சிறிதளவு பேரையாவது உண்மைகளை உணரச் செய்து உலகைக் காக்கும் சக்திகளாக உங்களை வளர்க்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கம்

சிறிதளவு பேரையாவது உண்மைகளை உணரச் செய்து உலகைக் காக்கும் சக்திகளாக உங்களை வளர்க்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கம்

 

கருப்பை இல்லை… அதனால் குழந்தைப் பாக்கியம் இல்லை என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில் கணவன் மனைவியாக எம்மிடம் வந்து “எங்களுக்குக் குழந்தை வேண்டும்” என்று கேட்டார்கள். யாம் ஆசீர்வாதம் கொடுத்த பின் குழந்தை கிடைத்தது.
1.அதைப் பற்றிப் பெருமைப்பட்டார்கள்.
2.ஆனால் அதற்குப்பின் சாமியைத் திரும்பி பார்த்தார்களா…? என்றால் இல்லை.
3.ஒரு நாள் ஒரு பொழுது கூட என்னிடம் வந்து எதையும் கேட்கவில்லை.

ஒரு முறை வீட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பின் எம்மைச் சந்திக்கவும் இல்லை.

அப்பொழுது எம்முடைய அருள் உபதேசங்கள் எல்லாம் என்ன…?

உங்கள் எண்ணம் தான் உங்களுக்குள் (அந்த உணர்வுக்குள் குழந்தை கருவாகி) எப்படிப் பதிவாகின்றது…? அதனால் “நான் செய்தேன்” என்று எண்ண வேண்டியதில்லை என்று அவர்களுக்கு உணர்த்தினோம்.

ஆக அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்… “சாமி செய்கிறார் என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கின்றது…?” நம் எண்ணத்தால் தானே உருவாகின்றது என்று…!

1.எண்ணத்தின் உணர்வு கொண்டு உயிர் என்ன செய்கிறது…? என்று யாம் சொல்கின்றோம்.
2.அதற்குண்டான ஒரு நல்ல கருவை ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
3.ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்தப் பருவம் வர வேண்டும் அல்லவா.

பின் இதை எதற்காகச் (அவர்களுக்கு) செய்தோம்…?

1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது அந்த இணக்கங்கள் நல் வழியை உயர்த்தும்
2.இது என் குருநாதர் எனக்குச் சொன்னது…!

போற்ற வேண்டும் என்று “நான் செய்தேன்” என்றால் தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும். நல்லவைகள் மறைந்து கொண்டுதான் இருக்கும்.
1.அனுபவரீதியிலே கொண்டு வருவதற்குத் தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
2.சிறிதளவு பேராவது “இந்த உண்மைகளை உணர்ந்தால்” தெளிவாக இருக்கும்.

ஒரு நோயாளி தன் நோயைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் இதே உணர்வுகள் தான் எல்லோருக்கும் இயக்கப்பட்டு அந்த நோய் தான் மற்றவருக்கும் பரவுகின்றது.

ஆனால் அருள் ஒளியைப் பெற்று நல்லதாகும் பொழுது “இதே வாக்கினை நீங்கள் சொன்னீர்கள்” என்றால் உங்கள் வார்த்தைகளைக் கேட்டால் தீமைகளை அது அகற்றும்.

விளம்பரம் செய்யாததின் நோக்கங்கள் என்ன…? என்றால்
1.ஆசையை ஊட்டி விட்டோம் என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதை குறிக்கோளாக வைத்து வந்தார்களோ அது தான் கிடைக்கும்.
3.அதன்படி கிடைத்து வந்தாலும் அதைப் பாதுகாக்கும் சக்தி இழந்து விடுகின்றார்கள்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…! யாம் கொடுக்கும் அருள் சக்திகளைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் வளர்ப்பதில்லை…
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதுமில்லை.

ஆரம்பத்திலிருந்து இதைத்தான் நாம் தெளிவாக சொல்லிக் கொண்டு வருகின்றோம் எத்தனையோ பேர்களை குருநாதர் காட்டிய வழியிலே நாம் தபோவனத்தில் பார்த்திருக்கின்றோம் அல்லவா…!

ஆகவே அந்த அசுத்த உணர்வு எப்படிப் போகின்றது…? அதனுடைய தாக்கத்திலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? இது மிகவும் முக்கியமானது.

ஓசோன் திரை கிழியப்பட்டு எந்தெந்தப் பகுதியில் அதன் வழி விஷத் தன்மைகள் வருகிறதோ அங்கே அது பரவுகின்றது. ஆனால் ஒரே இடத்தில் நிற்காது.

விஷத்தன்மைகள் பூமிக்குள் பரவினாலும் தன் இனத்தைச் சேர்த்து ஒரு குவியலாக வரும். குறிப்பிட்ட இடத்தில் தான் சுழன்று கொண்டிருக்கும் எல்லா இடத்திலும் வராது.

அப்பொழுது இந்த ஊரையும் தெருவையும் நாம் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

“அருள் ஒளி பெற வேண்டும் என்று” எல்லோரும்
1.ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் பரவச் செய்து இந்த அலைகளைப் பரப்பி விட்டீர்கள் என்றால்
2.இந்த உணர்வு பரவிய பின் அந்த விஷத்தன்மைகளை இது விலக்கி விட்டு விடும்.
3.இந்த ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்டு நிற்கும்.

அதைச் செய்வதற்கு தானே யாம் திரும்பத் திரும்ப இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றியமைக்கும் திறன் “சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்”

விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றியமைக்கும் திறன் “சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்”

 

1.காலையில்… மாலையில்… படுக்கப் போகும் முன்… தொழிலுக்குப் போகும் முன்… மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.
2.பிறருடைய தீமைகளைப் பார்க்க நேர்ந்தது என்றால் அதையெல்லாம் தனக்குள் பதிவாகாதபடி அழித்துப் பழகுதல் வேண்டும்… பதிவாக்கக் கூடாது.
3.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.
4.இந்தப் பழக்கத்திற்கு வந்தால் வளர்ச்சி பெறுகின்றீர்கள். உங்கள் மூச்சு உலகைக் காக்க உதவும்.

எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் நன்மை பெறச் செய்ய வேண்டும் என்று நாம் சொல்கின்றோம் அல்லவா…! அதைப் போல மூச்சு ஒரு நூறு பேர் தெருவில் விட்டாலே அங்கே தீமைகள் வராதபடி பாதுகாக்கலாம். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துங்கள்… தீமை புகாது உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்.

இதைச் செய்யச் செய்ய… அறியாமலே பல அற்புதங்கள் உங்களுடைய பேச்சால் மூச்சால் வரும்… பல நிலைகளைச் செய்ய நாம் பழக வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்… அருள் வாழ்க்கை வாழ வேண்டும்… தெளிந்த மனம் பெற வேண்டும்.

1.தபோவனம் என்று சொன்னால் நீங்கள் தான் தபோவனம்…! நான் அல்ல…!
2.நாம் எல்லோரும் சேர்ந்தால் தான் தபோவனம்.

