November 2022 உபதேசம்

எத்தனையோ துயரங்கள் வந்தாலும் அதிலிருந்து “மீளும் மார்க்கங்களைக் காட்டினார் குருநாதர்…”

 

உங்கள் உயிரான ஈசனை மதித்து… அவனால் உருவாக்கப்பட்ட எத்தனையோ கோடி உணர்வுகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு செல்ஃபோனில் நம்பரைத் தட்டியுடன் எங்கிருந்து… யாரிடமிருந்து வருகிறது..? என்று எப்படித் தெரிகிறதோ இதைப் போல
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத் தனித்தன்மையாக அமைத்து
2.அதன் உணர்வின் இயக்கமாக உங்களுடைய தொடர் வரிசைகள் இருக்க வேண்டும்.

காரணம்… விஞ்ஞான உலகில் நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து மீள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) இதை எல்லாம் தெளிவாகக் காட்டினார்… அறிந்தேன்.
1.எத்தனையோ துயரங்களைக் கண்டு அதிலிருந்து விலகும் மார்க்கங்களைக் காட்டினார்.
2.அதைப் போல் உங்களை அறியாது வந்த துயரங்கள் எத்தனையோ…
3.அதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று தான்
4.திரும்பத் திரும்ப உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரும் பயிற்சியைக் கொடுக்கின்றேன்
5.உங்களுக்கு அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்காக தவம் இருக்கின்றேன்.

ஆகவே அடிக்கடி யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சக்தி செய்து அந்தச் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.உங்கள் வீடுகளில் நல்ல நறுமணங்கள் வரும்
2.குடும்பத்தில் அற்புதமான வாசனைகள் வரும்
3.குடும்பத்தில் நற்செய்திகளும் வரும்.

இந்த வாசனைகள் உங்கள் வீட்டில் அடிக்கடி வந்தால் உங்களை அறியாது சேர்ந்து தீயவினைகள் சாப வினைகள் பாவ வினைகளை நீக்கக்கூடிய சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

நீங்கள் தொழில் செய்யும் இடங்களிலும் இதைச் செயல்படுத்தினால் நல்ல நறுமணங்கள் கமழும். வாடிக்கையாளர்களும் நலமும் வளமும் பெறுவார்கள்.

வேலை செய்பவர்களும் அந்த மகிழ்ந்து செயல்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும். அங்கே உற்பத்தி செய்யும் பொருள்களிலும் இது படரும். எல்லோரும் நலம் பெறக்கூடிய சக்தியாக இது அமைகின்றது. நாமும் நலம் பெறுகின்றோம்.
1.ஆகவே துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்வோம்
2.பிறவி இல்லா நிலை என்னும் அருள் வாழ்க்கை வாழ்வோம்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்ற… ஊற்ற அதுவும் நந்நீராக மாறுவது போல் இதற்கு முன் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த முந்தைய வினைகளுக்கு (அணுக்களுக்கு)
1.விஞ்ஞானத்தில் மருந்தினை ஏற்றி இஞ்செக்சன் செய்து உடலில் உள்ள நோயின் வலுவைக் குறைப்பது போல
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சி… ஆழமாகப் பதிவு செய்கிறேன்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை மகரிஷிகள் உணர்வுடன் ஒட்டும்படி செய்து
4.அதில் இருக்கக்கூடிய பகைமைகளை நீக்கச் செய்து
5.துருவ நட்சத்திரத்தின் ஒளியை பெருக்கிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை இப்போது ஏற்படுத்துகின்றோம்.

பல நூல்களை ஒன்றாகத் திரிக்கும் பொழுது அது எப்படி வலு கூடுகின்றதோ அது போன்று கூட்டமைப்பாகச் செயல்படுத்தும் போது மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகிறது.

ஒவ்வொரு நாளும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று உண்மை நிலைகள் எல்லோருக்கும் தெரியும்படியாகச் செயல்படுத்த வேண்டும்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகள் எல்லோருக்கும் கிடைத்து…
2.சிந்தித்து செயல்படும் சக்திகளையும்… வாழ்க்கையைச் சீர்படுத்தும் ஆற்றல்களையும் அவர்களைப் பெறச் செய்வோம்.

உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால்தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே…!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை நீக்கிடும் அருள் சக்திகளை உங்களுக்குள் பெருக்கியபின்
1.ஒருவரை நீங்கள் பார்த்த உடனே அவர் பிணிகள் ஓட வேண்டும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்.
3.அந்த ஆனந்த நிலைகள் பெறும் தகுதி பெற வேண்டும்.

எத்தனையோ வகையில் சந்தர்ப்பத்தால் நுகரும் ஒவ்வொரு மனிதனும்… “தான் வேண்டும் என்று” தவறு செய்வதில்லை.

நுகர்ந்த உணர்வுகள் அதனின் ஆசையை ஊட்டி அதன் வழியிலே அவனுக்குள் பெருகச் செய்கின்றது. அதன் வழியே அவனை வீழச் செய்கின்றது.

இராட்சனாக ஆவதும்… அசுர உணர்வு கொள்வதும்… தீமையினுடைய நிலைகளில் செயல்படுவதும்… தீமையே அவனுக்கு ஒரு சந்தோஷத்தை ஊட்டும்.
1.ஆனால் தீமையின் நிலைகளை அவன் தொடர்ந்து செய்தால்
2.மனிதப் பிறவியின் நிலையை இழக்கின்றான்.

தீமை செய்கின்றான் என்று அவனைப் பற்றி எண்ணி நாம் நுகர்ந்தால் நமக்குள் அந்த அணுவின் தன்மை வந்து… நம்மையும் தீமை செய்வோனாக மாற்றுகின்றது.

அத்தகைய தீமையின் நிலைகளை ஒருவன் செய்தால்… நாம் பார்த்தால்… அடுத்த கணம் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.பின் தீமை செய்வோர் அவர்கள் அறியாத நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.
2.பொருளறிந்து செயல்படும் எண்ணங்கள் அவர்களுக்குள் வரவேண்டும் என்று
3.அவரைப் பற்றி நாம் கவர்ந்த உணர்வுகளுடன்
4.இதைக் கலக்கின்றோம்.
5.நமக்குள் அந்தத் தீமைகள் விளையாதபடி தடுத்துக் கொள்கின்றோம்.
6.அவர்கள் நாம் சொல்வதை எடுக்கின்றார்களோ இல்லையோ…!
7.அவன் செய்த தீமையின் விளைவுகள் “நமக்குள் வரக்கூடாது”.

தனித்து ஒரு மிளகாய் காரமாக இருக்கின்றது. இதைப் போன்று மற்ற கடுகு இஞ்சி மிளகு எல்லாமே தனித்த நிலையில் காரமாக இருக்கின்றது. ஆனால் மற்ற பொருள்களுடன் இவைகளைக் கலக்கப்படும் பொழுது சுவையான நிலைகள் வருகின்றது.

இதைப் போலத்தான்
1.பிறிதொரு தீமையான உணர்வை நாம் நுகர்ந்தறிந்தாலும்
2.”அது தனித்து நம்க்குள் விளையாதபடி”
3.அருள் ஞானிகளின் உணர்வு கொண்டு எடுத்து அதை உள்ளடக்குதல் வேண்டும்.

அத்தகைய ஞானியின் உணர்வின் அணுக்களாகிவிட்டால் நமக்குள் அவர்களின் அணுக்கள் தீங்கு செய்யும் நிலைகளாக வராது. ஆகவே இதை “மடக்கிப் பழகுதல்” வேண்டும்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் அகஸ்தியன் சென்ற பாதையில் அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் அவன் துருவனாகி துருவ மகரிஷியான நிலை போல நாமும் அடையலாம்.

திருமணமானவர்கள் கணவனுக்கு அந்தச் சக்தியும் மனைவிக்கு அந்தச் சக்தியும் கிடைக்க வேண்டும் என்று அவசியம் எண்ணுதல் வேண்டும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எண்ணுவதை “மறந்துவிடக் கூடாது”.

ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்று எண்ண மறந்துவிட்டால் போய்விடும். ஆகவே… இதை மறக்காத நிலைகளில் எடுக்க வேண்டும்.

எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

 

செடி கொடிகளுக்கு அதனுடைய வித்துக்களை நிலத்தில் ஊன்றிய பின் அது முளைத்து வருகின்றது. பின் வளர்ச்சியாகி… மீண்டும் தன் இனத்தின் வித்துக்களை உருவாக்குகிறது.

அந்த வித்துக்களைப் பரவச் செய்தால்… மீண்டும் அதனின் வித்துக்கள் நிலத்தில் பட்டால் அதே தாய்ச் செடியின் சத்தை நுகர்கின்றது… இப்படித்தான் வளர்ந்து கொண்டே வருகிறது.
1.செடி கொடிகளுக்குண்டான வித்துக்கள் போன்றது தான்
2.நம் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனும்.

கண்களால் ஒன்றை (அல்லது மற்ற மனிதர்களை) உற்றுப் பார்க்கப்படும் போது “கருவிழி ருக்மணியால்” அது பதிவாக்கப்படுகிறது.

யார் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பதிவாக்கி அந்தந்த உணர்வுகளை நுகரப்படும் போது உயிரிலே மோதுகின்றது.

உயிரிலே மோதும் போது உயிர் அதனின் உணர்ச்சிகளாக நம்மை இயக்கி நம்மை அறியச் செய்கிறது… அதனின் செயலாகவே நம்மை அது மாற்றுகிறது.

எந்தெந்தக் குணங்களை எடுத்தோமோ அது எல்லாம் நம் எலும்புக்குள் ஊனாக மாறுகின்றது.

உதாரணமாக…
1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை அதிகமாகப் பதிவாக்கியிருந்தால் அது வேதனைப்படும் ஊனாகிறது.
2.எலும்புக்குள் வேதனைப்படும் அணுக்களாகப் பெருகி நம்மை வேதனைப்படும் செயலுக்கே கொண்டு செல்கிறது.
3.நாளடைவில் அதுவே நோயாக மாறத் தொடங்குகிறது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா.

வேதனைப்படும் உணர்வைப் பதிவாக்கினால் அது ஊனாகி நம்மை வேதனைப்படும்படி செய்து நோயாக மாற்றுவது போல்
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் எண்ணங்களைக் கண்ணுடன் இணைத்து
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து… உயிருடன் இணைத்து… ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தி
4.அறியாது வந்த வேதனைகளையும் தீமைகளையும் நீக்கிடும் சக்திகளைப் பெறச் செய்வதுவது தான்
5.நம் குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானத்தின் நோக்கம்.

அதன் வழியில் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வெளி வரும் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதன் பேரருளை நீங்கள் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற்று உங்கள் உடலிலே பரப்பச் செய்து கொண்டே இருந்தால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய தீய அணுக்களை மாற்றி உயிரைப் போல உணர்வின் தன்மை என்றுமே ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

மனிதனான பின் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனானோ இதைப் போன்று நமது வாழ்நாளில் நாமும் ஒளியின் சரீரம் பெற முடியும். மனிதனின் கடைசி நிலை பிறவியில்லா நிலை நிலை தான்

உயிரைப் போன்றே உணர்வுகளை ஒன்றாக்கி என்றும் ஒளியின் உடலாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தை ஒளியாக மாற்ற வேண்டும்.

பாம்பினம் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவுக்காக முழுமையாக விழுங்கினாலும்
1.அந்தந்த உடல்களில் உள்ள விஷத்தினைத் தனக்குள் வடிகட்டி
2.பல விதமான வர்ணங்கள் கொண்ட விஷத்தன்மைகளைத் பாம்பினம் தனக்குள் சேர்த்து நாகரத்தினமாக உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையிலே ஏற்கனவே சொன்னது போன்று வேதனை வெறுப்பு கோபம் பயம் ஆத்திரம் என்ற பல விதமான விஷத்தன்மைகளை நாம் நுகர்ந்தாலும்…
1.பல விதமான விஷத்தின் தன்மை ஒடுக்கி ஒளியின் உணர்வாகப் பெற்ற
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
3.விஷத்தின் தன்மை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றோம்.
4.எத்தகைய விஷத்தன்மைகள் வந்தாலும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
5.இந்த உடலை விட்டுச் செல்லும் நிலை தான் கடைசி நிலை.

ஆகவே… பிறிதொன்றின் ஈர்ப்பிற்குள் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி உயிருடன் ஒன்றி ஒளியாகின்றோம்.

“இது எல்லாம் ஒவ்வொரு உயிரின் கடமைகள்…”

காரணம்… “இந்த உயிர் தான்…” தன்னைக் காக்கத் தன் உணர்வின் தன்மையைச் செயல்படுத்துகின்றது என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.

மனிதனாக ஆன நிலையில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தியாக அங்கங்களும் அதற்குத்தக்க உறுப்புகளையும் உருவாக்கியது இந்த உயிரே.

ஆகவே… தீமையிலிருந்து விடுபடச் செய்யும் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் சேர்த்தோம் என்றால் மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து விடுபட்டு உயிரைப் போன்று உணர்வின் தன்மை ஒன்றி வாழும் திறன் பெற்று… “பிறவி இல்லை” என்ற நிலை அடையலாம்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

 

அகத்தினை அன்பு கொண்டால்…
“ஜெகத்தினை” வென்று வாழ்ந்திடலாம்.

தங்க வந்த கூட்டினில்…
தரணி ஆண்ட வாழ்க்கையில்…
தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

ஆண்டவன் என்ற ஆத்மாவை அடக்கி ஆளப் பார்க்காமல்
“ஆத்மலிங்க தேவனை” அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்

பகவான் படைத்த படைப்பே நாம்…
பகவான் எங்கே உள்ளான்…? என்று
பகுத்தறியும் ஆற்றலைத்தான் “பகவான் அருளால் பெற்றுள்ளோமே…!”

உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்…
உள்ள அழுக்கைப் போக்க எந்நீர்…?

திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்… திருநீறு அணிந்தே…!

ஈசன் அருளில் உதித்த நாம்…
ஈன்றெடுத்த தெய்வமாக..
“ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்…”

நம்மை ஈன்றவர்.. படைத்தவர் யார்…?
நம் முற்பிறவி இப்பிறவி மறுபிறவியில் யார்…?

நம்மில் பலவும் உள்ள பொழுது “நான்” என்பது யார்…?

ஒன்றில்லாமல் ஒன்றில்லை…
ஒன்றிலிருந்து ஒன்றாக ஓங்கி நிற்கும் சக்தியிலே
ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்.

பல ஆசை நிலைகளிலே பல நிலை அடைவதற்கே…
பயம் என்ற பேய்க்கு நாம் பயந்து வாழ்வது எதற்காக…?

நிலையில்லா வாழ்வினிலே “நித்திய நிலை பெற்றிடவே…!”
நிலையான அன்பைக் காட்டி நிலை பெற்று வாழ்ந்திடுவோம்…!

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைகிறது…! என்று உணர்ந்தே வாழ்ந்திடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் தினசரி வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கே இருந்தாலும் கணவனும் மனைவியும் (வெளி ஊரில்) காலையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடம் எடுத்தால் போதும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.என் கணவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.என் மனைவி உடல் முழுவதும் படர வேண்டும்.
4.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்.
5.எங்களைப் பார்க்கும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
6.எங்கள் பார்வையில் பிறருடைய தீமைகள் அகன்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்.
7.எல்லோருக்கும் அந்தத் தெளிந்த மனம் கிடைக்கும் அருள் சக்தி பெற வேண்டும்.
8.ஒவ்வொரு மனிதனும் அந்தத் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
9.காலையில் இப்படி எண்ணி கணவன் மனைவி இருவருமே உங்களுக்குள் படைத்துக் கொள்ளுங்கள்.

இதுதான் உண்மையான தியானமும் நாம் போகும் மார்க்கமும் ஆகும்.

நாம் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஜெபம் இருந்து ஆண்டவனை அடைவேன்… அந்தச் சக்தியைப் பெறுவேன்…! என்றால் அது முடியாது.

1.அப்படி மணிக்கணக்கில் ஜெபமிருந்து முடிந்தாலும்
2.முடிந்த பின் வாழ்க்கைக்கு வரும் பொழுது தீமைகள் வரும்.
3.அப்படி ஜெபமிருந்து பல நிலைகளைப் பெற்றாலும் அது “முனி” என்ற நிலையாகத்தான் வரும்.
4.ஒரே வைராக்கிய நிலைகள் கொண்டு “மற்றதைச் சிந்திக்கவிடாது” செயல்படுத்தும் நிலைகள் தான் வரும்.

ஆகவே… அருள் ஞானத்தை வளர்த்து மெய்ப்பொருள் காணும் நிலையை இந்த உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்.

அருள் ஒளி பெறுவோம். இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் எகாந்த நிலை என்ற நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.

அருள் உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றியே நிலைத்தே வாழ்வோம். அவனுடன் நாம் ஒன்றியே வாழ்வோம்.
1.என்றும் எதனையும் அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம்.
2.எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.
3.பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம்.
4.பகைமையான உணர்வுகள் சேராது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.
5.நம் பார்வையில் பகைமை உணர்வு ஓடவேண்டும்.., நஞ்சு கொண்டோர் உணர்வுகள் நீங்க வேண்டும்,
6.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற்றோம் என்றால் நம் பார்வை பிறருடைய நஞ்சை போக்கும்.
7.பிறருடைய நஞ்சின் தன்மை நமக்குள் வராது காக்கும்.

ஏனென்றால் நாம் இந்த மனித உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் ஒரு பிறவிக்கு வரக்கூடாது. இன்னொரு உடல் பெறக் கூடாது.

அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அகஸ்தியரையும் காணலாம்… ஈஸ்வரபட்டரையும் காணலாம்… துருவ நட்சத்திரத்தையும் காணலாம்… உங்களால் முடியும்…!

 

ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.

கண்களைத் திறந்தபடியே நேராக உற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

இப்பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்ற
2.மகரிஷிகள் அனைத்தும் உங்கள் காட்சிக்கு வரலாம்.

சப்தரிஷிகள் அருள் சக்திகள் இங்கே படர்ந்து இருப்பதனால்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் சப்தரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது
2.சப்தரிஷி மண்டலமும் சப்தரிஷி மண்டலமும் காட்சியாகக் கிடைக்கலாம்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய ஒளி அலைகளும் (நீல நிற ஒளிக்கற்றைகள்)
4.துருவ நட்சத்திரத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இப்பொழுது கிடைக்கின்றது.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு உணர்த்திய அருள் உணர்வுகள் இப்பொழுது தெளிவாகத் தெரிய வரும்.
6.குருநாதருடைய அருள் உணர்வு கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளைப் பெற முடியும்

அகஸ்தியனை நீங்கள் பார்த்ததில்லை… ஆனால் அகஸ்தியனுடைய பேரருளைப் பார்க்க முடியும். அகஸ்தியன் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை நீங்கள் எடுத்து வளர்க்க வளர்க்க
1.அகஸ்தியனையும் காணலாம்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும் காணலாம்.

ஏனென்றால் டிவி ரேடியோ அலைகளைப் பதிவாக்கிய பின்… அது எப்படி அந்த அலைத் தொடர்களின் மூலம் படங்களையும் ஒலிகளையும் நாம் காண்கின்றோமோ… கேட்கின்றோமோ… அதைப் போல்
1.அருள் மகரிஷிகள் உணர்வுகளை… ஒருங்கிணைந்த அந்த ஆன்மாக்கள் படர்ந்திருப்பதை
2.நாம் நுகர்ந்து வலுப்பெற்றால் நமக்குள் அவர்களின் காட்சியையும் காண முடியும்
3.அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும்…
4.அந்த ஞானிகள் காட்டி வழியில் நாம் வாழ்ந்து இருளை அகற்றலாம்… பேரருளையும் பேரருளையும் பெற முடியும்…!

நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த நிமிடத்திலும் இந்த அருள் சக்திகளைப் பெற முடியும். கண்ணின் நினைவு கொண்டு உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அதை வளரச் செய்யலாம்… எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய முடியும்.

இன்று உலகம் கடும் மோசமாக இருப்பதனால் அதையெல்லாம் நாம் மாற்றக் கூடிய சக்தியாக அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை நாம் அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று… காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில்
1.அதற்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்று
2.அந்தப் பேரருளை நாம் வளர்த்துப் பேரொளியாக மாற வேண்டும்.

இத்தகைய பழக்கத்திற்குத் தான் நாம் வர வேண்டும்.

வாழ்க்கையில் எதையுமே குறையாக எண்ண வேண்டியதில்லை… குறைகளைக் காண வேண்டியதில்லை.

சந்தர்ப்பத்தில் எங்கே யாரிடம் எதிலே குறைகளைக் கண்டாலும் அடுத்த கணம்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அவர்களும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.. தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இது போன்று ஆத்ம சக்தி செய்து செயல்படுத்தி வாருங்கள்.

இவை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய வழி முறைகள்.

ஞானம் பெற வேண்டியது மிகவும் அவசியம்

 

அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.

அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.

நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.

1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.
4.இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.

அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.

இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.

இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.

ஞானம் பெற வேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணி வெளிப்படுத்தும் உணர்வுகள் நம் குழந்தைகளை எப்படி இயக்குகின்றது என்று நாம் அறிந்திருக்கின்றோமா…!

இப்போது நாம் வாழ்க்கையில் எதை எதை எண்ணுகின்றோம்…? என் பிள்ளைக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அது நடக்கவில்லை… கால தாமதம் ஆகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்…? வேதனைப்படுகின்றோம். வேதனை அதிகமாகி நமக்குள் அந்த வேதனையை உருவாக்கிக் கொள்கின்றோம்.

கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். வேதனையாகும்போது அடுத்து அந்தக் குழந்தை திருமணமாகி அது நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பதை விட்டு விட்டுகின்றோம். (வேதனையையே எண்ணிக் கொண்டுள்ளோம்).

1.ஏனென்றால் நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனையை உருவாக்கி
2.அந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொழுதெல்லாம் “வயதாகிவிட்டது.., வயது ஆகிக் கொண்டே போகிறது.., என்ன செய்வது…?
3.“வயதாகிவிட்டது… வயதாகிவிட்டது…” என்று இங்கே நமக்குள் சமைத்து
4.அந்த உணர்வுகளைத்தான் குழந்தைக்குக் கொடுத்து
5.அது உடலிலும் வளர்க்கச் செய்கின்றோம்.

குழந்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம் “கல்யாணம் ஆகவில்லை ஆகவில்லை..,” என்று இந்த ராகத்தையே பாடிக் கொண்டிருப்போம்.

யாராவது மாப்பிள்ளை வருகிறார்கள் என்றால் எதை எண்ணினோமோ இந்த உணர்வலைகள் “கம்ப்யூட்டர் ரிமோட் செய்வது போல் செய்து” அங்கே இணங்கி வரும் நிலைகளை மாற்றிவிடும். பார்த்துவிட்டு… “வேண்டாம்” என்று சென்றுவிடுவார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அதே மாதிரி குழந்தைகளைப் படிக்க வைக்கின்றோம். சரியாகப் படிக்கவில்லை என்றால் என்ன ஆகின்றது…? நாம் என்ன நினைக்கின்றோம்…?

எப்படியோ நல்ல முறையில் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் சரியாக வரவில்லை என்று கவலைப்படுகின்றோம்.

“இப்படி ஆகிவிட்டதே…” என்று பல கவலைகளை எடுத்துக் குழந்தைகளிடம் பேசப்படும்போது அதன் மனதில் கவலையான உணர்வுகள் நினைவுக்கு வருகின்றது.

அப்பொழுது நாம் அந்தக் குழந்தைக்கு எதைச் சமைத்துக் கொடுக்கின்றோம்… நல்ல உணர்வுகளைக் கொடுக்கின்றோமா..?

ஏனென்றால் நாம் நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் நன்மை செய்தால் “விக்கலாகின்றது…” காரியங்கள் நல்லதாகின்றது. துரோகம் செய்தான் பாவி என்றால் புரையோடுகின்றது. காரியங்கள் எல்லாமே தடையாகிவிடுகின்றது.

அப்பொழுது பாசத்தால் தன் குழந்தை படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டாலும் படிக்கவில்லை என்கிற பொழுது “இப்படிச் செய்கின்றானே.., அப்படிச் செய்கின்றானே…! இவன் எங்கே உருப்படப் போகின்றான்…,?” என்ற கோபப்பட்டு அந்த உணர்வுடன் சொல்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இதை எண்ணி இப்படிப்பட்ட உணர்வுகளைச் சமைத்து என்ன செய்கின்றோம்…?

மீண்டும் அவனை எண்ணும் பொழுதெல்லாம்… வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் சொல்வோம்.

எல்லோரும் நன்றாகப் படிக்கிறார்கள். ஆனால் இவனைப் பார்த்தால் இப்பொழுது சுட்டித்தனம் ஜாஸ்தி ஆகிவிட்டது. வெளியிலே சுற்றப் போகிறான் என்று சொல்வார்கள்.

இப்படி நினைத்து…
1.மற்றவர்களிடம் தான் சொல்கிறோம் என்று நினைக்கிறோம்.
2.ஆனால் அவனை நினைத்து நாம் சொல்லும் உணர்வுதான்
3.அங்கு குழந்தைக்குள் சென்று பாய்கின்றது என்பதை யாரும் நினைப்பதில்லை.
4.அந்த உணர்ச்சிகள் அவனைத் தூண்டி இன்னும் கொஞ்சம் விளையாட்டுக்கு தான் போகச் சொல்லும்.
5.அப்போது நம்முடைய உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.

எப்படித் தீமை செய்த உணர்வுகளை எண்ணும்போது “எனக்குத் துரோகம் செய்தான் பாவி..,” என்றால் நமக்கு வெகு தொலைவில்… இருந்தாலும் அந்த உடலை இயக்குகின்றது.

அதே சமயத்தில் நன்மை செய்தார்கள் என்று எண்ணினால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கலாக வருகின்றது. இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு இருக்கின்றது.

தொடர்பு இல்லாது எவரும் இல்லை.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?
1.குழந்தை அவன் அறியாமல் இயக்கும் அந்த இருளைப் போக்கும் நிலையை
2.நாம் இங்கு நமக்குள் சமைத்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சி
3.அதை இணைத்துச் சொல்லாக அவனிடம் சொன்னால்
4.குழந்தை உடலில் நல்ல உணர்வுகளாகப் படர்கின்றது.

தெய்வ பக்தி கொண்டு சொல்பவர்கள் கூட என்ன செய்கிறார்கள்? வேதனையைத்தான் சொல்கிறார்கள்.

சாமியைக் கும்பிடுகின்றோம். அந்தத் தெய்வத்தை நினைத்து அவன் இப்படி இருக்கின்றானே… நீ பார்க்கக் கூடாதா…,? அந்த வேதனையை நினைத்துத் தான் சொல்கின்றோம்.

நாம் அந்த தெய்வத்தை நினைத்துச் சொன்னால் எப்படிச் சொல்ல வேண்டும்?

அந்த அருளை என் குழந்தை பெற்று இருளை நீக்க வேண்டும். அந்த அருளால் அவனை அறியாத இருள்கள் அனைத்தும் நீங்க வேண்டும். அவன் பேரருள் பெற்று எல்லாவற்றிலும் தெளிந்த மனம் பெற வேண்டும்.

சந்தோஷத்தோடு நாம் இந்த நிலைகளை அடிக்கடி அவனிடம் சொல்ல வேண்டும்.

1.நாம் செலுத்தும் உணர்வுகள் அவனுக்குள் ஊடுருவி
2.அவன் சுவாசத்தில் கலந்து
3.அவனுக்குள் இயக்கங்கள் நல்லதாகும்.

“உங்கள் உணர்வு” அவனைத் திருத்துகின்றதா இல்லையா…? என்று அப்புறம் உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

இரவிலே ஜெப நிலையிலேயே உறங்குங்கள்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் (நாம் சுவாசிப்பது) நல்லதாக வேண்டும் என்று எண்ணினாலும் பிறருடைய கஷ்டங்கள் பிறருடைய நஷ்டங்கள் பிறருடைய தொல்லைகள் எல்லாம் சேர்க்கப்படும்போது நம் உடலுக்குள் என்ன செய்கின்றது…?

அரக்க உணர்வுகள் அதிகமாகின்றது.

அப்போது நமக்குள் சந்தோஷம் என்ற சீதாவைச் செயலற்றதாக மாற்றுகின்றது. நமக்குள் என்ன செய்கின்றோம்…?

(உயிர் – விஷ்ணு; உயிரின் காந்தம் – இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; உடலின் இச்சை – இராவணன்)

1.ஒவ்வொரு நாளும் நாம் தேடிக் கொண்ட உணர்வுகள் பலவானாலும்
2.இலங்கேஸ்வரன் (இராவணன்) இந்த உடலின் இச்சைகள் தனக்குள் ஆகி நல்லதை உருவாக்காதபடி
3.நமக்குள் நல்லதைச் சிறைப்பிடித்துக் கொள்கிறோம்.
4.சீதா என்ற அந்த நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்…? இராமன் என்ன செய்கின்றான்…? இராமன் சீதாவை எண்ணிச் செயல்படுத்தும்போது சீதா என்ன செய்கின்றது…?

1.தன் கணவனின் உணர்வின் தன்மையை எண்ணி
2.அதை அதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.உயிரான விஷ்ணுவிடம் ஏங்குகின்றது.

இந்த அரக்கனோ தீமையின் உணர்வு கொண்டு நான் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணி அவனும் (உயிரான) விஷ்ணுவை நோக்கித் தவம் செய்கின்றான்.

அவன் உணர்வு அதிகமாக்கப்படும் போது அவன் உடலுக்குள் நல்ல குணங்களைக் கொல்கின்றான். இந்திரலோகத்தில் (உடலுக்குள் அணுக்கள் உருவாகும் இடத்தில்) இவன் எடுத்துக் கொண்ட உணர்வு எதிர்மறையாக மனிதனின் ஆறாவது அறிவை இழக்கச் செய்துவிடுகின்றான்.

அப்பொழுது சீதா எண்ணிய அந்த உணர்வின் தன்மை வரப்படும்போது
1.அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் கணவருக்குத் தூண்டப்பட்டு
2.அதைக் காக்கும் படைகலன்களாக வருகின்றது.
3.ஆகவே இதையெல்லாம் சேர்த்து “வானரப்படை”.

தான் எண்ணிய உணர்வுகள் வலுவாகி அந்த உணர்வின் தன்மை அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தனக்குள் “பாதுகாப்பு” என்ற உணர்வு வருகின்றது.

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க
1.தீமைகளை நீக்கும் உணர்வுகள் அசுர உணர்வுடன் இங்கே மனதிலேயே போர் நடக்கின்றது.
2.உடலுக்குள் சென்றபின் அரக்க உணர்வுக்கும் அதற்கும் போர் நடக்கின்றது.
3.சீதா இருக்கும் அந்த நிலையில் இலங்கைக்குள் (உடலுக்குள்) பல உணர்வுகளின் தன்மை கொண்டு நெருப்பு வைத்து ஆஞ்சநேயர் கொளுத்துகின்றார்.

அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் சேர்கின்றது. தீமைகள் அகற்றப்படுகின்றது.

ஆகவே நம் உடலுக்குள் அந்தத் தீமையை நீக்கும் உணர்வைச் செலுத்தப்படும்போது அந்தச் சீதாவை – சந்தோஷத்தை நாம் மீட்ட முடியும்.

சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…?

ஆத்ம சுத்தியின் சூட்சமமே புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “அழுத்தமாக…” நிலை நிறுத்துவது தான்

 

உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பத்திரிகைகளைப் படிக்கின்றோம். ஒரு இடத்திலே விபத்தாகி விட்டது… அடிபட்டனர்… விபரீத நிலைகள் ஆகிவிட்டது என்று அங்கே நடந்த நிகழ்ச்சிகளை… அவர்களுக்குக் கிடைத்த ஆதாரப்படி… அறிந்ததைச் சொல்கின்றார்கள்.

எழுத்து வடிவில் இருப்பதைப் பார்த்து நாம் படித்தாலும் அதே உணர்வுகளை நாம் நுகரக்கூடிய சந்தர்ப்பம் வந்து விடுகின்றது.

இதைப் போன்று பிறிதொரு தீமையின் உணர்வுகளை நாம் அறிந்து தெரிந்து கொண்டாலும் அது நம் உடலுக்குள் உருவாகாதபடி அவ்வப்போது அதைத் தூய்மையாக்க ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

ஈஸ்வரா… என்ற உயிரை எண்ணி…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை நம் புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.நாம் படித்துப் பதிவாக்கிய உணர்வும்… இதற்கு முன் நமக்குள் உருவான தீய வினைகளும் உள்புகாது தடுத்தல் வேண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வைத்து நாம் தடுத்து நிறுத்தினால்
5.அந்த விபரீத உணர்வுகள் உள்புகாது தடுக்கப்படுகின்றது.

ஏனென்றால் அதிர்ச்சியான செய்திகளை நாம் பார்த்தவுடன் நமக்குள் பதிவாகிறது.
1.பதிவான உணர்வுகளை நாம் சுவாசித்து
2.அந்த எண்ணங்கள் அந்த உணர்ச்சிகள் கொண்டு அந்தந்த வாழ்க்கை வாழ்ந்தாலும்
3.இப்போது (அடுத்து அடுத்து) மீண்டும் எண்ணத்தால் அதை எண்ணும் பொழுது
4.அதே உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து அதே உணர்ச்சிகள் இயக்கப்பட்டு
5.அதே செயல்களை நமக்குள் உருவாக்கி விடுகின்றது அல்லது வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க செய்கின்றது.

இப்படி நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தோம் என்றால் அது அனைத்தும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து இரத்தத்திலே “மாசுபடும் உணர்வுகளாக” மாறுகிறது.

மாசுபட்ட உணர்வுகளை நம் உடலில் மீண்டும் சேர்க்க உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்குள் அது சேரும் தன்மை வந்து விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வராதபடி தடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திப் பழக வேண்டும். தடுத்து நிறுத்தவில்லை என்றால் உடலுக்குள் சென்று அந்த நல்ல அணுக்களைக் கெடுத்துவிடும்.

கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று “இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்…”

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது வலு கொண்டதாக மாறுகிறது. இப்படி “அந்த வலுவை” நாம் ஏற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படிச் சேர்த்துக் கொண்டால் “இதன் அழுத்தம்… துருவ நட்சத்திர வலு” நாம் அங்கே எண்ணும் இதே உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆதாரத்துடன் கலந்து அந்த வெறுப்பு அல்லது வேதனை போன்ற தீமை செய்யும் உணர்வுகளை நுகராது உயிரிலே அடக்கி… ஆகாரத்தைச் சீராக அமைத்து நல்ல இரத்தமாக மாற்ற இது உதவும்.

“ஆத்ம சுத்தி என்பது சாதாரணமானதல்ல…”
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் பதிவாக்கி
2.இதைத் தெளிவாக்கி அந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான் இவ்வளவு காலம் உங்களுக்கு உபதேசித்தது (ஞானகுரு)
3.ஓரளவுக்கு அந்த வலிமை பெறக்கூடிய தகுதியைப் பெற்ற பின் இதை இப்போது முழுமையாகக் கொடுக்கின்றோம்.

காரணம்… உலகம் முழுவதும் விஷத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… உங்களுக்குள் யாம் சொன்ன முறைப்படி வலுக் கொண்டு இந்தக் காற்றுக்குள் மறைந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவர்ந்து உங்கள் உடல் உறுப்புகளில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை அதிகமாகச் சேர்த்துக் கொண்டு வர.. வர…
1.துருவ நட்சத்திரத்தின் வலிமையைப் பெறுகின்றீர்கள்…
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைகின்றீர்கள்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…?

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் அந்நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
4.வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்..
1.அவன் போடும் கணக்குப்படி தேதியிலும் கைரேகைகளிலும் ஜாதகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்து
2.தன்னுள்ளேயே அந்த ஆண்டவனின் சக்தியை மறந்து விட்டு இன்று உலகம் முழுவதுமே இந்த நிலையில் தான் நம்பி வாழ்கிறது.
3.நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டிட்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்ந்து
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..! அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீய உணர்வுகள் விளைந்து கனியானால் “கலி” தீமை வரும்பொழுதெல்லாம் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கனியாக்கினால் “கல்கி”

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தீமை என்று கண்ட பின் நாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.

இப்படித் தியானித்து நம் உடலுக்குள் எடுத்துக் கொள்ளும் பொழுது தன்னிச்சையாக (AUTOMATIC) என்ன செய்கின்றது…? தீமைகளைப் பிளந்துவிட்டு அந்தத் தீமை செய்யும் உணர்வுகளைச் சூரியன் (காந்தப் புலனறிவுகள்) எடுத்துக் கொண்டு போகின்றது. நம் ஆன்மா தூய்மை அடைகிறது.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கவலையோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ

1.நம் உடலில் இப்படி எத்தனையோ வரும்.
2.அதுவெல்லாம் தன் சாப்பாட்டிற்காக ஏங்கும்.
3.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் உயிர் வழியாக கண்கள் கொண்டு இழுக்கும்.
4.அப்புறம் நமக்குள் ஆன்மாவிற்குள் வந்து சுவாசத்தின் வழியாக உடலுக்குள் போய்
5.அது தன் இனத்தை வளர்க்க முயற்சிக்கும்.

ஏனென்றால் கோபம் வெறுப்பு சலிப்பு ஆத்திரம் வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வரும்போது “கலி…” ஆகிவிடுகின்றது. அப்பொழுது நல்ல சிந்தனை குறைக்கப்படுகின்றது.

வேதனை என்று வரும் போது நோயாகின்றது. நல்லதை நமக்குள் வலிமையாக்க முடியவில்லை. அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நமக்குள் மனக்கவலையோ மற்ற சங்கடமோ வந்தால் அந்த மாதிரி நேரத்தில் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று சொல்லிக் கொஞ்ச நேரம் ஏங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

“கண்களை மூடி…” அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று உள்முகமாக உணர்வினைச் செலுத்தி உடலுக்குள் இணைக்க வேண்டும்.

இந்த மாதிரி எடுத்து நம் உடலில் சேர்த்துக் “கல்கி…” ஆக மாற்ற வேண்டும்.

ஆகவே கார்த்திகேயா.., தீமை என்ற நிலைகள் புகாதபடி சேனாதிபதி… பாதுகாக்கக் கூடிய வலிமை இருக்கின்றது. அந்த வலிமையின் துணை கொண்டு நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்… இது இச்சை.
2.அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது கிரியை.
3.துருவ நட்சத்திரத்தின் சக்திகளைச் சேர்க்கச் சேர்க்க அதனின் ஞானமாக நமக்குள் இயங்கத் தொடங்கும். இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி.

இந்த ஆறாவது அறிவு என்பது வலிமைமிக்க சக்தி “வள்ளி”.இந்த வலிமை கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…? தீமைகளை நீக்கக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

அப்போது அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று உணர்வை எடுத்து அது உயிரிலே பட்டால் அந்த உணர்ச்சிகள் “தெய்வானை”.

1.அதாவது அந்த ஆணைப்படி நமக்குள் அருள் சக்திகள் சேரும்.
2.அந்தத் தெய்வமாக நாம் ஆணையிட்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் கந்த புராணத்தில் ஞானிகள் தெளிவாக கூறியிருக்கின்றார்கள்.

நாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்…? வாழப் போகின்றோம்…? நன்றாகச் சிந்தித்து பாருங்கள்.

“நான் நல்லது செய்தேனே…. எனக்குத் தீமை வருகின்றதே…” என்று தான் எண்ணுகின்றோமே தவிர நல்லதை எண்ண முடியவில்லை.

ஏனென்றால் நாம் சுவாசித்த தீமையின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகி வளரும் பொழுது அந்தந்த நேரத்தில் “அதனுடைய பசிக்கு…” அது எடுக்கின்றது.

அது வளர்ந்து தீமையைக் “கனியாக” ஆக்க முயற்சிக்கும். கனியாகி விட்டால் மீண்டும் பல வித்துக்களாக தீமையின் விளைச்சலாக நமக்குள் ஆகிவிடும்.

அது கனியாவதற்கு முன் நாம் தடுத்துவிட்டால்…? அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது. தீமையின் விளைவுகள் தடைப்படுத்தப்படுகின்றது.

முந்தைய வினைகளை நாம் மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்

 

தாய் கருவிலே நாம் பெற்ற உணர்வுக்கொப்ப மனிதனாக உருப்பெற்றாலும்
1.நமது வாழ்க்கையில் கண் கொண்டு உற்றுப் பார்த்து உணர்வுகளைப் பதிவாக்கி
2.அதன் வழி உணர்வுகளை நுகர்ந்து அறியும் சக்தி பெற்ற நாம்
3.நமது வாழ்க்கையில் எத்தனை பேரைப் பார்த்தோமோ எத்தனை பொருள்களை உற்றுப் பார்த்தோமோ
4.அவையெல்லாம் ஊழ்வினை என்ற வித்தாக நமது உடலில் எலும்புக்குள் இருக்கும் ஊன்களில் பதிவாகி விடுகின்றது.

எப்படி செல்ஃபோன்களில் பதிவாக்கி வைத்துக் கொண்ட பின் அதனின் இயக்கங்களை முழுமையாக நாம் இயக்க முடிகின்றதோ இதைப் போன்று எலும்புகளில் உள்ள செல்களில் இயக்கி எத்தனையோ கோடி உணர்வுகளை நாம் பதிவாக்கிக் கொள்ளலாம்.

“பதிவான நிலைகளில்…” நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த நினைவாற்றலே மீண்டும் வருகின்றது. அதன் வழி அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக நம்மைச் செயலாக்குகின்றது. அதிலே தீமைகளும் பதிவாகி இருக்கிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் எத்தனை கோடி தீமையின் உணர்வுகள் நம் ஊன்களில் உண்டு. அதை இயக்க விடாது தடைப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளை
1.எல்லா உறுப்புகளிலும் படரச் செய்ய வேண்டும்
2.அந்த உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்
3.எலும்புக்குள் இருக்கும் எல்லா ஊன்களிலும் அதைப் பரவ செய்ய வேண்டும்.

எப்படி விஞ்ஞான அறிவு கொண்டு இரத்தங்களில் இன்ஜெக்க்ஷன் மூலமாக மருந்தினைச் செலுத்தி உடலில் உள்ள உறுப்புகளுக்கும் மற்ற அணுக்களுக்கும் சேரும்படிச் செய்கிறார்களோ அதைப் போன்று தான்… துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் கவர்ந்து… இரத்த நாளங்களிலே கவரச் செய்து… உடல் முழுவதற்கும் பரவச் செய்ய வேண்டும்.

நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் பழகி அந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் “நன்மை செய்தார்…!” என்று எண்ணும் பொழுது எங்கே இருந்தாலும் அது பாய்ந்து விக்கலாக மாறுகின்றது அதே தொடர்பில் இருவரையும் நல்லதாக அது இயக்குகின்றது.

ஆனால் பகைமையானால்… எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று வேக உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.
1.உணவு உட்கொள்ளும் பொழுது அது இயக்க மறுத்து புரையும் ஓடுகிறது.
2.வாகனங்களிலோ அல்லது நடந்து செல்லப்படும் பொழுது விபத்தாகிறது.

மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் எப்படி செல்ஃபோன்களில் இயக்கி நாம் ஃபோனில் தொடர்பு கொள்கின்றோமோ அதே போல் அந்தப் பதிவுகள் இயக்கப்பட்டு அந்த மனிதனுக்கும் சரி… நமக்கும் சரி… அதே இயக்க நிலை ஆகி தொல்லைகளுக்கு ஆளாகின்றோம்.

நமக்கும் அந்த வெறுப்புகள் கூடும் போது பள்ளம் மேடு தெரியாதபடி இயக்கி நமக்கும் விபத்துகள் ஏற்படக் காரணமாகி விடுகின்றது.

அல்லது நாம் மற்ற வேலைகளைச் செய்தோம் என்றால் சிந்தனையற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடுகின்றது. அவர்களுக்கும் அதே போன்று சிந்தனை இல்லாத செயல்களாக இயக்கி விடுகின்றது…
1.விபத்துகள் ஏற்படுவதற்கு இதுவே காரணம் ஆகி விடுகின்றது.
2.இது எல்லாம் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்த முந்தைய பதிவுகள்.

இது போன்ற முந்தைய வினைகள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்மிடம் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும்
1.நம் கண்ணின் பார்வை கொண்டு அந்த அழுத்தமான நிலைகளில் அதிகமாகச் செலுத்தச் செலுத்த
2.முந்தைய பாவ வினைகளோ தீய வினைகளோ சாப வினைகளோ பூர்வ ஜென்ம வினைகளோ எது இருப்பினும்
3.அதை எல்லாம் சிறுகச் சிறுக நம்மால் குறைக்க முடியும்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற ஊற்ற அந்த அழுக்கு நீர் எப்படி அது குறைவாகின்றதோ இதே போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து முந்தைய (தீமையான) பதிவுகளைத் தூய்மையாக்குதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி உடல் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை இணைக்கக்கூடிய முயற்சிகளை நாம் செயல்படுத்துதல் வேண்டும்…!

நாளுக்கு நாள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரும் ஊன்களாக நமக்குள் உருவாக்க வேண்டும். அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

இன்றைய உலக வாழ்க்கை கனவு தான்…!

 

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!
1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான்…! ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிராணவாயு (பிராணாயாமம்) என்று சொல்லிக் கட்டாயப்படுத்திச் சில பேர் மூச்சுப்பயிற்சி எடுத்து எடுத்து மனக்குழப்பங்களையும் நோய்களையும் தீமைகளையும் அடக்கிவிடலாம் என்று நினைப்பார்கள்.

ஒரு நாளும் அப்படி அடக்க முடியாது.

தூக்கத்திற்குத் தூக்க மருந்து கொடுப்பார்கள் அல்லவா…? அந்த மாதிரித் தான் மூச்சுப்பயிற்சி கொடுத்து… வட கிளை தென் கிளையைச் சேர்…! என்பார்கள்.

இந்த உணர்வின் தன்மை போதை மருந்து ஏற்றியதுபோல் கொஞ்ச நேரம் இருக்கும்.

எப்படி…?

ஒருவர் சொல்லியிருப்பார் அல்லது புத்தக வடிவில் கொடுத்திருப்பார்கள். அதைப் படித்துவிட்டு
1.“நீ இந்த மாதிரிச் செய்தால் நன்றாக இருப்பாய்” என்று அந்த உணர்வு எடுத்தவுடனே
2.அவன் வெளியிட்ட உணர்வுகளை எடுத்தவுடனே கொஞ்ச நேரத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.
3.”ஆகா… எனக்கு வேறு நினைப்பே வரவில்லை… மிகவும் ஆனந்தமாக உள்ளது… எதுவுமே வராது” என்று நினைப்பார்கள்.

பயிற்சியை முடித்துவிட்டு முழித்துப் பார்த்தபின் இவன் நினைவுதான் வரும். “அயோக்கியப் பயல்.. அந்த மாதிரிச் செய்தான் இந்த மாதிரிச் செய்தான்…” என்று அவனைப் பார்த்தவுடனே வரும்.

எங்கேயோ அந்தப் பக்கம் மிளகாயை அரைக்கின்றார்கள். அது காற்றில் பறந்து வந்தவுடன் நமக்குள் பட்டு எரிச்சலாகின்றது. அப்பொழுது நாம் இருக்கும் வீட்டை மாற்ற முடியுமா…?

இன்று மாற்றினால் நாளைக்கு இன்னொரு பக்கம் வந்தால் அப்புறம் எந்தப் பக்கம் மாற்றுவது…?

1.வரும் தூசிகளை உள்ளே வராது நாம் குறைத்து
2.பாதுகாப்பாக நாம் இருப்பதற்கு அடைப்புகளை வைக்க வேண்டும்.
3.அதனை வெளியிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
4.இந்த மாதிரி முறைகளை நாம் கையாண்டு பழகுதல் வேண்டும்.

இதைப் போன்றுதான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் வரும் அழுக்கினைப் போக்குவதற்காக குருநாதர் காட்டிய வழியில் “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்தது.

ஒவ்வொரு நிமிடமும் எந்தெந்த வகையில் நமக்குள் தீமைகள் வருகின்றதோ அதைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் பிள்ளையைப் படிக்க வைக்கின்றோம், அது சரியான நிலையில் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.

“இப்படி இருந்தால் என்ன செய்வது…?” என்று எண்ணுகின்றோம்.

அப்போது அந்த வேதனை உணர்வு நமக்குள் வரும்போது அவன் மேல் இருக்கக்கூடிய பாசத்தை மாற்றுகின்றது. அப்புறம் வெறுப்பு தான் வருகின்றது.

அப்போது நாம் பாசத்தை வளர்க்க வேண்டும் என்றால் நமக்குள் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நமக்குள் அந்த அருள் சக்திகளைச் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்து
1.அந்த வேதனைகளை நிறுத்திவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குழந்தை உடலில் படர வேண்டும்.
3.அது சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும்.
4.அது படிப்பில் ஆர்வம் வர வேண்டும்.
5.மூலத்தின் தன்மை அறியும் அந்த ஆற்றல் வேண்டும் என்று
6.இப்படி நாம் மனதில் எண்ணி இதைச் செய்ய வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து சுவாசித்து எடுத்து நீங்கள் சொல்லப்படும் பொழுது
1.கண்களாலும் பாய்கின்றது
2.சொல்லாலும் பாய்கின்றது சொல்லின் தன்மை செவியிலே படுகின்றது.
3.உணர்ச்சியின் தன்மை நீங்கள் பரப்பியது காற்றில் உள்ளது.
4.அப்பொழுது இதைக் கவரும் சக்தி வருகின்றது.

இப்போது நிலத்தில் நாம் ஒரு வித்தினை ஊன்றப்படும்போது பலவிதமான செடிகளை உருவாக்குகின்றது.

அதில் எதை எதை விஞ்ஞான அறிவோடு கலந்து கொண்டார்களோ எல்லாமே இந்தக் காற்றில் தூசிகளாக இருக்கின்றது. அதை எடுத்து அதே செடியாக வளருகின்றது.

அதைப்போல நாம் அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்க்க வேண்டும். அதே சமயத்தில் நம் குழந்தைகளுக்குள்ளும் இதை வளர்த்துப் பழக வேண்டும்.

மனித வாழ்க்கையில் இதைப் போன்று ஆத்ம சுத்தி என்பதைச் தெளிவாகச் செய்ய வேண்டும். எத்தகைய நிலை வந்தாலும் உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“ஆத்ம சுத்தி” என்பது மிகவும் முக்கியமானது.

குரு இட்ட கட்டளைப்படி தான் சேவை செய்து கொண்டிருக்கின்றேன் – ஞானகுரு

 

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான் நான் (ஞானகுரு) தியானம் இருக்கின்றேன்.
1.உங்கள் ஒவ்வொருவரது உயிரிலும் அந்த அருள் சக்தி படர வேண்டும் என்றும்
2.உயிர் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் அருள் ஞானம் பெருக வேண்டும் என்றும்
3.அரும் பெரும் சக்தியை ஊட்டிக் கொண்டுள்ளேன்.

காரணம் உங்கள் உடலில் இதற்கு முன் அறியாது சேர்ந்த தூசிகளைத் (தீமைகளை) துடைக்க வேண்டும் என்று “இதை ஒரு சேவையாக நான் செய்கின்றேன்… குருநாதர் இட்ட கட்டளைப்படி…!”

உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உடலைக் கோவிலாக மதிக்கின்றேன். நீங்களும் இதே போல உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… அந்த அருள் சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.

அதே சமயத்தில் நீங்களும் எல்லோரது உயிரையும் கடவுளாக மதித்து அவர்கள் உடலை ஆலயமாக மதித்து… அவர்களுக்கெல்லாம் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நமது குரு காட்டிய வழியில் செயல்படுத்தினால்… நம் உயிரை நாம் கடவுளாக மதித்தவர்களாகின்றோம்… நம் உடலை ஆலயமாக மதித்தவர்களாகின்றோம்.

இதைப் போன்று அனுதினமும் நீங்கள் எண்ணி வந்தால்
1,உங்கள் குடும்பங்களில் நல்ல நறுமணங்கள் படரும்… புதுப்புது மணங்கள் வரும்… உங்கள் சுவாசத்தில் அதை உணர முடியும்.
2.உங்கள் சுவாசத்தில் உயர்ந்த மணங்கள் வந்தால் சர்வ தீமைகளிலிருந்து விடுபட முடியும்…
3.நோய்களிலிருந்து விடுபட முடியும்… தோஷங்களில் இருந்து விடுபட முடியும்…!
4.துன்பமாக துயரமோ மற்ற நிலைகள் வராதபடி சிந்தித்துச் செயல்படக்கூடிய அருள் சக்திகளும் பெருகும்.

உங்களால் ஞானத்துடன் செயல்பட முடியும். உங்கள் உடலில் நல்ல அணுக்கள் உருவாகும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவீர்கள். மன பலம் பெறுவீர்கள் உடல் நலம் பெறுவீர்கள்.

ஆகவே குடும்பத்தில் கஷ்டம் என்று சொல்லாதீர்கள்… குறைகளை எண்ணாதீர்கள். ஏனென்றால் உடல் நலிந்தால் சிந்தனை குறையும். சிந்தனை குறைந்தால் செயல்கள் குறையும்… செயல் குறைந்தால் தொழில் மந்தமாகும்… பொருள்கள் வீணாகும். குடும்பத்திற்குள் பகைமையாகும்.

இதை போன்ற நிலையிலிருந்து எல்லாம் நீங்கள் விடுபட்டு அருள் வழி வாழுங்கள். தீமைகள் புகாது தடுத்துப் பழகுங்கள்.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உயிர் செயல்படுத்துகின்றது அந்த உணர்வை வைத்துத் தான் நீங்கள் செயல்பட முடியும்.

1.ஆகவே உங்கள் உயிரை மதித்துப் பழகுங்கள்
2.உங்கள் உடலுக்குள் அருள் உணர்வுகளைப் பெருக்குங்கள்.
3.உடலுக்குப் பின் இனி பிறவியில்லை என்ற நிலையை அடையுங்கள்.

இதுதான் மனிதனின் கடைசி நிலை…!

குருவின் துணை நமக்கு அவசியம் வேண்டும்

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.

1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும்… உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

அந்நிலை கொண்டு தான் இந்தக் கலியில் கண்ட பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகானந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும்
1.ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால்
2.அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்டிவும் முடியும்.

வளரும் முறையிலிருந்து தான் இந்நிலை எல்லாமே வருகின்றது. வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற்றிட முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.

1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்டிட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானத்தில் முழுமை அடைந்தாலும் நீங்கள் துருவ நட்சத்திரத்தை எண்ணும்போது உங்கள் ஆன்மாவில் என்ன செய்கின்றது…?

நீங்கள் “நான் சும்மாதான்… உட்கார்ந்திருக்கின்றேன்” என்று நினைப்பீர்கள்.

ஆனாலும் பிள்ளை படிக்கவில்லை என்றாலோ சுட்டித்தனச் செய்தாலோ அல்லது கடுமையான தவறுகளைச் செய்தாலோ பிள்ளை மேல் பாசம் அந்த நினைவு அதிகம் இருந்தால் “கஷ்டமாக” இருக்கும்.

அதே மாதிரி மற்றவருக்குப் பணம் கொடுத்திருப்போம். அப்படிக் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் அவன் நினைவு கண்டிப்பாக வரும்.

1.சும்மா இருக்கின்றான்… என்று அவனுக்கு இத்தனை உதவி செய்தேன்
2.என்னைப்பற்றி எப்படியெல்லாம் கேவலமாகப் பேசுகின்றான் பார்…! என்ற
3.இந்த உணர்ச்சிகள் தான் வரும்.

அப்பொழுது நீங்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து செய்த ஜெபமோ தியானமோ என்ன ஆகின்றது…? தியானத்தில் உட்கார்ந்தாலே இந்த நினைவுகள் நம்மை அலைக்கழிக்கும்.

இப்படிப்பட்ட நினைவுகள் வரும்போது உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

கண்களைத் திறந்து அந்த மாதிரி நினைவலைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்து எங்கள் அது உடலில் படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது யாருடைய நினைவுகளெல்லாம் வருகின்றதோ அவர்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று அதனுடன் இதைக் கலக்க வேண்டும்.

பிள்ளை நினைவு வரும்போது
1.அது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
2.நல்ல ஞானசக்தியும் ஞாபகசக்தியும் பெற வேண்டும்.
3.படிப்பு மேல் நல்ல நாட்டம் வேண்டும்.
4.சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் வேண்டும் என்று இதை எடுத்து இப்படித் தியானித்து விடுங்கள்.

எது..?

உங்களுக்குள் பல கலக்கங்கள் வரும்போது அதை மாற்றக்கூடிய திறன் இதை இப்படித்தான் எடுத்து வர வேண்டும்

நீங்கள் சும்மா உட்கார்ந்து இருந்தால் சில நேரம் இந்த மாதிரி உணர்வுகள் “கிர்…ரென்று” இழுக்கும் அது தன் உணர்ச்சியைத் தூண்டி அவ்வாறு எடுக்கும்.

மீண்டும் நாம் ஆத்ம சுத்தி என்ற நிலையில் அருள் சக்திகளை நமக்குள் செலுத்தி எந்த உணர்வின் சக்தியோ அதைச் சேர்த்து நாம் இணைத்தல் வேண்டும்.

“இதைக் கலந்து இப்படி மாற்ற வேண்டும்…” (இல்லையென்றால் தியானத்தில் உட்கார்ந்து மீட்டிய உடனே கொஞ்ச நேரம் அடங்கும்… மறுபடியும் கிளர்ந்தெழும்).

உயிரின் இயக்கத்தைப் (வெப்பத்தை) பயன்படுத்த நமக்கு ஒரு பயிற்சி தேவை

 

1.உயிரிலே எது பட்டாலும் அதைத்தான் அது இயக்குகின்றது,,, அதைத் தான் இயக்கும்…!
2.அது தன்னிச்சையாக எதுவும் செயல்படுத்தாது

ஒரு நெருப்பை வைத்தோம் என்றால் அது தன்னிச்சையாக சமைக்குமா என்றால் இல்லை. நெருப்பை வைத்து… அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து… அதில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அதைத்தான் அது சமைக்கின்றது.

இதைப் போன்று தான்
1.“வெப்பத்தின் உணர்வு கொண்ட நமது உயிர்…”
2.அதில் இருக்கக்கூடிய காந்தம் எதைக் கவர்கின்றதோ சுவாசிக்கின்றதோ
3.அந்த உணர்ச்சியின் செயலே செயல்படுத்துகின்றது
4.அந்த உணர்வுக்கொப்பதான் வாழ்க்கை அமைகின்றது
5.இந்த உணர்ச்சிக்கொப்பதான் நாதங்களை எழுப்புகிறது.
6.உணர்ச்சிக்கொப்பத்தான் எண்ணம் சொல் செயல் என்று இயக்குகின்றது.

உயிரே கடவுள் என்றாலும் மிருக நிலையிலிருந்து ஆறாவது அறிவு கொண்டு மனிதனாக எப்பொழுது முழுமை பெற்றானோ… முழு முதல் கடவுள். தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெற்றவன் என்று விநாயகனைப் போட்டு மனிதனுக்குள் இருக்கும் சக்திகளைக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நீக்கி… தீமைகளை நீக்கிடும் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது உயிர் தான்.

ஆகவே அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்…! அருள் மகரிஷிகளின் உணர்வுகளை யாம் (ஞானகுரு) ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது மீண்டும் அதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறலாம்… தீமைகளை அகற்றலாம்.

இதற்கு பயிற்சி அவசியம் தேவை.

ஒரு தையல் மிஷினில் அமர்ந்த உடனே துணியைத் தைத்து விட முடியுமா…? சமையல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சமைக்கத் தெரியாதபடி உணவைச் சுவையாகக் கொண்டு வர முடியுமா…?

எல்லாக் காய்களையும் போட்டாலும் அது பக்குவப்படுத்தி வைத்தால் தான் அந்தக் குழம்பு ருசியாக இருக்கும்.

வெறும் சோறை ஆக்க வேண்டும் என்றாலும் கூட நெருப்பைத் திகு திகு… என்று எரித்துவிட்டு அதிலே அரிசியைப் போட்டால்
1.அதில் வைக்கக்கூடிய நெருப்பின் அளவுகோல்படி ஒரு பக்கம் அரிசி வேகும்.
2.அடியில் இருப்பது கருகிவிடும். மேலே இருப்பது வேகாது இருக்கும்.
3.கருகிய அரிசி மேலே சென்ற பின் அந்தச் சமையலே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

இந்த நெருப்பின் அளவுகோல் மாறினால் அரிசியின் வேக்காடும் மாறிவிடும்.

“ஆகவே எதிலுமே பக்குவம் தேவை…”

யாம் சொல்லும் இந்த தியானத்தின் மூலம் பக்குவப்படுத்தக்கூடிய முறைகளைப் பழகிக் கொண்டால் தீமைகளை மாற்றி அமைக்கும் பழக்கம் வந்துவிடும்.

தையல் வேலை தெரிந்தவர்கள் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே துணிகளைக் கத்திரித்து அதைச் சீராகத் தைப்பது போன்று
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பயன்படுத்தப் பழகிக் கொண்டால்
2.தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல் இயற்கையாக நமக்குள் வந்துவிடுகிறது

எலக்ட்ரிக்… எலக்ட்ரான்…! எதனின் அழுத்தம் அதிகமாகிறதோ அதன் நிலைக்கே வருகிறது. சங்கடம் சங்கடம் என்ற இந்த அழுத்தம் அதிகமாகி விட்டால் நமக்கு முன்னாடி அதுவே எலக்ட்ரானிக்காக இருக்கின்றது.

தீமை என்ற உணர்வு எலக்ட்ரானிக்காக மாறிவிட்டால் அது நன்மைகளை நமக்குள் விடுவதில்லை. ஆனால் தீமைகளை நீக்கிய அருள் உணர்வுகளை நமக்கு முன்னாடி வைத்து… தீமை என்ற உணர்வு உள்ளே புகாதபடி நன்மையின் உணர்வுகளாக… அந்த எலக்ட்ரானிக்காக மாற்ற வேண்டும்.

உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகரும் உணர்வுகள் சந்தர்ப்பத்தில் நமக்குள் பதிவான நிலை கொண்டு எலக்ட்ரானிக்…
1.வேதனை வெறுப்பு குரோதம் கோபம் என்ற உணர்வின் அழுத்தம் அதிகமானால்
2.மனிதன் எவ்வளவு தான் நல்லது செய்ய வேண்டும் என்று நல்ல உணர்ச்சிகள் ஆனாலும் அதைச் செயல்படுத்த முடியாது போய்விடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை மாற்ற ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… மகிழ்ந்து வாழ்வோம்… பிறவி இல்லா நிலை அடைவோம்.

இது தான் மனிதனின் கடைசி நிலை.

அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா இல்லை அடைந்தானோ… உயிருடன் ஒன்றி ஒளியாக மாறினானோ… அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
1.இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.

வாழும் வரை வாழலாம் என்றால் வாழ்ந்தபின் என்ன நிலை…?

 

இந்த மனிதப் பிறவி எடுக்க அவ்வாண்டவனின் சக்தியில் பல நாள் தவமிருந்து நாம் பெற்றதே இப்பாக்கியம்.

ஆனால் நாம் எடுத்த மனிதப் பிறவியையே பெரும் பயத்துடனும் கலக்கத்துடனும் வாழ் நாட்களை வீணடித்துக் கொண்டு வாழ்கின்றோம்.

நாம் எடுத்த பிறப்பின் பயனைப் பெறுவது என்பது நம் வாழ் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவது தான்…!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயத்தை ஆண்டவன் சக்தியிலிருந்து பெற்றுள்ளான். மனிதப் பிறவி எப்பொழுது எடுத்துள்ளோமோ அப்பொழுதே அந்த ஆண்டவனின் “பரிபூரண சக்தி” பெற்றவர்களாகத்தான் தாயின் கருவுக்கே வந்து உதிக்கின்றோம்.

இந்த நல்ல நிலையில் வந்தவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வாழ்ந்திடாமல்
1.பெரும் பேராசை நிலை கொண்டு பல விஞ்ஞான ரூபங்கள் எடுத்து
2.கடைசியில் தன்னைத் தானே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள் (இன்றைய உலக நிலை இது தான்).

விஞ்ஞான ரூபத்தில் வந்த மனிதர்கள் எல்லாம் தன்னுள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவ்விஞ்ஞானத்தையே வெல்லும் மெய் ஞானத்தைக் கண்டிடலாம்.

கூடுவிட்டுக் கூடு பாய்கின்றார்கள் சித்தர்கள்… என்றெல்லாம் கதைகளாகவும் காலப்போக்கிற்காகவும் படிக்கின்றார்கள். ஆக இன்றைய மனிதர்களின் குண நிலையெல்லாம்… பெரும் உல்லாசத்தைக் காணும் குணமாகவே உள்ளது…!

கனவும் நினைவும் உள்ள காலமாக உள்ளதப்பா இந்தக் காலம்.
1.கருத்துடன் நமக்குப் பல பெரியோர்கள் போதித்த கருத்தையெல்லாம்
2.தன் உல்லாச வாழ்க்கைக்காக வியாபாரமாக்கத்தான் தெரிந்தது
3.தன்னுள் இருக்கும் உண்மை நிலைகளை வீண் விரயமாக்கி வாழ்கிறார்கள்.

“வாழும் வரை வாழலாம்…!” என்ற எண்ணம் தான் மக்களின் மனதிலே பதிந்துள்ளது. இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு “அழியாத ஆத்மா” எப்படியெல்லாம் வட்டமிட்டுக் கொண்டுள்ளது…? என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை.
1.எண்ணிப் பார்ப்பதில்லை என்றால்
2.எண்ணத்தில் பயம் வருவதால் தான் எண்ணிப் பார்ப்பதில்லை…!

இன்றுள்ள நிலையில் நமக்குத் தெரிந்த ஒரே வழி… அச்சக்தியின் நிலை கொண்டு சகல ஜீவராசிகளையும் காத்து வாழ்ந்திட… அவ் ஈஸ்வர ஜெபம் இருப்பது ஒன்றே தான்.

அச்சக்தியின் நிலை கொண்டு ஒவ்வொருவரும் இந்த உலகில் உள்ள பல கோடி உண்மை நிலைகளைத் தன்னுள் ஈர்க்க முடியும்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…! என்று நம் முன்னோர்கள் சொல்லவில்லையா…! “எந்நிலையும் ஜெயம் கொண்டு வாழ்ந்து காட்டிட வேண்டுமப்பா…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றாட வாழ்க்கையில் எல்லாவற்றையும் நாம் நல்ல குணத்தோடு தான் பார்க்கின்றோம். ஆனால் பிறரின் தீமையான உணர்வுகள் நமக்குள் சிறு திரையாகிவிடுகின்றது.

அப்பொழுது நம் நல்ல குணத்தை அது மறைத்துவிடுகின்றது அல்லவா? அந்தச் சித்திரையை நீக்க வேண்டுமா… இல்லையா…?

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும்.
4.எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
5.நாம் இதை எண்ணும் பொழுது அந்தத் திரையை நீக்கிவிடலாம்.

இப்படி நம்மைத் தெளியச் செய்வதற்கு… தெரியச் செய்வதற்கு… எத்தனையோ உபாயங்களைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். ஒவ்வொரு மாதங்களிலும் நாம் அந்த அருள் சக்தியை எடுக்கும் முறைப்படுத்தியுள்ளார்கள்,

ஆக… நாம் சுவாசித்து எடுக்கும் நிலைகள் நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…? தீமைகள் வந்தால் அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களின்படி நாம் சென்றால் அவர்கள் அடைந்த எல்லையை அடைவது மிகவும் எளிதானது.

ஆறாவது அறிவை வைத்து நாம் உருவாக்க வேண்டியது எதை…?

 

மனிதனின் ஆறாவது அறிவைப் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று சொல்வார்கள். காரணம் நாம் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள். ஆறாவது அறிவு கொண்டு இன்று…
1.எத்தனையோ உயிரினங்களை உருவாக்கியுள்ளோம்
2.மிருக இனங்களை மாற்றியுள்ளோம்…
3.எத்தனையோ தாவர இனங்களை மாற்றி உள்ளோம்…
4.எத்தனையோ இயந்திரங்களையும் உருவாக்கி உள்ளோம்.

ஆனாலும் இந்த மனித வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் உதாரணமாகக் கோப உணர்வுகளை அதிகமாக நுகர நேர்ந்தால்… அந்தக் கார உணர்ச்சிகள் நம் உடலிலே இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

அந்தச் சந்தர்ப்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்தத் தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

அதைத்தான் ஓ…ம் என்ற பிரணவத்தை முருகன் சிவனுக்கே ஓதினான்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அதாவது…
1.கோபப்படுவோர் உணர்வுகளை நுகர்ந்தால் அது ஓங்கார உணர்வாக இயக்கினாலும்
2.அந்த ஓங்காரத்தை அடக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
3.நம் புருவ மத்தியில் எண்ணினால் கோப உணர்வுகளை இது தடைப்படுத்திவிடுகிறது.

அடுத்து அந்த உணர்வை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
1.எங்கே நம் கண்ணின் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்கியதோ
2.மீண்டும் அதைப் பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அதே இடத்தில் பதிவாகின்றது
3.அந்தக் கோபம் என்ற ஓங்காரத்தைத் தடைப்படுத்தி விடுகின்றது.

நம்முடைய வாழ்க்கையில் இதற்கு முன்னாடி எத்தனையோ தீமைகள் உடலிலே சேர்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் வரக்கூடிய வேதனை வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் பாய்ச்சாதபடி… தனக்குள் உருவாகாதபடி… அதை எல்லாம் தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவாற்றலைப் பெருக்குவதற்கு தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

தியானம் என்றால் என்ன…?

திட்டியவனை நாம் மீண்டும் மீண்டும் எண்ணுகின்றோம்… அதுவும் தியானம் தான். என்னைத் திட்டினால் அவனைச் சும்மா விடுவதா… அவனை விடக்கூடாது…? என்று எண்ணினால் அந்தக் கோப உணர்வுகளை நமக்குள் அது எப்படி மீண்டும் மீண்டும் தூண்டுகின்றதோ அதுவும் தியானம் தான். இவை எல்லாம் நமக்குத் தீமை செய்யக்கூடியது.

ஆனால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணத்தால் எண்ணி
2.நமக்குள் மீண்டும் மீண்டும் எடுத்து வளர்த்துக் கொண்டால் இந்தத் தியானம் நமக்குள் பல நன்மைகளைச் செய்கின்றது.

குருநாதர் அனைத்தையும் அறிந்தார்… அவருக்குள் விளைய வைத்தார்… எனக்குள் பதிவு செய்தார். குரு காட்டிய அருள் வழியில் நான் எனக்குள் விளைய வைத்தேன் உங்களுக்குள் அந்த நல்ல ஞான வித்தைப் பதிவாக்குகின்றேன்.

இந்தப் பதிவை நினைவாக்கினால் உங்கள் ஞானத்தால் தீமைகளைப் போக்க முடியும். உங்களைக் காத்துக் கொள்ள முடியும் யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று எண்ண வேண்டாம்.

ஆகவே ஆறாவது அறிவால் உங்களுக்குள் ஒளியான உணர்வுகளை உருவாக்க முடியும்.

மனிதன் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் தெளிந்து வாழலாம்.

இவ்வுலகில் வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவும் இல்லை

 

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

1.நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்…
2.நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…!
3.இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது. எண்ணத்தால் உருவாக்கப்பட்டதுதான் இராமேஸ்வரம் என்று இந்த உடலைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

பரம் என்பது இந்த மனித உடல் ஒரு தீவு.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும்… விடுபட வேண்டும்… விடுபட வேண்டும்… என்ற உணர்வால்
1.தீமைகளை நீக்கக்கூடிய உடல் அமைப்பைப் பெற்று
2.இந்த எண்ணத்தால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உடல் என்கின்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்த நிலையில் கடைசியிலே இன்று (மனித உடலில்) நாம் இருக்கின்றோம்.

அதனால் கடலோரத்தில் கரையைக் காட்டுகின்றார்கள். நாம் பெருங்கடலான நிலைகள் இன்று கடைசிக் கரையாக இருக்கின்றது.

நாம் எத்தனை வகையான உடல்களைப் பெற்றிருக்கின்றோம்…? எண்ணத்தால் உருவாக்கப்பட்ட பரம் இந்த உடல் என்ற நிலைகளில் இங்கே தெளிவாகக் கூறப்படுகின்றது.

இராமேஸ்வரம் அதுதான் கோடிக்கரை. நாம் எத்தனையோ உடல்கள் எடுத்து கடைசிக் கரையாக இருக்கின்றோம்.

இதைத்தான் தனுஷ்கோடி நாம் மனிதனாக வரும்போது எத்தனையோ உடல்கள் எடுத்துத் தீமை என்பதைத் தெரிந்து கொண்டோம்.

நாம் ஆத்மசுத்தி செய்யச் சொல்கின்றோம் அல்லவா.

வேதனை என்ற உணர்வு வந்தால் உடனே துருவ நட்சத்திரத்தின் அந்த பேரருள் பேரொளியை எடுத்து “அந்த தனுசைக் கொண்டு” இதை நீக்குதல் வேண்டும். இது விஷ்ணு தனுசு.

1.என்னை வேதனைப்படுத்தினான் என்றால் சிவ தனுசு.
2.அப்பொழுது அவன் உணர்வை நாம் நுகர்கின்றோம்.
3.இப்படி நம் வாழ்க்கையில் வரக்கூடிய உணர்வு ஒவ்வொன்றையும் மாற்றுவதற்காக வேண்டி தனுசுக்கோடி.

எத்தனையோ வகையான கோடி உடல்களை எடுத்தோம் கோடிக்கரை. எல்லாவற்றிலிருந்தும் தீமைகளை நீக்குவதற்கான திறன் பெற்றது கோடிக்கரை மனிதன்.

நாம் மனிதனின் வாழ்க்கையில் இருந்து தனுசு கோடி. அதாவது ஒவ்வொரு நிமிடத்திலும் (பல கோடி உணர்வுகளை) இதை வென்றவன் அகஸ்தியன் ஒளியானான்… துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றான்.

அதன் உணர்வு நாம் எடுத்துத் தீமைகளை நீக்கினால் விஷ்ணு தனுசு. இதை நாம் சேர்க்க வேண்டும்.

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் வாழ்கின்றோம். அப்பொழுது அதற்குள் மனதை ஒன்றாக்க வேண்டும்.

ஆனால் “என் பிள்ளைகள் இப்படி இருக்கின்றதே… என் தொழில்கள் இப்படி இருக்கின்றதே.., இதுவெல்லாம் என்ன ஆகுமோ…?” என்று கலக்கமானால் வேதனை என்ற உணர்வே வருகின்றது.

அதே மாதிரி “நான் ஒருவருக்கு உதவி செய்தேன் அவன் எனக்கு இப்படித் தீமை செய்கின்றானே…” என்று எண்ணினால் இங்கே நமக்குள் கலக்கம் அடைகின்றது. மனது வேதனைப்படுகின்றது.

நம் உடலுக்குள் பல போர் முறைகள் வருகின்றது. நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் இந்த உடலிலும் அந்தத் தீமையின் நிலைகள் வளர்த்து வரும்போது
1.அதற்குச் சாப்பாடு தேவை.
2.அது கிளர்ச்சி செய்து நமக்குள் என்ன செய்யும்…?
3.அந்த வேதனையை உயிருக்குக் கொண்டு வருகின்றது.

அப்போது அந்த வேதனை என்ற உணர்வு வரும்போது கண் கவருகின்றது. சுவாசித்து அது உள்ளே வரும். அப்போது என்ன செய்கின்றது…?

“அம்மா…ஆ… அம்மா…ஆ…” என்று சொன்னால் அந்த வேதனை உணர்வை எடுத்து மற்றதை அடக்கிவிட்டு உள்ளுக்குள் இது விலகி விடுகின்றது.

கொஞ்ச நேரம் விட்டுவிட்டால் இது என்ன செய்யும்…? அதற்குச் சாப்பாடு கொடுத்தால் சிறிது நேரம் அமைதியாக இருக்கும். நீங்கள் வேதனையாகச் சொல்லிப் பாருங்கள். அடங்கும்.

ஆனால் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து பாருங்கள்.

மறுபடியும் “அம்மா…ஆ அம்மா…ஆ…” என்று கத்தச் சொல்லும். அப்போது எது வளருகின்றது..? அதற்கு அது சாப்பாடு.

நன்றாக யோசித்துப் பாருங்கள்.

அப்போது இந்த மாதிரி நேரங்களில் அதனின் உணர்ச்சிகள் எதிலே விளைகின்றது?

அதன் உணர்வுகள் வித்தாக வளர்ந்து கனியாகிவிட்டால் என்ன செய்கின்றது…? நமக்குள் அடுத்த பிறவிக்குத் தயாராக அதாவது சிவ தனுசாக மாறுகின்றது.

ஆகவே நாம் இந்தெந்த நேரங்களில் எல்லாம் அந்த விஷ்ணு தனுசை எடுத்து நமக்குள் அதைப் பாய்ச்சி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்.

அதை நமக்குள் வராது தடுக்க வேண்டும்.

என் குழந்தைக்கு கல்வியில் ஞானம் பெற வேண்டும். உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று இங்கே நமக்குள் “மனதை ஒன்றாகச் சேர்க்க வேண்டும்”.

நம்மை யாராவது திட்டினார்கள் என்றால் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும். பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நம் மனதிற்குள் (நமக்குள்) அவன் உணர்வுகள் விடாதபடி தடுக்க வேண்டும். அப்பொழுது நமக்குள் வராது.

1.அவரவர்கள் எடுத்தது அவரவர்களுக்குத்தான்.
2.திருந்தி வாழ்ந்தால் வாழ்கிறார்கள்.
3.திருந்தி வாழவில்லை என்றால் அவர்கள் உடலில் அது விளைகின்றது.
4.அப்புறம் அது அனுபவித்துத்தான் வரவேண்டும்.
5.ஆகையினாலே நம்மைப் பாதுகாக்கின்றோம்.

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன். நாம் இந்த உணர்வின் தன்மையை எடுக்க வேண்டும்.

ருத்ர தாண்டவம்…

 

உதாரணமாக கோப குணத்தை நாம் நுகர்ந்து விட்டால் உடலுக்குள் என்ன நடக்கிறது…?

ஒரு மிளகாயை வாயிலே போட்ட பின் நாம் எப்படி அலறுகின்றோமோ இதைப் போல் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் அதே உணர்ச்சிகளைத் தூண்டும்.

அதைத் தாங்காத நிலைகள் கொண்டு அந்தக் கார உணர்வுகள் அதிகமானால் இந்த அணுக்கள் அந்தக் காரத்தையே ஏற்று காரமான மலத்தை அது வெளிப்படுத்தும் தன்மை வருகிறது.

இப்படி நமது வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து வந்தாலும்
1.கோபத்தின் உணர்வு கொண்டு கோப (கார) உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது
2.நரம்பு மண்டலங்களில் அதனுடைய இயக்கம் நாளுக்கு நாள் சேர்ந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
3.அப்பொழுது நம்முடைய உடல் அங்கங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இந்த உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விட்டால் அந்த உணர்ச்சிகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி… இந்த உணர்வின் இயக்கம் நரம்பு மண்டலங்களில் மாற்றப்படும் பொழுது “கை கால் அங்கங்களைச் சுருக்கி விடுகின்றது…”

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் அந்தக் கோப குணம் உடலை எப்படிப் பாதிக்கின்றது என்பதைக் காட்டுவதற்காகக் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.

புலி எப்படி இரக்கமற்று மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுகின்றதோ அதே போல
1.பிறிதொருவர் மீது வெறுப்புகள் வரப்படும் பொழுது
2.அந்தக் கார உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது
3.சிந்தனை அற்றவனாக ஆக்கி வெறித் தன்மை கொண்டு இயக்கப்பட்டுவிடுகிறது.

நண்பனாகப் பழகினாலும் கூட தான் எண்ணிய வழி அவன் சரியான நிலைகளில் வரவில்லை என்றால் ஆத்திரங்கள் அங்கேயும் வருகின்றது.

ஆத்திரம் அதிகரிக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. யாரைப் பார்த்து இந்த உணர்வைச் சேர்க்கின்றோமோ “தாக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை உண்டாக்கிடுகின்றது.

ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கின்றது…?

தாக்குபவனின் உணர்வுகளும் தாக்கப்பட்டவனின் உணர்வுகளும் அங்கே அவர்களுக்கு முன்னாடி இருக்கின்றது. அந்தக் கார உணர்ச்சிகள் உயிரிலே மோதினால் அது நம் உடலில் காளியாக மாறுகின்றது.

உயிரிலே மோதப்படும் போது அதே வேக உணர்வுகள் மோதியவுடனே உடலை இயக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் “சிவன் – ருத்ர தாண்டவம் ஆடுகிறான்…” என்று காட்டினார்கள்.
1.ஆக… நாம் ஆடுகின்றோமா…!
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை ஆட்டுவிக்கின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தாக்கப்படுபவன் நண்பனாக இருக்கும் பட்சத்தில்… அவன் மீது அன்பைச் செலுத்தி அவன் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவன் படும் வேதனை நம்மை இயக்குகின்றது. ஆஅனால் வேதனை என்பதே விஷம்.

நண்பனைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு எதிராளி தாக்குகின்றான். நண்பனின் வேதனையை நுகர்ந்து விஷத்தின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் நமக்குள் என்ன நடக்கிறது…?

காற்று மண்டலத்தில் சில செடி கொடிகள் விஷத்தின் தன்மை கொண்டதாக இருக்கும். அந்தச் செடி கொடிகள் உமிழ்த்தும் மணங்கள் காற்றில் கலந்து வருவதை நாம் சுவாசித்தால் நமக்கு மயக்கம் வருகின்றது.

அதைப் போல் நண்பனின் வேதனையை நாம் சுவாசித்தவுடன் உடல் முழுவதும் பரவி சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.

சிந்தனை இழந்த பின் யார் மீது பற்று இருக்கின்றதோ அவனைத் தாக்குவோர் மீது எதிர் நிலையாகி “அவரைத் தாக்க வேண்டும்…” என்ற வேக உணர்வு வருகின்றது.

வேதனை வரும் பொழுது “முதலில்” சிந்தனையை இழக்கச் செய்கின்றது… சோர்வடையச் செய்கின்றது. ஆனால் கார (கோப) உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது விஷமும் கார உணர்வுகளும் வேக நிலையில் கலந்து ஏதிராளியைத் தாக்கும் உணர்ச்சிகளே நமக்குள் கூடுகின்றது.

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் நண்பருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தான் வாழ்க்கையில் நடக்கின்றது.

நமக்கு வேண்டியவரை ஒருவர் தாக்கி விட்டால் நமக்கு எப்படி இருக்கும்…? வேதனைப்படும்போது அலறுகின்றோம். ஏன் எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை..! ஆனால் தாக்கிவிட்டான் என்று அடுத்தவன் மீது கோபப்படுகின்றோம்.

இப்படி… நமது வாழ்க்கையில்
1.நாம் தவறு செய்வதும்…
2.நாம் தவறு செய்யாமல் இருப்பதும்…
3.நம்மைத் தவறு செய்ய வைப்பதும்… “பிறருடைய நிலைகளை வைத்துத் தான்…”

இந்த உணர்வுகள் அணுக்களாக மாறி விட்டால் உணர்ச்சிகளைத் தூண்டிக் கண் வழி கவர்ந்து உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்திலே கலந்து விடுகின்றது… தீமைகளாக விளைகின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா…!

சித்தர்களின் சுவாச நிலை போல் நம் சுவாச நிலையும் இருத்தல் வேண்டும்

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூட வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“திரவகத்தை ஊற்றினால்தான்…” தங்கத்தில் உள்ள அசுத்தங்கள் பிரியும் – துருவ நட்சத்திரத்தை எடுத்தால் தான் தீமைகளைப் பிரிக்க முடியும்

நம் வாழ்க்கையில் நாம் எந்தத் தொழில் செய்தாலும் எந்த வேலை பார்த்தாலும் எந்த நிலையிலிருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியையும் ஆத்ம சுத்தியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதைச் செய்யவில்லையென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற முடியாத தகுதியற்றவராக மாற்றிவிடும்.

துருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்கு முன் இருக்கும். அதை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

தங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது.

அதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.

1.ஆனால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே
2.அதிலுள்ள செம்பு பித்தளை, வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு
3.நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன் என்றால் எப்படி முடியும்…?

அது முடியாது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர நேர்கின்றது. அறிய நேர்கின்றது.

1.நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து
2.அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது.
3.பின் இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ
4.அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.

அது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும். பின் உடல் நோயாகி மன நோயாகும்.

அத்தகைய தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமா வேண்டாமா…?

சாமி செய்யுமா…! சாமியார் செய்வாரா…! ஜாதகம் காப்பாற்றுமா…! சிந்தித்துப் பாருங்கள்.

நாம் எதை எண்ணிச் சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்குவது நம் உயிரின் வேலை. “அவனன்றி அணுவும் அசையாது”.

எது எப்படி இருந்தாலும் அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி நாம் உள் புறமாகக் கொண்டுபோய் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.

இல்லையென்றால் நமக்குள் அந்தத் தீமையின் விளைவை அதிகமாகிவிடும்.

நம்மால் மற்றவர்கள் தீமைகள் அகல வேண்டுமே தவிர… அவர்கள் தீமைகள் நம்மை மாற்றிவிடக் கூடாது

 

கோடிக் கோடி சொத்துக்கள் தேடி வைத்தாலும் பொறாமை உணர்வு வந்து… “அவன் அப்படிச் செய்கின்றான்… இவன் இப்படிச் செய்கிறான்…!” என்று விரோதிகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்கிறோம்… பகைமைகளைத் தான் உருவாக்கிக் கொள்கின்றோம்.
1.பகைமை உணர்வுகளை உடலுக்குள் சேர்த்துப் பகைமை உணர்வோடு தான் வாழ்கின்றோம்
2.துடிப்பும் துயரமும் தொல்லையும் தான் நம் உடலுக்குள் வருகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.

வெளியிலே சென்றாலும் எத்தகைய துயரங்களைக் கேட்டாலும் தீமைகளைப் பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதனின் வலுவை வைத்து அவைகளை அடக்கிப் பழக வேண்டும்.

யார் மேல் பகைமை ஆனதோ… அறியாத இருள்களிலிருந்து அவர்கள் மீள வேண்டும்… பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலில் படர்ந்து அவர்கள் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் நோய்கள் நீங்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

தொழில் செய்யும் இடங்களில் குற்றம் குறைகள் இருந்தாலும்
1.ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.அவர்களும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.உண்மையின் உணர்வை அறிய வேண்டும்
4.அவர்கள் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணி நாம் இதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

தொழில் செய்யும் இடங்களில் ஒருவருக்கொருவர் வரும் பகைமைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும் “ஈஸ்வரா…” என்று எண்ணி… துருவ நட்சத்திரத்தின் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்தி அந்தக் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும் அது உடல் நலம் பெற வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

முதலில் அந்தச் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் அங்கே பாய்ச்ச வேண்டும்… நோய் அகலும்.
1.உங்களால் அவர்கள் நோய் போக வேண்டும்
2.அவர்கள் நோய் உங்களுக்கு வரக்கூடாது.

அதற்குத்தான் இந்த அருள் வாக்குகளைக் கொடுத்து ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குப் பாதுகாப்பான நிலைகள் கிடைக்கும்படி செய்கின்றோம் (ஞானகுரு). உலக விஷத்தன்மைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கும் இது உங்களுக்கு உதவும்.

முன் ஜென்மத் தொடர்ச்சி தான்… இன்றைய வாழ்க்கை

 

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ வருவதல்ல அந்தக் குண நிலைகள் எல்லாம்…!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும் கோப நிலையில் உள்ளதும் மற்ற எல்லாமே.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அவ்வாண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவ்வாண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ உடல்களைக் கடந்து வந்த பின் மனிதனை உருவாக்கியதனால் “இந்தப் பிள்ளை யார்…?” என்று கேள்விக்குறி வைத்துச் சிந்திக்கச் செய்கின்றார்கள்.

எதற்காக வேண்டி இப்படிச் சிந்தனை செய்யும்படி வைத்துள்ளார்கள்…?

1.எனது உடல்
2.எனது பிள்ளை
3.என்னுடையது என்று தான் நாம் நினைக்கின்றோம்.

அப்பொழுது இந்தப் பிள்ளை யார்…?

உயிரால் உருவாக்கப்பட்ட அந்தப் பிள்ளை. ஏனென்றால் அந்த உயிர் தான் நம்மை உருவாக்கியது.

“இந்தப் பிள்ளை யார்…!” என்றால் நாம் யாரால் அதை அறிகின்றோம்…? ஆறாவது அறிவு கொண்ட கார்த்திகேயனால் அறிகின்றோம்.

இந்தப் பிள்ளை யார் என்ற வகையில் கேள்விக்குறியைப் போட்டுச் சிந்திக்கப்படும்போது நம் வாழ்க்கையில் எப்படிச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்…? எதன் வழிகளிலே நாம் வளர வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஏனென்றால் இந்த உயிர்தான் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.
1.ஆகவே அந்த உயிரோட பிள்ளை தான்.
2.அந்த உணர்வு தான் நாம்…!

இப்பொழுது கோபம் என்ற உணர்வு வந்துவிட்டால் அது நானாகி விடும்… நாம் கோபக்காரனாகி விடுவோம்.

அடிக்கடி நான் வேதனை என்ற உணர்வை எடுத்தேன் என்றால் அந்த நான் ஆகின்றது. அப்போது நானாகப்போகும்போது வளர்ச்சியில் கனியாகிவிடுகின்றது.

கனியான பின் அந்த வேதனைப்படும் உணர்வைத்தான் நான் சொல்வேன். அதை மீண்டும் நான் சொல்லப்படும்போது என்ன ஆகின்றது…?

கனியாகிவிட்டால் அந்த வித்து நமக்குள் முளைத்தே தான் ஆகும். முளைத்து அந்த வேதனைப்படும் நிலையை உருவாக்கிவிடும். அப்பொழுது இதை மாற்ற வேண்டுமல்லவா…?

உங்களுக்குள் யாம் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று சொல்லி உங்கள் உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அது எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உடலில் செலுத்தும்போது
1.விஷத்தின் தன்மையான வேதனைகளையும் கஷ்டங்களையும் வேக வைத்து
2.அதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.
3.அந்த உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டு வரும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள்ளே சேர்த்தோம் என்றால் தீமை செய்யும் எண்ணங்களை அழித்துவிடும்.

தீமையான உணர்வுகளை இப்படி எண்ணி வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைத்தோம் என்றால் பிறர் தீமைகள் நமக்குள் விளையாமல் தடுக்க முடியும்.

இந்த உணர்வுகள் வளர வளர உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக முடியும். அப்படிச் சென்றவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.

அந்த எல்லையை நாம் அடைய முடியும்.

இந்த உடலைக் கழட்டிவிட்டு விட வேண்டும்

 

இன்றைய சூழ்நிலையில்… வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து எடுத்துப் பழக வேண்டும். தனுஷ்கோடி…! அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

காரணம்… நாம் கோடிக்கரையில் (மனிதப் பிறவியின் கடைசியில்) இருக்கின்றோம். இதை விட்டுச் சென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.
3.“உடலைக் கழட்டிவிட்டு விடுகின்றோம்…!”

ஏனென்றால் இந்த உடலிலிருந்து மீண்டும் இன்னொரு உடல் பெறுவதற்குப் பதிலாக இந்த உடலில் இருக்கும் பொழுதே உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.

இன்றைய உலகில்
1.விஞ்ஞான வழியில் எத்தனையோ கடும் விளைவுகள் வந்து கொண்டிருக்கின்றது
2.விஷமான உணர்வுகளும் பரவிக் கொண்டுள்ளது
3.”புதிய புதிய வைரஸ்களும்” அதிக அளவில் பரவிக் கொண்டே உள்ளது.

தீமையான உணர்வுகளை வளர்க்கும் சில குடும்பங்களிலோ ஊர்களிலோ இது அதிகமாகப் பரவுகின்றது. ஒருவருக்கொருவர் சண்டையிடுவதும்… வேதனைப்படுவதும்… மந்திர ஜாலங்களைச் செய்வதும்… மாயாஜாலங்கள் செய்து அது நடக்கவில்லை என்றால் சாப அலைகள் விடுவதும்… அதன் மூலம் சாபமிட்ட ஆன்மாக்கள் வெளியேறி… எல்லை கடந்து செல்லப்படப் போகும்போது அந்தத் தெருக்களிலே பல தொல்லைகளும் துயரங்களும் அங்கே வாழும் மக்களுக்கு ஏற்படுகின்றது.

அதிலிருந்தெல்லாம் மக்களை மீட்டிடும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும். ஆகவே… எல்லோரும் அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தைக் கடைபிடிப்போம்.
1.அவரவர்கள் வீட்டிலும் தெருவிலும் ஊரிலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பரப்புவோம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும் ஆண்டவன் என்றும் ஈசன் என்றும் அவன் வீற்றிருக்கும் ஆலயம் அந்த உடல் என்றும் நமது குருநாதர் காட்டிய வழியில் அதைத் தூய்மைப்படுத்துவோம். உடலான அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்துவோம்.

மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களுக்கெல்லாம் அருள் உணர்வுகள் கிடைக்கப் பெற வேண்டும் என்று பரப்பி… மக்கள் அதைப் பெறும்படி செய்வோம்… அவர்களை மகிழ்ந்து வாழச் செய்வோம்.

அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ந்த உணர்வைக் கண்டு நாம் சந்தோஷப்பட வேண்டும். ஏனென்றால் அந்த மகிழ்ந்திடும் உணர்வு நமக்குக் கிடைக்கின்றது.

1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவர்கள் உடலை ஆலயமாக மதித்து
2.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த குறைகள் நீங்கி அருள் உணர்வுகள் பெருக வேண்டும் என்று எண்ணி
3.இந்த வழிப்படுத்தி நாம் வாழ்ந்தாலே போதுமானது… என்றுமே அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

கோடிக்கரையில் இருக்கும் நாம் தனுசுக்கோடியாக உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக மாற வேண்டும். எதிலுமே இருள் என்ற நிலைகள் வராதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற அந்த முயற்சியை நாம் எடுப்போம்.

நாம் இந்த உடலில் வாழும் காலத்தைக் காட்டிலும் ஆவி உலகில் தான் அதிக காலம் வாழ நேருகிறது

 

இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் தன் எண்ணத்திலும் சுவாசத்திலும் பல துவேஷங்களையும் ஆசைகளையும் வளர்த்து
1.நாம் இருக்கும் காலம் வரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்…
2.இறந்த பின் நமக்கு என்ன தெரிகிறது…? என்ற மனப்பான்மையிலே தான் ஊறி வாழ்கிறார்கள்.

நாம் இறந்த பிறகு தான் நம் ஆத்ம நிலை நாம் இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களைக் காட்டிலும் “அதிகக் காலங்கள்” ஆவி உலகில் சஞ்சரிக்கின்றது.

பூமியில் வாழ்ந்த காலங்களை வைத்தே அவ்வெண்ணத்தில் ஒரு சிறு அணுவும் தான் விட்ட சுவாச நிலை மாறிடாமலே சுற்றி வருகின்றது.

தன் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த உடல் கிடைக்கும் நாள் வரை
1.எந்த ஆசையில் இந்த உடலை விட்டு ஆவி பிரிந்ததோ அந்த ஆசை நிலை கொண்டே
2.பல நூறு வருடங்களும் தன் எண்ணத்திற்கு ஏற்ற பிறப்பிடம் கிடைக்கும் நாள் வரை இருந்து தான் பிறக்கிறது.

நாம் நம் தாய் தந்தையரை முதலில் வணங்குவதும் இந்நிலை வைத்துத்தான். முதல் ஜென்மத்தில் விட்ட குறையை வைத்து ஆவி உலகில் பல காலம் சஞ்சரித்து
1.நம் எண்ணத்தைச் செயல்படும் இடமாக வந்து சேருமிடம் தான்
2.நம் முதல் தெய்வமாக வணங்குவதின் உண்மை நிலையும் அதுவே.

யாரும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருமே அந்த ஆண்டவனின் சக்தியில் அச்சூரியனின் சக்தியில் வந்து உதித்த தனித் தனி பிம்பங்கள் தான்.

1.நாம் பல பிறவிகள் எடுத்து
2.ஒவ்வொரு பிறவியிலும் பல வகைச் சொந்தங்களை அடைந்து
3.”சொந்த பந்தங்களுடன் வாழ்கிறோம்…” என்பதல்ல சொந்தமும் பந்தமும்…!

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!”

சொந்தம் பந்தம் எல்லாம் கூடும் நாள் ஒரே நாள்… அவ் ஈஸ்வர சக்தியில் இருந்து இம்மனித வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டு.. நிறைவுடன் வாழ்ந்து விட்டு.. அந்தச் சூட்சம உலகிற்குச் சென்றிடல் வேண்டும்.

அங்கே சென்று அந்நிலையில் சகல நிலையையும் பெறும் பாக்கியம் பெற்று… அந்த சப்தரிஷிகளின் சக்தியுடன் சக்தியாகக் கலந்து
1.இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் ஞானிகள் இந்நிலை உள்ளவர்களுடன் நாமும் கலந்து
2.அவர்களுடன் வாழும் நாட்கள் தான் நாம் சொந்த பந்தங்களுடன் வாழும் வாழ் நாட்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்தத் தியானத்தின் மூலம் விண்ணிலிருக்கும் மெய்ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்களும் பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம்.

கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள் உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியான அந்த அரும்பெரும் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி
2.இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் குரு அருளும் உங்கள் உடலுக்குள்
1.இயங்கிக் கொண்டிருப்பதை
2.இயக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.

உங்கள் ஆன்மாவில் இப்போது அவருடைய உணர்வுகள் காட்சியாகவும் வரலாம். சொல்லாகவும் வரலாம்.

1.ஒலி ஒளி என்ற நிலையில் காற்றிலிருந்து வரும் அலைகளை
2.டி.வி.யில் எப்படிக் கவர்ந்து படமாகப் பார்க்கின்றோமோ
3.ஒலியாகக் கேட்கின்றோமோ இதைப்போல
4.உங்கள் ஆன்மாவில் படர்ந்திருப்பதை நீங்கள் நுகரப்படும்போது
5.அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு
6.காட்சியாகவும் உணர்வாகவும் அறிய முடியும்.

நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு பாதுகாப்புக் கவசமாகச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

 

அகஸ்தியன் உண்மையான நிலைகள் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.

யார் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெறுகின்றார்களோ அவர் வாழ்க்கையில் வரக்கூடிய இருளான நிலைகளை ஒவ்வொன்றாக… அடுக்கடுக்காக… ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இதை யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது. கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ எதைப் பார்த்தாலும்… அல்லது நுகர்ந்தாலும்…
1.அடுத்த நிமிடம் அந்தத் தீமைகள் உடலுக்குள் புகாதபடி ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை முந்தி
4.இந்த உணர்வுகளை உடலுக்குள் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி வலு ஏற்றியவுடன் தீமைகளைப் பிரித்து விடுகிறது.

அடுத்து நாம் எந்தத் தீமை செய்வோரைப் பார்த்தோமோ… அவர்கள் அறியாத தீமையிலிருந்து விடுபட வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும்… என்று இந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் “புதிய உணர்வின் அணுக்களாக” நமக்குள் உருவாகின்றது.

ஒவ்வொரு உடலிலும் எத்தனையோ விதமான நிலைகள் இருந்தாலும் நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டிப் பேரொளியாக மாற்றுதல் வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்… தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைப் பார்த்துச் சுவாசித்து… ஒன்றை ஒன்று கொன்று தின்று மற்றதுக்கு இரையாகி… வலிமையான உடலுக்குள் சென்று தான் பரிணாம வளர்ச்சிக்கு வந்தது.

ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும் விஷத்தின் தன்மை கூடி தேய்பிறையாகும் நிலையில் இருந்து மாற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானத்தின் உணர்வை
2.ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு குணத்திலும் நாம் சேர்த்துச் சேர்த்து
3.நாம் இந்த உடல்களில் அதை நன்மை செய்யும் சக்தியாக மாற்றி மாற்றி
4.எல்லாவற்றையும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

எதன் வழி கொண்டு…?

நம் உயிரின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் பாய்ச்சி… தீமை செய்யும் உணர்வுகளை மாற்றி… தீமைகள் வராது தடுக்கக்கூடிய கவசமாக “ஒவ்வொரு குணத்திலும் அதைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்…”

அப்பொழுது அது நம்மை காக்கக்கூடிய உணர்வாக வரும்.

மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை… வேண்டாம்

 

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது. யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருந்து அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நாம் உயிருக்குள் இருக்கும் நஞ்சின் துடிப்பே – உயிரின் இயக்கம்.
2.நஞ்சு அதிகரித்து விட்டால் துடிப்பின் இயக்கம் குறைவாகிவிடும்.

தேவாங்கு என்ற உயிரினத்தை நீங்கள் பார்க்கலாம். அதிலே நஞ்சின் இயக்கத் துடிப்பு குறைவு. உணர்ச்சியின் தன்மை வேகத்தைக் குறைத்த நிலைகள் வரப்படும் போது அதனுடைய “இயக்கச் சக்தி” குறைவாகின்றது.

உடலில் நல்ல தசைகளாக இருப்பினும் எவருக்கும் தீங்கு செய்யாத நிலையில் உடல் அமைப்பு கொண்டுள்ளது. உயிரின் துடிப்பு குறைவாக உள்ளதால் தன்னைத்தானே தான் காத்திடும் நிலை இழந்த நிலைகள் கொண்டுள்ளது.

1.உயிர் மற்றொன்றைத் தாக்கி அதன் உணர்வின் தன்மை கொண்டு
2.கடுமை கொண்ட உணர்வின் தன்மை எடுக்கப்படும்போதுதான்
3.இதன் உணர்வின் இயக்கமாக அது வளர்ந்து
4.அதற்குள் மற்றது அந்த உயிரின் வலுவையே பெற முடியும்.

ஒவ்வொரு உயிரனத்திற்கு அதற்கென்ற (உடல் அமைப்பு) தசைகள் கொண்டுள்ளது. பல்வேறு விதமான தசைகள் கொண்ட அத்தகைய உயிரினங்களின் உயிரில் உள்ள விஷத்தன்மை குறைந்துவிட்டால் என்ன ஆகின்றது…?

1.விஷத் தன்மை குறைந்தால்
2.உயிரின் துடிப்பு வேகம் குறைந்து
3,எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மை சீராக இயக்காது அந்த உணர்வின் தன்மை மறைந்துவிடும்.
4.அதனின் வலுவை இழந்துவிடும்.

இதைப் போன்ற இயக்கத்தின் தன்மை கொண்டு அத்தகைய உயிர்கள் வாழ்ந்தாலும் விஷத்தன்மை குறைந்ததாக இருப்பினும்… “எந்த நெருப்பிலும் இந்த உயிர் வேகாது…”

ஆனால் நஞ்சின் அறிவுடன் இருந்தால் நஞ்சினைத் தான் விளைய வைக்கும். அதாவது இன்று பூச்சிகளைக் கொல்லப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தூவுகின்றோம்.

பூச்சிகள் இந்த விஷத் தன்மை கொண்ட அந்தப் பூச்சிக்கொல்லி மருந்தைச் சுவாசிக்கும்போது அந்த உயிரிலே பட்டபின் அந்த உடலை மடியச் செய்கின்றது.

1.ஆனால் அதே சமயம் மடிந்து கொண்ட பின் இந்த நஞ்சின் உணர்வு அதனுடன் இணைந்து கொள்ளுகின்றது.
2.மீண்டும் அதே உயிரணு மற்ற நஞ்சு கொண்ட உயிரணுவாக மாறி
3.இந்த நஞ்சிற்கே அதைக் கொல்லும் சக்தி அதிகமாகி விடுகின்றது.

இதைப்போல நஞ்சைப் பாய்ச்சிப் பயிரைக் காக்க இவர்கள் தூவும் மருந்து அந்த சமயம் பூச்சிகளின் உடல்கள் மடிந்தாலும்
1.இந்த நஞ்சின் தன்மை உணர்வாக இணைந்து
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.நஞ்சினை வீழ்த்திடும் நிலைகள் வருகின்றது.
4.அதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

இதைப்போன்ற தீமையின் நிலைகள் கொண்டால் தீமையின் உணர்வைத்தான் நமக்குள் அதிகரிக்கச் செய்யும். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே… நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து இந்த நஞ்சினை ஒடுக்கிடல் வேண்டும். அதை அடக்கிடல் வேண்டும்.

உயிர் எவ்வாறு எந்த நெருப்பிலும் வேகுவதில்லையோ எந்த நஞ்சிலும் மடிவதில்லையோ அதைப் போன்று நாமும் அழியாத நிலையாக வேகா நிலை என்ற நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

வேகா நிலையாக… உயிருடன் ஒன்றிய ஒளியின் சிகரமாக இருளைப் பிளந்து ஒளி காணும் உணர்வை இந்த உடலிலே விளைய வைக்க வேண்டும்.

1.இதை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையும்
2.அழியா ஒளிச் சரீரம் என்ற நிலையும்
3.பிறவியில்லா நிலை என்ற நிலையும் அடைய முடியும்.

ஞானிகள் காட்டிய அத்தகைய மார்க்கத்தில் நாம் செல்வோம். இந்த உடல் சதமல்ல. எந்த நிமிடத்திலும் இந்த உடலை விட்டு இந்த ஆன்மா செல்லலாம்.

இந்த உடலில் எந்த உணர்வை அதிக அளவில் நாம் எடுத்து விளைய வைத்தோமோ இந்த அளவுகோல்படிதான் அடுத்த உடலை உருவாக்கும் நிலையும் அந்த உணர்வின் செயலாக்கமும் வரும்.

நாம் எந்த நிமிடம் இந்த உடலை விட்டு அகன்றாலும் மெய் ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் செல்ல வேண்டும்.
1.அதனின் வழித்தொடரில் தொடர்ந்து அந்த வரிசையில் சென்றால்
2.நாம் அதனின் அரவணைப்பில் நாம் என்றும் ஒளிச் சரீரம் பெற முடியும்.

நீங்கள் மந்திரங்களைச் சொல்லி மீண்டும் மனித உடலுக்குள் தாவி அவனின் அடிமையாகி அவன் காட்டும் நஞ்சினை உணவை உட்கொண்டு மீண்டும் இழி நிலையான சரீரம் பெறவும் முடியும்.

உங்களுக்கு எது… எது… தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம்.

1.நஞ்சு கொண்ட நிலைகளை நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து…
2.நஞ்சை அகற்றிடும் உணர்வைப் பெற்று… “உயிருடன் ஒன்றிய ஒளியான சரீரம் பெற வேண்டும்…” என்று
3.எவர் ஒருவர் எண்ணுகின்றாரோ அதை நிச்சயம் பெற முடியும்.

நல்லதைச் செய்தாலும் “அதைத் தடைப்படுத்துகின்றார்களே…” என்று எண்ணினால் இரு மடங்கு வேதனையாகிவிடும்

 

தியானம் செய்து நல்லதையே வளர்த்துக் கொண்டு வரும் பொழுது ஒருவன் கடுமையான தவறு செய்தால் எப்படி நினைக்கின்றோம்…?

1.நான் இவ்வளவு நல்லது செய்து கொண்டிருக்கின்றேன்…
2.இப்படித் தவறு செய்கின்றானே…! என்று “இரண்டு மடங்கு” வேதனைப்படும் நிலைகள் வந்து விடுகின்றது.

அதாவது… தியானம் செய்து நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும்… வேதனைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக இணைந்து விடுகின்றார்கள்.

ஆனால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீக்கும் நிலைகளுக்குத் தான் இங்கே உபதேசம் கொடுக்கின்றோம்.
1.நல்லதைச் செய்தாலும்… தர்மத்தைச் செய்தாலும்
2.எத்தனையோ பல நன்மைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று செயல்பட்டாலும்
3.வாழ்க்கையின் நிமித்தம் இடையில் வரக்கூடிய தவறுகளையும் தீமைகளையும் வேதனைகளையும் சுத்தப்படுத்தும் நிலைக்கு வர வேண்டும்.

பரிவு கொண்டு பண்பு கொண்டு பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை எடுத்து நம்மையே படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையாக வந்து விடுகிறது.

அது போன்று ஆகாதபடி தடுப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

திட்டியவனை மட்டும் இப்படித் திட்டினான்… திட்டினான்… என்று நினைவுக்குக் கொண்டு வருகின்றோம். அப்பொழுது அது கோப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.

அந்த நேரத்தில்
1.நம் குழந்தை ஏதாவது அழுதால் கூட “போடா நாயே…” என்று திட்டும்படி செய்யும்.
2.யாராவது நல்லது செய்தால் அட போய்யா…! என்று கோபமாகப் பேசும்படி வரும்… ஆக நல்லது செய்தாலும் கூட வெறுப்போம்.

என்ன இவர் இப்படிச் சீறிப் பாய்கிறார்…? என்று அவர்கள் நினைப்பார்கள்.

வேலை செய்யும் இடங்களிலே “மேலதிகாரி” தன்னிடம் வேலை செய்பவர்களை இது போன்று கடுமையாகத் திட்டினால் அது பய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்கள் சிந்திக்கும் வலுவை இழக்கச் செய்யும். கடைசியில் தவறு செய்யும் நிலையில் கொண்டு போய் விட்டுவிடும்.
1.நீங்கள் அதிகாரியாக இருந்து உங்களிடம் வேலை செய்பவர்களை மிரட்டிப் பாருங்கள்.
2.அடுத்து… அவர் செய்யும் வேலைகளில் தவறுகளை அதிகமாகச் செயல்படுத்துவார்கள்.

ஒரு சிலர் அவன் அப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… என்று ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நிச்சயம் இருக்கும்.

இது போன்ற நிலைகள் எல்லாம் நாம் மாற்ற வேண்டும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவசியம் எடுத்து ஆக வேண்டும்.

காரணம் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் நம் காரியங்கள் தடைப்படுகின்றது யாரைப் பார்த்து நாம் கோபித்தோமோ அவனுக்கும் இதே உணர்வுகள் ரிமோட் செய்து அவனையும் இயக்கும்.

ஏனென்றால் காற்றிலே இருக்கின்றது… இந்த உணர்வின் வேகங்கள் அவனை இயக்கி…
1.கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் தப்பாக்கி விடுகின்றது…
2.இயந்திரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் என்றால் அதைத் தவறாக இயக்கச் செய்யும்…
3.வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை இழந்து விபத்து ஆகிவிடும்.

இது எல்லாம் எதனால் வருகிறது…? சந்தர்ப்பம்…!

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் எப்படி மீள்வது…?

சந்தர்ப்பங்களில் இது போன்ற உணர்வுகள் மோதல் ஆனாலும்…
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தீமை புகாது தடைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் யாரால் நமக்குக் கோப உணர்ச்சிகள் தோன்றியதோ அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் கோப உணர்ச்சிகள் வருவதைத் தடைப்படுத்தும்.

நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

ரூபமில்லா சக்தி… கடவுளின் சக்தி…

 

எல்லோரும் வணங்கிடும் அந்தக் கடவுளின் சக்தி ஒன்றே தான். அந்தச் சக்தியின் நிலைக்குப் பல ரூபங்களும் பல நாமங்களும் இட்டு அவரவர்கள் வழிக்கு அவரவர்கள் வணங்குகிறார்கள்.

ரூபமில்லா சக்தியின் நிலை என்னப்பா..? அந்த ரூபமில்லாத நிலை தான் காற்றும்… மழையும்… ஒளியும்…! இவற்றில் கலந்துள்ள அச்சக்தியின் நிலை இல்லாவிட்டால் இந்த உலகிலே தோன்றிடும் பல கோடி உயிரணுக்கள் எல்லாமே எப்படி உதித்து இந்நிலையில் உயிர் பெற்று வாழ்ந்திடுமப்பா…?

அவ் ஈசனின் சக்தியின் ஆற்றல் எல்லாம் அச்சூரியனின் சக்தியிலிருந்து தான் பல வழிகளில் நமக்கு அருள் தருகின்றது. எல்லா அருளையும் தன்னுள் ஏற்றிருக்கும் அச்சூரியனின் சக்தியிலிருந்து பல கோடி உயிரணுக்கள் தோன்றுகின்றன.

அந்த உயிரணுக்களின் உண்மை நிலைகளை எல்லாம் பலர் பல வழிகளில் அறிந்தும் அறியாமலும்… பல ஆராய்ச்சிகளிலும்… பல வகை விஞ்ஞான ரூபத்திலும்… கண்டு உணர்கின்றார்கள். கண்டு உணர்வதற்குப் பல வழிகளைக் கையாளுகிறார்கள்.

அந்த உயிரணுக்கள் உயிர் பெற அச்சக்தியின் அருள் கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உயிர் பெறும் நிலையில் உள்ளது.

பல இடங்களில் பல வகைச் செடி கொடிகள் வளர்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகைச் செடிகளும் அந்த ஊரின் மண் நிலைக்கு ஏற்ப வளர்ந்து பயன் தருகின்றன.

1.நாம் பயிர் செய்து பலன் பெறும் செடி கொடிகள் பல.
2.நாம் பயிர் செய்யாமலேயே இப்படர்ந்த பூமியில் பல வகைச் செடி கொடிகளும் மரங்களும் வளர்கின்றன.

அவை எல்லாம் எந்நிலையில் அவ்விடத்தில் வளர்கின்றன…?

விதை விதைத்து வளர்கின்றனவா எல்லாமே என்று சிலர் எண்ணுகின்றார்கள். பறவைகளின் எச்சம் பட்டும் காற்றிலே பல விதைகள் பறந்து வந்தும் அந்நிலையிலிருந்து பல வகைச் செடிகள் வளர்கின்றன என்று..!

திடீர் திடீரென்று மழை பெய்து சூரிய ஒளி பட்டவுடன் ஈரம் உள்ள இடங்களில் எல்லாம் பல வகை புல் பூண்டு தாவரங்கள் எல்லாமே வளர்கின்றன. புல் பூண்டிற்குத்தான் விதையே இல்லாத பொழுது அவை எப்படி அந்நிலையில் எல்லாம் வளர்கின்றன…?

பல உயிரணுக்களின் உண்மைத் தத்துவங்களை இந்நிலையில் செப்புகின்றோம்.

சூரியனிலிருந்து கிளம்பி வரும் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் எந்தெந்த நிலையில் வந்து தாக்குகின்றனவோ அந்நிலையில் அப்பூமித் தாய் ஈர்க்கின்றாள்.

அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் மேல் அச்சூரிய ஒளி பட்டதும்
1.அப்பூமியின் நிலைக்கும் அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் நிலைக்கும் ஏற்ப சூரிய ஒளி பட்டவுடன்
2.அங்குள்ள உயிரணுக்கள் உயிர் பெற்று அம்மண்ணின் நிலை கொண்டு பல வகைத் தாவரங்கள் உண்டாகின்றன,

அந்நிலையிலே தான் பல கோடி உயிரணுக்கள் தன் தன் நிலைக்கு ஏற்ப தன் தன் சுவாச நிலைக்கேற்ப சேர்த்து
1.தன் ஆகாரம் உள்ள இடத்தில் படர்ந்து இருக்கும் பொழுது
2.அந்நிலையில் தன் ஆகாரத்தின் சுவாச நிலைக்கு ஏற்ப… “ஆகாரம் உள்ள இடத்தில் அச்சூரிய ஒளி பட்டதும்”
3.பல உயிரணுக்கள் உயிர் பெறுகின்றன.

இந்நிலையில் உயிர் பெறுபவை தான் பல வகைப் புழு… பூச்சிகள்… எறும்புகள்… கொசுக்கள்.. ஈக்கள்…! எல்லாமே. இவை எல்லாம் முட்டை இட்டு முட்டையிலிருந்து குஞ்சு பொரிப்பதில்லை.

இதன் நிலை எல்லாம் தன் சுவாச நிலைக்கேற்ப அழுகும் தன்மை நாற்றம் வாய்ந்த இடம் இப்படிப் பல பல இடங்களில் அந்தந்த இடத்திற்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு தான் அந்த உயிரணுக்கள் எல்லாமே உற்பத்தியாகின்றன.

தன் சுவாச நிலைக்கேற்ற உணவுள்ள இடங்களில் தான் இந்த உயிரணுக்களும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

ஆடி மாதத்தில் பலாப்பழத்தில் ஈ மொய்க்கிறது என்கிறோம்.
1.அந்த ஆடி மாதத்தில் மட்டும் தான் அந்த ஈ உற்பத்தியாகின்றதா…?
2.திடீரென்று தோன்றி மறைய அந்த ஈக்களுக்கு முட்டை எங்கிருந்து வந்தது…?
3.பல ஈக்கள் ஒரே சமயத்தில் வருகின்றன. அந்த ஈக்கள் திடீரென்று தோன்றுவதெல்லாம் இந்நிலையிலிருந்து தான்.

அச்சூரியனின் சக்தியிலிருந்து பல உயிரணுக்கள் இந்தப் பூமியின் மீது படர்ந்துள்ளன. இந்நிலையில் அதற்கு ஏற்ற சுவாச நிலை கிடத்தவுடன் அந்தந்த நிலையிலேயே அந்த உயிரணுக்கள் எல்லாம் ஜீவன் பெற்று தன் ஆகாரத்தைத் தேடிக் கொள்ளச் சுற்றி வருகின்றன.

எவ்வளவு குறுகிய காலத்தில் ஜீவன் பெற்றதோ அந்நிலையிலேயே அந்த உடலை விட்டும் அது ஜீவன் பிரிகின்றது. பல உயிரணுக்களின் நிலை எல்லாம் அந்நிலையிலிருந்து தான் உற்பத்தியாகின்றன.

மரப்பொந்துகளிலும் வீட்டின் பல பகுதிகளிலும் திடீர் திடீரென்று எறும்புகள் படர்ந்து காணப்படுபவை எல்லாமே இந்நிலையிலிருந்து தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் ஒரு கடையை வைத்துத் தொழில் நடத்திக் கொண்டு வருகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நடத்திக் கொண்டு வரும்போது நம் தொழிலில் கொஞ்சம் குறை ஏற்படுகின்றது.

அப்பொழுது அந்தக் குறையை நீக்க வேண்டும் அல்லவா…?

“நேற்று நன்றாக நடந்தது… இன்றைக்கு இப்படியாகிவிட்டதே…, நேற்று நன்றாக நடந்தது இன்றைக்கு இப்படியாகிவிட்டதே…” என்று சொல்லிக் கொண்டிருப்போம்.

வெறுமனே சொன்னால் போதும். ஆனால் நாம் எப்படிச் சொல்கிறோம்…? வேதனையோடு சொல்கின்றோம்.

வேதனையோடு எப்படிச் சொல்கின்றோம்…?

1.அவனைப் பார்.., அவன் எப்படி எப்படியோ மோசமாக வியாபாரம் செய்கின்றான். அவனுக்கெல்லாம் அங்கு நன்றாக நடக்கின்றது.
2.அவனுக்கு அங்கு நன்றாக நடக்கின்றது. நமக்குப் பாருங்கள் நடக்கவில்லை.
3.நான் நல்ல சரக்கைத்தான் கொடுக்கின்றேன். யாரும் வாங்கவில்லை என்கிறோம்.
4.அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்…? அவர்களை உயர்த்துகின்றோம். நம்மைத் தாழ்த்தி விடுகின்றோம்.

இது தான் பார்வதி பஜே அரோகரா சம்போ மகாதேவா…! நாம் பார்வையால் பார்த்துப் பதிவாகி நுகர்ந்த உணர்வுகள் அதில் எந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அதை அதிகமாகக் கவருகின்றது. (அவன் மோசமாக வியாபாரம் செய்கின்றான்… அவனுக்கு நடக்கின்றது… எனக்கு நடக்கவில்லை என்று இதையே தான் பார்க்கின்றோம்)

அப்பொழுது அதைக் கவராமல் தடுக்க வேண்டுமா இல்லையா…?

இப்பொழுது நாம் மாற்று நிலைகளாக அவன் அவ்வாறு வியாபாரம் செய்தாலும் கூட நாம் அவன் உணர்வைச் சேர்க்காதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவனுக்குள் தெளிந்த மனம் பெற வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டால்
1.நமக்குள் கெட்டது வராமல் தடுக்கின்றோம்.
2.அவர்களுக்குள் இந்த நல்லதை உருவாக்கக்கூடிய அந்தச் சக்தியை பெறுகின்றோம்.
3.அப்போது அவன் உடலில் விளைந்த தீமையான வித்து நமக்குள் முளைக்காமல் தடுக்கலாம்.

ஏனென்றால் அவன் உடலில் காயாக இருக்கின்றது. காயாக உள்ளததை அந்த வித்தை எடுத்துப் போட்டால் முளைக்குமோ…? முளைக்காது. ஏனென்றால் அவன் உணர்வு நமக்குள் விளையாதபடி காயாக்கி வைக்க வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணினால் அவன் செய்யும் நிலைகளில் தீமை அங்கே கனியானாலும் அந்த வித்து நமக்குள் வராதபடி மாற்றிக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து “ஒளிப்பிளம்பாக…” நாம் மாற வேண்டும்

 

வாழும் பொழுது நம்மை அறியாது சில உடல் நோய்கள் வந்தாலும் தியானத்தின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடிகிறது.
1.ஆனால் நோய்களை நீக்கினாலும் சிறிது காலமே இந்த உடலிலே வாழ்கின்றோம்.
2.எப்படியும் இந்த உடலை விட்டுச் சென்று தான் ஆக வேண்டும்
3.இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த அருள் ஒளியை எடுத்துப் பாய்ச்ச வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றோம்…”

உணர்வுகள் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்கின்றது. அருள் ஒளி பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையும் பொழுது அப்பொழுதும் உடல் சுருங்கத் தான் செய்யும்.
1.ஆனால் பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே அந்த வழிப்பட்டு ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அதைக் கவர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் பிளம்பாக மாறும்
4.நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

இதைத்தான் இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்துத் தியானிக்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

நம்முடைய தியானங்கள் அனைத்தும்… நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்துப் பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உயிருடன் ஒன்றி… உடலில் இருக்கும் பொழுதே ஒளியின் உணர்வைச் சேர்த்து ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும்.

இதுதான் கடைசி நிலை…!

குளவி புழுவின் மீது விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டியபின் புழு குளவியாக மாறுகின்றது. சில புழுக்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும்
1.அந்த உடலில் இருந்து தன் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி… தான் சுவாசித்துப் புழு – பூச்சிகளாக மாறுகின்றது.
2.இந்தப் பூச்சிகள் வேறு இலையில் மீது பட்டால் அந்த உணர்வை எடுத்து வண்டாக மாறுகின்றது
3.இந்த வண்டுகள் மற்ற நிலைகள் பட்டபின் பலவிதமான உணர்வுகள் மாறி ஒரு உடலாக சேர்த்துக் கொண்ட உணர்வு மேல் ஒடுகள் மாறிப் போகின்றது.

இதைப் போன்று தான் நாம் அந்த அருள் உணர்வுகளை எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் இங்கே விளைந்து… இந்த உடல் ஒளியாக மாறுகின்றது. அடுத்து நாம் பிறவிக்கு வருவதில்லை.

இதற்காக வேண்டித் தான் பல கோடி தவயோகிகள் எத்தனையோ வகைகளில் முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளார்கள். இருந்தாலும் மார்க்கங்கள் மாறிவிட்டது.

இமயமலைப் பக்கம் நான் (ஞானகுரு) செல்லும் பொழுது ஜீவ சமாதியாக எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இமயமலைச் சாரல்களில் மண் இடுக்குகளில்… சந்துகளில் குகை மாறி அமைத்து… ஓ…ம் நமச்சிவாய… என்றும் ஓ…ம் நமோ நாராயணா… என்றும் இந்த ஒலிகள் வருகின்றது.
1.சிறையில் அடைத்தது போன்று குகைக்குள் இருக்கின்றார்கள்
2.வேறு எங்கும் செல்ல முடியவில்லை… உடல் என்ற இந்த கூட்டில் தான் அடங்கியுள்ளார்கள்

இதெல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்…! ஆகவே இப்போது நல்ல நினைவு இருக்கும் போதே ஒளியின் உணர்வாக மாறுங்கள்.

உணவு பற்றிய இரகசியங்கள்

 

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
3.அது எந்நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்து… பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன…? என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகாரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

அச்சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அந்நிலையிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.அப்பூமி ஈர்த்து அந்நிலையில் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம் சுவாசத்தை.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அந்நிலையிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.எந்நிலை கொண்டு எப்படி உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விட்டிடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் “அழிக்கும் தன்மை” என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறப்படும்போது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.

அசுர உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட இந்த உடலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வரப்படும்போது அசுர உணர்வால் வளர்க்கப்பட்ட அணுக்கள் மாறத்தான் செய்யும்.

அதே சமயத்தில்
1.நம் உயிரின் அணுக்கள் ஒளியாக்கப்படும்போது
2.இதுவும் (உடலிலுள்ள அணுக்கள்) குறுகப்பட்டு அந்தச் சத்தினை வடிக்கப்பட்டு
3.உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது
4.இந்த உடல் கட்டாயம் மடிந்தே தீரும்.

இந்த உணர்வின் தன்மை ஒளியாக்கப்பட்டு உயிருடன் ஒன்றப்படும் பொழுது ஒளியின் உடலாக மாற்றிச் செல்லும்.

எப்படி ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

பல வகையான பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்ற முடியும்.

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய் ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

கெட்ட கனவுகள் வரக் காரணம் என்ன…?

 

அன்றாட வாழ்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் சண்டை போடுபவர்களை… வெறுப்படைபவர்களை… கோபப்படுபவர்களை… குரோதப்படுபவர்களை… எல்லோரையும் நாம் பார்க்க நேர்கிறது. அந்த உணர்வுகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.

அவர்களுக்கும் நமக்கும் நேரடியான சம்பந்தமே இல்லை. இருந்தாலும் பதிவு ஆகிவிட்டால் இரவு தூக்கத்தில் கனவுகளாகப் பார்க்கலாம்.

பகலில் நல்ல இடத்திலே… எப்படிச் சண்டை போட்டார்கள்…? என்று
1.“தூங்குவதற்கு முன்…” இந்த உணர்வலைகள் வரும்.
2.அடுத்து தூக்கத்தில் பார்த்தால் நாம் யாருடனோ சண்டை போடுகின்ற மாதிரி கனவுகள் வரும்… முழிப்பாகி விடும்… எழுந்து விடுவோம்…!
3.யார்… என்ன…? என்ற நிலையில் தெரியாது… உருவமும் தெரியாது
4.நம் எண்ணமும் இந்த உணர்வுகளும் சேர்த்துச் சரியான உருவம் தெரியாதபடி நமக்கு அதிர்ச்சியாகிவிடும்
5.யாரோ நம்மைத் தாக்க வருகிறார்கள்…! என்று கனவிலே வரும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து இதே உணர்வுகள் “மற்ற அணுக்களுக்கு எதிர்மறையாக வரும் போது…” இந்தப் பதட்டமும் பயமான உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுத் திடீரென்று இரவிலே எழுந்து விடுவோம்.

இது எல்லாம் எது செய்கின்றது…? பகலில் நுகர்ந்த உணர்வுகளை நமது உயிர் இயக்கிக் காட்டுகிறது.

அந்த உணர்ச்சியின் தன்மை அந்தந்த அணுக்களுக்கொப்ப அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்தச் செயல்களை உணர்ச்சிகள் வழி தான் செயலுக்கு வருகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

காரணம் பகலில் எல்லாவற்றையும் நாம் பதிவு செய்து விடுகின்றோம். இரவு தூக்கத்திலே அந்த மாதிரி நம்மை இயக்குகிறது.

நம்மை ஒருவன் திட்டிவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்கடுத்து மற்ற வேலைகளைச் செய்கிறோம். வேலையில் சோர்வடையும் பொழுது… தன்னை அறியாமலே அந்தத் திட்டியவனின் நினைவு வரும்.

என்னை இப்படி எல்லாம் பேசினான்… செய்தான்… என்று எண்ணினால் அந்த நேரத்திலே செய்யக்கூடிய வேலை கெட்டு விடுகின்றது… வேலையைச் சரியாகச் செய்து முடிக்க முடியாது.

அப்போது வீட்டில் ஏதாவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களிடம் சண்டைக்குச் செல்வோம்… நண்பர்களிடத்திலும் பகைத்துக் கொள்வோம்.

அதாவது மிகவும் பழகிய நண்பர்களாக இருந்தாலும் கூட வீட்டிலோ வெளியிலோ வெறுப்பாக இருந்தால் தமாஷாக ஏதாவது சொன்னால் போதும். இரண்டு பேருக்கும் நிஜமாகவே சண்டை கடுமையாகிவிடும்.

சந்தோஷமாக இருக்கும் போது ஒன்றும் இருக்காது. ஆனால் சங்கடமாக இருக்கும் பொழுது… வெறுப்பாக இருக்கும் பொழுது… என்னைக் கிண்டல் செய்கின்றாயா…? என்று இந்த நல்லவன் மீது… உதவி செய்தவர்கள் மீது… சண்டை வந்துவிடும்… பார்க்கலாம்… எதிரியாகவே மாற்றிவிடும்.

ஆகையினால் தமாஷாக… விளையாட்டாக… எப்போதும் நாம் செயல்படுத்தக் கூடாது. அன்புடன் அரவணைத்து ஒரு அர்த்தத்துடன் நாம் சொல்லி
1.நீங்கள் இப்படிச் செய்ததால் தான் தீமையின் விளைவுகள் இப்படி உங்களுக்கு வந்தது
2.அதற்குப் பதிலாக இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால்
3.அந்த நேரத்தில் நல்ல நிலைகளைக் கொண்டு தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.

ஆகவே இந்தத் தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் கேலியாகப் பேசுவதோ கிண்டலாகப் பேசுவதோ அல்லது அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்காகச் செயல்படுத்துவதோ அந்த வழிக்கே நாம் போகக் கூடாது. கடும் எதிரியாக மாறிவிடும்… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும்.

வேதனையாக இருக்கிறார் என்ற சிந்தனை இல்லாதபடி அவர்களை நாம் கேலி செய்வோம்… கிண்டல் செய்வோம்…
1.உடனே அவர்கள் நம் மீது சீறிப்பாய்வார்கள்… கடும் சண்டையாகும்…
2.நம்மை அறியாமலே… நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் நமக்கு எதிரியாக மாறி வரும்.
3.பின் வேதனையாகி உடலில் கடும் நோயாக மாறி நம்மைத் தீமையின் எல்லைகளுக்குக் கொண்டு சென்றுவிடும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து… அவைகளை நாம் மாற்றிப் பழகுதல் அவசியம். அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்கிறோம்.

எந்த நேரத்திலும் இந்த ஆயுதத்தை எடுத்துச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பகைமை இல்லாது வேதனை வராது மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.

எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டோமா…

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலந்திடும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் இந்நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்… உந்தல்கள்…!
2.தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவரவர் நிலையை அவரவர்கள் உணர்ந்து பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி “நான் என்றால் என்ன…?” என்பதை அன்றே உணர்ந்து இந்த மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.
3.அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி… ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமித்திடல் வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். அந்தச் சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்து நமக்குப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அந்நிலை கொண்டு தான் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்தப் பிரஞ்சம் அழிந்தாலும் இதில் ஒளியான உணர்வுகள் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதீதமாகின்றது. ஒளியின் உடலாக அது ஒரு பிரபஞ்சமாக மாறுகின்றது.

நம் சூரிய குடும்பம் எப்படியோ இதைப்போல உயிரணு தோன்றி… ஒளியின் உடலாக்கும் “அது ஒரு பிரபஞ்சம்”.

இன்னும் எங்கேயும் உருவாக்கவில்லை. இப்பொழுது இது உருவாகும். அப்படி உருவாக்கும் தன்மை வரப்படும்போது நாளடைவில் இதனுடைய வளர்ச்சியில் ஒளியான பிரபஞ்சமாகும்.

1.எத்தனையோ கோடி சூரியன்கள் உருவானாலும் பிரபஞ்சங்கள் உருவானாலும்
2.உயிரணு தோன்றி பிரபஞ்சத்தின் தன்மை அடையும்
3.ஒரு ஒளியின் உணர்வின் பிரபஞ்சமாக அமையும் தன்மை
4.நமது பிரபஞ்சத்தின் நிலைகளில் இருந்துதான் உருவாகும்.

நமது எல்லையில் அந்தத் துருவ எல்லையில் தான் இந்தப் பிரபஞ்சங்கள் அமைந்து இருக்கின்றது.

எது…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்.

இது வளர்ச்சி அடையப்படும்போது அடுத்து…, இதனுடன் சேர்ந்த 2000 சூரியக் குடும்பங்கள் அதுவும் வளர்ச்சி அடையப்படும்போது அதுவும் இணைந்து ஒளியின் சிகரமாக மாறும்.

அந்த நிலை உருப்பெற எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகிவிடும்.

1.இருப்பினும் நம் உயிரின் தன்மை வரப்படும் பொழுது என்றுமே ஏகாந்த நிலையாக
2.இந்த உடலுக்குள் சிக்கி உடலை வளர்க்கும் உணர்வுகளாக இல்லாதபடி
3.உயிரைப் போன்று ஒளியின் உணர்வாக நஞ்சை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.

ஏனென்றால் சிறிது காலம் தான் நாம் வாழ்கின்றோம். இராமேஸ்வரத்தில் அதைத்தான் காட்டுகின்றனர்.

சாதாரண மனிதனும் இதைத் தெரிந்து வாழ்வதற்காகப் புராணங்களை வைத்து ஒவ்வொரு நிலையும் கொண்டு வருகின்றனர் மெய் ஞானிகள்.

நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்

 

ஒரு வேதனை என்ற உணர்வு வந்த பிற்பாடு அது நோயாக மாறிவிட்டால் என்ன ஆகிறது…?

குழந்தைக்கு ஒரு நல்ல துணிமணியை எடுத்துக் கொடுக்கட்டும். நோயாளியாகக் கட்டிலிலே தந்தை படுத்திருக்கும் பொழுது எடுத்துக் கொடுத்த பட்டுச் சேலையைக் கொண்டு நீங்கள் வந்து காண்பியுங்கள்.

அதைக் காண்பிக்கும் பொழுது “எவ்வளவு கோபம் வருகிறது…?” என்று பாருங்கள்.

தன் பிள்ளைக்கு அதைக் கொடுக்க வேண்டும்.. இதைக் கொடுக்க வேண்டும்… நல்ல துணிகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

ஆனால் தந்தை மிகவும் நோயாக இருக்கும் போது இந்தச் சேலை எப்படி இருக்கிறது…? என்று கேட்டால் என்ன ஆகும்…?

நான் இருக்கிற நிலைமையில் இதைக் கொண்டு வந்து காண்பிக்கின்றாயே…! வந்ததா வினை…!

பிள்ளைக்கு நல்ல துணி வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். வாங்கிச் சென்று போய் விட்டால் பரவாயில்லை.

அப்பாவிடம் காட்டி விட்டு அதன் பின் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தால்…
1.இங்கே அவர் படும் வேதனையில் இந்த நல்ல துணியைப் பார்க்கும் போது எதிர்ப்பு உணர்வு வரும்… நெகட்டிவ்… பாசிட்டிவ்…!
2.மனதில் என்ன செய்யும்…? துணியைக் கொடுத்த பின் வாங்கிச் செல்ல வேண்டியது தானே.
3.நான் உடம்புச் சரியில்லாத போது என்னிடம் இதை காட்டி வேதனைப்படுத்துகின்றீர்களே…!

தன்னாலே இத்தகைய உணர்வு வரும்.

பாசத்தால் சொல்கிறார். ஆனால் உடலில் உள்ள உணர்வுகள் எதிர்க்கிறது. நம் மீது சிறிதளவு கூட அக்கறை இல்லையே என்று குழந்தை மீது வெறுப்பு வந்து விடுகிறது.

துணி வாங்கிக் கொடுத்தால் துணியை எண்ணி அந்த ஆசை தான் வருகின்றதே தவிர என்னைக் கவனிக்கவில்லையே.

சந்தர்ப்பம் எப்படி எண்ண வைக்கின்றது என்று பாருங்கள்…! ஆனால் தவறு நாம் செய்யவில்லை.

அப்பா தான் வாங்கி கொடுத்தார். அப்பாவிடம் காண்பிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன். அவர் உடலில் நோயினால் வேதனைப்படும்பொழுது அது எதிர்மறை ஆகிறது. நான் இருக்கும் நிலையில் சிறிதளவு கூட இந்தப் பெண்ணுக்கு வருத்தமில்லையே…!

சரிப்பா… சேலையை நான் எடுத்துக் கொண்டேன் என்று சொன்னால் நன்றாக இரு அம்மா…! என்ற வாக்கு தந்தையிடமிருந்து வரும்.

ஆனால் காண்பித்தால் என்ன செய்யும்…? கூடக் கொஞ்சம் எரிச்சல் வரும். இந்த உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
1.அது மாறாகப் (தவறாக) போய் விடுகிறது.
2.குழந்தைக்கு அவர் தான் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அந்தச் சந்தோஷம் இழக்கப்படுகிறது… வெறுப்பும் வந்து விடுகிறது.

தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

சந்தர்ப்பங்கள் இது போன்று வந்தாலும் ”அப்பா சொல்லிவிட்டார்… நான் எடுத்துக் கொண்டேன். பரவாயில்லை… நல்ல சேலையாகத் தான் இருக்கின்றது அப்பா என்று சொல்லலாம். இல்லை என்றால் “நீங்கள் நன்றாக ஆன பிற்பாடு எடுத்துக் கொள்கிறேன் அப்பா…” என்றும் சொல்லலாம்.

இந்த உணர்ச்சிகள் அங்கே தந்தைக்கு ஒரு சந்தோசத்தை ஊட்டும். ஏனென்றால் ஒரு உணர்வின் உணர்ச்சிகள் மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகின்றது…? என்று உங்களுக்குச் சொல்கின்றேன்.

மனிதனின் வாழ்க்கையில் எந்த மாதிரி நிலைகள் வந்தாலும் நாம் விழித்திருக்க வேண்டும்.

விழித்திருக்க வேண்டும் என்றால் எப்படி…?
1.புதுச் சேலையைக் காட்டி அந்த மகிழ்ச்சியைச் சொன்னால் அவர் மனம் புண்படும்
2.அந்த உனர்வை எடுத்தால் நாமும் சங்கடப்படுவோம் என்று விழித்திருத்தல் வேண்டும்.

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்ட வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்தக் காரணத்தினால் இது நிகழ்ந்ததோ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு என் தந்தை உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்த நிலை வர வேண்டும் என்று இதைப் போன்ற உணர்வுகளை எடுத்தோம் என்றால் வேதனை யாருக்கும் வராது.

சில பேர் என்ன செய்வார்கள்…?

அப்பா உடல் நோயாக இருக்கும் போது இந்தத் துணியை எடுத்துக் கொள் என்று பிள்ளையிடம் சொல்வார்கள்.

ஆனால் பெண்ணோ… அப்பாவுக்கு இப்படி நோயாக இருக்கின்றதே… வேதனைப்படுகின்றாரே… துணியை எடுத்துக் கொள்ளச் சொல்கிறாரே…! என்று எண்ணி அழுகத் தொடங்கும்.

தகப்பனுக்கு முன்னாடி அழுதால் எப்படி இருக்கும்…? சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறது அல்லவா.

ரியாக்ஷன் ஆகி… “வேண்டாம்…” என்று சொன்னாலும் அப்பாவுக்கு வேதனையாக இருக்கின்றது. அந்த வேதனை எடுத்துச் சமைக்கும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்… கண்களிலே நீர் வருகின்றது.

தகப்பனார் இதைப் பார்த்தால் “நான் இருக்கும் நிலையில் இப்படி அழுகின்றார்களே…!” என்று அவருக்கு அந்த வேதனை அதிகமாகும். ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நிலைக்கொப்ப அந்த வேலையைச் செய்யும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்துப் பல பொருள்களைப் போட்டுச் சமைத்தாலும்… அதிலே பக்குவம் தவறி விட்டால் சுவை கெட்டு விடுகின்றது.

ஆகவே ஆயுள் கால மெம்பர்கள் எப்படி இருக்க வேண்டும்…?
1.நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்.
2.நம் பற்று அதன் மீது வரவேண்டும்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சிக்கல்களை நிவர்த்தி செய்ய முடியும்.

குடும்பத்தில் ஒருவர் மட்டும் செய்தால் பத்தாது. கணவன் மனைவி குழந்தைகள் எல்லோரும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழக வேண்டும்.

தியானம் செய்ய வேண்டும் என்று சொல்வதன் முக்கியத்துவம்

 

மனிதர்கள் பிறந்து வளர்ந்து இந்த உலக வாழ்க்கையை விட்டு அந்தந்த உடலிலிருந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
1.அந்த ஆத்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றன…?
2.அவ்வாத்மாக்களின் நிலை என்ன..? என்ற உண்மை நிலையை
3.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் பொருளில் தான்
4.ஆத்மாவிற்கு முதலிடம் தந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றவுடன் பரலோகத்திற்குச் செல்கிறது…! என்கிறார்கள். இப்பரந்த உலகிலே அந்த ஆத்மாக்கள் அபிலாஷையுடன் (ஆசாபாசத்துடன்) சென்றிருந்தால் பரந்த உலகில் சுற்றிக் கொண்டிருப்பதில்லை.

தன் ஆத்ம நிலை கொண்டு எந்த இடத்தில் அதன் ஆன்மா பிரிந்ததோ அந்த நிலையிலேயே
1.அந்த ஆத்மா பிரிந்து செல்வதற்கு முதலில் இருந்த உடல்…
2.எந்த இடத்தில்… எந்த நிலையில் வாழ்ந்ததோ… அங்கேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

அதனுடைய ஆசைகளும் அதனுடைய எண்ணங்களும் செயல்படும் வரை அதற்குக் கால நிலைகள் இல்லை. எவ்வளவு காலம் வேண்டுமாகிலும்
1.அதன் ஆசை முடியும் வரை
2.அங்கே தான் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.

அந்த ஆத்மாவின் உருவம் என்பது அவ்வாத்ம ஜோதியின் நிலை அதாவது உருவமில்லாத அந்த உயிராத்மா எப்படி இருக்கும்…? என்றால் சிறிய அணுவாகத்தான் உள்ளது.

அவ்வாத்மாவைச் சுற்றி அது வாழ்ந்த நாட்களில் அதன் சுவாச நிலையைக் கொண்டு அவை பேசிய பேச்சுக்களும் விட்ட சுவாச நிலையும் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டேயுள்ளது.

இந்த உலகினிலே “பல கோடி ஆத்மாக்கள்” பரந்து பரவியுள்ளன. ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு நிலை கொண்டு சுற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய உலகில் வாழ்ந்திடும் மக்களில் நம் (உடலுடன் உள்ளவர்கள்) ஒவ்வொருவரின் சுவாச நிலை எப்படி உள்ளதோ அந்நிலைக்கு ஏற்ப
1.நாம் விட்டிடும் சுவாச நிலை கொண்டு
2.நாம் விட்டிடும் சுவாச நிலை என்றிடும் பொழுது கோபம் மகிழ்ச்சி சாந்தம் இப்படிப் பல உணர்ச்சிகள் நமக்கு வரும் பொழுது
3.அத்தகைய உணர்ச்சிகளுக்கும் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாவின் ஆசைக்கும் ஒத்த நிலை வரும் பொழுது
4.மனிதர்கள் (நம்) உடலில் அந்த உயிராத்மாக்கள் புகுந்து தன் எண்ணத்தையும் தன் ஆசைகளையும் செயல்படுத்திக் கொள்கிறது.

ஆனால் அதே சமயம் உள்ளே புகும் உயிரான்மாக்கள் வெளியேறும் வழி இல்லை. புகுந்த உடலை விட்டு எப்பொழுது அந்த உடலுக்குச் சொந்தமான உயிரான்மா பிரிகிறதோ அன்று தான் அந்த உடலில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் வெளியே வர முடியும்.

ஆகவே அந்த உயிரான்மாக்களின் செயல்களிலிருந்து தப்ப வேண்டும் என்றால் தியான நிலை மிகவும் முக்கியமான ஒன்றப்பா…! அதைத் தவிர வேறு வழி இல்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் அமைதியானவன். நான் சாந்தமாகவே தான் இருக்கிறேன். நான் தியானத்தைத் தான் செய்து கொண்டே இருக்கிறேன்…. “ஆனால் பாருங்கள்…” இத்தனை தடவை “சும்மா என்னை இடக்கு செய்து பேசினால்…”
1.எப்படிங்க நான் பார்த்துக் கொண்டேயிருப்பது…?
2.உதைக்கத் தான் மனது வருகின்றது
3.அல்லது திட்டுவதற்குத்தான் மனது வருகிறது என்பார்கள்.

ஆகவே, இப்படிச் சொல்லிக் கொண்டு பிறர் தவறு செய்யும் உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோமே தவிர நம் உணர்வை நமக்குள் மாற்றிக் கொள்ளும் வழியில்லாமல் போய்விட்டது.

தியானமிருந்தாலும் உலகில் இருள் சூழும் நிலைகள் வரும்போது நமக்குள் இந்த நிலை தான் உருவாகின்றது. இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

அதற்குத்தான் கருவில் வளரும் குழந்தைகளை ஞானிகளாக உருவாக்குதல் வேண்டும். அப்படி உருவாக்கப்படும்போது அவர்களுக்கு இந்த இருளையெல்லாம் மாய்க்கும் சக்தி வருகின்றது.

பல கொடுமையான விஷத் தன்மைகளையும் கொடுமைகளையும் வென்றவன் துருவ நட்சத்திரம். அதை நாம் எடுத்துக் கர்ப்பமாக இருக்கக்கூடிய தாயும் கருவிலிருக்கும் குழந்தையும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்ற உணர்வு அனைத்தையும் சேர்க்கப்படும்போது கருவிலே அந்த அருள் ஞானி உருவாக்கப்படுகின்றது.

கர்ப்பமானது என்று தெரிந்தபின் அந்தப் பத்து மாதமும் எந்தக் குறைகளையும் விட்டுவிடாதீர்கள்.

அந்த அருளைப் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்க்கப்படும்போது அது ஞானியாக உருவாகின்றது.

ஏனென்றால் இப்படி அவனை உருவாக்கினாலும் நம் உணர்வு பங்கு அவனிடத்தில் உள்ளது.

அவன் வளர்ச்சி அடையப்படும் போது ஒளியாக்கப்படும் போது அவனுக்குள் விளைந்த உணர்வுகள்
1.அந்தப் பங்கின் விகிதாச்சாரப்படி நமக்குள் பல தீமைகளை நீக்கும்
2.நம்மை ஞானியாக்க அவன் உதவுகின்றான்.

அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிவந்த பின் நாம் எல்லோரும் சேர்த்து அந்த உணர்வின் தன்மை பெறச் செய்தாலும் அவன் விளைந்த பின் அவனுடைய பங்கு நமக்கும் கிடைக்கின்றது.

இப்படி ஒருவருக்கொருவர் இணைத்து அந்த ஞானிகள் பெற்ற நிலையை எல்லோரும் பெற முடியும். ஆக ஒன்று இணைந்து ஒன்று வாழுகின்றது.

1.அது சிறு குழந்தை என்று இருக்கலாம்.., “அது உயிர்”.
2.அந்த உணர்வின் தன்மை தாய் கருவில் வளர்கின்றது.
3.இந்த உணர்வின் தன்மை சேர்ந்து உடலில் விளைகின்றது. அதற்குத்தகுந்த உடல் அமைப்பும் அமைகின்றது.
4.உணர்வின் ஞானத்தை அந்த உயிரணுவால் கவர முடிகின்றது.
5.அதனால் பல தீமைகளை நீக்கிடும் அருள் சக்தியும் பெருகுகின்றது.

ஆகவே இந்த முறையைக் கையாண்டு பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பண்டைய அரச காலங்களில் மந்திர சக்தியால் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளில் செயல்பட்டார்கள்…? அதனின் தொடர்ச்சியாக இன்றும் பல பல இடங்களில் மந்திரத்தால் என்னென்ன தவறுகள் செய்கின்றார் என்பதை குருநாதர் காட்டினார்.

ஒரு வயதிற்கு வந்த பெண்ணை அது திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றவுடனே ஏவல் செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் விட்டத்தில் அப்படியே தலை கீழாகத் தொங்கும். அப்புறம் கீழே இறக்கி விட்டு விடுவார்கள். இறக்கி விட்ட பின்னாடி ஆகாரம் சாப்பிடப் போனால் உச்சந்தலையில் இருந்து வெறும் இரத்தமாகக் கொட்டும்.
1.சாப்பிட விடாது செய்கின்றது.
2.ஆனால் இத்தனை இம்சைகளையும் பட்டு அது வாழுகின்றது.

இன்னொரு ஆவி அந்த உடலுக்குள் நின்று ஏவல் செய்த நிலைக்கொப்ப எப்படி இம்சிக்கின்றது என்று காட்டுகிறார் குருநாதர். அந்தப் பெண் எந்தத் தவறும் செய்யவில்லை.

எதை எதையெல்லாம் உருவாக்கி அந்த உடலைக் கொன்றானோ கொல்வதற்கு எது மூலமாக இருந்ததோ அதை வைத்து ஏவல் செய்கிறார்கள். ஏவல் வேலைக்காக என்றே இப்படித் தயார் செய்கிறார்கள்,

மந்திரம் செய்பவர்கள் பிறருடைய நிலைகள் அறியாதபடி பொருளுக்காகச் செய்கிறார்கள்.

1.தன்னுடைய புகழைத் தேடவும்
2.தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் என்றும்
3.தன்னைக் கண்டால் மற்றபர்கள் பயப்பட வேண்டும் என்றும்
4.நிலையற்ற உடலுக்காகவே அவ்வாறு செய்கிறார்கள்.

பிறரை இம்சிக்கச் செய்து பொருளை வாங்கி இவன் அனுபவித்தாலும் இவன் கண்ட வித்தைகள் அனைத்தும் பிறரைத் துன்புறுத்தும் நிலைகளில் தான் செய்து விட்டேன் என்று அகந்தை கொள்வதும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அகம் கொண்டு செயல்படுபவர்களையும் குருநாதர் காட்டுகின்றார்.

மனித உடலில் எந்த ஆசையின் உணர்வுகள் விளைய வைத்தார்களோ அதனின் அடிப்படையில் மந்திரங்கள் ஜெபிக்கப்படும் போது அந்த அலைகளைக் கவர்ந்து பெரிய தத்துவ ஞானியாகவும் பெரிய கடவுளாகவும் அவர்கள் செயல்படுத்துகின்றார்கள்.

தனக்கு மீறி எவரும் இல்லை…! நானே கடவுள்…! என்ற நிலையும் மந்திர ஒலிகள் பெற்றவர்கள் அவர் எவ்வாறு அலைகின்றனர்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஆவியை வைத்துச் செயல்படுத்தும் போது அந்த உடலிலே இம்சைகளைக் கொடுத்தாலும் அவன் (மந்திரவாதி) இறந்தபின் இந்த ஆன்மா எவ்வாறு போகும் என்ற நிலையும் நிலைப்படுத்திக் காட்டுகின்றார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் அவன் எந்த காரியத்தைச் செய்தானோ அதே உணர்வு இவர்களுக்குள் வந்து
1.அடுத்தவன் கையில் சிக்கி இதே காரியத்தைச் செய்து
2.அதில் எத்தனை வேதனைப்படுகின்றான் என்ற நிலையும் காட்டுகின்றார்.

அதே சமயத்தில் மந்திர சக்தி பெற்றவர்கள் மந்திரம் அல்லாது ஞானத்தின் தொடர் கொண்டு ஞானியின் வழியில் செல்ல வேண்டும் என்று அந்த வழியில் செல்ல முற்படுபவர்களுக்கு தீமையான நிலைகளைச் செய்து அவர்கள் பெற முடியாத நிலைகள் எவ்வாறு தடைபடுத்துகின்றனர்..?

ஆகவே ஒரு மந்திரக்காரனிடம் அவனுடைய தொழில் எவ்வாறு இருக்கின்றதென்றால்
1.நீ நன்மையே செய்தாலும்
2.அவன் தீமையின் வலு கொண்டு
3.உன் நல்லதைச் செய்யாது எவ்வாறு தடைபடுத்துவான் என்ற நிலையையும் உணர்த்துகின்றார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சாதாரணமாகவே நாம் பெற முடியும்

 

காலையிலிருந்து இரவு வரையிலும் நல்லவர்களையும் பார்க்கின்றோம் அதே சமயத்தில் கெட்டவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

நல்லது கெட்டது என்று இந்த உணர்வுகள் அனைத்தும் நம் இரத்தங்களிலே கலந்து கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் இரத்தத்தில் உள்ள சில அணுக்கள் கெட்டதை ஏற்க முடியாமல் மறுக்கின்றது.
1.அந்த அணுக்கள் மறுக்கும் பொழுது நம் உடலில் சோர்வு வருகின்றது.
2.சோர்வு அதிகமாகும் பொழுது வேதனைப்படுகின்றோம்.
3.இந்த வேதனையின் உணர்வுகள் அடுத்து விஷமான அணுக்களாக உடலுக்குள் மாறுகின்றது.

சலிப்புப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ நாம் பார்த்து அவர்களுடைய உணர்வுகளை நுகர்ந்தால் நம் இரத்தங்களில் அத்தகைய அணுக்கள் நிச்சயம் வளரத்தான் செய்யும். அது வெளியே செல்வதில்லை.

நாளுக்கு நாள் இதிலே எது பெருகுகின்றதோ உடலில் அணுக்களாக மாற ஆரம்பித்து விடும்… நாளடைவில் நோயாக மாறிவிடும். இது எல்லாம் நம்மை அறியாமலே உடலுக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

இதையெல்லாம் நாம் தூய்மைப்படுத்த வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலுக்குள் பெருகப் பெருக தீமை செய்யும் அணுக்களின் வலுவை அது குறைத்துவிடும்.

உதாரணமாக நாம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தோசமான செய்தியை யாராவது நம்மிடம் வந்து சொன்னால் ஏற்க முடிகின்றதா…? வேதனை அதை ஏற்க விடுகின்றதா…! இல்லை.

அதே போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் அதிகமாக பெருக்கிக் கொண்ட பின்
1.தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி
2.தீமையான அணுக்கள் விளையாதபடி அதைத் தள்ளி விட்டு விடுகின்றது
3.தீமைகளை நுகர்வதற்கும் வழியில்லை… தீமை உள்ளே புகுவதற்கும் வழியில்லை.

அதற்கடுத்து நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்… தெளிவான மனிதர்களாக அவர்கள் வரவேண்டும்… குடும்பத்தில் அனைவரும் பற்றுடன் பரிவுடன் அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இதைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

இத்தகைய அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க…
1.சிந்தித்துச் செயல்படும் உணர்வுகளாக மற்றவர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும்
2.நமக்குள் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக மாற்றிக் கொள்கிறோம்… தீமைகள் சிறுத்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் பிறருடைய தீமைகள் நம் மீது மோதினாலும் அதை மாற்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தந்தக் குணங்களில் எல்லாம்
2.அதாவது வேதனை வெறுப்பு சலிப்பு கோபம் ஆத்திரம் சங்கடம் போன்ற குணங்களில் எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கலந்து கொண்டே வருகின்றது.

இப்படி நாம் சாதாரண வாழ்க்கையின் நிலைகள் கொண்டே சக்தி வாய்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்க முடியும்.

அதற்குண்டான பக்குவ முறைகளைத் தான் உணர்த்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

கடந்த காலத் தவறுகளை மறந்து… இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்

 

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை
1.“பல உண்மைகளை அறிந்திட…” நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.
2.பிற்கால வாழ்க்கையை எண்ணி இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிந்திட எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்… என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டு அச்சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அந்நிலை பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை என்றும்
2.கேது.. இராகு… என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள். எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிந்திட முடியாது. குழந்தை பிறந்திடும் நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் “பாட நிலைப்படித்தான்…!”

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைத்திடலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் “குணா அம்சங்களை வைத்து”
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால்… அந்நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள்.

ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது. சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லாவிட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி… தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் பிறந்திடத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்றுச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.
1.அதிலே கருவாகி உருவாக்கிய
2.அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான்
3.எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார்.

நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ஞானிகள் உணர்வை நீங்கள் வளர்த்து அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால் உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம்.

ஏனென்றால்…
1.இந்த உடல் பற்றை அகற்றி
2.உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
3.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழ வேண்டும்.

அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் சேர்த்து என்றைக்குமே ஒளியின் உடலாகவும் நாம் எந்தத் துயரம் இல்லாத நிலையை அடைவதும் தான் “நமது கடைசி எல்லை”.

ஆயுள் மெம்பர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழி முறை

 

பேரருளை நமது குருநாதர் பெற்றார். அந்தப் பேரருள் பெறும் முறையை எனக்குக் (ஞானகுரு) கற்றுக் கொடுத்தார். “துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக எப்பொழுதுமே இருக்க வேண்டும்…” என்று என்னிடம் சொன்னார்.

அதைப் போன்றே உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்த்து அதன் வழியில் நாம் கிளைகளாக இருக்கின்றோம்.

ஆனாலும்… உண்மைகளை எல்லாம் தெரியப்படுத்தி ஆயுள் மெம்பராகச் சேர்ப்பதற்கு வெகு காலம் ஆகிவிட்டது.

காரணம்
1.அதிலே பற்றும் பாசமும் வளரப்படும் பொழுது… உங்களுக்கு உபதேசிப்பதும்… ஏற்றுக் கொள்ளும்படி செய்வதும்…
2.ஏற்றுக் கொள்பவர்களுக்கு அந்தச் சக்திகளைக் கொடுப்பதும்… எல்லாமே செயல்படுத்தியது.

ஆனால் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்குப் பேருக்கு ஆயுள் மெம்பர் என்று சொல்லிக்கொண்டு போவதில் பிரயோஜனம் இல்லை.

1.ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் ஒவ்வொருவருமே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும்
2.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழும் நிலையைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.

குடும்பத்திலோ அல்லது தொழில் செய்யும் இடங்களிலோ நாம் எதிர்பாராத நிலைகளில் சில சிக்கல்கள் வரும். நம்மை வேதனைப்படும்படியாக ஒருவன் செயல்படுவான். உற்றுப் பார்த்து அவன் உணர்வுகளை நுகர்ந்தறிவோம்.

“இப்படிச் செய்கின்றானே…” என்ற நிலை வந்துவிடும். வந்தபின் அதைச் சுத்தப்படுத்தாது விட்டு விட்டால் தீமையின் விளைவுகளுகே நம்மை இட்டுச் சென்றுவிடும்.

அது போன்று ஆகாதபடி ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி… நமது குருநாதர் காட்டிய முறைப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்…” என்று எண்ணி உடனடியாக நாம் தூய்மைப்படுத்தவேண்டும்.

உயிரிலே பட்ட பின் தான் அவர் செய்யும் தவறான உணர்வு அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகின்றது. நம் இரத்தங்கள் முழுவதிலும் அது கவரப்படுகின்றது.

இரத்தங்களிலே கலந்து கொண்ட பின்
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் நல்ல உணர்வை ஈர்க்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது.
2.அந்த வெறுப்பான காரமான உணர்வுகளை நல்ல உணர்வுகள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
3.வெறுப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது கொதிப்பு என்று வருகிறது.
4.அந்தச் சந்தர்ப்பங்களிலே உடலிலே ஒரு விதமான நடுக்கம் வரும்.

ஏனென்றால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குச் சரியான ஆகாரம் இல்லை என்றால் பதட்டமான நிலைகள் வரும். அந்த நடுக்கம் சிறிதளவு உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்ந்து விட்டால் அடுத்து… தவறு செய்யும் உணர்வை எடுத்து அதுவும் வளர ஆரம்பித்து விடும்.
1.நல்ல அணுக்களுடைய செயல்கள் மறைந்து விடும்
2.நல்லதை நுகர விடாதபடி அதனுடைய இனப்பெருக்கமாக ஆகிவிடும்
3.அந்த அணுக்கள் அது இடக்கூடிய மலம் உறுப்புகளில் படும் பொழுது அதனுடைய வளர்ச்சி குன்றிவிடுகிறது
4.அங்கே ஒன்றுக்கொன்று போர் முறையாகி வலியும் வேதனையும் வருகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஒருவர் செய்த தவறான உணர்வை நுகர்ந்த்தால் இந்த நிலை ஆனது. அதே சமயத்தில் இந்த உணர்வுகள் நம் ஆன்மாவிலே முன்னணியில் இருக்கும்.

வீட்டிற்குள் நுழைந்த பின் குழந்தை ஏதாவது ஒரு பாத்திரத்தைக் கீழே போட்டால் போதும். அல்லது சத்தம் போட்டுப் பேசினால் போதும்…!

மனைவியைக் கூப்பிட்டுப் பிள்ளையை வளர்த்திருப்பதைப் பார்…! என்று அங்கு வெறுப்பாகப் பேசும்படி வந்துவிடும்… நம்மை அறியாமலே இப்படி இயக்குகின்றது அல்லவா…!

காரணம் நாம் பிறரின் உணர்வுகளை நுகர்ந்தது இவ்வாறு இயக்குகின்றது. அப்படி இயக்கும் அந்த உணர்வை…
1.உங்களுக்குக் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு
2.ஆயுள் மெம்பராக இருக்கும் நீங்கள் அந்த நிமிடமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்து தூய்மைப்படுத்தவேண்டும்.

சமையல் செய்யும் போது குழம்பை ருசியாக மாற்றுவது போல் மாற்ற வேண்டும்.

தவறு செய்பவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்றுப் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… தெளிந்த மனம் பெற வேண்டும்… ஒன்று சேர்ந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று நல்லதாக இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் போது தீமையின் உணர்வை இங்கே தணிக்கிறது. அருள் உணர்வுகளை உயிர் கருவாக்கி… உடலில் அணுவாக மாற்றி நமக்குகந்ததாக மாற்றுகிறது.

“ஆயுள் மெம்பர்கள் இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்…”

அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்… ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது

 

இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.

பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.

1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.

இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.

(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.

அந்தச் சூரிய சக்தியிலிருந்து இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
1.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
2.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை உணருங்கள்.

நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.

ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.

அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?

அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.

பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.

பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.

அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.

அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.

1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.

இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடிடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.

1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலமே நச்சுத்தன்மை அடைந்துவிட்டது. விஷக் கதிரியக்கங்கள் எல்லாம் பூமியின் நடு மையம் அடைந்து இன்று உருகிக் கூழாக மாறிக் கொண்டே வருகின்றது.

அப்படி உருகும் வேகத்தில் தான் மேல்பாகம் வெடிக்கப்படும்போது “பூகம்பம்” என்ற நிலை அடைந்து மேலே எடை கூடி உள்ளே எல்லாப் பொருட்களும் சேர்ந்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் அதற்குள் நாம் சிக்கிவிட்டால் இந்த உடல் கருகி விடுகின்றது. ஆனால் இந்த உயிரோ கருகிய உணர்வுடன் வெளியே வருகின்றது.

இந்த உயிர் வெளிவந்த பின் அது எந்த வேதனையில் உருவானதோ அந்த உடல் இல்லை என்றால் இந்த உயிருக்குள் இந்த வேதனை என்ற உணர்வுடன் நரகலோகத்தைத் தான் சந்திக்க வேண்டும்.

1.இன்னொரு உடல் பெறும் வரையிலும்
2.நாம் அந்த வேதனையைத்தான் (கருகிய உணர்வை) அனுபவிக்க வேண்டும்.

இன்னொரு உடல் பெறும்போது ஒரு தாவர இனத்தின் மேலேயோ அல்லது வேறொன்று மேலேயோ இது பட்டால் அதையும் “கருக்கும்…” அந்தச் செடியும் என்ன செய்யும்…? வளர்ச்சியற்ற நிலைகள் போய்விடும்.

பின் அதனுடைய நிலைகள் சிறுகச் சிறுகச் சேர்த்து இதே உயிரணு இன்னொரு செடி மீது பட்டபின் அதையும் கருக்கி… அதில் சேர்த்துக் கொண்ட உணர்வு கொண்டு “கொஞ்சம் கொஞ்சமாக” மாறுகின்றது.

அப்பொழுது அந்த உடலிலும் வேதனை இந்த உயிரான நிலைகளிலும் வேதனை என்ற நிலையில் அந்த நரகலோகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்.

1.ஏனென்றால் உயிரின் இயக்கத்தால் தான் உணர்வுகள்…
2.உணர்வின் உணர்ச்சிகளை உயிர் அறியச் செய்யும்.
3.ஆன்மா என்பது தனி.
4.உயிர் என்பது காந்தம் – அந்த உணர்ச்சி கொண்டு உணர்வால் நமக்குள் இயக்கும்.
5.உடல் இருக்கும்போது… மாற்றியமைத்துக் கொண்டு
6.உடல் இல்லாதபோது… அந்த உணர்வை அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

இதெல்லாம் சாதாரணமானதல்ல. இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதையே தான் தீயிலே மாண்ட ஒரு உயிரான்மா ஒரு உடலுக்குள் புகுந்துவிட்டால் இதன் உணர்வை அங்கு இயக்கப்பட்டு “அங்கு எரிகின்றதே… எரிகின்றதே…” என்று சொல்லும்.

(முதலில்) தன் உடலைக் கருக்கிவிட்டு உடலைவிட்டு வெளிவந்த பின் அடுத்த உடலில் புகுந்து அவனையும் தீயில் குதித்து வேக வைக்கும்.

பின் புகுந்த உடலையும் அந்த நிலைக்கு மாற்றிவிட்டு வெளி வந்தபின் இன்னொரு உடல்களில் சென்று எரி பூச்சியாகவோ விஷம் கொண்ட பூச்சிகளாகவோ பிறக்கும்.

இப்படி இயக்கி உடல்களை மாற்றுவதுதான் இந்த உயிரின் வேலை. “நாம் நினைக்கின்றோம்… உடலை விட்டுப் பிரிந்தால் யாருக்கு என்ன தெரியப் போகிறது…!” என்று.

ஆனால் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
1.மனிதனாகப் பிறந்தாலே முழு முதல் கடவுள். சிருஷ்டிக்கும் ஆற்றல் கொண்டவன்.
2.இந்த மனித உடலில் இருக்கும் காலமோ மிகவும் குறுகியது.
3.அதற்குள் நம் மனதைக் குவித்து அருள் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றி அவனுடன் அவனாக வேண்டும்.

குடும்பத்தில் நிம்மதியே இல்லை என்று சொல்வார்கள்…!

 

நம்முடைய பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன நினைக்கின்றோம்…? இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்… எதிர்காலத்தில் என்ன ஆகப் போகின்றானோ…! என்று வேதனைப்படுவோம்.

வேதனையாக எண்ண… எண்ண… கை கால் குடைச்சல் ஆகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து பையனை உதைக்கும் நிலைக்கு வருகின்றது. கடைசியில் நாசமாகப் போடா…! என்று சொல்கின்றோம்.

பையனால் இப்படி வேதனை ஆகிவிட்டது என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் இறந்தால் எங்கே போகிறோம்…?
1.பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்.
2.பையன் உடலுக்குள் சென்ற பின் வேதனையை அங்கே கூட்டி அவனைக் கெடுத்து அவனையும் வாழ விடாது செய்யும்.

சம்பாதித்த சொத்தைக் காக்க ஞானம் வேண்டுமா இல்லையா…! ஞானம் இல்லை என்றால் சொத்தைக் காக்க முடியுமா…?

ஆதே போன்று வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் வெளியிலே போய்விட்டு வந்தபின் வெறுப்பாக இருப்பார்கள்.

அப்போது வீட்டிர்குள் வந்த பின் பெண்கள் எதாவது கேட்டால் பதில் வெறுப்பாக வரும்.

எப்பொழுது பார்த்தாலும் என் வீட்டுக்காரர் எரிந்து எரிந்து விழுகின்றார். கொஞ்சம் சாந்தமாகத் தான் சொன்னால் என்ன…! என்று கேட்பார்கள்.

நானா கோபமாகப் பேசுகின்றேன்…! நீ தான் என்னைக் கோபமாகப் பேசத் தூண்டுகிறாய்…! என்று மீண்டும் அங்கே சண்டை உருவாகும்.

சண்டை போட்ட பின் என்ன செய்வார்கள்…? சரி… கணவர் கோபமாக இருக்கின்றார்… “கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யலாம்…” என்று செய்யப் போனால்…
1.கணவர் எண்ணிய வேகத்திற்குச் செய்யவில்லை என்றால்
2.ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…! என்று மீண்டும் சண்டை வரும்

இது எல்லாம் உணர்வுகளின் இயக்கம்.

இப்படிச் சண்டையிட்ட உணர்வுகள் கலவை ஆன பின் அடுத்து சம்பாதிக்க வெளியிலே சென்றாலும்… எடுத்துக் கொண்ட உணர்வுகள் அங்கே வியாபாரத்தைத் தடைப்படுத்தும்… குழந்தைகளிடம் வெறுப்பாகப் பேசச் சொல்லும்… நண்பர்களாக இருந்தாலும் பகைமையாக்கிவிடும்…!

ஆக… சம்பாதிக்கக்கூடிய நிலையை நாம் தெளிவாக வைத்திருக்கிறோமா…?

இதெல்லாம் சந்தர்ப்பம்…
1.மோதலின் உராய்வினால் வரக்கூடிய உணர்வுகள்
2.நம்மை இப்படி எல்லாம் மாற்றி அமைக்கின்றது.

நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்..! எல்லா நல்லதும் செய்து இப்படி ஆகிவிட்டது.. “எனக்குக் குடும்பத்தில் நிம்மதியே இல்லை…!” என்று தொழிலை விட்டுவிடுவார்கள். சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லாது போய் வெளியிலேயும் வெறுப்பு… வீட்டிலும் வெறுப்பு…!

இது எதனால் வருகின்றது…?

1.கோபத்தையும் வெறுப்பையும் எனக்குள் விளைவை வைக்கின்றோம்…
2.பொறுமை இல்லாது பொறுப்பை இழந்து இங்கே பேசப்படும் பொழுது தொழிலும் மட்டமாகின்றது
3.வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரியிடம் கெட்ட பேர் வருகின்றது.

குடும்பப் பற்றுடன் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் இப்படி உணர்ச்சி வசப்பட்டுச் செய்தார் என்றால் அந்தக் குடும்பம் முழுவதும் வெறுப்பு வளர்கின்றது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

நாம் வேகமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அடுப்பிலே நெருப்பைக் கூட்டினால் என்ன ஆகும்…?

அடியில் இருப்பது கருகிவிடும் நடுப்பகுதியில் இருப்பது ஒரு மாதிரி வேகும்… குழைந்து போகும். மேலே இருப்பது சுத்தமாகவே வேகாது போய்விடும். இந்த மூன்று நிலையில் வரும்.

ஆகவே கோபம் வருகிறது என்றால்…
1.அது எதனால் வருகின்றது என்று தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்
2.அதை மடக்கித் திருப்பி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லும்
3.இது உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் முழுமையாகத் தெரியாதபடி “நானும் தியானம் தான் செய்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டு
1.எதைச் செய்தாலும் வீட்டிலே தொல்லைகள் வருகின்றது
2.எப்பொழுது பார்த்தாலும் சண்டை வருகின்றது
3.யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று இப்படிச் சொல்பவர்களும் உண்டு.

காரணம் இது எல்லாம் பூர்வ புண்ணியத்தில் வருவது. பூர்வ புண்ணியத்தின் வழியில் வந்தாலும் அதை மாற்றுவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டினால் அதை மாற்றிக் கொள்ள முடியும்.

அறியாது இயக்கும் இது போன்ற தொல்லைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக்கூடிய சக்தியை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆனால் செய்து பார்த்தேன்… முடியவில்லை என்று விட்டு விட்டால் என்ன ஆகும்…! ஆகவே நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

உடலுக்கு ஊட்டம் கொடுப்பதை விடுத்து விட்டு உயிருக்கு ஊட்டம் கொடுத்தால் அழியா வாழ்க்கை வாழலாம்

 

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அவ்வழியாக அருள் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகிறார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்துவிட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்நிலையில் நம் உயிர் அணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். இந்நிலையையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இந்நிலை எல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெறத்தான் இந்த ஜெப நிலையிலிருந்து ஈஸ்வர தியானங்கள் பெற்று அந்நிலையில் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைத்திடல் வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வேதனைப்படுவோரைப் பதிவு செய்துவிட்டால் பதிவான உணர்ச்சிகள் அந்த வேதனைப்படச் செய்தோரைத் திரும்பத் திரும்ப எண்ணும்படி வைக்கின்றது.

நாம் எண்ணவே வேண்டாம். அது நம்மை எண்ணும்படியே வைக்கின்றது. ஏனென்றால் அது அணுவாக உருவாகிவிட்டால் தன் இரைக்காக அதைத் தேடுகின்றது.

அப்பொழுது நம் உயிருடைய வேலை என்ன…?

காகமோ குருவியோ தன் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பது போல்
1.உருவான அணுக்கள் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது
2.அது கவர்ந்து தன் உணவாக எடுத்து
3.அதற்கு உணவு கொடுப்பது நம் உயிருடைய வேலை.
4.ஏனென்றால் தாய் (உயிர்) அதை வளர்த்துத் தான் ஆகவேண்டும்.

மனிதனான பின் ஆறாவது அறிவு கார்த்திகேயா “தெரிந்து கொண்டவன் அகஸ்தியன்
1.தன் வாழ்க்கையில் தீமைகளை அகற்றத் தெரிந்து கொண்டவன்
2.விண்ணுலக ஆற்றலைத் தெரிந்து கொண்டவன்
3.பின் துருவத்தின் ஆற்றலை உணர்ந்து அதை அறிந்து கொண்டவன்
4.அதனைத் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டான் துருவ மகரிஷியானான் துருவ நட்சத்திரமானான்.
5.இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகையை தீமை வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளான்.

பிறவியில்லாப் பெரு நிலையும் பேரானந்தப் பெரு நிலையும் தூங்காமல் தூங்கும் நிலையாக எப்பொழுதுமே தூங்கிக் கொண்டுள்ளான்.

ஒரு வெளிச்சத்தை நேரடியாக நம் கண்களால் பார்த்தால் நம்மை இருளடையச் செய்கின்றது. (வெளிச்சத்தை நேரடியாகப் பார்த்தவுடன் ஒரு பொருளைப் பார்த்தால் நாம் காண முடியாது)

1.தன் ஒளியின் சுடரின் தன்மை கொண்டு
2.வரும் இருளையெல்லாம் மாய்த்து ஒளியின் சக்தியாகவே
3.என்றும் அந்த ஒளிச் சுடராகவே நிலை கொண்டு
4.மகிழ்ந்திடும் நிலையாக உருவாகி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவர்களைப் பின்பற்றிச் சென்றோர் அனைவருமே சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டு தீமைகளை அகற்றிடும் சக்தியை உமிழ்த்திக் கொண்டும் உள்ளார்கள்.

அது நம் பூமிக்குள் துருவப் பகுதியின் வழியாக வரவும் செய்கின்றது. இங்குள்ளோர் அதை ஈர்த்தால் தான் நாம் பெற முடியும். துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் சக்திகளை எளிதில் நீங்கள் பெறவே இந்த உபதேசம்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது… அனுபவம் இல்லை என்றால் அருள் ஞானத்தைப் பெற முடியாது

 

இன்ஜினியரிங் படித்து எல்லாவற்றிலும் மள மள என்று தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கி வந்திருப்பார்கள். ஆனால் தொழிலுக்குச் சென்று வேலை பார்க்கும் இடத்தில் என்ன செய்கின்றார்கள்…?
1.படித்ததைத்தான் சொல்லிச் செயல்படுத்த முடிகிறதே தவிர
2.இடைவெளியில் தவறுகள் வந்தால் என்ன செய்வது…? என்று தெரியாது.

ஆனால் இங்கே ஃபிட்டராக வேலை செய்பவருக்கு இன்னது ஆனது. அதனால் தான் அந்த இயந்திரம் தேய்மானம் ஆனது என்று அனுபவத்தில் சொல்லி விடுவார்கள்.

அவர் அந்த இன்ஜினியரிடம் சென்று சார்…! இந்த மாதிரி இருக்கின்றது இப்படிச் செய்தால் சரியாகிவிடும்…! என்பார்.

ஆனால் அவரோ “நான் படித்துக் கொண்டு வந்து விட்டேன் எனக்கு எல்லாம் தெரியும்… நீ எனக்குச் சொல்வதா…!” என்று சொன்னால் என்ன ஆகும். அந்த அனுபவ அறிவைப் பெற முடியாது.

படித்ததைத் தான் சொல்ல முடியுமே தவிர அங்கே இயந்திரத்தில் உள்ள தேய்மானத்தைச் சரி செய்து கொண்டு வர முடியாது.

ஏனென்றால் கீழே வேலை செய்பவர்கள் தன் அனுபவத்தின் நிலைகள் கொண்டு சொல்கின்றார்கள். இப்படி வாழ்க்கையில் நாம் சிந்தித்துச் செயல்படுத்தினோம் என்றால் தான் சரியாக இருக்கும்.

இன்ஜினியரிங்கில்… படித்ததை வைத்துத் திருப்பிக் கொண்டு வந்தால் சரியாக வராது. அவசியம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதே போன்று தான்
1.யாம் (ஞானகுரு) சொன்னதை எல்லாம் பாடமாக வைத்துக்கொண்டு அதையே எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
2.ஆனால் சந்தர்ப்பத்தில் வரக்கூடிய தீமைகளை நான் சொல்லிக் கொடுத்த முறைகள் கொண்டு
3.அதை மாற்றி அமைத்த அனுபவம் மிகவும் முக்கியமாகத் தேவை.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று அதை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும். “அந்த அனுபவத்தின் நிலைகள் கொண்டு” செயல்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் அனுபவம் இல்லாதபடி அந்த இன்ஜினியருடைய செயல்கள் சீராக வராது. இதே போல் டாக்டராக வருபவர்களும் எல்லாம் படித்து விட்டுத் தான் வருகின்றார்கள்.

ஆனாலும் மருந்து கொடுக்கப்படும் பொழுது அனுபவம் அவசியமாகிறது. காரணம்… ஒரே நோயாகத் தெரிந்தாலும் கூட அந்த உடலில் இன்னொரு நோய் இருப்பது அது தெரியாதபடி செயல்படுத்தினால் என்ன ஆகும்…?

ஆஸ்த்மா நோய் இருக்கும். ஆனால் இரத்த கொதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று அதை அடக்கினால் ஆஸ்த்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது.

இந்த மருந்தைக் கொடுத்தால் அவருக்கு நோய் அதிகமாகிவிடும்…!

ஆனால் இதற்கு மருந்து கொடுத்தோம்… இப்படி ஆனது…! அதற்கு மருந்து கொடுத்தோம்… அப்படி ஆனது…! என்று அனுபவத்தில் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு ஆஸ்த்மா நோயைப் பற்றிச் சிந்தித்து இரண்டையும் சமப்படுத்தக்கூடிய மருந்தாகக் கொடுத்தால் அவருடைய நோயைக் குணப்படுத்த முடியும்.

1.ஆக இன்ன நோய்க்கு இன்ன மருந்து தான் கொடுக்க வேண்டும் என்று டாக்டருக்குப் படித்திருந்தாலும்
2.இந்த அனுபவம் இல்லை என்றால் பலன் இல்லை.

இரத்தக் கொதிப்பை அடக்கக் குளிர்ச்சியானதைக் கொடுத்தால் ஆஸ்த்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது. கர்… புர்… என்று மூச்சு இரைச்சலாகும். அப்போது எந்த நோயை நீக்க முடியும்…?

ஆனால் அனுபவரீதியில் கண்டவர்கள் என்ன செய்கிறார்கள்..?

இரத்தக் கொதிப்பினை இத்தனை நொடிகளில் நிறுத்தினோம் என்றால் இதனுடைய வலு குறையும். அந்த நொடிக்குள் அதைச் சரி செய்துவிட்டு அடுத்து அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றிக் கொடுத்தால் அது ரெண்டு நோயையுமே அது கட்டுப்படுத்தும்.

இப்படிச் சமப்படுத்திக் கொடுக்காதபடி ஆஸ்மா நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்பிற்குண்டான மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது.

இந்த மாதிரி ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுத்த வேண்டும். இது எல்லாம் அனுபவ ரீதியிலே அறிந்து செயல்படுத்த வேண்டிய முறைகள்.

இதே போன்றுதான்
1.உங்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கின்றோம்
2.என்னுடைய அனுபவத்தை உங்களிடம் சொல்கின்றேன்.

அனுபவங்களைச் சொல்லி எந்த நிமிடத்தில் அந்தக் குறைகள் வந்தாலும் உடனுக்குடன் அதைச் சீர்படுத்த ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்…! (ஏற்கனவே பல முறை பதிவு செய்துள்ளேன். அதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்)

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள்…! உங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்

அனுபவத்திலே ஒவ்வொன்றாகத் தெரிந்து கொண்டு அதிலே வளர்ச்சி பெற்று வருபவர்கள் தான் தொழிற்சாலையில் வேலை செய்யக்கூடிய ஃபிட்டர்கள்.

படித்து வந்தததைக் காட்டிலும் இவர்கள் தன் அனுபவத்தால் சொல்கிறார்கள். ஆனால் இன்ஜினியர் இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார். அவர் சொன்னபடி இயந்திரத்தை ஓட்டும் போது தேய்மானமாகிறது.

ஆனாலும் அந்த ஃபிட்டருக்கு அனுபவம் இருக்கிறது. இயந்திரம் இப்படிச் சாய்வாக இருக்கின்றது. அதை நேராக்கினால் சரியாகிவிடும் என்று அவர் சொல்கிறார்.

ஆனால் இன்ஜினியரோ நான் படித்து வந்திருக்கின்றேன் நீ சொல்வதைச் செய்தால் எப்படிச் சரியாகும்…? என்றால் அது எப்படி இருக்கும்…!

சில பேருக்கு இந்த உபதேசங்களை கொடுக்கப்படும் பொழுது “நான் எல்லாத் தியானமும் படித்திருக்கின்றேன்… எனக்கு எல்லாம் தெரியும்… குண்டலினி யோகா செய்திருக்கின்றேன்… இந்த யோகம் செய்து இருக்கிறேன்…!” என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனால் அந்த நுணுக்கம் எதிலிருந்து வருகின்றது என்றால் அது தெரியாது…! சொன்ன பாடத்தை அவர்களால் ஒப்படைக்க முடியவில்லை.

படித்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். ஆனால் படிக்காதவர்கள் யாம் சொன்ன தியானத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லும் பொழுது
1.நான் எத்தனையோ படித்திருக்கிறேன் என்னிடமே வந்து நீ சொல்லுகின்றாயா…? என்றால்
2.இவர் கண்டுபிடித்த உணர்வை அறிய முடியாது போய்விடுகிறது.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!

இது எல்லாம் இயற்கையின் நியதிகள். ஆக அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சி கொண்டு செய்தோம் என்றால் நமக்குச் சரியான பக்குவம் வரும்.

அந்த அனுபவம் இல்லை என்றால் எதையுமே சீராக்க முடியாது.

குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அதிலே பெற்ற அனுபவங்களை வைத்துத் தான் உங்களுக்கு உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

ஈசன் என்னுள் இருந்து வழி நடத்திக் கொண்டே உள்ளான் என்று உணர்வுபூர்வமாக எண்ணுவதே நமக்குகந்த தியானம்

பல நாள் தவம் இருந்து தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம் அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகள் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது – நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..! அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.

ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும். எண்ண அலைகள் மற்ற அணுக்களுடைய நிலைகள் உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது. நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.

அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது. அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.

அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகளை அடிக்கடி அந்தச் சுவாச நிலையில் நம் உயிரணுவிற்கு உயிருக்குக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும் உங்கள் ஜெபத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமையின் நிலைகளை மாற்றியமைக்கும் சக்தியை ஞானிகள் “நரசிம்மா…” என்று காட்டுகின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் செலுத்தப்படும்போது உடலுக்குள் எதையும் உட்புக விடாதபடி வாசல்படி மீது அமர்ந்து தீமைகள் வராதபடி இங்கேயே பிளந்து விடுகின்றான். உள்ளே சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.

அன்றாட வாழ்க்கையில் தீமை செய்வோரைப் பார்க்கின்றோம். அதன் மூலம் தீமை செய்தான் என்று நாம் அறிந்து கொள்ள உதவுகின்றது. ஆனால்…
1.தீமை செய்வான் என்று முதலில் பதிவு செய்து கொண்டாலும்
2.அந்தத் தீமையினுடைய நிலைகளை அடக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.

பின் எங்கள் பார்வை எல்லோரையும் நல்லதாக்க வேண்டும். என்னைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை நாம் பதித்துவிட்டால்
1.அவர் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் அது பதிவாகாது.
2.அதை ஈர்க்கும் தன்மை வராது.

இப்படி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் வலு கொள்ளும் போது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது அவனுடைய தீமையின் உணர்வை இதை அடக்கும்.

இதைத்தான் நீ விழித்திரு என்று ஞானிகள் காட்டுகின்றனர்,

அப்படி விழித்திருக்காதபடி… “எனக்கு இது தேவை… அது தேவை…” என்றும் “நான் இன்னாருக்கு நல்லது செய்தேன்… ஆனால் எனக்குத் தீமை செய்தான்…” என்ற எண்ணத்திலேயே இருந்தால் அது நம்மை இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்து செல்லும்.

ஆகையினால் எந்த நல்லதைச் செய்தேனோ அந்த நல்லதின் தன்மைகள் அங்கே விளைதல் வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் எண்ணுதல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை அதனுடன் வலு சேர்த்துக் கொண்டு இதை நாம் வலுப்படுத்தினால்
1.நமக்குள் தீமை விளையாது.
2.நம்மைப் பார்க்கும்போதே தீமையை விளைவிக்கும் நிலைகள் அங்கே ஒடுங்கும்.

இதுதான் நரசிம்மா. வாசல்படி மீது அமர்ந்து (சுவாசிக்கும் இடம்) நமக்குள் நுகரும் சக்தி இங்கு வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமையை விளைவிக்கும் எண்ணங்கள் நமக்குள் உருவாகாது.
2.தீமையை விளைவிக்கும் வித்து இங்கே உருவாகாது.
3.அது வினையாக வராது. வினைக்கு நாயகனாக இதை ஏற்காது.

அதைத்தான் கோதண்டத்தை முறித்த பின் சீதாவைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா என்று காட்டுகின்றார்கள்.

அதாவது தீமை செய்யும் உணர்வுகளை முறித்து விட்டால் மகிழ்ச்சியைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ள முடியும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

தீமையை முறிக்கும் நிலையாக அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து கொண்டிருந்தால் நமக்குள் அரவணைக்கும் சக்தியாகத் தனக்குள் நுகர்ந்து நாம் என்றும் மனிதன் என்ற நிலைகளில் முழுமை அடைய முடியும்.

அந்த மெய் ஞானியின் உணர்வுடன் ஒன்றி பிறவியில்லாப் பெரு நிலையை அடைய முடியும்.

ஒளியாக மாற்றிய குருவின் உணர்வுகளைத் தான் நாம் எண்ணி எடுக்க வேண்டும்

 

காட்சிகளையும் சக்திகளையும் யாம் (ஞானகுரு) கொடுத்தால் பெரியவர்களே பல தவறுகள் செய்கின்றார்கள். காரணம்…
1.“சாமி எனக்குத் தான் சக்தி கொடுத்திருக்கிறார்…!” என்ற நிலையில்
2.உண்மைகளை அறிவதற்கு மாறாகத் தவறு செய்கின்ற நிலைகளிலேயே சென்று விட்டார்கள்.

அதற்குப் பின் தான் இதையெல்லாம் நிறுத்தியது.

நீங்கள் உயர்ந்த பண்புகளை வளர்த்துக் காட்டினால் நீங்கள்தான் சாமி. உங்கள் நிலை கொண்டுதான் இங்கு சாமியின் நிலைக்கு மதிப்பு.

என் சக்தியின் நிலைகளை நீங்கள் பயன்படுத்தினாலும் உங்களை உயர்த்திக் காட்டினால்தான் எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்கும்… உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்… எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கலாம்.

ஆகவே நாம் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டும் அருள் வழியினைக் கடைபிடிக்க வேண்டும். அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும் பல இன்னல்களைப் பட்டார்.
1.அவருடைய நிலையைப் பிறர் பார்க்கும் போது பைத்தியக்காரனாகத்தான் காட்டினார்.
2.ஆனால் அந்த பைத்தியக்கார நிலையில் அவருக்குள் எவ்வளவு பெரிய ரகசியங்கள் இருந்தது என்று நம் நிலைகளுக்குத் தெரியாது.

அதே குருநாதரை வைத்து நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… ரசமணி செய்கிறேன்… என்று மந்திரங்கள் தந்திரங்கள் என்று அவர் பேரைச் சொல்லி இப்படியும் சில பேர் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணரந்த நிலைகளிலும் அவர் உடலைவிட்டுச் சென்றாலும் அவர் உடலில் இருந்து பிணைத்த உணர்வுகள் உண்டு.

அதன் வழியில்…
1.தீமையை எண்ணுவோர்க்குத் தீமையே கிடைக்கும்
2.நம் குருநாதர் காட்டிய அருள் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு அந்த அருள் ஒளி கிடைக்கும்
3.அந்த அருள் ஞானத்தை நாம் பெறுவோம் என்றால் நமக்கு மெய்வழி காணும் நிலைகள் கிடைக்கும்.

முந்தி வந்தவர்களுக்கெல்லாம் நோயைப் போக்க வேண்டும் என்று பெரும்பகுதி யாம் செயல்படுத்தினோம். இப்பொழுதும் நோய் போகும் என்று சொன்னால் போகத்தான் செய்கின்றது.
1.ஆனால் சாமி மீது தான் நம்பிக்கை வருகின்றது.
2.சாமி கொடுக்கும் சக்தியை நாம் பெற முடியும்… நோயை நீக்க முடியும்… என்ற நம்பிக்கை வருவதில்லை

இதை எல்லாம் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது நன்றாக ஆவது போன்று… உங்கள் பார்வையால் உங்கள் சொல்லால் அனைத்தும் நல்லதாக்க வேண்டும்.

தீமைகள் புகாதபடி தடுத்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தான் இவ்வளவு தூரம் உபதேசிக்கின்றோம்.

நீங்கள் எடுத்துக் கொண்ட சக்தியை உயிர் விளைவிக்கின்றது உடலாக மாற்றுகின்றது. எதை எண்ணுகின்றீர்களோ அதையே தான் உயிர் உருவாக்குகிறது.

திட்டியவனைப் பதிவு செய்து கொண்ட பின் “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் அவனையும் கெடுக்கின்றது… இங்கே நம்மையும் கெடச் செய்கிறது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ எது வந்தாலும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி இங்கே அதிகமாகி விட்டால் வேதனைப்படும் உணர்வுகள் உள்புகாதபடி அதைத் தடுத்துவிடும்… விலக்கி விட்டுவிடும். அருள் ஞான சக்தியும் உங்களுக்குள் பெருகும்.

இந்த இரண்டு வேலையும் செய்யும்.

அதனால்தான் உங்கள் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? என்று மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

இந்த உடலில் இருக்கும் போழுதே அந்த அருளைப் பெற வேண்டும். அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியும் இதைப் போல எண்ணுதல் வேண்டும்.

1.துருவத்தில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றடைவோம்
2.பிறவி இல்லா நிலை பெறுவோம் என்று பிரார்த்திக்கின்றேன்.

தன் சுவாச நிலையில் “ஒரு நிலை” எய்தி வாழ்ந்திட வேண்டும்

 

மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளும் பாவங்களும் நடைமுறையில் எல்லோருமே செய்கின்றோம். அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு “தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!

அந்தத் தவறிலிருந்து விடுபட்டுத் தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் அவ்வீஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,

“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு நம் ஆத்மாவிற்கு இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!

ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்லுகின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!

1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!

இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.

1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!

இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”

மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!

மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து…!

புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.

இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?

ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நிகழ்காலத்தில் ஒரு பாம்பு தன் இரைக்காக தவளையின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக்கொள்கின்றது.

1.ஆனால் தவளையினுடைய நிகழ்காலம் – பாம்பிடமிருந்து தப்பிக்கக் கூடிய எண்ணம்
2.அந்தச் சந்தர்ப்பம் பாம்பின் விஷம் இதற்குள் அதிகமான பின்
3.எதிர்காலம் பாம்பின் நிலைகளாக உருபெறுகின்றது
4.பாம்பின் உடலுக்குள் சென்று தவளை பாம்பாகப் பிறக்கின்றது.
5.ஆக தவளையின் இந்த நிகழ் காலம் அதனுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது.

இப்பொழுது மனிதனாக இருக்கும் நாம் வேதனைப்படுவோருடைய உணர்வை நாம் கேட்கின்றோம். அந்த வேதனை உணர்வுகள் நமக்குள் ஆகிவிட்டால் அந்த வேதனை வளர்ச்சி ஆகிவிட்டால்… “வேதனை என்ற உணர்வுக்கு” – நம் எதிர்காலத்தை அமைத்து விடுகின்றது.

இதைப் போன்று வரும் கடுமையான தீமைகளில் இருந்து நாம் தப்புதல் வேண்டும்.

ஏனென்றால் இன்றைய மனிதனின் வாழ்க்கையில் எத்தனை துயரங்களை எண்ணுகின்றோமோ அவை எல்லாம் எதிர்காலத்தை நிர்ணயித்துவிடும்.

ஆகவே
1.எத்தகைய தீமையை நாம் கேட்டுணர்ந்தாலும்
2.”அது நமக்குள் உட்புகுந்து” அது நம் எதிர் காலத்தை நிர்ணயித்து விடக்கூடாது.
3.நிகழ்காலத்தில் அதை வளர்த்திடக் கூடாது.

நிகழ்காலத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் எதிர்காலம் நாம் ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.

இதைக் காட்டி உணர்த்துவதற்குத்தான் யானையின் சிரசை மனித உடலில் பொருதி விநாயகரைக் காட்டினார்கள் ஞானிகள்.

மிருக நிலையில் சேர்த்துக் கொண்ட நிலைகளில் அதனுடைய நிகழ்காலத்தில் ஒவ்வொரு சரீரத்திலும் காத்துக் கொண்ட உணர்வுகளை வளர்த்து வளர்த்து அதனின் எதிர்காலமாக – இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கும் துருவ மகரிஷியும்.. அவரைப் பின்பற்றி சென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளையும் நாம் கவர வேண்டும்.

1.இந்த நிகழ்காலத்தில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும்
2.அந்தத் தீமையை நீக்க அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்
3.நம் நிகழ்காலம் எதிர்காலத்தில் ஞானிகள் அடைந்த எல்லையை அடைய முடியும்.

ஏனென்றால் பண்பால் அன்பால் பரிவால் எனக்கு இப்படிச் செய்தார்களே… எனக்குத் துரோகம் செய்தார்களே…! என்று இந்த நிகழ்காலத்தில் நாம் அதிகமாக மற்றவருடைய எண்ணத்தை அதிகரித்து விட்டால் என்ன ஆவோம்…?

நாம் யார் மேல் பகைமை கொண்டோமோ அந்த உணர்வுகள் நமக்குள் வளரப்பட்டு
1.இதை நிகழ்காலத்தில் வளர்ந்தபின்
2.எதிர்காலம் அந்தப் பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து
3.அவர் உடலில் புகுந்து
4.இந்தப் பகைமையை தீர்க்கும் உணர்ச்சிகளின் வேதனையை உருவாக்கி அந்த உடலைத்தான் வீழ்த்தும்.

பின் அந்த வேதனையை உருவாக்கிய பின் எத்தகைய வேதனையின் உணர்வுகள் அணுக்கள் ஆனதோ அடுத்து தேய்பிறையாக மற்ற மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த சிவன்ராத்திரி – நீ விழித்திரு.
1.பல கோடிச் சரீரங்களில் இருந்து நீ தப்பினாய்
2.எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் வளராதபடி அருள் உணர்வைச் சேர்க்கும் நிலையில்
3.இனி எப்பொழுதும் நீ விழித்திருத்தல் வேண்டும்.

அருள் ஞானியின் உணர்வை ஒவ்வொரு நொடியிலும் நீ நுகர்ந்து இந்த வாழ்க்கையில் வரும் மாசினை நீ துடைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உரைத்தது.

அருள் மகரிஷிகளின் உணர்வை நிகழ்காலத்தில் வளர்த்து எதிர்காலத்தில் நமக்குள் அது உருவாக்கிடல் வேண்டும்.

நான் காட்டிற்குள் சென்று கஷ்டப்பட்ட மாதிரி நீங்களும் கஷ்டப்பட முடியுமா…

 

குருநாதர் காட்டிய வழியிலே எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கு இருபது வருடம் அனுபவப்பட்டேன். ஆனால் அதையெல்லாம் நீங்கள் இப்போது சமமாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள்.
1.உங்களிடம் பதிவு செய்கின்றேன்…
2.நீங்கள் இந்த நினைவைக் கூட்டினீர்கள் என்றால் நான் பெற்ற எல்லாச் சக்திகளையும் பெற முடியும்.

ஆனால் நான் காட்டிற்குள் சென்று தெரிந்து கொண்ட மாதிரி நீங்களும் காட்டிற்குள் போய்த் தெரிந்து கொள்ள முடியுமா…? உங்கள் பிழைப்பு என்னாகின்றது…?

மனைவி பிள்ளைகள் எல்லாம் விட்டுவிட்டு காட்டிற்குள் சென்ற பின் அவர்கள் எத்தனை வேதனைப்பட்டு இருப்பார்கள்…! விட்டுச் சென்ற பின் அவர்கள் வேதனை என்ன செய்யும்…?

குருநாதர் இதை எல்லாம் சொல்லுகின்றார். வீட்டை விட்டு வந்து விட்டாய்… உன் பிள்ளைகள் என்ன செய்கிறது என்று பார்…! இமயமலையில் இருக்கும் பொழுது குருநாதர் இதைக் காட்டுகின்றார்.

என் கடைசிப் பையன் தண்டபாணி… அவனுக்குப் பேச்சு அப்போது முழுமையாக வராது நானா… நானா… என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

இவனுடைய அம்மா (என் மனைவி) திட்டிக் கொண்டிருக்கின்றது. நான் தான் அவனுக்கு பிஸ்கட்டோ மற்றதுளை வாங்கிக் கொடுப்பேன். என்னுடைய எண்ணம் தான் அவனுக்கு இருக்கும். அவன் அம்மா மீது எண்ணம் இருக்காது.

“ஆளைக் காணோம்…” என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

நானோ குருநாதர் கட்டளையிட்ட நிலையில் இமயமலையில் இருக்கின்றேன். இங்கே தெருவிலே நானா… நானா… என்று சொல்லிக்கொண்டு அது உஷ்ணமாகி இரத்த இரத்தமாக அவனுக்கு வெளியேறிக் கொண்டிருக்கின்றது.

இந்த உணர்வுகள் அங்கே காட்சியாகத் தெரிய வருகின்றது. வீட்டில் மனைவி “தொலைந்து போன உங்கப்பன் இப்படிச் செய்து விட்டான்…” என்று சொல்கிறது.

இப்படிப் பண்ணிவிட்டாரே…! என்று என் மாமியார் அந்த மாதிரிப் பேசுகின்றது. இந்தம்மா “என்னை இந்த இடத்தில் கொண்டு போய்க் கட்டி வைத்துக் கஷ்டப்படுத்தி விட்டாய்… என்னை விட்டுச் சென்று விட்டார்…!” என்று இந்த மாதிரிச் சொல்கின்றது.

ஒன்றுக்கொன்று இந்த வேகங்கள் எப்படி மாறுகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர். நடந்த நிகழ்ச்சி இது.

பையனுக்கோ இரத்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இமயமலையில் இருந்து இதை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அங்கே பனி மலையில் இருப்பதால் இதைப் பார்த்தவுடன் குருநாதர் சொல்லிக் கொடுத்ததை மறந்து விட்டேன்.

காரணம் அந்தப் பனி என்னைத் தாக்காது இருப்பதற்காக… என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு யுத்தியைச் சொல்லிக் கொடுத்திருந்தார். மனைவி பையன் மீது எண்ணம் வந்த உடனே இதயம் கிர்…ர்ர்ர்ரென்று இரைய ஆரம்பித்துவிட்டது.

ஏனென்றால் என் பையன் சிரமப்படும் உணர்ச்சிகளையும்… ஏங்கிக் கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணிய பின் எனக்கு இந்த நிலை வருகின்றது.

அப்பொழுதுதான் குருநாதர் பாடலைப் பாடுகின்றார்…
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

உன்னுடைய எண்ணங்கள் எல்லாம் இப்பொழுது மறையப் போகின்றது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…?
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று பாடுகின்றார்.

நீ இங்கிருந்து எதை எண்ண வேண்டும்…? என்று அந்த இடத்தில் உணர்த்துகின்றனர்

பையன் மீது ஆசையாக இருக்கின்றோம். அப்பொழுது நம்மையும் காக்க முடியவில்லை.

உன்னையே காக்க முடியாது போகும் பொழுது அவனை நீ எப்படிக் காக்கப் போகின்றாய்…? என்று குருநாதர் வினா எழுப்புகின்றார்.
1.இந்த உணர்வோடு உடலை விட்டு நீ சென்றால் அவன் உடலுக்குள் தான் செல்வாய்.
2.அந்த உடலுக்குள் சென்ற பின் அவனையும் பைத்தியக்காரனாக ஆக்குவாய்…
3.அவனைக் கொல்வாய்… அதற்குத்தான் உதவும்…! என்று அந்த இடத்தில் இப்படி உணர்த்துகின்றனர்.

குருநாதர் உணர்த்திய பின் ஈஸ்வரா…! என்று மறுபடியும் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த இரைச்சலை அடக்குகின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் உடல் முழுதும் படர வேண்டும். அவன் உடல் நோய் நீங்க வேண்டும். என் மனைவிக்கு மன உறுதி வர வேண்டும்… நல்ல சிந்தனைகள் வர வேண்டும்… சிந்தித்துச் செயல்படும் அந்த வலிமை பெற வேண்டும்…! என்று குருநாதர் சொன்னபடி எண்ணுகின்றேன்.

இது போன்று செய்த பின் அவர்களுக்கு அங்கே வருமானமும் தெளிந்து செயல்படக்கூடிய வழிமுறைகளும் கிடைக்கிறது. காசு இல்லாதபோது காசு கிடைக்கிறது.

1.நான் சொன்ன முறைப்படி செய்தால் உன்னையும் காக்கலாம் அவர்களையும் காக்கலாம்…! என்று
2.குருநாதர் இமயமலையில் வைத்துத் தெளிவாக்கினார்.

தவறை எண்ணி வருந்தும் பொழுதே நம் ஆத்மா “நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றது…!”

 

1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?

இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”

இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.

எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.

1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.

மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!

நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!

கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய வாழ்க்கையில் பல (தீமைகள்) அலைகள் வந்தாலும் “நமது எல்லை மகரிஷிகளின் அருள்வட்டம் தான்” என்று உறுதிப்படுத்துவோம்

நாம் மலைக்குப் போகப் போகிறோம் என்றால் என்ன செய்கிறோம்…? இந்தப் பக்கம் போனால் முட்கள் இருக்கின்றது இந்தப் பக்கம் போனால் மிருகங்கள் இருக்கின்றது என்று அறிந்து கொள்கிறோம்.

1.மிருகங்கள் இருக்கும் பக்கம் எவ்வாறு செல்ல வேண்டும்…?
2.நீர் அதிகமாகப் போகும்போது அதைக் கடந்து எப்படிச் செல்ல வேண்டும்…? என்றும் வழிகாட்டுவது போல
3.நமக்குள் எத்தனையோ உணர்வுகள் உண்டு.

அதனைப் போல இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான தீமைகளை நாம் சந்திக்கின்றோம். சந்திக்கப்படும்போது அந்தத் தீமையின் உணர்வுகளில் நாம் சிக்காது அதிலிருந்து நாம் கடந்து செல்லுதல் வேண்டும்.

அதே போல நாம் கடலிலே செல்கின்றோம். பல அலைகள் வருகின்றது.
1.படகோட்டி தான் எந்த எல்லையைக் குறிக்கோளாக வைத்து
2.அந்தப் படகினைத் திசைத் திருப்பித் தன் எல்லையை அடைகின்றான்.

இதைப்போல இந்த வாழ்க்கையில் பல அலைகள் நம்மை மோதுகின்றது.

கோப அலைகள் மோதுகின்றது. பாச அலைகள் மோதுகின்றது. வேதனை அலைகள் மோதுகின்றது. இதைப் போல எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது.

நம்மை வேதனைப்படும்படி ஒரு மனிதன் செய்தால் அந்த எண்ணத்தில் நாம் சிக்கிவிட்டால் அந்த அலைகளில் சிக்கி வேதனைப்படும் உணர்வுக்கே நம்மை அழைத்து சென்றுவிடும்.

ஒருவர் கோபப்படும் அலைகள் மோதிவிட்டால் அதிலே இந்தப் படகு மூழ்கி அதன் வழிகளிலே அழைத்துச் செல்லும். நாம் எல்லையை அடைய முடியாது.

ஆகவே தான் இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான அலைகள் நம்மை மோதினாலும் அந்த ஒவ்வொரு நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு திசை திருப்ப வேண்டும்.

நாம் அந்த அலைகளுக்குள் மூழ்கிடாது நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான் என்ற நிலைகளில் நாம் செல்ல வேண்டும்.

1.ஏனென்றால் எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது.
2.நாம் விழித்திருந்து அந்த அலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும்.
3.தீமையிலிருந்து விடுபடுதல் வேண்டும்.
4.நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான்.

நாம் அடிக்கடி இவ்வாறு எண்ணினோம் என்றால் வரும் அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து அருள் ஞானிகளின் வட்டத்தில் இங்கே வளர்த்து என்றும் பிறவியில்லா நிலை என்ற பெருநிலை அடையலாம்.

நமது எல்லை அது தான். இல்லையென்றால் இங்கே கீழே (கீழான உடல்களுக்குள்) அழைத்துச் சென்றுவிடுகின்றது.

இதிலிருந்து நாம் தப்புவோம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம் என்று தியானிப்போம். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தவமிருப்போம்.

சண்டையிடுவோரை எப்படிச் சமாதானப்படுத்துவது…?

 

கோபப்படுபட்டுச் சண்டையிடுவோரைப் பார்க்க நேர்ந்தது என்றால் உடனே ஈஸ்வரா…! என்று சொல்லி உள்ளே புகாதபடி நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்தி விட்டு
1.சண்டை போட்ட இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் திறன் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி எண்ணினால் அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நமக்குள் நல்லதாக மாற்றிக் கொள்கின்றோம்.

அவர்களும் இதே பிரகாரம் எண்ணினால் சரியாக இருக்கும்.

இருந்தாலும்… சண்டை போடுபவர்களிடம் சென்று புத்தி சொன்னால் கேட்பார்களா…!

இரண்டு பேரும் சண்டை இடுகிறார்கள். ஒருவரிடம் சென்று “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…! என்று சொன்னால் நீ அவனுக்குத் தான் சாதகமாகப் பேசுகின்றாய் என்று இவன் நம்மிடம் சண்டைக்கு வருவான்.

சமாதானப்படுத்த முடியுமா…?

ஆனால் அடுத்தவனை பார்த்துப் நீ பொறுத்து போப்பா…! என்று சொன்னால் “நீ அவனுக்குச் சாதகமாக பேசுகிறாய்…” என்று சொல்வான். ஆக இப்படித்தான் வரும்.
1.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் ஒத்துக் கொள்ளவில்லை என்றால்
2.நம்மைத்தான் அவர்கள் குற்றவாளியாக ஆக்கிவிடுவார்கள்.

அதை நாம் நுகர வேண்டியதில்லை…!

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனே ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

அவர்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்ற உணர்வுகளை நாம் வளர்க்க வேண்டும்.

அவர்கள் சாந்தமடைந்த பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…?

இருவரும் சண்டையிட்டதால் கஷ்டமானது. அதனின் விளைவுகள் இப்படி ஆனது. ஆகவே நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்…! என்று
1.நமக்குள் வளர்த்திருக்கும் நல்ல உணர்வுகளை அவர்களைக் கேட்க வைத்து
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்கும்படி செய்யலாம்.

இப்படித் தான் நாம் அவர்களைத் தெளிவாக்க வேண்டும். அட என்னப்பா… நீ தானே சண்டை போட்டாய்…! என்று சொல்லக்கூடாது.

உங்கள் சந்தர்ப்பம்…
1.உணர்ச்சி வசப்பட்டுச் சண்டை போட்டீர்கள்.
2.அதனால் நீங்கள் இருவரும் அன்பைக் கெடுத்துக் கொண்டீர்கள் என்ற
3.”உணர்வின் ஞானத்துடன் சொன்னால்” நாம் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலை வரும்.

அந்த ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அவர்களை நல்லதாக்க முடியாது.

சண்டையிட்டீர்கள்… இரண்டு பேருடைய வாழ்க்கையும் இந்த மாதிரி ஆனது. இது உங்களுக்குள் நோயாக மாறுகின்றது சிந்திக்கும் தன்மையை இழக்கின்றீர்கள்.

ஆகையினால் நீங்கள் பொறுப்புடன் இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… உங்கள் உடலில் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தெளிந்த மனம் வர வேண்டும் என்று எண்ணுங்கள் என்று இரண்டு பேரிடமும் இந்த மாதிரிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

அப்பொழுது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது… சிறிதளவு கேட்பார்கள். கேட்டால் உள்ளுக்குள் செல்லும். சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

ஆக மொத்தம் இந்த முறைப்படி அருள் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய சண்டை நமக்குள் விளைவதில்லை அருள் உணர்வுடன் நாம் எடுத்துச் சொல்லப்படும் பொழுது அவர்களும் மாறுகின்றார்கள்.

ஆகவே…
1.தியானம் என்பது வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வராதபடி
2.அருள் உணர்வுகளைச் சமைத்து அந்த மெய் ஞானத்தினை நமக்குள் வளர்ப்பது தான்.

எல்லோருக்கும் தெளிந்த மனம் வருகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் விளைகின்றது. இதைச் சொல்லிக் கொண்டே வந்தால் கோடிக்கரையில் இருந்து நாம் தனுஷ்கோடியாக பிறவி இல்லா நிலை அடைகின்றோம். சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றோம்.

ஆண்டவனின் சக்தி

 

உலகம் தோன்றியது முதலே வாழ்ந்திடும் ஜீவ அணுக்கள் எல்லாமே இந்த உலகம் என்று தோன்றியதோ… அன்றே ஆண்டவன் சக்தியில் அருளப் பெற்ற… அவ்வாண்டவன் சக்தியில் இருந்து உதித்த உயிரணுக்கள் தானப்பா…!

எறும்பிலிருந்து புழு பூச்சி மற்ற மிருகங்கள் பறவைகள் மரம் செடி கொடிகள் மனிதர்கள் யானை திமிங்கலம் நீரில் வாழ்பவை நிலத்தில் வாழ்பவை எல்லாமே எண்ணிலடங்கா வருடங்கள் முதல் கொண்டே அந்த ஆண்டவன் சக்தியில் ஆண்டவன் பிம்பத்தில் இருந்து உதித்த உயிரணுக்கள் தானப்பா…!

இந்த உயிர் அணுக்கள் எல்லாமே ஆண்டவன் தானப்பா…
1.எல்லா ஜீவராசிகளும் ஆண்டவன் தான்…
2.ஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் என்று ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டால்
3.“தான்…!” என்ற அகங்காரமே தனித்து நில்லாதப்பா..!

ஜென்மங்களின் முறையைத்தான் பாட நிலையிலேயே அளித்துள்ளேன்.
1.நானும் ஆண்டவன் தான்… தன்னுள்ளும் ஆண்டவன் உள்ளான்.
2.தனக்கு எந்நிலை உள்ளதோ அந்நிலை தான் எல்லா ஜீவராசிகளிடமும் உள்ளது என்ற எண்ணம்
3.எல்லா மனிதர்களிடமும் தோன்றிவிட்டால் ஆண்டவனின் சக்தி என்ன…? என்று தெரிந்து கொள்ளலாம்
4.நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்து எது…? என்று புரிந்துவிடும்.

நம் மனித ஜென்மத்தில் நமக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலிருந்து தான் நாம் நம் ஆத்மாவிற்கு அழியா நிலையைத் தேடி வைத்துக் கொள்ள முடியும்.

இந்த நிலையை நழுவ விட்டால்… நம் ஆத்மாவிற்கு இனி ஒரு சந்தர்ப்பம் “பல கோடி ஆண்டுகளானாலும்” கிடைப்பது அரிதிலும் அரிது என்பது புரிந்ததா…?

சந்தர்ப்பம் என்று சொன்னது… கல்கியில் ஆரம்பித்துக் கலியில் முடியும் காலத்திற்குப் பல கோடி ஆண்டுகள் ஆகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மனித உடல் ஏழு ஜென்மங்கள் எடுக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அடுத்து கல்கி பிறந்து பல அவதாரங்கள் எடுத்துப் பிறிதொரு கலி வரும் வரை நம் ஆத்மா அல்லல்பட்டுக் கொண்டு பல உடல்களை எடுத்து மனித ஜென்மம் எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

1.மனிதனுக்குத் தன் உடலில் உள்ள ஒரு உறுப்பு தான் இந்த உயிரும்…
2.தன் ஆயுள் உள்ளவரை தான் இந்த உயிர் இவ்வுடலில் இருக்கும்… என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே உள்ளது.

ஆனால் இந்த உடல் என்ற கூட்டில் அந்த ஆத்மா என்னும் ஆண்டவனின் சக்தி வந்து தான் இயக்குகிறது.
1.உயிர் எனும் ஆத்ம சக்தியே… ஆண்டவனின் சக்தியாக நமக்குள் இயங்குகிறது என்ற எண்ணம்… என்ற இந்த உண்மை…
2.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பதிய வைத்தால் தான் அதை நமக்குள் வளர்க்க முடியும்… அறிய முடியும்… உணர முடியும்… பார்க்க முடியும்.
2.படித்து மனப்பாடம் செய்து ஞானிகளின் உணர்வை வளர்க்க முடியாது… தெரிந்து கொள்ள முடியாது.

படிப்பறிவு என்பது வேறு. பதிய வைத்த உணர்வுகள் இயங்குவது என்பது வேறு.

ஒரு மைக் எப்படி ஈர்க்கின்றதோ ஒரு ஒலி/ஒளி நாடா எப்படிப் பதிவாக்கிக் கொள்கின்றதோ பதிவானதைத் திரும்ப வெளிப்படுத்துகின்றதோ அதைப் போல் தான் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் ஆழமாகப் பதிவாக்க வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரோ செல்ஃபோனோ படித்துவிட்டு இயங்கவில்லை. அதற்குள் பதிவு செய்த உணர்வுகளால் தான் இயங்குகிறது காட்டுகின்றது மற்ற வேலைகளைச் செய்கிறது.

அதைப் போல் தான் மகரிஷிகளின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வர வேண்டும். தீமைகள் வரும் பொழுதெல்லாம் அதற்காக வேண்டித்தான் உங்கள் நினைவை மகரிஷிகளின் பால் திருப்பச் சொல்கிறோம்.
1.அப்பொழுது தீமைகள் நமக்குள் பதிவாகாமல் மகரிஷிகள் உணர்வு பதிவாகும்.
2.இது அதிகமாக அதிகமாக தீமைகள் நம் ஈர்ப்புக்கு வராது.
3.மாறாக மகரிஷிகள் பெற்ற மெய் ஞானம் வரத் தொடங்கும்.

வித்து வளர்ந்த பின் தான் அதனின் உருவத்தையும் மணத்தையும் பலனையும் நாம் பார்க்க முடியும்… உணர முடியும்.

எல்லாவற்றையும் தெரிந்து அப்புறம் வருவதில்லை.

பள்ளிக்குப் போகிறோம் என்றால் அறிந்து கொள்வதற்காகத்தான் அங்கே செல்கிறோம். படித்தவர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்குப் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை.

அதைப் போன்று…
1.தீமைகள் வரும் பொழுதெல்லாம் துன்பங்கள் வரும் பொழுதெல்லாம் மகரிஷிகள் பால் நம் நினைவுகள் சென்றால்
2.அந்த உணர்வுகளைக் கவர வேண்டும் அதை வளர்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் நாமும் மகரிஷியாக வளர முடியும்.

ஒரு வித்தை நிலத்தில் பதிய வைத்தால் தான் அது வளரும். அதைப் போன்று தான் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை மீண்டும் மீண்டும் பதிய வைத்தால் தான் நமக்குள் அது வளரும்.

இனி எந்த நிலை வந்தாலும் குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்

 

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்… நீங்கள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். அதே போல் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்களும் தியானியுங்கள்.

எல்லோரும் நல்ல நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வருகின்றது. ஒன்றுபட்ட நிலைகள் கொண்டு இவ்வாறு செய்தோம் என்றால் நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் தெருவிலும் ஊரிலும் படர்கின்றது.

கொடுமையான நோய்களோ சில விஷத்தன்மை வாய்ந்த நிலைகளோ இங்கே வராது நாம் எளிதில் தடுத்து நிறுத்த முடியும். தெருவில் வசிக்கும் மக்களையும் நாம் மகிழ்ந்து வாழச் செய்ய முடியும். குடும்பத்திலும் ஒன்றுபட்டு வாழும் நிலையினை உருவாக்க முடியும்.

ஆகவே…
1.இனி எந்த நிலை வந்தாலும் குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்..
2.என் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்வேன்.
3.பேச்சால் மூச்சால் இந்த ஊர் முழுவதும் நல்லதாக்கச் செய்வேன் என்று பிரார்த்தனை செய்து
4.அதன் வழியில் இந்த ஊர் நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டு வாருங்கள்.

ஒருவருக்கு நோய் வந்துவிட்டது என்றாலும் யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அவரை நிற்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அதே உணர்வை அவரையும் எண்ணி எடுக்கும்படி செய்யுங்கள்.

சக்கரத்திற்கு முன்னாடியே இதைப் போன்று செய்து பழகுங்கள். அதே பிரகாரம் அந்த நோய்களும் நீங்கும்… தீமைகளும் அகலும்.

இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இப்படி நம்முடைய சக்திகளைப் பரப்பப்படும் பொழுது நாம் பாய்ச்சிய உணர்வுகள் அங்கே வேலை செய்வதைப் பார்க்கலாம்.

எப்படி…?

ஒருவன் நம்மைத் திட்டுகிறான் என்றால் அவன் திட்டிய உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறான வழிகளுக்கு அது இயக்குகின்றதல்லவா…?

இதைப் போன்று தான் நீங்கள் எங்கிருந்தாலும்
1.குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
3.தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் மாற்றிப் பழக வேண்டும் என்று அருளைப் பாய்ச்சுகின்றேன்.

எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலில் சிறிது காலம் தான் இருக்கின்றோம். அந்த நேரத்திற்குள் நாம் எதை எடுத்து வளர்க்க வேண்டும்…?

அருள் சக்திகளைப் பெற்று இருளை அகற்றிடும் நிலை பெற வேண்டும். அப்போது நம் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

ஆனால் விஷத் தன்மையானால் உடல் குறுகுகின்றது… விஷத்தின் இயக்கமாகவே மாற்றுகின்றது.

ஒளியா… இருளா…?

1.இருள் என்ற நிலைக்கு வரும் பொழுது மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்
2.ஒளி என்ற நிலையினை வளர்க்கும் போது பேரொளியாக மாறுகின்றது.

இந்த நிலையை நாம் பின்பற்ற வேண்டும்.

ஆகவே துருவ நட்சத்திரத்துடன் நாம் அங்கத்தினராக இருக்க வேண்டும் ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும். அதனுடன் இணைந்து என்றுமே நாம் பிறவி இல்லா நிலை அடையும் அந்த மார்க்கத்திற்குச் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தில்… வரும் தீமைகளை நீக்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம். எல்லோரும் அருள் உணவு பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

 

நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும்… நல்லெண்ணம் உடையவர்களும்… தீய எண்ணம் உடையவர்களும் எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைத்திட வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும்… பிறருக்காக… பிறர் மெச்ச தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்துவிடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து துருவனாகி துருவத்தின் ஆற்றலை அறிந்ததனால் அந்த அறிவின் தன்மையை விளையச் செய்து அவன் உடலை உருவாக்கிய உயிர்… ஒளியின் சரீரமாக இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.

அதனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

1.ஆனால் இடைமறித்து
2.சாமி என்ன சொல்கிறார்…!
3.நமக்கு என்ன அர்த்தமாகின்றது…?
4.அவர் “என்னென்னமோ” சொல்கிறார் என்றால் என்ன ஆகும்…?

“நான் படிக்காதவன் தான்…” ஆனால் பேசுகின்றேன்.

படித்தவர்கள் சிந்திக்கும் பொழுது படித்ததை வைத்து இது என்னமோ சொல்கின்றார்…! என்ற நிலைகளில் “விட்டுவிடுவார்கள்”

1.மிகவும் படிக்காதவர்கள்
2.யாம் சொல்வதை “சாமி என்ன சொல்கிறார்…” என்று கூர்ந்து கவனித்தால்
3.அந்த உணர்வின் கருவாகிவிட்டால்
4.தன்னையும் அறிகின்றார்… அண்டத்தையும் அறிகின்றார்… அகண்ட அண்டத்தையும் அறிகின்றார்.
5.துருவ நட்சத்திரம் தனக்குள் எப்படி ஒளியாக மாற்றுகின்றதோ அந்த நிலையை அடைய முடியும்.

ஆக நான் சொல்கிறேன் என்றால் எதை வைத்துச் சொல்கின்றேன்…? நான் எந்தப் பாட நூல்களையும் படிக்கவில்லை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் கண்டுணர்ந்தார். அந்த உணர்வின் அணுக்களை எனக்குள் பதிவு செய்தார். இந்த உணர்வின் நினைவைப் பாய்ச்சினேன்… அறிந்து கொண்டேன்.

இந்த அண்டங்கள் எப்படி உருவானது…? என்ற நிலையை அகஸ்தியன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டான். அவனுக்குள் கண்ட உணர்வுகள் அந்த உணர்ச்சியின் தன்மைகள் இந்தப் பூமியில் உண்டு.

1.அதை நுகரும் ஆற்றல் வரும் பொழுது இந்த உணர்வின் தன்மை
2.உணர்த்தும் தன்மையும்
3.உணரும் தன்மையும் வருகின்றது.

இதையெல்லாம் நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன்.

“நாங்கள் ஒன்றும் படிக்கவில்லையே” இதை என்றைக்குத் தெரிந்து கொள்ளப் போகின்றோம்…! என்று எண்ணினால் அதைத் தடைப்படுத்துகின்றீர்கள் என்று அர்த்தம்.

ஆனால் இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அகஸ்தியன் எப்படி இன்றும் விண்ணிலே என்றும் பதினாறு என்ற நிலையில் மரணமில்லாப் பெரு வாழ்வாக பிறவியில்லா நிலையாக வாழும் நிலைகள் போன்று
1.மனிதான நாம் அவன் வழிகளிலே சென்றால்
2.நிச்சயம் அங்கே செல்ல முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் “ஒளியாக மாறும்… ஒளியாக மாற்றும்…” நுண்ணிய வழி முறை

 

விறகுக் கட்டை இருக்கின்றது அதை எரித்தால் ஒளியாக (வெளிச்சம்) மாறுகின்றது… நன்மை செய்கின்றது.

அதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் தீமை என்ற உணர்வுகள் நம் மீது மோதினாலும்… அருள் ஒளி என்ற உணர்வை எடுத்துக் கலந்து அதை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

எப்படி…?

தீமை என்றாலும்…
1.அதிலே தொக்கி உள்ள விஷம் தான் அதனின் இயக்கத்திற்கு வருகிறது.
2.ஆக அதற்குள் மகரிஷிகளின் உணர்வை இணைத்து இயக்கப்படும் பொழுது “ஒளி…” என்ற உணர்வாக மாறுகின்றது.

அதாவது… கட்டையை எரித்தால் அது கருகுகின்றது… ஆனால் “வெளிச்சம்…” கொடுக்கின்றது. அந்த “வெப்பத்தால்…” மற்றொன்றைச் சமைக்க முடிகின்றது

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் எல்லாம் கதிரியக்கப் பொறிகளால் (அதற்குள் இருக்கும்) தான் இயக்கப்படுகின்றது.

ஆனால் அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை அதற்குள் சேர்த்து
2.நல்ல முறையில் அதை இயக்கப்படும் பொழுது கருகிய உணர்வுகளை நீக்கிவிடுகிறது.
3.அப்போது நமக்குச் சமைக்கும் பக்குவமும் அந்த வெப்பமும் உணர்வைப் பக்குவப்படுத்தும் வலிமையும் கிட்டும்.

இதை நாம் செய்து பழகுதல் வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் உங்களிடம் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்குக் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்தை உற்றுப் பார்த்துத் தியானிக்கும் போது அதிலிருந்து வெளிச்சம் வரும்… உங்களுக்கு நல் வழி காட்டும்… நல்ல சிந்தனைகள் வரும்.

அதிலே ஆசைகளை மட்டும் அதிலே கூட்டி விடாதீர்கள்.

ஆசை என்றால் அது எதுவாக இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த ஒரு ஆசையை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள். உடல் ஆசையைக் கூட்டி இருக்க வேண்டாம். எல்லாம் செய்து… எனக்கு இப்படி வருகிறது…! என்று வேதனையை மட்டும் எடுத்து விடாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும்
1.என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்… மற்றவர்களைப் புனிதப்படுத்தும் சக்தியாக அது வரவேண்டும்
2.குழந்தைகள் நல்ல பண்புள்ளவர்களாக வாழ வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.கணவனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்… மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.நாங்கள் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று
5.இது போன்று செய்து வாருங்கள்… உங்களை அது பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும்.

உயிருடன் ஒன்றுகின்றோம் உணர்வில் கலந்த இருளை அகற்றுகின்றோம்… ஒளியாக நாம் வளர்கின்றோம். என்றுமே நாம் அழியாது ஒன்று சேர்த்து மகிழ்ந்து வாழும் நிலை பெறுகின்றோம்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள். நான் (ஞானகுரு) உங்களுக்கு அருளைப் பாய்ச்சுகின்றேன்… நீங்கள் எனக்கு அருளைப் பாய்ச்சுகின்றீர்கள்.

இந்த உணர்வு ஒன்றாகி ஒளியின் உணர்வுகளாக வலுப் பெறும் போது இருளை அகற்றும் வலிமை பெறுகின்றது. என்றும் அழியாத அந்த ஒளியின் சக்தியைப் பெறுகின்றோம்.

அந்த நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.

October 2022 உபதேசம்

நீங்கள் மிகப் பெரிய டாக்டராக முடியும்

இன்று பெரும்பகுதியான மக்களுக்கு விஞ்ஞான அறிவால் வளர்ந்த நிலையில் உணவுடன் கலந்த விஷத்தன்மைகள் (பூச்சி மருந்துகள்) உடலில் பரவிக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையில் இயக்குகின்றது. அதனால் உடலில் கடுகடுப்பு அதிகமாக இருக்கும்.

நாம் தவறு செய்தோமா…? இல்லையே…!

விஞ்ஞான அறிவிலே சிக்கி இன்று இந்த நிலைகளில்தான் நாம் இருக்கின்றோம். குருநாதர் இதையெல்லாம் உணர்த்தினார்… கண்டேன். அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு)

மருத்துவம் படிக்கின்றார்கள்…
1.உடலில் இன்னென்ன குறைபாடுகள் இருக்கிறது
2.இன்னென்ன மருந்து இன்னென்ன வேலை செய்யும்
3.இன்ன மருந்தைக் கொடுத்து மாற்றினால் குறைபாடு நீங்கி உடல் சரியாகிவிடும் என்று அறிந்த பின்பு அதன் வழி செய்கின்றார்கள்.

ஆனால் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்…? என்ன ஆனதோ ஏது ஆனதோ…! என்று பதட்டம் அடைய வேண்டி இருக்கும்.

டாக்டர்கள் சில கருவிகளை வைத்து உடலில் அந்தந்த இடங்களில் நாடித் துடிப்புகளைப் பார்ப்பார்கள்.
1.இருதயத்தினுடைய வேகத் துடிப்பைப் பார்த்து… இந்த நிலைகள் தான் இருக்கும் என்று டாக்டர்கள் அறிகின்றார்கள்
2.சரியான மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… இந்த உலகம் எப்படி இயங்குகின்றது…? எந்தெந்த நிலையில் இருக்கின்றது…? என்ற ஞானத்தைக் கொடுத்து அதைத் தெரிய வைத்தார்.

அதற்கு 20 வருடங்கள் ஆனது. காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து தான் அதை எல்லாம் கண்டேன்… உணர்ந்தேன்.

“டாக்டராக” ஒருவர் வந்தாலும்… படிக்கப்படும் போது அவர்கள் ஆரம்ப நிலையில் இருந்து படிப்படியாகத்தான் அந்த அறிவினுடைய ஞானத்தில் வளர்ச்சியாகி வருகின்றனர்.

அது முழுமையாகும் போது தான்…
1.இது இன்ன நோய்…
2.அது இந்த நிலையில் இருக்கிறது…
3.அதற்கு இந்த மருந்து கொடுக்க வேண்டும்…! என்று பழக்கப்படுத்திச் செயல்படுகின்றார்கள்.

பழக்கப்படுத்தி… அதைச் சரியான நினைவு கொண்டு மீண்டும் அவர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தால் என்றால் அவர் உயர்ந்த டாக்டராக மாறுகின்றார்.

அதில் ஏமாந்து விட்டால் இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால்… ஒரு நொடி மாறினால்… இவர் கொடுக்கும் மருந்து நல்லது செய்வதற்குப் பதில் தீமைகளை உண்டாக்கிவிடும்.

ஒரே மருந்து தான் அந்த நோயைக் கேட்கும் ஒரே டாக்டர் தான் அந்த மருந்தினையும் கொடுக்கின்றார். இருந்தாலும்
1.மருந்து கொடுக்கப்படும் பொழுது இன்னொரு இடத்தில் துடிப்பு வேறாக இருக்கிறது என்றால்
2.அந்த எதிர்ப்பு நிலைகளைப் பரீட்சித்துப் பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி அதையும் அனுசரித்து
3,அதைத் தணிக்கும் மருந்துகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

சிலர்… அது என்ன…! இந்த டாக்டர் இத்தனை மருந்துகளைக் கொடுக்கிறார் என்றும் கேட்பார்கள்.
1.அறிந்து கொண்ட உணர்வு கொண்டு
2.அது வளர்ச்சியான நிலையில் கொண்டு செயல்படுத்துவது தான் அது.

ஆக… டாக்டருக்குப் படித்துக் கொண்ட மாதிரி உங்களுக்குள் வரக்கூடிய தீமைகளையும் நோய்களையும் நீக்கக்கூடிய சக்தியாக “பெரிய டாக்டராக… துருவ நட்சத்திரத்தின் உணர்வை…” உங்களிடம் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் “அத்தகைய டாக்டராக…” எப்படி வளர்ந்தது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அதைச் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.

அதை வைத்து “நீங்களும் பெரிய டாக்டராக ஆக முடியும்..!”

உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி ஒளியாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்.

அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.

மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்

ஐம்புலனை அடக்கிடவே அருள் புரியுங்கள் என்று பாடலைப் பாடுகின்றீர்கள். ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன…?

பார்த்தல்… சுவைத்தல்… கேட்டல்… நுகர்தல்… எண்ணல்… எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை…
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா…!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்…
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்…” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ்ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ்ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்…! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ்ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா…” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்…?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி… ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்…
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா…!

நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று…! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா…!

நான் சொல்வதெல்லாம்…
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக… அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்… பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல்… மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு…! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை…!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விளக்கினுள் ஊற்றப்படும் எண்ணெய் “இருட்டுதான்” ஆனால் எண்ணெயை எரித்தால் அதிலிருந்து “ஒளி” வருகின்றது – விளக்கம்

இன்று நாம் பல வகையான உணர்வுகளையும் இந்த மனித உடலுக்குள் நின்றே அறிய முடிகின்றது. இது தான் மகா சிவன் இராத்திரி.

நம் உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நம் உயிருடன் நினைவு கொண்டு வரப்படும் பொழுது அந்த நினைவின் ஆற்றலாக நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் துணையாக நம்மை அறியச் செய்கின்றது. தெளியச் செய்கின்றது.

ஆனாலும் நம் உடலுக்குள்… “இருளாக” இருக்கின்றது.

ஒரு விளக்கில் எண்ணையை ஊற்றும் பொழுது
1.எண்ணெய் இருண்ட நிலையாகத்தான் இருக்கின்றது.
2.அந்த எண்ணெயில் நாம் நெருப்பை வைத்து எரிக்கும்போது அது ஒளியாக மாறுகின்றது.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் எத்தனையோ வகையான குணங்கள் பதிவாகியிருக்கின்றது.

அந்த நினைவுகளை எண்ணும் பொழுது
1.அந்த மணம் (உணர்வுகள்) உயிருடன் ஒன்றி
2.உயிரிலே உராய்வாகும் பொழுது
3.அதனின் அறிவாக நம்மை இயக்கி அது அறியச் செய்கின்றது.

இது இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற இயற்கையின் தன்மைகளைத்தான் வேதங்கள் கூறுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் இணை சேர்க்கும் உணர்வுகளில் மாறுபடும் நிலையை “உபநிஷத்து” என்று உட்பிரிவுகளை உணர்த்திக் காட்டினர்கள் ஞானிகள்.

பல கோடிச் சரீரங்களில் நாம் கடந்து இந்த மனித உடல் பெற்ற பின் இந்த இருளுக்குள் மறைந்து
1.மறைத்து வைத்திருக்கக்கூடிய நிலைகளில் நாம் எதை நினைவு கொள்கின்றோமோ
2.அதனின் நினைவின் ஆற்றலாக நமக்குள் தெரியப்படுத்துகின்றது… அதை அறிகின்றோம்.
3.அதன் வழிகளில் வளர்கின்றோம். அதனின் வழிகளில் நாம் இயங்குகின்றோம்.

இவ்வாறு வருவதை நமக்கு உணர்த்துவதற்குத்தான் மகா சிவன் இராத்திரி என்றும் நம்மை நாம் அறிந்திடும் நிலையாக வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“நாம் யார்…?” என்று தன்னைத் தான் யார் என்று அறிந்து கொள்ளும் நிலைக்காக அன்றைய காலங்களில் அந்த மகரிஷிகள் காட்டிய உண்மையின் உணர்வுகள் வேதங்களில் உண்டு,

இன்று யாம் உபதேசிப்பது போன்று நமது குருநாதர் இதைப் போன்ற பல பேருண்மையின் நிலைகளை எமக்கு எடுத்து ஓதினார். அந்த உணர்வினைப் பதிவு செய்து “தான் யார்” என்ற நிலையில் என்னைச் சிந்திக்கச் செய்தார்.

இதில் வரும் எதிர்கொள்ளும் தீமைகளிலிருந்து விடுபடும் முறைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

நல்லதைக் காக்க ஒரு சக்தி உங்களுக்கு வேண்டுமல்லவா…!

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனை வந்து விட்டால் நம்மால் ஒரு கணக்கைச் சீராக பார்க்க முடிகிறதா… ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடிகிறதா… ஒரு சாமானை எடுத்துப் பத்திரமாக வைக்க முடிகிறதா…? இல்லை.

நாம் சரியாகச் செய்யவில்லை என்கிற பொழுது மீண்டும் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எது இயக்குகின்றது…? காரணம் என்ன…?

நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் பொழுது
1.திடீரென்று ஒரு தவறான நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறார்கள்..
2.தவறு செய்வோரை உற்றுப் பார்க்கின்றோம் அல்லது என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…
3.உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அது நமக்குள் வளர ஆரம்பிக்கின்றது.

அந்த நேரத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சரியாகச் செய்வதற்கு மாறாகத் தவறாகச் செய்து விடுகின்றோம். ஐயோ… இவ்வளவு தூரம் நாம் செய்தும் அது சரியாகவில்லையே… பலன் இல்லாமல் போய்விட்டதே… நஷ்டமாகிவிட்டதே…! என்ற வேதனை வந்து விடுகின்றது

1.தவறு நடக்கிறது என்ற அந்த உணர்ச்சிகளை ஊட்டும் பொழுது நமக்குள் ஜீவன் பெறுகின்றது
2.நாம் சுவாசிக்கும் ஆன்மாவிலே அது புகுந்து கொள்கின்றது
3.உயிரிலே பட்டபின் அதற்குத்தான் சாப்பாடு கிடைக்கின்றது… நல்ல குணங்களுக்கு நல்ல சாப்பாடு போவதில்லை
4.ஆகையினால் நல்லதை நம்மால் இயக்க முடியாமல் போய்விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் இயக்கத்திற்கு வருகிறது. நம் உடலில் அணுக்களாக விளைந்ததை மீண்டும் நினைவுபடுத்திய உடன் நமக்குள் இவ்வாறு சில மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்வதில்லை.

இதைப் போன்ற தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…? அதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா…!

அந்த சக்தி பெறுவதற்குத் தான் உங்கள் நல்ல குணங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்பொழுது ஊட்டமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கி வருகின்றீர்கள். உங்களுடைய உணர்வுகள் எதையெல்லாம்… எப்படி எல்லாம் அது இயக்குகிறது…? என்பதை உணரும்படி செய்கிறோம்.

எதன் வழி கொண்டு…!

குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் (ஞானகுரு) எனக்குள் கலந்து வைத்திருக்கின்றேன்.
1.உங்களுக்குள் அதைக் கலந்து உண்மையின் உணர்வுகளைத் தெரியப்படுத்துகின்றோம்.
2.அந்த நல்ல நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்… அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எண்ணத்துடனே இதை உபதேசிக்கின்றேன்.
4.கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணர்வுகளில் அதை இணைத்துக் கொண்டே வருகின்றேன்
5.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி தன்னாலே உங்களுக்கு வந்துவிடுகிறது

தன்னால் எப்படி வருகின்றது…?

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அப்போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த அந்தப் பதிவு உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுவில் சிறிதளவு இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து உங்களுக்குள் அதைப் பெருக்க ஆரம்பிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வளர வளர… உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக மாறும். தீமை அகற்றும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

யாகத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும்போது தான் ஆண்டவன் வருவானா…! யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

சாமியார்கள் என்றாலே வேஷதாரிகள்… ஏமாற்றுக்காரர்கள்… சூனியக்காரர்கள்… என்றும்… தான் வாழும் வழிக்குத் சாமியார் என்ற வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள்…! என்றும் உருவாக்கி விட்டார்கள்.
1.பல மதங்களைப் பரப்பி
2.பகவானைப் பணிவதற்குப் பல நிலைகளை மக்களுக்கு உணர்த்தி
3.பல கோடி ஜெபங்களை ஜெபித்து
4.ஆண்டவனை வணங்குவதையே மக்களின் மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வாக உண்டு பண்ணிவிட்டார்கள் இந்தப் பல வழிச் சாமியார்கள்.

இவர்களில் சிலர் பல மந்திரங்களை மக்களுக்குப் புரியாத பாஷையில் ஓதி ஒமகுண்டங்களை வளர்த்து அந்த ஓம குண்டத்தில் பொன்.. பட்டாடைகள்… பல வகைப் பதார்த்தங்கள்… இன்னும் பலவற்றைப் போட்டு ஓமங்கள் வளர்க்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் எட்டுப் பூசாரிகளை அமரச் செய்து அவ்வனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டவனைக் கோடியார்ச்சனை என்ற பேரில் புரியாத சமஸ்கிருத மொழியில் ஓதுகிறார்கள்.

இந்த வழியில் யாகக் குண்டத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும் பொழுது தான்
1.அந்த ஆண்டவன் வருவானா அந்நிலைக்கு…?
2.யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

அத்தகைய சாமியார்கள் மக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக யாகம் வளர்த்து மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ஆக
1.பொருள் தருபவனுக்கு (மக்கள்) அந்தச் சாமியார்கள் செய்யும் பூஜையில் ஆண்டவன் வந்து அருள் தருவானாம்…!
2.ஆண்டவனுக்கு இவர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) தூதுவர்களாம்…!

பல ஆயிரம் செலவு செய்து யாக குண்டம் வளர்த்து அந்தப் பூசாரிகளுக்கு அன்னமளித்து பொருள் தந்து அந்த ஆண்டவனை வணங்கினால் இவன் செய்த பாவங்களும்.. இவன் எண்ணமும் மாறி.. அந்த ஆண்டவன் வந்து அருள் புரிவானாம்..!

1.ஊரை ஏமாற்றி…
2.உள்ள நிலையைப் புரிந்திடாமல்…
3.தன் புகழைப் பரப்பப் பூஜை செய்பவர்கள் தான் பெரும்பாலனவர்களாக உள்ளார்களப்பா…!
4.இவர்களின் நிலைக்கெல்லாம் இந்தப் பல வழிச் சாமியார்கள் பெரும் தூதுவர்களப்பா…!

செய்த பாவத்தைக் கழித்திட பூஜை செய்துவிட்டால் பாவம் தீர்ந்துவிடுமா…? அவர்கள் தான் அதைப் பாவம் என்றே எண்ணுவதில்லையே…!

புகழுக்காகத் தான் சம்பாதித்த செல்வத்தை “அந்த ஆண்டவன் வந்து காப்பாற்றித் தர வேண்டும்…” என்பதற்காக அந்த ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பல பூஜை செய்கிறார்கள் இந்தப் பாமர மக்கள். “பெரும்பாலான பூஜை முறையே… இப்படித்தானப்பா உலகெங்கிலும் உள்ளது…!”

இந்த மனிதர்களை மாற்றிடவும் நல்வழியில் அழைத்துச் செல்லவும் நல் வழியில் பல சாமியார்கள் (நல் வழிச் சாமியார்கள்) இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்…!

பல ஜெபங்களை ஜெபிக்கச் சொல்லி மக்களின் மனதினிலே நல்ல உணர்வுகளை ஆழமாகப் பதிய வைக்க நல் வழிச் சாமியார்கள் எல்லாம் நாட்டம் கொண்டு நடந்திட்டார்கள்.

இன்னும் சில இடங்களில் சில சாமியார்கள் அந்த ஆண்டவனின் சக்திக்குப் பல வகை நாமங்களைச் சூட்டி புவனேஸ்வரி பூஜை… சௌண்டேஸ்வரி பூஜை… காமாட்சியம்மன் பூஜை…! என்று இன்னும் பல நாமங்களைச் சூட்டி அந்தச் சக்தியின் நிலைக்கே பல யாகங்களை வளர்த்துப் புகை மண்டலங்களை எழுப்பி
1.தான் வாழ… தன்னைச் சார்ந்தவர்கள் வாழ… தன்னை நம்பி வருபவர்களை வாழ வைக்க…
2.இப்படியும் பல நிலைகளைச் செய்கிறார்கள்.

நல்ல மணத்தைக் கொண்ட புகை மண்டலத்தை எழுப்பி அந்த ஆண்டவனை ஜெபிக்கும் பொழுது எந்நிலையில் நாம் ஜெபிக்கின்றோமோ அந்நிலையில் அவர் அவர்கள் ஜெபிக்கும் நிலைக்கு அந்தச் சக்தி நிலை வருகிறதப்பா…!

1.ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டாமப்பா…!
2.எல்லோருமே அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி அவன் அருளை எப்படியும் பெறலாமப்பா..!
3.அவனவன் எண்ணத்திலும் சுவாசத்திலும் தான் எல்லாமே இருக்கின்றதப்பா…!

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக…
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன்னை நான் பார்த்திடவே
என்னில் உன்னைக் கண்டிடவே
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன் வழியில் சத்தியத்தை
உன் வழியில் தர்மத்தை
உன் வழியில் நியாயத்தை
உன்னை எண்ணும் இதயத்தில்
ஊன்றிடுவாய் ஈசனின் சக்தியே

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமென்றாலும் உதவி செய்யலாம்… எந்த வகையிலும் நுகர்ந்தறியலாம்.

1.கஷ்டப்படுகின்றார்கள் வேதனைப்படுகின்றார்கள் தவறுகள் செய்கின்றார்கள் என்று
2.புறநிலைகளில் நாம் அறிந்து கொண்டாலும் அறிந்த பின்
3.மீண்டும் அது நமக்குள் அணுத் தன்மையாக கருவாகாதபடி
4.நாம் கேட்டறிந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் பிறருடைய தீமைகளையும் அவர்கள் கஷ்டப்படுவதையும் பார்த்து… கேட்டு… நுகர்ந்து… நமக்குள் வளர்த்து அதையெல்லாம் நாம் “பிடிவாதமாகப் பிடித்துக் கொள்கின்றோம்”.

அதைத் தடுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

சூரியன் உலகுக்கே ஒளியாக வழி காட்டுகின்றது.

அதைப் போல அகஸ்தியர் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ரிஷி என்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிருஷ்டித்துக் கொண்ட நிலைகளில் இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் மனைவி உயர வேண்டும் என்ற உணர்வை ஒன்றாகச் சேர்த்து இணைத்து அந்த ஒளியின் சரீரமாக ஆனவர்கள்.

இருவருமே அந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்து தனக்குள் எந்தத் தீமையும் புகாதபடி தீமைகளை அழித்தனர்.

அதனின் உணர்வு கொண்டு எந்தத் துருவத்தைக் கூர்மையாக எண்ணினார்களோ கூர்மை அவதாரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

பூமிக்குள் வருவதனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்,

நவராத்திரி கொலு முடிந்தபின் பத்தாவது நிலையாக விஜய தசமி என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

தசமி – நாம் எப்படிப் பத்தாவது நிலை அடைவது…?

விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்யும் உயிர் பல கோடிச் சரீரங்களில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றி விண் செல்லும் நிலையைத்தான் விஜய தசமி என்று காட்டினார்கள். அதை அறிவிக்கும் நாள் தான் விஜய தசமி.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. கல்கி என்று ஒளியின் நிலையாக அவர்கள் எப்படிப் பெற்றார்களோ அதன் வழி கொணடு அதை நாமும் பெற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து காலை 4 மணிக்கெல்லாம் ஒளி அலைகள் வெளி வருகின்றது. சூரியனின் காந்தசக்தி கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தோம் என்றால் நம் சிந்தனையைக் குறைக்கும் நஞ்சான உணர்வுகளை வெல்லும் ஆற்றல் பெறுகின்றோம்.

அதனின் வலிமை கொண்டு நமக்குள் பிடிவாதமாக இயக்கும் அத்தனை உணர்வுகளையும் அடக்க முடியும்.

1.இப்படிச் செய்தானே
2.அப்படிச் செய்கின்றானே
3.இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது…! என்ற நிலையில்
4.”பிடிவாதம் பிடிக்காதபடி” நமக்குள் அந்த உணர்வின் உண்மையை உணர்த்தும்.

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது.

அங்கே எடுத்தவுடன் எங்கே செல்கின்றான் நாரதன்…?

உயிரான விஷ்ணுவிடம் தான் செல்கின்றான். விஷ்ணுவிடம் சென்றபின் கண்ணாக இருக்கும் கண்ணனிடம் செல்கின்றான் நாரதன். “கண்ணா.., எல்லா உபாயமும் உனக்குத் தெரியும்” என்று சொல்கிறான்.

1.கண்களின் செயலாக்கமும்
2.எண்ணிய உணர்வுகள் நமக்குள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையையும்
3.அதிலிருந்து மீட்டிடும் உபாயங்களையும்…
4.ஒரு காவியத் தொகுப்பாக கீதாச்சாரம் என்று எழுதி அமைத்துள்ளார் வியாசகர்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

யாம் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் “விஷ்ணு தனுசாக உங்களுக்குள் பாயும்”

துருவ நட்சத்திரத்திலிருந்து அதிகமாகச் சக்திகள் நம் பூமிக்குள் வரக்கூடிய நேரம் அதிகாலை தான். நம் பூமி கவரக்கூடிய அந்த நேரத்தில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது…? என்று அந்த உணர்வுகளை உபதேச வாயிலாக உங்களுக்குக் கொடுக்கும் பொழுது
1.உங்கள் உணர்வுகள் ஒவ்வொன்றிலும் இது கலக்கின்றது.
2.உங்களிடம் இருக்கும் எல்லாக் குணங்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை இணைக்கும் ஒரு வித்தாக உருவாக்குகின்றோம்.

அக்ரிகல்ச்சரில் புது விதமாகப் பல வீரிய வித்துக்களை உருவாக்கிக் கொடுக்கின்றனர். அதற்குப் பிற்பாடு அதை விளைய வைப்பதற்கு எந்தெந்த நேரத்தில் நீரைப் பாய்ச்ச வேண்டும்…? உரங்களை எப்போது போட வேண்டும்…? அதற்கு வேண்டிய பக்குவங்களை எப்படிச் செய்ய வேண்டும்…? சொல்லிக் கொடுக்கின்றனர்.

அதைப் போன்று நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்திற்கு அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஆத்ம சுத்தி செய்து வந்தால் அந்தப் பேரருளை நிச்சயம் உருவாக்க முடியும்… பேரொளியாக நீங்கள் மாற முடியும்.

1.துருவ நட்சத்திரம் எப்படி அழியா ஒளிச் சரீரம் பெற்றிருக்கின்றதோ…
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எந்த விஷத்தையும் ஒளியாக அது எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றதோ…
3.அந்த உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஒளியான வித்துக்களாக உருவாக்குதல் வேண்டும்.

அவ்வாறு செய்து வந்தால் இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சில தீமைகளை நீங்களே விலக்கக்கூடிய நிலையும்… அதைச் சமப்படுத்தக்கூடிய நிலையும்… உணர்வுகளை ஒளியாக மாற்றக்கூடிய சக்தியும் எளிதில் பெற முடியும்.

அதற்குத் தான் அதிகாலை “துருவ நேரத்தில்…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அருள் ஞான வித்தாக உங்களுக்குள் ஆழமாக ஊன்றி அதைப் பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

தனுசுகோடி…! என்ற நிலைகளில் நான் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் தனுசாகப் பாய்ந்து உங்களுக்குள் அது முழுமை பெறக்கூடியதாக வளர்ச்சி பெறும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி இப்பொழுது ஏங்கித் தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்களுக்குள் ஈர்க்கப்படுகின்றது
2.அந்த ஒளி அலைகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அது ஒன்றென இணைந்து பேரருளாக… பேரொளியாக… உருவாகும் அருள் சக்தி உங்களுக்குள் இப்பொழுது உருவாக்கப்படுகின்றது… பதிவாக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ளும் அந்தத் தகுதியைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.

வசி…வசி…! என்ற வசிய மந்திரம்

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே மும்மூர்த்தியின் வடிவம் என்ன…? என்ற ஒரு அன்பரின் கேள்விக்கு ஈஸ்வரபட்டர் அளித்த பதில் இது.

எட்டுத் திசையை நோக்கி எட்டுத் திசையிலும் உள்ள பாலரை வசியம் செய்து உன்னுள் ஈர்க்கப் பார்க்கின்றாய்.
1.”ஈஸ்வர சக்தி” உன்னுள் இருப்பதை அறியாமல்
2.பல பாலரை ஏனப்பா உன் வசியத்தில் ஈர்க்கிறாய்…?

இது ஆவியின் நிலையில் மந்திரவாதிகள் மந்திரிக்கும் ஜெபமப்பா…! ஆவிகளை எல்லாம் தன் வசம் இழுப்பதற்காக இந்த நிலையில் வசியப்படுத்துவான்.
1.உன்னையே நீ யார்…? என்று புரிந்து கொள்ளாமல்
2.பல ஆவிகளை ஏன் இழுக்கின்றாய் உன் வசியத்திற்கு…?

ஆவிகளின் நிலை எல்லாம் தன் எண்ணத்திற்கு… தன் பசிக்கு… எங்கு அதற்கு ஆகாரம் கிடைக்கின்றதோ அந்த நிலைக்கு வந்துவிடும். ஆவிகளை வசியப்படுத்திக் கொண்டு தான் மந்திரவாதிகளின் வேலை எல்லாம் நடக்கின்றதப்பா. நடுத் தெருவிலும் நடுஜாமத்திலும் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் இது தானப்பா..!

குடுகுடுப்பை அடித்துக் கொண்டு வருபவன் நடுஜாமத்தில் மயானக் காட்டில் அமர்ந்து தன் வசியத்திற்கு ஆவிகளை அழைப்பான். இந்நிலையில் ஜெபித்துத்தான் அந்நிலையில் அந்த ஆவிகளுக்குப் பிடித்த ஆகாரத்தை அளிப்பான். பல உண்மைகளை அந்த ஆவிகள் இவனுக்கு உணர்த்திடும்.

நடுநிசியிலே அந்தக் குடுகுடுப்பாண்டி நடந்து வீதி உலா வந்திடுவான். அவன் நடப்பதுவும் அவன் சொல்வதும் அவனுக்கு ஒன்றும் தெரியாதப்பா. அந்த ஆவிகள் தான் அவன் உடலில் அவன் வசியப்படுத்திய வழியில் வந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சொல்லிக் கொண்டே செல்கிறது.

1.ஆனால் ஈஸ்வர சக்தியின் அருளைப் பெற்றவர்களின் இல்லத்திற்கு
2.இந்த ஆவிகள் சொல்லும் வாக்கெல்லாம் வந்து தாக்காதப்பா…!

நீ வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த ஆவிகளின் நிலையிலிருந்து எப்பொழுது தான் மீளப் போகின்றாய்..? ஜெப நிலையே இன்னும் நீ புரிந்து கொள்ளவே இல்லையப்பா..!

மந்திரக்காரர்ளும் மாந்திரீகம் செய்பவர்களும் அவர்கள் ஜெபிக்கும் இடத்தில் பல வாசனைத் திரவியங்களைப் போட்டுப் புகை மண்டலத்தை எழுப்பிப் பல வகை உணவுப் பதார்த்தங்களையும் ஜீவராசிகளின் உணவுகளையும் வைத்து மந்திரம் ஜெபிக்கின்றார்கள்.

அந்த மந்திரத் தன்மையில் ஜெபிக்கும் பொழுது அதன் நிலைக்குகந்த ஆவிகள்… தீட்சண்ய ஆவிகள்… அகால மரணமடைந்த ஆவேச ஆவிகள்… தற்கொலை செய்த ஆவிகள்… பிறரினால் கொலை செய்யப்பட்ட ஆவிகள்… இந்த நிலையில் உள்ள ஆவிகள் எல்லாம் இவர்கள் படைக்கும் உணவுக்காக வரும்.

இவர்கள் ஜெபிக்கும் ஜெபத்தில் ஜெபம் என்றால் என்ன என்று எண்ணுகிறாய்…?

ஆவிகளுக்குண்டான உணவை எல்லாம் படைத்துப் புகை மண்டலங்களை எழுப்பி வசி…வசி…! என்று அந்த ஒலியின் நாமத்தை துர்மரண ஆவியின் நாமத்தை வைத்து வசி…வசி…! என்று வசியப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.மந்திரம் சொல்வதும் தகட்டில் எழுதுவதும் ஓலையில் எழுதுவதும் எல்லாமே அந்த ஆவிகளின் வசியத்தின் மூலமாகத் தான்.
2.தன் பிழைப்புக்காக தன் உயிர் நிலையையே மாற்றிக் கொண்டு பல ஏவல்கள் செய்வதெல்லாம் அந்த ஆவிகள் தான்.

மாந்திரீகர்களின் மண்டை ஓட்டை வைத்து ஜெபிப்பது என்ன என்றால் எந்த ஆவியைத் தான் வசியம் செய்து வைத்துள்ளானோ அந்த ஆவியைத் தன் உடல் பின்னமாகி எந்த நிலையில் எங்கு அதனின் உடலின் மண்டை ஓடு உறுப்புகள் உள்ளது என்ற நிலையைச் சொல்லிவிடுகிறது.

அதை எடுத்துக் கொண்டு வந்து அவன் ஜெபிக்கும் பொழுது இன்னும் பன்மடங்கு அவனுக்கு அந்த ஆவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
1.மாந்திரீகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளும்
2.இந்த மண்டை ஓடுகளும் மற்ற எலும்பு உறுப்புகளும்
3.பிறருக்குத் தெரியாத நிலையில் இருக்குமப்பா…!

மன நிலையில் சோர்வுள்ளவர்கள் மகான் என்று எண்ணி அவன் போட்டிருக்கும் சாமியார் வேஷத்தை நம்பி அவனை அணுகுகின்றார்கள்.

மனச் சோர்வடைந்த மக்கள் அவனை நாடிச் செல்லும் பொழுது
1.விபூதி வரவழைத்தோ புஷ்பம் வரவழைத்தோ இப்படிப் பல பல பொருள்களை வரவழைத்துக் கொடுப்பான்
2.மக்கள் அவன் அளிப்பதை நம்பி வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலே வைக்கின்றார்கள்.

இல்லத்திற்குள் வைத்தவுடன் எல்லாமே நல்லதாகத்தான் நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் வேலை எல்லாம் இவன் உடலில் உள்ள அணுக்களை தன் நிலைக்குத் திசை திருப்பி அவன் உடலில் உள்ள அணுக்களைத் தன் வசப்படுத்த அவன் மன நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அந்த ஆவி தன் நிலைக்குகந்த ஆகாரத்தையோ தன் நிலைக்குகந்த எண்ணத்தையோ அவனை எண்ண வைத்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஆவிகளின் நிலை எல்லாம்
1.அவன் உயிரணுவுக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்து அவன் நிலையில் அவனை இருக்க விடாமல்
2.அவனையே தன் வசப்படுத்திக் கொண்டு அவனுக்குள் வந்து குடி அமர்கிறது அந்த ஆவி.

தன்னுள் இருக்கும் சக்தியை புரியாமல் மாந்திரீகரிடம் சென்று பல தீட்சண்ய ஆவிகளுக்குத் தன் நிலையையே விற்று விடுகின்றார்கள் புரியாத பாமர மக்கள்.

1.தேவர்களின் தேவனப்பா மனிதர்கள் எல்லாம்.
2.இந்த மனித உடலைப் பெறுவதே பெரும் பாக்கியமப்பா…! என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுங்களப்பா…!
3.மந்திர மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளின் இயக்கத்திலிருந்து விடுபடுங்களப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.ஆண்டவனாக இருப்பது நம் உயிர்.
2.ஈசனாக இருந்து உருவாக்குவதும் உயிர்.
3.நாம் எண்ணியதை உள் நின்று செயலாக்கும் தெய்வமாக இருப்பதும் அது தான்.

நம்முள் நின்று அது இயக்கப்படும் பொழுது அதுவே நம் எண்ணத்தால் உருவான அந்த அணுவின் தன்மை கடவுளாக இருக்கின்றது.

“தனித்த கடவுள்” எவரும் இல்லை.

உணர்வுக்கொப்ப அந்தச் செயலுக்கொப்பத்தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த நிலையை நாம் அறிந்து கொள்வதற்குத் தெய்வங்களாகக் காட்டப்படுகின்றது.

நாம் பார்க்கின்ற மாதிரி சிவன் இப்படி உருவத்தில் இல்லை. முருகன் இப்படி இல்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உருவங்களைக் காட்டிக் கடவுள் இப்படித்தான் இருந்தார் என்று அதன் வழி வகுத்துக் கொண்ட நிலைகள் தான் இன்று அவர்கள் கொடுத்த காவியத்தைப் பதிவாக்கி இந்த உணர்வே அவர்கள் உடலுக்குள் நின்று கடவுளாக உருவாகின்றது.

உலக மதங்கள் அனைத்திலும் இப்படித்தான் உருவாக்கிக் கொண்டார்கள்.

கடவுள் இப்படித்தான் இருந்தார் என்று கற்பனை செய்து கொண்டு அதற்குத்தக்க உருவத்தைக் கொடுகின்றார்கள்.
1.உருவம் இல்லாத நிலைகள் எதுவும் இல்லை.
2.கடவுள் உருவமே இல்லாதவர் என்று சொல்வார்கள்.
3,அரூபி என்றும் சொல்வார்கள்.
4.ஆலயங்கள் அமைக்கப்படும் பொழுது (எந்த ஆலயமாக இருந்தாலும் சரி) இந்த உருவத்தின் நிலையையே அங்கே உருவாக்குகின்றார்கள்.

அதற்குப் பெயரில்லை என்பார்கள். ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு ஞானிகளின் பெயரை வைத்திருப்பார்கள்.

மதங்கள் உருவமில்லாத நிலைகளில் அரூபியாகத்தான் கடவுள் செயல்படுகிறார் என்று சொல்வார்கள்.

இல்லை.

கிருஸ்தவர்கள் இயேசுவை உருவமாக வைக்கவில்லையா…! அதே மாதிரி இங்கே உருவமாக மசூதியை வைத்துத் திரையைப் போட்டு மூடவில்லையா…!. அதற்குள் மறைந்துள்ளார்கள் இன்னார் மகான் நல்லவர் என்பார்கள்.

இதுவும் உருவ வழிபாடுதானே.

1.நமக்குள் மறைந்த குணத்தின் செயலாக்கங்களை உருவமாக்கி
2.இன்னென்ன குணங்கள் இன்னது செய்யும்…! என்று தெய்வ நிலையாக்கி
3.நம்மை அறியும்படி செய்தார்கள் ஞானிகள்

இதுவும் உருவ வழிபாடு தான்.

பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

ஒரு நண்பன் மேல் பாசம் கொண்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். இந்த உணர்வு எனக்குள் பதிவாகின்றது. அதே நினைவுடன் கண் கொண்டு நண்பனைப் பார்த்த பின் மகிழ்ச்சியுடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றேன்.

நண்பன் என்று வளர்ந்தாலும் காலப் போக்கில் அவன் என்னை மதிக்கும் தன்மை குறைந்து விட்டால் என்ன ஆகிறது…?

நான் நண்பனை மதிக்கின்றேன். ஆனால் நண்பனோ என்னைச் சரியாக மதிக்கவில்லை… சீராக எனக்கு உதவி செய்யவில்லை…! என்று
1.இந்த எதிர்பார்ப்புகள் அதிகாமன பின் நண்பனை வெறுக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.அன்று அத்தனை உதவி செய்தேன்… இன்று எனக்கு இப்படிச் செய்கிறான்… என்று அகம் கொள்ளுகின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு அவனைக் குற்றவாளியாக்குகின்றது
4.முதலில் உதவி செய்த பண்புகளை மாற்றிவிட்டு அவனுக்குத் தீங்கு செய்யும் நிலையையே உருவாக்கி விடுகின்றோம்.

ஆக…. நமக்குள் இருக்கும் 108 அகமதிகளும் (108 விதமான குணங்கள்) அகங்கார நிலைகளும் “தன்னைத் தன்னைக் காத்திடும் நிலையாகவே” அது வருகின்றது.

விவசாயப் பண்ணைகளில் ஒரு செடியில் அதனுடன் மற்ற செடிகளின் கருக்களைச் சேர்த்த பின் அதற்குத்தக்க செடிகளில் மாற்றங்கள் அடைகின்றது.

இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு உயிரினங்களில் உள்ள அணு செல்களை எடுத்து மற்ற மற்ற உயிரினங்களில் இணைக்கும் போது உயிரினங்களிலே உருமாற்றங்களைச் செயல்படுத்தும் தன்மை மனிதனுக்கு வருகின்றது.

தாவர இனங்களை மாற்றுவது போல் உயிரினங்களை மாற்றுவது போல் தான் நாம் நுகரும் உணர்வுகளைச் சீர்படுத்தவில்லை என்றால்
1.அது நம் நல்ல குணங்களைத் தீமையின் உணர்வுகளாக மாற்றிவிடும்
2.உடலின் அமைப்பை மாற்றிவிடும்… குணங்களை மாற்றிவிடும்
3.பின் இருள் சூழும் நிலைகள் கொண்டு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்ததற்கு மாறாக தேய்பிறையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும்.

மனிதர்களான நாம் ஆறாவது அறிவு கொண்டு இன்று பல பொருள்களை இணைத்துச் சுவை மிக்கதாக உருவாக்கி உணவாக உட்கொள்கிறோம்.

அது போல… நமது வாழ்க்கையில் கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அதனதன் இயக்கத்திற்கு விடாதபடி நாம் சமப்படுத்த வேண்டும்.

நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் தனக்குள் சமப்படுத்தும் நிலை வருகின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழியே வழி பார்க்கின்றது

1.நண்பன் என்ற நிலையில் எண்ணங்கள் பாசத்துடன் வரும் பொழுது காக்கும் நிலைகளை உருவாக்குகின்றோம்
2.ஆனால் சிறிதளவு பகைமை என்று உணர்வுகள் வந்து விட்டால் அவனைத் தாக்க வேண்டும் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வே வருகின்றது

ஆகவே பற்றும் பாசமும் இந்த உலகில் நமக்குள் பல நன்மைகளையும் செய்கின்றது தீமைகளையும் செய்கின்றது.

ஆனால் பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை. அப்படி என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தான்…!

பிறிதொன்று நம்மை இயக்காதபடி அருள் ஒளி என்ற நிலைகளில்
1.அகண்ட அண்டத்திலும் நஞ்சின் தன்மை தன்னைத் தாக்கிடாது
2.அதை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.பகைமை உணர்வுகள் எப்பொழுது உருப் பெறுகின்றதோ அதை அடக்குதல் வேண்டும்;.

மிளகாய் காரத்தின் தன்மை கொண்டது தான். மற்ற பொருளுடன் இணைக்கப்படும் பொழுது அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் தணிகின்றது. உப்பு கைப்பாக இருக்கின்றது… அதை மற்றவைகளுடன் சமப்படுத்தும் போது சுவையின் தன்மை கூடி மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

எனவே எதனை நாம் நுகர்ந்தாலும் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.அந்த அகங்காரத்தை எடுத்து விடாதபடி
2.அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

அப்படி வளர்த்தோம் என்றால் நம்மை இருள் சூழாத நிலையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் ஆற்றலையும் நாம் பெறுகின்றோம்.

இன்றைய உலகில் மனிதனின் அடுத்த நிலை வளர்ச்சிக்கு உதவும் “திறவுகோல்…”

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான் மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவுகோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞானக் கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவர்கள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எந்த ஒரு அணுத் தன்மையை எடுத்துக் கொண்டாலும் மூன்று நிலைதான் வெப்பம் காந்தம் விஷம். அதே போல உயிரணுவின் தன்மை வரப்படும் பொழுது மூன்று நிலை.

ரேவதி நட்சத்திரம் பெண் பால் தன்மை கொண்டது. ஒரு உயிரணுவிற்குள் ரேவதி நட்சத்திரத்தின் தன்மை அதிகரித்திருந்தால் பெண்பாலாக உருவாக்கும் தன்மை வருகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் விகிதாச்சாரம் ஒரு உயிரணுவிற்குள் அதிகமாக இருந்தால் ஆண் பாலை உருவாக்கும் நிலை வருகின்றது.
1.இப்படி 27 நட்சத்திரங்களும்
2.வித்தியாசமான நிலைகளில் உயிரணுக்களைத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.

பூமியோ மற்ற கோள்களோ சுழலும் பொழுது வெப்பமும் ஒரு பகுதியில் ஈர்க்கும் தன்மையும் வருகின்றது.

சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ……கம்”.
1.அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து
2.தனக்குள் இழுத்து “கம்…” – “சோ……கம்”.
3.விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று
4.அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.

பூமியின் நாதம் “ஓ…ம்” என்று இருப்பினும் வியாழன் கோள் மற்ற நிலைகளுடன் மோதப்படும்பொழுது அதனுடைய சுருதியின் நிலைகள் பல விதமாக வரும்.

நாதங்கள் எதனெதன் நிலைகளில் மோதுகின்றதோ அதற்குள் “ஓஒஓ…ஓஒஓ…ஓஒஓம்…ம்…ம்”என்று இந்த மாதிரி அலைகள் தனக்குள் இசைகள் கூடியும் குறைத்தும் வரும்.

அது நுகரும் உணர்வுக்குள் மலரும் தன்மையும் வளரும் தன்மையும் என்ற நிலைகளில் இந்த ஒலி அலைகளைக் கண்டுணர்ந்தவன் ஆதியிலே அகஸ்தியன் என்றாலும் பின்னாடி வந்த வியாசகர் 4000 ஆண்டுகளுக்குள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட பேருண்மைகள் இது.

அதற்கு முன்பு பலர் பெற்றாலும் இந்த உண்மையின் உணர்வுகளை அவரவர்கள் அறிவிலே தெரிந்தது தான் வளர்ச்சி கொண்டது.

மற்ற கோள்கள் சுழலும் பொழுது வெப்பமும் தனக்குள் ஈர்க்கும் சக்தியால் உணவாக எடுத்து விளையும் தன்மையும் வருகின்றது.

1.இப்படி நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியும்
2,வியாழன் கோளின் சத்தும் மூன்றும் சேர்ந்து ஒரு உயிரணுவாக உருவாக்கப்படும் பொழுது
3.எதனின் நிலைகள் கவர்ந்ததோ அதனின் வழி கொண்டு தான் அந்த உயிரணுவின் இயக்கம்.

நான் செய்வது எப்படித் தவறாகும்… என்று கேட்பது நாம் தானா…! அல்லது சுவாசித்ததா…?

மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது – நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.

நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.

ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.

உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்… அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்… அகங்காரம் கொள்ளுகின்றது.

அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்…? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்… தான் நுகர்ந்த உணர்வுகள்… தான்… தனது… என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா…?

ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்… “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்…” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.

இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை… துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்…” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.

இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்… அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.

உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து சஞ்சலமற்ற… சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்… எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்… எடுக்க வேண்டிய முயற்சி நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெற வேண்டும். மனத் திறன் என்றால் என்ன…?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா…!
6.அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊண் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்…”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி… “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது…!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைக் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில் தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா…?

1.சுவாசிக்கும் சுவாசமானது… சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் – செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா…!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்…!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

சுபம்… சுபம்… சுபம்…!

நஞ்சை ஒளியாக மாற்றிடும் மார்க்கத்தைத் தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றோம் – ஞானகுரு

1.சூரியன் நஞ்சினைப் பிரிக்கின்றது
2.ஆனால் துருவ நட்சத்திரமோ நஞ்சினை ஒளியாக மாற்றுகின்றது.

சூரியன் தனது நிலைகளில் நஞ்சினைப் பிரித்து மற்றதுடன் மோதும் பொழுது தான் ஒளிக் கதிராக மின்னுகின்றது. நஞ்சின் தாக்குதலால் வெப்பத்தின் தணல் கூடி ஒளியின் தன்மையாக மாறுகின்றது.

ஆனால் மனிதனாகி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன பின் நஞ்சின் தன்மை தனக்குள் அருகில் வரும் பொழுது அதை ஒளியின் சிகரமாக மாற்றுகின்றான்.
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை அடக்கி ஒளியாக இணைத்து
2.ஒளியின் சிகரமாக மாற்றும் தன்மை நாமும் பெற வேண்டும்.

மனிதனாக ஆனவன் தான் இதை உருவாக்க முடியும். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்றும் முழு முதற் கடவுள் என்றும் காட்டுகின்றார்கள்.

ஆக… இந்த மனித உடல் பெற்ற பின் அருள் ஒளியினை உருவாக்கும் முழுமையான கடவுளாக நாம் ஆகின்றோம். அதன் வழியில்
1.மகா சாந்தம் என்ற நிலைகளில்
2.மகா என்று சர்வத்தையும் சாந்தப்படுத்தும் உணவுகளை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்.

நமக்குள் ஒன்றிணைந்து வாழும் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டால் எந்த நஞ்சினையும் வென்றிடும் சக்தியாக… உள் நின்று நஞ்சினை ஒளியின் சிகரமாகக் கூட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்ததைத் தான் விநாயகர் தத்துவத்தில் “முழு முதல் கடவுள்…” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் வாழ்வோம். நமக்குள் புகும் இருளை புகாது அதைத் தடுத்து நம்மைப் பாதுகாப்போம். அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஒருநிலைப்படுத்துவது தான் மெய்ஞான விழிப்பு

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்ளுதல்) என்றிட்ட ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்… அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தத்தம் செயலுக்கு சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்…” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்… உணர்தல்… தெளிதல்… என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால்… எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்…?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூர்மை அவதாரம் – நாம் தெளிவாக உணர்ந்து கொள்வதற்காக ஒரு உருவம் அமைத்து ஆமையைப் போடுகின்றார்கள்.

உதாரணமாக ஒரு கண்ணுள்ள புழு பாறை மீது நகர்ந்து செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். தன் உணவைத் தேடிச் செல்கின்றது.

கண்களால் பார்த்துத் தான் உணவாக உட்கொள்ளும் தாவர இனத்தைத் தேடிச் சென்றாலும் சூரியனுடைய ஒளிக் கதிர்கள் சிறிது நேரம் வெயில் அதிகமாகி விட்டால் வெப்பம் அதிகமாகிவிடுகின்றது.

பாறை மீது நகர்ந்து செல்கின்றது. நகர்ந்து செல்வதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகிவிட்டால் பாறை வெப்பமாகிவிடுகின்றது. இந்தப் புழுவின் மெலிதான உடல் தாங்க முடியவில்லை என்றால் “துடிக்கின்றது…”

இதிலிருந்து…, “தன்னைக் காக்க வேண்டும்…” என்ற நிலைகளில் கூர்மையாகத்
1.தாவர இனங்களைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் இந்தப் பாறைகளையும் பார்க்கின்றது.
3.இந்த வெப்பம் அந்தப் பாறைக்குள் பட்டுக் “கடினமான நிலைகள்” வருவதை நுகர்கின்றது.
4.இந்தப் பாறையைக் கூர்மையாக உற்றுப் பார்த்து
5.இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்கின்றது.

நுகர்ந்த உணர்வுகள் எல்லாம் “ஓ…ம்… நமச்சிவாய” என்று அந்த ஜீவ அணுவாக மாற்றி அந்த உடலாக மாற்றுகின்றது. அதனின் மலங்களை
1.இந்தப் பாறையைப் போன்று கடினமாக வெளிவிடும் அணுக்கள்
2.இந்தப் புழுவிற்குள் உருவாகின்றது.

ஆனாலும் இந்தத் துடிப்பின் தன்மை கொண்டு நுகர்ந்த உணர்வின் அணுக்களான பின் இந்த உடலைப் பிளந்து விடுகின்றது. புழு மடிகின்றது.

புழு கூர்மையாகக் கவர்ந்த உணர்வுகள் உடலிலே விளைந்து உயிரிலே சேர்ந்து அதற்குத்தக்க அடுத்த உடலாக “ஆமையாகின்றது”.

1.எந்தப் பாறையினுடைய வெப்பத்திலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்ததோ
2.(அந்த உணர்வின் சத்து) ஆமையின் ஓடு வலுவாகின்றது.
3.அதற்குள் வெப்பத்தைத் தாங்கும் சக்தி (பாறையைப் போன்று) வருகின்றது.

ஆமையை நெருப்பு இருக்கும் இடத்தில் போட்டுப் பாருங்கள். அந்த வெப்பத்தைத் தாங்கக்கூடிய சக்தி அதற்குண்டு.

இந்த உணர்வின் இயக்கங்கள் “எப்படி வந்தது…?” என்ற நிலையைக் கண்டுணர்ந்தவன் அன்று அகஸ்தியன்.

அதைத்தான் கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் நாம் எதைக் கூர்மை அவதாரமாக்க வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து வாழ்வோம்

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் இருளை அகற்றி ஒளியாக மாற்றிடும் அருள் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து வெளிப்படுத்தும் போது எல்லோருக்குள்ளும் அது ஓங்கி வளர்கின்றது.
1.இப்படி ஒருவருக்கொருவர் நாம் தொடர்பு கொண்டு பதிவான உணர்வுகளின் துணை கொண்டு
2.அடுத்து நாம் எங்கிருந்து தியானித்தாலும் அந்த அருள் உணர்வுகள் நமக்குள் ஒன்றாக இணைகிறது.

இப்படி வலுக் கொண்ட உணர்வின் துணை கொண்டு எல்லோரும் சேர்ந்து தியானித்து இந்த அருள் சக்திகளைப் பெருக்கி அதை நமக்குள் அடிக்கடி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போன்று வளர்ந்து வந்தாலும் கூட… சில சந்தர்ப்பங்களில் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வெறுப்பு வேதனை என்று ஏற்பட்டால் அதைக் கவர்ந்தால்… அது நாம் போகும் பாதையைத் தடைப்படுத்தும் நிலையாக வந்து விடுகின்றது.

1.தடைப்படுத்தும் நிலையாக வரும் பொழுதெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி… தடைகளை நீக்கி
2.நம்முடன் இணைந்து வாழும் நிலைகளை வளர்த்து அருள் ஒளியின் உணர்வாக உருவாக்கி
3.அருள் ஒளியின் சுடராக மாற்றி அமைத்தல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் நரகவேதனைப்படுத்தி ஒன்றுக்கு உணவாகி அதிலிருந்து மீண்டு… நஞ்சினை வென்றிடும்… வேதனையை அகற்றிடும்… சொர்க்க பூமியாகத் தான் இந்த மனித உடல் வளர்ந்து வந்துள்ளது.

நம் உயிரே சொர்க்கவாசலாக உள்ளது. சொர்க்கம் என்ற நிலையாக என்றும் எதனையுமே வென்றிடும் தன்மை பெற்று… அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை ஒளியின் சுடராக மாற்றி அமைக்கும் வேகாநிலையை நாம் அடைய முடியும்.

நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து அந்த அருள் சக்தியைப் பெருகுதல் வேண்டும். ஒருங்கிணைந்து அந்தச் சக்திகளைச் சேர்த்தது தான் துருவ நட்சத்திரம்.

நாம் அனைவரும்… “அனைவரும் நலம் பெற வேண்டும்…” என்று தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை வளர்க்க வளர்க்க… பகைமைகள் நமக்குள் சேராது நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பத்தை நாம் வளர்த்தல் வேண்டும். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை உருவாக்குதல் வேண்டும். உடலை விட்டு அகன்ற பின் பெரு வாழ்வாக அமைகிறது.

ஆகவே… இந்த உடல் வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் தெளிவாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1.இந்த உடல் நமக்கு சொந்தமல்ல… இந்த உடலை வைத்து அருள் ஒளியை நமக்குள் சொந்தமாக்குதல் வேண்டும்
2.ஒரு விளை நிலம் இருப்பினும் அதிலுள்ள மணலை நாம் உட்கொள்வதில்லை.
3.விதைகளை மண்ணிலே விதைத்து நமக்கு வேண்டியவைகளாக விளைய வைத்து உருவாக்குகின்றோம்
4.அதில் விளைந்ததைத்தான் சமைத்து உணவாக உட்கொள்கின்றோம்… உட்கொண்ட பின் உயிருடன் ஒன்றி வாழுகின்றோம்.

இதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மையை நமக்குள் விளைய வைத்து… அந்த ஒளியுடன் ஒன்றினால் அந்த உணர்வுக்குத் தக்க நாம் ஒளியின் சரீரம் பெறுவது உறுதி…!

ஆகவே…
1.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து
2.இந்த வாழ்க்கையில் வரும் துன்பங்களை நமக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டாதபடி
3.அதைத் தடைப்படுத்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

இரவு படுக்கும் முன் செய்ய வேண்டிய முக்கியமான தியானப் பயிற்சி

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு… “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே…” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது இல்லை)

1.அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால்
2.மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது.
3.அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்… உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது… பல நன்மைகளும் ஏற்படுமப்பா…!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்…
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு… கெட்டதும் உண்டு…! ஆனால் கெட்டது ஜீவன் பெறாதபடி அதனின் வினைச் செயலை மாற்றி… நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்…!”

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நட்சத்திரங்களில் இருப்பது ஒரு விஷத்தின் இயக்கம். அவைகள் கதிரியக்கப் பொறிகள் கொண்டது.

ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நிலைகள் நம் பூமிக்குள் நேரடியாக வந்தால் இடி மின்னலாக வரும் நிலைகளில் இவை அனைத்தும் ஊடுருவி நம் பூமியின் “நடு மையம்” செல்கின்றது.

அது கொதிகலனாக மாற்றி மின் அணுக்களாக மாற்றி அணுத் தன்மையாகி இந்தப் பூமிக்குள்ளே பிளந்து வெளிப்படுத்தும் நிலை வருகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களும் வரிசைப்படுத்தி வரும் பொழுது சூரியனுடன் சேர்ந்து சுழற்சியின் தன்மை “முன்…பின்…” வரும்.

ஒரு கூண்டை அமைத்து அதற்குள் ஒரு சைக்கிளை ஓட்டிக் காண்பிப்பது போல் – சுழன்று வரும் நிலைகளில் மையத்தில் இருந்து கொண்டு சூரியன் இயங்குகின்றது.

பல நட்சத்திரங்கள் உமிழ்த்தும் நிலைகள் பல பாகங்களிலிருந்து வருவதை இது மாற்றுகின்றது.

ஒரு ஐஸ் பெட்டியில் (REFRIGERATOR) மின்சாரத்தை வைத்து எப்படிக் குளிர்ச்சியை உண்டாக்குகின்றோமோ அதைப் போன்று
1.சனிக் கோள் தனக்குள் வருவதை
2.உறையும் தன்மையாகக் கொண்டு வருகின்றது.

அது சுழற்சியின் தன்மை அடைந்தாலும் குளிர்ச்சியின் தன்மையாக (ஐஸ் பாறையாக) மாற்றும் தன்மை வருகின்றது.

அப்படி மாற்றி எடை கூடும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வெளி வருகின்றது. (சனிக் கோளில் உள்ள வளையங்கள்)

1.மற்ற அணுக்களுக்குள் இது எந்த அளவிற்குள் கலந்துள்ளதோ
2.அந்த அணுவிற்குள் சேர்த்து
3.மற்றொரு பொருளைத் தன்னுடன் இணைத்து
4.அந்த அணுத் தன்மை வளர்ச்சி பெறும் தன்மை அடைகின்றது.

மற்ற கோள்களில் திடப்பொருள்கள் உருவாக வேண்டும் என்றால் அங்கே “நீர் உற்பத்தி கிடையாது…”

இருந்தாலும் இந்த அணுக்கள் மற்ற கோள்களிலிருந்து வெளிப்படும் சத்தும் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய பொறிகளும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது இதை இந்தக் காந்தம் தனக்குள் இழுத்து வைத்துக் கொண்டு சேமிப்பு என்ற நிலைகள் வெப்பமல்லாத நிலைகள் குளிர்ச்சியை உண்டாக்கி (கண்ணுக்குத் தெரியும்) ஒரு பொருளாக உறையச் செய்கின்றது.

ஏனென்றால் அது திடப்பொருளாக அது உருவாக்கப்பட்டது… இதனுடன் சேர்த்தவுடன் அந்தத் திடப்பொருளாக
1.நீரைத் தன்னுள் இருந்து மோதப்படும் பொழுது
2.ஆவியாக மாற்றி
3.இதனுடன் இணையும் பொருளாக மாறுகின்றது.

இப்பொழுது (1997) யாம் சொல்வதைப் பிற்காலத்தில் விஞ்ஞானிகள் சொல்வார்கள். ஏற்கனவே யாம் சொன்னதையெல்லாம் சொல்லிக் கொண்டேதான் வந்துள்ளார்கள்.

அணுக்களுக்குள் எப்படி நீர் கிடைக்கின்றது…? நீர் இல்லை என்றால் எதுவும் வாழ முடியாது. நீர் சக்தியைக் கொடுப்பது சனிக் கோள் தான்.

ஆகவே நம் பிரபஞ்சத்திற்குச் சனிக்கோள் முக்கியமானது. இவைகள் எல்லாம் ஆதியிலே அகஸ்தியர் கண்டுணர்ந்த பேருண்மைகள்.

அகஸ்தியனைப் போன்று நாமும் “அனைத்தையும் ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்…”

1.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டுணர்ந்த பேருண்மைகளைத் தன் மனைவிக்குப் பாய்ச்சி
2.உணர்வை இரண்டறக் கலந்து ஒரு அணுவின் தன்மை உருவாக்கி அந்த உணர்வின் தன்மை மாற்றமடைந்து
3.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவன்.

எதை உற்று நோக்கி உணர்வின் தன்மை தனக்குள் கவர்ந்து… எதைப் பெற வேண்டும் என்று தன் உடலிலே உருவாக்கினார்களோ அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி “துருவ நட்சத்திரமாக” இன்றும் உள்ளார்கள்.

சூரியன் தனக்குள் உருவான பாதரசத்தைக் கொண்டு புறத்திலிருந்து வரும் விஷத்தைத் தாக்கி அதைப் பிரித்து விடுகிறது. அதனால் தான் அதைப் பிரிக்கப்படும் போது ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது.

எந்த விஷத்தின் தன்மை தனக்குள் மோதுகின்றதோ நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மின்னலாக வருகிறதோ அதைப் போல் பிரித்தபின் ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது… ஒளி அலைகளாக நம் பிரபஞ்சத்திற்குள் மாறுகிறது. இது சூரியனின் இயக்க நிலை.

அதைப் போன்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் விஷத்தின் தன்மைகளைத் தனக்குள் இணைத்து… விஷத்தின் தன்மையைப் பிரித்து விட்டு ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான் அகஸ்தியன்… மனிதனாக ஆன பின் அது முழுமையான கடவுளாகின்றது.
1.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டு
2.என்றும் பதினாறாக பிறவி இல்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டுள்ளான்… வளர்ந்து கொண்டுள்ளான்.

அதே சமயத்தில் அகண்ட அண்டத்தில் வெளிப்படும் எத்தகைய கடும் நஞ்சாக இருந்தாலும்… அதையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்… ஏகாந்த நிலை கொண்டு வாழ்கின்றான்.

அவனைப் பின்பற்றிச் சென்ற அனைவரும் அதே வழியில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சூரியனே அழிந்தாலும்… இதன் எதிர்காலம்…! நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து மற்ற விஷத்தன்மை அதிகமாகக் கவர்ந்து எடுத்து விட்டால் அதன் உணர்வின் தன்மை (பிரபஞ்சம்) மாற்றம் அடைகின்றது.

ஆனால் மற்ற நட்சத்திர மண்டலங்களின் சக்திகளை எடுத்து
1.நம் பூமிக்குள் பல பொருள்களுடன் சேர்த்து இணைத்துப் பல பொருளாக உருவாக்கும் நிலையும்
2.கதிரியக்கப் பொறிகள் கடலில் பட்ட பின் மணலாக மாறுவதும்
3.அதே சமயம் இந்த கதிரியக்கப் பொறிகளை அடக்கச் செய்யும் அந்த மோதலில்
4.நமக்குண்டான வெப்பத்தை… பூமியில் சமப்படுத்தும் உணர்வின் நிலைகளை உருவாக்கும் தன்மை பெற்றது 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்.

ஒவ்வொரு செடியிலும் இந்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகள் கலவை கலந்துள்ளது.
1.அந்த உணர்வின் பொறிகள் வரப்படும் பொழுதுதான் செடிக்குள் வெப்பமாகி
2.தன் இனம் எதுவோ புவியின் ஈர்ப்பால் தன் இனத்தின் உணர்வை இழுத்துக் கவர்ந்து செடியாக விளைகின்றது.

இது எல்லாம் இயற்கை நியதிகள்…. அன்று அகஸ்தியன் கண்டது.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே…! என்று இதை விட்டு விடாதீர்கள்.

1.எல்லாம் தெரிந்து கொண்டு யாரும் வருவதில்லை… எல்லாம் தெரிந்து கொண்டு நான் இதைச் சொல்ல வரவில்லை
2.குரு காட்டிய உணர்வு கொண்டு தெரிந்து கொண்டேன் அவர் உணர்வைத் தொடர் கொள்கின்றேன்
3.எனக்குள் இருளை அகற்றும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றேன்
4.உங்கள் செவிகளில் படுகின்றது… அதை நுகர்கின்றீர்கள்… உங்கள் இரத்தங்களிலே கலக்கின்றது
5.மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அகஸ்தியன் கண்டதை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்
6.அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடையலாம்.

மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனை

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ணக் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

விண்ணிலே உருவாகி மண்ணிலே வந்து மண்ணில் விளைந்த உணர்வை எடுத்து விண்ணை நோக்கி என்றும் விண்ணின் ஆற்றல்களைத் தனக்குள் எடுத்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான்.

“அவன் வழியில்…” நாம் செல்வோம் என்றால் பத்தாவது நிலை கல்கியை அடைய முடியும். அது தான் விஜய தசமி என்று ஒன்பது நாள் கொலு வைத்துப் பத்தாவது நிலையை நாம் அடையும் மார்க்கமாகக் காட்டப்பட்டது.

ஏகோபித்த நிலைகளில் நாம் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வின் தன்மை தீமைகளை அகற்றும். அப்பொழுது
1.அந்தத் தீமையான உணர்வின் தன்மையை நுகரும் நிலை இழக்கப்படுகின்றது.
2.தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை அதிகாலையில் நாம் அனைவரும் நுகர்ந்து எடுத்து வலிமை பெற்று விட்டால் நம்மிடமுள்ள தீமை செய்யும் உணர்வுகள் “அனாதையாகி விடுகின்றது…”.

நம் உடல் ஈர்க்காது உணர்வுகள் வெளிப்பட்டபின் காலையில் அந்தச் சூரியனின் ஒளிக் கதிர்கள் வரப்படும் பொழுது
1.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
2.சூட்சமமான நிலைகளுக்கு “சூனியப் பிரதேசத்திற்கு” அழைத்துச் செல்கின்றது.
3.பூமிக்கு வெளியிலேயும் போகாது… பூமிக்குள் கீழேயும் வராது.
4.அதாவது சூனியமான நிலைகளை அடைந்து விடுகின்றது.

சூனியப் பிரதேசத்தில் அடைக்கப்படும் பொழுது மழை நீரோ மற்றவைகளுடன் கலந்து மின்னல்கள் ரூபமாகக் கீழே வந்துவிடும்.
1.பின் கடலலைகளால் ஈர்க்கப்பட்டு
2.தீமை செய்யும் அந்த உணர்வுகள் அதற்குள் அமிழ்த்தப்படுகின்றது.

இதைப் போன்று தான் 12 மாதங்களிலும் மனிதன் தனக்குள் வரும் தீமைகளை அகற்றுவதற்காக ஞானிகள் உருவாக்கியது தான் நாம் கொண்டாடும் பண்டிகை நாட்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் நலம் பெற வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் எண்ணும் பொழுது அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் ஈர்க்கும் சக்தி இழந்த பின் சூரியன் காலை ஆறு மணிக்கு வரும் பொழுது ஈர்த்து மேலே அழைத்துச் சென்றுவிடுகின்றது.

கணவன் மனைவி இருவரும் அதிகாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர்ந்து குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். குழந்தைகளுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் குழந்தைகளைத் திட்டியிருப்போம். சாபமிட்டிருப்போம். அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் அந்த வெறுப்பு வளரும்.

இதைப் போன்ற நிலைகளில் நமக்குள்ளிருந்து வெளி வந்த அத்தகைய தீமையான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. இந்தக் காற்று மண்டலத்தில் (பரமாத்மாவில்) பரவியுள்ளது.

இந்தப் பூமியைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் விஜய தசமி அன்று அனைவரும் ஏகோபித்த நிலையில்
1.நாங்கள் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம் நலம் பெறவேண்டும்
2.நாங்கள் பார்த்தோர் குடும்பங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
3.அவர்கள் மலரைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் நம்மிடமிருந்து வரும் பகைமை உணர்வுகள் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து வைத்திருப்பதை
1.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இங்கே தடைப்படுத்திவிட்டால்
2.ஈர்க்கும் சக்தி குறைகின்றது (யாரும் ஈர்ப்பதில்லை)

சூரியனின் காந்தப்புலனறிவு இழுத்து மேலே கொண்டு சென்று விடுகின்றது. கடல் அலைகள் ஈர்த்துத் தனக்குள் அமிழ்த்திவிடுகின்றது.
1.இந்தப் பரமாத்மா சுத்தமடைகின்றது.
2.நம் ஆன்மா சுத்தமாகின்றது.
3.நமக்குள் ஜீவான்மா தெளிவடைகின்றது.
4.பின் உயிரான்மா ஒளியின் சரீரம் கொண்டு அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

மனதை நாம் நொறுங்கவிடக் கூடாது… மற்றவர் மனதை நொறுக்கவும் கூடாது

உதாரணமாக… கண்ணாடியில் எழுத்துக்களை எழுதும் பொழுது பக்குவமாகச் செயல்படுத்தவில்லை என்றால் கண்ணாடி உடைந்துவிடும். நமது மனதும் ஒரு கண்ணாடி போன்றது தான்…!

1.நமக்கு அனைத்துமே தெரிந்திருக்கலாம்
2.இருந்தாலும் அடுத்தவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி சமமாகப் பதிவாக்கவில்லை என்றால் அவரின் மனம் நொறுங்கிவிடும்.

“நன்மையாகவே இருந்தாலும்” அழுத்தத்தின் தன்மை கொண்டு பக்குவம் தவறி மற்றவர்களுக்குச் சொல்லால் சொல்லப்படும் போது மனது கண்ணாடி போன்று உடைந்து விடுகிறது.

மனம் உடைந்து விட்டால் திரும்பச் சரி செய்வதே கடினம். பக்குவ நிலைகளை இழந்தால் நம் மனம் நொறுங்கி விடுகின்றது ஆகவே அதைப் போன்று சிதறுண்டு போகாதபடி பக்குவ நிலைகள் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும்.

1.காரியம் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தின் தன்மை கொண்டு
2.கோப உணர்வையோ வேக உணர்வையோ எடுத்தால் சாந்த உணர்வுகள் சுக்கு நூறாகத் தெறித்து விடுகின்றது.
3.அன்பு கொண்டு அரவணைக்கும் மற்றவர்களின் நல்ல மனதையும் நமது சொல் சிதறச் செய்து விடுகின்றது.

வாழ்க்கையில் பரிபக்குவம் கொண்டு வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அருள் வழியைப் பெறுதல் வேண்டும். இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்.

நம் குரு காட்டிய வழியினை வெறும் “சொல்லால் மட்டும் சொல்லிவிட்டுப் போகாதபடி…” காலத்தை அறிந்து பக்குவ நிலை கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

1.அருள் ஒளியின் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தப் பக்குவம் தன்னாலே வரும்
2.அருள் சக்திகளை நுகர மறந்தால் பக்குவம் தவறி விடுகின்றது.

பலகாரம் செய்கிறோம் என்றால் அதிலே எண்ணை காயும் பருவத்தை அறிந்து எந்தப் பொருளை இணைக்கின்றோமோ அதற்குத் தக்க அதிலே சுவையின் தன்மை வருகின்றது.

வடையைச் சுடுகிறோம் என்றால் எண்ணை காய்ந்திருக்க வேண்டும் அது காய்ந்திருக்கின்றதா…? என்றும் நாம் முதலில் சரி பார்த்தல் வேண்டும்.

பார்த்தபின் மாவைத் தட்டிப் போட்டால் வடை சுவையாக இருக்கும். என்னை காயாதபடி வடையைச் சுட்டால் எனண்ணையை அதிகமாக ஈர்த்துவிடும்… சுவை கெட்டுவிடும்.

1.ஆகவே அடுத்தவரிடம் நாம் பேசும் பொழுது பக்குவம் பார்த்துச் சொன்னோம் என்றால்
2.இணைந்து வாழும் தன்மையும் அவர்களைத் திருத்தும் நிலையும் தன்னுடன் அரவணைக்கும் தன்மையும் வருகின்றது.

அதைத் தான் இராமன் அம்பை எய்தான் என்றால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்வான் என்று சொல்வது.

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ… அதுவே பதிலாக நமக்குள் வரும்.
2.ஒன்றி வாழ்வதும்… இணைந்து வாழ்வதும்… பிரிந்து வாழ்வதும்… எல்லாமே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் இணக்கத்திற்குள் தான் உண்டு.
3.நான் உங்களை மகிழச் செய்யும் நிலைகள் கொண்டு வந்தால்… அதே மகிழ்ச்சி என்ற நிலைகளை எனக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பாய்ச்சினோம் என்றால் கல்யாணராமன் ஆகின்றோம்.

நீங்கள் மகிழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டு நான் சொன்னால் உங்களுடைய உணர்வு எனக்குள் இணைந்து வாழும் தன்மையாக வருகின்றது. என் சொல்லும் உங்களுடன் இணைந்து வாழ்கின்றது. மகிழ்ச்சி பெறும் தன்மை கொண்டு மகிழச் செய்யும் உணர்ச்சியாக இயக்குகிறது.

எண்ணங்களின் இணக்கமும்… எண்ணத்தின் உணர்ச்சியும்… நமக்குள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று எண்ணத்தால் இயக்கும் நிலைகளை விஷ்ணுவின் மறு அவதாரம் இராமன் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

வெப்பத்தின் உணர்வு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக அது எவ்வாறு இயக்குகிறது…? என்று சூரியனின் இயக்கத் தொடர்களைக் காட்டி உணர்வின் இயக்கங்களை நமக்கு ஞானிகள் காட்டினார்கள்.

உணர்வின் இயக்கம் தனக்குள் வலுவாகப் படும்பொழுது உணர்த்த வேண்டும்… உணர வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற நிலையாக “எண்ணத்தால் தான் கண்கள் உருவானது…” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஞானிகள் நமக்குக் காட்டிய நிலைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.

நீரைக் குடித்துத் திகட்டலை அகற்றுவது போல்… “மகரிஷிகள் உணர்வைப் பருகி… மனதை அமைதிப்படுத்த வேண்டும்”

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம். நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா ஆத்ம சுத்தி என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆயுத பூஜை என்றால் அதனின் அர்த்தமே “இப்பொழுது” வேறு விதமாக இருக்கின்றது.

படங்களை எடுத்து வைப்பது புத்தகங்களை எடுத்து வைப்பது அரிவாள்மனையை எடுத்து வைப்பது கோடாலியை எடுத்து வைப்பது ஆட்டை அறுப்பவன் கத்தியை எடுத்து வைப்பது என்று இதற்கெல்லாம் பூஜை செய்வது.

ஆக ஆட்டை அறுத்தவன் இந்தக் கத்தியை வைத்து இத்தனை ஆடுகளை நான் அறுத்தேன்… அதனால் எனக்கு வருமானம் வந்தது என்று அவனும் “கத்தியை வைத்து ஆயுத பூஜை செய்கின்றான்”.

“பார்க்கலாம் நீங்கள்…” ஆடு அறுக்கும் கடையில் அல்லது வீட்டில் கத்தியை வைத்துப் பூஜை செய்கின்றான்.

கத்தியால் ஆட்டை அறுத்து அதைக் கொன்று விற்று நான் சாப்பிட்டேன். அதனால் இது நல்ல முறையில் இருந்தால் “இன்னும் எத்தனையோ ஆட்டை இதை வைத்து அறுப்பேன்…” என்று அவனும் இப்படிப் பூஜை செய்கின்றான்.

ஆயுத பூஜை அன்று இந்த வேடிக்கையெல்லாம் பார்க்கலாம்.

அதே சமயத்தில் நான் ஏமாற்றி எல்லாவற்றையும் விற்றேன் என்று தராசுகளையும் மற்றவைகளையும் வைத்துப் பூஜை செய்வார்கள்.

1.தன்னிடம் பொருள் வாங்கிச் செல்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும்
3.கொடுத்த காசு திரும்ப வரவேண்டும் என்று எண்ணினால் பரவாயில்லை.

ஆனால் அப்படி எண்ணுவதில்லை. தராசைச் சுத்தப்படுத்தி வைத்துவிட்டால் போதும்.

எத்தனையோ வகையில் ஒருவருக்கு அளவுகோலைக் குறைத்துக் கொடுத்திருப்பேன். இப்படியெல்லாம் எனக்கு நீ சம்பாரித்துக் கொடுத்தாய் சரஸ்வதி பூஜை என்று சொல்லிவிட்டு தராசை வைத்துப் பூஜை செய்வார்கள்…”

ஏனென்றால் திருடுவதற்கு அந்த ஞானத்தைக் கொடுத்தாய் என்று சொல்லி அந்தப் பூஜை செய்கிறவர்கள் தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

நன்றாக யோசனை செய்து பாருங்கள் சரஸ்வதி பூஜை… ஆயுத பூஜை அன்று நாம் என்ன செய்கிறோம்…? பெரும்பகுதியானவர்கள் இப்படித் தவறு செய்யும் நிலையாக உள்ளார்கள்.

செய்யும் தவறை நீக்குவதற்கு யாராவது எண்ணுகிறார்களா…, என்றால் “இல்லை…”

தொழிலில் என்னை அறியாது எத்தனையோ ஏமாற்றியிருப்பேன். ஏமாற்றும் நிலைகள் மாறி சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்
1.என் தொழில் சீராக வேண்டும்
2.என்னிடம் பொருள் வாங்குபவர்கள் மனம் நோகக்கூடாது
3.மனம் நோகும்படி என் செயல் இருக்கக்கூடாது
4.மனம் நோகும்படி என் சொல் இருக்கக்கூடாது
5.எல்லோரும் சந்தோஷமாக இருக்கக்கூடிய வழியில் நம் எண்ணங்களை
6.”இந்த ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்”.

எத்தனை பேர் சுத்தப்படுத்துகின்றோம்?

ஆயுத பூஜை அன்று சுண்டலை அவித்து எல்லோருக்கும் கொடுக்கத் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆயுத பூஜை அன்று இப்படியெல்லாம் படைத்துப் பூஜை செய்தால் கடையில் நன்றாக வியாபாரம் ஆகும்.

கடையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு சுண்டலை இனாமாகக் கொடுத்தால் கடையைத் தேடி வருவார்கள். இப்படிக் கொடுத்தால் இந்தக் கடையில் இந்தச் சரக்கு இருக்கின்றது என்று தேடி வருவார்கள் என்று இது விளம்பரப்படுத்துவதற்காகச் செய்கின்றார்கள்.

படிக்கும் குழந்தைகள் என்ன செய்கின்றார்கள்?

1.கல்வியில் ஞானம் பெறவேண்டும் என்ற
2.உணர்வின் கூர்மையை அது தூய்மைப்படுத்துகின்றார்களா…?
3.தூய்மைப்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களா…?

தாய் தந்தையரின் அருள் நாங்கள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் சக்தி பெற வேண்டும் இருளை அகற்றும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

மகரிஷிகள் உபதேசித்த உணர்வுகள் நாங்கள் நடக்க வேண்டும் அவர்கள் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்த அந்த ஒளியான நிலைகள் நாங்கள் பெற வேண்டும் என்று “இப்படி நுகர்ந்தால்… மனத் தூய்மை ஆகின்றது”.

இப்படி மனித வாழ்க்கையில் நம்மை அறியாது சேர்ந்த தீமைகளையும் தீய செயல்களையும் நாம் அறியாது செய்த தவறுகளையும் நீக்க வேண்டும் என்று “இந்த ஞானத்தை” எடுக்க வேண்டும்.

நம் உடலிலுள்ள அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றியமைக்கின்றோம். அந்த ஞானத்தின் வழி நமக்குள் சேர்க்கும் பொழுது எதை நுகர்கின்றோமோ அது “ஓ…” என்று பிரம்மமாகின்றது.

இந்த உணர்வுகளை நாம் கவர்ந்து கொள்கின்றோம். கவர்ந்து கொண்ட உணர்வுகளை நுகரப்படும் பொழுது உடலாகின்றது. அருந்ததி தன்னுடன் இணைந்து அந்தச் சக்தியாக நமக்குள் வேலை செய்கின்றது.

ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திங்கள் இதுதான்.

திடுக்… திடுக்… என்று பயமும் பதட்டமும் நமக்கு வரக் காரணம் என்ன…?

1.கண்ணின் கருவிழிக்குப் பேர் “ருக்மணி (படமாக்குவது)” என்றும்
2.கண்ணின் காந்தப் புலனறிவுக்குப் பேர் “சத்தியபாமா (உண்மையை உணர்த்துவது)” என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.
3.அந்த இரு சக்திகளையும் சேர்த்துத் தான் “கண்ணன்” என்றும் காரணப் பெயர் வைத்தனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே ஒரு பஸ் வேகமாக வருகின்றது… நம் கண்களின் கருவிழி அதை நம் உடலில் பதிவாக்குகின்றது.

நம் மீது மோதும் நிலைகள் கொண்டு வருவதை அந்த உணர்வலைகளைக் கவர்ந்து உயிருடன் இயக்குகின்றது. அப்போது “பஸ் நம் மீது மோதி விடுமோ…!” என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
1.அதனின்று விலகிச் செல்ல கண்கள் நமக்குப் பயன்படுகின்றது.
2.விபத்து ஏற்படாமல் அந்த நேரத்தில் காப்பது நமது கண்களே.

ஆகவே கண்ணன்… கண்கள் நம்மை வழி நடத்துகின்றது. தீமையான உணர்வுகளைக் கண்டபின் அந்தத் தீமையிலிருந்து விடுபட விபத்துகள் வரும் என்று கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து விபத்திலிருந்து நம்மைக் காக்கின்றது.

அப்படி விபத்திலிருந்து காத்தாலும் பஸ்ஸின் வேகத்தைக் கண்டு அந்த அச்ச உணர்வு உயிரிலே பட்டு வேகமாகப் படும் பொழுது “பயத்தை ஊட்டும் அதிர்வுகள்…” ஏற்படுகின்றது.

1.கண்கள் அந்த உண்மையை உணர்த்தினாலும்… நம்மைக் காத்தாலும்
2.நாம் நுகர்ந்த பயமான உணர்வை உயிர் இயக்கி உடலைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும்
3.நுகர்ந்த பயமுறுத்தும் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக… நம் உடலாக மாற்றி விடுகின்றது.

ஒரு இடத்தில் இருவர் சண்டை இடுகின்றனர்… கடுமையாக மோதுகின்றனர். பயங்கரச் சொல்களையும் விபரீதப் பேச்சுகளையும் பேசுகின்றனர்.

நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் கண்ணின் கருவிழி அதைப் பதிவாக்குகின்றது. அவர்கள் செயல்களை உற்றுப் பார்த்துச் சண்டையிடும் உணர்வின் தன்மை நுகரச் செய்கின்றது.

அவர்கள் தவறு செய்கின்றனர்… பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாம் நுகர்ந்ததைக் கண் உயிருடன் இணையச் செய்கின்றது
2.உயிரோ அந்த உணர்வினை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக உடலாக மாற்றி விடுகின்றது.

இது எல்லாம்… நாம் தவறு செய்யவில்லை என்று இருந்தாலும்
1.தவறு செய்பவருடைய நிலைகளை நம் கண்கள் உணர்த்துகின்றது.
2.ஆனால் பதிவாக்கிய பின் உயிரோ அதை உடலாக மாற்றி விடுகின்றது.

அச்சுறுத்தும் உணர்வு உடலுக்குள் அணுக்களாக மாறிவிட்டால் அந்த பயமுறுத்தும் உணர்வைச் சுவாசிக்கும்போது “உயிரிலே படும்போதெல்லாம்” நாமும் பயந்து அதற்குத் தக்கவாறு வாழ்க்கை அங்கே நடக்க நேர்கின்றது

பயமுறுத்தும் உணர்வுகள் அதிகமாகி அந்த அணுக்கள் பெருகத் தொடங்கினால்…
1.நம்மை அறியாமலே அடிக்கடி பதட்டமடையும் அல்லது நடுக்கம் அடையும் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.
2.ஒரு காரியத்தையோ தொழிலையோ செய்ய வேண்டும் என்று வலுவாக எண்ணினாலே பதட்டமும் பயமும் வரும்… மன உறுதி இழக்க நேரும்.

அதனால்… சோர்வும் சஞ்சலமும் அடைந்து “என்னால் முடியவில்லையே…” என்று வேதனைப்படும் பொழுது – வேதனை என்பது விஷம்…! நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் இந்த உடலில் விஷமான அணுவாக மாற்றி விடுகின்றது.

அதனால் தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை” என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நாம் எதையெல்லாம் எண்ணிச் சுவாசிக்கின்றோமோ அதனின் உணர்வினை உணர்த்தினாலும் அதனதன் அணுவாக உருவாகித் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

நாம் தவறு செய்யாமலேயே பல நிலைகள் இப்படி வருகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் பல கோடிச் சரீரரங்களில் தன்னைக் காட்டிலும் வலுவான மிருகங்களின் உணர்வுகளை எடுத்து ஒவ்வொன்றில் இருந்தும் பாதுகாப்பான உணர்வுகளை எடுத்துத் தப்பிடும் உணர்வுகளை எடுத்துத் தான் மனிதனாக வந்துள்ளோம்.

அதாவது வலுவான உணர்வை நுகர்ந்து நுகர்ந்து தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து… இன்று வந்துள்ளோம்..

முதலிலே சொன்ன மாதிரி இன்றைய மனித வாழ்க்கையில் பயமான உணர்வுகளையோ… சண்டையிட்டோர் உணர்வுகளையோ… அல்லது நோயாளியின் உணர்வுகளையோ எடுக்க நேரும் போதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.அதிலிருந்து வரும் உணர்வுகளை உயிர் வழியாக நுகர்ந்து
3.நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.

காரணம் அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சினை வென்றது… உணர்வினை ஒளியாக மாற்றியது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதிலே இரண்டறக் கலந்த செம்பு பித்தளையும் ஆவியாக மாறித் தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துன்பப்படுத்தும் உணர்வுகளை நம் கண் கவர்ந்தாலும்
2.அந்த உண்மைகளை உணர்த்தினாலும்
3.அதிலிருந்து விலகிச் சென்றாலும்
4.நுகர்ந்த உணர்வு நம் உடலுக்குள் ஜீவ அணுவாக மாறுவதற்கு முன்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்துக்களோ அல்லது அது போன்ற அதிர்ச்சியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலோ அந்தக் காலங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். பயமான உணர்வலைகள் நீங்க வேண்டும்… என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… நாங்கள் மன பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் நம் எண்ணத்தை வலுவாக்கும். அனுபவத்தில் பார்க்கலாம்…!

நெஞ்சுக் குழியில் இருக்கும் “தாய் மூச்சு நாடி”

கோப குணத்தின் உந்துதலால் அந்த நேரத்தில் நாம் ஈர்த்துக் கொள்ளும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இருபாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி…! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்… அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி… இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது…எது.. எப்பொழுது செயல்படுகிறது…? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி… மோகம்.. தாகம்…” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்… சுவாசமும்… செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்…!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்… மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்… ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி…
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்…!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே…
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உடல் என்ன செய்கின்றது…? நாம் சாப்பிட்ட உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு நல்லதை நம் உடலாக மாற்றுகின்றது.

அப்பொழுது நன்மை தீமை என்று தெரிந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கின்றது. தெரிந்தாலும் நாம் என்ன செய்கின்றோம்…?

மாடு ஆடு இவைகளை வளர்க்கின்றோம். சாணத்தை அங்கேயே தான் போடுகின்றது. அது மேலேயே தான் படுக்கின்றது. அதற்கு முடிந்த அளவு அது தான். வேறு வழியில்லை.

நாம் அவைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றோம். இவ்வாறு கட்டிப் போட்டு வைத்த நிலைகளில் வேறு வழி இல்லை என்கிற பொழுது அந்த நிலை ஆகின்றது.

கட்டிப் போட்ட நிலைகளில் இப்படி இந்த உணர்வு பழக்கமாகிவிட்டால் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றாலும் சாணத்தை இட்டபின் மீண்டும் அதிலேயே தான் படுக்கும்.

இயற்கையின் நிலைகள் இது. ஆக எதன் உணர்வு பட்டதோ அதனின் ஞானம் அங்கே வேலை செய்கின்றது.

இதைப் போன்று தான் நம் வழக்கிலும் நம்மிடம் நல்ல குணங்கள் இருப்பினும் பிறிதொருவர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகி விட்டால் அதனின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.அந்தத் தவறின் நிலையையே வளர்க்கச் செய்யுமே தவிர
2.தூய்மைப்படுத்தும் நிலை இல்லாது
3.மீண்டும் அந்த அசுத்தமான சொல்லில் செயலில் தான் வாழ்க்கை அமையும்.
4.அதனின் உணர்வாகத்தான் நம் சொல்லும் செயலும் அமையும்.

ஆகவே இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…? தூய்மைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்…?

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வு பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.பின் நம் குடும்பத்தில் எதனால் நஷ்டமானது…?
2.எதனால் ஒற்றுமை இழந்தது…?
3.குடும்பத்தில் நம் பிள்ளைகள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை செய்தார்கள்…?
4.பக்கத்து வீட்டுக்காரர் நம்மிடம் ஏன் சண்டை போட்டார்…?
5.அதிலிருந்தெல்லாம் நாம் எப்படி விடுபட வேண்டும்…?
6.கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பத் திரும்ப எண்ணுவதனால் உடலில் கை கால் குடைச்சல் எப்படி வருகின்றது…?
7.நாம் நுகர்ந்த உணர்வுகளால் வீட்டில் எப்படி வெறுப்பை உண்டாக்கச் செய்கின்றது…?
8.பிறர் சொல்லும் தீமையான நிலைகளை நமக்குள் அதிகமாகக் கேட்டால் குடும்பத்திற்குள் எப்படிப் பகைமை உண்டாகின்றது…?

இதைப் போன்ற சிந்தனைகளை நாம் செய்தோம் என்றால் சிந்தித்துச் செயல்படும் உபாயங்கள் கிடைக்கும். தீமைகள் வராதபடி நம் குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்ற அருள் வழியும் கிடைக்கும்.

ஆகவே நம் வாழ்க்கையில் தீமையின் நிலைகளை நாம் கேட்டறிந்தவுடன் தூய்மை செய்து பழக வேண்டும்.

எப்படி…?

அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு 10 நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உள் முகமாக இந்த உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

நண்பர்களிடத்திலோ மற்றவர்களிடமோ பகைமையாக இருப்போம். அவர்களை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
2.ஒன்றுபட்டு வாழும் நிலைகள் நாங்கள் பெற வேண்டும்.
3.ஒன்றுபட்டு வாழும் நிலைகள் நண்பருக்கும் வர வேண்டும் என்று
4.இப்படி இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டால் அந்தப் பகைமையூட்டும் நிலைகள் நமக்குள் வராது.

அவர்களும் இதே போன்று எண்ணினால் அவர்களுக்குள்ளும் உள்ள தீமைகள் அகலும்.

நம்மை ஒளியாக மாற்றும் பொறுப்பு உயிருக்கு இருக்கிறது

விண்ணிலே ஒளியின் சரீரமாகச் சுழன்று கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்தும்… அதனைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும்… வெளி வரும் ஒளிக் கற்றைகளை நமது பூமி துருவப் பகுதியின் வழி கவர்ந்து பரமான நம் பூமியில் பரலோகமாக மாற்றிக் கொண்டே வருகின்றது.

இந்த பரமான பூமியில் பரலோகமாகக் காற்றிலிருப்பதை நுகர்ந்தவர் அவரவர் உணர்வுகளுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.மனிதனான பின் அரும்பெரும் சக்தி பெற்ற அந்த உணர்வுகள் பூமியில் படர்ந்து இருப்பதை நமது குருநாதர் காட்டி
2.அருள் ஒளியினை எனக்குள் பதிவு செய்தார்… அதை உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.

அந்தப் பதிவினை மீண்டும் நினைவு கொண்டு நுகர்ந்தறியப்படும் போது அந்த அருள் ஒளியை அனைவரும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுதல் வேண்டும்.

தன்னம்பிக்கை கொண்டு இந்த வாழ்க்கை வாழும் போது
1.நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ அதை நமக்குள் உருமாற்றம் செய்வதும் உயிரே.
2.ஆக… உயிரே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது
3.நாம் நுகரும் அருள் உணர்வுகளை உடலில் பரவச் செய்கின்றது… இந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது
4.உணர்வுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.

இது உயிரின் வேலை.

நம் கண்ணின் வேலையோ நாம் எதிரில் இருப்பதைப் படமாக்கிப் பதிவாக்கி விடுகின்றது உடலுக்குள். ஆனால் நாம் செல்லும் பாதையில் இது பிழையான இடம்… இது தவறான இடம்… என்பதனை நம் கண் வழிகாட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி நம்மைக் காக்கின்றது.

நமது கண்களால் உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மை உயிரிலே கொடுக்கப்படும் பொழுது நுகர்ந்த உணர்வை அறிகின்றோம். நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலை உயிர் இயக்குகின்றது.

தீமை என்று கண் உணர்த்தினாலும்… அப்போது அந்தச் சமயத்தில் தீமையிலிருந்து விடுபட்டாலும்… நுகர்ந்த உணர்வு தீமையின் அணுக்களாக உருவாகி விடுகின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வுகளை… உயிர் அந்த உணர்வுகளின் வழி நம்மை வழி நடத்தினாலும் அந்த உணர்வின் சத்து ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாறுகிறது.

பரலோகத்தில் இருப்பதை – உயிரணு தாவர இனச் சத்துக்களை எல்லாம் நுகர்ந்த பின் தாவர இனச் சத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் வந்து உடல்கள் பெற்றது.

இதைப் போன்று பல பல எண்ணிலடங்கா தாவர இனத்தின் உணர்வுகளை நுகர்ந்து… பல பல உடல்கள் மாற்றம் அடைந்து… மனிதனாக உருவாக்கும் தன்மை பெற்றது… தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்றது.

இருந்தாலும் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் இந்தப் பிரபஞ்சத்தின் ஆற்றலையும் அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அவைகளின் இயக்கங்களையும் கண்டுணர்ந்தவன் “அகஸ்தியன்…”

1.அவனுக்குள் விளைந்த அந்த உணர்வுகளை நாம் கவர்ந்தால்
2.நமது நினைவாற்றல் அகஸ்தியன் கண்ட அந்த அகண்ட அண்டத்திலும் பரவி
3.அதை நாம் நுகர்ந்து பேரருள் பேரொளி என்ற உணர்வினை நமக்குள் உருவாக்கிட முடியும்.

தாவர இனங்களுக்கு உரமிட்டு அதனை எப்படிச் செழிப்பாக வளர்க்கின்றோமோ அதே போன்று
1,அகஸ்தியன் உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு வீரிய சக்தியை ஊட்டி
3.ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த மெய் ஞானி கண்ட உண்மையைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் பாய்ச்சுகிறோம்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து அகஸ்தியன் உணர்வை வளர்த்தால் வாழ்க்கையில் நீங்கள் நுகர்வதை எல்லாம் உங்கள் உயிர் ஒளியின் சரீரமாக மாற்றி அமைத்து விடுகின்றது.

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சியை ஊட்டி… நஞ்சு புகாது தடுத்து நிறுத்தும் நிலையாகவும் இது அமைகின்றது.

சுவாச நிலையை மாற்றாதபடி… நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி… பூரண நலம் கிடைக்காது

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெற வேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நூலாம்படைப் பூச்சி தனக்குள் உணவாக உட்கொண்டபின் தன் மலத்தை வலையாக விரிக்கின்றது. அந்த வலைக்குள் சிக்குவதை உணவாக உட்கொள்கின்றது.

வலைக்குள் சிக்கும் ஒரு ஈயிற்குள் தன் கூர்மையான மூக்கால் ஊடுருவித் தன் உணர்வைப் பாய்ச்சி அதற்குள் இருக்கும் நீர் சத்தை அனைத்தையும் குடித்து வாழ்கின்றது.

தன் மலத்தால் மீண்டும் காற்றுப் புகாமல் அந்த ஈயினைச் சுழற்றிவிட்டு தனக்குள் உருவான கருவை அந்த ஈயிற்குள் பாய்ச்சியபின் ஈயிற்குள் இருக்கக்கூடிய அணுக்களை இது எப்படி உருவாகியதோ அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் பல நூலாம்படைப் பூச்சிகளாக உருவாக்குகின்றது.

அதைப் போன்று குளவியை எடுத்துக் கொண்டால் தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கொண்டு மண்ணைப் பிசைகின்றது. கூடு கட்டுகின்றது. கூடு கட்டிய பின் ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வருகின்றது.

தூக்குவதற்கு முன் அதை ஒரு கொட்டு கொட்டிவிடுகின்றது. குளவியைப் புழு கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றது. கட்டிய மண் கூட்டிற்குள் அந்தப் புழுவைத் தள்ளுகின்றது.

தள்ளிய பின் மீண்டும் இரண்டு தரம் புழுவைக் கொட்டுகின்றது. புழு மயக்கமடைகின்றது. குளவியையே அந்தப் புழு நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

அந்தக் குளவியின் உடலில் உருவான உமிழ் நீரைக் கொண்டுதான் அந்தக் கூட்டைக் கட்டுகின்றது. புழுவின் உடலுக்குள் தன் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சுகின்றது.

புழுவைக் கூட்டிற்குள் செலுத்தியபின் மண்ணைக் கொண்டு மூடிவிடுகின்றது. மூடிய பின்பு கூட்டிற்கு மேலே வந்து குளவி “கிர்..ர்ர்..ர்ர்..” என்று இரைச்சல் கொடுக்கின்றது.

இந்த உணர்வின் அதிர்வுகள் புழுவிற்குள் இருக்கும் அணுக்களில் இது கலக்கின்றது. ஆனால் இந்த விஷமோ புழுவின் தோலைச் சருகு போல் ஆக்கிவிடுகின்றது.

புழுவின் தசைகள் அமிலங்களாக மாறுகின்றது. அந்த அமிலங்களுக்குள் குளவி கொட்டிய விஷத் தன்மைகள் அணுத் தன்மை கருவாக உருவாக்கும் நிலை அடைகின்றது.

அதற்குள் இருக்கும் விஷத்தைப் புழுவின் உயிரால் துடிப்பாகப்படும் பொழுது இதற்குத் தக்கவாறு அதனின் உடலின் அமைப்புகள் மாறுகின்றது.

இதைப் போன்றே விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எறும்புப் புற்றுக்குள்ளும் கரையான் புற்றுக்குள்ளும் அது எப்படி உருவாகின்றது…? என்று கண்டு கொள்கின்றனர்.

1.அன்று மெய்ஞானி தன் எண்ணத்தை வைத்து அதை ஊடுருவிப் பாய்ச்சினான்.
2.அந்த உணர்வின் இயக்கத்தை அறிந்தான்.

யார்…? அகஸ்தியன்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வு தான் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் பூமியில் பரவப்படும் பொழுது அந்த உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கும்.

நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கருவாகும். உணர்வின் தன்மையை வலுவாக்கும். அதன் உணர்வு கொண்டு நம்மை ஆள்வது நம் உயிர்.

அந்த அகஸ்தியமாமகரிஷி கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை
1.வான இயல் புவி இயல் உயிரியல் அடிப்படையில்
2.அணுவின் ஆற்றலையும் பேரண்டத்தின் இயக்கங்களையும்
3.நீங்களும் கண்டுணர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற ஒரு தெளிவான “முன் சிந்தனை (PLAN) வேண்டும்…”

புதிதாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் ஒரு இன்ஜினியரை வைத்து அதற்குத் தேவையான பிளானைப் போடுகின்றோம். தேவையான பொருள்களை வாங்கிக் கொத்தனாரையும் மற்ற ஆட்களையும் வைத்து அந்த வீட்டைக் கட்டுகிறோம்.

ஆக… வீட்டைக் கட்டுவதற்கு முன்னாடியே எப்படி…? என்ன…? ஏது…? என்று எல்லைகளை வகுத்து விட்டுத் தான் வேலைகளை நாம் செய்யத் தொடங்குகின்றோம்.

அதே போல் ஒரு பலகாரத்தை செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே அரிசியை ஊறவைக்கின்றோம். ஊறிய பின் அதை அரைத்து மற்ற பொருள்களை அதனுடன் சேர்த்து அதைப் புளிக்க வைக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து மாவினை எடுத்து வடையாகச் சுடும் போது அதற்குத் தக்க ருசியும் சுவையும் பலகாரத்தில் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எவ்வாறு நாம் தெளிந்து செயல்படுத்துகின்றோமோ அதைப் போல் நமது வாழ்க்கையிலும்… எதை… எக்காலத்தில்… எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற பக்குவ முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவை அரைத்து வைத்துவிட்டுப் பத்து நாளைக்குச் சேமித்து வைத்தால் அது அதிகமாகப் புளித்துப் போய் விடுகின்றது. ஆனால் பத்து நாள் சேமித்து வைக்க வேண்டும் என்றால் அதை ஒரு ஐஸ் பெட்டியில் பத்திரமாக வைத்தால் கெடாமல் இருக்கின்றது.

விஞ்ஞான அறிவில் வாழும் நாம் இப்படிப் பக்குவப்படுத்துவது போன்று
1.அந்த மெய் ஞானிகளுடைய உணர்வு கொண்டு நமக்குள் அருள் ஒளியைப் வளர்த்து
2.அதை வைத்துப் பக்குவப்படுத்தி… நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும்.
3.சமயம் வரும் பொழுதெல்லாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

பொருள்கள் கெட்டுப் போகாது அதை பாதுகாக்க எப்படிச் செயல்படுத்துகின்றோமோ அதைப் போன்று நமக்குள் தீமையான உணர்வு வந்தால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் கொண்டு அந்தத் தீமை நமக்குள் வளராதபடி பாதுகாத்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் ஒளியை நுகர்ந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பாதுகாத்து என்றும் வேகா நிலை பெறும் தன்மையை உறுதிப்படுத்தி இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து பழகுதல் வேண்டும்.

ஆகவே குரு காட்டிய அருள் வழியில்…
1.அருள் ஒளி பெறுவோம்
2.இருளை அகற்றுவோம்
3.ஒளியான உணர்வை வளர்ப்போம்
4.ஒளியின் சரீரமாக நிலைப்போம்
5.நிலையான ஒளி சரீரத்தைப் பெற இந்த வாழ்க்கையினை அருள் வாழ்க்கையாக மாற்றி அமைப்போம்.

புறத்தில் காணுவதை விடுத்துவிட்டு நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…! – இராமலிங்க அடிகள் சொன்னது

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்… என்றும் ஜோதி தரிசனம்… என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில்
1.“அறிவை அறிவால் அறிவர்…!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய்
2.அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது…?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்… திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா… கொள்…! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்…!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்…
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை…!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்… இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்…!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்…” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா…?

போற்றி…போற்றி…! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.ஆக “பூசத்தில் ஜோதி கண்டேன்… பிறவிப்பயன் பெற்று விட்டேன்…!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா…? பெற்றதின் பயனை…! ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலகோதயத்தில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா…?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்…! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே… உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்… சந்திரன்… ஜோதி விளக்கு… அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்…!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் – தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி… “அறிவின் ஒளியப்பா…!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.
3.அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும்
4.ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் திருமூலர்.

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த வான இயல் தத்துவத்தைப் பின் வந்த திருமூலர் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

“தில்லை…” என்பது ஒரு எல்லை. எல்லை இல்லாத உலகில் தில்லை என்ற உணர்வு வரப்படும் பொழுதுதான் ஒரு கோள் என்ற நிலைகள் வருகின்றது. பரம் என்ற நிலையும் பரம்பொருள் என்ற நிலைகள் உருவாகின்றது.

“தில்லை நடராஜா…” என்று நம் பூமியின் செயலுக்குக் காரணப் பெயரை வைத்தார். நம் பூமி “நிற்காமல்… சுழன்று கொண்டேயிருக்கின்றது” என்பதைத் தில்லை நடராஜா என்று பெயரை வைத்தான்.

1,அது உருவமில்லாத நிலைகள் கொண்டு அருவம் என்ற நிலைகள் உணர்த்தப்படும் பொழுது
2.“திரு ஆவடையச் சுழலச் செய்து…” மனித உருவைப் போட்டு இவனே சிவன் என்றும்
3.இயக்கத்தின் நிலைகளில் “நடனமாடுகின்றான்…” என்றும் காட்டினார் திருமூலர்.

அந்த உணர்வின் தன்மை உராயப்படும் பொழுது உணர்வுக்கொப்ப இங்கே உருமாறுவதும் உணர்ச்சிகள் எவ்வாறு வருகின்றது…? என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார்.

திருமூலர் கூறியது… “நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது…”

ஆதியிலே ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது அது ஆவியாக மாறி எடையற்றதாக மாறி நாளடைவில் விஷமாக மாறி நெடி கலந்த உணர்வாக மாறி நெடியின் தன்மை வரப்படும் பொழுது புதிதாக உருவாவதை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது “நெருப்பு” உண்டாகின்றது.

நெருப்பாகும் பொழுது உணர்வின் தன்மை தாக்குண்டு நகர்ந்து ஓடும் பொழுது அங்கே ஈர்க்கும் “காந்தம்” வருகின்றது.

ஓடும் நிலைகளில் தாக்கும் நிலையில் வெப்பமாகும் பொழுது பராசக்தி என்றும் தாக்குதலால் நகர்ந்து ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும் தாக்குதலால் இயக்கச் செய்த விஷத்தை ஆதிசக்தி என்றும் கண்டுர்ந்தார் திருமூலர்

1.“கருமாரி…” (கருமாரி – உருமாறி) ஒன்றுக்குள் ஒன்று உருவாகி
2.அது மாற்றலான நிலைகளைச் செய்கின்றது என்றும் கருமாரி என்று திருமூலர் பெயர் வைக்கின்றார்.

ஆதி இலட்சுமி பெண்பால் தான். ஆதிபராசக்தி வெப்பம். கருமாரி என்பது ஒரு விஷத்தின் தன்மை ஒன்றுக்குள் சென்றபின் அது “மாற்றமடைந்து… மாற்றமான” நிலைகளைச் செயல்படுத்தும்.

தாக்குதலால் வெப்பமானது… ஈர்க்கும் காந்தமானத… ஆனால், ஈர்க்கும் காந்தமான பின் அது எதனைக் கவர்கின்றதோ அந்த மணத்தை இந்த “விஷம் இயக்கிக் காட்டும் கருமாரி…”
1.எதனுள்ளும்… “ஊடுருவி” அது மாற்றலான உணர்வை
2.அது இயக்கிக் காட்டும் என்பதைக் காரணப் பெயராக வைத்தார் திருமூலர்.

இதைப் போன்று மோதுண்டு மோதுண்டு ஆவியாக மாறி இணைந்து கொண்டு இணைந்து கொண்ட அணுக்களின் உருமாற்றமாகி மோதலில் வெப்பமாகிக் கவர்ந்து கொண்ட உணர்வு ஆவியாகி மேகமாக மாறி மேகக் கூட்டத்திற்குள் அணுக்கள் மோதும் பொழுது நீராகி நீருக்குள் அணுக்கள் சிக்குண்டு ஓர் பரம்பொருளாகி “இப்படித்தான்.., உலகம் பிறந்தது…” என்று திருமூலர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆனால் திருமூலரின் தத்துவத்தை இன்று அதைத் திருமூல மந்திரம் என்று பறைசாற்றி மாற்றிவிட்டனர்.

திருமூலர் இந்த இயக்கத்தின் உண்மையை உணர்ந்து தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா.., என்று பெயர் வைக்கின்றார்.

தில்லை நடராஜா என்பது பூமி. தில்லை அம்பலம் என்பது நம் உடல். ஒரு எல்லையாக வாழ்கின்றது.

இந்த உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்ப இந்த உடலின் அமைப்பும் இந்த உடலுக்கொப்ப மனிதனின் இயக்கமும் இந்த உடலுக்கொப்ப அந்தச் செயலும் இந்த உணர்வுக்கொப்ப செயலும் உணர்வுக்கொப்ப உடலும் என்ற நிலையைத் திருமூலர் “தன் இன மக்கள் அறிய வேண்டும்” என்பதற்காகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதை யாராவது தெரிந்திருக்கின்றோமா..,? உணர்ந்திருக்கின்றோமா..,?” என்றால் தில்லையம்பதியில் வாழ்பவர்களுக்கே தெரியவில்லை.

தில்லை நடராஜா என்று “சூனியப் பிரதேசம்” ஆனாலும் திருமூலர் சமாதி தான் அதை அடக்கமாக வைத்து அங்கே “சிதம்பர இரகசியம்…,” என்று பொருள் பறிக்கின்றனர். உண்மையைப் பெறச் செய்யவில்லை.

பொருளுக்கு இச்சைப்படுகின்றான். இச்சைப்பட்ட பொருளால் இவன் வாழ்கின்றானா என்றால் இல்லை.

உடலையும் சொத்தையும் தான் பார்க்க விரும்புகிறோம்… உயிர் பிரிந்த பின் எதைப் பார்க்கப் போகின்றோம்…!

உயர்தரக் கல்வியை உருவாக்கி இந்த உணர்வின் தன்மைகளைத் தனக்குள் பதிவாக்கி அதன் மூலம் இன்று விஞ்ஞானத்தைப் பெருக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

ஒரு இன்ஜினியரோ அந்த விஞ்ஞான அறிவுப்படி இயந்திரங்களின் உறுப்புகளைப் புதிது புதிதாகச் செயல்படுத்தத் தொடங்குகிறான்.

ஒரு இயந்திரத்தில் அதனுடைய இயக்கப் பொறிகள் எங்கெங்கே அழுத்தங்கள் அதிகமாக இருக்கின்றதோ அதற்குத்தக்கவாறு ஒரு வலுகொண்ட சக்தியினை உலோகங்களின் மூலம் கொடுக்கின்றனர்.

அதே போன்று ஒவ்வொரு பொருளுக்கும் அந்த இயந்திரங்களை இயக்குவதற்கு இன்ஜினியர்கள் முதலில் ஒருவர் கண்டுணர்ந்து உருவாக்கி இருந்தாலும்
1.அடுத்து அதிலே சந்தர்ப்பத்தால் எப்படிப் பழுதடைந்தது…?
2.அந்தப் பழுதை எப்படி மாற்றுவது…? என்ற நிலைகளைக் கண்டுணர்கின்றனர்
3.துரித நிலைகள் கொண்டு பழுதடைவதை நீண்ட நாள் பழுதடையாமல் பாதுகாக்கும் யுக்திகளை எண்ணுகின்றார்கள்
4.நீண்ட நாள் பழுதடையாதபடி இயந்திரப் பாகங்களின் உலோகங்களை மாற்றி
5.அதனை எந்தெந்த நிலைகள் செயல்படுத்த முடியும் என்று உருவாக்குகின்றார்கள்

அதாவது சரி செய்ய வேண்டும் என்ற நிலையில் தன் உணர்வின் எண்ணங்களைக் கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி அந்தப் பாகங்களைச் செய்கின்றார்கள்.

பண்டைய காலங்களில் மனிதனுக்குப் பற்கள் இல்லை என்றால் அதை வைத்துத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான காலத்தில்
1.பழுதடைந்த பற்களை நீக்கிவிட்டு
2.அதற்கென்று புதிதாக உருவாக்கப்பட்ட பற்களை வைத்து மாற்றி
3.கடினப் பொருள்களை மென்று உணவாக உட்கொள்ளும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அதே போல் உடல் உறுப்புகளில் பின்னமாகிவிட்டால் கூடுமான வரையிலும் செயற்கை முறையில் அதே உறுப்புகளைச் செயலாக்கும் தன்மையும் வந்துவிட்டது.

இப்படி… மனிதனுக்குள் பழகிய நிலைகள் கொண்டு மனித உடலைத்தான் இவர்களால் பார்க்க முடிகின்றது.

ஆனால் ஞானிகளோ விஷத்தை வென்றிடும் உணர்வை தனக்குள் வளர்த்து விஷத்தை வென்றிடும் அருள் உணர்வுகளை தனக்குள் பெருக்கி இந்த பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை வந்தால் அதை அடக்கி தனக்குள் ஒளியின் தன்மையாக மாற்றிடும் சக்தி பெற்றனர்.

அதிலே ஆதியிலே தோன்றிய அகஸ்தியன்
1.மீண்டும் அவன் தான் பிறவிக்கு வராதபடி அத்தகைய உணர்வினைத் தனக்குள் வளர்த்து
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆகும் தன்மை பெற்றான்.

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து வாழ்ந்தனர்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவருமே விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று ஒளியான அணுக்களை உருவாக்கி உடலை விட்டுச் சென்ற பின் துருவத்தின் எல்லையில் இருந்து கொண்டு பூமி கவரும் உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டு உள்ளார்

அவர்கள் பெற்ற சக்திகளைத் தியானித்து அதை நுகர்ந்த அக்கால மக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

உயிரணு தோன்றி மனிதனாகி கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனதும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் வேகாநிலை அடைகின்றனர்.

1.இந்தப் பிரபஞ்சமே மடிந்தாலும் சூரியனே அழிந்தாலும் அவைகள் அழியாது
2.எத்தகைய விஷத்தன்மையும் அவர்களைப் பாதிக்காது அதனை ஒளியாக மாற்றிக் கொண்டு
3.அகண்ட அண்டத்தில் ஏகாந்த நிலையில் வாழ்கின்றனர்.

அவர்களைப் போன்று நாமும் நுகர்வதை எல்லாம் ஒளியாக மாற்றி மகிழ்ச்சி பெறும் உணர்வாக மாற்றிடும் அந்த சக்தி பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது ஒளியாக மாற வேண்டும்.

பல ஞானிகளும் மகரிஷிகளும் முனிவர்களும் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று கடும் தவம் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்.

அவர்களிடம் இருந்து வெளிப்படும் அந்த ஒளியான உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் பரவச் செய்து கொண்டேயுள்ளது.
1.அதனை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால் அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடையலாம்
2.அதை உருவாக்கும் நிலைக்குத் தான் என்னுடைய உபதேசமே (ஞானகுரு).

“வாய் பேசாமல்… காதிலே எதுவும் கேட்காமல்…” நம்மால் இயல்பாக இருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் “இடும்பன்” காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்ம சக்தியைக் கேடாக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்ற விதம் அறிந்துணரப்பட வேண்டிய ஒன்று.

தீமைகள் தாக்கும் நிலையில்…
1.உயிரான்ம மூலக்கலப்பு – உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும் இணையாத் தன்மை கொண்டு
2.பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாச் செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவைத் அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.அதாவது சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்… மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ… சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்ம சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.
2.பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எங்கேயோ ஆக்சிடென்ட் ஆகிறது. பல இடங்களில் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சிலர் அந்தச் சிதைந்த சரீரத்தை உற்றுப் பார்த்தபின்… “அஞ்சிவிடுவார்கள்…”

அவ்வாறு அஞ்சி எண்ணுபவர்களுடைய உணர்வுகள் “பயமாகி விட்டது…” என்று அவர் பார்த்த உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது.

பதிவானாலும் “ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…” என்று பயந்த உணர்வினைத் தன் உடலுக்குள் அணுக்களாக்கிய பின் இந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தும் பொழுது கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் இது பதிவாகின்றது.

பின் அந்த உணர்வைப் பதிவாக்கி விட்டால்…
1.எங்கே சிதைந்த உடல் இருக்கின்றதோ… அங்கே அந்த உணர்வுகள் பரவியிருப்பதை இவர்களும் நுகர நேருகின்றது.
2.அப்பொழுது அதனால் இவர்களை அறியாமலே அந்த வேதனையும் “அச்சுறுத்தும் உணர்வுகளும்” வந்துவிடுகின்றது
3.வளர்ச்சியில் அவர்கள் எந்தச் செயலும் மன உறுதியுடன் செயல்படுத்த முடியாத பலவீனம் ஏற்படுகின்றது.
4.பயத்தால் சிந்தனை குறைதலும் எதைக் கேட்டாலும் நடுக்கமும் கடைசியில் கடுமையான நடுக்க வாதமாகவும் மாறுகின்றது.

அதே சமயத்தில் சிதைந்த உறுப்புகளை உற்றுப் பார்த்து ஆழமாகப் பதிவாக்கி இருந்தால் அந்த உறுப்பு எப்படிச் சிதைந்திருந்ததோ அதே நிலையை அதே உறுப்பில் இவர்களுக்கும் சிதையும் அணுக்களாக மாறி உடல் நலிவடையத் தொடங்கும்.

ஆகவே அச்சுறுத்தும் உணர்வுகளிலிருந்து விடுபடும் அந்த உணர்வின் சக்தியைப் பெறுவதற்கு ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி பெற வேண்டும்.

அந்தத் தகுதி பெறும் தன்மைக்கே இப்பொழுது உங்களுக்குள் உபதேசிப்பது. அப்படி உபதேசித்த உணர்வுகளின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் எப்படிப் பெற வேண்டும்…?

உயிரணுவின் தோற்றமும் பிரபஞ்சத்தின் தோற்றமும் உயிரணுவின் வளர்ச்சியும் வளர்ச்சி அடைந்த மனிதரில் “துருவ மகரிஷி” எவ்வாறு உருவானாரோ அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம்.

இதைப் பதிவாக்கிய நினைவு கொண்டு உங்களுக்குள் உருவாக்கி விட்டால் இந்த உணர்வின் துணை கொண்டு காலையில் நான்கிலிருந்து அந்தச் சக்திகளைப் பெற ஏங்கித் தியானியுங்கள்.

காலையில் நான்கிலிருந்து ஆறு வரையிலும்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் பேரருள் பேரொளி உணர்வலைகள் வெளிவருவதை
2.நம் பூமி வட துருவப்பகுதியின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் அழைத்து வருகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அதன் தொடர் கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் பேரருள் பேரொளி உணர்வைக் கவர்ந்து அந்த நேரத்தில் நம் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உட்புகுத்துதல் வேண்டும்.

அவ்வாறு செய்தால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் வெள்ளியும் ஆவியாகி தங்கம் பரிசுத்தமாவது போல் நமக்குள் இருக்கும் தீமை செய்யும் நிலைகளை… பயமான உணர்வுகளை ஆவியாக மாற்றி நம்மைத் தூய்மைப்படுத்தும்.

நம் ஆன்மாவும் தூய்மை அடையும். பிறிதொரு தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் வராது ஒரு வலுவான “பாதுகாப்புக் கவசமாக..” அமையும்.

