங்கள் வேதனையுடன் தொழில் செய்தால் அது வீணாகிவிடும்.

ஆனால் வேதனை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் மேகங்களில் கலக்கச் செய்து மழை நீராகப் பொழியச் செய்தோம் என்றால் இந்தக் காற்றில் உள்ள நச்சுத் தன்மைகள் குறையும்.

தாவர இனங்களில் படும் பொழுது நல்ல அணுக்களாக உருவாகும் தாவர இனங்கள் செழித்து வளரும் அதனுடைய மலங்கள் செடிகளுக்கு நல்ல உரமாகும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். அப்படி வந்துவிட்டால் நம் நாடும் செழிக்கும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது போன்று
1.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் பெற்ற அருள்
2.இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதை நாமும் பெற்று நமக்குள் வரும் இருளை நீக்கி
3.நமது மூச்சும் பேச்சும் புவியில் உள்ள இருளை நீக்கி கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கி
4.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வுகள் பெறச் செய்ய முடியும்.

அந்த அருள் ஞான சக்தி நீங்கள் பெற குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெற்று இருளை நீக்கி உலக இருளை நீக்கி… அருள் வழி வாழச் செய்யும் அருள் ஞான உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக “உங்கள் மூச்சலைகள் படரட்டும்…”

உங்கள் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் அந்த அருள் வழி வளரட்டும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் உலகமாக சிருஷ்டியுங்கள்.

1.இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான நிலையாக இருள் சூழச் செய்யும் நஞ்சிலிருந்து விடுபட்டு
2.அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து மெய் ஞானத்தின் உணர்வின் தன்மை பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
3.நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்.

இந்த உடலுக்குப்பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைவோம்.

யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியின் முக்கியத்துவம்

யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியின் முக்கியத்துவம்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செயல்பட்டால் நம்முடைய சிந்தனைகள் தெளிவாக இருக்கும்
1.அதன் வழி நல்ல சுவாசத்தை நாம் கொண்டு வர வேண்டும்.
2.அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்… சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் (ஞானகுரு).

இதெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் பல நிலைகளைப் பார்த்துத் தான் மற்றவர்கள் கொடுப்பார்கள்.

யாம் சாதாரணமாகக் கொடுத்த பின்… ஆரம்பத்தில் ஒரு சிலர் நிறையத் தவறு செய்து விட்டார்கள். ஆனால் அதே சமயத்தில் அப்படிப்பட்ட ஒருத்தர் இருவருக்காக நான் எல்லாவற்றையும் சொல்லாமலும் இருக்க முடியாது.

சில இடங்களில் மிகவும் கட்டுப்பாடாக இருப்பார்கள் ஆனால் இங்கே வருபவர்கள் எல்லோருக்கும் அது கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.

இவ்வளவு பெரிய விஷயங்களை யாரும் பப்ளிக்காகச் சொல்ல மாட்டார்கள்…!

நான் சொல்வதை எல்லாம் கேட்கின்றாயா…? அல்லது என்ன செய்கின்றாய் ஏது செய்கின்றாய்…? என்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்பு அவரை அனுமதித்து அதற்குபின் அங்கே வர முடியும்.

எல்லோருக்கும் தாராளமாக கிடைக்க வேண்டும் என்று தான் நான் செய்கின்றேன்.
1.ஏதோ நூறு பேர் வருகின்றார்கள் என்றால் அதிலே நான்கு பேராவது தேர்ந்தெடுத்து
2.இது போன்று அந்த நான்கு பேர் நான்கு நான்காகச் சேர்த்து நூறு பேருக்கு மாற்ற முடியும் என்ற
3.அந்த நம்பிக்கையில் தான் நான் இதை சொல்லிக் கொண்டு வருகிறேன்

ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் கோவில். கடவுள் வீற்றிருக்கக்கூடிய அந்த இடம் பரிசுத்தமாக வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

ஆகையினால் அதற்குண்டான பயிற்சியாக உங்களுக்குள் இதை கிடைக்கச் செய்வதற்கு தான் செய்கின்றேன் இல்லையென்றால் எனக்கு வேண்டிய ஆட்களுக்கு… “நான் சொன்னபடி கேட்பவர்களுக்கு” மட்டும் செய்யலாம்.

