அருள் வழியில் அன்றாடம் நினைக்க வேண்டியது

அருள் வழியில் அன்றாடம் நினைக்க வேண்டியது

 

எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ… அப்போது உடலில் இருந்து வரக்கூடிய மணமே உங்களுக்கு எதிரியாக மாறி விடுகின்றது அதை அடிபணியச் செய்யும் நிலைக்கே “என்னுடைய (ஞானகுரு) ஆசீர்வாதம்…”

துன்பத்தை விளைவிக்கும் நோயோ… துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ… அதெல்லாம் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அருளாசி கொடுப்பதை நீங்களும் அப்படியே எண்ணிப் பெற்றால் அந்த ஞானிகளுடைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் படர்ந்து துன்பங்கள் அகலும்.

உதாரணமாக மாம்பழம் வாங்க வேண்டும் என்று விரும்பினால் நுகர்ந்த உணர்வு உங்களை அந்தக் கடைக்கு அழைத்துச் செல்கிறது. அதே போல்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் உடல் நோய் நீங்க வேண்டும்… துன்பம் நீங்க வேண்டும்
3.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… செயல் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
4.அது உங்களுக்குள் கிடைக்கப் பெறும்.

அதற்குப் பதிலாக சாமி…! என் துன்பம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… “நீங்கள் தான் கடவுளாக இருக்கின்றீர்கள்…” என்று என்னை வணங்கினீர்கள் என்றால் “உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கின்றீர்கள்” என்று தான் அர்த்தம். நான் கொடுத்த உபதேசம் அனைத்தும் வீணாகிவிடும்.

இவ்வளவு தூரம் பெரியவர் உயர்ந்த கருத்துக்களைச் சொல்லுகின்றார் என்று என்னை உயர்த்தி விட்டு… உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள்
1.உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்… உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்த சக்தியைத் தாள் பணியச் செய்யுங்கள்.

எனக்கு குருநாதர் காட்டிய நிலைகள் அதுதான்…!

ஒருவர் துன்பப்படுகிறார் என்றால் “நம் சொல்” அவரைத் தீமையிலிருந்து மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… என்று எண்ணும் பொழுது நாம் முதலில் நலமாகின்றோம் நம் சொல்லும் செயலும் நல்லதாகிறது. நம் சொல் மற்றவர்கள் உள்ளங்களை மகிழச் செய்கின்றது.

அந்த மகிழ்ச்சியால்
1.மற்றவர்கள் நம்முடன் இணைந்து செயல்படும் நிலையாக
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிபடுத்துவதும்
3.தடையின்றி தொழில் நடப்பதும் தடையற்ற நிலையாக நமக்குள் எல்லாமே உருவாகின்றது.

இந்த அடிப்படையில் நீங்கள் எம்மிடம் ஆசி வாங்கினால் அது உங்களைப் பின் தொடர்ந்து எப்போதுமே உறுதுணையாக அமையும்.
1.உங்களைக் காக்கும்… உங்களுக்குள் உயர்வை ஊட்டும்
2.மெய் ஒளியின் தன்மையைப் பெறச் செய்யும்… நீங்கள் அருள் ஒளி பெறுவீர்கள்.

ஆக… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; நலமும் வளமும் நாங்கள் பெற வேண்டும்; எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்; எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்; எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் நல்ல உள்ளங்கள் வளர வேண்டும் என்ற இந்த உணர்வை எண்ணினால் இதுவே உங்களுக்கு எம்முடைய ஆசியாகக் கிடைக்கின்றது அருள் ஞான வித்துக்களாக…!

“நான் பார்த்த ஒவ்வொருவருக்கும்…” உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்

“நான் பார்த்த ஒவ்வொருவருக்கும்…” உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்

 

யாம் (ஞானகுரு) உபதேசித்ததைக் கேட்டுணர்ந்த நீங்கள் அடுத்து என்னைப் பார்க்கும் பொழுது
1.நான் நன்றாக இருக்கின்றேன்
2.நீங்கள் சொன்னபடி நான் எடுத்தேன்… என் உடலில் இருக்கும் நோய்கள் அகன்றது நன்றாக இருந்தது என்று
3.இந்தச் சொல்லை கேட்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி.

உங்களைத்தான் சதா நான் பிரார்த்தனை செய்கிறேன்…! நீங்கள் எத்தனையோ கோவிலுக்குப் போவீர்கள். ஆனால் உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உடலைக் கோவிலாக எண்ணி… உங்கள் உடலில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வங்களாக எண்ணி…
1.அந்தக் கோவிலில் அனைத்தும் மகிழ்ச்சியாகச் செயல்பட வேண்டும்.
2.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று உங்களைத் தான்
3.நான் பார்த்த கோவில் அத்தனையும் “ஒவ்வொருத்தராக…” நான் தியானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதிகாலை 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கிறேன். இதைக் கேட்டு பதிவு செய்தவர்களுக்கெல்லாம் அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்.

அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த உணர்வுகள் நமக்கு நல்லது செய்யும் ஆற்றலாகப் பெற முடியும். அதைப் பெறச் செய்யும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆகையினால் முழு நம்பிக்கையாக உங்களை நம்புங்கள்…!

ஏனென்றால்
1.உங்களிடம் அவ்வளவு சக்தி இருக்கின்றது… உங்களுக்கு முன்னாடி உயர்ந்த சக்திகள் இருக்கின்றது
2.அதை நினைத்தீர்கள் என்றால் உங்களுக்குள் கூடும்… நல்லதைப் பெற முடியும்… மெய் ஒளி காண முடியும்
3.மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை… ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

சாமி சொன்னார் என்று சொல்லி சாமி சொன்ன சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். “சாமி செய்து கொடுப்பார்…” என்று எண்ண வேண்டாம்.