செயற்கைக்கோளை விண் செலுத்துவது போல் முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்

நம்முடைய முன்னோர்களையும் குலதெய்வங்களையும் வணங்கி வருகின்றோம். அவர்கள் குல வழியில் தான் நாம் வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் இறந்த பின் அந்த ஆன்மாக்கள் நம் குடும்பத்தில் வந்து “அருளாடத் தொடங்குகின்றது…”
1.அவர்கள் உடலில் வந்த நோயும் அவர்கள் அடைந்த கஷ்டமும் நம் குடும்பத்திற்குள்ளும் பாய்கின்றது…. அதனால் நாமும் துன்பப்படுகின்றோம்.
2.இப்படித் தான் நடக்கின்றதே தவிர அது நம்மைத் தெளிவாக்காது… நமக்குத் தெளிவான நிலைகளையும் அது உருவாக்காது.

இதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்…?

அருள் ஒளி பெற்று ஒளியின் சரீரமாக நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் நாம் நுகர்ந்து பழக வேண்டும். அதை நமக்குள் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும். அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அவர்கள் உடலில் பெற்ற நஞ்சின் உணர்வுகள் அங்கே கரைகிறது.
2.குலதெய்வங்களின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்தில் இணைகிறது
3.அருள் ஒளி பெற்றுப் பிறவில்லா நிலை அடைகிறது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் துணை கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் கோள்களையும் படமாக்குகின்றார்கள். அதை எலக்ட்ரானிக்காக மாற்றி ஒலி நாடாக்களில் பதிவாக்குகின்றார்கள்.

ஒலி நாடாக்களில் பதிவானதை ஒரு இராக்கெட்டின் முகப்பில் வைத்து செயற்கைக் கோளை இணைத்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.
1.அந்த முகப்பில் இருக்கும் நாடாவில்… எதனின் உணர்வின் இயக்கமாக எலக்ட்ரானிக்காக மாற்றினானோ
2.பதிவான அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நுழைந்து அந்தக் கோளின் சமீபத்திற்கே கொண்டு சென்று விடுகின்றது.

அங்கே சென்ற பின் அதன் உணர்வுகளை நுகர்கின்றது… ஒளி அலைகளைப் பரப்புகின்றது. அதை வைத்து அதில் இருக்கக்கூடிய நிலைகளைக் கவர்ந்து புவியில் இருந்து அந்த உண்மைகளை விஞ்ஞானி அறிகின்றான்.

இதைப் போன்று தான்
1.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து
2.அதை நம் குலதெய்வங்கள் முன்னோர்களின் உயிரான்மா முகப்புகளில் இணைத்து
3.உந்தித் தள்ளினோம் என்றால் நேரடியாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.

அதிகாலையில் இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் (மீண்டும் இன்னொரு உடல் பெறும் உணர்வுகள்) எல்லாம் கரைகிறது. கரைந்ததை ஆறு மணிக்கெல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சென்று விடுகின்றது.

அந்த நஞ்சுகளை எல்லாம் ஓசான் திரைக்கு அப்பால் தள்ளி மாற்றி அமைத்து விடுகின்றது. அதே சமயத்தில் ஒளி உணர்வு பெற்ற அந்த உயிரான்மாக்கள் பூமியைக் கடந்து சென்று விடுகிறது.

ஆனால் அருள் ஒளி என்ற உணர்வுகள் புவியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலுகின்றது. நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு வாழும் நிலை பெறுகின்றது.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால்… சூரியனே ஒரு சமயம் அழிந்தாலும் அல்லது செயலிழந்தாலும்… இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் கூட…
1.இதிலே விளைந்த உயிரணுக்கள் ஒளியின் சரீரம் பெற்ற பின்
2.ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் பயணம் செய்யத் தொடங்கிவிடும்.
3.அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாகவே வாழும்.

இங்கு மட்டுமல்ல… ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரணு தோன்றி மனிதரான பின் இப்படி ஒளி நிலை பெறுவது தான் கடைசி நிலை. ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலையாக ஒளி நிலை பெறுவது.

இதைத்தான் ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்…! என்று ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய கலர் ஆறு… ஒளி எழு. மனிதனுடைய அறிவு ஆறு… அதை வைத்து உணர்வுகளை ஒளியாக்கும் போது ஏழு.

சூரியனிலிருந்து வரக்கூடிய நிலையும்… மனித உடலில் உணர்வை ஒளியாக மாற்றிவிடும் நிலையும்… இந்த ஈரேழு லோகத்தையும் வெல்லக்கூடியவன் என்றும் நிலையான ஒளியின் சரீரம் பெறுவான் என்று காவியங்கள் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.

அந்த நிலையை நாம் அனைவரும் பெறுவோம்…!

“சக்கர வியூகம்” நம் உயிருக்கு வசப்பட (CONTROL) வேண்டும்

“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்திட தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்…! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழிமுறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன்னிஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரமத்திற்கு… அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி…
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உணர்தல்…
சுவைத்தல்…
நுகர்தல்…
செவிமடுத்துக் கேட்டல்…
விழியின் செயல் திறன்…
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வினைக் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும். இதற்கு முன் உங்களுக்குள் பதிவான தீமையை விளைவிக்கும் அந்த உணர்வுகளை அடக்குவதற்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிப்பது.

ஏனென்றால்…
1.“சாமி (ஞானகுரு) இப்பொழுது சொன்னார்… அப்பொழுதும் சொன்னார்…
2.அப்பொழுது சொன்னதைத்தான் திரும்பச் சொல்கின்றார்.
3.சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கின்றார் என்று சொல்வார்கள்.

ஆனால், “திரும்பத் திரும்பச் சொல்கிறார்…” என்று அப்படிச் சொல்பவர்களிடம் “சாமி என்ன சொன்னார்..,?” என்று கேட்டால் திருப்பிச் சொல்லத் தெரியாது.

உங்கள் சாமி… “நிறைய… சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்” என்று அந்த ஒரு சொல்லில் சொல்லி நிறுத்திவிடுவார்கள்.

மைசூர்பாகு இனிப்பு கிளறுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சீராகக் கிளறவில்லை என்றால் அனைத்தும் ஒன்றாகிக் “கட்டி… கட்டியாகிவிடும்…”

பின் சுவை ஏது? வருமா…?”

ஒரே மாதிரி மாவையும் விட்டு நெய்யையும் விட்டுச் சீராகக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுது…
1.அதில் விட்ட இனிப்புப் பாகும் நீரும் ஒன்றாகச் சேர்த்து
2.இந்த வெப்பத்தின் தணலால் நீர் ஆவியாகி
3.“நெய்யின் தன்மை அதற்குள் ஊடுருவும் பொழுது… அங்கே சுவை கொடுக்கும்…”

இதைப் போன்று தான் ஒவ்வொரு பொருளும் செய்யும் பொழுதும் சரி… அல்லது ஒரு மருந்தே காய்ச்ச வேண்டும் என்றாலும் சரி… அந்தப் பக்குவம் வேண்டும்.

உதாரணமாக குழம்பை வைக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அது வெந்து கொண்டிருக்கும் பொழுது பெண்களுக்குத் தெரியும்.

குழம்பு வெந்து கொண்டிருக்கும்பொழுது சில பக்கம் உறைந்தது இல்லாதபடி (கட்டியாக ஒன்றாக ஒட்டிக் கொள்ளாமல்) கரண்டியை அந்தந்தச் சமயங்களில் பக்குவமாகக் கிளறுவார்கள்.

அது சீராகச் செய்பவர்களுக்குத்தான் தெரியும்.

சமையல் செய்து கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அந்தச் “சரியான நேரம் வந்து.., குழம்பைக் கிளறுவார்கள்…”

அப்படிக் கிளறும் பொழுது குழம்பின் சுவை “ருசியாக..,” இருக்கும்.

அதே சமயத்தில் அடுப்பின் பக்கத்திலேயே அமர்ந்து சமையல் செய்து கொண்டிருப்பார்கள். அடுப்பு எரிவதை “அதிகமாக வைத்தால்…” குழம்பைச் சீக்கிரம் வைத்துவிடலாம் என்று செய்வார்கள்.

இந்தச் சூட்டின் தன்மை வரப்படும் பொழுது இதற்குள் என்ன செய்யும்…? மற்றதுடன் கலந்து கட்டி கட்டியாகச் சேர்த்து ஒன்றாக உறைந்துவிடும்.
1.குழம்பில் போடப்பட்டுள்ள “காய்க்குள்… உப்பின் தன்மை சேராது”.
2.இது எடுத்துக் கொண்ட சத்திற்குள் உப்பு உறைந்துவிடும். இது தனித்துவிடும்
3.அப்பொழுது காயில் பார்த்தால் உப்பு இருக்காது.

சில நேரங்களில் “காய்… உப்பை இழுத்துக் கொள்ளும்…” குழம்பின் சாறுகளில் உப்பின் தன்மை இருக்காது.

இதில் வேக வைக்கும் நெருப்பின் அந்தக் கொதிநிலைகள் எவ்வளவோ அதற்குத்தக்கதான் சுவை வரும்.

ஒரு சிலருக்கு அந்தப் பருவ நிலைகள் தனக்குள் பதிவு செய்து கொண்ட பின் தன்னை அறியாமலேயே அந்தக் “கூட்டுக் கலவையின் தன்மை வருவதற்காக…” சரியான நேரத்தில் சரியானபடி கிளறுவார்கள்.

அதன் தன்மை நன்றாக இருக்கும்.

அதே மாதிரி அவர்கள் சாதம் வைக்கின்றார்கள் என்றால் முதலில் அடுப்பின் வெப்பத்தைச் சீராக்குவார்கள். அந்த வெப்பத்திற்குத்தக்கவாறு சாதத்தைக் கிளறிவிடுவார்கள். சரியாக இருக்கும்.

ஆனால் அப்படிக் கிளறிவிடும் பருவத்தைத் தவறிவிட்டால் “நறுக் அரிசி” என்று சொல்வார்கள். அப்படி வந்துவிடும். அதாவது ஒரு பக்கம் வேகும். ஒரு பகுதி சுத்தமாக வெந்திருக்காது. சாப்பாடும் ருசி இருக்காது.

வீட்டில் கொஞ்சம் மனக் கலக்கம் உள்ளவரோ… கொஞ்சம் வெறுப்பான நிலையில் உள்ளவரோ… தன் குழந்தைகள் சேஷ்டை செய்கின்றானே என்று எண்ணுபவர்களோ… அவர்கள் அந்த எண்ணத்துடன் சமையல் செய்வதைப் பாருங்கள்.

போட்டவுடன் இந்த அரிசியிலேயே வித்தியாசம் தெரியும்.

நல்ல அரிசியைப் போட்டிருப்பார்கள். இவர்களின் இந்த உணர்வுக்குத் தக்கவாறு நெருப்பு எரிப்பார்கள். அடுத்துத் தண்ணீர் கொதித்து வருவதற்கு முன்னாடி அரிசியைப் போடுவார்கள்.

இந்த உணர்வுகள் பாய்ந்தபின் இந்த உணர்வில் எந்த அளவிற்கு மேக்னட் இருக்கின்றதோ அந்த “நம் உடலில் உள்ள இந்த உணர்வுகள்” (அதாவது முதலில் சொன்ன மாறுபட்ட உணர்வுகள்) அந்த நீருக்குள் உள்ள காந்தப்புலனுடன் கலந்தபின் “இந்த அரிசியையே.., சுவை மாற்றும்”.

ஒரே கடையில் நீங்கள் அரிசி வாங்கிப் பாருங்கள். அந்த அரிசியை நான்கு பேரிடம் கொடுத்துச் சமைக்கச் சொல்லிப் பாருங்கள். “வெறும் சாதம் தான்… அதிலே வேறு ஒன்றுமே போட வேண்டாம்…”

அவர்கள் சமையல் செய்து முடிக்கும் பொழுது “எப்படி இருக்கின்றது…?” என்று பாருங்கள். நான்கு விதமாக இருக்கும். இதெல்லாம் காந்தப் புலனறிவால் இயக்கப்படக் கூடிய நிலைகள்.

ஆனால் நாம் அவர்கள் “கைராசி…” என்று சொல்வோம்
1.அவரவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டு
2.அது சமைக்கும் பக்குவத்தில் அதிலுள்ள காந்தப் புலனுடன் இணையும் பொழுது
3.அதற்குத்தக்க தான் இயக்கமாகி அங்கே “சுவை வருவதும்.., சுவை அற்ற நிலை” ஆக்குவதும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆக நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட ஒரு தீமையான உணர்வைச் சுத்தப்படுத்தாதபடி அன்று சமையல் செய்தால் நிச்சயம் அங்கே குறைபாடுகள் வரும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

“சமையலுக்கு மட்டுமல்ல…” உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் ஆனாலும்
1.நாம் ஈர்த்து வெளிவிடும் உணர்வுகள் இணையும் தன்மை கொண்டு
2.அதற்குத்தக்க தான் காரியங்கள் நல்லதாவதும் கெட்டதாவதும்.

ஆகையினால் தான் அருள் வித்துகளைப் பதிவாக்குகின்றோம். பதிவானாதை நினைவாக்கும் பொழுது உங்கள் நினைவாற்றல் மகரிஷிகளின் பால் செல்லும். உங்களைச் சீர்படுத்தும் எண்ணங்கள் உதயமாகும்.

அதன்படி நடக்கும் பொழுது உங்கள் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
1.எனக்கு குருநாதர் எல்லாவற்றையும் இப்படித்தான் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எடுத்துக் கொண்டால்
3.அந்த உணர்வே அருள் வழியில் உங்களை அழைத்துச் செல்லும்… இதில் ஒன்றும் சிரமமில்லை.
4.மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்… பேரானந்த நிலை பெறுவீர்கள்.

பரலோகம்…! அது ஒரு உலகமாகத் தான் இயக்கிக் கொண்டுள்ளது

ஒருவன் தவறு செய்கின்றான் என்று நாம் பார்க்கின்றோம் அந்த உணர்வு நமக்குள் பதிவாகிறது. அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது உணர்வாக நாம் (சுவாசத்தின் வழி) நுகர்கின்றோம். உணர்வின் தன்மை நம்மை இயக்குகின்றது.

ஆக… மனிதனில் விளைந்த உணர்வுகள் தீயவையாக இருந்தாலும் நல்லவையாக இருந்தாலும் அது அனைத்தும் நம் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவி உள்ளது.
1.அதைத்தான் பரலோகம் என்பது.
2.இது ஒரு “உலகமாக” இயக்கிக் கொண்டுள்ளது.

பூமியில் உருவான தாவர இனங்கள் தனது சத்துக்களை வெளிப்படுத்தும் போது சூரியன் அதை எடுத்து இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக வளர்க்கின்றது. பரலோகத்தில் உருவாகும் நிலையாக அது மாறுகின்றது.

அதிலே விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது தன் தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அது உருப்பெறுகின்றது. இந்தப் பரலோகத்தில் தான் அந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

பரலோகத்தில் எந்தச் செடியின் சத்தை இது நுகர்ந்து கொண்டதோ நமது உயிர் அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அந்த உணர்வுக்கொப்ப ஈசனாக இருந்து ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.

இப்படி மாற்றுவதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத் தான்
1.பரலோகத்தில் இருந்து நாம் சுவாசிக்கும் பொழுது இமயம்
2.இரு இமைகளுக்கு மையமாக இருக்கும் நம் புருவ மத்தியில் இயக்கி
3.அந்த இமயத்திலிருந்து நாம் நுகர்வது அனைத்தையும் சிவலோகமாக மாற்றுகின்றது.

ஆனால்…
1.நாம் நுகர்வது சூட்சமமாக இருக்கின்றது (கண்ணுக்குத் தெரியவில்லை)
2.இருந்தாலும் உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

அடுத்து இந்திரலோகமாக மாற்றி இந்த உணர்வின் தன்மை உடலாக்கப்படும் பொழுது “உணர்வுக்கொப்ப செயலும்… செயலுக்கொப்ப உடலும்… உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பும்…” என்ற நிலையில் அமைக்கின்றது.

பரலோகத்தில் இருந்து நாம் எடுக்கும் உணர்வுகள் சிவலோகமாக “உடலாக” மாறுகிறது. அதைத்தான் “என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்…” என்று உயிரிடம் சொல்வது.

ஆகையினால்
1.நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் எதுவோ அதுவே உடலாக… சிவமாக மாறுகின்றது
2.இந்த உடலான சிவத்தை இயக்குகின்றது… உணர்வின் தன்மை கருவாக்குகின்றது
3.கருவின் தன்மை உருவாகும் போது பிரம்மம் ஆகின்றது
4.அதாவது எதனின் உணர்வு கருவாகின்றதோ மீண்டும் அது அணுவாக மாறும் பொழுது பிரம்மமாகிறது.
5.பிரம்மத்தின் நிலைகள் அடைந்த பின் அந்த அணுவின் மலம் உடலாக்கப்படும் பொழுது சிவமாக மாறுகின்றது.

சிவத்தின் தத்துவத்தை நமது ஞானிகள் இப்படித் தெளிவாக கூறியுள்ளனர். எங்கோ இருந்து யாரும் இயக்கவில்லை…
1.நமக்குள் நின்று உயிர் தான் இயக்குகின்றான்
2.நாம் ஏங்கிப் பெறுவதை உணர்த்துகின்றான்
3.உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றான்
4.உணர்வின் செயலாக அந்த உணர்வுகளே உடலாகின்றது
5.உடலின் உணர்வுகள் அதற்குத் தக்க தான் இயங்குகின்றது.

இது எல்லாம் இந்தப் பரலோகத்தில் பரவி இருப்பதை நாம் நினைவு கொண்டு வந்து எடுக்கும் போது நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

சிறுமூளை வழியாகத் திறக்கப்பட வேண்டிய ஞானக்கண்

பரவெளியின் பூதியில் சூரிய மண்டலங்களின் சந்திப்பில் யுகம் என்ற மறைபொருளாக விண்மீன்கள் விண் கோள்கள் அமையப் பெற்று ஓர் ஓட்ட கதியில் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் அந்தக் குடும்பத்தின் சுழல் ஓட்ட கதியில் சுற்றி வரும் சூரியனின் சக்தியில்
1.ஒன்றுடன் ஒன்று பிடர் வழி என்ற உந்தும் வீரிய குண சக்தியைக் கொண்டு
2.சக்தியை ஈர்த்துக் கொண்டும்… சக்தியை அளித்துக் கொண்டும்…
3.ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு வெளித் தள்ளும் சமைப்பு அமில குணத் தன்மைகளை ஒளி காந்தமாக வீசிக் கொண்டும்
4.தன்னைச் சுற்றி ஓடும் சுழற்சியின் சப்த நாதங்களை வளர்த்துக் கொண்டும்
5.தான் பெறும் சக்தியை ஈர்ப்பு நிலையில் குறைவுபடாத தன்மையாக வளர்த்துக் கொண்டும் உள்ளது.

அவ்வாறு ஓடுகின்ற ஓட்டக் கதியில் எல்லாம் எந்த மண்டலமோ அந்த மண்டலம் தன் சக்தியின் வலுவைக் கொண்டு
1.தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும்
2.தன் வலுவை விடக் குறைந்த சக்தி பெற்ற உருவாகும் கோள்களின் தொடரை
3.தான் ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஓர் சூட்சமம் உள்ளது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞான வழியில் முன்னேறி வரும் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சரீரம் உள்ள பொழுதே வீரியச் சக்தியின் தொடரை “வேகம் கொண்டு” எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகம் என்பது என்ன…?

எண்ணத்தின் வலு கொண்டு மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சக்தியின் உயிரான்மக் கலப்பின் முலாம் தனக்குள் வலுப் பெற்று விட்டால் ஞானக் கண் திறக்கும் திறப்புச் செயல் வேகம் கொண்டுவிடும்.

அத்தகைய வேகம் கொண்டால் யுகங்கள் தன் சந்திப்பில் ஓர் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் உருவாக்கும் ஆக்கம் எந்தக் கோளமும் தன் ஈர்ப்பின் வலுச் செயலினால் மூலத்தையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.
1.சக்தியின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வீரிய மண்டலமாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் உருக்கோலம் கொள்ள வேண்டும்.

நீங்கள் என்ற சொல் உங்கள் அனைவரின் தொடருக்கு வலுக் கொள்ளும் செயலை… அதாவது “அழுத்தமாகச் சுட்டிக் காட்டும்” அமில குணம் கொண்ட வீரியச் செயலாக… நட்சத்திர அலைகளின் விசேஷ வீரிய குணத் தன்மைகளை அறிந்து கொள்ளும் “உயிரான்மா – ஜீவாத்மா தொடரில்”
1.சரீரத்தின் மூலம் அமைத்துக் கொள்ளும் பக்குவச் செயலாக
2.கரங்களில் வெளிப்படுத்தும் உணர்வு நரம்புகளின் வீரியச் செயல் கொண்டு மண்டலமாக உருவாக்கிடும் உருக்கோலம் கொள்ள
3.”பிடர் வழி” என்றிட்ட மன எண்ணச் செயலில்
4.பரணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எலும்புகளின் வலுக்கொண்ட சேமிப்பாகக் கூட்டிக் கொண்டு
5.சரீரத்தில் உள்ள உயிரணுக்கள்… உயிரின் ஒளி காந்தத்தை நாடி… உயிர்ச் சக்தியினை வலுக்கூட்டப்படும் பொழுது
6.சரீரத்தின் கட்டளைக் கேந்திரமான (CONTROL PANEL) சிறுமூளையின் பாகம் திறக்கப்படும் ஞானக் கண் வழியாக
7.எண்ணத்தின் பிடர்வழி உந்தும் குண வீரிய எண்ணமாக ஆக்கப்படும் பொழுது
8.மண்டலத்தின் உருக்கோலத் தன்மைக்கு வித்திடும் வீரிய சக்தியாகப் பரிமளிக்கும்.

ஆக மகரிஷிகள் படைத்த “படைப்பின் படைப்பு” என்பது சூட்சம சரீரம் கொண்டு உயிரான்ம ஒளி காந்த சக்தியுடன் தன் நிகழ்வில் பெறப்படும் சக்திகளுடன் தான் ஒன்றி “ஞானக் கண் திறப்பின்” வழியாகத்தான் தன் வலுவை வீரியமாக்கிக் கொண்டனர்.

பூதியின் வீரிய நட்சத்திரமாகத் தனக்கென்று தன் ஆக்கத்தின் ஆக்கமான படைப்பின் படைப்பான ஒளி காந்த சக்தியைப் பெற்றுச் “சுய வீரிய சக்தி கொண்ட நட்சத்திரமாக உருக்கொண்டார்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கப்படும் பொழுது
1.“இப்படித் தவறு செய்கின்றானே…” என்று எண்ணுகின்றோம். ஆனால் அச்சமயம்
2.அவன் அந்தத் தவறு செய்யும் நிலைகளிலிருந்து “மீள வேண்டும்..,” என்று எண்ண முடியவில்லை.

ஆகவே அதற்காக வேண்டி ஆலயங்களை அமைத்துத் தூய்மைப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் ஞானிகள்.

அன்றாட வாழ்க்கையில் “உடல் அழுக்கைப் போக்குவது போல” நாம் வாழ்க்கையில் கேட்டுணர்ந்த தீமையின் தன்மைகளைப் போக்கிட “வானை நோக்கி…” எண்ணும்படிச் செய்தார்கள்.

1.“விண்ணிலிருந்து வரும்” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
2.நாம் கேட்டறிந்த “தீமைகளைத் துடைக்கும்படி… நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும்படி..” செய்தனர்.

இதை வழிப்படுத்தி நம் வாழ்க்கையில் யாரை யாரையெல்லாம் சந்தித்தோமோ… அவர்கள் எல்லாம் இத்தகைய நிலைகள் பெறும்படி “பல முறை செய்தல் வேண்டும்”.

அவர்கள் எண்ணுவதற்கு நேரமில்லை. இருப்பினும்
1.அவர்கள் “எல்லோரும் அருள் உணர்வுகள் பெற வேண்டும்…”
2.அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்.
4.அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மகிழ்ச்சி பெற வேண்டும்
5.அவர்கள் குடும்பமெல்லாம் நலம் பெற வேண்டும் “ஈஸ்வரா..,” என்று
6.நமக்குள் ஆண்டு கொண்டிருப்பவனிடம் இதைக் கேட்டால் அது “ஓ..ம் நமச்சிவாய.. “ஓ…ம் நமச்சிவாய…”

நாம் எத்தகைய உணர்வினை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது “ஓ…ம் நமச்சிவாய…”

“அனைவரும் நலம் பெற வேண்டும்” என்ற இந்த உணர்வினை நமக்குள் “சதா சிவமாக்க வேண்டும்…”

எண்ணங்கள் (சுவாசிக்கும் உணர்வுகள்) நம்மை எவ்வாறெல்லாம் இயக்கும்…? என்பதைத் தான் இராமாயணம் காட்டுகிறது

தீமையை நீக்கும் எண்ணங்கள் வரும் பொழுது தான் இராமன் சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான் என்று காவியம் காட்டுகிறது.

1.தாக்கும் உணர்வு வந்தால்… எதிர்த்துத் தாக்கும் உணர்வே வருகின்றது
2.ஆனால் அரவணைக்கும் உணர்வின் தன்மை இருந்தால்… தன்னுடன் இணைந்து வாழும் நிலை வருகின்றது.

அது தான் “கல்யாணராமா…”

அரவணைக்கும் தன்மை கொண்டு நாம் நண்பனை இணைத்தால்… இந்த உடலுக்குள் தன்னுடன் இணைந்து வாழும் சக்தியாக அது எவ்வாறு கொடுக்கிறது என்று இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகின்றது.

அதை நாம் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.

மூலக்கூறுகளை விடுத்து விட்டு அவரவர்கள் உணர்வுக்கொப்ப காரியங்களைத் தீட்டிக் கருத்தினை மாற்றி மனிதன் வாழ்க்கைக்குண்டான போர் முறைகளைக் கையாண்டு “ஏமாற்றுவதும்… ஏமாற்றி வாழ்வதே சரி…” என்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டனர்.

இராமன் மிகவும் வலிமை கொண்டவன் என்று காட்டுகின்றனர். அன்று விசுவாமித்திரர் தான் யாகம் செய்யும் போது அசுரர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக இளம் பிராயத்தவர்களான இராமனையும் இலட்சுமணனையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார்.

பல வித்தைகளையும் கற்றுக் கொடுத்து எனக்குப் பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்கிறார். அதன்படி அசுரர்கள் தாக்குதலில் இருந்து இராமன் விசுவாமித்திரனைக் காக்கின்றான்.

ஆனால் விசுவாமித்திரனோ மிகவும் கொடூரமானவன்… கோபக்காரன்… பல அரசாட்சிகளைப் பிடித்தவன்… யாகத்தை வளர்த்தவன்… வலிமை பெற்றவன் தான்.

இவ்வளவும் இருந்தும் மீண்டும் வலிமை பெற வேண்டும் என்ற ஆசையின் உணர்வு உண்டு உலகை அடக்க வேண்டும்… உலகை அடிமையாக்க வேண்டும் என்று உணர்வின் வேகம் கொண்டு யாக வேள்விகளை நடத்த விரும்புகின்றான்.

யாக வேள்விகள் நடத்தப்படும் பொழுது எதிர்கொண்டு தாக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இராம இலட்சுமணர்களை அழைத்துச் செல்கின்றான். அந்த யாக வேள்வியும் நிறைவடைகின்றது.

ஆனால் அப்பேர்ப்பட்ட நிலையில்…
1.மற்றவர்களைக் காக்கும் நிலையாக அசுரர்களைக் கொல்லும் திறன் பெற்றவன்…
2.அசுரர்களின் செயலாக்கங்களை அறிந்து அவர்களை வீழ்த்தக்கூடிய திறன் பெற்றவன்…
3.மிக வல்லமை பெற்றவன் இராமன் என்று இருந்தாலும் தன் மனைவியுடன் காட்டிற்குள் செல்லும் போது என்ன நடக்கிறது…?

காட்டிற்குள் செல்லப்படும் பொழுது சூட்சம நிலைகள் கொண்டு அசுரனான இராவணன் சீதாவைக் கடத்திச் செல்கின்றான்.

ஆனால் வலுக் கொண்ட இராமன் அதைக் கேள்விப்படும் போது “தன் மனைவி போய் விட்டதே என்று மயங்கி விழுகிறான்…!” என்றால்
1.அப்பொழுது இராமனின் செயல் என்ன…?
2.இதை ஏன் காவியத்தில் இவ்வாறு சித்தரித்துக் காட்டுகின்றார்கள்…? என்று சற்று சிந்தித்தல் வேண்டும்.

வலிமை கொண்டவன் “தன் மனைவி போய் விட்டதே” என்று எண்ணும் பொழுது இதைப் போல் பிறிதொரு மனிதன் வெளிப்படுத்திய வேதனையைத் தனக்குள் நுகரப்படும் பொழுது… அந்த வாலியின் தன்மையே (நல்ல உணர்வின் வலிமை குறையும்) இங்கே வரும்.

கோதண்டத்தை முறித்து வேதனைகளை நீக்கிச் சீதாவை திருமணம் செய்து கொண்டவன்… கல்யாணராமன் என்று சுயம்வரத்தில் வென்றவன்… சீதாவைக் காணவில்லை என்று
1.“அந்த வேதனையான உணர்வை… விஷத்தின் தன்மையைக் கொடுத்தால்…”
2.இவனுடைய எண்ணத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்…? என்பதைத்தான் இராமாயணக் காவியம் தெளிவாகக் காட்டுகிறது.

இதையெல்லாம் அவர்கள் உணர்வுகளுக்கொப்ப காவியங்களைத் தீட்டி உண்மையின் உணர்வை அறியாதபடி தீமையின் விளைவுகளுக்கே பயன்படும்படி செய்து விட்டார்கள்.

நீங்கள் அந்த மூலக்கூறுகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்துதலே நல்லது.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்…” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்…! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்… ஒலி நாதத்தின் அமில குணமும்… ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா…” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு…!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று… “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை…!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் – உண்மையை உணர்ந்து கொள்ளத்தானே தவிர
5.அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு – சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர
6.சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்…?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது… திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி… விபூதி…! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்…!)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எதை எதை எப்படிச் செய்தாலும் “நம் உயிரிடமிருந்து மட்டும்…” யாரும் தப்பவே முடியாது.

காரணம்…
1.நாம் எண்ணியது எதுவோ அதை ஒவ்வொரு நிமிடமும்…
2.“ஓ..ம் நமசிவாய… ஓ..ம் நமசிவாய”…” என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.
3.காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எண்ணிய உணர்வுகள் “நல்லவை – கெட்டவை…” அனைத்தும் நம் உடலாக அமைந்து விடுகின்றது.

இதைத்தான் “ஓ..ம் நமசிவாய… ஓ..ம் நமசிவாய”…” என்பது. அப்படியென்றால் “நம் உடலைச் சதா சிவமாக்கிக் (சதாசிவம்) கொண்டயுள்ளோம்…” என்று பொருள்.

எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த “மணத்தின் தன்மை” வருகின்றது. அந்தச் “சொல்லின் தன்மை” வரப்படும் பொழுதுதான் “சிவாய நம ஓம்…”

நாம் நுகர்ந்தது ஜீவனாகி நமக்குள் அணுவாகி சிவமாகின்றது. எது ஜீவனாகி அணுவாக சிவமாக ஆனதோ நமக்குள் இருந்து “அதனின் சொல்லாக… செயலாக வெளிவரும்…” – “சிவாய நம ஓம்…”
1.வெறும் வாயில் “ஓ..,ம் நமச்சிவாய.. “ஓ..,ம் நமச்சிவாய.. என்றால் அதில் பொருள் இல்லை… அது வெறும் சொல்லே.
2.ஓ…ம் நமச்சிவாய…! என்று சொன்னால் அந்தச் சிவன் இறங்கி வந்து
3.“என்னையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்…” என்று
4.எதையாவது ஓடி வந்து செய்வான்…! என்ற இந்த நம்பிக்கையைத்தான் ஊட்டியுள்ளார்கள்.

சாஸ்திர சாங்கியங்களின்படி “ஓம் என்றால் பிரணவம்…” இப்படிச் சொல்லி அதையே ஜெபித்தால் “எனக்குள் ஜீவன் வந்து விடும்…” இன்று தவறான வழிகளில் நாம் ஜெபித்துக் கொண்டுள்ளோம்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் திறன் நாங்கள் பெற வேண்டும்
4.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நாங்கள் ஒன்றி வாழ்தல் வேண்டும்.
5.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
6.எங்களைப் பார்ப்போர் அனைவரும் உடல் நலம் பெற வேண்டும்
7.எங்களைப் பார்ப்போர் தீமைகள் அகல வேண்டும்.

“இதைத் தான் நமக்குள் வினையாக்கச் செய்ய வேண்டும்…” மூஷிகவாகனா.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைச் சுவாசித்து அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் கண்டுணர்ந்த மெய்ஞானிகளின் அருள் சக்தி திறன் அனைவரும் பெற வேண்டும். அனைவரும் பொருள் கண்டுணரும் திறன் பெற வேண்டும். அவர்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அங்கே அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

இப்படி எண்ணி.. இதை வினையாக்கி… நம் உடலாக சதாசிவமாக ஆக்கும்படி சொன்னார்கள் ஞானிகள்.

இந்த உடலின் பற்றை அறுத்துவிடு… என்றார் குருநாதர்

குருநாதர் பல நிலைகளைச் செய்தாலும் கூட என் குடும்பம் வாழ வேண்டும் என்று ஆசை எனக்குள் (ஞானகுரு) இருந்தது.

இந்த ஆசை எவ்வாறு உருவாகின்றது…? அதனால் விளையும் தன்மைகள் என்ன…? என்பதை உணர்த்துவதற்காக குருநாதர் இமயமலைக்கு என்னை அனுப்பினார்.

பனிப்பாறைகள் மீது நடக்கச் சொன்னார். இப்பொழுது உடலிலே ஆடைகளை அணிந்திருக்கின்றோம். ஆனால் அன்று அதுவும் இல்லாதபடி வெறும் கோவணத்துடன் தான் அங்கே போகச் சொன்னார்.
1.நான் சொல்லும் உணர்வின் தன்மையை ஏங்கிச் சுவாசி
2.பனியின் குளிர் ஒன்றும் செய்யாது
3.உன் நினைவாற்றல் அருள் ஒளி பெறும் உணர்வுடன் ஒன்றும் போது வாழ்க்கையில் மன பலம் பெறுவாய்
4.ஆகவே உன் நினைவு நான் சொன்னதன் பால் இருக்கப்படும் பொழுது பனிப்பாறைகள் உன்னை ஒன்றும் செய்யாது என்றார்

அதன் படி பனிப்பாறைகளைக் கடந்து நான் செல்கின்றேன். சென்ற பின் திடு…திடு… என்று நான் வந்த பாதையில் இருந்த பனிப் பாறைகள் அனைத்தும் நொறுங்கிக் கீழே விழுகின்றது.

நான் வந்த பாதை இடிந்து போய் விட்டதே… இனி எப்படித் திரும்பப் போகின்றோம்…? குழந்தைகளையும் குடும்பத்தையும் நான் எப்படிப் பார்க்கப் போகின்றேன்…? என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

அப்போது இந்த உடல் பற்று வரப்படும் பொழுது “என் இருதயமே இறைகின்றது…” சிறிது நேரத்தில் உயிரே போய்விடும் போல இருக்கின்றது.

காரணம்… குருநாதர் கொடுத்த கவசம்… அவர் கொடுத்த உணர்வின் தன்மையை நுகர மறந்துவிட்டேன்.

இனி எவ்வாறு வாழ்வது…? என் குழந்தைகள் என்ன ஆவார்கள்…? என்று குடும்பத்தின் பற்று வரப்படும் பொழுது இந்த உடல் பற்று தன்னாலே வருகின்றது.

அப்பொழுதுதான் குருநாதர் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்…!

“மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே… தயங்காதே…!

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!
மனமே இனியாகிலும் மயங்காதே… மயங்காதே…!

நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ…?
நிலையில்லா இவ்வுலகம் சதமாமோ… சதமாமோ…?

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே… தயங்காதே…!” என்று
குருநாதர் இந்தப் பாடலை பாடிக் காட்சிகளைக் கொடுக்கின்றார்.

நீ இப்பொழுது இருக்கும் இந்த நிலையில் எல்லாம் போய் உன் உயிர் வெளியேறி விட்டால்
1.“பொன்னடி பொருளையும் சுகத்தையும்” காண முடியுமா…? நீ எதை எண்ணுகின்றாய்…?
2.நான் எதைச் சொன்னேன்…? எதை எண்ணி ஏங்குகின்றாய்…?
3.எதைப் பெறச் செய்கின்றாய்…? எதை நீ பெறுதல் வேண்டும்…?

ஆகவே…
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு… அந்த உணர்வின் தன்மையை அங்கே குடும்பத்தில் பாய்ச்சு…
2.அவர்கள் நலம் பெற வேண்டும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்து…
3.அந்த அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சு அவர்கள் நலமும் வளமும் பெறுவார்கள்.

பாசத்தால் “இப்படி ஆகிவிட்டதே…” என்று அவருடைய நிலைகளை எண்ணும் பொழுது இங்கே உன் உயிர் போய் விட்டால் அந்தப் பொன்னடி பொருளை எவ்வாறு நீ காணப் போகின்றாய்…?

நான் உனக்குப் போதித்த உணர்வுகளை நீ ஏன் மறந்தாய்…?

1.அருள் ஒளி பெறு… இருளை அகற்றிவிடு
2.இந்த உடலின் பற்றை அறுத்துவிடு
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை அனைவரும் பெறச் செய்யும் அந்த அருள் பற்றை உண்டாக்கு
4.அருள் வாழ்க்கை வாழ்ந்திடு… இருளை அகற்றிடும் சக்தி பெற்றிடு…
5.இருளை அகற்றிடும் வாழ்க்கை வாழ்ந்துவிடு
6.அருள் ஒளியின் பற்றாக வாழ்ந்திடு
7.அருள் ஞானிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றிவிடு
8.வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிவிடு
9.பிறவியில்லா நிலைபெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்துவிடு என்று இந்த உபதேசத்தை அங்கே கொடுக்கின்றார்.

ஆகவே… இந்த வாழ்க்கையை இன்னல்கள் வந்தாலும் நாம் பற்ற வேண்டியது எது…” அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிட வேண்டும்.

குரு வழியில் அருள் உணர்வுகளைப் பெறுவோம்… இருளை அகற்றிடும் அருள் வழியைப் பெறுவோம்… அருள் வழி வாழ்வோம்.
1.அனைத்துக் குடும்பங்களும் நலம் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் வாழ வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்…!

திருக்கூட்டம் தேவை இல்லை… கல்கி என்ற ஒளியான வித்துக்கள் தான் தேவை…!

1.உரைத்துவிடு ஈஸ்வரா…! என்று உரைத்தவனும் கவி மழை பொழிந்தவனும் உண்மையின் சொரூபத்தை உணர்ந்தே
2.நலம் பெற நல்லாக்க நிலையில் “நான்…” என்ற அகங்கார நிலையை விடுத்து
3.சகலமும் ஈஸ்வரர்…! என்ற அருள் ஜோதியைச் சிந்தித்து
4.எல்லா உயிராத்மாக்களையும் தன் உயிர் போல் பாவிக்கும் பாவனையில்
5.மௌனத்தின் உரையில் ஆத்மாவில் உரைக்கட்டும்.

அதுவே எமக்குகந்த ஆனந்த நிலை…!

சரீர பக்தி கொண்டு ஆடுகின்ற ஆட்டமெல்லாம் எத்தனை காலத்திற்கப்பா…? ஆண்டாண்டு காலமாகச் சமுதாய அமைப்பில் எத்தனையோ தவசீலர்கள் என்று பறைசாற்றியவர்களைப் பற்றி எத்தனை முறைகள் தான் எடுத்துக் கூறுவது…?
1.உன்னை நம்பு.. பிறரை நம்பாதே…!
2.உன் உயிரான்மா சக்தி பெற்றிட அது… பிறர் கொடுத்துப் பெறுவதல்ல…!

கலியின் சூட்சமமே மனித எண்ணங்களின் விஷமான மூச்சலைகளால் பூமியின் பொக்கிஷங்கள் குறைவுபட்டு விட்டது. இந்தக் கால கட்டத்தில் ஒவ்வொருவரும் தன் உயிர் ஆத்ம சக்தியை வலுகூட்டும் முயற்சியைத்தான் யாம் விரும்புகின்றோம்.

ஒவ்வொரு மனிதனின் நிலைக்கொப்ப அது பக்தியோ வியாபாரமோ அல்லது குடும்ப நலமோ அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப எண்ணம் சொல் செயல் மூன்றிலும் சத்திய நியாய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிலைகளுக்கும்…
1.அவரவர்களுக்கு ஏற்றாற்போல் மெய் ஞானத்தை உரைத்திட்டால் வெறும் திருக்கூட்டம் தான் பெருகும்.
2.யாம் சொல்ல வந்த கல்கியின் வித்துக்களை உருவாக்கிடவும் முடிந்திடாது.

ஏனென்றால் வெறும் கூட்டம் தேவை என்றால் “எத்தனையோ வழிகள் உண்டு…!” (இன்றைய கலியில் கூட்டம் எங்கெங்கே கூடுகிறது என்று பார்க்கலாம்) அது நமக்கு வேண்டியதில்லை.

நமக்கு வேண்டியது…
1.எண்ணத்தில் பிறரைப் பற்றிய தவறான கருத்துக்கள் கொள்ளாது
2.தான் கொண்ட சத்தியத்தில் பிறழாது வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

ஆனால் சத்திய சோதனையில் சோர்வு பட்டவனும் துவேஷக் கருத்துக்களை வைத்துக் கொண்டிருப்பவனும் “சக்தி பெறலாம்…!” என்ற நம்பிக்கையிலாவது வாழட்டும்.

கலி இன்னும் முடிந்திட எண்ணிறந்த காலம் செல்லும் என்று. அறிந்து சொன்னானா எம் உரையை…? உரைத்துவிடு ஈஸ்வரா… என்றவனுக்கே உரைக்கின்றேன் “சடையாண்டி மலையின் சூட்சமத்தை…!”
1.சப்தரிஷிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றன…
2.அது பொங்கிடும் நாதமே உரைத்த சூட்சம ஒலி.
3.ஞானம் பெற்றிட விழைவோன் யாராக இருந்தாலும் சமமான உணர்வுகள் கொள்ள வேண்டும்.

இன்னல் கண்டு கலங்காதே…! என்ற வாசகத்தை நினைவில் கொள்க. காலம் குறுகியது என்று பல பல காலம் உரைத்திட்டேன். மெய் ஞானத்தைப் பெறுவது எக்காலம்..?

உலகெங்கிலும் எத்தனையோ எரிமலைகள் வெடிக்கின்றன. அங்குள்ள உயிர்த் தொகைகள் மடிகின்றன. எது எங்கோ நடைபெறும் சம்பவம் என்று நினைக்க வேண்டாம். அது நாம் வாழும் இந்த இடத்தில் ஏன் இருந்திடக் கூடாது.

உண்மையும் அது தான்…! சடையாண்டி மலை என்ற பெயரை வாசிக்கும் பொழுதே அறிந்து கொள்ள வேண்டும். ஞானம் பெற விழைந்தது எதற்கு…? இடத்தையும் உரைக்கின்றேன்.

கொங்கு மண்டலத்தின் தென் திசையில் அமைந்துள்ளது சடையாண்டி மலை. கந்தக மண் சூழ்ந்த அந்த இடத்தில் ஒரு மலை மாத்திரம் அன்று மூன்று மலைகள் அடுப்புகள் கூட்டிய அமைப்பில் அமைவு பெற்று அதில் ஓர் மலையில் இரண்டடி உயரத்தில் மலையின் தாழ்வாரத்தில் மூன்று நீருற்றுக்கள் கிளம்பி ஓடிக் கொண்டே இருக்கின்றன.

தென் கையிலாயம் என்று உரைத்திட்டேன் குரு மலையை. குரு மலையில் இருந்து நாற்பது கல் தொலைவில் தெற்கு திசையில் அடர்வனத்தில் உள்ளது சடையாண்டி மலை.

1.சடையாண்டி மலைகள் குமுறிக் கொந்தளிக்கப் போகின்ற எரிமலைகள்.
2.பயம் காட்டுகின்றேன் என்று எண்ணிட வேண்டாம்.
3.இன்னும் இந்தக் கலியில் உடல் கொண்டு உலவும் சித்தர்கள் அறிந்துள்ளனர் அதனின் சூட்சமத்தை…!

யாம் கூறி வரும் உண்மை நிலைகளை எல்லாம் உணர்ந்து தெளிதல் பொருட்டு இந்தத் தியானத்தின் வழியாக ஒவ்வொரு உயிராத்மாவும் பேரின்பத்தில் திளைத்துப் பேரருள் செல்வத்தில் ஆதி சக்தியில் கலந்திடவே உரைக்கின்றோம்.

மகரிஷிகள் வேண்டுவதோ கல்கியின் வித்துக்களாகிய ஞானச் செல்வங்களைத்தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் ஆக்சிடென்ட் ஆகின்றான். “இப்படி ஆகிவிட்டதே…” என்று நாம் வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது “ஓ..ம் நமச்சிவாய..,” பய உணர்வுடன் எடுக்கும் பொழுது நம் உடலாக சிவமாக ஆகின்றது.

அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது. ஏன்.. அவ்வாறு ஏற்படுகின்றது…? நம்முடைய உயிர் எவ்வாறு அதை உடலாக மாற்றுகின்றது..?

1.கண்கள் அவன் செயலை உற்றுப் பார்க்கச் செய்கின்றது.
2.கருவிழி படமாக்குகின்றது… உணர்வின் அலையைக் கவரச் செய்கின்றது.
3.உயிரோ “ஓ..,” என்று பிரணவமாக்குகின்றது.
4.உணர்வினை உணர்த்துகின்றது… உணர்வின் தன்மை உடலாக உறையச் செய்கின்றது என்று
5.சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஒரு ஆக்சிடென்ட் ஆகின்றது என்றால் “வேண்டும் என்றே விழுகின்றார்களா..?” இல்லையே.

அவனுடைய வாழ்க்கைக்காகச் சென்றான். எதிர்பாராது ஒரு வண்டி மோதுகின்றது. அடிபட்டு அவன் துடிக்கின்றான். அவன் உடலிலிருந்து துடிக்கும் உணர்வலைகள் வெளிப்படுகின்றது.

சூரியனின் காந்தப் புலனறிவோ அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. கண்களோ துடித்தவனின் உணர்வை உற்றுப் பார்க்கின்றது. உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்குகின்றது.

ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்ட அலைகளைக் கண்ணின் காந்தப் புலனறிவு தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. நம் உயிரோ அதை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை உணர்த்துகின்றது. ஜீவ ஆன்மாவாக மாற்றுகின்றது.

1.நமக்குள் இருக்கும் புலனறிவு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது
2.அந்தத் தீமை என்ற நிலையை அந்தந்தச் சந்தர்ப்பங்களில் உணர்த்துகின்றது.
3.ஆனால் தீமையிலிருந்து விடுபடும் ஆறாவது அறிவு கொண்டு விடுபட வேண்டுமே…!

இதற்குத்தான் இந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று உயிருடன் ஒன்றி அந்த அருள் சக்திகளைச் சுவாசித்தல் வேண்டும்.

அப்படிச் சுவாசித்தால் “ஓ..ம் நமச்சிவாய…” “ஓ..ம் நமச்சிவாய…”

ஏனென்றால் அந்த மகரிஷிகள் தீமையை அகற்றியவர்கள் நஞ்சை வென்றவர்கள். உணர்வை ஒளியாக மாற்றியவர்கள்.

“சிவாய நம ஓ..ம்…” “சிவாய நம ஓ..ம்…” – நான் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும். அவர்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்சுதல் வேண்டும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான அறிவால் வளர்த்துக் கொண்ட நிலைகளில் பல நஞ்சான உணர்வுகள் பரவிக் கொண்டுள்ளது. உலகில் நடக்கும் பல கொடுமையான நிலைகள் இன்டெர்னெட் மூலமும் டி.வி. மூலமும் பத்திரிக்கை மூலமும் வந்து கொண்டே இருக்கின்றது.

அதில் எதையெல்லாம் மனித உடலில் படைத்தோமோ அவையெல்லாம் “சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது…” அதை நுகர்ந்தால் நம்மை அறியாமலே பல தீமைகளை உருவாக்கும் நிலைகள் உருவாகின்றது.

“யாரும் தவறு செய்யவில்லை” – புலனறிவால் நமக்குள் புகும் தீமைகளிலிருந்து நம்மைக் காக்க வேண்டுமல்லவா…!

சொர்க்கலோகத்தை உருவாக்குங்கள்

உதாரணமாக… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக உடலிலே உருவாகி விட்டால் நாம் எந்த லோகத்தை உருவாக்குகிறோம்…?

இந்திரலோகத்தில் (உடலில் உள்ள இரத்தங்களில்) வேதனை உணர்வுகள் கருவாகி அணுக்களாக வெடித்து அணுவின் மலம் அது சிவமாகிறது (உடல்).
1.ஆக “வேதனையான உணர்வின் செயலாக” இயக்கப்படும் பொழுது சிவலோகத்தில் எமனாக மாறுகின்றது.
2.பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று மனிதனாக வந்த நம் உடலுக்குள் எமலோகமாக மாறுகின்றது.
3.வேதனையால் இந்த உடலின் தன்மை நலிகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் “எந்தக் குணத்தின் வரிசையில் எடுத்தோமோ…” அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை நரக வேதனைப்படச் செய்து இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி சாகாக்கலையாக (அந்த வேதனை உணர்வு கொண்டு) அழைத்துச் செல்கின்றான்…! நம் உயிர்.

எங்கே…?

விஷத்தால் மற்ற உயிரின்ங்களைத் தாக்கி உணவாக உட்கொள்ளும் பாம்பினமாகவோ விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவாக எடுக்கும் தேளினமாகவோ மாற்றிவிடுகிறது.

அடிக்கடி வேதனை என்றோ… வேதனைப்படுபவர்களைப் பார்த்து இரக்கம் ஈகை என்றோ ஏங்கினால் அவர்களின் வேதனை உணர்வு நமக்குள் வளர்ந்து எமலோகமாக மாறுகின்றது.
1.நம் உடலில் உள்ள இந்திரலோகம் (இரத்தநாளங்கள் – இந்திரீகம்) எமலோகமாக மாறி
2.சொர்க்கலோகம் செல்லும் உணர்வைத் தடைப்படுத்திவிடுகிறது.

வேதனையினால் உடல் குறுகி உயிரான்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் எந்த வேதனையை அதிகமாக எண்ணினோமோ அத்தகைய வேதனைப்படும் உடலுக்குள் சென்று விடுகின்றது

அதாவது…
1.விஷத்தை உணவாகப் பாய்ச்சும் அதை உணவாக எடுத்துக் கொள்ளும்
2.அந்த விஷத்தன்மை நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் பட்டபின் இது வெளிவந்த பின்
3.பாம்பினங்களுக்கோ தேளினங்களுக்கோ… வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் இந்த உடல்களுக்குள் உணர்வுக்கொப்ப அழைத்துச் சென்று
4.அந்தப் பாசக்கயிறு…! – தொடர்ந்து எந்த வேதனையை எடுத்தோமோ அதன் தொடர் வரிசையில் நாம் சென்று
5.அந்த உடலுக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று நீ எதை எண்ணினாயோ அதுவாகின்றாய் என்ற தீர்ப்பைக் கொடுத்து
6.கண்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும் – பயத்தின் உணர்வு கொண்டு
7.இப்படிச் செய்தான்… செய்தான்.. செய்தான்… என்ற எண்ணத்திலே எண்ணும் பொழுது
8.தனக்குள் எமலோகமாக மாற்றி நரக லோகத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது.

ஆக மொத்தம் வேதனையை வளர்த்துக் கொள்ளப்படும் பொழுது கண்ணன் சாரதியாகச் செல்கின்றான். எப்படி…?

1.எதனை எண்ணி ஏக்கத்தின் நிலைகள் கொண்டோமோ…
2.எந்த விஷத்தின் தன்மை தனக்குள் வலுக்கொண்டதோ….
3.எந்தக் கண் காட்டி நம்மை காத்துக் கொள்ளும் உணர்வை கொடுத்ததோ
4.அதை மறந்து… காத்திடும் நிலைகளை மாற்றி… ஆறாவது அறிவின் தன்மையை இழக்கப்படும் பொழுது
5.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று வேதனைப்படச் செய்யும் உடலுக்குள் சென்று விடுகிறோம்.

பயந்து நாம் ஒடுங்கினாலும்… பின் நாம் எதை எண்ண வேண்டும்…? இதை மாற்றி அமைத்தல் வேண்டும். அச்சுறுத்தும் உணர்வில் இருந்து நாம் மீள வேண்டும். காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்விலிருந்து மீளுகின்றோம்.

எதை வைத்து…?

1.மகரிஷிகளின் அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் கண்டுணர்ந்த அருள் ஞானியின் உணர்வுகள் நான் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பரலோகத்தில் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் பதிவாகியுள்ளது. அதைக் கவர்ந்து நம் உயிர் வழி சொர்க்கவாசலாக அமைத்துச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.

பேரின்ப இரகசிய ஆனந்த நிலை

வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே…!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பத்தன்மை எவ்வளவு தான் கடுமை ஆனாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்…!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே…! நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்…! என்பதன் கருத்தை ஊன்றி… உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.தத்துவத்தில் “வினோதம்…!” என்பதெல்லாம்… – சூட்சம கதித் தொடர் என்பதில்
2.வெப்பம் என்று பாலைவனம் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில் சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்… சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ… அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு… சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து…” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து… “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது…”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடர் எண்ணங்கள் வருதல் வேண்டும்.
1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின…! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்ம சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயல்படும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெற வேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி…
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன…?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் “இனி… நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று சிந்தித்தல் வேண்டும்.
1.இந்த உடலே நமக்குச் சதமில்லாத பொழுது தேடி வைத்த செல்வங்கள் நமக்குச் சதமாகுமா..?
2.நிலம், பூமி, காடு, கரை எல்லாம் சதமாகுமா..?

ஏனென்றால்… அன்று வாழ்ந்த அரசர்கள் மற்ற நாட்டின் மீது போர் புரிந்து எத்தனையோ கொள்ளையடித்தார்கள். கொள்ளை அடித்த செல்வங்களை அவன் பித்ருக்கள் வைத்துள்ளார்களா..,? சந்ததிகள் வைத்துள்ளார்களா..,?

இல்லை…. அனைத்தும் மடிந்துவிட்டது. கட்டிய கட்டடங்கள் நகரங்கள் அழிந்து விட்டது.

“எவரோ ஆண்டார் என்றும்… இதனை எக்காலத்தில் “எவன் ஆண்டான்..” என்றும் பூமிக்குள் பல இயற்கையின் நிலைகள் சீற்றமாகி அடக்கமில்லாத நிலை வரும் பொழுது நீர் நிலைகள் பரவப்பட்டு “நாட்டையே அழித்துச் சென்றபின்…” அந்த மண் மேட்டிற்குள் அனைத்தும் அடங்கிவிடுகின்றது.

அவன் கலாச்சாரம்… அவன் செய்த நிலைகள் எல்லாம் மறைந்தது. அரசனும் மடிந்தான்… அவன் மீண்டும் மிருக நிலையையே அடைந்தான்.

அதைப் போன்ற நிலைகள் “மனிதனுக்குள் தீவிரவாதம்…” என்ற நிலைகளில் அதீதமாக வளர்ந்து இன்றும் மனிதன் சிந்தனை இழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளான்.

1.கடும் விஷத் தன்மைகளைப் பரவச் செய்துள்ளார்கள்.
2.அந்த விஷத் தன்மைகள் அனைத்தும் நம் பூமியின் மையைப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
3.அதனால் நம் பூமி கூடிய சீக்கிரம் நீர் நிலை அடையப் போகின்றது.
4.நீர் நிலை அடைந்தால் நாம் மீனின் நிலை தான் அடைவோம்.

சூரியனைக் கடந்து செல்லப்படும் பொழுது வியாழன் கோளைப் போன்று பனிப் பாறைகளாகி இந்தப் பூமி நகர்ந்து சென்றாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த விஷத்தன்மைகள் சூரியனுக்குள் சென்று “சூரியனே மடியப் போகின்றது…”

அதிலே கதிரியக்கப் பொறிகள் வரப்படும் பொழுது அந்தச் சூரியனுக்குள் கொதிகலனாகின்றது.

பூமிக்குள் இங்கே எரிமலை கக்குவது போல சூரியன் செயலிழக்கும் தன்மை வந்து கொண்டே இருக்கின்றது. இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் பிரபஞ்சத்தில் பரவப்படும் பொழுது மற்ற கோள்களுக்குள்ளும் செல்கின்றது.

இந்தச் சுழற்சி போய்விட்டால் இனி மனிதன் வாழும் இன்னொரு பூமிக்குள் சிக்கி அங்கே மனிதனான பின் தான் அதிலிருந்து மீண்டிட முடியும்.
1.ஆனால் அது வரையில் எந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க நேரும்.
2.இதிலிருந்து சிறிதளவேனும் காக்க வேண்டும்.

ஆகவே யாருடைய துன்பத்தின் நிலைகளைக் கேட்டறிந்தாலும் உடனே அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நோயால் வேதனைப்படுபவர்களைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று “அவர்களை எண்ணச் செய்யுங்கள்…” மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று நீங்கள் நலமடைவீர்கள் என்று “செவி வழி… இந்த உணர்வை ஓதுங்கள்…”

நினைவாற்றலை இதே போல அவரை எண்ணச் செய்யுங்கள்.

அதன் வழி வந்தால் அவர்களுக்குள் வரும் பகைமைகள் மறையும். அவர்கள் நினைவாற்றல் அந்த மகரிஷிகளின் பால் செல்லும். அதே சமயத்தில் அவரின் நோயின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகாது.

அந்த அருள் ஒளியின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது இது நமக்குள் தீமைகள் அடங்கிவிடுகின்றது.

அப்பொழுது அருள் ஒளியின் தன்மையே நமக்குள் வளர்கின்றது. அவர் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. அவர் உடலில் வந்த நோய் நமக்குள் வருவதில்லை.

இதை நாம் அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் உயிரை மதித்துப் பழக வேண்டும்
2.அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
3.அருள் வழியில் இருளை அகற்றப் பழகுங்கள்
4.உங்கள் நினைவின் ஆற்றலைத் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு செல்லுங்கள்.
5.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பழகுங்கள்.

இதுவே மனிதனின் கடைசி எல்லை.

பிரம்ம சூத்திரம்…!

“நாபிக் கமலம் என்ற ஜோதி…” தன்னுள் கிளைத்து… எழுந்த மூலப் பொருளாக விளங்கும் தன்மையின் சூட்சமம்… அறிவின் துணை என்னும் சாமரத்தால் வீசப்படும் காற்றும்… காற்று என்று பொருள்பட அறிவை உபயோகிக்கும் பொழுது… சிந்திக்கத் தலைப்படும் பொழுது தான் உயர் ஞானமாக எழும்.

அறிவின் நற்குணம் – சாந்தம் என்ற சாமரத்தால் வீசிப் பெறப்படும் காற்று… வீர குணத்தைக் கொண்டு எழும் ஜோதி…
1.மீண்டும் மீண்டும் இந்தக் குணங்களை எண்ணி வீசும் பொழுது வீசும் காற்றாகிய எண்ணச் செயலின் செயல்பாடு
2.வீர குணத்தின் விளை நிலமாக ஆக்கும் செயலுக்கு உறுதியாகி
3.படைப்பின் படைப்பாக தைரிய குணத்தால் சாந்த குணத்தால் எண்ணி எழும் செயலுக்கு வித்தாகப் “பிரம்ம ஞானம்” உதிக்கும்.

ஆகவே பிரம்ம சூத்திரமாகவே மாறும் செயல் நிலை என்பது “அடையும் வழி இது தான்…!” என எண்ணித் தெளிந்து… பின் கைக்கொள்ள வேண்டிய செயலாகச் சித்தன் காட்டிய வழியில் எல்லாம் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.மனித எண்ணத்திற்குள் எழும் மதமாகிய வீரியத்தை அடக்க அங்குசமும்
2.எண்ணமே உணர்வாகி அந்த உணர்வுகளின் வழி செல்லும் எண்ணமான செயல் காமத்தின் அடியாக எழும் மோகத்தை
3.அதே எண்ணச் செயல் உயர்வைக் கொண்டு வீழ்த்தும் நிலை கரும்பு வில்லும் கைக் கொண்டு
4.உயிர் ஆன்மப் பிணைப்பையே வலியுறுத்தப் பாசக்கயிறும்
5.தன் நிலை என்றென்றும் மணமாக எண்ணத்தில் நிலை பெறக் கையில் மலரைக் கொண்டு
6.சித்தன் காட்டிய தத்துவ செயலைக் கைக்கொள்ளும் ஞானி தன் சுவாச எண்ண ஓட்ட உயரிய நற்செயலால் அக்கினி ஜோதியாகி
7.நாபிக் கமலத் தாமரை மேல் அமரும் படைப்பின் படைப்பாக அமரலாம் என்பதே “பிரம்ம சூத்திரம்…!”

கர்ப்பமான தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும் கரு அதாவது அந்தச் சிசு ஆகாரம் எடுக்கும் வழி நாபிக் கொடி ஆகும். அது போல்
1.அமில நிலை ஆகார உயர்வின் சிறப்பாக நாம் எடுக்கும் சுவாசத் தியானத்தால்
2.கரு நிலையின் முதல் நிலையான நம் உயிர் தன்மையையே “ஜோதி ஸ்வரூபமாக்குதல்…” வேண்டும்.

படைப்பின் படைப்பாக இணைக்கும் உயர் தன்மை என்பது…
1.தாய் சக்தியும் அந்தத் தாய் சக்தியின் ஆன்மக் கலப்போ அல்லது
2.இல்லற வாழ்வில் சிவ சக்தி நிலையாக எண்ணத்தால் ஒன்றுபட்டு ஆத்ம ஐக்கிய நிலை பெறும் வழியோ
3.படைப்பின் படைப்பாவது மட்டுமல்லாது அது புரியும் தொழில் தன்மையாகக் “காத்தல்” என்பது
4.தான் முயன்று பெற்ற “உயரிய ஆன்ம சக்தியே” சூட்சமப் பொருள் ஆகும்

அழித்தல் என்பது
1.உயிர்ச் சக்தியின் செயலுக்கு உயர் நிலை எற்படுத்தாமல் மாறுபாடு ஏற்படுத்தப்படும் பொழுது
2.அந்தச் சிவமாகிய சக்தி அழிக்கின்றான்…! என்று பொருள் கண்டு தெளிந்து…
3.ஏனென்றால் அழிக்கப்பட வேண்டியது துர்க்குணங்களே..! என்று அதைச் சம்ஹரிக்கும் நிலையில்
4.உயிர்த் தன்மை ஆதி சக்திக்குள் கலக்கும் பொருளே “மறைத்தல்” என்றும்
5.படைப்பின் படைப்பான உருக்கோலமே… அன்பு நிலைக் குணமாக “அருளல்…” என்பதுவும்
6.இந்தப் பேருண்மையின் சாராம்சங்களை உணர்ந்து அந்த நிலையைப் பெறுதல் வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் நம் குடும்பத்தில் பையன் சீராக இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால் அவன் மற்றவருடன் பழகும் பொழுது அவனை அறியாது தீமைகள் இவனைச் சாடி அவனின் நற்குணத்தை அழித்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

அதற்குத்தான் ஆலயத்திற்குள் சென்றபின் விநாயகரை எப்படி வணங்க வேண்டும்…? என்று காட்டியுள்ளார்கள்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற இன்று இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக விளைந்து ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும். பின்…
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப்பொருள் காணும் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்
4.எங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
5.எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லோரும் இனிமை பெற வேண்டும்
6.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும்
8.எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அகல வேண்டும்
9.சாப வினைகள் நீங்க வேண்டும் பாவ வினைகள் நீங்க வேண்டும்… பூர்வ ஜென்ம வினைகள் நீங்க வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து தீமைகள் அகல வேண்டும்
11.எங்கள் குழந்தை பொருள் காணும் சக்தி பெற வேண்டும்.
12.எங்கள் குழந்தை பொறுப்புணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
13.எங்கள் பார்வை குழந்தையை உயர்ந்தவனாக்க வேண்டும்.
14.எங்கள் சொல் அவனை உயர்ந்தவனாக்க வேண்டும் என்று இதைத் தனக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பின் இதே போல அந்தக் குழந்தையையும் விநாயகரை வணங்கச் செய்தல் வேண்டும். விநாயகர் தத்துவத்தில் காட்டிய முறைப்படி அவனையும் எண்ணத்தால் எண்ணித் தியானிக்கும்படி செய்தல் வேண்டும்.
1.என் அன்னை தந்தையரின் அருளாசி பெற வேண்டும்
2.என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்று அவனும் இங்கே எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பொருளை மையமாக வைத்துத்தான்…
1.குடும்பத்தில் தன்னை அறியாது சிக்கல் ஏற்படும் பொழுது
2.அதை இங்கே வந்து நமக்குள் நிவர்த்தி செய்யும் நிலைக்காகத்தான் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆனால் நீங்கள் எண்ணுகின்ற மாதிரி அந்தக் கடவுள் செய்வார் என்றால் அது இல்லை.

சாஸ்திர விதிப்படி நமது உயிர் கடவுள். “உள் நின்று..” இயக்குகின்றது. நாம் எண்ணிய உணர்வின் சத்தை ஓ… என்று ஜீவனாக்கி ம்… என்று உடலாகி நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது என்ற பேருண்மையை அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக அன்று எடுத்துரைத்தார் அகஸ்தியர்.

எண்ணியதை இயக்கிக் காட்டுவது உயிர். எண்ணிய உணர்வின் தன்மையை தன் உணர்வால் அது கடவுளாக இருந்து இந்த உணர்வின் சத்தை அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் தன்மை கொண்டு அது உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இதைத்தான் கடவுள் என்பது.

“உள் நின்று…” நாம் கேட்பது பார்ப்பது அனைத்தையும் அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த வினைக்கு நாயகனான “நம் உயிரையும் உடலையும்…” – விநாயகனை வணங்காதபடி ஆலயத்திற்குள் நீங்கள் சென்றால் பலன் ஏதும் இல்லை என்று அதனால் தான் சொல்வார்கள்.

பயிர் இனங்கள் சீராக விளையாதபடி மக்கள் மடியும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டனர்

விஞ்ஞான அறிவால் வந்த பேரழிவால் இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்படும் சக்திகளை இழக்கும் தருணங்கள் வந்துவிட்டது.

அதே சமயத்தில் தாவர இனங்கள் அதனுடைய கருவுறும் தன்மையும் இழந்து விடுகின்றது இழந்துவிடும் செயல்களை விஞ்ஞான அறிவால் உலகெங்கிலும் பரப்புகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பகுதியான இடங்களில்…
1.ஒரு தடவை பயிர் விளைந்ததோடு சரி… ஒரு வித்து வந்ததோடு சரி
2.அதில் விளைந்து வரும் வித்தினை மீண்டும் ஊன்றினால் அது மீண்டும் முளைக்காது… அது மலடாகிவிடும்.

நாம் குழந்தைகள் (குழந்தைப் பாக்கியம்) இல்லை என்று சொல்கின்றோம் அல்லவா. அந்த இனம் அழிந்து விடுவது போன்று தாவர இனங்களில் மலட்டுத்தன்மையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

சாதாரண தாவர இனங்களில் விளையும் அந்த சத்தினைக் கவர்ந்து கொண்டு விஷத்தன்மை கொண்ட தாவர இனங்களையும் உருவாக்குகின்றனர்.

முந்தைய ஆரம்பக் காலங்களில் மனிதனுக்கு மனிதன் ஒருவருக்கு ஒருவர் போரிட்டுத் தன்னை வளர்த்துக் கொள்ளச் செய்தனர்.

பின் மந்திர தந்திரங்களை மனித உடலில் விளைய வைத்து மந்திரத்தைப் பதிவு செய்து அந்த ஆன்மா வெளிவந்த பின் அதைக் கைவல்யப்படுத்தி ஆவிகளின் தொடர் கொண்டு ஒருவரை முடக்குவது என்ற நிலைகளில் போர்கள் நடந்தது.

ஆவிகளின் தொடர் கொண்டு செயல்படும் பொழுது பல உண்மைகளும் அறிய முடிகின்றது. மண்ணுக்குள்ளும் மற்ற நிலைகளிலும் ஊடுருவி அதில் உள்ள உண்மைகளை அறிந்து பூமிக்குள் இருக்கும் தாவர இனங்களையும் நீர் நிலைகளையும் உலோகங்களையும் கண்டுணரும் சக்தி கிடைத்தது.

பின் ஆவியின் நிலையில் கொண்டு மனிதனுக்கு மனிதன் எவ்வாறு இருக்கின்றார்கள்..? என்ற நிலையினைக் கொண்டு வருகின்றனர்.

அதே ஆவியின் தன்மை கொண்டு உலகத்தை அடக்கிடும் நிலையாக ஒவ்வொரு அரசும் செயல்பட்டது.
1.அரசை ஆட்சி செய்ய ஆண்டவனை வணங்குவதும்
2.ஆண்டவனுக்கு விரோதிகள் என்று மற்றவர்களைக் கொல்வதும் என்று ஆவியின் தொடர் கொண்டே செயல்பட்டனர்.

இஸ்ரேல் நாட்டில் இருந்து இத்தகைய நிலைகள் பரவி உலகெங்கிலும் பரவியது. இந்தியாவிலும் இது போன்ற நிலைகள் செயல்பட்டது

இதற்குப் பின் தான் உலோகங்களைக் கண்டறிந்து உலோகத்தில் ஆயுதங்களைத் தயார் செய்து அதை கொண்டு செயல்படுத்தினார்கள்.

அந்த ஆயுதங்களை வைத்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொல்வதும் என்ற நிலையில் செயல்படுத்தினர். அதற்குப்பின் வெடிபொருளைக் கண்டுபிடித்து வெடிக்கச் செய்து நாட்டையும் ஊரையும் தகர்க்கும் நிலை வந்தது.

இப்பொழுது…
1.அதைக் காட்டிலும் வீரியத்தன்மையாக அணுக்கதிர்கள் கொண்டு (அணு ஆயுதங்கள்)
2.கதிரியக்கத்தின் தன்மை கொண்டு நாட்டையே சீரழிக்கும் நிலையாக வந்தது.

லேசர் இயக்கம் என்று… மின்னலின் ஆற்றல் எவ்வாறு ஊடுருவி மற்றதைப் பிளக்கின்றதோ அதைப் போன்று
1.அணுக்கதிரியக்கங்கள் துணை கொண்டு லேசரை வைத்து பூமிக்குள் ஊடுருவச் செய்வதும்
2.மின்னல் தாக்கிய பின் கட்டடங்கள் எப்படி தகர்க்கின்றதோ அதைப் போல் பூமியைப் பிளந்து பூமிக்குள் இருப்பதைக் கண்டறிகின்றனர்.

வானில் வெகு தொலைவிலிருந்து கொண்டே தரையில் பூமிக்குள் என்ன எல்லாம் இருக்கிறது…? என்று கண்டறிகின்றனர் விஞ்ஞான அறிவு கொண்டு.

ஆனால் இவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் ஒரு நாட்டில் அங்கே விளையும் தானியங்களையும் தாவர இனங்களையும் விளையாதபடி செய்து விட்டால்
1.அந்த நாடு தனக்கு அடிமை ஆகிவிடும்.
2.மிருகங்களைப் போன்று நாம் ஆட்சி புரியலாம் என்ற நிலையில்
3.விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாடுகள் முன்னேறிச் சென்று விட்டது.

நாட்டுக்கு நாடு தன்னாட்டைக் காக்க மற்ற நாட்டை அழித்திடும் குரோத உணர்வுகள் அதிகரித்துத் தன் இனம் என்றோ… மனிதன் என்றோ அறியாதபடி… கொன்று குவிக்கும் உணர்வுகளே அதிகரித்து… மனிதனுக்குள் வெறித் தன்மையான உணர்வுகள் ஊட்டப்பட்டு…
1.அவனில் விளைந்த அத்தகைய உணர்வுகள் பூமியில் அதிகமாகப் பரவி விட்டது.
2.வெறித்தன்மையாகவும் சிந்தனை இழந்து செயல்படும் தன்மைகளும் தான் உருவாகிவிட்டது
3.மனிதனுக்கு உணவு இல்லாத செய்யும் சில நிலைகளையும் உருவாக்கி விட்டனர்.

ஆப்பிரிக்காவில் காடு வளங்கள் அதிகமாக இருப்பினும் சில பயிரினங்களில் அதனுடைய இனம் பெருகாதபடி செய்துவிட்டனர். அதற்குப்பின் அவர்கள் உணவுக்காக அலையும் நிலை வந்துவிட்டது.

மண்ணுக்குக் கீழ் புல் பூண்டுகளில் இருக்கும் கிழங்கை எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் நிலைகள் அதிகரித்து விட்டது அதுவும் கிடைக்காத பொழுது மடிந்து கொண்டும் உள்ளனர்.

பயிர் இனங்கள் சீராக விளையாதபடி மக்கள் மடிந்து கொண்டுள்ளனர் மழை நீர் பெய்தாலும் விஷத்தன்மைகளை அங்கே பாய்ச்சி விடுகின்றனர்.

மேகங்களில் விஷத்தன்மைகளைத் தூவப்படும் போது அந்த நாட்டில் மழையே இல்லாது போய் விடுகின்றது. இந்த விஷத் தன்மைகள் மேகமுடன் கலந்து உலகெங்கிலும் பரவி விட்டது. மனித இனத்தையே சீர்குலைக்கும் தன்மைகள் வந்து விட்டது.

1.நாகரீகம் என்ற பெயரில் அநாகரீக நிலைகள் தான் உலகெங்கிலும் வளர்ச்சி ஆகிக் கொண்டு வருகின்றது
2.மனிதனுக்கு மனிதன் கொன்று குவித்து ரசிக்கும் தன்மைதான் வளர்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா…?

ஐந்து எழுத்து மந்திரத்தின் உட்பொருள் என்ன…?

பஞ்ச பூத அமிலத் தத்துவம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் “ஜீவன் என்ற உயிராத்ம சக்தி” மூல சக்தியாக வளர்ச்சி பெற்றுப் “பேரருள்” சக்தியில் கலந்திட வேண்டும்.

பேரருள் சக்தியாக ஆகிட சிவ சக்தி கலப்பாகச் சக்திகளை ஈர்த்துச் செயல் கொண்டிருக்கும் பூமியின் தொடர்பில்
1.ஜீவன் கொண்டே நாம் சகல சக்திகளையும் ஈர்த்து
2.மெய் ஞான சக்தியின் வளர்ப்பாக வளர்ச்சிப்படுத்திக் கொள்ள முடியும்.

சூட்சமமாக ஈர்ப்பின் தொடரில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பூமியைப் போலவே
1.நாமும் நம் எண்ண வலுக் கொண்ட சுவாச ஈர்ப்பினால்
2.நம் சரீரத்திலேயே அனைத்துச் சக்திகளும் பெற்று
3.மனதின் திறன் என்ற “வைப்பாற்றல்” பெற்றிடலாம்.
(வைப்பாற்றல் என்றால் நாம் எண்ணிய நேரத்தில் எண்ணியபடி செயல்படுத்தும் தன்மை)

உயிரான்ம சக்தியைச் சூழ்ந்திருக்கும் பஞ்ச பூத சரீர சக்தி… ஓர் முகமாகச் சேமித்துக் கொண்டிடும் சக்தியே “மனோ சக்தி…!”

சரீர பிம்பத்தில் ஐந்து இடங்களில் பரவிக் கிடக்கும் அந்தச் சக்திகளை ஆற்றல்மிகு ஓர்மித்த வழி வகைகளின் செயலே நாம் காட்டும் இந்தத் தியானத்தின் மூலமாகச் சித்திக்கும்.

பஞ்ச பூதங்களை – “நமசிவாய” (சிவமயம்) தத்துவமாகக் காட்டப்பட்டதின் செயலையே மாற்று நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள். அந்தச் செயலை நீக்கிவிட்டு…
1.பஞ்ச பூத ஆற்றல் சக்தியை வீரத்தில் விளைந்த சாந்தமாக உயிர் சக்திக்குள் கலந்து
2.”ஈஸ்வர ஜோதி” என்ற சுயப்பிரகாச ஜோதியாக நிலையைப் பெற்றிடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இதைப் படிக்கும் அனைவரும் கடந்த காலத்தை நினைவில் வைக்காமல் “நிகழ் காலத்தில்… நாம் எவ்வாறு இருக்க வேண்டும்..? என்று எண்ணுங்கள்.

எதிர்காலத்தின் நிலையை உருவாக்குங்கள்.

நிகழ் காலமான இன்று…
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று
2.“நிகழ்ச்சி காலமாக” இதை நிகழ் காலமாக ஒவ்வொருவரும் வைத்துக் கொள்ளுங்கள்.
3.அப்பொழுது… எதிர் காலத்தில் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய “இன்றைய நிகழ் காலமே..” வழியாக அமைகின்றது.

எதிர்காலத்தை இவ்வாறு நிர்ணயிப்போம்.

வேதனை என்ற உணர்வை இந்த நிகழ் காலத்தில் உருவாக்கிவிட்டால் வேதனையின் தன்மை கொண்டு எதிர் காலத்தில் அது தான் செயல்படுத்துகின்றது. வேதனைப்படும் நிலைக்குத்தான் அழைத்துச் செல்லும். ஆகவே,
1.கடந்த காலத்தை மறந்து
2.நாம் நிகழ் காலத்தைச் சீராக வைத்து
3.எதிர்காலத்தின் உணர்வை உருவாக்குவோம்.
4.மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம்.
5.அருள் ஞானத்துடன் திகழ்வோம்… அருள் உணர்வுடன் வாழ்வோம்.
6.இந்த உலகையே… “ஒளி மயமாக்குவோம்”.

இந்த உணர்வின் தன்மை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால் நீங்கள் விடும் மூச்சலைகள் இங்கே பரவப் பரவ ஒவ்வொரு மனிதனும் தெளிவாகும் நிலை வரும்.

அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபடுவர். விஞ்ஞான வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுபடுவர். உணர்வின் தன்மை பிறவியில்லா நிலை அடைவர்.

இந்த உறுதி கொண்டு இந்த வாழ்க்கையின் பயணத்தை நாம் மேற்கொள்வோம். குரு வழியில் செல்வோம். அருள் வழி செல்வோம். அருள் வழி வாழ்க்கை வாழ்வோம்.

ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு உடலிலும் “ஒளி பெறும் உணர்வை… ஈசனாக…” உருவாக்குங்கள்.

ஒவ்வொருவருக்கும் இந்தத் துணிவு வேண்டும்.

மற்றவர்கள் இழித்துப் பேசும் உணர்வுகளைக் கண்டு பணிந்திட வேண்டாம்.
1.அவர்கள் அறியாது இருள்களிலிருந்து மீண்டிட வேண்டும் என்ற உணர்வினை வலுப்படுத்துங்கள்.
2.அவர்களை மெய் வழியில் அழைத்துச் செல்லுங்கள்.
3.அவர்கள் மெய் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாறாக அவர்களின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துவிட வேண்டாம் (இது முக்கியமானது).

இந்த மனித உடலின் வாழ்க்கையின் நிலைகளில் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே நிரந்தரமாக நாம் வாழ்ந்திட வேண்டும்.

அகஸ்தியர் நுகர்ந்த “வியாழன் கோள் சக்தியின் முக்கியத்துவம்…”

ஆற்றின் ஆழம் தெரியாமல் கடந்து சென்றுவிட எண்ணுபவன் செயல் போல் இல்லாமல் இலட்சிய நோக்கில் “விழிப்பாக இரு…!”

பால்வெளி மண்டலத்தின் சக்திகளை ஈர்த்து வலுக் கொண்டு பால்வெளிச் சூட்சமத்தின் பூதியை அறிந்து கொள்ளும் முன்
1.மாமகரிஷிகளின் அருளாசி பெறுவது…
2.சக்தியின் வலுவை வலுவாக்கிக் கொள்வது…
3.புவியின் காந்த நீர் சக்தியை ஈர்த்துச் செயல் கொள்வது என்ற
4.அந்தப் பாடத்தைப் படி… படி… படி… என்று சொன்னதெல்லாம்
5.இந்தப் படி தான்… இந்த வழி தான்…! என்று அறிந்து கொள்ளுதலும்…
6.நீர் சக்தியை வென்று காட்டினேன்… அதனுடன் ஒன்றியும் காட்டினேன்..! என்ற அகத்தியரின் கூற்று தான்.

இதனுடைய சூட்சமம் புரிகிறதா…?

நாம் வாழும் இந்தப் பூமித் தாயின் தொடர்பில் சக்தி பெற்று வலுக் கொண்டு மனிதனாக வளர்ந்த செயலுக்கு அன்று தாயின் பால் அருந்தினாய்.

இன்று சரீர வலுவின் வீரியத்தில் மண்டலங்களின் சுழற்சியினை (விண்ணுலகம்) அறியும் செயலுக்கு… எண்ண வலுவின் நேர் கோட்டில் அறிந்து கொள்ளும் செயலுக்கு
1.பூமித்தாய் புவி காந்த நீர் பாலை அமுதாக்கி அளித்திடக் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
2.வளர்த்து வலுக் கொண்டு சுயப்பிரகாச தனிச் சக்திச் சுழல் மண்டலமாக ஆக்கிடும் உங்கள் செயலுக்கு நானும் ஊட்டிவிட்டேன்…!

அகத்தியர் கூறிய அந்தச் சூட்சமப் பொருளைக் கூறுகின்றேன்.

1.நம் சூரியக் குடும்பத்தில் சுழன்று ஓடும் கோளங்களில் “குரு” என்று சிறப்பித்த வியாழன் கோள்
2.ஆதிசக்தியின் நீர் சக்தி அமில முலாமைத் தன் சக்திக்கு வலுக் கொண்ட செயலின் இரகசியம்
3.தன் ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் நெருங்கி வரும் அத்தனை வளரும் சுழல் சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு
4.அந்தச் சக்தியைத் தன்னுள் ஒன்றச் செய்து… தன் வலுவை வலுவாக்கி… வீரியம் கொண்டே சுழன்று ஓடிடும் செயலில்…
5.அந்த வியாழன் கோள் அலையை ஈர்த்திடும் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அகத்திய மாமகரிஷி அந்தக் கோளின் அலையைத் தன் வீரிய அமில ஈர்ப்பைக் கொண்டு தன் அமில வீரிய முலாமுடன் ஒன்றச் செய்து தன் சக்தியையே வலுக் கொண்டதாக்கிக் கொண்டார்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் என்ற தனித்துவமான மண்டலங்களாகச் செயல் கொண்ட செயலுக்கு “ஜெபத்தின் வேகம்…” என்று சொல்லிய சொல் நாதத்தின் குணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலை வீசாக்கடல் என்ற பால்வெளி சூட்சமத்தில் இப்படித் தனக்கென ஓர் சுய அமைப்பு மண்டலத்தை உருக்கொள்ளும் செயலின் கதிக்கு ஒவ்வொருவரும் வளர்தல் வேண்டும்.

தன் உயிராத்ம சக்தியின் வலுவிற்கு வலுக் கொண்டிடும் ஜெப நிலையில்
1.ஓர்முகப்படுத்தப்பட்ட எண்ண அம்பு…
2.பிரம்மாண்டமாகப் படைப்பின் படைப்பாக எய்தி
3.பூதியில் உருவாக்கப்படும் தன் ஒளி காந்த வட்டத்திற்குள் “ஒளி தீபம்…” ஏற்றப்பட வேண்டும்.

தாயை மகிழச் செய்தால் பேரானந்த நிலையை நாம் பெற முடியும்

நாம் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் வேதனையின் செயலாகவே உயிர் என்னைச் செயலாக்குகின்றது. வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது என் உயிரான ஈசன் உடலான சிவலோகத்தை உருவாக்குகின்றது.

சிவலோகத்தை உருவாக்கும் முன் இந்திரலோகமாக மாற்றுகின்றது அந்த உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

ஆகவே நம் வாழ்க்கையில் எத்தகைய உணர்வை நாம் நுகர வேண்டும்…?
1.அன்னையின் அருள் பெற வேண்டும்
2.நாம் பார்ப்பவை நலம் பெற வேண்டும் நாம் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்
3.என் செயல் அனைத்தும் அனைவரும் மகிழும் செயல் பெற வேண்டும்
4.அந்த அருள் வழியில் இருளை அகற்றிடும் அருள் ஒளி பெற வேண்டும்
5.அனைவரும் அருள் வாழ்க்கை பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்

இவை அனைத்தும் எவரால் உணர்ந்தோம்…?

தாய் தந்தை உயிரே கடவுள் ஆனது…!
1.நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்
2.நம்மைத் தெய்வமாகக் காத்ததும் அன்னை தான்
3.வாழ்க்கையில் நாம் நல்லவனாக வேண்டுமென்று நமக்கு உபதேசித்ததும் அன்னை தான்.

ஆகவே அன்னைக்கு நாம் செய்ய வேண்டிய சேவை என்ன…?

உதாரணமாக தீமை என்ற உணர்வை நாம் எண்ணினால் தீமை செய்யும் ஆன்மாவாக நம் ஆன்மா மாறிவிடுகின்றது.

அன்னையால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் தீமையின் செயலைச் செயல்படுத்தும் போது அதைத் தாய் பார்க்கப்படும் பொழுது வேதனைப்படுகின்றது.

ஆகவே தீமை உருவாகாதபடி…
1.அன்னையின் அருளால் நல்ல அறிவின் ஒளியை நமக்குள் பெற்று
2.அன்னையால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் “தீங்கு விளையாது”
3.அருள் ஒளியின் உணர்வை நமக்குள் வளர்த்து… அன்னையை மகிழச் செய்வதே அன்னைக்குச் செய்யும் சேவை.

அன்னையின் அருள் பெற வேண்டும் என்றால் தாயை மகிழச் செய்யும் தன்மை பெற வேண்டும்.

தாயை மகிழும் செயலாகச் செய்தால்
1.அன்னையின் ஆனந்தம் நமக்குள் பேரானந்த நிலையை ஊட்டும் நிலை பெறுகின்றது
2.ஆகவே வாழ்வில் உணரும் உணர்வை நல் ஒளியின் உணர்வாக நாம் பெற வேண்டும்.

அன்னை தந்தையின் அருளால் அருள் ஒளி பெற்று இந்த வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெற்றுப் பேரொளி என ஆவோம்.

மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று என்னை அறியாது வரும் இருளை நீக்கி
1.என்றும் பேரொளி பெறும் அருள் உணர்வை எனக்குள் பெறுவேன்
2.அருள் ஞானம் பெறுவேன் அருள் வாழ்க்கை வாழ்வேன்
3.குரு அருளால் அந்த அருள் ஞானத்தைப் பெறுவேன்… அகண்ட அண்டத்தையும் அறிவேன்
4.அருள் ஞானத்தை என்னுள் வளர்ப்பேன்.
5.பேரருள் பெறுவேன்… இருளை அகற்றிடும் நஞ்சை வென்றிடும் அருள் ஒளியைச் சேர்ப்பேன்…
6.அருள் வாழ்க்கை வாழ்வேன்… என்றும் ஏகாந்தம் என்ற நிலையைப் பெறுவேன்
7.அன்னையின் அருளால் பேரின்ப ஒளி என்ற உணர்வினை எனக்குள் வளர்ப்பேன்
8.அன்னை அருளால் அருள் ஒளி என்ற உணர்வினை எனக்குள் பெறுவேன்… அருளானந்தம் பெறுவேன்.

மனிதனுக்கு நோய் வருவது… சந்தர்ப்பத்தால் தான்…!

உடலுக்குள் ஒரு வேதனையாகி விட்டால் எம்மா… எப்பா… என்று சொல்வோம். ஆனால் நல்ல நிலைகள் இருக்கும் பொழுது “சம்பாரிக்க வேண்டும்…” என்று எண்ணுவோம். அது தடைப்பட்டால் வேதனை என்ற உணர்வுகள் வந்து விடுகின்றது.

வேதனை என்ற உணர்வு உடலில் விளையப்படும் பொழுது வேதனையை உருவாக்கும் அணுக்களாக உருவாகி விடுகின்றது. அது உருவான பின் அம்மா… அப்பா… என்று வேதனைப்படுகின்றோம்.

சம்பாரிக்க வேண்டும் என்ற நிலையில் தொழில் நிமித்தம் சென்றாலும் ஆசையின் நிலைகள் கொண்டு தன் பையன் சீராக அவன் செயல்பட வேண்டும் என்று எண்ணுவோம். அல்லது குழந்தை இல்லை என்றாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது…
1.தொழில் செய்யும் இடத்திலே தன்னிடம் வேலை செய்யும் ஒருவன் ஏதாவது அவன் செய்தான் என்றால்
2.வெறுப்பாகி… ஏன்டா…… இப்படிச் செய்கின்றாய்…? என்ற வேகமாகப் பேசுவோம்.
3.வெறுப்பைத் தான் அவனிடம் உருவாக்க முடியும்.

முதலாளி வேதனைப்படுகின்றார் நாம் உதவி செய்ய வேண்டும் என்று அவனும் எண்ணுகின்றான்.

ஆனால் முதலாளி சோர்வடைந்து… செயல்கள் குறைந்த நிலையில் நன்மை செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கின்றார். அதே சமயத்தில் வேதனையுடன் இருக்கப்படும் பொழுது… தான் எண்ணியதை வேலை செய்பவன் செயலாக்கவில்லை என்று வெறுப்பான நிலையில் சொல்லப்படும் பொழுது தன்னை அறியாமல் “அவனுக்குள்ளும்…” வெறுப்பு அதிகரிக்கிறது.

பாலுக்குள் பாதாமைப் போட்டாலும்… இனிப்பைப் போட்டாலும்… அதற்குப் பின் விஷத்தைப் போட்டுவிட்டால் பாதாமிற்குச் சக்தி இல்லாமல் போய் விடுகிறது. குடிப்போரை மயங்க வைக்கத்தான் செய்யும்.

அதைப் போன்று நல்ல குணங்கள் இங்கே இருப்பினும் வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது நல்லது மடிந்து விடுகின்றது.
1.மீண்டும் தன் நினைவாற்றல் கொண்டு கடுமையாகச் சொல்லப்படும் பொழுது அவன் வேதனை உணர்வுகளை நுகரத் தொடங்குகின்றான்.
2.முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பகைமைகளை ஊட்டி விடுகின்றது.

இதிலிருந்து நாம் எப்பொழுது மீள்வது…? செயின் தொடர் போன்று ஒன்றிலிருந்து ஒன்று தொடர்ந்து வருகின்றது.
1.வேதனை வேதனை என்று எடுத்தால் “கேன்சர்”
2.வேதனை வெறுப்பு என்று வரப்படும் பொழுது நல்ல குணங்களைக் கொல்லும் “டி.பி.”
3.வேதனை வெறுப்பு என்ற நிலைகள் நல்ல சுவாசத்திற்குள் இணைந்தால் “ஆஸ்த்மா”
4.அந்த அணுக்களின் தன்மை பெருக்கி அதனின் மலத்தைக் கூட்டும் போது நாம் சுவாசிக்கும் நிலையில் அடைப்பு… “மூச்சுத் திணறல்”
5.வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் கலந்து “உப்புச் சத்து” அதிகரிக்கின்றது.
6.அந்த உப்புச் சத்துகள் இரத்தத்தில் உறையப்படும் பொழுது இரத்தத்தின் வேகத் துடிப்பு கூடி “இரத்தக் கொதிப்பாகின்றது”
7.இரத்தங்கள் சீராகச் செல்லாதபடி அழுத்தத்தின் தன்மை கூடி… நகர்ந்து செல்லும் போது மற்ற உறுப்புகள் வேகமாகத் தனக்குள் ஈர்க்கும் சக்தி வரப்படும் போது அது முடியாத தன்மை வரும் பொழுது திணறல் “மயக்கம்…”
8.இப்படி மகிழ்ச்சி என்ற உணர்வின் தன்மை இழக்கப்படும் பொழுது நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) – எதிர்மறையான விளைவுகள் வந்து விடுகிறது.

பாலில் வெண்ணெய் என்ற சத்து இருந்தாலும் பால் பிருத்து விட்டால் அதனின் செயல் இழக்கப்படுகின்றது… வெண்ணெயை எடுக்க முடியுமா…? முடியாது.

இதைப் போன்று தான் நமக்குள் இருக்கும் இரத்தங்களில் நல்ல குணத்தின் தன்மையைப் பிரித்து விடுகின்றது… நல்ல குணங்கள் மடிந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் உருவாகாதபடி நம் உடலை நாம் எப்படிப் பண்படுத்த வேண்டும்…?
1.நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்தல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டவன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். நல்லதாக நாம் தான் மாற்ற வேண்டும். எப்படி…?

இயற்கை… சந்தர்ப்பம்…
1.நாம் நுகர்வதை எல்லாம் நமது உயிர் பிரம்மமாக உருவாக்குகின்றது.
2.தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அதனின் உணர்வை நமக்குள் உயிர் உருவாக்கிவிடும்.
3.சிந்திக்கும் திறனும் நம்மை அறியாது வரும் நோய்களை அகற்றும் அருள் சக்தியும் நாம் பெறுகின்றோம்.
4.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த நஞ்சினை அடக்கும் நிலையாக அவன் எவ்வாறு பெற்றானோ…
5.அருள் ஒளி என்ற உணர்வை இணைத்து ஒளி பெறும் அணுக்களாக விளைந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் எப்படிப் பெற்றானோ…
6.அதே போன்று நமது வாழ்க்கையில் அதைப் பெறுதல் வேண்டும்.

அகஸ்தியன் பெற்ற “கன நீரின் சக்தி”

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழியமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி…!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி… இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்… பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
5.அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது…!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர்ச் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ… நீர் மேல் அமரும் செயலில்… ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை… அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு… அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்…
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்…
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி… அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து…”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகின்றது என்று அறிந்து கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.

மேலும், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் எப்பகுதியில் எந்தெந்த இடங்களில் அவன் உணர்வுகளும் மூச்சலைகளும் பதிவாகியுள்ளதோ அங்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்றார்.
1.அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் பேருண்மைகளை அறியச் செய்தார்.
2.அவர் காட்டிய வழியில் உண்மைகளை அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது.

அறிந்து கொண்ட பின் எனக்குள் மட்டும் வளர்ந்தால் போதுமா..,? “நீங்களும்… அதைப் பெற வேண்டும் அல்லவா”.

ஆகவே, “எல்லோரையும்… அதைப் பெறச் செய்…” என்றார் குருநாதர்.

ஆனால். நீ சுயநலம் கொண்டு நான் வளர்த்துக் கொண்டேன்… “நான் பெரிய மகான்” நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்… என்று உனது பெருமையைக் காட்டினால் உனக்குச் சிறுமையே வரும்.

ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்தும்படி..,” நீ இதைப் பெறச் செய்தால் நீ உயர்கின்றாய்.., அவர்களை உயர்த்துகின்றாய். அந்த உயர்ந்த நிலைகளை நீ நுகர்கின்றாய்.

அவர்களும் உயர்கின்றனர்… அப்பொழுது நீயும் உயர்கின்றாய்… ஆக இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்.

நீ இத்தனையும் கற்றுணர்ந்தபின் எல்லாம் செய்த பின்… “நான் தான் இதையெல்லாம் செய்தேன்…” என்ற “அகம்” எப்பொழுது உனக்குத் தோன்றுகின்றதோ அப்பொழுது உண்மையை அறியும் தன்மையினை இழக்கின்றாய்.

1.“ஒருவர் உயர வேண்டும்” என்ற உணர்வினை எப்பொழுது நீ ஊட்டுகின்றாயோ
2.“அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்” என்று ஆசைப்படுகின்றாயோ
3.அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ… அந்த அருள் ஞானத்தை உருவாக்குகின்றாயோ…
4.உருவான அந்த உணர்வு “உன்னை… வலுவாக்கும்”.

அதே சமயத்தில் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களையும் காக்கும் நிலை வருகின்றது.

ஆகவே நீ இதை எவ்வாறு செய்யப் போகின்றாய்..,? எவ்வாறு வெளிப்படுத்தப் போகின்றாய்…? கடும் தீமைகள் எதிர்த்துத் தாக்கும் உணர்வின் உலகில் நீ வாழ்கின்றாய். இதிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…?

இப்படி அடிக்கடி எனக்குள் வினாக்களை எழுப்பி அந்த உண்மைகளை உணர்த்தி அகஸ்தியரின் அருளாற்றல்களைப் பெறும்படி செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

கடைசி நிலையில் இன்று நாம் இருக்கின்றோம்

நம்மை அறியாது தவறுகள் ஏற்பட்டாலும் அதை மாற்றி அமைப்பதற்குத் தான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானப் பயிற்சியே. அதை வைத்து நல்லதாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்ந்து விட்டால்
2.எந்தத் தீமையும் உங்களுக்குள் வராதபடி அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.

கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாகக் கழுவுகின்றோமா இல்லையா…? துணியில் அழுக்குப்பட்டால் துவைக்கின்றோமா இல்லையா…? வீட்டில் தூசி வந்தாலும் அதைத் தூய்மைப்படுத்துகின்றோமா இல்லையா…?

நேற்றுத் தான் கூட்டினேன். இன்று மறுபடியும் தூசி வந்து விட்டது என்று சொல்லி மறுபடியும் கூட்டாமல் விட்டுவிடுவீர்களா…?

அது போல் தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் (ஆன்மாவில்) அழுக்குகளாகச் சேர்ந்து விடுகிறது. அதைத் தூய்மைப்படுத்தத் தான் ஒவ்வொரு நிமிடமும் “சக்தி வாய்ந்த ஆயுதத்தை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி எடுத்துச் சுத்தப்படுத்திப் பாருங்கள்.
1.உயிருடன் ஒன்றிய அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொள்ளுங்கள்
2.பிறவி இல்லாத நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
3. உங்களை எல்லாம் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து விட்டோம்
4.அனுதினமும் தியானத்தின் மூலம் அந்தச் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

முந்தி எல்லாம் வேகமாகச் சொல்லிக் கொண்டே போவேன். அர்த்தமாகவில்லை என்று விட்டு விடுவார்கள். இப்பொழுது பொறுமையாக நிறுத்தி நிதானமாகப் பதிவு செய்கின்றேன்.

ஏனென்றால் சில விஷயங்களை நேரடியாகச் (PUBLIC) சொன்னால் தவறான வழிகளுக்கு அதைக் கொண்டு சென்று விடுகிறார்கள்
1.ஆனால் உங்களுக்கு அந்த உண்மைகள் கிடைக்கவும் செய்ய வேண்டும்
2.தவறான எண்ணங்களில் வருவோருக்கு அதைக் கிடைக்காதபடியும் செய்ய வேண்டும்.

ஒரு திருடன் என்ன செய்வான்…?

நான் இன்னாரைப் பார்த்து வந்தேன். அவர் மிகவும் நல்லவர். எனக்கு உதவி செய்தார். உங்களை பற்றிப் போற்றிப் பேசினார் என்று எதையாவது இரண்டை நம்மிடம் சொல்லிவிட்டு அதன் மறைவிலே தனக்கு வேண்டிய பொருளை நம்மிடமிருந்து அவன் வாங்கிச் சென்று விடுவான்
1.அதாவது நம்மை ஏமாற்றி விட்டுச் செல்வான்
2.ஏமாற்றுவதற்காக அப்படிப் பேசுவோர் உள்ளார்கள்
3.ஒவ்வொரு காரியங்களிலும் ஏமாற்றிய பழகியிருக்கின்றார்கள்.

ஆகையினால் தான் உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம். தனித்தன்மை வாய்ந்ததாகவே இப்பொழுது உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

இது ஒவ்வொரு நிமிடமும் உங்கள் சிந்தனைகளை உயர்வாக்கும்… தெளிவாக்கும். தீமைகளை அகற்றும் வல்லமை பெறுவீர்கள்… பேரருளை உங்களால் பெருக்க முடியும். அனைத்து உணர்வுகளும் ஒளியாக மாறும்.

கடைசி நிலையில் நாம் இருக்கின்றோம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அதை மாற்றி மாற்றி மாற்றி ஒளியாகக் கொண்டு வர வேண்டும்

தீமையிலிருந்து தப்பும் உணர்வுகளை எடுத்து எடுத்துத்தான் மிருகங்கள் மனிதனாக வருகின்றது. மனிதரான பின் கோடிக்கரை…! தீமைகளை வென்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதை எடுத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிக் கொண்டே வந்தால் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது.
1.சிறு பிழைகள் வந்தாலும் அது நமக்குள் வளர்ந்திடாது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கண்ணும் கருத்துமாகப் பேணிக் காத்தால் தான் ஞான வித்தின் மகசூல் காண முடியும்

உதாரணமாக கரும்பு பயிரிடும் ஒரு விவசாயி தான் பெறும் மகசூலை எத்தன்மை கொண்டு பாதுகாப்பாகப் பெறுவது…? என்பதிலும் நம் உயிரான்ம சக்தியின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்…” உள்ளது.

பூமியைப் பண்படுத்திச் செப்பனிட்டு உரமிட்டுக் காலமறிந்து கரும்பின் வித்தைப் பயிரிடும் செயலில் கரும்பு வளரத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பாதுகாப்பாக அந்த வித்தை வளர்த்திடும் தொடர் வேண்டும்.

தேவையான நீரை விட்டுக் கரும்பு வளர்ந்து வரும் காலகட்டத்தில் “சோகைகள்…” என்ற கரும்பின் இனத் தன்மைகள் அகற்றப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படாவிட்டால்
1.சிறு உயிரினங்கள் அதனுள் வாசம் செய்து கரும்பின் சுவையைக் கெடுத்துவிடும்.
2.அதனால் நல்ல பலன் பெற முடியாது.

நீர் பாய்ச்சும் செயலிலும் இயற்கையாக அதி தீவிர மழை நீர் பெய்து விட்டால் அவை நிலத்தில் தங்கினால் கரும்பில் நீர் சக்தி கூடி விடும். சுவை குறைவுபடும். ஆகவே தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும்.

பக்குவ காலத்தில் கரும்பை அறுவடை செய்யாமல் நாட்கள் என்ற கணக்கின் தொடர் நீண்டுவிட்டால் அந்தக் கரும்பின் சுவை சத்து ஈர்க்கப்பட்டு
1.கரும்பின் பூ என்ற தொடர் வளர்ச்சி ஆக்கும் செயலில்
2.வேண்டோடுதல் என்ற சொல் நாம குணத்திற்கொப்ப
3.அந்தக் கரும்பின் சுவை குணம் நீங்கிப் பலனில் மாற்றம் ஏற்படும்.

மனம் என்ற வயலைப் பக்குவப்படுத்தும் ஞானி… களைகளைக் களைந்து… தன் செயலில் ஒழுக்கம் என்ற பாத்தியிட்டு… நற்பண்பு என்ற ஜெப நீரைப் பாய்ச்சி… ஞான வித்தாம் கரும்பினைப் பயிர் செய்திடும் பக்குவம்… ஞானப் பயிர் காக்கப்பட வேண்டும் என்ற செயலுக்கு ஞான வித்தை ஈர்த்திடும் செயலே… விவசாயி கரும்பின் பயிரைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகின்ற வழி முறை போல் இருந்திடல் வேண்டும்.

ஞானப் பயிர் வளர்த்திடும் மனதில் தேவையற்ற களைகள் அகற்றப்பட்டு நல்லொழுக்க நீர் என்ற ஜெபம் என்ற சக்தித் தொடரினால் “நேர் செய்யப்பட வேண்டும்…!”

அப்படிச் செயல்படுத்தினால் பயிர் தனக்குத் தேவையான ஆகாரத்தைப் பூமியிலிருந்து பெற்றுச் சமைத்து வளர்வதைப் போல் நாம் தியானத்தின் மூலம் ஈர்த்திடும் எண்ண ஜெப நீரால் ஞானப் பயிர் நல்லொழுக்க முறைச் செயலுக்கு வளர்ச்சி பெற்றிடும்.

உலகோதய வாழ்க்கை முறை எதிர் மோதல் என்ற… கடும் மழைக் காலம் மிகுந்து விட்டாலும் விவசாயி பயிர் செய்யும் பூமியில் மழை நீர் தேங்கி அந்தப் பயிர் அழுகிப் போகாமல் நீரை நீக்கிட முற்பட்டும் ஓர் வழி அமைத்து வெளியேற்றுவது போல்
1.உலகோதய மழை நீர் தேங்கி
2.ஞானப் பயிர் வளர்ப்பின் முறையில் மாறுபாடு ஆகாதபடி
3.நாம் சுட்டிக் காட்டும் தியான வழித் தொடரில் அந்தத் தீமைகள் அனைத்தும் நீக்கப் பெற்று
4.நல்லாக்கம் பெறும் முயற்சியாக விவசாயி தன் பயிரைக் காத்திடும் செயல் போல் அமைத்திடல் வேண்டும்.

சரீரத்தில் வந்து மோதும் எதிர் அலை மோதல் ஈர்ப்பின் செயல் உடலிலிருந்து கழிவுகள் நீக்கப்படா விட்டால் எதிர் மோதல் குணத் அமிலத் தன்மைகள் சரீரத்தில் தங்கிப் பிணியாக உடலில் மாறிவிடும்.

ஆக உயரிய ஞான வளர்ப்பின் பயனைப் பெறுவதிலும் தடங்கல் ஏற்படாத செயலுக்கு எதிர் மோதல் குணங்கள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

கரும்பின் கழிவு என்ற சோகைகள் அடர்ந்து வளர்ந்து விட்டால் அதனுள் வாசம் செய்யும் சிறு உயிரினங்கள் தன்மை போல்
1.வாழ்க்கையில் வரும் எதிர் நிலையான குணங்கள் செயல்பட்டு
2.அந்தச் சிறு உயிரினங்களால் கேடுகள் உண்டாகிக் கரும்பின் பயிர் இனிய குணச் சுவையை நீங்கி புளிப்பின் சுவையைப் பெறுவது போல்
3.ஞான வளர்ச்சியின் செயலில் ஆகாதபடி “அதி தீவிர எண்ண வலு என்ற பாதுகாப்பு அவசியம்…!”
4.ஒவ்வொருவரும் விவசாயி போல் ஞானப் பயிரைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்தல் வேண்டும்.

அறுவடை செய்த கரும்பினைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கரும்பின் சுவை குணத்தில் உண்டாக்கப்படும் பல்பொருள்கள் என்ற செயலுக்கு முன்பே கடும் மழையால் அறுவடை செய்யப்பட்ட பயிர் நீரினுள் மூழ்கிவிட்டால்… பயிர் காக்கப்படா விட்டால் பலனை எப்படிப் பெற முடியும்…?

விவசாயியினால் காக்க முடியாமல் போன பலனை… பாதுகாப்பற்ற செயலின் தன்மை கொண்டு கேட்பாரற்று நீரில் மூழ்கிவிட்ட பயிரினை… ஒரு வியாபாரி பொருளுக்காக விற்பதின் செயலினால் விவசாயி என்ன செய்ய முடியும்…?

ஏனென்றால் அந்தக் கரும்பின் புளிப்பின் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்திடும் பொழுது தான் பயிர் செய்த நிலத்தின் பலனை
1.சோர்வு என்ற சலிப்பு என்ற சங்கட அலை உந்தும் செயலினால்
2.தன் முயற்சியில் பாதுகாப்பற்ற செயலினால்
3.தன் பயிரைத் தானே விலை கொடுத்து வாங்கிடும் செயல் நிகழ்வுகளின் வேடிக்கைகளை என்னவென்பேன்…?

அதாவது ஞானப் பயிர் யாருக்கு உரியதோ அவரின் முயற்சி இன்மையினால்… உலகோதய வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றின் செயல் குண நிகழ்வுகளின் மாற்றம்… எண்ணம் கொண்டு செயல்படுவதால் மனம் என்று கூறுவதெல்லாம் மன எண்ணச் செயல் நிகழ்வால் “மனமே பகை…!”

பகை என்ற தனித்துவம் ஞானத்தில் இல்லை என்ற செயல் உண்மை வாய்ந்தது. எதிர் மோதல் பகை என்ற குணங்கள் தாக்கினாலும் ஞானியின் ஈர்ப்பின் செயலில் உண்மையின் உயரிய உயர் ஞான எண்ண வலு பெற்றிருப்போன் அந்தப் பகை குண அமிலத் தன்மைகள் தன் ஞானத்தில் மோதினாலும் அனைத்தையும் அது துகள்களாக்கிவிடும்.

ஞானச் செல்வங்கள் பெற்றிடும் உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு
1.எந்த வித எதிர் மோதல் குணங்களும் தாக்கிடாத வண்ணம்
2.பக்குவப்படுத்தப்பட்டுச் செயல்படும் நிகழ்வனைத்தும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி என்ற எண்ண வலுத் தொடரில் நிலை பெற்று நின்று வளர்ப்பின் வளர்ப்பாக்கி
4.பேரண்டக் கோளத்தையே உருவாக்கிடும் செயல் சக்திக்கு… சக்தியின் முயற்சிக்கு… “என்றும் எனது ஆசிகள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அனுபவங்கள் பெறுவதற்காக காடு மலை மேடெல்லாம் அழைத்துச் சென்றார் குருநாதர்.

காட்டுக்குள் உன்னை அழைத்துச் சென்றதும் உனக்குள் துன்பப்படுத்தும் உணர்வுகள் ஏன் வருகின்றது…? என்று தெளிவுபடுத்தினார் குருநாதர்.
1.நானும் இதைத்தான் பெற்றேன்
2.“துன்பத்தில்தான்.., இன்பத்தைக் கண்டேன்…”
3.துன்பத்திலிருந்துதான் இன்பத்தைப் பெறும் அணுக்களை நீ உருவாக்குகின்றாய் என்றார்.

நீங்கள் இந்த உபதேசங்களைக் கேட்கும்பொழுதும் படிக்கும் பொழுதும் வீட்டில் சங்கடமென்றோ வெறுப்பென்றோ அதன் மேல் நினைவினைச் செலுத்திடாது அருள் ஒளியின் உணர்வினை நீங்கள் பெறுங்கள்.

அப்படிப் பெற்றால் துன்பத்தை நீக்கிடும் அருள் ஒளியின் உணர்வுகளை உங்கள் உயிர் “அந்த உயிரான ஈசன்.., கருவாக உருவாக்கி” அருள் உணர்வினை வளர்க்கச் செய்யும் இச்சக்தி பெறுகின்றது.

நீங்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.

ஆகவே உபதேசத்தைக் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும்..
1.என் உடல் நிலை சரியில்லை…
2.என் மனதே சரியில்லை…
3.என்னால் ஒன்றும் முடியவில்லை… என்ற எண்ணத்தைச் செலுத்தாதீர்கள்.

உபதேச வாயிலாக நுகரும் உணர்வுகள் உங்களுக்குள் இருக்கும் துன்பத்தைப் போக்கும். அந்த அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

அதே சமயத்தில் இப்பொழுது “கால் வலியாக இருப்பினும் சரி.., உடல் வலியாக இருப்பினும் சரி.. அல்லது எத்தகைய நோய் கொண்டவராக இருப்பினும் சரி.. சிறிது நேரம் இதைக் கூர்ந்து பதிவாக்குங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் பெற்ற அந்த உணர்வை நுகர்ந்து உணர்வினை யாம் வெளிப்படுத்துகின்றோம்.

அந்த உணர்வுகளை உந்தச் செய்யும்போது அதனின் நினைவின் ஆற்றல் கண்ணுக்கு வந்து ஞானிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

அதன் வழி உங்கள் உடலில் தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வுகள் படர்ந்து அதை அடக்கிடும் நிலை வரும் பொழுது அதை அடக்கிடும் அணுக்களாக உங்களுக்குள் பெருகும்.

இதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று தான் மணிக்கணக்கில் செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

உங்களுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நுகரச் செய்யவும் அணுக்களாக உருப்பெறச் செய்யவும் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம். துன்பத்திலிருந்து மீட்டிக் கொள்ளும் ஆற்றல்கள் உங்களிலே பெருகும்.

துன்பத்திலிருந்து மீட்டிய உணர்வுகள் உங்களிடமிருந்து மூச்சலைகளாக வெளிப்படும் பொழுது மற்றவர்களுக்கும் நல்ல உணர்வாகப் படரும். அதைச் சுவாசிக்கும் பொழுது துன்பத்திலிருந்து அவர்களும் விடுபடுவர்.

அறியாமல் வரும் துன்பங்களிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறும் நிலைக்குத்தான் “எழுத்தறிவு இல்லாத அக்காலங்களில்… ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்”.

ஆனால் இன்று சாங்கிய சாஸ்திரமாக “யாரோ செய்வார்..” என்ற நிலையில் தான் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

1.நாம் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது… நம் உடலாக மாற்றுகின்றது
2.உடலுக்குள் உருவான அனைத்தையும் நம் உயிரே குருவாக நின்று இயக்குகின்றது
3.இது தான் ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திரங்கள்.

துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே… இப்படி ஆகிவிட்டதே…” என்பதை எண்ணாமல் அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற வேண்டும்” என்று இச்சைப்பட்டால் துன்பங்கள் நீங்கி அங்கே மகிழ்ச்சி நிச்சயம் உருவாகும்.
1.எண்ணியதை… எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்… நம் உயிர் தான்…”
2.நம் உயிர் அதை உருவாக்கிக் கொடுக்கும்.

மந்திர ஒலிகளுக்குள் என்றுமே நாம் சிக்கக் கூடாது

சாமிக்கு சக்தி ஏற்றுகிறேன்…! என்று சொல்லிக் கோவிலிலே யாகம் செய்யும் பொழுது அதிலே புடவைகளைப் போடுவார்கள்… பட்டாடைகளைப் போடுவார்கள்… உணவுப் பொருள்களை எல்லாம் போடுவார்கள். பல வாசனைப் பொருட்களையும் போட்டுப் பொசுக்கி புகையை எழுப்புவார்கள். போடும் போது மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அதை எல்லாம்
1.நாம் கண்களில் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்… அதை நாம் சுவாசிக்கின்றோம்
2.அந்த வாசனையுடன் சேர்த்து மந்திர ஒலிகளும் நம் செவிகளிலே படுகின்றது
3.செவி… அந்த மந்திர ஒலிகளைக் கவர்கின்றது…
4.உயிரிலே படுகின்றது… உணர்ச்சிகள் கவரப்படுகின்றது
5.இப்படிப்பட்ட உணர்வுகள் ஆனபின் இதற்குப் பெயர் “வசியம்”
5.நாம் எண்ணி எடுக்கக்கூடிய எண்ணங்கள் அதர்வண…
6.அதாவது நம் எண்ணங்களை மாற்றி… அவர்கள் செய்வதை நமக்குள் ஏற்றி நம்மை வசியப்படுத்துகின்றார்கள்.

புரிந்து கொண்டீர்கள் அல்லவா…!

யாகத்தில் என்னென்ன சொன்னார்களோ அது எல்லாம் பதிவாகி விடுகின்றது… உடலிலே சேர்ந்து விடுகின்றது. மீண்டும் இதையே எண்ணி எடுத்து நாம் அர்ச்சனை அபிஷேகம் என்று மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருப்போம்.

அந்தச் சாமி நமக்குச் செய்யும் என்ற எண்ணத்தில் தான் போகின்றோம்.
1.கோவிலிலே சாமிக்கு சக்தி ஏற்றுவதாக அவர்கள் சொல்வார்கள்
2.ஆனால் யாருக்குச் சக்தி ஏற்றுகிறார்கள் என்றால் உங்களுக்குத் தான் ஏற்றுகிறார்கள்.

அர்ச்சனை செய்தால் இந்தச் சாமி நமக்கு எல்லாம் செய்யும். வாழ்க்கையில் ரொம்பக் கடினமாகிவிட்டால்… யாகத்தைச் செய்தால் சாமி நமக்குச் செய்யும்…! என்று இப்படித்தான் ஆலயத்திற்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

வசியம் எல்லாம் செய்த பிற்பாடு இந்த வாழ்க்கையின் முடிவில் இறந்த பின் என்ன செய்வார்கள்…? மந்திரத்தைச் சொல்லி அதில் என்னென்ன பொருள்களைத் தீயிலே போட்டுக் கருக்கினார்களோ… இதையே புகை மூட்டத்தின் மூலம் அதே மந்திரத்தைச் சொன்னால் (இறந்தவர் சொன்ன) அந்தப் பக்தி கொண்ட ஆன்மாக்கள் மந்திரம் சொல்வோருக்குக் கைவல்யமாகி விடுவார்கள்.

அக்காலத்தில் அரசர்கள் செய்த முறைகள் இது.

அரசன் இதை எடுத்துக் கொண்ட பிற்பாடு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உங்கள் உணர்வை… உங்கள் உயிரை… எப்படி எல்லாம் வேலை வாங்க வேண்டுமோ… அதை அவன் செய்வான். இல்லை என்றால் அவன் உடலுக்குள் போகலாம்.

அதை வைத்துப் பில்லி சூனியம் ஏவல் என்ற வேலைகளுக்குப் பயன்படுத்துவான். சில கருத்தன்மை உயிரிலே பட்டபின் அதற்குத் தகுந்த மாதிரி வேலை செய்யும். இது எல்லாம் மந்திரவாதிகள் செய்வது… அதையேதான் அரசர்கள் செய்தார்கள்.

நாடி என்ற நிலையில் அரசனுடன் பழகப்படும் பொழுது அதை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. இதே போன்று இன்னொரு குட்டி அரசன் செய்தான் என்றால் நாடி சாஸ்திரத்திலே மந்திர ஒலிகளாக எழுதி வைப்பான்.

மந்திரத்தைச் சொன்னால் சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் அவன் கூடு விட்டு கூடு பாயும் நிலையாக அரசன் செய்வான். அதற்குண்டான உணர்வுகளைத் தான் பதிவு செய்கின்றார்கள்.

பின் அந்த நாடியை எடுத்து வாசிப்பார்கள். அதிலே ஒரு முட்டையை வைப்பார்கள். வாசித்து முடித்த பின் முட்டைக்குள் அந்தக் கரு இருக்காது. அப்படி என்றால் அந்த உடலுக்குள் அவன் வந்து விட்டான்…! என்று அர்த்தம்.

அவன் வந்த பிற்பாடு…
1.இவன் சொல்லக்கூடிய வாக்குகள் அனைத்தும் பலிக்கும்.
2.நாடியில் எழுதி இருக்கும்… அதை அவன் சொல்லிக் கொண்டே போவான்
3.இன்னார் கூட வந்தேன்… இந்த மாதிரி வந்தேன்… இப்படியெல்லாம் இருந்தது… என்று கட கட… என்று சொல்லிக் கொண்டே போவான்.

இதைத் தான் நாடித் துடிப்பு என்று சொல்வது. நாடி என்றால் துடிப்புக்கொப்ப உயிர் ஆகின்றது.

அரசன் அவன் வாழும் காலத்தில் அந்த உடலில் சுகங்களை எப்படி அனுபவித்தானோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்து இங்கே இந்த மனித ரூபத்தில் மீண்டும் அனுபவிப்பான். இது சாகாக்கலை.

ஆனால் ஞானிகள் காட்டியது இது அல்ல. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் பெருக்கிக் கொண்டே வந்தால் அது வேகா நிலை.

நெருப்பிலே ஒரு மனிதன் குதித்தால் உயிர் வேகுவதில்லை ஆனால் உடல் கருகுகின்றது. கருகிய உணர்வுடன் வெளியிலே வரும் போது தன் நண்பன் மேலோ… அல்லது இன்னொரு பாசம் கொண்டவர் மேலோ… “இந்த உடலை விட்டுப் போகிறேன்…” என்ற வேக உணர்வுடன் சென்றால் போதும்.

அந்த உடலுக்குள் சென்றுவிடும். பின் “ஐய்யய்யோ… எரிகின்றதே…!” என்று சொல்லி அந்த எரிச்சல் தாங்காதபடி நெருப்பை வைத்து அவனும் தற்கொலை செய்து கொள்வான். இது எல்லாம் சாகாக்கலை.

1.ஆகவே மந்திர ஒலிகளிலே நாம் என்றுமே சிக்கக் கூடாது
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பற்றுடன் பற்றி
3.உயிரைப் போன்றே நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி வேகா நிலை பெற வேண்டும்.

ஞானிகள் நமக்குக் காட்டியது அதுதான்…!

சித்தன் போக்கு… சிவன் போக்கு

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!
3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

ஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமியை நம்புகின்றோம் சாமியாரை நம்புகின்றோம். ஜோசியத்தை நம்புகின்றோம் மந்திரத்தை நம்புகின்றோம் நல்ல நேரம் வருகின்றதா..,? கெட்ட நேரம் வருகின்றதா..,? ஜாதகம் பார்த்துத் திருப்பூட்டுகின்றோம்.

1.ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்த எத்தனை பேர் ஒன்றி வாழ்கின்றனர்..,? எத்தனை பேர் மரணமடைகின்றனர்…?
2,சாமிக்கு அபிஷேகமும் ஆராதனையும் அதே சமயத்தில் பாவத்தைப் போக்க எத்தனையோ யாகங்களைச் செய்கின்றார்கள். அவர்கள் எல்லாம் மடியாமல் இருக்கின்றார்களா..,?
3.துன்பங்கள் போய்விட்டதா..? சற்றுச் சிந்தியுங்கள்.
4.நம் எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றது…!
5.இந்த உடலில் இச்சைக்குத்தான் நாம் செயலாக்கிக் கொண்டுள்ளோம்.

நம் உடல் எவ்வாறு உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றுகின்றதோ அதைப் போல நஞ்சின் தன்மை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.

அதை “எல்லோரும் பெறுவீர்கள்” என்ற நம்பிக்கையில் தான் இதைப் பாய்ச்சுகின்றேன். குரு அருளைத் திரு அருளாக மாற்றி “அனைவரும் அருள் பெறும் மக்களாக” நீங்கள் உருவாக வேண்டும்.

1.உங்கள் பார்வையில் இருளைப் போக்க வேண்டும்.
2.உங்கள் பார்வையில் துன்பங்கள் போக்க வேண்டும்.
3.உங்கள் பார்வையில் பிணிகள் போக வேண்டும்.
4.உங்கள் சொல்லில் பிறருடைய இன்னல்கள் நீங்க வேண்டும்.
5.உங்கள் செயல்கள் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்.
6.உங்கள் செயல்கள் மற்றவர்களை உயர்த்தும் நிலைகள் வரவேண்டும்.

அந்த வளர்ச்சியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று “குரு அருள்… எமக்கு உபதேசித்த உணர்வை” உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

ஆயுள் மெம்பர் என்றால் வெறுமனே அல்ல… ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்

பூமியில் உயிரணு தோன்றி பல உடல்களைப் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆனபின் முதல் மனிதன் அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது விஷத்தை வென்றிடும் சக்தி பெற்றான்.

அவன் பிறந்த பின் எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான். அவனின் வளர்ச்சியில்
1.வானுலகில் வரும் மின்னல்களைத் தனக்குள் நுகர்ந்து
2.உயிரைப் போலவே உணர்வை ஒளியாக மாற்றினான்.

கணவன் மனைவியும் இருவரும் சேர்ந்து துருவத்தின் வழி வரும் ஆற்றல்களைக் கவர்ந்து ஒளியின் சரீரமாக ஆகி நம் பூமியின் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்… வளர்கின்றார்கள்.

அதிலிருந்து வரும் சக்திகளைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக இணைக்கின்றோம்
2.இணைத்தாலும் வெறுமனே ஆயுள் மெம்பராக இருக்கக் கூடாது.

குடும்பத்தில் ஆனாலும் சரி… அல்லது புறத்திலே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி… அல்லது தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி…
1.வேதனைப்படுவதோ வேதனைப்படுத்துவோரைப் பார்ப்பதோ…
2.சாபம் விடுவோரைப் பார்ப்பதோ அல்லது சாபமிடும் நிலைளுக்கு நாமே ஆளாகுவதோ…
3.இது எல்லாம் நுகர்ந்து… நுகர்ந்த பின் தான் அறிகின்றோம்
4.அறிந்து கொண்டாலும் அது நமக்குள் உருவாகாதபடி… விளையாதபடி ஆயுள் மெம்பர்கள் முதலிலே தடுத்து பழக வேண்டும் (இது முக்கியம்).

ஒரு வித்தை வேக வைத்தால் அந்த வித்து மீண்டும் மண்ணிலே ஊன்றினால் முளைக்காது. வேக வைத்த பொருள்கள் எதுவுமே மண்ணிலே போட்டால் முளைப்பதில்லை.

ஆகவே இந்த வாழ்க்கையில் வேதனையோ சலிப்போ சங்கடமோ கோபமோ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்ட நிலையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போல் பதிவு செய்திருக்கிறது.
1.தீமை என்ற நிலை வந்தால் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்
2.கண்களின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணின் நினைவ மேல் நோக்கி வானிலே செலுத்திக் குறைந்தது ஒரு நிமிடமாவது ஏங்க வேண்டும்.

காரணம்… எத்தகைய விஷத்தையும் வென்று அதை ஒளியாக மாற்றிக் கொண்டே இருப்பது துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத் தான் இந்நேரம் வரையிலும் உபதேசித்தது.

இந்த உணர்வை நீங்கள் சீராக எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சொல்லி விட்டால் இங்கே நின்று விடும்.
1.அதைத் தாண்டி உடலுக்குள் போவதில்லை
2.அதைத் தான் இராமன் வாலியைக் குகையின் மீது இருக்கும் பாறையைத் தட்டி வீழ்த்தி விடுகிறான் என்று காட்டுகிறார்கள்.
3.குகையை மூடிவிடுகிறான்… வாலி வெளியே வருவதற்கில்லை.
4.அவனுடைய செயலாக்கங்கள் தடுக்கப்படுகிறது.

வாலி என்றால் யார்…?

வேதனைப்படுவது கோபப்படுவது கொதிப்படைவது சலிப்படைவது சங்கடப்படுவது இது போன்ற மோசமான உணர்வுகள் எல்லாமே வாலி தான்.

ஒருவர் திட்டுகிறார்… நம்மைத் தவறாகப் பேசுகிறார்… என்றால் நமக்குள்ளும் அதே உணர்வுகள் வந்து உணர்ச்சியைத் தூண்டி இயக்கத் தொடங்குகிறது. நம்மால் அடுத்து நல்ல எண்ணங்களை எண்ண முடிகிறதா…? இல்லை.

இது நம் இரத்தங்களில் கலந்தால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்குள் விஷத் தன்மையாக மாறும். நம்மைச் செயலற்றதாக மாற்றும். அதனால் தான் வாலி யாரைப் பார்த்தாலும் அவர்களிடமிருந்து சம வலுவைப் பெற்று விடுவான் என்று சொல்வது.

அதை மாற்றுவதற்குத் தான் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்துடனே உங்கள் வாழ்க்கையை இணைக்கும்படி செய்கிறோம்.

ஈஸ்வர அனுபூதி

இந்தச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது. உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும்
1.இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
2.தியானம் என்ற அக்கினியில் குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
3.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொண்டிட வேண்டியது
4.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்கப்படுவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்த்திடல் வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைக் கலயம் ஈர்ப்பது போல்
2.கலயத்தினுள் குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்… ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்…!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது ஒரு கீரியும் நல்ல பாம்பும் போர் செய்து கொண்டிருக்கின்றது.

இது அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால் அது இதைத் தாக்க எண்ணுகின்றது.

பாம்பு சீறித் தாக்கினாலும் கீரி அதனிடம் சிக்குவதில்லை. கீரி தாவிச் சென்று அந்தப் பாம்பைத் தான் கவ்விப் பிடிக்க வேண்டும் என்று அதனின் விஷத்தன்மையைப் பாய்ச்சுகின்றது.

ஒரு மணி நேரம் போர் முறையாக இருக்கின்றது. நின்று பார்க்கும்படிச் சொல்கின்றார் குருநாதர். ஆனால் மனிதன் அருகே நிற்கின்றான்.. “தன்னைத் தாக்கிவிடுவான்” என்று இல்லை.

“எதிரியை வீழ்த்திவிட வேண்டும்…” என்ற உணர்வுகளில் தான் இரண்டும் போர் செய்கின்றது.

அங்கே நின்று வேடிக்கை பார்க்கின்றேன்…
1.பாம்பு மனிதனைக் கண்டால் சீறித் தாக்கும் அல்லவா..,? இல்லை.
2.எதனின் நிலைகளில் தன் எதிரியைத் தாக்க வேண்டும் என்று இருக்கின்றதோ அதிலேயே தான் இருக்கின்றது.

“அருகில் சென்று நில்…” என்கிறார் குருநாதர்.
1.அதனுடைய போர் முறையில் தான் இருக்குமே தவிர
2.உன்னைத் தாக்காது… என்று அருகில் சென்றே பார்க்கும்படி செய்கின்றார் குருநாதர்.

போர் செய்யும் பொழுது தவறி அந்தப் பாம்பின் விஷத்தன்மை கீரியின் உடலில் தாக்கிவிடுகின்றது.

விஷத்தின் தன்மை ஆனபின்… கீரி “கிறு…கிறு…” என்று சுழல்கின்றது.
1.சுழன்று சுற்றி வரப்படும் பொழுது
2.விஷத்திலிருந்து விடுபடும் அந்த மணத்தை எப்படி நுகர்கின்றது..? என்று உணர்த்துகின்றார் குரு.

அந்த மணத்தை நுகரப்படும் பொழுது விஷத்தை முறிக்கும் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் இருக்கும் “அந்தத் திசையை” நோக்கிப் போகின்றது.

கீரியின் மேல் விஷம் தாக்கப்பட்ட பின்… “முதலில் முடியாது” இருக்கின்றது. அந்த மணத்தை நுகர்ந்து… “போகப் போக… வேகம்…” அதிகமாகின்றது.

அதைப் பின் தொடர்ந்து “போய்ப் பார்…” என்று சொன்னார் குருநாதர்.

கீரியின் பின்னால் நான் சென்றேன்.

முதலில் மெதுவாகப் போனது. அந்தச் செடியின் அருகிலே செல்லும் பொழுது ரொம்பவும் வேகமாகப் போனது. போய் அந்தச் செடியின் மீது பிரள்கின்றது.

பிரன்டபின் அதற்குள் இருக்கும் நஞ்சின் உணர்வுகள் மாறுகின்றது. நான் கீரி எந்தச் செடியின் மீது பிரள்கின்றது…? என்று பார்ப்பதற்கு முன்னாடி “திருப்பி ஓடி வருகின்றது…”

ஓடி வந்த பின் மீண்டும் அந்தப் பாம்பைத் துரத்தி இரண்டும் சண்டையிடுகின்றது. பழி தீர்க்கும் உணர்வாக அது செயல்படுத்துகின்றது. பாம்பை இரண்டாகக் கத்திரித்து விட்டது.

பாம்பு சீறித் தாக்கினாலும்
1.எப்படித் தன்னைப் பாதுகாத்து இந்த உயிரினங்கள் எப்படி உருவாகின்றது…?
2.அதிலிருந்து ஒவ்வொன்றும் எப்படி படிப்படியாகத் தன் வளர்ச்சியில் வருகின்றது…?
3.விஷத்தை முறிக்கும் அந்த ஞானம் எப்படி வந்தது…? இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

அந்த விஷத்தின் தன்மை அதன் உணர்வுக்குள் பட்டபின் அதிலிருந்து தப்பிக்கும் அந்த உணர்வின் ஞானம் கீரிக்கு வருகின்றது.

இப்படித்தான் ஒவ்வொன்றிலும்… ஒவ்வொன்றும் நுகர்ந்து கொண்ட பின்
1.தீமைகளைப் போக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து
2.“இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது…” என்பதை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

அதே சமயத்தில் இத்தகையை விஷத் தன்மை கொண்ட நிலைகளிலிருந்து மீட்டிடும் உணர்வுகள் அதனுடன் இணைந்து அத்தகைய “விஷத்தை முறித்திடும் தாவர இனங்கள்.. எப்படி உருவானது…?” என்ற நிலையையும் காட்டுகின்றார்.

குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டி இப்படி அறிந்து வந்த உண்மையைத்தான் உங்களுக்குள்ளும் இதை உருவாக்குகின்றோம்.

சந்தர்ப்பத்தில் நீங்கள் செல்லப்படும் பொழுது மணத்தால் நுகர்ந்து இந்தச் செடியின் தன்மையை அறியும் பருவம் உங்களுக்குள்ளும் வரும்.

இதைப் போல உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் பெருகும். நீங்கள் வைத்தியமாகவும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் நீங்கள் நண்பர்களுக்குள் பழகுகின்றீர்கள். “வெகு தொலைவில்..,” இருந்தாலும் நண்பருக்கு நோய் என்று சொன்னால் அந்த நோய் நீங்க வேண்டும் என்று “உணர்வைச் செலுத்தினால்” அங்கே விஷத்தன்மைகள் குறைவதைப் பார்க்கலாம்.

இதைப் பரீட்சித்துப் பாருங்கள்.

உங்களுக்குள் இதனின் ஞானத்தின் வழி கொண்டு “தீமைகளை அடக்கிடும்.., தீமைகளைப் போக்கிடும்.., மெய்ப்பொருளை உணர்ந்திடும் அந்த ஆற்றலை…” உங்களுக்குள் பெருக்க முடியும்.

உயிரைக் கட்டிப்பிடித்தால் என்ன செய்யும்…?

இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கின்றேன் (ஞானகுரு). அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் ஒரு கருத்தன்மையாக உருவாக்கச் செய்கின்றேன்.

1.ஒரு கம்ப்யூட்டரில் சேமித்து வைத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்து விட்டேன்
2.எப்போழுது தீமை வருகிறதோ அந்த நேரத்தில் யாம் சொன்ன உபதேசங்களை நினைவுபடுத்தினால்
3.தவறை நீக்கக்கூடிய உபாயம் வரும்.

சந்தர்ப்பத்தில் வேதனையான நிலைகள் வந்தாலும் உடனடியாக ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திந் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வரும்.
1.அந்த இடத்தில் எப்படிச் செயல்பட வேண்டும்…?
2.நாம் எப்படி வாழ வேண்டும்…?
3.இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற நல்ல சிந்தனைகள் வரும்.

ஆனால் இன்று பெரும்பகுதி… ஒருவன் தவறு செய்கிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவு செய்து விட்டால் அவனை எப்படி மடக்க வேண்டும்…? என்று உணர்வு தான் வரும்.

அந்த உணர்வைச் சேர்த்த பின் அவனை இங்கே தட்டலாமா…? அங்கே தட்டலாமா…? என்று கால்குலேசன் பண்ணுவோம்.

பணம் இருப்பதால் தானே எவ்வாறு செய்கின்றான். பணம் வராமல் தடுத்தால் நம்மை எதிர்க்க மாட்டான் அல்லவா… கஷ்டப்படுவான் அல்லவா…! என்று இந்தச் சிந்தனைகள் ஓடுகின்றது.

ஆக… கம்ப்யூட்டரில் ஆணைகள் இடப்பட்ட பின் அது தன்னிச்சையாக இயக்குவது போல் நமது உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. நம் நுகர்வதை எலக்ட்ரானிக்காக மாற்றி
1.ஊழ்வினை என்ற வித்தாக்குகிறது
2.எல்லா ரெக்கார்டையும் சேர்த்து வைக்கிறது.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் படிப்படியாக வளர்ந்து சர்வத்தையும் உருவாக்கும் மனித உடலுக்குள் ஊனாக மாறிவிடுகிறது.

எந்த அணுவின் தன்மை வந்தாலும் அதன் கருத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்… எலும்புக்குள் இருக்கும் ஊன் என்ற வித்து…!

ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வளர்த்து அடுத்துப் பிறவியில்லா நிலையை அடையுங்கள்.
1.நாம் தேடிய சொத்து எதுவும் நம்முடன் வரப்போவதில்லை.
2.உடலையே காக்க முடியாது போகிறது… பின் தேடி வைத்த சொத்தைக் காக்க முடியுமா…?
3.செல்வம் கூடக் கூட வேதனைகள் கூடிக் கொண்டே வரும்
4.வேதனை கூடக் கூட எந்த செல்வத்தைப் பெற முடியும்…? வேதனை என்ற அழுக்குச் செல்வத்தை தான் தேட முடியும்.

ஒரு மிருகமாக ஆகிவிட்டால் செல்வத்தைப் பார்க்க முடியுமா…? அதை பார்த்தாலும் மிதித்து விட்டுத் தான் செல்லும். அதே போலத் தான் வேதனை என்ற உணர்வு அதிகரித்து விட்டால் நாம் மிருக உடலிற்குத் தயாராகி விடுகிறோம் என்று அர்த்தம்.

கடுமையான வேதனைக்கு உள்ளாகும் போது அழகான துணிகளையோ நகை நட்டுகளைப் பார்த்தால் நமக்கு வெறுப்பு தான் வரும். நோயுடன் நீங்கள் படுத்திருக்கும் பொழுது அப்படி அலங்காரம் செய்ய வேண்டும் இப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னாலே நமக்கு எரிச்சலாகும்.

அட… கொஞ்ச நேரமாவது நல்ல சட்டையைப் போடுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்…? போட வேண்டும் என்று சொன்னவர் மீது வெறுப்பு தான் வரும்.

மிருகம் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுத் தான் போகும். ஆகவே இந்த உணர்வின் தன்மை மிருக உடலுக்குத் தான் தயாராகின்றது.

அதைத் தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரம் காட்டுகிறது. ஒரு மனிதனுடைய தவறான நிலையைப் பார்க்கும் பொழுது சித்திரம். அவன் வெளிப்படுத்தும் உணர்வினை நமக்குள் சேர்த்த பின் புத்திரன். உடலில் அணுவாக உருவாகிறது.

புத்திரன் ஆன பிற்பாடு…
1.எந்த உடலில் இருந்து வந்ததோ அதே குணத்தை எடுத்து உடலுக்குள் கொடுத்து நாம் வளர்க்கின்றோம்
2.இதையே வழியாக அமைத்துக் கொண்டு அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு வரும்பொழுது
3.எந்தக் குணத்தை எடுத்தோமோ அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.

எமன் எது மேலே வருகின்றான்…? எருமை மீது…! சிந்தனையற்ற நிலைகள் ஆகும் போது எடுத்துக் கொண்ட பாசக் கயிறு அந்த உணர்வுக்குத் தக்கவாறு எமன் நரகலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றான் என்று தெளிவாகவே நமக்குக் காட்டுகின்றார்கள்.

அப்பொழுதாவது இந்த உண்மையை உணர்கின்றோமா என்றால் இல்லை.

“மார்க்கண்டேயன்…” என்றும் பதினாறாக சிவலிங்கத்தை… உயிரைக் கட்டிப்பிடித்துக் கொள்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.
1.உயிரை கட்டிப்பிடித்தால் என்ன செய்யும்…?
2.எமனால் அவனை இழுக்க முடியவில்லை…

அதாவது…
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக ஆக்கப்படும் பொழுது
2.எவரும் இழுக்க முடியாது என்று அதையும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

துருவ நட்சத்திரமும் சரி சப்தரிஷி மண்டலங்களும் சரி அது என்றும் பதினாறாக அழியாத நிலைகள் கொண்டது. அந்த எல்லையை நாம் அடைய வேண்டும்.

வாழ்க்கையில் எத்தனை சந்தோஷங்களை நாம் அனுபவிக்கின்றோமோ என்றும் பேரானந்தப் பெரு வாழ்வு பெற முடியும். இருளை அகற்றி மகிழ்ச்சி என்ற ஒரு கோட்டையாக அது அமைக்கும்.
1.இந்த உடலில் சந்தோஷம் எப்படி இருக்கிறதோ
2.அதே மாதிரி உணர்வு உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையாக மாறும்.

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…!

ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்…?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன…? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து…
4.உயர் நிலை பெற வேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்…!”

அப்படியானால்… தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்…?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இருவித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்…!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழிவகைகளை ஞானிகள் காட்டினார்கள்…!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்…! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்…!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்… உருவத்தின் ஆனந்த லயமும்… அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்…
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்…”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு உயர்ந்த குணம் கொண்டு நாம் தர்மத்தைச் செய்தாலும் பரிவுடன் உதவி செய்தாலும் நம்மால் உதவி பெற்றவர்களே அது திரும்பி நமக்கு எதிர்த்து நிற்பார்கள்.
1.“அடப் பாவி… நான் எப்படியெல்லாம் உதவி செய்தேன்…? நீ இப்படிச் செய்கின்றாயே…” என்று வேதனைப்படும்போது
2.அந்த வேதனையின் உணர்வுகள் உட்புகுந்து நாம் செய்த நன்மைகளை மாற்றி விடுகின்றது.
3.நன்மை செய்த நிலைகள் மாறி வேதனைப்படும் அணுவாக மாறி உடலுக்குள் விளையத் தொடங்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விழித்திருத்தல் வேண்டும்.

இதனை நாம் தெளிந்து அந்தத் தெளிந்த நிலைகள் கொண்டு நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும் நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும் என்றும் பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளை அறிதல் வேண்டும்.

உங்களைப் போற்றித் துதித்துவிட்டு அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகப் போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு. நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு.

ஆனால் அவர் எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும் என்று போற்றும் நிலைகள் வேறு.

இதைப் போன்ற நிலைகள் “ஏமாற்றும் அல்லது ஏமாறும் நிலைகள் அல்லாது நாம் வாழ வேண்டும்.

ஆனால் எல்லா உதவியும் செய்வார்கள். உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..
1.“பார்… அன்றைக்கு எல்லா உதவியும் நான்தான் செய்தேன்…”
2.இன்றைக்கு என்னைச் “சிறிதளவாவது அவன் மதிக்கின்றனா…? பார்…” என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.

ஆகவே செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் கௌரவம் என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.

“தன்னை மதிக்கவில்லையே..,” என்ற உணர்வு கொண்டு தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள். பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் இத்தகைய நிலைகளில் பகைமையை வளர்த்துக் கொண்டு நமக்குள் நல்ல அணுக்கள் வளராது தடைப்படுத்திடும் இந்த நிலைகளிலிருந்து மீட்டிடத்தான் சிவன் இராத்திரி அன்று “விழித்திரு..,” என்று காட்டினார்கள் ஞானிகள்.

மகா சிவன் இராத்திரி – ஓர் உயிரின் தன்மை உடல் பெற்ற பின் உடலுக்குள் மறைந்துவிடுகின்றது அந்த உயிர்.

அதைத்தான் இருளுக்குள் மறைந்த நிலைகளை சிவன் என்றும் உணர்வின் தன்மை ஈசன் என்றும் உணர்ச்சியின் தன்மை கொண்டு நம்மை வழி நடத்துகின்றது என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தாய் தந்தையரை எண்ணி ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று அந்த உணர்வுகளை எங்கிப் பெறுதல் வேண்டும்.

நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து… நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த வேதனையோ மற்றவர்கள் மேல் உள்ள பகைமைகளயோ நமக்குள் வளராமல் மாற்றிடலாம்.

நாம் செய்த நன்மை நமக்கும் பயனளிக்கும். பிறரின் உணர்வுகள் நம்மை இயக்காது.
1.அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் நம் நினைவுகள் செல்லும் பொழுது
2.இந்தப் புவியின் பற்று நமக்குள் வராது.

என்றுமே ஏகாந்த நிலை என்ற பேரானந்தப் பெருவாழ்வு வாழ முடியும்.

உருவம்… அருவம்… உருவம்…!

ஒரு கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்வது போல் தான் உங்களிடம் ஞானிகளின் அருள் ஆற்றலைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

1.யாம் உபதேசம் கொடுத்ததை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.வாழ்கையில் வரக்கூடிய தீமைகள் அனைத்தையும் நீக்கி
3.வல்லமை கொண்ட அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு உங்களுக்குள் சந்தோஷத்தை ஊட்ட முடியும்.
4.தீமைகள் உள்ளே புகாதபடி தடுக்க முடியும்.

அந்தச் சக்திகளைப் (அருவம்) பெறச் செய்வதற்குத் தான் ஆலயம்.

ஆலயத்திலே தெய்வங்களை உருவங்களாகக் காட்டி… சிலையாகத் தான் வைத்துக் காட்டுகின்றார்கள். அதாவது
1.உருவத்தைக் காட்டி அருவத்தைத் தெரிந்து கொள்ளும்படி தான் வைத்திருக்கிறார்கள்.
2.அருவ நிலை கொண்டு உருவத்தை நமக்குள் நாம் மாற்றலாம்.
3.இந்த இரண்டு வேலையும் இருக்கின்றது.

சொல்வது அர்த்தமாகிறதா…?

ஆனால் ஆலயத்தில் இவ்வாறு யார் செய்கின்றார்கள்…?

ஆலயத்தில் இது துவைதம். அந்தத் தெய்வீகக் குணங்களை நுகர்ந்து அறியும் பொழுது விசிஷ்டாத்வைதம். நுகர்ந்த உணர்வின் தன்மை உடலாகும் போது துவைதம்.

எதனின் இயக்கமாக நமக்குள் மாறுகின்றதோ…
1.இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…! என்று நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் அத்வைதம்.
2.நுகர்ந்து அது உள்ளே வரப்படும்பொழுது விசிஷ்டாத்வைதம்… நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
3.உணர்வின் தன்மை உடலாக உறையும் பொழுது துவைதம் (ஓளிச் சரீரம்)

இது தான் உருவ அமைப்பு. (உருவம்… அருவம்… உருவம்…)

சாதாரண மனிதனும் உருவத்தைப் பார்த்து உயர்ந்த உணர்வை எடுப்பதற்கும்… அந்தத் தெய்வமாக நாம் ஆவதற்கும் ஆலயத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள் ஞானிகள்.

அந்த ஆலயத்தின் பண்பின் பிரகாரம் உயர்ந்த உணர்வுகளை எடுத்து அதன் இயக்கமாக நம்மை நாம் மாற்ற வேண்டும். எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஏனென்றால்…
1.இந்த மனிதப் பிறவி என்பது கடைசி நிலை.
2.இனி உடல் என்ற நிலை இல்லாதபடி ஒளி என்ற நிலையாக மாறிப் பழகுதல் வேண்டும்.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்தையும் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்

உலகோதய எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது)

அலைக்கழிக்கபடுவதோடு மட்டுமல்லாது…
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமுறும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து… இறக்கும்… கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொண்டிடும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்துதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று சிலர் “தன் கணவரை இழந்துவிட்டோம்…” என்று எண்ணலாம். கணவரை எவரும் இழக்கவில்லை…!

அவருடைய உணர்வுகள் உங்கள் உடலுக்குள் உண்டு. “அந்த நினைவு கொண்டால்.., அவருடைய நினைவு கொண்டு “என்றுமே” வாழலாம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற கணவரின் ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கலாம். அவர் உடலில் பெற்ற நஞ்சினை அங்கே கரைத்து உணர்வின் தன்மை ஒளியாக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.

உங்கள் கணவர் எத்தகைய நோய்வாய்ப்பட்டு உடலை விட்டுப் பிரிந்திருந்தாலும் உணர்வை நீங்கள் நுகர்ந்தாலும் நோயின் உணர்வுகள் உங்களுக்குள் அணுக்களாக வளராதபடி அருள் ஞானத்தின் உணர்வை வளர்த்திட முடியும்.

1.உங்கள் கணவர் உங்களுடன் இருக்கின்றார் என்ற நினைவு கொள்ளுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும்.
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும். எங்கள் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்திடும் நிலைகள் பெறவேண்டும்.
4.இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதனின் உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளை எண்ணும் பொழுது.., எங்கள் பார்வையில் எங்கள் குடும்பங்களில் எங்கள் குழந்தைகளும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி சக்தி பெற வேண்டும்.

எங்கள் குழந்தைகளும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று ஒன்றி வாழும் நிலைகள் பெற்று அவர்கள் வாழ்க்கையில் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

மனிதனான நாம் அனைவரும் இந்த வழியில் சென்றால் அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் அவர்களுடன் ஐக்கியமாகலாம்.

“இருண்ட” உலகில்
தாக்குதலில் “ஒளி” என்ற உணர்வாகி
கோளாகி நட்சத்திரமாகி “சூரியனாகி”
அதற்குள் ஒரு “பிரபஞ்சமாகி”
பிரபஞ்சத்திற்குள் “உயிரணுக்களாகி”
உணர்வின் தன்மை நுகர்ந்து
“அறிவு” என்ற இயக்கத்தில் உருவாகி
“உயிர்” என்ற நிலைகள் கொண்டு
“மனிதன்” என்ற நிலைகள் உருவாகி
“அனைத்தையும் அறிந்திடும்” அறிவு பெற்று
இருளை அகற்றி “மெய்ப்பொருள்” காணும் சக்தியாக
கணவனும் மனைவியும் பெற வேண்டும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியை அனைவரும் பெற்று இருளை அகற்றி நஞ்சினை வென்று பேரின்பப் பெருவாழ்வு பெறும் சக்தி பெற்று “மகா… மகான்களாக” நீங்கள் திகழ வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் பற்றும் பாசத்தையும் வளர்த்து அனைவருக்கும் தெளிந்த மனதை ஊட்டி மகிழ்ந்த உணர்வை ஊட்டி உங்கள் ஊரிலும் தொழில் செய்யுமிடங்களிலும் அருள் உணர்வைப் பரப்பி “அருள் மகரிஷிகளாக” உருவாகுங்கள்.

வாழ்க்கையில் அறியாது தாக்கும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் மெய்ஞானத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.அகண்ட அண்டத்திற்கே ஓளி கொடுக்கும் சக்தி வாய்ந்த உயிராத்மாக்கள்
2.கணவன் மனைவி ஒன்றிய நிலைகளில் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு.
3.அத்தகைய நிலை நீங்கள் எல்லோருமே பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

மனிதனின் நல்ல சிந்தனைகள் குறைந்து கொண்டே வருகிறது…

கடலிலே மின்னல்கள் தாக்கினால் மணலாக மாறுகின்றது. அதில் உள்ள ஆற்றலைப் பிரித்து யுரேனியமாக மாற்றுகின்றார்கள்.

நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அதனின் உணர்வின் தன்மை மாற்றப்பட்டு
1.இரண்டு நட்சத்திரங்களின் உணர்வுகளை எடுத்து
2.பாசிட்டிவ் நெகட்டிவ் என்று எதிர்நிலை கொண்டு வருகின்றார்கள்.

இதை அடக்குவதற்கு… (தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு)
1.நீரில் உள்ள ஹைட்ரஜனை (கன நீரை) அழுத்தத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது
2.உப்புச் சத்தின் உறைவால் இதில் எது சூடானாலும் நீர் என்ற நிலையாகி…
3.சேமித்து வைத்த நிலையில் அணு பிளக்காமல் (வெடிக்காமல்) தடுக்கப்படுகின்றது.

இதே போன்று ஒவ்வொரு உடலிலும் இந்த நீர் சக்தி உண்டு. அந்த ஹைட்ரஜன் தாக்கப்படும் பொழுது மனிதனை அழிக்கும் தன்மையாக வருகின்றது.

விஞ்ஞானிகளுடைய சிந்தனைகள் இப்படிச் செல்கின்றது அழிக்கும் உணர்வுகள் தான் அவர்களுக்கு வந்ததே தவிர… மனிதனை வளர்க்கும் நிலை இல்லை.

ஆனால் மனிதனை வளர்க்கும் நிலையில் ஞானத்தின் வழி வளர்ச்சி பெற்றவன் தான் அகஸ்தியன். அவன் வழியில் பின் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் நமது சூரியன் 27 நட்சத்திரங்களின் ஆற்றலைத் தனக்குள் கவரப்படும் பொழுது அதிலுள்ள விஷத்தைப் பிரித்து வெப்பம் காந்தம் என்று அனுப்புகின்றது.

வெப்பம் காந்தம் என்று வந்தாலும் காந்தம் கடைசியில் பிரிந்து செல்லும் வலுவிழந்த விஷத்தினைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது.

“ஆதியிலே…” வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலை எப்படி உருவானதோ அதே போல ஒரு இயக்கச் சக்தியின் அழுத்தமாகச் சூரியன் தனக்குள் உருவான பாதரசத்தால் மோதி விஷத்தைப் பிரித்து வெப்பமும் காந்தமும் ஆக உருவாக்குகிறது.

1.விஷம் பிரிந்து வெகுதூரம் செல்வதற்கு முன் காந்தம் மீண்டும் கவர்ந்து
2.அந்த அழுத்தத்தைக் கொண்டு வரும் பொழுது மின் கதிர்களாக மாறுகிறது… வெயிலாக வருவது எல்லாம் அதுதான்.

பாதரசத்தின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இப்படி ஒன்றை எடுத்துக் கொண்ட பின் ஒன்று ஓடுவதும் பிரபஞ்சத்தை இப்படி இயக்கிக் கொண்டு இருக்கின்றது.

1.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் இரத்தங்களிலே கலந்த பின்
2.அதனதன் உணர்வுகளிலே மோதி அதனதன் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு
3.நமது உயிரும் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலையில் சூரியனைப் போன்றே
4.இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி அதை இயக்குகிறது.

விஞ்ஞான அறிவில் நீங்கள் இருப்பதால் உங்களுக்கு அதனுடன் இணைத்து மெய் உணர்வை அறிந்து கொள்வதற்கு இதை வெளிப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

அதே சமயத்தில் நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து எடுத்துக் கவர்ந்து கொண்டு வரும் அந்த அழுத்தமான உணர்வலைகள் மிகவும் கடுமையானது.. விஷத் தன்மை வாய்ந்தது.

சூரியன் தன் உணவுக்காக அதை எடுத்துக் கவரப்படும் பொழுது… பிரிந்து செல்லும் உணர்வைக் கண்ட பின் அழுத்தம் அதிகமாகி… வரும் பாதையில் இதைக் கண்ட பின் அஞ்சி நகர்ந்து ஓடுகின்றது.

அதாவது அழுத்தத்தால் மோதி விஷத்தினுடைய ஆற்றல் கொண்டு அதீதமான நிலைகள் பிரித்துச் செல்லப்படும் பொழுது “காந்தப் புலனறிவு” அதிகமாகின்றது.

1.இந்த அடர்த்திக்குள் அந்த விஷத்தின் தன்மை எடுக்கப்படும் பொழுது நியூட்ரான்…!
2.இந்தக் காந்தக் குவியல் ஒன்றாகச் சேர்த்து இணைத்துக் கொண்டால் நியூட்ரான்…!
3.இது ஊடுருவிச் செல்லப்படும் பொழுது இதைக் கண்ட பின் அஞ்சிப் பல பல விதங்களில் அணுக்கள் பல ரூபங்களாக மாற்றும் சக்தி வருகின்றது.

அதனால் தான் விஞ்ஞானி அதற்கு நியூட்ரான் என்று பெயரை வைக்கின்றான். புது விதமாக உருவாகுவதால் அந்தப் பெயரை வைக்கின்றார்கள் இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வான் வீதியில் காந்தப் புலனறிவால் கவரப்பட்ட அந்த உணர்வுகளை ஈர்த்துச் சேமித்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றான். இங்கே கொண்டு வந்து அதை வெடிக்கச் செய்யப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

அந்த விஷத்தின் ஆற்றல் காற்றிலே கலக்கப்படும் போது…
1.அதை நுகரும் உயிரினங்களின் உடலுக்குள் ஒன்றுக்கொன்று மோதிப் போர்முறையாகி…
2.சிந்தனை இழந்து விஷத் தன்மை கொண்ட நிலையில்
3.சுத்தமாகவே இந்த மனித உடலைச் சூனியமாக்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றார்கள்.

கட்டிடங்கள் இருக்கும்… செடி கொடிகள் எல்லாம் இருக்கும். ஆனால் மனிதனை இப்படிச் சூனியம் ஆக்கிவிட்டால் “தன் இனத்தை… தன் நாட்டைக் காத்துக் கொள்ளலாம்…” என்று விஞ்ஞானக் கணிப்பு இன்று சென்று கொண்டிருக்கின்றது.

மகேஸ்வரன்… லலிதா… நீலகண்டா…

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!

1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட…
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழி வழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெற வேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளிகாந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…! (நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்)

September 22 உபதேசம்

விஷத்தால் நெருப்பு உருவானாலும்… நெருப்பு அந்த விஷத்தையே ஒளியாக்குகிறது

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கினால் “உங்களை நீங்கள் அறிய முடியும்…”

உயிர் ஒளியாக இருக்கின்றது… நெருப்பிலே மனிதன் குதித்தால் உயிர் அழிவதில்லை… உடல் கருகுகின்றது. ஆனால்
1.அகண்ட அண்டத்தில் விஷத்தின் தன்மை தாக்கி மற்றதைக் கருக்கும் நிலை இல்லை.
2.விஷம் தாக்கித் தான் நெருப்பாக மாறியது
3.நெருப்பாக ஆனபின் விஷத்தைப் பிரிக்கின்றது… இது இயற்கை…!

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் விஞ்ஞான அறிவிலே படித்துக் கொண்டவர்கள். டெக்னிக்கல் (நுட்பம்) என்ற அறிவை வளர்த்துக் கொண்டவர்கள். குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானிகள் சொன்ன உண்மைகளை யாம் நினைவுபடுத்தும் பொழுது உங்களிலே இது ஆழமாகப் பதிவாகும்.

1.பதிவானதை மீண்டும் மீண்டும் நினைவாக்கி
2.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் சக்தியாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் வரவேண்டும்.
3.தீமையான உணர்வுகளை நுகர நேர்ந்தாலும் அதனுடைய வளர்ச்சி உங்களை மாற்ற நேர்ந்தால்
4.அதை உங்கள் நிலைக்கு மாற்றி அமைக்கும் அந்தத் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான்
5.நமது குருநாதர் காட்டிய வழியில் ஆயுட்கால மெம்பராக துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றோம்.

குருவுடன் இணைந்து… துருவ நட்சத்திரத்துடன் இணைந்து… ஆயுள் கால மெம்பராக ஆகும் பொழுது 2000 சூரியக் குடும்பங்களில் விளைந்த உணர்வின் ஆற்றல்களை நீங்கள் பெற முடியும்.

1.ஒரு உயிரணு நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல்களை எப்படி மாற்றி அமைக்கின்றதோ அதைப் போல்
2.உடல் பெறும் உணர்வுகளை மாற்றி உயிர் ஒளியாக இருப்பது போன்று
3.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக மாறும் நிலை தான்.

ஆகவே கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியாக மாறுதல் வேண்டும்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி “துருவ நட்சத்திரமாக ஆன அந்த நிலையை… நாம் அனைவரும் பெற முடியும்… பெற வேண்டும்.

ஞான வழியில்… வளர்ச்சி பெறுவது என்பது தனக்குத் தானே தவிர அடுத்தவர் கொடுத்துப் பெறுவதல்ல அது

 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா…? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன…?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்…! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா…?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது… என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்…”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற வகையில் உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன…?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே…!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானுகோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்கு தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலகோதய வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொண்டிட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே…!”

மகரிஷிகளால் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்…
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்…” என்ற பாச உணர்வினால் தானப்பா…!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்…” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா…?

அறிந்து கொண்டிருக்கும்… அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்… அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்… “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்…!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே…!

“உணவின் மாறுபாடும்…” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு…” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான் என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்றுவிட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும் என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும்… செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்…” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும். அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

தீமைகளை வளர்க்காது தடைப்படுத்திடவும் நல்ல உணர்வின் தன்மைகளை நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்கள் அனைத்திற்கும் கொடுப்பதற்காகவும் தான் ஒவ்வொரு மாதத்திலும் நந்நாளை உருவாக்கிக் கொடுத்தார்கள் ஞானிகள்.

ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். அவர்களுடைய துன்பங்களை எல்லாம் நாம் கேட்டறிந்துள்ளோம். நமக்குள் அந்த அணுக்களின் தன்மை பதிவாகியிருக்கும்.

பதிவான அத்தகைய தீய உணர்வுகள் நமக்குள் வளராது தடுப்பதற்குத்தான் “சிவன் இராத்திரி அன்று விழித்திரு” என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

“விழித்திரு..,” என்றால் ஒருவர் துயரப்படும் பொழுது உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எது எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வலைகளை நமக்குள் காலை நான்கு மணிக்கெல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் “யார் யாரையெல்லாம் நாம் சந்தித்தோமோ…” அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே சமயத்தில் நாம் உலகில் உள்ள எத்தனையோ பேரிடம் பழகுகின்றோம். பத்திரிக்கை வாயிலாகவோ, டி.வி. மூலமாகவோ உலக மக்கள் உணர்வுகளை நாம் நுகர நேர்கின்றது.

ஆகவே உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அவர்கள் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு காலையில் 4 மணியிலிருந்து ஆறு மணிக்குள் எண்ணினால் நம் வாழ்க்கையில் சந்தித்த நல்லதோ கெட்டதோ சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ இதைப் போன்ற உணர்வுகள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்திருந்தால் “அந்த அணுக்களுக்கு ஆகாரம் போகாது தடைப்படுத்தப்படுகின்றது…”

காலை 6 மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து அழைத்துச் சென்றுவிடுகின்றது. நம் ஆன்மா சுத்தமடைகின்றது.

மகா சிவன் இராத்திரி.., பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக உருவாக்கிய உயிர் நாம் நம் உடலுக்குள் மறைந்துள்ளது. மனிதனான பின் நமக்குள் பல கோடி குணங்கள் நமக்குள் மறைந்துள்ளது.

சிவனுக்கு அபிஷேகம் செய்வதும் ஆராதனை செய்வதும் அதையெல்லாம் செய்தால் மெச்சி அவன் நமக்குச் செய்வான் என்ற நம்பிக்கையில் தான் நாம் ஆலயங்களுக்குள் செல்கின்றோம்.

ஆனால் ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி சிவன் யார்…? நம் உடலே சிவம்.

இந்த உடலான சிவனுக்கு உயர்ந்த உணர்வின் குணங்களை நாம் நுகர்ந்தால் அபிஷேகம் ஆகின்றது. அந்த அருள் உணர்வுகள் மகிழ்ச்சி பெறும் உணர்வாக ஆராதனையாக மாறுகின்றது. தெளிந்த மனதை நமக்கு ஊட்டுகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குச் சுவைமிக்க அமுதாகக் கிடைக்கின்றது. அது மகிழ்ந்து வாழும் உணர்வுகளை உணர்ச்சிகளை உந்துகின்றது.

அதன் வழி கொண்டு சிவனான இந்த உடலில் அந்த அரும்பெரும் சக்தியாக மகிழ்ந்து வாழும் நிலை உருப்பெறுகின்றது என்பதைத்தான் உருவத்தை அமைத்துத் “துவைதம்” (திடப்பொருள்) என்று சிலையை வைத்துக் காட்டினார்கள்.

அதில் உணர்த்தப்பட்டுள்ள நற்குணங்களை “அத்வைதம்” (சூட்சமம்) என்றும் அப்பொழுது (அந்தச் சிலையை உற்றுப் பார்த்து) நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இயக்கப்படும் பொழுது “விசிஷ்டாத்வைதம்” என்றும் மிகத் தெளிவாகக் காட்டினார்கள்.

“உயர்ந்த குணங்களை… நமது உடலாக்க வேண்டும்…” என்பதுதான் ஆலயத்தின் பண்புகள்.

இந்த உடலுக்குள் (இருளுக்குள் – இராத்திரி) இயங்கி அந்த உயர்ந்த உணர்ச்சிகளை உந்தி அதன் வழி நமக்குள் நுகர்ந்தறிந்து தீமைகளை நீக்கும் நிலை பெறுகின்றோம்.

இந்த உணர்வின் இயக்கமாக நாம் எப்படி உருப்பெறுகின்றோம் என்பதை உணர்த்துவதற்குத்தான் அன்று சிவன் இராத்திரி அன்று “விழித்திரு” என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

இதை வகுத்துத்தான் சிவன் ஆலயத்தில் இவ்வாறு வைத்தார்கள்.

வில்லிப்புத்தூரார் உருவாக்கிய “ஆண்டாள் திருஸ்தலம்”

 

“நாத விந்துகள் ஆதி நமோ… நமோ… வேத மந்திர சொரூபாய நமோ… நமோ… வெகு கோடி…!”
1.நாம் எதனின் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உணர்ச்சியின் உருவமாக
2.பல கோடிச் சரீரங்களைப் பெற்று வந்தோம் என்ற நிலைகளை அருணகிரிநாதர் இப்படிப் பாடுகின்றார்.

ரிக் வேதத்தில் கூறியது போல வான் வீதியிலிருந்து வரும் ஆற்றல்கள் ரா…ரா…ரா… ரீ…ரீ…ரீ…ரீ… ரு…ரு…ரூ…ரூ… ரு…ரு…ரூ…ரூ… ரீ…ரீ…ரீ…ரீ… என்று இந்த உணர்வின் தன்மையைப் பாடலாகப் பாடுகின்றான்.

காரணம் 27 நட்சத்திரங்கள் அது வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் சூரியன் ஈர்க்கும் பாதைக்குள் வரப்படும் பொழுது ஒன்றோடு ஒன்று மோதிய பின்
1.அதனுடைய சப்தங்கள் பலவாறு எப்படி மாறுகின்றது…?
2.அதற்கொப்ப உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற உண்மைகளை இந்தப் பாடலின் மூலம் உணர்த்துகின்றார்.

ஆனால் பதஞ்சலி முனிவராக இருக்கும் நிலையில் உடலின் நிலைகளுக்கு ஆசைப்பட்டான். அந்த உடலிலிருந்து அதை மறுத்து உண்மையின் உணர்வை அறியப்படும் பொழுது திருமூலராகின்றான்.

தவறின் வழிகளில் சென்ற அருணகிரிநாதரைத் தெளிவான நிலைகள் கொண்டு வருவதற்காக அந்த்த் திருமூலர் கண்ட உண்மையின் உணர்வுகளை அருணகிரியின் சகோதரி படித்தது.

ஆனால் அருணகிரிநாதரைத் திருத்த முடியாத நிலையில் உடலை விட்டுப் பிரியும் சகோதரியின் ஆன்மா
1.அருணகிரியின் உடலில் புகுந்து அந்த உடலை இயக்கி
2.திருமூலர் கண்ட உண்மைகளைப் பாடலாக வெளிப்படுத்தச் செய்கின்றது
3.அருணகிரிநாதரைத் திருந்தி வாழச் செய்கின்றது.

வில்லிபாரதம் என்று சொல்லுகின்றோமே… அதை எழுதிய வில்லிபுத்தூரார் அருணகிரி வாழ்ந்த காலத்தில் இருந்தவர் தான்.

புலமை பெற்றவர்கள்… கவிநயங்கள் கொண்டு பாடும் பாடல்களுக்குச் சரியான விளக்கம் சொல்லவில்லை என்றால் அவமதிக்கும் நிலையில் துரட்டியைப் போட்டுக் காதை இழுத்து ஊனமாக்கி விடுவார்கள். அக்கால வழக்கம் இது.

அருணகிரிநாதர் அங்கே செல்லும் பொழுது ஆறாவது அறிவின் தன்மையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார். வான்வீதியிலிருந்து வரும் உணர்வின் தன்மைகளைப் பெறும் போது அதன் வழியில் ஆறாவது அறிவு எப்படித் தெரிந்து கொண்டது…? தெளிந்து கொண்டது…? என்று அதை எடுத்துச் சொல்கின்றான்.

அப்போது அருணகிரிநாதர் ரா…ரா…ரா… ரீ…ரீ…ரீ…ரீ… ரு…ரு…ரூ…ரூ… என்ற பாடலைப் பாடப்படும் பொழுது “இதற்குண்டான விளக்கங்கள் சொல்ல வேண்டும்…!” என்று சொன்னவுடனே வில்லிப்புத்தூரால் அதைச் சொல்ல முடியவில்லை.

1.ரா..ரா.. ரீ..ரீ… என்ற உணர்வின் ஒலி அதிர்வுகளையும்
2.உணர்வுகள் மாற்றத்தையும் உணர்வுக்கொப்ப உடல்களின் அமைப்பும்
3.கோள்களின் அமைப்பும் பிரபஞ்சத்தின் மாற்றமும் என்ற நிலைகளில்
4.உயிர் என்ற இந்தப் பிரபஞ்சத்தில் உணர்வின் இயக்கமாக உடல்கள் எப்படி மாறுகின்றது…? என்ற தத்துவத்தைத் தான் அவன் பாடுகின்றான்.

இந்த விடைகளை அங்கே கேட்கப்படும் பொழுது வில்லிபுத்தூரர் சொல்ல முடியவில்லை. ஆனால் அவன் பாடிய பாடல்களுக்கு அருணகிரி விடை கொடுக்கின்றான் ஆனால் இவன் பாடிய பாடலுக்கு அவனுக்கு விடை கொடுக்க முடியவில்லை,

மகாபாரதப் போர் என்ற நிலையில் வரப்படும் பொழுது வில்லி பாரதத்தை எழுதிய வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரிடம் இந்த விளக்கங்களைக் கேட்ட பின் “ஆண்டாள்…” என்ற நிலையிலே அந்த உணர்வின் தன்மையைப் பதியச் செய்கின்றான்.

ஏனென்றால்…
1.எதனின் உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ அந்த உணர்ச்சிகள் தான் தன்னை ஆளுகின்றது (ஆண்டாள்).
2.நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே படும் பொழுது தான் அரங்கநாதன் என்றும்
3.உணர்வின் தன்மை தனக்குள் ஆளுகிறது என்றும் ஆண்டாள் என்று திருஸ்தலத்தை அவன் அமைக்கின்றான்.

அதன் வழி வில்லி பாரதத்தை எழுதி வில்லிப்புத்தூரார் (திருவில்லிப்புத்தூர்) திருந்தி வாழ்ந்தான்.

1.ஆகவே உடலை விட்டுப் பிரிந்த ஒவ்வொரு உயிரும் எந்த நிலையில்… எப்படிச் செயல்படுகின்றது..? என்பதை உணர்ந்து
2.இந்த மனித வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

நம் மீது மோதும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகவும் கூடாது

 

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது…” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன…?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.

இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றை மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையையும் கூட உயர்வு பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நாம் பக்தி கொண்டு சிலையைப் பார்த்து இதுதான் முருகன் என்றோ மற்றதென்றோ நாம் மந்திரத்தைச் சொல்லி அதன் உணர்வைச் ஜெபித்து “அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில்..” நாம் உணர்வினைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

திரும்பத் திரும்ப அப்படிப் பதிவாக்கிவிட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின் கடைசியில் நாம் இறந்துவிடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

1.இன்று அந்தத் தெய்வத்தை எதன் ரூபத்தில் காட்டினரோ (காட்டுகின்றார்களோ)
2.அதன் உணர்வின் அலையாக உடலுடன் இருக்கும் பக்தி கொண்ட ஆன்மாக்களுக்கு
3.(நாமே) தெய்வமாகக் “காட்சி கொடுக்கும் நிலை” வரும்.

காரணம்… நம் ஆசையைக் கூட்டி அந்த மந்திரத்தைச் சொன்னால் இதனால் இன்ன பலன் கிடைக்கும் என்று கூறுகின்றார்கள். நாமும் அதை நம்பி மந்திரங்களை ஜெபிக்கத் தொடங்குகின்றோம்.

எந்தச் சிலையைப் பார்த்து மந்திரங்களைச் சொல்லி இந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் இந்த உடலை விட்டுச் சென்றபின் எதன் உணர்வின் அலைகள் நமக்குள் பதிவானதோ அது தான் நம் ஆன்மாவில் பதிவாகியிருக்கும்.

ஒரு பட உருவை கேமராக்களில் எடுத்து அதை அலைகளாக மாற்றி மீண்டும் நீங்கள் திரைகளில் காணும் பொழுது அதே உருவத்தைக் காட்டுவார்கள். நாம் அதைப் பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான் நாம் பக்தி மார்க்கங்களில் எதன் வழி பட்டு எதனின் உணர்வை எந்தெந்த ஆசைகளை எண்ணி அந்த உணர்வின் வழி பெறுகின்றோமோ அதே சமயத்தில் அந்தச் சிலைக்கு என்னென்னெ புஷ்பங்களைப் போடுகின்றோமோ என்னென்ன நிறங்களில் உடைகளை உடுத்துகின்றோமோ அவைகள் அனைத்தையும் சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்கின்றது.

அலைகளாக மாற்றுகின்றது.

நம்முடைய கண்கள் உற்று நோக்கிய உணர்வைப் பதிவாக்குகின்றது. நுகர்ந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அந்த உணர்வுகள் உடல் முழுவதும் அந்த உணர்வின் அலைகள் படர்கின்றது.

1.“நாம் ஆசையின் நிமித்தம்… அந்தத் தெய்வத்தை வழிப்பட்டு” அதன் வழிகளில் நாம் பெருகி வந்தாலும்
2.இந்த உடலை விட்டு ஆன்மா செல்லும் பொழுது இன்னோரு பக்தி கொண்ட ஆன்மா இதே போல செய்தால்
3.இந்த ஆன்மா அங்கே சென்று “அருளாடும்”

நீங்கள் பார்க்கலாம். அந்தத் தெய்வம் வந்தது, இந்தத் தெய்வம் வந்தது என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் சில மந்திரவாதிகள் என்ன செய்கின்றார்கள்..?

இன்னென்ன மந்திரம் கொண்டு ஜெபித்தால் “இந்தத் தெய்வத்தைக் கைவல்யப்படுத்திக் கொள்ளலாம்…” என்று மந்திர ஒலிகளை எழுப்புவார்கள்.

அப்படி அவர்கள் ஜெபித்தார்கள் என்றால் நாமே இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் வளர்த்துக் கொண்ட நிலைகள் கொண்டு நம் உயிரான்மா அவன் கையில் சிக்கும்.

அவன் கையில் சிக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்கு மாற்றாக மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்வார்கள்.

அற்புதக் காட்சிகளாகக் காட்டுவதும் பல தீய வினைகளைச் செய்வதும் பல பொருள்களை வரவழைப்பதும் காட்சியாகவும் உங்கள் முன்னாடியே காண்பிப்பார்கள்… வெளிப்படுத்துவார்கள்.

உதாரணமாக…
1.ஒரு மனித உடலில் உருவான உணர்வினை ஒரு தாவர இனத்திற்குள் பதிவாக்கிவிட்டால்
2.மீண்டும் அதை எண்ணத்தில் செயலாக்கினால்.. “ஒரு இலை அப்படியே நகர்ந்து வரும்”
3.ஒரு தேங்காயை வைத்து இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி அதில் ஏற்றிய பின்
4,அதை எண்ணத்தால் சுழலச் செய்ய வேண்டும் என்றால்.. “அந்தத் தேங்காயே சுழலும்”

இதைப் பார்ப்போர்கள் எல்லோரும் அதனைக் கண்டு வியந்து “அவரிடம் அபூர்வமான சக்தி இருக்கிறது..” என்று செல்லத் தொடங்குவார்கள்.

இந்த வாழ்க்கையில் அவன் சொல்லைக் கேட்டால் அந்தத் தெய்வ சக்தி பெறுவோம் அதன் வழியில் செல்வத்தைத் தேடுவோம், சுகத்தைத் தேடுவோம் என்ற உணர்வுகளைத்தான் இன்று “நூற்றுக்குத் தொண்ணூறு மக்கள்.., வாழ்ந்து கொண்டுள்ளார்கள்”.

1.கற்றவரும் சரி.. கற்காதவரும் சரி..
2.தெய்வமே இல்லை என்று சொல்வோரும் சரி..
3.தனது செல்வத்தைக் காக்க மந்திரங்களைக் கைக் கொண்டு
4.இதனால் தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டிய நிலைகள்.

அமாவாசை அன்று செய்யக் கூடாதது…

 

பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மந்திரம் சொல்லும் பழக்கம் இன்றுள்ள பெரும் பகுதியான மக்களிடம் உள்ளது.
1.இறந்த பின் அந்த உடலைக் கருக்கி விட்டாலும்
2.உடலில் இருந்து வெளியேறிய உயிரான்மா இந்தக் காற்று மண்டலத்தில் தான் இருக்கும்.

“ஐந்தாம் படை…” என்று சொல்வார்கள். நாட்டுக்கு நாடு ஒவ்வொரு அரசனுக்கும் அது இருக்கும். எங்கெங்கே என்ன இருக்கின்றது…? என்று இறந்தவர்களைப் பற்றிய முழு விவரங்களை அரசனுக்குச் சொல்வார்கள்.

அதனின் செயல்கள் இன்றும் குடுகுடுப்புக்காரன் என்ற பெயரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் நடந்து செல்லும் போது பாதம் பட்ட நிலைகளில் வீட்டு வாசல்படியில் இருக்கக்கூடிய மணலை எடுத்துக் கொள்வார்கள்.

நல்லது செய்வதாக… ஜோதிடம் சொல்வது மாதிரி நம் வீட்டிற்கே வந்து தலை முடியையும் பழைய துணியையும் கேட்டு வாங்கிச் செல்வார்கள்.

குடுகுடுப்புக்காரர்கள் என்று சொல்வதெல்லாம் அரசர்களுக்கு ஐந்தாம் படை வேலை செய்தவர்கள் தான். அன்றைய அரசன் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மக்கள் மத்தியில் வந்து இந்த மூன்று பொருள்களை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த முன்னோர்களுக்கு நாம் இங்கே என்ன செய்கின்றோம்…?

சுட்ட சாம்பலை எடுத்துக் கரைத்து விடுகின்றோம். அமாவாசை அன்று அவர்களுக்கு உணவு படைத்து அவர்கள் அணிந்த துணிகளை எல்லாம் வைத்து அழைப்போம்.

அதே சமயத்தில் அமாவாசை அன்று பித்ருக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களை எழுதி வைத்துள்ளார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

அமாவாசை அன்று சூரியனுடைய ஒளிக்கதிர்கள் அதிகமாக நமக்குக் கிடைப்பதில்லை. ஏன்…?

பூமியைச் சேர்த்துச் சுழன்று கொண்டிருக்கும் சந்திரன் சூரியனுடைய ஒளிக் கதிர்களைக் கவர்ந்து ரசம் பூசிய கண்ணாடி போல் எல்லா நாளும் நமக்குப் பரப்பிக் கொண்டு இருக்கின்றது. அதாவது பூமியின் இயக்க உணர்வுக்கு உதவி செய்கிறது சந்திரன்.

ஆனால் சந்திரனை பூமி முழுமையாக மறைக்கப்படும் போது
1.சூரியனுடைய ஒளிக்கதிர்கள் வராதபடி அது பூரண அமாவாசை ஆகின்றது.
2.அதனால் சந்திரன் மூலம் சூரியனின் ஒளிக்கதிர்கள் நமக்குச் சரியாகக் கிடைப்பதில்லை (பூமியிலிருக்கும் எல்லாவற்றுக்கும் இதே நிலை தான்)
3.அன்று கனமான சுவாசமாக நமக்கு இருப்பதன் காரணமே இது தான்

ஆகையினால் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் இங்கே சுழன்று கொண்டிருக்கப்படும் போது அமாவாசை அன்று வழக்கமாகக் கிடைக்கும் அலைகள் அவர்களுக்கும் கிடைப்பதில்லை.

அமாவாசை அன்று நாம் சாப்பாடு போட்டுத் துணிமணிகளை எல்லாம் வைத்து முன்னோர்களைக் கூப்பிடுவோம்.

ஆனால் அரசன் என்ன செய்வான்…?

அதற்கென்று ஒரு ஆளை நியமித்திருப்பான்.
1.வாழும் போது நாம் எந்தெந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்தோமோ
2.அந்த விவரங்களை எல்லாம் அவன் அரசனிடம் சொல்வான்.

அதன் பிரகாரம் கோவில்களோ மற்ற இடங்களிலோ “மந்திரங்களைச் சொல்லி” யாகங்களை வளர்ப்பார்கள். மந்திர ஒலிகளை வைத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நம் முன்னோர்களின் ஆன்மாக்களைக் இழுத்து கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

அதாவது
1.நாம் இங்கே உணவையும் அவர்களின் துணியையும் வைத்துக் கூப்பிடும் போது
2.அவர்கள் அங்கே இழுத்துக் கவர்ந்து கொள்வார்கள்.

ஆக மொத்தம் உடலுடன் இருக்கப்படும் பொழுது அரசனுக்கு அடிமை. இறந்த பின்னும் ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி விடுவான்… நம் ஆன்மாவும் அவனுக்கு அடிமை தான். கைவல்யப்படுத்திய ஆன்மாக்களை எதிரி நாட்டின் மீது ஏவிப் பில்லி சூனியங்களுக்குப் பயன்படுத்துவான்.

அரசர்களுக்குள் போர் முறை வரப்படும் பொழுது பக்தியின் தன்மை கொண்டு இறந்தார்கள் என்றால் எதிரிகளை வீழ்த்தும் உணர்வுடனே மடிகின்றனர்.
1.அந்த ஆன்மாக்களையும் கவர்ந்து கொண்டு எதிரிகளை வீழ்த்த ஏவல் செய்வான்.
2.இதைப் போன்று தான் மாற்று அரசனும் செய்வான்.
3.மனித உடலிலிருந்து எடுத்துத் தான் அன்று இந்த வேலைகளைச் செய்வார்கள்.
4.அன்றைய அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இது தான்.

தனுர் வேதம் கற்றுக் கொண்டவர் தான் போர்முறை நடத்த முடியும் என்று இதைத் தான் மகாபாரதத்தில் சொல்லியிருப்பார்கள்.

தனுர் வேதம் என்றால் ஒரு மனிதனுக்குள் மந்திரங்களைச் சொல்லிப் பதிவு செய்து அதன் பின் அதே பதிவை வைத்து மீண்டும் இறந்த பின் அந்த ஆன்மாவைக் கவர்ந்து ஏவத் தெரிய வேண்டும்.

அப்படி ஏவத் தெரிந்தவன் எவனோ அவன் தான் அந்த நாட்டையும் மற்றதையும் பாதுகாக்க முடியும் என்று அரசு நியதிகள் அன்று உண்டு.

ஒரு மனிதனுக்குள் மந்திர ஒலியினைப் பதிவாகி அந்தப் பதிவை மீண்டும் எடுத்துக் கொள்ளத் தெரிய வேண்டும். அதை வைத்துத் தான் அன்று பல நிலைகளைச் செயல்படுத்தினார்கள்.

எளிதில் ஆன்மாக்களைக் கவர்வதற்குத் தான் அமாவாசை என்று அந்த இருண்ட நாளை அன்று அரசன் தேர்ந்தெடுத்தான்
1.அன்று அரசன் எதைக் காட்டினோ அதே வழியில் தான் நாமும் செயல்படுகிறோம்.
2.அரசனால் காட்டப்பட்ட சாஸ்திர விதிகளில் இப்படிச் சிக்கி
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை உயர்ந்த நிலை பெறச் செய்யாதபடி
4.ஐதீகம் என்ற முறைகளில் மாதத்தில் ஒரு நாளும் வருடத்தில் ஒரு நாளும் ஒரு சாங்கியத்தைச் செய்து விட்டு
5.அதனுடன் திருப்தி அடைந்து கொள்கிறோம்

அதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும். சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சப்தரிஷி மண்டல ஒளி அலைகளை முதலில் நமக்குள் வலு கூட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்தப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து “நேரே…” அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்…!

இவ்வாறு “தினசரி” நாம் எண்ணுதல் வேண்டும்.

ஒவ்வொரு உயிரும் பெற வேண்டிய உயரிய தன்மையைத் தான் அகஸ்தியர் விநாயகனாகக் காட்டினார்

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும் அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் “சிலை வடிவில்…” சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்களின் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
2.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்…!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே…” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால்
1.தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும் என்பதற்காக
2.விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே “கணங்களின் பதியான கணபதி ஆவான்…” என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் மந்திரவாதிகளோ அல்லது அதைப் போன்ற மற்றவர்கள் தந்திரங்கள் செய்வதை உற்றுப் பார்த்தால் அவர்கள் உணர்வை நுகர நேர்ந்தால் கருவிலிக்கும் குழந்தைக்குள் அது இணைந்து விடுகின்றது.
1.அதனால் அதனின் வளர்ச்சி குன்றிவிடுகின்றது
2.சிந்திக்கும் தன்மையை இழந்துவிடுகின்றது.

இப்படிப் பிறிதொரு பக்கம் தீமைகள் நடப்பதைக் கருவுற்றிருக்கும் தாய் நுகரும்போது இதே போன்ற தீமைகள் ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் அல்லவா..!

ஒரு குடும்பத்திலே தாய் கருவுற்றிருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டாலே அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து அந்தக் கருவில் வளரும் குழந்தை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி அந்தச் சிசு பெற வேண்டும். உலகைக் காத்திடும் அருள் ஞானம் அந்தக் குழந்தை பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

நமது சாஸ்திரங்களில் சரஸ்வதி என்ற படத்தைப் போட்டுக் காட்டி அதை “ஞானத்தின் தொடர்” என்று சொல்வார்கள்.

கருவுற்ற தாயை அந்தப் படத்தை உற்றுப் பார்க்கும்படிச் செய்து அது எவ்வாறு ஞானத்தின் தொடரில் வளர்ந்து வந்ததோ அதைப் போல “ஞானத்தைப் பெறும் சக்தியாக… என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்” என்று எண்ணிச் சுவாசித்தல் வேண்டும்.

அதே போன்று இலட்சுமி படத்தை உற்றுப் பார்த்து அனைவரையும் மகிழச் செய்யும் அந்த உணர்வின் சக்தி என் கருவில் வளரும் குழந்தை பெற வேண்டும் என்று இப்படி அந்தத் தாய் எண்ணுதல் வேண்டும்.

சரஸ்வதியைப் போன்ற ஞானத்தின் சக்தியும் இலட்சுமியைப் போன்ற மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியும் கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்தத் தாய் கிடைக்கப் பெறச் செய்தல் வேண்டும்.

குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அந்தத் தெய்வீக உணர்வுகளை உற்று நோக்கி அந்தச் சக்திகள் அனைத்தும் கருவிலிருக்கும் சிசு பெற வேண்டும் என்று எண்ணினால் அதே உணர்வுகள் கருவிலே வளரும்,
1.அந்தப் படம் எவ்வளவு அழகாக இருக்கின்றதோ அதே போல உணர்வுகள் இங்கே குழந்தைக்கும் வரும்
2.அப்படிப் பிறந்தால் தன்னைக் காக்கும். தன் குடும்பத்தைக் காக்கும். இந்த ஊரையும் காக்கும்… இந்த உலகையும் காக்கும்.

ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட அருள் ஞானம் பெற்றவர்களாக உருவாகிட வேண்டும் என்பதற்குத்தான் நம்முடைய முன்னோர்கள் இங்கே இவ்வளவு ஆலயங்களையும் சாஸ்திரங்களையும் வடித்தார்கள்.

இன்று நாம் அதையெல்லாம் சிறிதளவாவது எண்ணுகின்றோமா..,? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே நம் நாட்டிலே தோன்றிய அந்த அருள் ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த சாஸ்திரங்கள்படி நாம் இந்த வாழ்க்கையில் வாழ்ந்தால் பேரானந்தப் பெரு நிலை என்ற நிலை எய்த முடியும்.

இது தான் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள்.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றையும் நேர்கோட்டில் வைத்திருப்பவனே குருவாக முடியும்

 

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்…” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான்.

குரு என்றால் என்னப்பா…?

குரு என்றாலே “ஒளி நிலை…” என்பது பொருள்…!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு… எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி… சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி… உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானுகோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர். ஆனால் சிலரே அனைத்து உயிர்களும் அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்…!” என்ற நிலை இல்லையப்பா…!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்…! என்ற சொல்லும் எதற்கப்பா…?

“தனித்துவமான சக்தி…” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்… மாமகரிஷிகளின் ஆசியுடன்… “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை…” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது…?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்… சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்… கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே…?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்…! குருதேவரே ஊட்டட்டும்… என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே…?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்…? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியர் அவர் மனைவியும் ஒன்றி வாழ்வது போல் கணவன் மனைவி நீங்கள் ஏகாந்தமாக வாழும் அருள் சக்தியைப் பெறுங்கள்
இன்று கணவன் மனைவியாக வாழ்பவர்களில் எந்த அளவிற்கு ஒன்றுபட்டு வாழ்கின்றார்கள் என்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

குடும்பங்களில் எடுத்துக் கொண்டால் சில நேரங்களில் கணவரை எதிர்த்துப் பேசும் நிலைகளும் சில நேரங்களில் மனைவியை அடிமையாக்கும் உணர்வுகளும் தான் “பெரும் பகுதி” இன்று வருகின்றது.

கணவன் மனைவியை அடிமையாக்கும் இந்த உணர்வின் தன்மை வந்து விட்டால் “வெகுண்டெழுந்து.., சீறிப்பாயும் உணர்வுகள்.., பெண்கள் மத்தியில் உருவாக்கிவிடுகின்றது”.

இதைப் போன்ற “சீறிப் பாயும் உணர்வுகள்” பெரும்பகுதி வீடுகளிலும் சரி… சொந்தபந்தங்களிலும் சரி… இதைப் போன்ற எத்தனையோ இடங்களிலும் சரி… கடுமையான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் உள்ளது.

இத்தகைய விஷமான உணர்வலைகள் சூரியனின் காந்தப்புலனறிவினால் கவரப்பட்டு காற்றிலே அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது.
1.அத்தகைய கருக்கள் அதிகமாகி விட்டால்
2.அந்தக் குடும்பத்திலேயே விஷத் தன்மைகள் பரவி
3.சிந்தித்துச் செயல்படும் செயல்களையே இழக்கச் செய்துவிடுகின்றது.
4.ஒன்றி வாழும் நிலையை இழக்கச் செய்கின்றது
5.மன அமைதியைக் குலைக்கின்றது.

நம்மை அறியாமல் குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொண்டாலும் இந்த உணர்வுகள் நமக்குள் நுகரப்படும் பொழுது அங்கிருப்போர் அனைவருக்கும் வெறுப்பின் உணர்வுகளும் வெறியான உணர்வுகளுமே உடலுக்குள் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

அதே சமயத்தில் வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் பொழுது
1.“சண்டையிட்ட உணர்வுகளும்… வெறுப்புடன் பேசிய உணர்வுகளும்”
2.வீட்டில் உள்ள தரைகளிலும் சுவர்களிலும் மற்ற இடங்களிலும் “பதிவாகிவிடுகின்றது”

இவ்வாறு ஒருவருக்கொருவர் வெறுப்பான செயல்களைச் செய்யப்படும் பொழுது கடைசியில் வேதனை அதிகமாகிவிடுகின்றது.

வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது “கடும் வாத நோய்களை” உருவாக்கிவிடுகின்றது. மனிதனின் உறுப்புக்களைச் சீர் குலையச் செய்து சிந்திக்கும் தன்மை அனைத்தும் இழந்து “ஏங்கித் தவிக்கும் நிலையே” உருவாகிவிடுகின்றது.

கை கால் அங்கங்கள் செயல்படவில்லை என்றால்.., “யார் கொடுப்பார்..,? எவர் கொடுப்பார்..,? யார் நமக்கு உதவி செய்வார்கள்..,? என்ற உணர்வினை ஏங்கிப் பெறும் நிலையே வருகின்றது.

ஏங்கிப் பெறும் நிலைகள் வந்தாலும்… “ஏங்கும் பொழுது கிடைக்கவில்லை என்றால்..” மீண்டும் எல்லை வேதனையே அதிகமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமா வேண்டாமா…! கணவன் மனைவியாக வாழ்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.“எப்பொழுதுமே… கணவன் மனைவிக்குள்… பகைமை உணர்வே வரக்கூடாது”
2.இதை இருவருமே உறுதியாக்கிடல் வேண்டும்.

எப்பொழுதும் சந்தர்ப்பபேதங்கள் வருகின்றதோ அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள்.

நாங்கள் கணவன் மனைவி இருவருமே வசிஷ்டரும் அருந்ததியும் போன்று ஒரு மனமும் ஒரு மனமாகி நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்ற உணர்வை இழுத்துச் சுவாசியுங்கள்.

அந்தத் துருவ மகரிஷி எப்படிக் கணவனும் மனைவியும் இணைந்து வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தனரோ அதே போல நாமும் இந்த வாழ்க்கையில் நிச்சயம் வாழ முடியும்.

இந்த உணர்வுகளைப் பதிவாக்கிவிட்டால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் நாம் சிக்காது “ஏகாந்த நிலைகள் கொண்டு..,” பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

நாம் உயிருடன் ஒன்ற வேண்டும்.. உடலுடன் அல்ல…! என்று தான் இராமாயணம் காட்டுகிறது

 

கர்ப்பமாக இருக்கும் சீதாவை இராமன் காட்டிலே விட்டு விட்டுச் சென்று விடுகின்றான். அங்கே கர்ப்பிணியாகத் தவித்துக் கொண்டிருக்கும் சீதாவின் நிலையை உற்றுப் பார்த்து அருகிலே வான்மீகி இருக்கும் ஆசிரமத்திற்குச் அழைத்துச் செல்கின்றனர்.

வான்மீகி சீதாவின் உண்மை நிலையை உணர்ந்து கொள்கின்றார்.

சீதா என்ற மகிழ்ச்சி என்ற உணர்வின் தன்மை…
1.இராமனின் செயலும் – அந்த எண்ணத்திற்குத் தக்க இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்றும்
2.அரசாங்க நிலைகள் எப்படி ஆகின்றது…? என்றும்
3.மக்கள் எப்படி வாழுகின்றனர்…? என்றும் இந்தக் காவியத்தின் உண்மை நிலைகளைச் சொல்கின்றார்.

வான்மீகி சீதாவிற்கு ஓதிய வான இயலின் உணர்வுகள்… சீதா நுகர்ந்த அந்த மெய் உணர்வுகள்… இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.

பத்து மாதம் ஆகிப் பிறந்த பின் வளர்ச்சியாகி லவ குசா என்ற நிலையில் இராம காவியத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

தன் தாயின் செயலை…
1.சீதா மாசு பட்டதல்ல… மாசற்ற நிலை கொண்டது
2.எதனிலும் கலக்கவில்லை… உண்மையின் உணர்வுகளையே பெற்றது என்ற நிலையில்
3.இராமனின் நிலைகள் எதனெதன் உணர்ச்சியின் தன்மையோ அதனதன் உணர்வுகள் தான் செயல்படுகிறது என்று பாடலாகப் பாடுகின்றார்கள்.

இது எல்லாம் மனிதர்கள் புரிந்து கொள்வதற்குத் தான்.

ஆனால் வெறும் கதையாகத் தான் படித்துத் தெரிந்து கொள்கின்றோமே தவிர உண்மையின் உணர்வை நாம் அறிந்து கொள்ளும் நிலையே அற்றுப் போய்விட்டது.

காரணம்… “நமது உணர்வுக்கொப்ப” உற்றுப் பார்க்கப்படும் போது அதே உணர்வு வருகின்றது. அந்த உணர்வைத் தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோமே தவிர
1.ஞானத்தின் உணர்வைப் பெறும் தகுதி இல்லாது
2.காவியத் தொகுப்புகளை அவரவர்கள் இஷ்டத்திற்குச் செயல்படுத்தி விட்டார்கள்.

ஆனால் குருநாதர் இதை எல்லாம் எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

வான்மீகி உணர்த்திய அந்த வழிப்படி லவ குசா இராமனைப் பற்றிப் பாடுகின்றனர். பாடலைக் கேட்கும் பொழுது இராமன் தன் மனைவி சீதா மாசு பட்டவள் அல்ல என்ற உண்மையை உணர்கின்றான்.

சீதா எவ்வளவு தொல்லை பட்டிருக்கும் என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ச்சி என்ற நிலைகளில் இனி அரவணைத்து
1.தான் செய்த குற்றத்தை மறந்து என்னுடன் இணைந்து மீண்டும் வாழலாம் என்ற நிலைக்கு இராமன் வருகின்றார்
2.ஆனால் மாசுபடும் உணர்வுடன் கலந்தால் அந்த உணர்வின் தன்மை எப்படி இருக்கும்…? என்ற நிலையைத் தான் இங்கே காட்டப்படுகின்றது.

விஷ்ணுவின் பக்தன் ஆஞ்சநேயர் என்றாலும் அதே உணர்வின் தன்மை தான் எண்ணிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன் என்று கூறப்படுகின்றது.

எதை எல்லாம் நுகர்ந்தோமோ உயிரான விஷ்ணுவிடம் வரும் போது அது வரம் கொடுக்கும் நிலையாக அமைந்து விடுகின்றது. இந்த உணர்வின் தன்மை உடலில் சேர்க்கப்படும் பொழுது சீதா – மகிழ்ச்சியின் தன்மையை பிரம்மம் ஆகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி அந்த ஞானத்தின் தன்மை கொண்டு வருகின்றது.

இருந்தாலும் இந்தச் சீதா…
1.தன் உணர்வின் தன்மை என்றும் ஒளியின் மயமாக வேண்டும் என்றும்… அருளொளியாக வளர வேண்டும்
2.கணவன் மனம் தெளிந்திட வேண்டும் தெளிவான நிலைகள் வளர வேண்டும் என்ற
3.தெளியச் செய்யும் உணர்வின் தன்மையைத் தான் எண்ணத்தால் எண்ணி எடுக்கப்படும் பொழுது
4.எந்தச் சுவையின் தன்மையோ… விஷ்ணுவிடம் இணையும் நிலை தன்மை வரப்படும் பொழுது
5.நுகர்ந்த உணர்வின் தன்மை (சீதா) ஒளியாகி அதைத் தன்னுடன் அரவணைக்கும் தன்மை வருகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் தன் கணவன் (விஷ்ணு) என்ற நிலையில் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு “நிலையான நிலைகள்” பெற்றதனால்
1.கடைசியில் இராமன் அரண்மனைக்குக் கூப்பிடும் பொழுது
2.இந்தப் பூமியில் விளைந்த உணர்வின் சத்து பூமியைப் பிளந்து
3.உடலில் பெற்ற சத்துக்கள் எல்லாம் பூமியுடனே ஐக்கியமாகின்றது.

ஆனாலும்… பூமியிலே வந்த மணத்தின் உணர்வுகள்… உணர்ச்சிகள்… வந்ததெல்லாம் சீதா எடுத்துக் கொண்டதனால் உணர்வின் தன்மை ஒளியாகி… உணர்வின் தன்மை அது இயக்கமானது போல
1.”சீதா – சீதாராமா என்ற சுவையின் உணர்வின் ஒளியாக விஷ்ணுவுடன் ஐக்கியமாகின்றது…
2.சொர்க்கம் அடைந்தது என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

இதனின் விரிவாக்கம் சொல்ல வேண்டும் என்றால் குறைந்த்து இரண்டு மாதம் ஆகும். உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லி இந்த உண்மைகளை நீங்கள் உணரும்படி செய்கின்றோம்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் உண்மையின் இயக்கங்களை நீங்கள் அனுபவங்களாகத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே இராமாயணத்தில் அவ்வளவு பெரிய உண்மைகள் உண்டு.

காட்டிற்குள் அழைத்துச் சென்று… சீதா என்ற சுவையைப் பற்றிய உண்மை நிலைகளை “மனிதனான பின் இதையெல்லாம் தெரிந்து கொள்கிறோம்…” என்று குருநாதர் எனக்கு உணர்த்துகின்றார்

நான்…! என்பது யார் என்று புரிந்ததா…?

 

1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து… பொருள் புரிந்து… அறிந்து… தெளியும் வகைகள் புலப்பட எழுத்தில் வடிக்கும் ஆசானும்
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு… கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போயின…?

கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைக்கின்றான் மனிதன்…! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?

எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்…” என்றால் வெறும் உலகோதய நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்கன்றோ சென்று விட்டது “அறிவு…”

எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால்
1.ஆத்மாவா…. நான் என்பது…?
2.எண்ணத்தின் அலையே சுவாசமாகி…
3.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி…! என்று பாடுகின்றோம்.

ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது.

அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.

சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்…” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்… உறங்குவதும்… புறத் தொழில் புரிவதும்… கழிவுகளை நீக்குவதும்… பார்த்தல்… கேட்டல்… நுகர்தல்… சுவைத்தல்… ஸ்பரிசித்தல்… அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே… இயல்பாக… “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்…”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?

சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?

எண்ணத்தின் அலையே சுவாசமாக சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான். “நான்…” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெற வேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி எந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட… மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்…!”

நான்…!” என்பது யார் என்று இப்பொழுது… “புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமேஸ்வரத்தில் இராமன் செல்லப்படும் பொழுது சிவலிங்கத்தைப் பூஜிக்க லிங்கத்தை எடுத்து வருவதற்கு ஆஞ்சநேயனை அனுப்பினான்.

ஆனால் அவன் வரக் காலதாமதமாகிவிட்டது.
1.ஆகவே “இராமன் மணலைக் குவித்தான்”
2.அதைச் சிவலிங்கமாக வைத்து வணங்கினான் என்று காட்டுகின்றார்கள்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் உட்பொருள் என்ன…?

இராமன் என்றால் நம் எண்ணங்கள். ஆக, எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமேஸ்வரம். நம் மனதைக் குவிக்கும் இடம்தான் “இராமேஸ்வரம்…”

கடைசியில் “நேரமாகிவிட்டது…” என்று இராமன் என்ன செய்கின்றான்…? மணலைக் குவித்து பூஜித்தான்.

1.எல்லோரும் அன்போடு இருக்க வேண்டும் என்று (நம் எண்ணங்களை) நம் மனதைக் குவித்துப் பழக வேண்டும்.
2.மனதைக் குவிக்கவில்லை என்றால் என்னவாகும்…? இரண்டும் சேர்த்துச் சண்டைப் போட்டுக் கொள்ளும்.
3.“சிறிது காலமே… இந்த மனித உடலில் வாழ்கின்றோம்..!” அதற்குள் இந்த மனித உடலில் மனதைக் குவித்தல் வேண்டும்.
4.அதாவது எல்லாக் குடும்பங்களும் நல்லது பெற வேண்டும் என்று மனதில் எண்ண வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கின்றார்கள்? விஷ்ணு பக்தர்கள் சிவனை வணங்க மறுக்கின்றனர்.

சிவனை வணங்குவோர் இராமனை வணங்கினால் அது பாபம் என்றும் இராமனை வணங்குவோர் சிவனை வணங்கினால் அது தோஷம் என்றும் இப்படியெல்லாம் நம்மைப் பிரித்து விட்டனர்.

மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உண்மைகளின் இயக்கத்தை நாம் அறிய முடியாது அரசர்கள் ஆண்ட நிலையில் காலத்தால் தடைப்படுத்தப்பட்டுள்ளது.

ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை நாம் அறிய முடியாதவண்ணம் காலத்தால் அழிந்தே போய்விட்டது.

இன்று அதை யாம் வெளிப்படுத்தினால்…
1.இது என்ன…? “புதிதாக இருக்கின்றது…!”
2.இவர் கடவுளே இல்லை.., என்று சொல்கிறாரே… என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாக இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். இராமேஸ்வரத்தில் “மனிதனுடைய பொக்கிஷம்” அத்தனையும் உண்டு.

இராமாயணத்தில் “இராமேஸ்வரம்…” எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின் “பூஜைக்கு நேரமாகிவிட்டது…” என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

1.“நேரமாகிவிட்டது…” என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர்
2.ஆனால் “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது…” என்பது தான் அதனுடைய பொருள்.

நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு இராமர் மணலைக் குவித்து (மனதைக் குவித்து) சிவ பூஜை செய்தார். சிவலிங்கத்தை பூஜித்தார்… சிவலிங்கமாக மாற்றினார்… என்று காண்பித்தார்கள்.

எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

1.நாம் எண்ணத்தால் பல தீமைகளை அகற்றி உணர்வின் எண்ணங்களைக் குவித்தால்
2.அத்தகைய எண்ணங்களால் உருவானது தான் “உயிரின் ஒளிகள்..,” என்பதை
3.“இராமலிங்கம்..” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

எதனின் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றதோ அதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை அணுவாகி அந்த உணர்ச்சியின் செயலாக நாம் செயலாக்கி அந்த “உணர்ச்சிக்கொப்ப உடலின் ரூபங்கள் ஆனது..,” என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

கல்லாவின் பால்

 

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனம் கொண்டே சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்டிட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாக உயிராத்மாவை எண்ணி
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெற்றிடவே “மௌனம்…”

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால் “பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல…”

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெற்றிடும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏடறிவின் வழி கற்றவர் அன்றி படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கல்லா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின் தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொண்டிடும் சப்தரிஷிகளின் ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
2.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
3.என் நிலைக்கும் உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தின்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில் ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில் உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஜோதிடம் ஜாதகம் பார்த்து நல்ல நேரம் வருகின்றதா.,,! கெட்ட நேரம் வருகின்றதா..,? என்று பலர் கூடிப் பார்க்கின்றார்கள். யாகங்கள் பல செய்கின்றார்கள்.
1.அவர்கள் எல்லாம் உடலுடன் இன்று இருக்கின்றனரா…?
2.அவர்கள் உடலிலுள்ள துன்பங்களைப் போக்கினார்களா…?
3.துன்பத்தைப் போக்கினாலும் அவர்கள் செல்வத்தையெல்லாம் நிலை நிறுத்தினார்களா…?
4.செல்வம் இவருடன் செல்கின்றதா..,? உடலுடன் செல்கின்றார்களா…? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

பல ஜாதகங்களையும் ஜோதிடங்களையும் பார்த்துத்தான் நல்ல நேரத்தை அமைத்துத் திருப்பூட்டுகின்றனர். திருப்பூட்டிய பின் ஒரு சிலரே அவருடைய சந்தர்ப்பம் “உயர்ந்த வாழ்க்கை” வாழ்கின்றனர்.

நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் ஜாதகம் ஜோதிடம் பார்த்தாலும் திருமணமாகி வீட்டுக்கு வந்த பின் பல புகைச்சல் பல வெறுப்புகள் பல வேதனைகள் “எல்லாமே வருகின்றது…”

எல்லாப் பொருத்தமும் பார்த்துத் திருமணம் செய்தாலும் இங்கே பகைமை உணர்வு வளர்ந்து விட்டால் அதனால் பல நோய்களும் வந்துவிடுகின்றது.

ஒருவருக்கொருவர் வெறுத்துப் பேசும் பொழுது வெறுப்பின் உணர்வு வீட்டிற்குள் பரவப்படும் பொழுது “பாவி மகள் என் வீட்டிற்குள் வந்தாள்… எல்லோருக்கும் நோய் வந்துவிட்டது” என்பார்கள்.

இவர்கள் பண்படுத்தும் உணர்வைத் தவறியதனால் வெறுப்பின் உணர்வைத் தனக்குள் வளர்த்ததால் அந்த உணர்வால் இவர்களுக்குள் நோயாகி விடுகின்றது.

ஆனால் “மருமகள் வந்தாள்… அதனால்தான் என் குடும்பம் சிதைந்து விட்டது…” என்று இவர்கள் செய்யும் தவறை விடுத்து… வந்த மருமகள் மேல் பழியைப் போட்டு “மீண்டும்… குடும்பத்தில் சிக்கல்களையே ஏற்படுத்துகின்றனர்…”

ஜாதகம் ஜோதிடம் பார்த்துத்தான் திருமணத்தைச் செய்து வருகின்றனர். ஆனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்தே விடுகின்றது.

அப்பொழுது துயர்படும் உணர்வுகள் வரும் பொழுது விஷத் தன்மையான உணர்வுகள் ஆகிவிடுகின்றது.
1.அப்பொழுது இவர்கள் பார்த்த ஜோதிடம் எங்கே போய்விட்டது…?
2.இவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்னவாகிவிட்டது…?

பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்காக தெய்வத்தின் மேல் பூவை வைத்துக் கேட்பார்கள். இந்தக் கலர் பூ வந்தால்… “எனக்கு நல்லது” என்றும் எண்ணுவார்கள்.

சிலை மீது அந்தப் பூவை வைத்தபின் இவர்கள் எண்ணம் எப்படியோ அப்படித்தான் விழுகும்.

கலக்கமான எண்ணத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுடன் கண்ணின் பார்வை அங்கே பட்டால் உணர்வுகளுக்குள் உணர்வுகள் மோதப்படும் பொழுது அன்று அதன் வழி தான் நடக்கும்.

உதாரணமாக அன்று வேதனையை அதிகமாக எடுத்திருந்தால் வேதனை வரும். “எப்படியும்.. இன்று நல்லதாக வேண்டும்…” என்று எண்ணியிருந்தால் அதற்குத்தக்க நல்ல பூ வரும்.

நல்ல பூ விழுந்த பின் என்ன செய்கின்றனர்…? எல்லாத் தெய்வமும் ஒத்து வந்துவிட்டது… ஜாதகமும் ஒன்றி வந்துவிட்டது. ஆகவே திருமணத்தை நடத்தலாம் என்று வருகின்றனர்.

அத்தகைய நிலைகளில் பார்த்தாலும் திருமணமாகி வந்தபின் இவர்கள் எண்ணிய நிலைகள் கொண்டு அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் வரப்படும் பொழுது வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது.

ஒன்றுபட்டு வாழும் நிலைகள் மாறிவிடுகின்றது. பகைமை ஆகிவிடுகின்றது.
1.அப்பொழுது அந்த ஜாதகம் காக்கின்றதா…?
2.பூ வைத்துக் கேட்ட அந்தத் தெய்வம் காக்கின்றதா…?

இல்லை…! “உங்களுடைய எண்ணங்களை உயர்த்தி வரப்படும் பொழுது… அதுவே தெய்வமாகின்றது…”

ஞானிகள் காட்டிய அருள் வழியில் ஜாதகம் மனிதனுக்கு இல்லை.

இயற்கை தாவர இனங்களுக்கு உண்டு. “கிரேதா…” என்ற நிலையில் செடி கொடி இவைகளுக்கும் சூரியன் மற்ற கோள்களுக்கும் ஜாதகம் உண்டு.

தனக்குள் கிரகித்து உணர்வின் தன்மை சேர்த்துக் கொள்ளும் நிலைகளுக்கு அது உண்டு. அது எந்த உணர்வு கொண்டு உடல் பெற்று அதன் உணர்வின் மணத்தால் நுகர்ந்து செல்லும் மற்ற உயிரினங்களுக்கும் ஜாதகம் உண்டு.

ஆனால் மனிதனோ தீமைகளை அகற்றிவிட்டு உணர்வினை ஒளியாக மாற்றும் இந்தச் சக்தி பெற்றவனுக்கு ஜாதகம் என்பது இல்லை.

நியுமராலஜி – இந்தப் பெயரை இப்படி மாற்றி வைக்க வேண்டும் அப்படி வைக்க வேண்டும் என்றும் அதனால் நன்மை கிடைக்கும் என்று தாய் தந்தை வைத்த நல்ல பெயரை மாற்றிக் கொள்கின்றார்கள்.

வாஸ்து சாஸ்திரம் – வீட்டில் வாசலையோ சுவரையோ இப்படி மாற்றினால் சரியாக வரும் என்று அதற்காக கட்டிய வீட்டை இடித்து மாற்றவும் செய்கின்றார்கள்.

பணத்தைச் செலவழித்து மாற்றியமைத்துச் சிறிது காலம் நன்றாக இருந்தாலும் அடுத்த கணம் சொந்தத்தில் பிரியப்பட்டவர் ஒரு ஆக்சிடெண்ட் ஆகி இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்…?

“அடப் பாவி மகனே…” எப்படி இருந்தான்..,? இப்படிப் போய்விட்டானே…” என்ற வேதனை உணர்வை அதிகமாகத் தனக்குள் எடுத்துக் கொள்வார்கள்.

எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்துவிட்டு அதன்படி கட்டினார்களோ அந்த வீட்டிற்குள் இத்தனை வேதனை உணர்வுகள் பரவப்படும் பொழுது தன் உடலுக்குள்ளும் பெருகிவிடுகின்றது.

அடுத்து இதே உணர்வின் வேதனை தொழிலிலும் பரவிவிட்டால் வாஸ்து சாஸ்திரம் வந்து காக்குமா…? காக்க முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கும். அதன் வழியில் தீமைகளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை உருவாக்க முடியும்.

இந்த உடலில் வாழும் பொழுது பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பற்றை நாம் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்துவிட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி நாம் பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.

அந்த அகஸ்தியன் கண்ட உணர்வை அவன் ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக ஆன பின் அவனைப் பின்பற்றிச் சென்ற ஞானிகள் எத்தனையோ பேர் உண்டு.

அவர்கள் அனைவருமே இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர். நம்முடைய எல்லை அது தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறருடைய தவறான செயல்களை உற்றுப் பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும் பாதையில்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவாசித்தால் என்ன ஆகும்…? நம்மையும் தவறு செய்ய வைத்துவிடும்.

ஆகவே… தவறான செயல்களை உற்றுப் பார்த்த அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் சுழலச் செய்து
2.அந்தத் தீய செயலின் உணர்வு உங்களுக்குள் அது வளராது அதனுடைய உணர்வைச் சமப்படுத்துதல் வேண்டும்.

ஆனால் சமப்படுத்திச் சென்றாலும் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது அங்கே தொழில் சம்பந்தமாக மற்றவர்களைச் சந்திக்கும் பொழுதும் இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.எங்கள் செயல் அனைத்தும் நலம் பெற வேண்டும்
2.நாங்கள் உருவாக்கும் உற்பத்தி செய்யும் பொருள்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
3.அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று
4.கண் கொண்டு அந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அடுத்து எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெற வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மலரைப் போன்ற மணங்கள் பெருக வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணி எடுக்கும் உணர்வின் செயலாக்கங்கள் அங்கே கூடினால் தொழில் செய்யும் இடத்தில் உள்ள தொழிலாளியிடமோ அல்லது மேலதிகாரியிடமோ பேசும் பொழுது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இணைந்து வாழச் செய்யும்.

இப்படிச் சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்…?

நாம் ரோட்டில் வரப்படும் பொழுது தீய செயலை ஒருவர் செய்கின்றார் என்றால் அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உடலில் ஆன்மாவில் முன்னனியில் வந்துவிடும்.

அதை நுகர்ந்து விட்டுத் தொழிலுக்கு வந்தால் நாம் சுவாசித்த உணர்வுகளே “நமக்குள் எதிரியாக வந்துவிடும்” என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது வேதனையான உணர்வைச் சுவாசித்துவிட்டுச் சென்று தொழிலில் ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் தவறான நிலைகளில் அது செயலுக்கு வரலாம். அது தவறான நிலைகளில் இயக்கப்படும் பொழுது பழுதாகித் தடையாகவும் ஆகலாம்.

அதனால் நண்பரிடத்தில் அல்லது மேலதிகாரியிடத்தில் பகைமை ஊட்டும் நிலை வரும். ஏனென்றால் நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமையான உணர்வுகள் நல்ல நண்பர்களையே பகைமையாக்கிவிடும்.

அதனால் தொழிலையும் வெறுக்கும் நிலை வரும்.

இதைப் போன்று நம்மையறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அருள் ஒளி பெற்றால் இருளை அடக்கிடும் ஞானமும் வரும். தெளிந்த மனதுடன் வாழவும் முடியும். ஆகவே இதை நீங்கள் எண்ணி எடுத்துப் பழகுங்கள்.

இதனால் உங்கள் தொழிலும் விருத்தியாகும். செல்வமும் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் உங்களால் ஒரு மன நிம்மதி கிடைக்கும்.

செவிக்கும் வயிற்றுக்கும் உணவு கொடுக்கின்றோம்… “உயிருக்கு” உணவு கொடுக்கின்றோமா…?

 

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.

அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழியுண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர்.

சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலகோதய எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும் உரை நடையும் மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.
4.அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
5.செருக்கின் தொடரில் எழுந்திடும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.

உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

1.ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும்
2.நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?

அதற்கு எது முக்கியம்..?

1.நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை.
2.ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொண்டிடும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடா…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடிடும் வழியாக்கிக் கொண்டதே வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்.

செவிக்கு உணவு வயிற்றுக்கு உணவு என்பது போன்றே
1.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
2.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது.

ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும். வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது.

1.வாய்மை மொழியே தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
2.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

உட்கார்ந்து தியானமிருப்பது என்பது “ஒரு பயிற்சி… பழக்கத்திற்குத் தான்…!”

 

பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும்பொழுது “மீண்டும்” பள்ளிக்குச் சென்று யாரும் படிப்பதில்லை.

படித்து விட்டு வந்துவிட்டோம். படித்து முடித்து வந்தபின் தப்பாகி விட்டால் “ஓடிப் போய்ப் பள்ளியில் உட்கார்ந்து” மீண்டும் படிப்பதில்லை.

பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்த பாடநிலையைப் பார்த்து அதன்படி செய்த நிலைகளில்… “இதில் என்ன குறை இருக்கின்றது…” என்று “திரும்பிப் பார்க்க வேண்டும்…” ஆகவே
1.தியானம் இருந்து பழகியபின்
2.பழையபடி ஓடி வந்து தியானமிருப்பதில்லை.

இங்கே பாட நிலையை உங்களுக்குள் உறுதிப்படுத்தியபின் அருள் உணர்வுகளின் “பதிவு… RECORD” உங்களுக்குள் இருக்கின்றது.

1.வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சிக்கலாகின்றதோ அந்த இடத்திலேயே… அப்போதே… இதனுடய சிந்தனை என்ன…?
2.சாமி என்ன உபதேசம் செய்தார்…?
3.“சாமி உபதேசம் செய்ததற்கும்… நமக்குள் இப்போது வருவதற்கும்,,. என்ன வித்தியாசம் இருக்கின்றது…?”
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால்…
6.உங்களுக்கு அப்பொழுதே “விடை” தெரியும்.
7.அந்த விடையை வைத்து மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்…?

சாமியை நம்புகிறோம்… சாமியாரை நம்ப முடிகின்றது.. மந்திரக்காரரை எல்லாம் நம்ப முடிகின்றது. நாம் இப்படித்தான் தேடிப் போகின்றோம்.

நமக்குள் இந்தச் சக்தியை வளர்த்து இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்களை நீக்கி அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்ற அந்த நிலைக்கு வருதல் வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கையில் தீமை புகாது “தீமைகளை அடக்கிடும் வல்லமை” வருகின்றது.

ஆனால் இதை விட்டு விட்டு என்ன சொல்வார்கள்…?

தீமை வரப்படும் பொழுது…
1.எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே…
2.இந்த வேலை செய்தால் அப்படி நடக்கின்றது… தொழில் செய்தால் நஷ்டமாகின்றது…
3.இந்த வண்டியை ஓட்டினால் கஷ்டமாக இருக்கின்றது…
4.”எதைச் செய்தாலும்…” எனக்கு ஒரே தொல்லையாக இருக்கின்றது என்பார்கள்.

இப்படிக் கஷ்டங்கள் ஆனபின் அப்புறம் அந்த உணர்வு கொண்டு பிள்ளைகளை எண்ணினால் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. அவர்கள் தொழில் செய்தாலும் நஷ்டமாகின்றது.

இப்படியே…
1.என் குடும்பத்தில் தொடர்ந்து எல்லாமே நஷ்டமாகின்றது
2.என் குடும்பத்திற்கு “யாரோ… ஏதோ… என்னமோ… செய்து கொண்டிருக்கின்றார்கள்…”
3..யாரோ செய்துவிட்டார்கள்…! என்ற இந்த உணர்வு தான் வரும்.

அதற்குத் தகுந்த மாதிரி ஜோதிடம் பார்ப்பவர்களிடம் செல்வார்கள். அவன் என்ன செய்வான் தெரியுமா..,?

நாம் இந்த எண்ணத்துடன் செல்கிறோம் அல்லவா.., இதை மீண்டும் உறுதிப்படுத்திவிடுவான் (RE – RECORD). உங்களுக்குத் “தோஷத்தைச் செய்துள்ளார்கள்…” என்பான்.

சகஜ வாழ்க்கையில் ஏதாவது சிறு குறைகள் இருந்தால் அந்தக் குறையின் தன்மை வரும் பொழுது என்ன செய்வோம்…? “இன்னார் தான்… செய்திருப்பார்கள்” என்று உறுதிப்படுத்துவோம்.

அதே மாதிரி நாம் எண்ணும்பொழுது இந்த உணர்வு கலந்து அலைகளாகப் பாய்ச்சப்படும் பொழுது.., நீங்கள் அங்கே போனவுடன் (ஜோதிடம் பார்ப்பவன்) இன்னொரு ஆவியின் உணர்வு கொண்டு… அல்லது உணர்வின் வலிமை பெற்று… இதை அறியும் உணர்வு மோதப் பெற்றவுடன் அவன் என்ன சொல்வான்..?

1.உங்களுக்குப் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள்
2.ரொம்பவும் தெரிந்தவர்கள்தான்… என்று இலேசாக ஒரு வார்த்தையை விட்டுப் பார்ப்பான்
3.இவராக இருக்குமோ என்று நம்மிடம் இருந்து சொல்கள் வந்தவுடன்
4.”அவர்களே தான்” என்பான்…
5.கடைசியில் இவர்கள் தான் செய்தார்கள் என்று பகைமையை உண்டாக்கிவிடுவான்.

உங்களுடைய சந்தர்ப்பம்… சந்தேகமாக இருந்தாலும்… பின் “அவர்கள் தான் செய்திருப்பார்கள்…” என்று உறுதியாகிவிடும்.

இந்த மாதிரிச் செய்து விட்டார்கள் என்ற உணர்வு ஆனபின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம்… “ஜிர்… ஜிர்…” என்று பகைமை உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

“பாவிப்பயல்…” ஒன்றும் தெரியாமல் இருந்து கொண்டு “எந்த வேலையைச் செய்திருக்கின்றான் பார்…” என்ற எண்ணங்கள் வரும்.

ஆனால் அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது “ஏன்… இப்படி முறைத்து முறைத்துப் பார்க்கின்றார்கள்…?” என்று அந்த உணர்வை அவர்கள் எடுத்துக் கொண்ட பின் அதற்குத் தக்க மாதிரி பதிலுக்கு அவர்களுக்குள்ளும் கலக்கமாகும்.

பின் ஒருவருக்கொருவர் என்ன ஆகும்…? அங்கேயும் வித்தியாசமாகி அவர்களும் முறைத்துக் கொள்வார்கள்.

அப்பொழுது என்ன முடிவுக்கு வருவார்கள்…?

1.“பார்த்தாயா.., ஜோதிடக்காரன் சொன்னது… “கரெக்ட்…”
2.அடுத்து வீட்டிற்குள் வம்பு வந்தது…! என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி… நாம் “பிறருடைய உணர்வுகளைத்தான்” வளர்த்துக் கொள்கின்றோமே தவிர நல்லதை எடுப்பதற்கு முடிகின்றதா…?

நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால் இருள் சூழும் நிலைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளும் சக்தி “உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்…!”

இவ்வளவு பெரிய உடலை வளர்த்து வந்ததும்… உங்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டி வந்ததும்… நீங்கள் நுகர்ந்த உணர்வு தான்… உங்கள் உயிர் தான் இதையெல்லாம் உருவாக்கியது.

எதெனெதன் நிலைகளில் எண்ணுகின்றோமோ அதன் வழியில் தான் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

1.நாம் உயர்ந்த உணர்வை எடுத்தால்… அது கருவாகி
2.அதை வளர்த்து விட்டால்… “உயர்ந்த ஞானத்தையும் தீமைகள் புகாத நிலையும்”
3.உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.

அதற்குத் தான் எம்முடைய உபதேசமே… (ஞானகுரு).

காயகல்பம்…!

 

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றிக் கொண்டு பால்வெளியில் உள்ள மற்ற கோள்களின் தொடர்பு கொண்டே பல சக்திகளை ஈர்த்துச் சமைத்துச் சுவாச அலைகளாக வெளிவிடுகின்றது.

பூமி சூரியனைச் சுற்றி வரும் நிலையில் நெருங்கியும் விலகியும் சுழன்றோடும் நீள் வட்டத் தொடரில் பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களையே “பருவ காலங்கள்…” என்று அன்றே ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்.

ஒவ்வொரு பருவ காலத்தையும் அந்த இயற்ககையின் செயல் நிகழ்வுகளை தன் சரீர உணர்வு கொண்டு அனுபவ ஞானத்தால் உணர்ந்து கொண்டார்கள்.

அவ்வாறு உணர்ந்து கொண்ட அந்த இயற்கையின் சூழலில்
1.அண்டத்தின் அதி உன்னதத் தன்மைகள் அனைத்தையும்
2.சமுதாய நல அமைப்பிற்கு நல் வாழ்க்கை நெறிகளாக
3.பல வழிகளில் பேருண்மைகளை நமக்குக் காட்டினர் அன்றைய மகரிஷிகள்.

புவியியல்… உயிரியல்… வானியல்… என்றே மூன்று வகைக் கோணத்திலேயும் இயற்கையின் செயல்பாட்டை அவர்கள் உணர்ந்து தெளிந்தனர்.

அதே சமயத்தில் அந்த வானியல் தன்மைகள் பூமியின் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளும் கிரியைகள் அனைத்தையும் தன் சரீரத்தில் கண்ட பொழுது “உயிரியல் தத்துவமாக” அதை உலகிற்கு உணர்த்திக் காட்டினார்கள்.

1.அறிந்ததை அறிந்ததாக எண்ணப் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டு
2.மௌனம் என்ற பூட்டால் பூட்டப்பட்டு
3.உணர்ந்து கொண்ட உணர்வின் அனுபவ ஞானங்கள் அனைத்தும் (காலத்தால்) மறைக்கப்பட்டதால்
4.வாழ்க்கையின் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல செயல்களை அவர்கள் உரைத்திருந்தாலும்
5.இன்றைய சமுதாயத்தின் எண்ணங்களால் “மாற்றமே” காணப்படுகின்றது.

காயகல்பத் தொடருக்கு உணர்த்தப்பட்ட மண் வள குணத் தன்மைகள் மறை பொருளாகவே இருக்கட்டும்…!

1.வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் அலைகளைப் பூமி அதிகமாக ஈர்த்திடும் காலகட்டங்களில்
2.பருவ காலத்தின் சுழற்சியில் குளிர்விப்பு குணத் தன்மைகளும்
3.கார்த்திகை மாதம் தொடங்கி… மார்கழியில் செயல் கூடி.. தை மாதத்தில் உருவாகும் “உவர் அமில அடர்வாக…”
4.பூரணச் சந்திரனின் “தண் ஒளி…” (குளிர்ச்சியான) கலந்திடும் செயலின் உருக்கோலமும் வண்ணமும் காட்டி
5.இரவுக் காலங்களில் பூமியின் வெக்கையால் மண் நெகிழ்ந்தே இருக்கும் நிலையில்
6.அமில அடர்வின் குணம் லேசான தன்மையாக வெளிப்படும் செயலை அறிந்து கொள்ள வேண்டும்.
7.ஆகாய நீர் உரித்தே எடுத்துக் கொள்ளவும்…
8.சூரிய வெப்ப அலையில் அந்த நீரினுள் மறைத்துக் கொள்ளவும்…
9.சுடாத நெருப்பில் காய்ச்சிக் கொள்ளவும்…
10.உயர் ஞானத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்………

இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்து அனுபோக மருத்துவ முறைப்படி இதையே குரு என்ற பெயர் நாமமிட்டு குருக்கோளின் (வியாழன்) தொடர்பினால் பெற்றதையே ஔஷதங்களில் கலந்து உடல் பிணிகளை அகற்றிடும் செயலுக்கே செயல் கொண்டனர்.

அனுபவ முறைகளைச் செவிப்புலனறிவால் அறிந்து கொண்ட சிலரால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்திடும் நிலைக்கும் இதே முறையைப் பயன்படுத்துகின்றனர்.

1.ஆனால் இந்தச் செயல்கள் அனைத்தையும் மெய் ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் – “காயகல்பமாக…”
2.மேன்மேலும் ஆக்கத்தின் செயலுக்கு உண்மையைக் காட்டும்.
3.அதைப் பெற்று நீங்கள் உயர்ந்திட எமது ஆசிகள். (ஈஸ்வரபட்டர்)

நீ பேசவில்லை… “பச்சிலை தான் பேசுகிறது…” என்றார் குருநாதர்

 

குருநாதர் என்னைக் காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று பல கஷ்டங்களைச் செயற்கையாக ஏற்படுத்தித் தான் உண்மைகளை உணரும்படி செய்தார்.

ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் அமர்ந்து இந்த உபதேசங்களைக் கேட்கின்றீர்கள்.
1.எந்த அளவிற்கு இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்குகின்றீர்களோ
2.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து வாழ்வதற்கு இது உதவும்.

ஒரு பச்சிலையைக் காட்டி… “இந்தப் பச்சிலை பேசுமாடா…!” என்பார் குருநாதர்.

அது எப்படி சாமி பேசும்…? என்பேன். அவர் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றார். பச்சிலை எப்படி சாமி பேசும்…! என்று நான் கேட்கின்றேன்.

“பச்சிலை தான் பேசுகிறது…” என்பார்.

நான் பேசாது என்பேன். இரண்டு பேருக்கும் “சண்டை” வரும்.

காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின்…
1.பச்சிலை தான் பேசும் என்பதை நீ தெரிந்து கொள்ளும் வரை
2.“உன்னை விடமாட்டேன்” என்பார் குருநாதர்.

அப்போது நான் என்ன செய்ய முடியும்…! அவர் ஒவ்வொரு பச்சிலையாகக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்வார். பல பச்சிலைகளை முகர்ந்த பின் கடைசியிலே என்ன செய்தார்…?

எனக்குத் தெரியாமலே ஒரு விஷமான செடியைக் கையில் கொடுத்து அதை என்னை நுகரும்படி செய்தார்.

மயக்கம் வருகின்றது… அம்மா… அப்பா…! என்று சொல்கின்றேன்.

இப்பொழுது யாருடா பேசுகிறது…? என்று கேட்கின்றார்.

என் உடலில் “நோய் பேசுகிறது…” என்று சொன்னேன்.

நோய் எப்படிடா வந்தது…? இந்த பச்சிலை தானே காரணம் என்று சொல்கிறார் குருநாதர்.

சில பச்சிலைகளை நுகரும் பொழுது எனக்கு உற்சாகம் வந்தது… ஜம்… என்று இருக்கின்றது.

காட்டிற்குள் அங்கே சாப்பாடு ஒன்றும் கிடையாது. ஒரு லிட்டர் அரிசி; ஒரு டப்பா; மோரில் ஊறப் போட்ட கத்திரிக்காய்; மோரில் ஊறப் போட்ட மிளகாய்… (உப்பு கலந்தது) இதை வைத்துத் தான் இரண்டு மாதம் நாங்கள் இரண்டு பேரும் காட்டிலே காலம் தள்ளினோம்.

இரண்டு கட்டையை வைத்துத் தீயை மூட்டி மேலே பாத்திரத்தை வைத்து நீரை அதிகமாக ஊற்றி அரிசியைப் போட்டுக் கஞ்சி மாதிரிக் காய்ச்ச வேண்டும். அதிலே மிளகாயையும் கத்திரிக்காயையும் ஒரு துண்டு போட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும். இது தான் அங்கே சாப்பாடு.

ஆனால் குருநாதர் பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கும்படி சொன்னார். நுகர்ந்து உடலுக்குள் மாற்றங்களாகும் போதுதான் எனக்குத் தெரிய வருகின்றது.

பச்சிலை பேசுமாடா என்று கேட்டுக் கேட்டுச் சில விஷமான பச்சிலைகளை நுகரும்படி செய்ததும் எனக்கு மயக்கம் வந்து விட்டது. எம்மா… எப்பா…! எம்மா… எப்பா…! என்று கத்தத் தொடங்கினேன்.

என்னடா செய்கிறது…? என்று குருநாதர் கேட்டார்.

சாமி… எதையும் சாப்பிட முடியவில்லை.. தலை வலி வருகின்றது எப்படியோ மயக்கமாக இருக்கிறது…! என்று சொன்னேன்.

இதை எல்லாம் பேசுவது யாருடா…? என்று கேட்டார்.

“நான் தான் பேசுகிறேன்…” என்று சொன்னேன்.

உன்னை பேச வைப்பது எது…? அது யாருடா…! நீ நுகர்ந்த பச்சிலை தான் இவ்வாறு பேச வைக்கின்றது என்றார்.

பச்சிலைகளுக்கு மணம் உண்டு.
1.தன் மணத்தால் மற்றொரு செடியின் மணத்தை அருகில் விடாது தள்ளி விடுகின்றது
2.இப்பொழுது நீ நுகர்ந்த பச்சிலையின் உணர்வுகள் உன் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்த பின்
3.இந்த வேலையை எல்லாம் செய்கின்றது… நல்லதை வர விடாதபடி தடுக்கின்றது…!

நீ எம்மா… எப்பா… என்று அலறுகிறாய் என்றால் அப்பொழுது எது பேசுகின்றது…?

உயிரணு எப்படி ஆனதோ இதைப் போன்று அந்தப் பச்சிலை உருவாகி குறித்த காலம் வந்து உனக்குள் இவ்வாறு செய்கின்றது. “பச்சிலை தான் பேசுகிறது…” என்பதை இவ்வாறு உணர்த்துகின்றார்.

உயிர் தோன்றிய பின் வளர்ச்சியில் மனித உடல் பெற்ற பின் உணர்ச்சிக்கொப்ப எண்ணமும் அதற்குத்தக்க செயலும் வந்தது. ஆனால் விஷமான செடிகளின் மணத்தை நுகர்ந்த ஐந்தாறு நாட்களுக்குள் உனக்கு இப்படி ஆகிவிட்டது. எம்மா… எப்பா… என்று வேதனைப்படுகின்றாய்…!

உங்களிடம் இப்பொழுது நான் சொல்கின்றேன் ஆனால் நான் காட்டிற்குள் சிரமப்பட்டு… இன்னல்பட்டு… வேதனைப்பட்டுத் தான் அதையெல்லாம் அறிந்து கொண்டேன்.

விஷமான செடிகளின் மணங்களை நுகரும்படி செய்து கை கால் குடைச்சல்களை ஏற்படுத்தித் தான் குருநாதர் தெரிய வைத்தார்.

ஒரு மாதம் இரண்டு மாதம் இவ்வாறு சுற்றிய பின் ஒவ்வொரு குணங்களுக்கும் நீ நுகர்ந்தது என்ன செய்கின்றது…/
1.இந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.அந்த அணுக்களுக்குள் என்ன இயக்கங்கள் ஏற்படுகின்றது…?
3.அதை மீண்டும் சரி செய்வது எப்படி…?

அதைத் தெரிய வைப்பதற்காக வேண்டி வேறு சில பச்சிலைகளை நுகரும்படி செய்தார். அதை நுகர்ந்த பின்பு “அப்பாடா…!” என்று சொல்கிறேன். உடல் நன்றாக ஆகின்றது.

உன் உடல் இப்பொழுது எவ்வாறு நன்றாக ஆனது…? என்று அதை எல்லாம் அனுபவபூர்வமாகத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.

நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிய வைப்பதற்குத் தான் இதை எல்லாம் செய்தார்.

தான் விரும்பியது உடனே கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தியானம் செய்தால் என்ன ஆகும்…?

 

தியானத்திற்கு வருகின்றோம் என்று சொல்பவர்கள் எந்த நினைவுடன் வருகிறார்கள்…?
1.என் பிள்ளைக்கு நன்றாகப் படிப்பு வர வேண்டும்
2.நான் தியானம் எடுத்தால் உடனே செல்வம் வர வேண்டும்… செல்வாக்கு வர வேண்டும்… என்று
3.இவைகளை எண்ணித்தான் தியானம் எடுக்கின்றார்கள்

ஆனால் அவ்வாறு எண்ணித் தியானம் செய்த பின் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்கின்றார்கள்…?

காரணம் ஆசை ஒன்றிலே இருக்கின்றது… செய்வது வேறாக இருக்கிறது.

பலகாரத்தைச் செய்யும் போது இன்னென்னதைச் சேர்த்தால் ருசியாக வரும் என்று நினைக்கின்றோம். ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செல்லும் பொழுது கலக்கும் பொருளைச் சேர்த்து அதை ருசியாகக் கொண்டு வருவதற்கு மாறாகக் கலக்கும் பக்குவத்தை மாற்றினால் ருசி எப்படி வரும்…?

ஏனென்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களை அறியாது இயக்கும் சங்கடமான உணர்வுகளைத் துடைத்துவிட்டு
2.சிந்தித்துச் செயல்படும் தன்மைக்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானத்தையே கொடுக்கின்றோம்.

ஆனால் தியானத்தை எடுத்து என்ன செய்கின்றார்கள்…?

1.தான் பெற வேண்டும் என்ற ஆசையில் வரப்படும் பொழுது
2.நாளுக்கு நாள் அதையே கூட்டுகிறார்கள்… கவர்கின்றனர்
3.வலுவாக (அழுத்தமாக) எண்ணி எடுக்க வேண்டிய அருள் சக்திகளையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் விட்டுவிடுகிறார்கள்.

கம்ப்யூட்டர் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இயக்குகின்றது.
1.அதனுடைய அழுத்தங்கள் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்குத் தான் இயக்கமாகின்றது – அனைத்தும் மேக்னட்
2.அதற்குள் உணர்வின் உணர்ச்சிகளைத் தட்டும் போது (ஆணைகள் – COMMANDS) அழுத்தம் எதுவோ அந்த ஒலி அலைகளை எழுப்புகிறது.

அதாவது… காந்தப்புலன் அறிவால் வரக்கூடிய உணர்வுகளும்… அதனுடன் சேர்த்துக் கெமிக்கலில் அந்த அழுத்தத்திற்குத் தக்க ஒலி அலைகளைப் பரப்புகின்றது.

அதே போன்று தான் நம் உயிரின் தன்மைகள் கொண்டு எதனின் உணர்வுகளை நுகர்கின்றமோ உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் எழும்பி அதற்குத் தக்க தான் ஒலி/ஒளியாகி நம்மை இயக்குகின்றது.
1.இன்றைய விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது
2.அன்றைய மெய் ஞானிகள் சொன்னதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.

ஆகவே இதைப் போன்றுதான் நம் நம்மை அறியாமலே பல தவறுகள் இயக்கத் தொடங்கி விடுகின்றது. நடக்கவில்லை… கிடைக்கவில்லை… என்ற பிடிவாதமான உணர்வு வளரப்படும் பொழுது இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே…! என்று வேதனைப்படும் பொழுது எல்லாருடைய மனமும் கெடுகின்றது.

சிந்திக்கும் தன்மை இழக்கப்படும் பொழுது
1.தன்னை அறியாமலே அவரும் தவறு செய்கின்றார்
2.நம்மையும் தவறு செய்யும் நிலைகளுக்கு அது அழைத்துச் சென்று விடுகின்றது.

கார்த்திகை நட்சத்திரம்

 

எண்ணம் கொண்டே வாழ்க்கை நிலைகளுக்கு உரைத்து வந்ததில்…
1.மனத்தின் பக்குவம் உலகோதய வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணத் தன்மைகள் அலை அலையாக வந்திட்டாலும்
2.துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளின் மீதே சென்று… சேருமிடம் சேர்வதைப் போல்
3.நம் நிலையிலும் உணர்வுகளைச் சமன்படுத்திட வேண்டும் என்ற எண்ணம் உந்துதலாக
4.அதன் வழி முறைகளைச் சிந்தையில் இருத்திச் சித்தன் நிலை பெற வேண்டும்.

பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு தாழ்வு முறைகளுக்கு அல்ல.

மருத்துவ குணங்களாகப் புகட்டினலும் எண்ணத்தின் நிறைவன்றோ சரீர சுகம் அளிக்கின்றது. சரீரத்தில் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்து வீரியம் கொண்டு எதிர்மோதல் குணத் தன்மைகளில் நோயை விலக்கிட்டாலும் மீண்டும் அதே நிலை காணப்படுவதெல்லாம் எண்ணத்தின் செயல் தான்.

1.நோய் உடலிலா…? எண்ணத்திலா…?
2.சுவாச நிலைகளின் இயல்புத் தன்மையை மாற்றினாலே எண்ண ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்கள் இயற்கை கொண்டா…? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்.
3.எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பில் நல்லாக்கம் பெற்றிடலாம்.

கார்த்திகை தீபம் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருள் புரிந்திட்டதா…? இன்றைய நடை முறைக்கு அது பெரும் சடங்காகிவிட்டது.

அன்று சித்தன் கண்ட உண்மைப் பொருள் பௌர்ணமி நிலவின் ஒளி சக்தியும் நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் பூமியின் ஈர்ப்பில் செயல் கொண்டே சில சூட்சம வித்தின் தன்மைகள் பூமித் தாய் அளித்திடும் செயலுக்கே மறைபொருள் காட்டி ஜோதியின் உட் பொருள் காட்டி ஜோதியின் பொருள் உணர்த்த கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியில் பூமி ஈர்த்துப் பெற்றிடும் சக்தியின் செயலையே அந்த மாதத்தில் தீபமேற்றி வணங்கிடும் முறை காட்டப்பட்டது.

எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில் அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில் உயர் ஞானம் கொண்டே அறிந்த காயகல்ப முறையே ஜோதி தீப வணக்கமாகக் கூறப்பட்டது.

இந்த மாதக் காலங்களில் சிற்றின்ப நுகர்வுகள் விடுத்து மனத்தை ஒருமுகப்படுத்திவிட்டு தியானிக்கச் செய்த வழி கார்த்திகை மார்கழி மாதங்களில் சிந்தனையில் செயல் ஒருமுகபடுத்தப்பட்ட தை மாத பௌர்ணமியில் பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகள் பெற்றிடவே ஞானிகளால் சிஷ்யர்களுக்கு உணர்த்தப்பட்டது.

அந்த வழி முறைகள் எல்லாம் இன்றைக்கு மாற்று நிலை பெற்றுவிட்டது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக கருணைக் கிழங்கை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள விஷம் நம்மை வீழ்த்திவிடும். ஆனால் ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு” மாற்றியமைக்கக்கூடிய சக்தி பெற்ற நாம் என்ன செய்கின்றோம்…?

1.கருணைக் கிழங்கில் விஷம் இருக்கிறதென்றால் “வேக வைத்து” விஷத்தின் தன்மை தணிக்கின்றோம்.
2.தொக்கியுள்ள இதனுடன் ஒன்றிய நிலைகளை “புளியைக் கரைத்துச்” சேர்த்து அந்த விஷத்தின் தன்மைகளைத் தணிக்கின்றோம்.
3.மிளகாயைத் தனியாக வாயில் போட்டால்.., “ஆ..ஆ..,” என்று அலறுகின்றோம். இதைக் கலந்து புளியுடன் சேர்த்து “உணர்ச்சியைத் தூண்டும்” சக்தி பெறச் செய்கின்றோம்.
4.உப்பைக் கலந்து அதனுடன் பல சரக்குகளைச் சேர்த்து இணைத்துச் “சுவையாக…” மாற்றுகின்றோம்.

இதைத்தான் “முருகு” மாற்றியமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன என்று சொல்வது.

கருணைக் கிழங்கில் “விஷம் இருக்கின்றது..,” என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.

மிளகாயில் “கார உணர்ச்சிகள் உண்டு…” என்று தெரிந்து கொள்கின்றோம்… கார்த்திகேயா.

புளியை வாயில் வைத்தால் முகத்தைச் சுளிக்கச் செய்கின்றது. இந்தப் புளியைக் கரைத்துவிட்ட பின் விஷத்தின் நேர்முக இயக்கத்தை அடக்குகின்றது. உப்பை அதனுடன் கலந்த பின் சுவையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… கார்த்திகேயா.

இவை அனைத்தையும் தன் உணர்வால் சுவையுள்ளதாக மாற்றி அதை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உணர்ச்சிகள் எப்படி வருகின்றது…?

கருணைக் கிழங்கைத் தனியாகச் சாப்பிட்டால் குடல் எல்லாவற்றையும் அரித்துவிடும்.

அதற்குப் பதிலாக இப்படிப் பல சரக்குகளைச் சேர்த்த பின் கருணைக் கிழங்கைக் குழம்பாக வைத்து “ருசித்துச் சாப்பிடும்போது…” இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சிகள் “பஞ்ச அபிஷேகமாக…” மகிழ்ச்சியான நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அப்பொழுது அந்த உணர்ச்சிகள் (விஷத்தை வென்ற உணர்ச்சிகள்) நம் உயிரிலே பட்டு… அந்த உணர்வின் “(ஊறும்) அமிலங்களை” உருவாக்குகின்றது.

அப்பொழுது அந்த அமிலங்கள் நம் “உமிழ் நீராக…” மாறுகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் “மகிழ்ச்சியூட்டும் உணர்வை ஊட்டப்படும் பொழுது…” அது நம் உடலில் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.

அப்பொழுது அந்த அணுக்களின் மலமாகி நம் உடலே நல்லதாகி நம் உடலை “ஆரோக்கியமான நிலைகளில்” உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

ஆனால் விஷத்தை அடக்குகின்றது. இது தான் ஆறாவது அறிவு மகிழ்வாகனா. மயிலைக் காட்டி அது தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுகின்றது என்று சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம் காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால், இன்று நாம் இதையெல்லாம் அறியாதபடி சூடத்தையும் பஞ்சாமிர்தத்தையும் அங்கே கொடுத்தால் “முருகன் செய்வார்…!” என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

“பஞ்சாபிஷேகம்” என்றால்.., விண்ணிலிருந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தியைக் கண்களாலே, காதாலே, வாயாலே, உடலாலே, சுவாசத்தாலே எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்.

பஞ்சாமிர்தம் அந்த ஐந்து வகையான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல புலனறிவில் கவர்ந்து கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இவை அனைத்தும் அந்தப் புலனறிவின் பஞ்ச அமிர்தம் என்ற நிலை அங்கே வருகின்றது.

அதுதான் “காயத்ரி..,” என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் அந்த எண்ணத்தை ஏங்கினால் அதன் உணர்வுகள் நம் உயிரிலே படும் பொழுது “அந்த உணர்ச்சியின் இயக்கமாக…” நம்மை இயக்குகின்றது. மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக இய்க்குகிறது.

துருவ நட்சத்திரத்துடன் இணைவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்

 

நோயாளியிடம் நோயின் உணர்வைப் பற்றி நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தாலும் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது… இரத்தத்தில் கருவாக உருவாகின்றது… அணுவாக வளர்கின்றது.

அதே போல் சண்டை போடுபவர்களைப் பார்த்தாலும் அந்தக் கார உணர்வுகள் நமக்குள் கருவாக உருவாகி உடலிலே அணுக்களாக விளைகின்றது.

நாம் கோபப்படவே வேண்டாம்…!
1.கோபப்படுபவர்களை ஒரு பத்து நாளைக்குச் சேர்ந்தால் போல் வேடிக்கை பார்த்தால் போதும்.
2.அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் இருக்கிறது என்று சொல்வார்கள்.

ஆஸ்த்மா நோய் உள்ளவர்களை அதிகமாகக் கவனித்துப் பார்த்தால் அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் சளி இருக்கிறது… ஆஸ்த்மாவிற்கு உண்டான அறிகுறிகள் தென்படுகிறது என்று சொல்வார்கள்.

ஒரு சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ளவரிடம் நாம் அடிக்கடி பேசிப் பழகினால் போதும். அதே சர்க்கரைத் சத்தை உருவாக்கக்கூடிய அணுக்கள் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தைப் பரிசோதித்தால் சர்க்கரை வியாதி உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்பார்கள்.

1.இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
2.எந்த வகையில் நமக்கு நோய் வருகிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்.

சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் “என்னால் முடியவில்லை… முடியவில்லை…” என்று சொல்லும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே நம் நினைவு ஈஸ்வரா என்று புருவ மத்திக்குச் செல்ல வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரத்த நாளங்களில் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப்பின் நோயாளி உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவருடைய சர்க்கரை வியாதி நீங்க வேண்டும் என்று இவ்வாறு நாம் அங்கே பாய்ச்சி விட்டால் அந்த நோய் நமக்குள் உருவாகாதபடி தடுத்துவிடலாம்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

நாம் எல்லோருடனும் சகஜமாகத்தான் பழகுகின்றோம். வலி அதிகமாக இருக்கிறது என்று அவர் வேதனைகளைச் சொல்லும் பொழுது நாம் பரிவுடன் தான் கேட்கின்றோம். இந்த உணர்வு உயிரிலே பட்ட பின் பதிவாகி விடுகிறது.
1.இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.ஞாபகமாக இருந்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்றும் நாம் சொல்லிவிட வேண்டும்.

இந்த உணர்வுகள் உடனே நம் இரத்தத்திலே கலந்துவிடுகிறது. அந்த நோயைத் தணிக்கக் கூடிய சக்தியாக மாறிவிடுகின்றது.

கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாக எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… உடையிலே பட்டால் அதை எப்படித் துவைத்துத் தூய்மையாக்குகின்றோமோ இது போன்று எந்த நோயைப் பற்றிய உணர்வு நமக்குள் வந்தாலும் அதை மறந்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும்…
1.உடல் நலமாகக் கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக் கொதிப்பு குறைய வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலே படர வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.

இப்படிப் பெருக்கிக் கொண்டால் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்போ சர்க்கரை வியாதியோ அவைகள் எல்லாம் குறைவதைப் பார்க்கலாம்.

நம் எண்ணத்தாலேயே இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியும்.

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என் உடல் நோய் நீங்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் நரம்பு மண்டலங்கள் சீராக இயக்க வேண்டும் என்று என்று எண்ணிக் கொண்டே வர வேண்டும்.

இது கூடக் கூட நம் உடலில் எல்லாம் மாறத் தொடங்கும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும்
1.நீடித்த நாள் இந்த உடலில் நாம் வாழப் போவதில்லை
2.குறித்த காலம் வரையிலும் நாம் அந்த அருள் சக்தியைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலுக்குப் பின் தீமைகள் நமக்குள் சேராதபடி பிறவி இல்லா நிலை அடைகின்றோம். இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு அவசியம் வர வேண்டும்.

காரணம்… நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…?

அருள் சக்தியைப் பெருக்கிக் கொண்டே வந்தால் நோய் பலவீனமாகும்… சிந்திக்கும் தன்மை வரும். சிந்திக்கும் தன்மை வந்தாலும்
1.உதாரணமாக ஒரு செடி மரமாகிக் காய்த்து அதனுடைய காப்பு எல்லாம் முடிந்த பின் அந்த மரம் பட்டுப் போகத் தான் செய்யும்.
2.அது போல் நம் உடலில் உள்ள அணுக்கள் மடியத்தான் செய்யும்.

மடிந்தாலும் கடைசியில் எந்தச் சத்து உயிருடன் ஒன்றி இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே எஞ்சி இருக்கப்படும் பொழுது நாம் அங்கே செல்கின்றோம்.

ஆகவே இந்த உடலுக்குப் பின் உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதே “சொர்க்கம்” என்று சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்ட பிற்பாடு நமது உயிர் அங்கே இழுத்துக் கொண்டு செல்கின்றது.
2.அதற்குத்தான் உங்களுக்கு இப்பொழுது பயிற்சி கொடுக்கின்றோம்.

குரு நாடி – உயிர் நாடி

 

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக அகக்கருவிகளில் (ஐம்புலன்களில்) செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடிடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்..” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்து செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழியோடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும்முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும்… உணரவும் முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆரம்ப நிலைகளில் சில இடங்களில் அருள் உணர்வுகளை வளர்ப்பதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு இல்லாது போய்விட்டது.

1.அவர்கள் ஆசை ஒரு பக்கம் இழுக்கின்றது. “பேராசை…” ஒரு பக்கம் இழுக்கின்றது.
2.“தனது நிலைகள் (தான்) வளர வேண்டும்” என்று எண்ணுகின்றது.
3.“பிறரை வளர்க்க வேண்டும்..,” என்ற எண்ணம் இல்லாது போகின்றது.

பிறர் வளர வேண்டும் என்று எண்ணினால் நாம் நிச்சயம் வளர்கின்றோம். இதுதான் உண்மை.

“நீங்கள் வளர வேண்டும்…” என்று எண்ணினாலே முதலில் நான் வளர்கின்றேன். “இவருக்கு என்ன வேலை…?” என்று அந்த உணர்வை அங்கே குறைத்தால் நானும் குறைந்து விடுகின்றேன்.

அங்கேயும் குறை உணர்வே விளைந்து இரண்டு பேரும் போர் முறைக்குத் தான் வரும். அப்பொழுது தீமையின் இயக்கத்திலிருந்து மீளும் நிலை இல்லாது போய்விடுகின்றது.

அப்பொழுது என்ன ஆகின்றது..?

“இப்படி இருந்தோம்.., அப்படி இருந்தோம்..,” என்று இதைத்தான் பேசிக் கொண்டிருக்க முடியும். இந்த உணர்வின் தன்மை நமக்குள் “வளர்ச்சியற்ற நிலை” அடைந்துவிடுகின்றது. பிறகு “இந்த உடலுக்குள்… சேர்த்தது என்ன…?”

எதனின் வெறுப்பின் உணர்வை வளர்த்ததோ இதனின் வலுப் பெற்றால் புவியின் ஈர்ப்புக்கே நிச்சயம் வருகின்றது. ஆகவே புவியின் ஈர்ப்புக்கு வருவதிலிருந்து நாம் தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் இந்த பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நீங்கள் பெற வேண்டும் என்ற இச்செயல், யாம் உபதேசித்ததைக் கீதையிலே சொன்ன மாதிரி “நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்…”

மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும் மூச்சும் வெளிப்பட்டு இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று இந்த பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றி அனைவரும் “ஏகாந்தமாக.., மகிழ்ந்து வாழ முடியும்”.

இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.

உணர்ச்சிகள் (சுவாசக் காற்று) நாடிகள் வழி உடலை இயக்கிக் காட்டும் விதம்

 

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில் காட்சிப் புலனறிவு… செவிப் புலனறிவு… உணர்வுப் புலனறிவு… நுகர்தல் புலனறிவு… சுவைத்தல் புலனறிவு… என்று ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும் புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா…?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா. உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும் ஆத்ம பலமும் பேரின்பப் பெரு வாழ்வும் பெற்றிட
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டிட…!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா…!

“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு ஒலிக் காற்று என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை விழிக் காற்று என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையில் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்…?

சோம்பல் ஏற்படுத்துவதும் வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்
1.சுவாசத்தில் சுதியும்… விழிக் காற்றும்…
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்…!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே…! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எண்ணும் உணர்வுகள் சிரசின் பாகம் “ஈஸ்வரலோகம்”. எதன் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உணர்வின் கருவாக உருவாக்கி நம் இரத்தநாளங்களில் அது வரப்படும்பொழுது அது “இந்திரலோகம்”.

அங்கே அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கிவிட்டால் “பிரம்மலோகம்” என்று அது அந்த உணர்வினை வளர்த்துவிடும்.

எந்தக் குணத்தின் தன்மை எடுத்துக் கொண்டோமோ அணுவாக ஆனபின் அதனின் மலமே நம் உடலாகின்றது. நல்ல குணத்தைக் கொண்ட அணுவின் மலமாக இருந்தால் நம் உடல் சீராக இருக்கின்றது. அழகாக இருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கின்றது.

வேதனை என்ற உணர்வை நாம் நுகர்ந்தால் உயிரான ஈசன் அதைக் கருவாக்கி இந்திரலோகமாக மாற்றி பிரம்மலோகமாக உரு பெற்றுச் சிவலோகமாக மாற்றுகின்றது.

ஆக வேதனை என்ற உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் “நரகலோகமாக” மாற்றுகின்றது என்று பல முறை உங்களுக்குள் சொல்லியுள்ளேன்… தெளிவாக்கியுள்ளேன்.

செல்வம் தேடுகின்றோம். ஆனால் தேடிய செல்வத்தால் மனிதர் நிலைத்திருக்கின்றனரா..? மனிதனால் தேடிய செல்வத்தைக் காக்க முடிகின்றதா..?

செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும்… நிம்மதி வருகின்றதா..? வேதனையுடன் தான் வாழ்கின்றோம்.

செல்வத்தைத் தேட ஆசைப்படுகின்றோம். அதற்கடுத்து அந்தத் தேடிய செல்வத்தைக் காக்க… மீண்டும் வேதனைப்படுகின்றோம்.

நேற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். இன்று செல்வத்தைத் தேடிக் குவிக்கின்றோம்.

சிரமப்படும்பொழுது நண்பராகப் பழகியவர்.., “நீ இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே… ஏன்.., எனக்குச் பணம் கொடுக்கக் கூடாதா..,?” என்று கேட்பார்.

முதலில் ஏழ்மையில் வாடுகின்றோம். பின் வசதியாக வந்து விட்டோம். ஏழ்மையாக இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் வசதியான பின் நம்மிடம் பணம் கேட்கும்பொழுது நாம் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வான்…?

“நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும்..” என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு மற்றவர்களிடம் அவ்வாறு சொல்லிப் பறைசாற்றுவான்.

“கொடுக்கவில்லை” என்பதற்காக என்னை இப்படியெல்லாம் பேசுகின்றானே…! என்று வேதனை நமக்குள் வந்துவிடும்.

அத்தகைய வேதனை வந்துவிட்டால் நுகர்ந்த உணர்வுகள் நம் ஈஸ்வரலோகமாக இருக்கும் சிரசிற்குள் அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக கருவாக உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ ஈஸ்வரலோகத்திற்குள் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் பிரம்மலோகமாக மாறுகின்றது.

அணுவாகிவிட்டால் எந்த மனிதன் எதனால் குறை கூறி வேதனைப்பட்டானோ அந்த வேதனை உணர்வை நுகர்ந்து வேதனைப்படும் அணுக்களைப் பெருக்கி இந்த உடலையே வேதனைக்குரிய நிலையாக நோயாக மாறுகின்றது. நோயாக மாற்றி சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடுகின்றது.

இதை நீங்கள் நடைமுறையில் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

1.ஆகவே செல்வத்தைத் தேடினாலும் சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை.
2.செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை
3.செல்வம் தேடினாலும் உடலைக் காக்கும் நிலை அதிலே இல்லை.

நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்கே தான் வாழ்கின்றோமே தவிர “இந்த உடலுக்குப் பின்.., என்ன..?” என்ற நிலையை யாரும் சிந்திக்கவில்லை.

நம்மைக் காக்க வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தி நமக்குத் தேவை.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கூறிய அருள் வழிப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை நம் வாழ்க்கையின் துன்பம் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உயிர் அணுக்களாக நம் உடலில் உருவாக்கிவிட்டால் அது தன் பசிக்காக உந்தும் பொழுது அந்த ஆற்றல்மிக்க உணர்வுகளை நாம் எளிதில் பெற முடியும்.

அதை வளர்க்க வளர்க்க…
1.எந்த மகரிஷியின் உணர்வுகளை அதிகமாக நாம் கவர்கின்றோமோ
2.அவரின் ஈர்ப்பின் நிலைகள் கொண்டு அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
3.இதுதான் நாம் சேமிக்க வேண்டிய அழியாச் செல்வம்… அழியாச் சொத்து.

உடல் அழுகினாலும்… பிறவியில்லா நிலை அடைவது தான் நமது குறிக்கோளாக இருத்தல் வேண்டும்

 

நாம் எப்படித் தான் இந்தத் தியானத்தில் வலிமை பெற்றாலும் நம் உடலிலுள்ள தீமையின் நிலைகள் அது அழுகும். அது அழுகிய பின் தான் இந்த உயிரே வெளியே செல்லும்.

ஒரு பழம் கனிந்தது என்றால் உட்கொண்டால் சுவையாக இருக்கின்றது. சுவையின் தன்மையாக இருந்தாலும் கடைசியில் அது தன்னிச்சையாக அழுகத் தான் செய்யும்.
1.அழுகிய மணங்கள் காற்றிலே கலக்கப்படுகிறது
2.ஆனால் அதில் உள்ள வித்தின் சத்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் தெளிவாக்குகின்றது
3.கனிந்து அழுகி வெளியே செல்லவில்லை என்றால் “வித்து முழுமை பெறாது…”

அழுகிய உணர்வு காற்றிலே படர்கின்றது. அதன் உணர்வின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த வித்தை மீண்டும் நிலத்தில் ஊன்றப்படும் பொழுது அதே சத்தின் தன்மையைக் கவர்ந்து அதே கனியைப் போன்று உணர்வின் தன்மை உரத்தின் சத்தாக “மரங்களை விளையச் செய்கின்றது…”

இதைப் போன்று தான் நம் உயிரான உணர்வின் நிலைகள் கொண்டு இருளை நீக்கிடும் உணர்வின் சத்தை விளைய வைக்கப்படும் பொழுது மனிதனாக நாம் விளைகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வினைச் சேர்த்து ஒளியாக மாற்றி இந்த உடல் என்று அழுக்கை நீக்கி அழுக்கை நீக்கிடும் உணர்வின் தன்மை பெற்று என்றும் ஏகாந்த நிலை என்ற நிலையினை அடைய முடியும்.

இதுவே நம் குருநாதர் காட்டிய நிலைகள்.

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் அது நம்முடன் வருவதில்லை. இந்த உடலும்… உடலின் அழகும் நம்முடன் வருவதில்லை. வாழ்ந்தோம்… மகிழ்ந்தோம்… வளர்ந்தோம்… என்று இருப்பினும் இந்த உடலில் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப இந்த உடல் அழுகத் தான் செய்கின்றது.

இந்தப் பிடிப்பின் தன்மை உடல் அழுகிய நிலைகள் ஆன பின்… அணுக்களின் இயக்கம் இல்லையென்றால் இந்த உயிர் வெளியே செல்கின்றது.

எதன் வழியில் இந்த இயக்கத்தைச் சேர்த்து இந்த உடல் அழுகுகின்றதோ அதற்குத்தக்க… கடைசி நிமிடத்தில் இந்த உயிர் வெளியே செல்லும் பொழுது அதன் வழி வெளியே செல்கின்றது உயிர்

1.ஆனால் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி அதனை வலுவாக்கப்படும் பொழுது
2.இந்த வலுத்தன்மை கொண்டு உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இது ஈர்க்கப்படுகின்றது.
4.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைக்கப்படுகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையத் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.

மூன்று நாடிகளும் சந்திக்கும் நெற்றிப் பொட்டே… ”திரிவேணி சங்கமம்…!”

 

மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.

சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.

அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.

மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே…”
2.”திரிவேணி சங்கமம்…!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.

சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை…” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.

இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.

எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்பமில குணங்களை நல் நிலைப்படுத்திடவே வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.

1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.

1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.

சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு “ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே…” இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“சப்” என்று இருக்கக்கூடிய உணவுப் பொருளில் சிறிதளவு காரத்தைப் போட்டு அதில் உப்பையும் சிறிது இணைத்தால் ருசியாக இருக்கும்.

ஆனால் காரத்தையும் உப்பையும் சேர்க்கவில்லை என்றால் ருசி இருக்காது. அதை இணைக்கப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மை தூண்டுகின்றது… உணர்வின் தன்மை செயல்படுகின்றது.

ஏனென்றால் மிளகாய் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை வெகு வீரியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றது. அதனால் தான்
1.ஒரு மனிதனுக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைக்குக் கோபம் அவசியம் தேவை.
2. ஆனால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் நம்மை அது விழுங்கிவிடும்.

காரம் அதிகமாகிவிட்டால்… என்ன சொல்கின்றோம்…? “ஸ்..ஸ்..ஆ..ஆ..,” என்று சப்தத்தை எழுப்புகின்றோம்.

அந்தக் காரத்தைச் சமப்படுத்தும் பொழுது ருசியாகின்றது. “ஆஹா..ஹா.., தலையயும் ஆட்டுகின்றோம். ஆகவே அந்த உணர்ச்சியைத் தூண்டும் சக்தி தேவை.

காரத்தின் தனித்தன்மையை மாற்றி அந்தக் கோபத்தை உருவாக்கிவிடக் கூடாது. அந்தக் காரம் என்ற கோபமான உணர்ச்சியை ஊட்டிவிட்டால் அந்த உணர்வு உணர்ச்சியை ஊட்டும் அணுக்களைப் பெருக்கிவிடும்.

அடிக்கடி மற்றவர்களை எண்ணி.., “அவன் இப்படிச் செய்கின்றன்.., அப்படிச் செய்கின்றான்..,” என்ற இந்த உணர்வு வரப்படும் பொழுது வேதனை கலந்து சிந்திக்கும் தன்மை எர்த் ஆகி (குறைந்து) கோபத்தின் நிலை அதிகமாகிவிடும்.
1.அப்பொழுது நம்மால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.
2.“கிடு..கிடு..கிடு..கிடு… என்று நம்மையறியாமலே உடலெல்லாம் நடுங்கும்.
3.கோபம் வருபவர்கள் “சிலரைப் பார்த்தோம்” என்றால் இப்படித்தான் இயக்கும்.

எனக்குக்கூட சில சமயங்களில் அந்தக் கோபம் வரும்போது இந்த மாதிரி ஆகும்.

ஏனென்றால் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் “ஊழ்வினை.., என்ற பதிவு” இருக்கின்றது. அது ஒட்டுமொத்தமாகக் கூட்டும் பொழுது அது வளர்ந்து விட்டால் நம் சிந்தனையை மாற்றிவிடும்.

இப்படி வந்தால் அந்த மகரிஷிகளின் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி இதை அடக்கி இதைத் தணித்து “நமக்குள் தெளிவு..,” என்ற நிலைகளில் கொண்டு வருதல் வேண்டும்.

பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால் சத்துதான். அதைப் போன்று நண்பர்களுடன் நாம் பழகி அன்பால் பண்பால் நாம் பல உதவிகளைச் செய்கின்றோம்…, நல்லதுதான்.

ஆனால் அவர்களுடைய சந்தர்ப்பம் வேதனை என்ற உணர்வாகி விட்டால் அதை நாம் நுகரும் பொழுது நம்முடைய நிலைகளும் மாறி அந்த வேதனையை நமக்குள்ளும் உருவாக்கிவிடுகின்றது.

அந்த வேதனை நமக்கு வராது பாதுகாத்தல் வேண்டும்.

யாம் இப்பொழுது கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.., என்று உயிரான ஈசனிடம் ஏக்கத்தைக் கொடுத்து வேண்டிடல் வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரிடம் அவன் உற்பத்தி செய்ய நாம் ஏங்கி எடுத்தல் வேண்டும்.

அடுப்பில் நெருப்பை வைத்து அதில் எந்தப் பொருளைக் கலக்கின்றோமோ அந்த ருசி தான் வரும். நம் உயிரின் வேலை நுகர்வதை உருவாக்குவதுதான்.

இதைத்தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான், பிரம்மா உருவாக்குகின்றான், சிவனோ அழிக்கின்றான் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

1.எனக்கு வரம் கொடுப்பதுதான் தான் வேலை என்று விஷ்ணு சொல்கிறார். அப்படி என்றால் நம் உயிரில் படும் உணர்வை எல்லாம் அது ஜீவன் பெறச் செய்கின்றது என்பதை அவ்வாறு காட்டுகின்றனர்.
2.பிரம்மாவோ… என் தந்தை விஷ்ணு இட்ட கட்டளைப்படி “உருவாக்குவது தான் என் வேலை…” என்று சொல்கிறார்.

நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு ஜீவனாகி அணுவின் கருவாகிவிடுகின்றது. அணுவின் கருவாகிவிட்டால் எந்தக் குணத்தின் தன்மை அணுவாகின்றதோ அந்த ஞானத்தின் வழி உணர்ச்சியை ஊட்டுவதும் அதைச் செயலாக்குவதும் அதனுடைய வேலை.

ஆகவே பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்று காட்டுகின்றார்கள்.

அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வந்தால் சிவனோ.., அரவணைத்துக் கொள்கின்றான். உயிரில் மோதி ஜீவனாகி அணுவாகி பிரம்மமாகும் நிலையில் வருபவர்களை எல்லாம் வாருங்கள் என்று தான் வரவேற்கத்தான் முடியும் என்று இந்த உடலான சிவம் காட்டுகின்றது.

நாம் எதை எண்ணினாலும் இந்த உடல் வரவேற்று வைத்துக் கொள்கின்றது.

நம் உயிரின் இயக்க நிலைகளைச் சாதாரண மனிதனும் புரியும் வண்ணம் காவியப் படைப்புகளாக்கி இதையெல்லாம் நமக்குத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக இருக்கின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

நமது குரு அவருடைய வாழ் நாளில் பல நஞ்சான உணர்வுகளை நீக்கி ஒரு பித்தரைப் போன்று தான் வாழ்ந்தார். ஆனால் மக்கள் பித்துப் பிடித்த நிலையில் தான் இந்த உலகிலே வாழுகின்றனர். அதிலிருந்து அவர்கள் அகல வேண்டும் என்ற நிலையைத் தான் எனக்கு குருநாதர் சொன்னார்.

ஏன் சாமி…? பைத்தியம் பிடித்த மாதிரி போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள்…! என்று நான் அவரிடம் கேட்டேன்.

நீ தான்டா கேட்டாய்…! வேறு யாரும் கேட்கவில்லை…!
1.பைத்தியம் என்று சொல்லுகின்றாய்… என்னிடமே நீ அதைக் கேட்கின்றாய்
2.என் செயலை நீ அறிய விரும்புகின்றாய்
3.நீ நாளடைவில் அறிந்து கொள்வாய்
4.அதைப் போன்று நீ செயல்படு…! என்று காட்டினார்.

உலக மக்கள் தான் நுகர்ந்த உணர்வின் ஆசைகள் கொண்டு பித்தரைப் போன்று தான் வாழ்கின்றனரே தவிர தனக்குள் இருளை நீக்கிடும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

தீமைகள் எனக்குள் வராதபடி பித்தனாக நான் இருக்கின்றேன்…!
1.தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக நான் இருக்கப்படும் போது எனது உயிர் ஒளியின் சரீரம் பெறுகின்றது
2.ஒளி பெறும் சரீரத்தை அதனின் உண்மை ரகசியத்தை நீ அறிந்து கொள்…
3.என்னுடன் இணைந்து வா…! என்றார்.

தாவர இனங்களின் மணங்கள் எப்படி இயங்குகின்றது…? தாவர இனம் பேசுமா…! என்று குருநாதர் என்னிடம் கேட்டார்.

பேசாது…! என்று நான் சொன்னேன்.

அப்போது காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்களின் உணர்வின் சத்தை நுகரும்படி செய்து அனுபவமாகக் காட்டினார்.
1.தாவரங்களின் மணமே நம் எண்ணங்களாக வருவதும்… நம்மை இயக்கச் செய்வதும்
2.அது தான் நம்மைப் பேச வைக்கின்றதே தவிர… நாம் அல்ல…!

எந்த உணர்வின் சத்து நம்முள் உண்டோ… அதனின் உணர்வின் மணங்கள் நமக்குள் எப்படி உண்டோ அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்கிக் காட்டுவது உயிருடைய வேலை. அந்த உணர்வின் தன்மை உடல் ஆக்குவதே உயிரின் வேலை.
1.உணர்வின் தன்மை எது அதிகமோ
2.அதன் வழி தான் நம்முடைய இயக்கமும்… அடுத்த உடல் வாழ்க்கையும் என்று குரு தெளிவாக்கினார்.

காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அலைந்து உண்மையின் உணர்வுகள் அறிந்ததை… பல காலம் பல தொல்லைகளுக்கு மத்தியில் அவர் ஊட்டிய உணர்வின் தன்மைகளை அறிந்து கொண்டோம்.

அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குரு சொன்னார். ஏன் அதைச் சொன்னார்…?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணி… அந்த உடலை உயிர் தான் உருவாக்கியது என்ற நிலையில் அதை ஆலயமாக மதித்து
1.ஒவ்வொரு மனிதனையும் கடவுளாக மதித்தால்
2.அவர்கள் செய்யும் குறைகள் உன்னைச் சாடாது என்றார் குரு.

அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்று உணர்வினை நீ எடுத்தால் இந்த உணர்வலைகள் காற்றலைகளில் பரவுகின்றது. நம் பூமியிலே பரமாத்மாவிலே படர்கின்றது.

அவர்கள் குறைகளை எண்ணாதபடி அவர்கள் நல்ல மனம் நிறைவு பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால்
1.நமது உயிரான கடவுளுக்கும் சேவை செய்கின்றோம்
2.இந்த உடலான ஆலயத்திற்குள் அசுத்தத்தை நீக்கிடும் சக்தி பெறுகின்றோம்
3.நல்ல உணர்வைக் காக்கும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே பேரருள் என்ற உணர்வுகளைச் சேர்த்துப் பழகி ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று “ஆலயங்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்று… ஒவ்வொரு உயிருக்கும் அதை நீ செய்ய வேண்டும்…!” என்று எனக்கு உபதேசித்தருளினார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

தியானத்தின் மூலம் நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும்

 

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது…!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்…!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது… அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது…? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா…? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது…?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட… பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது…?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கையில் எல்லோரும் அன்புடன் பண்புடன் பழகுகின்றோம். அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் “நீ விழித்திரு” என்று பெயரை வைக்கின்றார்கள்.

கஷ்டப்படுகின்றவர்களையும் குறை கூறுபவர்களைப் பற்றியும் வேதனைப்படுபவர்களையும் நாம் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வந்தால் தீமை செய்யும்.

அப்பொழுது உடனே நாம் என்ன செய்யவேண்டும்?

“ஈஸ்வரா..,” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஒருவர் நோயுடன் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்.., “உங்கள் உடல் நலமடையும்” என்ற உணர்வை அவருக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

ஒருவர் உங்களிடம் மற்றவர்களைப் பற்றிக் குறை கூறுகின்றார்கள். அல்லது உங்களைப் பற்றிக் குறையாகச் சொல்கிறார்கள் என்றால் உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தூய்மைப்படுத்திக் கொண்ட பின்.., “எல்லோரும் நல்லவராக வேண்டும். எல்லோருக்கும் என் மீது அன்பு வரவேண்டும்.., அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா..,” என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணினோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகள் எதுவும் நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாவதில்லை.

அதனால் தான் “நீ விழித்திரு…, நீ தனித்திரு..,”

அப்படி என்றால் விழித்திருந்து மற்ற தீமையான உணர்வுகளை நமக்குள் விடாதபடி நாம் எந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்தோமோ அதிலே நாம் தனித்து இருக்க வேண்டும்.

நீ விழித்திரு… நீ தனித்திரு என்று சொன்னால்… உடனே என்ன செய்கின்றார்கள்…? வேறு விதமாக “எங்கேங்கோ…” கொண்டு செல்கின்றார்கள்.

அர்த்தத்தை அனர்த்தம் செய்து அதர்ம உணர்வைத்தான் அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி நமக்குள் புகுத்தியிருக்கின்றார்கள்.

எப்பொழுதுமே.., “பிறிதொரு உணர்வுகள் நம்மை இயக்கக்கூடாது…”

அந்த அருள் உணர்வுகள் நாம் பெற வேண்டும் என்று நாம் தனித்து நின்று மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்…?
1.“அந்த அருள் ஒளியினை நாம் பாய்ச்சி…
2.இப்படித்தான் ஆகவேண்டும்” என்று எண்ணினால் அவர்களையும் நல்லவர்களாக்க முடியும்.
3.நம்மை அவர்கள் பார்க்கப்படும் பொழுது நம்மைப்பற்றி குறை சொல்லும் உணர்வுகளே அங்கே மாறிவிடும்.

இரண்டு தரம் நல்லதாக வேண்டும் என்று நாம் சொன்னாலும் மீண்டும் கொஞ்சம் தூண்டிப் பார்ப்பார்கள்.

ஆனாலும் நாம் “எல்லோரும் நல்லவராக வேண்டும்…” என்னைப் பார்க்கும் பொழுது எல்லோருக்கும் பேரன்பு வரவேண்டும்.., மகிழ்ந்திடும் உணர்வுகள் வரவேண்டும்.., என்று மீண்டும் நமக்குள் இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற இந்த உணர்வைச் சேர்த்து இதை உருவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தக் கரு மீண்டும் அந்த உணர்வைக் கூட்டித் தீமை நமக்குள் புகாதபடி தடுக்கச் செய்யும்.

எப்படிக் காரமான மிளகாயைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோமோ உப்பைச் சேர்த்து சுவைப்படுத்துகின்றோமோ இதைப் போல நம் உணர்வின் அணுக்களைச் சுவைமிக்கதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

அதனால் தான் நம் ஆறாவது அறிவைப் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று காட்டுகின்றார்கள்.

இன்று விஞ்ஞான அறிவைக் கொண்டு மற்ற அணுக்களைச் சேர்த்து உயிரினங்களை மாற்றித் தாவர இனங்களை மாற்றி உடலுக்குள் நோய்களை மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

இதே போல நமக்குள் அணுக்கள் உற்பத்தி ஆகும் பொழுது மற்ற தீமையான அணுக்கள் அது கலந்தாலும் அதைத் தணித்து நாம் அருள் உணர்வின் தன்மையை வளர்க்க வேண்டும். வளர்க்க முடியும்.

புத்தகத்திலோ ஏட்டிலோ படித்து யாம் உபதேசிக்கவில்லை… அன்று நடந்ததை நுகர்ந்தறிந்து தான் சொல்கிறோம்

 

அருணகிரிநாதர் பல தவறுகள் செய்தவர். செல்வத்தை வைத்துப் பேரின்பம் பெற விரும்பியவர்.

அதன் வழி எல்லை கடந்து தன்னுடைய சகோதரியிடமே கேட்கப்படும் பொழுது “நீ எதை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ என்னையவே நீ அனுபவித்துக் கொள்…” என்று ஏக்க உணர்வுடன் மூர்ச்சையாகி மாரடைப்பால் சகோதரி இறந்து விடுகின்றது.

தம்பி மீது உள்ள உணர்வுகளை வைத்து அவனுடைய உடலிலே அந்த ஆன்மா சேர்கின்றது.

தன்னுடைய சகோதரி இறந்து விட்டதே… உணவு கொடுத்த தாயை மறந்து விட்டோமே…! என்று அப்போது தான் தன் தவறைப் பற்றிச் சிந்திக்கின்றான் அருணகிரி.

ஆனால் அவருடைய சகோதரியோ… தன் சகோதரன் நல்லவனாக வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட்ட திருமூலரின் உணர்வுகளையே எடுத்து வளர்த்துக் கொண்டது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் என்ன நடக்கின்றது…?

இவனோ மரணமடைய எண்ணுகின்றான். திருவண்ணாமலையில் உள்ள கிளிக் கோபுரத்தின் மீது ஏறி அதிலிருந்து கீழே விழுந்து தன் உடலை மாய்த்துக் கொள்ள விரும்புகின்றான்.
1.இந்த உடலில் இந்தப் பிறவியில் நாம் செய்த தவறுகள் போதும்…
2.இனி அடுத்த பிறவியாவது “தவறில்லாத நிலைகள்” நடந்து கொள்ள வேண்டும் என்று உடலை அழிக்க முயற்சிக்கின்றான்.

ஆனாலும் அவனுடைய சகோதரி இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவனுடைய உடலுக்குள் சென்று அந்த உணர்வினை ஈர்த்துவிட்டது உள் சென்ற பின் உடலுக்குள் உந்தி அவனை மடிய விடாதபடி அவனுள் நின்றே தான் வளர்த்த உணர்வை அங்கே நிறைவேற்றுகின்றது.

சிறிது நேரம் கழித்த பின் அவன் சிந்திக்கின்றான்.
1.அவன் உடலிலிருந்த சகோதரியின் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.”நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…!” என்று பாடலையே பாடுகின்றான்.

எதனின் உணர்வுகள் கொண்டு எந்த இசையின் தன்மையை வருகின்றதோ அந்த உணர்வின் தன்மை உடலில் இரத்த நாளங்களில் சேர்க்கப்படும் போது… அதனின் உணர்வை உருவாக்கும் விந்துகளாக ஆகின்றது.

இப்படி இந்த உடலில் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் உடலுக்குள் எப்படிச் சேர்கின்றது…? ஆகவே எப்போது எதனை அதிகமாகச் சேர்த்தோமோ அதனின் உணர்வு கொண்டு தான் வருகின்றது என்று தன்னை அறியும் நிலையில் அவன் வெளிப்படுத்துகின்றான்.

தன் உடலில் சேர்த்துக் கொண்ட அகந்தை என்ற உணர்வுகளும் ஆசை என்ற உணர்வும்
1.ஆசை என்ற உணர்வு கொண்டு பிறிதொரு வேதனையை உணராத நிலையில்
2.குருடனைப் போன்று தவறின் வழியிலே செய்து கொண்ட உணர்வுகள்
3.அந்த உணர்ச்சியின் நாதங்களே அவனுக்குள் அதை இயக்கிவிட்டது என்ற இந்த நிலையை அறிகின்றான்.

அந்தச் சகோதரி அவனுள் நின்று “திருமூலரின் மந்திரத்தை” தான் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் எப்படி அதனின் இசையாக மாற்றுகின்றது…? நீ குஷ்டரோகியாக எப்படி ஆனாய்…” என்ற இந்த உணர்வுகளை இங்கே உணர்த்தப்பட்டு இந்த பாடலைப் பாடுகின்றான்.

அந்த சகோதரி தன் சகோதரனை மீட்ட வேண்டும் என்ற உணர்வுடன் அந்த உடலுக்குள் சென்று… 1.27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய உணர்வுகள்
2.சூரியனுடைய ஈர்ப்புக்குள் உணவாக அது வரும் நிலையில் ஒன்றுடன் ஒன்று மோதி நாதங்கள் மாறுவதும்… சுருதிகள் மாறுவதும்…
3.ரா ரா ரா ரா ரா… ரீ ரீ ரீ ரீ ரீ…. ரூ ரூ ரூ ரூ ரூ… டூ டூ டூ டூ டூ… என்ற நிலைகளில் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த நாதங்கள் எப்படி மாறுகின்றது…? என்று
4.திருமூலர் கண்ட உண்மையை உணர்த்துகிறது.

இதைப் போன்று தான் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உணர்வுகள் உயிரிலே உராய்வுக்குத் தக்க எண்ணங்களும் எண்ணத்தின் உணர்வும் உணர்வுக்கு ஒப்ப செயல்களும் அதற்குத்தக்க உடல் என்ற நிலையில் இதை தெளிவாக திருமூல மந்திரத்தின் உணர்வினை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

காலத்தால் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

ஆனால் இந்த உண்மைகளை உணர்வதற்காக குருநாதர் என்னை அந்தந்த ஸ்தலங்களுக்குச் செல்லும்படி செய்து அக்காலத்தில் நடந்த சம்பவங்கள் அந்த உணர்வுகள் பரவி இருப்பதை அருணகிரிநாதர் என்ன எடுத்தார்…? சகோதரி என்ன எடுத்துக் கொண்டது…? என்று காட்டுகின்றார்.

அருணகிரியின் வாழ்க்கையைப் பற்றிப் புத்தக வாயிலாக வந்திருப்பினும் ஏடுகளில் இது பதிவாக்கப்பட்டு இருப்பினும்
1.அவர்கள் (அருணகிரியும் அவருடைய சகோதரியும்) உடலிலிருந்து வெளிப்பட்ட உண்மையின் உணர்வுகள் எப்படி இருக்கிறது…? என்று திருவண்ணாமலைக்கு என்னைப் போகச் சொல்லி
2.அதன் உணர்வின் தன்மை எப்படி இருக்கிறது…? என்று இந்த காற்றிலே படர்ந்து இருப்பதை நுகரும்படி செய்து
3.ஆந்த உணர்ச்சிகளால் அவன் பாடிய பாடலும் அவன் பிறவி இல்லாத நிலை அடைந்ததும்
4.அவன் உடலுக்குள் இருந்த சகோதரி இந்த உணர்வின் தன்மை எடுக்கச் செய்ததும்
5.உடலுக்குப் பின் இரண்டு உயிரான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று ஒளியின் சரீரம் எப்படி அடைந்தனர்…? என்று தெளிவாகக் காட்டினார்.

அதைத்தான் உங்களுக்குச் சொல்கின்றேன் (ஞானகுரு).

காற்று (பிராணன்) நம்மை இயக்கும் விதம்

 

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி ஆங்காங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது…!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது… செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்குள் திரும்பத் திரும்ப அருள் ஞானத்தைப் பதிவு செய்கின்றோம். பெண்கள் இதிலே பெரும்பகுதி பங்கு கொள்ள வேண்டும்.

உங்கள் “குடும்பத்தைக் காக்கும்” அரும் பெரும் சக்தி கொடுத்திருக்கின்றோம்.

ஆகவே குறைகளை எண்ணாதீர்கள்… அதை உங்களுக்குள் புக விடாதீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தங்கள் கணவர் பெறவேண்டும் குழந்தைகள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள். எங்கள் குழந்தைகள் அருள்ஞானம் பெறவேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

“குறைகளை எப்பொழுது காணுகின்றீர்களோ..,” அந்த நேரத்தில் “விழித்திருந்து” இப்படி எண்ணிப் பழகுங்கள்.

குழந்தைகளுடைய குறைகள் உங்களுக்குள் வராதபடி அருள் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் எடுத்துக் கொள்ளுங்கள்.

“நீ என்றும் நல்லவனாவாய்.., நீ எல்லோரும் போற்றும் நிலை பெறுவாய்.., உனக்குள் பண்பு கொண்ட உணர்வுகள் வளரும் என்று “பல முறை” சொல்லுங்கள்.

இதைக் குழந்தைகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்யுங்கள்.

நாம் சொல்லும் உணர்வுகளை அவர்கள் நுகர்வார்கள். அவர்களுக்குள் அது கருவாகும். குழந்தைகளைப் பற்றிய எண்ணம் வரும் பொழுதெல்லாம் இப்படி எண்ணுங்கள்.

நண்பர்களுக்குள் நன்மை செய்தான்… என்று எண்ணினால் “விக்கலாகின்றது… துரோகம் செய்தான் பாவி… என்று எண்ணினால் “புரையோடுகின்றது…”

குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால் “என் குழந்தை இப்படி இருக்கின்றதே…” என்று வேதனைப்பட்டால் அந்த உணர்வுகள் அவர்களை “இயக்கும்…”

குழந்தைகள் பால் உயர்ந்த குணங்கள் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் வேதனைப்படும் உணர்வு கொண்டு குழந்தைகள் வெகு தூரத்தில் இருந்தால் அங்கே எப்படித் தனியாக இருக்கின்றார்களோ..,? என்ன செய்கின்றார்களோ…? என்றெல்லாம் எண்ணங்கள் ஓடும்.

வீட்டிலே இருந்தால் நான் எப்படி எல்லாம் நல்ல முறையில் குழந்தைகளைக் கவனிப்பேன்…! அடிக்கடி அவர்களுக்கு நல்ல உணவைக் கொடுக்க முடியும்.

ஆனால் இப்பொழுது “இல்லையே…” என்ற எண்ணத்தில் “வேதனைப்பட்டு நினைத்தீர்கள்” என்றால் அவர்கள் “எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும்” அங்கே சிந்திக்கும் தன்மை போய்விடும்.

தொழிலோ அல்லது மற்ற வேலைகளில் இருந்தாலோ அங்கே பின்னமாகின்றது. “ஐயோ… மகனே இப்படி… நினைத்தேனே” “ஐயோ… மகளே இப்படி.. நினைத்தேனே” என்ற நிலை வந்துவிடும்.

இதைப் போன்று நம்மையறியாமல் இயக்கும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடும் அருள் சக்தி பெற வேண்டும்.

யாம் முதலிலே சொன்ன முறைப்படி உங்களுக்குள் பதிவு செய்துவிட்டு எப்பொழுதெல்லாம் குழந்தைகளைப் பற்றி நினைவு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் என் குழந்தைகள்
1.அருள் ஞானத்தைப் பெறுவார்கள்…
2.அருள் செயல்களைச் செயல்படுத்துவார்கள்…
3.அருள் வழியிலே வாழ்வார்கள்
4.பேரன்பைத் தனக்குள் பெருக்கிக் கொள்வார்கள்… என்று
5.இப்படிப்பட்ட நிலைகளை எண்ணிக் குழந்தைகள் பால் பாய்ச்சிப் பாருங்கள்.

உங்கள் உணர்வால் எத்தகைய நிலைகளையும் மாற்றியமைக்க முடியும்.

“குழந்தைகளை நல்லவராக்கும் உணர்வை” உங்களுக்குள் கருவாக்கும் நிலையை உருவாக்க முடியும். “அருள் உணர்வின் ஒலிகளை” குழந்தைகளுக்குள் பரப்ப முடியும்.

அவர்களுக்குள் அந்த உண்மையின் உணர்வை வளர்க்க முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையுடன் “உங்களுக்குள் வளர வேண்டும்” என்று வேண்டிக் கொள்கின்றேன்.

அருள் வழியில் வாழுங்கள்… அருளானந்தம் பெறுவீர்கள்.

செல்வத்தின் மேல் வரும் “பற்று” நம்மை நரக வேதனைக்குள் தான் அமிழ்த்தும்

 

மனிதர்கள் நாம் வாழ்வது சிறிது காலம் தான். நாம் தேடிய செல்வங்களும் “என்றும்” நம்முடன் இருந்ததில்லை.

செல்வம் தேடி வைத்திருக்கும் குடும்பங்களை எல்லாம் பார்த்தால்… கோடிக் கணக்கில் பணம் இருக்கும்…! ஆனால் குடும்பத்தில் எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று பார்த்தால் தெரியும்… நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

செல்வம் இருக்கும்… வேதனையிலிருந்து மீள முடியாத நிலை தான் அங்கே இருக்கும். துயரத்தின் உணர்வுகள் எல்லை கடந்து இருக்கும்.
1.செல்வம் எது இருப்பினும் அதுவே எதிரியாக மாறுகின்றது.
2.செல்வத்தின் நிலை சிந்தனைகளைக் குறைக்கச் செய்கின்றது… செயல்களை மாற்றுகின்றது…
3.செல்வம் இருந்தாலும் தன்னை மதிக்கவில்லை என்றால் வேதனை தான் வரும்.

வேதனை என்றாலே விஷம். ஆகவே சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. உடலில் உள்ள அணுக்களில் விஷத்தன்மை பரவி நோயாக மாறுகின்றது.

செல்வத்தைப் பார்க்க வேண்டியதுதான்… ஆனால் “ஆசையோ விடாது…” அதையே ஒவ்வொரு நிமிடமும் நினைத்து நரக வேதனையைத் தான் அது உருவாக்குமே தவிர நல்லது செய்யாது.

ஆகவே செல்வம் இருந்தாலும் அருள் செல்வம் (ஞான சக்தி) என்ற நிலை இருந்தால் தான் செல்வத்தைப் பாதுகாக்கும் தன்மையாக வரும். நம் உடலில் அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்க முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

நம் உயிர் ஈசன்… நம் உடல் சிவம்…! ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தெந்த உயர்ந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் நல் வினைகளாக உடலுக்குள் உருவாக்கி அந்த வினைக்கு நாயகனாக அது நம்மை இயக்குகிறது… அதுவே நம்மை வழி நடத்தும். ஆகவே நல்வினைகளையே நமக்குள் சேர்த்தல் வேண்டும்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் வயல்களில் களைகளை எப்படி நீக்கிக் கொண்டே இருக்கின்றோமோ அதைப்போல
1.உடலில் வரும் தீமை என்ற நிலைகளை
2.அவ்வப்போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவைகளை நீக்குதல் வேண்டும்.

தீமைகளை நீக்கும் அருள் சக்திகளைப் பெறுவதே அழியாச் செல்வம்.

“உணர்வுடன் கூடிய சுவாசமே…” சரியான தியானமாகும்

 

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்…
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் – காத்திடும் விஷ்ணு…!” என்பது.

1.மூலத்தைக் கணபதி என்றும்…
2.குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
3.நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
4.இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
5.கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
6.நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
7.சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமைரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
8.மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்ல…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பெண்கள் உங்கள் வீட்டில் “கணவர் இப்படி இருக்கிறார்… அப்படி இருக்கின்றார்…” என்று எண்ண வேண்டாம்.

ஏனென்றால் அவர் தீமையான பழக்கங்களைக் “கட்டுப்படுத்த வேண்டும்” என்று விரும்புகின்றார்.

சிகெரெட் குடிப்பவர்களைப் பாருங்கள். குடித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன தான் சொன்னாலும் “வெறுப்பு” வந்துவிடும்.

அதே மாதிரி தண்ணி (மது) போடுபவர்களைப் பாருங்கள். வீட்டில் மிகவும் தரித்திரமாக இருக்கும். பெண்கள் நகையை அடமானம் வைத்துக் குடிப்பார்கள்.

நண்பரைப் பார்த்தால்… “நீ வாப்பா… நாம் தண்ணி போடப் போகலாம்” என்பார்கள்.

“தண்ணி போடும் ஆள்கள்” தண்ணியை வாங்கிக் கொடுத்து சிநேகம் ஆன பிற்பாடு…“அடச் சாப்பிடு…” என்று சொன்னால் போதும்.

“அண்ணே நீ சொல்வது தான் சரி…” என்று சொல்லிக் கொண்டு உடனே அங்கே இருந்து வந்து இவன் வாங்கிக் கொடுப்பான்.

அந்தத் தண்ணி போடுபவன் தண்ணி ஒருவனுக்கு வாங்கிக் கொடுத்தான் என்றால் “அண்ணனைப் போல… யாருமே உலகில் இல்லை…” என்று புகழ் பாடிக் கொண்டிருப்பான்.

இங்கே வீட்டிலோ மிகவும் தரித்திரமாக இருக்கும். அவன் வந்தவுடன் “அண்ணே..!“ என்று சொன்னால் போதும்.

குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பான்.

அங்கே வந்து மனைவி “என்னங்க.., இப்படி இருக்கின்றீர்கள்..,? என்று கேட்டால் போதும்.

“உனக்கு அறிவு இருக்கின்றதா..?” என்று சண்டை போட்டு மனைவியை அடிப்பார்கள். “எதையாவது கொடு… ஒரு சிறு பாத்திரத்தையாவது கொடு. நான் விற்றுத் தண்ணி சாப்பிடனும்…” என்று மனைவியிடம் வம்பு செய்வார்கள்.

குடும்பத்திலோ பணமில்லை. ஆனால் இப்படி விற்றாவது அடுத்தவருக்குத் தண்ணியை வாங்கிக் கொடுத்து அதன் வழியில் அங்கே “அவர்களிடம் மயங்கிக் கிடப்பார்கள்…”

“இதற்கெல்லாம்… காரணம் எது?”

அன்று மந்திரங்களிலேயும் மாயங்களிலேயும் “சோமபானம்” என்று அதர்வண வேதத்தில் கலக்கப்பட்டு இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டித்தான் அதிலே மந்திரங்கள் ஓதப்பட்டு அதற்குள் “வசியபடுத்தப்பட்ட நிலைகள்” தான் இது.

நாம் நினைக்கின்றோம் “போதை…” எங்கிருந்து வந்தது…? என்று.

இந்தத் தீயிலே கருக்கப்பட்டு உணர்வின் தன்மை இந்த யாக வேள்விகள் நடத்தப்படும் பொழுது சோமபானம் என்ற நிலையை ஊற்றுவார்கள்.

“புகையுடன் கலந்து வரும் பொழுது நுகர்ந்து விட்டால்” நுகர்ந்த உணர்வு அந்தக் கருவின் தன்மை அடைகின்றது.

இந்தப் போதையின் நிலைகள் தான் “வசியம்…” என்று “இந்தச் சாமி செய்யும்… அந்தச் சாமி செய்யும்…” என்ற நிலைகளில் இன்று போய்க் கொண்டிருக்கின்றோம்.

இதெல்லாம் ராஜ தந்திரத்தில் ராஜ தந்திரம்.

ஏனென்றால் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய விளக்க உரைகளைச் சொல்கின்றோம்
1.மக்கள் எத்தனையோ நிலைகளில் ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ளார்கள்
2.அதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று உணர்த்தியதை இங்கே வெளிப்படுத்துகின்றோம்.

குடும்பங்களில் இதைப் போன்ற எத்தனையோ சிக்கல்கள் வருகின்றது. ஆகவே வீட்டில் கணவரைக் குறை கூறும் உணர்வுகளை எடுக்க வேண்டாம். அவர் அறியாத நிலைகளில் செய்கின்றார்.

ஒருவர் சாக்கடையில் விழுந்துவிட்டால் என்ன செய்கின்றோம்…? அவரை மீட்டுத் தூய்மைப்படுத்துகின்றோம்.

இதைப் போன்று குறைபாடுகள் வந்தால் நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அது என் கணவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்.

நாங்கள் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ வேண்டும். நளாயினியைப் போன்று நாங்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். சாவித்திரி போன்று எங்கள் இரு உயிரும் ஒன்றிடல் வேண்டும் எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும் இரு உணர்வும் ஒன்றாக வேண்டும் என்ற “இந்த வலுவான உணர்வை” நீங்கள் எடுத்துக் கொண்டே வாருங்கள்.

இந்த அருள் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் கருவாக உருவாகிக் கொண்டே இருக்கும். கருவாகும் பொழுது அவருடைய உணர்வைச் சேர்த்து… அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால்…
1.அவருடைய உணர்வுகள் உங்கள் உடலுக்குள் உண்டு
2.அவர் “தவறுகள் பல செய்தார்… செய்து கொண்டேயிருக்கின்றார்.,” என்ற உணர்வுகள் உங்களுக்குள் உண்டு.
3.அவரைப் பார்த்தவுடனே… “இப்படிச் செய்கின்றாரே…” என்ற வேதனை வரும்.

அந்த வேதனையை மாற்றுவதற்கு இந்த முறைப்படி நீங்கள் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து இதைக் கருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதைத் திரும்பத் திரும்ப இதே மாதிரி நீங்கள் எண்ணினால் உங்கள் உடலுக்குள் அணுக்களாக விளைந்துவிடும்.

கணவருக்கு உணவு மற்ற நிலைகள் கொடுக்கும் பொழுது
1.“அவர் உயர்ந்த ஞானியாக வேண்டும் மகானாக வளர வேண்டும்…”
2.என் கணவரின் செயல்கள் எல்லாம் அனைவரும் போற்றக்கூடிய சக்தி அவர் பெற வேண்டும் என்று இதை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இந்த உணர்வின் தன்மை (அவர்) உற்றுக் கேட்கும் பொழுது சந்தர்ப்பத்தில் அவருக்குள் பதிவாக்கிவிடுங்கள். இது பதிவாகும் நிலைகளில் அவருக்குள் நிச்சயம் உருவாகும்.

எப்படியும் நீங்கள் சமையல் செய்யும் பொழுது அந்த மிளகாயை அளவுடன் சேர்த்து ருசியாக உருவாக்குகின்றீர்களோ அதைப் போல அவருடைய நிலையை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
1.தவறு செய்பவர்களை மாற்றலாம்… உங்களால் நிச்சயம் முடியும்.
2.பெண்களுக்குள் அதிகமான அளவில் வளர்க்கும் சக்தி உண்டு.

அதிகாலை 4 – 6க்குள் ஒரு பாலை வைத்து அல்லது தண்ணீரை வைத்து அல்லது இரண்டு வில்வம் தழையாவது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

யாருக்காவது நோய் இருந்தது என்றால் அந்த வில்வம் தழையைத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துக் கொடுங்கள். பல நோய்களையும் போக்க உதவும்.

ஏனென்றால் உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் கூடும் பொழுது உங்கள் உணர்வின் ஆற்றல் நோய்களைப் போக்கும்.

சக்தி உங்களுக்குள் அதிகமாகக் கொடுக்கின்றோம். நீங்கள் எடுத்துப் பாருங்கள்.

யாம் கொடுக்கும் உபதேசங்களை விளைய வைத்தால் தான் உங்களுக்கு ஞானம் கிடைக்கும்

 

பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் வேதனைகளையும் தவறுகளையும் நாம் நுகர்ந்தறிந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தூய்மையாக்கிக் கொண்டே வந்தால் மன பலம் பெற்று… விவேகத்துடன் நடந்து கொள்ளும் தன்மையும்… நம் வாழ்க்கையை அமைதி கொண்ட வாழ்க்கையாகவும் அமையச் செய்யும்.

பகைமையற்ற உணர்வுகளை வளர்த்து “என்றுமே ஏகாந்த நிலையாக” மகிழ்ச்சியுடன் வாழும் அந்த ஒளிச் சரீரத்தைப் பெறுகின்றோம்.

கணவனும் மனைவியும் குடும்பத்தில் ஏகக்காலத்தில் இதைப் பயன்படுத்திப் பழகுங்கள்.
1.குடும்பத்தில் கோபமோ குரோதமோ வராதபடி
2.அருள் உணர்வுகளைப் பெற்றுச் சிந்தித்து செயல்படும் திறனாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் எடுக்கப்படும் போது நமக்குள் வரும் வெறுப்பையும் வேதனையும் சமப்படுத்திச் சிந்திக்கும் தன்மை கிடைக்கின்றது. அப்போது நமது உணர்ச்சிகள் “விவேகத்துடன்” நடந்து கொள்ளும் நிலையாக வருகின்றது.

இதை எல்லாம் மனதில் வைத்து யாம் கொடுத்த உபதேசங்களை நூல் வடிவில் வந்ததை அனைவரும் திரும்பத் திரும்பப் படித்து அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதுவே “மிகப்பெரிய தியானம்” ஆகின்றது.

வாழ்க்கையில் வரும் இடையூறுகளை அகற்றிடும் சக்தி பெற்று மற்றவரை நல்வழிப்படுத்தும் அருள் ஞானிகளாகவும் நாம் மாற முடியும்.

ஆனால்…
1.பிறரிடம் நாம் சொல்லிச் செயல்படுத்தும் நிலை ஆகாது… முடியாது..
2.பிறருக்கு நல்ல புத்திகளைச் சொன்னால் அதை அவர்களால் ஏற்க முடியாது
3.ஏனென்றால் அது இயங்காது.

இவ்வளவு தூரம் இங்கே உபதேசிக்கிறோம் என்றாலும்
1.இந்த உணர்வுகளைப் பதிவாக்கித் தனக்குள் வளர்த்து
2.உங்கள் உடலிலே விளைந்தால் தான் அந்த ஞானமே வரும்.

சொல்லும் பொழுது… கேட்கும் போது… நன்றாகத்தான் இருக்கும். ஆக உங்கள் உடலுக்குள் விளையச் செய்து அந்த உயர்ந்த கருத்துக்களை என்றுமே நீங்கள் வளர்த்தல் வேண்டும்.

அது வரவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உங்கள் உடலுக்குள் அதிகமாகச் சேர்த்து வளர்த்தல் வேண்டும். அதைப் பற்றுடன் பற்றித் தீமைகளையும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் பற்றதாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

எந்த நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் பற்றுடனே நாம் வாழ்ந்திட வேண்டும்.

1.ஒரு காரியத்தைச் செய்யச் சென்றாலும்
2.வெளியில் சென்றாலும்
3.உறங்கச் சென்றாலும்
4.உணவு உட்கொண்டாலும்
5.ஒருவரிடம் பேசுவதாக இருந்தாலும் கூட
6.அதற்கு முன் ஒரு நொடி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு… அந்த வலுவைக் கூட்டிக் கொண்டு
7.நாம் சொல்லக்கூடியது அவருக்கு நல்லதாக வேண்டும் நல்லதாக அமைய வேண்டும்
8.என் சொல்லை அவர் மதித்து நடத்த வேண்டும்
9.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று
10.எதற்குமே இப்படி ஒரு தொடர்பு வைத்துக் கொண்டால்
11.அருள் உணர்வுகள் உங்களுக்கு அந்த ஞானத்துடன் விவேகத்துடன் வரத் தொடங்கும்.
12.எதிர்ப்புகளைத் தணிக்கும்… எதிரிகள் உணர்வு வராதபடி தடுக்கும்
13.கோபத்தை வளர விடாதபடி அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்காது தடுக்கும்.

இதை எல்லாம் மனதில் வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சீராகத் தியானத்தில் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

“மூச்சையும் காற்றையும்” பற்றிச் சிந்திப்பார் யாரும் இல்லை

 

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக…!” என்ற சொல் சூட்சமத்தில் மனிதச் சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்… அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு மின்காந்தச் செயலாக நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவபடி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்…” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி…” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக…” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக…”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக…” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்…” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி… ஆகாயம் என்ற கண்டப் பகுதி… காற்று என்ற இருதயப் பகுதி… நீர் என்ற வயிற்றுப் பகுதி… அக்கினி என்ற குறிப் பகுதி… மண் என்ற மூலப் பகுதி… இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலகோதய நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது…
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை… அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை…!

காற்று நூல்…! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி…” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களும் ஞானிகளும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் “வான இயல் புவிஇயல் உயிரியல்” அனைத்தையும் அறிந்தவன்.

1.அகஸ்தியன் தனக்குள் பேரண்ட இயக்க உணர்வின் தன்மையை எப்படிக் கற்றான்…?
2.இந்த உணர்வின் ஈர்ப்புத் தன்மை அவன் உடலிலே எப்படி வந்தது…? என்ற நிலையை எல்லோரும் அறிய முடியும்.

அவன் நட்சத்திரங்களின் இயக்கங்களையும் கோள்களின் இயக்கங்களையும் தன்னில் அறிந்தவன். வான இயல் தத்துவம் புவிஇயலின் நிலைகளாக எவ்வாறு மாறுகின்றது…? என்பதையும் அறிந்து கொண்டான்.

விண்ணுலக ஆற்றல் அது புவியியலுக்குள் வந்து அது கலக்கப்படும் பொழுது “தாவர இனங்களாக..” புவியியலாக எப்படி மாறுகின்றது…? என்பதையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

இவ்வாறு அவன் தனக்குள் அறிந்த “உணர்வின் எண்ண அலைகளை” இன்று நீங்களும் பார்க்கலாம்… உணர முடியும்.

ஏனென்றால் இதெல்லாம் ஆரம்பக் காலங்களில் அவருக்குள் விளைந்த உணர்வின் தன்மை அது வெளியில் படர்ந்திருப்பதை நாம் நுகர முடியும்.

இன்று நாம் ரேடியோக்களிலும் டி.விகளிலும் நாம் எப்படி ஒலி ஒளியைக் காணுகின்றோம்…?

1.காந்த ஈர்ப்பு கொண்ட நாடாக்களில் இயந்திரத்தின் மூலம் ஒலி ஒளியாக அது பதிவு செய்து
2.அதற்குண்டான சாதனங்களை வைத்து ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது
3.சூரியனின் காந்தப் புலன் கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.

பின்… நாம் அதே அலைவரிசையில் வைக்கப்படும் பொழுது அதனின் தொடர் கொண்டு இதைக் கவர்ந்து உருவங்களைப் பார்க்கின்றோம். ரேடியோ டி.விக்களில் பாடல்களை நாம் கேட்கின்றோம். பல உருவங்களையும் நாம் காணுகின்றோம்.

இதைப் போலத்தான் அன்று வாழ்ந்த அந்த மெய்ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இன்றும் இங்கே படர்ந்துள்ளது. சூரியனின் காந்தப் புலனறிவுகள் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

நாம் அதைக் கவரும் தன்மை வரப்படும் பொழுது அந்த அருள் ஞானியின் உணர்வுகளைப் பார்க்கும் திறனும் நமக்குள் வருகின்றது.

நமக்குள் “அருள் ஞானத்தின் அடர்த்தியின் வளர்ச்சி…” எவ்வளவு வருகின்றதோ அதன் தொடர் கொண்டு இந்த உணர்வின் வலிமை கொண்டு இந்தக் “காற்றிலே மிதந்திருக்கக்கூடிய… மெய்ஞானிகளின் உணர்வலைகள” நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.

நீங்கள் அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

ஏனென்றால் ஒவ்வொரு தன்மையும் நமக்குள் எது பதிவாகின்றதோ அந்தப் பதிவின் தன்மை எண்ணங்கள் வரப்படும் பொழுதுதான் அதை நுகரும் ஆற்றல் வருகின்றது.

1.“ஒருவன் தீமை செய்தான்” என்று நாம் பதிவு செய்து கொண்டால்
2.நம் உடல் சோர்வடையப்படும் பொழுது அந்தத் தீமை செய்தோனின் நினைவு வருகின்றது.
3அப்பொழுது அவனை எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வந்து
4.நம்மையறியாமலே நம் உடலுக்குள் நடுக்கமும் பல தீமைகளும் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டிட வேண்டும்.

அதைப் போன்றுதான் அகஸ்தியமாமகரிஷியைப் பற்றி உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். உங்களுக்குள் பதிவாக்கிய இந்த நினைவு கொண்டு நீங்கள் எண்ணினால் “உங்கள் நினைவாற்றல்” அந்த அகஸ்தியன் பால் செல்லும்.

அதன் மூலம் அகஸ்தியர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகளையும் விண்ணை நோக்கி எடுத்த அந்த துருவத்தின் ஆற்றலையும் நீங்கள் பெற முடியும்.

அகஸ்தியன் துருவ மகரிஷியான பின் அவரில் விளைந்த உணர்வுகளும் இங்கே பரவியுள்ளதை “இதை வரிசைப்படுத்தி” உங்களில் இதை நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியர் “அவரின் பாதம் பட்ட இடங்களில்… அவரின் ஆற்றல்கள்… இங்கே (தமிழ் நாட்டில்) தரையிலும் பதிவாகியுள்ளது…” அவரின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அவருடைய அருள் உணர்வுகள் இங்கே சுழன்று கொண்டுள்ளது.

“அதைப் பெற்று” அந்த அகஸ்தியனைப் போன்று உலகைக் காக்கும் மெய் ஞானியாக அருள் மகரிஷியாக விண்ணிலே என்றுமே அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்தமாக வாழலாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி…
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!

மனிதன் ஒருவன் தான் என்றுமே அழியாத நிலை பெற முடியும்

 

மூதாதையரின் உணர்வுகளை அதிகமாகப் பதிவாக்கி வைத்திருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் அதிகமானால்… உடலை விட்டு அவர்கள் சென்ற பின் இந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

எந்தெந்த நோய்களை அவர் பெற்றார்களோ அந்த நோய்களும் நமக்குள் உருவாக்கப்பட்டு நமக்குள் வேதனை வெறுப்பு என்ற நிலையே வரும்.

இப்படி… இதற்கு முன் நாம் செய்யத் தவறிய உணர்வுகள் மூதாதையரின் உயிரான்மா அந்த உயிரணுக்கள் அனைத்தும் நம் உடலில் உண்டு.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் வலுவாக எடுத்துக் கொண்ட பின்
2.அவருடைய (முன்னோர்) உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதன் துணை கொண்டு
3.அந்தச் சூட்சம சரீரங்களைச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையச் செய்ய முடியும்.

இந்த உடலில் எத்தனை கடுமையாக நோயினால் வேதனைப்பட்டனரோ அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் செலுத்தும் பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்தில் ஊடுருவி அங்கே நிலை கொள்ளும்.

பின் இந்த உடல் பெற்ற நஞ்சுகள் அனைத்தையும் அங்கே கரைத்து விட்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மூதாதையரின் உயிரான்மாக்கள் வாழத் தொடங்கும்.

இப்படி அவர்கள் வளர்ந்தால் அடுத்து அவர்களுக்குப் பிறவி இல்லை. மனிதன் ஒருவன் தான் இதை செய்ய முடியும்.

நம் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெற்ற நிலைகள் கரைந்து விட்டால் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
1.துருவ நட்சத்திரம் விஷத்தை முறிக்கும் உணர்வை ஒளியாகக் கொடுக்கும்
2.அந்த உணர்வலைகளை உணவாக எடுத்து வாழும் சக்தி பெறுகின்றார்கள்

சூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் எக்காலத்திலும் அழியாது.
1.அகண்ட அண்டத்தில் உள்ள எத்தனையோ சூரியக் குடும்பங்களும் அழியலாம்
2.ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் அழிவதே இல்லை.

நமது பிரபஞ்சத்தில் இருப்பது போல ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் மனிதர்கள் வாழ்ந்து முழுமை அடைந்த பின் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அமைந்துள்ளார்கள்.
1.சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும்
2.அந்த ஒளிச் சரீரம் பெற்ற உயிராத்மாக்கள் என்றுமே அழியாது.
3.உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின்
4.மனிதன் ஒருவன் தான் இந்த அழியாத நிலை பெற முடியும்.

தீமைகளை நீக்கிப் பேரின்பம் என்ற நிலைகளில் என்றைக்குமே பேரானந்த நிலையில் வாழ முடியும். ஆகவே உணர்வை ஒளியாக மாற்றுவது தான் மனிதனின் கடைசி நிலை.

அதைத்தான் இராமேஸ்வரம் என்றும்… பல கோடிச் சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வு கோடிக்கரை என்றும்… மனிதனுக்குப் பின் தீமைகளை நீக்கியது தனுஷ்கோடி என்றும் காட்டினார்கள்.

நமது வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி அவ்வப்பொழுது அதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெறச் செய்து இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே மனிதனின் கடைசி நிலை.

இதையெல்லாம் மக்களுக்கு உணர்த்துவதற்குத் தான் காவியத் தொகுப்புகளாக அமைத்து அந்த உண்மைகளை நாம் பெறும்படி செய்தனர் ஞானிகள்.

ஈஸ்வரபட்டனின் வாழ்த்து

 

பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து… தெளிந்ததை… ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்…!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக… அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்…!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது… கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து… சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக…”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது…!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்… ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்… வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே…!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெற வேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்…!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்…!”

இந்தக் கலியில்
1.சித்தர்களும்… மகரிஷிகளும்… சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வருவது
2.உண்மையான ஞான வித்துக்களைத் தான்…!

அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கே நம் பூமியில்…“ அகஸ்தியன் நடந்து சென்ற பாறைகளை” குருநாதர் காட்டுகின்றார்.

1.பாபநாசத்திலும்… “காவிரி” என்ற திருநகரிலும் அகஸ்தியனின் சுழற்சி வட்டங்கள் ஜாஸ்தி
2.“இமயமலையிலும்” சில பகுதிகளில் “அவர் பெரும்பகுதி சுழன்ற இடங்கள் உண்டு…” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டுகின்றார்.

“அந்தந்த இடங்களில்…” அகஸ்தியர் சுழன்று வந்த உணர்வுகள் “வேகா நிலை” என்று அழிந்திடாத நிலைகளில் இன்றும் உண்டு.

“சாகாக்கலை” என்று மந்திரங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள் இந்தப் பூமியிலே படர்ந்திருந்தாலும் அவைகள் எல்லாம் அழிந்துவிடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலை என்ற நிலைகளால் விஷத் தன்மைகளே படர்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.

வேகாக்கலை என்ற நிலையில் அந்த மகரிஷிகள் அவர்கள் பெற்ற உணர்வின் ஆற்றலையும் காட்டுகின்றார்.

எவ்வாறு உயிர் ஒளியின் துடிப்பாக இருக்கின்றதோ அதைப் போல உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக நஞ்சினை அடக்கி அதே சமயம் “வைரம்… ஒளியின் சுடராக” இருப்பது போல உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியதையும் காட்டுகின்றார் குருநாதர்.

1.வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் நஞ்சான உணர்வுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
2.அந்த ஞானிகள் “விண்ணுலக ஆற்றலை எடுத்து” அதன் மேல்… “அடுக்கடுக்காகப் பரப்பி”
3.இந்த வாழ்க்கையில் வந்த நஞ்சினை… “அதை ஒடுக்கியது எவ்வாறு…?” என்றும் காட்டுகின்றார்.

நஞ்சினை ஒடுக்கிய உணர்வின் தன்மையை வளர்த்து அந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் அது ஒன்றி இன்றும் துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி அதனின் துணை கொண்டு “ஒளியின் சிகரமாக…” இன்று அகஸ்தியன் இருப்பதையும் காட்டுகின்றார்.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து துருவ உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி “துருவ மகரிஷியாக” ஆனான்.

எந்தத் துருவத்தின் நிலையை அவன் ஈர்ப்பாக எடுத்தானோ பூமிக்குள் வரும் இந்த நஞ்சினைத் தனக்குள் மாற்றியமைத்து துருவ மகரிஷி “துருவ நட்சத்திரமாக… இன்றும் சுழன்று கொண்டுள்ளான்” என்பதைக் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அகஸ்தியர் உணர்த்திய அந்த உணர்வின் வழி கொண்டு அவனைப் பின்பற்றியவர்கள் இன்று விண்ணுலகில் “சப்தரிஷி மண்டலம்…!” அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கின்றார்கள்…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

1.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் முழுமையான உணர்வின் தன்மை பெறச் செய்து
2.“முழுமையாக்கிய உணர்வின் சத்தை” அது எவ்வாறு அங்கே தனது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்குள்
3.அகஸ்தியர் அழைத்துச் செல்கிறார் என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

உடலுடன் அல்ல… “உயிரோடு ஒன்றி வாழும்” உணர்வினை வளர்த்தால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை

 

மனித உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கிறது என்றால் மருத்துவ ரீதியிலே இரத்தத்திலே ஆசிட் ஊற்றிய பின் உடலுக்குள் எந்த அளவு நோய் இருக்கிறது என்பதை அது காட்டுகின்றது.

அதைப் போல துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தநாளங்களில் கலக்கச் செய்தால்
1.நம் உடலில் கோபத்தின் உணர்வுகள் அது எந்த அளவு இருக்கின்றது…? அதை எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும் என்று தெளிவாக்குகின்றது.
2.வெறுப்பு என்ற உணர்வு வரும் பொழுது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அந்தக் கலக்க உணர்வை மாற்றிவிட்டு
3.அதை எவ்வாறு சீர்படுத்த வேண்டும் என்று நமக்குத் தெரிய வருகின்றது… தீமையிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்கின்றது.
4.அதை நாம் எப்படிச் செயல்படுத்துவது என்ற உண்மையின் உணர்வை நாம் அறிய முடியும்.

தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கினால் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி அருள் உணர்வுகளைப் பெருக்கிச் சிந்தித்து செயல்படும் ஆற்றலைப் பெற முடியும். இந்த வாழ்க்கையில் ஏகாந்த நிலை பெற முடியும்.

ஆகவே எத்தகைய தீமைகள் நம் மீது வந்து மோதினாலும் அதை அகற்றப் பழகுதல் வேண்டும். அருள் உணர்வுகளைப் பெருக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக நாம் அமைய வேண்டும்

ஏனென்றால் ஆசையின் நிமித்தம் கொண்டு நமக்குள் பெருக்கிய உணர்வுகள் ஏராளம் ஏராளம் உண்டு. அந்த உணர்வை அடக்க ஒவ்வொரு நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்துப் பழக வேண்டும்.

இதைத் தான் இராமாயணத்தில் கோடிக்கரை என்று காட்டுகின்றார்கள்.

அதாவது… பல உடல்களைக் கொன்று தின்று அதன் உணர்வின் தன்மை கொண்டு எத்தனையோ உடல்களை மாற்றிக் கடைசி நிலையான கோடிக்கரை என்ற இந்த மனித சரீரத்தைப் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை அடக்க வேண்டும்.

நம் உடலில் கோடிக்கணக்கான உணர்வுகள் உண்டு. ஒவ்வொன்றும் அது அது தன் உணவுக்காக உந்தும்.

அப்படி உந்தும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அவைகளைச் சமப்படுத்தி ஒளியாக மாற்றி அது அனைத்தையும் உயிருடன் ஒன்றாக்கப்படும் பொழுது தனுசுக்கோடி.

இதைத் தெளிவாக்குவதற்காக இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி அதைப் பூஜிக்கத் தொடங்குகின்றான் என்று காட்டுகின்றார்கள்.

இந்த உடலில் நாம் இருக்கப்படும் பொழுது…
1.உணர்வின் தன்மையை நமக்குள் இணைந்து வாழும் தன்மையாக
2.உடலுடன் அல்ல… “உயிரோடு ஒன்றி வாழும் உணர்வின் தன்மையை நாம் சேர்ப்பித்தால்…”
3.அடுத்து நமக்குப் பிறவி இல்லை.

இந்த உடலில் குறுகிய காலம் தான் நாம் வாழ்கின்றோம் என்றாலும் அந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் எதைச் சேர்க்க வேண்டும்…? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.சந்தர்ப்பத்தால் வரும் தீமையான உணர்வுகள் நம்மை அடிமை ஆக்காதபடி
2.அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டி அந்தத் தீமைகளை நாம் அடிமையாக்கி
3.தீமை நம்மைக் கவர்ந்திடாது விண் செல்லும் நிலை தான் தனுசுக்கோடி.

காரணப்பெயர் வைத்து இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள் எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடையும் வழிகளை.

சுவாசமும்… நாடியும்…

 

மனித சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்… முக்குணங்கள் என்றும்… உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்…” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.

உலகோதய வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து தியான வழித் தொடர்பில் நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள்

சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.

உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக…!” அமைத்துக் காட்டினான்.

1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகோதயப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.

அதே சமயத்தில் வினைக்கு நாயகன் “விநாயகா…” என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் காட்டினார்கள்.

மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெற வேண்டி கீழான நிலையை விலக்கித் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துமே போதனை ஆக்கப்பட்டன.

இந்த மனித சமுதாயம் நல் நிலை பெறவேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்…?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாகச் (ஒளிச் சரீரம்) சக்தி பெற்றிடவே இந்தப் பாடங்கள்…!

மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.

1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது…!

ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பான உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து வளர்ந்து வந்தோம்.

அப்படி எடுத்துக் கொண்ட பாதுகாக்கும் உணர்ச்சிக்கொப்ப இந்த உடல்களை அமைத்துக் கொடுத்தது நம் உயிர் தான்,

அந்த உடல்களை அமைத்து எல்லாவற்றையும் பாதுகாக்கும்
1.மனித உருவை உருவாக்கிய உயிருக்கு உரிய மரியாதையை நாம் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
2.எல்லாவற்றையும் அறியும் உணர்வுகளும்.. தீமையை அகற்றும் உணர்வுகளும்.. தீமையை அகற்றும் சக்திகளும் தந்த..
3.“நம் உயிரான ஈசனை” நாம் மதித்தல் வேண்டும்.

அவனால் உருவாக்கப்பட்டு மனித உடலாக உருவாக்கியபின் “இந்த மனித உடலை.. எனது..!” என்று சொந்தம் கொண்டாட யாருக்குமே உரிமை கிடையாது.

ஆக… “அவனுக்குச் சொந்தமானது தான்… இந்த உடல்”.

அவனை வைத்தே தான் நாம் வாழ்கின்றோம். “நாம் எதனை விரும்புகின்றோமோ…” அதனையே தான் செயலாக்குகின்றான் நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் உயிர் என்றுமே அழியாது. ஏனென்றால் உயிர் நட்சத்திரங்களால் உருவானது.

ஆனால் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உடல்கள் தான் மாறுகின்றது. உயிர் என்றுமே மாறாதது.

இதைத் தெளிவாக அறிந்துணர்ந்த மெய் ஞானிகள் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி “உயிர் வேறல்ல… நான் வேறல்ல…” என்ற நிலை எய்தி என்றும் பதினாறு என்ற நிலையில் “பேரொளியாக” வாழ்கின்றார்கள்.

ஆகவே அந்த மெய் ஞானிகளைப் போன்றே நாமும் உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே இருக்க வேண்டும்…?

 

மனிதன் ஆன பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் அதுதான் கடைசி நிலை. அதை விடுத்து விட்டு… “சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன் தொழில் நனறாக நடக்க வேண்டும்…” என்று எண்ணினால் தொழில் எல்லாம் உங்களிடம் தான் இருக்கின்றது.

காரணம் அதற்குண்டான மன வலு பெற வேண்டும். மன வலிமை பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும்.
1.சாமியை நம்பி வந்தேன்… தியானம் செய்தேன்…
2.“எனக்கு அது கிடைக்கவில்லை… இது கிடைக்கவில்லை…” என்று சொன்னால் உங்களை நீங்கள் நம்பவில்லை என்று தான் பொருள்.

கடலிலே ஒரு படகிலே செல்கிறோம் என்றால் அது கடந்து செல்லப்படும் பொழுது அலைகள் வந்து மோதும். அப்பொழுது அந்த அலைகள் இருந்து தப்பி நாம் அடைய வேண்டிய எல்லையை அடைய… துடுப்பை வைத்து மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று தான் மனிதன் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலை வரும் பொழுது பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை சங்கட இலை என்று இந்தப் பூமியில் எத்தனையோ அலைகள் நம் மீது மோதுகின்றது.

அதிலிருந்து கடந்து செல்ல வேண்டும் அல்லவா…!

ஆகவே நமது எல்லை எது…? அந்தத் துருவ நட்சத்திரம்தான் என்ற உறுதி கொண்டு அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நாளும் எதை எண்ண வேண்டும்…? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

எல்லோருக்கும் யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். இருந்தாலும்..
1.சாமி சொன்னார்…! நான் தியானம்தான் செய்கின்றேன் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வருகின்றது…?
2.தியானத்தைச் “செய்து கொண்டே இருக்கின்றேன் அல்லவா…” எனக்கு ஏன் நோய் வருகின்றது…” என்றால்
3.துடுப்பைக் கையிலே கொடுத்த பின் கடலிலே எல்லையை நோக்கிப் போகாதபடி “இப்படி அலைகள் வந்து கொண்டே இருக்கிறது…!” என்றால்
4.அலைகளில் மோதி எந்த உணர்வின் தன்மையோ அதில் தான் மூழ்க நேரும்.

அன்றாட மனித வாழ்க்கையில் எத்தனையோ அலைகள் மோதிக் கொண்டே தான் இருக்கின்றது. நமது எல்லை பிறவி இல்லா நிலை தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தினால் சிந்திக்கும் ஆற்றலும் உணர்வின் வலுவும் நமக்குள் வரும்.

குருநாதர் என்னைப் பல இன்னல்களைப் படச் செய்தார்.
1.எது உன்னை என்ன செய்கின்றது…?
2.எதன் உணர்வு உனக்குள் என்ன செய்கின்றது…? என்பதை உணர்த்தினார்.

இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்று குருநாதர் அடிக்கடி என்னிடம் கேட்பார்.

அவர் சொன்னபடி நுகர்ந்த பின் கசப்பு என்றால் ஐய்யய்ய…! என்றும் காரமாக இருந்தால் ஸ்ஸ்… ஆ… என்பேன். அப்பொழுது எது பேசுகின்றது என்று கேட்பார்.
1.நீ பேசவில்லை…
2.உன் உயிரின் உணர்வுக்குள் அந்த உணர்வின் சத்து
3.அதில் பட்ட சுவையின் உணர்ச்சிகள் தான் உன்னை இயக்குகின்றது
4.எதன் சுவையின் உணர்வை நுகர்கின்றாயோ அந்த உணர்வின் வழியே உன்னை இயக்குகின்றது
5.அது நீ அல்ல…!
6.நுகரும் உணர்வே இயக்கமாகின்றது… அதன் உணர்வே உடலாக மாறுகின்றது…
7.அதன் வழி (தன்னை) அதை வளர்க்க அது உடலுக்குள் உருவாகின்றது.

ஆகவே தீமைகளை நீக்க நீ என்ன செய்ய வேண்டும்…?

தீமை என்ற நிலையோ… அதீத ஆசை என்ற நிலையோ… இருளான நிலைகள் வரப்படும் பொழுது அதை எல்லாம் அப்பொழுதே தவிர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.

அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும்…? என்று நம் உள்ளே வரும் உணர்வுகளுக்குத் தக்கச் சரியான உபாயத்தை அது காட்டும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து ஆயுள்கால மெம்பராகி அமைதிப்படுத்தி ஞானத்தின் நிலைகள் சிந்தித்து செயல்படும் நிலைகளும் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும் என்றா உண்மையின் உணர்வை அறிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உடலுக்குள் அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்

அடிக்கடி இதைச் செய்தோம் என்றால் தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போன்று நமக்குள் வரும் கலக்கமோ வேகமா ஆசையோ அனைத்தையும் அது மாற்றி அமைக்கும்.

ஏனென்றால்
1.ஆசையினால் வருவது தான் அனைத்துமே
2.ஆசையின் உணர்வுகள் தடைபட்டால் வேதனை.
3.வேதனை என்று வரும் பொழுது சிந்தனை குறைந்தால் கோபம்
4.கோபம் என்று வந்துவிட்டால் அடித்து நொறுக்கும் உணர்வாக வெறி கொண்டு தாக்கும் உணர்வு வரும்.
5.இது என்ன…? என்று உதறித் தள்ளும் உணர்வைத் தான் நமக்குள் உருவாக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வேதனை என்று வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து தன் உணர்வின் இயக்கத்தையே மாற்றி விடுகின்றது.

இதை போல் உலகெங்கிலும் தீவிரவாதங்கள் நுழைந்து ரேடியோ டிவி என்ற நிலையில் விஷத்தன்மை பரவி இருப்பதால் அதையெல்லாம் நாமும் பதிவாக்கி இருப்பதினால் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அந்தத் தீமையின் நிலைகளுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

1.தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றேன்
2.எப்பொழுதெல்லாம் உணர்ச்சிகள் மாறுகின்றதோ… உணர்வுகள் மாறுகின்றதோ… செயல்கள் மாறுகின்றதோ… அது நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.

அந்த மாற்றத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இதன் வழி செய்தால் நமக்குள் ஏற்பட்ட கலக்க உணர்வுகளை மாற்றும்
2.நாளை எப்படி அதை வழி நடத்த வேண்டும்…? என்ற நல்ல சிந்தனை வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

 

நாம் இன்று எந்த உலகில் வாழ்கின்றோம்…!
1.மெய் உலகில் வாழ்கின்றோமா…?
2.பொய் (மாய) உலகில் வாழ்கின்றோமா…? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

மெய் என்றால் “உயிர்…” அந்த உலகை அடைய வேண்டும். நம் உடலெல்லாம் பொய் உலகம். அதைப் பொய் என்றுதான் சொல்ல முடியும்.

ஏனென்றால் இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். அடுத்தாற்போல் பார்த்தால் சுருங்கிப் போய்விடுகின்றது. சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கின்றது…? வேறு ஒரு உடலை உருவாக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே நாம் பொய் உலகில் நாம் வாழ்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் அடிக்கடி சொல்வார். “ஏண்டா… பொய் உலகத்திற்குப் போகின்றாய்…? “மெய் உலகிற்குப் போடா…” என்பார்.

மெய் உலகம் என்றால் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?
1.உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்.
2.ஆனால் ஆறாவது அறிவால் தெரிந்து கொண்டவன் நீ… எந்த உலகிற்குச் செல்கின்றாய்…?” என்று
3.சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் உணர்த்திக் கேட்பார்.

சிக்கலான நிலைகள் வரும்போது நான் என்ன செய்வேன்…?

“என்ன வாழ்க்கை…? போ…! மனைவியை நோயிலிருந்து மீட்டிக் கொடுத்தார் குருநாதர். ஆனால் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் இப்படியெல்லாம் கடுமையான தொல்லைகள் கொடுக்கிறார் என்று சொல்லி “ரொம்பவும் கஷ்டம் வரும் பொழுதெல்லாம்” என் நினைவுகள் இப்படி வரும்.

எங்கேயாவது உடலை விட்டுப் போய்விடலாம்… “தற்கொலை செய்து கொள்ளலாம்…” என்று சொல்லி இரண்டு மூன்று தடவை முயற்சி செய்தேன்.

அப்பொழுதுதான் குருநாதர் சிரிக்கின்றார்.

இந்த உலகை… என்ன என்று அறிந்தாய். உன் உயிரை… யார் என்றும் அறிந்தாய்… இந்த உடலின் நிலையையும்… அறிந்தாய். “மீண்டும் ஏண்டா பொய் உலகிற்குப் போகின்றாய்…?”

ஆக மொத்தம் இந்த வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நீ எண்ணுகின்றாய். நீ தற்கொலை செய்து கொண்டால் இந்த உணர்வுகள் கேட்டவன் உணர்வுக்குள் தான் செல்லும்.

அவன் உடலுக்குள் பேயாகப் போய் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய். இந்த உணர்வின் தன்மை வந்தால் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவாய்…?

பிறிதொன்றைக் கொன்று தின்னும் இந்த உணர்வின் தன்மை தான் உனக்குள் வரும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ “பொய் உலகிற்கல்லவா போகின்றாய்…”

உயிரென்ற நிலை வரும் பொழுது பரிணாம வளர்ச்சியில் ஆறாவது அறிவால் தெரிந்து கொள்ளும் நிலைகளில் கார்த்திகேயா என்று “தெரிந்து கொண்டேன்…” என்ற நிலைகளில் என்று வந்தாய்.

இன்று மறுபடியும் ஏன் பொய் உலகிற்குச் செல்கிறாய்…? என்று அந்த இடத்தில் வைத்து விளக்கங்களைக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் பல தொல்லைகளைக் கொடுப்பார்.

நம் சகஜ வாழ்க்கையில் வியாபாரமோ மற்ற தொழிலோ எல்லாம் நன்றாகச் செய்ய வேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் போது சந்தோஷமாக இருப்போம்.

அப்படிச் சந்தோஷமாக இருக்கும் பொழுது… “அதிலே சிறிது குறை வந்துவிட்டால்…” போதும். “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் நம் மனது இருண்டுவிடும்.

இதைப் போன்று இந்த உடலைக் காக்க எத்தனையோ வகைகளில் இன்று சிரமப்படுகின்றோம். அதைச் செய்வோம்.. இதைப் பேசுவோம்.. சண்டையிடுவோம். எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்.

ஆனால் “ஒரு சொல்” தாங்கவில்லை… என்று சொல்லிவிட்டு “என்ன வாழ்க்கை” என்று தற்கொலை செய்யப் போவோம்… “ஒரு சொல்லுக்காக…”

அப்பொழுது “இந்த உடலுக்காக” நாம் எதை எண்ணினோமோ அதை வளர்த்து விடுகின்றது. இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் “அதன் வழியே நீ செய்…” என்றுதான் அந்த உணர்ச்சிகளை இயக்கி ஆளுகின்றது நம் உயிர்.

அதன் வழி சென்றபின் இந்த உடலை முழுமையாக நாம் வளர்ச்சியற்ற நிலைகளில் குறைக்கப்படும் பொழுது குறை உணர்வு கொண்ட விஷமான உயிரினங்களாக உயிர் நம்மை மாற்றிவிடுகின்றது என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

மெய் உலகம் என்பது உயிர். இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்றதுதான் துருவ நட்சத்திரம். ஆகவே அந்த மெய்யை நீ அடைய வேண்டும்.

“மெய்… மெய்யாக வரும் உன் உணர்வுகள்” மெய்யை உணர்த்தும் உணர்வுகள் பெறும்போது “நீ எப்படி இருக்க வேண்டும்” என்பதனை உணர்த்துவார் குருநாதர்.

ஆகவே… கடவுளின் அவதாரம் பத்து – “கல்கி” என்ற நிலையில் நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் குரு வழியில் அழியாத நிலைகள் பெற வேண்டும்.

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் “மின் கதிர்களுக்குண்டான ஆற்றல்”

 

உதாரணமாக இடி மின்னல் தாக்குகிறது என்றால் மரங்களில் பட்டால் கருகிவிடும்.
1.மாட்டுச் சாணங்கள் குவியலிலே இந்த மின்னல்கள் பாய்ந்தால் இந்த உணர்வின் தன்மை அதிலே பல விதமான நிலைகள் வரும்.
2.காட்டில் வாழும் மிருகங்கள் அதன் உணர்வின் தன்மை பெற்றால் வீரியத்தன்மை அடக்கி ஒளிப்பிளம்பாகக் கிடப்பதைக் காணலாம்.
3.இது அதிசயப் பொருளாகவும் இருக்கும்.

ஒரு மிருகத்தின் உணர்வுகளிலே இது படப்படும் பொழுது அது அவ்வாறு மாற்றுகின்றது. மிருகத்தின் உணர்வை அடக்கும் உணர்வுகள் இங்கே வரப்படும் போது மின் கதிர்களையும் அடக்கும் உணர்வுகளாகப் பரவி அதைச் சுவாசிக்கும் தன்மையும் வருகின்றது.

அது போல் தாய் கருவிலே விஷத்தின் தன்மை இருந்ததால் அதை அடக்கி அந்த உணர்வின் (மின்னல்கள்) உணர்ச்சியை மாற்றும் தன்மை வருகிறது. 10 மாதங்கள் தாய் கருவிலே அகஸ்தியன் “இந்தச் சக்தியை…” பெற்றுத் தான் பிறக்கின்றான்.

அவன் பிறந்த பின் தரையிலே மல்லாந்து படுத்துக் கிடக்கும் பொழுது வானை உற்றுப் பார்த்து
1.சூரியனால் விரிவடையும் நிலையும்
2.பல மின்னல்கள் தாக்குவதை உற்றுப் பார்ப்பதும்
3.அதன் உணர்வுகள் இவனுக்குள் அடங்கும் நிலையும் வருகிறது.

“நட்சத்திரங்களின் இயக்கத்தால் உயிர் எப்படி ஒளியானதோ” அதைப்போல (அந்த ஒளியான உணர்வின் தன்மை) உயிரைப் போலவே உணர்வின் வலுவைச் சேர்க்கின்றான்.

பல பேர் பல உயிர் என்ற நிலை இருந்தாலும்
1.“ஒரே எண்ணங்கள் கொண்டு” நாம் செயல்படுவோம் என்றால்
2.அதனுடைய வலிமையின் தன்மையே வேறு.

ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நிலை பெற்றது தான்.
1.உயிரின் தன்மை கொண்டு நாம் அனைவரும் சேர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றோம் என்றால் அது மிகவும் வலுக் கூடியதாகின்றது.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துவதற்குத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக உங்களை இணைக்கின்றோம் (ஞானகுரு).

உதாரணமாக… ஒரு செடிக்கு உரம் இடும் பொழுது உரத்தின் தன்மை கொண்டு அதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எந்தெந்த நிலை இருந்ததோ “காற்றிலிருந்து தான் அதனின் உணர்வின் சத்தை… அந்தச் செடி எடுத்து வளர்த்துக் கொள்கிறது…”

செடிக்கு உரமிடுவது போல் தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் ஒரு தடவை ஆழமாகப் பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் நினைவு கொள்ளும் போது அந்தச் சக்தியைக் காற்றிலிருந்து நீங்கள் எளிதில் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற உண்மையின் உணர்வுகளை அவனிட்ட மூச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு இந்த பரமாத்மாவில் தான் காற்றிலே கலந்துள்ளது…!

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து… 27 நட்சத்திரங்களின் மின் கதிரின் இயக்கங்களை இருவருமே சேர்த்து… உயிரைப் போன்று உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்கும் தன்மை பெறுகின்றனர்…! துருவ நட்சத்திரம் அப்படி உருவானது தான்.

அந்த அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன உணர்ச்சிகளை இப்பொழுது ஊட்டப்படும் பொழுது அவன் உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகர முடியும்.

அதைச் சுவாசிக்கச் செய்து துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்களை உங்கள் இரத்த நாளங்களில் பெறச் செய்கின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தைப் போன்று பேரருள் பேரொளியாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் ஆக வேண்டும்.

மூவுலகம்

 

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி… பூமிக்குள்ளும் சரி… ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி… படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூறிட முடியும்.

அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி…!”

பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாகக் குணங்களும்… மணங்களும்… நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.

அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.

உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது. உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது.

அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூல சக்திகளை தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.

“ஆட்டுவிக்கும் சக்தி…!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே…!

மூவுலகம் என்பது எவை…?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.கோடானு கோடி குணங்கள் ஓர் உலகமாக
4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.

மூவுலகம் என்றால் அதல.. சுதள… பாதாளம்…! என்ற எண்ணமா…?

இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி… நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள… மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிடல் வேண்டும்.

சிவ சக்தி என்பது… ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும்
2.இந்த மனித சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

திட்டியவர்களைப் பதிவு செய்தால் எனக்கு இந்த மாதிரி எல்லாம் துரோகம் செய்தான் அவன் உருப்படுவானா…? என்று நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணுகின்றீர்கள் அல்லவா.

அதே சமயத்தில்… குழந்தை மேல் பாசமாக இருக்கும் பொழுது ஒரு மாதத்திற்கு லெட்டரோ மற்ற தகவலோ இல்லை என்றால்… “என்ன ஆனதோ..? ஏது ஆனதோ..? என்று வேதனைப்படுகின்றீர்கள்.

1.நீங்கள் இங்கே வேதனைப்படும் பொழுது அங்கே குழந்தை சிந்திக்கும் தன்மை இழந்துவிடும்.
2.ஒரு சைக்கிளிலோ மோட்டர் சைக்கிளிலோ காரிலோ சென்றால் அந்த நேரம் ஆக்சிடென்ட் ஆகும்.
3.நடந்து செல்லும் பொழுது இந்த மாதிரி எண்ணினால் மேடு பள்ளம் தெரியாமல் கீழே விழுந்துவிடுவார்கள்…
4.பாச உணர்வால் இப்படி இயக்கப்படுகின்றது.

அதே சமயம் சிந்தனை குறையும் போது நாம் என்ன செய்கிறோம்…? குழந்தையைப் பற்றிய ஒன்றும் தகவலே இல்லை என்று வேதனையாக பொழுது வீட்டில் சமையல் செய்து கொண்டிருப்பார்கள்.

குழந்தை மேல் உள்ள நினைவால் ஒரு துணியையோ மற்றதையோ வைத்துத் தூக்குவதற்குப் பதில் வெறும் கையில் எடுக்கும் பொழுது கை சுட்டுவிடும்.

கை தவறிக் கீழே போட்டு உடல் மீது சூடானவைகளை ஊற்றிக் கொள்பவர்களும் உண்டு.

குழந்தை மீது பாசமாக இருந்து குழந்தையைப் பற்றி ஒன்றும் தகவல் இல்லையே என்ற ஏக்கத்தில் நினைவெல்லாம் அங்கே இருக்கும்.

1.ஆனால்… அங்கேயும் கெடுதலாகின்றது… இங்கேயும் நினைவிழந்து சிந்தனையற்ற செயல்களைச் செய்வோம்.
2.சமையல் செய்தாலும் சரி… மற்ற எந்த வேலைகளைச் செய்தாலும் சரி… கவனமில்லாத செயல்களாகி கெடுதலான நிலையாகிவிடும்.
3.பாசத்தால் நம் உணர்வுகள் இப்படிச் சென்றால் இந்த நிலை ஆகிவிடும்.