தெரிந்தவர்களும் இருக்கின்றார்கள்… தெரியாதவர்களும் இருக்கின்றார்கள்
1.என்னவென்ற விபரமே தெரியாது…
2.ஆனால் நீங்கள் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்
3.நீங்கள் எல்லோரும் பெற்றால் தான் எல்லோருடைய தீமைகளை அகற்ற முடியும்

வீட்டில் ஒருத்தர் இதைச் சீராகக் கடைப்பிடித்தால் கூட நல்ல காற்றலை வரப்படும் பொழுது வீட்டில் உள்ள மற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்.

எல்லோருக்கும் இந்த சக்தி பெற வேண்டும் என்ற இந்த ஆசையில் தான் நான் செய்கின்றேன்…
1.இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடாதீர்கள்
2.சாமி (ஞானகுரு) லேசாகச் சொல்கின்றார் என்று…!

இங்கு சாமியை வந்து பார்க்க வேண்டும் என்றால் வாசலுக்கு முன்னாடி யார்…? எந்த ஊர்…? என்று கேட்டு… பிறகு அங்கு உட்காந்து “எப்பொழுது சந்திக்கலாம்…?” என்று மணியைக் கேட்டு… ஆர்வத்தை எல்லாம் தூண்டி இங்கே கொஞ்ச நேரம் உட்காருங்கள் என்று சொந்னோம் என்றால்… இத்தனை தடைகள் வரும் பொழுது “ஏதோ பெரிதாக என்று நினைக்கின்றார்கள்…”

ஆனால் நான் அப்படி எதுவுமே செய்யவில்லை. தாராளமாக இங்கே வரலாம். அதே போல் இங்கே வெளிப்படுத்தியுள்ள புத்தகங்கள் நிறைய இருக்கின்றது என்று வாங்குவார்கள்.
1.கடைசியில் கிழித்துப் போட்டுப் போய்விடுவார்கள்
2.படிக்கக்கூட மாட்டார்கள்… அலட்சியமாகப் போட்டு விடுவார்கள்
3.அதனால் தான் இப்பொழுது ஓசியாக புத்தகம் கூட ஜாஸ்தி கொடுப்பதில்லை
4.கொடுத்தோம் என்றால் வாங்கி படிக்க மாட்டார்கள்… கீழே போட்டு விடுவார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உங்களை மனிதனாகப் பிறக்கச் செய்த ஆறாவது அறிவு கார்த்திகேயா…! அந்த அறிவைத் தெளிவாக்க வேண்டும்.

1.உயிர் அறிவாக்கிய அந்த அறிவைத் தெளிவாக்கி உயிரோடு சேர்த்து ஒளி ஆக்க வேண்டும்… இதுதான் இப்பொழுது நமது குருநாதர் காட்டிய அருள் வழி.
2.அதை நாம் செய்தோம் என்றால் நமது வாழ்க்கையிலே இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற முழுமை அடையலாம்.

ஆனால் இந்த உடலுக்காக இச்சைப்பட்டோம் என்றால் அடுத்த உடல் நிச்சயம் உண்டு. அதிலிருந்து தப்ப முடியாது. நாம் எந்த குணமோ அதற்குத்தக்க இந்த உயிர் ரூபத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்.

ஆரம்பத்திலிருந்து பார்க்கின்றோம் அல்லவா…? எத்தனையோ இம்சைப் பட்டு இந்த இம்சையிலிருந்து தப்பிக் கொள்ள முடியும் என்று இந்த உடல் பெற்ற பிற்பாடு மீண்டும் அதே உணர்வை எடுத்தோம் என்றால் இது சாகாக்கலையாக போகின்றது.

இப்பொழுது நம் குருநாதரைப் பார்த்தால் வேகாநிலை…! தீயில் குதித்தால் உயிர் வேகாது. உயிரைப் போல் ஒளியாகிக் விட்டால் இந்த அகண்ட அண்டத்தில் எதிலும் வேகாது அப்பொழுது ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும். “அந்தச் சக்தியை நாம் பெற வேண்டும்…”

இதையெல்லாம் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தித் தயாராகிக் கொள்ள வேண்டும். காற்று மண்டலம் விஷத்தன்மையாக இருக்கின்றது.