உயர்ந்த குணங்களை எடுத்து எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க வேண்டும். உயர்ந்த நிலைகள் நாம் பெற வேண்டும். “எல்லோரும் உயர்வான நிலைகள் வர வேண்டும்” என்று இதை நாம் முன்னணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் மட்டுமல்ல… வீட்டிற்குள்ளும் எந்தக் குறையாக இருந்தாலும் உடனே நிவர்த்தி செய்ய வேண்டும். சாந்தத்தையும் ஞானத்தையும் வளர்த்து நம்முடைய நிலைகளை “மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்…”

யாம் வெளிப்படுத்தியுள்ள உபதேச நூல்களை ஒரு நாளைக்கு “ஒரு அரை மணி நேரமாவது” படிக்க வேண்டும்.
1.அதில் இருக்கக்கூடிய “முக்கியமான கருத்துகளை” வெளிப்படுத்த வேண்டும்.
2.எல்லோருக்கும் அதைப் படித்துச் சொல்லும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.
3.எல்லோருக்கும் கேட்கும்படியாக அந்த “அருள் உணர்வோடு” வாசிக்க வேண்டும்.

இப்படிச் செய்தோம் என்றால் அனைவரும் ஒன்றாகின்றோம்.

1.என் சொல்லே உங்களுக்குள் வருகின்றது.
2.குருவின் அருள் எனக்குள் இருக்கின்றது
3.அந்த குருவின் அருளே உங்களுக்குள் பாய்கின்றது
4.அந்த உணர்வே நம் அனைவரையும் ஒன்று சேர்க்கின்றது.

மனப்பாடம் செய்து புத்தகங்களைப் படித்தால் ஏற்றத்தாழ்வுகள் கூட வரலாம். சிறிது நாளைக்கு இந்த மாதிரி எடுத்து ஒரு இடத்தில் உபதேசம் செய்கிறோம் என்றால்… கேட்டார்கள் என்றால்…
1.எம்முடைய புத்தகத்தை எடுத்து அந்த உணர்வை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் ஒன்று போல குரு அருளை நாம் எல்லோரும் எடுத்துப் பேசலாம்
2.குரு அருளால் நாம் அனைவரும் ஒன்றாக இயங்கும் தன்மை வந்துவிடும்.

நம் உணர்வுகள் அதிலே பற்று வளர்ந்து விட்டால் எந்தக் கலக்கமும் வராது… உணர்வுகள் தெளிவாகும். ஆகையினால் ஒவ்வொருவரும் எம்முடைய உபதேசங்களை அடிக்கடி படியுங்கள்… கேட்டுப் பதிவாக்குங்கள்.

ஒரு விசேஷத்துக்குச் சென்றாலும் உபதேசக் கருத்துக்களை எடுத்துக் கணவன் மனைவி வசிஷ்டரும் அருந்த்தியாக எப்படி வாழ வேண்டும்…? என்ற தத்துவத்தை வாழ்த்தாகச் சொல்லி நம்முடைய புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.

ஒருங்கிணைந்த நிலையில் நாம் செயல்படும் பொழுது நாம் விடும் மூச்சலைகள் இந்த காற்றிலே தான் பரவுகின்றது… இது பெருகிக் கொண்டே வரும்.

ஆனால் சங்கடம் சலிப்பு போன்ற உணர்வுகள் தான் இந்தக் காற்றில் அதிகமாக உள்ளது. இதிலிருந்து மாறுபட்ட உணர்வுகளாக
1.இந்த உலகத்திலே நாம் உயர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி
2.அதை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

எத்தனையோ கெமிக்கல் கலந்த விஷங்களை விஞ்ஞான முறையிலே பிரிக்கின்றார்கள்… நியூட்ரானைப் பிரித்து அணு உலைகளாகவும் உருவாக்கியுள்ளார்கள். ஆகையினால் விஷத் தன்மைகள் வெப்பத்தால் பிரிந்து பலவாறு பூமி முழுவதும் பரவிக் கொண்டுள்ளது.

சூரியனுடைய காந்த சக்தி அனைத்தையும் கவர்ந்து வைத்துள்ளது. இந்த விஷங்கள் ஒரு பக்கம் அடர்த்தியாகி இன்னொரு பக்கத்திலிருந்து எதிர்நிலையான அலைகள் வந்தால் “மோதிச் சூறாவளியாக மாறி அதிவேகமாகச் சுழல ஆரம்பிக்கின்றது…”

உலகம் முழுவதற்கும் “எந்த நிமிடத்தில் என்ன நடக்கும்…?” என்று இப்பொழுது சொல்ல முடியாது. செல்வம் நம்முடன் வரப் போவதில்லை. விஞ்ஞானிகள் இருக்கக்கூடிய இடங்களிலும் விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி பரிதாப நிலைகளில் தான் அவர்களும் உள்ளார்கள்.

1.எந்த இடத்திலே பார்த்தாலும் மனிதன் தன்னம்பிக்கை இழந்து வாழக்கூடிய நிலைகளாக இருக்கின்றது.
2.தன்னம்பிக்கை வர வேண்டும் என்றால் நம்மைப் போல் இந்த அருள் ஞான வழியினைச் செயல்படுத்துபவர்கள் தான் அதை வழி நடத்த முடியும்.
3.நாம் செய்யும் தியானத்தைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து வெளிப்படுத்துங்கள். எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தியானியுங்கள். இந்த உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நாளடைவில் “உங்களுடைய சக்தியை” நீங்கள் பார்க்கலாம்.

குரு அருளால் அரும் பெரும் சக்தியை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த உணர்வுகளை மூச்சலைகளாக வெளிப்படுத்துகின்றீர்கள். இதை நீங்கள் செய்ய முடியும்.
1.சூறாவளிகள் வருகிறது என்றால் ரிமோட் செய்கின்ற மாதிரி
2.நம்மைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

உதாரணமாக அன்று போபாலில் விஷ வாயு கசிவு ஆனது. நம்முடைய தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் குடும்பமே தியானத்தில் இருந்தது. அதன் வழியிலேயே தான் எல்லோரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒன்றுமே தெரியாதபடி “யாரோ ஒருவர் திடீரென்று அங்கிருந்து உடனே கிளம்பி வாருங்கள்” என்று சொல்கின்றார்.

குடும்பத்துடன் அங்கிருந்து பூனாவிற்குக் கிளம்பி விட்டார்கள். இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் போபாலில் வெடிச் சத்தம் கேட்கின்றது அதற்குப்பின் டிவியில் ஒளிபரப்பு செய்கின்றார்கள் “விஷவாயு டேங்க் வெடித்தது… என்று…!”

இந்தக் குடும்பம் இருந்த வீட்டிற்கு அருகில் தான் அந்த டேங்க் இருந்தது. எல்லாம் பாதிப்படைந்து விட்டது. இவர்களுடைய உறவினர்கள் என்ன ஆனதோ…? என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால் இவர்கள் நாங்கள் வெளியிலே வந்து விட்டோம்… பூனாவில் பாதுகாப்பாக இருக்கின்றோம். நாங்கள் வசித்த தெருவில் இருப்பவர்களுக்குக் கண் போய்விட்டது மாடெல்லாம் இறந்துவிட்டது ஏராளமானோர் இறந்து கொண்டிருக்கின்றார்கள் என்று ஃபோனிலே சொல்கிறார்கள்.