சில குடும்பங்களில் பார்த்தால் நாங்கள் நன்றாகத் தான் இருந்தோம் ஆனால், “தொடர்ந்து இப்படியே தான் நடக்கின்றது” என்பார்கள்.

அதே போல ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கின்றார் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் போதும். “இப்படித் திட்டுகின்றாரே…” என்று மீண்டும் மீண்டும் நினைவினைச் செலுத்தினால் அங்கே புரையோடும்… அவர்கள் செயலும் கெடும்.

அதே சமயத்தில் சிந்தனை இழந்து இங்கேயும் ஒரு கணக்கைப் பார்த்தாலும் சரி… அடுப்பிலேயே ஒரு பொருளை வைத்தாலும் சரி… தவறான செய்கைகளைச் செய்ய வைத்துவிடும்.

இப்படி எல்லாம் ஆனால்.. அப்புறம் சிந்தனை எப்படிப் போகும்…?

நாசமாகப் போகின்றவர்கள்… என் மீது கண் பட்டுக் கண் பட்டு… எதைத் தொட்டாலும் எனக்கு இடைஞ்சலாகின்றது…! என்பார்கள்.

பாசத்தால் எண்ணி வேதனைப்பட்ட பின் அந்தக் குழந்தைக்கு ஆன பிற்பாடு… “என்னமோ தெரியவில்லை..! என் கெட்ட நேரம் போலிருக்கின்றது…” என்று இப்படி எண்ணுவார்கள்.

இதுவெல்லாம் எதைக் காட்டுகின்றது…?

“நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட அந்த உணர்வைக் காக்க..” இந்த எண்ணங்களை மாற்றுவதும் அதன் வழி “நாம் நுகர்ந்த உணர்வை… நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது…?” என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் உயிர் “அரங்கநாதன்..,” நாம் நுகரும் உணர்வு அரங்கத்திலிருந்து உணர்வுகளை அது உள்ளிருந்து நாதங்களை எழுப்புகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் வரும் பொழுது “ஆண்டாள்…” பெண்பாலாகக் காட்டுகின்றார்கள். அதுதான் (அந்த உணர்ச்சிகள்) நம்மை ஆளுகின்றது… ஆண்டாள்.

இந்த உயிர் பத்தாவது நிலை (கல்கி) அடைய வேண்டும் என்றால் நம் வாழ்க்கையில் வரும் நஞ்சினை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி பத்தாவது நிலை அடைந்தது கல்கி. அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

அதிலே நாம் சென்றடைய வேண்டும். அதைப் பெறச் செய்வதற்குத்தான் உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

இன்று இருக்கும் “கால மாற்றங்கள்” அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான்

 

1.அகஸ்தியன் பெற்ற பேரருளும்… இருளை அகற்றிடும் அருள் ஞானமும்…
2.அகஸ்தியன் துருவனான பின் துருவத்தின் வழி வானுலக ஆற்றலை அவன் நுகர்ந்த சக்திகளையும்
3.2000 சூரியக் குடும்பப் பிரபஞ்சங்களில் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலை அகஸ்தியன் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்தப் பேரருளையும்
4.நாங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானங்களிந் மூலம் வலுப்படுத்துவோம்.

அதன் மூலம் அகஸ்தியன் எப்படி இந்த உலகைக் காத்தானோ… தன் தாய் தந்தையைக் காத்தானோ… அதே போல விஞ்ஞான உலகில் இன்று வரும் பேரழிவிலிருந்து எல்லோரையும் காக்கலாம்… உடலுக்குப் பின் நாம் ஒளியின் சரீரம் பெறலாம்.

விஷத்தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட்டமைப்பாக இருந்து வலுவான நிலைகள் கொண்டு “நீங்கள் இடும் மூச்சலைகளால்” ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செயல்படுத்தும் போது… வீட்டுக்குள்ளோ தெருவிற்குள்ளோ கிராமத்திற்குள்ளோ தீமைகள் வராதபடி… ஊரையும் வீட்டையும் உங்களையும் காக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.

இன்று வரக்கூடிய கால மாற்றங்கள் அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான். மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நிலைகளிலிருந்து மீட்க அருள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்தே ஆக வேண்டும்.

ஞானிகள் இருளை அகற்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் சக்திகளை நாம் அனைவரும் எடுத்து அந்த உணர்வை வளர்த்து
1.நம்மைக் காத்து உலகைக் காத்திடும் சக்தியாக நாம் உருவாக்குவோம்.
2.மெய் ஞானத்தின் உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்.
3.இருளை அகற்றிடும் உணர்வுகளை இந்த உலகில் பரப்புவோம்.
4.விஞ்ஞான உலகில் இருள் சூழ்ந்த நிலைகளை அகற்றுவோம்
5.அருள் உணர்வுகளை நம் பூமியிலே பரப்புவோம்.

ஆகவே “மெய் ஞானத்தை உருவாக்க முடியும்…” என்று உறுதி கொண்டு நமது குருநாதர் காட்டிய வழிகளில் நாம் வாழ்வோம் என்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

நாம் இடும் மூச்சலைகளால் இந்த உலகை அருள் ஞான உலகமாக மாற்றுவோம். மதம் இனம் மொழி என்ற பேதங்களினால் தீவிரவாத உணர்வுகள் கொண்டு மனிதனையே கொன்று அழித்து ரசித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து மனிதர்களை விடுபடச் செய்வோம்.

அவர்களால் உருவாக்கப்பட்ட விஷத்தன்மைகளை எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் இருந்து அகற்றச் செய்வோம். துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க அது ஓடி ஒடுங்கியே விடும்.

இந்த உணர்வின் தன்மை கூட்டக் கூட்ட… காலையில் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அந்த இருளை எல்லாம் மாற்றிவிடும். இந்தப் பூமியும் புனிதமாகும்… பூமிக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.

குரு காட்டிய அருள் வழியில் இனி வரும் ஆண்டுகளை மகிழ்ச்சிக்குரியதாக்கி
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரையும் இணைந்து வாழச் செய்யும் ஆண்டாகவும்
2.பிறவில்லா நிலைபெறும் ஆண்டாகவும்
3.இருளை அகற்றிடும் ஆண்டாகவும்
4.நஞ்சினை வென்றிடும் ஆண்டாகவும் நாம் உருவாக்குவோம்.

கூட்டுத் தியானத்தின் மூலம் நாம் எடுக்கும் முயற்சிகள் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை மாற்றி… அருள் உணர்வுகளைப் பெருக்கி… இந்த உலகில் அசுர உணர்வுகளை அகற்றிடும் சக்தியாக நாம் பெறுவோம்.

மெய் ஞானத்தை வளர்த்து அருள் ஞானத்தை வளர்க்கும் மெய் உலகை “நாம் உருவாக்குவோம்…!”

“ஒளி நிலை பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு” என்பதை உணர்த்துவதே சைவ சித்தாந்தம்

 

சைவ சித்தாந்தத்தின் உண்மை நிலை என்ன…?
1.ஒளி நிலையாக ஒளிர்வது அனைத்தும் சைவமாகவும்
2.சைவத்தை வளர்க்கும் மாற்றுத் தன்மை யாவும் அசைவமாகவும் ஆகின்றது.
3.இந்த உயிர் சைவம்…. உடலோ அசைவம்…!
4.பூமி அசைவம்… பூமி பெறும் ஒளியோ சைவம்…!

இருள் இருந்தால் தான் ஒளியைப் பாய்ச்சி உண்மையை அறிய முடியும். ஆகவே அசைவமான உணர்வைச் சைவமாக்கிடும் சித்தம் கொண்டு ஒளியின் ஒளியாக ஒளி நிலையை வளர்க்க வேண்டும். அசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும்.

ஜீவ பிம்ப சரீர அசைவ உணர்வினால்
1.சைவ ஆத்மாவை எண்ணத்தின் சித்தம் கொண்டு
2.சிவ சக்தி நிலை பெறச் செய்ய வேண்டும்.

அசைவமான உடலிலிருந்து தான் உயர்வான எண்ணங்களைச் சமைத்துச் சைவமான இந்த உயிராத்மாவை வளரும் நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.

ஏனென்றால் ஜீவனற்ற ஆத்ம உயிர்களினால் எண்ணத்தின் சமைப்புத் தன்மைக்கு அசைவ நிலை இல்லாததினால் வளரும் நிலைக்கு வழியில்லை.
1.சமைக்கப்படுவது அனைத்தும் அசைவம்.
2.வளர்வது அனைத்தும் சைவம்.

மாறு கொண்டு சுழலும் நிலையிலிருந்து பகுத்தறியும் ஆற்றலின் சித்தத்தினால் இந்த உயிராத்மாவையே சைவ சித்தமாக்கிடல் வேண்டும்.

இந்தக் கலியான உலகில் யாம் சொல்லும் முறைப்படி தியானித்தால் அன்று சித்தர்கள் மகரிஷிகள் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை அறியலாம். அணுவுக்குள் அணு மாறுபடும் நிலைகளையும் பூமியின் உள் நிலை மற்ற கோளங்களின் செயல் முறைகளையும் அறிந்திடலாம்.

சைவத்தின் சித்தத்தால் தன் நிலை உணர்ந்து அனைத்து நிலையையும் அறியும் அந்த அருள் ஞான சக்தி மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவிற்கும் உண்டு.

அதை உணர்த்துவதே சைவ சித்தாந்தம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்… நாம் வேடிக்கை பார்க்கின்றோம். அதைப் பார்த்தவுடன் நமக்கும் கோபம் வருகின்றது.

ஒருவன் வலுவான நிலைகளில் அடிக்கின்றான். அடி வாங்கியவன் “ஐய்யய்யோ…” என்று அலறிக் கொண்டு செல்கிறான். “இருடா… நான் உன்னைப் பார்க்கின்றேன்..” என்று கோபமாகத் தாக்குகின்றான்.

“இரண்டையும் பார்த்தவுடன்…” சும்மா போகின்றவனை இப்படி அடிக்கின்றானே என்று நம்மையறியாமலே அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
1.அடிபடுபவனைப் பார்த்தவுடன் பாசம் வருகின்றது
2.அடிப்பவனைப் பார்த்தவுடன் கடுமையாகின்றது.

இந்த இரண்டையும் சேர்த்து அவன் மேல் குறி வைத்து ஓடுபவனை நாம் பார்க்கப்படும் பொழுது துணிந்து போய்… “சும்மா போகிறவனை ஏனப்பா அடிக்கின்றாய்..?” என்று கேட்போம்.

ஆனால் அதே சமயத்தில் அடிப்பவன் முரட்டு ஆளாகத் தெரிந்தால்… “கேட்டால்… நம்மையும் உதைத்துவிடுவான்” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது பயமான உணர்வுகளும் வரும்.

இப்படி இரண்டு நிலையும் வரும்.

ஆனால் பய உணர்வு வந்துவிட்டால் என்ன ஆகும்…? அடுத்தாற்போல் யாராவது கோபமாகப் பேசினால் “கிடு.. கிடு…” என்று நடுக்கமாகும்.

ஆக ஏன் பேசுகிறார்கள் எதற்காகப் பேசுகின்றார்கள் என்ற உணர்வு வராது. பய உணர்வுகள் வந்த பின்… ஒரு பொருளே கீழே விழுந்துவிட்டால் அந்தச் சப்தத்தால் “அதிர்வின் தன்மை ஆகி…” நம்முடைய சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடும்.

1.இதைப் போன்ற நிலைகள் எல்லாம் பிறிதொரு உணர்வின் இயக்கங்களாக
2.இன்னொரு உடலில் ஏற்கனவே விளைந்த உணர்வுகள் “சிவ தனுசாக” நம்மைத் தாக்குகின்றது.

அதை நாம் மாற்ற வேண்டுமல்லவா..,?

அதற்குத்தான் சக்தி வாய்ந்த நிலையை குருநாதர் எமக்குக் கொடுத்ததை உங்களிடம் உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

எப்படித் தீமைகள் வருகின்றது என்ற நிலைகளை குருநாதர் உணரச் செய்து… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை மாற்றியமைக்கும் சக்தியைக் கொடுத்தார்.

அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள்ளும் பதியச் செய்து உங்களை எல்லாம் “ஆயுள் கால மெம்பராக.., அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே இருக்கின்றேன்”.

ஆக நீங்கள் அதன் வழி கொண்டு பிறவியில்லா நிலை அடைய முடியும். இது.. “விஷ்ணு தனுசு…”

எப்படிப் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த உயிர் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்ற மனிதனாக நம்மை உருவாக்கியதோ மனிதனான பின் நம் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.

உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை “அந்த ஆயுதத்தை” அடிக்கடி நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

சண்டை போடுபவர்களைப் பார்த்தவுடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.., அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் பார்த்த சண்டை போடுபவரின் உணர்வைக் கண்ணின் கருவிழி இங்கே பதிவாக்குகின்றது.
1.அடுத்து அதே கண்ணின் நினைவை நாம் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு செல்லும் பொழுது
2.அதை அடக்கி “இது மேலே வந்துவிடுகின்றது”.

வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம். “அடடா… இப்படி ஆகிவிட்டதே…” என்று “வேகமாக” அந்தப் பாசம் இயக்குகின்றது.

அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இந்த நினைவினைக் கூட்டி “அந்த வேகத்தின் தன்மையைத் தணித்து” தீமையை நீக்கிடும் வீரியத்தின் தன்மையைக் கொண்டு வருதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று நுகரும் பொழுது அந்த வேதனைப்படும் உணர்வுகள் உடலுக்குள் பரவுவதற்கு முன் இதை மாற்றிவிடுகின்றோம்.

அந்த நோயாளி உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் மகிழ்ச்சிக்குரிய நிலைகளாகப் பெற வேண்டும் என்று இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

சண்டை போடுபவர்களைப் பார்த்தபின் நமக்குள் வெறுப்பின் உணர்வுகள் வரும்.

அந்த வெறுப்பின் உணர்வுகள் வந்தபின் நாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் பொழுது சிறிது தடைபட்டால் போதும். என்ன செய்வோம்…?

உடனே அந்தப் பொருளைத் “தூக்கியெறி..!” என்ற இந்த உணர்வு தான் வரும்.

அதே மாதிரி வெறுப்பான உணர்வுகள் வரும் பொழுது வீட்டில் மனைவி சாப்பாடு எடுத்து வரச் சிறிது நேரமானால் போதும். நீ எப்பொழுது பார்த்தாலும் “இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றாய்…” என்ற நிலையில் வெறுத்துப் பேசும் நிலை வந்துவிடும்.

பொறுமை என்ற நிலையை மாற்றி அதை இழக்கச் செய்துவிடும். இதையெல்லாம் மாற்றவேண்டும் அல்லவா…?

பிறவிக் கடலை நீந்திக் கரை சேர்ந்த குரு அருளைப் பெறுங்கள்… நீங்களும் கரை சேருங்கள்

 

நம் உடல் பல கோடி உணர்வுகள் சேர்த்துக் கோடிக்கரையாக வந்தது. மனித உடலின் தன்மை உருவானது – இது சிவ தனுசு.

ஆனால் வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அந்தத் தீமைகள் உட்புகாது துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைச் சேர்த்துச் சேர்த்து அதைத் தணித்தல் வேண்டும்.
1.இப்படித் தணித்துக் கொண்டு வந்தோம் என்றால் அது வலுப்பெறுகின்றது…
2.விஷ்ணு தனுசுவாக மாறுகின்றது.

ஒவ்வொன்றிலும் அழுக்கை நீக்கும் நிலைகளாக… நம் வாழ்க்கையில் எத்தனை விதமான உணர்வை எடுத்துக் கொண்டுள்ளமோ அது அனைத்திலும் அருள் உணர்வுகள் சேர்க்கப்பட்டுத் தீமைகளை அகற்றிடும் தன்மையாக வரும் போது தனுசுக்கோடி..!

ஆகவே உயிர் என்ற நிலைகள் வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் கோடி உணர்வு உணர்வுகளையும் உயிருடன் ஒன்றிடும் போது ஒன்று…! அது தான் தனுசுக்கோடி என்று கூறுகின்றனர்.

அதாவது… நமது வாழ்க்கையில் வரும் துன்பங்கள்… சங்கடங்கள்… சலிப்புகள்… வெறுப்புகள்… பாசத்தால் கவர்ந்த பல விஷத் தன்மையான உணர்வுகள்… இவைகளை நமக்குள் விடாதபடி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தணித்திடும் உணர்வின் தன்மையாக வரும் பொழுது “கோடி ஆகின்றது…”
2.பகைமை இல்லாத நிலையில் “ஒன்றாகின்றது…”

அதனால்தான் இராமேஸ்வரத்தில் இராமன் தனது நிலைகள் கொண்டு மணலைக் (தன் மனதை) குவித்துப் பூஜித்தான் தனுசுக்கோடி… இராமலிங்கம்…! என்று காட்டியுள்ளார்கள்.

ஆகையினால் இந்த உடலை விட்டுச் செல்வதற்கு முன் நாம் எதை எல்லாம் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்…?

ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை ஒளியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வரப்படும் போது அதன் வழி அங்கே அழைத்துச் செல்கிறது. அடுத்து நாம் “பிறவி இல்லை” என்ற நிலையை அடைகின்றோம்.

எந்த நிலை ஆனாலும் இதன் உணர்வின் வழிப்படி நாம் செயல்படுவதே மனிதனின் கடைசி நிலை. அதை அடையச் செய்வதற்காகத் தான் அருள் வாக்காக இப்பொழுது கொடுத்துப் பதிவாக்கினோம். துருவ நட்சத்திரத்துடன் இணையும்படி செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி அந்த அரும்பெரும் சக்தியைக் கொடுத்தாரோ அதே போன்று உங்களை அந்த்த் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக ஆக்குகின்றோம். பிறவி இல்லா நிலை அடைய உங்களுக்குள் அந்த அருள் சக்தியைப் பதிக்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி உபதேசித்தாரோ உங்களுக்குள் அந்த உணர்வின் ஞானத்தைப் பதித்து இந்த காற்றுக்குள் பரவி வரும் அருள் ஞானிகளின் உணர்வை நுகரச் சொல்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றி மெய் ஞானத்தின் உணர்வைப் பெற… அருள் உணர்வுகளைப் பெற… உங்களுக்குப் பிரார்த்திக்கிறேன்.

1.எனது புருவ மத்தியை எண்ணி ஈஸ்வரா… என்று எண்ணி இருங்கள்
2.உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள்
3.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது உங்கள் உயிரை நினைத்து கண்களில் (கண்களைத் திறந்து) என் புருவ மத்தியை எண்ணுங்கள்
4.குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்நேரம் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அணைப்பிலே சென்றேன்
5.அதன் உணர்வை எனக்குள் கவர்கின்றேன்
6.எனது புருவ மத்தியில் நீங்கள் எண்ணும் பொழுது “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செல்கின்றோம்…”

கடலிலே நீந்தும் பொழுது நீந்திக் கரை சேர்ந்த ஒருவரைப் பின்பற்றிச் சென்றால் அதன் வழி நாமும் கரை சேரலாம். இதைப் போன்று
1.பிறவிக் கடலில் நீந்திச் சென்று ஒளியான நமது குருவின் உணர்வு கொண்டு
2.அவர் காட்டிய அருள் வழியில் நீங்கள் என்னை உற்றுப் பார்க்கும் பொழுது அதை நீங்கள் காணலாம்.

அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக ஆன அதனின்று வெளி வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் ஏங்கித் தியானியுங்கள்.

குருநாதர் காட்டி அருள் வழியில்…
1.என்னுடைய நினைவுகள் கண்ணின் நினைவு உயிரின் நினைவும் நட்சத்திரத்தின் பால் செல்கின்றது
2.நீங்களும் இப்பொழுது என் உயிரைப் புருவ மத்தியில் எண்ணிப் பாருங்கள்
3.பார்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

இப்பொழுது உங்களுக்குள் அரும் பெரும் சக்தியைப் பெரும் தகுதி பெறுகின்றீர்கள்…
1.அருள் உணர்வுகளைக் கூட்டியது
2.அருள் உணர்ச்சிகளை ஈர்த்தது…!

ஆகவே அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்தும் நேரத்தில் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைக் கவர்ந்து உங்களுக்குள் உருவாக்குங்கள்.

உயிர் குருவைச் “சைவ சித்தமாக்க வேண்டும்”

 

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை…!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே – தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்… ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி… தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்…!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை… அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக… அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய உலகில் நிறையப் பேர் ஆசையில் சிக்கி ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ளார்கள். ஆசைகளை ஊட்டி மயங்கச் செய்து வாய் பேசாது மூடும்படி ஆக்கிவிடுகின்றனர்.

இன்றைய விஞ்ஞான உலகில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் “ஏமாற்றம் தான் வருகின்றது…” கஷ்டம் அதிகமாகின்றது…! ஏமாறிக் கொண்டேயிருக்கின்றோம்.

நீங்கள் வயலில் விதையை விதைத்துவிட்டுப் போய் ஜோதிடரிடம் கேட்கிறீர்கள். அவர்… நிறைய வெள்ளாமை “கொட்டும்” என்று சொல்கிறார்.

கேட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டால்… “என்ன கொட்டும்…?” தரித்திரத்தைத்தான் கொட்டும். செடிகள் அனைத்தும் பட்டுப் போகும்.

ஏனென்றால் தன் பிழைப்பிற்காக ஆசை வார்த்தைகளைச் சொல்லி நமக்குள் ஆசையை ஊட்டி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றனர்.

ஜாதகமோ மந்திர தந்திரம் செய்பவர்களையோ மற்றவைகளையோ பார்த்தபின் உங்களுக்கு இந்தத் தடவை “அமோகமான விளைச்சல்… அது அப்படி வரும்… இப்படி வரும்” என்று சொல்லியபின்… அப்படியே வந்து பேசாமல் இருங்கள்.

வெள்ளாமை வருமா… என்று பார்க்கலாம்..!

இதுவெல்லாம் என்ன என்றால்..
1.நம்முடைய ஆசை கொண்டு நம்மைத் திரை மறைவாக்கி உண்மையை மறைக்கச் செய்யும் நிலைகள் தான்.
2.அந்த ஆசையிலேயே தவழ்ந்து கடைசியில் “ஒன்றும் கிடைக்கவில்லையே…!” என்று வேதனை தான் வரும்.

வேதனைகள் அதிகமாகிவிட்டால் இந்த உடலிலே கடும் விளைவுகளாகி இந்த மனித உடலையே இழக்கச் செய்து அடுத்து விஷமான ஜெந்துக்களாகப் பிறக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான்… “அவ்வளவு பெரிய சக்தியை” உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாக ஊட்டுகின்றோம்.

நீங்கள் இதை வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் “உங்களைக் காக்க… உங்கள் எண்ணம்” அது உதவும்.

நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை… “மெய்ஞானிகளின் ஞான வித்துக்களை” உங்களிடம் ரிக்கார்டு (பதிவு) செய்கின்றோம்… அவ்வளவு தான்…!

ஒரு விதையைக் கொண்டு பூமியில் விதைத்துவிட்டால் அது என்ன செய்கின்றது…?

அந்த வித்தின் தன்மை எதுவோ பூமியின் துணை கொண்டு “தன் தாய்ச் செடியின் சத்தை எடுத்து நுகர்ந்து… மள… மள..” என்று வளரத் தொடங்குகின்றது.

அதிலே எந்தெந்த நேரத்தில் என்ன பருவமோ அதிலே உரமோ மருந்தோ மற்றதோ அதைப் போட வேண்டும் என்றால் அதைச் சரியாகப் போட்டு விட்டால் நிச்சயம் நன்றாக விளைகின்றது. அந்தப் பலனைக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான்.. உங்களுக்குப் பருவம் யாம் என்ன சொல்கிறோம்…?

“கஷ்டம் வரும் பொழுது… அந்தக் கஷ்டத்தை விட்டுவிடுங்கள்…” அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுங்கள்.

பல வகைகளிலும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் அந்த மெய்ஞானிகளின் வித்துக்களை ஊன்றிக் கொண்டேயிருக்கின்றோம் அல்லவா.

அப்படி ஊன்றி இருக்கும் பொழுது… “அதற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உரத்தைக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்.

அது போதும்.

இப்படிச் செய்து கொண்டே வந்தோம் என்றால் உங்கள் உடலில் “ஊழ்வினை என்ற வித்து” வளர்ச்சி அடைந்து கொண்டே வரும். உங்களுக்குள் அந்தப் பலன் கிடைக்கும்.

வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடக்கூடிய ஞானம் தன்னாலே வரும். மன பலமும் மன தைரியமும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்தும் விடுபட்டு மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.

கணவன் மனைவிக்குள் “பற்று…” எப்படி இருக்க வேண்டும்…?

 

குடும்பத்தில் சஞ்சலம் என்று உணர்வு வந்து விட்டால் கணவன் மீது பற்றாக இருக்கும் மனைவி கணவர் வெளியே செல்லப்படும் பொழுது அவருடைய தொழில் எப்படி இருக்கின்றதோ…? அங்கே என்ன நடக்கின்றதோ ஏது நடக்கின்றதோ…? என்று மனைவி அடிக்கடி எண்ணினால் இதே உணர்ச்சிகள் கணவருக்குத் தூண்டப்பட்டு அங்கே சிந்தனையற்ற செயல்களாகி… பகைமை ஆகி… தொழில் செய்யும் இடங்களில் தீமைகள் வருகின்றது.

கணவன் மனைவிக்குள் இது போன்று வருகின்றது. இதைத் தடுக்க மனைவி எப்படி எண்ண வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தன் உடலில் மனைவி அதை வலுவாக்கிக் கொண்டு அந்த அருள் சக்தியைக் கணவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.
1.அவருக்கு அந்த ஊக்கமான நிலை கிடைக்க வேண்டும்
2.அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்
3.அவர் பார்ப்பவருக்கெல்லாம் நல்ல உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்

கணவர் மீது பற்று இருப்பினும் அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலும் எண்ணும் பொழுது அவருக்கு வரக்கூடிய தீமையில் இருந்து மீட்க முடியும். கணவனுக்குத் தீமை வராது மனைவி காத்துக் கொள்ள முடியும்.

ஆகவே… துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளை காலை துருவ தியானத்தில் இரண்டு பேருமே எடுத்து அந்தச் சக்தி வாய்ந்த நிலைகளை இணைத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நுகர்ந்து பேரின்பம் பெறும் உணர்வாகப் பெற்று இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

நோயாளியை உற்றுப் பார்த்து நோயை அறிந்து கொள்கின்றோம். இருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் இயக்காதபடி அதை அடக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நோயாளியை நாம் பார்க்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் எண்ணி எடுத்தால் அது விஷ்ணு தனுசு.

நோயாளி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டால் இந்த உணர்வுகள் அங்கே உருவாகின்றது. அவர் உடல் நலம் பெறும் சந்தர்ப்பமும் உருவாகிறது.

இத்தகைய வல்லமை பெற்ற சக்தியாக வர வேண்டும் என்றால் காலையில் கணவன் மனைவி இருவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
1.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
2.எங்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்
4.நுகரும் அந்த உணர்வுகள் எல்லாம் உயிரின் இயக்கத்தில் ஒன்றி அது பிரணவமாகின்றது (ஜீவன் பெறுகிறது)
5.உயிரான ஈசனிடம் பட்ட பின் ஓ…! என்று உணர்ச்சிகளாக மாறி இரத்தநாளங்களில் கலக்கின்றது
6.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உடலிலுள்ள அணுக்களிலே படரப்படும் பொழுது தீய அணுக்கள் ஒடுங்குகின்றது.

ஆனால் அதே சமயத்தில் தீய அணுக்களை நுகர்ந்தால் அதன் உணர்ச்சி கொண்டு இயக்கப்பட்டு நல்ல அணுக்கள் செயலற்றதாகிந்றது… நாம் சோர்வடைகின்றோம்… சஞ்சலப்படுகின்றோம்…! இந்த உணர்வு அதிகரித்தால் உடலில் மாற்றமே (வலியோ நோயோ) வருகின்றது.

ஆகவே கணவன் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இரு உணர்வும் ஒன்றாகி விட்டால் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கல்யாணம் ஆகிவிட்டால் மனைவியைக் கண்டபடித் திட்டுவதும்… உதைப்பதும்… போன்ற நிலையில் சிலர் இருப்பார்கள்.

அதே சமயத்தில் பெண்களும் கணவர் செயல் பிடிக்கவில்லை என்றால் அவரைச் சாபமிடும் நிலைகளுக்கே வருகின்றார்கள்.

இது போன்ற நிலைகளில் இருவரும் செயல்பட்டால் மனிதனாக இருக்கக்கூடிய நிலையினைப் பிரிக்கப்பட்டு
1.எதனின் விஷத்தின் தன்மை இருவருக்குள்ளும் கலந்ததோ அதற்குத்தக்க அடுத்து தீமையான உடல்களுக்குத் தான் செல்ல நேரும்.
2.அடுத்து மனித உருப் பெரும் தகுதியை இழந்து விடுகின்றோம்
3.நரக லோகத்தைச் சந்திக்கும் நிலையே வருகின்றது.

இது போன்ற நிலையிலிருந்து விடுபட குடும்பத்தில் கணவன் மனைவி ஒவ்வொருவரும் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள்.

வசிஷ்டரும் அருந்ததி போன்று கணவன் மனைவி ஒன்றி வாழ்ந்து ஒருவரை ஒருவர் மதித்து நடந்து அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆனால் பற்று கொண்ட நிலையில் வேதனையைச் சேர்த்து விட்டால் அந்த வேதனை உருவாக்கப்படும் பொழுது இங்கே இருவருக்குள்ளும் நோயாக மாறுகின்றது அதாவது
1.”வெளியிலே எனக்கு இடைஞ்சல்…” என்று கணவன் மனைவியிடம் சொல்லப்படும் பொழுது
2..அதை ஏற்று மீண்டும் திருப்பி கொடுக்கும் நிலையாக ஆண் பெண் என்ற நிலையில் “நோயே…” இங்கே ஜீவன் பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவன் பெற வேண்டும்… என்று மனைவியும் மனைவி பெற வேண்டும் என்று கணவனும் இணைத்து விட்டால்… அது மிகவும் உயர்ந்த சக்தியாக இங்கே ஜீவன் பெறுகின்றது.

அதைத் தான் கணவனும் மனைவியும் உருப் பெறச் செய்ய வேண்டும்.

பரணி நட்சத்திரத்தின் சக்தி

 

1.தன்னையே தான் அறிந்து உணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொண்டிடும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெற்றிடும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொண்டிடும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு…!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது…?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்…” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலகோதய நடை முறைக்கு ஆற்றல் கொண்டிடும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்…” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்க எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொண்டிடும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி… உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது… “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்…?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது…?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்தச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலைச் சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே…! இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும்.

பரணியின் அமில குணத்தை கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்த்திடும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொண்டிடும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றிட்டால் எலும்புகளின் வலுக் கூடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வுகளைப் படிக்கும் சமயத்தில் பல உணர்வுடன் இருப்பார்கள்.

1. என் குடும்பத்தில் கஷ்டம்,..,
2. என் குடும்பத்தில் தொல்லை..,
3. என் குடும்பத்தில் சண்டை..,
4. என் பையனின் நிலைகள் இப்படி..,
5. நான் கடன் கொடுத்தவன் ஏமாற்றுகின்றான்..,
6. அவன் தரவே முடியாது என்கிறான்..,
7. என் உடல் நிலை சரியில்லை..,
8 என் குடும்பத்தில் என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்று
9.இப்படிப் பல சிக்கல்களின் உணர்வு கொண்டு தான் இதைப் படிக்கின்றோம்.

எம்முடைய அருள்ஞான உபதேசங்களைப் படிக்கும் நேரம் அந்த மாதிரி அணுக்களானால் அந்த அணுவெல்லாம் தன் உணவாக எதைக் கேட்கும்…?

எவர் மேல் பகைமை கொண்டு சிக்கல்கள் ஆகி இந்த உணர்வின் தன்மை அணுவாக ஆனதோ… “அது அது…” தன் உணர்ச்சிகளை உந்தும்.

உபதேசிக்கும் உணர்வை எடுக்கவிடாது… “அது உந்தித் தடைப்படுத்தும்”. “நல்ல உண்மைகளைப் பெற முடியாதபடி… தடைப்படுத்திக் கொண்டிருக்கும்…”

தடைப்படுத்தும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்… “எப்படியும் நீங்கள் அதிலிருந்து மீண்டிட வேண்டும்” என்று தான் வலிமையான உணர்வு கொண்டு “உங்கள் கவனத்தை இங்கே திருப்பி” அருள் உணர்வு கொண்டு உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் “அணுக்களாக விளைந்து” பகைமையற்ற உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற நிலைக்கு உபதேசிக்கின்றோம்.

உங்கள் பார்வை பகைமையை உட்புகாது தடுக்கும் நிலையாக வர வேண்டும் என்றும்… “உங்கள் பார்வை” எங்கே பகைமை உருவாகின்றதோ “அங்கேயே… அதை அடக்கிடும் சக்தி” பெற வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

பகைமை என்றால் விஷத் தன்மை கொண்ட விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்திய உணர்வுகள் “எத்தனையோ… எத்தனையோ” நமக்கு முன் சந்தர்ப்பத்தால் வந்து கொண்டே இருக்கின்றது.

அத்தகைய தீமை செய்யும் நிலைகளை நாம் காண நேர்கின்றது. செவி வழி கேட்கவும் நேர்கின்றது.

இதைப் போல “செவி கொண்டு கேட்டுணர்ந்த உணர்வுகள் உடலுக்குள் பதிவாகி… கண் வழி கொண்டு நுகர்ந்தறிந்து…” அதன் வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்… இயற்கையின் செயலாக்கங்களிலிருந்து “நம்மை எப்படி மீட்டிக் கொள்ள வேண்டும்..?” என்பதைத்தான் குருநாதர் காட்டிய வழிகளில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

சூரியன் எவ்வாறு தன் உணர்வின் தன்மை கொண்டு மற்றவைகளை வளர்க்கின்றதோ அதைப் போன்று குருநாதர் நாம் எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற ஆசையில் வளர்க்கின்றார்.

அவர் இன்று சூரியனாக இருக்கின்றார். அகஸ்தியன் பெற்ற உண்மைகளை அவர் கண்டார். அவர் வாழ்க்கையில் அறிந்துணர்ந்தார். அவர் வழியில் அவர் கண்ட உண்மையும் அதன் உணர்வை எனக்குள் பதியச் செய்தார்.

“பதிந்த உணர்வுகளை…” மீண்டும் நினைவு கொண்டேன். அதை நுகரும்… அறியும்… சந்தர்ப்பத்தை எனக்குள் உருவாக்கினார்.

அதன் உணர்வின் தன்மை பெருகும் நிலைகளில்… “அவர் கவர்ந்து கொண்ட உண்மைகள்… அவர் வெளிப்படுதிய உணர்வுகள் எதுவோ” அதை நான் பருகினேன்.

எனக்குள் அந்த அணுவின் தன்மையை உருவாக்கினார். அது அணுவான பின் தன் உணவுக்காக ஏங்குகின்றது. அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது.

உணர்வை அறிகின்றேன். “அதையே” இங்கே உங்களிடம் சொல் வடிவில் வெளிப்படுத்துகின்றேன்.

அதைக் கேட்கும் பொழுதும்… படிக்கும் பொழுதும் உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது. இதை உங்களுக்குள் அணுவாக மாற்றிவிட்டால் தெளிந்த மனம் வரும்.

ஏற்றுக் கொள்ளும் பண்பு… உங்களுக்கு வேண்டும்.

ஆனால் “கதவை அடைத்து விட்டால்..,! என்ன செய்யும்…? யாம் உணவைக் கொடுத்தால் அதை நீங்கள் உட்கொண்டால் தானே உங்களுக்குள் அது சத்தாக மாறும்.

யாம் பதிவு செய்யும் அந்த ஞான வித்துக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உரமாக ஏற்றுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உரமாகக் கொடுத்தால் தான் ஞானத்தைப் பெருக்க முடியும்

 

தெருவிலே சாக்கடை இருக்கின்றது… வீட்டிலோ… தொழிலிலோ… “மிகுந்த கஷ்டம்…” என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நம்முடைய உணர்வுகள் சாக்கடை நாற்றத்தை எடுத்துச் சாப்பிடும் (நம்மை அறியாமலே).

ஆனால் யாம் சொன்ன முறைப்படி தியானம் அதிகமாக இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களுக்குச் சாக்கடை நாற்றமே பெரும்பகுதி தெரியாது.

1.சாக்கடை அருகிலே இருந்தாலும் கூட… அந்த உணர்வுகளை நுகரவிடாது
2.எடுத்துக் கொண்ட தியானம் அதைத் தடுக்கும்… உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற அத்தகைய ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களிடம் யாம் பதிவு செய்த ஞான வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

பயிர்களை விவசாயம் செய்யும் போது பார்க்கலாம். புகையிலைக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்… நெல்லுக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்… சோளத்திற்கு என்று ஒரு உரம் போடுகின்றார்கள்.

அதே மாதிரி யாம் கொடுக்கும் ஞான வித்திற்கு “அருள் ஞான உணர்வின் உரத்தை” நீங்கள் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் “ஞான வித்தாக” ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது. ஒவ்வொரு நிமிடத்திலும் அதற்குச் சத்து கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களிலே அது படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது இது கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை உயர்த்தும்.

1.நான் தியானம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன்… என் வீட்டுக்காரர் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்
2.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்… கடன்காரன் பணத்தை திரும்பத் தர மாட்டேன் என்கிறான் என்று இப்படி விட்டு விட்டால் இது சவாரி செய்து விடும்
3.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்… எனக்கு நோய் வந்து விட்டது என்று எண்ணினால்
4.அருள் சக்திகளைப் பெறுவதை விட்டுவிட்டு இதை எடுத்துக் கொள்கின்றீர்கள்
5.கெட்டதற்குத் தான் நீங்கள் சக்தி கொடுக்கின்றீர்கள்… அதையே வளர்க்கிறீர்கள்.

இந்த மாதிரி எண்ணங்கள் எதனால் வருகின்றது…?

உடலில் உள்ள அணுக்களுக்கு அதற்குப் பசி எடுக்கும் பொழுது அது உணர்ச்சியைத் தூண்டி நல்லதை எடுக்க விடாது இப்படித் தடுக்கும்.

அந்த மாதிரித் தடுக்கும் நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? உங்களுக்குக் கொடுத்த ஆத்ம சுத்தி பயிற்சி மூலம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்து நல்ல உரமாகக் கொடுத்தால்
2.ஞானத்தை நாம் பெருக்க முடியும்
3.தீமையான உணர்வுகள் உள்ளுக்கே புகாதபடி தடுக்கவும் முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா. இப்படி நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரோட்டில் ஒருவன் போகின்றான்… யாரையோ கோபமாகப் பேசுகின்றான். அதைப் பார்த்தவுடன் நம் நினைவுகள் எப்படி வருகிறது…?

பார்… இந்த மாதிரி நடுரோட்டில் பேசுகின்றானே…! இந்த உணர்வு வந்த பின் உயிரிலே பட்ட பின் நமக்குள்ளும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நாமாக அப்படிச் செய்கின்றோமா…? இல்லை…! அவன் உணர்வு நம்மை இயக்குகின்றது. ஆகவே இந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே உயிருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் இந்த வலுவான நிலைகள் இங்கே ஆனபின்
1.அவன் உணர்வைத் தள்ளி விட்டு விடும்
2.காரணம் இங்கே அடைத்து விடுகின்றோம்
3.துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டுகின்றோம்
4.ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்

துணியில் அழுக்குப்பட்ட பின் சோப்பைப் போடுகின்றோம். நுரை என்ன செய்கின்றது…? அந்த நூலுக்குள் மறைந்துள்ள அழுக்கை அப்புறப்படுத்துகின்றது.

சோப்பு போடாதபடி… என்ன தான் துணியைத் துவைத்தாலும் கூட அழுக்குப் போகாது. இருட்டடித்த மாதிரி தான் இருக்கும். வெள்ளையாக இருக்காது.

உப்பைப் போட்டுத் துணிகளை வேக வைத்த பின் அழுக்கை எல்லாம் வெளியேற்றி விடுகின்றது. அது போன்று தான் நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழகுங்கள்.

ஆத்ம நிலையைத் தன் வழிக்கு “ஏற்க வந்தவர்களுக்கு…” அறிந்திடத் தான் இந்தப் பாட நிலை

 

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்… மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ… பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன…!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை… பூகம்பம் வரும் நிலை… பெரும் மழை வரக்கூடிய நிலை…! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே அந்தச் சக்தி உள்ளது என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

ஆனால்… இந்த மனிதன் உண்டு… உடுத்தி… உறங்குவது தான் வாழ்க்கை…! என்ற சுகத்தை எண்ணுகின்றான். இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு…?

1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதர்களான நாம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை பெற்றவர்கள். எதனையுமே நமக்குள் எளிதில் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள்.

விஞ்ஞானி விண்ணிலே அண்டத்தின் நிலைகளையும் பூமிக்கடியில் உள்ள நிலைகளையும் ஊடுருவிப் பார்த்துப் பல பொருகளை அறிகின்றான். அதை எல்லாம் இணைத்து எத்தனையோ புதுப் புது இயந்திரங்களை உருவாக்குகின்றான்.

“ஒலி.. ஒளி..” அலைகளைப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை அங்கே விஞ்ஞானத்தின் நிலைகளில் இயக்குகின்றது.

கடந்த காலத்தில் ஞானிகள் இதைப் போன்று சப்தமிடுவதில்லை. மனதிற்குள் ஒடுக்கி வைத்துள்ளார்கள்.

“தான் பெற்ற ஆற்றல்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை உள் நின்று பாய்ச்சப்படும் பொழுது மற்றவர்கள் ஏங்கி நிற்கும் பொழுது அந்த உணர்வலைகளை நுகர நேர்கின்றது,

இவன் எண்ணி வெளிவிடும் உணர்வுகளை “மௌனமாக இருந்து…” உணர்வினை நுகர்ந்து இந்த ஞானியின் உணர்வுகளை அவர்கள் சீடர்களும் உருவாக்கும் தன்மை பெற்றார்கள்.

இப்படித்தான்…
1.“அகஸ்தியன் தான் கண்டுணர்ந்த உணர்வுகளை…” சொல் என்ற நிலைகள் வராதபடி… “உணர்வென்ற நிலையில்”
2.தான் நுகர்ந்த உணர்வுகளைத் தன் இன மக்கள் பெற வேண்டும் என்று உணர்வுகளை “மூச்சலைகளாக…” வெளியிட்டுள்ளான்.

அதே மாதிரி அகஸ்தியனை உயர்ந்த நிலைகள் கொண்டு எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் அகஸ்தியனின் சகாக்களுக்குள்ளும் வளரப்பட்டு தீமைகளை அகற்றும் நிலை பெற்றார்கள்.

அருள் உணர்வை அவன் பெற்றது இந்த வழியில் தான். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தில் வளர்ந்திட வேண்டும்,

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவுகள்… “சூறாவளி புயல்” போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம்
1.இந்த உடலும் நமக்குச் சொந்தமல்ல…
2.நாம் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமல்ல… என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

நாம் சொந்தமாக்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும்… என்ற “இந்த உணர்வை” நமக்குள் சொந்தமாக்க வேண்டும்.

உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைத் தான் பெற்று ஒவ்வொருவரும் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று எண்ணினால் அதனுடன் கலந்து நமக்குள் தெளிவான நிலையும் பெறுதல் வேண்டும்.

பேரன்பைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

சிலர் தவறு செய்தாலும் அந்த உணர்வு நம்மை இயக்காத நிலையும் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி வாழ்தல் வேண்டும். ஏனென்றால் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம்.

இனி எதிர்காலம் மிகவும் சிந்தனையற்ற காலமாகவே மனிதனின் செயல்கள் இருக்கும். மனிதன் மனிதனாகத்தான் இருப்பான்.

ஆனால் மனிதன் பல கொடூரமான செயல்கள் செய்வதும் கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் ஏமாற்றும் நிலைகளில் செல்வம் வைத்திருந்தாலும் வீடு புகுந்து அடித்துக் கொன்று விட்டு பொருளை அபகரித்துச் செல்லும் நிலை வந்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் தேடிய செல்வம் எங்கே இருக்கின்றது…?

நாம் எடுக்கும் மூச்சின் அலைகள் கொண்டு எந்தத் தீமையான உணர்வுகளும் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும். இதைப் போன்ற நிலைகளில் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தான் வேண்டுகின்றோம்.

குருநாதர் எம்மை எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தரோ அதே போன்றுதான் “உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம்…”
1.உலகில் இன்று நடக்கும் தீமையின் உணர்வுகளும்..,
2.அதை நீக்கிடும் அருள் உணர்வுகள் பெற்றதையும் இணைத்து…
3.இரண்டையும் கலக்கப்படும் பொழுது இணைத்து…
“தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகள்… உங்களுக்குள் வலுப்பெற வேண்டும்” என்ற நிலைக்குக் கொண்டு செல்கின்றோம்.

அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறேன்

 

இன்று கோடிச் செல்வங்களை நாம் வைத்திருந்தாலும் அழகான உடலாக வைத்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் பண்பால் பரிவால் கேட்டறிந்த உணர்வுகள் உடலுக்குள் கடும் நோயாக மாறும் பொழுது “நம் அழகான உடல் நிற்கின்றதா…?”

ஆடை அலங்காரங்களை எல்லாம் செய்து பிறரை மகிழச் செய்யும் நிலை நமக்கு இருந்தாலும்
1.வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் என்ன ஆகிறது…?
2.நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது அழகான ஆடையை மேலே போட்டால் என்ன சொல்வீர்கள்…?

நல்ல ஆடைகளைப் பார்த்தால் வெறுப்பு தான் வரும்.

மீறி யாராவது கொடுத்தால் என்னைக் கேலி செய்கின்றீர்களா…? நான் நோயாக இருக்கும் போது இப்படிச் செய்கின்றீர்களே…! என்று வெறுக்கும் தன்மை தான் வரும்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் போது ஒரு நல்ல ஆடையைக் காண்பித்து இது எப்படி இருக்கிறது பாருங்கள்…! என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்…?

காட்டுவர்கள் மீது ஏரிந்து விழுவோம்… எந்த நேரத்தில் எதைச் செய்கிறார்கள் பார்…! என்று. ஆகவே அதை அப்போது ஒதுக்குகின்றோம் அல்லவா…!

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய ஆடம்பர நிலை பெற்றிருந்தாலும்
1.அருள் ஒளி என்ற நிலையை நாம் பெருக்கி
2.அருளைப் பெறும் ஆசையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இருளை நீக்கும் அந்த வலிமை பெற்று நமது வாழ்க்கையில் பேரருளைப் பெறும் அருள் சக்தியாக நாம் வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் முழுமை பெறுதல் வேண்டும்.

உங்களை எங்கே அழைத்துச் செல்கின்றேன்…? துருவ நட்சத்திரத்திற்கே இப்போது அழைத்துச் செல்கின்றேன்…!

நம் பிரபஞ்சத்தின் இயக்கம் 2000 சூரியக் குடும்பத்தில் இணைந்து வாழும் தன்மை பெற்றது.
1.அதைக் கண்டுணர்ந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்கு உணர்த்தப்படும் போது
2.உங்கள் நினைவாற்றல் அந்த 2000 சூரியக் குடும்பங்கள் வாழும் எல்லைகளுக்கே செல்லுகின்றது
3.அதன் உணர்வின் தன்மையைப் பெருக்கி பிறவில்லா நிலையை அடையும் நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஆகவே உங்கள் ஆழ்ந்த சிந்தனையைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அறியாது வந்த இருளை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கணவன் மனைவி எங்கள் இரு உயிரும் ஒன்றாக வேண்டும். வசிஷ்டர் அருந்ததி போல நாங்கள் ஒன்றி வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து சாவித்திரி போன்று தீமைகள் புகாது இரு உயிரும் ஒன்றிட வேண்டும் என்று கணவன மனைவி இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஆகவே உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
2.பேரின்பப் பெரு வாழ்வு வாழக்கூடிய நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

தியானிக்கும் முறைகளை வழி காட்டினோம்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் பதிவு செய்தோம்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்துடன் இணைத்து “ஆழ்ந்த நித்திரைக்கு முன் நீங்கள் கொண்டு வந்தால்” என்றும் ஏகாந்த உணர்ச்சி கொண்டு உங்கள் உடலுக்குள் உண்மையின் உணர்வை அது உணர்த்தும்… பேரருளைப் பெருக்கும்… பேரொளியாக மாறுவீர்கள்.

“சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்”

 

ஒவ்வொரு உயிர் அணுக்களின் (உயிரினங்கள்) உயர் அமில வீரிய குணச் செயலின் தொடர் என்பது சுழல் சக்தி எண்ணமாக… பிரம்மத்தின் பிம்பமாக… சரீரச் செயல் வாழ்க்கையாகப் பூமியின் ஈர்ப்பில் செயல்படுகிறது.

அந்த உயிரினங்கள் தன் வாசனை குணத்திற்கொப்ப ஈர்ப்பின் பக்குவமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு செயல்படும் அனைத்திலுமே
1.இரு குண அமிலங்கள் சந்திக்கும் நேர் தொடரில் கலந்து
2.சத்ரு…மித்ரு… என்ற செயல் நடக்கிறது.

அதனால் அந்த இரு குண அமிலங்களில் எது வீரியத் தன்மையோ அதன் குணத்திற்கொப்ப மற்றொன்று அதனுள் கலந்து மற்றொன்றாக உருவாக்கிடும் செயல் நடக்கின்றது.

இப்படிப்பட்ட எதிர் மோதல்களை எல்லாம் தன் வாழ்க்கை நடை முறையில் சந்திக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் அந்த எண்ண மோதல்களை
2.அறிந்து உணர்ந்து செயல் கொண்டிடும் அவகாசக் காலம் ஒரு நொடிப் (நொடிக்குள்) பொழுதின் காலம் தான்.

அந்த நொடிப் பொழுதில் அறிந்ததை உடனே தெளிதலும் தெளிந்ததின் பொருள் விளங்கி எதிர் மோதல் குணங்களை தன்னைப் (ஆன்மா) பாதித்திடா வண்ணம் காத்துக் கொள்ளும் நிலைக்கு வருகின்றது.

அது மட்டுமல்ல…!
1.அந்த எதிர் மோதல் குணங்களையே மாற்றியமைத்து நற்குண நீர் பாய்ச்சி
2.தன்னுள் எதிர் மோதல் குணங்களையே அமுதமாக உட்கொண்டுவிடும் வல்லமை பொருந்தியவர்கள் தான்
3.”சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்…!”

பிராணிகளில் மான் தன் குட்டிக்குப் பாலைப் புகட்டும் பொழுது அது எடுக்கும் உணர்வின் தன்மை எப்படிப்பட்டது…?

பாலை ஊட்டும் பொழுதே இயற்கையாகச் செயல் கொள்ளும் தொடரில் தன்னைப் புசிக்க வரும் கொடிய விலங்குகளின் உணர்வுகள் காற்றிலே அலைகளாக வரும் பொழுது தன் மீது வந்து மோதியவுடன் அந்த வாசனையை அறிந்து கொள்கிறது.

1.உடனே தன் சுவாசத்தின் ஈர்ப்பினால் எதிர் மோதல் குணங்களை அறிந்து
2.தான் சுரந்திடும் பாலைத் தடைப்படுத்தி நிறுத்தி விடுகிறது.

தன் குட்டிக்கும் அதே உணர்வை ஊட்டி ஒரு நொடிக்குள் நடைபெறும் இயற்கையின் சூட்சம உணர்வில் அது எடுக்கும் அச்ச உணர்வு கொண்டு விரைந்து தப்பி ஓடிவிடும்.

ஏனென்றால் அதற்குள் இருக்கும் குண அமிலச் சுரப்பிகள் இயற்கையின் வழி வரும் (மற்ற கொடிய மிருகங்கள்) அந்த வாசனைக்கொப்ப உணர்வு கொண்டு அந்தச் (மானின்) சரீரத்தைச் செயல்படுத்தச் செய்கிறது.

அதாவது ஒரு கட்டளைக் கேந்திரமாகச் (CONTROLLING STATION) செயல்படும் எண்ணத்தின் பிடர்தல் உந்துவிசை கொண்டு எந்த உணர்வுகள் அச்சத்தை ஊட்டியதோ (ஈர்த்ததோ)
1.அதே உணர்வுகளில் நொடிக்குள் மாறு கொண்ட விநோத செயல்பாட்டை அறிந்து
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் செயல்கள் துரித கதியில் செயல்படுகிறது.

இதே செயல் முறை தான் கௌதம புத்தருக்கும் அன்று ஏற்பட்டது.

புத்தர் தான் பெற்ற அனுபவ ஞானத் தொடரில் சரீர அவஸ்தைகளிலிருந்து மனிதன் விடுபட்டு இந்தச் சரீரத்தைக் காத்திட வேண்டும் என்றால் மனிதன் விடுபட வேண்டிய குணங்களில் “அதி ஆசையை முதன்மையாகக் காட்டினார்…!”

ஆக பிறவித் துன்பங்களுக்குக் காரணமே “ஆசை” என்ற சொல் நாமப்படுத்திச் சூட்சமங்களை உள் மறைத்து உயிரான்ம சக்தியை வலு கொண்டதாக ஆக்கிடும் செயலில் புத்தருக்குப் பரிபூரணத்துவம் உண்டு.

நம் உயிரான்ம சக்தியைக் காத்திடும் பஞ்ச உறுப்புகளில் எதிர் மோதல் தன்மைகளைப் பக்குவமாக விலக்கிடும் உணர்வுகள் கொண்டு அறிந்து செயல்படும் பிடர்தல் செயல்பாட்டின் பொழுது
1.உயிரான்ம சக்தியில் ஏற்கனவே பதிவு செய்த செயலை வீரியமாக்கிடாமல்
2.ஆன்மாவில் பதிந்த பின் சுவாசத்தின் வழி கொண்ட சரீர உணர்வுகளில் செயலாக்கத்திற்கு
3.ஞான விழிப்பார்வை கொண்டு “நொடி நேரச் செயல்பாடாக…”
4.அருள் உணர்வுகளைத் தன் ஒளிகாந்த சக்தியால் வலுக் கூட்டிக் கொண்டு அதனைப் பார்வை வழியாகச் செயல்படுத்துதல் வேண்டும்
5.ஆனால் அப்பொழுது செயல்படும் செயலின் ஈர்ப்பில் அச்ச உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளக் கூடாது.

காத்திடும் பக்குவமும்… எதிர் மோதல் குணங்களையே தன் ஒளி காந்தத்தால் வசமாக்கி.. அன்பு கொண்டு ஈர்த்திடும் செயலாக… தன் எண்ண அசைவு கொண்டு செயலாற்றிடல் வேண்டும்.

புத்தரைக் கொல்ல வந்த காட்டுக் கள்வன் எடுத்த விரக்தியின் உச்சகட்ட ஆவேச உணர்வுகள் “சாது என்றோ… சம்சாரி என்றோ…” அறிந்து கொள்ளாத செயல்பாடாக இருந்தது.

அவனின் அறிவின் மௌடீகம் எவ்வளவு கொடுமையாக வீரியமாக அவனுக்குச் செயல்பட்டாலும் அதை ஒரு நொடிக்குள் மாற்றியமைத்துச் சமப்படுத்திய
1.அந்தப் புத்தனின் செயலாற்றும் திறன்
2.எல்லா ஞானச் செல்வங்களும் (மனிதர்கள்) பெற்றிட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“சாமியைப் பார்த்தோம்.. சாமியாரைப் பார்த்தோம்…” ஆகவே எல்லாம் நமக்குக் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.

நாம் எதை நுகர்கின்றோமோ.. “அதைத்தான்” நம் உயிர் அந்த வழிப்படி செயல்படுத்துகின்றது என்று நான் அடிக்கடி சொல்லி வருகின்றேன்.

நீங்கள் “இருந்த இடத்திலிருந்தே… நல்ல சக்திகளைப் பெற முடியும்”. அந்தத் தன்னம்பிக்கை வேண்டும்.

உதாரணமாக ஒருவர் திட்டும்பொழுது அவர் உணர்வை பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். பின் என்ன நினைக்கின்றீர்கள்…?

1.என்னைத் திட்டினார்… என்னைத் திட்டினார்… என்று எண்ணுகின்றீர்கள்.
2.அடுத்து என்னைத் திட்டினால் அவன் உருப்படுவானா.., உருப்படுவானா..,?” என்று எண்ணுகின்றீர்கள்.

இந்த உணர்வு என்ன செய்யும்…? அங்கேயும் இயக்குகின்றது. இங்கேயும் இயக்குகின்றது.

அதே மாதிரி உங்கள் குழந்தை மேல் பாசமாக இருக்கின்றீர்கள். வெளி ஊரில் படிக்கின்றது. சமயத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் “என்ன ஆனதோ…? ஏதாச்சோ…?” என்று வேதனைப்படுகின்றீர்கள்.

வேதனைப்படும் பொழுது அந்த வேதனை உங்களுக்குள்ளும் விளைகின்றது. அந்த குழந்தைக்கும் வேதனை வரப்படும்பொழுது… “சிந்திக்கும் தன்மை குறைந்து படிப்பில் கெடுகின்றது”.

குழந்தை… “இதற்கு முன்னாடி நன்றாகப் படித்துக் கொண்டிருந்ததே…!” என்று எண்ணுவீர்கள். இதைப் போன்று ஏதாவது வேதனை உணர்வுடன் உங்கள் குழந்தையை எண்ணினீர்கள் என்றால் குழந்தைக்கு என்ன செய்யும்…?

சிந்திக்க முடியாதபடி படிப்பிலே அது ஓரளவிற்கு நினைவை இழக்கச் செய்கின்றது. “முக்கியமான பாடங்கள் இருக்கும்போது” நீங்கள் குழந்தையை வேதனைப்பட்டு எண்ணினால் “அது (படித்தது) நினைவிழந்து போகின்றது”.

நினைவில்லை என்கிற பொழுது “நான் நன்றாகப் படித்து வந்தேனே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று அதுவும் வேதனைப்படும்.

இதுவெல்லாம்.. “நம்மையறியாமல் செயல்படக் கூடிய நிலைகள்” என்பதை அடிக்கடி நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்.

“நீங்கள் எல்லோருமே… அருள் ஞானம் பெற வேண்டும்” என்று தான்
1.உங்கள் உயிரைக் கடவுளாக நான் வணங்குகின்றேன்.
2.உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன்.
3.ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் தான் உங்கள் உடல் சிவம் என்று மதிக்கின்றேன்.

“எண்ணத்தால் உருவானது தான் கண்” என்றும்… “கண்ணால் தான் உருவாகி… எண்ணத்தைக் கொடுக்கின்றது” என்றும் எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை நான் மதிக்கின்றேன்.

எண்ணத்தால் தான் நாம் எல்லாம் இயக்குகின்றோம்.

1.நம் சொல்லே இராமனாகின்றது
2.கண்ணே கண்ணன் ஆகின்றது.
3.உடலே சிவம் ஆகின்றது என்ற நிலைகளை வைத்து
4.ஒவ்வொருவரும் நாம் இதைப் போல நினைக்க நேர்ந்தால்
5.நாம் ஒவ்வொரு உயிரையும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் ஈசனாகவும் சிவனாகவும் விநாயகனாகவும் சொல்லை இராமனாகவும் கண்களைக் கண்ணனாகவும் நாம் மதிக்க முடியும்.

இவ்வாறு மதித்து விட்டால்… “நம்மை அறியாமல் வரும் தீமைகளை” அகற்றும் சக்தி “நாமே பெறுகின்றோம்”.

தீமையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்டுத் தீமையை விளைவிக்கும் உணர்ச்சிகள் நம் உடலிலே சுழல்கின்றது.

உயிருக்கு “விஷ்ணு” என்று காரணப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
1.இயக்கத்தின் நிலையை ஈசன் என்றும்
2.இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்
3.வெப்பத்தால் ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும் தெளிவாக நம் ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிரிலே மோதும் பொழுதுதான் அந்த உணர்ச்சிகள் நம் உடலில் இயக்கத் தொடங்குகின்றது.

அதனால் தான் அவனைச் “சங்கு சக்கரதாரி” என்று தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள். இதைப் பல முறை உங்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன்.

பிறரின் வேதனைப்படும் நிலைகளை நுகர்ந்தோம் என்றால் அந்த வேதனையின் உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது. நம் உடலான ஆலயத்தில்… “அசுத்தத்தைச் சேர்க்கின்றோம்…” நம் உயிரான ஈசனுக்கும்… “துயரத்தைக் கொடுக்கின்றோம்…”.

நம் கண்ணின் “கருவிழியால்” கண்ணுற்றுப் பார்க்கும் உணர்வின் தன்மை தெளிவாக்கும் நம் கண்ணுக்கே வேதனை என்ற உணர்வு வரும் பொழுது “கண் மங்கும் நிலையும்” சிந்திக்கும் தன்மையும் சீரான உணர்வைக் கவரும் தன்மையும் “இழக்கின்றது” என்பதையும் தெளிவாகக் கூறுகின்றோம்.

இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பத்தால் வரும் நுகரும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

இதைத் துடைப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பதிவாக்கி அதனை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.“இருந்த இடத்திலேயே.., தீமைகளை அகற்றலாம்”.
2.உணர்வின் சக்தியை நீங்கள் பெறலாம்
என்றுதான் சொல்கின்றேன்.

எப்பொழுதுமே… “உங்களிடம் தான்… நான் வரம் கேட்கின்றேன்”.

காரணம்.., “உயிரான ஈசன் வீற்றிருக்கும்… அந்த இடத்தில்” அமைதி கொண்ட உணர்வுகள் நீங்கள் சுவாசித்தால்… அந்த அருள் உணர்வுகள் வெளி வரும்போது.., அதைக் கண்டு நான் ஆனந்தப்படுகின்றேன்…”

அப்பொழுது என் உயிரான ஈசனுக்கும் அந்த அமுதைக் கொடுக்கின்றேன்.

அதனால் தான் தெளிவாகச் சொல்வது. குறைகள் அகற்றுங்கள். அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றுங்கள்.

மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெற ஒவ்வொரு மனிதனின் நிலையையும் கடவுள் என்ற நிலையில் மதித்துப் பழகுங்கள்.

கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் இந்த அருள் ஞானச் சக்கரம்

 

ஆயுள் கால மெம்பர்களுக்கு அந்த உண்மையின் உணர்வின் சக்தி பெற கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் அருள் ஞானச் சக்கரம். எமக்கு குருநாதர் முதலிலே அப்படித்தான் கொடுத்தார்.

அதைப் போல அவர் காட்டிய அருள் வழியில்
1.27 நட்சத்திரங்களும்
2.சிவசக்தி விஷ்ணு சக்தி பிரம்ம சக்தி சித்தி விநாயகர் என்ற இந்த உணர்வின் தன்மை இணைத்து
3.அந்த வட்டத்திற்குள் கணங்களுக்கு அதிபதி சித்தி விநாயகர் என்று அதை முறைப்படுத்தியது.

இன்று கம்ப்யூட்டர் நாடாக்களில் எப்படிப் பல விதமான ஆணைகளைப் பதிவு செய்கின்றனரோ அதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்குகின்றோம். உங்கள் உடலிலும் பதிவாக்கி உள்ளோம்.

1.அந்தச் சக்கரத்தைப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுதெல்லாம்
2.தீமைகளை அகற்றி உங்கள் செயல்களை அது நல்லதாக மாற்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும்… அகஸ்தியரின் உணர்வு எங்களுக்குள் படர வேண்டும்… மெய் ஒளி காணும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்து வலிமை பெறச் செய்து விட்டு… அடுத்து எந்தக் காரியமாக இருந்தாலும் எந்தச் செயலாக இருந்தாலும் அது நல்லதாக அமைய வேண்டும் என்று செயல்படுத்திப் பாருங்கள்.

அதே சமயத்தில் எங்கள் சொல்லும் செயலும் புனிதமாக வேண்டும் என்ற இந்த உணர்வுடன் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள். அருள் உணர்வுகளைப் பெறுங்கள்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.

1.குரு காட்டிய நிலையில் கொண்டு உங்களை ஆயுள் கால மெம்பராக அமைத்து
2.அதன் வழி துருவ நட்சத்திரத்துடன் இனைந்து வாழச் செய்ய
3.கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்வது போன்று இதைப் பதிவு செய்கின்றோம்.

இதன் வழி உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள்… பேரருளைப் பெறுங்கள். இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றுங்கள். நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுங்கள்.

எங்கள் சொல்லும் செயலும் இந்த உலகைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மையை எல்லா இடங்களிலும் பரப்பப்படும் பொழுது இந்த உலகில் வரக்கூடிய தீமைகளிலிருந்து நாமும் மீண்டு மற்றவரையும் மீட்டிட முடியும்.

நாட்டுக்கு நாடு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் ஊருக்கு ஊர் தெய்வத்திற்குத் தெய்வம் என்று எத்தனையோ பேத உணர்வுகள் இன்று சூழ்ந்து கொண்டுள்ளது.

விஞ்ஞானத்தால் ஏற்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் “நியூட்ரான்” என்ற விஷத்தன்மைகளும் பரவிக் கொண்டுள்ளது. இது எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்.

குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று சூழ்ந்திருக்கும் இந்த விஷத் தன்மையிலிருந்து மீண்டு அனைவரையும் மீட்டிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எடுக்கும் போது நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் வலுப் பெறுகிறது.

1.எத்தகைய நஞ்சையும் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றி
2.துருவ நட்சத்திரத்துடன் இணைந்து என்றும் பிறவில்லா நிலை அடைவோம்.

மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால்… அது திருவினையாக்கும்

 

1.எண்ணிலடங்காத பிறவிகள் எடுத்து எடுத்து இளைக்கலுற்றேன் இறைவா…! என்று கவி புனைந்தவனும்
2.ஏழு பிறப்பின் வினைகளும் அகல வேண்டும் என்றே உரைத்த வகையிலும்
3.எண்ணிலடங்காத பிறவிகளைப் பற்றியும் ஏழு பிறவிகளைப் பற்றியும் அந்த உண்மை நிலைகளை யாரப்பா அறிந்து கொண்டார்கள்…?

ஏனென்றால் இது விவாதம் கொண்டு உரையாட வேண்டிய விஷயம் அல்ல…! சிந்தனையில் கொள்ள வேண்டிய தனித்துவ நிலையப்பா இது.

உயிராத்மா தன் எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் செயலில் தனக்குள் சேர்த்துக் கொண்ட அமிலத் தன்மைகளில் குணங்களால் அதனுள் எழுந்திட்ட வீரிய நிலைக்கொப்ப சுவாசம் கொண்டே தனக்கொத்த தன்மைகளில் பிறப்பிற்கு வருகின்றது.

மனிதனாகப் பிறப்பிற்கு வரும் உயிராத்மா… பிறவி என்ற மாயையில் தன் உண்மை நிலை மறக்கப்பட்டே பிறந்து வருகின்றது.

பூமி சமைத்து வெளிப்படுத்தும் சக்திகளைச் சுவாசமாக்கி அதன் வழி அறிவின் ஞானம் பெற்று அனுபவமாகப் பெறும் செயல்களில் மனித எண்ணத்தின் செயல்பாடே…
1.தனக்குத் தேவையான காரியங்களைச் செயல்படுத்தும் அனைத்திலும்
2.“நான்…!” என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே வினை செயல் புரிகின்றது.
3.எந்த எண்ணம் வலுவோ அந்த எண்ணத்தின் வட்டச் சுழற்சியில் முதிர்வு நிலை பெற்று
4.புவி ஈர்ப்பின் பிடிப்பில் தான் வலுக் கொண்டிட்ட குணங்களுக்கொப்ப “மீண்டும்…மீண்டும்…” பிறப்பிற்கு வருகின்றது.

பிறவி எடுத்திட்டதனின் பயன் என்ன..? என்ற வினா எழும்பினால்… தியான வழியில் அறிவின் ஞானம் உயர் ஞானமாக்கும் சிந்தனை கொண்டு… தெளிவு கொண்டிட முயற்சிக்கும் பக்குவத்தில் “அனைத்துமே சித்திக்குமப்பா…!”

ஞானத்திற்குத் தேவை ஒன்று உண்டு. அதுவே உயர் ஞானம் பெற்றிட முயலும் “முயற்சி…!”

1.தன் உயிராத்ம வலுவின் முலாமைக் கூட்டிக் கொண்டு
2.எண்ணத்தின் செயலுக்கு எது தேவையோ அதையே முயற்சித்து… அந்தப் பேரருளைக் கூட்டி
3.இதற்கு முன் எடுத்துக் கொண்ட வினைப் பயனை மாற்றிடும் நல்லாக்கத்தின் செயலே
4.மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால் அது திருவினையாக்கும்.

தெய்வத் தன்மை பெறுவதுவும் ஒரு பிறவியப்பா…!

1.என் (ஈஸ்வரபட்டர்) நிலைக்கு ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) உயர்ந்திட வேண்டும் என்பதற்காக
2.சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் கூறி வருகின்றேன்.
3.அது அனைத்தையும் நீங்கள் பெற்று “என்னையும் முந்திச் செல்லவே ஆசி கூறுகின்றேன்…!”

மனிதன் என்ற பிறப்பில் தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு தன்னுள் உள்ள இறைச் சக்தியை வலுக் கூட்டும் முயற்சிக்குச் சங்கட அலைகளை வாழும் வாழ்க்கை மோதலிலிருந்து அறவே விலக்கிடல் வேண்டும்.

எண்ணத்தில் கடுமையும் சொல்லில் உபதேசமும் உரைத்திடும் எத்தகைய சக்தி பெற்ற ஞானவான்கள் யாராக இருந்தாலும்
1.சத்தியம் என்ற நேர் பாதை காட்டிடும் உண்மை நிலைக்கு
2.தனக்குள் இருக்கும் எண்ணத்தின் கடுமையை மாற்றிக் கொண்டால்
3.அவர்களும் நல் நிலை பெற்றிட முடிந்திடும்.

ஆகவே எல்லா உயிர்களையும் சமமாக… கடவுளாக மதிக்கும் உயர் ஞானத் தன்மையின் வலுவைக் கூட்டிக் கொண்டால் இந்த மனிதப் பிறவியிலேயே தெய்வப் பிறவி நிலை பெற்று விடலாமப்பா…! எனது ஆசி உங்களுக்கு உறுதுணையாக இருக்குமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு துளி விஷம் பாலில் பட்டால் அதைக் குடித்தால் என்ன ஆகின்றது…? நம்மை மயங்கச் செய்கின்றது. சிறிது விஷம் அதிகமானால் மரணமடையும் நிலையே வந்துவிடுகின்றது.

இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். வேதனை என்பதே விஷம்.

வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்ததென்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இது பட்டபின் நம்மை “மயங்கச் செய்துவிடுகின்றது”.

அப்பொழுது சிந்தனை என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்கின்றது. தன்னை அறியாமலே வெறுப்பும் வேதனைப்படும் நிலைகளைச் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன உபாயம் இருக்கின்றது…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் பதிவு செய்த அந்த வழிப்படி உங்களுக்குள் விஷத்தை அடக்கிடும் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.

பின் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று “உள்முகமாகப் பாய்ச்சுதல் வேண்டும்”.

இப்படி எண்ணினால் அந்தத் தீமைகளை மறைத்துவிடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை என்ற உணர்வுகள் “இழுக்காது… தடைப்படுத்தப்படுகின்றது…”

இது வலுப் பெறும் பொழுது நம் ஆன்மா மீது சுருண்டு கிடக்கும் வேதனைப்படச் செய்யும் தீமைகள் நீக்கப்படுகின்றது.

எத்தகைய நிலைகள் வந்தாலும் இதைப் போல நம்மைப் பாதுகாக்கும் வலுவான உணர்வுகள் வருதல் வேண்டும்.

இன்று இருக்கும் இந்த விஷமான உலகில் “நம்முடைய சிந்தனைகள் சிதறாது” அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக்குவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை உங்களுக்குள் அடிக்கடி உந்தச் செய்கின்றோம். உங்கள் “மனம் மாறும் நிலைகளில்” எல்லா உணர்வுகளுடன் இதைக் கலக்கச் செய்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு நீங்கள் மீண்டும் ஏங்கினால் தீமைகளை அகற்றிட முடியும். அந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.. உங்களை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றோம்.

தீமையை வென்ற உணர்வின் தன்மை “உணர்ச்சிகளாகக் கொடுத்து” நீங்கள் எல்லோரும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இது உலகைச் சுற்றி ஊரைச் சுற்றிக் காட்டைச் சுற்றி உணவில்லாதபடி நான் அலைந்தேன். அகண்ட அண்டத்தின் நிலைகளையும் உலக அனுபவத்தையும் குருநாதர் கொடுத்தார்.

நீங்கள் உங்கள் வீட்டிற்குள் இருந்தே அந்த அனுபவத்தைப் பெற முடியும்.

அதைப் பெற… “உங்கள் நினைவு ஒன்றுதான்” தேவை.

தீமை என்று நீங்கள் காணும்பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.
2.தீமையிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.
3.தீமை செய்வோர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சினால்
4.“தீமையை நுகரும் சக்திகள்” அங்கே மாறிவிடுகின்றது.

இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்திலேயும் கணவனும் மனைவியும் இதைச் செய்தே ஆக வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர்ந்து வரும் நிலையில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்த உயிர் எதை வலுவாக எடுத்ததோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

நாம் “பிறவியில்லா நிலை” அடைகின்றோம்.

August 22 உபதேசம்

துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்கின்றாயா…? என்று கேட்டார் குருநாதர்

 

பாம்பினங்கள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது தான். அந்த விஷம் அதிகமாக அதற்குள் வளர்ச்சி அடையப்படும்பொழுது அது வைரக்கல்லாக… நாகரத்தினமாக மாறுகின்றது.
1.ஆண் பெண் என்ற உணர்வுகள் கொண்டு ஈர்க்கப்பட்டால்
2.அது வைரமாக நாகரத்தினமாக மாறுகின்றது.

இதே போன்று தான் மனிதனின் உணர்வுகள் உணர்ச்சியின் தன்மை கொண்டு இரண்டும் ஒன்றான பின் உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உயிரணுவாக மாறுகின்றது. மனிதனுக்கு அடுத்து உடல் இல்லை.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இப்படித்தான் உணர்வின் தன்மை ஒன்றாகி ஒளியின் சரீரம் பெற்றுத் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் குருநாதர் என்னை அங்கத்தினராக இணைத்தார். அங்கத்தினராக இணைத்து அதனைப் பின்பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி அகற்றுவது…? என்றும் உணர்த்தினார்.

புலி குகைக்குள் சுற்றுவது போல 20 வருடம் காடு மேடெல்லாம் அலைந்து… புலியும் பாம்பும் தாக்கிக் கொள்ளும் இடங்களிலும்… புலியும் பன்றியும் தாக்கும் இடங்களிலும் என்னைச் செல்லும்படி செய்து… காட்டு விலங்குகள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தப்பிக்கின்றது…? என்று சில உண்மை உணர்வுகளை நேரடியாகக் காணும்படி செய்தார். தெரிந்து கொண்டேன்.

அந்த மிருகங்கள் ஒன்றை ஒன்று தாக்கி இறக்கப்படும் போது அதனின் உடல்கள் எப்படி மாறுகின்றதோ இதைப் போன்று
1.மனிதன் பிறிதொரு வேதனையை நுகரப்படும் பொழுது தாக்கி… இந்த உடலை உருமாற்றச் செய்து விடுகின்றது
2.மனிதன் அல்லாத உருக்களாக மாற்றி விடுகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட நீ துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்கின்றாயா…? என்று கேட்டார்.

இருளை அகற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைந்துவிடு என்றார்.

1.உன் ஆயுள் முழுவதற்கும்… எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காணுகின்றாயோ
2.அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நுகர்ந்து அந்த உணர்வை வளர்த்து
3.உன் உடலுக்குள் தீமைகளை மாற்றி அமைக்கும் சக்தியாக நீ பெற வேண்டும்.

ஏனென்றால் எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.
1.ஆகவே அதனை நீ பெறு… அதன் வழி நீ வாழ்…! என்று
2.இந்த உண்மையின் தன்மையை குருநாதர் உணர்த்தினார்.

எமது குருநாதர் என்னை எப்படி ஆயுள் கால மெம்பராக அங்கே இணைத்தாரோ… அதன் வழியில் தான் உங்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணையச் செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் தவறுகள் வந்தாலும் அதிலிருந்து நீங்கள் மீட்டிக் கொள்ள முடியும்.

பிறர் படும் வேதனைகளையோ துயரங்களையோ கோபங்களையோ நுகர நேர்ந்தாலும் அது உங்களுக்குள் உருப்பெறாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து புருவ மத்தியில் நீங்கள் எண்ணப்படும் பொழுது தீமைகள் உட்புகாது தடுக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் முகமாகச் செலுத்தப்படும் பொழுது இது வலிமை கூடக் கூட நோயாளியின் உணர்வைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமையின் உணர்வுகளைப் பிளந்து விடுகின்றது… ஆன்மாவைத் தூய்மையாக்குகிறது.

துணியில் அழுக்குப்பட்ட பின் அது போகவில்லை என்றால் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கை வெளியேற்றி அதை எப்படித் தூய்மையாக்குகின்றோமோ அதே போன்று தான் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலில் இரத்தநாளங்களில் கலந்தாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அதைத் தூய்மையாக்க முடியும்.

அது உடலில் பெருகப் பெருக…
1.இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைய முடியும்
2.அதற்குத்தான் உங்களை ஆயுள் கால மெம்பராக இணைப்பது.

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டும் என்பதே “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற வான்மீகியின் தத்துவம்

 

உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.

தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி…!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.

அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.அது சக்திச் சுடரால் காக்கப் பெறும் என்ற சூட்சமத்தையும் காட்டினார்.

அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு…” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி…” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.

நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால் அது நல் வினைப் பயனாகப் பெற்று
1.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
2.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.

அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.

சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்…
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்…?

நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ அதுவே ஆன்ம சக்தியாகச் சரீரத்தையும்
1.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
3.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.

ஆசை என்ற சிறு தொடரில் இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது “மோகம்” என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவாகப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது…! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.

அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.

நம் ஆத்மாவைக் காக்கும்… காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்…! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.

ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.

அந்த ஜடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.

மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனையோ கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.

பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்றுத் தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையில் உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
1.அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
2.நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரினங்கள் ஒன்றை ஒன்று கொன்று அதன் வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது. அதனின் வளர்ச்சியில் மனிதனாக நாம் இன்று வந்துள்ளோம்.

வந்த பின் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் செயல்களைப் பார்க்க நேர்கின்றது.

1.கோபப்படுவோரை
2.நோய்வாய்ப்படுவோரை
3.வேதனைப்படுவோரை
4.வேதனைப்படுத்துவோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம் உடலில் “ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது”.

அந்தந்த குணத்திற்குத்தக்க உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலக்க ஆரம்பித்து விடுகின்றது.

அப்பொழுது நம் உறுப்புகளில் இருக்கும் நுரையீரல் கல்லீரல் கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்தம் சுழன்று வரும் பொழுது மற்ற ஈரல்களில் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தின் தன்மையால் சோர்வின் தன்மை அடைகின்றது. அதனின் இயக்கங்களும் குறைகின்றது.

ஏனென்றால்… “இரத்தத்தில் அதற்கு வேண்டிய உணர்வு (உணவு)” கிடைப்பதில்லை. அது உடனே வாடிவிடுகின்றது அல்லது மடிய வைத்துவிடுகின்றது.

மடிந்துவிட்டால் அந்த உறுப்புகள் சீர்கெட்டுவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.

ஒரு குளவி புழுவை எடுத்து வந்து தன் விஷத்தால் அதைக் கொட்டும் பொழுது அந்தப் புழு “குளவியாக” மாறுகின்றது.

இதைப் போல (வேதனை உணர்வுகள்) அந்த விஷத் தன்மை இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது விஷத்தை வடிகட்டும்… “ஏற்றுக் கொள்ளக் கூடிய பித்த சுரப்பிகள்” அந்த விஷத் தன்மைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும்.

அந்த விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகிவிட்டால்… அது உமிழ்த்த நேர்ந்தால்.. “பித்தம்” என்ற நிலைகள் நம் உடலுக்குள் அதிகரிக்கும்.

அதனால் அடிக்கடி சோர்வடையச் செய்து நம்மையறியாமல் “தலை சுற்றுவதும்” சிந்தனையற்ற நிலைகளாகவும் ஆகிவிடும்.

அப்பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாது போய்விடும். இதற்கு எதிர் நிலையான நிலைகள் ஆகிவிடுகின்றது.

ஆனால் பித்த சுரப்பிகள் அதிகமாகிவிட்டால் பச்சைக் காய்கறிகள் சாப்பிட்டால் அதைச் ஜீரணிக்கக்கூடிய சக்தி அதற்கு உண்டு.

மிருகங்களெல்லாம் பச்சையாக உணவை உட்கொண்டு பழகியது. இயற்கையில் விளைந்த தாவரங்கள் விஷத்தின் ஈர்ப்பால் விளைகின்றது. அதிலுள்ள தொக்கியுள்ள விஷத்தைத் தனக்குள் பெருக்கி இதே சத்தைத் தனது உணவாக மாற்றி மிருகங்கள் வலு கொண்ட உடலாக மாற்றும்.

வலு கொண்ட உடலாக ஆகவேண்டும் என்பதற்காக அதற்குத்தக்க “பச்சைக் காய்கறிகளை… உணவாக உட்கொள்ளுங்கள்” என்று டாக்டர்கள் சொல்வார்கள்.

இதன் உணர்வு வழிப்படி நாம் உட்கொண்டாலும் கூட இந்த உடலை விட்டுச் சென்றபின் என்ன ஆவோம்…?

இப்பொழுது ஆடு மாடெல்லாம் பச்சையாகத் தான் மற்றவைகளைச் சாப்பிடுகின்றது. வேகவைத்தா சாப்பிடுகிறது…? இல்லை.

இதன் உணர்வு கொண்டு உறுப்புகள் மாறி நம் உடலுக்குள் வலு கூடும். ஆனால் இந்த உடலில் “நீடித்த நாள்” நாம் இருக்கப் போவதில்லை.

இந்த உடலில் இருக்கும் வரை “சுகத்தை” வேண்டும் என்றால் தேடலாம். அடுத்து இதுவே எதிர்நிலையாகி இந்த உடலில் மாற்றமாகிவிடும்.

பித்த சுரப்பிகள் அதிகமாக அதிகமாக உடலில் இந்த அணுக்களின் பெருகமாகி நம் மனித உடலுக்கு எதிர் நிலையாகி அது அதிகரித்த பின் அதுவே நோயாக மாறி இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்றுவிடும்.

பின் நாம் எந்தெந்தக் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டோமோ அதன் ஈர்ப்புக்கொப்ப இந்த உணர்வுகள் மாறி “அங்கே தான்” செல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம். அடுத்து வெளியிலே போனபின் அதன் ஈர்ப்புக்குள் சென்று அதற்குத்தக்க உறுப்புகளை மாற்றிப் பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளும் உடலை அமைத்துவிடும் இந்த உயிர்.

1.உணர்வுகள் எதுவோ அதற்குத்தக்க தான்
2.உயிர் அந்த உருவங்களை அமைக்கும்.
3.அந்த அணுவின் மலங்கள் தான் உடலின் நிலைகள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கணவன் மனைவி தியானத்தின் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்திகள்

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தன் குடும்பத்தைப் பொறுத்தவரையிலும் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போலக் கவர்ந்து கொண்ட சக்தியாக… அருள் உணர்வுகளை இணைத்து வாழ்தல் வேண்டும்.

நளாயினை போன்று மதித்து நடக்க வேண்டும் என்றால்
1.கணவனை மனைவி உயர்த்தி எண்ணுவதும்
2.கணவன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும் தான்.

இந்த ரெண்டு எண்ணங்களும் உயர்த்தி எண்ணும் போது உயர்ந்த உணர்வாக இரண்டு பேரும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஆனால் பெரும் பகுதி குறை சொல்லும் பழக்கத்தில் தான் இன்று வாழ்கின்றோம். நம் உடலிலே இது போன்ற எத்தனையோ உணர்வுகள் உண்டு இருந்தாலும் அதை மாற்றி அமைக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் நிலையாக உயர்ந்த நிலை பெறுதல் வேண்டும்.

கணவர் தொழில் செய்யும் இடங்களில் அனைத்தும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்… அதே போன்று மனைவியின் செயல்கள் அனைத்தும் உயர்ந்து இருக்க வேண்டும்… மனைவி வெளிப்படுத்துவது உயர்ந்த சொல்களாக வர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்… கணவன் மனைவி இருவருமே இப்படி எண்ணிப் பாருங்கள்.

நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது என்று இதைத் தான் சொல்வது.

நளாயினி முடமான தன் கணவனைக் கூடையில் அமர்த்தித் தூக்கிச் சென்றாள் என்று உருவ அமைப்பைக் கொடுத்து நமக்குக் காவியத்தைப் படைத்துக் காட்டி உள்ளார்கள்.

கணவன் சொல்லை சிரம் மீது ஏற்று அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இதைப் போன்று கணவன் மனைவியை உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.சக்தி தான் சிவமாகின்றது…
2.பெண்கள் எப்பொழுதுமே உயர்ந்த நிலையில் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உடலாக மாறுகின்றது.
3.அதே மாதிரி கணவனும் எண்ணி எடுக்கும் பொழுது “அதே சக்தி நிலைகொண்டு”
4.உயிரில் அந்த உணர்வுகளை ஊட்ட உதவுகிறது.

அதுதான் நளாயினி என்று சொல்வது.

எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்றால் பிறரிடமிருந்து தீங்கான உணர்வுகள் வந்தாலும்… மனைவி அருள் உணர்வுகளைத் தனக்குள் பெற்றுக் கணவன் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் “எத்தகைய தீய நிலைகளோ சாப அலைகளோ இங்கே வந்து சாடாது…”

1.உங்களுக்கு முன்னாடி ஒரு துப்பாக்கியை வைத்துச் சுட்டாலும் கூட அந்த உணர்வுகள் திடீரென்று திசை மாறும்.
2.கணவனைக் காத்திடும் சக்தியாக செயல்படுத்த முடியும்
3.அங்கே சக்தி கொடுக்கப்படுகின்றது… துன்பத்திலிருந்து மாற்றப்படுகின்றது.

ஆகவே கணவன் மனைவி ஒவ்வொருவரும் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியையும் “ஒன்று சேர்த்து எடுத்து… ஒருவருக்கொருவர் இணைத்துப் பழகுதல் வேண்டும்…”

இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக இணையும் பொழுது இரண்டு உயிரும் வலுவாகி அடுத்துப் பிறவி இல்லா நிலையை அடைய உதவுகின்றது.

தீய சக்திகளுடன் நேரடியான மோதலைத் தவிர்த்து நாம் விலகித் தான் செல்ல வேண்டும்

 

வாலியின் வீரிய குணத்தின் தன்மையின் ஆணவம் எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித் தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும். வான்மீகி பதம் பார்த்தான். அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.

ஜடாக்கினி மனதிறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான். அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளைப் பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு
1.உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் – அவர்களின் பார்வை அலையை
2.உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலகோதய வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற அனுபவ நிலை என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவம் ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம் ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருள் எடை காட்டும் கல் ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு ஆவதைப் போல் அந்த அனுபவ ஞானம் தன் நிறை காண சபரியிடம் பதம் பார்த்தான்.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் சூட்சம விளக்கம் உள்ளது. இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி.

இந்த ஏக்கத்தில் பூர்த்தி செய்ய எப்படிச் சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்டிட்ட வழி காட்டும் குரு பூரணத்துவம் நிறைவு பெறாத் தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் வழியமைத்தான்.

தெளிவின் தொடர்பில் மகரிஷிகளின் தொடர்புபடுத்திப் பெறும் ஜடாக்கினி சக்தி ஈர்ப்பிற்குச் செயல் கொண்டிட மனித மனங்களின் ஜீவ ஏக்கம் சிஷ்யர்கள் என்ற தொடர்பில் சங்கடமற்று சமமான பாவனையில் நிலை கொண்டிட்டுச் செயலுறும் பொழுது அந்த உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு உண்மையை உணர்ந்து தெளிந்து சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பில் தொடர்புகளில் தொடர்பு கொண்டு ஈர்த்து வலுக் கொண்டிட்டால் இராமபாணம் பாயும் இலட்சியத்தை எய்தும்.

இராமபாணம் திரும்புவதைப் போல் செயல் கொண்டிட்ட சக்தியும் எண்ண ஈர்ப்பின் வலுவால் வலுத்துத் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

சபரி மோட்சம் என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் எப்படித் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டு தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் என்றுமே அழிவதில்லை. எத்தகைய விஷத்திலும் நெருப்பிலும் அது மடிவதில்லை. அழிவதில்லை.

ஏனென்றால் உயிரின் இயக்கத்தின் துடிப்பால் ஏற்படும் வெப்பம் அந்த வெப்பத்தின் தணலானால் “உயிரின் வீரியம்” அதிகமாகின்றது. அதனால் உயிர் அழிவதில்லை.

ஆனால் உணர்வுகள் அழிந்து விடும் கருகிவிடும். மாற்றிவிடும் உணர்வுகள் இந்த உடலிலுள்ள உணர்வுகள் எல்லாம் மாற்றமடைந்துவிடும்.

ஆகவே, இந்த இயற்கையின் உண்மையை அறிந்து கொண்ட பின் நாம் இப்பொழுது எப்படி வாழ வேண்டும்?

கையில் அழுக்குப்பட்டால் துடைத்துவிடுகின்றோம். கையில் பெயிண்ட் ஆயில் மற்றவைகள் பட்டால் கெரசின் போன்றதை வைத்துக் கழுவிவிடுகின்றோம்.

இப்படியெல்லாம் நாம் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது நாம் நுகரும் ஆன்மாவை நாம் சுத்தப்படுத்தவில்லை என்றால் சரியாகுமா?

வாழ்க்கையில் எப்படித்தான் இருந்தாலும் பிறரின் வேதனைகளை நாம் பார்க்க நேர்கின்றது.., அறிய நேர்கின்றது. அப்பொழுது அந்த வேதனைப்படும் உணர்வு நம் ஆன்மாவாக (நம் காற்று மண்டலமாக) மாறிவிடுகின்றது.

ஏனென்றால், இதிலிருந்து தான் நாம் சுவாசிக்க முடியும். நம் ஈப்புக்குள் (ஆன்மாவிற்குள்) வராததை நாம் மூக்கின் வழி சுவாசிக்க முடியாது.

ஒரு கண்ணாடியில் அழுக்குப் படிந்து விட்டால் நம் முகம் சரியாகத் தெரியுமா? நம் ஆன்மாவில் வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் என்ற உணர்வுகள் அதிகமாகிவிட்டால் சிந்திக்கும் தன்மை இருக்குமா?

இருக்காது. ஆக, இருட்டுக்குள் வாழ்ந்தது போல் தான் இருக்கும்.

எதைச் செயல்படுத்த வேண்டும் என்றாலும் நம் எண்ணமே எதிரியாகி
1.தொழிலில் கஷ்டம்
2.நம் குடும்பத்தில் பகைமை
3.நம் சொல்லே நண்பருக்குள் எதிரியாக மாற்றுவது – இப்படி எல்லாம் வந்துவிடும்.

ஒருவர் சந்தோசமாகச் சொல்லும் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு எடுத்துக் கொண்டால் சீதாலட்சுமி. நோயின் உணர்வுகள் வெளிவரும் பொழுது வாலி. கோபமான வெறுப்பின் உணர்வுகளைச் சொல்லும் பொழுது வாலி.

ஏனென்றால் “இந்த ஆன்மாவில் பட்ட அழுக்கு” நாம் உற்றுப் பார்க்கும் பொழுது இதே உணர்வுகள் தான் பல கஷ்டங்களும் பல தொல்லைகளும் வர ஏதுவாகின்றது.

1.எங்கள் வீட்டில் எப்பொழுதுமே கஷ்டமாக இருக்கின்றது…
2.எப்பொழுதுமே தொல்லையாக இருக்கின்றது…
3.ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றோம்… என்று சொல்வதெல்லாம்
4.இதைப் போல தீமையான உணர்வுகள் அதிகரித்து அதைத் தூய்மையாக்காததனால் ஏற்படும் விளைவே ஆகும்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் இத்தகைய மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். செல்வத்தில் நீங்கள் உயர்ந்திருப்பினும் சரி.

அந்தச் செல்வத்தைக் கொண்டு நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்தாலும் இந்த உணர்வுகள் அடிக்கடி “சங்கடங்களைச் செயல்படுத்துவதும் வெறுப்பை ஊட்டுவதும்” நிச்சயம் இருந்தே தீரும்.

அதை நாம் துடைக்க வேண்டும் அல்லவா…!

அதற்காக வேண்டித்தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் – அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தத் “துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே” எனக்குச் சொல்லி வந்தார்.

அவர் காட்டிய அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் இணைக்கும்படி செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய அலைகளை நம் பூமி கவர்ந்து கொண்டேயுள்ளது. உங்கள் நினைவெல்லாம் தீமைகளை நீக்கும் உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வருவதற்கொரு வழி தான் இப்பொழுது பதிவாக்கும் இதனின் நிலைகள்.

1.உயிரணுவாகத் தோன்றி மனிதனாக வளர்ந்து
2.நஞ்சை எல்லாம் வென்றவன்
3.கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து
4.அகண்ட அண்டத்திலிருந்து வரும் உணர்வின் உண்மையை அறிந்து
5.உயிருடன் ஒன்றி எல்லா உணர்வுகளையும் ஒளியாக மாற்றி
இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் “அகஸ்தியன்…”

ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிகளிலேயும் உங்கள் ஆறாவது அறிவினை அந்த நல்ல உணர்வினைச் சீராகப் பயன்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரம் தன்னுடைய ஈர்ப்பு வட்டத்தில் எத்தகையை விஷம் வந்தாலும் அதை ஒளியாக மாற்றிவிடும். அதைப் போன்று நம் ஆன்மாவிலும் ஆற்றல் பெருகும்.

நம் ஆன்மா தீமை புகாத வலிமை பெற்றதாக மாறும்.

“ஆயுள் மெம்பர்” என்பது நமது வாழ்நாள் முழுவதுமே துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்வது தான்

 

யாராவது நமக்குத் தொந்தரவு கொடுத்தார்கள் என்றால் என்னை இப்படிப் பேசினான்… பேசினான்…! என்று அவர்களுடைய துயரமான ஈர்ப்பு வட்டத்தில் தான் நம் நினைவுகள் சென்றுவிடுகிறது.

அவருடைய உணர்வையே வளர்த்து நமக்குள் தொந்தரவுகளை உருவாக்கிப் பல பல கஷ்டங்களை உருவாக்கிக் கொள்கின்றோம்.

இதை மாற்றி அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நமது வலுவைக் கூட்டி
1.அவர்களுக்கு நல்ல வழிகள் கிடைக்க வேண்டும்
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டோம் என்றால்
3.அவருடைய உணர்வுகளை இழுக்கும் சக்தி இங்கே குறைக்கப்படுகின்றது.

ஆனால் “என்னை இப்படிப் பேசினானே…” என்று எண்ணினால் அது உடனே இங்கே வந்துவிடும். ஒருவர் நம்மைத் திட்டி விட்டால் அல்லது அடுத்தவர்களைத் திட்டும்போது அது பதிவாகிவிட்டால் அதைத் திருப்பி எண்ணும் பொழுது நினைவுக்கு வருகின்றது. அது நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

அதைத் தடுப்பதற்கு ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்து காட்ட வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் ஒரு சூரியக் குடும்பம் போன்று
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
2.ஒரே குடும்பமாக வாழ்ந்து பழக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பரப்பப்படும் பொழுது இனி வரக்கூடிய விஞ்ஞான அழிவுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆகையினால் பிறருடைய சங்கடங்களையோ வேதனைகளையோ அதிகமாகக் கேட்டுப் பழகாதீர்கள்… அதைப் பதிவாக்காதீர்கள். அப்படியே கேட்க நேர்ர்ந்தாலும் அதை உடனுக்குடன் மாற்றி பழகுதல் வேண்டும்.

ஆயுள் கால மெம்பர் என்பது…
1.நமது வாழ்நாள் முழுவதுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்வது தான்
2.அந்த அருள் ஒளியை நமக்குள் பெருக்குவதற்குத் தான் அதிலே சேர்வது.

இதைச் சீராகப் பயன்படுத்தி இந்த வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை அகற்றி நாம் பிறவில்லா நிலை அடைதல் வேண்டும் ஆயுள் மெம்பர் என்றால் என்றும் பேரானந்த நிலை கொண்டு நாம் வாழ்ந்திட முடியும். அந்த வழிகளை நாம் கடைப்பிடித்துப் பழகுதல் வேண்டும்

இந்த உடலும் நம்முடன் வருவதில்லை… தேடிய செல்வமும் நம்முடன் வருவதில்லை. நாம் சேர்க்கும் அந்த அருள் சக்திகளே நம்முடன் இணைந்து வருகின்றது. அதன் வழி கொண்டு என்றுமே ஏகாந்த நிலை பெறுகின்றோம்.

எதுவுமே நமக்கு எதிர்ப்பு இல்லாத நிலையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம்

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகும். அந்த நிலை பெறச் செய்வதற்கு தான் உங்களை ஆயுள் மெம்பராக அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைப்பது.
1.உங்களுக்கு அந்த அருள் சக்திகளைக் கொடுக்கின்றோம்.
2.அதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறவா நிலை பெறச் செய்யும் செயலைத் தவிர நமக்கு இந்தப் பூமியில் வேறு வேலை இல்லை…!

 

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலம் “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

எந்த இலட்சியம் தன் கருத்தோ அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலை பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்கின்ற பொருள் எல்லாம் என்ன…?
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.வான இயலை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதை நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும் என்பதே இராமபாணம் திரும்பும் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகிமாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா… என்ன…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.“வாலி வதம்…! என்ற பாங்கில் இராமன் தலை குனிந்தான்…! என்கின்ற பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவன் அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம் ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா…? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலகோதயம் என்னும் பிடிப்பில் “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான். ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்கின்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்
1.உற்றுறுந்து கேட்கவும் வேண்டாம்…
2.அதிசயித்து நோக்கவும் வேண்டாம்….
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.எடுக்கும் வீரிய ஜடாக்கினி முல சக்தி நம்முடைய முக்கியமான சேமிப்பாக இருக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராவணன் என்ன செய்கின்றான்…? சந்தோஷம் என்ற நிலைகள் வந்தாலும் சந்தோஷத்தை அவன் சுவாசிப்பதில்லை. இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

புலி என்ன செய்யும்…? அது சந்தோஷத்தையா சுவாசிக்கும்…? புலி ஆண் பெண் என்ற நிலையில் மகிழ்ச்சியுடன் இருந்தாலும் அது வெறுப்பு கலந்த உணர்வுகளையே தான் நுகரும்.

அதனிடன் சந்தோஷம் என்பது இம்மியும் கிடையாது. ஆனால், பாசத்தின் தன்மையில் தன் குட்டிகளை வேண்டும் என்றால் வளர்க்கும்.

பாசம் என்ற நிலையில் தன் இனத்தின் மீதே கிடையாது. தன் சுயநலம் ஒன்றே தான் அதற்குண்டு. ஆனால்… கொஞ்சம் இடையூறு என்றாலும் உடனே “ஜிர்…” என்று மோத ஆரம்பித்துவிடும்.

இதைப் போன்று இந்த இயற்கையின் நியதிகளை அறிந்து கொண்டவன் மனிதன். தன் விஞ்ஞான அறிவால் மிருகங்களை எப்படி மாற்றி அமைப்பது…? மிருக உணர்வுகளை இணை சேர்த்து மிருகங்களை எப்படிச் சாந்தமாகக் கொண்டு வருவது…? மனிதர்களை ஒன்று போல அழகாக எப்படி உருவாக்குவது…? என்று செயல்படுத்துகிறார்கள்.

கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்றால் அதற்குத்தகுந்த சில உணர்வுகளைக் கொடுத்து அழகான குழந்தைகளாக எப்படி உருவாக்குவது என்று இதையெல்லாம் விஞ்ஞானி செய்கின்றான்.

விஞ்ஞானத்தால் எத்தகைய அழகாக உருவாக்கினாலும் இவன் நுகரும் மணம் அனைத்தும் நஞ்சாகத் தான் மாறும். அழகுபடுத்தினாலும் விஞ்ஞானி அவன் கண்டுபிடித்த உணர்வும் அவன் வாழ்க்கையில் வந்த வேதனையும் குடும்பத்தில் சிந்தனையைச் செலுத்தும் பொழுது குடும்பப் பற்றற்றுத்தான் இருப்பார்கள்.

குடும்பப் பற்று இல்லை என்றால் அவனுக்குள் வேதனை என்ற உணர்வுகளே மிஞ்சும்.
1.விஞ்ஞானத்தில் பல நிலைகளைக் கண்டாலும் இந்தப் பூமியின் ஈர்ப்புக்குள் தான் சுழல முடியும்
2.மெய்ஞானத்திற்குள் அவனால் செல்ல முடியாது.
3.மீண்டும் அஞ்ஞான வாழ்க்கைக்கே சென்று “மனிதனல்லாத உருவைத்தான்” அவன் பெற முடியும்.

நாம் ஒவ்வொருவரும் சந்தோஷம் என்ற நிலைகளில் இருந்தாலும் “வாலி” – பிறிதொரு தீமையான உணர்வுகளை எடுத்தால் அடுத்த நிமிடமே இந்தச் சந்தோஷத்தை அடக்கிவிடும்.

அதைத்தான்…
1.“இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்துக் கொண்டான்”.
2.சந்தோஷத்தை அவனுக்குள் அடைத்து வைத்துக் கொண்டான்
3.செயல்படுத்தவில்லை என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

நாம் நினைக்கின்றோம். இலங்கையில் சீதாவை அடைத்துவிட்டான் இராவணன் என்று.

இந்த உடலே இலங்கை தான். ஒரு தீவு தான். “அதிலே கொண்டு அடைத்துவிட்டான்” என்று நாமெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்றைய நிலைகளில் மக்களுக்குப் புரிய வைக்க மெய்ஞானிகள் இதைச் செய்தனர்.

நாம் ஒவ்வொரு நொடிப்பொழுது எடுக்கும் உணர்வின் எண்ணங்கள் என்ன செய்கின்றது..? என்று காட்டுகின்றார்கள்.

ஆனால் இன்று அதைப் படித்தவர்கள் சரியாக உணராதபடி இராமனையும் சீதாவையும் பற்றி நல்லதாகப் பேசி இராவணன் இப்படிச் செய்தான் என்று சொல்லும் போது நாமும் அதைக் கேட்டு வேதனைப்படுகின்றோம்.

கதையைப் படித்துவிட்டு நாம் நினைக்கின்றோம்… சீதா இராமனுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது…! ஆனால், இராவணனிடம் சிக்கியவுடன் “சீதா எவ்வளவு வேதனைப்படுகின்றது” என்று நாமும் வேதனையைத்தான் வளர்க்கின்றோம்.

ஆக சந்தோஷத்தையா ஊட்டுகின்றது…? அதே சமயத்தில் அதைப் பார்த்து அழுகின்றவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்…?

இவைகளெல்லாம் இந்த உணர்வின் உணர்ச்சிகள் எப்படி நம்மை மாற்றுகின்றது…? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தீமைகளைக் கண்டால்… அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு குணங்களிலும் துருவ நட்சத்திரத்தை இணைக்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அப்படி இணைக்கும் நிலை பெற்றுவிட்டால் “மகிழ்ச்சி” என்ற நிலைகள் வந்து கொண்டே இருக்கும். ஆகவே, பேரானந்தப் பெரு மகிழ்ச்சி பெற்று என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழுங்கள்.

எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்

 

விஞ்ஞான அறிவால் அணுகுண்டுகளையும் மற்ற எத்தனையோ விதமான கெமிக்கல் குண்டுகளையும் உலகில் பல நாடுகளில் தயார் செய்து வைத்திருக்கின்றார்கள்.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கடலிலே பாய்ந்தால் மணலாக மாறுகின்றது. அந்த மணலிலிருந்து யுரேனியமாகப் பிரித்து எடுத்து “அணுவைப் பிளக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள்…”

அதை மற்றதுடன் கலந்து நியூட்ரான் என்கிற நிலையிலும் புரோட்டான் என்கிற நிலையிலும் சில நிலைகளைச் செயல்படுத்துகின்றனர்.

பொதுவாக நட்சத்திரங்களில் இருந்தும் உமிழ்த்தப்பட்டு வரும் கதிரியக்கச் சக்திகள் சூரியனின் ஈர்ப்புக்குள் வரும் போது
1.சூரியன் இழுத்து வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று கலந்தால் அதிகமான அழுத்தங்கள் ஆகும்.
2.அந்த அழுத்தத்தைக் கண்ட பின் மற்றதெல்லாம் அஞ்சி (நியூட்ரான்) ஓடுகின்றது.
3.ஓடினாலும் ஒன்றோடு ஒன்று கலந்து பல மாற்றங்கள் ஆகின்றது… சக்தி வாய்ந்த நிலையாக மாறுகின்றது.

அதை எடுத்துத் தான் இராக்கெட்டை விண்ணிலே செலுத்தினார்கள். நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய துகள்களைப் பிரித்து “நியூட்ரான்” என்று கொண்டு வருகின்றார்கள்.

அதை எடுத்துக் கொண்ட பின் “வெடிக்கச் செய்தால்” சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

அத்தகைய உணர்வுகள் மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் விஷத்தின் தன்மை கலந்து… சிந்திக்கும் தன்மை குறைந்து… மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் மறைந்து விடுகின்றது.
1.மனிதன் இருப்பான்… ஆனால் பைத்தியம் பிடித்தது போன்று ஆகிவிடுவான்.
2.மனிதனை மனிதனே கொன்று சாப்பிடும் நிலைகள் வருகின்றது

அதே சமயத்தில் அணுகுண்டுகளை வெடித்தால் கதிரியக்கங்கள் மோதி அனைத்தையும் பஸ்பமாக்கி விடுகின்றது இது மனிதன் கண்டுபிடித்தது தான். ஆனால் இதில் கட்டடங்கள் ஊரெல்லாம் அழிந்து விடுகின்றது என்று எண்ணி என்ன செய்தான்…?

நியூட்ரான் குண்டுகளை வீசி மக்களைப் புத்தி பேதமில்லாது செய்துவிட்டுத் “தான் ஆட்சிக்கு வரலாம்…” என்று செயல்படுத்துகின்றார்கள்.

இவ்வாறு எத்தனையோ செய்தாலும் அந்த விஷமான கசிவுகளைச் சூரியனுடைய காந்த சக்தி இந்த இரண்டையுமே (கசிவு + கதிரியக்கம்) கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

காற்றலைகளில் இது பரவப்படும் பொழுது இதனுடைய அழுத்தம் எப்படி வான் வீதியில் நியூட்ரான் என்ற அழுத்தம் மற்றதோடு மோதும் பொழுது விரட்டிச் செல்கின்றதோ இதே போல கதிரியக்கச் சக்தியும் இதுவும் இரண்டும் மோதப்படும் பொழுது சுழிக்காற்றாக மாறுகின்றது.

இரண்டும் சேர்ந்த பின் என்ன நடக்கிறது…?

நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள் கலந்து தான் மண்ணோ கல்லோ செடி கொடிகளோ எல்லாமே உருவாகியுள்ளது.

1.சுழிக் காற்றாக மாறி… கல் மண் மற்றும் அனைத்திலும் இருக்கும் கதிரியக்கத்தைக் கவர்ந்து கொண்ட பின் இன்னும் வீரியம் அதிகமாகி
2.காற்றாடி போல (TORNADO) எல்லாவற்றையும் மேலே தூக்கிக் கொண்டு… பிய்த்து எறிந்து கொண்டு போகின்றது.

அமெரிக்கா சீனா ரஷ்யா ஜப்பான் எல்லா நாடுகளும் இது நடக்கின்றது பார்க்கலாம்…! எங்கெங்கே அதை உற்பத்தி செய்தார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய கட்டிடங்களாக இருந்தாலும் சுக்கு நூறாகத் தவிடு பொடியாகிப் போய்க் கொண்டிருக்கின்றது.

1.கடல்களிலே பட்டால் கடல் அலைகள் பெருகி (TSUNAMI) நகருக்குள் இது பாய்ச்சப்பட்டு
2.ஊரே சின்னாபின்னமாகும் நிலைகளும் வந்து கொண்டிருக்கின்றது.

இதே சுழல் காற்றின் நிலைகள் மேகங்களிலே இழுக்கப்பட்டால்
1.இந்த உணர்வின் தன்மை மோதிய பின் மழை நீராகக் கொட்டு… கொட்டு… என்று கொட்டி… மேக வெடிப்பாகிப் (CLOUDBURST) பெரும் மழையாக
2.ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரு மணி நேரத்தில் பெய்து நகரமே வெள்ளக் காடாக ஆகி விடுகின்றது.

இந்த மாதிரி உலகத்தில் எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் எந்த நிமிடம் எந்த நிலை ஆனாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிப் பிறவி இல்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

இதை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). யாம் சொன்ன முறைப்படி வளர்த்துக் கொண்டால் இதில் சிக்க மாட்டோம்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்
2.”ரிமோட் செய்வது மாதிரி…” ஒதுக்குப் புறமான இடங்களுக்கு அழைத்துச் சென்று “நாம் தப்ப முடியும்…”

ஏனென்றால் விஞ்ஞானத்தை மிஞ்சியது அந்த மெய் ஞானம்.

மெய் ஞானத்தின் உணர்வு வளரப்படும் பொழுது அதிலே வளர்ச்சி பெற்றவன்… மனிதனாக முழுமை அடைந்தவன் துருவ நட்சத்திரமாக நம் பூமியின் வடக்குத் திசையில் நிலை பெற்றிருக்கின்றான். மற்ற பிரபஞ்சங்களிலிருந்து எது வந்தாலும் அது ஒளியாக மாற்றும் திறன் பெற்றது.

1.அந்த உணர்வை எடுத்து நம்மைக் காக்கக்கூடிய சக்தியாக வளர்த்து
2.உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலையை அடைவோம்.

ஒலி கேட்டு உணர்ச்சி வசப்பட்டாலும்… “ஒளி கொண்டு” அதைத் தெளிதல் வேண்டும்

 

யானை நீர் மொள்ளும் ஓசையைக் கேட்டே அம்பெய்து சிரவணனைக் கொன்ற தசரதனின் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் “சூட்சமப் பொருள் உள்ளது…!”

அது என்ன..?

பார்வை ஒளியற்ற பெற்றோரைச் சுமந்து செல்பவன் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் தாகம் என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான். ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன…?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.

விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா…?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா…?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?

ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.

ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன…?

காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு… சரீர உணர்வின் இயக்கத்தால்… “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்…” தசரதனின் அந்தச் செயல்.

தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.

அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்… எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்… குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு… “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது…!”

1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்த்கால் சந்தித்த சந்திப்பு… அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.

ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு. எப்படி…?

செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்பட்ட அந்தக் காலத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேக்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.

ஆகவே ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும் ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான் நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் பாப வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

தியானமிருக்கும் குடும்பங்களில் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மன நோய் நீங்கி மன பலம் பெற்று உடல் நோய் நீங்கி உடல் நலம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

தியானமிருக்கும் குடும்பங்களில் வாழ்ந்து வரும் கணவனும் மனைவியும்
1.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து
2.நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து
3.சாவித்திரியைப் போன்று கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றி வாழ்ந்து
4.இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து
5.இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி
6.நஞ்சினை வென்று பேரருள் பெற்று பேரொளி என ஆகிட அருள்வாய் ஈஸ்வரா

தியானமிருக்கும் குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் குழந்தைகள் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.கல்வியில் ஞானம் பெற்று
2.கருத்தறிந்து செயல்படும் திறன் பெற்று
3.உலக ஞானம் பெற்று
4.உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக
வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

இதை எல்லோரும் ஒன்று போலச் சொல்லி “உணர்வின் ஒலிகளை எழுப்பும் பொழுது..,
1.எல்லோருடைய செவிகளிலும் படுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டுகின்றது.
3.கண்களுக்கு வருகின்றது.
4.சொன்ன உணர்வுகள் எல்லாம் இந்த பூமி முழுவதும் படர்கின்றது.
5.நம்முடைய கண்களில் உள்ள கருமணிகள் பதிவாக்குகின்றது.
6.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் இந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து இழுக்கின்றது.
7.நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது.
8.நம் உயிரிலே மோதுகின்றது.
9.இந்த உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இப்படி “எல்லோரும்.., நன்றாக வேண்டும்” என்று நாம் சொல்லும் உணர்வுகள் வலுப்பெறுகின்றது. அடிக்கடி இந்த மாதிரிச் சொன்னோம் என்றால் “நோயுள்ளவர்கள் கேட்டால் கூட.., அந்த நோயெல்லாம் நீங்கிவிடும்”.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடுமபத்தில் உள்ள சிரமங்களெல்லாம் நீங்கள் வேண்டும் என்று நீங்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானித்துப் பரிசுத்தப்படுத்துங்கள்.., நீங்கிவிடும்.

இது ஒரு “பழக்கத்திற்கு..” வரவேண்டும்.

ஒருவர் மிகக் கொடுமையான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதனின் வீரியத்தைக் குறைக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் “இறப்பதை…, யாரும் தடுக்க முடியாது”.

அவர் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அவர் உயிரான்மா வெளியிலே சென்றாலும்.., இந்தக் கூட்டுத் தியானத்தின் அமைப்பு கொண்டு அவரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அங்கே இணைத்து அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

ஆனால், முழுமையாக ஆயுள் காலம் முழுவதும் தியானம் செய்து “தியானத்தால்.., நோயெல்லாம் நீக்கிவிடுவேன்” என்று சொன்னால் யாரும் முழுமையாக இருக்கப் போவதில்லை. “இருக்கவும் முடியாது”.

1.சிறிது காலம் இந்த உடலிலிருந்து “நல்லதை எண்ணுவதற்காக வேண்டியாவது…” வாழ வைக்கலாம்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை “அவரைப் பெறச் செய்வதறகாக வேண்டி” வாழ வைக்கலாம்.

வெள்ளம் வந்தால் குப்பை கூளங்களை ஒட்டு மொத்தமாக அடித்துச் செல்வது போல் அந்த அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து எண்ணும்போது ஒவ்வொருவருக்குள்ளும் அதீத அளவில் சக்திகள் கூடும்.

தீமைகள் விலகும். வாழ்க்கையில் வேதனையின்றி வாழ முடியும். மன மகிழ்ச்சி கிடைக்கும். ஆகவே, வாரத்தில் ஒரு நாளாவது கூட்டாகத் தியானியுங்கள்.

உங்கள் அனுபவம் பேசும்.

உடலை விட்டுப் போவது உறுதி தான்… அதற்காக வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை

ஆயுள் மெம்பராகச் சேரக்கூடியவர்கள் ஒவ்வொருவருமே குருநாதராக மாற வேண்டும். உங்கள் பார்வையில் தீமையைப் போக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும். உங்கள் எண்ணம் உலகத்தை நல்லதாக்கும் அந்த உணர்வுகளாக விளைய வேண்டும்.

அருள் ஞானச் சக்கரம் இருக்கும் வீடுகளில் எல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தச் சக்கரத்தை பார்த்து…
1.யாராக இருந்தாலும் சரி.. அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்…
2.lஅவர் நோய் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

இதைச் செய்தால் மற்றவருடைய துன்பங்களோ நோய்களோ துயரங்களோ நமக்கு வருவதில்லை.

ஒவ்வொரு உடலிலும் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும்.
1.எப்படி இருந்தாலும் உடலை விட்டுப் போவது உறுதி தான்
2.அதற்காக வேதனைப்பட வேண்டியது அவசியம் இல்லை.

உடலில் நோய் இருந்தால் அது நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள். ஆனால் நோய் நீங்கி அவர்கள் வாழ்ந்தாலும் “எத்தனை வருடம் வாழ்கின்றார்கள்…!”

டாக்டரிடம் சென்று காசைச் செலவழித்து எல்லா மருத்துவமும் பார்க்கத்தான் செய்கின்றோம். உயிருடன் முழுமையாக இருக்கின்றார்களா…? இல்லை…!

நான் அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்… கடைசியில் இறந்து விட்டார்களே…! என்று எண்ணி வேதனைதான் படுகின்றோம்.

அப்படி எண்ணாதபடி…
1“எப்படி இருந்தாலும்” மகரிஷிகளின் அருள் உணர்வு அவர்களுக்குள் வளர வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும் மட்டும் எண்ணுங்கள்.
2.உடலை விட்டுப் போய்விட்டார்கள் என்றால் உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்
3.உடலில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீங்கி அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “இப்படித்தான் நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்…”

ஏனென்றால் அவர்களுடன் நாம் பழகியிருக்கிறோம். அவர்களுடைய உணர்வுகளும் நமக்குள் பதிவு உண்டு. மேலே சொன்னபடி எண்ணிச் செய்தால் தீமைகள் நமக்குள் வளராதபடி தடுத்துக் கொள்ளலாம்.

ஆகவே சக்கரத்திற்கு முன் நீங்கள் தியானம் செய்து
1.குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும்
3.என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்
4.குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ வேண்டும் என்று வரிசைப்படுத்தி நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்
5.குறை என்ற நிலைகள் வரவே கூடாது.

ஏனென்றால் இந்தச் சக்கரத்தில் அவ்வளவு சக்திகள் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக அது வரும்.

துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்த உணர்வோடு நாம் ஒன்றி வாழ வேண்டும்.
1.நம் குருநாதர் அதைக் கவர்ந்தார்… அதன் வழி அங்கே இருக்கின்றார்.
2.அதன் வழியில் நாமும் முயற்சி எடுக்கும் பொழுது அந்த உணர்வுகள் இருளை அகற்றிடும் சக்தியாக வரும்
3.துருவ நட்சத்திரத்தின் பால் நம்முடய பற்று அதிகமாகும்
4.வாழ்க்கையில் ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும்… சங்கடங்கள் உட் புகாது தடுக்கும்.

அத்தகைய உணர்வுகளை நாம் பெற வேண்டும்.

சமமான நிலை நிலைக்கச் “சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…”

 

சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம். முயற்சியும் செய்கிறோம். ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை யார் எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட…பொட…!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்…!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே… நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்…! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும். அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா…?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்…” அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்… நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

அப்படியானால் பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே… தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்…!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன…? எப்படி…?

வாழ்க்கை நடை முறையில் மாற்றமான எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் மோதி அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி
2.அவ்வாறு சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன…?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ…ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து அதன் வழியில் செயல் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால் அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்…” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமமான நிலை நிலைக்க வேண்டும் என்ற செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து இந்த உலகில் கலந்துள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பெற்று மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி அருள் வாழ்க்கை வாழ்ந்து சகோதர உணர்வுடன் உலக மக்கள் அனைவரும் “மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்திட” அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி “நல்ல மழை பெய்து.., ஏரி குளங்கள் நிரம்பி” தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

“இதைப் போன்ற உணர்வுகளை” நாம் எண்ணி எடுத்துப் பழக வேண்டும். ஒவ்வொருவரும் அந்தப் பேரருளைப் பெருக்கி “உங்கள் வீட்டிலும்…,” இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெறுங்கள்.

நீங்கள் வாழும் “தெருவிற்குள்ளும்…,” உங்கள் மூச்சும் பேச்சும் எல்லோரையும் தெளிந்த மனமாக ஆக்கும் அந்த அருள் பெற வேண்டும்.

உங்கள் தெருவில் படர்ந்தால் “ஊருக்குள்ளும்…” அது பரவத் தொடங்கும். தெருவிற்கு ஒருவர் இந்த மாதிரி இருந்தால் போதும்.

இந்த உணர்வுகளைப் பெருக்கிப் பெருக்கி உண்மைகள எடுத்துச் சொல்லிச் சொல்லி இந்த உணர்வினைப் பெருக்கினால் இந்த “உலகம்..” முழுவதும் பரவும்.

குருநாதர் எம்மைத் துருவ நட்சத்திரத்தில் ஆயுள் கால மெம்பராகச் சேர்த்தார். அவர் காட்டிய அருள் வழியில் உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைக்கின்றோம்.
1.“அங்கே” என்றுமே நீடித்த ஆயுளாக நாம் பெற வேண்டும்.
2.இனி உடல்கள் மாற்றக் கூடாது.
3.இருளை அகற்றும் ஒளியின் உணர்வுகளாக நமக்குள் வரவேண்டும்.
4.நினைவுகள் அனைத்தும் சிந்திக்கும் தன்மையாகவே இருத்தல் வேண்டும்.
5.உங்களுடைய பேச்சும் மூச்சும் உங்கள் சொல்லும் செயலும் பிறரைப் புனிதப்படுத்தும் சக்தியாக நீங்கள் மாறவேண்டும்.
6.என் ஒருவனால் மட்டும் முடியாது.

நான் உங்களுக்குச் சொல்லும்போது உங்களுக்கு நல்லதாகின்றது. அதே போல நீங்கள் சொன்னால் மற்றவர்களுக்கும் நல்லதாக வேண்டும். அதன் துணை கொண்டு அவர்கள் தீமைகள் மறைய வேண்டும். அவர்களுக்குள் அருள் உணர்வுகள் ஓங்கி வளர வேண்டும்.

“இத்தகையை நிலைகளுக்கு” நாம் வளர்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால் தீவிரவாதம் என்ற நிலையில் மனிதன் தன்னை மறந்து மற்றவர்களை “நிர்மூடத்தனமாகத் தாக்கும் நிலைகள்” உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது.

அரசாட்சி செய்வோரும் தான் வாழ தன் இனம் என்ற பெயரால் “மற்றவர்களை அடிமைப்படுத்தும் நிலைகளாக” ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

“நாம் எடுக்கும் தியானத்தின் வலுக் கொண்டு..” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை அவர்கள் எல்லோரும் பெறக் கூடிய தகுதியை ஏற்படுத்திவிட்டால் அவர்கள் தவறு செய்யும் எண்ணங்களை மாற்றியமைக்கலாம்.

நம் பூமியின் துருவப் பகுதி இரண்டும் உருகி கடல் நீர் பெருகிக் கொண்டுள்ளது. ஆகவே பூமியின் துருவப் பகுதிக்குள் இப்படி நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு… இன்று விஞ்ஞானிகள் “அஞ்சிக் கொண்டுள்ளனர்”.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து இனி வரும் ஆண்டுகளை நாம் நல்ல ஆண்டுகளாக மாற்றிக் காட்டிடல் வேண்டும். நாம் அஞ்ச வேண்டியதில்லை.

அருள் உணர்வுகளைப் பெருக்குவோம். உலகம் நலம் பெறப் பிரார்த்திப்போம். எல்லோரும் மன நிறைவுடன் இருக்க வேண்டும்.

நமக்கு இனிப் பிறவியில்லை. நாம் என்றுமே ஒளியாக இருப்போம். ஒளியின் தன்மை பெறுவோம் என்ற உணர்வை வலிமைப்படுத்தி வாழ்வோம்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். குரு அருளால்
1.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை என்றுமே பருகிக் கொண்டேயிருப்போம்
2.இருளை அகற்றிக் கொண்டேயிருப்போம்.
3.அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொண்டேயிருப்போம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா…!

தியானத்தில் “ஞானம்” பெறுவது முக்கியம்

 

தியானம் என்பது தனித்து அமர்ந்து சக்தி பெறக்கூடியது அல்ல. காரணம்… எவ்வளவு சக்தி பெற்றாலும் நாம் அந்த “ஞான சக்தி” என்ற நிலையை அடிக்கடி நினைவுபடுத்தி அதைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
1.ஞானத்தின் உணர்வுகள் பெருகினால் தான்
2.இந்த வாழ்க்கையில் ஓரளவு சிந்தித்து செயல்படும் தன்மையும்
3.தீமையான உணர்வுகள் நமக்குள் வளராதபடியும்
4.மீண்டும் பிறவிக்கு வராதபடி தடைப்படுத்தும் சக்தியும் வரும்.

ஞானத்தின் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி வளர்த்துக் கொண்ட பின்… உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிர் நேரடியாக நம்மை அங்கே அழைத்துச் சென்று விடும்… அதைப் பார்க்கலாம்.

செத்த பிற்பாடு என்ன…? என்று சாதாரணமாக நினைப்பார்கள்…!

யார் மீதாவது நாம் அதிகப் பற்றுடன் பிரியத்துடன் இருந்தால் இந்த ஆன்மா உடலுக்குள் வந்து எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? இறந்த பின் எத்தனை அவஸ்தைப்படுகிறது…? இன்னொரு உடலுக்குள் சென்று தான் கஷ்டப்பட்டது போல அவர்களையும் கஷ்டப்படுத்தும் நிலையாக வரும்.

அனுபவத்தில் நாம் பார்க்கலாம்.

உடலில் பட்ட அவஸ்தைகளை அங்கேயும் உண்டாக்கி வேதனையை அங்கேயும் எடுத்து அதை முழுமையாக்கிக் கொண்ட பின் விஷம் அதிகமாகி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு நிச்சயம் பாம்பாகப் பிறக்கும்.

வேதனைகள் வந்த பின் சிந்திக்கத் தெரியாதபடி குடும்பத்திலோ தொழிலிலோ மற்றவர்களையோ வெறித் தன்மையாகப் பேசினால்… அல்லது அடித்துத் தாக்கும் உணர்வுகள் வந்தால்… அடுத்து புலியாகத்தான் பிறக்க நேரும்.

ஒரு உடலுக்குள் சென்று இத்தகைய நிலைகளை வளர்த்து வெளியே வந்தால் புலியாகத்தான் பிறக்கும்.

ஆனால்… ஒவ்வொரு நொடிகளிலும் இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் கேட்டாலும் அதை எல்லாம் நல்லதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு உண்டு.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை எடுத்து
2.வருவதை எல்லாம் மாற்றி அமைத்துக் கொண்டே வரவேண்டும்.

தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளரச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பெற வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே போல் நம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… தெருவில் உள்ளோர் நன்றாக இருக்க வேண்டும்… ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்… உலக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

சண்டையிடுபவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் அவர்களும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உண்மையின் உணர்வுகளை உணர வேண்டும். ஒன்றுபட்டு வாழும் உணர்வு பெற வேண்டும். அவர்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

காரணம்… அவர்கள் சண்டையிட்ட உணர்வு நமக்குள் பதிவு இருக்கும். அதை மேலே சொன்னபடி எடுத்து மாற்றி அது நமக்குள் வளராதபடி பக்குவப்படுத்த வேண்டும்.

ஒரு செடியில் விளைந்த வித்தை அது அப்படியே விட்டு விட்டால் அது முளைத்து வளர ஆரம்பித்துவிடும். அது போன்று மற்றவர்கள் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே தான் நமக்குள் பதிவாகின்றது. அது வளராதபடி தடுக்க வேண்டும்.
1.அந்தக் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்கு இது எதிரான நிலை.
2.இப்படி இது வளரும் போது அந்த அணுக்கள் நல்ல அணுக்களாக நமக்குள் மாறும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி எத்தகைய தீமையையும் மாற்றி நம் உடலில் நல்ல அணுக்களாக அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

AGRICULTUREல் (விவசாயப் பண்ணைகளில்) வீரிய வித்தாக மாற்றுவது போன்றது செய்து பழக வேண்டும் ஒவ்வொரு உணர்வையும் நல்லதாக.. ஒளியாக… மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.

நுனிக் கரும்பின் சுவையை உணர்ந்தவர்களே ஞானிகள்

 

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை…!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை…!”
3.இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்…” கிடைக்கின்றது.

எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது… “தான் உணர்ந்து… அனுபவத் தன்மையால்… பதிவு செயல் நடைபெறுகிறது…!”

உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்ட வலுக் கொண்ட கால கட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.

காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…!) மறை பொருளாக நிற்கும்.

பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும் காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்.. “நம்மை அதன் வழியிலேயே இயக்கும்…!”

ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா – தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.

இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் அது உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்…” உபயோகப்படுத்தப்படும்.

ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.

ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பழனியில் ஒரு பித்தரைப் போல இருப்பார் என்றாலும் பிறர் அவரைப் “பித்தர்” என்றே எண்ணுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பித்துப் பிடித்துச் செல்வம் தேட வேண்டும் என்று எண்ணுவான். அதே சமயத்தில் செல்வத்தில் குறை என்றால் பித்துப் பிடித்து “வெறி பிடித்தவன்” போல் மற்றவரை எப்படித் தாக்குகின்றான்…!

பித்துப் பிடித்து மற்றவர்களுக்கு எப்படித் தொல்லைகள் கொடுக்கின்றான்…! ஒவ்வொரு மனிதனும் “பித்துப்பிடித்துத்தான் அலைகின்றான்” என்று சொல்வார்.

குருநாதர் எலெக்ட்ரிக் போஸ்ட் கம்பத்தில் கல்லைக் கொண்டு தட்டுவார். அலோ… ஹலோ… என்பார்.

“ஏன் சாமி.. கல்லைக் கொண்டு போஸ்ட் கம்பத்தில் தட்டுகிறீர்கள்..,?” என்று கேட்டேன்

நீ தான்டா..;. கேட்கின்றாய். மற்ற எல்லோருமே என்னைப் “பைத்தியக்காரன்…!” என்று சொல்கின்றார்கள். நான் டெலிஃபோன் செய்கின்றேன் என்கிறார்.

என்ன சாமி டெலிபோன் செய்கின்றீர்கள்…?

இந்தக் கம்பத்தின் மூலம் ஆண்டவனுக்கே அனுப்புகின்றேன். அந்த ஆண்டவன் என்பது “யார் தெரியுமா..,?” என்றார்.

நான் தட்டும் உணர்வுகள் சேர்த்து “உயிரில் பட்டபின்” அந்த ஆண்டவன் என்ன செய்கின்றான்..? இந்த உணர்வை என்னைச் செயல்படுத்தச் சொல்கின்றான்.

தட்டும் பொழுது… நான் எதை எண்ணித் தட்டுகின்றேன்…?

ஏனென்றால்… “தட்டும் பொழுது.. சப்தம் வருகின்றது…” ஒவ்வொரு பொருளிலும் தட்டும் பொழுது அதில் என்னென்ன நாதம் வருகின்றது…?

கல்லில் தட்டினால் ஒரு நாதம்.. மண்ணிலே தட்டினால் ஒரு நாதம்.. மரத்தில் தட்டினால் ஒரு நாதம்… உலோகத்தில் தட்டினால் அது ஒரு நாதம்.

ஆக உணர்வின் ஒலியின் நிலைகள் நான் தட்டும் பொழுது என் உயிரான இவனுக்கே எட்டுகின்றது. அப்படி எட்டும் பொழுது நான் என்ன செய்கிறேன்…?

1.இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தெரிந்து வாழ வேண்டும்.
2.அந்த ஆண்டவன் கட்டிய ஆலயத்தில் அவர்கள் பரிசுத்த நிலைகள் பெறவேண்டும்.
3.அவர்கள் புனிதம் பெறவேண்டும்.
4.புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.புனிதமான ஆலயமாக மாற்றவேண்டும்.
6.இப்படி இதை நினைத்து நான் டெலிஃபோன் செய்கின்றேன் என்கிறார் குருநாதர்.

ஆனால், வழக்கமாக நாம் டெலிஃபோன் செய்தால் மற்றவர்களிடம் என்ன கேட்கின்றோம்…?

உங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கின்றார்களா..? என்ன…? ஏது…? என்று கேட்கின்றோம்.

அதனால் என்னை ஆளும் ஆண்டவனுக்கு இதைத் தட்டி அவனுக்குள் இந்த உணர்ச்சியை ஊட்டுகின்றேன் என்கிறார் குருநாதர்.

1.உலக மக்கள் தன்னையறியாமல் எத்தனையோ நிலைகளைச் செய்கின்றனர்.
2.இந்த உடலாசை கொண்டு அவர்களை இயக்கும் ஆண்டவனை மறந்துவிட்டார்கள்.
3.அவர்களை ஆளக்கூடிய ஆண்டவனை மறந்து வாழ்கின்றனர்.

அவர்களுக்கெல்லாம் “அந்த ஆண்டவனை நினைவுபடுத்துவதற்கு” இதை நான் பாய்ச்சினேன்.

என்னைப் “பித்தன்…” என்கிறான். ஆனால் அவன் பித்தனாக இருக்கின்றான்.

தன் காரியம் செயல்படுத்தவில்லை என்றால் “எத்தனாகவே… மாறிவிடுகின்றான்”. பிறருக்குத் தொல்லை கொடுத்து வாழும் எத்தனாக வாழ்கின்றான்.

இவனை எத்தன் என்று மற்றொருவன் சொல்கின்றான். ஆக அவனும் பித்தனாகவே மாறுகின்றான். அடுத்து அவனும் எத்தனாகவே மாறிக் கொண்டிருக்கின்றான்.

அவன் உடலிலே வாழும் “அவன் உடலை உருவாக்கிய… அந்த உணர்வின் ஈசனை மறந்து விட்டான்…” அந்த ஈசனே இவனை ஆள்கின்றான் என்று அந்த ஆண்டவனை மனிதனான பின் மறந்தே வாழ்கின்றார்கள்.

எமக்குள் (ஞானகுரு) இதைத் தெரியப்படுத்துகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

“நீ தான்.. கேட்டாய்… அதனால் உனக்குச் சொல்கின்றேன்”.

“மற்ற எவனும்” கேட்கவில்லை. அவனுக்குச் சொல்லவில்லை. அவனுக்கு டெலிஃபோன் செய்கிறேன்.

அவன் உடலில் உள்ள “ஆண்டவன்” அவனை ஆள்கின்றது. அவனுகெல்லாம் “நல்ல சிந்தனை கொடு…” என்று அவனுக்கு (ஆண்டவனுக்கு) நான் டெலிஃபோன் செய்கின்றேன்.

இப்பொழுது யாம் உபதேசிப்பதை நீங்கள் கேட்டால் உங்களுக்குக் கிடைக்கின்றது.

ஆனால் கேட்டுக் கொண்டிருந்தாலும்.. “ஏதோ பைத்தியக்காரன் சொல்கின்றான்… ஊரை ஏமாற்றுகின்றான்…” என்று சொன்னால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்..? அவரவர்கள் ஆசை கொண்டு (அவர்கள்) பைத்தியமாக இருக்கின்றார்கள்.

ஆனால் நான் என்ன செய்கின்றேன்…? என்று (குருநாதர்) என்னிடம் கேட்கின்றார். என் உடலில் உள்ள துணியை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டேன். ஏனென்றால், எனக்கு “இந்த ஆடை” பாதுகாப்பாக இல்லை.

அவர்களுக்குள் இருக்கும் எல்லா ஆண்டவனுக்கும் டெலிபோன் செய்கின்றேன்.
1.அந்த உடலை நீ பாதுகாத்துக் கொள்
2.அந்த உடலுக்குள் நல்ல நிலைகளைச் செயல்படுத்து
3.எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லும் பொழுது எனக்குள் என்ன நடக்கின்றது?

“நான் எண்ணக்கூடியது… (இந்த ஆடை) இந்த ஆன்மா” எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. “நான் இந்த ஆடையைத்தான்… விரும்பினேன். ஆனால் என் கிழிந்த ஆடையைப் பார்த்தவுடனே “என்னைப் பைத்தியம்…!” என்று சொல்கின்றார்கள் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

இதைக் கேட்டவுடனே எனக்கும் (ஞானகுரு) அந்த அழகான ஆடை “என் உள் மனது என்னை அழகுபடுத்துவதும்… உயிருடன் ஒன்றி மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது…”

உங்கள் ஒவ்வொரு உயிரையும் ஆண்டவனாக மதித்து நான் சொல்லும் பொழுது… எனது சொல்லைக் கேட்கும் பொழுது உங்களுக்கும் அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் கிடைக்கும். இந்த உணர்வு பெற வேண்டும் என்பவருக்கு அங்கே மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்.

அதே சமயத்தில் என் கிழிந்த துணிகளைப் பார்த்து மற்றவர்கள் “என்னைப் பைத்தியம்…” என்ற நிலைகளை எண்ணும் பொழுது அவர்கள் பைத்தியத்திலிருந்து மீள முடியவில்லை.

ஆக மொத்தம் ஒவ்வொரு மனிதனும் பித்துப் பிடித்துத்தான் அலைகின்றனர். தன் பிள்ளையைச் சீராக வளர்க்க வேண்டும் என்று பித்துப் பிடிக்கின்றான்.

தன் பிள்ளை சரியாக வரவில்லை என்றால் எத்தனாகவே மாறுகின்றான். பிள்ளையை உதைக்க ஆரம்பிக்கின்றான்.

இந்தப் பித்து எத்தனாக மாறுகின்றது. என்ன சொன்னாலும் என் பையன் கேட்க மாட்டேன் என்கிறானே.., என்ற இந்த உணர்வு கொண்டு நாம் தாக்குகின்றோம்.

இதைப் போல தொழிலில் ஒருவருக்கு உதவி செய்கின்றோம். அதைச் சரியானபடி நாம் செய்தாலும் நாம் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் “எத்தனகாகப் பேசுகின்றோம்… திட்டுகின்றோம்”.

இப்படிப்பட்ட உணர்வுகளை எடுத்துப் பித்தனாகத்தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றானே தவிர என்னைப் பித்தன் என்கின்றனர். இந்த ஆடையும் அலங்காரமும் எனக்கு ஒன்றும் செய்யவில்லை.

அழகான ஆன்மாவை… நான் சேர்க்கின்றேன்… “பாருடா…” என்று என்னிடம் சொல்கின்றார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.அவரை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அவருக்குள் “அகண்ட அண்டத்தின்” உணர்வின் தன்மை
3.”அவருடைய ஆன்மாவில்… எப்படிக் கலந்துள்ளது” என்று அறிய முடிந்தது.

குருநாதர் எனக்குக் (ஞானகுருவிற்கு) காட்டிய இந்த நிலைகளை எல்லாம் நீங்களும் பார்க்கலாம். “எந்த அளவிற்கு.. ஆர்வமுடன் இருக்கின்றீர்களோ…” அதைப் பார்க்கலாம்.

அவரின் ஆன்மாவை “என்னில் பார்…” என்று அவர் சொல்கிற பொழுது அவரின் உணர்வுகள் அந்த மகிழ்ச்சிக்குரிய நிலைகள் வருகின்றது.

அவரைப் பார்த்தபின்… “எனக்கும் ஏகாந்த நிலை… என்ற மகிழ்ச்சி” வருகின்றது.

என்னுடைய ஆடை எப்படி இருக்கின்றது…? மற்றவர்களுடைய ஆடை எப்படி இருக்கின்றது…?

மற்றவர்கள் ஆடை வெளுப்பாக இருக்கின்றது. ஆனால் சொல் எப்படி இருக்கின்றது…? வேதனை என்ற உணர்வுடன் தான் வருகின்றது. அந்த வேதனையை நீ நுகர்ந்தால் உன் நிலை என்னாகின்றது…? என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிப் பித்தர்களாக வாழும் நிலை தான் இன்று இருக்கின்றது. யாரையும் தவறாகச் சொல்லவில்லை. அவன் படும் ஆசை அவனுக்குள் செயல்படுகின்றது. அவரவர் ஆசையே அவருக்குள் மாற்றிக் கொண்டுள்ளது.

இந்த உடலின் இச்சையிலிருந்து நாம் மாற்றி “ஒளியின் உணர்வின்… ஆன்மாவைச் சேர்த்தால்…” இன்றைய செயல் நாளைய உடலாக மாறுகின்றது என்று காட்டுகின்றார் குரு.

அவர்களுக்குள் அருள் ஒளி என்ற இந்த உயர்ந்த ஆசையை ஊட்டும் பொழுது அதைப் பெற்றால் அவருக்குள் இருளச் செய்யும் அந்தத் “தீமையான உணர்வுகள் மாறுகின்றது”.

ஒவ்வொரு உயிரும் கடவுள் என்று.., “அவன் வீற்றிருக்கும் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்…” என்று தான் இந்தக் கல்லை வைத்து போஸ்ட் கம்பத்தில் அடிக்கின்றேன்.

உன்னையும் இப்பொழுது “அடித்தேன்டா…” என்கிறார் குருநாதர்.

உனக்குள் செவிகளில் அந்த நாதம் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு… “ஏன் சாமி அடிக்கின்றீர்கள்..,?” என்று கேட்டாய்

நீ இதன் மேல் இச்சைப்படுகின்றாய். இந்த இச்சையின் உணர்வு “உனக்குள் செயலாக்கும்” என்று சொன்னார்.

குருநாதருடன் ஆயுள் மெம்பராக நாம் இணைய வேண்டும்

 

வீட்டிலே சில பேர்களைப் பார்க்கலாம்…
1.இப்படிப் பேசுகின்றார்கள் உருப்படுவார்களா…? இப்படிப் பேசுகின்றார்கள் உருப்படுவார்களா…? என்று
2.இப்படிச் சொல்லிச் சொல்லியே “தன்னை உருப்படாமல்…” செய்து கொள்வார்கள்.

இந்த மாதிரிப் பேசுபவர்கள் உடல்களில் பாருங்கள்…! ரொம்பச் சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். பையன் மீது வெறுப்புகள் வரும்.

இவர்கள் எண்ணமே… உருப்படுவார்களா…? உருப்படுவார்களா…? என்று சொல்லும் போது மற்றவர்கள் இவர்களுக்கு உதவி செய்வதற்கு மாறாக பகைமையாக்கிப் பிரித்துவிடும்.

நண்பர்களிடம் அடிக்கடி இதைச் சொன்னாலும் அவர்கள் உடலில் பதிவாகி அவர்களும் இப்படிப் பேசுகின்றார்களே உருப்படுவார்களா…! என்ற நிலைக்கு வந்து விடுவார்கள். “எப்பொழுது பார்த்தாலும் இப்படிப் பேசுகிறார்கள்… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…?” என்று அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

இப்படித்தான் மாறிக் கொண்டே போகும்.

எத்தகைய தீமைகளப் பார்த்தாலும் கேட்டாலும் அதை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

தீமை என்று தெரிந்து கொள்கின்றோம்… நமக்குள் அது புகாது முதலில் தடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித் தடுக்க வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடமே வேண்ட வேண்டும்… அவன் தான் நமக்கு உணர்த்துகிண்றான்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பெருக்கி பழகுதல் வேண்டும்.

மற்றவர்கள் தவறு செய்தாலும் கூட அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். ஒரு தெளிவான நிலைகள் அவர்களுக்குள் வர வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்தால் நமக்குள்ளும் தெளிவாகின்றது.

அதே சமயத்தில் அவர்கள் எடுத்தால் அங்கே தெளிவாகின்றது.
1.எடுக்கவில்லை என்றாலும் அங்கிருந்து வந்த உணர்வுகளை
2.நாம் மேலே சொன்னபடி எண்ணிச் சுவையாகச் சமைத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

காரமான உணர்வின் தன்மை அவர்களுக்குள் இருந்தால் நோயின் தன்மை அங்கே விளைகின்றது. அந்தக் காரத்தை நமக்குள் எடுத்தால் அதே நோய் நமக்கும் வரும்.

ஆகையினால் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் நமக்கு ஒரு பாதுகாப்பு தேவை. அதற்குத் தான் ஒவ்வொரு நொடியும் அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுக்கும்படி சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்த்துக் கொண்டால் அதன் வழி உண்மை நிலைகளை நாம் உணர முடியும்.

கணவன் மனைவி இருவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் பொழுது தீமைகளை அகற்றி மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். நம் குடும்பங்களில் முதலில் இதைப் பரப்பிப் பழக வேண்டும். நாம் எடுக்கும் உணர்வு நம் வீட்டில் மட்டுமல்ல… மற்ற இடங்களிலும் பதிவாகின்றது. அனைவருக்கும் கிடைக்கும் சக்தியாக வருகிறது

1.நம் குருநாதர் ஒளியாக இருக்கின்றார்
2.அவர் விண்ணிலே ஒளியாக இருப்பது போல நாமும் ஆயுள் மெம்பராக அவருடன் சேர வேண்டும்.

“சூட்சமத்தை…” உள்ளடக்கிய காவியமே இராமாயணம்

 

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

1.“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும் காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது
1.உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தையும் காட்டி
2.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
3.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும்…! என்று தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள் பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல…!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.

ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்தப் பூவுலகில் அகஸ்தியன் சர்வ தீமைகளையும் அகற்றி சர்வ தீமைகளையும் அகற்றிடும் பேரருளைப் பெற்று நமது பூமியின் “துருவ நிலையின் நேராக நின்று… துருவ நட்சத்திரமாக… வடகிழக்காக அமைந்துள்ளான்…”

துருவ நட்சத்திரம் எத்தகைய விஷத் தன்மைகளானாலும் தீமைகளானாலும் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டயுள்ளது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைக் கவரும்படி செய்தார் நமது குருநாதர். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை நுகரச் செய்து… என் உடலுக்குள் வந்த… தீமைகளை மாற்றியமைக்கும் முறையினைச் சொன்னார்.

அதன் வழி என் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கினேன். அவர் எனக்குக் காட்டிய அதே வழியில் குரு கொடுத்த அருள் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்துவிட்டேன்.

1971ல் வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நம் குரு ஒளி உடல் பெற்ற நாள். தீமைகளை வென்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தார்.

அவரைப் போலவே நீங்களும் தீமைகளை அகற்றுங்கள். இந்த உடலுக்குப் பின் ஒளியாக மாற்றுங்கள். உங்களால் முடியும். ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுவோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றி நடக்கும்போது நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…?

1.நான் ஒருவரைப் பார்த்தேன்… அவரின் தீமைகளைக் கேட்டேன்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றேன்
3.அவர் நன்றாக ஆக வேண்டும் என்று சொன்னேன்.
4.”அவர்கள் நன்றாக ஆனார்கள்…” என்று இந்த சந்தோஷம் உங்களுக்கு வரவேண்டும்… “வரும்…”

இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

அதை விட்டுவிட்டு “என்னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றான்… இரு.. நான் அவனைப் பார்க்கிறேன்… அவனைத் தொலைத்து விடுகிறேன்” என்ற நிலை வரக்கூடாது.

அதற்குப் பதிலாக அந்த அருள் உணர்வை நான் பெற்றேன். “என்னைத் திட்டியவர்கள் தீமையிலிருந்து விடுபட்டனர்… அவர்கள் நல்லவர்களாக ஆனார்கள்” என்று இப்படிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும்.

அதைப் போல நோயுற்றவர்களாக இருந்தால்… “என் பார்வையால் சொல்லால் மூச்சால் அவர்கள் நோய் விலகியது” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.

இதை நீங்கள் ஒரு பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.

குரு எனக்கு இதைத்தான் காட்டினார். அதைத்தான் நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன்… பதிவாக்குகின்றேன்.

“இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவது” உங்களுடைய பொறுப்பு. ஆகவே..
1.பகைமையை மாற்றுங்கள்.
2.பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4.அரவணைக்கும் சக்தியை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.
5.பேரன்பை உருவாக்குங்கள்… பேரிருளை மாற்றுங்கள்.
6.பேரன்பைக் கூட்டினால் நமக்குள் இருள் என்ற நிலைகள் வராது தடுக்க முடியும்.

நாமெல்லாம் அருள் வழியில் செல்வோம். இனி விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷத்தன்மைகளிலிருந்து மாற்றியமைப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.

தியான வளர்ச்சியில்… நம் மூச்சலைகள் மோதினாலே அனைத்தும் ஒளியாக மாறும்

 

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் பாசத்துடன் இருப்பார்கள். அவர் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கின்றார். ஆனால் அவருடன் வேலை செய்பவர்கள் எல்லாம் தொல்லை கொடுக்கின்றார்களே… என்று எண்ணுவார்கள்.

இருந்தாலும் மனைவி இப்படி எண்ணி இந்த உணர்வைச் சமைத்து வெளிப்படுத்தினால் ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் சுத்தமாக அது செயலற்றதாக மாற்றிவிடும் (பாசமாக இருப்பவர்களுக்குள்).

1.கணவருக்கு இந்த மாதிரித் தொல்லை வருகின்றதே… இப்படிச் செய்கின்றார்களே…! என்ற உணர்வை எடுத்தால்
2.கணவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் பாய்ந்து அவருடைய திறமைகளை எல்லாம் குறைத்துவிடும்.

இதையெல்லாம் மாற்ற நாம் அருள் ஒளி பெற வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவருடைய உடல் முழுவதும் படர்ந்து அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்
2.எங்கள் இரு மனமும் ஒன்று பட வேண்டும்… இரு உயிரும் ஒன்றாக இணைய வேண்டும்
3.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இரண்டு பேரும் ஒரு ஐந்து நிமிடமாக எண்ணிப் பழக வேண்டும்

அதிகாலையில் முழிப்பு வரும் பொழுது இது போன்று செய்து பழக வேண்டும்.

நான்கு மணிக்கு மேல் உங்களை அறியாமலே அந்த முழிப்பு நிச்சயம் வரும். அந்த நேரத்திலே சுதாரித்து இந்த சக்தியை இரண்டு பேருமே எடுக்க வேண்டும்

பெண்கள் தங்கள் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்றும் ஆண்கள் தங்கள் மனைவிக்கு அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்கள் உயர்ந்த சக்தி பெற வேண்டும். குரு அருளைப் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து அவர்கள் பார்வையில் தீமை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று செலுத்திப் பாருங்கள்

அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும். அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும். அவரைப் பார்ப்பவர் எல்லாம் அந்த புனித நிலை பெற வேண்டும் என்று கணவன் மனைவிக்கு எண்ண வேண்டும். இதே போல மனைவியும் கணவனுக்கு எண்ண வேண்டும். ஒரு இரண்டு நிமிடமாவது இதை எண்ண வேண்டும்.

அதிகாலையில் இவ்வாறு செய்து விட்டு அடுத்து எழுந்தபின் ஒரு ஆனந்தமான நிலையாக இருக்கும்.
1.இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் வீட்டிலே பளீர்… பளீர்… என்று வெளிச்சம் வரும்
2.உங்கள் உடலில் இருந்து வீட்டிற்குள்ளேயே அது படரும்.

ஏனென்றால்
1.நாம் அருள் சக்திகளை நுகரப்படும் பொழுது அது பட்ட உடனே மோதி இருளை நீக்கி
2.அந்த வீட்டிற்குள் பளீர்… என்று ஒரு வெளிச்சம் வரும்… பார்க்கலாம்.

ஏனென்றால் உங்கள் மூச்சலைகள் பட்ட உடனே இது போன்ற நிலைகள் நிச்சயம் வரும்.

சூரியன் தனக்குள் விளைந்த பாதரசத்தால் தன் அருகில் வரும் மற்ற உணர்வுகளுடன் மோதி விஷத்தைப் பிரித்து விட்டுப் பளீர்… என்று இந்த பிரபஞ்சம் முழுவதற்குமே வெளிச்சமாகின்றது.

இதே போன்று நாம் வீட்டிற்குள் செய்தோம் என்றால் நம் உடலில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியுடன்
1.தீமை என்ற உணர்வுகள் மோதிய பின் அது விலகிப் போகும்
2.நம் உடலில் ஒரு விதமான வெளிச்சம் வரும்
3.புதுவிதமான ஒரு மகிழ்ச்சி வரும்… அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் இதைச் செய்து பழகுங்கள். இப்படிச் செய்து வந்தீர்கள் என்றால் நான் கொடுத்த ஞான வித்திற்கு “நீங்கள் சக்தி ஊட்டுகின்றீர்கள்…” என்று அர்த்தம்.

மதி வழி முன் சென்றால்… வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்…

 

இராமன் என்றும் லட்சுமணன் என்றும் சீதை என்றும் அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் (உபதேசம்) கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.

ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வந்ததும் எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் ஆசை நிலையைச் சித்தரிப்பதே “மாயமான்…!”

அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வேரூன்றி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை. “ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.

உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)

ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை… சூட்சமமாகப் பொருள்படுத்தியது…”
1.எல்லா ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்
2.வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்…!

ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
1.அந்த உலகோதய ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
2.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.

ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து… பலம் குன்றுவதைக் காட்டவே… இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.

அதாவது மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டி தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள் தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி
1.ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் உலகோதய “அதி ஆசை நிலை…!”
4.இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை…”

மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி மாயமானாகிய அதி ஆசை நிலையைத் தான் தகர்க்கின்றது. ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உருக்கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தியூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

எப்படி…?

உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.

ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.

அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.

அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலகோதய ஆசை நிலையாகிய மாயமான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன…!

ஏன்…?

காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்…!

அது மட்டுமல்ல…! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி…!)

உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
1.மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக
2.தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும்
3.எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டி
4.உயிரான்மாக்கள் பெறும் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
5.மதி வழி முன் சென்றால்… வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்…! என்று அருளியுள்ளார் அந்த வான்மீகி மாமகரிஷி…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நீங்கள் சொத்தை அதிகமாகச் சேர்த்து வைத்திருந்தால் அடுத்தாற்போல் உங்கள் மனது எப்படி இருக்கின்றது?

துடுக்.. துடுக்.. துடுக்… என்று கடிகாரம் அடித்த மாதிரி இருக்கும். “எங்கேயாவது… திருடி விட்டார்கள்…” என்று பத்திரிக்கையில் படித்தால் போதும்.

இரவெல்லாம் துடுக்… துடுக்.. என்று இருக்கும். இவ்வளவு நகைகளையும் எங்கே ஒளித்து வைப்பது…! இவ்வளவு பணத்தையும் எங்கே ஒளித்து வைப்பது..?

வைத்தாலும் இந்த மனது என்ன செய்யும்…?

எங்கேயாவது.., “சறுக்…” என்று சப்தம் கேட்டால் போதும். உடனடியாக முழிப்பு வந்து “பட..படா… பட… படா…” என்று துடிக்க ஆரம்பித்துவிடும்.

ஏனென்றால் கொள்ளை கொலை என்று இன்றிருக்கக்கூடிய உலகத்தில் நாம் எண்ணும் பொழுது இவ்வாறு நமக்குள் வந்துவிடுகின்றது.

நிறையப் பேர் என்ன சொல்கிறார்கள்…? சம்பாரித்து வைத்த என் நகைகளைக் காணோம் என் பணத்தைக் காணோம்… 50 பவுனைக் காணோம் என்று அலறுகின்றார்கள்.

போனால் போகின்றது என்று அதை விடாதீர்கள்.

1.எடுத்துக் கொண்டு போனவனுக்கு நல்ல புத்தி வரவேண்டும்.
2.யாரிடமாவது அவன் சிக்க வேண்டும்.
3.சீக்கிரமே போலீசில் சிக்கிவிடுவான்.
4.சிக்கிக் கொண்டபின் நம் பணம் திரும்ப வரவேண்டும்.
5.தவறு செய்ததை அவன் சிந்திக்க வேண்டும்.
6.தான் செய்த தவறை உணர வேண்டும்

“இந்த மாதிரி எண்ணி… உங்கள் தியானத்தில் எடுத்துப் பாருங்கள்…” உங்கள் காசு வருகின்றதா இல்லையா என்று பாருங்கள்.

இந்த உணர்வு… “வேகமாக” வேலை செய்யும்.

பெரும்பகுதியாவனவர்கள் திருடு போனபின் எப்படி எண்ணுகின்றார்கள்…?

உங்கள் நகைகளை எல்லாம் எண்ணி “அய்யோ… போய்விட்டதே… எல்லாம் போய்விட்டதே… போய்விட்டதே… என்று எண்ணினால் என்ன ஆகும்?

இப்பொழுது அதுவும் போய்விட்டது. அன்றைய தினம் நீங்கள் சம்பாரித்த பணத்தையும் எங்கேயாவது வைத்துவிட்டு “அதையும் காணோமே…” என்று தேட ஆரம்பித்துவிடுவீர்கள்.

இந்தப் பதட்டம் இப்படி வந்துவிடும்.

அதே மாதிரி கையில் ஒரு பையை (BAG) எடுத்துச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பதட்டத்திலேயே அதையும் எங்கேயாவது வைத்துவிட்டு என்ன செய்வோம்…?

கையில் வைத்திருக்கின்றோம் என்ற எண்ணம் கூட வராது. நாம் எந்தச் சிந்தனையில்லாமல் வந்து விடுவோம்.

“ஐய்யய்யோ… என் பையை வைத்துவிட்டு வந்துவிட்டேனே..! இதுவும் எங்கே போனதோ…? என்ற இந்தப் பதட்டம் கையில் இருக்கின்ற பொருளையும் விட்டுவிடச் செய்துவிடும்.

இதுவெல்லாம் நமக்குள் எது செய்கின்றது…? காரணம் என்ன…? என்றால் நாம் அல்ல. நாம் தவறு செய்யவில்லை.

என் பொருள் எல்லாம்… “திருடு போய்விட்டதே…” என்று நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் நல்ல சிந்தனையை இழக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அந்த அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

1.திருடிச் சென்றவன் நல்லவனாக வேண்டும்.
2.உதவி செய்பவனாக வர வேண்டும்.
3.பிறருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் அவனுக்கு வரவேண்டும்.
4.போலீசில் சிக்க வேண்டும்.
5.அப்பொழுது அவனுக்கு நல்ல ஞானம் கிடைக்க வேண்டும்
என்று இப்படிப்பட்ட உணர்வைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். காணாமல் போன பணம் வருகின்றதா.., இல்லையா.., என்று பார்க்கலாம்.

அதையே எண்ணி வேதனையாக எண்ணிக் கொண்டிருந்தால் “இருக்கும் பணத்தையும்” எங்கேயாவது விட்டுவிட்டு இருப்பீர்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஆகவே உங்களுக்கு எல்லாச் சக்திகளையும் கொடுக்கின்றோம். “நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”.

ஏனென்றால் இனி வரும் எதிர்காலத்தில் விஷத் தன்மையான உணர்வுகள் உலகம் முழுவதும் பரவப்படும் பொழுது அதிலிருந்து “உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்” என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவாக்குகின்றோம். இந்த உணர்வுகள் எல்லாம் காற்றிலே படர்கின்றது.

“அதை நீங்களும் எடுத்து… அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி… என் பணம் கிடைத்துவிட்டது…” என்று சந்தோஷப்பட்டு நீங்கள் சொல்ல வேண்டும்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் போன்று நீங்களும் “பிறருடைய தீமைகளைப் போக்குபவர்களாக” மாற வேண்டும். “நல்ல சிந்தனை உள்ளவர்களாக… மற்றவர்களையும் மாற்றியமைக்கும் சக்தி… நமக்கு உண்டு” என்ற நிலைக்கு வர வேண்டும்.

ஆகவே சோகத்திற்கும் சலிப்பிற்கும் சஞ்சலத்திற்கும் வெறுப்பிற்கும் வேதனைக்கும் “உங்கள் உணர்வை… உயிரிலே மோதவிடாதீர்கள்…”

இறந்தவர்கள் உடலிலிருந்து நமக்கு வரக்கூடிய தொல்லைகள்

 

உடலை விட்டு இந்த உயிர் சென்று விட்டால் அடுத்த கணம் இந்த உடல் சவமாகி விடுகின்றது. இறந்த பிற்பாடு உடலை உருவாக்கிய அணுக்கள் உயிரணுக்களாக மாறி… புழுவாகி இந்த உடலையே சாப்பிடுகின்றது.

சாப்பிட்டு இந்த உடல் தசைகள் தீர்ந்த பிற்பாடு அதுவும் இறக்க நேருகின்றது. நம் உயிரணுவைப் (உயிர்) போல் அதுவும் உயிரணுக்களாக மாறுகின்றது.

உயிரணுக்களாக மாறிய பின் அந்த உயிர் என்ன செய்கின்றது…?

1.யார் யாருடன் பழகி அந்த உணர்வுகள் தசைகளோடு இணைந்ததோ
2.இது உயிரணுவான பின் அவர்கள் உடலுக்குள் சென்று
3.அந்த உணர்வுகளைத் தீண்டி அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் உணர்வாகச் சேர்கின்றது.
4.உடல்களிலே பலவிதமான நோய்களை உருவாக்கும் தன்மை வருகின்றது.
5.தசைகளில் நோய் வருகின்றது… எலும்புகளிலே மற்றவைகளிலே நோயாக மாறுகின்றது.

அதாவது ஒருவர் இறந்த பிற்பாடு அவர் யார் யாருடன் நெருங்கிப் பழகினாரோ அந்தப் பழகியவர்கள் உடலில் இப்படிச் சேர்கின்றது.

ஆனால் உயிருடன் இருக்கும் பொழுது அவர்கள் உணர்வுகளைப் பதிவாக்கி நாம் கவர்ந்து கொண்ட பின் இதைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அந்த உடலில் இருந்து வரக்கூடிய சத்தை எல்லாம் அந்த உடலில் எந்த நோயாக மாறியதோ அதை எல்லாம் இங்கே உருவாக்குகின்றது.

இதுவே உயிரணுக்கள் வெளியே சென்ற பிற்பாடு
1.அந்த இறந்த உடலைச் சாப்பிட்டது போல இந்த உடலைச் (உயிருடன் இருப்பவர்கள்) சாப்பிடும் நிலைகளிலே
2.குஷ்டரோகமா மற்றும் அழுகிய நிலைகளோ படை பத்து போன்ற நோய்கள் வருகின்றது.

நான் ஒன்றுமே செய்யவில்லை… என் உடலில் படையாக வந்து விட்டது பத்து வந்துவிட்டது… ஒன்றும் செய்ய முடியவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

மனிதனுக்குள் தொடர்ந்த இந்த உணர்வின் அலைகள் இப்படி எல்லாம் மாற்றிக் கொண்டு போகின்றது. எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த பிற்பாடு மனிதனின் நிலைகள் இப்படி ஆகிறது.

இதை எல்லாம் மாற்றி அமைக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியை அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர வேண்டும்.

அதற்காக வேண்டித் தான்…
1.பல முறை உபதேசத்தைக் கொடுத்துப் பல விதமான உணர்ச்சிகளை நுகரச் செய்து
2.உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்கிறோம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்வதறகுத் தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.

ஒரு சிலர் அரை மணி நேரத்தில் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள். மூன்று மணி நேரம் பேசுகிறேன் என்றால் நீங்கள் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்தங்களிலே கலக்கப்படுகின்றது.

எந்த அளவிற்கு உற்றுப் பார்க்கின்றீர்களோ இரத்தத்தில் கலந்து அந்த அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகின்றது. உற்றுப் பார்த்துப் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் அதை எண்ணி எடுத்தீர்கள் என்றால் நான் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞான வித்து உங்களுக்குள் விளையும்.

அது விளையத் தொடங்கினால் ஒவ்வொரு நொடிகளிலும் மகரிஷிகள் பெற்ற அந்த அரும் பெரும் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கை எப்படி இருக்கின்றது…? குடும்பத்தில் கணவன் மனைவி எப்படி ஒன்றி வாழ வேண்டும்…? என்று யாம் சொல்லப்படும் பொழுது அதை வைத்து… சர்வ தீமைகளிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.

தீமை நம்மை இயக்காதபடி கணவன் மனைவி ஒருவருக்கொருவர் காத்துக் கொள்ளவும் முடியும்.

எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அதற்குத் தேவை “முயற்சி மட்டும் தான்…”

 

எந்த நிலை பெற வேண்டி விழையும் (ஆர்வம், விருப்பம்) மனம்… அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில்
1.செயல் நிலை எப்பொருளோ அப்பொருளே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளே வீரிய வளர்ப்பாகவும்
3.அப்படிச் செயல்படுத்தும் நிலை எதுவோ அதுவே “முயற்சி…!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது. அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம் தன்னுள் விழும் நிலை கருத்தறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின் வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்கு வருகிறது. இருந்தாலும் சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் என்பது போல் “முயற்சி விளைவாக்கும்…!”
2.முத்தாக விளையாவிட்டால் என்ன செய்வது…! என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை (இது முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) உலகோதய உடல் வாழ்க்கை மோதல்கள் நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்குத் “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி விதி வழி செல்லும் செயல் வாழ்க்கையில் அதிலே வனத்தில் பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று குற்றவாளிகள் பெருகும் நிலைக்குக் காரணம் என்ன…?

மக்கள் ஆசையின் நிமித்தம் பேராசையாக வளர்த்துக் கொள்கின்றனனர். ஆனால் அது “நிராசையாக மாறும் பொழுதுதான்… குற்றவாளியாகின்றார்கள்…” குற்றங்களை அதிகமாகச் செய்கின்றனர்.

அவர்கள் செய்த குற்றங்கள் “மற்றவர்களின் சாபங்களால்…” ஒவ்வொரு குடும்பங்களிலும் வேதனைகள் படுகின்றனர் பல வகைகளிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதைப் போன்று இன்று அரசாங்க நிர்வாக நிலைகளில் நீதியைச் சொல்லக்கூடியவர்களும் நீதிகள் தவறப்பட்டு மக்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாமல் எதிர்பார்த்த அளவு இல்லை.

நீதிக்குப் புறம்பான நிலைகளில் தீர்ப்புகள் கூறப்படும் பொழுது… அந்த நீதிக்குரியவன் நீதிபதிகளையும் அதற்குக் காரணமானவர்களையும் மனம் நொந்த நிலையில் சாபமிடுகின்றான்.

அப்படிச் சாபமிட்ட உணர்வுகள் யார் நீதி சொன்னார்களோ அவர்கள் உடலில் பதிவாகின்றது.

ஆனால், நீதிபதியாக இருப்பவரோ செல்வத்தைச் சம்பாரிக்கின்றார். அதே சமயத்தில் அவருடைய குடும்பங்களில் இந்தச் சாபமிட்ட உணர்வுகள் “குழந்தைகளும்… அவர் வாரிசுகள் அனைத்தும்… துன்பத்தை அனுபவிக்கின்றனர்…”

1.நாம் இன்று தவறு செய்தோம் என்றால்
2.குழந்தைகளுக்கு நிச்சயம் அதனின் பாதிப்பு உண்டு.
அடுத்து அந்தக் குழந்தைகள் வாடும் பொழுது… “அவர்களுடன் சேர்ந்து நாமும் நிச்சயம் அனுபவிக்க நேரும்…”

ஆகவே, இதைப் போன்ற இயக்கங்கள் “உலகில் இப்படி நடக்கின்றது…” என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நாடு நலம் பெற வேண்டும் என்றால்
1.நாம் எல்லோருமே ஞானிகளாக வேண்டும்.
2.நல்ல உணர்வுகளைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.
3.நாட்டில் எல்லோரையும் நல்லவர்களாக மாற்றிப் பழகுதல் வேண்டும்.
4.அரசாங்கமோ மற்றவைகளோ அதில் நல்ல நிர்வாகத்தை உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் தான் தவறாக்கிவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இன்றைய விஞ்ஞான அறிவு எங்கேயோ போய்விட்ட்டது. கடுமையான நோயாகி விட்டால் மனிதனின் உறுப்புகளைச் செயற்கையாகவே செய்து மாற்றுவதும் இதைப் போல எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது.

ஏனென்றால் நமக்குள் வேதனைகள் அதிகமாகிவிட்டால் நோயாகி விடுகின்றது. அறுவை சிகிச்சை செய்து இருதயத்தை மாற்றினாலும் அவர்களும் சிறிது காலமே வாழ்கின்றனர்.

இருதயத்தை மாற்றியவர்கள் என்ன எண்ணுகின்றார்கள்…? என் இருதயத்தை மாற்றியிருக்கின்றார்கள்… மாற்றியிருக்கின்றார்கள் என்று எண்ணிக் கொண்டு “நாளைக்கு வாழ முடியுமா… அதிக நாள் வாழ முடியுமா…? என்ற இந்த வேதனை உணர்வுகள் தான் வருகின்றது.

இது குறைவதில்லை. சாம்பாரித்த பணத்தை அதற்காக வேண்டி எவ்வளவோ செலவழித்தும் மீண்டும் வேதனையைத்தான் வளர்க்க முடிகின்றது.

இதைப் போன்று மக்களின் நிலைகளில் நாம்… “இந்த உடலுக்குப் பின் என்ன ஆகின்றோம்…?” என்று யாருமே “சற்றும்” சிந்திப்பது இல்லை.

இதற்குத்தான் இராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், விநாயகர் புராணம் உலகில் எந்த நாட்டில் இல்லை என்றாலும் நம் நாட்டில் இது தெளிவாக உண்டு.

அந்தக் காவியங்களில் மனிதன் அடைய வேண்டிய எல்லையைத் தெளிவாக்கியுள்ளார்கள்.

நம் நாட்டில் தோன்றிய ஞானிகள் சாஸ்திரங்களாக கொடுத்ததை நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் காட்டிய அருள் வழி வாழ்ந்தால் அந்த ஞானிகள் இருப்பிடத்தை நாமும் அடையலாம்.

1.அழியக் கூடிய உடலுக்காக வாழாதீர்கள்.
2.அழியாத நிலைகள் கொண்ட… “நம்மை உருவாக்கிய உயிருக்காக வாழுங்கள்…”

உயிருடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து என்றுமே அழியாத நிலைகள் பெறலாம்.

குருநாதர் வழியில் காடு மேடெல்லாம் அலைந்து உண்மைகளைத் தெரிந்தாலும்… உலகம் எப்படிப் பார்த்தது…?

 

தனித்து நான் (ஞானகுரு) சாமியாராக இருந்தேன். குருநாதர் காட்டிய வழியில் காடு மேடு எல்லாம் அலைந்து பல அனுபவங்களைப் பெற்று விட்டு வந்த பிற்பாடு என் மனைவிக்கு இதையெல்லாம் சொன்னேன்.

ஆனால் “சாமியாராகப் போய்விட்டார்…!” என்று ஊரெல்லாம் என்னைத் திட்டினார்கள். குடும்பத்தை விட்டு விட்டுச் சாமியாராகச் சென்று விட்டார் என்று திட்டிய சொந்தக்காரர்களும் நண்பர்களும் ஏராளம்.

சாமியம்மாவும் “பாவிப்பயல்…! என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்…” என்று என்னைத் திட்டியதும் உண்டு. அதே சமயத்தில் என் பிள்ளைகளைக் கூப்பிட்டு உன் அப்பனிடம் காசு வாங்கிக் கொண்டு வா…! பெத்துப் போட்டுச் சென்று விட்டால் யார் கொடுப்பது…? என்று துரத்தி விட்டவர்களும் உண்டு.

இது எல்லாம் இமயமலையில் நான் குருநாதர் காட்டிய வழியில் அனுபவம் பெறுவதற்காகச் சென்ற போது நடந்த நிகழ்ச்சிகள்.

குருநாதர் எம்மைக் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு தான் அங்கே போகச் சொன்னார். அங்கெல்லாம் பனி ஜாஸ்தி. அது சீன எல்லை வேறு. அதிலே பல இம்சைகள். துணி இல்லை கிடு… கிடு… என்று நடுங்குகின்றது.

அப்படி நடுக்கம் வரும் பொழுது குருநாதர் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதன்படிச் செய்தவுடன் உடலுக்குள் வெப்பமாகி நடுக்கம் நீங்குகின்றது.

நடுக்கம் நீங்கியபின் என்னுடைய பையன் தண்டபானி இருக்கின்றான். அவனைக் காட்டுகிறார் குருநாதர்.

அவனுக்கு மூல பௌத்திரம் மாதிரி இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தெரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நைனா… நைனா… என்று சொல்லிக் கொண்டு வலி பொறுக்க முடியாமல் உட்கார்ந்து போய்க் கொண்டிருப்பதைக் குருநாதர் காட்சியாகக் காட்டுகின்றார்.

அதைப் பார்த்ததும் பாசத்தால் எண்ணியவுடன் உடனே எனக்குக் குளிர் அதிகமாகிறது. மறுபடியும் கிடு… கிடு… என்று உதறுகிறது. பார்த்தோம் என்றால் “கிர்…” என்று இருதயமே விரைக்கின்றது.

அப்பொழுது குருநாதர் என்ன சொல்கிறார்…?

அனுபவம் பெறுவதற்காக எனக்குக் காட்டிய அந்த மூன்று இலட்சம் குடும்பங்களை எண்ணச் சொல்கிறார்.

அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் “நன்றாக வாழவேண்டும் என்று நீ இங்கிருந்து எண்ணு…” என்று அங்கே உபதேசிக்கின்றார்.

அப்பொழுது அவர்களுக்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணும்போது இங்கே குளிரினால் வரும் இரைச்சல் குறைகிறது. பனி என்னைத் தாக்கவில்லை.

ஏனென்றால்… இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்ற நிலையை அந்த இடத்தில் வைத்துத்தான் பாட நிலையாகக் கொடுக்கின்றார்.

அதாவது… அங்கே காட்சி தெரியும்போது “இப்படி ஆகிவிட்டதே…” என்று பையன் மேல் பாசம் வருகிறது. அதே சமயத்தில் சாமியம்மா (என் மனைவி) என்ன நினைக்கின்றது…?

இரண்டு மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அது பட்டினியாக இருக்கின்றது. ஏனென்றால் என் மூத்த பையன் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்று சொல்லி சொத்தை எல்லாம் இழக்கச் செய்துவிட்டான்.

இந்தச் சூழ்நிலையில்… இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சொல்லி மைசூரில் இருக்கும் என் மகள் என்னைத் திட்டுகின்றது. “பிள்ளைகளைப் பெத்துவிட்டுச் சோறு போடாமல் சுற்றிக் கொண்டுள்ளான்…!” என்று திட்டுகிறார்கள்.
1.இதெல்லாம் என் காதில் கேட்கிறது.
2.நான் இமயமலையிலிருந்து இதெல்லாம் பார்க்கின்றேன்.

பாசத்தினால் எடுக்கும் பொழுது எப்படியெல்லாம் இந்த உணர்வுகள் மாறுகின்றது…?

அந்த உணர்வால் நான் என்ன அவஸ்தைப்படுகின்றேன்…? என்று குருநாதர் அந்த இடத்தில் வைத்து நேரடி அனுபவமாகக் கொண்டு வருகின்றார்.

ஆக…
1.கஷ்டப்படும் குடும்பங்களை எண்ணி அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆகவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் போது குளிர் ஒடுங்குகின்றது.
2.அதே சமயத்தில் குடும்பப் பாசம் என்ற நிலையில் அந்த இடத்தில் எண்ணும் பொழுது குளிர் பாதிக்கின்றது… நல்லதை எண்ண முடியவில்லை.

சிலர் எல்லோருக்கும் நல்லவைகளைச் சொல்வார்கள். தன் குடும்பப் பற்று வரும்பொழுது “தன் பையன்… தன் பிள்ளை…” என்று வரும்போது அவர்களுக்குள் அந்த உணர்வுகள் வரத்தான் செய்யும்.

ஏனென்றால் அந்தப் பாசம் என்ற உணர்வு வரும்போது எப்படியெல்லாம் தடைப்படுத்துகிறது…? என்று இமயமலையில் வைத்து குருநாதர் சொல்லிக் கொடுக்கின்றார்.

யாம் சந்தித்த அந்த மூன்று இலட்சம் பேரை எண்ணி… அவர்களெல்லாம் நலம் பெற வேண்டும் என்று அங்கிருந்து எண்ணச் சொல்கிறார்.

இப்படி பல வகையில் சிரமப்பட்டு உண்மைகளை எல்லாம் தெரிந்து நான் இங்கே வந்த பிற்பாடு சில இடங்களில்
1.இந்தச் சாமி கல்யாணம் செய்து விட்டாரே…!
2.கல்யாணம் பண்ணிய சாமியார்கள் எல்லாம் அயோக்கியச் சாமியார்கள் என்று இப்படியும் சொல்கின்றார்கள்.

காரணம்… சாமியார் ஆகிவிட்டால் கல்யாணம் செய்யக்கூடாது.

எப்பொழுதாவது என் மனைவி என் அருகில் வந்து ஏதாவது பேச முற்பட்டால் சில பேருக்கு இதைப் பார்க்கும் பொழுது “குடும்பப் பற்றுடன் இருக்கின்றாரே இந்தச் சாமியார்…” என்று சொல்கின்றார்கள்.

இது எல்லாம் “மனித உணர்வுகளுக்குள்…” நடந்த நிகழ்ச்சிகள்.

காம குணத்தை அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது தெய்வீகம்…! – “காமாட்சி”

 

காமத்தின் அடியாகப் பிறக்கும் “மோகம்…” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளை தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.

1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் தொட்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் வழியமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட
5.சபலம் (மோகம்) தானே தன் வழி செல்லா நிலையில் மறைந்து விடும்.

குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் சபலத்தின் வழியில் சிக்காதபடி பயிற்சி வழி முறைகளைக் காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குண செயல்பாட்டையும் போதிப்பார்.

அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் காவியம் இராமாயணத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்…!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்…!” என்றும் காட்டுகிறார்கள்.

அதனின் உட் கருத்து ரிஷித் தன்மை பெற வழி காட்டும் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி ரிஷி பத்தினி சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.

விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.

ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்…” அதையே “காமாட்சி…” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமுமே.

ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்…?

அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.

அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைச் “சாப நீக்குப் படலம்…” என்று செயல்படுத்தி ரிஷி பத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.

கௌதம முனிவருக்குத் தன் நிலை உயர்த்த ரிஷி பத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனதால்
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்…! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!”

சபல குணம் என்று உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.

சபல குண வலையில் விழுந்ததால்… தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்… இந்திரனால்… “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்…” என்பது மோக குணத்தால் தான்…!

1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை…!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!

ரிஷி பத்தினி என்ற சிறப்பை அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுதுதான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்பதையும் சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வானஇயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.

இதே தொடர்பை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.

அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியூட்டித் தானும் அந்த முனிவனின் சக்தியுடன் ஒன்றுதல் என்பதே
1.பால்வெளி சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் தான் ரிஷி பத்தினிச் சக்தியாகக் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும் என்று காட்டுகின்றார்.

இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே… பலர் “சபல குணத்தை இந்திரன்…” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.

இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன…?

அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.ஜெபம் என்ற வழி முறையை… அந்த உயர்வைப் பெறும் வழியை…
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் நண்பருக்கோ உறவினர்களுக்கோ நோய் என்று கேள்விப்பட்டால்… “ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று வேதனைப்படாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

அந்த நோயால் வேதனைப்படுபவர் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அந்த அருள் சக்திகளைப் பெறும் ஆற்றல் அவருக்குள் வரவேண்டும். அருள் வழியில் அவர் நலமாக வேண்டும் என்ற இந்த உணர்வைப் பெறச் செய்யுங்கள்.

ஒருவருக்குக் கடுமையான தலைவலியே வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டு.., “ஒரு மரத்தில் அவர்களைக் கையை வைக்கச் சொல்லி… உங்கள் தலைவலி நீங்கிப் போகும்..” என்று சொல்லுங்கள்.

தலைவலி நீங்குகின்றதா இல்லையா…? என்று பாருங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் “தீமையை நீக்கக்கூடிய… சக்திவான்களாக” மாற வேண்டும்.

1.நான் (ஞானகுரு) சொன்னால் உங்கள் தீமைகள் போகின்றது.
2.ஏன் நீங்கள் சொன்னால் மற்றவர்கள் தீமைகள் போகக் கூடாதா…?

நான் தான் செய்ய வேண்டுமா…?

நாம் அனைவருமே ஞானிகளாக உருவானால் “உலகிலேயே ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக… நமது தமிழ்நாடு… அந்த உயர்ந்த நிலையாகப் பெறும்”.

உலகைக் காக்கும் அந்த “அகஸ்தியன்” பெற்ற உணர்வை நாம் மீண்டும் வளர்த்து உலகில் உள்ள மக்களுக்குத் தெளிவான உணர்வுகளை ஊட்டும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

விஞ்ஞான நிலைகளால் இன்று இந்த உலகமே திசை திரும்பும் நிலைகள் வந்து கொண்டு வருகின்றது.

முன்பு ஒரு காலத்தில் இந்தப் பூமி ஒரு பக்கம் உறைபனியாக நீள வடிவாக வரப்படும் பொழுது தலை கீழாகக் கவிழும் தன்மை வந்தது.

அப்பொழுது அகஸ்தியன் தன் சக்தியினால் அந்த இடத்தைத் திருப்பி அது வரக்கூடிய திசையை மாற்றி அதன் உணர்வை உறையும் இடமாக்கி இதைக் கரைக்கச் செய்து கடலாக மாற்றி இன்றும் பூமியில் அவன் மாற்றி வைத்த நிலைகள் தான் நாமும் வாழ்கின்றோம்.

இப்பொழுது விஞ்ஞான அறிவால் உலகமே நச்சுத் தன்மை பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மனிதனின் சிந்தனை குறைந்து உருக்குலையும் நேரம் வரும் இந்த நிலையில் அந்த அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்த ஆற்றலின் துணை கொண்டு இந்தப் பூமியில் மக்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் தீமைகளிலிருந்து விடுபடச் செய்தல் வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற நிலைகளில் அன்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியனின் ஆற்றலை எந்நாட்டவரும் பெறும்படி நாம் செய்ய முடியும்.

அப்பொழுது இந்தப் பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் ஆன்மாவும் தூய்மையாகின்றது. இந்தக் குறுகிய காலத்தில் நாம் இந்த வளர்ச்சி பெறமுடியும்.

1.இந்தப் பூமியையும் நம் உயிராத்மாவையும்
2.அந்த அகஸ்தியன் துணை கொண்டு
3.அவன் சென்ற வழியில் நாமும் சென்று
4.இந்த உடலுக்குப் பின் அனைவரும் ஒளியின் உடலாகப் பெறும் சக்தியை நாம் பெறுவோம்.

போக்கிரி வலுவானவன் தான்… ஆனால் உடலுக்குப் பின் எந்த நிலை அடைகிறான்…?

 

ஒரு போக்கிரி இருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவன் மற்றவர்களை அடித்து உதைத்துப் பழக்கப்பட்டவன். ஒருவன் மற்றவனை அடிப்பதை இவன் பார்த்தால் மன தைரியத்தோடு இருப்பான்.
1.அப்படித் தான் அடிக்க வேண்டும்…! என்று சொல்வான்.
2.ஏனென்றால் அவன் அடித்துப் பழகியவன்
3.அடித்து அடித்தே அவன் உணர்வுகளை வலுப் பெற்றவன்.

அவனுடைய அழுத்தம் அதிகமாக இருப்பதால் மற்றவர்கள் அடிப்பதை இவன் பார்த்தாலும் “அப்படித்தான் வேண்டும்…” என்ற வகையிலே தன்னுடைய உணர்ச்சிகளை வலுப்படுத்திக் கொள்கின்றான்.

ஆனால் ஒருவன் மற்றவனை அடிப்பதைப் பார்த்தால் நமக்கு நடுக்கம் தான் வரும். பயமும் பதட்டமும் சேர்ந்து வரும்.

போக்கிரியினுடைய அழுத்தம் மற்றவர்களைச் செயலிழக்கச் செய்து உடல் உறுப்புகளைப் பின்னப்படுத்தும். அத்தகைய பின்னப்படுத்தும் உணர்வுகள் வரப்படும் பொழுது அதே உணர்வைத்தான் அவனும் வளர்த்துக் கொள்ள முடியும்

அடுத்தவர்களைச் சிதையச் செய்த உணர்வுகள் தான் அவனுக்குள் சுவாசமாகி அதுவே உடலுக்குள் வளரும். உடலை விட்டுப் பிரிந்தால்
1.“எட்டுக்கால் பூச்சி… ஆக்டோபஸி…!” போன்ற பல விதமான உயிரினங்களாக மாறி அதிலே அவன் அவஸ்தைப்படும் தன்மை வரும்.
2.உணவைச் சரியாக உட்கொள்ள முடியாது கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சி இனங்களாக உயிர் உருவாக்கி விடும்.

மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற நிலையில் மனிதனாக இருக்கின்றோம். இருந்தாலும் உயிர் அதுவாக மாற்றி விடுகின்றது.

இது போன்ற உணர்வுகளை மாற்றுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். ஆயுள் கால மெம்பராகச் சேரும் நீங்கள் அதன் தொடர்பை எடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் வலுவாக்க வேண்டும்.

சண்டை செய்தவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும். அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளை எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

ஆகவே இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து கொண்ட பின் அது நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்கின்றது.

இரத்தத்தில் அது சுழன்று வரப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சுவையான உணர்வாக மாறிவிடும்.

அடுத்தவர்களைப் பற்றி நன்றாக வேண்டும் என்று சொல்லும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் நல்ல முறையில் வளரும்.

அப்பொழுது எதனுடன் தொடர்பு கொள்கின்றது…?

1.உயிருடனும் துருவ நட்சத்திரத்துடனும் தொடர்பு கொள்கிறோம்.
2.இதைத்தான் விஷ்ணு தனுசு என்று சொல்வது
3.உயிருடன் ஒன்றி… உணர்வின் தன்மைகளை எல்லாம் ஒளியாக்குகின்றோம்.

சக்கர வியூகம்

 

எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் பதிவு செய்கின்றோமோ… அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில் “தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்தச் சப்த நாத ஒளி வட்டத்தில் எது வீரியமாக இருக்கின்றதோ…!” அதனின் தொடர் செயல் நிகழ்வில்… (அந்த) எண்ணம் உருவாக்கிடும் உருக்கோலமாகத் தான் நாம் ஒவ்வொரு நாளும் உருவாகின்றோம்.

பூமியின் சுவாச நிலை அதாவது பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமிலத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் நிறம்… மணம்… நீரமில மூலத் தொடர் இந்த முக்கூட்டின் ஆதிமூலத்தையே கண்டிடலாம்.

1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய ஈர்ப்பின் பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலகோதய ஈர்ப்பின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செயல் கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் பெற வேண்டும்.

வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற்றிட வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…!” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.

சங்கட உணர்வின் ஈர்ப்பால் அத்தகைய அமிலங்கள் நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் சரீரத்தில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.

ஒரே நிலை கொண்டு செயல்பட வேண்டும் என்றால்
1.எதிர் மோதலாக வரும் உணர்வுகளை
2.அது நமக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…!”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.

“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.

இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகோதய கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனாக நிச்சயம் ஆக்கம் பெறும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் எல்லோருமே அரும் பெரும் ஞானியாக வேண்டும். தெய்வீகக் குணங்களை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீங்கள் அந்த அருள் ஞானத்தை ஊட்டுங்கள். ஒரு தெளிவான நிலையை உருவாக்குங்கள். இந்த நாடு நலம் பெற வேண்டும் என்று உறுதிப்படுத்துங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள். குருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற ஆசையை ஊட்டுங்கள்.

1.அனைவரையும் அந்தச் சக்திகளைப் பெறச் செய்யுங்கள்.
2.அவர்கள் இச்சைப்படட்டும்.
3.அருள் உணர்வுகளை அவர்கள் நுகரட்டும்.
4.அது இச்சா சக்தி.., கிரியா சக்தி.., என்று அந்த ஞான வழியில் வளரட்டும்.

ஆனால் “என்னைத் திட்டினானே… அவனை விடுவதா…?” என்று இச்சைப்பட்டால் அந்த உணர்வான பிற்பாடு அந்த ஞானத்தின் வழி கொண்டு அவனுக்குத் தொல்லைகளைத்தான் கொடுக்கச் செய்யும்.

ஒருவர் நல்லதாக வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை இச்சைப்பட்டு எடுத்துக் கொண்டால் “நல்லதாக வேண்டும்…” என்று அந்த ஞானத்தின் வழி நம்முடைய உணர்வுகள்… “உணர்ச்சிகள் அங்கே இயக்கும்…”

நம்மையும் நல்லதாக்கும். அவர்களையும் நல்லதாக்கும்.

இன்று குடும்பத்தில் எடுத்துக் கொண்டோம் என்றால் எல்லா நியாயத்தையும் பேசுவார்கள். கடைசியில் பார்த்தோம் என்றால் அவரவர்கள் சுயநலத்திற்கு வந்துவிடுவார்கள்.

ஆகவே பொது நலத்தில் சுயநலம் வேண்டும்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் நீங்களும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று மரியாதை செலுத்துகின்றீர்க்ள்.

ஆனால் என்னை நீங்கள் எல்லோரும் மதிக்கின்றீர்கள் என்று சொல்லிக் கொண்டு “நான் பெரியவன்…” என்று அதிகாரம் செய்தால்… எப்படி இருக்கும்…?

ஏனென்றால் எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து நாம் வலுவாக இயக்குகின்றோம். நீங்கள் மதிப்பதால் தான் எல்லோரும் மதிக்கும் நிலை வருகின்றது.

என்னை எல்லோரும் மதிக்கின்றார்கள் என்று எண்ணித் தலை கீழாக நின்று கொண்டு “என்னிடம் தான் சக்தி இருக்கின்றது.., என்று சொன்னால்… சரியாகுமா…? ஆகாது.

இந்தச் சக்திகளை உங்களிடமிருந்து தான் நான் பெறுகின்றேன். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டியது அதுதான்.

ஆகவே உங்கள் மனதைப் பண்படுத்தி அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும்
தெய்வீக அன்பைப் பெறுவோம்
தெய்வீகச் சக்தியைப் பெறுவோம்
தெய்வீகச் சக்தியை வளர்ப்போம்
தெய்வீக உலகமாக மாற்றுவோம்.

துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் எப்படிப்பட்டது…?

 

பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையும் சூரியன் தன் பாதரசத்தால் மோதி வெப்பம் காந்தமாக உருவாக்கப்பட்டு விஷம் தனித்துப் பிரிந்து ஓடுகின்றது.

ஆனால் அந்த விஷத்தை வெப்பகாந்தம் மறுபடியும் எடுத்து அணுக்களாகச் சேர்த்து “எலக்ட்ரிக் எலக்ட்ரான்…” என்ற நிலையில் மற்ற பொருளை எடுத்துச் செல்கிறது.

அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடியது ஒரு அழுத்தமான உணர்வுகள் கொண்டது… அது மிகவும் வலுவானது. அது நேராகச் சூரியனுடைய ஈர்ப்புக்கு வரும்போது…
1.வரும் பாதையில் பார்த்தோம் என்றால் மற்ற நுண்ணிய அணுக்கள் எல்லாம் அதைக் கண்டு அஞ்சி ஓடி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும்
2.அப்போது அதனுடைய அழுத்த நிலைகள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைக் கண்டறிந்து
3.நியூட்ரான் என்று அதற்கு விஞ்ஞானிகள் பேரை வைக்கின்றார்கள்.

அது “நியூட்ரானாக…” எப்படி மாற்றமடைகின்றதோ அதே போல நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையுமே “நல்லதாக” மாற்ற முடியும்.

எதை வைத்து…?

27 நட்சத்திரங்களிலிருந்து வருவது வலுவான நிலைகள் கொண்டு சந்தர்ப்பத்தால் மோதுகின்றது. ஆனால் நம் குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கச் சொல்கின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.இதனுடைய உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
4.எத்தகைய தீமையையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உருவாகின்றது.

மாடு ஆடுகள் இவைகள் எல்லாம் இயற்கையில் வந்ததை உணவாக உட்கொண்டு அதனுடைய உணர்ச்சிக்குத் தக்க தான் இயங்குகின்றது. ஆனால் மனிதன் இயற்கையிலே விளைந்ததை வேக வைக்கும் போது அந்தச் சந்தர்ப்பம் அதனுடைய சக்தி இழக்கப்படுகிறது.

நெருப்பிலே பாத்திரத்தை வைத்து மற்ற பொருள்களைச் சேர்த்து எதன் எதன் அளவுகோல் கொண்டு அதற்குள் போடுகின்றோமோ அதை ருசியாக மாற்றுகின்றோம்.

இயந்திரத்தையோ மற்ற கருவிகளையோ உருவாக்க… உலோகத் தன்மைகளையும் இதே மாதிரித் தான் செயல்படுத்துகின்றோம்.

பல விதமான நோய்களை நீக்க அதற்குண்டான மருந்தினைக் கலவையாக உருவாக்கி அதை மருந்தாகக் கொடுத்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்… நோய்களையும் தணிக்கின்றோம்.

அதே போல் தான்
1.தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அடுத்த கணமே அதிலே இணைத்து விட்டால் அதனுடைய செயலை இழக்கச் செய்துவிடும்.
3.அப்போது தீமைகளை இழுக்கும் சக்தி குறைகின்றது.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது. அந்த உணர்வினை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.27 நட்சத்திரத்தின் உணர்வுகள் எப்படி வலுவாக வருகின்றதோ (நியூட்ரான் போல்)
2.அது போன்று அழுத்த நிலைகளில் துருவ நட்சத்திரம் தீமையினுடைய செயலை இழக்கச் செய்கின்றது.

சில பேருக்குத் தன்னை அறியாமலே பதட்டங்கள் வரும். ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்ட பின் அந்தப் பதட்டம் வராதபடி மன வலிமையைக் கொடுக்கும். பதட்டமான உணர்ச்சிகள் நம்மை இயக்காதபடி தடுக்கலாம்.

மன வலிமை கூடிய பின் சிந்திக்கும் ஆற்றல் கூடுகின்றது. அந்த சந்தர்ப்பத்தில் எப்படிச் செய்யலாம்…? என்று அதற்குத் தக்க உபாயங்களும் வருகின்றது.

கஜலக்ஷ்மியாக அமர்ந்திட்டாள் பூமித்தாய்

 

1.சுவாசத்தின் வீரியத்தைக் காட்டிட நாசியாக யானைகளையும்
2.சுவாசத்தில் நறுமணத்தைக் காட்டிடத் துதிக்கையில் அமுதக் கலசத்துடன் மலர்களையும்
3.மன எண்ண வீரியத்தின் தூய்மையைக் காட்டிட ஏழு எண்ணங்கள் கலந்த (தூய்மை எண்ணமாக) வெண்மையான யானையின் நிறத்தையும்
4.சுவாச நிலை முக்தி பெறும் தொடருக்கு ஆதி மூல நீர் சக்தியைக் காட்டியும்
5.நீரடி மூல வித்து நீர் மண் தொடர்பில் சித்தன் நிலை பெறும் சித்துக்கள் என்பதைக் காட்டிட நீரின் சுவாசத்தை ஈர்த்துச் சமைத்திடும் ஆகார நியதியைக் கொண்டு முளைத்து நீர் மேல் கிளைத்தெழும் தாமரை இதழ்களைக் காட்டி
6.பரிபூரணத்தைப் பெற்றிடும் வழியாக வண்ண மலரில் அமர்ந்திட்டாள் “கஜலக்ஷ்மி…!” என்று அன்று உணர்த்தினார்கள் ரிஷிகள்.

மண்டலமாக உருக்கோலம் பூண்ட நம் பூமித் தாய் பெற்று வளர்த்திட்ட… இன்னும் வளர்ச்சியின் வலுக்கொள்ளும் ஈர்ப்பின் செயலில்… தன்னை மேன் மேலும் வளர்த்துக் கொள்கின்றது.

அதைப் போல் பூமித் தாயின் செல்வங்களான ஒவ்வொரு உயிரான்மாவும் ஆதிமூலச் சக்தியின் தொடர் கொண்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திடும் தொடருக்கு “கஜலக்ஷ்மியாக அமர்ந்திட்டாள் பூமித்தாய்…! என்பதிலும் அதே சூட்சமமே காட்டப்பட்டுள்ளது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

திரும்பச் திரும்பச் சொல்கிறார் என்று எண்ணாதீர்கள், அர்த்தமாகவில்லை என்று எண்ணாதீர்கள்.

1.சாமி சொன்ன நிலைகளை நாங்கள் பெற வேண்டும்
2.குரு அருளை நாங்கள் பெற வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும்
4.இருளை நீக்கும் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்.

இந்த உணர்வுகள் காற்றிலிருந்து தன் இனச் சத்தை இழுத்துக் கொள்ளும். இதனைத் தொடர்ந்து நீங்கள் ஆகாரம் உட்கொள்ளச் செல்லும்போது உற்சாகமாக இருக்கும். சாப்பாடும் சுவையுள்ளதாக இருக்கும்.

உங்கள் உடலிலுள்ள அணுக்களும் உற்சாகம் அடைகின்றன. ஒவ்வொரு அணுவும் உற்சாகம் அடையும்போது உங்கள் உடலில் “நல்ல இரத்தம் ஊறும்…” உயிரைப் போன்றே உணர்வின் அணுக்களும் வீரியம் அடைகின்றன.

நாம் நுகரும் உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலுக்குள் சென்றபின் அதனின் செயலாக்கங்கள் நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரில் மோதும்போது உணர்ச்சிகளாக மாறுகின்றது. நுகர்ந்த உணர்ச்சிக்கொப்ப நம்மிடத்தில் உமிழ்நீர் சுரக்கின்றது. நம்முள் சுரந்த உமிழ்நீர் நமது சிறுகுடலில் கலக்கின்றது.

1.நீங்கள் சங்கடமாக, சலிப்பாக இருந்து சாப்பிட்டுப் பாருங்கள்… சரியாக ஜீரணிக்காது.
2.வேதனையோடு இருந்து பாருங்கள் வயிறு பொருமும்.. சரியாக ஜீரணிக்காது.
3.ரொம்ப வேதனையோடு வெறுப்போடு இருந்து பாருங்கள்… சாப்பாட்டின் மீது ஞாபகம் இருக்காது.
4.உடலிலுள்ள உணர்வின் அணுக்கள் சோர்வடைந்து விட்டால் சாப்பாட்டின் மீது ஞாபகம் இருக்காது.

ஒருவர் வீட்டிலுள்ளவர்களுடன் கோபித்துக் கொண்டு முறைத்துக் கொண்டு படுத்துவிட்டார்கள் என்றால் பசியே தெரியாது. “அவர் சாப்பிடவே இல்லையே… பட்டினியாக இருக்கிறாரே” என்று மற்றவர்கள்தான் நினைக்க வேண்டும்.

ஏனென்றால் வேதனை வெறுப்பின் உணர்வின் தன்மை கொண்ட உமிழ்நீர் உள்ளே போனவுடன்
1.அது உடலிலுள்ள அணுக்களை மயக்கமடையச் செய்துவிடுகிறது… பசி எடுப்பதற்கு வழியில்லை.
2.இதை மீறிச் சாப்பிட்டார்கள் என்றால் ஜீரணமாகாது. நோய்தான் வரும்

எண்ணிய எண்ணத்திற்கு அதாவது வேதனையான உணர்வுகளால் உடலில் நோய்தான் வருகிறது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று கூறப்பட்டது. நாம் எண்ணக்கூடிய எண்ணங்களின் உணர்வின் சத்தை நமது கண் இந்தக் காற்றிலிருந்து நுகர்ந்தெடுத்து நமது உடலில் இணைக்கின்றது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரில் மோதியவுடன் நம்முள் உணர்ச்சிகளாகின்றது. உமிழ்நீராக மாறுகின்றது.

நாம் நல்ல சந்தோஷமான எண்ணங்களை எண்ணியிருந்து உமிழ்நீர் சுரந்தால் நமது உடல் உற்சாகமடைந்து நன்றாக ஜீரணமாகின்றது. “இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா..,” என்ற ஆசை நம்முள் வரும்.

இதுபோன்ற நிலைகளை நாம் விஞ்ஞான அறிவாலும் அறிந்து கொள்கிறோம். ஆனால், நம் குருநாதர் அருளிய மெய்யுணர்வுகளை நாம் தெரிந்து கொண்டால்
1.கோபிப்பது நாமல்ல…
2.சங்கடப்படுவது நாமல்ல…
3.சலிப்படைவது நாமல்ல…
4.வெறுப்படைவது நாமல்ல…
5.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்கிவிடுகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

ஆகவே… நம்மிடத்திலுள்ள தீமைகளை நீக்கி நம்மிடத்தில் நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும்.

ஆகவே, நம்மையறியாது வரும் தீமைகளை நீக்க நமக்கு ஒரு ஆயுதம் வேண்டுமல்லவா. அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

தீமைகளையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அதனால்தான் இந்த உணர்வுகளை உங்களிடம் அடிக்கடி சொல்லி செல்ஃபோன்களில் பதிவு செய்வது போன்று உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
1.இதன் நிலை அதிகமாக அதிகமாக
2.பேரருள் உணர்வுகள் உங்களுக்குள் அதிகரித்து வரும்.

எனவே… நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அப்பொழுது நம் கண்களில் உள்ள கருவிழிகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைக் கவர்ந்து நம்முள் பதிவாக்கச் செய்கின்றது.

நமக்குள் அறியாது சேர்ந்த தீமைகளைத் துடைக்கவும் செய்கிறது. நம்முள் தெளிந்த ஞானத்தை உருவாக்கி நாம் மகிழ்ந்து வாழும் நிலையையும் உருவாக்கச் செய்கிறது.

நமக்கு லாபகரமானது எது…?

 

வீட்டில் கஷ்டமோ சங்கடமோ மற்றதோ வந்தாலும்… “அட போ…!” என்று இந்த உணர்வைப் பெருக்கிப் பாருங்கள்
1.இந்த உணர்வுகள் வலுக்க… வலுக்க… வலுக்க…
2.செய்வினையோ தோஷங்களோ மற்ற எதுவாக இருந்தாலும் நமக்கு அது ஒரு லாபகரமானதாக மாறிவிடும்.

பொருளையோ இந்த உடலையோ சொத்தையோ எண்ணிவிட்டால் பற்று இங்கே வந்து விடுகின்றது… புவியின் ஈர்ப்புக்கே வருகின்றது.

இந்த மாதிரி ஆகிவிட்டதே…! நான் எப்படி வாழப் போகின்றேன்…? என்று எண்ண வேண்டியது இல்லை. இந்த உடல் எப்பொழுதுமே மடியக்கூடியது தான்…! அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும்… இந்த உடலில் இருந்து தான் உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும். வாழ்க்கையில்
1.துன்பத்தைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எப்பொழுது வருகின்றதோ அப்போது தான்
2.”அதிலிருந்து விடுபட வேண்டும்…” என்று உணர்வு வருகின்றது.

வீட்டில் இருக்கக்கூடிய எலிக்கு… பூனையைப் பார்க்கும் சந்தர்ப்பம் வருகிறது. சந்தித்த பின் பூனை எலியைப் பிடித்து விட்டால் பூனையின் நினைவு தான் எலிக்கு வருகின்றது.

எலியோ பூனையின் உடலுக்கு அது இரையாகின்றது. இரையாகும் போது நரக வேதனைப்படுகிறது. ஆனால் எலியினுடைய அந்தச் சந்தர்ப்பம் தீமையில் இருந்து விடுபட வேண்டும்… வேதனையில் இருந்து விடுபட வேண்டும்… என்று எண்ணுகிறது.

பூனை எலியைப் பிடித்த பின் எலியின் உயிரான்மா அதனுடைய வலுவைப் பெற்று அதனின் சந்தர்ப்பம் எலி பூனையாகப் பிறக்கக்கூடிய நிலை வருகின்றது

அதே போல இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டம்… தொல்லை… என்று வரப்படும் பொழுது
2.அதை எல்லாம் “அருளைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் என்று நினைத்து விட்டால்”
3.வேதனை என்ற நிலையே வராது.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா.

எப்படித்தான் இருக்கட்டும்…! இந்த உடலோ சொத்தோ சுகமோ நம் கூட வருகின்றதா…? இல்லை.

இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கிய அருள் உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது அதன் வழி உயிர் வெளியேறிய பின் இன்றைய செயல் நாளைய சரீரமாக மாறுகிறது.

“எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்…” என்று அவருடைய நினைவை கூட்டிக் கொண்டே வந்தால் இந்த உணர்வுகள் வலுப்பெற்று இந்த உடலுக்குப் பின் யாரை நினைவுக்குக் கொண்டு வந்தோமோ… உயிரான்மா அங்கே தான் செல்லும்.

அவர்கள் உடலில் சேர்ந்த பின் மீண்டும் அங்கேயும் இதே தொல்லைகளைத்தான் கொடுக்கும்… பழி தீர்க்கும் நிலையாக வரும். விஷத்தின் தன்மை உருவான பிற்பாடு பிறவி இல்லா நிலை அடைவதற்கு மாறாக சாகாக் கலையாக மாறி… இந்த வேதனை உணர்வு எதுவோ அதன் உணர்வின் தன்மைக்கொப்ப இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை பெற்றால்
1.எத்தகைய விஷத் தன்மையும் அதனைக் கொல்வதில்லை
2.இதுதான் வேகாநிலை என்று சொல்வது.

அந்த நிலையை நாம் அடைதல் வேண்டும்.

வலம்புரிச் சங்கு

 

உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பலவித உயிர் சக்திகள் உருவாகும் செயல் நிலையில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.

1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக…!” கடலிலே உருப்பெறுகின்றது.

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள். அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.

அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும்.

நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையா சிறப்பு ஒன்று தான்.

1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு – நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.

நக்கீரனைக் கேட்டால் சொல்வார்…! சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன…?

வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி… ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி… நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட… சங்கு நீர் அமிலக் குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்…! சூட்சமப் பொருளை மனதில் கொள்க…!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணு பூமிக்குள் வந்தபின் உடல்களைப் பெறுவதற்குண்டான காரணங்களையும் பன்றியின் சரீரத்திற்குப் பின் அடுத்து மனிட உடல் பெறும் நிலைகளையும் எமக்கு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

மனிதனாகப் பிறந்தாய். இந்த மனித வாழ்க்கையில் உன்னிடத்திலுள்ள விஷ உணர்வுகளை நீக்கவிலை என்றால் மீண்டும் பிறவிச் சுழலுக்கே செல்வாய். இதே நிலைதான் ஒவ்வொரு மனிதருக்கும்.

ஆகவே மனிதர்களிடத்திலுள்ள தீமைகளை விஷ உணர்வுகளை நீக்குவதற்கு என்ன வழி…? என்று எம்மிடம் கேட்பார் குருநாதர்.

இது போலக் கேட்டுவிட்டு பதில் சொல்லாமல் இருந்தாலோ.. தெரியாது என்று சொன்னாலோ… உடனே குருநாதர் வாயினால் சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளால் எம்மைத் திட்டுவார்.

“தொம்… தொம்…” என்று பலமாக எம்மை அடிப்பார். இதையெல்லாம் யாம் சகித்துக் கொண்டுதான் அவரிடம் இருக்க வேண்டும்.

எம்மை அவரிடமிருந்து விரட்டுவதற்கு என்ன வேலையோ அதைக் குருநாதர் செய்வார். “சரி… அவரிடமிருந்து ஓடிவிடலாம்…” என்று யாம் நினைப்போம்.

உடனே, குருநாதர் “நான் சொல்வதைச் செய்கிறேன்” என்று சொன்னாய் அல்லவா. ஆகவே நீ என்னிடமிருந்து தப்ப முடியாது என்பார்.

இது போன்று குருநாதர் போட்ட கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டு யாம் இந்தப் பக்கமும் போகவில்லை, அந்தப் பக்கமும் போகமுடியவில்லை.

இது எதற்குச் சிரமம்…? அவரிடமிருந்து விலகிக்கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால், குரு அருளினுடைய உணர்வுகளிலிருந்து யாம் எங்கேயும் தப்ப முடியாது.
1.அதே சமயத்தில் தப்பு செய்யவும் முடியாது.
2.தப்பு செய்தால் அடுத்த நிமிடமே தண்டனை கிடைக்கும்.
3.அந்த அளவிற்குத்தான் எம்மை குருநாதர் கொண்டு வந்தார்.

இயற்கையின் உண்மையில் நீ தவறு செய்யவில்லை. சந்தர்ப்பம் உன்னைத் தவறு செய்ய வைக்கிறது என்பது போன்ற உண்மைகளை குருநாதர் எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்து உணர்த்தினார்.

அகஸ்தியர் தமது வாழ்க்கையில் தீமைகளை நீக்கிப் பேரொளி என்ற நிலையைப் பெற்று இன்று விண்ணிலே துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

அகஸ்தியர் பெற்ற உணர்வை நீ பெற வேண்டும். அதில் நீ ஐக்கியமாவது தான் உன் வேலை என்று கூறினார் குருநாதர்.

ஆனால் குருநாதரிடம் பழகியவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா…?

குருநாதர் எனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தால் கோவில் கட்டுவேன், அதைக் கட்டுவேன் என்று கூறுவார்கள். இதைப் போன்றவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள்.

எம்மிடமும் வந்து இதைச் செய்தால் நான் அதைக் கட்டித் தருவேன் என்று கூறுகின்றார்கள். யாம் யாரிடமும் பணம் கேட்டு எதையும் செய்யவில்லை

குருநாதருடைய அருள் உணர்வுகள்தான் எம்மை நம்மை இயக்கிக் கொண்டு வருகின்றதே தவிர வேறு எதுவும் இல்லை. எல்லாம் அவரின் செயலாக்கங்கள் தான்.

ஆகவே குருநாதர் காட்டிய வழியில் அருள் சக்தியைப் பெறுவோம் என்று நீங்கள் எண்ணினால் போதும்.

நம்மை நாம் அறிந்து கொள்வோம்

 

உதாரணமாக சண்டையிடுவோர்களைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நமக்கும் அதே உணர்வுகள் வருகின்றது,
1.இது தெரிந்து கொள்ள உதவுகின்றது.
2.தெரிந்தாலும் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு உடலுக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது

உணர்ச்சிகளால் அறிய முடிகின்றது. அந்த உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படுகின்றோம். நாம் கண்ணிலே பார்க்கிறோம் என்றால் கருவிழி ருக்மணி நம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றது. “மூளையில் அல்ல…!”

உடலில் எலும்புக்குள் உள்ள ஊனில் வித்தாகப் பதிவாக்குகின்றது ஆதைத் தான் ஊழ்வினை என்று சொல்வோம்.
1.இங்கே பதிவு செய்தால்தான் மீண்டும் மீண்டும் அது நினைவுக்கு வரும்.
2.பதிவாகவில்லை என்றால் நினைவு வராது.

அவர்கள் இருவரும் சண்டை போட்ட உணர்வுகள் (மூச்சலைகள்) வெளி வருவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து வந்தால் அது உணர்வாக மாறுகின்றது.

உதாரணமாக செடி கவர்ந்து கொண்டால் அதை வித்து என்று சொல்கின்றோம். அது போல் தான் கோபம் இங்கே “உணர்வாக” (வினை) மாறுகின்றது

அந்த உணர்வை நாம் சுவாசித்த உடனே உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாற்றி அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது. இந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் கலந்த பின் அவர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் போன்று நம் உடலிலும் பரவுகிறது.

நம் உயிரிலே மோதும் பொழுது இயக்கத்தின் சக்தியாக மாறுகிறது. இரத்தத்தில் கலந்தால் இந்திரலோகமாக மாறுகிறது. இந்திரலோகம் என்றால் கருத்தன்மைகள் உருவாகும் இடம்.

நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது கருவாகி உருவாகிவிட்டால் பிரம்மலோகம்… அணுவாகின்றது. அணுக்களாக உருவாகிவிட்டால் அதற்கு உணவு தேவை.

அப்போது உணவுக்காகக் கிளர்ச்சியாகி உந்தப்படும் பொழுது உயிரில் பட்டு உணர்ச்சிகளாக மாறி இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.உயிருக்கு எட்டும் போது சண்டையிட்டவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பரமாத்மாவிலிருந்து கண்ணின் காந்தப் புலன் இழுக்கின்றது.
2.காந்தப்புலன் இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
3.அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறி இது உணவாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை வருகிறது.

நம் உடலில் எத்தனையோ கோடி உணர்வுகள் இருப்பினும் இதன் உணர்வு வலுப்பெறும் போது அந்தக் கோப உணர்வுகளைக் கவர்கிறது.

அதே உணர்ச்சியின் தன்மை நமக்குள் ஏற்படும் போது என்ன நடக்கிறது…?

யாரையாவது பார்த்தோம் என்றால் திடீரென்று நமக்குக் கோபம் வரும். கோபம் ஏன் வருகிறது…? ஒருவரைப் பார்த்தால் ஏன் சப்தம் போடுகிறோம் என்று தெரியாது…!

சண்டை போடுவதே சிலருக்குத் தெரியாமல் இந்தக் கோபத்தின் தன்மை வரும். பளீர்… என்று வரும். காரணம் அந்த அணுக்களுக்குச் சாப்பாடு வேண்டும் என்பதற்காக அப்படி இயக்குகின்றது.

அந்த நேரத்தில் நம்மால் நல்ல குணங்களை என்ன முடிகின்றதா…? இல்லை.

சில நேரங்களில் நாம் நல்ல குணங்களை எண்ணினால் அது முடிவதில்லை. வெறுப்பு வேதனை போன்ற அணுக்கள் ஜாஸ்தியாக நம் ஆன்மாவிலே முன்னாடி இருந்தால் அத்தகைய நிலை தான் வரும்.

ரேடியோ டி.வி. ஸ்டேசன் ஒலி/ஒளிபரப்பு செய்த உடனே எந்தெந்த உணர்வுகள் எந்த அலைவரிசைகளில் வருகிறதோ திருப்பி வைத்தவுடனே டி.வி.யிலே பார்க்கின்றோம்… ஒளிகளைக் காண முடிகின்றது. காற்றிலிருந்து பிரித்து எடுக்கின்றது.

இதே போன்றுதான் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் எப்போது பதிவானதோ இந்த உணர்ச்சிகள் தன்னிச்சையாக இயக்கப்படும் பொழுது நமக்கு அந்த எண்ணங்கள் வருகின்றது.

1.நாம் அமைதியாக இருந்தாலும்… சண்டை போட்ட நினைவெல்லாம் வரும்… பாக்கி நினைவு வராது
2.வெறுப்படைந்தது தவறு செய்தது தவறான நிலையில் எல்லா நினைவையும் இழுத்துக் கொண்டு வரும்.

ஏனென்றால் அது வலு பெற்றது. நல்ல அணுக்களுக்குச் சாப்பாட்டை விடுவதில்லை. நல்ல அணுக்கள் சோர்வடைந்து விடுகின்றது. அப்படிச் சோர்வடைந்த பின் அடுத்து ஒரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும் கூட
1.“என்ன வாழ்க்கை போ…!
2.என்ன செய்து என்ன ஆகப் போகின்றது…?” என்ற சொல் வரும்.

வலு கொண்டு ஒரு நல்ல எண்ணத்தையோ ஒரு காரியத்தையோ பற்றிப் பேசவோ செயல்படுத்தவோ முடியாத நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

காரணம் “அதனுடைய அழுத்தம்: அதிகமாக இருப்பதால் ஆன்மாவில் வந்து இயக்கி விடுகின்றது.

ஆகவே நம் கண் கருவிழி ருக்மணி இது போன்று பதிவாக்கி அத்தகைய உணர்ச்சிகள் வந்தால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இந்த உணர்வுகளை இழுத்து
1.அந்த வேதனைப்பட்ட கோபப்பட்ட உணர்வோடு சேர்த்து இணைத்து… ஒட்டச் செய்ய வேண்டும்.
2.எப்படிப் பதிவானதோ அந்தப் பதிவான இடத்திலேயே கலக்க செய்ய வேண்டும்.

அக்ரிகல்சுரலில் (AGRICULTURE) வித்துக்களை மாற்றுவது போன்று மாற்ற வேண்டும். இப்படி மாற்றினால் சண்டை போடும் உணர்ச்சியை மாற்றிவிட்டுச் சிந்திக்கும் தன்மையாக வரும்.

செய்து பாருங்கள்.

வடக்குத் திசையிலிருந்து நாம் எடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி

 

மகரிஷிகளின் ஒளி காந்த சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்ம சக்தியை வலுக் கொள்ள அந்த வீரிய எண்ணச் செயல் மூலம் வளர்வதற்கே வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை என்று ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிராத்ம சக்தியுடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம்
1.அதாவது காமதேனு என்று சூட்சமமாக மகரிஷிகள் உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொண்டிட வேண்டும் என்றால் பரவெளியில் உலவிடும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலை (ஆகாரமாகப்) பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய ரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும் என்றும் காட்டினார்கள்.

இதையே தான் “உலக வழக்கப்படி” நாம் நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்ற சித்தின் செயல்பாட்டினுள் சித்தனே மறைந்துள்ளான்.

“விசுவாத்திர மாமகரிஷிக்கு”
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.

தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.

1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம் என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் என சித்தர்களால் காட்டப்பட்டது.

சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?

1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்திடும் தொடர்பில்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
4.அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றிருக்கக்கூடிய காற்று மண்டலத்தை..,
1.யார்.., எந்த நிலையில் நச்சுத் தன்மையாக ஆக்கியிருந்தாலும்..,
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.நம் உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றோம்.
4.அந்த நச்சுத் தன்மை நம்மைப் பாதிக்காது தப்ப முடியும்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த உடலில் இத்தகைய நிலையை உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை கல்கி ஒளியின் உடலாக மாற்றும்.

இதில் சிரமம் ஒன்றும் இல்லை. உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை எண்ணினால் காற்றிலிருந்து எளிதில் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு டி.வி.க்களில் இன்னென்ன அலைவரிசை என்கிற பொழுது ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வைக் கவர்கின்றது.

இன்ன அலைவரிசை என்கிற பொழுது இந்த இடம்… இந்த நாடு.., என்று அறிந்து அதை எடுத்துக் கொள்கிறோம்.

இதைப் போன்று தான் மக்கள் பேசும் தவறான உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு அவர்களை எண்ணினால் அந்த அலைவரிசைப்படி நமக்குள் கோபம் வரும்… சங்கடம் வரும்… வேதனை வரும்.

இத்தனையும் வருகின்றது.

ஆனால் “இத்தனை தீமைகளையும் நீக்கிய..,” உணர்வின் அறிவு கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குருவின் துணை கொண்டு அதைக் கவர்ந்தால் “அந்த அலைவரிசை” நமக்குள் வந்து
1.தீமைகளை நீக்கும்.
2.சிந்தித்துச் செயல்படும் தன்மையைக் கொண்டு வரும்
3.நம் வாழ்க்கையை உயர்த்தும்.

இந்த உயர்ந்த உணர்வு வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.

அருள் ஞானிகளாக நீங்கள் மாறி உங்கள் பார்வையில் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும். உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும். உங்கள் பார்வை எல்லோரையும் ஞானியாக்க வேண்டும்.

இத்தகையை… “கூட்டங்கள்” அமைந்தால் தான் பேதங்களை மாற்ற முடியும். குருவின் அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்கள்.

இதைப் படிப்போர்… உபதேசத்தைக் கேட்போர்… அனைவரும் இதன்படி செய்தால்
1.பல ஆயிரம் பேராக மாற்றலாம்.
2.பல ஆயிரம் பேர் பல இலட்சக்கணக்கான பேரை மாற்றலாம்.
3.இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.

ஒரு வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் கசப்பான உணர்வைக் கண்டதும் மற்ற உணர்வலைகள் “எப்படி ஓடுகின்றதோ…” இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்க்கப்படும் பொழுது பூமியில் படர்ந்துள்ள
1.“சர்வ தீமையான உணர்வலைகளையும்… ஓடச் செய்யலாம்…”
2.அல்லது அந்த உணர்வுகள் இயங்காது தடைப்படுத்தலாம்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் எல்லோருடனும் பழகுகின்றோம். பார்க்க நேர்கின்றது… கேட்க நேர்கின்றது.

இப்படி நமக்குள் பலருடைய உணர்வுகளும் பதிவாகி இருப்பதால் அதை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது. அதனால் நம் உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணமாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஏங்கி எடுத்து தீமைகள் புகாது தடுத்தால் காலையில் ஆறு மணிக்கெல்லாம் நாம் இழுக்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளை சூரியன் மேலே கவர்ந்து சென்று விடுகின்றது.

நம்முடைய ஆன்மா சுத்தமாகின்றது.

நமக்கு எப்பொழுது தொல்லை வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி தீமைகள் புகாது தடுத்துப் பழகுங்கள்.

குருநாதர் காட்டிய வழியில் நம் ஆத்மாவைச் சுத்தம் செய்ய வேண்டிய முறை இதுதான். ஆத்ம சுத்தி என்பது இதுதான்.

இன்றைய செயல்… “நாளைய சரீரம்…!”

 

உதாரணமாக ஒரு மனிதன் அவன் உடலுடன் இருக்கும் போது “கோபித்தான்…” என்ற நிலையில் அந்தக் கோப உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும் சரி… அல்லது அவன் இறந்த பின்னும் அவன் இப்படியெல்லாம் என்னைக் கோபித்தான் என்ற உணர்வை எடுத்துக் கொண்டாலும் சரி…
1.நமக்குள் பதிவான பின் எனக்குத் தீங்கு செய்தான் என்று
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்தத் தீமையே நமக்குள் உருவாகும்.

எப்படி…?

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோள் பல நிலைகளைக் கவர்ந்து பல பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. ஒரு இணைப்புப் பாலமாகி ஒன்றாக இணைத்துப் புதுப் புது அணுக்களை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இதனின்று வெளிப்படுவதைச் சூரியன் கவர்ந்து தனக்குள் உணவாக எடுக்கின்றது.

அதே போல் தான் நாம் உற்றுப் பார்த்தோ அல்லது செவி வழி கேட்டோ நுகரும் உணர்வுகள் சுவாசத்தின் வழி கூடி உயிரில் பட்டு உடலுக்குள் சென்று இரத்தத்தில் கலக்கின்றது,

இரத்தத்திலிருந்து அது ஊடுருவி எல்லாப் பாகங்களில் செல்வதற்கு முன்
1.எதெனதன் உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டதோ அத்தகைய அணுக்களாகி அதனின் மலமாகி
2.உணர்ச்சிக்கொப்ப நம் உடலில் உறுப்புகளில் ரூபங்கள் மாறுகின்றது… அந்த உறுப்புகளில் சத்துகள் மாறுகின்றது.

மாடு ஆடு நாய் நரி புலி குருவி மைனா காக்காய் போன்ற உயிரினங்களோ அல்லது மற்ற பட்சிகளானாலும் அவைகள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப நுரையீரல் மண்ணீரல் கல்லீரல் போன்ற (அதனதன் சத்துக்கொப்ப) உறுப்புகளாகி அதன் உணர்வின் தன்மை இரத்தங்களாகி உணர்வின் தன்மை உயிரிலே மோதி உணர்ச்சிக்கொப்ப அந்த உணர்வின் எண்ணங்களாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் பிரபஞ்சத்தில் உள்ள நவக்கோள்களின் வளர்ச்சியும்.

நம் உயிர் இந்த உடலுக்குச் சூரியனாக ஆனாலும்
1.நுகர்ந்த உணர்ச்சிகளை எல்லாம் கலக்கும்… இணைக்கும்… எல்லாவற்றிற்கும் பாலமாக அமைகின்றது
2.நமது உயிரே குருவாக இருக்கின்றது

இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் இயக்கினாலும் இந்தp பிரபஞ்சத்திற்குள் மற்றதை இணைக்கும் பாலமாக அது (சூரியன்) குருவாக அமைகின்றது.

இப்படிக் கலந்து வரும் உணர்வின் சத்தைச் சூரியன் அருகில் இருக்கக்கூடிய புதன் கோள் பல விதமான உணர்வின் தன்மை கலந்து கலந்து… கலவைகளை மாற்றி உலோகத்தன்மைகளாக அது வெளிப்படுத்துகின்றது

சூரியனிலிருந்து வரும் வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலைகள் இதிலிருந்து வரக்கூடியதைக் கவர்ந்து பிரபஞ்சத்தில் மீண்டும் வீசினாலும் மற்றதுடன் கலந்து சூரியன் தன் உணவாக எடுத்துக் கொள்கின்றது

இதைப் போன்று தான்
1.நம் நுகர்ந்த உணர்ச்சிகளின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து மற்றதை வளர்த்தாலும்
2.நரம்பு மண்டலங்களில் ஆசிட் தன்மையாகவும் வாயுத் தன்மையாகவும் உருவாக்கி
3.சுருங்க… இழுக்க… அந்த உணர்வின் தன்மைக்கொப்ப இயக்கச் சக்தியும்
4.இப்படி உருமாற்றி வரும்… இவைகளை எல்லாம் கலந்து வரும் உணர்வின் சத்தை நரம்பு மண்டலங்களில் வடித்து
5.நமது உயிருக்கும் சிறுமூளை பாகத்திற்கும் இந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது அது இயக்கமாகி… இணைத்து…
6.இந்த உடலில் உருவாக்கும் கருத்தன்மையாகி… அந்தக் கருத்தன்மையில் அதிலே சேர்க்கப்படும் தன்மைகள் எதுவோ
7.அதிலே நாம் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் நாம் பிறிதொரு உடலின் தன்மை பெற்றாலும்
8.இதன் ஈர்ப்பு மண்டலத்திற்கு அழைத்துச் சென்று (ஒரு எறும்பை நசுக்கினாலும் இந்திரீக மண்டலம் என்று ஒன்று உண்டு)
9.அதன் உணர்வுக்குள் இழுத்துச் சென்று அதன் உணர்வின் கலவைக்குள் கொண்டு
10.இந்த உடலில் பெற்ற உணர்வைக் கலவையாக்கி அதற்குத்தக்க உடலை மாற்றும் தன்மை பெறுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

 

பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.

1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.முன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.

(வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பலவிதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்)

அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது. அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.

அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானு கோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.

அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது. (இந்தத் தொடர் காலம் காலமாக நடக்கின்றது)

நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.

அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூலம் சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.

நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.

சரீரம் என்ற குகைக்குள்… உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம் சக்தியாகச் செயல் கொள்வது என்பது சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.

அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.

பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…?

சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.

ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும் பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும் பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”

தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.

அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.

இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் (நிறம் குணம் அமிலம்) நறுமணமாக அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் தீமையான செயலைச் செய்கின்றார். தீமை செய்யும் தீயவர்கள் இருப்பினும் “அவர்கள் நல்லவராக மாற வேண்டும்” என்ற இந்த உணர்வை நாம் நுகர்ந்தால்
1.நமக்குள் அந்த நல்ல உணர்வைக் கொண்டு வருகின்றது.
2.நல்ல உடலாக மாற்றுகின்றது.
3.நல்ல சொல்லாகவும் செயலாகவும் நம்மைச் செயல்பட வைக்கின்றது.

ஒருவரை நல்லவன் என்று நாம் எண்ணினாலும் அவன் வெளிப்படுத்தும் கோபமான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது என்ன ஆகும்…?

பாலிலே பாதாமைப் போட்டாலும் அந்தப் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் பாதாமிற்குச் சக்தியில்லை.

அதைப் போன்று தான் நாம் நல்லதை எண்ணிச் செயல்படும் பொழுது கெட்டவன் என்று இருந்தாலும் “அவன் சொல்லையோ செயலையோ கேட்டுத்தான்… பார்த்துத்தான்…” நாம் உணர்கின்றோம்.

அப்படி உணரப்படும் பொழுது நம் உடலில் தீய உணர்வின் வலிமை சேர்ந்து விடுகின்றது. ஆகவே
1தீயவர்கள் என்பவர்கள் எவரும் இல்லை.
2சந்தர்ப்பம் அந்தத் தீய செயலைச் செய்ய வைக்கின்றது.
3அந்த உணர்வுகள் உடலிலே தீயதாக விளைகின்றது.
4.தீய அணுக்கள் விளைந்து தீயதாக அந்த உடலை இயக்குகின்றது.
5.தீயவனாக மாற்றி உடலுக்குப் பின் “இன்று மனிதன்.. அடுத்து… மனிதனல்லாத நிலையை…” உருவாக்கிவிடுகின்றது.

ஆனால் நமக்கு ஞானிகள் காட்டிய நிலைகளில் “தன்னை அறிந்து” செயல்படும் தத்துவம் தான் “விநாயகர் தத்துவம்”.

நாம் புல்லைத் தின்றோம் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம். மனிதனானபின் சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த உடலைப் பெற்றோம்.

ஆகவே இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று கேள்விக் குறியைப் போட்டு திரும்பும் இடமெல்லாம் விநாகரை வைத்துக் காட்டியுள்ளார்கள். ஆக உயிரால் வளர்க்கப்பட்டது தான்.

உயிர் – “ஈசன்”

நுகர்ந்து கொண்ட உணர்வு – “வினை”.

அந்த வினைக்கொப்ப உடலின் நிலை – “விநாயகா”.

உணர்வின் தன்மை உறையும்போது அதனின் மலம் உடலாகும் பொழுது – “சிவம்”.

தீமைகளை நீக்கிய உணர்வு ஒவ்வொன்றும் நம் உடலில் அறிந்து கொள்ளும் ஆற்றல்கள் அதிகரிக்கின்றது. இது தான் – “கார்த்திகேயா”.

சிவனின் பிள்ளை மூத்தவன் விநாயகன்… இளையவன் கார்த்திகேயன். எல்லாவற்றையும் அறிந்திடும் உடல் பெற்றது என்ற நிலையை நமது ஆறாவது அறிவைத் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

விநாயகர் கோவிலுக்குச் சென்றால்… நாம் என்ன நினைக்கின்றோம்…?

1.அங்கே குறைகளைச் சொல்வதும்
2.அல்லது என்னைச் சோதிக்கின்றான் என்பதும்
3.அர்ச்சனை அபிஷேகத்தைச் செய்து குறைகளைச் சொல்லி அதைத்தான் விரும்புகின்றோமே தவிர
4.குறைகள் நமக்குள் எப்படி வந்தது…?
5..அந்தக் குறைகளை எப்படி நீக்குவது..? என்ற நிலை இல்லை.

குறைகளை எப்படி நீக்குவது…? என்று கேட்டு யாராவது தீமையை நீக்கும் ஆற்றலை எண்ணுகின்றோமா..,? தீமை செய்பவர்களின் வலிமையைப் பற்றித்தான் “அதிக நேரம்” எண்ணிக் கேட்கின்றோம்.

1.தீமைகளைத் துடைக்கும் மார்க்கம் தான்
2.நமது குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் செலுத்துவது.

கடுமையான விஷங்களை மாற்றி உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன். அவன் தான் இன்று அந்தத் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அதை நாம் நுகர்ந்தால் அவன் எப்படி விஷத்தை நீக்கினானோ அதை நாமும் நீக்கலாம். அவன் சென்ற எல்லையை அடையலாம்.

தீமைகளை நீக்கிவிட்டு “உயிருடன் ஒன்றும் உணர்வை.., எப்படி ஒளியாக மாற்ற வேண்டும்?” என்பதை நாமெல்லாம் அறிந்து நம்மை நாம் தெரிந்து “தெளிவான வாழ்க்கை வாழ்வதற்குத்தான்” இந்தச் சிலைகளை எல்லாம் வைத்தார்கள் ஞானிகள்.

குரு இல்லாதபடி “எதையுமே” செயல்படுத்த முடியாது…!

 

நல்லதைச் செயல்படுத்தும் பொழுது சிலருக்குப் பாருங்கள். உணர்வின் இயக்கங்கள் மாறும்.

கணவர் பணத்தை மற்றவருக்குக் கொடுத்து உதவி செய்கிறார் என்றால் “இப்படியே செய்து கொண்டிருக்கின்றார்…” என்ற வெறுப்பின் தன்மை மனைவிக்கு வரும்.

யாருக்காவது அவர் காசு கொடுக்கப் போனால்… கொடுப்பதற்கு முன் அல்லது அவர்கள் உதவி கேட்டு வருவதற்கு முன் தடுத்து நிறுத்தும் நிலை வருகின்றது.

இல்லை என்றால் “இப்படியே இருக்கின்றது…” என்று வீட்டிற்குள் சண்டை வரும். அதனால் வெறுப்பின் தன்மை வரும்.
1.பிறருக்கு நன்மை செய்ய மாட்டோம்
2.அவர்களை வாடச் செய்து துன்புறுத்தும் தன்மை தான் வரும்… அதை ரசிக்கும் தன்மை வரும்.
3.வீட்டிலே செல்வம் இருக்கும்… கஷ்டம் என்று ஒருவர் வந்தாலும் அவருக்கு உதவி செய்வதைத் தடுக்கும் நிலை வரும்.
4.ஒரு நல்ல காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றாலும் அது விடாது.

இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதை அறிவதற்குத் தான் குணங்களைப் பற்றி ஞானிகள் காவியங்களாகப் படைத்து
1.உயிரின் இயக்கத்தையும்
2.உணர்வின் இயக்கத்தையும்
3.உடலின் செயல்களையும் பல நிலைகளிலும் உணர்த்தி உள்ளார்கள்.

ஏனென்றால் மனிதனாக வருவதற்கு முன் எத்தனையோ சரீரங்களில் பல விதமான தாவர இனங்களைப் உணவாக உட்கொண்டு பழகியது. அதனின் தன்மை உடலிலே அணுக்களாக உருவாகி… அந்த அணுக்களுக்குள் ஒன்றை ஒன்று கொன்று தின்று… மற்றதை வென்றிடும் உணர்வின் உணர்ச்சிகள் மாறி அதிலே வளர்ச்சி பெற்றவன் தான் மனிதன்.

இதைப் போன்ற இருள்களை நீக்கி அருளைப் பெறும் உணர்வு பெற்றவன் தான் அகஸ்தியன். தாய் கருவிலேயே அந்தச் சக்திகளை அவன் பெற்றான்.

அகஸ்தியன் வெளிப்படுத்திய நஞ்சை வென்றிடும் அத்தகைய சக்திகள் “இந்தக் காற்றிலே தான் இருக்கின்றது…” என்று குருநாதர் அதைத் தெரியும்படி செய்தார். அதை நான் பெற்றேன்.

அதன் வழியில் என்னைத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக அமைத்தார் அதே போன்று உங்களையும் அமைக்க வேண்டும் என்று தான் செயல்படுத்துகின்றோம்.

இன்ஜினியரிங்… சம்பந்தமான புத்தகத்தை எடுத்துப் படித்தாலும் ஒரு கருவியை உருவாக்க அதிலே எந்தெந்த உலோகத்தைச் சேர்க்க வேண்டும்…? என்ற உணர்வின் தன்மை தெரியவில்லை என்றால் என்ன ஆகும்…?
1.வாத்தியார் சொன்னால்தான் தெரியும்
2.புத்தகத்தைப் படித்து விட்டேன் என்றால் அதைத் தெரிந்து கொள்ள முடியுமா…?
3.தெரிந்து கொண்டாலும்… “அதை இணைக்கும் தன்மை பெற்றால் தான்…” அது செயல்படுத்த முடியும்.

சில பேர் கடைகளிலே சென்று இது போன்ற புத்தகங்களை வாங்கிப் படித்துக் கொள்வார்கள். இதனுடன் இதைச் சேர்த்தால் “சோப்பு செய்யலாம்… தைலம் செய்யலாம்…” என்று அதிலே போட்டிருக்கும்.

அதைப் படித்துவிட்டுக் காசைச் செலவழித்து எந்தப் பருவத்தில் எதை இணைக்க வேண்டும்…?” என்று தெரியாதபடி சோப்பு வரவில்லை… தைலம் வரவில்லை… எல்லாம் நஷ்டம் ஆகிவிட்டது…! என்று இருப்பார்கள்.

ஆக… நஷ்டமான பின் தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும். புத்தகத்தைப் பார்த்தேன்… படித்தேன்… இப்படி எல்லாம் சேர்த்தேன்… என்று செய்ய முற்பட்டாலும் சரக்குகளைக் கலக்கும் தன்மை வரும் போது “தடுமாற்றம் தான் வரும்…”

ஏனென்றால்…
1.குரு என்ற உணர்வு கொண்டு அதை இணைத்து
2.எந்தப் பருவத்தில் எதைச் சேர்த்தால் உருப்பெறும் என்ற உணர்வுகள் இல்லை என்றால்
3.அதைச் சீராகச் செயல்படுத்த முடியாது.

புத்தகங்களை வெளியிட்டிருப்பார்கள். அதைப் படித்துவிட்டு “நான் எல்லாம் தெரிந்து கொண்டேன்…” என்று அடுத்தவர்களுக்கு சொல்வார்கள். இவனுக்கும் செய்யத் தெரியாது. ஆனால் அடுத்தவனிடம் சொல்லி இவன் வார்த்தையை அவன் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…?

இப்படி நிறையப் பேர் பொருளையும் பணத்தையும் இழந்தவர்கள் உள்ளார்கள்.
1.குரு இல்லாதபடி… வாத்தியார் இல்லாதபடி… தெரியாதபடி செய்தவர்கள் எல்லாம்
2.இருக்கிற காசை எல்லாம் விட்டுவிட்டுத் திரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்

உதாரணமாக… இரசமணி செய்யலாம் என்று ஒருவன் சொன்னால் அதைக் கேட்ட பின் அதிலே இது இருக்கின்றது… அது இருக்கிறது… என்று சொத்தை எல்லாம் இழந்து ரோட்டில் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்.

இரசமணி வைத்திருந்தால் அப்படிப் பேசும் இப்படிப் பேசும் இன்னன்ன நிலைகள் உண்டு என்று கதையைப் பேசிக் கொண்டிருப்பார்கள் ஆனால் முழுமையாகத் தெரியுமா…? என்றால் தெரியாது.

பல உணர்வுகள் சேர்த்து உணர்வின் தன்மை ஒன்றாகும் போது இரசமணி. அதாவது
உயிருடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை ரசமாக்கி
2.உயிர் எப்படி மின்னுகின்றதோ உணர்வின் தன்மைகளை ஒளியாக்குவது தான் இரசமணி.

ஆகவே மனிதனின் தன்மை உயர்ந்த நிலைகள் கொண்டு… இணைந்து வாழும் தன்மையாக இரசமணியாக மாற்றுதல் வேண்டும். ஞானிகள் இதைத் தான் சொல்லி உள்ளார்கள். குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டினார்.

“வான இயல் சூத்திரதாரி…!”

 

வான இயலின் தத்துவத்தை “முத்தொழில்” (ஆக்கல் காத்தல் அழித்தல்) என்ற வகையில் அவர் அறிந்து கொண்டவர் வராகிமிகிரர். பேரண்டங்களின் சூட்சமச் செயல் நிகழ்வாக ஒவ்வொரு சூரியக் குடும்பங்களின் வளர்ச்சியின் ஆக்கத்தையும் அவர் உணர்ந்தார்.

ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற குடும்பத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே வளர்ச்சியின் சக்திப் பிரவாகமாகச் சுழன்று கொண்டிருப்பது அனைத்தையும் தன் உயிராத்ம வலு கொண்டு ஞானதிருஷ்டி கொண்டு அறிந்து உணர்ந்து தெளிந்தவர் வராகிமிகி மகரிஷி…!

நம் சூரியக் குடும்பத்தில் பூமித் தாய் ஈர்த்து அளித்திடும் சக்தியின் தொடருக்கு தன் வினையின் செயலுக்கு நாற்பத்தி எட்டு கோளங்களே முக்கிய காரணமாகின்றது.

அந்த ஆற்றல்களை ஒவ்வொரு உயிராத்மாவும் ஜீவ சரீரம் கொண்டு வலு பெற்று வளர்த்திடவும் நல் வினையின் ஆக்கம் அறிந்து தெளிவு பெற்றிடவும் “மண்டலம்…” என்ற வகைப்படுத்திக் கர்ம வினைச் செயலாகக் காட்டினார்.

1.சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நவக் கோள்களும்
2.வியாழனைப் பிரகாசப்படுத்திடும் எட்டு உப சந்திரக் கோள்களும்
3.புதனைச் சுற்றி ஓடும் ஐந்து சந்திரக் கோள்களில் நான்கு ஜீவன் கோள்களும்
4.பூமித் தாய் ஈர்ப்பின் தொடர்பு கொண்ட மாமகரிஷிகளின் அருள் பார்வை கொண்ட இருபத்தியேழு ஜீவ நட்சத்திரத் தொகுதியும்
5.நாள் கணக்கு வைத்து 48 என்ற வகையே மண்டலம் என்ற வகைப்படுத்தி
6.ஒவ்வொரு நாளும் பரவெளியில் நடக்கும் கோடிக்கணக்கான சூட்சமச் செயல்களில்
7.நிறம் மணம் குணம் என்ற அமிலக் கூறுகள் நீர் காந்த சக்தியுடன் கலந்து சிறப்புறும் அந்த விளையாடல் செயலை
8.யாரும் எடுத்துரைக்க இயலுமோ..?

பொதுவான பால்வெளி மண்டலமாகிய சூட்சமப் பேரண்டத்திற்குள் இருளினுள் ஊடே உலவி இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களும் சுற்றிச் சுழன்றோடுகிறது. இதைப் போல எத்தனையோ சூரியக் குடும்பங்கள் ஆயிரமாகவும் இரண்டாயிரமாகவும் ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் சுழன்று வருகிறது.

அப்படிப்பட்ட சுழல் கதியில் ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற சூரியக் குடும்பங்களைச் சுற்றி வரும் நிலையில் நீர் சக்தியின் தொடர் மூலம் காந்த சக்தியின் ஈர்ப்பால் உள் நிகழ்வுகள் எத்தனையோ நடைபெறுகிறது.

சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்லும் சுழல் ஓட்டக் கதியில் ஒரு சூரியன் மற்ற சூரியனைச் சந்திக்கும் பொழுது அந்தச் சந்திப்பினால் ஒளிக் கதிர்வீச்சு எதிர் மோதல்களும் ஏற்படுகின்றது.

அவ்வாறு நடைபெறும் காலகட்டத்தில் அந்தந்தச் சூரியனைச் சார்ந்த மண்டலங்கள் அந்தக் கதிர்வீச்சின் ஈர்ப்பில் இயற்கையாக ஈர்ப்பின் தொடரில்
1.தனக்குத் தானே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு
2.சுழன்று ஓடிக் கொண்டே இருக்கின்றன.

மூன்று சூரியக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வால் அதிலிருந்து வெளிப்படும் கழிவுகள் வால் நட்சத்திரமாக உருவாகின்றது. அதே போல பஞ்சமுக சந்திப்பு…! என்ற வட்டப்பகுதி ஏற்படும் கால நிகழ்வு ஒன்றும் உண்டு.

பஞ்சமுக சந்திப்பின் கதிர்வீச்சு ஏற்படும் கால கட்டத்தில்
1.சக்தி இழந்து வரும் கோளங்கள் அந்த வெப்பக் கதிர்வீச்சில் ஆவியாக மாறுவதும்
2.பிரளயம் ஆகிச் சக்தி குறைவுபட்ட மண்டலங்கள் மீண்டும் தன் சக்தியின் வலுவைக் கூட்டுவதும் போன்ற நிகழ்வுகள்
3.சூரிய மண்டலங்களின் தொடர்பில் நடைபெறும் செயல் வருகின்ற காலத் தொடரில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள கோளங்களில் சூரியன் முதற் கொண்டு அனைத்துக் கோளங்களும் தங்களைச் சுற்றி வளையமிட்டுக் காத்திடும் தொடர்களும் உண்டு.

இவ்வாறு மனித குல வளர்ச்சியின் மேம்பாட்டிற்கான தியான வழித் தொடரைக் காட்டி ஆதி சக்தியுடன் கலந்து வாழும் சூட்சமம் பற்றிக் கூறிய சுத்திரதாரியே வராகமிகி.

அவருடைய அருள் சக்தி பெற்று அனைத்து மண்டலங்களிலும் செயல் கொண்டிடும் பூரணத்துவம் அறிய நாமும் தியானிப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் வாழ்க்கையில் வரும் இன்னல்களை எளிதில் மாற்றிக் கொள்ளலாம். எளிதில் மாற்றிக் கொள்ளும் உபாயத்தைத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

எப்படிக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றனரோ இதைப் போல உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

உங்கள் கண்ணில் உள்ள கருவிழி… விலா எலும்புகளில் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அந்த நேரத்தில் யாம் பதிவாக்கியதை மீண்டும் எண்ணும் பொழுது
1.தீமை நம்மை எப்படி இயக்குகின்றது…?
2.தீமையிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற ஞானம் உங்களுக்குக் கிடைக்கும்.

இன்று செல்ஃபோன்களை வைத்துள்ளார்கள். அதிலே அந்த நம்பரை யார் அழுத்துகின்றார்கள் என்று தெரிந்து கொள்கின்றோம். இதைப் போல நாம் எங்கெங்கேயோ இருக்கக்கூடிய இடங்களுக்கு எல்லாச் செய்திகளையும் படங்களையும் காட்சிகளையும் அனுப்புகின்றோம்.

ELECTRICAL WIRE எதுவும் கிடையாது. அது இல்லாமலே (WIRELESS) செய்திகளை அனுப்புகின்றோம்.

ஆகவே சூரியனிலிருந்து வரக்கூடிய காந்தப் புலனறிவு இதை மோதச் செய்து நாம் அனுப்புவதை அங்கே இருக்கக்கூடியவர்களைத் தெளிவாக்குகின்றது.

இந்த விஞ்ஞான அறிவு கொண்டு இதைச் செய்கின்றார்கள். இதைப் போன்றுதான்
1.யாம் உபதேசிக்கும் மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை
2.உங்கள் விலா எலும்புகளுக்குள் உள்ள ஊனுக்குள் வித்தாகப் பதிவாக்கி விட்டால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுதெல்லாம்
4.அது உங்களுக்குள் எளிதில் கிடைக்கும்.

இதை வளர்த்துக் கொள்வதற்கு இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதெல்லாம் உங்கள் அம்மா அப்பாவை எண்ணி ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தினால் அந்த அணுக்களுக்கு நேரடியாகச் சக்தி கிடைக்கின்றது.

உங்கள் வாழ்க்கையில் தெளிந்து வாழ்ந்திட மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும்.

உயிரிலே கடைசியில் மிஞ்சும் உணர்வு… எது வலிமையோ அதற்குத் தக்க தான் “அடுத்த நம்முடைய ரூபம் (பிறவி)…”

 

துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் வரும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் நவக் கோள்களின் உணர்வுகளையும் அவைகளின் செயல் மாற்றத்தையும் அகஸ்தியன் உற்று நோக்கி நுகர்கின்றான்.

தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு அந்த உணர்வின் அறிவை இவனால் முழுமையாக அறிய முடிகின்றது.

1.துருவம் கவரும்… துருவத்தின் வழி பூமிக்குள் வரும் உணர்வுகள்
2.எவ்வாறு எங்கே எதன் வழியில் இங்கே உருப் பெறுகின்றது…?
3.கலவையாகி அந்த உணர்ச்சிகள் எப்படி எல்லாம் மாறுகின்றது என்பதை அறிந்தான்.

அந்த எல்லையில் இருந்தே அவன் பிரபஞ்சத்தின் ஆற்றல்களை நுகர்ந்தான். அங்கிருந்து பூமி கவர்வதற்கு முன் துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டான்

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது எதனின் ஒளிக் கற்றைகள் மாறுகின்றதோ அந்த ஒளிக்கற்றைகளையும் மின்கதிர்களையும் நுகர்ந்து தனக்குள் வளர்த்தவன் தான் அந்த அகஸ்தியன்.

துருவத்தின் நிலைகளில் எதை எதை எல்லாம் நுகர்ந்தானோ இன்று அதே எல்லையில் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கின்றான். பூமிக்குள் வரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கின்றான்.

பாம்பு தன் உடலுக்குள் விஷமான உணர்வுகளைத் தான் வளர்த்து வைத்துள்ளது. அது தன் உணவுக்காக மற்ற உயிரினங்களின் மீது விஷத்தைப் பாய்ச்சி அதை மயங்கச் செய்து விழுங்குகிறது. விழுங்கும் போது தனக்கு இணையாக அது கரைக்கச் செய்யும் சக்தியும் பெறுகின்றது.

அதே போல் மாடு ஆடு இவையெல்லாம் இயற்கையில் விளைந்த தாவர இனங்களை உட்கொண்டாலும் அதிலுள்ள விஷத் தன்மையைத் தன் உடலாக ஆக்கிக் கொண்டு… நல்லவைகளை மலமாக மாற்றுகின்றது.

விஷத்தின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி இந்த உணர்வின் தன்மைகொப்ப வரப்படும் பொழுது ஒரு கடினமான தட்டையாக இருந்தாலும் பிஸ்கட் போன்று அது எளிதில் கரைத்து உணவாக அதை உட்கொள்கின்றது.

பாம்பினமோ மற்றதை விழுங்கும் போதே உடனடியாக நீராக மாற்றும் தன்மை பெற்றது.
1.ஒவ்வொரு உடல்களிலும் பல பல விஷத் தன்மைகள் இருந்தாலும்
2.பாம்பினங்கள் முழுமையாக அது விழுங்கப்படும் பொழுது அதனின் உணர்வின் தன்மை பட்டபின்
3.அது சிறுகச் சிறுகக் கரைந்து நீராக மாறி… அதனுடைய உணவாக மாறி இரத்தங்களாக மாறி
4.இந்த உணர்வின் தன்மை ஒன்றாகித் தன் கருத்தன்மையாக… (தன் இனமாக வளரும்)
5.மற்ற உயிரினங்களின் தன்மையை இதன் உணர்வுபடி அதைக் கவர்ந்து கொள்கின்றது.

ஆனால் மனிதனை இந்தப் பாம்பு தீண்டிவிட்டால் உணர்வுகள் அனைத்தும் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது. மனிதன் இறந்தால் இந்த விஷத்தின் உணர்வுகள் சேர்த்து உயிருடன் ஒன்றிச் செல்லப்படும் பொழுது எங்கே… எப்படிச் செல்கிறது…?

பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் தூசுகள் மோதும் போது வெளிப்படும் மின்னல்களிலிருந்து “வெள்ளிக் கோள் அந்த ஒளிக்கற்றைகளை எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ… அதில் வரும் விஷத் தன்மைகளைக் கேதுக் கோள் எப்படி எடுத்துக் கொள்கின்றதோ…” அதைப் போல்
1.பாம்பால் தீண்டப்பட்ட மனித ஆன்மா
2.தரையில் ஊர்ந்து செல்லும் உணர்வுகள் (பாம்பு) அதனுடைய காந்தம் – மேக்னட் அதற்குள் ஈர்க்கப்பட்டு
3.இதை ஒத்த உயிரினமாக இருந்தால் தனக்குள் அதைக் கவர்ந்து… தன் உடலில் சேர்த்துக் கருவாக்கி
4.மனிதனைப் பாம்பினமாக மாற்றிவிடுகிறது.

ஏனென்றால் உயிரின் உணர்வுகள் எதைக் கவர்ந்ததோ… அதன் வலிமை கொண்டு மற்ற… அதற்கொத்த இனத்தின் ஈர்ப்புக்குள் சென்று… அதன் கருத்தன்மை அடையும் தன்மை பெறுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

ஏனென்றல் இயற்கை எப்படி இயக்குகின்றது…? என்பதை அகஸ்தியன் கண்டவன். அதைத்தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்

 

“மதம்…” என்ற சொல்லின் முந்தைய நிலை மனித இனம் வாழ ஏற்படுத்தப்பட்ட “சமூக அமைப்பு” என்ற உலக வாழ்க்கை நிலை. ஆனால் இன்றோ மதம் என்ற சமூக அமைப்பே… “கடவுள்” என்ற பெயரால் ஒன்றுக்கொன்று ஏற்காது போர் முறையாகி ஆகிவிட்டது.

1.மனிதர்கள் உலகோதய ஆசைப் பிடிப்பில் சிக்குண்டு
2.இந்த உடல் வாழ்க்கையையே பிரதானமாகக் கருதி
3.ஆன்மாவை உயர்த்தும் அறிவின் ஆற்றல் குறைவுபட்டு
4.மனிதனின் எண்ணமே மீளாப் பிடிக்குள் ஆட்பட்டு
5.மீளும் வழி அறியும் செயலையே அறிய முடியாத காலங்களில்
6.மனித குலம் காக்கப்பட அவதார புருஷர்கள் அவதரித்த பூமி தான் நாம் வாழும் இந்தப் பூமி.

அன்று காட்டப்பட்ட நெறி முறைகளில் மனிதன் தன்னிலை உயர்த்த சுட்டிக் காட்டப்பட்ட அறிவின் ஆற்றல் அந்த மகான்களுக்குப் பின் வழி வந்த சீடர்களால் மதம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு விட்டார்கள்.

1.நாபிமனு முதல் வர்த்தமான மகாவீரர் வரை என்று சொல்லும் வரைமுறைகள் (பாரம்பரியம்) எல்லாம் எதற்கப்பா..?
2.வரையறையின்றிக் காட்டுவதே மதங்களின் பிடியில் அகப்படச் செய்வதற்குத்தானா…?
3.அந்த வரைமுறையை இன்று காட்டுபவன் அன்றைய நிலையைச் சிந்தித்தானா..?
மனித வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று சிந்தித்த நாபிமனு அதைச் செயல்படுத்த முனைந்து
1.ஞானப் பாதையை காட்டிய ரிஷப தேவர் (ஆதிநாதர்) வழியில் வந்த எத்தனையோ மகான்கள்
2.(தம் ஆன்மாவைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்கள்)
3.ஜீவ காருண்யம் நல்லொழுக்கம் நற்செயல் என்று போதித்த வழி முறைகள் எல்லாம் “மதம் கொண்ட…!” மதத்தினை வளர்க்கத்தானா…?

“ஜீன தீர்த்தங்கரர்கள் இத்தனை பேர் தான்…!” என்ற பட்டியல் கொடுத்து விட்டால் அதைக் கண்டு என்ன செய்யப் போகிறான்..? மீண்டும் மதத்தின் பிடியில் அகப்பட்டு தத்தளிக்கப் போகின்றான்.

வர்த்தமானர் பெற்றதும் ஓர் நல் நிலை தான்…! அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட கடமை.. விதி… சரீரம் தொட்டுச் செயல்படுத்த முனையும் வாய்ப்பு இன்றைய பரபரப்பான உலகியல் வாழ்க்கை நெறியில் இல்லையப்பா…!

1.சன்னியாசிக்கு என்று ஒரு வழி முறையும்
2.சம்சாரிக்கு என்று ஒரு வழி முறையும் அன்று காட்டியவற்றில்
3.உணர்ந்து கொண்டார்களா அனைத்தையும்…? அவைகளிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.

வர்த்தமானன் கடவுளையா சொன்னான்..? இல்லயே…! மதம் என்ற பெயர்படுத்த மனித ஆத்மாவின் வளர்ச்சியை அல்லவோ கூறினான்.

நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியானத்தின் வழி முறையில் காக்கப்பட வேண்டியது ஆன்மா தான் என்று கூறிட்டாலும் காக்கப்பட வேண்டியது சரீரமும் தான்,

அன்று சமுதாய அமைப்பில் மனித இனத்தின் எண்ணிக்கை குறைவு பட்ட காலச் சூழலில் மகான்கள் நடைமுறைக்குக் காட்டிய செயல்களைச் செயல்முறைக்குக் கொண்டு வரும் வழி வகைகள் இருந்தன.

ஆனால் இந்தக் கலியில் உடலை வருத்திடும் செயல்கள் தேவை தானா…?

உன் கண்ணிலிருந்து நீர் வழிகின்றது. மனம் வேதனைச் சூழலில் ஆட்படுகின்றது, மனம் சங்கட அலைகளில் சிக்குண்டிருக்கும் பொழுது ஆத்மா வேதனையுறாவிட்டால் உடல் வருந்திட நீர் வரக் காரணம் என்ன..?

துக்கம் சந்தோஷம் அனைத்துமே ஆன்மாவில் பதிவு நிலைகள் தான்.

1.மனித மன நடை முறைச் செயலுக்கு
2.நல் வாழ்வு நற்கதிக்கு இதை விட வேறு ஆக்கமில்லை என்ற நிலையில்
3.இந்தத் தியான வழி கொண்டு உண்மையை உன்னுள்ளே ஊன்றிப் பார்.

வாழ்க்கையில் நேரும் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதற்காகப் பயன்படுத்தப்படும் பொழுது அதிலே நிறைவு காணும் மனம் பெற்று விட்டால் தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நேரத்திலும் யாம் உபதேசித்த உணர்வு கொண்டு ஒரு கம்ப்யூட்டரில் செயல்படுத்துவது போல் நீங்கள் வரிசைப்படுத்திக் (PROGRAMS AND COMMANDS) கொள்ளலாம்.

அதன் துணை கொண்டு வாழ்க்கையில் ஒருவருடைய தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அல்லது அந்தத் தீமையைக் கேட்டாலும் அடுத்த நிமிடம் தீமைகள் உங்களுக்குள் வளராது தடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணினால் இது (உங்களுக்கு) முன்னாடி வலிமை பெறுகின்றது.

அதே சமயத்தில் எதிரே திடீரென்று ஒரு வாகனம் வந்தாலும் நம்மை ஒதுங்கச் செய்யும்.

1.வீட்டில் தன் பையன் இப்படிச் செய்துவிட்டான்
2.அவன் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் என்று
3.காலையில் எழுந்தவுடன் இந்த எண்ணத்தில் சோர்வடைந்து விட்டால் இந்த உணர்வுகள் முன்னனியில் வந்துவிடுகின்றது.

அது முன்னாடி வந்துவிட்டால் நாம் போகும் பாதையில் ஒரு சைக்கிள் வருவது கூடத் தெரியாது. ஒரு பெரிய வாகனம் வருவதும் தெரியாது.

அப்பொழுது நம்மை அறியாமலே விபத்துக்கள் நடந்துவிடும்.

எதன் உணர்வு நம்மைச் சிந்தனையைக் குறைக்கச் செய்ததோ இதைப் போல் நம் வாழ்க்கையில் நடந்துவிடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னனியில் வந்துவிடுகின்றது. அது நம்மை இயக்கிவிடுகின்றது.

இதையெல்லாம் மாற்றி உங்கள் வாழ்க்கையில் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி இந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்திக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அதை முன்னிலைப்படுத்திச் செல்லும் போது
1.தீமை என்றால்… விலகி வரும் உணர்வுகளையும்
2.தீமை வந்தால்… விலகிச் செல்லும் உணர்வுகளையும்
3.சிந்தித்துச் செயல்படும் ஆற்றல்களையும்
4.வாழ்க்கையில் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளையும் நமக்கு அது ஊட்டிக் கொண்டேயிருக்கும்.

அதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றேன். நீங்கள் கூர்ந்து இதைப் பதிவாக்கிக் கொண்டால் நிச்சயம் உங்கள் நல்ல குணங்களைக் காக்க முடியும்.

“அகஸ்தியனுடன் ஒன்றி” அவன் நுகர்ந்த உணர்வுகளை எடுக்கப் பழக வேண்டும்

 

நம் பூமியில் உருப்பெற்ற நிலைகளில் அகஸ்தியன் முதல் நிலைகளில் அணுவின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான். உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் தொடர்ந்து பதிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.
1.”அவன் எப்படிப் பெற்றானோ…!” என்ற சந்தேக உணர்வு கொண்டு எண்ணாது
2.அவனுடன் ஒன்றி அவன் நுகர்ந்த உணர்வுகளை எடுக்கப் பழக வேண்டும்.

அகண்ட அண்டத்தை அறிந்துணர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது… பதிந்த உணர்வுகளை நீங்கள் நினைவாக்கினால் உங்கள் வாழ்க்கையில் வரும் பேரிருளை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றிட முடியும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆயுள் கால மெம்பராக நீங்கள் இணைந்திட வேண்டும்.
1.அவன் பெற்ற அருள் சக்திகளை எல்லாம் நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவருக்கெல்லாம் அந்த வித்தினைப் பரப்ப வேண்டும்
3.நாம் பார்க்கும் நண்பர்களிடத்திலும் இந்த உணர்வுகளைப் பரப்புதல் வேண்டும்.

அப்படிப் பரவச் செய்யப்படும் பொழுது இருளை நீக்கிடும் சக்தியும் சிந்திக்கும் ஆற்றலையும் அவர்களும் பெறுகின்றார்கள். அவர்களிடத்தில் விளைந்து அந்த உணர்வுகள் வெளி வரப்படும் பொழுது இந்தப் பரமாத்மாவிலே அதிகமாகப் பெருகுகிறது.

அதன் மூலம் அந்த அருள் உணர்வின் தன்மையை அனைவரும் எளிதில் பெற்று இருளை நீக்கும் வலிமையும் பெறுகின்றோம்.

இதற்கு முன் யாம் (ஞானகுரு) உபதேசித்த நிலைகள் எல்லாம் வேறு. இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் எல்லாம் உங்களை நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைக்கச் செய்யும் நிலையே…!

ஆயுள் மெம்பராக இருக்கும் நீங்கள் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தால் தான் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆனால் வெளியிலே சொன்னால் தவறின் உணர்வுகளுக்கே வரும்… மந்திரவாதிகளுக்கு உபயோகமாக இருக்கும். இந்தப் பேரைச் சொல்லி ஏமாற்றுவதற்கு உபயோகமாக… ஒரு கருவியாக மாறும்.
1.உண்மையின் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோர்கள் பலர் இருந்தாலும்
2.தவறு செய்வோரின்… அந்த தவறான உணர்வுகள் கலக்கப்படும் போது
3.உண்மையின் வழிகளில் செல்வோர் உணர்வுகளுக்குள் அவரின் விஷத் தன்மை படர்ந்து… சிந்தனை குறைந்து…
4.இப்படிச் செய்கின்றார்களே…! என்று உணர்வுகள் மாறப்படும் பொழுது போகும் பாதைகளுக்குத் தடையாக வருகிறது.

அப்படி ஆகாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!

இன்று “எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்..” என்ற நிலைகள் கொண்டு எதனுடைய அழுத்தம் இருக்கின்றதோ அதனுடன் ஈர்க்கப்பட்டு இந்த உணர்வின் தன்மையை நமக்கு அறிவிக்கின்றது மனிதனால் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரானிக் கருவிகள்.

“நம் உயிரும் எலக்ட்ரிக் தான்…” நாம் நுகரும் உணர்வின் தன்மையை உயிர் எலக்ட்ரானிக்காக நமக்குள் இயக்கும் பொழுது
1.எதனுடைய அழுத்தத்தில்
2.எதனுடைய உணர்வின் தன்மை உள் செலுத்துகின்றமோ
3.அந்த உணர்வின் தன்மை… நம்மையும் அதன் வழிக்கே இயக்குகின்றது.

ஆக இயந்திரக் கருவிகள் போன்று தான் நமது உடலும் உணர்வுகளும் இயக்குகின்றது.

1.இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உயர் அழுத்தத்தின் உணர்வுகளைக் கொண்டு வரும் பொழுது
2.உங்களுக்குள் இருக்கும் தீமை என்ற உணர்வுகளை அது அழுத்தி
3.அருள் உணர்வின் ஞானத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

சகலத்திற்குமே தீர்வுண்டு

 

மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.

மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.

ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?

உலகோதய வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணித் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?

1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.

அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அழித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?

நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வுண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.

மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.

மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?

உலகோதயப் பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.

ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.

மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
4.ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான்.
5.ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.

“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தான் பெற்ற மெய் உணர்வுகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல பேரிடம் எடுத்துரைத்தார். ஆனால் அவர்கள் எல்லாம் என்ன செய்து விட்டார்கள்…?

எனக்குக் காசைக் கொடுத்தால் கோவிலைக் கட்டி நான் எத்தனையோ செய்துவிடுவேன் என்று சொல்கிறார்கள்.

குருநாதர் பல சக்திகளைக் காட்டினார்… நோய்களைப் போக்கும் பல மூலிகைகளைக் காட்டினார் என்றால் அதை வைத்துச் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும் என்ற நிலைக்குத்தான் வந்தார்களே தவிர அழியாத சொத்தை அந்த அருள் ஞானப் பொக்கிஷத்தை வாங்க யாரும் வரவில்லை.

சிலருக்குப் பாதரசத்தைச் (இரசமணி) செய்து கொடுத்தார். அதில் என்னவெல்லாம் தெரிகிறது பார்…! என்று காண்பிப்பார். மேலும் அதில் என்னென்ன தெய்வங்கள் எல்லாம் தெரிகின்றது…? என்றும் காண்பிப்பார்.

பாதரசத்தால் கவர்ந்து கொண்ட உணர்வுகள் எந்தெந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொள்கின்றதோ… அந்த உணர்வின் “ரூபங்கள்” வரும்.

எல்லாம் சேர்த்துச் சூரியனிலிருந்து வரக்கூடிய அந்தப் பாதரசமே எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் வழிகளில் எப்படி இயங்குகின்றது…? என்பதனை எமக்குத் தெளிவாக்குகின்றார்.

ஏனென்றால்… இன்று நாம் வெயில் என்று பார்க்கின்றோமே இது சூரியனிலிருந்து வெளி வரும் பாதரசம் தான். சுக்குநூறாகத் தெறித்து ஒளி அலைகளாகத் தெரிகின்றது. இதைச் சூரியனின் வெப்ப காந்த அலைகள் என்பார்கள்.

குருநாதர் செய்து கொடுத்த (இரசமணி) பாதரசத்தில் இந்தச் சாமி தெரிகின்றது… அந்தச் சாமி தெரிகின்றது… என்று சொல்வார்கள். “காளிதேவி தெரிகின்றது… மாரியம்மன் தெரிகின்றது…” இப்படி இவர்கள் எண்ணம் எதுவோ அங்கே அதைப் பிரதிபலிக்கும்.

1.பாதரசத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் எதுவோ
2.அந்த உணர்வின் இயக்கமாக நமக்குள் “தெய்வமாக” எப்படி இருக்கின்றது…?
3.ஆகவே நம் உயிரை எப்படி மணியாக்க வேண்டும்…?

உயிர் ஒளியைப் போன்று ஆனது. இருளை நீக்கி எல்லாம் ஒன்றாகச் சேர்த்துப் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கத்தைத்தான் குருநாதர் அந்தப் பாதரசத்தை வைத்து இரசமணியாகக் காட்டினார்.

குருநாதர் பைத்தியக்காரர் போல் இருக்கும் பொழுது அவருடன் பழகியவர்கள் எல்லாம் தங்கம் செய்யும் நிலைகளைப் பாதரசத்தை வைத்துச் சொல்லிக் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு இதைப் பாருங்கள்… அதைப் பாருங்கள்… என்றெல்லாம் உடல் ஆசை கொண்டு (இன்றும்) சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் இரசமணியில் பல சத்துக்களைச் சேர்த்துச் சேர்த்து தங்கத்தைச் செய்து விட்டால் சிரமமில்லாமல் வாழலாம் அல்லவா. இப்படிப்பட்ட ஆசைகள் வந்துவிடுகின்றது.

நம் வாழ்க்கையில் ஒருவர் ஒன்று சொல்லிவிட்டால் அதைக் கேட்டவுடன் நம் மனது மங்கிவிடுகின்றது. அந்த மனதை மங்காமல் இருக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்…?

அதற்காக வேண்டித்தான்.., குருநாதர் “மனதைத் தங்கமாக்கும்…” நிலைகளைச் சொன்னார். எனக்குக் குருநாதர் கொடுத்தது
1.உணர்வை எல்லாம் ஒளியாக்கி
2.ஒளியின் தன்மையாக
3.இந்த இரசமணியாக்க வேண்டும்
4.உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றச் செய்து உங்கள் உயிரை ஒளியாக ஆக்குவது தான் இரசமணி.

எல்லாவற்றையும் நான் வெட்ட வெளிச்சமாகச் (PUBLIC) சொல்ல முடியாது

 

இந்தப் பிரபஞ்சமே அழியும் தருணத்தில் இருக்கின்றது. ஆனால் உயிரணு எப்பொழுதும் அழிவதில்லை… அதாவது பிரபஞ்சத்தில் உயிரணுவாகத் தோன்றி விட்டால் அது என்றுமே அழிவதில்லை.

உயிரணுவாக உதித்த பின் புழுவிலிருந்து மனிதனாக வரும் பொழுது எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து தான் வந்திருக்கின்றோம். இருந்தாலும்…
1.இந்த உடலை விட்டுச் சென்றால் “கடைசி நிமிடத்தில்” எந்த வேதனை பெற்றதோ
2.உயிரிலே இந்த வேதனையின் துடிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
3.நரகலோகத்தை அனுபவிக்க வேண்டியதிருக்கும்.

உடலில் இருக்கும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதை மாற்றலாம். உடல் இல்லை என்றால் மாற்ற முடியாது. இதை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கு
1.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது
2.அந்தச் சக்தியை முதலில் நீ பெறுகின்றாய்.

இதைப் போல உன்னைச் சார்ந்திருக்கும்… குரு ஸ்தானத்தில் சேரக் கூடியவர்களும் இந்த உணர்வுகளைப் பெற்றார்கள் என்றால் அவர்களும் உன்னைப் போன்று வளர்ச்சி பெறும் தன்மை வருகின்றது.

ஆகையினால் ஆயுள் கால மெம்பராக அங்கம் வகிக்கும் அனைவரும் இதைப் பதிவாக்கி இதை நினைவாக்கிக் கொண்டு வருவது நல்லது.

உபதேசத்தின் உணர்வுகளை எத்தனையோ நூல்கள் மூலம் வெளியிட்டிருந்தாலும் அதிலே முழுமையாகக் கொடுக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த உயர்ந்த சக்தி ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படுகின்றது. இந்தப் பதிவின் நினைவு கொண்டு உண்மைகளை நீங்கள் பிரித்து எடுத்து உங்கள் வாழ்க்கையில் நல் வாழ்க்கை வாழ்ந்திட உதவும்.

“எல்லாவற்றையும் நான் வெட்ட வெளிச்சமாகச் (PUBLIC) சொல்ல முடியாது…”
பார்க்கிறோம் அல்லவா. எத்தனையோ பேர் வருகிறார்கள். வந்து எத்தனையோ நிலைகளில் அவரவர்கள் சௌகரியத்திற்கு எடுத்துச் செல்கின்றார்கள்.

ஆகவே… உண்மையின் இயக்கத்தை உணர்ந்து
1.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று வருபவர்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தோம் என்றால்
2.அவர்களும் வாழ்வார்கள்… அவர்கள் உணர்வு அவர்கள் அருகில் உள்ளோருக்குப் பட்டு அவர்கள் இருளைப் போக்கவும் செய்வார்கள்.
3.அதனால் இந்த உலகிற்கும் ஒரு நல்ல பயன் உண்டு என்பதற்குத் தான் இதைத் தனித்து
4.தனிப்பட்ட முறையில் ஆயுள் கால மெம்பர்களுக்குப் பதிவாக்குகின்றேன்.

இந்த உலகமே இருள் சூழும் நேரத்தில்… பிரபஞ்சமே சிதறுண்டு போகும் தருணத்தில்… ஒவ்வொரு நொடியிலும் அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் துடுப்பாக வைத்து அதைப் பிளந்து விட்டு நமது பயணம் பிறவில்லாப் பயணமாக அந்த சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்…!

மனித உடலே ஒரு காண்டீபம்… அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்)

 

விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.

ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து… அதன் வழி நடந்து… அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.

இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்…!

பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்…!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.

தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான் மாமகரிஷியாக நம்மை ஆக்கும் என்ற உண்மையை உணர்ந்தார்.

அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் ஐயப்பனாக… ஐயப்ப முனிவராக…! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்.

அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா…!).

1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.

(நான்.. நான்…! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்…!” என்று நம்பி கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது அதைக் காக்காது மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே இருளுக்குள் சென்று விடுகின்றோம்)

உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் தன்னைத் தயாராக்க வேண்டும் என்றார்.

1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி” என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்…!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே சரணம் என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.

ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.

அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.

தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன்
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் தீய “ஊழ்வினைகளிலிருந்து விடுபட” நாம் என்ன செய்ய வேண்டும்
நம் உடலில் வரும் நோய்களை விஞ்ஞான அறிவுப்படி சில மருந்துகளைக் கொடுத்துத் தடுத்து நிறுத்துகின்றோம். ஆனால் நோய் உருவாவதற்குக் காரணமான நிலைகளை முழுமையாக மாற்ற முடியவில்லை.

காரணம் என்ன…?

நாம் உற்றுப் பார்க்கும் உணர்வுகளைக் கண்ணில் உள்ள கருவிழி “ஊழ்வினை” என்ற வித்தாக நம் விலா எலும்புகளில் பதிவாக்கிவிடுகின்றது.

ஊழ்வினை என்றால் இயக்கம்.

உதாரணமாக நமக்கு வேண்டியவர் ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அவரை உற்றுப் பார்க்கின்றோம். அப்பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் கருவிழியால் பதிவாக்கப்பட்டு ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.

அப்பொழுது அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதன் உணர்வுப்படி இயக்கி அவருக்கு உதவியும் செய்கின்றோம்.

ஆனால் அவர் உடலில் விளைந்த வித்தை நமக்குள் பதிவாக்கிய பின் அது என்ன செய்யும்…?

அது வலிமையான வித்தாக இருக்கும் பொழுது அவர்கள் பட்ட வேதனையைக் கவர்ந்து அவர்கள் உடலில் நோய்கள் உருவாக்கியது போல நம் உடலிலும் வேதனையை உருவாக்கும் அணுக்கள் பெருகி விடுகின்றது.

அத்தகைய அணுக்கள் பெருகியபின் நமக்கும் உடல் நலக் குறைவாகின்றது. அப்பொழுது மருந்து கொடுத்து நோயைத் தடுத்துக் கொள்கின்றோம்.

இருந்தாலும் கருவிழியால் கவரப்பட்டு விலா எலும்புகளில் பதிவான ஊழ்வினை என்ற வித்தை அழிக்க முடியாது. நம் உடலில் மானிட்டர் போன்று குருத்தெலும்பு இருக்கின்றது.

நாம் வேதனைப்பட்ட உணர்வை விலா எலும்புகளில் பதிவாக்கும் பொழுது அது இழுக்கும். அப்பொழுது அந்த நேரத்தில் பார்த்தோம் என்றால் “பட…பட…பட…பட..,” என்று துடிக்கும்.

1.ஒரு அதிகமான சந்தோஷம் ஆனாலும் படபடப்பு வரும்.
2.பயமானாலும் அந்த உணர்ச்சிகள் வரும்.
3.எதை ஆசைப்படுகின்றோமோ அது கிடைக்கும் என்று இருந்தால் அந்தப் படபடப்பு வரும்.

இன்றைக்கு தரித்திரமாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். “ஒரு இலட்ச ரூபாய் பரிசு விழுந்தது..!” என்று கேள்விப்பட்டால் உங்கள் இருதயத் துடிப்பைப் பார்க்கலாம்.

அந்த ஆசையில் வேகமாக வருகின்றது. அப்பொழுது உங்கள் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுவெல்லாம் அந்தந்த நிகழ்ச்சிகளைச் சொன்ன உணர்வைப் பதிவாக்கியபின் அதன் உணர்வைக் கவர்ந்தாலும் உயிருக்குள் பட்டவுடன் சிலருக்கு மயக்கமே வந்துவிடும்.

“இல்லாதவர்களுக்குத் திடீரென்று… பணம் கிடைக்கின்றது” என்று வந்தபின் அதைத் தாங்கும் இயல்பற்று அந்த இருதயங்களுடைய “நரம்பு மண்டலங்கள்.., சிதைந்து விடுகின்றது…”

அல்லது
1.அந்த உணர்ச்சிவசப்பட்டு வேகத் துடிப்பாக எடுக்கும் பொழுது
2.இருதயத்தை இயக்கும் சிறு மூளை பாகங்கள் இதனுடைய அழுத்தம் அதிகமான பின்
3.கடத்திச் செல்லும் நரம்பு மண்டலம் ஒரு சைக்கிள் ட்யூபில் கொஞ்சம் பலவீனமானால் ஒரு பலூன் மாதிரி உப்பி எப்படி வெடித்து விடுகின்றதோ
4.இதைப் போல் சிறு மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் அது வெடித்துவிடும்.
5.பிறகு வைத்தியமே இல்லை… மரணம் தான்.

இதைP போன்று ஆசையின் அளவுகள் பெறும் பொழுதும்.., நமக்குள் வேதனை என்ற உணர்வு வரும் பொழுதும் இந்த மாதிரி ஆகிவிடுகின்றது.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.

பண்பும் பரிவும் ஈகையும் கொண்டு பிறருடைய துயரங்களை நாம் கேட்டுணர்ந்து அவர்களுக்கு நாம் உதவி செய்தாலும்
1.அவர்களுடைய வலிமையான உணர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவி
2.நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப நீங்கள் எண்ணினால் உங்கள் விலா எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அதனின் வலிமையை நாம் கூட்டிக் கொண்டே வந்தால் அந்த வலிமையால் நமக்குள் முந்திய நிலைகள் இருப்பினும் இப்பொழுது சேர்க்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அதற்கு அருகிலேயே (ஏற்கனவே பதிவான வித்திற்கு) உருவாகும்.

1.துருவ நட்சத்திரத்தின் கணக்குகள் கூடக் கூட ஏற்கனவே உள்ள தீமையின் நிலைகள் சிறுத்துவிடுகின்றது.
2.தீமைகளின் வலிமையைக் குறைத்து நன்மை செய்யும் கணக்காக மாற்றிக் கொள்கின்றோம்.
3.அதாவது தீமை செய்யும் வித்துக்களை நன்மை செய்யக்கூடிய வித்துக்களாக மாற்றுகின்றோம்.

உதாரணமாக குழம்பு வைக்கின்றோம் என்றால் மிளகாய் தனித்துக் காரமாக இருக்கின்றது, அதைப் போன்ற மற்ற பொருள்களும் அதனதன் சுவைகளைக் கொடுக்கின்றது. நாம் தெரிந்து கொள்கின்றோம்.

எல்லாவற்றையும் சமப்படுத்தி அதன் உணர்வுகளைச் சுவையாக மாற்றிக் கொள்கின்றோம்.

வேதனைப்படுகின்றான் கோபப்படுகின்றான் கொதிப்படைகின்றான் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான் ஏமாற்றுகின்றான் என்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டால் நமக்குள் பதிவாகி அதனின் உணர்வின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது.

அதை எல்லாம் நாம் மாற்ற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து அவைகளை மாற்ற முடியும். அதைச் சுவையாக மாற்றிக் கொள்ள முடியும்.

உங்களால் முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள்.

உயிருடன் ஒன்றி வாழ வேண்டும் என்று பிரியப்பட்டவர்களுக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்

 

வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்தில் உயிரணு உருவாவதற்குக் குருவாக இருக்கின்றது. மனிதனாக வளர்ப்பதற்கும் உயிரணுக்களை வளர்ப்பதற்கும் வியாழன் கோளே காரணமாக இருக்கின்றது.

அதனால் தான் வியாழன் கோளைக் “குரு” என்று சொல்வது. இதைப் போல்
1.27 நட்சத்திரங்களின் உணர்வுகளில் மனிதனான பின் ஒருக்கிணைந்து மனிதனை உருவாக்குகின்றது… அது தான் நவமி.
2.மனிதன் முழுமையாக ஆவதற்கு இந்த 27 நட்சத்திரமே மூல காரணமாக இருக்கின்றது.

எத்தனையோ செடி கொடிகளில் அதைச் சேர்த்தாலும் அது சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சேர்த்து இன்று சூரியன் எப்படி ஒளிக்கதிராக ஆனதோ அதைப் போல் மனிதனின் ஆறாவது அறிவு… “ஒளியாகத் தெளிந்திடும் இந்த உணர்வுகள்” நமக்குள் விளைகின்றது.

சூரியன் பாதரசத்தால் மோதி விஷத்தைப் பிரித்துவிட்டு ஆந்த அணுக்கதிரியக்கங்கள் ஒளியாக மாறி அது எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் அறிவாகவே அது இயக்குகிறது “இயக்க அணுக்களாக…”

இதைப் போல் தான் மனிதனின் நிலைகளில் ஆறாவது அறிவு (ஒளியின் அறிவாக) கார்த்திகேயா என்று வளர்ந்தது. இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் எனக்கு எப்படி இதை எல்லாம் தெரியச் செய்தாரோ இதைப் போல ஆயுள்கால மெம்பராக இருக்கப்படும் பொழுது
1.நாம் எப்படி வளர்ந்தோம்… இனி எப்படிப் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…? என்று
2.இதைத் தெரிந்து கொண்டால் நாம் எளிதில் அந்தச் சக்திகளைப் பெறலாம்.
3.இதை வெளியிலே அதிகமாகச் சொல்ல முடியாது… ஆயுள் மெம்பர்களுக்குத் தான் இந்த உண்மையைச் சொல்ல முடியும்.

இதைப் பதிவாக்கி விட்டால் உங்கள் நினைவு சப்தரிஷி மண்டலத்தின் பால் சென்று இந்த வாழ்க்கையில் அடுத்துப் பிறவியில்லா நிலை அடைவதற்கு உதவும். அதற்குத் தான் உங்களை ஆயுள் கால மெம்பராக ஆக்கியது.

என்றுமே கார்த்திகேயா என்று உங்கள் உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
1.அந்தத் துருவ நட்சத்திரம் எப்படி உருவானதோ
2.அதன் உணர்வை எடுத்து ஒளி உடலாகப் பெற முடியும்.

குருநாதர் காடு மேடல்லாம் அலையச் செய்தார். அவர் சொன்ன நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்ட பின் தான் உங்களுக்கும் இதைப் போதிப்பது.

குரு எனக்கு எப்படிக் காட்டினாரோ அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று தான் மெம்பர்களுக்கு “உயிருடன் ஒன்றி என்றும் வாழ வேண்டும் என்று பிரியப்பட்டவர்களுக்கு…” இதை நான் சொல்வது.

பிரியம் இல்லாதவர்களுக்குச் சொன்னால் இந்த உடலுக்கு என்ன வேண்டும்…? அது வேண்டும்… இது வேண்டும்… என்று தான் போவார்கள். யாம் சொல்வதை மறந்து விடுவார்கள்.

ஆகவே ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும் இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும்.

இந்தச் சூரியன் அழியலாம்… பிரபஞ்சம் அழியலாம். ஆனால் துருவ நட்சத்திரம் அழியாது அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழியாது.

அதனுடன் நாம் ஐக்கியமாக வேண்டும்…!

சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்… ஜெபத்தால் ஞானத்தைப் பெற வேண்டும்

 

ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு… விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்…!”

அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் காரண காரியங்கள் செயலாகின்றன.

அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்கு வருகின்றது.

அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்…” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.

யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.

நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திகள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக – நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.

சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.

கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்…
1.அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து
2.அதன் பின்னணியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.

பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை… விளக்கவொண்ணா அந்த அதிஅற்புதமான உயிரியல் தத்துவத்தை… “நடராஜராக…” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகாமகான்கள் தந்தனரோ அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி… வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு… பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் நடராஜரின் விந்தையே…!

பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் – சிதம்பர இரகசியம்…!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெற வேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.

அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.

இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை” என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. ஜெபத்தால் ஞானத்தைப் பெற வேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை…” என்ற சுவாசம் பெற வேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.

சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்… ஜோதியில் ஒடுங்கும்…!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.

சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும் சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்…!” (சரீர ரகசியம்). இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்…!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தையல் வேலை பார்ப்பவர்களும் சில வகையான பின்னல் ஆடைகளை நெய்பவர்களும் இருக்கின்றார்கள்.

நம்மிடம் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் அவர்கள் கைகள் தன்னாலேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்.

நேர்த்தியாகத் தைப்பார்கள்… பின்னுவார்கள். அவர்கள் தைத்த ஆடைகள் சீராக இருக்கும். பின்னல் ஆடைகளும் நன்றாக இருக்கும்.

ஆனால் பழக்கமில்லாதவர்கள் பார்த்துப் பார்த்துத் தைத்தாலும் பின்னினாலும் நேராக வராது. கோணல் மாணலாகப் போய்க் கொண்டிருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை நான் (ஞானகுரு) கடைப்பிடித்தேன். நான் படித்தது மூன்றாம் வகுப்புதான். அது கூட முழுமையாகப் படிக்கவில்லை.

குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார். அவர் சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

எப்படிப்பட்ட தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்க முடிகின்றது. எளிதில் தீமைகளை அகற்றும் நிலைகளைப் பெற்றேன். ஆகவே
1.எனக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்வதும்
2.உங்களுக்குள் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியாக அந்த அருள் உணர்வுகளை ஊட்டுவதும் என்னால் முடிகின்றது.

நீங்களும் பழகிக் கொண்டால் நிச்சயம் உங்களால் முடியும்.

உங்கள் வாழ்க்கையில் பல தீமைகள் வந்தாலும் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் அவர்களுக்கு உதவி செய்தாலும் அந்தத் தீமை என்ற உணர்வுகள் உங்களுக்குள் வளராது தடுக்கும் “உபாயத்தைத்தான்…” கொடுக்கின்றோம்.

இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் செயலாக்குகின்றது.

இன்று ஒரு கம்ப்யூட்டர் மூலம் ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகின்றார்கள். இயந்திர மனிதனை உருவாக்கியபின் அதை வைத்துப் பல வகையான வேலைகளைச் செய்ய வைக்கின்றார்கள்.

உதாரணமாக இங்கே குப்பைகள் விழுந்துவிட்டால் அதைக் கண்டபின்… “எலெக்ட்ரானிக் ஆகி” உடனே அந்தக் குப்பையை உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றது.

குப்பை இல்லை என்றால் பேசாமல் போய்விடுகின்றது.

அதே சமயத்தில் “தனக்கு ஆகாதவன் வருகிறான்…” என்றால் பணப் பெட்டியையோ மற்றதையோ திருடும் நோக்கத்துடன் வருகின்றான் என்றால் “அது எலெக்ட்ரானிக் ஆக மாற்றி” எதிரி வருகின்றான் இதை உடைக்கப் போகின்றான் என்று “அறிவிப்பு” கொடுக்கின்றது.

ஏனென்றால்… மனிதனால் செய்யப்பட்ட இயந்திரம் எலெக்ட்ரானிக் மூலம் இத்தகையை உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது. இதைப் போன்று தான்
1.உங்கள் உயிர் “எலெக்ட்ரிக்”.
2.நுகரும் உணர்வுகள் “எலெக்ட்ரானிக்” (உணர்ச்சிகளாக மாற்றுகின்றது உயிர்)

இருளை நீக்கி ஒளியான உணர்வாக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். அப்படிப்பட்ட உயர்ந்த அழுத்தத்தைக் கொண்ட மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அப்பொழுது உங்கள் நினைவினைச் சிறிது கூட்டினால் (எலெக்ட்ரானிக் அழுத்தத்தைக் கூட்டி) மகரிஷிகளின் உணர்வின் அழுத்தம் பிறருடைய பகைமை உணர்வுகளை உங்களுக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும்.

உங்களை இயக்குவது உயிர் ஈசன். நுகர்ந்த உணர்வின் தன்மை உருவாக்குவது ஈசன்.

உருவாக்குவது ஈசன் என்று தெரிந்து கொண்ட பின் வேதனையான உணர்வுகள் உயிரிலே பட்டால் நாம் எதைச் சேர்த்தோமோ அதன் வழியில் தான் அழைத்துச் செல்லும்.

ஆனால் அந்தத் தீமைகளை நீக்க வேண்டும் என்று எண்ணினால் அதன் வழியில் நம்மை அழைத்துச் செல்லும்.

நம் உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைக்க வேண்டும்

 

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட சரீரம் கிடைக்கப் பெற்ற இந்தக் கால கட்டத்தில் உண்மையை நாம் உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலை பெறும் வழி அறிந்திட வேண்டும்.

தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலை வழி அமைத்து… சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே சக்தி பெறச் செய்யும் மார்க்கம் அறிந்து… அந்த எண்ண வழித் தொடரில்
1.பசுக்களுக்காக வசுவா…?
2.வசுவிற்காகப் பசுக்களா..? என்ற கேள்வி எழுந்து பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான்
3.“கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.

கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக உணர்த்தினார் வியாசகர்.

1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.சரீர உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.அதற்கும் “காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6.இந்த ஜெப வழித் தொடர் வலுப் பெற்று விட்டால்
7.சரீரம் தனக்குகந்த பக்குவத்திற்கு உயரிய ஒளிக் காந்த சக்தியின் சக்தி வலுக்கூட்டும் செயல் தன்மையும்
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டிடவே
9.அதைக் காவியமாக்கிச் சொல்லாமல் சொல்வித்து
10.”உயிர் ஒளி சக்தி பெற்றுக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”

ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் ஜெபமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதனுள் வளரும் சக்தி நிலைப்படுத்திட “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”

அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெற வேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் பசுக்களாகிய உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!

தன் உயிர் சக்தியை ஒளி காந்த சக்தியாக உயர்த்துவதோடல்லாமல் முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் நிலை நின்ற அத்தனை உயிரணுக்களையுமே என்பது மறை பொருள்.

திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தச் சுவை குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு உணர்வுகளின் வழிதான் எண்ணம் என்ற நிலைப்படுத்திவிடும்.

உயர்ந்த எண்ணங்களின் வழியில்… தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரியும் உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்தப்பட வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.

உணர்வுகளின் வழிக்கெல்லாம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே. கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்பட்டதாகவும்
1.உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தியால்
1.“தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக என்பதன் கருப் பொருள் உணர்ந்து கொள்வதே நல்லது.

ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் ஒளி பெறும் தன்மைக்கு வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் என்றுமே பெற வேண்டும் என்று எண்ணுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானமாக்குங்கள்.

ஏனென்றல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் தீமை என்று வந்தால் அந்தத் தீமை புகாது தடுக்க அருளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள இது உதவும்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உங்கள் நினைவு முழுவதையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதனின்று வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெறுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் உங்களுக்குள் ஏங்க வைத்து அதை நுகரச் செய்து அந்த வலிமையை ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வலிமையின் துணை கொண்டு உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியை ஊட்ட முடியும்.

உங்கள் கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.துருவ நட்சத்திரம் எப்படி இருக்கும்…
2.அது எங்கே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் எங்கேயோ இருக்கின்றார். அவர் இந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்படுகின்றார் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்குள் பதிவாகின்றது.

அது நினைவாகும் பொழுது என்ன செய்கின்றது…? அவர் அங்கே “எப்படிச் சிரமப்படுகின்றாரோ..! என்ன செய்கின்றாரோ…?” என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள்ளும் இயங்குகின்றது.

இதைப் போல
1.துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கின்றது
2.உங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை
3.குருநாதர் எனக்குக் (ஞானகுரு) காட்டினார்… பார்த்தேன்.
4.அவர் காட்டிய நிலைகள் கொண்டு அதனின் ஆற்றலைப் பெற்றேன்
5.அந்த உணர்வினை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

பதிவானதை நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து உங்கள் கண்களாலேயும் பார்க்க முடியும். இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது
1.அந்த அருள் ஒளிகள் இங்கே படர்ந்து வருவதையும் உங்களால் பார்க்க முடியும்.
2.நீல நிற ஒளி அலைகள் சுழன்று வருவதைப் பார்க்கலாம்.
3.ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் “பளீர்..,” என்று வெளிச்சமாவது போல் தெரியும்.
4.ஏனென்றால் பழக்கப்பட்டோர் உணர்வுகளில் இதைப் பெற முடியும்.

பேசுவது நான் அல்ல. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வே இங்கே பேசுகின்றது.

அவர் ஒளி என்ற உணர்வைப் பெற்றார். அது உங்களுக்குள் வந்து அதைப் பெறும் தகுதி பெறக் கூடிய சந்தர்ப்பம் தான் இப்பொழுது சொல்லும் இந்தத் தியானம்.

ஏனென்றால் அவர் ஒளியான உணர்வை நீங்களும் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் பதிவாக்குவது.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்.
2.உங்கள் உடலிலுள்ள எல்லா நினைவுகளையும் ஒன்றாக இணைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.அதனின்று வரும் பேரொளியைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
4.மெதுவாகக் கண்களை மூடுங்கள்.
5.உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு இங்கே வரும் பொழுது உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமையான அணுக்களுக்குத் தீமையின் உணர்வுகள் போகாதபடி இப்பொழுது எடுக்கும் தியானத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுகின்றது.

உங்கள் உடலுக்குள் உள்ள சஞ்சலம் சலிப்பு வெறுப்பு கோபம் போன்ற உணர்வுகளால் விஷத்தின் தன்மையால் ஏற்பட்ட விஷத்தின் தன்மையால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு ஆகாரம் போகாது இப்படித் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

உங்கள் உயிர் என்ற உணர்வுகளில் நமது குருநாதர் காட்டிய அருள் உணர்வுகளை (மேலே சொல்லப்பட்டவைகளை) இதை ஏற்றி வைத்துக் கொண்டு வெளியிலே செல்லுங்கள்

1.விபத்துக்களிலிருந்து தப்பலாம்
2.தீமைகளிலிருந்து நோய்களிலிருந்து விடுபடலாம்
3.எதிரி என்று இருந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் இயக்காது தடைப்படுத்திக் கொள்ளலாம்
4.நமது உணர்வுகள் அவரை மாற்றவும் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையான சந்தர்ப்பமாக இருந்தாலும் அந்த நேரத்திலும் அதை மாற்றிட இதைப் போன்று தியானத்தைச் செய்யுங்கள்.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.

ஐந்து தலை நாகன் மீது நாராயணன் பள்ளி கொண்டு உலகையே இயக்குகின்றான்… எப்படி…?

 

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் துகள்களைச் சூரியன் தன் உணவாக எடுத்துக் கொண்டாலும் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் மோதி அதில் உள்ள விஷத்தைப் பிரித்து விட்டு… வெப்பம் காந்தம் என்று உருவாக்குகிறது.

இருந்தாலும் பலவீனமடைந்த விஷத்தைக் காந்தம் மீண்டும் கவர்ந்து கொள்கிறது.
1.வெப்பம் உருவாக்கும் சக்தி
2.காந்தம் கவரும் சக்தி (அரவணைக்கும் சக்தி)
3.விஷம் இயக்கும் சக்தி.

இப்படி மூன்று நிலைகளில் அது இயக்க அணுவாக உருவாகிறது.

ரேடியோ டி.வி. எந்தெந்த அலைவரிசைகளில் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றோமோ அதை இந்தக் காந்தம் கவர்ந்து வைத்துக் கொண்டால் அந்தச் சத்தினை வெளிப்படுத்தும் சக்தி விஷத்திற்கு உண்டு.

இதே போல் அந்த இயக்க அணு ஒரு மனிதனின் உணர்வைக் கவர்ந்து கொண்டால்…
1.உதாரணமாக கோபத்தை அந்தக் காந்தம் கவர்ந்து தனக்குள் இணைத்துக் கொண்டால்…
2.மற்ற மனிதர்கள் அதை நுகர்ந்தபின் “கோபத்தை இயக்கும் அணுவாக” ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதை நாம் நுகர்ந்து உயிரிலே பட்டால் கோப உணர்ச்சிகளைத் தூண்டி அந்தக் கோபமான உணர்வின் சத்து உடல் முழுவதற்கும் பரவி எண்ணம் சொல் செயல் என்று இயக்குகிறது.

இதுவும் சூரியனிலிருந்து வந்தது தான்.

உயிரின் இயக்கம் ஈசன்… அதனின் துடிப்பில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் இலட்சுமி…!

கோபமான உணர்வை அந்த மனிதன் வெளிப்படுத்தும் போது இந்த இயக்க அணு அந்தக் கார உணர்ச்சிகளை நுகர்ந்து எடுத்துக் கொண்ட பின் அதை நாம் நுகர்ந்தால் உயிரிலே பட்டு அதே கோபத்தை இயக்கும்… அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை அடைகிறது.

உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் நம் உடலையே இயக்கும் அந்தச் சக்தி பெறுகிறது. ஆகவே நம் உயிரின் இயக்கத்தை நாம் புரிந்து கொள்வதற்குச் “சங்கு சக்கரதாரி…” என்று காட்டுகிறார்கள்.

கோபமான உணர்வுகள் உயிரிலே பட்ட பின்
1.அந்தக் கோபத்திற்குண்டான சப்தங்களும்… அந்த உணர்ச்சிகள் வேகமாக இயக்குவதும்…
2.ஒரு மிளகாயை வாயிலே போட்டால் ஆ… என்று அலறுவது போல
3.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உடலில் இப்படிச் செயலாக்குகிறது.

உயிரின் இயக்கமும் இந்த மூன்று நிலையில் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் சூரியன் விஷத்தைப் பிரித்துவிட்டு இயக்க அணுவாக மாறி அந்தக் கோபமாக வெளிப்படும் உணர்வின் சத்தைக் கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்… அதனுடன் இணைந்து கொண்டால் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும்… இந்த விஷம் அந்தக் கோபமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது புலனறிவு ஐந்தாக மாறுகின்றது.

இதைத் தான் சூரியன்… “ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இந்த உலகையே இயக்கிக் கொண்டுள்ளான்…!” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
1.எல்லா உணர்வுகளையும் இயக்க இந்த விஷமே மூலமாக இருக்கின்றது என்பதனை நாம் அறிந்து கொள்ள ரூப வடிவினைக் காட்டி
2.சூரியனின் இயக்கத்தையும் உயிரின் இயக்கத்தையும் காரணப் பெயரை வைத்து உணர்த்துகின்றனர்.

ஆகவே கோபமான உணர்வை நுகரும் போது அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் எப்படிப் பாய்கிறது…? என்பதனை குருநாதர் உணர்த்துகின்றார்.

அந்தக் கோபமான உணர்வுகள் உயிரிலே பட்ட பின் சங்கு சக்கரதாரி “சப்தமாகி…” அந்த உணர்ச்சிகள் எண்ணம் சொல் செயல் என்று இந்த உடலை இயக்குகிறது என்பதைச் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.

இந்த உடல் ஒரு அரங்கம். கோபமான உணர்ச்சிகள் உயிரிலே பட்ட பின் அரங்கநாதன்…! கோபமான நாதத்தை உண்டாக்குகிறது. அந்தக் காரமான உணர்ச்சிகள் நம்மை இயக்குகிறது… ஆள்கிறது… “ஆண்டாள்” நம்மை ஆள்கிறது.

அதாவது நாம் எண்ணி எடுத்த அந்தக் கோபமான உணர்ச்சிகள் நம்மை ஆளத் தொடங்குகிறது.

அந்தக் கோபப்படும் மனிதனை உற்றுப் பார்க்கப்படும் போது அந்த இயக்க அணு நமக்குள் வந்து அது இயங்குகிறது. ஆனால் அது ஆள்கிறது.

அதே உணர்ச்சிகள் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறுகின்றது. உமிழ் நீராக மாறும் போது அந்தக் காரமான உணர்ச்சிகள் நம் சிறு குடல் பெரும் குடலில் இருக்கக்கூடிய அணுக்களுடன் இணைகின்றது.

அப்போது என்ன நடக்கிறது…?

ஒரு மிளகாயை வாயிலே போட்டால் எப்படி நாம் அலறுகின்றோமோ… அதே போல் நாம் சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்க முடியாதபடி எரிச்சலூட்டும் உணர்வுகளாக அங்கே உருவாகின்றது.
1.வயிற்றிலே எரிச்சல்…
2.இதன் உணர்வு உடல் முழுமைக்கும் படரும் போது மற்ற உறுப்புகளில் எரிச்சல்.

இப்படி நாளடைவில் இயங்கத் தொடங்கினால் இரத்தக் கொதிப்பாக வந்து விடுகின்றது. எதை எடுத்தாலும் எரிச்சலாகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சூரியனிலிருந்து வந்த இயக்க அணு அந்தக் கோபக்காரன் உணர்வை எடுத்துக் கொண்ட பின் அதை நுகரப்படும் போது அந்தக் கோபத்தை நமக்குள் இயக்கினாலும் அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறும்.

உமிழ் நீர் ஆகாரத்துடன் கலந்த பின் ஆகாரம் ஆவியாக மாறி அதனின் இயக்கமாக மாறி இரத்தமாக மாறப்படும் போது அந்த இயக்க அணு ஜீவ அணுவாக மாறுகின்றது.

ஜீவ அணுவாக மாறிய பின்
1.அந்தக் கோபத்தால் உருவான அணுவின் மலம் எங்கெல்லாம் படுகின்றதோ அங்கெல்லாம் எரிச்சல் வருகிறது…
2.குருநாதர் இதை எல்லாம் எம்மை நேரடியாக அறியும்படி செய்தார்.

சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் ஒரு கோபப்படுவோரையோ வெறுப்படைவோரையோ பார்த்து… கோபத்தையும் வெறுப்பையும் நுகர்ந்து விட்டால் நம் உடலில் எப்படித் தீமைகள் விளைகின்றது…? என்பதைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.

இதை எல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தாய்மையின் சக்தியால் தான் உயர் ஞானம் பெற முடியும்

 

தாய் தந்தை குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட… தீதெண்ணச் செயலுக்குச் சென்றிடாவண்ணம் ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திட பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே ஜெபத்தில் வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.

அன்பென்னும் வசமாக… பரிவு என்ற இரக்க குணம் காட்டி… பாசம் கொண்ட செயல் மூலம்…!
1.உயிரை நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய் சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில் செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்…!”

தாய் சக்தி என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது என்பது அன்பு கொண்டு தான்.

அன்பு பரிவு பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால் ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.

அந்த அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம் கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.

ஆணின் தன்மையில் பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப் புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம் கொண்டாலே செயல் வேறாகுமப்பா..!

அதாவது
1.(POSITIVE NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண் என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம் சூனியமாகிவிடும்…!)

பெண்மை குணங்களை அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்…?

தன்னுள் திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால்
1.போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை…”
2.மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.

அத்தகைய செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான் வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் “தாய் சக்தியையும் இழந்து…” அவசரம் ஆத்திரம் என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான்.

இந்த உண்மையை உணர்ந்து கொள்வது மிகவும் நலம்.

ஆகவே உயர் ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.

ஆனால் உயர் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே தீருவேன்…! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த குணம் கொண்டே சம நிலை பெற வேண்டும்.
3.அன்றைய சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.

பெண்மையின் குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப் பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும் அதுவும் ஒரு வகை தான்.

ஆகவே சிவ சக்தி என்ற குணங்களால் தான்… நல்லெண்ணம் கொண்ட… நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.

ஆணவம் அகங்காரம் என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால் மௌனம் கொண்டு
1.ஞானம் வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.ஞானத்தின் முதிர்வு நிலையை எய்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்கு மனம் பக்குவப்பட வேண்டும். அதற்காக வேண்டி.., “வாருங்கள் போகலாம்..,” என்று சொல்லி உங்களை நான் காட்டுக்குள் அழைத்துச் செல்ல முடியுமா…?

அப்பொழுது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள்…? “சாமியார் வருகிறார்” என்றால் ஒரு வேளை குடும்பத்தை விட்டு இவரும் “ஓடி விடுவாரோ… என்னமோ…!” என்று சொல்லிப் பெண்கள் பேசத் தொடங்குவார்கள்.

இந்த மாதிரியெல்லாம் இன்று உலக நிலைகள் இருக்கின்றது.

ஆனால்… உங்கள் உடலே ஒரு காடு. அந்தக் காட்டிற்குள் என்னென்ன நடக்கின்றது என்று தான் இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

காட்டிற்குள் இராமனும் சீதாவும் செல்லும் பொழுது குகன் என்ன செய்கின்றான்…? நீரைக் கடந்து செல்வதற்குப் படகு கொடுக்கின்றான். அதனுடைய விளக்கம் என்ன…?

“நாம் எதை எண்ணுகின்றோமோ…” அந்த உணர்வுகள் அனைத்துமே “இரத்தத்தில் தான்” கலந்து செல்கின்றது.

நல்ல இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நாம் போகக்கூடிய இடத்திற்கு போகின்றோம். அதனால் தான் குகனைப் பற்றிச் சொல்கின்றார்கள்.

1.நாம் எடுக்கும் உணர்வுகளிலிருந்து இயங்கி
2.இந்த “இரத்தம்”
3.நம் உடலில் எவ்வளவு பக்குவமாகக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது…?
4.அங்கங்கே அவரவர்களுக்கு வேண்டிய இடத்தில் கொண்டு போய் இந்த உணவைக் கொடுக்கின்றது.
5.உடலிலுள்ள எல்லாவற்றிற்கும் உணவு இந்த இரத்தத்தின் வழியாகத் தான் செல்கின்றது என்பதைப் பச்சையாகவே காவியத்தில் காட்டுகின்றார்கள்.

இதையெல்லாம் சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

ஆனால் இங்கே “பட்டிமன்றம்” வைத்துப் பேசினார்கள் என்றால் என்னவெல்லாம் பேசுகின்றார்கள்…?

இராமனைப் பற்றிப் பேசுபவர்கள் இராமனுக்கு.., “எல்லா உதவியும்” செய்தது… யார் தெரியுமா…?

குகன்.

அந்த இடத்தில் வான்மீகி எழுதிய காவியத்திற்கு இவர்கள் கற்பனை கட்டுகின்றார்கள்.

ஒவ்வொரு ஞானியும் எத்தனையோ காவியங்களைப் படைத்துள்ளார்கள். அதை இன்று பட்டிமன்றம் வைத்து வாதித்து இவர்கள் ஒரு புத்தகத்தை எழுதுகின்றார்கள்.

இன்று இருப்பவர்கள்.., அதைப் படிப்பவர்கள் எல்லோரும் மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள் என்கிறார்கள்.

அதே மாதிரி கந்த புராணத்திலும் சரஹணபவா.., குகா.., இங்கேயும் குகனாகின்றது. கந்தா – வருவதை அறிந்து; கடம்பா – உருவாக்கத் தெரிந்து கொண்டவன் – இந்த ஆறாவது அறிவு முருகன்.

1.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மை எழுப்பும் பொழுது
2.குகன் அந்த நல்ல வழிக்குக் கொண்டு போகின்றான்.

இராமாயணத்திலும் குகனைப் பற்றிக் கொடுக்கின்றார்கள். இங்கே கந்த புராணத்திலும் அதே தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு காவியத் தொகுப்பிலும் குகன் முக்கியமானவனாக வருகின்றான்.

இராமயாணக் காவியத்தில் இராமன், குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான் என்று உரைத்திருப்பார்கள். குகன் ஆற்றில் படகை ஓட்டி வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.

ஆக நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும், நம் எண்ணங்களால் உருவாக்கிய உணர்வுகள் எதுவோ அவைகள் நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை உணர்த்துவதற்குத்தான் இராமயாணத்தில் இராமனின் நண்பன் குகன் என்று உரைத்தார்கள்.

1.நமது இரத்த நாளங்களில் நட்புள்ள உணர்வுகளாகச் சேர்த்து விட்டால்
2.நமக்குள் வெறுப்பை உண்டாக்கும் நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை
3.நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம் என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.

நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வைக் கலந்து அதன்வழி செல்லப்படும் பொழுது நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது.

தீய உணர்வின் அணுக்கள் நல்ல உணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும். ஏனென்றால் அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது, நல்ல அணுக்கள் மடியும்.

இதனை உணர்த்துவதற்குத்தான் முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கினார்கள். ஞானிகளால் உருவாக்கப்பட்ட நம்முடைய காவியங்கள் தெளிவானது. அதன் மூலங்களை நாம் அறிந்து கொண்டால் விண் செல்வது மிகவும் சுலபம்.

அருள் ஞானச் சக்கரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சக்திகள் சாதாரணமானவை அல்ல

 

யாம் (ஞானகுரு) அகஸ்தியனைப் பற்றித் தொடர்ந்து உபதேசிக்கின்றோம். காரணம் ஆயுள் கால மெம்பர்கள் இதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

முந்தி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு வந்தோம். மெம்பர்களுக்கு எப்படியும் முழுமையாகச் சொல்லித் தான் ஆகவேண்டும். அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சித் தான் ஆக வேண்டும் என்பதற்கே பரிபூரணமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அருள் ஞானச் சக்கரத்தைச் “சும்மா வாங்கிக் கொண்டு போய்…” நானும் பூஜை செய்தேன் எனக்குக் கிடைத்தது என்று அதைச் செய்வதில் பலன் இல்லை.

1.சக்கரத்திற்கு முன்னாடி நீங்கள் நின்றாலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்…
2.அதற்குத் தான் சக்கரத்தைக் கொடுப்பது
3.குருபீடத்திற்கு அடியில் தான் அந்தச் சக்கரங்களை எல்லாம் வைத்து
4.அதிலே எல்லாச் சக்திகளையும் பரப்பி இப்போது உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அகஸ்தியன் தாயின் கருவிலிருக்கும் போது பெற்றது தான் அனைத்து நஞ்சினை வெல்லும் சக்திகளும். தாய் சுவாசித்த நஞ்சை வெல்லும் பல பல தாவர இனங்களின் மணங்களை இரத்தத்தின் வழி நுகர்ந்து அகஸ்தியன் பூர்வ புண்ணியமாகப் பெறுகின்றான்.

அதை எல்லாம் பெற்றுப் பிறந்த பிற்பாடு கொசுவோ பாம்போ தேளோ அவன் அருகில் வருவதில்லை. அதைப் பார்க்கும் போது சுற்றி இருப்பவர்கள் அவனைக் “கடவுளின் பிள்ளை” என்று போற்றும் நிலை வருகிறது.

அகஸ்தியன் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைய அடைய…
1.மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைக் கண்டாலே ஒடுங்கி நிற்கிறது.
2.செடி கொடிகளும் இவன் மணம் பட்டாலே இரைச்சலாகி ஒடுங்குகிறது
3.அப்போது அதன் குணங்களை முழுமையாக அறிகின்றான்.

வேப்பிலையைப் பச்சையாக நான்கு நாளைக்குச் சாப்பிட்டால் நம் உடலிலிருந்து வேப்பிலை வாசனை வரும். கத்திரிக்காயை இரண்டு நாள் சாப்பிட்டால் மூன்றாவது நாள் அந்த மணம் வரும்.

வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் அடுத்த நிமிடமே அந்த வாசனை வரும். சாப்பிட்டு அந்த அணுக்களில் சேர்ந்த பின் அந்த வாசனை வருகிறது.

இதை எல்லாம் அன்று அகஸ்தியன் அறிந்து முதலில் வேக வைக்கும் பழக்கத்தைக் கண்டுபிடிக்கிறான். இயற்கையில் விளைந்ததை வேக வைத்துவிட்டு அதனுடன் பல நல்ல பொருள்களைச் சேர்த்து ருசியாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டு வருகின்றான்.

அதே சமயத்தில் மனிதனுக்குகந்த தாவரங்களைப் புதிதாக உற்பத்தி செய்கிறான். தன் மூன்றாவது வயதில் இதைச் செய்கிறான். இன்று நாமும் பத்திரிக்கையில் படிக்கின்றோம் அல்லவா… மூன்று வயதுக் குழந்தை என்னென்னமோ செயல்படுத்துகின்றது என்று.

தாய் கருவில் இருக்கும் போது தாய் நுகரும் உணர்வுகள் மூலம் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் இவை எல்லாம். சில சந்தர்ப்பங்களில் அபூர்வமான எத்தனையோ செயல்கள் அதனால் வந்துவிடுகிறது.

அகஸ்தியன் இதை எல்லாம் கண்டுணர்ந்து புதிய புதிய பயிரினங்களைக் கண்டுபிடிக்கின்றான்.
1.இயற்கையில் உருவான கனிகளைக் கூட
2.வேக வைத்துத் தான் அகஸ்தியன் சாப்பிட்டான்.

இன்று நாம் கனிகளைப் பச்சையாகச் சாப்பிடுகின்றோம். ஆனால் அதை வேக வைத்துவிட்டால் அதில் உள்ள மற்ற அணுக்கள் செத்து விடுகிறது. அதனின் ருசி வேறாக இருக்கும். அதைச் சாப்பிடலாம்.

இது அகஸ்தியனால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே… வேகா நிலை பெற்ற அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகினால் அவனைப் போன்றே நாம் மெய் ஞானியாகலாம்.

மறைக்கப்பட்ட மூலச்சக்கரமும் அதனின் தத்துவ இரகசியமும்

 

மனித சரீரத்தின் பஞ்ச உறுப்புகளில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி ஓடுகின்ற நாடி குய்யம் என்றிட்ட மூலாதார நாடியுடன் இணைந்து செயல் கொள்கிறது.

தீய எண்ணங்களின் குணங்களும் நினைவை மறக்கச் செய்யும் ஆத்திரமான செயல்களினாலும் வாழ்க்கை நடைமுறையில் அந்த எண்ணமே தீவிரமாகச் செயல் கொள்ளும் காலத்தில் மூலாதார உஷ்ணத்தினால் தாக்கப்படுவது அந்த நாடியே…!

எண்ண எதிர்பார்ப்பு அற்ற நிலையில் கூட அதிர்ச்சியால் ஏற்படும் அதி பய உணர்வே
1.இந்த நாடியின் செயலைச் செயல் நடத்திடும்
2.நாபிக் கமல நீர் சக்தி நாடி கலந்து செயல்படும் இடத்தில் தடை ஏற்பட்டு
3.ஒலி ஏற்படுத்திடும் செயல் தன்மைகளை மாற்றிவிடும்.

கோலமாமகரிஷி தீய குணங்களின் செயலையே மாற்றித் தாய் சக்தியின் அருளாசி பெற்றுத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொண்ட உயர் ஞான வளர்ப்பினை
1.மூகமாகச் செயல்படும் திறத்தை… அந்த இரகசியத்தை
2.தாய் சக்தியாகப் பெற்ற பேராற்றல் ஞான வளர்ப்பை
3.”அவரது அனுமதியுடன்…!” அந்த வழி முறைகளாகச் சிறிது கோடி காட்டுகின்றோம்.

கோலமாமகரிஷி தன்னை உணர்ந்து கொண்ட அறிவின் தெளிவில்
1.உயிராத்மாவின் சக்தியைக் குழந்தையாகப் பாவனைப்படுத்தி
2.எண்ணத்தில் தன்னையே தாயாக்கிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியின் வளர்ப்பிற்கு அன்பு கொண்டு ஜெப ஆகாரம் ஊட்டிட்டாரப்பா..!
4.இத்தகைய தனித்துவத் தன்மையை விளக்கிட்டாலும் உண்மையின் கருப்பொருளை அறிந்து கொள்வார் இல்லையப்பா…!

பூமியே சிவமாகவும் பூமியின் இயக்கமே சக்தியாகவும் உயர் ஞான சிந்தனையாகத் தெளிந்து தன் சரீர கதியிலும் தொடர்பு கொண்டே உணர்ந்து கொண்டதிலும் தாய் சக்தியின் ஆக்கம் தன் நிலையுயர்த்தக் கூட்டிக் கொண்டால் எல்லா உண்மை நிலைகளையும் உணர்ந்து கொண்டிடலாம்.

சமூக அமைப்பில் இந்தச் சக்திதனை நாடி வரும் அனைவரும் அதைப் பெற்றிட வேண்டும் என்ற அன்பு கொண்டு சூட்சம நிலையில் மூலச் சக்கரமாக உருவாக்கினார் ஆதிசங்கரர் உடலினின்று செயல்பட்ட கோலமாமகரிஷி.

அதாவது “சர்வக்ஞ பீடம் என்ற மூலச்சக்கரமாக…” ஆதிசங்கரரால் மூகாம்பிகை கோவில் அமையப் பெற்றிருக்கும் இடத்திலிருந்து நேர் கிழக்காக “குடசாஸ்திரி” என்று அழைக்கப்படும் மலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

பின் அந்த அமைப்பையே கவர்ந்து சென்றிடும் அரசர்களின் அதி ஆசை செயல்களுக்கு அகப்பட்டுவிடாமல் அந்த மூலச்சக்கரம் மறைக்கப்பட்டது. அந்த மலையில் ஒரு புறத்தே அமையப் பெற்ற குகைக்குள் பேழை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது.

மூகாம்பிகை அம்மன் சக்தியாலும் கோலமாமகரிஷியால் அருள் ஒளி பாய்ச்சிடும் செயலுக்கே ஆதிசங்கரரே அவருடன் செயல்படுகின்றாரப்பா…!

அந்தப் பகுதியில் அமைந்துள்ள மலைகள் அனைத்திலும் இரும்புக் கனி வளங்கள் நிறைந்துள்ளது. வனப் பகுதியின் மையத்தில் மலைகளால் சூழப்பட்டு யாரும் நெருங்கிடாவண்ணம் சரிவின் தாழ்வறையில் ஒரு “காந்தக் கிணறும்…” உண்டு.

மூலச் சக்கரம் வைக்கப்பட்டுள்ள குகைக்கும் மூகாம்பிகைக் கோவிலுக்கும் தொடர்பு கொண்ட ஒரு நீண்ட நெடிய குகை வழிப்பாதை உண்டு. சுயம்பு காந்தலிங்கம் இந்தக் குகையின் வழிப் பாதையில் நீண்டே செல்கின்றது.

லிங்கத்தின் உச்சியில் காணப்படும் தங்க ரேகை குகை வழிப்பாதையில் நீண்டு படர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சும்மா… “சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்…” என்று சிலர் எண்ணுவார்கள். அவர்களுக்குத் தான் இந்த விளக்கம்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம். ஆனால்.. “சாமி என்ன சொன்னார்…? தெரியவில்லையே..,” என்று விட்டுவிட்டால்
1.நீங்கள் பிடித்துக் கொள்வதற்குத்தான் மீண்டும் சொல்வது.
2.இரண்டாவது உங்களுக்குள் மீண்டும் பதிவு செய்வதற்கும் நினைவாற்றலைக் கூட்டுவதற்கும் தான்
3.இதைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

சாமி.. “சும்மா” திரும்பத் திரும்பச் சொல்கிறார்… “சொன்னதையே” சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்ற நிலையிலே சிலர் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

யாம் சொல்வது இத்தனையும் கேட்கின்றீர்கள். “என்ன சொன்னார்…?” என்று திரும்பக் கேட்டால் என்ன சொல்வார்கள்…?

சொன்னார்… கேட்டேன்…! என்று தலையைத்தான் சொறிவார்களே தவிர முழுமையாகச் சொல்லத் தெரியாது.

நூற்றுக்கு ஒன்று இரண்டு பேர்தான் இருக்க முடியும். நூற்றுக்கு ஒன்று இரண்டு பேர் கூடக் கஷ்டம் தான்.

நானே இப்பொழுது சொல்லிவிட்டுத் திருப்பி என்ன சொன்னேன் என்று கேட்டால் எனக்கே தெரியாது.

இதைப் போல “உணர்வின் நினைவாற்றல்…, அதனுடைய செயல்கள்” இவ்வாறு இருக்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பள்ளியிலே படிக்கும் பொழுது விஞ்ஞான அறிவைக் கற்றுக் கொண்டால் அதன் அறிவின் துணை கொண்டு தான் வாழ வயிற்றுக்காக எத்தனையோ பொருள்களைச் செய்கின்றார்கள்.

விஞ்ஞான அறிவினால் எத்தனையோ பல இயந்திரங்களையும் கருவிகளையும் உருவாக்குகின்றோம். ஒருவர் பேசுவதை உலகம் முழுவதுமே பல ஆயிரம் பேர் எளிதில் கேட்கும் அளவிற்கு வைத்திருக்கின்றோம்.

ஆனால் மெய்ஞானிகளோ…
1.பலருடைய உணர்வுகளைப் பதிவு செய்து
2பல கோடிக்கணக்கோரின் நிலைகளையும் அறியக்கூடிய அந்த ஆற்றலால் அந்த உணர்வின் தன்மை இயக்கப்படும் பொழுது
3.”தீமைகளை அகற்றும்” வலிமை பெற்றவர்கள் மெய்ஞானிகள்.

அதை நாம் அனைவரும் பெற முடியும். “உங்களை நம்ப வேண்டும்…” என்னால்… எப்படி முடியும்…! என்று சோர்வடைய வேண்டியதில்லை. உங்களுக்கு என்ன தெரியப் போகின்றது…? என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

1.இராமலிங்க அடிகளோ படித்தவரல்ல… ஞானத்தை எழுதினார்.
2.இராமகிருஷ்ண பரமகம்சரோ அதிகமாகப் படித்தவரல்ல… அவர் எழுதினார்.
3.வான்மீகியோ படித்தவரல்ல. ஆக உலக எண்ணத்தின் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தவர். எண்ணங்கள் எப்படி உருவாகின்றது…? என்று உணர்த்தியவர்.
4.வியாசகரோ படித்தவரல்ல. மிகவும் முரடன். கடலிலே மீன் பிடித்து வாழ்பவன். அவனுடைய சந்தர்ப்பமே மெய் உணர்வை ஊட்டி மெய் உலகின் தன்மையில் வேத சாஸ்திரங்களை எது என்று (இன்று இவர்கள் சொல்லும் வேதம் அல்ல) மெய் உணர்வின் உணர்வுகள் எண்ணங்களாக அது எப்படி இயக்குகின்றது…? என்ற நிலைகளை உணர்த்தினார்.

பொதுவாகப் பார்க்கும்போது இராமகிருஷ்ண பரமஹம்சரோ வான்மீகியோ வியாசகரோ இவர்கள் அனைவரும் கல்வியில் நாட்டம் இல்லாதவர்கள்.

இதைப் போன்றுதான் வரிசைப் படுத்திப் பார்க்கும்போது நம் குருநாதருக்கும் கல்வி அறிவில்லை. குருநாதர் கற்று வந்தவர் அல்ல. எழுதவும் தெரியாது.

எந்தப் பாறையில் எழுதினாலும் சும்மா இரண்டு கோடு போட்டுவிட்டுப் போய்விடுவார். இதில் நான் என்ன எழுதி இருக்கின்றேன்..? என்று கேட்பார்.

ஏதும் சொன்னால் கோபித்துக் கொள்வார். கோபத்திற்குள், அவர் கண்ணுக்குள் இருந்து… “ஒரு விதமான ஒளி வரும்…” அந்த ஒளிகள் வரும்போது என்னை அறியாமலே உடலை இயக்கும். அந்த இயக்க உணர்வுகள் வரும்.

இன்றிருக்கும் பாட நிலைகளில் உள்ளது போன்று புத்தகத்தில் எழுதி வைத்து விட்டுப் படித்தால் முடியுமோ…? மனப்பாடம் செய்தவர்கள் புத்தகத்தையே மனப்பாடம் செய்திடுவார்கள்.

திருப்பி “மூலக்கூறுகளைக் கேட்டால்… தெரியாது”.

இந்த மகரிஷியின் உணர்வைப் பதிவு செய்ததை மீண்டும் அந்த உணர்வு வரப்படும்போது அந்த உணர்வின் ஞானமாக வளர்வதும் வளர்த்துக் கொள்வதும் “கல்வி ஞானம் இல்லாதவர்கள்” அதிகமாகப் பெறுகின்றார்கள்.

அவர்கள் அந்த உணர்வோடு ஒன்றி வளர்க்கும்போது அது வளர்கின்றது.

1.மெய்ஞானிகள் கண்ட உணர்வினைக் கவரும்போது
2.மெய்வழி எடுத்து நமக்குள் தீமைகளைப் பிளந்து
3.அந்த மெய்ப்பொருளுடன் ஒன்றச் செய்கின்றது.

ஆகவே தான் யாம் உங்களுக்குப் பாட நிலையாகக் கொடுக்காமல் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்த நிலைகளை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் தீமைகள் வரும் நேரம் இந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கினால் அதைக் கவரும் திறன் உங்களுக்கு வருகின்றது. அப்பொழுது அந்த மூலக்கூறை அறியும் திறன் உங்களுக்கு வரும்.

படித்ததை வைத்து குற்றங்களையும் குறைகளையும் அறியலாம். ஆனால் அறிந்தது நமக்குள் வளராமல் தடுக்கவில்லை என்றால் நமக்குள் அது விளைந்து விடும்.

ஆகவே, அந்த மெய்ஞானிகள் காட்டிய வழியில் நாம் சென்றால் விண் செல்லலாம். பிறவா நிலை என்ற நிலையை மற்றவர்களையும் அடையச் செய்யலாம்.

உள் நின்று (மௌனமாக) இயக்கும் சக்தியே “மூகம்…!” என்ற உயிரின் சக்தி

 

ஒலி ஒளியால் விண்ணிலே உதித்த ஒரு உயிரணு பூமிக்குள் வந்து ஜீவன் என்ற உயிராத்மாவாக மனிதன் என்ற ஜீவ பிம்பச் சரீரம் பெற்றிட்டதின் உண்மை நிலை என்ன…?

1.ஞானம் கொண்ட தியானத்தின் வழி முறைகளைக் கடைப்பிடித்து
2.ஞானியாக உருவாக உயர் ஞான வளர்ப்பில் ஓ…ம் என்ற நாதத்தைக் கூட்டி
3.ஒலி நாதமே ஒளி சக்தியாக்கும் சூட்சமத் தொடர்பின் நிலை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் எண்ணத்தின் வழியாக வரும் விஷ வித்துக்களை நீக்கிடவே “மூகம்” என்ற செயலாக அனுபவ ஞானம் கொண்டு
1.கோலமாமகரிஷி காட்டிய மூகாம்பிகையின் பொருளறிந்து செயல் கொள்ள வேண்டும்.
2.“தெய்வம் நின்று கொல்லும்…!” என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்தல் வேண்டும்.

நம் உயிராத்மா தெய்வ சக்தியாக வளர்ச்சி கொள்ள அறிவின் ஆற்றல் விவேகம் கொண்டு செயல்பட்டு ஜீவகாருண்யம்… ஒழுக்கம்.. என்ற நற்பண்புகளால் உண்மைப் பொருளை ஈர்த்துக் கொள்வதே “தியானத்தின் மூலமாகும்…!”
1.அறிவின் தெளிவே ஆக்கம்.
2.மற்ற செயல்கள் அனைத்தும் தேக்கம் தான்…!

மனிதனின் எண்ணத்தில் “தனக்குள் இயக்கும் குணங்களை அறிந்து கொண்டிடும் பகுப்பாற்றல் (பிரித்து அறியும்) செயல் கொண்டான்…” என்றால் மனிதன் ஞானத்தை உணர்கின்றான்…! என்று அர்த்தமாகும்.

அவ்வாறு தன்னை உணர்ந்து கொள்ளும் நிலையில் குணங்களின் எதிர் மோதல்களைத் தெளிந்து ஞானி ஒருவன் கருத்தில் நற்குணங்களைத் தனக்குள் மேலும் உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான்
1.தீமையான குணங்களின் கேடுகளை உலகினுக்கு உணர்த்தி
2.உண்மைப் பொருளாக… மெய்ப் பொருளாகத் தானே (மெய் ஞானி) நிலை நின்றான்.

தீமை செய்யும் குணங்கள் மனிதச் சரீரத்தில் அறியாத நிலைகள் ஈர்க்கப்பட்டு அது பதிவு நிலை பெற்று விட்டால் அந்தப் பதிவின் தொடரில் அதே எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் சுவாச ஓட்டச் செயல் நிலையால் உடலில் என்ன நடக்கின்றது…?
1.தீதெண்ணப் (தீமையான எண்ணம்) பதிவு வலுவாகி..
2.அது வீரியமாக நம் உடலுக்குள் உரமே(ற்)றிக் கொண்டு
3.அதனின் எதிர் மோதலாக நம் சரீரத்தையே பிணிக்குள் சிக்கச் செய்து விடுகின்றது.

இதையே தத்துவப் பொருளாக… அந்த அசுர சக்தியின் எண்ண வலு வீரியத்தை அடக்கிட
1.மூகம்… என்ற மூகாம்பிகைச் சக்தி என்பதே சூட்சமப் பொருளப்பா…!
2.மனிதச் சரீரத்தில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி
3.மூலாதார நாடியுடன் (புருவ மத்தியில்) இணையும் ஓர் நாடி செயல்படும் விதம் உண்டு (ஃ).
4.அந்த நாடியின் செயலால் நமக்குள் வரும் அத்தனை அசுர சக்திகளையும் அடக்கிட முடியும்…! என்பதே
5.கோலமாமகரிஷி ஆதிசங்கரர் உடலில் செயல்பட்டு மூகாம்பிகையாக (மூலச்சக்கரம்) உருவாக்கியதன் உண்மைத் தத்துவம் ஆகும்

பஞ்சேந்திரியங்களால் உருவானது தான் “மனித சரீரம்” என்று செப்பி அந்த ஜீவ பிம்ப உடல் செயல்படும் விதம்… அறிவின் உயர் ஞான வளர்ப்பாக உணர்ந்து தெளிந்திட்டவர்கள் நம்முடைய சித்தர்கள்.

உலக ஜீவன்களில் பகுத்தறியும் திறன் கொண்ட… “மனித குலம்…”
1.தன்னைத் தான் உணர்ந்து
2.தன் தெய்வீகத் தன்மை நிலை அறிந்து கொண்டிட
3.வளர்ச்சியின் வளர்ப்பாக உயர்ந்திட
4.உலகினுக்கு எடுத்துக் காட்டாகத் தாங்களே நிலை நின்று போதனைப்படுத்திக் காட்டிட்ட வழி முறைகளில்
5.தங்களை உணர்ந்து கொண்ட அக்கணமே தான் யார்..? தன் செயற்பாடு என்ன..?
6.இறைச் சக்தியின் கூத்தாட்டும் செயல் என்ன…? என்று சிந்தித்துத் தெளிந்து
7.தான் உணர்ந்ததை எல்லாம் வெளிக் கொணர்ந்து அறிவின் கருவூலமாக ஞானப் பொக்கிஷமாக அதையே உலகினுக்கு ஈந்து
8.மறை பொருளாக மனித குலச் சிந்தனையைச் சுய வளர்ப்பாக வளர்ச்சி கொள்ளச் சூசகப்படுத்தியவர்கள் தான் “சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்…!”

அவர்களின் அருளாசி பெற்று அறிவின் ஞானம் கொண்டு நாம் தெளிந்து வாழ்தலே மிகவும் சிறப்பு…!

அன்று அகஸ்தியன் வாழ்ந்த வாழ்க்கையும் இன்று கணவன் மனைவி ஒன்றி வாழும் வாழ்க்கையும்

 

இப்போது கணவன் மனைவியுமாக வாழ்பவர்கள் இரு மனமும் ஒன்றித் தான் வருகிறார்கள்.

எப்படி…?

தொழிலில் ஒரு நஷ்டமாகி விட்டால் என்ன ஆகிறது…?

நல்ல முறையில் நான் வேலை செய்கின்றேன் ஆனால் என்னை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று கணவன் மனைவியிடம் சொல்லும் நிலை வருகின்றது.

மனைவியோ தன் கணவரை நினைத்து வேதனையை உருவாக்கிக் கொள்கிறது. கணவனை நினைக்கும் போதெல்லாம் வேதனையைத் தான் மனைவியாலும் எண்ண முடிகிறது.

வேலைக்குச் சென்று விட்டார் என்றால்…
1.“இந்த மாதிரி நஷ்டமாகின்றதே…!” என்று வேதனையாக மனைவி நினைக்கும் போது
2.கணவனுடைய சிந்தனை குறைந்து செய்யும் வேலையில் பலவீனமாகும்.

ஒரு வியாபாரத்திற்கே செல்கிறார் என்றால் “அங்கே கலவரம் நடக்கிறது… இங்கே சண்டையிடுகின்றார்கள்…” என்று வீட்டில் பெண்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அதே உணர்வு தன் கணவருக்குத் தாக்கப்பட்டுப் பயமும் பதட்டமும் வந்து கொண்டேயிருக்கும்.

பதட்டமும் பயமும் வந்ததும் இவர் வைத்திருக்கும் பொருளைக் கூட இவருக்குத் தெரியாமல் தூக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். பொருள் காணாமல் போகும்.

இந்த மாதிரிச் சில நிலைகள் எல்லாம் நடக்கும்.

கணவனும் மனைவியும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றார்கள்
1.ஆனால் வேதனை கலந்து தான் இருக்கின்றார்கள்.
2.வேதனையைத் தான் இருவரும் வளர்க்க முடிகிறது
3.இருவர் உடலிலும் நோயாக மாறுகிறது.

வேதனை அதிகமாகும் போது கடைசியில் இந்த உணர்வுகள் விஷமாகப் போகும் போது இருவர் உடலிலும் பகைமையாகின்றது. ஆக வேதனையில் தான் ஒன்று சேர்த்து வாழ்கின்றார்கள்.

இது தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் எப்படி வாழ்ந்தனர்…?

அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தையும் அறிந்து… அண்டத்தையும் அறிந்து… அதனின் இயக்கத்தைத் தன்னில் உணர்கின்றான். அவனுடைய பதினாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.

1.தான் கண்டறிந்தவைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான்.
2.மனைவியும் தன் கணவன் சொன்ன நிலைகளை ஏற்று அதன் வழி நடக்கிறது.

மனைவி உயர்ந்து வருவதைக் கண்டு அகஸ்தியன் மகிழ்ச்சி அடைகின்றான். அவர்கள் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று வசிஷ்டர் அருந்ததி போல் வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி பேரருள் பேரொளியாக மாறுகின்றனர்.

1.இரண்டு உயிரும் தனியாக இருந்தாலும் ஒரு உயிராக மாறிவிடுகின்றனர்…
2.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றனர்.

அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக அதனின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்கின்றனர்.

அதுவே நாம் அடைய வேண்டிய எல்லை.

எதனையுமே ஒளியாக மாற்றும் கலை தான் வேகாக்கலை

 

டி.வி. ரேடியோ ஸ்டேசனில் எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றனரோ… நம் வீட்டில் அதிலே எதைத் திருப்பி வைக்கின்றோமோ அதை இழுத்துப் படமாக அல்லது பாடலாகப் பாடுகிறது.

அதே போல ஒரு மரத்தில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் எந்த மரத்தின் சத்தை எடுத்து அது விளைந்ததோ… அந்தச் சத்தினைத் தான் அது கவரும்… அதே மரமாக விலையும்.

இதைப் போல் சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட
1.வேதனை சலிப்பு கோபம் ஆத்திரம் போன்ற குணங்கள்
2.நம் உடலுக்குள் வீரியமான சத்தாக வலு கொண்ட நிலையில் இருந்தால் அது தான் முன்னணியில் இருக்கும்.
3.நல்ல குணங்களை நமக்குள் விடாதபடி அது தடுத்துக் கொண்டிருக்கும்.

அப்படித் தடுக்கும் நிலைகளை மாற்றி அருள் ஞானிகளின் சக்திகளைப் பெறச் செய்வதற்குத் தான் இப்பொழுது அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை… “அந்த அடிப்படை ஆதாரத்தையே” உங்களிடம் பதிவாக்குவது.

அன்று அகஸ்தியன் எப்படி இயற்கையின் பேருண்மைகளை அறிந்தானோ அதைப் பதிவாக்கி அதனின் தொடர் வரிசையிலேயே அடிக்கடி நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

அதை வளர்த்துக் கொள்ளக்கூடிய அந்தத் தகுதியை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத் தான் பல முறை உபதேசித்திருந்தாலும் ஆயுள் கால மெம்பருக்கு யாம் (ஞானகுரு) ஆசீர்வாதம் கொடுப்பதும் அந்த அரும் பெரும் சக்திகளைப் பதிவாக்குவதும்.

ஏனென்றால் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்ட பின் அந்த அருள் உணர்வைப் பெற்று நீங்கள் எங்கே சென்றாலும் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை மாற்றிக் கொள்ள முடியும்.

புறத்திலிருந்து வருவதைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி அதிலிருக்கும் விஷத்தைப் பிரித்துவிட்டு வெப்பமும் காந்தமுமாக உருவாக்குகின்றது… “இயக்க அணுக்களாக” வெளிப்படுத்துகின்றது.

அதே சமயத்தில் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்தம் அந்த விஷத்தைத் தனக்குள் கவர்ந்து கொண்டால்
1.அதனை இணைத்தே வாழ்கிறது… அந்த விஷத்தைக் கொல்லவில்லை.
2.இதைத் தான் “இரணியன் சாகாவரம் கேட்டான்…” என்று சொல்கிறார்கள்
3.ஏனென்றால் எல்லாவற்றுக்கும் இந்த விஷம் இருந்தே ஆகவேண்டும்.

இது சாகாக்கலை.

ஒரு சத்துக்குள் இந்த விஷம் போயிருந்தால் அந்தச் சத்தை இயக்கச் சக்தியாக மாற்றுகிறது. ஆகவே… எதனையுமே சாகாக்கலையாக அதனதன் உணர்வுகளை உருவாக்கும்…! என்பது பொருள்.

ஆனால் நம் உயிரோ வேகா நிலை பெற்றது.

உயிர் எதிலுமே வேகுவதில்லை. அந்த உயிரைப் போலவே ஒவ்வொரு உணர்வையும் வேகா நிலையாக ஜீவ அணுவாக மாற்றும் சக்தி இந்த மனித உடலில் தான் உண்டு.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா… தீமைகளை நீக்கும் உணர்வுகள் சேனாதிபதி.
1.தீமைகளைத் தடுத்து நிறுத்தி நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை ஒழுங்குபடுத்தி
2.உயிரைப் போலவே உணர்வின் ஒளிமயமாக ஆவது தான் வேகா நிலை.

அதை அடைவதற்குத் தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! அதைப் பயன்படுத்தும் போது விவேகம் தேவை

 

மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.

சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திட யாம் கூறிடும் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டிட்டால்
1.ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக வளர்ப்பவனின் செயலில் நாம் பேரருளை வளர்க்க முடியும்.

இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.

அப்படிக் கற்பித்தாலும் அவர்கள் தங்கள் எண்ணத்தில் திணித்துக் கொண்டிட்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா…!

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! (இது மிகவும் முக்கியமானது)

சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கட வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொண்டிடும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா…!

“இராமபாணம்…” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது என்ற தத்துவ உண்மை உண்டு…!

அதைப் போல் சமமான உணர்வாக… நல்லெண்ணச் சுவாசமாக… உயிரான ஈசனுடன் ஒன்றி… ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் அருமருந்து.

(ஏனென்றால் நடக்காத… முடியாத… நடைபெறாத ஆசைகளை… முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்…!” என்று முயற்சி செய்து முயற்சி செய்து அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை… நடக்க வேண்டியதை… எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)

நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை…!”

(வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது பஸ்ஸில் அடிபட்டு ஒருவன் துடித்துக் கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் துடிக்கும் உணர்வுகள் பாவ வினைகள்.

அதனால் அவனுக்குள் எத்தனை இம்சைகள் பட்டானோ வேதனைப்படுகின்றானோ நாம் உற்று பார்த்தால் அதனின் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

அதே மாதிரி ஒருவன் ஆட்டினை அதைக் கத்தக் கத்த அறுத்துக் கொல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அதைப் பார்த்தவுடன் நம் முகம் சுளிக்கின்றது. அவன் செய்கின்றான் பாவம். ஆனால் நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

ஆட்டிடமிருந்து வெளிவரும் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் பாவ வினைகளாக வந்துவிடுகின்றது. ஆடு அது துடிதுடிக்கும் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

மற்றொரு ஜீவனை ஒரு நாய் கடித்துக் குதறுகின்றது. இந்த வகையில் அங்கே பாவங்கள் நடக்கின்றது. அது துடிக்கும் உணர்வுகளைப் பார்க்கின்றோம்.

அதைப் பரிவு கொண்ட மனதுடன் பார்க்கும் போது அதனின் உணர்வுகள் நமக்குள் பாவ வினையாக வந்து சேர்ந்து விடுகின்றது.

1.ஒன்றை அது மற்றதைக் கொன்று புசிக்கும் பொழுது “அது எப்படித் துடித்ததோ…”
2.ஒன்று மற்றொன்றைத் “தாக்கும் பொழுது…” அந்த உணர்வின் அலைகள் படர்ந்ததோ
3.இரண்டு உணர்வின் வித்தாக இது நமக்குள் பதிவாகின்றது.

ஆக அங்கே எப்படி ஒன்றை ஒன்று விழுங்குகின்றதோ அதே போன்று நமக்குள்ளும் நம் நல்ல குணங்களை ஒன்றை ஒன்று விழுங்கிச் செயலற்றதாக மாற்றிப் பாவ வினைகளாக நமக்குள் விளைந்து தீய வினைகளாக உருவாகிவிடுகின்றது.

பாவ வினைகளையும் தீய வினைகளையும் நீக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

பல கோடிச் சரீரங்களில் நாம் தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர்ந்து வந்துள்ளோம். அவ்வாறு வளர்ந்து இன்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில் மனிதனாக வந்தோம் என்பதை நாம் அறிதல் வேண்டும்.

விண்ணிலிருந்து வரும் ஆற்றலை நுகர்ந்து நஞ்சினை வென்று தனக்குள் வந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே உண்டு. அதை நாம் எளிதில் பருகுவதற்குத்தான் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள். அந்த விநாயகர் தத்துவத்தை உணர்த்தியவன் அகஸ்தியர்.

இந்த மண்ணுலகில் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அகஸ்தியர் இன்று விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் அகல வேண்டும் ஈஸ்வரா என்று விநாயகரைப் பார்க்கும் பொழுது இப்படி எண்ணுதல் வேண்டும்.

இந்த நல்ல வினைகளை நாம் ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும். நல்ல வினைகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்க இதனின் கணக்குகள் கூடி நாம் பார்த்த பாவ வினைகளின் கணக்குகள் குறைந்து சிறுத்து விடுகின்றது.

1.நமது குருநாதர் இயற்கையின் நிலைகள் எது எது எப்படி இயங்குகின்றது…?
2.நமக்குள் தீமைகள் எப்படி வருகின்றது… தீமைகள் நமக்குள் எப்படி விளைகின்றது…?
3.அந்தத் தீமையை விளைவிக்கும் நிலைகளிலிருந்து நாம் எப்படித் தப்ப வேண்டும்…? என்பதை உணர்த்தினார்.

பல கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கிடையிலும் அவர் காட்டிய அருள் வழியில் அனுபவபூர்வமாக யாம் கண்டுணர்ந்ததைத்தான் உங்களிடம் உபதேசிக்கின்றோம்.

1.உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.
2.தீமைகள் உங்களை அணுகக் கூடாது.
3.உங்கள் பார்வையினாலேயே தீமைகள் அகல வேண்டும் என்ற நிலைக்கே தான் இந்த உபதேசத்தைக் கொண்டு வருவது.

சூரியனிலிருந்து வெளி வரும் இயக்க அணுவும்… பிரகலாதனும்

 

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் தினசரி சந்திக்கின்றோம். வேதனைப்படுபவரையோ கோபப்படுவோரையோ வெறுப்படைவரையோ பார்க்காமல் நாம் இருக்க முடியாது.