இப்பொழுதே சில பேருடைய நிலைகள் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு செல்கின்றது. இனி வரும் காலம் ரொம்ப மோசமான காலமாக இருக்கின்றது.
1.அதற்குள் நீங்கள் தயாராகி நல்ல சக்திகளைப் பெருக்கி உங்களையும் காத்து
2.உங்கள் ஊரையும் வீட்டையும் இந்த உலகையும் காத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு நீங்கள் தயாராக வேண்டும்.

ஒருத்தர் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தி இருந்தாலும் ஒரு அரிசியைப் போட்டு சாப்பாடு செய்து எல்லாத்தையும் சாப்பிடு என்று சொன்னால் முடியுமா…?
1.நாமெல்லாம் அந்த அரிசியாக மாற வேண்டும்.
2.ஒன்று சேர்த்து விளைந்து வந்தால் எல்லாருடைய பசியும் தீரும்.., அது தான் முக்கியம்.

ஒன்று என்பது எதுவுமே இருந்து… என்றுமே ஒன்றும் செய்வதில்லை.

இந்த உயிர் ஒன்றுதான் அப்படி இருந்தாலும் மூன்று நிலைகளில் (வெப்பம் காந்தம் விஷம்) வேலை செய்கின்றது. ஆனால் இந்த உடலுக்கு எத்தனை வகையான உணர்வுகள் வந்து உடலை உருவாக்குகின்றது…?

ஆனால் நல்ல உணர்வுகள் குறையக் குறைய இந்த உடலைச் சிறுக்கின்றது, இப்பொழுது நாம் வேதனையை வெறுப்பை நுகரும் பொழுது இந்த அழகான உடலும் சிறுத்துப் போகின்றது.

அப்போது இந்த உடலைச் சிறுக்கச் செய்த உணர்வுகள் என்ன செய்கின்றது…? இந்த உயிர் அதற்குத் தகுந்த உடலைத் தான் உருவாக்குகின்றது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1.நமக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்…
2.குருநாதர் காட்டிய வழியில் நாம் இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியும்
3.பிறவியில்லா நிலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பமாக நாம் இப்பொழுது உட்கார்ந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

தனக்குள் இயங்கும் நுண்ணிய நிலைகளைத் தெரிந்திடும் “எண்ண வலு கொண்டவர்கள்” ஞானியாகின்றார்கள்

தனக்குள் இயங்கும் நுண்ணிய நிலைகளைத் தெரிந்திடும் “எண்ண வலு கொண்டவர்கள்” ஞானியாகின்றார்கள்

 

வைத்திய ரீதியிலே சிலர் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். நோயுடன் வருபவர்களின் நாடித் துடிப்புகளை எண்ணித் தான் பரிசீலனை செய்வார்கள்.

இவர்களுடைய (வைத்தியர்) வாழ்க்கையில்
1.மற்றவர்களின் உணர்வுகளை வேகமாக நுகர்ந்தால் துடிப்பின் வேகம் ஜாஸ்தியாக இருக்கும்
2.இவருடைய வேகத்துடிப்பு இப்படி ஆனால் அவரின் (நோயாளியின்) நாடியினுடைய துடிப்பை அது அடக்கிவிடும்.
3.அங்கே இருக்கும் உண்மை நிலைகளை அறியாதபடி துடிப்பு அடங்கிய பின் அதற்குத்தக்க தான் மருந்து கொடுப்பார்
4.பித்தம் சிலேத்துமம் இப்படி இருக்கிறது என்று.

உதாரணமாக தெர்மாமீட்டரையே வைத்துப் பாருங்கள். அது வைக்கப்படும் பொழுது அங்கேயும் மேக்னட் அதிலே உள்ள பாதரசம் இந்த உணர்வின் அழுத்தத்தைக் கொண்டு மாற்றி அமைக்கும் தன்மை கொடுக்கின்றது. அதிலேயும் காந்தப்புலன் உண்டு… துடிப்பின் உணர்வுகள் உண்டு.