நான் உங்களை எல்லாம் பிராத்தனை செய்கின்றேன். அந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று உங்களுடன் உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனின் காந்த அலைகள் படுகின்றது… பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் முடியும் பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படர்கின்றது போகும் பாதையில் தான் ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்

இதைப் போன்று தான் நீங்கள் எல்லோரும் ஞானிகள் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று யாம் எண்ணுகின்றோம். அந்த அருள் ஒளியை “நீங்கள் ஈர்த்துக் கொண்டால் தான்…” செயல்படுத்த முடியும்.

அதன் வழி நீங்கள் செயல்பட்டு நான் நன்றாக இருக்கின்றேன்; எல்லாம் நன்றாக இருக்கின்றது; என் உடல் நன்றாக இருக்கின்றது; காற்றிலிருந்து நல்ல சக்திகளை என்னால் பெற முடிகின்றது…! என்று
1.ஒவ்வொருவரும் அந்தச் சந்தோஷமான செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்
2.அதை நான் கேட்க விரும்புகின்றேன்…!

குருநாதர் என் ஒருவனுக்குத் தான் சக்தி (POWER) கொடுத்தார்

குருநாதர் என் ஒருவனுக்குத் தான் சக்தி (POWER) கொடுத்தார்

 

1.குருநாதர் எம்மைத் தொட்டு உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்தார் (பவர் கொடுத்தார்).
2.என் ஒருவனுக்குத் தான் குருநாதர் சக்தி கொடுத்தார் ஆனால் உங்களிடம் யாம் (ஞானகுரு) என்ன செய்கின்றோம்…?
3..அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
4.உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக மதித்து அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்கள் உயிருடன் நினைவை இணைக்கின்றேன்.
5.அந்த அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் உயிர் மேக்னெட்.. கவரும்
6.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு நீங்கள் எல்லோருமே அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

ஒரு பக்கத்திலே கம்ப்யூட்டரை வைத்து இயக்குகின்றார்கள். அதிலிருந்து இணைப்பைக் கொடுத்த பின் “உலகம் முழுவதற்கும் அது இயக்குகின்றது…”

ஒரு இடத்திலே அதை வைத்து ஆணையிட்டாலும் அடுத்த பக்கத்தில் மற்றதை இயக்கும்படி வைத்திருக்கின்றனர். இதே மாதிரித் தான்
1.குருநாதர் கொடுத்த அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
2.இந்த உணர்வை அங்கே எண்ணி உங்களுக்குள் பதிவு செய்து… உங்களை எடுக்கச் சொல்கின்றோம்.
3.(உபதேசத்தின் வாயிலாகப் பல முறை பதிவு செய்திருக்கின்றோம்)
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கினால்… எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த உயர்ந்த நிலைகளை நீங்கள் பெற முடியும்.

இப்படித்தான் உயர்ந்த நிலைகளை யாம் உங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றோம்…!

ஏனென்றால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து இந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஆனால் குருநாதரைப் பார்க்கும் போது ஒரு பைத்தியக்காரராகத் தெரிந்தார்… பைத்தியக்காரராகத் தான் நான் நினைத்தேன்.

ஆனால் நான் சொல்வதை இப்பொழுது நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்…? சாமி சாதாரணமாகச் சொல்கின்றார் என்று…!
1.சொல்லிலே சாதாரணம்…!
2.ஆனால் எம்முடைய வாக்கின் பதிவு “குரு அருளின் சக்தியை அப்படியே உங்களிடம் பதிவு செய்கிறேன்…!”

ஒரு கொலைகாரனைப் பார்த்த பின் அது பதிவாகி அவனை நினைக்கும் போதெல்லாம் நடுக்கமும் பயமும் உண்டாகின்றது.

அதே மாதிரி… தீமைகளை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள் முந்தி ஏற்கனவே பதிவு செய்த தீமையின் விளைவுகள் அதைக் கண்ட பின் நமக்குள் நடுக்கம் உண்டாகும்.
1.நான் நினைத்தேன்… ஒரு நாள் எடுத்தேன்… அடுத்த நாள் என்னால் எடுக்க முடியவில்லை… என் உடல் எல்லாம் நடுங்குகிறது
2.சிறிது நாளைக்கு அந்த நடுக்கம் வரும்.

காரணம்… ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்துப் பதிவு செய்த பின் அவனை நினைக்கும் போதெல்லாம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்கும். அவனை நினைக்கும் போதெல்லாம் நல்ல செயல்களைத் தடைப்படுத்துகின்றது.

இத்தகைய சங்கடத்தை உருவாக்கும் தீமையின் நிலைகளை அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் யாம் பதிவு செய்ததை எண்ணி உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை நம் உடலுக்குள் ஆக்கினை இங்கே இணைத்து விட்டால் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் ஆணையிட வேண்டும். என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

1.மகரிஷிகளின் உணர்வுகளைக் கண் கொண்டு தான் பதிவு செய்கிறோம். (பொட்டில் தொட்டு அதைப் பதிவு செய்ய முடியாது)
2.அதைப் பெற வேண்டும் ஏக்க உணர்வு கொண்டு பதிவு செய்து விடுகின்றோம்.
3.மீண்டும் இதை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… இயக்கம் “அந்த உயிரின் இயக்கமாக வருகின்றது…”

இதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிருடன் இணைத்துக் கொண்டு வர வேண்டும். முதலில் கண் கருவிழி பதிவாக்கி விடுகிறது. பதிவானால் தான் எடுக்க முடியும். ஆன்மாவில் வந்து உயிரிலே பட்டு நாம் தெரிய முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை இங்கே கொண்டு வரச் சொல்கின்றோம்… பதிவாக்கி விடுகிறோம். இது தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

என்னுடைய ஆசீர்வாதம் துன்பத்தைத் தாள் பணியச் செய்வதற்குத் தான்…!