ஆனால் அந்த வேதனை கோபம் வெறுப்பு உள்ளுக்கே போகாதபடி தடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா. அதற்குத் தான் இதை உபதேசிக்கிறோம்.

தீமை நீக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

பிள்ளை மேலே பாசமாக இருக்கின்றோம்… ஒரு மார்க் குறைந்து விட்டால் போதும் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…? பிள்ளைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…?

நீங்கள் சமப்படுத்த வேண்டும் அல்லவா.
1.ஆனால் வேதனையை எடுத்துச் சமப்படுத்த விரும்புகின்றீர்கள்
2.இந்த உணர்வுகள் நமக்குள் வந்து மீண்டும் சிவ தனுசாக மாறுகின்றது… வேதனைக்கொப்ப உடலாக (வேதனைப்படும் உடலாக) மாறுகின்றது.

அதனால் தான் பிரகலாதன் கதையிலே நாராயணனுக்கும் இரணியனுக்கும் இரண்டு பேருக்கும் அங்கே கேட்கின்றார்கள்.

பிரகலாதன் என்றால் இதிலே பிறக்காதவன். அதாவது
1.எதிலுமே பிறக்காதவன் தான் பிரகலாதன் என்று காட்டுகின்றார்கள்.
2.சூரியனிலிருந்து ஒவ்வொரு இயக்க அணுக்களும் வருகிறது அல்லவா…!

என்னால் தான் பிறந்தது என்கிறான். சூரியனால் தான் இயக்கப்படுகின்றான் என்கிறான். என்னால் தான் பிறந்தது என்னால் தான் உருவானது என்று இயக்க அணுவைப் பற்றிப் பிரகாலதன் கதையிலே காட்டுகின்றார்கள்.

ஹரி ஓம் நமோ நாராயணா…! சூரியனின் இயக்கமாகத்தான் நம் உடல் எல்லாம் இருக்கின்றது என்று பிரகலாதன் சொல்கிறான்.

அவன் எங்கே இருக்கின்றான் என்று இரண்யன் கேட்கின்றான்…?

உன்னிலும் இருக்கின்றான்… என்னிலும் இருக்கின்றான்… எல்லாவற்றிலும் இருக்கின்றான்.

அவனைக் காட்டு…! என்கிறான்.

தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று காட்டுகின்றான்.

அவனை அழித்து (தூணை உடைத்து) அந்த உணர்வின் வேகத்தைப் பார்க்கப்படும் பொழுது அதிலிருந்து அந்த உண்மையை உணர்த்திக் காட்டுகின்றது

1.தன் உடலுக்குள் இருக்கும் தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை தான் வருகின்றதே தவிர
2.உன்னால் அழிக்க முடியும்… உணர முடியாது
3.அதை ஈர்க்க முடியும்… ஆனால் வளர்க்க முடியாது.
4.தீமையைத்தான் வளர்க்க முடியும்…! என்று பிரகலாதன் கதையில் அதைக் காட்டுகின்றார்கள்

எவ்வளவு பெரிய உண்மையைக் காட்டுகின்றார்கள்.

வெறும் கதையாக நினைக்கின்றோம். மக்கள் நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நல்ல குணத்தில் அதை வலுவாக்க வேண்டும்.

அந்தச் சக்தி வலுவான பின் வேதனையான உணர்வுகள் இங்கே வருகிறது அல்லவா… அதை உள்ளிருந்து பிளந்து விடுகின்றது.

இது தான் மடி மீது இரணியனை (நஞ்சான உணர்வுகள்) வைத்து நமக்குள் வரும் தீமைகளை வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன்… இந்த ஆறாவது அறிவால் இதைப் பிளந்து பழகுதல் வேண்டும்.

இப்பொழுது நாம் ஒன்பதாவது நிலையிலிருக்கின்றோம். அதைப் பிளந்தால் “பத்தாவது” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

July 2022 உபதேசம்

“ஆயுள் மெம்பர்கள்” தெரிந்து கொள்ள வேண்டியது

 

உதாரணமாக… வேகமாக ஒருவர் நம்மை திட்டி விட்டார் என்றால்… “இப்படித் திட்டினான்…” என்று அதை வலுவாகப் பிடித்துக் கொள்கின்றோம்.

ஒரு நல்ல காரியத்தைச் சாந்தமாகச் சொல்லி இருந்தால் அது சந்தோஷத்தை ஊட்டக்கூடியது தான்.
1.இருந்தாலும் அது நினைவில் இருக்காது… கெட்டது நினைவில் இருக்கும்
2.நல்லதைச் சாந்தமாக சொன்னால் இது உடனே மறந்துவிடும்
3.நறுமணம் அதுதான்… அதில் விஷம் பட்டால் அது மறந்து விடுகின்றது… அதனுடைய செயலை இழக்கச் செய்து விடுகின்றது

நாம் நல்ல குணம் கொண்டிருக்கின்றோம். ஒருவர் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினால்…
1.அதை நாம் கேட்டறிந்தால் நம் நல்ல குணங்களை இது மூடி விடுகின்றது
2.நல்லது செய்வதை மறந்து விடுவதற்கு காரணமே அது தான்
3.இந்த விஷம் எப்பொழுதுமே அதனுடைய வேகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.

ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் அந்த ஒரு குடம் பாலும் பாழாகி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நூறு குடம் பாலை அதிலே விட்டால்
1.அந்தப் பாலிலே இந்த விஷம் குறைந்து அந்தப் பாலுக்கே ஒரு வீரிய சக்தி உண்டாக்கக்கூடிய சக்தி வருகிறது
2.அதாவது விஷம் அதிகமானால் கொல்கிறது… “விஷம் சிறுத்தால் வீரிய சக்தி உண்டாக்குகின்றது” (முக்கியமானது)

ஏனென்றால் நாம் எப்படி வாழ்கின்றோம்…? எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூடுமானவரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்… “ஆயுள் கால மெம்பராக இருப்பதால்…”

உயிர் தீயிலே பட்டால் அழிவதில்லை. ஆகவே உயிரைப் போலவே உணர்வுகளை ஒளியாக மாற்றுவது தான் நம்முடைய குறிக்கோள். ஆகையினால்
1.உயிரோடு சேர்த்து அவன் ஒளியாக இருப்பது போல் ஆயுள் கால மெம்பராக அவனுடன் இணைந்து
2.அந்த உயிரின் இயக்கமாக நாம் மாறுவதுதான் மெம்பராக இருப்பதனுடைய நோக்கம்.

நமக்குள் இருக்கும் இயக்கத்தை… இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நமக்குள் நாம் அறிந்தாக வேண்டும்.

கெமிக்கல் கலந்த நாடாவில் ஒலி.. ஒளி… என்று பதிவாக்குகின்றார்கள். திருப்பி அதை இயக்கிச் சுழல விடும்பொழுது அந்த உணர்வுகள் வெளி வருகின்றது.

அதே போன்றுதான் இந்த உபதேசக் கருத்துக்களை நீங்கள் இப்பொழுது கூர்ந்து கவனிக்கும் பொழுது… கருவிழி ருக்மணி “ஊழ் வினை” என்ற வித்தாக உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் பதிவாக்குகிறது.

பதிவாக்கிய பின் கண்ணின் காந்தப் புலனறிவு அதைக் கவர்ந்து அதன் அறிவாக இயக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி மீண்டும் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குகின்றது

இந்த உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அதை நுகர்ந்தோர் உணர்வுகளையும் அதே உணர்ச்சிகள் இயக்கத் தொடங்குகிறது. இதை நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

அதன் வழியிலே தான் அந்த அருள் ஞான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றேன். எனக்கு குருநாதர் எப்படி உருவாக்கினார்களோ அந்த ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்கி அதை உருவாக்குகின்றேன்.

நமது குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ தியானத்தில் அதற்குண்டான சத்தைக் கூட்டிக் கொண்டே வந்தால்
2.அருள் ஞானச் சொத்தாக அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டே வரும்.

அகஸ்தியன் எப்படிப் பெற்றானோ அதே மாதிரி நாமும் இருளை நீக்கி உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும் அதற்குத்தான் அருள் ஞான வித்தைக் கருவிழி ருக்மணி மூலம் பதிவாக்குகின்றேன்.
1.நான் (ஞானகுரு) சொன்ன அருள் ஞான உணர்வுகள் இங்கே படர்கிறது.
2.உங்களுக்குள் பதிவாகின்றது… அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது.

“என் குரு ஒரு கசாப்புக்கடைக்காரன்…!” கொல்லாமை போற்றிய வாசுகி கொங்கணரிடம் சொன்னது

 

கொங்கணர் தன் ஞான வளர்ச்சிக்கு வித்தாக அன்று தேர்ந்தெடுத்து பிட்சை கேட்ட இல்லம் “உலகுக்குப் போதனை தந்த வள்ளுவனார் வாசுகி வாழ்ந்து வந்த இல்லம் தான்…!”

பிச்சாந்தேஹி..! என்று பல முறை கேட்டும் (ஒரு முறை தான் கூப்பிட வேண்டும் என்பது நியதி) அன்னமிட வராத காரணமும் பசியின் ஆதிக்கம் அன்று அதிகரித்து விட்டது.

அதே சமயத்தில் எச்சமிட்ட கொக்கை எரித்த தன் வல்லமையை நினைத்துக் கர்வம் மீண்டும் தலைக்கேற அதன் வழி கோபத்தின் வசமாக ஆவேசத்துடன் படபடத்துப் போன அந்த மகான் விழி சிவந்து நாசி புகை கிளம்ப கோபக் கனலாகத் தகித்து நின்றார்.

தனக்கு அன்னமிட வராத காரணம் அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணம் கொண்டு விறைத்து நின்றார்.

வெளி வந்த வாசுகி அம்மையும் கோபக்கனலாக ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயலாக நிற்கும் முனிவரின் நிலை கண்டு “எதனால் இந்த நிலை வந்தது…?” என்று சிந்திக்கத் தலைப்பட்டார்.

பின் தன் அறிவின் ஞானத்தால் தெளிந்து முனிவரின் கோபத்தின் மூல காரணத்தையும் அறிந்து அவரின் “நான்” என்ற நிலை கண்டு அமைதியாகச் சிரித்தார்.

வெகுண்டெழுந்த கோபத்தால் முனிவன் வாசுகி அம்மையிடம் “ஆஹா…” ஓர் தபசியைக் காக்கச் செய்த பின்னும்.. பல முறை குரல் கொடுத்தும்.. வெறும் கையோடு வந்த காரணம் என்ன..? என்ன மமதை கொண்டு தாமதமாக வந்தாய் காரணம் கூறு..! என்றார் கொங்கணர்.

வாசுகி அம்மையோ அந்த முனிவரின் கர்வத்தை அடக்கும் விதமாக… முனிவரின் கோபத்தின் மூல காரணத்தை நொடியில் கூறி அவர் தம் கர்வத்தை நீக்கினார்.

“என்னையும் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே…!” என்றார் வாசுகி.

அந்தச் சொல்லால் திகைத்துப் போன கொங்கணரும் தன் கோப நிலையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் இருக்கும் இந்தப் பெண் பிள்ளை கூறியதைக் கேட்டு அமைதியாகச் சிந்தனையின் வசமானார்…!

ஆற்றோரம் அமைதி பெறவேண்டி எடுத்த நியமன ஜடாக்கினித் தொடரில் தவம் முற்றுப் பெற்று சக்தியின் பரிபூரணத்துத்தை முழுமை பெற வொட்டாமல் என் கோபமே எனக்குத் தடையாகிப் போனது.

காரணம்… அன்று நான் அமர்ந்திருந்த மரக்கிளை மேல் அமர்ந்த கொக்கு தன் எச்சத்தை இட அது என் தலை மேல் விழுந்தது. பகுத்தறிவற்ற ஓர் பறவை அறியாமல் செய்துவிட்ட செயலை என்னால் பொறுக்க முடியவில்லை.

பொறுக்காமல் நான் பெற்ற சக்தியின் செயல் கொண்டு சுட்டெரித்து விட்டேன்.
1.எச்சமிட்ட அந்தக் கொக்கை நான் சுட்டெரித்தேன்.
2.இன்றோ இந்தப் பெண்மணி என் கோபக்கனலையே சுட்டெரித்து விட்டாள்.
3.எம் அகத்தினைக் குளிரச் செய்து எனது “நான்…” என்ற அகங்காரத்தைப் பொடிப் பொடியாக்கி விட்டாள்.
4.வீட்டினுள் இருந்து கொண்டு இல்லறப் பயன் ஒழுகும் இந்தப் பெண்மணி பெற்ற தவத்தின் பேறு தான் என்னே…?
5.நான் காட்டில் தவம் கிடந்து என்ன பயன்…? இவள் அறிவின் ஞானக் கண் திறந்தாள் என்றெல்லாம் சிந்தித்தார் கொங்கணர்.

வாசுகி அம்மையைக் கும்பிட்டு “அம்மா ஞானம்பிகே..!” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன். பதில் கூற வேண்டும் என்று பணிவோடு பகர்ந்து அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும் என்றார்.

வாசுகி அம்மை கூறுகின்றார்கள்…!

1.“மண் சட்டியில் உணவில்லை.
2.ஆதலால் விண் சட்டியில் உணவு உட்கொண்டிருந்தோம்…!”
3.உமது குரல் எட்டா நிலைப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததே காலதாமதம் ஆனது என்று சொல்கிறார்.

அம்மா..! இவ்வளவு ஞானத்தையும் உமக்குப் போதித்த குரு யாரம்மா…? என்றார் கொங்கணர்.

அவன் ஒரு “கசாப்புக் கடைக்காரன்…!” என்றார் கொல்லாமை போற்றிய வாசுகி அம்மை.

என்ன…? கசாப்புக் கடைக்காரன் ஞானம் போதித்தானா..? என்று ஆச்சரிய மேலிட்டால் கொங்கணவர் திகைத்து விட்டார்.

ஆம் கொங்கணரே..! கசாப்புக் கடைக்காரன் தான் என் குரு…! உண்மையைக் கூறுவது என்றால் என் உயிர் தான் அந்தக் கசாப்புக் கடைக்காரன். பேரண்ட இரகசியம் தெரியுமா…?

ஓர் உயிர் சக்தி சரீர கதி வளர்ச்சிக்கு உயிரணுக்களை உண்டு உண்டு தான் வளர்ச்சியின் வலுவாகின்றது. ஆனால் அதுவே உணர்வுகளின் அதி ஆவேச செயலுடைய சரீரம் தொட்டுச் செயல்படும் “அணு செல்களின் மாமிசம்… என எண்ண வேண்டாம்….!”

1.உயரிய உயிர் சக்திக்கு வலு ஊட்டும்
2.காற்றின் ஆகார அமில அணுக்களைக் கொன்று சமைத்து உண்ணும் கசாப்புக் கடைக்காரன் – என் உயிர் சக்தி தான்
3.அதுவே என் குரு…! என்று கொங்கணருக்கு சூட்சமப் பொருள் விளங்கக் கூறுகின்றார் அந்த வாசுகி அம்மை.

உட்கொள்ளத் திட ஆகாரம் இல்லை என்றால்… வல்லமை கொண்ட உயரிய சக்தி பெற்ற முனிபுங்கவன் காற்றில் ஆகாரம் உண்ணும் ஞானப்பால் உட்கொண்டே தன் வளர்ச்சிக்கு வித்தாக்க வேண்டும் என்ற இந்தச் சூட்சமத்தை வாசுகி கூறியருள “கொங்கணர் வைராக்கியம் பெற்றார்…! கோபமகற்றி ஞானக்கண் திறந்தார்…!”

“வள்ளுவர் வாக்கு…! (திருக்குறள்) என்னும் உலக வேதத்தைத் தொகுத்தளித்த அம்மை அதைத் தன் பெயர் கொண்டு வெளி உலக அறிவின் செயல்பாட்டுக்கு வெளியிட விரும்பாமல் “வள்ளுவன் வேதம்…” என்று உலகுக்குக் கொடுத்ததற்கு பலமான பின்னணிக் காரணமும் உண்டு. அது என்ன…?

அது தன் கணவர் ஓர் சாதாரண ஆடை நெய்பவர் மட்டுமல்ல. அளவிடற்கரிய சித்து நிலை பெற்ற ஓர் சித்தன் என்று அறிந்து கொண்டதற்கு மூலமும் வறுமைதான்.

பல காலம் வறுமைப் பிடிப்பில் சிக்கி ஆகாரச் செலவாணிக்குத் தக்க பொருள் இல்லாமல் சிறிதளவு பொருள் கிடைத்தாலும் நிறைவாக வாழலாம் என்ற எண்ண ஓட்டம் இருந்தாலும்
1.முழுவதும் காற்றின் ஆகாரம் உட்கொள்ளும் பக்குவச் செயல்பாட்டுக்கு
2.முழுமையாக வந்துவிட்டால் அப்புறம் திட ஆகாரம் எதற்கு..?
3.இல்லறத் தொடரிலோ சரீர கதிச் செயல்பாட்டிற்குச் சிறிதளவு திட ஆகாரமும் தேவை தான்.

காற்றின் ஆகாரத் தொடருக்கு முழுப் பக்குவச் செயல் கொண்டிடக்கூடிய பக்குவமும் கூடி வரும் வரை சிறிதளவு திட ஆகாரமும் கொள்ளுதலும் வேண்டும். அதற்குரிய பொருளும் வேண்டும் என்ற தொடரையே சூசகப்படுத்தி வள்ளுவப் பெருமானிடம் வாசுகி கூறுகின்றார்கள்.

எத்தனையோ புலவர் பெருமக்கள் புரவலர் பெருமக்களை நாடிப் பொருள் பெற்றுச் சிறப்படைந்து வாழ்கின்றார்கள். வள்ளல் தன்மை இன்னும் நம் ஞான பூமியிலே குறைவுபட்டு விடவில்லை என்று அமைதியாகவும் சூசகமாகவும் வாசுகி வள்ளுவரிடம் தெரியப்படுத்துகின்றார்.

1.“பரிசு பெறும் எண்ணம் புலவர்களுக்குத் தான் உண்டு…!
2.அது வாசுகிக்கும் வந்ததன்றோ விந்தை…!” என்று உணர்ந்து கொண்டு
3.வள்ளுவப் பெருமான் அம்மையின் மன எண்ணச் செயலின் விபரீத வழி செல்லும் செயலை மாற்றி
4.நற்செயலுற வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததார்.

பின் அம்மையை வீட்டின் பின்புறம் அழைத்துப் போய் அங்குள்ள சிறு கல்லின் மீது அம்மையைச் சிறு நீர் பெய்யச் செய்தார். வெறும் உடலின் கழிவு நீரைக் கொண்டே தமது சித்தின் திறத்தால் அக்கல்லையே சொக்கத் தங்கமாக மாற்றி அமைத்தார், “தான் ஒரு சித்தன்…!” என்ற சூட்சமத்தை அம்மையிடம் காண்பித்தார் வள்ளுவர்.

“கல்லைக் கூடத் தங்கமாக மாற்றும் செயல் திறன்…” நம்மிடமே உள்ள பொழுது வெறும் உலகோதய ஆசையைத் தூண்டி அந்தச் செயல் வீரியத்தை நாம் பெற எண்ணினால்
1.நமது எண்ணச் செயலிலும் மாற்றுக் கலந்தால் தங்கம் மாசுபடுவது போல் ஆகிவிடும்.
2.நல் வழி ஒன்று அது நன்றாம்.. தியான வழி அதிலேயே ஆகாரம் பெறுவோம்.
3.சரீர நலத் தொடருக்கும் நம்மிடமே தொழில் உள்ளது.
4.எந்த அவதார நிலை சூட்சமமோ அது தொடங்கப் போகின்றது…!
5.ஆகவே அனைத்தும் சேமமாகும்…! என்று கண்டிப்பது போல் எடுத்துரைத்தான் வள்ளுவச் சித்தன்.

இந்தச் சம்பவம் வாசுகியம்மைக்கும் வள்ளுவன் வேதத்தை உலகினுக்கு அவர் பெயரிலேயே வெளியிடக் காரணமாக அமைந்த சம்பவம் ஆகும்…!

வள்ளுவனாரும் வாசுகி அம்மையும் தனது சிந்தனையின் தவத்தை ஆட்கொள்ள தவத்தில் ஆழ்ந்திருந்த கொங்கணரும் வள்ளுவச் சித்தரின் செயல் ஒரு படிப்பினையாக வெளிப்பட்ட கருத்தின் பயன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டார் கொங்கணர்.

அதனால் அவர் தனது வைராக்கியத்தை வளர்த்து சக்தி நிலை பெறக் காரணமாக அமையப் பெற்று சிந்தனையின் வசமாக ஆனார்.

வெளி உலகின் நிகழ் செயல் தன்மையின் முழுப்பயனையும் வீட்டினுள் இருந்து கொண்டு இல்லற ஒழுக்கவியலில் செயல்பட்டுத் தவத்தின் சிறப்பை நல்லறமாக நடத்தி ஒழுகி வரும் “வள்ளுவன் வாசுகி அம்மை பெறுகின்ற ஞானப்பால்…” உலகினுக்கு ஓர் நீதி போதனையாக வெளிப்பட வேண்டும்…!

வாசுகி அம்மை வீட்டில் இருந்து ஞானத்தைப் போதித்தாள். ஆனால் இந்த வள்ளுவரோ உலகம் அறிந்து கொள்ள முடியாத தன்மையில் தான் ஒரு சித்தன் செயல் நிலைக்கும் மேற்பட்ட சக்தி பெற்றவன் என்பதை வாசுகி அம்மையை வைத்துத் தங்கம் செய்வித்து வறுமைப் பிணி விரட்டும் சக்தி மனித எண்ண ஞான வளர்ச்சியின் செயல்பாட்டில் உள்ளது என்ற போதனையைக் காட்டி உண்மையின் சூட்சமம் தெளிவுபடுத்தி விட்டார்.

1.வாசுகி சொல்லால் போதனைப்படுத்தினார்.
2.ஆனால் சொல்லாமல் செய்வித்து வாசுகி அம்மையாரின் ஞானம் வளர் ஞானமாக்கும் தொடருக்கு வள்ளுவர் வித்திட்டு விட்டார்.
3.என்னே இவர்கள் பெற்ற தவத்தின் பயன்…!
4.இனி யான் இந்த வறுமைப் பிடிப்பைப் போக்கச் செல்வ நாயகன் ஆவேன்.
5.என்னை எண்ணும் அலைத் தொடருக்கு சக்தியளிக்கும் செல்வச் சக்தி பெறுவேன்.
6.இத்தகைய “ஞானச் செல்வங்கள்…” வறுமையில் வாடும் கொடுமையை வெல்வேன்.
7.செல்வ நாயக சூட்சமம் பெற்று உலகுய்ய வழி காட்டிடுவேன்…! என்ற உறுதி கொண்டார் கொங்கணர்.

சொல்லாமல் உபதேசிக்கும் வள்ளுவன் வாக்கு…! வீட்டில் உள்ளதோ வறுமை… வீட்டில் உள்ளதுவும் ஒன்றில்லை…!
1.தன் சூட்சம சரீரம் செயல்படும்
2.இந்தத் தூலத்தில் உள்ளதடா அத்தனை செல்வங்களும்…! என்று எனக்கே போதனை தந்துவிட்டார்…!

இவ்வாறு கொங்கணர் எண்ணிக் கடும் தவம் பேற்கொண்டு தனது சரீரத்தைப் புற்று மூட அதனுள் சூட்சம ஜெபத்தில் ஆழ்ந்து விட்டார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்த மெய்ஞானிகள் காட்டிய மெய்வழியில் விண்ணின் ஆற்றலை நாம் பெற வேண்டும். அதன் துணை கொண்டு நம்முடைய குலதெய்வங்களை விண் செலுத்த முடியும். பிறவா நிலை அடையச் செய்யலாம்.

கங்கையில் கொண்டு போய்ச் சுட்ட சாம்பலைக் கரைத்தாலோ அல்லது புதைத்து விட்டாலோ பிண்டம் செய்து வைத்துக் கரைத்து விட்டாலோ அவர்கள் செய்த பாவங்கள் போகாது.

பாவங்களை மீண்டும் “நாம் சுமந்து கொள்கிறோம்” என்று தான் அர்த்தம்.

அமாவாசை அன்று பல உணவுகளைப் படைத்து எங்கள் முன்னோர்களை அழைக்கின்றோம் என்பார்கள்.

அமாவாசை அன்று இருண்ட நிலைகள் கொண்டது. உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை இருண்ட நிலைகளில் திருடர்களைப் போன்று அழைக்கின்றோம்.

அவ்வாறு அழைத்து… அந்த ஆன்மாக்களை மீண்டும் இருள் கடலில்… நமக்குள்… “பிறவிக் கடனுக்கு அழைக்கின்றோமே” தவிர அமாவாசை விரதங்கள் என்பது தவறான முறைகள்.

ஞானிகள் சொன்னது அதுவல்ல.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியைக் கூட்டமைப்பாகக் கவர்ந்து அந்த மெய் உணர்வின் தன்மைகளை வலுவான எண்ணம் கொண்டு தியானிக்க வேண்டும்.

பின்… உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விட்டு “உந்திச் செலுத்த வேண்டும்”.

எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை “விண்ணிலே வீசி” அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குள் இணையச் செய்து (இருள் சூழ்ந்த) உடலில் கலந்த நஞ்சினை “அங்கே… கரைக்க வேண்டும்…”

உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டு அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் ஒளியின் சுடராக நிலைக்கச் செய்யும் நிலையே “பௌர்ணமி நாள்…”

இது தான் ஞானிகள் சொன்னது.

இன்று அமாவாசை நாள். இன்றைக்கு நான் “கறி” சாப்பிட மாட்டேன் அதை சாப்பிட மாட்டேன்… இதைச் சாப்பிட மாட்டேன்… என்று சொல்வார்கள்.

எங்கள் அம்மா அப்பாவிற்குப் படைத்துவிட்டு அவர்களின் நினைவாகவே நான் இருந்தேன் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகளுக்கே நாம் அவர்களை அழைக்கும் முறை.

ஏனென்றால்,
1.மந்திர ஒலியால் சுவாசிக்கப்பட்ட உணர்வுகள்
2.மீண்டும் ஒலி கொண்டு எழுப்பும் பொழுது அதற்குள் சிக்கப்பட்டு
3.அதை ஆவி வேலைகளுக்குத் தன் பசியைப் போக்குவதற்காக மந்திரவாதிகள் வேண்டிய வேலைகளுக்குத்தான் ஆகும்.
4.ஆக… மந்திர ஒலிகளைக் கூட்டி அந்த ஆன்மாக்களைக் கவர்ந்து கொள்ளும் நிலைதான்… “அமாவாசை… இருளுக்குள் செய்யும் நிலை…”
5.மறைந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும் முறை இது… ஆகவே இது பிழை கொண்டது.
6.இது இல்லை என்று எவராலும் மறுக்கவும் முடியாது.
7.உறுதியாகவே உங்களிடம் சொல்கின்றேன்.

“காரணம்…” மக்களின் நிலைகள் பக்தி என்ற நிலைகளில் “உண்மைகள் மறைக்கப்பட்டு…” தீமையின் செயல்களிலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் அன்றைய அரசர்கள் “தான் சுகமாக வாழ” உடலுக்குள் விளைந்ததைப் பிரித்தெடுத்து அதன் வழிகளில் மற்றவர்களைச் செயலிழக்கச் செய்வதற்காகச் செய்யப்பட்டவைகள் தான் அது.

அரசர்கள் இன்று இல்லை என்றாலும்
1.“அதன் தொடர் வரிசையில் வந்தவர்கள்”
2.இன்றும் அந்த வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

முன்னோர்களை நாம் இன்னொரு உடலுக்குள் மீண்டும் உடல் பெறும் நிலைகளுக்குச் செல்லவிடாது தடுக்க வேண்டும். அருள் ஒளியின் சுடரை ஏற்றி அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும்.

இது நமது தலையாயக் கடமையாகும்.

மனக் கவலையும் மனக்குழப்பமும் தீரவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் தொடர்பிலேயே இருக்க வேண்டும்

 

ரோட்டில் சென்று கொண்டிருந்தேன்… ஒருவருக்கு விபத்து ஆகிவிட்டது… “அடிபட்டார்…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

“ஆ…!” என்று கேட்டுக் கொண்டே இருப்போம். இந்த உணர்வுகள் நமக்குள் படப்பட்டு எந்த வகையில் விபத்து ஆனது…? என்று அவர் சொன்னாரோ அதே உணர்ச்சிகள் தூண்டி நம்மை இயக்க ஆரம்பிக்கும்.

என்ன செய்வோம்…?

1.ரோட்டிலே செல்ல ஆரம்பித்தோம் என்றால் ஓரத்திலே ஒதுங்கிப் போகாதபடி
2.நம்மை அறியாமலே நடு ரோட்டிற்கு அழைத்துச் செல்லும்.
3.ஏனென்றால் பதிவான அந்த உணர்வு நம்மை அறியாமலே அங்கே இட்டுச் செல்லும்.

ஆகவே விபத்தோ மற்ற அசம்பாவிதங்களையோ கேள்விப்பட்டால் அடுத்த கணமே ஆத்ம சக்தி செய்து கொள்ள வேண்டும்.

பின் யாருக்கு அந்த விபத்து ஆனதோ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும பெற வேண்டும் என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் நல்ல குணத்துடன் பார்க்கும் பொழுது தான் பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டே உள்ளது.

மனக் கவலையும் மனக்குழப்பமும் ஆகி… இனி எப்படி வாழ்வது…? என்ற நிலையில் நம்மைப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.துருவ நட்சத்திரத்துடன் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்
2.அதைப் பற்றுடன் பற்ற வேண்டும்
3.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் அந்த அணுக்கள் நமக்குள் பெருகிவிட்டால் நம்மை அறியாமலே அந்தச் சொல் வந்துவிடும்.

உதாரணமாக ஒரு பாடலை பாடிக் கொண்டிருக்கின்றோம். நமக்குள் அது பதிவாகிவிட்டது என்றால் அந்தப் பாடல் சரியாக வரும்… முழுமையாகப் பாடவும் முடியும்.

இருந்தாலும் அப்படிப் பாடிக் கொண்டிருக்கும் பொழுது இடைமறித்து… இடையிலே ஒன்றை தனித்துச் சொல்ல வேண்டும் என்று சொன்னால்… இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவு வராது.

அப்போது மீண்டும் முதலில் இருந்து பாடிக்கொண்டு வரவேண்டும்.
1.வரிசைப்படுத்தி வரும் பொழுது நமக்குள் அந்தத் தொடர்வரிசை வருகின்றது
2.இடையிலே சிக்கிவிட்டால் நமக்கு அந்த நினைவு வருவதில்லை.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி “அடுத்தடுத்து… அடுக்குகளில் வருகின்றது…!”

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி நாம் விழித்திருந்து பழகுதல் வேண்டும்.

சிவன் ராத்திரி… நீ விழித்திரு. தீமைகள் வந்தால் அந்தத் தீமையான உணர்வுகள் புகாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இடும்பச் சித்தர்

 

1.கரங்களைச் சேர்த்து
2.சரீர கதியில் உயிர் சக்தி தலை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை
3.மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் ஓடுகின்ற உயிர்ச் சக்தியின் ஒளி வட்டத்தில்
4.ஈஸ்வர வேதி மூலிகையை அமிலமாக உள் நுழைத்துச் செயல் கொண்டிட்ட செயல் என்ன…?

எந்தத் தொடருக்கு இது ஊக்கம் தருகிறது…? இடும்பன் கூறிய குணத்தை எழுதுவாய். இடும்பன் என்றால் யார்…?

1.நற்குணங்களின் எதிர்மறையாக தீவினைச் செயல்படுத்தும் குணங்கள் என்று எண்ணும் பொழுதே
2.முருக குணம் என்று போகப் பெருமான் நல் வினைப் பயன் காட்டியதைப் போல்
3.தீவினைப் பயன் என்ற தொடரில் உலகிற்குக் காட்டியவனப்பா இடும்பச் சித்தன்.

இடும்பன் என்றாலே ஏன் வெறுக்கின்றாய்…? இடும்பன் சுட்டிக் காட்டிய அந்தக் குணங்கள்
1.போகப் பெருமானுக்குப் போதனையைத் தந்திட்ட
2.அந்த இடும்பச் சித்தன் அகஸ்தியரின் சீடனப்பா…!

இன்றைய பழனியின் அன்றைய பெயர் இடும்பவனம். போகப் பெருமானால் அது கடம்பவனமாகி பூஜித்த தொடருக்குத் திரு ஆவினன் குடி என்று சித்தர்களால் பெயர் நாமம் சூட்சமாகச் சூட்டப்பட்டு இன்றைய வழித் தொடரில்
1.போகமாமகரிஷியின் சப்த அலைகள் பதியப் பெற்றுள்ள அந்த மலையில் இடும்பச் சித்தரின் சப்த அலையும் உள்ளது.
2.அதை எடுக்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.

இடும்பனால் தீவினை குணங்களைப் பற்றிக் காட்டப்பட்ட அதைப் போகர் அறிந்திட்ட வழியிலெல்லாம் மும்மலம் (கோபம். ஆணவம். காமம் – சபல குணம்) நீக்கிட்ட முருகா என்ற ஆறு குணம் கொண்ட செயல் சூட்சமம் உள்ளது.

போகர் பெற்றது போல் நாமும் அந்த இடும்பச் சித்தரின் தொடர்பைப் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறரை ஏசிப் பேசும் நிலைகள் கொண்டு ஒருவன் சாபமிடும் நிலைக்கு வருவான். அந்த மாதிரி எந்த மனிதன் தன் எண்ணத்தில் துரிதமாக இருக்கின்றானோ மற்றவர்கள் “எவ்வளவு நல்லது சொன்னாலும்… சாபமிடுவதை அவன் நிறுத்த மாட்டான்…”

அதே சமயத்தில் யாரை அவன் சாபமிடுகின்றானோ அந்தச் சாப வினையைக் கேட்டவனும்… “அதை விடுவேனா..,” என்று அதே உணர்வு கொண்டு அவனும் அத்தகைய நிலைகளைச் செய்வான்.

ஓம் நமச்சிவாய…. சிவாய நம ஓம்.., முதலில் சாபமிட்டவன் உடலில் விளைந்த தீமைகளின் வினைகள் இவருக்குள்ளும் பதியப்பட்டு அதே உணர்வுகள் இங்கே எதைப் பேசுகின்றார்களோ அதை எதிர்மறையாகப் பேசச் செய்யும்.

இவ்வாறு அந்த உணர்வின் தன்மைகள் வேகமாக இயக்கப்படும் பொழுது மற்றவர்கள் இதைப் பார்த்துக் கேட்பார்கள். அட… இரண்டு பேரும் ஏன் இந்த மாதிரி ஏசிப் பேசுகின்றீர்கள்… “விட்டுவிடுங்கள்” என்று சொன்னாலும் இந்த உணர்வுகள் எடுக்காது.

“உங்களுக்கு என்ன தெரியும்..!” என்று சொல்வார்கள்.

இருவரில் எவரையாவது… அவன் தான் பேசுகின்றான்.., “நீ ஏன் அதை விட்டுவிட்டுப் போகலாம் அல்லவா… போ…” என்று சொன்னால் என்ன ஆகும்.

“நீ அவனுக்குத்தான்… சாதகமாகப் பேசுகிறாய்” என்ற உணர்வுகள் அங்கே நல்லதைச் சொன்னாலும் எதிர்த்துத் தாக்கும் நிலை வரும்.

இதைப் போல ஒருவர் ஏசுவதைக் கண்டு சரி விட்டு விடுங்கள் போகட்டும் என்று சொன்னால் உடனே அவன் என்ன சொல்வான்…?

“பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்…” என்பான்

ஆக இவன் ஏசிப் பேசிவிடுவான். அடுத்தவனுக்குள் இது பட்டவுடன் இந்த உணர்ச்சிகள் பொங்கிவிடும்.

1.அவன் ஒரு சொல்லைச் சொல்லி இருப்பான்
2.ஆனால் இவன் பத்து சொல்லைச் சொல்வான்.

இவ்வாறு அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் பொழுது இருவருக்குமே தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மிளாகாய்ச் செடி தனக்குள் காரமான உணர்வை எடுத்துத்தான் அந்த மிளகாயின் வித்து உருவாகும். அந்த வித்தின் தன்மை தன் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தின் தன்மையைத்தான் அது விருத்தி செய்யும்.

இதைப் போல ஒருவருக்கொருவர் பேசிய உணர்வுகள் அது வித்தாகும் பொழுது இந்த மனிதன் எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ இவனுக்குள்ளும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டேயிருப்பான்.

இந்தச் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தோரும் அவர்களும் சாபத்தை விட்டுக் கொண்டேயிருப்பார்கள். இந்த அலைகள் படர்ந்து.. படர்ந்து… இவர்களுக்குள் உள்ள நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்திவிடுவார்கள்.

இந்தச் சாப அலைகள் இருவருக்குள்ளும் விளைந்து இவர்கள் எதையெல்லாம் சொன்னார்களோ இவை அனைத்தும் அங்கே படர்ந்து அங்கே இருவருடைய குடும்பங்களிலும் இவர்கள் வீரியமாகப் பேசுவார்கள்.

அதே சமயத்தில் இந்த வீரிய உணர்வுகள் இவர்கள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் விட்டு அதனால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்கிவிடும்.

பாசத்துடன் இருப்போரின் நிலைகளும் இவருடன் பேசப்படும் பொழுது இந்த வெறுப்பான அந்த உணர்வுகள் பற்று கொண்ட அவருக்குள் ஈர்ப்புக்குள் அதிகமாகிவிடும்.

ஆனால் ஏசியவர் தப்பிவிடுவார்கள். குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோரின் நிலைகளில் இது படப்பட்டு அந்த உணர்வுகள் அது துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலில் வீழ்த்தும்.

அண்ணன் தம்பிக்குள் இதைப் போன்று ஒருவருக்கொருவர் பார்த்து விடும் சாப அலைள் உற்று நோக்கப்படும் பொழுது அவர்களுக்குள் தீய வினைகள் ஆகி நோயாக மாறி அவர் குடும்பத்திலேயே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.

அவர்கள் தாயோ தந்தையோ அவர்கள் “அதை விட்டு விடுடா…” என்று சொன்னாலும் அந்த வேக நிலையில் “நீ பேசாமல் இரு…” என்பார்கள்.

ஆனாலும் அவர்கள் இட்ட சாப அலைகள் அவர்களுக்குள்ளே படர்கின்றது. இது “அவர்களுடன் போனாலும் பரவாயில்லை”.

அதே சமயத்தில் அவர்கள் குடும்பத்தில் கர்ப்பமாக இருந்தால் அதே சாப அலைகள் தன் வீட்டிலிருப்போரின் நிலைகளுக்குள் நுகரப்பட்டு அவரின் “கருவிலிருக்கும் குழந்தைக்கும்” இந்தச் சாப அலை படர்ந்து விடுகின்றது.

நிம்மதியாக வாழும் குடும்பத்திற்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏன் வருகின்றது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி வாயிலாகவும் இன்னும் எத்தனையோ சாதனங்கள் வழியாக பல இடங்களில் ஒருவருக்கொருவர் ஏசிப் பேசும் நிலைகளையும் அசுரத்தனமாகத் தாக்குவதையும் அப்படியே காண்பிக்கின்றார்கள்.

எல்லாவற்றையும் பார்க்கின்றோம்.. கேட்கின்றோம். நமக்குள்ளும் அதே கொதிப்பும் ஆத்திரமும் வருகின்றது. நாமும் அவர்களைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

ஆகவே அவ்வாறு கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த தீமை செய்யும் நிலைகளைச் சுத்தப்படுத்துகின்றோமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தவறு நாம் யாரும் செய்யவில்லை.

ஒரு இடத்தில் விளைந்த தீமை எல்லோருக்குள்ளும் சென்று அதனின் இயக்கமாக எல்லோரையும் அது இயக்குகின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா.

ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

ஏசிப் பேசுவோர் உடல்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் உண்மையை உணர வேண்டும். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறவேண்டும் என்று நாம் இவ்வாறு எண்ணி நம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

தூய்மைப்படுத்தவில்லை என்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
1.கடுமையான நோய்கள் வரும்
2.குடும்பத்தில் ஒற்றுமை குலையும்
3.பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இருக்காது
4.தொழில்கள் நசிந்து போகும்
5.வேலை பார்க்கும் இடங்களில் தொல்லைகள் வரும்
6.நிம்மதி இழந்து தவிக்க நேரும்
7.கடைசியில் மனிதனல்லாத உருவைத் தான் பெறச் செய்யும் நம் உயிர்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலில் அதனின் வலிமையைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

உங்கள் சொல் செயல் புனிதம் பெறும். உங்கள் மூச்சால் மற்றவர்களுக்கும் நல்லதாகும். “இந்தப் பாதுகாப்புக் கவசம்…” நமக்கு அவசியம் தேவை.

வளர்ச்சியின் பாதையில் வந்த மனிதன் நாம் இனி அடுத்த நிலையான “தெய்வ நிலைக்குச் செல்ல வேண்டும்…”

உடலில் வரும் வலிகளை எப்படித் தணிப்பது…?

 

முந்தைய நிலைகளில் உருவானது இனம் புரியாத நிலையில் வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டாலும் அந்த நிமிடம் என்ன செய்கிறது…? உடலில் இருந்து தான் அந்த வேதனை தோன்றுகின்றது. அந்த வேதனை உணர்ச்சிகள் ஆன பின் நம் உயிருக்கு வருகின்றது

உதாரணமாக
1.முள் குத்திவிட்டால் உடனே உயிருக்குத் தான் வருகின்றது… அப்பொழுது கண் என்ன செய்கின்றது…?
2.எங்கே முள் இருக்கின்றது…? என்று தேடுகின்றது
3.அதைக் கூர்ந்து கவனித்து நுகர்கின்றோம்.
4.ஆ… காலிலே முள் ஏறி விட்டதா… என்ன…? என்கிற அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இப்படித் தான் நம் உடலுக்குள் முந்தைய நிலைகள் பெற்ற உணர்வுகள் அந்த அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது என்றால் நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா…?

நம் உடலிலே ஏற்கனவே உருவான அணுக்கள் (முன்னாடி வேதனைப்பட்ட்து) தன் பசிக்கு வேதனையான உணர்வுகளை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த வேதனையை நாம் அறிய முடிகின்றது.

அந்தச் சமயங்களில் நமக்குள் அந்த நினைவு வந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

அதாவது…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போய்ச் சேராதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ
2.அங்கே உங்கள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் “வேதனையை உருவாக்கும் அணுவிற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

இப்படி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வாருங்கள்.
1.இதை இவ்வாறு செய்ய
2.இந்த உணர்வுகள் அந்த அணுக்களில் படர
3.விஷத்தன்மைகள் குறைந்து வலியைக் குறைக்க உதவும்.

இதைப்போல எடுத்து அந்த உணர்வின் தன்மையை நம் உடலில் செலுத்த செலுத்தச் சிறுகச் சிறுக அதனுடைய வீரிய சக்தி இழந்து நல்ல அணுக்கள் வலுப்பெறத் தொடங்கி விடுகின்றது.

இதைத் தான் “கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வார்கள்.

நம் உடலில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலைகள் எத்தனையோ விதமான அணுக்கள் இருக்கின்றது. அந்த அருள் ஒளியை நம் கண்ணிலே கவர்ந்து… அதே கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அங்கே “ஊடுருவிப் பாய்கின்றது…”

எங்கே வலி எடுக்கிறதோ அங்கே நேராகக் கண்ணின் நினைவைச் செலுத்தினோம் என்றால் சிறுகச் சிறுக வலிகள் தணியத் தொடங்கும்.

இதே போலத் தான் நம் நரம்பு மண்டலங்களில் கை கால் குடைச்சலோ மற்ற நிலைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசைகளில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளில் படர வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தி எங்கள் உறுப்புகள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வுகளை படரச் செய்யும் பொழுது “மின்சாரம்…” பாய்வது போல உடலுக்குள் பரவும்.

சிறுகச் சிறுக எடுத்தோம் என்றால் உடலில் வரக்கூடிய வலிகள் தணிய நேரும்.

பிடர்தல் என்னும் நுணுகி அறிதல்

 

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு…” வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

1.நமக்கு முன்னே மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு
2.வேகம் என்ற சொல்லில் – “அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்”
3.முயற்சி என்ற ஞான சூத்திரம் கொண்டு “உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்…!’

“பிடர்தல்…” என்ற எண்ண உந்து சக்தியின் துணையால் இலட்சியம் கொண்டு பயணமாகும் மெய் ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது அதை நம் அறிவின் ஞான எண்ணம் கொண்டு சமைத்து அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து ஆக்கம் கொண்டிடும் செயல் முறைகளில் செயல்படுத்துதல் வேண்டும்.

சிலர் தங்கள் சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
1.எண்ணத்தின் பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்
2.பூமியின் ஊடே செல்லும் நீரோட்ட வீரியத்தை
3.தன் சரீர அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும் பொழுது
4.அதில் செலுத்தப்படும் எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.

சரீரத்தின் எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும் பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்
1.எந்த இடம் நீர் சக்தி உள்ள இடமோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது
2.நாம் செலுத்திய உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக
3.சரீரத்தைச் சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.

இதைப் போல் மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப் பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால் அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும் முடியும்.

குழந்தைகள் படங்களைப் பார்த்த அந்தப் படத்தின் கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல் நாம் சுவாசிக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும் கருத்தாற்றலை உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.

அந்தச் சூட்சமச் செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும் பக்குவத்தையும் பெற்றிடலாம்.

இந்த வலு வீரியத்தைக் கூட்டிடும் சக்தியின் தொடர் தன்னுள் வலுக் கொள்ள காந்த அமில குண வீரியத் தாய் சக்தியும் ரிஷிபத்தினி சக்தியும் சேர்த்துச் சிவசக்தியாக உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல முறை சொல்லியிருக்கின்றார். நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். சாமி (ஞானகுரு) நேற்றுச் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறார். திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.

ஆனால், காலையில் சொன்னதை “சாமி என்ன சொன்னார்…?” என்று மறுபடி கேட்டால் “தெரியாது…” என்பார்கள்.

ஆனால், யாம் திரும்பச் சொல்லும் பொழுதுதான் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றது.

இதற்குத்தான் மறைந்ததை மீண்டும் உங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அந்த மகரிஷிகளின் சக்தியை யாம் பெறச் செய்கின்றோம்.

முதலில் பதிவு செய்துவிட்டாலும்
1.சாமி நேற்றுச் சொன்னதைத்தான் சொல்கிறார் என்று (நினைவினை) வேறு பக்கம் திரும்புவார்கள்.
2.தான் கேட்பதைத் தடைப்படுத்திக் கொள்வார்கள்.
3.தனக்குத் தண்டனையே கொடுத்துக் கொள்வார்கள் என்று கூடச் சொல்லலாம்.
4.நன்மைகளைப் பெற முடியாதபடி தீமைக்கே இடமளிக்கும் நிலை வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை விடுத்து நீங்கள் மீண்டும் மீண்டும் பெற வேண்டும் என்றுதான் இதை உபதேசிக்கின்றேன்.

இராமாயணமோ மகாபாரதமோ கந்த புராணமோ விநாயக புராணமோ இவை அனைத்தும் ஒரே கதையாகத் தான் எழுதி வைத்துள்ளார்கள்.

அதற்காக வேண்டி.., “நேற்று நீ அதைப் படித்தாய் இன்றைக்கு ஏன் நீ கந்த புராணத்தை மாற்றிப் படிக்கக்கூடாது…! நேற்றுச் சொன்னது தானே படிக்கின்றோம்… என்று யாராவது கேட்கின்றீர்களா…?”

கேட்கவில்லை.

“சாமி சொல்லும்போது மட்டும்…” நேற்றுச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார் என்கிறார்கள்.

இதே மாதிரி கீதாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் நேற்றுச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார்கள். மகாபாரதப் போர் என்றால் இயற்கையின் உண்மைகளைச் “சொன்னதைத்தான் திருப்பிச் சொல்வார்கள்…”

பள்ளிக்குச் சென்று எஞ்சினியரிங் (ENGINEERING) படிக்கின்றீர்கள் என்றால் அந்தப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்து அதை நீங்கள் படித்துத் தெரிந்து கொள்கிறீர்கள்.

அப்பொழுது.., “நேற்றுப் படித்ததை இன்றைக்கு ஏன் படிக்க வேண்டும்…!” என்று விட்டுவிட்டால் படித்தது மீண்டும் என்றைக்கு நினைவுக்கு வருவது…?

ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். பள்ளியில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டோம். அப்புறம் ஏன் நீங்கள் படிக்கின்றீர்கள்…?

அங்கே பள்ளியில் சொல்லிக் கொடுத்தவுடன் மீண்டும் என்ன செய்கிறோம்…? புத்தகங்களை எடுத்து மீண்டும் மீண்டும் படித்து மனதில் நிறுத்திக் கொள்கிறோம் அல்லவா.

இதைப் போன்று தான்
1.உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளை ஆழப்பதியச் செய்து
2.அந்த உணர்வுகளை உங்களை அறியாமல் இயக்கச் செய்து
3.உங்களை அறியாமலே தீமைகளை அகற்றச் செய்வதற்காக இதைச் செய்கின்றோம்.

ஒரு தடவை தீமை செய்வதை உற்றுப் பார்க்கின்றீர்கள். அதனைப் பதிவு செய்து கொண்டால் “அந்த நினைவு வரும் பொழுதெல்லாம்” உங்களுக்குக் கோபம் வருகின்றது… ஆத்திரம் வருகின்றது… அவரை எப்படித் தாக்குவது..? என்ற உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.

இதைப் போன்று தான் உங்களுக்குள் “மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்.. மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் இதை யாம் சொல்லும் பொழுது உங்களுக்குள் உணர்வுகள் பதியப் பதியப் பதிய இந்த நினைவுகள் அது எடுத்துக் கொண்டே இருக்கும்.

அப்பொழுது அதனின் வளர்ச்சியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு உங்கள் நினைவினைக் கூட்டி அருள் உணர்வுகளைத் தூண்டச் செய்து நமக்கு முன் இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவரும் நிலைக்கே இதைச் சொல்வது.

ஆனால் “என்னமோ” சாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். “நேற்றுச் சொன்னார்.. சொன்னார்… சொன்னார்..!” என்ற நிலைகளில் இல்லாது அதை நாம் “பெற வேண்டும்… பெற வேண்டும்… பெற வேண்டும்..,” என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நேற்று கோவிலுக்குச் சென்று விநாயகரைப் பார்த்தோம் “இன்று” ஏன் விநாயகரைப் பார்க்க வேண்டும்…? நாளை வேறு ஒருவரைப் பார்க்கலாம் அல்லவா..!

இன்று முருகனைப் பார்த்து வணங்கப்படும் பொழுது நேற்றுப் பார்த்த அதே முருகனை இன்று ஏன் பார்க்க வேண்டும்…? இப்படிப் புதிதாகப் பார்க்கின்றோமா…?

நேற்றே முருகனைப் பற்றித் தெரிந்து கொண்டோம். அபிஷேகம் வேறு செய்தாகிவிட்டது. திரும்ப ஏன் முருகன் கோவிலுக்குச் செல்கின்றீர்கள்…?

ஏனென்றால்..,
1.சில பேர் வினாக்களை ரொம்பவும் எழுப்புவார்கள்.
2.சாமி எல்லாவற்றையும் சொல்கிறார்.
3.திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று மிகவும் சுலபமாகச் சொல்லிவிடுகின்றார்கள்.
4.ஆனால், அவர்கள் ஏன் திரும்பத் திரும்பப் புத்தகத்தைப் படிக்கின்றார்கள்…?
5.திரும்பத் திரும்ப முருகனைப் போய் பார்க்கின்றார்கள்…?
6.திரும்பத் திரும்ப விநாயகரைப் போய் பார்க்கின்றார்கள்…?
7.திரும்பத் திரும்ப மாரியம்மனைப் போய் பார்க்கின்றார்கள்…?
8.ஒரு தடவைதான் பார்த்தாகிவிட்டதே… திரும்ப அதை ஏன் சொல்வானேன்…?
9.ஒரு தடவை தான் அங்கே கோவிலுக்குள் சென்றோம் மறுபடியும் அங்கே ஏன் செல்ல வேண்டும்…?
10.தெரிந்து கொண்டோம் அல்லவா…! இந்தச் சாமி நல்லது செய்யும் என்றார்கள். பார்த்துவிட்டோம். அப்புறம் ஏன் திரும்பப் போய் அதைக் கும்பிட வேண்டும்…?

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கேட்டு திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று சாதாரண நிலைகளில் “வினாக்கள் எழுப்பிக் கொண்டிருப்போர்… அதிகம் பேர் இருக்கின்றார்கள்…”

ஏனென்றால் யாம் உயர்ந்த நோக்குடன் சொல்லும் பொழுது இப்பொழுது அந்த உபதேசக் கருத்திற்கு அது எதிர்மறையாக வருவது என்ன செய்யும்…?

1.மனிதனின் வாழ்க்கையில் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கும் உணர்விற்கு
2.இது (அருள் உணர்வுகள்) தடைப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டி கேட்க விடாது தடைப்படுத்தும்.

காரணம் நீங்கள் அல்ல. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் நம்மைக் கடுமையாகத் திட்டினார் என்றால் அதைக் கூர்ந்து பதிவாக்குகின்றோம். பதிவானால் தான் அவரைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் வரும்.

அப்படி அவர் திட்டவில்லை என்றால் அவர்களைப் பற்றிய பதிவு இல்லை, நினைவுக்கு வருவது மிகவும் கடினம்.

ஆகவே தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி” ஒவ்வொரு உயிரையும் கடவுள் என்று யாம் மதிக்கின்றோம். அந்த ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாக யாம் இதைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

தியானமிருப்பதைக் காட்டிலும் அதை எழுத்திலே எழுதிப் பாருங்கள்

 

ஒரு சமயம் குருநாதர் பழனியில் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது என்ன செய்தார்…?

டாக்டரிடம் போய் “நோயாளிகள் எல்லோரும் குணமாக வேண்டும், இல்லையென்றால் சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவேன்” என்று சொல்லி சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வாடா…! என்று என்னிடம் (ஞானகுரு) சொல்கிறார் குருநாதர்.

நான் போய்விட்டு வந்தேன். என்னை “உள்ளே வராதே” என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்றேன்.

குருநாதர் என்ன சொல்கிறார். “ஏண்டா.. நீ அங்கே போகவே இல்லை.. என்னிடம் பொய் சொல்கிறாய். போய் நிஜமாகவே சொல்லிக் கொடுத்துவிட்டு வா என்கிறார்.

இவர் சொல்கிற வார்த்தையெல்லாம் அங்கே சொன்னால் என்ன செய்வார்கள்…? நீ டாக்டரா… நான் டாக்டரா…? என்று கேட்கிறார்கள்.

ஆனால் “நான் எல்லா சக்தியையும் பெற்றிருக்கின்றேன்” என்று டாக்டரிடம் போய்ச் சொல்லுடா…! என்கிறார் குருநாதர்.

ஐயோ… அவர் செய்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியெல்லாம் சொல்லி அடுத்து என்ன செய்தார்…?

1.நீ போய் அவனுக்கு லெட்டர் எழுதிப் போடுடா.
2.லெட்டர் எழுதிப் போட்டு போஸ்ட் ஆபீசில் கொண்டு போய் போடு.
3.உடனே எல்லோருக்கும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி ஆண்டவனுக்கு எழுதிப் போடுடா என்கிறார்.

யார்..? ஆண்டவனுக்கு.

சாமி… விலாசம்…? என்று கேட்டேன்.

எழுதுடா… “ஆண்டவன்” என்று எழுதிப் போஸ்ட் ஆஃபீஸில் கொண்டு போய்ப் போடு…! என்று என்னை எழுதச் சொல்லிப் போடச் சொல்கிறார் குருநாதர்.

இந்த மாதிரி பெரிய கூத்தெல்லாம் பண்ணுவார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அப்புறம் விளக்கமெல்லாம் கொடுப்பார்.

உன்னை ஆள்பவன் யார்…? உன் உயிர் தான்.

“அவனிடத்தில் நீ சொல்லுடா…”
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு
2.உன் இருள் போக வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நீ நினைத்து எழுது.
4.அங்கே எண்ணித்தான் நீ எழுதுகிறாய்.

இந்த லெட்டர் என்ன செய்யும்…? நீ போடு.

ஆக உனக்குள் அந்த அருள் சக்தி வருகின்றது. அதே சமயத்தில் அவர்களும் அங்கே அந்த அருள் சக்தி பெறுகின்றார்கள்.

இப்படியெல்லாம் சுருக்கமாக அந்த இயற்கையின் நிலைகளை
1.உயிரின் இயக்க நிலைகளை
2.எனக்குப் புரியும்படி செய்தார் நமது குருநாதர்.

வேறு ஒன்றும் வேண்டியதில்லை… “தியானம் இருப்பதற்கு பதில்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடல் நன்றாக ஆக வேண்டும் என்று எழுதிக் கொண்டிருந்தாலே போதும். இந்த உணர்வுகள் அங்கே பாயும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.உடல் நன்றாக வேண்டும் என்று இப்படி எழுதிக் கொண்டேயிருங்கள்.
3.அப்பொழுது அங்கே பாஸாகிக் கொண்டே இருக்கும்
4.உங்கள் எண்ணமே அந்த உணர்வாகும்… மற்ற எண்ணங்கள் கலப்பதில்லை.

என் உடல் நன்றாக வேண்டும். இந்த நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி நீங்கள் லெட்டர் எழுதுங்கள். அப்படி லெட்டர் எழுதும் பொழுது, ஆண்டவனை இங்கே (உங்கள் உயிருக்குள்) போய்ச் சேருகின்றது.

1.அந்த உணர்வை அங்கே சிந்தித்துத்தான் நீங்கள் எழுதுகின்றீர்கள்.
2.அந்த உணர்வு தான் இங்கே வருகிறது…. அந்த எழுத்து எல்லாம் இங்கே வருகின்றது.

இதையெல்லாம் அங்கே காட்டுவதற்காக குருநாதர் எமக்கு இப்படியெல்லாம் ஒரு வழியைக் காட்டினார்.

ஏனென்றால் இன்றிருக்கக்கூடிய விஷ உலகில் உங்களைக் காக்க “இருந்த இடத்திலிருந்து…” இந்தச் சக்திகளை நீங்கள் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

நீயே தான் உனக்குக் கடவுள்

 

1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை.
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கிவிடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.

இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.

ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.

அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.

ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகாதேவன்.

இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழுமலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களப்பா.

நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழுமலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்குத் தெரிந்துவிடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.

இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்செங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித் தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்…? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்… கண்ணில்லையா…? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.

கடவுள் எங்குள்ளான் என்று இப்பொழுது புரிந்ததா…? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள்.

கடவுள் என்பது யார் என்று புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தாவர இனங்களுக்குண்டான சக்திகளைப் பற்றிய அனுபவம் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

ஒரு இடத்தில் குருநாதர் என்னை நிற்கச் சொன்னார். அப்பொழுது அங்கே ஒரு கொடி.., “தன்னாலே அது நகர்ந்து வருகின்றது”. அதை நான் முதலில் கவனிக்கவில்லை.

அந்தப் பக்கம் ஒரு செடி இருக்கின்றது பார் என்றார் குருநாதர். ஓடிப்போய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தக் கொடி அப்படியே.., நகர்ந்து வருகின்றது.

அந்தக் கொடி நகர்ந்து வரப்படும்போது ஒரு குச்சியை ஊன்றச் சொன்னார். குச்சியை ஊன்றிய உடனே “குச்சியைச் சுற்றிக் கொண்டு… என் கைக்கு வருகின்றது…”

மனித உடலில் உள்ள அந்த உணர்வின் நிலைகள் அந்தச் செடிக்குத் தேவை.

அது பட்டுவிட்டது… கையில் சுற்றி விட்டது என்றால் அதை அறுத்து விட்டால் பரவாயில்லை. இல்லை என்றால் நம் இரத்தத்தை அப்படியே குடித்துவிடும். அப்படியே “சொத்…”என்று விழுக வேண்டியதுதான்.

இது அஸ்ஸாம் மலைப்பகுதிக்கு செல்லப்படும்போது நடந்த சம்பவம். அங்கே சில இடங்களுக்குச் செல்லப்படும் போது சில பூக்கள் பார்த்தால் ரொம்ப அழகான பூக்களாக இருக்கின்றது.

அந்தப் பூக்களில் உள்ள தேனைத் தேனீக்கள் எடுக்கப்போகின்றது. அதனுடைய மூக்கு நீளமாக இருக்கின்றது. தேனை எடுக்கப் போகும்போது அந்தத் தேனீயை அப்படியே கோர்த்து இழுக்கின்றது அந்தப் பூ.

இந்த விஷத்தின் தன்மை அதற்குள் பட்டபின் இது எடுத்து அப்படியே முழுதாகவே செத்துக் கிடக்கின்றது. அந்தப் பூவிற்கு அவ்வளவு வலு இருக்கின்றது.

நான் அதை எடுத்துப் பார்த்தேன். எடுத்து வைக்கும் பொழுது ஒரு விட்டில் பூச்சியை அதற்குப் பக்கத்தில் வைத்தேன். வைத்தவுடன் அந்தப் பூச்சியில் இருக்கும் சத்தை இழுக்கின்றது. பூச்சியை வெறும் சக்கையாக்குகின்றது.

அந்தப் பூவை முகர்ந்து பார்த்தால் நமக்கு ஒன்றும் இல்லை. குருநாதர் நுகரும்படிச் செய்தார். விஷம் இல்லை. ஆனால் இந்த உடலில் இருப்பதை “எப்படி இழுக்கிறது…?” என்பதனைக் காட்டுகிறார்.

சில பட்சி இனங்கள் தன் உணவைக் காயோ அல்லது பழத்தையோ முழுதாக வித்துடன் சேர்த்துத் தன் உணவை விழுங்குகின்றது.

இது அதனின் மலத்துடன் வெளி வந்தபின் அந்த வித்து ரொம்பவும் துரிதமாக விளைகின்றது.

அரச மரத்தை எடுத்துக் கொண்டால் அரசம் பழத்தைக் குருவிகள் சாப்பிடுகின்றது. அது எங்கேயாவது போய் தன் மலத்தை இட்டால் அந்த மலத்திலிருந்து வரக்கூடிய வித்து அரச மரமாக விளைகின்றது.

அத்தகைய வித்து ஒரு கொடி மீது விழுந்து அரச மரமாக விளையப்படும் போது அதற்கு குருவியிடம் இருக்கக்கூடிய ஜீவித சக்தியை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது.

அப்படி அது வரப்படும்போது காற்றிலிருந்து இருக்கக்கூடிய நீரைப் பிரித்தெடுக்கக் கூடிய சத்தை அது பெறுகின்றது. அரச மரத்தின் இலைகளைப் பார்த்தால் இலையின் நுனி ஊசி போன்று இருக்கும்.

அதன் வழியாக நீர்ச்சத்தை இழுத்து உள்ளுக்குள் செலுத்துகின்றது. காற்றில் இருக்கும் நீரை வடித்துத் தனக்குள் ஜீவனாக்குகிறது.

அதை எடுத்து எடுத்து விழுதுகளில் பரப்புகின்றது. விழுதுகளைப் பரப்பியபின் அது நீர் இருக்கும் பக்கம் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.

1.தாவர இனங்களில் அதன் உணர்வுகளுக்கு
2.எத்தனை விதமான நிலைகளில் “எதனதன் கலவையில்… எது எது.. சேர்கின்றதோ… அதன் வழி வளர்கின்றது” என்றும்
3.தனக்குப் பாதுகாப்பான நிலைகள் அது எப்படி வருகின்றது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.இதைப்போல அதில் விளைந்ததை உணவாக வித்தாக உட்கொள்ளும் பட்சிகளுக்கும் மற்ற நிலைகளுக்கும்
5.அதற்குண்டான ஞானங்களும் அதற்குண்டான உணர்வுகளும் எப்படி விளைகின்றது…? என்று உணர்த்துகின்றார்.
6.அதே உணர்வுகள் அது கரு முட்டையாக்கப்படும்போது (தன் குஞ்சுகள்) அது ஒவ்வொன்றுக்கும் எந்தெந்த நிலைகள் ஏற்படுகின்றது…? என்பதனையும் உணர்த்துகின்றார்.

ஆகவே, இந்த அணுக்களின் வளர்ச்சியின் உணர்வுகள் அது தான் இயல் இசை நாடகம்.

ஒரு செடியில் உண்டான “இயல்… அந்த வாசனையின் உணர்வுகள் “இசையாக” மாறுகின்றது. அதன் உணர்வுக்குத்தக்க அந்த “உடலின் அமைப்பு” மாறுகின்றது.

அதனால்தான் “இயல் இசை நாடகம்” என்ற நிலையில் அந்த உடலின் தன்மையில் உணர்வுகள் எப்படி என்ற நிலையில் “வேதங்களின் மூலங்கள்” தெளிவாகக் கூறுகின்றது.

“செத்த பிற்பாடு…” யாருக்கு என்ன தெரியப் போகிறது…? என்று சாதாரணமாக நினைக்கின்றனர்

 

எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்… என் குடும்பத்தை நாஸ்தி செய்கின்றான்… அவனை விடுவேனா பார்…! என்று எண்ணினால் உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் சென்று அதே வேலையாக அந்தக் குடும்பத்தையும் கெடுக்கிறது.

குழந்தை மீது மிகுந்த பாசமாக இருந்தால் போதும். வாழ்க்கையின் கடைசியில் உடல் நோயினால் அவஸ்தைப்படும் பொழுது நான் போய்விட்டால் அவன் என்ன செய்வான்…? ஏது செய்வான்…? எப்படித் தன்னைப் பாதுகாப்பான்…? என்று எண்ணி உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று எல்லாவற்றையும் அவனை இழக்கச் செய்துவிடுகிறது.

ஏனென்றால்
1.இப்படி மூன்று லட்சம் பேருடைய உணர்வுகள் அது எப்படி இயங்குகின்றது…?
2.உடலுக்கு பின் என்ன…? என்கிற நிலையை அறிந்த பின்பு தான் உங்களிடம் இந்த உண்மைகளைச் சொல்கின்றேன்.

செத்த பின்னாடி என்ன தெரியப் போகின்றது…? யார் என்ன செய்யப் போகின்றோம்…? என்று தான் பெரும் பகுதியானோர் சொல்வார்கள். பேய் வந்து ஆடுகிறது என்றால் அது எப்படிப் பேய் எப்படி ஆடுகிறது…? என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அது அவர்களைப் பிடித்தது என்றால் சரியாய் போய்விடும்.

ஒருவர் இப்படித்தான் சாமியே இல்லை… பூதம் இல்லை…! என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் குடும்பத்திலே ஒருவர் இறந்த பின் அந்த ஆவி அவர் பெண் குழந்தை மீதே வந்து விட்டது.

வந்த பின் என்னிடம் (ஞானகுரு) ஓடி வந்தார். ஏன் குழந்தை என்னென்னமோ சொல்ல ஆரம்பிக்கின்றது என்றார்.

“நீ தான் கடவுளே இல்லை…” என்று சொன்னாய் அல்லவா என்றேன்.

கடவுளே இல்லை என்று தான் சொன்னேன் ஆனால் இந்தப் பிள்ளை தெரியாத வார்த்தைகளை எல்லாம் பேசுகிறது. குழந்தையின் தலையில் இருந்து குங்குமம் வருகின்றது. அதற்கு ஒன்றுமே தெரியாது ஆனால் வருகின்றது. ஏதாவது பேச ஆரம்பித்தால் நல்ல நறுமணங்கள் வருகின்றது. இது என்னப்பா… விசித்திரமாக இருக்கின்றது…? என்றார்.

நீ தான் பேயும் இல்லை பூதமும் இல்லை என்று சொன்னாய். “சாமி இல்லை…” என்கிற பொழுது இது எப்படி இருக்கும்…? என்கிற நிலையில் நீ தெரிந்து கொள் என்று விளக்கத்தைச் சொன்னேன்.

மந்திரத்தை ஏவியதால் தலையிலிருந்து குங்குமம் வருகிறது. மனித உடலிலிருந்து ஆன்மா பிரிந்து இன்னொரு உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? என்று நீ தெரிந்து கொள் என்றேன்.

பின்னர் தன் நாஸ்திகத்தையே அவர் விட்டுவிட்டார்.

ஆனால் இதற்காக நீ மந்திரவாதியிடம் செல்ல வேண்டாம். நான் சொல்லும் முறைப்படி தியானத்தைச் செய். அந்த குழந்தையைச் சீராக்க முடியும் என்று சொன்னேன்.

அதே பிரகாரம் அவர் செயல்படுத்தும் போது அந்தக் குழந்தை நன்றாக ஆனது.

குருநாதர் இப்படிப் பல அனுபவங்களை எமக்குக் கொடுத்ததைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன். இயற்கையின் உண்மைகளை அறியும்படி செய்தார்… நுகரும்படி செய்தார். அந்த உணர்வை எனக்குள் ஊட்டினார்.

காடு மேடல்லாம் அலைந்து திரிந்து தான் அதை எல்லாம் அறிந்து கொண்டேன். ஆனால் நீங்கள் உட்கார்ந்து அமைதியாகக் கேட்கின்றீர்கள்.

சிரமப்பட்டுத்தான் நான் இதை வளர்த்தேன் அதன் வழியில் கண்ட உண்மைகளைத் தெரியப்படுத்துகின்றேன்
1.உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்… நீங்கள் நினைவு கொள்ளுங்கள்
2.தீமையிலிருந்து விடுபடுங்கள்… பிறவி இல்லா நிலை அடையுங்கள்
அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்.

அருள் உணர்வுகளைச் சேர்த்து தீமைகள் புகாதபடி அதை அடக்கி அருள் ஞான உணர்வின் கருவாக உருவாக்குங்கள்… இந்திரலோகமாக மாற்றுங்கள்… உடலுக்குள் பிரம்மலோகமாக மாற்றுங்கள்… சொர்க்கலோகமாக உருவாக்குங்கள்… சிவலோகத்தைச் சொர்க்கலோகமாக மாற்றுங்கள்.

1.உயிருடன் ஒன்றி உடலை விட்டு வெளி வரும் போது உயிரைச் சொர்க்க வாசலாக அமையுங்கள்
2.எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தீர்களோ உயிர் அங்கே அழைத்துச் செல்லும்
3.உங்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும்.

அந்த அருள் பெற வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன் உங்கள் உயிரை வேண்டுகின்றேன். அவன் அமர்ந்திருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும்… அவனால் உருவாக்கப்பட்ட சிவனான உடலுக்குள் மகிழ்ச்சிக்குரிய நிலைகள் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இந்த உபதேசத்தின் வாயிலாகத் தீமை நீக்கும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் ஒளியான அணுவின் கருக்களாக உங்களுக்குள் எப்படியும் உருவாக வேண்டும் என்று தான் மூச்சு விடாது பேசிக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தை எண்ணி நீங்கள் தியானிக்கும் போது
1.உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போன்று இந்த உணர்ச்சிகள் உங்கள் உடலில் பரவும்
2.அந்தச் சக்தி தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.

தவயோகிகள் தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைப்பதற்காகத் தவமிருக்கவில்லை

 

சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே… காப்பவளும் அவளே… அழிப்பவளும் அவளே…!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கிக் காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்… சக்தியின் சுயநிலை… அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்…!”

அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.

அவ்வழியின் அருளைப் பெறப் பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி… காத்து.. அழிக்கும்… நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.

சக்தியின் நிலை என்னப்பா…?

1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்…?
2.தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா… அந்த நிலையைப் பெற்றார்கள்…?

இல்லையப்பா…!

அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து… தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.

ஆனால் இந்தக் கலியில் வந்த சாமியார்கள் – சாமியார்கள் என்ற பெயரில் வந்தவர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் வழியில் உபதேசம் செய்ததைப் பலர் அறியப் பணம் காசுகள் சேர்த்துத் தன் வழியில் வந்தவர்களுக்கு வாழ வழி செய்து விட்டுத் தன் பெயரை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள்.
1.இக்கலியில் வந்த சாமியார்களுக்கே இந்த நிலை என்றால்
2.இக்கலியில் தோன்றிய மனிதர்கள் நிலை எப்படியப்பா இருக்கும்…?

இக்கலியில் மாமனிதனாகலாம் என்பதெல்லாம் பல கோடிப் பணம் சேர்த்துப் பலர் அறியப் புகழ் எய்தி வாழ்வது தான் மாமனிதன் என்ற எண்ணம்.

அந்த நிலையில் அவனைப் பார்ப்பவனுக்கு என்னப்பா தோன்றும்…?
1.அவன் மேல் பொறாமை எண்ணம் தான் ஏற்படும்.
2.அந்த நிலையில் மாமனிதனாகி என்னப்பா பயன்…?

ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா…? தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.

கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும் என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல் மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.

அந்த நிலையில் அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம் அவர்கள் பெற்ற அருள் எல்லாம் ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்.

இத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.

அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.

அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்…!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.

அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.

அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய உலகில் மனித இனத்தையே பூண்டுடன் அழிக்கும் உணர்வுகளாக மனிதனுக்குள் விளையப்பட்டுச் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நஞ்சு கொண்ட உணர்வுகளாகச் சாக்கடையாக இருக்கின்றது.

இந்தச் சாக்கடைக்குள் பல ஆண்டுகளுக்கு முன் மறைந்திருந்த ஞானிகள் இத்தகைய தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்தி நமக்கு முன் உண்டு.

அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். பதிவு செய்ததை நினைவு கொண்டு நீங்கள் எடுக்க முடியும்.

இந்தச் சாக்க்டையான வாழ்க்கையில் சாக்கடையைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து இந்தச் சாக்கடையான உலகில் வாழ்ந்த நம் உடலுக்குள் சாக்கடையைப் பிளந்து உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற முடியும்.

இதற்கென்று “விதி” இல்லை.
1.இளம் பிள்ளை என்றோ மற்றவர்கள் என்றோ
2.அறிந்தவன் என்றோ அறியாதவன் என்றோ எதுவுமே இல்லை.

அறியாதவன் அறிய முற்படுகின்றான். அறியாத நிலைகளில் இருக்கும் பொழுது நாம் அறிய முற்படுகின்றோம். அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.

அப்படிக் கூட்டும்போது இதனின் உறுதுணை கொண்டு அறிந்திடும் நிலைகள் கொண்டு இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வினை உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

நாம் வீட்டில் இருக்கிறோம் என்றால் எவ்வளவு சுத்தப்படுத்தி வைத்தாலும் வீட்டிற்குள் அழுக்கு வரத்தான் செய்கின்றது. நாம் எவ்வளவு தூய்மையான ஆடையைப் போட்டாலும் அது அழுக்காகத்தான் செய்கின்றது. நம் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அழுக்கு வரத்தான் செய்கின்றது.

1.நாம் தூய்மையான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும்
2.தூய்மையற்ற நிலைகளைக் கேட்டுத் தூய்மையற்றதை நமக்குள் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.

எவ்வாறு தூய்மையற்ற நிலைகளைத் தூய்மையாக்குவதற்குத் துடைக்கின்றோமோ நல்ல நீரை விட்டு அதைக் கழுவுகின்றோமோ இதைப் போல
1.மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உடலுக்குள் இருக்கும் தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே
3.யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானத்தின் வழி.

இந்த உடலுக்குப் பின்னால் நாம் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது

 

ஒவ்வொரு நிலைகளிலும்
1.”தீமைகளை அகற்றி விட்டேன்…” என்று நீங்கள் சொன்னால் அதை நான் (ஞானகுரு) கேட்கும் போதெல்லாம் எனக்குச் சந்தோஷம்
2.”சக்தி எடுத்தும் விரயமாகி விட்டது…” என்று நீங்கள் எண்ணினால் எனக்கும் அது கஷ்டம் தான்.

நான் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அலைந்து எத்தனையோ சிரமப்பட்டு அருள் ஞானிகள் பெற்ற சக்திகளை உங்களுக்குள் பதிவாக்கியுள்ளேன்.

அதை நீங்கள் எடுத்து வளர்த்துச் சந்தோஷப்பட முடியாதபடி வேதனையாக இருக்கிறது என்று அதை வளர்த்தால் எனக்குள்ளும் அதே உணர்வு வளர்கின்றது. உங்களுக்கு வேதனை நீங்கவில்லையா…? என்ற உணர்வு தான் எனக்கும் வரும்.

ஆனால் நான் அதைத் திருத்திக் கொள்கின்றேன். உங்களுக்குள் அதைத் திருத்த முடிவதில்லை. அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகி விடுகிறது.

அப்படி இல்லாதபடி…
1.எப்படியும் அந்த அருள் ஒளியைப் பெறுவேன்
2.என் வாழ்க்கையில் வந்த இருளை அகற்றுவேன்
3.மெய் ஒளியை எனக்குள் பெறுவேன்
4.பேரானந்தம் பெறுவேன்… பெரு வீடு என்ற நிலையை அடைவேன்
5.பிறவி இல்லா நிலை அடைவேன்… என்று உறுதிப்படுத்தி இந்தப் பாதையில் நீங்கள் செல்லுங்கள்.

உயிர் என்றுமே அழிவதில்லை…. உணர்வுகள் மாறுகின்றது எதன் உணர்வைப் பெறுகின்றோமோ இந்த உடலுக்குள்… இருண்ட நிலைக்குள் உயிர் ஒளியாக உள்ளே இருக்கின்றது. அருள் ஞானிகள் உணர்வின் தன்மையை எடுத்து ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

நீங்கள் சீராகத் தியானிக்கும் பொழுது பார்த்தால் உள் ஒளி பெருகும். அப்பொழுது உடலில் இருந்து வெளிச்சம் வரும்.

இதை எல்லாம் பழனியில் ஒருவரிடம் சொல்லும் பொழுது ஆர்வமாகக் கேட்டார்.

கணவன் மனைவி சேர்ந்து இந்தத் தியானத்தைச் செய்தவுடன் அவர் உடலிலிருந்து திடீரென்று பளீர்….ர்ர்… என்று வெளிச்சம் வருகின்றது. வீடே வெளிச்சமாகிறது.

இரண்டு பேரும் அதைப். பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐய்யய்யோ… ஒளி தெரிகின்றதே… என்னுடைய சந்தோஷம் எல்லாம் போய்விடும் போலத் தெரிகிறதே…! என்று அவர் உடனே மனைவியைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார்.

உடலில் இருந்து ஒளி வருகின்றது… நான் இப்படியே போய் விடுவேனா…? என்ற இந்தப் பயம் அவருக்கு வந்து விட்டது.

“பயப்பட வேண்டியதில்லை…” என்று சாமி (ஞானகுரு) சொல்லி இருக்கின்றாரே என்று மனைவி அவரிடம் சொல்கின்றது. உடலில் இருந்து வெளிச்சம் வருகிறது… எனக்கும் தெரிகிறது…! என்று சொல்கிறது.

இல்லை…! எனக்கு எப்படியோ நடுக்கம் வருகின்றது என்று அதை மாற்றி விட்டு இதை எடுக்கின்றார். பெரும் ஆனந்தம் வந்தாலும் அதை அவரால் எண்ண முடியவில்லை.

வட்டிக்கடை வைத்து அவர் நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பாவம் எல்லாம் எனக்கு வருமே. இதை எல்லாம் எப்படி மாற்றுவது…? என்று சொல்லி என்னிடம் கேட்டார்.

நான் விவரத்தை எல்லாம் அவருக்குச் சொன்னேன். அவருக்குச் சில தத்துவங்களும் தெரிகின்றது… கவிகளையும் பாடுகின்றார்.
1.ஆனால் இந்த ஒளி தெரிந்த பின்
2.உடல் ஆசையைக் கூட்டும் நிலை தான் வருகின்றது.

அடுத்து என்ன செய்கிறார்…?

மந்திரவாதிகளிடம் சென்று இந்தத் தீய நிலைகள் எனக்குள் வராது தடுக்க வேண்டும் என்று கேட்கின்றார் கோழிக்கறியும் சாராயமும் வைத்து நீ சாப்பிடு. தாயத்தை ஒன்றைக் கொடுத்து அதைக் கட்டிக் கொள் என்று மந்திரவாதி சொல்கின்றார்.

கடைசியில் இதற்கு அதற்கும் போராட்டமாகி அவருடைய நிலைகள் மாறிவிட்டது. உடலுக்குள் எதிர்நிலையான பின் நோயாக மாறிவிட்டது

அவருடைய வீட்டிலே தாயும் மற்ற எல்லோரும் சொல்கின்றார்கள். சாமி இவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருக்கின்றார்…! அட நீ என்னப்பா…? என்று.

ஆனால் அவரோ
1.நான் இத்தனையும் அனுபவிக்க வேண்டுமே
2.அதற்கு முன்னாடி நான் ஒளியாகி விட்டால் என் சுகம் எல்லாம் போய்விடுமே
3.இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது…? என்று சொல்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

இப்படியும் சிலர் சக்தி கிடைத்தும் நழுவி விடுகின்றார்கள். இந்த உடலில் ஆசை வரப்படும் பொழுது இந்த வழியில் சென்று விடுகிறார்கள்
1.இதைப் போன்று இல்லாதபடி பேரானந்த நிலை என்ற நிலையை நீங்கள் அடையக் கற்றுக் கொள்ளுங்கள்.
2.இந்த உடலுக்குப் பின்னால் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது.

ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் எங்கே செல்கின்றது…? எப்படி அல்லல்படுகிறது…? என்று ஏற்கனவே பல உபதேசங்களைக் கொடுத்திருக்கின்றோம். இது தான் சாகாக்கலை என்பது.

சாகாக்கலை நீக்கி வேகாநிலை பெற வேண்டும். ஒவ்வொருவரும் அருள் ஞான சக்தியை வளர்த்து இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுங்கள். என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையுங்கள்… பிறவி இல்லா நிலை அடைய இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவும்.

நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடைய வேண்டும்

 

உன் நிலைக்குப் பகர்கின்றேன். எடுத்த பிறவியில் எல்லாம் விட்ட குறையினால் தான் இப்பிறவியில் வந்துள்ளாய்.

இப்பிறவியின் தன்மையில் தியான நிலையில் வந்திடும் ஜோதி நிலை என்னப்பா…? பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் பெற்றிட்ட ஜோதி நிலை என்னப்பா…?

ஜோதி நிலை என்றதன் பொருள் என்னப்பா…? ஜோதி நிலை பெறுவது எப்படியப்பா…? (தியானத்தில் காட்சியாகத் தெரிவது ஜோதி நிலை அல்ல)

குடும்ப நிலையில் உள்ள ஒவ்வொருவரும் அவர் விடும் சுவாச நிலையினாலேயே ஜோதி நிலையைப் பெற்றிடலாம். இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பொழுதிலேயே பெற்றிடலாம் “ஜோதி நிலை…!”

ஜோதி நிலையின் பொருள் உனக்கு பகர்வதற்குப் புதிதல்ல. உன் நிலையிலேயே அஜ்ஜோதி நிலையை ஒளிரச் செய்யலாம். சித்தர்களும் ஞானிகளும் பெற்றிட்ட ஜோதி நிலையை உன் நிலையில் பெற்றிடலாம்.

அதற்காக உன் வழியில் சிறிது மாற்றம் வேண்டும்.

மன நிலையில் உள்ள சோர்வை உன் நினைவில் மறக்கச் செய்து உன் சுவாச நிலையில் நல் சுவாசத்தை எடுத்திடப் பழக வேண்டும். மன அமைதியும் சுவாச நிலையும் ஒன்றுபட்டு ஒரு நிலை எய்திட வேண்டும். (ஏனென்றால் சுவாச நிலையில் சிறு மாற்றம் வந்தாலும் அந்த நிலை மாறுபடுகிறது)

1.மனதில் சோர்வும் கோபமும் வந்திடாமல் நீ எடுக்கும் சுவாச நிலையில்
2.தியான முறையில் உள்ள பொழுது நீ ஈர்ப்பதே உன் கண்ணில் தெரிந்திடும் ஒளிகள் எல்லாம்…!

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.
1.மேல் நோக்கிப் (விண்ணிலே) பார்க்கும் உணர்வின் தன்மையை
2.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்ற வேண்டும்.

இருள் அகற்றும் நிலைகளை ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெற வேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக ஜோதியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் அன்றைய ஞானிகள்.

மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெருகி ஜோதியாகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
4.வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம்.

மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால்
1.“நம் ஆன்மா மெய் ஞான விழிப்பு நிலை பெறும்…!”
2.நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடையும்.

அதன் மூலம் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்படும் ஞானத்தின் சக்தியாக நம்முடைய செயல்களை எல்லாமே மெய் வழியில் அமைத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நல்லதைப் பெற வேண்டும் என்று ஒருவர் ரொம்பவும் பிரியப்படுவார். நல்லதைச் செய்பவர்… வேதனைப்பட்டுக் கஷ்டப்பட்டவருக்கு ரொம்பவும் உதவி செய்கின்றார்.

ஆனால் இவர் உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது எல்லா உதவியும் வாங்கிக் கொண்ட அந்த ஆன்மா உடலில் பட்ட நோயின் தன்மை கொண்டு இறந்து விட்டால் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எவர் உதவி செய்தாரோ அவர் உடலுக்குள் வரும்.

இவர் பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார். இருப்பினும் இந்த (உதவி செய்த) மனிதனை மட்டும் பக்தி கொண்டு இருப்பார். தெய்வத்தை எல்லாம் வேண்டினேன். எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டது. தெய்வத்தின் மேல் அந்த நல்ல ஒழுக்கத்தின் மேல் வெறுப்பு உணர்வு இருக்கும்.

ஆனால் இவர் நல்லவர் எல்லோருக்கும் உதவி செய்திருப்பார். அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பேரும் புகழும் வாங்கியிருப்பார்.

கோவில்களுக்கு வேண்டிய நிலைகளை ஓடி ஓடியும் செய்திருப்பார். கோவிலில் காட்டிய பக்தியின் நிலைகள் கொண்டு ஒரு மனிதருக்கு ஓடிப் போய்… அடடா… முருகா இப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிச் சொல்லி உதவி செய்வார்.

அவர் (உதவி பெற்றவர்) இந்த நல்லவர் செய்த உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகனை இவர் சொல்லும் பொழுதெல்லாம் அவர் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டுவிட்டான்
2.நீ தானப்பா என்னைக் காப்பாற்றுகின்றாய்…! என்பார்.

அப்பொழுது இந்த உணர்வுகளை அதிகமாக விளைய வைத்து இவர் மேல் எண்ணமாகி அவர் இறந்தால் இவர் நினைவாகவே யார் உதவி செய்தாரோ செய்த நன்றிக்கு அவரை எண்ணி இந்த ஆன்மா உதவி செய்தவர் உடலுக்குள் வந்து சேர்ந்து விடும்.

எல்லாக் கோவிலுக்கும் பக்தியாகப் போய்ச் செய்து கொண்டிருந்தவர் இதற்கப்புறம் என்ன செய்வார் தெரியுமா…? கோவிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.

ஏனென்றால் “நோய்வாய்ப்பட்ட அந்த ஆன்மா… இவருக்குள் வந்துவிட்டது அல்லவா…!” அவருக்குள் அது வெறுக்கச் செய்யும். இங்கே நல்ல உபதேசம் கேட்டுக் கொண்டிருந்தால் கூட உட்கார விடாமல் எழுப்பி வெளியில் இழுத்துக் கொண்டு போய்விடும்.

இது தான் பக்தி மார்க்கங்களில்…
1.நாம் செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலைகளில்
2.நாம் செய்த நன்றியின் உணர்வுகள் அந்த எண்ண வலு எது பெற்றதோ
3.அதன் உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்துவிட்டால் இந்த மாதிரி ஆகிவிடுகின்றது.

நாம் அவருக்கு நன்மை செய்தோம். ஆனால் யார் மீது அந்த வெறுப்புப்பட்டதோ அந்த வெறுக்கும் உணர்வு நமக்குள் வரும் பொழுது நல்ல ஒழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.

என்ன நல்லது செய்து… என்ன பிரயோஜணம்…? என் உடலில் நோயாகிவிட்டது…? அந்த உணர்வு கொண்ட ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.

1.முன்னாடி எல்லாம் கோவிலுக்கு ஓடி ஓடிச் சேவை செய்தார்.
2.இன்று நல்லது சொன்னாலும் நிற்க மாட்டேன் என்கிறார்.
3.இப்பொழுது சதா வேதனையை சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.

காரணம் அவர் நல்லவர் தான். அவர் அறியாது வந்த தீமைகளிலிருந்து “தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால்…” அந்த உணர்வுகள் வந்து அந்த ஆன்மா நமக்குள் குடிகொள்கின்றது.

ஒரு மான் புலியின் நிலைகளைக் கண்டு கண்டு அது தன்னை இம்சிக்கும் என்ற உணர்வு கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணுகிறது.

மானின் ஆன்மா வெளியில் சென்ற பின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்புக்குக்குள் சென்று மானின் உயிராத்மா புலியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் இவர்கள் நல்ல உணர்வைக் கொண்டாலும் இந்த நஞ்சு கொண்ட உணர்வு வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால் பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால் கொன்று விடுவது போல்
1.இவர் பட்ட வேதனை (யாருக்காகப் பட்டாரோ) இவர் உடலுக்குள் சென்று
2.இவரின் நல்லதைச் “செயலற்றதாக மாற்றிவிடும்”.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் மகரிஷி அவன் உணர்வின் வலுக் கொண்டு இதை அடக்கினோம் என்றால் நம்முடைய எண்ணம் அங்கே போய் அடங்கும்.

சுவாசிக்கும் உணர்வுகளில் அதிர்வுகள் அதிகமானால் டிரான்சாக்ஷன் செய்யும் இடத்தில் ஏற்படும் தீமைகள்

 

ஒரு சிலருக்கு இந்தப் பேய்… பிசாசு…! என்ற பயந்த உணர்வாகி அதிர்ச்சியாகி விட்டால் அதனால் அடிபட்டுச் செத்தான் என்று சொல்வார்கள்.

ஒரு இலையோ ஏதோ தானாக ஆடி விட்டால் அந்த எண்ணத்திற்குத் தகுந்த மாதிரி அங்கு ரூபங்கள் தெரியும் ஐயோ…! பேய் வந்து விட்டது… பேய் வந்து விட்டது… பேய் வந்துவிட்டது…! என்பார்கள். இவன் எண்ணத்திற்குத் தகுந்த மாதிரியே அங்கே தெரியும்.

இந்த உணர்வின் தன்மை வந்து திடீரென்று ஒரு ஓலை காற்றடித்துக் கீழே விழுந்தது என்றால் ஆ… பேய் வந்து விட்டது என்று எண்ணினால் தீர்ந்தது.

இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்த பின்
1.சிந்திக்கும் நரம்புகளில் இது சென்றால் அது கட்டாகி விடும் (அறுந்து).
2.மூக்கிலே வாயிலே எல்லாம் இரத்தம் வரும். ஆக இரத்த நாளங்கள் வெடித்து விடுகின்றது.

ஆனால் “பேய் அடித்து” இரத்த இரத்தமாகக் கக்கினான் என்று சொல்வார்கள். பேய் வந்து அடிப்பதில்லை.
1.அதிர்ச்சியான பின் அந்த உணர்வுகள் ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய இடத்தில்
2.அதிர்வுகள் அதிகமாகி விரிவடைந்து (பலூன் மாதிரி) அந்த இரத்த நாளங்கள் வெடித்து விடுகின்றது.

நம்முடைய எண்ணங்கள் நம்மை எப்படி எல்லாம் கொண்டு செல்கிறது என்ற நிலையை எல்லாம் அறிந்து கொண்டால் போதும். அந்த அதிர்வின் தன்மை எண்ணும்போது பயத்தில் துடுக்கு… துடுக்கு… துடுக்கு… என்று வந்து கொண்டே இருக்கும்.

உதாரணமாக… ரோட்டிலே சென்று கொண்டிருக்கின்றோம். காக்காய் வலிப்பு வந்து ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான். இரக்கப்பட்டுப் பார்த்தோம் என்றால்
1.ஓரு சிலருக்குப் பலவீனமான உணர்வுகள் ஆனால்
2.சிறு மூளைப் பாகத்திலே தாக்கி விட்டால் வெடுக்கு… வெடுக்கு… என்று சுண்டும்

இதற்கு முன் காக்காய் வலிப்பு இல்லை. ஆனால் இந்த மாதிரி அதிர்ச்சியான பின் அத்தகைய அணு இங்கே தேங்கி விட்டால் அதற்குப் பின் காக்காய் வலிப்பு வரும்.

சிறிய குழந்தையாக இருக்கும் பொழுது இல்லை என்று எண்ணுவார்கள். ஆக இந்த உணர்வின் அறிவு இப்படி வருகின்றது.

சாந்தம் குணம் கொண்டு பரிவான குணம் கொண்ட ஒரு மனிதன் எதிர்பாராத நிலைகள் ஆ… என்று இதைக் கேட்டு விட்டால் ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய உணர்வுகள் ஒலிபெருக்கியாகும் பொழுது விரிவடைந்து விடுகின்றது.

அதனால் மயக்கம் வருகின்றது… அதிர்ச்சியினால் உறுப்புகள் கை கால் அங்கங்கள் வராது கூடப் போய் விடுகின்றது. இது எல்லாம் நம்மை அறியாமலே நாம் நுகரும் உணர்வுகளால் நடக்கக்கூடிய செயல்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நம் ஆறாவது அறிவைச் சீராக பயன்படுத்த வேண்டும்.
1.ஈஸ்வரா…! என்று உயிருடன் ஒன்ற வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
3.இங்கே புருவ மத்தியில் நிலை நிறுத்தி அதன் வழி உள்ளே புகச் செய்து
4.அதிர்ச்சியால் ஏற்படும் செயலாக்கங்களைத் தடுத்துப் பழக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எந்த மனிதனுக்கு அந்த நோய் இருந்ததோ… துருவ நட்சத்திரத்தின் பேரருளை அவன் பெற வேண்டும். அவன் காக்கப்பட வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் அவன் உடலில் இருக்கக்கூடிய பிணிகள் நீங்க வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வுகளை இப்படி நாம் எடுத்து நமக்குள் படைத்து விட்டால் நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை உருவாக்குகிறது…. பிறருடைய தீமைகளோ துன்பங்களோ நமக்குள் வருவதில்லை.

சந்தர்ப்பவசத்தல் வேதனை என்று நாம் நுகரப்படும் பொழுது… அது நமக்குள் பிரம்மம் ஆகின்றது… உடலில் அணுக்களாக உருவாகின்றது.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு கார்த்திகேயா… சேனாதிபதி..! இதையெல்லாம் பாதுகாக்கும் சக்தி பெற்றது… எல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்றது.

தீமை என்ற உணர்வு வந்த பின்
1.அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்கி… இதை இணைத்து… அதைச் சுவை மிக்க உணர்வாகப் படைத்துப் பழகுதல் வேண்டும்
2.அந்த அணுக்களை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

இது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காடுகளில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் காட்டிலே செல்லப்படும் போது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகளில் தங்களைப் பாதுகாக்கும் அறிவு அவர்களுக்கு வருகின்றது.

காட்டு விலங்குகளிடம் இருந்தும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தாவர இன மூலிகைகளை அரைத்துத் தன் உடலிலே பூசிக்கொள்கின்றனர்.

சில நேரங்களில் அதே மூலிகைகளைத் தன் உடலில் பூசாதபடி சில மூலிகைகளை அணைப்பாக வைத்துப் போட்டு விடுகின்றனர். ஆக இந்தத் தாவர இனங்களின் மணத்தின் தன்மையை மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தால் புலியோ நரியோ நாயோ இவர்கள் பக்கம் வருவதில்லை.

அந்தச் செடிகளை ஒவ்வொன்றும் பக்குவப்படுத்தி அவர்கள் எப்படி வைத்துக் கொண்டார்கள்…? என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “அக்காலங்களில் நடந்தவைகளை…” எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

இப்பொழுது கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வலைகளைப் பதிவாக்கி
1.அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட உயிரினங்கள் என்னென்ன ரூபங்களில் இருந்தது…?
2.அது எதை எதையெல்லாம் உணவாக உட்கொண்டது…?
3.அதை உட்கொண்ட உணவுகளின் நிலைக்கொப்ப அதனின் குணங்களின் வளர்ச்சியும் அந்த உடல்கள் எப்படி அமைகிறது…? என்றும் விஞ்ஞான நிலைகள் காண்கின்றனர்.

இதே போல நமது குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று இந்த உணர்வுகள் அதன் நடைப்பாதையில் (நடமாடிய இடங்கள்) எப்படி எல்லாம் சில நிலைகள் ஊர்ந்து சென்றது… பறந்து சென்றது… மனிதனாக வந்தது…? என்று காட்டினார்.

விஞ்ஞான அறிவில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளை இங்கே இயக்கிப் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உருவத்தையும் அமைத்துக் காண்கின்றார்கள். அந்த உயிரினங்களின் குணத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்.

மெய்ஞானியின் அறிவை நம் குருநாதர் அன்று கண்டுணர்ந்ததனால் அதை நான் அறியும் பருவம் வந்தது. பின் அதன் வழிகளில் அவை எப்படி ரூபங்கள் பெற்றது…? என்ற நிலையையும் அறியும்படி செய்தார்.

அக்காலத்தில் காட்டு விலங்குகளிலிருந்து தப்பிக்கப் பல தாவர இனங்களைத் தன் அருகிலே போட்டுக் கொள்வார்கள். சில பகுதிகளில் அடுக்கடுக்காகப் போட்டு இருப்பார்கள்.

சில பச்சிலைகளைத் தன் உடலிலே முலாமாகப் பூசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தக்க அந்தப் பகுதிகளில் எப்படி மற்ற நிலைகள் வருகிறது…? என்று அடுக்கு வரிசையில் அதைப் போட்டு இருப்பார்கள்.

அப்பொழுது அவர்கள் வாழ்ந்த காலங்களில் இத்தகைய தாவர இனங்கள் புவியின் நிலைகள் வெப்பத்தினால் காயும் போது ஆவியாகவும் அதன் நீர் சத்து பூமியின் நிலைகள் எப்படி ஈர்த்துக் கொண்டது என்று காட்டுகின்றார்.

இதன் உணர்வின் பதிவு எப்படி இருக்கின்றது…? என்ற நிலையும் அக்காலப் பச்சிலைகளைக் காண்பித்தார்,
1.அன்று உருவான பச்சிலைகளுக்கும்
2.இன்று இருக்கக்கூடிய பச்சிலைகளுக்கும் உள்ள வித்தியாச நிலையையும் காட்டுகின்றார்.

அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அந்தப் பச்சிலைகளைப் போட்டு வைத்தாலும் பின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை இவர்களை அறியாதபடி இவர்கள் சுவாசிக்கின்றனர்.

1.இதைப் பாதுகாப்பாக வைக்கின்றனர்.
2.ஆனால் “பாதுகாக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை இவர்கள் நுகர்கின்றனர்.
3.அந்த உணர்வின் அறிவாக அவர்கள் வளர்ந்தாலும் அந்தப் பச்சிலை மூலிகைகளின் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.

அவ்வழியில் தான் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அந்தக் கருவுறும் ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் கருவுறும் சிசுக்களில் இந்த மணங்கள் கலந்துவிடுகின்றது.

ஏனென்றால் தாயின் இரத்தத்தில் இருந்துதான் அதற்கு உணவு கிடைக்கின்றது. ஆக இந்த உணர்வின் தன்மை அந்த அணுவின் துடிப்பு வரப்படும்போது நஞ்சினை வென்றிடும் உணர்வாக அணுக்களாக அந்தக் குழந்தைக்குள் விளைகின்றது.

அவ்வாறு நஞ்சினை வென்றிடும் அணுக்கள் விளைந்த குழந்தை பிறந்த பின் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு போனால் போதும். நரியோ பாம்போ நாயோ இவர்களைத் தாக்குவதில்லை.

இவர்கள் செல்லும் பக்கம் பையனை எடுத்துச் செல்லும் போது சில சில விஷச் செடிகள் கூட அப்படியே ஒடுங்கிவிடுகின்றது.

அப்படி ஆற்றல்மிக்க நிலைகளாக ஆதியிலே வளர்ந்த அந்தக் குழந்தைதான் “அகஸ்தியன்…” குருநாதர் இதையெல்லாம் அக்காலங்களில் நடந்தவைகளை அப்படியே பார்க்கும்படி செய்கின்றார்.

1.அந்த அலைகள் காற்றிலே இன்றும் உண்டு.
2.நீங்களும் பார்க்க முடியும். காண முடியும்.

சுவாசத்தில் வருவது தான் பிறப்பும்.. இறப்பும்…

 

இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம்.
1.விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…! என்கிறோம்.
2.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
3.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல…!

பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.

எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.

கலி முடிந்து கல்கி வருகிறது…! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.

உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.

மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக பூச்சியாக மீனாக நண்டாக…!

ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.

மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான். மனிதனில் இருந்து தான் மிருகம்.
3.மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசிக்கும் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.

இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள்.

இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.

ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்…! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…!” என்று பல முறை உணர்த்தினேன்.

இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.

உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் சுற்றலிலே…! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே.

பாட நிலை புரிந்ததா…?

பரவிக் கொண்டே… வளர்ந்து கொண்டே வரும்… நோய்க் கிருமிகள் பற்றிய உண்மைகள்

 

விஞ்ஞான அறிவால் வந்த விஷத்தன்மைகள் பலவாறு பரவி… மக்களை இன்று மடியச் செய்யும் நிலையாக வருகின்றது.

மின்சாரத்தை உற்பத்தி செய்ய “அணு உலைகளை” உருவாக்குகின்றோம்.
1.அதிலிருந்து வரும் கசிவுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.
2.இந்த உணர்வுகள் நம் பூமி முழுவதும் படர்கின்றது.
3.அதன் எல்லையில் நுகர்வோர் அனைவருக்குள்ளும் விஷத்தன்மையான கதிர்களைப் பாய்ச்சுகின்றது.
4.அந்தக் கதிர்கள் படரப்பட்ட மனிதர்கள் இறந்த பின் அந்த உடலிலிருந்து அதே அணுக்களின் தன்மை மீண்டும் பெருகத் தொடங்குகிறது.

மனிதனை ஒத்த நிலைகள் வரப்படும் பொழுது “மிகக் கடுமையான நோய்களாகவும்…” மாறுகின்றது.

முதலில் மனித உடலுக்குள் சென்று தீய அணுக்களின் தன்மையாக உருவாகின்றது. இறந்த பின் மனிதனை ஒத்த நிலையில் கொண்டு பரவிப் புது விதமான நோய்களாக வருகின்றது.
1.இதைத் தான் வைரஸ் என்ற நிலையில்
2.”புதிது புதிதாக உருவாகிறது…” என்று கண்டுபிடிக்கின்றார்கள்.

ஒவ்வொன்றையும் என்னென்ன நிலைகள் என்று பரீட்சித்து பார்க்கும் போது சில வைரஸ்களை மாற்ற முடியவில்லை என்று கூடச் சொல்கின்றார்கள்.

ஏனென்றால் இந்த அணு தன்மைகள் உடலிலே நுகர்ந்து விட்டால் அது விளைந்த பின்
1.கேன்சர் எப்படி விஷத்தன்மையான நோயாக ஆன பின் வேறு எந்தக் கடுமையான மருந்தைக் கொண்டும் அதை நீக்க முடிவதில்லையோ
2.இதைப் போன்று வைரஸ் சென்ற அந்தக் கிருமிகள் அதிகமாகி விட்டால் அதை மற்ற மருந்துகள் கொண்டு மாற்றி அமைக்க முடிவதில்லை

எதிர் நிலையான நிலைகள் வரும் பொழுது காய்ச்சல் அதிகமாகவே இருந்து கொண்டிருக்கும். காய்ச்சல் அதிகமாக இருக்கப்படும் பொழுது இதை மாற்றுவதற்காக இரத்தத்தைப் பரிசோதித்து. இதனுடைய மலங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்ற நிலையில் அதைக் கண்டுபிடிப்பதற்குக் குறைந்தது ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் ஆகி விடுகிறது.

இந்த உணர்வின் தன்மை சேர்த்துச் சேர்த்து இதற்கு இது ஒத்துக் கொள்கிறதா… இல்லையா…? இந்த உணர்வின் தன்மை எது…? என்ற நிலையும் இது புதுவிதமான வைரஸ் ஆக இருப்பதால் இதற்கு என்ன கொடுப்பது…? என்று பல மருந்துகளைக் கொடுத்துப் பரிசீலித்துப் பார்க்கின்றார்கள்.

அதற்கு அப்புறம் அது பலவீனமான பின் செயல்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வைரஸின் வீரியத் தன்மை அதிகமாகிவிட்டால் அந்தக் காய்ச்சலையே போக்க முடியாது… எத்தனையோ பேர் அவதிப்படும் நிலைகளும் இருக்கின்றது.

ஏனென்றால் அணுக்கதிரியக்கங்களால் தாக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை மனிதனுக்குள் வருகிறது…!

அது எப்படி…? என்றால் இன்று சென்னை அருகிலே அணு மின் நிலையத்தில் அணு உலைகளை அமைத்திருக்கிறார்கள் என்றால் அங்கே அருகிலே வீட்டிலே குடியிருக்கின்றார்கள்.

அங்கே இருப்பவர்கள் மற்ற இடங்களுக்கு மாற்றலாகி வந்தார்கள் என்றால்
1.அவர் உடலில் விளைந்த அந்தக் கதிரியக்கங்கள் அவர்கள் இறந்தால்
2.அந்த உடலிலிருந்த அந்த அணுக்கள் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்குகிறது.
3.அவர்கள் பழகிய நண்பர்கள் உடலில் எல்லாம் பரவுகின்றது.

இப்படி வரப்படும் பொழுது தான் இந்த அணுக்களின் தன்மை (வைரஸ்) வளர்ந்து விடுகின்றது.

ஒருவருக்கொருவர் எப்படித் தொடர்பு கொண்டு வருகின்றது…? என்ற நிலையையும் குருநாதர் இந்த உலகம் முழுவதும் சுற்றி உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்.

இதிலிருந்து மீட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரம் சர்வ நஞ்சுகளையும் வென்றது. அந்த உணர்வுகளை எல்லோரையும் பருகச் செய்…! என்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.

திட்டியவர்களைப் பதிவு செய்த பின் அவர்களை நினைத்தால் கோபம் வருகின்றது. அன்றைக்கு ஒரு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் திட்டியவரை எண்ணினால் கணக்குத் தப்புத் தப்பாகத்தான் வரும்.

துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் அங்கேயும் தவறாகும். ஆக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தான் இருக்கின்றோம். நம்மை அறியாமல் இத்தகைய நிலைகள் நடக்கின்றது.

இதைப் போன்று தான் உங்களுக்குள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி விட்டால் தீமை என்ற உணர்வை அறிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் அதை அடக்கும்.

ஆகவே…
1.ஒவ்வொரு நிமிடத்திலும் தீமையை அடக்கக்கூடிய சக்தி உங்களுக்குள் வர வேண்டும்
2.அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கு தான் திரும்பத் திரும்பச் சொல்வது.

ஒரு சில பேர் சாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஒரே தலைவலியாக இருக்கிறது என்று கூடச் சொல்லி விடுகின்றார்கள் ஆனால் சாமி என்ன சொன்னார்…? என்று திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.

கர்ம பயன் என்பது சாதாரணமானதல்ல…! நல்லதுக்கும் அது தான்… கெட்டதுக்கும் அது தான்…!

 

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது
மனிதனின் விதி முறை…!”

வினையின் எண்ண\த்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள ஒரு உடலை எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது. காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா.
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்.
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்மபயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா…?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில் ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான் என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரணமாக ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு இருக்கிறான் என்றால் அவன் எத்தகைய குணத்தைக் கொண்டிருந்தானோ உதாரணமாக வாழ்க்கையில் அடிக்கடி வெறுப்பும் வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் இப்படிக் கலவை கொண்டு எடுக்கப்படும் போது அதற்குத்தக்க நோய் வருகிறது.

1.அடிக்கடி “வேதனை” என்ற உணர்வு எடுத்தால் டி..பி. வருகிறது.
2.அடிக்கடி “எல்லாக் குணங்களிலும் வேதனை” என்ற உணர்வுகளை உருவாக்கி விட்டால் அது கேன்சராக மாறுகின்றது.

இந்த டி.பி. என்ற அணுக்கள் தனித்து எந்த உறுப்பில் நாம் பதிவாக்குகின்றோமோ நாம் ஊழ்வினை என்ற பதிவினை நாம் எலும்புக்குள் உள்ள ஊன்களில் இது பதிவாகி விடுகின்றது.

அடிக்கடி நாம் வேதனைப்பட்டால் நாம் எடுக்கும் உணர்வுகள் இரத்த நாளங்களில் அணுக்களாக மாறி அதன் உணர்வின் தன்மை “இரசாயணமாக” மாறுகின்றது.

அது எலும்புகளில் வரப்படும் போது அதில் உறையச் செய்து அதில் வடித்து இந்த உணர்வுக்கொப்ப ஊழ்வினை என்ற ஒரு அமிலத்தை (எலும்புக்குள்) உருவாக்குகின்றது. கண் கொண்டு உற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள் அந்த ஊனுக்குள் பதிவாகின்றது.

எதை உற்றுப் பார்த்தோமோ எண்ணம் அந்த உணர்வுகளைத் தூண்டும் அந்த உணர்வினைப் பதிவாக்கி அதனை ஈர்க்கும் சக்தியாக உடல் முழுவதும் உள்ள எலும்புகளில் (அந்த இடத்தில்) வைத்து விடுகின்றது.

சற்றுக் கவனமாகக் கவனிக்க வேண்டும்.

மண்ணுக்குள் ஒரு செடியில் விளைந்த வித்தினை ஊன்றினால் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு எந்தச் செடியில் விளைந்ததோ அது எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்ததோ அதன் வழி அந்தச் செடியின் உணர்வுக்கொப்ப ரூபமாகின்றது.

இதே போல ஒரு குணத்தின் தன்மை இங்கே பதிவான பின்
1.வேதனை என்ற உணர்வை நாம் நுகரப்படும்போது
2.வேதனையை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து அது இரசாயணமாக மாறி
3.நரம்பு மண்டலங்களில் கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்த இரசாயணக் கலவை நம் நரம்பு மண்டலங்களை அது இயக்குகின்றது.

இது சிறு மூளை பாகங்களில் நாம் எண்ணும் உணர்ச்சிக்கொப்ப அந்த இரசாயணக் கலவை அதன் அழுத்தத்தின் உணர்வின் அழுத்தங்களைக் காட்டும் போதுதான் கைகளை மடக்குவதும் மற்ற நிலைகளைச் செயல்படுவதும் இவை அனைத்தும்.

இப்படி இரசாயணக் கலவைகள் வரப்படும் போது அதனதன் அமைப்பு தன்மைப்படி வேதனை என்ற விஷத் தன்மை வரப்படும் போது இந்த எலும்பை அசைக்கும் நரம்பு மண்டலங்களிலிருந்து வரும் இரசாயணத்தில் அந்த விஷத்தின் அணுக்கள் உருவாகி விடும்.

வேதனை என்ற உணர்வின் தன்மை கொண்ட இரசாயணக் கலவையில் வரப்படும் போது இதனில் எதிர்மறையான விஷத் தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.

சாதாரணமான நிலையில் இந்த எலும்புக்குள் இரசாயணக் கலவை ஊடுருவி அதை எடுத்து எலும்பின் வளர்ச்சியும் அதற்குப் போதுமான நிலைகள் கொண்டு வலு கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் உருவாக்கிய அந்த அணுக்களை வைத்துத்தான் அதன் மலம் எலும்பாகிறது.

ஆனால் அந்த இரசாயணக் கலவையில் வேதனை என்ற விஷ அணுக்கள் உருவாக்கி விட்டால் எலும்பை உருவாக்கிய அணுக்களை இது விழுங்கத் தொடங்கி விடுகின்றது.

இது விழுங்கத் தொடங்கினால் எலும்புக்கு வலு கொடுக்கும் அந்த அணுக்களின் மலங்கள் கிடைக்கவில்லை என்றால் எலும்பு சொத்தையாகி விடும். தொட்டால் கத்தரித்து விடும். இது போன் டி.பி. (BONE T.B.)

இதைப் போல வேதனை உணர்வுகள் கலந்து ஒவ்வொரு உறுப்புக்களில் வரப்படும் பொழுது மூளையில் டி.பி… கண்களுக்கு வரும் நரம்பு மண்டலங்களில் டி.பி. என்று காரணப்பெயர் வைக்கின்றார்.

இன்னென்ன அணுக்களின் செயலாக்கங்களால் இந்த அணுக்கள் மற்ற அணுக்களைக் கொன்று சாப்பிடுகின்றது என்று டாக்டர்கள் சொல்வார்கள்.

விஞ்ஞான அறிவுப்படி டி.பி. அணுக்களைக் கொல்லும் போர் முறைக்காக அதைக் காட்டிலும் அதிகமான அணுக்களைச் சேர்த்து பல கலவைகளைச் சேர்த்து (3-4 மாத்திரைகள) அதை உணவுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.

அதே சமயத்தில் இரத்த நாளங்களில் இஞ்சக்சன் மூலம் கலக்கச் செய்கின்றனர். அல்லது நேரிடையாகவே அமில சக்தி உள்ள நரம்பு மண்டலங்களுக்கு ஆசிட் போன்றவைகளைச் செலுத்தச் செய்கின்றார்கள்.

அப்பொழுது அந்த எலும்புகளில் உள்ள அந்த விஷத்தன்மையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்துகின்றனர்.

தடைப்படுத்தினாலும் அதனுடைய கொடுமையான உணர்வுகள் நாம் சிறுகச் சிறுக வேதனையின் உணர்வுகள் எடுத்திருந்து மற்றவைகளுக்கு இணைத்து அந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அறிவை ஊட்டும் நிலையில் இது மடிந்து விட்டால் சிந்தனை மாறி விடும்.

இதற்காக இந்தச் சிந்தனையின் நிலையை வைத்து இன்னென்ன உறுப்புகளில் இன்னென்ன இராசாயணக் கலவை கொண்டு இயங்குகின்றது என்று காண்கின்றனர்.

விஞ்ஞான அறிவுப்படி ஈரல் என்றால் அதற்குச் சத்து கொடுப்பதற்காக மற்ற தாவர இனங்களைப் புசித்து அந்த நிலையில் நல்ல அணுக்கள் உருவாக்கும் தன்மையை ஆரம்பத்தில் கொண்டு வந்தார்கள்.

இப்பொழுது நேரடியாகவே மாட்டு இனங்களில் இருந்தோ ஆட்டு இனங்களில் இருந்தோ மனிதனுக்கொத்த உணர்வுகள் கலந்த அந்த ஈரலை மற்ற இராசாயணக் கலவையைக் கொண்டு அதைப் பவுடராக்குகின்றார்கள்.

அந்தக் கலவைகளை இஞ்சக்சன் மூலமோ உணவு மூலமோ உட்செலுத்தி நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றார்கள்.

ஆக எலும்பை உருக்கும் அணுக்களிலிருந்து மீட்க மருந்துகளினால் அந்த அணுக்களை உருவாக்கி இதனைக் கலந்து மற்ற அணுக்கள் செத்து விடாது அதற்குகந்த உணர்வின் சத்தைச் சேர்க்கின்றனர்.

இன்னென்ன நிலைகளில் இன்னென்ன உறுப்புகளுக்கு அது பாதிக்காத நிலைகள் கொண்டு இந்த இஞ்சக்சன் செய்கின்றார்கள்.

இதையெல்லாம் நான் பேசுகிறேன் என்றால் விஞ்ஞான அறிவில் படித்தவன் அல்ல. மெய்ஞான அறிவை ஊட்டி அந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்று குரு காட்டிய அருள் வழியில் தான் இதை வெளிப்படுத்துகின்றேன்.

1.காற்றில் கலந்துள்ள உணர்வை நீ நுகர்ந்து
2.உணர்வின் தன்மை அறிந்து
3.அந்த இயற்கையின் செயலாக்கங்களை நீ அறி…! என்று குருநாதர் சொன்னார்.

அவர் கொடுத்த அருள் ஞான வித்தின் துணை கொண்டுதான் இயற்கையின் விளைவு அது எவ்வாறு…? என்ற நிலைகளில் நான் அறிய முடிகின்றது.

இதையெல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாம வேதத்தின் மூலங்களை குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்தவிதம்

 

காட்டுக்குள் புலி செத்துக் கிடக்கிறது. அந்த உடலிலிருந்து வெளிப்படும் “அழுகிய உணர்வுகள்…” மணங்களாக வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

அப்படிக் கவர்ந்து கொண்ட பின் அதனுடைய சக்தி வலிமையாக இருக்கின்றது. அதே சமயத்தில் இயற்கையிலேயே விஷத்தின் தன்மை கொண்ட ஒரு செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி நுகர்ந்து
1.அது அலைகளாக வரப்படும் பொழுது
2.இந்தப் புலியின் உணர்வின் தன்மையை நகர்த்திச் (துரத்தி) செல்கின்றது.

நகர்த்தி வேகமாகச் செல்லப்படும் பொழுது அடுத்துப் பல செடிகளின் உணர்வுகளுடன் மோதி இது கலவையாகி ஒரு சுழற்சி என்ற நிலையை அடைகின்றது.

இப்படி மூன்றும் ஒன்றாகிக் கருத்தன்மை அடைகின்றது. எடை கூடி பூமியின் ஈர்ப்பில் சிக்கி மண்ணிலே பதிகின்றது.

உதாரணமாக… வேப்பமரத்தினுடைய சத்தும் ரோஜாப்பூவினுடைய சத்தும் விஷச் செடியினுடைய சத்தும் சேர்ந்து புது விதச் செடியாகக் கருவேப்பிலையாக மாறியது போன்று…
1.இரத்தத்தை உறிஞ்சி வாழும் புலி (இறந்தது) உடலிலிருந்து வந்த உணர்வுகள்
2.மற்ற விஷச் செடியின் மணத்துடனும்… விஷமற்ற செடியின் மணத்துடனும் இணைந்து
3.புது விதத் தாவர இனமாக மாறுகின்றது

அந்த வித்து முளைத்துக் கொடியாகவோ செடியாகவோ வளர்ந்த பின் இரத்தம் கொண்ட மனிதனோ யானையோ புலியோ குருவியோ அந்த இடத்திலே சென்றால் அதை அப்படியே இழுத்துக் கவர்ந்து இரத்தத்தை உறிஞ்சிவிடும்… மடிய வேண்டியது தான்.

அஸ்ஸாம் காடுகளில் இது நிறைய உண்டு. இது எல்லாம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைக் குருநாதர் காட்டினார்.

இங்கே நாம் வாழும் பகுதியில் அனேகமாக இல்லை. வைத்தியத்திற்காகப் பறித்து விடுவார்கள்.
1.கேன்சர் நோய் வந்த இடத்தில் இந்தச் செடியின் சத்தை மேலே தடவினால்
2.விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிடும் சக்தி பெற்றது.

இதைப் போன்ற செடிகள் விளைவது மிகவும் கடினம்.

அக்காலத்தில் இதை “ராஜ வைத்தியம்…” என்று சொல்வார்கள். அரசர்களுக்கு இதைப் பயன்படுத்திப் பயன்படுத்தி இந்த வித்தை மீண்டும் வளர்க்காது மறைந்தே போய்விட்டது.

குருநாதர் இத்தகைய செடிகள் எல்லாம் எப்படி உருவாகின்றது…? உருவானது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக காடுகளிலும் மேடுகளிலும் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார்.

எனக்கு அங்கே சாப்பாடு இரண்டு பேரிச்சம்பழம்… இரண்டு பச்சிலை அவ்வளவுதான்…! அதைச் சாப்பிட்டு விட்டுத் தண்ணீரைக் குடித்துவிட்டு… குருநாதர் சொன்ன வழியில் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித்தான் இயற்கையின் நிலைகளைப் பார்க்கும்படி செய்தார்.
1.ஒவ்வொரு நொடிக்கு நொடியும் இந்த காற்று மண்டலம் எப்படி மாறுகின்றது…?
2.எதன் வழி அது இயங்குகின்றது…?
3.செடி கொடிகளின் உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்று அந்த நிலையைப் பார்த்துக் கொண்டே நான் செல்ல வேண்டும்.

ஒரு இடத்தில் சுழிக்க்காற்று வருகிறது என்றால் அங்கு ஓடிச் சென்று நான் பார்க்க வேண்டும். எங்கே நிலை பெறுகிறதோ அங்கே பூமியிலே படரும் இடத்திற்குச் சென்று மணத்தால் அதை நுகரும்படி செய்வார்.
1.மணத்தால் நுகர்ந்து என்னென்ன செடிகள் வந்தது…? எல்லாம் கலந்து எப்படி ஆகிறது…?
2.புதுவிதமான செடிகளாக எப்படி உருவாகிறது…? என்று காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் பார்க்கும்படி செய்தார்.

இதைத்தான் ஆயுர்வேதம் என்று சொல்வார்கள். தாவர இனங்களின் உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குவதைச் “சாம வேதம்…” என்றும் சொல்வார்கள் .

இயற்கையின் உண்மை… அந்த உணர்ச்சியின் தன்மை எப்படி உருவானது…? ஒரு செடியின் வாசனை அது எப்படி இயக்குகின்றது…? இந்த உணர்ச்சியின் தன்மை எப்படி இயக்குகின்றது…?

ஒரு உணர்வுக்குள் ஒரு உணர்வைச் சேர்த்து ஒரு உணர்வுக்குள் மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது இசைக்கொப்ப இந்த உணர்வுகள் இசையை மாற்றி எவ்வாறு செய்கிறது…? என்று வேதங்களின் மூலங்களில் இது கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த உண்மைகளை நீங்களும் உணர வேண்டும்… உங்களுக்குள் இயக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அறிய வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே…!

 

கொங்கணர் ஞானம் பெற்ற நிலைகளை விவரிக்கத் தொடங்கினால் அது எந்த வகை என்றுரைக்க நினைப்பதற்கு அடங்கிடுமோ..?

“மாடி வீட்டு அரசன்… கோடி வீட்டுப் புருஷன்…!” என்ற வகை உண்மை நிலையில் இவர் வேறு… அவர் வேறு…! என்று பிரித்துச் சொல்லும் வகையில் “கோடி வீட்டுப் புருஷார்த்த புருஷனே கொங்கணர்…!” என்றாலும் அவர் எடுத்த அவதார நிலைகளே பாலாஜி… வெங்கடேஸ்வரன்… ஸ்ரீனிவாசன்…!

இருந்தாலும் பின் அவரே மாடி வீட்டு அரசன் ஆக ஆன செயலில் இரு வகைச் சூட்சமங்கள் பெற்ற அவதாரமே ஸ்ரீனிவாசன் என்னும் வெங்கடேசக் கொங்கண மாமகரிஷி.

ரிஷி மூலம் பார்க்காதே… நதி மூலம் பார்க்காதே…! என்று அக்காலங்களில் சொல்வார்கள். அதனின் வகையில்
1.மெய்ப் பொருளைக் கண்டறிந்த அந்த மாமகரிஷிகள் பெற்ற ஞானத்தை மட்டும் நாம் அறிந்து
2.அதைப் பெறுகின்ற ஞானத்தின் வளர்ச்சிக்கு முயல்வோம்.

அறிவின் வளர்ச்சிக்கு வளச்சியூட்டும் செயலாக அந்தக் கொங்கணர் பெற்ற சூட்சமத்தின் தொடர் நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி… சித்தன் முனிவனாகி… பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.

தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் ஜெப நிலையும் தியான நிலையும்.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய… வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.

எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ அவர்களுக்கெல்லாம்
1.தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில் அதாவது நமது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்குத் தானே ஆகாரமாகி
4.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே.

நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து… நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.

கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற… பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.

தாய் சக்தி… மனைவி சக்தி… என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆயிரம் நல்லது செய்து… என்ன பலன்? “தெய்வம் என்னைச் சோதிக்கின்றது” என்கிறோம் – விநாயகர் தத்துவம் என்ன சொல்கிறது?

வாழ்க்கையில் மனிதர்கள் யாரும் தவறு செய்யவில்லை. பக்தி மார்க்கத்தில் இருப்போர் எவரும் குறைகளைச் செய்யவில்லை.
1.நல்லவைகளைச் செய்ய வேண்டும்.
2.நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்
3.பிறரைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டிருந்தாலும்
4.”பிறர் படும் துயரங்களைக் கேட்டுணர்ந்த உணர்வுகள்… பதிவான பின்… என்ன ஆகின்றது…?”

நாம் பலகாரங்களைச் சுவையாகச் செய்து வைத்த பின்பு அதிலே சிறிதளவு உப்பு அதிகமாகி விட்டால் அதனின் சுவை கெட்டுவிடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் நல்லவைகளைச் செய்தாலும் பிறர் படும் வேதனைகளை நாம் கேட்கும் பொழுது அவர்கள் கஷ்டமெல்லாம் நமக்குள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே இந்தத் தீமையான உணர்ச்சிகள் வளர்ச்சி அடைகின்றது.

பல பொருள்கள் தனித்தனியாக இருக்கின்றது. பலகாரமாகச் செய்யும் பொழுது எல்லாவற்றையும் ஒருக்கிணைந்து அந்த உப்பையும் இணைத்தால் தான் பலகாரம் சுவையாக இருக்கின்றது.

ஆனால் அந்த உப்பு கூடிவிட்டாலோ சுவையின் தன்மையை மாற்றி விடுகின்றது.

இதைப் போல நம் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் செயல்கள் அதிகமாக இருப்பினும் மற்றவர்களையும் நாம் மகிழ்வடையச் செய்கின்றோம்.

சில பேர் மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் அவர்களை மகிழச் செய்வார்கள். 100க்கு 99 பேர் அந்தக் கொள்கையில் உள்ளவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

பிறருக்கு உதவி செய்யும் நிலைகளில் அதை மெச்சிச் செய்வார்கள். ஆனால் பின்னாடி “என்ன செய்து… என்ன பலன்…?” என்று வெறுப்பார்கள்.

பிறர் படும் துயரங்களைக் கேட்டறிந்து கேட்டறிந்து ஒருவருக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார். மற்றவர்களுக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார்.

1.இதைப் போல ஆயிரக் கணக்கோருக்கு உதவி செய்கின்றார்.
2.அவர்கள் எல்லாம் மகிழ்கின்றார்கள்.
3.ஆயிரம் பேரிடம் கேட்டுணர்ந்த கஷ்டத்தின் உணர்வுகள் இவருக்குள் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து
4.இவரின் சுவையைக் கெடுத்துவிடுகின்றது.

இதைத் “தெளிவாகக் காட்டுகின்றார்…” நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

கோவிலினுடைய தத்துவமே “உதவி செய்” என்று தான் சொல்கிறது. ஆனால் உதவி… “எப்படிச் செய்ய வேண்டும்?” என்று நாம் அறிந்துள்ளோமா…?

பக்தி மார்க்கத்தில் இருப்போர் “ஆயிரம் பேருக்கு நன்மை செய்தேன்…” என்ற நிலைகளில் பின்னாட்களில் தெய்வத்தை எப்படி எண்ணுகின்றோம்…?

1.நான் உன் வழியிலே தான் அனைவருக்கும் உதவி செய்தேன் என்னை ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்…?
2.உனக்காக நான் எத்தனை காலம் நான் விரதம் இருந்தேன்…?
3.எத்தனை யாகசாலைகளைச் செய்தேன்…? எத்தனை ஆலயங்களை நான் கட்டினேன்… அதற்கு உதவி செய்தேன்…?
4.எத்தனை பக்தர்களை உனக்காக வரவழைத்தேன்…? எத்தனை பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்தேன்…?
5.உன்னை நாடி வருவோருக்கெல்லாம் எத்தனை உணவைக் கொடுத்தேன்…?
6.என்னை ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்….? என்று கேட்கும் நிலை வருகின்றது.

இப்படித்தான் பக்தி மார்க்கத்தில் உள்ளோர் நாம் இருக்கின்றோம்.

பக்தி என்றால் நல்ல ஒழுக்கமாக இருந்தாலும் அதைக் காத்திடும் நிலையாக விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

நல்லதை எண்ணிப் பிறருக்கு உதவி செய்கின்றோம். ஆனால், அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் கேட்டறிந்த பின்பு தானே நாம் உதவி செய்கின்றோம்.

நாம் கேட்டறிந்த கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் யாராவது தூய்மைப்படுத்துகின்றோமா…? அதைக் கடவுள் வந்து சுத்தப்படுத்துவாரா…?

1.செடிக்குள் விளைந்தால் வித்து
2.மனிதனுக்குள் விளைந்தால் வினை
3.வினைக்கு நாயகனாக விநாயகனாக நாம் மனிதனாக இன்று உருவாகியுள்ளோம்.

மனிதனான பின் கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் வினையாகச் சேர்த்தால் அந்த வினை நமக்குள் விளைந்தால் நம்மை எங்கே கொண்டு சேர்க்கும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அதை உணர்த்துவதுதான் விநாயகர் தத்துவமே. மண்ணுலகில் நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி விண்ணுலகில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி வாழ்ந்து கொண்டுள்ளான்.

அதை (துருவ நட்சத்திரத்தை) அரசாகக் காட்டினார்கள். வாழ்க்கையில் நமக்கு முன்னாடி வரும் கசந்த நிலைகளை வேப்பமரமாகக் காட்டினார்கள்.

அன்றாட வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளிலிருந்து விடுபட அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி அதை வினையாகச் சேர்த்து அந்த வினைக்கு நாயகனாக ஒளிச் சரீரம் பெறு…! என்பது தான் விநாயகர் தத்துவம்.

ஒவ்வொரு மனிதரும் இதைப் பெற அன்று செய்து வைத்தான் ஞானி.

சாகாக்கலையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்

 

மனிதனுடைய வாழ்க்கையில் வரும் ஆசை எல்லாம் சாகாக் கலை…!
1.என்னை அவன் இப்படிப் பேசினான்… இருக்கட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்…! என்றால் இது சாகாக் கலைதான்
2.காரணம் உடலை விட்டுச் சென்றால் அவனுடைய உடலுக்குள் சென்று இதே வேலையைச் செய்யும் (அழியாதபடி).

எந்த ஆசையின் தன்மையை இந்த உடலில் பெற்றானோ சாகாக்கலையாக அடுத்த உடலில் வந்த பின் அந்த வேலையைச் செய்யும்

ஆனால் நம் குருநாதர் நமக்குக் காட்டியது வேகா நிலை.

இராமலிங்க அடிகள் கூட இதைப்பற்றிப் பாடி இருக்கின்றார் சாகாக்கலை… வேகாநிலை… போகாப்புனல்…! வேகா நிலை பெற்று விட்டால் நாம் இன்னொரு உடலுக்குள் போக மாட்டோம்.

வேகா நிலையைப் பற்றிச் சொன்னால் இல்லை சாகாக் கலைதான் பெரிது…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்

நாடி சாஸ்திரங்களிலோ வைத்தியரீதியிலே பார்த்தோம் என்றால்
1.காயகல்பம் செய்து இந்த உடலை நாங்கள் அழியாது வைத்திருக்கிறோம்
2.போகர் 12000 எல்லாம் படித்துவிட்டு இப்படி வாதம் செய்வர் பலர் உண்டு.

ஆனால் அதை அவர் எழுதினாரா…?

பின்னாடி வந்தவர்கள் அதனுடைய தத்துவத்தை எடுத்து இந்த உணர்வின் தன்மையை நாடிகளாக எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இயற்கையில் ஒன்றுடன் ஒன்று சேர்க்கும் போது தங்கம் எப்படி உருவாகின்றது…? அதைப் போல் உன் மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டும்…? என்று போகன் அன்று சொல்லி இருந்தால்
1.புறத்தில் தங்கம் செய்வதிலேயே ஆசைகளைக் கொண்டு செல்கின்றார்கள்
2.இருக்கிற சொத்தை எல்லாம் இழந்து ஆண்டியாகச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
3.தங்கம் செய்ய முடியும் என்ற இந்த ஆசை பேய் மனமாக மாறிச் சுற்றுபவர்கள் இன்று நிறைய உண்டு.

செய்து செய்து பார்த்த பின்… என்னிடமே (ஞானகுரு) அதைக் காண்பித்து தங்கமாக வந்து விட்டதா…? பார்த்துச் சொல்லுங்கள்…! என்று என்னைச் சுற்றியவர்களும் உண்டு.

ஏனென்றால் குருநாதர் ஒரு சமயம் ஒரு இரும்புக் கரண்டியும் ஈயக் கட்டியையும் எடுத்து வா என்று சொன்னார். காட்டிற்குள் அழைத்துச் சென்றார். பல குப்பைகளை எடுத்து வரச் சொல்லி அதை எல்லாம் போட்டு வேக வைடா… தீயை வைத்து ஏரிடா…! என்றார்

அவர் சொன்ன இடங்களிலே தேடித் தேடித் தேடி… இந்த இடத்தில் இந்தக் குப்பையை எடு… இன்ன இடத்தில் இந்தக் குப்பையை எடு…! என்று எனக்கும் தெரியாமலே இதைச் செய்தார்.

அவர் சொன்ன இடத்திலிருந்து குப்பைகளை எடுத்துக் கொண்டு வந்தேன். போட்டு எல்லாவற்றையும் எரித்த உடனே இந்த உணர்வுகள் பட்டவுடனே ஈயம் தங்கமாக மாறிவிட்டது

ஆசாரியிடம் கொடுத்து உறைத்து பார்த்த பின் அடேயப்பா… இது உயர்ந்த தங்கமாக இருக்கின்றது இதிலே இன்னும் செம்பைச் சேர்க்கலாம்… உயர்ந்த தங்கமாக இருக்கிறது..! என்று சொல்லுகின்றார்.

அட… நீ இந்தச் சாமியாரிடம் (குருநாதரிடம்) சுற்றிக் கொண்டிருப்பது எதற்கு…? என்று இப்பொழுது தான் எனக்குத் தெரிந்தது நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா என்று அந்த ஆசாரி சொல்கின்றார்.

அதற்குப் பின் நான் என்ன செய்தேன்…?

குருநாதர் எந்தெந்த இடத்தில் குப்பைகளை எடுத்து வந்து அதைச் செயல்படுத்தச் சொன்னாரோ அதே மாதிரி நானாகவே செய்து பார்த்தேன் தங்கமாகிவிட்டது.

தங்கமான பின் கொண்டு போய் விற்று விட்டு வந்தேன் வந்த பின் குருநாதர் என்ன சொன்னார்…?

இங்கே வாடா…! என்றார்.

என்னிடம் இருந்து காசை எல்லாம் வாங்கிக் கொண்டார். இங்கே எத்தனையோ பேர் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் காசைக் கொடு என்றார். எனக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தார்
1.இனிமேல் இந்த மாதிரியான வேலையைச் செய்யாதே.
2.இதைத் தெரிந்து கொண்ட பின் உன் எண்ணம் எங்கே செல்கின்றது…? உன் ஆசை எங்கே செல்கின்றது…?
3.உன் மனதைத் தான் நான் தங்கமாக்கச் சொன்னேன்
4.தங்கத்தைச் செய்ய வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால் உன் மனம் பித்தளை ஆகிவிடும்… இரும்பாகப் போகும்… துருப்பிடித்து விடுமடா…!
5.இந்த வேலையை இனிமேல் செய்யாதடா…! என்று காசை எல்லாம் பிடுங்கிக் கொண்டார்.

ஆசை யாரை விட்டது…! குருநாதர் தங்கத்தைச் செய்தார். நான் பார்த்தேன்… எனக்கும் அந்த ஆசை வருகிறது.

ஏனென்றால் இரண்டாம் தடவை நான் தங்கம் செய்து விற்கும் போது “தங்க நகை செய்பவர்கள்… நீங்கள் எதை எதைச் செய்ய வேண்டுமோ செய்து கொடுங்கள். நாங்கள் விற்றுத் தருகின்றோம்… உங்களுக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறோம்…!” என்று சொல்கின்றார்கள்.

இப்படியும் ஆள்கள் வருகின்றார்கள்… உடலின் இச்சைக்கு நிறையப் பேர் வருகின்றார்கள். காரணம்
1.இந்த ஆசை எப்படித் தூண்டுகின்றது…?
2.மனிதன் எப்படி வாழ்கின்றான்…? என்ற நிலைகளை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன்…?

உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் என்ற உணர்வுகளை வளர்த்துப் பிறவில்லா நிலைகள் அடையும் நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.

அதன் வழி நீங்கள் செயல்பட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கணவனும் மனைவியும் பெற்று வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ்ந்து… நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி… நஞ்சினை வென்று பேரருள் பேரொளி பெற்று… பெருவீடு பெருநிலை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

உங்கள் பார்வையில் உங்கள் குடும்பத்தில் தீமைகள் அகற்றப்பட வேண்டும். உங்கள் பார்வையில் உங்கள் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும்.

கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானம் பெற்றிடும் அருள் சக்தி பெற்ற குழந்தைகளாக வளர்ந்திட வேண்டும். அதன் வழி நீங்கள் எல்லோரும் வாழ வேண்டும் என்று நான் (ஞானகுரு) வேண்டிக் கொள்கிறேன்.

உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!”

 

உலகோதய வாழ்க்கையின் சூழலில் சிக்கிக் கரை காணாது மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டுவிட எட்டிவிட நினைக்கின்றது. ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை அறிய முடியாது எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும் என்று கரை சேரலாம் என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக் கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் தன் முயற்சி கொண்டு கரை காண்பதும் உண்டு.

அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில் திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும் தானே கண்ட வழியாக ஓர் படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு எண்ண கதி ஓட்ட வாழ்வில் செல்லும்
1.பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்… உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்.. தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் போதினியைத் (குரு) தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8.குருவின் அருட் பார்வையில் நனைகின்றான். நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.

உலகோதய வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்துவிட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக் கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.

இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள் “அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத் துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலகோதய ஆசைக்கெல்லாம்… குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் அன்றோ..!

அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.

தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.

அந்தப் பக்குவத்தை முயற்சி செய்து பெறுவதற்காகத் தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”

தன்னிடம் குருகுல வாசம் செய்ய வரும் சீடர்களுக்கும் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை. “தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கும் மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.

அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்

“காரணம் உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!

குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம். நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”

உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.

மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலகோதய ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.

அடுத்துப் படிக்கும் மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழிதனின் ஏகிவிடுவர்.

இதில் எல்லாம் தெளிந்து
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலகோதய ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
4.அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள்.

அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!

தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.

1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.

அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.

சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது. வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”

உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்துத்
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.

ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலகோதய ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்.
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் ஏதோ…; “கதை சொல்கிறேன்” என்று எண்ணி விடாதீர்கள்.

இயற்கை நிலைகளில் பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார்

“மனிதனும் தெய்வமாக வேண்டும்… தெய்வ நிலை கொண்டு வேகா நிலை பெற வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் வெளிப்படுத்தினார்.

1.மண்ணுலகில் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.
2.அவர்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
3.மனிதனை மனிதனாக்க வேண்டும்
4.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்
6.பற்றுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற நிலையை உணர்த்திய
7.இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், மகாத்மா காந்தி போன்ற எத்தனையோ ஞானிகளும் மகான்களும் நம் பூமியிலே வாழ்ந்தார்கள்.

இதைப் போல ஓவ்வொரு மகானும் சொல்லி இருந்தாலும் அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ன செய்தார்கள்…?

இராமலிங்க அடிகள் இந்த உடலைப் விட்டு பிரிந்த பின் அவரை யாரும் விண் செலுத்தும் நிலை இல்லை. அவரைப் போற்றி துதிக்கும் நிலைதான் இருந்ததை தவிர பற்றுடன் பற்றித் தங்களுடைய வாழ்க்கைக்காகப் பற்றும் நிலை தான் வந்தது.

அவர்களுடைய அன்பைப் பெற்றனர். இந்த மனித வாழ்க்கையைத்தான் எண்ணி அவர்களிடம் வேண்டியிருந்தார்கள். ஆனால் அவர்கள் உடலை விட்டு அகன்ற பின் மகான்களின் ஆன்மாக்களை யாரும் விண் செலுத்தவில்லை.

ஆகவே இது காலத்தால் மறைந்த நிலைகள்.

மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள். பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள்.

சூரியன் எவ்வாறு தனக்குள் ஒளியின் சுடராக அனைத்தையும் மாற்றுகின்றதோ அதே போல மகரிஷிகள் எவ்வாறு மாற்றினரோ
1.எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்று அத்தகையை மகான்கள் எண்ணினாலும்
2.“விண் செல்லும் ஆற்றலை…” அவர்களும் கற்றுணரவில்லை.

மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. “விண் செல்ல வேண்டும்” என்று யாரும் எண்ணவில்லை.

இத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு. “நீ முதலில் அவர்களை விண் செலுத்து…” என்று அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.

காந்திஜி “மதங்கள் இல்லை.., பேதங்கள் இல்லை” என்று உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வெளிப்படுத்தினார்.

மக்களுக்குள் ஐக்கியமாக வாழ்ந்து மனிதன் என்ற ஆறாவது அறிவை கொண்டு நாம் அனைவரும் தீமைகளிலிருந்து விலகி நின்று உலக மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நிலைகள் கொண்டு எடுக்க வேண்டும் என்று உணர்த்தினார்.

அவ்வாறு அவர் உணர்த்தினாலும் இவர்களுடைய வேட்கையின் நிலைகள் கொண்டு வெறி கொண்ட உணர்வு கொண்டு அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சுட்டு வீழ்த்தினார்கள்.

காந்திஜியின் எண்ணங்கள் அப்பொழுதும் மற்றவர் மேல் பகைமை கொள்ளாது “இராமா… இராமா…” என்று உயர்ந்த குணத்தைச் சாந்தம் கொண்டு பிறருக்கு.., “என்னால் தீங்கு வரக்கூடாது” என்றுதான் எண்ணினார்.

அப்படி எண்ணினாலும் அவர் விண் செல்ல வேண்டும் என்ற நிலை அறவே அற்று விட்டது.

அத்தகைய மகான்களை எல்லாம் இன்று போற்றித் துதிக்கின்றோம். ஆனால் அதன் மறைவிலே பல தவறுகள் செய்வோரும் இன்று உண்டாகி விட்டார்கள்.

அவர் செய்த நன்மைகளைப் புகழ்கின்றோம். ஆனால் புகழ்ச்சி நிலைகள் கொண்டு மனிதர்கள் தங்களுடைய சுகபோகங்களுக்காகத் தவறு செய்யும் நிலைகளாக அதை உருமாற்றி விட்டார்கள்.

இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்கே எமது குருநாதர் இதையெல்லாம் சொன்னார்.

பிறரைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் செயல்பட்ட அந்த மகான்களின் உயிரான்மாக்களை அந்த மெய் ஞானிகளுடன் இருந்து தனித்து நின்று “நீ விண் செலுத்து” என்றார்.

அவர்களின் துணை கொண்டு இந்தப் புவியிலே விளைந்த அந்த ஆன்மாக்களைச் “சப்தரிஷி மண்டலத்துடன்… இணைக்கக் கற்றுக் கொடுத்தார்” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கிறது…?
2.எதனின் உணர்வை உனக்குள் கவர வேண்டும்…?
3.எதனின் வலுவின் துணை கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்…?
4.அந்த ஆன்மாக்களை உந்தி விண்ணிலே வீசி விட்டால் அந்த ஞானிகள் அருகிலே செல்லும்போது உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகின்றது.
5.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது…? என்று
6.அவர் எம்முடன் இருந்தே இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் “நானல்ல…” குருநாதர் காட்டிய உணர்வின் தன்மையே இது.

ஒரு மரம் எவ்வாறு தன் மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய உணர்வு கொண்டு இயக்குகின்றதோ இதைப்போல ஒரு மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் செயல் எதுவோ அதனின் நிலைகளையே பேசுவர். அதனின் நிலையிலேயே வலுப்படுவர்.

இதைப்போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருக்குள் விளைந்த ஆன்ம ஞானத்தை மெய் உணர்வின் தன்மையை விண்ணில் வளர்ந்துக் கொண்டிருக்கும் உணர்வுகளைப் பரப்பும் மார்க்கத்தைக் காட்டினார்.

1.மக்கள் நலமாக இருக்கவேண்டும் என்று வாழ்ந்த மகான்கள்
2.சாதாரண வாழ்க்கையிலிருந்து அவர்கள் ஆன்மா பிரிந்த பின்
3.மீண்டும் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை முதலில் விண் செலுத்து என்றார்.
4.அவருடன் இருந்து அந்த மகான்களை விண் செலுத்தினோம்.

இராமலிங்க அடிகள் போகர் இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகாநந்தர் இராகவேந்திரர் ஐயப்பன் இவர்களையெல்லாம் விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.

அதனின் நிலை கொண்டுதான் அவர்களின் தத்துவத்தை இன்று நாம் பருகும் நிலையாக எமக்குள் அந்த உணர்வின் சத்தை ஊட்டி நீ இவ்வாறு பருக வேண்டும் என்று உணர்த்தினார்.

அவர்கள் முதலில் விண் செல்லும் போது எல்லோரும் ஐக்கிய உணர்வு பெற வேண்டும் என்று எண்ணச் செய்தார்.

1.அவர்கள் விண் செல்லும் போது
2.அவர்களின் உணர்வின் தன்மை உனக்குள் வருவதும்
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தோரும் ஐக்கிய உணர்வும் மெய் உணர்வைப் பெறும் தகுதியையும் பெறுகின்றனர் என்றார்.

இதைப் போல் நம்மை வளர்த்த தாய் தந்தையர்களின் மூதாதையர்களும் நம்மை வளர்த்திட எத்தனை நிலைகள் நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி என்று சொன்னால் அவருடைய சிரமத்தையும் பார்க்காது நமக்கு எத்தனையோ நிலைகளைச் செய்தார்கள்.

அதே போல் அந்த ஆன்மாக்களையும் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செலுத்த வேண்டும்…? என்று இத்தகைய நிலைகளையும் குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகக் காட்டினார்.

ஆனால் இன்றைய நிலையில் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்கள் குலதெய்வங்கள் குடும்பத்தைக் காத்திட்ட நிலைகள் கொண்டு அவர் ஆன்மாக்கள் பிரிந்து சென்றபின் என்ன செய்கின்றார்கள்…?

அமாவாசை அன்று இருண்ட நாளில் அவருக்கு வேண்டிய உணவை வைத்து அவர்களுக்கு வேண்டிய மற்றவைகளையும் படைத்து அழைக்கின்றார்கள்.

அவர்களை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே இழுத்துப் பழகி விட்டனரே தவிர ஒளி என்ற சரீரம் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கும் நிலை முழுவதுமே அற்றுப் போய்விட்டது.

ஐதீகம் சாஸ்திரம் என்ற நிலைகள் இருளான அமாவாசை நாள்களில் அவர்கள் உணவாக உட்கொண்ட நிலைகள் கொண்டு அவர்களை ஏங்கி இந்தப் புவிக்குள் இழுக்கும் நிலைகளாகச் சாஸ்திர விதிகளை மாற்றி விட்டனர்.

ஆனால் அவர்களுக்கு உணவு எப்படிக் கொடுக்க வேண்டும்…?

பிறவா நிலை பெற்ற அருள் மகரிஷிகளின் உணர்வை என்றென்றும் அவர்கள் உணவாகப் பெற்று அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு நாம் விண் செலுத்த வேண்டும்.

“அங்கே இணைத்து” உடல் பெறும் உணர்வைக் கருக்கி விட்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக ஒளிச் சரீரம் பெறச் செய்தல் வேண்டும்.

இவ்வாறு தீமையை ஒடுக்கி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதை நீ பருகு என்றார். “எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்” என்றார்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் பேசுகின்றேன்… உங்களிடம் அல்ல…!

 

உண்மையான யாகம் எது…?

நமது உயிர் ஒரு நெருப்பு…! நாம் எந்த உணர்வின் தன்மையை இங்கே சேர்க்கின்றோமோ அந்த உணர்வலைகளை உயிர் நமக்குள் பரப்பும். உணர்வின் சொல்லாக வரப்படும் பொழுது பிறருடைய நிலைகளை அங்கே இயக்கும்.

1.ஒரு மயக்கப் பொடியைப் போட்டால் சுவாசித்தால் மயங்கி விடுவோம்
2.நல்ல நறுமணத்தைச் சுவாசித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

இதைப் போன்று நல்ல உணர்வின் (நல்ல குணத்தின்) தன்மையானால் உயிரிலே பட்ட பின் அது நமக்குள் சுழல்கின்றது
1.அந்த உணர்வுகள் சொல்லாக வருகின்றது
2.கேட்போர் உணர்வுகளை இனிமைப்படச் செய்கின்றது
3.நட்பு என்ற நிலைகள் அதனால் வளர்கின்றது… பகைமைகளை மாற்றுகின்றது
4.அருள் உணர்வை நமக்குள் கூட்டுகின்றது
5.பேரின்பத்தைப் பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.

ஆகவே ஞானிகள் காட்டிய ஆலயங்களை நாம் ஒவ்வொருவரும் மதித்துப் பழகுதல் வேண்டும். நம் உடல் தான் ஆலயம் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்க வேண்டும்.

இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்கின்றேன் என்றால் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன் உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன் மனித உடலை உருவாக்கிய நல்ல குணங்களை அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று குரு காட்டிய அருள் வழியில் தான் செயல்படுத்துகின்றேன்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும்… உங்கள் ஆன்மா பரிசுத்தமாக வேண்டும்… நல்ல குணங்கள் இங்கே வளர வேண்டும் என்ற அடிப்படையிலே தான் நான் பேசுகின்றேன்
1.உங்களிடம் அல்ல
2.உங்கள் உயிரான ஈசனிடம்.

அப்போது இந்த உணர்வை நீங்கள் நுகர்கின்றீர்கள். அருள் ஒளி இங்கே பெருகுகின்றது. அது பெருக வேண்டும்… நீங்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் உயிரான ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்ற உணர்வுடனே நான் பேசுகின்றேன்.

அருள் உணர்வைப் பரப்பி உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திடும் நிலையாக செயல்படுகின்றேன். என் ஆன்மாவை நான் தூய்மைப்படுத்திக் கொள்கின்றேன்

நல்லது செய்ய வேண்டும் என்ற நிலையில்
1.நீங்கள் தப்பித் தவறி தவறானதைக் கேட்க நேர்ந்தால் கூட
2.நீங்கள் அதிலிருந்து விடுபட்டு உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுவதால்
3.அது எனக்குள் வருவதில்லை

சூரியன் பல பல உணர்வுகளை எடுத்தாலும் எல்லாவற்றையும் அது எப்படி ஒளியாக மாற்றுகின்றதோ… அது போல் உயிரணு தோன்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிய பின்
1.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்
2.அவனைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய கலர் ஆறு… உணர்வுகள் மோதும் பொழுது… ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு… உணர்வின் தன்மை அறிந்து (வெளிச்சம் – ஒளி) எடுப்பது.

அதைத் தான் ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான் என்று சொல்வது. அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.

“வாயு ஸ்தம்பம்…”

 

மனிதன் (ஞானி) தன் அறிவின் ஞானம் கொண்டு ஞானப் பாதையின் வளர்ச்சியில் உயர் ஞான எண்ணச் செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால் அவன் கடைப்பிடிக்க வேண்டிய “சத்தியத்தின் சக்தி” என்பது எதுவப்பா…?

உயர் ஞானத் தத்துவப்படிச் செயல்படும் அனைத்திலுமே எண்ணம் சொல் செயல் செயலில் ஒரே நேர்கோடாகச் சத்தியத்தின் செயலாகப் பரிணமிக்க ஞானி தன் ஆக்கத்தின் ஆக்கமாகிய ஊக்கத்தில் செயல்படும் பொழுது சிவத்தைப் பெறுகின்றான். அந்தச் சிவம் என்பதே அன்பு தான்.

சத்தியத்தையும் சிவத்தையும் (அன்பையும்) கடைப்பிடிக்கும் செயலில் தன் உயிர் ஆன்ம ஜோதியை வளர்த்துக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டிட்டால் அத்தகைய அழகு தான் சுந்தரம் என்பது.

சத்தியம் சிவம் சுந்தரம் பெறுதல் என்பதெல்லாம் தான் கடைப்பிடித்து வரும் வழியில் உயர்விற்கு வழி காட்டிடும் மார்க்கம் “இது தான்…” என எண்ணத் தெளிவு கொண்டிடல் வேண்டும்.

உயிரான்மத் தத்துவத்தில்
1.சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான் “உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் மேலிருந்து கீழுமாக கீழிருந்து மேலுமாக
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!

இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”

அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.

தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.

உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.

1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.

உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.

விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?

அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?

நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!

அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பராசக்தி குளித்த குளத்தில் வேறு யாராவது ஆண்கள் குளித்தால் அது பெண்களாக மாறிவிடுவார்கள் என்று சாபமிட்டதனால் “அந்தக் குளத்தில் யாரும் ஆண்கள் குளிப்பதில்லை…”

இப்படிக் காவியப் படைப்பைப் படைத்து அந்தக் கருத்தினை நாம் தெரிந்து கொள்வதற்காகத் தெளிவாக்குகின்றனர்.

குரங்கு அது தாவிச் செல்லும் நிலையானாலும் அந்தக் குளத்தில் விழுந்து விட்டது. இது ஆண் குரங்காக இருப்பதனால் அந்தக் குளத்தின் உணர்வுகள் இதன் மேல் பட்டுப் பெண்ணாக மாறி விடுகின்றது.

ஏனென்றால் நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இது ஒரு பெரிய குளம்.

அதிலே நாம் பிறர் படும் கஷ்டங்களையோ வேதனைகளையோ நுகரப்படும் போது நாம் அதிலே விழுந்து விடுகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காக காவியத் தொகுப்புகளைத் தெளிவாக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

இப்படி விழுந்த குரங்கு பெண்ணாக மாறிவிடுகின்றது. பெண் என்றால் சக்தி என்று பொருள். ஆகவே அது தனக்குள் கருவாக்கும் தன்மை பெற்றது என்பதனை உணர்த்துகின்றனர்.

நமது பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் இத்தகைய விஷத்தன்மை பெரும் குளமாக இருக்கின்றது. அந்த உண்மைக்கு மாறான நிலைகள் நடப்பவைகளைப் பார்த்து நாம் விழுந்து விட்டால் எப்படி மாற்றம் அடைகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக ஒரு காவியமாகப் படைத்தனர் ஞானியர்கள்.

நம்மை அறியாமலே பிறருடைய நிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் “இப்படி வேதனைப்படுகின்றானே..,” என்று (குளத்தில் பட்டால்) அவன் உணர்வை நாம் எடுத்தால் இந்த உடலுக்குள் என்ன ஆகின்றது…?

நாம் பல வேதனைகள் படுகின்றோம் என்பதனைக் காட்டுகின்றனர்.

இப்படிப் பெண்ணாக மாறியபின் அதைக் கண்டு ரசிக்கின்றனர். யார்…? வாயு. அதைக் கண்ட பின் எப்படியும் அதனின் அழகைக் கண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதனை அணைத்துக் கொள்ள வேணடும் எனறு விரும்புகின்றது.

1.வாயு என்பது நாம் நுகர்வது வாயு (சுவாசக் காற்று),
2.அதன் உணர்வின் தன்மை இங்கே நம் உடலுக்குள் சென்றபின் உமிழ் நீராக மாறுகின்றது.
3.வாயுவுனுடைய நிலைகள் எந்த குணத்தின் உணர்வோ அதனை எண்ணும்போது
4.“அதிலே உருவான கரு தான்” என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

வேதனைப்படுபர்களைப் பார்த்து அந்த வேதனையான உணர்வை நாம் சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வுகள் வேதனை என்ற உணர்வைக் “கருவாக்கும்” உமிழ் நீராக மாறுகின்றது.

இதை மாற்றி அமைப்பதற்காக “இந்திரன்..,” இரண்டாவது வருகின்றான். இந்த அழகைக் கண்டு தானும் ஆசைப்பட்டு அதை அடைய விரும்புகின்றான்.

1.“இந்திரன்… என்றால் உருவாகும் உணர்வுகள்”.
2.உமிழ் நீராக மாறி அது இந்திரீகமாக மாறுகின்றது.
3.இந்திரீகமாக மாறப்படும் போது அந்த வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது…? என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளில் தெளிவாக்கியுள்ளார்கள்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கின்றேன்…? நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை எல்லாம் நேராகத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்லுகின்றேன்.

இந்த உணர்வை எடுத்து எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடலில் எளிதில் சேர்த்துக் கொள்ள இது உதவும்.

உமிழ் நீராக ஆனதால் இந்திரன் என்றால் அவனுக்கும் இரண்டு பேருக்கும் (வாயு, இந்திரன்) சேர்த்துப் பிறந்தது தான்.

ஆகவே வேதனைப்பட்ட உணர்வுகள் வாய்வு. நமக்குள் நுகர்ந்த பின் அது உமிழ் நீராக மாறுகின்றது.

பின் இந்திரன் என்ன செய்தான்…? அதன் உணர்வு கொண்டு அதன் ஆசையிலேயே தான் (உடலாக) உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது என்பதனைக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்து விரும்பித்தான் எடுக்கின்றோம். ஆகவே.., அப்பொழுது நாம் ஆசைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெற வேண்டும் என்று அதை ஆசைப்படுதல் வேண்டும்.

ஏனென்றால் வேதனையை நுகருகின்றோம். வாயுவாகின்றது. நம் உடலுக்குள் வரும்போது வாலியாகிவிடுன்றது. அந்த வலுவின் தன்மை உமிழ் நீராக மாறுகின்றது.

அந்த வலிமையான நிலைகளை மாற்றியமைப்பதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.தீமைகளை நீக்கிய உணர்வை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கி
2.அந்த உணர்வை நாம் சுவாசிக்க வேண்டும்.
3.அது நமக்குள் கலந்து நம் உயிரிலே பட்டு இயக்கச் சக்தியாக மாறுகிறது… தீமையை நீக்கும் அரும் பெரும் சக்தியாகிறது.

நாம் குழம்பு வைக்கும் போது உப்பு புளி காரம் என்று பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக மாற்றுவது போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இப்படி அதை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இணைத்தால் அந்த வேதனைகளைத் தடுத்து விடுகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துகின்றது.

நம்முடைய சகஜ வாழ்க்கையில் பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். பார்த்தபின் அவர்களை நல்லதாக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்களுக்குப் பொருளால் உடலால் வேண்டிய உதவிகளைச் செய்து நல்லதாக்கி விடுகின்றோம்.

ஆனால் நாம் நுகர்ந்த தீய உணர்வுகள் அதனுடைய வலிமையான நிலைகள் நமக்குள் நோயாக வந்து விடுகின்றது. அந்தத் தீமைகளை நுகர நேர்ந்தாலும் தீமையின் உணர்வுகள் நமக்குள் பெருகாது தடைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளில் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் சேரும் தீமைகளை “நாம் தடைப்படுத்துவதற்குத் தான்” ஞானிகள் இப்படி காவியங்களைக் கொடுத்துள்ளார்.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதரின் சங்கேத பாஷை

 

குருநாதர் எந்தெந்த வழிகளில் எல்லாவற்றையும் தெரிந்து இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு (ஞானகுரு) அது தெரியவில்லை என்றாலும் அறிய வைக்கின்றார்.

குருநாதர் டெலிஃபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தை அடிப்பார். அடித்த உடனே
1.இந்த லயன் அந்த லயன்…
2.இந்த லயன் இந்த லைன்…! என்று சொல்லிக் கொண்டே வருவார்.

இப்படி என்னத்தைக் கிரகத்தைச் சொல்லுகின்றாரோ…! பைத்தியம் போன்று பேசிக் கொண்டிருக்கின்றார்…! என்று நான் (ஞானகுரு) நினைப்பேன். அவர் சொல்வது ஒன்றும் புரியாது.

டேய்… மிளகாய் ஒரு லட்சம்…! கோடி… கோடி… என்று சொல்வார். அவர் எல்லா பாஷைகளும் பேசுவார்.

நான் என்ன சொல்வேன்…? கோடி (கோழி) இங்கே இருக்கிறது சாமி…! என்பேன் (தெலுங்கிலே).

அந்தக் கோடி இல்லைடா… “ஈகோடி” என்பார். மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி… அது… இது… என்று என்னென்னமோ கோடி… கோடி… என்று சொல்வார். எனக்கு அர்த்தம் புரிய மாட்டேன் என்கிறது.

இந்த லைன் அந்த லயன் அந்த லயன் அந்த லைன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். அர்த்தமே புரியாது…!

அப்புறம் அந்த உணர்வுகளை எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று கலந்து
1.உணர்வுகள் எத்தனை கோடியாக மாறுகின்றது…?
2.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
3.எதன் செயலை மாற்றுகின்றது…? – அப்படி என்றால் அந்த லயன்…!

அதாவது நட்சத்திரத்திலிருந்து மின்னலாகப் பாயும் பொழுது
1.இந்த உணர்வுகள் எதனுடன் எப்படிச் சேர்கின்றது…?
2.உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை உள் உணர்விலே அதை உணர்த்துகின்றார்.

முதலிலே சொல்லிவிடுவார்… பின் புரிய வைப்பார்.

அதே போன்று தான் உங்களிடம் இதைச் சொல்லிப் புரிய வைக்கின்றேன் குருநாதர் எனக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதே போல உங்களிடமும் அதைப் பதிவு செய்கின்றேன்.

சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் இந்த நினைவுகள் உங்களுக்கு வரும்.

காரணம்… தீமைகளை அகற்றக் கூடிய சக்தி உங்களுக்குள் வளர வேண்டும். இந்த உலகம் விஷத்தன்மையாகப் பரவும் நேரத்திலே விஞ்ஞானத்தால் வந்த விஷத்தை வெல்லக்கூடிய சக்தியை நீங்கள் பெற வேண்டும்.

உங்கள் மூச்சு பிறரைக் காக்கும் சக்தியாகப் பரவ வேண்டும் என்பதற்குத்தான் இந்த நேரத்திலே இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை… குருநாதருடைய உணர்வு தான் பேசுகின்றது.
2.அந்த உணர்வு தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றது.

இதை நிலை நிறுத்தி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களையும் நீங்கள் காக்கின்றீர்கள்… இந்த நாட்டையும் காக்கின்றீர்கள்… மக்களையும் காக்கின்றீர்கள்… இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்.

இப்படிப் பல முறை லயன் லயன் லயன் என்று புரியாத உணர்வுகளைச் சொல்லிச் சொல்லித் தான் குருநாதர் கண்டுணர்ந்த எல்லாவற்றையும் என் உடலுக்குள்ளே பதிவு செய்தார்.

குரு வழியில் நான் எதை எதைப் பதிவு செய்தேனோ அதை மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.
1.பதிவு செய்ததை நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் எண்ணினால்
2.குருநாதர் எனக்கு உணர்த்தியது அனைத்தும் உங்களுக்குள் நிச்சயம் வரும்… வளரும்.

சத்தியம் சிவம் சுந்தரம்

 

மனிதனான நமக்குள் பல பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த உடல் வாழ்க்கையில் மோதும் உலகோதய உணர்வுகளிலிருந்து உயர் ஞான வழியின் வழியை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெற வேண்டும்.

1.நான் என்ற ஆணவம் ஒரு மலம்
2.காமம் என்ற சபல குண மோகம் ஒரு மலம்
3.உலகோதய ஆசை என்னும் மாயை மூன்றாவது மலம்.

இந்த மூன்றையும் அறிந்து அந்த மும்மலத்தையும் நீக்க வேண்டும் என்றால் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற கருத்தின் பொருளைக் காண வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வுடன் தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெற்று சத்தியம் என்பதன் உண்மைப் பொருள் விளங்கி நம் எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர்கோடாகப் பரிணமித்தல் வேண்டும். சத்தியம் என்ற அந்த மெய் ஞானமே உண்மை ஞானமாக அறிந்து செயல்பட வேண்டும்.

சத்திய வழி சிவம் பெறுதல் என்பது என்ன..? சிவத்தை எங்கிருந்து பெறுவாய்…?
1.உன்னிடத்தில் உள்ளதடா சிவம்… என்று
2.சித்தன் காட்டிய வழியில் உன்னை உணர்ந்து பாரப்பா…!

காமம் என்பதே உயிர்களுக்கு அன்பு. காமம் சமமான பக்குவத்தில் இருந்தால் அதுவே சிவமாகும். அந்த அன்பு தானப்பா “சிவம்…!”

மனதில் அன்பு கொண்டு விட்டால் உயிரான்மாவின் சக்தியின் வலுவிற்குச் சுலபமான வழி கிட்டிவிடும். அதுவே சுந்தரம்…! சுந்தரத்தைப் பெறுவது என்றால் “அழகு” என்று பொருள் கொள்வாய்.
1.அந்த அழகு என்பது எதுவப்பா..?
2.நீ நினைக்கும் உடல் அழகு அல்ல…!

அழகு என்பது ஆன்ம வலுவின் ஒளி காந்த சக்தி கொண்டு “சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதித் தத்துவம் ஆகும்..!” அதைப் பெற வேண்டும் என்றால் மும்மலம் நீக்கப்பட வேண்டும்.

அதை நீக்கிய பிறகு மெய் வழி கண்டு மெய் வழி அறிந்து மெய் ஞானம் மலர்ந்து
1.விரிந்து மணம் வீசும் ஒரு மலர் போல
2.ஆன்ம சக்தியின் சத்தியம்.. சிவம்… சுந்தரம்… என்ற எண்ணத்தில்
3.கடைப்பிடிக்கும் அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தி அதை மேன்மைப்படுத்தினால்
4.அன்பு என்ற சிவத்தைப் பெறுகின்றாய்.

அன்பாம் சிவ ஈர்ப்பின் வலுச் செயலினால்… சுந்தரமாம் ஆன்ம அழகின் ஜோதியாக… ஜோதியின் சக்தியே பிரகாசமாக… பிரகாசத்தின் ஒளி நிகழ்வாக… “மூலத்தின் மூலமாகச் செயல் கொண்டிடலாம்…!”

சிற்றின்ப போகத்தையே பேரின்பப் போகமாக்கிய போகநாதர் சத்தியம் சிவம் சுந்தரத்தைப் பெற்றது… மும்மலத்தை மாற்றியமைத்து நற்குண வழிச் செயல் ஆக்கத்தின் ஆக்கம் பெற்றதால் தான்…!

முருகனுக்கு மயிலையும் சேவலையும் காட்டி நாகம் வேல் என்ற தொடரையும் காட்டுகின்றார்கள். அதன் சூட்சமம் அறிந்தோமா…? போகப்பெருமான் வளர்த்துக் கொண்ட அனுபவ ஞானத்தை நாமும் அறிந்து கொண்டால் நம்முடைய வளர்ச்சி நல் வழி ஆகுமப்பா..!

விநாயகர் ஞானக்கனியைப் பெற்றார். இடும்ப குண வசத்தால் முருகனுக்குக் அது கிடைக்கவில்லை என்ற கதையின் தத்துவத்தில் உள்ள உண்மையையும் தெளிந்து கொள்ள வேண்டும்.

வினையின் நாயகன் அந்த விநாயகனே நாம் தானப்பா…! நாம் எப்படி ஞானக்கனி பெறுவது..?

உயிரின் மூலமாகிய “சிவ சக்தி…!” என்று சொரூபப்படுத்திக் காட்டிய
1.சுழற்சியின் வேகமான சிவத்திற்குள்… சக்தி உருக்கொள்ளும் தன் உயிர் சக்தியை
2.தன்னைத் தான் உணர்ந்து தன்னுள் அந்தச் சிவ சக்தியைக் கண்டு
3.வலுக் கொண்ட செயலின் ஆக்கமாகத் தன்னைத் தான் அறிவதே ஞானக்கனி பெறுவது என்பது.

(சூட்சமப்படுத்திக் காட்டிய நிலையில்) தன்னுள்ளே சிவ சக்தியைக் கண்டு அதைச் சுற்றும் வழித் தொடரில் அதை வலம் வந்து அந்த வினையின் நாயகனாக நாம் பெறுவதே “ஞானக்கனி…!”

அகஸ்திய மாமகரிஷியின் தொடர்பு கொண்டு… போகப் பெருமானின் குரு காளஞ்சி நாதர் (காலிங்கநாதர்) சொன்ன முறைப்படி
1.இருந்த இடத்திலேயே (வெளியிலே தேடிக் கொண்டிருக்காமல்) ஞானக்கனி பெறுதல் என்பதில் அந்த ஞானம் கனிந்து விட்டால்
2.அதனின் சுவையைப் பெற்று விட்டால்
2.அந்தச் சுவையின் “மூலம் அறிய…” வழி பிறக்கும்.

இப்படித் தத்துவங்களையெல்லாம் காட்டி சூட்சமங்களை எல்லாம் உள் புகுத்தி மும்மல நீக்கத்திற்கு வழி காட்டி வாழையடி வாழை என வரும் ஞானச் செல்வங்கள் தன் சக்தியை வளர்த்துக் கொள்வது என்பது மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் வழியாகும்.

கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.

கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி. கோபத் தன்மை இருந்தால் மும்மலங்களும் தீய வினைகளுக்கு அடிகோலும்.

ஆணவம்.. மோகம்… உலக மயக்கம் என்னும் மாயை…! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது…! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.

முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்… மோக குணத்தை வென்றிட்டார்… உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்… என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப்பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்…!”

மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்…! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.

ஆகவே ஆணவ மலத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி…!”

அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது…! என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.

மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாக சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்…!” என்ற பொருளை உணரலாம்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்…? என்னை அவன் இப்படிப் பேசினானே.., அப்படிப் பேசினானே… நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?

கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே… எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…? என்று சொல்வார்கள்.

ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.., உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.

தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை” இல்லை.

இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள்… படிக்கின்றீர்கள். எனக்கு அப்படின் எல்லாம் காட்டவில்லை.

திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.

இந்தக் குகைக்குள் போகவேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.

என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…” என்கிறார் குருநாதர்.

போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது…? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்துவிட்டது.

அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது… “அந்தச் சந்தர்ப்பம்…!” அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி வருகின்றது.

அப்புறம் என்ன செய்தேன்…?

“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.

அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.

மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.

அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.

ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.

அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.

குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.

1.விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன்.
2.மறுபடி திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது…?
3.விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது. இதை எப்படிப் பிடிப்பது…?

அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.

விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
1.நொடிக்கு நொடி மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது…?
2.பயம்… என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது…?
3.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது…?

இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.

அப்புறம் என்னாகிவிட்டது..? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.

நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நல்லா திரித்துக் கொண்டேன்.

அந்த நேரத்தில் “ஒரு சிந்தனை” வந்தது.

அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.

அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.

முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்…? ஆபத்து தான்.

இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்பதற்குத்தான் இந்த அனுபவம்.

ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…! என்று காட்டுகிறார்.

அதன் வழியில் நான் போகின்றேன்.

முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.

அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.

விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது…? அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி வசமாக இப்படிச் சிக்க வைத்து விட்டார் என்று எண்ணினால் எப்படி இருக்கும்…?
3.குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்…?
4.குரு வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? என்ற நிலையில் அவரை எண்ணி
5.இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.

இது தான் என்னுடைய அனுபவம்.

அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.

பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.

இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.

அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.

ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள் என்று “பார்” என்று காட்டுகின்றார்.

ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.

நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.

ஆறு பக்கத்திலிருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.

அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.

ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.

காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.

ஆனால் அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.

சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.

தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.

காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் “பெரும் கூட்டமைப்பு…”

 

ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் படர்ந்துள்ளது. அதை எடுத்து நான் (ஞானகுரு) மட்டும் பேசுவதில்லை
1.நீங்கள் எல்லாம் அதைத் தெரிந்து கொள்ள முடியும்… “தெரிந்து கொள்ள வேண்டும்”
2.தெரிந்தால் தான் இந்த நாட்டையும் மக்களையும் விஞ்ஞானத்தின் விஷத்தன்மையிலிருந்து காக்க முடியும்
3.காலத்தால் மறைந்து விட்டது மறைந்த நிலைகளை மீண்டும் கொண்டு வந்து நாம் தப்ப வேண்டும்.

காரணம் சூரியன் அழியும் தருணம் வந்துவிட்டது… சூரியன் அழிவதற்கு முன் பூமிக்குள் உயிரினங்களில் மாற்றங்கள் அதிகரிக்கும்.

மனிதர்களாக இருக்கும் நாம் இன்று நல்ல நினைவு இருக்கும் பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டு… உடலை விட்டுச் செல்லும் போது பிறவியில்லா நிலை அடைந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும். நமது குரு உயர்ந்த உணர்வைப் பெற்றார். அந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.
1.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.குரு வழியில் அருள் ஒளியை நாம் எல்லாம் சேர்க்கப்படும் பொழுது இது பெரும் கூட்டமைப்பாக மாறுகின்றது.

மனித உருவாக ஆன பின் அடுத்து அந்த இறந்த உடலைப் புதைத்தால் அது கரைக்கப்படுகின்றது மீண்டும் மற்றொன்றுக்குத் தான் அது இரையாகின்றது.

அது போல் தான் நம் சூரியனும் தன் செயலை இழந்தால் கரைந்து விடும். மற்றதுக்கு இரையாகிவிடும்.

ஏனென்றால் நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித்தனியாக… ஒவ்வொரு சூரியக் குடும்பமாக மாறிக் கொண்டிருக்கின்றது. கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது. மற்ற ஏனைய நட்சத்திரங்களும் இவ்வாறு சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

நம் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கின்றது. அதனால் இது முதுமை அடைந்து விட்டது.
1.27 நட்சத்திரங்களுக்குள் சரி பகுதி தனிச் சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் நம் சூரியனுக்கு இரையில்லை.
2.அப்போது சுழற்சியின் தன்மை சூரியனின் ஈர்ப்பு வட்டம் குறையும்.
3.இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய நமது பூமியோ அந்தச் சுழலுக்குள் சென்று இதுவும் கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.
4.27 நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவான நிலைகளுக்குள் இது உணவாகி இதுவும் மாறிவிடும்

2000 சூரியக் குடும்பங்கள் சேர்ந்து ஓர் குடும்பமாக மாறுகின்றது. நமது பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரிய குடும்பமாக மாறினால் இது ஒரு அண்டமாகின்றது… பேரண்டமாகிறது.

இதைப் போன்று வளர்ச்சியின் நிலைகள் மாறி மாறித்தான் தனது பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளர்ந்து வந்தது.

இதை எல்லாம் நான் வெறுமனே சொல்லவில்லை. படிக்காதவன் தான் இதைச் சொல்கின்றேன். படித்திருந்தால் தப்பாகத் தான் சொல்லி இருப்பேன் என்று நினைக்கின்றேன்.

குருநாதர் கொடுத்த அருள் உணர்வின் தன்மையை நினைவு கொண்டு வளர்த்துக் கொண்டேன். வளர்த்துக் கொண்ட உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.பதிவு செய்தை எண்ணி அந்த உணர்வுகளை நுகர்ந்து நீங்களும் அண்டத்தை அறிய முடியும்
2.உடலான பிண்டத்திற்குள் வளர்க்கவும் செய்யலாம்.

உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும் அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

ஆனந்தலயமான “பிரம்ம சாயுஜ்யம்…”

 

சொல்லாக எழுத்து வடிவில் எத்தனையோ சூட்சமங்களை ஈஸ்வரபட்டனாகிய யான் இங்கே வெளிப்படுத்தி வரும் நிலையில் நீங்கள் இதைக் கேட்டுப் படித்து அதைச் செயல்படுத்துவது என்பது மேன்மை தான்,

ஆனாலும் சொல்லப்பட்ட சூட்சமங்களைத் தன்னுடைய சிந்தனைத் திறனால் தன்னில் அறிந்துணர்ந்து தெளிதலே அதி மேன்மையாகும்.
1.”வாயு ஸ்தம்பம்…!” என்றிட்ட
2.ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.

பைராகிகளின் தொடர்பால் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை அறிய முற்பட்டார். பல கோடித் தாவரங்களின் சத்துக்களைப் பற்றியும் அதனின் இயல்புகளையும் அறிந்து கொண்டார்.

அது எல்லாவற்றையும் அறிந்த பின் அனுபோக முறை (தனக்குள் அனுபவபூர்வமாக உணர்ந்து) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,

மூலிகைகளின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளையும் பதப்படுத்திப் பக்குவமாக இணைத்து திரியைப் போட்டு தீபமாக ஏற்றப்படும் பொழுது அந்தத் தீபத்திலிருந்து புகை வெளி வருகின்றது. (இன்று இராக்கெட்டில் வெளி வரும் அடர்த்தியான புகை போல)

காற்றின் அடர்வைக் காட்டிலும் மெலிதான அந்தப் புகை மேல் நோக்கிக் கிளம்பும் சூட்சமத்தை உணர்ந்து உலோகக் கூண்டுகளில் உள்ளே நிரப்புகின்றார்கள்.

நிரப்பிய அந்தக் கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்யும் செயலாக அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தார்கள் அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும்.

இன்று பூமியில் உள்ள கனி வளங்களை எடுத்து அதை எரி பொருளாக எரித்து இராகெட் மூலம் செயற்கைக் கோள்களை அனுப்புவது போல்
1.ஞானிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் அடிப்படையில் இயற்கை முறையில் செய்வித்தார்கள்.
2.அதாவது பூமித் தாயின் இயற்கைச் சக்தியை “இன்றைய விஞ்ஞானம் நச்சாக மாற்றிக் கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்…”
3.தன்னுடைய அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல்படுத்தினார்கள்.

அவர்கள் வெளிப்படுத்திய சூட்சமங்களையே இன்றைய விஞ்ஞானிகள் நுகர்ந்து தங்களுடைய கண்டுபிடிப்புகளாக உருவாக்குகின்றார்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு மூலமே அன்றைய சித்தர்களின் மெய் ஞானம் தான்.

மெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைக்கும் செயலாக
1.சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து
2.சிவஸ்வரூபத்தின் மூலத்தை அறிந்து
3.அதனுள் அதுவாகத் தான் ஒன்றி “தான் வேறல்ல… ஈசன் வேறல்ல…!” என்ற மனப்பக்குவம் கொள்வதே
4.அகத்தின் பொருளை… அந்தப் பரம் பொருளை அறியும் மார்க்கம் ஆகும்.

இதைச் சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது…!
1.அறிந்ததை உனர்ந்து கொண்டு
2.தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் “பிரம்ம சாயுஜ்யம்…!” பெறும்
3.ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு ஒவ்வொருவரும் வலுக் கூட்ட வேண்டும்.
(சாயுஜ்யம் என்றால் உயிருக்குள் (ஈசனுக்குள்) புகுந்து அவனை ஆகர்ஷிப்பது)

மிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனும் உண்டு.
1.ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதனோ
2.பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற மிகுந்த திறன் உடையவன்.

இயற்கை ஞானத்தை மெய் ஞானமாக வளர்க்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை மூலச் சக்தியை அறிந்து கொள்ளும் செயலுக்கு ஒவ்வொரு மனிதனும் முற்பட வேண்டும்.

அந்த நிலையை அடைவதற்கு மகரிஷிகள் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை உடல் என்ற இந்தப் பிண்டத்தில் பக்குவமாக ஒவ்வொரு நாளும் விளைய வைக்க வேண்டும்.

எப்படி…?

1.உலகோதய ஆசை என்ற வலைக்குள் சிக்காமல்
2.அகத்தின் (தனக்குள்) எண்ணச் செயலில் தூய்மையும் சொல்லிலே அன்பும் கனிவும் கொண்டு
3.பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியத்தைப் பெற்றிடும் பாக்கியமாகத் தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

மூல சக்தி… அது ஆட்டுவிக்கும் மூவுலகம்…!” என்ற செயலை உணரும் பக்குவம்… தன்னைத்தான் உணரும் செயலில் தான் (அது யாராக இருந்தாலும் சரி) அறிந்து கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் எங்கே சென்றாலும் ஜோசியமும் ஜாதகமும் கேட்டு அவர்கள் சொல்லும் நிலையைப் பதிவு செய்தால் அந்த உணர்வே… “அது கடவுள்…” என்ற நிலைகளில் உங்களுக்குள் இறையாகி அந்த இறையின் செயலாக உங்களை இயக்கிவிடும்.

அத்தகைய நிலைகளுக்கு விட்டுவிடாதீர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நாங்கள் பெறுவோம். எங்களை அறியாத தீமைகளை அகற்றுவோம் என்ற மன பலம் கொண்டு வாருங்கள்.
1.ஜோசியம் கேட்டு… அவர் சொன்னதை மனதில் வேதனை கொண்டு
2.உங்கள் மன நிலையை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

நல்ல பெண்ணாக இருக்கும். அழகாக இருக்கும். படித்த நிலைகள் கொண்டிருக்கும். சீரான குணங்கள் இருக்கும். ஆனால் ஜாதகப்படி “செவ்வாய் தோஷம்” என்பார்கள்.

செவ்வாய் தோஷத்தின் நிலைகள் கொண்டு நாம் சென்றால்
1.நம் குடும்பத்தில் கலகம் வரும்.
2.அதனால் தீய விளைவுகள் வரும் என்ற ஜாதகத்தின் உணர்வு கொண்டு
3.அவர்கள் சொல்வதையெல்லாம் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

ஆக ஜாதகத்தின் பலன் கொண்டு நல்ல பெண்ணாகவும் குணவதியாக இருப்பினும் அதை நாம் “ஏற்க மறுக்கின்றோம்…”

செவ்வாய் தோஷம் இருப்பதனால்
1.தாய் இறந்து விடுவார் தந்தை இறந்து விடுவார்.
2.இங்கு குடும்பம் நலிந்துவிடும்
3.இந்தச் செவ்வாய் தோஷத்தால் குடும்பமே சாபமாகிவிடும் என்பார்கள்.

ஆனால் நற்குணவதியும் நல்ல குணங்களும் நல்ல பேணிக் காக்கும் நிலையும் சிறந்த நிலைகள் இருப்பினும் அதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.

எதனால்…?

“ஜாதகத்தால்…!”.

1.இந்தத் தோஷங்களைப் பதிவு செய்யாது
2.அருள் ஞானியின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்து இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட்டு
3.நம் எண்ணத்தில் மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம் என்று எண்ணுங்கள்.
4.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று இருளைப் போக்குவோம்
5.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனைப் பெறுவோம் என்று எண்ணுங்கள்.

ஆலயங்களுக்குள் செல்லும்போது எத்தனையோ பேர் அங்கே வந்தாலும் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞானம் பெற்று அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

நமக்குள் இருக்கும் வேற்றுமைகளையும் பகைமைகளையும் நீக்கி என்றும் ஒற்றுமையுடன் வாழும் உணர்வைத்தான் ஆலயத்தில் காட்டப்பட்டது.

ஆகவே நாம் நம் மனதைப் பண்படுத்துவோம். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு பண்பட்ட வாழ்க்கையாக வாழ்வோம்.

மனிதனின் சுவாசம் செல்லும் பாதையைச் சீரமைக்காதபடி எந்தச் சாங்கியமோ சாஸ்திரமோ செய்தாலும் அது வேலை செய்யாது

 

மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு. ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?

வாஸ்து சாஸ்திரத்தைப் பார்க்கின்றோம்… ஜோதிடம் பார்க்கின்றோம்.. நல்ல நேரம் வந்ததா…? கெட்ட நேரம் வந்ததா…? என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தவறாக நினைக்காதீர்கள்… நம்மை அறியாது எந்தெந்த அளவுக்கெல்லாம் நம்மை இழுத்துச் சென்று இருக்கின்றது…? என்று கவனித்துப் பார்த்தால் தெரியும்.

“வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர்கள்…”
1.உங்கள் வீட்டு வாசல் கொஞ்சம் ஒதுங்கி இருக்கின்றது
2.இதை இடித்துவிட்டு “வாஸ்துப்படி…” நேராக இப்படி வையுங்கள் என்பார்கள்.
3.கஷ்டம் வந்ததற்கு காரணமே இதுதான்…! ஆகவே கட்டிடத்தை இடித்து விட்டு இப்படி மாற்றி வையுங்கள் என்று அவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படுத்துவோம்.

ஒரு ஓரத்தில் கொஞ்சம் இப்படி மாற்றினாலே… மறைத்து விட்டால் அது நல்லது என்பார்கள்.

அவர் சொல்வதை எல்லாம் நாம் பதிவு செய்து கொள்கின்றோம். அதை ஏற்றுக் கொள்கின்றோம். காசைச் செலவழித்து எல்லாவற்றையும் செய்து வைக்கின்றோம். “இது தான் வாஸ்து சாஸ்திரம்…”

ஆனால் அதற்கு பின் என்ன நடக்கிறது…?

குடும்பத்தில் குழந்தைகள்… உடன் பிறந்தவர்கள் என்று ஏழு பேர் எட்டுப் பேர் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் அன்பாகப் பண்பாக உதவி செய்பவர்கள் தான் நாம்.

இருந்தாலும் சந்தர்ப்பம்… ரோட்டிலே நடந்து செல்கிறோம். அப்பொழுது ஒரு விபத்தாகி ஒரு வாகனம் வேறொருவர் மீது ஏறி விடுகின்றது.

பார்த்த்தும் “ஆ….ஆ…” என்று அலறி விடுகின்றோம். அதனால் பிரமை பிடித்த மாதிரி ஆகி விடுகின்றது. பிரமையானால் என்ன ஆகும்…?
1.இந்த அழுத்தம் கவன நரம்புகளை வீங்கச் செய்து விடுகின்றது.
2.விரிவடைந்த பின் அது பழையபடி அடங்குவதில்லை.

இதைச் சரி செய்ய எத்தனையோ வைத்தியங்கள் நாம் பார்க்கின்றோம் ஆனால் மற்றவர்கள் பாசமாக இருப்பவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். ஐயோ… என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… அல்லது என் தம்பிக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று எல்லோரும் எண்ணுவார்கள்.

தொழில் செய்யும் நிலைகளில் தான் இந்தக் குடும்பம் இருக்கின்றது. இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின் தொழிலைச் சரியாக அல்லது சீராகக் கவனிக்க முடியுமா…?

இல்லை.

சங்கடமான உணர்வுகள் இங்கே பரவப்படும் பொழுது நன்றாக இருந்த வியாபாரம் இந்தச் சங்கடத்தினால் மந்தமாகும். உடனே நாம் என்ன நினைப்போம்…?

கெட்ட காலம் வாருங்கள்…! ஒரு விபத்து ஆனது எல்லாம் இப்படி ஆகிவிட்டது. வரிசையிலே இப்படியே தொழில் எல்லாம் கெட ஆரம்பிக்கும்.

கஷ்டமாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில் நாம் கடன் கொடுத்தவர்களிடம் கூடப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பா என்று கேட்டால் நான் தான் தருகிறேன் என்று சொன்னேனே அதற்குள் என்ன…? என்பார்கள்.
1.இல்லை… இங்கே குடும்பத்தில் நோயாகி விட்டது என்று சொன்னால்…
2.எங்களுக்கும் தெரியும்…! பணம் வந்தால் தானே கொடுக்க முடியும்…! என்று அந்த நேரத்திலே “எதிர்ப்புகள்…” வரும்.

அப்போது இந்த வாஸ்து சாஸ்திரம் எங்கே போகும்…?

ஆனால் இந்தக் குடும்பம் முதலிலே நன்றாக இருந்தது தான். ஆனால் இது போன்று சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதனால் குடும்பத்தில் தொழில் நஷ்டம் எல்லாம் வந்து விடுகின்றது.

வாஸ்து சாஸ்திரம் செய்த பின் இப்படி வந்தால் இதையெல்லாம் யார் சரி செய்வது…? அந்தச் சாஸ்திரம் நமக்கு உதவி செய்யுமா…?

ஆகவே… திருத்தி அமைக்க வேண்டும் என்றால் எப்படி…?

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு அதிர்ச்சியான நிகழ்வு வந்தால் அதை மாற்றிடும் நிலையாக எப்படிச் செயல்பட வேண்டும்… என்ற நிலையில் அதிர்ச்சியை மாற்றி அமைக்கும் “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால்” இந்த நிலை வராது.

அதை விட்டு விட்டு வீட்டின் வாசல் தெற்கே இருக்கின்றது… வடக்கே இருக்கின்றது… என்று துருவத்தைப் பார்த்து எத்தனையோ சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை.

1.ஏனென்றால் நமக்குத் துருவம் (திசை) நாம் சுவாசிப்பது (வாசி – வாஸ்து) தான்
2.அதன் வழி நுகரப்படும் பொழுது அத வழிதான் இந்த வாழ்க்கையில் எல்லாமே செயல்படுத்துகின்றது.
3.அதை (சுவாசிப்பதை) எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பது தான் முக்கியம்…!

நியூமராலஜி என்று அதையும் சொல்வார்கள். கடையில் நஷ்டமாகின்றது குடும்பத்தில் சிக்கல் வருகிறது என்றால் உங்கள் பெயரில் உள்ள எழுத்தை இப்படி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்… இது இராசியாக இருக்கும் என்பார்கள்.

அவர் சொல்வதை நம்பிச் செய்தால் நான்கு நாளைக்கு நன்றாக இருக்கும். இப்போது பரவாயில்லையா…? என்று கேட்பார்கள்

அடுத்தாற்போல்
1.நண்பர்கள் யாராவது சங்கடப்பட்டு வந்தால் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
2.கடை சரியாக நடக்கவில்லை என்றால் இந்த நியூமராலஜி எங்கே செல்லும்…?

இது எல்லாம் மனிதர்கள் நமக்கு நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம் என்று தான் அர்த்தமே தவிர
1.இயற்கையின் உண்மையிலிருந்து
2.நாம் தப்ப முடியாத நிலைகள் கொண்டு தான் வாழ்கின்றோம்.

ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?

 

போகம் என்பது உடலியலில் அனுபவித்தல் என்று பொருள்படும்.

உயிரணுக்கள் உயிரின் செயலுக்கு உணர்வுகளின் வழி அனுபவிக்கும் செயல் போகம் சிற்றின்ப போகம் என்றும்… பேரின்ப போகம் என்றும் வழி அமைத்து
1.சிற்றின்ப போகம் சந்ததியின் வளர்ச்சிக்காக மட்டும் என்றும்
2.அந்த வளர்ப்புப் பெற்று விட்டால் மனிதன் பேரின்பப் போகமாக்கும் தன்மைகளை வகைப்படுத்தி
3.உணர்வுகளின் சஞ்சலம் மாற்றியமைத்துப் பெறும் பேறே பேரின்ப போகம் என்று அறிந்ததே “போகநாதர் சொன்ன போகமாகும்…!”

நாம் எடுக்கும் தியானத்தின் பலத்தால் காயகல்ப நிலைக்கு உட்படுத்தி தெய்வீக சக்திக்கு வழியமைத்து உயிரான்மா உயர்ந்த சக்தி பெறும் மார்க்கத்தைப் போகர் உணர்ந்தார்.

வானிலே சுழன்று கொண்டிருக்கும் விண்மீன்களின் அமில சக்திகளையும் நவக்கோள்கள் என்ற நவபாஷாண சக்திகளையும் நம் உயிராத்மா பெறுவதற்காக முருகன் சிலையை நிர்மாணித்தார்.

வானுலக ஆற்றலை… அந்த அமுதத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் யார் யார் எல்லாம் முருகா என்ற ஏக்கத்தில் வருகின்றார்களோ அந்த ஆன்மாக்களையும் தன்னுடைய ஈர்ப்பிலே வளர்ச்சிப்படுத்தி
1.புவியியல் தன்மையை வானியல் படுத்தி போகர் “போகமாமகரிஷி” ஆனார்.
2.பேரின்பப் போகமாகிய ஆனந்தப் பரவச பேரானந்தச் சூட்சம நிலை பெற வழி அமைத்தார்.
3.போகமாமகரிஷியின் அருளாசி வேண்டி வணங்குகின்றேன் ஈஸ்வரா…!

உயிரான்மாவின் தத்துவத்தில் உயிர் சக்தியின் தொடர்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து கீழுமாகவும் கீழிருந்து மேலுமாகவும் ஓடிடும் அமைப்பு உள்ளது.

உயிரணுக்கள் சரீரம் பெற்ற பின்பு உயிரோட்ட ஒளி சக்தி மனிதச் சரீரத்தில் மேலிருந்து கீழுமாக ஓடிடும் நிலையில் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சுழலச் செய்யும் செயலினால்
1.ஞான விழிப்பார்வை கொண்டு உற்று நோக்கினால்
2.”ஆத்ம லிங்கம்…!” என்ற ஆத்மா புலப்படும். அதுவே “சிவஸ்வரூபம்…!”

விழி படம் எடுத்து நாசியின் சுவாசம் கொண்டு எண்ணத்தின் பிடர்தலில் (மெய் ஞானிகளின் வழியில்) அறிந்திடும் தொடரில் அறியும் செயலுக்கு நாம் வளர வேண்டும்.

ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?

1.எண்ணம்… சொல்… செயல்…! மூன்றிலும் நேர்கோடாகக் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு வர வேண்டும்.
2.தீவினையான எண்ணங்களை விடுத்துப் பரிசுத்தம் என்ற நிலையில் நல் வினைகளை வளர்க்கும்
3.திடமான – வைராக்கியச் சிந்தனை கொண்டிட்டால் அகத்தின் பொருளை நிச்சயம் அறியலாம்.

அகத்தினை அறிந்திடும் அருள் வழியில் தன்னுடைய சிந்தனையை வீரியமாக்கி…
1.நற்செயலுக்கு வழி அமைத்து…
2.அதைச் சொல்லால் வெளிப்படுத்தும் அன்பிலும்
3.அந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறைப் பண்பிலும்
4.நிகழ்த்தும் செயலை எவன் ஒருவன் கைக் கொள்கின்றானோ
5.அவன் பரம்பொருள் என்ற சூட்சமத்தில் கலந்திடும் தகுதி பெறுகின்றான்.

நிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.

அதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.

ஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது
1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று
2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.
3.மூல சக்தி செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் உணர்ந்து அறிதலே சிறப்பு.
4.அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…!”

சொல் நாம சூட்சமத்தை விளக்கிடும் செயலில் செவிப்புலன் அறிவு என்பதில் அகத்தின் பொருள் செவிமடுக்கும் நிறத்தில் செயற்படுதல் மேன்மை என்றிட்டாலும் சிந்தனை வசமாகத் தானே தன்னில் அறிந்து உணர்ந்து தெளிதலே அதி மேன்மை..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி. மூலமாகவோ ஒருவர் பஸ்ஸிலே சென்று கொண்டிருக்கும்போது “இத்தகைய ஆக்சிடன்ட் ஆனார்…” என்று அதனின் உணர்வினைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

பதிவு செய்து கொண்ட பின் நாம் பஸ்ஸிலே செல்லும்போது இதனுடைய உணர்வே அதிகரிக்கிறது. அதிகரித்த உணர்வு கொண்டு நாம் டிரைவரை உற்று நோக்குகின்றோம்.

அப்படி உற்று நோக்கினோம் என்றால் அவரின் எண்ணத்தில் அதிகரித்து நாம் டிரைவரை உற்று நோக்க நமக்குத் தக்கவாறு டிரைவரின் உணர்வின் தன்மை “தன்னுடைய ஸ்டியரிங்கைத் திருப்ப வைத்துவிடும்”.

பின் நாம் எதை அஞ்சி இருந்தோமோ நாம் எண்ணியது போல அங்கே நிறைவேற்றி ஆக்சிடண்ட் ஆகும்.

அந்த ஆக்சிடண்ட் ஆகும்போது நாம் எதை எண்ணி வலுப் பெற்றோமோ அதன் நிலை கொண்டு
1.மற்றவர்களுக்கு அடி இருக்காது.
2.நாம் எதைப் படித்து அல்லது பார்த்து இப்படி ஆக்சிடென்ட் ஆனது என்று பயந்தோமோ
3.அப்பொழுது நுகர்நது கொண்ட அந்தப் பய உணர்வு அதற்குத் தக்கவாறு விபத்து ஏற்படுவதும்
4.நமக்குக் காயங்கள் ஏற்படுவதும் இருக்கும்.

குழந்தைகள் ஓன்றும் அறியாத நிலையில் இருக்கும்போது எத்தகைய ஆக்சிடண்ட் நடந்தாலும் “குழந்தைகள் தப்பி விட்டது” என்று சொல்வார்கள் இதைப் பார்க்கலாம்.

ஒரு சமயம் திண்டுக்கலில் இரயில்வே நிலையத்தில் நான் (ஞானகுரு) நின்று கொண்டிருக்கும் போது அங்கே ஒரு அம்மா ஒரு குழந்தையை எடுத்து தண்டவாளத்தைத் தாண்டுகின்றது.

கண்ணிலே பார்க்கிறேன்.

அப்போது குருவும் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) கூட இருக்கின்றார். இரண்டு பேரும் சேர்ந்து நடந்தே தான் அங்கே வருகின்றோம்.

அப்பொழுது குருநாதர் காட்டுகின்றார். இந்தப் பெண்ணின் இயல்பின் வழி இதனின் உடலில்.., “விபத்தால் இறந்த ஆன்மா உண்டு”. அது அழைத்துச் செல்வதைப் “பார்” என்றார். இதைக் கண்ணுற்றுப் பார்… என்று காண்பிக்கின்றார்.

அதாவது ஒரு அச்சத்தால் ஆக்சிடண்ட் ஆனதைப் பார்த்தபின் இது உடலிலே பட்டபின்
1.இதற்கு இரயில் வருவது தெரிகின்றது.
2.இரயிலைக் கடந்து செல்ல அதே ஈர்ப்பின் தன்மைக்குக் கொண்டு வருகின்றது (அந்த விபத்தால் இறந்த ஆன்மா).
3.கொண்டு வந்த பின் அது எவ்வாறு அடிப்பட்டதோ அதே நிலையில் கொண்டு சுக்கு நூறாக அந்த அம்மாவின் தசைகள் சிதைந்து விட்டது.
4.இது சிதைந்த நிலையில் இது உடலில் இருந்த இது நுகர்ந்த உணர்வுகள் “அதனுடைய சரீரத்தையும்…” காட்டுகின்றார் எமது குருநாதர்.

அதற்கு முன் அடிபட்ட இந்த உணர்வுகள் இதற்குள் பட்டபின் அது எப்படி அஞ்சி உடல் பதறியதோ…, ஏனென்றால் வண்டி வருவதும் தெரிகின்றது. பதட்டத்தின் விபத்தின் ஈர்ப்பு நிலைகள் எப்படி ஊடுருவிச் செல்கின்றது பார் என்றார்.

ஆனாலும் அது கையில் வைத்திருக்கும் அதன் குழந்தை தண்டவாளத்தின் நடுவிலே விழுந்து விடுகின்றது. இதை கண்ணுற்று பார்க்கச் சொன்னார்.

காரணம் இதனுடைய பிழையின் நிலைகள் இவ்வாறு இருக்கும். அதன் உணர்வின் செயல்கள் எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை உற்றுக் காண்பிக்கின்றார். ஏனென்றால் இது உங்களுக்கு
1.குருநாதர் உற்று நோக்கி
2.உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்று
3.தெளிவாக எமக்குக் காட்டியதைத்தான் உங்களிடம் அப்படியே நான் சொல்கின்றேன்.

குருநாதர் இதை நான் கண்டுணர வேண்டும் என்பதற்காக… என்னை வேக வேகமாக… அவசரமாக… அழைத்துக் கொண்டு வருகிறார்.

அதைப் பார்க்கப்படும் போது இதனுடைய உணர்வுகள் எப்படி இயங்குகிறது…? என்ற காண்பிக்கின்றார். அது எவ்வாறு அந்த உணர்வுகளை இயக்குகிறது…? என்ற நிலையும் காட்டுகின்றார்.

அப்பொழுது நான் குருநாதரிடம் கேட்டேன். அதே நிலையில் “அந்த அம்மாவைக் காக்க கூடாதா…!” என்று கேட்கிறேன்.

அப்பொழுது குருநாதர் சொல்கிறார்.
1.அதனின் உணர்வின் செயலாக அது செல்கின்றது.
2.இருப்பினும் அதனுடைய உயிரான்மா அது வெளிச் செல்கின்றது.
3.எதைச் செய்தாலும் அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் புகத்தான் செய்யும்.
4.அந்த ஆன்மா இந்த உடலில் புகுந்தது போல இன்னொரு உடலில் புகுந்து அதைச் செய்யும்.

ஆனால் அந்த உடலில் இருக்கும்போதே அந்த ஆன்மா அந்த உடலின் தன்மை “எந்த ஆன்மாவத் தனக்குள் மாற்றிக் கொள்கின்றதோ.., அதைத்தான் அது மாற்ற முடியுமே தவிர… நான் மாற்றுவேன்… நீ மாற்றுவாய்…” என்று இல்லை.

அது தாயின் கருவில் இருக்கும்போது இத்தகைய மாற்றத்தின் நிலைகள் கொண்டு
1.தாய்… தன் எண்ணத்தால் “காத்திட வேண்டும்…” என்று உயர்ந்த ஞானியின் தத்துவத்தை அது எடுத்திருந்தால்
2.அதன் உடலிலே இந்த உணர்வின் தன்மை உடலிலே பதிவாகி இருந்தால் “இன்று அதைக் காக்கும்…”

இன்று நீ அதைச் செய்ய முடியாது என்ற இந்த உண்மையையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே அப்படியே நீ இன்று செய்ய வேண்டும் என்றாலும் அது உனக்கு முன் இது காத்து இந்த உணர்வின் செயலாகப்படும் போது எதிர்மறையாகி இதைக் காத்திடும் நிலையும் வரும்.

1.அது உன்னிடம் கேட்டிருந்தாலோ
2.அல்லது என்னிடம் பேசியிருந்தாலோ
3.உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கியிருந்தாலோ
4.இந்தப் “பதிவின் தன்மை” இருந்தால் தான்… அதைக் காக்க முடியும்.

இதையெல்லாம் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

இன்று நம்மில் அதிக பேருக்கு நாம் விபத்தில் சிக்குவது ஏன்…? ஏன் அதைக் காப்பாற்ற முடியாதா… தடுக்க முடியாதா…! என்ற எண்ணங்கள் உண்டு.
1.நீங்கள் கேள்விகள் கேட்பது போன்று தான்
2.நானும் குருநாதரிடத்தில் அந்த இடத்தில் கேள்வியைக் கேட்டேன்.

விபத்தாகிறது என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உணர்வின் தன்மையைக் காட்டுகின்றீர்கள். இதை ஏன் நீங்கள் காக்கக் கூடாது…? “காக்க வேண்டும் அல்லவா…” என்று குருநாதரிடம் கேட்டேன்.

1.காப்பது நாம் அல்ல…
2.அறிந்து கொள்ளும் நிலைகள் வரும்.. தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.
3.அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் அந்த உணர்வின் தன்மை அதற்குள் “அவர்கள்… பதிவாக்கியிருக்க வேண்டும்…”
4.தாயின் நிலையிலே அது பதிவாகியிருக்க வேண்டும்.
5.வாழ்க்கையில் இது போல் ஞானிகளுடன் யாராவது நல்ல வாக்கினை கொடுத்தால் அந்த “வாக்கு” காக்கும்.

இதைத்தான் அங்கே தெளிவாகக் காட்டினார்.

அந்தக் குழந்தை அறியாத தன்மையிலிருப்பதால் இதனுடைய நிலைகளும் அதற்குத் தெரியாது. நடுத் தண்டவாளத்தில் கடந்து சென்ற பின் அந்த உணர்வின் தோற்றமும் மற்ற நிலைகளும் அதற்கு எந்த ஆபத்துமில்லை.

ஏனென்றால் அந்தக் குழந்தை அடிபட்டு இறந்த இந்தத் தாயின் கருவிலே இருக்கப்படும் போது அந்தக் குழந்தை ஞானிகளுடைய நிலைகளையும் அது கேட்டுணர்ந்த உணர்வுகளில் பதிவானது.

சிறிது யாசகத்திற்காக வேண்டி ஒரு மந்திரவாதி தான் அங்கே வீட்டிற்கு வந்திருக்கின்றான். ஆனாலும் (அவர்) மந்திரவாதி என்று சொல்ல முடியாது.

சாது என்ற நிலைகள் அவர் வரப்படும் போது இந்தத் தாயும் அப்படி எண்ணியதால் தக்க தருணத்தில் குழந்தை கருவாக இருக்கப்படும்போது அவர் யாசிக்கும் போது அதைக் கொடுத்தது.

அப்படிக் கொடுத்த உணர்வுகள் அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்கு உதவியிருக்கின்றது. ஆகவே அந்த அம்மாவின் குழந்தை காப்பாற்றப்பட்டது.

ஆனால் அதே சமயத்தில் அந்த மந்திரவாதி எந்தக் கருவின் தன்மை உருவாக்கினாரோ அந்த உணர்வின் தன்மை “தனக்கு வேண்டிய உணர்வை” (இறந்தவரின் ஆன்மாவை) அது எடுத்துக் கொண்டது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா….?

ஒரு உடலின் நஞ்சைப் பிரித்தெடுத்து உணர்வின் தன்மை சக்தி பெற்றதோ அந்தச் சக்தியின் தன்மை கொண்டு இவர் ஆசிர்வாதம் கொடுத்தது தாயிற்கு ஊழ்வினையாகின்றது. ஆனால் அவர் கொடுத்த சக்தி கருவுக்குள் இருந்து குழந்தையைக் காத்தது.

அதே சமயம் இதனை எடுத்துக் கொண்ட நிலைகள் “எதை… மந்திர ஒலிகள் கொண்டு எடுத்தாரோ… இது மந்திரவாதியைப் போய்ச் சேரும்…”

இது “அலறிய உணர்வுகள்” கொண்டு இங்கே எடுத்துத் தன் வலுவின் தன்மை கொண்டு “எவ்வாறு செய்கிறார்…” என்ற நிலையும் இதையும் விவரித்துக் காட்டினார்.

ஒரே செயலில்… “எத்தனை நிலைகள் பொருந்தியுள்ளது…” என்பதை எமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டுதான் சொல்கின்றோம். நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.

1.குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் காரத்தின் சுவையாகவும்,
2.உப்பு அதிகரித்து விட்டால் உப்பின் சுவையாகவும் மாறுவது போன்றுதான்
3.நமது வாழ்க்கையில் எதனின் உணர்வுகள் (அதனின் பதிவு) “முன்னிலையில்” அதிகரிக்கின்றதோ
4.அதனின் செயலாக நம் உணர்வின் தன்மையை மாற்றி அதனின் இயக்கமாக நம்மை இயக்கிவிடுன்றது.
5.இதிலிருந்து மனிதர்கள் ஒவ்வொருவரும்… “எவ்வாறு மீள வேண்டும்….” என்றுதான் இதைக் காட்டினார்.

முதுமையாகும் போது… “என்னை யாரும் கவனிக்கவில்லை” என்ற எண்ணத்தில் சாபமிட்டு ஆன்மா பிரிந்தால் எங்கே செல்கிறது…?

 

நாம் நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் கொண்டு எல்லோரிடத்திலும் பழகுகின்றோம். அன்பாகப் பழகும் பொழுது ஒரு நண்பனுக்கு நோய் என்ற நிலை வந்து விட்டால் அவருக்கு வேண்டிய உபகாரத்தை நாம் செய்கின்றோம்.

பற்றுடன் பாசத்துடன் நாம் அவரைக் காக்க உதவி செய்கின்றோம். உதவி செய்தாலும் அவருடைய உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. அந்த அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்கி விடுகின்றது.

அதே சமயத்தில் நோய்வாய்ப்பட்டவரோ தன் குடும்பத்தில் ஒன்றி இருப்பவர்களிடத்தில் எனக்கு மேல் வலிக்கின்றது… இங்கே வலிக்கின்றது… அப்படி இருக்கின்றது… சங்கடமாக இருக்கிறது… என்று எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்.

ஆனால்…
1.குறித்த நேரத்தில் எதிர்பார்த்தபடி அவருக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்றால்
2.நன்றாக இருக்கும் போது நான் இத்தனை செல்வங்களை இவர்களுக்கு தேடிக் கொடுத்தேனே.
3.பாவிகள் என்னை ஒருவரும் இப்போது கவனிக்கவில்லையே என்ற உணர்வு தான் வரும்.

காரணம் கவனிக்க முடியவில்லை என்ற இந்தச் சந்தர்ப்பம் இத்தகைய உணர்ச்சிகளை இவருக்குள் தூண்டுகின்றது. “பாவிகள்…” என்ற நிலையில் சாப அலைகள் அங்கே தொடர்கின்றது.

இத்தகைய சாப அலைகளாக இவர் தொடரப்படும் பொழுது அந்த குடும்பத்தில் உள்ளவர்களோ…
1.இவருக்கு நாம் இவ்வளவு தூரம் உபகாரம் செய்த பின்பும்
2.”இப்படி எல்லாம் பேசுகின்றாரே…” என்ற இந்த உணர்வுகளை அங்கே அவருக்குள் பரப்புகின்றது.

அவருக்குள் வெறுப்பின் தன்மை வருகின்றது.

வெறுப்பின் தன்மை வர வர அது இவரைக் கவனிப்பவர்களுக்குள்ளும் வளர்ந்து அவர்களிடத்தில் இருக்கும் நல்ல உணர்வுகளை அழிக்கும் தன்மையாக வருகின்றது.

எவ்வளவு நல்லது செய்தாலும் இப்படியே செய்து கொண்டிருக்கின்றார்… நாம் என்னத்தைச் செய்வது…? என்று வேதனைப்படுகின்றார்கள்.

இந்த வகையில் வேதனையான உணர்வின் அணுக்கள் இவர்கள் உடலிலும் உருவாகத் தொடங்குகின்றது. கருவாக உருவான பின் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இங்கே அவரை நினைத்து வேதனை என்ற உணர்வுகள் வருகின்றது

வேதனையான உணர்வுகள் வரப்படும் பொழுது
1.அவர் எப்படி நோயாக உருவானரோ அதே நோய் இவர்கள் உடலிலும் வளரத் தொடங்கும்
2.அந்த மரபணுக்கள் இங்கே விளையத் தொடங்கி விடுகிறது.

குடும்பத்தில் யாராவது கர்ப்பமாக இருந்தால் இதை எல்லாம் எண்ணிப் பார்த்தாலே போதும்… கூர்ந்து கேட்டால் போதும்…! இதே உணர்வுகள் கருவில் இருக்கும் குழந்தைக்குள் விளைந்து விடும்.

இந்த மரபணு அங்கே ஈர்க்கப்பட்டு அந்த குழந்தைகளுக்கும் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் சக்தி இழக்கப்படுகிறது. அவர்களுக்கும் அந்த நோய் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

தவறு செய்யவில்லை… நுகர்ந்த உணர்வுகளை அறிகின்றோம் சந்தர்ப்பம் இதை உருவாக்கி விடுகின்றது. ஆனாலும் நண்பன் என்ற நிலைகளில் நுகர்ந்து பார்க்கும் பொழுது பற்று இங்கே வந்து விடுகின்றது.

அத்தகைய பற்று வந்துவிட்டால் இந்த உடலை விட்டு அவர் செல்லும் பொழுது
1.இத்தனை செல்வத்தைத் தேடி வைத்தேன்… என்னைக் கவனிப்பார் யாரும் இல்லை என்ற சாபமும்
2.நண்பன் மீது பற்றும் வரப்படும் பொழுது அந்த உயிரான்மா நண்பனுடைய உடலுக்குள்ளேயே வந்துவிடும்.

உங்கள் நண்பர் போய்விட்டார் என்று கேள்விப்பட்டால் உடனே “ஆ…“ நேற்று கூட நான் பேசினேனே என்ற இந்த உணர்வின் வேகம் கொடுக்கப்படும் பொழுது அந்த ஆன்மா இங்கே வந்து விடுகின்றது.

இந்த உடலுக்குள் வந்தால் அதே உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு அதே நோயை இங்கேயும் மாற்றும்.

மனிதனுடைய எல்லை அது அல்ல…!

மார்க்கண்டேய தத்துவம்

மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.

இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்… பின்னும்… மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.

அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் “ஆத்ம பதிப்பு” உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.

புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்…!

உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்…!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.

பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.

1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது

என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை…”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.

எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.

விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில் சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை “நான்” என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.

விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உணமைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனித தத்துவத்திலும் மெய் ஞானத் தத்துவத்தால் மாற்ற முடியும்.

1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
(அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே)

ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது…?

உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள்.

எப்படி…?

1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் – பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.

மனிதனின் முதிர்வு நிலை அதுவே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விநாயகரை வைத்து அதை உற்று நோக்கி உணர்வினைப் பதியச் செய்து விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானியர்கள்.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஓங்கி எண்ணத்தைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று அதைத் தனக்குள் கவர்ந்து தீமையை அகற்றும்படி செய்து உணர்த்தினார் அகஸ்தியர்.

எதைக் கண்டுணர்ந்து அன்று அகஸ்தியன் விண்ணுலகம் சென்றானோ அதைத் தன் இன மக்களுக்கும் பெற வேண்டும் என்று அவ்வாறு செய்தான்.

அதை யாரும் இப்போது செய்யவில்லை.

அதை இப்பொழுது சொன்னோம் என்றால்
1.“தேங்காய் பழம் உடைக்காமல்… எப்படிச் செய்வது…?
2.அரச மரத்தைச் சுற்றாமல்… எப்படி அந்தச் சாமியிடம் வரம் வாங்குவது? என்று கேட்பார்கள்.
3.எங்கள் மூதாதையர்கள் இறந்து விட்டால் இறந்த பிற்பாடு மோட்ச தீபம் போட்டு அங்கே அர்ச்சனை செய்யாவிட்டால் மோட்சத்திற்கு எப்படிப் போவார்கள்….?

இப்படி இந்த ஐதீகத்திலும் சாங்கியத்திலும் தான் நாம் தொடர்ந்து கொண்டுள்ளோம். நம்முடைய வாழ்க்கையே சாங்கிய சாஸ்திரங்களில் காட்டியபடிதான் போய்க் கொண்டிருக்கின்றது.

1.சாங்கிய சாஸ்திரம் என்பது வேறு
2.ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிகள் வேறு.

ஆக ஒவ்வொரு குணங்களுக்கும் விதி அமைத்து இதை முடக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு மதி கொண்டு விதியை மாற்றும் மார்க்கங்களைக் காட்டினார்கள் மகரிஷிகள்.

நம் விநாயகர் தத்துவமே ஞானவான் என்று விநாயகரைச் சொல்வார்கள். அதாவது அந்த மதி கொண்டு மனிதன் வாழ்வில் வந்த இருளைப் போக்கிய நிலைகள் பெற்றவர்கள் மகரிஷிகள்.

ஒன்றைக் கூர்மையாக உற்றுப் பார்த்தால் கண்ணின் கருவிழி நம் உடலிலுள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற நிலைகள் பதிவாக்குகின்றது. அதன் கதியில் நமக்குள் விளையப்படும் போது அது விதியாக மாறுகின்றது.

ஓர் வித்தினை நாம் ஊன்றினால் அது மரமாக வளரும் போது அதன் “கதியிலே” வளருகின்றது. வித்தின் தன்மை பெறும்போது “விதியாக” மாறி விடுகின்றது. தன் இனச் செடியை அது “விருத்தியாக்கச்” செய்து விடுகின்றது.

இதைப்போன்று தான் மனிதன் நாம் தீமையான சொற்றொடர்களைக் கேட்டுணர்ந்தால்
1.ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.
2.பின் அந்தத் தீமைகளைப் பற்றிய நினைவுகள் கூடிக் கூடி
3.அதனின் கதியிலே மனிதன் வாழ்க்கை கூடிவிடுகின்றது.
4.ஆக அந்தத் தீமையை விளைவிக்கும் அந்த உணர்வின் நிலையாக விளையப்படும் போது “விதியாக..” மாறி விடுகின்றது.
5.அந்த விதியிலிருந்து மீள முடியாது.., என்ற நிலை சாங்கிய சாஸ்திர விதிகளில் காட்டப்பட்டிருக்கின்றது.
6.விதி வழி நடக்கும் என்கிறார்கள்… அதை மதி கொண்டு மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.

எந்த மதி கொண்டு… விதியை மாற்ற வேண்டும்….!

நம் உயிர் நெருப்பு. அருள் மகரிஷிகளின் அருளாற்றலை உயிர் வழி சுவாசித்து உடலில் உள்ள இரத்தங்களிலும் அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களிலும் பாய்ச்சுதல் வேண்டும்.

பின் நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சுதல் வேண்டும்.

ஆக ஊழ்வினையாகப் பதிவாகி அதனால் விளைந்த அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை வலுப் பெறச் செய்யும் பொழுது அந்த விதியின் கதி மாறி நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் மதியாகி “ஒளியின் சுடராக” மாறுகின்றது.

1.நம் உயிரான நிலைகள் கொண்டு
2.அருள் ஞான உணர்வை நம் உடலுக்குள் செலுத்தி
3.தீமையைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்” என்பது தான் மகரிஷிகள் கண்டுணர்ந்த சாஸ்திரத்தின் உண்மைகள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பயன்படுத்தும் முறை

 

இந்த மனிதனின் வாழ்க்கையில் அன்பும் பரிவும் பாசமும் கொண்டு வாழும் நிலையில் பிறருடைய துயர்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு நாம் உதவி செய்கிறோம்.

உதவி செய்தாலும் அவருடைய துயரமான உணர்வுகளை நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுக்களாக உடலுக்குள் நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

மீண்டும் மீண்டும் அவர்களுடைய துயர்களை எண்ணும் பொழுது அந்த அணுக்கள் நமக்குள் பெருகி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை நம்மை அறியாமலேயே மடியச் செய்து விடுகின்றது.
1.அப்போது நல்ல குணங்களை நாம் காக்க முடியாது போய் விடுகின்றது.
2.உயிரான ஈசனை நாம் மறந்து விடுகின்றோம்
3.மனித உடலில் இருந்து வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்
4.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளில் இருந்து விடுபடத் தெரியவில்லை.

அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நிலைகளிலும் நீங்கள் தெளிந்து தெரிந்து அந்த அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத் தான் இப்போது உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

ஆக… ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வதைத்தான் “தொட்டுக் காட்டுவது…” என்று சொல்வது.

1.உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் அது எப்படி இயங்குகின்றது…? தீமைகள் விளைவது எப்படி…? என்ற நிலையில்
2.தீமையிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை யாம் (ஞானகுரு) உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது
3.இந்த இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்

நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. இந்த அணுக்கள் உடலில் பெருகிவிட்டால் இதற்கு முன்னாடி உடலில் உருவான தீமை என்ற உணர்வின் அணுக்களை வளராது இது தடுக்கும்.

நல்ல பண்பு கொண்ட மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் சந்தர்ப்பத்தால் பிறருடைய வேதனையைக் கவர்ந்து கொண்டால் அது வலிமை பெற்று விடுகிறது.

வேதனைப்படுகின்றான் வேதனைப்படுகின்றான் என்று மீண்டும் எண்ணும் பொழுது அந்த வேதனை உணர்வே நமக்குள் இரையாகி வேதனைப்படச் செய்யும் அணுக்களாக வளர்க்கப்படும் பொழுது நல்ல அணுக்கள் வாழ முடியாதபடி கடும் நோயாக வந்து விடுகின்றது.

நோய் வளர்ந்து விட்டால் அந்த நோயை நீக்கும் உபாயம் வேண்டுமல்லவா…!

1.வேதனையால் உருவான நோயின் அணுக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து கலந்து விட்டால்
3.அதே உணர்வு ஓம் என்று பிரணவமாகி இந்த உணர்வின் கருவாக அதை மாற்றுகின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோய்வாய்ப்பட்டவர் உடலில் படர வேண்டும் அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

நமக்குள் அதை வளர்த்துக் கொண்ட பின் அந்த அணுவின் தன்மையாக விளைகிறது. விளைந்த பின் நோயுற்றவரிடம் இதை வாக்காகச் (சொல்லாக) சொல்லி அவருக்குள்ளும் இது விளையப்படும் பொழுது
1.நம்முடைய பார்வையும் நம்முடைய சொல்லும் அவருடைய நோயை நீக்கக்கூடிய தன்மையாக வரும்
2.நமக்குள் நோய் வராது தடுக்கும் சக்தியும் பெறுகின்றோம்.

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம்மை மாற்றுகின்றது. அதை மாற்ற… கொடுத்த சக்தியைப் பயன்படுத்திப் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற நிலையில் இந்த ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்தச் சக்தியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

மனிதனின் நிலைகளில் உயர்ந்தவன் அகஸ்தியன் அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நமக்குள் சேர்த்துக் கொண்டால் தீமைகளை நீக்கி நோய்களை நீக்கி அது நமது ஆன்மாவைத் தூய்மை ஆக்குகின்றது.
1.அந்தத் தூய்மையான உணர்வுகள் வளர வளரத் துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் வருகின்றது
2.இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வு கொண்டு
3.உயிர் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து… ஆறாவது அறிவு கொண்ட நிலையை ஏழாவது நிலையாக ஒளியாகப் பெறச் செய்யும்.

“நான்…” என்னும் பலனை நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?

சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

சுவாசம் எடுத்துவிடுவதும்… கண் இமை மூடித் திறப்பதும்… செவி ஒலி கேட்பதும்… சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்… தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்கவேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக்கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனை கோடிச் செல்வங்கள் இருந்தாலும் அது நம்மை மகிழச் செய்கிறதா…! என்றால் இல்லை.

அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் அது ஒளி பெறும் நிலையிலிருந்து நம்மை என்றென்றும் பிறளாது அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து என்றும் நம்மைக் காத்தருளும்.

பிற தீமைகளில் நாம் சிக்காது உயிருடன் ஒன்றி பிறவியில்லா நிலைகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும்.

ஆகவே அந்த அருள் ஞானியின் உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களில் விளைவிப்பதற்குத்தான் இந்த உபதேசம். மகரிஷியின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பெறுவதற்குண்டான தகுதியை உருவாக்குவதற்குத்தான் இந்த உபதேசம்.

1.ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது
2.அதே போல் தனி மனிதன் “ஒருவரால்” அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தைப் பெறுவதற்கு முடியாது.

அதைப் பெறுவதற்குண்டான தகுதியை அவர்களைப் பற்றிச் சொல்லி அந்தப் பதிவுகளை உங்களுக்குள் ஏற்படுத்தி உங்கள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒருங்கிணைக்கச் செய்கின்றோம்.

1.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்களுக்குச் சமமான நிலைகளில் வலுப்பெறுகின்றீர்கள்.
3.அவ்வாறு வலுப் பெறச்செய்து மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து… கவர்ந்து… எடுக்க வேண்டும்.
4.நாம் கவரப்படும்போது நமக்கு முன் அந்த அலைகள் படர்கின்றது.
5.அப்பொழுது நம் ஆன்மாவில் இது கலக்கப்பட்டு தீமைகளைப் பிளக்கின்றது,
6.அவ்வாறு தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை நுகர்ந்து உள் செல்லச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம்.

என்னமோ… சாமி லேசாகச் சொல்கிறார்… என்று நீங்கள் எண்ண வேண்டாம்.

1.குண்டலினியைத் தட்டி எழுப்பி…
2.மண்டலத்தையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்…
3.தொட்டுக் காண்பித்தார்கள்… பொட்டிலே வைத்துக் காண்பித்தார்கள்…
4.ஐயோ… “இவர் ஒன்றுமே அப்படிச் செய்யவில்லையே…” என்று சொல்வதற்கு இல்லை.

உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வை “அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக மாற்றத்தான்” என்னால் என் குரு காட்டிய நிலையில் முடியும்.

தொட்டுக் காட்டியோ எல்லை அறியாது எல்லை இல்லாத நிலைகள் போகும் மார்க்கங்களையோ உங்களுக்குள் சொல்லவில்லை.

உதாரணமாக… சிறு குழந்தையாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நிச்சயம் விளைய வைக்க முடியும்.

உங்களுக்குள் அருள் ஞானியின் உணர்வை ஆழப் பதியச் செய்து அதனின் அருள் துணை கொண்டு அனைவரும் ஏங்கி அந்த உணர்வின் சத்தைக் கவரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

1.ஆழ் சக்தியுடைய அந்த மகரிஷிகளின் உணர்வுகள்
2.எட்டாத தூரத்தில் இருக்கும் அவர்கள் உணர்வுடன்
3.உங்களை ஒன்றச் செய்து கொண்டிருக்கின்றோம்.

அவர்களுடன் ஒன்றும் நிலை வரும் பொழுது நம் ஆன்மாவில் கலந்த தீமைகளைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் உணர்வாக அது விளையச் செய்யும். நமக்குள் அதை வலுப்பெறச் செய்யும்.

இந்த வலுவின் துணை கொண்டு தான் உடலை விட்டு அகன்று சென்ற நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்ய முடியும்.

அவர்கள் முன் சென்றால் இன்னோரு உடல் பெறும் உணர்வுகள் அங்கே கருக்கப்படுகின்றது, கருகியபின் அது ஒளியின் உணர்வாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளியின் சரீரம் பெறுகின்றது.

ஏனென்றால் அவரின் உணர்வின் தன்மை பெற்றது தான் நமது உடல். அவர்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் நாம் உந்திச் செலுத்தும் பொழுது அவர்களும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறார்கள்.

அதே சமயம் அவர்கள் மூலம் விண்ணின் ஆற்றலை எளிதில் நாம் கவர முடிகிறது. அதன் வழியில் நம் வாழ்க்கையில் வரும் தீமையைத் துடைக்க முடிகின்றது.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகள் நமக்குள்ளும் இருள் நீக்கும் அந்த உணர்வாக விளைகின்றது.
1.அதைப் பற்றுடன் பற்றும்போது
2.நமது எல்லையும் “சப்தரிஷி மண்டலமாக”அமையும்.

இறந்தபின் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் (ஆவி) அடுத்த உடலில் எப்படிச் சாடுகிறது…?

 

நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் இது நடந்த நிகழ்ச்சி. ஒரு ஊரில் இரண்டு பேரில் ஒருவருக்கொருவர் பகைமையில் அடுத்தவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகின்றார்கள்.

எதிரி என்ற நிலையில் இருக்கப்படும் பொழுது இறந்தவருக்கோ தன்னிடம் வேலை செய்யும் ஒரு சாதாரண கூலி ஆளிடம் பேசிப் பழக்கம் இருந்திருக்கின்றது. இறந்த பின் அவருடைய ஆவி அந்த கூலி ஆளின் உடலுக்குள் சென்று விட்டது

அந்த உடலுக்குள் சென்ற பின் “ஐய்யய்யோ… என்னை வெட்டிப் போட்டு விட்டார்களே… வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்களே…! என்று சொல்லத் தொடங்குகின்றார்.

ஆனால் இப்படிப் பேச ஆரம்பித்ததும் “இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது…” என்று ஊர்க்காரர்கள் எல்லாம் சொல்கின்றார்கள். அந்த ஆளை என்னிடம் அழைத்து வருகின்றார்கள்.

என்னை வெட்டி விட்டார்கள்… வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்கள்… என் துணி எல்லாம் இங்கே இருக்கின்றது… அரிவாள் எல்லாம் இங்கே இருக்கின்றது… புதைத்தவர்கள் இன்னார்…! என்று அந்தப் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றது இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று சொல்கின்றது.

அந்த நேரத்திலே போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்த்தாற் போல் தான் நான் சைக்கிள் தொழில் செய்து கொண்டிருக்கிறேன் அங்கே இருக்கக்கூடிய சப் இன்ஸ்பெக்டர் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

காரணம் அவருக்கு ஏற்கனவே இங்கே என்னிடம் பழக்கம் இருந்தது.

அவருடைய கொழுந்தியாளுக்கு ஒரு சிக்கல் இருந்தது. அவர்கள் கேரளாவில் இருப்பவர்கள். அந்தப் பெண்ணிற்கு அங்கே செய்வினை செய்து விட்டார்கள்.

சேலை கட்டினால் சேலை கிழிந்து விடும் வெளியிலே வர முடியாது இரவில் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்து விடும்.

ஆரம்பத்தில் இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு அந்தச் சப் இன்ஸ்பெக்டர் என்னை அது விஷயமாகச் சந்தித்தார். என்னை அவர்கள் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் பெண்ணுக்கு இப்படி இருக்கின்றது… என்ன செய்ய வேண்டும்…? என்று கேட்டார்.

மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்து இருக்கின்றார்கள். சுருட்டையும் மதுவையும் வைத்திருப்பார்கள். ஒரு ரூமில் கொண்டு போய் அந்தப் பதார்த்தங்களை வையுங்கள் என்று சொல்லி வைக்கச் சொன்னேன்.

சொன்ன மாதிரி வைத்தவுடன் அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்று இந்தப் பெண்ணை எதுவும் செய்யவில்லை. சேலை எல்லாம் அப்படியே இருக்கின்றது… முகத்தில் காயமும் இல்லை.

சுயநினைவு வந்த பின் இங்கே என்னிடம் அழைத்து வந்தார்கள். அந்த அம்மாவிடம் சில விவரங்களைச் சொல்லி இந்த மாதிரிச் செய் உனக்கு நன்றாகி விடும்… பாதுகாப்பாக இருக்கும்…! என்று சொன்னேன் செய்தது

அதன் பிறகு அது நன்றாக ஆனது. செய்வினை எதுவும் பாதிக்கவில்லை. அதற்குப் பின் சப் இன்ஸ்பெக்டர் இங்கே வந்தார் என்றால் உள்ளே சிறிது நேரம் உட்கார்ந்து நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படி அவர் இருக்கும் நேரத்தில் இந்த ஆள் வந்து இப்படிப் புலம்ப ஆரம்பிக்கின்றான்.

என்னை வெட்டி விட்டார்கள்… புதைத்து விட்டார்கள்…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவர் உடனே என்ன…! ஏது…? என்று கவனித்துக் கொண்டே சென்று அது நிஜமா… பொய்யா…? என்று அது எத்தனாவது வாழை மரம்…? என்று விசாரித்து அங்கே சென்று தோண்டிப் பார்க்கின்றார்கள்.

பார்த்தால் அங்கே எல்லாமே இருக்கின்றது.

துணி எங்கே இருக்கிறது என்று சொன்னது…? கொன்ற ஆயுதங்கள் எங்கே இருக்கிறது…? என்று சொன்னது. எல்லாம் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

எடுத்த பின் மற்றவர்கள் தலைமறைவாகப் போய்விட்டார்கள்…
1.கடைசியில் என்னைக் (ஞானகுரு) கொலை செய்ய வந்து விட்டார்கள்
2.இந்த ஆள்தான் எல்லாம் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்று என்னைத் தேடி வருகின்றனர்.

பின் அவர்களை அரெஸ்ட் செய்து விட்டார்கள். மரண தண்டனை கிடைத்தது.

இருந்தாலும்…
1.சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லப்படும் பொழுது நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வருகின்றது…? என்ற வகையில்
2.அப்பொழுது குருநாதர் சில உணர்வுகளை உணர்த்துகின்றார்

அவர்கள் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

1.ஆபத்து வந்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இப்படிச் செய்…! என்று சொன்னார்
2.அதனால் அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கின்றது என்ற நிலையை
1.ஒரு ஆன்மா எப்படி வெளியில் செல்கின்றது
2.இன்னொரு உடலுக்குள் சென்ற பின் என்ன செய்கின்றது
3.இதையெல்லாம் அறிந்து கொள்வதற்குத் தான் மூன்று லட்சம் பேரைப் பார்த்தது.

எல்லாம் அனுபவபூர்வமாகக் கண்ட நிலைகள்.

மூலமும் இவனே… மூலக் காரணமும் இவனே…!

 

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான்கு நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நண்பர் என்று பழகிப் பாசத்துடன் ஒன்றிவிடுகின்றோம். அதே சமயத்தில் ஒரு நண்பருக்கு அவர் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடுகின்றது. அவர் மீது குடும்பத்தில் மிகுந்த வெறுப்பின் தன்மை அடைகின்றார்கள்.

அதைத் தாங்காது குடும்பத்தின் மேல் வெறுப்பு வந்தபின் “என்ன வாழ்க்கை…!” என்று அந்த நண்பர் மருந்தைக் குடித்துவிடுகிறார். தற்கொலை செய்து கொள்கிறார்.

அப்பொழுது அந்தக் குடும்பத்தின் மேல் வெறுப்பும் அதே சமயத்தில் சாப உணர்வுகளும் அங்கே வரும்.

என் குடும்பத்தில் இப்படிச் செய்தார்களே.., “அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…!” என்ற சாப அலைகளை அங்கே பதிவு செய்கின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்திலுள்ளோர் மீது பதிவாகி விடுகின்றது. இறந்த பின் அந்த உடலில் எந்த நிலைகள் பதிந்ததோ அந்த வீட்டிலும் பதிவாகின்றது.

அவரைச் சார்ந்தவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது. அதன் உடலில் எவ்வளவு கெடுதல் செய்ததோ அதுவெல்லாம் இங்கே வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில் நண்பர் என்ற நிலைகளில் பாசமாகப் பழகி இருந்தார் அல்லவா. மருந்தைக் குடிக்கும் பொழுது
1.“நண்பனே…, நாம் இருவரும் எவ்வளவு பழகியிருந்தோம்…! இந்த மாதிரி ஆகிவிட்டதே…
2.நான் உன்னை எப்படி வந்து பார்ப்பது?” என்றே தெரியவில்லை.
3.உனக்குத் தெரியாமல் நான் இப்படிச் செய்துவிட்டேன் என்ற எண்ணத்தை அதிகமாகச் சேர்த்து விட்டால் இந்த ஆன்மா எங்கே போகும்…?

எந்த நண்பன் மேல் பாசமாக இவ்வாறு எண்ணினாரோ அந்த நண்பனின் உடலுக்குள் வரும்.

எப்படி…? ஏன்…?

தற்கொலை செய்த நண்பரைப் பற்றி இவர் கேள்விப்படுவார். கேள்விப்பட்டவுடன் நண்பனைப் பற்றிப் பாசத்தால் எண்ணுவார்.

“அடடா… நேற்று வரையிலும் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தானே… அதற்குள் இப்படிப் போய்விட்டானா…!” என்று இந்த எண்ணத்தை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இறந்த ஆன்மா இங்கே வந்துவிடும்.

பாசத்தால் எண்ணும்பொழுது இரண்டு பேரின் எண்ணங்களும் ஒன்றும்போது ஆன்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

தற்கொலை செய்து கொண்ட ஆன்மா அந்தக் குடும்பத்தில் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்ததோ இவை அனைத்தும் நண்பர் உடலுக்குள் ஆகி… “இல்லாத கஷ்டங்களை எல்லாம்” அவருக்கு உண்டாக்கும்.

இவரும் தவறு செய்யவில்லை… அவர்களும் தவறு செய்யவில்லை. ஆனால் அந்தக் குடும்பத்தில் இந்தச் சாப அலைகள் அதன் தொடர்பு கொண்டு இது வளர்ந்து கொண்டே இருக்கும்.

இது ஒவ்வொரு குடும்பத்திலும் இது இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வகையிலும் இதனுடைய தொடர்பு இல்லாது இருக்காது.

இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்…?

யாராக இருந்தாலும் சரி… “உடலை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்…” என்று கேள்விப்பட்டாலே உடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து எங்களுடன் நண்பராகப் பழகிய உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

1.உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.உயிருடன் ஒன்றிய “ஒளியின் சரீரம் பெற வேண்டும்”என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இதைப் போன்று குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானித்து அந்த உயிரான்மாவை எளிதில் விண் செலுத்தலாம்.

உயிரான “ஈசன்…” நமக்குள் இருக்கின்றான் என்ற பயம் நமக்கு வர வேண்டும்

 

என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன் உன்னிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணிப் பாடலைப் பாடுகின்றோம்.

அதனின் உட்பொருளே…
1.“உயிரான ஈசன்” நீ எப்படி ஒளியாக இருந்து எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ…
2.இருளை அகற்றி நீ எப்படி என்றுமே ஒளியாக இருக்கின்றாயோ…
3.அதன் உணர்வாக என்னை நீ இயக்குதல் வேண்டும்.
4.அதன் வழியே நான் வாழ வேண்டும்…
5.பொருளறிந்து செயல்படும் தன்மை நான் பெற வேண்டும்
6.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி எனக்கு வேண்டும்.

ஒளி பட்டால் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப்போல எனக்குள் இருளை நீக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும். ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலான சிவம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

உயிரால் இயக்கப்பட்ட நிலையும்… உணர்வால் என்னை உருவாக்கிய நிலையும்… மகிழ்ச்சி என்ற உணர்வின் சக்தியை நான் எண்ணும் பொழுது என் இசையில் நீ இயக்குகின்றாய்
1.என் நினைவில் நீ எப்பொழுதும் வர வேண்டும்.
2.”நீ இருக்கின்றாய்…” என்ற நிலையில் அந்தப் பயம் எனக்குள் வரவேண்டும்.
3.தவறு என்ற உணர்வு எனக்குள் வராது தடுத்து நிறுத்தும் அந்த ஆற்றல் பெற வேண்டும் ஈஸ்வரா.

என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…! என்று உயிரே வேண்டுகிறோம்.

ஆனாலும்… அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றோம்.
1.அந்த ஆசையினால் நமக்குள் தீமை என்ற உணர்வுகள் வந்து சேர்ந்து விடுகின்றது.
2.தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகிறோம்
3.இந்த உடலின் ஆசைதான் நமக்குள் வருகின்றது
4.”உயிரான ஈசன் இருக்கின்றான்…” என்ற நிலை மறந்துவிடுகின்றது.

வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் கடும் வேதனை உருவாகின்றது. அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலான கோவிலில் “அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர…” ஈசனான நிலையை நாம் வணங்க மறுக்கின்றோம். அவன் அறிவை நாம் தெளிவாக்கும் நிலையையும் இழந்து விடுகின்றோம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்கு நாம் செல்லாதபடி அருள் ஒளி பெற்று இருளை அகற்றிடும் சக்தி பெற்று… உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும். இருளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

உயிர் எவ்வாறோ… நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வுகள் அனைத்தும் ஒளிமயமாக மாறுதல் வேண்டும்

தீமையைப் பிளக்கும் நரசிம்மா என்ற நிலையில் வரும் தீமைகளை மாற்றி விட்டால் கல்கி. இந்த உயிர் ஒளியாக உள்ளது. அதைப் போல் நம் உணர்வின் தன்மை பத்தாவது நிலை ஆகும் போது தான் கல்கி.
1.பூமியின் ஈர்ப்பை விடுத்து விண்ணுலகம் செல்கிறது…
2.எதுவுமே தன்னை ஈர்த்து விடாது பறந்து செல்கின்றது.
3.குதிரை மேல் பறந்து சென்று வாளை வீசித் தப்பிச் செல்வதாக உருவம் அமைத்து
4.அருவ நிலையில் நாம் உயர்ந்த சக்திகளை எப்படிப் பெற வேண்டும்…? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

வான் வீதியில் தோன்றிய “உயிர்” மனிதனான பின் இனி பிறவி இல்லா நிலை அடைவது தான் கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் “துருவ நட்சத்திரம்…”

கண்களுக்கு நாம் கூட்ட வேண்டிய உயர்ந்த சக்திகள்

 

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே நம் ஆத்மாவில்
3.நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய ஐந்தாம் நிலையான ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…!” (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த ஆறாம் நிலையில் அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.ஏழாம் நிலையான படைப்பின் படைப்பாக்கும் செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த உயிரும் ஆத்மாவும் இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (நம் விழிப்பு நிலை) இந்த கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான நம் உயிர் ஈர்ப்பது போல் அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் ஆன்மாவின் விழிப்பு என்ற அந்தக் கண்கள் வழியாக நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும். அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முருகனுக்காக வேண்டி முருகனை எண்ணிக் காவடிகளை எடுத்து வருவார்கள்.

மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டு மந்திர ஒலிகளை எழுப்பிய பின் ஆற்று மணலை எடுத்துக் கொண்டு போய் சட்டியில் போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.

30 நாள் அல்லது ஒரு மண்டலம் விரதம் இருந்து பல ஆயிரம் பேர் முன் வைத்துக் காவடியை எடுத்து வருவார்கள். அந்த 48 நாளும் மந்திர ஒலிகளை மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள்.

108, 1008 அல்லது ஒரு இலட்சமோ மந்திர ஒலிகளை எழுப்பி அந்த உணர்வின் தன்மை இவர்கள் ஏங்கி எடுக்கும் பொழுது அந்தக் காலம் உணர்வின் நினைவாற்றல் பருகப்படும் பொழுது எந்தக் கை கொண்டு இவர் தொட்டாரோ அந்த மணல் சர்க்கரையாக மாறும்.

இது நமக்குச் சாட்சியாகின்றது.

முருகனுக்காகக் காவடி எடுத்து வந்தேன் நான் இங்கே போய்த் திறந்து பார்த்தேன். அங்கே போய்த் திறந்து பார்த்தேன். இல்லை.

இரவும் பகலும் இங்கும் அங்கும் சுற்றுவார்கள். அப்புறம் கடைசியில் பார்த்தால் சர்க்கரையாக வரும்.

முருகனின் அருள் கிடைத்தது… சர்க்கரை கொடுத்தான்…! என்று சொல்வார்கள். பார்த்தபின் பக்தியின் நிலைகள் கொண்டு அதற்காக வேண்டி அதிலே சாய்கின்றோம்.

1.சர்க்கரையை விளையவைத்தான் என்ற
2.இந்த மந்திர ஒலிக்குத்தான் நாம் சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிக் கொண்டோமே தவிர
3.நம் உணர்வின் தன்மை இனிப்பாக வரும் சாஸ்திரங்கள் இல்லை.

அதே போல நான் (ஞானகுரு) பழனியில் இருக்கும் காலத்தில் மச்சக் காவடி என்று எடுத்து வருவார்கள். மச்சக்காவடி என்றால் மீனை அறுத்து அதில் மஞ்சள் பொடி போட்டு மற்ற பொருள்களையும் போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.

பத்துப் பதினைந்து நாள்கள் சுற்றுவார்கள். நானும் கூடப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கின்றேன். இந்தக் காவடி எடுத்துச் சுற்றும் பொழுதெல்லாம் சில இடங்களில் வரவில்லை.

அப்புறம் மீண்டும் மீண்டும் மீண்டும் அந்த மந்திரங்களைச் சொல்லி அதை எடுத்து வந்தபின் சரியான நிலையில் வந்தபின் அந்த மீன் உருப்படியாகவே (உயிருடன்) வருகின்றது.

அந்த மீன்களை வையாபுரிக் குளத்தில் கொண்டு விடுகின்றார்கள். கோவிலைச் சுற்றியுள்ள ஒரு கிணற்றிலும் அந்த மீன்களை விடுகின்றார்கள்.

இதைப் போன்று சேவல் காவடி என்று சேவலைச் சமைத்து மறுபடியும் வந்தபின் இதைப் போல சேவலும் உருப்படியாக வந்ததைப் பார்த்துள்ளேன்.

ஏனென்றால் இந்த மந்திர ஒலிகளைக் கொண்டு சில நிலைகளைச் செய்கிறார்கள். கந்த புராணத்தில் எதைச் சொல்லியிருக்கின்றதோ அதற்குள் புராண காவியமாக மாற்றியமைத்து வைத்துள்ளார்கள்.

1.மந்திரங்களை ஜெபிக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் அதற்குள் படப்பட்டு
2.இது மீண்டும் சரியான பருவம் வரும் பொழுது இணைந்துவிடும்.
3.இதைக் கரையான் மந்திரம் என்பார்கள்,

ஆனால் பக்தி மார்க்கங்களில் இதையெல்லாம் “முருகன் செயல்” என்று நிலைக்கு வரும் பொழுது
1.அந்த முருகனை வணங்கினால்
2.சாங்கியங்களைச் செய்தால் நமக்கு நல்லது என்ற நிலையில் தான் இன்று நாம் ஆலயங்களுக்குச் செல்கின்றோம்.

ஆனால் அந்த ஞானிகள் சொன்னது பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் அறிவாக வளர்ந்து வந்த மனிதனின் “ஆறாவது அறிவைத் தான்” முருகனாகக் காட்டினார்கள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை உனக்குள் எடுத்து நஞ்சினை வென்று ஒளியின் சுடராக “கார்த்திகேயா” என்று பேரொளியாக மாற வேண்டும்.

“அழியும் சொத்தைச் சேமிப்பதற்காக…” நாம் மன உறுதியைக் கொண்டு வர வேண்டியதில்லை

 

அகஸ்தியன் நஞ்சினை வென்றான் இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான். அவனில் விளைந்த உணர்வு இந்தப் பூமியில் படர்ந்துள்ளது.

அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வினைப் பெற நாம் ஏங்கித் தியானிப்போம். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்குங்கள்.

கண்களை மூடி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உயிரான ஈசனிடம் “இந்த உணர்வை இயக்குங்கள்… அதை நுகருங்கள்…”
2.நுகர்ந்த உணர்வை… அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்தியை உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உயிர் உருவாக்கும்
3.ஓ… என்று ஜீவ அணுவாக உருவாக்கும் கருத்தன்மை அடையச் செய்யுங்கள்.

உங்கள் உடலுக்குள் அந்த அகஸ்தியனின் அணுக்கருக்கள் பெருகும். அணுக்களாக வளர்ச்சி பெற்ற பின் அகஸ்தியன் உணர்வுகளை உட்கொள்ளும் அந்த உணர்ச்சிகளை உந்தும்.

அப்போது அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகள் நீங்குகிறது… நஞ்சினை நீக்கி… இருளை அகற்றி… மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெறும் தகுதி நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அந்தப் பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள்
2.பேரொளி பெரும் கரு உலகமாக… உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
3.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைப் புருவ மத்தியிலே உணரலாம்.

ஒரு நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது… அந்த உணர்வுகள் “மின் கற்றைகளாக… மின்னல்களாக எப்படி வெளி வருகின்றதோ…” இதைப் போன்று உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி இருளினை அகற்றி உடலுக்குள் ஒளியின் நிலையாக உருவாகும்.

1.உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுக்கும்
2.இருளை அகற்றும் அருள் ஒளி என்ற உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே பெருகும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எடுக்க இப்படிப் பழகிக் கொள்ளுங்கள்.

“டக்… என்று அந்த ஞாபகம் வரும்… நோய் வராது தடுக்க முடியும்

இதற்கு முன்னாடி நோய்கள் இருந்தாலும் அடுத்தடுத்து வேதனை வரும் பொழுது இதைக் கலந்து எடுத்துக் கொண்டே வாருங்கள்.
1.நல்ல உணர்வுகளுக்குள் மற்ற கஷ்டம் என்ற உணர்வுகளைக் கேட்டறிந்த பின் அந்த நல்ல உணர்வை அது எப்படிக் கெடுக்கின்றதோ
2.அதே போன்று தீய உணர்வுகளை அழித்த அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாககச் சேர்த்துக் கொண்டு வாருங்கள்.

அந்த உணர்வுகள் மாறும். ஆகவே துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வரவேண்டும்… வாழ்க்கையில் வரும் நிலைகளை பற்றதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

செவிகளில் கேட்கின்றீர்கள்… கூர்ந்து கவனிக்கின்றீர்கள்… நுகர்கின்றீர்கள் இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலில் அணுக் கருவாக மாறுகின்றது கருவானால் உங்களுக்குள் அது விளையத் தொடங்கும்.

உதாரணமாக…
1.கோழி அடைகாக்கத் தவறினால் அந்த முட்டை குஞ்சாகப் பொரிக்காது.
2.அது போல் தீமையான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த எண்ணத்தை அங்கே இணைத்தால்
4.அந்த பேரருள் என்ற உணர்வின் தன்மை அணுத் தன்மையாக உங்களுக்குள் விளையும்
5.தீமைகள் விளையாது தடுக்கப்படுகிறது… உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும்.

தொடர்ந்து இதைச் செயல்படுத்துதல் வேண்டும். மனிதனான பின் பிறவி இல்லா நிலை தான் நாம் அடைதல் வேண்டும்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? மின்னலைப் போல மறைவதைப் பாராய்…! ஏன்று குருநாதர் பாடியது போன்று
1.செல்வத்தை எவ்வளவு தேடிச் சென்றாலும்… அதன் வழி சம்பாரித்து வைத்திருந்தாலும்…
2.அந்தச் சொத்தைக் குழந்தைகள் சீராக அமைக்கின்றனரா…? பாதுகாக்க முடியவில்லை.
3.எத்தனையோ அரசுகளை அரசர்கள் ஆண்டார்கள்… சாம்ராஜ்யத்தை ஆண்ட அந்த அரசர்கள் இருக்கின்றார்களா…? அவருடைய சொத்துக்கள் இருக்கின்றதா… “இல்லை…”
4.இல்லாததற்கு நாம் ஏன் இந்த மன உறுதியைக் கொண்டு வர வேண்டும்…?
5.என்றும் நிலையானதாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

எப்படி அணுவாகிச் சூரியன் ஆனதோ பிரபஞ்சமான பின் உயிரணு ஆக ஆனால் அது என்றுமே அழிவதில்லை. தீயில் குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகள் கருகுகின்றது.

எதிலும் அழியாத உயிரை… அந்த உயிரைப் போன்றே ஒளியான அணுக்களின் தன்மையாக நாம் பெருக்குதல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்.

“சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதால்தான் கடைசியில் இறப்பை எய்துகிறோம்

 

இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியால் பூமி எதை எதை எடுத்து வளர்க்கின்றதோ அந்தத் தொடரின் அமிலக் கலவையின் உயர்ந்த வீரியம் கொண்ட உயிர் நிலை தான் மனிதச் சரீரம் எடுக்கும் உண்மை நிலை.

பூமியின் இயற்கைத் தன்மையிலேயே அறிவின் ஆற்றலைச் செயலாக்கும் திறன் கொண்ட
1.மனித நிலையில் ஜீவித சரீர ஓட்டத்தில்
2.எந்தச் சுவையின் உணவு முறையில் மனிதன் உண்டு வாழ்கின்றானோ
3.அந்த அமிலம் மட்டுமல்லாமல் இந்தப் பூமியிலுள்ள கனி வள அமிலத் தன்மையின் குணமும் மனிதச் சரீரத்தில் உண்டு.

மனிதன் தான் எடுக்கும் சுவாசத்தின் உணர்வால் இந்தப் பிறப்பின் தொடர் வாழ்க்கையில்
1.பிறப்பு… இறப்பு…! என்ற இயற்கையின் கதியில் உட்பட்டு
2.அதையே நியாயப்படுத்தி வாழ்கின்றானே தவிர
3.மனிதனுக்குள் மறைந்துள்ள “நான் என்பது யார்…?” என்ற நிலையை மனிதன் உணரவில்லை.
4.பிறப்பையும் இறப்பையும் ஏற்றுக் கொண்ட நிலை தான் உள்ளது
5.எங்கிருந்து வந்தோம்… எங்கே செல்ல வேண்டும்… ஏன்… எதற்காக.. எப்படி…? என்று அறியும் நிலை இல்லை.

ஆனால் கோள்களில் செயல்படும் எண்ணிலடங்காத தெய்வ சக்திகளின் சூட்சமத்தின் சூட்சமமே “மனித உயிரும்…!”

மனித உயிரின் ஜீவித உடலின் உயிர் அணுக்கள் தான் உயிர்ப்பித்து உணர்வு கொண்ட சுவாச கதியில் செயல் கொண்ட அமில உயிர்ப்புத் தன்மைகள் அதனுடைய கதியின் நிலைக்கொப்பத்தான் வாழ்க்கையின் எண்ண உணர்வு நிலையின் செயலின் கதி ஓட்டம் இன்று மனிதன் வாழும் நிலை.

(அதாவது உயிரால் ஜீவன் பெறும் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்துமே அந்த உயிரின் தொடர்பால் தான் சுவாசிக்கும் நிலையே பெறுகிறது. அப்படி வெளியிலிருந்து உடலுக்குள் வரும் பல சக்திகள் அது எந்த எந்த உணர்வு கொண்டு வந்ததோ அதற்கு ஒப்பத்தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் இயங்கி நம் வாழ்க்கையே அமைகிறது)

இந்த உலகில் கலந்துள்ள அமிலத்தின் அனைத்துத் தொடர்புகளும் மனித உயிரின் சூட்சமத்தில் அடங்கியுள்ளது. அது எல்லாவற்றையும் பெறும் தகுதியும் உண்டு.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.

உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்…!

இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)

இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது…
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
(2.வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.

இந்தப் பூமியில் சில மகான்களின் தத்துவம் எப்படி வளர்ந்தது…?

நம்முடைய உணர்வின் எண்ணம் எதை எண்ணிச் செயல்படுகின்றதோ அதற்கொப்ப குண அமிலங்கள் உடலுக்குள் வந்து சேர்கின்றது. அத்தகைய உயிர் அணுக்களுக்குள் எது பதிவாகியுள்ளதோ அந்தப் பதிவின் தொடர் அலை ஜீவித வாழ்க்கை தான் மனிதனின் வாழ்க்கை.
1.அதன் தொடரில் எண்ணும் எண்ணமே தான்
2.நம்முடைய ஆத்மாவில் பதிவாகி
3.நம் ஆத்ம தொடரின் வளர்ப்பும் செழிப்பும்.
(உடலில் உள்ள உயிரணுக்களின் நிலையும் நமக்குச் சொந்தமான உயிரணுவின் நிலையும் இங்கே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது)

இந்த நிலையில் இருந்து தான் மனிதனில் சிலருக்கு அபூர்வமான உண்மைத் தன்மைகளை உணரும் நிலை ஏற்பட்டது.

இந்தக் கலியிலேயே பிறப்பால் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு சிறுவன் தன் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட சந்தர்ப்பத்தால் தெய்வ குணத்தின்பால் “கிருஷ்ணர்… இராமர்…!” என்ற தன் எண்ணத்தில் ஈர்க்கப்படுகின்றான்.

அதன் தொடர்பால் அந்தச் சிறுவனின் எண்ணம் சர்வ சதா காலமும் கிருஷ்ணனின் நாமத்தைத் தெய்வ குணமாக எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

அப்பொழுது விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் சக்தி ஒளி அந்தச் சிறுவனின் மேல் பட அந்தச் சிறுவனில் இருந்த இருள் அகலுகின்றது.
1.அந்த மகரிஷிகளின் ஒளி சக்தியால்
2.சிறுவனின் ஆத்மா மங்காத நட்சத்திர ஒளியைப் பெற முடிந்தது. (பாலயோகீஸ்வரர்)

எதைத் தொடர்ந்து எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வே தான் ஆன்மா.
1.அந்த ஆத்மாவின் விதி கொண்டு தான் நற்கதியும் துர்க்கதியும்.
2.நற்கதியின் எண்ணத்தை மதி நுட்பமுடன் எண்ணும் பொழுது ஆத்மா நிச்சயம் ஒளித் தன்மையில் பிரகாசிக்கும்.

மனிதன் “நான் என்பது யார்..?” என்பதை உணரக்கூடிய நிலையில் மெய் ஞானத்தில்
1.மகரிஷியாகக் கூடிய உயிர் தான் தன்னுயிரும் என்பதை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து அந்த நிலையை எய்த முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ – ஆறு திரையிட்டு ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார் இராமலிங்க சுவாமிகள்

இராமலிங்க அடிகள் சொன்னது “அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ…”

ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் இந்த உயிரின் துணை கொண்டு அவன் தீமை செய்கிறான் என்று அறிந்து கொள்கின்றோம். அவன் செய்யும் தீமைகளை இந்த உயிரே தான் அதைப் பிரித்துத் “தவறு செய்கின்றான்…” என்று உணர்த்துகின்றது.

அதைத்தான் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ என்று சொல்லிவிட்டு “தீமை செய்வோருடன்… என்னுடைய பழக்கம் இல்லாது இருத்தல் வேண்டும்…” என்று அவர் வேண்டுகின்றார்.

எத்தகைய தீமைகள் இருந்தாலும்
1.அவர்களுடன் நான் அணுகாது
2.அவர்கள் பேச்சை நான் பேசாது
3.அவர்களுடைய நினைவுகள் இல்லாது நான் பெற வேண்டும்.
4.அந்தத் தெளிந்த மணங்கள் நான் பெறவேண்டும் என்பதுதான் அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ.

ஏனென்றால் தன் உணர்வின் தன்மை “பிறர் செய்யும் தீமைகளை… உற்றுப் பாராது… இருத்தல் வேண்டும்…” ஆகவே எனக்குள் தெளிந்திடும் அறிவாக நீ அருட்பெரும் ஜோதியாக இருக்க வேண்டும்.

கார்த்திகேயா என்ற நிலையில் ஆறுபடை வீடுகளில் முருகனைப் பற்றி அவர் தத்துவம் பாடி வந்தார். அதைத்தான் இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது திரையிட்டு மனிதனின் உணர்வின் தன்மை ஒளியாக்கி உயிருடன் ஒன்றி ஜோதியின் உடலாக இருக்கும் நிலைகள் என்று காட்டினார்.

அந்தப் பேரருள் பெற வேண்டும் என்ற தத்துவத்தைத்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் இந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இராமலிங்க அடிகள் கூறினார்.

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ – நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையெல்லாம் நமக்குள் தெளிவாக்குகின்றது.

ஒருவன் தவறு செய்கின்றான் என்று கேட்டறிந்தால் அவன் செய்யும் தவறுகளை நுகர்ந்தறிந்து தவறு செய்கின்றான் என்று நம் உயிர் தான் உணர்த்துகின்றது. ஆனாலும்
1.அந்தத் தவறு செய்பவனைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணுவோம் என்றால்
2.அவன் தவறு செய்த உணர்வுகள் நமக்குள் அதிகமாகி
3.அந்த அறிந்திடும் அறிவு செயலிழந்து
4.அவன் தவறு செய்யும் உணர்வே நமக்குள் உள்ள நல்ல உணர்வுகளை இருள் சூழச் செய்துவிடுகின்றது.

அவன் தவறு செய்கின்றன் என்று உணர்த்துவதும் நம் உயிர் தான். அவன் தவறு செய்கின்றான் என்று நாம் பல முறை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் வந்து “உயிரால் உணர்த்தப்படும் இந்த அறிவும் மங்கிவிடுகின்றது”.

அதனால் தான் இராமலிங்க சுவாமிகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ என்று இந்த உயிருடன் ஒன்றி
1.தான் எண்ண வேண்டியது எது…?
2.எவ்வாறு எண்ண வேண்டும்…?
3.எதனை நாம் செய்ய வேண்டும்…? என்ற நிலைகளில்
4.மக்கள் நாம் எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும்…? என்று அவருடைய பாடல்கள் மூலம் உணர்த்தினார்கள்.

அதே சமயத்தில் அக்காலத்தில் அவர் தெளிந்த நிலைகள் கொண்டாலும் அவர் அறியாது அவருக்குள் பல “அற்புதம்” நடக்கின்றது.

சில நஞ்சினைப் போக்கும் உணர்வுகள் அவர் உடலில் ஆன்மாவில் இருந்ததனால் ஒரு நஞ்சு தீண்டிவிட்டால் இராமலிங்க சுவாமிகளின் பார்வை பட்டால் நஞ்சு தீண்டியவரும் நஞ்சு நீங்கி உயிர் பிழைத்து எழுந்து நடக்கத் தொடங்குகின்றனர்.

ஆனால் அவரவர் இச்சைகள் கொண்டு நமக்குப் பொருள் கிடைக்கும் புகழ் கிடைக்கும் என்ற நிலைகள் தான் மனிதனுடைய சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சென்றதே தவிர
1.பொருளும் புகழும் நமக்கு எத்தனை காலம் நிலைக்கும்..?
2.புகழும் நம்மைத் தேடி வராது.
3.பொருளும் நம்மை நாடி வந்தாலும் நிலைக்காது.
4.நாம் பெறவேண்டியது என்ன…? என்று இராமலிங்க அடிகள் தெளிவாகச் சொன்னார்.

இந்த வாழ்க்கையில் அனைத்தும் தெரிந்து கொண்டாலும் உயிர் ஒளியாக நின்றது போல் உணர்வுகளையும் ஒளியாக மாற்றி
1.என்றும் அருட்பெரும் ஜோதியாக
2.நம் உணர்வுகள் என்றும் சுடராக இருக்க வேண்டும் என்றுதான்
3.அவர் ஆறு திரையிட்டு ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார்.

ஆனால் அக்காலத்தில் உள்ள மக்கள் இவருடைய அற்புதத்தைப் பெற்றால் எனக்கு உடல் சுகம் கிடைக்கும் பொருளை அனுபவிக்கலாம் புகழ் கிடைக்கும் என்றுதான் அவரை நாடிச் சென்றார்களே தவிர “அவர் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தாலும்…, யாரும் எடுப்பார் இல்லை…”

இதைத்தான் “கடை விரித்தேன்… கைக் கொள்வார் யாரும் இல்லை…” என்று அவர் விடுபட்டுச் சென்றார்… நொந்து சென்றார்.

துருவ (நட்சத்திர) தியானத்தை லேசாக நினைத்து விடாதீர்கள்

 

1.உயிரணு தோன்றி… மனிதனாகப் பிறந்து வளர்ந்து
2.27 நட்சத்திர உணர்வுகளை உணவாக உட்கொண்ட பின்…
3.உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது.

துருவத்தை எல்லையாகக் குறி வைத்து அதன் வழி நட்சத்திரங்களின் உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து அதனின் எல்லையை அடையும் போது துருவ நட்சத்திரமாகிறது.

நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளில் அவைகளை எடுத்தாலும் உயிரணு தோன்றிய பின்… நட்சத்திர உணர்வுகளை உட்கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மை வருகிறது… மற்றதைக் கருக்கி விடுகின்றது.

1.நட்சத்திரம் மின் கதிர்களாக வரப்படும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போன்று தான்
2.இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.

மனிதரான பின் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றான பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது. அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உணர்வுகளும் ஒளியாகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி “சப்தரிஷி…” சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு… அந்த மண்டலங்களாக துருவ நட்சத்திரத்துடன் இயங்குகின்றது.

மகாபாரதத்தில் இது தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் காலத்தால் மறைத்து விட்டார்கள். இந்த உண்மைகளை நாம் மறந்தே போய் விட்டோம்.

காரணம்… அரசர்கள் தனக்குத் தெரிந்த “ரகசியம்…” மற்றவர்களுக்குத் தெரிய கூடாது என்ற நிலையில் அவ்வாறு செயல்படுத்தி விட்டார்கள்.
1.வேதங்களை மாற்றப்பட்டு… உண்மையின் இயக்கங்கள் மறைக்கப்பட்டு…
2.மறைந்த உணர்வுகளை… அந்த உண்மைகளைத் தேடிக் கொண்டே இருக்கின்றோம். இன்னும் கிடைத்த பாடு இல்லை…!

ஆனால் இப்பொழுது நீங்கள் அதை தேடிக் கொள்ள வேண்டாம்..! உங்கள் உடலுக்குள் அனைத்தும் உண்டு.

ஒளியாக எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு) இருந்தாலும் ஏற்றுக் கொள்வார் குறைவாகவே உள்ளனர்… ஏற்றுக் கொள்வதே மிகக் கடினமாக இருக்கின்றது

காலை துருவ தியானத்தில் எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை எல்லாம் தொடர்பு கொள்ளச் செய்கிறோம்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை எடுத்து
1.அந்த இயக்கச் சக்தியை உங்களுக்குள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் இயங்கிப் “பேரொளியாக…”
2.உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளி மயமாக மாற்றி
3.அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலையை அடைந்து
4.என்றும் பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில்
5.வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.

உங்களுக்குள் ஆழப் பதிவு செய்த இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வந்து இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி… இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்துச் செயல்படுங்கள்.

1.மனித வாழ்க்கையில் வரும் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பகைமை உணர்வோ போன்றவைகளை மாற்றி அமைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் தனக்குள் புகாத வண்ணம் தடுத்துக் கொள்ளுங்கள்.

சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்ய முடியும்.

ஆகவே அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து உடலுக்குள் அதை அணுக்களாக மாற்றிடும் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான் துருவ தியானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

அதை லேசாக நினைத்து விடாதீர்கள்…!

உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் நாம் பிறப்பு எடுக்கவில்லை

 

இந்தப் பூமியின் இயற்கைக் கதியுடன் வளர்ந்த பலா மரம் அது வளர்ந்து பலன் தருகிறது. அதனுடைய பலனாக ஒவ்வொரு தருணத்திலும் காய்த்துப் பல ஆண்டுகள் அந்த மரத்தினுடைய பலனை வெளிப்படுத்தியபின் அந்த மரம் பட்டு விடுகின்றது.

1.அந்த மரத்தின் பலனான பலாப் பழத்தின் சுவை பக்குவப்படும் நாள் இரண்டு தினங்களே (அறுத்த பின்)
2.அதனுடைய மணமும் சுவையும் அந்த இரண்டு தினங்களுக்குத் தான்…!
3.அந்த நேரத்தில் அந்தக் கனியை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்கின்றான்.

இரண்டு தினங்களுக்கு மேல் அப்படியே வைத்திருந்தால் அழுகிய துர்நாற்றமும் ஈ கொசு எறும்பு போன்ற பூச்சிகள் மொய்க்கத் தொடங்குகிறது. அதற்குப் பிற்பட்ட நாளில் அந்தக் கனியிலேயே புழுக்கள் புழுத்து விடுகின்றது.

பலாக் கனியின் பயனை இரண்டு நாளில் சுவையாக மனிதன் உட்கொள்கின்றான். அதே சமயத்தில் அந்த இரண்டு நாளிலேயே அதனைத் தன் உணவுக்காகப் பல நாட்கள் கெடாமல் பக்குவப்படுத்தும் வழியையும் மனிதன் செய்து கொள்கின்றான்.

பலா மரத்தின் கனியின் சுவையைச் சுவைப்பதற்காக மனிதன் அதனை மீண்டும் மீண்டும் பயிர் செய்கின்றான். மனித இனத்தின் உணவின் பெருக்கத்திற்கு வித்தாக்கி வளர்க்கின்றான்.

மனிதனின் பக்குவத்தால் பலா மரத்தின் வளர்ச்சியின் விகிதங்கள் பூமியின் இயற்கையில் கூடுகின்றது. ஏனென்றால் பலா மரம் தானாக வளரக்கூடிய நிலை அதிகம் இல்லை.

1.மனிதனின் செயல்பாட்டினால் பூமியின் இயக்கத்தில் தாவரத்தின் இனப் பெருக்கத்தை வளர்த்துக் கொள்வது போல்
2.உலோகக் கனி வளங்களின் வளர்ச்சியை மனிதனின் செயலால் இந்தப் பூமியின் இயக்கத்தில் வளர்க்க முடியவில்லை.

அதே போல் பூமியின் ஜீவ ஜெந்துக்களின் இன விருத்தியையும் நீர் நிலைகளில் வளரும் முத்துக்கள் போன்ற சில இனங்களையும் மனிதனின் செயல்பாட்டால் வளர்க்க முடிகின்றது.

1.பூமியில் உருவாகும் அனைத்துத் தனிமங்களையும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தும் மனிதனால்
2.அந்த உலோகத் தன்மையைத் தன்னுடைய செயலால் வளர்க்க முடியவில்லை விளைய வைக்கவும் முடியவில்லை.
3.ஆனால் இந்தப் பூமியின் ஜீவ நாடியே பூமிக்குள் விளையும் உலோகங்கள் தான்…!
(அதை விஞ்ஞானிகள் இது வரை உணரவில்லை)

ஆக இன்றைய மனிதனுடைய திறமை உயிரினங்களையும் தாவரங்களையும் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் தேவைக்காகச் செயல்பட்டு
1.அதனுடைய பெருக்கத்தின் வளர்ச்சிக்காகத்தான்
2.இன்றைய மனிதனின் ஞானச் செயலும் விஞ்ஞானமும் இந்தப் பூமியில் வளர்த்து வாழ்கின்றது.

இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும்
1.மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால்
2.இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.

உலோகத்தின் சத்தைக் கொண்டு தான் இயற்கையின் கதியை இந்தப் பூமியின் பெருக்கத்தின் ஜீவ நாடியாக்க முடியும் என்பதனை மனிதனின் மெய் அறிவு இனிமேலாவது விழிப்படைதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதன் என்பவன் உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் இந்தப் பூமியில் பிறப்பு எடுக்கவில்லை. ஞானத்தின் பகுத்தறிவை மெய்யின் விழிப்படைந்து மனிதன் இந்தப் பூமியின் இயக்கத்தின் செயல் சூட்சமத்தில் சுழல வேண்டும்.

சூரியனும் பல கோள்களும் இந்தப் பூமியின் தொடர்புடன் சுழலும் பொழுது இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியில் வாழும் மனிதன் “இந்த மெய்யை அறிதல் வேண்டும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது உயிர் கடவுளாக நின்று இயக்கினாலும் நாம் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ அதுவே நமக்குள் கடவுளாக நின்று நம்மை இயக்குகின்றது.

இந்தப் பேருண்மையைத்தான் அன்று இராமகிருஷ்ண பரமகம்சரும் எடுத்துச் சொன்னார்.

“கடவுளைப் பார்க்க வேண்டும்..,” என்ற மிகுந்த வேட்கை கொண்டவர் விவேகானந்தர்.

தான் கல்விச் சாலையில் படித்தாலும் அன்று பக்தி மார்க்கங்களில் உள்ள நிலைகள் கொண்டு கடவுளை அறிய வேண்டும் என்று அவருடைய வீரிய உணர்வுகள் கொண்டு பல நிலைகள் எடுத்தாலும் அவருக்குச் சரியான “விடை” கிடைக்கவில்லை.

பித்தரைப் போன்று இருக்கும் இராமகிருஷ்ண பரமகம்சரிடம் செல்பவர்களுக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது என்று அறிந்த பின் அவரை அணுகுகின்றார் விவேகானந்தர்.

கடவுள் என்பது எப்படி இயக்குகின்றது…? என்று அவருக்குள் (பரமகம்சர்) அறிந்த சக்தியின் தன்மை கொண்டு
1.விவேகானந்தர் தன்னைத் தேடி வருகின்றார் என்பதை உணர்ந்து
2.தான் படுத்திருக்கும் இடத்திற்குக் கீழ் முட்களையும் வேதனைப்படுத்தக்கூடிய சில பொருள்களையும் பாய்க்கு அடியில் போடுகின்றார் இராமகிருஷ்ணர்.

இதை உற்றுப் பார்த்தபின் விவேகானந்தர் கேட்கின்றார். இது… என்ன..?” முட்கள் போட்டிருக்கின்றது.., இதன் மேல் உட்கார்ந்திருந்தால் வலிக்கவில்லையா…!

அப்பொழுது பரமகம்சர் சொல்கின்றார். (எனக்கு) “வலிக்கின்றது” என்று நீ நினைக்கின்றாய்.
1.நான் இதைப் பார்க்கவில்லை…, அதனால் எனக்கு வலிக்கவில்லை.
2.எனக்கு வலி தெரியவில்லை…! என்கிறார்.
3.அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தினால் தான் “எனக்குள் அது இயக்கும்” என்று விவேகானந்தருக்கு உணர்த்துகின்றார்.

பின் அவரைத் தொட்டுக் காட்டுகின்றார். அவர் உடலைத் தொட்டபின் அந்த உணர்வுகள் விவேகானந்தருக்குள் பாய்ந்தபின் சில உண்மையின் நிலைகளை உணர்கின்றார்.

உனக்குள் நின்று இந்த உணர்வின் செயல்கள் எவ்வாறு இருக்கின்றது என்று ஆக “இது தான் கடவுள்…”
1.என்னை முள் குத்தும் என்று நீ எண்ணுகின்றாய்
2.அந்த உணர்வின் சக்தி உன் உயிரின் தன்மை
3.அது உள் நின்று அது உணர்த்துகின்றது.
4.அந்த உணர்த்திய சக்தி உனக்குள் வந்த பின் “வேதனைப்படுவேன்.., என்று உணர்த்துகின்றது…” இது தான் கடவுள்.
5.நீ எண்ணியது எதுவோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு உள் நின்றே அது உணர்த்துகின்றது.

இவ்வாறு தான் கடவுள் அது செயலாக்குகின்றான் என்ற நிலையை அன்று விவேகானந்தருக்கு தெளிவுபடுத்திக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

கடவுளின் செயலாக்கங்கள் – உன் உயிர் எவ்வாறு உள் நின்று இயக்குகின்றதோ அதைப் போல எனக்கு வேதனை என்று எண்ணும் பொழுது இந்த உணர்வின் தன்மை உனக்குள் நின்று வேதனை என்ற உணர்வை உணர்த்துகின்றது.
1.கடவுளின் இயக்கம் இதுதான்.
2.கடவுளைக் கண்ணால் பார்க்க முடியாது.

உனக்குள் இருந்து உயிர் இயக்கினாலும் அவனை நீ காண முடியவில்லை. உனக்குள் பல கோடி குணங்கள் இருப்பினும் அதனை நீ காண முடியவில்லை.

நினைவின் ஆற்றல் வரும் பொழுது தான் உனது ஆன்மாவாக மாறுகின்றது. நுகர்ந்தபின்தான் உன் உயிரின் இயக்கங்கள் இவ்வாறு இயக்குகின்றது என்று தெளிவுபடுத்தினார் இராமகிருஷ்ண பரமகம்சர்.

அதன் பின் தான் அப்பொழுது அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு தான் அன்று விவேகானந்தர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்தார்.

நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ அதையே நமக்குள் படைக்கின்றது என்றும் இதைப் போல நாம் எண்ணிய உணர்வுகள் எப்படி வினை என்ற நிலைகளையும் அந்த வினைக்கு நாயகனாக எந்த நிலைகளை இயக்குகிறது என்ற நிலைகளையும் உணர்ந்து கொண்டார் விவேகானந்தர்.

அவ்வாறு உணர்ந்து கொண்ட நிலையில் தான் சிகாகோவில் “சகோதர சகோதரிகளே…” என்று தன்னுடன் இணைத்து (மிஸ்டர்… அது… இது… என்று சொன்னாலும்) வெளிப்படுத்திக் காட்டினார்.

“சகோதர சகோதரிகளே” என்று தன் குரு தனக்கு உணர்த்திய வழியைத் தனக்குள் இணைத்து அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மேலை நாட்டில் “கடவுளின் அவதாரம்” என்ற நிலைகளையும் வெளிப்படுத்தினார்.

இயேசுவின் தாயார் கணவன் இல்லாமல் பிறந்தது என்ற நிலைகளை அவர்கள் பறை சாற்றிய நிலைகளை இது பொய்மை என்று மறைமுகமாக எடுத்துக் காட்டினார்.

நெகடிவ்… பாசிடிவ்… – VE.., + VE.., என்ற இயக்கம் இல்லை என்றால் இந்த உலக இயக்கம் இருக்காது.

ஒரு மனிதன் நல்ல நிலைகளில் இயக்கப்படும் பொழுதுதான் மற்றவர்களுடைய உணர்வுகள் இயக்கப்பட்டு மற்றவன் தீமை செய்கின்றான் என்று உணர்த்துகின்றது.

அப்படி உணர்த்தினாலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நல்ல உணர்வு கொண்டு இயக்கினால் தான் அந்தத் தீமைகளை அகற்ற முடியும். இதையெல்லாம் அங்கே உணர்த்துகின்றார் விவேகானந்தர்.

சிகாகோவில் அவர் பேசிய உபதேசங்கள் ஆங்கில வடிவில் பேசினார். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தமிழ் வடிவில் எனக்கு உபதேசித்தருளினார்.

நான் (ஞானகுரு) எந்தப் புத்தகங்களையும் படித்து இதைச் சொல்லவில்லை.

விவேகானந்தர் தன் குரு காட்டிய வழியினை அங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். நம் நாட்டின் பெருமையை அங்கே நிலைநாட்டினார்.

1.“ஆச்சாரம்… அனுஷ்டானங்கள்..,” என்பதை நீக்கிவிட்டு
2.நாம் அனுஷ்டிக்க வேண்டிய முறைகள் எது என்ற தத்துவத்தைத்தான் விவேகானந்தர் அங்கே தெளிவாக எடுத்துரைத்தார்.
3ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் நம்மைக் காக்காது.
4.”நாம் அனுசரித்து நடக்கக்கூடிய ஆச்சாரம்… எதுவோ…,” அது தான் வழி நடத்தும்.

உங்களுக்கு நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?

 

ஒரு பயமுறுத்தும் உணர்வை நாம் பதிவாக்கிவிட்டால் என்ன நடக்கிறது…?

இந்த இடத்திலே போனேன்… பார்த்தேன் விபத்தானது என்று ஒருவர் அதை விவரித்துச் சொன்னால் போதும்.
1.நாம் பதிவாக்கிக் கொண்ட பின் அங்கே சென்றாலே இந்த நினைவு வரும்
2.அங்கே சென்று அந்த உணர்வான பின் நம்மை அறியாமலே கிடு…கிடு… என்று நடுக்கம் வரும்.

இதே போன்றுதான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே என்ன செய்கிறோம்…?

எனக்கு (ஞானகுரு) என் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி அறிமுகப்படுத்தினாரோ இதே போன்று உங்களுக்குள் அந்த அரும் பெரும் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலைகளிலேயே இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.காரணம்… இனம் இனத்தைத் தான் பெருக்கும்.
2.அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளில் எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகவே குரு எனக்கு ஊட்டிய அந்த அருள் வழிகளை உங்கள் உயிரை ஈசன் என்று மதித்து அந்த அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் இணைய வேண்டுமென்று தான் இதை உணர்த்திக் கொண்டு வருகிறேன்.

“குண்டலினி சக்தி” என்று சொல்லி “இங்கே தட்டி எழுப்புகிறேன்…” என்று செயல்படுத்தும் போது அவர்கள் உணர்வு இங்கே வந்து விடுகிறது. அவர்களின் ஆசையின் உணர்வு இங்கே வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள்.
1.அந்த மந்திரத்தின் உணர்வு இங்கே வந்தபின் ஆக்கினைக்கு நீ இங்கே தொடு என்று காட்டுவார்கள்
2.அப்போது அவர் ஆசையின் உணர்வுகள் இங்கே இயக்கத் தொடங்கும்… மற்ற மனிதர்களுடைய உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும்.
3.தொட்டவுடன் கிர்ர்ர்… என்று ஏறும்… அந்த உணர்வே தான் அவர்களுக்குப் பழக்கம் வரும்
4.நெற்றி வலிக்க ஆரம்பிக்கும்… பல நிலைகளும் ஆரம்பிக்கும்.

இது அல்ல…!

நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அது எப்படி உருவானது என்ற உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் உடலில் விளைந்த அணுக்களில் அதைத் தான் தொட்டுக் காட்டுகின்றோம்.

நான் பேசும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாயும். அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “நீங்களே உங்கள் எண்ணத்தால் அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்…!

ஒன்றுமே வேண்டாம்… ஒரு பையனைக் கூப்பிட்டு “இங்கே கரண்டு பாய்கிறதா பார்…” என்று உடலைத் தொட்டவுடன் உடலுடன் இருப்பதெல்லாம் வர ஆரம்பிக்கும். இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் விதமும்.

மூலாதாரம் என்றால்… நமக்குள் வரும் ஒரு உணர்வின் தன்மை
1.எலும்பும் இரத்தங்களும் நரம்பு மண்டலமும் இந்த மூன்றும் சேர்த்து
2.அணுத் தன்மை கருத் தன்மையை ஜீவன் பெற செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து
3.விந்துடன் கலக்கும் ஜீவணுக்களாக மாற்றுகின்றது.

இதுதான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது. அங்கே உயிர் அணுக்கள் தோற்றுவிக்கும் நிலை வருகிறது என்றால் “வைத்திய ரீதியிலே” அன்று அகஸ்தியன் கண்டுபிடித்தான்.

“ஆக்கினை…” என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ உயிரிளே பட்ட பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது. இதைத் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. ஆகவே ஆக்கினை என்றால் உணர்வின் தன்மை இதிலிருந்து தான் ஆணையிடுகிறது.

மூலாதாரத்தில்… கீழே மாற்றுகிறது என்று உணர்வின் தன்மை தனக்குள் கொண்டு வரப்படும் பொழுது வித்தியாசமான நிலைகளில் சென்று விடுகின்றது.

1.மூலாதாரம் என்றால் நமது உயிர் மூலம்
2.நாம் நுகரும் உணர்வே ஆதாரம்.
3.எந்த உணவின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான் நம் உணர்வுகள் இயக்குகிறது என்று
4.சாஸ்திரங்களும் வேதங்களும் தெளிவாக நமக்கு காட்டும் நிலை.

ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் நம் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்

 

1.இந்தப் பூமியின் சமைப்பு அமிலத்தின் முதிர்வு நிலையின் முலாம் தன்மை தான்
2.மனித உடலின் அமிலக்கூறின் வார்ப்பு நிலை.
(பூமியின் முதிர்ந்த வளர்ப்பு தான் மனிதன்)

பூமிக்கு அடியில் உருவாகும் உலோகத் தன்மையில் முதிர்வு நிலை வளர வளர பூமியின் முதிர்வின் வலுத் தன்மை கூடுவதைக் காண்கின்றோம். (உலோகத்தின் வளர்ச்சியில் பூமி அடுத்து நட்சத்திரமாகிப் பின் சூரியானாக வளர்ச்சி பெறும்.)

தாவர இனங்களின் வளர்ச்சியில் காய்களாக உருவாகும் பொழுது அந்தப் பிஞ்சு முற்றிப் பழமாகிப் பழுத்து விடுகின்றது. அதற்கடுத்த நிலையாக அதனுடைய கொட்டை மீண்டும் ஒரு வித்தாகப் பயிருக்கு வருகின்றது.

ஆனால் உலோக வளர்ச்சியில் பல மாறுபாடு கொண்டு அதனுடைய வளர்ச்சி முதிர்வின் நிலை பெறுகின்றது. முதிர்வு நிலை பெற்ற உலோகம் தான் செயலுக்கு வருகின்றது.

இந்தப் பூமியின் இயற்கை வளத்தை ஒட்டிய உயிர் அணுக்களின் வளர்ச்சி யாவும் உலோகப் படிவத்திலும் தாவர இன வளர்ச்சியிலும் மாறி மாறி வளர்கிறது. பல உருவங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

அப்படி உயிர் பெறும் அத்தகைய ஜீவ ஜெந்துக்களின் உயிராத்மாவின் பரிமாணம்
1.வலு கொண்ட மனித உருவத்திற்கு வரவும்
2.அதிலே ஞானத்தின் ஒலியை எடுக்கும் செயலாக உருவத்திற்கு வரவும் பல கோடி ஆண்டுகள் ஆகின்றன.

அப்படி வளர்ந்து வந்த மனிதன் ஞானத்தின் முதிர்வு நிலை பெற்றுத் தன் ஆத்மாவின் வலுவின் ஒளியை விழிப்பு நிலைக்கு (ஒளிச் சரீரமாக) வித்தாக ஆக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?

ஆரம்பத்தில் பூமியில் இருக்கும் முலாம் தன்மையில் (தாவரத்திலும் உலோகத்திலும்) உயர் நிலை பெற்ற வலுவை… அந்த வலுவை வளர்த்த தொடர்ச்சியைப் போல்
1.மீண்டும் மிருக இனத்திற்கும்
2.மற்ற ஜீவ ஜெந்துக்களின் இன நிலைக்கும்
3.புழு பூச்சியாகத் தாவர இனம் மற்ற உலோக நிலைக்கும்
4.பூமியின் சுழற்சி வட்டத்தில் பல கோடி ஆண்டுகளுக்குச் சுழலும் நிலை தான் ஏற்படும்.
(பல கோடி ஆண்டுகளில் வளர்ந்து மனிதனான நாம் மீண்டும் தேய்பிறையாகிக் கீழே போய் விடுவோம்)

பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.

மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை… அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்…” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.

1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.

அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.

பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.

அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்…
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.

மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு…” நிலையாக்கினால் தான் முடியும்.,

அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது பக்தி மார்க்கங்களில் வழக்கில் நாம் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தாலும் ஒருவரிடம் க்ஷேமம் விசாரிக்கப்படும் பொழுது எப்படிக் கேட்கின்றோம்…?

நண்பரைப் பார்த்தவுடனே, “குடும்பத்தில் எதுவும் கஷ்டமா..? எதுவும் பிரச்னையா…! ஒரு வாரமாக நீங்கள் வரவில்லையே… ஏன்…?” என்று கேட்பார்.

அதை ஏன் கேட்கின்றீர்கள்…? பையன் இப்படிப் பேசுகின்றான்… நான் அதை அப்படி நினைத்தேன்… கடைசியில் வேறு மாதிரி ஆகிப் போய்விட்டது. மனதுக்கு ரொம்பவும் வேதனையாகப் போய்விட்டது.

அதனால் எனக்குக் கை கால் குடைச்சலாகிவிட்டது… மனதிலும் வலி… உடலிலும் வலி… என்று நண்பரிடத்தில் இப்படிச் சொல்வார். இதையெல்லாம்
1.நான் யாரிடம் சொல்லி இந்த மூட்டையை இறக்கி வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.நல்ல வேளை நீ வந்தாய்.
3.உன்னிடம் சொல்லிவிட்டேன்.
4.இப்பொழுது எனக்கு மனது கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றது

நண்பர் என்ற நிலையில் அவரும் இவர் கொடுத்த மூட்டையை வாங்கிக் கொள்கின்றார்.

பின் அவர் கேட்பார். “உனக்குக் கூட இப்படி வந்துவிட்டதா…? நீ எத்தனை பேருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாய்…! உனக்குமா இப்படி…” என்பார்.

கஷ்டங்களை மூட்டையாக இறக்கி வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் வேதனைப்படும் நிலையாக “ஒருவர் சுமையை ஒருவர் தாங்கும் நிலையாகத்தான்” இன்று வாழ்கின்றோம்.

ஆனால் கஷ்டங்களைக் கேட்ட பின் “உனக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று எண்ணினால் நாமும் அதுவாகிவிடுகின்றோம்.

கந்த புராணத்தில் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் “கந்தா.., கடம்பா… கார்த்திகேயா…” என்று காட்டப்பட்டிருக்கின்றது.

நண்பர் சொல்வதையெல்லாம் கேட்டறிகின்றோம். கேட்டறிந்த பின் “கந்தா…” கந்தா என்றால் ஒவ்வொரு நிலையும் அறிந்து கொண்டவன் என்று பொருள்.

“கடம்பா…” கடம்பா என்றால் உருவாக்க வேண்டும் என்று பொருள். ஆக எதை உருவாக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த இருளைப் போக்கிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நமக்குள் தெளிந்திடும் நிலையாக ஒளியின் சுடராக அதை உருவாக்க வேண்டும்.

கார்த்தி – “கார்த்திகேயா” என்றால் வெளிச்சம்… இருளைப் போக்கும் நிலை.

அதே சமயத்தில் வேதனைப்பட்டோருக்கு நாம் எவ்வாறு எதை உருவாக்க வேண்டும்…?

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் விலகும்.
3.உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவார்கள்.
4.உங்களை அறியாது புகுந்த வேதனைகள் அனைத்தும் நீங்கும்.
5.நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள் என்று இதை நாம் உருவாக்க வேண்டும்.

இதையெல்லாம் நமக்குள் எண்ணி வளர்த்து அவரிடம் வாக்காகச் சொல்ல வேண்டும்.

செவி வழி அவர் இதைக் கேட்கும் பொழுது நாம் சொன்ன நிலைகள் அந்த உணர்ச்சிகள் அவரை இயக்கும். அதைப் பெற வேண்டும் என்று அவரும் எண்ணினால் அவருடைய இருளைப் போக்கி அவருக்குள்ளும் தெளிந்த நிலைகள் கார்த்திகேயா என்று உருவாக்கும்.

“அப்பொழுது நாம் அதுவாகின்றோம்…” கீதையிலே இதைத்தான் தெளிவாகச் சொன்னார்கள்.

தாய் தந்தையரிடம் எத்தனை பேர் நாம் அருள் ஆசி வாங்குகின்றோம்…?

 

மனிதனாக வருவதற்கு முன் நாம் பாம்பாக இருந்திருப்போம்… தேளாக இருந்திருப்போம்.. நமது தாய் அவர்களைப் பாதுகாக்க நம்மை அடித்துக் கொன்று இருப்பார்கள்…
1.இந்த (நம்) உயிர் அவர் உடலுக்குள் சென்றிருக்கும்
2.போன உடனே அவர்கள் உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி வருகின்றது.

கருவாக ஆன பிற்பாடு தேளாக இருந்த… பாம்பாக இருந்த நம்மை… மனிதனாக உருவாக்குகின்றது நமது தாய். அப்போது நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்…?

நம் தாய் தந்தையினுடைய உயிர் தான்…! கடவுளாக இருந்து மனிதனாக நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.

அம்மா அப்பாவைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும் யாராவது நாம் நினைக்கின்றோமா…?

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாயைத் திட்டுபவர்கள் தான் உண்டு. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உடனே தாயைத் திட்டுவார்கள்.
1.இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்…
2.உண்மையை உணர்தல் வேண்டும்.

பத்து மாதம் நம்மைச் சுமந்து உருவாக்கியவர்கள் தாய். பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும்… ஒரு நாளைக்குத் தலையிலே கல்லை வைத்துத் தூக்கிப் பாருங்கள். சுமக்க முடிகிறதா என்று…!

ஆனால் பத்து மாதம் நம்மைச் சுமக்கின்றது.

சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்… தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வையே எண்ணி எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைகளும் பட்டுப் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன் நாம் நெருப்பைத் தொட முயற்சிப்போம். டேய்… டேய்… நெருப்புடா…! என்று நம்மைப் பாதுகாக்கின்றது… அந்தத் தெய்வமாக இருக்கின்றது.

இது நல்லது இது கெட்டது இது அசுத்தம் என்று அனைத்தையும் சொல்லிக் கொடுக்கக்கூடிய குரு யார்…?

நம் தாய் தான். ஆனால் எத்தனை பேர் நாம் தாயை மதிக்கின்றோம்…?

1.தாயை மதிப்பவர்கள் சிறிது பேர்தான்.
2.தாயின் அருள் வேண்டும்… எனக்கு நல்லது நடக்க வேண்டும்…! என்று வேண்டுபவர்கள் கொஞ்சப் பேர் தான்.

அந்த தாயின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் இதை உணர்த்துகின்றோம்,

எத்தனையோ துன்பங்கள் பட்டு என்னை நீங்கள் வளர்த்தீர்கள். எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் அங்கே மறைய வேண்டும்.
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெற வேண்டும்
2.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் அவர் பெற வேண்டும்.
3.தாய் தந்தையர் என்றென்றும் எங்களுக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று
4.தாய் தந்தையரை நாம் வணங்கி எண்ண வேண்டும்.

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தன் எண்ணத்தால் எடுத்துப் பதிவாக்கியிருக்கின்றது. நமக்குள்ளும் அந்தப் பதிவு உண்டு. இந்தக் காற்றிலும் அது உண்டு.
1.எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
2.அம்மா… எனக்கு நோய் நீங்க வேண்டும் அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.தாயும் இதே மாதிரி என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றது
4.அந்த உணர்வை நுகர்ந்தீர்கள் என்றால் உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

உதாரணமாக… காட்டுக்குள் செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். புலியோ யானையோ துரத்தி வரும் நேரத்தில் அம்மா…! என்று சொன்னால் போதும். அந்தப் புலியானாலும் யானை ஆனாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் போகச் சொல்லி “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…?” என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர்.

போய்க் கொண்டே இருப்பேன். திடீரென்று புலி வந்தால் உடனே நான் “ஐய்யய்யோ…” என்று சத்தம் போடுவேன்.

அப்பொழுதுதான் குரு உணர்த்துவார்
1.டேய்…! உன் அம்மா எங்கேடா போனது…?
2.உன் அம்மாவை நினைடா…! என்பார்.

நினைத்து நான் அம்மா… என்று சத்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வரும் புலி அப்படியே நின்றுவிடும். இது எல்லாம் அனுபவத்தில் பெற்ற உணர்வு.

நீங்களும் இதே போல் தாயின் அருள் சக்தி பெற்று… ஞானிகள் காட்டிய வழியில் சென்று அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள்.

ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்… அழியாத வாழ்க்கை வாழ முடியும்

 

நம்முடைய எண்ணம் ஓடிக் கொண்டே உள்ளது உடல் உறங்கும் வரை.

உறக்கத்தில் உடலையும் எண்ணத்தையும் மறந்துள்ள தன்மையில் கனவுகள் சில நேரம் நமக்கு வருகின்றது. எல்லாக் கனவுகளும் மீண்டும் நம் நினைவுக்கு வருவதில்லை.

உறக்கம் இல்லாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் உடல் உறங்கும் வரை நம் எண்ணங்கள் ஓடிக் கொண்டே தான் உள்ளது.

சிலருக்குச் சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் எண்ணத்தின் ஓட்டமில்லை. மயக்கம் தந்து (ANESTHESIA) உடல் உபாதைகளை நீக்க அறுவை சிகிச்சைகளைச் செய்யும் வேலைகளில் நம் எண்ணத்தின் ஓட்டம் மறந்து விடுகின்றது.

ஆக விழிப்புடன் உள்ள நேரங்களில் தான் மனிதனின் எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ளது. உடல் உறக்கத்தில் எண்ணத்தின் ஓட்டம் இல்லை. சாதாரண வாழ்க்கை நிலையில் நாம் வாழ்ந்து இறக்கும் வரையிலும் இப்படித்தான் செயலாகின்றது.

1.உறக்க நிலையிலே எண்ண ஓட்டம் இல்லாத பொழுது
2.உடல் இறந்த பிறகு ஆன்மாவின் எண்ணம் செயலாகுமா…?
3.ஆன்மாவின் எண்ணம் செயலாகக் கூடிய வழி முறை யாது…?

சாதாரணமாக இறந்த மனிதனின் ஆன்மா அது உடலை விட்டுப் பிரிந்த பிறகு அந்த ஆத்மாவின் எண்ண ஒலிகள் ஜீவன் பிரிந்த பிறகு செயலாக்கும் சக்தியின் வீரியம் குறைந்து விடுகின்றது.

உடலில் இருக்கும் பொழுது தான் ஏற்படுத்திக் கொண்ட வலு நிலைக்கொப்ப அந்த ஆத்மா
1.இந்தப் பூமியின் சுழற்சியில் அதனுடைய தன்மைக்குகந்த வலுவில் தான் சுழன்று கொண்டிருக்கும்
2.தன் ஆசை நிலைக்கொப்ப…!
3.அதாவது அதனுடைய செயலுக்குகந்த ஆத்ம சந்திப்பு ஏற்படும் காலம் வரை…! (சுழன்று கொண்டிருக்கும்)

உடல் விழிப்பு இருந்தால் தான் எண்ண ஓட்டத்தின் கதியின் செயலாக சரீர இயக்கத்தின் நிலை உள்ளது. அப்படியானால்
1.உறங்கா நிலை…
2.விழிப்பு நிலை… என்பதின் பொருள் யாது…?

உடல் உறக்கமற்ற நிலையில் எண்ணத்தின் விழிப்பு நிலையில் இந்தச் சரீர வாழ்க்கைக்கு ஒத்த அமைப்பு கொண்டது தான் அந்த “எண்ணத்தின் ஓட்டம்…!”

ஆகவே “ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்…” என்றுமே நாம் அழியாத வாழ்க்கையாக என்றும் பதினாறு என்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

இந்த உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உடலுடன் வாழ்ந்தாலும்
1.வாழும் காலத்தில் மெய் ஞானத்தை அறிய விரும்புவோருக்கு
2.உடல் உறக்கத்திலும் ஆத்மாவின் விழிப்பால் எண்ணத்தின் ஓட்டத்தைக் கொண்டு
3.என்றுமே விழிப்பு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
4.ஒளியாக… ஜோதி நிலையாக அறியும் நிலைக்கு
5.ஆத்மாவின் எண்ணச் செயல் செயலாக்கும் அந்தத் தெய்வ நிலைக்கு
6.அஷ்டமாசித்தின் சக்தியைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த உணர்வுகள் கொண்டு புதுப் புது இயந்திரங்களை இன்று உருவாக்கினாலும் அதில் கலந்துள்ள நஞ்சின் புகைகள் வெளிப்படும் பொழுது அதுவே நம்மை மாற்றுகின்றது.

நாம் ஆடைகள் அணிவதற்காக எத்தனையோ நஞ்சு கலந்த வர்ணங்களைக் கலக்கின்றோம். ஆனால் அன்று வாழ்ந்த மெய்ஞானிகள் என்ன செய்தார்கள்…?

சூரியனிலிருந்து விளைந்த தாவர இனச் சத்தை இந்த நூல்களில் இணைத்துத்தான் அந்த வர்ணங்களை மாற்றினார்கள்.

இன்றும் நீங்கள் மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலில் பார்க்கலாம். திருமலை நாயக்கர் ஆட்சி புரியும் பொழுது வாழ்ந்த மெய்ஞானிகள் உண்மையின் நிலைகளில் இயற்கையில் உருவாக்கிய இந்த வர்ணங்களை அங்கே சுவர்களால் எழுதியதை அழிக்கமுடியவில்லை.

இன்று விஞ்ஞான அறிவினால் கண்டுணர்ந்த வர்ணங்களை இட்டால் அது சீக்கிரத்திலேயே மங்கிவிடுகின்றது. ஆனால் திருமலை நாயக்கர் மஹாலில் தீட்டப்பட்ட வர்ணங்கள் மங்கவுமில்லை.

சரஸ்வதி ஹாலில் அன்று இயற்கையின் வர்ணங்களை வைத்து எத்தனையோ சித்திரங்களை வரைந்துள்ளார்கள். அதுவும் இன்று மங்கவில்லை.

அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு இயற்கையாக இடப்படும்பொழுது “மனிதனுக்குத் தீமைகள் வரவில்லை…”

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பல வர்ணங்களை கெமிக்கல்கள் கலந்து உருவாக்கி புகைகளைப் பரவச் செய்த நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

“பளிச்…” என்று இருப்பதற்காக இத்தகையை வர்ணங்களைத் தூவினாலும் அதிலே கலக்கப்பட்டுள்ள நஞ்சுகள் புதிதாக உருவாகி வெளிப்பட்டதையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

இந்த ஆறாவது அறிவால்… தான் தனக்கு வேண்டிய வசதிகளுக்காக விஞ்ஞான அறிவால் மாற்றும் பொழுது
1.பல கெமிக்கல்களை இணைத்து நஞ்சாக மாற்றி
2.அவ்வாறு உமிழ்த்துவதைச் சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது
3.இந்தக் காற்று மண்டலத்தில் பரவி காற்றே நஞ்சின் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது.
4.மனிதன் சிந்தித்துச் செயல்படும் நல்ல அறிவினை அது இங்கே மறைக்கின்றது.

நம் அணுயும் ஆடைகளுக்குக் கொடுக்கும் வர்ணங்களாக இருப்பினும் கலக்கும் நிலைகளிலிருந்து நஞ்சாக வெளிப்படுகின்றது.

இதனின் கழிவின் தன்மைகள் நீராக பூமிக்கடியில் செல்லும் பொழுது பூமியில் ஏற்படும் வெப்பத்தின் தன்மை ஆவியாக மாறி பூமிக்குள்ளும் இந்த நஞ்சின் தன்மை கலக்கின்றது.

திருப்பூரில் உருவாக்கும் சாயக் கலர்கள் அவை கலந்து கலந்து மற்ற பக்கம் உள்ள நீரில் சுவைத் தன்மைகள் மாறலாம். சூரியனால் கவரப்பட்ட காந்தப் புலனறிவுகள் பூமி சுழலும் நிலைகளில் கொதிகலனாகும் நிலைகளில் பூமியின் நடு மையம் அடைந்துவிட்டது.

அதில் ஏற்படும் வெப்பத்தால்தான் மற்ற உணர்வுகள் ஒன்று சேர்ந்து இயங்குகின்றது. ஆக ஆவியின் தன்மை படரப்படும் பொழுது ஊடுருவி பூமி முழுவதும் படர்கின்றது. இந்தக் காற்று மண்டலத்திலும் பரவி விட்டது.

ஓசோன் திரை என்பது சூரியனிலிருந்து வெளிவரும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சைத் தனக்குள் புகாது தடுக்கும் நிலையாகச் சிறுகச் சிறுக உறைந்து அதனுடைய படலம் அதிகமாகி ஒரு திரை போன்று மறைத்துத் தனக்கு வேண்டிய அளவு எடுத்துத் தனக்குள் அணுக்களாக மாறிய நிலைகள்.

அத்தகைய ஓசோன் திரையும் இன்று கிழிந்துவிட்டது.

அன்று மெய்ஞானிகள் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து மனிதர்கள் வாழ்வதற்குண்டான சூழ்நிலையை இங்கே உருவாக்கினார்கள்.

இதையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் மெய்ஞானிகள் கண்டுணர்ந்த நஞ்சினை வென்ற ஆற்றல்மிக்க உணர்வுகளை உங்களுக்குள் ஆழப் பதியச் செய்வதற்கே இதைச் செய்கின்றேன்.

அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஆழப் பதிந்தால் அது நினைவுக்கும் வரும் பொழுது உங்களைக் காத்திடும் உணர்வாக விளைய வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவை முதலில் படிக்கும் பொழுது ஒன்றும் தெரிவதில்லை. மீண்டும் மீண்டும் படிக்கும் பொழுது.., படித்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணைக்கப்படும் பொழுதுதான் விஞ்ஞான அறிவையும் காண முடிகின்றது.

1.அந்த மெய்ஞானிகள் கண்டுணர்ந்த அறிவினை உங்களுக்குள் புகுத்தப்படும் பொழுது
2.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறுகள் வருகின்றதோ
3.அப்பொழுது அந்த மெய்ஞானியின் உணர்வை இணைக்கப்படும் பொழுதுதான்
4.இந்த விஞ்ஞான அறிவினால் வரும் சிக்கல்களிலிருந்து மீட்டிடும் எண்ணம் அதுவாக மாற்றும்.
5.விஞ்ஞான அறிவினால் பரவப்பட்டுள்ள நச்சுத் தன்மைகளிலிருந்து மீளும் உணர்வை ஊட்டும்.
6.அந்த நினைவின் தன்மையை நீங்கள் கூட்டி எண்ணினால் தீமைகளிலிருந்து மீட்டிடும் நிலையாக அதுவாக நீங்கள் ஆவீர்கள்.

இதைத்தான் வியாசகன் கீதையில் காட்டினார். “நீ எதை எண்ணுகின்றாயோ… நீ அதுவாகின்றாய்…”

மகாபாரதப் போர் எங்கே நடந்து கொண்டிருக்கிறது…?

 

நம் உடலில் இருக்கும் 1008 குணங்கள் அது மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? ஒவ்வொரு குணமும் அது எப்படி உருவானது…? என்றும் ஆலயங்களிலே காட்டப்பட்டுள்ளது.

பத்து உணர்வுகள் சேர்த்து ஒரு தெய்வ குணத்தைப் பெறுகின்றது. கோவில்களில் “10 நாள் விழா…” என்று கொண்டாடுவார்கள்… மாடு வாகனம் காளை வாகனம் சர்ப்ப வாகனம் அன்ன வாகனம் என்றெல்லாம் சொல்வார்கள்.

இந்த உடலிலே ஒன்றுக்குள் ஒன்று விழுங்கித் தான் ஒரு குணத்தின் தன்மை உருவானது… அந்தத் தெய்வ குணமாக ஆனது. மனிதனாகும் பொழுது தீமையிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வைத் தனக்குள் உருவாக்கும் சக்தி பெற்றது என்று தான் இங்கே வருகின்றது.

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர்கள் என்றும் பஞ்ச பாண்டவர் ஐந்து என்று வந்தாலும்…
1.அரச நிலைகள் கொண்டு கௌரவர்கள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த வலிமை கொண்டு
2.நல்லதை எண்ணினால் அதை விடாதபடி செய்கிறார்கள்.

எல்லாம் கெட்டவர்களாக இருக்கின்றார்கள்.. ஆசைப்பட்டுத் தனக்குள் வளர்த்திருக்கின்றோம்.

நமது உயிர் திரௌபதையாக இருக்கின்றது. ஐந்து புலனறிவு கொண்டு நாம் நுகர்கின்றோம்.
1.தீமைகளை நீக்கிடும் உணர்வை எண்ணி எடுத்து அதை நாம் நுகர்ந்தோம் என்றால்
2.கௌரவர்கள் தனக்கு இடைஞ்சலாகிவிடும் என்று உள்ளே புகாதபடி தடுக்கும் போது இந்தப் போர் முறைகள் வருகிறது என்று
3.மகாபாரதத்தில் இப்படித் தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்… நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா…?

மகாபாரதப் போர் என்றால் அதை எப்படி எப்படியோ காட்டி விட்டார்கள்…!

கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் அதாவது
1.ஐந்து புலனறிவு கொண்டு ஒரு உணர்வை நுகரப்படும் பொழுது அதற்கும்
2.இந்த உடலில் உள்ளுக்குள் (ஏற்கனவே) வளர்த்ததற்கும் இதற்கும் எதிர்மறையாகின்றது.

கோபமான குணங்களை எடுத்துக் கொண்ட பின் அடுத்து ஒரு சாந்தமான நிலைகளை நாம் எண்ணினால் அது விடுகின்றதா…? இல்லை. அந்த உணர்வை விடாதபடி எதிர்த்து நின்று போர் செய்து அதைத் தொலைத்து விடுகின்றது.

ஆகவே நாம் எதனின் உணர்வை எடுத்தோமோ இந்தக் கண்கள் அதற்கு உதவி செய்தாலும் அடுத்து இந்தக் கண்கள் அதை எப்படி மாற்றி அமைக்கின்றது…? என்ற நிலையைக் இங்கே காட்டுகின்றார்கள்.

மகாபாரதப் போரைப் பற்றி இன்று எழுதி வைத்திருக்கும் வித்தியாசங்களைப் பார்த்தோம் என்றால் அதிலே திசை திருப்பிய நிலைகளைப் பார்க்கலாம்.

அகஸ்தியன் கண்ட உணர்வைத் தான் வியாசகன் அறிந்து இத்தனை நிலைகளையும் அவன் வெளிப்படுத்தி உள்ளான்.

மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும்… சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.

இடி மின்னலைப் போன்றே நமக்குள் ஏற்படும் இன்னல்களை எல்லாம் பேரொளியாக்க வேண்டும்

 

மறை பொருளே உறைப்பொருள்
உறை பொருளே வினைப்பொருள்
வினைப் பொருளே விளைப்பொருள்
விளைப் பொருளே மெய்ப்பொருள்

1.விளைப் பொருளின் வளர்ச்சியின் ஆக்கம் தான் ஒவ்வொன்றிலும் வலுத் தன்மையாகி
2.மெய் ஞானம்… மெய்ப் பொருளாக… மெய் ஒளி ஒலி… செயல் சக்தியாகக் கூடுகிறது.

மனித உணர்வில் எண்ணியவுடன் (READYMADE) ஏற்படுவதல்ல அந்த விளைப்பொருளும் மெய்ப் பொருளும். அப்படியானால் அந்த மெய் ஒளி… மெய் ஒலி… மறைப் பொருள்… உறைப் பொருள்… இதெல்லாம் எப்படி உருவாகின்றது…?

இந்தப் பூமியின் சுழற்சி தட்ப வெப்ப சீதோஷ்ண நிலை மாறிக் கொண்டே உள்ளது. பூமியின் எட்டுத் திசைகளில் அந்தந்த இடங்களில் ஒன்று போல் சீதோஷ்ண நிலையும் கால நிலையும் இருப்பதில்லை. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஆனாலும் பூமி எப்படி மறைப்பொருளை (தனக்குக் கிடைக்கும் ஆற்றலைச் சமமாக்கும் நிலையாக) தன்னுடைய சக்தியின் ஈர்ப்பிற்குப் பல மாற்றங்களில் விளைப் பொருளாக ஒளியையும் ஒலியையும் எடுத்துத் தன் ஓட்டத்தின் கதியில் ஓடிக் கொண்டேயுள்ளதோ அதைப் போன்று தான்
1.உணர்வு கொண்ட எண்ணத்தின் கதி ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள சுழற்சியில்
2.நம் சரீர உடலின் நிலையும் உள்ளது.

ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.

வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.

இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.

1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!
5.அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.

மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று என்ன செய்தார்கள்…?
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்றால் மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.
7.பால்வெளியில் படர்ந்துள்ள உண்மைத் தன்மைகளை உணரும் சக்தியாக ஆதிசக்தியின் சக்தியை மெய் ஞானிகள் அன்று இப்படித்தான் கண்டார்கள்.

பூமியின் சுழற்சியின் கதியில் ஒவ்வொரு நாளும் நாம் வானத்தில் கண் கொண்டு பார்க்கும் பொழுது எண்ணிலடங்காத எத்தனையோ பிரபஞ்சங்களையும் மண்டலங்களையும் காணுகின்றோம்

அந்தப் பால்வெளி மண்டலத்தில் பலவாக படர்ந்துள்ள பரம்பொருளின் செயல் என்பது
1.ஆதி சக்தியின் சூட்சமமாக
2.சூனிய மண்டலமாகப் பலவும் நிறைந்துள்ள செயலின்
3.செயல்பாடில்லா – சூனியமான நிலை தான் பால்வெளியின் நிலை.

அந்தப் பரம்பொருளின் சக்தியைத் தான் மெய் ஞானத்தின் ஒலி கொண்டு… ஒளி பாய்ச்சும் ஏக்கத்தில்… மெய் ஞானி பெற்றான் “ரிஷிச் சக்தி…!”

அந்த ரிஷிச் சக்தியின் செயல் நிலை தன் தன் கதியின் சுழற்சிக்குச் செயலாக்குவதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்துள்ள ஞானத்தைக் கொண்டு
2.வலுவை வளர்க்க வழியமைக்கும் நிலையைத்தான் இங்கே உணர்த்துகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வறுமையிலும் கஷ்டத்திலும் இன்று மாயாஜாலங்களில் சிக்குண்டு “இதிலிருந்து விடுபட மாட்டோமா…?” என்று பிறர் மேல் தான் மனிதர்கள் நம்பிக்கை கொள்கின்றார்களே தவிர ஒவ்வொரு மனிதனும் தன் மீது நம்பிக்கை இல்லாது இருக்கின்றனர்.

ஜோதிடத்தாலும் மந்திரத்தாலும் யாகத்தாலும் ஜாதகத்தாலும் வேள்விகளாலும் தான் “எதையும் நாம் செய்ய முடியும்” என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாம் பெற வேண்டும் என்று இந்த உயிருடன் உராயச் செய்யும் பொழுதுதான் அது “உண்மையான வேள்வி” ஆகின்றது.

ஆகவே இந்த வேள்விகளை எடுத்துக் கடமையாகச் செய்வோம் என்றால் நமக்குள் தீமைகள் அகற்றும் எண்ணங்கள் வரும்.

1.இந்த வாழ்க்கையில் நாம் ஒவொருவரும் நம் உயிரைக் கடவுளாக மதிப்போம்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை ஆலயம் என்று மதிப்போம்.
3.அனைத்தையும் அறிந்திடும் அறிவாக இருக்கும் நம் உயிரை ஆண்டவனாக மதிப்போம்.
4.ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்ற முடியும் என்ற வலு கொண்டு தியானிப்போம்.
5.நம்மை உருவாக்கிய தாய் தந்தையரைக் கடவுளாக மதித்து நம்மைக் காத்தருளிய தெய்வமாக மதிப்போம்
6.நல் வழி போதித்த நம் அன்னை தந்தையரை குருவாக மதித்து அவர்கள் அருளால் நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம்.
7.நம்மை வளரச் செய்த முன்னோர்களையும் குலதெய்வங்களையும் விண்ணிலே செலுத்தி அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.
8.அவர்களின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும் என்றும் மனிதன் என்ற முழுமை அடைய முடியும் என்ற நிலைகளில் நாம் பிரார்த்திப்போம். தியானிப்போம் தவமிருப்போம்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் அவர் அனுபவபூர்வமாக அறிவித்த இந்த உணர்வின் தன்மையை நீங்கள் எல்லோரும் பெற முடியும்.

அதை எல்லாம் எளிதில் காண முடியும். உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும். அந்த நம்பிக்கையுடன் நீங்கள் வாழ முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றோம்.

கார்த்திகேயா என்று தெளிந்திடும் ஆறாவது அறிவு கொண்ட நாம் ஞானிகள் காட்டிய அந்த அருள் வழியில் தெளிந்திட வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று
2.தீமையிலிருந்து விடுபட்டு “தீமையிலிருந்து நான் விடுபட்டேன்…” என்று
3,எப்பொழுது நீங்கள் சொல்கிறீர்களோ என் குருநாதரை உங்களில் காண விரும்புகின்றேன்.

அதைத்தான் குருநாதர் காட்டினார்.

தியானத்தில் சக்தி பெறும் நிலையில் பாம்பின் காட்சி தெரிவது ஏன்…?

 

தியானம் செய்யும் போது தன் உடலுக்குள் பாம்புகள் செல்வதாகக் காட்சிகள் தெரிய வருகின்றது. இதனின் விளக்கம் என்ன…? என்று பார்ப்போம்.

1.சாதாரணமாக நம் உடலுக்குள் பல விதமான விஷத்தன்மைகள் ஊடுருவுகின்றது…
2.அது ஊடுருவப்படும்போது அதை எல்லாம் நாம் ஒளியாக மாற்ற வேண்டும்.

நாகனின் (பாம்பு) உடலில் பல விஷத்தின் தன்மைகள் அதற்குள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத்தன்மைகள் நமக்குள் சென்றாலும் நம் உயிரின் துணை கொண்டு அதை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்ற வேண்டும் என்பதே அங்கே காட்சியாகத் தெரிந்தது

அகண்ட அண்டத்தில் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் விஷம் இல்லாது உணர்வின் இயக்கம் எங்கும் கிடையாது.

பல விதமான விஷங்கள் கூடி நாகரத்தினமாக எப்படி மாறியதோ நமக்குள் பேரருள் என்ற உணர்வினைச் சேர்த்து அனைத்தையும் ஒருக்கச் சேர்த்து நாம் நுகரும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் நிலைகளுகளைத் தான் பாம்பினங்களாகக் காட்சியாகக் காண முடிந்தது.

உருவ அமைப்பிலே பாம்பு என்றாலும் அதன் உணர்வின் சக்தி விஷம் என்பதை உணர்த்துவதற்குத் தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.

நமது சாஸ்திரங்களில் கூர்மை அவதாரம் என்பதை ஆமையைப் போட்டுக் காட்டுகின்றார்கள். அதே போல் பன்றியைப் போட்டு வராக அவதாரம் என்றும் காட்டுகின்றார்கள்.

1.எந்தெந்த உணர்வுகளைக் கூர்மையாகப் பார்க்கின்றோமோ
2.அதன் உணர்வுகள் தீமைகளிலிருந்து தப்பிடும் உணர்வுகளாக வளர்ச்சி அடைந்து அடைந்து
3.அதற்குத்தக்க பரிணாம வளர்ச்சியாக அடைந்து வந்தோம் என்பதைக் கூர்மை அவதாரத்தில் காட்டியுள்ளார்கள்.

அதே போல் கூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமை என்ற உணர்வுகளை நீக்கிடும் சக்தி பெற்றது பன்றி என்றும் தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்திருக்கக்கூடிய நறுமணங்களை நுகர்கின்றது என்பதை உணர்த்துவதற்கு வராக அவதாரத்தைக் காட்டுகின்றார்கள்.

ஆகவே மனித வாழ்க்கையில்… காலையிலிருந்து இரவு வரை நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்குள் தீமை என்ற உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மையைக் காட்டுவதற்குத் தான் அத்தகைய காட்சிகள் கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். ஆனால் நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது.

இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத்தன்மையாக இருந்தாலும் நாம் அதை மாற்றி அமைத்து உயிருடன் ஒன்று ஒளியான நிலைகள் பெற முடியும்.

காட்சிகளுக்கு உண்டான உண்மை நிலைகளை இங்கே விளக்கம் கூறிய பின்… அடுத்தடுத்து உங்களுக்குக் காட்சிகள் வரும் போது
1.அந்த உண்மையின் உணர்வை அறிய நீங்கள் மீண்டும் எண்ணத்தைச் செலுத்தினால்
2.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து நுகர்ந்த உணர்வுகள் எது…? என்பதை அறிய முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுதும் அதை உங்களால் உணர முடியும்.

இந்த உடலுக்குப் பின்…
1.துருவ நட்சத்திரத்தைப் போன்று என்றும் பிரகாசமான ஒளியாக
2.எந்தத் தீமையும் நமக்குள் புகாது இருள் சூழா நிலைகள் கொண்டு பாதுகாக்கும் சக்தியாகப் பெற முடியும்.

இது எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடிய சக்தியாக வளரும். எல்லோரும் அருள் ஞானம் பெறும் நிலைகளுக்கு வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் (ஞானகுரு).

மனிதன் உயர்ந்த நிலை பெறக் காட்டப்பட்ட அஷ்டமி.. நவமியின் உண்மை நிலைகளை மறைத்துவிட்டார்கள்

 

நம் சூரியக் குடும்பத்தில் சூரியனை மையம் கொண்டு சுழன்று ஓடும் கோள்களும் அதன் உபகோள்களும் பூமியுடன் தொடர்பு கொண்ட 27 நட்சத்திரங்களும் ஒரு மண்டலம் 48 கோள்கள் கொண்டு ஒரு முழுமையாகின்றது.

அந்த வினைச் செயலின் பதிவு நிலை எண்ணம் கொண்டு ஈர்த்திடும் உயிர் சக்தியின் மின் காந்தத் தொடர் வான இயலின் தத்துவத்தை அறிந்து கொண்டு பேரருள் பேரொளியாக அன்றே ஆனவர்கள் மாமகரிஷிகள்.

தனக்குப் பின் வந்த தன் இன மக்கள்
1.நல்ல எண்ணம் நல்ல சுவாசம் கொண்டு தியானத்தின் வழி பெறும் மார்க்கமாகவும்
2.மனித குலம் வாழ்ந்து நல்லாக்கம் பெற்றிடவும்
3.பேரானந்தப் பேரருள் சக்தியாகப் பெற்று ஆதிசக்தியில் கலந்திடவும்
4.அந்த மகரிஷிகள் காட்டிய தத்துவமே “நவஜோதித் தத்துவம்…!”

இராம நவமி என்றும் கோகுலாஷ்டமி என்றும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இருந்தாலும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடத்த வேண்டிய கர்ம வினைச் செயல்களுக்கு “அஷ்டமி… நவமி…” என்று காலத்தைக் கணக்கிட்டு அன்று எந்தச் சுப காரியம் செய்யக் கூடாது…! என்கிறார்கள்.

அந்த நேரத்தில் அவதரித்த இராமனையும் கிருஷ்ணனையும் வணங்கிடும் செயலில் “மறைக்கப்பட்ட உண்மைப் பொருளே… நவ ஜோதியின் தத்துவமப்பா…!”

ஆனால் அந்த நவ ஜோதியைத் தன் உயிராத்மாவை ஜோதியாக்கும் செயலுக்குச் செயல்படுத்தும் ஒவ்வொருவருக்கும்
1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்
2.நல்ல நேரம்… கெட்ட நேரம்… என்பது இல்லையப்பா…!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.

நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது…! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக” முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர்.

ஜோதி நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவிஇயலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட 5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.

அதே தத்துவத்தை… அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான்.

இராசிகள் என்று கூறுகின்றோம். அதன் பொருள் என்ன…?

நாம் பார்க்கும் பால்வெளி மண்டலத்தில் நம் சூரியக் குடும்பம் சுழன்று ஓடுகிறது. அதைப் போல மற்ற சூரியக் குடும்பங்களும் அதிலே சுழல்கிறது. 2000, 1000 என்று குடும்பம் குடும்பமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது.

நம் சூரியக் குடும்பத்தின் ஓட்டத்தின் கதியில் நம் சூரியக் குடும்பத்தைப் போல் சுழலும் மற்ற குடும்பத்தின் சந்திப்பாக ஒன்றுடன் ஒன்று கலவையாகி அதிலே உயிரணுக்கள் உதித்திடும் தன்மையாக அத்தகைய குணங்களைப் 12 இராசிகள் என்று கூறினார்கள் ஞானிகள்.

பூமியில் பிறப்புக்கு வரும் உயிரணுக்கள் ஜீவாத்மாவாகி (உடல் பெற்று) தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில்
1.விண்ணின் ஆற்றல்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொண்டு
2.பரமாத்மாவாக ஆகும் தத்துவத்தில்
3.சுயப் பிரகாச ஜோதியாக ஆவதின் மூலமே நவஜோதி.

நாம் சுட்டிக் காட்டும் தியான வழிகளில் உயர் ஞான சிந்தனை வசம் நிலைப்போர் ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவை வளர்ச்சி கொண்டதாக ஆக்கிட
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை
2.நவஜோதிகளாக உங்கள் உயிரான ஆத்ம ஜோதியில் கலக்கச் செய்யுங்கள்.

அந்த ஆதிசக்தியில் (இயற்கை) ஒன்றிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு உயர்ந்திட வேண்டும் என்று எண்ணுவோர் அனைவருக்கும் எமது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

தெய்வ குணத்தைப் பெறுவோம்… தெய்வ சக்திகளை வளர்ப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரியும் முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

அங்கே அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டு பிறவா நிலை எண்ணும் அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

சிலர் கேள்விகள் கேட்கலாம், எங்கள் மூதாதையர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்று பல காலம் ஆகிவிட்டது. “எப்படிச் செலுத்துவது முடியுமா…?” என்று எண்ணலாம்.

1.அவர்கள் பகைமை கொண்டிருந்தால் பகைமை கொண்டவர் உடலுக்குள் சென்றிருப்பார்கள்.
2.பாசத்துடன் வாழ்க்கையில் சென்றிருந்தால் பாச உணர்வு கொண்ட உடலுக்குள் சென்று பேயாக உருவாகி அங்கே நோயாக உருப்பெறச் செய்வார்.
3.அதே சமயத்தில் துர்மரணம் அடைந்து எந்தப் பக்தியுடன் சென்றதோ அத்தகைய பக்தி கொண்ட உடல்களில் சென்றிருக்கும்.
4.இதைப் போன்ற நிலைகளில் ஆன்மாக்கள் அந்த உடல்களை விட்டு வெளி வந்தபின் அதைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சாதாரணமாக அதனின் இரத்த சம்பந்தம் உள்ள அவரைப் பற்றி எண்ணுபவர்கள் இருக்கும் வரை கடைசி நிலைகளில் எந்த உணர்வை அதிகமாக எண்ணியிருந்ததோ அந்த இடங்களில் தான் சுழன்று கொண்டிருக்கும்.

குறைந்தது மற்றொரு உடல் பெறுவதற்கு அதனுடய முந்தைய நிலைகள் மறக்கப்பட்ட பின் 150-200 ஆண்டுகளுக்குப் பின் தான் மறு (புதிய பிறப்பு) உடல் பெறும்.

(ஆனால் மிருக உடல்களுக்குள் சென்றிருந்தால் விண் செலுத்த முடியாது)

பௌர்ணமி அன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும்
5.நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும்.

அவ்வாறு தியானித்த அந்த வலுவின் துணை கொண்டு எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று “உந்தித் தள்ளினால்…” எளிதில் செலுத்திவிடலாம்.

நாம் உடலுடன் உள்ளோம்.
1.அவர்கள் உயிரான்மாக்கள் எடையற்றது
2.இயந்திரம் போன்று நாம் உந்தித் தள்ள முடியும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வே உங்கள் உடல். இதைப் போன்று தினசரி தியானித்து அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று அங்கே இணைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் இருக்கும் இன்னொரு உடல்களிலிருந்து அது எந்த நேரம் வெளி வரும் என்று சொல்ல முடியாது. நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் அங்கே அந்த ஆன்மாவில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.

அப்படி வெளியேறிவிட்டால் இதைப் போன்று நாம் தியானித்ததன் வலு இருந்தால் மறுபடி இன்னொரு உடலுக்குள் போகாதபடி நாம் விண்ணிலே செலுத்த முடியும்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க முடியும். பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாக மீண்டும் மற்றொரு உடலுக்குள் போகாது தடுக்க முடியும்.

சாஸ்திரப்படி இது தான் ஞானிகள் சொன்னதை விட்டு விட்டுச் சுட்ட சாம்பலைக் கொண்டு போய் ஆற்றிலேயும் கடலிலேயும் கரைத்தால் அதனால் எதுவும் பலன் இல்லை.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை.
2.நமக்குச் சொந்தமானது உயிர் ஒன்று தான்.
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுவதே அழியாதது. அது தான் வேகா நிலை.
4அப்படி அடைந்தவர்கள் சப்தரிஷிகள் இன்று சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.
5.நம் முன்னோர்களை நாம் சப்தரிஷிகளாக ஆக்க வேண்டும்.

அருளைத் தேடினால் தேவையான பொருள் தானாக வரும்… பொருளைத் தேடினால் வேதனை தான் வரும்

நம் பிரபஞ்சத்தில் உள்ள செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் “சிவப்பு நிறமாகவும்” புதன் கோளை எடுத்துக் கொண்டால் “மஞ்சள் நிறமாகவும்” இருக்கின்றது.

பல நட்சத்திரங்களுடைய கலவைகள் இதனுடன் (புதன் கோளில்) சேர்க்கப்படும் பொழுது உலோகத் தன்மை கொண்ட எத்தனையோ வகையான நிலையில் அது மாற்றிக் கொண்டிருக்கின்றது.

வியாழன் கோளை எடுத்துக் கொண்டால்…
1.நட்சத்திரங்களின் கதிர்வீச்சின் சக்திகளைத் தனக்குள் அடக்கி
2.ஒரு பொருளுக்குள் ஊடுருவி அதிலே இணைக்கும் சக்தியைக் கொடுக்கின்றது.

அதிலே வெளிப்படும் ஆவி தன்மைகள் மேகங்களாக மாறுவதைச் சனிக் கோள் தனக்குள் எடுத்து நீராக எப்படி மாற்றிக் கொள்கின்றது…? என்று இப்படி இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்

ஒவ்வொரு கோளும் தனக்கென்று உபக்கோள்களாக வளர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தன்மைகள் கொண்டது. எட்டுக் கோள் 10 கோள் 12 கோள் என்று துணைக்கோள்கள் உண்டு.

வியாழன் கோளுக்கு 24 உபக்கோள்கள் உண்டு. அந்த 24 கோள்களும்
1.27 நட்சத்திரத்தின் சக்திகளை இது கவர்ந்து எடுத்துப் பல பல கலவைகளாகச் சேர்த்துக் கொள்கின்றது.
2.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான நிலைகள் வரும்.
3.அதிலே ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்.. இன்னொன்று மறு பக்கம் சுற்றும்.

இன்றும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்குச் சிரமப்படுகின்றனர் அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையிலிருந்து வருகின்றதா…! என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டே உள்ளார்கள்.

24 கோள்கள் அங்கே சுழன்று கொண்டிருக்கின்றது 27 நட்சத்திரங்களின் உணர்வுகளைக் கவரந்து இதற்குள் ஒரு மிக்சர் ஆகி இந்த உணர்வின் தன்மை “புது விதமான கதிரியக்கமாக” மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படித் தனக்குள் உறை பனியாக மாற்றுகின்றதோ வியாழன் கோளும் இதே போன்று உறை பனியாக மாற்றிக் கொள்ளும் செயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் (ஞானகுரு) என்றால்
1.எதிர்காலத்தில் இந்த உண்மைகளை எல்லாம் நீங்கள் அறிய வேண்டும்
2.நான் மட்டுமல்ல… இந்த உண்மைகளை உணர்ந்து நீங்களும் தெளிந்து தெரிந்து
3.இந்த உலகின் இருளை மாய்க்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவால் பேரழிவு வருகிறது அதிலிருந்து நீங்களும் மீள வேண்டும்… மற்றவர்களையும் மீட்க வேண்டும். “பிறவி இல்லை” என்ற நிலையை நீங்கள் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

இந்த உடலில் இருக்கும் வரை “எந்த நிலையில் இருந்தாலும்” கோடி செல்வங்கள் வைத்திருப்பினும் அந்த செல்வம் நமக்கு உறுதுணையாக இருப்பது இல்லை.

1.உடல் நலம் சரியில்லை என்றால்
2.அந்த செல்வத்தைக் கொண்டு வந்து முன்னாடி வைத்தாலே நமக்கு வெறுப்பு தான் வரும்.

சொத்திலே பாகங்கள் பிரிக்கும் போது சகோதரர்களுக்குள் வெறுப்பான உணர்வுகள் வரப்படும் போது அதனால் நோயின் தன்மை ஆகும்பொழுது
1.இதனால் தான் எனக்கு பகைமை ஆனது இதனால் தான் நோயானது என்று
2.பணத்தைப் பார்த்தாலே வெறுப்பு வரும்… இந்தக் கிரகத்திலேயே நான் முழிக்க வேண்டாம் என்று வரும்

ஆகவே பொருளைப் பற்றி எண்ணாதபடி அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி வளர்த்துக் கொண்டால் பொருள் மேல் ஆசை வராது.

பொருள் மீது ஆசை இல்லாதபடி அருள் ஞானம் பெற வேண்டும் என்று ஆசையை வளர்த்தால் கிடைக்கக்கூடிய பொருளைச் சிதறாது அந்த அருள் சக்திகளை எடுக்கப்படும் போது மனது நிம்மதியாக இருக்கும்.
1.இந்த வாழ்க்கையில் நமக்குத் தேவையான
2.போதுமான செல்வங்கள் நிச்சயம் வந்து கொண்டே இருக்கும்

படைத்தவனின் படைப்பான நீங்கள்… படைக்கப்பட்டவனின் படைப்பாக… படைப்பின் படைப்பாக… “படைக்கும் நிலைக்கு உருத் தாருங்கள்…”

 

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள 48 மண்டலங்களிலிருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.

இந்தப் பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இந்தப் பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது. மனித ஆத்மாக்கள் அந்த 48 மண்டலங்களிலும் இல்லை.
1.ஆனால் இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான்
2.இந்தப் பூமியில் உள்ள மனிதர்களின் நிலையெல்லாமே உள்ளது.

ஒரு மண்டலம்… “48 நாள்…” என்ற ஜெப நிலையை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள். ஏன் என்பதை நாம் அறிந்துள்ளோமா…?

நமக்கு முதலில் இருந்த சித்தர்களும் ஞானிகளும் கடும் தவமிருந்த நிலையில்
1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மணடலம் என்ற 48 நாளைத் தியானத்திற்குகந்ததாக எடுத்து
3.பேரண்டத்தின் பல உண்மைகளை அந்த ஜெபத்தினால் அறிந்தனர்
4.அதன் வழியில் வந்தது தான் நாம் இன்று சொல்லும் ஒரு மண்டலம் 48 நாள் என்ற முறையெல்லாம்.

நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்குப் புரிந்திடும்.

கண்ணில் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுதே வானத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைக் காண்கின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியைக் காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன. நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்களும் உள்ளன.

புள்ளியாகத் தெரியும் அத்தகைய மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இந்த மனித உடல் பெற்ற ஜீவாத்மாக்கள் உள்ளன. பல மண்டலங்களில் நம்மைக் காட்டிலும் திறன் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.

ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த இந்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை,

இந்த உலகிலே நாம் மனிதனாகப் பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றோம். அந்தச் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் வழியில் ஜெபத்தின் அருளைப் பெற்று எண்ணத்தையும் நினைவையும் தூய்மையாக்கி நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தியாக்கிடல் வேண்டும்,

விஞ்ஞானத்தின் செயற்கை நிலையால் இக்கலி என்னும் காலத்தில் மீண்டு கல்கியுடன் கலந்து வாழும் பக்குவ நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தும் நிலைக்கு வந்திடவே
1.ஆசை என்னும் நிலை கொண்டே ஈஸ்வரபட்டனாகிய நான்
2.இந்தப் பாட நிலை எல்லாம் அருளுகின்றேன்.
3.ஒவ்வொருவரும் இனி வரும் கால நிலையைக் கடத்திடாமல் அருள் பெறுங்கள்.

இந்த உலகில் உதித்துள்ள மனித உயிரணுக்களுக்கெல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையில்
1.நாம் வேறல்ல இந்த உலகம் வேறல்ல
2.இந்த உலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல
3.தனித்து நிற்பவை எவையுமில்லை
4.எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலந்துள்ள நாம்
5.நம் உயிராத்மாவைப் பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
6.இந்த உலகத்தின் உண்மையை மட்டுமல்ல சகல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.

ஏனென்றால் உங்கள் எல்லோருக்குமே அந்தத் தகுதி உண்டு…!
1.படைத்தவனின் படைப்பான நீங்கள்
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக… படைப்பின் படைப்பாக
3.படைக்கும் நிலைக்கு உருத் தாருங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் தாய் நாம் கருவிலிருக்கும் பொழுதும் குழந்தையாக இருக்கும் பொழுதும் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்…? என்று கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

தன் வேலைகளை எல்லாம் செய்கின்றது. பெருமூச்சு இடுகின்றது. குழந்தை மேல் பாசமாக இருப்பதால் வேதனைகளைத் தாங்கிக் கொள்கின்றது.

எத்தனையோ வேதனைகளைப் பட்டாலும் தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்றி அதன் சந்தோஷத்தில் தாயும் மகிழ்கின்றது.

தாய் தன் அன்றாட வாழ்க்கையின் நிலைகளில் உணவினைச் சமைப்பதும் தொழில் செய்வதும் இப்படி எல்லாவற்றையும் செய்து அதிலுள்ள அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தன் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அது வளர்க்கின்றது.

குழந்தை பிறக்கும் பொழுதும் தாயிற்கு வேதனை. குழந்தை வளரும் பொழுதும் தாய் எத்தனையோ வேதனைகள் படுகின்றது.

நாம் பல குறும்புத்தனங்கள் செய்வோம். அதனால் வயிற்று வலி வந்திருக்கும். தலை வலி வந்திருக்கும்.

தாய் இதையெல்லாம் உற்று நோக்கி என் குழந்தைக்கு இப்படி இருக்கிறதே என்று எண்ணி வேதனைப்படும். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய் வேதனைப்படுகின்றது.

தாய் படும் வேதனையில் தந்தையும் பங்குகொள்கின்றார். இதைப் போன்ற எத்தனையோ வேதனைகளை நம் தாய் தந்தையர் அனுபவித்தார்கள். நம்மை வளர்ப்பதறாகப் பல இன்னல்களை அவர்கள் பட்டார்கள்.

அவர்கள் உயிர் கடவுளாக நின்று நம்மை மனிதனாக உருவாக்கி தெய்வமாக நம்மைக் காக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் தவழ்ந்து நடக்கும் பருவத்தில் குருவாக நின்று இது நல்ல வழி நீ இந்த வழியில் இப்படிச் செல் என்று முதல் குருவாக இருந்து வழி காட்டியதும் நம் தாய் தந்தையர் தான்.

1.அத்தகைய குருவாக இருந்த தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும்…?
2.அவருக்குச் செய்ய வேண்டிய காணிக்கை என்ன…?” என்பதை ஞானிகள் விநாகர் தத்துவத்தில் காட்டியுள்ளார்கள்.

எனக்காக அல்லும் பகலும் விழித்து என்னைக் காத்தருளிய தெய்வங்களான அன்னை தந்தையர் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.

அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்,

என்னை வளர்ப்பதற்காக அவர்கள் வாழ்க்கையில் பட்ட வேதனைகளால் உருவான நஞ்சுகள் அனைத்தும் நீங்க வேண்டும். அவர்கள் உடல்களில் உள்ள தீய வினைகள் அனைத்தும் அகல வேண்டும்.

என் அன்னை தந்தையர் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வின் தன்மையை ஓங்கிச் செலுத்துதல் வேண்டும்.

1.விநாயகர் சிலையை நாம் பார்த்து
2.இத்தகைய வினைகளை நமக்குள் சேர்த்து
3.இதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
4.தாய் தந்தைருக்குக் காணிக்கையாகச் சேர்க்கும்படி விநாயகர் தத்துவத்தில் சொல்லியிருக்கின்றார்கள்.

விநாயகர் தத்துவப்படி நாம் இதைச் செயல்படுத்தி தாய் தந்தையர் மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் அவர் மனைவி அவர் தாய் தந்தையர் நான்கு பேரும் இணைந்து உருவானது தான் துருவ நட்சத்திரம். அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது தான் “விநாயக தத்துவம்”.

நம் சாஸ்திரங்கள் காட்டிய வழியில் இன்று நடக்கின்றோமா…! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

27 நட்சத்திரங்களின் சக்தியை ஒருங்கிணைத்துப் பெறச் செய்யும் நிலைக்காக உருவாக்கப்பட்டது தான் முருகன் சிலை

 

1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் இருக்கும்
2.நாளுக்கு நாள் விஷங்களை மாற்றி… மாற்றி… மாற்றி… மாற்றி… விஷத்தையே மாற்றிடும் சக்தி பெற்ற பின் தான் மனிதனாக உருவாக்கியது.

அதே போல் ஒவ்வொரு தாவர இனச் சத்திற்குள்ளும் மனிதனாக உருவாகக் காரணமான “நஞ்சினை வென்றிட்ட… நஞ்சை வென்றிடும்…” இந்த உணர்வின் சத்துக்கள் உண்டு.

மனிதனுக்கு மூலமாக இருந்த அத்தகைய விஷத்தை வென்றிடும் அருள் சக்தியின் தன்மைகளைச் சாரணையாக முருகன் சிலைக்குள் ஏற்றினான் போகன்.

விஷம் கொண்ட ஜந்துக்கள் தன் இரைக்காக நுகர்ந்தறிந்து வரும் போது தன்னைக் கொன்று புசித்திடாத நிலைகள் இருப்பதற்காகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனின் தாய் தந்தையர் பல விதமான மூலிகைகளைத் தாங்கள் படுத்திருக்கும் குகைகளின் பக்கத்தில் பரப்பி வைத்திருந்தார்கள்.

அதைக் கருவுற்ற அகஸ்தியனுடைய தாயாரும் நுகர்ந்ததால் அகஸ்தியன் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் சக்தியாக அது பெருகியது.

நஞ்சை மூலமாக வைத்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகள் மின்னல்களாக (கதிரியக்கங்கள்) தாக்கும் பொழுது மற்றொன்றுக்குள் ஊடுருவி அதை வீழ்த்திவிடும். அத்தகைய வீரிய சக்தி கொண்டது.

தாய் கருவிலேயே நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றதனால்
1.வீரிய சக்தி கொண்ட நட்சத்திரங்களின் மின்னல்களையும் அகஸ்தியன் அடக்கி
2.தனக்குள் அணுவின் தன்மையாக ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அகஸ்தியன் பெற்ற பேராற்றல்களை இரண்டாவது நிலைகள் கொண்டு தான் போகன் 5000 ஆண்டுகளுக்கு முன் அறிந்துணர்ந்தான்.

நமது பிரபஞ்சமும் கோள்களும் நட்சத்திரங்களும் உருவானது எப்படி…? என்று அகஸ்தியன் கண்ட உணர்வை அவனும் தனக்குள் கண்டுணர்ந்து நஞ்சினை வென்றிடும் சக்தியாகப் பெற்றான்.

நவபாஷாணங்களை எடுத்து உருவாக்கி…
1.27 நட்சத்திரங்கள் மின்னலாகத் தாக்கப்படும் பொழுது அந்த மின் கதிர்களை நவபாஷாணத்திற்குள் ஊடுருவச் செய்து
2.அதன் வழி கொண்டு 27 நட்சத்திரங்களின் ஒருக்கிணைந்த உணர்வினைப் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற ஒரு சிலையை (முருகன்) உருவாக்கினான்.

அது தான் போகன் உருவாக்கிய ஆறாவது அறிவின் சக்தி கொண்ட நிலைகள்.

மனிதரான பின் நாம் எப்படி வந்தோம்…? மனிதனான பின் இத்தனை அறிவையும் நாம் எப்படித் தெரிய முடிந்தது…? என்பதை அவன் கண்டுணர்ந்தான். அதை உணர்வதற்காக நாடு முழுவதற்கும் சென்றான்.

ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களும் அதனின் அறிவாக எப்படிப் பெறுகின்றனர்…? என்ற நிலையை அறிவதற்காக உலகம் முழுமைக்கும் “ககன மார்க்கமாகச் சென்று…” எல்லாவற்றையும் அறியும் சக்தி பெற்றான்.

அந்த அறிவின் சக்தியைத் தனக்குள் பெற்ற பின் தான் இங்கே முருகன் சிலையை உருவாக்கி அதன் வழியில் நாம் எல்லாம் வழிபடும் நிலையாக
1.ஆறாவது அறிவின் பெருமையை
2.சிலை ரூபமாக வெளிப்படுத்தினான் போகன்.

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்…! மகரிஷிகளின் அருளை ஏற்றே அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்

 

இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அத்திறமை பெற்றுத்தான் இப்பூவுலகிற்குள் வந்து பிறக்கின்றன.

மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி கொடி புழு பூச்சி எல்லாமே அச்சக்தியின் அருளில் ஒவ்வொரு திறன் கொண்டு சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.

இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம்
1.நம் சக்தியை…
2.நம் திறனை…
3.நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதறவிட்டு…
4.நாம் பெற்ற பாக்கியத்தையே இழந்து வாழும் நிலையில்தான்
5.நாம் இந்த உலகில் இன்று வாழ்கின்றோம்.

இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனுண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருகங்களுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மை உள்ளது. அதாவது
1.இரண்டு கைகளால் செயல்படும் திறனையும்
2.ஆற்றல் கொண்ட சொற்களைப் பேசும் திறனையும்
3.நமக்களித்த அத்திறன்களை ஒரே நிலை கொண்டு
4.நம் எண்ண நிலையைச் சிதறவிடாமல் செயலாற்றும் தன்மை உடையவர்களாக இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் அவரவர்கள் எடுக்கும் சுவாச நிலை கொண்டு பல செயல் திறன்களை வென்று வாழ்ந்தாலும்
1.பெரும் உன்னத நிலை அடையச் செய்யும்
2.அருள் ஞானப் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்.
3.உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு வாழுங்கள்.