இதைப் போன்று இன்னொரு பையன் திருநெல்வேலியில் இருந்து வந்து அங்கே தங்கி இருந்தான். அவனுடைய தாயார் எம்முடைய உபதேசப் புஸ்தகத்தைக் கொடுத்து “இதைப் படித்துக் கொண்டே வா…” என்று சொல்லி இருக்கின்றார்கள்.

அதைப் படித்துக் கொண்டிருக்கும் போது என்ன ஆனது…? அவரும் விஷக் கசிவிலிருந்து தப்பிவிட்டார்.

திடீரென்று என்னவென்றே தெரியவில்லை…!
1.வித்தியாசமான நெடி தெரிந்தவுடன் கம்பளித் துணி போட்டு அந்த நெடி பாதிக்காதபடி மூடிக்கொண்டு
2.ஈஸ்வரா குருதேவா ஈஸ்வரா குருதேவா என்று சொல்லி தன்னுடைய தாயை நினைத்துக் கொண்டே இருந்திருக்கின்றார்.

அடுத்து பார்த்தால் அருகிலே மற்ற இடங்களில் உள்ளவர்கள் எல்லாம் இறந்து கிடக்கின்றார்கள்.

அதற்குப் பின்னாடி அவர் மாற்றலாகி டெல்லி சென்றார். அங்கே எம்மைச் சந்தித்து இந்த விவரங்களை எல்லாம் என்னிடம் சொன்னார்.
1.என் தாய் சொல்லித் தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். இந்தப் புத்தகம் தான் கடவுள்…
2.என் தாய் தான் எனக்குக் கடவுளாக இருந்து காப்பாற்றியது.
3.இதைப் படிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நானும் அந்த விபத்தில் சிக்கியிருப்பேன்.

என் அருகில் இருந்தவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் நான் தப்பிவிட்டேன் என்று என்னிடம் சொல்கின்றார்.

இதெல்லாம் காரணம் என்ன…? என்று கேட்டால் “நமக்கு நாமே… நாம் எதை எண்ணுகின்றோமோ… அதுவே நம்மைக் காக்கக்கூடிய சக்தியாக வருகின்றது…!”

வேதனை என்ற உணர்வு வந்தால் பாதுகாப்பு இல்லை… போகும் இடங்களில் எல்லாம் சண்டை வருகின்றது… தொழிலில் நிம்மதி இல்லை. ஆனால் அருள் உணர்வுகளை நாம் வளர்த்துக் கொண்டால் போகும் இடங்களில் எல்லாம் அனுசரணையாகி பாதுகாக்கக்கூடிய நிலையாக வருகின்றது.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றால் நமக்கு அது பெரிய பாதுகாப்பாக அமைகின்றது.
2.ஒரு எதிர்பாராத நிலைகள் வருகிறது என்றால் ஓரளவுக்குத் தாங்கி நம்மைப் பாதுகாக்கக் கூடிய நிலையும்
3.அதற்குண்டான சந்தர்ப்பத்தில் ஏதாவது ரிமோட் செய்து “வேறு பக்கம் அழைத்துச் செல்லக்கூடிய நிலைகள் இருக்கின்றது…”

இந்த உணர்வுகள் ஒளியாக மாற்றக்கூடிய சக்தியாகக் கிடைக்கும் ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.சாமி தான் என்று நினைக்கிற மாதிரி…
2.சாமி மாதிரி நானும் பெரிய சக்திக்கு வர வேண்டும்.
3.என் பேச்சால் மூச்சால் பிறருடைய நோய்கள் போக வேண்டும்
4.என் மூச்சால் மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்துக் கொண்டு வாருங்கள்.

இது உலகம் முழுவதற்கும் பரவ வேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் சதா என்னுடைய தியானமே. நீங்கள் எல்லாம் தயாராக வேண்டும்.

இந்த உடல் தான்… தொழில் தான்… சம்பாத்தியம் தான்… அது தான் மிச்சம் என்று எண்ணாதபடி
1.அருள் தான் நமக்கு வேண்டும்… அது தான் நிலையானது என்று உணர்வோடு வளருங்கள்.
2.துருவ நட்சத்திரத்தை மறந்து விடாதீர்கள்… எந்த நிமிடமும் அதை எடுத்துப் பழகுங்கள்.
3.இந்த உணர்வை உங்களுக்குள் சேருங்கள்… எந்த இருளும் உங்களை நாடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

எதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது. அதன் வழி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று சொன்னது போல்.

எல்லோருக்கும் நான் நன்மை செய்தேனே…! “எனக்கு ஏன் இப்படி வந்தது…?” என்று வேதனைப்பட்டால் அதுவாக நாம் மாறி விடுகின்றோம். ஆகவே அருள் ஒளி பெற வேண்டும். எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும். எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்…”

எல்லோருடைய அந்த உயர்ந்த உணர்வுகளும் நமக்குள் வரும் பொழுது உலகைக் காக்கும் எண்ணங்கள் நமக்குள் வளருகின்றது ஆகையினால் நாம் அனைவரும் அதைச் செயல்படுத்துவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… உலகத்தைக் காப்போம்.

1.உங்கள் உணர்வுகள் நீங்கள் வாழும் பகுதியிலோ அல்லது மற்ற இடங்களிலோ உண்மையில் நல்லதைச் செய்யும்.
2.உங்களையும் காக்கும் மற்றவர்களையும் காக்கும்
3.உலகையே காக்கக்கூடிய திறன் உங்களிடமிருந்து அது வெளிப்பட வேண்டும்.

சாதாரண மனிதனாக உங்களை நீங்கள் எண்ண வேண்டாம்…! எல்லோருக்கும் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துச் செயல்படுத்துங்கள்.

ஒவ்வொருவரும் அன்பை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அரவணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இருளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
1.தனக்குள் வரும் தீமைகளை அகற்றும் அந்த வலிமை பெற வேண்டும்.
2.அந்த நிலையை வளர்த்துக் காட்டி உலகிற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய செயல்கள் இருக்க வேண்டும்.
3.நமது குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் தான் இயங்கிக் கொண்டுள்ளார்.
4.அவருடைய அருளை நாம் எளிதில் பெறலாம். இருளை அகற்றலாம் மெய்ப்பொருளைக் காணலாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
5.அந்த நிலைக்குத் தான் இந்த உபதேசம்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை என்று தெரிகின்றது… சொத்து நம்முடன் வருவதில்லை என்றும் தெரிகின்றது. தெரிந்தும் நாம் அதில் சிக்கிவிடக் கூடாது.

நாம் அந்த அருள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் வழியில் வாழ வேண்டும் இருளை அகற்றி மெய்ப் பொருளுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற இந்த உணர்வே நமக்குள் உருவாக வேண்டும்.