என்னுடைய ஆசீர்வாதம் துன்பத்தைத் தாள் பணியச் செய்வதற்குத் தான்…!

 

வியாசகர் கீதையில் சொன்னது போன்று “குருக்ஷேத்திரப் போர் – ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணுங்கள்.. அது தான் உடலுக்குள் இருக்கும் அனைத்துக்கும் குரு.

ஓ…ம் என்பது பிரணவம் (ஜீவன்)… நாம் எண்ணியது ஜீவன் பெறுகின்றது ஆகவே உயிரை எண்ணி…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
3.குருக்ஷேத்திரத்தில் அவனிடமே கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து
3.அதைப் உணர்வு பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.

அந்த உணர்வின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று… நான் கொடுக்கும் இந்த உணர்வின் நிலைகள்… அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடியதாக தகுதி பெற்று…
1.யாம் உபதேசித்த ஆற்றல் மிக்க சக்தியை
2.எண்ணிய போது எண்ணிய நிலைகள் கொண்டு உங்களுக்குள் கிடைக்கச் செய்து
3.துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் தாள் பணியச் செய்வதே “என்னுடைய ஆசி… (ஞானகுரு)”

ஆகவே அதைப் பெற வேண்டும் என்ற ஆசை கொண்டு மேல் நோக்கி நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; என் உடலில் இருக்கக் கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும்; என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்; என் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்; நான் பார்ப்பதெல்லாம் அனைத்தும் நலம் பெற வேண்டும்; நான் பார்ப்போர் எல்லாம் நல்லதாக வாழ வேண்டும்…! என்று இதை மட்டும் எண்ணிக் கொண்டு வாருங்கள்.

1.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அனைத்தும் தாழ் பணிந்து
2.உங்களுக்குள் ஒத்துழைத்து… உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.

எது…?

எதுவும் கெட்டது அல்ல…!
1.உங்களுக்குள் வலுவூட்டும் வழி காட்டியாகவும் அது இருக்கும்.
2.கெட்டது என்று அதுதான் காட்டுகின்றது
3.அதை நீக்கி நாம் செல்ல வேண்டும்
4.கெட்டது என்று வழி காட்டினாலும் இந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்ந்து விடுகின்றது
5.ஆனால் வழி காட்டிய நிலைகளும் எனக்குள் பணிந்து நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
6.வழி காட்டிய அந்த நிலைகள் – “விஷமே” என்னை ஆட்கொண்டு விடக்கூடாது.

ஆசீர்வாதம் என்பது மெய் ஒளி பெறும் அந்தத் தகுதியின் தன்மை கொண்டு நாம் பெற வேண்டும் என்று அதுதான் ஆசி.

மீண்டும் மீண்டும் யாம் இதைச் சொல்வதன் நோக்கமே
1.அரசனுக்கு கீழ் பணிவது என்பது கௌரவத்திற்காக வேண்டிப் பணிவது
2.பெரியவரைக் கண்டால் பணிவது வேறு…
3.நமக்குள் ஒன்றைப் பணியச் செய்வது வேறு…!

அருள் வாக்கின் தன்மைகள் மெய் ஒளி நமக்குள் வளர்ந்து தீமை செய்து கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மை அதைத் தாள் பணியச் செய்வதே “ஆசீர்வாதம்…”

ஆகவே “நீங்கள் எப்பொழுதும் அந்த மெய் ஒளி பெற வேண்டும்…” என்று அந்த உணர்வின் அடிப்படையிலேயே உங்களுக்கு ஆசி வழங்குகின்றேன் அதை நீங்கள் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

நினைத்ததும் சக்தி பெற முடியாது.. வாக்காகச் சொல்லித் தான் கொடுக்கின்றோம்… “சும்மா இல்லை…!”

நினைத்ததும் சக்தி பெற முடியாது.. வாக்காகச் சொல்லித் தான் கொடுக்கின்றோம்… “சும்மா இல்லை…!”

 

மெய் ஞானிகள் உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதை நுகர்வதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகச் சொல்லி உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
1.சும்மா இல்லை…
2.நீங்கள் நினைத்த உடனே… யாரும் சொன்னவுடனே…
3.இப்படி எடுங்கள்…! என்றால் எடுக்க முடியாது…!

நீங்கள் அதைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி இந்த நினைவுக்குள் உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு),

1.திட்டியவனை எண்ணிய உடனே எப்படி ஜிர்..ர்ர்ர்… என்று வேகம் வருகின்றதோ
2.திட்டியவனைப் பத்து வருடம் கழித்துப் பார்க்கப்படும் போது… துரோகம் செய்தான் பாவி…! டட்டட்…டட்ட… என்று கோபம் வருகின்றது…”
3.பல்லை எல்லாம் நற…நற… தன்னை அறியாமலே கடிக்க வைக்கும்.
4.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற நிலை வரும்.

அதைப் போன்று தான்
1.உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அந்த நேரத்தில்
2.ஈஸ்வரா…….! என்று “வேகமாக எண்ணுங்கள்…”

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… என் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு அடுத்து எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்..

துன்பத்தைப் போக்கச் செய்து உங்கள் காரியத்தை நல்லதாக ஆக்கிவிடும்.

சில உடல்களிலே ஆவிகள் இருக்கும்… என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் சதா திட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் நமக்கு வேதனை அதிகமாகும்.

அதைக் கேட்கக் கேட்க நமக்குக் கை கால் குடைச்சல் வந்துவிடும்
1.பேசுபவர்களுக்குக் கொஞ்சம் குடைச்சலாகும்…
2.ஆனால் அதைக் கேட்பவர்களுக்கு அதிகமான கைகால் குடைச்சல் வரும்.

சண்டை போடுபவர்களை… திட்டுபவர்களை எல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அடுத்த நாள் பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்பார்கள்.

