நம் சூரியன் முதுமை அடைந்து கொண்டிருக்கின்றது…

demise of our sun

நம் சூரியன் முதுமை அடைந்து கொண்டிருக்கின்றது…

 

சூரியன் தன் சக்தியை இழந்தால் அது மீண்டும் கரைந்து விடும். மனிதர்களாக நாம் உருவாகி வாழ்ந்து மடிந்த பின் புதைத்தால் இந்த உணர்வின் தன்மை கரைந்து விடுகிறது. நம் உடல் மற்றொன்றுக்கு இரையாகின்றது.

இதைப் போன்று தான் சூரியக் குடும்பம் இருக்கிறது என்றால் இந்த 27 நட்சத்திரங்களும் சூரியக் குடும்பங்களாக மாறுகின்றது,
1.கார்த்திகை நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது…
2.ரேவதி நட்சத்திரமும் சூரியனாக மாறுகின்றது.
3.இந்த இரண்டு மட்டுமல்ல மற்ற நட்சத்திரங்களும் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
4.முழுமையாக மாறி விட்டால் நம் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது.

அப்பொழுது நம் சூரியன் முதுமை அடைகின்றது, இப்படி ஒரு சரி பகுதி நட்சத்திரங்கள் சூரியக் குடும்பங்களாக மாறிவிட்டால் நம் சூரியனுக்கு இரை இல்லை.

அப்பொழுது இந்தச் சூரியனின் சுழற்சியின் தன்மை அதனின் ஈர்ப்பு வட்டம் குறையும். அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் நம் பூமியோ அந்தச் சுழலான சுழற்சியான பின் அதற்குள் போய்க் கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.

மற்ற இந்த 27 நட்சத்திரங்கள் இருக்கிறதல்லவா…! இதிலே ஒவ்வொன்றும் மாறிப் போகும் இதனுடைய உணர்வுகள்… அதற்கு உடலாகி இதனின் உணர்வின் தன்மை மாறும்.

இப்படித்தான் 2000 (நட்சத்திரங்கள்) சூரியக் குடும்பங்கள் ஓர் குடும்பமாக மாறுகிறது. நம் பிரபஞ்சத்தில் இந்த 27 நட்சத்திரங்களும் 27 சூரியனாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது… பேரண்டமாகின்றது.

இதன் வளர்ச்சி இதே போல் மாறி மாறித் தான் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளர்ந்தது.

1.நான் வெறுமனே சொல்லவில்லை…
2.படிக்காதவன் தான் இதைச் சொல்கிறேன்…
3.படித்திருந்தால் இதை எல்லாம் தப்பாகத் தான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கின்றேன்.

குருநாதர் கொடுத்த உணர்வின் தன்மை வரும் பொழுது நீங்களும் இதைப் பதிவாக்கி
1.இந்த உண்மைகளை நுகர்ந்து அண்டத்தையும் அறியலாம்
2.அதை இந்தப் பிண்டத்திற்குள் வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடையவும் செய்யலாம்.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

விண் செல்லும் ஆற்றலும்… விண் செலுத்தும் ஆற்றலும்…!

சப்தரிஷி மண்டலம் – மனிதனின் கடைசி எல்லை

27 நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுங்கள்

பிறவியில்லா நிலை

விண் செல்லும் ஆற்றலையும் விண் செலுத்தும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள்

ஆண் பெண் என்ற நிலையில் தான் விண் செல்ல முடியும் – இல்லை என்றால் முனி தான்

இராக்கெட் போல் நாம் விண் செல்ல வேண்டும்

அகஸ்தியன், ஈஸ்வராய குருதேவர் வழியில் நட்சத்திரத்தின் ஆற்றலால் விண் செல்லுங்கள்

விண் சென்றவர்களைப் பார்த்து நாமும் ஏன் அந்த நிலை பெற முடியாதா என்று ஆசைப்படுங்கள்

குருநாதர் விண் சென்ற நிலை – அகஸ்தியன் குடும்பம் துருவ நட்சத்திரமாக ஆன நிலை

போகரை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர்

பேரருள் பெறச் செய்த நமது பிரபஞ்சத்தைப் போற்றுதல் வேண்டும்

விண் செல்லும், விண் செலுத்தும் மார்க்கம் – முன்னோர்களை விண் செலுத்தினால் நாமும் எளிதில் விண் செல்ல முடியும்

நமது எல்லை எது…?