அருள் ஞானம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் இருளை அகற்றும் சக்தி ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும்.
1.விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றி அமைக்கும் திறன்
2.சாதாரண மனிதனுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வேண்டினோம் என்றால்
3.இந்த உண்மைகள் உலகம் முழுவதும் பரவும்.

இதை எடுத்து நுகர்வோர் எவரோ… காக்கும் சக்தியை அவரே பெறுகின்றார்கள்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. நான் ஒருவன் என்ன செய்ய முடியும்…?
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் பிராத்திக்கின்றேன்.
2.எண்ணுகின்றவர்களுக்கு இது கிடைக்கின்றது… பெற வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் வருகின்றது
3.அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஒருவருக்கு நோய் வந்துவிட்டது அல்லது குடும்பத்தில் கஷ்டம் என்று கேள்விப்பட்டால் அதைக் கேட்போர் அனைவருக்கும் கஷ்டமாக இருக்கின்றது.

அப்போது இந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்து உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் தொழில் நன்றாக இருக்க வேண்டும். நோய் இல்லை என்று இந்தச் சொல்லை அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்.
1.உங்கள் உணர்வுகள் அவர்களுடைய நோயை நீக்கும்
2.அவர்கள் கஷ்டத்தைப் போக்கக்கூடிய சக்தியாக வர வேண்டும்.
3.அவருடைய உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அவருடைய அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும். எல்லோரும் பேரின்பம் பெறக்கூடிய தகுதி அந்தச் சக்தி பெற வேண்டும் எல்லோரும் அதைப் பெறக் கூடிய அந்த நிலையை உருவாக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
1.உலகம் நலம் பெறத் தியானிப்போம்.
2.உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் விளைய வைப்போம்
3.நம்மையும் காப்போம்..,. உலக மக்களையும் காப்போம்.
4.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுவோம்.
5.எல்லா மக்களுக்குள்ளும் இதைப் பதிவு செய்வோம்..!

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

 

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் எண்ணினால் அதற்குத் தக்க உடலுக்குள் அணுக்கள் உருவாகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதனுடைய இனத்தைப் பெருக்குகின்றது.

அது அனைத்தும் பெருகிவிட்டால் நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.
1.வேதனை அதிகமாகும் பொழுது உடல் சுருங்குகின்றது… எண்ணங்களும் சுருங்குகின்றது.
2.இந்த உடலையே மாற்றி அமைக்கும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத உடலைத் தான் பெறச் செய்கின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் நமக்குள் நாடி வருவது எதுவும் இல்லை. கோடிச் செல்வம் இருப்பினும் அதனால் நாடி வருவது எது…?
1.தீமை என்ற நிலையில் செல்வத்தைக் காத்திடும் அச்சமும் பயமும் வருகின்றது.
3.அதைக் காத்திடும் நினைவு வரப்படும் பொழுது காக்கும் உணர்வே வருகின்றது.
3.அதனால் வேதனை என்ற உணர்வும் தோன்றுகின்றது.
4.வெறுப்பை ஊட்டும் உணர்வுகள் பெருகுகின்றது.
5.நம் உடலுக்குள் அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகிறது.
6.செல்வம் நம்மைக் காப்பதில்லை. மனித உருவைச் சீர்குலைக்கும் ஆசையை ஊட்டுகின்றது.
7.பிறர் துன்பப்படுவதைக் கண்டு ரசிக்கச் செய்கின்றது… தனக்கு எதிரி என்ற நிலைகள் பணம் கொண்டு கொலை செய்யச் சொல்கிறது.

துன்பப்படும் பொழுது அவன் சாபமிடுகின்றான். எனக்கு இவ்வாறு செய்கின்றான் அவன் உருப்படுவானா…? என்ற சாப அலைகள் பாய்ந்தால் இந்தச் செல்வத்தினால் சாபத்தைத் தேடுகின்றான்.

அந்தச் சாபத்தினால் இவன் செல்வத்தைக் காக்கும் நிலையே அற்று விடுகின்றது.. இதைப் போன்ற கொடுமைகள் மனிதனை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.தீமைகளை அகற்றும் உணர்வு பெற்றும் தீமைகளை வளர்த்திடும் உணர்வுகளே நமக்குள் வளர்ந்து
2.நம்மை அறியாதபடி அந்த இழி நிலை என்ற உணர்வுகளுக்கே செல்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நல்ல நிலை பெற வேண்டும். அதற்காகத்தான் பிறருடைய உணர்வுகள் தனக்குள் வளராது தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அருள் செல்வமாக அழியாச் செல்வமாகச் சேர்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது. நமக்குள் அறியாத புகுந்த தீமைகளை அது மாற்றி அமைக்கும்.

மனிதருக்குள் மனிதர் ஒன்று சேர்ந்த உணர்வுகள் ஒன்றாக இணைத்து கூட்டுத் தியான்ங்களின் மூலம்
1.உணர்வினை ஒலியாகப் பாய்ச்சப்படும் பொழுது செவி வழி உணர்வுகள் உடலுக்குள் செல்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் நிலை கொண்டு கண் வழி நுகர்கின்றது.
3.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
4.உணர்வின் தன்மை உடலுக்குள் அனைவரது ஆதரவும் நமக்குக் கிடைக்கின்றது
5.அறியாத வந்த பகைமைகளை மாற்றிடவும் முடிகின்றது.

குரு வழியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்

குரு வழியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்

 

ஒருவர் திட்டினாலும் பேசினாலும் கவலையான நிலைகளாக இருந்தால் அதை எடுத்தால் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. வேதனை வெறுப்பு கோபம் சலிப்பு சஞ்சலம் இது எல்லாம் உடலுக்குள் வந்தபின் இந்த உடலான கோயிலில் அசுத்தமாகின்றது… நோய்கள் ஆகின்றது பல வேதனைகள் ஆகின்றது.

1.”கூட்டுத் தியானத்தின் மூலம்” நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற உணர்வினைச் செவிகளிலே பாய்ச்சப்படும் பொழுது
3.நமது கண்கள் இந்தக் காற்றிலிருக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தைக் கவருகின்றது நம் உயிரிலே படுகின்றது.
4.இந்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.

இந்தக் கூட்டு தியானத்தின் அமைப்பிலே இந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்துப் பழகிக் கொண்டால்
1.உயிரான ஈசனுக்கும் இந்த அசுத்தம் சேர்வதில்லை.
2.இந்த உடலான கோவிலுக்குள் தீமைகள் புகாது தூய்மைப்படுத்துகின்றோம்.

ஒருவன் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் எண்ணுகின்றோம். அப்போது புரையேறுகிறது. தொழிலில் எத்தனையோ இடைஞ்சல் ஆகிறது.

ஆனால் கூட்டுத் தியானத்தின் மூலம் அத்தனை பேரும் சேர்ந்து அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியைக் கிடைக்கச் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது.