ஒவ்வொருவரும் ஜெப நிலை பெற்று இந்த உடலையும் உயிராத்மாவையும் பூமியையும் புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே… நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்…! தியான நிலையில் இருந்திடுங்கள்…!

இதைப் படிப்போர் அனைவரும் அந்த அருள் சக்தி பெற்று
1.சகல சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் நமக்குள் வந்து
2.நமக்கு அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே… அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்…!

“மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்…!” என்ற நிலைக்கேற்ப அந்த மகரிஷிகளின் அருளை ஏற்றே அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். பேரருள் பேரொளி பெற்றுப் பேரானந்த நிலையை அடையுங்கள். உங்களால் முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக அப்பொழுது தான் குளித்து முடித்துத் தூய்மையாக வந்திருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அந்த நேரத்தில் ஒருவர் நம்மைச் சந்தித்துத் தன்னுடைய வேதனையான நிலைகளைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதைக் கேட்டுக் கொண்ட பின் நாம் குளித்து விட்டு வந்திருந்தாலும் சிறிது நேரத்தில் உடலில் பிசு… பிசு… என்று ஆகிவிடும்.

அவர் சொல்வதை நாம் கேட்கும் பொழுது சலிப்பு சஞ்சலம் என்ற நிலைகள் “இப்படி வேதனையாகப் பேசுகின்றார்களே…” என்ற உணர்வு வரும். அந்தச் சலிப்பு வந்த பின் உங்கள் உடலில் பிசு பிசுப்பு வரும். நீங்கள் பார்க்கலாம்.

அப்பொழுது குளித்ததனால் என்ன பயன்…?

1.அதே சமயத்தில் ஒருவன் கோபமாகத் திட்டியிருப்பான். அதை நாம் பார்த்திருப்போம்.
2.அந்தக் கோப உணர்வுகள் “நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் நம்முடைய ஈர்ப்பு வட்டம்) இருக்கும்”.
3.உடலில் அழுக்குடன் இருக்கும் பொழுது இது தெரியாது.
4.நீங்கள் குளித்து விட்டு வந்தபின் பார்க்கலாம்…, “உங்கள் ஆன்மாவில் இருப்பது எரியுதே… எரியுதே…, என்று எரிச்சலாவதைப் பார்க்கலாம்”.

நீங்கள் எத்தனை குளித்தாலும் இந்த ஆன்மாவில் பட்ட எரிச்சலைப் போக்க முடியாது. ஆக எரிச்சலைப் போக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா. எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஈஸ்வரா என்று தன் உடலுக்குள் இதைச் செலுத்தித் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

தூய்மைப்படுத்தியபின் நாம் எதை எல்லாம் எண்ண வேண்டும்…?

முதலில் சொன்ன மாதிரி மகரிஷிகளின் அருள் சக்தியை ஒரு பத்து நிமிடம் உடலுக்குள் செலுத்துதல் வேண்டும். பின் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணுதல் வேண்டும்.

பின் எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவது தியானம்.
2.அந்தச் சக்தியைப் பெற்ற பின் அதை எல்லோரும் பெற வேண்டும் என்று எண்ணுவது பக்தி.
3.நல்ல ஒழுக்கத்தை நாம் எண்ணுவதே பக்தி.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் அங்கே தொழிலில் இணக்கம் பெற வேண்டும்.

அங்கே தொழிலில் உற்பத்தியாகும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும். என்னைப் பார்ப்போர் குடும்பங்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இதுதான் “உண்மையான தெய்வ பக்தி” என்பது.

1.நாம் எண்ணும் எண்ணமே இறையாகி
2.அந்த உணர்வின் செயலே நமக்குள் செயலாகி
3.அந்தச் சொல்லாக வரும் பொழுது
4.நம் சொல்லே “தெய்வமாகின்றது”.
5.நமக்குள் அந்தத் தெய்வ உணர்வை இயக்குகின்றது.
6.கேட்போர் உணர்வுகள் அதைக் கேட்டறிந்தால் அது “தெய்வமாக இயக்கும்…”

உயிரான ஈசனை நேசிப்பதா…? உடலான சிவத்தை நேசிப்பதா…?

 

இயற்கை எவ்வாறு இயங்குகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ளத்தான் சிலைகளை வடித்து அதற்கென்று காரணப் பெயரை அன்று வைத்தார்கள்

உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்… இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்… ஈர்க்கும் காந்தத்தை லட்சுமி என்றும்… உயிர் எப்படி ஓ… என்று இயக்குகின்றதோ அது போல நுகர்ந்த உணர்வுகளும் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும் என்று காட்டுகின்றார்கள்.

உயிரிலே பட்ட பின் ஓ… என்று பிரணவம் ஒலியை எழுப்புகிறது… சப்தத்தைக் கொடுக்கின்றது. அதே போல் நாம் நுகரும் உணர்வுகள் அதே சப்தத்தைக் கொடுக்கும் என்று பொருள்.

ஆகவே பிரணவம் என்ற நிலையில் உயிர் நாம் நுகர்வதை ஜீவ அணுவாக மாற்றுகிறது. இந்த உணர்வின் தன்மை அணுவாகி அதனின் மலம் தான் நம் உடலாக சிவமாகின்றது. ஆனால்
1.உயிரான ஈசன் வெளியிலே சென்று விட்டால் இந்த உடலான சிவம் சவம் தான்.
2.அதற்கு அப்புறம் ஒன்றும் இயக்கம் இல்லை.

நாம் எந்தெந்தக் குணங்களை நுகர்ந்தோமோ அது அணுக்களாக ஆன பின் இந்த உடலை வளர்க்க அவை தான் உதவியது. ஆகவே அந்த அணுக்கள் தான் இந்த உடலை வளர்த்தது.

இருந்தாலும்… உயிர் வெளியில் போன உடனே
1.அந்த அணுக்கள் உயிரணுக்களாக மாறி உடலின் சத்தை எடுத்துப் புழுக்களாக மாறுகிறது
2.எந்தெந்த உறுப்புகளில் அது வளர்ந்ததோ அதையே உணவாகச் சாப்பிடும் (முக்கியமானது)

உணவாகச் சாப்பிட்டு எல்லாம் தீர்ந்த பின் இந்தப் புழு மடிந்து விடுகின்றது. முதலில் அணுவாக இருக்கின்றது உயிர் போன பிற்பாடு உயிரணுவாக மாறிப் புழுவாகின்றது.

உதாரணமாக நமக்கு வேண்டிய ஒருவர் நோயால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார். அந்த நோயினாலேயே கடைசியில் மடிந்திருப்பார். அவர் மேல் உள்ள பற்றால் ரொம்பப் பிரியமாக நாம் அதைக் கேட்டறிந்திருப்போம்.

ஆனால் அந்த உடலில் விளைந்தது உயிரணுவாகிப் புழுவான பிற்பாடு பிரியமாக எண்ணிய நம் உடலில் வந்து “ஒட்டிக் கொள்ளும்…”
1.அங்கிருந்து காற்றை உறிஞ்சி உடலில் விளையும்… கொசு மாதிரி கூட சிறு உயிர்களாக அதில் தோன்றும்.
2.இது சரும நோயாக வரும்… உடலுக்குள் சென்றுவிட்டால் சர்க்கரைச் சத்தாக வந்துவிடும்
3.இரத்தத்தைக் குடித்துவிட்டு அதனின் மலத்தை வெளிவிடும் போது சீழாக மாறும்…
4.இருக்கிறதை எல்லாம் தின்று குடைந்து கொண்டே போகும்.

இறந்தவர் உடலில் உருவானது… எதன் வழி வளர்ந்ததோ புழு இறந்து விட்டால் மனிதனாக இருக்கும் நாம் எந்தெந்த உணர்வைக் கேட்டு வளர்த்தோமோ “லபக்…” என்று வந்து இங்கே ஒட்டிக் கொள்ளும். அவருக்கு வந்த நோயை இங்கே உருவாக்கி விடும்.

இதைத்தான் மரபு அணு என்று சொல்வது…!

எதன் வழியில் வளர்ந்ததோ… அந்த உணர்வின் இயக்கமாக மரபணுக்கள் தொடர்ந்து… வந்து கொண்டே இருக்கும். அது மடிவதில்லை

அதனால் தான் “ஒரு அசுரன் இறந்தான் என்றால் பல அசுரர்கள் அதிலிருந்து எழுவார்கள்…!” என்று இராமாயணத்தில் சுத்தமாகவே நமக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.

உயிரை ஈசன் என்றும் நுகர்ந்த உணர்வுகள் தான் உடலாகின்றது என்றும் காட்டி
1.இவன் சிவனை நேசிக்கின்றான்… அவன் உயிரை நேசிக்கின்றான்…
2.இந்த இரண்டுக்கும் உண்டான வித்தியாசத்தை இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தியானம் என்றாலே… அது தன்னைத்தானே சங்கடப்படுத்திக் கொண்டு செய்யும் நிலை அல்ல

 

மன நிலையில் பயந்தவர்கள்… தன் நிலையை மறந்து மற்ற நிலைகளின் தன்மையைப் பயந்த நிலையில் ஏற்கும் நிலையை அடையும் தன்மை பெற்று… அதனால் உடல் நிலையும் மன நிலையும் கெடும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.

ஏனென்றால் நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்று மண்டலத்தில் எண்ணிலடங்காத நிலைகள் கொண்ட பல உயிரணுக்களும் நல்ல அணுக்கள்… தீமையான அணுக்கள்.. பல ஆவி நிலைகள்… என்று இப்படிப் பல சுற்றிக் கொண்டுள்ளன.

இந்தக் காற்று மண்டலத்தில் தான் ஈரப்பசையும் உள்ளது. மேகங்கள் படிந்துள்ளதும் இந்தக் காற்று மண்டலத்தில் தான் உள்ளது. இந்தக் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள காற்றில் ஈரப்பசையில்லை அந்த நிலையில் ஓரே சமமான நிலை தான் உண்டு,

காற்று மண்டலத்தில் உள்ள மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அந்த நிலையில் அலைந்து கொண்டுள்ள பல ஆவிகள் அதனுடைய செயலைச் செயல்படுத்த முற்படுகின்றன.
1.அத்தகைய ஆவிகள் எந்த உடலை ஏற்கலாம்…? என்ற நிலையில்
2.இடிக்கும்… மழைக்கும்… இருட்டிற்கும்.. பயந்த நிலையில் உள்ளவர்களை
3.அந்தத் துர் ஆவிகள் வந்து அண்டிக் கொள்கிறது.
4.இந்த நிலையில் நம்மை அறியாமலேயே நாம் நம்மை அந்த ஆவியின் நிலைக்குச் செல்லும் தன்மை வந்துவிடுகின்றது.

அப்பொழுது பயம் கொண்ட நிலையில் உள்ளவனுக்குத் தன் எண்ண நிலை அற்றுப் போகிறது. எண்ண நிலை இல்லாததினால் செயல் திறன் மங்கி விடுகின்றது.

சோர்வுத் தன்மைக்கு அடிபணியும் தன்மை வந்து மன நிலை மாறுபட்டு உடல் நிலை கெட்டு தன் வாழ்க்கை நிலையே பெரும் சஞ்சலத்தில் செல்லும் நிலைக்குச் செல்வதெல்லாம் “மன நிலையில் தான்…” என்பது இப்பொழுது புரிந்ததா…? ஒவ்வொரு மனிதருக்கும்…
1.அவரவர் எடுக்கும் சுவாச நிலையும் மன நிலையும் பொறுத்துத்தான்
2.அவர்கள் வாழ்க்கை முறையும் உடல் நிலையும் செல்வ நிலையும் சந்தோஷ நிலையும் சோர்வு நிலை பெறுவதும் எல்லாமே…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து சகல சக்தியும் இந்த உலகினிலே சுற்றிக் கொண்டுள்ள நிலையில் நமக்கு அவன் அளித்த சக்தியைக் கொண்டு நம் சக்திக்குகந்த நல்ல அணுக்களையும் மகரிஷிகளின் ஆசியைப் பெறும் தன்மையில் நாம் நம் ஆத்ம ஜெபத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆத்மீக வழியில்…
1.நல் வழி ஒன்றிலேயே நாட்டம் கொண்டு ஜெபிக்கும் பொழுது
2.நல் ஆத்மாக்களின் நல் உறவை நாம் பெற்று நல் மனத்துடன் நாம் இருந்தால்
3.நம்மை எந்தத் தீய சக்திகளும் தீய ஆவிகளும் தீண்டும் தன்மையை அகற்றும் நிலை நமக்கு வந்தடையும்.

நம் எண்ணத்தில் அச்சக்தியின் ஒரே சக்தி நிலை மட்டும் சத்திய நிலையில் இருந்து விட்டால் பயம் அச்சம் என்ற நிலையெல்லாம் வந்து அண்டாது.

நம்மை நாமே பரிசுத்தப்படுத்துவதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஜெபம் ஒன்று தான் சகல வித்தையும்…! சகல மந்திரமும்…! மந்திரம்…மாயம்…! எல்லாமே…!
1.அச்சக்தி நிலை பெற்ற சத்தியவானுக்குச் சகல நிலைகளும் தானாக நடந்துவிடும்.
2.எந்த நிலையிலும் சலிப்பிற்கும் சங்கடத்திற்கும் ஆளாகாமல் ஜெப நிலை பெறுங்கள்…! என்பது இந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான்,

இன்று இந்த உலகம் உள்ள நிலையில் ஒவ்வொருவரும் தன் நிலை உணரும் தன்மை அற்றுப் பெரும் சங்கட நிலையில் சலிப்புத் தன்மை கொண்டு வாழுகின்றார்கள்.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் இதை உணர்ந்து அதிலிருந்து மீண்டு உன்னத நிலை பெற்று வாழ்ந்திட ஒரே வழி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தியான நிலை தான்.

தியானம் என்றாலே…!
1.தன்னைத்தானே சங்கடப்படுத்திக் கொண்டு செய்யும் நிலையாக எண்ணாமல்
2.தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் எப்பொழுதும் ஒரே நிலை கொண்டு
3.அந்த ஈஸ்வர சக்தி நம்முள்ளே தான் சுற்றிக் கொண்டுள்ளது என்ற நினைவுடன்
4.நாம் எண்ணும் எண்ணத்தில் பரிசுத்தம் கொண்டு வாழ்ந்திட்டாலே
5.இந்த உலகில் சுற்றியுள்ள பல நல்லோரின் ஆசியை நாம் பெறக்கூடிய பாக்கியம் பெறுகின்றோம்
6.எல்லா மெய் ஞானியரின் நல்லாசிகளை நாம் பெறுகின்றோம்.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த நிலையில் உண்மையறிந்து அந்தப் பரமாத்மாவின் சக்தி பெற்று பலருக்கும் நல் நிலைகளைப் புகட்டி நல் நிலை கொண்டே நலம் பெற்று வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் புழுவாக இருந்திருப்போம். பூச்சியாக இருந்திருப்போம். அப்பொழுது (தாய்) கொன்றிருப்பார்கள். இந்த உயிர் அவர்கள் உடலுக்குள் போனால் அந்த உணர்வை எடுத்து நம்மை மனிதனாக உருவாக்கியது.

1.மனிதனாக உருவாக்கிய பின் அவர்கள் உயிர் “கடவுள்”.
2.நாம் குழந்தையான பின் “தெய்வமாக” இருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.
அடுத்து “குருவாக” இருந்தும் “இது நல்லதப்பா…, இது கெட்டதப்பா…,” என்றும் நமக்கு நல்ல வழிகளைச் சொல்லிக் கொடுக்கின்றது.

அதைத்தான் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம். நல்வழி காட்டும் குருவை அடைவோம் என்று சொல்வது.

எந்தக் குருவை…?

“தாயை” நம் குருவாக அடைதல் வேண்டும்.

இந்த முறைப்படி நீங்கள் செய்து அடிக்கடி தாயிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு நீங்கள் எந்தக் காரியத்திற்கும் செல்லுங்கள்.

நான் வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், அது வேண்டும்… இது வேண்டும்… என்று ஒரு சாமியாரிடமோ மற்றவர்களிடமோ கேட்க முடிகின்றது. ஆனால்,
1.“அம்மாவிடம் கேட்கக் கூச்சமாக இருக்கின்றது”.
2.பெரும் பகுதி எல்லோரும் இப்படித் தான்.
3.தாயின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் தான் நாம் இருக்கின்றோம்.
4.எப்பொழுதுமே தாயின் உணர்வே நமது உடல்.
5.நாம் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு.
6.நம்மைக் காத்திடும் உணர்வுகள் தாய்க்குள் விளைந்தது உண்டு.
7.அந்த உணர்வுகள் நமக்கு முன் உள்ள காற்றிலேயும் உண்டு.

அதை நாம் எளிதில் பெற முடியும்.

காட்டிற்குள் செல்லும் போது ஒரு யானையே தாக்க வருகின்றதென்று வைத்துக் கொள்வோம். ”அம்மா…” என்று சொன்னால் போதும். உங்களைத் தாக்காது.

இப்படி யாம் சொல்லிக் கொடுத்ததில் அனுபவத்தில் பெற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

ஆகையினால் தாய்க்கு உண்டான சக்தியை நாம் மறந்து வாழ்கின்றோம். “தாய்க்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு”.

1.நாம் சாமியாரைப் பார்த்து விட்டு வரம் வாங்கப் போகின்றேன் என்று நினைப்பதைக் காட்டிலும்..,
2.என்னைக் (ஞானகுரு) கேட்டு “நான் வரம் வாங்கப் போகின்றேன்” என்று என்னிடம் நீங்கள் கேட்பதைக் காட்டிலும்
3.தாய் மூலம் எளிதில் பெறலாம்.

நான் சொன்னதை நீங்கள் எடுத்தால்தானே அது நடக்கும்.

அதே மாதிரி தாய் சொன்னதை எடுத்தால் என் பையன் எப்பொழுதுமே உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்”என்று என்னைக் காட்டிலும் அந்தத் தாயின் உணர்வின் பதிவு உங்களுக்குள் அதிகம் உண்டு.

தாயின் உடலே நீங்கள். ஆகவே இதனின் உணர்வை எடுக்கும் போது “உங்கள் தாயின் உணர்வே” காக்கும்.

தொழிலிலே நஷ்டம் வருகின்றது… கஷ்டம் வருகின்றது.., என்று சாமியாரிடம் போய்க் கேட்கின்றீர்கள் என்னிடம் கூடக் கேட்கின்றீர்கள்.

ஆனால் அதற்குப் பதில் அம்மா.., ”எனக்கு இந்தத் தொழிலில் லாபம் வர வேண்டும். உங்களது ஆசீர்வாதம் உறுதுணையாக இருக்க வேண்டும். நான் சிந்தித்துச் செயல்படும் அந்த சக்தி பெற வேண்டும்”என்று தாயாரை எண்ணுங்கள்.

அதே மாதிரி தாயார் இல்லை என்றாலும் தாயார் படம் இருந்தால் அதைப் பார்த்து எண்ணி விட்டு நீங்கள் செயல்பட்டுப் பாருங்கள். தாயின் உணர்வுகள் உடலாக இருந்ததால் அந்த உணர்வுகள் காற்றிலே உண்டு. அதை உங்களால் பெற முடியும். அப்பொழுது உங்களுடைய காரியங்களெல்லாம் ஜெயமாகும்.

“அது எப்படி..,?” என்று எண்ணாதீர்கள். உங்களால் முடியும்.

உங்களது தொழிலுக்குச் சிலர் வேண்டுமென்றே தீமைகளைக் கொடுக்கின்றனர். தொல்லைகளைக் கொடுக்கின்றனர். நம்மை எப்படியும் துரத்த வேண்டும் என்று முயற்சி எடுக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது நீங்கள் உங்கள் தாயை மட்டும் எண்ணி
1.”அம்மா.., இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் நல்ல குணங்கள் வர வேண்டும்.
2.நல்ல உணர்வை நீ ஊட்ட வேண்டும். அந்த அருளுணர்வு இங்கே படர வேண்டும்.
3.தொழில் செய்யும் இடங்களிலே அன்பு பரவ வேண்டும். அருளுணர்வு பெருக வேண்டும்.
4.அந்த அருள் ஞானம் நான் செல்கிற இடங்களில் எல்லாம் படர வேண்டும்” என்று நீங்கள் அம்மாவை நினைத்துப் பாருங்கள்.

இந்த உணர்வுகள் தாயின் உணர்வுடன் வலுவாகி இந்த உணர்வைப் பெறப்படும் போது “பகைமை உணர்வுகள் உள்ளவன்.., மாற்றிக் கொள்வான்”. நமக்குள் அந்த உணர்வின் தன்மை வலிமை பெறும்.

இதைச் சிறிது காலம் நீங்கள் செய்து பாருங்கள். உங்களது தாயின் பேரன்பை நீங்கள் உணரலாம்.

ஆனால் நீங்கள் சாதாரணமாகத் தாயை எண்ணுகின்றீர்கள்.

நாம் கஷ்டப்படுவதைக் காட்டிலும் எவ்வளவு தொல்லைகள் பட்டு எத்தனை இன்னல்கள் பட்டு நம்மை வளர்த்தது.

“தாயை மறந்தவர்களாகத்தான்” பெரும் பகுதியானவர்கள் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் நம்மை உருவாக்கிய “கடவுள்” அவர்கள். “தெய்வமாகக்” காத்தது தாய். நல்ல வழிகளைக் கற்றுக் கொடுத்ததும் “குருவாக” இருப்பதும் உங்கள் தாய்.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு உண்டு. இது காற்றிலேயும் உண்டு. உங்களுக்குள் உண்டு. இதன் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்றால் எளிதில் பெறலாம். அந்த வலிமை கூடுகின்றது.

இதைப்போல எண்ணும்போது நம் குரு காட்டிய அருளுணர்வுகள் உங்களுக்குள் உறுதுணையாக இருந்து இதையெல்லாம் பெறக்கூடிய தகுதி ஏற்படுத்துகின்றது. இதை நீங்கள் பின்பற்றுங்கள்.

அதே சமயத்தில் இப்பொழுது நமது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிகளில் தாயின் வழிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற ஆசைப்பட்டால் இது இச்சா சக்தி.

அப்பொழுது இந்த உணர்வுகள் உங்களுக்குள் கிரியையாகி அந்த ஞான சக்தியாக உங்களை இயக்கும். தாயின் துணை கொண்டு அதை எளிதில் பெறலாம். “இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி”.

இந்த உணர்வின் தன்மை நம் உடலில் வரப்படும் பொழுது தீமை அகற்றிடும் ஞானம் வருகின்றது. அந்த ஞானத்தின்படி நாம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

பிரம்ம குருவான வசிஷ்டரைக் கேட்டுத் தான் எல்லாம் செய்வார்கள்

 

மனிதனான பின் தசரதச் சக்கரவர்த்தி… இந்த உயிர் “பத்தாவது நிலை” அடையக்கூடிய பக்குவம் பெற்றது. இதற்குப் பிரம்ம குருவாக இருப்பவர் யார்…?

வசிஷ்டர்…! வசிஷ்டரைக் கேட்டு விட்டுத் தான் எல்லாம் செய்வார்கள்.

பத்தாவது நிலையை அடையும் நிலையில் இன்று மனிதனாக இருக்கின்றோம். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைக் கவர நேர்ந்தால் அது வசிஷ்டர் தான்.

அந்தத் துருவ நட்சத்திரம் இருளை நீக்கி ஒளியாக மாற்றியது.
1.நீங்கள் கவர்ந்து கொண்ட அந்தச் சக்தி உங்களுக்குள் பிரம்மமாக உருவாக்குகின்றது… அந்த உணர்வின் அணுவாக.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு எதுவோ அருந்ததி… அதனுடன் இணைந்து உங்களுக்குள் ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

இவ்வளவு பெரிய தத்துவத்தை இராமாயணத்தில் இந்த உயிர் என்ன செய்யும்…? என்று தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“வசிஷ்டரும் அருந்ததியும் போல” என்றால் ஒருவர் வேதனைப்படுகின்றார். நாம் பாசமாக என்ன…? ஏது…” என்று விபரங்களைக் கேட்டறிகின்றோம்.

அப்போது வசிஷ்டர். ஆண்பாலாக உடலுக்குள் அந்த வேதனையான உணர்வுகள் உறைகின்றது. அந்த குணத்தின் சக்தி இங்கே வந்தால் அருந்ததி… வேதனை உணர்வைத் தான் உங்களுக்குள் இயக்கும்.

“நளாயினி” என்றால் எந்த உணர்வின் சக்தியாக ஆனதோ இந்தச் சக்தி “உறுதுணையாகத் தான் இருக்கும்” என்று பொருள்.

சாவித்திரி போன்று என்றால் அந்த உணர்வுகள் (வேதனை) விஷத்தின் தன்மையாகவே நம்மை இயக்கும் என்று பொருள்.

ஆனால்…
1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால்
2.நம் உணர்வுகளை எல்லாம் அது ஒளியாக மாற்றும் என்பதை இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

இது நம்முடைய சாஸ்திரங்களின் உண்மை. ஆனாலும் இதனை அறிய முடியாதபடி காலங்களால் எத்தனையோ நிலைகள் மாறிவிட்டது

மறைந்த உண்மைகளை எப்படியும் பெற வேண்டும் என்பதற்குத் தான் உங்களை நீங்கள் முழுமையாக அறிய வேண்டும் என்ற நிலையில் இதை குருநாதர் காட்டிய அருள் வழியினை உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

விஞ்ஞான உலகில் பேரழிவு வரும் நிலையிலிருந்து
1.உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்
2.அன்பு கலந்த உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள்.
3.அருள் ஞானிகளின் உணர்வை வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

அந்த உணர்வைத் தான் உங்களில் இப்போது பதிவாக்கி அதை உருவாக்குகின்றேன் (ஞானகுரு).

பூஜையும்… பல நாமங்கள் கொண்டு ஜெபிப்பதும்… ஆண்டவனின் அருள் பெறும் நிலையல்ல

 

1.இறை சக்தியைக் கண்டிடவே… இறைவன் பூஜை செய்து விட்டால் இறைவன் அருள் கிட்டுமா…?
2.அந்த இறைவனின் எண்ணம் மட்டுமே இருந்து…
3.அந்த இறைவனே வந்து நமக்கு எல்லா அருளையும் அருள்வான்…! என்று
4.இறைவனையே எண்ணிப் பூஜித்தால் இறைவன் அருள் கிடைக்குமா…?

ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும் பருவம் முதல் எந்த எண்ணத்தை முதலில் பாய்ச்சுகின்றாளோ அந்த எண்ணம் அந்தக் குழந்தைக்குச் சுற்றிக் கொண்டே தான் இருக்கும்.

ஒரு குழந்தை அது பிறந்தது முதல் அந்த இல்லத்தில் உள்ளோரின் எண்ணத்தின் சுவாச நிலைகளை வளர்ந்து வரும் அந்தக் குழந்தைக்கும் நாம் அளிக்கின்றோம் என்பதனை உணர்ந்து
1.வளரும் பருவத்திலேயே நல் உணர்வை
2.நாம் அந்தக் குழந்தைக்கு அளிப்பது தான்
3.இறை சக்தியை அதற்கு அளிக்கும் நிலையப்பா…!

இறை சக்தி என்பதைப் பல நாமம் கொண்டு அழைத்து வணங்குகிறோம். அப்படி வணங்கும் பொழுது நம்முள் உள்ள இறைச் சக்தியை
1.நாம் எந்த நிலை கொண்டு நாம் அதன் தன்மையைப் பெற்றுள்ளோமோ
2.அதற்குகந்த சக்தித் தன்மை தான்
3.நாம் அழைத்து வணங்கும் இறை நாமத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நம் எண்ணத்தில் பல கலக்கங்களைக் கொண்டு கோப தாப துவேஷ நிலைகளை எல்லாம் நம்மையே சுற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம்மைச் சாந்தப்படுத்திச் சமநிலைப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் நிலை கொண்டு
1.நாம் அடைந்த இத் தீய நிலைகளை எல்லாம்
2.நம்மையே சுற்றிக் கொண்டுள்ளாமல் இருக்கும் நிலைக்கு
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச் சாந்த நிலை கொண்டு
4.நம் நிலையில் என்றும் நாம் மாறுபடாமல்
5.சாந்தமான நிலையில் அன்பு கொண்டு வாழ்ந்திடும் வாழ்க்கையே
6.அந்த இறை சக்தியை நாம் பெற்ற வாழ்க்கையாகும்.

பூஜையும் பல நாமங்கள் கொண்டு ஜெபிப்பதும் ஆண்டவனின் அருள் பெறும் நிலையல்ல.

மன அமைதிப்படுத்திட நம் மனதை அன்பு கொண்டு அந்த ஆண்டவனின் நாமத்தை அன்புடன் உச்சரிக்கும் பொழுது அந்த நாமத்தின் வழியினிலே
1.“நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளும் நிலை தான்”
2.பல ஆண்டவனின் நாமத்தை நாம் ஜெபித்துப் பூஜிப்பதுவே…!

ஆண்டவனின் அருளைப் பெற நம்மை நாம் பக்குவப்படுத்துவது என்பது
1.அடித்துத் துவைத்து வெளுக்கும் நிலையல்ல.
2.அறிந்து… அந்த அழுக்கைப் போக்க அலசி எடுக்கும் நிலை தான் நம் நிலைக்கு வரவேண்டும்.

ஆண்டவன் என்னும் எண்ணத்தையே பெரும் ஆர்ப்பாட்டமாகக் கோவில்களுக்குச் சென்று பல பூஜைகளைச் செய்து பெறுவதல்ல அந்த ஆண்டவனின் அன்பு.

நம்மை நாம் அன்புப்படுத்தி அறம் கொண்ட வாழ்க்கை வாழ்வது தான் அந்த இறைவன் அருள் பெறும் இன்ப நிலையாகும். இந்த இன்ப நிலை பெறுவதற்கு
1.தன் வாழ்க்கை நிலையை இன்பமாக்கி
2.இறைவன் அருள் பெறுவதுவே இன்ப நிலை என்றுணர்ந்து
3.அந்த இறை சக்தியின் நிலை பெற்று வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் மிகவும் மோசமானவர். ஆனால் வாயினால் அழகாகப் பேசுவார். அப்படி அழகாக மகிழ்ச்சியான நிலைகளில் அவர் பேசுவதை “நாம் பதிவு செய்து கொள்கின்றோம்”.

அவர் ஏமாற்றுவதை இன்னொருவர் தெரிந்து வைத்திருக்கிறார்.

ஏன் அவர் வலையில் போய்ச் சிக்குகின்றீர்கள்…? உங்களை அவர் “ஏமாற்றிவிடுவார்…!” என்று நம்மிடம் சொல்கின்றார்.

முதலில் சொன்னவர் உணர்வு வந்த பின் இவர் என்ன சொன்னாலும் “ஏமாற்றுவதற்குத்தான் சொல்கின்றார்” என்று எண்ணுகின்றோம். இரண்டாவது சொல்பவர் “அனுபவப்பட்டவர்” நம்மிடம் வந்து சொல்கின்றார் என்று எண்ணுவதில்லை.

அதற்குப் பதில் அவரைக் குற்றவாளியாக்குகின்றோம்.

பார்…, அவரிடம் நட்பாக இருக்கின்றோம். பொறாமையால் பிடிக்காத நிலைகளில் “இப்படிச் சொல்கிறார்…” என்று எண்ணுகின்றோம்.

நம்மைக் காப்பதற்காகச் சொன்னாலும் அவரிடம் உங்களை எப்படியெல்லாம் சொல்லுகின்றார்…! என்று (முதலமாவரிடம்) சொல்லி விடுகின்றோம்.

ஆனால் சொல்லி ஏற்றுக் கொண்டு சிந்தித்துப் பார்க்கின்றோமா…? என்றால் இல்லை. அந்த உணர்வை உடனே வெளிப்படுத்துகின்றோம்.

அவர்களுக்குள் தீமை செய்யும் உணர்வுகளே விளைந்திருக்கின்றது. (நாம் தவறு செய்யவில்லை).

ஆனால் அவரின் இனிமை நமக்குள் விளைந்து விட்டால், பின்னாடிதான்… “அதிலே சிக்கிவிட்டோம் போல் இருக்கிறது…” என்று தெரிகின்றது.

இதை நாம் எப்படி மாற்றுவது…? ஏமாற்றுபவர்களிடம் சிக்காமல் இருக்க வழி வேண்டுமல்லவா…!

உதாரணமாக ஒரு புலி ஒரு மானைப் பார்க்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த மானைப் பார்த்தவுடன் அமைதி கொண்டதாகவே இருக்கின்றது. தன்னருகிலே இருப்பதை உற்றுப் பார்ப்பதில்லை.

வெகு தூரத்தில் இருக்கும் மானைப் புலி குறி வைக்கிறது. அதைப் பதிவு செய்துவிட்டதென்றால் அதன் மேல் எண்ணம் வருகின்றது.

பக்கத்திலிருப்பதை நின்று வேடிக்கை பார்க்கின்றது. ஆனால், தூரத்தில் இருப்பதை உற்றுப் பார்க்கும் பொழுது அந்த மான் ஓட ஆரம்பிக்கின்றது.

மானிற்கு இந்த உணர்வின் ஒலி பட்டபின் “உணர்வின் அறிவு” உன்னைக் குறி வைக்கின்றது என்று உணர்த்துகின்றது. உடனே அது ஓட ஆரம்பிக்கின்றது.

1.புலியோ பக்கத்தில் இருக்கின்றதைப் பிடிக்காதபடி
2.தூரத்தில் இருப்பதைத் துரத்திச் செல்கின்றது.
3.அந்த உணர்வின் வலு எதுவோ அதனைத்தான் துரத்துகின்றது.
4.இதைப் போலத்தான் நாம் எதனைப் பதிவு செய்கின்றோமோ
5.அந்த உணர்வின் “நினைவாற்றல்தான்” நம்மை இயக்குகின்றது.

ஆகையினால் நாம் பக்கத்தில் இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு, அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் இது நம்மை ஒன்றும் பாதிக்காது.

அகஸ்திய மாமகரிஷி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை தன் தாய் கருவிலேயே பெற்றார். அவர் மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கி உயிருடன் ஒன்றச் செய்த அலைகள் இன்றும் உண்டு.

அவைகளை நாம் நுகர்ந்தால் அந்த எண்ணம் வரப்படும்போது நம் உடலிலே நுகர்ந்த தீயவைகளுக்கு எமனாக ஆகின்றது. தீயவைகளைக் கொல்லக்கூடிய நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து அதை நாம் அறிந்து கொண்டாலும் தீமை என்று அறிந்தபின் மகரிஷிகளின் அருள் சக்தியை இந்த முறைப்படி உள்ளே நுகர்ந்து அதைப் பிளத்தல் வேண்டும்.

ஆனால் இதைப் பிளப்பதற்கு, “நுகரும் ஆற்றல்” அந்தச் சக்தி வேண்டும். அந்த சக்தி இல்லையென்றால் நாம் நுகர முடியாது.

அந்த உணர்வின் சத்தை நுகர்வதற்கு என்ன வழியோ அதைத்தான் உங்களிடம் யாம் “பதிவு செய்து” கொண்டிருக்கின்றோம். குருநாதர் எமக்கு அப்படித்தான் சொன்னார். அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறோம்.

மந்திரவாதிகள் செய்யும் சில தந்திரமான வேலைகள்

 

அன்று சாங்கிய சாஸ்திரங்களை ஏற்படுத்தினார்கள் அல்லவா… அந்த அரசர்கள்…! அதற்கென்று ஒரு கூலி ஆளை வேலைக்கு வைத்திருப்பான் ஐந்தாம் படை என்பார்கள்.

அது போன்று தான் இன்றும் அந்த வழியில் வந்தவர்கள் மந்திர தந்திர வேலைகள் செய்து கொண்டுள்ளார்கள்.

உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அதற்கென்று இன்று சாங்கியங்களைச் செய்கிறோம். அதை எல்லாம் செய்து கொண்ட பிற்பாடு தனித்துப் பிரித்து வைத்துக் கொண்ட பின்
1.நம் வீட்டு வாசல் படியில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.
2.அதை எடுத்த பின் அதற்கென்று தனித்த இடத்திற்குக் கொண்டு செல்வார்கள்.

இறந்தவரின் உடலை எங்கே புதைத்தார்களோ அதைத் தெரிந்து கொள்வார்கள். புதைத்திருந்தால் அந்த இடம் அல்லது சுட்டு (தகனம்) இருந்தால் அந்த இடம். அங்கே செல்வார்கள்.

எந்த தெய்வத்தின் மேல் அவர் பக்தி கொண்டு வாழ்ந்திருந்தாரோ எந்தெந்த வழிகள் அதைப் பின்பற்றி மந்திரம் எல்லாம் சொன்னாரோ அதை வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

இந்த தெய்வத்தின் மீதுதான் அவர் பக்தி கொண்டார் என்ற நிலை வந்தவுடனே இறந்தவர் வீட்டில் அவர்கள் தந்தையை நினைத்துச் சாமி கும்பிடுவார்கள். ஆனால் அவர்கள்
1.சுடுகாட்டில் பாத மண்ணை வைத்து மந்திரத்தை சொல்லி
2.அந்த இறந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்.

கைவல்யப்படுத்திய பின் பல பல வேலைகளைச் செய்வான். குட்டிச்சாத்தான் ஆக மாற்றுவான்… பில்லி சூனியத்திற்குப் பயன்படுத்துவான்… ஒரு சிலரின் நோய்களைப் போக்கவும் பயன்படுத்தலாம்.

இதுகள் எல்லாம் செயல்படுத்துவதற்கு… கர்ப்பத்தில் உருவாகும் கரு கலைந்தது (ABORTION) என்றால் அதை எடுத்துக் கொள்வார்கள். ஆஸ்பத்திரிக்குச் சென்று பிரசவத்தின் போது வரும் பனிக்குட நீரை எடுத்துக் கொள்வார்கள் இது எல்லாம் மந்திரவாதிகள் செய்யக்கூடிய நிலைகள்.

அதை எடுத்து வைத்துக்கொண்டு மந்திரத்தைச் சொன்ன உடனே இந்த குழந்தையினுடைய (பனிக்குட நீரை எடுத்த குழந்தையின் ஆன்மா) ஆன்மா பிரிந்துவிடும்.

மந்திரத்தால் அதைக் கவர்ந்து கொண்டு சில கரு வித்தைகளை எல்லாம் செய்வார்கள் அதாவது… ஜோதிடங்கள் பார்ப்பது குடும்பங்களைக் கெடுப்பது தனக்கு ஆகாதவர்களுக்கு தீய செயல்களைச் செய்வது… குட்டிசாத்தானாக வைத்து வேலைகளைச் செய்வார்கள்.

ஆகவே
1.இந்த சாங்கிய சாஸ்திரங்களில் சிக்குண்ட குடும்பங்கள் எல்லாம்
2.இப்படி பேயாகப் போய்… நோயாகப் போய்… சர்வ நாசமாக ஆகிப்போகும் நிலைகள் தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

உடலை விட்டுப் போன பிற்பாடு அந்த ஆன்மாக்களுக்கு நாம் இங்கே உணவை வைத்துக் கூப்பிடுவோம். ஆனால் கடைசியில் இன்னொரு உடலுக்குள் சென்று அவஸ்தைப்பட்டு அந்த உடலை விட்டுப் போன பிற்பாடு தேளாகவோ பாம்பாகவோ பூச்சியாகவோ தான் பிறக்க வேண்டி வரும்.

குடுகுடுப்புக்காரன் வீட்டுக்கு வந்தால் புது துணியைக் கொடுத்தால் வாங்க மாட்டான். பழைய துணிகளைத் தான் கேட்டு வாங்குவான் காரணம் நம் உடலிலிருந்து வெளி வந்த மணம் அதிலே இருக்கும்.

அதை வைத்து மந்திரங்களை ஜெபித்த உடனே
1.இங்கே வீட்டில் நாம் என்னென்ன செய்திருக்கின்றோம்…?
2.வீட்டிற்குள் நாம் மறைத்து வைத்திருக்கக்கூடிய அடுக்குப் பானையில் இருப்பதையும் சொல்ல ஆரம்பிப்பான்.

இப்படி இதை இவனுக்கு ஒரு பிழைப்பாகச் செய்வான். பற்றாக்குறைக்கு ஆகாதவர்கள் யார் என்று தெரிந்து வைத்திருப்பான். அவனே அதாவது செய்துவிட்டு வந்து “உங்களுக்கு ஆகவில்லை…” என்பான்.

காரணம்…
1.இன்னார் தான் உங்களுக்கு இந்தக் கெடுதலைச் செய்தார்கள் என்று சொல்வான்.
2.நாம் அடப்பாவிகளா…! என்போம்.
3.எல்லாம் சொன்ன பின்… வெளியிலே சொல்லக்கூடாது ஆபத்தான விஷயம் என்று
4.நம்மிடம் சத்தியமும் வாங்கிக் கொள்வான். பரிகாரம் என்ற பெயரில் காசையும் வாங்கிக் கொள்வான்.

சிநேகிதமாகச் சொல்வது போல் சொல்லி தலை முடியும் பழைய துணிகளையும் கொடுங்கள் என்று அதையும் கேட்டு வாங்கிக் கொள்வான்.

தலைமுடி பழைய துணியை வைத்து அதற்கென்ற கருவை வைத்து மணலில் எல்லாவற்றையும் கலந்து சில வீடுகளில் தூவிவிடுவான்.

அந்த மணல் பட்டதென்றால்
1.வீட்டிலிருப்பவருக்குக் கை கால் வராதபடி செய்யும்
2.குழந்தை உருவானால் அந்தக் கருக்களைச் சிதையச் செய்வது.
3.சில இடங்களில் நிறைய இது போன்று செய்வார்கள்.

இந்த மாதிரித்தான் சாங்கியங்களைச் செய்து… காசைக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பி விடலாம் என்று நினைக்கின்றார்கள்…! ஆனால் மோட்சத்திற்குச் செல்ல முடியாது.

1.இந்தச் சாங்கிய சாஸ்திரப்படி அனுப்பினோம் என்றால் நிச்சயம் நரக வேதனைப்படும் நிலைகளுக்குத் தான் செல்ல முடியும்
2.மனிதனல்லாத உயிரினமாகத்தான் உருவாக்குமே தவிர
3.மீண்டும் மனிதனாகக் கூட வரத் தகுதி இல்லாது போய்விடும்.

கல்லுக்குள் தேரையும் மாம்பழத்திற்குள் வண்டும் எவ்வாறு ஜீவன் பெறுகிறது…?

 

சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் இடங்களில் எல்லாம் உயிர் அணுக்கள் ஜீவன் பெற்று வாழ்கின்றன. பூமியின் மேல் பகுதியிலும் அடிப்பகுதியிலும் உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.

அதே போல் காற்றிலும் பல உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. வான மண்டலத்தில் பல உயிரணுக்கள் பறந்து இக்காற்றினில் வீசிடும் பல உயிரணுக்களையே ஆகாரமாக எடுத்து அந்த நிலையிலேயே முட்டையிடுகின்றது.

அந்த முட்டை மேலிருந்து கீழ் வரும் பொழுது பூமிக்கு வந்து தாக்குவதற்கு முதலிலேயே வான மண்டலத்திலேயே அந்த முட்டை வரும் வேகத்திலேயே வெடித்து குஞ்சு வெளிப்பட்டு அந்தக் குஞ்சு அந்த நிலையிலேயே பறக்கும் நிலை பெற்று உயிர் வாழ்கின்றது.

இப்படி பூமிக்கும் உயிரணுக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலேயே வான மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. அதே போல்
1.பூமியிலும் கல்லுக்கடியில் தேரை எப்படி வந்தது…?
2.அந்தத் தேரை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத் தாயினம் இருந்ததா…?
3.மாம்பழத்திற்குள் வண்டு எந்த நிலை கொண்டு உள்ளே சென்றது…?
4.பூவிலேயே முட்டையிட்டு அந்த முட்டை அதே நிலை கொண்டு உயிர் பெற்றதா…?
5.பூ காயாகிக் கனியாகும் வரை அந்த முட்டை அங்கேயே முட்டையிலிருந்து புழு வந்து வண்டானதா..? என்று எல்லாம் எண்ணுகின்றோம்.

இதன் நிலையை ஆராய்ந்து உண்மை அறிந்தோர் வெளியிடவும் இல்லை. ஆனால் பல மெய் ஞானியர்கள் அறிந்த பேருண்மை இது.

மாம்பழத்தில் வண்டு வந்ததின் உண்மை நிலை அந்த மரத்தில் பூப்பிடித்துக் காயாகும் தருணத்தில் அந்தப் பூவில் உள்ள ஈரப்பசை கொண்டு அக்காய் பிடித்து அது கனியாக ஆவதற்கு முன்
1.அந்தக் காய்க்கு மேல் சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் பொழுது
2.அந்த ஒளிக் கதிரிலிருந்து காயில் உள்ள ஈரப்பசையின் சுவாச நிலைக்குகந்த உயிரணு
3.அந்தக் காயிலேயே தான் உற்பத்தியாகின்றது.

சூரிய ஒளி பட்டவுடன் அவ்வுயிரணு ஜீவன் பெற்றுப் புழுவாகி வண்டாகி அந்தக் காயில் உள்ள மாங்கொட்டையின் பருப்பினையே உணவாக ஏற்று மாங்காயின் உள்ளேயே உயிர் வாழ்கின்றது.

அதன் சுவாச நிலைக்கேற்ப ஆகாரமும் அம்மாங்காயிலே தான் அதற்குக் கிடைக்கின்றது. அந்தக் கனியைப் பறித்து அதை அறுத்துப் புசிக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது அந்த வண்டு வெளிப்படுகின்றது. வெளிப்பட்ட வண்டிற்கு வேறு நிலையிலுள்ள (வெளி உலக) சுவாசத்தை ஈர்க்கும் தன்மை இல்லாததினால் கனியிலிருந்து வெளிப்பட்ட உடனே அது மடிகின்றது. அதன் சுவாசத்திற்குகந்த ஆகாரம் இல்லை என்றால் அதனால் வாழ்ந்திட முடியாது.

கல்லுக்குள் தேரை வந்ததும் இதே நிலையே.

கல்லிற்குள் இருக்கும் ஈரப்பசையில் கல்லிற்கு மேல் படும் சூரிய ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கல்லுக்குள் இருக்கும் ஈரத்தில் அங்கேயே ஒரு ஜீவன் உற்பத்தியாகி அது வாழ்ந்து அந்தக் கல்லுக்குள்ளேயே மடிகின்றது.

1.எல்லா உயிரணுக்களுக்கும் தாய் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலை இல்லை.
2.தேரை மாம்பழத்தில் உள்ள வண்டு ஈ கொசு எறும்பு விட்டில் பூச்சிகள் ஈசல்கள் பலவிதமான புழுக்கள் இவைகளில் எல்லாம்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை… தாய் தந்தை என்ற நிலையும் இல்லை.
4.சூரிய சக்தியிலிருந்து அந்தந்த நிலைக்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு உயிர் பெற்று வாழ்வதுவே.

இப்படி இயற்கையின் சக்தியிலே பல கோடி உண்மைகள் உள்ளது.

அதற்காகத்தான் நம் முன்னோர்கள் இயற்கையையே ஆண்டவனாகப் பணித்தார்கள்.
1.இந்த இயற்கை தந்த ஆண்டவனைக் கண்டவர்கள் இந்த உலகிலே யாரும் இல்லை.
2.இந்த உலகில் மட்டுமல்ல… சூட்சம நிலை பெற்ற பாக்கியவான்களாலும்…
3.இயற்கை சக்தி தந்த ஆதி அன்னையை அறிந்தவர்கள் யாரும் இல்லை.

அவள் தந்த சக்தியையே சூரியனையும் காற்றையும் மழையையும் இவற்றின் அருள் பெற்ற இயற்கை அன்னையையும் என்றென்றும் நாம் எண்ணி வணங்கிடுவோம்… போற்றிடுவோம்…!

இயற்கையின் அன்பு நிலையில் நம்மையும் அன்பு கொண்டு
இயற்கைகளின் இயற்கையையும் (படைப்புகளையும்) அன்பாக்கி
இயற்கை அன்னை தந்த – அந்த இயற்கையில் வந்த நாமும்
இயற்கையுடனே ஒன்றி அன்பு கொண்டே என்றும் வாழ்ந்திடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரும்
2.அவர் ஞானம் பெற்ற நிலையும்
3.துருவத்தின் ஆற்றலை அறிந்து “துருவ நட்சத்திரமாக” ஆன நிலையும்
4.காலத்தால் மறைந்தே போய்விட்டது என்று சொல்லலாம்.

அகஸ்தியரை “எல்லாவற்றிலும் வல்லவர்” என்று சொல்லி மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் ஓரிரு இடங்களில் அவர் வருவதாகக் காட்டி அத்துடன் நிறுத்தி விட்டார்கள்.

நம் பூமியிலிருந்து “விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்” என்ற நிலை விநாயகர் தத்துவத்தின் மூலம் காட்டியிருந்தாலும் அதை வெறும் சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள்.

அவர் தான் பெற்ற விண்ணின் ஆற்றல்களைத் தன் இன மக்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று தென்னாட்டிலே தோன்றிய அந்த மகா ஞானி வெளிப்படுத்திய நிலைகளை அரசர் காலத்தில் சுத்தமாகவே மறைத்து விட்டார்கள்.

சாங்கியங்களைச் செய்தால் ஆண்டவன் மெச்சி உனக்கு எல்லாம் செய்வான் என்று நம்மைச் சரணாகதி தத்துவத்தில் திசை திருப்பிவிட்டார்கள்.

ஆனாலும்… இன்று காலம் கடந்த இந்த நேரத்திலாவது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அகஸ்தியரைப் பற்றி அறிந்து கொண்டோம்.

அறிந்து கொண்ட பின்னும் இப்பொழுது இந்தச் சந்தர்ப்பத்தில் இதை இழந்து விட்டால் அடுத்து நமக்கு விண் செல்லும் மார்க்கம் ஏது…?

அந்த மெய்ஞானி காட்டிய உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்று காடு மலை எல்லாம் என்னை (ஞானகுரு) அலைய வைத்தார்.

1.உண்மையை அறிந்து கொள்வதற்கு உணர்வின் தன்மையைப் பதிவாக்கினார்.
2.பதிவின் நிலைகள் அனைத்தும் அறிந்து கொண்டபின் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.
3.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவருக்கும் நீ பெறச் செய். மறைந்த நிலைகளை மீண்டும் மக்களுக்கு எடுத்து ஊட்டு.
4.இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

உனக்குள் மக்களின் உணர்வுகள் உண்டு. அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்துக் கொண்டால் அந்த மகிழ்ச்சி என்ற உணர்வு வருகின்றது.

அதனால் நீயும் ஒளியாகின்றாய். கேட்போரும் ஒளியாகின்றார்கள். பிறவி என்ற நிலையை அகற்றுகின்றாய். அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை அமைகின்றது.

பேரருளை உனக்குள் வளர்த்துவிடு. எல்லோரையும் பேரின்பம் பெறச் செய். அதுவே உனக்குள் பேரானந்தப் பெரு நிலையாக ஏகாந்த நிலை அடைய உனக்கு உதவும் என்று கூறினார்.

அதைத் தான் இங்கே செயல்படுத்துகின்றோம் (ஞானகுரு).

தாக்கும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்க்க வேண்டும்

 

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான் அவனை நேரடியாகத் தாக்கவில்லை என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். காரணம் என்ன…?

அதாவது குகை மீது இருக்கும் பாறையைத் தன் காண்டீபத்தால் தாக்கி வாசலை மூடிவிடுகின்றான்.
1.குகையில் கல்லைப் போட்டு மூடியவுடனே அதற்குள் வாலி அடைபட்டுவிடுகின்றான்… அவன் வளர்ச்சி குன்றுகிறது.
2.அவனைக் கொல்லவில்லை… அவன் செயலாக்கத்தைக் குறைக்கின்றான் என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

உதாரணமாக… வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் இங்கே வாலியாகின்றது. அதே சமயத்தில் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவில் முன்னாடி நிற்கின்றது.
1.ஆன்மாவில் இருப்பதைத் தான் நாம் சுவாசிக்க முடியும்.
2.சுவாசித்ததைத்தான் உயிர் இயக்கி அதனதன் உணர்ச்சிகளாக நமக்குள் தூண்டும்.
3.அதன் வழியிலே தான் நம் எண்ணம் சொல் செயல் எல்லாமே இருக்கும்.

அப்போது அந்த வேதனையான உணர்வலைகள் உள்ளே புகாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!

பல கோடித் தீமைகளை வென்றவன் தான் அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக உருவானது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் அதைச் செலுத்தினோம் என்றால் அதற்கப்புறம் மற்ற தீமைகள் உள்ளே செல்லாது.

1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவுகளைக் கூட்டப்படும் போது
3.இங்கே வலிமை பெறுகின்றது… மற்றதை ஈர்க்கும் சக்தி குறைகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்ட பின் அந்தச் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதன் வழி நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.

அப்படி நினைவைச் செலுத்தினால் நம் உடலில் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலிமை பெறுகின்றது.
1.இந்த வலிமை பெறப் பெற இதனின் அழுத்தம் ஆக ஆக
2.வேதனை என்ற உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றுவிடுகிறது.

காலையிலிருந்து இரவு வரை நாம் கவர்ந்ததெல்லாம் (சுவாசித்தது)
1.சாதாரணமாக ஒரு சாண் நீளம் உடலைச் சுற்றி நமக்குள் ஆன்மாவாக இருக்கின்றது.
2.அதிலிருக்கும் வேதனை என்ற உணர்வின் தன்மையை மாற்றத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கச் சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வலுவைக் கூட்டக் கூட்ட
1.ஆன்மாவில் இருக்கும் தீமையான உணர்வுகள் நகர்ந்து நகர்ந்து சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விடுகிறது.
2.நம் பிடிப்பில் இல்லாததால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடுகிறது
3.நம் ஆன்மா தூய்மை அடைகிறது.

நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்று இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார். அதாவது வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான்… அவனை நேரடியாகத் தாக்கவில்லை.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து… சுவாசத்தில் வரும் தீமை புகாதபடி இங்கே அடைக்கப்பட்டு… அந்தச் சக்தி உடலுக்குள் வலிமையான பின் நம் ஆன்மாவிலிருந்து தீமைகளைப் பிரித்துவிடுகிறது… பிளந்து வெளியே தள்ளிவிடுகிறது.

சுவாச நிலையைச் சீர்படுத்தித் தியானித்தால் எதையுமே எளிதில் சமப்படுத்த முடியும்

 

தியானத்திற்கு வரும் பொழுது “சுவாச நிலை எடுத்துத் தியானம் பெற வேண்டும் என்பது…” நம் எண்ணத்தை முதலில் அச்சுவாச நிலையினால் சமப்படுத்துவதற்காகத்தான்.

தியான நிலைக்கு அமரும் நிலையில் “முதலில் அச்சுவாச நிலையை ஈர்த்துக் கொள்…!” என்று அதனால் தான் சொல்கிறோம்.
1.நாம் தியானத்தில் அமர்ந்தவுடனே
2.சுவாசம் ஒரு நிலையில் இல்லாமல்
3.மேலும் கீழுமாக ஆடிக் கொண்டே தான் வரும்.

நம் எண்ணம் முழுவதையுமே அந்த ஜெப நிலையில் நினைவைச் செலுத்திய பிறகுதான்
1.ஒரே நேர்பட்டுச் சம நிலை பெற்று…
2.பிறகு உயர்ந்த நிலையில் நாம் இருப்பதைப் போன்ற
3.நம் உடலும் மனமும் எண்ணும்படி அந்தச் சுவாசம் உயர்ந்து செல்கிறது.

அந்த நிலையில் இவ்வுலகம்… இந்த உடல்.. எல்லாவற்றையும் மறந்து நாம் உயர்ந்த நிலையில் “பறந்த நிலையில்… சஞ்சரிக்கும் தன்மை பெற்றுச் சஞ்சரிக்கின்றோம்…!”

நம் நினைவுகள் அந்தத் துருவ நட்சத்திரத்திலும் சப்தரிஷி மண்டலத்திலும் சஞ்சரிக்கும். உடல் உணர்வு இல்லாதபடி ஏகாந்தமாக மேல் நோக்கி நாம் செல்வது போல் நிச்சயம் உணரலாம்.

1.நாம் செய்யும் தியானத்தில் இதை எல்லாம் உணர்கிறோம் என்றால்
2.அந்த மெய் ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகள்
3.அப்பொழுது நம் உடலுக்குள் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஆகவே நமக்கு முன் தோன்றிய பல மகரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து நாமும் அந்த ஜெப அருளைப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிறவியில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
1.அந்தச் சூட்சம உலகில் கலந்துள்ள பெரியோர்கள் (மெய் ஞானிகள்) நம்முள் வந்து
2.நமக்குப் அருள் வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3.நம் உயிராத்மாவிற்குச் சேர்க்கும் நல் சொத்தாக அந்த மகரிஷிகளின் ஆசிகளை ஏற்று நம் வாழ்க்கையை வழி நடத்துதல் வேண்டும்.

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அவர்கள் வாழும் அந்தச் சூட்சம உலக்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிறரின் எண்ணமும் பிறரின் தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப் பெற்று அறிந்திட வேண்டும்.

பால் ஊட்டத் தாய்.. பாடம் புகட்ட குரு… வாழ்ந்திட மனைவி… வளர்த்திட மக்கள்… என்று ஒன்றுடன் ஒன்றி நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில்
1.”நான்” என்ற தனி நிலையில் இல்லாத நாம்
2.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெற்று வாழ்வதே
3.நம் உயிரணுவிற்கு நாம் சேர்க்கும் அழியாச் சொத்து என்று உணர வேண்டும்.

மெய் வழியில் நாம் செல்லும் நிலையில் நம்மை இயக்கிச் செல்வதுவே
1.அந்தப் பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.”நான்” என்ற நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அழிவிலிருந்து மீட்டிடும் நிலையாகக் கருவில் வளரும் சிசுக்களுக்கு அருள் ஞானத்தை ஊட்டி உலக ஞானம் பெறச் செய்ய வேண்டும்.

வான்மீகி ஆசிரமத்தில் சீதா கருவுற்றிருக்கும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு வான்மீகி ஓதிய உணர்வுகள் சீதாவின் கருவில் வளரத் தொடங்குகிறது.

இராமனைப் பற்றிய உண்மைகளையும் உலக நிலைகளையும் இந்த உலகிற்கே எடுத்துச் சொல்லக்கூடிய நிலைகள் அந்தக் குழந்தைகளுக்கு வந்தது.

இதைப் போல நம் குடும்பத்தில் வரும் அறியாத நிலையும் உலகத்தில் வரும் தீமைகளிலிருந்து மீட்டிடும் அருள் ஞானிகளை நாமும் உருவாக்கிடல் வேண்டும்.

விஞ்ஞானத்தை வெல்லும் மெய்ஞானத்தை உருவாக்கச் செய்யும் அருள் ஞானிகளை உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் மறைவில் தான் நாமும் வாழ முடியும்.

கருவில் வளரும் சிசுக்களில் இந்த ஞானத்தை வளர்த்து விட்டால் பேரருளைப் பெறும் ஞானிகளாக அவர்கள் வளரத் தொடங்குவார்கள்.

சீதா பல துன்பங்களை அனுபவித்தாலும் அன்று வான்மீகி இராமனைப் பற்றிய உண்மைகளையும் உலக ஞானத்தையும் சீதாவின் கருவில் வளரும் சிசுக்களுக்கு எடுத்து வான்மீகி ஓதினார்.

1.உலகைக் காத்திடும் தன்மையாக ஞானத்தைப் பெறும்படி செய்து
2.ஞானத்தின் உணர்வின் தன்மையைப் போதித்த நிலைகள்
3.அங்கே உருப்பெற்றது தான் “லவா… குசா…” என்று உணர்த்தினார்.

மனிதன் எப்படி வாழ வேண்டும்…? உணர்வுகளும் எண்ணங்களும் எப்படி வருகின்றது…? நாம் நுகரும் (குணங்கள்) சுவையின் உணர்ச்சிகள் எப்படியெல்லாம் நம்மை இயக்குகின்றது…? என்ற உண்மைகளைக் காவியமாகக் காட்டினார் வான்மீகி.

ஆகவே, நம் உயிரின் இயக்கமும் உடலின் தன்மையும் “கடைசி நிலை… என்ன…?” என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழி நாம் வாழ்வோம்.

நம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்.

அவர்கள் மீண்டும் ஒரு உடல் பெறும் நிலையை மாற்றிப் பேரொளி என்ற நிலையை அடையச் செய்வோம்.

அவர்கள் முன் சென்றால் நம் வாழ்க்கையில் அவர்கள் பெற்ற அந்தப் பேரருள் உணர்வை நாம் எடுத்து நாமும் அடுத்துப் பிறவியில்லா நிலை அடைவோம்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற தியானிப்போம். தவமிருப்போம்.

June 2022 உபதேசம்

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் சூட்சமம்

 

மாயவரத்தில் ஒரு டாக்டர் இருக்கின்றார். அவருடைய தாயாருக்கு வயது எண்பது இருக்கும் அவருடைய கணவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டார்.

அந்தத் தாய் “என் கணவர் என்னுடன் தான் இருக்கின்றார்…” என்ற நிலையிலே அது வாழ்ந்தது. மற்றவர்கள் பொட்டையும் தாலியை நீக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

என் கணவர் என்னுடன் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் அதை நீக்கஸ் சொல்கிறீர்கள்…? என்று மற்றவர்கள் சொல்வதை ஏற்காதபடி வீட்டிற்குள்ளேயே அடங்கி இருந்தது…. வெளியே சென்றால் அதையே கேட்கிறார்கள் என்று…!

அந்த அம்மா உபதேச வாயிலாக யாம் வெளிப்படுத்திய புத்தகங்களை இதற்கு முன்னாடி படித்திருக்கின்றார்கள். அதை மனதில் எண்ணிக் கொண்டு
1.இந்த மாதிரி ஒரு சாமி (ஞானகுரு) வருகின்றார்… அவரை நான் பார்க்க வேண்டும்
2.அவரை பார்த்து அவர் என்ன சொல்கிறார் என்ற விளக்கங்களைக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்தது.

ஆனால் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

நான் (ஞானகுரு) அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அப்போது
1.தெரிந்தோ தெரியாமலோ அந்த எண்ணம் (என்னுடன் தான் கணவர் இருக்கிறார்) எனக்கு வந்தது
2.சாஸ்திரங்களைப் பற்றி படிக்கும் பொழுது எனக்கு அந்த உள் உணர்வு ஒன்று தோன்றியது என்று
3.விபரங்களை எல்லாம் அந்த அம்மா சொல்லியது.

கணவனுடன் இணைந்து வாழ்கின்றோம். இருவரும் ஒன்றாகி விட்டால் மனைவி இறந்தால் கணவனும் உடனே இறக்கின்றான்… கணவன் இறந்தால் மனைவி இறந்து விடுகிறாள்…!
1.இப்படி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்து ஒரே உணர்வோடு சென்றால்
2.அந்த ஆன்மாக்கள் எங்கே செல்கிறது…? என்று இந்த ரகசியத்தை எல்லாம் நான் எடுத்துச் சொன்னேன்.

எனக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…? என்று அந்த அம்மா என்னிடம் கேட்கின்றது.

உங்களுடைய தாய் கருவிலே நீங்கள் விளையப்படும் பொழுது
1.இந்த உணர்வைப் பற்றி நீங்கள் கேட்டதால் உங்கள் உடலில் விளைந்திருக்கின்றது
2.அந்த உணர்வு தான் உங்களை இயக்குகின்றது என்று விபரத்தைச் சொன்னேன்.

கணவர் என்னுடன் தான் இருக்கின்றார் என்று தான் அறியாதபடியே அவர்கள் எண்ணிச் செயல்பட்டார்கள். ஆனால் சாங்கியம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை… சாங்கியம் செய்யவும் விடவில்லை

இருந்தாலும்… உன்னுடைய கணவருடைய ஆன்மா வேறு எங்கேயும் செல்லாதபடி உன் உடலைச் சுற்றிக் கொண்டே இருப்பதே நீ பார்க்கலாம் அம்மா…! என்று சொன்னேன்

அப்போது கணவனின் உணர்வலைகள் தனக்குள் இருந்து அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருந்ததோ அதை எல்லாம் அந்த அம்மா கண்களில் பார்க்கின்றது.

அந்த மகிழ்ச்சியான நிலையினை அந்தத் தாயும் மகனும் (டாக்டர்) காணுகின்றனர். பின் இன்றைக்குத்தான் இந்த உண்மைகளை நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது… உணர முடிந்தது…! என்று என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள்

என் தாயின் அருள் கிடைக்க வேண்டும்… என் குடும்பத்திலும் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட பின் டாக்டரும் வேண்டி நிற்கின்றார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் காலையில் நான்கு மணிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாவை உந்தி “விண்ணுக்குச் செலுத்துங்கள்…” என்று சொன்னேன்.

அந்த ஆன்மா இவர்கள் உடலுக்குள் செல்லவில்லை வெளியே தான் இருந்தது. உடலைச் சுற்றிக் கொண்டிருப்பதை அந்த உண்மைகளை அவர்கள் உணர்கின்றார்கள்.

யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்த பின் அவர் ஒளிச் சரீரம் பெறுகின்றார்.

ஏனென்றால் முன்னாடி அவர்கள் ஒரு பெரிய சாதுவைச் சந்தித்து இருக்கின்றார்கள். அவர் சில உபதேசங்களைக் கொடுத்திருக்கின்றார். இராமாயணம் மகாபாரதத்தை பற்றிச் சொல்லி இருக்கின்றார்.

ஆனால் சாங்கியங்கள் மட்டும் நீ செய்ய வேண்டாம்…! என்று ஒன்றை மட்டும் சொன்னார்… மற்ற விவரங்களை அவர் சொல்லவில்லை என்று அந்த அம்மா சொல்கிறது.

அவர் சொன்ன முறைப்படி என் கணவர் என்னுடன் தான் இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.
1.அவர் கட்டிய தாலி என்னுடன் இருந்தாலும்
2.அவருடன் ஒன்றி முழு மாங்கல்யக்காரியாகத்தான் நான் செல்ல வேண்டும் என்ற
3.அந்த எண்ணத்தில் தான் நான் வாழுகின்றேன்… என்று அந்த அம்மா சொன்னது.

ஏனென்றால் இந்த உண்மைகளை அறிந்தும் அறியாதபடி சில இடங்களில் சில நிலைகள் இருக்கின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்று லட்சம் பேரை நான் சந்தித்ததில் “எப்படி எல்லாம் இந்த உலகம் இயங்குகின்றது…?” என்பதைக் கண்டுணர முடிந்த்து.

ஆகவே… மனிதரான பின் இனி நமக்கு என்ன இருக்கின்றது…?

1.இந்த உடலுக்குப் பின் நான் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உறுதியை வைத்து விட்டால்
2.நாம் நிச்சயம் அந்த எல்லை அடைகின்றோம்…!

அதை அடைவதற்கு தான் இந்த உபதேசம்…!

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்…

 

விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கையை நாம் தொடர்தல் வேண்டும்.

விஞ்ஞான வாழ்க்கையில் வரும் கடுமையான விஷத்தன்மைகளால் சூரியனின் இயக்கச்சக்தி எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

1.வெயிலின் அழுத்தம் கடுமையாக… இன்று எப்படிச் சுட்டெரிக்கும் வெயிலாக வருகின்றதோ
2.சூரியனின் இயக்கம் ஒரு நொடிக்குள் கரண்ட்டை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலையாக
3.பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகும் நிலையாகி விட்டது.

ஒரு எலக்ட்ரிக் வயருடன் இன்னொரு எலக்ட்ரிக் வயர் உராய்ந்தால் அதிகமான மின்சாரம் பாய்ந்து பல்புகள் ஃப்யூஸ் ஆவது போல
1.ஒரு நொடிக்குள் சூரியனுக்குள் தாக்குதல் அதிகமாகி அதிகமான காந்தப்புலன்களை அது உமிழ்த்தி
2.அந்த உணர்வுகள் மனித உயிருக்குள் உராயப்பட்டு அதனின் உணர்வின் தொடராக அதிகமான உணர்ச்சிகளைத் தூண்டி
3.நம் உடலில் உள்ள அணுக்களில் கடுமையான மாற்றங்கள் மாற்றப்பட்டு
4.மனிதனே மனிதனல்லாத நிலைகள் செயல்படுத்தும் உணர்ச்சிகளைத் தூண்டி மனிதனைத் தாக்கிடும் நிலையாக வரும்.

ஒரு நொடி மாற்றத்தின் நிகழ்வுகளிலிருந்து உங்களைக் காக்கவும் உங்கள் சார்புடையவரைக் காக்கவும் இந்த உலகைக் காக்கவும் அருள் ஒளியின் உணர்வை தினமும் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் நமக்கு உறுதுணையாக இருக்க
2.”நாம் அனைவரும் ஒன்று…” என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற
3.எங்கிருந்தாலும் துருவ தியானத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தியானித்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தை நாம் அதிகமாகக் கூட்டி அதை அடர்த்தியாக உலகெங்கிலும் பரவச் செய்து உலக மக்களையும் காக்க முடியும்… அவர்களையும் நாம் நல்லவர்களாக்க முடியும்.

உலக மக்களின் தீமையான உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் பகைமையான உணர்வை வளர்க்கும் தன்மையிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளிய அருள் வழிப்படி இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை மாற்றி நஞ்சினை வென்று… நஞ்சினை வென்றிடும் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.

நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும்… தீமைகள் புகாது சேனாதிபதியாக அருள் ஒளியின் உணர்வை எடுத்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்தி அதனுடைய செயலாக்கங்களை மாற்றிடல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வின் வழிப்படி நாம் வாழ்ந்தோமென்றால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை. அதை அடைவது தான் மனிதனுடைய கடைசி எல்லை.

1.உயிர் தோன்றி உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கிய நிலைகளில்
2.உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவாக ஒளியாக மாறுதல் நாம் வேண்டும்.

எத்தகைய அழுக்குப் பட்டாலும் உடலை நாம் தூய்மைப்படுத்துகின்றோம். இந்த உடலிலே ஒரு திரவகமே பட்டு அதனால் தசைகள் வெந்தாலும் நாம் மருந்தைப் போட்டு அதை ஆற்றத் தொடங்குகிறோம்.

இதைப் போன்று
1.கடும் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தாலும் “அருள் மகரிஷிகள் உணர்வுகளை வைத்து அதை நீக்கிடல் வேண்டும்…”
2.இதுவே வாழ்க்கை என்ற நிலையில் அருள் வாழ்க்கை வாழ்வோம்
3.அருள் ஆற்றலை நாம் பெறுவோம்… அருள் ஆசையுடன் வாழ்வோம்.

இதைப் பேராசை என்று கூடச் சொல்லலாம்…!

அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற இந்த ஆசை என்றுமே நமக்குள் நிலையானதாக இருக்க வேண்டும். அதன் வழி வளர்ச்சி அடைந்தால் “உடல்” என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றோம்.

ஆனால் உடலுக்காக வாழும் போது “எண்ணியபடி நடக்கவில்லை…!” என்று நம்முடைய ஆசைகள் தடைபடும் பொழுது இது பேராசையாக மாறுகின்றது.
1.முதலில் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் என்று நினைப்போம்
2.அது வந்த பின் அடுத்து ஒரு லட்சம் கிடைத்தால் போதும் என்று நினைப்போம்.
3.முதலில் ஒரு சிறிய வீட்டைக் கட்டி இருப்போம்
4.அடுத்து இதைக் காட்டிலும் விசாலமான வீட்டைக் கட்டினால் நலமாக இருக்கும் என்று ஆசையைக் கூட்டிக் கொண்டே இருப்போம்.
5.சிறிது தடைப்பட்டாலோ வேதனைகள் கூடிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே இருளை அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுவோம்… மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்… மெய் ஞான வாழ்க்கை வாழ்வோம்

உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்… என்றும் பேரின்பம் பெறுவோம்… பெரு வாழ்க்கை வாழ்வோம். பிறவி இல்லா நிலை அடைவோம்… அருள் ஒளியாக என்றுமே நிலை கொள்வோம்.

1.சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றுமே நாம் என்றும் பதினாறு என்ற நிலைகளில் ஏகாந்தமாக வாழலாம்
2.வைகுண்ட ஏகாதசி வைகுண்டம் என்றால் அகண்ட அண்டத்திலும் ஏகாந்த வாழ்க்கை வாழக்கூடிய தன்மை.

பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற வாழ்க்கையை வாழத் தொடங்கினால் இதுவே வைகுண்ட ஏகாதசி…! என்றும் பகைமைகள் புகாத நிலையாக வருகின்றது.

ஆனால் விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் புவியின் ஈர்ப்புக்குள் நம்மைச் சிக்க வைத்துவிடும். இதிலிருந்து நாம் மீண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்… ஏகாந்த நிலை பெறுவோம்.

பேரின்பம் பெறுவோம்… ஏகாந்த நிலை பெறுவோம்…! என்று பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).

நடந்ததை நினைத்து வேதனைப்படுவதும்… நடக்கப் போவதாகக் கனவு காணுவதும் நமக்குகந்ததல்ல…!

 

சிறு சிறு மழைத் துளிகள் தான் பெரும் வெள்ளமாகச் செல்கிறது. நாற்று நட்டுப் பயிர் செய்து.. அந்தப் பயிரை விளைய வைத்து… அதை எடுத்து வந்து நாம் சமைத்துப் பக்குவப்படுத்திய பின் தான்… நாம் உணவை உட்கொள்ள முடிகின்றது.

அதே போல் தான் இந்தத் தியான முறையிலும் நம்மை நாம் சிறுகச் சிறுகப் பக்குவ நிலைக்குப் பதப்படுத்தித்தான் அந்த நிலைக்கு நாம் வழியமைத்து வந்திட முடியும்.
1.அவசரப்பட்டும்…
2.இருக்கும் நிலையில் கசப்புடனும்…
3.ஆவல் நிலையில் ஆசைப்பட்டும் வருவதல்ல தியான நிலை.

மெய் ஞானத்தைப் பெறும் தியான நிலையின் பக்குவம் என்ன…?
1.தன் வாழ்க்கையுடன் ஒன்றி உயர்ந்து
2.சிறு சிறு நிலைக்கும் நம் எண்ணத்தையும் செயலையும் பக்குவப்படுத்தி
3.நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் நம் நிலைக்குச் செயல்படும் தன்மைக்குக் கொண்டு வந்து
4.நாம் என்ற நிலையையே… இந்த உடல் என்னும் கூட்டை நாம் மறக்கும் நிலை கொண்டு
5.நம்மை நாம் பரிபக்குவப்படுத்தி நம்முள் இருக்கும் அந்த ஆத்மாவை நாம் கண்டு
6.அருள் வழியில் நாம் இதை இயக்கும் தன்மையைப் பெற்று
7.அந்த ஆத்மாவின் நிலை கொண்டு பெரும் உன்னத சக்தியை நாம் ஈர்த்து எடுக்கலாம்.

இந்த உலகம் சுழலும் சுழற்சி நிலையில் நம் ஆன்மாவிற்கு விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நேரடியாக ஈர்க்கும் நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து நம் நிலையை நாம் ஞான நிலைக்கும் ரிஷியின் நிலைக்கும் உயர்த்திக் கொள்ள முடியும்.

1.நடந்தவைகளை நினைப்பதுவும்
2.நடக்கப் போவனவற்றைக் கனவு காண்பதுவும்
3.ஞான நிலைக்கும் ரிஷி நிலைக்கும் உகந்ததல்ல,
4.நேற்று… இன்று… நாளை… என்ற பாகுபாடில்லாத பகலும்… இரவும்… பிரித்து எண்ணாமல் தியான நிலையைப் பெற்றிடலாம்.

வெறும் பாட நிலையிலிருந்தோ போதனை நிலையிலிருந்தோ தன்னுள் அச்சக்தியின் அருளை ஒவ்வொருவரும் ஈர்த்து எடுத்திட முடியாது.

பாட நிலையும் போதனை முறையும் நமக்கு வழி காட்டி நிலை தான். வழி அறிந்து செயல்படுவது “நம்முடைய செயலினால் தான்…!” இந்த நிலையை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டு ஒவ்வொருவரும்
1.தன் நிலையில் ஜெப நிலை என்றால் என்ன…?
2.அத் தெய்வத்தின் சக்தியின் அருளை நாம் எப்படி ஈர்த்து எடுத்திட முடியும்…? என்றுணர்ந்து
3.தன் தன் நிலையில் நடந்தவற்றை மறந்து
4.நடக்கப் போவதை எண்ணிடாமல் இன்று இருக்கும் நிலையில் எண்ணம் கொண்டே ஜெபித்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் கண்களால் பார்த்து நமக்குள் பதிவான உணர்வுகள் நுகரப்பட்டு நம் ஆன்மாவாக மாறுகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டவுடன் அந்தந்த உணர்ச்சிகளாக இயக்குகின்றது. உடலுக்குள் சென்று அணுவாக உருவாகும் கருவாக உருவாகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் அவரிடமிருந்து வெளிப்படும் அலைகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அலைகளாகப் பரவி வருகின்றது.

அந்த அலைகள் எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் கலக்கின்றது. அதைத்தான் “பரமாத்மா” என்று சொல்வது. அவர் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின் கண்ணின் காந்த புலனறிவு அந்த அலைகளைக் கவரச் செய்கின்றது.

அப்பொழுது சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்ட அந்த வேதனப்பட்ட உணர்வுகள் பரமாத்மாவிலிருப்பது நம் ஈர்ப்புக்குள் வருகின்றது. அது நம் “ஆன்மாவாக” மறுகின்றது.

ஆக… நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலிருந்துதான் சுவாசிக்கின்றோம். எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ (பரமான இந்தப் பூமியில்) இந்தப் “பரமாத்மாவிலிருந்து தான்… நம் ஆன்மா” எடுக்கின்றது.

அந்த அலைகள் நம் நெஞ்சுப் பகுதியின் அருகில் வருகின்றது. மூக்கின் துவாரங்கள் கீழ் நோக்கி இருப்பதால் அதைக் கவர்ந்து சுவாசத்திற்குள் செல்கின்றது.

மூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட உணர்வுகள் “கவன ஈர்ப்பு நரம்பு” கவரும் புருவ மத்தியில் உள்ள நம் “உயிரிலே” மோதுகின்றது.

உயிரிலே மோதியபின் “ஒ…ம்…” வேதனைப்பட்ட உணர்வலைகளைச் சுவாசித்தால் வேதனையை நமக்குள் ஊட்டும் உணர்ச்சிகளை உயிர் ஊட்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நுகர்ந்து உடலுக்குள் சென்றபின் “ஜீவான்மாவாக” மாறுகின்றது. அதாவது உடலுக்குள் நுண்ணணுக்கள் விளைந்து வேதனைப்படும் அணுவாக ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது.

இப்படி எந்தெந்த குணங்களை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ அதையெல்லாம் உயிர் ஜீவ அணுக்களாக ஜீவான்மாவாக உடலாக நம் உயிர் விளைய வைக்கின்றது.

இந்த ஜீவான்மாவில் விளைந்ததைத்தான் “உயிரான்மா” எடுக்கின்றது. பாலிலிருந்து வெண்ணையைப் பிரிப்பது போல் நம் உடலுக்குள் விளைந்த சத்தை உயிர் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

உயிரான்மாவில் இருக்கும் சத்துக்கொப்பத்தான் நாம் அடுத்த உடல் பெற முடியும். ஆகவே இந்த வாழ்க்கையில் எதனை நாம் எடுக்கின்றோமோ அதனின் வலுத்தன்மையே உருவாக்கப்படுகின்றது.

அப்பொழுது எதை நாம் நம் உயிரான்மாவாக்க வேண்டும்…?

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்களால் பதிவு செய்து அதை நினைவு கொண்டு உயிரான நிலைகள் கொண்டு உந்த வேண்டும்.

அதைத்தான் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்பது.

நம் உடலே சிவம். நம் உயிரே அகக்கண். கண்களோ புறக் கண்.

புறக் கண்கள் கொண்டு பிறரைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை நம் ஆன்மாவாக மாற்றி நாம் சுவாசிக்கும் பொழுது அது அகக் கண்ணுடன் மோதும் பொழுது
1.உடலுக்குள் உணர்வைப் பரப்புகின்றது.
2.உணர்வை அணுவாக மாற்றுகின்றது.
3.அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் அறிகின்றோம்.

தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுவதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிலே நினைவினைச் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று “உள் முகமாகக் கொண்டு வர வேண்டும்”.

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்திருப்பினும் இந்த உணர்வுகள் வரும் பொழுது அதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம்மை அறியாது வந்து நமக்கு முன் சுருண்டு கொண்டிருக்கும் இந்த தீமையான உணர்வுகளை அந்த ஆன்மாவைப் பிளக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்குள் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

இதை முறைப்படிச் செய்வதற்குத்தான் விநாயகர் தத்துவத்தை அமைத்தனர் ஞானிகள்.

காலையில் நம் உடலைத் தூய்மைப்படுத்தி நம் ஆடைகளைத் தூய்மைப்படுத்தியபின் விநாயகரை உற்றுப் பார்க்கும் பொழுது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வழியை அன்று இவ்வாறு முறைப்படுத்தினார்கள்.

செல்வம் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தினாலும் தனக்குள் வரும் பகைமைகளை நிர்வகிக்கும் திறன் இருக்கின்றதா…?

 

வாழ்க்கை என்ற நிலைகளில் செயல்படும் போது “ஒரு எஞ்சினியர்” அவர் கண்டுபிடித்த கருவியை உருவாக்குவதில் கால தாமதமானால் வேதனை என்ற உணர்வு அவருக்குள் அதிகமாகிறது.

இப்படி வேதனையை உருவாக்கி விட்டால் பின் அதனுடைய நிலைகள் ஆன பின் அந்த இயந்திரத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாது.

காரணம்… வேதனை என்று வரப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்தால் அருகில் இருக்கும் தன்னுடைய சிஷ்யனை (தன்னிடம் வேலை செய்பவனை) கோபித்துப் பேசுவான்.

அவன் சொன்னபடி சரிவர செய்யவில்லை என்றால்… சரியான பதில் சொல்லவில்லை என்றால் “போடா அறிவு கெட்டவனே… ஏன்டா இப்படிச் செய்கின்றாய்…?” என்று சீறிப்பாயும் தன்மை தான் வரும்.

ஏனென்றால்…
1.மனிதன் தான் நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் – உயிருடன் ஒன்றி உணர்வின் பொறிகள் இயக்கி
2.அந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாக எடுத்து என்னிடம் கூறினார்.

மனிதனின் வாழ்க்கையில் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். அந்த ஆசை நிராசையாக எப்படி மாறுகின்றது…? நிராசையாக மாறும் பொழுது மனித உணர்வுகள் எப்படி மாறுகின்றது…?

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நோய் என்ற நிலைகள் வருகின்றது. பல துறைகளைக் கற்றுணர்ந்த டாக்டர்களும் இந்த உடலை விட்டு அதனால் தான் மடிகின்றார்கள். வேதனை என்ற உணர்வு கொண்டு மீண்டும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றார்கள்.

1.செல்வத்தைத் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தி நிர்வாகத்தை நடத்தும் திறன் வந்தாலும்
2.இந்த உடலுக்குள் இருக்கும் பகைமையான உணர்வுகளை நிர்வகிக்கும் தன்மை எவருக்கும் இல்லை.

அப்படி நிர்வகிக்கும் அந்தத் திறனைப் பெற
1.அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் அந்த மெய் ஞானியின் உணர்வை
2.எவர் ஒருவர் இங்கே தேடிக் கொள்கின்றனரோ அவரே அதனைப் பெற முடியும்.

ஆகவே… அந்த அருள் ஞானத்தின் உணர்வின் தன்மையை நாம் நமக்குள் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

விஞ்ஞானத்தின் அறிவு வந்தால் அது இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது. ஆனால் மெய் ஞானத்தினுடைய அறிவால் ஒவ்வொரு அணுவின் இயக்கங்களையும் அறிய முடிகின்றது.

அருள் உணர்வின் தன்மை கொண்டு மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கி விட்டால் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக நமக்குள் வருகின்றது.

உதாரணமாக குறும்புத்தனம் செய்வோரை உற்றுப் பார்த்த பின் அந்த குறும்புத்தனத்தை உருவாக்கும் அணுவாக நம் உடலில் விளைய ஆரம்பிக்கிறது.
1.அவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்ச்சிகள் தூண்டும்
2.நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நாமும் குறும்புத்தனம் செய்வோம்… பார்க்கலாம்…!

அது நமக்குள் உருப் பெறாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!

ஏனென்றால் தவறு செய்கின்றான் என்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அது கார்த்திகேயா. கார்த்திகேயா என்றால் ஆறாவது அறிவு… நம்மைக் காத்திடும் சேனாதிபதி.

ஆகவே… தீமையான உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும் என்றால் சேனாதிபதிக்கு வலு எப்படி கொடுக்க வேண்டும்…?

நஞ்சினை வென்ற அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாக உள்ளான்.
1.அவனின் உணர்வை அடுத்த கணமே இணைத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்குதல் வேண்டும்.
2.அந்தத் தீமைகள் உள்புகாதபடி நம் வழிக்கு அது வசப்படும்படி செய்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் ஞானத்தின் வழிகளில் அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்து தீமைகளை அடங்கச் செய்ய வேண்டும். அது தான் அங்குசபாசவா…!

தீமையான உணர்வை நாம் நுகர்ந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து… இதை வைத்து அதை அடக்கி நமக்குள் செயலாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்காக
1.சிறு கல்லைக் காட்டி (ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வச் சிலை)
2.அடுத்து உன் வாழ்க்கையை நீ எப்படி அமைக்க வேண்டும்…?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் நீ என்ன ஆவாய்…? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளான் அருள் ஞானி.

இயற்கையின் உண்மை நிலைகள் எப்படி மாறுகின்றது…? என்பதை உணர்ந்த மெய் ஞானிகள்… உருவாக்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவால் நாம் எப்படிச் சீராகச் செயல்பட வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.

சொல்வது நன்றாக அர்த்தம் ஆகிறது அல்லவா.

படிப்பறிவினால் சம்பாரித்து உடலை வளர்க்கலாம்… அருள் ஞானத்தைப் பெற்றால் உயிரான்மாவை வளர்க்கலாம்

 

பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… மடிந்தோம்…! என்ற சாதாரண நிலையில் மிருகங்களின் வாழ்க்கை நிலை போலத் தான் “நம் எண்ணத்தின் சக்தியை…” நாம் எண்ணிப் பார்க்காமல் வாழ்கின்றோம்.

1.இந்த எண்ணம்…
2.இந்தச் சக்தி…
3.உடல் என்னும் கூட்டில் ஆத்மா உள்ள வரை “செயல்படும் தன்மை…!”
4.உடலை விட்டுப் பிரிந்த பின்னாடி ஆவி உலகத்தில் அறிந்திட முடியாது.
5.தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆவி உலகில் உள்ள ஆத்மாவினால் முடிந்திடாது. (இது மிகவும் முக்கியம்)

பல ஜென்மங்களில் நாம் எடுத்த எண்ணங்களும் செயல்களும்தான் இந்த உடலை விட்டுச் சென்ற அந்த ஆவிகளால் அறிந்து கொள்ள முடியும்.

உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ… எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ… அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.

1.இந்த உலகையும்…
2.தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்…
3.அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்று
4.“தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்…!” என்ற ஆவலுடன்
5.பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல் பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்… அண்டசராசரங்கள்… எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.

அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்… பெண்… குழந்தைகள்… முதியவர்கள்… என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதிதீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதிவிரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.

படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருந்தாலும் அறிவு வளர வேண்டும்…
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.

படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்… கல்வி புகட்டுபவருக்குமே… உள்ளது.

அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.

இந்த உடல் என்னும் கூட்டை… ஆத்மாவின் நிலை கொண்டு… நம் எண்ணம் என்ற செயலினால்…! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று பெரும்பகுதியானவர்கள் எதை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்…?

சாமி (ஞானகுரு) வந்தார்… சாமியிடம் ஆசீர்வாதம் கேட்டேன். என்னைக் காப்பாற்றுகிறேன்…! என்று சொன்னார். அப்படி என்றால் “அவர் தானே காப்பாற்ற வேண்டும்…” என்று சாமியைத்தான் எண்ணுகின்றார்களே தவிர
1.உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கிவிடும் என்று சொல்கிறேன்.
2.அதை மட்டும் எண்ணுவதில்லை.
3.கஷ்டத்தை மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.

சாமி சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். உங்கள் உடலுக்குள் சென்றவுடன் நோயைப் பிளந்துவிடும். உங்களுக்குள் அந்த நல்லது நடக்கும். ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுங்கள்…! என்று சொல்கிறேன்.

ஆனால் அதை யாரும் எண்ணுவதில்லை. இங்கே வந்தால் உடனே எனக்கு அந்த “விபூதி” வேண்டும். “விபூதி இருந்தால் போதும்…” சாமி தான் காப்பாற்றுவார் இந்த எண்ணம் தான் வருகின்றது.

1.சாமி சொன்னவைகளை நினைத்து
2.அந்த அருள் சக்திகளை எடுத்தால்
3.”அந்த எண்ணம்” நம்மைக் காக்கும் என்ற எண்ணத்திற்கே வருவதில்லை.
4.விபூதி கொடுத்தால் போதும் என்ற எண்ணம் தான் வருகின்றது.

ஆனால் சாமி சொன்னதைப் பதிவு செய்வோம். நமக்கு முன் உள்ள இந்தக் காற்று மண்டலத்தில் மறைந்திருக்கும் அந்த அருள் சக்திகளை எடுப்போம். “நல்லதாவோம்…” என்ற எண்ணம் வர மாட்டேன் என்கிறது.

ஆசீர்வாதம் வாங்கிச் சென்றவுடன் சிறிது நாளைக்குப் பார்ப்பது. அது கிடைக்கவில்லை என்றால் அப்புறம் என்ன சொல்வார்கள்…!

என்ன… இந்தச் சாமி…? என்ற நிலைக்குத்தான் போவார்கள். இதைத்தான் மீண்டும் மீண்டும் கற்றுக் கொண்டு வருகின்றோமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதே மாதிரி கோவிலுக்குச் சென்று அவனுக்கு இரண்டு தேங்காய் பழத்தை வைத்து உடைத்தோம் என்றால் சரியாகும் என்ற நிலையில் செல்வார்கள்.

விரதம் இருந்து இது எல்லாம் செய்த பின் “நினைத்தது நடக்கவில்லை” என்றால்
1.என்ன சாமி இது…,?
2.எத்தனை நாள் தான் இந்தச் சாமி என்னைச் சோதிக்கிறது என்று பார்க்கிறேன்…!
3.நான் எத்தனை நாள் விரதமிருந்தேன்…? எல்லாம் செய்தேன்…! என்பார்கள்.

முதலில் சாமி… கடவுள்…! என்று கும்பிடுவார்கள். கடைசியில் அதைக் “கல்” என்றே நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். கோவிலில் அப்படித்தான் நினைக்கின்றோம்.

1.அந்தச் சிலை தான் கடவுள் என்ற நிலைகளும்… தெய்வம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றோமே தவிர
2.அந்த மெய் ஞானிகள் காட்டிய நிலைகளை எண்ணி எடுப்பார் யாரும் இல்லை.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். ஒவ்வொரு நிலைகளிலும் நம் வாழ்க்கையில் நல்லதைத் திரை மறைக்கும் “சித்திரை” தீமைகளை அகற்றிப் பழகுதல் வேண்டும்.

பிறர்படும் வேதனைகளைக் கேட்கின்றோம். “நல்ல உணர்வை அது மறைத்து விடுகின்றது”. அந்தத் திரையை நீக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி இதைப் பிளத்தல் வேண்டும்.

ஒரு அணுவைப் பிளந்து அதை ஒருக்கிணைந்து அணு குண்டாகச் செய்து அதை வெடிக்கச் செய்கின்றனர். கல்லுக்குள்ளும் இரும்புக்குள்ளும் கதிரியக்கம் உண்டு.

ஆக தன் இனத்தைச் சேர்த்துச் சேர்த்து அந்த உணர்வின் தன்மை பரவப்படும் பொழுது ஒரு நொடிக்குள் இரும்பானாலும் கரைந்து காணாமல் போய்விடும். கல்லாக இருந்தாலும் உருகிக் காணாமல் போய்விடும். அதே கதிரியக்கம் தான்.

இதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்து அதனை நமக்குள் சேமிக்க வேண்டும்.
1.பின் உணர்வால் வளர்ந்த இந்த உடலை
2.இந்த உடல் பெறும் உணர்வைக் காணாது செய்துவிடும்.
3.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து இருக்கும்.

அந்த மகரிஷிகள் எதைப் பெற்றார்களோ அதன் வழிக்குக் காரணப் பெயரை வைத்துக் காவியங்களையும் ஆலயங்களையும் அமைத்தார்கள்.

அதைக் கருத்துடன் ஏற்றுக் கொண்டால் அந்தக் கருத்தின் உணர்வு “உன்னை வாழ வைக்கும்…” என்ற நிலைகளை நமது காவியங்கள் தெளிவுற எடுத்துரைத்துள்ளது.

நான் (ஞானகுரு) கற்றறிந்தேன்… பேசுகின்றேன்… நீங்கள் என்றைக்குத் தயாராகுவது…!

 

மனிதனாக வாழும் பொழுதே கணவன்-மனைவி இருவரும் இங்கே கொடுக்கும் உயர்ந்த சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வை தீமைகளை அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியாக விளைய வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்… அருள் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை
1.உங்கள் உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்
2.இந்த உணர்வலைகளை உலகெங்கிலும் பரப்புங்கள்.

அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்குத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இதை நினைவுபடுத்துகிறேன் (ஞானகுரு).

ஏதோ சாமி சொல்கின்றார்… நாங்கள் கேட்பதற்குத்தான் இருக்கிறோம் என்று எண்ணிவிடாதீர்கள்.

நீங்கள் என்றைக்குத் தயாராகுவது…?

நான் கற்றறிந்தேன்… பேசுகின்றேன். உங்களை வளர்ப்பதற்காக இந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றேன். நீங்கள் தயாராக வேண்டும்…!

1.ஒரு குருவாக இருந்தார்… என்னைத் தயாராக்கினார்.
2.அந்த ஞானத்தின் வழியை எல்லோருக்கும் போதிக்கச் சொன்னார்.
3.நீங்கள் எல்லோரும் நம் குருவின் உணர்வை ஏற்று… குருவாகவே மாற வேண்டும்.

ஒவ்வொருவரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வளர்த்து குரு நமக்கு எந்த வழியைப் போதித்தாரோ அதன் வழியிலே நாம் சென்றோம் என்றால்
1.நாம் அனைவரும் குருவே… குரு வழியில் குருவாகின்றது அதன் வழியே செயல் ஆகின்றது
2.ஆக அருள் ஒளியை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்
3.அந்த அருளையே நமக்குள் குருவாக்குதல் வேண்டும்
4.அருள் வழியில் இருளை மாற்றிடும் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும்
5.குருவாக… குருவின் நிலைகளில் தீமையை மாற்றிடும் அருள் உணர்வுகளைப் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

சாதாரண மனித வாழ்க்கையில் வாழ்கின்றோம். இருந்தாலும் இயற்கையின் நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் உணர்வுகளை… அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் காலை துருவ தியானத்தில் எடுத்துப் பழகுங்கள்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் கணவனும் மனைவியும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை பெறவேண்டும் என்று உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வின் அறிவாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒருப் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டபின் அந்தச் சக்தி என் கணவருக்குப் பெற வேண்டும் என்று ஏங்கி பெறச் செய்யுங்கள் அதே போன்று கணவன் மனைவிக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டுமென்று உணர்வைப் பாய்ச்சுங்கள்.

1.அடுத்தடுத்து உங்களுக்குள் அந்த மெய் உணர்வின் விளக்கங்கள் வர வேண்டும்.
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஒளியின் சுடராக மாற வேண்டும்
3.உங்கள் பார்வையால்… உங்கள் சொல்லால் கேட்போர் உணர்வுகளில் இருளை மாய்த்திடும் நிலை பெற வேண்டும்.

உங்கள் பேச்சும் மூச்சும் விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவுகளில் இருந்து உலகைக் காக்கும் நிலையாக மாறுதல் வேண்டும். குருவின் அருள் நமக்குள் செயல்படுதல் வேண்டும்.

தியானத்தின் மூலம் பெற்ற சக்தியால் உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் பிணிகள் பறந்து ஓடவேண்டும் அருள் உணர்வுகளை அவர்கள் நுகரும் திறனைப் பெறச் செய்தல் வேண்டும்.

அதை அவர்கள் நுகர்ந்தால் அவர்கள் பிணிகள் ஓடுகின்றது. இதனின் தன்மையை அவர்களுக்குள் சேர்த்தால் பல பிணிகளையும் போக்க முடிகின்றது. பிணிகளைப் போக்கும் அந்த நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நோயாகிவிட்டதே…! என்று எண்ணி அதை நுகர்ந்தால் இங்கே அது சாடிவிடுகிறது. நம் நல்ல குணங்களையும் அழித்து விடுகின்றது.

ஆகவே மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து நாம் விடுபட்டு மெய் ஞான வாழ்க்கைக்குச் செல்லுதல் வேண்டும்.

அஞ்ஞான வாழ்க்கையாக வாழும் இன்றைய உலகில்…
1.மனிதன் சிதைந்திடும்… மனிதனைச் சிதைக்கச் செய்யும் உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில்
2.மனிதனையே பூண்டோடு அழித்திடும் சக்திகளும்
3.மனிதனுக்கு மனிதன் அழித்திடும் நிலையை உருவாக்கும் சந்தர்ப்பங்களும்
4.மதம் இனம் மொழி என்ற நிலையில் மொழி பேதங்களும் இனபேதங்களும் மனபேதங்களும் உருவாக்கப்பட்டு
5.நம்முடைய ஆறாவது அறிவின் தன்மையை இருள் சூழச் செய்துவிட்டோம்.

நம் உயிரை மறந்துவிட்டோம்… எங்கேயோ இருக்கின்றான் ஆண்டவன் என்று எண்ணுகின்றோம்… எங்கேயோ இருக்கின்றான் கடவுள் என்று எண்ணுகின்றோம்… எங்கேயோ இருக்கின்றான் ஈசன் என்று எண்ணுகின்றோம்… எங்கேயோ இருக்கின்றான் கர்த்தர் என்று எண்ணுகின்றோம்…!

ஆக மொத்தம் கடவுள் நாம் எண்ணும் உணர்வு எதுவோ அந்த உணர்வைத் தான் உருவாக்கி இயக்குகிறது. இது தான் உயிருடைய வேலை

நமக்குள் இருந்து இயக்கும்
1.அவனை (உயிரான ஈசனை) மறவாது
2.அவனால் உருவாக்கப்பட்ட மனித உடலை அழித்திடாது
3.மனித உடலில் சோர்வை விடாது அருள் உணர்வுகளை வளர்த்துப் பழகுங்கள்.

தீமைகள் வரும்போதெல்லாம் மகரிஷிகளின் அருள் ஆற்றலை உங்கள் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள். தீமை என்று நுகர்ந்தாலும் அறிய அது உதவினாலும் அடுத்தகணம் நமக்குள் உருவாகாதபடி அதை மாற்ற வேண்டும்.

அதற்குத்தான் இந்த உபதேசம்…!

நாம் எண்ணிய எண்ணத்தில் தான்… ஏற்றமும் தாழ்வும் அமைவது…!

 

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே…!

இந்த உலகம் என்ற மாயையே எண்ணி மயங்கி வாழும் வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம். அப்படிப்பட்ட
1.இந்த உலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி இருப்பது எதுவப்பா…?
2.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…?
3.சொத்தையும் சுகத்தையும் ஆள்வது யாரப்பா…?
4.இந்த உலகில் பிறந்து வாழ்ந்து இறந்த பின் நிலைத்து இருப்பது என்னப்பா…?
5.நம் உடலா…? சம்பாரித்த பணமா…? சொத்தா…? சுகமா…?

நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது நம்முடைய மக்கள் (பிள்ளைகள்) இருக்கின்றார்களே…! என்ற எண்ணம் பலருக்குண்டு. ஆனால்
1.நம் பெயர் சொல்ல அந்த மக்கள் எத்தனை காலங்களுக்கு…?
2.அடுத்து அந்தக் குழந்தைகளுக்குக் குழந்தை.. குழந்தைகளுக்குக் குழந்தை…! என்று (பேரன்… கொள்ளுப் பேரன்….!)
3.இப்படிச் சுற்றிக் கொண்டேயுள்ள நிலையிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…? என்று இதை எல்லாம் சிந்திக்கின்றோமா…?

நம்முடைய அம்மா…அப்பா… பற்றி சிறிது காலத்திற்கு எண்ணுகிறோம். அவர்கள் அம்மா அப்பா… அதற்கு முன்னாடி வாழ்ந்தவர்கள்…! என்று யாரையாவது நாம் நினைக்கின்றோமா…?

மீறிக் கேட்டால் என்ன சொல்வோம்..? அவர்கள் எல்லாம் போய் விட்டார்கள்… என்று “சாதாரணமாகத்தானே சொல்கிறோம்…!”

அவர்கள் எதையுமே (தன் உடலையோ பொருளையோ) கொண்டு போக முடியவில்லை என்கிற பொழுது நாம் மட்டும் எதைக் கொண்டு போக முடியும்…?

ஆக மொத்தம் பிறப்பு…உடல்…இறப்பு…! மீண்டும் பிறப்பு… உடல்…இறப்பு…! என்று இராட்டினம் மாதிரித் தான் சுற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் அனைவரும் பிறவிப் பயன்… பிறவிப் பயன்… என்பதையே புரிந்து வாழ்ந்திடாமல் இருக்கும் வரை (உடலுடன்) அனுபவிக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் நம்மைப் போன்றே பூமியில் தோன்றிய புண்ணியவான்கள் இன்றும் அவர்கள் பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1.நம்முடைய ஆணிவேரான சுவாச நிலையிலிருந்து
2.நாம் பெறும் பாக்கியங்களை… நாம் பெறும் செல்வங்களை
3.உயிராத்மாவிற்குத் தேவையான அழியாத பொக்கிஷத்தை… அந்தச் செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திட
4.பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றவர்கள் தான் புண்ணியவான்களான அந்த ஞானிகளும் மகரிஷிகளும்…!

அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல பல ஆற்றல்களையும் சக்திகளையும் பெற்று இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் நிலைத்திருக்கவில்லையா…?

அவர்கள் பிறந்த அதே பூமியில் வாழும் நமக்கு நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

அத்தகைய சக்தி (அஷ்டமாசித்து) பெற்றவர்கள் தன் உடலை ஒரு கூடாக வைத்துத்தான் தன் ஆத்மாவை உலகெங்கும் பிற மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்த உலகில் கலந்துள்ள அத்தகைய மெய் ஞானிகள் மகரிஷிகளின் நிலையை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்து உதவி
2.நம் எண்ணத்தையும் செயலையும் நல்லதாக்க
3.நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் அப்படிப்பட்ட பல பெரியோர்கள் உள்ள பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் எண்ணமும் செயலும் பல ஆசை கொண்ட சுகபோகங்களுக்குச் சென்றிடாமல் அதற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையை மாற்றிட வேண்டும். அன்பென்னும் ஆசை தான் நமக்கு வேண்டும்.

ஆகவே
1.அழியாச் செல்வமான நம்முடைய ஆத்மாவை நாம் அழித்தே வாழ்ந்திடாமல்
2.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி
3.அந்த ஆத்மாவிற்கு அடிபணிந்து வாழ்வதற்கு நம்முள் இருக்கும் உயிரான ஈசனின் சக்தியைக் கொண்டு
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே மனிதனின் வாழ்க்கை.

ஞானிகள் மகரிஷிகளின் அருளாசி பெற்று வாழ்ந்திடுங்கள்…
அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்…!

நழுவ விட்டதை மீட்டிட இந்தக் கடைசி உடலிலிருந்தாவது உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி மகரிஷிகளிடம் ஐக்கியப்படுத்துங்களப்பா

 

இந்தப் பூமியில் பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதருமே சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். சமமான வாழ்க்கையை ஆண்டவன் நமக்கு ஏன் அருளவில்லை என்று எண்ணிவிடாதீர்கள்.

இந்தப் புண்ணிய பூமியில் பிறந்ததின் நோக்கமே அச்சக்தியின் அருள் பெற்று நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்களை எல்லாம் நம் நிலையைச் சமமாக்கி வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

அதாவது ஒவ்வொரு பிறவி எடுக்கும் பொழுதும்
1.அடுத்த பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி வாழ்ந்திடலாம்
2.சகல தேவரையும் கண்டிடலாம் என்ற பேராவலுக்காகத்தான் பிறப்பு எடுக்கின்றோம்

பிறவி எடுத்திருந்தாலும் நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் இன்று இந்த உலகில் உள்ள பாமரர்களின் நிலை உள்ளது.

மனிதனாகப் பிறவி எடுத்த நாளிலேயே அடுத்த ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.ஒரே பிறவியில் தன் நிலை உணர்ந்து சமமான நிலை எய்தி
2.சகல தேவனாக சூட்சம உலகத்தில் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத் தெய்வ நிலையாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.

ஆனால் நாம் எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவியிலும்… இப்பொழுதும்… இன்றும்… நிறைவு இல்லாமலேயே வாழ்கின்றோம்.

ஆகவே சமமான நிலை நிலைக்க அந்த ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1.நான் என்ற நிலையை…
2.நம்மை ஈசன் இயக்குகின்றான் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்

இவ்வுலக வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல் நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்க்கையால்தான் அந்த சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழக்கூடிய தகுதியைப் பெற முடியும். அந்தத் தேவாதி தேவர்களின் நிலையையும் எய்திட முடியும்.

சகல தேவர்கள் என்றால் யார்…? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்.

ஈசன் ஒருவன் தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அந்த ஈசன் தான் என்னும் பொழுது ”சகல தேவர்கள்” என்று பிரித்துக் கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்…? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.

1.சகல ரூபங்கள் கொண்டு
2.ஒவ்வொரு ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவருக்கு
3.ஆண்டவனாக வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற
4.“மெய் ஞானிகளும்… மகரிஷிகளும் தானப்பா அச் சகல தேவர்கள்…!” (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்)

இந்த உலகில் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பல கோடி ஆத்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் (ஆவிகள்) இந்தக் காற்று மண்டலத்தில் உள்ளது.

1.உலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்
2.தன் ஆத்மா வந்து (தான்) பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்
3.எந்த உடலில் ஏறினால் அந்த உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை – நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை கொண்டும்
4.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று உடலுடன் வாழும் மனிதர்களை
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டேயுள்ளன.

நாம் நினைக்கின்றோம்…!
நம் எண்ணம்…
நம் உடல்…
நம் ஆன்மா என்று…!
நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா.

(நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை – இது மிகவும் முக்கியமானது)

நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகின்றதோ
1.அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள் நம் உடலில் வந்து எந்தத் திசையிலும் ஏறிக் கொண்டு
2.நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக
4.தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.

(உடலில் ஆவிகள் இல்லாத மனிதரே இல்லை என்று சொல்லலாம்)

நம் நிலையைக் கொஞ்சம் போல மாற்றிக் கொண்டாலே (உணர்ச்சி வசப்பட்டாலே) நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் பல அணுக்கள் நம்மைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளன…! என்பதை இப்பொழுதாவது ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும் என்றால் நம்முள் அந்த ஆண்டவனின் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து பல ஆவி உலக ஆன்மாக்களுக்கு நாம் அடிமையாகாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இது வரை இந்த உலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் (பல பிறவிகள்) எல்லாவற்றையுமே நழுவ விட்டு விட்டோம்.
1,இந்தக் கடைசி நிலை கொண்ட இந்த மனித உடலிலிருந்தாவது
2.நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
3.அந்தச் சகல தேவர்களிடம் (மகரிஷிகளிடம்) ஐக்கியப்படுத்துங்களப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் இந்த உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உணர்வையும் தனக்குள் கவர்ந்து ஒவ்வொன்றுக்கும் அதன் மணத்தால் உணர்வால் அதனை வளர்த்து வருகின்றது.

அதைப் போல நாமும் அந்தத் தெளிவு பெற வேண்டும் என்பதற்குத்தான் அன்று ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

1.சூட்சமத்தில் இருக்கும் சக்தியை
2.ஆலயத்தில் அந்த உருவத்தைக் காட்டும் பொழுது
3.காவியமாகப் படைத்ததை எண்ணத்தில் பதிவு செய்து
4.நம் எண்ணம் கொண்டு தான் எடுக்க வேண்டும் என்று
5.அன்று 2000 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் உணர்த்தினார்.

அந்த ஆலயத்திற்குச் சென்று “எல்லோரும் நலம் பெற வேண்டும்” என்று நாம் எண்ணினால் “எல்லோரையும் நலமாக்கும் சக்தியாக… நமக்குள் உருவாகிறது” என்று தான் ஆதிசங்கரர் சொன்னார்.

அவருக்குப் பின் வந்த சீடர்கள் என்ன செய்தார்கள்…? (யாரையும் நான் குறை கூறவில்லை).

குருவை மறந்தார்கள். மதத்தைக் காக்க எண்ணினார்கள். மடாதிபதியானார்கள்.

அதன் வழிகளில் தான் இன்றும் தெய்வத்திற்கு அபிஷேகத்தைச் செய்து ஆராதனை செய்துவிட்டு யாகங்களைச் செய்துவிட்டு அப்படிச் செய்தால் “அதற்காக மகிழ்ந்து தெய்வம் நமக்குச் செய்யும்…!” என்ற உணர்வை நமக்குள் பரப்பிவிட்டார்கள்.

ஆதிசங்கரர் உணர்த்திய மூலம் காலத்தால் மறைந்து போய்விட்டது. மெய்ப்பொருளை நாம் பெறும் தகுதியும் இழந்துவிட்டோம்.
1.உயிரைக் கடவுளாக்கி
2.நம் உடலை ஆலயமாக்கி
3.உணர்வைத் தெய்வமாக்கி அதுவே இறைவனாக்கி
4.அதன் வழியில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று தான் நம் சாஸ்திர நிலைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஞானிகள் காட்டிய வழிப்படி நாம் ஆலயத்தில் வழிப்படுவோம். அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ சக்திகளை நாம் பெறுவோம். நமக்குள் தெய்வ குணங்களை வளர்ப்போம். உலகைக் காக்கும் எண்ணங்களை நமக்குள் வளர்ப்போம்.

நம் மூச்சும் பேச்சும் “உலக நன்மை பயக்கும் சக்தியாக” வளரட்டும்.

உலக மக்கள் அனைவரும் அவர்கள் உயிரைக் கடவுளாக மதித்து மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று நாம் ஏகோபித்த நிலையில் இந்த உணர்வைப் பரப்புவோம்.

ஆலயங்களுக்குச் சென்று உலக மக்கள் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம் பிரார்த்திப்போம்… தவமிருப்போம்…!

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளியின் சுடராக ஆக்குவது போல நாமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக ஆக்கிடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று அரச சபையில் அன்று கவி பாடினார்கள்.

நாம் என்ன செய்கின்றோம்…?

“மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை…” என்று சொல்லிக் கொண்டு அந்தப் பாடலைப் பாடுகின்றோம். அதனின் உட் கருத்தை அறிந்தோமா…!

மூலாதாரம் என்றால் நம் உயிர். நாம் எண்ணும் எண்ணங்கள் அது நமக்குள் மோதும் பொழுது அதாவது நம் உயிரிலே மோதுகின்றது.

அப்பொழுது
1.உயிரிலே மூண்டெழும் கனலை
2.எந்தக் காரணத்தால் நாம் பார்த்தோமோ
3.அந்த உணர்வின் தன்மையை இயக்குகின்றது.

உயிரிலே பட்டதனால் தான் அது இயக்குகின்றது. படவில்லை என்றால் அது இயக்காது.

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி உயிரிலே பட்டால் தான் “ஓ… ம்…” பிரணவமாகும்.., ஜீவன் பெறும்.

அப்பொழுது “ஓ…ம்…” அந்த வெப்பமாகி கனல் எழும்புகின்றது. நாம் நுகர்ந்த சுவாசத்தை உயிர் உணர்ச்சிகளாக எழுப்புகின்றது.

ஒரு மத்தாப்பை நாம் கொளுத்தினால் அது எப்படிப் பல பொறிகளைக் கிளப்புகின்றதோ அதைப் போல நம் உயிர் நுகர்ந்ததை உணர்ச்சிகளாக மாற்றுகின்றது.

1.அந்த உணர்ச்சிகள் எதுவோ
2.அது நிச்சயம் நம்மை “இயக்கும்”
3.நமக்குள் “உண்மையை உணர்த்தும்” என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலத்தால் அறிந்து கருத்தறியும் நிலைக்கு வரவேண்டும் என்று ஞானிகள் உணர்த்துகின்றனர்.

அதை நாம் விட்டுவிட்டோம்.

பாடலைப் பாடுகின்றோம்… கருத்தை விட்டுவிட்டோம்… மூலத்தையே விட்டுவிட்டோம்.

ஆக விநாயகர் அகவலைப் பாடிவிட்டுப் போகின்றோமே தவிர கருத்தினை மனதில் எண்ணிப் பார்க்கின்றோமா…!

நாம் அதை உணர்வதில்லை.

நாம் எந்த நிலைக்குக் காலத்தால் அறிகின்றோமோ அது நம் “மூலமான உயிரில்… இதை ஆதாரமாக இணைக்கப்பட்டு” அந்த உணர்வின் தன்மை கனலாக எழும்புகின்றது.

1.அதைக் காலத்தால் ஆறாவது அறிவால் அறிந்து
2.பிறிதொரு உணர்வு இயக்கும் நிலைகளை ஞானத்தால் உணர்ந்து (கருத்தை)
3.தனக்குள் கணங்களுக்கு அதிபதியாக “மகரிஷிகளின் உணர்வை” இணைத்து
4.அதை நாம் எவ்வாறு “நன்மை செய்யும்” சக்தியாகச் செயல்படவேண்டும்…? என்பதை நாம் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களில் தப்பில்லை.

இன்று சாங்கிய சாஸ்திரங்களில் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாத துயர்களிலேயே நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

ஆக “யாரோ செய்வார்… எவரோ செய்வார்” என்று தான் நமக்குள் எண்ணுகின்றோமே தவிர நாம் சுவாசித்ததை உயிர் இயக்கி… அதை உணர்த்தி… இந்த உடலைச் செயல்பட வைக்கின்றது என்று ஞானிகள் கொடுத்த நிலைகளை எண்ணவில்லை.

வாயுப் பிடிப்பு… அல்சர்… இது எல்லாம் வரக் காரணம் என்ன…?

 

நாம் நுகரும் உணர்வுகள் (சுவாசிப்பது) அனைத்தும் இரத்த நாளங்களில் தான் செல்கின்றது.

சூரியன் பல விதமான உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக மாற்றி பூமியில் எப்படிப் பரவச் செய்கின்றதோ இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளும் இந்த இரத்த நாளங்களின் வழி கூடித் தான் எல்லா அணுக்களுக்கும் உணவாகப் போய்ச் சேர்கின்றது.

அப்போது உடலுக்குள் ஆங்காங்கு மோதலின் எதிர்நிலை வரப்படும் பொழுது வாயு உண்டாகிறது.

ஒரு வேப்பமரத்தினுடைய உணர்வும் ரோஜாப்பூவினுடைய உணர்வும் இரண்டும் கலந்து வரப்படும் பொழுது
1.வேப்பமரத்தின் மணத்தைக் கண்டு ரோஜாவின் மணம் அஞ்சி ஓடப்படும் பொழுது
2.இதற்கு முன்னாடி இதனுடைய அழுத்தம் தள்ளும் பொழுது ஒரு காற்று வரும்… நறுமணமாக இருக்கும்.
3.அதே போல இதைக் காட்டிலும் வலுவான நிலைகள் (விஷச் செடியின் மணம்) அங்கே இருக்கிறது என்றால் போகாது தடுக்கும்
3.”சுழி…” என்ற காற்றுகள் சுழலும்.

ஒரு எதிர்ப்பான உணர்வின் தன்மை வரப்படும் பொழுது இங்கே காற்று மண்டலத்தில் சுழிகள் எப்படி வருகின்றதோ இதைப் போல நாம் அணுக்களின் நிலைகளில் இரத்த நாளங்களில் செல்லப்படும் பொழுது மோதலின் தன்மை வரப்படும் பொழுது
1.எதிர்மறையான மோதல் வந்து
2.ஏ…வ்வ்வ்வ்…! என்று ஏப்பமாக வருவது இப்படித்தான்.

எதிர்நிலையான அணுக்களின் தன்மையும் அதே சமயத்தில் இந்த உணர்வும் இரத்த நாளங்களில் அதிகமாக ஊடுருவி அது செல்லும் பாகங்களில் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது வாயு அதிகமாக உருவாகின்றது.

அது அதிகமாக உருவாகி அழுத்தங்கள் அதிகமாக்கப்படும் போது நம் உடல் அசர்க்கையாகின்றது (சோர்வு). ஏனென்றால்
1.இந்த அணுக்கள் நுகர்ந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதல் ஆக்கப்படும் பொழுது
2.இதற்குள் ஒன்றை ஒன்று வென்றிடும் உணர்வுகள் வரும்.

சில நேரங்களில் வாயு உபத்திரவம் ஆனால் முக்கியமான பாகங்களில் செல்லப்படும் பொழுது “பளீர்…ர்…” என்று ஒரு மின்னலாகும். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இந்த உணர்ச்சியின் தன்மை தூண்டப்படும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

அதேபோல ஒவ்வொரு உணர்வுகளும் நமக்குள் மாறிக் கொண்டே இருக்கின்றது.

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் பொழுது நம் இரத்த நாளங்களைச் சோதித்தால் இதில் வித்தியாசமாக இருக்கும்.
1.மறு நாள் காலையில் பார்த்தோம் என்றால் சிவப்பு அணுக்களையே காணோமே…! என்ற நிலை வரும்
2.இதை மாற்றிடும் உணர்வின் தன்மை நுகர்ந்து விட்டால் சிவப்பணுக்களின் நிலைகள் பூராம் இழந்து விடுகின்றது.

ஒரு திரவகத்தை ஊற்றினால் எப்படியோ அது போல் விஷத்தன்மை கொண்ட இத்தகைய நிலைகளும் நொடிக்குள் நம் உடலுக்குள் மாற்றும் நிலை வந்துவிடும்.

நொடிக்குள் மாற்றம் வரப்படும் பொழுது…
1.நமக்குள் வளர்ச்சி பெற்ற அணுக்களுக்கு இதனின் உணர்வின் தன்மை அந்த வலு இல்லை என்றால்
2.அதனுடைய செயலாக்கங்களை இழக்கின்றது… சோர்வடைகின்றது.

உதாரணமாக… காற்று மண்டலத்தில் அனல் காற்று வீசினால் இங்கே தாவரங்கள் எப்படி வளரும்…? அது கருகுகின்றது. அனல் காற்று பூமியில் உள்ள ஈரசத்தை எல்லாம் எடுத்துக் கொண்டால் தாவர இனங்களுக்கு வேண்டிய ஈரம் இல்லை என்றால் மரம் வாடுகின்றது.

இதைப் போன்றுதான் நாம் நுகர்ந்த உணர்வுகள் போர் முறையாகி வெப்பமாகி ஈரச்சத்தை எல்லாம் ஆவியாக்கி விட்டால் உடலுக்குள் அடுத்து வாயு உருவாகிறது.

நம் உடலுக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுள்ளது. இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அன்பு கொண்டு நாம் வணங்கும் “அனைத்துமே ஆண்டவன் தான்…”

 

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பென்னும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது. எல்லா ஆன்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இந்த உடலுடன் வாழ்கின்றது.

அந்த அன்பிற்காகத்தான்… …
1.அந்த அன்பு கிடைக்காத நிலையில் சோர்வாகி
2.மன நிறைவைப் பெற்றிடாமல் பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
3.அந்த மனம் என்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்களாக்கி வாழ்ந்திடுகிறார்கள் மனிதர்கள்.

பரலோகம்.. எமலோகம்… நரகலோகம்… பூலோகம்… சொர்க்கலோகம்… இப்படிப் பல லோகங்களைச் சொல்கிறார்கள்…! அல்லவா. இவைகள் எல்லாம் என்னப்பா…?

மனம் என்னும் அந்த அன்பு லோகத்தை அந்த அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அந்த ஆத்மலோகத்திற்காக நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத்தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. ஆகவே எந்த நிலை கொண்டும் இன்று இருக்கும் இந்த விஷமான விஞ்ஞான உலகில்
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பென்னும் பொக்கிஷத்தை அவ்வுயிர் ஆத்மாவிற்கு ஊட்டம் தந்தே வாழ்ந்திடுங்கள்.

ஏனென்றால் அன்பினால் தான் நம் உடலும் நம் மனதும் நம் ஆத்மாவும் புத்தொளிர் பெற்று வாழ்கிறது என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் ஏன் உணர்த்தினார்கள்…? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1.சஞ்சலக்கூடு நிறைந்த இந்த மனத்தை
2.அன்பு என்னும் நிலையில் தான் அவ்வாத்மாவை அமைதிப்படுத்த முடியும் என்ற நிலைக்காகத்தான்
3.ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தினார்கள் முன்னோர்கள்.

மனமென்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட அவ்வாண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து நம் ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழி காட்டி வந்தார்கள்.

ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை ஒன்றில் மட்டும் செலுத்தி வணங்கிடுவதில்லை…!
1.அன்பு கொண்டு நாம் வணங்குவதெல்லாம் ஆண்டவன் தான்.
2.எல்லா உயிரினங்களிலுமே அந்த ஆண்டவன் உள்ளான்.

உன் அன்பை உயிரினங்களிடம் மட்டுமல்ல…! இந்த வானமும் பூமியும் மரம் செடி கொடி மழை காற்று சூரியன் சந்திரன் நட்சத்திர மண்டலங்கள்
1.இப்படி எந்நிலை கொண்டும்
2.உன் மனமென்னும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் (எல்லா வகையிலுமே) உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.
4.ஆகவே அந்த அன்பினால் மட்டும் தான் அவ்வுயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை (மகத்துவத்தை) அளிக்க முடியும்.

இந்த உடல் முழுவதுமே ஒரு நிலை கொண்ட வெப்பத்துடனே உள்ளது. ஆனால் இந்த உடலிலுள்ள நம் உயிரணு மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.

மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ்வுயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.

இம்மனமென்னும் நிலையை
1.நாம் பல நிலை கொண்டு அலைய விடும் பொழுது (மன அழுத்தம் – TENSION, STRESS)
2.இவ்வுடல் நிலையில் ஏற்படும் அதி உஷ்ண நிலையினால்
3.அவ்வுயிராத்மாவிற்குப் பல தீங்குகளைத்தான் நம்மால் சேர்க்க முடிகின்றது.

நம்மில் பல பெரியோர் இந்த அன்பையே நமக்குப் பல வழிகளில் உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.“அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை…!” என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்,
2.அன்பே தான் கடவுள்…! என்றார்கள்.

ஆனால் இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் குறிக்கோள் எல்லாம் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும் என்பது தான். அதற்காக “எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்…!” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

அந்த நிலைக்காகத் தன்னைத் தானே.. தன் இனத்தைத் துவேஷிக்கும் நிலையில்
1.தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கிறான்.
2.அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்றைய உலகமே உள்ளது.
3.இந்த நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.

ஆகவே இனி வாழ்ந்திடும் வாழ் நாள்களை வீண் விரயம் செய்திடாமல் அன்பு கொண்ட வாழ் நாள்களாக வாழ்ந்து அன்பென்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.

ஈஸ்வரபட்டனாகிய எனது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவு வருவதற்கு முன் மந்திர ஒலிகளே அதிகமாக இருந்தது… (இன்றும் உள்ளது).

மந்திர ஒலிகளின் உணர்வின் தன்மை கொண்டுதான் உணர்வின் எண்ணங்கள் எப்படி…? என்று நூற்றுக்கணக்கில் அவர்கள் ஓதுவார்கள்.

அப்படித் திரும்பத் திரும்ப ஓதும் போது இந்த பூமியைப் பிளந்து (உணர்வலைகள்) அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மையை தனக்குள் விளைய வைத்து விளைய வைத்து இந்த உணர்வால் தனக்குள் அறிந்திடும் உணர்வுகள் வருகின்றது.

ஜோதிடம் சொல்வதும் நாடி சாஸ்திரங்கள் எழுதுவதும் இவையெல்லாம்
1.இவன் கற்பித்த உணர்வும் இதனுடன் இணைத்துக் கொண்ட உணர்வும் எதுவோ
2.எவர் பதிவு செய்து கொண்டாரோ அந்தப் பதிவு செய்தோர் கொண்ட உணர்வு இங்கே இயக்குகின்றது.
3.அதிலே நன்மை என்ற நிலைகள் வராது,
4.தீமை என்ற உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டது… தீமையின் நினைவாற்றலைத்தான் கூட்டும்.
5.தீமை செய்யும் உணர்வே தான் வருமே தவிர… ஞானிகள் தீமையைப் பிளந்த உணர்வுகள் இங்கே சிறிதளவும் வராது.

நீங்கள் எண்ணுகின்ற நாடி சாஸ்திரமானாலும் சரி சாஸ்திர விதிப்படி ஜாதங்கள் குறித்தாலும் சரி இப்படி உருவாக்கப்பட்ட நிலைதான்.

இயற்கையில் ஒரு மனிதனுக்கு ஜாதகம் இல்லை. ஜாதகம் கணிப்பது “மனிதன் எண்ணத்தில்தான்…”

இவர்கள் சொன்னது மாதிரி
1.எதை எதையோ கூட்டிக் கழித்து
2.எந்த உணர்வின் எண்ணங்களைப் பதிவு செய்தார்களோ
3.அந்தப் பதிவின் நிலைகளை நாம் “தலைவிதியாக” வைத்து
4.அதனை மீண்டும் “விதியாக” மாற்றி
அதன் வழிகளிலே தான் நாம் வருகின்றோம்.

நமக்குள் பழக்கப்படுத்திவிட்டால் நீங்கள் ஆயிரம் தான் சொல்லுங்கள். மீண்டும் ஜாதகத்தைத் தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்றுதான் தேடிச் செல்ல முடியும்.

நேரத்தை உங்களால் மாற்ற முடியாது. இந்த உடலுக்கு நல்ல நேரம் வேண்டும் என்று தேடி அலைவீர்கள். பதிந்த உணர்வுகளில் ஆசை ஓங்கிக்கொண்டு இருக்கும்.

அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக்கொண்டுதான் இருக்கும். தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும். பின் அதனின் நிலைகள் மனித உருவைச் சீர் குலையச்செய்யும் நிலைதான் வரும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, நாம் எதை நமக்குள் பதிவாக்கியிருக்கின்றோமோ அதுதான் இயக்குகின்றது.

அதே மாதிரி எலி ஜோதிடம் கிளி ஜோதிடம் சில பேர் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் மனித உடலிலிருந்து எடுத்துக் கொண்ட மந்திர ஒலி எடுத்து கரு எடுத்து அதற்குக் கொடுப்பார்கள்.

அந்தக் கருவைக் கொடுத்தவுடன் எலியோ கிளியோ இவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஒரு நெல்லைக் கொடுத்து இது பண்ணியவுடனே என்ன செய்வான்..? தன் விரலைக் காட்டி அதைக் கண்ணிலே பார்ப்பார்கள்.

1.அந்தக் கிளி இவனை நேராகப் பார்க்கும்…
2.விரலை அசைத்தவுடனே இங்கே பார்க்கும்…
3.பார்த்தவுடனே அந்த சீட்டை விட்டுவிட்டு அடுத்த சீட்டை எடுக்கும்.
4.எடுத்தவுடனே அதைப் படித்துக் காட்டுவார்கள்.

இதே மாதிரி எலியை வைத்தும் சீட்டை எடுக்கச் செய்வார்கள். அவர்கள் கண்ணில் பார்ப்பார்கள். அதே மாதிரி உணர்வுகள் வேலை நடக்கும்.

(நாம் அவர்கள் கண்ணிலேயும் கை விரலிலேயும் இதைப் போல எத்தனையோ நிலைகளில் செய்வதை நாம் கவனிக்க மாட்டோம். அது நமக்குத் தெரியவும் செய்யாது)

இது எல்லாம் உலகம் முழுவதற்கும் மாந்திரீக நிலைகளில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதிலிருந்தெல்லாம் நாம் மாறவேண்டுமா இல்லையா…?

ஆக மொத்தம் நம்மை நாம் நம்பாமல் யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் எண்ணிக் கொண்டுள்ளோம்.

அன்று அரசர்கள் காட்டிய வழியில் சரணாகதி என்ற தத்துவத்தில் “எல்லாம் அவன் செயல்” என்று சொல்லி சாங்கிய சாஸ்திரங்களைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

1.நம் எண்ணத்தால் வந்த தீமைகளை நம் எண்ணத்தாலேயே எடுத்துப் போக்க முடியும்
2.“அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் உண்டு” என்று ஞானிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

ஆகவே உங்களுக்கு வரும் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். “உங்களால் முடியும்…”

நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவே என்றும் வெளிப்பட வேண்டும்

 

குடும்பத்தில் மிகவும் கஷ்டம் என்று ஒருவர் சொன்னால் அதை அதிக நேரம் கேட்டு நமக்குள் பதிவாக்கக் கூடாது. கேட்டவுடனே…
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
2.எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

தியானித்த பின் கஷ்டத்தைச் சொன்னவரிடம்… உங்கள் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருப்பீர்கள்… உங்கள் தொழில் நன்றாக இருக்கும்… குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பீர்கள்… செல்வம் செல்வாக்கு பெருகும்… என்று இதைச் சொல்ல நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் உடலில் வந்த நோயைப்பற்றிச் சொன்னாலும் அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள். பின் அவரிடம்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் இரத்த நாளங்களில் கலந்து உங்கள் உடல் முழுவதும் அது படர்ந்து நீங்கள் நலம் பெறுவீர்கள்…! என்று சொல்ல வேண்டும்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவர்களை ஏங்கித் தியானிக்கும்படி சொல்ல வேண்டும்
2.உடலில் எங்கு வலி இருக்கிறதோ அவர்களை அங்கே நினைக்கச் செய்து
3.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வலி எடுக்கும் இடங்களில் படர்ந்து வலி நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கச் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்தால் அவருடைய நோய் நீங்க நீங்களே உதவி செய்கின்றீர்கள். ஆனால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்காதபடி
2.உடனடியாக (SUDDEN ஆக) நோய் நீங்கிவிடும் என்று சொல்லக்கூடாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று முதலில் ஏங்கி அந்தச் சக்திகளை வலுவாக்க வேண்டும்.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவருடைய இரத்த நாளங்களில் கலந்து அவர் உடலில் இருக்கக்கூடிய சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ மற்ற எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று சொல்லிப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் இவ்வாறு இருந்தாலும்
1.கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்…
2.கணவர் உடல் நலம் பெற வேண்டும் என்றும் மனைவி இதே மாதிரி சொல்லி
3.ஒருவருக்கொருவர் இந்த உணர்வை பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

இதன்படி செய்து வந்தால் எந்த நோயாக இருந்தாலும் அதை நீக்கிடும் சக்தி பெறுகின்றீர்கள். இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும். பழகி விட்டால் சரியாகிவிடும்.

ஆகவே நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாக இருக்க வேண்டும்.

தீமைகளை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக நாம் விடும் இத்தகைய மூச்சலைகள் இந்த பூமியிலே பரவப் பரவ…. விஞ்ஞான அறிவால் காற்று மண்டலம் நச்சுத் தன்மை அடைந்து வரும் இந்த வேளையில் அதை மாற்றிடும் சக்தியாகப் பரவும்.

கூட்டுத் தியானங்களின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்… நோய்களை நீக்கும் சக்தி பெற வேண்டும் என்றும்… நாம் ஏங்கி எடுத்து அந்த உணர்வுகளைப் பரப்பும் போது பூமியிலே அதிகமாக இது பரவும்.

ஒவ்வொருவரும் இதைச் செய்தால் எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாகப் பரவுகிறது. எளிதில் கிடைக்கும் சந்தர்ப்பமும் உருவாகிறது.

உதாரணமாக நண்பனுக்கு நண்பன் பழகும்போது “நன்மை செய்தான்…” என்றால் விக்கலாகிறது… நாம் செய்யும் காரியமும் அப்போது நல்லதாகிறது.

காரணம்… நன்மை செய்த உணர்வுகள் இங்கே படர்ந்திருக்கும் நிலையில் அதை எண்ணும்போது உடனே அவர்கள் உடலிலே பதிந்திருக்கும் உணர்வுகள் அதை இயக்கிச் செயல்படுத்துகின்றது.

ஆனால் பழகிய பின் தீமை செய்திருந்தால் அதைப் பதிவு செய்து எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று எண்ணினால் உடனே அங்கே இயக்கிப் புரையோடச் செய்கின்றது… காரியங்களும் தடையாகின்றது.

இது போன்ற உணர்வின் இயக்கங்களை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால்
1.நண்பர்கள் உடல் நலக் குறைவாக இருந்தாலும் கேள்விப்பட்ட மாத்திரத்தில் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.நண்பனின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
3.ஒருவருக்கு ஒருவர் இவ்வாறு நாம் செய்து துன்பங்களை நீக்கிப் பழகுதல் வேண்டும் (இல்லை என்றால் நண்பரிடம் விளைந்தது இங்கேயும் பரவும்)

கூட்டுத் தியானங்கள் ஆங்காங்கு நடக்கும் பொழுது புதிய அன்பர்கள் வந்தாலும் அவர்களுக்கும் இந்த முறையைச் சொல்லிக் கொடுத்து… நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள்…! உங்கள் குடும்பம் நலமாகும் தொழில் நலமாகும்… உடல் நோய்கள் நீங்கும் என்ற வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன் வழியில் கூடுமானவரை அவர்கள் உடலில் இருக்கக்கூடிய சிரமங்கள் குறைந்தால் நீங்கள் சொல்வது போல் அவர்களும் இந்தத் தியானத்தைச் செய்ய முற்படுவார்கள்.
1.அவர்கள் விடும் நல்ல மூச்சுகளும் இந்தப் பூமியிலே பரவும்
2.ஒன்று சேர்ந்து வாழும் சக்திகள் நம் பூமியிலே அதிக அளவிலே வளரும்.

பணம் சம்பாரிக்கத் தான் இன்றைய கல்வி… தன்னை உணர்வதற்கல்ல…!

 

அறியாதவர்கள் அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலேயே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்கிறார்கள்.

கற்றவர்… கல்லாதவர்… அறிந்தவர்… அறியாதவர்… எழை… செல்வந்தன்… இப்படிப் பல பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இந்த உலகமே சுழல்கின்றது.

1.கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும்
2.கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு மனப்பான்மையும்
3.தன் மனதிலுள்ளே ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த
4.மாய ரூபத்தையே மனதினில் கலக்கவிட்டு உலக மக்கள் இன்று வாழ்கிறார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு…! என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தியுள்ளார். இன்றுள்ள மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணம் தான் அதிகமாக உள்ளது. அதையே பெரிய படிப்பாக எண்ணி வாழ்கின்றார்கள்.

1.ஏட்டுப் படிப்பிற்குப் பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தியுள்ளதால்
2.அந்த நிலைக்காக ஏங்குவோர் பலர் உள்ளனர்.
3.படிப்பும் பட்டமும் அளித்த மாய ரூபங்கள் தாம் இவை.

தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
1.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா…?
2,அன்று கம்பர் எழுதிய கவிதையெல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்றுப் படிக்கப்பட்டதப்பா..?

கம்பரும் திருவள்ளுவரும் வியாசகரும் வான்மீகியும் இப்படி எண்ணிலடங்கா ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?

அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டுதான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளிகளிலும் கல்லூரியிலும் கல்வி என்ற பெயரில் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்.

அந்தப் படிப்பைப் படித்ததற்கு இன்றுள்ள உபாத்தியாயர்கள் மதிப்பெண்களும் தருகிறார்கள். மதிப்பெண் பெறுவதில் தான் இருக்கின்றார்கள்.
1.ஆக இன்றுள்ள இக்கலியுகமே
2.தானாக உணர்ந்து செயல்படும் நிலையை முழுவதுமாக மாற்றி வருகிறது.

உலகின் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மனிதனின் எண்ணத்தில் மட்டும்
1.தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு
2.பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழ்கின்றான் இன்றுள்ள மனிதன்.
3.மனிதர்களின் எண்ணமெல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
4.பிறர் சொல்லிய உண்மைகளையே ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
5.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது. இந்தச் செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இனியாவது இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா…!

ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அந்தச் சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும்.

தானும் ஒரு திருவள்ளுவராகவும்.. கம்பராகவும்… வால்மீகியாகவும்… வியாசகராகவும்… அந்த ரிஷிகளைப் போல ஆகலாம்…! என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து இன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.

வீண் விவாதத்திற்கு இடம் தராமல் கற்கும் கல்வியால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
1.இந்த உலக நன்மைக்காக
2.இந்த உயிரணுக்களின் நன்மைக்காக
3.இந்த விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
4.கல்கி என்னும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கையின் சக்தியைப் பெற்றிடுங்கள்…!

நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக (இயற்கைக்கு) அடிபணிந்து வாழ்ந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை மறைத்திருக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

இந்த விஞ்ஞான உலகில் இனி வரும் பெரும் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும்.

குருநாதர் எமக்குக் கற்றுக் கொடுத்த நிலைகளை எல்லாம் என்னுடன் வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருந்தால் என்னாகும்…?

எனக்குள் மறைந்துவிடும்.

ஆனால் உங்களுக்குள் இதை உணர்த்தப்படும் பொழுது உங்களுடைய பார்வையால் சொல்லால் பேச்சால் மூச்சால் பலருடைய தீமைகளை மீட்டிடும் சக்தி உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்ற “ஆசையில் தான்” சொல்கிறேன்.

சிந்தனையை மறைக்கச் செய்யும் நிலைகளை மாற்றியமைத்துத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வாக அந்த ஞானத்தின் வழிகளில் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்.

நாம் நல்ல குணம் கொண்டு இருந்தாலும் நம் சந்தர்ப்பம் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நல்ல குணத்துடன் சேர்ந்து அது பதிந்து விடுகின்றது.

அந்த அச்சுறும் உணர்வுகள் நமக்குள் விளைந்து விட்டால் நல்ல குணங்களைக் காக்கும் செயலை இழந்து விடுகின்றது.

ஆகவே அந்த அச்சுறுத்தும் உணர்வின் தன்மையை மாற்றிடும் உணர்வைச் சொல்லாக இங்கே உபதேசிக்கின்றேன்

சொல்லாகச் சொல்கிறேன் என்றால் அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் என்னுடைய நினைவாற்றல் சென்றது. அதை நான் பெற முடிந்தது. பெற்று அதை வளர்த்துக் கொண்டேன்.

1.யாம் பெற்ற நிலையில் அந்த ஞானிகள் பெற்றதை யாம் இங்கே நினைவு கொண்டு சொல்லும்போது
2.உங்கள் நினைவாற்றல் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த எல்லைகளுக்கே சென்று
3.அங்கே உருவான அந்த அருளாற்றல்களை நீங்களும் நுகர முடியும்.

உதாரணமாக ரோட்டில் இன்ன இடத்தில் ஆக்சிடென்ட் ஆனது என்று கேள்விப்பட்ட உடனே “ஆ…” என்று பதிவாகி விடுகின்றது. பின் அதை யாராவது சொன்னால் மீண்டும் நினைவு வந்து அந்த இடமே தெரிய (படம் போல்) ஆரம்பித்துவிடும். இதைப் போல

1.குருநாதர் கொடுத்த அந்த அருள் வழியில் யாம் உபதேசிப்பதை
2.நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதெல்லாம்
3.அவர் கண்டுணர்ந்த பல தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
4.அப்பொழுது உங்களுக்குள் சித்திரை – சிறு திரையாக நல்லதை மறைத்து கொண்டிருக்கும்
5.அந்த நல்லதை அறிய விடாது செய்யும் நிலைகளை மாற்றி
6.உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வின் அணுவாக மாற்றிடல் வேண்டும் என்பதற்கே இதை நினைவுபடுத்துகின்றேன்.

பள்ளியில் படித்த பின் படித்தை நினைவு கொண்டார்களா…? என்பதை தேர்வில் பரீட்சித்துப் பார்க்கின்றனர்.

படித்தது நினைவு வந்தால் தேர்வில் எழுதிவிடுகின்றார்கள். நினைவுக்கு வந்தால் சிந்திக்கும் தன்மை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் அந்தச் செயலாக்கத்தின்படி தேர்வில் தேர்ச்சி பெறுகின்றார்கள்.

அதைப் போன்று தான் யாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்து தீமைகளை எப்படி மாற்றுவது…? என்ற சிந்தனை கொண்டால் சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானம் உங்களுக்குள் வருகின்றது.

அந்த ஞானத்தால் உங்கள் தீமைகளை எளிதில் போக்கிக் கொள்ள முடியும்.

கணவனும் மனைவியும் ஒன்றிணைந்து ஒளியாக ஆவதற்குத் தான் திருப்பூட்டும் பழக்கத்தை ஏற்படுத்தினர் ஞானிகள்

 

கணவன் இறந்தாலும் அவர் உடலிலே விளைந்த உணர்வுகள் மனைவியின் உடலிலே நிலைத்திருக்கின்றது. அந்த உணர்வின் துணை கொண்டு
1.என்றும் என்னுடன் அவர் இருக்கின்றார்… “இருக்க வேண்டும்…!” என்பதற்குத்தான் மாங்கல்யத்தை அணிகின்றனர்.
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் மாங்கல்யத்தின் தத்துவமே
3.என்றுமே கணவர் தன்னுடன் உறுதுணையாக இருக்கின்றார் என்று நினைவுபடுத்துவதற்குத் தான்.

மாயவரத்தில் ஒரு கிராமத்தில் அவர் ஒரு டாக்டர். அவருடைய தாயாருக்கு வயது 65 அல்லது 70 இருக்கும். கணவர் உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது.

அந்த ஊரின் சமூகத்தின்படி பொட்டை நீக்கவேண்டும்… தாலியைக் கழட்ட வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டார்கள்.

நான் (ஞானகுரு) அங்கே மாயவரம் சென்றிருக்கும் பொழுது இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லும் பொழுது அந்த அம்மா பொட்டையும் கலைக்கவில்லை… தாலியையும் கழட்டவில்லை.

1.கணவர் என்னுடன் தான் இருக்கிறார்… என்னுடன் தான் இருக்கிறார்… என்ற நிலையைச் சொல்லி
2.அவருடைய உணர்வு என்னுடன் உள்ளது
3.சாமி சொன்னபடி அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றே செயல்படுத்தியது.

உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த ஆன்மா அவருடைய உணர்வின் துணை கொண்டு… எங்கள் உடலில் இருப்பதை அதனின் வலுக் கொண்டு தான் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தோம்.

உடல் பெறும் உணவுகள் அங்கே கரைந்துவிட்டது… ஒளி பெறும் சரீரம் அங்கே நிலைத்திருக்கின்றது.

1.இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் அவருடன் நான் தொடர்பு கொள்கின்றேன்… காண்கின்றேன்.
2.அந்த உணர்வின் ஒளியின் நிலை கொண்டு எனக்குள் அவ்வப்போது அந்த நினைவாற்றல் வரும் பொழுது
3.இந்தப் புவியில் வரும் இருளை நீக்கும் அருளாற்றல் எனக்குக் கிடைக்கின்றது என்று அந்த அம்மா செயல்படுத்தியது.

இது நடந்த நிகழ்ச்சி…!

ஆனால் சாங்கியங்களைச் செய்து மாங்கல்யத்தைப் பறிப்பதும் பெண்களை அவமதிப்பதிலும் தான் இருக்கின்றார்கள். பெண்களை ஒரு கருவியாகத் தான் மதங்கள் பயன்படுத்தி உள்ளதே தவிர
1.சம உரிமை கொண்டு கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழும் நிலை இல்லை
2.காலப்போக்கில் அவை அனைத்துமே மறைந்து போய்விட்டது.

கணவனும் மனைவியும் என்றும் ஒன்றியிருந்து ஒளியின் உணர்வின் நினைவு கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படும் பொழுது இந்த உடலை விட்டு முதலில் ஒருவர் சென்று அடுத்து ஒருவர் சென்றாலும் “அங்கே தான் செல்ல முடியும்…”

இப்படிப்பட்ட உணர்வுடன் காலை துருவ தியானத்தில் எடுக்கப்படும் போதெல்லாம் அங்கே ஒளியான கணவன்/மனைவி உணர்வுடன் தொடர்பு கொள்கிறது. அதன் மூலம் அந்தக் குடும்பத்திற்கும் உயர்ந்த உணர்வின் ஞானங்களும் கிடைக்கின்றது.

ஆகவே யாராக இருந்தாலும் உடலை விட்டுப் பிரிந்தால் உடல் தான் செல்கிறது. ஆனால் அவருடன் வாழ்ந்த உணர்வுகள் இவரை (உடலில் பதிந்திருப்பது) விட்டு அகலவில்லை இந்த உணர்வை எப்படிப் போக்குவது…?

பொட்டையும் தாலியையும் நீக்க வேண்டும் என்றால் உறவாடிய உணர்வுகள் உடலில் பதிந்துள்ளது… நினைவுகள் வருகின்றது… சொற்கள் வருகிறது. இதை எப்படி நீக்குவது…?

சாங்கியங்களைச் செய்து கணவன் மனைவி ஒன்றிணைந்து ஒளியாகும் பழக்கங்கள் காலத்தால் அந்த உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது.

ஆகவே
1.திருமணம் ஆகிவிட்டால் கணவனும் மனைவியும்
2.நாங்கள் ஒன்றி வாழ்கிறோம் என்ற இந்த உணர்வுடன் தான் வாழ வேண்டும்.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?

 

1.மனித எண்ணத்தின் வேகம் என்பது
2.இந்த உலகிலுள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று
3.பல முறை சொல்லியுள்ளேன்.

நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோதவிடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுவாகிறது.

இந்த எண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்… உயிர் உதிக்கும் நிலையும்… உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்… எல்லாமே வருகின்றன.

இந்த எண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன. எண்ணத்தின் ஆசையை வளர விடுவதனால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகின்றோம்.

இந்த எண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன்.
1.இந்த எண்ணத்தை வைத்தே ஒவ்வொரு ஆத்மாவும் அந்த உடலில் இருக்கும் நிலை கொண்டு
2.தன் எண்ணத்தை “ஓ..ம் ஈஸ்வரா…” என்ற நாதம் கொண்டு
3.ஒரே நிலையில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
4.இந்த உடல் வேறு… இந்த ஆத்மா வேறு…! என்ற நிலையைக் கண் கூடாகக் கண்டிடலாம்.
(சீராகத் தியானமிருப்பவர்களால் இதை நிச்சயம் உணர்ந்திருக்க முடியும்)

நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் வாழ்க்கை நிலையில் நாம் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை. ஏனென்றால் நம்மையே நாம் உணராத நிலையில்
1.பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது
2.பிறரின் அன்புக்கும் நம் ஆன்மாவை நாம் அடிமையாக்கிக் கொள்கிறோம்.
3.அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசை நிலை தான்.

ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அந்த ஆண்டவன் நமக்கு எப்படி அன்பைப் பொழிவான்…?

நம்முள் அதிக ஆசையை வளரவிட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
1.நம்முள்ளேயே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
2.நம்மையே நாம் வெறுக்காமல்
3.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
4.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து
5.நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளேயே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் அவ்வாத்மா அமைதியுற்று அந்த ஆண்டவனின் சக்தியே
8.நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.

நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்த நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடலாகாது.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு அந்த ஆண்டவனா பொறுப்பாளி…? நம்மில் இருக்கும் ஆண்டவனைக் கண்டிட நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது தான் அந்த ஆண்டவனின் ஜெபத்திற்கும்
2.ஆண்டவனின் ஆசியைப் பெறுவதற்கும் உகந்தவர்களாகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றினான்…, துருவ நட்சத்திரமானான்

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் நம் பூமியின் துருவத்தின் ஆற்றலை அறிந்தான்.

அவன் செய்யும் அதிசயமான செயல்களைக் கண்டு அவனுடன் வாழ்ந்தவர்கள் “காட்டு ராஜா”என்றே அவனைக் கொண்டாடுகின்றார்கள்.

புவிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எங்கிருந்து வருகிறது…? என்று உற்று நோக்குகின்றான். அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அவ்வாறு அவனைச் சிந்திக்கும்படி செய்கின்றது.

வானுலக ஆற்றல் நம் பூமிக்குள் துருவப் பகுதியின் வழியாக எப்படி வருகின்றது…? என்பதை அறிகின்றான்.

துருவத்தின் வழியாக வரும் உணர்வுகள் விஷத் தன்மையாக இருந்தாலும் இவன் நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் ஒளிக் கதிர்களை மாற்றுகின்றான்.

இன்றும் நாம் விண்ணிலே “மின்னல்களைப் பார்க்கலாம்…”

அதாவது நட்சத்திரங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் எதிர் நிலையானால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது சுக்குநூறாகி அலைகள் மாறும்.

அலைகளாக மாறி வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வரும் பொழுது அதனுடைய கலவைகளில் பல வித்தியாசமாக வரும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை “மின்னலைப் பாருடா… மின்னலைப் பாருடா…” என்று சொல்வார்.

எனக்குப் பயமாக இருக்கிறது. என் கண்கள் குருடாகிவிடும் என்று சொல்வேன். எனக்கும் அவருக்கும் இதனால் தர்க்கமாகும்.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளை அடக்குகின்றது. அதே சமயத்தில் அந்த மின்னல்கள் கடும் விஷத் தன்மை கொண்டது

1.ஆனால், அகஸ்தியன் அவனுக்குள் இதை அடக்கிடும் உணர்வை எடுத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவன்.
2.அகஸ்தியன் மின்னலின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து எப்படி அடக்கினான்…?
3.மின்னல் எப்படி அவனுக்குள் அடங்குகிறது…? என்பதனை அங்கே உணர்த்துகின்றார் குருநாதர்.

அந்த நட்சத்திரங்களிலிருந்து வருவது எதற்குள் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத்தக்கவாறு அந்த உணர்ச்சிகளை ஊட்டி அது செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று காட்டுகின்றார்.

குருநாதர் என்னை அந்த மின்னலையும் பார்க்கச் சொல்லி அகஸ்தியன் எப்படி விஷத்தை அடக்கினான்…? அந்த மின்னணுவின் தன்மையைத் தனக்குள் ஒளியாக்கினான் என்பதையும் காட்டினார்.

செடியின் மேல் மின்னல் தாக்கினால் செடி கருகிவிடுகின்றது. அதிலுள்ள சத்தை எடுத்துவிடுகின்றது. இதே போல
1.விஷத்தை ஒடுக்கிடும் உணர்வு வரப்படும் பொழுது
2.கதிரியக்கப் பொறிகளாக வருவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும் இதை ஒடுக்கி
3.அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றுகின்றான்.

இதையெல்லாம் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அப்படி மாற்றியமைத்த அவன் உடலில் உருவானதுதான் அகண்ட அண்டத்தில் வரும் எதையுமே மாற்றிடும் சந்தர்ப்பம் வருகின்றது.

அகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது 27 நட்சத்திரங்களிலிருந்து வரும் பல கோடி மின்னல்களையும் பார்க்கின்றான்.

அதையெல்லாம் அடக்கி “ஒளியின் அணுவாகத் தனக்குள் மாற்றும் நிலை” பெறுகின்றான்.

விண்ணுலக ஆற்றலை எடுத்துத் தன் ஆத்மாவுக்கு ஊட்டம் தந்து என்றும் அழியாது வாழ்பவர்களே “சப்தரிஷிகள்”

 

இப்பூவுலகில் ஜீவ உடலுடன் நம் ஆத்மா (உயிர்)
1.எந்த நிலை கொண்டு சுவாசம் எடுத்ததோ
2.எந்த நிலை கொண்டெல்லாம் சப்த அலைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளதோ (உடலுடன் உள்ள பொழுது)
3.அதே நிலை கொண்டு தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின்னும்
4.உயிராத்மாவைச் சுற்றிச் சப்த அலைகள் சுற்றிக் கொண்டே உள்ளன.

ஏனென்றால் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்ற பிற்பாடு எந்த நிலையில் ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது…?
1.நாம் எந்த நிலை அடைகிறோம்…?
2.எங்கே எப்படி இருப்போம்..? என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.

இதைப் பற்றி பலரும் பல ரூபங்களிலும் பல விதக் கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகக் கேட்கப் பெறுகின்றோம். அறிந்த உண்மையை அறிந்த நிலையில் செப்புவதற்கு இன்று யாருமில்லை. அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து செப்பினார்கள்.

நம் உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவிற்குச் சுவாச நிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ அந்த நிலையில் தான் சுற்றிக் கொண்டே இருக்கும்.

பூமியில் சுற்றிக் கொண்டேயிருந்து மீண்டும் இங்கேயே இன்னொரு ஜீவ உடல் பெற்று ஜென்மம் எடுக்கிறதா…? அல்லது இந்த நிலையிலிருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜென்மம் எடுப்பதில்லையா…? என்ற எண்ணம் உள்ளது.

அச்சக்தியின் அருள் பெற்ற அவ்வுயிரணு உருவம் பெற்ற நிலையில் எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்டே தான் அவ்வுயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளது.

1.உடலுடன் அஜ்ஜீவாத்மா இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலை கொண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்வாத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான எந்தச் சக்தி நிலை பெற்று அவ்வுயிரணுவிற்குச் சுவாச நிலை கிடைத்ததுவோ அதே நிலை பெற்றுத்தான்
6.மீண்டும் மீண்டும் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வுயிரணு என்னும் ஆத்மா எல்லாமே..!

அந்த ஆத்மாவின் சுவாசத்தால் எப்பூமியில் அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் தந்ததோ அந்த நிலை கொண்டு தான் அவ்வுயிரணு எத்தனை காலமானாலும் சுற்றிச் சுற்றிப் பிறவி எடுத்துக் கொண்டே வாழ்ந்திட முடியும்.

உடலுடன் இருக்கும் பொழுது தான் உயிராத்மா தன் வலுவைக் கூட்ட முடியும். உடலை விட்டுப் பிரிந்தால் உயிராத்மாவில் என்ன மணம் அதிகமாக உள்ளதோ அந்த மணங்களின் ஈர்ப்பிலே தான் சுழன்று கொண்டிருக்க முடியும். வளர்ச்சி இருக்காது.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு மீண்டும் ஒரு உடலுக்குள் செல்லாது
1.“பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…!” என்று முயற்சி எடுத்து
2.அதன் வழி விண்ணுலக ஆற்றலை எடுத்துத் தன் ஆத்மாவுக்கு ஊட்டம் தந்து
3.விண்ணுலகில் அழியாது வாழ்பவர்களே சப்தரிஷிகள்.

அந்த நிலையை எய்திடத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

தேறாதது எது…? தேறுவது எது…!

 

நோயுற்ற ஒரு பெண் குழந்தையைக் குணப்படுத்துவதற்காக எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்தார்கள். சுமார் 13 வயது இருக்கும்.

குழந்தை நோயால் மிகவும் வாடிக் கொண்டிருக்கும் பொழுது வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டதால் விஷத்தின் தன்மை அடைந்து விட்டது.

1.மருந்து மாத்திரைகள் என்று விஞ்ஞான அறிவு கொண்டு விஷத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதனல்லாத உடலாகத் தான் பிறக்கும்.

அந்த உடலிலேயே அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை ஏற்று வளர்த்துக் கொண்டால் அடுத்து உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியில்லா நிலை அடைகின்றது.

ஆகவே…
1.மகரிஷிகளின் உணர்வை அந்த குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு
2.உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த உணர்வுடனே தொடர்பு கொண்டு தியானப் பயிற்சி கொடுத்தோம்.

ஏனென்றால் அது உடலில் ஆஸ்த்மா தொல்லை உண்டு.

நுரையீரல் பாகங்களில் நரம்பு இழுத்துப்பிடித்து இருப்பதனால் அத்தகைய பாதிப்பு வந்தது. இந்தப் பிடித்தம் அவர்களின் பரம்பரையில் வந்தது அப்பாவுக்கும் உண்டு… தாத்தாவுக்கும் அது இருந்தது

பரம்பரை வழியிலே வந்ததனால் இந்த பின்னம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட்டால் தான் அதனுடைய நிலைகள் தப்ப முடியும்.

ஆகவே பெண் குழந்தையாக இருப்பதால் இப்போது காப்பாற்றினாலும்… அதனுடைய மண வாழ்க்கையில் மீண்டும் அதிகமான வேதனைப்பட்டால் மனிதனல்லாத உருவைத் தான் உருவாக்கிவிடும்.

ஆகவே பருவம் வரப்படும் பொழுது அருள் ஒளியின் தன்மை கொண்டு இந்த உடலிலே மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவர்களையே பெறும்படி செய்தோம்.

இப்போது எடுக்கும் அருள் உணர்வுகளின் வளர்ச்சி கொண்டு…
1.அடுத்து உடலை விட்டுப் பிரியும் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்
2.உடல் பெறும் உணர்வுகள் கரையவும் பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவருடைய நிலைகளை நாம் இத்தகைய நிலைகளில் அது மாற்றி அமைக்க வேண்டும்.

குழந்தையினுடைய தாயும் வேதனை உணர்வையே எடுத்துக் கொள்கின்றது. அதை மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும் என்ற நினைவைக் கூட்டும்படி செயல்படுத்தப்பட்டது.

1.இதன் வழி செய்தால் அந்த ஆன்மா எளிதில் அங்கே போய்ச் சேர்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகிறது.

காரணம்… எந்த நேரமும் எத்தருணத்திலும் உடலை விட்டுப் பிரிய நேரலாம். முயற்சி செய்தால் இன்னொரு பத்து வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!

ஆனால் இங்கே இந்தப் பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது சீரான உடல் அமைப்பு இல்லை என்றால் மண வாழ்க்கையில் காலப் பருவம் வரும் போதெல்லாம் வேதனைப்படும்.
1.ஆகவே “இது தேறாது…” என்ற நிலை வந்தபின்
2.தேறுவது எது…? என்ற நிலையில் அருள் உணர்வின் ஒளியே தேறுகிறது… அதுவே என்றும் பிறவியில்லா நிலை.
3.இந்த இளமைப் பருவத்தில் அது ஒளியாகிவிட்டால் நலமாக இருக்கும் என்று
4.அந்த ஆன்மா அதன்படி சப்தரிஷி மண்டலம் இணைந்தது.

இப்படி… இந்த உடலுக்கு என்று இச்சை அதிகமாகப் பெறாதபடி அருள் ஒளி பெற வேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தாலே போதுமானது.

1.குறித்த காரியங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியை நமக்குள் பெருக்கும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்
3.வழியறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்
4.சோர்வு என்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.

எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும்… அருள் ஒளி பெறும் அந்த நினைவு பெருக வேண்டும்… இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… அந்த அரும் பெரும் சொத்தே நமக்குச் செல்வம் என்று செயல்படுத்த வேண்டும்.

நாம் தேடிய செல்வங்கள் நம்முடன் வருவதில்லை… அழகான உடலும் வருவதில்லை… நாம் அலங்காரம் செய்யக்கூடிய பொருள்களும் வருவதில்லை… ஆடம்பரமாக நாம் கட்டிய வீடும் வாங்கிய காரும் வருவதில்லை. மற்ற எத்தகைய பொருளாக இருந்தாலும் நம்முடன் வருவதில்லை.
1.ஆனால் அந்த அருள் ஞானத்தை இந்த உடலிலே வளர்த்துக் கொண்டால்
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை பெறும்.
3.வேகா நிலையாக பிறவியில்லா நிலை அடைய முடியும்
4.அகண்ட அண்டத்தில் என்றுமே ஒளியாக வாழ முடியும்
5.அப்படி வாழக்கூடிய பருவத்தை இந்த உடலிலேயே சேர்த்தால்தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது மனதை மட்டும் “நான்…!” என்று ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?

 

தாய் தந்தையில்லாமல் குழந்தையில்லை…! நிலம் நீர் இல்லாமல் “தாவர இனங்கள் இல்லை….!” சூரியனின் ஒளிக் கதிர்கள் இல்லாமல் பூமியுமில்லை…! பல மண்டலங்களின் நிலையில்லாமல் சூரியனுமில்லை…!

சூரியனின் நிலை இல்லாமல் பல மண்டலங்களுமில்லை…! சூரியனுக்கே சக்தி தரும் பல கோடிச் சூரியன்கள் இல்லாமல் இயங்காமல் இந்த மண்டலங்கள் சூரியன்கள் எதுவுமே இல்லை…!

இந்த மண்டலங்களின் தன்மை எதுவும் இல்லாமல் காற்றும் மழையும் ஒளியுமில்லை…! இப்படி இந்த எல்லா நிலைகளையும் ஆட்டிப் படைக்கும் அத் தேவனின் சக்தி ஒன்றே தான்… ஒரே நிலை கொண்டு தனித்து வணங்கிடும் அவ்வாண்டவனின் சக்தி…!
1.அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து இயங்குபவை எல்லாமே
2.எதுவுமே தனித்து இல்லை….
3.ஒன்றை ஒன்று ஒட்டித்தான் எல்லாமே உள்ளன.

ஆனால் இன்றைய மனிதர்களில் சிலரின் நிலை “நான்…!” என்ற ஆணவத்தில் இயங்கி வருகிறது. அந்த நான் என்ற ஆணவத்தை விட்டகற்றிடும் அவன் மன நிலையை அச்சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து தான் அவன் பெற வேண்டும்.

ஆண்டவனே இல்லை என்று சொல்லும் யாராக இருந்தாலும் இதைப் படித்து விட்டுப் பதில் சொல்லட்டும்…!

1.இந்த உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது
2.நம் மனதை மட்டும் “நான்…!” என்ற நிலையில் ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?
3.நான் என்ற நிலை கொண்ட மன நிலையை விட்டு அகற்றிடுங்கள்.

இந்தக் கலியின் கடைசி நிலை கொண்டு நாம் எல்லோரும் வாழ்கிறோம் என்ற உண்மையை அறிந்து இனி நல்ல வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்னும் நிலையில் அவ்வாண்டவனை வேண்டி அருள் பெற்று வாழ்ந்திடுங்கள் நல் வாழ்க்கையை.

ஆண்டவனின் சக்தி… ஆண்டவனின் சக்தி… என்று சொல்லும் பொழுதே ஆண்டவனை ஆண்பாலாகவும் சக்தியினைப் பெண்பாலாகவும் கொண்டு யாம் (ஈஸ்வரபட்டர்) எதையும் தனித்துச் சொல்லவில்லை.

எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்து தான் உள்ளது. அந்த ஆண்டவனின் சக்தி நிலை இயங்குவதற்கே இப்பல மண்டலங்கள் இல்லாவிட்டால் பொருளில்லை.

இந்த நிலையில் ஆண்டவன் எங்கப்பா தனித்து நிற்கின்றான்…?

1.நாம் தனியாக இயங்கவில்லை (நம் எண்ணத்தில் தான்…!)
2.அவன் ஒருவன் உள்ளான் என்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்
3.அவ்வாண்டவனை மட்டும் தனித்த நிலையில் வணங்கச் செய்தார்கள் ஞானிகள்.

அவ்வாண்டவனின் சக்தியில் தான் எல்லா மண்டலங்களும் எல்லா உயிரினங்களும் உள்ளன.

1.அவ்வாண்டவனே தான் எல்லாமே
2.ஆண்டவன் என்பவன் தனித்து எங்குமில்லை
3.அவ்வாண்டவன் என்பவன் தான் எல்லாமே என்ற உண்மை மட்டும் தனித்து இருக்கிறதப்பா…!

அவ்வாண்டவனின் சக்தியை நீங்கள் எந்த ரூபம் கொண்டும் எந்த நிலை கொண்டும் அவரவர்கள் மன நிலைக்கு உகந்தபடி வணங்கி வாழ்ந்திடுங்கள். நம்முள்ளே உள்ள ஈசனையே நாம் காணும் பாக்கியம் பெற்றிடலாம்.

அந்த ஆண்டவனின் சக்தி நிலையும்… எந்த நிலை கொண்டு இருக்கிறது என்பதனையும் தான் புகட்டியுள்ளோம்.

ஆண்டவன் என்பவன் யாரென்று புரிகின்றதா…?

ஆண்டவன் என்பவன் யார்…? நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத இந்தப் புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலுமே கலந்துள்ள சக்தியை யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் ஒருநிலைப்படுத்திச் சொல்லும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?

ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து அவரவர்கள் வழிக்கு வணங்குகின்றார்கள். இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

இங்கு ஆண்டவனை வணங்கும் முறையே பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து பொருள் உள்ளவர்கள் மட்டும் தான் ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை சாஸ்திரங்களின் பெயரால் புரியாத நிலைப்படுத்தி வணங்குகின்றார்கள்.

ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம். எல்லோருமே ஆண்டவன் தான். எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

1.எத்தனையோ ஞானிகளும் மகான்களும் சாஸ்திரங்களாகக் கொடுத்த நற்போதனைகளை
2.அவர்கள் உடலுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்று நடத்திடாமல் இன்று
3.அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதும் நல் உபதேசத்தை ஏற்கும் மன நிலையை மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

நாளேடுகளிலும் சினிமா டி.வி.யிலும் மற்ற வழிகளிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும் ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் படங்களைக் காட்சியாக காண்பித்து மக்களின் மனதையே பெரும் உந்துதலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆட்சி செய்பவர்களும் உள்ளார்கள். பல கோடி நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை எல்லாம் மறந்து நாம் பயத்துடனே இன்று வாழ்கின்றோம்.

அதை எல்லாம் மாற்றிவிட்டு நம் பூமியிலே தோன்றி வாழ்ந்து வளர்ந்து சூட்சம நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஞானிகளின் ஆசியுடன் வாழ்கின்றோம் என்ற பேருண்மையை உணர்ந்து ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலை எல்லாம் மறந்து ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழுங்கள்.

1.இது வரை நடந்தவைகளை நடந்தவையாகவே விட்டு விட்டு
2.இனி நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன்
3.நம் உயிரணுவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து
4.நமக்காக மட்டும் வாழாமல் நம்முடன் தோன்றிய எல்லா உயிரணுக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.

அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள் எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலமும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள்.

இக்கலியை கல்கியாக்கி வாழ்ந்திடுங்கள். கலியை ஆண்டவன் வந்து கலியாக்குவதில்லை. இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன்கள் எல்லோருமே ஆண்டவன்கள் என்பது யாரென்று புரிந்ததா…?

இக்கலியில் உள்ள உயிரணுக்களான நாம் எல்லோருமே தான் கலியைக் கல்கியாக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.
1.ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை
2.மனிதர்கள் மன நிலையை வைத்துத்தான் கால நிலையும் மாறுகின்றது.

ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்து மனிதரின் மன நிலையை வைத்துத் தான் மாறுபடுகிறது. இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இந்த மன நிலை மாறுவதற்காகத்தான்… நம் ஞானிகளின் நிலை கொண்டே நடந்திடும் “பெரும் நாடகம்…”

நாடகத்தின் தொடரை இனிக் கண்டு வாழ்ந்திடலாம். இந்த நிலையிலிருந்து மக்களின் மன நிலையில் பெறும் மாற்றம் வந்திடுமப்பா.

அந்த நிலை நடப்பதற்காகத்தான் சூட்சம நிலையில் உள்ளவர்கள் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.

இன்றைய செயற்கையின் கோளத்தை அந்த நிலையின் உண்மைகளை நாமும் (எல்லோரும்) பார்த்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூட்டுத் தியானங்களில் நாம் பதிவு செய்த வலுவான சக்தி துணை கொண்டு ஈஸ்வரா… என்று நம்மை இயக்கும் உயிரை எண்ணி ஏங்கி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் மூலம் நம் உடலுக்குள் நம்மை அறியாது சேர்ந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வின் சக்திகளை பலவீனப்படுத்தச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் அது நம் உடலுக்குள் நோயாகி நல்ல குணங்களை செயல்படுத்தாது ஆக்கி விடும்.

1.இப்படி அடிக்கடி நாம் அந்த விண்ணை நோக்கி ஏகி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஆத்ம சுத்தி நாம் செய்து கொண்டால்
3.அன்றன்று அந்தந்த நிமிடங்களில் நமக்குள் நம்மை அறியாது ஏற்படும் தீமைகளை அகற்ற இது உதவும்.

அது மட்டுமல்லாமல்… நம்முடைய எண்ணங்கள் கூர்மையாக அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நம் நினைவலைகள் அங்கே இணைக்க படுகின்றது.

இதனை நாம் வலுக் கூட்டக் கூட்ட… விண்ணின் ஆற்றலும் அந்த மகரிஷிகளின் தொடர்பும் நமக்குக் கிட்டுகின்றது.

நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ வேதனைகளை அனுபவித்துத் தான் நம்மை வளர்த்து நமக்கு எத்தனையோ சுகங்களையும் கொடுத்துள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனாக உயர்ந்து வாழவும் வைத்துள்ளார்கள் செல்வங்களும் நமக்கு சேமித்து வைத்து உள்ளார்கள். செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் செல்வத்தைச் சேமிப்பதற்கு எவ்வளவோ வேதனைகள் பட்டு அனுபவித்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.

அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து மனித நினைவு இழந்து உணர்வின் சத்து அவர் உடலுக்குள் சேர்க்கப்படும்போது இன்னொரு மனிதனின் உடலுக்குள் அவர்கள் புகுந்தாலும்
1.அந்த ஆன்மா முதல் முதலில் சேர்த்துக் கொண்ட வேதனை உணர்வை அந்த உடலிலே உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தி
2.நஞ்சின் உணர்வைத் தான் அந்த ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

மீண்டும் இப்படி பல உடலுக்குள் போனாலும் அந்த நஞ்சைத் தான் வளர்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனின் உருவாக அந்தக் கருப்பெறும் தன்மையை இழக்கப்படுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் நாம் புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சியில் வந்தது போல… மீண்டும் மனிதனிலிருந்து பரிணாம வளர்ச்சி தேய்பிறையாகி… பௌர்ணமிக்கு மறு நாள் தேய்வதுபோல மனிதனின் ஒளிச்சுடர் நாம் அறியும் நிலைகள் மங்கி… நாம் மீண்டும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியில் பாம்போ தேளோ பல்லியோ இது போன்ற விஷ ஜந்துக்களின் நிலையை அடையச் செய்து விடுகின்றது நமது உயிர்.

நம் முதாதையர்களின் உணர்வுகள் நம் உடலிலே உண்டு. அவர்களுடைய உணர்வுதான் நம் உடலை இத்தகைய நிலைகளுக்கு வளர்த்தது. நம்மை மனிதனாக உருவாக்கியது நம் முதாதையர்களுடைய எண்ணங்களே.

1.ஆகவே நம் வாழ்க்கையில் வரும் துன்பத்தைத் துடைக்க
2.அடிக்கடி விண்ணை நோக்கி மகரிஷிகளின் அருள் சக்தி பெறும்போது
3.நமக்குள் வலுப் பெறும் இச்சக்தியின் துணை கொண்டு
4.நம் முதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி இணைக்கச் செய்ய வேண்டுமென்றால் இப்போது நாம் இங்கே எப்படிக் கூட்டு தியானங்களில் செய்கின்றோமோ இதைப் போன்று குடும்ப கூட்டு தியானங்கள் செய்து அந்தந்தக் குடும்பத்திலிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை பிரிந்த நிமிடமே அவர்கள் இதைப்போல சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து பிறவா நிலை என்னும் ஒளி சரீரம் பெற வேண்டுமென்று ஐக்கிய உணர்வின் வலுக்கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அதற்கு இந்தக் கூட்டுத் தியானம் உதவும்.

அந்த உணர்வின் சக்தியை நாம் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தையே வைத்துள்ளோம்.

குடும்பப் பற்றும்… அருள் பற்றும்

 

ஞானிகள் காட்டிய வழியினைப் பற்றுடன் பற்றும் பொழுது அருளை நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் எல்லாம் நடக்கின்றது.

வாழ்க்கையில் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் போது செயல்கள் தடைப்படுகிறது. காரணம்…
1.குடும்பப் பற்று என்று வந்தாலே
2.அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.

இந்தக் குழந்தைக்கு இப்படி ஆக வேண்டும்… அங்கே இப்படி நடக்க வேண்டும்… என்ற உணர்வு வந்து விட்டாலே போதும்.
1.நமக்குள் பதிந்திருந்த “பழைய உணர்வுகள்” அனைத்தும் முன்னாடி வந்துவிடும்.
2.அது முன்னாடி வந்து விட்டால் அதனைக் காப்பது என்பதே பெரிய சிரமம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டுமென்றால் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… எல்லாம் தெளிவாக வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி நாம் கூட்டிக் கொண்டே வந்தால் சரியாக இருக்கும்.

1.கண்களைத் திறந்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி
3.அந்த அருள் சக்திகளைச் சுவாசிக்க வேண்டும்.

அதற்குப் பின் வாழ்க்கையில் எது நமக்குக் குறையாகத் தென்படுகிறதோ அது நிறைவேற வேண்டும்… குழந்தைக்கு திருமணம் ஆக வேண்டும் சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்

ஆனால் ஆகவில்லை என்கிற போது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது… திருமணம் ஆகவில்லையே…! என்று ஏக்கம் வருகிறது.

ஏக்கத்தின் தன்மை கொண்டு “அது நடக்க வேண்டும்…” என்ற நிலை இருந்தால் சோர்வு நமக்குள் வராது. ஆனால் சோர்வடைந்த நிலையில் எண்ணி எடுக்கப்படும் பொழுது இந்த விஷத் தன்மைகள் கூடி
1.இந்தப் புவியின் பற்றும் உடலின் பற்றும் அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.

ஆனால் அருளைக் கூட்டினால் அது வளர்ந்து எதையும் நாம் வெல்ல முடியும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள் உயர்வாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது.

கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது மனித வாழ்க்கையின் எண்ணங்கள் கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி வருகின்றது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.நமக்குள் வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி
2.அருள் ஒளி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும் அருள் வழியில் எங்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டே வந்தால் இந்த உயர்ந்த குணம் நமக்குள் உருவாகும்… நமக்குள் அது பெருகும்… நம்முள் அது வளரும்.
6.நம் சொல் அனைவரையும் பற்றுடன் இயக்கும் நிலை வரும்
7.நாம் எண்ணிய காரியங்கள் ஜெயமாகும்… அந்த உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து செயலாகும்.

சுவாசக் கண்ணின் நிலை கொண்டு தான் “உயிர்க் கண்ணே…” ஒரு நிலைப்படுகின்றது

 

1.நாம் எண்ணும் பொழுது தான்… சுவாசத்தை ஈர்த்து
2.நம் உடல் இயங்குகிறது என்று எண்ணுகிறோம்.
3.ஒருவரை நாம் பார்க்கும் பொழுது – ஒரு பொருளையோ ஒரு மனிதரையோ எதுவாக இருந்தாலும்
4.நம் பார்வை பட்டுத்தான் நம் எண்ணத்திற்கு வருவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நம் பார்வைக்கு (கண்களுக்கு) ஒளியே எங்கிருந்து கிடைக்கின்றது…?

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது பார்ப்பதற்கு முதலிலேயே அச்சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் பொழுதுதான் நம் கண்களுக்கே ஒளி வருகிறது.
1.நம் கண்ணிற்கு “ஒளி”
2.நாம் எடுத்திடும் சுவாசத்திலிருந்து தான் கிடைக்கிறது.
3.நம் உடலில் உள்ள எல்லா அவயங்களுமே இந்தச் சுவாச நிலை கொண்டே தான் இயங்குகிறது.
4.அந்தச் சுவாசத்தை ஈர்த்து நாம் இழுக்கும் பொழுதே நம் எண்ணம் நம் அவயம் யாவும் செயல்படுகிறது.

நாம் வாழ்ந்த நாட்களில் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்ட எல்லா நிலைகளும் நம்மைச் சுற்றி அப்படியே பதிந்துள்ளன. நாம் சுவாச நிலையில் பார்த்த நிலையும் பல நாட்களுக்குப் பிறகு நம் எண்ணத்தில் வருகிறதல்லவா…!

அது எப்படி வருகிறது…?

நாம் பேசிய ஒலி அலைகள் மட்டும் தான் நம்மைச் சுற்றுகிறது என்பதல்ல. நாம் எடுத்திட்ட ஒவ்வொரு சுவாச நிலையும் நம்மைச் சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

1.நாம் விழித்துள்ள நிலையில் எடுத்த சுவாச நிலைகளும்
2.உறக்கத்தில் எடுத்த சுவாச நிலைகளும் நம்மைச் சுற்றிக் கொண்டு தான் உள்ளன.

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது அச்சுவாச நிலை ஈர்த்துத் தான் பார்க்க முடிகிறது. அதைப் பார்ப்பதற்கு முதலிலேயே நம் எண்ண நரம்பில் அச்சுவாச நிலை தாக்கிய பிறகு தான் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

நம் விழியில் அச்சுவாச நிலை பட்ட பிறகுதான் அவ் விழியே பார்க்கும் தன்மை பெறுகிறது.
1.ஞானக் கண்ணில் பார்க்கின்றார்கள்…
2.அகக் கண்ணில் பார்க்கின்றார்கள்
3.புறக் கண்ணில் பார்க்கின்றார்கள் என்கின்றார்கள்.
4.அவ்வகக்கண்ணும் புறக் கண்ணும் ஞானக் கண்ணும் இச்சுவாசக்கண் ஒருநிலைப்படும் பொழுது தான்
5.செயற்கரிய கண்ணாகச் செயல்படுகிறது.

நம் சுவாசக் கண்ணை எந்த நிலை கொண்டு செயல்படுத்துகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் “உயிர்க் கண்ணே…!” ஒரு நிலைப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின் இரண்டு கண்களை வைத்து அந்தக் கண்களிலிருந்து வீசிடும் ஒளியை வைத்து அவன் குண நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

மன நிலையில் மாறுபட்டவர்கள் நிலையையும் அக்கண்ணிலிருந்தே கண்டிடலாம். ஒரு மனிதனின் குணத்தையும் அவன் நிலையையும் அவன் கண்ணிலிருந்தே அறிந்திட முடியும். ஒவ்வொரு மனிதனின் குணமும் அவன் எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் அமைகிறது.

அழகான இயற்கை நிலை கொண்ட சில இடங்களுக்கு நாம் செல்லும் பொழுது அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நமக்குப் பிடிக்காத நிலை கொண்டு ஒருவரைப் பார்க்கும் பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நம் கண்ணின் பார்வைக்கும் நம் உடல் உறுப்புகளுக்கும் நம் உயிரணுவிற்கும் பல மாற்றங்கள் விளைவிக்கின்றன.

நாம் ஒவ்வொரு நிலை கொண்டு எடுத்திடும் சுவாச நிலையைப் பொறுத்துத்தான் நம் உடல் நிலை செயல்படுகிறது. நம் உடல் நிலை எந்த நிலை கொண்டு செயல்படுகிறதோ அந்த நிலை எல்லாம் நம் உயிர் அணுவிற்குத் தாக்கப்படுகிறது.

அதிகக் கோபமும்… அதிக மனச் சஞ்சலமும்… அதிகத் துவேஷமும்… உள்ள மனிதர்களுக்கு அவர்களின் உயிரணு சஞ்சல நிலைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நிலை கொண்டு இருக்கும் பொழுதும் அந்த உயிரணு எல்லா நிலையும் அறிந்து தான் செயல்பட்டு வருகிறது.

நம் உடல் மனம் இவைகளைத்தான் நாம் எண்ணுகின்றோம். நம்மை ஆட்டி வைக்கும் அவ்வுயிரணுவைப் பற்றி நாம் நினைப்பதில்லை.

சுவாச நிலை கொண்டு தான் எல்லா உயிரினங்களுமே உயிர் வாழ்கின்றன என்ற உண்மை எல்லோரும் அறிந்ததுவே. ஒவ்வொரு உயிரணுவும் எப்படி எப்படி உயிர் பெறுகிறது என்பதனைத்தான் பாட நிலையில் விளக்கியுள்ளோம்.

1.சுவாச நிலையை நாம் எந்த நிலை கொண்டு ஈர்க்கிறோம் என்பது தான்
2.இந்தப் பாட நிலையின் மையக் கருத்தாகும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை நீக்கிடும் அருள் சக்திகளை உங்களுக்குள் பெருக்கியபின்
1.ஒருவரை நீங்கள் பார்த்த உடனே அவர் பிணிகள் ஓட வேண்டும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்.
3.அந்த ஆனந்த நிலைகள் பெறும் தகுதி பெற வேண்டும்.

எத்தனையோ வகையில் சந்தர்ப்பத்தால் நுகரும் ஒவ்வொரு மனிதனும்… “தான் வேண்டும் என்று” தவறு செய்வதில்லை.

நுகர்ந்த உணர்வுகள் அதனின் ஆசையை ஊட்டி அதன் வழியிலே அவனுக்குள் பெருகச் செய்கின்றது. அதன் வழியே அவனை வீழச் செய்கின்றது.

இராட்சசனாக ஆவதும்… அசுர உணர்வு கொள்வதும்… தீமையினுடைய நிலைகளில் செயல்படுவதும்… தீமையே அவனுக்கு ஒரு சந்தோஷத்தை ஊட்டும். ஆனால் தீமையின் நிலைகளை அவன் தொடர்ந்து செய்தால் மனிதப் பிறவியின் நிலையை இழக்கின்றான்.

“தீமை செய்கின்றான்” என்று அவனைப் பற்றி எண்ணி நாம் நுகர்ந்தால் நமக்குள் அந்த அணுவின் தன்மை வந்து நம்மையும் தீமை செய்வோனாக மாற்றுகின்றது.

அத்தகைய தீமையின் நிலைகளைச் செய்தால்… நாம் பார்த்தால்… அடுத்த கணம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.பின் தீமை செய்வோர் அவர்கள் அறியாத நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.
2.பொருளறிந்து செயல்படும் எண்ணங்கள் அவர்களுக்குள் வரவேண்டும் என்று
3.அவரைப் பற்றி நாம் கவர்ந்த உணர்வுகளுடன் இதைக் கலக்கின்றோம்.
4.நமக்குள் அந்தத் தீமைகள் விளையாதபடி தடுத்துக் கொள்கின்றோம்.
5.அவர்கள் நாம் சொல்வதை எடுக்கின்றார்களோ இல்லையோ…!
6.அவன் செய்த தீமையின் விளைவுகள் “நமக்குள் வரக்கூடாது”.

மகரிஷிகளின் அருள் சக்தி நம் உடலில் அணுக்களாகிவிட்டால் நமக்குள் அவர்களின் அணுக்கள் தீங்கு செய்யும் நிலைகளாக வராது. ஆகவே இதை “மடக்கிப் பழகுதல்” வேண்டும்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் அகஸ்தியன் சென்ற பாதையில் அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் அவன் துருவனாகி துருவ மகரிஷியான நிலை போல நாமும் அடையலாம்.

திருமணமானவர்கள் கணவனுக்கு அந்தச் சக்தியும் மனைவிக்கு அந்தச் சக்தியும் கிடைக்க வேண்டும் என்று அவசியம் எண்ணுதல் வேண்டும். இதை கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எண்ணுவதை “மறந்துவிடக் கூடாது”.

ஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்று எண்ண மறந்துவிட்டால் போய்விடும். இதை மறக்காத நிலைகளில் எடுக்க வேண்டும். கணவனோ மனைவியோ முந்தி உடலை விட்டுச் சென்றிருந்தாலும் இதை எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு. அப்பொழுது அந்த அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் என்று “இணைத்தே…” வாழ்தல் வேண்டும்.

நமக்குள் அதைப் பெறப்படும் பொழுது அதன் வழி இருவருமே அங்கே இணைய முடியும்.

உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விட்டால் உயிருடன் ஒன்றிய உணர்வுகள் “ஒன்றி வாழும்” நிலைகள் பெறுகின்றது.

குருவின் அருள் பாதுகாப்பு

 

நான் (ஞானகுரு) எத்தனையோ சிரமங்கள் பட்டேன். காட்டிற்குள் சென்று பல துன்பங்களை அனுபவித்துக் குருநாதர் காட்டிய உண்மைகளையெல்லாம் அறிந்து அதை உங்களுக்குள் பதிவு செய்து அந்த உணர்வை வளர்க்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் பற்று கொண்டவர்கள் இரவெல்லாம் சாமி…! எனக்குத் தலை வலிக்கிறது… மேல் வலிக்குதே… உடம்பு வலிக்குதே… என்னை காப்பாற்ற மாட்டீர்களா…! என்று தான் நினைக்கிறார்கள்.

சாமியைத் தான் நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்
3.தீமையை வென்றிடும் அந்த அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.ஒவ்வொருவரும் எண்ணுங்கள் என்றும் யாம் சொன்னாலும் அதை எண்ணுவதில்லை.

சாமியைத் தான் நினைக்கிறார்கள்… ஆனால் ஞான வித்தை நான் தான் உங்களுக்கு பதிவு செய்திருக்கின்றேன்.

இது போன்று ஆயிரம் பேருடைய உணர்வு என்னைத் தாக்கினால் எனக்கு எப்படி இருக்கும்…? அத்தனை பாதிப்புக்கும் நான் உள்ளாக வேண்டியிருக்கின்றது இத்தனைக்கும் நான் சமாளிக்க வேண்டி இருக்கின்றது
1.என்னையும் காக்க வேண்டும்… உங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
2.என்னை அந்த உணர்வுகள் சாடாதபடி பாதுகாத்துக் கொள்வதற்குக் குருநாதர் அருள் கொடுத்தார்
3.அதைப் போன்று உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு உண்டு… என்றுமே எமது அருள் உறுதுணையாக இருக்கும்.

அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெற முடியும். குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். அது கிடைக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.

இந்த வாழ்க்கை என்ன…? என்று அறிந்து கொண்டபின் இனி நாம் எப்படி வாழ வேண்டும்… என்ற நிலையில் உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

ஆனால் ஒரு பிறவி என்று இனி வந்தாலோ நரகத்திற்குத் தான் நாம் செல்கின்றோம். இப்போது நரகலோகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1.மனித உடல் பெற்றால் சொர்க்கலோகம் என்று சொல்வார்கள்
2.அது பண்டைய காலமாகப் போய்விட்டது.

உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனை உருவாக்கும் உணர்வுகளையும் நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலும் போர் முறைகளே நமக்குள் வருகின்றது.

நல்ல குணங்களுக்கும்… தீமை செய்யும் குணங்களுக்கும்… மற்றவர்கள் செய்யும் உணர்வுகளை நுகர்ந்தபின் நமக்குள் பெரிய போரே நடக்கின்றது இந்த போரினால் மனக் கலக்கங்கள் வருகின்றது… உடல் நோய்கள் வருகின்றது… சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

நம் உடலுக்குள் நாம் நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி இந்த உணர்வுகள் சென்று அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

1.என்ன வாழ்க்கை என்றும் இனி வாழ்ந்து என்ன…? என்றும்
2.இந்த உடலையே அழித்திடும் நிலைக்குத் திருப்பி விடுகிறது.

இதை எல்லாம் நாம் செய்யவில்லை. உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் அது எதுவோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குவதும் இதே உயிரே தான்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றும் இருளை அகற்ற வேண்டும் என்றும் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதித்தல் வேண்டும்.

பதித்த அந்த நினைவு கொண்டு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால்
1.வாழ்க்கையில் வரும் போர்களை அடக்கும்.
2.அது எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலையில் கொண்டு வரலாம்.

அத்தகைய வலிமை பெற்று விட்டால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியின் வலுவைப் பெற்றோமோ உடலை விட்டுச் சென்ற பின் நம்மைப் பிறவியில்லா நிலைக்கு அழைத்துச் செல்லும்.

உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்… சொல்லும் சொல்லாக நான் வருவேன்… செயல் தானாகவே வந்துவிடும்

 

1.எண்ணும் எண்ணம்
2.சொல்லும் சொல்
3.செய்யும் செயல் எல்லாம் ஒன்றாக…
4.ஒன்றுடன் ஒன்று சுற்றும் நிலையில் இருக்க வேண்டும்.

ஏனென்றால் சொல்லும் சொல்லைக் காப்பவனே “பெரும் நாணயஸ்தன்…!”

மனித நிலையில் சொல்லும் சொல்லைக் காப்பாற்றி விட்டால்…! அவன் நிலை என்றுமே உயர்ந்து நிற்கும்.

நீ வேறல்ல உன் எண்ணம் வேறல்ல உன் சொல் வேறல்ல உன் செயல் வேறல்ல எல்லாம் கலந்துதான் மனிதன் என்பவன்.
1.வெறும் ஆத்மாவும் உடலும் மட்டுமல்ல மனிதன்
2.உயிரும் உடலும் மட்டும் தான் மனிதனல்ல
3.எண்ணமும் சொல்லும் செயலும் தான் மனிதன்,

உடலும் அழிகின்றது ஆத்மாவும் பிரிகின்றது. எண்ணிய எண்ணமும் சொல்லிய சொல்லும் செய்த செயலும் நிலைக்கின்றது. ஆகவே
1.எண்ணும் எண்ணத்தை நல் எண்ணமாக எண்ண வேண்டும்.
2.நல்ல சொல்லும் நல்ல செயலும் தானாக வரும்.

எண்ணம் என்பது எங்கிருந்து வருகின்றது…? உன் உடலில் எந்த உறுப்பப்பா எண்ணம்…? எண்ணும் எண்ணம் எல்லாம் உன் நிலையைச் சுற்றித்தான் உள்ளது. சுற்றி வரும்.

காற்றிலே நல்ல பூவின் மணமும் கொடிய நஞ்சுத் தன்மையும் உண்டு. நீ எடுக்கும் தன்மையிலே தான் அது உன்னுள்ளே வந்து சேரும்.

எண்ணங்களைக் காவியத்தில் வடித்திடலாம். காலங்கள் மாறினாலும் காவியங்கள் அழிவதில்லை. பெரும் ஞானிகளின் நிலையும் அது தான்.

பெரும் பட்சிகள் வானிலே பறந்தாலும் அதன் எண்ணமெல்லாம் ஒன்றிலேயே நிலைத்திருக்கும். நிலைத்த எண்ணத்திலேயே தன் உணவை எடுத்துச் சென்றுவிடும். பறவையின் பார்வையின் தன்மையில் தான் சொல் உள்ளது.

நான் முதலில் சொல்லிய கருத்தின்படி எண்ணத்தையும் செயலையும் காட்டியது… பறவையின் நிலை எல்லாம் இதுவே தான்.

எண்ணம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் பொருள் இது தான். எண்ணம் சொல் செயல் என்பது புரிந்ததா…?

1.உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்.
2.சொல்லும் சொல்லாக நான் வந்திடுவேன்
3.செய்யும் செயல் தானாகவே வந்துவிடும்.
4.எண்ணத்தை உயர்த்திவிட்டால் சொல்லும் உயர்ந்துவிடும்… செயலும் ஓங்கிவிடும்.

எண்ணம் என்பது தியானத்திற்கு மட்டுமல்ல. நீ எடுக்கும் எந்த எண்ணத்திற்கும் எந்த நிலைக்கும் இதுவே தான்.

நாளெல்லாம் நல்ல நாள் தான்
நாளெல்லாம் நடத்திடலாம்
நாளைக் கடத்திட வேண்டாம்
நாளை நாளை என்று…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் தினசரி வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

கணவனும் மனைவியும் எப்படி இருந்தாலும் (வெளி ஊரில்) காலையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடம் எடுத்தால் போதும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். என் கணவர் உடல் முழுவதும் படரவேண்டும். என் மனைவி உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்.

எங்களைப் பார்க்கும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் பார்வையில் பிறருடைய தீமைகள் அகன்றிடும் அருள் சக்தி பெறவேண்டும்.

எல்லோருக்கும் அந்தத் தெளிந்த மனம் கிடைக்கும் அருள் சக்தி பெற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அந்தத் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று காலையில் இப்படி எண்ணி கணவன் மனைவி இருவருமே உங்களுக்குள் படைத்துக் கொள்ளுங்கள்.

இதுதான் உண்மையான தியானமும் நாம் போகும் மார்க்கமும்…!

நாம் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஜெபம் இருந்து ஆண்டவனை அடைவேன்… அந்தச் சக்தியைப் பெறுவேன் என்றால் அது முடியாது.

1.அப்படி மணிக்கணக்கில் ஜெபமிருந்து முடிந்தாலும்
2.முடிந்த பின் வாழ்க்கைக்கு வரும் பொழுது தீமைகள் வரும்.
3.அப்படி ஜெபமிருந்து பல நிலைகளைப் பெற்றாலும் அது “முனி” என்ற நிலையாகத்தான் வரும்.
4.ஒரே வைராக்கிய நிலைகள் கொண்டு “மற்றதைச் சிக்கவிடாது” செயல்படுத்தும் நிலைகள் தான் வரும்.

ஆகவே, அருள் ஞானத்தை வளர்த்து மெய்ப்பொருள் காணும் நிலையை இந்த உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த உபதேசங்களை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பப் படியுங்கள். வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தால் ஒரு 10 நிமிடமாவது இதைப் படியுங்கள்.

இதுவே ஒரு தியானமாகின்றது.

இதைப் படித்து முடித்த பின்பு “எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அப்பொழுது இந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மற்றவர்களை நலமாக்க இது உதவும்.

அருள் உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றியே நிலைத்தே வாழ்வோம். அவனுடன் நாம் ஒன்றியே வாழ்வோம்.
1.என்றும் எதனையும் அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம்.
2.எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.
3.பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம்.
4.பகைமையான உணர்வுகள் சேராது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

ஏனென்றால் நாம் இந்த மனித உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் ஒரு பிறவிக்கு வரக்கூடாது. இன்னொரு உடல் பெறக்கூடாது.

அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

பிறவியில்லா நிலை அடைவதற்கு ஓசான் திரையின் முக்கியத்துவம் என்ன…?

 

அதிகாலை துருவ தியானத்தில் நாம் சக்தி ஏற்றிக் கொண்ட பின்… நாம் எதைத் தியானித்தோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு நம் குடும்பத்தைச் சேர்ந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை எளிதில் விண் செலுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் உயிரான்மாக்களை இணையச் செய்தபின் இந்த உணர்வுகள் பட்டு அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. “ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்…”

இதைக் கரைத்து வெளி வருவது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது. அது வரப்படும் பொழுது
1.இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை
2.அந்த விஷத்தை அது கவர்ந்து சென்று விடுகின்றது… ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை நாம் வேக வைக்கின்றோம். விஷத்தின் தன்மை பிரிந்து சென்ற பின் இதே சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

ஆனால் இது இயற்கையில் விளைந்த உணர்வாக இருந்தாலும் “வேக வைத்து நாம் நீக்கினாலும்…”
1.எதன் கலவையுடன் இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்தி நாம் அதை உணவாக உட்கொண்டால்
3.அந்த உணர்வின் தன்மை இழுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்கள் ஆக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து நமக்குள் அதை வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அணுக்களாக்கப்படும் போது அதை நமக்குள் உருவாக்கி
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலைகொண்டு அந்த அணுக்கள் மாற்றமடைகின்றது.

இதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும் சூரியனுடைய காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது. ஆனால் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலை சூரிய உதயத்தில் அது வரப்படும் பொழுது ஓசோன் திரை அதைக் கவர்ந்து கொள்கிறது.

காரணம் ஓசோன் திரை என்பதே “விஷத்தின் அடர்த்தியாகி… தன்னுடன் விஷத்தை இணைத்துக் கொள்வது தான்…!”

சூரியனிலிருந்து மற்ற பிரபஞ்சத்திலிருந்து வரக்கூடியது எல்லாம் பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியான பின் தான் விஷத்தன்மை உட்புகாது தடுக்கப்படுகின்றது… அதுதான் ஓசோன் திரை.

சூரியனிலிருந்து வரக்கூடியது அல்ட்ரா வைலட்… அதுவும் விஷத்தின் தன்மை கொண்டது தான். அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக்கதிர்கள் வெகு தூரத்தில் இருப்பதையும் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது.

நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத் தன்மைகள் பிரிகின்றது. ஆனாலும் இந்த மோதலில் (வெப்ப) மின் அணு போன்று ஆகும்பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மையை அடைகின்றது.

இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் நிலைகளில் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக (ஓசான்) ஆனபின் நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற உயிரினங்கள் வாழும் தகுதி பெறுகின்றது.
1.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும்
2.தனக்குள் அடக்க சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்றுதான் இதனின் உணர்வுகள்… இந்த பிரபஞ்சத்தை விட்டு உயிரான்மா வெளி சென்றபின்
1.உடல் பெறும் உணர்வுகள் அந்த ஓசான் திரையுடன்… அதனுடைய அடர்த்தியில் கலந்து விடுகின்றது.
2.இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் (விஷம் வடிகட்டப்படவில்லை என்றால்)
3.மீண்டும் இந்த உயிரின் தன்மை அதனின் உணர்வு தொடர் கொண்ட உடலைத்தான் உருவாக்கும்.

அதாவது… இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உடலாகத் தான் மீண்டும் உருவாக்கும். பிறவா நிலை பெறுவதில்லை.

ஆசை ஆசை என்பதெல்லாம் உன் அருளைப் பெற்றிடவே… உன் ஆசையை என் ஆசையில் பதித்திடப்பா…!

 

1.பற்றற்று இருக்க வேண்டும்…
2.ஆசையில்லாவிட்டால் தான் உலக ஞானம் பெற முடியும் என்பது எல்லாம் இவர்களாகச் சொன்ன கதை.

பெரும் ஆசையினால் வந்தது தான் இந்த உலகமே. ஆசையில்லா விட்டால் இவ்வுலகமே இல்லை… ஜீவனும் இல்லை… பந்த பாசமும் இல்லை… பாற்கடலுமில்லை… பாழடைந்த நிலை தான் எங்கும் இருக்கும்…!

மனிதனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் ஆசையிலே தான் உலகமே உள்ளது. இந்த உலகம் மட்டுமல்ல… எல்லா உலகமும் ஈசனின் ஆசையில் தான் உள்ளது. ஈசனின் அருளைப் பெற்றிடவே பெரும் ஆசைதான் வேண்டும்.

1.பற்றற்றவன் என்பவனுக்கும் ஆசை இல்லாமல் இல்லை.
2.ஆசையில்லாதவன்…! என்று எவனும் இல்லை.
3.சித்தனுக்கும் ஞானிக்கும் மகரிஷிக்கும் ஆசையுண்டு.

ஈசனுக்கு ஆசையுள்ளதால் தான் ஞானி சித்தன் மனிதன் உயிரினங்கள் எல்லா ஜீவராசிகளுக்குமே ஈசனின் அருளை அளித்திடுகின்றான்.

எண்ணத்தை இன்பமாக்குங்கள் என்று சொல்லும் பொழுது அந்த எண்ணம் ஆசையில் தான் வருகிறது.
1.ஆசைக்கு நான் (ஈஸ்வரபட்டர்) எதிரியல்ல.
2.ஆசையுடன் தான் நானும் உள்ளேன்.
3.ஆசையுடனே இருந்திடுங்கள்..!

ஆசை என்பது வேறு… ஆனால் பேராசை என்பது வேறு…! பேராசை என்னும் பேயை ஒட்டிவிடுங்கள்.

“சுவாச நிலை… சுவாச நிலை…!” என்பதெல்லாம் நம் மனதைச் சாந்த நிலையில் வைத்துக் கொண்டு
1.நம் மனதில் வந்து மோதும் கோபம் தாபம் குரோதம்
2.எது வந்தாலும் அந்த நிலையை அடக்கிக் கொண்டு
3.பெரும் சாந்த நிலைக்கு வருவது தான் சுவாச நிலை.

அச்சுவாச நிலை வருவதற்கே அந்த ஆசை இருந்தால் தான் சுவாச நிலையே வரும். ஆசை தான் மனிதனே. சோர்வல்ல மனிதன்.

ஆசையை அடக்கிவிடு… ஆசையை அடக்கிவிடு…! என்று சொல்வதெல்லாம் சொல்பவனுக்கே அந்த நிலை இருப்பதில்லை.

1.ஆசையை விட்டுவிட்டால் இந்த ஆன்மாவுக்கு என்ன வேலை இந்த உடலில்…?
2.ஆசையை அடக்குபவனின் ஆன்மா தானாகப் பிரிந்துவிடும் தன் நிலைக்கே.

இவ்வுலகில் நாம் பிறந்த பலனை (மெய்ப் பொருளை அடைய) ஆசையுடனே பெற வேண்டும். நாம் பெற்ற குழந்தையை ஆசை இருந்தால் தான் வளர்க்க முடியும். உண்ணும் உணவையும் ஆசைய்டன் தான் உண்ண முடியும்.

ஆசையுடன் இருங்கள் என்பதும்… அன்புடன் இருங்கள் என்பதும்… ஒன்றே தான். ஆசை இல்லை என்றால் இந்த உலகில் அலையுமில்லை கடலுமில்லை.

செடிக்கும் மரத்திற்கும் ஆசையுள்ளது. மண் பேசும் கல் பேசும் என்பதும் இந்த ஆசையினால் தான். ஆசையில்லாதவன் பிறந்ததுமில்லை. ஆசையில்லாதவன் பிறக்கப் போவதுமில்லை.

ஆசையைப் பற்றிச் சொல்லும் பொருள் எல்லாம் என்ன என்றால்
1.தன் நிலை அறிந்து
2.உன் ஆசையை எண்ண வேண்டும் என்பது தான் அதனின் பொருளே.

ஆசையுடன் அருள் செய்வாய்… “குருதேவா ஈஸ்வரா…!”
ஆசையான இவ்வுலகில் ஆசையுடன் இருந்திடவே
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை…
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை…!

ஆசை ஆசை என்பதெல்லாம் உன் அருளைப் பெற்றிடவே – உன்
ஆசையை என் ஆசையில் பதித்திடப்பா…!
ஆசை மனதை எனக்கருளி
ஆசை அமுதை எனக்கூட்டு…!

ஆசையுடன் நான் தியானம் செய்ய ஆசியும் அருளும் வேண்டுமப்பா
ஆசியும் அருளும் வேண்டுமப்பா… ஆசியும் அருளும் வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணி வெளிப்படுத்தும் உணர்வுகள் நம் குழந்தைகளை எப்படி இயக்குகின்றது என்று நாம் அறிந்திருக்கின்றோமா…!

இப்போது நாம் வாழ்க்கையில் எதை எதை எண்ணுகின்றோம்…? என் பிள்ளைக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அது நடக்கவில்லை கால தாமதம் ஆகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்..? வேதனைப்படுகின்றோம். வேதனை அதிகமாகி நமக்குள் அந்த வேதனையை உருவாக்கிக் கொள்கின்றோம்.

கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். வேதனையாகும்போது அடுத்து அந்தக் குழந்தை திருமணமாகி அது நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பதை விட்டு விட்டுகின்றோம். (வேதனையையே எண்ணிக் கொண்டுள்ளோம்).

1.ஏனென்றால் நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனையை உருவாக்கி
2.அந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொழுதெல்லாம் “வயதாகிவிட்டது.., வயது ஆகிக் கொண்டே போகிறது… என்ன செய்வது…?
3.“வயதாகிவிட்டது… வயதாகிவிட்டது…” என்று இங்கே நமக்குள் சமைத்து
4.அந்த உணர்வுகளைத்தான் குழந்தைக்குக் கொடுத்து
5.அது உடலிலும் வளர்க்கச் செய்கின்றோம்.

குழந்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம் “கல்யாணம் ஆகவில்லை ஆகவில்லை..” என்று இந்த ராகத்தையே பாடிக் கொண்டிருப்போம்.

யாராவது மாப்பிள்ளை வருகிறார்கள் என்றால் எதை எண்ணினோமோ இந்த உணர்வலைகள் “கம்ப்யூட்டர் ரிமோட் செய்வது போல் செய்து” அங்கே இணங்கி வரும் நிலைகளை மாற்றிவிடும். பார்த்துவிட்டு… “வேண்டாம்…!” என்று சென்றுவிடுவார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அதே மாதிரி குழந்தைகளைப் படிக்க வைக்கின்றோம். சரியாகப் படிக்கவில்லை என்றால் என்ன ஆகின்றது…? நாம் என்ன நினைக்கின்றோம்…?

எப்படியோ நல்ல முறையில் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் சரியாக வரவில்லை என்று கவலைப்படுகின்றோம்.

“இப்படி ஆகி விட்டதே…” என்று பல கவலைகளை எடுத்துக் குழந்தைகளிடம் பேசப்படும்போது அதன் மனதில் கவலையான உணர்வுகள் நினைவுக்கு வருகின்றது.

அப்பொழுது நாம் அந்தக் குழந்தைக்கு எதைச் சமைத்துக் கொடுக்கின்றோம். நல்ல உணர்வுகளைக் கொடுக்கின்றோமா..?

ஏனென்றால் நாம் நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் நன்மை செய்தால் “விக்கலாகின்றது…”காரியங்கள் நல்லதாகின்றது. துரோகம் செய்தான் பாவி என்றால் புரையோடுகின்றது. காரியங்கள் எல்லாமே தடையாகிவிடுகின்றது.

அப்பொழுது பாசத்தால் தன் குழந்தை படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டாலும் படிக்கவில்லை என்கிற பொழுது “இப்படிச் செய்கின்றானே… அப்படிச் செய்கின்றானே…! இவன் எங்கே உருப்படப் போகின்றான்…?” என்ற கோபப்பட்டு அந்த உணர்வுடன் சொல்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இதை எண்ணி இப்படிப்பட்ட உணர்வுகளைச் சமைத்து என்ன செய்கின்றோம்…?

மீண்டும் அவனை எண்ணும் பொழுதெல்லாம் வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் சொல்வோம்.

எல்லோரும் நன்றாகப் படிக்கிறார்கள். ஆனால் இவனைப் பார்த்தால் இப்பொழுது சுட்டித்தனம் ஜாஸ்தி ஆகிவிட்டது. வெளியிலே சுற்றப் போகிறான்…! என்று சொல்வார்கள்.

1.இப்படி நினைத்து…
2.மற்றவர்களிடம் தான் சொல்கிறோம் என்று நினைக்கிறோம்.
3.ஆனால்… அவனை நினைத்து நாம் சொல்லும் உணர்வுதான் அங்கு குழந்தைக்குள் சென்று பாய்கின்றது என்பதை யாரும் நினைப்பதில்லை.
4.அந்த உணர்ச்சிகள் அவனைத் தூண்டி இன்னும் கொஞ்சம் விளையாட்டுக்குத் தான் போகச் சொல்லும்.
6.அப்போது நம்முடைய உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.

இப்படித் தீமை செய்த உணர்வுகளை எண்ணும்போது “எனக்குத் துரோகம் செய்தான் பாவி…” என்றால் நமக்கு வெகு தொலைவில்… இருந்தாலும் அந்த உடலை இயக்குகின்றது.

அதே சமயத்தில் நன்மை செய்தார்கள் என்று எண்ணினால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கலாக வருகின்றது. இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு இருக்கின்றது.

தொடர்பு இல்லாது எவரும் இல்லை.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.குழந்தை அவன் அறியாமல் இயக்கும் அந்த இருளைப் போக்கும் நிலையை
2.நாம் இங்கு நமக்குள் சமைத்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சி
3.அதை இணைத்துச் சொல்லாக அவனிடம் சொன்னால்
4.குழந்தை உடலில் நல்ல உணர்வுகளாகப் படர்கின்றது.

தெய்வ பக்தி கொண்டு சொல்பவர்கள் கூட என்ன செய்கிறார்கள்…? வேதனையைத்தான் சொல்கிறார்கள்.

சாமியைக் கும்பிடுகின்றோம். அந்தத் தெய்வத்தை நினைத்து அவன் இப்படி இருக்கின்றானே… நீ பார்க்கக் கூடாதா…? அந்த வேதனையை நினைத்துத் தான் சொல்கின்றோம்.

நாம் அந்தத் தெய்வத்தை நினைத்துச் சொன்னால் எப்படிச் சொல்ல வேண்டும்…?

அந்த அருளை என் குழந்தை பெற்று இருளை நீக்க வேண்டும். அந்த அருளால் அவனை அறியாத இருள்கள் அனைத்தும் நீங்க வேண்டும். அவன் பேரருள் பெற்று எல்லாவற்றிலும் தெளிந்த மனம் பெற வேண்டும்.

சந்தோஷத்தோடு நாம் இந்த நிலைகளை அடிக்கடி அவனிடம் சொல்ல வேண்டும்.

1.நாம் செலுத்தும் உணர்வுகள் அவனுக்குள் ஊடுருவி
2.அவன் சுவாசத்தில் கலந்து
3.அவனுக்குள் இயக்கங்கள் நல்லதாகும்.

“உங்கள் உணர்வு” அவனைத் திருத்துகின்றதா இல்லையா…? என்று அப்புறம் உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும்போது பிறவியில்லா நிலை அடையும் தகுதி இழக்கப்படுகின்றது

 

பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்றபின் விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் இந்த பூமியில் இன்று பரவிக் கொண்டுள்ளது.

1.பக்தி மார்க்கங்களிலும் கடவுளை வணங்குவது எல்லாம் இந்த உடலுக்கு வேண்டிய சுகத்திற்குத் தான்.
2.இந்த உடலில் வரும் தீமைகளை மாற்ற அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்றால் அதை யாரும் எடுப்பதில்லை.
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் பொழுது இந்த வாழ்க்கையில் வரும் குறைகளை நீக்கும்…
4.அதே சமயத்தில் அந்த ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளரும் என்ற நம்பிக்கை யாருக்கும் வருவதே இல்லை.

விஞ்ஞான அறிவால் இன்று பல ஆடம்பரப் பொருட்களை விரும்புகின்றோம். அதன் வழி கொண்டு செயல்பட்டாலும் டி.வி. மற்ற தொலைத் தொடர்பு உபகரணங்களை நாம் உபயோகப்படுத்தும் பொழுது உலகம் முழுவதும் நடக்கும் அசம்பாவிதங்களைப் படமாக்கி அதை உடனுக்குடன் காட்டுகின்றனர்.

ஒரு கர்ப்பமுற்ற தாய் இதையெல்லாம் உற்றுப் பார்க்கும் நிலை வந்தால் குறிப்பாக… “ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் இதை நுகர்ந்தால்…” அந்த குழந்தையின் உடலிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

அங்கே சிதைந்த உணர்வுகள் டி.வி. மற்ற சாதனங்கள் மூலமாக இங்கே வருகின்றது. சிதைந்திடும் உணர்வுகள் இந்தக் குழந்தையிடமும் விளைகின்றது கருவிலேயே…!

இதைப் போன்று நம்மை அறியாத நிலையில் எத்தனையோ வருகின்றது.

இவ்வாறு ஒளி ஒலி அலைகளை அடிக்கடி இப்படி ஒளிபரப்பு செய்கின்றனர். எங்கே சிதைந்த உடலிலிருந்து அந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ அந்த உணர்வலைகளை நுகரும் தன்மை வருகின்றது.

இன்று எங்கேயோ நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும் வீட்டில் இருந்தபடியே உடனடியாக இங்கே அந்தச் செய்திகளைப் பார்க்கவும் படிக்கவும் பல பிரதிகள் (COPY) எடுக்கவும் முடிகின்றது… மற்றவருக்கு அனுப்பவும் முடிகிறது.

காரணம்… காற்றின் அழுத்தத்தால் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைகளை வைத்து மாற்றிக் கொண்டு வருகிறார்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற தொடர்வரிசை கொண்டு இதே அழுத்தங்களை எண்ணப்படும் பொழுது அந்த அழுத்த உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்காக மனிதனுடைய படத்தையே அங்கு காட்டுகின்றது.

உலகெங்கிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒரு நொடிப் பொழுதில் இங்கே கிடைக்கும்படி செய்கின்றார். ஆக மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறு நாம் செய்தாலும் அது மனிதனுக்கு “எவ்வளவு பெரிய தீங்கு விளைவிக்கின்றது…?” என்ற நிலைகளை நாம் மறந்துவிட்டோம்.

1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வரும் பொழுது மனித உடலின் இச்சைதான் வருகின்றது
2.மனிதனின் கடைசி எல்லை – பிறவியில்லா நிலையை அடைய முடியாதபடி இழக்கப்படுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு அவன் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் வழிப்படி நாம் அதைப் பெற முடியும்.

அதிகாலை துருவ தியானத்தில் இதைத் தெளிவாக அதை எடுத்துக் கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து
1.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டுமென்று என்ற நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
2.அதே போல் மனைவியும் தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தி
3.இரு உயிரும் உணர்வின் தன்மை ஒன்றிணைக்க அவசியம் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் மூலம் அருள் உணர்வைப் பெற்றுத் தங்களைச் சார்புடையோர் நிலைகள் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்துதல் வேண்டும்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும். அவர்கள் முன் சென்றால் நாமும் பின் செல்ல முடியும்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் நல்லதாக வேண்டும் என்று எண்ணினாலும் பிறருடைய கஷ்டங்கள்… பிறருடைய நஷ்டங்கள்… பிறருடைய தொல்லைகள்… எல்லாம் சேர்க்கப்படும்போது நம் உடலுக்குள் என்ன செய்கின்றது…?

அரக்க உணர்வுகள் அதிகமாகின்றது.

அப்போது நமக்குள் சந்தோஷம் என்ற சீதாவைச் செயலற்றதாக மாற்றுகின்றது. நமக்குள் என்ன செய்கின்றோம்…?

(உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம் – விஷ்ணு; உயிரின் காந்தம் – இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; உடலின் இச்சை – இராவணன்)

1.ஒவ்வொரு நாளும் நாம் தேடிக் கொண்ட உணர்வுகள் பலவானாலும்
2.இலங்கேஸ்வரன் (இராவணன்) இந்த உடலின் இச்சைகள் தனக்குள் ஆகி நல்லதை உருவாக்காதபடி
3.நமக்குள் நல்லதைச் சிறைப்பிடித்துக் கொள்கிறோம்.
4.சீதா என்ற அந்த நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

இராமன் என்ன செய்கின்றான்…? இராமன் சீதாவை எண்ணிச் செயல்படுத்தும்போது சீதா என்ன செய்கின்றது…?

1.தன் கணவனின் உணர்வின் தன்மையை எண்ணி
2.அதை அதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.உயிரான விஷ்ணுவிடம் ஏங்குகின்றது.

இந்த அரக்கனோ தீமையின் உணர்வு கொண்டு நான் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணி அவனும் (உயிரான) விஷ்ணுவை நோக்கித் தவம் செய்கின்றான்.

அவன் உணர்வு அதிகமாக்கப்படும் போது அவன் உடலுக்குள் நல்ல குணங்களைக் கொல்கின்றான். இந்திரலோகத்தில் (உடலுக்குள் அணுக்கள் உருவாகும் இடத்தில்) இவன் எடுத்துக் கொண்ட உணர்வு எதிர்மறையாக மனிதனின் ஆறாவது அறிவை இழக்கச் செய்துவிடுகின்றான்.

அப்பொழுது சீதா எண்ணிய அந்த உணர்வின் தன்மை வரப்படும்போது
1.அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் கணவருக்குத் தூண்டப்பட்டு
2.அதைக் காக்கும் படைகலன்களாக வருகின்றது.
3.ஆகவே இதையெல்லாம் சேர்த்து “வானரப்படை”.

தான் எண்ணிய உணர்வுகள் வலுவாகி அந்த உணர்வின் தன்மை அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தனக்குள் “பாதுகாப்பு” என்ற உணர்வு வருகின்றது.

தீமைகளை நீக்குவதற்காக நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை வலுவான நிலைகள் கொண்டு எடுக்கும்போது
1.நம் ஆன்மாவில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் வானரப்படைகளாகச் சேர்க்கின்றது.
2.தீமைகளை நீக்கும் நிலையாக தனக்குள் அந்தப் பாதுகாக்கும் நிலைகள் கொண்டு அது போர் செய்து
3.சீதாவை (சந்தோஷத்தை) மீட்கும் தன்மை வருகின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…?

தியானத்தின் நிலையில் “அந்த ஈஸ்வரனே…” பந்தம் வருவான்

 

மனதை அடக்கு…! என்பதன் பொருள் என்ன…?

1.உள் மனதை அடக்கும் தன்மை முதலில் வந்துவிட்டால்
2.வெளி மனதும் அடங்கிவிடும்.
3.உள் மனதை அடக்கிவிட்டால் ஜெப நிலையில் ஜோதி நிலை காண்பாய்.
4.வெகு சீக்கிரத்தில் இந்தப் பூமியின் ஆகர்ஷண சக்தியையே வென்றிடலாம்.

“ஆர்யபட்டா” பறந்ததன் நிலை என்ன…? அவனே செய்தானா..? ஈஸ்வரபட்டா சென்றல்லவா அதைப் பார்த்தான். அந்த ஆர்யபட்டா என்ற பெயர் வர அவனுள்ளே நான் இருந்தேன்.

ஆனால் விஞ்ஞான நிலை கொண்டு அழிக்கும் நிலை நமக்கு வேண்டாம்.

1.தியானத்தின் நிலையில் அந்த ஈஸ்வரனே பந்தம் வருவான்.
2.“நீ வேறு… அவன் வேறு அல்ல…!” என்ற நிலையை நீ பெற்றிடு.

நான் சொல்லும் பாடம் இதுவே தான்,

இந்த உலகில் பிறந்த நிலை எவ்வுலகத்திலும் இல்லை.

நம் மனமே தெய்வமாக்கும் நிலையைச் சீக்கிரம் பெற்றிடுங்கள். வாயளவில் மனமே தான் தெய்வம் என்பதில்லாமல் மனதையே தெய்வமாக்கிக் கொள்ளுங்கள்.
1.உன் மனதைத் தெய்வமாக்கிய பின்னால் தான் உனக்கருளும் பாக்கியம் வரும்.
2.தியான நிலையின் மூலமாகப் பெறும் அருள் மணங்களை உன் மனதில் உருவாக்கு.
3.சுவாச நிலை என்பதன் உட்பொருளே இது தான்.
4.உன் மனதை வாசனையாகப் பெற்றுவிட்டால் கோடி இன்பம் இதுவே தான்…!
5.நுகரும் தன்மையில் இருந்திடப்பா…! மலரும் கழிவும் வேறல்ல…! என்னும் நிலை தெரிந்திடும்.

கோப நிலை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. மணம் என்னும் வாசனையைப் பெற்றுவிட்டால் எல்லா நிலையும் மாறிவிடும். யோகியாகச் சென்று தான் இதை அடைய வேண்டும் என்ற நிலை இல்லை.

இப்பொழுது வாழும் நிலையிலேயே மெய்ப் பொருளை உணரத்தான் இந்தப் பாடங்கள்…!

அகஸ்தியனுக்குள் விளைந்த அபூர்வ சக்திகள் உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா

 

அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் சிறு குழந்தைப் பருவத்திலேயே மிக மிக சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பெற்றான்.

அவனுடைய தாய் தந்தையரோ கடவுள் நம்மைக் காக்க வருகின்றான் என்ற எண்ணத்துடன் காலையில் “சூரியனை…” உற்றுப் பார்க்கின்றனர். அவர்கள் சூரியனை உற்றுப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள் அவர்கள் கருவில் விளைந்த இந்த அகஸ்தியன் என்ற குழந்தையும் அதற்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் சூரியனை அதுவும் உற்றுப் பார்க்கின்றது.

சூரியனை உற்றுப் பார்க்கும் பொழுது அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை இந்தக் குழந்தை பார்க்கின்றது. அந்த உணர்வின் அறிவு குழந்தையிடம் விளைகின்றது. அதே சமயத்தில்
1.குழந்தையிடமிருந்து வெளிப்படும் அந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது
2.எப்படி எடுக்கிறது… எப்படி விளைகின்றது… இந்த மனித கருவுக்குள் வந்தபின் ஒன்றும் அறியாத நிலையில் இருந்தாலும் இந்த உணர்வலைகள் எப்படி வருகிறது…?
3.அதைச் சூரியன் எப்படி எடுத்து வைத்துக் கொள்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகிறார் குருநாதர்.

இதை அக்காலத்தில் அவனுடன் வாழ்ந்த மக்களும் அவன் செய்கைகளை உற்றுப் பார்க்கின்றனர் உற்றுப் பார்க்கும் பொழுது இந்த உணர்வுகள் அக்கால மக்களுக்கும் தெரிய வருகின்றது.

இவனின் வளர்ச்சியில் இயற்கையின் உண்மை நிலைகள் அவனுக்குள் விளைந்த பின் அவன் அருகில் வரப்படும் பொழுது இந்த உணர்வின் ஞானத்தை மற்றவரும் பெறுகின்றனர்.

முதலில் அகஸ்தியனின் தாய்
1.விஷத்தை வென்றிடும் பச்சிலைகளை மணங்களையும் மூலிகைகளிண் ஆற்றல்களையும் நுகர்ந்தது.
2.அதனால் விஷத்தின் தன்மைகள் மடிந்தது… கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் அந்தச் சக்திகள் விளைந்தது.
3.அதன் வழிப்படி அகஸ்தியன் பிறந்தபின் அவனைச் சூழ்ந்துள்ளோரும் உற்றுப் பார்க்கப்படும் பொழுது
4.இவனில் விளைந்த தாய் கருவிலே பெற்ற சக்திகளை அவர்களும் நுகர்கின்றனர்… அதன் அறிவாக அவர்களும் விளைகின்றனர்.

இவனைப் போல அந்த உணர்வினை அவர்களும் நுகர்ந்து தாவரங்களின் சக்திகள் எப்படிப்பட்டது…? என்று அறியும் பருவம் அந்தப் பகுதியில் உள்ள மனிதர்களுக்கும் இது தோற்றுவிக்கப்படுகிறது.

இப்படி அகஸ்தியனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் இன்றும் சூரியனால் கவரப்பட்டு நமக்கு முன் பரவி உள்ளது என்பதைக் குருநாதர் தெளிவாக்கினார்…
1.எனக்குள் (ஞானகுரு) அதைப் பதிவாக்கினார்.
2.அகஸ்தியனின் உணர்வலைகளை நுகரும்படி செய்தார்.
3.காட்டிலே அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது இந்த உண்மைகளை அறிய முடிந்தது

ஏனென்றால் குரு அதை எல்லாம் பெற்றவர். அவர் பெற்ற உணர்வின் தொடர் வரிசையில் வரப்படும் பொழுது
1.எனக்குள் வளர்த்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற முடிந்தது.
2,அந்த வழிகளிலே தான் உங்களுக்குள்ளும் அந்த அகஸ்தியனின் சக்திகளை இணைக்கின்றேன்.

கஷ்டங்கள் வந்தாலும் என் (ஈஸ்வரபட்டர்) அருள் உங்களுடனே…!

 

ஜெப நிலையைக் கூட்டிக் கொள்
ஜெபத்துடனே நான் இருப்பேன்
ஜெபமெல்லாம் உன்னுடனே
ஜெபிப்பதெல்லாம் உன்னுள்ளே

 

“ஜெபித்ததெல்லாம் நானல்லவோ..!”

 

இந்நிலையில் நான் இருக்க
உனக்கு இனி கவலையில்லை
பாடும் பாடல் நானல்லவோ
“பாடிய குரல் எனதல்லவோ – புரிந்ததா…?”

 

உன் நிலை மறந்திடாமல்
ஜெப நிலையில் வந்துவிட்டால்
எந்நிலையும் கிட்டிவிடும்
என்ற பொருள் இதுவே…!

 

ஜோதி நிலை தந்திடுவேன்
ஜோதியுடன் கலந்திடுவாய்
ஜோதியாகி உலகத்தையே
ஜோதி மயம் ஆக்கிடுவாய்…!

பாடலின் தன்மையைப் புரிந்து பாட வேண்டும்.

நாம் சொல்கிற வார்த்தையிலும் செய்கிற செயலிலும் நம் நினைவு ஆழமாக அதில் ஒன்றி இருக்க வேண்டும்..!

உனதல்ல… எனதல்ல… இந்த உலகம்…! என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன். ஆத்மீக வழியைப் பெறுவதற்கு வயது வரம்பு தேவையில்லை – ஏற்றுக் கொள்ளும் நிலையும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு.

ஆசையைத் தூண்டத்தான் இந்தப் பாட்டு.
1.உன் பாடலை எனதாக்கு
2.என் பாடலை உனதாக்குகின்றேன்.

உன் நிலையை மாற்றிக் கொள். காலம் கனிந்து வரும்.

1.எனக்கு நல்ல மனம் கொடு…! என்று சொல்லும் பொழுது
2.எல்லோரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை
3.பக்குவ நிலையில் உள்ளவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

ஆகவே எந்த ஒரு துளி நிலையும் வீண் செய்யாமல் காலத்தை உபயோகப்படுத்துங்கள். உங்கள் வழி நல் வழியாகட்டும். தட்டில் சாப்பாடு உள்ளது. எடுத்து சாப்பிடுவது அவரவர்கள் வேலை.

அருள் மணங்களைப் பெற்றிடுங்கள். நம்பி வந்த பாதையை வென்று வாருங்கள். சித்தனின் நிலையைக் காண்பீர்கள். சித்தனாகிச் சித்தனுடன் கலந்திடுவீர்கள்.

நேரத்தை வீணாக்காதீர்கள். கால நிலை குறுகி விட்டது. காற்றுடன் கலந்து வாருங்கள். கஷ்டங்கள் வந்தாலும் என் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) அருள் உங்களுடனே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கவலையோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ
1.நம் உடலில் இப்படி எத்தனையோ வரும்.
2.அதுவெல்லாம் தன் சாப்பாட்டிற்காக ஏங்கும்.
3.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் உயிர் வழியாகக் கண்கள் கொண்டு இழுக்கும்.
4.அப்புறம் நம் ஆன்மாவிற்குள் வந்து சுவாசத்தின் வழியாக உடலுக்குள் போய்
5.அது தன் இனத்தை வளர்க்க முயற்சிக்கும்.

ஏனென்றால் கோபம் வெறுப்பு சலிப்பு ஆத்திரம் வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வரும்போது “கலி…” ஆகிவிடுகின்றது. அப்பொழுது நல்ல சிந்தனை குறைக்கப்படுகின்றது.

வேதனை என்று வரும் போது நோயாகின்றது. நல்லதை நமக்குள் வலிமையாக்க முடியவில்லை. அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நமக்குள் மனக்கவலையோ மற்ற சங்கடமோ வந்தால் அந்த மாதிரி நேரத்தில் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லிக் கொஞ்ச நேரம் ஏங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

“கண்களை மூடி” அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று உள்முகமாக உணர்வினைச் செலுத்தி உடலுக்குள் இணைக்க வேண்டும்.

இந்த மாதிரி எடுத்து நம் உடலில் சேர்த்து ஒளியாக மாற்ற வேண்டும்.

ஆகவே கார்த்திகேயா… தீமை என்ற நிலைகள் புகாதபடி சேனாதிபதி…! பாதுகாக்கக் கூடிய வலிமை இருக்கின்றது. அந்த வலிமையின் துணை கொண்டு நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இது இச்சை.
2.அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது கிரியை.
3.சேர்க்கச் சேர்க்க அதனின் ஞானமாக நமக்குள் இயங்கத் தொடங்கும். இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி.

இந்த ஆறாவது அறிவு என்பது வலிமைமிக்க சக்தி “வள்ளி…”

இந்த வலிமை கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…? தீமைகளை நீக்கக்கூடிய தகுதி பெறுகின்றோம். அப்போது அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று உணர்வை எடுத்து அது உயிரிலே பட்டால் அந்த உணர்ச்சிகள் “தெய்வானை”.

1.அதாவது அந்த ஆணைப்படி நமக்குள் அருள் சக்திகள் சேரும்.
2.அந்தத் தெய்வமாக நாம் ஆணையிட்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் கந்த புராணத்தில் ஞானிகள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.

நாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்…? வாழப் போகின்றோம்…? நன்றாகச் சிந்தித்து பாருங்கள்.

“நான் நல்லது செய்தேனே… எனக்குத் தீமை வருகின்றதே..,” என்று தான் எண்ணுகின்றோமே தவிர நல்லதை எண்ண முடியவில்லை.

ஏனென்றால் நாம் சுவாசித்த தீமையின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகி வளரும் பொழுது அந்தந்த நேரத்தில் “அதனுடைய பசிக்கு” அது எடுக்கின்றது.

அது வளர்ந்து தீமையைக் “கனியாக” ஆக்க முயற்சிக்கும். கனியாகி விட்டால் மீண்டும் பல வித்துக்களாகத் தீமையின் விளைச்சலாக நமக்குள் ஆகிவிடும்.

அது கனியாவதற்கு முன் நாம் தடுத்து விட்டால்…? அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது. தீமையின் விளைவுகள் தடைப்படுத்தப்படுகின்றது.

1.தீய உணர்வின் தன்மை நமக்குள் கனியாவதற்கு முன்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஒவ்வொன்றாக எடுத்து
3.நம் உடலுக்குள் வளர்த்து இதன் வழி கனியாகி
4.உயிர் என்ற உணர்வை முழுமையான கனியாக்க வேண்டும்
5.அது தான் கல்கி.

அருள் ஒளி உடலுக்குள் அதிகரிக்க உடல் பெறும் அணுக்கள் கரையத் தான் செய்யும்… கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்

 

உதாரணமாக பாம்பினை நாம் கொன்றால் அந்தப் பாம்பின் உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் பாம்பு நம்மைத் தீண்டிவிட்டால் இந்த விஷத்தின் தன்மை உடல் முழுவதும் பரவும் போது பாம்பின் நினைவே நமக்குள் வருகின்றது. விஷம் அதனின் நினைவுக்கே அழைத்துச் செல்கின்றது.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நாம் மனிதனாக வந்தாலும் அதனின் உணர்வு நம்முடைய நினைவாற்றல் அனைத்தையும் மடியச் செய்து விடுகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றபின் அதனின் ஈர்ப்புக்குள் சென்று நாம் பாம்பாகத் தான் பிறக்க நேரிடும்.

எத்தனையோ காலம் பல உடல்களைக் கடந்து மனிதராக உடல் பெற்றாலும் இத்தகைய தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்றால்
1.விஷத்தை வென்ற விஷத்தை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அந்த நிலைகளை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.பாம்பின் நினைவு மறைந்து நஞ்சினை வென்ற நினைவு வரும்.
4.அந்தப் பாம்பினத்திற்குள் போகாது தடைப்படுத்த முடியும்.

நம் உணர்வின் நினைவலைகள்
1.கண் கொண்டு கடைசியில்… எது நினைவுக்கு வந்ததோ
2.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு கண்ணன் பார்த்தசாரதியாக
3.எந்தத் துருவ நட்சத்திரத்தின் வலிமை பெற்றதோ அங்கே அழைத்துச் செல்லும் நம் கண்கள்.

ஆனால் அதற்கு மாறாகப் பாம்பினத்தின் நினைவுகள் வரும் போது அது வலுவாகி விட்டால் நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கும் பொழுது இந்தக் கண் “இந்தப் பாம்பு தான் தன்னைத் தீண்டியது…” என்ற உணர்வுடன் அந்த விஷத்தின் தன்மை வலுவானால் இதே கண்கள் பாம்பின் உடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

அது தான் கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாகச் சென்றான் என்று சொல்வது. பாம்பின் உணர்வுகள் நம் உடலுக்குள் வலிமை ஆகிவிட்டால் அர்ஜுனன்…! அப்போது அந்தப் பாம்பிடம் இருந்து தப்பிக்க கண்கள் எத்தனையோ உபாயங்களைச் சொல்கின்றது.

இருப்பினும் இந்தக் கண் அதனின் உணர்வை வலுவாக்கிவிட்டால் அர்ஜுனன் ஆகின்றது. அர்ஜுனன் ஆன பின் எந்த உடலின் தன்மை கொண்டதோ இந்த உடலைத் தீண்டினாலும் அதன் உடலுக்குள் நாம் (உயிரான்மா) சென்ற பின் அது பாதுகாப்பு தருகிறது.

கண்கள் எதனின் உணர்வை நுகர்ந்ததோ… அதன் வழியிலேயே நம்மை அழைத்துச் சென்று… அதன் வழியில் நம்மைப் பாதுகாக்கச் செய்கிறது.

ஒரு பாம்பு நம்மைத் தீண்டிவிட்டால் நம் நினைவுகள் அதனை வலு கொண்டு எண்ணும் பொழுது இந்த உடலில் அந்த நஞ்சு பாய்ந்தாலும் நஞ்சு கலந்த உணர்வு பாய்ந்தாலும்
1.பாதுகாப்பான இடங்களை அந்தத் துருவ நட்சத்திரத்தினை நாம் எண்ணும் பொழுது அது வலிமை பெற்று
2.இந்த உடலை விட்டு வந்தாலும் இது அர்ஜுனன் ஆகி அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் சென்று நஞ்சினை ஒடுக்கச் செய்கின்றது
3.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது அதன் அருகில் செல்கின்றோம்
4.நஞ்சை வென்ற உணர்வுகள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகின்றது.
5.மனிதர் என்ற அறிவின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகிறது.

அது தான் பிறவியில்லா நிலை என்று சொல்வது.

ஆகவே நம் வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த உடலை விட்டு நம் உயிரான்மா வெளியில் சென்றால்
1.எது நம்மைத் தாக்கியதோ அந்த உணர்வின் வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து அதனின் வலுவை இழக்கச் செய்து
3.அருள் ஒளியின் உணர்வைப் பெறும் தகுதியை நாம் பெற வேண்டும்.

காலை துருவ தியானத்தில் நாம் அதை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் இந்த உடலிலே எடுத்தாலும்
1.ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க இந்த உடலை உருவாக்கிய அணுக்களும் அந்த ஒளி பட்டு இது கரையத் தான் செய்யும்
2.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி நாம் ஒளியாக மாற முடியும்.

உடலுடனே நான் இருப்பேன் என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை. எதனின் உணர்வைக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான்.

அத்தகைய நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும்.

தன் மன நிலையில் இருந்துதான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!

 

இன்றுள்ள மனிதர்களுக்கு ஆயுள் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள். அறிவு நிலையும் ஆயுள் நிலையும் அவனுக்குள் இருக்கும் ஆண்டவன் அளித்த பொக்கிஷங்கள்.

அறிவினால் ஆயுளை வளர்க்கின்றான் இக்கலியில் உள்ள மனிதன்.
1.அவன் எண்ணம் அவன் வைத்தியத்தில் ஆயுள் வந்தது என்று.
2.இல்லையப்பா… அவன் எண்ணத்தில் வந்ததப்பா ஆயுள் நிலை
3.ஜீவ எண்ணத்தில் வந்ததப்பா அவ்வாயுள் நிலை.

மனித உடலில் ஆசையுள்ளவன்…
1.தான் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் எண்ணுகின்றான் அவ்வீசனை.
2.அவன் எண்ணத்தின் வடிவினிலே அவனுள் இருக்கும் ஈசனே அவனைச் சுற்றுகின்றான்.
3.அவ்வெண்ணத்தின் தன்மையினால் அவனின் ஜீவனும் வாழ்கின்றது.

எண்ணத்தைக் குறுக்கிட்டு வாழ்ந்து என்ன பயன் இருந்து என்ன புண்ணியம் வரும்…? வியாதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவ்வெண்ணத்திலேயே சுருங்கி விடுகின்றான். அவன் உடலில் உள்ள உறுப்புகளும் உணர்வுகளும் இவ்வெண்ணத்தினுள்ளேயே சுருங்கி விடுகின்றன.

1.ஆயுள் முடிந்து இறக்கின்றான்.. என்பதல்ல.
2.அவனின் எண்ணம் சுருங்கி மனம் சுருங்கிப் பெரும் பயத்தில் உள்ளவனிடம்
3.சோர்வு நிலையில் பிரிந்து செல்வதுதான் அவ்வாவியின் நிலை.

வாழ்ந்திட வேண்டும் என்று ஆசையுள்ளவன் வாழ்கின்றான் பல நாட்கள். உயிர் பிரிவதெல்லாம் காலன் பிரித்துச் செல்வதல்ல. இவனின் எண்ணத்தாலும் சோர்வாலும் சோகையினாலும் வருவதே அவ்வியாதிகள்.

அவ்வியாதியில் உள்ளவன் எண்ணும் எண்ணத்திலேயே தன் உயிர் பிரிந்துவிடும் என்ற பயத்திலேயே பிரிந்து செல்வதுதான் அவ்வாவி.

எந்நிலையில் உள்ளவனும் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஒரு நிலைப்படுத்தி வேண்டுபவன் எல்லாம் வாழ்கின்றான்.
1.மருந்தும் மாயமும் அல்ல பல நாட்கள் வாழ்வதெல்லாம்.
2.பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவனிட்ட பிச்சை என்கின்றோம்.. இயற்கை என்கின்றோம்…!
2.எதுவப்பா பிச்சை…? எதுவப்பா இயற்கை…?

அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். பிறப்பு இறப்பு என்பதைப் புரிந்து கொண்டீர்களா…?

தன் மன நிலையில் இருந்துதான் மடிகின்றான்… வாழ்கின்றான் இம்மனிதன்…!

ஜெபித்திடுவேன்… ஜெபித்திடுவேன்…!
ஜெப அருளைத் தந்திடுவாய்

ஜெபமெல்லாம் ஜெயித்திடவே
ஜெப அருளைத் தந்திடுவாய்

ஜெபித்திடுவேன் ஈஸ்வரனை
ஜெபித்திடுவேன் அவன் சக்தியை
ஜெபித்திடுவேன் ஓ…ம் என்ற நாதத்தில்

ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் “ஓ…ம் ஈஸ்வரா…!

ஜெபித்த நிலையில் நீ வந்து… ஜெபமாக்கித் தந்திடுவாய்… ஈஸ்வரா…….!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானத்தில் முழுமை அடைந்தாலும் நீங்கள் துருவ நட்சத்திரத்தை எண்ணும்போது உங்கள் ஆன்மாவில் என்ன செய்கின்றது…?

நீங்கள் “நான் சும்மாதான்… உட்கார்ந்திருக்கின்றேன்…” என்று நினைப்பீர்கள்.

ஆனாலும் பிள்ளை படிக்கவில்லை என்றாலோ சுட்டித்தனச் செய்தாலோ அல்லது கடுமையான தவறுகளைச் செய்தாலோ பிள்ளை மேல் பாசம் அந்த நினைவு அதிகம் இருந்தால் “கஷ்டமாக” இருக்கும்.

அதே மாதிரி மற்றவருக்குப் பணம் கொடுத்திருப்போம். அப்படிக் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் அவன் நினைவு கண்டிப்பாக வரும்.

1.சும்மா இருக்கின்றான் பார்… என்று அவனுக்கு இத்தனை உதவி செய்தேன்
2.என்னைப்பற்றி எப்படியெல்லாம் கேவலமாகப் பேசுகின்றான் பார்…! என்ற
3.இந்த உணர்ச்சிகள் தான் வரும்.

அப்பொழுது நீங்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து செய்த ஜெபமோ தியானமோ என்ன ஆகின்றது…? தியானத்தில் உட்கார்ந்தாலே இந்த நினைவுகள் நம்மை அலைக்கழிக்கும்.

இப்படிப்பட்ட நினைவுகள் வரும்போது உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

கண்களைத் திறந்து அந்த மாதிரி நினைவலைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்து எங்கள் அது உடலில் படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது யாருடைய நினைவுகளெல்லாம் வருகின்றதோ அவர்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று அதனுடன் இதைக் கலக்க வேண்டும்.

பிள்ளை நினைவு வரும்போது
1.அது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
2.நல்ல ஞானசக்தியும் ஞாபகசக்தியும் பெற வேண்டும்.
3.படிப்பு மேல் நல்ல நாட்டம் வேண்டும்.
4.சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் வேண்டும் என்று இதை எடுத்து இப்படித் தியானித்து விடுங்கள்.

எது…?

உங்களுக்குள் பல கலக்கங்கள் வரும்போது அதை மாற்றக்கூடிய திறன் இதை இப்படித்தான் எடுத்து வர வேண்டும்

நீங்கள் சும்மா உட்கார்ந்து இருந்தால் சில நேரம் இந்த மாதிரி உணர்வுகள் “கிர்…ரென்று” இழுக்கும் அது தன் உணர்ச்சியைத் தூண்டி அவ்வாறு எடுக்கும்.

மீண்டும் நாம் ஆத்ம சுத்தி என்ற நிலையில் அருள் சக்திகளை நமக்குள் செலுத்தி எந்த உணர்வின் சக்தியோ அதைச் சேர்த்து நாம் இணைத்தல் வேண்டும். இதைக் கலந்து இப்படி மாற்ற வேண்டும்.

இல்லையென்றால் கலி என்ற உணர்வுகள் வரும். உட்கார்ந்து தியானத்தில் உட்கார்ந்து மீட்டிய உடனே கொஞ்ச நேரம் அடங்கும்… மறுபடியும் கிளர்ந்தெழும்.

பிராணவாயு என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி சில பேர் மூச்சுப்பயிற்சி எடுத்து இதை அடக்கிவிடலாம் என்று நினைப்பார்கள்.

ஒரு நாளும் அடக்க முடியாது.

தூக்கத்திற்குத் தூக்க மருந்து கொடுப்பார்கள் அல்லவா…? அந்த மாதிரித் தான் மூச்சுப்பயிற்சி கொடுத்து வட கிளை தென் கிளையைச் சேர் என்பார்கள்.

இந்த உணர்வின் தன்மை போதை மருந்து ஏற்றியது போல் கொஞ்ச நேரம் இருக்கும்.

எப்படி…?

ஒருவர் சொல்லியிருப்பார் அல்லது புத்தக வடிவில் கொடுத்திருப்பார்கள்.

அதைப் படித்துவிட்டு “நீ இந்த மாதிரிச் செய்தால் நன்றாக இருப்பாய்…” என்று அந்த உணர்வு எடுத்தவுடனே அவன் வெளியிட்ட உணர்வு எடுத்தவுடனே கொஞ்ச நேரத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

“ஆகா… எனக்கு வேறு நினைப்பே வரவில்லை… மிகவும் ஆனந்தமாக உள்ளது… எதுவுமே வராது…” என்று நினைப்பார்கள்.

பயிற்சியை முடித்துவிட்டு முழித்துப் பார்த்தபின் இவன் நினைவுதான் வரும். “அவன் அயோக்கியப் பயல்… அந்த மாதிரிச் செய்தான் இந்த மாதிரிச் செய்தான்…” என்று அவனைப் பார்த்தவுடனே வரும்.

இப்படி நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டமும் வராமல் இருக்க முடியாது. எப்படித்தான் நீங்கள் வீட்டைத் தூய்மைப்படுத்தி வைத்திருந்தாலும் தூசிகள் வரத் தான் செய்யும்.

எங்கேயோ அந்தப் பக்கம் மிளகாயை அரைக்கின்றார்கள். அது காற்றில் பறந்து வந்தவுடன் நமக்குள் பட்டதும் எரிச்சலாகின்றது. அப்பொழுது நாம் இருக்கும் வீட்டை மாற்ற முடியுமா…?

இன்று மாற்றினால் நாளைக்கு இன்னொரு பக்கம் வந்தால் அப்புறம் எந்தப் பக்கம் மாற்றுவது…?
1.வரும் தூசிகளை உள்ளே வராது நாம் குறைத்து
2.பாதுகாப்பாக இருப்பதற்கு நாம் அடைப்புகளை வைக்க வேண்டும்.
3.வெளியிலேயே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
4.இந்த மாதிரி முறைகளை நாம் கையாண்டு பழகுதல் வேண்டும்.

இதைப் போன்றுதான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் வரும் அழுக்கினைப் போக்குவதற்காக குருநாதர் காட்டிய வழியில் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்தது.

ஒவ்வொரு நிமிடமும் எந்தெந்த வகையில் நமக்குள் தீமைகள் வருகின்றதோ அதைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் பிள்ளையைப் படிக்க வைக்கின்றோம், அது சரியான நிலையில் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.

“இப்படி இருந்தால் என்ன செய்வது…?” என்று எண்ணுகின்றோம்.

அப்போது அந்த வேதனை உணர்வு நமக்குள் வரும்போது அவன் மேல் இருக்கக்கூடிய பாசத்தை மாற்றுகின்றது. அப்புறம் வெறுப்பு தான் வருகின்றது.

அப்போது நாம் பாசத்தை வளர்க்க வேண்டும் என்றால் நமக்குள் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முடுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நமக்குள் அந்த அருள் சக்திகளைச் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்து
1.அந்த வேதனைகளை நிறுத்திவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குழந்தை உடலில் படர வேண்டும்.
3.அது சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்.
4.அது படிப்பில் ஆர்வம் வர வேண்டும்.
5.மூலத்தின் தன்மை அறியும் அந்த ஆற்றல் வேண்டும் என்று
6.இப்படி நாம் மனதில் எண்ணி இதைச் செய்ய வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து சுவாசித்து எடுத்து நீங்கள் சொல்லப்படும் பொழுது
1.கண்களாலும் பாய்கின்றது
2.சொல்லாலும் பாய்கின்றது சொல்லின் தன்மை செவியிலே படுகின்றது.
3.உணர்ச்சியின் தன்மை நீங்கள் பரப்பியது காற்றில் உள்ளது.
4.அப்பொழுது இதைக் கவரும் சக்தி வருகின்றது.

இப்போது நிலத்தில் நாம் ஒரு வித்தினை ஊன்றப்படும்போது பலவிதமான செடிகளை உருவாக்குகின்றது.

அதில் எதை எதை விஞ்ஞான அறிவோடு கலந்து கொண்டார்களோ எல்லாமே இந்தக் காற்றில் தூசிகளாக இருக்கின்றது. அதை எடுத்து அதே செடியாக வளருகின்றது.

அதைப்போல நாம் அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்க்க வேண்டும். அதே சமயத்தில் நம் குழந்தைகளுக்குள்ளும் இதை வளர்த்துப் பழக வேண்டும்.

மனித வாழ்க்கையில் இதைப் போன்று ஆத்ம சுத்தி என்பதைச் தெளிவாகச் செய்ய வேண்டும். எத்தகைய நிலை வந்தாலும் உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“ஆத்ம சுத்தி” என்பது மிகவும் முக்கியமானது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து நாம் ரசிக்கவே கூடாது

 

ஒரு சிலர் வேதனைப்படுபவரைக் கண்டு ரசித்துப் பார்ப்பார்கள்.
1.பார்க்கலாம்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… அப்படித் தான் வேண்டும்…! என்று
2.அந்த வேதனை உணர்வினை ரசித்துச் சுவாசித்தால்
3.விஷத்தை உருவாக்கும்… விஷத்தை உணவாக உட்கொள்ளும்… அணுவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.

பொதுவாக ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு அணுக்களும் விஷத்தின் இயக்கமாகவே தான் இருக்கின்றது… நல்ல குணங்களும் சரி… மற்றதும் சரி.

ஆனால் வேதனைப்படுவோரைக் கண்டு ரசித்தோம் என்றால் இந்த விஷத்தினை உணவாகக் கவரும் அணுக்கருவாக உடலில் உருவாகிறது.

அந்த அணுக்கள் நம் இரத்தநாளங்களில் சுழலப்படும்போது உடலில் எந்த பாகத்தில் தேங்கி அணுக்களாகப் பெருகுகின்றதோ…
1.விஷத்தையே உணவாக உட்கொள்ளும் அணுவாகத் தன் வீரியத்தைக் காட்டுகின்றது,
2.முதலில் விழுதுகளை ஊன்றுகின்றது… பின் ஒவ்வொரு அணுக்களுக்கும் செல்லும் நிலையில்
3.உடல் முழுவதும் படர்கின்றது… “கேன்சராக” (புற்று நோயாக) மாறுகிறது.

மற்ற அணுக்கள் விஷத்தின் இயக்கத்திலேயே வருகின்றது. ஆனால் கேன்சர் அணுக்கள் தனக்குள் அந்த விஷத்தை வளர்த்து உடல் முழுவதும் பரப்பி உடலுக்குள் வரும் விஷத்தையே உணவாக உட்கொள்கிறது.

இப்படித்தான் கேன்சர் என்ற நோய் ஒவ்வொரு நிலைகளிலும் படர்ந்து உடலையே சீரழித்து விடுகிறது.

பார்க்கலாம் கேன்சர் வந்தவர்களுக்கு…!
1.உடலில் ஒரு பகுதியில் அதை அறுத்து அப்புறப்படுத்தி எடுத்தாலும்
2.அடுத்து அதனுடைய விழுதுகள் தொடர்ந்து மரக்கிளைகள் முளைப்பது போன்று
3.அது வேறு பக்கம் முளைத்துக் கொண்டே வரும்.

இன்று சில வகையான தாவரங்களைப் பார்த்தோமென்றால் அதனின் விழுது ஊன்றும் வழிகளிலேயே அந்த மரங்கள் செடி கொடிகள் விளையும். இதைப் போன்று தான் இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் இந்த உடலில் பரவுகிறது.

இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே வேதனைப்படுவோரைக் கண்டு நாம் ரசித்தோம் என்றால் அவனிடமிருந்து வெளிப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது அவன் எப்படி வேதனைப்படுகின்றானோ அந்த விஷத்தின் அணுக்கள் நமக்குள் வளர்ந்து அது அணுவாக விளைந்த பின் விஷத்திற்காக அந்த அணுக்கள் ஏங்கும்.

அப்போது வேதனைப்படும் உணர்வை மீண்டும் நுகரப்படும் பொழுது அது பெருகும். இடைமறித்து நம் உடலில் விழுகளைப் போட்ட பின் நம் உடலில் இருக்கும் மற்ற அணுக்களின் இயக்கச் சக்தி குறையும்.

இவ்வாறு ஆனபின் நல்ல உடலில் வீக்கங்கள் உருவாகும். வீக்கமாகும் போது உணவுக் குழாயில் வந்து விட்டால் உணவு உள்ளே போகாது அடைத்து விடுகின்றது.

பல்லிலே வந்தால் அங்கே விஷத்தின் தன்மை கூடி கடுமையான வலியாகிறது. இப்படி நரக வேதனையைத் தான் பட வேண்டி இருக்கின்றது.

ஆகவே வேதனைப்படுவோரைப் பார்த்து ரசித்தோம் என்றால் நிச்சயம் அவருக்குக் கேன்சர் நோய் வரும். இதைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்காதே… வேதனைப்பட்டு அதன் வழியில் உருவாக்கும் அனைத்தும் அவர்களுக்குள் விஷமான அணுக்கள் உருவாக்கப்பட்டு நல்ல அணுக்களை மடியச் செய்து விடுகின்றது

கேன்சர் நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்…? ஒவ்வொரு நொடியிலும் பிறர் தவறு செய்வதைக் கண்டு நீ மகிழ்ச்சி அடையாதே…! என்றார் குருநாதர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எனக்குள் பெருக வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று முதலில் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்…
1.அந்த வேதனைப்படுவோர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…
2.அறியாமையிலிருந்து விடுபடவேண்டும்… இருள் நீக்கிப் பொருளறியும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
3.பிறர் வேதனைப்படுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெற மாட்டோம்
4.அவருக்குள் வரும் தீமைகளை நுகர்ந்து அறிய மாட்டோம்.
5.வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்க மாட்டோம்…!

கேன்சர் நோய் வராது இப்படித் தடுக்க முடியும்.

வாழ்ந்த பயனையெல்லாம் கல்கியில் கண்டிடலாம்

 

ஜீவன் பிறந்து அந்த ஜீவன் வளர்வதற்கு அந்த ஜீவனுக்கு ஆகாரம் தேவை. எல்லா ஜீவராசிகளுக்குமே ஆகாரம் தேவை. மற்ற ஜீவராசிகள் எண்ணமெல்லாம் தன் ஆகாரத்தை எந்த நிலையில் பெறுவது என்ற ஒரே குறிதான். ஜீவன் எடுத்து முடியும் வரை அதன் எண்ணமெல்லாம் அதன் ஆகாரத்தை எடுத்துப் புசித்து உண்டு வாழ்ந்து மடிவதுவே.

ஆறறிவு படைத்த ஜீவனுள்ள மனிதனுக்கு அவ்வாகாரத்தை அடைவதற்குத் தன் அடுத்த அறிவைப் பயன்படுத்துகின்றான் என்கிறார்கள். அடுத்த அறிவு என்பது ஜீவராசிகளுக்கு உள்ள அறிவைவிட மனித அறிவு உயர்ந்தது ஐந்தறிவு ஆறறிவு என்று சொல்கின்றார்கள்.

எறும்பிற்கும் ஐந்து அறிவுதானா…? யானைக்கும் ஐந்து அறிவு தானா…? இவர்கள் சொல்வது போல் ஜந்துக்களுக்கு ஐந்து அறிவும் அல்ல.. மனிதனுக்கு ஆறு அறிவுமல்ல…!

அவனவன் செய்த பாவ புண்ணியங்களில் எடுத்திட்ட பிறப்பிற்கு இவன் மனிதனாகின்றான். அது செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மிருகமாகின்றது மற்ற ஜீவராசியாகிறது. மனித உடலில் உள்ள எல்லோருமே அவர்களுக்கு அளித்த ஆறு அறிவைப் பயன்படுத்துகிறார்களா…?

ஆறறிவு படைத்த மனிதன் என்பதெல்லாம் மனிதனில் இருந்து மாறுபடும் ஜீவராசிகளுக்கு மனிதனின் நிலை மாறுபடுகின்றதல்லவா…? மற்ற ஜீவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நிலை பிரித்துக் காட்டிடப் பகிர்ந்திட்டேன் இவையெல்லாம்.

மனிதன் ஜீவிப்பதற்கு அவனுடைய ஜீவாதாரம் மிக முக்கியம். மனித நிலையும் மிருகத்தின் நிலையும் மாறுபடுகின்றது என்றேன். மனிதனின் நிலையில் இருந்து அவன் வாழ்வதற்கு ஜீவனுள்ள ஜீவாதாரத்திற்குப் பொருள் முக்கியம். இன்றுள்ள மனிதர்களுக்கு பொருள் முக்கியம்.

ஆதியில் மனிதன் அன்னம் புசித்திடவில்லை. தன் இனத்தை தன்னைத்தானே அடித்தும் உண்டிட்டான். இராமாவதாரத்திற்கு முன்பு மனிதர்களெல்லாம் மிருக நிலையில் இருந்தவர்கள்தான். ஒன்றை ஒன்று அடித்துத் தன் பசியைப் போக்கிக் கொண்டவர்கள் பிறகு ஒரு நிலையில் தன் இனத்தைத் தவிர மற்ற இனத்தை அடித்துப் புசித்திட்டார்கள்.

அதற்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் தன்னிச்சையில் வளர்ந்த காய்கறிகள் இலைளைப் பறித்துப் புசித்திட்டார்கள். அந்நிலையில் ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்தது. அவ்வுலக நிலை மாறித்தான் அந்நிலையில் இருந்து மீண்டவர்கள் இராமாவதாரத்தில் வந்து தேவர்கள் என்ற பெயருடன் புதிய உலகம் கண்டார்கள்.

இராமாவதாரத்தின் சுழற்சியில் வந்த கடைசிக் கலி இது. இக்கலியின் தன்மை மாறி கல்கி சுழலப் போகின்றது. இராமாவதாரத்தில் இருந்துதான் இந்த ஜீவாதாரத்திற்குப் பொருள் தேடி தன் வழியில் அப்பொருளைத் தேடிப் பக்குவம் செய்து புசித்திட்டான்.

இராமாவதாரத்தில் இருந்த நிலை பெரும் நிலையப்பா. காலப் போக்கில் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததப்பா பெரும் கஷ்டங்கள் எல்லாம். ஆதியில் மனிதன் மனிதனையே அடித்துப் புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த உலகத்தில் தப்பி வந்தவன் தான் கிருஷ்ணாவதாரத்தில் உதித்திட்டான்.

அந்நிலையில் ஜென்மங்கள் மாறி கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் எல்லாரும் ஒருவனை ஒருவன் வஞ்சனையாலும் பெரும் சூழ்ச்சியினானும் சிக்க வைத்துப் பொருளைச் சம்பாதித்து மகிழ்ந்தான்.

கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் எல்லாரும் தன் நிலையை உயர்த்திட…
1.உயர்த்திட என்பது அவர்கள் வழியில் பொருளைச் சேர்த்து வைத்திட
2.பெரும் புதையல் பொக்கிஷம் புதைத்து வைக்கும் நிலையை உண்டு பண்ணினார்கள்.
3.அந்நிலையில் இருந்து வந்த இக்கலி மனிதர்கள்தான் செயற்கை யுகத்தைக் கலந்திட்டார்கள்.
4.காலப்போக்கில் அச்செயற்கையின் தன்மைக்குப் பொருளைத் தேட மிக முக்கியமான ஜீவாதாரத்தின் வழியையே மாற்றிவிட்டார்கள்.

ஜீவன் தோன்றி வளர்வதற்கு அப்பொருள் முக்கியமப்பா. தன் ஜீவனை வளர்த்திடத் தன் வாழ்க்கைக்கு வேண்டியதை எண்ணுவதில்லை இம் மனிதர்கள். பெரும் செயற்கையின் காலத்தில் தள்ளுகிறார்கள் இம் மனிதர்கள்.

இச்செயற்கை ஆசையின் உந்தலினால்தான் ஜீவாதாரத்தின் தன்மையையே மாற்றித் தான் மகிழ என்ற நிலையையும் எடுக்கின்றார்கள்.

ஜீவாதாரத்தை மறந்து மதம் மதம் என்று செயற்கையுடன் கலக்கி விட்டார்கள்.
1.தான் பிழைக்கும் வழிக்குத்தான் எல்லாமே…! என்கின்றார்கள்.
2.தான் பிழைக்கும் வழிக்குப் பெரும் சொத்தைச் சேர்க்கின்றார்கள்.
3.பிழைக்கும் வழிக்குச் சொத்து எதற்கப்பா…?

சொத்து என்று சேர்ப்பது என்னப்பா…?

அவர்கள் வழியில்… பணம் காசு தான் “சொத்து…!” என்கின்றார்கள். பெரும் சொத்து… அதுவல்லப்பா…!

தான் பிறந்து வளரும் நிலையில் தன் ஜீவாதாரத்தில் “போதும்…!” என்ற நிலையில் பெற்ற பயனை எடுத்து
1.மறற மக்களுக்கு நல்லறிவைப் புகட்டி தர்ம நியாயம் அளிப்பவனும்
2.தான் பெற்ற மக்களை நல்லுணர்வுடன் வளர்ப்பவனும்
3.தான் என்றால் யார்…! என்று புரிந்து நடப்பவனும் அடைந்த சொத்துத்தானப்பா பெரும் சொத்து.

இக்கலியில் அந்நிலையில் வாழ்வது பெரும் அரிது. அரிதப்பா அரிது. இக்கலியில் இருந்து தப்புவது அரிது. கலியில் உள்ள மனநிலையெல்லாம் மற்றவனைப் பார்த்துத்தான் தன் நிலையில் வாழ்கின்றான். இது புரிந்ததா…?

மற்றவர்களைப் பார்த்து அவன் அந்நிலையில் வாழ்கின்றானே… தன் நிலை அப்படி இல்லையே…! தானும் அவனைப் போல் வாழ்ந்திட முடியவில்லை என்கிற பொழுது அவனைப் பார்த்துத் துவேஷ எண்ணமும் தன் நிலையில் பெரும் சோர்வும் அடைகின்றான்.

இந்நிலையில் உள்ளவனின் நிலைதான் இக்கலியில் உள்ளவர்கள் நிலையெல்லாம். ஜீவாதாரத்திற்கு ஆசை வேண்டுமப்பா. ஆனால் பெரும் பேராசைக்காரன் அப்பா இக்கலியின் மனிதன்.

இவன் விட்ட சுவாசத்தினால் இக்காற்று மண்டலமே பெரும் கரியாகிவிட்டதப்பா…! இந்நிலையில் வளரும் பயிர்களை உண்டவன் அவன் எப்படி அப்பா இருப்பான்…?

இவன் விட்டிடும் நஞ்சுக் காற்றுடன் சுற்றிடும் உலகம் வேறு எப்படியப்பா இருந்திடும்? ஜீவாதாரத்தையே மாற்றி விட்டான்…! ஜீவனுக்கே பெயர் வைத்துவிட்டான்… ஆறறிவு ஐந்தறிவு என்று…! பாட நிலை புரிந்ததா…!

கல்கி அவதாரத்தில் ஆரம்பித்துக் கலிக்கு வரும் உலகம் காலம் மாறி மீண்டும் இதே சுற்று நிலை வரும். கல்கியில் வந்த உலகம் சுற்றும் நிலையில் கல்கிக்கே வருகின்றது. இந்நிலையில் வடிகட்டி வந்தவர்கள்தான் கல்கியில் அவதரிக்கின்றார்கள். இந்நிலையில் கல்கியில் அவர்கள் நிலையை வைத்துத்தான் பிறகொரு உலகம் வந்திடுமப்பா.

அந்நிலையில் மண்டலங்களின் தன்மை மாறுபடுகின்றன. உலகத்தன்மையில் உணர்வெல்லாம் இவ்வுலகத்திற்கும் கல்கியில் வரும் உலகத்திற்கும் மாறுபடுகின்றது.

மனிதனின் எண்ணமும் செயலும் மாறுபடுகின்றன. அந்நிலையில் வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணத்தில் அந்நிலையை எய்திடத்தான் இப்பாடங்கள் எல்லாம் கல்கியில் வரும் அவதாரங்கள்தான்.

இந்த வாழ்க்கையில் வரும் அற்ப ஆசைகளை மறந்துவிட்டு பெரு நிலையை எய்திடப்பார்…! அந்நிலையில் பெருநிலையை எண்ணிவிட்டால் பெற்றிடுவான் இந்நிலையில் பெருநிலையை…!
1.நான் வாழ்ந்தென்ன பயன்… நான் வாழ்ந்தென்ன பயன் என்கின்றார்கள்…!
2.வாழ்ந்த பயனையெல்லாம் கல்கியில் கண்டிடலாம்.

பெருநிலையை எய்திடவே என்பது இவ்வுலக வாழ்க்கையில் சுற்றி வந்தவர்களெல்லாரும் பெரு நிலை எய்திக் கல்கிக்கு வருபவர்களே. எல்லாச் சித்தர்களும் ஞானிகளும் காலகாலமாகத் தவமிருந்த தவசிகளும் பெருநிலையை எண்ணித்தான் கல்கிக்கு வருகின்றார்கள். அவர்களுடன் கலந்திடலாம்.

இக்கலியில் இப்பொழுது வாழும் மனிதர்களில் முதல் ஜென்மத்தில் விட்ட குறையை இந்த ஜென்மத்தில் எய்திவிட்டால் அப்பெருநிலையான கல்கியில் நாமும் கலந்திடலாம் பலகோடித் தேவாதி தேவர்களுடனும். பாட நிலை புரிந்ததா…?

விடிய விடியக் கேட்டுவிட்டு விக்கல் நிற்க என்ன மருந்து…? என்று கேட்டால் நினைவின் எண்ணத்தில் வருவதுதான் அவ்விக்கல். அவ்விக்கலுக்கே மருந்து தேடினால் விக்கலுக்கு ஏதப்பா மருந்து…?

1.விக்கலுக்கு மருந்து இல்லை
2.எண்ணும் எண்ணத்திற்கும் மருந்தில்லை.
3.விடியும் விடிவிற்கும் மாற்றில்லை.
4.ஈசனின் சக்தியில் உதித்ததப்பா உனக்குள்ளே அவ்வெண்ணம்.
5.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனுடன் ஒன்றிய நிலையில் ஜெப நிலையில் மனநிலையைக் கலந்திடப்பா.
6.உன் நிலைக்கே புரிந்துவிடும் உன் நிலை என்ன என்று…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் வாழ்கின்றோம். அப்பொழுது அதற்குள் நம் மனதை ஒன்றாக்க வேண்டும்.

1.ஆனால்… “என் பிள்ளைகள் இப்படி இருக்கின்றதே… என் தொழில்கள் இப்படி இருக்கின்றதே…
2.இதுவெல்லாம் என்ன ஆகுமோ…?” என்று கலக்கமானால் வேதனை என்ற உணர்வே வருகின்றது.

அதே மாதிரி “நான் ஒருவருக்கு உதவி செய்தேன் அவன் எனக்கு இப்படித் தீமை செய்கின்றானே..,” என்று எண்ணினால் இங்கே நமக்குள் கலக்கம் அடைகின்றது. மனது வேதனைப்படுகின்றது.

நம் உடலுக்குள் பல போர் முறைகள் வருகின்றது. நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் இந்த உடலிலும் அந்தத் தீமையின் நிலைகள் வளர்த்து வரும்போது
1.அதற்குச் சாப்பாடு தேவை.
2.அது கிளர்ச்சி செய்து நமக்குள் என்ன செய்யும்…?
3.அந்த வேதனையை உயிருக்குக் கொண்டு வருகின்றது.

அப்போது அந்த வேதனை என்ற உணர்வு வரும்போது கண் கவருகின்றது. சுவாசித்து அது உள்ளே வரும். அப்போது என்ன செய்கின்றது…?

“அம்மா…ஆ… அம்மா…ஆ…” என்று சொன்னால் அந்த வேதனை உணர்வை எடுத்து மற்றதை அடக்கிவிட்டு உள்ளுக்குள் இது விலகி விடுகின்றது.

கொஞ்ச நேரம் விட்டுவிட்டால் இது என்ன செய்யும்…? அதற்குச் சாப்பாடு கொடுத்தால் சிறிது நேரம் அமைதியாக இருக்கும். நீங்கள் வேதனையாகச் சொல்லிப் பாருங்கள். அடங்கும்.

ஆனால் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து பாருங்கள்.

மறுபடியும் “அம்மா…ஆ… அம்மா…ஆ…” என்று கத்தச் சொல்லும். அப்போது எது வளருகின்றது…? அதற்கு அது சாப்பாடு. நன்றாக யோசித்துப் பாருங்கள்.

அப்போது இந்த மாதிரி நேரங்களில் அதனின் உணர்ச்சிகள் எதிலே விளைகின்றது..?

அதன் உணர்வுகள் வித்தாக வளர்ந்து கனியாகி விட்டால் என்ன செய்கின்றது…? நமக்குள் அடுத்த பிறவிக்குத் தயாராக… அதாவது சிவ தனுசாக மாறுகின்றது.

ஆகவே நாம் இந்தெந்த நேரங்களில் எல்லாம் அந்த விஷ்ணு தனுசை எடுத்து நமக்குள் அதைப் பாய்ச்சி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்.

அதை நமக்குள் வராது தடுக்க வேண்டும்.

என் குழந்தைக்கு கல்வியில் ஞானம் பெற வேண்டும். உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று இங்கே நமக்குள் “மனதை ஒன்றாகச் சேர்க்க வேண்டும்…”

நம்மை யாராவது திட்டினார்கள் என்றால் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும். பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நம் மனதிற்குள் (நமக்குள்) அவன் உணர்வுகள் விடாதபடி தடுக்க வேண்டும். அப்பொழுது நமக்குள் வராது… நம்மைப் பாதுகாக்கின்றோம்.

இராமயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது. எண்ணத்தால் உருவாக்கப்பட்டதுதான் இராமேஸ்வரம் என்று இந்த உடலைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

பரம் என்பது… இந்த மனித உடல் ஒரு தீவு.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும்… விடுபட வேண்டும்… விடுபட வேண்டும்… என்ற உணர்வால் அந்த தீமைகளை நீக்கக்கூடிய உடல் அமைப்பைப் பெற்று
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்டதுதான்
2.இந்த மனிதஉடல் என்கின்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்த நிலையில் கடைசியிலே இன்று (மனித உடலில்) நாம் இருக்கின்றோம்.

அதனால் கடலோரத்தில் கரையைக் காட்டுகின்றார்கள். நாம் பெருங்கடலான நிலைகள் இன்று கடைசிக் கரையாக இருக்கின்றது.

நாம் எத்தனை வகையான உடல்களைப் பெற்றிருக்கின்றோம்…? எண்ணத்தால் உருவாக்கப்பட்ட பரம் இந்த உடல் என்ற நிலைகளில் இங்கே தெளிவாகக் கூறப்படுகின்றது.

இராமேஸ்வரம் அதுதான் கோடிக்கரை. நாம் எத்தனையோ உடல்கள் எடுத்துக் கடைசிக் கரையாக இருக்கின்றோம்.

இதைத்தான் தனுஷ்கோடி – நாம் மனிதனாக வரும்போது எத்தனையோ உடல்கள் எடுத்துத் தீமை என்பதைத் தெரிந்து கொண்டோம்.

நாம் ஆத்ம சுத்தி செய்யச் சொல்கின்றோம் அல்லவா.

வேதனை என்ற உணர்வு வந்தால் உடனே துருவ நட்சத்திரத்தின் அந்தப் பேரருள் பேரொளியை எடுத்து “அந்தத் தனுசைக் கொண்டு” இதை நீக்குதல் வேண்டும். இது விஷ்ணு தனுசு.

1.என்னை வேதனைப்படுத்தினான் என்றால் சிவ தனுசு.
2.அப்பொழுது அவன் உணர்வை நாம் நுகர்கின்றோம்.
3.இப்படி நம் வாழ்க்கையில் வரக்கூடிய உணர்வு ஒவ்வொன்றையும் மாற்றுவதற்காக வேண்டி தனுஷ்கோடி.

எத்தனையோ வகையான கோடி உடல்களை எடுத்தோம் கோடிக்கரை. எல்லாவற்றிலிருந்தும் தீமைகளை நீக்குவதற்கான திறன் பெற்றது கோடிக்கரை மனிதன்.

நாம் மனிதனின் வாழ்க்கையில் இருந்து தனுசுகோடி. அதாவது ஒவ்வொரு நிமிடத்திலும் (பல கோடி உணர்வுகளை) இதை வென்றவன் அகஸ்தியன் ஒளியானான்… துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றான்.

அதன் உணர்வு நாம் எடுத்துத் தீமைகளை நீக்கினால் விஷ்ணு தனுசு. இதை நாம் சேர்க்க வேண்டும். அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன். நாம் இந்த உணர்வின் தன்மையை எடுக்க வேண்டும்.

அப்பொழுது அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு அணுவும் உயிரோடு சேர்த்து ஒளியான அணுவின் தன்மை அடையப்படுகின்றது கல்கியாகின்றது.

மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் குருநாதர் என்னை எடுக்க வைத்த முறை

 

குருநாதர் பாஷை புரியாதபடி எதை எதையோ சொல்லுவார் என்னென்னவோ சொல்லுவார். எனக்குத் (ஞானகுரு) தெரியாது
1.தெரியாது… என்று நான் சொன்னாலும் வம்பு…!
2.தெரியும் என்று நான் சொன்னாலும் “எப்படித் தெரிந்து கொண்டாய்…?” என்று கேட்பார் குருநாதர்

இப்படி வழக்கத்திற்கு மாறான நிலையில் செய்து அதனைத் தனக்குள் செய்யச் செய்து
1.அவரின் சக்தி வாய்ந்த உணர்வை எனக்குள் போதிக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் வளர்ந்தபின்
2.இப்போது எப்படி இருக்கின்றது…? என்று கேட்பார்…?

அவர் சொல்லும் (உபதேசம்) பொழுதும் எனக்குக் கஷ்டங்கள் வரும் பொழுதும் மறைமுகமாகவே எனக்குள் இப்படித் தான் சொல்வார். சொல்லிவிட்டு
1.அதைப் பார்… இதைப் பார்…
2.இப்படிப் பார்… அப்படிப் பார்…! என்பார்.

அதை நான் கேட்கும்போது இவர் என்ன சொல்லுகிறார்…? என்று நான் நினைத்து விட்டால்
1.ஏன்டா திருடா நீ இதைத் திருட வேண்டும் என்றால் அதைத் திருடுகின்றாயே…!
2.நான் சொல்வதை விட்டுவிட்டு எதை எதையோ திருடிக் கொண்டிருக்கிறாய்… “என்னவோ ஏதோ என்று…”

ஆக அதைத் திருடினால் நீ திருடனாகின்றாய். ஆனால் நான் சொல்லும் உணர்வின் தன்மையைப் பெற்றால் நீ திருடன் அல்ல. நீ என்னிடம் கேட்டு வாங்குகிறாய்…! ஆகவே நான் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீ ஏங்கிப் பெறு என்பார்.

ஆனால் இவர் (ஈஸ்வரபட்டர்) சொல்வது எப்படி…? எனக்கு ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே… அதாகின்றது… இதாகின்றது… என்று எண்ணினால்
1.திருட்டுத்தனமாக உனக்குள் “குறையின் உணர்வை” எடுத்துக் கொள்கின்றாய்.
2.அது உன் திருட்டுத்தனத்தின் நிலையைக் காட்டுகின்றது.

நான் கொடுக்கின்றேன்… நீ எடுத்துக்கொள்…! ஆகவே கொடுப்பதை விடுத்துவிட்டுக் கிடைக்காததை நினைத்து நீ எங்கோ நினைவு செலுத்துகின்றாய்.

நான் மனமுவந்து கொடுக்கும் உணர்வை நீ நுகர்ந்தறிந்தால் அதன் அணுவாக உனக்குள் வரும். அருள் ஞானத்தின் உணர்வுகளை உனக்குள் வளர்த்துக் கொள்ள உதவும்…! என்றார்.

இப்படித்தான் அவருடைய சொல் செயல் இவை எல்லாம் வெளிப்பட்டது. அதன் வழி கொண்டு எனக்குள் தெளிவாக்கினார்.

எனக்குக் கல்வி அறிவே இல்லை… நான் மூடனாக இருப்பினும் என் மூடத் தன்மையை நீக்கி அருள் ஞானத்தை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று வளர்த்தார்.

காடு மேடெல்லாம் அலையச் செய்தார் உணவு இல்லாதபடி தேடச் செய்தார். இயற்கையில் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது…? என்று இப்படி எத்தனையோ பல உணர்வுகளைக் காட்டுகின்றார். அதையெல்லாம் பசியோடு இருந்து தான் பார்த்தேன்.

1.என் குரு எனக்குச் சொன்னது போன்று…
2.அவர் எனக்கு உணர்த்தியது போன்று…
3.நீங்களும் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று தான் இப்பொழுது உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கையில் நாம் எந்தத் தொழில் செய்தாலும் எந்த வேலை பார்த்தாலும் எந்த நிலையிலிருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியையும் ஆத்ம சுத்தியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதைச் செய்யவில்லையென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற முடியாத தகுதியற்றவராக மாற்றிவிடும்.

துருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்கு முன் இருக்கும். அதை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

தங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது.

அதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.
1.ஆனால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே
2.அதிலுள்ள செம்பு பித்தளை, வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு
3.நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன் என்றால் எப்படி முடியும்…?

அது முடியாது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர நேர்கின்றது. அறிய நேர்கின்றது.

1.நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து
2.அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது.
3.பின் இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ
4.அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.

அது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும். பின் உடல் நோயாகி மன நோயாகும்.

அத்தகையை தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமா வேண்டாமா…?

சாமி செய்யுமா…! சாமியார் செய்வாரா…! ஜாதகம் காப்பாற்றுமா…! சிந்தித்துப் பாருங்கள்.

நாம் எதை எண்ணிச் சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்குவது நம் உயிரின் வேலை. “அவனன்றி அணுவும் அசையாது”.

ஆகவே நாம் எது எப்படி இருந்தாலும் அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி நாம் உள் புறமாகக் கொண்டுபோய் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.

இல்லையென்றால் நமக்குள் அந்தத் தீமையின் விளைவை அதிகமாகிவிடும்.

இப்போது பெற்றிருக்கும் இந்த மனித உடலே “கடைசியாக இருக்கட்டும்…”

 

1.சுழன்று கொண்டே உள்ள உலகத்தின் சுழற்சியில் சிக்கிப் பல பல அவதாரங்களை எடுத்து பல உடல்களை எடுத்து
2.உலக ஆரம்ப நிலையில் அல்ல கல்கியில் ஆரம்பித்து கலியில் முடிந்து…
3.திரும்பவும் கல்கிக்கு வந்து திரும்பவும் கலியில் முடிந்து பல பல உடல்களை எடுத்து
4.ஏனப்பா இவ்வுலகத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஜென்மங்கள் வருவது எதனால் என்பது தெரிந்து விட்டது முதலிலேயே உங்களுக்கு…!

இப்பொழுது பெற்றிருக்கும் இவ்வுடலைக் “கடைசி உடல்…!” என்ற எண்ணம் வைத்து இவ்வுடலிலேயே உன்னுள் இருக்கும் ஆண்டவனை நீ புரிந்து கொண்டு
1.மறு ஜென்மம் எடுத்திடும் நிலைக்கு வந்திடாமல்
2.இக்கலியிலேயே உன் நிலையை ஒரு நிலைப்படுத்தி அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
3.சூட்சும உலகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த கல்கி பிறந்து கலி வந்து முடியும் வரை பல ஜென்மங்கள் எடுத்து அவதிப்பட வேண்டியதில்லை.

சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே எவ்வுடலையும் உன் நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வுடலில் உன் நிலைக்குச் செய்யும் சேவையை முடித்துக் கொண்டு மறு உடலையும் எடுத்துக் கொள்ளலாம்.
1.பிறந்து வளர்ந்து பல நிலைகளில் மாறுபட வேண்டியதில்லை.
2.அந்நிலைக்கு வந்து வாழ்வது… “என்ன சோம்பேறி வாழ்க்கையா…?” என்று எண்ணிவிடாதே…!

அந்த வாழ்க்கை நிலையில் இம்மனித உடலுக்கு… இம்மானிட மக்களுக்கு… நல் வழி புகட்டி நல்லாசியை அளித்திடத்தான்
1.அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
2.நீ ஆண்டவனாக இருந்திடு…! என்று சொல்வதெல்லாம்.

திரும்பவும் சொல்கின்றேன்……! இக்கலியில் இப்பொழுது பெற்றிருக்கும் கடைசி உடல் தான் உங்களுடைய உடல்கள். இந்நிலையில் இருந்து நீங்கள் மாறுபட்டால்
1.வந்திடும் எதிர்ப்பையும் எண்ணத்தின் மாற்றத்தையும் வைத்து மாறுபட்டால்
2.அடுத்த மானிட உடல் இல்லையப்பா… மனித உடல் இல்லையப்பா…!
3.மிருக உடலுக்குத்தான் செல்ல முடியும்.

உமக்கு ஆண்டவர் எடுத்து கொடுத்த சந்தர்ப்பத்தில் கடைசிச் சந்தர்ப்பம். இது இந்நிலையை மாற்றி விடாதீர்கள்.

நான் பயமுறுத்துகிறேன்…! என்று எண்ணிடாதீர்கள். உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்துங்கள் நல் வழியில். அழியாத நிலை பெற்றுக் கல்கியில் கலந்திடுங்கள்…!

ஈஸ்வரபட்டர் சாக்கடை அருகே எம்மை (ஞானகுரு) அமர வைத்துச் சொன்னது…

 

1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கிப் பெறு
2.புருவ மத்தியில் நினைவு கொள்
3.சாக்கடை நாற்றம் உனக்குள் வருகிறதா என்று பார்..!
4.வராது… உன்னால் அதை உணர முடியாது என்று தெளிவாக்கினார்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் எடுத்த பின் இது தீமைகளை வெளியேற்றிக் கழித்து விடுகிறது. இதைத் தான் மடி மீது இரண்யனை வைத்து நரநாராயணன் வாசல்படி மீது அமர்ந்து அவனைப் பிளந்தான்… “நரசிம்ம அவதாரம்” என்று சொல்வது.

ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் புருவ மத்தியில் உயிருடன் ஒன்றப்படும் போது வலிமையான சக்தியாக உருப்பெறுகிறது.

எப்போதெல்லாம் தீமைகளைப் பார்க்கின்றோமோ அந்தத் தீமை நமக்குள் அணுவாக உருவாவதற்கு முன் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

சாக்கடையின் அருகிலே அமரச் செய்து எனக்கு நேரடி அனுபவமாகத் தான் குருநாதர் அதைக் காட்டினார்.

எனக்குக் காபியும் அவருக்கு டீயும் வாங்கி வரச் சொல்லி சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட குப்பைகளை காபியில் போட்டுக் குடிக்கச் சொன்னார். அவர் டீயிலும் அள்ளிப் போட்டு அவர் குடிக்கின்றார்.

ஈஸ்வரா என்று உன் புருவ மத்தியில் எண்ணி அதைக் அதைக் குடித்துப் பார் என்றார்… குடிக்கச் செய்தார்.
1.அவர் சொன்ன முறைப்படி எண்ணும் போது
2.அந்த நாற்றம் வரவில்லை… அந்த மணம் எனக்குள் வரவில்லை.

ஆனால் முதலிலே குடிக்க மறுத்தேன். குருநாதர் “குடி…!” என்றார். நீ நுகர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி இந்த உணர்வின் சுவைகளை எப்படி மாற்றுகிறது…? தீமைகள் அணுகாது எப்படித் தடுக்கிறது…? என்று நேரடியாகக் காட்டுகிறார்.

1.ஒரு திரவகத்தை ஊற்றினால் அது பட்டவுடனே மற்ற தீமைகளை அது எப்படி ஆவியாக மாற்றுகின்றதோ
2.அதைப் போல் நஞ்சினை வென்ற அந்தத் துருவ மகரிஷியின் உணர்வை உனக்குள் நீ எடுக்கப்படும் போது
3.அந்த நஞ்சு உட்புகாது… புறத்தாலே கழித்துவிடுகிறது என்றார்.

முதலில் நான் மறுத்தேன். ஆனால் “அவர் குடிக்கின்றாரே…” என்ற எண்ணம் எனக்குள் வந்த பின் நீ கொஞ்சம் குடித்துப் பார் என்றார் குருநாதர்.
1.அப்போது தேவாமிர்தம் போன்று அந்த மணத்தை மாற்றுகிறது.
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகளை அங்கே உருவாக்குகிறது.

தீமைகளை நீ எப்படி நீக்க வேண்டும்…? நரசிம்ம அவதாரமாக நீ எப்படி ஆக வேண்டும்…? இயற்கையிலே இதை அனுபவமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

அருள் ஞானி அகஸ்தியன் தன் வாழ்க்கையில் தீமைகளை வென்று இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின்று வெளி வரும் ஆற்றலைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகிறது.
1.அதை நீ உற்றுப் பார்…! என்று அந்த உணர்வின் தன்மையை நினைவாக்குகின்றார்
2.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் என் நினைவை இணைக்கின்றார்.

அதனின்று வெளிப்படும் உணர்வுகள் எப்படிப் பரவுகிறது…? சூரியன் எப்படி அதைக் கவர்கிறது…?
1.அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கிப் பெறு
2.அதை உன் புருவ மத்தியில் எண்ணி நுகரப்படும் போது ஒளிக் கதிர்கள் எப்படித் தெரிகிறது…? என்று பார்.

அந்த ஒளிக் கற்றைகள் உன் உடலுக்குள் பரவப்படும் போது அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. ஒளியான அணுவின் கருவாக மாற்றும் தன்மை பெறுகிறது என்று காட்டுகின்றார்.

அதற்குத்தான் அடிக்கடி உங்கள் நினைவினை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

அந்தச் சக்தியைப் பெறச் செய்யும் தகுதிக்குத் தான் துருவ தியானத்தில் உங்கள் நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தச் செய்யும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

1.எனது குரு எனக்கு எப்படிச் செய்தாரோ அதே போல்
2.நீங்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை நுகரும் சக்தியாக அடிக்கடி இந்த உபதேச வாயிலாக உணர்த்தி
3.கேட்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுக் கருவாக உருவாக்கப்படும் போது
4.மெய் ஞானிகளின் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த நினைவுகளைக் கொண்டு வரும்படி செய்கிறேன் (ஞானகுரு).

பல அணுக்களின் உந்தலுக்கு அடிபணியாமல் நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்

 

ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும். நாம் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நாம் உண்ணும் உணவு நல்ல மணமாகவும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது.

அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு “அமிழ்தமாக… அரும் பெரும் சுவை கூடியதாக… நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது…!”

ஆனால் நாம் நமக்குள் பல கலக்கங்கள் பல கஷ்ட நிலைகள் சோர்ந்த நிலை கொண்டு மனச் சங்கடத்துடன் உள்ள பொழுது நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலும் மனமும் பெரும் சங்கடத்துடனே ஏற்று அதிலுள்ள சுவையும் நம் நாவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாமல் நம் உடல் நிலையும் அதனால் பாதிக்கப்படுகின்றது. நோய் வரக் காரணமாகின்றது.
1.ஒன்று போல் உணவை எல்லோரும் உண்டாலும்
2.அவரவர்கள் நம் மன நிலையைப் பொறுத்துத்தான் உடல் அவ்வாகாரத்தை எடுத்து நம் ஆத்மாவிற்கு அளிக்கிறது.

அதைப் போன்று தான் ஒவ்வொருவரும் தன் சுவாச நிலையும் எண்ண அலைகளும் கொண்டுதான் இவ்வுயிர் இவ்வுடலை இயக்கி வாழ்கின்றோம்.

எப்படி ஒரு பொருளையோ நாம் சமைக்கும் சமையலையோ நம் எண்ணத்தை அதன் மேல் செலுத்திப் பக்குவப்படுத்திப் பதம் பார்த்துச் செய்கின்றோமோ
1.ஏனென்றால் எந்த ஒரு சமையலையும் செய்யும் பொழுது
2.அதன் பதம் அறிந்து செய்தால்தான் அது முழுமை அடைகிறது.

அதைப் போலத்தான் இவ்வுடல் என்னும் கூட்டை
1.இவ்வுள்ளத்தினாலும் இச்சுவாசத்தினாலும் தான் இவ்வுடலுக்குப் பதம் அறிந்து
2.சந்தோஷ நிலை – கோப நிலை என்ற நிலையில் நாம் நம்மைச் சமமாக நிலைப்படுத்திக் கொண்டு
3.இவ்வுடலையே பக்குவப்படுத்தி பதம் அறிந்து
4.நாம் நம் உயிராத்மாவை வணங்கி வாழும் நிலைக்கு நம்மை நாம் பதப்படுத்தி வாழ்ந்திட வேண்டுமப்பா.

நம்மில் நம்மைச் சுற்றி இருக்கும் பல அணுக்களின் உந்தலுக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்திடாமல் “நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்…!”

1.நாம் எடுத்திடும் சுவாச நிலைகள் எல்லாம் நம் உடலுக்கு எந்தெந்த நிலையில் நாம் எடுக்கின்றோமோ
2.அதைக் கொண்டுதான் நன்மையும் தீமையும் அமைகின்றது என்பதனை உணர்ந்து
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச் சமப்படுத்தி வாழ வேண்டும்.

இப்பாட முறை கொண்டு நீங்கள் பகுத்தறிந்து உணர்ந்து நமக்கு முன் உபதேசித்த பல மெய் ஞானிகளின் அருள் வழியில் நடந்து ஏற்றமுடன் நல் எண்ணம் கொண்டே பதப்படுத்தி வாழ்ந்திடுங்கள் பக்குவ நிலையில்.

1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல
2.இவ்வுலகனைத்திலும் உள்ள உயிரணுக்கள் வேறல்ல.
3.அச்சக்தியின் அருளில் உருளும் இவ்வுலகத்தில் உதித்துள்ள உயிரணுக்கள் எல்லாமே ஒரே சொந்தம் தான்.

நம்மை நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை. நம்முள் கலந்ததுதான் எல்லாமே. அந்த எல்லாவற்றிலும் கலந்துள்ளவர் தாம் நாமுமே.

“நான்…!” என்ற தனி நிலை இல்லாத நாம் இவ்வுருளுகின்ற உலகுடன் உலகமாகச் சுற்றி நாம் பெற்ற அருளை நம்முள் ஈர்த்து வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம்.

நல் மனத்துடனும் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தனையோ உடல்களைக் கடந்து கொண்ட பின் மனிதனை உருவாக்கியதனால் “இந்தப் பிள்ளை யார்…?” என்று கேள்விக்குறி வைத்துச் சிந்திக்கச் செய்கின்றார்கள்.

எதற்காக வேண்டி இப்படிச் சிந்தனை செய்யும்படி வைத்துள்ளார்கள்…?

“இந்தப் பிள்ளை யார்…!” என்றால் நாம் யாரால் அதை அறிகின்றோம்…? ஆறாவது அறிவு கொண்ட கார்த்திகேயனால் அறிகின்றோம்.

இந்தப் பிள்ளை யார்…? என்ற வகையில் கேள்விக்குறியைப் போட்டுச் சிந்திக்கப்படும்போது நம் வாழ்க்கையில் எப்படி சிந்தித்துச் செயல்பட வேண்டும். எதன் வழிகளிலே நாம் வளர வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஏனென்றால் இந்த உயிர்தான் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.
1.ஆகவே அந்த உயிரோட பிள்ளை தான்.
2.அந்த உணர்வு தான் நாம்.

இப்பொழுது கோபம் என்ற உணர்வு வந்துவிட்டால் அது நானாகி விடும். நாம் கோபக்காரனாகி விடுவோம்.

அடிக்கடி நான் வேதனை என்ற உணர்வை எடுத்தேன் என்றால் அந்த நான் ஆகின்றது. அப்போது நானாகப் போகும்போது வளர்ச்சியில் கனியாகிவிடுகின்றது.

கனியான பின் அந்த வேதனைப்படும் உணர்வைத்தான் நான் சொல்வேன். அதை மீண்டும் நான் சொல்லப்படும்போது என்ன ஆகின்றது…?

கனியாகிவிட்டால் அந்த வித்து நமக்குள் முளைத்தே தான் ஆகும். முளைத்து அந்த வேதனைப்படும் நிலையை உருவாக்கிவிடும். அப்பொழுது இதை மாற்ற வேண்டுமல்லவா…?

1.ஒரு பருப்பை (தானியம்) வேக வைக்கவில்லை என்றால்
2.அது மண்ணிலே போட்டால் முளைத்து விடுகின்றது.
3.ஆனால் வேகவைத்த பின் அதை மண்ணிலே போட்டால் முளைக்குமோ…?
4.முளைக்காது.

இதே மாதிரித் தான் வேதனைகளையோ கஷ்டங்களையோ எதைப் பார்த்தாலும் அதையெல்லாம் வேக வைக்க வேண்டும்.

உங்களுக்குள் யாம் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று சொல்லி உங்கள் உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அது எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உடலில் செலுத்தும்போது
1.விஷத்தின் தன்மையான வேதனைகளையும் கஷ்டங்களையும் வேக வைத்து
2.அதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.
3.அந்த உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டு வரும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள்ளே சேர்த்தோம் என்றால் தீமை செய்யும் எண்ணங்களை அழித்துவிடும்.

தீமையான உணர்வுகளை இப்படி எண்ணி வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைத்தோம் என்றால் பிறர் தீமைகள் நமக்குள் விளையாமல் தடுக்க முடியும்.

இந்த உணர்வுகள் வளர வளர உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக முடியும். அப்படிச் சென்றவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.

அந்த எல்லையை நாம் அடைய முடியும்.

ஆத்மாவைத் தூய்மைப்படுத்தி அன்புடன் அறத்துடன் வாழ்வதே ஆத்மீகம்

 

ஆத்மீகம் என்பது என்ன..?

ஆத்மீக வழிக்குச் செல்வதற்குப் பல நாள் பல பூஜைகள் செய்து… பல பாடல்களைப் பாடி… ஆண்டவன் திருப்பாதத்தை நமஸ்கரித்து வேண்டி… எண்ணத்தையும் செயலையும் அவ்வாண்டவனுக்கே அர்ப்பணித்து… ஆண்டவனின் அருள் ஒன்று பெற்றால் இவ்வுலகமே பெற்ற பூரிப்பு எனக்குக் கிடைக்கும்…!

அவ்வாண்டவனுக்குத் திருப்பணி நடத்துவதுவே… திகட்டாத இன்பம் என்றெல்லாம் நாம் நம்மில் பலரும் நல்லெண்ணம் கொண்டு வழி தெரிந்தும்… தெரியாமலும்…! நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற வழிதனை அவன் பாதம் பணிந்து நின்றே… பல விரதம் பல பூஜை செய்தே… செல்கின்றோம் ஆத்மீக வழி காண…!

1.ஆத்மீக வழியில் உள்ள ஆண்டவன் யாரப்பா..?
2.இந்நிலையில் பூஜிப்பவன் எல்லாம் ஆத்மீக வழியை அடைந்தவனா…?
3.அவன் எண்ணும் ஆண்டவன் யாரப்பா…?

இவ்வழி முறைகளைக் கொண்ட “ஆத்மீக வழிக்கு நான் சென்றுள்ளேன்…!” என்பவனின் எண்ணத்தில்
1.சிறிதளவு புகழ்ச்சிக்கு மகிழும் தன்மையும்
2.இகழ்ச்சிக்கு வருந்தும் தன்மையும் உண்டென்றாலும்
3.அவன் செல்லும் ஆத்மீக வழிக்குப் பயனேதும் இல்லையப்பா…!

நான் ஆண்டவனை வேண்டுகின்றேன் ஆத்மீக வழிக்குச் செல்வதற்குத்தான்…! ஏன் அந்த முருகன் வந்து எனக்கு வழிகாட்டக் கூடாதா…? என் தவறுக்கு – தவறுக்கு முன் தடுக்கும் வழியை அம்முருகன் செய்யக் கூடாதா…? நான் நினைப்பதுவும் செயல்படுத்துவதுவும் அவனே அல்லவா…! என்றே
1.அவ்வாண்டவனைப் “பிற ரூபத்திலேயே…..!”
2.நாம் ஆத்மீக வழியைக் கண்டுணரப் பார்க்கின்றோமப்பா.

ஆத்மீக வழியென்றால் என்ன…? ஆண்டவன் என்பதன் நிலையென்ன…? என்றெல்லாம் பல நிலைகளில் விளக்கியுள்ளேன்.
1.நம்முள் உள்ள ஆண்டவனை…
2.நாம் எண்ணும் சக்தி கொண்டு…
3.நாம் எண்ணும் வழிக்குத்தான்…
4.எவ்வெண்ணத்தில்… எச்சுவாச நிலையைப் பெறுகின்றோமோ…
5.அந்நிலை கொண்டேதான் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையும் வந்தடைகிறது. (இது முக்கியம்)

முன் ஜென்மத்தில் நாம் விட்ட சப்த அலைகளும் நாம் இஜ்ஜென்மத்தில் வாழும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளதினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்ட சுவாசத்தின் முன் ஜென்மத்தின் சப்த அலைகளும் இஜ்ஜென்மத்தின் சப்த அலைகளும் கலந்தேதான் நாம் சுவாசம் எடுக்கின்றோம்.

இக்காற்றினிலே பரிசுத்தமான காற்று… நிர்மலமான காற்று… என்ற நிலை இல்லையப்பா. இக்காற்றில் கலந்துள்ள சப்த அலைகளில் பலர் எடுத்த பலர் எடுத்த என்னும் பொழுது இப்பூமியில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டுள்ள
1.ஜீவனுடன் உள்ள எல்லா சப்த அலைகளும்
2.ஜீவனில்லா இயந்திரங்களின் சப்த அலைகளும் இக்காற்றில்தான் கலந்துள்ளன.

நாம் எடுக்கும் சுவாச நிலைகொண்டு நம்மைச் சுற்றியுள்ள நாம் பிறவி எடுத்த இப்பிறவி மட்டுமல்ல அணுவாக உதித்த காலம் முதற் கொண்டு நாம் விட்ட சப்த அலைகளும் அனைத்துமே நம்மைச் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

நம்மில் கலந்துள்ள இச்சப்த அலைகளில் இஜ்ஜென்மத்தில் நம் எண்ணமும் செயலும் நல்லவைகளாக இருந்திருந்தாலும் முன் ஜென்மத்தின் நன்மை தீமைகள் நம்மைச் சுற்றிக் கொண்டுள்ளதினால் அதனின் இயக்கமும் வரும்.

எண்ணத்திலிருந்து வருவதுதான் குணம். பல ஜென்மங்களின் தொடர்பு கொண்டுதான் நாம் இன்று வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் எப்படி நன்மை தீமை இருந்தன என்கின்றீர்…? என்பீர்கள்…! முன் ஜென்மத்தின் குறையினால் தான் ஜென்மத்தில் மீண்டும் உடல் பெற்று இங்கே வந்துள்ளோம்.

நாம் வாழும் வாழ்க்கையில்
1.நாம் ஆத்மீக வழிக்குச் சென்றிட
2.ஜெபம் செய்து ஆண்டவனின் திருப்பணி செய்து வாழ்வது மட்டும் வழியல்ல…! என்று உணர்தல் வேண்டும்.
3.ஆத்மீக வழிக்குச் செல்லும் வழிமுறையை நல் வழியாக அமைத்துச் சென்றிட வேண்டும்.

இக்காற்றினால் கலந்துள்ள நன்மை தீமை கொண்ட சப்த அலைகளில்… “நல்லதையே…!” நம் சப்த அலைகளில் ஈர்க்கும் சுவாச நிலைபெற்ற அந்த ஜெப நிலையை நாம் அடையும் பக்குவத் தன்மைக்கு வர வேண்டும்.

இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் மன நிலையை அடிபணிய விடாமல் நம் எண்ணமும் சுவாசமும் நம்முள் உள்ள அவ்வாண்டவனைக் கண்டுணர்ந்து
1.நம்மை ஆட்டுவிக்கும் அச்சக்தி நம்முள் உள்ள பொழுது அச்சக்தியை ஆண்டவனாக்கி
2.தீய வாழ்க்கையை விட்டகற்றி
3.கோபத்திற்கும் பகைக்கும் போற்றலுக்கும் நம்மை நாம் அடிபணிய வைத்திடாமல்
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு (ஆத்ம சுத்தி)
5.அன்பு கொண்டு அறத்துடன் வாழ்பவன் ஒவ்வொருவனுமே
6.ஆத்மீக வழிக்குச் சென்ற ஆண்டவன் ஆகின்றான் என்றுணர்தல் வேண்டும்.

ஆகவே ஆத்மீக வழியின் வழியறிந்து அன்பென்னும் சத்தியத்திற்கு அன்பு காட்டி அன்புடனே அருள் கொண்டு வாழ்ந்திடுங்கள்.

இவ்வுலகினில் மட்டுமல்லாமல் இவ்வுலகுடன் தொடர்பு கொண்ட எல்லா உலகிலும் (அகண்ட அண்டத்திலும்) உள்ள நிலையை அறிந்து கொள்ள முடியும்.
1.அவரவர்கள் எந்த எண்ணத்தை எண்ணுகின்றார்களோ
2.அந்த நிலையிலிருந்து அமைவதுதான் அவரவர்களின் நிலையெல்லாம்.

நம் உடலுக்கு நாமெடுக்கும் ஆகாரம் கொண்டுதான் அவ்வுடல் நிலை உள்ளது. இவ்வுடல் என்னும் கூட்டைப் பாதுகாத்திடவே பரிபக்குவ நிலை பல செய்கின்றோம். அதைப் போல
1.இவ்வுடலுடன் கலந்துள்ள
2.இவ்வுடலையே நடத்திச் செல்லும் ஆண்டவன் என்னும் ஆத்மாவுக்கு
3.ஆத்மீக வழி என்ற அன்பு கொண்ட அன்னமிட்டே வளர்த்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்களும் பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம்.

கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள் உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியான அந்த அரும்பெரும் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி
2.இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் குரு அருளும் உங்கள் உடலுக்குள்
1.இயங்கிக் கொண்டிருப்பதை
2.இயக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.

உங்கள் ஆன்மாவில் இப்போது அவருடைய உணர்வுகள் காட்சியாகவும் வரலாம். சொல்லாகவும் வரலாம்.

1.ஒலி ஒளி என்ற நிலையில் காற்றிலிருந்து வரும் அலைகளை
2.டி.வி. யில் எப்படிக் கவர்ந்து படமாகப் பார்க்கின்றோமோ
3.ஒலியாகக் கேட்கின்றோமோ இதைப்போல
4.உங்கள் ஆன்மாவில் படர்ந்திருப்பதை நீங்கள் நுகரப்படும்போது
5.அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு
6.காட்சியாகவும் உணர்வாகவும் அறிய முடியும்.

பக்தி எது…?

 

பக்தி என்பது நாம் சிலையை வணங்குவதும் அபிஷேகம் செய்வதும் தெய்வத்திற்குக் காசைக் கொடுப்பதும்… போன்ற நிலை உள்ளது. அங்கே அதன் வழியில் சாமியாராக உட்கார்ந்திருப்பவன்
1.நான் கடவுளையே கைவல்யப்படுத்தி வைத்திருக்கின்றேன்…! என்று மந்திரத்தைச் சொல்வான்.
2.பக்தியில் சென்ற ஆவியைத் தனக்குள் எடுத்து வைத்திருப்பான்.
3.நாம் அவனிடம் வந்தவுடனே நீங்கள் என்னென்ன எண்ணியிருக்கின்றீர்கள்…? என்பான்
4.இன்னென்ன மாதிரிச் செய்திருக்கிறீர்கள்…! என்று சொன்னவுடனே அவனே நமக்குக் கடவுளின் தூதுவனாகின்றான்.

அதன் நிலைகள எடுத்துக் கொண்ட பின் இவன் மீண்டும் அசுரனாகின்றான். ஆசையின் நிலைகள் தனக்குள் வரப்படும் போது தவறு செய்யத் துணிகின்றான் (சாமியார்).

பக்தி என்ற நிலை இப்படி வரும் போது நம்மை அறியாமலே அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் நுகர்ந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட சாமியார்கள் உலகில் பக்தி கொண்டோரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நரகலோகத்திற்கு அனுப்பும் உணர்வைத் தான் வளர்க்கின்றனர். ஆக… நல்லதைப் பெறும் நிலைகளை இழந்து நம்மையே வாட்டிக் கொண்டிருக்கின்றோம்.

பக்தி கொண்ட நிலையில் நாம் கடவுளை வணங்குகின்றோம் என்றால் வணங்குவோருக்கு
1.பக்தி கொண்ட நிலையில் நமக்கு ஏன் தெய்வம் இதை உணர்த்தவில்லை…?
2.மற்றவர்கள் சிரமப்படுகின்றார்கள்… சிரமத்திலிருந்து மீட்ட வேண்டும் என்ற நிலைகள் ஏன் வரவில்லை
3.தவறு செய்வோருக்குத் தெய்வம் உடந்தையாக இருக்கின்றதா…?
4.அபிஷேகமும் ஆராதனையும் காணிக்கையும் கொடுத்துவிட்டால் அவர்களை மட்டும் அந்தத் தெய்வம் காக்கின்றதா…?
5.நமக்கு நல்ல உணர்வைத் தெய்வம் ஊட்டவில்லையா…? ஊட்டுகின்றதா…? என்ற எண்ணங்கள் ஓடுகிறது.

ஆனால் இந்தப் பூமியில் இந்தப் பரமாத்மாவைச் (காற்று மண்டலத்தை) சுத்தப்படுத்துவதற்காகத் தான் அன்று ஒவ்வொரு மாதங்களிலேயும் விழாக்களை வைத்தார்கள் ஞானிகள்.

விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் அனைவரையும் ஏகோபித்த நிலைகள் கொண்டு தீய வினைகளைத் தடுத்து நிறுத்தும்படி செய்யச் சொன்னார்கள்.

களிமண்ணால் விநாயகரைச் செய்து அபிஷேகம் செய்து ஆராதனை செய்து அதைக் கொண்டு போய்க் கடலில் கரைத்துவிட்டால் அதற்காக நம்மை வணங்கினான் என்று மெச்சி நமக்கு எல்லாமே கொடுக்கின்றாரா…? என்றால் இல்லை.

ஆக நம் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் வெறுப்பு வேதனை கோபம் பயம் என்ற உணர்வுகள் உடலிலே அதிகரித்திருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு அதை எல்லாம் வளராது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முறைகளைத் தான் கடைப்பிடிக்கச் சொன்னார்கள்.

ஈஸ்வரா…! என்று தன் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் நாங்கள் பார்க்கும் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் வளர்த்துவிட்டால் தீய வினைகள் உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.

குடும்பத்திலோ… கொடுக்கல் வாங்கலிலோ… தொழில் செய்யும் இடங்களிலோ… வெறுப்பு என்ற உணர்வை இங்கே உள்ளே புகவிடாது அது தடுக்கப்படுகின்றது.

அதிகாலை நான்கிலிருந்து காலை ஆறு மணிக்குள் ஏகோபித்த நிலைகள் கொண்டு
1.எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இந்த முறைப்படி செய்தால்
2.தீமையான அணுக்கள் நம் ஈர்ப்புக்குள் வராதபடி உடலுக்குள் வளராதபடி தடுக்கின்றது.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணங்கள் கூட்டமைப்பாக வெளிவரப்படும் போது பூமியிலிருக்கும் அந்தத் தீமை செய்யும் உணர்வுகளைக் காலை ஆறு மணிக்குச் சூரியன் மேலே எடுத்துக் கொண்டு செல்கிறது.

அங்கே சூனிய நிலைகளுக்குச் சென்ற பின் கடலுக்குள் சென்று கடல் அலைகளுக்குள் அமிழ்த்திக் கரைத்துவிடுகிறது. நம் பரமாத்மா சுத்தமடைகிறது… நம் ஆன்மாவும் தெளிவாகிறது.

அருள் ஒளி பெறும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் தெளிவாகிறது. நம்மை அறியாமல் வரும் நிலைகளை இப்படித் தான் கரைக்கும்படி அன்று ஞானிகள் சொன்னார்கள்.

ஆகவே நாம் எதைப் பக்தி கொள்ள வேண்டும்…?

1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ண வேண்டும்.
2.நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.
3.ஒவ்வொரு உயிரும் கடவுளே… அந்த உடலை உருவாக்கிய ஒவ்வொரு குணங்களும் தெய்வமே…!

அந்த வழிகளில் மனிதனின் செயலாக்கம் உரு பெற்றுக் கொண்டு வந்தது.

ஆகவே மற்றவர்கள் உயர வேண்டும் என்றால் அந்த உணர்வு எனக்குள் தெய்வமாகிறது. இந்தப் பண்பினை வளர்ப்பதற்குத் தான் இதைச் செய்தார்கள்.

யாராவது நாம் சற்று சிந்தித்துப் பார்க்கின்றோமா…? இல்லை…! இல்லை என்ற பதில் தான் வரும். இதிலிருந்து நாம் மீள வேண்டும். பக்தி எது என்பதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

நல்லது நடக்கும் “காலமோ நேரமோ” நம்மைத் தேடி வராது… நாம் தான் அதை உருவாக்க வேண்டும்

 

தெய்வப் பிறவி… மனிதப் பிறவி…! என்ற பாகுபாடு எல்லாம் பிறக்கும் பிறவியில் இல்லை.

தேவனுக்கு அடுத்தது மனிதப் பிறவி என்கின்றார்கள். தேவப் பிறவியாக யாரும் பிறப்பதில்லை. உயிர் அணுக்கள் தோன்றிய நாள் முதலே சமமான நிலையில்தான் எல்லா உயிரணுக்களுமே ஜீவன் பெற்றன.

ஆண்டவனாகவும் மனிதனாகவும் பேயாகவும் மிருகமாகவும் மற்ற எல்லா ஜீவ ஜெந்துக்களாகவும் ஆனதெல்லாமே அதனதன் சந்தர்ப்பம் தான்.
1.அச்சக்தியின் அருளில் சமமான நிலையில் வந்த உயிரணுக்கள் எல்லாம்
2.அதனதன் சுவாச நிலை கொண்டு பல நிலை கொண்ட ரூபமெடுத்து ஜீவன் பெற்று வாழ்கின்றது.

உலக ஆரம்பத்தில் உயிர் பெற்ற நாம் எல்லாருமே ஆண்டவனாகவும் மனிதனாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இன்றைய உலகில் ஜீவன் பெற்று வாழ்வதெல்லாம்
1.நாம் அன்று எடுத்த
2.அதே போல இன்று எடுக்கும் சுவாச நிலை கொண்டு
3.நமக்கு நாமே தேடிக்கொண்ட நிலைதான்…!

இன்றுள்ள நிலையையாவது நிலை நிறுத்தி வாழ்வதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
1.ஆண்டவன் பிறப்பு வேறு…!
2.மனிதன் பிறப்பு வேறு…! என்ற
3.மாறுபட்ட நிலை அச்சக்தியின் அருளிலிருந்து நாம் பெறவில்லை.

நாம் இன்று மனித உடல் பெற்று வாழும் வாழ்க்கையை அதிலுள்ள உண்மையை ஊன்றிப் பார்த்தால் தெய்வ நிலையில் இருந்து மனித நிலைக்கு வந்ததுதான்.

மனிதனின் நிலை கொண்டு நம் நிலையை நாம் உணர்ந்து… நாம் விட்டு வந்த தெய்வப் பிறவியை நாம் ஏற்கும் நிலையே நமக்கு முன்னாடி உள்ளது.

ஆகவே
1.தெய்வத்தின் தெய்வமாகக் கலந்துறவாடும் நிலையை ஏற்ற நாம்
2.இந்தப் பிறவியிலேயே அப்பாக்கியத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
3.மனிதனின் நிலை – தன்னை அறிந்து வாழ்ந்திட வேண்டும்.
4.தன் நிலை உணர்ந்து தான் வாழும் வாழ்க்கை என்பது “காலமும் நேரமும் பார்த்து அது வருவதில்லை…!

ஏனென்றால் காலத்தையும் நேரத்தையும் பார்த்துக் கொண்டு மனிதன் தன் நிலையில் தன் சுவாசத்தையும் எண்ணத்தையும் கெடுத்துக் கொள்கின்றான்.

அப்படிக் கெடுத்துக் கொள்வதால்தான் மனிதனுக்கு அடுத்துத் தெய்வமாகும் நிலையை மாற்றி ஆவி உலகில் அல்லல் பட்டுக் கொண்டு பல ஜென்மங்கள் ஜென்மங்களாக… பல ஜீவராசிகளின் ஜென்மங்களைப் பெற்றுச் சுற்றிக் கொண்டே உள்ளான்…!

அந்த நிலையை நாம் ஏன் பெற வேண்டும்…?

உலக மாற்றம் அருகிலே வந்துவிட்டது. ஆகவே நல்ல நினைவு இருக்கும் இந்த நேரத்திலேயே மனிதப் பிறவியின் உய்வைக் காணுங்கள். அந்த நிலையை அடைந்த தெய்வ நிலைகள் பெற்ற
1.மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழும் தகுதியை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளியின் சரீரம் பெறுங்கள்.
3.அகண்ட அண்டத்தில் என்றுமே நிலைத்திடும் நிலையாக வேகா நிலை அடையுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் நல்லவைகள் ஆயிரம் செய்தாலும் அதற்குள் நஞ்சு கலந்துவிட்டால் அந்த நல்லது அனைத்தையுமே அது அடிமையாக்கி விடுகின்றது.

ஆனால், நஞ்சினை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் அந்த நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக்க முடியும்.

1.நாம் உயிருக்குள் இருக்கும் நஞ்சின் துடிப்பே – உயிரின் இயக்கம்.
2.நஞ்சு அதிகரித்துவிட்டால் துடிப்பின் இயக்கம் குறைவாகிவிடும்.

தேவாங்கு என்ற உயிரினத்தை நீங்கள் பார்க்கலாம். அதிலே நஞ்சின் இயக்கத் துடிப்பு குறைவு. உணர்ச்சியின் தன்மை வேகத்தைக் குறைத்த நிலைகள் வரப்படும் போது அதனுடைய “இயக்கச் சக்தி” குறைவாகின்றது.

உடலில் நல்ல தசைகளாக இருப்பினும் எவருக்கும் தீங்கு செய்யாத நிலையில் உடல் அமைப்பு கொண்டுள்ளது. உயிரின் துடிப்பு குறைவாக உள்ளதால் தன்னைத்தானே தான் காத்திடும் நிலை இழந்த நிலைகள் கொண்டுள்ளது.

1.உயிர் மற்றொன்றைத் தாக்கி அதன் உணர்வின் தன்மை கொண்டு
2.கடுமை கொண்ட உணர்வின் தன்மை எடுக்கப்படும்போதுதான்
3.இதன் உணர்வின் இயக்கமாக அது வளர்ந்து
4.அதற்குள் மற்றது அந்த உயிரின் வலுவையே பெற முடியும்.

ஒவ்வொரு உயிரனத்திற்கு அதற்கென்ற (உடல் அமைப்பு) தசைகள் கொண்டுள்ளது. பல்வேறு விதமான தசைகள் கொண்ட அத்தகைய உயிரினங்களின் உயிரில் உள்ள விஷத்தன்மை குறைந்துவிட்டால் என்ன ஆகின்றது…?

1.விஷத் தன்மை குறைந்தால்
2.உயிரின் துடிப்பு வேகம் குறைந்து
3.எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை சீராக இயக்காது அந்த உணர்வின் தன்மை மறைந்துவிடும்.
4.அதனின் வலுவை இழந்துவிடும்.

இதைப் போன்ற இயக்கத்தின் தன்மை கொண்டு அத்தகைய உயிர்கள் வாழ்ந்தாலும் விஷத்தன்மை குறைந்ததாக இருப்பினும்… “எந்த நெருப்பிலும் இந்த உயிர் வேகாது”.

ஆனால் நஞ்சின் அறிவுடன் இருந்தால் நஞ்சினைத் தான் விளைய வைக்கும். அதாவது இன்று பூச்சிகளைக் கொல்லப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தூவுகின்றோம்.

பூச்சிகள் இந்த விஷத் தன்மை கொண்ட அந்தப் பூச்சிக்கொல்லி மருந்தைச் சுவாசிக்கும்போது அந்த உயிரிலே பட்டபின் அந்த உடலை மடியச் செய்கின்றது.

1.ஆனால் அதே சமயம் மடிந்து கொண்ட பின் இந்த நஞ்சின் உணர்வு அதனுடன் இணைந்து கொள்ளுகின்றது.
2.மீண்டும் அதே உயிரணு மற்ற நஞ்சு கொண்ட உயிரணுவாக மாறி
3.இந்த நஞ்சிற்கே அதைக் கொல்லும் சக்தி அதிகமாகி விடுகின்றது.

இதைப்போல நஞ்சைப் பாய்ச்சிப் பயிரைக் காக்க இவர்கள் தூவும் மருந்து அந்த சமயம் பூச்சிகளின் உடல்கள் மடிந்தாலும்
1.இந்த நஞ்சின் தன்மை உணர்வாக இணைந்து
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.நஞ்சினை வீழ்த்திவிடும் நிலைகள் வருகின்றது.
4.அதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

இதைப் போன்ற தீமையின் நிலைகள் கொண்டால் தீமையின் உணர்வைத்தான் நமக்குள் அதிகரிக்கச் செய்யும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து இந்த நஞ்சினை ஒடுக்கிடல் வேண்டும். அதை அடக்கிடல் வேண்டும்.

உயிர் எவ்வாறு எந்த நெருப்பிலும் வேகுவதில்லையோ எந்த நஞ்சிலும் மடிவதில்லையோ அதைப் போன்று நாமும் அழியாத நிலையாக வேகா நிலை என்ற நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

வேகா நிலையாக நமக்குள் உணர்வின் இயக்கம் மற்றொன்றை மடிந்திடாது உயிருடன் ஒன்றிய ஒளியின் சிகரமாக இருளைப் பிளந்து ஒளி காணும் உணர்வை இந்த உடலிலே விளைய வைக்க வேண்டும்.

1.இதை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையும்
2.அழியா ஒளிச் சரீரம் என்ற நிலையும்
3.பிறவியில்லா நிலை என்ற நிலையும் அடைய முடியும்.

ஞானிகள் காட்டிய அத்தகைய மார்க்கத்தில் நாம் செல்லுவோம். இந்த உடல் சதமல்ல. எந்த நிமிடத்திலும் இந்த உடலை விட்டு இந்த ஆன்மா செல்லலாம்.

இந்த உடலில் எந்த உணர்வை அதிக அளவில் நாம் எடுத்து விளைய வைத்தோமோ இந்த அளவு கோல்படிதான் அடுத்த உடலை உருவாக்கும் நிலையும் அந்த உணர்வின் செயலாக்கமும் வரும்.

ஆகவே நஞ்சினை நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நஞ்சை அகற்றிடும் உணர்வைப் பெற்று இன்று உயிருடன் ஒன்றிய ஒளியான சரீரம் பெற வேண்டும் என்று எவர் ஒருவர் எண்ணுகின்றாரோ அதை நிச்சயம் பெற முடியும்.

யாரோ செய்வார்… எவரோ செய்வோர்… என்ற எண்ணுவதை விடுத்து “நம் எண்ணமே கடவுளாக இயக்குகிறது” என்பதை உணர வேண்டும்

 

உதாரணமாக… ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த உணர்வினை ஏற்றுக் கொண்ட பின் அந்தப் பொருளை நாம் உற்று நோக்கி அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்கும் போது “எப்படியாவது…” அதை வாங்கிவிடுகின்றோம்.

ஆனால் அது கிடைக்கவில்லை என்றால் உடனே சோர்வடைகின்றோம்… சஞ்சலப்படுகின்றோம்… சங்கடப்படுகின்றோம்…!
1.முயற்சி எடுத்தேன் அது கிடைக்கவில்லை என்று சோர்வின் உணர்வுகளை நாம் எண்ணுகின்றோம்…
2.நாம் அதுவாக ஆகிவிடுன்றோம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் பொருள் கிடைக்கவில்லை என்று சோர்வடைகின்றோம் சலிப்புப்படுகின்றோம் சஞ்சலப்படுகின்றோம்… சங்கடப்படுகின்றோம்… வேதனைப்படுகின்றோம். இப்படி ஐந்து விதமான உணர்வுகளை நுகர்ந்த பின் ஐந்து வித அணுக்கள் உடலுக்குள் கருவாக உருவாகின்றது.

அப்படிக் கருவாக உருவாகிவிட்டால் நாம் எதைப் பெற வேண்டும் என்று எண்ணினோமோ அந்த எண்ணத்திற்கு (வேலைக்கு) நாம் போக வேண்டும் என்று எண்ணினாலும் உடனே சலிப்பு வருகிறது.

1.இவ்வளவு முயற்சி செய்தேன்… ஒன்றும் ஆகவில்லை… என்ற உணர்வை எடுத்து
2.அங்கே செல்லவிடாதபடி அதைப் பெற முடியாத நிலைகளில் தடைப்படுத்திவிடுகின்றது.
3.நம் எண்ணம் அதுவாக ஆகிவிடுகின்றது.
4.இவ்வளவு செலவழித்து முயற்சி எடுத்து வெற்றி இல்லாது போய்விட்டதே…! என்று வேதனை.

வேதனையை நுகர்ந்த பின் வேதனையை உருவாக்கும் விஷத் தன்மையான அணுக்கள் கருவாக உருப்பெறுகிறது. பின் அதை மீண்டும் மீண்டும் எண்ணும் போது அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

அதற்கு அந்த விஷம் தான் தேவை.

அந்த வேதனையைச் சுவாசிக்க அந்த அணுக்கள் வளர்ச்சி பெற அதனுடைய மலங்கள் நம் உடலில் இரத்தநாளங்களில் கலக்கப்படும் போது “கைகால் குடைச்சல்…” போன்ற நிலைகள் வருகின்றது.

ஒரு தரம் நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இத்தனை விதமான அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்குகிறது.
1.ஆக நம் காரியங்கள் வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி பெறுகின்றோம்.
2.நடைபெறவில்லை என்றால் மாறுபட்ட குணங்கள் நமக்குள் பெருகுகின்றது.

இவை அனைத்தையும் நம் உயிர் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நமக்குள் அந்த உணர்வின் தன்மையை உடலாக மாற்றிக் கோண்டே உள்ளது.

ஆக நாம் எண்ணியது எதுவோ அதைத் தான் உயிர் உருவாக்குகின்றது.

ஒரு காரியத்தினை முயற்சிக்கின்றோம்… நிச்சயம் வெற்றி கிட்டும். அவருக்கு நல்ல மனது வரும்… உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வரும்…. என்று இப்படி எண்ணினோம் என்றால் நமக்குள் உதவி செய்யும் உணர்வுகளும் அவரை எண்ணிச் செல்லப்படும் போது நம் சொல் அவர் செவிகளில் பட்டு நாம் எண்ணியது இங்கே ஆன்மாவாகச் சேர்கின்றது.

நாம் திருப்பி இரண்டு தரம் சொன்னால் இந்த உணர்வுகள் செவிகளில் பட்டு நம்மை அவர் உற்றுப் பார்த்தார் என்றால் நம் நினைவு… “அந்தச் சொல்லை அவர் சுவாசித்து… உதவி செய்யும் பண்புகள் வருகிறது…”

ஆனால் ஒரு தரம் கிடைக்கவில்லை என்றால் வேதனையும் வருத்தமும் சோர்வும் அடைகிறோம். அடுத்து அந்தச் சோர்வுடனே நாம் செல்லப்படும் போது
1.என்னங்க… போன தடவை சொன்னீர்கள்… இப்போது வந்தனுங்க…!
2.இரண்டு தடவை இப்படிக் கேட்டோம் என்றால் அல்லது சொல்லாமல் மனதிலே எண்ணினோம் என்றாலும்
3.இது அவருக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இந்த உணர்வு கண்களில் பட்டவுடனே நம் உடலிலிருந்து வரும் மணத்தை அவர் நுகர்ந்தவுடனே அதை அறியச் செய்கிறது. நாம் சோர்வடைந்திருந்தால் அவரும் உதவி செய்கிறேன் என்று சொல்லாமல் “பார்க்கலாம்…!” என்பார்.

அடுத்து மீண்டும் வேதனையுடன் கேட்டால்… என்ன…? சும்மா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்…! என்ற இந்த உணர்வைத் தோற்றுவிக்கும்.
1.நமக்குள் விளைவதைத் தான் அங்கே அவர் கண்கள் கவர்ந்து
2.அந்த உணர்வைச் சுவாசிக்கச் செய்து அதே உணர்வு அவரை இயக்குகிறது.

இப்படி நம் வாழ்க்கையில் “நம் எண்ணமே… கடவுளாக உள் நின்று…” நாம் எண்ணியதைத் தான் உருவாக்குகிறது.

இதை எல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் சிறு குறைகள் ஏற்படும். எப்படியும் அது நிவர்த்தியாக வேண்டும்… அவருக்கு நல்ல மனது வர வேண்டும்… நமக்கு உதவி செய்யும் பண்புகள் அங்கே வர வேண்டும்… என்ற எண்ணத்தைத் தான் தோற்றுவிக்க வேண்டும்.

1.யாரோ செய்வார் எவரோ செய்வார் என்ற எண்ணத்தை விடுத்துவிட்டு
2.நாம் நமது வாழ்க்கையில் எப்போதுமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும்
4.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதைச் செயல்படுத்த வேண்டும்.

நம் வீட்டில் அழுக்குப்பட்டால் அடிக்கடி அதைத் தூய்மைப்படுத்துவது போல் நம் ஆன்மாவில் படும் அழுக்கை அடிக்கடி இப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்.

அப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து பழக வேண்டும்.

சகலத்திலும் கலந்துள்ள ஆண்டவன் என்பவனை அறிந்து காண அவ்வாண்டவனால் தான் முடிந்திடும்

 

கோவில் என்ற புண்ணிய ஸ்தலத்தை அரசனும் சென்று வணங்கினான்… ஆண்டியும் சென்று வணங்கினான்.

கோவில் என்னும் இடத்தைப் புனிதமாக்கி அந்த நிலை கொண்டு மனிதர்களின் எண்ணமெல்லாம் ஒரே பக்தி நிலையாக… ஆண்டவன் என்ற அவ்வாண்டவனைத் துதிப்பதற்கு… ஒரே நிலை கொண்டு செல்வதற்காக… அன்று சித்தர்களால் மனிதர்கள் நிலைக்கெல்லாம் புரிவதற்காக அமைத்து வைத்த புண்ணிய ஸ்தலங்கள்தான் பல கோவில்களும்.

கோவில் என்னும் இடத்திற்குச் செல்ல செல்வந்தன்… செல்வமில்லாதவன்…! என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒரே பக்தி நிலை கொண்டு வணங்குவதற்காகத்தான் பல சித்தர்கள் அக்கோவிலில் உருவ வழிபாட்டினை அமைத்து வைத்தார்கள்.

1.நமக்கு மேல் ஒருவன் உள்ளான்…
2.அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான்… என்று பல நிலைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக
3.தன் நிலையில் பெரும் தவமிருந்து அச்சக்தியில் இருந்து சகல அருளையும் தான் பெற்று
4.அக்கோவில் உள்ள இடத்தில் தானே கோவில் கொண்டு… வரும் பக்தர்களின் எண்ணத்தையெல்லாம் தன் நிலையில் ஈர்த்து
5.அவரவர்கள் வேண்டும் நிலைக்கு உகந்த செயல்களை எல்லாம் செய்வது
6.அச்சகல அருள் பெற்ற மகரிஷிகளும் சப்த ரிஷிகளும் ஞான ரிஷிகளும் தாம்.

இந்த உலகில் தோன்றிய மகரிஷிகளும் ஞானிகளும் அவரவர்கள் கோவில் கொண்ட இடத்திலேயே இன்றும் சூட்சம நிலைகளில் செயல்படும் செயல்களினால் தான்
1.மக்களின் மனதில் ஒரு ஒற்றுமை நிலையும்
2.தவறுக்குப் பயப்படும் நிலையும் (இன்றளவும்) இருந்து வருகின்றது.

அக்கோவில் இல்லாத நிலையும் ஆண்டவன் இல்லாத நிலையும் இருந்திருந்தால் இன்றுள்ளளவும் பக்தியும் நியாயமும் இருப்பதற்கு வழியில்லாமல்தான் நாம் எல்லாம் இருந்திருப்போம்.

நாம் செய்த பாக்கியம்… அன்று தோன்றிய
1.நம்முடனே கலந்துள்ள
2.நம்மையெல்லாம் காக்கும் தெய்வங்களாக
3.இன்றும் தெய்வத்தின் தெய்வமாக நம் மகரிஷிகள் தான் கலந்துள்ளனர்.

நம்மில் நாமே ஆண்டவனாக உள்ள பொழுது நமக்கு உயர்ந்தவர்… நமக்குத் தாழ்ந்தவர்…! என்ற பாகுபாடு ஏற்படுத்தி ஏன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நீங்கள் கொள்ளலாம்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் பொருளினாலேயோ ஜாதி மத இன வேறுபாட்டினாலேயோ வருவதில்லை.

நமக்கு மேல் உயர்ந்த எண்ணம் கொண்டு அவ் ஈஸ்வரன் சக்தியைப் பெற்று சகல நிலைக்கும் நம்முள் கலந்துள்ள
1.நாம் எண்ணும் நிலைக்கெல்லாம் நம்முள் வந்து நமக்கு அருள் புரியும்
2.உயர்ந்த ஞானம் பெற்ற அத்தேவர்களை வணங்குவது தான்
3.நம் உயிராத்மாவிற்கு நாம் சாந்தி பெறும் நிலையாக இன்றுள்ளது.

ஆண்டவனின் ரூபத்தையும் ஆண்டவனின் நிலையையும் அறிந்து சொல்லவோ உருவம் பார்த்து உணர்ந்து சொல்லவோ யாராலும் முடிந்திடாது.

“யாராலும்……..!” என்பது ஆண்டவன் என்பவன் எங்கிருக்கின்றான்..? அச்சக்தியின் ரூபம் என்ன…? அந்தச் சிவனின் ரூபம் என்ன…? என்று கண்டறிய ஆண்டவன் என்னும் ரூபம் கொண்டு நாம் வணங்கிடும் நமக்கு ரூபமளித்து இன்று பல நிலைகளை நமக்கு உணர்த்தி நம்முள் எல்லாம் கலந்து சூட்சும நிலைகொண்டு வாழும்
1.பல பெரியோர்களைக் கேட்டாலும்
2.எந்த ரிஷித்தன்மை பெற்றவர்களாலும்
3.எந்த ஞான நிலை பெற்றவரினாலும் ஆண்டவனின் ரூபத்தைக் கண்டறிய முடியாது,
4.சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவன் என்பவனை அறிந்து காண அவ்வாண்டவனால்தான் முடிந்திடும்.

சக்தியின் அருள் பெற்று இஜ் ஜீவ உடலுடன் வாழ்ந்திடும் எல்லோருமே தன் நிலையில் அவரவர்கள் ஏற்கும் நிலை கொண்டு அவரவர்களும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள… உணர்ந்து கொள்ள… இவ்வாத்மாவை அழியா நிலை கொண்டு சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற நிலையைத் தான் பெற முடியுமே தவிர…
1.ஆண்டவனின் ரூபத்தையோ ஆண்டவனின் சொல்லையோ பார்த்தறிந்தவர் யார் உள்ளார்…?
2.ஆண்டவர் என்பவருக்கு ரூபமே இல்லை.
3.இல்லை என்று சொல்லுவதற்கும் நம் சக்தியில் பொருளில்லை.

நம் எண்ணம் கொண்டுதான் நம் சுவாச நிலையின் அருளால் நாம் உயர்ந்து வாழ்ந்திட முடியும். நம் எண்ணத்திற்குத் தகுந்த சக்தியை ஈர்த்து எடுக்கத்தான் இந்த உபதேசத்தின் நிலைகளும் தியானங்களும்.

எண்ணும் எண்ணத்திற்கு உகந்த நிலையில் உள்ளவன் அவ்வாண்டவன்.
1.அச்சக்தி நிலையை ஈர்த்து நல்வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்…!
2.சகல அருளையும் பெற்றிடலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் ஒரு கடையை வைத்துத் தொழில் நடத்திக் கொண்டு வருகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நடத்திக் கொண்டு வரும்போது நம் தொழிலில் கொஞ்சம் குறை ஏற்படுகின்றது.

அப்பொழுது அந்தக் குறையை நீக்க வேண்டும் அல்லவா…?

“நேற்று நன்றாக நடந்தது… இன்றைக்கு இப்படியாகிவிட்டதே… நேற்று நன்றாக நடந்தது இன்றைக்கு இப்படியாகிவிட்டதே…” என்று சொல்லிக் கொண்டிருப்போம்.

வெறுமனே சொன்னால் போதும். ஆனால் நாம் எப்படிச் சொல்கிறோம்…? வேதனையோடு சொல்கின்றோம்.

வேதனையோடு எப்படிச் சொல்லுகின்றோம்…?

1.அவனைப் பார்… அவன் எப்படி எப்படியோ மோசமாக வியாபாரம் செய்கின்றான்
2.அவனுக்கு அங்கு நன்றாக நடக்கின்றது…. நமக்குப் பாருங்கள் நடக்கவில்லை.
3.நான் நல்ல சரக்கைத்தான் கொடுக்கின்றேன். யாரும் வாங்கவில்லை என்கிறோம்.

அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்…?

1.அவர்களை உயர்த்துகின்றோம்.
2.நம்மைத் தாழ்த்தி விடுகின்றோம்.

அப்பொழுது நாம் அதை மாற்றிடும் நிலைகளாக அவன் அவ்வாறு வியாபாரம் செய்தாலும் கூட
1.நாம் அவன் உணர்வைச் சேர்க்காதபடி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவனுக்குள் தெளிந்த மனம் பெற வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டால்
1.நமக்குள் கெட்டது வராமல் தடுக்கின்றோம்.
2.அவர்களுக்குள் இந்த நல்லதை உருவாக்கக்கூடிய அந்தச் சக்தியை பெறுகின்றோம்.
3.அப்போது அவன் உடலில் விளைந்த தீமையான வித்து நமக்குள் முளைக்காமல் தடுக்கலாம்.

ஏனென்றால் அவன் உடலில் காயாக இருக்கின்றது. காயாக உள்ளததை அந்த வித்தை எடுத்துப் போட்டால் முளைக்குமோ…?

முளைக்காது.

ஏனென்றால் அவன் உணர்வு நமக்குள் விளையாதபடி காயாக்கி வைக்க வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று நாம் எண்ணினால் அவன் செய்யும் நிலைகளில் தீமை அங்கே கனியானாலும் அந்த வித்து நமக்குள் வராதபடி மாற்றிக் கொள்ளலாம்.

நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் துணை கொண்டு தெளிந்திடும் சக்தி நாம் பெறுவோம். அந்த உணர்வுகள் படரப் படர நம் வியாபாரம் செழிக்கத் தொடங்கும்.

நம்மிடம் சரக்கு வாங்குபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியுட்டும் நிலையாக அது அமையும். தொழிலை நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.

இறந்த உயிரான்மாக்களை எண்ணி இழுக்கக்கூடாது… உந்தித் தள்ள வேண்டும்…!

 

உதாரணமாக உடலை விட்டுப் பிரிந்தவர்கள் (இறந்த உயிரான்மாக்கள்) இன்னொரு உடலுக்குள் போவதற்கு முன்
1.அந்த 48 நாள்களுக்குள் உணவைப் படைத்து (படையல்) அவர்களை நாம் அழைத்தோம் என்றால்
2.மந்திர தந்திரக்காரர்கள் அதைக் கவரும் வாய்ப்புகள் வருகிறது.

காரணம்… முதல் அமாவாசை அன்று மந்திரவாதிகள் வருவார்கள். இது எல்லாம் அரசர் காலத்தில் செய்யப்பட்ட முறைகள். வழி வழி இன்றும் வருகிறது.

குடுகுடுப்புக்காரனை எடுத்துக் கொண்டால் பார்க்கலாம்… இரவிலே மண்ணை எடுத்து ஜெபிப்பார்கள். உடலில் பட்ட உணர்வுகள் மண்ணிலே பதிந்திருக்கும்.

வாசல்படி மண்ணை எடுத்துக் கொண்டு போய் உணர்வின் தன்மை அறிந்து கொள்வார்கள். காலையில் வந்தவுடனே உங்கள் குடும்பத்தில் இன்னது நடந்தது… இன்னது நடக்கும்…! என்றும் சொல்வார்கள்.

ஆனால்
1.பழைய துணியைத் தான் கேட்பார்கள். தலை முடியையும் கேட்பார்கள்.
2.இது சம்பந்தப்பட்ட ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்துவார்கள்.
3.வியாபார நிலைகளுக்குப் பயன்படுத்துவார்கள்.
4.மந்திர தந்திரங்கள் செய்வோர் இதன் வழியில் தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆகவே… நாம் அந்த ஆன்மாக்களை மோட்சத்திற்கு அனுப்புவதில்லை.

அமாவாசை அன்று (இருளான நாளில்) இங்கே நாம் அழைப்போம். மண்ணையும் துணியையும் முடியினையும் எடுத்துக் கொண்டவர்கள் மந்திர ஒலி கொண்டு ஜெபிப்பார்கள்.

1.நாம் பாசத்தால் கூப்பிடும் போது அந்த உணர்வின் தன்மை வைத்து
2.ஆன்மாவை இழுத்து அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்.

“பௌர்ணமி நாளன்று…” குடும்பத்தைச் சேர்ந்தோர் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் குடும்பத்தில் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளுங்கள்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அந்த ஆன்மாக்களை அங்கே கலக்கச் செய்யுங்கள். இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லா நிலையை அடையச் செய்யுங்கள்.

சப்தரிஷி மண்டலத்தின் உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆன்மாக்களை (சூட்சம சரீரத்தை) அங்கே ஏவிவிடலாம்.

சப்தரிஷி மண்டலத்தின் அருகில் சென்ற பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகிறது. நாம் எடுத்துப் பாய்ச்சிய அறிவின் நிலைகள் உயிருடன் ஒன்றுகின்றது.

இப்படி…
1.நம் முன்னோர்கள் முதலில் சப்தரிஷி மண்டலத்திற்குச் சென்றால்
2.அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கும் போது துரித நிலைகள் கொண்டு நம் எண்ணங்கள் அங்கே செல்கிறது.
3.அதனின் உணர்வின் துணை கொண்டு தீமைகளை அகற்றும் சக்திகளை எளிதில் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

சுவாச நிலை மாறினாலே… அதனின் உந்துதல் உயிர் துடிப்பை மாற்றி உடல் உறுப்புகளின் இயக்கத்தை மாற்றுகிறது

 

உன்னுள் இருக்கும் எண்ணம் ஒன்றல்ல… இரண்டல்ல… உன் பிறப்பிலிருந்து இன்று வரை உன் ஞாபகத்தில் எல்லாமே எப்படி வருகின்றது.

சிறு குழந்தையில் வளர்ந்த நிலையும் படிப்படியாக உனக்குள் வளர்ந்த நிலைகளும் உனக்கு எப்படிப் புரிகின்றதோ… மூளையில் சுற்றி வைத்திருக்கின்றாயோ… அந்நிலைகளை எல்லாம் ஒரு சிறிதளவு சொல் பார்க்கலாம்.

சுவாச நிலைகள் நாம் இடும் எந்த எண்ண அலைகள் நாம் வெளியிடும் சுவாசத்தைக் கொண்டுதான் சிறு குழந்தையில் நீ செய்த ஒரு வேலை உன் ஞாபகத்துக்கு இப்பொழுது வருகிறது.
1.அவ்வேலை செய்யும் பொழுது நீ விடும் சுவாசம்
2.உன்னைத்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

மிக முக்கியமான ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அன்று நடந்த நேரம்.. தேதி… இருந்த ஆட்கள்…! எல்லா நினைவுகளும் எப்படி இப்பொழுது நினைவிற்கு வருகிறது…?
1.அன்று நீ விட்ட சுவாச நிலையில் “உள்ள அழுத்தத்தில்”
2.தங்கி விடுகிறது அந்நிலையெல்லாம்.

உன்னுள் இருக்கும் அணுவின் சுழற்சியில் நீ விடும் சுவாசத்தில் உன்னுள்ளேதான் சுற்றிக் கொண்டே இருக்கிறது உன் எண்ண அலைகள்.

நீ நினைக்கிறாய் உன்னைச் சுற்றி இருப்பது (உன்) இப்போது இருக்கும் பிறவி ஒன்று தான் என்று. இல்லையப்பா…! உன் முதல் பிறவியில் நீ வெளியிட்ட எண்ண மூச்சலைகள் எல்லாம் இன்றும் உன்னைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது

1.இப்பிறவி மட்டும்தான்…
2.இந்தப் பிறவியில் உடலாக உருவான அணுக்களுடன் கலந்து இருப்பதனால்
3.இப்பிறவியில் விட்ட சுவாசங்கள் அவ்வணுக்களில் கலந்துள்ளன.
4.அதனால் உன் நினைவோட்டத்தில் இப்பிறவியில் நடந்ததைத் தெரிந்து கொள்கிறாய்.

ஆனால் தியான நிலையின் தன்மையில் உன்னைச் சுற்றி உள்ள அணுக்களில் உன் முன் ஜென்மங்களையும் தெரிந்திடலாம். பாட நிலை புரிந்ததா…?

பூமியின் தன்மை எப்படிச் சுற்றிக் கொண்டே வருகின்றதோ அதே போலத்தான் மனிதன் நிலையும். தன்னைத்தானே தன் நினைவு அலைகள் சுற்றிக் கொண்டே வருகிறது.

1.நம் எண்ணத்தில் நாம் விட்ட சுவாச நிலைகள்
2.நம் உயிரினத்தைத் தாக்கும் பொழுது நடந்த நினைவுகள் நமக்குள்ளே வருகின்றன.

நமக்குள் வரும் பொழுது அவ்வொலியின் தன்மையிலே அவ்வுயிரணுவைத் தாக்கும் பொழுது அவ்வுந்தலில் வெளி வருகின்றது அந்நினைவுகள் “சப்த ஒலிகள் அலைகள் நிலையிலே…!” பேசும் பேச்செல்லாம் பல கோடி அணுக்களாகச் சப்த அலைகள் வெளிவருகிறது.

1.அந்த அலையின் ஒலியை
2.எந்த நினைவில் வெளியே கொண்டு வருகின்றோமோ அந்த நிலையில் உயிரணுவைத் தாக்கி
3.சப்த நிலையில் அலைகளின் உதவியால் தொடர்ந்து எண்ணங்கள் நினைவுக்கு வருகின்றன.

நாம் எண்ணும் உயர்ந்த எண்ணம் அவ் இனிமை கலந்த அணுவாக சுவாசத்தின் மூலமாக நம் உயிரினத்திற்குக் கிடைக்கிறது அடைகிறது. அடைந்த பிறகு உயிர்த் துடிப்பு சமநிலைப்படுகிறது.

எந்த நிலையில் தாக்கப் படுகிறதோ அந்நிலையிலேயே நம் உயிரினத்திற்கு அதன் உந்தல் வருகிறது.

1.உயிரின் உண்மை நிலையை உணர்ந்திட்டால்
2.ஒவ்வொரு அணுவின் நிலையையும் உணர்ந்திடுவாய்.

இன்றைய உலகில் அணுவின் தன்மையை ஆராய்ச்சியின் மூலமாகக் கண்டுபிடித்துச் சிவப்பு அணு வெள்ளை அணு அது போல் இன்னும் சில வகைகள் தான் மனிதனுக்கு உள்ளது என்கின்றார்கள்.

சில வகை அணுக்கள் மட்டும் மனிதனுள்ளே இல்லை. பல கோடி அணுக்கள் பல நிலையில் மனிதனுக்குள் சுற்றிக் கொண்டு உள்ளன.
1.மனிதனின் ஆசைக்கு
2.”அவ்வாசை அணுக்களின் உந்தலினால்தான்…!” அடிபணிகின்றான் அம்மனிதன்.
3.மனதில் ஆசை… என்று எண்ணுகின்றான்.
4.மனதில் தான்… கோபம் ஆசை நடைமுறை எல்லாமே இருக்கின்றது என்று எண்ணுகின்றான்.
5.மன நிலையை அடக்கிட முடியவில்லை… என்கின்றான்.