என்றுமே மாறாத வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும்…?

உடல் பற்று கொண்ட சகோதரரின் நிலை – சாமிகள்

மின்னலைப் பேரொளியாக மாற்றிக் கொள்ளும் பக்குவம்

1500 ஆண்டு மனிதனை வாழ வைக்க முடியுமா…?

மரணமில்லாப் பெருவாழ்வை எப்படிப் பெறுவது..?

விஷத்தைப் பேரொளியாக மாற்றும் யுக்திகள்

உயிரை ஒளியாக்கும் சந்தர்ப்பம் – 27 நட்சத்திரம்

மரணம் அடைவதற்கு முன்னாடி அரிதாக சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்

உடலை விட்டுச் செல்லும் பொழுது யாருடன் செல்ல வேண்டும…?

மரணமில்லாப் பெரு வாழ்வு…!” வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

.இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் இருப்பதே உண்மையான தியானம்

 

 

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள்

Big dipper - vashista

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள் 

அருந்ததியும் வசிஷ்டரும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த உடலில் இருக்கப்படும் போது இரு மனமும் ஒன்றாகி ஒரு மனதுடன் உணர்வின் ஒளியாகி என்றும் நிலையான சரீரத்தைப் பெற்றுள்ளார்கள்.

நாம் தியானம் இருப்பது போன்றே தான் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளியை அவர்கள் இருவருமே பெற்று ஒருவருக்கொருவர் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை வளர்த்து அதன் வழிகளிலே இரு சரீரமும் ஒரு சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
1.அருந்ததி வசிஷ்டர் என்ற இந்த இரு நட்சத்திரங்கள்
2.ஒன்றின் பிணைப்புடன் ஒன்று சுழன்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

கணவன் மனைவி என்ற இரு சரீரங்களாக இருந்தாலும் இந்த உணர்வை ஒத்த அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நாம் எண்ணி ஏங்கும்போது இரு உடலும் ஒரே உணர்வாகக் கலந்து என்றும் நிலையான நிலைகளைப் பெறும்.

கணவனும் மனைவியும் இருவரும் சேரும் பொழுது குழந்தை எப்படிப் பிறக்கின்றதோ அதைப்போல
1.இரு மனமும் ஒன்றாகும் போது ஒரு சரீரமாகி
2.விண்ணிலிருந்து வரக்கூடிய சக்தியை சிவ சக்தியாகக் கவர்ந்து
3.தீய வினைகளை நீக்கி விஷத்தை ஒடுக்கி ஒளியின் சரீரமாக அந்த உருவின் தன்மையை கருவாக உருப் பெற செய்து
4.மெய் வழியில் என்றுமே ஒளி சுடராகத் திகழ்ந்திருக்கும்.

இந்த மனித வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ந்து இருந்தோமோ அந்த மகிழ்ச்சி என்றும் அழியாத நிலைகளில் என்றும் பதினாறு என்ற நிலைகள் கொண்டு
1.இனி ஒரு சரீரம் எடுக்காது
2.ஒளி சரீரத்தையே நிலையான சரீரமாக பெற்றுச் செல்லும் நிலை வருகின்றது.

இந்த மனித உடலில் இருக்கும் போதே கணவன் மனைவி இருவரும் இந்தத் தியானத்தின் மூலமாக அந்த இணை பிரியாத நிலைகளைக் கொண்டு வர வேண்டும்.

கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும். மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.

ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் நூறு முறையாவது இது போன்று கணவனும் மனைவியும் எண்ணினால் அந்த உணர்வுகள் ஓங்கி வளர இது ஏதுவாகும்.

1.எந்த உண்மைகளைக் காண வேண்டும் என்றாலும்
2.எந்த வழிகளில் நன்மை பெற வேண்டும் என்றாலும்
3.எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும்
4.கணவன் மனைவி இருவரும் ஒருமித்த நிலைகள் கொண்டு எண்ணிச் செயல்படுத்திடல் வேண்டும்.