எல்லோருடைய உடல்களிலும் அருள் உணர்வுகள் வளர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்… எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… உடல் நலமாக இருக்க வேண்டும்… எங்கள் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும்… என்று
1.கூட்டு தியானங்களில் இதைப் போன்று எடுத்துக் கொண்டால்
2.உங்களுடைய வாக்கு எல்லோருக்குள்ளும் ஆழமாக இது பதிந்து நோய்களைப் போக்க முடியும்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெரிய மகானாக முடியும்
4.உங்களுடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க வேண்டும்.
5.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களை அறியாத சேர்ந்த துன்பங்களை அகற்றும்.

இதை நாம் வலுப்பெறச் செய்தல் வேண்டும்.

நாளைக்கு வரும் விஞ்ஞான உலகத்தால் காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடையும் பொழுது “அந்த விஷங்கள் நமக்குள் சேர்ந்து”
1.நமது சிந்தனையை அழித்துவிடக் கூடாது.
2.அருள் உணர்வுகளை அழித்துவிடக் கூடாது.
3.அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் வலிமை பெற வேண்டும்.

அதற்காகத்தான் இதைச் சொல்கின்றேன்… உங்களால் முடியும்.

நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது உடனே நல்லதாகின்றது. ஏன்..? நீங்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கு நல்லதாக்க முடியும் அல்லவா.
1.அந்த அளவுக்கு நமக்குள் பெருக்கி விட்டால் காற்றிலிருக்கக்கூடிய தீமைகளை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
2.நாட்டு மக்களைக் காக்கலாம் நல்லவர்களைக் காக்கலாம்.
3.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்க்கலாம்… பகைமையற்ற வாழ்க்கை வாழலாம்.
4.உயிருடன் என்றும் ஒன்றிடலாம்… அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது போன்றது என்றும் நாம் வாழ முடியும்.
5.மனதை ஒன்றாக்கப்படும் பொழுது ஒளியின் சுடராக முடியும்.

குறுகிய காலமே நாம் வாழுகின்றோம். மனதை ஒன்றாகக் குவித்து நாம் வாழ வேண்டும் உடலில் அறியாது சேர்ந்த பகைமைகளை அகற்றிப் பண்பைக் காட்டி… அன்பைக் காட்டி.. அரவணைத்து… அருளைப் பெருக்க வேண்டும் என்று நமக்குள் செலுத்த வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அதைச் செயல்படுத்த வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞானத்தினால் பரவப்பட்டுள்ள நச்சுத்தன்மைகளை நாம் அனைவரும் சேர்ந்து அகற்றுவோம். அருள் வழியில் வாழ்வோம்… அதை நாம் செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை நாம் பெறுவோம். அதுதான் நம்முடைய கடைசி எல்லை. இந்த உடலுக்குப் பின் அந்த எல்லையை அடைவோம்.

அந்த எல்லை எங்கு இருக்கின்றது…?
1.நம் உயிருடன் ஒன்றி அந்த உணர்வைக் கூட்டினால் அவனே நம்மை அழைத்துச் செல்கின்றான்.
2.ஒளியின் உடலாக நம்மை உருவாக்குகின்றான்.

இல்லை… எனக்குத் தீமை செய்கிறான் என்ற உணர்வை ஊட்டினால் தீமை செய்யும் உடலுக்குள்ளே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும். ஆக நாம் எண்ணிய நிலைக்கொப்பத் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.

ஆகவே நாம் அருள் வழியைப் பெறுவோம் பேரருளைக் கூட்டுவோம். யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலே படரப்பட்டு நமது குருவின் உணர்வுகளை நீங்கள் பெற்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் சக்தி பெறுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் வந்த இருண்ட நிலையை நீக்கி அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தியை நீங்கள் பெற்று அதை மகிழ்ந்து வாழும் உணர்வை உங்களுக்குள் ஊட்டி “உங்கள் பேச்சால் மூச்சால் உலக மக்களைத் தெளிந்து வாழும் மக்களாக வாழச் செய்யுங்கள்…”

1.இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரவச் செய்யுங்கள்.
2.நமது குரு அருளை உலக மக்களுக்குப் பெறச் செய்யுங்கள்… நீங்களும் அதைப் பெற்று வளருங்கள்.
3.நம் குரு வழியில் அவருடைய சீடர்களாக நாம் அனைவரும் ஆவோம்.
4.அவர் ஒளியின் தன்மை பெற்றார்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஒளியைக் கூட்டுவோம்.

நம் பேச்சும் மூச்சும் பிறருடைய இருளைப் போக்கட்டும்… மெய்ப்பொருளைக் காண்போம். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைவோம். அந்த அருள் சக்தியைப் பெறுவோம்… அனைவரையும் பெறச் செய்வோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்… மெய் வாழ்க்கை வாழ்வோம்.

மெய் உலகை உருவாக்குவோம்

மெய் உலகை உருவாக்குவோம்

 

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள்… நேரமாகிவிட்டது வீட்டுக்குச் செல்ல வேண்டும்… தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று சிலருடைய எண்ணங்கள் இருந்தால்… உங்கள் எண்ணங்களைப் பல நிலை கொண்டு அலைய விட்டால்… இந்த அருள் உணர்வுகளைப் பெறுவது கடினமாகி விடுகின்றது.

ஆலயங்களுக்குச் செல்கிறோம் என்றால் மலர் பூஜை விளக்கு பூஜை என்று எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள். அதைச் செய்ய நாள் கணக்கில் மணிக்கணக்கில் கூட உட்கார்ந்து இருக்கின்றோம்.

யாகங்கள் வேள்விகளைச் செய்தால் அங்கேயும் அமர்ந்து… தான் எந்த ஆசையில் போனோமோ “அவன் அதைக் கொடுப்பான்” என்று ஆர்வத்தில் உட்கார்ந்து இருக்கின்றோம்.

ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் தெய்வத்தையே பழித்திடும் நிலைகள் வருகின்றது. ஆக ஆசைக்கொப்பத் தான் நாம் அங்கெல்லாம் செல்கின்றோம்.

அவ்வாறு இல்லாதபடி
1.நமது ஆசை அனைவரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும் என்றும்
3.என் பார்வை சொல் செயல் எல்லாம் அனைவரும் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று
4.உயிரான நெருப்பில் இந்த உணர்வின் அலைகளைப் பரப்பினால்
5.உண்மையான யாகம்… உயிரின் நிலைகள் கொண்டு அவ்வாறு உருவாக்கும் சக்திகள் தான்.