முதுகுத் தண்டில் மூன்றாவது எலும்பு… இடுப்பில் இருக்கும் மூன்றாவது எலும்பு… கழுத்தில் இருக்கும் எட்டாவது எலும்பு… தன்னாலே அங்கே வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.

டாக்டரிடம் சென்றால் “எலும்பு தேய்மானம்” ஆகிவிட்டது என்பார்கள் அல்லது இடுப்புக்குப் பெல்ட் போட வேண்டும் என்று சொல்வார்கள். இது தான் நடக்கும்.

அடிக்கடி கவலை… வீட்டிலே சண்டை போடுவது போன்ற எரிச்சலான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இது இரண்டும் ஒன்றாகக் குவியும்
2.விரிந்து கொடுக்கும் நிலை வரப்படும் பொழுது அந்த இரண்டு எலும்புகளுக்குள் நீர் புகுந்து விடும்
3.புகுந்த பின் தாங்க முடியாதபடி வலிக்க ஆரம்பிக்கும்
4.நரம்பு செயலற்றதாகி வேதனையாகி (நரம்பு) பிடித்துக் கொள்ளும்.

மூன்றாவது எலும்பு விரிந்து கொண்டே இருக்கும்… எக்ஸ்ரேயில் பார்த்து உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள். இப்படி எல்லாம் வரும்.

இது போன்ற நிலையில் இருந்து நீங்கள் உங்களை மீட்டிக் கொள்வதற்கு ஆத்ம சுத்தியை அவசியம் செய்து கொள்ளுங்கள். இருளை நீக்கி மெய் ஒளியின் தன்மையை பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

கஷ்டத்தையோ துன்பத்தையோ “எம்மிடம் சொல்லக் கூடாது…” என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

கஷ்டத்தையோ துன்பத்தையோ “எம்மிடம் சொல்லக் கூடாது…” என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

 

நீங்கள் குறையை நினைக்க வேண்டாம்
1.அது நிறைவு பெற வேண்டும் என்று எம்மிடம் கேளுங்கள்.
2.அருள் சக்திகள் உங்களுக்குக் கிடைக்கும் என்று நான் (ஞானகுரு) பதிவு செய்யும் பொழுது
3.அதன் வழி நீங்கள் நினைவுபடுத்தினால் உங்கள் எண்ணம் அவ்வப்பொழுது உங்களுக்கு அதை நிறைவேற்றிக் கொடுக்கும்.

பல முறை நான் இதைச் சொல்லிவிட்டேன்.

உதாரணமாக கஷ்டமாக ஒருவர் வந்து சொல்கின்றார்… அதைப் பார்த்தால் உங்களுக்குள் பதிவாகின்றது. உங்களுக்கும் அப்போது கஷ்டமாக இருக்கின்றது.

அது போல்…
1.ஆயிரம் பேர் என்னிடம் வந்து கஷ்டமாகச் சொன்னால் அத்தனையும் நான் கேட்க வேண்டி இருக்கின்றது.
2.கஷ்டம் நஷ்டம் என்று சொல்வதை நான் மாற்றிக் கொள்வதற்குக் குறைந்தது நான்கு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரை ஆகின்றது
3.அந்த அருள் சக்திகளை எடுத்துத் தான் நானும் துடைக்க வேண்டும்.

உயர்ந்த சக்திகளை நான் எடுத்தாலும் கூட என்ன ஆகிறது…?

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாலைக் குடித்தால் மயக்கம் வருகின்றது அல்லது மரணம் அடைய நேருகின்றது.

அந்த ஒரு துளி விஷத்தை மாற்ற ஆயிரம் குடம் நல்ல பாலை அதிலே ஊற்ற வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பாலுக்கே அது வீரிய சத்து கிடைக்கின்றது.

அதே மாதிரித் தான் உங்களுக்கு வாக்கினைக் கொடுக்கின்றேன். அது நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று சொன்னாலும் அது சமயம் நீங்கள் கஷ்டத்தைச் சொல்லிக் கேட்கக் கூடாது… கஷ்டத்தையே சொல்லக் கூடாது.

தயவு செய்து இதை எல்லாம் சிறுகச் சிறுக மாற்றிக் கொண்டே வாருங்கள்…!

எனக்கு நல்லது நடக்க வேண்டும்; குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்; குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும்; என்னைப் பார்ப்பவர்களுக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இப்படித்தான் நினைக்க வேண்டும்.

அப்படி நினைக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.அந்த அலைகளைத் தியானத்தில் யாம் அனுப்பும் பொழுது
2.உங்களுக்கு அது கிடைக்கின்றது… நிச்சயம்…!

ஆனால் கஷ்டம் என்று சொல்லி விட்டீர்கள் என்றால் அது தான் எனக்குள் பதிவாகிறது. அந்தக் கஷ்டத்தை நான் துடைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதற்கப்புறம் நான் நல்ல வாக்கை அனுப்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்…?

ஆக…
1.சுத்தமாக அதைத் துடைத்து என்னைப் பாதுகாப்பதற்குத் தான் நான் தியானம் செய்ய வேண்டி இருக்கும்
2.அப்புறம்தான் உங்களுக்கு நல்ல வாக்கினைக் கொடுக்க வேண்டி வரும்.

ஏனென்றால் நீங்கள் கஷ்டத்தைச் சொல்கிறீர்கள்… அதை எல்லாம் கேட்டுக் கொண்டு உங்களுக்கு உடனடியாக நான் வாக்கு சொல்ல முடியாது கஷ்டத்தைத் தூய்மைப்படுத்திய பின்பு தான் வாக்குக் கொடுக்க முடியும்…!