எங்கள் (கணவன் மனைவி) பார்வை அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். எங்களைப் பார்போருக்கு நல்ல மனம் வர வேண்டும்… நல்ல எண்ணங்கள் வர வேண்டும்… என்று எண்ணி வலு ஏற்றிக் கொண்டால்
1.நமக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எத்தகைய நிலைகள் இருந்தாலும்
2.அந்த உணர்வுகள் நமக்குள் புகுந்து நம்மைச் சோர்வடையச் செய்யாத வண்ணம் தடுக்கும்.

இப்படி அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்த்து நமக்குள் அந்த மெய் ஒளியை வளர்க்கும் நிலை வரப்படும் பொழுது நம்மைப் பார்போர் நம் மீது கொண்ட வெறுப்பு சிறுகச் சிறுகத் தணிந்து நம்முடன் அணுகும் நிலையும்… அவர்களை அறியாத இருள்களை நீக்கும் நிலையும் பெறும்….!

ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும். ஏனென்றால் நீங்கள் எண்ணிய உணர்வுகளை
1.இந்த உடலிலே உயிர் தான் அணைக்கின்றது… இயக்குகின்றது… வளர்க்கின்றது…!
2.வளர்ந்த நிலையைத் தன்னுடன் அணைத்துக் கொள்கின்றது.
3.உடலை விட்டுச் சென்ற பின் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கொப்ப அடுத்த உடலாக மாற்றுகின்றது.

ஆகையினால் இந்த உண்மையை அறிந்த நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைக் கோவிலாக மதித்துப் பழகுங்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்து அறியாது சேர்ந்த இருளைப் போக்கி மெய் வழி செல்ல வேண்டும்… மெய் ஒளியை அடைய வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றேன்.

சப்தரிஷி மண்டலத்தில் வாழும் ஒளியான குடும்பங்கள்

Alcor-Mizar

சப்தரிஷி மண்டலத்தில் வாழும் ஒளியான குடும்பங்கள்  

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் சிகரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அவன் உணர்வை வளர்த்துக் கொண்ட அக்கால மக்களும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் அவனைப் போன்றே ஒளிச் சரீரமாகிப் பேரின்ப வாழ்க்கையாக சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அக்காலங்களில் அவர்கள் சென்றிருந்தாலும் அவர்களுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லும் நிலை படிப்படியாகக் குறைந்து குறைந்து அந்தப் பாதையே தெரியாத நிலை உருவாகிவிட்டது.

யார் அதைப் பெறுகின்றனர்…? அதனில் யார் போய் இணைகின்றனர்…!

இப்போது நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த மெய் வழி செல்லும் மார்க்கத்தைக் காட்டிய பின் அதைச் செயலாக்குகின்றோம். ஏனென்றால் இனம் இனத்தைச் சேர்க்கும்.

ஒளியின் சுடர் கொண்டு எந்த ஒளியின் சரீரத்தை நாம் எடுக்கின்றோமோ அந்த ஒளியின் தன்மையை வளர்க்கப்படும் போது இனம் இனத்தைச் சேர்க்கும்…!

இப்போது நான் கோபிக்கின்றேன் என்றால் அதே மாதிரியே இன்னொருத்தரும் கோபப்பட்டார் என்றால் கோபப்பட்ட இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள்.

ஒருவர் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கிறார் என்றால் வாழ்க்கையில் கஷ்டம் என்றால்.. “வேதனையைத்தானே பட வேண்டும்” என்று இந்த இரண்டு உணர்வும் ஒன்றாகச் சேரும்.

இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கணவனை இழந்தவர்கள் என்ற நிலையில் யாரும் எண்ண வேண்டாம். அவர்களினுடைய உணர்வுகள் உங்களுடன் ஒன்றியே உண்டு.

அவர்கள் உங்களிடமிருந்து என்றும் பிரியவில்லை. அவர்கள் உணர்வு உங்களுடன் வாழ்கின்றது. அவருடன் வாழ்ந்த காலங்கள் நினைவுக்கு வரும்போது அந்த இயக்கங்களும் வருகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்யும்போது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகின்றது. அதனால் அவர்கள் இன்னொரு உடலுக்குள் போவதில்லை. ஆனால்…,
1.இன்னொரு உடலுக்குள் போய்விட்டால் (மனவிக்கு) தனக்குக் கணவன் ஏது….!
2.உடலை விட்டுச் சென்று விட்டால் எப்போது கணவனும் மனைவியும் இணைவது…?