மன நிலை… என்று “தனி நிலை இல்லையப்பா…!” மனிதனின் உள் சுற்றிக் கொண்டே இருக்கும் அணுக்களின் நிலைதான் எல்லாமே. மனித உடலில் உள்ள உறுப்புக்கள் எல்லாமே எண்ணத்தைக் கலந்ததுதான்.

மனிதன் நினைக்கின்றான் காலில் வலி வந்தால் அவ்வெண்ணத்தில் பதிகின்றது என்று. அக்காலிலேயே எண்ணம் உள்ளது என்று தெரிவதில்லை.

அவ்வணுவின் சுற்றல் அக்காலிலும் உள்ளது. மயிர்க்காலிலும் உள்ளது. ஒரு முடியை இழுத்திட்டால் வலிக்கும் வலி அவ்வெண்ணத்திற்குத்தான் தெரியுமா…?

நெஞ்சில் உள்ளது அவ்வெண்ணம் என்று எண்ணுகின்றாய். உடலைச் சுற்றியுள்ள அவ்வணுக்களின் எண்ணத்தை எண்ணுகின்றாய் நெஞ்சில் உள்ளது என்று.

இருதயம் என்பது அணுக்களைச் சுவாசத்தின் காற்றின் மூலமாகச் சுத்தப்படுத்தியும் உடல் பூராவும் பரவச் செய்யவும் ஏற்பட்ட “ஒரு கருவிதான்…!” அந்த இருதயக் கருவியில் மட்டும்தான் எண்ண அலைகள் தங்கி உள்ளன என்பது சரியில்லை.

மனிதனுடைய நினைவலைகள் சுவாசம் எண்ணமெல்லாம் அவனைத் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வெண்ண நினைவலைகள் எல்லாம்
1.அச்சுவாச நிலையில் ஒன்றுபோல் வரும்பொழுது மனித நிலையும் ஒரு நிலையிலேயே உள்ளது
2.எண்ணத்தின் உந்தலில் சுவாச நிலையை மாற்றிக் கொள்ளும் பொழுது அவ்வுந்தலின் தன்மை துரிதமாகின்றது.
3.அவ்வொலியின் தன்மை அச்சுவாச நிலையில் தாக்கி உயிர்த் துடிப்பிற்குத் தாக்கி
4.அந்நிலையில் அக்கருவி (இருதயம்) வேலைப் பளு அதிகமாகின்றது.
5.அந்நிலையில் வருவதுதான் உடலில் உள்ள குறைபாடுகள் வியாதிகள் எல்லாம்.
6.மனிதன் விட்ட சுவாச நிலையில் இருந்துதான் அவனுக்கு வரும் வியாதிகள் எல்லாம்.

மனிதன் எண்ணத்தைக் கொண்டுதான் வியாதிகளே அமைகின்றது. வேலைப் பளுவை “வேலைப் பளு…!” என்று எண்ணும்பொழுது அப்பளு உன்னை அழுத்துகிறது.

அந்நிலையில் வரும் சுவாச நிலையினால் வரும் சோர்வெல்லாம் மனிதனை துவளச் செய்கின்றது. அந்நிலையில்
1.இதுவென்ன வேலை…?
2.ஊதி விடலாம்…! என்று எண்ணி விட்டால் அச்சுவாச நிலை மாறுவதில்லை.
3.அச்சுவாச நிலையிலேயே மனிதன் உடலைப் புனிதப்படுத்துகிறது.

மனநிலையில் சோர்வும் சோகையும் வருவது சுவாச நிலையில்தான். புரிந்ததா…?
1.உயிரின் உண்மையை உணர்ந்து கொள்.
2.உன் எண்ணத்தின் தன்மையை எண்ணிக் கொள்.
3.தியானத்தில் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திக் கொள்.
4.உன் நிலைக்கு ஜெப நிலை கைகூடும்…! பாட நிலை புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறப்படும்போது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.

அசுர உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட இந்த உடலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வரப்படும்போது அசுர உணர்வால் வளர்க்கப்பட்ட அணுக்கள் மாறத்தான் செய்யும்.

அதே சமயத்தில்
1.நம் உயிரின் அணுக்கள் ஒளியாக்கப்படும்போது
2.இதுவும் (உடலிலுள்ள அணுக்கள்) குறுகப்பட்டு அந்தச் சத்தினை வடிக்கப்பட்டு
3.உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது
4.இந்த உடல் கட்டாயம் மடிந்தே தீரும்.

இந்த உணர்வின் தன்மை ஒளியாக்கப்பட்டு உயிருடன் ஒன்றப்படும் பொழுது ஒளியின் உடலாக மாற்றிச் செல்லும்.

எப்படி ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

பல வகையான பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்றமுடியும்.

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய்ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

காயத்ரி ஜெபத்தின் வலு

 

1.விஷத்தின் இயக்கத்தால் தான் உலகமே இயங்குகிறது… என்ற நிலையும்
2.விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பங்கள் உருவாகிறது… என்றும்
3.விஷத்தின் உணர்வால்தான் மற்றதை இயக்குகிறது…! என்றும்
4.இதைத் தெளிவாக்குவதற்காக பிரகலாதன் கதையைக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது…
1.ஒரு கருவிலிருந்து பிறக்காதபடி…
2.உணர்வின் மோதலில் உருவானது தான் உணர்வின் இயக்கச் சக்தியே என்று
3.அதைப் பிரகலாதன் என்று காட்டி நமக்கு விளக்க உரையையும் கொடுக்கின்றார்கள்

இரண்யன்… என்னால்தான் நீ உருவானாய்…! என்று சொல்கிறான்.

ஒரு அணுவாக ஆனாலும் சரி… மற்ற எதனின் நிலைகள் ஆனாலும் சரி…
1.விஷத்தின் தன்மை இயக்கத்தால் தான்
2.சூரியனே சூழலும் சக்தி கொண்டு ஒளியின் தன்மை பெற்றது.
3.“என்னுடைய இயக்கம்தான் சூரியன்…” என்று இரண்யன் சொல்கின்றான்.

இதைப் போன்று விளக்கவுரைகளைக் கொடுத்து இதிலே பிரித்து மனிதர்கள் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று காவியக் கதைகளாகக் கொடுத்துள்ளார்கள்.

பிரகலாதன் கருவுற்றுப் பிறந்தவன் அல்ல… உணர்வின் மோதலில் உரு பெற்றது என்று அதைத் தெளிவாக சொல்கின்றார்கள்.

இரண்யாய நம என்று “என்னை நீ வணங்கு…” என்று இரண்யன் சொல்கின்றான். இல்லை… ஹரி ஓம் நமோ நாராயணா…! என்று தான் நான் சொல்வேன் என்று அவன் சொல்கிறான்.

ஹரி என்பது சூரியன். அவன் உலகைச் சிருஷ்டிக்கும் வல்லமை பெற்றவன். அவன் தான் எனக்குக் கடவுள் என்ற நிலையில் ஹரி ஓம் நமோ நாராயணா…! என்று பிரகலாதன் சொல்கின்றான்.

இல்லை என்னால்தான் நீ உருவானாய்… இல்லை அவனால்தான் உருவானேன்… ஜீவ அணுவாக உருமாற்றும் தன்மை அங்கிருந்துதான் உரு பெற்றது என்று இப்படி விரிவுரைகளைக் காட்டப்படும் போது அவன் (ஹரி) எங்கே இருக்கிறான்…? என்று இரண்யன் கேட்கின்றான்.

உன்னிலும் இருக்கின்றான்… தூணிலும் இருக்கின்றான்… துரும்பிலும் இருக்கின்றான்… என்று தெளிவாக்குகின்றான்.

அப்போது அதைத் தாக்க முயற்சிக்கிறான்.

அந்தத் தாக்குதலில் உள் நின்று இருக்கும் இந்த உயிர்… விஷ்ணு அவனிடம் வரம் கேட்கின்றான். எனக்கு நீரிலும் இறப்பில்லை நெருப்பிலும் இறப்பில்லை காற்றிலும் இறப்பில்லை எதிலுமே எனக்கு இறப்பு இல்லை என்று வரம் கேட்கின்றான்.

அவன் விஷ்ணுவிடம் வரம் கேட்டதனால் அந்த வரம் கொடுத்த நிலைப்படி அவனை ஒன்றும் செய்ய முடியாதபடி ஆகிறது.

கொடுத்த வரப்படி எல்லாம் ஆனாலும் வாசல்படி மீது அமர்ந்து மனித உடலுக்குள் தீமைகள் (விஷத் தன்மை) உட்புகாதபடி தடைப்படுத்தும் தத்துவமாக விஷ்ணு – நரசிம்ம அவதாரத்தைக் காட்டுகின்றார்கள்.

ஏனென்றால்
1.நாம் நுகரும் உணர்வை எல்லாம் உடலுக்குள் அவனே (விஷ்ணு) சுழலச் செய்கின்றான்.
2.ஆனால் அருள் ஒளியின் தன்மை கொண்டு உள்ளே வராதபடி இந்த உணர்வின் சக்கரத்தை உள்ளே சுழலச் செய்யப்படும் பொழுது
3.அங்கே வலுப்பெறும் தன்மை வரும்போது இங்கே உள்ளே வராதபடி தீமைகளைப் பிளந்து விடுகின்றான்.

இந்த உண்மையைக் காட்டுவதற்காகக் காவியங்களைச் சீராகப் படைத்து மனிதன் அதை உணர்ந்து தீமை தன் உடலுக்குள் புகாதபடி எப்படித் தடுக்க வேண்டுமென்று தெளிவாக்கப்பட்டுள்ளது

ஆக… தீமைகளை எல்லாம் வென்றவன் யார்…? துருவ மகரிஷி. அந்தத் துருவ மகரிஷியின் உணர்வைத் தனக்குள் பதிவாக்கி எப்போது தீமை என்று வருகிறதோ அப்போது தடுக்க வேண்டும் என்று காட்டுகிறார்கள்.

உதாரணமாக ஒரு வேதனையால் வாடுவோரைப் பார்த்து அவரின் உணர்வை நுகரப்படும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகுந்து விடுகிறது. ஆனால் உட்புகாதபடி அங்கேயே அந்தத் தீமையை அழித்து விடவேண்டும்.

ஒரு நோயாளியைக் காணும் பொழுது அவரின் உணர்வை நுகர்ந்தறிந்தால் உடனே அது நமக்குள் அணுவாக மாறி விடுகின்றது. அது அணுவாக உருவாதபடி இங்கே தடைப்படுத்துதல் வேண்டும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிருடன் ஒன்றச் செய்யும் பொழுது அந்த உணர்வின் வலிமை கூடி “தீமை வராதபடி தடுக்கப்படுகின்றது…”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தும் போது அது வலிமை பெற்றபின் “தீமைகளை ஈர்க்கும் சக்தியே குறைந்து விடுகின்றது… தீமைகளைப் பிளந்து விடுகிறது…”

நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? என்பதைத் தான் கடவுளின் அவதாரம் நரசிம்மா…! என்று காட்டுகின்றனர். மனிதனான பின்…
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஒளியின் சுடரைத் தனக்குள் எடுத்து
2.அதை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியான அணுக்களாக மாற்றி
3.பிறவி இல்லா நிலைகள் அடையும் பண்பினை அங்கே தெளிவாக்கப்பட்டுள்ளது

ஆக நாராயணன் யார்…? நர நாராயணன் யார்…?

சூரியன் இந்த உலகம் முழுமையும் உருவாக்குகின்றது. நம் உயிர் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நரநாராயணன் ஆக இருந்து இயக்குகிறது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு எல்லாம் நாயகனாக கணங்களுக்கு அதிபதியாகக் கார்த்திகேயா என்று பெற்ற நம் ஆறாவது அறிவை முருகன் என்றும் அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நுகர்ந்து தனக்குள் உருவாக்குதல் வேண்டும் என்றும் காட்டுகின்றார்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை விண்ணை நோக்கிப் பாய்ச்சி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பித்தல் வேண்டும்.

இதைத்தான் காயத்ரி ஜெபம் என்று சொல்வார்கள்

1.வலுவான உணர்வினை நாம் நுகர்ந்து அந்த உணர்வினைத் தன் உடலுக்குள் சேர்த்து வலிமையைக் கூட்ட வேண்டும்
2.இதுதான் உண்மையான காயத்ரி ஜெபம்.
3.சூரியனைப் பார்த்து காயத்ரி மந்திரத்தைச் சொல்வதனால் பலனில்லை…!

“உதயம்…” கிடைத்து விட்டால் உண்மை நிலை எல்லாம் புரிந்துவிடும்

 

உயிரின் உண்மை நிலை எங்கிருக்கின்றது…? உயிரின் துடிப்பு துடிப்பதற்குச் சுவாச நிலை வேண்டுமப்பா. உயிர் எப்படிச் சுவாச நிலையில் உள்ளதோ அந்தத் தன்மைதான் இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களும்.
1.”நட்ட கல் பேசுமோ.. நாதன் உள் இருக்கையில்…!” என்று படித்திருந்தாலும்
2.அக்கல்லுக்கும் மண்ணிற்கும் உயிர்த் துடிப்பு உள்ளது.

எப்படி மனிதன் சுவாசத்தில் உயிர்த் துடிப்பு உள்ளதோ அதுபோல்தான் மண்ணிற்கும் கல்லிற்கும் மடுவிற்கும் மலைக்கும் பூமியில் இருந்து எடுத்திடும் திரவத் தன்மையில் உள்ள நீர் மற்ற திரவங்களுக்கும் உலோகங்களுக்கும் எல்லா இயற்கைத் தன்மையுள்ள மரம் செடி ஜீவராசிகள் எல்லாவற்றுக்குமே உயிர்த் துடிப்பு உள்ளதப்பா.

அடுப்பு எரிந்து ஆவி செல்லும் பொழுது அந்நிலையிலும் உயிர்த் துடிப்பு உள்ளதப்பா. உயிர்த் துடிப்பு என்பது ஜீவ அணுக்கள்தான்.
1.அவ்வணுக்களின் தன்மையிலே சூரியனின் ஒளியை ஈர்த்து
2.இயற்கைத் தன்மையினால் வந்த எல்லாமே
3.மனிதன் எப்படிச் சுவாச நிலையை இழுத்து விடுகின்றானோ அந்நிலையில்தான் எல்லாமே சுவாச நிலையில் உள்ளதப்பா.

உலோகங்களின் தன்மையெல்லாம் எந்நிலையில் வந்ததப்பா…?

மண்ணில் இருந்து காந்தத்தையும் செம்பு வெள்ளி என்ற பதம் பிரித்தும் நிலக்கரியையும் எப்படி எடுக்கின்றான்..? நிலக்கரிக்கு இவன் சொல்லும் காரணங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலத்துடன் படிந்த (மடிந்த) மரங்கள்தான் நிலக்கரி ஆகிவிட்டது என்று.

அந்த நிலை இல்லையப்பா…!

அந்நிலையில் உள்ள மண்ணின் உயிரணுவின் ஈர்ப்புத் தன்மையினால் அச்சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மண்ணில் தாக்கும் பொழுது அந்நிலையில் உள்ள உயிரணுக்களை அம்மண் ஈர்க்கின்றது.

பல கோடி ஆண்டுகளாக ஈர்த்ததன் விளைவால் நிலக்கரி படிவங்கள் அந்நிலையில் உள்ளதப்பா. அப்படிவங்கள் தன்மையில் இயற்கை அப்படியே இருந்து விட்டால் அந்நிலையில் அப்படியே இருந்தால்
1.அந்நிலையில் வளரும் மண் வளங்கள் தாவரங்களின் நிலையில் பெரும் பூரிப்பை அடைந்திருக்கலாம்.
2.அங்கே வளரும் பயிர்கள் பெரும் அமிழ்தமாக இருந்திருக்கும்.

இயற்கையின் தன்மையை உணர்ந்திடாமல் இச்செயற்கை ஆவலின் உந்தலில் மனிதன் வைத்த வினையப்பா… “சுரங்கம் வெட்டுவதெல்லாம்…!”

உன் அறிவிற்கே விடுகின்றேன். இப்பொழுது நிலக்கரி எடுக்கும் இடத்தில் எல்லாம் தாவரங்கள் நிலை அன்று எப்படி இருந்தது…? என்று எண்ணிப்பார்…! நெய்வேலியில் விளைந்த பழங்கள் பலா முந்திரி ருசியின் தன்மை அன்று எப்படி இருந்தது…! இன்று எப்படி உள்ளது…?

சோலைவனத்தை அழிக்கின்றான். பூமியில் உள்ள உலோகத்தை எல்லாம் தோண்டி எடுக்கின்றான்.
1.அவ்வுலோகத்தின் தன்மையிலே மின்சாரம் எடுத்து பூமியைச் சோலையாக்குகின்றானாம்.
2.சுற்றுகின்றான் பார்த்தாயா…… உலகம் போலவே மனிதனும்…!

உலோகத் தன்மையெல்லாம் அந்தந்த இடத்திற்குத் தகுந்த மண் சுவையில் படிவதுதான். தங்கச் சுரங்கம் என்கிறான்.
1.அந்தத் தங்கச் சுரங்கம் உள்ள பூமியில் வளரும் பயிர் அதனுடைய ருசியில்தான் இருந்திடும்.
2.இப்பூமியின் தன்மையிலே இம்மனிதனுக்கு அறிவில் வராத பொக்கிஷங்கள் பல உள்ளன.
3.அப்படிவங்கள் உள்ள நிலையில் தான் அந்நிலையில் வளரும் பயிர்களும் அதனுடைய ருசியும்…!

சொல்வது அர்த்தமாகின்றதா…?

மனிதன் சொல்கின்றான் அந்தந்த ஊரில் உள்ள தட்ப வெப்ப நிலை என்று…!

அது அல்ல…! இந்த மெய் ஞானப் பாடத்தின் தொடரைச் சிறிதளவு புகட்டிவிட்டால்
1.உன் உதய எண்ணம் அதில் எப்படிச் செல்கின்றது…?
2.அந்நிலையையே ஈர்த்துக் கொள்…! “உதயம்…” கிடைத்து விட்டால் உண்மை நிலை எல்லாம் புரிந்துவிடும்.

ஆகவே தியானம் எடுப்பதெல்லாம் உன்னுள் இருக்கும் அணு உன்னுள் சுற்றிக் கொண்டே இருக்கும் பொழுது உன் நிலையில் கவன ஈர்ப்பு மண்டலத்தின் (புருவ மத்தியில்) தன்மையில் பாய்கிறது.
1.உன் சுவாச நிலையை அங்கே ஒரு நிலைப்படுத்திடும் போது
2.அந்நிலையில் நீ எண்ணும் எண்ணத்திற்கு உதயம் கிடைத்துவிடுகின்றது.
3.உன் வழியில் உண்மை நிலைகள் உணரும் தன்மை உன் உயிரணுவிற்கு
4.அவ்வொளியின் கதிர்கள் ஒளிக்கற்றைகள் அதீதமாகப் பாய்கின்றது.

தியான நிலையின் முறை புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் இதில் ஒளியான உணர்வுகள் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதீதமாகின்றது.

ஒளியின் உடலாக அது ஒரு பிரபஞ்சமாக மாறுகின்றது. நம் சூரிய குடும்பம் எப்படியோ இதைப்போல உயிரணு தோன்றி… ஒளியின் உடலாக்கும் “அது ஒரு பிரபஞ்சம்”.

இன்னும் எங்கேயும் உருவாக்கவில்லை. இப்பொழுது இது உருவாகும்.

அப்படி உருவாக்கும் தன்மை வரப்படும்போது நாளடைவில் இதனுடைய வளர்ச்சியில் ஒளியான பிரபஞ்சமாகும்.

1.எத்தனையோ கோடி சூரியன்கள் உருவானாலும் பிரபஞ்சங்கள் உருவானாலும்
2.உயிரணு தோன்றி பிரபஞ்சத்தின் தன்மை அடையும்
3.ஒரு ஒளியின் உணர்வின் பிரபஞ்சமாக அமையும் தன்மை
4.நமது பிரபஞ்சத்தின் நிலைகளில் இருந்துதான் உருவாகும்.

நமது எல்லையில் அந்தத் துருவ எல்லையில் தான் இந்தப் பிரபஞ்சங்கள் அமைந்து இருக்கின்றது.

எது…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்.

இது வளர்ச்சி அடையப்படும்போது அடுத்து…, இதனுடன் சேர்ந்த 2000 சூரியக் குடும்பங்கள் அதுவும் வளர்ச்சி அடையப்படும்போது அதுவும் இணைந்து ஒளியின் சிகரமாக மாறும்.

அந்த நிலை உருப்பெற எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகிவிடும்.

1.இருப்பினும் நம் உயிரின் தன்மை வரப்படும் பொழுது என்றுமே ஏகாந்த நிலையாக
2.இந்த உடலுக்குள் சிக்கி உடலை வளர்க்கும் உணர்வுகளாக இல்லாதபடி
3.உயிரைப் போன்று ஒளியின் உணர்வாக நஞ்சை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.

ஏனென்றால் சிறிது காலம் தான் நாம் வாழ்கின்றோம். இராமேஸ்வரத்தில் அதைத்தான் காட்டுகின்றனர்.

சிறிது காலமே வாழும் இந்த மனித உடலில் வாழும்போதே நமக்குள் மனதைக் குவித்து ஒன்றாக்கும் தன்மை வர வேண்டும்.

இந்த உடலுக்குள் பகைமை என்ற தன்மை விடாதபடி குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் என்ற உணர்வைத் தனக்குள் சேர்த்து உயிரென்ற உணர்வின் தன்மை நமக்குள் ஒன்றாக்குதல் வேண்டும்.

சாதாரண மனிதனும் இதைத் தெரிந்து வாழ்வதற்காகப் புராணங்களை வைத்து ஒவ்வொரு நிலையும் கொண்டு வருகின்றனர் மெய் ஞானிகள்.

துன்புறுத்தும் உணர்வுகளை நாம் நீக்கினால் தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்

 

வயலை உழுகும் போது சீதா என்ற குழந்தை கிடைத்தது. அதை ஜனகச் சக்கரவர்த்தி எடுத்து வளர்த்தான் என்று காவியங்கள் கூறுகிறது.

ஜனகச் சக்கரவர்த்தி யார்…?

நாம் உழுது பயிரிடும் போது அந்தப் பயிரிலிருந்து வரக்கூடிய மணம் சுவை கொண்டதாக இருக்கிறது. அது தான் சீதா. அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கிறது. “சீதாலட்சுமியாக…” அந்த ஜனகச் சக்கவரவர்த்தி சீதாவைத் தத்துப் பிள்ளையாக எடுத்து வளர்க்கின்றார்.

நாம் உழுது பயிரிட்டு அதிலே விளைந்ததை உணவாக உட்கொள்ளும் போது அந்தச் சுவையின் சத்து நமக்குள் எப்படி வளர்கிறது…? என்ற நிலையை இப்படித் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

காட்டிலே விளையும் பயிர்கள் வெளிப்படுத்தும் சத்தினையும் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்கிறது. சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வளர்க்கிறது. ஆனால் அது விஷச் செடிகளாக இருக்கின்றது.

இப்படி இத்தகைய இரண்டு விதமான உணர்வின் சத்துகளும் (நல்ல பயிர்கள், காட்டிலே விளையும் விஷமான பயிர்கள்) உலகில் பரவப்படும் போது அந்த உணர்வின் இயக்கத்தை நமக்குத் தெளிவாக்குகின்றனர்.

அப்போது… நற்குணம் கொண்ட சீதாவை திருமணம் செய்ய வல்லமை பெற்றவர்கள் அவரவர்கள் திறமைகளைக் காட்டுங்கள்…! என்று பறைசாற்றுகின்றனர்.

பறைசாற்றும் போது அவரவர்கள் வில்லை எடுத்துக் குறி வைத்து மற்றவரை வீழ்த்துகின்றனர். செடி கொடிகளில் விளைவதையும் அதனின் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்ளும் போது அதை எவரெவெர் நுகர்கின்றனரோ அந்த உணர்வின் சொல்லாக வெளிப்படுத்தி மற்றதை வீழ்த்துகின்றனர்.

1.உழுது பயிரிட்ட உணர்வுகள் ஒன்றை அரவணைக்கிறது என்றும்…
2.அப்போது மகிழச் செய்யும் எண்ணங்கள் வருகிறது என்றும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
3.ஆனால் விஷம் கொண்ட செடியின் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் உடனே அலறும் தன்மையாக வருகிறது என்றும்
4.நுகர்ந்தவரை வீழ்த்தச் செய்கின்றது என்றும் காட்டுகின்றனர்..

உழுது பயிரிடப்பட்டதை உணவாக உட்கொள்ளும் போது அந்த உணர்வின் சொல்லாக விளையப்படும் போது கேட்போர் நிலைகளை அது அரவணைக்கும் தன்மையாக வருகிறது.

இந்த உணர்வுகளின் இயக்கங்களைத் தெளிவாக்குவதற்காக
1.எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்றும்…?
2.சுவைக்கொப்ப உணர்வுகள் உருவாவது “அது தான் எண்ணம்…” என்றும்
3.இவை எல்லாம் உருவாக்குபவன் அனைத்திற்கும் சக்கரவர்த்தி (ஜனகர்) சூரியன் என்றும் தெளிவாக்குகின்றார்கள்.

சீதாவைத் திருமணம் செய்ய அவரவர்கள் வைத்திருக்கும் வில்லைக் (ஆயுதம்) காட்டித் திறமைகளைக் காட்டுகின்றார்கள். ஆனால் இராமனோ “தீமை விளைவிக்கும் அந்த வில்லையே ஒடித்துவிடுகின்றான்…!”

ஒடித்தபின் தீமையான எண்ணங்களை நீக்கிய பின் அந்தச் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறான்.
1.அரவணைக்கும் தன்மையாக மற்றொன்றை மகிழ்ச்சியுடன் தனக்குள் எண்ணினால்
2.அந்தச் சக்தி தன்னுடன் இணைந்தே வாழும் என்றும் அதைக் “கல்யாணராமா…” என்றும் சொன்னார்கள்.

ஆகவே நாம் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலுக்குள் பரவச் செய்து தீமை செய்யும் பகைமை உணர்வுகளை எல்லாம் ஒடித்துவிட வேண்டும். அப்போது நாம் மகிழ்ச்சியை அரவணைத்துக் கொள்கிறோம் – கல்யாணராமா.

தன் நிலையை மாற்றிக் கொள்ளாதவனுக்கு… நல்ல நேரமும் கெட்ட நேரமும் வந்து அண்டிடாதப்பா…!

 

தன் நிலை என்பது என்னப்பா…? தன் நிலையை மறந்திடாமல் ஜெப நிலையைக் கூட்டிக் கொள் என்பது என்னப்பா..? தன் நிலை என்றால் தியானத்தில் (ஜெப நிலையில்) இருப்பது மட்டும் தன் நிலை அல்ல…!

மற்றவர்கள் எதிர்ச் சொல்களாக உன்னை நோக்கிப் பேசும் பொழுது அதனால் உன் நிலைக்குக் கோபதாபங்கள் வரும்பொழுது உன் எண்ணத்தில் கலக்கவிட்டு அதனால் வரும் சோர்வையும் கோபத்தையும் உன்னுள் அடக்கும் பொழுது நீ வீசிடும் எதிர்ச் சொல்தான் தன் நிலையை மறந்து நீ பேசும் சொல்.

மனித வாழ்க்கையில் குடும்ப நிலையில் குறையும் நிறையும் எல்லாமே கலந்துதான் வந்துவிடும். அந்நிலையில் மனச் சோர்வை வளரவிட்டு அதி சந்தோஷத்தை வளரவிட்டு வாழ்பவன் எல்லாம் தன் நிலை மறந்து வாழ்பவன்தான்.
1.சுவாச நிலைக்குக் கடும் எதிரிகள் தான்
2.கோபமும்… அதிகோபமும்… மிக மகிழ்ச்சியும்…!

மனித வாழ்க்கையில் அன்பு பாசம் ஆசை செயல் கடமை எல்லாமே அவசியமானதுதான். வாழ்க்கை நிலையில் வரும் கஷ்டத்தை எண்ணிக் கலங்கி அந்நிலையில் அவன் விடும் சுவாசம் அவன் எண்ண நிலையிலேயே கலந்து மனச் சோர்வையும் பெரும் சஞ்சலத்தையும் அடைந்து அந்நிலையில் அவன் உடல் நிலையையும் பாதித்து அவன் வாழ்க்கை நிலையில் தொழில் நிலையில் எல்லாமே இக்கஷ்ட நிலைகள் தான் தெரிந்திடும்.

அந்நிலையில் இருப்பவன் விடும் சுவாச நிலையினால் தன் குடும்ப நிலை… அந்த இல்லத்தின் தன்மை… அவனைச் சார்ந்தோரின் நிலை…! எல்லாமே மாறுபட்டுப் பெரும் சலிப்பு நிலையில் நிலை பெறுகிறது.

அப்படி ஆனதும் “என் நேரம் சரியாக இல்லை…!” என்று பல ஜோசியங்களைப் பார்த்துப் பாவ பரிகாரங்களைச் செய்து எல்லாவற்றையுமே இம்மனிதர்கள் குட்டிச்சுவர் செய்து விடுகிறார்கள்.
1.ஆண்டவனின் மேல் பழியைப் போடுகிறார்கள்
2.மற்றவர்களின் வாழ்க்கை எல்லாம் நல்ல நிலையில் உள்ளது… எனக்கு மட்டும் ஏன் இப்படிக் கொடுமை செய்கிறாய்…?
3.நான் என்ன பாவம் செய்தேனோ..? என்றெல்லாம் வேண்டுகிறார்களப்பா.

இந்நிலைக்கு ஆண்டவன் என்னப்பா செய்வான்..?

சந்தோஷ நிலையில் உள்ள பொழுது சகலத்தையும் பெற்று விடுகிறான். அந்நிலையில் ஆண்டவன் எனக்களித்தது… ஆண்டவன் எனக்களித்தது…! என்று சொல்கின்றான். ஆண்டவனா அவனுக்கு அளித்தான்…?

என் நேரம் நல்ல நேரம் என்கின்றான்…!
1.இவன் நேரம் மட்டுமா நல்ல நேரம்…?
2.எல்லா நேரங்களும் ஒரே நேரம் தான்…!
3.அவனவன் மன நிலையை வைத்து அவன் சுவாச நிலையில் வருவதுதான் நல்ல நேரமும் கெட்ட நேரமும்.

தன் நிலை மறந்திடாமல் என்று முதலில் சொன்னேன். எந்த நிலை வந்தாலும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாதவனுக்கு இப்பொழுது சொல்லிய நல்ல நேரமும் கெட்ட நேரமும் வந்து அண்டிடாதப்பா…!

அதி சந்தோஷ நிலையில் உள்ளவனுக்கும் தன் நிலையில் அவன் விடும் சுவாச எண்ண அலையில் அவனுக்கும் தான் பல வியாதிகள் வந்து அண்டுகின்றன. சலிப்புத் தன்மையில் உள்ளவனுக்கும் வியாதி வருகின்றது.
1.வியாதியை விதி என்கின்றார்கள்.
2.வியாதியும் விதியும் வருவதெல்லாம் இம்மனநிலையில் இருந்துதான்.

மன நிலையை எந்நிலைக்கும் மாற்றிடாமல் அந்நிலையில் விடும் சுவாச நிலைதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை நிலையையே நடத்திச் செல்கின்றது.
1.ஆண்டவன் செய்யவில்லை…
2.அவனாகவே செய்வதுதான் அவன் வாழ்க்கை நிலையெல்லாமே.

என்னப்பா புரிந்ததா…?

ஆகவே ஒருவரின் எதிர்ப்புச் சொல்லோ பழிச் சொல்லோ ஒருவரின் குறையோ மற்றவரின் சந்தோஷமோ எதுவுமே தன் நிலையில் இருப்பவனுக்கு அவன் மன எண்ணத்தில் வந்து தாக்கும் பொழுது அந்நிலையின் எதிர்ப்பு அவனை அண்டாமல்
1.தான் எடுத்த ஈஸ்வர சக்தியின் துணை கொண்டு தன்னைக் காத்து
2.அந்த அருள் ஒளியை மற்றவருக்குள் பாய்ச்சுவது தான்…! தன் நிலையில் இருப்பது என்பது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் அமைதியானவன். நான் சாந்தமாகவே தான் இருக்கிறேன். நான் தியானத்தைத் தான் செய்து கொண்டே இருக்கிறேன்…, “ஆனால் பாருங்கள்…” இத்தனை தடவை “சும்மா என்னை இடக்கு செய்து பேசினால்…”
1.எப்படிங்க நான் பார்த்துக் கொண்டேயிருப்பது…?
2.உதைக்கத் தான் மனது வருகின்றது
3.அல்லது திட்டுவதற்குத்தான் மனது வருகிறது… என்பார்கள்.

ஆகவே… இப்படிச் சொல்லிக் கொண்டு பிறர் தவறு செய்யும் உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோமே தவிர நம் உணர்வை நமக்குள் மாற்றிக் கொள்ளும் வழியில்லாமல் போய்விட்டது.

தியானமிருந்தாலும் உலகில் இருள் சூழும் நிலைகள் வரும்போது நமக்குள் இந்த நிலை தான் உருவாகின்றது. இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

அதற்குத்தான் கருவில் வளரும் குழந்தைகளை ஞானிகளாக உருவாக்குதல் வேண்டும். அப்படி உருவாக்கப்படும்போது அவர்களுக்கு இந்த இருளையெல்லாம் மாய்க்கும் சக்தி வருகின்றது.

பல கொடுமையான விஷத் தன்மைகளையும் கொடுமைகளையும் வென்றவன் துருவ நட்சத்திரம். அதை நாம் எடுத்துக் கர்ப்பமாக இருக்கக்கூடிய தாயும் கருவிலிருக்கும் குழந்தையும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்ற உணர்வு அனைத்தையும் சேர்க்கப்படும்போது கருவிலே அந்த அருள் ஞானி உருவாக்கப்படுகின்றது.

கர்ப்பமானது என்று தெரிந்தபின் அந்தப் பத்து மாதமும் எந்தக் குறைகளையும் விட்டுவிடாதீர்கள்.

அந்த அருளைப் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்க்கப்படும்போது அது ஞானியாக உருவாகின்றது.

ஏனென்றால் இப்படி அவனை உருவாக்கினாலும் நம் உணர்வு பங்கு அவனிடத்தில் உள்ளது.

அவன் வளர்ச்சி அடையப்படும் போது ஒளியாக்கப்படும் போது அவனுக்குள் விளைந்த உணர்வுகள்
1.அந்தப் பங்கின் விகிதாச்சாரப்படி நமக்குள் பல தீமைகளை நீக்கும்
2.நம்மை ஞானியாக்க அவன் உதவுகின்றான்.

அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிவந்த பின் நாம் எல்லோரும் சேர்த்து அந்த உணர்வின் தன்மை பெறச் செய்தாலும் அவன் விளைந்த பின் அவனுடைய பங்கு நமக்கும் கிடைக்கின்றது.

இப்படி ஒருவருக்கொருவர் இணைத்து அந்த ஞானிகள் பெற்ற நிலையை எல்லோரும் பெற முடியும். ஆக ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் ஒவ்வொன்றும் வாழுகின்றது.

1.அது சிறு குழந்தை என்று இருக்கலாம்… “அது உயிர்”.
2.அந்த உணர்வின் தன்மை தாய் கருவில் வளர்கின்றது.
3.இந்த உணர்வின் தன்மை சேர்ந்து உடலில் விளைகின்றது. அதற்குத்தகுந்த உடல் அமைப்பும் அமைகின்றது.
4.உணர்வின் ஞானத்தை அந்த உயிரணுவால் கவர முடிகின்றது.
5.அதனால் பல தீமைகளை நீக்கிடும் அருள் சக்தியும் பெருகுகின்றது.

ஆகவே இந்த முறையைக் கையாண்டு பாருங்கள்.

“எல்லாமே…” நம் எண்ணத்தில் இருந்து வருவது தான்…!

 

பல சாமியார்களைக் கண்டிருப்பாய். விரக்தியில் சாமியாராகி தான் ஆண்டவனைக் காணப் போகின்றேன் என்று பல நாட்கள் அமர்ந்து பல பல ஜெபங்களை ஓதி ஓதும்போது ஜெப மணியை எண்ணுகின்றான்.

ஆண்டவனை ஜெபிக்க ஜெப மணியை எண்ணித்தான் லட்சார்ச்சனை கோடியார்ச்சனை என்றெல்லாம் பெயர் சூட்டி கோடி தடவை லட்சம் தடவை ஆண்டவனின் நாமத்தை உச்சரிக்கின்றார்கள்.

ஜெப மணியில் எண்ணிக் கொண்டே எண்ணினால்தான் அவ்வாண்டவன் வந்து ஆசிர்வதிப்பாரா…?

அவன் லட்சார்ச்சனை… கோடியார்ச்சனை… என்று ஜெபமிருக்கும் நிலையில் சிறு தடங்கல் வந்திட்டால் அவன் நிலையில் கோபம் வருகிறது.
1.அப்பொழுது அவன் விடும் சுவாச நிலையே மாறுபடுகிறது.
2.அந்நிலையில் எப்படியப்பா அவன் ஆண்டவன் அருளைப் பெற்றிட முடிந்திடும்…?

அவனுள்ளே இருக்கும் ஆண்டவனையே மறந்துவிட்டு ஜெபம்…ஜெபம்…ஜெபம் என்று செய்கின்றான் ஜெபங்களாக…!

ஆண்டவன் எங்கப்பா உள்ளான்…? அவன் ஜெப நிலைக்கு எப்படியப்பா அவன் வந்திடுவான்..?
1.தனக்குள்ளே இருக்கும் ஈசனின் சக்தியை மறந்துவிட்டு
2.தன்னையே தான் மறந்து தன் செயலையும் தன் காலத்தையும் சிதற விட்டு
3.சாமியார் என்ற நிலையில் ஜெபம் ஜெபித்துக் காலத்தையே வீணடித்து விடுகிறார்கள் பல சாமியார்கள்.

நான் ஆண்டவனைக் காணப் போகின்றேன்… ஆண்டவன் என்பது யார் என்பதை அறிந்திடவே பூரண அருளையும் தானே பெற்றிடலாம்.. பெற்று மக்களுக்கு அளித்திடலாம் என்றும் பல சாமியார்கள் ஜெபம் செய்கிறார்கள். காலத்தையே கடத்துகிறார்கள்.

அவ் ஈஸ்வரன் இவனுக்கு மட்டும்தான் தெரிவானா…? மற்றவருக்குத் தெரிய மாட்டானா…? அம்மகேசனின் சக்தி… அம் மகா சக்தி என்ன…? என்பது யாரப்பா அறிய முடியும்…?

1.உன்னையே நீ வணங்கிவிட்டால்…
2.உன் நிலையை மாற்றிடாமல்… உன் எண்ணத்தின் எண்ணமெல்லாம் ஒரு நிலை எய்தும்பொழுது
3.உன் சுவாச நிலையின் தன்மையால் “உன்னுள்ளே உள்ள ஈசனின் சக்தியை நீ கண்டிடலாம்…!”

“ஆண்டியும் அரசனாகலாம்…. அரசனும் ஆண்டியாகலாம்…!” என்பதன் பொருளும் இதுவே. ஆண்டவனின் நிலை எங்கெங்கு உள்ளது என்று அறிந்திட்டாயா…?

“எல்லாமே எண்ணத்தில் இருந்து வருவதுதான்…!”

எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்

 

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இது எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு அடுத்து… அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் “சரி பாதி” இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இதே சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

நோய் நீக்கும் பயிற்சி

 

எந்த நோயாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா… எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா.. என்று புருவ மத்தியில் என்று எண்ணுங்கள்.
1.நம் உடலில் ஐந்து அல்லது ஆறு லிட்டர் தான் இரத்தம் உள்ளது
2.அந்த இரத்தைத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலே போதுமானது
3.இரத்தத்தில் தீமைகள் உருவாகாது தடுத்துக் கொள்ள முடியும்

தலையிலிருந்து கால் வரை மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒரு சர்க்குலேசன் (CIRCULATION) போன்று 100 முறை 200 முறை எண்ணுங்கள். அலை அலையாகப் அருள் வட்டமாகப் படரச் செய்யுங்கள்.

1.என் உடல் நோய் நீங்க வேண்டும்.
2.எனக்கு நோய் இல்லை என்று எண்ணுங்கள்.
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் உடல் முழுவதும் படர்கின்றது.
4.என் உடலிலுள்ள வலி வேதனை நோய்கள் அனைத்தும் விலகுகின்றது என்று
5.இதை மட்டும் எண்ணித் தியானித்துப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகளை நுகர்ந்தறிய நேர்ந்தாலும் அந்தக் கொடிய உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்க அதைத் தியானித்து உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் உடலில் உள்ள அணுக்களை வலுவாக ஆக்க முடியும்,

மனிதன் ஒருவனால்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தனக்குள் ஒளியான அணுக்களாக ஆக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எடுத்து நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும். இரண்டு மூன்று தடவை பழகி விட்டால் அந்த அருள் சக்தி நமக்குள் கூடிக் கொண்டே வரும்.

அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழ முடியும்.
1.நேற்று நன்றாக இருந்தேன்…
2.இன்று நேற்றைக் காட்டிலும் நன்றாக இருக்கின்றேன்…!
3.நாளை இன்னும் நன்றாக இருப்பேன்…! என்ற இந்த உணர்வை
4.அழுத்தமாக உங்களுக்குள் எடுத்துப் பாருங்கள்.

மன நலமும் உடல் நலமும் உங்களைத் தேடி வரும்…! எண்ணும் எண்ணமே இறைவன். நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்..!

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் நிச்சயம் முடியும்…!

 

நம் உடலுக்குள் மறைமுகமாக ஈர்க்கும் (சுவாசிக்கும்) தீமையின் உணர்வுகளை மாற்றிப் பழக வேண்டும்

 

தீமை செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால்
1.அது நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி அதை அடக்கி விடுகின்றது… வங்கு போட்டுவிடுகிறது
2.பின் அதனை அது தன் இருப்பிடமாக வைத்துக் கொள்கின்றது.
3.இதைத் தான் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் என்று சொல்வது.

நாம் சுவாசத்தின் மூலம் எடுத்துக் கொண்டது உயிரிலே பட்டு ஓ… என்று பிரணவமாகி ஜீவ அணுவாக ஆனாலும் கார உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வை (கோபத்தை) நாம் சுவாசித்தால் அது உயிரிலே பட்டு ஓ… என்று ஓங்கார நிலையை இயக்கப்படும் போது அதன் வழி தான் அந்த நாதங்கள் வரும்.

ஒரு மாவின் சுவை சமமாக இருந்தாலும்… எந்தெந்தச் சத்தினை (காரமோ புளிப்போ இனிப்போ) அதற்குள் சேர்க்கின்றோமோ அதற்குத் தக்க அதனின் சுவை மாறுகின்றது. நாம் சுவைக்கும் போது அதனதன் உணர்வின் ஒலிகளை நமக்குள் எழுப்புகிறது.

அதாவது
1.சப்… என்று இருக்கும் பொருளில் காரத்தைச் சேர்த்தபின்
2.வாயிலே போட்டால் ஸ்..ஆ…ஆ…! என்று அதனுடைய ஒலிகள்
3.ஓ…! என்று அதனின் உணர்வின் சக்தி வரப்படும் பொழுது அதனின் இயக்கமாகவே மாறுகின்றது.

ஒலியின் நிலைகள் எப்படி எதனதன் நிலையில் செயல்படுகின்றது…? என்ற நிலையை வேதங்களில் தெளிவாகக் காட்டப்படுகின்றது.

உதாரணமாக ஒரு கோபப்படுவோரின் உணர்வு நமக்குள் அதிகரித்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் மற்றதைக் கொன்று விழுங்கும் உணர்வாக வளர்ந்துவிடும்.

அதே மாதிரி பிறருடைய நோய்களைப் பார்க்கும்போது அவர்கள் உணர்வை நுகர்ந்தால்
1.அவரின் கசந்த வாழ்க்கையை நுகர்ந்த பின் அது நமக்குள் மாறி… நம் வாழ்க்கையும் கசந்த வாழ்க்கையாக மாற்றி விடுகின்றது
2.இவ்வாறு மாறி (மாறி – மாரி) வருவதை மாரியம்மன் என்றும் காட்டுகின்றார்கள்.

ஒருவர் வளர்ச்சி பெற்று வாழும் நிலைகளை நாம் காணும் பொழுது நாம் அங்கலாய்கின்றோம். பார்…! எத்தனை பேருக்கு நான் உபகாரம் செய்தேன்…? தர்மத்தைச் செய்தேன்… எல்லாம் செய்கின்றேன்… ஆனால் இவர்களோ எப்படி எப்படியோ கொள்ளை அடிக்கின்றனர். அவர்கள் மட்டும் எப்படியோ இன்று வளர்ந்து கொண்டே போகின்றார்கள் என்று எண்ணுகின்றோம்.

1.அவர்கள் தவறு செய்து வளர்கிறார் என்று வரும் போது அவர்கள் உணர்வைத் தான் நுகர்கின்றோம்
2.நமக்குள் வளரும் நல்ல குணங்களை இழந்து விடுகின்றோம்.

இதைத் தான் அங்களேஸ்வரி கோவிலில் குழந்தையை குடலை உருவி மாலை போடுவதாகக் காட்டுகிறார்கள்.

நமக்குள் நல்ல உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது தனக்குள் வளரும் நல்ல குழந்தை வளராது அதையே பிளந்து விடுகிறோம் என்ற இந்த உணர்வைக் காட்டுவதற்குத் தான் அங்களேஸ்வரி கோவிலில் சிலைக்கு முன் குழந்தையை மடி மீது வைத்துப் பிளக்கிறார் என்று காட்டுகிறார்கள்.

ஏனென்றால் அவர்கள் தவறு செய்து வளர்கின்றார்கள்…! நாம் தெய்வங்களை வணங்கப்படும் பொழுது பார்… அவர்களுக்குத்தான் அள்ளிக் கொடுக்கிறார் என்று
1.அவர்கள் செய்யும் தவறைத்தான் நாம் உணர்கிறோமே தவிர
2.அந்த உணர்வின் அணுக்கள் வந்தால் நல்ல அணுக்களை வளராது தடைப்படுத்துகின்றோம் என்பதை அறியவில்லை.

இப்படி நம் உடலுக்குள் மறைமுகமாக ஈர்க்கும் உணர்வுகளை மாற்றி அமைக்கும் நிலையைத் தெளிவாகக் காட்டுவதற்குத் தான் அத்தகைய தெய்வ உருவங்களைப் போட்டுக் காட்டுகின்றார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். வரும் தீமைகளை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம் (ஞானகுரு).

ஈஸ்வர சக்தியை தியானித்துக் கொண்டே பெரும் புனிதத்துடன் வாழ்ந்திட வேண்டும்  

 

பல மகான்கள் தோன்றி சூட்சும நிலை கொண்டு சூட்சும நிலையில் வாழ்ந்து இவ்வுலகுடனே கலந்துள்ள மாபெரும் உலகமப்பா இவ்வுலகம். இவ்வுலகில் உள்ள நிலை மற்ற எந்த உலகத்திலும் இல்லையப்பா…!

ஒன்றுடன் ஒன்று பின்னிய நிலையில்தான் இவ்வுலகமே உருண்டு செயல்படுகின்றது. எல்லாமே ஒன்றுடன் ஒன்று பின்னிய நிலை கொண்டு தான் நடந்து செயல்படுகின்றது.

நமக்கு முதலில் தோன்றிய எல்லாப் பெரியவர்களும் (ஞானிகள்) நம்முடன் தொடர்புடைய பெரியாவர்கள்தான். நாம் பல ஜென்மங்கள் எடுத்து வாழ்ந்த நிலை கொண்டு நம்முடன் ஒவ்வொரு ஜென்மத்திலும் தொடர்புடையோர் எல்லா இடத்திலுமே உள்ளார்கள்.

சொந்தம் என்பது ஏதப்பா..? நமக்குச் சொந்தமாக எதையப்பா ஏற்றுக் கொள்வது…? எதை விடுவது…?
1.எல்லாமே நமக்குச் சொந்தம்தான். இவ்வுடலும் நமக்குச் சொந்தமான உடல் தான்.
2.பல நிலை கொண்டு பலர் சொல்வார்கள். இவ்வுடல் நமக்குச் சொந்தமில்லை என்று…!
3.”பயம்…! என்னும் பேயை அகற்றிவிட்டால்…….” இவ்வுடலில் இருந்தே எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் நம் உயிரினம் செயல்படலாம்.

இயற்கையின் சக்தியிலிருந்து சக்தியாக உயிர் பெற்று வாழும் எல்லா ஜீவஜெந்துக்களுமே அச்சக்தியின் சொந்தத்துடன் சகலத்தையும் ஒன்றாக எண்ணி வாழ்ந்திட்டாலே வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவைக் காணலாம்.

எதிலும் சலிப்பும் சங்கடமும் தோன்றும் நிலை கொண்டு எண்ணத்தைச் செலுத்திடாதீர்கள்.
1.சலிப்பும் சோர்வும் வருவதினால்தான் பல சங்கடங்கள் நம்மை அண்டி
2.அதனால் நம் உடல் நிலைக்கும் உயிர் நிலைக்கும் பெரும் கேடு விளைவித்து
3.உலக வாழ்க்கையில் பற்றற்றவராக நம்மை ஆக்கி
4.நம்மை ஒரு பகடைக்காய்போல் நம்மை நாமே ஆக்கிக் கொண்டு,
5.வாழ்ந்த நிலையில் திருப்தியும் திறனும் அற்றுப் பெரும் சங்கடத்துடன் நம் ஜீவாத்மா பிரிந்து செல்லும் நிலையில்
6.பெரும் சங்கடத்துடனே அவ்வாத்மா பல நூறு ஆண்டுகள் சலிப்புடன் சுற்றிக் கொண்டே பெரும் ஈனப் பிறவியாகப் பிறவி எடுக்கிறது.
7.அதிலிருந்து மாறி விடுபடும் நிலைக்கே அவ்வாத்மாவுக்குச் செயலும் திறனும் இல்லாமல் போகிறது.

அவ்வாத்மா முடிவில்லாமல் பல நிலை கொண்ட உயிரினங்களைப் (உடல்களை) பெற்று
1.அத்தகைய சங்கட நிலை கொண்ட நிலையில்
2.இந்த உலகில் எண்ணிலடங்காப் பல ஆத்மாக்கள் சுற்றிக் கொண்டே உள்ளது.

ஆகவே இதைப் படிக்கும் ஒவ்வொரு உயிராத்மாவும் அவரவரின் நிலை கொண்டு நம் உடலில் உள்ள உயிராத்மாவிற்கு நாம் என்றுமே தீங்கு செய்யலாகாது. இதை ஆழமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாம் எடுக்கும் ஒவ்வொரு சுவாச நிலையும் கொண்டுதான் எண்ணங்கள் வருகிறது. இவ்வுயிர் ஆத்மாவிற்கு அந்தந்தத் தன்மைகளை அவ்வாத்மாவில் பதிய வைக்கிறது.

இந்தப் பூமியில் ஜெனித்த நாள் முதற் கொண்டு எடுத்த சுவாச அலையும்… எண்ண நிலையும்… சப்த அலைகளும்… நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் நம் ஆத்மாவிற்கு எல்லா நிலைகளும் தெரிந்து கொண்டே தான் உள்ளது.

இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் நம் ஆத்மா உடலுடன் இருக்கும் பொழுது நமக்கு நினைவில் நிற்காத சில செயல்களும் சிறு பிராய நினைவுகளும் அவ்வாத்மாவைச் சுற்றியேதான் நம் நினைவலையும் சப்த அலையும் சுற்றிக் கொண்டிருக்கும்.

வாழ்ந்த காலத்தில் பல நன்மை தீமைகள் எல்லாம் கலந்துதான் வாழ்ந்திருப்போம். எந்த நிலையிலும் நம் எண்ணமும் சப்த அலைகளும் நம் ஆத்மாவைச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில்
1.நாம் இனி வாழும் – வாழ்ந்த நாட்களில் நாம் எடுத்த சுவாச அலையும் எண்ண அலைகளும் சப்த அலைகளும்
2.நாம் எல்லோருமே அச்சக்தியிலிருந்து தோன்றிய சொந்த பந்தங்கள்தான்.

ஆகவே ஒன்றுடன் ஒன்று பின்னிய வாழ்க்கை நிலையில்தான் வாழ்கின்றோம் என்ற உண்மை நிலையை ஒரு நிலைப்படுத்தி நாம் பிறவி எடுத்த நாள் முதற் கொண்டு நம்மைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டுள்ள நினைவலைகளையும் சப்த அலைகளையும்
1.வாழ்ந்த வாழ் நாட்களில் நம்மை அறிந்தும் அறியாமலும் நாம் செய்த தவறென்னும் துவாரங்களை அடைத்திட
2.இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம்முள் உள்ள “ஈஸ்வர சக்தியை…” தியானித்துக் கொண்டே
3.வாழும் நாட்களை எல்லாம் பெரும் புனிதத்துடன் வாழ்ந்து புண்ணிய நிலை கொண்டு நாம் தவறி விட்ட அத்துவாரங்களைச் சீர் செய்து நல்ல நிலையில்
4.இனி நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ள நம்மைச் சுற்றப் போகும் சுவாச அலைகளையும் சப்த அலைகளையும் எண்ண அலைகளையும் பெரும் புனிதமாக்கி
5.இன்று சகலத்திலும் கலந்துள்ள சகல பாக்கியங்கள் பெற்ற பல மெய் ஞானிகளின் மகரிஷிகளின் சூட்சும நிலைகொண்ட வாழ்க்கையையே நாம் வாழ வேண்டும்.

இவ்வுலகம் வேறல்ல… அவ்வுலகம் வேறல்ல… சகலமும் ஒரே உலகம்தான்…! ஒன்றுடன் ஒன்று கலந்த சூட்சும நிலை கொண்ட உலகத்திற்குச் செல்லத்தான் என் அன்பான ஆசியை அருளுகின்றேன். வழிபெற்று வாழுங்கள்.

தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும் “தனக்குத்தானே எதிரி ஆகின்றான்…!”

இன்றுள்ள உலக நிலை அனைத்திலுமே
1.தன் புகழ் உயர வேண்டும்
2.அந்தப் புகழ் உயரச் செல்வம் வேண்டும்
3.அந்தச் செல்வம் சம்பாதிக்க இவ்வுடல் என்னும் கூடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
4.இப்படிப்பட்ட ஆசைகளுக்காகத்தான் அநேகம் பேர் பல வழிகளில் ஆண்டவனை வணங்குகின்றார்கள்.

ஆண்டவனிடம் தன் ஆசைக்கும்… தன் புகழுக்கும் வேண்டக் கூடாது…! என்பவர்களை எல்லாம் இன்றைய உலகம் “பெரும் பைத்தியமாக…” எண்ணுகின்றது. ஆண்டவன் எங்குள்ளான்…? என்ற கேள்விக்கும் இன்றைய உலகில் அறிந்து பார்க்கும் தன்மை இல்லையப்பா.

ஆண்டவனிடம் வேண்டிக் கேட்காவிட்டால் இவ்வுடலுக்கு ஆகாரம் வேண்டியது இல்லையா…? ஆண்டவன் தான் “பசி…” என்ற பெரும் பசியை இவ்வுடலுக்கு அளித்துள்ளானே.
1.இப்பசியை அடக்க… நாம் உண்டு வாழ்வதற்கு…
2,அவ்வாண்டவனை வேண்ட வேண்டாமா…? என்றெல்லாம் பல நிலைகளில் எண்ணுகிறார்கள்.

ஆனால் இவ்வெண்ணப் பசியைப் பேராசை கொண்ட பசியாக அலைய விட்டு அதனால் வரும் பல இன்னல்களுக்கு நாம் அடிபணிகிறோம்…! என்பதை நம் எண்ணப் பசியில் எண்ணிப் பார்த்தால் புரிந்துவிடும்.

இவ்வாத்மா பசியை யாரும் எண்ணுவதில்லை. இவ்வுடல் பசிக்குத்தான் இவ்வுலகமே இன்றுள்ளது. இவ்வுடல் பசியினால் தான் வரும் நிலைகள் எல்லாமே நமக்கு நடப்பவை.

இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவும் பிற நிலைகளும் நம் ஆத்மாவிற்கு எந்த நிலையில் ஏற்கிறது என்று எண்ணி
1.இவ்வுடல் என்னும் பசியை
2.மனம் என்ணும் பசியால் அடக்கி ஆண்டிட முடியுமப்பா.

இவ்வுலகில் உதித்த எல்லோரும் ரிஷிகளைப் போலவும் ஞானிகளைப் போலவும் இவ்வுடலுக்கு உணவு உண்ணாமல் “உடல் பசியை அடக்கி ஆளுங்கள்… என்று சொல்லவில்லையப்பா…!

அன்ன ஆகாரம் இல்லாமல் வாழ்ந்திடுங்கள் என்று சொல்லவில்லை.
1.இவ்வுடல் என்னும் கூட்டை
2.”எண்ணம் என்ற ஏவலனால்…” (CONTROL) எந்த நிலைக்கும் வைத்திருக்க முடியுமப்பா.

உண்ணும் உணவிலிருந்து இவ்வுடலுக்கு எப்படிப் பல நிலைகள் கிடைக்கின்றதோ அதேபோல் தான் அவ்வாத்மாவிற்கும் கிடைக்கின்றது.

நாம் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்ந்திடத்தான் வேண்டும். ஆனால் அதற்காகப் பேராசை நிலை கொண்டு தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும் “தனக்குத்தானே எதிரி ஆகின்றான்…!”

இன்று இவ்வுலகில் பெருகி உள்ள மக்கள் நிலையில் அன்பும் ஆதரவும் காட்டி வாழும் நிலைமை மறைந்துவிட்டது. தன் உடல் பசி ஒன்றுதான் ஓங்கி நிற்கிறது.

நல்ல உபதேசங்களைக் கேட்பதும் நல்லோர் வழியில் செல்வதும் நம் ஆத்மாவிற்குச் செய்யும் நற்பணிகளை நாம் ஏற்று நடக்கவில்லை. நம் எண்ணங்கள் எல்லாம் இவ்வுடல் என்னும் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆண்டவனை எண்ணுவதாகவே உள்ளது.

இவ்வுடல் வேறு… இவ்வாத்மா வேறு…! இவ்வுடலில் இவ்வாத்மா தங்கி இருப்பதையே நாம் பெற்ற பாக்கியமாகக் கொண்டு இவ்வுலக நிலையில் இவ் இயற்கையில் கலந்துள்ள உண்மைகளை அறிந்தே மெய் ஞானிகள் பெற்ற ஆற்றலைப் பெற்று (விண்ணின் ஆற்றல்) நாமும் வாழ்ந்திட வேண்டும்.

அச்சக்தி நிலை ஒரே நிலையில்தான் உள்ளது. நாம் எந்த நிலை கொண்டு ஏற்கின்றோமோ… “அந்த நிலைக்குத்தான்…” அச்சக்தி நிலை நம்முடன் வரும்.

இன்று வீசும் இக்காற்றையே நாம் எண்ணிப் பார்த்தால் நம் நிலைக்கு எல்லாம் விளங்கும்.
1.கொதிக்க வைத்த தண்ணீரை ஆற்றுவதும் அக்காற்றுதான்.
2.அனல் கொண்டு எறியும் விறகை எரிய விடுவதும் அக்காற்றுதான்.
3.ஒரே நிலை கொண்டு வீசும் காற்றுதான் இவ்வனலையும் எரிக்க உதவுகின்றது, கொதி நீரையும் குளிரவிடுகிறது.

அதைப் போல சக்தி நிலையும் நம் நிலைக்கு இப்படித்தான் வருகின்றது. எந்த நிலைகொண்டு நாம் எங்கு செல்கின்றோமோ அந்த நிலைகொண்டு தான் அச்சக்தி நமக்கு உதவி புரிகின்றது.
1.நம் எண்ணத்திற்கு உகந்தபடிதான் அவ்வாண்டவனின் சக்தியையும் நாம் பெற முடியும்.
2.இவ்வுலகமே இவ்வெண்ணம் என்ற பசி நிலையைக் கொண்டுதான் சுற்றி வருகின்றது.
3.தன் எண்ணமும் செயலும் அமைதி கொண்டு தன் ஆத்மாவை அடக்கி ஆள்பவனுக்கு
4.தன் நிலையில் பதட்டத்தை வளர விடாமல்
5.நான் என்ற எண்ணம் கொள்ளாமல் நல்லுணர்வுடனே வாழ்ந்திட முடியும்.

அமைதியுடனும் அன்புடனும் நடத்திச் செல்லும் மனப்பக்குவம் பெற்று வாழத்தான் யாம் சொல்லும் இந்த உபதேசமும் தியானமும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலமே நச்சுத்தன்மை அடைந்துவிட்டது. விஷக் கதிரியக்கங்கள் எல்லாம் பூமியின் நடு மையம் அடைந்து இன்று உருகிக் கூழாக மாறிக் கொண்டே வருகின்றது.

அந்த உருகும் வேகத்தில் தான் மேல்பாகம் வெடிக்கப்படும்போது “பூகம்பம்” என்ற நிலை அடைந்து மேலே எடை கூடி உள்ளே எல்லாப் பொருட்களும் சேர்ந்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் அதற்குள் நாம் சிக்கிவிட்டால் இந்த உடல் கருகி விடுகின்றது. ஆனால் இந்த உயிரோ கருகிய உணர்வுடன் வெளியே வருகின்றது.

இந்த உயிர் வெளிவந்த பின் அது எந்த வேதனையில் உருவானதோ அந்த உடல் இல்லை என்றால் இந்த உயிருக்குள் இந்த வேதனை என்ற உணர்வுடன் நரகலோகத்தைத் தான் சந்திக்க வேண்டும்.

1.இன்னொரு உடல் பெறும் வரையிலும்
2.நாம் அந்த வேதனையைத்தான் (கருகிய உணர்வை) அனுபவிக்க வேண்டும்.

இன்னொரு உடல் பெறும்போது ஒரு தாவர இனத்தின் மேலேயோ அல்லது வேறொன்று மேலேயோ இது பட்டால் அதையும் “கருக்கும்…”. அந்தச் செடியும் என்ன செய்யும்…? வளர்ச்சியற்ற நிலைகள் போய்விடும்.

பின் அதனுடைய நிலைகள் சிறுகச் சிறுகச் சேர்த்து இதே உயிரணு இன்னொரு செடி மீது பட்டபின் அதையும் கருக்கி… அதில் சேர்த்துக் கொண்ட உணர்வு கொண்டு “கொஞ்சம் கொஞ்சமாக” மாறுகின்றது.

அப்பொழுது அந்த உடலிலும் வேதனை இந்த உயிரான நிலைகளிலும் வேதனை என்ற நிலையில் அந்த நரகலோகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்.

1.ஏனென்றால் உயிரின் இயக்கத்தால் தான் உணர்வுகள்…
2.உணர்வின் உணர்ச்சிகளை உயிர் அறியச் செய்யும்.
3.ஆன்மா என்பது தனி.
4.உயிர் என்பது காந்தம் – அந்த உணர்ச்சி கொண்டு உணர்வால் நமக்குள் இயக்கும்.
5.உடல் இருக்கும்போது… மாற்றியமைத்துக் கொண்டு
6.உடல் இல்லாதபோது… அந்த உணர்வை அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

இதெல்லாம் சாதாரணமானதல்ல. இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதையே தான் தீயிலே மாண்ட ஒரு உயிரான்மா ஒரு உடலுக்குள் புகுந்து விட்டால் இதன் உணர்வை அங்கு இயக்கப்பட்டு “அங்கு எரிகின்றதே… எரிகின்றதே…” என்று சொல்லும்.

(முதலில்) தன் உடலைக் கருக்கிவிட்டு உடலைவிட்டு வெளிவந்த பின் அடுத்த உடலில் புகுந்து அவனையும் தீயில் குதித்து வேக வைக்கும்.

பின் புகுந்த உடலையும் அந்த நிலைக்கு மாற்றிவிட்டு வெளி வந்தபின் இன்னொரு உடல்களில் சென்று எரி பூச்சியாகவோ விஷம் கொண்ட பூச்சிகளாகவோ பிறக்கும்.

இப்படி இயக்கி உடல்களை மாற்றுவதுதான் இந்த உயிரின் வேலை. “நாம் நினைக்கின்றோம்… உடலை விட்டுப் பிரிந்தால் யாருக்கு என்ன தெரியப் போகிறது…!” என்று.

ஆனால் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். மனிதனாகப் பிறந்தாலே முழு முதல் கடவுள். சிருஷ்டிக்கும் ஆற்றல் கொண்டவன்.

இந்த மனித உடலில் இருக்கும் காலமோ மிகவும் குறுகியது. அதற்குள் நம் மனதைக் குவித்து அருள் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றி அவனுடன் அவனாக வேண்டும்.

மனிதனாகப் பிறந்த பலனை அடைய வேண்டும். இல்லையேல் மற்ற உயிரினங்கள் எப்படி வேதனைப்படுகின்றதோ அதை நாமும் அனுபவிக்க வேண்டியதாகும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.
1.அதிலே கருவாகி உருவாக்கிய
2.அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான்
3.எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார்.

நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ஞானிகள் உணர்வை நீங்கள் வளர்த்து அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால் உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம்.

ஏனென்றால்,
1.இந்த உடல் பற்றை அகற்றி
2.உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
3.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழவேண்டும்.

அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

தியானமே நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும். பிறவியில்லா நிலை பெறுவதே நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதே நம்முடைய வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

அகஸ்தியனுடன் நேரடித் தொடர்பு (NETWORK)

 

ரேடியோ டி.வி. நாம் பார்க்கிறோம் என்றால் அது எந்தெந்த ஸ்டேசனிலிருந்து ஒலி பரப்பு செய்கின்றனரோ அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் இந்தக் காற்றில் கலந்துள்ள அந்த அலைகளைக் குவித்து அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து பார்க்கின்றீர்கள்… பட வழி கூடி…!

இதைப் போன்று
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வினை
2.உங்களுக்குள் இப்போது பதிவு செய்கின்றேன்… இந்த ஸ்டேசனை நீங்கள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்
3.வெகு தூரத்தில் இருப்பதை நீங்கள் நுகர்ந்தறிய வேண்டும் என்ற எண்ணங்களை ஊடுருவிச் செலுத்தினால்
4.அதனின் கவர்ச்சியாகி அகஸ்தியனின் உணர்வலைகளை நுகர்ந்து அந்த உணர்வலைகளை உங்கள் உயிர் தெரியப்படுத்தும்.

தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாதபடி அண்டத்தின் இயக்கமும் தனக்குள் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கிறது…? என்பதையும் அறிய முடியும்.

நீங்கள் எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து… மோதலில் வெப்பமாக விஷ்ணுவாகி… அந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் பரப்பச் செய்யும்.

விஷ்ணு கையில் என்ன இருக்கிறது…? சங்கு சக்கரம்…!

எண்ணிய உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த ஒலியின் நாதங்களாகி அந்த நாதங்கள் உடலில் சுழற்சியாக இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்கத் தொடங்கும்.
1.காந்தம் இழுத்து உயிருடன் ஒன்றப்படும் போது சுழன்றாலும்
2.இந்த உணர்வின் தன்மை கருவாகி இரத்தநாளங்களில் அணுக்களாக உறைந்து விடுகிறது.

அகஸ்தியன் கண்ட அண்டத்தின் உணர்வுகளை நினைக்க நினைக்க அதைச் சேர்க்கச் சேர்க்க அந்த உணர்வுகள் அணுக்கருக்களாக நமக்குள் வளர்ச்சி அடையும்.

அவன் வழியில் அவன் கண்டுணர்ந்த உணர்வும் நமக்குள் நினைவுக்கு வரும்.
1.அகஸ்தியன் துருவனாகி… துருவத்தின் ஆற்றலை நுகர்ந்தறிந்தது போல் நமக்கும் அந்த நுகரும் ஆற்றல் கிடைத்து
2.அதே உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை அறியாமலே அங்கே அழைத்துச் செல்லும்.

இப்போது இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் உணர்வுகள் அனைத்தும் நீங்கள் நுகரும் போது உங்கள் உடலில் கருக்களாக உருவாகும். பின் நாளடைவில் அதனுடைய எண்ணங்கள் வரும் போது கரு வலுவாகும்.

கரு வலுவான பின் இரத்தநாளங்களில் கலந்து எந்த உறுப்புகளில் இணைகின்றதோ அந்தக் குணத்தின் அணுவாக உருவாகி அதனின் உணர்ச்சிகளை உந்தச் செய்து அந்த உணர்வை நாம் மணத்தால் நுகரப்படும் போது உள் நின்று தன்னை வளர்க்கும் அந்த மணத்தின் உணர்ச்சி கொண்டு நமக்குள் அந்த எண்ணங்கள் செயல்படுகிறது.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் போது அது அணுக்கருவாகி அணுக்களாக உருவாகி விட்டால் அந்த அருள் ஞானி பெற்ற உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை நீங்கள் எளிதில் கவர முடியும்.

கவரும் நிலையில்… அகஸ்தியன் கணவனும் மனைவியுமாக ஒன்றாகச் சேர்த்து ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனானோ அந்த உணர்வுகளை
1.நம் உயிர் உடலுக்குள் கடவுளாக நின்று தனக்குள் வளர்க்கப்படும் போது நம் எண்ணமே அங்கே கடவுளாகிறது
2.அந்தக் கடவுளே உள் நின்று இயக்கும் அந்த உணர்வின் குணங்களைப் பாய்ச்சுகின்றது.
3.அதுவே அருள் ஞானத்தின் உணர்ச்சிகளைத் தூண்டி அதனின் செயலாக அங்கங்களை இயக்குகிறது.

நாம் அதை நுகர நுகர… அந்த அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் சிறுகச் சிறுகக் மாற்றி நம்மை ஒளியின் சுடராக மாற்றுகின்றது. நம் உணர்வுகள் எல்லாம் ஒளியாக மாறுகிறது.

உங்கள் சுவாச நிலையை மாற்றுவதற்காகத்தான் இந்த உபதேசமே

 

நல் மனதைப் பெறுங்கள்… நல் மூச்சையே விடுங்கள்…! என்பதல்லாம் அந்த நிலையில் உள்ள பூக்களின் நறுமணங்களையும் மற்ற நறுமணங்கள் கொண்ட பொருள்களளையெல்லாம் தேடுகின்றீர்கள். ஆனால் அந்த நிலையிலிருந்து வருவதல்ல நல்ல மூச்சு என்பது

நல் மூச்சு என்பதன் பொருளே உங்கள் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலிருந்தும் வருவது தான்.
1.உங்கள் மன நிலை மகிழ்ச்சியாக உள்ள நாளில் அந்த இடத்தில் உள்ள அசுத்தமான காற்று உங்களை வந்து அண்டாது
2.அந்த நிலையில் உங்கள் சுவாச நிலையும் அந்தத் தீமையான மணத்தை ஏற்றுக் கொள்ளாது.

ஆனால் உங்கள் மனதிலும் சுவாச நிலையிலும் சோர்வு வந்துவிட்டால் உங்கள் சுவாச நிலைக்கு எந்த நறுமணமும் வராது.

நல்ல மூச்சை விடுங்கள்… நல் சுவாசமே எடுங்கள்…! என்பதெல்லாம் உங்கள் மன நிலையில் உள்ள எண்ண அலைகளில் உங்கள் சுவாசத்தின் அலைகள் எல்லாம் நல்ல அலைகளாகவே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

நல் மனத்தில் உள்ள தன்மையில் உங்கள் உடலில் உள்ள சிறு வியாதியும் பெரு வியாதியும் உங்கள் மனதிற்குப் பாரமாகத் தெரிந்திடாது.
1.தன் நிலையில் சந்தோஷமாக உள்ளவனுக்கு
2.நல் மூச்சை விட்டு நல்ல சுவாசத்தை இழுப்பவனுக்கு வியாதியும் பிணிகளும் அண்டாது.
3.தன் நிலையில் சோர்வு உள்ளவனுக்குத்தான் வியாதியும் பிணியும் வந்து அணுகும்.

வியாதி வந்தவன் ஜோசியக்காரனிடம் செல்கிறான். அவன் சொல்கிறான் அஷ்டமத்தில் சனி இருக்கிறது என்று. அஷ்டமத்தில் சனி ஏழரை நாட்டான் சனி என்பதெல்லாம் இந்தச் சுவாச நிலையில் மாறுபட்டவனுக்கு வந்தடைவது தான்..!

உங்கள் சுவாச நிலையை மாற்றுவதற்காகத்தான் இந்த உபதேசமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வேதனைப்படுவோரைப் பதிவு செய்துவிட்டால் பதிவான உணர்ச்சிகள் அந்த வேதனைப்படச் செய்தோரைத் திரும்பத் திரும்ப எண்ணும்படி வைக்கின்றது.
1.நாம் எண்ணவே வேண்டாம்… அது நம்மை எண்ணும்படியே வைக்கின்றது.
2.ஏனென்றால் அது அணுவாக உருவாகி விட்டால் தன் இரைக்காக அதைத் தேடுகின்றது.

அப்பொழுது நம் உயிருடைய வேலை என்ன…?

காகமோ குருவியோ தன் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பது போல்
1.உருவான அணுக்கள் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது
2.அது கவர்ந்து தன் உணவாக எடுத்து
3.அதற்கு உணவு கொடுப்பது நம் உயிருடைய வேலை.

ஏனென்றால் தாய் (உயிர்) அதை வளர்த்துத் தான் ஆகவேண்டும்.

மனிதனான பின் ஆறாவது அறிவு கார்த்திகேயா “தெரிந்து கொண்டவன்”- அகஸ்தியன்.
1.தன் வாழ்க்கையில் தீமைகளை அகற்றத் தெரிந்து கொண்டவன்
2.விண்ணுலக ஆற்றலைத் தெரிந்து கொண்டவன்
3.பின் துருவத்தின் ஆற்றலை உணர்ந்து அதை அறிந்து கொண்டவன்
4.அதனைத் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டான் துருவ மகரிஷியானான் துருவ நட்சத்திரமானான்.
5.இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகையை தீமை வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளான்.

பிறவியில்லாப் பெரு நிலையும் பேரானந்தப் பெரு நிலையும் பெற்றுத் தூங்காமல் தூங்கும் நிலையாக எப்பொழுதுமே தூங்கிக் கொண்டுள்ளான்.

ஒரு வெளிச்சத்தை நேரடியாக நம் கண்களால் பார்த்தால் நம்மை இருளடையச் செய்கின்றது. (வெளிச்சத்தை நேரடியாகப் பார்த்தவுடன் அடுத்து ஒரு பொருளைப் பார்த்தால் நாம் காண முடியாது)

1.தன் ஒளியின் சுடரின் தன்மை கொண்டு
2.வரும் இருளையெல்லாம் மாய்த்து ஒளியின் சக்தியாகவே
3.என்றும் அந்த ஒளிச் சுடராகவே நிலை கொண்டு
4.மகிழ்ந்திடும் நிலையாக உருவாகி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவர்களைப் பின்பற்றிச் சென்றோர் அனைவருமே சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டு தீமைகளை அகற்றிடும் சக்தியை உமிழ்த்திக் கொண்டும் உள்ளார்கள்.

அது நம் பூமிக்குள் துருவப் பகுதியின் வழியாக வரவும் செய்கின்றது. இங்குள்ளோர் அதை ஈர்த்தால் தான் நாம் பெற முடியும். அதை ஈர்த்துக் கொண்டால்… என்றுமே ஒளியாக தூங்காமல் தூங்கும் நிலையாக மகிழ்ந்திடும் நிலையாக நாம் அவர்களுடன் ஐக்கியமாக முடியும்.

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வாக… நாம் அதுவாக ஆகவேண்டும்

 

எம்மைச் (ஞானகுரு) சந்திக்க வருபவர்கள் “சாமி… ஏதோ வரம் கொடுக்கின்றார்…” என்று அத்தகைய பழக்கத்தில் தான் வருகின்றார்கள். என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டதே… எனக்குக் கஷ்டம் வந்து விட்டதே…! என்று வேதனையுடன் அழுகைக் குரலுடன் கஷ்டத்தைத் தான் சொல்கின்றார்கள்

1.யாம் சொல்வதை நிதானமாகக் கேட்டு…
2.கொடுக்கும் உபதேசத்தை ஏற்றுக் கொண்டு அதைப் பதிவாக்கும் நிலையில் இல்லை.

அந்த அளவிற்குச் சில பேர் வருகின்றார்கள்.

யாம் திரும்பச் சொன்னாலும் கூட இல்லைங்கே… என் கஷ்டம் அப்படியே இருக்கின்றது… அதனால் தான் சொல்கிறேன்…! என்று சொல்கின்றார்கள்.

கஷ்டத்துடன் வரப்படும் பொழுது… அதை நீக்கும் உபாயங்களை யாம் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பண்புகள் அங்கே வராது போய்விடுகின்றது.

இது போன்ற துன்ப நிலையிலிருந்து நீங்கள் விடுபடுதல் வேண்டும் என்பதற்காகத்தான் காலை துருவ தியானத்தைக் கொடுத்துள்ளோம். அதன் மூலம் அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பெற்று யாம் பதிவு செய்ததை நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குள் வரும்.

அதே சமயத்தில் துருவ மகரிஷி வாழ்ந்த காலத்தில் அவனின் உணர்வுகள் இங்கே படர்ந்துள்ளது.
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து
2.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.இந்த இரண்டையும் எண்ணி இந்த உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதற்குப் பின் எந்த நல்ல காரியமோ அது நடைபெற வேண்டும் என்று எண்ணுங்கள். அந்த உணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டு அந்தக் காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லுங்கள்… அது செயல்படும்…!

காரணம் இயற்கையின் பல பேருண்மைகளையும் கால்நடையாக அலைந்து திரிந்து… மனித உடலின் செயலாக்கங்களை எல்லாம் உணர்ந்து அந்த மகரிஷிகள் சக்தி நீங்கள் பெற முடியும் என்று உங்களை நம்பச் செய்கின்றோம். ஆனால் நீங்கள் உங்களை நம்ப மறுக்கிறீர்கள்… இன்னும் நம்பாது தான் இருக்கின்றீர்கள்.

அதே சமயத்தில்… அது வரும் சொத்து வரும் செல்வம் வரும் இப்படிச் செய்தால் உனக்கு எல்லாம் கிடைக்கும் என்று பணத்தை மட்டும் அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு அவன் சொல்லைக் கேட்டு அதன் வழி தான் நடக்க முற்படுகின்றனர்.

அதை எல்லாம் விடுத்துவிட்டு
1.இங்கே கொடுக்கும் அருள் ஞானிகளின் உணர்வை வலுவாக எடுத்துப் பாருங்கள்
2.கடும் தீமைகளையும் உங்களால் அகற்ற முடியும்
3.அருள் ஒளியை உங்களுக்குள் வளர்க்க முடியும் அறியாது வரும் இருளையும் போக்க முடியும்
4.உங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையிலும் இருள்கள் போகும் அதைப் போக்க முடியும்
5.நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாற வேண்டும்… துருவனாக மாற வேண்டும்…
6.துருவ நட்சத்திரமாக அந்த ஒளியின் சுடராக அந்த உணர்வின் ஒளி அலைகள் பாய வேண்டும்.

என்றும் பிறவியில்லா நிலை அடைந்த அந்த சப்தரிஷிகளின் உணர்வை வளர்த்து
1.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வாக… நாம் அதுவாக ஆகவேண்டும் என்ற நிலையில்
2.அந்த எல்லையை அடைவதற்கு ஒவ்வொருவரும் இதைச் செயல்படுத்துங்கள்.

இந்த உலகில் உள்ள பல பாகங்களிலும் ஒவ்வொரு வழியிலும் என் வழியை உணர்த்துகின்றேனப்பா…!

 

இன்றல்ல அன்றல்ல… இந்த உலகம் உதித்த நாள் முதற்கொண்டே உங்களுக்கும் எனக்கும் (நான் சந்தித்த எல்லோருக்கும்) தொடர்பு உண்டு. பல பிறவியிலும் உங்களுடன் நான் இருந்தேன்…. வழி வழியாகத் தொடர்பு உள்ளவர்கள் தான் நாம் எல்லோருமே…!

மனித உடலின் உருவம் பெற்றவுடனே இராமாவதாரத்திலேயே பெரும் தொடர்பு உடையவர்கள் நாம். இராமாவதாரத்தில் வான்மீகி முனிவனாகிவிட்டேன். வான்மீகியாக இருந்த அக்காலத்திலேயே நான் எய்திய தியான நிலையினால் நான் வான்மீகியில் விட்ட குறையினால் அடுத்த அவதாரம் எய்தினேன், கிருஷ்ணாவதாரத்திலும் என் ஆசை பூர்த்தி அடையவில்லை.

அரசனாகவும் அவதரித்தேன். ஆண்டியாகவும் அவதரித்தேன். இம்மக்களுக்கு உணர்த்திடப் பல கதைகள் வழியிலும் செப்பிவிட்டேன். பல பல அவதாரங்களையும் எடுத்திட்டேன்.

எந்த நிலையிலும் எந்த உடலுக்கும் சென்றிடும் பல பாக்கியம் பெற்றேன். பல உடல்களை எடுத்து அந்த உடல்களின் வழியில் பல உண்மை நிலைகளையும் உணர்த்தினேன். இந்த உலகம் முழுவதும் பல உடல்களை.. பல உருவங்களைப் பெற்றிட்டேன்.

பார்த்தேன்… பார்த்தேன்…! இந்த உலக மக்களின் உள்ளத்தையும் சுவாசத்தையும் பார்த்தேன்…!
1.பல பாவகள் செய்தவனையும் பார்த்தேன்.
2.பல பஜனைகள் செய்தவனையும் பார்த்தேன்.
3.பரந்தாமனைப் பழித்தவனையும் பார்த்தேன்.
4.உள்ள (மனது) நிலையில் பஜனை செய்தவனும் பரந்தாமனைப் பழித்தவனும் ஒரே சுவாச நிலையில் தான் இருக்கின்றார்களப்பா…!

இம்மனிதர்களை மாற்றத்தான் இக்காலம் தோன்றிய நாள் முதலே இக்கலியில் இங்கு வந்துள்ளேன் பாடம் புகட்ட…! கடைசியில் பைத்தியமாகவும் (ஈஸ்வரபட்டர்) இருந்தேன். பார்த்து எடுத்தேன் ஒரு சிஷ்யனை…! (வேணுகோபால சுவாமிகள் – ஞானகுரு).

அவன் வழியில் உணர்த்துகின்றேன் பல நிலைகளை…! இந்த உலகில் உள்ள பல பாகங்களிலும் ஒவ்வொரு வழியிலும் என் வழியை உணர்த்துகின்றேனப்பா.

இப்பொழுது நான் யார் என்று புரிகிறதா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் நாம் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகி விடுகின்றது. (வினை – வித்து)

ஆனாலும் நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.

1.நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி
3.அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி
4அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைச் கேட்டறிகின்றோம்.

அவர்கள் சொல்லும் கஷ்டத்தை நாம் கேட்டறிந்தால் நாம் நுகரப்படும்போது அந்த உணர்ச்சிகளே நமக்குள் இயக்கி நம் உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

1.பரவப்படும்போது நம் உடல் ஒரு அரங்கம்.
2.சுவாசித்த உணர்வுகள் (உயிரிலே மோதினால் நாதம்) நம் உடலிலே படரும்போது “அரங்கநாதன்”.
3.அதே சமயத்தில் அந்த உணர்ச்சிகளே நம்மை ஆளுகின்றது “ஆண்டாள்…”

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.

இதைப்போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.

மற்றவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.

1.ஒரு வித்தை ஊன்றியபின் அதே செடியாக வளர்ந்து பல வித்துகளை உருவாக்குவது போல
2.நம் உடலில் அதீதமான வித்துக்கள் உருவாக்கிவிடுகின்றது.

ஒரு வித்து செடியாகி வளரும் வளர்ச்சியில் மலர்கள் உருவாகின்றது. மலரானபின் மணத்தைப் பரப்புகின்றது. அதே போல பிறர் உடலில் விளைந்த (உணர்வுகளை) வித்துக்களை நாம் கேட்டறிந்து நம் உடலில் நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

பதிவான பின் மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர்கள் படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.

“கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.

நாம் அடுத்தவர்களிடம் போய்
1.எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்…
2.ஆனால் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…” என்று
3.நமக்குள்ளே அதே வித்தை உருவாக்குகின்றோம்.

உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும்போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது.

ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை.
1.நல்லது சொல்வது என்பது சிறிது காலம் இருந்தாலும்
2.அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து
3.அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
4.நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.

முதலில் நாம் நன்மை செய்பவர்களாக இருப்போம். பிறருடைய கஷ்டங்களும் குறைகளும் அவர்களின் கஷ்டத்தினால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்குள் வித்தாகி வளர்ந்தபின் கனியாகி நம்மையும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.

1.நாம் யாரும் தவறு செய்யவில்லை
2.நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் இத்தகைய தீமைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும்
3.அதைத்தான் விநாயகர் சதுர்த்தி என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

மே 2022 உபதேசம்

உயிருடன் ஒன்றி என்றும் ஒளி என்ற உணர்வுகளை உருவாக்கும் நிலை தான் கல்கி

 

இந்த உடலில் சிறிது காலமே நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த உடலும் சொந்தமில்லை. இதிலே தேடிய செல்வமும் சொந்தமில்லை. காரணம்…
1.செல்வத்தைத் தேடிய பின் உடலில் முதுமை அடையப்படும் போது கவலையும் வேதனையும் தான் வருகிறது.
2.தன் பையன் என்ன செய்யப் போகின்றான்..?
3.இவ்வளவு பொருளையும் விட்டுவிட்டுச் செல்கிறேன்… என்ன ஆகப் போகிறதோ…? என்ற
4.இந்த உணர்வின் பற்று தான் வருகிறது… அந்த நினைவுடனே இந்த உயிர் உடலை விட்டுச் செல்கிறது.

பின் யார் மேல் எந்தப் பற்று வருகிறதோ மீண்டும் பிறவிக்கே வருகிறது. இவரின் உடல் கூட வருகிறதா என்றால் இல்லை.
1.இவர் தேடிய ஆசையின் உணர்வே கூடச் செல்கிறது.
2.அந்த உணர்வு கொண்டு தான் அடுத்த உடலாக மாற்றுகிறது
3.மீண்டும் அதிலே வேதனையைத் தான் தேடுகிறது.

ஆகவே நாம் இப்போது ஆசையின் நிமித்தம் கலியில் சிக்கி மீண்டும் உடல் நிலையே பெறுகின்றோம்.

இதிலிருந்து விடுபடும் நிலையாக இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

நாம் பல கோடி உடல்களில் சேர்த்துக் கொண்ட “கார்த்திகேயா…” எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு… தீமை என்ற நிலைகள் புகாதபடி தணித்துக் கொள்ளும் சக்தி தான் ஆறாவது அறிவு.

1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் “வள்ளி…” அந்த வலிமையான சக்தியின் துணை கொண்டு
2.வலிமை பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிரிலே படும் போது
3.அது தெய்வ ஆணையாகத் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளாக உடலுக்குள் வருகிறது.

ஆக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் நம் உயிரிலே அது கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம் வாழ்க்கையை அமைக்கின்றது.

நாம் பெற்ற இச்சைகள் நம் உடலில் கிரியையாகி அந்த ஞானத்தின் வழியாக நம் வாழ்க்கை அமைந்து உயிருடன் ஒன்றிய ஒளியாகப் பிறவி இல்லா நிலை அடைவதே கல்கி… கடைசி நிலை.

உடல் என்ற ஆசை வராதபடி என்றுமே இந்த உயிர் எல்லா உலகையும் காட்டுவதற்கு எல்லா உணர்வையும் ஊட்டியது. ஆகையினால் அந்த உயிரைப் போன்று உணர்வின் ஒளியாக நாம் மாறுதல் வேண்டும்.

1.நாம் உயிருடன் என்றுமே ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும்
2.உடலான நிலைகள் மாறி அந்த ஒளியான நிலைகள் பெற வேண்டும் என்பது தான் நம் குரு காட்டிய அருள் வழி.

அதனால் அதை நாம் உருவாக்குவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

இதைப் படிப்போர் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தி பெற்று… கலியை அகற்றிக் கல்கியாக மாறி… ஆனந்த நிலை பெற்று… என்றும் ஏகாந்த நிலை பெற எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

எதிர்த்து வரும் ஏதிர் நிலைகளுக்கு நம்மை அடிமைப்படுத்தாமல் மெய் ஞானி காட்டிய வழியிலேயே நாம் செயல்பட வேண்டும்

 

உதாரணமாக சாதம் உண்ணும் பொழுது அதிலே ஒரு கல் பட்டு உடம்பே சிலிர்க்கின்றது.

நாம் நல்ல நிலையில் நல்ல உணர்வும் எண்ணங்களும் கொண்டு வாழ்ந்து வந்து ஞானத்தின் வழித்தொடரைப் பெற்றாலும்
1.அறுசுவையான உணவை உட்கொள்ளும் பொழுது அதனுடன் சேர்ந்து வந்த சிறு கல்லைப் போல
2.அருள் வழியில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது சில இடர்கள் வரத்தான் செய்யும்.
3.அந்த நிலையில் உணவுடன் வரும் கல்லுக்காக நாம் சாப்பாடு சாப்பிடாமல் இருப்பதில்லை.
4.நம்மை எதிர்த்து வரும் அந்த ஏதிர் நிலையான உணர்வுக்கு நம்மையே நாம் அடிமைப்படுத்தாமல்
5.ஞானிகள் காட்டிய மெய் வழியிலேயே நாம் செயல்படுதல் வேண்டும்.

உதாரணமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் பலமான அஸ்திவாரம் வேண்டும். அதே போலத்தான் சுவரை எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அந்தந்த அளவிலே சேர்த்துக் கட்டினால் தான் அந்தச் சுவர் உறுதியாக நிற்கும்.

சுவர் எழுப்பும் பொழுது அதன் கலவையில் போடும் பொருள்களில் அளவு மாறுபட்டால் அந்தச் சுவருக்குப் பலமில்லை.
1.மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும்
2.சிமெண்ட் அதிகமானால் வெடிக்கும் தன்மையும்
3.நீர் அதிகமானால் அதன் பக்குவ நிலை செயல்படாத நிலையும்
4.மனிதனால் உருவாக்கப்பட்ட சுவருக்கே அதன் கலவை மாறும் பொழுது அது நிற்பதில்லை.

ஆகவே நம் உடலிலுள்ள உணர்வின் எண்ணங்கள் சீராகவும் சமமாகவும் இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும். உடல் நலமாக இருந்தால் அது எண்ணத்தின் “மையக் கோலாகி (வலுவாகி)” ஆத்ம சக்தியைப் பெற முடியும்.

சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் வேதனை பேராசை அதிகமான உடல் இச்சைகள் லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலைகளில் அடிமைப்பட்டு வாழும் பொழுது
1.நாம் எடுக்கும் சுவாசமானது “கடினமாகி…!”
2.நம் உடலில் சேரும் (உணர்வின் எண்ணங்கள்) அமிலத் தன்மை கூடியும் குறைந்தும் விடுகின்றது

அதனால் உடலில் உள்ள சுரப்பிகளில் சுரக்கக்கூடிய அமிலங்களில் வித்தியாசமாகி (உப்புக்கள் சர்க்கரை கொழுப்பு) நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அதனால் பல நோய்களுக்கும் ஆளாகிவிடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளைச் சமப்படுத்தும் நிலைக்குத்தான் உங்களுக்குச் சரியான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து உடல் உறுப்புகளுக்குள் பாய்ச்சி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து கொண்டே வந்தால் நம்முடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேலே ஒன்றி வாழும் தகுதி பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நம் உடலுக்குள் பல உணர்வுகள் இருப்பினும்
2.அதனதன் உணர்வுகள் பெற்ற அணுக்கள் அது அது வளர்வதற்கு
3.அதனதன் செயல்களை உருவாக்கும்.

அதற்கு உணவு கொடுப்பது உயிரான தாய் தான்.

உதாரணமாக விண்ணிலே தோன்றிய ஒரு உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து ஒரு பருத்திச் செடியின் மீது வீழ்ந்தால் ஒரு புழுவாக உருவாகின்றது.

பருத்திச் செடியில் உருவாக்கிய அந்த அணு உயிர்தான் உருவாக்கியது. ஆனாலும் அதில் உருவான அந்த அணுவின் தன்மை
1.தன் பசிக்கு ஏங்கப்படும்போது
2.இங்கே இல்லையென்றால் அது நுகர்ந்து
3.அது (பருத்திச் செடி) இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும்படி வைக்கின்றது அந்த அணு.

அது தான் மூஷிகவாகனா. கணங்களுக்கு அதிபதி கணபதி.

அப்போது அந்தப் புழுவின் உடலில் பருத்திச் செடியின் அணுக்கள் அதிகமாக இருப்பதனால் இந்த உடலை இயக்குவது “கணங்களுக்கு அதிபதியாக இருந்து” இயக்குகின்றது.

ஆகவே இதைச் சுவாசித்து
1.இங்கே இல்லை என்றாலும்
2.இன்னொரு பக்கத்திற்கு அது நகர்த்திச் சென்று
3.அதை உணவாக உட்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றது.

பறவை இனங்கள் மரத்தின் மேல் குஞ்சு பொரிக்கின்றது. குஞ்சுகளோ அது இரை தேடிச் செல்லும் வழியில்லை.

இருப்பினும் தான் முட்டையிட்டு கூட்டிலே இந்தக் குஞ்சுகளைப் பொரித்து விட்டால் அதற்குப் பாதுகாப்பான கூடுகளைக் கட்டிவிட்டு தன் இனத்திற்கு அது உணவைத் தேடிச் சென்று எடுத்து வந்து குஞ்சுக்கு அது இரை கொடுக்கின்றது.

1.அதிலே விளைந்த உருவான அந்தக் குஞ்சுகளோ
2.இந்தத் தாயின் சப்தத்தைக் கேட்டால் போதும்
3.“ஆ…” என்று வாயைத் திறந்து ஒன்றோடு ஒன்று சப்தம் போட்டு வாயைத் திறந்துவிடும்.

இதைப் போலத்தான் இந்த உயிர் பருத்திச் செடியின் சத்தை அது நுகர்ந்த பின் கருவாகி அந்த அணுவின் தன்மை உருவாகியபின் தன் பசிக்காக ஏங்குகின்றது.

அது ஏங்கும்போது
1.உருவாக்கிய அந்த “உயிர் தான்” இதற்குத் தாய்.
2.அதனுடைய உணர்வின் தன்மை இந்த “உடல் தான்” தந்தை.

இந்தத் தந்தையின் வலுவின் தன்மை கொண்டுதான் தாயின் இயக்கமே உள்ளது என்பதை வேதங்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது, இதை நாமும் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.

ஆகவே நம் உயிர் தாயாக நின்று இந்த உடலைக் காக்க எண்ணுகின்றது.

இதைப் போலத்தான் அந்த உயிர் முதலில் அந்தப் பருத்திச் செடியில் உருவான அந்த அணுவின் தன்மைக்கு அந்தச் செடி எங்கே இருக்கின்றதோ அதன் பக்கம் மணத்தை நுகர்ந்து இதுவே அழைத்துச் சென்று அங்கே கொண்டு அது உணவாக ஊட்டச் செய்கின்றது.

இது பரிணாம வளர்ச்சியில் இவ்வாறு நகர்ந்து சென்று அது செயல்படுத்துகின்றது.

உயிரால் தான் இயக்கப்படுகின்றோம்… உயிர் தான் அனைத்திற்கும் காரணம்

 

நம்மைத் திட்டியவனை எண்ணும் போது அவனைச் சும்மா விடலாமா…? கொலை செய்யலாமா…? என்று கூட எண்ணம் வந்துவிடுகிறது. நம் பிள்ளைகளாக இருந்தாலும் கூட வெறுக்கும் தன்மையே வருகிறது.

இது எல்லாம் கலி தான்.

1.வெறுக்கும் தன்மை கொண்டு கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது
2.அல்லது அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் போது
3.நம் உடலுக்குள் அதே உணர்வாகக் கலி ஆகி
4.மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்களை நமக்குள் நாம் கொலை செய்துவிடுகின்றோம் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அந்த வலுவான விஷத் தன்மைகள் மனிதனை உருவாக்கும் அணுக்களை… அதனுடைய செயலாக்கங்களை மாற்றி விட்டால் கலியாக மாறுகின்றது நமக்குள்ளேயே.

மற்ற விஷத்தின் தன்மையைப் பெருக்கி மனிதனல்லாத உருவை உருவாக்கும் நிலைகள் பெற்றுவிடுகின்றது. இதை நாம் மாற்ற வேண்டுமல்லவா.

1.ஒவ்வொரு உடலையும் காக்க… உயிருடன் ஒன்றிய உணர்வுகள் தான் வருகிறது.
2.இந்த உடலைக் காக்கத் தான் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி இயக்கச் சக்தியாக வருகிறது.

இது யாரால் இயக்கப்படுகிறது…?

நம் உயிரால் தான் இயக்கப்படுகிறது என்பதை மனிதனான பின் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன். ஆகவே அவன் கூறிய வழிப்படி பார்த்தோம் என்றால் தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகிறது.

அவன் நமக்குள் இருக்கப்படும் போது…
1.அவனை எண்ணி உயர்ந்த ஞானியின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அதனை நம் உடலுக்குள் உருவாக்குவதும் அவனே தான்
2.அந்த ஞானத்தின் வழியில் எண்ணும்போது அந்தச் சுவையின் எண்ணங்கள் வருகிறது
3.அந்த எண்ணத்தின் அடர்த்தியானால் தீமையை நீக்கிடும் வலுவாகிறது.
4.தீமையை நீக்கிடும் வலுவாக்கப்படும் போது அந்த உயிரின் இயக்கத்தால் தீமைகள் நமக்குள் புகாத தன்மை வருகிறது.

எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று மனிதனான பின் நாம் எல்லாவற்றையும் அறிந்திடும் உணர்வு வருகிறது… கார்த்திகேயா. நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வினை… அந்த நஞ்சினை மலமாக மாற்றிடும் உடலாக மாற்றிவிடுகிறது நம் உயிரே தான்.

அவன் தான் இத்தனை செயலுக்கும் காரணம்…!

எதை இந்த உடலில் ஆசைப்படுகின்றோமோ அதை உருவாக்கிவிடுகின்றான். ஆகவே தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வு பெற்ற பின் நஞ்சை ஒளியாக மாற்றுகின்றான்.

இதைப் பெறக்கூடிய தகுதியாக எல்லோரும் வர வேண்டும் என்பதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு கால கட்டத்திலும் எனக்கு (ஞானகுரு) எப்படிப் போதித்தாரோ
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்கப்படும் போது
2.வசிஷ்டர் அதைப் பெற வேண்டும் என்ற ஆசையின் தன்மையை நீங்கள் அதிகமாக வளர்த்தால் “அது பிரம்மமாகி…”
3.உயிரைப் போன்று அந்த உணர்வின் தன்மை ஒளியாக மாறி நாம் கல்கியாகின்றோம்.

ஒரே நிலையில் ஆண்டவனின் பெயரை மட்டும் உச்சரித்துக் கொண்டு… ஆண்டவன் பால் செல்வதல்ல வாழ்க்கை

 

மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்…! ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்…! என்றால் அப்படிப்பட்ட ஆண்டவன் எங்குள்ளான்…?

1.ஒன்றுடன் ஒன்று இணைந்தது தான் “ஆதி சக்தியின் நிலையே….!”
2.காற்றும் நீரும் மோதுண்டால் “ஒளி..” உருவாகின்றது.
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் “ஜீவன்…” உண்டாகிறது.
4.ஒளி நீர் ஒலி எல்லாமே சேர்ந்த பிறகுதான் அந்த ஜீவனுக்குச் “சுவாசத் துடிப்பே…” வருகிறது.
5.சுவாசத் துடிப்பு வந்தவுடன் பல உணர்வின் எண்ணங்களுடன் அந்த ஜீவன் (அணு) மோதி மோதி “ஈர்க்கும் சக்தி பெற்றுச் சுழல்கிறது…”

அந்த ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது தனக்குள் சேமித்த குணத்தின் தன்மைக்கொப்ப இந்தப் பூமியில் உள்ள பல சத்துகளுடன் மோதி மோதி தன் வளர்ச்சிக்கு அதன் சுவாசத்திற்கொப்ப “வழித் தொடரைப் பெறுகின்றது…”

ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில்… “ஜீவனே பெற முடியாது…!”

இரண்டு நிலைகள் கொண்ட நிலையில் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழல்வது தான் இந்த அகண்ட அண்டத்திலுள்ள எல்லா ஜீவன்களும்…! (மண்டலங்களாக இருந்தாலும் சரி உயிரினங்களாக இருந்தாலும் சரி அப்படித்தான்…!)

1.தனித்த (சக்தி) ஆண்டவன் என்று எங்கே இருக்கின்றான்…?
2.ஆண்டவனின் பெயரை ஜெபித்துக் கொண்டே நாம் எங்கே செல்லப் போகிறோம்…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே (பேரருள் பேரொளி) அந்த மோதலின் சுழற்சியில் தான் உள்ளது.

ஆதி சக்தி என்பது விஷம். அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது ஏற்படுவது வெப்பம். வெப்பத்தினால் ஈர்க்கும் காந்தமாகி மற்றதைக் கவர்ந்து ஒரு திடப் பொருளாகின்றது… “பரம்பொருள்…”

மோதவில்லை என்றால் எதுவுமே சிருஷ்டியாகாது. ஒன்றுடன் ஒன்று மோதவில்லை என்றால் ஆண்டவன் என்ற சொல்லுக்கே பொருள் இல்லை…! மோதலினால் ஏற்படும் அந்தச் சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் உருவங்களாகி மனிதன் வரை வளர்ச்சி பெற்று வந்துள்ள நாம்

1.எல்லாமில் எல்லாமாக….
2.”ஒளிரக் கூடிய எல்லாமே ஆண்டவன் தான்…!” என்று உணர்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமையின் நிலைகளை மாற்றியமைக்கும் சக்தியை ஞானிகள் “நரசிம்மா…” என்று காட்டுகின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் செலுத்தப்படும்போது உடலுக்குள் எதையும் உட்புக விடாதபடி வாசல்படி மீது அமர்ந்து தீமைகள் வராதபடி இங்கேயே பிளந்து விடுகின்றான். உள்ளே சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.

அன்றாட வாழ்க்கையில் தீமை செய்வோரைப் பார்க்கின்றோம். அதன் மூலம் தீமை செய்தான் என்று நாம் அறிந்து கொள்ள உதவுகின்றது.

ஆனால் தீமை செய்வான் என்று முதலில் பதிவு செய்து கொண்டால் என்றால் அந்தத் தீமையினுடைய நிலைகளை அடக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.

பின் எங்கள் பார்வை எல்லோரையும் நல்லதாக்க வேண்டும். என்னைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை நாம் பதித்து விட்டால்
1.அவர் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் அது பதிவாகாது.
2.அதை ஈர்க்கும் தன்மை வராது.

இப்படி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் வலு கொள்ளும் போது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது அவனுடைய தீமையின் உணர்வை இதை அடக்கும்.

இதைத்தான் நீ விழித்திரு என்று ஞானிகள் காட்டுகின்றனர்,

அதை விடுத்துவிட்டு… நாம் “எனக்கு இது தேவை… அது தேவை…” என்றும் “நான் இன்னாருக்கு நல்லது செய்தேன்… ஆனால் எனக்குத் தீமை செய்தான்…” என்றால் நம்மை இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்து செல்லும்.

ஆகையினால் எந்த நல்லதைச் செய்தேனோ அந்த நல்லதின் தன்மைகள் அங்கே விளைதல் வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் எண்ணுதல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை அதனுடன் வலு சேர்த்துக் கொண்டு இதை நாம் வலுப்படுத்தினால்
1.நமக்குள் தீமை விளையாது.
2.நம்மைப் பார்க்கும்போதே தீமையை விளைவிக்கும் நிலைகள் அங்கே ஒடுங்கும்.

இது தான் நரசிம்மா. வாசல்படி மீது அமர்ந்து (சுவாசிக்கும் இடம்) நமக்குள் நுகரும் சக்தி இங்கு வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமையை விளைவிக்கும் எண்ணங்கள் நமக்குள் உருவாகாது.
2.தீமையை விளைவிக்கும் வித்து இங்கே உருவாகாது.
3.அது வினையாக வராது. வினைக்கு நாயகனாக இதை ஏற்காது.

அதைத்தான் கோதண்டத்தை முறித்த பின் சீதாவைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா…! என்று காட்டுகின்றார்கள்.

அதாவது தீமை செய்யும் உணர்வுகளை முறித்து விட்டால் மகிழ்ச்சியைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ள முடியும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

தீமையை முறிக்கும் நிலையாக அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து கொண்டிருந்தால் நமக்குள் அரவணைக்கும் சக்தியாகத் தனக்குள் நுகர்ந்து நாம் என்றும் மனிதன் என்ற நிலைகளில் முழுமை அடைய முடியும்.

அந்த மெய் ஞானியின் உணர்வுடன் ஒன்றி பிறவியில்லாப் பெரு நிலையை அடைய முடியும்.

குரு கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் பலன்

 

எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து “நோய் போய்விடும்…” என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது…? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது…? என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள்…? என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும் நிவர்த்தி செய்ய முடிந்தது.

நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன். அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினைப் பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு… உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்…”

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

மெய் ஒளியான அக அழகைக் காண முயலுங்கள்… பேரருள் பெற்று பேரொளியாக நிச்சயம் மாறுவீர்கள்

 

1.கண்ணாடியில் படிந்துள்ள தூசியைத் துடைத்தால் தான் நம் முகம் தெளிவாகத் தெரியும்.
2.இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் காண முயல்கிறோம்.
3.வெயிலில் உள்ள பொழுது தான் நிழலுக்காக ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையிலே தான் சுழன்று கொண்டுள்ளோம். அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலுக்குள் கூட்டிக் கொண்டுள்ளோம்.

இந்த நிலையை மாற்றி உண்மையான ஒளியைக் காண முயல்கின்றோமா…? சற்றுச் சிந்தியுங்கள்…!

கண்ணாடியில் உள்ள தூசியை அகற்றிவிட்டுத் தெளிவான உருவைக் காண ஆசைப்படுகின்றோம். ஆனால்
1.நம் உடலிலுள்ள அசுத்த அலைகளையும் தீமையான எண்ணங்களையும் மாற்றிவிட்டு
2.நம்முடைய உண்மையான அழகைக் காண விரும்புவதில்லை…!

நம்மிடம் உள்ள அசுத்த அலைகளை அகற்ற “நாம் ஆசைப்படாமல்…!”
1.கடவுள் வந்து தானாக அகற்றுவான்……! என்று
2.தெய்வத்திடம் வேண்டி அக அழகைக் காண விரும்புகின்றோம்.

ஒரு செம்பில் உள்ள அசுத்த நீரில் அதற்கு மேல் நல்ல நீரை ஊற்ற ஊற்ற நல்ல நீரும் அசுத்த நீரும் சேர்ந்து வெளிப்பட்டுப் பிறகு அனைத்துமே நல்ல நீராக மாறுகின்றது.

இதைப் போன்று தான் நம்மிடம் உள்ள தீய அணுக்களையும் அசுத்த உணர்வுகளையும் அகற்ற
1.நாம் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியின் ஈர்ப்பினால்
2.மேலும் மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வின் அலை அதிகப்படும் பொழுது
3.தீய அணுக்கள் எல்லாம் பல ரூபத்தில் நம்மிடமிருந்து வெளிப்பட்டுச் சென்றுவிடும்.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆன்மா ஏறியிருந்தாலும் தீமையான உணர்வுகள் நம்மிடமிருந்து வெளிப்படும் பொழுது அந்த ஆன்மாவிற்குகந்த ஆகாரம் கிடைக்காததால் அதன் பாதிப்பான உணர்ச்சியின் தூண்டுதலும் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது.

இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் தான் உங்களுக்குள் வளர்ச்சியின் தன்மை கூடும். ஏனென்றால்
1.இந்தப் பிரம்மாண்டமான அண்டசராசரங்களில் உள்ள
2.அனைத்து சக்திகளையும் அறியும் ஆற்றல் மனித ஆன்மாவிற்குத்தான் உண்டு.
3.மனித ஆன்மாவினால் முடியாத சக்தி எந்தச் சக்திக்குமில்லை.

ஆகவே இந்த உடலில் நாம் வாழும் காலத்தில் உயர் ஞானத்தின் சக்திகளைச் சேமித்து உயிரான்மாவிற்கு அதை ஊட்டமாகக் கொடுத்து மெய் ஞானத்தின் வீரிய சக்தியாக நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

உங்களை நீங்கள் நம்புங்கள். மெய் ஒளியான அக அழகைக் காண முயலுங்கள். பேரருள் பெற்று பேரொளியாக நிச்சயம் மாறுவீர்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நிகழ்காலத்தில் வளர்த்தால் எதிர்காலத்தில் நீங்கள் அரும்பெரும் ஞானி ஆகலாம்

நிகழ்காலத்தில் ஒரு பாம்பு தன் இரைக்காக தவளையின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக்கொள்கின்றது.

1.ஆனால் தவளையினுடைய நிகழ்காலம் – பாம்பிடமிருந்து தப்பிக்கக் கூடிய எண்ணம்
2.அந்தச் சந்தர்ப்பம் பாம்பின் விஷம் இதற்குள் அதிகமான பின்
3.எதிர்காலம் பாம்பின் நிலைகளாக உருபெறுகின்றது
4.பாம்பின் உடலுக்குள் சென்று தவளை பாம்பாகப் பிறக்கின்றது.
5.ஆக தவளையின் இந்த நிகழ்காலம் அதனுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது.

இப்பொழுது மனிதனாக இருக்கும் நாம் வேதனைப்படுவோருடைய உணர்வை நாம் கேட்கின்றோம். அந்த வேதனை உணர்வுகள் நமக்குள் ஆகிவிட்டால் அந்த வேதனை வளர்ச்சி ஆகிவிட்டால்… “வேதனை என்ற உணர்வுக்கு” – நம் எதிர்காலத்தை அமைத்து விடுகின்றது.

இதைப் போன்று கடும் தீமைகளில் இருந்து நாம் தப்புதல் வேண்டும்.

ஏனென்றால் இன்றைய மனிதனின் வாழ்க்கையில் எத்தனை துயரங்களை எண்ணுகின்றோமோ அவை எல்லாம் எதிர்காலத்தை நிர்ணயித்துவிடும்.

நாம் நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டுமென்றால் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறுதல் வேண்டும்.

1.நமக்குத் துன்பம் வரும்பொழுதெல்லாம் அதை மறக்க
2.மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் – இந்த நிகழ்காலம்
3.எதிர் காலத்தில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.

இதை நீங்கள் பெறும் தகுதிக்கு சிவன்ராத்திரி என்றும் நீங்கள் விழித்திருக்க வேண்டும் என்றும் சொல்வது இதுதான்.

1.ஏனென்றால் எத்தகைய தீமையை நாம் கேட்டுணர்ந்தாலும்
2.”அது நமக்குள் உட்புகுந்து” அது நம் எதிர்காலத்தை நிர்ணயித்துவிடக்கூடாது.
3.நிகழ்காலத்தில் அதை வளர்த்திடக் கூடாது.

நிகழ்காலத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் எதிர்காலம் நாம் ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.

இதைக் காட்டி உணர்த்துவதற்குத்தான் யானையின் சிரசை மனித உடலில் பொருதி விநாயகரைக் காட்டினார்கள் ஞானிகள்.

மிருக நிலையில் சேர்த்துக் கொண்ட நிலைகளில் அதனுடைய நிகழ்காலத்தில் ஒவ்வொரு சரீரத்திலும் காத்துக் கொண்ட உணர்வுகளை வளர்த்து வளர்த்து அதனின் எதிர்காலமாக – இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கும் துருவ மகரிஷியும் அவரைப் பின்பற்றி சென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர வேண்டும்.

1.இந்த நிகழ்காலத்தில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும்
2.அந்தத் தீமையை நீக்க அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்
3.நம் நிகழ்காலம் எதிர்காலத்தில் ஞானிகள் அடைந்த எல்லையை அடைய முடியும்.

ஏனென்றால் பண்பால் அன்பால் பரிவால் எனக்கு இப்படிச் செய்தார்களே… எனக்குத் துரோகம் செய்தார்களே… என்று இந்த நிகழ்காலத்தில் நாம் அதிகமாக மற்றவருடைய எண்ணத்தை அதிகரித்து விட்டால் என்ன ஆவோம்…?

நாம் யார் மேல் பகைமை கொண்டோமோ அந்த உணர்வுகள் நமக்குள் வளரப்பட்டு
1.இதை நிகழ்காலத்தில் வளர்ந்தபின்
2.எதிர்காலம் அந்தப் பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து
3.அவர் உடலில் புகுந்து
4.இந்தப் பகைமையை தீர்க்கும் உணர்ச்சிகளின் வேதனையை உருவாக்கி அந்த உடலைத்தான் வீழ்த்தும்.

பின் அந்த வேதனையை உருவாக்கிய பின் எத்தகைய வேதனையின் உணர்வுகள் அணுக்கள் ஆனதோ அடுத்து தேய்பிறையாக மற்ற மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த சிவன்ராத்திரி – நீ விழித்திரு.
1.பல கோடிச் சரீரங்களில் இருந்து நீ தப்பினாய்
2.எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் வளராதபடி அருள் உணர்வைச் சேர்க்கும் நிலையில்
3.இனி எப்பொழுதும் நீ விழித்திருத்தல் வேண்டும்.

அகஸ்தியன் அருளைப் பெற மறந்து விடாதீர்கள்… தவறி விடாதீர்கள்

 

தென் துருவம் வட துருவம் என்கிற போது
1.தென் துருவம் பூமியின் அச்சிலே இருக்கிறது
2.வட துருவத்தின் வழியாக வரும் போது… மற்றது எது வருகிறதோ ஒதுக்கித் தள்ளும்.
3.தென் துருவம் தனக்குள் இழுத்துக் கொள்ளும்… பிடிப்பாக இருக்கும்.

இதனுடைய காந்தப் புலனறிவுகளை அறிந்து கொண்டு இன்று விஞ்ஞான அறிவுகளில் பல விதமான வித்தைகளைச் செய்கின்றனர்.

துருவப் பகுதியை அறிந்து இன்று விஞ்ஞானி அதைச் செய்கின்றான். அன்று துருவத்தின் எல்லையில் நின்றான் அகஸ்தியன்

அந்தத் துருவத்தின் எல்லையில் அகஸ்தியன் இருக்கும் போது வானுலக ஆற்றலை அறிந்தான். துருவத்தின் எல்லையில் அவன் நின்று
1.துருவத்தில் நீளமாக இந்தப் பூமி மாறும் போது (கோழி முட்டை போல் நீளமாக) அதனின் உணர்வை மாற்றியமைத்து
2.சமமான நிலையில் வைத்தான் அகஸ்தியன்… இன்றும் அவன் வைத்தது தான் ஓடிக் கொண்டுள்ளது.

ஏனென்றால் சர்வத்தையும் தனக்குள் கவர்ந்திடும் சக்தியாக அவன் எல்லை கடந்து தன் எண்ணங்களை விண்ணிலே செலுத்தி… உணர்வின் தன்மை ஆற்றலைப் பெறும் போது “துருவத்தின் வழியாகத் தான்…” இவன் நுகர்ந்தறிய முடிந்தது.

அதன் வழி அறிந்த அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. நம் பூமி துருவத்தின் வழியில் அதைக் கவர்கிறது.

அப்படிக் கவரப்படும் போது
1.அவன் எப்படி ஒளியின் தன்மை பெற்றானோ… பூமியைத் திசை மாற்றினானோ…
2.இதைப் போல் அவன் உணர்வின் தன்மையை நாம் அனைவரும் பெற முடியும்.
3.அப்படிப் பெறுவதற்குத் தான் அகஸ்தியன் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தான்.

அதாவது முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது என்று மனித உடலில் யானையின் தலையைப் போட்டு
1.வடமேற்காக விநாயகரை வைத்து… வடகிழக்காக விண்ணிலே நம்மை உற்றுப் பார்க்கும்படி செய்து
2.அகஸ்தியன் எப்படி ஒளி உடல் பெற்றானோ துருவ நட்சத்திரமாக ஆகும் பருவம் பெற்றானோ
3.தன் இன மக்கள் அதைப் பெறுவதற்காக… அவன் இருக்கும் போது அத்தகைய நிலையை உருவாக்கி விட்டுச் சென்றான்.

அவன் வழியிலே சென்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் பெற வேண்டும். நம் உடலில் ஆழமாக ஊழ்வினை என்ற வித்தாக அதைப் பதிவாக்கிக் கொண்டால் காற்றுக்குள் மறைந்திருக்கும் அருள் உணர்வை நாம் பெற முடியும்.

ஏனென்றால் அவன் சர்வ சக்தியும் பெற்றவன். தெற்கிலிருந்த அந்த உணர்வுகள் அது வழக்கில் வந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து அவன் ஒளியின் உடல் பெற்றான். அந்த உணர்வின் தன்மை வடக்கிலிருந்து பூமிக்குள் பரவிக் கொண்டு தான் உள்ளது.

1.அது வரும் பாதையில் வடகிழக்கினை உற்று நோக்கி – அதிகாலையில் நாம் நுகர்ந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே எடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

அவன் உணர்வை எடுத்து நமக்குள் உருவாக்கினால் நமது உயிர் அதன் வலுவாகக் கொண்டு செல்கிறது. ஆகவே அந்த அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற மறந்துவிடாதீர்கள்… தவறி விடாதீர்கள்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும். அந்த உணர்வுகளை வலு ஏற்றிக் கொள்ளுங்கள். அவன் உணர்வைப் பெற்ற பின் அவன் அடைந்த எல்லையை நாம் அடையலாம்.

இந்தப் பூமியில் உயிரணு தோன்றி உணர்வின் தன்மை ஒளியாகி ஆன பின்
1.சூரியனே அழியலாம்… அத்தகைய சந்தர்ப்பம் வந்து கொண்டுள்ளது
2.இந்தப் பிரபஞ்சமே அழியப் போகிறது… இதிலே சிக்கிய உயிரணுக்கள் எல்லாம் மீண்டும் வேறு பிரபஞ்சத்தில் பரவும்
3.எந்தப் பிரபஞ்சம் கவர்கிறதோ அங்கே சென்று அடுத்த உடல் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேதனை தான் இருக்கும்.
4.நரகலோகத்தைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே இன்று இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்த அருள் உணர்வைச் சேர்த்துக் கோண்டால் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் செல்கிறோம்.

உன்னையும் ரிஷியாக ஆக்கத்தான்.. ஈஸ்வரபட்டனாகிய யான் கடும் தவம் செய்து இந்த உலகில் சுற்றிக் கொண்டுள்ளேன்…!

 

“ரிஷி நிலை…!” பெற்ற மகரிஷிகளின் நிலையெல்லாம் ஒன்றிரண்டு நாளில் பாட நிலையில் சொல்ல முடியாத நிலையப்பா.

ரிஷி அருள் பெற்றவர்கள் எல்லாம்
1.இவ்வுலகை… இவ்வுலக மக்களுக்காக… இவ்வுலக நன்மைக்காக… தாங்கள் பெற்ற அருளை
2.பல ரூபத்தில்… பல வழிகளில்… பல உடல்களில் வந்து… பல கோயில்களின் சிலைகளின் ரூபத்திலும் வந்து…
3.ஆண்டவனை அடிபணிந்து.. ஆண்டவன் ஒருவன் உள்ளான்… அவன் நம்மைக் கைவிடமாட்டான்… என்ற ஒரே நிலையில் அண்டி வருபவர்களுக்கு
4.ஆண்டனவனாக வந்து அருள் புரிகிறார்கள்…! என்று பல பல தடவை சொல்லிவிட்டேன்.

பல புராதனக் கோயில்களில் சென்றிருந்தால் தெரியும். கோயில் வாசலின் உட்புகும் பொழுதே கோயிலின் மணம் ஒன்று எல்லோருக்குமே தெரியுமப்பா.

பல மூலிகைகள் கலந்த அவ்வாசனையை “என்ன…” என்றே நாம் புரிந்திட முடியாத நிலையில் அம்மணம் வீசிடுமப்பா. அம்மணங்கள் எங்கிருந்து வருகின்றன…?

பல பக்தர்கள் ஒன்றுகூடி பிள்ளையாரப்பா…! முருகா…! ஈஸ்வரா…! கோவிந்தா…! என்ற நாமத்தை ஒரே நிலையில் ஒலித்துக் கொண்டே அக்கோவிலுக்குள் செல்கிறார்கள்.

அக்காலத்தில் இந்த ரிஷிகள் தவமிருந்து அமைத்த கோவில்களில் எல்லாம் இம்மணங்கள் வீசிடும். அந்த ரிஷிகள் தான் பெற்ற ஈஸ்வர சக்தியில் இருந்து பல மணங்களைத் தன் வழிக்கு ஈர்த்து வரும் மானிடர்களுக்கு எல்லாம் “அம்மணங்களை அளிக்கிறார்கள்…!”

சித்தர்களின் அருளையும் ரிஷிகளின் அருளையும் சிந்தித்துப் பார்க்கவே முடிந்திடாதப்பா. அந்நிலையில் அருள் பெற்றவர்கள் பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் தவப்பயன் பெற்ற ரிஷிகளும் இல்லாவிட்டால் இவ்வுலக நிலையே வெறும் குட்டிச்சுவராகி இருக்குமப்பா.

அந்த மகரிஷிகளும் ஞானிகளும் இக்கலியின் கடைசியில் கடும் தவமிருக்கிறார்களப்பா. கல்கிக்கு இம்மானிட மக்களை எப்படியாவது ஈர்த்துச் செல்ல வேண்டும். இக்கலியில் மடியாமல் கல்கிக்கு வந்திட வேண்டும் என்று பேராவல் கொண்டு பெரும் தவமுள்ளார்கள்.
1.கல்கியின் ஆரம்ப நிலைதானப்பா
2.சில இடங்களில் மனித உள்ளங்களில் இந்த மெய் ஞானத்தின் நிலை பரவி வருகின்றதப்பா.

ஏனென்றால் இக்கலியில் உள்ள மனிதர்களின் நிலையை “என்ன…?” என்று எண்ணிப் பார்த்திடவே முடியவில்லையப்பா.
1.ஆசை
2.அதியாசை
3.பேராசை
4.கலியில் கடைசி நிலை இதுதானப்பா. பேராசை நிலை,
5.இந்நிலையில் யாரும் (இங்கே) தனித்து நிலைத்திட முடியாதப்பா.

ஆகவே காலமுடன் கலந்துதான் உயிரான ஈசனை எண்ணித் தியானிக்க வேண்டுமப்பா.

1.ஊர் நிலையில்…
2.உலக நிலையில் ஒத்துப் போய்..
3.உங்கள் எண்ண நிலையில் மட்டும் ஈசனின் அருளை மாற்றிடாமல் தியானித்திடுங்களப்பா… ஜெப அருளைப் பெற்றிடுங்கள்…!

அச் சித்தர்களின் நிலையையெல்லாம் நீங்கள் அறிந்திட மட்டும்தான் இந்த ஜெப அருள் இல்லையப்பா. இந்நிலையில் இருந்து கொண்டே உன்னையும், சித்தராகவும் ஞானியாகவும் ரிஷியாகவும் ஆக்கத்தான்… கல்கியில் கலக்கத்தான்… கடும் தவம் செய்து “ஈஸ்வரபட்டனாகிய யான் இந்த உலகில் சுற்றிக் கொண்டுள்ளேன்…!”

புரிந்த பாடத்தை நல்ல நிலையில் ஏற்றுக் கொள்ளுங்களப்பா. என்றும் என் அருள் உங்கள் எல்லோருக்கும் உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் அருள் ஞானிகள் கண்ட உண்மைகளை உபதேசிக்கின்றோம். அதையெல்லாம் புரியவில்லை என்று எண்ணினீர்கள் என்றால் அது புரியாத அணுவாகத் தான் உங்களுக்குள் மாறும்.

புரிய வேண்டும்… என்று “ஏங்கிப் பெற்றால்” அது கருவாகி உங்களுக்குள் அணுவாக உருவாகும்.

அந்த அண்டமும் அகண்ட அண்டமும் எப்படி உருவானது என்ற நிலையை அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்த அறிய முடியும்.

அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து துருவனாகி துருவத்தின் ஆற்றலை அறிந்ததனால் அந்த அறிவின் தன்மையை விளையச் செய்து அவன் உடலை உருவாக்கிய உயிர் ஒளியின் சரீரமாக இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.

அதனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

1.ஆனால் இடைமறித்து
2.சாமி என்ன சொல்கிறார்…!
3.நமக்கு என்ன அர்த்தமாகின்றது?
4.அவர் “என்னென்னமோ” சொல்கிறார் என்றால் என்ன ஆகும்…?

“நான் படிக்காதவன் தான்…” ஆனால் பேசுகின்றேன்.

படித்தவர்கள் சிந்திக்கும் பொழுது படித்ததை வைத்து இது என்னமோ சொல்கின்றார் என்ற நிலைகளில் “விட்டுவிடுவார்கள்”

1.மிகவும் படிக்காதவர்கள்
2.யாம் சொல்வதை “என்ன சொல்கிறார்…” என்று கூர்ந்து கவனித்தால்
3.அந்த உணர்வின் கருவாகிவிட்டால்
4.தன்னையும் அறிகின்றார் அண்டத்தையும் அறிகின்றார் அகண்ட அண்டத்தையும் அறிகின்றார்.
5.துருவ நட்சத்திரம் தனக்குள் எப்படி ஒளியாக மாற்றுகின்றதோ அந்த நிலையை அடைய முடியும்.

ஆக, நான் சொல்கிறேன் என்றால் எதை வைத்துச் சொல்கின்றேன்..? நான் எந்தப் பாட நூல்களையும் படிக்கவில்லை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் கண்டுணர்ந்தார். அந்த உணர்வின் அணுக்களை எனக்குள் பதிவு செய்தார். இந்த உணர்வின் நினைவைப் பாய்ச்சினேன். அறிந்து கொண்டேன்.

இந்த அண்டங்கள் எப்படி உருவானது என்ற நிலையை அகஸ்தியன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டான். அவனுக்குள் கண்ட உணர்வுகள் அந்த உணர்ச்சியின் தன்மைகள் இந்தப் பூமியில் உண்டு.

1.அதை நுகரும் ஆற்றல் வரும் பொழுது இந்த உணர்வின் தன்மை
2.உணர்த்தும் தன்மையும்
3.உணரும் தன்மையும் வருகின்றது.

இதையெல்லாம் நீங்களும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன்.

“நாங்கள் ஒன்றும் படிக்கவில்லையே” இதை என்றைக்குத் தெரிந்து கொள்ளப் போகின்றோம்…! என்று எண்ணினால் அதைத் தடைப்படுத்துகின்றீர்கள் என்று அர்த்தம்.

ஆனால் இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அகஸ்தியன் எப்படி இன்றும் விண்ணிலே என்றும் பதினாறு என்ற நிலையில் மரணமில்லாப் பெரு வாழ்வாக பிறவியில்லா நிலையாக வாழும் நிலைகள் போன்று
1.மனிதான நாம் அவன் வழிகளிலே சென்றால்
2.நிச்சயம் அங்கே செல்ல முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

 

ஒவ்வொரு வருடமும் நமக்குள் வெறுப்பு கோபம் குரோதம் எல்லாம் விளைந்திருக்கின்றது. அதிலே கோபமான உணர்வு அதிகமாகியிருந்தால் நம் அனுபவத்தில் போன வருடத்தில் நாம் எப்படிக் கோபித்தோம்…? என்று சிந்தித்து இந்த வருடத்தில் நாம் அதை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் வருடங்கள் மொத்தம் 60 என்றால் அந்தக் கணக்கின் பிரகாரம் நம் பூமி 2000 சூரியக் குடும்பத்தைச் சுற்றி வருகிறது. இதே நேரத்தில் போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் பார்த்தால் வேறு ஒரு சூரியப் பிரபஞ்சத்தில் நிற்கும் (சுழன்று வரும் பகுதிகள்).

1.எந்தச் சூரியக் குடும்பத்தைச் சந்திக்கின்றதோ அதன் உணர்வை நம் பிரபஞ்சம் இழுத்துக் கவரும் போது
2.அது நல்ல பிரபஞ்சமாக இருந்தால் நமக்கும் நல்லதாகும்…
3.இல்லை என்றால் அதனதன் நிலைக்கொப்ப மாற்றங்கள் வரும்.

ஆகவே அதற்கொப்ப இந்த வருடத்தில் எப்படித் திருப்பம் ஏற்படுகிறதோ அது இந்த வருடம் முழுமைக்குமே அப்படித் தான் இருக்கும் (60 வருடத்தில் ஒவ்வொன்றிலும்).

அதிலே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வேறு இடத்திற்குப் போகும் போது அதன் உணர்வு மாறும்.
1.மாறும் போது அதற்குத் தக்கவாறு நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
2.இதை மனிதன் ஒருவனால் மாற்ற முடியும்.

இப்படி இந்த 2000 சூரியக் குடும்பத்தில் நாம் ஒத்து வாழும் போது நமக்குள் மாற்றங்கள் வருகிறது.

இதே மாதிரித் தான் நாம் எத்தனை பேரிடம் பழகுகின்றோமோ அது எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரபஞ்சம் தான். அந்த மனிதரிடத்தில் (பிரபஞ்சத்தில்) கஷ்ட நஷ்டங்களைக் கேட்கப்படும் போது அவருடைய கஷ்டம் எல்லாம் நமக்குள் விளையத் தொடங்குகிறது.

அதை மாற்றிடும் நிலையாக
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்தால் நம் உடலில் அது அதிகமாகிறது… கல்கியாகிறது.

வேதனை என்ற உணர்வு அதிகமானால் அது கலியாகிறது. கலியும் கல்கியும் நமக்குள் மாறி மாறி வருகின்றது. ஆனாலும்
1.கல்கி என்ற நிலைக்கு வரப்படும் போது
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும்.

அதை நாம் பெற்றோம் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றியபின் அதில் உள்ள செம்பு பித்தளை வெள்ளி எல்லாம் ஆவியாகித் தங்கம் எப்படிப் பரிசசுத்தமாகிறதோ அதைப் போல் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்தால் நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த அது உதவும்.

இதை நாம் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த வருடத்தில் நாம் எதைத் தூய்மைப்படுத்தாமல் விட்டோம்…? இந்தப் புது வருட்த்தில் எதை எதைச் சந்திக்கின்றோம்…? என்பதை உணர்ந்து அந்தத் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

ஒவ்வொரு குணத்திலும் சிறு சிறு திரைகளாக இருக்கும் அதை நீக்கிவிடலாம். பெரும் திரையாக மாறிவிட்டால் அவைகளை மாற்றுவது சிரமம்.

சித்திரை…! நம் உடலில் ஒவ்வொரு குணத்திலும் சிறு சிறு திரைகளாக (தீமைகள்) வருவதை நாம் நீக்கிக் கொண்டே வர வேண்டும். நீக்கிக் கொண்டு வந்தால் நாம் கலி என்ற நிலைக்கு வந்துவிடுகின்றோம்.
1.கலி முழுமை அடையப்படும் போது கல்கிக்கு வந்துவிடுகின்றோம்.
2.தீமைகளை நீக்கும் உணர்வு கலியாகிக் கொண்டே வரும் போது கல்கியாகவே மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
3.ஆக ஒளி என்ற உணர்வு வரும் போது கல்கியாக மாறுகிறது
4.கல்கி என்ற நிலை ஆனால் உயிருடன் ஒன்றி என்றும் நிலையான நிலை பெறுகின்றோம்.

அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ உபாயங்களைக் காட்டுகின்றார்கள். அதை நாம் பின்பற்றுதல் வேண்டும்.

எல்லாம் தந்து அருள் பெறுவது அருளல்ல…! வரும் நிலையிலிருந்தெல்லாம் மீண்டு பெறுவதுதான் ஆண்டவனின் அருள்

ஏழ்மையில் இருப்பவனின் எண்ணத்தில் அவன் எண்ணமேதான் அவனை ஏழ்மையாக்குகின்றது. செல்வந்தனின் நிலையும் அதுதான். செல்வந்தனும் அவன் எண்ணத்தில்தான் செல்வந்தன் ஆகின்றான்.

ஏழ்மையும் செல்வமும் அவனவன் எண்ணத்தில் இருந்து தான் வருகின்றன.
1.பிறப்பில் வருவது அல்ல எதுவுமே…!
2.ஜாதகத்தில் வருவது அல்ல எதுவுமே…!
3.எண்ணத்தில் வரும் “எண்ணத்தையே கொண்டு……!”
4.அவரவர்கள் வழிக்கு வாழ்கிறார்கள் இக்கலியில் பிறந்த பாமர மக்கள் எல்லாருமே…!

ஆகவே
1.வரும் சோதனையைக் கண்டு கலங்கிடாதே.
2.எல்லாம் தந்து அருள் பெறுவது அருளல்ல…!
3.வரும் நிலையிலிருந்தெல்லாம் மீண்டு பெறுவதுதான் ஆண்டவனின் அருள்.

ஏமாற்றி வாழ்பவன் வாழ்கின்றான். தர்மமுடன் வாழ்பவனுக்குப் பல தடைகள் ஏனப்பா என்கிறாய்…! “தடையில் இருந்து மீள்பவன் தான் தர்மவான்…!” சத்திய நியாயத்துடன் வாழ்பவனுக்குச் சத்திய சோதனைதான் வந்துவிடும்.

அச்சோதனையில் இருந்து மீண்டால்தான் சத்தியவனாகலாம். சகலத்தையும் அளித்துவிட்டு… “சத்தியவான் நிலையை எப்படியப்பா எய்த முடியும்…?”

சத்தியத்துக்குச் சோதனை வந்தால்தான் அவன் சத்தியவான் ஆகலாம்…!

முருகா……! என்று கோவிலுக்குச் சென்று வணங்கி விட்டால் உடனே உன் நிலைக்கு முருகன் ஓடி வந்து உன் நிலைக்கு எல்லாமே அவன் அளித்து விட்டால் ஆண்டவன் என்பவன் எதற்கப்பா…?

நீ உண்ணும் உணவையே எடுத்துக் கொண்டால் உழுது பயிர் செய்து… அப்பயிரில் விளையும் தானியத்தைப் பக்குவ நிலை செய்து… அதன் பிறகு சமைத்துத் தான்… நீ உண்ண முடிகிறதப்பா…!

சிறு உதாரணத்திற்கு இதைச் சொல்லுகிறேன்.
1.எந்த நிலையும் வேலை செய்யாமல் எந்தக் கஷ்டமும் படாமல் எதுவுமே வருவதில்லை.
2.அவ்வாண்டவன் அருளைப் பெறவும் பல சோதனைகளில் இருந்து மீண்டுதான் ஒரு நிலையை எய்தி
3.அவன் அருளையே… உன்னுள் இருக்கும் அவனை நீ… உன்னையே நீ கண்டிடலாம்…!
4.வரும் தடங்கலைத் தடங்கலாக எண்ணிடாமல் ஜெயத்துடன் ஜெயித்துக் காட்டிடப்பா.
5.உன் ஜெபத்துக்கு என் அருள் உண்டு…! என்ற ஒரு எண்ணம் மட்டும் உங்களுக்கு இருந்தால் போதும்,
6.உன் ஜெபத்துக்கு நான் வருகிறேன்…!
7.ஜெபிக்க வேண்டியது நீ தானப்பா…
8.புரிகிறதா பாடநிலை…? உழுதால் தான்… சமைத்தால் தான் உண்ண முடியும்.

ஆண்டவனே… என்று எண்ணி வாயைத் திறந்தால் உணவை ஆண்டவனா வந்து உன் உடலுக்கு அளித்திடுவான்…..? புரியாத பாமரர்கள் “பழியைப் போடுவதெல்லாம் அவ்வாண்டவனின் மேல்தான்…!”

ஆண்டவன் என்பது யாரென்று புரிந்து விட்டதா… உங்களுக்கு…!

ஒவ்வொரு மனிதனும் ஆண்டவனாகலாம்…! எல்லாமே அவன் எண்ணத்திலும் சுவாசத்திலும்தான் உள்ளது.

ஆண்டவனாக வாழ்வதும் அழுகும் உடலை அழுகவிட்டு மனச்சோர்வுடன் மடிவதும் எல்லாமே மனித எண்ணத்தில் இருந்து வருவது தான். இந்நிலையைப் புரிந்து கொண்டுதான் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் ஒளிச் சரீரம் என்ற அந்த நிலையை எய்தினார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவு கொண்டுதான் நாம் வாழுகின்றோம். அதே சமயத்தில் சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும்போது அவர்களை நாம் பண்புடன் அணுகி அதைக் கேட்டறிகின்றோம்.

அப்பொழுது அந்த உணர்வுகள் நாம் நுகர்ந்தறிந்தாலும் அது நம் உடலுக்குள் அணுக்கருக்களாக மாறி விடுகின்றது.

அவர்கள் உடலில் வேதனையால் நோயானபின் தன் குடும்பத்திற்காகச் செல்வமோ சொத்தோ இதைச் சேர்த்து வைத்து இந்த உடலைவிட்டு பிரியப் போகின்றோமே என்ற ஏக்கத்துடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று மரணமடைகின்றார்.

1.அப்பொழுது அவரைப்பற்றி நாம் கேட்டறிந்த உணர்வுகள்
2.நமக்குள் அந்த அணுவின் தன்மை அதிகமாக வளர்ந்திருந்தால்
3.அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி நமக்குள் மன வேதனை கொடுக்கும் நிலையாக முதலில் மாறும்.

அதே சமயத்தில் அந்த வேதனையுடன் வெளிப்பட்ட அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்தால்
1.அது இந்த வேதனை உணர்வை உணவாக எடுத்து
2.அதனுடைய இனங்களை நம் உடலுக்குள் பெருக்கிவிடும்.

அப்படி இருந்தால் இப்பொழுது யாம் சொல்லும் இந்த உபதேசத்தின் உணர்வுகளை நுகரவிடாது தடுக்கும்.

இதைத் தடைப்படுத்தும் நிலைகள் வரப்படும்போது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலையில்
2.இப்பொழுது தியானத்தில் உட்கார்ந்திருந்தாலும்
3.எழுந்து ஓட வைக்கும்.
4.ஏனென்றால் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதனால் அதன் வழி அதை வழிப்படுத்தும்.

ஆகவே… இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் அதை அடக்கப் பழகிக் கொள்வதற்கே இதைச் சொல்கின்றோம்.

ஆனால் பழகவில்லை என்றால் உடலுக்குள் இருக்கும் ஆன்மா அதன் வழியில் நம்மை அழைத்து சென்றுவிடும். மீண்டும் உடல் பெறும் உணர்வைத் தான் நாம் பெற முடியும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் இந்த மன வேதனை வரப்படும் பொழுது மன நோயாக வருகின்றது. உடல் நோயாக மாறி பின் இந்த உடலையே மாற்றியமைக்கும் சக்தியாக மனிதனல்லாத உருவாக மாற்றிவிடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி தியானத்தில் உட்கார முடியவில்லை.., எண்ணங்கள் எங்கெங்கோ ஓடுகின்றது.., ஒரு நிலைப்படுத்த முடியவில்லை.., இப்படியெல்லாம் சொல்லி “உங்களை எண்ணவிடவில்லை” என்றால்
1.உடனே கண்களைத் திறங்கள்.
2..உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும். எனக்குள் இருக்கும் இருள் மறைய வேண்டும்.
4.மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும்
5.என் உடலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
6.இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7.என் உடலிலுள்ள ஆன்மா அந்த மெய்ஞானிகளைப் போன்ற உயர்ந்த நிலை
8.என்னுள் இருந்தே பெற வேண்டும் என்று ஏங்கினால் அது நமக்குள் அடங்கும்.

ஆக இவ்வாறு எண்ணும்போது அந்த ஆன்மாக்களுக்கும் நற்பயன் கிடைக்கும். அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அணுக்களை அந்த ஒளியின் அணுவாக மாற்றிவிடலாம்.

இதை மறவாது செய்து பழகுங்கள். இதைத் தொடர்ந்து வழிப்படுத்தி வாருங்கள். இது நல்லதாக அமையும். தியானத்தின் மூலம் உங்கள் சக்தியைக் கூட்டிக் கொள்ள முடியும்.

அகஸ்தியனின் ஒளியான உணர்வை எடுத்து… அதை வைத்துத் தான் நாம் எதையுமே அறியும் ஆற்றலாகக் கொண்டு வர வேண்டும்

 

ஒரு மனிதனைப் பார்த்தால் அதனின் உணர்வு நமக்குள் விளைகிறது. எப்படி…?

அந்த மனிதனைப் பற்றி அவர் குணநலன்களைப் பற்றி நம்மிடம் “அவர் மோசமானவர்…” என்று சொல்லி நீங்கள் அதைப் பதிவு செய்தீர்கள் என்றால் அந்த மனிதனைப் பார்த்தவுடனே அன்றைக்கு அவர் சொன்னார் ஆனால் அவருக்கு மோசம் ஆக இருப்பார்.

ஆனால் அவர் சொல்லி விட்டால் என்றால் நாம் பார்த்து மோசமானவர் என்று எண்ணியவுடனே அவர் என்ன பதில் சொன்னாலும் அவரைக் குற்றவாளியாக்கக்கூடிய பதில் தான் வரும்.

1.அன்று மோசம் என்று அவர் சொன்னார்…
2.ஆனால் இன்று வந்து நல்லவன் என்று சொல்கிறார் என்று சொல்லப்படும் போது வித்தியாசம்…!
3.முதலில் சொன்னவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டு அதற்குப் பின்
4.இரண்டாவது அவரைப் பற்றித் தெரியப்படும் போது இதை வைத்துத் தான் அளந்து பார்ப்போம்.

இதை நாம் மாற்றுவதற்கு…
1.மனிதனில் முதலில் ஒளியாகப் பெற்ற அகஸ்தியனின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.அவன் ஒளியான உணர்வை நமக்குள் வளர்க்கப்படும் போது
3.அவர்கள் ஏன் தவறு செய்தார்கள்…? தவறான கருத்தை ஏன் சொல்கிறார்கள்…? என்ற உண்மைகளை எல்லாம் தெளிவாக உணர முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

ஆனால் அவர்களிடம் நாம் நேரடியாகச் சொல்ல வேண்டியதில்லை.
நாம் போய்ச் சொன்னால்
1.இவன் பெரிய யோக்கியன்… என்று நம்மிடம் சண்டைக்கு வருவார்கள்.
2.இன்னும் கொஞ்சம் மனதைக் கெடுக்கும்.

ஆகவே நமக்கு அதிகம் அறிமுகம் ஆகாதவர்களாக இருந்தால்… அவர்களுக்கு உண்மையை உணரும் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

காரணம்… அவர்கள் தவறு செய்யும் போது அவர்கள் செய்த தவறைச் சுட்டிக் காட்டினால் உங்களைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.

ஆகையினால் தவறு செய்யும் நேரத்தில்…
1.அவர்கள் செய்யும் தவறான உணர்வு நமக்குள் விளையாதபடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து அந்தத் தவறை நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி… நம்முடைய கடந்த கால வருட அனுபவத்தை வைத்து
1.நம் தொழிலில் எப்படி நஷ்டம் வந்தது…?
2.பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்றதால் அவனைப் பற்றி எண்ணும் போது திருப்பித் திருப்பி வேதனைப்படும் போது
3.கை கால் குடைச்சல் எப்படி வந்தது…? என்பதையெல்லாம் நாம் தெரிந்து
4.பிறந்திருக்கும் இந்தப் புதிய வருடத்தில் நமக்குள் தீமைகள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

இது மனிதனால் நிச்சயம் முடியும்.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை தரம் திருப்பித் திருப்பி உங்களிடம் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). இந்தப் பதிவை நீங்கள் நினைவாக்கினால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே நீக்கும் திறன் பெறுகின்றீர்கள்.

அது இல்லை என்றால் மாற்ற முடியாது.

உதாரணமாக… சமைக்கும் போது குழம்பில் தெரியாமல் மிளகாயை அதிகமாகப் போட்டுவிட்டால் “காரம்” என்ற உணர்ச்சி தான் உந்தும். மற்ற பொருளைப் பற்றிச் சொல்ல மாட்டோம்.

அதே போல் உப்பு அதிகமாகி விட்டால் குழம்பு கையிக்கத் தான் செய்யும். “உப்பாக இருக்கிறது” என்று தான் சொல்வோம். குழம்பில் போடப்பட்டுள்ள மற்ற சுவையான பொருளைச் சொல்ல மாட்டோம்.

அது எப்படி எல்லாவற்றையும் மாற்றுகிறதோ அதே மாதிரி நம் உணர்வுக்குள் மாற்றி அமைக்கும் திறன் பெற வேண்டும்.

ஆகவே… மாற்றி அமைக்கும் திறன் பெற வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்… கஷ்டப்படுவோர் உடலில் படர வேண்டும்… அவர்கள் தெளிந்த மனம் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டியம் (இது முக்கியம்).

1.மிகவும் கஷ்டப்படுவோராக இருந்தாலும் கூட… சொன்னால் சிலர் கேட்க மாட்டார்கள்.
2.அதே சமயத்தில் தெரிந்தவர்களாக இருந்து அவர்களுக்குச் சொன்னாலும்… இவருக்கு எதற்கு இந்த அக்கறை…? என்று நினைப்பார்கள்.
3.இது இப்படியும் வரும்… அப்படியும் வரும்.

அப்போது மனதால் நாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
1.மீண்டும் மீண்டும் இரத்தத்தில் கலந்து
2.அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

இப்படிப் பழகிக் கொண்டால் பிறருடைய நோயைப் பற்றியோ வேதனையைப் பற்றியோ கேட்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாலும் அந்த நோயோ துன்பமோ நமக்குள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

உயிரான்மாவிற்குச் சேமிக்கும் சொத்தே என்றும் அழியாததாகும்… அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது

 

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் தான் மனிதர்கள் மனதிலே ஊன்றியுள்ளது.

1.உயர்வு எனும் பொழுது அல்லது உன்னத நிலை எனும் பொழுது
2.நம் உடலுக்கு நம் உயிருக்கு அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலையைப் பெறவேண்டும் என்ற
3.அந்த உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் எல்லாம் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

வாழ்க்கையில் சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம். அழியாச் சொத்தை யாரும் எண்ணுவதில்லை. மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை உடலில் உள்ள பொழுதே அதைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

இந்தத் தூல சரீரத்தைத்தான் எண்ணுகின்றார்கள். ஞானச் சரீரத்தை எண்ணிப் பார்ப்பதில்லை.

ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற… நம் உயிராத்மாவிற்கு அழியா நிலை பெற…
1.எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே நம் சுவாசத்தில் என்றுமே எடுத்துக் கொண்டால்
2.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை (உடலை) எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகின்றார்கள்.

வாழும் நாள் எல்லாம் மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்….!
1.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து
2.பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
3.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்த நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது. அந்த நிலையில் நம் உயிருக்குப் பெரும் சோர்வின் தன்மையைத் தான் அளிக்கின்றோம்.

அதையே வளரவிட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத் தான் மேலும் மேலும் பெறுகின்றோம். இதை எல்லாம் அறிந்திடல் வேண்டும்.

ஆகவே
1.நம் உயிரணுவிற்கு நாம் பெறும் ஊட்ட நிலையை
2.அழியாச் செல்வமான ஆத்ம ஜோதி என்ற ஒளி நிலையைப் பெற
3.ஈஸ்வர தியானங்கள் பெற்று அந்த நிலையில் நமக்குக் கிடைத்திடும் அரிய பொக்கிஷங்களை
4.நம் உயிரணுவிற்குச் சேமித்திடல் வேண்டும்.
5.விண்ணிலே ஒளிரும் நட்சத்திரமாகலாம்…!

நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அந்தச் சொத்தே என்றும் அழியாத சொத்தாகும். அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணுவின் துடிப்பின் இயக்கத்தில் ஏற்படும் “வெப்பம் – விஷ்ணு”. உயிரின் இயக்கத்தால் ஈர்க்கும் “காந்தம் – லட்சுமி”.

மகாவிஷ்ணு சர்வத்தையும் “உருவாக்கும்… உணர்வைச் சுழலச் செய்யும்” சக்தி திறன் கொண்டது. உயிரின் காந்தப்புலனை மகாலட்சுமி என்று அதற்குக் காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.

உதாரணமாக நமக்கு வேண்டிய நண்பர் ஒருவர் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் அறிந்துணரும் பொழுது நமக்குள்ளும் அந்த வேதனை வருகின்றது.

அப்போது அந்த வேதனைப்படும் உணர்வைத் தனக்குள் எடுத்து அதைக் கருவாகி உருவாக்கி வளர்க்கும் சக்தி கொண்டு வருகின்றது – மகாவிஷ்ணு அதைத் தன் உடலில் சுழலச் செய்கின்றது.

ஆனாலும் அது தோற்றுவித்த உணர்வுகள் எக்குணத்தின் தன்மை பெற்றதோ அணுவாகும்போது பிரம்மா. விஷ்ணுவின் மகன் பிரம்மா. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

1.அந்த வேதனைப்பட்ட உணர்வின் சக்தியை நுகர்ந்தால்
2.அதன் நிலைகொண்டு கருவாகி உடலுக்குள் உருவாகிவிட்டால்
3.விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் பிறந்த குழந்தை அது
4.எதைப் பற்றி உருவாக்கியதோ அக்குணத்தை உருவாக்கும் திறன் பெற்றது.

அதனால்தான் “விஷ்ணுவின் மகன் பிரம்மா…” என்று சாஸ்திரங்களில் ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள்.

உருவான அந்த உணர்வின் சத்து அணுக்களாகி நம் உடலுடன் சேர்க்கப்படும்போது உடல் சிவமாகின்றது.

அது தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான். பிரம்மாவோ உருவாக்குகின்றான். சிவனோ அரவணைக்கின்றான் என்று மூன்று நிலைகளில்
1.நம் உயிரின் இயக்கங்களையும்
2.உடலின் இயக்கங்களையும் தெளிவாக்குகின்றார்கள்.

சுக்ரீவனும்… அவனுடைய மந்திரியான ஆஞ்சநேயனும்…

 

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்…! தீமையை நீக்கியவன் சீதாராமன்…! சந்தோஷப்படும் உணர்வின் தன்மையைச் சுக்ரீவன்…! என்று காவியங்கள் கூறுகிறது. ஆனால் இவ்வாறு காரணப் பெயர்களாக வைத்ததை நாம் புரிந்து விடக்கூடாது என்பதற்காகத் திரித்து விட்டார்கள்… மாற்றி விட்டார்கள்.

ஒரு நோயாளியிடம் இருந்து வேதனையான உணர்வுகள் வெளி வரும் பொழுது அது வாலி. அதனுடைய வலிமை மற்றவர்களையும் வேதனைப்படச் செய்யும்.

ஆனால் சீதாராமன் என்ற நிலையில்
1.அவர் உடல் நலமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து உயிரிலே சேர்க்கப்படும் பொழுது “அஞ்சனை…”

அதாவது… தீமையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (சுக்ரீவன்) உணர்வை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதைச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அந்தச் சொல் அடுத்தவர் (துன்பப்படுவோர்) செவிகளில் படுகின்றது
2.உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அவரின் கண்கள் நாம் சொன்ன சொல்லைக் கவர்கின்றது.
3.உற்று நோக்கிப் பதிவாக்கப்படும் போது அவர் உயிருக்குள் சேருகின்றது.
4.உயிரில் பட்டபின் வாயுவாக மாறுகின்றது.
5.அது இரத்தங்களில் கலந்தபின் உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
6.இராமனின் பக்தன் ஆஞ்சநேயன் வாயு புத்திரன்… அவன் சுக்ரீவனின் மந்திரி
7.துருவ நட்சத்திரம் எதைச் செய்யுமோ அந்த உடலுக்குள் அதைச் செய்யும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

இராமாயணத்தில் உணர்வின் மனம் எதுவோ அதற்குத் தக்க எண்ணங்கள் எப்படி வருகின்றது…? என்று இப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று சொல்கிற பொழுது மனிதன் தன்னையும் பாதுகாத்துக் கொள்கின்றான்.
1.அவனால் முடியாமல் இருக்கும் பொழுது உணர்ச்சியைத் தூண்டி அவன் உயிரிலே மோதச் செய்கின்றான்
2.இந்த உணர்ச்சிகள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் பரப்பப்படும் போது வேதனையை நீக்கிச் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலுக்குள் புகும் போது கலியை மாற்றிக் கல்கியாக மாறுகின்றது.

உயிரைப் போன்ற உணர்வின் தன்மையைச் சிறுகச் சிறுக எண்ணப்படும் போது அந்த உடலில் ஒளியின் உணர்வாக மாறுகிறது. உயிரின் நிலைகளில் இது ஏற்படும் பொழுது “முழுமையான கனியாக மாறி…” அதனின் இனத்தின் வித்தை உருவாக்கிக் கல்கி… கடைசி நிலை.

மனிதனான பின் தான் ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறுகின்றான்.

கஷ்டமோ நஷ்டமோ மற்ற உணர்வின் தன்மை வலிமையாக்கப்படும் போது அது வாலியாகி விடுகிறது.

அதை மாற்ற… கொடுத்த சக்தியைச் சீராகப் பயன்படுத்தி நன்மை செய்யக் கூடிய சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஆத்ம சுத்தி செய்ய மறந்து விடாதீர்கள்…!

ஆண்டவனின் சக்தியைப் புரிந்து ஆத்ம ஜோதியாக நீங்கள் கலந்திட வேண்டும் என்பது தான் ஈஸ்வரபட்டன் அளித்திடும் பொக்கிஷம்

 

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றைய கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் தான் பார்த்து வணங்குகின்றார்கள். இவர்கள் வேண்டுவது எல்லாம் அக்கல்லின் ரூபத்தில் இவர்களுக்கு வந்து அருள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றும் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் உயிராத்மாவின் மூலமாக நாம் ஜெபம் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.
1.நாம் யார்…?
2.நம் உயிராத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மைகளையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்தோம். நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது என்று எண்ணிடலாகாதப்பா..!

தவறை எண்ணி வருந்தும் பொழுதே நம் உயிராத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…! நம் உயிராத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா…!

அழியும் யுகத்தில்… அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… “இந்த உயிராத்மா தானப்பா…!”

கலியின் கடைசியில் கல்கி ஆரம்பமான நிலையில் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தை ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு நம் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனிடம் கலக்கவிட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக சூட்சம உலகிற்கு அழைத்துச் செல்லத்தான் இதை உரைக்கின்றேனப்பா…!

1.இந்த உயிராத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
2.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
3.ஈஸ்வரபட்டனாகிய நான் அளித்திடும் பொக்கிஷம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மாவினை எடுத்து அதில் வெல்லத்தைக் கரைத்தால் ஒரு ருசி வருகின்றது, அந்த மாவிலே சீனியைப் போட்டுக் கரைத்தால் அது ஒரு ருசி வருகின்றது.

அதே சமயத்தில் மாவில் சிறிது காரத்தைச் சேர்த்தால் அதனுடைய ருசி வேறாக வருகின்றது. அதிலே சுக்கைச் சேர்த்தால் அது ஒரு ருசி வருகின்றது.

காரம் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

ஆனால் சுக்கு உடலுக்குள் உற்பத்தியாகும் (விஷமான உணர்வை) வாயுவாக உருவாகி வருவதை அகற்றக்கூடிய சக்தியாக மாறுகின்றது.

1.சுக்கு அல்லது இஞ்சி இவையெல்லாம்
2.ஒரு திடப்பொருளுக்குள் உருவாகும் ஆவியின் தன்மையை நீக்கி
3.சம அளவு கொண்டு வரக்கூடிய சக்தி பெற்றது.

உடலில் உருவாகும் பித்தம் அதிகரிக்கப்படும் பொழுது பித்தத்தால் மந்த நிலைகள் ஏற்பட்டு அதனால் அஜீரணம் ஏற்படும் பொழுது வெப்பத்தால் ஆவியாக மாறுகின்றது.

ஆவியின் தன்மை உறையப்படும் பொழுது சளியாக மாறுகின்றது. ஆஸ்த்மா போன்ற நோய்களையும் உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இஞ்சிச் சாற்றுடன் எலுமிச்சம்பழத்தின் சாறைச் சேர்த்துச் சிறிதளவு உப்பையும் இணைத்து விட்டால் இதை அடக்கும் தன்மை வருகின்றது.
1.ஆகவே இது அமிலங்களாக மாறுகின்றது.
2.அணுக்களாக மாறும் தன்மை இல்லை.
3.உடல்களில் அணுக்களாக மாறி வரும் அமிலங்களை இது பிரித்து விடுகின்றது.

இது பௌதீக முறையில் மருந்து என்ற நிலையில் வருகின்றது.

இதையெல்லாம் நமது தத்துவ ஞானிகள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். நமது காவியங்களிலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடுத்தவர்களுக்குப் பாய்ச்சும் முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அனுதினமும் துருவ தியானம் எடுக்கின்றோம்.

நாம் எடுத்து வளர்த்த பின் உடல் நலம் இல்லாதவர்களுக்கு அல்லது வேதனைப்படுவோருக்கு எப்படிச் செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று வளர்த்து விளைய வைத்த ஞான வித்தை அவர்களுக்குள் சொல்லாகச் சொல்லப்படும் போது
1.கேட்டவுடனே அவர்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் விளைகின்றது.
2.அவர்கள் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் ஓடுவதைப் பார்க்கலாம்.
3.இதன் வலிமையான பின் நோயின் தன்மையான அந்த உடல்களில் நடுக்கமாவதையும் பார்க்கலாம்.
4.இது இரத்தத்தில் கலந்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர்களுக்குள் ஊட்டும்.
5.உடலுக்குள் சென்று அந்த நோயின் வீரியத்தைத் தணிக்கும்… வேதனைகளை அடக்கும்.

உதாரணமாக நீங்கள் ஒரு நோயாளியையோ ஒரு தரக்குறைவாகப் பேசக்கூடியவர்கள் உணர்வையோ நுகர்ந்தால் உங்களுக்குள் பதட்டமாகிறது அல்லவா…! நுகர்ந்த பின் உடலுக்குள் எத்தனை வேகத்தை உண்டாக்குகிறது…?

அதே போல் தான் தீமையைக் கண்ட பின் ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் நாம் செலுத்த வேண்டும்.

இது வலுவான பிற்பாடு…
1.அந்தத் தீமைகளைத் தள்ளி விட்டுவிடுகிறது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு முன்னணியில் வந்துவிடுகிறது.

ஆகவே… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல் நலமாக வேண்டும் என்று சொல்லி இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி வளர்த்துக் கொண்ட ஞான வித்தை இதே உணர்ச்சி கொண்டு அடுத்தவர்களுக்குச் சொல்லும் போது செவிகளில் பட்டபின் இந்த உணர்வுகள் அங்கே உந்தப்பட்டு அவர்கள் தீமைகளை நீக்க உதவும்.

1.நாமும் உடல் நலம் பெறுகின்றோம்… மற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்து
2.அவர்களையும் உடல் நலம் பெறச் செய்கிறோம்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து தான் மக்கள் வாழும் உலகிற்கு ஞானிகளும் ரிஷிகளும் பல நன்மைகளைச் செய்திட முடிகிறதப்பா..!

 

இந்தக் காற்றில் கலந்துள்ள பல வகை மூலிகைத் தன்மைதான் நம் சுவாசத்தில் வந்து தான் நம் சுவாசத்திலும் வந்து கலக்கின்றது. நாம் ஆண்டவனை நினைத்துச் சில நிலைகளில் நம் உடல் நலக் குறைவுக்காக நம்பி எண்ணும் பொழுது
1.அந்தச் சித்தர்கள் உருவில் உள்ளவர்கள்
2.நலிவுற்ற உடலுக்கு அந்த உடலுக்கேற்ற மூலிகையின் மணத்தை
3.அந்த நலிவுற்றோருக்குச் சுவாச நிலையிலேயே அளிக்கின்றார்கள்.

மறைந்துள்ள சித்தர்களின் நிலையெல்லாம் பல கோடி இரகசியங்களைத் தனக்குள்ளே மறைத்து வைத்திருந்தாலும்
1.ஏங்கிடும் இதயத்திற்கு அவர்கள் பெற்ற சக்தியை
2.எந்த வழியிலாவது புகட்டி ஆசீர்வதிக்கின்றார்கள்.

தானறிந்த பல சக்தியின் இரகசியங்களை மக்களின் நிலைக்கு உகந்தபடி அந்த இரகசியங்களை வெளியிடாமல் “பல வகைகளில்…!” இன்றும் புகட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

பல கோடிச் சித்தர்கள் இன்றும் உடலுடன் இந்த உலகிலே உலாவிக் கொண்டு தான் உள்ளார்கள். பல சித்தர்கள் பல வகைக் குகைகளை அமைத்தும் சமாதி நிலை எய்தியும் இன்றும் உள்ளார்கள்.

எப்படி இந்த உலகிலே வாழும் மனிதர்கள் குடும்பம் குடும்பமாக ஒன்றாகக் கலந்து வாழ்கிறார்களோ இந்த உலகிலே அதே போல் தான்
1.பல ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் ஒன்று கலந்து ஒரு நிலைப்பட்டு
2.இந்த மக்களுக்காக அவர்கள் ஒரு உலகில் “சப்தரிஷி மண்டலங்களாக…” வாழ்கிறார்கள்.
3.அந்த உலகில் இருந்து தானப்பா மனித உடலுடன் வாழும் மக்களின் உலகிற்கு பல நிலைகளைச் செய்திட முடிகிறதப்பா..!

அன்று இருந்த சித்தர்கள் கோவில் அமைத்து
1.மனிதர்களின் எண்ணங்களை எல்லாம் ஒன்றுபடுத்திடத்தான்
2.அந்த ஆண்டவன் அந்தக் கோவிலிலே அமர்ந்துள்ளான்…! என்ற எண்ணத்தை
3.மக்களின் மனதினிலே ஆழமாகப் பதிய வைத்தார்களப்பா…!

மனித எண்ணத்தில் தான் பல தவறுகள் செய்தாலும் அந்த ஆண்டவனிடம் “மன்னிப்புக் கேட்கும் எண்ணமாவது… … இன்றும் உள்ளதப்பா…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நாம் பல வகையான உணர்வுகளையும் இந்த மனித உடலுக்குள் நின்றே அறிய முடிகின்றது. இது தான் மகா சிவன் இராத்திரி.

நம் உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நம் உயிருடன் நினைவு கொண்டு வரப்படும் பொழுது அந்த நினைவின் ஆற்றலாக நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் துணையாக நம்மை அறியச் செய்கின்றது. தெளியச் செய்கின்றது.

ஆனாலும் நம் உடலுக்குள்… “இருளாக” இருக்கின்றது.

ஒரு விளக்கில் எண்ணையை ஊற்றும் பொழுது
1.எண்ணெய் இருண்ட நிலையாகத்தான் இருக்கின்றது.
2.அந்த எண்ணெயில் நாம் நெருப்பை வைத்து எரிக்கும்போது
3.அது ஒளியாக மாறுகின்றது.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் எத்தனையோ வகையான குணங்கள் பதிவாகியிருக்கின்றது.

அந்த நினைவுகளை எண்ணும் பொழுது
1.அந்த மணம் (உணர்வுகள்) உயிருடன் ஒன்றி
2.உயிரிலே உராய்வாகும் பொழுது
3.அதனின் அறிவாக நம்மை இயக்கி அது அறியச் செய்கின்றது.

இது இயற்கையின் சில நியதிகள். இதைப் போன்ற இயற்கையின் தன்மைகளைத்தான் வேதங்கள் கூறுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் நாம் கடந்து இந்த மனித உடல் பெற்ற பின் இந்த இருளுக்குள் மறைந்து
1.மறைத்து வைத்திருக்கக்கூடிய நிலைகளில் நாம் எதை நினைவு கொள்கின்றோமோ
2.அதனின் நினைவின் ஆற்றலாக நமக்குள் தெரியப்படுத்துகின்றது. அதை அறிகின்றோம்.
3.அதன் வழிகளில் வளர்கின்றோம். அதனின் வழிகளில் நாம் இயங்குகின்றோம்.

இவ்வாறு வருவதை நமக்கு உணர்த்துவதற்குத்தான் மகா சிவன் இராத்திரி என்றும் நம்மை நாம் அறிந்திடும் நிலையாக வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இன்று யாம் உபதேசிப்பது போன்று நமது குருநாதர் இதைப் போன்ற பல பேருண்மையின் நிலைகளை எமக்கு எடுத்து ஓதினார். அந்த உணர்வினைப் பதிவு செய்து “தான் யார்…?” என்ற நிலையில் என்னைச் சிந்திக்கச் செய்தார்.

இதில் வரும் எதிர்கொள்ளும் தீமைகளிலிருந்து விடுபடும் முறைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார். அவர் காட்டிய வழியில் தான் உங்களுக்குள்ளும் சூட்சமத்தில் மறைந்த நிலைகளை அறியும் வண்ணமாக உபதேசிக்கின்றோம்.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இருளைப் போக்கிடும் நிலையாக “விழித்திரு” என்ற நிலையில் என்றுமே பேரொளியாக மாறுவோம்.

தாவர இனச் சத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முகப்பில் வைத்துத் தான் அன்று சித்தர்கள் செயல்பட்டார்கள்

 

தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பெற்ற பின் நஞ்சினை மாற்றும் உடலின் அமைப்பு வருகிறது.

பன்றியின் உடலாக இருக்கும் போது நஞ்சை நீக்கும் உணர்வுகள் பெற்று… நல்ல மணத்தை நுகர வேண்டும் என்று பட்டது. அதன் உணர்வின் தன்மை வரும் போது கலியாகி மனிதனாக மாற்றியுள்ளது.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வு பெற்று மனிதனாக ஆன வலிமை கொண்டு
1.இன்று விஞ்ஞானியோ அல்லது வைத்தியரோ
2.இதைக் காட்டிலும் வலுவான உணர்வு கொண்டு விஷத்தை மாற்றுகின்றனர்.

“சாம வேதம்…” என்று சொன்னாலும் வேப்ப மரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் சாம. அதாவது…
1.வேம்பின் மணத்தை நாம் நுகரப்படும் போது ஓ…ய்… என்ற சப்தத்துடன் உமட்டல் வருகிறது.
2.கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் போது மற்றதை விடாதபடி வாந்தி வருகிறது – இது சாம.
3.அந்த வாசனை வரப்படும் போது அந்த உணர்ச்சிகள் உந்தி வெளியே தள்ளுகிறது.

உணர்வின் தன்மை கவரப்பட்டு உறையும் நிலை வரும் போது கிரேதா. அதைக் கடந்து அதிலிருந்து வரக்கூடிய மணம் தான் சாம… இசை. அதை உயிரணு நுகரப்படும் போது “உணர்ச்சியின் எண்ணங்கள்…” வருகிறது.

ஆனால் தாவர இனங்களாக இருக்கும் போது அந்த மணத்தின் வலிமை கொண்டு மற்றதைத் தன் அருகில் விடாது பாதுகாத்துக் கொள்கிறது.

ஆகவே அதைப் போன்று மனிதனான பின் தீமைகள் நமக்குள் வராது தன்னைப் பாதுகாக்கும் நிலையாக அருள் உணர்வை எடுத்துச் சேர்த்தல் வேண்டும்.

சாம வேதத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டவர்கள்
1.இந்தச் செடி இதைச் செய்யும்… இந்தச் செடி இன்னதைச் செய்யும்… என்று மணத்தால் நுகர்ந்து
2.எந்தச் செடியின் மணத்தை அதிகரித்து மனித உடலில் தீமையை நீக்கியதோ
3.அதன் உணர்வின் குணத்திற்கொப்பத் தாவர இனத்தின் மணத்தைக் கூட்டி
4.மனிதனுக்கு வரும் நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டார்கள் கடந்த கால மனிதர்கள்.

நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டாலும் இதன் வலுவின் தன்மை கொண்டு மாற்றும் போது அன்றைய காலத்தில் இந்தச் சாம வேதம் என்று வரும் போது இதைக் கொடுப்பதற்கு முன்
1.அந்தத் தாவர இனச் சத்தைக் கையில் ஏந்தி
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சேர்த்து
3.விஷத்தினை வென்றிடும் வலுவைக் கூட்டும் போது கலியை மாற்றிக் கல்கியாகக் கொண்டு வந்தனர்.

இப்படி அந்த ஞானிகள் கூட்டிய சாம வேதத்தின்படி அந்த அருள் மணத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். கலியாக மாறாமல் கல்கிக்குச் செல்ல வேண்டும்.

உங்கள் தியானத்திற்கு அந்த ஈசனே அருளை அளித்திடுவார்

 

நாம் தியானிக்கும் பொழுது நாம் எண்ணும் மகரிஷிகளின் நிலையிலிருந்து “மகரிஷிகள் மட்டுமல்ல…” தியானிக்கும் நிலையில் உள்ள எல்லோருக்குமே நாம் ஒருவரை எண்ணித் தியானிக்கும் பொழுது அவர்கள் நமக்காக எண்ணித் தியானிக்க முடியுமப்பா…!

தியான வழியின் ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது நமக்கு ஒரு குரு வேண்டுமல்லவா…!
1.அந்தக் குருவின் சக்தியை நாம் எங்கிருந்து தியானம் செய்தாலும்
2.அவரின் அருளாசியை ஒவ்வொருவரும் பெற முடியும்.

வீட்டிலிருக்கும் பொழுது நமக்கு விக்கல் எடுத்தால் யாரோ நம்மை நினைக்கின்றார்கள் என்று எண்ணுகின்றோம். எண்ணுபவர்கள் நினைத்திட்டால் இருவரும் ஒரே நிலையில் எண்ணும் பொழுது அந்த விக்கல் நின்று விடுகின்றது என்றும் சொல்கிறோம்.

அதே போலத்தான் தியான நிலையிலும்
1.நாம் தியானிக்கும் பொழுது
2.நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிலை தெரிந்து
3.நாம் செய்யும் தியானத்திற்கு அவரின் அருளாசியைப் பெறுகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று ஒரே நிலையில் சுவாச நிலையை எடுத்துத் தியானிக்கும் பொழுது பல நல்ல நறுமணங்கள் கிடைக்கும்.

உங்கள் தியானத்திற்கு அந்த ஈசனே அருளை அளித்திடுவார். அந்த நல்ல மணங்களை எடுத்து எடுத்துத் தான் நம் உயிரான்மாவிற்கு ஊட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

தியானத்தின் பொருளை உணர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறர் செய்யும் தீமைகள் நமக்குள் அதிகமாகிவிட்டால் நல்லதை எண்ணாதபடி அதை இறுகப் பிடித்துக் கொள்கின்றோம் – அத்தகைய “பிடிவாதமான தீமைகளை” நாம் அகற்றிப் பழக வேண்டும்

இந்த வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமென்றாலும் உதவி செய்யலாம்… எந்த வகையிலும் நுகர்ந்தறியலாம்.

1.கஷ்டப்படுகின்றார்கள்… வேதனைப்படுகின்றார்கள்… தவறுகள் செய்கின்றார்கள்… என்று
2.புறநிலைகளில் நாம் அறிந்து கொண்டாலும் அறிந்த பின்
3.மீண்டும் அது நமக்குள் அணுத் தன்மையாக கருவாகாதபடி
4.நாம் கேட்டறிந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் பிறருடைய தீமைகளையும் அவர்கள் கஷ்டப்படுவதையும் பார்த்து கேட்டு நுகர்ந்து நமக்குள் வளர்த்து அதையெல்லாம் நாம் “பிடிவாதமாகப் பிடித்துக் கொள்கின்றோம்…”

அதைத் தடுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

சூரியன் உலகுக்கே ஒளியாக வழி காட்டுகின்றது.

அதைப் போல அகஸ்தியர் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ரிஷி என்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிருஷ்டித்துக் கொண்ட நிலைகளில் இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் மனைவி உயர வேண்டும் என்ற உணர்வை ஒன்றாகச் சேர்த்து இணைத்து அந்த ஒளியின் சரீரமாக அவர்கள் ஆனவர்கள்.

இருவருமே அந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்து தனக்குள் எந்தத் தீமையும் புகாதபடி தீமைகளை அழித்தனர்.

அதனின் உணர்வு கொண்டு எந்தத் துருவத்தைக் கூர்மையாக எண்ணினார்களோ கூர்மை அவதாரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

பூமிக்குள் வருவதனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள், கல்கி என்று ஒளியின் நிலையாக அவர்கள் எப்படிப் பெற்றார்களோ அதன் வழி கொணடு நாமும் பெற வேண்டும்.

அந்த மகரிஷிகளின் ஆற்றலின் வலிமை கொண்டு நமக்குள் பிடிவாதமாக இயக்கும் அத்தனை உணர்வுகளையும் அடக்க முடியும்.

1.இப்படிச் செய்தானே…
2.அப்படிச் செய்கின்றானே…
3.இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது…! என்ற நிலையில்
4.”பிடிவாதம் பிடிக்காதபடி” நமக்குள் அந்த உணர்வின் உண்மையை உணர்த்தும்.

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது.

அங்கே எடுத்தவுடன் எங்கே செல்கின்றான் நாரதன்…?

உயிரான விஷ்ணுவிடம் தான் செல்கின்றான். விஷ்ணுவிடம் சென்றபின் கண்ணாக கண்ணனிடம் செல்கின்றான் நாரதன். “கண்ணா.., எல்லா உபாயமும் உனக்குத் தெரியும்”

1.கண்களின் செயலாக்கமும்
2.எண்ணிய உணர்வுகள் நமக்குள் எப்படி உருவாகின்றது என்ற நிலையையும்
3.அதிலிருந்து மீட்டிடும் உபாயங்களையும்
4.ஒரு காவியத் தொகுப்பாக கீதாச்சாரம் என்று எழுதி அமைத்துள்ளார் வியாசகர்.

ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அடிக்கடி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

கலி எது..! கல்கி எது…?

 

வீட்டிற்குள் பாம்பு வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐயோ பாம்பு வந்து விட்டதே…! கடித்து விடுமே… கடித்து விடுமே… சொல்லிக் கொண்டு இந்த உணர்வு அதிகமானால் பாம்பின் நினைவே வருகிறது.

“கலி” என்ற இந்த உணர்வுகள் அதிகமானபின் அதன் உணர்வை எடுத்து மனிதனாக இருக்கும் நாம் அந்த உடலுக்குள் சென்று விடுகிறோம். பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று அடுத்துப் பாம்பாகத் தான் பிறக்க நேரும்.

ஒரு மாட்டினை வளர்க்கின்றோம். மனிதனுடைய உணர்வைக் கூர்மையாகப் பார்க்கின்றது. அது தனக்குள் இதை எடுத்துக் கொண்டால் கலி தான்.

மனிதனுடைய உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டபின் நம்மை ஏங்கியே அந்த மாடு இறக்கப்படும் பொழுது யார் மேல் பிரியமாக இருந்ததோ இறந்த பின்… வளர்த்த அந்த உடலுக்குள் செல்ல நேர்கிறது.

எனேன்றால் வளர்த்த ஆர்வத்தில் “நான் செல்லமாக வளர்த்தேனே… நான் சொன்னபடி எல்லாம் கேட்டதே…!” என்ற மனிதனின் உணர்வு வரும் போது அதனின் அறிவாக மாறுகின்றது. மாடு இறந்த பின் நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. அது மாட்டிற்குப் பரிணாம வளர்ச்சி.

நாயோ கோழியோ ஆட்டையோ வீட்டில் நாம் செல்லப் பிராணிகளாக வளர்த்தாலும் மனிதனின் உணர்வு அதற்குள் வளரப்படும் பொழுது இறந்தால் மனிதனுக்குள் வருகின்றது. இதுவும் கலி தான். ஆனாலும் அவைகள் எல்லாம் பரிணாம வளர்ச்சி அடைகிறது.

உதாரணமாக… மனிதனாக இருக்கும் நாம் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம் என்றால் அந்த உணர்வை இரக்கத்துடன் நுகர்ந்தால் நமக்குள் அதே நோய் வரத் தொடங்குகிறது. நாம் தேய் பிறையாகின்றோம். இதுவும் கலியாகத் தான் ஆகிறது.

ஆனால் அந்த நேரத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று துவாரகா யுகத்தில் சேர்க்கப்படும் பொழுது
2.நாம் எந்த நல்ல குணத்தால் நோயாளியை உற்றுப் பார்தோமோ அவரின் வேதனை நமக்குள் சேராதபடி
3.அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
5.எந்தக் குணத்தின் மணத்தை உருவாக்கி அந்த எண்ணங்கள் வந்ததோ
6.அதில் அந்த அருள் ஞானத்தின் உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது இது “கல்கி” ஆக மாறுகிறது.
7.இருளை நீக்கும் அணுவின் தன்மையாக ஒளியாகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஏனென்றால் திரேதாயுகம் (உடல்) என்று இருந்தாலும் துவாரகா யுகத்தில் “வேதனை” நமக்குள் வலுவானால் கலியாக மாற்றி நல்ல உடலின் ரூபத்தையே மாற்றி விடுகின்றது.

1.ஆனால் அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமென்றால் கல்கி ஆகின்றது
2.உயிர் கல்கி… நாம் நுகரும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் உயிரைப் போன்றே ஒளியாக மாற்றிக் கொண்டு வருதல் வேண்டும்.

மனிதன் கனியாக ஆன… துருவ நட்சத்திரமான அந்தக் கல்கியை நாம் பெற வேண்டும் என்று தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு வருவது (ஞானகுரு).

சிறு சிறு திரைகள் நமக்குள் ஒவ்வொன்றிலும் உண்டு. நல்லதை மறைக்கும் அந்தத் திரைகளை நீக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் கனியாக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு நாளும் இந்த உணர்வின் தன்மையை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.
2.நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வையும் ஒளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொன்றிலும் நாம் இணைத்தால் தான் கல்கி. அதைச் சேர்க்கவில்லை என்றால் கலி தான்.

நீ என்னிடம் நம்பி வேண்டும் பொழுது… உன்னுடன் நான் (ஈஸ்வரபட்டர்) வருவேன்

 

நம்பிக்கையிலிருந்து பெறுவது தான் ஜெப அருள்…! எப்படி…?

உன் எண்ணத்தில் உன் செயலில் ஒன்றை நினைத்து ஆண்டவனை எண்ணுகிறாய்.

ஞானிகள் கொடுத்த உருவ அமைப்பில் முருகன் விநாயகர் சரஸ்வதி இலட்சுமி வெங்கடாஜலபதி பராசக்தி என்று இப்படிப் பல நாமங்கள் உடைய ஆண்டவனை எண்ணும் பொழுது நம்பிக்கையின் மூலமாக ஜெப அருளைப் பெற்ற ஞானிகளூம் மகரிஷிகளும் நீ வணங்கும் நிலையில் உன் எண்ணத்தை அறிகின்றார்கள்.

அந்த நிலையில் அவர்கள்
1.உன் சொல்லுக்கு அவர்களாகவே பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திப்
2.பல நிலைகளை உண்டு பண்ணி
3.உன் எண்ணத்திற்கு உன் செயலுக்கு வெற்றியை அளிக்கின்றார்கள்.

சூட்சம உலகில் இருந்து கொண்டே நடக்கும் செயல்கள் தான் இவை எல்லாம். அந்த நிலையில் அவர்களின் பரிபூரண அருளை நீ பெறுகின்றாய்.

ஒரு செயலைச் செய்யும் பொழுதும் வெளியில் எங்காவது செல்லும் பொழுதும் “ஈஸ்வரா…!: என்று உன் உயிரை நினைத்து வணங்கிச் செல். தடைகளையும் வரும் வினையையும் அவர் பார்த்து உனக்கு நல்வழி புகட்டிடுவார்.

நம்பிக்கையுடன் செல்லும் எந்த நிலையும் தோல்வி அடைவதில்லை…!

ஞானிகளாகவோ மகரிஷிகளாகவோ ஆவது எதற்காக…? என்று எண்ணுகிறார்கள் புரியாத பாமரர்கள். எண்ணத்திற்கு செயலுக்கும் இந்த உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு இவர்களை நல் வழி நடத்திடத்தான்
1.அந்த மகரிஷிகள் பல ஜெப வழிகளைப் பெற்று சூட்சம உலகில் இருந்து கொண்டே
2.நம்பிக்கை வைத்தவனுக்கு நடுக் கடலுமில்லை…! என்னும் வெற்றியை அளிக்கின்றார்கள்.

நடுக்கடல் எனும் பொழுது நடுக்கடலிலிருந்து மீள்வதற்கும் அவர்கள் அவர்களை எண்ணும் பொழுது மீட்கிறார்கள் ஆண்டவனின் ரூபத்தில்…! நம்பிக்கையின் எண்ணம் புரிந்ததா…?

ஆகவே இனிமேல் நீ ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது எந்தக் காரணத்தைக் கொண்டும் மனக் கலக்கப்படாமல் பூஜை அறையில் வந்து நீயே நில்.
1.அந்த நிலையில் நீ என்னிடம் வணங்கி வேண்டும் பொழுது
2.நம்பி வேண்டும் பொழுது உன்னுடன் நான் (ஈஸ்வரபட்டர்) வருவேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எந்த ஒரு அணுத் தன்மையை எடுத்துக் கொண்டாலும் மூன்று நிலைதான் வெப்பம் காந்தம் விஷம். அதே போல உயிரணுவின் தன்மை வரப்படும் பொழுது மூன்று நிலை.

ரேவதி நட்சத்திரம் பெண் பால் தன்மை கொண்டது. ஒரு உயிரணுவிற்குள் ரேவதி நட்சத்திரத்தின் தன்மை அதிகரித்திருந்தால் பெண்பாலாக உருவாக்கும் தன்மை வருகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் விகிதாச்சாரம் ஒரு உயிரணுவிற்குள் அதிகமாக இருந்தால் ஆண் பாலை உருவாக்கும் நிலை வருகின்றது.

1.இப்படி 27 நட்சத்திரங்களும்
2.வித்தியாசமான நிலைகளில் உயிரணுக்களைத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.

பூமியோ மற்ற கோள்களோ சுழலும் பொழுது வெப்பமும் ஒரு பகுதியில் ஈர்க்கும் தன்மையும் வருகின்றது.

உயிரணு ஒன்றுக்குள் ஒன்று துடிப்பாகப்படும் பொழுது
1.இந்தத் துடிப்பின் தன்மை அடைபட்டு அதனால் மோதும் தன்மையும்
2.இதிலே ஏற்படும் நிலைகள் ஈர்க்கும் தன்மை வரப்படும் பொழுது
3.தனக்குள் இழுத்து ஒன்றை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.

இப்படி உருவானது தான் உயிர்.

இதைத்தான் நாராயணனின் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றுகின்றான் என்று காட்டப்பட்டுள்ளது.

சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ… …கம்…”
1.அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து
2.தனக்குள் இழுத்து “கம்…” – “சோ… …கம்”.
3.விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று
4.அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.

பூமியின் நாதம் “ஓ…ம்” என்று இருப்பினும் வியாழன் கோள் மற்ற நிலைகளுடன் மோதப்படும்பொழுது அதனுடைய சுருதியின் நிலைகள் பல விதமாக வரும்.

நாதங்கள் எதனெதன் நிலைகளில் மோதுகின்றதோ அதற்குள் “ஓஒஓ…ஓஒஓ…ஓஒஓம்…ம்…ம்”என்று இந்த மாதிரி அலைகள் தனக்குள் இசைகள் கூடியும் குறைத்தும் வரும்.

அது நுகரும் உணர்வுக்குள் மலரும் தன்மையும் வளரும் தன்மையும் என்ற நிலைகளில் இந்த ஒலி அலைகளைக் கண்டுணர்ந்தவன் ஆதியிலே அகஸ்தியன் என்றாலும் பின்னாடி வந்த வியாசகர் 4000 ஆண்டுகளுக்குள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட பேருண்மைகள் இது.

அதற்கு முன்பு பலர் பெற்றாலும் இந்த உண்மையின் உணர்வுகளை அவரவர்கள் அறிவிலே தெரிந்தது தான் வளர்ச்சி கொண்டது.

மற்ற கோ\ள்கள் சுழலும் பொழுது வெப்பமும் தனக்குள் ஈர்க்கும் சக்தியால் உணவாக எடுத்து விளையும் தன்மையும் வருகின்றது.

1.இப்படி நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியும்
2,வியாழன் கோளின் சத்தும் மூன்றும் சேர்ந்து ஒரு உயிரணுவாக உருவாக்கப்படும் பொழுது
3.எதனின் நிலைகள் கவர்ந்ததோ அதனின் வழி கொண்டு தான் அந்த உயிரணுவின் இயக்கம்.

புராதன ஆலயங்களின் சுவர்களிலும் சிலைகளிலும் பூசப்பட்டிருக்கும் “வர்ணங்களின் இரகசியம்…”

 

விஞ்ஞான உலகில் “நாகரீகம்…” என்ற போர்வையில் நாம் உடுத்தும் ஆடைகளிலும் சாயங்கள் என்ற பெயரில் விஷத் தன்மைகள் கலக்கப்பட்டு விட்டது. இன்று அத்தகைய ஆடைகளைத் தான் நாம் அணிகின்றோம்.

நாம் அணிந்திருக்கும் ஆடைகளில் உள்ள விஷத் தன்மைகள்… அதே இனமான தன் சக்தியைக் காற்றிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவில் கலக்கச் செய்துவிடுகிறது.

அதன் வழி ஆன்மாவிலிருந்து சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டு நம் இரத்தநாளங்களில் விஷத் தன்மைகள் கூடிவிடுகின்றது.

ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இத்தகைய சாயங்கள் கலக்குவதனால் அதிலுள்ள விஷத்தினால்
1.கேன்சர் என்ற நோய் வருகிறது.
2.ஆஸ்த்மா என்ற நோய்கள் வருகிறது.
3.மனிதன் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது என்று கண்டு கொண்டனர்.

ஆகவே தீமையை உருவாக்கும் இத்தகைய சாயங்களை நீக்க வேண்டும்… எங்கள் நாட்டிலே இறக்குமதி செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தினான்.

நம் நாட்டின் பண்பின் பிரகாரம் இன்றும் பழைய ஆலயங்களில் எல்லாம் சாயங்கள் (வர்ணம்) என்று பூசியிருப்பார்கள்.
1.இயற்கையில் உருவான பச்சிலைகளை எடுத்து
2.பல பல தீமைகளை அகற்றக்கூடிய அத்தகைய மூலிகைகளை
3.மற்றவைகளுடன் கலந்து மற்ற கலருடன் இணைக்கச் செய்யப்படும் போது
4.அந்த ஒன்றுபட்ட நிலைகள் கொண்டு… அதனின் உணர்வுகளை
5.ஆலயத்தில் உள்ள சுவர்களில் உள்ள காந்தப் புலன்கள் இதைக் கவர்ந்த பின்
6.அதிலிருந்து மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக வெளி வரும்.

அந்த உணர்வுகள் காற்றிலே பட்ட பின் நீங்கள் அந்த ஆலயத்திற்குள் சென்ற பின் இருளை நீக்கும் அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் தகுதிக்குத் தான் “இயற்கையில் விளைந்த தாவர இனங்களைச் சேர்த்தான் அன்றைய ஞானி…”

அன்று பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கருவிலே இருக்கப்படும் போது தாய் தந்தையர்கள் பல விஷத் தன்மை கொண்ட விஷத்தை முறித்திடும் தாவர இனங்களை தாங்கள் படுத்திருக்கும் குகைப் பக்கம் போட்டு வைத்திருந்தனர்.

அந்த மணத்தை நுகர்ந்த பின் விஷப் பூச்சிகளோ மற்றவைகளோ அச்சத்தால் நகர்ந்து ஓடுகிறது. அகஸ்தியனின் தாய் தந்தையருக்கு ஒரு பாதுகாப்பாக அது அமைகிறது.

அவர்கள் தங்களைக் காத்திடும் நிலையாகச் செயல்படுத்திய தாவர இனத்தின் மணங்களை அந்தத் தாயின் கருவிலே வளர்ந்த அகஸ்தியனுக்குள்ளும் இது பெறப்படுகின்றது.

இதைப் போன்று தான் இயற்கையில் விளைந்த அத்தகைய தாவர இனங்களில் உள்ள
1.தீமைகளை அகற்றிடும் இப்படிப்பட்ட பச்சிலைகளை எடுத்துத் தான்
2.அன்று ஆலயங்களிலே வர்ணங்களாகக் கலந்து பூசுவதும்
3.அந்த வண்ணங்களை எடுத்து நமக்குள் நுகரப்படும் போது
4.தீமைகளை அகற்றிடும் ஒளிக்கதிர்களை தனக்குள் பாய்ச்சும் தன்மையாகக் கொண்டு வந்தனர் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள்.

எப்படி ஒரு தாவர இனம் தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அந்த வித்துக்கள் விளைகின்றதோ… அதைப் போன்று தீமைகளை வென்றிடும் தாவர இனத்தின் சத்தை இங்கே நம்மை நுகர வைக்க சுவர்களிலும் சிலைகளிலும் வர்ணங்களாகத் தீட்டுகின்றனர்.
1.அந்த அலைகளைக் கவரும் தன்மையால்
2.இந்த ஆலயத்திற்குள் தீமை வராதபடி ரொம்பவும் நாசூக்காக அன்றைய ஞானிகள் செய்தனர்
3.அகஸ்தியன் பெற்ற பேருண்மையின் தன்மைகளை மக்களுக்குக் கிடைக்க ஆலயங்களில் இப்படிச் செய்தனர்.

ஆலயங்களில் பார்த்தோமென்றால் வர்ணங்கள் எத்தனையோ இருக்கின்றது. நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

உன் தியான நிலையைக் கூட்டிக் கொண்டால் நீ செய்யும் தொண்டுடன் வந்திடுவேன் நானும் அங்கே…!

 

தியான நிலையின் பொருள் என்னப்பா…? தியானம் செய்வது எதற்காக…?

உணவிற்கோ உடைக்கோ உலக ஆசாபாசத்திற்கோ செய்வது தியானம் அல்ல…! என்று பலர் சொல்வார்கள். மனிதனாகப் பிறந்தவனுக்கு உண்ணும் உணவும் உடுக்க உடையும் ஆசாபாசங்களும் உள்ளது தானப்பா. இந்த உலகில். இந்த உடலையும் பாதுகாக்க வேண்டுமப்பா…!

தியானத்தின் பொருள்
1.இந்த உடலில் நாம் உள்ளவரை “ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்ற ஜெபத்தை
2.உயிரைப் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டுமப்பா.
3.அப்படித் தியானித்தால் உன் சுவாச நிலை நல்லதாக மாறிவிடும்.

அந்த நிலையில் உன் எண்ணமெல்லாம் சிதறிவிடாமல் பரிபக்குவமான நிலையில் உயிரான ஈசனை எண்ணும் பொழுது “சுவாச நிலை ஒரு நிலைப்படுகின்றது….!”

சுவாச நிலை ஒரு நிலைப்பட்டவுடன் உன் உயிர் நிலைக்குப் பெரும் உன்னதத் தன்மை வருகின்றது. அந்த நிலையை எய்திவிட்டால் பிறரின் துவேஷமும் எந்தத் தொழிலுக்கும் வேறு எந்த நிலை வந்தாலும் உன் நிலை மாறாது.

உன் நினைவெல்லாம் “ஈஸ்வரா…!” என்று உயிருடனே ஒன்றி இருக்க வேண்டும். எந்தத் தீமையான உணர்வும் உன்னை அண்டாது. துன்பங்களும் உன்னை அண்டாது. உன் எண்ணத்தில் உள்ள கோபதாபங்களைக் குறைத்துவிடும்.

1.பிறரின் புகழுக்கு மயங்கிடாதே…!
2.பிறரைப் போற்றுவதையும் விட்டிடப்பா…!
3.விஷமான தன்மை தான் இந்த இரண்டும்.

ஜெப நிலையில் இருந்திட்டால் தோல்வி நிலை எந்த நிலையிலும் அண்டிடாதப்பா…! உன் நிலைக்கு உதயத்தை (தக்க உபாயத்தை) அளித்திடுவான் அந்த ஈஸ்வரனே…! நீ எடுக்கும் ஈஸ்வர தியானத்தினால் ஜெயித்திடலாம் உன் வழிக்கே…! எல்லாமே…!

உன் தியான நிலையைக் கூட்டிக் கொண்டால்
1.நீ செய்யும் தொண்டுடன் வந்திடுவேன் நானும் அங்கே…!
2.உன் நிலையில் வருபவர்களுக்கெல்லாம் வாழ்த்திடப்பா “நலமாக வாழ்வாய்…!” என்ற சொல்லை.
3.வாழ்வாங்கு வாழ்த்துவார்கள் அவர்கள் உன்னை.
4.அவர்கள் வாழ்த்திடும் வாழ்த்து தானப்பா ஈஸ்வரனின் வாழ்த்து…!

ஈசனின் வாழ்த்தையே நீ பெற்றிடுவாய்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூர்மை அவதாரம் – நாம் தெளிவாக உணர்ந்து கொள்வதற்காக ஒரு உருவம் அமைத்து ஆமையைப் போட்டுக் காட்டுகின்றார்கள்.

உதாரணமாக ஒரு கண்ணுள்ள புழு பாறை மீது நகர்ந்து செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். தன் உணவைத் தேடிச் செல்கின்றது.

கண்களால் பார்த்து… தான் உணவாக உட்கொள்ளும் தாவர இனத்திற்குச் சென்றாலும் சூரியனுடைய ஒளிக் கதிர்கள் சிறிது நேரம் அதிகமாகிவிட்டால் வெப்பம் அதிகமாகிவிடுகின்றது.

பாறை மீது நகர்ந்து செல்கின்றது. நகர்ந்து செல்வதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகிவிட்டால் பாறை வெப்பமாகிவிடுகின்றது. இந்தப் புழுவின் மெலிதான உடல் அதைத் தாங்க முடியவில்லை என்றால் “துடிக்கின்றது”.

இதிலிருந்து… “தன்னைக் காக்க வேண்டும்…” என்ற நிலைகளில்
1.கூர்மையாகத் தாவர இனங்களைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் இந்தப் பாறைகளையும் பார்க்கின்றது.
3.இந்த வெப்பம் அந்தப் பாறைக்குள் பட்டுக் “கடினமான நிலைகள்” வருவதை நுகர்கின்றது.
4.இந்தப் பாறையைக் கூர்மையாக உற்றுப் பார்த்து
5.இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்கின்றது.

நுகர்ந்த உணர்வுகள் எல்லாம் “ஓ…ம்… நமச்சிவாய” என்று அந்த ஜீவ அணுவாக மாற்றி அந்த உடலாக மாற்றுகின்றது. அதனின் மலங்களை
1.இந்தப் பாறையைப் போன்று கடினமாக வெளிவிடும் அணுக்கள்
2.இந்தப் புழுவிற்குள் உருவாகின்றது.

ஆனாலும் இந்தத் துடிப்பின் தன்மை கொண்டு நுகர்ந்த உணர்வின் அணுக்களான பின் இந்த உடலைப் பிளந்து விடுகின்றது. புழு மடிகின்றது.

புழு கூர்மையாகக் கவர்ந்த உணர்வுகள் உடலிலே விளைந்து உயிரிலே சேர்ந்து அதற்குத்தக்க அடுத்த உடலாக “ஆமையாகின்றது…”

1.எந்தப் பாறையினுடைய வெப்பத்திலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்ததோ
2.(அந்த உணர்வின் சத்து) ஆமையின் ஓடு வலுவாகின்றது.
3.அதற்குள் வெப்பத்தைத் தாங்கும் சக்தி (பாறையைப் போன்று) வருகின்றது.

ஆமையை நெருப்பு இருக்கும் இடத்தில் போட்டுப் பாருங்கள். அந்த வெப்பத்தைத் தாங்கக்கூடிய சக்தி அதற்குண்டு.

இந்த உணர்வின் இயக்கங்கள் “எப்படி வந்தது…?” என்ற நிலையைக் கண்டுணர்ந்தவன் அன்று அகஸ்தியன்.

அதைத்தான் கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் நாம் எதைக் கூர்மை அவதாரமாக்க வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆடல் கலைகளை ஞானிகள் நமக்கு வகுத்துக் கொடுத்ததன் உண்மையான நோக்கம் என்ன…?

 

பண்புகளை இழந்து நாகரீகம் என்ற நிலைகள் கொண்டு ஆட்டங்கள் ஆடிக் கொண்டிருக்கும் போது தையா…தக்கா… என்று ஆடுவதும் ஆணும் பெண்ணும் மோதுவது போல் செயல்படுத்துவதும்… இது தான் இன்றைக்கு இருக்கும் ஆடல் பாடல் கொண்டாட்டம் எல்லாமே.

கழுதை கத்துகிற மாதிரியும்… குதிரை கத்துகிற மாதிரி ஊளையிடுவதும்… அதாவது மிருகங்களுக்குச் சமமான நிலைகள் கொண்டு ஆடுவது தான் இன்றைய டான்ஸ் (DANCE).

ஆடுவதைப் பார்த்தால் ஏய்….ஊய்… என்று அவனையே பைத்தியக்காரனாக ஆக்கும் நிலையில் இது தான் கலாச்சாரமாகப் போய்விட்டது.

ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எதிர்படும் உணர்வுகளால் மனது சோர்வடைகிறது. அதனால் உள் உறுப்புகள் சோர்வடைந்து பல நோய்களுக்குக் காரணமாகின்றது. அதைச் சீராக்குவதற்காக வேண்டி…
1.இனிமையான இசை கொண்டு அங்கங்களை அசைத்து அதற்குத் தக்க அபிநயங்களைக் காட்டப்படும் போது
2.உள் உறுப்புகள் இயக்கமாகி உடலில்… சிக்கல் உள்ள நீர்களை மாற்றுவதும்
3.தும்மல் வரும் போது ஒரு பக்கம் சிக்கலானால்… இங்கே அபிநயமாகும் போது அந்தச் சிக்கலை மாற்றி
4.உடல் நலம் பெறுவதற்கும் மகிழ்ந்து வாழும் உணர்வுகளை நுகரச் செய்வதற்கும் நாட்டியங்களாக (ஆடல் கலைகள்) உருவாக்கினார்கள்.

ஏனென்றால் மனிதன் வேகமாக இருக்கும் போது உள் உறுப்புகளில் குறிப்பாக நுரையீரலில் சிக்கலாகி விட்டால் அதனால் இருமல்கள் வரும்.
1.அடிக்கடி விரிவடையவில்லை என்றால் அழுத்தங்கள் அதிகமாகும்
2.அப்போது நுரையீரலில் எதிர்ப்பாகிவிடும்.
3.நாளடைவில் அந்த உறுப்பே பாழடைந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத் தான் கலை அபிநயம் கொண்டு உணர்வின் தன்மை கொண்டு அங்கங்களை அசைத்து மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தனக்குள் தோற்றுவிக்கும்படி செய்தார்கள்.

1.தன்னை அறியாது உடலில் உண்டாகும் நரம்புப் பிடித்தங்களையோ
2.உறுப்புகளில் ஏற்படும் சிக்கல்கலையோ நீக்குவதற்கு அதைச் செயல்படுத்தினார்கள்.

ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் தையா… தக்கா… என்று குதித்து தவறான உணர்வுகளைத் தூண்டி… கருத்தை இழக்கச் செய்து அநாகரீக நிலைகளை வளர்க்கச் செய்து… மாடுகளைப் போல் நம்மை ஆடும்படி வைத்துவிட்டார்கள்.

குழந்தைக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

விளக்கை (ஜோதியை) ஏற்றி வைத்துச் சொந்தமோ பந்தமோ நண்பர்களோ எல்லோரும் சேர்ந்து அந்தக் குழந்தையைப் பார்த்து…
1. அவன் உலக ஞானம் பெற வேண்டும்
2.உலகைக் காக்கும் அருள் ஞானம் பெற வேண்டும்
3.குடும்பத்தைக் காக்கும் அருள் ஞானியாக வேண்டும்
4.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும்
5.பண்புள்ளவனாக வளர வேண்டும் பரிவுள்ளவனாக வளர வேண்டும் என்று வாழ்த்துக்களைச் சொல்லி
6.பாடலைப் பாடி அவனை மகிழச் செய்து… உன்னுடைய வழி எப்படி இருக்க வேண்டும்…?
7.அன்னை தந்தையரால் நீ வளர்க்கப்பட்ட நிலைகள் என்ன…? கல்வியின் தரங்கள் என்ன…? கருத்தின் தன்மை என்ன…? என்ற
8.இந்த உணர்வுகளின் தன்மை எடுத்துப் பாடலின் ரூபமாக அவனுக்கு எடுத்துக் கூறியது தான் அக்கால வழக்கங்கள் – ஆடல் பாடல்கள்.

அதை யாராவது நாம் இப்போது செய்கிறோமா என்றால் இல்லை. இதைச் சொன்னால் அநாகரீகம் என்ற நிலையில் விட்டுவிடுகிறார்கள்.

எரியும் வெளிச்சத்தை ஊதி அணைத்து இருள் சூழச் செய்து… எல்லோரும் சப்தமிட்டு… அதன் பின் கேக்கைக் கத்தியால் அறுத்துக் கொடுப்பது தான் நம்முடைய கலாச்சாரமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

“அறிவிப்பு” – நல் சுவாசத்தை எடுத்தவர்களை எல்லாம் ஒரு நொடியில் பறக்கச் செய்கின்றாள் ஆதிசக்தி

 

இந்தக் கலி மாறி கல்கி வரும் பொழுது இந்த உலகின் தன்மையே விஞ்ஞானிகளால் உருவாக்கிய அணுகுண்டால் விஷத் தன்மை உலகம் முழுவதும் பரவுகின்றது.

அந்த நிலையிலேயே
1.இந்தப் பூமித் தாயின் பொக்கிஷங்களை (உலோகங்கள்) எல்லாம் இன்றைய மனிதன் பாளம் பாளமாக வெட்டி எடுக்கின்றான்.
2.அதே சமயத்தில் உறிஞ்சும் தன்மை கொண்டு பூமிக்குள் இருக்கும் திரவங்களை (OIL) எல்லாம் எடுத்துக் கொண்டேயிருக்கின்றான்.

அதனின் விளைவாகக் கலியின் கடைசியில் அணுகுண்டின் கதிரியக்க அணுக்களும் மனிதன் செய்த பெரும் செயற்கையின் விளைவுகளாலும் ஒரு நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் அந்த அணுக்களின் தாக்குதலால் அந்த ஒளி பட்டவுடன் பூமியின் இயற்கைத் தன்மையைச் செயற்கையின் நிலையாக மாற்றியதால் “ஒரு நொடியில் உலகமே அழிகின்றது…!”

“நல் சுவாசம் எடுத்தவனுக்கு…!” அந்த அணுகுண்டின் விஷத் தன்மையும் இந்த உலகத் தன்மையும் வந்து தாக்கிடாது.

இந்த உலகத் தன்மை மாறும் பொழுது இந்தப் பூமியின் நிலை மீண்டும் கல்கிக்கே வருகின்றது. கல்கியில் இருந்த நிலையெல்லாம் பெரும் நீர் நிலை தான்.

ஒரு நொடியில் உலகத் தன்மை மாறுகிறது என்றேன் அல்லவா…! அந்த நிலையில் உலகத் தன்மை மாறும் பொழுது
1.உன் சுவாச நிலையின் தன்மையால்…
2.அவரவர்கள் செய்த பூர்வ புண்ணிய பலனால்…
3.பெரும் சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் வந்து கலக்கும் கல்கி என்ற அந்த நிலையில்
4.நல் சுவாசத்தை எடுத்திட்டவர்களை எல்லாம் ஒரு நொடியில் அவர்களைப் பறக்கச் செய்கின்றாள் அந்தச் சக்தி.

பாவ உடல்களில் உள்ளவர்கள் தான் அந்தச் சுவாச நிலையின் தன்மையால் கலியின் கடைசியை முடிக்கின்றார்கள்.

ஆரம்பமாகும் முதல் படியாக கல்கியில் ஒளியாக ஒவ்வொருவரும் வந்திடவே இதை உணர்த்துகின்றேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நட்சத்திரங்களில் இருப்பது ஒரு விஷத்தின் இயக்கம். அவைகள் கதிரியக்கப் பொறிகள் கொண்டது.

ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நிலைகள் நம் பூமிக்குள் நேரடியாக வந்தால் இடி மின்னலாக வரும் நிலைகளில் இவை அனைத்தும் ஊடுருவி நம் பூமியின் “நடு மையம்” செல்கின்றது.

அது கொதிகலனாக மாற்றி மின் அணுக்களாக மாற்றி அணுத் தன்மையாகி இந்தப் பூமிக்குள்ளே பிளந்து வெளிப்படுத்தும் நிலை வருகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களும் வரிசைப்படுத்தி வரும் பொழுது சூரியனுடன் சேர்ந்து சுழற்சியின் தன்மை “முன்…பின்…” வரும்.

ஒரு கூண்டை அமைத்து அதற்குள் ஒரு சைக்கிளை ஓட்டிக் காண்பிப்பது போல் – சுழன்று வரும் நிலைகளில் மையத்தில் இருந்து கொண்டு சூரியன் இயங்குகின்றது.

பல நட்சத்திரங்கள் உமிழ்த்தும் நிலைகள் பல பாகங்களிலிருந்து வருவதை இது மாற்றுகின்றது.

இதிலே ஒரு ஐஸ் பெட்டியில் (REFRIGERATOR) மின்சாரத்தை வைத்து எப்படிக் குளிர்ச்சியை உண்டாக்குகின்றோமோ அதைப் போன்று
1.சனிக் கோள் தனக்குள் வருவதை
2.உறையும் தன்மையாகக் கொண்டு வருகின்றது.

அது சுழற்சியின் தன்மை அடைந்தாலும் குளிர்ச்சியின் தன்மையாக (ஐஸ் பாறையாக) மாற்றும் தன்மை வருகின்றது.

அப்படி மாற்றி எடை கூடும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வெளி வருகின்றது. (சனிக் கோளில் உள்ள வளையங்கள்)

1.மற்ற அணுக்களுக்குள் இது எந்த அளவிற்குள் கலந்துள்ளதோ
2.அந்த அணுவிற்குள் சேர்த்து
3.மற்றொரு பொருளைத் தன்னுடன் இணைத்து
4.அந்த அணுத் தன்மை வளர்ச்சி பெறும் தன்மை அடைகின்றது.

மற்ற கோள்களில் திடப்பொருள்கள் உருவாக வேண்டும் என்றால் அங்கே “நீர் உற்பத்தி கிடையாது”.

இருந்தாலும் இந்த அணுக்கள் மற்ற கோள்களிலிருந்து வெளிப்படும் சத்தும் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய பொறிகளும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது இதை இந்தக் காந்தம் தனக்குள் இழுத்து வைத்துக் கொண்டு சேமிப்பு என்ற நிலைகள் வெப்பமல்லாத நிலைகள் குளிர்ச்சியை உண்டாக்கி (கண்ணுக்குத் தெரியும்) ஒரு பொருளாக உறையச் செய்கின்றது.

ஏனென்றால் அது திடப்பொருளாக அது உருவாக்கப்பட்டது.., இதனுடன் சேர்த்தவுடன் அந்தத் திடப்பொருளாக
1.நீரை தன்னுள் இருந்து மோதப்படும் பொழுது
2.ஆவியாக மாற்றி
3.இதனுடன் இணையும் பொருளாக மாறுகின்றது.

இப்பொழுது (1997) யாம் சொல்வதைப் பிற்காலத்தில் விஞ்ஞானிகள் சொல்வார்கள். ஏற்கனவே யாம் சொன்னதையெல்லாம் சொல்லிக் கொண்டேதான் வந்துள்ளார்கள்.

மூச்சுத் திணறல் வருவதற்கு மூல காரணம் என்ன…?

 

குழந்தைகள் மீது அன்பிருந்தாலும் சரி… மனைவி மீது கணவனுக்கு அன்பிருந்தாலும் சரி… அந்த அன்பு கொண்ட நிலையில் சிறிது குறைகள் வந்துவிட்டால் தொழில் நிமித்தம் வெளியில் வெறுப்படைந்து வீட்டிற்குள் வரும் சமயங்களில் மனைவி மீது கணவன் வெறுப்படையும் தன்மை வருகின்றது.

வெறுப்படையும் உணர்வுடன் வரப்படும் போது சாப்பிடும் போது மனைவி ஆகாரத்தைச் சுவையாகச் செய்திருந்தாலும் அந்தச் சுவையை ரசித்துச் சாப்பிடும் நிலையை அது இழக்கச் செய்து விடுகின்றது.

அப்போது சோர்வடைந்து… என்ன சாப்பாடு இப்படி இருக்கிறது என்ற வேகங்கள் வருகிறது.

நாம் உழைத்துச் சம்பாரித்துப் போட்டாலும் கூட “இங்கே சாப்பாடு மோசமாக இருக்கின்றதே…” என்று இந்தக் குறையான உணர்வுகளைச் சுவாசித்து நம்மை அறியாமலே அன்பு கொண்ட மனைவியையும் வெறுக்கும் தன்மை வந்துவிடுகின்றது.

ஏனென்றால் நாம் அல்ல.

காரணம்…
1.நாம் எடுத்துக் கொண்ட பிற உணர்வுகள் நம் நல்ல குணங்கள் கொண்ட உணர்வுகளை மறைத்து விடும் போது
2.உணவைப் பார்க்கும் போது சுவைமிக்க உணர்வின் அமிலங்கள் ஊறினாலும்
3.அதிலே… சந்தர்ப்பத்தால் எடுத்த விஷம் கலந்த அமிலங்கள் கலக்கப்படும் போது
4.சுவையான அந்த உணவின் ருசியையே மாற்றிவிடுகிறது.

அதனால் பித்தம் அதிகமாகின்றது. பித்தம் கூடி விட்டால் அடுத்து எதைச் சாப்பிட்டாலும் வாந்தியாக வருகிறது. சுவையான உணவை நீங்கள் உட்கொண்டாலும் உடல் அதை ஏற்க மறுக்கின்றது. இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்.

ஆக பித்தத்தின் தன்மை கொண்டு நாம் உடல் வலுப் பெற வேண்டும் என்றாலும் முடியாத நிலை செய்கின்றது. இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அது அமிலங்களாக எச்சிலாக மாறுகின்றது.

உணவாக உட்கொள்ளும் நிலையில் அந்தந்த உணர்வுக்கொப்பத் தான் உடல் ஜீரணிப்பதும் ஆஜீரணமாவதும்.
1.நீங்கள் அதிகமான சலிப்பும் சஞ்சலத்துடன் இருந்துவிட்டு அந்த உணர்வுடன்
2.நல்ல சுவையான உணவை உட்கொண்டால் அதை ஜீரணிக்கும் சக்தியும் குறைகின்றது.

கஷ்டப்பட்டு உழைத்து அப்பொழுது நல்ல சுவையான உணவை உட்கொண்டு உடல் வலுப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் உமிழ் நீராக மாறும் போது ஜீரணிக்கும் சக்தி இழந்து புளித்த ஏப்பமாக வரும்.

1.புளித்த ஏப்பம் வந்த பின் அந்த வாயு என்ற நிலைகளால் வயிறு உப்புசமாகும்
2.வயிறு உப்புசமானாலும் வாயுத் தன்மை நுரையீரலில் அதிகமானால் அங்கே மூச்சுத் திணறல் போன்று வரும்… ஆயாசமாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்தோமா என்றால் இல்லை.

இதைப் போன்று நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி எல்லாம் இயக்குகிறது…? என்ற நிலையை நம் குருநாதர் அருள் வழியில் எமக்குக் காட்டினார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து இந்த உணர்வின் தன்மை வலுவாகச் சேர்த்துக் கொண்டால் எத்தகைய குறைகள் வந்தாலும் அதை நீக்க முடியும்.

ஆகவே மன உறுதி கொண்டு…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அடிக்கடி உடலில் சேர்த்துக் கொண்டால்
2.சோர்வு சலிப்பு சங்கடம் சஞ்சலம் போன்ற உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.மற்றவர்கள் செயலைப் பார்த்து நுகரும் தீமையான உணர்வுகள் நமக்குள் உருப்பெறாதபடி தடுக்கவும் முடியும்… நோயாகவும் மாறாது.

நாடியைப் பார்த்தால் தெரிந்துவிடும் மூன்று ஜென்மக் கதையும்

 

ஒரு குழந்தை வீட்டில் பிறந்தவுடன் அந்த வீட்டில் உள்ள பெரியவரும் தன் வாயால் சொல்வதில்லை. பிறந்த நேரம் எப்படி உள்ளதோ…?!
1.ஜாதகக்காரனிடம் கேட்டால் பகர்ந்திடுவான்.. என்ற எண்ணத்துடன்
2.ஓடுகின்றார்கள்…… ஜாதகத்தைப் பார்க்க.

அந்த ஜாதகக்காரனின் தன்மையிலே சொல்கின்றதாம்…! குருவும் கேதுவும் சனியும் சந்திரனும் சூரியனும் புதனும் வியாழனும்…! இதை எல்லாம் பகர்ந்தவன் யாரப்பா…?

ஒன்பது கட்டம் போடுகின்றான். புதனின் பார்வையிலே சந்திரன் படுகின்றானாம். கேதுவின் நிலை பார்க்கின்றதாம்…! சனி உச்சத்தில் உள்ளதாம்.. சுக்கிரன் நடக்கின்றானாம்…! எப்படி இருக்கிறது பார்த்தாயா…?

குழந்தை பிறந்தவுடன் இப்படிப் பகர்கின்றான் பாவக்காரன். அந்தக் குழந்தையின் ஜாதகத்தையே வளரும் காலமெல்லாம்
1.அக்குழந்தையை வளர்ப்பவனுக்கும்
2.அக்குழந்தை விபரம் வந்த பிறகும்
3.ஜாதகக்காரன் சொல்வது தான் மனதினுள்ளே பதிகின்றது.

அதை வைத்து வளர்த்திட்டால் அந்த எண்ணத்தில் வைத்து வளரும் வளர்ப்புத்தான் வந்திடும். ஜாதகத்தில் வந்ததனால் எண்ணத்தின் ஊன்றிவிடுகின்றது.

அந்த “எண்ணமே தான் மனிதன்…!” என்று பல முறை பகர்ந்திட்டேன்,

எண்ண வடிவில் வருவதெல்லாம் கால நிலையில் வந்திடுமப்பா. ஜாதகத்தில் வந்ததல்ல அந்நிலை. ஜாதகம் ஜோதிடம் என்பதெல்லாம் பொய்யுமல்ல… நடப்புமல்ல…!

முன் ஜென்மத்தின் நிலையையும் கண்டிடலாம். இந்த ஜென்மத்தின் நிலையையும் கண்டிடலாம் என்னும் நிலையில் தான் ஆதிகாலத் தவசிகள் பெரும் தவமிருந்து பெற்றிட்டார்கள்.

1.ஓலைச் சுவடி முறையின் முறையிலே
2.நாடி நரம்பு என்ற வழியினிலே
3.ஒருவன் ஜாதகத்தைத் தெரிந்திட அவனின் நாடியைப் பார்த்தால் தெரிந்துவிடும்
4.அவன் மூன்று ஜென்மக் கதையும் – முன் ஜென்மக் கதையும் நடக்கும் ஜென்மமும் அடுத்த ஜென்மமும்.

எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள் பெரும் ஆத்திரக்காரர்கள்… அழித்துவிட்டார்கள் தான் பிழைக்கும் வழிக்காக. போகர் எழுதிய நாடியெல்லாம் நடு ஆற்றில் விட்டுவிட்டார்கள்.

எழுதுகிறார்கள் ஜாதகத்தை… புதனைச் சனி பார்ப்பதாக…!

ஜாதகம் என்பது முன் ஜென்மத்தில் நடந்தவற்றைத் தெரிந்து இந்த ஜென்மத்தில் நடப்பதைச் சொல்வது தான். திரித்துவிட்டார்கள் ஜாதகத்தின் உண்மை நிலையை.

இன்று ஜாதகம் பார்ப்பதெல்லாம் பேராசையின் ஆவலால் தான்.

ஆகவே ஜாதகத்தைப் பார்க்க எங்கும் சென்றிட வேண்டாம்…
1.உன் நிலையிலேயே உன் உள்ளத்திலேயே உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொண்டால்
2.தெரிந்துவிடும் “ஏழு ஜென்மப் பலனும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும்
4.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்
5.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று அனைவரும் எண்ணினால்
6.வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் குரோதம் பகைமை என்ற இந்த உணர்வுகள் நமக்குள் நிலைத்திருக்காது.

அதை நாம் நீக்கினால் தான் பத்தாவது நிலை கல்கியை அடைய முடியும்.

ஏகோபித்த நிலைகளில் நாம் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வின் தன்மை தீமைகளை அகற்றும். அப்பொழுது
1.அந்தத் தீமையான உணர்வின் தன்மையை நுகரும் நிலை இழக்கப்படுகின்றது.
2.தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை அதிகாலையில் நாம் அனைவரும் நுகர்ந்து எடுத்து வலிமை பெற்று விட்டால் நம்மிடமுள்ள தீமை செய்யும் உணர்வுகள் “அனாதையாகி விடுகின்றது…”

நம் உடல் ஈர்க்காது உணர்வுகள் வெளிப்பட்டபின் காலையில் அந்தச் சூரியனின் ஒளிக் கதிர்கள் வரப்படும் பொழுது
1.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
2.சூட்சமமான நிலைகளுக்கு “சூனியப் பிரதேசத்திற்கு” அழைத்துச் செல்கின்றது.
3.பூமிக்கு வெளியிலேயும் போகாது… பூமிக்குள் கீழேயும் வராது.
4.அதாவது சூனியமான நிலைகளை அடைந்து விடுகின்றது.

சூனியப் பிரதேசத்தில் அடைக்கப்படும் பொழுது மழை நீரோ மற்றவைகளுடன் கலந்து மின்னல்கள் ரூபமாகக் கீழே வந்துவிடும்.
1.பின் கடலலைகளால் ஈர்க்கப்பட்டு
2.தீமை செய்யும் அந்த உணர்வுகள் அதற்குள் அமிழ்த்தப்படுகின்றது.

இதைப் போன்று தான் 12 மாதங்களிலும் மனிதன் தனக்குள் வரும் தீமைகளை அகற்றுவதற்காக ஞானிகள் உருவாக்கியது தான் நாம் கொண்டாடும் பண்டிகை நாட்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் நலம் பெற வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் எண்ணும் பொழுது அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் ஈர்க்கும் சக்தி இழந்த பின் சூரியன் காலை ஆறு மணிக்கு வரும் பொழுது ஈர்த்து மேலே அழைத்துச் சென்று விடுகின்றது.

கணவன் மனைவி இருவரும் அதிகாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர்ந்து குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். குழந்தைகளுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் குழந்தைகளைத் திட்டியிருப்போம். சாபமிட்டிருப்போம். அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் அந்த வெறுப்பு வளரும்.

இதைப் போன்ற நிலைகளில் நமக்குள்ளிருந்து வெளி வந்த அத்தகைய தீமையான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. இந்தக் காற்று மண்டலத்தில் (பரமாத்மாவில்) பரவியுள்ளது.

இந்தப் பூமியைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் எண்ணுதல் வேண்டும்.
1.நாங்கள் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்
2.நாங்கள் பார்த்தோர் குடும்பங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
3.அவர்கள் மலரைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் நம்மிடமிருந்து வரும் பகைமை உணர்வுகள் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து வைத்திருப்பதை
1.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இங்கே தடைப்படுத்திவிட்டால்
2.ஈர்க்கும் சக்தி குறைகின்றது (யாரும் ஈர்ப்பதில்லை)

சூரியனின் காந்தப்புலனறிவு இழுத்து மேலே கொண்டு சென்று விடுகின்றது. கடல் அலைகள் ஈர்த்துத் தனக்குள் அமிழ்த்தி விடுகின்றது.
1.இந்தப் பரமாத்மா சுத்தமடைகின்றது.
2.நம் ஆன்மா சுத்தமாகின்றது.
3.நமக்குள் ஜீவான்மா தெளிவடைகின்றது.
4.பின் உயிரான்மா ஒளியின் சரீரம் கொண்டு அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

நல்லது நடக்காது… என்று எண்ணுவதற்குப் பதிலாக நல்லது நடக்கட்டும்… நல்லது வரட்டும்… என்று மாற்றி யோசிக்க வேண்டும்

 

குடும்பத்தில் அன்புடன் தான் வாழ்கின்றோம். பிள்ளை அமெரிக்காவில் இருந்தாலும் “என் பிள்ளை ஒரு மாதமாகத் தபால் போடவில்லையே…” என்று தாய்க்குள் வேதனையின் உணர்வின் தன்மை வரும் போது அது வலுவான உணர்வுகளாக வருகின்றது… பாச உணர்வு இயக்குகிறது.

அந்த வேதனையின் உணர்வுகளைப் பாசத்தால் தாய் பதிவு செய்கிறது. பாசத்தின் உணர்வு கொண்டு குழந்தையை எண்ணி வேதனைகளைப் பாய்ச்சப்படும் போது அங்கே என்ன நடக்கிறது…?

தாய் வெளிப்படுத்திய வேதனை உணர்வு
1.அங்கே (அமெரிக்காவில்) அந்தக் குழந்தையின் உணர்வுகளில் அது நுகரப்பட்டு… சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு
2.மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து காயமாகின்றான்.

அப்போது… நான் நினைத்தேனே… அது போல் ஆகிவிட்டதே…! என்று தாய் மீண்டும் வேதனைப்படுகிறது. ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனையுடன் எண்ணப்படும் போது… “என்ன ஆனதோ…? ஏது ஆனதோ…? என்ற பதட்ட உணர்வின் இயக்கம் தான்…” அங்கே குழந்தையை அவ்வாறு இயக்குகிறது.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை தபால் போடவில்லை… சரி…!
1.இருந்தாலும் மன வலு கொண்டு உறுதியான நிலைகள் கொண்டு
2.தபால் வருவதில் ஏதோ மாற்றங்கள் இருக்கலாம்… என்று இதை மாற்றி விட்டால்
3.தபாலின் மாற்றங்களாகத் தான் நாம் அறிந்து கொள்ளக் கூடிய தன்மை வரும்.
4.பின்னாடி பார்த்தோம் என்றால் ஓ… தபால் தேங்கி வந்தது…! என்ற நிலை வரும்.

ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனை உணர்வு கலக்கப்படும் போது எந்தக் குழந்தை மேல் பாசமாக இருந்தோமோ… அங்கே இயக்கப்பட்டுச் சிந்தனை இழக்கச் செய்து குழந்தை தடுமாறிக் கீழே விழுந்து விடுகிறது.

அதே மாதிரி நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் நல்ல சந்தோஷமாக இருக்கின்றோம் என்று பதிவாக்கிக் கொள்கிறோம். கூட்டாகத் தொழிலும் செய்கிறோம்.

ஆனால் சந்தர்ப்ப பேதத்தால் வியாபாரத்தில் ஏதோ மந்தமாகி விட்டால் இவன் எனக்குத் துரோகம் செய்கிறான்… இல்லை நீ தான் எனக்குத் துரோகம் செய்தாய்…! என்ற கோப உணர்வுகள் பதிவாகத் தொடங்கிவிடுகிறது.

இருவரும் சேர்த்து தொழில் செய்யும் போது பொருள் நஷ்டமான பின்… இரண்டு பேருமே துரோகம் செய்தான் பாவி…” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலை வருகிறது.

உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது… உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது…! என்று இருவருமே அடிக்கடி சொல்லத் தொடங்குவார்கள்.

1.இப்படி இரண்டு பேருக்குள்ளும் ஆகிப் பிரிவு ஏற்பட்ட பிற்பாடு
2.அடுத்து அவர்கள் எங்கே போய் எந்தத் தொழில் செய்தாலும் சரி…
3.இந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்லதை அவர்கள் பெறவே முடியாது.
4.இவரும் சரி… அவரும் சரி… இரண்டு பேரும் தான் கெடுகின்றனர்.

இதைப் போல் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருக்கும் போது இது எல்லாம் எதைக் காட்டுகின்றது…?

சிறு திரைகளாக அமைந்து நம் நல்ல குணங்களை அது மறைத்துச் சிந்தனை என்ற நிலை நமக்குள் வருவதில்லை. ஆகவே தெளிந்த மனதுடன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நினைவுபடுத்துவதற்குத் தான் சித்திரை… புது வருடப் பிறப்பைக் கொண்டாடுகின்றோம்.

எப்படி..?

நம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ வரக்கூடிய நிலைகளில் இருந்து
1.என் நண்பன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.என் குழந்தை கல்வியில் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்… சிந்திக்கும் தன்மை பெற வேண்டும்
3.கணவன் மனைவி நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ்தல் வேண்டும்.
4.யாருடன் பகைமையாக இருந்தாலும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வர வேண்டும்
5.அருள் உணர்வு பெற வேண்டும் என்று எல்லோரும் சொல்ல வேண்டும்.

இப்படி எண்ணும் போது குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பகைமையை மறந்து விடுகின்றோம். சிறு திரைகளை நீக்கிவிடுகின்றோம். பேரருளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோம்.

நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நிலைக்கு வரும் போது நம்மை அறியாது ஒருவருக்கொருவர் இயக்கும் தீமையான உணர்வின் இயக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

அதற்குண்டான பயிற்சி தான் இது.

மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா…! ஒவ்வொரு மனிதனையும்… அவனைப் பார்த்துக் கொள்ள…!

 

ஆவி உலகில் ஊடுருவி (நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்று மண்டலம்) அதன் தன்மையில் பார்த்தால் உலக நிலைமை எல்லாமே தெரிந்துவிடும்.
1.மனித உடலில் உள்ள வரை தான் அமைதியையும் சாந்தத்தையும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல்படும் நிலை தான்.
3.(ஆவி என்றாலும் ஆன்மா – உயிரான்மா என்றாலும் இங்கே பொருள் ஒன்று தான்)

மனித உடலின் நிலையிலே மூன்றில் ஒரு பாகம் அமைதியான ஆனந்தமான நித்திரையை இந்த இயற்கையே நமக்குக் கொடுத்துள்ளது. ஆவிகளுக்கு எந்த நிலையிலும் இந்த ஆனந்தமான நித்திரை இல்லையப்பா.

மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாக உங்களுக்குச் சொல்கின்றேன். இந்தப் பேறு பெற்றதற்குப் பல கோடித் தவம் வேண்டும்.
1.தவமிருந்து பெற்ற உடலைத்
2.தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.

மனித உடலின் தன்மையெல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா. மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும் ஆனந்தத்திலும் களித்திட வேண்டுமப்பா.

மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்தவுடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழி வாங்கும் நிலையிலும் கோபதாபத்துடனும் வளர்க்கப்படுகின்றான்.

எப்படியப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?

பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்திடுவான். வளரும் தன்மையிலே தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உடல் என்ன செய்கின்றது…? நாம் சாப்பிட்ட உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு நல்லதை நம் உடலாக மாற்றுகின்றது.

அப்பொழுது நன்மை தீமை என்று தெரிந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கின்றது. தெரிந்தாலும் நாம் என்ன செய்கின்றோம்…?

மாடு ஆடு இவைகளை வளர்க்கின்றோம். சாணத்தை அங்கேயே தான் போடுகின்றது. அது மேலேயே தான் படுக்கின்றது. அதற்கு முடிந்த அளவு அது தான். வேறு வழியில்லை…!

நாம் அவைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றோம். இவ்வாறு கட்டிப் போட்டு வைத்த நிலைகளில் வேறு வழி இல்லை என்கிற பொழுது அந்த நிலை ஆகின்றது.

கட்டிப் போட்ட நிலைகளில் இப்படி இந்த உணர்வு பழக்கமாகிவிட்டால் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றாலும் சாணத்தை இட்டபின் மீண்டும் அதிலேயே தான் படுக்கும்.

இயற்கையின் நிலைகள் இது. ஆக எதன் உணர்வு பட்டதோ அதனின் ஞானம் அங்கே வேலை செய்கின்றது.

இதைப் போன்று தான் நம் வழக்கிலும் நம்மிடம் நல்ல குணங்கள் இருப்பினும் பிறிதொருவர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகி விட்டால் அதனின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.அந்தத் தவறின் நிலையையே வளர்க்கச் செய்யுமே தவிர
2.தூய்மைப்படுத்தும் நிலை இல்லாது
3.மீண்டும் அந்த அசுத்தமான சொல்லில் செயலில் தான் வாழ்க்கை அமையும்.
4.அதனின் உணர்வாகத்தான் நம் சொல்லும் செயலும் அமையும்.

ஆகவே இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…? தூய்மைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்…?

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வு பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.பின் நம் குடும்பத்தில் எதனால் நஷ்டமானது…?
2.எதனால் ஒற்றுமை இழந்தது…?
3.குடும்பத்தில் நம் பிள்ளைகள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை செய்தார்கள்…?
4.பக்கத்து வீட்டுக்காரர் நம்மிடம் ஏன் சண்டை போட்டார்…?
5.அதிலிருந்தெல்லாம் நாம் எப்படி விடுபட வேண்டும்…?
6.கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பத் திரும்ப எண்ணுவதனால் உடலில் கை கால் குடைச்சல் எப்படி வருகின்றது…?
7.நாம் நுகர்ந்த உணர்வுகளால் வீட்டில் எப்படி வெறுப்பை உண்டாக்கச் செய்கின்றது…?
8.பிறர் சொல்லும் தீமையான நிலைகளை நமக்குள் அதிகமாகக் கேட்டால் குடும்பத்திற்குள் எப்படிப் பகைமை உண்டாகின்றது…?

இதைப் போன்ற சிந்தனைகளை நாம் செய்தோம் என்றால் சிந்தித்துச் செயல்படும் உபாயங்கள் கிடைக்கும். தீமைகள் வராதபடி நம் குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்ற அருள் வழியும் கிடைக்கும்.

ஆகவே நம் வாழ்க்கையில் தீமையின் நிலைகளை நாம் கேட்டறிந்தவுடன் தூய்மை செய்து பழக வேண்டும்.

எப்படி…?

அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு 10 நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உள் முகமாக இந்த உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

நண்பர்களிடத்திலோ மற்றவர்களிடமோ பகைமையாக இருப்போம். அவர்களை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
2.ஒன்றுபட்டு வாழும் நிலைகள் நாங்கள் பெறவேண்டும்.
3.ஒன்றுபட்டு வாழும் நிலைகள் நண்பருக்கும் வர வேண்டும் என்று
4.இப்படி இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டால் அந்தப் பகைமையூட்டும் நிலைகள் நமக்குள் வராது.

அவர்களும் இதே போன்று எண்ணினால் அவர்களுக்குள்ளும் உள்ள தீமைகள் அகலும்.

காலமறிந்து கருத்தறிந்து செயல்பட நாம் பழகிக் கொள்ள வேண்டும்

 

கணவன் மனைவிக்குள் அன்பு கலந்ததாக இருப்பினும் சில நேரங்களில் கணவர் தொழில் நிமித்தம் கடினமான வேலைகள் செய்துவிட்டு வீட்டிற்குள் வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

தொழிலில் சோர்வடைந்த நேரத்தில் மனைவி சிரித்துக் கொண்டு (இதற்கு முன் அன்பாகப் பேசியது போல்) கணவரிடம் பேசினால் ஆது கணவனுக்கு எதிர்மறை ஆகின்றது.

1.நேரம் காலம் தெரியாதபடி சிரிக்கும் நேரம் இது தானா…? என்று
2.இந்தச் சந்தர்ப்பம் அந்த நல்ல குணங்களை வேதனை என்ற உணர்வால் அது மறைக்கப்படுகிறது
3.வேதனை என்ற உணர்வுகள் மறைப்பதால் மனைவி மீது இருக்கக்கூடிய பாசங்கள் அது மறைந்து விடுகின்றது.

ஏனென்றால் கணவனின் சந்தர்ப்பம்… வெளியிலே கஷ்டமான நிலைகளில் வேலை செய்துவிட்டோ… அல்லது மற்றொருவரிடம் தகராறு செய்துவிட்டோ… மிக வருத்தத்துடன் வீட்டுக்கு வரும் பொழுது
1.மனைவி அதற்கு முன் கணவனிடம் சந்தோஷமாக இருந்தாலும்
2.கணவன் வருத்தம் அடைந்த நேரத்தில் அதே சந்தோஷத்தை ஊட்டும் பொழுது
3.அங்கே சந்தோஷத்தை வெளிப்படுத்தினால் எதிர்மறை ஆகின்றது.

எதிர்மறையாகும் போது மனைவி மீது வெறுப்பு வருகின்றது. நல்ல குணத்தில் இந்த விஷத்தின் தன்மை திரையாக மூடி விடுகின்றது. அவர் மீது இருக்கக்கூடிய அன்பை அது மறைத்து விடுகின்றது.

அன்பை மறைத்து விட்டால் மீண்டும் அதிலிருந்து பகைமை தான் வளர்கின்றது. அதை மாற்ற வேண்டும் என்றால் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்.

கணவன் அங்கே வருத்தத்துடன் இருக்கப்படும் பொழுது அவரை மனைவி உற்றுப் பார்க்கப்படும் பொழுது கண்கள் வழி அதை நுகர நேருகின்றது.

இதை… மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

வெளியில் கணவனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை…! அவர் சோகத்துடன் இருக்கின்றார்… வருத்தத்துடன் இருக்கின்றார்… என்ற உணர்வை அறிந்து அவரை மனைவி பார்த்த பின் நுகர நேர்கின்றது… உயிரிலே மோதுகின்றது மூலாதாரத்தில்…!

மூலத்தில் (உயிரிலே) மோதும் பொழுது வேதனை உணர்வுகள் தெரிய வருகின்றது. தெரிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
1.கணவருக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
2.சாந்தமும் ஞானமும் அவர் பெற வேண்டும்
3.அவரைப் பார்ப்போருக்கு நல்ல மனம் பெற வேண்டும் என்று
4.மனதால் அந்த உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்
5.மனைவியும் அந்தச் சமயத்தில் அமைதியாக (பொறுமையாக) இருந்து
6.அவர் பார்த்துச் சொல்லப்படும் பொழுது என்ன விவரத்தை சொல்கிறார் என்று “எதிர்பார்த்து…”
7.நாம் அந்த உயர்ந்த நிலையை அவருக்கு எப்படிக் கொடுப்பது…? என்று மனைவி சிந்தித்து அதைச் சொன்னால்
8.கணவர் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது.

ஆனால் காலம் தெரியாதபடி அவர் வருத்தமாக இருக்கும் பொழுது சிரித்து… “ஏன் இப்படி வேதனைப்பட்டு கொண்டே இருக்கின்றீர்கள்…?” என்று சொன்னால்… இந்த வேதனை உணர்வுகள் அங்கே சோர்வாக இருக்கும் பொழுது எதிர்மறையாகி… நல்ல செயல்கள் அங்கே செயல்படுவதில்லை

இதைப் போன்று மனிதனின் வாழ்க்கையில் சித்திரையாக… சிறு சிறு திரைகள் நம்மை மறைத்து விடுகின்றது… உண்மையின் உணர்வை அறிய முடியாது போகின்றது.

மறைத்து விட்டால் அது என்ன பொருள் என்று தெரியவில்லை. அப்போது அந்தப் பொருளின் தரத்தை நாம் அறிந்து கொள்ள முடியுமா…?

1.நமது வாழ்க்கையில் நல்ல குணங்கள் இப்படித்தான் மறைக்கப்படுகின்றது
2.நல்ல குணங்களை அந்த நேரத்தில் செயல்படுத்த முடியாதபடி பகைமை உணர்வு வந்து விடுகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாக இத்தகைய உபதேசங்களைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

தன்னைத் தானே உணரும் விழிப்பு நிலை பெறுங்கள்

 

ஒரு மத யானையை மாவுத்தன் அடக்குவது “தன் மதி கொண்டு தான்…”

மனித உணர்வின் எண்ணம் (நம்முடைய எண்ணம்)
1.தன் ஞானத்தைக் கொண்டு தன் ஆத்மா விழிப்புறும் மதி அறிந்தாலும்
2.தன் உணர்வின் எண்ணத்தை நியாயப்படுத்தும் செயல் கொண்டு
3.பிறரின் உணர்வுகள் செயல்படும் எண்ணத்தை – “தன் எண்ணம் கொண்டு பார்க்கும் பொழுது..!”
4.பிறிதொருவரின் செயலைக் குற்றமாகக் குறையாக எண்ணி
5.தன்னையே நியாயப்படுத்தும் பொழுது
6.இப்பிரபஞ்சத்தில் பரவியுள்ள பகுத்தறிவின் ஞானம் நமக்குள் வளர்ச்சி பெற்றதாக வந்த நிலையில்
7.அந்த ஞானத்தை நாம் விரயப்படுத்துவதால் ஆத்மாவின் விழிப்பு (தன்னை அறியும் நிலை) உறங்கி விடுகின்றது.

பிறிதொருவரின் உணர்வு மோதும் பொழுது தன்னை உயர்த்தி பிறிதொருவரைக் குறைக்கும் எண்ணத்தை எடுத்தோமானால் தன் உணர்வில் முதலில் மோதுவது குறை கொண்ட ஒலித் தன்மைதான்,

ஞானத்தின் செயலானது ஒவ்வொரு அணுவுமே மூச்சலையிலிருந்து வெளிப்படும் சுவாசக் காற்றானது
1.சாதாரண மனிதனுக்கு உள் இழுப்பது நல்ல காற்றும் வெளிப்படுவது தீய காற்றாகவும் இருக்கின்றது. – இது இயல்பு
2.ஆனால் தன்னை உணரும் மெய் ஞானியின் மூச்சுக் காற்றோ உள் இழுக்கும் காற்றுக்கு மேல் அவன் வெளிப்படுத்தும் சுவாசக் காற்று பரிசுத்த ஒளியாகப் பரவக்கூடிய தன்மை உண்டு.

தீமையை நன்மையாக்கும் சூட்சும உயிர் தான் மனித உயிராத்மா (மனித உயிரும் + ஆத்மாவும்). ஆதிசக்தியின் படைப்பால் பலன் கொண்ட நிலையில் படைக்கப்பட்ட உயர்ந்த படைப்பு தான் அந்த மனித உயிராத்மா. அண்டத்தையே ஆளுகின்ற சக்தி அந்தப் படைப்புக்குத் தான் உண்டு.

அந்தப் படைப்பின் பலனைப் பெற வேண்டும் என்றால் மாமகரிஷிகளின் அருள் ஒளி சக்தி கொண்டு ஆத்மாவும் உயிரும் இணையும் வலுக் கொண்ட விழிப்பு நிலையாக
1.மெய் ஞானத்தில் பெறும் தியானத்தின் முறையால்
2.தன்னைத் தானே உணரும் விழிப்பு ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நூலாம்படைப் பூச்சி தனக்குள் உணவாக உட்கொண்டபின் தன் மலத்தை வலையாக விரிக்கின்றது. அந்த வலைக்குள் சிக்குவதை உணவாக உட்கொள்கின்றது.

வலைக்குள் சிக்கும் ஒரு ஈயிற்குள் தன் கூர்மையான மூக்கால் ஊடுருவித் தன் உணர்வைப் பாய்ச்சி அதற்குள் இருக்கும் நீர் சத்தை அனைத்தையும் குடித்து வாழ்கின்றது.

தன் மலத்தால் மீண்டும் காற்றுப் புகாமல் அந்த ஈயினைச் சுழற்றிவிட்டு தனக்குள் உருவான கருவை அந்த ஈயிற்குள் பாய்ச்சியபின் ஈயிற்குள் இருக்கக்கூடிய அணுக்களை இது எப்படி உருவாகியதோ அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் பல நூலாம்படைப் பூச்சிகளாக உருவாக்குகின்றது.

அதைப் போன்று குளவியை எடுத்துக் கொண்டால் தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கொண்டு மண்ணைப் பிசைகின்றது. கூடு கட்டுகின்றது. கூடு கட்டிய பின் ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வருகின்றது.

தூக்குவதற்கு முன் அதை ஒரு கொட்டு கொட்டிவிடுகின்றது. குளவியைப் புழு கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றது. கட்டிய மண் கூட்டிற்குள் அந்தப் புழுவைத் தள்ளுகின்றது.

தள்ளிய பின் மீண்டும் இரண்டு தரம் புழுவைக் கொட்டுகின்றது. புழு மயக்கமடைகின்றது. குளவியையே அந்தப் புழு நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

அந்தக் குளவியின் உடலில் உருவான உமிழ் நீரைக் கொண்டுதான் அந்தக் கூட்டைக் கட்டுகின்றது. புழுவின் உடலுக்குள் தன் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சுகின்றது.

புழுவைக் கூட்டிற்குள் செலுத்தியபின் மண்ணைக் கொண்டு மூடிவிடுகின்றது. மூடிய பின்பு கூட்டிற்கு மேலே வந்து குளவி “கிர்..ர்ர்..ர்ர்..” என்று இரைச்சல் கொடுக்கின்றது.

இந்த உணர்வின் அதிர்வுகள் புழுவிற்குள் இருக்கும் அணுக்களில் இது கலக்கின்றது. ஆனால் இந்த விஷமோ புழுவின் தோலைச் சருகு போல் ஆக்கிவிடுகின்றது.

புழுவின் தசைகள் அமிலங்களாக மாறுகின்றது. அந்த அமிலங்களுக்குள் குளவி கொட்டிய விஷத் தன்மைகள் அணுத் தன்மை கருவாக உருவாக்கும் நிலை அடைகின்றது.

அதற்குள் இருக்கும் விஷத்தைப் புழுவின் உயிரால் துடிப்பாகப்படும் பொழுது இதற்குத் தக்கவாறு அதனின் உடலின் அமைப்புகள் மாறுகின்றது.

குளவி கூடு கட்டியதையும் புழுவைத் தூக்கிக் கொண்டு வைத்ததையும் பின் கடைசியில் புழு குளவியாக மாறி வெளி வருவதையும் பார்ப்பதற்காக இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு நுண்ணிய கேமராக்களிலும் சக்தி வாய்ந்த ஸ்கேன் வைத்துப் பார்ப்பது போல் இந்த உணர்வை உள்ளுக்குள் செலுத்தி அது எப்படி உருமாறுகின்றது…? என்று சாப்பாடு கூட இல்லாமல் குருநாதர் எம்மைப் பார்க்கச் செய்தார்.

அதை உங்களிடம் இப்பொழுது இலேசாகச் சொல்கிறோம்.

இதைப் போன்றே விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எறும்புப் புற்றுக்குள்ளும் கரையான் புற்றுக்குள்ளும் அது எப்படி உருவாகின்றது என்று கண்டு கொள்கின்றனர்.

1.அன்று மெய்ஞானி தன் எண்ணத்தை வைத்து
2.அதை ஊடுருவிப் பாய்ச்சினான்.
3.அந்த உணர்வின் இயக்கத்தை அறிந்தான்.

யார்…? அகஸ்தியன்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வு தான் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் பூமியில் பரவப்படும் பொழுது அந்த உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கும்.

நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கருவாகும். உணர்வின் தன்மையை வலுவாக்கும். அதன் உணர்வு கொண்டு நம்மை ஆள்வது நம் உயிர்.

அந்த அகஸ்தியமாமகரிஷி கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை
1.வான இயல் புவி இயல் உயிரியல் அடிப்படையில்
2.அணுவின் ஆற்றலையும் பேரண்டத்தின் இயக்கங்களையும்
3.நீங்களும் கண்டுணர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்… கண்களைத் திறந்து தியானிக்க வேண்டும்

 

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தியானம் செய்து கொண்டே இருப்பது தியானமல்ல.
2.அது தியானம் ஆகாது.

காரணம்… தியானத்தை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள். அடுத்தாற்போல் திடீரென்று ஒரு விபத்து ஆகிறது என்றோ உங்களை நோக்கி ஒரு மாடு மிரண்டு ஓடி வந்தால் ஆ…! என்று அலறினால் போதும். இது வந்து உள்ளே உருவாகிவிடும்.

இந்த உணர்வு அதிகமானால் தியானத்தில் அடுத்து உட்கார முடியாது.
1.அதிர்ச்சியான செய்தியைக் கேட்டால் அது தான் முன்னாடி நிற்கும்.
2.அப்புறம் நீங்கள் எப்படித் தியானம் எடுப்பது…?

ஆகவே அப்போதைக்கப்போதே துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திற்கே விடும். அப்படிப் பழகவில்லை என்றால் தியானத்திற்கே வர முடியாது.

மனதை ஒரு நிலைப்படுத்துவது (CONCENTRATION) என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் முடியாது.
1.நீங்கள் எவ்வளவு செய்தாலும்… பல காலம் நான் தியானமிருந்தேன் என்று சொன்னாலும்
2.முதலில் நன்றாக இருந்தது… இப்போது தியானம் செய்ய முடியவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

காரணம் எதிர்பாராதபடி அதிர்ச்சியோ மற்றதோ வந்த பின் அது நமக்குள் வலுப் பெற்று விடுகிறது. நம் ஆன்மாவில் கலந்து விடுகிறது. அது வலிமை பெறுகிறது… அதனால் முடியாது போகிறது.

அந்தச் சமயத்தில்… நன்றாகத் தியானம் செய்தேனே… போய்விட்டதே…! தியானம் செய்தேனே… போய்விட்டதே…! என்று வேதனைப்பட்டு அந்த விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கையில் அழுக்குப்பட்டதைத் துடைப்பது போல் யாம் (ஞானகுரு) கொடுத்த அருளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.

1.எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ அப்போதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் இணைத்து உள்ளே புகாது தடுத்துவிடுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் அது வளர வளர…
1.எந்தத் தீமையை நுகர்ந்தோமோ அதை உங்கள் ஆன்மாவிலிருந்து தள்ளிக் கொண்டே போகும்
2.நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டுக் கடந்து சென்றால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூடக் கொஞ்ச நேரம் சேர்த்து எடுத்தீர்கள் என்றால் யாம் சொல்வதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்களைத் திறந்தே எடுங்கள்… அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.கண்களை மூடுங்கள்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலில் இருக்கும் எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.
3.இப்படி எண்ணி உங்கள் நினைவைக் கூட்டிப் பாருங்கள்.

உங்களால் சாத்தியமாகிறதா இல்லையா என்று பாருங்கள். ஆகவே… வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

அப்போதைக்கப்போது துடைக்கவில்லை என்றால் உள்ளுக்குள் சென்று அது வலுவாகிவிடும். உங்கள் ஆன்மாவில் அது வலுவாகிவிடும்.

அடுத்து… தியானத்தில் உட்கார்ந்தவுடனே அவன் அப்படிச் சொன்னான்… அதிர்ச்சியாகிவிட்டது என்று அந்த நிலை தான் வரும். அந்த மாதிரி அதிர்ச்சி வந்தாலும் மீண்டும் மேலே சொன்ன முறைப்படி எண்ணி எடுத்து அதைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

இது தான் உண்மையான தியானம். ஒவ்வொரு நொடியிலும் உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

எதை எதையோ ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் பதிவு செய்கின்றோம். திருப்பி எண்ணும் போது அதனின் உணர்வே நம்மை இயக்குகிறது… நம்மைத் திசை திருப்புகிறது.

ரேடியோ டி.வி.யில் எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ காற்றிலிருந்து இழுத்து அதைப் பேசுகின்றது. அது போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

அதை நினைவுக்குக் கொண்டு வரும் போது
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் உடனடியாகப் பெற முடியும்.
2.மன பலம் பெற முடியும்… மகிழ்ந்து வாழும் சக்தி நிச்சயம் பெற முடியும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளைப் பெறுவோம். துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே நாம் வாழ்வோம்.

என்னை அழைத்துச் செல்… உன்னுடன் வருகின்றேன்

 

எங்கே வெளியில் செல்வதாக இருந்தாலும் சரி… எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சரி… புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி ஒரு நிமிடம் ஏங்கி என்னை அழைத்தால்
1.உன்னுடனே நான் வருவேன்.
2.உன்னுள் இருக்கும் என்னை நீ பார்..!
3.உன்னையே நீ பார்…!

எந்தக் காரியம் துவங்குவதாக இருந்தாலும் அல்லது எந்தச் சிக்கலாக இருந்தாலும் எத்தகைய கடுமையான நிலையைச் சந்தித்தாலும் அடுத்த கணம் புருவ மத்தியில் ஈசனை எண்ணும் பழக்கம் வந்துவிட்டால் எல்லாமே நல்லதாகத்தான் முடியும்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்…
1.நம் எண்ணத்தை… நம் மனதை… புருவ மத்தியில் இருக்கும் ஈசனிடம் திருப்பும் பழக்கம் வந்து விட்டால்
2.நம் வாழ்க்கை என்றுமே சீராக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதனை வெறுப்பு எடுத்து விவசாயம் செய்தால் உங்கள் “கண்களிலிருந்து வெளிப்படும்”அந்த வேதனையான உணர்வுகள் பயிர்களில் பட்டுச் சரியாக விளையாது. நல்ல பலன்களைக் கொடுக்காது.

குடும்பத்தில் சங்கடப்பட்டுக் கொண்டு விவசாயம் செய்யட்டும். அவர்கள் கண் பார்வை பட்டு…
1.அந்த விதைகளை விதைக்கப்படும் பொழுதே இந்த வேதனை என்ற விஷங்கள் அதிலே கலக்கப்பட்டு அது சரியான பயிராக வராது.
2.வியாபாரத்தில் வேதனையுடன் ஒரு பொருளை எடுத்துக் கொடுத்தாலோ இந்த உணர்வு பட்டு
3.வாங்குபவர்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது அந்தப் பொருளை வெறுக்கும் தன்மையே வரும்.
4.ஒரு புடவையாக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் சரி… அதனால் வியாபாரம் மந்தமாகும்.
5.வியாபாரம் இல்லை என்கிற பொழுது கடைச் செலவு மற்ற செலவுகள் வீட்டுச் செலவுகள் எல்லாம் தொக்காகும். (குறைவாகிவிடும்)

அப்பொழுது எதை வைத்து வருகின்றது…? அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நம் நல்ல குணங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் நன்மை பெற வேண்டும் என்ற உணர்வை எனக்குள் எடுத்தால் எனக்குள் நன்மை பயக்கும் சக்தி வருகின்றது.

ஆனால் “வெறுமனே…” நன்மை பயக்க வேண்டுமென்றால் வராது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுடன் அந்த வலு கொண்ட சக்தியைச் சேர்த்து அந்த உணர்வுடன் கலந்து நல்லவைகளை எண்ணுதல் வேண்டும்.

நன்மை பெற வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் தொழில் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.இந்த உணர்வுகள் என் உடலுக்குள்ளும் பாய்கின்றது.
2.இந்த உணர்வின் சொல் உங்களுக்குள்ளும் இந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
3.அதையே இயக்குகின்றது.

ஒரு பக்கம் நாம் வெறுப்பாகும்படி ஒருவர் செயல்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வெறுப்பான உணர்வுகள் செயல்படுவதைப் பார்த்தவுடன் அந்த வெறுப்புடன் நான் இருக்கின்றேன்.

அந்த வெறுப்பின் தன்மை வரப்படும்போது என் நண்பன் வருகின்றான். நம்மைப் பார்த்து… ஏம்ப்பா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது…! என்று சொல்லிச் சிரிக்கின்றான்.

நண்பன் சிரிப்பதைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் தன்மையுடன் இருக்கும் பொழுது “என்ன..! இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்…?” அவன் அப்படிப் பேசினான்… ஆனால் இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்.

ஆக சந்தோஷமாகச் சிரித்தாலும் இங்கே வெறுப்பு வருகின்றது.

அப்பொழுது என்ன செய்கின்றது…? அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகள் இதனுடன் கலந்தபின் நண்பனின் உணர்வு இங்கே “எதிரியாகத் தெரிகின்றது”.

விஷத்திற்குள் நல்ல பொருளைப் போட்டால் என்ன செய்யும்…? ருசியாக இருக்குமா…? அதுவும் மயக்கத்தான் செய்யும்.

இதைப் போன்று இயற்கையின் நிலைகள் வருவதை நாம் மனத் தூய்மை செய்ய வேண்டும். நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் யார் சங்கடப்பட்டார்களோ வேதனைப்பட்டார்களோ அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் அவர்கள் மன பலம் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும் அவர்கள் செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது அவர்கள் உணர்வை நாம் எடுப்பதில்லை.

ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது நண்பன் சிரித்ததைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் உணர்வை ஊட்டி என்ன செய்கின்றோம்…?

1.அந்த நண்பன் மேல் உணர்வு வரப்படும் பொழுது
2.அவனைப் பார்க்கும் பொழுது நம்மைக் கேலி செய்கின்றான்… கிண்டல் செய்கின்றான்…
3.நாம் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது…! என்ற இந்த உணர்வு வரும்.

சில பேரைப் பார்த்துமே… “நம்மைப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது…” என்று சொல்வோம். அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது…?

“நாம் நுகர்ந்த உணர்வை நம் உயிர் இயக்குகின்றது…” தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்றுத் தீமைகளை நீக்கிப் பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளியின் சரீரம் பெறுவதை உணர்த்துவதே விஜய தசமி.

நம் ஆறாவது அறிவை ஞானிகள் காட்டிய வழியில் பயன்படுத்த வேண்டிய முறை

 

மிளகாய் காரமாக இருக்கிறது என்றால் அந்தக் காரத்தை நாம் வாயிலே சுவைத்துத் தான் ஸ்… ஆ…! என்று உணர்கின்றோம். ஆனால் விஞ்ஞான அறிவோ அந்தக் காரத்தின் நிலையையே மாற்றி அமைத்து அதைச் சுவையான மிளகாயாக உருவாக்குகின்றார்கள்.

எப்படி…?

1.மிளகாயின் காரத்தின் அளவுகோலை அறிந்து… அதனுடைய இயக்கம் எவ்வாறு…? அதனின் வீரியங்கள் எவ்வாறு…? என்று
2.இயந்திரத்தின் மூலம் எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற உணர்வின் துணை கொண்டு இயக்கங்களைக் கண்டறிகின்றான் தன் விஞ்ஞான அறிவால்.

மனிதனாக வளர்ச்சி பெற்ற பின் காரத்தைக் குறைப்பதற்கு இப்படிக் கண்டறிகின்றான்.

உதாரணமாக… மிளகாயைச் சட்டியில் போட்டு வறுக்கிறார்கள் அல்லது மிளகாயைப் பொடியாக அரைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் நுகர்ந்தால் என்ன ஆகும்…?

நச்… நச்… என்று தும்ம வேண்டி வரும். கார உணர்ச்சிகள் உடலுக்குள் சென்ற பின் “ஒரே நெடியாக இருக்கிறது…” என்று தான் நாம் அறிகின்றோம். காரணம்… அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் நம்மை இயக்கிவிடுகின்றது.

இதைத் தணிப்பதற்காக… மனிதன் இயந்திரத்தினை உருவாக்கி அதனின் உணர்வின் அதிர்வுகளை எலெக்ட்ரான் ஆக மாற்றி அதனின் உணர்வின் செயலாக்கங்களைச் செயல்படுத்துகின்றார்கள்.

காரம் என்று சொன்னாலும் அதிலே எத்தனையோ வகை உண்டு.

“குடமிளகாய்…” பெரிதாக இருக்கும். அதிலே பல விதமான வாசனைகளும் வரும். ஆனால் காரம் இலேசாக இருக்கும். இது மனிதன் உருவாக்கியது.

தாவர இன வித்திலேயே பல விதமான உணர்வுகளைக் கலந்து செயல்படுத்துகின்றனர். அதாவது… ஒவ்வொரு செடிகளுக்கென்று மரபணுக்கள் உண்டு.

1.காரம்… புளிப்பு… உப்பு… நல்ல நறுமணங்கள்… கொண்ட தாவர இனங்களில் உள்ள மரபணுக்களை எடுத்து
2.அதை ஒரு புது விதமான வித்தாக உருவாக்குகின்றனர்.

எந்தெந்தச் செடிகளில் அந்தச் சுவைகள் தனித் தனியாக வளர்ந்ததோ அதனின் மரபணுக்களை இணைத்து ஒன்றாகக் கூட்டாக அமைக்கப்படும் போது காரத்தின் அளவும் நல்ல நறுமணத்தின் நிலைகளையும் அதே சமயத்தில் அந்த மிளகாயில் சுவையும் கூடுகிறது.

அதை நாம் குழம்பிலோ மற்றதிலோ போடப்படும் போது அதிலே இத்தனை மணங்களும் வருகிறது. ஏனென்றால்
1.பல விதமான செடிகளின் மரபணுக்களிலிருந்து காரத்தை எடுத்து இணைத்து
2.இந்த உணர்வுக்கொப்ப குடமிளகாயை உருவாக்குகின்றார்கள் மனிதன்.

இப்படி நம் சுவைக்காக வேண்டி அதை உருவாக்கி உணவாக உட்கொள்ளும்போது நாம் ரசித்துச் சாப்பிடுகின்றோம். மகிழ்ச்சி பெறும் சக்தியாக “ஆறாவது அறிவு” உருவாக்குகின்றது.

ஆக இந்த உடலை மகிழச் செய்ய விஞ்ஞானம் இப்படித் தாவர இனங்களை உருவாக்கி மகிழச் செய்யும்படி வைக்கின்றது.

ஆனால் மெய் ஞானியோ வாழ்க்கையில் தன்னை அறியாமல் வரும் எத்தனையோ சுவையற்ற நிலைகளை (தீமைகளை) சுவைமிக்கதாக மாற்றிக் கொண்டவர்கள்… முருகு… மாற்றியமைக்கும் சக்தி பெற்றவர்கள்.

ஏனென்றால் நல்ல குணத்துடன் இருக்கின்றோம். கஷ்டப்படுகின்றவர்களைப் பற்றிக் கேட்டறிகின்றோம். அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்கின்றோம். அவர்கள் கஷ்டப்பட்டது ஆறாவது அறிவில் இங்கே வந்து சேர்ந்து கொள்கின்றது.

அப்பொழுது இதைச் சேர்த்தால் வேதனையான எண்ணம்தான் வருகின்றது.
1.வேதனைப்படும்போது யார் காப்பாற்றுவது…?
2.இந்த ஆறாவது அறிவில் கலந்ததைச் சுத்தப்படுத்துவது யார்…?

பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள். முருகனைப் பார்க்கப்படும் போது எதை எண்ண வேண்டும்…?

இந்த உண்மையை உணர்த்திய
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று
3.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தன்னைக் காத்திடும் நிலையாகத் துடைக்க வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய. இந்த ஆறாவது அறிவின் தன்மை நமக்குள் அதைப் வலுப்படுத்தும் சக்தியாக தீமைகள் நம் உடலுக்குள் உருவாகாதபடி பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று செயல்படுகின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகள் விளையாது அந்த ஞானியின் உணர்வை நமக்குள் விளையச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றான். இந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று ஞானிகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உன் உணர்வின் தன்மை ஒளியாக்கு – கார்த்திகேயா…! கார்த்திகேயா என்றால் வெளிச்சம். கெட்டதை நீக்கி நீ இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று ஞானிகள் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி தெரியப்படுத்துகின்றர்கள்.

ஆகவே…
1.நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில்
2.உனக்குள் உன்னைக் காப்பாற்றிய நல்ல தெய்வம் இந்த ஆறாவது அறிவு தான்…! என்கின்ற நிலையில்
3.நீ பக்குவப்படுத்திப் பார்…!” என்று ஞானிகள் தெளிவாகவே காட்டியுள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ரேடியோ டி.வி அலைகளில் எந்தெந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்தந்த அலையில் தான் வருகின்றது. கோபித்தவனுடைய உணர்வைப் பதிவாக்கிவிட்டால் அது ஒரு ஸ்டேசன் ஆகின்றது.

அவன் உடலில் விளைந்த உணர்வு அங்கே இருக்கின்றது. நம் உணர்வு அவனிடம் இருக்கின்றது. “என்னை இப்படி மோசம் செய்தான்…” என்று எண்ணினால் அந்த அலைகள் வருகின்றது.

அதே நேரத்தில் அந்த உணர்ச்சிகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றது. உடனே நம்மை அறியாமலே இங்கே தவறுகள் செய்ய ஆரம்பித்துவிடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் உலகில் எத்தனையோ உணர்வுகளைப் பார்க்கின்றோம். ஒரு ஆக்சிடென்டைப் பார்க்கின்றோம். அப்பொழுது அது ஒரு ஸ்டேசனாக அமைந்துவிடுகின்றது.

இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம். ஒருவன் மற்றொருவனை மிரட்டிப் பேசுகின்றான்.
1.அவன் உடலிலிருந்து வெளிவந்த அலைகள் இங்கே இருக்கின்றது.
2.அவனுக்குள் விளைந்திருக்கின்றது… அவனிடமிருந்து வெளி வருகின்றது.
3.நமக்குள் பதிவாகியிருக்கின்றது. அந்த அலைகளை நுகரச் செய்கின்றது.
4.அது அழிவதில்லை.
5.அதை (அந்த ஸ்டேசனை) அழிக்க வேண்டுமல்லவா…!

அது நமக்குள் இருக்கும் பொழுது என்ன செய்கின்றது…?

நாம் சோர்வடையப்படும் பொழுது காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்கச் செய்கின்றது. திடீரென்று நமக்குக் கோபம் வரும்.

அப்பொழுது எதை எடுத்தாலும் வேகம் வரும். ஒரு பொருளை எடுத்தாலும் அந்த வேகம் வரும். சோர்வடைந்த அந்த நேரத்தில் தூக்கி எறிவார்கள்.

ஒரு பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரி ஆகட்டும். உடனே என்ன செய்வார்கள்…?

வடையை எணணெய்ச் சட்டிக்குள் மெதுவாகப் போடுவதற்குப் பதில் தூக்கி “டப்..” என்று போடுவார்கள். எண்ணெய் மேலே படும்.

செய்வது எது…? நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள் தான்.

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் அந்த உணர்வுகள் நம்மை இயக்காது நாம் அதை அடக்க வேண்டும்.

ஒரு ரேடியோ ஸ்டேசனில் உணர்வலைகள் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருக்கின்றது. சில நேரங்களில் காரசாரமான உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலைவரிசையில் வரப்படும் பொழுது இதிலிருந்து இந்த ஏரியல் வழி கூடித்தான் எடுக்கும்.

அந்த ஏரியலில் வரும் பொழுது இந்த அலை வரிசை அதிகமாகிவிட்டதென்றால் இதனின் அதிர்வலை “ஜிர்..ர்ர்..ர்ர்” என்று சப்தம் போடும்.

ஆகவே இதில் அலை வரிசையில் வரும் பொழுது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும் எலெக்ட்ரிக்கின் உணர்வலைகள் வரப்படும் பொழுது அந்த எலெக்ட்ரிக்கின் தொடர்பு கொண்டுதான் இங்கே இயக்குகின்றது.

அந்த உணர்வின் தன்மை எரியல் வழி கூடி அது வந்தாலும் இது எர்த் ஆன பின் இன்னொரு ஸ்டேசனை வலுவான நிலைகளை இழுத்து என்ன செய்கின்றது..?

அந்த அதிர்வுகளையே காட்டுகின்றது. (நீங்கள் கேட்டிருப்பீர்கள் – இரண்டு ஸ்டேசன் ஒரே அலைவரிசையில் வந்தால் ரேடியோவாக இருந்தாலும் டி.வி.யாக இருந்தாலும் அதிர்வாகி இரைச்சலாகும்) இதைப் போல
1.நம் உயிர் எலெக்ட்ரிக் என்றாலும்
2.ஒரு எதிர் உணர்வான எலெக்ட்ரிக் அந்த எலெக்ட்ரானிக்காக மாற்றப்படும் பொழுது
3.நம்முடைய சிந்தனை குலைந்து
4.நம்மை அறியாமலே தவறான சொல்களைச் சொல்லச் செய்து
5.தவறான செயல்களைச் செய்யச் செய்துவிடுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?

ஆகவே நம்மை அறியாமல் இத்தகைய தீமைகள் இயக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் “அருள் மகரிஷிகளின் பால்” நினைவைச் செலுத்த வேண்டும் அந்த அலைவரிசையை எடுக்க வேண்டும்.

தீமையான உணர்வைக் கண்ட அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் உயிரிலே படும் இந்த அருள் உணர்வுகள் நம்மை இயக்கும் தீமையின் நிலைகளை உணர்த்தும். தீமையின் நிலைகளை அடக்கும். சிந்தனைத் திறனைக் கூட்டும். தீமையான உணர்வலைகள் நம் அருகிலே வராது தள்ளிவிடும்

அப்பொழுது நம் சொல்லில் இனிமையும் செயலில் தெளிவும் வரும். நமக்கும் நல்லதாகும் எல்லோருக்கும் நல்லதாகும்.

செய்து பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

 

நம்முடைய மனித வாழ்க்கையில் எத்தனையோ வகையான உணர்வுகள் தாக்கும். அந்த உணர்வுகளெல்லாம் நம்மைத் தாக்காதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் நம்மைக் கோபித்துத் திட்டுகின்றார் என்றால் திட்டுகிறான்… திட்டுகின்றான்.. என்று எண்ணினால் அவன் உணர்வைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

“அவன் உணர்வை…” வராமல் தடுக்க முடிகின்றதா…!

பிள்ளை மேல் பாசமாக இருக்கின்றோம். அவன் சரியாகப் படிக்கவில்லை என்று எண்ணினால் அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றதே தவிர அதனால் நாம் வேதனைப்படுகின்றோம்.

ஒருவருக்குப் பணம் கொடுத்து உதவி செய்திருப்போம். கொடுத்த பணம் வரவில்லை என்கிற பொழுது அன்றைக்கு உதவி செய்தேன் ஆனால் இன்று ஏமாற்றுகின்றானே…! என்று இந்த உணர்வைத்தான் வளர்க்கின்றோம்.

“இல்லை” என்று சொல்ல முடியுமா…?

ஆகவே இதைப் போல்
1.நம் வாழ்க்கையில் எதை எடுத்தாலும் குறைகளைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
2.இதை நீக்கும் உணர்வே வரவில்லை.

ஆறாவது அறிவு கொண்டு நம் உடல் நஞ்சைப் பிளந்த பின் தீமைகளை நீக்கக்கூடிய அறிவின் ஞானம் தீமை என்று தெரிகின்றது. தீமையை நீக்க வேண்டும் அல்லவா…?

அந்தத் தீமைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். அது நமக்கு முன் படர்ந்துள்ளது.

அதை எடுத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்… அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்… என்று நாம் எண்ணினால் அவன் உணர்வு இங்கே சிறுத்து விடுகின்றது.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுத்த உணர்வுகள் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் கலந்து நம் உடலிலுள்ள இரத்தங்களிலே கலக்கின்றது.
1.அப்பொழுது நமக்குள் பதட்டமும் பயமும் குறைகின்றது.
2.இந்த அருள் உணர்வுகளை நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் சுவைத்துச் சாப்பிடும்.
3.அருள் ஒளி என்ற உணர்வுகள் இது தெளிவாகும் பொழுது நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் தெளிவாகும்.
4.நமக்கு மன வலிமை கிடைக்கின்றது.
5..சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.
6..நம் செயலும் ஒரு நல்ல செயலாகச் செய்யும் நிலை வருகின்றது.
7.நம் சொல்லும் பிறரை மகிழச் செய்யும் சக்தியாக அமைகின்றது.
8.நாம் சொல்ல நினைக்கும் உணர்ச்சிகள் நமக்குள் நல்லதாகவும் அமைகின்றது.

உங்கள் நினைவாற்றல் குருநாதர் இருக்கும் எல்லைக்குச் செல்வதற்கே உபதேசிக்கின்றோம்

 

உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை மறைத்திருக்கும் சித்திரை என்ற நிலைகளிலிருந்து… அந்தத் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதற்குத் தான் அருள் உரைகளை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாம் கற்றுக் கொடுத்தாலும் அதை நான் (ஞானகுரு) மறைத்து விட்டால் என்ன செய்யும்…? அவ்வாறு இல்லாது
1.இந்த விஞ்ஞான உலகில் வரும் பெரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.
2.உங்கள் பார்வையால் மற்றவர்களின் தீமைகளைப் போக்கும் நிலை பெற வேண்டும்.
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக அந்த ஞானத்தின் வழியில் நீங்கள் வாழ்ந்திட வேண்டும்.

உதாரணமாக நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தில் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம் நல்ல குணத்தில் அது இணைந்து விடுகிறது.

அந்தப் பயமுறுத்தும் உணர்வு நமக்குள் விளைந்து விட்டால் நல்ல குணங்களை நம்மால் காக்க முடியவில்லை… காக்க முடியாது போகிறது.

அதாவது…
1.ரோட்டிலே இன்ன மரம் இருந்தது… அந்த இடத்தில் கோர விபத்தானது என்று கேள்விப்பட்டவுடனே “ஆ…” என்று பயமான உணர்வு பதிவாகின்றது.
2.பதிவான பின் அதே நினைவு வருகிறது… அந்த இடமே அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிடும்.

ஆகவே அச்சுறுத்தும் உணர்வை மாற்றிடும் சக்தியாகத் தான் குருநாதர் கொடுத்த அந்த அருள் சக்திகளை… தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகளை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

1.எம்மிடமிருந்து (ஞானகுரு) சொல்லாக அது வெளி வந்தாலும் (உங்களுக்குள் பதிவு)
2.அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் யாம் பெற்ற நிலையில்
3.அங்கே யாம் பெற்றதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.உங்கள் நினைவாற்றல் என் குருநாதர் காட்டிய அந்த எல்லைகளுக்கே செல்லும்
5.அங்கே உருவான அந்த மெய் உணர்வை நீங்களும் நுகர முடியும்.

நீங்கள் மீண்டும் மீண்டும் அதை நினைவுபடுத்தி உங்கள் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சித்திரை என்ற நிலைகளை மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வின் அணுவாக மாற்றிட வேண்டும்.

ஏனென்றால் திரும்பத் திரும்பச் சொல்லித் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வை இணைத்துக் கொண்டு வருகின்றேன்.

உதாரணமாக பள்ளியில் படித்த பின் தேர்வை வைக்கின்றனர். தேர்வின் மூலமாக அவன் தெரிந்து கொண்டானா…? இல்லையா…? என்று பரீட்சித்துப் பார்க்கின்றனர்.
1.படித்தது நினைவுக்கு வந்தால் எழுதிவிடுகின்றான்.
2.படித்ததை நினைவுக்குக் கொண்டு வந்தால் சிந்திக்கும் தன்மையும் வருகின்றது.

படித்ததை வைத்து நினைவு கொண்டு அந்தச் செயலாக்கங்களை எப்படி மாற்ற வேண்டும் என்ற சிந்தனை கொண்டால்… சிந்தித்துச் செயல்படும் ஞானமாக அங்கே வருகின்றது.

அது போன்று தான் குருநாதர் காட்டிய உண்மைகளை எல்லாம் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.
1.அதை யாரெல்லாம் நினைவுபடுத்தி அதைக் கவரும் நிலைக்கு வருகின்றனரோ
2.அவர்களுக்கு நிச்சயம் குரு பெற்ற அருள் ஞானம் கிடைக்கும்… மெய்ப் பொருள் காணும் திறனும் கிடைக்கும்.

இந்த மனிதப் பிறவியில் நாம் சேமிக்க வேண்டியது ஞானிகளின் சக்தி தான் – ஈஸ்வரபட்டர்

 

மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”

மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்தி நிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”

இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.

1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.

இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.

வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”

1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தேதான் வழி வந்துள்ளோம்.

ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தாவர இனங்களுக்குண்டான ஆற்றல்களை அறிவதற்காக எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார் குருநாதர்.

போகர் பல தாவர இனங்களை எப்படி நுகர்ந்தார்…? என்று எனக்கு உணர்த்துவதற்காக ஒரு கட்டுப் பீடியைக் கொடுத்து அதை அப்படியே குடிடா… என்கிறார்.

அதே போல பத்து சிகரெட்டைப் பற்ற வைத்து “மொத்தமாக ஊது…” என்கிறார். எனக்கு வாயெல்லாம் எரிகின்றது.

இதை எப்படி உறிஞ்சுகின்றாயோ இதனுடைய தன்மை போல அந்தத் தாவர இனத்தின் தன்மையை நீ எப்படி நுகர வேண்டும்…? என்று உணர்த்துகின்றார்.

கணேஷ் பீடியைத்தான் அவர் குடிக்கச் சொல்வார். கணேசன் என்றால் என்ன…?

1.கணங்களுக்கெல்லாம் ஈசனாக அவன் படைப்பது போல
2.நீ எடுக்கும் இந்த உணர்வின் தன்மை
3.உன் உடலிலுள்ள கணங்களுக்கு அந்த ஈசனாக இருக்கும் உயிரின் நிலைகள் கொண்டு எப்படி இருக்கிறது…? என்று காட்டுகின்றார்.

வெறும் கணேஷ் பீடி என்று தான் நினைத்தேன். ஆனால் எனக்குத் தெரியாமலே இத்தனை விஷயத்தையும் குருநாதர் காட்டுகின்றார்.

பீடியைக் குடிக்கச் சொல்லும் பொழுது “மாட்டேன்…” என்று சொன்னாலும் உதை விழுகும்.

ஆக அதன் மூலம் தாவர இனங்களை என்னை நுகரச் செய்தார். அதனின் உணர்வின் தன்மை கொண்டு நோய்களை எப்படி நீக்க வேண்டும்…? என்று காட்டினார்.

அதே சமயம் சாதாரண மக்களுடன் நீ பழகப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை அவர்களுக்குள் பதிவு செய்த பின் அவர்களின் நோயை நீக்க நீ எப்படி எண்ண வேண்டும்…? என்று உணர்த்தினார்.

அன்று போகன் ஒவ்வொரு தாவர இனத்தையும் மோகித்தான். தன் உணர்வுக்குள் அந்தச் சத்தின் தன்மையை அடைக்கலமாக ஆக்கினான். ஆகவே அவனுக்குப் போகன் என்று பெயர் வந்தது.

ஒவ்வொரு தாவர இனச் சத்தையும் அவன் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொள்ளும் சக்தியாகக் கொண்டு வந்தான்.

1.எத்தகைய நஞ்சின் தன்மை கொண்ட தாவர இனமாக இருந்தாலும்
2.இவனுக்குள் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மை கொண்டு
3.தாவர இன சத்திற்குள் இருக்கக்கூடிய நஞ்சினை அடக்கினான்.

அவன் வளர்த்துக் கொண்ட நிலைகள் இரு நிலையாகும் பொழுது தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் எப்படி ஆவியாக மாறுகின்றதோ இதைப் போல போகன் தனக்குள் தாவர இன சத்தை மோகித்தான்.

தன் உடலுக்குள் அதைப் பாய்ச்சச் செய்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் விளையும் எண்ணங்களாக “சீதாராமா…” என்று அன்று வான்மீகி சொன்னது போல சுவை மிக்க நிலையை அவன் எடுத்து வளர்த்துக் கொண்டான்.

இந்தச் சுவையான உணர்வுகள் அது எண்ணங்களாக மாறி அவன் வாக்கினைப் பிறருக்குக் கொடுக்கப்படும் பொழுது அது கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் அம்பாகப் பாய்கின்றது.

போகன் பாய்ச்சும் அந்தத் தாவர இனச் சத்தின் உணர்வுகள் அவர் உடலில் இந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வின் தன்மையை அடக்கி ஆற்றல்மிக்கதாகச் செயல்படுத்தச் செய்கின்றது.

1.இவ்வாறு மற்றவர்கள் உடல்களில் வரும் நோய்களை
2.தன் “வாக்கின் வன்மை கொண்டு” போகன் எப்படி நீக்கினான் என்ற நிலையை
3.குருநாதர் எமக்குக் காட்டிற்குள் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

குருநாதர் எமக்குக் காட்டியதை போகர் நோய்களை நீக்கியது போல் உங்களுக்கும் அத்தகைய ஆற்றல்களைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.

1.அந்த “ஒளி பெறும் உணர்வின் ஆற்றல்” உங்களுக்குள் அது பெருக வேண்டும்.
2.நீங்கள் செய்து கொண்ட நன்மையின் தன்மைக்குள் இருள் சூழச் செய்யும் விஷத்தின் தன்மைகளை அகற்ற வேண்டும்.
3.நீங்கள் இடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தில் பரவியுள்ள நஞ்சினை அகற்ற வேண்டும்.
4.இதைக் கேட்டுணர்ந்தோர் உள்ளங்களிலும் இது ஊடுருவி அவர் அறியாது இருள் சூழச் செய்யும் இருள்கள் விலக வேண்டும்.
5.அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்.

எல்லோரும் அந்த மெய்வழி காணும் நிலைக்கு நீ எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எனக்கு இட்ட கட்டளைப்படித்தான் அதை உங்களுக்குள்ளும் பதியச் செய்கின்றோம்.

ஓரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் தோன்றுகிறார்கள் – விளக்கம்

 

ஒருவன் இறந்து விட்டான் என்று நினைக்கின்றோம். ஆனால் அந்த உடலில் விளைந்த உணர்வுகள் அடுத்த உடலுக்குள் வந்து என்ன செய்யும்…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள். ஒரு அசுரன் இறந்தான் என்றால் அதிலிருந்து பல அசுரர்கள் அதிலிருந்து தோன்றுகின்றார்கள் என்று காட்டுகின்றார்கள்.

ஓர் உயிர் தோன்றிய பின் அந்த அணுத் தன்மை அடைகிறது. ஜீவ அணுவாக மாறும் போது இதனுடைய நிலைகள் என்ன செய்கிறது…?
1.முதலில் உயிரணுவாக மாறுகிறது
2.பின் ஜீவ அணுவாக மாறுகிறது… ஜீவ ஆன்மாவாக மாறுகிறது.

உதாரணமாக வீட்டில் கொடூரத் தன்மைகளைச் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் இறந்த பிற்பாடு என்ன நடக்கிறது…? ஒவ்வொரு உடலுக்குள்ளும் போய் நரக வேதனைப்படுத்துகிறது.

குடும்பங்களில் பார்த்தோம் என்றால் என்னை இப்படிச் செய்தானே…! என்று நினைத்தார்கள் என்றால் அங்கிருந்து பரவி உள்ளுக்குள் வந்துவிடுகிறது.

1.சில குடும்பங்களில் அவன் தொலைந்து போய்விட்டால் பரவாயில்லை… எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பார்கள்.
2.போன பிற்பாடு தான் அந்த உணர்வின் தன்மை எல்லார் உடலிலும் பெருகத் தொடங்கும்.

அங்கே தொலைகிறது…?

இதை நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…? இராமாயணக் காவியங்களில்
1.இந்த உயிரின் இயக்கத்தால் வந்த நிலைகளும்
2.பத்தாவது நிலை அடையக்கூடிய இராவணன் எந்த நிலையில் இருக்கின்றான்…?
3.இந்த உடலில் வளர்த்துக் கொண்ட அந்த அணுக்கள் அனைத்தும் மீண்டும் எப்படி அசுர குணங்களை வளர்க்கிறது…? என்று காட்டுகிறார்கள்.

அதே சமயத்தில் இராவணனின் மகன் இந்திரஜித் என்ன செய்கிறான்…? செத்தாலும் கூட… யாருக்கும் தெரியாமல் “மறைந்திருந்தே செயல்படுவான்…” என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் கொடூரமான நிலைகளில் சாகின்றான். பழி தீர்க்கும் உணர்வுடன் இறந்தால் ஒரு உடலுக்குள் வந்தால் அவருக்குத் தெரியாமலே அங்கே ஆட்டிப் படைக்கின்றான்.

உடலுக்குள் பேயாக வந்து ஆட்டுகிறது என்று சொல்கிறோம் அல்லவா.

எத்தனை ஆசைப்பட்டானோ செத்த பிற்பாடு என்ன செய்கின்றான்…? பேயாக வந்து ஆடுகின்றான். ஆகவே இவனுக்குள் விளைந்த இந்த உணர்வுகள்
1.அவன் கொல்ல வேண்டும் என்ற உணர்வுகள் மடிந்த பின் இத்தனை வேலைகளும் செய்கிறது
2.அவனுக்குப் பிறந்த குழந்தையும் அதன் வழியில் வளரப்படும் போது இப்படித்தான் வருகின்றான்.

நாம் பார்க்கின்றோம் அல்லவா.

நாம் நண்பர்களாகப் பழகுகின்றோம். அதே போல் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம். எதிர்பாராது அவர்கள் குடும்பத்தில் ஏதோ தொல்லை…! ஆனால் நாம் அன்பாகப் பேசிப் பழகிவிட்டோம்.

என்ன வாழ்க்கை…! என்று வெறுக்கப்படும் போது வீட்டில் உள்ளவர்களை எண்ணி… இப்படி எல்லாம் தொல்லை கொடுத்தார்கள் உருப்படுவார்களா…? என்று நினைத்து சாப அலைகள் விடுகின்றான்.

அந்தச் சமயத்தில் பழகிய நண்பர் மீது நினைவுகள் வந்து… என் குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கிறது…. அதனால் நான் இந்த உடலை விட்டுப் போகிறேன் என்ற எண்ணத்தில் இறந்தால் போதும்.

நினைத்து இந்த எண்ணத்துடன் வெளி வந்தால் இங்கே அந்த நண்பர் அவர் போய்விட்டாரா…? என்று எண்ணினால் என்ன நடக்கிறது…?

பழகிய நண்பர் உடலுக்குள் வந்துவிடுகிறது.

1.அவன் எப்படித் தற்கொலைக்குக் காரணமானானோ அல்லது துன்புறுத்தும் உணர்வுகளுக்குக் காரணமனானோ
2.இந்த உடலுக்குள் வந்து அவன் செய்த வேலையை எல்லாம் செய்யும்.

இனி நடப்பது எல்லாம் நல்லதாக இருக்கட்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய இவ்வுலக நியதியிலே “நீதி…” என்னும் சொல்லே
1.இக்காலத்திற்குகந்ததாக
2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்
3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி
4.”அநீதியையே நீதி…” என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.

இன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது…? தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…!”

சத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியாத பாமர மக்களுக்குத் தான்…! இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.

இச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும்… செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில்… தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.

அவரவர்களே தான்…
1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி
2.நம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்
3.நம் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… நம் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.

நம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…
1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்
2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.

இன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”

இன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.

விஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…?

இச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.

இவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.
1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை
2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

இக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது…!

இப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப்போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.

அத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…
1.இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை
2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…!

வாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…
1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…
2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” – விநாயகா.

நம் உடலிலே எதன் எதன் வழியில் சுவாசித்து உணர்வின் தன்மை உடலில் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் வினைக்கு நாயகனாக அது அது இயங்கத் தொடங்குகின்றது.

1.கோபமான உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து
2.அந்த உணர்வின் ஞானமாக அதனின் உணர்ச்சிகள் நமக்குள் செயல்படும் பொழுது
3.கோபமான உணர்வின் அணுக்கள் பெருக்கமாகின்றது.
4.கோபத்தின் அணுக்கள் பெருக்கமானபின் அதனின் ஞானத்தைக் கொண்டு
5.அதையே உணவாக உட்கொள்ளும் ஞானத்தைப் பெருக்குகின்றது.

தன் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கோப உணர்ச்சிகள் வருகின்றது. அதற்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யும்…!

அதே கோப உணர்ச்சியைத் தூண்டச் செய்து
1.பையனைத் திட்டச் சொல்லும்.
2.நண்பனை வெறுக்கச் சொல்லும்.
3.வியாபாரம் செய்து கொண்டிருந்தோம் என்றால் அதை மறக்கச் செய்யும்.
4.பொருள்களைக் கோபத்தால் வீசி எறியச் செய்யும்.

அந்த உணர்ச்சிகள் உணர்வான பின் அந்தச் சூட்சம உணர்வை எடுத்து அந்த அணுக்கள் விளைந்து இந்தக் கணக்குகள் நமக்குள் கூடினால் அந்த வினைக்கு நாயகனாக “இரத்தக் கொதிப்பாக” உருவாகின்றது.

இரத்தக் கொதிப்பான பின் எல்லோரையும் நாம் வெறுக்கும் நிலையாகி நம் உடலுக்குள்
1.நல்ல குணங்களை வெறுக்கும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலற்ற நிலைகள் வரும் பொழுது
2.நம் உடலின் அங்கங்கள் குறுக்கப்படும்.
3.நரம்பு சம்பந்தப்பட்ட (வாத) நோய்கள் வரும்
4.அந்த நிலையான பின் நம்மால் நடந்து செல்ல முடியாது.

முடியவில்லை என்றால் ஒருவரை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்போம். எதிர்பார்த்தவுடன் வரவில்லை என்றால் அவன் மீது சீறிப் பாயும் நிலைகள் வரும்.

“நம்மால் முடியவில்லை…” என்று அவர் சிரமப்பட்டுக் கொண்டு நமக்காக வந்தாலும்
1.நினைத்த மாத்திரத்தில் வரவில்லை என்றால்
2.வெறி கொண்ட நாயைப் போலத் தாக்கிப் பேசும் உணர்வுகள் தான் வருகின்றது.

நம்மால் முடியவில்லை. ஆனால் கோபத்தின் நிலை வரும். அதுவும் முடியவில்லை என்றால் “அழுகை” வரும்.

முந்தைய வாழ்க்கையும் இன்றைய நிலைகளும் முடியவில்லை என்ற நிலைகள் சேர்ந்து வெகு நேரம் ஆகிவிட்டால் தேம்பித் தேம்பி அழுகும் நிலை ஆகின்றது.

இப்படி இரத்தக்கொதிப்பாகச் சுருங்கி விட்டால் நண்பன் என்ற நிலைகள் பழகிய உணர்வு பட்டபின் நண்பனைப் பார்க்கும் பொழுது – என் நிலை இப்படி ஆகிவிட்டது… சொல்லால் பேச முடியவில்லை என்றால்… “அழுகையால் காட்டும் ஞானம்” வருகின்றது.

இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

நாம் பல கோடிச் சரீரங்களில் தீமையை நீக்கி நீக்கி இன்று மனிதனாக வந்துள்ளோம். மனிதனான பின்
1.நன்மை பயக்கும் நல்ல குணங்களைப் பக்குவப்படுத்துதல் வேண்டும்.
2.அதுதான் சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை.
3.நம் மனதைத் தெளிவாக்கினால் அந்த உணர்ச்சிகள் அந்த ஆயுதமாக மாறி நண்பனைக் காக்கும்
4.அந்த நண்பனும் நம்மைக் காப்பான்.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு கொண்டு “கார்த்திகேயா” நாம் தெரிந்து கொள்ளும் அறிவு வருகின்றது. தீமைகளை நீக்கிய உணர்வின் தன்மையை இந்த ஆறாவது அறிவால் அறிய முடிகின்றது.

தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றவர்கள் பத்தாவது நிலையாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் நாம் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றி அவர்களைப் போன்று பத்தாவது நிலை அடையும் தன்மையை நினைவுபடுத்தச் செய்யும் நாள் தான் “விஜய தசமி”.

மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் – ஞானகுரு

 

காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ உணர்வுகளை எண்ணத்தால் நாம் எண்ணி எடுத்தாலும் அதிலே அறியாது வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் அல்லவா.

அதற்காகத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம்
1.மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).
2.அதைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து
4.”கொஞ்சம்…” நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும்.

கோபித்தான்… துன்பப்பட்டான்… கஷ்டப்பட்டான்.. என்ற உணர்வு வரப்படும் போது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.

ஆனால் முதலில் கண்ணின் நினைவைக் கோபித்தவர் மேல் அல்லது துன்பப்படுவோர் மீது வைத்தோம். அதை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கினோம். அவர் உடலிலிருந்து வந்த கோபமான உணர்வுகள் அல்லது வேதனையான உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறுகின்றது.

நுகர்ந்து (சுவாசித்து) உயிரில் பட்டவுடனே உணர்ச்சிகள் எழும்புகிறது. விஷ்ணு என்ன செய்கிறான்…? வரம் கொடுக்கின்றான். ஒலி எழுப்புகிறது. உடல் முழுவதும் அந்த உணர்ச்சிகள் பரவுகிறது.

அவன் கோபமாகப் பேசியதை…
1.ஒன்று – நாம் கொஞ்சம் வலு கொண்டவராக இருந்தால் சண்டைக்குப் போவோம்.
2.இரண்டு – நாம் வலு குறைவாக இருந்தால் கிடு… கிடு… என்று பயமாகி இப்படிப் பேசுகிறானே.. என்று வேதனைப்படுகின்றோம்.

அதற்கடுத்து ஏதாவது அவனிடம் வாய் திறக்கின்றோமா..? நமக்கு வேதனை என்ற உணர்வு வருகின்றது. அந்தக் கார உணர்வுடன் வேதனை உணர்வைச் சேர்த்தவுடனே என்ன செய்யும்…?

மிளகாயை எடுத்து அரைத்தால் கையில் எரிச்சல் ஆவது போல் நம் உடலில் எரிச்சல் ஆகின்றது. ஆகவே அத்தகைய தீமைகள் புகாது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்ல வேண்டும்.
1.உயிரான ஈசனிடம் நாம் வேண்ட வேண்டும்…
2.அவனிடம் கேளுங்கள்… அவனிடம் தான் கேட்க வேண்டும்
3.ஏனென்றால் எல்லாவற்றையும் அவன் தான் நமக்குள் உருவாக்குகின்றான்.
4.இத்தனையும் தெரிய வைப்பது அவன் தானே…!

ஆனால் நாம் ஈசனை எங்கேயோ தேடிக் கொண்டிருக்கின்றோம்.

உருவாக்குவது அவனே தான். நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது எல்லாவற்றையும் இயக்கிக் காட்டுவது அவனே தான். நம்மை ஆண்டு கொண்டிருப்பது உயிர் தான் என்கிற வகையில் நாம் மறந்துவிடுகின்றோம்.

அழகான துணிகளைப் போடுகின்றோம்… நம்மை அழகுபடுத்துகின்றோம். இருந்தாலும் யாராவது ஒரு கடும் சொல் சொல்லிவிட்டால் நம்மால் தாங்க முடியவில்லை.

உயிர் வெளியே போய்விட்டால் என்ன செய்கிறது…? கோடீஸ்வரனின் மகனாக இருந்தாலும் உடல் சவமாகி விட்டால் சீக்கிரம் தள்ளி விடப்பா…! என்று தானே நாம் சொல்கிறோம்.

சொத்து எல்லாம் இருந்து என்ன செய்வது…? அவனால் அதை அனுபவிக்க முடிகிறதா…? இல்லையே…!

இது எல்லாருக்கும் தெரிகிறது. தெரிந்தாலும்
1.இந்த உடலில் எடுத்து நாம் வளர்த்துக் கொண்ட வேதனையான உணர்வு… அதற்குச் சாப்பாடு தேவை.
2.அந்த உணர்ச்சிகள் உந்தி நம்மைச் சிந்திக்க விடாதபடி செய்கிறது.

ஆகவே… பிறர் செய்யும் தீமையான எண்ணங்களும் குற்றச் செயல்களும் நம் உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? அந்தத் தீமையின் உணர்வாக அதனுடைய வலிமை கொண்டு இயக்க ஆரம்பித்துவிடும்.

நம் நல்ல குணம் வேலை செய்யுமோ…? அது செயலற்றுப் போகும். இப்படி நாம் நல்லதைச் செய்து வந்தாலும் தீமைகள் உடலுக்குள் வருகிறது. வெளியிலிருந்து தான் அது வருகிறது.

அதனால் தான் இராமாயணத்தில் வாலியை இராமன் குகைக்குள் போட்டு மூடி விடுவதாகக் காட்டுகிறார்கள். அதாவது “தீமைகள் நமக்குள் உட்புகாதபடி தடுக்க வேண்டும்…” என்று உணர்த்துகிறார்கள்.
1.குகைக்குள் வாலி இருக்கின்றான்.
2.இராமன் அம்பை எய்து ஒரு கல்லைப் போட்டு அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான்.
3.ஆனால் அவனைக் கொல்லவில்லை.
4.அவன் வீரியத்தைத் தடைபடுத்துகிறான்…! என்று காட்டுகின்றார்கள்..

தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைத் தடுக்க வேண்டும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

இயந்திரங்களின் (ARTIFICIAL INTELLIGENCE) சக்தியை அதிகமாக நம்புகின்றனர்… தன் ஆத்ம சக்தியை உணரவில்லை – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனிதனின் பல எண்ண சக்தியினால் கணிதத்தின் (கம்ப்யூட்டர்) தொடர்பு கொண்டு…
1.செயற்கையினால் இயந்திரத்தின் துணை கொண்டு
2.ஒருவர் இருவர் அறிந்த சக்தியை இயந்திரங்களின் வழியில் செயல்படுத்தி
3.மற்ற ஆத்மாக்களின் சக்தியை இவ்வியந்திரத்தின் கணிதத் தொடர்பு கொண்டு சக்திக்கு அடிமைப்படுத்தி
4.செயலற்ற சோம்பேறி நிலையில் சென்று கொண்டுள்ளது இன்றைய உலகம்.

உலகம் எப்படித் தோன்றியது…? எந்நிலையில் உயிரினங்கள் வளர்ச்சி கொண்டன…? என்ற நிலையை அறியவும் ஆராயவும் இன்றளவும் இம் மனித எண்ணங்களின் நிலையுள்ளது.

பிறரின் தொடர்பை மட்டும் இயக்கி உள்ள நிலை இது…!

1.தான் பிறந்து வளர்ந்து செயல் கொண்டு வாழ்ந்திட… தனக்குள்ள சக்தியையும்…
2.தான் வாழவே தன்னுள் உள்ள தன் ஆத்மாண்டவனையும் வணங்கிடல் வேண்டும்…! என்று உணராமல்
3.பிறரின் சக்தியில் அடிமை கொண்டு வாழ்ந்து என்ன பயன்…?

நாம் பிறவியெடுத்த பயனை உணர்ந்து ஆத்ம ஜெபம் கொண்டால் நம் சக்தியுடன் அனைத்து நற்சக்திகளையும் ஈர்த்துச் செயல்படுத்தி வாழ்ந்திடலாம்.

நம் ஆத்மாவான நம் சக்தியை நாம் உணர்ந்து செயல் கொண்டால்தான் இம் மாறப்போகும் இக்கலியின் மாற்றத்திலிருந்து நம் ஆத்மாவை ஒளிரச் செய்திட முடிந்திடும்.

ஆத்ம சக்தியை உணர்ந்து கொண்டால் அவரவர்களிடத்திலுள்ள இவ்வெண்ண சக்தியின் தொடரைக் கொண்டு இக்கோளம் மட்டுமல்ல… இப் பிரம்மாண்ட அனைத்துக் கோளங்களையுமே நமதாக்கும் சக்தி ஒவ்வோர் ஆத்ம சக்திக்கும் உண்டு.

அனைத்துக் கோளங்களுமே நமக்குச் சொந்தமானவைதான்.

இப்பூமியில் உயிரணுவாய் உயிராத்மாவாய் வாழ்ந்திடும் நாம் நம் சக்தியைச் செயல் கொண்டதாக்கி வாழ்ந்து காட்டிடல் வேண்டும். ஜீவன் பிரிந்த பிறகு ஆவி உலகில் இவ்வுடலில்லாமல் நம் சக்தியை வளர்த்திட முடியாது.

மாறப் போகும் கலியிலும் பிறகு வரும் கல்கியிலும் ஆவி உலகில் ஆத்மாக்களாய்ச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.இவ்வுடலில் இருந்து பிரிந்து சென்ற நிலையிலுள்ள எண்ண நிலைக்கொப்ப…
2.பிறவி எடுத்திடும் நாள் வரை இவ்வாவி உலகில் சுற்றிக் கொண்டேதான் எண்ணத் தவிப்புடனே இருந்திடல் வேண்டும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல மந்திரங்களைக் கற்றுணர்ந்தவர்.
1.மந்திரத்தின் உண்மைகளையும் அறிந்தார்.
2.மந்திரத்திற்குள் இருக்கும் உட்பொருளை அறிந்தார்.
3.மெய்ப்பொருளைக் காணும் நிலையில் தன் எண்ணத்தைச் செலுத்தினார்.
4.மெய்ப்பொருளை அடைந்தார்.

தன் வாழ்க்கையில் மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டால் அதன் பின் விளைவுகள் என்ன ஆகும்…? என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

1.யார் யார் எந்தெந்த மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டார்களோ
2.அதே மந்திரத்தைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது
3.அந்த மந்திரத்தைப் பதிவு செய்தவரின் உணர்வுகள்
4.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்தபின் (இறந்தபின்) அந்த ஆன்மா மந்திரம் சொல்பவர் உடலுக்குள் வருகின்றது.
5.இந்த மனிதனின் உடலுக்குத்தான் இது பயன்படுத்த முடியும் என்ற நிலையைக் குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார்.
7.ஆகவே இதைப் போல மந்திரங்களை எவர் சொன்னாலும் அதை நீ பதிவு செய்யாதே.

அந்த மந்திரங்களை மற்றவர்கள் சொல்வதை நீ கேட்டறிந்தாலும் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று மெய் ஒளியின் உணர்வை வைத்துத் துடைத்துக் கொள்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி அந்த உணர்வின் ஆற்றலை உன் உடலுக்குள் சேர்த்துக் கொள்.

நம் உடலை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ துணியில் இருக்கும் அழுக்கை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல் நம் ஆன்மாவிற்குள் பட்ட இந்த உணர்வின் தன்மையைத் துடைக்க வேண்டும் என்றார் குருநாதர்.

இதே மாதிரித்தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் தீமைகள் எதைக் கண்டாலும் வெறுக்கும் நிலைகளுக்கு ஆகி பதிலுக்கு வெறுத்திடும் செயலாக நம்மையும் செயல்படுத்தச் செய்கின்றது.

ஏனென்றால் நாம் கொடுப்பதைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. அவையெல்லாம் அழுக்காகச் சேர்ந்து நம் நல்ல உணர்வினை இயக்காது தீமையான உணர்வுகளாக நம் உடலுக்குள் ஜீவன் பெற்றுவிடுகின்றது.

ஆக நல்லதைச் செயல்படுத்துவதைத் தடுக்கும் இத்தகைய தீமைகளை உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும். ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு “விண்ணை நோக்கி ஏகு…” என்றார் குருநாதர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானித்து தீமை செய்யும் உணர்வின் தன்மையைத் துடைத்துவிடு…! என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

காலத்தை இனிமேல் விரயம் செய்யாதீர்கள் – ஈஸ்வரபட்டர்

 

எல்லா மண்டலமும் ஒரே நிலை கொண்டு வளர்ச்சி பெறும் என்பதல்ல…!

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாகவும்… சிறு சிறு கோளமாக உள்ள மண்டலங்களும்… ஜீவனற்று உள்ள மண்டலங்களும்… பெரிய மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியில்
1.அதன் சக்தி நிலையும் (அமில நிலை) பெரிய மண்டலங்களின் அமில நிலையும் ஒன்றுபடும் பொழுது
2.இதன் ஈர்ப்புடன் வந்து சேர்ந்து அந்நிலையிலேயே கலந்து சுழல்கின்றது.

மண்டல வளர்ச்சி கொண்ட சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாய் சுற்றிக் கொண்டுள்ள கோளங்கள் எல்லாம் பெரிய மண்டலங்களின் பிரளய நிலையின் காலங்களில்தான் வந்து சேருகின்றன.

பூமியின் பூமத்திய ரேகையின் இன்றுள்ள நிலை… நடக்க இருக்கும் பிரளயத்தின் போது பிரளயத்தின் அசைவினால்… சிறிது மாறுபட்ட இடத்தில் வரப்போகின்றது.

1.இன்று நீர் நிலைகளாய் ஆழ்கடலாய்ச் சூழ்ந்துள்ள இடமெல்லாம்
2.சமமான தரையாகச் (நிலங்களாக) செயல் கொள்ளப் போகின்றது.

இம்மனித ஆத்மாக்கள் ஜீவராசிகள் மட்டும் மாறப்போகின்றன என்பதல்ல. இன்று வளர்ச்சியில் உள்ள தாவர வர்க்கங்களின் நிலையும் மாறப் போகின்றது.

இன்று ஆத்மீக நெறியை அறியும் சக்தி நிலையே குறைந்துள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ள ஆத்மாக்கள் எல்லாம் இயற்கையின் சீற்றத்திலிருந்து தப்பும் நிலையை உணர்ந்திடல் வேண்டும்.

வாழும் வாழ்க்கை செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ளதை மாற்றி இவ் இயற்கையின் கால மாறுதலை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

1.பல சித்தர்கள்… பல ரிஷிகள்… வாழ்ந்து செயலாக்கி இன்றும் ஆண்டவன் ரூபம் கொண்டு
2.நம் கோயில்களின் மூலமாகப் பல சக்தி நிலைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்ற நாம்
3.நம் ஆத்மாவிற்கு உயர்ந்த சக்தியின் நிலையைச் சேமிக்கும் சக்தி பெற்றிட வேண்டும்.

நம் சக்தியைச் செயற்கைக்கும் விளையாட்டிற்கும் வீண் விவாதத்திற்கும் இன்றைய அரசியல் ஆட்டத்திற்கும் அடிபணியச் செய்திடக் கூடாது.

1.நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அடிமைப்படுத்திடும் எத்தகைய நிலையிலிருந்தும் மீளும் நிலையில் நம் சக்தியை ஓங்கச் செய்தே
2.இக் குறுகிய காலத்தில் அன்பு என்ற ஜெபத்தின் செயல் கொண்டு
3.ஆத்ம சக்தியை வளர்க்கும் பரிபக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய விஞ்ஞான உலகம் எதில் இருக்கின்றது…?

நீங்கள் பார்க்கும் எதுவாக இருந்தாலும் சரி. காற்று மண்டலத்திலும் விஷம்… புழு பூச்சிகளைக் கொன்றதில் உணவுப் பொருள்களில் விஷம்… நம் உணர்வுக்குள்ளும் விஷம்.

ஆக விஷம் கலந்து விட்டால் அப்புறம் சிந்தனை இருக்குமா…? இல்லை.

விஷம் கலந்த உணவைத்தான் நாம் சாப்பிடுகின்றோம். சிந்திக்கும் திறன் இழந்துவிடுகின்றது… இரக்கமே இல்லாது போகின்றது.

ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டுமா அல்லது எங்கேயாவது கடுமையான வலி இருக்கின்றதா கடுமையான காய்ச்சல் இருக்கின்றதா… உடனே ஒரு இஞ்செக்சன்…!

ஒரு டோஸ் போட்டவுடன் காய்ச்சல் நிற்கவில்லை என்றால்
1.இன்னொரு டோஸ்… அப்புறம் இன்னொரு டோஸ் சேர்த்துப் போடுவார்கள்.
2.காய்ச்சல் உடனே நின்றுவிடும்.
3.நம் உடலில் இனிப்புச் சத்தெல்லாம் சுருங்கிப் போகும்.
4.காய்ச்சலுக்கு ஊசி போட்டால் அடுத்தாற்போல் சர்க்கரை வியாதி வந்துவிட்டது என்பார்கள்.

அதிகமான காய்ச்சல் இருந்தது… எல்லாம் நிவர்த்தியானது. அடுத்து நான்கு டோஸ் போட்டேன்.
1.அப்புறம் கிட்னி – சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது.
2.உடலில் உள்ள இரத்தத்தில் உப்புச் சத்து அதிகமாகிவிட்டது என்று சொல்வார்கள்.
3.விஷம் கலந்த மாத்திரைகளையும் மருந்துகளையும் தான் உட்கொள்கின்றோம்.

“தலை வலிக்கின்றது…தலை வலிக்கின்றது…” என்று சொல்லி அடிக்கடி மாத்திரையைச் சாப்பிடுவார்கள். தலை வலி போய்விடுகிறது.

ஆனால் கிட்னி இந்த விஷத்தை முறியடிக்க முடியாதபடி செயலிழந்து விடுகின்றது. கிட்னி வேலை செய்யாமல் போய்விடுகின்றது.

இந்த மாதிரி விஞ்ஞான உலகில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். “அவசரத்திற்குத் தலை வலி நீங்கினால் போதும்” என்று எண்ணுகின்றார்கள். பின்விளைவுகளைப் பற்றிய சிந்தனை இல்லை.

ஆனால் அதிலுள்ள விஷத்தன்மைகள் கிட்னிக்குள் சென்றால் அது அதைப் பிரிக்க முடியாது போய்விடுகின்றது. அடுத்து அதைச் சரி செய்யலாம் என்றாலோ அல்லது மாற்று கிட்னி பொருத்தலாம் என்றாலோ பணம் இலட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும்.

இதுவும் போக இதைக் காட்டிலும் யாராவது இந்த மாதிரிச் சிக்கினால் கிட்னியையே எடுத்து வியாபாரம் செய்துவிடுகின்றார்கள். “குழந்தைகள் காணோம் அல்லது முதியவர்கள் காணோம்…” என்றால் அவர்கள் உடலில் உள்ள உறுப்புகளை அலுங்காமல் எடுத்து வியாபாரம் ஆகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து தப்ப என்ன வைத்திருக்கின்றோம்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி – காடுகளில் மனித நடமாட்டமே இல்லாத சில இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார்.

அங்கே அந்த மெய்ஞானிகள் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகளை எமக்குள் பதிவாக்கி அதைப் பெறும்படி செய்தார். அதை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

சுமார் 12 வருட காலம் அவ்வாறு விளைய வைத்த அந்த ஞானிகளின் அருளாற்றல்களைத்தான் உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

நீங்கள் அதைப் பதிவு செய்து உங்களுக்குச் சிரமம் வரும் பொழுதெல்லாம் இதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டினால் அந்தச் சக்திகளை நீங்கள் பெற முடியும்.

உங்கள் உடலுக்குள் சேர்த்து தீமைகள் உங்களுக்குள் விளையாது தடுத்துக் கொள்ள முடியும். விஞ்ஞான விஷத்தால் வந்த தீமைகளை நீக்க முடியும்.

முருகன் சிலையிலிருந்து வரும் வாசனைகள்

 

உணர்வின் இயக்கங்கள் பற்றி உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.

விஞ்ஞான நிலைகள் படித்தவர்களோ… அல்லது இஞ்சினியர்களோ அந்த தொழில்நுட்பம் (TECHNIQUES) கொண்டு பாட நிலைகளை உற்றுப் பார்த்துப் பதிவாக்கி அதற்குண்டான இயந்திரங்களில் நினைவச் செலுத்துகின்றனர்.

அதை வைத்துத் தாவர இனங்களுக்குள் சூட்சும நிலைகள் இயக்கும் இந்த உணர்வினை அறிந்து
1.அதை மாற்றி அமைத்தால் என்ன…? இதனுடைய செயலாக்கங்கள் என்ன…? என்ற நிலைகள் விஞ்ஞானி கண்டறிந்து
2.இது மனிதனுக்கு உகந்ததா… இது உகந்ததல்லவா…? என்று இந்த உணர்வின் தன்மை அளவுகோல் சேர்க்கப்படும் பொழுது
3.அந்த உணர்வால் இவனுக்கு இந்த நிலை வருகின்றது.

உணவு உட்கொண்டு மற்ற நிலையில் இருக்கப்படும் பொழுது இந்த உணவிற்குச் சத்தை ஏற்றுவதற்கும்… மற்ற தாவர இனச்சத்தை இணை சேர்த்துப் புதுப் புது வித்துக்களை உருவாக்கி “சத்துள்ள ஆகாரம்…” என்றும் விஞ்ஞானி உருவாக்குகின்றான்.

இதைப் போன்று தான் அன்று மெய் ஞானி பெற்ற உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் கொண்டு நஞ்சினை வென்ற அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகிறது…? என்று ஞானிகள் கண்டதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால்
1.இந்த மனித வாழ்க்கையில் அறியாத நிலைகள் கொண்டு அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்
2.மகிழ்ந்து வாழும் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் போகன் விஷத்தின் தன்மை வென்றிடும் நிலைக்காக முருகன் சிலையை உருவாக்கினான்.

கோள்களிலிருந்து வரும் நவபாஷணத்தை எடுத்து… சூரியனிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு தாவர இனங்களையும் அதிலே பாதரசம் கலந்திருப்பதைப் பிரித்து இதனுடன் இணை சேர்த்தான்.

மனிதனுக்குண்டான ஆறாவது அறிவின் ஆற்றலை… அதாவது நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுவது போல… மனிதனின் ஆறாவது உருவைக் கண்டு தீமைகளை அகற்றிடும் பச்சிலைகளை அதிலே சாரணைகளைக் கொடுத்து இணைத்தான்.

சூரியன் எப்படி மற்றதுடன் மோதும் பொழுது தன் வெப்பத்தின் தன்மை கூட்டுகின்றதோ இதைப் போல
1.சிலையின் மேலிருந்து சொட்டு சொட்டாக நீரை ஊற்றப்படும் பொழுது அதிலே எதிர்நிலையாகும்… அதிலே ஒரு விதமான வெப்பம் உருவாகும்.
2.அந்த வெப்பத்தினால் சிலைக்குள் போகன் மருந்துகளாகச் சேர்த்த உணர்வின் ஆவி அலைகள் வரும்
3.கண்களால் அதை உற்றுப் பார்த்து நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
4.போகன் காட்டிய நெறிப் பிரகாரம் சிலையிலிருந்து வெளிவரும் அலைகளை (வாசனைகளை) நுகர்ந்து எடுத்தோம் என்றால்
5.பெரும் குஷ்டரோகமாக இருந்தாலும் சரி… கேன்சராக இருந்தாலும் சரி… அந்தத் தீமைகளை நீக்கிவிடும்.

ஆகவே இயற்கையின் உணர்வுகள் எதைக் கலவையாக எடுத்து நாம் எண்ணுகின்றோமோ அதன் அணுவாக நுகர்ந்து அந்த உணர்வின் செயலாகவே நம்மை மாற்றும்.

பிரளயத்தினால் பூமிக்கு வளர்ச்சி நிலை உண்டா…? ஈஸ்வரபட்டர்

 

பூமி தோன்றிய நாள் கொண்டே இந்தப் பூமிக்கும் ஓர் எண்ண நிலையுண்டு. இரண்டு ஆத்மாக்கள் ஒன்றுபட்டு சக்தி நிலையைச் சேமித்து இப்பூமி என்னும் பிம்பத்தை வளர்த்தது என்று ஏற்கனவே சொன்னேன்.

ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் கிடைக்கக்கூடிய சக்தி நிலையை வைத்துப் பல நிலைகளிலிருந்தும் பல சக்திகளை ஈர்க்கும் நிலைப்படுத்தி இப்புண்ணிய பூமியைச் சிறுகச் சிறுக வளர்த்து… இன்று இப்பூமியே தன் எண்ண நிலையில் தானே கற்றும் நிலையில் உள்ளது.

பூமி வளர்த்த உயிரணுக்களின் சுவாச நிலையுடன் தன் சுவாச நிலையைக் கலக்கவிட்டே இப்பூமியே சுவாச நிலை எடுத்து ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தில் சுழல்கின்றது.

இப்பூமியில் உள்ள அனைத்து சப்த அலைகளையுமே இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டேயுள்ளது.

சிறு எறும்பு முதற்கொண்டு… எண்ணங்கள் கொண்டு சுவாச நிலையை ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து ஜீவராசிகளின் சுவாச நிலையும்… தாவர வர்க்கங்களின் சுவாச நிலையும்… இயந்திர வர்க்கங்களின் சப்த ஒலியும்… அனைத்துமே இக்காற்றுடன் கலந்து இப்பூமியின் சுவாசத்திற்கு வந்து சென்று கொண்டுள்ளன.

இப்பூமிக்கும் ஜீவன் உண்டு… எண்ணம் உண்டு… சுவாச நிலையும் உண்டு. அழியா ஆயுட்காலமும் உண்டு.

மாறி மாறிப் பிரளய நிலை ஏற்படுவதெல்லாம் இன்று நாம் எப்படிப் பிறப்பெடுத்து வாழ்ந்து இவ்வுடல் என்னும் இப்பிம்பம் செயல்படாமல் போகும் நிலையில் நம் ஆத்மா பிரிந்து செல்கின்றதோ அந்த நிலை போன்றது தான்.

அதாவது பூமியின் பிரளய நிலையினால்…
1.இப்பூமியின் ஆத்மா ஜீவன் இல்லாமல்… பிரிந்து செல்லாமல்
2.ஜீவனுடனே தன் ஆத்மாவைக் காத்துக் கொண்டே பிரளய நிலை ஏற்படுத்தி
3.தான் வளர்த்துச் செயலாக்கிய உயிரணுக்களின் மற்ற இயற்கையின் தன்மையைச் சிறிது மாற்றி
4.”பிரளயம்…” என்ற மாற்றத்தினால் சுற்றிக் கொண்டே வாழ்கின்றது.

பூமி சுழல இந்தச் சப்த அலைகள்தான் இப்பூமிக்கு உயிர் நாடி. பேரிரைச்சல் கொண்ட இக்கடல் அலைகளும் ஜீவராசிகளின் சுவாச நிலையும் இருந்தால்தான் இப்பூமியைச் சுற்றியுள்ள இக்காற்று மண்டலத்திற்கே செயல் நிலை வருகின்றது.

பூமி தோன்றிய நாளில்… இன்று இருக்கும் ஓங்கார நாதத்தின் உயிர் நாடியின் சப்த அலையை விட ஒலியின் சப்த நிலை குறைவாகத்தான் இருந்தது. இப்பூமி வளர வளரத்தான் சப்த அலை ஓங்காரமுடன் வளர்ந்து கொண்ட வந்துள்ளது.

இப்பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலமும் வியாழன் மண்டலமும் பெரியவை. அவற்றின் சுழலும் வேகமும் இதை விடப் பல மடங்கு அதிகம் என்று உணர்த்தியுள்ளேன்.

சூரிய மண்டலத்தில் உள்ள உயிரணுக்களின் தன்மையும் நம் பூமியின் தன்மையும் மற்ற மண்டலங்களின் தன்மையும் மாறு கொள்கின்றது என்று உணர்த்தினேன்.

அந்தந்த மண்டலத்தின் சீதோஷ்ண நிலைக்கொப்பத்தான் அம்மண்டலத்திலுள்ள உயிரணுக்களின் நிலையும் இருந்திடும்.

எந்த மண்டலத்திலும் உயிரணுக்கள் இருந்து சுவாசம் எடுத்திடாமல் இருந்தால் அந்த மண்டலத்திற்கே ஜீவனில்லை.
1.நடமாடும் பறக்கும் ஊரும் ஜெந்துக்களுக்கு மட்டும்தான் ஜீவன் உண்டு என்ற பொருளில்லை.
2.ஒவ்வொரு மண்டலத்திலும் அம்மண்டலத்துடனே வளர்ந்துள்ள கல் மண் நீர் அனைத்திற்குமே ஜீவனுமுண்டு… சுவாசமுமுண்டு.

கல் பேசும் மண் பேசும் என்பதின் பொருளென்ன…? அதனதன் சுவாசமே அதனதன் சொற்கள்தான். சுவாசமில்லாமல் எந்த மண்டலமுமில்லை சுவாசம் எடுத்திடாமல் எந்த உயிரணுக்களும் இல்லை.

1.இஜ்ஜீவத்துடிப்பின் ஒலியினால்தான் ஒவ்வொரு மண்டலமும் வாழ்கின்றது
2.நம் பூமியின் சக்தி நிலையும் கூடிக் கொண்டே வருகின்றது.

கலியின் பிரளயத்திற்குப் பிறகு வரப்போகும் கல்கியின் வளர்ச்சியிலிருந்து நம் பூமி இன்னும் சக்தி நிலை நிறைந்ததாகத்தான் சுழலப் போகின்றது. இன்று சூரியனின் சக்தியினால் சக்தி கொண்டு சுழலும் நம் பூமியே சூரியனின் நிலைக்கொப்பச் சுழலப் போகின்றது.

ஒவ்வொரு பூமியின் நிலையும் ஒவ்வோர் உயிராத்மாவின் சக்தியினால் செயல் கொண்டு சுழல்கின்றது அதனதன் நிலைக்கொப்ப…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் சொல்லும் முறைப்படி தியானம் இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் கூட்டுக் குடும்ப தியானமிருக்க வேண்டும்.

தியானமிருந்த பின்
1.உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
3.எல்லோரும் சேர்ந்து விண்னை நோக்கி உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் அங்கே சென்று ஒளிச் சரீரமானபின் அங்கிருந்து எங்களுக்கு நல் ஒளிகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் அங்கே போகாதபடி நாம் அங்கே செல்ல முடியாது.

மூதாதையர்களின் உணர்வுகள் தான் நாம். முதலில் நம் குலதெய்வங்களை விண்ணுக்குச் செலுத்திவிடுகின்றோம். பின் அவர்கள் இருக்குமிடத்திற்கு நாம் போகலாம்.

நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள். முதுமையாகும் பொழுது போகின்றார்கள். அவர்கள் உடலை விட்டுச் செல்லும்போது அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும்.

1.அதற்காக வேண்டித்தான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும்
2.உங்கள் உணர்வின் எண்ணங்களுக்கு விண்ணை எட்டிப் பிடிக்கும் நிலையும்
3.விண்ணிலே ஊடுருவிச் செல்லகூடிய நிலைக்கும் பழக்கப்படுத்துகின்றோம்.

அந்த வலுவின் துணை கொண்டு ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தது என்றால் அதை நீங்கள் உந்திச் செலுத்தும் ஆற்றலைப் பெறச் செய்வதற்கும் உங்களைப் பழக்குகின்றோம்.

இவைகள் எல்லாம் “சிறு துளி… பெரு வெள்ளம்”.

இப்பொழுது எல்லோரும் நன்றாக இருந்தாலும் கூட யாராவது ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் “ஐய்யய்யோ… இப்படி இறந்துவிட்டாரே…” என்று எண்ண வேண்டியதில்லை.

நீங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த இந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணித் தியானித்தால்
1.அந்த ஆன்மா “ ஜிர்..ர்ர்…ர்ர்..” என்று (அவர்) மேலே போய்விடலாம்.
2.அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) தேவை.

ஆனால், இதை விட்டுவிட்டு… இந்தச் சரீரத்தை இங்கே புதைக்கலாமா… அல்லது அங்கே எரிக்கலாமா… என்று “அழுகக்கூடிய சரீரத்திற்கு” முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

ஆக சமாதியைக் கட்டினேன்… அதற்கு அதைச் செய்ய வேண்டும்… இதைச் செய்ய வேண்டும்…! என்ற நிலையில் அதை மிகவும் விரும்பிச் செய்து கொண்டிருந்தால் மீண்டும் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் தான் சிக்க வேண்டும்.

இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். ஆனால் இந்த உடலிலிருந்துதான் உயிரான்மாவை ஒளியாக மாற்ற வேண்டும்.

ஆகையினால் இந்த உணர்வின் நிலையை மெய் ஒளியாக்கி இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அனைவருமே அந்த மெய்ஞானிகள் சென்ற இடத்திற்குச் செல்ல வேண்டும்.
1.இந்த உடல் மண்ணிலிருந்து பெற்ற சக்தி தான் இது.
2.மண்ணுடன் கலந்து இந்த உடல் மக்கட்டும்.
3.மண்ணுக்குள் இருந்து சத்தை எடுத்து ஒலி ஒளியாக மாற்றிய பின்
4.ஒளியின் சரீரமாக நாம் பெறவேண்டும்.

நீங்கள் எல்லாம் ஒளியின் சரீரம் பெறுவதற்காகத்தான் இத்தனை உபதேசமும் செய்கின்றோம். உங்களை நீங்கள் நம்புங்கள்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக உபதேசத் துணுக்குகளை யாம் கொடுப்பதன் நோக்கம்

 

யாம் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் பொழுது சிலதுகளை விளங்காமல் சொல்கிறேன் என்றால் அதற்குக் காரணம் உண்டு.
1.சிலருக்குக் கிடைக்காமல் செய்வதற்கும்
2.பதிவானதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் தெரிந்து கொள்வதற்கும் இது உதவும்.

ஏனென்றால் உபதேச வாயிலாக பேருண்மைகளைச் சொன்னாலும் சில மாயாஜாலங்கள் உள்ளவர்கள் இதை எடுத்து
1.அதிலிருக்கும் உள் மூலக்கூறைத் தெரிந்திடாது
2.விஷம் கலந்த உணர்வு கொண்டு அவன் இச்சைக்கே அதைக் கவர்ந்து விடுவான்.

ஆக இந்த உண்மையின் தன்மை செயல்படும் பொழுது அங்கே அவனுக்குப் பயனற்றதாகும் ஆகும். அவன் மக்களை வசியப்படுத்த சொற்றொடரில் இது உதவும். அதைப் போன்ற தீமைகள் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்குதான் அவ்வாறு செய்வது.

ஆனால் அதே சமயத்தில்
1.உங்களுடன் தொடர்பு கொண்ட நிலையில்… உங்களுக்குள் பதிவாக்கும் இதனின் விளக்கம்
2.அடுத்த உபதேச நிலைகள் வரப்படும் பொழுது இணைத்து
3.அந்த உண்மைப் பொருளின் உணர்வை நீங்கள் அறிந்து
4.உங்கள் வாழ்க்கையில் தெளிவாக்கிக் கொள்ள முடியும்.

எம்முடைய உபதேசப் கருத்துக்களைப் புத்தக வாயிலாக வெளிப்படுத்தினாலும் மற்றவர்கள் இதைக் கலவையாக்கி மனித வாழ்க்கைக்குத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் உணர்வுகள் பதிவு செய்யும் எண்ணமும் இல்லை.

அவருடைய ஆசை கொண்டு…
1.இதை எடுத்து இப்படிச் செய்தால் தனக்குச் செல்வம் வரும்… செல்வாக்கு வரும்… என்று நிலைகள் வரப்படும் பொழுது
2.அந்த ஆசையின் உணர்வு வந்து உண்மையின் தன்மை பெறாதபடி ஆகி
3.யாம் கூறிய ஞானத்தின் உணர்வுகளும் நாளடைவில் மறைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் மாற்றுவதற்குத் தான்
1.இங்கொன்றும் அங்கொன்றும் தொட்டு உங்களுக்குள் இதைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அடுத்த உணர்வுடன் இணைந்து தெளிந்த மனம் பெற்றிடும் அந்த நிலையை உருவாக்கிடத் தான்

இப்போது ஒன்றைச் சொல்கிறேன் என்றாலும்… இதனுடன் இணை சேர்த்த நிலைகள்… அடுத்த அறிவின் தன்மை தொடர் வரும் பொழுது உங்களுடன் இணைத்து… அந்த ஞானத்தைப் பெற்று எத்தகைய தீமையில் இருந்தும் நீங்கள் விடுபட முடியும்

விஷத்தினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறுவதற்குத் தான் எல்லாவற்றிலும் கலந்து கலந்து… உபதேசங்களை அந்தந்தக் காலப் பருவத்தில் கொடுக்கின்றோம்.

அதற்குண்டான விளக்கங்களைத் தான் இங்கே வெளிப்படுத்திக் காட்டுகின்றோம் (ஞானகுரு).

நம் பூமியின் பூர்வாங்கம் – ஈஸ்வரபட்டர்

பூமி தோன்றிய நிலையை… சூரியனிலிருந்து சிதறி வந்த கோளங்கள் பல ஒன்று சேர்ந்து ஆரம்ப நிலையில் ஆவியாய்க் குளிர்ந்து ஒன்றுபட்டு இப்பூமியாகச் சுழல்கின்றது என்ற யூக நிலையில் உள்ளனர்.

பூமி தோன்றிய நிலையை ஆரம்ப நிலைப்படுத்திப் பல நிலைகளில் செப்பி வந்துள்ளேன். வரிசைத் தொடரை இன்று உணர்த்துகின்றேன்.

இந்தப் பூமியே “ஆண்பால் பெண்பால் கொண்ட இரண்டு ஆத்மாக்களின் ஜோதிக் கலப்பினால்…” உற்பத்தியானது.

இந்தப் பூமியைப் போன்ற… இன்று வாழ்ந்திடும் வளர்ந்த அறிவு நிலை பெற்ற… ஆத்ம உடல் கொண்ட மனித இனம் இப்பூமியில் வளரும் நிலைக்கும் முதலே…
1.நம் சூரியனைச் சார்ந்துள்ள 48 மண்டலங்களில்லாமல்
2.மற்ற சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட நிலையில் வாழும் மண்டலங்களில்
3.பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித ஆத்மாக்கள் உண்டு.

நம் பூமியில் இம்மனித இன வர்க்கங்கள் தோன்றியதெல்லாம் மூன்று மாற்றங்களுக்குப் பிறகு தான்… மனித இன வர்க்கமே அறிவு நிலை பெற்று வளர்ச்சி நிலையில் வாழ்ந்து வருகின்றது.

அதுவும் இக்கலியினால் மாற்றம் கொண்டு கல்கியில் இன்னும் மாற்றம் கொண்ட நிலையில்தான் செயல்படப் போகின்றது.

ஆனால் இந்நிலையில் செப்பியபடி மனித ஆத்மாக்கள் வளர்ச்சி கொண்ட மண்டலங்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகின்றன.

அத்தகைய மண்டலங்களில் வாழ்ந்த அறிவு நிலை பெற்ற ஆத்ம உடல் கொண்ட சூட்சும நிலையைக் கொண்டோருக்கு எந்த மண்டலத்திலும் தன் நிலையைச் செயலாக்கும் பக்குவம் உண்டு.

அத்தகைய வளர்ச்சி கொண்ட… ஜீவன் கொண்ட ஆத்மாக்களினால்தான்
1.ஒவ்வொரு மண்டலமுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு
2.ஈர்ப்பு நிலையின் சக்தியினால் ஒவ்வொரு மண்டலமாக (புதிதாக) உருப் பெறுகின்றது.

சப்தரிஷிகளின் மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றனர். இவ் ஏழு நட்சத்திர மண்டலம் மட்டும் சப்தரிஷியினால் உருக்கொண்டு செயல்பட்டு வாழ்கிறார்கள் என்பதல்ல பொருள்.

இந்த ஏழு சப்தரிஷி மண்டலம் என்பதின் பொருள்…
1.இந்தப் பூமியிலிருந்து இம் மனித ஆத்மா உயர் நிலை பெற்று
2.ஜெப நிலை கொண்ட ஆத்ம மண்டலங்கள்தான் அந்த ஏழு நட்சத்திர மண்டலங்களும்.

அனைத்து மண்டலங்களுமே ஆத்ம நிலை பெற்ற ஜீவன் கொண்டு வாழ்ந்து வழி வந்த ஆத்ம மண்டலங்கள்தான். இப்பூமி தோன்றிய நிலையும் இரண்டு ஒன்றுப்பட்ட ஆத்மாக்களின் அன்புக் கலவையினால் ஆண் பெண் என்ற சக்தி நிலையில் உருவானது தான்.

1.மற்ற சூரியக் குடும்பத்தில் இருந்து வீரிய ஜெபம் கொண்டு
2.ஒரே நிலையில் சூட்சுமம் பெற்று
3.இப்பூமியை இரண்டு ஆத்மாக்களுமே ஒன்றுபட்டு ஈர்த்து ஆவி நிலையாக ஆத்மாவுடன் இணைத்து
4.இரண்டு ஆத்மாவுமே ஆத்மாவுக்குகந்த சக்தியின் ஈர்ப்புத் தன்மையினால்
5.பல சக்திகளைத் தன்னுள் ஈர்த்தே சிறுகச் சிறுக வளர்த்துத்தான் உயிருடன்
6.உணர்வுடனே இப்பூமியை இன்றளவும் வளர்த்துக் கொண்டே தன் சக்தியின் செயலினால் சுற்றிக்கொண்டு
7.பல உயிரினங்களை வளர்த்துக் கொண்டே வாழ்கின்றது இந்தப் பூமி.

இப்பூமியில் ஆண் பெண் என்ற பிணைப்பு நிலையினால் மற்ற உயிராத்மாக்களின் உற்பத்தி நிலை ஏற்படுவதின் நிலையும் இப்பூமியின் நிலையும் ஒன்றுபட்டதுதான்.

இப்பூமி தோன்றி உயிரணுக்கள் உதித்துச் சில காலங்களிலேயே இனத்துடன் இனச் சேர்க்கையினால் இன வளர்ச்சி பெறும் நிலை வந்துவிட்டது.

உயிரணு உதித்தால் அந்த உயிரணுவிலிருந்து பல கோடி உயிரணுக்கள் வளர்ச்சி பெறுகின்றன. அதன் தொடர்ச்சியிலே எந்த உயிரணுக்களுமே அழிவதில்லை. உயிரணுவாய் உதித்த பிறகு அவற்றின் உடல் பிம்ப நிலைதான் மாறு கொள்கின்றது.

இந்நிலையில் வளர்ச்சி பெறும் உயிராத்மாவாக ஞானி சித்தன் ரிஷி சப்தரிஷியாக ஆகி சூட்சுமம் கொண்ட பிறகு
1.ஒவ்வொரு சப்தரிஷியின் நிலையிலும் தான் ஈர்த்து செயல் கொண்ட ஆசை நிலைக்கொப்ப
2.மற்ற மண்டலத்துடன் சேர்ந்தும் தனி மண்டலமாய் உருப்பெற்றும்
3.தான் வாழ்ந்து வழிவந்த மண்டலத்தை ஆண்டவனாய்க் காத்திடும் நிலையிலும்
4.தன் தன் சக்தி நிலைக்கொப்ப இவ்வுலகில் மட்டுமல்லாமல்
5.மற்ற மண்டலங்களிலும் பால்வெளி மண்டலத்திலும் சென்று வரும் நிலையிலும்
6.தான் பெற்ற சக்தியைச் செயலாக்குகின்றனர் சப்தரிஷிகளெல்லாம்.

ஆகவே… பூமியில் இன்று மனித ஆத்மாவாய் வளர்ச்சி கொண்ட நிலையில் நாம் சேமிக்கும் சொத்து நிலைதான் அப்பேரானந்த நிலை. ஆனால் வழியின் நிலையை அறிந்திடாமல் வாழ்ந்திடும் நிலைதான் இன்றுள்ள நிலை.

இன்றுள்ள மக்களின் எண்ண நிலையே “ஆராயும் நிலையையும்… தர்க்க நிலையையும்” வளர்த்துக் கொண்ட நிலையாக உள்ளது.

எந்த நிலையையும் ஆராய்ந்து… அறிவு நுட்பத்தின் வழித்தொடரின் ஞான வழியில் வந்திட்டால்… உண்மை நிலையின் வழித் தொடரை அறிந்திடலாம்.

1.ஆனால் இன்றுள்ள ஆராயும் நிலையோ சஞ்சலமுடன் செயல்படுவதினால்
2.மெய் உணர்வை அறிந்திட முடியாமல் உள்ளது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வைகுண்ட ஏகாதசி என்ற நந்நாளில் தான் குரு பூஜையாக வைத்துள்ளோம் (ஞானகுரு).

குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாகி எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றார். (1971 ஆம் ஆண்டு)

ஒளியின் சுடராக அவர் தனக்குள் மலரச் செய்து மனித வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நஞ்சினை மாய்க்கும் ஆற்றல்மிக்க சக்திகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்,

அந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது. அவர் விண் சென்றது போல் நீங்கள் அனைவரும் அந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் “குரு பூஜை”.

1.”குரு…” என்பது
2.நாம் எதை ஆழமாகப் பதியச் செய்கின்றோமோ
3.அதை மீண்டும் செய்ய எண்ணும் பொழுது
4.அது குருவாக நின்று நமக்குள் செயல்படுத்துகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராகச் சென்ற அந்த நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

அவர் ஒளிச் சரீரத்தைப் பெற்றபின் தான் உடலை விட்டுச் செல்லும்போது “என்னைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்தார்”.

இந்தப் பூமிக்குள் நான் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ உணர்வு கொண்டு எல்லோரிடமும் பழகினேன். அதே சமயம் எல்லோருடைய நோய்களையும் நீக்கவும் உதவினேன்.

அவர்கள் அனைவரும் என் பால் பற்றுதலும் கொண்டார்கள். இருப்பினும்
1.அவர்களுடைய பாச உணர்வுக்குள் சிக்காது
2.அவர்கள் எண்ணும் ஏக்கம் என்னை இயக்காது
3.அவர்களுக்குள் உள்ள இருள்களை நீக்கிடவும்
4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்ற நிலைக்குத்தான் என் உணர்வுகள் செயல்பட்டது.

இந்த உடலை விட்டு (உயிரான்மா) “நான் செல்கின்றேன்”. ஒளியின் சுடராக எவருக்கும் சிக்காது இந்த உயிரான்மா எப்படிச் செல்கிறது…? என்று “பார்…” என்று உணர்த்தினார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி சுமார் 30 வருடங்கள் காடு மேடெல்லாம் அலைந்து யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற நிலைகளைத்தான் “விண் செல்லும் மார்க்கமாக” உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

அரசர்கள் உருவாக்கிய மந்திர தந்திரங்களில் உள்ள உண்மையின் நிலைகள்

 

ஒரு மனிதனுக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வினை எடுத்துப் பிரித்துத் தான் அன்றைய அரசர்கள் பல மந்திர தந்திர வேலைகளைச் செய்தார்கள்.

ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு மந்திரம் என்று உண்டு. அதை மனிதனுக்குள் பதிவாக்கி… அதன் வழி வாழ்ந்து கடைசியில் அந்த மனிதன் இறந்த பின் அதற்கென்ற மந்திர ஒலியை அந்த ஆன்மாவைக் எழுப்பிக் கவர்ந்து கொள்வார்கள்.
1.பின் அதனை வைத்து… கருவின் உணர்வு கொண்டு
2.ஒரு மனிதனுக்குள் இதைச் செய்து வா… உனக்கு இப்படி இருக்கும்…
3.உன்னைப் பாதுகாக்கும்…! என்று சொல்வார்கள்.

இப்படி இன்னொரு ஆவியின் தன்மை கொண்டு மற்றவரை அடக்கலாம்… இதை அடக்கவும் செய்கின்றான். மற்ற நினைவுகள் வராதபடி சில செயல்களைச் செய்தாலும்
1.ஒரு மனிதனின் உணர்வை மந்திர ஒலி கொண்டு எடுத்துப் பிரித்துக் கொண்ட நிலைகள் சிறிது காலம் வேலை செய்யும்.
2.மீண்டும் பகைமை உணர்வினை உருவாக்கி… நோயை உருவாக்கி… அந்த உடலினை (புகுந்த) வீழ்த்திவிடும்.

ஆதியில் உருவாக்கிய உடலில் உருவான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்ததனால்… உடலைக் கருக்கி அந்த உணர்வின் தன்மை தனக்குள் கவர்ந்து கொண்டதும்… மற்ற கலவை கொண்டு மற்ற கருவுக்குள் இது செலுத்தப்பட்டு
1.அவன் பிரித்தெடுத்துச் செயல்படும் சில நிலைகள் தான்
2.இன்று மந்திரம் என்று சொல்லி வசியப்படுத்துவதும்…
3.ஒன்றை அடக்குவது என்றும் மனிதன் இத்தகைய நிலைகளில் செயல்பட்டான்.

இவர்கள் மற்றதைக் கொன்றது போல் இந்த உணர்வின் தன்மை இது இணைந்தாலும்… மீண்டும் பிரிந்திடும் நிலைகள் கொண்டு… தன் உடலிலே அந்த நோயின் தன்மை கொண்டு இது பிரித்துவிடும்.
1.ஆக ஒன்று சேர்ந்தனர்… இணைந்தனர்
2.நோயாக ஆனது… பிரிந்து விட்டது என்று.

ஆனால் மந்திரத்தின் தன்மையினால் இறந்த பின் அதே மந்திரவாதி மீண்டும் எண்ணினால்… பிரிந்து வெளி வந்த ஆன்மாவை அவன் தனக்குள் கைவல்யப்படுத்திக் கொள்வான்.

இதை வைத்துப் பல வேலைகளையும் பல அற்புதங்களையும் அவன் செய்வான். “ஆண்டவன் ஆட்சி…” என்ற நிலைகளிலும் அதைக் கொண்டு வருவார்கள்.

இதைப் போன்ற நிலைகள் என்ன…? என்று அறியாதபடி நாம் அத்தகைய மந்திரவாதியிடம் சென்றால் நம் ஆன்மாவும் கைவல்யமாகும் நிலைக்கே வந்துவிடுகின்றது.

அப்படிச் சேர்த்திடும் உணர்வு கொண்டு மனிதர்களுக்குள் செயல்படுத்தினான் என்றால்… இது ஒவ்வொன்றும் நோயின் தன்மையாக உருவாக்கி இதைப் பிரித்துவிடும்.

பிரிந்து விட்டாலும் மீண்டும் மந்திரவாதி கையில் சிக்கி இதைக் கொண்டு இது இணை சேர்த்தது… இணை சேர்த்தது… இணை சேர்த்தது… இணை சேர்த்தது… என்ற நிலைகளில் சில நிலைகள் உருவாக்கப்படும் போது அதர்வண வேதத்தில்… (அரசர்கள் பிரித்துக் கொண்டது)
1.ஒன்றை ஒன்று அதிகப்படுத்தி அதனின் உணர்வின் தன்மை அடிமையாக்கி
2.அதன் உணர்வின் தன்மை தனக்குள் எப்படிச் செயலாக்குகிறது என்றும்
3.ஒன்றை அதிகப்படுத்தி அதை வசியம் என்றும்… அதனைக் கொண்டு கவர்ந்து இழுப்பதற்கும்
4.இறந்த பின் மீண்டும் அதே மந்திரத்தைச் சொன்னால் கைவல்யம் என்றும்
5.தன்னுடைய இயக்கத்திற்காக வரும் நிலையாக அவர்கள் செயல்படுத்தும் நிலைகள் தான் அது எல்லாம்.

மந்திரங்களும் மாயங்களும் எடுத்து அதர்வண வேதத்தின் தன்மை கொண்டு தன் எண்ணத்தை நிலைப்படுத்தி அரசு என்ற நிலைகள் கொண்டு அந்த அரசர்களாள் உருவாக்கப்பட்ட மதத்தின் அடிப்படையிலே அந்த இயக்க நிலைகளில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஆனால் இதை எல்லாம் வென்றவன்… புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றவன் துருவ மகரிஷி. அவன் துருவப் பகுதியை உற்று நோக்கி அதன் ஆற்றல் கொண்டு
1.நஞ்சினை வென்றிடும் உணர்வை இந்தப் பூமியில் வாழும் காலத்தில் பெற்றவன்.
2.புவிக்குள் வரும் நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக உருமாற்றிக் கொண்டவன்.
3.இப்படி உருமாற்றிய அவனின் நிலைகளிலிருந்து நாமும் அவன் பெற்ற ஆற்றல்களைப் பெற வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). புரியவில்லை என்று விட்டுவிடாதீர்கள். பதிவு செய்தால் அதனின் ஞானத் தொடர்களை நீங்கள் நிச்சயம் பெற முடியும்.

மகரிஷிகளின் துணை என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்

 

“எண்ண நிலைப்படிதான் அனைத்து நிலைகளும் இயங்குகிறது…!” என்று உணர்த்தி வந்தேன். இந்நிலையின் சூட்சும நிலையை உணர்த்துகிறேன்.

முன் பாட நிலைப்படி… மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் அனைவரின் எண்ண நிலையும் மகிழ்ச்சி கொண்டதாகவும்… துக்கம் அனுஷ்டிக்கும் இடத்தில் அந்த நிலைக்கொப்ப அனைவரின் நிலையிலுமே துக்க நிலை சாடும் என்றுணர்த்தினேன்.

இப்படி இவ்வெண்ண நிலையின் சுவாச நிலை கொண்டுதான் இன்றைய “கைரேகை ஜோதிட நிலையும்… மனோவசிய நிலையும்” உள்ளன.

அந்நிலையிலுள்ளோர் (மனோவசியம் செய்பவர்) தன் எதிரில் அமர்ந்துள்ளவரின் எண்ணத்துடன் தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரது எண்ணத்துடன் ஈர்க்கும் நிலையில் மனோவசியம் செய்யப்படுவோரின் அனைத்து நிலைகளுமே செய்யப்படுபவருக்கு இவரின் எண்ணக் கலவையுடன் வந்து மோதி அனைத்து நிலைகளும் அறிகின்றனர். இந்நிலை அறிபவர்கள் மற்ற ஆவியின் தொடர்பை வைத்து ஈர்க்கும் சக்தியைச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் நம்மில் உயர்ந்த ரிஷிகளின் நிலையும் எண்ண சக்தியின் சக்தி நிலைத்தொடர் கொண்டுதான் அவர்கள் சூட்சும நிலைக்குச் சென்றதின் நிலையும்.

இவ்வுலகினில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒவ்வொரு நிலையான எண்ணக் கலவையின் வாழ்க்கை நிலையுண்டு.

அவ்வழியில் நல்லுணர்வு கொண்ட சக்தி நிலையின் எண்ணக் கலவையுடன்… வாழ்க்கையில் வழி வந்தவர்களின் நிலையில்தான் இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே…
1.பல சக்தி நிலையை இவ்வெண்ணத்துடனே ஈர்த்து இன்று ஆண்டவனாய்ச் செயல்படுகின்றனர்.
2.அவர்கள் மனித ஆத்மாவாய் நம்மைப் போன்ற நிலையில் வந்தவர்கள் தான்…!

எண்ணமுடன் தீய சக்தியை வளரவிட்டவர்களின் நிலை எல்லாம் எந்த நிலைக்குச் சென்றிட்டார்கள் என்று முன் பாட நிலையிலேயே உணர்த்தியுள்ளேன்.

நல்லுணர்வின் வழி வந்தவர்கள்…
1.தன் வாழ்க்கையில் நடந்திடும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஜெயித்த நிலை கொண்டு வந்தவர்கள் தான்
2.இவ் உலகில் தோன்றிய மகான்கள் எல்லாரும்.

இதன் வழி வந்தவர்களின் உடல்களைத்தான் இவர்களின் நிலையைக் காட்டிலும் சக்தி கொண்ட ரிஷிகள் தன் உடலாக ஈர்த்துச் செயல்படுகின்றனர்.

ஆதிசங்கரர் போன்றோரும் மற்றும் அருணகிரிநாதர் முகமது நபி புத்தர் இயேசு பிரான் ஐயப்பர் கோலமாமகரிஷி இக்கலியில் வந்திட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் இன்னும் பல ரிஷிகளும் இவ்வழியில் வந்தவர்கள் தாம்…!