நீங்கள் சொல்லும் கஷ்டமெல்லாம் இந்த உணர்வோடு கலந்து விட்டால் அந்த உணர்வோடு வாக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்…?
1.முதலில் என்னைச் சுத்தப்படுத்த வேண்டி இருக்கின்றது
2.அது தூய்மையான பின்பு தெளிந்த மனதுடன் தான் வாக்கு கொடுக்க முடியும்… அப்பொழுது அது வேலை செய்யும்.

ஏனென்றால் வாக்குக் கொடுக்கிறோம் என்றால் அது சாதாரணமானது அல்ல…! எத்தனையோ சிரமங்கள் பட்டு நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் அதைக் கொடுக்கின்றோம்… உபதேசத்தையும் கேட்க வைக்கின்றோம்

ஆனால் நீங்கள் நன்றாக வேண்டும் என்று தான் கேட்க வேண்டும் நல்லதைக் கேட்டுப் பழகுங்கள். குடும்பத்தில் அனைவருக்கும் ஞானம் கிடைக்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்று கேளுங்கள்.

ஆனால் பக்தி மார்க்கத்தில் தெய்வத்திடம் முறையிடுவது போன்று அல்லது கோவில் பூசாரியிடம் சொல்வது போன்று “எல்லாவற்றையும் சாமி (ஞானகுரு) பார்த்துக் கொள்வார்…! என்றால் அப்படி அல்ல…”

உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை நீங்கள் தான் எண்ணி எடுத்து அந்த நல்லதை வளர்த்துக் கொள்ள வேண்டும்…!

திட்டியவனை மீண்டும் எண்ணும் பொழுது அவன் மீது எப்படிக் கோபம் வருகின்றதோ… இடைஞ்சல் செய்தவனைப் பதிவு செய்து விட்டால் அவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எப்படி எரிச்சல் ஆகின்றதோ… அதே போல்
1.குருநாதர் கொடுத்த மிக மிகச் சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்
3.அதை வைத்துத் தீமைகளை நீங்கள் அடக்கிப் பழக வேண்டும்

அந்த ஞானிகளுடைய உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். உங்கள் பேச்சால் மூச்சால் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடிய சக்தி பெற்றவர்களாக நீங்கள் மாற வேண்டும்.

மெய் ஞான உணர்வுகள் வளர வேண்டும்.. அருள் ஞானம் நீங்கள் பெற வேண்டும்… அந்த அறிவு உங்களுக்குள் வளர வேண்டும்.
1.இந்த வாழ்க்கை என்ற கடலில் இருந்து இருள்கள் மறைந்து
2.அந்த மெய்ப்பொருளுடன் ஒன்றி வாழும் நிலைகள் நீங்கள் பெற வேண்டும்.

எமது ஆசிகள்…!

ஏறுக்கு மாறாகச் சொல்லிச் சொல்லித் தான் எனக்கு உபதேசித்தார்

ஏறுக்கு மாறாகச் சொல்லிச் சொல்லித் தான் எனக்கு உபதேசித்தார்

 

குருநாதர் என்னிடம் சொன்னது:-
1.உடலை விட்டுச் செல்லும் பொழுது நீ எங்கே இருக்க வேண்டும்…? என்று சொன்னார்
2.அந்த உணர்வுக்குள் என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்…
3.வெளியில் வந்த பிற்பாடு “நான் எவ்வாறு செல்கிறேன் பார்,..!” என்றார்.

குருநாதர் இங்கே உடலுடன் இருக்கும்போது வெறும் துண்டு மட்டும்தான் கட்டி இருப்பார். அசூசையான (சாக்கடை) இடங்களில் தான் அவர் படுத்திருப்பார்.

குளிர்காலம்…! நல்ல வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள் என்று கொடுத்தால் அதை எல்லாம் கிழித்துக் கைகளிலும் கால்களிலும் கட்டிக் கொள்வார்.

பார்… யாரோ வந்து இவ்வாறு கிழித்து விட்டான்…! என்று சொல்வார் எவனோ கிழித்து விட்டுப் போய்விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…? என்று கேட்பேன்.

கிழித்து விட்டுச் சென்று விட்டான்… நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன் அவன் கிழித்து விட்டான்…!

ஏனென்றால் அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித்தான் சிந்தித்தார். அவர் பைத்தியக்காரத்தனமாகக் காண்பிக்கும் போதெல்லாம்…
1.ஐயோ… இவரோடு ஒரே தொல்லையாகி விட்டதே… வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டோமே என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.அவர் பேசுவது… செய்வது… எல்லாம் பார்க்கும் பொழுது இப்படித்தான் தோன்றியது.

ஆனால் அவர் “உடலை விட்டுச் செல்லும் பொழுது…” எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது “பளீர்… பளீர்ர்…” என்று தள்ளிக் கொண்டு போகின்றது.

அப்படிச் சென்றாலும் இந்த பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிரான்மா என்ன செய்கிறது…? பார்…! முன்னாடியே எனக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.

அன்றைய ஞானிகளும் மகரிஷிகளும் பூமியில் வாழும் காலத்தில் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியே சென்றாலும் மீண்டும் பூமிக்குள் வராதபடி தடுப்பதற்கு எவ்வாறு செயல்பட்டார்கள்…? என்று குருநாதர் காட்டுகிறார்.

அந்த உணர்வுக்கொத்த (ஞானிகளின்) விழுது “பூமியிலிருந்து உந்தித் தள்ள வேண்டும்…!” இதற்காக வேண்டித்தான் எவ்வளவு பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனைத் தேடி அந்த ஞானிகள் வருகின்றார்கள்.

அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு அங்கே மகிழ்ச்சியை ஊட்டி அவனிடமிருந்து வரக்கூடிய மகிழ்ச்சியான மூச்சுலைகளைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு… ஏகாந்தமாக விண் சென்றார்கள்.