ஆகவே உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா (கணவனோ அல்லது மனைவியோ) “பேயாகச் சென்று… நோயாகச் சென்று… இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுக்கும் நிலையைத்தான் “எமனிடமிருந்து… சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!” என்று சாஸ்திரங்களில் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாவைத் தனக்குள் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளுதல் எண்ணுதல் வேண்டும்.

தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று அந்த ஆன்மாக்களை விண்ணிலே செலுத்துதல் வேண்டும்.

ஒரு குடும்பப் பற்றுடன் வரப்படும் போது இதனைப் பார்க்கலாம். “வசிஷ்டரும் அருந்ததியும்” என்று சொல்வார்கள். அதாவது
1.தாய் தந்தையர்கள் இணைந்து ஒரு நட்சத்திரமானாலும்
2.திருமணமாகாத குழந்தையின் உயிரான்மாக்களும் அவர்களுடன் சேர்ந்தே
3.அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும்.

வசிஷ்டரும் அருந்ததி என்ற நட்சத்திரத்தில் ஒன்று மட்டுமல்ல நான்கு நட்சத்திரங்கள் உண்டு. அதாவது இரண்டு நட்சத்திரத்தின் (வசிஷ்டர் நட்சத்திரத்தின்) அருகிலே ஒன்று வரும்.. மற்றொன்றும் வரும். ஆக நான்கு நிலைகள் அங்கே வருகின்றது.

இன்று விஞ்ஞான அறிவினால் டெலஸ்கோப்பின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கின்றார்கள். வசிஷ்டர் அருந்ததி என்று இரண்டைத் தான் பார்ப்பார்கள். ஒன்று மற்றொன்று பின்னாடி செல்லும் போது மறைந்து விடும்.
1.மறைந்து விட்டால் முதலில் “ஒன்று” என்பார்கள்
2.அப்புறம் திடீரென்று…. “அபூர்வமாக இன்னொன்றும் தெரிகிறது…!” என்பார்கள்.

தாய் தந்தையின் மீது பற்று கொண்டவர்கள் தன் உடலை விட்டுச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம் சென்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பிறவியில்லா நிலைகளாக
1.இப்போது தன் குடும்பத்தில் எப்படிக் குழந்தைகளுடன் வாழ்கின்றாரோ அதே போல்
2.ஒளியின் சுடராக அன்னை தந்தையின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

இவைகளை நீங்கள் எப்படி விஞ்ஞானக் கருவி கொண்டு பார்க்கின்றீர்களோ இதைப்போல மெய் ஞானிகளின் உணர்வை எமக்குள் (ஞானகுரு) செலுத்தி இந்த உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றல் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையைத் தெளிவாக்கிக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் சொன்னபடி விளையச் செய்த அந்த உணர்வின் ஞானத்தைத்தான் “சொல் வடிவில்” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாக இது பதிவாகின்றது. பதிவானதை மீண்டும் மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த அருள் ஞானி அகஸ்தியன் சென்ற வழிகளில் நீங்களும் செல்லலாம்.

கணவன் மனைவி குழந்தைகள் சகிதம் குடும்பமாக எளிதில் பெறலாம். இதில் ஒன்றும் கஷ்டமில்லை….!
1.நான் குண்டலினியைத் தட்டியெழுப்ப வேண்டும்.
2.கீழிருந்து மேலே ஏற்ற வேண்டும்.
3.காட்டுக்குள் போய் தவமிருக்க வேண்டும் என்று
4.காட்டிலே தவம் இருந்து பெறக் கூடியது அல்ல இது….!

“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”

 

Light world.jpg

“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”

நட்சத்திரங்களின் சத்து பூமியில் மண்ணுடன் கலந்து புவி ஈர்ப்பில் அது சிறுகச் சிறுக வளர்ந்து வைரமானபின் அது வெடித்து தனித்தன்மையாக வெளி வந்துவிடுகின்றது.

இதைப் போன்றே அந்த ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது “அறிவின் வளர்ச்சி, அறிந்திடும் வளர்ச்சி”, வருகின்றது.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவதைப் போன்று,  நமது ஜீவ அணுக்களின் துணை கொண்டு கண்களின் வழி ஒரு உணர்வின் அறிவினை அறியும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்கள் எப்படி மின்னுகின்றதோ அதைப்  போன்று நமது உயிர் மின் அணு போன்று இயங்கிக் கொண்டே இருக்கின்றது, அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின் அணுக்களாக இயங்குகின்றது.