அதாவது எண்ணத்தின் உணர்வு கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்ச்சிகளைப் பரப்புவதும்… அந்த உணர்வின் அணுக்களாக மாற்றுவதும்… சொல்லின் உணர்வுகள் அனைவருக்கும் பரவச் செய்து…
1.கண்ணின் நினைவாற்றல் கொண்டு யாரை எண்ணுகின்றோமோ அந்தச் சொல்லின் ஆற்றல் அங்கே ஊடுருவி
2.அவர்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் ஒன்றி வாழ வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் போது
3.நம் எண்ணத்தின் உணர்வுகள் கண்ணின் நினைவு கொண்டு அவர்கள் மேல் பாய்ச்சப்படுகின்றது.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “அவருடைய தீமை நமக்குள் வராதபடி தடுக்க இது உதவும்…”

ஆகவே ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம். உலக மக்கள் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம். நமது பார்வையும் சொல்லும் செயலும் புனிதம் பெறுவோம். அனைவரையும் புனிதமாக்கும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

உலக மக்கள் நலம் பெறத் தியானிப்போம். விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழும் அனைவரும் அந்த அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய்ஞான வாழ்க்கை பெற வேண்டும் என்று தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் இந்த மனித வாழ்க்கையிலேயே ஒளி என்ற உணர்வை உருவாக்கும் பிறவி இல்லாத நிலை என்ற நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று தியானிப்போம்.

1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்றும்
2.அவரவர்கள் குடும்பத்தில் பற்றுடன் வாழ வேண்டும் என்றும்
3.எதிர்காலக் குழந்தைகள் மெய்ஞானத்தை வளர்க்க வேண்டும்… மெய் உலகை உருவாக்க வேண்டும் என்றும்
4.எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு

குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு

 

ஒரு கம்ப்யூட்டர் என்ற சாதனத்தில் எலக்ட்ரிக் என்ற அறிவின் தன்மை கொடுத்த பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு அது ஒரு ரூபத்தையே அமைத்துக் கொடுக்கின்றது.

இதைப் போன்று
1.நம் உயிர் உயிர் துடிக்கும் நிலையில் எலக்ட்ரிக்காக இயங்கினாலும்
2.நுகரும் உணர்வுகள் இணைந்த பின் பொறிகளைக் கிளப்பும் எலக்ட்ரானிக்காக (உணர்வுகள்) மாறுகின்றது.

அந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? விஞ்ஞான அறிவிற்கும் அன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததற்கும் நுகர்ந்த உணர்வுகள் ரூபமாக எப்படிக் காட்சி தருகின்றது…? என்ற நிலையைக் காட்சியாகவே காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு உயிரினத்திலிருந்து (என்றோ வாழ்ந்து மடிந்த) வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்தறியும் பொழுது… அதன் வாழ்க்கையும் அதன் உணர்வின் தன்மையையும் கம்ப்யூட்டரால் விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி அதிர்வுகளைக் கூட்டி… அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய இயக்கங்களும் உணவுக்காக அது தேடி அலைந்ததும் அதன் ரூபத்தையும் அதனின் குணத்தையும் விஞ்ஞானிகள் அறிகின்றார்கள்.

அதாவது…
1.எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் இருப்பினும் பாறைகளுக்குள் மக்கிய உணர்வுகளும் அது ஆவியாகக் கலந்த பின்
2.அந்த ஆவியின் தன்மை அந்தப் பாறைகள் அமைந்த இடத்தில் எப்படிச் சுழல்கின்றது…? என்பதையும்
3.அந்த உணர்வைக் கவர்ந்து அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய உருவத்தைப் படமாக வரையப்பட்டு
4.அதனுடைய செயலாக்கங்களை விஞ்ஞான ரூபமாக இன்று காணுகின்றார்கள்.

இதைப் போன்று தான் நமது குருநாதர் அவர் வாழ்க்கையில்
1.அகண்ட அண்டத்தினை… அகஸ்தியன் கண்ட உணர்வினைக் கண்டுணர்ந்தார்
2.குரு தனக்குள் பெற்றதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? எதனை…? எவ்வாறு…? என்பதை எனக்கு (ஞானகுரு) அந்த வழியைக் காட்டி
3.செவி வழி ஓதி… உணர்ச்சிகளை உந்தச் செய்து… உணர்வினை அறியும்படி… நுகர்ந்தறியும் ஆற்றலை எனக்குக் கொடுக்கின்றார்.

நுகரும்போது உணர்ச்சியால் உடலில் அறிவதும் உணர்வின் தன்மை குவியும் பொழுது காட்சிகளாகத் தெரிவதும் இதைப் போன்று அறியும்படி செய்கின்றார்.
1.அதன் வழி அறிந்தேன்
2.அதனின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
3.அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால் அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் உருப்பெறும் தன்மையாக அது இணைகின்றது.

உணர்வுகள் குவிக்கப்படும் பொழுது அது காட்சியாகவும் தெரியும் கண் திறந்திருந்தாலும் சரி கண் மூடி இருந்தாலும் சரி உணர்வின் தன்மை அலைகளாக மாறும் தன்மை வரும்.

ஆக தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடினால் உணர்வின் தன்மை புற நிலை அடக்கி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருக்குள் உணர்வின் தன்மை காட்சியாகவும் நாம் அறியும் உணர்வாகவும் உணர்வின் தன்மை குவித்து ரூபமாகக் காட்சிகளாகத் தெரிய வரும்.

குருநாதர் பெற்றார் எனக்குள் அதை எனக்குள் பெறும்படி உபதேசித்தார். எனக்குள் பதிவானது பதிவின் நிலைகள் அறிவாக இயக்கி அந்த இயக்கத்தின் தன்மை எனக்குள் உருவாக்கினேன்.

அதையும் நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன். ஏனென்றால் ஒரு வித்து யாருக்கும் பசி தீர்க்காது.
1.அந்த உணர்வின் சத்தை எல்லோருடைய உணர்வுகளிலும் படரச் செய்து
2.அதை நீங்களும் வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் ஒன்றனை இணைத்து விடலாம்.

சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது புவிக்குள் அது இணைந்து விடுகின்றது. அதே சமயத்தில் சிறு துளி பெருவெள்ளம் என்பது போன்று
1.பலரும் பல உணர்வுகள் கொண்டு சிறு துளிகளாக இருப்பினும்
2.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணங்களை இணைத்தால் பெரும் வெள்ளமாக மாறி
3.அரும் பெரும் சக்திகளை நாமும் பெறலாம்… நம்முள் வரும் தீமையான உணர்வுகளை அதை நீக்கவும் செய்யலாம்.

கூட்டமைப்பின் தன்மையில் நாம் உபதேசித்த உணர்வின் துணை கொண்டு கூட்டுத் தியானங்கள் மூலம் அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அருள் ஒளியைப் பெருக்கவும் அது உதவும்.

அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் தெளிவாகக் கூறிக் கொண்டு வருகின்றேன் அதை எளிதில் கண்டுணர… இந்தப் பூமி என்பது பரம். உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமான பரலோகத்தில் பரவி உள்ளது. நாம் அதை நுகர்ந்தறிந்தால் சிவலோகமாக மாற்றுகின்றது.