ஒருவன் துன்பப்படுகிறான் என்றால் பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷமான சில நிலைகளையும் தான் கஷ்டப்பட்டு எடுத்து… அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று அவர்கள் துன்பத்தை நீக்கினார்கள்

ஆனால் அன்றைக்கு அவர்கள் காசு எதுவும் வாங்கவில்லை…!

துன்பப்படுகிறான் என்றால் உடனே அவனுக்குள் நிவாரணத்தை ஏற்படுத்தித் துன்பத்தை நீக்கிவிட்டு மெய் ஒளியின் சுடராக மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து… மருந்து கொடுத்து நோயை நீக்கி அங்கே சந்தோஷத்தை உருவாக்கினார்கள்.

1.”எனக்கு நல்லது செய்தார்…” என்ற அந்த எண்ணத்தை ஏங்க வைத்து
2.அதை ரசித்துத் தனக்குள் எடுத்து அவன் பேரானந்த நிலை பெற்றான்.

சகஜ வாழ்க்கையில் பார்த்தோம் என்றால்…
1.பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள்… ஒருவன் துன்பப்படுகிறார் என்றால் வேதனை வருகின்றது
2.அசுர உணர்வு கொண்டு துன்பப்பட்டவனைப் பார்த்து… “கிடக்கட்டும் அவனுக்கெல்லாம் அப்படித்தான் வேண்டும்…” என்று எண்ணினால் முரட்டுத்தனமான நிலைகளில் சிக்கி அவ அடிபடுகின்றான்

ஆனால் ஞானிகளோ
1.துன்பப்படுபவனுக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை நீக்கி
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

விஷத்தைத் தனக்குள் இயங்காத வண்ணம் அதை அடக்கினான்…! எந்த விஷமாக இருந்தாலும் அவனுக்குள் அது ஒடுங்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன் என்றால் “குருநாதர் கொடுத்த அந்த நிலைகள் தான்…!”

வாழ்க்கையில் உங்களை அறியாது இருள் சூழ்ந்த நிலைகள் வந்தாலும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்று யாம் உபதேசிக்கும்போது இதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்தவுடன் உங்கள் துன்பத்தைப் போக்கச் செய்து நோயைப் போக்கச் செய்கிறது. அத்தகைய மெய் ஒளியினைப் நீங்கள் பெற வேண்டும் என்ற அந்த ஆசையில் தான் சொல்கிறேன்.

ஆனால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல இம்சைகளைக் கொடுத்தார்.. பல தொல்லைகளைக் கொடுத்தார்.

யானைக்குப் பலமா…! எனக்குப் பலமா…? என்று கேட்பார்.

இவருக்குப் பலம் என்று சொன்னால் எப்படி…? என்று கேட்பார் யானைக்குத் தான் பலம் என்று சொன்னாலும் வம்பு தான்…! அது எப்படி…? என்று கேட்பார்.

என்ன சொன்னாலும் இரண்டு உதை கிடைக்கும்…!

எப்படி என்று நீ சொல்லுடா என்பார்… எப்படிடா நீ சொல்கின்றாய் என்று கேட்பார் நான் சுவாசிக்கின்றேன்… யானை இப்போது என்ன செய்கிறது என்று பார்…!

சுவாசித்து உணர்வலைகளை அவர் வெளிப்படுத்தும் போது யானை பயப்படுகின்றது. இப்போது யாருடா பயப்படுகிறது…? என்று கேட்பார்.

நான் எப்படிச் சொன்னாலும்… நான் எதைச் சொன்னாலும்
1.ஏறுக்கு மாறாகவே சொல்லிச் சொல்லிச் சொல்லி
2.இந்த உணர்வின் மோதல் எப்படி ஆகின்றது… உனக்குள் எப்படி உருவாகின்றது…?
2.நான் சொல்வது உனக்குள் எப்படி ஆகின்றது…?
3.இந்த உணர்வின் தன்மை காற்றிலிருந்து எவ்வாறு வருகின்றது…?
4.கவர்ந்து கொண்ட பின் எண்ணத்தின் நிலைகள் என்ன ஆகிறது…?
5.உடலுக்குள் பதிவாகும் பொழுது என்ன ஆகின்றது…? என்று இப்படித்தான் பாடம் கொடுத்தார்

நான் எந்தப் புத்தகத்தையும் படித்து உங்களுக்கு உபதேசிக்கவில்லை.

குருநாதருடைய உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எவ்வாறு எதன் நிலையில் கொண்டு நான் என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் தான் வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று தெளிவாகக் காட்டினார்

அவர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை “நீங்களும் பெற வேண்டும்…” என்பதற்குத் தான் உங்களுக்குள் செல்களாகப் பதிவு செய்கின்றேன்.

பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷங்கள் வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியாக மாற்றி… உணர்வின் தன்மையை மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்… “சப்தரிஷி மண்டலங்களாக அந்த ஞானிகள்…”

அந்த நிலையை நீங்களும் அடைய வேண்டும்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உபதேசித்ததைத்தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உபதேசித்ததைத்தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்

 

ஆதியிலே… அகஸ்திய மாமகரிஷி விண்ணுலக ஆற்றலைத் துருவத்தின் வழியாக நுகர்ந்து தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி அவர் எவ்வாறு விண் சென்றார்…? என்பதை குருநாதர் எனக்கு உபதேசித்தார்.

1.அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.

இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்.

ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று
2.நேரடியாகக் காட்டி அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.

அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

அதனைப் பெறும் தகுதியாக…
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.

27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்” நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.

எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.

அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.

அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.

தன் எண்ணத்தின் வலு என்றால்… உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அமைத்துக் கொள்கின்றது.

அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் “மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதையும் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைத்து தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்று
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஒளி சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் இணைக்கச் செய்கின்றோம்.