கோபமாக வெறுப்பாகவோ அல்லது அதிகமான நிலைகளிலே வேலை செய்து களைப்பின் தன்மை கொண்டு எரிச்சல் ஊட்டும் நிலைகள் வந்தால்
1.அந்த உணர்வுடன் அந்த தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்த உடனே உற்றுப் பார்க்கும் நிலைகளில் கண் எரிச்சலாகி விடும்.
2.என்ன…! ஒரு பாயிண்ட் ஜாஸ்தியாக இருக்கிறது… சரியாகப் போகும் போ…! என்று அளவுகோலை மாற்றி விட்டு மருந்தையும் கொடுத்து விடுவார்கள்

ஏனென்றால் இயற்கையின் நிலைகளில்… கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்… கீதா உபதேசம் கொடுப்பது யார்…? கண்கள்.

கண் நுகர்ந்ததைத்தான் காட்டும்… அதாவது எதை எண்ணிப் பார்க்கின்றோமோ அதைச் செயல்படுத்தும்.

நாம் சலிப்பும் சஞ்சலமும் கொண்ட பின் ஒரு பொருளைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சலிப்பினால் உண்மையை அறிய முடியாது போய் விடுகின்றது.

ஆகவே…
1.மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் நுண்ணிய நிலைகள் உண்டு
2.இதைத் தெளிந்து கொண்ட பின் “வலுவான எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றார்கள்…”
3.சந்தர்ப்பத்தில் உணர்வின் வலுக் கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் வருகின்றது.

தியான வழியில் உள்ளவர்கள் சில சந்தர்ப்பங்களில்…
1.இவையெல்லாம் கொஞ்சம் எண்ண வலுவைக் கூட்டினோம் என்றால்
2.உண்மை நிலைகள் “வாழ்க்கையில் எது வந்தது…?” என்று சிந்திக்க முடியும்…
3.உணர்ச்சிவசப்படுவதில்லை…!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் பள்ளிகளில் பாடங்களைப் படித்தாலும் அனுபவ ரீதியில் வருவதற்காக அளவுகோலைக் காட்டி அனுபவத்தைக் கொண்டு வருகின்றார்கள். பாட நிலையை வைத்து மட்டும் வைத்துக் கல்வியைச் செயல்படுத்துவதில்லை.

அது போன்று தான் உங்களுக்கு அனுபவங்களைப் பெறச் செய்கின்றோம் அந்தச் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மணிக்கணக்கில் உபதேசித்துக் கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு).

ஆக… இந்த வாழ்க்கையில் நம் வலிமை எதிலே இருக்கின்றது…?

நஞ்சின் உணர்வின் வேகத்திலிருக்கும் பொழுது நற்குணங்களின் தன்மையை அது செயலற்றதாக மாற்றி விடுகின்றது.
அந்த நஞ்சின் தன்மையைச் செயலற்றதாக ஆக்கும் அருள் ஒளியினை உங்களுக்குள் கூட்டி
2.அருள் ஒளியினால் காலப்பருவம் கொண்டு அதை அடக்கும் வல்லமை உங்களுக்குள் வர வேண்டும்.

யாம் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் சென்று அதைப் பதிவு செய்யும் பொழுது “ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய” என்ற அழுத்தத்தின் தன்மை அது உங்களுக்குள் பெருகுகின்றது.

ஓரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்றப்படும் பொழுது முதலில் கலங்கலாகத் தெரியும் ஆனால் நல்ல தண்ணீரை அதிகமாக ஊற்ற ஊற்ற அந்த கலங்கல்கள் குறைந்து “சிறிது தெளியும்…”

இதைப் போல்
1.எத்தனையோ உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் அழுக்கின் நிலையாக இருப்பினும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்க உங்களுக்குள் மனம் சிறிது தெளியும் நிலை வருகின்றது

அதனால் தான் உபதேசிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றேன்…!

“பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்

“பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்

 

அருள் ஞானிகள் உணர்வைப் பருகுவதற்குத் தான் ஆலயங்களில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள்.