1.உயிரின் துணை கொண்டு அருள் உணர்வுகளைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது ஒளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவுகின்றது.
2.உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
3.இரத்தங்களில் கலக்கின்றது… நாளடைவில் உறைகின்றது
4.உணர்வுகள் கருவாகின்றது கருவின் தன்மை அணுவாகின்றது
5.எதன் வழி கொண்டு அணுவானதோ அந்த உணர்வை அது உந்துகின்றது.
6.உணர்வை நுகரச் செய்கின்றது
7.நுகரும் தன்மை வரப்படும் பொழுது அருள் உணர்வுகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது
8.உயிரின் தன்மை வரப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மை அறிவென்ற நிலைகள் அறிகின்றோம்.
9.அந்த அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் அருள் ஒளியின் அணுக்கள் விளைகின்றது.
10.தீமைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக நாம் பெறுகின்றோம்

ஆகவே… இருளை அகற்றி மகிழ்ச்சி பெறும் தன்மை பெற்றிட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும். அதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை

 

சிறு வயதிலே நாம் பல குறும்புத்தனங்கள் செய்கின்றோம்… தாய் என்ன செய்கின்றது…? தூக்கி நம்மை வெளியே எறிந்து விடுகின்றதா…? இல்லை.

அவன் எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும்… எதை எதையோ சொல்லி அவனை அரவணைத்து “இந்தடாக் கண்ணு அதைச் சாப்பிடுடா இதைச் செய்யிடா…! என்னடா இப்படிச் செய்கின்றாய்…?” என்று குழந்தையைக் கெஞ்சிப் பராமரித்து வருகின்றது.

ஆனால் வளர்ந்த பின் தன் தாய் ஏதாவது சொன்னால்… தாயைப் பார்த்து “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகின்றாய்…” என்று தாயைப் பேசுபவர்கள் தான் பலர் உள்ளார்கள். தாயை மறக்கும் நிலையே வருகின்றது.

1.தாயை மறந்திடாது எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அந்த அருள் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும்.

ஒரு பித்துப் பிடித்த தாயாகவே இருந்தாலும் தன் குழந்தையை இன்னார் இந்த இடத்தில் அடித்து விட்டார்கள் என்று சொன்னால் போதும்.

பிள்ளை மீது கவனம் முழுமையாக இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்று கேள்விப்பட்ட பின் உடனே பதறி அழுகும். ஆனால் அந்தப் பித்துப் பிடித்த தாயை ஒருவர் அடித்தால் அதனுடைய பிள்ளை இதைக் கேள்விப்பட்டு “கிரகம்…! அப்படித்தான் வேண்டும்” என்று சொல்லும்.

தாயைக் கவனித்துப் பார்ப்பார்களா…? என்றால் இல்லை. ஏனென்றால் இன்று மனிதனுடைய உணர்வுகள் அந்த வழிக்குச் சென்று விட்டது.

அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில்
1.தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
2.அந்த உணர்வுகள் என்றும் உறுதுணையாக இருக்கும்.

நண்பனுக்குள் உதவி செய்வது போன்று பின் தாயின் உணர்வுகள் நமக்கு உதவுகிறது. தாயை எண்ணி ஏங்கினால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும்.

ஒரு காரியமே நடக்கவில்லை என்றால்
1.அம்மா…! என்று ஏங்கித் தாயினுடைய அருளைப் பெற்று
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். உடனடியாக அது கிடைக்கும்.

இதையெல்லாம் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மனிதன் என்ற முழுமை பெற வேண்டும் என்றால் இந்த நிலை அடைய வேண்டும். அதற்காக வேண்டித் தான் அம்மா அப்பாவை நினைவுபடுத்தி அக்காலத்தில் வணங்கும்படி செய்தார்கள் “விநாயகர் ஆலயத்தில்…”

இதை வினையாக்க வேண்டும் அருள் உணர்வுகளை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

நம் பாட்டன் பாட்டி… அந்தக் குல வழியில் தான் நாம் மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும். பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் ஈஸ்வரா என்று
3.காலை துருவ தியான நேரத்திலே அவர்களை எண்ணி விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். சப்தரிஷியுடன் ரிஷியாகின்றார்கள். அவர்கள் உணர்வு நமக்குள் இருக்கின்றது மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் உடனடியாக அந்தச் சக்தி இங்கே கிடைக்கும்.

இதை வளர்த்துக் கொண்டால் நாம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்முடைய உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்லும்.

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

 

எம்முடைய அருள் உரைகளைக் கேட்கும் அனைவரும் நீங்கள் இதை ஆழமாகப் பதிவு செய்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து
1.என்றும் அழியா பெருவீடு பெருநிலை என்று ஒளிச்சரீரம் பெற்று
2.நீங்கள் இந்த வாழ்க்கையிலே இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி ஒளி பெறும் உணர்வின் தன்மை உங்கள் உடலிலே வளர்த்து
3.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நூல் வடிவிலே உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.

உபதேச வாயிலாகக் கொடுத்ததை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது சொல் வடிவிற்கும் எழுத்து வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதினால் யாமே இதை எழுத முடியாததால் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவரை வைத்து இதை எழுதுவதினால்
1.சிறிது மாற்றங்கள் குறைகள் இருந்தாலும்
2.அதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் பொழுது இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே அந்தக் குறைகளை எண்ணாது மீண்டும் மீண்டும் இதைப் படிக்கும் பொழுது இடைவெளியில் விடப்பட்ட சிறு குறைகளையும் அதை நீக்கக்கூடிய சக்தியாக உங்கள் உணர்வுக்குள் தோன்றி அதில் நிறைவு செய்யும் நிலையை நீங்கள் அடைகின்றீர்கள்.

1.நீங்கள் படிக்கும் பொழுது எத்தகைய குறை வந்தாலும் மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
3.எழுத்து வடிவில் வரும் குறைபாடுகளை நீக்கிவிட்டு மூலப்பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து
4.உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

இந்த உணர்வோடு நீங்கள் படித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அந்த மகரிஷியின் அருள் சக்தியை சேர்த்துப் பாருங்கள்.

1.எழுத்து வடிவில் மாற்றங்கள் இருந்து உண்மைகள் மறைந்து இருந்தாலும்
2.அந்த உண்மைகளைத் தெளிந்திடும் சக்தியாக உங்களுக்குள் உணர்வதை நீங்கள் பார்க்கலாம்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியா ஒளிச்சரீரமாக அதைப் பெறும் நிலையாக உங்களுக்குள் ஊட்டப்படுவது தான் இந்தத் தியானத்தின் அறவழிகள்.

ஆகவே இதைத் தெளிவாகத் தெரிந்து இதைக் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று அந்த உணர்வின் சக்தி ஒளியாக மாற்றும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று என்றுமே அந்த மகரிஷிகளின்ன் நினைவுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

தபோவனத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட
1.அனைத்துப் புத்தகங்களையும் அனைத்து ஒலி நாடாக்களையும் அதில் வெளிப்பட்டுள்ள உபதேசங்களை நீங்கள் படித்து கேட்டு…
2.மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டும் என்று உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம்.

கூட்டுத் தியானம் இருப்போம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். ஆத்ம சக்தி செய்வோம்… அன்றாட வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்வோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம்.