அதற்காக வேண்டி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உபதேசித்து
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்து
5.நல்வினைகளை ஓங்கச் செய்து அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் உங்களை இணையச் செய்து கொண்டுள்ளோம்,

யாம் உங்களுக்குக் கொடுக்கும் வாக்கு

யாம் உங்களுக்குக் கொடுக்கும் வாக்கு

 

எல்லோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) பூரண ஆசீர்வாதம் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலமாக வேண்டும் பிள்ளைக்குத் திருமணமாக வேண்டும் தொழில் சீராக வேண்டும் என்று
1.உங்களுக்கு எது நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை மனதில் எண்ணி ஆசி பெறுங்கள்.
2.சிந்தனைகளைச் சிதற விட்டுப் பல பல கோரிக்கைகளை வைக்காதீர்கள்.

எம்மிடம் வருகின்றீர்கள் என்றால்… என் பிள்ளைக்குத் திருமணம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று மனதில் எண்ணி இப்படிக் கேளுங்கள். “அதைக் கொடுத்து விடலாம்…”

அடுத்த முறை வரும் பொழுது இன்னொன்றை நீங்கள் கேட்கலாம்…!

ஆனால் ஒன்றைக் கொடுத்த பின் மொத்தமாக எல்லாத்தையும் கேட்க ஆரம்பித்துச் சொல்ல ஆரம்பித்தால்
1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது
3.சம்பாதிக்கிற பணம் செலவழிந்து கொண்டிருக்கின்றது
4.வியாபாரம் நஷ்டமாகிக் கொண்டே வருகின்றது என்று இப்படி வரிசையில் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

நான் எதற்கு ஆசி கொடுப்பது… எதற்குப் பதில் சொல்வது…?

எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஆசி கேளுங்கள் அதே போல் எங்கள் தொழில் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். அதற்கு நல்ல ஆசி வேண்டும் என்று கேளுங்கள்.

இது எல்லாம் வாக்கு தான்…!

திட்டியவர்களைப் பதிவு செய்கின்றோம் திருப்பி எண்ணும் பொழுது “திட்டினான்… திட்டினான்…” என்று வருகிறது.

நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாக்காகப் பதிவு செய்கின்றேன்.
1.அதைத் திரும்ப நீங்கள் எண்ணினீர்கள் என்றால்
2.அதே மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் வேலை செய்யும்
3.ஏனென்றால் நான் சதா தியானம் இருந்து கொண்டே இருக்கின்றேன்

ஒருவர் ஒரு தரம் திட்டிவிட்டார் என்றாலும் அடுத்து அதை யாரிடம் சொன்னாலும் மீண்டும் மீண்டும் சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார். அந்த அலைகளை அவர் பரப்பிக் கொண்டே இருப்பார்.

பதிலுக்கு நீங்களும் அவர்களை அடிக்கடி நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்பீர்கள். நீங்களும் இந்த எண்ணத்தை பரப்பிக் கொண்டே இருப்பீர்கள்
1.அவருடைய நினைப்பு உங்களிடம் வளர்கின்றது
2.இரண்டும் கலந்து பேசிக் கொண்டே இருக்கும்.

இதே போன்றுதான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “எந்தெந்த வகையிலோ தந்திரமாக உங்களுக்குள் நுழைய வைக்கின்றேன்…”

அதைப் பெற வேண்டும் என்று திரும்ப எண்ணி விட்டீர்கள் என்றால் அதை நீங்கள் பெருக்கிக் கொள்கின்றீர்கள் உங்களிடம் கோபப்படச் செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதை அது கொஞ்சம் அடக்குகிறது.

உங்கள் சொல்லே உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.

1.எந்த எந்த வகையிலோ உங்களுக்குத் தெரியாமலே கஷ்டம் எப்படி வருகின்றதோ அதே போலத்தான்
2.உங்களுக்குத் தெரியாமலேயே கஷ்டத்தை நீக்க கூடிய சக்தியை கொடுக்கின்றோம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் யாரைப் பார்த்தாலும் “உங்கள் பார்வையால் அவர்கள் கஷ்டம் விலக வேண்டும்…” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

அந்தச் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்… பரப்புகின்றேன்…!

ஆகையினால் கூடுமான வரையில் அடுத்தவருடைய கஷ்டங்களையோ குறைகளையோ எடுத்துப் பேசாதீர்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பழகுங்கள்.

எங்கேயாவது ஏதாவது குறை நடந்தது என்றால் அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணுங்கள். ஏனென்றால்
1.முந்திப் பதிவு செய்த குறையான உணர்வுகள் இருக்கும்
2.அது எல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் மனது நிறைவு பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.இதைத்தான் நாம் சொல்ல வேண்டும்… பெருக்க வேண்டும்.

குறையைக் கண்டு… பார்த்து… பேசி… அதையே வளர்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படியே விட்டு விட்டால் அந்தக் குறை நமக்குள் வளர்ந்து கொண்டே வரும் குறையை இயக்குவதற்குண்டான தூண்டுதலாக நமக்குள் வளர்ந்துவிடும்.

இது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி என்று வளர்த்துக் கொண்டே வர வேண்டும் நீங்கள் அனைவரும் அதைப் பெறுவீர்கள் என்று பிரார்த்தனை செய்கின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எல்லாவற்றிலும் முகப்பில் வைத்துக் கொள்ளுங்கள்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எல்லாவற்றிலும் முகப்பில் வைத்துக் கொள்ளுங்கள்

 

சூரியனிலிருந்து வரக்கூடியது “எலக்ட்ரிக்…” அதைக் கடந்து வரப்படும் போது காந்தம் இழுத்து விட்டது என்றால் “நியூட்ரான்…” அது ஓடும் வேகத்தில் இரண்டற இணைந்து அந்த உணர்வின் தன்மையாக மாறும் போது “புரோட்டான்…” சத்தாகின்றது. விஞ்ஞானிகள் வைத்த பெயர்கள்.