எப்படி மேட்டூரில் மின் அணுவினை உருவாக்கும் பொழுது நம் வீட்டில் எந்தெந்தப் பொருள்களில் அதை இணைக்கின்றோமோ அந்த மின் அணு அதை இயக்கி அதன் வழி காண்கின்றோம்.

இதைப் போன்றுதான் நமது உயிரின் துணை கொண்டு உடலுக்குள் ஜீவ அணுக்கள் இயங்குகின்றது. சூரியனின் இயக்கத் தொடரில் நாம் வாழ்ந்தாலும் நமது உயிரே சூரியனின் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றது.

நாம் எப்படி ஊருக்கு ஒரு துணை மின் நிலையம் வைத்துள்ளோமோ அதைப் போன்றே நமது உயிரும் அந்த  நிலை பெறுகின்றது. சூரியனின் துணை கொண்டு அந்த மின் அணுக்கதிர்கள் நம் உடலில் உள்ள மின் அணுக்களை இயக்குகின்றது.

இருப்பினும் பல உணர்வின் தன்மை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு மனித உடலில் விஷத்தினை வென்றவன் அகஸ்தியன்.

விஷத்தை வென்றிடும் ஆற்றல் கொண்டு உணர்வினை ஒளியாக்கும் திறன் பெற்று,ஒளியாக இருக்கும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று ஒளியாக இருக்கும் உயிரைப் போலவே உயிரணுக்களை வளர்த்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

27  நட்சத்திரங்களும், கடும் விஷத்தன்மை கொண்டது. அதன் துகள்கள் பூமியில் பட்டால் வைரங்களாக விளைகின்றது. அந்த வைரத்தினைப் பொடி செய்து சாப்பிட்டால் மனிதனைக் கொன்றுவிடும், அவ்வளவு விஷம் கொண்டது.

ஆனால்  விஷத்தின் உணர்வினை ஒளியாகக் காண முடிகின்றது. வெளிச்சமாக அது தெரிகின்றது. விஷமே உலகத்தை இயக்குகின்றது.

இன்றைக்கும் சூரியன் இயங்குகிறது என்றால், விஷத்தின் தாக்குதலால்தான் வெப்பத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது.

நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால்தான் துடிக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இதைப் போன்று ஒவ்வொரு அணுக்களிலும் கலந்திருப்பதால்தான் இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளதை நாம் அறிதல் வேண்டும்

நமது ஆறாவது அறிவால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் எளிதில் பெறுவது என்றால் மிகவும் கடினம். குருவின் துணை இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.

நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது. நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.

ஆகவேதான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.
1.நாம் ஒவ்வொரு நாளும்
2.உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது
3.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று  உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
1.உயிரின் துணை கொண்டு  துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது
2.குருநாதர் எனக்கு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
3.நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

உங்களுக்குள் நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு இதை உபதேசிப்பது.

ஆகையினால் மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.

ஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால் ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம் உப்பு போன்ற நிலைகள் இருந்தால் அது  காரத்தின் சுவையாக மாறும். பாலின் தரத்தின் சத்தைக்  காண முடியாமல் போய்விடும்.

நாம் எத்தனையோ கோடி  உடல்களில் இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி உணவாக உட்கொண்டோம்.

இப்படிப் பல நரக வேதனைப்பட்டு தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம்  மனித உடல் பெற்றது நமது உயிர்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனான  இந்த உடலுக்குப் பின்
1.உயிர் நம்மை உருவாக்கியது என்று
2.எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு
3.என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது, அதைத் தடுக்கும் ஞானம்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.

அதைப் பெறும் நிலையாகத்தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

ஆகையால், நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது

1.நாம் இந்த உடலை  விட்டு  எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் (சப்தரிஷி மண்டலம்)
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் நாம் இணைந்திடல் வேண்டும்.

அங்கே இணைந்து விட்டால் அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது.., “இந்த மனித உடலில்தான்”.

ஆனால் நம்முடைய இந்த சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால் நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.

நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம்.