உடலில் பட்ட அழுக்கினைத் துடைக்க நீரை ஊற்றிக் குளிக்கின்றோம். அதே சமயத்தில்
1.ஆன்மாவிலே பட்ட அழுக்கினைத் துடைப்பதற்கு “விண்ணை நோக்கி ஏகி”
2.உயர்ந்த சக்திகளை எடுக்கப் பழக்கினான் அன்று ஞானி.

அதற்குப்பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று “எந்த நேரம் நினைத்தாலும்” அந்தச் சக்திகள் கிடைக்கின்றது.

ஆலயத்தில் தீப ஆராதனை காட்டப்படும் பொழுதெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற நாங்கள் வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள். அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி அந்தச் சிலையை உற்றுப் பாருங்கள்.

அந்தச் சிலையில் காட்டப்பட்ட குணங்களை… காவியங்களாகத் தீட்டிய அந்த நற்குணங்கள் நாங்கள் பெற வேண்டும்… இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எங்குங்கள்.

தெய்வத்தின் மேல் போட்டிருக்கும் மலரின் மணம் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் அந்த முழுவதும் நறுமணங்கள் படர வேண்டும். என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த நறுமணங்கள் படர்ந்து அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்.

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும். என் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெற வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் எல்லாம் தெய்வ நிலைகள் பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அங்கே ஒற்றுமை ஏற்பட வேண்டும் அவர்கள் தொழில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.
1.பிறரை நாம் வாழ வைக்க இவ்வாறு எண்ணும் பொழுது
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் வாழ்கின்றன.
3.அப்போது தீமையை அறிவிக்கும் உணர்வுகள் ஒடுங்குகின்றது… அந்தத் தீமையை அறிந்ததோடு அதை நிறுத்திடல் வேண்டும்.

ஆக “பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்.

குழம்பு வைக்கப்படும் பொழுது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு என்று பல நிலைகளை சேர்த்துத் தான் அதைச் சுவை மிக்கதாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.

இதைப் போன்றே மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். இது தான் ஆலயம்… நம் உடலே ஆலயம்.

நமக்குள் இருக்கும் நன்மை செய்விக்கும் நற்குணங்கள்… காலத்தால் நல்லதைக் காப்பதற்காக நாம் கேட்டறிந்த உணர்வால் தீமைகள் பல சேர்ந்து
1.நல்ல தெய்வமாக இருந்த நிலைகளை மாறுபடச் செய்யாது
2.நல்ல குணங்கள் இருண்டு விடாது… நஞ்சுக்குள் சிக்காது அதைத் துடைக்கும் மார்க்கமாகத்தான் ஆலயங்களிலே காட்டப்பட்டது.

நம் உடலை ஆலயமாக்கி
1.அந்த ஆலயத்திற்குள் ஈசனாக இருந்து உயிர் இயக்கும் நிலைகளையும்
2.எண்ணியதைப் பிரம்மமாக உயிர் படைத்துக் கொண்டிருப்பதையும்
3.அதைச் சிவமாக உருவாக்கி சிவத்திற்குள் சக்தியாக நம்மை இயக்கிக் கொண்டிருப்பதையும்
4.நம் உயிரை நாம் மதித்து நடக்க வேண்டும்.

காரணம்… நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உயிரே. நாம் எண்ணியதை இயக்கும் ஈசனாக இருப்பதும் உயிரே.

தீமைகளைக் கேட்டறிந்தால் தீமைகள் நுகரா வண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து தீமைகளை அப்புறப்படுத்திப் பழக வேண்டும். அதற்குத்தான் ஆலயம்.
1.ஆலயத்திற்குச் சென்றால் “பிறர் வாழ வேண்டும்” என்று எண்ணுங்கள்.
2.கீதையிலே இதைத்தான் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைக் காட்டினார்கள்.

ஞானிகள் உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன் இங்கே படர்ந்துள்ளது அவர்கள் சொன்ன முறைப்படி நாம் சென்றால் அவர்கள் வாழும் எல்லையை அடைகின்றோம்.