மெய் ஞானிகள் சொன்னது…
1.சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகிறது
2.ஒரு செடியின் சத்தைக் கவர்ந்தால் எலெக்ட்ரானிக்
3.அதை நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் நம்மை இயக்குகின்றது.
4.நம் உயிர் எலக்ட்ரிக்…
5.அதிலிருந்து அது உருவாக்கும் உணர்வலைகளைப் பாய்ச்சப்படும் போது சூரியன் எலக்ட்ரானிக்காக அதை மாற்றுகின்றது.
6.அதை இன்னொருவர் நுகர்ந்தால் அதே எலெக்ட்ரானிக்காக இயக்குகிறது.

நமக்குள் இது எப்படி இயக்குகிறதோ அதே மாதிரித்தான் விஞ்ஞான இயக்கங்களும் – எலக்ட்ரானிக் என்பது…!

மனிதனுடைய உணர்வுகளை வைத்துத் தான் விஷத்தன்மை கொண்ட நாடாக்களில் அதைப் பதிவு செய்கின்றார்கள் இந்த உணர்வின் அழுத்தங்கள் வரப்படும் பொழுது இதனுடன் கலந்து அறிவாக அதனுடன் சேர்க்கப்படுகின்றது.

ஆனால் மனிதனுக்கு நோயாகி விட்டால் கம்ப்யூட்டரில் எந்த நாடாவில் இது பதிவானதோ அடுத்தவனுக்கு அந்த நோய் வரும். குடும்பத்தில் சண்டையிட்டுக் கொண்டு இருந்தார்கள் நாடாவில் இது பதிவாகி அடுத்து அவன் குடும்பத்திலும் இந்தச் சண்டை வரும்.

கம்ப்யூட்டரில் வேலை செய்கின்றார்கள் அல்லவா…
1.தவறான பாதையில் போவது தவறான வழிகளில் திருட்டுத்தனமாக செயல்படுவது
2.இதெல்லாம் இதற்கும் அதற்கும் சம்பந்தம் உண்டு.

ஏனென்றால் இந்த உணர்வுகள் எலெக்ட்ரானிக்காக மாற்றப்படும் பொழுது இதே உணர்வு எடுத்து அந்த நாடாக்களில் பதிவாகி விடுகின்றது.
1.புதிய நோய்கள் வருவதற்கும்… சில வைரஸ் என்று சொல்வார்கள்
2.இதெல்லாம் மாறுவதற்கும் இது காரணமாகின்றது

கம்ப்யூட்டரில் என்ன செய்கின்றார்கள் முகப்பில் வைத்து விண்வெளியில் கோள்களுக்கு அனுப்புகின்றார்கள். அந்த உணர்வை எடுத்து இங்கிருக்கும் சாதனங்களில் பொருத்துகின்றார்கள்.

அங்கே சென்றவுடன் இதே (கம்ப்யூட்டர்) சாதனத்தை வைத்து முகப்பில் இணைத்து விடுகின்றார்கள். எதைப் பதிவாக்கினார்களோ அந்த முகப்பின் பிரகாரம் அந்த இலக்கை அடைகின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் (மனிதன் நினைப்பது போல்) என்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான் குறிப்பிட்ட எல்லையை விமானத்திலிருந்து ஈராக்கெட் மூலமாக அனுப்பப்படும் பொழுது கம்ப்யூட்டரில் பதிவு செய்த எல்லையை ஆது அடைகிறது.

அதே போன்றுதான்
1.இப்பொழுது நல்ல குணத்துடன் நாம் இருக்கின்றோம்
2.அந்த இடத்திலே தீய குணம் கொண்ட ஒருவரின் உணர்வுகள் பதிவாகி விட்டால் நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது
3.அவர் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… இங்கே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றால் அங்கே அழைத்துச் செல்கின்றது

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அதே சமயத்தில் நாம் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வுகளை நம்முடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலும் முகப்பில் இணைத்து விட்டால் இந்த உடலை விட்டு நாம் சென்றால் நாம் அந்த எல்லையை அடைகின்றோம்.

கணவனும் மனைவியும் இது போன்று ஒன்று சேர்ந்து உருவாக்கி விட்டால் இங்கே சிருஷ்டிக்கும் ஆற்றல் பெறுகின்றோம்…!

இதை எல்லாம் விஞ்ஞான அறிவு பிரகாரம் உங்களுக்குச் சொல்கிறோம். ஏனென்றால் குருநாதர் இதை எல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டிய நிலைகள்…!

விஞ்ஞானிகள் எப்படி செயல்படுத்துகின்றார்கள்…? ஒவ்வொன்றையும் எவ்வாறு அவன் கண்டுபிடிக்கின்றான்…? எதை எதைச் செய்கிறான்…? எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்… அது எவ்வாறெல்லாம் உருவாகின்றது என்று…!

1.நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்… ஆனால் ஆங்கில அறிவு எனக்கு இருந்திருந்தால் “தூள் கிளப்பி இருக்கலாம்…”
2.குருநாதர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்
3.அவர் எல்லா பாஷைகளிலும் பேசுவார் ஆனால் அது உனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

பாஷைகள் கற்றவர்கள் எத்தனையோ உண்டு. பற்று கொண்டு வரும் போது அவர்களுக்கு இதை நீ கொண்டு போகலாம். நேரத்தை வீணாக்காதே… நான் சொல்வதைச் செய்…! என்று சொல்லிவிட்டார்.

அதனால்
1,அவர் சொன்ன முறைப்படி உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… முகப்பிலே நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.
2.அதன்படி பெருக்கும் போது உங்களுக்குள் வளர்ச்சியாகும்.
3.இதில் ஒன்றும் பெரிய வித்தை இல்லை..!