நம் போகரே பல உடல்களைத் தன்னுடலாகச் செயல் கொண்டு செயல்படுத்தி வந்தார். இவ்வுலகினிலே ஆறுமுகனாய் இவர்கள் புராணக் கதையில் சொல்லிய நிலையில்லாமல் ஆறு உடல்களைத் தனதாகச் செயல்படுத்தி வந்தார்.

1.பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்து வழிபடுத்தவில்லை… தன் சக்தி நிலையை நம் போகர்
2.பல ஆத்மாக்களை ரிஷியின் நிலைக்குச் சென்றிடும் பக்குவ நிலை ஏற்படுத்தித் தந்தார் நம் போகர்
3.இன்று அனைவருக்கும் முருகனாய் ஜோதி அருள் அளித்திட ஆண்டவனாய்ச் செயல் கொண்டுள்ளார்.

இவ்வெண்ண நிலையின் தொடர் நிலையை வைத்துத்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலையெல்லாம் செயல் கொண்டு நடக்கின்றது. போகரைப் போன்றே இந்நிலையில் பல சித்தர்கள் இவ்வுலகெங்கும் செயல் நிலைப்படுத்தி நல் உணர்வுகளை இன்றும் செயலாக்கி வருகின்றனர்.

ஆனால் இக்கலியில் பக்தி நிலையும் தன் உணர்வும் குறைந்ததினால் பல நிலைகள் செயல்படாமல் செயற்கைக்கே அடிமைப்பட்டுச் சென்று விட்டனர்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நம் எண்ண சக்தியின் தொடர் நிலையை ஈர்த்து
2.நல்லுணர்வு கொண்ட எந்த ரிஷியின் சக்தியின் தொடரையும் நாம் ஈர்த்துச் செயல் கொண்டிட முடிந்திடும்
3.நாமும் அவர்களின் நிலையை அடைய முடியும் என்பதற்குத் தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மரணமடையும் தருவாயில் பார்க்கலாம். ஒவ்வொருவரும் என்னவெல்லாம் எண்ணுகின்றோம் என்றும்…! அடுத்து எங்கே செல்க்கிறோம் என்றும்…!

ஒரு வேப்ப மரம் கசப்பான உணர்வுகளை வெளிப்பரப்பித் தன் கசப்பின் தன்மை எப்படி எடுத்துக் கொள்கின்றது. அதைப் போன்று தான்
1.இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் தன்மையை
2.நமக்குள் சிருஷ்டித்து முன்னணியில் வைத்திருக்கின்றோமோ
3.அந்த முன்னணியில் வைத்திருக்கும் குணத்திற்குத்தக்க தான்
4.அடுத்த உடலுக்குள் உயிராத்மா போகும்.

ஆனால் இன்னொரு மனிதனின் உடலுக்குள் போனால் ஏற்கனவே இந்த உடலில் எந்தத் தீமைகள் விளைந்ததோ அதைத்தான் அங்கே விளைவிக்க முடியும். தீமைகள் தான் அங்கே கருவாக உருவாக முடியும்.

தீமையை உருவாக்கும் அந்த அசுத்த சக்தியின் நிலைகளை “ஞானிகள் உணர்வு கொண்டு…” அதைத் தடைப்படுத்தினால் தான் இன்னொரு கருவின் தன்மை அது விளையும்.

அது அல்லாதபடி இங்கே விளைந்த தன்மைகள் அது வந்தால் இந்த உணர்வின் நினைவலையாக பல தீய விளைவுகளையே அது ஏற்படுத்தும்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபடுவதற்காக அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் அடிக்கடி சுவாசித்து அதை உடலுக்குள் சேர்த்து நம்மைப் பரிசுத்தப்படுத்தப் பழக வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ கோடி மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்களுடைய உணர்வலைகள் எத்தனையோ உண்டு. அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

1.திரும்பத் திரும்ப இதைப் பதிவு செய்தாலும்
2.ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
3.ஒரேயடியாக எல்லாச் சக்திகளையும் பெற முடியாது.
4.அப்படிக் கொடுக்கவும் முடியாது.

ஒன்றை எடுத்து ஒன்றின் சக்தி வளர்ந்த பின்… அதனின் துணை கொண்டு விண்ணின் நிலைகளை ஒவ்வொன்றையும் வளர்க்கும் நிலைக்கு நீங்கள் வர முடியும்.

நான் (ஞானகுரு) பல பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அதை எனக்குள் ஜீரணிக்கும் நிலைகள் குரு பலம் கொண்டு தான் அதைப் பெற்றேன்,

ஆகையினால் எந்தக் கரண்டுடன் (இயக்கச் சக்தி) நீங்கள் தொடர்பு கொள்கின்றீர்களோ அதனின் நிலைகளைத்தான் நீங்கள் பெற முடியும்.

ஒரு TRANSFORMER மாறி இருக்கும் பொழுது வேறு லைனில் இணைப்பைக் கொடுத்தால் அந்தப் பக்கம் மாற்றிக் கொண்டு போய்விடும்.

மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் தன்மையை வளர்க்கும் நிலையாக அதற்குத் தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய வேண்டும்.

நமக்குள் எந்த வலுவோ அதற்குத் தக்கவாறு நாம் அருளாற்றல்களைப் பெற முடியும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
2.அந்தக் கரண்டின் தொடர் வரிசையில் செல்லும் பொழுது தான்
3.அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

எந்த மகரிஷிகளின் தொடர் வரிசையில் அத்தகைய ஆற்றல்களை நாம் பெறுகின்றோமோ இந்த உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விட்டு அகன்று “நேராக துருவ நட்சத்திரத்திற்கே…” கொண்டு போய் நம்மை நிறுத்தும்.

நம்மை அறியாமல் தான் கெட்டது வருகிறது… அதே போல் நன்மையைக் கொண்டு வந்து அதை என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்

 

நண்பருக்குள் ஒருவருக்கொருவர் பகைமையாகித் “துரோகம் செய்தான் பாவி…” என்று எண்ணினால் புரையோடுகிறது. நண்பருக்குள் “உதவி செய்தார்…” என்று ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக எண்ணினால் விக்கலாகிறது.

பற்று பாசத்துடன் நம் குழந்தையை வளர்க்கின்றோம். இருந்தாலும் அந்தப் பாச உணர்வுகளினாலும் சில தீமைகள் சந்தர்ப்பத்தில் வந்து சேர்கிறது.

இன்னொரு நண்பரிடம் பழகுகின்றோம். அவருடைய குழந்தைக்கு எதிர்பார்க்காதபடி… “விபத்தானது…” என்று கேள்விப்படுகின்றோம்.. என்ன… ஏது…? என்று விசாரிக்கின்றோம்.

அவர் அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதே நினைவு கொண்டு வெளி ஊரில் இருக்கும் நம் குழந்தையை எண்ணத் தொடங்குகிறோம்.
1.நண்பர் வாயிலாகக் கேட்ட இதே உணர்ச்சிகள் இயக்கப்பட்டு
2.தன் குழந்தையின் மீது உள்ள பாசத்தால் அங்கே நடந்த அதே வேதனையான எண்ணங்கள் வந்தால்
3.இந்த உணர்வு அங்கே நம் குழந்தையை இயக்கி
4.இயந்திரத்திலேயோ வாகனத்திலேயோ அவன் செயல்படும் போது அவன் சிந்தனையைக் குறையச் செய்து
5.எதிர்பாராதபடி விபத்துக்களில் சிக்க வைத்துவிடும்… நடந்து சென்றால் கூட பள்ளம் மேடு தெரியாதபடி கீழே விழுகச் செய்யும்.

ஐயோ… நான் நினைத்தேனே இப்படி நடந்துவிட்டதே…! என்று நாம் சொல்லத் தொடங்குவோம். காரணம்…
1.மற்றோர் சொல்லும் உணர்வைக் கேட்கப்படும் போது
2.ஒருவருக்கொருவர் தொடர் கொண்ட நிலையில் இப்படி எல்லாம் இயக்கிவிடுகின்றது.

ஆகவே நட்பின் தன்மை வரும் போது
1.நல்லதைப் பிரித்திடும் நிலைகளை… அந்தத் தீமையை மாற்றி
2.தீமைகளைப் பிரித்து நல்லதைச் சேர்த்திடும் தன்மை நமக்குள் வர வேண்டும்.

அத்தகைய அருள் ஞான சக்தி பெறுவதற்குத் தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் மெய் ஞானிகள் உணர்வை ஆழமாகப் பதிவு செய்கிறேன். ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த ஞானிகளின் உணர்வலைகளை உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றேன் (ஞானகுரு).

அதை நீங்கள் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு
1.நீங்களே தீமைகளிலிருந்து விடுபடும் சக்திகளைப் பெற முடியும்.
2.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் உருவாக்கி அந்த ஆற்றலாகப் பெறச் செய்யும்.

அதே போன்று குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பகைமை இருந்தால் உங்கள் நினைவாற்றல் கொண்டு கணவனைத் தன்னுடன் இணையச் செய்ய முடியும். பகைமை கொண்ட உணர்வுகள் அவரை ஆட்டிப் படைக்கும் நிலைகளிலிருந்து மீட்டிட முடியும்.

மெய் உணர்வின் வலிமை கொண்டால் அறியாத இருள் சூழந்த நிலைகளை அகற்றுகிறது. அருள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க சிந்திக்கும் செயலும் வருகின்றது… இணைந்து வாழும் நிலைகள் வருகின்றது.

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகள்.

இன்னொன்று… தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் போது பிறர் துன்பப்படுவதையோ அல்லது விபத்தான உணர்வுகளையோ தாய் உற்றுக் கேட்டு… பாசத்தின் உணர்வு கொண்டு எண்ணி… அதனைத் தனக்குள் பதிவாக்கியிருந்தால்… இந்த உணர்வுகள் தாய் கருவிலேயே குழந்தைக்குள் உருவாகிவிடுகின்றது.

குழந்தை பிறந்து வளர்ந்த பின்..
1.இந்தப் பூர்வ புண்ணியத்தின் நிலைகள் கொண்டு
2.அதே பருவம் வரப்படும் போது விபத்தோ அல்லது நோயோ
3.தாய் எதைப் பதிவாக்கியதோ அந்த நிலை செயலாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்டிட வேண்டும் என்றால் அது பூர்வ புண்ணியமாக இருந்தாலும் அந்த உணர்ச்சிகள் இயக்குவதை மெய் ஞானிகள் காட்டிய வழிகளில் செயல்படுத்தி அந்தக் குழந்தையை அருள் ஞானத்தின் வழியில் மாற்றிக் கொண்டு வர முடியும்.

நல்லவர்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்

 

இன்றும் இக்கலியில் ஆத்மீக நெறியும் நல்லொழுக்கம் அன்பு பாசம் பக்தி தர்மம் நியாயம் சமத்துவம் இப்படிப்பட்ட நல்லுணர்வுகளும் சத்தியத்துடன் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.
1.இந்த நிலையில் வாழும் ஆத்மாக்களின் நல்லுணர்விற்காகவே
2.இப்பூமியின் நிலை இன்றளவும் நிலைத்துச் செயல்படுகிறது.

எண்ணத்தில் நல் சக்தியும் தீய சக்தியும் உள்ள நிலையில்… நல்லுணர்வைக் காட்டிலும் தீய உணர்வின் வழி நிலைதான் பெருகும் நிலையில் உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் மட்டுமல்ல தீய உணர்வுடன் வாழ்வது. இவ்வுடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களிலும் தீய சக்தி நிறைந்த எண்ண நிலைகள்தான் நல்லுணர்வைக் காட்டிலும் பெருகிய நிலையில் உள்ளன.

ஆவி உலகிலும் நல்லுணர்வு கொண்ட ஆத்மாக்களின் நிலையுண்டு. வாழும் மனித ஆத்மாக்களிலும் இந்நல்லுணர்வின் நிலை உள்ளதினால்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலை இன்றளவும் இப்பூமியின் நிலையைக் காத்தருளும் நிலையில் செயல் கொண்டு நடக்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தினால் செய்து வைத்துள்ள அணு குண்டுகளும் விஷ மருந்துகளும் நிறைந்துள்ள இந்த நிலையிலும்
1.ஒரு நொடியில் அனைத்துமே மாற்றம் கொள்ளும் விஷ சக்தியின் தாக்குதலிலிருந்து
2.நல்லுணர்வு உடையோர் வாழ்வதினால்… இவ்வுலக நிலையே நம் ரிஷிகளினால் காக்கப் பெற்று வருகிறது.

நல்லுணர்வையே உலகெங்கும் பரப்பிடும் நிலைக்காகப் பக்தி நிலையை வளரவிட்டதின் நிலையே… இன்று பக்தியையே தன் பேராசைக்கு உகந்த சக்தியாக நாடும் நிலையாக இன்றைய எண்ண நிலை உள்ளது.

பூமிக்காகவும் இப்பூமியில் வாழ்ந்திடும் உயிராத்மாக்களுக்காகவும் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திய நம் ரிஷிகளின் சக்தி நிலை செயல்படாமல்… மீட்டுச் செல்லும் நிலைக்கு இன்று வந்துள்ளது.

“மீட்டுச் செல்லும் நிலை…” என்பது…
1.இம் மாறப்போகும் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் இக்கலியுடனே ஈன நிலை பெற்று…
2.கல்கியின் ஆரம்ப நிலை உயிரினமாகிப் பல நிலைகளை எய்தி…
3.பல கோடி ஆண்டுகள் இவ்வெண்ண சக்தியுடனே அல்லல் கொண்டிடாமல் தடுக்கும் நிலை தான்.

இக்கலியிலேயே மனித ஆத்மாவை மனிதனாய் ஞானியாய் சித்த அருள் பெற்று சூட்சும நிலைக்குச் சென்றிடச் செயல் கொண்டிடும் நிலைதான் இன்றுள்ள நம் ரிஷிகளின் செயல் நிலை.

இந்நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து… மாறப் போகும் இக்கலியின் நிலையை எண்ணத்தில் கொண்டு இவ்வெண்ண சக்தியினால் செயல் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பேசுவது நான் (ஞானகுரு) அல்ல. பேசுவதற்கு அந்த அளவு தகுதி படைத்தவனும் அல்ல. மெய்ஞானிகளால் வளர்க்கப்பட்ட அந்தப் பேருண்மைகளை குருவின் உணர்வால் அந்த மெய் ஒளியினைக் காண முடிந்தது.

எனக்குத் துன்பத்தைச் செயற்கையில் உருவாக்கித்தான் இந்தத் தீய நிலைகளை நீக்கும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினார்.
1.எனக்குள் வளர்ந்த தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல்கள்
2.உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்பது எனது ஆசை.

உங்களையறியாது வரும் துன்பத்தை நீக்க இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் துன்பத்தை நீக்கிவிட்டு
1.இன்பத்தை வளர்க்கும் என்றும் நிலையான இன்ப நிலைகள் பெறும்
2.பெரு வீடான பெரு நிலைகள் பெற முடியும் என்றுதான்
3.உங்களுக்குள் லேசாகச் சொல்கிறேன்.

ஒரு விவசாய ஆபீசில் எவ்வளவோ நாள் பக்குவப்படுத்தி ஒரு வித்தைக் கொடுத்த பின் அதற்கு நீரை ஊற்றிப் பக்குவமாகப் பராமரித்து வளர்த்தால் அது “தக்க பலன் தரும்…” என்று சொல்வார்கள்.

அது போல் குருநாதர் கூட 12-13 வருடம் பெற்ற உணர்வுகளை வித்தாக அருள் வாக்காக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

அந்த அருள் வாக்குக்குள் மூலம் உங்கள் நினைவலைகளைக் கூட்டி அதன் மூலம் காற்றில் படர்ந்துள்ள ஆற்றல்மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் முறைதான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

“ஞானிகள் சென்ற வழிகள்” அது தான்.

சாமியாரிடம் சென்றால் தலை வலி போகும் வயிறு வலி போகும் என்று எண்ணினால் அந்த நிலையிலேயே நிற்க வேண்டியது தான்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெற்றால்
1.அந்தத் தலை வலியும் வயிற்று வலியும் போக்க முடியும் அது தன்னாலே போகும்
2.அறியாது வரும் இருள் சூழ்ந்த நிலைகள் விலகும்
3.மெய் ஒளியின் தன்மை வளரும் என்ற இந்த நிலைகளுக்கு வரவேண்டும்.

அதைப் பெறும் பொழுது இருள் நமக்குள் நிற்காது.

இருளை நீக்க வேண்டும் என்று ஓட்டையாக (குறைபாடு) உள்ளதை… “அதை உடனே தட்டியெறிந்து விட்டு” முழுமையான நிலைகளில் செயல்பட்டால்தான் சரியாகும்.

ஒரு பாத்திரத்தில் ஓட்டை உடைசல் அடைக்கிற மாதிரி அப்பொழுதுக்கு மட்டும் ஏதாவது சாமியைப் பார்ப்பதோ மந்திரத்தைச் செய்தோ மாயங்கள் செய்தோ சாமியாரைப் பார்த்தோ செய்வோம்..,
1.“பின்னாடி எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்றால்
2.எல்லாம் கழன்று ஓடி விடும்.

அந்த மாதிரி இல்லாதபடி மெய் ஒளியின் தன்மையை உங்களுக்குள் வளர்ப்பதற்கு அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் பெறவேண்டும்.

உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

விஷம் இல்லை என்றால் எதையுமே இயக்க முடியாது…!

 

எத்தனையோ கோடி விதமான விஷ உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு நிலை உண்டு.

உதாரணமாக ஒரு நல்ல மருந்து இருக்கிறது… சுக்கு மிளகு திப்பிலி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.அதற்கு வீரிய சக்தி ஊட்ட வேண்டும் என்றால்
2.ஒரு விஷம் கலந்த செடியின் சத்தை இதனுடன் இணைக்க வேண்டும்.

அப்போது தான் சுக்கு திப்பிலியின் உணர்வுகளுக்குள் இந்த விஷத்தின் தன்மை ஊடுருவப்பட்டு அதற்குண்டான வீரிய உணர்வுகளை அது உருவாக்கும்.

ஆக விஷத் தாவரத்தை அதனுடன் இணைத்தால் தான் அந்த மருந்திற்கே சக்தி உண்டு. இதன் உணர்வு இப்படிச் செயல்படுவது போன்று தான் வைத்தியரீதியிலும் இதைச் செய்கின்றோம்.

பொதுவாக… இயற்கையின் அணுவின் தன்மையும் இதே போன்று தான் செயல்படுத்துகின்றது.
1.சூரியனிலிருந்து வெளிப்படுவது வெப்பம் காந்தம் என்று இருந்தாலும்
2.அதிலிருந்து பிரிந்து சென்ற விஷம் இதனுடன் மீண்டும் இணைந்தால் விஷம் இயக்கச் சக்தியாகவும்
3.அதனுடன் எந்தப் பொருள் இணைகின்றதோ அந்தச் சத்தின் மணத்தை வெளிப்படுத்தும் சக்தியாகவும் பெறுகின்றது.
4.இந்த விஷம் இல்லை என்றால் அந்த மணத்தை நாம் அறியும் தன்மை இழந்துவிடுகின்றோம் (நம்மால் அறிய முடியாது).

சில செடிகளில் விஷத்தின் தன்மை குறைந்திருந்தால் அந்த மணத்தை அறியும் தன்மையும் குறைவாகத் தான் இருக்கும்.

நல்ல மலர் இருப்பினும் அதில் உள்ள விஷத்தின் அளவுகோல் எதுவோ அதற்குத்தக்க அந்த மணத்தை விரிவடையச் செய்கிறது. விஷம் குறைந்தால் அந்த மலருக்கு மணத்தின் தன்மை வெளிப்படுத்தும் நிலைகளும் குறையும்.

ஆகவே விஷம் இல்லை என்றால் எதையுமே இயக்க முடியாது…!

அதற்குத் தான் பிரகலாதன் கதையைக் காட்டி இரண்யன் எனக்கு எதிலுமே இறப்பில்லை…! என்று சொல்வதாக… காற்றிலும் சரி… மழையிலும் சரி… நீரிலும் சரி… நெருப்பிலும் சரி… எனக்கு இறப்பு இல்லை என்று. விஷ்ணுவிடம் வரம் கேட்டுக் கொண்டான் என்று காட்டுகின்றனர்.

ஒரு பொருளின் தன்மையை நாம் நெருப்பில் இட்டுக் கொளுத்தினால் அல்லது வேக வைத்தால் அதில் உள்ள விஷம் பிரிந்து சென்றுவிடுகின்றது. ஆனால் இறப்பதில்லை.

இதைப் போல்
1.நம் உயிரும் நெருப்பில் பட்டால் இறப்பதில்லை
2.உயிருக்குள் இருக்கும் விஷமே துடிப்பின் இயக்கத்திற்குக் காரணமாகிறது
3.உயிர் இயங்க இந்த விஷமே மூலமாகின்றது.

ஒரு செடியில் இருக்கும் விஷத்தின் தன்மையே அதைப் பாதுகாக்கும் நிலையாக மற்ற செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது இது வீரிய சக்தி கொண்டு தள்ளிவிடும்… அல்லது நகர்ந்து ஓடும்.

ஆனால் அதே சமயத்தில் இன்னொரு வீரிய சத்தின் தன்மை இதனுடன் மோதி விட்டால் அது சுழலும். இவ்வாறு
1.சந்தர்ப்பத்தால் இணைவதும்
2.நகர்வதும்
3.இணைவதும்
4.உருமாறுவதும் என்ற நிலையில்
5.காற்று மண்டலங்களில் தாவர இனங்கள் மாறுபடும் நிலைகள் வருகின்றது.

தாவர இனங்கள் எப்படி மாற்றம் அடைகின்றதோ அதைப் போன்று தான் மனிதர்களான நமக்குள்ளும் எதிர்மறையான நிலைகள் வரும் போது நம் எண்ணங்களும் உணர்வுகளும் அதற்குத் தக்க இயக்கங்களும் மாறுகிறது.

உடலில் அணுக்களும் மாற்றமாகிறது. அதனால் உடலில் சில உபத்திரவங்களும் வருகிறது.

ஆனால் நஞ்சை வென்ற அகஸ்தியன்… துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் நாமும் அவனைப் போன்று விஷத்தை அடக்கி ஒளியாக மாற்றலாம்… நாமும் அழியா நிலையான ஒளிச் சரீரம் பெறலாம்.

அத்தகைய தகுதி ஏற்படுத்தும் நிலைகளுக்குத் தான் இதைப் பதிவு செய்கிறோம்.

திரைகளுக்குள் பூஜிக்கும் சக்தி நிலை என்ன..? – ஈஸ்வரபட்டர்

 

மாறப் போகும் இஜ் ஜீவ உடலையோ மாற்றம் கொண்டு சுழலப் போகும் இப்பூமியின் நிலையையோ சலிப்பு நிலைப்படுத்தி எண்ணத்தை வளரவிடாமல் நம் ஆத்மாவின் உயர்ந்த நிலையை உயர்த்திடும் எண்ணத்தில் செயல் கொண்டு நடந்திடல் வேண்டும்.

1.பூமி ஆரம்ப நாள் தொட்டு வந்திட்ட உயிரணுவாய் உயிராத்மாவாய்… வளர்ந்த நற்ஜோதியின் நல்தெய்வங்களெல்லாம்…
2.இப்பூமியில் ஒவ்வொரு பிரளயத்திலும் பல நிலையிலும் வாழ்ந்து அந்நிலையின் தொடரினால்…
3.இன்றளவுமுள்ள நல் நிலையில் வந்திட்ட நல் ஆத்மாக்களின் சக்தி நிலையின் தொடராக…
4.சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே இன்று பல நிலைகளுக்கு…
5.நல் ஆத்மாக்களாகப் பலரை ஈர்க்கும் நிலை கொண்டு செயல்படுகின்றன.

இவ்வுலகில் இந்தியாவில்தான் ஞானிகளும் சித்தர்களும் வழி வந்ததின் நிலை அதிகம். இவ்வுலகனத்துமே இவ் இந்தியாவில் இருந்துதான் பல சித்தர்கள் சென்று ஆத்மீக வழியை வழி நடத்தினார்கள்.

இயேசு கிருஸ்து இந்தியாவில் சில இடங்களில் வந்து வாழ்ந்து சென்றார். முகமது நபியும் இவ்விந்தியாவில் வந்து வாழ்ந்தவர்தான். புத்தரின் நிலையும் அதுவே…!

“இந்தியாவை உயர்ந்த எண்ணத்தில் காட்டல் வேண்டும்…” என்ற நிலையில் விளக்கவில்லை. இப்பூமியில் உள்ள அனைத்து நிலைகளும் பொதுவானவையே…!
1.ஆத்மீக நெறியில் தொடர் நிலை வழி வந்த முதல் நிலை இங்குதான்.
2.ஆனால் இன்று நாம் எல்லாரும் முருகராய் வழிபடும் அப்போகரின் ஆரம்ப ஞான சித்து நிலை பெற்ற இடம் சீனாவில்தான்.

இன்று… இன்றைய மக்களினால் பிரித்த நிலைதான் சீனா… இந்தியா என்ற நிலையும்…! அந்நிலையில் வழிவந்தவர்தான் நம் போகர்.

போகர் சித்து நிலையின் தொடர் நிலையில் சூட்சுமத்தில் செயல் கொண்டிடும் சக்தி பெற்ற பிறகு இன்று மெக்கா மதீனா என்று புண்ணிய யாத்திரை ஸ்தலமாகச் சென்றிடும் இடத்தில் இதே நம் போகர்தான் முகமது நபியின் நாமத்தில் செயல் கொண்டு அந்நாட்டில் இப்பக்தி நிலையை அல்லா என்னும் நாமத்தில் வளர விட்டார்.

இன்றைய புண்ணிய ஸ்தலமாய் செயல் கொண்டு துதித்திடும் அம் மெக்கா மதீனாவின் திரைகளுக்குள் பூஜிக்கும் சக்தி நிலை என்ன..?

காட்சி – யானைச் சிலையின் மேல் லிங்க ஜோதியின் காட்சி…!

பல கோடி மக்கள் தரிசிக்கச் சென்றிடும் அந்நிலையிலுள்ள திரையின் மர்ம நிலையென்ன…?

1.ஆண்டவனின் சக்தி நிலை ஒன்றே
2.இஜ் ஜாதி இனம் போர்வையில் வழி வந்ததின் நிலைதான் இன்றுள்ள நிலை.
3.அங்குள்ளவர்கள் சிலருக்கு மட்டும் உண்மையின் நிலை புரியும்.

அல்லாவாய் அங்கு செயல்படுத்துபவர் யார்…?

காட்சி: மேடையில் ஜிப்பா அணிந்து தலையில் துணியுடன் ஒரு பெரியவர் காட்சியளிக்கின்றார்… புன்னகைத்தே தலையை மட்டும் அசைக்கின்றார்…! அடுத்து பெரிய வேல் எதிரில் நிற்கிறது…!

யாரென்று எண்ணுகின்றீர்…?

அல்லாவாய் செயல் கொண்டவரும்… முருகனாய் வழி வந்தவரும்… இலங்கையில் கதிர்காமத்தில் சில நிலைகளைச் செய்தவரும்… “அனைவருமே ஒரே சக்தி நிலை கொண்ட போகரின் நிலைதான்…”

சூட்சும நிலையில் எவ்வுடலையும் தனதாக ஏற்கும் சக்தி பெற்ற போகரினால் பல நாடுகளில் அவரது எண்ணத்தின் செயல் ஜோதி சக்தி “இன்றும்…” செயல் கொண்டு வருகின்றது.

அவர் வாழ்ந்த ஒவ்வொரு சூட்சும நிலையிலும் பல போதனை சக்திகளை வளரவிட்டுச் சக்தியளித்துச் செயலாக்கியுள்ளார். ஜாதகம் நாடி மருத்தவம் இப்படிப் பல நிலைகளைச் சித்து நிலை கொண்ட நாளிலேயே படரவிட்டுள்ளார்.

இன்று இவ்வுலகெங்கும் வெடி நிலையை ஆரம்பித்தவரே நம் போகர்தான். ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு வெடி நிலையினால் பல நிலைகளை ஆரம்ப நாளில் செயலாக்கிக் காட்டியவர் நம் போகர்தான்.

சித்து நிலையில் அவர் அறிந்த நிலைதான் இன்று இவ்வுலகம் முழுவதும் பரவியுள்ள மருத்துவ நிலையும். அந்நிலையின் தொடரை வைத்துத்தான் இன்றைய வளர்ச்சி நிலையெல்லாம்.

அவர் சீனாவில் வாழ்ந்த நாளில்தான் சூட்சுமத்தின் ஆரம்ப நிலையில் பல நிலைகளை முதன் முதலில் செயலாக்கி வெளிப்படுத்தினார். அன்றே பல சக்தி நிலையை சித்து நிலையினால் சூட்சும நிலை பெறும் நிலையெல்லாம் அறிந்து செயலாக்கினார்.

இவரின் நிலை போன்றே…
1.இவ்வுலகம் தோன்றிய நாள் தொட்டு தன் சக்தியைச் செயல் கொண்டு வந்திடும் நல் ஆத்மாக்களெல்லாம்
2.இக்கலியில் வாழ்ந்திடும் பிம்ப நிலை கொண்ட ஆத்மாக்களை
3.நல்லுணர்வு கொண்டு வந்திடும் சக்தி நிலைக்கு அழைத்துச் சென்றே
4.இம் மாறப்போகும் கலியின் பிடியிலிருந்து மீட்டே…
5.கல்கியில் நல் ஆத்மாக்களாய் செயலாக்கிட அழைத்துச் செல்கின்றனர்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்று சாவித்திரி கதைகளைக் காட்டியுள்ளார்கள்.

கணவனை எமனிடமிருந்து மீட்டினாள். கணவன் மனைவி இருவரும் மெய் ஒளியினைக் காண வேண்டும் என்ற ஆற்றல்மிக்க சக்திகளை எடுத்துக் கொண்ட பின் இதே உணர்வுடன் உடலை விட்டுச் சென்றால் இரு உடலுக்குள் எவர் முந்தினாலும் அவர் உடலுக்குள் சென்றுவிடுகின்றது.

ஆனால் அதே உணர்வின் தன்மை உணர்ச்சியை அங்கே உந்தி அந்த மெய் ஒளியின் மிக மிக ஆற்றல்மிக்க சக்தியாகத் தன் கருவின் தன்மை உண்டாக்குகின்றது.

கணவன் மனைவி இறந்த பின் அந்த உடலுக்குள் போனால் ஒளி பெறும் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் நினைவலைகளையே தான் ஊட்டும்.

ஆனால் ஆசையின் நிலைகளில் தாங்க முடியாது… வீட்டில் விரக்தி கொண்டு தற்கொலை செய்து இறந்த ஒரு ஆன்மா அதே போல எண்ண ஏக்க அலைகள் கொண்ட இன்னொரு உடலுக்குள் சென்றுவிட்டால்
1.அந்தக் குடும்பத்திற்குள் கலக்கமும் வேதனையும் ஆகின்றது.
2.துன்ப நிலைகளுக்கு இழுத்துச் செல்கின்றது.

அதே போல் இன்னொரு உடலின் தன்மை பெறாதவண்ணம் தடுத்து நிறுத்தி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி நாம் என்றும் நிலையான ஒருநிலையான ஒருக்கிணைந்த ஒரு சரீரமாக பெறும் நிலையைத்தான் ‘சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்…” என்று காவியங்களில் உணர்த்தப்பட்டது.

ஆனால் சாவித்திரி மட்டும்… கணவனை மனைவி ஏங்கியே தான் இருக்க வேண்டும்…! என்று ஒரு தலைப்பட்சமாக எழுதப்பட்டதாக மாற்றிவிட்டார்கள்.

தன் உணர்வின் நிலைகள் கொண்டு படைக்கும் ஆற்றல்கள் பெற வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி நமக்குள் சுத்தப்படுத்தினாலும் ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

1.மனைவி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.அது சமைக்கும் ஆகாரம் அனைத்தும் சுவைமிக்கதாக ஆகி
3.அதைப் புசிப்போர் அனைவரும் மகிழ வேண்டும்.
4.மன பலமும் உடல் நலமும் பெறக்கூடிய ஆற்றலும் பெற வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.

1.அதே போல தன் கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் செய்யும் தொழிலில் நலமும் வளமும் பெற வேண்டும்.
4.அவர் பார்ப்பதெல்லாம் நலமாக வேண்டும்.
5.அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

இந்தப் படைப்பின் படைப்பினுடைய நிலைகள் நாம் ஏங்கி அதை நாம் அடிக்கடி செயல்படுத்தும் பொழுது அந்த ஆக்கச் சக்தியான நிலைகள் இருவருடைய உள்ளங்களையும் ஒன்று சேர்க்கின்றது.

ஒரு உயிரின் தன்மை பூமிக்குள் ஈர்க்கப்படும் பொழுது ஒரு தாவர இனச் சத்தைத் தனக்குள் கவர்ந்த பின் அந்தக் கவர்ந்த சக்தியினுடைய நிலைகள் அந்த உயிருக்குள் உறையச் செய்து அணு திசுக்களாக மாற்றி உடலின் தன்மை பெறுகின்றது.

இதைப் போல கணவன் மனைவி இரு சரீரம் என்று இருந்தாலும் ஆண்பாலினுடைய நிலைகள் இருந்தாலும் பெண்பாலினுடைய உணர்வின் ஈர்ப்பலைகள் தனக்குள் சத்தைக் கவர்ந்து குழந்தையை உருப்பெறச் செய்யக்கூடிய ஆற்றல்மிக்க சக்தியாக வருகின்றது.

இதைப்போல் கணவன் மனைவி இருவரும் இரண்டறக் கலந்த எண்ணத்தின் உணர்வை உயிருக்குள் சேர்த்து மெய் ஒளியின் தன்மை தனக்குள் பெருக வேண்டும் என்று இந்த உடலுக்குள் இரண்டறக் கலந்துவிடுகின்றது.

இவ்வாறு கலந்த உணர்வின் தன்மைகள்
1.மெய் ஒளியின் தன்மையை ஒலி ஒளி என்ற நிலைகளில் வளர்த்து
2.மெய் ஒளியைக் காணும் நிலை ஏழாவது சப்தரிஷி
3.ஒளியின் தன்மையை சிருஷ்டிக்கும் தன்மையாக அது எட்டும்.

விண்ணுலகம் செல்லும் பொழுது எதையும் தனக்குள் படைத்து அந்தப் படைப்பில் என்றும் ஒளி சரீரமாகி என்றும் பதினாறாக நிலை பெறும் தகுதியை அடைகின்றது.

இந்த உடலில் எப்படி இரு நிலையில் பிரிந்திருந்து மகிழ முடிகின்றதோ ஆக இரு நிலையான இயக்கச் சக்தி மாறி என்றுமே மகிழ்ச்சியான நிலைகள் தோற்றுவிக்கும் நிலைகள் தான் இது.

அதைத்தான் சப்தரிஷி மண்டலம் என்பது.

அதை எவெரொருவர் பின்பற்றி இந்தச் சரீரத்திலிருந்து உருப்பெறும் நிலையை அமைத்துக் கொண்டால் ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் – முருகன்.

அறியாது புகுந்த ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தும் முறை

 

கூட்டுத் தியானம் இருந்து முடிந்த பின் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.

1.பின் மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவர் உடலில் உள்ள அந்த ஆன்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அது பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்
3.அந்த உடலிலேயே நன்மை தரும் சக்தியாக அது மாற வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

அனைவரும் இதைப் போன்று கூட்டாகச் செய்தோம் என்றால் ஆவி ஒரு உடலில் ஆட்டிப் படைக்கும் நிலையிலிருந்து அவர்களை மீட்டலாம்.

உடலுக்குள் ஒரு ஆவி வந்துவிட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ளோருக்கும் அதனால் பல தொல்லைகள் வரும்.
1.தொல்லைகள் வரப்படும் போது இப்படி இருக்கின்றதே…! என்று
2.ஆவி அல்லது பேய் ஓட்டுபவரிடம் சென்றால் அதை ஓட்ட முடியாது.

உள்ளுக்குள் இருந்து அதன் வீரியத் தன்மையைத் தடுத்தல் வேண்டும். அதாவது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை அந்த உடலுக்குள் பெருக்கப்படும் போது
1.அது இதை உணவாக உட்கொண்டு அதனுடைய வீரியத்தைக் குறைக்கும்
2.அப்போது அந்த ஆன்மாவிற்கும் ஒரு நன்மையாகின்றது. நமக்கும் நன்மையாகின்றது.

மாறாக ஆவியை விரட்ட வேண்டும் என்று
1.”அதிகாரத்தில் நாம் செயல்படுத்தினோம்…” என்றால் எதிர்மறைகள் அதிகமாகி
2.அது எதன் வேகத்தில் அந்த அணுக்கள் (ஆன்மாவின் இயக்கம்) இருந்ததோ அதன் வழி தான் பெருக்கும்.

பிறிதொரு ஆவியின் நிலைகள் இருந்தாலும் நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானங்கள் இருந்து
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் இரத்தநாளங்களில் படர வேண்டும்
2.அவர் உடலிலிருக்கும் ஆன்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று சாந்த நிலை அடைந்து
3.அதுவும் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலைகள் எண்ணி நீங்கள் இதைச் செய்வீர்கள் என்றால் அது ஒடுங்கும்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தீமைகளை அகற்றக்கூடிய வல்லவர்களாக மாற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ வேண்டும்.
1.மகரிஷிகள் தம் பார்வையில் எப்படிப் பிணிகளைப் போக்கினார்களோ இதைப் போல்
2.உங்கள் பார்வையில் தீமைகளைப் போக்கும் சக்தி பெற வேண்டும்.

தீமை என்று எப்படிக் கேட்டறிந்தாலும் அது உங்களுக்குள் புகாது தடுத்துக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்

அன்றாட வாழ்க்கையில் தினசரி பத்திரிக்கையைப் பார்க்கும் போது அரசியல் வாழ்க்கையிலோ அல்லது மற்ற நிலைகளிலோ கடும் தீமைகளைப் பார்க்க நேரும் போது மத பேதம் இன பேதம் என்ற பல போர் முறைகளைப் பற்றிக் கேட்ட பின் அங்கே ஒருவருக்கொருவர் வெறுப்பின் தன்மை தான் வருகிறது.

அந்த நேரத்தில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து ஒன்றுபட்டு வாழும் அருள் சக்தி வர வேண்டும் என்று எண்ண வேண்டும். ஒவ்வொரு உடலில் இருக்கும் உயிரை ஆண்டவன் என்றும் அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அமைதி பெறும் உணர்வுகள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் மதத்திற்குள் இனம் என்று இனத்திற்குள் இனம் என்று இனத்திற்குள் இனம் என்று பிரிந்து வாழும் நிலையே ஒருவருக்கொருவர் போர் முறை கொண்டு வாழும் நிலைகள் தான் வருகின்றது.

என் இனத்தைப் பற்றித் தாழ்த்திப் பேசுகின்றான்…! என்ற இந்த உணர்வுகள் வளரப்படும் போது பகைமைகளை வளர்த்து மனிதனின் நல்ல பண்புகளை மாற்றிவிடுகின்றது.

1.பிறிதொரு தீமை நம்மை ஆட்டிப்படைக்காதபடி நம் நல்ல குணங்களை மறைத்திடும் இது போன்ற நிலைகளை நாம் நீக்கிடல் வேண்டும்.
2.கணவனும் மனைவியும் இந்தத் தியானத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திலும் ஒன்று சேர்த்து வாழக் கூடிய பக்குவத்தை உருவாக்க வேண்டும்.

எந்த எண்ணமும் முன் தொடரில்லாமல் வருவதில்லை – ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தெய்வ நிலை கொண்ட ரிஷிகளின் சக்தியினால் இப்பூமியில் இன்று வாழ்ந்திடும் மனித இன வர்க்கத்தின் தொடர் நிலையே அடுத்து மாறப்போகும் கல்கியில் வந்திடும் உயிரினங்களின் சக்தி இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை கொண்ட ஆத்மாக்களின் சக்தியைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற நிலை வரப்போகின்றது.

இப்பூமி தோன்றிய நாள் தொட்டு இம் மனித ஆத்மாக்களாய் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட்ட நிலைகள் மாறி மாறிப் பல தடவை (மூன்று) ஏற்பட்டுள்ளன.

இப்பூமியில் ஆரம்பத்தில்…
1.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் இயற்கையின் தாவர வர்க்கத்திலிருந்து மாறு கொண்ட உயிரினங்கள் வளர்ச்சி பெற்றன
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனித உடல் கொண்ட ஆத்ம நிலையும் வந்தது.

அந்நிலையின் வளர்ச்சி கொண்டு இப்பூமியின் பிரளய நிலை மாறி மற்ற நிலை வந்த பொழுதும் ஆரம்ப நாளில் இப்பூமியில் தோன்றிய உயிரணுக்களின் நிலைக்கும் இரண்டாவது மாற்றம் கொண்டு வளர்ந்திட்ட உயிரணுக்களின் நிலைக்கும் மாறு கொண்ட நிலை வந்தது.

அந்நிலையின் தொடர்ச்சியில் பல கோடி ஆண்டுகள் இப்பூமியின் தொடர்ச்சி நிலை இருந்தது. ஒவ்வொரு மாற்றம் கொண்ட நிலையிலும்
1.இப்பூமியின் நிலையும்… உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியில் வளர்ந்த தாதுப் பொருட்களின் நிலையும் மாறி மாறித்தான் வந்து கொண்டுள்ளன.

இன்று நம் பூமியில் பல நிலைகொண்ட உலோகங்கள் சில சில இடங்களில் வளர்ந்து வருகின்றன. ஆனால் உலோக சக்தியிலேயே உருளுகின்ற மண்டலங்கள் சில உள்ளன.

மற்ற அமில நிலைகளை ஈர்க்காமல் ஒரு நிலை கொண்ட ஒரே அமில சக்தியின் சக்தியை மட்டும் ஈர்த்து வளருகின்ற சிறிய மண்டலங்கள் சில உள்ளன.

நட்சத்திர மண்டலமாக உருளுபவை நிலையெல்லாம் இந்நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன. மாற்றம் கொண்ட மண்டலமும் உண்டு.

நம் பூமியில் மாறி மாறி வந்திடும் இப் பிரளய நிலையில் உயிரினங்களும் மாற்றம் கொண்டே சுற்றி வருகின்றன என்று சொன்னேன். உயிரினங்கள் சுவாசித்து வெளிப்படுத்தும் நிலைக்கொப்பத் தான் அவற்றின் சக்தி நிலையுள்ளது.

ஆனால் பூமி ஒவ்வொரு தடவையும் மாற்றம் கொண்டு சுழலும் நிலையில்
1.பூமியின் சுவாச நிலையும் மாற்றம் கொண்ட நிலையின் தொடரினால்
2.அந்நிலையிலிருந்து வளர்ச்சியுறும் இன வர்க்கங்கள் அதற்குகந்த நிலையில்தான் வளர்கின்றன.

ஆரம்ப நாளில் உலகம் தோன்றிய நிலையிலிருந்து பல பிரளய நிலை ஏற்பட்டு அன்று தோன்றிய உயிரினங்கள்
1.அன்றிலிருந்தே எவையுமே அழிந்திடாமல் பல எண்ண நிலையில் சக்தி நிலையின் தொடர்பு கொண்டு…
2.இன்றளவும் என்றென்றும் வாழ்ந்து கொண்டேதான் உள்ளன.

பல புராணக் கதைகளைக் கேட்டு வருகின்றீர்கள்… இவற்றின் நிலையெல்லாம் என்ன…?

ஒவ்வொரு பிரளயம் நடப்பதற்கும் முந்தைய வாழ்க்கையில் நடந்த நிலைகளை அவ்வாத்மாவின் தொடர் கொண்டு வந்திட்டவர்கள்… அடுத்த பிரளயத்தில்…
1.சக்தி கொண்ட நிலை பெற்றவர்களின் எண்ணத்தில் உதித்திட்ட நிலைகள்தான்
2.இன்று நாம் நம்ப முடியாமல் கேட்டிடும் புராணக் கதைகளெல்லாம்.

எவ்வெண்ணமும் முன் தொடரில்லாமல் வருவதில்லை…!

வாழ்க்கையில் நடப்பவைக்கும் கனவில் காண்பவைக்கும் மாறுபட்டுக் காண்கின்றோம். எவையுமே பொய்யல்ல…!

இவ்வுலகம் எத்தனை பிரளய நிலை ஏற்பட்டுச் சுற்றிக் கொண்டு வந்தாலும் எண்ணமும்… எண்ணத்தின் கலப்பினால் நாம் கண்டு பேசி வாழ்ந்திடும் நிலையெல்லாம்… “நம்மைத் தொடர்ந்து கொண்டேதான் வரும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நமக்கு முன் பரவிக் கிடப்பது பரமாத்மா.
2.எண்ணி எடுப்பது ஆத்மா.
3.இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் விளைந்தால் ஜீவாத்மா.

விளைந்த உணர்வுகள் எதன் எதனுடன் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வினுடைய ஆற்றலின் நிலைகள்
1.உயிருடன் சேர்த்து நினைவுடன் சேர்ந்து இயக்கக்கூடிய ஆற்றலாக
2.ஒரே இயக்கமாக வருவது நான்காவது – காயத்ரி.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது. ஆனால் உயிரின் ஓட்டத்திற்குள் தான் இது நிலைத்திருக்கின்றது என்ற நிலையைக் காயத்ரி – சூரியன் என்று சொல்வது. சூரியன் என்றால் நம் உடலுக்கு “உயிர்” சூரியனாகின்றது.

குருக்ஷேத்திரம் என்பது உயிர் இருக்கும் இடம் தான். நம் உடலுக்குண்டான… நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் இந்தக் குருவான (உயிர்) நிலைகள் கொண்டு அது வளர்த்துக் கொண்ட நிலைகள் தான்.

நாம் எதை எடுக்கின்றோமோ அந்த நிலைக்கொப்ப ஞானத்தை உருவாக்கி அது உபதேசிக்கும் உணர்வின் நிலைகளில் தன் குருவுடன் அணுகி
1.நமக்கு எப்பொழுது துன்பம் வருகின்றதோ
2.அவனை நினைக்கும் பொழுது
3.அந்த ஆற்றல்மிக்க சக்திகள் நமக்கு உறு துணை செய்கின்றது.
4.இதைத் தான் அன்று கீதா உபதேசத்தின் நிலைகள் கொண்டு கண்ணன் சொன்னது.

நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது “பிறர் செய்யும் தவறின் தன்மை தெரிகின்றது… உணர முடிகின்றது…” அது உணர்த்திய நிலைகள் கொண்டு தவறு செய்தவரை எண்ணியே என்னை இயக்குகின்றது.

என்னுடைய நல்லதைக் காக்க வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகள் என் உடலுக்குள் சென்று தீய விளைவுகள் உருவாக்காதபடி அதைத் தடைப்படுத்த வேண்டும்.

அதைத் தடைப்படுத்தும் நிலைகளுக்குத்தான் கீதா உபதேசம் காட்டப்பட்டது.

1.”ஒ…ம்” என்ற உணர்வின் உணர்ச்சி “ஓ…ம்..கார”நாதம் கொண்டு வானை ஏகுகின்றான்.
2.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய பல எண்ண அலைகளை அடக்கி
3.அந்த “ஓ…ம்” என்ற நாதத்தை உயிருடன் சுருதியை ஏற்றி இந்த உணர்வை
4.வலு கொண்டு சுவாசிக்க (இழுக்க) வேண்டும்.

ஏனென்றால் கண்ணன் (கண்களால்) இங்கே தவறு செய்பவர்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை ஆகின்றது.

இந்த உடலுக்குக் குருவான உணர்வின் தன்மை கொண்டு அங்கே விண்ணை நோக்கி ஏகி “ஓ…ம்” என்ற ஓங்கார உணர்ச்சியைச் செலுத்தி மனித உடலுக்குள்ளிருந்து வரும் சிற்றலைகளை அடக்கிடல் வேண்டும்.

பின் இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி மெய் உணர்வை ஊட்டிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

(மகாபாரதத்தில்) குருவே எதிரியின் பக்கம் இருந்து அந்த விஷத்தின் தன்மை சிக்கியபின் குருவாகக் காட்டப்பட்ட அந்த மெய் உணர்வின் சக்திகளை எப்படி மீட்டுவது…?

குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவரை அறியாது ஏனென்றால் அந்தப் பாசத்தின் வலைகளில் சிக்கும் பொழுது
1.குரு என்ற நிலையில் மரியாதை
2.இங்கே சகோதரர் என்ற மரியாதை
3.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.

எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு “அவரை வீழ்த்தி விட்டால்…” நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன்…? என்ற இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது அப்பொழுது தீமையை வளரவிடும் நிலையாகி “நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது…”

மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து செல்லும் பொழுது நம்மால் அதை மீட்டிடும் பலம் இழந்து நம்மையே வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய நிலையைத்தான் அர்ச்சுனனுக்கு (அர்ச்சுனன் என்பது சகல வலிமையும் கொண்ட உணர்வின் நிலைகள்) தன் உயிரான நிலைகள் கீதா உபதேசத்தின் தன்மை உபதேசிக்கும் பொழுது
1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.
2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டுதான் அறிய முடியும்.
3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டுதான் இந்த உடலிலே விளைகின்றது.
4.நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.
5.என் நிலையையே நீ அறிவாய் என்று
6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

ஆனால் கண்ணின் நினைவுகள் என்னாகின்றது…? கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்கிறபோது அவர் அறியாத நிலைகள் அங்கே வருகின்றது.

அவர் எடுக்கும் உணர்ச்சிகள் இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி இந்தக் கண்ணின் நிலையை அவருடன் ஒன்றி கண்ணா… என்று நாம் எண்ணும் பொழுது
1.இந்தக் கண்ணின் நிலைகள் உயிருடன் எண்ணி
2.நினைவை நாம் இங்கே புருவ மத்தியில் செலுத்தி
நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் குருவான – உயிருடன் அங்கே ஏங்குவது.

அதைத் தான் குருக்ஷேத்திரப்போர் என்பது.

அங்கே அவர்கள் (தீமை செய்யும்) உணர்வுகளை நாம் சுவாசித்து உயிரான குருவிடம் பட்டுத்தான் அதை நாம் அறிய முடிகின்றது.

அவருடைய உணர்வின் தன்மை இங்கே செல்லாதபடி “ஈஸ்வரா…” என்று குருவை எண்ணி அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்ற ஆற்றல்மிக்க சக்தியைக் கூட்டும் பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள் வலு கூடுகின்றது.

வரும் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அகற்றும்படி செய்கின்றது.

சாமானியர்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்யக்கூடிய வழிகாட்டியாக நீங்கள் வளர வேண்டும்

 

இந்த உபதேசத்தைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டவர்கள் ஒவ்வொருவருமே தியானத்தை வழி நடத்த முன் வர வேண்டும்.

தியானம் முடிந்த பிற்பாடு யாருக்காவது உடல் நலம் சரியில்லை சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு வாத நோய் இருந்ததென்றால்… அவர்களை எழுந்து நிற்கச் சொல்லி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்
3.நோய் நீங்க வேண்டும்… உடல் நலமாக வேண்டும் என்று
4.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

இந்தப் பழக்கத்தை நாம் எங்கே சென்றாலும் கொண்டு வர வேண்டும். இங்கே சொல்லிக் கொடுப்பதை ஒருவர் செய்தாலும்… மற்றவர்களும் நான் செய்கின்றேன்…! என்று முன்னுக்கு வர வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ளவர்கள் இதை வழி நடத்த வேண்டும்.

1.ஏனென்றால் எம்மைச் சந்தித்தவர்களுக்கு இந்த அருள் வாக்கினைக் கொடுக்கின்றோம்.
2.கணவன் மனைவியாக இந்தக் கூட்டமைப்பினை உருவாக்கி வழி நடத்த வேண்டும்.

ஒரு கட்டுப்பாடான நிலைக்கு வர வேண்டும்.

குறைகளைக் கண்டால் அந்தக் குறையைப் பற்றிப் பேசக் கூடாது. அதை நிவர்த்தி செய்வதற்கு என்ன மார்க்கமோ அதை எடுத்துப் பேச வேண்டும்.

உதாரணாமக ஒரு இடத்தில் தூசி விழுந்தால்… பிசின் மாதிரி இருக்கிறது. அது ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதிலே எண்ணை விட்டால் போகாது. சோப்பைப் போட்டுத் தண்ணீரை விட்டால் போய்விடும்.

ஆனால் எண்ணையுடன் சேர்ந்த அழுக்காக இருந்தால் தண்ணீரை விட்டால் போகாது. அதற்குக் கிரசினை விட்டுத் தான் தூய்மைப்படுத்த வேண்டும்.

1.ஆகையினால் எது எதற்கு எப்படிச் செய்ய வேண்டும்…? என்ற நிலைப்படுத்தி
2.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அறியாது வந்த தீமைகளை நீக்கக்கூடிய சக்திகளை நாம் பெற வேண்டும்.

நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும். அதற்குத் தான் இந்தத் தியானமே…!

தியானம் என்றால் என்னமோ ஏது என்று இல்லை.

1.உங்கள் எண்ணங்களை அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு சென்று
2.அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வுகளை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்யப்படும் போது நீங்கள் அந்த நிலைக்கே ஆளாகின்றீர்கள்.

அதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.

என்னைப் (ஞானகுரு) போன்று நீங்களும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற வேண்டும். நான் எப்படிச் சொல்வது…? என்று கூச்சம் இல்லாதபடி தெளிவாக எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி ஒரு பழக்கத்தைக் கொண்டு வந்து
1.உலக மக்களுக்கு வழி காட்டக் கூடிய தன்மைக்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்
2.நீங்கள் ஒவ்வொருவருமே ரிஷியாக வேண்டும்.

உங்கள் பார்வையில் மற்றவர்கள் தீமைகளையும் துனபங்களையும் பிணிகளையும் போக்கக்கூடிய சக்தி பெற வேண்டும். அதற்குத்தான் இந்த அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம்.

குறைகளையோ மற்ற நிலைகளையோ காண நேர்ந்தால்
1.அதை நீக்கும் உபாயங்களைச் சொல்லுங்கள்
2.அந்தக் குறைகளையே பேசி அதையே வளர்க்கும் நிலை இல்லாதபடி
3.துணிவுடன் அதை நீக்கும் முறைகளை எடுத்துக் காட்டி அந்த அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றும்படி செய்யுங்கள்.

அருள் உணர்வின் மீது பற்று கொண்டு மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றி வாழச் செய்யும் அருள் ஞானத்தைப் பெருக்கச் செய்யுங்கள். அருள் வழியில் வளர வேண்டும் என்று நமது குரு அருளை அனைவரையும் பெறச் செய்யுங்கள்.

எல்லோரும் மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெறச் செய்யும் அந்தத் திறனை நீங்கள் பெற வேண்டும் என்று நமது குரு அருளை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு). நாம் அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.

உலக மக்கள் அறியாது சேர்த்துக் கொண்ட பகைமைகள் நீங்கி அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திட மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்…! என்று பிரார்த்திப்போம்.

1.சாமானியர்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்யும் சக்தியாக
2.எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றிணைந்து வாழும் நிலையை உருவாக்குவோம்.

ஆத்மீக நெறி கொண்டு செயல்பட்டால் மட்டும் தான் உலக மாற்றத்தைத் தடுக்க முடியும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய இப்பூமியின் பூமத்திய ரேகையின் நேர் கோட்டை வைத்து அந்த நிலையில் இன்றைய விஞ்ஞானிகளால் மேலே வான மண்டலத்தில் வான இயல் நுட்பக் கருவிகளை வைத்து இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தைக் கண்டறிகின்றனர்.

அதைப் போல இப்பூமத்திய ரேகையின் மையத்தில் இப்பூமியின் உள் பாகத்தில் சில நிலைகளைச் செய்வித்தால் இப் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் தன்மையைக் கொண்டு…
1.இப்பூமியில் தற்பொழுதும் இனி நடக்கப்போகும் காலத்தின் இயற்கையின் சீற்றத்திலிருந்து
2.எந்தெந்த இடங்களில் நிகழப்போகும் பெரும் மாற்றத்தைக் கண்டறிந்து அந்த ஆத்மாக்களைக் காத்திடவும் முடிந்திடும்.

வான நிலையில்தான் இவர்களின் ஆராய்ச்சி நிலை எல்லாம் உள்ளது. பூமியின் உள் நிலைகளை அதிகமாகக் காண முயலவில்லை.

ஆனால் இப்பூமி கவர்ந்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்துதான் இப்பூமியைச் சுற்றியுள்ள வான நிலையும் உள்ளது.

வளர்ந்திட்ட விஞ்ஞானத்தின் சக்தி அறிந்த ஆத்மாக்களினால் அவர்களின் சக்தியையே செயல் கொண்டு காத்திடும் நிலைப்படுத்திடும் ஆத்மீக நெறியையும் கலக்க விட்டால் உலகைக் காக்கவும் முடிந்திடும்.

இவ்வுலகையே செயலாக்கிடும் சப்தரிஷிகளின் சக்தி கொண்டு…
1.மனித உடலுடன் உள்ள விஞ்ஞான ஆத்மாக்களினால்
2.இவ்வுலகை இக்கலியின் கடைசி மாற்றத்திலிருந்து காத்திடும் சக்தி நிலையும் உண்டு.

ஒவ்வோர் ஆத்மாவிற்குமே ஆதி சக்தியின் செயல் சக்தி அனைத்தும் உண்டு. செயல்படுத்திட்டால் அந்த நற்சக்தியுடன் கலந்தே செயலாக்கிட முடியும்.

சக்தி பொதுவானதே…!

மெய் வழி செல்லும் பாதையைத் தான் எம்மால் காட்டிட முடியும்…. ஏற்றுக் கொள்வதும் அதன் வழி செயல்படுத்துவதும் அவரவர்கள் எண்ணத்தால் தான் அது முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நண்பர் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனை கொண்டு சொல்லும் பொழுது அவர் வாழ்க்கைக்கு வழி காட்டுகின்றோம். வழி காட்டிய நிலைகளில் அவர் கஷ்டங்களை நாமும் அறிந்து கொண்டோம்.

ஆனால் அறிந்து கொண்டாலும் அவர் வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது. இந்த வழியில் செயலின் தொடரை நாம் செய்கின்றோம். அடுத்து நாம் நம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இந்த வேதனைப்பட்ட மனம் கூடவே நிற்கும்.

நல்ல மனதில் படும் இந்த வேதனையைச் சுத்தப்படுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

நண்பருக்கு நல்ல வழி காட்டிவிட்டோம். ஆனால் நாம் கேட்டறிந்த வேதனையை அடுத்த நிமிடமே சுத்தப்படுத்திவிட்டு “இனி உன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்…” என்று சொன்னால் நாம் சொல்வதை அவரும் ஏற்றுக் கொண்டால் அங்கே சிறப்பாகின்றது. அவருக்கு லாபமும் வருகின்றது.

ஆனால் “ஐயோ…! இப்படிக் கஷ்டப்படுகின்றாயே… என்று எண்ணி..,
1.“இந்தா இந்தப் பணத்தை வைத்துக் கொள்…” என்று சங்கடப்பட்டுக் கொடுத்தால் சங்கடமே வரும்.
2.வேதனையான உணர்வுகள் தான் வரும்… அவரும் வேதனையுடன் தான் வாங்குவார்.
3.இந்த ஒலியின் மாற்றங்கள் இந்த வேலையைச் செய்யும்.
4.இரண்டு பேரும் கெட்டோம்… உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று தோப்புக்கரணம் போட வேண்டியது தான்.

இதுவெல்லாம் இயற்கையின் செயலின் நிலைகள். “உணர்வின் இயக்கங்கள்” தான் இவைகள்.

சாதாரண வாழ்க்கையில் மனிதனின் உணர்வுகள் எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான் இன்று விஞ்ஞானமும் பல எலெக்ட்ரானிக் (ELECTRONIC) கருவிகளையும் லேசர் (LASER) போன்ற நிலைகளையும் உருவாக்கி இயக்குகின்றது.

ஒரு கம்ப்யூட்டரின் துணை கொண்டு விண்ணிலே இராக்கெட்டைச் செலுத்துகின்றார்கள். இந்தத் தரை மார்க்கத்தில் இருப்பது நுண்ணிய அலைகள் தான்.

இதையும் அதையும் இணைக்கப்பட்டு இயந்திரத்தின் நிலைகள் கொண்டு பல டன் எடை கொண்ட அந்த இராக்கெட்டை விண்ணிலே பறக்க விடுகின்றார்கள்.

1.மனிதனின் எண்ண ஒலியாலே அது உருவாக்கப்பட்டு
2.அது திசையை அறியும் அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்த பின்
3.சிலிகனாக (SILICON) மாற்றுகின்றான் விஞ்ஞானி.
4.உணர்வின் நிலைகள் கொண்டு அலைகளைப் பதிவு செய்கின்றான்.

இப்பொழுது நாம் எப்படி நாடாக்களில் பதிவு செய்த இசையோ படமோ திருப்பி அதை இயக்கும் பொழுது அந்த இசையின் தன்மை கொண்டு மனிதனை மகிழச் செய்கின்றது… ஆடச் செய்கின்றது… இயக்கச் செய்கின்றது.. இதெல்லாம் மனிதன் உணர்வுகள்.

இதைப் போன்று தான் இந்தக் கம்ப்யூட்டருக்குள் இருக்கும் நிலைகள் சிலிகன் – உணர்வின் அலைகளை ஒலி பரப்பும் நிலைகளும் நுண்ணிய அலைகளை இழுக்கும் காந்த செல்களை இயக்கச் செய்து அதற்குள் இயக்கப்பட்டுச் சிலிகனாக மாற்றுகின்றான்.

நாம் எண்ணும் உணர்வின் தன்மை நமக்குள் உடலுக்குள் புகுகின்றது. அதாவது காந்தம் உணர்வு வெப்பம் மூன்றும் சேர்த்து நாம் எண்ணும் நிலைகள் அனைத்தும் சிலிகனாக (அணு செல்களாக) நம் உடலுக்குள் மாறுகின்றது.

அதையே தான் புற நிலைகள் கொண்டு அகத்தின் நிலைகளாகச் சிலிகனாக மாற்றுகின்றார்கள். அந்த உணர்வின் இயக்கம் வரும் பொழுது எதுவாக மாறுகின்றது…?

1.இயந்திரத்தில் எட்ட முடியாத தூரமாக இருந்தாலும் லேசர் புலனின் இயக்கத்தை
2.கதிரியக்கச் சக்திகளாக இருந்தாலும்
3.ரேடார் (RADAR) என்ற ஒலி அலைகளைத் தனக்குள் இயக்கச் செய்து
4.இங்கிருந்து (தரையிலிருக்கும் ரேடார்) விண்ணிலிருப்பதைத் தனக்குள் அந்த நுண்ணிய அலைகளைக் கவர்ந்து இழுக்கும் நிலையும் வருகின்றது.

ஆனால் அதே சமயம் விண்ணில் அனுப்பும் இயந்திரத்திலேயும் ரேடார் என்று நுண்ணிய அலைகள் வைக்கும் பொழுது அந்த ரேடார் தன்னுடைய உணர்வின் ஒலி அலைகளைப் பிரித்தெடுத்து
1.இங்கே மனிதனால் ஒலியாக எழுப்பட்டதை
2.உணர்வின் ஒலிகள் உந்தி
3.அங்கே இயந்திரத்தை இயக்கித் திசை திருப்புகின்றது.

“இவ்வளவு ஆற்றல் பெற்றவன் தான் மனிதன்…” அந்தச் சிந்தனைக்குரிய நிலைகள் வரும் பொழுதுதான் “மிக நுண்ணிய நிலைகளையும்” அறிகின்றான்.

இவ்வளவு ஆற்றல் பெற்றிருந்தாலும் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் இல்லை என்றால் மறுபடியும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டும்.

எந்தச் சாமியும் காப்பாற்றாது, எந்தச் சாமியாரும் காப்பாற்ற முடியாது. நாம் எடுக்கும் உணர்வுகளை நமக்குள் “உள் நின்று” இயக்கும் உயிரான ஈசன் அது சமைத்து அணுக்களாக விளையச் செய்துவிடும்.

விளைந்த உணர்வுகளைத் தன்னுடன் இணைந்த உயிராத்மாவாக்கி அடுத்த நிலையை உயிர் உருவாக்கிவிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதவி செய்கிறோம் என்றாலும் அது நமக்கு உபத்திரவமாக ஆகிவிடக் கூடாது

 

யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானத்தை கணவன் மனைவி எடுத்து… இருவரும் ஒன்று சேர்ந்து வாழக்கூடிய பக்குவத்தையும்… குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கக்கூடிய நிலைகளையும்… குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற நிலைகளையும்… நீங்கள் அனைவரும் வழி நடத்திக் காட்ட வேண்டும். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆனால்
1.கேட்காதவருக்குச் சொன்னீர்கள் என்றால் அங்கே வெறுப்பு தான் வரும்
2.உங்களை அணுகி வருவோருக்குத் தான் சொல்லிப் பழக வேண்டும்.

அணுகி வராதவருக்கு இந்தக் கருத்துக்களைச் சொன்னோம் என்றால் உங்களை அசுத்தமான நிலைகளில் பேசத் தொடங்கிவிடுவார்கள்.

பாலுக்குள் காபித் தூளையும் இனிப்பையும் போட்டால் நன்றாக இருக்கும். ஆனால் அதிலே விஷத்தைப் போட்டுக் குடித்தால் எப்படி இருக்கும்…?

சிலருடைய உணர்வுகள் அப்படி இருக்கும்.

அந்த மாதிரி இருந்தாலும்… அவர்களும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்று நாம் தியானித்து அவர்கள் பொருளறியும் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நாளடைவில் அவர்களுடன் பேச்சு வேறு வகையில் தொடரப்படும் போது அவர்கள் திருந்தி வாழும் அல்லது சிந்திக்கச் செய்யும் தன்மைகள் அவர்களுக்குல் ஏற்படும்.

இதை எல்லாம் நம் மனித வாழ்க்கையில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று உயர்ந்த மனிதர்களாக இருப்பார்கள். எல்லோருக்கும் உதவியும் செய்திருப்பார்கள். ஆனால் உதவி செய்த நிலையில் உதவி பெற்றவர் சந்தர்ப்பத்தில் இறந்து விடுகிறார்.

அந்தக் கடைசி நேரத்தில்…
1.”இன்னார் தான் எனக்கு உதவி செய்தார்…” என்ற எண்ணத்தில் அந்த ஆன்மா பிரிந்தால்
2.உதவி செய்தவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்…? என்ற எண்ணத்துடன் பிரிந்தால்
3.உதவி செய்தவருடைய உடலுக்குள் இந்த ஆன்மா வந்துவிடுகின்றது.

ஆனால் அவர் தவறு செய்யவில்லை… உதவி தான் செய்தார்.

ஆகவே அந்த மாதிரி உதவி செய்தாலும் உடலை விட்டுப் பிரியும் ஆன்மா உடலுக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால் உதவி எப்படிச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் எந்த உதவி வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் செய்யலாம்.

உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று உடலுக்குள் பாய்ச்சி விட்டு
3.யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்கள் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
4.அந்தக் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லி
5.இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்… நீங்கள் நலம் பெறுவீர்கள்… என்ற அருள் உணர்வினை வாக்காகக் கொடுக்க வேண்டும்.

அதே சமயத்தில் அவர் வேதனைப்படுவதை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் அந்த வேதனைக்கு வலிமை அதிகம்… நம்மையும் வேதனைக்குள்ளாக்கிவிடும்.

ஆனால் அதை எல்லாம் அடக்கியவன் மகரிஷி.
1.அதை நாம் எடுத்துப் பழக்கப்படுத்தி
2.இதைச் சொல்லித் தான் நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் இதை முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்றாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு நமக்குள் மகரிஷிகளின் உணர்வை வலுவாக ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து அவரின் நோயைப் பற்றிக் கேட்டறிந்த பின் அவரின் உணர்ச்சிகள் நம்மைத் தாக்காதபடி மேலே சொன்ன மாதிரி எடுத்து அதைச் சமப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நோயாளியின் உடலில் படர வேண்டும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி அவர் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானங்களில் இவ்வாறு செய்து அவருடைய நோய்களை நீக்கவும் அவர்கள் குடும்பத்தில் மன பலம் பெறச் செய்யவும் இதைப் போன்ற ஒரு நிலைக்கு வரவேண்டும்.

நாம் ஒவ்வொருவருமே இத்தகைய ஒரு பழக்கத்திற்கு அவசியம் வரவேண்டும்.

ஏப்ரல் 2022 உபதேசம்

“கதிரியக்கப் பொறிகளை நுகர்ந்து… அதை அடக்கி…” ஒளியான அணுக்களாகத் தனக்குள் உருவாக்கினான் அகஸ்தியன்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது மிருகங்கள் எல்லாமே அஞ்சி ஓடுகின்றது அதனால் அவனுக்குப் பெயர் காட்டு ராஜா என்று வந்தது.

அவன் குழந்தையாக இருக்கும் பொழுது அவனுக்கு இவ்வாறு பட்டங்களைச் சூட்டி எல்லா நிலைகளையும் கொண்டாடுகின்றனர். அவனுக்கு ஐந்து வயது வரப்படும் பொழுது அவன் எண்ணங்கள் சில நிலைகளைப் பிரதிபலிக்கும் பொழுது தாவர இனங்களைப் பற்றி அறிகின்றான்.

காரணம்… அவன் தாய் கருவில் இருக்கும் போது தாய் நுகர்ந்த நஞ்சினை அடக்கும் பல பல மூலிகை மணங்களையும் பச்சிலை வாசனைகளையும் பூர்வ புண்ணியமாகப் பெற்றவன்… அதன் வழி பிறந்தவன்.

ஆகவே…
1.தாவரங்களில் இருக்கும் சக்திகளை அவன் அறியும் நிலையில்
2.அந்தத் தாவர இனங்களுக்கு எங்கிருந்து உணவு வருகின்றது…? என்று
3.இவனுக்குள் தோன்றும் உணர்ச்சிகள் சிந்திக்கச் செய்கின்றது… உற்று நோக்குகின்றான். வானை நோக்கிப் பார்க்கின்றான்
4.அப்பொழுது துருவப் பகுதியில் இருந்து நம் பூமிக்குள் சக்தி எப்படி வருகிறது…? என்று அறிகின்றான்.

துருவத்திலிருந்து வரக்கூடியது அனைத்தும் விஷத்தின் உணர்ச்சிகளை உருவாக்கும் உணர்வு பெற்றாலும் இவன் அவைகளை நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் ஒளிக்கதிர்களாக மாற்றுகின்றான்.

இன்று நாம் மின்னல்களைப் பார்க்கின்றோம். நட்சத்திரங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அதிலிருந்து உமிழ்த்தப்பட்டு வரும் துகள்கள் எதிர்நிலை ஆகி ஒன்றுடன் ஒன்று மோதும்போது சுக்குநூறாக அதனுடைய அலைகள் மாறும்.

மாறி வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து அதனுடைய கலவைகளில் வித்தியாசமாக வரும். அதை… அந்த மின்னலாக மாறி வருவதைத்தான்… குருநாதர் என்னைப் பார்க்கும்படி சொல்கின்றார். “என் கண்கள் குருடாகி விடுமே…” என்று எனக்கு அந்தப் பயம் வருகின்றது.

ஆனால் இதை அடக்கிடும் உணர்வுகளை அகஸ்தியன் எடுத்து மின்னல்களை அவன் எப்படிப் பார்த்தான்…? என்று பார்க்கச் சொல்கிறார்.
1.அந்த மின்னலின் அலைகளை அகஸ்தியன் எப்படி எடுத்தான்…?
2.மின்னலின் வீரியம் அது எப்படி அவனுக்குள் அடங்குகின்றது…?
3.அகஸ்தியன் விஷத்தை அடக்கியது எவ்வாறு…? என்று காட்டுகிறார் குருநாதர்.

ஏனென்றால் அது மிகவும் விஷத் தன்மை கொண்டது…!

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வருவது எதில் எதில் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளை ஊட்டி அதைச் செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று
1.“மின்னலையும் என்னைப் பார்க்கச் சொல்லி…
2.அகஸ்தியன் அதை எப்படி அடக்கினான்…?” என்பதையும்
3.அந்த மின் அணுவின் தன்மையைத் தனக்குள் எப்படி ஒளியாக்கினான்…? என்பதையும் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு செடியிலோ மரத்திலோ மின்னல் தாக்கினால் அது கருகி விடுகின்றது… அதிலுள்ள சத்தை எடுத்து விடுகின்றது.

அதைப் போல
1.இந்த விஷத்தை ஒடுக்கிடும் உணர்வு வரப்படும் பொழுது
2.கதிரியக்கப் பொறிகளாக வருவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்
3.அதை ஒ\டுக்கித் தன்னுடன் ஒளியாக மாற்றும் அணுத் தன்மையாக மாற்றிவிடுகின்றான்.
4.அப்படி அவன் உடலில் உருவான அந்த ஆற்றலைக் கொண்டு தான் எதையுமே மாற்றிடும் சந்தர்ப்பம் வருகின்றது.

இது எல்லாம் குருநாதர் அனுபவரீதியில் எனக்குக் கொடுத்தது..

ஆகவே… அகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது எல்லா மின்னல்களையும் பார்க்கின்றான். அவன் பெற்ற அந்த உணர்வின் சத்தை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது போல் நாமும் ஒளியாக முடியும்.

அடிமையாக எண்ணி மகான்களைப் பணிந்து வணங்காது மகானுடனே மகானாக நாம் கலந்திட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

எண்ணத்தில் உயர் ஞானத்தையும் நற்செயலையும் ஆத்மீக நெறி கொண்ட அன்பு வாழ்க்கையையும் வழி நடத்திட்டால்… அந்த நிலையில் பெறும் சக்தியின் திறன் தானப்பா நாம் அடைந்திடும் பேரானந்த வாழ்க்கை.

ஆரம்ப வழித்தொடர்…
1.வாழ்க்கையுடனும் பிற எண்ணங்களின் மோதலினாலும் தொடரை வழிப்படுவதற்கு சிரம நிலை கொண்டிடலாம்
2.அச்சிரம நிலையிலிருந்து வழி நடந்து வந்திட்டால் இப்பேரின்ப நிலையை அடைந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தினால் செயற்கைக்கோளை இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களின் நிலையறிய ஏவுகின்றனர்.

இப்பூமியின் காற்று மண்டலத்தையும் இப்பூமிக்கு மேல் சில தூர விகிதத்திற்கு அந்த ஏவுகணையைச் (இராக்கெட்) செலுத்திட இவ்வமிலங்களின் (அணுகாந்த மின் அலை) உதவியினால் செலுத்தி அதற்கு மேல் உள்ள நிலைகளுக்கு எந்த அமில சக்தியின் நிலையில்லாமலே இயக்கிடும் நிலைக்கு அவ் ஏவுகணை செல்கின்றது.

குறிப்பிட்ட தூர விகிதத்திற்குத்தான் மற்ற அமில சக்தியின் நிலையினால் இயங்குகிறது. அந்த ஏவுகணை. பிறகு செல்லும் நிலைக்கெல்லாம் எரிபொருள் செலவு நிலை இல்லாமலே செல்லும் நிலையைத்தான் செய்வித்து அனுப்புகின்றனர்.

அதைப் போலவே நம் எண்ண சக்தியின் வழித் தொடரினை நற்சக்திக்கு வழிப்படுத்திட்டால் ஆத்மீக நெறிக்கு நம்மை வழி நடத்திட நம் உயிராத்மாவின் சக்தியினால் முடிந்திடும்.

1.இவ்வுடல் என்னும் அமிலங்கள் நிறைந்த இப்பிம்பத்தின் காந்த சக்தியின் நிலையை நாம் உணர்ந்திட்டால்
2.இப்பிம்பத்தையே பறக்கும் நிலைக்கும் பதப்படுத்திடலாம்.
3.நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே பெரும் சக்தி…!
4.இச்சக்திதனை நாம் உணர்ந்திடாமல் நம்மையே நாம் விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

செயற்கையினால் இன்று காணும் அனைத்து நிலைகளையுமே… அனைத்து நிலையென்பது ஒலி… ஒளி… இவற்றின் ஈர்ப்பு சக்தி கொண்ட நிலையை எல்லாம் இவ்வுடல் என்னும் அமில சக்தியின் தொடர்பினாலேயே கண்டிடலாம்.

“இவ்வெண்ண சக்தியின் வழித்தொடர் பெற்றோரின்…” சொல் செயல் பார்வை இவற்றின் சக்தி நிலையினால் அவர்கள் சொல்லும் சொல்வாக்கு பலிதம் கொள்ளும்.

ஒருவரைக் காணும் பொழுது அவரின் மேல் எவ்வெண்ணத்தின் நினைவுடன் அவரின் சுவாசக் காற்று பட்டுக் காண்கின்றனரோ அவ்வெண்ண நிலைப்படியே அவர்களைக் காண்பவரின் நிலையும் நடக்கும்.

1.ஆத்மீக நெறியறிந்து சக்தி நிலை பெற்றோரின் சொல்வாக்கும்
2.அவர்கள் எண்ணத்தில் பாய்ச்சிடும் விழியின் ஒளி நிலையும் பலிதம் கொள்ளும்.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பேரின்ப சக்தியுண்டு. மகான்களின் நிலையிலெல்லாம் இந்நிலையுண்டு.

1.மகான்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2.அவர் புண்ணிய பாதம் பட்ட இடமெல்லாம் செழிப்பு
3.அவரின் பார்வை பட்டாலே புண்ணியம்
4.அவரின் ஆசியினால் பேரின்பம் கிட்டும் என்ற வழித் தொடரிலுள்ள நாம் அத்தொடரினையே
5.அம்மகானின் புண்ணிய நிலையை நம் ஆத்மாவுடனும் கலந்து நாமும் அம்மாகனைப் போன்ற மகான்கள் ஆகலாம்.

இந்த உண்மை உணர்ந்து… உயர்ந்த நிலையிலுள்ளோரைத் தாழ்ந்தே வணங்கி… “தாழ்ந்த நிலையிலேயே இருந்திடாமல்…” அவரின் அடிச்சுவட்டைப் பற்றியே உயர்ந்து… அவரின் நிலையுடனே உயர்நிலை பெறும் மகான்களாய் நல் ஆத்மாவாய் நாமும் கலந்திடல் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அடிமை கொண்டு வணங்கி வாழ்ந்திடுவதல்ல வாழ்க்கை.
2.அன்பு கொண்டே வணங்கிடல் வேண்டும்.
3.அன்புடனே அன்பாய்க் கலந்து வாழ்ந்திடல் வேண்டும்.

ஆனால் நம் வழி முறையும் செயல் முறையும் அடிமை கொண்ட நிலையில்தான் மகான்களின் நிலையையும் பணிந்து பற்றி வாழ்கின்றனர்.

மகானுடனே மகானாய்க் கலக்கும் மனப்பக்குவ நிலையை வளர்த்து இவ்வுலகின் சக்திச் செல்வமான சக்தி ஆத்மாக்கள் அனைவருமே
1.சக்தி ஜோதியாய்த் திகழ்ந்திடும் உண்மையினை உணர்ந்து
2.உன்னத வழி பெற்றே மகாமகான்கள் ஆகிடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆயுள் ஹோமத்தைச் செய்பவரும் “செத்துப் போவார்” என்று தெரியும் தெரிந்தாலும் “நம்முடைய ஆசைக்கு…” அதைச் செய்கிறோம்

ஆயுள் ஹோமம் செய்கின்றார்கள்.

ஆனால் முதலில் ஆயுள் ஹோமத்தைச் செய்து கொடுப்பவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா…! இல்லை.

அப்புறம் அவர் ஆயுள் ஹோமம் நமக்காகச் செய்தால் நம் ஆயுள் எப்படி விருத்தியாகும்…? நாம் இதைத் தெரிந்து கொள்ளவும் செய்கின்றோம். தெரிந்தாலும் செய்கின்றோம்.

1.ஆயுள் ஹோமம் செய்பவரே இறந்து போகின்றார்.
2.அப்புறம் அவரிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி ஆயுள் நீடிக்கும்…?

காரணம்… ”நம்முடைய ஆசை…” இதைச் செய்தால் ஆயுள் நீடிக்கும் என்று செய்கின்றோம். யாருக்கு ஆயுள் நீடிக்கின்றது…! ஒருவருக்கும் நீடிப்பதில்லை.

சனிப் பெயர்ச்சி… “ஏழரை நாட்டான் பிடித்துக் கொண்டான்…” குரு பெயர்ச்சி… அதனால் நீ இங்கே போ… அங்கே போ… என்று ஜாதகக் குறிப்பு சொல்கின்றது.

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு சட்டத்தை இயற்றுகின்றது. இயற்றிய அந்தச் சட்டத்தைப் பதிவு செய்து அதையே மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதுவே நமக்குள் இயக்குகின்றது.

ஜோதிடம் பார்ப்பவனிடம் சென்று பையன் பிறந்திருக்கின்றான். பையனுக்கு “நல்ல நேரம் வருகின்றதா….! கெட்ட நேரம் வருகின்றதா….! என்ற ஆசையில் கேட்கின்றீர்கள்.

அவன் அந்தத் தேதியின் பிரகாரம் சட்டங்களில் எழுதி வைத்த பிரகாரம் படித்துக் கொண்டு வருகின்றான்.

அது நமக்குப் பொருந்தி அதைச் சொன்னவுடன் வரிசைப்படுத்தி அதைச் சிருஷ்டிக்கின்றோம். நம் எண்ணத்தால் எடுத்துக் கொள்கின்றோம்.

பையன் பிறந்திருப்பான். குழந்தை அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி… தந்தையார் இவனின் எதிர்காலம் எப்படி இருக்கின்றதோ…? என்று எண்ணிக் கேட்பார்.

ஜோதிடம் பார்ப்பவன் எழுதி வைத்த குறிப்பைப் படித்தவுடன் அவன் சொன்னதை மனதில் பதிய வைத்துக் கொள்வார். தாயிடம் வந்து குழந்தை குழந்தை பிறந்த நேரம் ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது என்று சொல்வார்.

“ஆ…ஹா…” அந்தப் பிறந்த கருவின் தன்மை இந்த உணர்வின் நினைவை அங்கே கூட்டுகின்றது.
1.ஒன்றும் அறியவில்லை என்றாலும் கூட
2.நம்முடைய அணு செல்களில் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

நம் பாசத்தின் நிலைகள் கொண்டு அங்கே பதிவு செய்து கொண்ட பின் இரண்டாவது பையனுக்கும் ஆபத்து…! “அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பார்கள்.

அவனை உடனே கூப்பிட்டு…, அங்கே ரோட்டிலே பார்த்துப் போடா… பஸ்ஸில் ஆபத்துடா… போகாதடா…. இதைச் செய்யாதேடா… என்று அவனிடமும்
1.இந்த விதையை விதைத்து விடுகின்றோம்.
2.பஸ்ஸை விட்டுப் போனாலும் வீட்டை விட்டுப் போனாலும் இவன் எங்கே போனாலும்
3.எங்கே போய் அடிபடுகின்றானோ…! என்னமோ…! ஏதோ…! என்ற இந்த சிந்தனை
4.அவன் பின்னாடியே… நம் எண்ணங்கள் போய்க் கொண்டிருக்கும்.
5.வெளியிலே போனால் போதும். இப்படித்தான் வரும்

அப்பொழுது ஜோதிடக்காரன் உருவாக்கிக் கொடுத்தது எனக்குள் உருவாகி அதையே நான் சிருஷ்டிக்கின்றேன்.

அப்புறம் என்ன ஆகின்றது…? ஏழரை நாட்டான் சனி பிடித்ததென்றால் கொடுக்கல் வாங்கலில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பார்கள்.

வியாபாரத்திற்குச் சென்றால் கொடுக்கல் வாங்கலில் தன்னையே சுருக்கி நாம் உணர்வினுடைய நிலைகளைக் கவர்ந்து நாம் எந்த நினைவு கொண்டு இருக்கின்றோமோ அதற்குத்தக்க தான் வியாபாரம் ஆகும்.

நீ எதை நினைக்கின்றாயோ… நீ அதுவாகின்றாய். இந்த வேதனை வரும்… துன்பம் வரும்… என்ற இந்த எண்ணத்தைக் கூட்டி நாம் செலுத்தி அடுத்தாற்போல் நாம் எங்கே சென்றாலும் இந்த உணர்வே வரும்.

என் உணர்வுகள் வாங்க வருவோர் செவிக்குள் பட்டவுடன் நான் எதை நினைக்கின்றேனோ அதன் உணர்வே அதையே எனக்குள் அவரைப் பேச வைக்கின்றது.

ரேடியோவில் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைவரிசையில் வருவதைத்தான் பாடும்.

1.எந்தச் சந்தேக உணர்வை எனக்குள் எடுகின்றேனோ
2.இந்த உணர்வின் ஒலிகள் மற்றவர்கள் செவிகளில் பட்டவுடன்
3.அந்த உணர்வின் நிலைகள் அங்கே இயக்கச் செய்து
4.அந்தப் புலனறிவை எனக்கு அது ஊட்டும்… இது இயற்கை
5.இது தான் இன்றைய நிலைகளில் நாம் ஜாதகம் பார்க்கும் நிலை.

மறதிப் பூடு

 

காட்டிற்குள் சில வகையான செடிகள் உண்டு அந்தச் செடிகளின் மீது மிதித்து விட்டால் நம் நினைவையே இழந்து விடுவோம். அடுத்து எங்கே போகின்றோம்…? என்ன செய்கிறோம்…! என்றே தெரியாது.

அந்தச் செடியைத் தூசி போல் ஆக்கி… வீட்டு வாசல்படியில் தேய்த்து விட்டால் உங்கள் நினைவுகள் மறந்துவிடும். உங்கள் கடையில் கொண்டு போய்ப் போட்டால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை வராது. இதை “மறதிப் பூடு…” என்று சொல்வார்கள்

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் எமக்கு (ஞானகுரு) ஞாபகப்படுத்திக் காட்டுகின்றார்.

நாங்கள் ரெண்டு பேரும் செல்லும் பொழுது திடீரென்று அவர் ஒதுங்கிச் செல்கிறார்… என்னைச் செடி மீது மிதித்து விட்டு வாடா…! என்று சொல்கின்றார்.

செடியை மிதித்து நான் கடந்து சென்றவுடன் என் நினைவே இல்லை…! எந்த பக்கம் போகின்றேன்… என்ன செய்கின்றேன்…? என்றே எனக்குத் தெரியவில்லை

செடிகளுக்குச் சத்து எப்படி இருக்கிறது பாருடா…! என்கிறார்.

1.மனிதனான பின் காட்டிற்குள் அவன் அடிபட்டு வேதனையுடன் கீழே விழுந்து தன்னை மறந்த நிலைகள் மடிந்த பின்
2.அவனுடைய உணர்வுகள் செடியுடன் கலந்து அதை அது உணவாக உட்கொண்ட பின்
3.அதன் விழுதுகளில் இப்படி எல்லாம் ஆற்றல் வருகிறது…. அதை மிதித்தால் நம் சிந்தனையை இழக்கச் செய்கின்றது

பிறகு குருநாதர் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே செல்கின்றார். ஆனால் என்ன செய்வது… எந்தப் பக்கம் போவது…? என்று எனக்குத் தெரியவில்லை.

வேகமாக என் கையை பிடித்து இழுத்து… வாடா… வாடா… வாடா… வாடா… என்று என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார்.

பின் வேறு சில செடிகளைக். காண்பித்து… “அதன் மீது உட்கார்…” என்றார். உட்கார்ந்த பின் அப்புறம் எனக்கு நினைவு வருகின்றது.

இப்படி அனுபவரீதியில் தான் குருநாதர் எனக்குக் கொடுத்தார். வெறும் வாயால் சொல்கிறேன் என்று அல்ல.

1.உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் திரை மறைவாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும்
3.விஞ்ஞான உலகில் வரும் கடுமையான தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இத்தனையும் கற்றுக் கொடுத்தார். இருந்தாலும் இதை எல்லாம் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் விட்டால் என்னவாகும்…! எனக்குள் அது மறைந்து விடுகின்றது.

அப்படி இல்லாதபடி உங்களுக்குள் அதை எல்லாம் உணர்த்தப்படும் போது
1.உங்கள் பார்வையால் மற்றவருடைய தீமைகளைப் போக்க முடியும்
2.சிந்தனை இழக்கச் செய்யும் நிலையிலிருந்து மற்றவர்களை மீட்கும் சக்தியும்
3.அதனை மாற்றியமைக்கும் சக்தியாகத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.அந்த ஞானத்தின் வழிகளில் உங்கள் வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

இதன் வழியில் ஒவ்வொருவரும் சென்றால் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் உங்களுக்குள் கிடைக்கின்றது. ஆகவே… நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும்.

உங்கள் உணர்வைக் கேட்போருக்கும் அருள் ஞானத்தை ஊட்டி மறைத்திருக்கும் தீமையான உணர்வுகளை நீக்கி அருள் ஒளியின் உணர்வை அவர்களும் பெருக்க வேண்டும்… உங்களுக்குள்ளும் அருள் சக்தி பெருக வேண்டும்.

அத்தகைய நோக்கத்தில் தான் குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டிய உண்மைகளை உங்களுக்குள்ளும் தெளிவாக்குகின்றேன்.

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” – ஈஸ்வரபட்டர்

 

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” இப்படிப் பல மணிகளைத் தன் ஜெபத்தினால் செய்வித்துச் சித்து நிலை பெற்றவர்கள் தம் உடலில் இந்த மணிகளை அணிந்து கொண்டு அவற்றின் ஈர்ப்பு சக்தியின் நிலையினால் தன் ஆத்மாவிற்குச் சில நிலைகளை அறிந்திட இப்படிப் பல நிலைகளை ஜெபம் கொண்டு செய்வித்தனர்.

சந்திர மண்டலத்தில் இருந்தும் சூரிய மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் தொடர்புடைய மற்ற மண்டலங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் அணுக்கதிர்களின் சக்தியை உணர்ந்து அமாவாசையில் சந்திரனின் சக்தி இல்லாமல் சூரியனின் ஒளிக்கதிரையே பெற்றிடும் இப்பூமியை நிலைப்படுத்தி மூலிகைகளை வளரச் செய்யும் நாள் கணக்குப்படி அதை நீர் மட்டத்தின் தூர விகிதப்படுத்தி இம் மூலிகைகளை ஒன்றுக்கு நேர்ப்படுத்தி மற்றவற்றை வைத்து அதன் நாள் கணக்கில் வளரும் நிலைப்படுத்தி பக்குவமுடனே இரசமணியுடன் கலந்த ஜெபம் செய்கின்றார்கள்.

துளசி நாமத்தையும் அகஸ்தியர் நாமத்தையும் எம்மணியை உருவாக்குகின்றார்களோ அம்மணிக்குகந்த நாமத்தை ஜெபித்து தம் உடலுடன் ஜெபம் கொண்ட அந்த மணிகளை அணிந்து கொண்டு அதன் ஈர்ப்பு சக்தியின் தொடரினால் பல நிலைகளைச் செய்கின்றார்கள்.

1,இவ்வுடலையே ஒருவர் கண்ணுக்கும் காணாத நிலையெல்லாம் செய்விக்கின்றனர்
2.இவ்வுடலை விட்டு ஆத்மாவைப் பிரித்துப் பல சக்தி நிலைகளை அறிந்திடும் நிலைக்கும் பல நிலைகளைச் செய்கின்றனர்.
3.இயற்கையுடன் வளர்ந்திட்ட இம் மூலிகையின் நிலையறிந்து
4.இயற்கையின் சக்தியினாலேயே ஞான வழியில் சித்து பெற்றவர்கள் செய்திடும் நிலை இவையெல்லாம்.

ஆனால் சூனிய நிலை கொண்ட தீய சக்தியிலும் இந்நிலைகள் செயல்படுகின்றன.

குடுகுடுப்பு ஆண்டிகளும் இன்னும் சில சூனிய சாமியார்களின் நிலையிலும் மை போட்டு மந்திரித்து கறுப்புக் கயிற்றில் தாயத்துக்களை அளித்துப் பல நிலைகளை அவர்கள் செய்கின்றனர்.

இந்தியாவிலும் சீனாவிலும் திபெத்திலும் இன்னும் ஒரு சில நாடுகளிலும் இச்சூனியக்காரர்களின் ஆதிக்க நிலை நிறைந்துள்ளது.

குறைப் பிரசவத்தில் போன சிசுக்களையும் பிறந்த சிசுவையும் அதைப் புதைத்த நிலையிலிருந்து எடுத்துச் சென்று… அதன் ஜீவ சக்தியைத் தன் உடலுடன் ஏற்றிக் கொள்ளும் மந்திர ஜெபங்கள் செய்து தன் உடலுடன் ஏற்றிக் கொள்கின்றார்கள்.

குட்டிச் சாத்தான் வேலையும் இதுவே…!

கூடுவிட்டுப் பறந்து செல்லும் நிலையும் தன் உடலையே பிறர் கண்ணிற்குக் காணாமல் ஆவி உருவப்படுத்தும் நிலையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

இவர்களினால் பல தீய நிலைகள் இன்றும் நடந்து வருகின்றன. தீய எண்ணத்திற்கு இத்தீய சக்தியின் தொடர்பும் கிட்டுகின்றது.

நல்வழிக்கும் தீய வழிக்கும் இந்நாடு கலந்த நிலையில்தான் உள்ளது.

இவ்வெண்ண சக்தியை மேம்படுத்தி இவ்வுலக சக்தியில் ஆத்ம சக்தியை ஒன்றச் செய்தால் நம் ஆத்மாவுடன் நாம் வளர விடும் நற்சக்தியின் பயனால் நாம் வாழ்ந்திடும் காலத்தில் இக் காற்றுடன் கலந்துள்ள தீய சக்திகளின் அணுக்கதிர்களை வளரவிட்டு சோர்வும் நலிவும் இவ்வுடலை அண்டாமல் இவ்வுடல் அகால மரணம் எய்திடாமல் அன்பு கொண்ட ஜீவாதார அறம் கொண்ட நல் வாழ்க்கை வாழ்ந்தே சூட்சும உலகிற்குச் சென்றிடும் பக்குவ நிலைக்குச் சென்று வாழ்ந்திடலாம்.

தீயோரின் சக்தி நிலை வளர்ந்து நற் சக்தியைக் குறைத்துக் கொண்டு வருவதினால் நம் சக்தியையும் நம்மைச் சார்ந்தோரின் சக்தியையும் அவர்களின் தொடர்பு கொண்டோரின் சக்தியையும் கீழான நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தன் இனத்துடன் தன் இனத்தைச் சேர்த்தே ஒவ்வொரு மண்டலமும் ஈர்த்து எப்படி வளர்ந்ததுவோ அந்த நிலை போன்றே…
1.இவ்வுலகில் உதித்த ஆத்மாக்கள் அனைவருமே ஒன்றுடன் ஒன்றை நற்சக்திகளாக்கி
2.இவ்வுலகையே நல் உணர்வு கொண்ட நல் பூமியாக வாழ்ந்திடும் பக்குவம் பெற்ற ஆத்மாக்களாய் வந்திட
3.நல்லுணர்வையே நலமாக்குங்கள் என்றே வழிப்படுத்தி வாழ்த்துகின்றேன் நல் வாழ்த்துக்களை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்றால் என்ன என்றே தெரியாதபடியே இருக்கின்றார்கள்.

1.மூலம் என்பது உயிர்.
2.ஆதாரம் என்பது நமக்குள் இருக்கக்கூடிய உணர்வு.
3.அதில் மெய் ஒளியைக் காணும் ஆதாரத்தைத் தட்டியெழுப்பி
4.அந்த உணர்வின் சக்தியை நாம் சுவாசித்து
5.அந்த உணர்வைப் பெருக்கச் செய்வதுதான் “மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது” என்று ஞானிகள் சொன்னது.

ஆனால் இவர்கள் என்ன செய்கின்றார்கள்…!

மூலாதாரத்தைத் தட்டியெழுப்பி என்று நினைவை எங்கெங்கோ செலுத்தி “மூலம்… பூரம்… மணிப்பூரம்…” என்று சொல்லி எதை எதையோ இவர்கள் சிருஷ்டித்துக் கொண்டு இவர்களும் அறியாத நிலையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களையும் அறியவிடாது செய்துவிடுகின்றனர்.

“பூரம்” என்ற நிலைகளில் அந்த இடத்திற்குக் கொண்டு செல்லும் பொழுது “தாமரை” இங்கே இருதயத்திற்குள் நினைக்கும்போது பொழுது ஹார்ட் அட்டாக் வந்து அசுத்தத்தை நீக்கி – ஏனென்றால் நெஞ்சு வலித்தது அதனால் இப்படி இருந்தது என்பார்கள்.

நான் சிந்தனையுடைய நிலைகளை எடுத்தேன்… ஏதோ ஒரு பிரம்மத்தில் போய்ச் சேர்ந்தது… எனக்குப் பித்துப்பிடித்தது என்றும் சிலருடைய நிலைகள் சொல்வார்கள்.

ஆனால் சரியான நிலைகளில் அவர்கள் சொன்ன பூரம் ஆதாரம் இவைகளைத் தட்டியெழுப்பினால் நிச்சயம் அந்த உணர்வின் தன்மை அந்தந்த இடங்களைப் பாதிக்கச் செய்யும்,

குண்டலினி யோகம் செய்தவருடைய நிலைகள் எல்லாம் HEART WEAK அந்த உணர்வின் தன்மை இருதயம் பலவீனமாக இருப்பதைப் பார்க்கலாம்.

இயற்கையின் தன்மை நாம் சுவாசிக்கும் பொழுது
1.வடிகட்டும் உணர்வின் தன்மை “சுவாசம்”
2.நமக்குள் உணர்வின் தன்மையைச் செல்களைத் தட்டியெழுப்பி
3.நம் மூச்சின் தன்மை உடலாக்குவது தான்
4.அந்த உணர்வின் சக்தியை வடிப்பது தான் இந்த இயற்கை.
5.அந்த இயற்கையுடன் ஒன்றிய நிலைகளில் நாம் செல்வது தான் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி.

ஒரு தென்னை மரம் தனக்குக் காந்த சக்தி குறைவாக இருந்தால் என்ன செய்யும்…? வளைந்து நெளிந்து அந்தச் சூரியனின் காந்த சக்தியை எடுத்துத் தனக்குள் விளைவித்துக் கொள்ளும்.

அதைப் போல் தான் மனிதன் அந்த மெய்ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் அதற்குத் தக்கவாறு நாம் எண்ணி ஏங்கி எடுத்தல் வேண்டும்.

ஒரு ட்யூப் லைட் (TUBE LIGHT) அதற்குத் தக்க மின்சாரத்தின் அளவுகோல் சரியாக வைக்கும் பொழுது சரியான நிலைகளில் எரிகின்றது. குறைந்தாலோ எரிவதில்லை.

இதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் அதற்குத்தக்க காந்த சக்தி இருந்தால் தான் காற்றிலிருந்து நாம் எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருளை “நீ பெறு” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம். அதனால் பலனில்லை. அந்த உணர்வின் ஆற்றல்மிக்க இந்தச் சக்திக்கு யாம் உபதேசித்தாலும் அந்தக் காந்தத்தின் சக்தியைக் கூட்டினால் தான் அதை எடுக்க முடியும்.

நாள் முழுவதற்கும் நாம் உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிடமாவது இந்தச் சக்திகளை எடுத்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

காலமறிந்து… கருத்தறிந்து… ஞானத்துடன்… செயல்பட வேண்டும் என்று தான் நம் சாஸ்திரங்கள் கூறுகிறது

 

சாஸ்திரங்களில் சித்திரை மாதத்தைப் பற்றிய உள் மூலக்கூறைத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நாம் அந்தச் சித்திரை மாதத்தை எப்படி நினைக்கின்றோம்…!

இந்த வருடம் சித்திரை மாதம் பிறந்திருக்கிறது…
1.இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் அவன் ஓடுகாலியாக வருவான்..
2.குழந்தைகள் அந்த மாதத்தில் பிறக்கக்கூடாது… குடும்பத்திற்கு அது ஆகாது.
3.சித்திரை மாதத்தில் ஏதாவது செய்தால் எல்லாம் சிதறிப் போகும்… ஆகையினால் நல்ல காரியம் செய்யாதே…! என்றெல்லாம் சொல்கிறார்கள்.

சித்திரை மாதத்தில் நாம் உயர்ந்த ஞானத்தைப் பெறும் நிலையாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் போது இந்தச் சித்திரையை நீக்குகின்றோம். நமக்குள் நல்லதை மறைத்திடும் அந்த்த் தீமைகளை அகற்றுகின்றோம்.

ஆகவே “உத்தராயணம்…” என்ற மனிதனின் ஆறாவது அறிவைக் கொண்டு மீண்டும் அது தெளிவு கொண்ட பின் இந்தப் புது வருடம் வரப்படும் போது… ஒவ்வொன்றையும் தெளிந்து தீமைகளை அப்புறப்படுத்தும் நிலை வருகின்றது.
1.அதனால் தான் மாதத்தை இணைத்து… காலத்தையும் இணைத்து…
2.மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று விநாயகர் (தத்துவத்தில்) அகவலில் பாடுகின்றனர்.

மூலாதாரம் என்றால் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிர்…!

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அது உயிரிலே மூளும் போது மூண்டெழும் கனலை… எந்தக் காரணத்தால் நாம் பார்த்தோமோ அந்த உணர்வின் தன்மை உயிரிலே மோதும் தன்மை கொண்டு அதனின் இயக்கமாக நம்மை இயக்குகிறது.

அதனால் தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலத்தால் அறிந்து கருத்தறிய வேண்டும்” என்று பாடலைப் பாடுகின்றோம்.
1.பாடலைப் படித்தோம்… கருத்தை விட்டுவிட்டோம்.
2.மூலத்தையே விட்டுவிட்டோம்… அந்த உண்மைகளை உணரவில்லை.

காரணம்… நாம் எந்த நிலையைக் காலத்தால் அறிகின்றோமோ… அது நம் மூலமான உயிரில் இது ஆதாரமாக இணைக்கப்பட்டு அது உணர்வின் தன்மை கனலாக எழும்புகிறது.
1.அதைக் காலத்தால் அறிந்து ஆறாவது அறிவால் ஞானம் கொண்டு அறிந்துணர்ந்து
2.மகரிஷிகளின் அருள் உணர்வைக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடலுக்குள் இணைத்து நாம் செயல்பட வேண்டும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களில் தவறில்லை. சாங்கிய சாஸ்திரங்களில் நாம் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாதபடி துயர்களையே நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

இதைத் தான்…
1.ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் எந்தெந்த நிலைகள் வளர்கிறது என்ற நிலையில்
2.பங்குனி உத்திரம்… திசை மாறும் நிலைகள் கொண்டு
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் நிலையாக நாம் திசை திரும்ப வேண்டும்…
4.ஞானிகள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்று காட்டுகின்றார்கள்… உத்தராயணம்…!

பங்குனி உத்திரம் முருகனுக்குகந்த நாள் என்று தேரோட்டம்… காவடி ஆட்டம்… என்று ஆடிப் பாடி மகிழ்கின்றோம்.

இருந்தாலும் அதனின் உணர்வின் வேகம் கொண்டு பக்தியில் முருகா… முருகா… முருகா… என்று “அவன் செய்வான்…” என்ற நம்பிக்கையுடன் இருந்து உணர்வின் தன்மை நமக்குள் பேயாக்கி… இந்த ஆசை கூடி… உடலை விட்டுச் சென்ற பின் அதே உணர்வின் தன்மை கொண்டு அடுத்த உடலுக்குள் சென்று… ஆசையின் நிலைகள் பேயாகத் தான் ஆக்க முடியும்… அடுத்த உடலுக்குள் சென்ற பின் ஆசை தான் வளர்கிறது… ஆறாவது அறிவு சூனியமாகிறது.

காவடி ஆடுபவர்கள் உடலை விட்டுப் இறந்த பின் எங்கே செல்கிறார்கள்…? முருகன் மீது பக்தியாக இருந்து அடுத்தவர்கள் காவடி எடுத்தால் போதும்.. அந்த ஆன்மா புகுந்து தன்னாலேயே ஆடத் தொடங்கும்.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்த அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு உத்தராயணம் என்ற நிலையில் ஆறாவது அறிவு கொண்டு அருள் உணர்வை எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அதற்குத் தான் இதை உங்களுக்குள் விளக்க உரையாகக் கொடுப்பது.

நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

தீப ஜோதியைக் கண்டிடவே தீபங்களை ஏற்றி வைத்துப் புனித நன்னாளாய்க் கார்த்திகைத் திருநாளைத் தீபத்தின் ஜோதியிலே ஜோதியாய் வணங்குகின்றீர்.

தீபம் ஏற்றி வணங்கிடும் நாளில்…
1.தீப ஜோதியையே உம்முள் ஐக்கியப்படுத்திடும்
2.ஜோதி தீபங்களாய் வாழ்ந்திடும் “எண்ண தீபத்தை ஏற்றிடுங்கள்…!”

எண்ணெயும் திரியும் ஏற்றுவதற்குத் தீக்கோளப் பெட்டியும் செயற்கை கொண்டு தீபம் ஏற்றி தீப விழாவாக்கி மகிழ்ந்திடும் நன்னாளை…
1.என்றுமே தீபமாய்ச் சுடர்விடும் ஆத்ம விளக்கை
2.”எண்ண தீபத்தில் இயற்கையின் சக்தியில் கலக்கவிடுங்கள்…!”

நம் பூமியின் ஒலியினால் ஒளியாகி ஒளியுடனே வாழ்ந்துள்ள நாம் நம்மைப் போன்ற ஒவ்வொரு மண்டலமும் ஒலி கொண்டு ஒளி பெற்று வாழ்வதைப் போல்…
1.மற்றச் சாதனங்களினால் எரிந்து ஒளிவிடும் ஒளியாய் இல்லாமல்
2.தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள்.

சூரியனும் மற்ற அனைத்து மண்டலங்களும் தானாகவே தன்னுள்ளேயே ஒளியினால் ஒளி பெற்றுச் சுற்றிடும் ஜோதி மயம் போல் ஒவ்வோர் ஆத்மாவுமே…
1.அவரவர்களின் ஆத்மாவுடன் ஜோதியின் சக்தியைப் பெற்று
2.ஜோதி மயமான ஜோதியுடனே கலந்தும் தனிப்பெரும் சக்தியினைப் பெற்றிடலாம்.

நம் ஆத்மாவிற்கு உள்ள சக்தியினை நாம் உணர்ந்திடல் வேண்டும். நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும். ஆனால் நம் சக்தியை நாம் அறிந்திடாமல் பல தீய சக்திகளுக்கு நம்மை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்.

1.வாழ்க்கையுடனே தியான வழியின் ஜோதித் தொடரை வளரவிட்டு வாழ்பவருக்கு
2.நம் ஆத்ம ஜோதியின் சக்தியினைப் பூர்ணமாக அறிந்திடும் சக்தி நிலை வந்தடையும்.

வாழும் காலம் குறுகியதுதான்…! “மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் காலத்தில்தான்…” நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் கிட்டுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களுக்கு… ஆத்ம வளர்ச்சி வளர்ச்சி என்பது சக்தி நிலை கூடிடும் நிலையில்லை. உடலுடன் கொண்ட ஆத்மாக்களினால்தான் வாழ்ந்திடும் பக்குவத்தில் ஆத்மாவை ஜோதியாக்கிட முடிந்திடும்.

வாழ்வும் சாவும் என்ற இரண்டு நிலைகளைத்தான் உணர்ந்துள்ளோம்.
1.பிறந்த பின் நம் நிலையை நாம் உணரப் போகின்றோமா…? என்ற பக்குவம் பெறாத நிலையில்
2.நாம் பிறப்பதுவே நம் தாய் தந்தையரின் நிலையினால் வந்தது… நாமாகப் பிறவிக்கு வரவில்லை…
3.ஆகவே வாழும் காலத்தை அனுபவித்து வாழலாம் என்றெல்லாம்
4.நம் ஆத்ம சக்தியைப் புரிந்திடாமல் எண்ணி வாழ்ந்திடும் நாம்
5.இனி வரும் காலத்தை நாம் எடுத்திடும் சுவாச நிலையின் ஒளியினால்
6.நம் ஆத்மாவை ஒளி கொண்ட ஒளியாக்கித் தீப ஒளியாக வாழ்ந்திட வேண்டும்.

எமது அருளாசிகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“அருள் ஞானப் பொக்கிஷத்தை” அனைவரும் பெறுவதைக் கண்டு பேரானந்தப்பட வேண்டும் என்றார் குருநாதர்

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” எமக்குக் காட்டிய அருள் வழிகளை உங்களுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றோம். அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

இதை உங்கள் வாழ்க்கையில் எண்ணும் பொழுதெல்லாம்
1.நிச்சயம் இந்த அருள் சக்தியை நீங்கள் பெறுகிறீர்கள்.
2.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்
3.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் நோய்கள் இருப்பதை மாற்றி அமைப்பீர்கள்.
4.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் உங்கள் கணவனிடம் சில குறைபாடுகள் இருந்தாலும் அவர்களை உயர்ந்தவர்களாக மாற்றியமைப்பீர்கள்.
5.அப்படி மாற்றக்கூடிய சக்தி இருக்கின்றது.
6.குடும்பத்தில் குறிப்பாகப் பெண்கள் உங்கள் “குழந்தை இப்படி இருக்கிறதே…” என்று எண்ணுவதற்குப் பதில் நம் குழந்தைகள் நிச்சயம் நல்லவர்களாக ஆகிவிடுவார்கள்.
7.இப்படி எண்ணி உங்கள் உணர்வை நிச்சயப்படுத்தி உறுதிப்படுத்தி அவர்கள் உயர்ந்தவர்களாக வர வேண்டும் என்று எண்ணி வாருங்கள்.

யாம் சொல்லும் “தியானம்…” என்பது இதுதான்.

இந்தத் தியானத்தில் அரும் பெரும் சக்தி கொடுப்பதை நீங்கள் பக்குவப்படுத்தி வளர்க்க முடியும். உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும். தெருவும் நன்றாக இருக்கும். ஊரும் நன்றாக இருக்கும்.

அதே மாதிரி கிராமப்புறத்தில் வாழ்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் விவசாயமும் நன்றாக இருக்கும்.

ஊரில் ஒற்றுமையற்ற நிலையில் பகைமை இருந்தால் பகைமையான உணர்வுடன் நாம் பயிரிடப்படும் பொழுது அந்தப் பயிரிலும் கெடுதல் வரும். பல பூச்சிகள் விழுகும். பல விஷத்தின் தன்மைகளாக நம்மிடமிருந்து பரவும்.

இதை இந்த மாதிரி நீங்கள் எண்ணினால் அந்த விஷ மருந்துக்கே வேலையில்லை. ஆகவே நஞ்சினை ஒடுக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வை மருந்தாகத் தெளிக்கலாம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் பார்வையில் விவசாயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்
1.“நன்றாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
2.அதிலே நல்ல அணுக்கள் விளைய வேண்டும்.
3.அருள் தாவர இனங்களாக வளர வேண்டும்.
4.அதை உணவாக உட்கொள்வோர் அனைவரும் நல்ல மகிழ்ச்சி பெற வேண்டும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் விவசாயம் நன்றாக இருக்கும்.

ஆகவே… இந்தப் பூமியில் பிறந்த நாம் அந்தத் தாயிற்கு நாம் சேவை செய்கின்றோம். அதை அசுத்தப்படுத்தாது நாம் பாதுகாத்தல் வேண்டும்.

“பூமித் தாய்” – என்று அதிலிருந்து உருவானது தாம் நாம். அந்தத் தாயை மதிக்க வேண்டும்.
1.அந்தத் தாய் வீற்றிருக்கும் இந்த இடம் சுத்தமாக இருந்தால்
2.இதில் வாழும் மக்கள் நாமும் நன்றாக இருப்போம்.

ஆறாவது அறிவைப் பயன்படுத்தி நாம் ஒளியாக மாறும் பருவத்தைத் தான் உத்தராயணம் என்றார்கள் ஞானிகள்

 

சித்திரை…! என்றால் ஒவ்வொரு நிலைகளிலும் (சந்தர்ப்பத்தால்) நம் எண்ணத்தால் வரும் பிறிதொரு தீமையின் நிலைகள் நாம் உண்மையை உணர முடியாத நிலைகள் கொண்டு மறைத்துவிடுகிறது… அதனால்தான் சித்திரை.

பங்குனி கடைசியில் உத்தராயணம் பிறக்கின்றது. “உத்தராயணம்…” என்கிற பொழுது புழுவிலிருந்து மனிதனாக வரப்படும் பொழுது
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை மாற்றியமைத்து
2.இயற்கையின் நிலைகளை மாற்றி ஒளியின் சுடராக அறிவின் தன்மையாக
3.தனக்கு வேண்டியதைத் தனக்குள் சேமிக்கும் நிலை

உத்தராயணம் வரப்படும் பொழுது தான் வெயிலின் தன்மையும் அதிகமாகிறது. இந்த பூமியில் விளைந்த உணர்வின் சத்துகள் அது எதுவானாலும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகச் சேமிக்கின்றது,

அந்தத் தருணத்தில் ஒவ்வொரு தாவர இனத்திற்கும்.. மரங்களுக்கெல்லாம் இலை உதிர் காலமாகிறது. ஆனால் செடிகளுக்கோ… வளர்ந்த நிலைகள் கொண்டு அதனுடைய சத்தைக் கவர்ந்து கொள்கின்றது

அதில் விளைந்த வித்துக்களை மறுபடியும் அந்த நேரம்… பருவம்… பார்த்து விதைக்கும் பொழுது
1.மாரிக்காலத்தில் தட்சிணாயணம் என்ற நிலைக்கு வரும் பொழுது
2.மழை நீரும் நீர் மற்ற நிலைகளும் வரும் பொழுது
3.அந்த வெப்பத்தின் தன்மை துடிப்பு கொண்டு தன் இனத்தை விருத்தி செய்கின்றது.

உத்தராயணம் தட்சிணாயணம் என்று இப்படி வரும் போது அந்தக் காலப் பருவத்தில் ஆக… மனிதனான பின் உத்தராயணம் “ஒவ்வொன்றையும் வேக வைத்து மாற்றி அமைக்கின்றோம்….!”

அதாவது மனிதனான பின் ஒரு பொருளை வேக வைத்துத் தனக்கு வேண்டியதை மாற்றி அமைத்துப் புது விதமாக நாம் சமைக்கின்றோம்… உணவாக உட்கொள்கிறோம் அல்லவா…!

உத்தராயண நேரங்களில் அந்த வெப்ப காலங்களில் தாவர இனங்களிலிருந்து கவர்ந்து கொண்ட இந்த உணர்வின் சத்து… அந்த அலைகள் அதிகமாகும் பொழுது பார்த்தால் பெரும் புயல்கள் வரும்… பெரும் அலைகளும் வரும்.

இந்தக் காற்றலைகள் எங்கிருந்து வருகின்றது…? எங்கிருந்து உருவாகின்றது…?

ஒவ்வொரு தாவரமும் தன் உணர்வின் வலுவால் வளர்ந்தாலும்… அதனின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரும் பொழுது
1.ஒரு விஷத்தன்மை கொண்ட நிலையோ
2.ஒரு உணர்வின் உந்து விசை கொண்ட உணர்வுகளையோ எடுத்து அலைகளாக வரப்படும் பொழுது
3.தாழ்ந்த உணர்வு கொண்ட சாந்தமான உணர்வு கொண்ட அலைகள் இதைக் கண்ட பின் அஞ்சி ஓடி வருகின்றது

அஞ்சி ஓடி வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் எதிர்ப்படும் நிலைகள் மோதித்தான் சுழல் காற்றுகளும்… பின் மற்றொன்றைச் சுழலச் செய்வதும்… அதன் உணர்வின் தன்மை அணுக்களின் தன்மைகளை உருமாற்றுவதும்… எல்லாம் ஒன்றாகச் சேர்த்துத் தனக்குள் கவர்ந்து கொள்ளும் போது புதுப் புது வித்தாக மாறுகின்றது.

இதைப் போன்றுதான் ஆறறிவு கொண்ட மனிதன்… “வாழ்க்கை…” என்ற சுழற்சியின் நிலைகளில் வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனையோ எதிர்மறையான உணர்வுகள் மோதி நமக்குள் புயலாக மாறுகின்றது

மாறினாலும் அந்த ஆறாவது அறிவை வைத்துப் அந்தப் புயலை அடக்க முடியும்.

எப்படி…?

1.வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கித் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம் என்றால்
3.அந்தப் புயல்களை நாம் அடக்க முடியும்.

அதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது.

நம் ஆறாவது அறிவை வைத்து ஒளியாக உருவாக்கும் நிலையை நமக்குள் எவ்வாறு வளர்ப்பது…? என்ற உண்மைகளைத் தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

புத்தர் ஞானம் பெற்ற நிலை – ஈஸ்வரபட்டர்

புத்தரை ஆண்டவனாய் வழிபடுகின்றனர். புத்தரின் நிலையென்ன…?

சித்தார்த்தராய் அரச குடும்பத்தில் அவதரித்து வாழ்ந்தவருக்கு ஒரே நாளில் துறவு நிலை கொண்ட ஞான நிலை போதி மரத்தடியில் பெற்றார். எந்த நிலையில் அவரின் நிலை இப்படி வந்தது…?

பிறவியின் ஆரம்ப நாள் தொட்டு வாழ்ந்த காலத்தில் அவரின் நிலை எல்லோரின் நிலையை ஒத்த வழியில்தான் வந்தது. ஞான நிலைக்கு அவர் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திடாமல் போதி மரத்தடியில் வந்ததின் நிலையென்ன…?

அவரின் நிலை சித்தார்த்தராய்ப் பிறவி எடுத்து அவர் அரச காலத்துடன் மட்டும் ஏற்பட்டதல்ல.

இவ்வுலகில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி பல ஜென்மங்கள் வாழ்ந்த நாட்கள் தொட்டே…
1.அந்நிலையில் அவரின் தொடர்புடைய ரிஷிகளின் நிலையிலிருந்தெல்லாம் அவர் சேமித்து வைத்து
2.அவருடனே வளர்ந்த ஜீவ சக்தி எந்தப் பிறவியிலும் செயல்படாமல்
3.அவர் கடைசியாக எடுத்த உடலில் ராஜ வம்சத்தில் பிறந்ததின் நிலையினால்
4.வளர்ந்த சூழ்நிலை வளர்ப்பின் நிலை இவற்றினால் அவரின் முன் ஜென்மத்தில் சேமித்த நற்சக்தியுடன் மோதுண்டவுடனே
5.இக்கலவையின் சக்தி கூடி அந்த ஞானி வழிதனை அவரும் வழி நடத்தி ஞானோதயம் பெற்று
6.சூட்சும உலகினில் பலருடன் கலந்து… ஆண்டவனாய் அருள் செய்திடும் அன்பு நிலையில் உள்ளார்.

இவ்வுலகினில் உதித்து… உலகுடனே ரிஷிகளாய் சப்த ரிஷிகளாய்க் கலந்தவர்களின் எண்ணக் கலவைகளின் நற்சக்திகள் அனைத்துமே ஒன்று கூடி இப்பூவுலகிற்கே பூ மழையாய்ப் பல நிலைகளைச் செய்விக்கின்றன.

ஆத்மீக நெறிதனில் ஞானியாய் சித்தனாய் ரிஷியாய் சப்த ரிஷியாய் ஓங்கி நிற்கும் அனைத்து நற்சக்திகள் கொண்ட நல் ஆத்மாக்களின் நிலையில் இன்று நீங்கள் வழிபடும் ஆலயங்களில் இருந்தெல்லாம் அவரவர்களின் எண்ண நிலைக்கேற்ப அவர்களின் சக்தி நிலை ஒன்று கூடிய ஆண்டவனாய்ச் செயல்படுகின்றது.

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று… கோயிலில்லா ஊரில் குடியிருத்தல் வேண்டாம்…!” என்றெல்லாம் உணர்த்தினர் நம் முன்னோர்.

பக்தி நிலையை வளர்க்கவும் ஆத்மீகத்தை நிலைநிறுத்தவுமே இந்நிலைகளை எல்லாம் நமக்குப் போதித்தனர்.

காட்சி:
ஒரு பெரிய யானை விபூதிப் பட்டையுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு பக்தரின் சிரசில் தும்பிக்கை வைத்து ஆசிர்வாதம் செய்கின்றது. அந்த யானையே ஒரு மகா ரிஷியாய் உருமாறிக் காட்சியளித்து ஆசிர்வதிக்கின்றார்.

மக்களின் எண்ணத்தில் அந்த யானையையே ஆண்டவனாய் வணங்கிடும் பொழுது யானையின் நிலையிலும் அந்த ரிஷிகளே வந்து வணங்கிடும் ஆத்மாக்களுக்குச் சில நிலைகளில் பக்தி கொண்டவருக்கு ஆசிர்வதிக்கின்றனர்.

காட்சி:
பாடை கட்டி நான்கு பேர் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வது போலவும்… “கோவிந்தா…!” என்ற கோவிந்த ஜெபம் செய்து கொண்டே செல்வது போலவும்… காரியம் முடிந்து வந்து கை கால் அலம்பி ஜோதியைக் காண்பது போலவும் காட்சி தெரிகிறது.

ஆண்டவனின் நிலையை உணர்த்திவிட்டு இந்நிலையின் காட்சியை “ஏன் அளித்தேன்…?” என்று எண்ண வேண்டாம்.

1.புத்தருக்கே இந்த நிலையைக் கண்ட பிறகுதான் ஞான நிலையே வந்தது.
2.எந்த நிலையையும் ஒரு நிலையாய்க் காணும் ஆத்ம ஜெபம் நமக்கு வேண்டும்.

ஆண்டவனின் அருள் ஆலய நிலையில் மட்டும் தான் கிட்டும் என்பதல்ல.

ஆலயங்களுக்குச் சென்று ஆத்ம ஜெபம் பெறும் பொழுது நம் ஆத்மா அமைதி பெறுவதற்குத் தான். வாழ்க்கையுடன் வந்து மோதிடும் பல நிலைகளில் இருந்தெல்லாம் நம் எண்ணப் பயத்தையும் எண்ணச் சோர்வையும் அந்த நிலைக்குச் சென்றிட்டால் அமைதி கொண்டு வந்திடவே நமக்கு வழிப்படுத்தி வைத்தனர் நம்மில் கலந்த ஆண்டவன்கள் எல்லாம்.

காட்சி:
ஜெகஜோதி மயமாய் ஒரு தேர் தானாக ஆடி வருவது போல் காட்சி. அந்தத் தேரே புஷ்பமாய் ஒரு மகா சப்தரிஷியால் அருள் புரிந்து ஆசிர்வதித்திடும் காட்சி தெரிகிறது.

1.காட்சியில் கண்டிடும் இந்த ரிஷியின் அரும் பெரும் சக்திகள் அனைத்துமே
2.இதைக் காண்பவருக்கும் இதை எழுதுபவருக்கும் இவற்றைப் படிக்கும் என் ஆசிகள்.

தேரில் வந்தவர் புத்தர்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து ஆராதனை செய்து யாகத்தைச் செய்தால் அந்த ஆண்டவன் காப்பாற்றுவான்.
1.நீங்கள் ஏன் கஷ்டப்படுகின்றீர்கள்…!
2.காசைச் செலவழித்தால் “ஆண்டவன் தன்னாலே வருவான்…” என்று
3.பெரும்பகுதியாவனவர்களுக்கு இப்படிப்பட்ட நம்பிக்கைதான் இருக்கின்றது

1.நாம் எண்ணக்கூடிய எண்ணங்களும் சுவாசிக்கும் உணர்வுகளும்
2.உயிருக்குள் – உயிரின் துடிப்பினால் உண்டாகும் (யாகத் தீயான) நெருப்பில் படுகிறது என்றுதான் ஞானிகள் சொன்னார்கள்
3.அந்த உயிரான நெருப்பில் அருள் உணர்வுகளைப் போடும்படி சொன்னார்கள்
4.அதை விட்டுவிடுகின்றார்கள்.

அதைச் செய்யாது இன்றைய வழக்கில் என்ன செய்கிறார்கள்…?

காசைக் கொடுத்துத் தீயை வளர்க்கின்றார்கள். அந்த நெருப்பிலே எல்லாவற்றையும் போட்டு “நெய்யை ஊற்று… பாலை ஊற்று… அந்தக் கட்டையைப் போடு… இதைப் போடு… என்று ஆண்டவனுக்கு வேண்டியதெல்லாம் போட்டால் அவன் பார்த்துக் கொள்ளட்டும்…” என்று செய்கின்றார்கள்.

நெருப்பிலே எல்லாம் கருகி புகையாகப் போகின்றது. இதெல்லாம் செய்தால் எனக்கு எல்லாம் செய்வான்…! ஆண்டவனுக்காக இதையெல்லாம் போட்டு நேராக இந்த வாசனைகளை அவனுக்கு அனுப்பினால் நமக்கு அவன் “எல்லாவற்றையும் கொடுப்பான்…” என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.

ஞானிகள் நமக்குக் காட்டிய முறைப்படி நம் உயிரான நெருப்புக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் போட்டால் அந்த உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.

அந்த உயர்ந்த உணர்வலைகளைச் சொல்லின் தன்மை கொண்டு வெளிப்படுத்தினால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
1.அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமைகள் நீங்குகிறது.
2.நம் சொல்லைக் கேட்போர் தீமையும் நீங்கும்.
3.ஆக மொத்தம் தீமையை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக அந்த உணர்வலைகளாக அங்கே படர்கின்றது.

இதற்குத்தான் ஞானிகள் சொன்னது.

புறத் தீயிட்டு அதை எழுத்தில் (புத்தகத்தில்) காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றது…? அப்படித்தான் உயிர் செய்கிறது அன்று சொல்லிக் கொடுத்தார்கள்.

உயிர் என்ன வேலை செய்கிறது…? என்று சொல்லவில்லை.

அந்த நெருப்பில் இன்னென்ன பொருளைப் போட்டால் “உள் நின்று இயக்கும் ஆண்டவன்” இப்படிச் செய்வான்…! என்று காண்பித்தார்கள். ஏனென்றால்
1.நெருப்பிலே எந்தெந்தப் பொருளைப் போட்டாலும்
2.அதைக் “கரைத்து” (கருக்கி)
3.எல்லாம்… “மணமாகத்தான் கொடுக்கின்றது”.

அதைப் போன்று தான் நம் உயிரான நெருப்பும் நாம் எண்ணத்தால் எடுக்கும் குணங்களை நமக்குள் அது உடல் முழுவதும் பரப்பிச் சொல்லாகச் செயல்பட்டு அந்த உணர்வின் தன்மையாக விளையும் என்று அன்றைக்குச் சொன்னார்கள்.

ஆக “உயிர்” என்ற நிலையை விட்டுவிட்டார்கள். “நெருப்பில் போட வேண்டும்…” என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.

நாம் எப்படி உருவானோம் என்ற உண்மையை ஆதியிலே கண்டவன் அருள்ஞானி அகஸ்தியன் இதை வெளிப்படுத்தினான்.
1.அந்த உணர்வலைகள் இன்றும் உண்டு.
2.இதைத்தான் வேதங்கள் கூறுகின்றது.

ஆனால் காலத்தால் அரசர்களால் வேதங்களை தனக்குகந்த நிலைகளாக மாற்றி பேருண்மையின் நிலைகளை மறைத்து இன்றும் அரசுப் போர்கள் நடந்து ஞானிகள் காட்டிய உணர்வின் அலைகள் மறைந்துவிட்டது.

அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த இந்த உண்மைகளை வியாசகர் நமக்குப் பிற்காலத்தில் எடுத்துரைத்தார். அதை வேதங்களாக மாற்றப்பட்டு தவறான வழிகளில் காட்டப்பட்டு தவறின் நிலையிலே “அரசர்கள்” நம்மை இயக்கிவிட்டார்கள்.

அதிலிருந்து விடுபட்டு அந்த மெய் ஞானியான அகஸ்தியனின் ஆற்றல்களையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று தான் உபதேசிக்கிறோம்.

இதை உங்கள் உடலுக்குள் பதிவாக்கிவிட்டால் உங்கள் நினைவின் ஆற்றல் அகஸ்தியன்பால் செல்லும். அகஸ்தியரின் அருள் சக்திகளைப் பெற்று தீமையில் இருந்து விடுபடும் உணர்வினை உங்களிலே வளர்த்து அருள் உணர்வை உங்களில் பெருக்கிட உதவும்.

இந்தப் பூமியில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக்கும் அந்த உணர்வுகளை நுகர்ந்து கடைசி நிலைகளில் நாம் அனைவரும் பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.

அதைத்தான் ஆலயங்களில் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவு செய்து கொண்டால் மற்ற “எதுவுமே கடினமில்லை…”

 

உதாரணமாக… பள்ளியில் பாடங்களைப் படிக்கும் போது “விஞ்ஞான அறிவு வந்த பின்…” விஞ்ஞானத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை.
1.பதிந்த நிலைகள் மீண்டும் அதைப் படித்துணரப்படும் போது மூலத்தின் கூறை அறிந்து
2.தன் வாழ்க்கைக்குப் பாட நிலைகள் கொண்டு வாழ வழி வகுக்கின்றது.

இதைப் போன்று தான் இந்த இயற்கையின் நிலைகளை மகரிஷிகள் காட்டிய உணர்வின் அடிப்படையில் அவர்கள் இட்ட காரணப் பெயரை வைத்து (சாஸ்திரங்கள்) நாம் வளர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆகவே அதை நாம் பதிவு செய்து கொண்டால் தான் மீண்டும் நினைவு கொள்ள முடியும்.

பள்ளியில் படிக்கப்படும் போது
1.முதலில் “பதிவாக்கிக் கொள்கின்றோம்…”
2.அந்தப் பதிவின் தன்மை நினைவு வரும் போது தான் படித்த நிலைகளை “உணர முடிகின்றது…”
3.உணர்ந்த நிலைகள் கொண்டு அது “செயலாக்கத்திற்கு வருகிறது…”

அதாவது… தான் படித்த நிலைகள் கொண்டு இணைத்து மற்ற நிலைகளை வைத்து ஒரு புதுப் பொருளை உருவாக்க முடிகின்றது.

ஆக… விஞ்ஞானி தான் படித்துணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு டெக்னிக்கல் (TECHNICAL) என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு இயந்திரத்தின் உறுப்புகளை உருவாக்க முடிகிறது.

மனிதன் பதிவு செய்து கொண்ட உணர்வின் இயக்கம் எதுவோ அதனின் நினைவின் இயக்கமாகத் தான் இயக்குகின்றது.

இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நீங்கள் பதிவாக்கி
2.அந்தப் பதிவான நிலைகளை இயக்கப்படும் போது இந்த மனித வாழ்க்கையில் தவறில்லாமல் செயல்பட முடியும்.

சந்தர்ப்பங்களில் நமக்குள் தவறுகள் உட்புகுந்து உருப்பெறும் சில நிலைகள்
1.தவறின் நிலையாக இயக்கச் செய்வது எது…? தவறை அடக்குவது எது…? என்ற நிலைகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.தவறு வரும் நேரங்களில் யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகளை நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அது உங்களுக்குத் தெளிவின் நிலையை ஊட்டும்.

அதனின் அடிப்படையில் கூட்டுத் தியானத்தின் மூலம் எடுக்கும் வலுக் கொண்ட சக்தியால் ஞானிகள் பால் நினைவின் ஆற்றல் நமக்குள் பெருகி தவறின் நிலைகள் நம்மை இயக்காது… அந்தத் தவறைத் தடுத்து அதைத் தவிர்த்து நமக்குள் இயக்காவண்ணம் தடுக்க முடியும்.

அத்தகைய அந்த நிலை பெறச் செய்வதற்கே இந்த உபதேச வாயிலாக ஞானிகள் உணர்வுகளை உணரும் தன்மையை “உங்களுக்குள் ஒவ்வொரு உணர்விலும் தொட்டுக் காண்பிப்பது…”

அதன் வழியில் ஒவ்வொரு உணர்வின் இயக்கத்தையும் அது எவ்வாறு இயக்குகிறது…? என்று அறிகின்றோம்.
1.அந்த உணர்வின் அறிவைக் கிளர்ந்து எழச் செய்து அந்த ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்து
2.தீமைகளை அகற்றும் மார்க்கங்களை உங்களில் இணைக்கப்படும் போது தான் இந்த உணர்வின் அறிவாற்றல் பெருகி
3.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி அதனின் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் திறன் பெறுவீர்கள்.

அவ்வாறு பெற்றவர்கள் தான் மகரிஷிகள்…. அவர்கள் பெற்ற உணர்வின் தன்மையைத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் பதிவு செய்து உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

உலக மாற்றத்தைப் பற்றிய உண்மைகளை வெளிட அச்சத்துடன் உள்ளார்கள் – ஈஸ்வரபட்டர்

 

மாறப் போகும் இக்கலியின் கால நிலைக்காக… இதை உணர்த்துகின்றேன்.

1.இக்கலியுடனும்… இக்கலிக்கு முந்தைய காலங்களிலும்
2.இப்பூமியில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி உங்களுடனே வாழ்ந்த
3.இவ்வுலகுடன் ஒன்றிய நிலை கொண்ட ரிஷிகளின் அருளாசியினால்
4.இவ்வுலகத் தன்மை மாறப் போகும் தற்போதைய காலத்தில்
5.உங்களுடன் கலந்து வாழ்ந்த எங்களின் ஆசையினால்
6.இம்மாற்றத்திலிருந்து அணுவாய்… ஆத்மாவாய்… அனைத்து அறிவும் ஆற்றலும் சக்தி கொண்ட மனித உடல் பெற்ற ஆத்மாக்களை
7.இப்பேறு பெறும் பாக்கிய நிலை அடைந்தவரை நம்முடன் அழைத்திடவே (ரிஷிகளுடன்)
8.இந்நிலையில் இப்போதனை வழியினைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

பூமியின் பூமத்திய ரேகையின் நிலையைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம். இவ்வுலக நிலை கால நிலைகேற்ப உஷ்ண நிலையும் மாறு கொள்கின்றது. காற்றும் மழையும் பனியும் குளிரும் அனைத்துமே மாறி மாறி வருகின்றன.

அது எவ்வாறு என்ற நிலையில்… இப்பூமியின் பூமத்திய ரேகையின் நிலையில் அதன் சுற்றும் தன்மையில் சூரியனின் நிலைக்கு சூரியனின் தூர விகிதப்படி இவ் இயற்கையின் நியதிகள் மாறுபட்டு வருவதாகப் பண்டைய காலம் தொட்டு இன்றளவும் உணர்ந்து வருகிறீர்கள்.

பல நாட்களுக்கு முதலிலேயே வான சாஸ்திரப்படி என்றென்று சந்திர சூரிய கிரகணங்கள் வருகின்றன என்றும் சரியாக உணர்த்துகின்றனர்.

1.இவ்வான மண்டலங்களில் சுழற்சியில் ஏற்படும் நிலைகளையெல்லாம் பல நிலைகளில் அறிந்துள்ளனர்
2.இருந்தாலும் எல்லாவற்றையும் வெளியிடும் அச்ச நிலையில் உள்ளனர்.

இப்பூமி சுழலும் தன்மையில் ஏற்படும் ஒளி (சூரியனின் ஒளிக்கதிர்கள்) சில இடங்களில் படுவதே இல்லை. என்றுமே இருண்ட பூமியாக சில இடங்கள் உள்ளன.

ஆனால் இப்பூமியின் அசைவு காலத்தில் (மாறப் போகும்) அவ்விருண்ட நிலை கொண்ட இடங்களெல்லாம் ஒளிக்குச் சிக்கிடும் இடங்களாக வந்துவிடும்.

சில இடங்களை இப்பூமியின் மாற்றத்தின்போது ஏற்படும் அசைவுக்குக் குறிப்பிடுகின்றேன்.
1.இன்று மக்கள் நிறைந்து வாழ்ந்திடும் சீனாவும் அமெரிக்காவும் இம் மாற்றத்திற்குச் சிக்கிடும் நிலையில் உள்ளன.
2.அதிக மாற்றம் கொள்ளும் நாடுகள் இவை இரண்டும்தான்…!

மற்ற நாடுகளில் மாற்றம் வந்தாலும் சில நிலைகளில் அந்நீரின் மட்டம் ஏறாமல் நிலமாக இருந்திடும்.

இவ்வுலக மாற்றத்தினால் இன்று இருண்ட நிலையில் உள்ள பூமிகள் எல்லாம் ஒளிக்கு வந்துவிடும்.
1.இன்று செயற்கையுடன் ஒன்றிய வளர்ச்சியடைந்த நாடுகள் என்று நாம் செப்பிடும்
2.பூமிகளில் சில இருண்ட நிலைக்குச் சென்றிடும்.

இம் மாறப்போகும் இப்பூமியின் தன்மையுடன் இயற்கை சக்தியும் இன்றுள்ள நிலையிலிருந்து மாறும் தன்மை படுகின்றது. சித்திரையில் உள்ள வெயிலும் மார்கழியின் குளிரும் இம்மாற்றம் கொள்ளும் இப்பூமியின் நிலையினால் மாற்றம் கொண்டு சுழலப் போகின்றது.

அனைத்து நிலைகளையும் நீங்களும் காணப் போகின்றீர்கள்…!

1.இவ்வெண்ண சக்தியின் செயலைக் கொண்டு ஜெப சக்தியை உயர்வாக்கி
2.ஜெபம் கொண்ட வாழ்க்கையை ஜெயித்தே வந்திடுங்கள்.
3.வழியின் தொடர்பினை அறிந்துள்ளீர்… இனி வருவதற்குச் சிரமம் இல்லை.

ஞானத்தின் வழியறிந்து செயல்பட்டு எல்லோரும் ஞானியாகி… அந்த வழித்தொடரினை வழிப்படுத்தியே “சப்த ரிஷிகளுடன் சங்கமித்தே சகல நிலையுடன் கலந்திடுவோம்…” என்ற ஓ…ம் என்ற நிலையினிலே மன நிலையை ஒன்றச் செய்திடுங்கள்.

இவ்வுலகம் மட்டுமல்ல… அனைத்து உலகங்களுமே நமதாக்கி அனைத்து உலங்கங்களுக்கும் சொந்தமான அவ் ஆதி சக்தியுடனே கலந்திடுவோம்… என்ற “ஒரு நிலை கொண்ட தைரியமுடன் கலந்திடுங்கள்…!”

1.எவ்வாண்டவனும் வந்து நம்மை அழைத்துச் செல்வதல்ல அந்நிலைக்கு…
2.நம்முடன் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனை (உயிரான ஈசனை) நாம் வழி நடத்திட்டால்
3.அனைத்து ரிஷிகளின் அருளைப் பெற்று… அனைத்துடனும் நாமும் கலந்திடலாம்.
4.ஒன்றிடும் பக்குவ நிலையையே அறிந்து… பக்குவப்படுத்தி வளர்ந்து கல்கியின் நிலைக்கே வந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் “நாம் எப்படியும் வாழ வேண்டும்…” என்று வேகத் துடிப்புடன் பல கோடிகளை இணைத்துப் பொருளாகச் சம்பாரித்து வைக்கின்றோம்.

சம்பாரித்து வைத்தாலும் அந்தப் பணத்தைப் பார்க்கலாம். பணம் கோடி கோடியாக இருந்தாலும் என்ன சொல்கிறார்கள்…?
1.இவ்வளவு வைத்திருக்கின்றேன்… ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கின்றான் என்று தெரியவில்லை…!
2.இந்த வேதனையைத்தான் எடுக்கின்றார்கள்.
3.இதற்கும் அதற்கும் உடலுக்கும் மனதிற்கும் சீரற்ற நிலைகள் ஆகி
4.கடைசியில் மன நிம்மதியற்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாரித்த பின்
1.இன்றைக்குப் பொய் சொல்லி “எப்படிடா தப்பிக்கலாம்…” என்று ஷேர் மார்க்கெட்டிலோ
2.மற்ற தெரியாத வகைகளிலோ கொண்டு போய் அந்தக் கோடிகளைப் போடுகிறார்கள்.

இவ்வளவும் இருந்தாலும் “மன நோய்க்கு…” மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

சொத்துக்களைக் காக்க வேண்டும் என்று சென்றாலும் இந்த மனதிற்கும் உடலுக்கும் நிம்மதி இல்லை. நிம்மதியற்ற உணர்வே நஞ்சாக மாறுகின்றது.

உடலை விட்டுச் சென்றால் இந்தக் கோடிச் சொத்து எங்கே வருகின்றது…? வருமா…!

இன்றைக்கு முதல் மந்திரியாக இருப்பவர் பிறர் மேல் பழியைத் தூக்கிப் போட்டுப் “பல கோடி நான் அவருக்குக் கொடுத்தேன்… இவருக்காக இதைச் செய்தேன்…” என்பார்.
1.இப்படி இருப்பவருக்குத் தன் நாட்டைக் காக்க வேண்டும் என்றால்
2.“நிம்மதி… எங்கிருந்து வரும்…?

நாட்டிற்கு முதல் மந்திரியாக இருக்கலாம். அதிகாரத்தின் நிலைகளில் தட்டிக் கேட்கும் நிலையும் இங்கே இருக்கலாம். ஆனால் இவருக்கு நிம்மதி ஏது…?

ஆகவே அத்தகைய நஞ்சின் தன்மை வரும் நிலையிலிருந்து தப்ப “தனி மனிதன் எதுவும் செய்ய முடியாது…”

அதற்குத்தான் ஆலயங்களிலே விநாயகரை முன்னிறுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டம் வந்தாலும் அந்த விநாயகரைப் பார்த்தவுடனே மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றச் செய்து உணர்வின் ஆற்றலை உடலுக்குள் உள் செலுத்துதல் வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் கண்டறிந்த கேட்டுணர்ந்த நம்மையறியாது வந்த நஞ்சான உணர்வுகள் நம் ஆன்மாவாக நிற்கும்.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் செலுத்தும் பொழுது உள் நின்று வரும் குழம்பின் தன்மை இந்தத் தீமைகளைப் பிளக்கச் செய்யும்.

அந்த விநாயகர் தத்துவத்தின்படி
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நம்மை நுகரச் செய்து
2.அறிந்திடும் உணர்வாக உயிர் இயக்கி அந்த உணர்வின் ஆற்றலாக
3.நாம் செயல்படும் தன்மையை உருவாக்கினார்கள் ஞானிகள்.

நாம் ஆலயங்களுக்குச் சென்று இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஆத்ம சுத்தி என்பது.

கோடிப் பணம் நம்மை ஒரு பொழுதும் காக்காது. நம் உடலையே நம்மால் காக்க முடியவில்லை என்கிற பொழுது சேர்த்து வைத்த செல்வம் நம்மைக் காக்குமா…!

அருளைச் சேர்த்தால் ஞானம் வரும். “ஞானத்தால் தான்…” செல்வத்தைக் காக்க முடியும். இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.
1.உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்று
2.கல்கி – ஒளியின் சரீரமாக
3.பறக்கும் நிலை அடைய முடியும்.

ஒலி… ஒளி… அலைவரிசையில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்

 

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்தாகிறது… அடிபடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வின் ஒலி ஒளிகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.

இன்று டி.வி.யில் படங்களை எவ்வாறு பார்க்கின்றோம்…?

இயந்திரத்தின் துணை கொண்டு ஒரு மனிதனைப் படமாகி அதை ஒலிப் பேழைகளில் பதிவு செய்கிறார்கள்… வீடியோ. அப்போது அதனுடைய படச்சுருள்களில் அந்த உருக்களை நாம் பார்க்க முடியவில்லை.

பதிவு செய்ததை மீண்டும் காந்தப் புலனறிவால் ஒரு இயந்திரத்தின் துணை கொண்டு இயக்கப்படும் போது ஒலி/ஒளிப் பேழைகளிலிருந்து அலைவரிசைகளை வெளிப்படுத்துகிறது. அதைத் தான் நம் டி.வி பெட்டி கவர்கிறது.

காந்தப் புலனறிவால் எந்த மனிதனைப் படமாக உருவாக்கப்பட்டதோ அவன் எந்த நிலையில் இருந்தானோ அதைத் திரைகளில் நாம் காணுகின்றோம்.

இதே காந்தப் புலனறிவால் தான் அதுவும் கவர்கின்றது அதனின் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது. இது விஞ்ஞானம்.

அதே போன்று தான்
1.அடிபட்ட அந்த மனிதனின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் பொழுது
2.ஒலி ஒளி என்ற நிலையில் அலைவரிசைகளில் வெளிப்படுகின்றது… சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்கின்றது.
3.அப்போது எந்த மனிதனை நாம் அங்கே உற்றுப் பார்க்கின்றோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
4.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதிலிருந்து வெளி வரும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.

அதை நமக்குள் உணர முடிகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப்புலன் மகாலட்சுமி என்றாலும் நாம் உற்றுப் பார்க்கும் ஒவ்வொன்றையும் லட்சுமி தனக்குள் கவர்ந்து விஷ்ணு என்ற தன் கணவனுடன் இணைந்து அந்த உணர்வின் சக்தியை (விபத்தான) அதே வேதனைப்படும் உணர்வின் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக.

நாம் கண்ணுற்றுத் தான் பார்த்தோம்… ஆனால் உயிர் அதனின் ஜீவ அணுவாக மாற்றுகின்றது விபத்தில் சிதைந்து போன அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் உருப்பெறப்படும் பொழுது
1.அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு வரும் போது
2.இரவிலே அவன் சிதைந்த உணர்வின் தன்மை கனவாக வருகின்றது
3.அவன் உடலைப் பார்த்திருந்தாலும் அவனின் உருவம் வராது… வேறு உருவமாகத் தெரியும்.

உடல்கள் சிதைவதையும் சிதைந்து கொண்டே இருப்பதும் போன்ற இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நம் ஆன்மாவிலிருந்து உடலுக்குள் செல்லும் போது ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி நாம் மனிதனாக உருப்பெற்ற நிலைகள் மறைந்துவிடுகிறது.

அச்சுறுத்தும் நிலைகளும் அஞ்சிடும் நிலைகளும் நமக்குள் வலுப் பெற்ற நிலைகளாக உருப்பெற்று அந்த அணுவின் தன்மை நமக்குள் பரப்பத் தொடங்குகிறது.

அந்த மனிதன் விபத்தில் அவன் எப்படிச் சிதைந்தானோ அதிலே உருவான அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் போது நம் உடல்கள் சிதைந்து விடுகிறது.

எந்த எலும்பு அவனுக்குள் ஒடிந்ததோ அதிலிருந்து வந்த உணர்வின் அலைகளை நமக்குள் இருக்கும் காந்தப் புலனறிவுகள் நுகர்ந்த பின்
1.அதாவது முறிந்த எலும்பின் உணர்வுகள் நம் எலும்புகளில் இது பட்டுவிட்டால்
2.நம் உடலில் எலும்பை உருவாக்கும் அந்த அணுவின் மலங்கள் அது குறையத் தொடங்கிவிடும்.
3.பின் எலும்புகளிலே சிதைவின் தன்மை ஆகி அடுத்து ஏதாவது பட்டால் உடனே சடக் என்று முறிந்துவிடும்…. ஆக மாவு போல் ஆகும்.

ஆகவே அங்கே எலும்புகள் நொறுங்கியது… நொறுங்கிய உணர்வின் தன்மை வெளி வந்தது.
1.அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை இங்கே கவர்ந்தது நமது கண்.
2.இந்த உணர்வின் தன்மை ஓ என்று நமக்குள் ஜீவனாகின்றது… ஜீவ அணுவாகச் சிவமாகின்றது (உடலாகிறது)

சிவத்திற்குள் அணுவின் தன்மை ஆன பின்… அது தன் உணர்வினை ஏங்கிப் பெற்று நொறுங்கிய உணர்வின் மலத்தை நமக்குள் விடும் போது நம் எலும்புகளைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

இது போன்ற நிலைகளிலிருந்து விடுபட
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழிப்படி,
2.அந்த மெய்ஞானியரின் அருள் ஒளியை நமக்குள் கூட்டி
3.இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும்.

நாம் இரவில் படுத்து உறங்கும் பொழுது
1.அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
2.நம்மைத் தாக்கும் தீமைகளிலிருந்து
3.நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

“நான்…” செய்வது தான் சரி…! என்ற எண்ணத்துடன் இருந்தால் வளர்ச்சியே இருக்காது – ஈஸ்வரபட்டர்

 

கேள்வி:
எண்ணத்தில் தூய்மையும் நற்செயலுடனும் இருக்கும் ஒருவருக்குத் தியானம் அவசியமா…?

மற்றவரை நோக வைக்கும் எண்ணமோ செயலோ இல்லை. தான் செய்யும் காரியமும் எண்ணமும் சரியானதாகவும் இருப்பதாக இருக்கின்றது. தான் செய்வது சரியா…? நியாயமா…? என்பது தெரியவில்லை.

1.எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.
2.ஆனால் மற்றவர்கள் அதை ஏற்பது இல்லை…!

என் நினைவிலும் செயலிலும் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

பதில்:
எண்ணமுடனும் உணர்வுடனும் நல் நிலை பெற்றிருந்தாலும் பக்தி என்ற அன்பு நிலையை வளரவிடாமல் “நான்…” என்ற நிலைப்படுகின்றது இந்த வினாவின் நிலை.

கேள்வி கேட்டவர்:
அது சரியா… தவறா..! என்பது தெரியவில்லை. “நான்…” என்று எனக்கு உணரும் நிலை எனக்கு நன்றாகத் தெரிகின்றது.

பதில்:
உணர்வுடனே… “தன் நிலையை நல் நிலை என்றுணர்ந்து.. நான்…!” என்ற உணர்வையும் கலக்கிவிட்டதினால் வந்த நிலை உன் நிலை.

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இவ்வியற்கையின் சக்தியில் எவையுமே இல்லை
2.இந்த நிலையில் தன் உணர்வை நல்லொழுக்கப்படுத்தி அவ்வொழுக்க நிலைக்கே அடிமைப்பட்டு
3.அந்த நிலையையே தெய்வமாக்கித் தன் உணர்வுடன் நானாக இருந்து என்னம்மா பயன்…?

அனைத்து நிலைகளை அறிந்த சப்தரிஷிகளுமே தனித்த நிலையில் இயங்குவதில்லை. உணர்வுடன் உணர்வை ஒன்றச் செய்து தான் செயலாக்குகின்றார்கள்.

1.நீ அமைத்துக் கொண்ட இந்நிலையிலிருந்து விடுபட்டால் தான்
2.உன் உணர்வுடன் சேமித்துள்ள நற்சக்திகள் செயல் கொண்டிட முடியும்.

நல் எண்ணமும் அவ்வெண்ணமுடன் கூடிய உணர்வினால் நம் பார்வையின் சக்தியும்… நாம் செப்பிடும் சொல் அழகும்… அன்பான ஆசை வாழ்க்கை நிலையும் தான் ஜெப வாழ்க்கையம்மா.

“ஜெபம் என்பதுவே வாழ்க்கையுடன் ஒன்றிட்ட நல் உணர்வைப் பெற்றதுவே…”

எண்ண நிலையை ஒரு நிலை கொண்டு உண்மையுடனும் அன்புடனும் அன்பாசையுடனும் உள்ளவர்களுக்குத் தெய்வ நிலை கிட்டும். தெய்வம் என்பதுவே இந்த நிலை பெற்றோரைத்தான்.

1.ஆதிசக்தியின் இயற்கை சக்திகள்தான் அனைத்து சக்திகளும்.
2.நம்மையே நாம் இவ் இயற்கையுடன் தெய்வமாகக் கலக்கவிட்டு வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இப்பேராசைக்கும் வெறி உணர்வுகளுக்கும் மற்றத் தீய சக்திகளின் உணர்வுகளுக்கும் நாம் அடிமையாகாமால் வாழ்வதற்கே “நல் ஜெபம் எடுத்திடுங்கள்…” என்று மீண்டும் மீண்டும் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் சென்ற அவர்களின் வழிப்பாதைகளில் செல்ல வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அப்போது அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க எமது குருநாதர் பல முறைகளில் அவர் கண்டுணர்ந்த உணர்வை அவர் எனக்குள் பதிவு செய்துள்ளார்.

அவர் உடலுக்குள் விளைய வைத்த ஆற்றல்களை எண்ணத்தின் செயலாகச் சொல்லுகின்றார்.
1.அதை உற்று நோக்கும் போது அந்த உணர்வின் சத்து
2.அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப்புலன் ஈர்த்தாலும்
3.அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

ஊழ்வினை என்றால் “வித்து” என்று பொருள். அதாவது ஒரு மரத்தின் சத்து தனக்குள் விளைந்து அதனின் வித்தாகும் போது அதை ஒரு நிலத்தில் நாம் பதியச் செய்கின்றோம்.

அப்பொழுது அந்த மரம் எந்த உணர்வின் சத்தை வித்தாக எடுத்ததோ அந்த வித்து அதே உணர்வின் இயக்கமாக பூமியின் துணை கொண்டு நம் முன் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் சத்தை உணவாக எடுத்து வளரும்.

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து வெளிப்படும் கசப்பின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கின்றது. அது இங்கே உண்டு.

அந்த வேப்ப மரத்தில் ஒரு வித்து உருவாகின்றது என்றால் அதை நாம் மண்ணிலே ஊன்றுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அப்பொழுது அது காற்றிலே பரவிப் படர்ந்திருக்கும்
2.தன் தாய் மரத்தின் உணர்வின் சத்துகளைக் காந்தப் புலன் கவர்ந்திருந்தால்
3.புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அதைக் கவர்ந்து
4.தன் உணவாக எடுத்து அந்த உணர்வின் சத்தாக விளைந்து “வேப்ப மரமாகும்”.
5.அதன் உணர்வின் “வித்தாக” மீண்டும் விளைகின்றது.

இப்பொழுது சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…?

இதைப் போலத்தான் குருநாதர் அவர் விளைய வைத்த உணர்வின் சத்தை எனக்குள் உபதேசித்தார்.

என் செவிப் புலனறிவால் நான் கேட்டறியும்போது அவர் உணர்வின் உணர்ச்சிகள் எனக்குள் உந்தப்பட்டு அந்த உணர்வின் ஆற்றலை
1.நான் நினைவு கொண்டு “கூர்ந்து…” எண்ணும் போது
2.”அதைக் கவரும் நிலை” ஏற்படுகின்றது.
3.கவர்ந்த உணர்வுகள் என் நினைவுகளுடன் இணைக்கப்பட்டு
4.கருவின் தன்மையாக ஊழ்வினையாக ஒரு “ஞான வித்தாக” எனக்குள் பதிவாகின்றது.

அவர் உபதேசித்த உணர்வின் தன்மை கூர்மையாகக் கவனித்த பின் அதனின் நிலைகள் எனக்குள் பதிவாகி அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன்.

அவர் உடலிலே விளைந்த தீமைகளைக் கண்டறிந்து அதனின் உண்மையின் பொருளைக் கண்டுணர்ந்து மெய்யுணர்வை அவர் தனக்குள் வளர்த்த உணர்வுகளை என்னால் பெற முடிந்தது.

நமது குருநாதர் அவர் தீமைகளை அகற்றி மெய்யுணர்வைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கின்றார்,

ஒரு வித்து எவ்வாறு தனக்குள் சுவாசித்து தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அதே மரமாக விளைகின்றதோ இதைப் போல குருநாதர் உடலில் விளைந்த
1.அந்த மெய்ஞானியின் மெய்யுணர்வின் ஆற்றல்
2.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்று ஒளியின் சரீரமாக இருக்கும் அந்த உணர்வின் ஆற்றல்
3.நமக்கு முன் பரவி உள்ளது… அதைக் கவர்வதற்கே இந்த உபதேசம்.

ஒரு வித்து தாய் மரத்தின் சத்தைக் கவருவது போல் மெய் ஞானிகள் விளைவித்த மெய் ஞான உணர்வுகளை நாம் பெற வேண்டும்

இதைப் படித்துப் பதிவாக்கும் அனைவரும் மெய் வழி நடந்து மெய் ஞானம் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து “என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்” என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் பிரார்த்திக்கின்றேன்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

 

நாம் யாரும் தவறு செய்யவில்லை. பிறருக்கு நாம் பல நன்மைகளைச் செய்து இருக்கின்றோம். ஆனால் நாம் நன்மை செய்த நிலைகள்…
1.அந்த உதவி செய்த நன்றிக்காக நண்பன் உடலை விட்டுப் பிரியும் போது
2.நம் மேல் பற்று கொண்டு அந்த ஆன்மா பிரிந்து விட்டால்
3.அந்த ஆன்மா நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் வந்துவிடும்.

நண்பனை நாம் உடலுடன் எப்படிப் பார்த்து உதவி செய்தோமோ அதே போல் நமக்குள் வந்தாலும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் என் உடலில் உள்ள அந்த ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.இந்த நண்பன் நம்முடன் ஒன்றி வந்தாலும்
2.அந்த நண்பனிடத்தில் விளைந்த தீய வினைகள் நம்மிடத்தில் விளையாது நம்மையும் காக்கலாம்
3.அந்த நண்பனின் உயிர் ஆன்மாவையும் பிறவியில்லா நிலை அடையச் செய்யலாம்.

அதாவது உங்களின் நிலையிலிருந்தே அந்த ஆன்மாவை உயர்ந்த நிலை பெறச் செய்ய முடியும்

ஒவ்வொரு நாளும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

அந்த இன்னொரு உடலில் தான் வாழும் போது குடும்பத்தில் சங்கடத்தினாலோ வெறுப்பாலோ வேதனையாலோ உருவான உணர்வுகள் அங்கே எப்படி நோயாக விளைந்ததோ… அந்த உடலை வீழ்த்தியதோ… அதே சமயத்தில் “உதவி செய்தான் நண்பன்…!” என்ற எண்ணத்துடன் பற்று கொண்ட நிலையில் அந்த ஆன்மா நம்முள் வந்தாலும் அதைப் போன்ற தீமைகளை அகற்ற சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ண வேண்டும்.

அவ்வாறு பல முறை செய்யச் செய்ய நம் உடலில் இருக்கக்கூடிய நண்பருடைய உயிரான்மா நமக்குத் தீமை விளைவிக்காது அதற்கும் அந்த நன்மைகளைப் பெறச் செய்கின்றது,

ஆகவே பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தாலும் அந்தக் கஷ்டத்தை உருவாக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளையாது தடுக்க…
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பத்திரிக்கை வாயிலாகப் படித்துணர்ந்த நிலையில்
4.அது நமக்குள் தீமை விளைவிக்கும் வித்தாக விளைந்திடாது தடுக்கவும் நம்மைக் காத்திடவும் முடியும்.

ஆகவே மேல் அழுக்கைப் போக்க நீரை ஊற்றி எப்படிக் குளிக்கின்றோமோ… தங்கத்தில் செம்பும் வெள்ளியும் சேர்ந்து விட்டால் திரவகத்தை ஊற்றி எப்படிச் சுத்தப்படுத்துகின்றோமோ… கைகளில் அழுக்குப்பட்டால் சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்துவது போன்று
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நம் உடலுக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீவினைகளை அகற்றி
2.நன்றியின் உணர்வாக எண்ணி… நம்முள் வந்த ஆன்மாக்களுக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைச் செலுத்தி
3.நமக்குள் தீமையாக விளைவிக்காத அதைத் தடுத்து
4.சப்தரிஷி மண்டலத்துடன் அவர்களை இணையும் நிலையைச் செய்வதே நல்லது.

நாம் அனைவரும் உலகிற்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்ட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

1.இயற்கை உணர்வுடனே கலந்திட்ட நல் நிலை பெற்றோரின் எண்ணச் சக்திக்கு
2.இவ்வெண்ணத்துடன் கலந்திட்ட இயற்கை சக்தியும் உறுதுணையாக நிற்கும்

இயற்கையின் தன்மையில் ஒரே நிலை இருப்பதில்லை.

காற்றும் மழையும் குளிரும் உஷ்ணமும் கால நிலைக்கேற்ப மாறிக் கொண்டு வருகின்றன. இயற்கை அனைவருக்கும் பொதுவான சக்தி தான்.

அச்சக்தியின் அருளைச் சாதக நிலைப்படுத்தி எண்ணத்தில் உயர்வு கொண்டோரின் நிலையின் ஜெபத்திற்கு அவர் எண்ண ஜெபத்தின் நிலைக்கு இயற்கையும் ஒத்துழைக்கும்.

எண்ணத்தில் ஏற்றுவித்த இந்நல் சக்தியின் நிலை கொண்டு இயற்கையின் சீற்றத்தையும் நாம் கட்டுப்படுத்திடலாம்.

1.நம் எண்ணமே அத்தெய்வ சக்தியை ஈர்த்து ஜெப நிலையில் உள்ள பொழுது…
2.இவ் இயற்கையில் கலந்திட்ட பல நிலை கொண்ட அமில சக்தியை நம் எண்ணத்தின் சக்தியைக் கொண்டு திசை திருப்பிடவும்…
3.ஜெபப்படுத்தி அவ் இயற்கையின் சக்தியையே நம் எண்ண நிலைக்கொப்ப நிலைப்படுத்திடலாம்.

ஆனால் எண்ணத்தில் கறையுண்டோருக்கு இயற்கையும் ஒத்துழைப்பதில்லை.

இன்றைய மனித ஆத்மாக்கள் தன் நிலை உணர்ந்திடாமல்… தான் பிறவி எடுத்து வாழ்ந்த நிலையையும் மடியும் நிலையையும் எண்ணத்தில் கொண்டு
1.இவ் இடை கொண்ட வாழ் நாட்களில் இருந்தென்ன பயன்…? என்றும்
2.இவ்வுடலுடன் நாம் இருந்து அடையும் நன்மை என்ன…? என்றும்
3.இயற்கை எய்திடும் (இறப்பு) நாம் இவ்வாழ்க்கையில் சிக்கி மனக் கலக்கப்பட்டு வாழ்ந்து என்ன பயன்…? என்றும்
4.எண்ணும் எண்ணத்தில்தான் பல ஆத்மாக்கள் உள்ளன.

எண்ணத்திலேயே தன் நிலையை வினாவாக்கி வாழ்பவருக்கு… இவ்வுடலுடன் மட்டுமல்ல… இவ்வுடலை விட்டுச் சென்றிட்ட ஆத்ம நிலையிலும் “இவ்வினா நிலைதான்…” சுற்றிக் கொண்டே இருக்கும்.

இயற்கையின் சக்தியில் இயற்கையே அளித்திட்ட இயற்கையுடன் ஒன்றிய நம் உயிராத்மாவை இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நாட்களிலும் சரி… ஆத்மா பிரிந்து ஆவியுடன் சுற்றிக்கொண்டுள்ள நிலையிலும் சரி… இவ் இயற்கையுடன் ஒன்றியே தான் உயிரணு உதித்த நாள் முதற் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையும் அமில சக்தியும் நம் எண்ண சக்தியுடன் என்றென்றும் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.

இப்பிறவிக்கு நம் எண்ணம் கொண்டுதான் வருகின்றோம்… ஈன்றவரின் நிலையினால் மட்டுமல்ல…!

நாம் பிறவி எடுத்த நற்பயனையே நற்சக்தியாக்கி… இவ்வுலகுடன் ஒன்றியே நம் உயிராத்மாவும் தொடர்பு கொண்டு… நம் பிறவிப் பயனைப் பெற்று…
1.நாம் பிறந்திட்ட உண்மை சக்தியினை இவ்வுலகில் நிலை நிறுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.
2.அகஸ்தியனைப் போன்றும் போகனைப் போன்றும் கொங்கணவரைப் போன்றும் ஒவ்வொரு நிலையிலும் நல் உணர்வு கொண்டு
3.நம்முடன் நம்மை வழி நடத்திச் செயல் கொண்டு செயலாக்கிடும் பல ரிஷிகளின் நிலை பெற்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இயற்கையின் சக்தி அனைத்திற்கும் பொது சக்தி. அச்சக்தியின் நல் உணர்வை ஈர்த்து நம் ஆத்மாவை நிலைப்படுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வராகன் பல கோடிச் சரீரங்கள் எடுத்துக் கூர்மையாகப் பார்த்துத் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்று நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்தது. அடுத்து மனிதனாக உருவானது.

ஆனால் காற்று மண்டலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத் தன்மைகள் இன்று ஏராளமாக வருகின்றது.

அதனால் நம் உடலில் இரத்தநாளங்களில் பல விஷத் தன்மைகள் கிருமிகள் உருவாகின்றது. பல விதமான புதுப் புது நோய்களும் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வலுவாக எடுத்துச் சுவாசித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஏனென்றால் உலக யுத்தம் என்ற நிலை வரும்போது அணுகுண்டை வெடித்து இரு மடங்கு மின் உற்பத்தியாகும் நிலை ஏற்படும்.

அந்த அணுக்கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் மோதி எல்லாக் கோள்களும் அதை எடுத்து அது உமிழ்த்தும் போது
1.சூரியன் அருகிலே போனதும் மோதி
2.இரு மடங்கு காந்தத்தை உற்பத்தி செய்யப் போகின்றது.
3.அந்த மாதிரி இயக்கச் சக்தி வரும் பொழுது நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்.
4.உடலில் உள்ள அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.

நம் உணர்வின் தன்மை மடிந்து போகும் நேரத்திலே நாம் நம்மைக் காக்க வேண்டும் என்றால் அந்த அகஸ்தியனின் உணர்வை எடுத்தே ஆக வேண்டும்.

ஆகவே எப்படி வராகன் தீமையைப் பிளந்ததோ அந்த அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து விஷத் தன்மைகள் நமக்குள் வராது பிளந்து பழக வேண்டும்.
1.யாம் சொல்வது லேசாகத் தான் தெரியும்
2.இதை நீங்கள் கண்டுபிடித்து அர்த்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் உங்களுக்கு ஆயுள் பத்தாது.

ஏனென்றால் குருநாதர் அந்த அருள் சக்தியின் உணர்வுகள் கொண்டு அகஸ்தியன் உணர்வைக் கவரும்படி செய்தார்.

பாக மண்டலத்தில் அகஸ்தியன் அமர்ந்த இடத்தில் என்னையும் இருக்கச் செய்தார் குருநாதர். அங்கே மேலே தண்ணீர் இருக்கும். ஆனால் கீழே அடிவாரத்தில் நீர் கிடையாது. மேலே ஊற்றுகள் உண்டு.

ஏனென்றால் அங்கே மேகங்கள் கூடி வருவதை நுகர்ந்து அதை நீராக மாற்றுகின்றது. அதனால் தான் அகஸ்தியனுக்கு நீர் சக்தி வருகின்றது. நீர் சக்தி வருவதனால் ஜீவ சக்தியை அவனால் பெற முடிந்தது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது…? அகண்ட அண்டம் ஆதியிலே எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகளை அங்கே அமர்ந்து தியானிக்கும்போது அறிய முடிந்தது. குரு அருளால் அதைக் கண்டுணர முடிந்தது.
1.அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்த உணர்வின் அறிவு தான்
2.எனக்குள்ளும் புகுந்து இத்தகைய நிலைகளை எல்லாம் அறிய முடிந்தது.

இதைப் போல நீங்களும் அறிந்து தீமைகளைப் பிளந்து அந்த “அகஸ்தியனின் அருள் ஒளிகளை” உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

அதற்காகத்தான் நான் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்வது. அகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” அகண்ட அண்டத்தையும் அறிந்தான். அந்த அறிவின் ஆற்றலை நாமும் பெறுவோம்.

அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் பரவுவது போல் மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பரவச் செய்யுங்கள்

 

இன்று பெரும்பகுதியானவர்கள் என்ன நினைக்கின்றார்கள்…? சாமி (ஞானகுரு) வந்தார்… ஆசீர்வாதம் கேட்டேன்…! என்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னார்…! அவர் தான் காப்பாற்ற வேண்டும்… என்று சாமியைத் தான் எண்ணுகின்றார்கள்.

உங்கள் கஷ்டம் எல்லாம் நீங்கிவிடும் என்று யாம் வாக்கைக் கொடுத்தால் அதை யாரும் பிடித்துக் கொள்வதில்லை…!
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெறுவீர்கள்
2.உங்கள் உடலில் உள்ள நோய்களை அது பிளந்துவிடும்
3.நல்லது நடக்கும்… அதை நீங்கள் பெறுங்கள்…! என்று தான் இங்கே உபதேசிக்கின்றோம்.

ஆனால் அதை யாரும் எண்ணுவதில்லை.

விபூதி வேண்டும்… பிரசாதம் வேண்டும்… சாமி காப்பாற்றி விடுவார் என்ற இந்த எண்ணம்தான் வருகின்றது.
1.சாமி சொன்ன வழியினைப் பின்பற்றினால் அந்த எண்ணம் நம்மைக் காப்பாற்றும் என்பது நினைவுக்கு வருவதில்லை
2.சாமி சொன்னதைப் பதிவு செய்து இந்த காற்றிலிருக்கும் நல்லதை எடுத்தால் நான் நல்லவனாவேன்… என்ற எண்ணமும் வருவதில்லை.

காரணம்… எதைக் குறிக்கோளாக வைத்து எடுக்கிறோமோ அது தான் நடக்கும்.

சாமி ஆசிர்வாதம் கொடுத்தார் என்று சிறிது நாளைக்குப் பார்ப்பார்கள்… பின் அடுத்து ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் “என்ன இந்தச் சாமி…?” என்று எண்ணிச் சென்று விடுகின்றார்கள்.

பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டாலே அது நம் நல்ல உணர்வை மறைத்து விடுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் இப்படித் தன்னை மறைக்கும் நிலை வந்தால் அது சித்திரை.

அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி இதைப் பிளத்தல் வேண்டும். ஞானகுரு காட்டிய வழியில் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைப் பெறுவேன் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து ஒருக்கிணைந்து அதை வெடிக்கச் செய்கின்றனர். கல்லுக்குள்ளும் உலோகத்திற்குள்ளும் அணுக் கதிரியக்கம் இருக்கின்றது.

அணு ஆயுதங்களை வெடித்து அதைப் பிளக்கப்படும் பொழுது தன் இனத்தை அது சேர்த்துச் சேர்த்து ஒரு நொடிக்குள் இரும்பாக இருந்தாலும் இரும்பே உருகிக் காணாமல் போய்விடுகின்றது… கல்லாக இருந்தாலும் உருகிக் காணாமல் போய் விடுகின்றது… அதே கதிரியக்கம் தான்.

இதைப் போன்றுதான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை சிறுகச்சிறுக நமக்குள் சேர்த்து அதை நமக்குள் சேமிக்க வேண்டும் (அதுவும் கதிரியக்கச் சக்தி தான்)
2.அதை வளர்த்த பின்… நம் எண்ணத்தால் உணர்வால் எடுத்து வளர்த்த இந்த மனித உடலை… “உடல் பெறும் உணர்வை…” இது காணாது செய்துவிடும்
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நம் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும்.

ஆகவே… அந்த மகரிஷிகள் எதைப் பெற்றார்களோ அந்த வழியினைப் பெறும் நிலைகளுக்கே காரணப் பெயர் வைத்து கருத்தினைக் காட்டி “அதுவே தன்னை வாழ வைக்கும்…” என்று காவியங்கள் மூலம் நமக்குக் காட்டினார்கள்.

அதன் முறைப்படி நம் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்கி உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நம் நினைவாற்றல் சென்று… “அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல…” என்ற நிலையை அடைய வேண்டும்.

அணுகுண்டுகளை வெடித்த பின் மற்றதைப் பொசுக்கி விட்டு அந்த அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் எப்படிப் பரவுகின்றதோ அதைப் போன்று
1.மெய் ஞானிகளின் அருள் உங்களுக்குள் பரவி இருள் சூழும் அந்த நஞ்சினைப் பிளந்துவிட்டு
2.உலகைக் காத்திடும் சக்தியாக உங்கள் நினைவாற்றல்கள் பெருகி
3.உலக இருளைப் போக்கி… மெய்ப் பொருளுடன் ஒன்றி… மெய் ஞானிகளுடன் ஒன்றி… என்றும் பேரானந்தப் பெரு வாழ்வு நீங்கள் பெற்றிட
4.சர்வ மகரிஷிகளின் அருள் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

மனிதன் உயர்ந்த நிலை பெற ஞானிகள் காட்டிய மிக மிக எளிதான வழி – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகில் உதித்திட்ட அனைத்து உயிராத்மாக்களும் உயிரணுக்களும் அனைத்துமே தெய்வம் தான்.

1.தெய்வம் என்று அன்பு கொண்டு நாம் காணும் சிறு துரும்பும்
2.நாம் தெய்வம் என்று எண்ணும் நிலையிலேயே
3.நம் உயிராத்மாவும் அத்தெய்வ சக்தியைப் பெறுகின்றது.

கல்லையும் மண்ணையும் ரூபப்படுத்தித் தெய்வமாக வணங்குவதெல்லாம்
1.நம் ஆத்மாவையே அத் தெய்வ நிலையில் அன்பு கொண்டு வணங்கிடுங்கால்
2.அச்சக்தியின் திறன் நம் ஆத்மாவிற்கே பதிவு கொள்கின்றது.

உருவ வழிபாடெல்லாம்.. குண நிலையை உணர்த்திட நம் முன்னோர்கள் வழி நடத்திட்ட நல் வழி முறைகள் தாம்.

இம்மனித எண்ணங்களில் வாழ்க்கையுடன் கூடிய பல நிலைகள் கொண்ட எண்ணக் கலவையிலிருந்து
1.ஆண்டவனைப் பக்தி கொண்டு பூஜிக்கும் நிலை ஏற்படும் பொழுதே
2.ஒவ்வோர் ஆத்மாவும் அமைதி கொள்கின்றது.

பாட நிலையில் இந்நிலைகள் அனைத்திற்கும் எல்லா நிலைகளையும் புரியும்படி விளக்கியுள்ளோம். வழிப்படுத்தும் முறைக்காகத்தான் இப்பக்தி நிலை.

நாம் வாழ்ந்த… வாழும் இந்த நாட்டில் உள்ள பக்தி நிலையின் தொடர்பினால்தான் இங்குள்ள மக்களின் எண்ணத்தில் அன்பு நிலையும் சில இடங்களில் ஆத்மீக நெறி முறையும் உள்ளன.

ஆனால் இப்பூமியிலேயே மற்ற மேலை நாடுகளில் உள்ள நிலையினை அறிந்திருக்கலாம் எப்படி இருக்கிறது என்று…!

ஏனென்றால் அவரவர்கள் தான் அமைத்துள்ள வழியில்… வந்த தம் தம் தொடர்புப்படி பெற்ற… எண்ணக் கலவையின் வழித்தொடரிலேயே இன்றளவும் எண்ண நிலையுள்ளது.

ஆனால் மனித எண்ணத்தில் அனைத்து நிலைகளையும் அறியும் சக்தித் திறனுண்டு. அதை நல் நிலைப்படுத்தி… எடுத்த பிறவியின் பலனை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் என்பதற்கே இந்தப் போதனைகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்…?

திடீரென்று ஒரு சுழிக் காற்று வருகின்றது. எதிர்பாராது ஒரு விஷத் தன்மையை நுகர்ந்து விடுகின்றோம் சிறு மூளை பாகம் சென்று விடுகின்றது. நமக்குள் இரத்தத்தை வடிகட்டும் அந்த உணர்வின் உறுப்புகளை நிறுத்திவிடுகின்றது.

அல்லது அந்தச் சுவாசப் பையிலே இத்தகைய இயக்கச் சக்திகள் வந்தால் ஹார்ட் அட்டாக் (HEART ATTACK). ஹார்ட் அட்டாக்கிலே பல விதம் உண்டு.

உறுப்புகளை இயக்கும் அந்தச் சிறு மூளை பாகம் தாக்கிவிட்டால் இந்த உறுப்புகள் அப்படியே நின்றுவிடும்.

ஒரு வாத நோய் வந்தால் கை கால்கள் மற்றும் அங்கங்கள் ஒரு பக்கம் எப்படிச் செயலிழந்துவிடுகின்றதோ இதைப் போல
1.நுண்ணிய அலைகளை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த சிறு மூளைப் பாகங்களில்
2.அந்த உணர்ச்சியைத் தடைப்படுத்தி அதை இயக்காது தடைப்படுத்தி விட்டால் ஹார்ட் அட்டாக்…!

டாக்டரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.

இருதயத்தில் மூன்று வால்வுகளில் இருக்கக்கூடிய நிலைகளில் அதில் அடைப்படும் பொழுது வலி வந்து வந்து செல்லும்.

ஆனால் ஹார்ட் அட்டாக் என்பது…
1.உணர்வின் தன்மை எடுத்தவுடன் இயக்கவில்லை என்றால் விரிந்ததைச் சுருக்காது.. அதே மாதிரி சுருங்குவது விரியாது.
2.அதற்கப்புறம் விரிய முடியாது போய்விட்டால் மூச்சு இழுக்கும் சக்தி வராது… மடிந்துவிடுவார்கள்.

இது வேறு. ஹார்ட் அட்டாக் இத்தனை விதமான நிலைகளில் வருகின்றது.

வால்வின் தன்மை அடைக்கப்படும் பொழுது இரத்த நாளங்களில் சுருக்கி மற்ற உறுப்புகளுக்குள் செல்லும் இரத்தங்கள் அது செல்லாது அடைபட்டால் இது விரிவடையும்.

அப்பொழுது வலியும் அதனால் வேதனையும் வரும்.
1.விரிவடையும் பொழுது போகும் பாகம் வாய்வின் தன்மை அதிகரித்து வெப்பத்தின் தன்மை கூடுகின்றது.
2.வாயுவின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது அப்படியே மூச்சுத் திணறலாகி இறக்கும் தன்மை வந்துவிடும்.

இரத்தத்தில் கொஞ்ச நாள் ஆகிவிட்டதென்றால் துடிப்பின் தன்மையாகி இரத்தத்தின் தன்மை ஆவியாக மாறும். அந்த ஆவியின் தன்மை ஆனபின் மற்ற பாகம் நிற்காது. இதைப் போல இதனின் உணர்வுகள் இப்படிப் பலவிதமான நிலைகளில் இருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அடிக்கடி அடிக்கடி எடுத்து நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துப் பழகுதல் வேண்டும்.

தியானம் செய்து கொண்டிருக்கின்றேன் திடீரென்று வந்தது என்றால் உடலை விட்டுப் போவது அல்ல. இந்த விஞ்ஞான விஷத்தின் தன்மையால் கதிரியக்கங்கள் பரவினால் அது நமக்குள் புகாத வண்ணம் பாதுகாத்துப் பழக வேண்டும்.

உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா தியானிக்கின்றேன் (ஞானகுரு).

1.உங்களுக்குள் அருள் ஒளி படர வேண்டும் அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று தியானிக்கும் பொழுது
2.அந்த நேரத்தில் நீங்கள் எண்ணி எடுத்தால் எளிதில் நீங்கள் பெற முடியும்.

ஏனென்றால் யாம் தியானிக்கும் பொழுது நீங்களும் எடுத்தீர்கள் என்றால் உங்களுக்கும் அந்தத் தொடர்பு கிடைத்து அந்த நினைவைக் கொண்டு வந்தீர்கள் என்றால் உங்கள் வளர்ச்சிக்கு அது உதவும்.

காலம் குறுகியதாக இருப்பதால் குருநாதர் காட்டிய அருள் வழியில் அமைதிப்படுத்தி எல்லோருக்கும் அந்த அருள் ஒளி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

சாமி காப்பாற்றும் சாமியார் காப்பாற்றுவார் மந்திரம் காப்பாற்றும் யந்திரம் காப்பாற்றும் ஜோதிடம் காப்பாற்றும் என்றால் ஒன்றும் காப்பாற்றாது.

பூமியின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது…?

 

விஞ்ஞான அறிவால் இன்றைய மனிதன் தன் அறிவைக் கொண்டு மற்ற எதிரி நாடுகளில் எத்தகைய தீங்கான நிலைகள் உருவாக்க வேண்டும் என்று எண்ணத்தால் எண்ணினோ
1.அதற்குண்டான ஆயுதங்களை (அணு, இரசாயண, கிருமிகளை) உருவாக்கியதால்
2.அந்த உணர்வின் அலைகளை எல்லாம் சூரியனுடைய காந்தசக்தி கவர்ந்து இந்தப் பூமியிலே பரமாத்மாவாகப் படரச் செய்துள்ளது.
3.அந்த விஷக்கதிரியக்கங்கள் பூமி ஈர்ப்பின் நடு மையம் அடையப்படும் பொழுது பூமியில் கொதிகலனாக மாறுகின்றது.

கொதிகலனை அதிகமாக உருவாக்கினாலும் அதனின் விளைவுகளை அவர்கள் யாரும் அறியவில்லை. காரணம்… மனிதன் தன் சுகபோகங்களுக்காகப் பல காலம் ஒரு வருடமோ பத்து வருடமோ கடல் நீருக்குள் மறைந்திருந்து (நீர்மூழ்கிக் கப்பல்) எதிரியை வீழ்த்த வேண்டும்… மற்ற நாட்டை அடக்கி ஆட்சி புரிய வேண்டும்… என்று பல ஆயுதங்களையும் அணுக் கதிரியக்கச் சக்தியால் வீரிய உணர்வு கொண்டு செயல்படுத்தினார்கள்.

இதனின் உணர்வுகள் ஹைட்ரஜன் (கண நீர்) என்ற நிலைகள் அங்கே மாறி கடல் வாழ் உயிரினங்களில் அது இணைந்து கொண்டாலும் அது எல்லாம் வீரிய உணர்வின் அணுக்களாகவே மாறுகின்றது.

ஆனால் அதை மனிதன் உணவாக உட்கொண்டு வளர்ச்சி பெற்ற பின் மனித உடலில் இந்த உணர்வுகள் சிதைந்து… மீண்டும் நலிந்திடும் நிலையே அடைகின்றது. உடலைக் காக்கும் நிலை இல்லை…!

விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் வளர்ச்சி என்று கண்டுணர்ந்தாலும் இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மை இவ்வாறு தான் அது பதிவாகின்றது.

மனிதன் விஞ்ஞான அறிவால் இத்தகைய நிலைகளைச் செய்து செய்து செய்து நாம் வாழும் இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே நச்சாக மாற்றி விட்டனர்.

இவர்கள் பரப்பிய கதிரியக்கச் சக்திகள் பூமியின் நடுமையத்தில் அடையப்படும் பொழுது
1.ஏற்கனவே இருக்கும் பாறைகளைக் காட்டிலும்
2.விஷத்தன்மை கொண்ட பாறைகளாக மாற்றிடும் நிலை வந்துவிட்டது.

அதனால் பூமியின் உள் பகுதியில் கொதிகலன் அதிகமாக உரு பெற்றபின் துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீர் நிலைகள் பெருகிக் கொண்டே உள்ளது.

அணுவைப் பிளக்கும் போது ஹைட்ரஜனை வைத்துக் கொதிகலனாக மாற்றி எப்படி அடக்குகின்றானோ (அடக்கும் நிலையில் வரும் கசிவுகள்) அதனால் நீர் நிலைகள் மாறி (கடல் நீர்)
1.விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட இந்த அணுவின் தன்மை நடு மையம் அடைந்து உருகிடும் நிலையில்
2.ஹைட்ரஜன் என்ற நீரின் தன்மை மீண்டும் மூடி மறைத்து இந்த உணர்வின் தன்மை அதிகமாகும் பொழுது
3.இந்தப் பூமியே மிகத் துரித நிலைகள் கொண்டு குறுகும் நிலையும் (கடல் நீர் பெருகி நிலத்தைக் குறுக்கும்)
4.குறுகிய நிலத்திற்குள் மனிதர்கள் மிகவும் விஷத்தன்மை கொண்டவர்களாகி
5.விஷப்பூச்சிகள் மற்றொன்றைத் தீண்டினால்… அது எதுவாக இருந்தாலும் எப்படி மடிகின்றதோ
6.இதைப்போல விஷத்தின் தன்மை அடையும் காலம் வந்து கொண்டுள்ளது.

ஹைட்ரஜன் எப்படி அடக்குகின்றதோ… இதைப்போல விஷத்தின் தன்மை அடக்கியபின் கொதிகலனில் வெடிப்பது போல இந்த உணர்வின் தன்மை கொண்டு கோளாக இருக்கும் பூமி நட்சத்திரமாக மாறும்.

ஆனால் இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மை வேறு. இன்று விஞ்ஞான வீரியத்தால் அணுக்களைப் பிளக்கச் செய்து அது எல்லாம் ஒருக்கிணைந்த நிலையில் வரும் போது
1.மற்றதைச் சுட்டுப் பொசுக்கி தன் இனத்தின் தன்மை பெருக்கி
2.அது வளரும் தன்மை வரப்படும் பொழுது “பூமியே நிலைகுலைந்து போகும்…”

அத்தகைய விஷத்தின் தன்மையைச் சேர்த்துக் கொண்ட உயிரணுக்கள் இங்கே அதிக அளவில் பெருகும் போது அது மனிதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து
1.நீருக்குள்ளோ அல்லது பனிப் பாறைகளுக்குள்ளோ அடைபட்டு
2.உடலை விட்டுப் பிரிபவர்கள் அனைவரும் நச்சுத் தன்மை கொண்டு வெகு காலம் நரகத்தையே அனுபவிக்க நேரும்.

அதற்குப் பின் இன்னோரு பிரபஞ்சத்திற்குள் சென்று அடுத்த உடலாக உருவாக வேண்டும் என்றால் பல கோடிக் காலம் ஆகும்.

எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம் – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகின் ஈர்ப்பு நிலை போன்றே… எண்ணத்தின் நினைவும் தொடர் நிலை கொண்டதாக ஒவ்வோர் உயிரணுவும் அது தோன்றிய நாள் தொட்டே உயிராத்மாவுடனும் சேர்ந்து வருவது தான்.

இவ்வுலகின் சுழற்சி நிலை வேகத்தின் நிலைக்கொப்ப அது பெற்ற ஈர்ப்பு சக்திதான் இந்த உலகிற்கு உண்டு. அந்த நிலை போன்றே… நம்முடனே வளர்ந்திட்ட அமில நிலைக்குகந்த எண்ண சக்திதான் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பல நிலை கொண்ட குண நிலைகள் அமைவதெல்லாம்
1.நம்முள் உள்ள நாம் ஈர்த்துச் சேமித்த உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே
2.வளர்ந்த நிலை கொண்ட… குண நிலை கொண்ட நாம்
3.அந்நிலைக்கே… அச்சுழற்சியுடனே… இன்று வரை வழி நடந்தும்
4.எண்ண நிலை பெற்றும் வாழ்ந்து வருகின்றோம்.

எப்பிறவிக்கு வந்தாலும் நாம் நம் உயிரணுவுடன் சேமித்த அமில சக்தியுடன் தான் (உயிராத்மாவில் விளைந்தது) இன்றளவும் வாழ்ந்து வருகின்றோம்.

பல உலோகங்களும் தாவரங்களும் அதனதன் நிலைக்குகந்த அமிலத்தை ஈர்த்து ஒரே நிலை கொண்ட தன்மையில் வளர்கின்றன. பல உலோகங்களும் திரவங்களும் ஆவியான தன் இனத்திற்கு உகந்த இனத்தையே மேன்மேலும் ஈர்த்துச் செயல்படுகின்றன.

வான மண்டலத்தில் இடியும் மின்னலும் ஓர் இனத்துடன் மற்றோர் இன அமில நிலை மோதிடும் பொழுது “சத்ரு… மித்ரு…” நிலையினால் ஏற்காத நிலையில் இடியும் மின்னலும் ஏற்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இவ்வுலகினில் மற்ற எல்லா மண்டலமும் அதனதன் இனத்துடன் தான் வாழ்கின்றன. ஆனால்…
1.இம்மனித ஆத்மா நிலை கொண்ட நம்மால்
2.நம் இன நிலையான இவ்வெண்ண நிலையை
3.நாம் எடுத்திடும் சுவாச நிலையினால் நல் நிலைப்படுத்திட முடியும்.

மண்டலங்களுக்கும்… மண்டலங்களில் தோன்றி வளர்ந்திடும் இயற்கை வளங்களுக்கும்… மற்றத் தாவர இன வர்க்கங்களுக்கும் எவற்றுக்குமே இம் மனித உடல் கொண்ட ஆத்மாவுடன் கூடிய நாம்… வாழ்ந்திடும் இந்த மனிதப் பிறவியின் பாக்கியத்தை… நம்மால் நம் நினைவினில் நமக்குகந்த நிலையினை ஈர்த்து வாழ்ந்து காட்ட முடியும்.

ஆனால்…
1.எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம்.
2.வெறி உணர்வுக்கும்… பேராசைக்கும் அடிமை கொண்டு… பக்தி நிலையை வளர்த்தாலும் பலன் பெறுவது கடினம்.
3.பக்தி என்பதனையே அடிமைப்படுத்திடும் நிலையாக்கிடாமல்
4.அவரவர்களின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அன்பாக்கி
5.அந்நிலையின் தொடரினால் ஜெப நிலையில் நல்லுணர்வு கொண்ட அமிலத்தையே நம் ஆத்மாவின் சொத்தாக்கி
6.மாறப் போகும் கலியில் இருந்து மீண்டு பல மகரிஷிகளுடன் கலந்திடலாம்.
7.இன்று இவ்வுடலில் நாம் சேமித்த ஒளி சக்தியின் தொடர்புடனே மனித வாழ்க்கைக்கும் உயர்ந்த வாழ்க்கையான
8.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழும் நிலை பெற்றிடலாம்..!

இப்பூமியின் அமில சக்தி உன்னத சக்தி. அனைத்து நிலைகளும் கலந்த சக்தி. இப்பூமியின் தன்மை மாறுபடத்தான் போகின்றது. சூரியனின் நிலையும் மாறுபடத்தான் போகின்றது. ஆனால் நம் எண்ணத்தில் எண்ணிடும் நிலையில் இல்லை.

சூரியனையே நெருப்புக் கோளமாக எண்ணுகின்றனர். ஆனால் அது குளிர்ந்த பூமி. எச்சக்தியையும் அறிந்திடும் நிலை இம்மனித ஆத்மா ஒன்றுக்குத்தான் உண்டு.

யாம் உணர்ந்த ஆத்மீக நெறியையே அனைத்து உலக நிலைகளையும் உணர்த்திட்டால் “நான்…” என்ற அந்நான் நிலை வந்துவிடும்.

1.ஆத்மீக நெறியினில் அன்பு கொண்டே ஜெபம் கொண்டு அறிய வருபவர்களுக்கு
2.அந்நிலையின் தொடரை வழிப்படுத்தி
3.அனைவருக்கும் பொதுவான சக்தியின் சக்தியை உணரும் நிலையை
4.எமக்குக் கிட்டிய சக்தியின் வழித் தொடரை வழிப்படுத்துகின்றோம் (ஈஸ்வரபட்டர்).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் சண்டை நடந்தது என்று காவியம் உண்டு பரசுராமன் சிவ தனுசை எடுத்தான் சீதாராமன் விஷ்ணு தனுசை எடுத்தான் – விளக்கம்

உடல் என்பது திடப்பொருள் – சிவம். ஒரு உணர்வின் தன்மை எடுத்து ஒன்றைத் தாக்கி… அதை அடக்கிப் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனான பின் அசுர உணர்வுகளைச் சேர்த்தால் என்ன ஆகின்றது…?

ஒருவரை எதிரியாகக் கருதி அவர் உணர்வை எடுத்து நாம் சொல்லால் தாக்கும் பொழுது சிவ தனுசு. இந்தச் சிவ தனுசு
1.அவரிடமிருக்கும் நல்ல குணங்களையும்
2.நம்மிடமிருக்கும் நல்ல குணங்களையும் வீழ்த்திவிடுகின்றது.

இராமாயணத்தில் பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் சண்டை நடந்ததாகச் சொல்வார்கள். இரண்டு பேரும் கடவுள் தான். ”ஏன் சண்டை நடந்தது…?”

மனிதனான பின் நாம் தீமைகளை நீக்கி நீக்கிச் சமப்படுத்தும் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. “சமப்படுத்தும் நிலையையே… பரசுராமன்” என்பது.

சமப்படுத்தும் நிலைகளில் நாம் இருந்தாலும் ஒருவர் நம்மிடம் கோபம் வேதனை போன்ற உணர்வுடன் தாக்கிப் பேசும் பொழுது நம் நல்ல உணர்வுடன் அது சேர்ந்து கொள்கின்றது.

அப்படிச் சேர்ந்து கொண்டவுடன் அதைச் சரிக்கட்ட வேண்டும் என்றால் நாம் என்ன செய்கின்றோம்…?

அவர் உடலிலிருந்து (கோபமான நிலைகளில்) வந்தவுடன் “இரு நான் பார்க்கின்றேன்…” என்று சமப்படுத்தும் நிலைகளில் சண்டையிடுகின்றோம்.

அதாவது சிவ தனுசாக மாறுகின்றது. (உடல் – சிவம்; தனுசு – இயக்ககூடிய உணர்வின் உணர்ச்சிகள்) நம் உடலுக்குள் தான் இந்த மாற்றமாகின்றது.

நாம் எப்படிப் புலி கரடியாக இருந்தோமோ அதே கோப உணர்வின் தன்மை நமக்குள் அணுக்களை மாற்றிவிடுகின்றது. அப்படித் தாக்கும் உணர்வு வரும் பொழுது நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம்.

காளி கோவிலுக்குச் சென்றால் நாம் புலியையா பலியிடுகின்றோம்…?

கோபப்படுவோரைப் பார்த்தால் காளி…! காளிக்கு முன்னாடி என்ன இருக்கின்றது…? புலி. அந்தக் கோப உணர்வைச் சுவாசித்தால் நமக்குள் காளியாக மாறிவிடுகின்றது.

இரு…! உன்னை நான் பார்க்கின்றேன் என்று ருத்ரதாண்டவம் ஆட வைக்கின்றது இந்த உடலான சிவம்.

இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் போனால் நல்ல குணங்களால் உருவான அணுக்களைக் கொல்லும் அணுக்களாக மாறுகின்றது.

அதாவது நம் உடலில் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம் என்று அர்த்தம். இதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான் காளி கோவிலில் காளிக்கு முன்னாடி புலியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நாம் யாராவது இதைக் கொஞ்சம் சிந்திக்கின்றோமா…!

மற்ற மிருக நிலையிலிருந்து மனித உருவ அமைப்பு கொண்டு நாம் எப்படி வந்தோம் என்பதற்காக ஆலயங்களில் ஞானிகள் தெய்வச் சிலைகளை உருவங்களாக வடித்துக் காட்டினார்கள்.

நல்ல குணங்கள் பலியானவுடன் ருத்ரதாண்டவம் ஆடுகின்றோம். இது போய் நம் இரத்தத்தில் கலக்கின்றது. கலந்த பின் நம் நல்ல குணங்களைக் கொல்ல ஆரம்பிக்கின்றது.

நம்மைத் தாக்கியவரைக் கொல்ல வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இது சிவ தனுசு. இந்த வீரிய உணர்வு கொண்டு வலுவாகத் தாக்கப்படும் பொழுது வீழ்ச்சி அடைகின்றது.

அப்பொழுது இதை வெல்லக் கூடியது எது…? அதைத்தான் அங்கே இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். சீதாராமன் என்ன செய்கின்றான்…? விஷ்ணு தனுசை எடுக்கின்றான்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.

நம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று
1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி
2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.
4.அப்பொழுது நமக்குள் கோபம் உண்டாகும் நிலை அடங்குகின்றது.

நம் உடலிலுள்ள இரத்தங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கலந்தவுடன் கோப உணர்வின் வீரியத் தன்மை அடங்குகின்றது.

பரசுராமன் சிவ தனுசை எடுத்தான் அதனால் தோல்வி அடைந்தான். இராமாயணத்தில் இவ்வளவு அழகாகக் கூறியிருக்கின்றார்கள்.

பனிரெண்டு மாதங்களிலேயும் நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப் பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்

 

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை அனைவரும் எளிதில் பெறும் வண்ணம் அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்கிறோம். ஆக… சித்திரையை நீக்கிக் கனியின் தன்மை அடைய வேண்டும்.

உயிரான அந்த ஒளியின் வித்தைக் கொண்டு நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் அந்த ஒளியின் வித்தாக மாற்றிடல் வேண்டும்.

அது தான் சித்திரைக்கனி என்ற நிலைகள் கொண்டு
1.அந்தக் கனியின் தன்மை அடைந்தால் தான் நாம் முழுமை அடைய முடியும்.
2.உயிரான உணர்வை ஒளியாக நாம் பெற்று என்றும் பேரானந்த நிலை என்ற பெரு நிலையை அடைய முடியும்.

அதைப் பெறச் செய்வதற்கே உபதேசிக்கின்றோம்.

1.சித்திரை என்பது நமக்குள் எடுத்துக் கொண்ட சிறு திரைகளை மாற்றி அமைக்கின்றோம்.
2.வைகாசி… தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியைக் கொண்டு “தனக்குள் தெளிவாக்கு…” என்பது.

ஒவ்வொரு மாதமும் இப்படித் தெரிந்து தெளிந்து கொள்வதற்காகத்தான் பன்னிரெண்டு மாதங்களிலும் விழாக்களை அமைத்தார்கள் ஞானிகள்,

பன்னிரண்டு இராசிகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டிப் போகும் போது இந்த இராசியைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த இராசிக்குச் செல்லும் பொழுது மீண்டும் குறைகள் வந்தால் அந்த இராசியைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படிப் பன்னிரண்டு மாதங்களிலேயும்
1.ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்தி
2.நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப்
3.பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் இதை அறிந்து கொள்ளச் சொன்னார்கள்.

ஆகவே… இந்தப் பனிரெண்டு மாதத்தையும் வீணாக்கி விடாது ஒவ்வொரு காலப் பருவத்திலும் எந்தெந்த நிலைகள் வருகின்றதோ எல்lலோரையும் உண்மைகளை உணரச் செய்…! என்றார் குருநாதர்

அவர்கள் யார்…? என்ற நிலையை அந்த மெய்யை அவர்களை அறியச் செய்து… அருள் உணர்வின் தன்மை பெறச் செய்து… எந்த அளவில் அவர்கள் அதைப் பெறுகின்றனரோ
1.அதைக் கண்டு நீ மகிழ வேண்டும்…
2.அந்த மகிழ்ச்சி பெறும் சக்தியாக உன்னில் நீ வளர்த்திடல் வேண்டும் என்று எனக்கு உபதேசித்தார்.

அவர் உபதேசித்த அந்த உணர்வின் வழிப்படித் தான் குரு அருளை உங்களில் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் திரு அருளாக மலர்ந்து
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் அருள் சக்தி பெற்று
3.இந்த வாழ்க்கையில் கனியின் பருவம் (ஒளி நிலை) பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்.

சுவாச நிலையின் மகத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

நாம் ஈர்த்து வெளியிடும் சுவாசத்திற்கு “ஈர்க்கும் நிலையை ஒத்த சக்தியே…” நாம் வெளியிடும் சுவாச சக்திக்கும் உண்டு.
1.நாம் எடுக்கும் சுவாசத்தை நேராக நம் உயிரணு ஈர்க்கிறது
2.உயிராத்மா ஈர்த்த நிலையில் அச்சக்தி நம் நெற்றியில் வந்து பாய்ந்து…
3.இவ்வுடல் அனைத்திற்கும் நாம் ஈர்க்கும் சுவாசம் பரவுகிறது.

எந்த நிலையில் அந்த ஈர்த்த நிலை செயல்படுகின்றதோ அந்நிலை போன்றே நாம் வெளிப்படுத்தும் சுவாசமும் வெளிப்படுகின்றது. நாம் எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலையினால்தான்… நம் நினைவலைகளும்… சப்த ஒலிகளும்… நாம் காணும் பிம்ப ஒலிகளும்.. நமக்குத் தெரிகின்றன.

இச்சுவாசத்தின் நிலை கொண்டேதான் அனைத்துச் சக்தி நிலைகளையும் நாம் செயல்படுத்துகின்றோம். இந்நிலையில் நாம் செயல்படுத்திடும் நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாச நிலை நம் உயிராத்மாவுடன் கலந்துதான் நம் உடல் நிலையும் நம்மைச் சுற்றியுள்ள ஒலி ஒளி அலைகளும் உள்ளன.

இச்சுவாச நிலை என்னும் பொக்கிஷ நிலையை நாம் உணர்ந்திட வேண்டும். எந்தெந்த நினைவலைகளுடன் நாம் இருக்கின்றோமோ அந்த நினைவலைகளுடன் நம் எண்ண நிலை உள்ள பொழுதில்… நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தில் நம்முடன் ஒலியாகவும் ஒளியாகவும் அனைத்து நிலைகளும் சுற்றிக் கொண்டுதான் உள்ளன.

நம் வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகளை நாம் எண்ணிடுங்கால் “அன்று நாம் கண்ட அக்காட்சியின் பிம்பமும்… ஒலி அலைகளையும்…” நாம் கண்டு கொண்டுதான் உள்ளோம்.

நாமாக நினைவுபடுத்திக் கற்பனையாக அக்காட்சியை நம்முள் காண்பதாக எண்ணுகின்றோம். நாம் எண்ணும் நிலைப்படி அல்லாமல்… ஒலி அலைகளைப் போலவே இவ்வொளி அலைகளும் நம் உயிராத்மா தோன்றிய நாள் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையுடன் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.நம் நினைவை ஒரு நிலைப்படுத்தி பல எண்ணங்களின் நினைவின் மோதலைத் தாக்கவிடாமல்
2.ஒரே நினைவுடன் நல்லுணர்வு கொண்ட நிலையில்
3.அவரவர்களுக்கு உகந்த அன்புருவம் கொண்ட எவற்றையும் ஒரே நிலையில் நம் எண்ண சக்தியில் செலுத்தி
4.அந்நிலையில் நாம் எடுத்திடும் சுவாசத்தின் சக்தியினால்
5.நம் உயிராத்மாவில் கலந்து வெளிப்பட்ட அனைத்து நிலைகளையும் அறிந்திடலாம்.

நாம் நம் ஆத்மாவுடன் கூடிய நிலையினைத்தான் அறிந்திடும் நிலையை இந்நிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்நிலை போன்றே நாம் உள்ள நிலையில் நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இப்பூமியும் இப்பூமியைச் சார்ந்த அனைத்து நிலைகளையும் நம் எண்ண சக்தியையும் ஒரே நிலையில் பாய்ச்சும்போது நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் அக்காந்த நிலை கொண்ட இச்சுவாச சக்திக்கு நம் எண்ணமுடன் நாம் எண்ணிடும் இடத்திலுள்ள நிலைகளையெல்லாம் அறிந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் காந்த நிலை கொண்ட அமிலக் கற்களைப் பதிய வைத்துப் பல அலைவரிசைகளை ஓர் இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலியையே இருந்த நிலையில் இவ் வானொலியின் மூலமாக அவ்வலை வரிசையிலேயே மோதவிடும் பொழுது அங்கு நடக்கும் ஒலியின் அலையையே வானொலியின் மூலமாக நாம் கேட்கின்றோம்.

இந்தக் காற்றினில் கலக்கவிட்டுத்தான் விஞ்ஞானியும் பல செயல்களைச் செய்கின்றான்.
1.இக்காற்றையே சுவாசித்து நம் உயிராத்மாவுடன் மோதவிட்டு
2.அந்நிலையிலேயே எம்மண்டலத்திற்கும் நம் எண்ண நிலையைப் பாய்ச்சி
3.நாம் அந்நிலையில் எடுத்திடும் சுவாசத்தின் அலைகள் நாம் வெளிப்படுத்திடும் நிலையில் அங்கும் பாய்ந்து
4.எங்குள்ள நிலையையும் நம் உயிராத்மாவின் சக்தியுடன் நாம் இருந்த நிலையிலேயே அறிந்திடலாம்.

இத்தியான நிலையில் ஆரம்ப பக்குவ நிலையில் ஞானம் கொண்ட நிலைக்கு வந்திட்டால்… நம் விழியை நாம் மூடி அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்திட முடியும்.

பக்குவ நிலைக்குப் பதம் பெற்றுச் செல்லச் செல்ல… இவ்விழியைத் திறந்தே
2.உள்ள நிலை அனைத்தையும்… நம் எதிரிலுள்ள பிம்ப நிலைகளையும் தாண்டி
3.எங்குள்ள நிலையையும் நாம் அறிந்திட முடியும்

ஞானமும் சித்தும் இவ்வாத்மீக நெறியிலுள்ள எந்த நிலைக்குகந்த சக்தி நிலை பெறவும் இவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி… “சிறுகச் சிறுகப் பெருகச் செய்து… வழி நடந்திடல் முடிந்திடும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் ஒவ்வொருவருமே மெய் ஞானியாக ஆக முடியும் – ஒன்றும் சிரமமில்லை “எளிதானது தான்”

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் அதன் பின் வந்த பல ஞானிகள் வெளிப்படுத்திய பேருண்மைகளையும் யாம் (ஞானகுரு) உபதேசிக்கின்றோம்.

அத்தகைய மெய்ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை எல்லாம்
1.”தெரிந்து கொள்ள வேண்டும்…” என்று நினைத்துவிட்டோம் என்றால் இந்தக் காலத்திலேயே (இப்பொழுதே) தெரிந்து கொள்ளலாம்.
2.அதற்குண்டான மெய் உணர்வைப் பெறவும் செய்யலாம்.

ஆனால் பெரும்பகுதியானவர்கள் என்ன நினைக்கின்றார்கள்…? என்ன சொல்கிறார்கள்…?

நான் எல்லாப் புத்தகங்களையும் படித்திருக்கின்றேன்.. அறிந்திருக்கின்றேன்… எல்லாம் செய்திருக்கின்றேன். ஆனால் இவர் சொல்லும் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

1.படித்த என்னாலேயே இதைப் பின்பற்ற (FOLLOW) முடியவில்லையே…!
2.சாதாரணமானவர்கள் எப்படிப் பின்பற்ற முடியும்…! எப்படிப் புரிந்து கொள்ள முடியும்…! என்று முடித்துக் கொள்கிறார்கள்.
3.பிறரை எண்ணி இப்படித் தன்னைத் தாழ்த்திக் கொள்வோர் உண்டு.

சிறிய குழந்தைகளைப் பாருங்கள். பள்ளிக்கே சென்றிருக்காது. ஒரு டி.வி முன்பாக உட்கார வைத்துவிடுங்கள்.

ஒரு மூன்று அல்லது நான்கு வயது குழந்தைகள் அதைக் கூர்ந்து கவனிக்கட்டும். டி.வி.யில் பாடும் பாட்டையெல்லாம் அந்தக் குழந்தை பாட ஆரம்பிக்கும். அதில் ஆடிய ஆட்டமெல்லாம் ஆட ஆரம்பிக்கும்.

நீங்கள் அந்த மாதிரி ஆடிக் காட்டவும் பாடிக் காட்டவும் முடியுமோ…!

ஏனென்றால் அந்தக் குழந்தை
1.கூர்மையாகக் கவனித்தது.
2.அந்த உணர்வுகள் அதற்குள் பதிவாகின்றது.
3.அதையே மீண்டும் செயலாக்குகின்றது.

அதைப் பார்த்துவிட்டு நாம் என்ன சொல்வோம்…?

என் குழந்தையைப் பாருங்கள்…! டி,வி.யைப் பார்த்துவிட்டு அப்படியே… பாடுகின்றது… ஆடுகின்றது…! என்று நாம் புகழ் பாடுவோம். நம்மால் அது முடியுமா…? என்றால் முடியாது.

குழந்தை எதைப் பதிவு செய்ததோ அந்த உணர்வுகள் அது அங்கே இயக்குகின்றது.

“குழந்தைப் பருவம்” மாதிரித் தான் நாமும் இந்த அருள் வழியில் இப்பொழுது செல்கிறோம்.

ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.அவர்கள் (ஞானிகள்) செய்த நிலைகளை எல்லாம் நாமும் செய்வோம்.
2.அதைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூர்மையாகப் பதிவாக்கினால் அது வரும்.

அப்படிப் பதிவாக்காதபடி மற்றவர்களை எண்ணி… நான் எத்தனையோ புத்தகத்தைப் படித்திருக்கின்றேன்… அதில் உள்ளதை ஒன்றும் இவர் சொல்லவில்லை… இவர் (என்னமோ) புதிதாகச் சொல்கிறார்…! நம்மால் ஒன்றும் பின்பற்ற முடியவில்லையே என்று இப்படித்தான் எண்ணிப் போய்விடுகின்றார்கள்.

இப்படிப் பெரும்பகுதியானவர்கள் தன்னைத்தான் தாழ்த்திடும் நிலையே தான் வளர்கின்றது.

நான் எதை எதையெல்லாம் எனக்குள் பதிவு செய்திருக்கின்றேனோ அதன் வழி தான் என் உணர்வுகள் செல்லும். அந்த உணர்வுகள் அதிகமாக எனக்குள் சேர்ந்துவிட்டது என்றால் அதனின் வழிக்கே தான் என்னை இழுத்துக் கொண்டு போகும்.

அதன் உணர்வுகளைக் காலி செய்து தான் பார்க்க முடியுமே தவிர ஆனால் காலி செய்தே பார்த்தாலும் கூட படித்தவர்களுக்கெல்லாம் அது தான் முன்னாடி நிற்கும்.

இவர் சொல்வதை எல்லாம்… “அதை எப்படிப் பார்ப்பது…?” என்ற எண்ணம் தான் வரும்.

பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகள் ஒன்றாவது வகுப்பிலிருந்து இரண்டாவது வகுப்புக்குச் செல்லுகின்றது. அப்பொழுது ஒன்றாம் வகுப்பில் படித்த பாடம் மாதிரி இது இல்லையே. இது அதைவிடப் பெரிதாக இருக்கின்றதே என்று எண்ணினால் எப்படிப் படிக்க முடியும்…? ஆனால்
1.நாம் படிப்படியாகப் படித்துத்தான் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.
2.விஞ்ஞானியாக ஆனதும் அப்படித்தானே.

அந்த நிலையே வருவதில்லை.

1.தானும் பெறாதபடி மற்றவர்களையும் பெறவிடாது செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
2..இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் விடுபடுங்கள்.

உத்தராயணத்தின் சிறப்பு

 

உதாரணமாக வியாபாரமோ அல்லது தொழிலோ நாம் கூட்டாகச் செய்யும் போது அதிலே ஒருவருக்கொருவர் வெறுப்பாகி விட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது.

தொழில் செய்து முன்னுக்கு வர வேண்டும்… நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணமே அடுத்து வராது. அந்த வெறுப்பையே வளர்க்கப்படும் போது அது நம் நல்ல குணங்களை எல்லாம் மறைத்து விடுகிறது… சித்திரை.

யாரை எண்ணி வெறுப்பை நமக்குள் பதிவு செய்து வளர்த்தோமோ அந்த உணர்வின் ஆக்கமாக நம்மை அது இயக்கி வியாபாரத்தையும் மந்தமாக்கிவிடும்… உடல் நலத்தையும் பாதிக்கும்.

ஒரு நிலத்தில் வித்தைப் பதிவு செய்த பின் அது எப்படி வளரத் தொடங்குகிறதோ அது போல்
1.நம் உடலும் நிலம் போன்றது தான்.
2.அதிலே எத்தனை குணங்களை நாம் பதிவு செய்கின்றோமோ
3.வேதனை என்ற விஷமான உணர்வோ அல்லது கோபம் என்ற காரத்தை ஊட்டும் உணர்வோ அந்த வித்துக்கள் பதிந்து விட்டால்…
4.நம் ஆன்மாவில் படரப்படும் போது நம் நல்ல குணத்தின் இயக்கத்தையே அது மாற்றி நமக்குள் எதிரியாகிவிடுகின்றது.

இது எல்லாம் மனித வாழ்க்கையில் நமது எண்ணம் கனியாகும் பருவத்தை இழக்கச் செய்து சித்திரையாக மாற்றிவிடுகின்றது… நல்ல குணத்தினை மறைத்து விடுகின்றது.

இதைப் பிளத்தல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம் அந்தத் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிகள் கொண்டு அதை நீக்கும் நினைவாற்றலைக் கொண்டு வர வேண்டும்.

அதைக் காட்டுவதற்குத் தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று
1.தீமைகளைச் சரணமடையச் செய்யும் சக்தியாக
2.இந்த உடலான குகைக்குள் நின்று
3.வருவது அனைத்தையும் அறிந்து
4.தீமைகளை அகற்றி உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா… என்று
5.காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறியுள்ளார்கள் ஞானிகள்.

இந்தப் புது வருடத்தில்
1.ஆறாவது அறிவைக் கொண்டு இருளைப் போக்கித் தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பதிவு செய்து
2.பேரானந்தப் பெரு நிலை பெறும் அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் வித்தாகப் பதிவு செய்து
3.தீமைகளை அகற்றும் உணர்வின் ஞானத்தை நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.

இதற்கு முன் தட்சிணாயணம்… இப்போது உத்தராயணம்…! இதனின் வளர்ச்சியில் ஒளி கண்ட பின் இருள்கள் மாய்கின்றது… நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையும் தடுக்கப்படுகின்றது.

அதே சமயம் அந்தத் தாவர இனங்களின் சத்தை எல்லாம் காய வைக்கின்றது. அதனின் சத்தைக் கவர்ந்து கொள்கிறது. ஆறு மாதம் கழித்துத் தட்சிணாயனம் என்று வரப்படும் போது அந்த மழைக் காலத்தில் அதனின் வித்துகளுக்கு இது உணவாகக் கொடுக்கின்றது.

1.ஆகவே ஆறாவது அறிவால் நாம் சேமித்துக் கொண்ட… நாம் தெளிந்து கொண்ட… அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு
2.நமக்குள் சிறிது சிறிதாக மறைத்திருக்கும் தீமைகளைப் பிளந்து இந்தப் புதிய வருடம் நமது வாழ்க்கையைத் தொடர வேண்டும்.

வருடம் தோறும் பன்னிரெண்டு மாதங்களிலும் மக்கள் அருள் உணர்வுகளைப் பெறுவதற்கு நமது சாஸ்திரம் தெளிவாக வழி காட்டுகின்றது. இதனின் உண்மையின் உணர்வை நாம் உணர்ந்து அதன் வழியில் அருள் வாழ்க்கையாக வாழ வேண்டும்.

உலக மாற்றத்தில்… அனைவருக்கும் ஆவதே நமக்கும் நடக்கட்டும்… என்று எண்ணிடலாகாது…! – ஈஸ்வரபட்டர்

 

பல காலங்கள் வெளியிடாமல் இருந்திட்ட சக்தியின் உண்மை நிலையை இங்கு போதனைக்கு அளித்திட்ட நிலைக்குக் காரணம்
1.இப்பொழுது மாறப் போகும் கலியில்…
2.இன்றுள்ள இக்கலியில் வாழ்ந்திடும் அறிவாற்றல் கொண்ட மனித ஆத்மாக்களின் நிலையை
3.இம்மனிதரின் நிலைக்கு உணர்த்தவே இப்போதனை நிலை.

இன்றைய மனிதரின் வாழ்க்கை முறையும் எண்ணக் கலவையும் இன்று வாழ்ந்திடும் மனிதனால் ஏற்பட்டதல்ல. கல்கியில் தோன்றிட்ட கால நிலை தொட்டே வருவது தான்.

மனிதருடன் எண்ண நிலை சப்த அலையாக எப்படிச் சுற்றிக் கொண்டு உள்ளதோ… அந்த நிலையின் தொடர்ச்சியுடன் ஒவ்வொரு உயிராத்மாக்களின் எண்ணத்துடன் கூடிய சப்த அலைகளும் இப்பூமியில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்… “இப்பூமிக்கே உகந்த சப்த அலை ஒன்று உண்டு…” என்று உணர்த்தினேன்.

ஓங்கார இசையுடன் ஓ…ம்… என்ற பிரணவ நாதத்தில் உருளுகின்ற இவ்வுலகினில் உயிராத்மாக்களின் சப்த அலையின் தொடர்ச்சியில் இவ்வுலகிற்கு எண்ண நிலையும் உண்டு. இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் சப்த அலையுண்டு.

சுவாசம் எடுத்திடும் நிலையிலேயே சப்த அலையுண்டு. ஒலி நிலை இல்லாமல் இவ் உலகமே இல்லை என்று உணர்த்தினேன்.
1.இயற்கையில் அமைத்திட்ட உன்னத ஒலிதனில்
2.இன்றைய செயற்கையும் கலந்து செயல்படும் நிலையில்
3.இப்பூமியே மிகவும் தத்தளித்த நிலையில் உள்ளது.

இப்பூமியில் அறிவாற்றல் கொண்டு வாழ்ந்திடும் மனிதர்கள் தன் சக்தியை உணர்ந்து செயல்படாமல் வாழ்ந்ததின் வினையினால் இவ்வினையின் செயல் இவ்வுலகுக்கு மட்டுமல்ல… “இவ்வுலகைச் சார்ந்த அனைத்து மண்டலங்களுக்கும் மாறு கொள்ளும் நிலை…” மிகவும் குறுகிய கால நிலையில் உள்ளன.

பயந்த நிலையில் எண்ணத்தைச் செயல் கொண்டு பேராசைக்கு அடிமைப்பட்டிடாமல் ஆத்மீக நெறியறிந்து ஒவ்வோர் உயிராத்மாக்களும் செயல்பட வேண்டும்.

1.மனித ஆத்மாக்களிடமிருந்து மட்டுமல்ல
2.நினைவாற்றல் உடைய மற்ற ஜெந்துக்களிலும் வெறியுணர்வு பேராசை நிலை இவற்றிலிருந்து விடுபட்டால்தான்
3.மாறப் போகும் இக்கலியிலாவது நாம் மீட்சி கொண்டிட முடியும்.

அடுத்து வரப்போகும் கல்கியில் இன்று இப்பூமியில் அவதார புருஷர்களாக அவதரித்தவரின் எண்ண நிலை கொண்ட பிறப்பு நிலையின் தொடரினால் “நல் நிலையில் அவதரிக்கலாம்…!”

இவ்வுலக நிலையே மாறப் போகின்றது என்றால்…
1.நம் உடல்களும் அனைத்து ஜீவராசிகளும்தான் இயற்கை எய்தப் போகின்றனவே
2.அடுத்த நிலைக்காக ஏன் நம்மை இப்பொழுது செயல் கொண்டிட வேண்டும்…?
3.நடப்பது நடக்கட்டும்… அனைவருக்கும் ஆனது நமக்கும்…! என்று எண்ணிடலாம்.

இயற்கையின் நியதியும் இயற்கையின் சீற்றமும் இயற்கையின் சக்தியுடனே தான் செயல்படுகின்றன.

இந்த இயற்கையில் தோன்றிய உயிரணுக்களிலிருந்து அந்நிலையின் தொடரினால் சக்தி கொண்ட உயிராத்மாக்களாகி… செயலாற்றும் திறமையுடைய “அதிக சக்தி நிலை கொண்ட இம் மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் மண்டலங்கள் சில தான்…”

இவ்வுன்னத பூமித் தாயின் குழந்தைகளாய் இப்பூமியின் சுவாசமுடன் கலந்துள்ள உயிராத்மாக்களான நாம்… நம் ஆத்மாவும்… நம் எண்ணமும்… நம் சப்த அலைகளும்.. என்றுமே அழிவதில்லை என்பதின் உண்மையினை உணர்ந்து… மாறப் போகும் இக்கலியில் நம் ஆத்மாவை உன்னத பொக்கிஷமாக நாம் உணர்ந்து…
1.பல தீய சக்திகளுக்கு நம்மை அர்ப்பணித்திடாமல்
2.நம்முடன் தொடர்பு கொண்டவரின் நிலைக்கும் நம்மிடமுள்ள தீய சக்தி பாய்ந்திடாமல்
3.நல்லுணர்வுகளையே அவர்களுடனும் கலக்கவிட்டு
4.அவர்களின் நற்சொற்களையே நம் ஆத்மாவிற்கும் சுழலச் செய்து
5.உலக சக்தியையே இவ்வியற்கையின் மாற்றத்தில் வரப்போகும் கல்கியின் சுழற்சியில்
6.நல் நிலையாக்கிடத்தான் இப்போதனை நிலையெல்லாம்.

மனிதர்களின் இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை இன்று அவர்களால் ஏற்படுத்திய நிலை மட்டுமல்ல…! கல்கியிலிருந்து கலி வரை வந்த நிலை. இவ்வுலகுடன் கலந்துள்ள சப்த ஒலிகளில் ஈர்த்து எண்ணமுடன் கலந்திட்ட நிலை. இந்நிலையிலிருந்து மீளும் நிலையைத்தான் நாம் அறிந்திடல் வேண்டும்.

“உயிராத்மாக்களின் பொக்கிஷ சக்தி நிலையை… ஆத்மீக நெறிதனில் அழைத்திடவே…” இப்போதனை நிலையெல்லாம் ஈஸ்வரபட்டனாகிய யான் கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நல்லதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் சாமி கும்பிடக் கோவிலுக்குச் செல்கின்றோம். ஆனாலும் சாமிக்குப் பலி கொடுத்தால் அது நம்மைக் காக்கும் என்ற எண்ணத்தில் சிலர் பலி கொடுக்கின்றார்கள்.

காளியைப் பார்த்து இந்தக் காளிக்குப் பலி கொடுத்தால் அந்த வலு கொண்டு “காளி என்னைக் காப்பாற்றுவாள்” என்ற இந்த உணர்வு தான் வருகின்றதே தவிர நல்லதை எண்ணி எடுக்க முடியவில்லை.

காளியின் சிலை கோபத்தின் சொரூபமாக இருக்கின்றது. காளியின் வாகனமோ புலி. அந்த மிருக குணம் என்ன செய்யும்…? அது தான் நம்மை வழி நடத்துகிறது.

புலி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுத் தாக்கிக் கொன்று புசிப்பது போன்று நமது கோபத்தின் உணர்வுகள் நம் உடலிலுள்ள மனிதனாக உருவாக்கிய நல் உணர்வின் அணுக்களை இரக்கமற்றுத் தாக்கிக் கொன்று அடுத்து மனித சரீரத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.

1.காளியை வணங்கி வருபவர்களைப் பாருங்கள்.
2.கோபம் பயங்கரமாக வரும்.
3.எதை எடுத்தாலும் அவர்கள் சொல்லக்கூடிய… பேசக்கூடிய பேச்சு என்ன செய்யும்…?
4.அவர்கள் சொல் மற்றவர்களை மடங்கச் செய்யும்.
5.அப்பொழுது இவர்கள் ஜெயித்த மாதிரிப் போவார்கள்.
6.உன்னைத் “தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்…” என்பார்கள்

அவர்களிடம் யாராவது பேச முடியுமா…? என்றால் முடியாது. எல்லோரும் ஒதுங்கிக் கொண்டே போவார்கள். இந்த உணர்வுகள் கடைசியில் என்ன செய்யும் என்று அவர்களுக்கே தெரியாது.

ஏனென்றால் எத்தனையோ கோடிச் சரீரங்கள் எடுத்து இன்று மனிதனாக இன்று வந்திருக்கின்றோம். இதையெல்லாம் எங்கே கொண்டு போய் மாற்றும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஏனென்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் எமக்குக் கொடுத்த அனுபவத்தில் கண்ட பேருண்மைகளை உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

1.உலகம் எப்படி இயங்குகிறது…? என்றும்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகிறது…? என்றும்
3.,உயிரின் வேலை என்ன…? என்றும் சொல்கிறோம்.

அறியாமல் வரும் தீமைகளிலிருந்து விடுபட உங்களையெல்லம் துருவ நட்சத்திரத்துடன் நேரடியாக இணைக்கின்றோம். அதிலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கின்றோம்.

ஆகவே கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

கணவன் மனைவி இரண்டு உணர்வும் இவ்வாறு ஒன்றாகின்றது. உயிரின் உணர்வில் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது “ஒளியாகின்றது”. அதாவது
1.இரண்டு உடல்களிலிருந்து கருவாக்குகின்றது.
2.இரண்டு உயிரும் ஒன்றாகின்றது.
3.ஒன்றான பின் ஒளியாக மாறும் திறன் பெறுகிறது.

சித்திரைக் கனி

 

புது வருடம்… “சித்திரை… சித்திரைக் கனி” என்று சொன்னாலும் ஒரு கனியின் தன்மையை எடுத்துப் பார்த்தால் அந்தக் கனிக்குள் வித்து மறைக்கப்பட்டுள்ளது. அந்த வித்தின் தோடோ (மேல் ஓடு) அது சித்திரையாக மறைத்துள்ளது.

இதைப் போன்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிலைகள் கொண்டு மறைக்கப்பட்டே உள்ளது.
1.ஒரு நெல்லுக்குள் அரிசியின் தன்மை மறைக்கப்பட்டுள்ளது.
2.உமியைப் பிரித்துவிட்டால் அந்த நெல் முளைப்பதில்லை.
3.எந்த ஒரு வித்தாக இருந்தாலும் அதன் தோடைப் பிரித்து விட்டால் அதை மண்ணிலே ஊன்றினால் முளைப்பதில்லை.

இதைப் போன்று ஒரு தீமை என்று நமக்குள் வந்தாலும் அந்தத் தீமையின் நிலைகளைப் பிரித்து விட்டால் அது முளைப்பதில்லை (வளர்வதில்லை). இதைத்தான் நம்மை மறைத்திருக்கும் சித்திரை என்ற நிலையை ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நம் உயிரின் தன்மை அதுவும் ஒரு வித்தாகின்றது. ஆனால் அதை மூடி மறைத்திருப்பது உடல்… இதுவும் சித்திரை தான்…! அதாவது பல அணுக்களின் நிலைகள் கொண்டு உணர்வின் தன்மை உடலாகி… உயிரினை உள்ளடக்கி அதை மறைத்துள்ளது.

ஆகவே ஒரு வித்திற்குள் இருக்கும் உணர்வின் சத்து தனக்குள் எதனை வளர்த்துக் கனியாக ஆனதோ அதை மண்ணிலே ஊன்றினால்
1.அந்த வித்தின் மேல் தோட்டைப் பிளந்து
2.தன் உணர்வின் சத்தினை வெளியே நீட்டி
3.தன் தாய்ச் செடியின் சத்தை அது நுகர்ந்து தன் இனத்தின் சத்தை அது வளர்க்கின்றது.

அதைப் போன்று தான் நமக்குள் மறைந்திருக்கும் உயிர் ஒளியாக இருக்கின்றது. இந்த வாழ்க்கையில் மற்ற உணர்வுகள் சித்திரையாக மறைத்திருக்கின்றது. அதை நீக்கி ஒளியின் உணர்வை நாம் நுகரப் பழக வேண்டும்.

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் அதை எல்லாம் இராசிகள் என்று சொல்வார்கள்… வருடம் தோறும் அந்தச் சுழற்சிகள் வரும். அந்தந்த இராசியின் நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு நம் பூமியில் பரவும். ஆக சித்திரையால் மூடப்பட்டு அது செயல்படுகின்றது.

ஒரு வித்தை நாம் பூமியிலே ஊன்றும் போது அந்தப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அச்சித்திரையை (மேல் ஓடை) விலக்கித் தன் உணர்வின் சத்தை வெளிப்படுத்தி அந்த உணர்வின் சத்தால் அது விளைகின்றது.

இதைப் போன்று தான்
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் தனக்குள் வித்தாகும் போது
2.அது மறைத்திருக்கும் அந்த ஓட்டிலிருந்து நீட்டி… எத்தகைய தீமையின் நிலைகளையோ
3.அந்த உணர்வின் தன்மை பிளந்து தன் உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்க்கத் தொடங்குகிறது.

ஆனால் அது சித்திரையாக மறைத்திருப்பினும் அதை மாற்றி அமைக்க
1.நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு ஒளியின் சத்தை நாம் கவரும் நிலை வரப்படும் போது
2.தீமையான உணர்வின் சத்தைப் பிளந்து ஒளியின் சிகரமாக நமக்குள் வளர்க்க இது உதவும்.

பல கோடிச் சரீரங்களில் அந்தந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி நீக்கி… மறைக்கும் தீமைகளை அகற்றி அகற்றித் தீமைகளை அகற்றிடும் தன்மை கொண்டு நாம் மனிதனின் நிலைகள் இன்று அடைந்துள்ளோம்.

இதனின் நிலைகள் கொண்டு…
1.உயிர் எப்படி ஒளியானதோ நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை கனியாக்கி கனியின் தன்மை முழுமையாகும் போது
3.ஆறாவது அறிவு ஏழாவது நிலை அடைகின்றது… சப்தரிஷி.

நம் ஆறாவது அறிவைச் சிருஷ்டிக்கும் உணர்வின் ஒளியாக வாழ்ந்திடும் நிலையைத் தான் கனிகளை வைத்துச் “சித்திரைக் கனி…” என்று காட்டினார்கள் ஞானிகள்.

உலகம் மாற்றம் அடைந்து கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகினில் தோன்றிய உயிர் அணுக்களுக்கும்… உயிரணுவாய் ஜீவ ஆத்மா கொண்ட உடல் பிம்பம் கொண்ட அனைத்திற்கும்… எப்படி மறு ஜென்மம் ஒன்றுள்ளதோ அந்த நிலை போன்றே
1.இவ்வுலகிற்கும் இவ்வுலகைப் போன்ற வளர்ச்சி நிலை பெற்ற ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஜென்ம நிலை உள்ளது.
2.ஜீவன் கொண்டு தனி ஒரு சக்தி நிலை பெற்ற பெரிய மண்டலங்கள் அனைத்திற்குமே ஜென்ம நிலையுண்டு.

இவ்வுலகம் மாறு கொண்ட நிலையில் கல்கியில் தோன்றிய நாளில் உதித்திட்ட உயிரணுக்களின் செயல் சக்தியினை விளக்கியுள்ளோம்.

கல்கியில் தோன்றிய உயிரணுக்கள்… அன்றிருந்த நிலை ஜீவன் கொண்டு பிம்பக் கூடுகள் பெறும் நிலையில் அதிகச் சதை நிலை கொண்ட எலும்புகளின் வளர்ச்சி நிலையில்லா நிலையில்தான் பிம்ப உருவங்கள் இருந்தன.

கல்கியில் இருந்து தொடர்ந்த நிலை கொண்ட… மாறி மாறி வந்திட்ட ஜென்மத் தொடரில் ஈர்த்த சக்தி நிலைதான் இன்றுள்ள மனிதர்களும்… மற்ற இன வர்க்கங்களின் வளர்ச்சி நிலையும். இந்நிலை போன்றே இவ்வுலக நிலையும்.

1.அதிசக்தி நிறைந்த வளர்ச்சியில் வந்த நிலைதனை
2.இன்றைய வளர்ச்சி கொண்ட இக்கலியின் “செயற்கையின் நிலையினால்”
3.இப்பூமியின் சக்தியையே சிதறும் நிலைப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் நம் பூமியின் தொடர்பு நிலை கொண்ட இச் சூரியனைச் சுற்றியுள்ள மற்ற மண்டலங்களில்… நம்மை ஒத்த மனித பிம்பங்களும் இச்செயற்கையின் நிலையும் அந்நிலையில் இல்லாததினால் அம் மண்டலங்களின் சக்தி நம் பூமியையும் விட மென்மேலும் வளரும் நிலையில் அதிக சக்தி கொண்டதாக உள்ளது.

நம் பூமியும் வளர்ந்து கொண்டு தான் உள்ளது “பலன் இல்லாத நிலையில்…!”

அறிவு வளர்ச்சி கொண்ட… செயலாற்றும் திறமையும் அதற்குகந்த அங்கங்களும் பெற்ற… பிறவியிலேயே உன்னதப் பிறவி பெற்ற இம்மனிதனால் “தன் சக்தியை உணர்ந்திடாமல் வந்ததின் வினைதான்… இன்றுள்ள நம் பூமியின் நிலை…!”

தனக்குகந்த அறிவின் செல்வத்தைப் பேராசைக்கு அடிமை கொண்டு வாழ்வதின் நிலை இன்றைய மனிதனின் நிலையும் இம் மனிதனை வளர்க்கும் பூமிக்கும் உள்ளது.

இன்றைய பாட நிலையிலிருந்து ஜென்ம நிலையை உணர்த்தியதின் நிலை புரிந்ததா…?

இப்பூமியின் பொக்கிஷத்தைத்தான் இக்கலியின் மனிதனின் பேராசைக்காக எடுத்து விட்டீர்கள். இவ்வுலகனைத்தும் உள்ள எண்ண நிலையே இப்பேராசைப் பிடியில் சிக்குண்டு தவிக்கும் நிலையில் உள்ள பொழுது…
1.இந்நிலையில் இருந்து விடுபடும் எண்ணத்தை
2.இவ் உலகனைத்திற்கும் போதிக்கும் சக்தி நிலை இவ் உலகைக் காக்கும் சக்திக்கே இல்லை.
3.உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது.

அழிவு என்னும் நிலையே எதற்கும் இல்லை. எதுவுமே அழிவதில்லை…! மாறு கொண்ட நிலைதான் ஏற்பட்டிடும். மாறு கொண்ட நிலையில் இவ் உடல் என்னும் கூட்டிலிருந்தும் அனைத்து ஜீவராசிகளும் மாறு கொள்ளத்தான் போகின்றன.

எவ்வாத்மாவும் அழிந்திடாது. இவ்வுலகம் மாறு கொண்டு சுழலும் நிலையில் இவ் உடல் கூட்டை விட்டு வெளிப்படும் உயிராத்மாக்களின் நிலைக்காகவே இந்நிலையில் அளித்திடும் பாட நிலைகள் எல்லாம்…!

இப்பூமியில் வாழ்ந்திடும் இன வர்க்கங்களைப் போன்ற நிலை மற்ற மண்டலங்களில் மாறு கொள்கின்றது. இவ்வுலக நிலை மாறுபட்டு உயிராத்மாக்கள் இப்பால் வெளி மண்டலத்தில் உள்ள நிலையில் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் இருந்த நிலை கொண்டு மற்ற மண்டலங்களின் நிலைக்குச் சென்று உடல் பெறலாம்.

அந்த நிலைக்காகத்தான் இப்போதனை நிலையும்… இப்பாட நிலையும்…!

இவ்வுலக நிலை மாறு கொள்ளும் நிலை நெருங்குவதினால் இந்த நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் ஆத்மீக நெறிக்கு வந்து அந்நிலையின் மூலமாக மீட்சி பெறுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கர்ப்பமாக இருக்கும் பொழுது முதல் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் தாய் உற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள் குழந்தைக்குப் “பூர்வ புண்ணியமாக” அமைகிறது.

பிறர் தவறு செய்வதைப் பார்த்து நியாயத்தைப் பேசியிருப்போம். நுகர்ந்த அந்த உணர்வு இரத்தத்தில் கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்குப் போய்விடுகின்றது.

அப்படிப் பிறந்த குழந்தைகளைப் பாருங்கள். எந்தத் தவறைச் செய்தாலும் அந்தத் தவறை நுகர்ந்தாலும் அதே தவறான நிலைக்கே போகும்.

ஒருவன் திருடனாக இருப்பான். ஏண்டா… இப்படி இருக்கின்றாய்…? என்று கேட்போம். கேட்கவில்லை என்றாலும்
1.அவன் செயலைப் பார்த்தவுடன் கருவிலே விளைகிறது.
2.ஏனென்றால் இந்தக் “காந்தம்” இதை இழுத்துக் கொண்டே இருக்கும்.
3.உணர்வை நுகரச் செய்கிறது.
4.அப்படியே கருவிலிருக்கும் குழந்தைக்குள் விளைகிறது.

அது பிறந்தபின் என்ன செய்கிறது…?

நாம் பிறருக்கு நியாயத்தைச் சொன்னோம். அதே மாதிரித் தவறு செய்ய ஆரம்பித்துவிடும். உங்கள் குழந்தை இந்த மாதிரித் தவறு செய்கிறது என்று யாரிடமும் நீங்கள் சொல்ல முடியாது.

காரணம் (திருடனைப் பார்த்து) நாம் கேட்ட உணர்வுகள் தான்.

ஆகவே “கர்ப்பம்” என்று தெரிந்தால் எப்படி இருக்க வேண்டும்…? எதை எண்ண வேண்டும்…?

அன்றைய காலங்களில் ஞானிகள் தெய்வ குணங்களை உருவம் அமைத்து அதன் நிலைகளைக் காட்டியிருப்பார்கள். நாம் அந்தத் தெய்வப் படங்களை வீட்டிலும் மாட்டியிருக்கின்றோம்.

1.“மகாலக்ஷ்மி” போல் என் குழந்தை அழகாக இருக்க வேண்டும்.
2.“மகா சரஸ்வதி” போல் என் குழந்தை நல்ல ஞானத்தைப் பெற வேண்டும்.
3.மிருக நிலையிலிருந்து மனிதனாகத் தோன்றிய “வினைகளுக்கெல்லாம் நாயகனான… அந்த விநாயகன்” முழு முதல் கடவுளாக இருக்கின்றான். அதே மாதிரி என் குழந்தை நல்லதை உருவாக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஞானிகள் சொன்ன இந்த முறைப்படி யாராவது நாம் நினைக்கின்றோமா…!

கற்பூர ஆராதனை செய்கிறோம். அடுத்து என் பையன்… “இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கின்றானே…” என்று குறைபாடுகளை எண்ணித்தான் அழுகின்றோம்.

ஞானிகள் எத்தனையோ வழிகளில் திருத்துவதற்கு வழி கொடுத்திருக்கின்றார்கள். அதன் வழிகளில் போவதில்லை. நாம் வேதனையான உணர்வுகளைத்தான் கவர்கின்றோம்.

தீபாராதனை கொடுக்கும்போது கூட… குழந்தைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… பெற வேண்டும்… என்று எண்ண முடியவில்லை.

காரணம் இதையெல்லாம் மறைத்து விட்டார்கள். அதனால் எடுக்க முடியவில்லை.

எல்லாம் நன்றாக இருப்பார்கள். ஆனால், “என் குழந்தை இப்படி இருக்கிறதே…” என்ற உணர்வுகளை எண்ணி எடுப்பார்கள்.

இது போன்ற நிலைகளை நீக்க வேண்டுமென்றால் உங்களுடைய குடும்பமே ஒரு தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். கர்ப்பமுற்ற பெண்களை அருள் ஞான நூல்களைப் படிக்கச் செய்யுங்கள்.

பிறரைப் படிக்கச் சொல்லி செவி கொடுத்துக் கேட்கச் செய்யுங்கள். அருள் ஞானவழி வயிற்றில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதனால்… பிறக்கும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாகப் பிறக்கும். குடும்பத்தில் சாப அலைகளை நீக்கும் அருள் சக்தியும்… உலகத்தை ஞானத்தின் வழி அழைத்துச் செல்லும் நிலையும்… குடும்பத்தில் தொழில் வளத்தைப் பெருகச் செய்யும் நிலையும்… கருவில் உள்ள குழந்தை பெற்று “அருள் ஞானியாக” உருவாவான்.

நல்லது நடக்க வேண்டும் என்று ஆசையை மட்டும் கூட்டுவதைக் காட்டிலும் அதைச் செயல்படுத்தும் மார்க்கம் மிக மிக முக்கியமானது

 

எனது எண்ணத்தில் நான் அதீதமாக ஆன்மீக நிலைகள் பெற வேண்டும் என்று ஆசையை வைத்துக் கொள்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.

அதை ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்து விட்டால்… அந்த ஆசையில் அதைப் பெறுவேன் என்ற எண்ணம் கொண்டாலும் அந்த ஆசை ஒன்றேதான் தனக்குள் மிஞ்சுகின்றது.

ஆனால் அதை நான் பெறும் தன்மையை எதன் வழி…? என்ற நிலைகளை இழந்து விடுகின்றேன்

நான் எண்ணியபடி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அந்த சக்தியின் தன்மை ஒன்றேதான் நினைவில் இருக்கின்றதே தவிர அந்தச் சக்தியை எவ்வழியில் பெற முடியும்…? என்ற நிலைகளில்
1.எனது குருநாதர் காட்டிய நிலைகளை நான் இழந்துவிட்டால்
2.அதை நான் பெறுவது மிகவும் கடினம்.

இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனிடமும் எத்தனையோ ஆசைகள் வருகின்றது எத்தனையோ நிலைகள் விளைகின்றது…. இந்த வாழ்க்கையில் ஆசைப்பட்டபடி தான் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.

அப்படி எண்ணினாலும் அதே சமயத்தில்
1.அவருடைய எண்ணத்திற்குள் அவரின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் சித்திரை…
2.அடுத்து எதிர்ப்பக்கம் என்ன வருகிறது…? என்று சிந்தனையற்ற நிலைகள் இருப்பார்கள்.

அது மறைத்திடும் பொழுது அதனின் நிலை இல்லாதபடி இவர் ஆசைப்பட்டபடி வாழ்க்கையில் நடக்காது அந்த நல்ல உணர்வுகளும் மறைந்து விடுகின்றது.

அதனைத்தான் “இந்தச் சித்திரையை” (இடைமறிக்கும் தீமைகளை) நீக்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.

உதாரணமாக ஒரு வியாபாரத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோம். அப்போது வியாபாரத்தில் லாபம் வர வேண்டும் என்ற ஒரே நோக்குடனே செல்கின்றோம்.

ஆனால் அது எந்த காலப் பருவம்…? என்ற நிலைகளைத் தெரியாது “வியாபாரம் செய்ய வேண்டும்…” என்ற அந்த நோக்கம் ஒன்றுதான் நமக்குள் வருகின்றது

காலத்தை அறியாதபடி பொருள்களை வாங்கி வைத்து விட்டால் யாரும் வாங்கமாட்டார்கள். யாருமே வாங்கவில்லை… வியாபாரம் நடக்கவில்லை… என்றால் அங்கே அந்த உணர்வின் தன்மை
1.நாம் ஆசைப்பட்ட நிலைகளை இடைமறித்து அதை மறைத்துவிடுகிறது…
2.சித்திரையாக அது வந்து விடுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் அதைக் காக்கும் நிலையற்று நாம் போகும் பாதையையே அது தடைப்படுத்திடும் சக்தியாக வந்து விடுகின்றது.

இதைப் போல சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் எத்தனையோ உணர்வுகள் சித்திரையாக நம்மை மறைத்து விடுகின்றது. இதைக் குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நோக்கம் கொண்ட நிலையில் வருவார்கள். அவர்களுடைய எண்ணம் அதுவாக இருந்தாலும்
1.அவருடைய சந்தர்ப்பம் சூழ்நிலை அங்கிருக்கும் நிலைகளைத் தெளிவாக்கி
2.இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வினை நீ அவர்களுக்குத் தெரியப்படுத்தினால்
3.அருள் உணர்வுகளை அவர்களுக்குள் விளைவிக்கும் சந்தர்ப்பத்தை நீ ஏற்படுத்தினால்
4.உனக்குள் இருக்கும் நிலைகளை உன்னில் தெரிந்திடும் நிலைகள் வரும்.

ஆகவே… கேட்போர் உணர்வுகளில் அருள் ஞானத்தைப் பதிவு செய்து… அறியாத நிலைகள் கொண்டு அவர்கள் நல்ல உணர்வுகளை மறைத்திருக்கும் சித்திரையை நீக்கி…
1.அவர்கள் உணர்வின் தன்மை ஒளி பெறும் சக்தியாகவும்
2.கனியின் தன்மை பெறும் நிலையாகவும் நீ உருவாக்கு…! என்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

மனிதனின் தெய்வீக சக்தியை ஒவ்வொருவரும் உணர வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனித உடலுக்குத்தான் பல நிலை கொண்ட அமில சக்தியும் காந்த சக்தியும் கலந்த நிலை நிறைந்துள்ளது. இவ்வுடலுடன் பல அணுக்களின் நிலையும் ஏறி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலையும் குண நிலையும் உண்டு.

நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திடும் நிலை கொண்டு
1.எந்த நிலைக்குகந்த எண்ண சக்தியை ஈர்க்கின்றோமோ
2.அந்த நிலைக்குகந்த சக்தியுடன் கூடிய நிலைகளை எல்லாம் இவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்திடலாம்.

இன்றைய செயற்கையில் விஞ்ஞான நிலைப்படுத்தி இரசாயன முறையில் பல செயல்களைச் செய்கின்றனர்.
1.ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவும் ஒன்றுடன் ஒன்றைச் சேர்க்கவும்
2.பல நிலைகளை இன்றைய விஞ்ஞானத்திலும் செயலாக்குகின்றனர்.

விஞ்ஞான சக்திக்கும்… மெய் ஞான சக்திக்கும்… அனைத்திற்குமே… இக்காற்றிலிருந்து நமக்குக் கிடைத்திடும் சூரியன் அளித்திட்ட அமில சக்தி கொண்டுதான் இவ்வுலக சக்திகள் செயல்படுகின்றது.

அதன் மூலம் நம் ஆத்மாவின் துணையினாலே..
1.நம்முள்ளே அனைத்து சக்தியையும் ஈர்த்துச் செயல் கொண்டிடும் “உன்னத தெய்வீக அருள் கொண்ட நாம்…”
2.இன்றைய கலியில் மிகவும் ஈன நிலையில் அடிமை கொண்ட பேராசையில்
3.இக்குறைந்த வாழ் நாட்களை விரயம் செய்தே வாழ்கின்றோம்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இன்றைய விஞ்ஞானத்தில் கண்டிட்ட சக்தியின் நிலைக்கு மேலே “இவ்வாத்மாவின் சக்தியை ஈர்த்தே…” பல நிலைகளை ஒவ்வொருவரும் செயலாக்கிட முடியும்.

பண்டைய காலம் தொட்டே பல ரிஷி நிலை கொண்ட தேவர்கள் எல்லோரும் அவர்கள் இப்பூமியில் வாழ்க்கையுடன் வாழ்ந்திட்ட நாட்களில்… அவர்களால் உணர்த்தப்பட்ட… பதிவு செய்வித்த அனைத்து உண்மை நிலைகளையுமே… இன்றுள்ள இக்கலியின் எண்ணத்திற்குச் செயல்படுத்திட முடியாத வண்ணம் பல நிலைகள் மறைக்கப்பட்டன.

நம் எண்ண நிலையை ஒரு நிலை கொண்டிட்டால் அவர்களின் துணையுடனே பல நிலைகளை நாம் இன்று பெறலாம்.

தாவரங்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு தாவரமும் ஒரே நிலை கொண்ட சக்தியைத்தான் (அமிலம்) ஈர்த்து வளர்கின்றது. சில வகைத் தாவரங்களின் நிலையுடன் சில அமிலங்களைக் கலக்கும் போது இப்பூமியில் இருந்து நாம் எடுத்திடும் கனி வளங்களைப் போன்ற பல வகை உலோகங்களை நாம் செய்திடலாம்.

தங்கம் தாமிரம் ஈயம் செம்பு இப்படிப் பல நிலைகள் நாமே செய்திடலாம். செய்து என்ன பயன்…? இப்பேராசையை வளர்க்கும் நிலைதான் ஏற்படும்.

தாவரங்களைப் போன்றே சில ஊரும் நிலை கொண்ட அட்டை என்னும் இன வர்க்கத்தை உடைய புழுவும் இன்னும் சில புழுக்களும் ஒரே அமில சக்தியை ஈர்க்கும் நிலையுடையதாக உள்ளன.

அந்த அட்டைப் புழுவின் நிலையெல்லாம் தாமிர சக்தியை ஈர்த்து வளர்ந்த நிலை. இவ்வுலகினில் இப்படிப் பல நிலைகள் உள்ளன. எத்தகைய விஷத்தையும் எடுத்திடும் தாவர வர்க்கங்கள் பல உள்ளன.

அனைத்து நிலைகளுக்கும் குறிப்பு நிலைகள் நம் சித்தர்களால் பதியச் செய்து மறைக்கப்பட்டுள்ளன.

அது எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற சாதாரண நிலையில் அந்த எண்ணத்தின் நிலைக்கு நாம் அடிமைப்பட்டிடலாகாது என்பதற்காக… “பல நிலைகளை மறைத்தே வெளிப்படுத்துகின்றோம்…!”

இருந்தாலும் சக்தியின் நிலையில்…
1.இம் மனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை உணர்த்திடவே
2.சில குறிப்புகளை இங்கே வெளிப்படுத்தினோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“ஈசன் நமக்குள் இருக்கும்போது… அவனை மதித்துப் பழகுங்கள்” அவனை மதிக்காமல் உடலே பிரதானம் என்றால் வேதனை தான் வரும்

விஞ்ஞானி எத்தனையோ வகையில் இன்று நிரூபிக்கின்றான்.

முப்பது நாற்பது வருடத்திற்கு முன்பே 2000 சூரியக் குடும்பங்கள் இருக்கிறது. ஒரு வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளது என்று சொன்னோம். இப்பொழுது ஒரு சூரியக் குடும்பம் இருக்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டு கொண்டுள்ளார்கள்.

அதிலே நம் பிரபஞ்சத்திலிருப்பது போல் வியாழன் கோள் இருக்கிறது… இதே மாதிரி ஒன்பது கோள்கள் சுற்றிக் கொண்டு வருகிறது என்று இப்பொழுது தான் கண்டுபிடிக்கின்றார்கள்.

அங்கே என்னென்ன நடக்கின்றது…?

சில சூரியக் குடும்பங்களில் மொட்டைத் தலையுடன் இருக்கின்றார்கள். சில சூரியக் குடும்பங்களில் நம்மைக் காட்டிலும் வீரிய உணர்வுடன் இருக்கின்றார்கள்.

ஆனால் நம் சூரியக் குடும்பத்தில் மற்ற எட்டுக் கோள்களில் கிருமிகள் உண்டு. செவ்வாய்க் கோளில் நீர் சக்தி இருக்கிறது என்கிறார்கள். அது முழுமை கிடையாது.

உணர்வின் நாதங்களை இயக்கி அந்த நாதத்திற்குத் தக்க அணுக்கள் உருவாகி அணுக்கள் மடிந்து பிரபஞ்சத்திற்கு வந்து இந்தப் பூமியில் தாவர இனங்களில் படுகின்றது.

அப்படிப் படும்போது “பிரணவம்” ஒரு இயக்கச் சக்தியின் உணர்வை எடுத்து இதற்குள் இதைக் கடந்து இங்கே வளர்த்தாலும் இங்கே மனிதனுக்குள் அணுத்தன்மை வளர்க்கும் வருகின்றது.

ஆனால் இந்தக் கோள்கள் உருவாக்கக்கூடிய கிருமிகள் அது மீண்டும் உமிழ்த்திக் கக்கி வரப்படும்பொழுது நம் பூமி கருப்பையான நிலைகளில் அதைக் கவர்ந்து அதை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

ஒன்பது கோள்களின் உணர்வு 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் பெற்றது.

அதிலே எதிர் நிலையாகி நெகடிவ் பாசிடிவ் என்ற நிலைகளில் புலனறிவு ஐந்து.
1.ஐந்து நட்சத்திரங்கள் சேர்ந்து ஒன்று
2.ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்து ஒன்று
3.”ஏழு நட்சத்திரங்கள்…” சேர்ந்து ஒரு உணர்வின் தன்மை ஆகும் பொழுது “ஒளியின் உணர்வு” வருகின்றது.
4.மனித உடலில் ஏழு நட்சத்திரத்தின் உணர்வை ஒலி எழுப்பி இதனின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.

மனித உடலில் எப்படிக் கருப்பை இருக்கின்றதோ அதே போல் நம் பிரபஞ்சத்தில் நம் பூமி ஒரு “கருப்பை” கொண்டது என்பதை உணர வேண்டும்.

யாம் சொல்வதை எல்லாம் அடுத்தாற் போன்று விஞ்ஞானி சொல்வான். இப்பொழுது ஒரு சூரியன் தான் என்று சொல்கிறான். அடுத்து 2000 சூரியன் இருக்கின்றது என்று சொல்வானா…! என்றால் முடியாது.

அவன் இருப்பானா…? நாம் இருப்போமா…! தெரியாது. எழுதி வைத்ததை மீண்டும் அடுத்துக் கண்டுபிடிப்பார்கள். இதையெல்லாம் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை நம்புங்கள். உங்கள் அம்மா அப்பாவைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். அவன் வீற்றிருக்கும் ஆலயம் உங்கள் உடல் என்று எண்ணுங்கள்.

தீமை வந்தால் உடனடியாகச் சுத்தப்படுத்தப் பழகுங்கள். யாம் உபதேசித்த அருள் உணர்வுப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

1.அருள் உணர்வைப் பெருக்குங்கள்.
2.உங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்களே பார்க்க முடியும்.
3.பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும்.
4.அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் உங்களால் உணர முடியும்.
5.எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வும் வரும்.
6.அதை வைத்து உங்கள் எண்ணத்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நிச்சயம் அடைய முடியும்.

தியானத்தின் அடிப்படை முறையும்… அதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டிய சரியான யுக்தியும் – பயிற்சி

 

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன்… “உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள்…” அவர்கள் தான் உங்களைக் காத்திடும் எண்ணங்கள் கொண்டு செயல்படுத்துபவர்கள்.

அந்த அரும் பெரும் சக்திகள் எத்தனையோ இந்தக் காற்று மண்டலத்தில் பரவி உள்ளது அவர்கள் உணர்வில் பதிவு செய்தது உங்கள் உடலிலும் ஆற்றல்மிக்க சக்தியாக உள்ளது.

அதன் துணையாகக் கொண்டு…
1.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்… உங்கள் கண்களைத் திறந்து.
2.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்
3.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவாத்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா இப்படி ஐந்து முறை கண்களைத் திறந்து ஏங்குங்கள்.

பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெற அருள்வாய் ஈஸ்வரா உள்முகமாக உங்கள் உடலுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள். இவ்வாறு ஐந்து முறை எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெற அருள்வாய் ஈஸ்வரா கண்களை மூடி ஐந்து முறை மீண்டும் நினைவைச் செலுத்துங்கள்.
1.உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்களைத் திறந்து மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…
3.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சொல்லி
4.ஒரு ஐம்பது தரமாவது எண்ணிச் சுவாசியுங்கள்.

இதே போல் கேன்சரோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் சரி… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள கேன்சர் நோய் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் என்று முந்நூறு தரமாவது முதலில் சொன்ன மாதிரிச் சுவாசித்து அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
1.இந்த நோய் தன்னாலேயே போய்விடும்.
2.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் சரி இந்த மாதிரிச் செய்யுங்கள்.
3.மருந்து சாப்பிடுவதற்கு முன்பு இதே மாதிரிச் செய்யுங்கள்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் மருந்து சாப்பிட்டுப் பழக்கமாகிப் போய்விட்டது. அதைச் சாப்பிடும் போது மகரிஷிகளின் உணர்வை எண்ணிக் கொண்டு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தச் கேன்சருக்கெல்லாம் இன்று மருந்தே இல்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் ஒரு ஆயிரம் தராமவது இப்படிச் சொன்னால் அதன் மூலம் அதை நீக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஆயிரம் தரமாவது நீங்கள் எண்ணி அதைச் சுவாசித்தீர்கள் என்றால் நிச்சயம்
1.உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி உங்கள் உடலுக்குள் வலுப் பெற்று
3.அந்தக் கேன்சரையே “கேன்சல்…” செய்துவிடும்

அத்தகைய சக்தி உங்கள் எண்ணத்திற்கு உண்டு. நீங்கள் எண்ணும் எண்ணங்கள் உங்கள் உடலுக்குள் சென்று அந்தக் கேன்சரை நீக்கிவிடும்.

இதைப் பழக்கப்படுத்தினால் உங்கள் எண்ணங்களுக்கு மிக மிக வலிமையான ஆற்றல்கள் கூடும். அத்தகைய நிலை பெறச் செய்வதற்கே இந்தத் தியானப் பயிற்சி.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதைக் கடைப்பிடிக்க நோய் நீக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

1.சாதாரணமாகச் சொல்கின்றேன்…! என்று யாரும் எண்ண வேண்டாம்.
2.உங்களுக்குள் அந்தச் சக்தி பெருகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு வாக்கின் மூலம் பதிவாக்குகின்றேன்.

ஒவ்வொரு மனிதனும் தன் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்.

நண்பனுக்கு நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நூறு முறை சுவாசித்து விட்டு
1.உன் நோய் நீங்கி விடும்
2.நலமாக இருப்பாய் என்று சொல்லுங்கள்.
3.இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

அவர் நோயால் அவதிப்படுகிறார் என்பதைக் கேட்டுணர்ந்தாலும் சோர்வடையாது மீண்டும் நூறு தரம்
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்
4.மகரிஷியின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
5.அவர் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
6.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

நீங்கள் இந்த உணர்வை எண்ணினால் கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.மற்றவர்கள் நலமாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது
2.நலமடையும் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.

தீமைகளை அகற்றும் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்க்கப்படும்போது தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

அந்தத் தீமையை அகற்றும் ஆற்றல்களை நாம் பெற்றால் தான் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் பிறிதொரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி மகரிஷியின் அருள் வட்டத்திற்குள் செல்ல முடியும்.

அங்கே சென்று உடல் பெறும் நிலையைக் கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிச்சயம் பெற முடியும்.

1.ஏதோ… எளிதில் சொல்கின்றேன்… எளிதில் கிடைக்கச் செய்கிறேன் என்று
2.அலட்சியப்படுத்தி விடாதீர்கள்… அது உங்களுடைய இஷ்டம்.

நீங்கள் பெற வேண்டும் என்று நான் சதா தியானிக்கின்றேன். எனது குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

குரு அருளால் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் தீய வினைகள் நீங்க வேண்டும் என்றும் உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது சேர்ந்த தீமைகளை நோய்களை “நீங்களே நீக்க முடியும்…” என்ற அந்தத் தன்னம்பிக்கையில் செயல்படுங்கள்.

உணவை உட்கொள்ளும் போதும் உணவில் கை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு பின் உட்கொள்ளுங்கள்.

அந்த அலைகள் அந்த உணவுக்குள் பாயும். சிறிது நேரம் ஆகாரத்தில் கையை வைத்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று குறைந்த பட்சம் பத்து தரமாவது எண்ணுங்கள்.

நாங்கள் உணவாக உட்கொள்ளும் இந்த உணவு அனைத்தும்
1.எங்கள் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும்.
2.மன பலம் மன வளம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் உணவை உட்கொள்ளுங்கள்.
3.இந்த உணர்வின் உமிழ் நீர் சுரக்க சுரக்க
4.இந்த உணர்வுகள் சத்துள்ளதாகக் கூடி
5.உங்களுக்குள் நல்ல சக்தியாக நலம் பெறச் செய்யும் சக்தியாக வளர இது உதவும்.

இதை நீங்கள் பயிற்சியாகச் செய்து உங்கள் அனுபவத்தில் நல்ல முன்னேற்றங்களைப் பார்க்கலாம்.

இனம் இனத்துடன் தான் சேரும் – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகம் இன்றுள்ள நிலைக்கொப்ப இக்கலியின் நிலைக்கேற்ப ஆத்மீக நெறியைப் போதிக்கும் நிலையும்… அவ்வழிக்கு வழி நடந்திட வந்திடும் நிலையும்… கால நிலைபோல் மாற்ற நிலையில் உள்ளன.

இப்போதனை நிலையே பல நாட்களுக்கு முதலில் பின் நோக்கிச் சென்றிட்ட அன்று வாழ்ந்திட்ட எண்ண நிலைக்கொப்ப வழி முறைகள்தான் இவ்வாத்மீக நெறி முறையுடன் கலந்துள்ளன.

இன்று நாம் வாழ்ந்திடும் இக்கலியுகத்தில் நாம் வளர்ந்து விட்ட நாகரிகத்துடன் ஒன்றியுள்ள நிலையில் இவ்வாத்மீக நெறியை எந்நிலையில் ஏற்று வழி நடந்திடல் என்பதனை உணர்த்திடவே… இப்பரந்துள்ள உலகில் ஈஸ்வரப்பட்டராகிய யான் “என் பூர்வ ஜென்மத்தின் தொடர்பு கொண்டவர்கள் மூலமாகத் தான்…” இந்தப் பேருண்மைகளை இங்கே போதனைப்படுத்திட முடிந்தது.

இந்த நிலைக்கு ஒப்பத்தான் இவ்வுலகு அனைத்திலுமே…!

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட ஒரு நிலைப்பட்ட சக்திகள்தான் ஒன்றுபடுகின்றன
2.இனம் இனத்துடன் எப்படிக் கலக்கின்றதோ அந்த நிலை போன்றே…!

எந்த இனமும் தன் இனத்துடன் மற்ற நிலை மோதும்போது “சத்ரு… மித்ரு…” நிலை ஏற்பதில்லையோ அந்த நிலை போன்றே இவ் உலகில் இவ்வெண்ண நிலைக்கும் தொடர்பு நிலை உள்ளது.

இத்தொடர் நிலை கொண்டுதான் பிறப்பும் இறப்பும் உள்ளன. இந்த ஜென்மம் மறு ஜென்மம் அனைத்துமே இக்கலியில் மனித ஜென்மங்களாய் அறிவாற்றலும் நற்செயலைச் செயல்படுத்திடும் அங்கங்கள் பெற்றிட்ட நாம் நமக்குகந்த நம் உடலுடன் உள்ள இக்காந்த சக்தியை அறிந்திடாமல் நம் கால நிலையைக் களிப்பு நிலை என்ற உல்லாச நிலைக்கு அடிமைப்படுத்தி நம் ஆத்மாவை அடிமையாக்கி வாழ்கின்றோம்.

இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான யுகத்திற்கு வேண்டிய சக்தி அனைத்துமே இக்காற்றில் உள்ள காந்த சக்தியை ஈர்த்து இன்றைய மின்சாரமாகவும் இன்னும் இப்பூமியிலிருந்து ஈர்த்தெடுத்த திரவத்தைக் கொண்டு பல மண்டலங்களுக்குச் சென்றிடும் பல கோளங்களைச் செய்வித்தும் செயலாக்குகின்றனர்.

நம் எண்ணத்தில் நம்மையும் விட இயந்திரத்தின் சக்திக்கு அடிமைப்பட்டிடும் நிலையான வாழ்க்கை இக்கலியில் உள்ளது.

பல நிலைகளைப் புகைப்படமாக எடுக்கின்றீர். பல நாட்களுக்குப் பிறகு பழைய நினைவுகளை காண்பதற்கே. பதிவேட்டில் நம் சப்த அலைகளைப் பதித்துக் கேட்கின்றீர்.

ஆனால் இன்று இயந்திரத்தின் உதவியுடன் செயற்கையாகக் காணும் இந்த நிலைகள் அனைத்துமே நம் ஆத்மாவின் சக்தியில் (நம்மிடம்) உள்ளன.

இன்று எடுக்கும் மின்சாரத்திற்கு காந்தத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு அச்சக்திகளை ஈர்த்து நமக்கு ஒளியை அளிக்கின்றது. இவ்வுடல் என்னும் கூட்டில் நாம் அங்கமாகப் பெற்றிட்ட நாம் செயல்படுத்திடும் நம் கைகளுக்கு அக்காந்த சக்தி நிறைந்துள்ளது.

“நம் ஆத்மாவின் நிலையினை நாம் உணர்ந்தால்…” இவ்வுலகனைத்தும் தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை அனைத்து நிலைகளையுமே நாம் பிம்பமாக எந்த நிலையை எண்ணுகின்றோமோ அந்நிலையின் ஆரம்ப நாள் தொட்டு இன்று நடக்கும் நாள் வரை ஒளிக் காட்சிகளாகக் கண்டிடலாம். சப்த அலைகளையும் அந்நிலையிலேயே கண்டிடலாம்.

1.நம் ஆத்மாவுடன் கூடிய காந்த சக்தியை நாம் எவ்வெண்ணம் கொண்டு ஈர்த்து எடுக்கின்றோமோ
2.அவ்வெண்ணத்தின் சக்தி அனைத்தும் தொடர் நிலையாக நாம் அறிந்திடலாம்.
3.இவ்வெண்ண நிலையின் பிறவி நிலையிலும் இத்தொடர் நிலையுள்ளது.
4.அவ்வெண்ணமேதான் அனைத்து நிலைகளுக்கும் முதல் நிலை.
5.இவ்வெண்ணத்தின் நினைவுடன் நாம் எடுக்கும் சுவாசமேதான் நம் ஆத்மாவின் செயல்நிலை.

ஆகவே… ஒவ்வொருவரும் இவ்வுலக சக்தியினை இவ் உடல் என்னும் கூட்டில் உள்ள நம் ஆத்மாவின் ஜோதியையே நற்சக்தியாக்கிடும் நிலைப்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டவன்… தவ வலிமை கொண்டவன் அனைத்தையும் அறிந்துணர்ந்தவன்… கூடு பாயும் வித்தைகளை எல்லாம் தெரிந்தவன் என்ற நிலையில் அன்றைய அரசர் காலங்களில் நிறையப் பேர் உண்டு.
1.பிறருடைய எண்ணங்களைத் தன் மந்திரத்தால் அறிந்துணர்ந்து
2.இன்னொரு உடலுக்குள் புகுந்து அந்த உடலுக்குள் நின்று
3.பலருடைய ஆற்றல்களையும் சக்திகளையும் பெற முடியும் என்று இருந்தவர்கள் பலர்.

அந்த அளவிற்குச் சென்றாலும் ஒரு உடலுக்குள் ஊடுருவி பாம்பு உடலிலோ மற்ற மனிதனின் உடலிலோ சென்றாலும் இந்த உடலில் வாழப்படும் பொழுது அந்தச் சந்தர்ப்பத்திற்கோப்ப கடினமான நிலைகள் வந்தவுடன் என்ன ஆகின்றது…?

இப்பொழுது சாதாரண மனிதன் தான் வளர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு அதே நிலைகளில் ஏங்கியிருந்தால் இங்கே செல்லும்.

முதலிலே கூடுவிட்டுக் கூடு பாய்ந்துவிடலாம். ஆனால் அதிலிருந்து புகுந்த உடலில் அவன் எடுத்துக் கொண்ட அசுத்த நிலைகள் மறுபடியும் கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகள் அந்தச் சக்திகள் இழந்துவிடுகின்றது.

மறு கூட்டினுடைய நிலைகள் கொண்டு எந்த உடலைப் பெறுகின்றதோ அந்த உடலின் உணர்வின் சக்தி கலக்கப்பட்டு அந்த உணர்வின் ஆன்மா தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகத்தான் ஆகின்றது.

அப்படித் தேய்ந்துதான் இன்றும் பல வித்தைகளைச் செய்கின்றது. இன்று நாம் பார்க்கலாம்.
1.பலர் அருளாடுகின்றார்கள்…,
2.பல சித்தர்கள் இவர் உடலிலிருந்து செயல்படுகின்றார்கள் என்று சொல்வார்கள்.

இந்த உடலிலிருந்து செயல்பட்டாலும் இந்த உடலுக்கொப்ப ஆசைகள் தூண்டப்பட்டு இன்றைய வாழ்க்கைக்குக் காலத்தை வேண்டுமென்றால் தள்ளலாம்.

அதே சமயம் “அறிதல்…” என்ற நிலைகளில் முன் கூட்டியே மற்றவைகளையும் மற்றவர்களைப் பற்றியும் அளந்தறிந்து
1.அவர்கள் துன்பத்தையோ நோய்களைப் பற்றியோ
2.அறிந்துணர்ந்து அவர்களால் சொல்லவும் முடியும்.

அப்படிச் சொல்வார்களேயானால் அவர்களுடைய உணர்வுகள் அனைத்தும் இவர் உடலில் சேர்ந்து அந்தத் தீமையான உணர்வின் சத்துகள் இவர் உடலுக்குள் விளையத் தொடங்கும்.

சொல்லும் நிலைகள் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அதே சமயத்தில் பலருடைய துன்பத்தின் நிலைகள் இவர் உடலிலே சேர்க்கப்பட்டு நஞ்சான நிலைகள் கொண்டு அடுத்து நஞ்சான உடல்களாக மாறும் நிலைகள் தான் வரும். மனிதனாகக் கூட மீண்டும் பிறக்க முடியாது.

மந்திரத்தால் மக்கள் மத்தியிலே நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்றும் அந்தத் தாய் செய்கின்றது… இந்தத் தாய் செய்கின்றது…, என்றும் சொல்வார்கள்.

அந்தத் தாய்… என்பது எது?

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியைத்தான் தாய் என்கிறார்கள். அந்தச் சக்தியின் தொடர் வரிசையின் நிலைகள் ஒரு மனிதனுக்குள் எந்த நிலைகள் வளர்த்துக் கொள்கின்றனரோ அந்தச் சக்திகள் செயல்படுகின்றன.

சாமியார் செய்வார் மந்திரம் செய்யும் ஜோதிடம் செய்யும் இயந்திரம் செய்யும் இந்தச் சக்தி செய்யும் அந்தச் சக்தி செய்யும் என்றால்
1.“எந்தச் சக்தியும் செய்யாது”.
2.அவர்கள் மனித ஆசையில் எடுத்துக் கொண்ட சக்தி
3.இந்த மனித உடலில் சிறிது நேரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
4.அடுத்த கணம் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

ஒவ்வொரு மனிதனும் அவரவர் ஆசைக்கொப்ப எத்தனையோ மந்திரங்களைச் சொல்கின்றார்கள்.

இந்த மனித உடலில்
1.ஒவ்வொருவருடைய ஆசை விருப்பு வெறுப்பினுடைய நிலைகள் வெளிப்பட்டு
2.அதனின் நிலைக்கோப்ப எந்தெந்தத் தெய்வங்களை எண்ணுகின்றனரோ
3.அந்த உணர்வின் அலைகளைத்தான் இயக்கச் செய்ய முடியும்.
4.அந்த நிலைகளில் தான் வாழ்க்கை அமைந்திருக்கும்.

இன்னும் அந்த நிலைகளில் தான் நாமும் இருக்கின்றோம்.

இதைப் போன்ற உண்மைகளைத் தெரிந்த பின் நாம் எடுக்க வேண்டிய சக்தி எது…? என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய வேண்டும். “அது தான் ஞானிகள் நமக்குக் காட்டியது”.

சர்வ மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெறுவீர்கள்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே யாம் உபதேசிக்கும் போது அதை எந்த அளவிற்கு அளவு கோல் எண்ணி விகிதாச்சாரப்படி ஏங்கி நீங்கள் தியானிக்கின்றீர்களோ இதன் வழியில் உங்களுக்குள் சர்வ மகரிஷிகளின் உணர்வுகள் பதிவாகின்றது.

அவர்கள் எப்படி ஒளியின் சரீரமாக ஆனார்களோ அதைப்போல தீமையை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளைகின்றது அப்பொழுதுதான் என் குரு காட்டிய நிலைகளை என் குருவை உங்களிடம் காண முடிகின்றது.

அவர் இட்ட வித்தின் தன்மை எதுவோ உண்மை நிலைகள் பரீட்சிப்பது இதுதான். நீங்கள் எல்லோரும் வளர வேண்டும் உங்கள் உயிரான ஈசனின் நிலைகள் அந்த எண்ணத்தின் நிலைகள் கொண்டு அந்த அபிஷேகம் அந்த அருள் ஞானிகளின் உணர்வாக நீங்கள் செயல்பட வேண்டும் என்றுதான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த சக்தியை பெறமுடியும் எண்ணிய நேரத்தில் தீமைகளை அகற்ற முடியும் அந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சிருஷ்டிக்க முடியும்,

தீமைகளை அகற்றுவதும் அதே சமயத்தில் அந்த அருள் உணர்வை ஒளியாக மாற்றுவதும் ஒரே நேரத்தில் தான் இந்த ஆறாவது அறிவு தான்.

தீமைகளை அகற்றும் வலுக்கொண்ட நிலையில் மெய் ஒளியின் தன்மையை நமக்குள் வளர்த்திடும் நிலை தான் ஞானிகள் காட்டிய நிலையில் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது.

தியானப் பயிற்சியாக இதை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறும் தகுதியாக அவர்கள் நினைவின் ஆற்றலாக உணர்ச்சியை உங்களில் தூண்டச் செய்து ஏக்கத்தைப் பெறச் செய்து அதன் வழியில் நாம் அனைவரும் ஏங்கித் தியானிக்கும் இந்த உணர்வின் சத்து அவரவர்கள் எண்ணி ஏங்கிய உணர்வின் அளவுகோல்படி அவர்கள் ஆன்மாவில் சேருகின்றது.

தியான நேரத்தில் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் அருள் ஞான வித்தாக ஊழ்வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது. தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் அனைவருமே உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகள் ஆனாலும் அதைத் துடைத்திடும் வண்ணமே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு அந்த அரும்பெரும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.

சாப வினையோ பாவ வினையோ தீய வினையோ அனைத்தும் உங்களை அணுகாது அதை நீக்கிடும் ஆற்றலாக தீமைகளை அகற்றிடும் நிலையாக இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். தீமைகளை அகற்றிடும் சக்தி பெறுகின்றீர்கள்.

அதை மனதில் வைத்து ஒவ்வொரு நாளும் தியானித்து அரும்பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை உயிராத்மா தன்னிச்சையாக ஈர்க்கும் பக்குவம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

வளர்ந்து வரும் செயற்கையுடன் கூடிய கால நிலையில் ஆவி உலகின் செயலும் நம்முடனே வருகிறது என்பதனை உணர்ந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

1.இன்று வாழ்ந்திடும் மக்களின் (எண்ணிக்கை) அளவை விடவும் அதிகமாக
2.இவ்வாவி உலகில் ஆத்மாக்களின் தாக்குதலினால் இன்றுள்ள மக்களின் வெறியுணர்வு அதிகரித்துள்ளது.

உயிரணுவாய் உதித்து ஆத்மாவுடன் கூடிய ஜீவ நிலை பெற்று ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திடும் வாழ்க்கையிலெல்லாம் நாம் உண்ணும் நிலை கொண்டும்… எண்ண நிலை கொண்டும்… நம்முடன் பல உயிரணுக்கள் நம்முள் நம் உயிர் ஜீவ ஆத்மாவுடன் நம் உடலில் ஏறுகிறது.

அதனால் நம் செயல் எல்லாம் நம் ஆத்மாவுடன் கூடியதாக மட்டும் இருந்திடாமல் பல உயிரணுக்களின் நிலைக்கு ஒத்த சக்தியெல்லாம் நம் உடலில் இருப்பதினால் “பல நிலை கொண்ட சக்தி” நம் உடலுடன் வளர்கின்றது.

ஒவ்வொருவரின் உடலிலும் பல நிலைகள் உள்ளன. நம் ஆத்மாவை நாம் செயலாக்கிட…
1.ஒரே வழியான ஜெபம் கொண்ட வழியை நாம் செயலாக்கும் பொழுது
2.நம் உடலில் உள்ள பல நிலை கொண்ட அணுக்களின் சக்தி குறைந்து விடுகின்றது.

நம் உயிராத்மாவுக்கு நம் பூமியின் தொடர்பு கொண்ட சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை நம் உயிராத்மா தன்னிச்சையில் ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால் அதிலிருந்து வருவதுதான் நமக்குகந்த ஜெப நிலை.

1.பல தீய அணுக்களின் சக்திக்கு அடி பணிந்தே வாழும் வரை
2.தெய்வீக சக்தி நிலையை அடையும் நிலைக்கு நாம் வருவது மிகவும் கடினம்.

நம் உயிராத்மாவிற்கு வேண்டிய சக்தியினை ஈர்க்கும் நிலைப்படுத்தி வாழுங்கால் நமக்கு சப்தரிஷி மண்டலங்களின் தொடர்பிலிருந்து சேமிக்கும் நிலையை எளிதில் பெற முடியும். இது தான் தியானம் என்பது.

இத்தகைய தியானத்தின் மூலம் பல எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டுத் தெய்வீக சக்தியை ஈர்க்கும் நிலை பெற்று விட்டால் பல ஞான வழிகளையும் சித்து முறைகளையும் சப்த ரிஷியின் நிலையையும் நம் உயிரணுவே (உயிர்) ஈர்த்துச் செயல் கொண்டிடும்.

இவ்வுயிர் என்னும் ஜீவக்கூட்டை இருந்த இடத்தில் விட்டுவிட்டு நம் ஆத்மாவுடன் கூடிய சத்து (அமில) நிலையை ஈர்த்துக் கொண்டே பறக்கும் நிலை பெறலாம்.

எந்நிலைக்கும் சென்று நம் ஆத்மாவுடன் கூடிய சத்து நிலையுடன் பிம்ப நிலையையும் ஏற்படுத்தி ஒவ்வொரு மண்டலங்களின் நிலையையும் அறியலாம்.

இக்காற்றுடன் எந்தெந்த ஜென்மங்கள் எடுத்து அச் ஜென்மத்தில் நாம் வெளியிட்ட மூச்சு அலையினால் சப்த அலையின் நிலை கொண்டு பல ஜென்மங்களில் வாழ்ந்த நிலையையும் அறிந்திடலாம். இவ்வுலகினிலும் மற்ற மண்டலங்களின் நிலையை அறிந்திடலாம்.

இவற்றினால் யாது பயன் என்றும் கேட்டிடுவீர்…?

இவ்வுயிர் ஆத்மாவின் சக்தியை இக்காலமுடன் காலமாக இவ்வுடலுடன் கூடிய குறுகிய வாழ்க்கையுடன் சுழல விடாமல் இம் மாற்றம் கொண்டு சுழலப் போகும் “இக்கலியின் நிலையிலிருந்து மீளத்தான் இவ்வழியினை வெளியிடுவதெல்லாம்…!”

நம் சக்தியுடன் பல மண்டலங்களின் சக்தியையும் இணைத்துச் செயல்படுத்திட முடியும். இவ்வழியினை யாவருமே அடைந்திடலாம்

இல்வாழ்க்கையென்னும் பிடியில் பேராசையில் வாழ்ந்திட்டால் செயலாக்குவது கடினம். அன்பு கொண்ட ஆண்டவனாய் வந்திட்டாலே இச்சக்தி நிலையை நம் ஜெபமுடன் பெற்றிடலாம்.

இந்நிலையில் வந்த சித்தர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகொண்டு வந்துள்ளனர். வாழ்க்கையுடன் இன்னலில் இருந்து சலிப்புற்ற நிலையில் வந்த பலர் உள்ளனர்.

1.போகரின் நிலையைப் போல் வாழ்க்கையுடன் கூடிய நிலையில் வருவதுவே மகத்துவம்.
2.கோலமாமகரிஷி தன் சக்தியையே ஆதிசங்கரரின் சக்திக்கு அளித்திட்டார்.
3.ஒவ்வொரு ரிஷியும் ஒவ்வொரு நிலை கொண்டு வந்தவர்கள்தான்.
4.புத்தரின் நிலை அனைத்திற்கும் மாறு கொண்ட வெறுப்பற்ற நிலையில் வந்த நிலை.
5.பல ஞானிகள் வந்த நிலையெல்லாம் குடும்பத்துடன் ஒன்றிய ஆத்மீக நெறி கொண்ட அன்பு வழியில்தான்.
6.இவ்வழி அடைவதற்கே சந்நியாசி நிலை உகந்ததல்ல
7.ஆத்மீக நெறி பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.

இந்நிலைகளை உணர்ந்து ஒவ்வொருவரும் வழி பெற்றிடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையின் நிலைகளில் “உடலின் ஆசைகளைக் கூட்டும்போது” நம் உயிர் ஈசனாக இருந்து அதையே உருவாக்கி அந்த உணர்வின் தன்மைகளை உடலாக்கிவிடும்.

அதன் வழியில் மீண்டும் எண்ணினால் அந்தக் குருவின் வழியில் நமக்குள் உடலின் இச்சைதான் வளரும். அதனின் ஆசை எங்கே செல்லும்…?

இப்பொழுது சிலர் மீடியம் பவரை…ஆவிகள் வைத்து (MEDIUM POWER) சில ஆன்மாக்களை இப்படி இடறி விழுந்தால் அந்த மீடியத்தை வைத்து அபூர்வ சக்தி பெறுவதாகச் செய்கிறார்கள்.

அதில் நம் எண்ணத்தைச் செலுத்தினால்
1.பிறிதொரு ஆன்மா உங்களுக்குள் வந்துவிடும்.
2.அதனின் ஆசைகளையெல்லாம் உங்களுக்குள் வந்து வெளிப்படுத்தும்.
3.அதே உணர்வுகள் உங்களுக்குள் வளர்ந்து விட்டால் அந்த ஆசையின் தன்மையே உங்களுக்குள் விளைவிக்கின்றது.

அதாவது அதனின் வலுவை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஆன்மாக்கள் நமக்குள் வந்துவிடுகின்றது.

ஆகவே உங்களுடைய சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகில் ஒளியின் சுடராக வாழும் அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்ட பின் உங்கள் எண்ணம் உங்கள் நினைவு மகரிஷிகளின் அலைவரிசையுடன் அங்கே செல்ல வேண்டும்.

மகரிஷிகளின் உணர்வை எடுத்துக் கொண்டவர்கள் நீங்கள்
1.மீடியம் (ஆவிகள்) பவர் உள்ள இடத்திற்கு எங்கே சென்றாலும்
2.அது வேலை செய்யாது… இதைப் பார்க்கலாம்.

யாம் சொல்லும் தியானத்தைச் சரியான வழிகளில் செய்து வந்தால் மீடியம் வைத்துச் செயல்படுவோர்கள் “அந்த மீடியம் உணர்வுகள்” என்று அவர்கள் உடலில் இருந்தாலும்
1.அந்த இயக்கச் சக்தி மாறிவிடும்.
2.அது பேசாது. அதனின் உணர்வுகள் செயல்படாது. இதையும் பார்க்கலாம்.

ஏனென்றால் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் மீடியமாக்கப்படும் பொழுது இந்த உணர்வு உங்களை அங்கே விண்ணுக்கே அழைத்துச் செல்லும்.

குலதெய்வங்களாக இன்று நாம் நம் ஊரில் வணங்கிக் கொண்டிருப்பதெல்லாம் நம் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் தான்.

அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அவர்கள் எண்ணங்களை எடுத்தால் அவர்கள் இங்கே நம் உடலுக்குள் வந்து அருளாடுவார்கள். அதைப் பார்க்கலாம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றுவோம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.

நம்முடைய குல வழியில் வந்த மூதாதையர்களை விண் செலுத்துவோம். மூதாதையர்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி அவர்கள் உடல் பெறும் உணர்வின் சக்தியைக் கரைத்திடல் வேண்டும்.

ஏனென்றால் பல உணர்வுகள் வாழ்க்கையில் அவர்கள் கண்ட இருள்கள் நீங்கி “பூரண நிலவாக்கிப் பேரொளியாக…” அவர்களைச் சப்தரிஷி மண்டலத்தில் வாழச் செய்த பின்
1.அவர்கள் வழியில் ஒளியினைப் பின்பற்றி நாம் சென்றால்
2.நாமும் அங்கே அதே வழியில் சென்றடையலாம்.
3.இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலைகளைப் பெறுவோம்.

அருள் ஒளியை எடுத்து அந்த ஒளி கொண்டு தாக்கினால்… இருளை ஒளியின் அறிவாக மாற்றச் செய்யும்… ஒளி.. ஒலி… ஒளி…!

 

ஒருவருக்கொருவர் கோபம் கொண்டு ஏசுகின்றனர்… பேசுகின்றனர். அப்போது தன்னைத் தாங்காது நீ உருப்படமாட்டாய்… உன் குடும்பம் நாசமாகிவிடும்.. உன் குழந்தை குட்டி எல்லாம் நாசமாகப் போகும்… கண் தெரியாது குருடாகிவிடும் என்று சந்தர்ப்ப பேதத்தால் ஒருவருக்கொருவர் சாபமிடுகின்றனர்.

சந்தர்ப்பவசத்தால் இப்படி மோதக் கூடிய நிலைகள் வரப்படும் போது அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சித்திரை.., திரையாக மூடிவிடுகிறது.

இந்த வாழ்க்கையில் இப்படி மூடி இருள் சூழும் நிலையாகி வேதனையாகி விட்டால் நாம் எதை நுகேர்வோம்…? அடுத்து எண்ணத்தால் நாம் எதை எடுப்போம்…? என்பதைத் தான் ஞானிகள் சித்திரை என்று அந்தத் திரையை நீக்கும் நாளாகக் காட்டினார்கள்.

1.சூரியன் எதனின் உணர்வின் தன்மையைத் தனக்குள் எவ்வாறு கவர்கின்றதோ
2.தன் ஒளியின் தன்மையைப் பாய்ச்சி அந்த அறிவின் ஞானமாக இயக்குகின்றது ஒளி… ஒலி.
3.அதைப் போல் .அந்த மெய் ஞானிகள் காட்டிய உணர்வின் சக்தியை நமக்குள் ஒளி… ஒலி… ஒளி என்ற நிலையில் எடுக்க வேண்டும்.

மனிதனுக்குள் விளைய வைத்த தீமையை அகற்ற வேண்டுமென்ற நிலையில் மெய் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் இழுக்கும் பொழுது இருள் சூழ்ந்த நிலையைச் சித்திரை (சிறு சிறு திரை) அதை நீக்கி உணர்வின் அறிவாக நமக்குள் அறியச் செய்யும்.

ஒருவன் தீமையில் சிக்கிக் கொண்டாலும்
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனுக்குள் இருக்கும் உணர்வினை அந்த ஒளி கொண்டு தாக்கினால்
2.ஒளியின் அறிவாக அவனுக்குள் அறிந்திடும் ஆற்றல் வருகின்றது.. ஒளி… ஒலி ஒளி… ஒலி.

மெய் ஞானிகள் காட்டிய மெய்ப் பொருளின் உண்மை நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் புதிய வருடம் முழுவதும் என்றுமே நீங்கள் மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்குத் தான்
1.அந்த மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
3.உங்களுக்குள் தீமைகளை அகற்றும் திறனைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஞானிகள் காலத்திற்குப் பின் அவரின் போதனைகளை வழி நடத்துவோர் அரிதாகவே உள்ளனர் – ஈஸ்வரபட்டர்

 

இயேசு கிறிஸ்துவைக் கல்லறையில் அடக்கம் செய்த பிறகு அவர் மூன்றாம் நாளில் எப்படி வெளிப்பட்டார்…? ஏற்கனவே அவ் உடலை ஒரு ஞானி ஏற்றார்…! என்று செப்பியுள்ளேன்.

அவ்வுடலை இவர்கள் அடக்கம் செய்த பிறகு அவ் உடல் என்னும் கூட்டிற்கும் அவ்வுடலில் ஏறிய ஞானியின் ஆத்ம சக்திக்கும் தொடர்பற்ற நிலையில் இவர்கள் இம்சித்ததெல்லாம் உடல் என்னும் கூட்டைத்தான்.

இவர்கள் இம்சித்த நிலையில் இவர்கள் எண்ணத்தில்தான் அத்தீய சக்தி இவர்களையே தாக்கிற்று. இயேசு பிரானின் ஆத்மாவையோ அஜ்ஜீவ சக்தியையோ இவர்கள் செய்த இம்சை நிலை பாதிக்கவில்லை.

எப்படி எப்படி எல்லாம் இம்சைப் படுத்திடலாம் என்ற எண்ணம் கொண்டார்களோ அவ்வெண்ணமுடனே சுவாசித்த சக்தி நிலையெல்லாம் இவர்கள் உடலில் தான் ஏறியது.

அம்மகான் இவர்கள் அடக்கம் செய்திட்ட பூத உடலில் இருந்து அந்த ஞானியின் சக்தி வெளிப்பட்டு ஆவியான அமில நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஆவி பிம்பத்தைத்தான் இயேசு பிரானாய் இவர்கள் மூன்றாம் நாளில் கண்டது.

இந்நிலை பெறுவதற்கு அவ்வுடலில் ஏறிய அம்மகான் இச்சுவாச சக்தியை எங்கும் பிம்பப்படுத்திடும் நிலை பெற்றார்.

ஆனால் அங்கு வாழ்ந்த மக்களிடையே… இன்று அவ்வழியில் வந்திட்ட அந்நிலையைப் போதிக்கும் ஜெப நிலையில்…
1.அவரை ஜெபப்படுத்தும் நிலையே மாறு கொண்ட நிலையில் உள்ளது
2.சக்தியின் ஜெபத்தை ஈர்த்து ஜெபிப்பார் இல்லை.

ஞான ஒளியைத் தன் ஞானமுடன் ஜெபம் கொண்டு ஈர்த்து இயேசுபிரான் நாமத்தில் வந்திட்டவரின் சக்தியை ஈர்த்து அவருடன் தொடர்பு கொண்டு செயல் படுத்திடும் நிலை அவர்களை வழி நடத்துவோருக்கு எட்டவில்லை.

பல ஜெபங்கள் செய்கின்றனர்… வளர்ந்துள்ள நாகரிக நிலைக்கொப்ப…! ஆத்ம ஜெபம் கொண்டு அவரின் தொடர்பைப் பெற்றிடும் நிலை கொண்டிடவில்லை.

பக்தி நிலையை வளரவிட்டு சக்திக்கு அடிபணியும் நிலை உள்ளது. அம் மகானின் தொடர்பைப் பெற்றிருந்தால் இன்று இம் மனித உள்ளங்களின் வெறி உணர்வை மாற்றும் நிலையைப் போதித்திடலாம்.

இன்றுள்ள எண்ண நிலையே வெறி உணர்வும்… காம இச்சையின் நிலையும்… பேராசையின் நாகரிக நிலையும்… “அதிவேகமாக எண்ணமுடன் கலந்து வளர்கின்றன…!”

இந்நிலையின் வளர்ச்சியினால் வரும் அபாயத்தையோ உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்ம சக்தியையோ கடுகளவும் எண்ணுவார் இல்லை.

ஆத்மீகத்தை வழிப்படுத்திட்டால் இன்றுள்ள இவ்வெண்ண நிலைக்கு அமைதி கொள்ளும் அன்பு நிலையைச் செயலாக்கிடலாம்.
1.இன்றும் அங்குள்ள மக்களின் நிலையில் பக்தி என்னும் பய நிலை உள்ளது
2.வழிப்படுத்திடத் தக்க குரு இல்லை.

மற்ற நாடுகளில் தம் தம் எண்ணத்தில் உள்ள கறையை இன்றுள்ள ஜெபாலயங்களில் வெளியிட்டால் எண்ணக் கறையை நீங்கிவிடுவதாகப் போதனை நிலையுள்ளது.
1.இக் கறையுடன் கறையைச் சேர்த்து
2.ஒரே சூனிய நிலையாக்குகின்றார்கள் மனித ஆத்மாக்களை.

சக்தியின் சக்தியாய் ஆத்ம ஜீவன் கொண்ட மக்களெல்லாம் இன்று வாழ்ந்திடும் அன்பு நிலையிலும் பந்த பாசம் கொண்ட ஆத்மீக நெறியும் இல்லாமல் மிகவும் கீழ் நிலை கொண்ட அவல நிலையிலும் வாழ்கின்றனர்.

மாபெரும் முனிவரின் சக்தி பெற்ற இந்நிலையுள்ள அவ்விடம் இன்று சூனிய நிலையாக உள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுப் பேராசைப் பேயின் பிடியில் சிக்கி நாகரிகப் போர்வை போர்த்தியே ஆத்மீக நெறியினை அறிந்திடாமல் இப்பாட நிலையை யாவருக்கும் பொதுவான நிலைப்படுத்தி வழங்கி வருகின்றோம் (ஈஸ்வரபட்டர்).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஊருக்குள் நான் (ஞானகுரு) கெளரவமாக இருக்கப்படும் போது வேலைக்குச் செல்லும் போது திடீரென்று குருநாதர் அழைக்கின்றார், சாக்கடைப் பக்கம் அவர் அமர்ந்து இருக்கின்றார் குருநாதர்.

ஒரு காபி.. ஒரு டீ… வாங்கி வா என்றார். கடையிலிருந்து வட்ட செட்டாவில் வாங்கி வந்தேன்.

அப்போது சாக்கடைப் பக்கம் நான் போனவுடன் இங்கு வா…! என்றார். இங்கே உட்கார்…! என்றார். அங்கு சாக்கடையில் இருந்து அள்ளிப் போட்ட அந்தக் கப்பிகள் அனைத்தையும் இந்தக் காபியிலும் இந்த டீ யிலும் போடுகிறார்.

போட்டு விட்டு… இதை நீ சாப்பிடு…! என்கிறார் குருநாதர்.

ரோட்டுப் பக்கம் ஜனங்கள் அதிகமாக போகும் இடம் அது. இந்தச் சாக்கடைப் பக்கம் இருந்த உடனே இந்த காப்பியில் அள்ளிப் போட்ட உடனே எல்லோரும் என்னை “வேடிக்கை…” பார்க்கிறார்கள்.

இவ்வாறு அனைவரும் வேடிக்கை பார்க்கும் போது நம்மைப் பார்த்த உடனே என்ன ஆனது…?

ஏற்கனவே குருவிடம் “நீங்கள் சொல்வது அனைத்தையும் கேட்கிறேன் என்று சொல்லி விட்டேன்…” அதனால் இவரிடம் இருந்து மீற முடியவில்லை.

பல உண்மைகளை எல்லாம் குரு காட்டி இருக்கிறார். இதை மறுத்தாலோ நமக்கு இனி “என்ன தண்டனை கிடைக்குமோ…!” என்ற நிலையும் வருகிறது. அவருடைய வாக்கினாலே எப்படித் தப்ப முடியும்…? என்ற நிலையும் வருகின்றது.

அவர் கூப்பிட்ட உடனே போகமல் இருக்க முடியவில்லை.

அந்த சாக்கடைப் பக்கத்திலே உட்கார்ந்து அதை அள்ளிப் போட்டு “நீ குடி…” என்கிறார்.

நானோ ரோட்டைப் பார்க்கிறேன் ஆள்களைப் பார்க்கிறேன் வேடிக்கை பார்க்கிறவர்களைப் பார்க்கிறேன். குருநாதரைப் பார்க்கிறேன் என் மனதைப் பார்க்கிறேன். “வசமாகச் சிக்கி விட்டோமே…” என்று எண்ணுகின்றேன்.

இனி யாரும் பார்த்தால்… “நம்மைக் கேலி செய்வார்களே…” இதை எப்படிக் குடிப்பது…! உமட்டல்… அதை நினைத்தாலே “வாந்தி” வருகிறது.

இந்த பக்கம் அசிங்கமாக இருக்கிறது, அசூசையாகக் கிடப்பதை அதிலிருந்து வருவதைச் “சாப்பிடு” என்று சொன்னால் எப்படி இருக்கும்…? அப்பொழுது எனக்கு உமட்டல் தான் வருகிறது.

இதைப் பார்த்தவுடனே குருநாதர் கேட்கின்றார்.

நான் சொல்வதைச் செய்றேன் என்று சொன்னாய். உன்னைக் காபி தானே குடிக்கச் சொன்னேன். இதற்குள் எவ்வளவு பெரிய சத்து இருக்கிறது தெரியுமா…! நீ குடித்துப் பார்…! என்கிறார்.

அவ்வாறு அவர் கூறினாலும் எனக்கு வாந்தி தான் வருகிறதே தவிர உள்ளுக்குள் போக வழி இல்லை.

மறுத்தவுடனே “சரி நீ போ.. இந்த வட்ட செட்டைக் கொண்டு கடையில் கொடுத்து விடு” என்கிறார்.

அங்கே போனால் டீ கடைக்காரர் சும்மாவா விடுவார். வட்ட செட்டாவை நீயே வைத்து உங்கள் வீட்டில் வைத்துக் குடித்துக் கொள். யாராவது பார்த்தால் இங்கே வர மாட்டார்கள். இங்கு காபி குடிப்பதைக் கெடுக்காதே…! என்றார்.

பைத்தியதோடு சேர்த்து நீ ஓரு பைத்தியமாக இருக்கிறாய், நீ போய்யா…, என்கிறார். குருநாதரை ஒரு பைத்தியமாகவும் அவருடன் நான் சேர்ந்து கொண்டதால் என்னையும் பைத்தியாமாக்கி “நீ போய்யா..,” என்கிறார்.

வரும் போது முறுக்கு பொட்டுக் கடலை நிலக்கடலை இந்த மூன்றையும் வாங்கிட்டு வாடா என்றார் குருநாதர்.

வாங்கிக் கொண்டு வந்தவுடன் சாக்கடையில் இரண்டு அடிக்கு ஒரு கோடு போடச் சொல்கிறார்.

இரண்டு அடிக்கு வரிசையாக கோடு போட்டேன். அடுத்து எதைச் சொல்வாரோ… என்ன சொல்வாரோ…! என்று தவித்துக் கொண்டு இருக்கிறேன்.

முருக்கு நிலக்கடலை பொட்டுக்கடலை வாங்கிக் கொண்டு வந்ததைச் சாக்கடைக்குள் போடச் சொல்லிவிட்டார்.

முதலில் பொட்டுக்கடலை ரெண்டாவது நிலக்கடலை மூன்றாவது பொட்டுக்கடலை நான்காவதாக முறுக்கு அதற்கப்புறம் பொட்டுக்கடலை அதற்கு அப்புறம் இந்த நிலக்கடலை,

இப்பொழுது “நீ முகர்ந்து பாருடா…!” என்கிறார்.

இதென்ன வம்பாகப் போய்விட்டது…? இதை எடுத்துச் சாப்பிடச் சொல்வார் போலிருக்கிறது…!

நான் குருநாதரிடம் நாற்றம் தான் வருகிறது சாமி…! என்றேன்.

அப்படியாடா வருகிறது…! நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய். என்னைக் காப்பாற்றுவேன் என்று சொன்னாய் என்கிறார் குருநாதர். இப்பொழுது நாற்றம் வருகிறது என்கிறாய்…!

“ஆரம்பத்தில்” என் மனைவியைக் குருநாதர் காப்பாற்றிய பொழுது நான் சொல்வதை நம்புகிறாயா…? என்றார்.

நம்புகிறேன்…! என்றேன்.

என்னை நீ காப்பாற்றுவாய் அல்லவா…? என்றார்.

நீங்கள் சொல்வதை எல்லாம் நான் காப்பாற்றுவேன். சொன்ன வாக்கை “நான் காப்பாற்றுவேன்” என்று சொன்னேன்.

சொன்ன வாக்கைக் காப்பாற்றுவேன் என்று சொன்னாய் அல்லவா இப்பொழுது ஏன் இந்த மாதிரிச் செய்கிறாய்…? நீ முகர்ந்து எடப்பா…! என்கிறார்.

எதை…!

கோடு போட்டு மொத்தமாகக் கலக்கிவிட்டு நீ நிலக்கடலைப் பருப்பாக எடு என்கிறார். எல்லாவற்றையும் வேறொரு பக்கம் போடுகிறார்.

அந்த நேரத்தில் தான் பன்றி வருகிறது. அது வந்தவுடன் பாருடா…! என்கிறார்.

அங்கிருந்து நுகர்ந்து முகர்ந்து முகர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறது. அந்த வாசனையைப் பிடித்தவுடன் குடு…குடு… என்று ஓடி இங்கே வருகின்றது.

வந்த உடனே முதலில் நிலக்கடலைப் பருப்பை எடுத்தது. அதைச் சாப்பிட்டவுடன் முருக்கைப் போய் எடுத்தது. அதைத் தாண்டி நிலக்கடலைப் பருப்பை எடுத்தது. அதற்கு அப்புறம் முகர்ந்து பார்த்து விட்டுக் கடைசியாகத்தான் பொட்டுக் கடலையை எடுக்கிறது.

இதிலே எண்ணெய்ச் சத்து இருக்கிறது அதிலே எண்ணெய்ச் சத்து இல்லை.

பார்த்தாயா…! அது எப்படி நுகர்ந்து எடுக்கின்றது…? பார்த்துக் கொண்டாயல்லவா…! நீயும் எடு… என்கிறார்.

நான் எங்கே சாமி எடுக்க முடியும்…! நாற்றம் தான் அடிக்கிறது என்றேன்.

பார்த்துக் கொண்டாய் அல்லவா.
1.நாற்றத்தை அது பிளந்தது.
2.அந்த உணர்வைத் தனக்குள் விளைய வைத்தது,
3.அது கெட்டதை எண்ணவில்லை.

நீயோ நாற்றம் என்று எண்ணியதால் “அது தான்” உனக்கு முன்னாடி வருகிறது, உன்னால் “நல்லதை நுகர முடியவில்லை…” என்று சொல்கிறார்.

அப்புறம் எதோ ஒன்றைச் சொல்கிறார்… அதை நுகர்ந்தேன்.
1.நுகர்ந்து எடுத்தவுடனே அப்பொழுது அதற்குள் இருக்கக்கூடிய அந்த வாசனையை இது எப்படிப் பிளக்கிறது…?
2.இந்த உணர்வை நீ இப்படிச் சுவாசி.
3.இதற்கு அப்புறம் நீ நுகர்ந்து பார்க்கக் கூடிய நாற்றம் எப்படி விலகுகிறது…?
4.இந்தப் பருப்பை நீ நுகர முடிகிறது.

இப்படிச் சொன்னவுடனே மறுபடியும் இதை எடுத்து சாப்பிடச் சொல்வாரோ…? என்று அந்தப் பயமும் வருகிறது.

இப்படி இந்த உணர்வின் தன்மை என்ன இருந்தாலும் நாம் சாக்கடைக்குள் போட்டதைச் சாப்பிடச் சொல்லி விட்டால் என்ன…? என்கிற போது எனக்கு வாந்தி தான் வருகிறது, இதைத்தான் சாப்பிடச் சொல்வாரோ…? என்கிற இந்த நிலை தான் வருகிறது.

நடந்த நிகழ்ச்சி இது. பின் குருநாதர் உபதேசித்தார்.

உயிர் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கெடுதலில் இருந்து தன்னைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து அந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வு வலுப்பெற்று அதனின் வலு கொண்ட அந்த உணர்வின் சரீரமாக வளர்ந்தது.

கெட்டதை நீக்கி நல்லதைப் பெறும் இந்த உணர்வின் தன்மையை அது வளர்த்து அதிலே சேர்த்து கொண்ட அந்த வினைக்கு நாயகனாக இன்று மனித உடல் நீ பெற்றிருக்கிறாய்.

1.அன்று இது நாற்றம் என்று நீ விலகி இருந்தால்
2.உன் உடல் இன்று நாற்றத்தை விலக்கும் சக்தியாக வராது.
3.உன் உடலில் இருந்து வரக்கூடிய இந்த உணர்வின் தன்மை
4.”கெட்டதைப் பிரித்து நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…” என்று
5.வியாசகர் உணர்த்திய “வராக அவதாரத்தை” அங்கே அமரச் செய்து எமக்குத் தெளிவாக்கினார்.

கெட்டதை நீக்கிப் பல நிலைகள் கொண்டு இப்படி வந்திருக்கூடியது தான் இந்த மனித உடல் என்று அங்கே சாக்கடையில் வைத்து உபதேசத்தைக் கொடுக்கிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

எம்முடைய “ஒரு சொல்லை” ஆழமாகப் பதிவாக்கி அதன் வழி நடந்தாலே போதும்

 

இந்த வாழ்க்கையிலே நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனாலும் தவறு செய்தோர் நிறைய உண்டு. அவர்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் வந்தால் நம் நல்ல குணங்களை அது மறைத்து விடுகிறது.

அப்போது அவர்கள் விடும் சாபங்களோ ஏசிப் பேசும் உணர்வுகளோ அல்லது துன்பப்படும் உணர்வுகளோ வந்துவிடுகிறது.
1.அதை நுகர்ந்தால் நம்மையும் சாபமிடச் செய்யும்… ஏசிப் பேசும்படி செய்துவிடும்.
2.நம் குழந்தையாக இருந்தாலும் இரக்கமற்று அடிப்போம்.

ஒரு சிலர் வாழ்க்கையில் நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்டு இப்படிச் செய்கிறான்… அப்படிச் செய்கிறான்… என்று பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டிருப்போம்.

இது எல்லாம் நம்மை அறியாமலே நடக்கும் நிலைகள்.

நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் உணர்வின் தன்மை மாறுபடப் போகும் போது பார்… இவன் பெரிதாக என்ன செய்து விட்டான்…? என்று பாவ வினைகளாகச் சேரும். அவர்களுக்கு இடையூறு செய்யும் தன்மையாக வேதனைப்படச் செய்து அதை இரசிக்கும் நிலையாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

உயிரின் வேலை என்ன…?

எதை நாம் எண்ணினாலும் உயிரிலே பட்ட பின் ஓ… என்று ஜீவனாகி ம்.. என்று உடலாக்கச் செய்யும்.
1.ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ..ம். ஆக உடலின் வேலை இதைத் தான் செய்யும்.
2.ஆனால் உயிரின் வேலை… நெருப்பிலே எந்தப் பொருளை இட்டாலும் அதன் மணத்தை அது வெளிப்படுத்திக் காட்டுவது போல்
3.உயிரான நெருப்பிலே நாம் சுவாசிப்பது பட்டவுடனே எண்ணம் சொல் செயல் என்று அதை இயக்கிக் காட்டும்.

எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதன் மணத்தின் தன்மை கொண்டு அதுவாகும். அதனின் இயக்கத்தின் தன்மை கொண்டு உணர்வாகும்.

ஒரு சிலர் செய்வதைப் பார்த்து உனக்குக் கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கின்றதா…? அறிவு இருக்கின்றதா…? அறியக் கூடிய திறன் இருக்கின்றதா…? என்றெல்லாம் நாம் வழக்கத்தில் பேசுவோம்.

ஒன்றைச் சொல்லப்படும் போது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… அப்போது… இப்படிச் சொல்லிவிட்டாயா…? இரு நான் பார்க்கின்றேன்… என்று இந்த உணர்வின் தன்மை எனக்குள் விளைகின்றது சொல்லின் தன்மை கேட்போருக்கும் உணர்ச்சியைத் தூண்டுகிறது.

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகள் எவ்வாறு வருகிறது…? என்று உணர்ந்து அந்தத் தீமைகள் நமக்குள் வராதபடி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் சுமார் இருபது வருடம் காடு மேடு நகரம் எல்லாம் எம்மைச் (ஞானகுரு) சுற்றச் செய்து மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

அந்தக் குடும்பங்களை எல்லாம் சுட்டிக் காட்டி
1.தவறு செய்யாமலே தொல்லைகள் அவர்களுக்கு எப்படி வருகிறது…?
2.தவறு உள்ளவர்களாக எப்படி மாற்றுகின்றது…?
3.பாவ வினையாக எப்படி இயங்குகிறது…?
4.சாப வினைகளாக எப்படி வருகிறது…?
5.தீயவினைகளாக எப்படி உருவாக்குகிறது…? என்பதைக் காட்டி
6.அதிலிருந்து அவர்களை மீட்க எப்படிச் செய்யப் போகிறாய்…?
7.இது குருநாதர் எம்மிடம் கேட்ட கேள்வி.

அந்த அருள் ஞானி காட்டிய உண்மையின் இயக்கங்கள் அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையில் உபதேசத்தைக் கொடுத்து என்னை அறியும் ஆற்றலாகச் செயல்படுத்தினார் குருநாதர்.

அவர் கொடுத்த அருள் ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு வருகின்றோம்.
1.உங்களை அறியாது வரும் தீமைகளை உங்களாலேயே அகற்ற முடியும்
2.அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொள்ளும் போது உயிரால் இயக்கப்பட்டு அதை ஜீவனாக்க முடியும்
3.அந்த உணர்வின் சக்தியாக… உங்கள் உடலாக ஆக்க முடியும்.

குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்கும் செயல்படுத்துகிறேன். காரணம் குருநாதரை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.

தீமைகள் தன்னை அறியாமலே சாடுகின்றன. அதிலிருந்து ஒவ்வொருவரும் அகல வேண்டும் என்று நீ அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சு..!

1.எனக்குள் விளைய வைத்த வித்துக்களை உனக்குள்ளும் விளையச் செய்கின்றேன்.
2.அதை நீ விளைய வைத்து அந்த உணர்வை யார் யார் உற்று நோக்குகின்றார்களோ அவர்களுக்குள் பதியச் செய்.
3.அங்கே விளைந்த நிலைகள் அது வெளி வரும் போது என்னை அங்கே காண்.
4.அவர்கள் மகிழ்ச்சி பெறும் போது அங்கே என்னைப் பார்…! என்றார் குருநாதர்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… யாம் உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குத் தக்க சமயத்தில் வழி காட்டும்.

எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஞானத்தின் தொடர் கொண்டு உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்று “குருவின் ஆணைப்படி…” இதைச் செயல்படுத்துகின்றோம்.

உங்களுக்குள் துன்பங்கள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கும் ஆற்றலாகவும் அருள் உணர்வை வளர்க்கும் தன்மையாகவும் வரும்.

ஒரு சிலர் நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் எங்களுக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை நீங்கள் சொல்வது எல்லாம் அர்த்தமாகவில்லை என்று எண்ணுவார்கள். அப்படி எண்ணினால் அது அர்த்தமாகாது.

1.எப்படியும் ஞானகுரு சொன்ன வழியில் நடக்க வேண்டும் என்று
2.அந்த ஒரு சொல்லை எண்ணினால் அது நிச்சயம் உண்மையை விளக்கிக் காட்டும்.

முருகன் + ஈசன் = முருகேசன் என்ற முருகேஸ்வர போகநாதர்…! – ஈஸ்வரபட்டர்

 

நம் வழக்கத்திலுள்ள சொல் நாமங்கள் நம்மால் வழக்கத்திற்குப் பேசுவதற்காக நம் முன்னோர்களின் ஒவ்வோர் இன வழிப்படி பல நாமச் சொற்களை இவ்வுலகினிலே பல பாகங்களில் பல நிலைகளில் அவரவர்கள் வந்த வழிப்படி பேசி வருகின்றோம்.

ஆண்டவனின் நாமத்தையே பல நாமங்கள் சூட்டி… அவரவர் வழக்கப்படி வேண்டுகின்றோம்.

“முருகா…!” என்ற ஜெபம்
1.போகரினால் இவ் ஆறு வகைக் குணங்களை நாம் போற்றி வணங்கிட
2.இக்குணங்களையே முருகனாக்கி… முருகா…! என்ற நாமகரணம் சூட்டியவர் போகர் தான்.
3.ஆனால் முருகா என்னும் நாமகரணம் சூட்டிக் கொண்ட தனித்த ஆண்டவன் ஒன்றில்லை.

அழியா ஒளி உடல் கொண்ட ஆத்மா நிலை பெற்ற அப்போகர் தன் சக்தியுடன்… இம் முருகா என்ற ஜெபம் கொண்ட நிலைக்கு… அவர் சக்தியில் அவர் உடலிலேயே… அவர் ஆத்மாவுடன்… அவர் உடலிலுள்ள அவர் ஈர்த்துச் சேமித்த முருகா என்ற சக்தியின் நிலையினை ஒளியாகத் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இன்றும் உள்ளார்.

அந்த நிலையில்…
1.முருகா…! என்ற சொல் எவ்வுள்ளங்களில் இருந்தெல்லாம் எழுகின்றதோ
2.அந்தச் சக்தி போகரின் சக்தியுடன் நினைத்த மாத்திரத்தில் வந்து மோதி ஒளியாக…
3.ஜெபிப்பவரின் உள்ளத்திற்கெல்லாம் போகரின் நிலையிலிருந்து அச்சக்திதனை வழங்கி வருகின்றார்.

அழியா உடல் பெற்ற ஆத்ம சக்தியுடன் தனக்குகந்த நாமத்தையே ஜெபமாக்கி அஜ்ஜெப நாமத்தை எண்ணுபவரின் சக்தியுடன் இன்றும் இந்நிலையில் கலக்கவிட்டு… எண்ணுபவரின் ஆத்மாவிற்குகந்த அவர்களின் நிலைக்கெல்லாம் “தான் பெற்ற சக்தியைப் பகிர்ந்து அளித்து வருகின்றார்…” அம் முருக நாமம் கொண்ட “முருகேஸ்வர போகநாதர்…!”

போகரின் சக்தி அழியா சக்தி. இன்றும் அச்சக்தியினை பலவாக ஈர்த்து அருளிக் கொண்டே உள்ளார். அவர் எடுத்த சக்திப்படி இன்றும் மனிதருள் மனிதராகச் சில நிலைகளில் வந்து செல்கின்றார்.

எந்நிலையில் என்று உணர்ந்தீரா…?

அப்போகநாதரின் உடல் கூடு எந்நிலைக்கும் அவர் ஜெபம் கொண்டு இன்றுள்ள அப்பழனிக் குகை வாசஸ்தலத்தை விட்டு வெளிப்படுவதில்லை.

ஆனால் முருகராகவும் மற்றும் பல நிலைகளிலும் மக்களுடன் மக்களாக அவர்களின் இன்னலைத் தீர்க்க வந்து செல்கின்றார்.

போகரின் ஆத்மாவுடன் அவர் சேமித்த சக்தி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தி நிலையை… உடல் கூட்டிலிருந்து பிரித்துக் காண்பவருக்கு… அவ்வாவி சக்தியை… இக்காற்றிலிருந்தே பல சக்திகளை ஈர்த்து ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தியைப் பிம்பமாக்கி வந்து செல்கின்றார்.

அதாவது ஆவியான அமில சக்தியை எந்நிலையிலும் விரிந்து கூடும் நிலைப்படுத்தும் நிலையைப் பெற்றுள்ளார் முருக நாமம் கொண்ட நம் போகர்.

ஒரே நாளில் பல இடங்களில் அவரின் பிம்பத்தை அவரால் காணச் செய்திடவும் முடிந்திடும். அம் முருக நாமத்துடன் பல செயல்களைச் செயலாக்குகின்றார் நம் போகர்…!

ஆவியான அமில சக்திகள்தான் அனைத்து சக்திகளுமே. இவ்வுடலும் ஆவியான பிம்பம்தான். இப்பிம்பத்திலிருந்து நம் ஆத்மா பிரிந்து சென்றாலும்… நம் ஆத்மாவுடன்… நம் உடலுடன் கூடிய ஆவியான நமக்குகந்த அமில சத்துக்கள் நம்முடனே… நம் ஆத்மாவுடன் ஈர்த்துத்தான் ஆவி உலகில் நாமும் இருந்திட முடியும்.

1.இவ்வுலக சக்தியையே நம் சக்தியாக்கி நாமும் நிலைத்து வாழ்ந்திட முடியும்
2.இன்று நாம் வாழும் வாழ்க்கை நம் வாழ்க்கையல்ல
3.நம் வாழ்க்கை என்பது இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடும் வாழ் நாட்கள் மட்டுமல்ல
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் வாழ்க்கை நமது அரும்பெரும் பாக்கியத்தை நாடுவதற்கு நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம்தான்.

ஒவ்வொருவரும் இவற்றை உணர்ந்து வாழ்ந்திடும் நாளில் பல நிலைகளுக்கு எண்ணத்தைச் செலுத்தி…
1.வாழ் நாளைத் தன்னிச்சைக்கு (தன் இஷ்டம் போல்) வாழாமல்
2.இவ்வுலக இன்பத்தைத் துறந்து வாழ்ந்திடல் வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிடாமல்
3.இவ்வுடலுடன் நாம் இன்று பெறும் நிலைக்குகந்த சக்தியே அழியா சக்தியாக நம்முடன் வரும் சக்தி என்பதனை உணர்ந்து
4.நம் போகநாதரின் சக்தியின் அருளை நாம் ஈர்த்து நல் வழியில் வாழ்ந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“ஓ…ம் நமச்சிவாய…, சிவாய… நம ஓ…ம்” – சிவலிங்கத்தில் மூன்று பட்டைகள் போட்டுக் காண்பித்ததன் விளக்கம் – இராமலிங்கம்

“எண்ணம்” என்றால் இராமன். அதைப் போல உயர்ந்த ஞானத்தின் உணர்வு கொண்டு தன் எண்ணத்தால் உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆனது தான் இராமலிங்கம் என்று பெயரை வைக்கின்றார்கள்.

இப்பொழுது நாம் எண்ணும் அனைத்தும் சிவலிங்கம்… சீவலிங்கம்…! நம் வாழும் நிலைகள் கொண்டு இந்த உடலின் தன்மை “சிவ தத்துவம்” அடைகின்றது.

எண்ணத்தால் உணர்வின் தன்மை தனக்குள் சேர்த்து உயிருடன் ஒன்றிய நிலைகள் வரும் பொழுது எண்ணத்தால் உருவாக்கிய நிலைகள் இராமலிங்கம் என்று பெயரை வைக்கின்றார்கள்.

நாம் அறிந்து கொள்ள எளிதாகப் பல காவியங்களைப் படைத்துள்ளார்கள் ஞானிகள்.

இதை உணர்த்துவதற்குத்தான் சிவ ஆலயங்களில் அனைத்தும் இப்படிப் பல நிலைகளை உருவாக்கி அதிலே
1.சிவலிங்கத்தில் ஒவ்வொன்றும் மூன்று பட்டைகள் கொண்டு போட்டுக் காண்பித்திருப்பார்கள்.
2.சிவனுக்கு விபூதியைப் போட்டு மூன்று பட்டைகளாகக் காண்பித்திருப்பார்கள்.

நாம் எதையெல்லாம் நுகர்கின்றோமோ அது அந்த இயற்கையின் தன்மையில் “பஸ்பமாக்கி” அது தனக்குள் தனதாக மாற்றிக் கொள்கின்றது.

ஆக… உருவத்தைக் காட்டினாலும் அந்த “உருவத்திற்குள் உள்ள ஆற்றலை” நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் இதையெல்லாம் வைத்தார்கள்.

இதைப் போன்று நாம் சிவமாக்கும் (உடலாக ஆக்கும்) முறைகளைச் சிவன் ஆலயத்தில் காட்டினாலும் நாம் எவை எவையெல்லாம் அங்கே எண்ண வேண்டும்…? என்பதற்கு அங்கே மலரை வைத்திருப்பார்கள்.

இந்த மலரைப் போல் மணம் நாம் பெற வேண்டும் என்று ஏங்கினால் இதை “ஓம் நமச்சிவாய…, நம் உடலாக” (நமதாக) மாற்றுகின்றது.

இந்த மலரைப் போன்ற நறுமணம் எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் அந்த மணம் “சிவாய நம ஓம்…” நம்மிடமிருந்து அது வெளிப்படுகின்றது.

நாம் கண்களால் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் சத்து நமக்குள் ஓம் நமச்சிவாய என்று இந்த நறுமணம் நமக்குள் உடலாக சிவமாக ஆனாலும்
1.அதைச் “சிவாய நம ஓம்…”
2.நாம் பார்ப்போருக்கெல்லாம் இந்த நறுமணம் கிடைக்க வேண்டும்
3.அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் சுவற்றில் எந்தச் (நிறத்தில்) சாயத்தைப் பூசுகின்றோமோ அதன் உணர்வைத்தான் நாம் கண்களில் பார்க்க முடியும்.

இதைப் போல் ஒரு மனிதனிடம் நாம் சொல்லாகச் சொல்லும் பொழுது மகிழ்ச்சியான சொல்லைச் சொல்லப்படும் பொழுது
1.மீண்டும் அங்கே ஓம் நமச்சிவாய – சிவாய நம ஓம்.
2.அதாவது நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்
3.நாம் மகிழ்ச்சியாக இருப்பது போல் எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொல்லும்போது – “சிவாய நம ஓம்”

அப்பொழுது அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற சொல்லைச் சொல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் தூண்டப் பெற்று
1.ஓம் நமச்சிவாய என்று
2.அவர் உடலுக்குள்ளும் ஐக்கியமாகின்றது.

இவ்வாறு எல்லோருக்குள்ளும் உயர்ந்த உணர்வைப் பெற்று வளர்க்கும் நிலைகளுக்குத்தான் இவ்வாறு சிவலிங்கத்தைப் படைத்துள்ளார்கள் ஞானிகள்.

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றன்…? என்பதைச் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினை நீக்கிவிட்டு வெப்பம் காந்தம் என்று ஒளியாகப் (வெயில்) பரப்பும் போது… அது எதன் எதனுடன் கலந்து வெளி வருகின்றதோ அதை எல்லாமே இயக்குகின்றது.

1.காந்தம் வெப்பம் விஷம் இந்த மூன்றும் எந்தப் பொருளைக் கவர்கின்றதோ
2.அது உள் நின்று தான் கவர்ந்து கொண்ட மணத்தை இயக்குகின்றது – கடவுள்…!

பிரகலாதன் கதையிலே கடவுள் எங்கே இருக்கின்றான்…? என்ற வினா வரும் போது
1.உன்னிலும் இருக்கின்றான்… என்னிலும் இருக்கின்றான்…
2.தூணிலும் இருக்கின்றான்… துரும்பிலும் இருக்கின்றான்… என்று சொல்வதாகக் காட்டியிருப்பார்கள் ஞானிகள்.

எத்தகைய துரும்பாக இருந்தாலும் வெப்பம் காந்தம் விஷம் என்று அந்த மூன்று நிலைகளில்… தான் கவர்ந்து கொண்ட நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத் தெளிவுபடுத்தி காரண காரியப் பெயரை வைத்து நமக்குத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்கள் ஞானிகள்.
1.இதையெல்லாம் தெளிந்து கொள்வது… தெரிந்து கொள்வது…!
2.தெரிந்து கொண்டால்… தெளிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்

விஞ்ஞான நிலைகளில் பாட நிலைகளைப் புகட்டி மனித வாழ்க்கையைச் சுகமாக வாழ்வதற்காக வேண்டி இயந்திரங்களையும் மற்ற பொருட்களையும் நாம் உருவாக்கி நமது வசதிகளுக்காகச் செய்து வைத்திருக்கின்றோம்.

அதைப் போல் மெய் ஞானியின் உணர்வினை நமக்குள் செலுத்தி நஞ்சினை அகற்றி ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மகிழச் செய்து நம் சொல்லால் கேட்போர் உணர்வுகளையும் மகிழச் செய்ய முடியும். அது தான் மகிழ்வாகனா (மயிலை வாகனமாக முருகனுக்குக் காட்டியிருப்பார்கள்).

1.பிறரிடத்திலிருந்து தீமைகள் வந்தாலும்
2.நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஞானியின் உணர்வைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றி
3.அந்தத் தீமையை அகற்றிடும் செயல் பெற்றவன் மனிதன்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு டாக்டருக்குப் படிக்கின்றோம் என்றால் “ஒரு நோயின் தன்மை வந்தால் அதை எப்படி அகற்ற வேண்டும்…? என்ற பாட நிலையைப் புகட்டுகின்றார்கள்.

அதனை ஆழமாகப் பதிவு செய்தால் இந்த அறிவின் தன்மை கொண்டு பிறருடைய நோயைப் போக்கும் நிலையும் வருகின்றது.

அதே போல் ஒரு தச்சு வேலை செய்கிறார்கள் என்றால் சீராக இல்லாதவற்றைச் சீர்படுத்தி அழகாகப் பல பொருள்களை உருவாக்குகின்றார்கள்.

1.சீர்படுத்தும் இத்தகைய ஆறாவது அறிவின் தன்மையைத் தான் “முருகு…” என்ற காரணப் பெயரை வைத்து
2.ஒரு சொல்லுக்குள் பல உணர்வின் தன்மையைக் காட்டி
3.மனிதன் என்ற நிலையில் தன் நிலை அடையச் செய்யும் நிலையாகத் தெளிவாகத் தெரிந்து
4.தெளிந்திடும் நிலை கொண்டு தெரிந்து… தெளிந்திடும் நிலைக்குக் காட்டினார்கள் ஞானிகள்.

சிவ தத்துவத்தில் வரப்படும் பொழுது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று “படைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்…” என்று காட்டுகின்றார்கள்

மனிதனிலிருந்து வளர்ச்சி பெற்றவர்கள் தான் ரிஷித் தன்மை அடைந்து சூரியக் குடும்பங்களை உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்

 

இயற்கை சக்தியில்…
1.ஆவியாக இருப்பது அணுவாக உயிர் பெற்று
2.அவ் ஆவியிலே உள்ள சக்தியினை உயிரணுவிற்கு ஊட்டமாக்கி
3.அவ்வாவியின் பிம்பமாய் ஜீவ ஆத்மாவிற்கு வந்து
4.ஜீவனாய் மனித பிம்பம் பெற்று பிம்பமாய் வாழ்ந்திட்டு
5.ஆத்மா பிரிந்து பிறகும் அவ்வாத்மாவுடன் ஆவியான சக்தியை ஈர்த்தே
6.இப்படி மாறி மாறி ஆவி உலகம்… பிம்ப ஜீவன் கொண்ட… ஜீவ ஆத்மா வாழ்க்கை வாழ்ந்திடும் உயிரணுக்கள் யாவற்றுக்குமே
7.அனைத்து சக்திகளும் அடைந்திடும் சக்தி (தகுதி) உண்டு.

எவ்வுயிரணு எவ்வழியில் தன் சக்தியினை வளர்த்துக் கொள்கின்றதுவோ அவ்வழியில் சென்றிடலாம்.

ஆனால் தன் சக்தியைத் தான் உணர்ந்திடாமல் இருந்திடும் மனித ஆத்மாக்களாகத்தான் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை நிலைகள். சக்தியினைச் சிதறவிட்டு இப்பேராசை நிலையையே வளர்த்துக் கொண்டு வாழ்வதின் வினையினால் வந்ததது தான் இன்றைய வாழ்க்கையின் நெறி முறைகளாக உள்ளன.

பல மகான்கள் இப்பூமியில் அவதரித்து ஆண்டவனாய் இன்றும் அருள் புரிகின்றனர். ஆனால்
1.இன்றைய மனிதர்களோ தன் சக்தியினை வீண் விரயம் செய்து
2.இந்த உடலுடன் கூடிய ஆத்மார்த்த ஆத்மீக நெறி உடைய அன்பு கொண்ட வாழ்க்கைதனை
3.இம்சையிலும் பேராசையிலும்… பல நெறி கெட்ட காமச் சூழ்நிலையிலும்… தன்னடக்கம் இல்லா வாழ்க்கையிலும்
4.குரோதம் விஷமம் இப்படி நமக்குள் பல தீய சக்தியினை வளர விட்டு
5.நல்லொழுக்கம் எற்றிடும் நற்பயன் கொண்ட வாழ்க்கைதனைச் சிதற விட்டு
6.இவ்வாத்மீக நெறி கொண்ட இல்வாழ்க்கைதனை இன்பமுடன் வாழ்ந்திடாமல் வாழ்ந்து என்ன பயன்…?

நம்மைப் போன்ற உயிரணுவாய் உதித்திட்டு உயிர் ஆத்மா கொண்டு ஜீவ ஆத்மாவாகி இஜ்ஜீவ வாழ்க்கைக்கும் வந்து இவ் உலகில் உதித்ததின் உண்மை சக்தியினை உணர்ந்து தன் ஆத்மாவின் சக்தியினால் இவ்வுலக சக்தி அனைத்தையும் எந்நிலையில் பெற்றனர் பல மகான்கள் என்பதனை இப்பாட நிலையில் வெளியிடுகின்றேன்.

பல ரிஷிகள் நம்மைப் போல் வாழ்ந்த வாழ்க்கையில் பல இன்னல்களில் வாழ்ந்துள்ளார்கள். வாழ்க்கைச் சுற்றலில் குடும்பப் பற்றுடன்தான் வாழ்ந்தார்கள்.

அந்நிலையில் இருந்து கொண்டே அவர்கள் எடுத்த ஜெப நிலையால்
1.ஜெப நிலை என்பது… எவ்வெண்ணத்திற்கும் அடிமை ஆகாமல்
2.எவ்வெண்ணத்திற்கு என்பது வாழ்க்கைக்குகந்த நெறி முறையில் மாற்றம் காணாமல்
3.வரும் இன்னலுக்குச் சோர்வு நிலைப்பட்டோ சந்தோஷ நிலைக்கு அடிமைப்பட்டோ
4.பாசத்திற்குத் தன்னைக் கட்டுபடுத்தியோ வாழ்ந்திடாமல்
5.இவ்வெண்ண சக்தியினை வாழும் காலத்திலேயே அனைத்து சக்திகளையும் தன்னுள் ஈர்க்கும் பக்குவ நிலை பெற்று
6.ஆத்மீக நெறிக்குகந்த ஞான வழிக்கு வித்திட்ட வழியில் வந்தவர்கள் தான் அனைத்து மகான்களும்.

வாழ்க்கை நிலையில் ஞான நிலை பெற்ற முதல் நிலைக்கு வந்தவர்கள்… அந்நிலையின் தொடர் நிலையை வளர்த்தே சித்து நிலை பெற்றிடலாம்.

சித்து நிலை பெற்றவர்கள் மகரிஷியாய் சப்தரிஷியாய் வந்திடலாம்.

இவ்வழியில் வந்தே தன் உயிரணுவாய் உதித்து ஆத்ம நிலைக்கு வந்தவர்கள் பெற்ற சக்தியினால் எவ் உலகில் உதித்தனரோ அவ் உலகில் இருந்து எவ் உலகிற்கும் (மற்ற சூரியக் குடும்பங்களுக்கு) சென்றிடும் நிலை பெற்றுள்ளனர்.

மேலும் மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களின் நிலையிலிருந்து பல சக்தியினைத் தன் உயிராத்மாவுடன் சேமித்து… தனக்குகந்த பல சக்தியினை ஈர்த்துத் தன்னுள்ளே சுழலச் செய்து… தனி ஒரு மண்டலமாக உருப்பெறச் செய்தும்… அந்நிலையிலிருந்து தனி ஓர் உலகமாகத் தன் மண்டலத்தினுள்ள பல ஜீவன்களின் வளர்ச்சியைத் தானே வளரச் செய்தும் மண்டலங்களாக உருப் பெறுகின்றனர்.

1.இவ்வியற்கையின் சக்தியில் எண்ணில் அடங்காப் பல உண்மைகள் உள்ளன.
2.உயிரணுவாய் நம்மைப் போல் உதித்திட்டவைதான் இன்றுள்ள பல மண்டலங்கள்.

இந்நிலைக்கு வருவதற்கு உயிரணுவாய் இருந்து… உயிர் ஆத்மா கொண்ட செயலாற்றும் நிலைபெற்ற இம் மனித உடலினால் மட்டும்தான் முடிந்திடும்.

இந்நிலையில் இருந்து வந்தவர்கள் தான் நாம் சொல்லும் பல பல ரிஷிகளும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து தீமைகளை நீக்கி நல்ல உணர்வின் தன்மையை வளர்க்கச் செய்யும் மனித உடலைப் பெற்றோம்.

ஆனால் அதர்வணவாதிகள் விஷத் தன்மையை வளர்க்கும் மாட்டின் நிலைக்குத்தான் நம்மைக் கொண்டு செல்கின்றார்கள்.

சரணாகதி என்ற தத்துவத்தைக் கொடுத்து “யாகங்களைச் செய்… பாவங்களைப் போக்கு…” என்று சொல்லி இதனின் மணத்தைக் கூட்டி எடுத்து ஒருவரின் உடலுக்குள் சேர்க்கச் செய்தபின் இவர் இறந்த பின் இவர் ஆன்மாவை ஆகாதவர் உடலில் தான் பாய்ச்சுகின்றர்கள்.

இது போன்ற நிலைகளிலிருந்து என்று நாம் விடுபடுவது…?

நாம் எதனின் உணர்வை எடுத்தோமோ அது சாகாக்கலை. வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்து பெருக்குவோமேயானால் பெருக்கிய உணர்வின் கலையின் பிரகாரம் நம் உடல் நலிவடைகின்றது.

நலிந்த உடலை நம் உயிர் உருவாக்கும். இது “சாகாக்கலை”.

பழனியில் சிலர் எம்மை வைத்தியரீதியில் அணுகி “போகர் சமாதியானது உங்களுக்குத் தெரியுமா…?” என்று கேட்டார்கள்.

எமக்குத் தெரியாது… என்றோம்.

போகர்… காயகல்ப சித்தியாகி “சாகாக்கலையாக இருக்கிறார்” என்றார்கள்.

போகர் சாகாக்கலையாக “எங்கே…” இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டோம்.

போகர் முருகன் பக்கத்தில் சமாதியாகிவிட்டார் என்று கூறினார்கள்.

சமாதியைத் தோண்டி “அவரைப் பாருங்கள்” என்று கூறினோம்.

அது எப்படித் தோண்டுவது…! என்றார்.

போகர் உயிருடன் தான் இருக்கின்றார் சமாதியைத் தோண்டி போகரை அணுகி அனைவரும் அருள் வாக்கு வாங்கலாம்… நீங்கள் எல்லோரிடமும் சொல்லுங்கள் என்று கூறினோம்.

இப்படி எம்மிடம் பேசிக் கொண்டிருந்தவர் போகர் பன்னிரெண்டாயிரத்தைக் கற்றுக் கொண்டவர்… தமிழ் வைத்தியர்…! சாகாக்கலையை நான் கற்றிருக்கின்றேன் காயகல்ப சித்தியைக் கற்றிருக்கின்றேன் என்று கூறினார்.

இன்று விஞ்ஞானிகள் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்” என்ற நிலை கொண்டு உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று கண்டறிந்துள்ளனர்.

1.ஒரு உணர்வுடன் மற்றொரு உணர்வை மோதச் செய்து
2.அதனில் உணர்வுகள் விரிவடைவதைக் காண்கின்றனர்.
3.கெமிக்கல் (இரசாயணம்) கலந்து ஒரு தகடை வைத்து
4.எலெக்ட்ரிக்கைப் பயன்படுத்தி அதனில் உள்ள காந்தப் புலன்களைத் தட்டிவிடுவது.

நாம் இரண்டு கல்லை உரசினால்… “ஒளி” வருகிறதல்லவா.

இதைப் போன்று உராய்ந்த உணர்வுகள் அழுத்தமான பின் ஒளிக் கற்றைகளை வெளிப்படுத்தும். இதனின் உணர்வின் அழுத்தம் எதுவோ அழுத்தத்தின் வேகத்திற்குத்தக்க எழுத்து வடிவமோ உருவமோ உணர்வின் தன்மையோ உருவாக்கிக் காட்டுகின்றது.

இது மனிதனின் சிந்தனையில் உருவானது.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையைக் கண்டறிந்த பின் அதன் உணர்வுகள் கொண்டு “மனிதரைப் போன்று வேலை செய்ய முடியும்” என்று காண்பிக்கின்றனர்.

ஒரு நொடிக்குள் உணர்வின் தன்மையினைக் கணக்கிடுகின்றனர். இதன் தொடர் கொண்டு நாம் எப்படி நுகர வேண்டும் எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் இயந்திர நிலைகளைக் கூட்டிக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் போகர் பன்னிரெண்டாயிரத்தைக் கற்றுக் கொண்டவர்கள் காயகல்ப சித்தி… சாகாக்கலை…! என்ற நிலையில் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

சாகாக்கலை காயகல்ப சித்தி கற்றுக் கொண்டேன்.. என்னிடம் போகர் பேசுகின்றார் என்று சொல்பவர்களின் நிலை என்ன…?

இவரைப் போன்றே ஒருவர் சாகாக்கலை என்ற தத்துவ உணர்வைப் படித்து மனதில் பதிய வைத்து தன்னுள் அந்த உணர்வை வளர்த்து அவர் இறந்திருப்பார்.

இவர்கள் இப்பொழுது புதிதாகச் சாகாக்கலைப் புத்தகங்களைப் படித்துக் கொண்டு “மீடியம் பவர்… 1..,2..,3…” என்று எடுத்து இறந்த ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு “போகரிடம் பேசுகின்றேன்…” என்று கூறுவார்கள்.

இவர் எப்படிப் பச்சிலைகளுக்கு அலைந்தாரோ கண்டாரோ இதனின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் இவருடைய உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா இதே நிலை கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்துவிடும்.

அதன் பிறகு புகுந்து கொண்ட உடலில் சாகாக்கலையாகச் செயல்படுத்திவிடும்.

இப்படிப் போகர் என்னிடம் பேசினார் என்று சொன்னால் இதைத் தேடிக் காசைச் சேர்க்கும் நிலைக்குத்தான் வருகின்றனர். உடலை வளர்க்கத்தான் பயன்படுத்துகின்றனர்.

இந்தப் புவிக்குள் தோன்றும் உணர்வின் சத்தை அது எங்கிருந்தாலும் பழனி மலையில் ஒரு குகைக்குள் இருந்து போகர் கவர்ந்து சுவாசித்தார்.

தான் சுவாசித்த நிலைகள் கொண்டு தனது இருப்பிடமான இந்தச் சரீரத்தில் இருந்தாலும் தன் எண்ணத்தை ஊடுருவச் செய்து எங்கெங்கு இருந்து நுகர்ந்தாரோ அங்கெல்லாம் ஒளியான உணர்வின் அணுக்களைப் படரச் செய்தார்.

தன் உயிராத்மாவைப் பிரபஞ்சம் முழுவதும் படரச் செய்து அவர் தம் உணர்வின் தன்மையை ஒளியாக்கிச் “சப்தரிஷி மண்டலத்தின் அங்கமாக ஒளியின் சரீரமாக…” விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்.

1.உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்த
2.போகமாமகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்தால்
3.”என்றும் அழியா ஒளிச் சரீரமாக” நாமும் வாழலாம்.

உயர்ந்த சக்தியை உங்களுக்குள் கொடுக்கின்றேன்… நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டும்

 

இராக்கெட்டை விஞ்ஞானிகள் விண்வெளியிலே அனுப்பினாலும் தரைக்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லை… அலைகளை வைத்துத் தான் அதனுடன் தொடர்பு கொள்கிறார்கள்.

இவர்கள் அனுப்பிய இராக்கெட்டில் சந்தர்ப்பத்தால் ஏதாவது பழுதடைந்தால் தரையிலிருந்தே லேசர் இயக்கமாக அந்த இயத்திரத்தைப் பூமியிலிருந்தே சீர் செய்கின்றார்கள்.

அதைப் போன்று
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி… அதை வைத்து ஒரு பழுதடைந்த மனதைத் தூய்மைப்படுத்த முடியும்…
2.அதாவது அடுத்தவர்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியால் (லேசர் இயக்கம் போன்று) நாம் சீராக்க முடியும்.

இன்றைய மனித வாழ்க்கையில் தொழிலின் நிமித்தங்களிலோ அல்லது குடும்ப நிலைகளிலோ அல்லது பற்று கொண்டு தொழில் நடத்தும் போதோ சில வித்தியாசமான நிலைகள் ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகிறது.

பகைமையான பின் அவருடைய பொருள் தான் என்று தெரிந்தாலும் பகைமை உணர்வு கொண்டே அதைச் செயல்படுத்துவதும்… அவருடைய பொருள் என்ற நிலையில் அதைக் கொடுக்காத நிலையும் ஏற்பட்டு விடுகின்றது
1.அதாவது அடுத்தவருடைய பொருளை எடுத்துக் கொண்டு
2.”என்னுடையது தான்…” என்று இம்சிக்கும் இத்தகைய நிலைகள் இன்று உலகில் பெரும்பகுதி நடக்கின்றது.

இதைப் போன்று நடக்கும் தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் துருவ தியான நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் தூய்மைப்படுத்த வேண்டும்

உடல் அழுக்கைப் போக்க நாம் எப்படிக் குளிக்கின்றோமோ… துணி அழுக்கைப் போக்கச் சோப்பைப் போட்டு அதை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… இதைப் போன்று நமது ஆன்மாவில் பட்ட அழுக்கினைப் போக்க… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் செலுத்த வேண்டும்.

மற்றவர்கள் செயலைப் பார்த்து நாம் எந்த விருப்பு வெறுப்பினை அடைந்தோமோ அவர்களை எண்ணி “அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும்…” என்று எண்ண வேண்டும்.

1.எனக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் அவருக்குள் வரக்கூடாது என்ற இந்த உணர்வினை நாம் எண்ணினோம் என்றால்
2.அவர்கள் நம்மைப் பகைமையாக எண்ணும் போதெல்லாம் இந்த உணர்வுகளை அவர் நுகர நேர்ந்து
3.நம் மீது பகைமையை மறந்து… சிந்திக்கும் திறனையும் அவர்களுக்கு நாம் உருவாக்க முடியும்.

ஏனென்றால்
1.அவ்வளவு பெரிய உயர்ந்த சக்தியை உங்களுக்குள் கொடுக்கின்றேன்
2.நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டும்
3.சிறிது காலம் இவ்வாறு செய்தால் இங்கிருந்தே பிறருடைய குறைகளை நாம் நீக்க முடியும்

உதாரணமாக
1.நன்மை செய்தார் என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது
2.தீமை செய்கிறான் பாவி…! என்று எண்ணினால் புரையோடித் தீமையின் செயலாக உருவாக்குகின்றது

அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நமக்குள் பெருக்கி
2.தீமை செய்வோர் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால்
3.தீமைகளிலிருந்து மற்றவரை மீளச் செய்யவும் முடியும்.

மனித உணர்விற்கு எட்டாத பல கோடி நிலைகள் இயற்கையில் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

எறும்பிற்கும் உணர்வுண்டு… சிறு மண் புழுவிற்கும் உணர்வுண்டு…! இஜ் ஜீவத் துடிப்பு நிலையுள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே இவ்வுணர்வு நிலையுண்டு.

ஆனால் தாவர வர்க்கங்களுக்கு இஜ் ஜீவத் துடிப்பு நிலை இல்லாததினால் தாவரங்களுக்கு உணரும் தன்மை இல்லை.

சில வகைத் தாவரங்கள் மனிதனின் உடல் உறுப்புகள் பட்டவுடனே சுருங்கும் தன்மை பெறுகின்றன. உணர்வில்லாமல் அவை எப்படிச் சுருங்குகின்றன என்று எண்ணுவீர்…?

இவ்வுணரும் சக்தி பெற்ற ஜீவஜெந்துக்கள் அதற்குகந்த அவை ஈர்த்து வளர்ந்த அமிலத் தன்மைக்குகந்த காந்த சக்தி நிலையுண்டு.

இச்சக்தியினால் அத்தாவரங்களின் மேல் இச்ஜீவஜெந்துவின் சக்தி நிலை பட்டவுடன்… அந்தத் தாவரம் எந்த நிலை கொண்ட சக்தி பெற்று எந்த அமிலத்தை ஈர்த்து வளர்ந்ததோ… அந்நிலைக்கும் இந்நிலைக்கும் எதிருண்ட நிலை அடைவதினால்… “மற்ற ஜீவ ஜெந்துவின் உறுப்புகள் பட்டவுடன் அது சுருங்கும் நிலைக்கு வருகின்றது…”

அஜ் ஜீவ ஜெந்துவின் வெப்ப நிலையும் அத்தாவரத்தின் வெப்ப நிலையும் மாறுபட்ட நிலையில் உள்ளதினாலும் இந்நிலை பெறுகிறது.

சில வகைத் தாவரங்கள் சில நிலை கொண்ட மனிதரின் தீய எண்ணத்தையே ஈர்த்து நச்சு நிலையில் வாழ்பவரின் உஷ்ண நிலை அவர் அந்நிலையில் எடுக்கும் சுவாச நிலை அந்தத் தாவரங்களின் மேல் பட்டாலே அத்தாவரம் கருகும் நிலை பெறுகிறது.