பொன்னான இந்த மனிதச் சரீரத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்
1.நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று சதா பிரார்த்திப்போம்.
2.நாம் பார்க்கும் எல்லோரும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.தபோவன தியான மண்டபத்தில் நீங்கள் அமர்ந்து தியானித்தால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

 

நாம் நண்பர்களாகப் பழகிய அல்லது குடும்பத்தில் பழகியவர்கள் உடலில் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் பதிவாகி இருப்பதால்
1.அதே நினைவு கொண்டு நாம் எண்ணினோம் என்றால்
2.அவர் உடலில் இருந்த உணர்வுகளும் நோய்களும் நினைத்தவர் உடலுக்குள் வருகின்றது.
3.இருள் சூழ்ந்த நிலையாகி விடுகிறது.

ஆனால் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தப்படும் பொழுது ஒளியின் உடலாகின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின்
1.சப்தரிஷி மண்டலம் என்று எண்ணினாலே அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் புகுந்து தீமைகளை அகற்றி
2.நல் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நல்ல குணங்களுக்கு நம் மனம் இடம் கொடுக்கின்றது.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! ஒரு செடியில் எத்தகைய குணம் உண்டோ சுவை உண்டோ அதிலே விளைந்த வித்தினை நிலத்திலே போட்டால் அதைக் கவர்ந்து அதனுடைய சுவை அதனுடைய குணங்களை மீண்டும் காட்டுகின்றது.

இதைப் போல் தான் பிறிதொரு உடலில் விளைந்த நோயின் உணர்வுகள் அது வெளிப்படும் என்றால் “அது வித்து…” நாம் நுகர்ந்து நம் உடலில் பதிவாகி விட்டால் அவரைப் பற்றி எண்ணினால் அந்த நோயின் உணர்வே வரும்.

அதற்கு முன்பு அவர் நல்லதாக இருந்த நிலையை எண்ணும் பொழுது அடுத்து இப்படி ஆகிவிட்டாரே…! என்று தான் வரும். அப்போது அவருடைய முழுமை விஷத்தன்மை அடைவதால் நாம் எண்ணினோம் என்றால் அந்த விஷத்தின் உணர்வே நமக்குள் இயக்கப்பட்டு அவர் எப்படி வருத்தப்பட்டாரோ அதே வருத்தம் நமக்குள்ளும் வருகின்றது.

எத்தனை பேருடன் இப்படி பழகுகின்றோமோ வாழ்நாள் முடிவில் நோயின் தன்மை கொண்டு உடலை விட்டு வெளியேறும் போது அவர்கள் உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.ஆக நோய் என்ற உணர்வுகள் கொண்டு பலவும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது
2.அவர்களுக்குள் விளைந்த தீமைகளை நமக்குள் வந்து சேருகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைக்கப்படும் பொழுது நஞ்சுகள் கரைக்கப்படுகின்றது.
2.அந்த எண்ணத்தை நமக்குள் செலுத்தப்படும் பொழுது நஞ்சை நீக்கும் உணர்வும் நல்ல சிந்திக்கும் தன்மையும் நமக்கு கிடைக்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதில் சாவியைப் (PASSWORD) போட்டோம் என்றால் எந்த அட்டைக்கு எந்தச் சாவி என்று அதைப் பாய்ச்சி விடுகின்றனர்.

அதைச் சரியாகப் போட்டால் தான் திறக்கின்றது… இல்லையென்றால் திறப்பது இல்லை இதைப் போன்று பல விதமான உணர்வின் தன்மைகளை பிளாஸ்டிக் அட்டைகளிலேயே கொடுத்துத் திறக்கும்படி செய்கின்றார்கள்.

இதைப் போல
1.நாம் நமது உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்
2.நமது எண்ணத்தின் திறவுகோலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
3.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு இருளை நீக்கி நல்வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.

ஆகவே நாம் நம் மனதைத் திறக்க வேண்டியது உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு மட்டும் தான்…!

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

 

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தையும்
1.நமது உயிர் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று அந்தக் குணங்களில் இயக்கும் அணுவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
2.இவ்வாறு காலையிலிருந்து இரவு வரையிலும் சதாசிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.

நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ வேதனைகள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவணுவாக மாற்றி “ம்” என்று நமது உடலாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… செடி கொடியினில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றுகின்றோம். ஆனால் (முதலில் உருவான) அந்தச் செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

நிலத்தில் ஊன்றப்பட்ட அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு… சூரியனால் கவர்ந்து வைக்கப்பட்டுள்ள தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே செடியாக விளைந்து அதன் வித்தை மீண்டும் உருவாக்குகின்றது.

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் பயம் அவசரம் ஆத்திரம் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால்
1.எந்தெந்த மனிதனின் உடலிலிருந்து அந்த வேதனை உருவாகி வெளி வந்ததோ அதனை நாம் நுகரப்படும் பொழுது
2.அதே வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது.

இப்பொழுது ஒரு செடியில் விளைந்த வித்து எவ்வாறு தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது தனது வித்தை உருவாக்குகின்றதோ… தன் இனத்தை உருவாக்குகின்றதோ அதே போல்
1.நம் உடலுக்குள் பிறர்படும் வேதனையோ அல்லது மற்றதையோ வேடிக்கை பார்த்தால்
2.அல்லது சாபமிடுவதைப் பார்த்தால் ஒருவர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்தால்
3.அந்த உணர்வை நாம் நுகர்ந்து வேதனைப்படுகின்றார் என்று அறிகின்றோம்.

ஆனாலும் அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் உயிர் அறியச் செய்கின்றது. அவை நம் இரத்தங்களில் கலந்து…
1.எந்த உடலில் அது உருவானதோ அதே அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு இரை தேவை.
2.எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ அது காற்றில் உண்டு.
3.அப்பொழுது நம் உடலுக்குள் இருந்து அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது அதே உணர்வை நாம் நுகர்வோமென்றால்
4.நமக்குள் இதே போல் வேதனைப்படுவதும் வெறுப்படைவதும் சங்கடப்படுவதும் போன்ற நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

இவ்வாறு நமக்குள் வருவதிலிருந்து நாம் மீள்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்றால் யாம் கொடுக்கும் உபதேச உணர்வினைப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரமோ இப்புவியில் துருவ மகரிஷி அல்லது அகஸ்தியராக இருக்கும் பொழுது தீமைகளை வென்று வானை நோக்கி உணர்வுகளை நுகர்ந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

அதனின்று வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமியோ அதைத் துருவப் பகுதியில் கவர்ந்து நமது பூமிக்குள் கொண்டு வருகின்றது.

1.அதனை நீங்கள் நினைவு கூர்ந்து உங்களில் பதிவாக்கி நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற முடியும்.
2.அப்போது நாம் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமையின் அணுக்களை நமக்குள் வளராது தடுக்க உதவும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வுகளை நமக்குள் அந்த அணுக்களைப் பெருக்கவே நாம் தியானமிருக்கின்றோம்….
3.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யவும் சொல்கிறோம்.