இன்னும் சிலரின் நிலையில் அவர்கள் விதை விதைத்தால் அவ்விதை வளர்ந்திடாது. அவ்விதையே இவர் கையில் ஏந்தி வைத்துள்ள நிலையிலேயே அவர் எடுக்கும் சுவாச நிலை கொண்டு அவர்களின் அங்க சக்தியைக் கொண்டு அவ்விதைக்கு வளரும் சக்தியற்றுப் போகிறது. அந்நிலையில் அவர் விதைக்கும் விதையும் வளர்வதில்லை.

1.சிலரின் சுவாசத்தினால் இவ்வுலக சக்தியையே சக்தியாகக் காணும் நல் நிலை உள்ளது
2.சிலரின் சுவாசத்தினால் அவர்களின் எண்ணத்தின் நிலையினாலேயே
3.எந்த நிலைக்குச் சென்றிட்டாலும் சோர்ந்த நிலை பெறுகின்றனர்.

சக்தி நிலை பொதுவானதே…! இவ்வெண்ண நிலையினால்தான் மாறுபட்ட நிலைகளெல்லாம்…!

தாவரங்களின் நிலைக்கு இவ்வுணரும் நிலையும் எண்ண நிலையுமில்லை. உயிரணுவாய் ஒரே நிலையில் சக்தியை ஈர்த்து எந்நிலை கொண்ட அமில சக்தியை ஈர்த்து வளர்த்தனவோ அந்நிலைக்கொப்பத்தான் அவற்றில் விளையும் பூவும் காயும் கனியும் தானிய வகைகளும் இருக்கும்.

தாவர வர்க்கங்களை நாம் அதில் வளரும் பூவையும் காய்கனியையும் சில கீரைகளின் மேல் நிலையில் உள்ள கொழுந்துகளையும் நாம் பறித்து எடுக்கும் பொழுது அதன் நிலை மென்மேலும் வளரத்தான் செய்கிறது.

அவற்றுக்கு ஜீவத் துடிப்பும் உணரும் தன்மையும் இல்லாமல் ஒரு நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளரப் பெற்றதினால் ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட கால நிலைப்படி அதன் பயன் நிலை கொண்டு சக்தியளித்து நமக்குப் பயன் தருகின்றது.

1.இந்த இயற்கையின் சக்தியில் பல நிலை கொண்ட ஒவ்வொன்றிற்கும் மாறுபட்ட நிலையில்
2.நம் எண்ணத்திற்கும் நம் உணர்விற்கும் எட்டாத பல கோடி நிலைகள் உள்ளன.

சில தாவரங்கள் பல நாட்கள் வளர்ந்தாலும் பலன் தராததை வைத்தும் இன்னும் சில வகைத் தாவரங்களுக்கு ஒன்றுக்கெதிரில் அதே நிலைகொண்ட (ஜாதி) அதன் நிலை பெற்ற தாவரம் இருந்திட்டால்தான் இவை இரண்டுமே பலனளிக்கும்.

தாவரங்களில் சில பலன் தராத நிலை பெற்றதை ஆண் தாவரம் என்கின்றனர். தாவரங்களுக்கு இவ் ஆண் பெண் என்ற நிலையில்லை. உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிடும் எவ்வுயிரணுக்களுக்குமே இவ் ஆண் பெண் நிலையில்லை.

உயிரணுவாய் இருந்து ஜீவ ஆத்மாவிற்கு வந்த பிறகுதான் இவ் ஆண் பெண் நிலையெல்லாம். ஆவி உலகத்திலும் இவ் ஆண் பெண் நிலையில்லை.

இவ்வாவி உலகிலிருந்து ஜெனனத்திற்கு வருபவர்களின் ஆவி ஆத்மாவின் எண்ணப்படிதான் இஜ்ஜீவ ஆத்மாவிற்கு ஆணாகவும் பெண்ணாகவும் வந்து பிறப்பது எல்லாம்.

1.அவரவர்கள் எண்ண நிலைக்கும் உணர்வு நிலைக்கும் தக்கப்படிதான்
2.அவ்வாவி உலக ஆத்மா இஜ் ஜீவ உடலுக்கு வருகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மடாதிபதிகளின் நிலை எல்லாம் “குரு… சிஷ்யன்…” என்ற நிலைகளில் உடலை விட்டுச் சென்ற பின் சிஷ்யன் உடலுக்குள் சென்றாலும் அடுத்த நிலை என்ன…? என்றே தெரியாதபடி இன்றும் தவித்துக் கொண்டுள்ளார்கள்.

நமது குருநாதர் இதைத் தெளிவாக்கியுள்ளார்.

எப்பொழுதுமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நீங்கள் எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தான் குருநாதர் எம்மைத் தியானிக்கும்படி சொன்னார். அதைத்தான் செய்து கொண்டு வருகின்றேன்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து இதை வலுப்பெறச் செய்து உங்களுக்குப் பெறச் செய்து நீங்கள் உயர வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

இதைப் போலத்தான் நீங்களும் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். இதை விடுத்துவிட்டு… குரு சிஷ்யன் என்ற நிலைகளில் சொல்லி விட்டால் நீங்கள் இந்த மனிதப் பிறவிக்குத்தான் வர முடியும்.

அதைத் தவிர்ப்பதற்குத்தான்
1.யாம் சந்திக்கும் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்ற அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.
4.உங்கள் அனைவருடைய எண்ணங்களும்
5.மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் தியானிப்பதால்
6.உங்கள் ஈர்ப்புக்குள் (உடலுக்குள்) நான் வர முடியாது.

காரணம் உங்கள் உணர்வுகளை அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளுடன் இணைக்கத்தான் செய்ய முடியும்.

“நான் சொல்கிறேன்…” என்று நீங்கள் என்னை எண்ண வேண்டியதில்லை.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும். அதை அப்படிப் பற்றினால் தான் அங்கே செல்ல முடியும்.

யாம் உபதேசிக்கும் இந்த உணர்வுகளை… “நீங்கள் பயன்படுத்தி” அங்கே செல்ல வேண்டும்.

நீங்கள் எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் மகரிஷிகளுடன் ஒன்ற வேண்டும் இந்த வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் காணும் சக்திகள் நீங்கள் பெற வேண்டும் என்று தான் நான் தவமிருக்கின்றேன்.
1.நான் எண்ணுவது போல் நீங்கள் எண்ணினால்
2.நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் போகலாம்.

ஒரு தொழிலுக்குச் செல்கின்றீர்கள் என்றால் அங்கே சென்றவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் பார்வை நலமாக இருக்க வேண்டும் என்று உங்களை எண்ணும்படிச் சொல்கின்றேன்.

அப்பொழுது உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று எண்ணினால்
1.சதா உங்களை நான் தியானிக்கும் பொழுது
2.நீங்கள் அங்கிருந்து…, “எடுத்தால் தானே…” – அது நடக்கும்.
3.சாமி தான் காப்பாற்றுவார் என்று என்னை எண்ணிக் கொண்டிருந்தால்
4.உங்களை நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள் அல்லவா.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படரவேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.

நாம் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அது கிடைக்கும்.

அதற்கு உபாயமும் அருள் சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று யாம் தியானிக்கின்றோம்.

டி.வி ரேடியோ இவைகளில் ஒலி பரப்பச் செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேசனிலிருந்து எதை ஒலி பரப்புச் செய்கின்றார்களோ அதை எடுக்க வேண்டும் என்றால் அந்த ஸ்டேசனை வைத்தால் தான் அதைப் பெற முடியும்.

இதைப் போன்றுதான்
1.உலகில் உங்கள் ஆசையின் நிலைகளை இங்கே வைத்து
2.அந்த “ஆசை” என்கிற ஸ்டேசனை வைத்துக் கொண்டிருந்தால்
3.“சாமி செய்வார்…” என்றால் சாமி எப்படிச் செய்வார்…!

யாம் சொன்ன உணர்வின் வழிப்படி நீங்கள் செய்தால் இதே உணர்வின் அலை வரிசை இங்கே இருக்கின்றது. அதை எடுத்தால் உங்களுக்குள் அந்த உணர்வுகள் வேலை செய்யும்.

இல்லை என்றால் நாம் இந்த மண்ணுலகின் பற்றைத்தான் வளர்க்க முடியுமே தவிர விண்ணுலகப் பற்றை எடுக்க முடியாது. எதிலுமே அந்த விண்ணுலகப் பற்றுதல் வந்து கொண்டேயிருக்க வேண்டும்.

ஏனென்றால் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்.

நாங்கள் செல்லும் இடங்களெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். நாங்கள் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.
1.இந்த உணர்வுகள் இது உங்களுக்குள் வளர்ந்து கொண்டேயிருக்கும்.
2.உங்கள் வாழ்க்கைக்கு நல்ல வழியையும் அது காட்டும்.
3.நீங்கள் இந்த நிலையிலிருக்கும்போது உங்களுக்கு நல்ல வரவேற்பும் (செல்லும் இடங்களில்) இருக்கும்.
4.அங்கே அவர்கள் அறியாமல் தீமைகள் இருந்தாலும் அது மாறி
5.அந்த அருள் ஞானத்தின் நிலைகளில் உங்களுக்குள் வளரவும் செய்யும்.

எத்தகைய நிலையாக இருந்தாலும் அங்கே மறைந்த உண்மையை வெளியே கொண்டு வரும் சக்தி நமக்கு உண்டு

 

பணத்திற்கு அடிமையானவர்கள்… பணத்தையே குறிக்கோளாக வைத்துப் பிறருடைய துன்பத்திற்குத் தீர்ப்பு கூறுவார்கள். அங்கே உண்மையின் நிலைகள் தீர்ப்பு வராது. இன்று சத்தியம் தர்மம் “செல்வத்தில் தான்…” இருக்கின்றது.

இது போன்ற சூழ்நிலையில்
1.நாம் வளர்த்துக் கொண்ட அருள் செல்வத்தை வைத்து…
2.அந்த அருள் ஞானத்தின் உணர்வைத் தவறு செய்வோருக்குள் பாய்ச்சி
3.அவர்கள் தவறு இல்லாத நிலையில் நடந்து கொள்வதற்குச் செயல்படுத்த வேண்டும்.

தவறு செய்வோர் உணர்விலும்…
1.அந்த உண்மைகளை உணர வேண்டும்
2.அவர் தெளிவான செயலாக்கத்திற்கு வரவேண்டும் என்று உணர்வைப் பாய்ச்சும் பொழுது
3.நம்மை அவர்கள் எண்ணும் பொழுது இது ஊடுருவி
4.தவறு செய்யும் உணர்வினைப் பிளந்து உண்மையை உணர்த்தும் சக்தியாக அங்கே மாறும்.

இந்தச் சக்தி உங்களுக்கு உண்டு…!

ஒருவர் மேல் வெறுப்படையும் போது அந்தச் சக்தி கொண்டு “நாசமாகப் போவான்…!” என்று சொல்லப்படும் பொழுது அவர் செவிகளில் இது பட்டு இந்த உணர்வுகள் அவர் தொழிலுக்குப் பாதகத்தைப் ஏற்படுத்தும்… அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தால் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகின்றது.

1.மனித வாழ்க்கையில் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
2.பிறருடைய வேக உணர்வுகள் தாக்கி விட்டால் நம்முடைய சிந்தனையை அது சீர்குலையைச் செய்து விபத்துகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
3.சில விபரீத செயல்கள் நம்மை அறியாமலேயே செயல்படுத்தத் தொடங்கிவிடும்.
4.விபரீத செயல்கள் செயல்படுத்துவது மட்டுமல்லாதபடி குற்றவாளியாக ஆக்கும் நிலையும் உருவாக்கி விடுகின்றது.

பகைமையை வளர்த்து வெறுப்பின் தன்மை வரப்படும் பொழுது அடுத்து நம் நண்பரிடத்தில் பழகினாலும் அவரையும் வெறுப்பின் தன்மை அடையச் செய்யும்.

நம் பெயரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவருக்குள் சென்று ஏற்கும் நிலை இல்லாதபடி நமக்கு உதவி செய்வதும் தடைப்படும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எண்ணி எடுக்கும் பொழுது பிறருடைய தீமைகள் எதுவாக இருப்பினும் அது நமக்குள் பதிவாக்கப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டாது இது அடக்கிவிடும்.

அதே சமயத்தில் யார் யாரெல்லாம் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
2.அவர்கள் அறியாது செய்த தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுபட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாற வேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலே அவர்களுக்குள் வரவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

யார் தீங்கு செய்தாலும் அவர்களுக்கு அருள் ஞானத்தை இப்படி ஊட்டுங்கள்.

நாரதன் கலகப்பிரியன்… நாம் ஈடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாரதனாகச் சென்று உண்மையை வெளிப்படுத்தும் சக்தியாக வருகின்றது. இதைத் தான் காவியங்களில் நாரதனை முக்கிமாக வர்ணித்துக் காட்டியிருப்பார்கள்… “நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்று…!”

இதனின் உணர்வினை நாம் வழிப்படுத்தினால் தீமைகளை உருவாக்கும் நிலையில் இருந்து “நம் எண்ணத்தாலேயே நாம் விடுபட முடியும்…”
1.இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் உணர்வை நாம் தொடரப்படும் பொழுது அதைப் பற்றுடன் பற்றுகின்றோம்
2.மகரிஷிகள் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் செல்கின்றோம்.

ஒரே நிலை கொண்ட சுவாசத்தைப் பெற வேண்டியதன் அவசியம் – ஈஸ்வரபட்டர்

 

நாம் எடுக்கும் சுவாசம் ஒரே நிலை கொண்டதாக இருந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையுடன் எடுக்கும் சுவாசத்தில் நம் நிலைக்கு நாம் பெறும் சக்தி நிலை தடைப்படுகின்றது.

1.வாழ்க்கையில் பல நிலைகள் மோதுண்டாலும்…
2.நம் எண்ண சக்தி அவ்வீசனின் ஜெபம் கொண்டதாக
3.நம்முள்ளே உள்ள ஈசனை வணங்கிய நல் சக்திக்கு வர வேண்டும்.

காட்சி:
இல்லத்தில் தூசி அண்டிக் கொண்டே இருந்திட்டாலும் அதனை நாம் பெருக்கித் தூய்மைப்படுத்திக் கொண்டே உள்ளோம்.

அதே போல் ஒரு தீபத்தை ஏற்றும் பொழுது அத்தீபத்தில் உள்ள எண்ணெய் குறையக் குறைய மீண்டும் அவ்வெண்ணையை ஊற்றித் தீபத்தின் திரியைத் தூண்டுகின்றோம்.

அப்படித் தூண்டினால்தான் அத்தீபம் ஒளி அளித்துக் கொண்டே இருக்கும்.

1.அதே போல்… நம் எண்ணத்தை எண்ணெயாக்கி
2.நம் ஆத்மாவின் ஜோதி என்னும் ஒளிரும் சக்தியில்
3.இவ் எண்ணமான எண்ணெயைக் குறையக் குறைய ஊற்றி
4.தீபம் சுடர் விட்டுப் பிரகாசிப்பது போல்
5.நம் சக்தியை நாம் உணர்ந்து… உணர்வுகள் ஒளியாகும் நல் சக்தி பெற வேண்டும்.

தாவர வர்க்கங்கள் ஒரே நிலை கொண்ட சக்தியை மட்டும் ஈர்த்து எப்படி அச்சக்தியின் நிலை கொண்ட செயலில் வளர்கின்றனவோ அந்த நிலை போல் நம் நிலையும் இருந்திடல் வேண்டும்.

தாவரங்கள் அதன் இயற்கையின் சக்தியில் ஒரே நிலை கொண்டு அவ்வணு வளர்வதினால் ஒரே சக்தியில் ஈர்த்து வளர்கின்றன.

ஆனால் ஜீவ ஆத்மாக்கள் (நாம்) பல நிலைகளை எண்ணும் நிலையில் உள்ளத்தினால் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்தந்த நிலைக்குகந்த சக்தி நிலையும் நம் உடலுக்குள் செல்கின்றது.

அதிகோப நிலையும் சலிப்பு நிலையும் பயந்த நிலையும் இப்படி ஒவ்வொரு நிலை கொண்ட எண்ணமுடன் நாம் உள்ள நிலையில்
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் இக்காற்றில் உள்ள அமிலத்தில் இருந்து அவைகள் நம் உடலில் வந்து குவிந்து
3.நம் உடலின் நிலையை மாறுபடச் செய்கின்றது.

ஆக… நாமாக ஏற்பதுதான் நம் வாழ்க்கை நிலையும் ஆயுள் நிலையும்.

எண்ண சக்தி கொண்டு உயிராத்மாவாய்ப் பிறந்து இவ்வெண்ணமுடனே வளர்ந்து இவ்வெண்ணத்துடனே உடலை விட்டு ஆத்மா பிரிந்தும் இவ்வெண்ணத்துடனே ஆவி உலகில் சஞ்சரித்தும் பிறகு இவ்வெண்ண நிலைகொண்டு தான் இப்பூமிக்கு மறு பிறப்பிற்கும் வருகின்றோம்.

உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே அந்த நிலை கொண்டு வளர்ச்சியுற்று எல்லா நிலைகளுமே இந்த எண்ணத்துடன்தான் செயல்படுகின்றன.

எண்ண சக்தியை நாம் பெற்ற மானிடனாக இப்பூமியில் வாழ்ந்திடும் காலத்திலேயே
1.நாம் பிறந்ததின் பயனை உணர்ந்து
2.நம் ஆத்மாதான் நமது தெய்வம்
3.அவ்வாத்மாவிற்கு நாம் ஈர்க்கும் சுவாசம் கொண்டும்… நாம் சேமிக்கும் சக்தி நிலையைக் கொண்டும்…
4.நம் நிலையை நல் நிலை ஆக்கிடும் நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தி வாழ்ந்திடும் எண்ணத்தை வழிப்படுத்துதல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள தாவரங்களின் நிலையுடன் இயற்கை அன்னை அளித்துள்ள நல்ல கனிகளையும் உண்டிட்டே நம் நிலையில் அவற்றின் சக்தியைக் கொண்டே வளர்த்திடல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள இத் தாவரங்களுக்கு மட்டும் ஜீவனில்லையா..? இவ் இயற்கையுடன் பூமியில் உள்ள அனைத்துமே ஜீவனுடன் உள்ள பொழுது மிருகங்கள் பறவைகள் இவற்றின் மாமிசத்தைப் புசித்திடலாகாது. இத்தாவரங்களை நசித்து உண்ணலாமா…? என்றுரைப்பீர்.

தாவரங்கள் இப்பூமியைப் போன்ற நிலை பெற்றவை. உயிர் அணுவாய் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து அச்சக்தியின் நிலையின் தொடர்பு கொண்டு நம்மை வளரச் செய்பவை.
1.இத்தாவரங்கள் உயிரணுவாய் வளரப் பெற்றவைதான்
2.ஆனால் இச்சரீர நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஜீவத்துடிப்பு இல்லாதவை.

இஜ்ஜீவனுடன் ஜீவன் பெற்ற அனைத்து ஆத்மாக்களுக்குமே அது ஈர்க்கும் சக்தி கொண்ட உஷ்ண அலைகளின் வெக்கை நிலையும் அதன் உடல் ஆரோக்கிய நிலையைப் பொறுத்துக் கூடிக் குறையும் நிலை அஜ் ஜீவனுடனே அஜ் ஜீவனே ஏற்படுத்திக் கொள்கிறது.

தாவரங்களின் நிலையில் நம் பூமி வெளியிடும் உஷ்ண சக்தியின் நிலைதான் அந்நிலையில் வளர்ந்திடும் தாவரங்களுக்கும் இருந்திடும்.
1.ஜீவத் துடிப்பும் ஜீவ எண்ணமும் தாவரங்களுக்கில்லை
2.தாவரங்களின் சக்தியெல்லாம் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளர்ந்திடும் நிலைதான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கை கால் வலி மூட்டு வலி உடல் வலி நெஞ்சு வலி என்று இவையெல்லாம் வருவது எதனால்…!

சந்தர்ப்பவசத்தால் நாம் நஞ்சான உணர்வுகளை சலிப்பு சஞ்சலம் கோபம் வேதனை ஆத்திரம் நுகர்ந்துவிடுகிறோம். அந்த நஞ்சான உணர்வுகள் நம் உடலில் சேர்ந்தவுடன் நம்மை மனிதராக உருவாக்கிய அனைத்தும் மாறுகின்றன.

இதனால் அங்கங்கே வலி நுரையீரல் வீக்கம் போன்றவை வருகின்றன.

இதற்கு விஞ்ஞானிகள் (டாக்டர்கள்) என்ன செய்கிறார்கள்…? மற்ற உடலின் உறுப்புகளை இரசமாக்கி நோய்வாய்ப்பட்ட உடலுக்குள் செலுத்திப் பலவீனமான உறுப்புக்களை வலிமையாக்குகின்றனர்.

இதற்குண்டான உபாயங்களைச் செய்து நோயின் வேகத்தைத் தணித்தாலும் நாம் எத்தனை காலம் வாழ்கின்றோம்…?

ஆடு மாடு போன்றவைகளின் உணர்வுகளை நுரையீரல்களில் செலுத்துகின்றனர். ஆனால் ஆடு மாடுகள் தங்கள் உடலில் “விஷத்தை ஏற்றுக் கொண்டவைகள்…”

அதனின் உணர்வின் தன்மையினை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.விஷத்தின் தன்மை கொண்டு நோயின் அணுக்கள் வராது.
2.அப்பொழுது அடுத்து மனிதருக்கு எந்தக் குணம் வரும்…?
3.மிருகக் குணம் தான் வரும்.

இதே போன்று மற்ற உணர்வின் செல்களை எடுத்து மாற்றி மாற்றி 1500 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதனை உருவாக்க முடியும் என்று முயற்சிக்கின்றார்கள்.

1500 ஆண்டுகள் வாழ்ந்தாலும் தனது குழந்தைகள் மற்ற உறவினர்கள் மீது பாசம் இல்லாமல் இருக்க முடியுமா…?

வாலிபராக ரோட்டில் நடந்து செல்லலாம். விபத்து ஒன்றை நேரிடையாகவே காண்கிறோம். அல்லது இன்று டி.வி. இன்டெர்னெட்டில் நேரிடையாகவே விபத்தின் கொடுமைகளைக் காட்டுகின்றார்கள்.

அதையும் நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்த அலைவரிசையில் உள்ளதை டி.வி இன்டெர்னெட் கவர்ந்து நமக்குக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நாம் எந்த உணர்வைப் பதிவு செய்கின்றோமோ நுகர்ந்த உணர்வு பதிவான பின் அதே உணர்வை நம்மை நுகரும்படிச் செய்கின்றது.

நம் கண்களே நமக்கு ஆண்டென்னா. விபத்து ஒன்றைக் காணும் பொழுது அதிர்ச்சி என்ற உணர்வை உடலில் பரவச் செய்கின்றது.

ஒரு பக்கம் இழுத்தால் ஒரு பக்கம் வளர்கின்றது. மற்றொன்றின் நிலைகள் வரப்படும் பொழுது “போராடுகின்றது”. அதன் பிறகு
1.1500 வருடமும் போராடிப்… போராடி…
2.ஊசி மருந்தைச் செலுத்திச் செலுத்தி…. வாழ்க்கைக் காலத்தை ஓட்டலாம்.

வாலிபத்தைப் பெருக்க இறந்த குழந்தையின் மூளையிலிருந்து திசுக்களை எடுக்கின்றனர். இதனை இன்னொரு உடலில் சேர்க்கப்படும் பொழுது முதுமை இளமையாகின்றது… இது விஞ்ஞான அறிவு.

முதுமையாக இருக்கும் மனிதனை இளமையானவனாக மாற்றுகின்றார்கள். “இவ்வளவும் செய்து…” உடலுக்காக வாழ்ந்தாலும் உடலை விட்டுப் பிரிந்தால் எங்கே செல்ல முடியும்…?

கெமிக்கல் கலந்த உணர்வுகள் நம் உயிராத்மாவில் பெருகி மீண்டும் மனித உடல் பெறாத நிலைகள் விஷத் தன்மை கொண்ட உயிரினங்களாகப் பிறக்கச் செய்துவிடும் உயிர்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மனிதர்கள் நாம் மீள வேண்டுமா இல்லையா…!

1.நம் உயிரில் நஞ்சு கலக்காதபடி பாதுகாக்கும் நிலைக்குத்தான்
2.நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும்படிச் செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் நோய் நீக்கிடும் ஆற்றல் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மருந்து மாத்திரை உட்கொள்ளும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணிவிட்டு எடுத்துக் கொண்டால் அந்தக் கெமிக்கல் கலந்த நஞ்சு நம் உயிராத்மாவில் சேராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

ஆகவே உடல் நலமும் பெறுகின்றோம். நஞ்சு நமக்குள் சேராதபடியும் தடுத்துக் கொள்கின்றோம்.

அகஸ்தியர் உணர்வையும் குருநாதர் உணர்வையும் கலந்தே நாம் தியானிக்க வேண்டும்

 

நமது உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது.

நம் உயிர் ஓ என்று இயக்கி ம்… என்று உடலாக்கப்படும் போது உடலில் உருவான அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது.

1.நம் குருநாதர் அவர் உயிரிலே உருவாக்கிய உணர்வின் தன்மையை
2.இந்த மனித வாழ்க்கையை வென்று என்றும் ஒளிச் சுடராக வளர்ந்திடும் அவர் சக்தியை
3.நமது குருவை எண்ணி அதை ஏங்கிப் பெறும் பொழுது
4.நம் உயிர் அணுவின் கருவாக அதை எல்லாம் உருவாக்கப்படும் போது
5.நமக்குள் உருவாக்கும் ஈசனாக நம் குரு (குருநாதர்) வருகின்றது (வருகின்றார்).
6.(அதனால் தான்) ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் அவருக்குப் பெயர் வைத்தார்கள்.

அவர் தனக்குள் வளர்த்த அந்த அருள் சக்தி… அவர் உபதேசித்த உணர்வுகள் நமக்குள் குருவாக இருந்து… அரூப உணர்வை நமக்குள் அது உணர்த்தி… அவர் பெற்ற வழியில் நம்மையும் அருளானந்தம் பெறும் நிலைகளுக்கு… அது குருவாக அழைத்துச் செல்லும்.

அகஸ்திய மாமகரிஷியை அவர் கண்டுணர்ந்த வழியில்
1.நஞ்சினை வென்றிட்ட அகஸ்தியர் உணர்வினைப் பெற்ற அந்த குரு அருள் நமக்குள் உறுதுணையாக இருந்து
2.அவர் தான் நுகர்ந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை நாம் கவரும் தன்மை பெற்று
3.இருளை வென்று ஒளியை உருவாக்கும் உணர்வின் சக்தியைப் பெறும் தகுதியை நாமும் பெறுவோம்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம்
“நம் உயிரும்…”
“நம் குருவும்…”
இணைந்தே வருகின்றார்கள்.

இந்த இணைவுடன் குரு அருளை நமக்குள் பெறுவோம் என்ற ஏக்க உணர்வுடன் அகஸ்திய மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை வேண்டிக் கண்களின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

நம் உயிருடன் தொடர்பு கொண்டு குரு காட்டிய அந்த உணர்வின் நிலையை நமக்குள்ளும் உருவாக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை இரத்த நாளங்களில் கருவுறச் செய்து அந்த உணர்வின் அலைகள் உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் பெற வேண்டும் என்று ஏக்கத்தைச் செலுத்தி உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அகஸ்தியர்… அவர் தான் பெற்ற அந்தச் சக்தியும்
2.நமது குருநாதர்…அவர் தான் பெற்ற அந்த அருள் சக்தியும் கலந்து
3.அதை நீங்கள் நுகரும் பொழுது அரும் பெரும் சக்தியாக
4.புதுப் புது தாவர இனங்களில் மணங்களை… அந்த நஞ்சினை வென்றிடும் அருள் சக்திகளை நுகர்வீர்கள்
5.நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் உங்களிலே உருவாகும்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் தகுதியை இப்போது பெறுகின்றீர்கள்.

முதல் பாதம்… இரண்டாம் பாதம்… என்றால் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

கால நிலை எப்பொழுதும் ஒன்று போல் இருப்பதில்லை. காலை பகல் இரவு ஒவ்வொரு தன்மைக்கு உகந்த உஷ்ண நிலையும் காற்று மழை இடி இவற்றைப் போன்ற சில நிலைகளும் மாறி மாறித்தான் இப்பூமிக்கும் அதன் சக்தி நிலை கிடைக்கின்றது.

இப்பூமியில் வாழும் நாமும் மற்ற ஜீவராசிகளும் இக்கால நிலையின் மாற்றத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு அவரவர்களின் நிலைக்குகந்த காப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஜீவ உடல் பெற்ற ஜீவ பிம்பம் கொண்ட ஆத்மாக்கள் வெயில் மழை காற்று பனி குளிர் இவற்றில் இருந்து ஜீவ உடலைக் காப்பதற்காக இருப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் ஜீவனுடன் வாழ்ந்து ஜீவன் விட்டுப் பிரிந்த ஆவி நிலையில் வாழ்ந்திடும் ஆத்மாக்களின் நிலைக்கு… அவ்வாவியுடன் ஆவியாகத் தன் சக்தியைத் தனியாக தன் ஆத்மாவுடனே கலந்து படர்ந்து வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள இவ்வாத்மாக்களுக்கு அவற்றின் சக்தியுடன் கலந்து விட்டதினால் இந்நிலை தாக்கப்படுவதில்லை.

இவற்றில் சில ஆவி உலக ஆத்மாக்கள் வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.அவ்வாத்மாவுடன் கூடிய ஆவி சக்தியுடன்..
2.இக்காற்றில் கலந்துள்ள அவற்றின் சக்திக்கு ஒத்த சக்தி அவற்றுடன் சேரும் பொழுது அதன் கனம் அதிகரிப்பதனால்
3.அதி மழை வரும் பொழுது இம்மழையின் தன்மையினால் கனமான ஆவி நிலை கொண்ட சக்தியை ஈர்த்த ஆத்மா
4.இப்பூமியின் மேல் மழை வரும் காலங்களில் வந்து படர்கின்றது.
5.அந்த நிலையில் அச்சக்தி நிலை கொண்ட ஆத்மாவே சில புதிய தாவரவர்க்கமாக
6.நச்சுத் தன்மை வாய்ந்த தாவர இனமாக வளர்கின்றன.

இவ்வுடலை விட்டு எந்த எந்த எண்ணம் கொண்ட நிலையில் ஆவி பிரிந்ததோ… அந்த அந்த நிலை கொண்ட எண்ணமுடன்தான் அனைத்து ஆவிகளுமே சுற்றிக் கொண்டுள்ளன.

தன் எண்ண நிலை கொண்டே சுற்றிக் கொண்டுள்ள ஆவிகளின் நிலை… அவரவர்கள் உடலில் வாழ்ந்த நாட்களில் ஈர்த்து வெளியிட்ட சுவாச நிலைப்படி ஆவி உலகிற்குச் சென்றிட்டாலும்… வாழ்ந்த நாட்களில் அவர்களின் குண நிலைப்படி உள்ள எண்ணத்தைக் கொண்டே ஆவி உலகினிலும் அவர்களின் எண்ணம் செயல்படுவதினால்… இந்நிலையை வைத்தே
1.அவர் முதல் பாதத்தில் உள்ளார் இரண்டாம் பாதத்தில் உள்ளார் என்று
2.இப்படிப் பல பாத நிலைகளை வரிசைப்படுத்தி… ஒவ்வொரு பாதமாக மேல் நிலைக்கு சென்று
3.அச் சிவனிடம் ஐக்கியப்படுவதாகச் சொல்கின்றனர்.

இப்பாதம் என்னும் நிலையென்ன…?

வெறியுணர்வுடன் செல்லும் ஆத்மாக்கள் அவ்வெறி உணர்வுடனேதான் ஆவி உலகில் இருந்தும் மற்ற உடல்களில் ஏறியோ மற்ற எண்ணங்களுடன் கலந்தோ இன்று நாம் பேய் பிசாசு என்று செப்பிடும் நிலையில் மிகவும் கீழ் நிலையான எண்ணத்துடனே தான் பெற்ற சக்தியைச் செயலாக்கியும் சுற்றிக் கொண்டுள்ளன.

சலிப்புடன் செல்லும் ஆத்மாக்கள்… அச்சலிப்பு நிலை கொண்டே பெரும் சோர்வுடனே ஆவி உலகிலும் சஞ்சரித்துக் கொண்டுள்ளன சில ஆத்மாக்கள்.

குடும்பப் பற்றுக் கொண்ட குடும்ப ஆசையுடன் செல்லும் ஆத்மாக்கள்… அக்குடும்பத்துடனே அக்குடும்பத்தை காக்கும் நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

தெய்வ பக்தியுடன் தன் எண்ணம் அனைத்தையும் பக்தி கொண்ட நிலையிலேயே செல்லும் ஆத்மாக்கள்… கோவில்கள் உள்ள இடத்திற்குச் செல்வோரின் எண்ணத்திற்கெல்லாம் ஆவி நிலையில் இருந்து கொண்டு… அப்பூஜை நிலைக்கே செல்பவரின் எண்ணத்தையும் செயலாக்கித் தானும் பூஜித்தே தன் எண்ணத்தை கலக்கவிட்டு வாழ்கின்றன சில ஆத்மாக்கள்.

இந்நிலையைத்தான் எந்தெந்த எண்ணம் கொண்டு ஆவி பிரிந்து ஆத்மா செல்கின்றதோ அந்தந்த நிலையை முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சூட்சுமமாக நம் முன்னோர் வெளியிட்டதை… இன்று பல நிலைப்படுத்திக் காண்கின்றோம்.

ஆனால் இவ்வெண்ணமுடன் எல்லாம் செல்லும் ஆத்மாக்கள் எவ்வளவு காலங்கள் ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருந்தாலும்… இப்பூமிக்கு எதாவது ஒரு பிறப்பிற்கு மீண்டும் மீண்டும் வரத்தான் செய்கின்றது.

“ஏழு ஜென்மம் எடுக்கின்றன…” என்று உணர்த்தினேன் முன் பாடங்களில். இவ் ஏழு ஜென்மத்தை மட்டிலும் எவ்வாண்டவன் செயல்படுத்தி அனுப்பினான் என்றுரைப்பீர்.

எவ்வாண்டவனும் செயல்படுத்திடவில்லை…!

இப்பூமியில் உயிர் அணுக்களாய் வந்து மோதும் அனைத்து உயிரணுக்களுமே மனிதப் பிறவியாய் வருவதில்லை.

அப்படியும் இம்மனிதப் பிறவியாய் முதல் பிறவிக்கு வருவதற்கு முன்னே பல நிலைகள் பெற்றுப் பல உயிராத்மாக்கள் மாறி மாறி… உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிய நாள் தொட்டு அவ்வுயிரணு ஈர்த்துச் சேமித்து கொண்ட சக்தியின் நிலை பெற்றுதான்… பல நிலைகள் மாறி மனிதக் கர்ப்பத்திற்கு இம்மனிதன் வருகின்றான்.

மனிதனாய் உருவம் பெற்று வரும் நிலையிலேயே இவ் ஏழு நிலைகளுக்குகந்த சக்திகளை ஈர்த்துதான் மனித நிலைக்கு வருகின்றான்.

1.தான் ஈர்த்த சக்தியினை என்றும் அழியாச் சக்தியாக்கி “ஒரே பிறவியிலேயே…” ஆண்டவன் நிலைக்குச் சென்ற அரும்பெரும் ஜோதிகள் பல உள்ளனர்.
2.தான் பெற்ற சக்தியே “இவ் ஏழு ஜென்மத்திலும் தவற விட்டு” பல ஈன நிலைகளுக்குச் செல்லும் எண்ணத்தையும் பல ஆத்மாக்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இன்று வாழும் வாழ்க்கை மட்டும் “எண்ணம் போல் வாழ்வு…” என்பதல்ல.

உயிரணுவாய் இவ்வுலகில் தோன்றிய நாள் தொட்டே இவ்வெண்ண சக்தியின் நிலை கொண்ட ஒவ்வொரு உயிரணுவின் சக்தி நிலையும் ஒவ்வொன்றுக்கும் கிட்டுகின்றது.

1.உயிரணுவாக நிலை பெற்ற நாள் கொண்டே… அதன் தொடராக
2.நாம் நம் நிலையைதனைச் செயல் கொண்ட வாழ்க்கையாக வாழ்வதுவே
3.இன்றைய நம் வாழ்க்கை நிலையும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் எனக்கு இடையூறு செய்கிறார்… வேதனைப்படுத்துகிறார்… கொலை செய்ய வருகின்றார்… என்று எண்ணும் பொழுது அச்சுறுத்தும் உணர்வுகள் வந்து “இரு அவனை நான் ஒரு கை பார்க்கின்றேன்…” என்ற உணர்வுகள் வருகின்றது.

கருப்பணச்சாமியின் கையில் அரிவாளையும் கொடுத்து முன்னாடி மோப்ப நாயையும் வைத்துள்ளார்கள்.

காரணம் ஒருவர் நம்மைப் பார்த்துப் பழி தீர்ப்பேன் என்று சொன்ன உணர்வை நுகர்ந்த பின் நமக்குள் என்னவாகின்றது…? நம்மிடத்தில் இருள் சூழ்கின்றது. வேதனை பெருகின்றது.

ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்… எனும் நிலையாக அவர் நம்மைப் பழி தீர்ப்பதற்கு முன்னால்
1.நாம் அவரைப் பழி தீர்க்க வேண்டும்
2.வெட்ட வேண்டும்… குத்த வேண்டும்… என்ற நிலை வருகின்றது.
3.சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லை. இதனின் உணர்வின் தன்மை உடலில் விளைகின்றது.
4.ஏதாவது ஒன்று என்றால் “தாக்குவதுதான்”.

இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அவர் அறியாமையிலிருந்து விடுபட்டுப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எங்கித் தியானிக்க வேண்டும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் நஞ்சை வென்றது. உணர்வின் தன்மையை ஒளியாக்கும் திறன் பெற்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்வதால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் உயிரில் பட்டு இதனின் உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது. உடல் முழுவதும் படர்கின்றது.

இதனின் உணர்வின் உணர்ச்சிகளை ஒளி அலைகளாக மாற்றுகின்றது. துருவ நட்சத்திரம் இருண்ட உலகிலிருந்து நம்மை மீட்கின்றது.
1.நமக்குள் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
2.அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
3.இப்படித்தான் ஞானிகள் நம்மைச் செய்யச் சொன்னார்கள்.

ஆனால் கருப்பணச்சாமிக்கு நாம் என்ன செய்கின்றோம்…?

ஆட்டை வாங்கி உனக்குப் படையல் செய்கின்றேன்… “என்னை நீ காப்பாற்று…” என்று சொல்லி வணங்குகின்றார்கள்.

ஆட்டை அறுத்துக் கொலை செய்து சாப்பிட்டு கருப்பணச்சாமிக்குக் கொடுத்தால் அவன் என்னைக் காப்பாற்றுவான்… என் மகனைக் காப்பாற்றுவான்…! என்று இருக்கின்றார்கள்.

இப்படி ஆட்டைப் பழி கொடுத்து வணங்கினால் என்னவாகும்…? நாம் நுகர்ந்த உணர்வுகள் “நம் நல்ல குணங்களைக் கொல்கின்றது…”

இது என்ன செய்யும் என்றால் நாம் தீமையின் நிலைகள் கொண்டு பிறரிடம் இதே செயலைச் செயல்படுத்தச் செய்யும்.
1.புற வாழ்க்கையில் இப்படி என்றால்
2.நமது அக வாழ்க்கையில் நம் நல்ல குணங்களைக் கொல்கிறது.
3.இதைக் காட்டுவதற்காகத்தான் கருப்பணச்சாமியை முச்சந்தியில் வைத்தார்கள்.

கருப்பணச்சாமிக்கு ஒரு பாட்டில் சாராயம் வைத்து ஆட்டுக்கறி வைத்து படையல் செய்து அருளாடி அவன் என்னைக் காப்பாற்றுவான் என்றால் அவன் எப்படிக் காப்பாற்றுவான்…!

தன் குடும்பத்தில் ஒரு துயரம் என்றால் கருப்பணச்சாமியிடம் போய்
1.என் மனைவி இப்படிச் செய்கிறாள் என்று கணவனும்
2.என் கணவர் இப்படிச் செய்கிறார் என்று மனைவியும் முறையிட்டு
3.“நீயே கேள்…!” என்று கணவன் மனைவிக்குள் சாபமிடும் நிலைகள் வருகின்றது.

இதனால் எத்தனை துயரங்கள் வருகின்றது?

கணவன் மனைவிக்குள் திருந்தி வாழ இடம் கொடுக்கின்றனரா…! இல்லை.

பாவி…! என்னை இப்படிக் கொடுமைப்படுத்துகின்றானே…! என்று புலம்பிச் சாபம் கொடுக்கின்றனர். ஏனென்றால் கருப்பணச்சாமி நம்மை மெச்சிக் காப்பாற்றுவார் என்று நினைக்கின்றனர்.

ஆட்டைக் கொலை செய்து இரத்த வாசனை கொண்ட உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது பழி தீர்க்கும் உணர்வுகளே அங்கே வரும்.

எந்த ஆட்டைப் பலி கொடுத்தாரோ அந்த ஆட்டின் உயிரான்மா கொன்றவரின் உடலுக்குள் செல்கிறது. ஆட்டின் இறைச்சியைத் தின்றவரின் உயிரான்மா உடலை விட்டுச் சென்றபின் எங்கே செல்கின்றது?

“நீ… வா இங்கே என்னைப் பழி தீர்த்தாயல்லவா….! வந்து ஆடாகப் பிறப்பு எடு” என்று ஆட்டின் ஈர்ப்புக்குள் செல்கின்றது.

இதைத்தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம்… “எமன் தண்டனை கொடுக்கின்றான்” என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆட்டைப் பலி கொடுப்பதை அந்த இருள் சூழச் செய்யும் நிலையைச் செய்ததைக் கண்ணால் பார்க்கின்றோம். இது நமக்குள் “புத்திரன்” ஆகின்றது.

ஆட்டைப் பலி கொடுக்கும் பொழுது என்னென்ன உணர்வுகளை எடுத்தோமோ அதுவும் நமக்குள் புத்திரன் ஆகின்றது. இந்தக் குழந்தையை வளர்க்கின்றோம். இந்தக் குழந்தையை வளர்த்த பின் என்ன செய்கின்றோம்…?

இதே உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நம் எண்ணம் தீமையை நீக்குவதற்கு மாறாக சித்திரபுத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் எனும் நிலையாக
1.“நீ ஆடாகப் பிறந்து வா…” என்று
2.நம் எண்ணம் எமனாகி… அடுத்து ஆடாகப் பிறக்கச் செய்கின்றது.

ஆடாகப் பிறக்க நமக்குச் சம்மதமா…!

நல்ல குணங்களைக் கொல்லும் தீமைகளிலிருந்து நம்மைக் காக்க வேண்டும் என்பதற்கே “கருப்பணச்சாமியைக் காட்டினார்கள் ஞானிகள்” சிந்தித்துப் பாருங்கள்…!

எந்த வகையிலும் (நன்மையோ தீமையோ) நாம் யாருக்கும் அடிமையாகிவிடக் கூடாது

 

மீண்டும் மீண்டும் உங்களுக்குள் ஞாபகப்படுத்துகின்றோம். நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் வளர்ச்சி நமக்குள் பேரின்பத்தை ஊட்டும் நிலையாக வரும்.
1.இந்த உடல் இருக்கும் பொழுதே அந்த அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால்தான்
2.நமக்கு அந்த வளர்ச்சி கிடைக்கும்.

ஆனால் யாரோ எவரோ செய்து கொடுப்பார்…! என்று எண்ண வேண்டாம்.

யாரோ செய்வார் என்று அந்த ஏக்கத்தில் செல்லப்படும் பொழுது தான் மகா சக்தி என்ற நிலைகள் கொண்டு அடுத்தவர்கள் வலையில் நாம் சிக்கி நம் புத்தி இழந்து அவருக்குள் அடிமையாகி விடுகின்றோம்.

அதற்குப்பின் அவர்களிடமிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

உதாரணமாக ஆசைகளை ஊட்டி “இந்தத் தொழிலில் நீங்கள் லாபம் பெறலாம்…” என்ற உணர்ச்சிகளை ஒருவர் நமக்குள் தூண்டி விட்டால் அவரைப் புகழாரம் பாடத் தொடங்குவோம்.

அவர் உதவி செய்வார்… உதவி செய்வார்… என்று அதே எண்ணத்தில் ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு நூறு ரூபாய் வேண்டும் என்று புகழ்ந்து பேசி நம்மிடம் கேட்பார். கேட்டவுடன் கொடுத்துவிடுவோம்.

அடுத்தாற்போல் நாம் அதைக் கேட்கப் போனால் நல்ல நேரத்தில் அன்று உபகாரம் செய்தீர்கள் இன்னும் ஒரு 500 ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை…! என்று கேட்பார்கள்.

ஆக.. புகழ்ந்து பேசுபவருடைய நிலையில் நாம் அடிமையாகி விட்டால் அவர் புகழ்ந்து பேசியே காசை நம்மிடம் வாங்கிச் சென்று விடுவார்.

நமக்குக் கஷ்டமாக இருக்கும் பொழுது பணத்தைக் கேட்டால்
1.ஐயோ… என்னிடம் காசு இல்லையே…! என்பார்
2.ஆனால் நாம் கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்
3.ஆனால் கேட்பதை நிறுத்த மாட்டார்
4.நாம் இல்லை என்று சொல்லி விட்டால் பகைமையை ஊட்டிவிடுவார்
5.காசைத் திருப்பி கேட்பார் என்று அடுத்தவரிடம் சீண்டி விடுவார்
6.கற்பனையாக உருவாக்கி கற்பனையான சொல்களைச் செய்து இடையூறை ஊட்டி பணத்தை வாங்க இவ்வாறு செயல்படுத்தி விடுவார்
7.கடைசியில் எப்பொழுது நீ பணம் கொடுத்தாய்…? நம்மைக் கேட்கும் அளவிற்கு வந்து விடுவார்

புகழாரம் பாடுவோர் கையிலே நாம் சிக்கிவிட்டால் மனிதனின் வாழ்க்கை இப்படிக் கடுமையாகி விடுகின்றது. சிந்திக்கும் செயலும் இழந்து விடுகிறது

ஆகவே நாம் ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றால்
1.திருப்பிப் பெறும் நிலைகளுக்கு இருக்கக் கூடாது
2.திருப்பிப் பெறாத நிலையில் இருக்க வேண்டும்

“மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும்…” என்று அருள் வாக்கினைக் கொடுத்து விட்டால் திரும்பக் கேட்கும் நிலை வராது. ஆகவே திரும்பக் கேட்கும் நிலை அற்று இருக்க வேண்டும்.

உபகாரம் செய்வதில் கவனமாக இல்லையென்றால் நட்புக்குள் பகைமையும் வந்து விடுகின்றது இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுக் கருக்களாக… அதைக் கருவாக்கி நாம் வளர்த்தோம் என்றால் உடலுக்குள் அணுக்களாகப் பெருகி ஒளியான வளர்ச்சியின் தன்மை கூடிக் கொண்டே வரும்.

1.பிறிதொரு பகைமையோ உணர்வு ஏமாற்றும் உணர்வோ நமக்குள் வராதபடி அருள் உணர்வின் தன்மை வலிமை பெற்று
2.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்… சிந்திக்கும் தன்மை பெறச் செய்ய வேண்டும்
3.என்னைப் பார்க்கும் போதெல்லாம் மற்றவர்களுக்கு நல்ல எண்ணம் வரவேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கருவாக்கி வளர்த்துக் கொண்டால்
5.உற்று நோக்கி நம்மை ஏமாற்றுவார்கள் இதை நுகர்ந்த பின்
6.ஏமாற்றும் செயலே அவர் உடலில் இருந்து விலகிச் சென்று விடுகிறது.

இதைப் போன்று நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்

எப்போதுமே அடுத்தவரிடம் நாம் பழகும் போது… அவர் கஷ்டங்களைச் சொன்னால் “அவருடைய கஷ்டத்தை நீக்கும் உபாயங்களை…” நாம் சொல்லிப் பழக வேண்டும்.

இதன் வழி நாம் செல்லும் பொழுது
1.அந்த அருள் உணர்வுகள் நமக்குள்ளும் பெருகும்… துன்பத்தைப் போக்கும் உணர்வுகள் நமக்குள் விளைகிறது.
2.நம் எண்ணங்கள் கொண்டு அந்தக் கஷ்டங்களைப் போக்கும் தன்மை வரும்.
3.ஆகவே அருள் வழியில் இத்தகைய உபாயங்களை நீங்கள் சொல்லுங்கள்.

இவ்வாறு செயல்பட நாம் அந்த உணர்வுகளை எண்ணும் போதெல்லாம் நம் உடலுக்குள் வளர்ந்த அணுக்களுக்கும் இந்த நல்ல உணர்வை ஊட்டி அதை வளர்க்கும் தன்மையும் பெறுகின்றது நாம் வாழ்க்கையில் இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்துப் பழகிக் கொண்டால் உடலை விட்டுச் செல்லும் போது நாம் மெய் ஒளி பெறுகின்றோம்.

குருவிற்குக் கொடுக்க வேண்டிய காணிக்கை – ஈஸ்வரபட்டர்

 

புள்ளிகளோ கோடோ மையமாக வைத்துத்தான் கோலம் போடுகின்றோம். அவற்றை அழகு பெறவும் செய்கின்றோம்.

அதே போல் நம் ஆத்மாவை நாம் உணர்ந்து… மையமாக அதை வைத்து நம் எண்ணச் சிதறல்களுக்கு அடிமையாக்கிடாமல் வாழ்ந்திட வேண்டும்.

இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகளெல்லாம் உள்ளனவோ அதைப் போலவே நம் உயிராத்மாவிற்கும் அனைத்துச் சக்திகளும் உள்ளன என்ற உண்மைகளை உணர்ந்திட வேண்டும்.

1.இப்பூமிக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு…
2.பூமிக்கு மேலே எந்த ஒரு பொருளைத் தூக்கிப் போட்டாலும் அதை எந்தக் கால அளவில் பூமி தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றதோ
3.அந்த நிலை போலவே நம் உயிராத்மாவும் ஈர்க்கும் காந்த சக்தி கொண்டதாகத்தான் உள்ளது.

இன்று நாம் நம் செயற்கையில் ஓடவிடும் அனைத்து இயந்திர நிலை கொண்ட சாதனங்களுக்கும்… அதற்குகந்த சக்தி நிலையை வைத்து மற்ற சக்தியை அதனுடன் மோதலிடும் பொழுதுதான்… நாம் அமைக்கும் இயந்திர நிலைகள் செயல்படுகின்றன… அச்சக்தியே செயல்படுகின்றது.

இந்த நிலை போலவே நம்முள் உள்ள இக்காந்த சக்தி கொண்ட அனைத்துச் சக்தி நிலையையும் ஈர்க்கும் இவ்வாத்மாவைப் பெற்ற நாமும் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… என்று தானாக இயங்கும் இயந்திரமாக இவ்வுடலை எண்ணிடலாகாது.

இவ்வுலகம் எந்தெந்த அமிலங்களை எல்லாம் ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றதோ அவற்றின் நிலைப்படுத்திய சக்தியனைத்தும் இவ்வுடலுக்கும் உண்டென்பதை உணர்ந்து
1.நம் ஆத்மாவின் உன்னத சக்தியை விரயம் செய்திடாமல்
2.நம் அறிவாற்றலை மென்மேலும் வளர்த்து
3.நம் உடலில் அண்டவிடும் பிணிகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய நிலையில் வாழ்ந்திடவும்
5.கோபம் குரோதம் சலிப்பு இவற்றிலிருந்து விடுபட்டு சாந்தம் அன்பு ஆசை என்ற ஆத்மிக நெறியை அனைவரும் ஈர்த்து
6.நமக்கு வழி காட்டும் ஆண்டவன் நிலைபெற்ற சப்தரிஷிகளின் அருளாசியைப் பெற்றிடல் வேண்டும்.

இந்த வளர்ச்சியில் இவ்வுலக உண்மைகளை மட்டுமல்ல… இவ்வுலகைப் போலுள்ள எல்லா மண்டலங்களின் நிலையையும் அதனதன் ஈர்ப்பு சக்தியையும் அறிந்திடலாம்.

ஒவ்வொரு மண்டலங்களுக்கும் அதற்குகந்த தனித்தன்மை உண்டு ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லை.

இன்றைய நம் வாழ்க்கை வழி முறைகள் அனைத்துமே பிறர் எழுதிய… பிறர் சொல்லும் நிலையைக் கேட்டு… வாழ்ந்திடும் நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆத்மீக நெறிக்கே பிற ஏடுகளையும் பழங்காலக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கையின் கால நிலையை அதிலே விரயமாக்கி பிறர் நிலை அறிந்து வாழும் எண்ண வேட்கை கொண்டதாகவே உள்ளது.

1.சக்தியின் சக்தி ஆத்மா தான் நாமும் என்றுணர்ந்து
2.நம்முள்ளேயே நம் சக்தியை வளர்த்து
3.அனைத்து நிலையையும் நாமே அறிந்திடும் ஆற்றலையும்… உணரும் சக்தி நிலையையும் நாம் பெற வேண்டும்.

வழி அறிந்திட குரு வேண்டும்… அக்குருவின் சக்திக்கு மேல் சக்தி பெறும் சக்திவானாகச் செல்வதுதான் குருவாக நாம் ஏற்பவருக்கு நாம் அளிக்கும் காணிக்கை…!

ஒவ்வொருவரும் தனக்குகந்த ஈர்ப்பு சக்தியை உணர்ந்து ஒரு நிலை பெற்று… “உயிரோட்டம் கொண்ட சக்தி ஜெபம் பெற்றிடுங்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைக்குக் கனியை எடுத்துக் கொண்டால் சிவம் அதற்குள் இருக்கக்கூடிய சுவை சக்தி.

ஒரு மிளகாயை எடுத்துக் கொண்டால் சிவம். அதற்குள் இருக்கும் காரம் சக்தி. மிளகாயைத் தனித்து வாயில் இட்டால் வெறுப்பின் தன்மைகளை ஊட்டுகின்றது.

சிவ சக்தி என்ற நிலைகளில் இயக்குகின்றது. அதாவது சக்திதான் சிவமாகிச் சிவத்திற்குள் சக்தியாக அது எவ்வாறு இயக்குகிறது…? என்ற நிலையைச்
1.”சைவ சித்தாந்தத்தில்” பேருண்மைகளை உணர்த்துகின்றார்கள்.
2.எதைத் தனக்குள் நுகர்ந்து கொண்டதோ அந்தச் “சித்த சக்தியின் தன்மையை” அங்கே உருவாக்குகின்றது.

சித்து வேறு… சித்தி வேறு.

மனிதனுக்குள் சித்து என்ற நிலைகளில் செய்து பல அற்புதங்கள் செய்வது சித்து. பல மனிதனின் உணர்வுகளை நாம் மீண்டும் மீண்டும் எண்ணி அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் சித்து.

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் சக்தியை மீண்டும் நாம் இயக்கப்படும் பொழுது “சித்துக்கள்” பல அற்புதங்களைக் காட்டலாம்.

ஆனால் சித்தி என்பது மகரிஷிகளின் உணர்வுகளையும் தாவர உணர்வின் ஒலிகளையும் நமக்குள் சித்தித்து உணர்வின் தன்மை அவர்கள் எப்படி ஒளியாகச் சென்றார்களோ அதன் வழி செய்வதே சித்தி.

சித்தி புத்தி என்று சிலர் சித்தாந்தங்களைச் சொல்வார்கள். இதையெல்லாம் பேருண்மையின் நிலைகள் காலத்தால் மறைந்துவிட்டது.

இதனின் உண்மையை உணர்த்துவதற்குத்தான் இங்கே விநாயகரை வைத்து இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…? என்று காட்டியுள்ளார்கள்.

நாம் பல கோடிச் சரீரங்களில் எடுத்து இன்று மனிதனை உருவாக்கியது இந்த உயிர். உயிருடன் உணர்ந்து உயிருடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் நாம். உயிரின் தன்மையை அறியும் பக்குவம் பெற்றது மனிதன்.

1.மனித நிலைகளிலிருந்து இப்பொழுது எதை வினையாக்க வேண்டும்…?
2.எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…?
3.இதைக் கேள்விக் குறியாகப் போட்டுக் காட்டி நம்மைச் சிந்திக்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

சைவ சித்தாந்தத்தில் காட்டியபடி நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.

கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

 

பற்று கொண்ட நிலையில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் மனைவியுடைய ஆன்மா பிரியப்படும்பொழுது கணவருடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது… கணவனுடைய ஆன்மா பிரியப்படும் போது மனைவியுடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.
1.உடல் பெறும் உணர்வுகள் இரண்டும் கரைக்கப்பட்டு
2.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
3.விண்வெளியில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
4.பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

அதாவது கணவன் உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா மனைவியின் பால் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனுடைய உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரம் பெற்று விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது துருவ தியானத்தில் இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

உதாரணமாக நெசவு தொழிலில் இருந்த ஒரு குடும்பம் அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவரோ ஆஸ்த்மா நோயினால் மிகவும் அவதிப்பட்டார். எளிய குடும்பமாக இருப்பினும் மனைவி மேல் மிகுந்த பற்றின் தன்மையும் குழந்தை மீதும் பற்றும் வருகின்றது.

இருந்தாலும் அந்த நோயினால் உடலில் வேதனை தாங்காது விஷத்தை உணவாக உட்கொண்டு உடலை விட்டு அந்த ஆன்மா பிரிகின்றது. பிரியும் பொழுது தன் மனைவி நினைவாகவே அந்த ஆன்மா சென்றது… மனைவி உடலுக்குள் சென்று விட்டது.

விஷத்தைச் சாப்பிட்ட பின் அவர் எப்படித் துடிதுடித்தாரோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடிதுடிக்கும் நிலை வந்துவிட்டது.

இரத்த நாளங்களில் அந்த ஆன்மா சுழன்று வரப்படும்போது சிறு மூளை பாகம் சென்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி
அதே உணர்வு
அதே சொல்
அதே செயல் என்று
அந்த உடலை இயக்கி அவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருந்தது

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. சிறிது நேரம் சுயநினைவு இருக்கும் சில நேரம் இருக்காது. ஆனால் இரண்டு நாட்களாக சுத்தமாகவே நினைவு இழந்து விட்டது என்று என்னிடம் (ஞானகுரு) கொண்டு வந்தார்கள்… தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.

ஆவிகளை ஓட்டுபவர்களிடம் நாங்கள் சென்றோம் பணத்தைச் செலவு செய்தோம்… ஒன்றும் ஆகவில்லை. வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வந்து சொல்கின்றார்கள்.

ஆனால் அந்த அம்மாவிற்குச் சுயநினைவுன் இல்லை. அந்தக் குழந்தைகளும் வாடிக் கொண்டிருக்கிறது.

குடும்பத்தைச் சார்ந்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து தியானம் இருங்கள்… என்று சொன்னேன்
1.அந்த அம்மா உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா உயர்ந்த சக்தி பெற வேண்டும்
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மைகள் நீங்க வேண்டும் என்று தியானிக்கும் படி சொன்னேன்.

அதன் வழி அந்தக் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஒரு அரை மணி நேரம் தியானித்தார்கள். அந்த அம்மா சிறிது தெளிவானது.

எழுந்தபின் அந்த அம்மாவையும் இதே போல் சொல்லச் செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்தும்படி சொன்னேன். உடலில் இருந்த அந்த ஆன்மா பரிசுத்தம் அடைந்தது.

பின் நல்ல நிலைகள் ஏற்பட்டுத் தன் குடும்பத்தைப் பேணிக் காக்கும் அளவிலே வந்தது. வாழ்க்கையின் நிறைவில் அந்த அம்மாவும் இறந்தபின்
1.அந்த இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது ஒளிச்சரீரம் பெற்றது

ஆரம்ப நிலையில் யாம் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது 25 வருடங்களுக்கு முன்பு இத்தகைய நிலைகளைச் செயல்படுத்தி வந்தது.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எளிதில் விண்ணுக்கு (சப்தரிஷி மண்டலம்) அனுப்ப முடியும்.

குடும்பமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.

வரும் தடங்கலுக்கு வருந்தாமல் அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழியில் செல்வதுதான் ஞான மார்க்கம் – ஈஸ்வரபட்டர்

 

ஞான மார்க்கத்துக்குச் சென்ற அவ்வாத்மீக வழியின் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகையையும் சோலைகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் இப்பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச் சிகரங்களுக்கும் சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலையென்ன…?

இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும்… இம்மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும்… மற்ற ஆலைகள் உள்ள இடங்களிலும்… அங்குள்ள காற்று…
1.அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமாகவும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளாகவும்
3.காற்றுடனே அந்நிலை கொண்ட அவ்விடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

அந்நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது அவர்களின் எண்ணமுடன் இவ்வெண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது.

ஆகையினால் இக்காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். அப்பொழுது அத்தியானத்திற்குப் பல நல்லுணர்வுகளும் அவர்களின் ஆத்மாவிற்கு நற்பயனும் கிட்டுகின்றன.

இதைப் போன்றே இப்பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது அசுத்தமான காற்று அவர்கள் செய்யும் தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.

மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுதும் இப்பூமிக்கு அடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே. “வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால்” இந்நிலைக்குச் சென்று இத்தியானம் பெறுவது எளிது.

1.ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு
2.நம் வாழ்க்கையையே… நாம் வாழும் நிலையையே தியானமாக்கி
3.வாழும் பக்குவ நிலைதான் நமக்குகந்த உன்னத நிலை.

உடல் உபாதை உறும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்கும் அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமுற்ற மருந்தை உண்டால்தான் அந்த உபாதை மறைகிறது.

அதைப் போல் இவ்வாத்மீக வழியில் நல்லுணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட்டுப் பழகுதல் வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்…!

பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும் அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து எப்பாதை சரியான பாதை என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்றே
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து நாம் மீண்டு சென்று
2.ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞான மார்க்கம்.

இம்மார்க்கத்தை வெறுப்புடனோ… சலிப்புடனோ… சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ… நம்மைத் தாக்கிடும் இன்னல்களிலிருந்து பயந்தோ… செல்வது முறையல்ல…!

1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்…
2.அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழிக்குச் செல்வதுதான்
3.நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உயர்ந்த நிலை.

இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இவ்வுலகம் முழுவதுமே வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்…!” இன்று இவ்வுலகில் உள்ளனர்.

ஞான வழியையும் இத்தெய்வீக வழியையுமே இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை…! என்று உணர்ந்து அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

அவர்களைப் போன்றே… நாமும் நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாய் ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாடிப்பட்டியிலிருந்து ஒரு பையன் வந்தான். அந்தப் பையனுக்கு பத்து வயதுக்கு மேல் ஆனவுடன் உடலெல்லாம் அப்படியே சுருங்கிக் (முடங்கி) கொண்டே வந்துள்ளது.

இங்கே எம்மிடம் வந்தால் சரியாகும்…! என்று அழைத்து வந்திருந்தார்கள்.

முதலில் நன்றாக நடந்து கொண்டிருந்தான். இப்பொழுது இந்த மாதிரி ஆகிவிட்டது. உடலில் இப்பொழுது எதுவும் வேலை செய்யவில்லை என்றார்கள்.

அப்பொழுது நான் சொன்னேன். உங்கள் மூதாதையர் யாராவது இதே வயதில் கை கால் எல்லாம் அடித்து முடங்கி “அதனால் இறந்திருக்கின்றார்களா…!” என்றேன்.
1.யாராவது அப்படி இறந்திருந்தால்
2.அந்த மாதிரித்தான் “இதுவும் இருக்கும்” என்று சொன்னேன்… போய்க் கேட்டு வாருங்கள் என்றேன்.

எனக்குத் தெரியாமல் அது எப்படி இருக்கும்…? யாரும் இல்லையே… என்றார்கள்.

நன்றாக விசாரித்துக் கொண்டு வாருங்கள்… அப்புறம்தான் என்ன என்று பார்க்க முடியும்…! என்று சொல்லி அனுப்பினேன்.

அப்புறம் அவரைச் சேர்ந்த ஆட்கள்.., “ஆமாம்… நீங்கள் சொன்ன மாதிரி நடந்திருக்கிறது” என்றார்கள்.

ஒரு பெண் இருந்தது. அவர்கள் ஆசைப்பட்டு ஒருவருக்கொருவர் ஏதோ ஆகவில்லை போலிருக்கின்றது.

அவர்கள் ஆசாரி. அதனால் அந்தப் பெண்ணைச் சுத்தியலில் அடித்துப் போட்டு நகையெல்லாம் கழட்டிக் கொடு என்று சொல்லி ஒரு குழியைத் தோண்டி அதிலே போட்டுக் கொன்று விட்டார்கள்.

“அடப்பாவிகளா…! என் குடும்பம் எப்படி இப்படி ஆனதோ உன் குடும்பமும் ஆகும்…” நான் வேதனைப்பட்டேனோ…, “உன் குடும்பமும் உருப்படியாகாமல் போய்விடும்…” என்று அங்கே சாபமிட்டது.

அதற்குப் பின்… குடும்பத்தில் ஒரு பெண் வாரிசு வந்தால் அந்தப் பெண் குழந்தை எங்கே போனாலும் கல்யாணம் ஆகி அந்த வயதானால் துடிக்கத் துடிக்க இறந்து போகும்.

ஆண் வாரிசு என்றால் அந்தக் கை கால் முடங்கிக் கொண்டே வரும். அது எப்படிக் குறுகி இறந்ததோ அதே மாதிரி இறக்கும்.

இது கரு வழி வந்த சாபம்.

நாம் நினைக்கின்றோம் ஒருவரை அடித்து நொறுக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று.
1.ஆனால் சாகும் பொழுது என்ன ஆகும்…?
2.அந்த அலைகள் எல்லாம் உடலுக்குள் வரும்.
3.இதிலிருந்து “யாரும்” தப்ப முடியாது.

நாம் நினைக்கலாம் எல்லாம் கெட்டிக்காரத்தனமாகச் செய்துவிட்டோம்… என்று. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் மனிதனாகப் பிறந்த பின் எப்படியெல்லாம் ஆகின்றோம்…? என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் பற்றி அதிகமாகவும் சொல்ல முடியாது. சொன்னால் பிறகு பயந்து போய்விடுவீர்கள்.

ஏனென்றால் “தவறு செய்துவிட்டால்… அதன் பின்பு என்ன ஆகும்…” என்று ஒரு உதாரணத்திற்கு உங்களுக்குத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றோம்.

எல்லாம் இப்பொழுது மன தைரியமாக இருப்பீர்கள்.

ஆனால் வீட்டில் சிறிது குறை என்றால் அது கடினமாக ஆகிவிட்டால் “உன்னால் தான் இப்படி ஆகிறது…” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலைகள் ஆகின்றது.

அதிகமாகி வளர்ந்து விட்டால் அடித்துக் கொல்லும் நிலைக்கே வந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிய அந்த மகரிஷிகளைப் பற்றிய உணர்வுகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு நொடியிலேயும் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் ஞாபகப்படுத்துகின்றோம்.

குருநாதர் எமக்கு எப்படிப் பக்குவப்படுத்தி அருள் சக்திகளைப் பெறும்படி செய்தாரோ அதே போல் தான் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம்.
1.இது வாக்கு தான்.
2.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகா பச்சிலையின் மணங்களை நுகரும் ஆற்றல் பெறுங்கள்

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

நம் உயிரே ஈசனாக இருந்து நாம் எண்ணியதை எல்லாம் அந்த உணர்வின் கருவாக “உயிரே மாற்றுகின்றது…!” அப்படிக் கருவின் தன்மை பெறச் செய்வதற்கு நமது உயிரே குருவாக இருக்கின்றது.

நம் குருநாதரின் அருள் சக்தியைப் பெற்று அவர் வழியில் அகஸ்தியரின் அரும் பெரும் சக்திகளை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உருவான அந்த உணர்வு கொண்டு அவன் வழியில் நாமும் சென்று ஆறாவது நிலையை ஏழாவது ஒளியாக மாற்றி அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடையும் சக்தியை நாம் பெறுவோம்.

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது
1.அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்திகள் உங்கள் அருகிலேயே வந்தது போன்று இருக்கும்
2.அகஸ்தியனைப் பற்றி உபதேசிக்கும் போதெல்லாம் அவன் நகர்ந்த அந்த “மகா பச்சிலையின் மணங்கள்…” உங்களுக்குள் வரும்
3.அந்த மணங்கள் உங்கள் உடலுக்குள் புதுமையான நிலைகளில் ஊர்ந்து செல்லும்
4.உங்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் வலிமை மிக்க சக்தியாக நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வாக நீங்கள் நுகரும் தன்மை பெற்று
5.அந்த அணுவின் தன்மை கருவாக உருப்பெறும் சக்தியும் பெறுகின்றது.

கருவுறும் அந்த உணர்வின் கருவிற்குக் காலை துருவ தியானத்தின் மூலம் அருள் சக்திகளை நீங்கள் தினசரி செருகேற்ற வேண்டும்.

நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய எம்முடைய உபதேசத்தின் பல கலவைகளும் சேர்த்து அதுவும் அணுக்கருக்களாக உங்களில் உருவாகும். தியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை இரத்தநாளங்களில் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஒருங்கிணைந்து அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் பெருகும்.

அகஸ்தியன் உடலிலிருந்து உருவாகி வெளிப்பட்ட அருள் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது. அதை நீங்கள் கவர்வதற்காக இந்நேரம் வரையிலும்
1.அதைப் பதிவு செய்தது
2.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது
3.உங்களுக்குள் உள் நின்று அது இயக்கத் தொடங்குகின்றது

அதை நீங்கள் மீண்டும் எண்ணும் பொழுது அந்த எண்ணம் உங்கள் கண்ணிற்கே வருகின்றது. யாம் சொல்லும் சொல்லின் நிலைகளைக் கண் உங்களுக்குள் பதிவாக்கி அந்த உணர்வை நுகரப்படும் பொழுது கண்ணால் தான் பதிவாகின்றது.

அது தான் ஹரி…! அறியக்கூடிய அறிவாக… சூரியனால் இயக்கப்படுவது ஹரி கிருஷ்ணா “கிருஷ்…“ என்றால் பதிவாக்குவது அப்படிப் பதிவான பின்…
1.இந்த உணர்வு எண்ணம் ஆகும்போது ஹரி ராமா.
2.அந்த எண்ணத்தை எண்ணி மீண்டும் கண்ணிற்குக் கொண்டு வந்தால் ஹரி கிருஷ்ணா

அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு எண்ணத்தின் மூலம் உள்ளுக்குள் பதிவாக்கி
2.மீண்டும் எண்ணத்தில் வரப்படும் பொழுது அந்த பதிவின் நிலையை நுகர்ந்து
3.நமக்குள் அணுவின் கருவாக உருவாக்கும் திறனைப் பெறுகின்றோம்.

கண் வழி நுகரும் சக்தி பெறுகின்றீர்கள். நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் அணுவாக மாறி இரத்த நாளங்களில் கருத் தன்மை அடையும் கருக்களாக உருவாக்கப்படுகின்றது

1.அகஸ்திய மாமகரிஷி பெற்ற நஞ்சினை வென்றிடும் தாவர இனச் சக்தியும்
2.நஞ்சினை வென்றிடும் அணுவின் தன்மை விளைந்து அவனின்று வெளிப்பட்ட மூச்சின் உணர்வலைகளும்
3..உங்கள் உடலுக்குள் ஊடுருவும் போது உயர்ந்த சக்திகளின் உணர்ச்சிகளை நுகர்ந்தறியும் அறிவின் ஆற்றலாகப் பெறுகிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையில்…
அதை நுகரும் சக்தியும்
அறியும் சக்தியும்
வளர்க்கும் சக்தியும்
வளர்ந்திடும் சக்தியும் பெருகும்…!

1.அந்த அரும்பெரும் சக்தி உங்கள் அருகில் சுழன்று
2.நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்தின் வழி கூடி உடலுக்குள் செல்லும் நிலை இப்போது உருவாகின்றது.

ஆகவே அகஸ்தியமாமகரிஷி வெளிப்படுத்திய மணத்தின் தன்மைகளை நுகர்ந்து அந்த உணர்வின் ஆக்கச் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி – ஈஸ்வரபட்டர்

 

இன்று நாம் வாழும் வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவும் நாம் எடுக்கும் சுவாசமும் விஷம் கலந்ததாக உள்ளது. அதனால் பல புதிய வியாதிகளை நாம் ஏற்க வேண்டிய நிலையும்… அது நம்மைத் தாக்கும் நிலையும் உள்ளது.

இவை தவிர இன்றைய இக்கலியில் வாழ்ந்த நம்மில் வாழ்ந்த உடலில்லா ஆத்மாக்களின் எண்ணத்தில் செயலில் இருந்து நம்முடன் வாழும் மனிதர்களின் எண்ணத்தில் செயலில் இருந்தும் தப்ப வேண்டியுள்ளது.

இவைகளின் தாக்குதலில் இருந்தெல்லாம்…
1.நம்மையும் நம் மனோநிலையையும் நம் உடலையும் காத்திட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து
2.ஆத்மீக வழியைப் பின்பற்றி வாழும் நிலைக்குப் பக்குவம் பெற்று வந்திடல் வேண்டும்.
3.நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி.

ஓங்கி நிற்கும் “தனியான தெய்வம் ஒன்றில்லை…” என்பதனை உணர்ந்து… நாமும் நம்மைப் போல்தான் இவ்வுலகமும் மற்ற அனைத்து உலகங்களுமே என்றுணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் அதனதன் உடல் தன்மை எந்தெந்த நிலை கொண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் செயல்படுகின்றதோ அந்நிலை கொண்டே இப்பூமித்தாயும் உயிருடன் உணர்வுடன் வாழ்கின்றாள்.

இப்பூமியில் வளர்ந்து வாழும் நாம் ஜீவன் கொண்டு எப்படி வாழ்கின்றோமோ அப்படியே தான் இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்… வளர்க்கின்றாள்… காக்கின்றாள்… அனைத்து சக்தியையும் வளர விடுகின்றாள்…!

உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் எந்நிலை கொண்ட உணர்வுத் தன்மை உள்ளதோ அந்நிலையின் உணர்வுடனே இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்.

இவ்வுலகத் தாயின் உணவாக இவ்வுலகத் தாய்க்குச் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் அமுது தான் பல சக்திகள் கொண்ட இக்காற்றினில் வந்து சேரும் இப்பூமித்தாய் ஈர்க்கும் பல அணுக்களும் நீருமே.

இப்பூமித்தாய் உண்ணும் நீரும் அணுவும்தான் அவள் உண்டு அந்த அமுதை நமக்கும் அளிக்கின்றாள். அவள் பெற்ற செல்வங்களுக்கு இந்நீர் இல்லாவிட்டால் இவ்வுலகுக்கே ஜீவனில்லை.

இவ்வுலகிலுள்ள உலோகங்கள் தங்கம், தாமிரம், வைரம், நிலக்கரி இன்னும் பல நிலை கொண்ட உலோகங்களும் கல்லும் மண்ணும் மரமும் செடியும் எவையுமே
1.இப்பூமியிலிருந்து வளரும் எவையுமே நீர் இல்லாவிட்டால் வளர்ந்திடாது.
2.இப்பூமியும் நீர் இல்லாவிட்டால் வாழ்ந்திட முடியாது
3.நீரையே ஜீவனாகப் பெறும் இவ்வுலகிற்கு உணரும் தன்மை அனைத்தும் உண்டு.

இவ்வுலகில் பல இடங்களில் எரிமலையும் வெளிப்படுகின்றது பனி மலையும் வளர்கிறது பாலைவனங்களும் உள்ளன. “பாலைவனங்களுக்குச் சக்தி இல்லை…” என்று எண்ண வேண்டாம்.

பாலைவனங்கள் தான் மற்ற நிலையில் உள்ள சோலைகளுக்கு உயிர் நாடி. சோலைவனங்களும் மலைகளும் கடலும் சில பள்ளத்தாக்குகளும் இப்படி இவ்வுலகிலேயே ஒன்றுபோல் இல்லாமல் ஒவ்வொர் இடத்திற்கும் ஒவ்வொரு மாறுபட்ட தன்மைகளை இப்பூமித்தாய் தான் ஈர்த்து வெளிக்காட்டிடும் நிலையில் வளரச் செய்கின்றாள்.

பல சக்திகள் இக்காற்றில் சுற்றிக் கொண்டே உள்ளன.

அனைத்து சக்திகளுமே மனிதனுக்கெப்படி துடிப்பு நிலை சுவாச நிலை ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளனவோ அந்நிலை போல்தான் இப்பூமியும் ஈர்த்துத் துடிப்புடனே வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

இவ்வுடலுக்கு நாம் உண்ணும் ஆகாரங்கள் அமிலமாகி அவை ஜீரணித்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெற்று நமக்கு வேண்டாத நிலையை வெளிப்படுத்துகின்றது.

நாம் எடுத்துக் உண்ட உணவையே இவ்வுடல் ஏற்று உதிரமாகவும் சிறுநீராகவும் மலமாகவும் காற்றாகவும் வியர்வையாகவும் ஆக்குகின்றது. இவற்றில் உதிர சக்தியை மட்டும் உடல் ஏற்று மற்றவைகளை வெளிப்படுத்துகின்றது.

அந்நிலை கொண்டுதான் இப்பூமித்தாய் ஈர்க்கும் நீரையும் அணுவையும் எந்தெந்த நிலைகளில் எச்சக்தி கொண்ட அணுவான அமிலத்தை ஈர்த்தனளோ அவ் ஈர்த்த சக்தியின் நிலை கொண்டே அச்சக்தியின் நிலை பெற்று அந்நிலையில் வளர்ச்சி பெறுகிறது.

அப்படி வளரும் நிலைகேற்ப சக்தியை அளிக்கும் (கொடுக்கும்) நிலையில் இப்பூமியின் உள் நிலையில் பல நிலை கொண்ட அமிலச் சக்திகள் தங்கி ஈர்க்குங்கால் அந்நிலையில் அவை சுற்றிக் கொண்டுள்ள தன்மையில் ஒரு சக்தியுடன் ஒரு சக்தி என்பது ஒரு நிலை கொண்ட அமிலத்துடன் மற்றொரு சக்தி நிலை கொண்ட அமிலம் மோதும் பொழுது (சத்ரு, மித்ரு நிலை) ஒன்றுக்கொன்று ஏற்காத நிலையில் அவை வெடிக்கும் தன்மையில் தான் பூமி அதிர்வு ஏற்படுவதெல்லாம்.

நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முதலிலேயே இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கும் நிலையை உணர்ந்துள்ளார்கள்.

ஆனால் இந்நிலை அதிர்வு பூகம்பம் இவை எல்லாம் எந்நிலையில் ஏற்படுகின்றன…? என்பதனை உணர்த்தி விட்டால் இனி விஞ்ஞானத்திற்கு இன்னும் பல வழிகள் புலப்பட்டிடும்.

1.பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து சக்திகளையும்
2.இக்காற்றிலிருந்து இழுத்துத் தன் சுவாசத்திற்கு ஈர்த்திடும் ஆற்றல்
3.இந்த உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உண்டு.

ஆனால் அவையவை எடுத்த சக்தியின் நிலை கொண்டு குறைந்தும் அதிகரித்தும் மாறுபட்ட தன்மையுண்டு. உலோகங்களில் மாறுபட்ட தன்மை உள்ளது போல் ஜீவராசிகள் ஈர்த்து வெளிபடுத்திடும் சக்தியிலும் மாறுபட்ட சக்தி நிலையுள்ளது.

ஒன்று போல் ஒன்றில் சக்தி நிலை ஒன்றுபட்டு எவற்றுக்குமே இருந்திடாது. கனி வர்க்கங்களிலும் ஒரே மரத்தில் காய்க்கும் கனிக்கும் மாறுபட்ட சுவையும் மாறுபட்ட சக்தியும் மாறுபட்ட அளவு நிலையும் இருந்திடும் சிறிதளவேனும்.

ஒரே செடியில் பூக்கும் புஷ்பங்களின் நிலையும் இவை போன்றே. இவ்வுலக நிலையும் இவை போன்றே.

சுற்றிக் கொண்டே உள்ள உலகில் அவை ஈர்த்து வெளிப்படுத்திய சக்தியில்தான் எத்தனை மாற்றங்கள்…? எத்தனை நிலை கொண்ட தன்மைகள்…?

இவை போல்தான் ஒவ்வொரு மண்டலத்தின் நிலையுமே.

இவ்வான மண்டலத்தின் நிலையும் ஜீவன் கொண்டேதான் சுற்றிக் கொண்டு உள்ளது. பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்றெல்லாம் செப்புகின்றோம். எவை சூனிய மண்டலம்…?

1.சூனிய மண்டலம் என்ற தனித்த மண்டலம் ஒன்றில்லை.
2.இப்பால்வெளி மண்டலம் என்ற மண்டலத்திற்கே ஜீவன் உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நுகரும் ஆற்றல் கொண்டு ஒருவருக்கு ஜோதிடம் பார்ப்பது போல் முன்னாடியே அறியக்கூடிய நிலையும் நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்த்துச் சொல்லலாம்.

அத்தகைய நிலைகள் சென்றால் ஒரு மனிதனுக்குள் விளைய வைத்த “தீமையின் உணர்வும்…” நமக்குள் வந்து சேரும்.

சாதாரணமாக உங்கள் உடலிலிருந்து பல உணர்வுகள் வெளிப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

உங்களைச் சந்தித்தவுடனே உங்கள் உணர்வின் தன்மை அனைத்துமே நான் அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் வாழ்க்கையிலே எத்தகைய துன்பங்களை அனுபவித்தீர்களோ
1.அந்த உணர்வை இழுத்து
2.அதை நான் சுவாசித்துத்தான்
3.உங்கள் நிலையைச் சொல்ல முடியும்.

ஒருவன் துன்பப்படுவதைப் பார்த்தபின் “இப்படிக் கஷ்டப்படுகின்றானே…!” என்று பரிவுடன் ஏக்கத்துடன் பார்த்தால் அவன் உடலில் விளையக்கூடிய துன்ப உணர்வின் அலைகள் நமக்குள் நிச்சயம் வந்துவிடும்.

வந்த பின் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நடுக்கமும் பயத்தையும் சோர்வையும் அல்லது மயக்கத்தையும் நமக்கு உண்டாக்கும்.

நமக்குச் சம்பந்தமே இல்லை என்று கூடச் சொல்லலாம். திடீரென்று எதிர்ப்பார்க்காதபடி ஒருவர் விபத்துக்குள்ளாகி விட்டால் அந்தப் பரிவான குணம் கொண்டு பார்க்கும்போது
1.பயம் கலந்த நிலைகளில் ஈர்த்து விட்டால்
2.நாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும்
3.அது நுகரப்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி மயக்கமடையச் செய்யும்.

இதைப் போன்று வலுக்கட்டாயமாக ஒருவர் உடலிலிருக்கும் துன்பத்தை அறிந்துணர்ந்து சக்தியின் தன்மை பெற்றவர்கள் அதைச் சொல்ல வேண்டும் என்றாலும் அவர் கஷ்ட நஷ்டங்களையும் அவர் எதிர்கால நிலைமைகளையும் சுவாசித்துத்தான்… அதை உணர்ந்து தான் சொல்ல முடியும்.

சொன்னாலும் அந்த வலுக்கட்டாயமாகக் கவர்ந்த பிறர் உடலிலிருக்கக்கூடிய தீய சக்திகள் நம் உடலில் பெருகத் தொடங்கும்.

சிலர் இதே மாதிரி “ஒவ்வொருவருடைய துன்பங்களையும் நான் போக்குவேன்…” என்ற நிலையில் மந்திரங்கள் யந்திரங்கள் செயல்படுத்திச் சொல்வார்கள்.

இதே மாதிரியான ஈர்க்கும் ஆற்றல் கொண்டு பிறருக்கு மந்திரித்து அல்லது மந்திரங்கள் சொல்லி அவர் உடலில் உள்ள தீமையின் விளைவுகளை இந்த உடலில் இழுத்துக் கொள்ள முடியும்.

ஏனென்றால் “அறிதல்…” என்ற நிலையில்
1.ஈர்த்துச் சொல்லக்கூடிய பக்குவம் வந்துவிட்டாலே
2.ஒருவர் உடலிலிருப்பது தன்னிச்சையாகவே
3.இவர் நினைக்கும் பொழுது வந்துவிடுகின்றது.

அவரைப் பற்றியதெல்லாம் அறிந்து சொல்வார். அவரின் வியாதியைப் போக்கும் நிலையும் வரலாம். நான் நல்லது செய்தேன் என்று அவரும் நினைக்கலாம்.

வியாதியைப் போக்கும் பொழுது இவர் உடலில் அவரின் வியாதியை உருவாக்கிய தீய சக்திகள் விளைந்து மறுபடியும் மனித உணர்வல்லாத ஈர்ப்புக்குள் தான் இவர் செல்ல முடியும்.

மிருக இனங்களுக்குத்தான் அழைத்துச் செல்லும். ஞானிகளின் உணர்வலைக்குள் செல்ல முடியாது.

காரணம் சாதாரண மனிதனின் எண்ணங்களைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த மெய் ஞானிகளின் அருகில் போனால் என்ன செய்யும்…?

மெய் ஞானிகள் தீமைகளை மாய்க்கும் கடும் அக்கினி சக்தியைப் பெற்றவர்கள். அந்த நெருப்புக்கு அருகில் சென்றால் சுட்டுப் பொசுக்கிவிடும். நம் உணர்வுகளைக் கருக்கிவிடும். ஞானிகள் அருள் மிக்க ஆற்றல் பெற்றவர்கள்.

நம் எண்ணத்தால் சாதாரணமாக அவர்களைக் கவர வேண்டும் என்றால் நடக்காது. அந்தச் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்
1.அவர்களின் உணர்வை நமக்குள் பதிவாக்கி இருக்க வேண்டும்.
2.பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து
3.விண்ணிலிருந்து அதைப் பெற வேண்டும் என்றால் கவர முடியும்.

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

 

காலை துருவ தியானத்தின் உடலில் இருக்கக்கூடிய அணுக்கருக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஜீவன் ஊட்டிப் பழக வேண்டும்.

அது அணுவின் தன்மையாக அடைந்தபின் நாம் எதை நுகர வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதை எண்ணி ஏங்கப் படும்போது
1.அது ஞானத்தின் உணர்ச்சிகளாக நம்மை இயக்குவதும் அருள் வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது
2.நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்க தொடங்கி விடுகிறது.

தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விட்டால் இந்த உடலில் ஏற்கனவே உடலின் இச்சை கொண்டு மற்ற அணுக்கள் வளர்ந்திருந்தாலும் அருள் ஒளியின் சுடராக வரப்படும் பொழுது இருள் சூழ்ந்த அந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்து விடுகின்றது.

அது மடியும் தன்மை வரும் போது
1.ஒளியின் அணுவாக மாறுகின்றது… ஒளியாக மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்ற பின்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக ஆகின்றோம்.

உதாரணமாக ஒரு பட்டுப் புழு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் மணத்தால் உருவாகும் அந்த மலத்தை நூலாம்படை போன்று தனக்குள் சுற்றுகின்றது.

தனக்குள் சுழற்றிக் கொண்ட பின் தன்னை அறியாமலேயே ஒரு பாதுகாப்புக் கூடாக அமைத்து விடுகின்றது. அதிலே பாதை இல்லாத நிலைகள் அடைபட்டுக் கொண்டபின் “வெளியே செல்ல வேண்டும்… வெளியே செல்ல வேண்டும்…” என்று உணர்வுகள் உந்துகிறது.

1.தன் உடலில் மலத்தால் கட்டப்பட்ட இந்தக் கூட்டிற்குள் இருந்தே உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து
2.நினைவின் ஆற்றல் வெளியே பறக்க வேண்டும் என்ற உணர்வுகள் முதிர்ந்து “இறக்கைகள்” வளர்கின்றது.

அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த கூட்டைக் கத்திரித்து விட்டு வெளியே வரப்படும் பொழுது அது பூச்சியாக (புழு – பூச்சியாக) வெளி வருகின்றது.

அதனின் நிலைகள் முட்டை இடும் பொழுது இதை உணவாக உட்கொண்ட அதனின் கருவாக தன் இனமாகப் பெருக்குகின்றது. கூடு கட்டி மீண்டும் பறக்கும் பூச்சியாக மாறுகிறது.

இதைப் போலத்தான்
1.அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு நமக்குள் கூட்டைக் கட்டி
2.இந்த உணர்வின் தன்மை அருள் வட்டமாக நம் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.எந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அணுக்கள் விளைந்த பின்
4.கூட்டைவிட்டு (உடலை) வெளியே செல்லும் பொழுது அருள் மகரிஷிகளின் வட்டத்தில் சென்று
5.நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இப்படித்தான் ஒவ்வொரு உடலிலும் முழுமை அடைந்து நாம் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் அளவுக்கு விஞ்ஞானம் ஓங்கி விட்டது – ஈஸ்வரபட்டர்

 

நல் உணர்வுடைய நற்செல்வங்களை (குழந்தைகளை) நாம் பெற்றே சமமான நிலையில் வாழ்ந்திட்டாலும் வாழும் நிலையில் சூழ்ந்துள்ள அசுத்தத் தன்மை வாய்ந்த மூச்சுக் காற்றுகளும் நல் நிலையில் வாழ்பவரையும் வந்து தாக்குகின்றது. ஆரோக்கிய நிலையும் மாறுபடுகின்றது.

1.இக்காற்றில் கலந்துள்ள சக்தியில் நச்சுத்தன்மையின் வீரியம் தான் இப்பொழுதுள்ள நிலையில் ஓங்கி நிற்கின்றது
2.இதிலிருந்து மீண்டு ஜெப நிலை பெற்றே வாழ்ந்திட வேண்டும்.

சில உபாதைகள் இக்காற்றிலிருந்து நாம் ஈர்க்கும் சுவாசத்துடன் நம்மை வந்து அணுகத்தான் செய்கின்றன. அந்நிலையிலிருந்து நாம் மீள… சில வைத்திய முறைகளை ஏற்க வேண்டியுள்ளது.

இக்காலநிலை மாறும் தன்மையிலும் இவ்வுடல் நிலை மாறும் தன்மையிலும் சில நிலை கொண்ட மாற்றங்கள் உடல் நிலைக்கும் வரத்தான் செய்கின்றன.

இந்நிலையில் இருந்தெல்லாம் நம் உடல் ஆரோக்கியம் பெறச் சாதாரண வாழ்க்கை நிலையிலுள்ள நாம் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.

சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் ரிஷிகளும் போல் இக்காற்றிலிருந்தே உடலில் ஏற்படும் பிணிகளை மாற்றும் சக்தி கொண்ட காற்றினை ஈர்த்து வாழும் பக்குவ நிலை பெற்றவர்கள். அத்தகைய நிலையை நாமும் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கும் சரி… பிறந்த சிசுவுக்கும் சரி.. தாயின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகில் வாழ வந்த நாட்களில் அதைப் பேணிப் பாதுகாக்கப்
1.பிறந்த நாளிலிருந்தே சில மருந்துகளை நம் முன்னோர்கள் அதற்கு ஊட்டித்தான்
2.வளரும் பக்குவத்தை நமக்கும் வழிகாட்டித் தந்தார்கள்.

ஆனால் இன்று வாழும் மனிதர்களோ… உணவைப் போலவே மருந்தையும் உட்கொண்டே வாழும் நிலையில் உள்ளார்கள்.

ஏனென்றால் இக்காற்றின் அசுத்தத் தன்மையினால் வளரும் பயிரின் செழிப்பும் குறைந்து விட்டது. மக்கள் தொகையும் பெருகி விட்டது.

நாம் உண்ணும் உணவுத் தானியங்களைப் பெருக்கிட வேண்டும் என்றால்… இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல இரசாயன நிலை கொண்ட உரங்களைச் செலுத்தியே உணவுத் தானியங்களின் உற்பத்தியை வளரச் செய்து நாம் அதை உண்ண முடிகின்றது.

1.இயற்கையின் உரங்களைச் செலுத்தி வளரச் செய்த காலங்கள் மாறி
2.செயற்கையான உரங்கள் செலுத்தித்தான் இன்றைய உணவு உற்பத்தி நிலையை நாம் பெற முடிகின்றது.

இந்த இரசாயன உரங்களை ஈர்த்து வளர்ந்த பயிர்களில் இருந்து நாம் பெற்று உண்ணும் தானியங்களின் மூலம் நம்மையும் அந்நிலை கொண்ட சத்து நிலை (இரசாயணங்கள்) வந்து தாக்குகின்றது.

இயற்கையில் வளரும் தன்மை இன்றுள்ள இக்கால நிலையில் முடியாததினால் இச்செயற்கையின் வளர்ச்சியில் வந்த செயற்கையான தானியத்தையே உட்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே செயற்கையுடன் ஒன்றி நாம் வாழ்வதால் இவ்வுடல் மாற்றத்திற்கு இன்று புதிய புதிய மருத்துவத்தைச் செயல்படுத்தி நமக்கு ஏற்கத்தான் வேண்டியுள்ளது.

1.நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிய பல மூலிகைகளை இன்று இக்கால நிலையில் தவற விட்டுவிட்டோம்
2.மூலிகையில் உள்ள மகத்துவத்தை நாம் எடுக்கும் நிலையில் இல்லை
3.அதை ஏற்கும் மனோ நிலையும் நம்மிடம் இல்லை.

சித்தர்கள் நமக்கு உணர்த்திய பல மூலிகைகளை நாம் பெறுவதற்கும்… இன்றைய மனிதனின் மன வளர்ச்சியில் எதையும் துரித நிலை கொண்டு செயலாக்கும் மன வளர்ச்சியில்… “இன்றைய மனிதனுக்குப் பொறுமை நிலையும் இல்லை…!”

இதில் வந்த வினைச் செயலால் தான் இன்று இத்தேசத்தில் அன்று உணர்த்திய பல உன்னத மூலிகைகளின் பொக்கிஷமெல்லாம் மறைந்து சிதைந்து விட்டதின் நிலை.

ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் “விஞ்ஞானம்…” என்னும் துரித நிலையில் சென்று கொண்டுள்ளான் இன்றைய மனிதன்.

அன்றன்ற தேவையை மட்டும் உணர்ந்து வாழும் மனிதன் தன் ஆத்மா என்ற ஆண்டவனை எண்ணி வாழ்வதில்லை.

துரிதமுடன் செயற்கைக்கு அடிமைப்பட்ட இன்றைய மனிதனால்
1.இவ்வாத்மீக வழியும் ஜெப வழியும் அறிந்து வாழ்ந்திட்டால்
2.தன் வாழ்க்கையின் முழுமை எங்குள்ளது…? என்பதனையே அறிந்திடலாம்
3.காற்று மண்டல நஞ்சிலிருந்து விடுபடவும் செய்யலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கந்த சஷ்டி எல்லா முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது.

அதை நாம் வேடிக்கை பார்க்கச் செல்கின்றோம். எப்படி…?

முருகனைப் பற்றிய காவியங்களை மனதில் வைத்துக் கொள்கின்றோம். கந்தன் அசுரனைக் கொல்லப் புறப்படுகின்றான் என்ற நிலை தான் நமக்குத் தெரிகின்றது.

ஆனால் அந்தக் கந்த புராணத்தின் உண்மையின் நிலைகளை நாம் அறிவதில்லை.

அதை இராமலிங்க அடிகள்…, “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேளே…” என்று பாடல்களைப் பாடியுள்ளார்.

1.பல கோடிச் சரீரங்களில் பல அணுக்களால் உருவாக்கப்பட்டு
2.அவை அனைத்தும் எனக்குள் கூர்மையாக இருந்து
3.எனக்கு முன் தெளிவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிரை – அதைத்தான்
4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள இந்த உயிரைக் “கந்தவேளே…” என்று அவர் பாடுகின்றார்.

தீமைகள் எனக்குள் நாடாது நன்மைகள் செய்யும் பல உணர்வுகள் என்னிலே தோன்ற வேண்டும் என்று தன் உயிரை வேண்டுகின்றார்.

தீமையான உணர்வுகளைத் தனக்குள் நுகராது “நல்ல உணர்வுகளை நாம் எவ்வாறு நுகர வேண்டும்…” என்று இராமலிங்க அடிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்.

தீமைகளை எண்ணாது நாம் யார் யாரையெல்லாம் பார்த்தோமோ அந்த அனைத்துக் குடும்பங்களும் எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதை ஒவ்வொருவரும் எண்ணும்படி செய்வதற்கே கந்தர் சஷ்டி என்று இத்தகைய விழாக்களை அன்று ஏற்படுத்தினார்கள் ஞானிகள்

வியாபித்திருக்கும் சக்தியைப் பெற்றவர் தான் வியாசக பகவான்

 

வியாசருக்கு மீன்களைப் பிடித்துத்தான் ஜீவிதம். அவர் அலைகடலிலே செல்லும் பொழுது புயலிலே சிக்கிப் படகு கவிழ்கின்றது. அப்பொழுது தன் உயிருக்காக வேண்டித் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் எண்ணங்கள் தோன்றுகின்றது.

தான் எப்படியும் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வின் ஏக்கம்… உடலின் உணர்வுகளை மறந்து தன் உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஒரே எண்ண ஒலிகளை ஈர்த்து… அதனின் இயக்கத்திலிருக்கும் பொழுதுதான்,
1.அவன் எந்த மீனைப் பிடித்து வேட்டையாடி அதைப் புசித்து அதன்வழி கொண்டு அவன் வாழ்ந்தானோ
2.அதே மீன் இனம் காப்பாற்றி இவனைக் கரை சேர்க்கின்றது.

கடல் வாழ் மீன் இனங்களில் மனிதனைக் காத்திடும் உணர்வலைகள் வெளிப்பட்ட பின் அந்த மீனை மீனவனான வியாசகன் எண்ணுகின்றான். இவனைக் காத்திட்ட அந்த உணர்வுகள் இவனுக்குள் கருவாகி அப்போது தான் அதைத் தியானிக்கின்றான்.

பிறிதொரு ஜீவனால் காப்பாற்றப்பட்ட உணர்வின் எண்ணம்… இவன் தன்னைக் காக்கும் எண்ண உணர்வுடன் கலந்தவுடனே வீரியம் அடைந்து… அந்த உணர்வின் சக்தியை ஆற்றலாகப் பெற்று… இயற்கையின் செயலின் ஆற்றல் இவனுக்குள் உருப்பெற்று “விண்ணை நோக்கி ஏங்குகின்றான்…”

அவ்வாறு ஏங்கும் நிலைகள் கொண்டுதான் சூரியனின் காந்த சக்தியின் ஆற்றல் இவனுக்குள் வேகத்தைக் கூட்டி அந்த உணர்வின் சத்தான நிலைகள் அவனுக்குள் வளரச் செய்கின்றது.

எந்த மீன் இனம் அவனைக் காத்ததோ அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் வளர்ச்சி பெறுகின்றது. அந்த வளர்ச்சியின் தன்மை பெறப்படும் போது தான்
1.அகண்ட அண்டங்கள் எப்படி இருக்கின்றது…?
2.அண்டத்திற்குள் நம் பிரபஞ்சம் எப்படி உருவானது…?
3.பிரபஞ்சத்திற்குள் பூமி எப்படி உருவானது…?
4.இந்தப் பூமிக்குள் கடல்கள் எப்படி உருவானது…?
5.கடல் நீருக்குள் உயிரணுக்கள் எப்படி உருவானது…? என்ற நிலையை
6.வியாபித்திருக்கும் உணர்வின் சக்தியை இவன் அறியும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

அவனை மீன் காத்தது… அதை அவன் தியானிக்கின்றான். காத்திட்ட உணர்வுகள் இவனுக்குள் விளைகின்றது. தன்னைக் காத்த உடலுக்குள் அந்த மீன் இனத்தைத் தியானிக்கும் போது கடல் வாழ் மீன் இனம் அது இயற்கையில் தனக்குள் ஒன்றுக்கொன்று விழுங்கி அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் “அகண்ட அண்டத்தின் நிலையை…” இவனுக்குள் நினைவுபடுத்திக் காட்டும் நிலை வருகின்றது.

தன் எண்ணங்களை வியாபித்துக் கிடக்கும் அந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்து தனக்குள் உருவாக்குகின்றான். அதனால் தான் வியாசகர் என்று அவனுக்குப் பிற்காலங்களில் காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

ஒவ்வொரு காலங்களிலும்…
1.மனிதன் வானுலக உணர்வின் தன்மையைத் தனக்குள் சந்தர்ப்பத்தால் எடுக்கப்படும் போது – நுகர்ந்த உணர்வை
2.இந்த உயிர் அவனை மீட்டிடும் உணர்வுகளாக விளைந்த பின்
3.அவனின்று சொல் வடிவில் வரக்கூடிய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

அதை நாமும் நுகர்ந்து இரத்தத்தில் அணுக்கருக்களாக்கி அணுக்களாக நமக்குள் உருவாக்கும் தன்மை பெற வேண்டும்

வியாசகரால் கண்டறிந்த இந்த வியாபித்த உணர்வின் தன்மையைத் தனக்குள் குவித்து நாம் எப்படி வாழ வேண்டும்..? என்று காட்டுகின்றார் நமது குருநாதர்.

அகஸ்தியனால் கண்டுணர்ந்த உணர்வுகள் வெளிப்பட்டதை நமது குருநாதரும் அதைக் கண்டுணர்ந்தார். அதைத் தனக்குள் விளைய வைத்தார். ஒளிச் சரீம் பெறும் தகுதியைப் பெற்றார்… ஒளியின் சரீரமும் ஆனார்.

அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு அதிலே விளைந்த வித்தினைத்தான் உங்களுக்குள்ளும் பெறும்படி ஊழ்வினை என்ற வித்தாக இப்போது பதிவு செய்வது.

1.இதை நினைவு கொண்டு எவர் எடுக்கின்றனரோ அந்த அருள் சக்தியை நீங்கள் உணர முடியும்.
2.அந்த உணர்வின் துணை கொண்டு அதை வளர்த்திடவும் முடியும்.
3.அருள் மகரிஷிகள் சென்ற இடமான சொர்க்க பூமியான சொர்க்கலோகத்தை அடைய முடியும்.

பிறக்கும் குழந்தைகள் எல்லாம் “அறிவின் சுடராக வந்து பிறந்திட வேண்டும்…” – ஈஸ்வரபட்டர்

 

“கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்…” என்ற பொருள்படி கம்பராமாயணத்தை கம்பர் எழுதும்கால் அவரின் எண்ணம் நினைவு எல்லாமே அவர் எவ்வெண்ணத்தை ஈர்த்துச் செயல்படுத்துகிறாரோ அவ்வெண்ணத்தின் சுவாசக் காற்றுத்தான் அவர் உள்ள இடம் தனில் சுற்றிக் கொண்டிருக்கும்.

எவ்வில்லத்தில் எவ்வெண்ணத்தின் செயலுடன் துரிதமாகச் சுற்றிக் கொண்டுள்ளதோ அந்த நிலைக்கொப்பத்தான் அந்தந்த இடத்தில் உள்ள எல்லா நிலைகளும் நடந்திடும்.

அவ்வில்லத்தில் வாழ்பவரின் எண்ணமும் இவ்வெண்ணத்தின் சுவாசக் கலப்பினால் ஒவ்வோர் இல்லத்திலும் எச்சக்தியின் எண்ண நிலை ஓங்கி நிற்கின்றதோ அந்நிலை கொண்ட செயல்தான் நடந்திடும்.

கவி பாடும் கவிஞரின் இல்லம் மட்டுமல்ல…!
1.ஒவ்வொரு குடும்ப நிலையிலும்
2.அக்குடும்பத்தில் உள்ள தனித்தன்மையின் நிலை அக்குடும்பத்தில் உள்ளோரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்திடும்.

பிறக்கும் குழந்தைகளில் நல்லறிவு கொண்ட குழந்தைகளும்… சில குழந்தைகள் நல்லறிவு வளர்ச்சி பெறாமல் பிறப்பதுவும் கண்டிருப்பீர்.

முன் ஜென்மத்தில் செய்த வினைப்பயன் மட்டும் கொண்டு அனைத்து குழந்தைகளும் பிறப்பதில்லை. பிறக்கும் ஒவ்வொரு சிசுவுக்கும் முன் ஜென்மத் தொடர் தொடர்வதில்லை.

ஆதியில்… ஆதியில் என்பது இவ்வுலகம் கல்கியில் பிறந்த நாளில் இருந்த உயிர் அணுவிற்கும் இப்பொழுதுள்ள உயிரணுவிற்கும் பல கோடி கோடி நிலைகள் அதிகரித்துள்ளன.

அந்நிலையில் இப்பொழுது வாழும் அனைவருக்குமே முன் ஜென்மத்தில் வாழ்ந்ததின் தொடர் நிலைகள் எந்நிலையில் வந்திடும்…?

புதிய புதிய உயிரணுக்கள் தோன்றிக் கொண்டே உள்ளன. முன் பாடத்தில் சொல்லியபடி ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் உடலை அடக்கம் செய்த நிலையில் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் தோன்றி சுற்றிக் கொண்டு உள்ளன என்றேனல்லவா…?

1.அந்நிலை கொண்ட உயிரணுக்களெல்லாம் தாயின் கர்ப்பத்திற்கு ஜீவன் பெற வந்திடும் பொழுது
2.அவ்வுயிரணுக்களுக்கு எண்ண நிலைகளும் செயல் திறமையும் முழுமை பெறாததால்
3.அத்தகைய உயிரணுக்கள் தாயின் கர்ப்பத்திற்கு வரும் பொழுது தான்
4.சில குறைப் பிரசவங்களும் கருச்சிதைவுகளும் உண்டாவதெல்லாம்.

இவ்வுயிர் அணுக்கள் தன் ஜீவன் பெறும் துடிப்பில் எத்தாயின் கர்ப்பத்திற்கும் வந்து பிறக்கும் நிலையில் பிறப்பிற்கு வருகின்றது.

மனித உடலிலிருந்து உண்டான உயிரணுக்கள் எல்லாமே மனித சுவாசம் நிலை கொண்ட மனித கர்ப்பத்திற்குத்தான் வருகின்றது. மிருக நிலையும் இதைப் போன்ற நிலை கொண்டதுவே.

இப்புதிய உயிரணுக்கள் ஜீவன் பெற தாயின் வயிற்றில் உதித்து வளரும் பொழுது… எக்கரு எத்தாயின் வயிற்றில் வளர்கின்றதோ…
1.அத்தாயின் நிலை சமமான நிலை கொண்ட சஞ்சலம் கொள்ளாத நிலையிலிருந்தால்
2.அத்தாயின் ஆரோக்கிய நிலையும் நல் நிலையிலிருந்தால்
3.அத்தாயின் வயிற்றில் உள்ள கருவும் அத்தாயெடுக்கும் சுவாச நிலை கொண்ட புத்தியின் வளர்ச்சி நிலைக்கும்
4.அத்தாயின் வாழ்க்கையுடன் கலந்துள்ளவரின் சுவாச நிலைக்கும் அக்கருவையும் தன்னுள் வளர்த்துக் கொண்டு
5.நல் நிலை கொண்ட சிசுவாக வந்து பிறக்கின்றது.

இன்னும் பல சிசுக்கள் தாயின் கர்ப்பத்தில் உள்ள பொழுதே அத்தாயின் எண்ண நிலை கொண்டு அந்நிலையின் தாக்குதலினால் இச்சிசுக்கள் பிறந்தவுடன் பிறவியிலேயே பல நிலை கொண்ட வியாதியின் அணுவைத் தாங்கியே பிறக்கின்றது.

இவ்வுலகத்தாய் பெற்றெடுத்த தாயானவள் “தான் பெற்றெடுக்கும் சிசுக்களை…” நல்ல அறிவுள்ள பொக்கிஷமாகப் பெற்றெடுக்க சூலுண்ட நிலையில் உள்ள ஒவ்வொரு தாயும் தன் எண்ணத்தை அன்புடனும் ஆசையுடனும் பண்பாக்கிச் சம நிலையில் கொண்ட நிலையில் வாழ்ந்தே “அறிவுடன் கூடிய அன்புச் செல்வங்களை பெற்றெடுத்து மகிழ்ந்திடுங்கள்…”

சூலுண்ட நிலையில் அன்பு, ஆசை, பண்பு என்ற ஆண்டவன் ஜெபம் கொண்ட அமுதுண்டே அழகுடனே பெற்றிடுங்கள் அரும் செல்வங்களை.

1.ஆண்டவன் வந்து அளிப்பதல்ல நாம் பெறும் செல்வங்களை…!
2.நம்மை நாம் பக்குவம் கொண்டு வாழ்ந்திட்டாலே அவ்வாண்டவனின் செல்வம் நம்முள் வந்து பிறந்து
3.நாம் பெற்றெடுக்கும் செல்வமும் அவ்வாண்டவனின் சக்தி கொண்டு நமக்கு வந்து பிறக்கும்.
4.நமக்குப் பிறக்கும் செல்வங்கள் எல்லாம் “அறிவின் சுடராய் வந்து பிறந்திட வேண்டும்…” என்ற ஜெப நிலை கொண்டே பெற்றெடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் பிச்சையோ யாசகமோ எடுத்துக் கொண்டு வருகின்றார் என்றால் அவனிடத்தில் கடும் வேதனையும் சங்கடமும் துன்பமும் இருக்கும்.

விரக்தியின் நிலைகள் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராது நம்மிடத்தில் யாசகத்திற்கு வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

1.அவனைக் கடுமையான சொற்கள் கொண்டு திட்டும் பொழுது
2.பதிலுக்கு அவன் கடுயான வாக்கு கொண்டு நம்மைச் சொல்லி விட்டால் அந்த வாக்கு உடனடியாகப் பலிக்கும்.

ஏனென்றால் அது நஞ்சின் தன்மை…!

நான் (ஞானகுரு) பல வருடங்கள் சிரமப்பட்டு பல ஆற்றல்கள் பெற்று நீங்கள் நலம் பெற வேண்டும் என்று ஒரு வாக்கைக் கொடுத்தால் அந்த வாக்கை நீங்கள் ஏற்றுக் கொண்ட நிலைகளுக்கொப்பத்தான் அது நல்லதாகின்றது.

இது கால தாமதமாகும்.

நான் கொடுத்த வாக்கின்படி நல்லதாக ஆனாலும் நீடித்த நாள் அது செயல்பட வேண்டும் என்றால் உங்கள் எண்ணத்தைக் கொண்டு அதை ஊடுருவச் செய்து நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் ஒரு தீயவனின் சக்தியோ அவன் சாபமிட்டால் அந்த உணர்வுகள் உடனடியாக வேலை செய்யும்.

பாலுக்குள் விஷம் பட்டால் அந்த விஷமான பாலைக் குடித்தால் எப்படி நஞ்சாக மாய்த்துவிடுகின்றதோ அதைப் போல சாதாரண மனிதனாக இருந்தாலும் அவன் சாபமிடுகின்ற நிலைகள் அப்படி விஷத் தன்மை வாய்ந்தது தான்.

நம்மைச் சாபமிட்டான் என்றால் நாம் என்ன செய்வோம்…?

என்ன சொன்னாய்…? என்று எதிர்த்துக் கேட்போம். அவன் மீண்டும் ஏதாவது சொன்னால் அடிக்கத் துணிவோம்.

அந்த ஆத்திரத்தை நாம் ஊட்டப்படும் பொழுது அவன் மீண்டும் கடுமையான சொற்களைச் சொன்னால் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடும்.

அவ்வாறு சேர்ந்து விட்டால் அந்தச் சாப அலைகள் குடும்பப் பரம்பரைக்குள் வந்துவிடும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அது ஆட்டிப் படைத்துவிடும்.

செல்வம் இருக்கும். ஆனால் உடலுக்குள் துன்பம் இருக்கும். அவர்களுக்குள் மகிழ்ச்சி இருக்காது. ஆசையின் நிலைகளில் அதிகமாகப் பேசலாம். இதைப் போன்ற துன்புறும் நிலைகள் நிச்சயம் வந்தே தீரும்.

ஆனால் சாபமிட்டவன் அது எப்படி ஏழ்மை என்ற நிலைகளில் எப்படியெல்லாம் துன்பம் அனுபவித்தானோ
1.பணமில்லாது உள்ளுக்குள் வேதனை கொண்டு அனுபவித்தாலும்
2.பொருள் இல்லாததால் அவன் தாங்கும் சக்தி இருக்கின்றது.
3.ஏனென்றால் அந்த விஷத்தின் தன்மை வரப்படும் பொழுது அவன் தாங்கிக் கொள்ள முடிகின்றது.

செல்வச் செழிப்புடன் ஆனந்தமாக இருப்பவர்கள் இத்தகைய சாபத்தினால் அவர்களுக்கு வேதனையாகிவிட்டால் அவர்களுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இல்லை.

வேதனைகள் அதிகமாக இருக்கும். பொருள்கள் எல்லாம் இருக்கும். உள்ளுக்குள் அதைச் சுவைக்கும் நிலை இல்லை. மகிழும் நிலை இல்லை.

உடல் முழுவதற்கும் நரகத்தை அனுபவிப்பது போல் ஒவ்வொரு நிமிடமும் வேதனையை அனுபவிப்பார்கள். இதைப் போன்ற வேதனையான உணர்வுகளை இந்த உடலில் விளையை வைத்தால் உடலை விட்டுச் சென்ற பின் எதுவாகப் பிறக்க முடியும்…?

மிருகங்கள் அனைத்தும் விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொண்டது. அதைப் போல இவர்கள் இறந்தால் இவர்கள் உடலிலிருக்கக்கூடிய வேதனையான உணர்வின் அணுக்கள் விளைந்த அனைத்துமே அந்த செல்கள் உயிராத்மாவில் சேர்ந்து மிருகத்தின் தன்மையாகத்தான் பிறக்க முடியும்.

மிருகத்தின் அலைகளின் உணர்வுகள் சேர்க்கப்பட்ட அணு செல்கள் அந்த வாசனை வரப்போகும் பொழுது இவன் எத்தனை அநாகரிகமான முறையில் சாபமிட்டானோ அந்தச் சாபத்தின் நிலைகளுக்கொப்ப உடல் உருமாறிவிடும்.

ஒரு மெய்ஞானி சொல்லக்கூடிய வாக்கைக் காட்டிலும் ஏழ்மையிலே தரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உணர்வின் விஷத்தன்மைகள் அவ்வளவு சீக்கிரம் வேலை செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால்
1.யாம் சொல்லும் முறைப்படி கணவனும் மனைவியும் தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் சரியானபடி செயல்படுத்துதல் வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றினால் தீமைகளப் பற்றற்றதாக்கிட முடியும். தீமைகள் அருகில் வராதபடி நம் ஈர்ப்புக்குள் புகாதபடி “பாதுகாப்பு அரணாக” அமைக்க முடியும்.

குடும்பத்திலுள்ளோர் அனைவரும் சேர்ந்து கூட்டாகத் தியானமிருந்து அருள் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்று வலுப்படுத்துதல் வேண்டும்.

செய்து பாருங்கள்.

சூரியனிலிருந்து மீண்டும் மீண்டும் விஷமான கதிர்வீச்சுகள் (CME) வெளி வரக் காரணம் என்ன…?

 

இன்று விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களில் ஏற்படும் கதிரியக்கப் பொறிகளை அடக்கி அணு சக்தியாக (ஆயுதங்களாக) மாற்றுகின்றார்கள்.

அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்யும் பொழுது அது உலோகத்திற்குள் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியை அதாவது
1.அந்த உலோகத்தில் இருக்கும் அணுக் கதிரியக்கங்களில் இந்த இரண்டும் மோதிய பின்
2.அந்தக் கடினமான உலோகமே ஆவியாக மாறி விடுகின்றது

இது போன்ற நிலைகள் விஞ்ஞானத்தால் கவர்ந்த விண்ணுலக ஆற்றல்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சூரியனுடைய காந்தப் புலனறிவு அதைக் கவருகின்றது… கவர்ந்தபின் அதை ஜீரணிக்கும் சக்தியும் இழக்கின்றது.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்கள் வெளிப்படுத்தும் சக்திகளைக் கவர்ந்து தூசிகளாக மாறி வரும் நிலையில்… சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் அது வரப்படும் பொழுது தனக்குள் உருவாக்கப்பட்ட பாதரசத்தின் சக்தி கொண்டு எதிர்த்துத் தாக்கி நெருப்பாகி அதில் உள்ள விஷத்தைப் பிரிக்கின்றது. இது இயற்கை.

ஆனாலும் மனிதன் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் அணுக்கதிரியக்கங்களாக உருவாக்கப்பட்டு அதைப் பரவச் செய்யப்படும் பொழுது பூமியைக் கடந்து வெளி செல்கிறது. அதைச் சூரியனுடைய காந்தசக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

இருந்தாலும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது செல்லப்படும் பொழுது கதிரியக்கப் பொறிகள் சூரியனுக்குள் ஊடுருவி விடுகின்றது… சூரியன் அதை ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது
1.மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தகைய நிலைகள் சூரியனுக்குள் ஊடுருவப்படும் போது
2.நடு மையம் அடைந்தபின் கொதிகலனாக மாறுகின்றது.

ஆனால் சூரியனோ ஐஸ் பாறைகளால் உருவாக்கப்பட்டது. அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது பாதரசங்களாக உருவாகும் குளிர்ந்த சாதனம் போன்று உண்டு. பாதரசத்தை எடுத்துக் கொண்டால் விறு விறு விறு என்று இருக்கும்.

ஆக… கதிரியக்கப் பொறிகளால் பாதரசத்தை உருவாக்கும் சூரியனுடைய நிலைகள் மாறி கொதிகலன்கள் ஆக மாறுகிறது.
1.இன்று பத்திரிக்கைகளிலும் டி.வி.க்களிலும் பார்க்கலாம்…
2.சூரியனின் கரும்புள்ளிகளிலிருந்து கடுமையான கதிர்வீச்சுகள் வெளி வருகிறது என்று – CORONAL MASS EJECTION “CME”)

கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜனை வைத்து விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட அணுகுண்டுகளை அடக்கி வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல சூரியனும் தனக்குள் அடக்கும் சக்தி இருந்தாலும் அந்தச் சக்தி இழக்கும் தன்மை வந்து விட்டது. செயற்கையில் உருவாக்கப்பட்டது பெருகப் பெருக நாளடைவில்
1.அந்தக் கதிரியக்கப் பொறிகள் சூரியனையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விட்டது.
2.அதே உணர்வுகள் ஊடுருவிய பின் நம் உலகத் தன்மையும் மாறுகின்றது.
3.தாவர இனங்கள் மரம் செடி கொடிகளில் இந்த உணர்வுகள் படரப்படும் மரங்கள் கருகும் தன்மை வருகின்றது… காடுகள் கருகுவதையும் பார்க்கலாம் (FOREST FIRE).

அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது மேகங்களில் ஊடுருவி மேகங்கள் மறைந்துள்ள அணுக் கதிரியக்கங்களைத் தன்னுள் இணைத்த பின் மேகக் கூட்டத்தை கலைத்திடும் நிலை வருகின்றது. இன்னொரு பக்கம் அது குவிந்து கடுமையான மழை பெய்து ஊரையே அழிக்கிறது (CLOUD BURST).

இதைப் போன்று இந்தக் கதிரியக்கங்கள் மழை நீரின் வழி வரப்படும் பொழுது மற்ற உலோகங்களில் கலக்கப்பட்டுத் தாவரங்களிலும் சேர்கின்றது.

உணவுப் பயிர்கள் வழி இது மனிதனின் உணர்வுக்குள் கலக்கப்படும் பொழுது மனிதனுடைய உடலில் உள்ல அணுக்களிலும் இது கலக்கப்படுகின்றது.

இப்படி வானுலக ஆற்றல் கதிரியக்கப் பொறிகளாக விஞ்ஞான அறிவில் வந்தபின் அணு ஆயுதங்கள் வெடித்தால் எல்லாமே அதன் தொடர் வரிசையில் கருகிவிடும்.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து அகஸ்தியன் உணர்வின் தன்மை கொண்டு
2.கதிரியக்கப் பொறிகளை வெடிக்காத வண்ணம் “நீர் நிலைகள் உருவாக வேண்டும்…” என்ற உணர்வினை
3.உங்கள் எண்ணத்தால் பாய்ச்சினால் அந்தச் சாதனங்கள் செயல் இழக்கப்படுகின்றது.

காரணம்… அந்த நீரின் வன்மையை
1.அகஸ்தியன் அவன் அமர்ந்த இடங்களில் மேகங்களைக் கூட்டச் செய்து நீராக வடியச்செய்து ஜீவ நதியாக ஓடும் நிலைகள் பெற்றது.
2.ஜீவனுள்ளதாக அனைத்தையும் உருவாக்கும் நிலைகள் ஆஅதியிலே அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது.

அகஸ்தியன் பெற்ற நீர் சக்தி மிக மிக முக்கியமானது

தாவர இனச் சத்தை உணர்வின் ஒளியாகத் தனக்குள் வளர்க்கப்பட்டவன்… தாய் கருவிலே அத்தகைய சக்தியைப் பெற்றவன். அந்த அகஸ்தியன் அவன் வெளிப்படுத்திய பேருண்மைகளை… இயற்கையின் தன்மைகளை மாற்றி விட்டார்கள்.

மறைந்த நிலைகளைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.

தலையில் வரும் வலி தான் உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி – ஈஸ்வரபட்டர்

 

நல்நிலை பெற்று நாம் எந்நிலை கொண்ட சுவாசம் எடுக்கின்றோமோ அந்நிலைக்குகந்த உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் நம் ஆரோக்கிய நிலையும் நமக்குக் கிட்டுகின்றன.

நமக்கு வரும் பிணிகள் எல்லாம் நம்மை வந்து அண்டுவது பிறரிடத்தில் இருந்தோ அனைத்தும் வம்ச வழி கொண்டோ நமக்கு வந்து அடைகிறது என்பது மட்டுமல்ல.

வம்ச வழியில் வருகின்றது பல பிணிகள் என்கிறார்கள். வம்ச வழியில் உதிரத் தொடர்புடன் சில நிலைகள் நமக்கு வருகின்றன.

ஆனாலும் நம்முடைய உணர்வும் உணவும் செயலும் கொண்டு நம் எண்ணத்தினால்… அந்த வம்ச வழியின் தொடரில் வரும் பிணிகள் நம்மை அண்டாமல்… நம் உடல் நிலையை ஆரோக்கிய நிலையில்… “இஜ்ஜெப நிலை என்னும் ஆத்மீக வழிக்கு நம்மை நாம் வழி நடத்தி வரும் பொழுது… எப்பிணியும் நம்மை அண்டாது…!”

1.இவ்வுடல் பிணிகள் அனைத்துமே வருவதெல்லாம் இவ்வெண்ணத்திலிருந்துதான்
2.மனிதனின் குண நிலை கொண்டுதான் அவனுக்கு வரும் பிணி எல்லாம்.

தலை வலி எந்நிலை கொண்டு வருகின்றது…?

சமமான நிலையில் மன நிலை உள்ள பொழுது ஆரோக்கிய நிலையில் நாம் உள்ளோம். அப்படி இருந்தாலும்
1.எண்ணமுடன் எண்ணம் மோதும் பொழுது (எதிர் நிலை)
2.நாம் உட்கொள்ளும் ஆகாரம் நமக்குச் செரித்து நம் நிலையில் அவ்வுமிழ் நீர் சுரக்கும் தன்மை தடைப்படுகிறது.

இந்த உமிழ் நீர் சுரப்பியின் நிலை வேறுபடும் பொழுது நாம் உட்கொள்ளும் உணவும் நமக்குச் செரிப்பதில்லை. அந்த நிலையிலிருந்து தான் நமக்கு வருகிறது தலை வலி.

1.உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி இச்சிரசில் வரும் வலி தான்.
2.இதன் தொடர்நிலை தான் நமக்கு வரும் வாந்தி மயக்கம் காய்ச்சல் இப்படி வரும் அனைத்துப் பிணிகளுமே.
3.இந்நிலையின் தொடர்தான் அடிக்கடி உடல் உபாதை உற்றவனுக்கு
4.அவன் உடலில் சில உறுப்புகள் செயல்படும் தன்மையை இழந்து விடுகின்றன.

சில உறுப்புகள் அதிகப் பிணி கொண்டு அதன் செயல் தன்மை இழந்த பிறகு எந்த விதமான வைத்தியத்தாலும் அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினமாகிறது.

நாமே நமக்கு வரவழைத்துக் கொள்ளுவதுதான் நமக்கு வரும் பிணிகளெல்லாம்.

1.மன நிலையில் மாற்றமில்லாதவனுக்கு
2.என்றும் அமைதி கொண்டு வாழ்பவனுக்கு இவ்வலியும் பிணியும் வந்து அண்டாது.

நாம் மாறுபட்ட உணவை உட்கொள்ளும் பொழுது அம்மாறுபட்ட உணவினால் தான் “நம் உடல் நிலை சீர் கெட்டது…!” என்று செப்புகின்றோம்.

1.மாறுபட்ட இடம் மாறுபட்ட உணவு என்று எண்ணும் பொழுதே
2.நம் எண்ணத்தையும் மாறுபடக் கொள்கின்றோம்.

அந்நிலையின் கலக்கத்தினால் நம் எண்ணமே அவ்வுணவை உட்கொள்ளும் பொழுதே நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் உமிழ் நீர் சுரக்கும் தன்மையும் மாறுபடுகிறது.

அந்நிலையிலேயே அவ்வுணவு செரிக்கும் பொழுது இவ்வுடலுக்கும் அதை ஏற்கும் தன்மை குறைபடுகிறது. உணவின் மேல் நாம் பாரத்தைப் போடுகின்றோம்.

நம் உடல் நிலைக்குப் புசிக்கும் உணவை நாம் விரும்பி உண்ணும் பொழுது அதன் சுவை “நமக்கு அமிர்தம் போல் உள்ள நிலையாக” உணர்ந்து உண்டிட வேண்டும்.

உணவின் நிலையைப் பற்றி நம் முன்னோர்கள் எழுதிய பல நூல்களில் உணவை உண்ணும் நிலையையும்… நாம் உண்ணும் உணவினால் நம் உடல் பெறும் நிலைகளைப் பற்றியும்… பல நிலைகளை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

1.நாம் உண்ணும் உணவையே நாம் சந்தோஷத்துடன் அவனளித்த அமிர்தத்தை அமிர்தமாகப் புசித்திடல் வேண்டும்.
2.“பசித்துப் புசி…!” என்று நம் முன்னோர் செப்பியுள்ளனர்.
3.பசித்த நிலையில் புசிப்பவனுக்குப் புசித்த உணவெல்லாம் அமிர்தம் போல் உட்சென்று
4.அதன் சத்தினை இவ் உடல் ஏற்கும் பக்குவ நிலைக்கு இருந்திடும்.

நம் முன்னோர்கள் நமக்குகந்த பல உணவுகளைப் பக்குவ நிலைப்படுத்தி நமக்கு உணர்த்திச் சென்றார்கள். உண்ணும் உணவை நாம் ஆசையுடன் புசித்திட்டாலே இவ்வுடல் நிலைக்கும் இவ்வுள்ள நிலைக்கும் எப்பிணியும் வந்து அண்டாது.

நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதற விட்டும் மோத விட்டும் நம் கோபத்தையும் அதி சந்தோஷ நிலையையும் வளரவிட்டும் அந்நிலையில் நாம் உண்ணும் எவ்வுணவையும் நம் உடல் நிலை ஏற்பதில்லை.

நமக்கு வரும் வலியும் பிணியும் இம்மாறுபட்ட சஞ்சல நிலை கொண்ட எண்ணத்தின் மோதலினால்தான் நமக்கு வருகிறது என்பதனை அறிந்திடல் வேண்டும்.

வியாதி உள்ளவனை நாம் சென்று பார்த்தால் அவன் உடல் நிலையிலுள்ள அவ்வியாதியின் அணுக்கள் நம்மையும் வந்து தாக்கி நமக்கும் அவ்வியாதி வரும் என்று சொல்கின்றோம்.

வியாதியஸ்தனைக் காணச் செல்பவனுக்கு…
1.நல்நிலையில்… ஆரோக்கிய நிலையில்… சமமான நிலையில்… அவன் எண்ணத்தில்
2.சிறு அணுவும் “தனக்கு அந்த வியாதி அண்டிக் கொள்ளுமே…” என்ற பயமில்லாத நிலையில் செல்பவனுக்கு
3.எந்த வியாதிஸ்தனின் உடலிலுள்ள எவ்வியாதி அணுவும் வந்து அண்டாது.

ஆனால்… அவ்வியாதியஸ்தனின் “உதிரத் தொடர்புடையவருக்கு” எண்ண நிலையில் ஒரு நிலை கொண்டவருக்கு அவன் சுவாச நிலை பட்டாலே அக்கிருமிகள் வந்து தாக்கும் நிலை உள்ளன.

சில வகை ஜுரங்களின் அணுக்கள் அவ்வியாதியஸ்தன் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்துடனே அவனைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.உடல் நிலையில் ஆரோக்கியமில்லாதவரும்
2.எண்ண நிலையில் கலக்கமுள்ளவர்களும்
3.அந்நிலையிலுள்ள வியாதியஸ்தனின் சுவாசக் காற்று பட்டாலே
4.அவனின் வினையான இவ்வியாதி அணு இவர்களையும் வந்து அண்டிக் கொள்ளும்.

இப்படர்ந்த பூமியில் உள்ள அணுக்கள்தான் யாவையுமே. வியாதியின் அணுவும் இக்காற்றில்தான் உள்ளது. அவ்வியாதியைக் குணப்படுத்தும் மருந்தும் இக்காற்றில்தான் உள்ளது.

நாம் ஏற்கும் சுவாசம் கொண்டுதான் அனைத்து நிலைகளுமே நமக்கு வருகின்றன. “இவ்வெண்ணத்தினால் வருவதுதான் எல்லாப் பிணியும்…!”

இன்று பல புதிய புதிய வைத்தியமும் தான் வளர்ந்துள்ளன.

ஜீவராசிகளின் பெருக்கத்தினாலும் பல ஆலைகளிலிருந்து வெளிப்படும் கழிவின் புகையினாலும் விஞ்ஞானம் கொண்டு இப்பூமியின் பொக்கிஷத்தை நாம் பிரித்து எடுத்தினாலும் தாவர வர்க்கங்களின் நிலையின் குறைவினாலும் வந்த வினைதான் “இன்று இக்காற்றில் கலந்து வரும் புதிய புதிய பிணிகளெல்லாம்…!”

இன்று இவ்வுலகம் உள்ள நிலையில் ஜீவராசியின் அதிபெருக்கத்தைச் சமப்படுத்தினால்தான் இவ்வுலகம் இனி வரும் மாற்றத்திலாவது தாவரங்கள் செழித்து வளர்ந்திடும்.

1.தாவரங்களின் வளர்ச்சிதான் உலகத்தின் உண்மையான வளர்ச்சி.
2.விஞ்ஞானம் கொண்டு வளரும் வளர்ச்சியல்ல இவ்வுலக வளர்ச்சி.

ஜீவராசிகளின் இனப்பெருக்கத்தைச் சமப்படுத்திடும் நிலை உணர்ந்தே வந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் நல்லதை ஏற்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வதற்காக வேண்டி அடுத்தவர்களிடம் நமக்குத் தெரிந்த அந்தப் பக்குவங்களை நாம் சொல்வோம்.

எப்படியும் அந்தப் பக்குவம் எல்லோரும் அடைய வேண்டும் என்பதற்காகத் திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது…?

இவ்வளவு நல்லது சொல்கிறோம்… எத்தனை தடவை சொல்கிறோம்… “ஆனால் கொஞ்சமாவாது ஏற்றுக் கொள்கின்றார்களா…?” இவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் தானா..? என்று நாம் கேட்கின்றோம்.
1.சகஜ வாழ்க்கையில் அடிக்கடி அதைத்தான் பேசுவோம்
2.இப்படித்தான் கேட்போம். இல்லையா…!
3.நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்…? அதைக் கேட்பதே இல்லை என்று இப்படித்தான் சொல்வோம்.

ஆனால் அவர்கள் சங்கடமாக இருக்கும் பொழுது “நல்லது சொன்னால்…” எப்படி எடுத்துக் கொள்வார்கள்…!

“அட போய்யா….” தொழில் போய்விட்டது எல்லாம் போய்விட்டது காசெல்லாம் போய்விட்டது. ஏதோ இருந்தோம்… சாப்பிட்டோம்… போனோம்… நாளைக்கு என்னமோ ஆகிறது “எல்லாம் போய்விட்டது… விடு போ…,!” என்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

1.அப்படி வெறுப்பாக இருப்பவரிடம் போய் நீங்கள் என்ன பக்குவம் சொன்னாலும் அது என்ன செய்யும்…?
2.காது கேட்காதவர்களிடம் போய்ப் பேசினால் எப்படி இருக்கும்? என்ன செய்வார்கள்…?
3.ஒரு உணர்வைக் கிரகிப்பதற்காக வேண்டி அந்த விஷயத்தைச் சொன்னால் என்ன சொல்வார்கள்…?
5.அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பக்குவத்தை ஏற்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்…?

நாம் முதலில் நம் குடும்பத்தில் இந்தச் சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ அதைச் செய்ய வேண்டும். “அந்தப் பயிற்சியை” எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் அத்தகைய சிக்கல்கள் வரும்போது பெரும்பகுதியானவர்களுக்குக் கோபம் அதிகமாக வரும். அந்த மாதிரிக் கோபம் வரப்படும் பொழுது யாம் சொன்ன “ஆத்ம சுத்தியைச் செய்து பாருங்கள்…”
1.நம்மைப் பார்த்தவுடன் அவர்களுக்கு உணர்வு மாறும்.
2.அந்த நல்ல எண்ணம் வர வேண்டும்.
3.அதே மாதிரித் தொழிலில் செயல்படுத்தும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வைக்க வேண்டும்.
4.அப்பொழுது அந்தப் பக்குவ நிலைகளை நாம் சொல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும்.

அதை விடுத்துவிட்டு இதைப் போன்ற நிலைகளிலிருந்து மாற்றிக் கொள்ள
1.குடும்பக் கூட்டுத் தியானமிருந்தோமா…?
2.”என்னத்தை… நாம் சொன்னால் இவன் எங்கே கேட்கப் போகிறான்..,” என்று இதை இணைத்துவிடக் கூடாது.

அதற்குப் பதிலாக அவரும் தியானத்தில் அமர வேண்டும். அவரும் கலந்து கொள்ள வேண்டும். அந்த அருள் சக்திகளைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று இந்தப் பிரசாதத்தைக் கொடுத்துப் பாருங்கள்.

வரவில்லை… என்றாலும் கூடக் “கூப்பிட்டுக் கொடுங்கள்…”

சிறிது நாள் இப்படிச் செய்துவிட்டு
1.உனக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும்.
2.உன் வாழ்க்கையில் எதிர்காலம் சிறந்திருக்கும் என்று
3.கட்டாயமாக இதைச் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

இது நடக்கும்.

சீராகத் தியானத்தில் உட்கார்பவர்களே சில நேரம் “எங்கே முடிகிறது…!” என்று சோர்வடைந்து விடுகின்றார்கள்.
1.தியானம் செய்ய முடியவில்லை… வர மாட்டேன் என்கிறது.
2.இப்படித்தான் சொல்ல முடிகின்றதே தவிர சீராக்கும் பக்குவ நிலைக்கு வரவில்லை.

ஒரு தோசையைச் சுட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால் அடியில் பிடித்துக் கருகி விட்டால் சாப்பிட முடியவில்லை.

ஆனாலும் அதைச் சுரண்டி எடுத்துவிட்டு எண்ணையை வைத்துத் தேய்த்து மறுபடியும் ஒட்ட வைத்து அதை அழகாகச் சுட்டுச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றோம்.

திருப்பி மாவை ஊற்றிச் சுட்டாலும் கூட அது சிறிது சட்டியுடன் ஒட்டிக் கொண்டு சுருங்கிப் போய்விட்டால் ருசி இருப்பதில்லை.

ஆனால் அதே நெருப்பு தான். “பக்குவமாகச் சுடுபவர்கள்” அந்த வெப்பத்தைச் சீராக்கி எண்ணையைத் தேய்த்து அழகாகச் சுடுகிறார்கள். ருசி வருகின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளைப் பற்றி யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். எல்லாம் கேட்கின்றார்கள். ஆனாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் இப்படி ஆகிவிட்டது.

அப்பொழுது நாம் அதை எண்ணத்தில் எண்ணாது மனப்பக்குவம் வர வேண்டும்.

தோசை முதலில் சுட்டது ருசியாக வரவில்லை.

மறுபடியும் அதைச் சீராக்கி அடுத்துத் தோசையைச் சுட்டோம். இப்பொழுது வந்துவிட்டது.
1.வந்துவிட்டது என்று அதை எப்படிச் சாப்பிடுகின்றோமோ
2.இந்த மாதிரி வாழ்க்கையில் அந்த மனப்பக்குவம் வர வேண்டும்.

எம்முடைய அருள் ஞான உபதேசம் – ஞானகுரு

 

யாம் உபதேசிக்கும் உணர்வுகளைப் படிக்கும் சமயத்தில் பல உணர்வுடன் இருப்பார்கள்.
1.என் குடும்பத்தில் கஷ்டம்,..
2.என் குடும்பத்தில் தொல்லை..
3.என் குடும்பத்தில் சண்டை…
4.என் பையனின் நிலைகள் இப்படி…
5.என்னிடம் கடன் வாங்கியவன் ஏமாற்றுகின்றான்… அவன் தரவே முடியாது என்கிறான்…
6.என் உடல் நிலை சரியில்லை…
7.என் குடும்பத்தில் என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள்…! என்று
6.இப்படிப் பல சிக்கல்களின் உணர்வு கொண்டு தான் இதைப் படிக்கின்றோம்.

எம்முடைய அருள் ஞான உபதேசங்களைப் படிக்கும் நேரம் அந்த மாதிரி அணுக்களானால் அந்த அணுவெல்லாம் தன் உணவாக எதைக் கேட்கும்…?

எவர் மேல் பகைமை கொண்டு சிக்கல்கள் ஆகி இந்த உணர்வின் தன்மை அணுவாக ஆனதோ… “அது அது…” தன் உணர்ச்சிகளை உந்தும்.
1.உபதேசிக்கும் உணர்வை எடுக்கவிடாது…
2.“அது உந்தித் தடைப்படுத்தும்…”
3.“நல்ல உண்மைகளைப் பெற முடியாதபடி… தடைப்படுத்திக் கொண்டிருக்கும்…”

தடைப்படுத்தும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்… “எப்படியும் நீங்கள் அதிலிருந்து மீண்டிட வேண்டும்” என்று தான் வலிமையான உணர்வு கொண்டு “உங்கள் கவனத்தை இங்கே திருப்பி” அருள் உணர்வு கொண்டு உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் “அணுக்களாக விளைந்து” பகைமையற்ற உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற நிலைக்கு உபதேசிக்கின்றோம்.

உங்கள் பார்வை பகைமையை உட்புகாது தடுக்கும் நிலையாக வர வேண்டும் என்றும்… “உங்கள் பார்வை” எங்கே பகைமை உருவாகின்றதோ “அங்கேயே… அதை அடக்கிடும் சக்தி” பெற வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

பகைமை என்றால் விஷத் தன்மை கொண்ட விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்திய உணர்வுகள் “எத்தனையோ… எத்தனையோ” நமக்கு முன் சந்தர்ப்பத்தால் வந்து கொண்டே இருக்கின்றது.

அத்தகைய தீமை செய்யும் நிலைகளை நாம் காண நேர்கின்றது. செவி வழி கேட்கவும் நேர்கின்றது.

இதைப் போல “செவி கொண்டு கேட்டுணர்ந்த உணர்வுகள் உடலுக்குள் பதிவாகி… கண் வழி கொண்டு நுகர்ந்தறிந்து..,” அதன் வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்… இயற்கையின் செயலாக்கங்களிலிருந்து “நம்மை எப்படி மீட்டிக் கொள்ள வேண்டும்..?” என்பதைத்தான் குருநாதர் காட்டிய வழிகளில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

சூரியன் எவ்வாறு தன் உணர்வின் தன்மை கொண்டு மற்றவைகளை வளர்க்கின்றதோ அதைப் போன்று குருநாதர் நாம் எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற ஆசையில் வளர்க்கின்றார்.

1.அவர் இன்று சூரியனாக இருக்கின்றார்
2.அகஸ்தியன் பெற்ற உண்மைகளை அவர் கண்டார்.
3.அவர் வாழ்க்கையில் அறிந்துணர்ந்தார்.
4.அவர் வழியில் அவர் கண்ட உண்மையும் அதன் உணர்வை எனக்குள் பதியச் செய்தார்.

“பதிந்த உணர்வுகளை…” மீண்டும் நினைவு கொண்டேன். அதை நுகரும்… அறியும்… சந்தர்ப்பத்தை எனக்குள் உருவாக்கினார்.

அதன் உணர்வின் தன்மை பெருகும் நிலைகளில்… “அவர் கவர்ந்து கொண்ட உண்மைகள்… அவர் வெளிப்படுதிய உணர்வுகள் எதுவோ” அதை நான் பருகினேன்.

எனக்குள் அந்த அணுவின் தன்மையை உருவாக்கினார். அது அணுவான பின் தன் உணவுக்காக ஏங்குகின்றது. அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது.

உணர்வை அறிகின்றேன். “அதையே” இங்கே உங்களிடம் சொல் வடிவில் வெளிப்படுத்துகின்றேன்.
1.அதைக் கேட்கும் பொழுதும்… படிக்கும் பொழுதும் உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது.
2.இதை உங்களுக்குள் அணுவாக மாற்றி விட்டால் தெளிந்த மனம் வரும்.
3.ஏற்றுக் கொள்ளும் பண்பு… உங்களுக்கு வேண்டும்.

நம்முடைய அந்தஸ்து எது…? ஈஸ்வரபட்டர்

 

வாழும் காலத்தில் அவரவர்களின் அந்தஸ்தைப் பொறுத்த வாழ்க்கை நிலை வாழ்வதாக இம்மனிதன் சொல்கின்றான். மனிதன் சொல்லும் அந்தஸ்து இப்பொருள் சுகத்தைக் கொண்ட அந்தஸ்து.

பொருளை வைத்து… அவரவர்களின் கையிலுள்ள செல்வத்தை வைத்து… இன்றுள்ள மனிதன் மனிதனை எப்படி எடை காண்கின்றானோ அந்நிலைக்கு மேல்…
1.இன்று நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் பெற்ற வழி நெறிகளைக் கொண்டு
2.நம் ஆத்மா இவ்வுடலை விட்டுச் சென்ற பிறகும்
3.நம் ஆத்மாவிற்கும் அந்தஸ்து நிலையுண்டு (தர நிலையுண்டு).

வாழ்ந்த காலத்தில் மனிதன் தனத்தை வைத்துத் தரத்தை நிர்ணயிக்கின்றான். இத்தரம் எத்தரம்…? மனிதனே மனிதனுக்கு அளிக்கும் தரம் தான் இந்தத் தரம்.

வாழ்ந்த வாழ்க்கையில்… எண்ணம் செயல் அனைத்தையுமே ஆத்மீக நெறி கொண்ட அன்பு நிலை கொண்டு வாழ்பவனின் தரம்தான் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் நிலைத்து நிற்கும் “நிர்மலமான ஜோதி நிலை கொண்ட தரம்…!”

அத்தகைய தரம் பெற்ற ஆத்மாவுக்கு ஆண்டவனாக வாழும் அரும் பெரும் பொக்கிஷ நிலை கிட்டுகிறது.
1.வாழும் காலத்தில் இவ்வாத்மீக நெறி கொண்டவன் அவ்வழிக்கு வந்துவிட்டால்
2.மற்ற அணுக்களுக்கும் வந்து தாக்கிடவும் செய்யாது.
3.முதலில் அவ்வுடலில் இருந்த மற்ற அணுக்களின் (ஊழ்வினைகள்) சக்தியும் செயலற்றுப் போகின்றன.

ஆத்மீக வழிக்கு வந்து… அறம் பெற்று… வாழும் தரம் கொண்டே வாழ்ந்திட வேண்டும்.

இவ்வுடலுடன் உள்ள நாட்களில் நாம் நமக்களித்த இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
1.நம் ஆத்மாவுடன் ஆவி உலகத்தில் வாழும் வாழ் நாட்களுக்கும்
2.இவ்வுடலுடன் உள்ள பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்ட எண்ணமும் செயலும்தான் வந்து
3.நம்முடன் என்றும் சப்த அலைகளாக சத்து கொண்ட ஆத்மாவாக ஆவி உலகில் வாழப் போகின்றோம் என்பதை உணரல் வேண்டும்.

ஏனென்றால் நாம் சேர்க்கும் சொத்தும் சுகமும் அல்ல நம்முடன் வருவது.

நாம் உடலுடன் உள்ள நிலையில் நாம் இப்பிறவி எடுத்து நம் ஆத்மா என்று பிரிகிறதோ அன்று வரை “நம் சப்த அலைகள் அனைத்துமே” நம் ஆத்மாவுடன் நம் கூட வருகின்றன.

ஆகவே எண்ணத்தையும் செயலையும் நன்றாக்கி வாழ்ந்திடுங்கள். நம் ஆத்மாவிற்கு நாம் சேர்க்கும் சொத்து அவைதாம்…! என்பதனை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

ஞானிகள் வெளிப்படுத்தும் நல்ல அலைகளை ஈர்த்து வாழும் பக்குவத்திற்கு வாருங்கள். பல நிலை கொண்ட தீட்சண்ய ஆவிகளின் செயலில் இருந்து தப்பி வாருங்கள்.

இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் உள்ளன என்று பல முறை உணர்த்தியுள்ளேன்.

நம் உடலுக்குத் தேவையான மருந்தும்… உணவும்… நீரும்… காற்றும்… உலோகமும்… பல நிலை கொண்ட திரவங்களும்… இப்பூமித்தாய் பதித்துள்ள அனைத்து சக்திகளும்… இக்காற்றினிலே கலந்துள்ள பொழுது
1.நமக்கு வேண்டிய நல் நிலைகளை
2.நாம் ஈர்த்து வாழும் பக்குவம் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு யாம் கண்ட உண்மைகளை எல்லோருக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று இப்பொழுது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் அந்த உண்மைகள் தெரியாதபடி நாம் என்ன செய்வது…?

மந்திரத்தினால் என்னென்ன நடக்கின்றது…? நாடி சாஸ்திரங்கள் எப்படி வேலை செய்கிறது…? யாகங்கள் செய்வதால் என்னென்ன தீய விளைவுகள் இருக்கின்றது…? மதங்கள் எல்லாம் என்ன செய்கின்றது…? ஞானிகள் என்ன சொன்னார்கள்…?

இதையெல்லாம் குருநாதர் தெளிவாக எமக்கு உணர்த்தினார்.

கடவுள் எங்கே இருக்கின்றான்…? என்றால் ஒவ்வொரு உயிரும் கடவுள் என்று மதிக்கச் சொன்னார்.

1.உன்னால் முடிந்தமட்டும் நன்மை செய்.
2.அவர்கள் சந்தோஷப்படுவதைக் கண்டு நீ சக்தி பெற முடியும்.
3.அங்கே அதை உருவாக்கினால் அவர்கள் மகிழ்ச்சி பெற்று
4.அந்த உணர்வுகள் அவர்களிடம் நீ நல்ல வாக்கு வாங்கினால்
5.அது உனக்குள் உயர்ந்த சக்தியாகக் கிடைக்கும்.

இது தான் குருநாதர் எனக்குக் கொடுத்த நிலைகள்.

அதைத்தான் யாம் இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றோம். இந்த உடலுக்குப் பின் நாம் வேறு என்ன கொண்டு போகப் போகின்றோம்…?

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும். அதை நீங்கள் பெற வேண்டும். அந்த உயர்ந்த நிலை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று அந்த உணர்வைத்தான் நான் எண்ணிக் கொண்டேயிருக்கின்றேன்… “தவமிருக்கின்றேன்”.

நீங்கள் சந்தோஷமாக… சந்தோஷமாக… அதைக் கண்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.

அப்பொழுது அந்த அருள் பெற வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். நீங்களும் அந்த அருள் பெற வேண்டும் என்று எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்.
1.இப்படி ஒருவருக்கொருவர் பின்னி வரும் பொழுது தான்
2.எல்லோருக்குள்ளும் இது வளரும்.

அதனால் தான் பொது விதிகளில் வந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எல்லோரும் பெற வேண்டும் நாம் பார்ப்பவகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அந்த விதியை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

அதைச் செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்றால் ஒன்றுமில்லை
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதை…,
2.”உயிர் செய்கிறது…” அவ்வளவு தான்.

அதனால் தான் “உங்களை நீங்கள் நம்புங்கள்” என்று யாம் சொல்வது.

இதையெல்லாம் குருநாதர் தெளிவாக்கிய பிற்பாடு தான் எல்லோருக்கும் இந்த அருள் உணர்வுகளை எப்படியும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். அப்பொழுது அதை யாமும் பெறுகின்றோம்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது தான்
2.முதலில் நான் பெறுகின்றேன்.

இந்த உணர்வு எனக்குள் விளைந்த எண்ணத்தைத்தான் உங்களிடம் கொடுக்கின்றோம். “எல்லோரையும் இதே மாதிரிச் செய்து பாருங்கள்…” என்று சொல்கின்றோம்.

தீமையின் இயக்கத்தைக் காட்டி “அதைக் கருக்க வேண்டும்…” என்பதற்கே ஆலயங்களில் அக்னி குண்டத்தை வைத்தனர் ஞானியர்

 

இன்று காளியம்மன் கோவிலில் அக்னி குண்டம் இறங்குவதும் அங்களேஸ்வரி கோவிலில் அக்னி குண்டம் இறங்குவதும் என்ற நிலைகளில் செயல்படுகின்றார்கள்.

ஆனால் ஞானிகள் நம்மை அந்த அக்னி குண்டத்திற்குள் இறங்கச் சொல்லவில்லை. தீமைகளைக் கண்டோம் என்றால் அடுத்த கணம்
1.அருள் மகரிஷிகளின் உணர்வை (அக்னி) எடுத்து
2.இந்த உடலான குண்டத்திற்குள் நம் எண்ணங்கள் கொண்டு இறக்க வேண்டும்…
3.அந்தத் தீமைகளைக் கருக்கிடல் வேண்டும்.
4.அருள் ஞானத்தை நமக்குள் உயர்த்த வேண்டும்.

அதற்குத் தான் அங்களேஸ்வரி கோவிலிலும் காளியம்மன் கோவிலிலும் மாரியம்மன் கோவிலிலும் அக்னி குண்டத்தை வைத்தது.

1.சிவன் கோவிலில் அதை வைத்திருக்கின்றார்களா…
2.விஷ்ணு கோவிலில் வைத்திருக்கிறார்களா…
3.இலட்சுமி கோவிலில் அக்னி குண்டம் இறங்கச் செய்கிறார்களா…?
4.அல்லது மீனாட்சி கோவிலில் அக்னி குண்டம் இறங்கச் செய்கின்றார்களா…!

இல்லை

ஆகவே நற்குணங்கள் இருக்கும் பக்கம் அதைச் செய்வதில்லை நற்குணங்களின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்க்கும் சக்தி பெறுகின்றோம்.

ஆகையினால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் தீமை வராது செயல்படுத்துதல் வேண்டும். இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் தீமையை வென்றிடும் சக்திகளை நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த உயர்ந்த சக்தியைக் கூட்ட வேண்டும்.

சிரமங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் அதை எடுத்துச் சொல்லுதல் வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எண்ணி ஏங்கினால் இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் செல்கின்றது
2.தீமைகளை அகற்றுகின்றது.. நீங்கள் எண்ணிய அருள் உணர்வுகளை உயிர் அணுக்களாக மாற்றுகின்றது.
3.அணுக்களாக மாற மாற அறியாது வரும் தீமைகளை அகற்றுகின்றது என்று அடுத்தவர்களுக்கு நாம் சொல்ல வேண்டும்.
4.அப்படிச் சொன்னாலும் அந்த மகரிஷியின் அருள் சக்தியை நுகர்ந்தே சொல்கின்றோம்.

அவர்கள் உடலிலிருந்து தீமைகள் அகல வேண்டும் என்ற உண்மையான உணர்வுடன் சொல்லப்படும்போது நாமும் வளர்கின்றோம். அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

மற்றவர்களை அணுகும் முறைகள் நாம் இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்.

இறந்த பின் உயிரான்மாக்களின் செயல்கள் – ஈஸ்வரபட்டர்

 

நம்மை நாம் பக்குவப்படுத்தி அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்கும் போது பல ஞானிகளும்… முன்னோர்களும்… நம் ஜெபத்துடன் வந்து அருள் தருகின்றார்கள்.

முன்னோர்கள் என்பது நம் குடும்பத்தில் நாம் பிறவி எடுத்த இப்பிறவியில் உதிரத் தொடர்புடைய பெரியோர்களின் ஆசியும் நமக்குக் கிட்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அக்குடும்பத்தின் மூதாதையர் அவர்கள் இறந்த பிறகு உடனே மறு பிறப்பிற்கு வராமல் தனது உதிரத் தொடர்புடைய வம்ச வழிக்கு ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்து அக்குடும்பத்தைக் காக்கும் தெய்வமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வாழ்ந்த நாளில் அக்குடும்பத்திற்காகச் செய்த நன்மையைக் காட்டிலும் ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்கின்றனர்.
1.தன் உதிரத் தொடர்பு உடையவர்கள் நிலையெல்லாம் மறைந்த பிறகுதான்
2.அவர்கள் மறு பிறப்பிற்கு வருகிறார்கள்.
3.இப்படிப் பிறப்பு இறப்பு என்னும் நிலைகளில் பல நிலைகள் உள்ளன.

நம் முன்னோரை வணங்கி நாம் ஆகாரம் படைத்து அவற்றைப் பட்சிகளுக்கு வைக்கின்றோம். அப்பட்சிகள் வந்து உண்ணும் நிலையில் நாம் நம் முன்னோரே அதை வந்து உண்டதாக மகிழ்கின்றோம்.

நம் முன்னோர் அப்பட்சியின் நிலைக்கு எப்படி வருகிறார்கள்…? அவர்களின் ஆத்மா அப்பட்சியின் உடலில் ஏறுவதல்ல.

ஞானிகளும் ரிஷிகளும் செயல்படுவதைப் போல் இந்நல்நிலை பெற்ற குடும்ப முன்னோர்களும் அப்பட்சியின் எண்ணமுடன் கலந்து அப்பட்சியையே தான் வருவதாக இயங்கச் செய்து அப்பட்சி உணவு எடுக்குங்கால் நாம் படைக்கும் அவ்வுணவில் உள்ள மணத்தை அவர்கள் ஈர்த்து எடுத்துச் செல்கிறார்கள்.

நாம் அவர்கள் எடுத்தார்கள் என்பதனை அறிய அப்பட்சியை ஒரு கருவியாக்கி அவர்களே அப்பட்சியுடன் வந்து எடுத்துச் செல்வதுதான் நாம் படைக்கும் நிலையெல்லாம்.

பறக்கும் நிலை கொண்ட அப்பட்சியின் உடலில் செயல்படுவது எளிது. அதன் நிலை கொண்டு தான் நம் முன்னோர்கள் நிலையும் இங்கு நடக்கின்றது.

எவ்வுடலையும் தன் செயலுக்குக் கட்டுப்படுத்திட எவ்வாவிகளுக்கும் முடியும். அவ்வாவிகளின் குண நிலைக்கு ஏற்பச் செயல்படுத்திடும் நிலை கொண்டவரின் நிலைக்கெல்லாம் அவ்வாவிகள் வருகின்றன.

குறிப்பிட்ட காலங்களில் இன்னும் பல இடங்களில் பட்சிகளுக்கு உணவு வைத்தால் அவ்வுணவை அதே நேரத்தில் வந்து அப்பட்சிகள் எடுத்துச் செல்வதைக் கண்டிருப்பீர்கள்.

இன்றும் அருணகிரிநாதர் தன் செயலை பட்சியின் மேல் வந்து அவருக்குப் படைக்கும் உணவை எடுத்துச் செல்கின்றார்.

இவ்வாவி உலக வாழ்க்கை ஒன்று உள்ளது.

மனித வாழ்க்கையில் உண்டு உறங்கி உழைத்து வாழ்கின்றோம். இவ்வாழ்க்கைக்கே ஆவி உலகில் உள்ளவரின் வாழ்க்கையும் கலந்துதான் செயல்படுகின்றது. அவ்வாவி உலகில் உள்ளவரும் நம்முடனே சுற்றிக் கொண்டுதான் உள்ளார்கள்.

இன்று மனிதனையும் இப்பிம்பப் பொருள்களையும் நிழல் படம் எடுப்பதைப் போல் ஆவி உலகில் உள்ளவர்களையும் எடுத்திடலாம்.

1.ஆவி உலகில் உள்ளவர்களும் எண்ணமும் செயலும் கொண்டுதான் வாழ்கின்றார்கள்
2.தன் ஆத்மாவிற்கு அவர்களும் நுகரும் தன்மை கொண்டு
3.பல சக்தி ஆகாரத்தை ஈர்த்துத்தான் ஆவி உலக ஆத்மாவும் வாழ்கிறது.

ஜீவ உடலில் உள்ள நாம் திடப்பொருளை உணவாக்கி உண்ணுகின்றோம்.
1.இவ்வுடலில்லாத ஆவி உலக ஆத்மாக்கள் தன் ஆத்மாவுக்கு வேண்டிய உணவை
2.ஆவியாகவே ஈர்த்துத் தன் ஆத்மாவுக்கு உணவாக்கிச் சுற்றிக் கொண்டுள்ளன.

நாம் படைக்கும் உணவையும் சில இல்லங்களில் அவ்வில்லங்களில் உணவைச் சமைத்து வைத்த நிலையிலும் அவ் இல்லத்தில் இறந்தோர்கள் தனக்கு வேண்டிய உணவை இன்றும் வந்து அதன் சுவையை ஈர்த்தெடுத்துச் செல்கின்றார்கள்.

சில இல்லங்களில் கேட்டிருப்பீர்…! உறக்கத்தில் உள்ள பொழுதே எழுந்து நடமாடி வீட்டு வேலைகள் செய்து உணவு சமைத்து உண்பதாக எல்லாம்.

உறக்கத்திலேயே அனைத்தையும் செய்துவிட்டு விழித்த பிறகு கேட்டால் மறந்துவிட்டதாகச் சொல்லுவார்கள்.

உறக்கத்துடன் பல நிலைகளை இன்றும் பலர் செய்கிறார்கள். இவையெல்லாம் தன் ஆசை அடங்காத நிலைகொண்ட ஆவிகளின் நிலைகள் தான்.

தன் நிலையைச் செயல்படுத்திட…
1.தன் ஆசைக்கு இவ் உடல்களைத் தன் எண்ணத்துடன் கலக்கச் செய்து
2.அவர்கள் நிலையை மறக்கச் செய்து தன் செயலை தன் ஆசையை இவ்வாவிகள் பூர்த்தி செய்து கொள்கின்றன.

இவ்வாவிகளுக்கு மனிதர்கள் விழித்துள்ள நிலையில் அவர்கள் எண்ணத்தை அடங்கச் செய்து தன் செயலைச் செயல்படுத்திட முடியாத நிலையில் தன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத்தான் பலர் இரவில் தன்னை அறியாமல் உறக்கத்தில் நடந்திடும் நிலையெல்லாம்.

இவ்வாவிகள் தன் ஆசையைச் செயல்படுத்திடும் எண்ணத்துடனேதான் இவ்வுலகினில் சுற்றிக் கொண்டே உள்ளன. ஆகவே
1.நாம் பெறும் ஜெபம் முதலில் பிற ஆவியின் அணுக்களின் உந்தலில் இருந்து தப்பி
2.நம் சக்தியை நாம் உணர்ந்து நல் சக்தியை ஓங்கச் செய்து நாம் வாழ வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எமது குருநாதர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார். எமக்குப் பல இம்சைகளையும் கொடுத்தார். இந்த இம்சை உனக்குள் எப்படி எல்லாம் வருகின்றது…? உன்னை எப்படி அது இயக்குகிறது…?

ஒவ்வொரு உணர்வின் தன்மை தன்னை அறியாமல் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பாசத்தால் உடலுக்குள் விஷமான அணுக்கள் எப்படி வளர்கின்றது…? அதே சமயத்தில் கேட்டோர் உள்ளங்களில் அது எப்படி இயக்கச் செய்கின்றது…?

அந்த உணர்வின் காந்தப் புலன்கள் கவர்ந்து நம்மைச் சுழன்று நிம்மதியற்ற நிலைகள் கொண்டு மீண்டும் ஆரம்ப நிலைகள் கொண்டு எப்படித் திருப்புகின்றது…?

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்ளும் வழிகளை அன்று அந்த மெய்ஞானிகள் காட்டினார்கள். அதைத்தான் குருநாதர் பைத்தியம் போல் இருந்து அனுபவபூர்வமாகக் காட்டினார்.

பைத்தியக்காரர் போல் தான் நானும் (ஞானகுரு) இருந்து கொண்டு வருகின்றேன். (அவர் சொன்ன வழிகளில் தான்) முதலில் நான் வெறும் ஒரு துண்டும் வேஷ்டியும் மட்டும் தான் போட்டிருந்தேன்.

நீங்கள் வேறு விதமாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அப்புறம் வெள்ளைச் சட்டையைப் போட்டது.

ஒவ்வொரு நிமிடத்திலும் நமது நிலைகளில் பிறருடைய தீமைகளின் நிலைகளைக் கேட்காது விட்டால் “நம்மைப் பைத்தியக்காரன்…” என்று சொல்வார்கள்.

ஒருவர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போது “நமக்கு எதற்கு இந்த வம்பு…?” என்று சென்றுவிட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

வாழ்க்கையில்… எதாவது ஒரு பொருளை சரி என்று சொல்லி “அவன் ஆசைப்படி அவனே வைத்துக் கொள்ளட்டும்…!” என்று நாம் ஒதுங்கிச் சென்றால் “சரியான பைத்தியம்… இது” என்று நம்மைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

அதே சமயத்தில் அவன் திட்டும்போது நாம் காது கொடுத்துக் கேட்காது சென்றால் “பைத்தியம்…” என்று நம்மைச் சொல்வார்கள்.

தியான வழியில் இருக்கும்போது சொல்வார்கள். யாராவது சொன்னாலும்… கொஞ்சம் கூட ரோசம் இல்லை… அவன் ஒரு பைத்தியக்காரன்…! என்பார்கள்.
1.ஒருவரைச் சரி இல்லை என்று கேட்டவுடனே
2.அவனை உதைத்தோம்… என்றால்
3.அப்பொழுது “மனிதன்…” என்று சொல்வார்கள்.

இந்தத் தியான வழியில் நீங்கள் சென்றால் மற்றவர்கள் சுத்தமாகவே பைத்தியம் என்று சொல்வார்கள். அடுத்தவர்கள்.., ஏதாவது சொன்னாலும் பாருங்கள், இவன் ஒன்றுமே சொல்ல மாட்டான் என்று சொல்லிவிட்டு
1.சூடு சுரணை எதுவும் இல்லை
2.இவன் ஒரு பைத்தியக்காரன்…! என்பார்கள்.

ஆனால் அவன் பைத்தியம் என்று அவன் உணர்வதில்லை. தான் நுகரும் உணர்வின் தன்மை தன்னை ஒரு பைத்தியக்காரனாக ஆக்குகின்றது. தன்னையறியாமலே அந்த உணர்வுகள் அவனுக்குள் செயல்படுகிறது என்று அவன் உணர்வதில்லை.

ஆனால் நம்மைப் பைத்தியக்காரன் என்பார். இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிதல் வேண்டும்.

ஆகவே எம்மைத் தேடி வருபவர்கள் உங்களால் எனக்கு ஏதாவது “நல்லதாக வழி இருக்கின்றதா…” என்று கேட்டால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு
1.”சக்கரம்… தகடு…” மாதிரி எதுவும் கொடுப்பீர்களா…? என்று தான் கேட்கின்றார்கள்.
2.மந்திரம் சொல்வீர்களா…? ஜோதிடம் சொல்வீர்களா…?
3.நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வீர்களா…?
4.எனக்கு எப்பொழுது நல்ல நேரம் வருகின்றது…? என்று பார்த்துச் சொல்லுங்கள்.

இதைத்தான் கேட்டுப் பழகியிருக்கின்றார்கள்.

ஏனென்றால் இனி வரும் காலங்களில் சிந்திக்க நேரம் இருக்குமா…! என்று சொல்ல முடியாது.

மெய் ஞானிகள் பெற்ற தீமையை வென்ற அருள் சக்திகளை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றோம். யாம் சொல்லும் அருள் ஞான உபதேசங்களை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்.

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

உயிர் வாழ அதி சக்தி வாய்ந்த உணர்வைக் கொடுத்தார் குருநாதர்

 

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) இமயமலைக்குச் செல்லப்படும் பொழுது மலை உச்சியில் பனிகள் உறைந்து இருக்கின்றது. ஆனால் உறைந்த பனிகள் (சுடு தண்ணீர் கிணறு – அடியில் கந்தகப் பாறை இருப்பதால்) சூட்டினால் கரைந்து ஒரு குளம் மாதிரி இருக்கின்றது.

அந்தக் குளத்திற்குள் பார்த்தோமென்றால் அடியில் இருக்கக்கூடிய சிறு துரும்பு கூட… கண்ணாடி போன்று பளிச்சிட்டுத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் அதில் இருந்து சூட்டினால் புகை வருகின்றது.

ஒரு துணியில் அரிசியைப் போட்டுக் கட்டி அதில் முக்கி 10 நிமிடம் வைத்திருந்தால் போதும். ஒரு பிரஷர் குக்கரில் அரிசியை வேக வைப்பது போன்று அவ்வளவு சீக்கிரம் வேக வைத்து விடுகின்றது.

அங்கே உட்கார்ந்து நான் தியானம் இருக்கச் சென்றேன். குருநாதர் அப்போதுதான் சொல்கின்றார் நீ குளிர் காய்வதற்கு இங்கே வரவில்லை… எழுந்திரு…! என்று சொல்லி குளிர் அடிக்கும் இடத்தில் போய் அமரச் செய்தார்

காரணம்…
1.குளிர் வரும் பொழுது உனக்குள் எப்படி நடுங்குகிறதோ
2.அந்த நடுக்கத்தை நிறுத்துவதற்கு இங்கே (சுடு தண்ணீர் இருக்கும் இடம்) எப்படி அமர்ந்தாயோ…
3.பின் அதி சக்தி வாய்ந்த உணர்வை நுகரப்படும் பொழுது உனக்குள் இந்த குளிர் வராது.
4.”அந்தச் சக்தியை நுகர்வதற்குத் தான்… இந்த குளிரிலிருந்து நீ தப்பிப்பதற்குத் தான்
5.நீ உயிர் வாழ வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்தேன் என்று
6.நீ போ…! என்று சொல்லி குளிர் அதிகமாக உள்ள இடத்தில் அமரச் செய்தார்.

வெறும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு தான் அங்கே சென்றேன். ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் உட்கார்ந்து மகிழ்ச்சியாக “இவ்வளவு இரகசியத்தையும்…” கேட்கின்றீர்கள்.

ஆனால் அங்கே கிடு…கிடு கிடு…கிடு என்று நடுங்கும். குருநாதர் சொன்ன முறைப்படி நான் தியானிக்கவில்லை என்றால் கிர்ர்ர்ர்ர்… என்று இரைச்சல் வரும்.

மார்கழி மாதப் பனிக்காலத்தில் ஒரு சிலருக்கு உள்ளுக்குள் இருந்து கிர்ர்ர்… என்று உடல் இரையும். அது போன்று அங்கே இமயமலைக் குளிரில் இருந்தால் எப்படி இருக்கும்…?

இருதயம் இரையப்படும் போது கொஞ்சம் வேகமாக உள்ளே வந்து டக்… என்று குறைந்து விட்டால் மூச்சு போய்விடும். காரணம் அந்த இரத்தங்கள் ஓடும் பொழுது அந்த இயக்கச் சக்தியாகும் போது உறைந்து விட்டால் எல்லாம் இன்ஜின் நின்றுவிடும்.

அந்த மாதிரி இடங்களில்…
1.மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் பொழுது
2.உடலுக்குள் இந்த உணர்வை நான் செலுத்தும் பொழுது ரொம்ப சுகமாக இருக்கின்றது.
3.தியானத்தில் என் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கெல்லாம் அந்தச் சக்தியைக் கொடுக்க முடிந்தது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்குவதற்காகத் தான் தனித்து அங்கு அனுப்பினார் குருநாதர். அதில் வளர்த்த உணர்வின் ஒளி அலைகளைத் தான் இப்போது உங்களிடம் சொல்கின்றேன்.

குருநாதர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் அந்த ஆற்றல்களை பெறுவதற்கு…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளை அதைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் பதிவு செய்தார்.

அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அந்த அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்ள முடிந்தது… எடுத்துக் கொண்டேன்.
1.அதைத்தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் ஏங்கிப் பெறுவீர்கள் என்றால்
3.தீமைகள் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கருக்கிவிடும்.

பிற உணர்வின் உந்துதலை நாம் கட்டுப்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள ஆவிகளின் சுமையுடன் நம்மை அறியாமலேயே அவற்றின் சக்திகள் பலவற்றை நம்முடலில் நாம் ஏற்றிக் கொண்டுள்ளதினால் தான் நம்முள் உள்ள குண நிலையை
1.நம் குண நிலைக்கு மேல் பிற அணுவின் செயலை நம்முள் ஏற்படுத்தி
2.அதனால் நமக்கு வரும் பல இன்னல்களின் நிலையுடன் வாழ்கின்றோம்.

நம் சக்தியின் செயலை நாம் பெற வேண்டும். பல அணுக்கள் நம் உடலிலிருந்து செயல்பட்டாலும்…
1.அவ்வணுக்களின் எண்ணத்திற்கு நம் புத்தியை அடிபணிந்து செல்லாத நிலைப்படுத்தி
2.நம் தியான சக்தியின் ஜெபத்தை நாம் பெற வேண்டும்.

எண்ணத்தில் கலக்கத்தை அண்ட விட்டால்… நம் உடலிலிருக்கும் பிற அணுவின் துரிதம்தான் செயல்படும். நம் நிலை ஒரே நிலையிலிருந்தாலும் நம்முடன் கலந்து வாழ்பவர்களின் எண்ண நிலையின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் தாக்கும் பொழுது நம் நிலையும் மாறுபடும்.

சந்தோஷமான சூழ்நிலை உள்ள இடத்தில் நாம் உள்ள பொழுது நம் நிலையும் அங்குள்ளோரின் நிலையும் மகிழ்ச்சியுடன் உள்ளதல்லவா…? அதே நிலைபோல் துக்கம் உள்ள இடத்திலும் அங்குள்ளோரின் நிலையும் கவலை கொண்டதாக உள்ளதல்லவா…?

ஏனென்றால் இந்தக் காற்றினில் அனைத்து நிலைகளும் கலந்துள்ளன.

நாம் எந்நிலையில் உள்ளோமோ அந்நிலையில் சுற்றிக் கொண்டுள்ள சுவாசத்தின் துரித நிலை நம் நிலைக்கும் வந்து தாக்கி நம்மையும் அச்சூழ்நிலையில் கலக்கச் செய்கிறது.

இக்காற்றினில் உள்ள துரித நிலை கொண்டு
1.எந்த இடத்தில் நாம் உள்ளோமோ அந்த நிலையின் சூழ்நிலைகேற்ப
2.நம்மை அறியாமலே நாம் அடிமைப்பட்டு செயல்படுகின்றோம்.

இவ்வெண்ணத்தின் நிலைதான் இவ்வனைத்து நிலைகளுக்கும் நம்மை அடிகோலுகிறது.

நம்மில் வாழ்ந்த பெரியோர்கள் இந்நிலையிலிருந்து நாம் மாறுபடுவதற்குத்தான்… பக்தி நிலை தியான நிலை என்று நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லப் பல வழிகளை நமக்கு உணர்த்தினர்.

இந்நிலையை அறிந்த சிலரும் சில வினாக்களை எழுப்புகின்றனர்.

ஆண்டவன் அருள் பெற்று மகான் என்று பலரும் போற்றும் நிலையில் உள்ளவருக்கும் பல கஷ்டங்களும் பல உபாதைகளும் அவர் உடலில் வருகிறதல்லவா…? அது எதனால்…?

நம் கலியுடன் வாழ்ந்த மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற நாமம் கொண்டவர் வாழ்ந்த கடைசிக் காலத்தில் அவர் உடலில் பல உபாதைகள் இருந்தனவே.

அவர் தான் இவ்வுலகத்திற்கு இக்கலியில் வாழும் மனிதர்களுக்காக அவர்கள் நிலைக்கு புரியும்படி பல அருட்சொற்களை வெளியிட்டுப் பல ஜெபங்கள் இருந்து பல வழிகளைப் புகட்டினார். பலருக்குப் பல நல் நிலைகளைப் புகட்டிய அவர் உடலிலேயே பல நோய்கள் ஏன் தாக்கின..?

அவர் அவ்வுடலை அவரின் சொந்தமாகக் கருதவில்லை. மக்களுடன் மக்களாக வாழ்ந்தது தான் இவரின் நிலை.

இவரிடம் உபதேசம் பெற வருபவர்களின் எண்ணத்திற்கும் மற்ற நிலையில் வருபவர்களுக்கும் இவரின் நிலையை ஆண்டவனாக எண்ணி அவர்களின் கஷ்டத்தை இவரிடம் செப்பிடும் பொழுது இவரின் ஜெபத்தின் பயனால் இவரிடம் அருள் வேண்டி வருபவர்களின் உடல்களில் உள்ள உபாதைகளை இவர் ஈர்த்து இவர் உடலில் ஏற்றுக் கொண்டு அவர்களை நலமுடன் வாழும் நிலைப்படுத்தி அனுப்பினார்.

இவர் பெற்ற சக்தி இவரைக் காண்பவரின் நிலையிலுள்ள உபத்திரவத்தைத் தான் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலை பெற்றிருந்தார்.

ஆனால் அந்நிலையில் அஜ்ஜெப நிலை செய்யும் பொழுது ஈர்த்து உடனே வெளிப்படுத்தா விட்டால் இவர் இஜ்ஜெப நிலைக்கு வரும் காலத்திற்கு முதலில் இவர் உடலில் இருந்த அணுக்களின் வேகத்தினால் மற்றவரிடமிருந்து இவர் ஈர்த்த அவ்வியாதியின் அணுக்கள் இவர் உடலிலேயே தங்கிவிடுகின்றன.

இந்நிலையில் வந்ததுதான் அவரின் அந்திமக் காலத்தில் நடந்த நிலை. நிலை அறிந்தேதான் அவரும் வாழ்ந்தார். இத்தவயோக முனிவர்களின் நிலையெல்லாம் இதைப்போல்தான்.

உடல் உபாதையில் மற்றவர்கள் நிலை இருக்கும் பொழுது அவற்றைத் தான் ஈர்த்து வெளிப்படுத்திட முடியும். அவர்களைக் குணமாக்கிடவும் முடியும்.

இதுவே இவ்வுடல் தசைப் பாகத்தில் மட்டும் இந்நிலையைச் செய்திட முடியுமே தவிர இவ்வுடலிலுள்ள எலும்பின் நிலையில் உள்ள மாற்றத்தையும் பிணியையும் எம்முனிவனாலும் சித்தனாலும் ஈர்த்துச் செயலாக்கிட முடியாது.

ஆவி நிலைகொண்ட தசையில் உள்ள நிலைகளை மட்டும் தான் குணப்படுத்திட முடியும்.

1.சக்திக்கும் சக்தி வாய்ந்த அச்சக்தி தேவனின் அருளை வென்றிட
2.எந்த ரிஷி நிலை பெற்றாலும் அச்சக்தியேதான் ஓங்கி நிற்கும் நிலை உள்ளது.
3.அச்சக்தியின் சொரூப நிலையை எண்ணியே வணங்கிடத்தான் முடியும்.

ஆகவே… நம்மில் நம் எண்ணத்தை நல் நிலைப்படுத்தி
1.நமக்குள் இருக்கும் மற்ற அணுக்களின் செயல்களிலிருந்து
2.நம்மை நாம் பாதுகாப்புடன் வாழும் நிலைக்கு முதலில் பக்குவம் கொண்டு வந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாரதர் சிவனிடம் வருகின்றார். கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். இந்த உலகை யார் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கு இந்தக் கனி.

அப்பொழுது முருகன் என்ன செய்கின்றார்…? தன் உணர்வின் ஆற்றல் இருக்கப்படும் பொழுது அவரிடம் வேகமாகச் செல்லும் மயில் இருக்கிறது.

ஏறி உட்கார்ந்து ஒரு நொடியில் உலகை வலம் வருகின்றேன் என்று அவருடைய உணர்வு வேகமாக ஓடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக ஆகி தனக்குள் பல உணர்வின் சத்தை எடுத்து தான் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக மனித உடல் பெற்ற இந்த உடல் இது இருந்த இடத்திலிருக்கின்றது – விநாயகர்

1.உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள்
2.அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது – முருகர்
3.ஆனால் இவர் இருந்த இடத்திலிருந்து
4.உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து
5.இந்த வினையின் உருவமாக அது சேர்க்கப்பட்டது.

பேரண்டத்தின் நிலைகள் பெரும் உலகமும் இந்தத் தாய் தந்தை தனக்குள் எடுத்துக் கொண்டது. அது இருந்த இடத்திலிருந்தே தன் உணர்வின் சத்தை அது கருவாக எடுத்து விளைய வைத்தது.

மரம் பல அலைகளின் தொடர் கொண்டு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் கொண்டு இந்தச் சத்திற்குள் விளைய வைக்கின்றது தன் கனிகளை.

அதே போல் தன் அன்னை தந்தைக்குள் விளைந்தது இந்த உணர்வின் வித்து. இந்த வித்தின் தன்மையே அந்த உயிரான அந்தச் சத்து.

இந்த உடலின் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலைகள் கொண்டு அந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியை
1.இந்த உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல அந்த உயிரின் தன்மை தனக்குள் எடுப்பது.

ஒரு மாங்கனி அது வித்தாகி மரமாகிப் பின்பு தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்க்கின்றது. இதைப் போல் தன் இனத்தின் சத்தின் தன்மை “அந்த ஒளியின் சுடராக… வளரும் பக்குவ நிலைகள்” பெறுகின்றது.

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத்தான் இங்கே காட்டுகின்றார்கள்.

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை நுகர்ந்தான். அனைத்தும் அறியும் ஞானியாக ஆனான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரக் கூடிய அணு நாரதன். அந்த உணர்வின் தன்மை அங்கே இயக்கப்பட்டது. நாரதன் வான்மீகியின் காதிலே ஓதினார் என்று காவியம் உண்டு.

அதே நாரதனை இங்கே காட்டினார்கள்.

மரத்தில் விளைந்து முதிர்ந்தது கனி. கனியிலிருந்து சுவையான மணம் வரும். அது இனிமை கொண்டது.

நாரதன் கையில் நாதம் சுருதி ஏழு. சரஸ்வதி வைத்திருப்பதும் சுருதி ஏழு. இவ்வளவையும் காட்டியுள்ளார்கள். படத்தையும் காட்டியுள்ளார்கள். பேருண்மையின் தன்மையைக் காட்டுவதற்கு அன்று மெய்ஞானிகள் இப்படிக் கொடுத்துள்ளார்கள்.

மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தைத் தனக்குள் எடுத்து அதைத் தன் எண்ணத்தாலே (தாய்) கருவாகக் கூட்டியதோ இதைப் போல பேரண்டமும் பேருலகமும் இந்த அன்னை தந்தை தான். நீ அதிலிருந்து ஜெனித்தாய் என்ற இந்த உணர்வைக் காட்டுகின்றார்கள்.

மரத்துடன் ஒன்றிய காய் அது கனியாகும். காயாக வெம்பிவிட்டால் சுவை இயக்கம் புளிப்பாகும். வித்தின் தன்மை ஆகாது.

ஆகவே முதல் தெய்வங்களாக இருந்து உன்னை உருவாக்கியது உன் தாய் தந்தையர் தான். அவர்களுடன் நேசித்து நீ அருள் வழியில் வளர வேண்டும்.

அப்பொழுது தான் அந்தக் கனியின் தன்மையை நீ அடைவாய் என்பதே அன்றைய ஞானிகள் நமக்குத் தெளிவாக உணர்த்திய காவியத்தின் “மூலம்”.

மார்ச் 2022 உபதேசம்

யாம் உபதேசிக்கும் வழியில் செல்வதைக் “கடினம்…” என்று யாரும் எண்ணாதீர்கள்

 

கல்வி கற்றுக் கொண்ட ஒருவர் புதிதாக ஒரு சாதனத்தை உருவாக்குகிறார் என்றால்…
1.எந்தெந்த அளவில் சேர்த்து அந்தப் பொருளை உருவாக்கினால்
2.இயக்கச் சக்தி… இந்த இடம்… “இது வலுவை தாங்கக் கூடியது…” என்று உணர்கின்றார் விஞ்ஞானி
3.அதன் வழியில் தான் புதிய சாதனத்தை உருவாக்குகின்றார்கள்.

இப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அவர் கற்றுணர்ந்ததை யார் அவரிடம் சீடராக வருகின்றாரோ அவருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர்.

முதலில் கல்வியைக் கற்பிக்கின்றார்கள். அவர் கற்றுணர்ந்த வழியிலேயே சீடருக்கும் காட்டப்படும்போது அதைக் கற்றுணர்ந்து வருகின்றார்.

கற்றுணர்ந்து அதன் வழிகளிலே வந்தாலும்… போதித்தவரின் வழியிலே சீராக அவர் செயல்படுவார்…! என்றால் அவர் அதில் வெற்றி பெறுகின்றார்.

ஆனால் கற்றுக் கொடுக்கப்படும் பொழுதே
1.“கடினம்…” என்று எண்ணி அந்தக் கல்வியை அவர் கற்க நேர்ந்தால்
2.அவர் எண்ணங்களிலும் கடுமை வந்துவிடும்
3.அவருடைய சிந்திக்கும் திறனும் வலு இழக்கப்படும்.

அவர் இன்ஜினியராக வரும் நிலையில்… “எப்படியோ” பாட நிலைகளை எண்ணி உயர்வுக்கு வந்தாலும்… அந்தப் பாட நிலைதான் அவருக்கு மீண்டும் மீண்டும் வரும். “மூலக்கூறுகளை அவர் அறிய முடியாது…”

ஆகவே அவரவர்கள் எடுத்த உணர்வு கொண்டு தான் அது இயக்கும்.

இதைப் போன்று யாம் கொடுக்கும் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம். உங்கள் உணர்வுடன் இணைந்து விட்டால் அந்த உணர்வை நீங்கள் நுகரும் போது… அறிவின் ஞானமாக வருகின்றது.

அது ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு குணங்கள் உருவாவதும்… அதனின் சிறப்பின் தன்மையை நினைவு கூறும் பொழுது அதனதன் கருக்களாக உங்களுக்குள் உருவாகின்றது.

1.ஞானிகளைப் பற்றிய நினைவின் தன்மை உங்களுக்குள் வருவதற்கு
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் உடலுக்குள் இருக்கும் ஊனுக்குள் இதைப் பதிவாக்குகின்றோம்.

அந்தப் பதிவினை நினைவாக்கப்படும்பொழுது அவ்வப்பொழுது இந்த வாழ்க்கையில் வரும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.

யாம் பதிவாக்கியதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது வாழ்க்கையில் வரும் இருளை மாற்றச் செய்யும் சக்தியாக அது நிச்சயம் வரும்.

1.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை எப்போதுமே இணைத்துக் கொண்டு வந்தால்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நீங்கள் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

இல்லை என்றால் இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் மற்ற உணர்வுகள் வளர்ச்சி அடைந்தால் மீண்டும் இதனுடைய நிலைகள் இன்னொரு பிறவியைத் தான் உருவாக்கும்.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை…!

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் பாவத்தைத் தான் இன்று கட்டிக் கொண்டு வருகின்றோம் – ஈஸ்வரபட்டர்

 

நம் பாட நிலையில் உடலில்லாத ஆத்மாவுடன் கூடிய ஆவிகளின் நற்செயல்கள்… தீமைகள்… இவற்றையே பல நிலைகளில் சொல்லி வருகின்றேன்.

1.வாழ்பவரின் நிலையைக் காட்டிலும்… அவர்களின் எண்ண சக்தியை
2.இவ்வாவிகளின் செயல்தான் இவ்வுலக நிலையையே நடத்திச் செல்லும் தன்மை கொண்டதாக உள்ளது.

இன்று புனித கங்கை என்ற நிலையில் காசிக்குச் சென்று நம் பாவங்களைக் கழிக்கப் பல மைல்களுக்கப்பால் இருந்தும் அப்புண்ணிய நதியில் நீராடி வந்தால் பாவங்கள் குறையும் என்ற எண்ணத்தில் பக்தி கொண்டு பல கஷ்டங்களுடன் பாவத்தைப் போக்க காசிக்குச் செல்கிறார்கள். அதே போல் இராமேஸ்வரம் என்று புண்ணிய ஸ்தலத்தையும் நாடி மக்கள் செல்கிறார்கள்.

அக்காசி கோவிலில் உள்ள அத் தபசு ரிஷியான காசி விஸ்வநாதரின் அருளைப் பெற்றிட அப்புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்கின்றார்கள்.

ஆனால் அங்கும் நடக்கும் நிலை என்ன…?

அப்புண்ணிய ஸ்தலத்தில் வாழும் மக்களின் எண்ணமெல்லாம் புண்ணியாத்மாக்களாக புண்ணிய பூமியாக்கிடவா செயல்கள் நடக்கின்றன…?

பாவத்தைக் கழிக்கும் இடமாக எண்ணிச் சென்று புண்ணியத்தை வாங்கியா வருகின்றார்கள்…? கொலையும் கொள்ளையும் மலிந்து அப்புனித கங்கையில் புனித நீரைக் குருதி நீராக்கிக் கலக்க விட்டுள்ளார்கள்.

பல மைல்களுக்கப்பால் இறந்தோரை எல்லாம் அவ்வுடல்களை இக்கங்கையில் செலுத்தினால் “இறந்தவருக்குப் புண்ணியம்…” என்ற நிலையில் இந்நிலையில் கொண்டு வந்து விடுகின்றார்கள்.

பாவத்தின் பிறப்பிடமாக இன்று உள்ளது புனித கங்கையும் காசியின் திருத்தலமும். அங்கு செயற்கொண்டு இருக்கும் ஆண்டவனின் அஜ்ஜோதி மகான் இன்றும் அங்கு தான் உள்ளார்.

அனைத்துப் பாவங்களையும் அவரும் பார்த்துக் கொண்டே தான் உள்ளார். எண்ணத்திற்குகந்த அருளைத்தான் அவர் அளிக்கின்றார். பாவத்திற்கு அவர் என்ன செய்ய முடியும்…?

1.பாவத்தின் எண்ணம் கொண்டவன் அவன் செய்யும் பாவங்களின் அணுவையே மீண்டும் மீண்டும் தன்னுள் ஏற்றிக்கொண்டு
2.எப்பாவத்திற்கும் துணிந்தவனாகப் பல பாவங்களுக்கு உகந்தவனாகத் தன்னை ஏற்படுத்திக் கொண்டு
3.அப்புண்ணியக் கரையிலேயே பலர் இன்று வாழ்கிறார்கள்.

ஏன் அவ்வாண்டவன் இவர்களுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்று கேட்பவர் பலர். ஆண்டவன் நிலையையும் ஆவியின் நிலையையும்தான் நாம் பிரித்துப் பிரித்துப் பல நிலைகளில் சொல்லியுள்ளோம்.

1.எண்ணத்தின் பேய்க்கு அடிமைப்பட்டவனை எவ்வாண்டவனும் வந்து நல்வழியில் செலுத்திட முடியாது
2.அவன் உடலைவிட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
3.அவ்வாத்மாவின் நிலை அடையும் அதிகாட்டத்திலிருந்துதான் அவன் உணர்ந்திட முடியும்.

அந்நிலையில் வாழ்ந்தவனுக்கு உணரும் தன்மையும் உடலை விட்டு ஆத்மா பிரிந்த பிறகும் அறிந்திட முடியாது. நரகலோகம் என்னும் அதி அவஸ்தை கொண்ட அழுகும் ஆவியாகத்தான் மிகவும் அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

அவ்வாவி பிறப்பெடுத்தாலும் நாயாகவும் அதற்கும் ஈன நிலையில் உள்ள மற்ற ஜெந்துக்களின் நிலைக்குத்தான் வந்திட முடியும்.

வாழும் காலத்தில் வாழ்க்கையின் சுகம் என்ற நிலையில் பல சுமைகளை ஏற்றிக் கொண்டு வஞ்சகம் குரோதம் ஆத்திரம் வெறி காமம் இப்படி பல வெறி கொண்ட நிலையை வாழ்க்கையின் சுகமாக எண்ணி வாழ்ந்து என்ன பயன்…?

வாழும் காலம் ஒரு மனிதனுக்கு 60, 70 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை. இக் குறுகிய காலத்தின் ஆசைக்குத் தன் ஆத்மாவை அடிபணிய வைத்து வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

அழிவில்லா இவ்வாத்மா மனித வாழ்க்கையில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலம். என்றுமே அழியாத ஆத்மாவை இம்மனித உடலில் உள்ள பொழுதினில் மட்டும் தான் கரை சேர்த்து என்றும் அல்லல் இல்லா வாழ்க்கை பெறும் சூட்சுமம் கொண்ட வாழ்க்கைக்குச் செல்லும் பொக்கிஷம் இம்மனித வாழ்க்கையில்தான் உண்டு.

1.அறியாமல் செய்திடும் பிழைதான் இன்று வாழும் வாழ்க்கை நிலை
2.கரை சேர்ந்திடும் நிலைக்கு நம்மைப் பக்குவப்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் பல மனிதர்களுக்கு இல்லை.

அன்று நம் முன்னோர் புண்ணிய ஸ்தலமாக்கி ஆண்டவன் சக்தி பெற்றுப் பல கோவில்களை அமைத்து நமக்கு வழிகாட்டிட ஏற்படுத்திய நிலையை எல்லாம் இன்று நாம் நம் வேடிக்கைக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் பொழுது போக்கும் நிலைக்காகவும் நமக்கு உகந்த ஆசைப்படி எல்லாம் ஏற்படுத்தி விட்டோம்.

அதனால் இன்று அந்தப் புண்ணிய ஸ்தலங்களும் பல புண்ணிய நதிகளும்
1.ஆவிகளின் அட்டுழியங்கள் நடக்கும் நிலையாக மாறி
2.இன்று புண்ணியம் வாங்கச் செல்பவர்களின் உடல்களில் எல்லாம் பல உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
3.அடங்கா ஆசையுடன் உள்ள ஆவிகள்தான் உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
4.தன் ஆசைக்குகந்த செயல்களையும் நடத்துகின்றன.

தன் செயலின் நிலை ஈடுபடுத்தாவிட்டாலும் அவ்வுடலில் இருந்து வெளிவர முடியாத நிலையில் பல உடல்களை இவ்வாவிகளினால் அவ்வாவிகளின் உந்தலுக்கு உட்படுத்திவிட்டன.

1.நாம் செல்வது புண்ணியம் வாங்க…
2.அப்புண்ணிய ஸ்தலத்தில் உள்ள இவ்வெண்ண மூச்சுக்கள் எல்லாம் நாம் சென்றதும் நம் எண்ணத்தில் கலந்து (நம் சுவாசத்தில்)
3.நம்மையே நம் செயலில் செயல்படாத நிலை ஏற்டுத்தி விடுகின்றன.

புண்ணிய ஸ்தலத்திற்குச் சென்று “பாவ மூட்டையைத்தான் சுமந்து வருகின்றோம்…!” இன்றைய நிலை இது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே “அணுவின் ஆற்றலை” அறியும் நிலை வந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.

அவன் வாழ்ந்து வளர்ந்து சுழன்று வந்த இடமான இந்த இடத்திலிருந்து தான் (பாபநாசம்) அதைப் பேசுகின்றோம்.

ஏனென்றால் அகஸ்தியரின் மூச்சலைகள் இங்கே பரவியுள்ளது. அவன் தாய் கருவிலே பெற்ற உணர்வின் தன்மை கொண்டு தாவர இனச் சத்தை அறியும் மலைப்பகுதியிலே சுற்றி வளர்ந்தான்.

1.பல கோடித் தாவர இனங்களை நுகர்ந்தான்.
2.தீமைகளை வென்றிடும் அருள் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்தான்.
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி என்றும் நிலைத்து நிற்கும் நிலையும்
4.இருளை வென்றிடும் உணர்வின் தன்மை தன் உடலில் வளர்த்துக் கொண்டான்.

(பாபநாசம்) இந்த மலைப்பாங்குகளில் தான் சுழன்றான்.

ஆகவே அவனுடைய நினைவாற்றலை நாம் கொண்டு வரப்படும் பொழுது இங்கே அமர்ந்துள்ள நாம் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது
1.உங்கள் கண்ணின் நினைவலைகள் அங்கே அகஸ்தியன் பால் செல்லும்.
2.அந்த உணர்வினை நுகரும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்கின்றது.
4.இரத்தத்தில் கலந்த அகஸ்தியனின் உணர்வுகள் கரு முட்டைகளாக விளையத் தொடங்கும்.

அந்த உணர்வின் தன்மையை எவ்வளவு நேரம் நீடித்து எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வின் கருவாக உருவாகும் தன்மைகள் உருப்பெறும்.

அவ்வாறு உருப்பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

இந்த உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்ற அந்த அகஸ்தியரின் உணர்வை நீங்கள் பரப்ப வேண்டும்.

உலகில் எந்த மூலையில் இருப்பினும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இவ்வாறு
1.நம்மைக் காத்து
2.நம் குடும்பத்தைக் காத்து
3.எல்லோரையும் காத்திட வேண்டும்.
4.நம் நாட்டையும் இந்த உலகையும் காக்க வேண்டும்.
5.இந்த மனித இனத்தைக் காக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைதல் வேண்டும்.
6.மனிதன் என்ற உணர்வுகள் ஒன்று சேர்த்து இணைத்தால் தான்
7.”மரணமில்லாப் பெருவாழ்வு” என்ற நிலைகளில் வாழ முடியும்.

நீங்கள் அனைவரும் அந்த மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசையில் தான் இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

இதை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏதிரி என்றும் எதிர்நிலை என்றும் நமக்குள் வளர விடக் கூடாது

 

1.மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே மறைமுகமாகத் தீங்குகள் எப்படி விளைகிறது…?
2.நம்மை அறியாமல் தீமைகள் எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றது…?
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிகளுக்கும் தூண்டப்பட்டு இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…? என்று
5.இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் நமக்கு அடிக்கடி தொந்தரவு செய்கிறார் என்று எண்ணுகின்றோம். அவ்வாறு எண்ணும் பொழுது அந்த உணர்வு
1.நம் உடலுக்குள்ளும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது
3.நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்… அங்கேயும் வெறுக்கும் உணர்ச்சிகளைத் தான் தோற்றுவிக்கின்றது.

ஆகவே அதனதன் உணர்வுக்கு அது அது போராடும். அங்கேயும் அதனதன் உணர்வுக்காகப் போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்த்திடும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் நாரதனாக இயக்கத் தொடங்குகிறது. நாரதனாக நமக்குள் வந்தபின்… “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கிறோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கிறது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை வலுப்படுத்திக் கொண்டு அங்கே யார் மீது வெறுப்படைந்தோமோ நம் கண்ணின் நினைவலைகளை அவர் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள்… (அதாவது) கண்ணனும் அந்த நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3.எதிரியின் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அந்த “நாரதன் வேலையைச் செய்வான்…”

நம்முடைய உணர்வுகள் அங்கே பகைமையாக்கும் உணர்வாக முதலிலே சென்றது. அடுத்து இந்த அருள் ஞானியின் உணர்வுகள் அங்கே சென்றபின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

1.நாரதன் கண்ணனிடம் (கண்கள் வழி) இவ்வாறு செயலாக்கிய பின்
2.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
3.கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
4.வியாசகர் எவ்வளவு தெளிவாக எழுதி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்

எப்போதுமே “எதிரிகளை…” எதிரிகள் என்று எண்ணாதபடி… அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுக்கப்படும் சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க… அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ…
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும் என்றும்
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வரவேண்டும் என்றும்
3.இந்த உணர்வினை நமக்குள் பதிவாக்கிக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது… “அவர் எனக்குத் தீங்கு செய்தார்…” என்ற அந்த உணர்வை நமக்குள் வளர்த்து நம்மை பலவீனப்படுத்துவதற்குப் பதில்
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து
2.அந்த உணர்வினைக் கண் கொண்டு செலுத்தப்படும் போது நாரதனாக அங்கே செல்லும்.

அங்கே சென்ற பின் அவர் செய்த தீங்கினையும் அங்கே வெளிப்படுத்திக் காட்டும். அப்போது நம் மீது வரக்கூடிய உணர்வுகளைப் பலவீனப்படுத்துகின்றது.

இதைப் போன்று அடிக்கடி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் எண்ணங்கள் கொண்டு நம் இரத்தநாளங்களில் பெருக்கப்படும் போது தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர்கின்றது.

இதற்கு முன்னாடி அறியாமல் நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சங்கடமோ சஞ்சலமோ வெறுப்போ வேதனை போன்ற உணர்வுகளால்… இரத்த நாளங்களில் உருப்பெற்ற இந்தக் கருக்கள் அனைத்தும் அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கச் செய்கின்றது.

அதைத் தடுக்கத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள்ம் இதைக் கருக்களாக உருவாக்கப்படும் போது இரத்த நாளங்களில் இது பெருகுகின்றது.

1.ஏனென்றால் உடலுக்குள் இரத்தம் போகாத இடமே இல்லை
2.அருள் உணர்வுகளை இப்படி எண்ணி எடுத்துக் கொண்டால்
3.பாதுகாப்பான நிலைகளுக்கு நம்மை அழைத்துச் சென்று பகைமை உருவாகாதபடி தடுக்கும்.

அதைத் தான் காட்டிலே “இராமனுக்குக் குகன் உதவி செய்கிறான்…” என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. (இராமன் – எண்ணங்கள்; குகன் – இரத்தநாளங்கள்)

நம்முள் ஈஸ்வரனே உள்ளான் என்பதை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

நமக்கு வழி காட்டிய நம் முன்னோரும்… நம்மில் கலந்து வாழ்ந்த சப்தரிஷி நிலை பெற்றவர்கள் முதற்கொண்டு இயற்கையின் நிலையைத்தான் போற்றி வழி நடந்து வந்தார்கள்.

இன்றும் அவர்களின் செயல் பல ரூபத்தில் செயல் கொண்டு வழி நடத்தியும் வருகின்றார்கள். எந்நிலையில்…?

இன்று நீங்கள் பல இடங்களில் அகஸ்தியர் நாடி போகர் நாடி பிருகு மகரிஷியின் நாடி இன்னும் இப்படிப் பல நிலை கொண்ட நாடிகள் சில இடங்களில் உள்ளதாக அந்நிலைக்குச் சென்று அதை ஒதுபவர்களின் வாயிலாக அறிந்து வருகிறீர்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்நாடிக்கும் இன்றைய நிலைக்கும் பெயர் நாமம் முதற்கொண்டு ஒத்து வரும் தன்மை என்ன…?

அந்நாடியை ஓதுபவரின் ஜெபமும் எண்ணமும்… எப்பெரியோரின் நாடியைத் தெய்வ நிலை கொண்டு ஜெபம் கொண்டு அவர் ஏற்கும் பக்தி நெறியின் நிலைக்கு… அந்நாடியை எழுதிய பெரியோரை… அதை வணங்கி ஓதுபவரின் சப்த அலையுடன் வந்து கலந்து… ஓதச் செய்வதுதான் அந்நாடியில் உள்ள நிலை.

இன்று படிப்பவரின் அறிவுக்கு எட்டாத இன்றைய கல்வித் திறனும் அதை எழுதி வைத்த காலத்தின் கல்வித் திறனும் மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும் நிலை கொண்டு இன்று ஓதுபவருக்கு அச்சொல்லின் நயமும் அழகும் அவரால் ஈர்த்துப் படித்திடவும் முடியாது.

சில குறிப்புகள் மட்டும் இவரால் அறிந்திட முடியும். அந்நிலையில் வந்து சொல்வதெல்லாம் அந்நாடிகளை எழுதியவர்களே தான் வந்து உணர்த்துகிறார்கள்.

காமாட்சி நாடி மீனாட்சி நாடி என்றெல்லாம் சொல்லும் நிலையிலும் அந்நிலையிலுள்ள சித்து நிலை கொண்ட காமாட்சி அம்மனும் மீனாட்சி அம்மனுமே வந்து இவர்கள் நிலையில் உணர்த்துவதுதான்.

சிலருக்கு நாடியில் வந்ததை அதன் சொல்லிய வாக்குப்படி எந்நிலையில் நம்புகின்றார்களோ அந்நிலையின் பரிபூரண அருளாசி பெறுகின்றார்கள்.

நம்பிக்கையில் நடப்பதுதான் இவ்வுலகமே…!

நாடியில் கேட்டதையே மனச் சஞ்சலத்துடன் வளர விடுபவனுக்கு அனைத்து நிலைகளுமே தவறாகத்தான் நடந்திடும்.

ஆண்டவனே… ஆண்டவனே…! என்பது நாம் ஆண்டவனாக வணங்கும் பெரியோரின் நிலையையே சஞ்சலப்படுத்தும் நிலைதான் இவையெல்லாம்.

நம் பாட நிலையில் தான் ஆண்டவன் என்றால் யார்…? என்பதனைப் பல நிலைதனில் விளக்கியுள்ளோம். ஞான வழியின் பக்குவ நிலைக்கு நாம் பெறும் சொத்து தான் ஆண்டவனின் அருள் சொத்து.

ஆவி உலகின் சூழ்ச்சியினால் இவ்வுலக நிலையே தத்தளித்த நிலையில் உள்ளது. ஆவி உலகில் அல்லல்பட்டு…
1.பல செயல்களை அதி கஷ்டத்துடன் செயலாற்றும் பல நிலை கொண்ட ஆவிகளுடன் நாம் கலந்து வாழ்வதினால்
2.நம்மில் தியான நிலை கொண்ட செயலை வளரவிடுவது ஒன்றுதான் இன்று இவ்வுலகினில் உள்ள நிலையிலிருந்து நாம் தப்பும் வழி.

ஏனென்றால் இப்படர்ந்த உலகினில் நம் எண்ணத்தில் சிறு சலிப்புக்கும் கோபதாப குரோதத்திற்கும் இடம் அளித்திட்டாலும் இவ்வாவியின் நிலையிலிருந்து தப்புவது கடினம்.

நம்முள் உள்ள இறை சக்தியை உணர்ந்தே அவ் ஈஸ்வர ஜெபத்தை எந்நிலையிலும் நம் நினைவில் கொண்டிடல் வேண்டும்.

1.நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடாமல்
2.ஒவ்வொருவரும் இதன் வழி பெற்று வாழ்ந்தால்தான்
3.இவ்வாவி உலகிலுள்ள ஜீவ ஆத்மாக்கள் அனைத்தின் செயலிலிருந்தும் நாம் தப்ப முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் நம்மைத் தாக்கிப் பேசினால் பதிலுக்கு அவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தான் தூண்டுகின்றது. அப்படித் தூண்டும்போது ஆத்திரமான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.

ஆத்திரமான உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்துவிட்டால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது. அல்லது வாத நோய் வருவதற்குண்டான வித்தாக மாறுகின்றது.

அதிலிருந்து தப்ப முடியாத நிலை ஆகின்றது. ஆனாலும் அது சந்தர்ப்பம் தான்.

அதே மாதிரி நாம் தவறே செய்யவில்லை என்றாலும் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் தாக்கப்படும் பொழுது நாம் பார்க்கின்றோம்.

“சும்மா இருப்பவனைத் தாக்குகின்றானே…” என்று நாம் உணர்ச்சிவசப்படுகின்றோம். அப்படி உணர்ச்சிவசப்படும் பொழுது “இதைக் காட்டிலும் நமக்கு ஆத்திரம் அதிகமாகின்றது”.

அப்பொழுது அவனைப் பார்த்து “ஏனப்பா.., சும்மா இருப்பவனை அடிக்கின்றாய்…?” என்று கேட்டால் அவன் திருப்பிப் பதில் சொன்னால் போதும்.
1.கோபமும் ஆத்திரமும் இரு மடங்காகி
2.அந்த உணர்வை நாம் அழுத்தமாகச் சுவாசிக்க நேருகின்றது.
3.ஆனால் நன்மை செய்வதாகத்தான் நாம் எண்ணுகின்றோம்.
4.அதே சமயம் நமக்குள் ஆத்திர உணர்வுகள் ஈர்க்கப்பட்டு இரத்தக் கொதிப்பாகும் என்று நாம் அறியவில்லை,

அந்த விஷத்தின் தன்மை நமக்குள் அதிகமாகி நம் மனித நினைவை இழக்கச் செய்து அது வியாதியாகி நஞ்சுகள் அதிகமாகி கடைசியில் குறுகிய நிலைகள் கொண்டு இயங்குவது போல் “குறுக்கும் உணர்வுகள்” உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

உயிராத்மாவில் சேரும் இந்த உணர்வுகள் இந்த உடலைக் குறுக்கி வேறு விஷமான உடலைப் பெறும் தகுதியைத்தான் ஏற்படுத்தும்.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அடுத்த நிமிடமே ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வந்த அந்த இருண்ட சந்தர்ப்பத்தை மாற்றி மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுதல் வேண்டும்.

நம்மை ஒருவர் குறைத்துப் பேசிவிட்டால் ஆத்திரம் மூண்டு “இப்படிக் கேவலப்படுத்திவிட்டான்…” என்ற வேட்கையைக் கூட்டி அழிக்கும் உணர்வுகளே அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றுகின்றது.

இதைப் போல சந்தர்ப்பங்கள் வந்தாலும் உடனடியாக விண்ணை நோக்கி ஏகி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால்
1.வரும் அசுத்தத்தை நீக்குகின்றோம்.
2.அதே சமயத்தில் மெய் ஒளியைப் பெறுகின்றோம்.
3.இப்படித்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உயர்வதும் தாழ்வதும் “படித்துணர்ந்து… நான் அதைச் செய்வேன்…” என்றால் விஞ்ஞான அறிவிற்குத்தான் செல்ல முடியும்.

மெய் ஞான அறிவில் படித்து வர முடியாது. அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் “அனுபவரீதியில் தான்” நாம் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

பகைமை என்பது நல்லதா… கெட்டதா…!

 

பகைமை இல்லாது எதுவுமே நடப்பதில்லை.
1.ஒரு பகைமை என்று வந்து விட்டால்
2.“உஷார் தன்மை கொண்டு”
3.நல்லதைக் காக்கும் உணர்வை வளர்த்து விட வேண்டும்.

பகைமை உணர்வுகள் வந்தால் எனக்கு இப்படி நடக்கிறதே…! என்று எண்ணத்தை வளர்த்து விட்டால் அந்த உணர்வின் அணுக்கருக்கள் நமக்குள் வளர்ந்து நோயாகவும் மாறுகின்றது… நமது எண்ணங்களும் சீர் கெடுகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுத்த ஆற்றலைp பருகி அதை வலுப் பெறச் செய்ய வேண்டும்.

எப்பொழுது நம் மனம் சோர்வடைகிறதோ அந்தச் சோர்வை நமக்குள் விடாதபடி தடைப்படுத்த ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இதைத் தான் கண்ணன் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.

கர்ப்பமான தாயின் கருவிலே சிசு இருக்கப்படும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கருவிலே இந்த நினைவைச் செலுத்தினால் அந்த உணர்வின் தன்மை அங்கே குழந்தைக்குள் வளர்ச்சியடைகின்றது.

அதே போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைகின்றது. கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தான் நமக்குள் அணுவின் தன்மையாக உருவாகின்றது.

அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கினாலும் அருள் மகரிஷிகளின் அருள் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி எண்ணி அந்த உணர்வினை உயிருடன் ஒன்றி மீண்டும் உடலுக்குள் செலுத்தும் போது
1.இரத்த நாளங்களில் அந்தக் கருக்கள் உருவாக வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடல் முழுவதும் பரவி உடல் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்றும்
3.வெறும் வாயால் சொல்லக் கூடாது.
4.இந்த நினைவினை உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது பெற வேண்டுமென்று நினைவினை “உள் பாய்ச்ச வேண்டும்…” (3 & 4 முக்கியம்)

வெளியிலேயே பார்க்கும் பொழுது வேண்டாதவர்கள் யாராவது இருந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் “எனக்கு இப்படிச் செய்தார்கள்…” என்று எண்ணினால் போதும்.

இந்த நினைவலைகள்… கண்ணின் நினைவாற்றல்…
1.அவர் உடலில் நம் உணர்வுகள் பதிவாகி இருப்பதால்
2.அங்கே (அதைப்) போய் உடனே தாக்கச் செய்யும் (EARTH).

எப்படி இராக்கெட்டை விண்ணில் செலுத்தி அதனுடன் தொடர்பு கொண்ட நிலையில் இங்கே தரையிலிருந்து இயக்குகின்றனரோ இதைப் போல “வேண்டாதவர்களை எண்ணும் பொழுது…”
1.உடனே அவர்களை அது இயக்குகின்றது.
2.அவர் செயலாக்கங்களை இடைமறிக்கின்றது
3.அவருக்கு இடையூறு வருகின்றது
4.அந்த அணுக்களின் தன்மை அங்கே வளர்ச்சி பெறுகின்றது… அதன் வழி அங்கே தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்றுதான் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்து விட்டால் இந்த நினைவு உடனே அங்கே செல்கின்றது. இது நமக்குள் இங்கே வலுப்பெறுகின்றது. வேண்டாதவர் என்ற நிலையில் அவர் உணர்வின் சக்தியைத் தடைபடுத்துகிறது.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அருள் ஒளியை நமக்குள் பெருக்கப் பெருக்க… நமகு யார் தீமை செய்தாலும் “என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்…” என்று எண்ணினால் போதும்.

நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள்…
1.அவர்கள் நமக்குத் தீமை எண்ணும் பொழுதெல்லாம்
2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக அவர்களுக்குள் இது ஊடுருவப்பட்டு
3.அங்கிருக்கும் நமக்குத் தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யும்.

இது போன்ற நிலைகள் வளர்ந்து விட்டால் தீமையான அணுக்கள் நமக்குள் வளராது… நமக்கு நோய் வராது… நம் காரியங்களைத் தடைத்தும் நிலைகளும் வராது.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மனிதன் தனக்குள் இருக்கும் ஆற்றல்களை ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

அச்சு ஒன்று பதித்து உருவம் ஒன்று ஆவதில்லை. எந்த விதையைப் போடுகின்றோமோ அந்தச் செடிதான் வளரும்.

நம் எண்ணத்தை எந்த நிலையில் செயல்படுத்துகின்றோமோ அந்த நிலையின் தொடரின் வழி நிலையின் வாழ்க்கைதான் வந்தமையும் நமக்கெல்லாம்.
1.எண்ணப்படிதான் வாழ்க்கை…
2.உன் எண்ணம் போல் வாழ்ந்திடு…! என்ற பெரியோரின் வாழ்த்தைத்தான் நாம் பெறுகின்றோம்.

ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் பல குழந்தைகளின் குண நிலை ஒன்று போல் இருப்பதில்லை. குண நிலை மட்டுமல்ல மன நிலையும் ஒவ்வோர் உடலுக்கும் ஒவ்வொரு வித மனம் உண்டு.

இப்பூமியில் உதித்த ஜீவன் பெற்ற அனைத்திற்குமே ஒவ்வொரு மணம் உண்டு. மணத்தைப் போலவே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு.

ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் அவரவர்கள் எந்நிலை கொண்ட குண நிலையையும் சக்தி நிலையையும் வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்நிலையின் வளர்ச்சிக்கு அந்நிலைக்கு ஒத்த குண நிலைகளில் உள்ள ஆவி உலகிலுள்ள ஆத்மாக்களின் தொடர்பு நிலையும் இவர்களுக்கு வந்தடைகின்றது.

இன்று இந்நிலத்தில் நீர் எங்குள்ளது..? எந்நிலையில் ஊற்று நிலை உண்டு…? என்பதனையறிய சிலரின் உடல் நிலையிலேயே அச்சக்தி நிலையுண்டு.

அவர் உடலிலேயே அச்சக்தி நிலையும் அந்நிலைக்கு ஒத்த அவர் நிலையில் உள்ள மற்ற ஆத்மாவின் தொடர்பும் அவர் உடலில் இருந்தால் தான் நீர் உள்ள நிலைகளைக் கண்டறிந்திட முடிந்திடும்.

நம் முன்னோரின் வழியில் வந்தது தான் இந்நிலையின் வழி. இவை போலவே இப்பூமியில் உள்ள உலோக நிலையையும் கண்டறியலாம்.

இவ்வுடலில் இப்பூமி எச்சக்தியெல்லாம் எடுத்து வெளிப்படுத்துகின்றதோ அந்நிலைக்குகந்த சக்தி நம் உடல்களிலும் உள்ளது. இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் கலந்துள்ளன.

எப்படி இப்பூமியில் பல நிலை கொண்ட உலோகங்கள் வளர்கின்றனவோ அந்நிலைபோல் ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் பல நிலைகள் கொண்ட சக்தி நிலைகள் உண்டு.

நமக்குகந்த சக்தி நிலையை வளர விட்டு அவற்றின் நிலையை அறிந்து அதன் வழிக்குச் செல்லும் பக்குவ நிலை புரியாமல் வாழ்கின்றோம்.

இன்று பல இடங்களில் மனோவசிய நிலை (மெஸ்மரிஸம்) என்னும் நிலையைச் சிலர் அறிந்து ஒருவரது நிலை அனைத்தையும் கட்டுப்படுத்தி இவர்கள் எச்சக்தியைப் பாய்ச்சுகின்றார்களோ அச்சக்தியின் நிலை கொண்டெல்லாம் மனோவசியத்திற்கு உட்பட்டவர் நடப்பதாகப் பார்த்தும் கேட்டும் இருப்பீர்.

இவற்றின் நிலையென்ன…?

அறிந்து… கல்வி அறிவில் வந்த நிலை என்பர் பலரும். கல்வி அறிவில் மட்டும் வந்த நிலையல்ல அந்நிலை.

அவர்கள் நிலையும் இன்று பல நிலை கொண்ட சாமியார்கள் மந்திரம் செய்து பல பொருட்களை விபூதி புஷ்பம் இப்படிச் செய்யும் நிலைக்கும் இம்மனோவசியம் செய்யும் நிலைக்கும் ஒத்த நிலைதான்.

ஆவியின் தொடர்பு கொண்டு மனோவசியத்தால் யாரை அந்நிலைக்கு வசியப்படுத்துகிறார்களோ அவர்களின் எண்ணத்துடன் இவ்வாவியின் எண்ண அலையும் சப்த அலையும் கலக்கவிட்டு வசியப்பட்டவரின் நிலையை அடக்கி இவர்கள் ஏவிய ஆவியின் நிலைப்படியெல்லாம் அவ்வசியப்பட்டவர்கள் நடக்கும் நிலைதான் இம்மனோவசிய நிலை.

யார் இம்மனோவசியம் செய்கிறாரோ அவரது சொல்லும் அவரது எண்ணமும் இவ்வசியப்பட்டவரின் நினைவில் கலந்துள்ள ஆவியின் நிலைக்கும் தொடர்பு கொண்டு இவ்வசியப்படுத்தியவர் சொற்படியெல்லாம் அவ்வாவி அவ்வசியப்பட்டவரின் உடலில் இருந்து செயல்படுத்துகிறது.

1.அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழை இது
2.வசியப்பட்டவரின் சக்தியும் பாதிக்கப்படுகிறது
3.வசியம் செய்தவரின் சக்தியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

இதன் நிலையில் அடையும் நல் நிலை என்ன..? கால நிலையும் விரயமாகிறது.

ஆண்டவன் அருளிய சக்திதனை அன்பென்னும் பொக்கிஷமாக்கி அச்சக்தியான ஜெபத்தைக் கொண்டு பல உன்னத அறிவுச் செல்வத்தை நாம் பெற்று இவ்வுலகினைச் செழிப்பான உலகமாக்கி செழித்து வாழ்ந்திடும் இயற்கையின் செழிப்பிற்கு நம் சக்திதனை ஒன்றச் செய்தல் வேண்டும்.

அப்படிச் செய்தால் இவ்வுலகமே செழித்து…
1.இன்று இக்காற்றே கடும் விஷமாகச் சுற்றியுள்ள நிலையை மாற்றி
2.ஆனந்தமான மண நிலையைப் பரவச் செய்யத் தாவரங்களின் நிலையைத் துரிதப்படுத்தி… தாவரங்களை வளரச் செய்து
3.நற்கனிகளையும் நல் தானியங்களையும் நாம் பெற்றே
4.நற்சுவையுடன் நாம் உண்டே நல் மணத்துடன் நாம் வாழும் நிலை ஏற்படுத்திட முடியும்.

அதற்கு நாமெல்லாம் ஒன்றுபட்டு நம் சக்தியின் ஜெபத்தால் அந்த இயற்கைக்கே அடிபணிவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“கிருஷ்ணா… கிருஷ்ணா…” என்பார்கள். ஹரே கிருஷ்ணா ஹரே இராம்… ஹரே கிருஷ்ணா ஹரே இராம்…! என்று சொல்கிறோம். அந்த இராமன் யார்…? ஹரே கிருஷ்ணா யார்…?

நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். (அவரைப் பற்றி) அந்தக் கண்ணின் நினைவுகள் வரும், அது ஹரே கிருஷ்ணா. அவரைப் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன்… என்று சொல்வோம்.

முதலில் ஹரே கிருஷ்ணா… அடுத்து ஹரே இராம். ஒருவனை நான் பார்க்கிறேன்… அப்பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள் இரண்டாவது அந்த எண்ணமாக வருகிறது,

அப்போது அந்த எண்ணத்தின் செயலாக ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.
“ஹரே கிருஷ்ணா ஹரே இராம்,
ஹரே இராம் ஹரே கிருஷ்ணா…”

நாம் அதைப் பார்ப்பது கண்களின் தன்மை கொண்டு தான் பார்க்கின்றோம். இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா…?

“ஹரே இராம்… ஹரே கிருஷ்ணா… ஹரே இராமா… ஹரே கிருஷ்ணா…” என்று பாடல்கள் பாடுகின்றார்கள்.

ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிக் கோபிப்பவரின் எண்ணங்களை எண்ணும் பொழுது அந்த எண்ணத்தின் தன்மையை
1.நாம் கண் கொண்டு பார்க்கின்றோம்.
2.கண்களால் பார்த்தபின் ஹரே கிருஷ்ணா… அதாவது அவன் தவறு செய்வதை “நாம் பார்க்கும்போது ஹரே கிருஷ்ணா”
3.அதே உணர்வுகள் நம் உயிரிலே படும் பொழுது அதே (கோபிக்கும்) எண்ணம் வருகின்றது “ஹரே இராமா…”
4.ஆகவே அந்தக் கோபிக்கும் எண்ணம் நம் உடலுக்குள் உருவாகின்றது.

நம் உடலுக்குள் உருவான பின் ஹரே இராமா ஹரே கிருஷ்ணா…

நமக்குள் அந்த எண்ணம் வரும் பொழுது நாம் கண் கொண்டு பார்த்து… “எனக்கு இவன் தீமை செய்தவன்…” என்று அதை உணர்த்துகின்றோம்.

நாம் எண்ணும் எண்ணங்களே நமக்குள் கடவுளாக இருக்கின்றது.
1.நாம் எதை எண்ண வேண்டும்…?
2.நமக்குள் எதை உருவாக்க வேண்டும்…?
3.எந்தத் தீமைகளை அகற்ற வேண்டும்…?
4.அசுர சக்திகள் புகாதபடி நாம் எப்படி அகற்ற வேண்டும்…? என்று காட்டியுள்ளார்கள்.

இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் உருவாக்க முடியும்.

அவ்வாறு உருவாக்கி விட்டால் நமக்குள் தீமையை அகற்றும் சக்தியாக உருவாகி அது நமக்குள் கடவுளாக நின்று தீமையை அகற்றும் வல்லமையான அணுக்களாக உடலுக்குள் உருவாகின்றது.

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அருள் உணர்வை விளைய வைத்து இணை பிரியாத நிலைகள் கொண்டு இதை உருவாக்கிவிட்டால்
1.உடலை விட்டுச் சென்ற பின்
2.இனி அடுத்துப் பிறவியில்லா நிலைகள் கொண்டு
3.”என்றும் ஒளியின் சரீரமாக நிலைத்து வாழ” இது உதவும்.

அருள் ஞானியின் உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது இது அர்ச்சுணனாகி வலிமையாகிறது. நம் கண்கள் அங்கு விண்ணுக்கு அழைத்துச் செல்கிறது.
1.எதை வலுவாக எண்ணி எடுத்ததோ
2.அந்தக் கூர்மை நம்மை வலுவாக அழைத்துச் செல்கிறது.

இது மகாபாரதத்திலும் கீதா உபதேசத்திலும் தெளிவாக உள்ளது. யாம் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதைத்தான் யாம் திருப்பி விளக்கமாகச் சொல்கின்றோம்.

நம் உயிர் கொடுக்கும் தீர்ப்பு

 

நம் உயிரை மதித்துப் பழகுதல் வேண்டும். காரணம்… நாம் எதை எண்ணுகின்றோமோ
1.அதைத்தான் இயக்குகின்றது
2.அதைத்தான் உடலாக்குகின்றது
3.அதைத் தான் ஆளுகின்றது.

அதை எண்ணும் பொழுது அதன் வழி வருகின்றது. உடலான மணமே நமக்குள் எண்ணமாகி இந்த எண்ணத்தின் உணர்ச்சியே நம் வாழ்க்கையின் செயலாகவும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இயக்கி அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய உலக நிலைகளில் இருக்கும் விஷத் தன்மைகளை நமக்குள் கவராது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

பத்திரிக்கையைப் படித்தாலும் டி.வி.யைப் பார்த்தாலும் பிறருடைய குறைகளைக் கேட்டு அறிந்து கொண்டாலும் அந்த அறிந்து கொண்ட தீமைகள் நமக்குள் வளராது ஒவ்வொரு நொடிக்கும் நாம் மனத் தூய்மை செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

அப்படிச் செய்தோம் என்றால்… நமது வாழ்க்கையில் இந்தக் கணக்கு கூடினால்…
1.அதற்குத் தக்க நமது உயிர் ஜட்ஜ்மெண்ட் கொடுக்கும்
2.பிறவியில்லா நிலையாக அடுத்த பிறவி இல்லை என்று உயிர் தீர்ப்பளிக்கும்.

அதிலே சிறிது தவறினால் உயிரான்மாவில் விஷத்தின் தன்மையே வலிமையாகும். அந்த உணர்வின் அடிப்படை நமக்குள் வளர்ந்து விட்டால் அதன் தீர்ப்பாக உயிர் மீண்டும் நம்மைப் பிறவிக் கடலில் அமிழ்த்திவிடும்.

மனிதனாக வரக்கூடிய காலம் எப்போது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போது இருக்கக்கூடிய விஞ்ஞான உலகத்தில் மனிதன் இறந்தால் மீண்டும் மனிதனாக வருவதற்குப் பல காலமாகும்.

மனிதனே மிருக உணர்வு கொண்டு மாறும் நிலையாகிக் கொண்டிருக்கிறது.
1.பண்டைய கால மக்களோ தங்கள் அனுபவத்தால் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு வந்தார்கள்.
2.இன்றோ விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தின் தன்மையாக மாறி மனிதனல்லாத உருவையே உருவாக்கிடும் நிலை வளர்ந்து விட்டது.

ஆக விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் கூடிக்கொண்டே வந்தாலும் இந்த உடலை ஆனந்தப்படுத்துவதற்காக “இரவு நேரக் கேளிக்கைகள்” என்ற பேரில் எத்தனையோ தவறான பாதையில் மதுவையும் தன்னை மறந்து… அதிலே ஆனந்த நிலைகள் பெற வேண்டுமென்று நகரங்களில் ஆனந்தக் கூத்தாடும் நிலைகளாக வைத்து விட்டார்கள். அரசும் இதை அனுமதிக்கிறது.
1.இந்த உடலில் இது போன்று இன்று காணும் சொர்க்கம்
2.அடுத்து நம்மை நரகத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை மறந்து விட்டார்கள்.

இந்த உலகமே துரித நிலைகள் கொண்டு மனிதன் மிருகமாக மாறும் நிலை வருகிறது. இந்த பூமியே நிலை தடுமாறப் போகின்றது, தடுமாறி விட்டால் அதை உணரப் போவதில்லை.
1.இந்தத் தியானத்தில் வலுப்பெற்றால் அதையும் உணர முடியும்.
2.அதிலிருந்து விடுபடும் ஞானமும் நமக்குக் கிடைக்கும்.

உலகில் அணுகுண்டுகள் வெடிக்கத் தொடங்கினால் கதிர் இயக்கங்கள் மேக மண்டலங்களாக மாறி சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியிலே படாதபடி தடைப்படுத்தினால் பூமி பனிப்பாறையாக மாறிவிடும்.

இப்போது இருக்கும் பூமி தன் திசை மாறும்… நாம் எல்லாம் கடலுக்குள் போகும் நிலை வந்துவிடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது இருந்தே அந்த அருள் உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் தான் தப்ப முடியும்.

அமாவாசை தினத்தின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய ஒவ்வொரு வழியிலும் உள்ள உண்மையினை அறியாமல் நாம் அவற்றைக் குடும்பங்களில் வந்த குடும்பச் சடங்கு… சாங்கியம்… என்று வழிப்படுத்தி விட்டோம்.

1.அதன் நிலையில் மாறுபடும் பொழுது மனச் சஞ்சலம் கொண்டு
2.நாம் தெய்வக் குற்றம் செய்து விட்டோம்… பாவத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற பயந்த நிலையில்
3.இன்றும் பல குடும்பங்களில் பல நிலைகள் நடக்கின்றன.

பக்தி நிலை வளர்வதற்காக நம் முன்னோர்கள் பல வழிகளில் அவர்களின் சந்ததியார் வர வேண்டுமென்பதற்காகக் காட்டிச் சென்ற வழிதான் அந்தப் பல வழிகளும்.

1.அமாவாசை அன்று அவரவர்களின் முன்னோர்களை நினைத்து வணங்குவது…!
2.அமாவாசையில் வைத்தியம் செய்து கொண்டால் நற்பயன் அடையலாம்…!
3.அமாவாசையன்று எந்தக் நற்காரியங்களுக்கும் நல்ல நாள்…!
4.அமாவாசையன்று சேமித்து வைத்த தானியத்தைச் சூரியனின் ஒளி படும்படி வைத்தால் பல நாட்கள் அவற்றில் பூச்சி புழுக்கள் அண்டாது…!
5.அமாவாசையன்று தொழில்களுக்குச் செல்லலாகாது…! என்றெல்லாம்
6.பல நிலைகளை நமக்கு உணர்த்திச் சென்றார்கள் நம் முன்னோர்கள்..

அமாவாசையின் நிலையென்ன…?

அன்று நமக்கு இப்பூமியின் மேல் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் அனைத்தும் அப்படியே வந்து தாக்குகின்றன. தாக்கும் நிலை கொண்டு இப்பூமியும் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

அமாவாசையன்று கடல் பொங்குகின்றது என்கின்றோம். கடலும் பொங்குகிறது. அமாவாசையன்று மட்டும் கடல் நீர் அதிகரிப்பதன் நிலையென்ன…?

இப்பூமித்தாய் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில் அதிசக்தி வெளிப்படுத்துகிறது. கடல் நீர் எப்படி பொங்குகிறதோ அதைப் போலத்தான் ஜீவராசிகளின் நிலையும் தாவரங்களின் நிலையும் பனிமலையின் நிலையும் எரிமலையின் நிலையும் மற்றுமுள்ள பல இவ்வுலகில் இப்பூமியிலிருந்து இப்பூமித்தாய் வளர்க்கும் அனைத்து ஜீவ நிலை கொண்ட யாவுமே அமாவாசை அன்று சூரியனிலிருந்து கிடைக்கும் சக்தியின் மாற்றத்தினால் இந்நிலை பெறுகின்றது.

மனிதர்களுக்கு அமாவாசையன்று உடல் கனம் தெரியும். ஒரு வித சோர்வும் என்றும் இல்லாத நிலையில் சிறு தளர்ச்சியும் ஏற்படும்.

நாம் அன்று சுவாசிக்கும் காற்றில் கனமான அணு நிலை கொண்ட சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தியின் துரிதத்தினால் அக்காற்றை நாம் சுவாசிப்பதினால் நம் உடல் நிலையில் மாற்றம் தெரிந்திடும்.

1.ஆரோக்கியமுடன் வாழ்பவர்க்கே இந்நிலை ஏற்படும் பொழுது
2.நலிவுற்றோரின் நிலைக்கு அவர்கள் எடுக்கும் சுவாசம் கனம் பெறுவதால்
3.அவர்களின் உடல் நிலைக்கு முதலில் இருந்த நிலைக்கும் அவ்வமாவாசை நாளுக்கும் முன்னேற்றத்தை விட நலிவுத் தன்மை கூடிவிடுகின்றது.

நம் முன்னோர்கள் அதிக நலிவுற்றோர்களைக் காணும் பொழுது அமாவாசை தாண்ட வேண்டும் என்று சொல்வதன் நிலையும் இதுதான்.

நலிவுற்ற நிலையில்… இக்கனமான சுவாச நிலையை நலிவுற்றோர் ஈர்த்து சுவாசிப்பது கடினமாவதினால்தான் இந்நிலை நடக்கின்றது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் இவ்வமாவாசையன்று அவர்கள் மன நிலை அதிகமாக மாறுபடும் நிலைக்கு வருகின்றது.

அமாவாசையன்று சந்திரனில் இருந்து நாம் பெறும் பல நிலைகள் நமக்குக் கிடைக்காமல் போகின்றது. நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு போல் உள்ள சந்திரனின் அன்பான அரவணைப்பு இல்லாததினால் இந்நிலை ஏற்படுகின்றது.

விண் சென்ற முன்னோரைப் பக்தி கொண்டு நாம் வணங்கும் பொழுது நம் எண்ணம் அனைத்தும் அவர்களின்பால் பக்தி கொண்டு செல்வதினால் அவர்கள் காக்கும் நிலைக்கு நம்மை நாம் நிலைப்படுத்துகின்றோம்.

அப்பொழுது நமக்கு அமாவாசையன்று கனமான சுவாசத்தை ஈர்த்துச் சுவாசித்தாலும் அந்நிலையில் அவர்களின் ஆசி பெறுவதினால் இந்நிலையில் சோர்வு நமக்குத் தெரிவதில்லை.

அமாவாசையன்று நம் முன்னோர் விரதம் இருக்கும் நிலை ஏற்படுத்தியது எந்த நிலையில்…?

நாம் எடுக்கும் சுவாசத்திலேயே அமாவாசை தினத்தில் பல சக்திகள் அதிகரித்து ஏற்பதினால் இவ்வுடல் நிலைக்கு அன்று பசியின் நிலையும் குறைவு.
1.அதன் நிலையை அறிந்துதான் நம் முன்னோர்கள் “விரதம்” என்னும் பக்தி நிலையை
2.அந்நிலையில் காட்டி நமக்கு வழிப்படுத்தித் தந்தார்கள்.

எந்த ஒரு சிறிய நிலையையும் நம் முன்னோர்கள் நமக்குப் பக்தி நிலையிலேயேதான் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

ஆண்டவன் என்ற பக்தி நிலை ஒன்றினால் மட்டும்தான்… என்றும் இவ்வுலக மக்களின் நிலையை நல்வழிப்படுத்திட முடியும் என்ற உண்மை நிலையில் தான்… பல நிலைகள் கொண்ட செயல்களையெல்லாம் நமக்கு உணர்த்திச் சென்றார்கள். பல ஏடு நிலைகளில் எழுதி வைத்தும் சென்றுள்ளார்கள்.

எந்நிலையிலும் நம்பிக்கை என்ற ஆண்டவனை நம்பினால் அனைத்து சக்திகளின் ஆண்டவனையே ஆண்டவனின் அருளையே அந்நம்பிக்கையில் நாம் பெறலாம்.

நல்லோரின் வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாமே ஆண்டவனின் நாமச் சொற்கள் என்ற நம்பிக்கையுடன்
1.நாம் நம் முன்னோரையும் நம் பெரியோர்களின் வாழ்த்தையும்
2.நம்பிக்கையுடன் ஆண்டவனின் சொற்களாக நம்பி வரம் பெற்றால் நடப்பவை யாவும் நல் நிலைகளாக நடந்திடும்.

நம் முன்னோரையும்.. நம்மில் பெரியோரையும்… அவர்கள் ஆசி பெற நாம் வணங்குவது ஆண்டவனின் அருள் சொற்களை அவர்களின் நிலையில் இருந்து பெறுகின்றோம் என்ற நம்பிக்கையில் நலம் பெறப் “பெரியோர்களின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆலயங்களிலே சிலை வைத்திருக்கின்றார்கள் என்றால் அந்தச் சிலைகளுக்குள் 1008 குணங்களின் தன்மையைக் காவியமாகப் படைத்திருக்கின்றர்கள் ஞானிகள்.

அந்தக் குணத்தின் சக்தியாக அந்தத் தெய்வம் என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்கள்.

ஆலயத்திலுள்ள தெய்வச் சிலைகளை நாம் பார்க்கும் பொழுது
1.தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.அதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதனுக்குள் விளைய வைத்த ஒரு உணர்வின் தன்மையை ஒரு மனிதனுக்குள் இயக்கப்படும்போது அது எவ்வாறு இயக்குகிறது…? என்பதை அறிந்துணர்ந்து ஆற்றல்மிக்க சக்தியாகப் பெற்று அந்த ஆற்றல் என்ன செய்கிறது…? என்று அங்கே ஆலயத்தில் உணர்த்தினார்கள்.

பல ஆற்றல்களைப் பெற்றுத் தன் உடலுக்குள் ஒளியான உணர்வுகளை விளைய வைத்து விண் சென்ற அந்த மெய் ஞானிகள் சமைத்த அனுப்பிய உணர்வின் அலைகள் இந்த ஆலயங்களில் உண்டு.

ஞானிகளின் ஆற்றல்கள் இன்றும் பரவிக் கொண்டுள்ளது. அதை நாம் பெறுவதற்காகத்தான் ஆலயங்களில் தெய்வங்களாகச் சக்தியாகக் காட்டினார்கள்.

நமக்குள் செயல்படும் “உணர்வின் (அணுவின்) செயல் இது தெய்வம்” என்று மனித உடலின் உணர்வினுடைய நிலைகளை அதைச் “சக்தியாக – பெண்மையாக” ஆலயங்களில் உருவாக்கிக் கொடுத்தனர்.

1.அந்தக் குணத்தை நீ பெற்று… “தெய்வமாகு…” என்று தான் சொன்னார்கள்.
2.யாரும் கோவிலுக்குச் சென்று இவ்வாறு வேண்டுவது இல்லை.

அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுகிற பொழுது அந்தத் தெய்வம் நல்லது செய்கிறது.

ஆலயங்களில் காட்டியபடி அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெற்றோம் என்றால் அந்தக் குணத்தின் தன்மை கொண்டு நாம் தெய்வமாகின்றோம்.

ஆகவே “நீ நன்றாக இருப்பாய்… நல்ல நிலையில் இருப்பாய்… அனைவரும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும்” என்று எண்ணி அந்த ஆலயத்தில் வேண்டினால் நல்லதாக இருக்கும்.

ஆனால் கோவிலுக்குச் சென்று
1.என் பிள்ளைக்காக நான் பாசமாக இருக்கின்றேன் என்ற நிலையில்
2.“என் பிள்ளை இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றானே… தாயே…!” என்று வேதனைப்பட்டு
3.அதை நாம் சுவாசித்தால் எப்படி இருக்கும்…?

பாலுக்குள் விஷத்தை ஊட்டி அந்தப் பாலைக் குழந்தைக்கு ஊட்டினால் எப்படியோ அப்படித்தான் இது அமையும்.

ஏற்கனவே விஷமாக இருப்பதால் தான் குழந்தை சிரமப்படுகின்றது.

கோவிலுக்குச் சென்று அங்கே இன்னும் கொஞ்சம் வேதனைப்பட்டு அந்த விஷத்தை உட்கொண்ட நிலையில் நம் கண் ஒளிகளிலும் ஆக புலனறிவு ஐந்திலேயும் பாய்ச்சினால் சரியாகுமா…! ஆகாது.

அதி வேகமாக நீங்கள் வேதனைகளைக் கூட்டி அதே உணர்வின் நஞ்சை உங்கள் உடலுக்குள் சேர்த்துக் கொள்கின்றீர்கள். இது தான் அங்கே நடக்கின்றது.

இப்படிச் சுவாசிக்கும் நஞ்சான உணர்வுகள் அனைத்தும் உயிரிலே பட்டவுடன் அது பிரம்மமாக நம் உடலாகச் சிருஷ்டித்துவிடுகின்றது. அந்த வேதனையான உணர்வுகள் குழந்தையை இயக்கி இன்னும் கொஞ்சம் அவனைக் கஷ்டப்படச் செய்யும்.

இதைத்தான் எல்லா மகரிஷிகளும் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

1.நம் உடலின் தன்மையை ஆலயமாக அமைக்கப்பட்டு
2.அந்த ஆலயத்திற்குள் குணத்தின் சிறப்பின் தன்மையை அங்கே வெளிப்படுத்திக் காட்டினார்கள்.
3.தெய்வ குணங்களை நாம் நுகரும்படி அதைச் சுவாசிக்கும்படிக் காட்டினார்கள்.

ஆனால் அரசர் காலங்களில் இதையெல்லாம் மறைத்துவிட்டு சரணாகதித் தத்துவமாக தெய்வங்களுக்கு நீ இதைப் படைத்தால் அது நமக்குச் செய்யும் என்று காட்டி “நல்லதைப் பெறும் மார்க்கத்தையே” தடைப்படுத்திவிட்டார்கள்.

அதன் வழிகளில் தான் இன்றும் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

காசைக் கொடுத்துவிட்டு… சாமியிடம்… “நீ எதை எனக்குச் செய்து கொடு” என்ற நிலைகளில் தான் நம்முடைய பக்தி இருக்கின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

அகஸ்தியன் சென்ற ஞானப் பாதையிலேயே நாமும் செல்ல வேண்டும்

 

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானிகளின் ஞான வித்தை உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். அதைக் கூர்ந்து பதிவாக்கினாலே போதுமானது.

ஞானிகளின் அருளாற்றலைப் பெறக்கூடிய தகுதியாக யாம் உபதேசிக்கும் இந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கரு வளர்ச்சியாகி பின் அணுக்களாகப் பெருகும்.

முதலில் கரு என்பது முட்டை. பின் யாம் பதிவு செய்த உணர்வின் தன்மையை நீங்கள் மீண்டும் எண்ண எண்ண அந்த அணுக்கள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது.

1.கோழி தான் இட்ட முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ
2.அதனின் உணர்வின் தன்மை உடலில் வெப்பம் ஆகின்றதோ
3.அதன்பின் அந்த அணுவின் தன்மை வெப்பத்தின் துடிப்பு கொண்டு
4.கருவின் துணை கொண்டு அது குஞ்சுகளாக விளைகின்றது.

குஞ்சுகள் வெளி வந்த பின் தாய்க் கோழி எந்த உணவினை உட்கொண்டதோ அதே உணவைக் குஞ்சுகளும் உட்கொள்ளத் தொடங்குகிறது.

அதே போன்றுதான் இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்கள் இரத்தங்களில் கருவாக உருவாகின்றது.
1.அதனை மீண்டும் நினைவு கூற கூற முட்டையின் வளர்ச்சி பெறுகின்றது
2.சாமி சொன்னார்… என்று அடிக்கடி எண்ணும் பொழுது அதை அடை காத்தது போல் ஆகின்றது.

கோழி எங்கே இரை தேடிச் சென்றாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தன் முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ அதைப் போன்று
1.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி உங்களுக்குள் விளைய அடிக்கடி இந்த நினைவுகளை எடுத்து
2.நீங்கள் எத்தொழிலைச் செய்தாலும் இவ்வாறு எண்ணிப் பாருங்கள்.

முதலில் நாம் பதிவு செய்து கொண்ட அந்த உணர்வுகளை நினைவுபடுத்த நினைவுபடுத்த அதை அடைகாப்பது போன்று ஆகி ஞானிகளின் அரும் பெரும் சக்திகள் நமக்குள் விளைகின்றது.

கோழி இரை தேடும் பொழுது கூவி… தன் குஞ்சுகளைக் கூப்பிட்டு அதற்கு எப்படி இரை கொடுக்கின்றதோ இதைப் போல
1.யாம் பதிவு செய்த ஞான வித்து உங்களுக்குள் அந்த அணுவின் கருவாகி விட்டால்
2.இந்த உணர்ச்சியின் கிளர்ச்சிகள் இரத்த நாளங்களில் கிளம்பும்போது
3.உங்கள் உயிர் அந்த உணர்வின் ஒலிகளை வெளிப்படுத்தி
4.காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
5.கண் வழியும்… காது வழியும்… உடல் வழியும்… சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் உங்களுக்குள் கொண்டு வந்து
6.சுவாசத்தின் மூலம் உடலுக்குள் பரவச் செய்து அந்தக் கருக்களை உருவாக்குகின்றது.

இந்த வழியில் நடந்து அதனின் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் “அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்லும்…”

மகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் – ஈஸ்வரபட்டர் 

 

இவ்வுலக மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்கள் அறியாமலே அவர்களை இப்பேராசை என்னும் செயற்கைப் பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

1.அன்றாண்ட அரசர்களின் ஆவேச உணர்ச்சிகள் அன்றைய மக்களின் எண்ணங்களிலெல்லாம் கலக்கவிட்டு
2.இன்றும் அதே வழி வழியாய் வந்த அவ்வாவேச நிலை கொண்ட உணர்ச்சியினால்
3.இவ்வுலக நிலையே செயற்கைக்கு அடிபணிந்து வாழும் நிலையில் உள்ளது.

இன்றுள்ள மனிதர்களில் பெரும்பாலோரின் எண்ணங்கள் பெரும் பேராசை கொண்ட பணத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலை தான்…! செல்வத்தை ஈட்ட எவ்வழியையும் நாடலாம் என்று தான் உள்ளார்கள்.

இவ்வுலகில் வாழப் பணச் செல்வம் ஒன்றைத்தான் பொக்கிஷத்தின் பொக்கிஷமாகக் கருதி… அதற்கே அடிமையாகி… இவ்வுலகத்தையே செயற்கையின் கோளமாக்க இந்நூற்றாண்டில் அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்கள் இவ்வுலக நிலையை நடத்திச் செல்கின்றார்கள்.

ஆண்டவனையே பல ஜாதி நிலை கொண்டு பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதி என்னும் வழியை உண்டு பண்ணியவர்களும் அதன் வெறி நிலையில் இன்று தன்னைத் தானே தன் ஜாதிக்குத்தானே அடிமைப்பட்டு உழன்று வாழ்கின்றார்கள் என்று எண்ணுவதில்லை.

தன் ஜாதிக்குத் தான் மதிப்பளிப்பதாக எண்ணுகிறார்கள் அச் ஜாதிக்கு அடிமைப்பட்டவர்களெல்லாம்…!

இவ்வுலக நிலையை இவ்வரசர்கள் ஆண்ட காலம் முதல் இப்பொழுது அரசாட்சி நிலை கொண்டும் ஆட்சியில் உள்ளவர்கள் நடத்திடும் நாடகத்தினால் வந்த வினைச் செயல்தான் இன்று இவ்வுலக நிலையில் உள்ளன.

சூழ்ச்சியான நிலையில் பேராசையின் பேயை வளர விட்டுத்தான் இன்று இவ்வுலக நிலையே உள்ளது.

அனைவரின் எண்ணமும் ஒன்றுபட்டுச் செயல்படும் நிலையாகக் கூடி வரும் நிலையை ஏற்படுத்திட
1.இன்றுள்ள பல மத வழிகளில் உள்ள பெரியோர்கள் எல்லாம் ஒரு நிலைப்பட்டு
2.இவ்வுலக நிலையை இவ்வுலக மக்களின் எண்ண நிலையை ஒன்றுபடுத்திட
3.பக்தி என்னும் நிலையை வளரவிட்டு அன்பு பாசம் என்ற பிணைப்பு நிலையை மக்களின் எண்ணத்தில் சுழல விட்டு
4.இப்பேராசையிலிருந்து விடுபட்டு ஆசையான அமுதை ஊட்டி தெய்வீக நிலையில் ஈர்த்து
5.இன்றுள்ள மக்களின் ஜன நெருக்கத்தை மிகத் துரித நிலையில் பெருகும் நிலையைச் சமப்படுத்தி
6.தாவர வர்க்கங்களை ஓங்கச் செய்து இவ்வுலகை நிலைப்படுத்தும் தன்மைக்கு
7.பல நூறு வருடங்களுக்கு முன் நம்மைப் போல் இவ்வுலகினில் பிறந்து நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்த
8.இவ்வுலகின் ஞானச்சுடரான மகரிஷி ஒருவர் எழுதி வைத்த பெரும் பொக்கிஷம் ஒன்று
9.அவரால் பாதுகாக்கப்பட்டு அந்நிலையிலேயே ஜெபம் கொண்டும் காத்துள்ளார்.

அவருக்கு ஜாதி மதம் ஒன்றுமில்லை. இன்று இவ்வுலகிலுள்ள சக்தியின் செல்வங்களான சக்தி பெற்ற நம் மக்களில் யாவரும் அறிந்திடலாம் அதை.

அவரவர்களின் நிலையில் நடக்கும் நிலை கொண்டு ஜெபத்தின் அருளைப் பெற்றால் அந்த ஞானச் சுடரின்… அம்மகரிஷியின் அருளைப் பெற்று… அவ்வுலகப் பொக்கிஷத்தை எடுத்து அனைவருக்கும் அதிலுள்ள உண்மையை உணரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்திடலாம்.

இம்மதம் என்ற நிலையை மாறுபடுத்தி இன்று இவ்வுலக நிலையைக் காத்து ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனின் ஜோதிகளை…
1.பல ஞான நிலைகளை மக்களுக்கு உணர்த்திடும் நல் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுபட்டால்
2.இவ்வுலகில் உதித்த சக்தியின் செல்வக் குழந்தைகளை
3.இச்செயற்கையின் பேராசைப் பேயிலிருந்து விடுபடும் நிலைக்கு அழைத்திடலாம்.

இஜ்ஜாதி மதப் பேயின் வழி நடந்திடாமல் ஒன்றுபட்டுச் செயல் கொண்டு தன்னைத்தானே அடிமைப்பட்டு வாழும் நிலையிலிருந்து மீண்டு அருள் வழி நடந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணுக்கள் பரிணாம வளர்ச்சியில்
1.பல பல தாவர இன சத்துக்களை எடுத்து வளர்ந்து மனிதனாக வளர்ந்தாலும்
2.உயிருடன் ஒன்றி உணர்வுகள் ஒன்றாகி வேறொரு உடலை உருவாக்குகின்றது.
3.இது இயற்கையின் நியதி.

ஆனால் அதே சமயத்தில் எந்தத் தாவர இனத்தை எடுத்து உணர்வுகள் உட்கொண்டதோ மீண்டும் அது பூமிக்குள் அடைகிறது என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றது.

எதன் உணர்வைத் தன்னுடன் சேர்த்ததோ அது உயிருடன் ஒன்றி அந்த உணர்வுக்கொப்ப அது மாறுகின்றது.

சீதாவோ தன் கணவனின் உணர்வு கொண்டு கலக்கமில்லாத உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின்
1.எந்த உயிரின் பண்பைத் தனக்குள் எடுத்ததோ
2.அந்தச் சொர்க்கம் என்ற நிலைகளைத் தன் உணர்வின் உறுதி கொண்டு
3.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இணைந்தது என்பதை
4.சொல்லாமல் சொல்லிக் காட்டுகின்றனர்.

சீதா என்ற நிலை இராமனிடம் பட்ட துன்பங்களும் அது எண்ணாதபடி அதன் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது எத்தனையோ இன்னல்களை இராவணனிடத்தில் பட்டது.

சீதா பட்ட இன்னல்கள் இன்னது என்று சொல்ல முடியாது.

அத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு உயிரின் உணர்வின் தன்மையை உண்மையை நிலைப்படுத்திய அந்த உணர்வுகள்
1.இந்த உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா சொர்க்கத்தை அடைந்தது.
2.இந்த உடல் என்ற சீதா பூமிக்குள் மண்ணைப் பிளந்து மீண்டும் மண்ணுடன் மண்ணாக மற்றவைகளுக்கு உணவாக மக்கியே விட்டது.

இதை இராமாயாணத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

இராமன் என்பது எண்ணங்கள். சீதா என்பது சுவை. சீதாராமன் தான். இராமாசீதா அல்ல. இராவணன் என்பது நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட ஒலிகள் (நாதங்கள்).

லவ.. குச… என்பது நஞ்சை வென்று உயிருடன் ஒன்றி ஒளியான “விண்ணுலக ஆற்றல்”

நாம் கவர்ந்து கொண்ட உணர்வின் சுவை உயிரிலே பட்டபின் நாதங்களாக… உணர்ச்சிகளாக… எண்ணங்களாக அது எப்படி இயக்குகின்றது…? அந்தந்த எண்ணத்தின் இயக்கமாக நம் வாழ்க்கை எப்படியெல்லாம் அமைகிறது…? பல பல மாற்றங்கள் ஆகிக் கொண்டேயிருக்கின்றது.

ஆக மனித உடலின் கடைசி முடிவையும்… உயிராத்மா அடைய வேண்டிய எல்லையையும்… இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார்.
1.உடல் அழியக்கூடியது… உடல் நமக்குச் சொந்தமல்ல.
2.உயிர் என்றும் அழிவதில்லை… உயிர் தான் நமக்குச் சொந்தமானது.

விண்ணிலிருந்து வந்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சத்துகளை எடுத்து பல உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகின்றது.

மனிதனான பின்பு அனைத்தையும் அறியும் அறிவாக ஒளியின் உணர்வாக வளர்ந்து “விண் செல்ல வேண்டும்” என்பதே நம் சாஸ்திரங்கள் நமக்கு உணர்த்திய பேருண்மைகள்.

“குரு வழியில்” நன்மைகள் செய்ய வேண்டிய முறை

 

கேள்வி:
நண்பர் ஒருவர் வயிற்று வலி என்று என்னிடம் வந்தார். வலி நீங்கிவிடும் என்று சொன்னேன். அவருக்கு நன்றாகி விட்டது… ஆனால் எனக்கு வயிற்று வலி வந்துவிட்டது. இதற்கு என்ன காரணம்…!

பதில்:
தியான வழியில் பொதுவாக என்ன செய்கிறார்கள்…? நமக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது என்று எல்லாம் செய்கின்றார்கள். ஆனால் பிறருடைய தீமையான உணர்வுகள் தனக்குள் வராதபடி முதலில் ஆத்ம சுத்தி செய்வதில்லை.

நாம் ஆத்ம சுத்தி செய்து விட்டால் அந்த நோய் நமக்கு வராது தடுக்கப்படும். அதற்குப்பின் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உடலும் நலமாகும்.

அப்படி இல்லாதபடி…
1.எடுத்த உடனே அவர் உடல் எல்லாம் நலமாக வேண்டும் என்று பாசத்தால் எண்ணினால்
2.உடனே ஜிர்ர்ர்ர்ர்… என்று உங்கள் உடலுக்குள் அவர் உணர்வு வந்துவிடும்
3.அவர் நன்றாகி விடுவார் உங்களுக்கு வயிற்று வலி வரத் தான் செய்யும்.

உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆத்ம சுத்தி என்ற வலுவான ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் அந்தப் பக்தி மார்க்கத்தின் வழி வந்ததால் அத்தகைய பாச உணர்வின் செயலே வருகின்றது.

குருநாதரின் உடலிலே எல்லாமே உண்டு. அவரும் பக்தியின் நிலைகளில் செயல்பட்டவர் தான். அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் எத்தனையோ இருக்கிறது.

ஆனால் அவர் உடலிலிருந்து
1.அருள் ஞானத்தைப் பெற்ற உணர்வுகளும் உண்டு
2.இருளை அகற்றிய உணர்வுகளும் உண்டு
3.விஷத்தை நீக்கிய உணர்வுகளும் உண்டு
4.ஒளியான உணர்வுகளும் அவரிடம் உண்டு

இப்பொழுது யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இருளை நீக்கும்… நஞ்சை வெல்லும்… உணர்வுகளைத் தான் உங்களிடம் கொடுக்கின்றோம் இதை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு மற்ற தீமைகள் வராது தடுக்கலாம்.

நான் தியானம் செய்தேன். பாருங்கள்… எண்ணியபடி நடக்கின்றது என்று சொன்னாலும் உங்களுக்கு வயிற்று வலி ஏன் வருகிறது…?

அதற்குத் தான் இதைச் சொல்வது. எப்போதுமே முதலில் அந்த ஞானத்தின் வழியில் அருள் சக்திகளை எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டு அதற்குப் பின் “உங்களுக்கு நோய் நீங்கிவிடும்” என்று சொன்னால் சரியாகும்.

இல்லாமல் போனால் அவர்கள் உடலில் இருப்பதை இழுத்து உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். அவர் நன்றாக ஆகிவிடுவார்.

ஆகவே எப்போதுமே ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும்.
1.சந்தர்ப்பத்திற்குத் தக்க அந்த உணர்வின் ஞானங்களும் வரும்.
2.அந்த ஞானத்தை அருள் வழியில் பயன்படுத்த வேண்டும்
3.நடக்கின்றது என்ற ஆர்வத்தில் பக்குவமில்லாது செய்தால் அதில் சில தீமைகளும் வந்துவிடும்.

குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் நானும் செல்லப்படும்போது ஒவ்வொரு மிருகங்களுக்குத் தக்கவாறும் சில உணர்வுகளை எடுத்து அந்த ஒலி அலைகளை எழுப்பினால் எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

யானைக் கூட்டம் இருந்தால் அதற்கென்று ஒரு ஒலி அலைகளை எடுத்துப் பரவச் செய்தால் யானைகள் அமைதியாக இருக்கும்.

இத்தகைய உபாயங்களைக் காட்டிற்குள் செய்தாலும் நாட்டிற்குள் மோசமான கரடி புலி எல்லாமே இருக்கின்றது. இதில் இருந்து எப்படித் தப்பிப்பது…?

காட்டிலே தப்பித்தாலும் நாட்டிற்குள் மனிதர்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது. உடனே அது நம் மீது பாயும். ஒருவருக்கு நன்மை செய்தால் உடனே பதிலுக்கு எப்படி இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று திரும்ப வரும்.
1.நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள்
2.அவர்கள் அடுத்து நிமிர்ந்த உடனே நீங்கள் தாழ்ந்து விடுவீர்கள்

அதனால் நாம் எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

மற்றவர்களைத் தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யத் தூண்ட வேண்டும்.
1.நீங்கள் இதைச் செய்யுங்கள் உடல் நலமாகும் என்று சொல்லி இந்த வாக்கினை பதிவு செய்ய வேண்டும்
2.ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதை எடுக்கச் சொல்ல வேண்டும்.

நானும் (ஞானகுரு) எத்த்னையோ பேருக்கு ஆசீர்வாதம் செய்கிறேன். இந்த உணர்வுகள் அங்கே சென்று வேலை செய்கின்றது… நோய் கீழே இறங்குகிறது. நான் அதை இழுத்துக் கொள்வதில்லை.
1.ஆனால் நீங்கள் இழுத்துக் கொள்கின்றீர்கள்.
2.அப்படி இழுப்பதால் தான் அந்த வயிற்று வலி உங்களுக்கு வந்தது.

என்னிடம் எத்தனையோ மோசமான நிலையில் வருகின்றார்கள். அதை எல்லாம் என் உடலில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…? எனக்கு ஒர் பாதுகாப்பு கட்டிக் கொண்டு வரவேண்டும் அல்லவா.

அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இவ்வுலக மாற்றத்திலிருந்து அதை மீட்டிடும் வழி உண்டா…! – ஈஸ்வரபட்டர்

தாவர வர்க்கங்களை நாம் இன்று அழித்தும்… அதிலிருந்து நாம் பெறும் உன்னத நிலைகளைச் சிதற விட்டும் வாழ்கின்றோம்.

1.இம் மனித வர்க்கத்தின் பெருக்கத்தினாலும்
2.மற்ற ஜெந்துக்களின் பெருக்கத்தினாலும்
3.நம் செயற்கைக்குகந்த நிலைகளைப் பிரித்ததினால் மட்டும் அல்லாமல்
4.இன்று ஆவி உலகத்தின் பெருக்கத்திலுள்ள ஆவிகளும் அச்சத்தை ஈர்த்து வாழ்வதினாலும்
5.இன்று இவ்வனைத்து இனப் பெருக்கத்தினால் அச்சக்தியெல்லாம் இந்நிலையில் ஈர்க்கப்படுவதினால்
6.தாவர வர்க்கங்களுக்குக் கிடைக்கும் சத்து நிலை குறைந்து விட்டது.

எத்தாவரமும் சூரியனின் சக்தி பட்டு மட்டும் வளரவில்லை. இப்பூமித்தாய் சக்தியை ஈர்த்து ஊட்டம் தரும் நிலையிலிருந்தும் தான் அத்தாவரங்களின் செழிப்பு நிலை உள்ளது.

சில தாவரங்களினால் இப்பூமியில் உற்பத்தியாகும் பல அணுக்களை ஈர்த்து வளரும் தன்மை உள்ளது.

உயிரணுக்களையே ஊட்டமாக ஈர்த்து வளரும் தன்மையில் பல தாவரங்கள் உள்ளன. உயிரணுக்களையே என்பது இன்று பல ஜீவன்கள் ஆத்மா பிரிந்த பிறகு நாய் நரி பன்றி இப்படிப் பல ஜீவன்களைத் தாவரங்களின் வேருக்கு அடிப்பாகத்தில் இஜ்ஜீவன்களின் உடலை உரமாக இட்டு… அதையே உரமாக்கித் தன் சக்தியில் ஈர்த்து நற்கனிகளைப் பல தாவரங்கள் நமக்கு அளிக்கின்றன.

அத் தாவரங்களின் சக்திக்கு உரமாக வைத்த அவ்வுடலில் உள்ள தன்மையெல்லாம் அத்தாவரமே சத்தாக ஈர்த்ததினால் அதிலிருந்து பல உயிரணுக்கள் ஜீவன் பெறும் நிலையில்லாமல் அதிலிருந்து சென்ற ஓர் ஆத்மா மட்டும்தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

மனிதனிலிருந்து மாறுபட்ட மிருக ஜெந்துக்கள் மற்றப் பிராணிகள் யாவையுமே
1.அதை எருவாக வைக்கும் பொழுது
2.தாவர வர்க்கங்கள் உரமாக ஈர்த்துச் செழித்து வளர்ந்திடும்.

ஆனால்… இம்மனித உடலைப் புதைத்தால் இம்மனித உடலைப் புதைத்த இடத்தில் அதன் சக்தி அங்கிருந்தால் இம்மனித உடலில் இருந்து “ஒரு புல் பூண்டும் வளர்ந்திடாது…!”

இம்மனித உடல் தாவர வர்க்கத்திற்கு எருவாக சக்தி தரும் பாக்கியமும் இம்மனித உடலுக்கில்லை…!

மற்ற ஜெந்துக்களும் இம்மனித உடலுக்கும் உள்ள வேறுபாடு இம்மனித உடல் “கடும் உப்பு நிலை” பெற்றது. இம்மனித உடலை உப்புக் கலந்த இரசாயன நிலைப்படுத்தி பல நாட்கள் ஆவி பிரிந்த உடலைப் பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கலாம்.

ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது. எதுவுமே அழிவதில்லை… வளரத்தான் செய்கிறது. இச்சூரியனின் சக்தியில் வந்த எவற்றையும் யாராலும் அழித்திட முடியாது.

வளர்ந்து கொண்டே உள்ள இவ்வுலகினில் இன்று நாம் ஆரம்பத்தில் உள்ள நிலையை… ஒரு சக்தியை அழித்ததினால் மற்ற சக்தி வளர்ந்து விட்டது. அந்நிலையை மாற்றி அச்சக்தியை அழித்துத்தான் முன் இருந்த சக்தியை வளரச் செய்ய வேண்டும்.

தாவர வர்க்கங்களை வளர்த்து மற்ற இனப்பெருக்கத்தை நாம் மாற்றி மாற்றி என்னும் பொழுது அழித்து மற்ற மிருக வர்க்கத்தை நாமே அதை உண்டு பல அணுக்களை வளரவிடாமல் மற்றப் பிராணிகள் இறந்த பிறகு அதன் உடலைத் தாவரங்களுக்கு எருவாக்கி தாவர நிலையை வளரச் செய்ய வேண்டும்.

மனித வர்க்கத்தின் பெருக்கத்திற்கும் எவ்வுடலையும் நாம் புதைக்காமல் மனிதன் இறந்த பிறகு அவ்வுடலை எரிக்கும் நிலைப்படுத்திட வேண்டும்.

செயற்கையின் ஆசையை மாற்றி வாழும் நிலையில்லை இன்று மனிதனுக்கு…! ஆகவே இவ்வுலக நிலையையே காத்து அதன் அழிவான மாற்றத்தைத் தாங்கும் சக்தி சித்தர்களாலும் ரிஷிகளாலும் முடியாத நிலையில் இன்றுள்ளது.

1.இச் செயற்கையை மனிதனின் நிலையிலிருந்து மாற்றிடவும் முடியாது…
2.இவ்வுலகத்தின் மாறும் தன்மையிலிருந்து
3.இவ்வுலக நிலையை மீட்டிடவும் முடியாத நிலையில் உள்ளது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் நம் உயிர் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

அதைத் தான் “பார்வதி பஜே… நமச்சிவாய” என்பது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்துடன் கலந்து நம் உடலாக உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

இது தான் “ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. அதன் வழியில்
1.நாம் எண்ணும் பார்க்கும் நுகர்ந்து அறியும் அனைத்தையும்
2.சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது நம் உயிர்.
3.அதாவது சதா நம் உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது என்று பொருள்படும்படி நம் ஞானியர்கள் கூறியுள்ளார்கள்.

ஆகவே நாம் சதா சிவமாக்க வேண்டியது எது…?

இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலில் “இருளை அகற்றிடும் அருள் ஞானத்தைச் சதா சிவமாக்கிக் கொண்டேயிருத்தல்” வேண்டும்.

நமது உணர்வுகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து நம் வாழ்க்கையில் என்றும் ஏகாந்த நிலை என பேரருள் பேரொளி என ஆகி என்றும் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி இரு மனமும் ஒன்றாகி அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து இருண்ட உலகை அகற்றிப் பேரருள் பேரொளி என ஆன அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

1.அகஸ்தியர் அவர் வாழ்ந்த காலங்களில் எதை எதையெல்லாம் நுகர்ந்தாரோ
2.அந்தத் தாவர இனங்களின் நறுமணங்களும்
3.தீமைகளை நீக்கிடும் பச்சிலைகளின் மணங்களும் இங்கே வரும்.

நீங்கள் தியானிக்கும் பொழுது பல விஷத் தன்மைகளும் விஷமான உணர்ச்சிகளையும் தீமைகளை நீக்கிடும் அல்லது அடக்கிடும் “அருள் மணங்கள்” உங்களுக்குள் வரும்.

இவை அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று தீமையை அடக்கி அருள் ஞானத்தைப் பெருக்க உதவி செய்யும்.

உங்கள் மனைதை அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான “அந்தப் பேரருளுடன் இணைத்து…” அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் தியானியுங்கள்.

1.சர்வ பிணிகளையும் அகற்றிடும் அருள் சக்தியாக
2.அகஸ்தியன் கண்ட பல மூலிகைகளின் மணங்கள்
3.இப்பொழுது உங்களுக்குள் வரும்.

அதை ஏங்கிப் பெற்று நமக்குள் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களை அகற்றிடும் அருள் ஞான சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று நம் உயிரை வேண்டி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அவ்வாறு துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கித் தியானித்துப் பேரருளை உங்கள் உடலில் உருவாக்குங்கள். பேரருளைப் பெருக்குங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஏங்கித் தியானித்து அன்னை தந்தையர் உடல் முழுவதும் படரச் செய்து நமக்காகப் பட்ட துயரினை அகற்றச் செய்து பேரருள் பெற வேண்டும் என்று அன்னை தந்தையரை ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் அன்னை தந்தையர் உடல் முழுவதும் அந்த அருள் சக்தி படர்ந்திட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் பெற்ற அற்புத சக்திகளைப் பெற நாம் தியானிக்க வேண்டிய முறை இது. தொடர்ந்து செய்து வந்தால் எத்தகைய தீமைகளையும் பிணிகளையும் போக்க முடியும்.

நம் பார்வையால் பேச்சால் மூச்சால் மற்றவர்கள் தீமைகளும் பிணிகளும் தோஷங்களும் அகலும். செய்து பாருங்கள்.

நாம் இயங்கவில்லை… மற்றொன்று தான் நம்மை இயக்குகிறது – விளக்கம்

 

இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ நிலைகளில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உருவாக்குகின்றனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகும் பாதையிலே ஒரு அழுத்தமான மிளகாய் நெடி காற்றிலே கலந்து வந்தால்
1.எவ்வளவு திறமையுள்ளவராக நாம் இருந்தாலும்
2.அதைச் சுவாசிக்கும் போது… அந்த நேரத்தில் நல்ல குணங்களை மாற்றிவிட்டு நம்மைத் தும்ம வைத்து விடுகின்றது
3.சிந்திக்கும் தன்மையை அந்த இடத்தில் இழக்கச் செய்துவிடுகிறது.

அது எலக்ட்ரானிக் ஆக மாறுகின்றது.

அதாவது… எதனுடைய உணர்வைச் சூரியனின் இயக்க அணுக்கள் (வெப்பம் காந்தம்) கவர்கின்றதோ அதை நாம் நுகரப்படும் போது அதனின் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்கி விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுதான நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். இருந்தாலும் அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.

ஆனால் சில சந்தர்ப்பங்களில்…
1.ஒருவரைப் பார்த்தபின் இனம் புரியாது அவன் மேல் வெறுப்பு வரும்
2.இனம் புரியாத சோர்வு நமக்குள் வரும்
3.சும்மா பார்த்தாலே… இனம் தெரியாத சிந்தனைகளும் வரும்
4.ஏன்… எதற்கு…? நம் மனம் அப்படி மாறுகிறது…! என்று நிலை கூட வந்துவிடும்.

காரணம்… மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வின் தன்மை நம்மை அறியாது இயக்குவதை நாம் அறிய முடியவில்லை.

விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்கி அதிலே காந்தப் புலனையும் கெமிக்கலும் கலந்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழைகளை உருவாக்குகின்றனர்.

1.தட்டும் போது மோதலின் அதிர்வின் ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு அது இயக்கி அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப
3.எதிர் நிலை வரும்போது எலக்ட்ரானிக் ஆக மாற்றி
4.எவ்வளவு பெரிய இயந்திரமாக இருந்தாலும் அதை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் நம் உடலான இந்த இயந்திரத்தை… நம்மை இயக்கிவிடுகின்றது. அதனால் இனம் புரியாது சோர்வடைந்து விடுகின்றோம்.

உதாரணமாக ஜோதிடம் ஜாதகம் பார்ப்போரெல்லாம் தன்னிடம் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து
1.ஒரு வார்த்தையை விட்டு அதற்கப்புறம் என்ன வருகிறது…? என்று பார்ப்பார்கள்…
2.நம்மிடமிருந்தே தெரிந்து கொள்வார்கள்.

அதை வைத்து… நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…! என்று சொல்வார்கள் காரணம்… அதே குறிக்கோளாக இருப்பதால் அவர்களால் என்ன… ஏது..? என்று சொல்ல முடிகிறது.

ஆனாலும் மற்றவர்கள் குடும்பத்தில் நடந்த கஷ்டத்தை எல்லாம் கேட்டு வாங்கிக் கொண்ட பின் கடைசியில் அவரால் அவரைக் காக்க முடியாது. அவர் குடும்பத்தில் பார்த்தோமென்றால் பல தரித்திரங்களும் பல சங்கடங்களும் பல வெறுப்புகளும் தான் இருக்கும்.

வயிற்றுப் பிழைப்புக்காக ஜாதகம் பார்த்தாலும்…
1.பிறருடைய உணர்வின் அதிர்வுகளைச் சேர்த்து சேர்த்து
2.பிறருக்கு ஜோதிடம் சொன்னாலும் இவர் வாழ்க்கை பாழாகிவிடும்.

அதே போல் தான் மந்திர ஒலிகளைச் சேர்த்துப் பிறரை இயக்கலாம். பின் இதுவும் பாழாகி உடலுக்குப்பின் பிறருடைய ஈர்ப்புக்கு அவர் ஜெபித்த மந்திரத்தால் ஈர்க்கப்பட்டு முதலிலே இவன் எதைச் செய்தானோ அங்கே போய் அதற்குத் தான் பயன்படும்.

இது எல்லாம் சாகாக்கலையாக… ஒரு உடலில் விளைந்தது மீண்டும் மீண்டும் அடுத்த உடலிலே சுற்றிக் கொண்டிருக்கும். கடைசியில் யானை தேய்ந்து கட்டெறும்பானது போன்று மனிதனல்லாத உடலாகத் தான் போக நேரிடும்.

ஆகவே மனித உடலிலே குறுகிய காலமே வாழுகின்றோம் என்பதை உணர்தல் வேண்டும். சிறிது காலமே வாழ்கின்றோம்… என்பதை
1.“நேரமாகி விட்டது…” என்று இராமன் மனதைக் குவித்தான் (மணலைக் குவித்து சிவலிங்கமாக்கிப் பூஜித்தான்) என்று இராமாயணத்தில் அதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
2.வளர வளர உடலின் தரமும் குறைகின்றது… ஆயுளும் குறைந்து கொண்டே வருகிறது…!
3.இதற்குள் நாம் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலைப் பெற வேண்டும் என்றால் நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்.

பகைமைகளை அகற்றி நம் பார்வையால் மற்றவர்களுக்கும் அந்தத் தீமைகள் அகலும் சக்தியாகச் செயல்பட வேண்டும்.

இந்த உலகில் இருளை ஒளியாக மாற்றி… விஷத்தை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாமும் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றும் நிலையாக ஏகாந்த நிலையாக வாழ முடியும்.

காற்று மண்டலம் நஞ்சாக மாறியதன் காரணம் – ஈஸ்வரபட்டர்

 

செயற்கையின் பாவத்தினால் வந்த வினையான தாவரங்களின் நிலையின் குறைவினால் இன்று இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வந்துள்ளது.

தாவரங்களின் நற்பயனை அறிந்து சுவையுள்ள காய் கனி வர்க்கங்களும் தானிய வர்க்கங்களும் நாம் பெற்று இயற்கையின் அமுதைப் புசித்திட்ட உன்னத கால நிலை மாறி இன்றைய மனிதனின் உணவில் தன் இனத்திலிருந்து மாறுபட்ட ஜென்மம் சென்ற மற்ற ஜெந்து வர்க்கங்களைச் சமைத்து உண்ணும் நாகரிக நிலைக்குத் தன்னையே அடிமைப்படுத்தி வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

இவ்வுலகம் ஒன்றின் சக்தியிலிருந்து ஒன்று சக்தி பெற்றுத்தான் வாழ்கிறது. ஒன்றை ஒன்று அழித்து ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றுத்தான் வாழும் சக்தியையே சக்தி நிலை நமக்கு அளித்துள்ளது.

அந்நிலையில் இதன் நிலையில் மட்டும் என்ன பாவம்…? என்பீர்.

மற்ற ஜெந்து வர்க்கங்கள் எப்படி உருவாகி வந்தன…? என்பதைத்தான் பாட நிலையில் உணர்த்தியுள்ளோம்.

இன்று இருக்கும் இவ்வுலக நிலையில்…
1.இவ்வுலகிலுள்ள பூமியிலுள்ள கனி வர்க்கங்களையும் தாவர வர்க்கங்களையும் நாம் சிதறவிட்டதனால்
2.(நாம் சிதறவிடவில்லை அதை எடுத்துப் பயன்படுத்தித்தான் கொண்டோம் என்பீர்)
3.நம் செயற்கையின் ஆசையினால் இவ்வுலகின் பொக்கிஷங்கள் குறைந்ததின் நிலையில்
4.மற்ற ஜெந்துக்கள் மனித வர்க்கம் முதற்கொண்டு அனைத்து ஜீவராசிகளும் மிகத் துரிதமாகப் பெருகியதன் நிலையில்
5.இம்மனிதனும் மற்ற ஜெந்துக்களும் இப்பூமியின் சக்தியை ஈர்த்து வாழ்வதினால்
6.இப்பூமியிலிருந்து மற்ற கனிவர்க்கங்கள் வளரும் நிலை குறைந்துவிட்டது.

இஜ்ஜீவ ஜெந்துக்கள் பெருகப் பெருக இன்னும் இவ்வுலக நிலையிலுள்ள சத்துத் தன்மை குறையும் நிலையில்தான் உள்ளது.

ஒரு ஜீவனை அழிப்பதினால் பல ஜீவன்கள் உற்பத்தியாகின்றன.

உங்கள் நினைவில் மண்ணில் புதைத்தால்தான் அவ்வுடலிலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுவதாக எண்ணுவீர். அப்படி அல்ல..!

1.மற்ற ஜீவ ஜெந்துக்களை நாம் சமைத்து உண்டு அதன் சக்தியைப் பெற்று
2.அதைக் கழிவாக வெளிப்படுத்தும் அக்கழிவில் இருந்தும்
3.எந்நிலைகொண்ட ஜீவ ஜெந்துவை உண்டு கழித்தோமோ அதன் நிலையிலிருந்து
4.அந்நரகமான அவ்வாடையிலிருந்து பல ஜீவ ஜெந்துக்கள் உயிர் பெறுகின்றன.

ஒன்றை அழித்துத்தான் ஒன்று சக்தி பெறுகின்றது. இஜ்ஜீவ ஜெந்துவின் பெருக்கத்திற்குக் காரணம்… ஆறறிவு படைத்த இம்மனிதனாலேதான் அனைத்துப் பெருக்கங்களும் வந்துள்ளன.

இன்று இவ்வுலகில் மனித இனத்தைக் (மக்கள் தொகையை) குறைக்கப் பார்க்கின்றான். ஒரு மனிதன் வாழும் காலத்தில் அவன் வாழ்க்கையில் அவன் எத்தனை குழந்தை பெறுகின்றானோ அவை தாம் அவனது பெருக்கம்.

ஆனால் இவ்வுடலை விட்டு அவனது ஆத்மா சென்ற பிறகு அவன் வாழ்ந்ததில் ஆசை வைத்து அவன் வாழ்ந்த காலத்தில் “அவன் பெற்ற இரத்தபந்தத்துடன் உள்ள குழந்தை வாழும் நாள் வரை…” அவனது ஆத்மா மறு ஜென்மத்திற்குச் செல்வதில்லை.

ஆனால் அவனின் உடலை அடக்கம் செய்த இடத்தில் அவன் உடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று ஜென்மத்திற்கு வருகின்றன.
1.இம் மனிதனே மனித வர்க்கத்திற்கும் மிருக வர்க்கத்திற்கும்
2.மிருகத்திலிருந்து பல ஜெந்து வர்க்கங்களுக்கும் அடிகோலியாகின்றான்.

தாவர வர்க்கங்களின் உன்னத பொக்கிஷத்தைச் சிதற விட்டவனும் இவ்வாறறிவு என்னும் அறிவைப் பெற்ற ஆண்டவனின் அடிகோலிகள் என்று செப்பிடும் இம்மனிதனேதான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மீண்டும் ஏற்றிக் கொடுக்கவில்லை என்றால் “அது இயக்காது” – ஞானத்தின் வளர்ச்சிக்கு “குருவிடம் என்றுமே தொடர்பு கொண்ட நிலையில் இருத்தல்” மிக மிக அவசியம்

இந்த அகண்ட அண்டத்தில் நம்மைப் போன்ற பிரபஞ்சங்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உணர்வுக்கொப்ப அங்கே மனித உருக்களில் மாற்றங்களும் உண்டு.

நமது பிரபஞ்சத்தில் எப்படி விஞ்ஞானப் பெருக்கங்கள் இருக்கின்றதோ இதைப் போல மெய்ஞானப் பெருக்கம் உள்ள பிரபஞ்சங்களும் உண்டு. அதையெல்லாம் நீங்களும் நுகரலாம். அறியலாம்… பார்க்கலாம்… என்னால் (ஞானகுரு) காண முடிகின்றது.

வெள்ளக்கோவில் டாக்டர் கிருஷ்ணனுக்கு சில உண்மைகளைக் காணும்படி பரீட்சார்ந்தமாகக் கொடுத்தேன்.

அவர் என்ன பார்த்தார்…?

1.நம் பிரபஞ்சத்தில் நம் பூமியைத் தவிர மற்ற கோள்கள் எதிலும் மனிதர்கள் இல்லை.
2.இந்தெந்தக் கோள்களில் இந்த அளவு நீர் இருக்கின்றது.
3.சில கோள்களில் உறை பனியாக இருக்கின்றது. அதெல்லாம் சிறிது காலத்தில் அழிந்துவிடுகின்றது.

இதையெல்லாம் அவருக்குத் தெளிவாகத் தெரியும்படி செய்தேன். எனக்கு மட்டும் தெரிந்தால் பத்தாது…! என்று அவருக்கும் காட்டினேன்.

ஆனால் அந்த மாதிரி எல்லாம் காட்டிய பின் என்ன ஆனது…?

சுயநலத்தின் சொரூபங்கள் வந்துவிடுகின்றது. “நான் இருந்த இடத்திலே தேடுகிறேன்… நான் இருந்த இடத்திலிருந்தே பெற முடியும்…” என்று இருந்துவிட்டார்.

ஆனால் குருவை மட்டும் தேடி வரமாட்டார்.

ஞானகுரு என்னை இருந்த இடத்திலே பெறச் செய்து விட்டார். அதனால் “நான் குருவைத் தேடி எங்கேயும் செல்ல வேண்டியதில்லை…” குரு தான் சொல்லியிருக்கின்றார் அல்லவா…! நாம் இருந்த இடத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்று.

இப்படியும் சில பேர் உண்டு.

ஒரு பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன ஆகும்…? வேலை செய்யுமோ…!

சார்ஜ் ஏற்றிக் கொள்வதற்கு மின்சாரம் எங்கே இருக்கின்றது என்று தேடி அதை ஏற்றுகின்றோம் அல்லவா.

சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை எல்லாம் செலவழித்தால் பேட்டரி பலவீனமாகும். அதை உபயோகப்படுத்த மீண்டும் பேட்டரியைச் சார்ஜ் செய்துதான் ஆகவேண்டும்.

அதைப் போன்று அந்த அருள் உணர்வைத் தனக்குள் பெருக்குவதற்கு குருவைச் சந்தித்து உணர்வை உறவாடி அதிலுள்ள உண்மைகளைத் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அப்படி இல்லாமல்
1.குருவிடமிருந்து “எல்லாமே தெரிந்து கொண்டேன்…!”
2.அவரை எதற்காகப் பார்ப்பது…?
3.குருவிடம் சொல்ல என்ன இருக்கிறது…? என்று சொன்னால் என்ன ஆகும்…?

குரு கொடுத்த அந்த மெய் உணர்வுகள் அவருக்குள் இயக்கிய தன்மை தனக்குள் அதை மீண்டும் வலு பெறச் செய்யவில்லை என்றால்
1.ஆக மொத்தம் பலவீனமடையத்தான் செய்யும்.
2.போகும் பாதையில் வளர்ச்சியின் தன்மைகள் குன்றத்தான் செய்யும்.
3.இதை எல்லாம் நாம் தெரிந்துணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் அருள் ஞானிகளைப் பற்றிய அருள் ஞான உணர்வுகளை நீங்கள் பதிவு செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

அதை எண்ணி எண்ணி அதற்கு ஊட்டம் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லை என்றால் எது பதிவோ அதற்குத்தக்க நம்மைத் திசை திருப்பும். கிடைத்தும் பலன் இல்லாது போகும்.

குரு இல்லாத வித்தை வித்தையாகாது…!

உங்கள் ஆர்வத்தை எதிலே காட்ட வேண்டும்…?

 

வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டுத் தடுத்துக் கொள்வது போல் தீய சக்திகள் உங்களுக்குள் புகாதபடி தியானத்தின் மூலம் அருள் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.இதற்குக் காசோ… பணமோ… ஒன்றும் தேவையில்லை.
2.அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து ஒரு அரை மணி நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.அந்தச் சக்தியினை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

யாம் (ஞானகுரு) ஆரம்பத்தில் கொடுத்த உபதேசங்களை யாரும் எட்டிப் பிடிப்பது என்றால் சிரமம். உபதேசம் கேட்ட பழைய அன்பர்களுக்குத் தெளிவாகத் தெரியும். எக்ஸ்பிரஸ் மாதிரி ஓடிக் கொண்டே இருக்கும். யாரும் அர்த்தம் காண முடியாது.

ஆனால் இப்போது எல்லோருக்கும் அர்த்தம் புரியும் அளவிற்குச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

காரணம் முன்னாடி சில ரகசியங்களை எல்லாம் சொல்வேன். மந்திரவாதிகள் அதைத் திருடிச் சென்று விடுவார்கள் என்பதற்காக… பட்டும் படாமல் அவர்களுக்குப் புரியாமல் இருப்பதற்காக்க் கட…கட…கட… என்று உருட்டிக் கொண்டு செல்வேன்.

இப்பொழுது அது எல்லாம் இல்லை.

உலகம் இன்று மிகவும் மோசமான நிலையில் இருள் சூழும் நிலையாக இருப்பதால் எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பவரைக் (POWER) உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

1.இதை கேட்டவர்கள் நீங்கள் தயாரானால் போதும்
2.இந்த உலகையும் காக்கலாம்… ஊரையும் காக்கலாம்… உங்கள் வீட்டையும் காக்கலாம்…!

யாம் சொல்லும் உபதேசக் கருத்துக்களை முறைப்படுத்திக் கொண்டு பக்குவப்படுத்தி கொண்டு வந்தாலே போதுமானது. நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. சிரமத்திலிருந்து நீங்கள் விடுபடுவதற்கான வழிகளைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நான் சிரமப்பட்டேன்… தெளிந்தேன்…! அந்தத் தெளிந்த உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும் என்று குரு வழியில் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.இதில் நீங்கள் யாராவது தயாரானால் தான் உண்டு
2.அரையும் குறையுமாக விட்டு விட்டுச் செல்ல முடியாது
3.அது போன்ற நிலை இல்லாதபடி நீங்கள் வளர்ந்து காட்ட வேண்டும்.

காற்று மண்டலமே இன்று நச்சுத் தன்மையாக மாறி விட்டது. கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதைப் போலக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கி உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

இந்தச் சூரியனும் அழியக் கூடியது தான். அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய பூமி எந்த நேரம் தலை கீழாக ஆகும்…! என்றும் சொல்ல முடியாது. அணு குண்டுகள் வெடித்தால் போதும்.

ஏனென்றால் குறுகிய காலமே இருக்கின்றது. 2004க்கு மேல் உலகம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. எங்கே பார்த்தாலும் தீவிரவாதம்..! அந்தக் கடுமையான உணர்வுகள் காற்றலைகளில் பதிவாகின்றது.

பத்திரிக்கையிலும் டிவியிலும் பார்த்து அதை எண்ணும் போது நமக்குள்ளும் தீவிரவாதம் ஆகிவிடுகின்றது.
1.நம்மை அறியாமலே பகைமைகள் வருகின்றது
2.நம்மை அறியாமலே உடலுக்குள் தீமைகள் வருகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

எப்படியும் நீங்கள் சிறிது பேராவது முந்திக் கொண்டீர்கள் என்றால் அதை வைத்து மற்றவர்களுக்கும் நன்மை செய்ய முடியும்.

நான் ஒருவன் இருந்தால் போதுமா…! நீங்கள் எல்லோரும் தயாராக வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்கிறேன்.

உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம். அதன் மூலம் நன்மைகள் நடக்கிறது என்றால் அதில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை
1.இந்த மாதிரித் தெரிகின்றது
2.இதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்…?
3.எப்படிப் பக்குவப்படுத்துவது…? என்று எம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாமியிடம் (ஞானகுரு) எப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்வது…? என்று எண்ண வேண்டியதில்லை. தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அதிகாலையிலேயே தினமும் உங்களுக்கு உயர்ந்த சக்தியை ஏற்றிக் கொடுப்பது.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்…
1.ஆயிரம் பேருக்குப் பல தீமைகளைப் போக்க முடியும்
2.உங்கள் அரவணைப்பில் ஆயிரம் பேரைக் காப்பாற்ற முடியும்.

ஆகவே பழமையையே எண்ணாதபடி எதிர்காலத்தின் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள ஆர்வத்தைக் காட்டுங்கள்…!

இயற்கையின் சக்தியைச் செயற்கைக்காகச் செலவழித்த பாவத்தை மனிதர்கள் உணரும் நேரம் வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

 

நம் முன்னோர்கள்… ஆத்மா பிரிந்த உடலில் அவ் உடலிலிருந்து உற்பத்தியாகும் உயிரணுக்கள் தோன்றாத நிலைப்படுத்தி அவ்வுடலுடன் அவ்வுடல் கெடாத பக்குவ நிலைப்படுத்தி அடக்கம் செய்து வைத்தார்கள்.

இன்று இக்கலியில் மக்களின் தொகை பெருகுவதினால் அனைத்து ஆக்கச் சக்திகளும் அதிகரிக்கும் நிலைக்காக மக்களின் தொகையையே குறைக்கும் நிலையில் பல வழிகளைச் செய்கிறார்கள்.

மனிதனே மனிதனின் இன வர்க்கத்தை நிறுத்தப் பார்க்கின்றான் இன்று வாழும் மனிதன்.

ஆவி உலகில் பல மனித இன ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்றச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில்தான்
1.இன்று பல இடங்களில் ஒரு தாய் ஒரு மகவு பெறும் நிலை மட்டும் இல்லாமல்
2.ஒரு தாய் ஒரே சூலில் பல மகவுகளை ஈனும் நிலையில்
3.மிருக வர்க்கத்தின் நிலைக்கு ஒப்ப வந்து பிறக்கின்றன.

பிறக்கும் மகவுகளைக் குறைக்க வழி காண்கின்றான் இக்கலியின் மனிதன். ஆனால் இறக்கும் உடலை எந்நிலையில் சிதற விடுகின்றான்…? இந்த நிலையைப் புரிந்து கொண்டால் பல நிலைகளில் இந்நிலையை மாற்றிடலாம்.

ஆவி உலகிலுள்ள ஆத்மாக்கள் மட்டும் பிறவி எடுத்தால் இன்றுள்ள மக்கள் தொகையுடன் கூடி வராதா…? என்பீர்..

ஆவி உலகிலுள்ள மனித ஆத்மாக்கள் எவையுமே உடனே பிறவி எடுக்கும் ஜென்ம ஆசையில் வந்து பிறப்பதில்லை. ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களுக்குத்தான் இவ்வுலகில் உடலுடன் வாழும் மனிதர்களின் நிலை புரிகின்றதே.

இப்புதிய புதிய உயிரணுக்கள் தோன்றும் நிலையை இம் மனிதன் மாற்றும் வழியை ஏற்படுத்தி வாழ்ந்தாலே…
1.மனிதனிலிருந்து மிருகம் மிருகத்திலிருந்து மற்ற ஜெந்துக்கள் இவற்றின் நிலையும் மாறி
2.சூரியனிலிருந்து வரும் சக்தியினால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் உன்னத நிலை பெறலாம்.

சூரியனிலிருந்து வரும் சக்தியில் குறைந்தோ அதிகப்பட்டோ வருவதில்லை. என்றும் ஒரே நிலைப்படித்தான் வந்து குவிகிறது.

இவ்வுலகினில் தோன்றிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு சக்தியின் துரிதத்தினால் (ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தினால்) தாவர வர்க்கங்களின் நிலை குறைந்து விட்டன.

இன்று தாவரங்களுக்குப் பல செயற்கை நிலை கொண்ட பக்குவம் (உரங்கள்) ஏற்றினாலும் முன் காலத்தில் உள்ளதின் சுவையும் மணமும் இன்றில்லை.

பூமியிலிருந்து வெளிப்படும் சக்தியையே மற்ற ஜீவன் பெற்ற உயிரணுக்கள் ஈர்த்து வாழ்கின்றன. இனப் பெருக்கம் ஆக ஆக இப்பெருக்கத்திலுள்ள ஜீவன்களுக்குத்தான் இப்பூமித்தாயும் நம் சூரியனும் தரும் சக்திகள் சரிப்படுகின்றன.

தாவர வர்க்கங்களின் நிலைக்கு அதன் ஈர்ப்புத் தன்மைக்கு உகந்த சத்துத் தன்மை குறைந்தே வருகிறது.

ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தின் சுவாசத்தினாலும் இன்று செயற்கையினால் வந்த வினை கொண்டு இக்காற்று மண்டலத்திலுள்ள சக்தியின் தன்மை குறைந்ததினாலும் இக்காற்றே கடும் விஷத்துடன் சுற்றிக் கொண்டுள்ளது. அதனால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் நிலையில்லை.

1.கலியான இம்மனிதன் தன் சக்தியின் சக்தியெல்லாம்
2.செயற்கையின் பேய்க்குப் பலியிட்டதின் பாவத்தை
3.உணரும் தன்மைக்கு வந்து விடுவான்… வந்து விட்டான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் யாம் இருக்கும் பொழுது
1.என்னைத் தாழ்த்தி…
2.உங்களை உயர்த்துகின்றேன்.

ஆனால் நான் உங்களைத் தாழ்த்தி என்னை உயர்ந்தவனாகக் காட்டினேன் என்றால் அகந்தை என்ற நிலை வரும். “நான்…” என்ற ஆணவம் வந்தால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று குருநாதர் தெளிவாக எமக்குக் காட்டினார்.

நாம் அனைவரும் குரு வழியில் சென்று நான் என்ற அகந்தையை விடுத்து
1.அருள் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்றும்
2.அனைவருடைய உயிரும் கடவுள் என்றும்
3.அந்த உடல்கள் அனைத்தும் ஆலயம் என்றும் நாம் மதித்து வாழ்தல் வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் வழி நடத்திச் செல்லப்படும் பொழுது என்னைப் போற்றுவோர் பலர். சிலர் தூற்றவும் செய்வர்.

போற்றுவோரைக் கண்டு நான் அவருக்காக அதிகமாகச் செய்வதும் தூற்றுவோரைக் கண்டால் வெறுப்படைவதும் அல்ல.

“போற்றுவதும் தூற்றுவதும் சமமே”.

போற்றலுக்குரிய நிலைகளை ஒருவரிடமிருந்து கேட்டபின் அவர் உடலிலிருந்து மகிழ்ச்சி என்ற உணர்வுகள் பெறப்படும் பொழுது நான் கவலைப்படும் பொழுது அந்தப் போற்றும் உணர்வுகள் எனக்குள் அதிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஆனால் என்னை ஒருவன் தூற்றிவிட்டான் என்ற உணர்வைச் சேர்த்து விட்டால் என் உடலுக்குள் தூற்றும் உணர்ச்சிகள் அதிகமாகி நான் நல்லதைச் செய்யும் உணர்வுகள் செயலிழக்கப்படும்.

இதைப் போன்ற நிலைகளில் குருநாதர் கொடுத்த அந்தப் பக்குவ நிலைகளில் தான் நான் வழி நடத்திச் செல்கின்றேன்.

ஒரு நெல்லை எடுத்து விதைத்தோம் என்றால் அந்த நெல் (விதை) அழிந்து விடுகின்றது. அதன் சத்தை எடுத்துத் தன் இனத்தை அங்கே பெருக்குகின்றது.

நெல் (விதை) அழிந்துவிட்டது என்றால் உனக்கு எப்படிக் கிடைக்கும்…? என்று சொன்னால் முடியுமோ…!

அந்த விதையைப் பக்குவப்படுத்தும் பொழுது தான் மீண்டும் பல நெல்லாக விளைகின்றது.

வித்துக்களை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்துகள் மறைந்து விடுகின்றது. அதனின் சத்துகளை எடுத்துத் தன் இனத்தை வளர்க்கச் செய்கின்றது.

நெல்லை விளைய வைத்த பின் மகசூல் கொடுக்கின்றது. குவிந்த பின் அனைவரும் சாப்பிடுகின்றனர்.

இதைப் போலத்தான் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம். உங்களுக்குள் அருள் ஞானம் விளைந்த பின்
1.எனக்கும் உயர்ந்த ஆகாரம் கிடைக்கின்றது.
2.உங்களுடன் பழகியவர்களுக்கும் அருள் ஞானம் கிடைக்கின்றது.
3.அருள் வழி அருள் ஞான வித்துகள் அங்கே வளரத் தொடங்கும் சக்தி கிடைக்கின்றது.

நாம் அனைவரும் அருள் ஞானத்தைப் பெருக்கி இந்த உணர்வின் சொல்லாக வரும் பொழுது அருள் ஞான வித்துக்களாகப் படர்கின்றது.

கேட்போர் உணர்வுகள் அனைத்திலும் பதிவாகின்றது. அதை நினைவு கொள்ளும் பொழுது வளர்க்க முடிகின்றது.

கேட்ட பின் அதனுடைய நிலைகள் அவ்வளவு தான்…, “கேட்டது போதும்…!” என்று இதைப் போற்றித் துதித்துவிட்டுச் சென்றால் ஞானத்தை வளர்க்க முடியாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

தியானம் செய்யக்கூடிய அனைவருமே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

1.சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் உபாதைகளோ வந்தால்
2.நாம் சரியான முறையில் தியானம் எடுத்து வந்தால்
3.அந்தக் கஷ்டத்தை மாற்றுவதற்குண்டான ஞானமும்… அதை எப்படி வழி நடத்த வேண்டும் என்ற உபாயமும்… வரும்.

சங்கடங்கள் வரப்படும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்போது சலனம் சஞ்சலம் சங்கடம் இதையெல்லாம் நீக்கிவிட்டு
1.எது உண்மையோ அதை உணர்ந்து
2.அதற்குத் தக்க நம்முடைய எண்ணங்களைச் சீராக்குவதும்… நல்ல செயல்களைச் செயல்படுத்தவும் முடியும்.

உடல் உபாதை உற்றவரைப் பார்க்கும் பொழுது முதலிலே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அது சிறு குழந்தையாக இருந்தாலும்… தன்னால் வெளியிலே சொல்ல முடியவில்லை என்றாலும்
1.எலக்ட்ரிக் எலகட்ரானிக் என்ற உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் அருள் சக்தி அந்தக் குழந்தை உடலில் ஊடுருவி அங்கே இயக்கச் சக்தியாக மாற்றும்.

“முடியவில்லை…” என்பவர்களுக்கு இருதயத் துடிப்பு நின்றாலும் கூட இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு அந்த இருதயத்திற்கு மேல்… “கை வைத்தோம்…” என்றால் அந்தத் துடிப்பு மீண்டும் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் மிகவும் பழுதாகி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென்று எதிர்பாராதபடி சில நிலைகள் வந்திருந்தால் அதை மீண்டும் இயக்க வைக்க முடியும்.

இருதயத்திலிருந்து வரக்கூடிய நிலைகளால் அங்கே துடிப்பிலே ஏதாவது சிறிது பிசகானால் இருதயத்திற்கு மேல் கையை வைத்தவுடனே இயங்கிவிடும்.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளில் பழுதாகி அதனால் இருதயம் சரியாக இயங்கவில்லை என்றால் அது ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே
1.இதைப் போல ஒவ்வொரு சந்தர்ப்பமும்… ஒவ்வொரு நோய்க்கும்… ஒவ்வொரு விதமாக இருக்கும்.
2.இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தான்.

அதைப் பெற வேண்டுமென்று வலுவான நிலையில் எண்ணி நமது பார்வையைச் செலுத்தி அதே உணர்வுடன் நம் கையைக் குழந்தையின் உடலில் வைத்தால் அதை எழுப்ப முடியும்.

ஆக… சிறு குழந்தையால் எண்ண முடியாது… அதனால் சொல்ல முடியாது… சொன்னால் கேட்க முடியாது…! என்று இருந்தாலும் கூட உடலில் கையை வைத்தோம் என்றால் அங்கே வேலை செய்யும்.

உதாரணமாக… நாம் வேலை செய்யும் இடத்தில் ஆபீஸர் நம் மீது கோபப்பட்டு… நமமைக் குறை சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தக் குறை நமக்குள் வராதபடி ஆத்மசுத்தி செய்து விட்டு
2.அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் நம் மீது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்றும் எண்ணினால்
3.இந்த உணர்வு அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு ஆபீஸர் நமக்குச் சாதகமாக வரவேண்டும் என்று சொன்னால் அது நடக்காத காரியம்.

நமக்குள் தப்பு இல்லாத நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்துவிட்டு தவறுக்குச் சரியான மார்க் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது தவறான நிலைகள்.

ஆகவே உண்மை என்று தெரிந்தால் ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.அவர் என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அது நல்லதாகும்.

இதை எல்லாம் ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய மன உறுதியும் நாம் எடுக்கும் அருள் உணர்வும் தீமையிலிருந்து விடுபடக் கூடிய சக்தியாக நமக்குள் வருகின்றது…!

ஒவ்வொருவருக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் உண்டு. இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் மாற்றி அமைக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

இறந்த உடலைத் தகனம் செய்ய வேண்டும்… புதைக்கக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு பிறவியிலும் பல உயிரணுக்களின் நிலையுடன் வாழ்ந்த நாம் அவ்வுடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்லும் பொழுது நம் ஆத்மாவுடன் கூடிய “சப்த அலையும்… சத்து நிலையும் தான்…” நம் உயிராத்மாவுடன் இஜ்ஜென்மத்திற்கு வரும் பொழுதும் வருகிறது

இக்காற்றினில் பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

1.பிறவி எடுக்கும் ஆசையிலும்
2.தன் எண்ணத்தைச் செயலாக்கும் ஆசையிலும்
3.குடும்பத்தைக் காக்கும் பற்றுக் கொண்ட ஆசையிலும்
4.பழிவாங்கும் வெறி நிலை கொண்ட குரோதத் தன்மையிலும்
5.வாழும் காலத்தில் அகால மரணமடைந்து அவதியுறும் நிலையிலும்
6.பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

இவ்வுலகில் வாழ்ந்திடும் மனிதர்களைக் காட்டிலும் மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் அதிக நிலையில் படர்ந்த நிலையில் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

புதிய புதிய மனிதன் பிறக்கிறானா…? அப்படி என்றால் போன ஜென்மம் என்பதின் நிலையென்ன…? ஆதியில் வந்த உயிரணுக்கள்தான் நாம் எல்லாம் என்றால் ஆதி காலத்தில் மனிதர்களின் ஜனத்தொகை குறைவு…! இப்பொழுது அதிகமல்லவா…?

ஆவி உலகிலும் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளனவல்லவா என்று எண்ணுவீர்.

இவ்வுலகம் கல்கியில் தோன்றிக் கலியில் முடியும் காலத்தில் வந்த உயிரணுக்கள் மட்டும் அல்ல… இன்றுள்ள உயிரணுக்கள் மட்டும் இன்றுள்ள உயிரணுக்கள் எல்லாம்.

இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே வந்த உயிரணுக்கள்தான் எல்லாமே. படர்ந்துள்ள உயிரணுக்கள் எல்லாம் உலகம் மாறுபடும் நிலையிலும் இவ்வுலகுடனே சுற்றிக் கொண்டேதான் வருகின்றன.

புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன. இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு பல கோடி உயிரணுக்கள் அன்றன்று வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

இம்மனித உயிரணுவில் இருந்து பல உயிரணுக்கள் உதித்து வெளிப்படுத்துகின்றன. ஒவ்வோர் உடலிலிருந்தும் அவ்வுடல் அழிந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் பல உயிரணுக்கள் அவ்வுடலில் இருந்தே வளர்ச்சி பெற்று பல உயிரணுக்கள் உதிக்கின்றன.

ஆதியில் வாழ்ந்த மனித இனம் குறைவாயிருந்தாலும் அம்மனித இனத்தில் ஒவ்வோர் உடலும் அதன் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு அவ்வாத்மாவுக்குச் சொந்தமான ஆவி நிலையான சத்து நிலையும் சப்த அலையும் அதனுடன் சென்ற பிறகு இவ்வுடலை நாம் அடக்கம் செய்யும் நிலையில் இவ் உடலில் இருந்து பூமியில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் ஈர்ப்பினால் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று புழுவான நிலையில் படர்ந்துள்ளன.

மனித உடலில் இருந்து உயிர் பெற்ற உயிரணுக்கள் அந்நிலைகொண்ட சக்தியையே தன்னுள் ஈர்த்து அதே நிலை கொண்ட சுவாசங்களைப் பெற்று மனிதக் கர்ப்பத்திற்கு வந்து மனிதனுடன் வந்து விடுகிறது.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவ் ஒரே மனிதன் மட்டும் பிறவி எடுத்து வந்த நிலையல்ல இப்பொழுது உள்ள நிலை.

1.ஒவ்வொரு மனிதனும் அவன் இறந்த பிறகு
2.அவனிலிருந்து பல உயிரணுக்கள் மனிதனாகப் பிறவி எடுத்து
3.மனித இனமும் வளர்ந்து கொண்டே வருகிறது.

அதைப்போலத்தான் மற்ற ஜெந்துக்களின் உயிரணுவின் நிலையும்.

நம் முன்னோர்கள் இதன் நிலை அறிந்து தான் உடலை அடக்கம் செய்யும் நிலையிலிருந்து எரிக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
1.உடலை எரிக்கும் பொழுது அவ்வுடலில் உள்ள ஆத்மா மட்டும்தான்
2.அதன் ஆவி நிலையான சத்து நிலையைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது
3.உடலில் உள்ள நீர்ச் சத்துக்கள் அதை எரிக்கும் நிலையில் ஆவியாகி நீருடன் நீர் கலந்து விடுகிறது
4.தகனம் செய்த உடலிலிருந்து புதிதாக உயிரணுக்கள் தோன்றுவதில்லை.

இதன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் அவ்வுடலைப் பல நிலையில் பக்குவப்படுத்தும் வழி காட்டினார்கள்.

உயிரணுக்கள் பெருகும் நிலை புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வக்கீல்கள் சட்டத்தைப் படிப்பார்கள். அவரிடம் ஏராளமான நூல்கள் இருக்கும்.

கால சூழ்நிலை சந்தர்ப்பம் எப்படி ஆனது…? குற்றத்திலிருந்து இவனைப் பிரிப்பது எப்படி…? என்பது தான் வக்கீல்களின் வேலை.

நன்மை செய்பவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டு அந்த நூல்களைப் படித்து வந்தால் நன்மை செய்தவனையும் காக்கும். வக்கீலையும் காக்கும் நிலை வரும்.

ஆனால் குற்றம் செய்தோரைக் குற்றத்திலிருந்து மீட்டிடும் நிலையாகக் குற்றம் செய்தோருக்குச் சாதகமாகச் செயல்படும் பொழுது என்ன ஆகிறது…?

அதற்காக வாதாடலாம்… காசையும் பெறலாம்… இதனின் செயலாக எவருக்குத் துன்பம் உருவாக்கினாரோ அது அவருக்குள் முழுமை அடைகின்றது.

1.குற்றம் செய்தோர் மகிழ்வர்
2.ஆனால் நன்மை செய்தோர் சோர்வடைவர்
3.அவரின் உணர்வு வக்கீலின் மீது பாயும்
4.தீமை செய்யும் உணர்வுகள் இங்கே சேரும்.

பாதாம் பால் நல்லது தான். அதிலே தெரியாதபடி விஷம் பட்டு விட்டால் அதைக் குடித்தால் நம்மை மடியச் செய்துவிடும்.

அதைப் போன்று தான் நல்ல மணம் கொண்டவன் வேதனைப்படுகின்றான். வேதனையான உணர்வுகளை நுகர்கின்றான். நல்ல மனம் விஷம் தோய்ந்து கெடுகின்றது.

1.எவரால் இத்தகைய நிலை வருகிறது என்று (வக்கீலையோ நீதிபதியையோ) உற்று நோக்குகின்றான்.
2.“அடப் பாவி எனக்குத் துரோகம் செய்தாய்..” என்று எண்ணுவான்.

அந்த உணர்வு இங்கே பதிவானபின் அது மீண்டும் நினைவுக்கு வரும். இங்கே பாதக நிலையை உருவாக்கும்.

1.தீமையுள்ளவனைச் சட்டங்கள் இயற்றிக் காக்கலாம்.
2.ஆனால் “இவனுக்குள் நல்லதைக் காக்கத் தவறிவிடுவான்”.

வக்கீல்களின் குடும்பங்களில் தீமையின் உணர்வு வந்து கஷ்டப்படுபவர்களைப் பார்க்கலாம். இவர் (வக்கீல்) சோர்வடையும் பொழுது இவருடைய பிள்ளைகள் இவரைத் தாக்கும் உணர்வுகள் வரும்.

அதே சமயத்தில் சுற்றியுள்ளவர்களையும் “இவருக்கு எதிரி…” என்ற நிலையை உருவாக்கும். வாழ்க்கை குறுகிவிடும்.

“திறமை…” என்ற நிலைகள் கொண்டு தீமைகள் எப்படி என்று உணர்ந்து
1.தீமை உள்ளவரைத் தீமை இல்லாதவர் என்று வாதிட்டு
2.ஜெயிக்கின்றவர்களுக்கே நீதிபதி பதவி கிடைக்கின்றது.

நீதிபதி பதவி வரும் பொழுது இந்த உணர்வின் அனுபவம் பெற்ற பின் எதிர் வக்கீலின் உணர்வைக் கண்டபின் இந்த நுண்ணிய அறிவு கொண்டு “தர்மத்தின் எல்லையை வைத்தால்” நீதியைக் காக்க முடியும்.

நீதிபதியாக உள்ளவர்களோ இன்று பெரும்பகுதி செல்வத்திற்குத்தான் அடிமையாகின்றனர். அநீதியைத்தான் அவருக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றது.

ஆனால் அநீதியின் வழியில் செல்வம் தேடுவோர் குடும்பங்களில் மன நோய் அதிகரித்து நீதிபதியின் உடல் நலம் கெடும். அந்த உடல் மண்ணுக்குத்தான் செல்கிறது.

இந்த உடலை வளர்க்கச் செல்வத்தைத் தேடினார். செல்வம் வந்தாலும் அந்தச் செல்வத்தால் எதிரியின் உணர்வுகளே அதிகரித்து விடுகின்றது.

சேர்த்துக் கொண்ட உணர்வுகள் மனிதனின் சிந்தனையைச் சிதறச் செய்து சிந்தனையற்ற செயலின் தன்மை உருவான பின் இந்த உயிர் “நீ இதை அனுபவி…” என்று மாற்று உடலில் செலுத்திவிடுகின்றது.

இதை எல்லாம் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இன்று நாம் சாப்பிடும் உணவில் அரிசியும் பருப்பும் கலந்து உணவை உட்கொண்டால் சுவையாக இருக்கின்றது. ஆனால் அதிலே பருப்புடன் அரிசிக்குப் பதிலாகச் சோளத்தையும் கம்பையும் கேழ்வரகையும் சேர்த்துச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…?

உணவிலே சுவையைக் கூட்ட குழம்பு எல்லாவற்றையும் இணைத்துச் சாப்பிடுகின்றோம். ஆனால் அரிசி கம்பு சோளம் எல்லாவற்றையும் இணைத்துச் சாப்பிட்டால் சுவை வருமோ…?

ஒன்று சீக்கிரம் வேகும். ஒன்று காலதாமதமாகும். எல்லாவற்றையும் கலந்து விட்டு “நான் ருசியாக்கிவிடுவேன்…” என்று சொன்னால் ருசியாகுமா…? பகுதி வெந்திருக்கும் பகுதி வேகாதிருக்கும்.

சமைக்கும் பக்குவம் அறிந்து சமைத்தால் தான் ருசி வரும். வாழ்க்கையில் நாம் வழி அறிந்து செயல்படுதல் வேண்டும்.

1.ஆகவே இதையெல்லாம் வெளிப்படுத்துகின்றோம் என்றால்
2.அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பொக்கிஷமாக உங்களுக்குள் படைக்கின்றோம்.
3.இதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இது உதவும். காலம் வரும் பொழுது இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

செல்வத்தைத் தேடி வைத்திருந்தால் நோய் என்று வரும் பொழுது நோயைச் சீக்கிரம் விரட்டிவிடலாம். ஆனால் செல்வம் இருக்கும்போது தாரளமாகச் செலவழித்துவிட்டால் நோய் வந்தால் என்ன செய்வது…?

செல்வத்தைத் தேட வேண்டும் என்று பிறரை இம்சித்து அந்தச் செல்வத்தைத் தேடினாலும் செல்வத்தை எடுத்துச் சுவைக்கும் தன்மையும் இழந்துவிடுகின்றது.

இதையெல்லாம் நாம் சிந்தனை செய்தல் வேண்டும்.

1.இந்த மனித வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் ஒளி கொண்டு
2.நம் உடலையும் ஆன்மாவையும் அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

செல்வத்தைக் கொண்டு பல நறுமணங்களைப் பூசி என் உடல் சுத்தமாக இருக்கிறது என்றால் அது பிறருக்குத்தான் மணமாகும். நம் உடலுக்குள் “இருள்..” என்ற உணர்வு நோயாகும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபடுங்கள்.

விபத்து நடந்த இடத்திலேயே மீண்டும் விபத்து நடக்கக் காரணம் “அந்த இடமா…? அல்லது பதிவு செய்து கொண்ட நம் எண்ணமா…?”

 

கேள்வி:-
வாகனத்தில் செல்லும் போது ஒரே இடத்தில் இரண்டு தடவை விபத்தாகி விட்டது. கேட்டால் சாப அலைகள் அங்கே இயக்குகிறது என்று சொல்கிறார்கள்.

நானும் தியானம் செய்துவிட்டுத் தான் அந்த வழியாகச் செல்கிறேன். அந்தப் பாதையை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமா…? எதனால் அங்கே விபத்தானது…?

பதில்:-
1.இந்த இடத்தில் சாப அலைகள் உள்ளது… வாகனத்தில் சென்றால் அடிபடும்… என்று
2.மற்றவர்கள் சொன்ன உணர்வுகள் உங்களுக்குள் பதிந்திருக்கின்றது.
3.அந்த இடம் வந்தவுடன் சரியாக அவர்கள் சொன்ன நினைவு வருகின்றது… விபத்தாகிறது.

இது தான் அங்கே நடந்தது…!

காரணம்… அந்த அலைகள் உங்களுக்குள் இருக்கிறது. நினைவு வந்ததும் அதை இழுத்துக் கொண்டு வருகின்றது… விபத்தாகிறது.

ஆனால் மற்றவர்கள் சொன்ன உடனே ஆத்ம சுத்தி செய்து நீங்கள் மறைத்து விட்டால் அத்தகைய விபத்து நேராது.
1.பிறர் சொல்லும் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதியும் போது அந்த இடத்தில் போகும் போது டக்… என்று அந்த எண்ணம் வரும்.
2.அந்த சமயத்திலே பிரேக் இடாதபடி மற்ற வண்டிக்கு முன்னாடி உங்களை அழைத்துச் செல்கிறது
3.வண்டிக்காரன் வந்து அடிக்கவில்லை… நீங்கள் தான் சென்று விழுகிறீர்கள்.

காரணம் அதைப் போன்ற சந்தர்ப்பங்களில் நம்முடைய நினைவாற்றல் தான் அந்த வேலையைச் செய்கின்றது. ஒரு மனிதனுடைய உணர்வுகள் இப்படி எல்லாம் இயக்குகிறது… சந்தர்ப்பம் தான் இதெல்லாம்.

உதாரணமாக வீட்டில் கஷ்டம் என்றால் வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லிக் கொண்டு என்ன தான் வீட்டுச் சுவரை இடித்து மாற்றி வைத்தாலும் மீண்டும் அவன் சொன்ன “இடி…” தான் அங்கே வரும். குடும்பத்தில் மீண்டும் சங்கடங்களும் தொல்லைகளும் தான் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நாம் பதிவு செய்த உணர்வு மீண்டும் அந்த இடம் வந்ததும் ஞாபகம் வரும்

ஒரு பனை மரத்தில் பெரிய பூதம் இருந்தது. அதைப் பார்த்தேன்…! என்று வேண்டுமென்றே ஒருவர் வந்து சொல்லட்டும்.

எங்கப்பா…?

அங்கே அந்த ஒற்றைப் பனை மரம் இருக்கிறதல்லவா.. அது தான்…! என்று சொன்னால் போதும்.

அப்படீங்களா…! என்று பதிவாகி விட்டால் போதும்.

ஆனால் அங்கே பேயும் இல்லை பூதம் இல்லை.

இங்கிருந்து நடந்து போகும் போது… பூதம் இருக்கிறது என்று அவர் சொன்னாரே… “இந்த இடம்தான் தானே…!” என்று எண்ணினால் போதும். உடனே அந்த இடத்தில் பேயாகக் காட்சி கொடுக்கும்.

பார்க்கலாம்…
1.மனிதனுடைய உணர்வலைகள் அவன் பரப்பியது
2.அங்கே நாம் செல்லும் பொழுது அந்த இடத்தில் அதைக் குவித்துக் கொடுக்கும்
3.ரேடியோ டி.வி. அலைகள் மாதிரி தான் மனிதனுடைய உணர்வின் இயக்கங்கள்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை கொடுத்திருக்கின்றோம். அதை எடுத்துப் பயன்படுத்தி விட்டு “நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக இருக்க வேண்டும்…!” என்று எண்ணி அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆக மொத்தம் வாஸ்து சாஸ்திரம் நியுமராலஜி ஜாதகம் ஜோதிடம் என்று
1.கஷ்டம் வருகிறது… கஷ்டம் வருகிறது… எல்லோருமே கஷ்ட நஷ்டங்களைச் சொன்னால்
2.முதலில் கஷ்டத்தைத் தான் ஏற்றுக் கொள்கின்றோம்… அப்புறம் நன்மை எங்கே கிடைக்கும்…?

அதைக் கழிக்கச் சாங்கியம் செய்வதற்காகக் காசை செலவழித்து காசும் போனது தான் மிச்சம். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:-
சூரியனுக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் உண்டான ஒற்றுமை என்ன..? வேற்றுமை என்ன…?

பதில்:-
நம் உடலுக்குள் உயிர் சூரியன் தான். இதிலே (உடலிலே) ஒற்றுமையாக வரக்கூடிய உணர்வுகளை ஒளியாக்கப்படும் பொழுது ஒளி ஒன்றாகின்றது. ஆறாவது அறிவைத் தெளிவாக்குகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகிய உணர்வின் தன்மை ஒளியானபின் உயிரைப் போன்றே உடலில் உள்ள ஜீவ அணுக்களை மாற்றுவது தான் ஒளி… பிறவியில்லா நிலை… துருவ நட்சத்திரத்துடன் இணைகின்றது

சூரியன் நம்முடைய உடலைப் போன்றது தான்… அழியும் தன்மை பெற்றது… நிரந்தரமானதல்ல…! நம் உடல் எப்படி நிரந்தரமற்றதோ சூரியன் உடலும் நிரந்தரமற்றது தான்.

அதிலே விளைந்து உயிரணு தோன்றி எத்தனையோ உணர்வுகள் கடந்து உணர்வை ஒளியாக மாற்றியது நிரந்தரமானது. அது அழியாப் பேரருள் கொண்டது.
1.பிரபஞ்சத்தில் உருவானதுதான் அந்தத் துருவ நட்சத்திரம் (அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது) ஆனால் அது அழிவதில்லை.. சூரியன் அழியும்.
2.ஆறாவது அறிவினை அகஸ்தியனைப் போன்று நாமும் சீராகப் பயன்படுத்தினால்… ஏழாவது நிலையாக ஒளியாகின்றோம்.

அது தான் பிறவியில்லா நிலை என்று சொல்வது.

நம்முள் உள்ள பல உயிரணுக்களின் இயக்கத்திற்கு நாம் அடிமை ஆகிவிடக்கூடாது – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு உடலும் மாறுபட்டாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறப்பிலும் குழந்தை பருவம் முதல் தன்னைத்தானே உணர்ந்து வாழும் காலம் வரை நம்மை ஒருவர் வழிநடத்தித்தான் நாம் வாழும் காலம் வருகிறது.

1.அன்னை அன்னத்தை ஊட்டத்தான் செய்வாள்… அதை ஏற்று உண்ணுவது நாம் தான்
2.பள்ளியில் பாடத்தை உபாத்தியாயர் போதித்தாலும் அதை ஏற்று மதிப்பெண் பெறுவதும் நாம் தான்
3.நம்மை நாமே உணரும் காலம் வரும்வரை வழியைத்தான் நமக்குணர்த்துவர் பெரியோர்
4.ஏற்றுச் செயல்படுவது நம் செயலில்தான் உள்ளது.

ஒவ்வொரு ஜென்மத்திலும் மாறி நாம் வந்தாலும் முன் ஜென்மத்தின் நினைவு இஜ்ஜென்மத்தில் இருப்பதில்லை. முன் ஜென்மத்தின் தொடரின் அறிவுடன் தான் இஜ்ஜென்மத்தில் பிறக்கின்றோம்.

அவ்வறிவுடன் இஜ்ஜென்மத்தில் நாம் பிறந்ததின் பயனைக்கூட்டி வாழும் பக்குவத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்படும் நிலைக்கு நம்முள் உள்ள சக்தியை நாமேதான் செயல்படுத்தி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வாண்டவனும் வந்து நமக்கு அனைத்தையும் அருள்வதல்ல…!

தீய வழிக்குச் செல்பவனுக்கும் அவன் செல்லும் வழியிலேயே அவன் சக்தியை வளர்ப்பதனால் அத்தீய சக்தியே அவன் வழியில் கூடி மென்மேலும் அந்நிலையிலேயே செல்கின்றான்.

நல் உணர்வை வளரச் செய்தால் அந்நிலைதான் வளரும். ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலை அமைவதுவும் அவரவர்கள் அமைத்துக் கொண்ட நிலைதான்.

எவ்வெண்ணத்தில் நாம் உள்ளோமோ அவ்வெண்ணத்தின் வழித் தொடர்தான் நம்முடன் வளரும். வியாதியில் உள்ளவன் அவ்வெண்ணத்தையே வளர விட்டால் அவ்வெண்ணத்திற்கேப வளரும் நிலைதான் தொடர்ந்து வரும்.

ஒவ்வொரு வழி நிலையும் இதைப் போல்தான் வருகின்றது.

விஞ்ஞானத்தில் பல நிலைகளை அறிபவனும் அவன் எண்ணத்தின் வளர்ச்சிப்படிதான் அவன் வழி நடக்கிறது. ஆக எந்த ஒரு நிலையிலும் அவரவர்களின் எண்ண நிலையை வளரும் நிலைப்படுத்தி வளர விடுகின்றோமோ அந்நிலையில்தான் வாழ்க்கை நிலை அமைகிறது.

நம் எண்ணமுடன் இக்காற்றினில் கலந்துள்ள பல உயிரணுக்கள் நம் உயிரணுக்களுடனும் கலந்து விடுகின்றன. நாம் ஏற்ற ஒரே வழியில் செல்லும் பொழுது நம்முள் கலந்துள்ள அவ்வுயிரணுவும் நம்முடன் செயல்பட வருகிறது.

1.நம் எண்ண நிலையில் மாற்றம் வரும் பொழுது
2.நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத வழியில்
3.நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணுவின் எண்ணத்தை
4.நாம் வேறு எண்ணத்திற்குச் சென்றாலும்
5.நம்மைத் தடைப்படுத்துகிறது நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணு.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பல உயிரணுக்கள் ஏறித்தான் உள்ளன. நம் ஆத்மாவை நாமே ஆண்டு… நம்மை நாம் உணர்வது என்பதன் பொருள்…
1.நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல்
2.நம் ஆத்மாவின் வழியில் நமக்குகந்த சக்தி நிலையில் நாம் வாழும் நிலைப்படுத்தி
3.சீராக வாழும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நுகரும் உணர்வுக்கொப்ப உறுப்புகள் மாறி அதற்கொப்பத்தான் “நம் அடுத்த உடல்” என்பதை மெய்ஞானி அன்றே சொன்னான் – விஞ்ஞானிகள் மனித உருவையே மாற்றி இன்று அதை நிரூபித்துக் காட்டுகின்றனர்

விஞ்ஞான அறிவிலே பெண்ணை ஆணாக மாற்றுகின்றனர். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றனர்.

அதே மாதிரி பெண்கள் மீது அதிக மோகம் கொண்டவர்கள் இருந்தால் இந்த உணர்வுகள் மாற்றப்பட்டு அந்த உணர்வுகள் ஜெயித்தாலும் இந்த உடலுக்குப்பின் “எந்த ரூபம் பெற்றாலும்… பெண்ணாகத்தான் மாற்றும்”.

விஞ்ஞானிகள் இயற்கையில் இயற்கையில் மனித உடலில் உருவாக்கப்பட்ட தன்மையை எடுத்து அதை அமிலமாக மாற்றி இன்னொரு உடலிலே பாய்ச்சப்படும் பொழுது அந்த அமிலங்களைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

அப்பொழுது பெண் ஆணாகவே மாறுகின்றது. அதற்குத்தக்க உறுப்புகளை உருப்பெறச் செய்கிறார்கள். நரம்பு மண்டலங்களை இணைக்கின்றனர். இன்று விஞ்ஞானிகள் செய்கிறார்கள் அல்லவா…!

இதைப் போன்ற (பெண்களைப் பற்றிய) உணர்வுகளை அதிகமாக எடுத்தால் இன்று ஆணாக இருக்கலாம். நாளை பெண்ணாக இருப்போம்.

இதே உணர்வுகள் வரப்படும் பொழுது மற்ற உயிரினங்களைப் பார்க்கலாம். பெண்ணாகப் பிறக்கக்கூடிய ஆடு மாடு எல்லாம் எத்தனை அவஸ்தைப்படுகின்றது?

குழந்தையை ஈன்றெடுக்கும் பொழுது அவஸ்தைப்பட்டாலும் குழந்தை பிறந்த பின் பாசத்துடன் காக்கின்றது. பாசம் இருப்பதால் வேதனையை மறக்கின்றது.

தாய்க்கு வேதனை இருந்தாலும் பிள்ளை மேல் உள்ள பாசத்தால் தன் வேதனையை மறந்து “பிள்ளை சாப்பிட்டதா…” என்று எண்ணுகின்றது. தாயின் பாச உணர்வு இவ்வாறு செயல்படுத்துகின்றது.

இதைப் போலத்தான் நாம் நுகரக்கூடிய உணர்வுகள் உறுப்புக்களையே மாற்றக்கூடிய சக்தியாக வருகின்றது.

அப்பொழுது ஒருவனின் தீமை செய்யும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அணுக்களை மாற்றியவுடன்
1.உடல்களில் உறுப்புக்களை மாற்றிவிடுகின்றது.
2.உறுப்புகள் மாறியவுடன் அதற்கேற்ப எண்ணங்கள் மாறும். செயல் மாறுகின்றது.
3.வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது. இவ்வளவும் நடக்கின்றது.

நல்ல திடகாத்திரமாக இருப்பவர்கள் பலருடன் பழகப்படும் பொழுது சில உணர்வுகளை எடுத்தவுடன் இந்த அணுக்கள் மாற்றம் அடைந்த பின் “உறுப்புகளே சுருங்கிப் போய்விடுகின்றது… எண்ணங்கள் சுருங்கி விடுகின்றது”.

இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆகவே நம் உடலுக்குள் பிறரின் தீமை செய்யும் உணர்வுகள் புகாமல் தடுக்க வேண்டுமல்லவா…!

அதற்குத்தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தில் எந்த நிலையாக இருந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் தீமை நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

இல்லை என்றால் நம் உடலில் உள்ள கெட்ட அணுக்கள் சாப்பாடு அதிகம் எடுத்துவிடும். அதற்கு சக்திவாய்ந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் எடுத்து அதைத் தடைப்படுத்த வேண்டும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவின் ரூபத்தில் இதையெல்லாம் இன்று நிரூபித்துக் காட்டுகின்றனர்.

ஆனால் மெய் ஞானிகளோ
1.நாம் நுகரும் உணர்வுகளால் நம் உடலின் உணர்வின் மாற்றமும்
2.அடுத்த பிறவியின் ரூபங்கள் எப்படி மாறுகின்றது என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

மனிதனுடைய ஆணிவேர் அவன் எடுக்கும் சுவாசம் தான்…! – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுடல் பசிக்கு நாம் எப்படி உண்ணுகின்றோம்…?

பசித்ததும் புசிக்கின்றோம். புசித்த பிறகு அதன் நிலையை இவ்வுடல் ஏற்றதும் மறுபடியும் பசி வந்து புசிக்கும் பொழுது நாம் தான் புசித்து விட்டோமே இப்பொழுது எதற்காக…? என்று எண்ணுவதில்லை.

மறுபடியும் மறுபடியும் பசி வந்தால் புசித்துக் கொண்டே உள்ளோம்.
1.இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவு
2.நம் எண்ணப் பசியில் இருந்து வருவதுதான்
3.இவ்வெண்ணப்பசியே நாம் எடுக்கும் சுவாசநிலை கொண்டுதான் வருகின்றது.

இவ்வுடல் நாம் புசிக்கும் ஆகாரத்தை எந்நிலையில் ஏற்று வளர்கிறது…? நாம் உண்ணும் ஆகாரம் இவ்வுடலில் எத்தன்மையில் செயல்படுகின்றது…?

நாம் எண்ணுகின்றோம்…! நாம் உண்ணும் உணவெல்லாம் இவ்வுடலுக்குள் சென்று இரைப்பை ஏற்று அந்நிலையிலிருந்து சிறு குடல் பெருங்குடலுக்குச் சென்று ஜீரணித்து அந்நிலையிலிருந்து அவை இரத்தமாகவும் சிறு நீராகவும் மலமாகவும் பிரித்து இவ்வுடல் நிலை உள்ளதென்று…!

இவ்வுடலின் நிலை எந்நிலையில் உள்ளதென்று உணர்த்துகின்றோம் இப்பாட நிலையில். இதைப் படிப்பவரின் எண்ணத்தில் இதன் உண்மையினை அறிய வேண்டுமென்றால் (வினா எழுப்பினால்) இந்நிலையில் வந்து அவர்கள் கேட்டிடலாம். நாம் ஏற்கும் உணவு இவ்வுடல் எந்நிலையில் ஏற்கிறது…?

நாம் எந்த ஆகாரத்தை உண்ணும் பொழுதும்…
1.இக் கையான காந்த சக்தி கொண்ட ஈர்ப்பு நிலை கொண்ட இக்கையினால் நாம் எடுத்துப் புசிக்கும் பொழுதே
2.அவ்வாகாரம் நம் வாய்க்குச் செலுத்துவதற்கு முன் நம் சுவாசத்திற்கு அதன் மணம் ஈர்க்கின்றது.

ஈர்க்கும் நிலையில்… நம் உடலுக்குள் சென்ற அவ்வாகரமும் நம் வாயில் உள்ள பொழுதே… நம் சுவாசம் ஈர்த்த நிலையில் “நம் வாயிலிருந்து உமிழ் நீர் சுரக்கிறது…!”

அவ்வுமிழ்நீர் அவ்வாகாரத்தில் பட்டு…
1.அவ்வாகரத்திலுள்ள சத்தையும் சேர்த்து ஆவியாகி
2.அவ்வாவியே அமிலமாகி நம் உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சென்று
3.அவ்வாகாரத்திலுள்ள ஆவியான சத்துள்ள அமிலம் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

நாம் உண்ணும் உணவு எல்லாமே நம் சுவாசம் ஏற்றுத்தான் அவ்வுமிழ்நீர் என்னும் நீர் சுரந்து அதிலிருந்து செயல்படுவதுதான் இவ்வுடலமைப்பே…!

மரம்… செடி… கொடி… இவ்வுலகம்… இவ்வுலகைப்போல் பல உலகங்கள் எல்லாவற்றுக்குமே “ஆணிவேர்…” உண்டு. அதைப்போல் இம் மனிதனுக்கு எது ஆணிவேர்…? இம்மனிதனுக்கு மட்டுமல்ல மற்ற ஜெந்துகளுக்கும் எது ஆணிவேர்…?

1.இம்மனிதனின் ஆணிவேர் அவன் ஆத்மாவுமல்ல… அவன் உடலுமல்ல.
2.அவன் எடுக்கும் சுவாசம் தான்… இந்நாசி தான் மனிதனுக்கு ஆணிவேர்
3.இவ்வாணிவேரில் மாற்றம் வந்தால்… அனைத்து நிலையுமே மனிதனுக்கு மாற்றம்தான்.

எடுக்கும் சுவாச நிலைகொண்டு அவ்வெண்ணத்தில் எண்ணுவதின் நிலை கொண்டுதான் அவன் உடல் நிலையே உள்ளது.., வாழ்க்கை நிலையும்தான்…!

உடல் பசிக்கு உண்டதை நினைத்திடாமல் “பசி வரும் பொழுதெல்லாம் எப்படி உண்ணுகின்றோமோ…” அதைப்போல்
1.இவ்வெண்ணத்தை நடத்தவற்றை நினைவு கூர்ந்தே பின் நோக்கிச் செலுத்திடாமல்
2.இவ்வெண்ணப் பசியை நடப்பவற்றைச் செயலாக்கும் நிலையிலேயே நல் நிலைப்படுத்தி வாழுங்கள்.

பசிக்கும் பொழுது புசிக்கும் நிறைவைப் போல் எப்படிப் பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம்.

அதாவது இப்பொழுது பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலையை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம்.
1.இப்பொழுது பசிக்கும் பொழுது இப்பொழுதே சாப்பிடாமல்…
2.பிறகு வரும் பசிக்கு என்ன செய்வது…? என்று இவ்வுடல் எண்ணுவதில்லை.

அதைப்போல் நடந்தவற்றையும் நடக்கப் போவதையும் கனவான கற்பனைப்படுத்தி கால நிலையை விரயம் செய்திடாமல்… ஆண்டவன் தந்த கால நிலையில் இவ்வுடல் என்னும் பொக்கிஷத்தை உயர்ந்த தெய்வமான இவ்வாத்மாவின் செயலினால் இக்காலத்தை விரயமாக்கிடாமல்…
1.ஒவ்வொரு நொடியையும் அத்தெய்வத்தின் சேவகனாய் நம் எண்ணத்தைச் செயல்படுத்தி
2.தெய்வமுடன் தெய்வமாக… தெய்வீக வாழ்க்கையில் தேவனாய் வாழ்கின்றோம்…! என்ற நிலைப்படுத்தி ஒவ்வொருவரும் வாழ்ந்திடுங்கள்.

இக்காற்றினில்தான் அனைத்து சக்தியும் கலந்துள்ளன. அனைத்து சக்திகளின் கலவைதான் நம் உடலும்.

இவ்வுடலின் உண்மை மகத்துவத்தை உணர்ந்து… நாமும் தெய்வத்துடன் தெய்வமாக சூட்சுமம் கொண்டு வாழ்பவர்களுடன் “இவ்வுடலில் நாம் உள்ள நிலையிலேயே கலந்து வாழ்வதற்குத்தான்…” இப்பாட நிலையின் உண்மை நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“நோய் நீக்கும் பயிற்சி…!”

நம் வாழ்க்கையில் நம்மை அறியாது எத்தனையோ வகையான வேதனைப்பட்டிருப்போம் சங்கடப்பட்டிருப்போம்.

அதிகமாக “வேதனை…வேதனை…” என்று வாழ்க்கையில் எண்ணிக் கொண்டிருந்தால் அது நம் உடலில் கேன்சர் நோயாக மாறுகின்றது.

“வேதனை…சலிப்பு வேதனை…சலிப்பு…” என்று எண்ணிக் கொண்டிருந்தால் வாத நோய்கள் உருவாகிக் கை கால்கள் வராது ஆக்கிவிடுகின்றது.

“வேதனை…வேதனை என்று கோபமும்…கடு…கடுத்த நிலையும்…” கொண்டு வாழ்ந்தால் முடக்கு வாதம் கீழ் வாதம் சரவாங்கி நோய் போன்றவைகள் வந்துவிடுகின்றது.

“வேதனையும் அதிக சலிப்பும்…” எடுத்தால் உப்புச் சத்து கூடுகின்றது. டி.பி. போன்ற நோய்கள் உருவாகிவிடுகின்றது.

அடிக்கடி “சலிப்பு…சலிப்பு சஞ்சலம்…” என்று எடுத்தால் ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரக் காரணமாகிவிடுகின்றது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று பண்பும் அன்பும் கொண்டு பரிவுடன் கேட்டறிந்தாலும் நம்மை அறியாது நுகர்ந்தறிந்த அவர்கள் வேதனைகளை நம் உயிர் ஓ…ம் நமசிவாய என்று உருவாக்கிவிடுகின்றது.

அவர் உடலில் விளைந்த நோய்களை நம் உடலிலும் உருவாக்கத் தொடங்கிவிடுகின்றது. இதைப் போன்று நம் உடலில் பலவிதமான உணர்வுகள் கலவையாகி ஒவ்வொரு உடலிலும் பலவிதமான நோய்களை உருவாக்கும் அணுக்களை உருவாக்கிவிடுகின்றது.

ஆகவே இதற்கு முன் நம் உடலில் அறியாது சேர்த்துக் கொண்ட நிலைகளால் நம் உடலில் அந்த அணுக்களின் பெருக்கமாகி எத்தனையோ வகையான நோய்கள் உண்டு.

மகரிஷிகளின் அருள் ஆற்றலைப் பெற்று அறியாமல் வந்த இதைப் போன்ற நோய்களிலிருந்து நாம் விடுபட முடியும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும்
1.எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்று
2.எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த சாப வினைகளால் தீய வினைகளால் விளைந்த சர்வ நோய்களும் சர்வ ரோகங்களும் நீங்கி சர்வ ரோகங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற்று
3.எங்கள் உடல் நலம் பெற்று வளம் பெற்று வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி
4.புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி அந்தப் பேரருளை உங்கள் உடலுக்குள் செலுத்தி
5.பேரொளி என்ற நிலை உருப்பெறத் தியானியுங்கள்.

இப்படி எடுக்கும் இந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகள் உங்கள் இரத்தங்களில் அணுக்கருக்களாகி விளையத் தொடங்கும் பொழுது நோயின் வீரியம் குறையும். உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்கள் உற்சாகம் அடையும்.

நல்ல அணுக்கள் பெருகப் பெருக நோயை அகற்றிடும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள். உங்கள் உடலில் நல்ல இரத்தங்கள் உருவாகும். கணையங்கள் இருதயம் சிறுநீரகம் மற்ற எல்லா உறுப்புகளும் சீராக இயங்கத் தொடங்கும்.

சலிப்பு சஞ்சலம் வேதனை கோபம் சோர்வு ஆத்திரம் பயம் இதைப் போன்ற உணர்வுகளால் விளைந்த நஞ்சான நிலைகளை அகற்றிடும் சக்திவாய்ந்த உறுப்புகளாக மாறும்.

அதே சமயத்தில் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமையானவற்றைக் காணுகின்றீர்களோ நுகர்கின்றீர்களோ அடுத்த கணம் அது உடலுக்குள் சேராவண்ணம் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டால் எத்தகைய நோயாக இருந்தாலும் கட்டுப்படுத்த முடியும். நோய் வராது தடுக்கவும் முடியும்.
1.உங்கள் எண்ணத்தால் வந்த நோய்களை
2.உங்கள் எண்ணத்தாலேயே மாற்றியமைக்க முடியும்.

“தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்…” தெரிந்தும் நாம் தவறு செய்யக்கூடாது.

 

யாராக இருந்தாலும் மற்றவருடன் நாம் ஒத்துழைத்து… “நம்முடைய தத்துவத்தை” இணைந்து அவரிடத்தில் சொல்லும் போதுதான் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அங்கே வரும்.

1.இல்லை… இல்லை… நாங்கள் இந்தத் தியானத்தின் வழியில் மிகப் பெரிய சக்தி பெற்றிருக்கின்றோம்
2.இப்படிச் செய்தால் மட்டும் தான் நன்றாக இருக்கும்…! என்று சொன்னால்
3.நம் காரியங்கள் அத்தனையுமே அது தடைப்படுத்தும்
4.நீங்கள் நல்லதை எடுத்து யாருக்கும் சொல்லவும் முடியாது… அதை வளர்க்கவும் முடியாது.

எது எதிலே பழக்கத்தில் இருக்கின்றோமோ அந்தப் பழக்க உணர்வு தான் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதைத் தெரிய வைக்க வேண்டியது… தெளிவாக்க வேண்டியது… நம்முடைய கடமைகளாக இருக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நமது தான் உயர்ந்தது என்று நாம் சொல்லப்படும்போது
2.அடுத்தவர்கள் “அவர்களது உயர்ந்தது என்று என்று தான் சொல்வார்கள்…!”

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நம்மிடம் இந்தப் பிடிவாதம் இருக்கக்கூடாது.

மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு… நம்முடைய தத்துவத்தை அவர் உடலில் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவ நிலைக்கு அதை உருவாக்க வேண்டுமே தவிர…
1.நாம் பிடிவாதமாக இருந்து வெறுக்கும் தன்மைக்குக் கொண்டு வந்து விடக்கூடாது.
2.எப்பொழுது பார்த்தாலும்… “என்னமோ சாமியார் என்கிறார்கள்…
3.அதைப் பண்ணுகிறேன்… இதைச் செய்கிறேன்… என்று என்னென்னமோ வேலை செய்கின்றார்கள்…! என்ற நிலைக்குச் செல்ல விடக்கூடாது.

வீட்டில் நடக்கும் சில நிலைகளுக்குச் சாங்கியங்களும் சடங்குகளையும் செய்வார்கள். உதாரணமாக உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்த பிற்பாடு என்ன செய்வார்கள்…?

காக்காய்க்கு நாங்கள் சோறு வைக்கின்றோம்… பித்ருக்களுக்குச் சாப்பாடு கொடுத்துக் கூப்பிடுகிறோம்… என்று சொன்னாலும் “அவர்கள் இஷ்டத்திற்கு” விட்டு விட வேண்டும்.

நாம் முறைப்படி தியானம் இருந்து அந்த உடலை விட்டு பிரிந்த அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

நாம் கூட்டுத் தியானமிருந்து அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

இதை… அவர்களிடம் சொல்லப்படும்போது…
1.இந்த ஆன்மா எப்படி விண்ணுக்குப் போகிறது என்று பாருங்கள்…! என்று சொல்லிக் கொஞ்சம் தூண்டி விட்டால்
2.அந்த ஆர்வம் அவர்களுக்குள் வரும்… ஏற்றுக் கொள்ளும் பருவங்களும் வரும்.
3.அப்போது அந்த ஆன்மா விண்ணுக்குச் செல்வதை அவர்களும் பார்க்க நேரும்.

ஆக… ஒரு பழக்கத்தில் இருக்கிறோம் என்றால் அதைப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டும் என்றால்
1.எவ்வளவு நல்லதாக இருந்தாலும்…
2.அந்தப் பழக்கத்தை மாற்றுவது எளிதானது அல்ல.

கேரளாவில் மொக்கை அரிசி சாப்பிடுகிறார்கள். இந்த அரிசியைப் பார்த்து இதை யார் சாப்பிடுவார்கள்…? என்று நாம் சொல்கின்றோம்.

இங்கே சன்ன ரகமான பொன்னி அரிசியை நாம் சாப்பிடுவதைப் பார்த்து இந்த அரிசியை யார் சாப்பிடுவது…? என்று அவர்கள் சொல்கிறார்கள். அவரவர்கள் ருசி தான் அவரவர்களுக்கு வரும்

ஆகவே எப்போதுமே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மற்றவர்களை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.அவர்களை உயர்த்தினால் தான் நமது சொற்களை அங்கு ஏற்கும் பருவம் கிடைக்கும்.
2.இல்லை என்னுடையது தான் உயர்ந்தது..! என்று சொன்னால் நமது உணர்வை அவர்கள் தாழ்த்தித் காட்டுவார்கள்.

நமது தத்துவங்களை அவர்களை அணுகிப் போய்த்தான் சொல்ல முடியுமே தவிர
1.கட்டாயப்படுத்தி யாருக்கும் திணிக்க முடியாது
2.கட்டாயப்படுத்திச் சொல்வதோ… இது தான் மிகவும் நல்லது என்று வலியுறுத்தினாலோ
4.நம் மீது வெறுப்பு தான் வரும்.

அந்த வெறுப்பை எடுக்க விடாதபடி… நாம் அவர்களைப் பக்குவப்படுத்தி நம்முடைய நிலைகளைப் படிப்படியாக அங்கு சொல்லி மாற்றி… “அவர்களை உணரும்படி செய்வது தான்…” நம்முடைய கடமையாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் உடலில் இயக்குவது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்…! அவரின் எதிர் நிலையான அழுத்தங்கள் நாம் எவ்வளவு தான் உண்மையைச் சொன்னாலும் வெறுக்கும் தன்மை தான் வரும்.

ஆகையினால் இதைப் போன்ற பழக்கத்தை எல்லாம் நாம் மாற்றி
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலைக்கு
2.அந்தப் பக்குவ நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

சூரிய (வெப்ப) சக்தியை அபரிதமாகப் பிரித்தெடுப்பதால் காற்றிலே விஷத் தன்மைகள் அதிகரிக்கிறது – ஈஸ்வரபட்டர்

சூரியனின் அணு சக்தியில்லாமல் இவ்வுலகில் உள்ள எந்தச் சக்தியும் இயங்கிட முடியாது. சூரியனிலிருந்து இப்பூமிக்கு வந்து படரும் சக்தியைக் கொண்டுதான் அனைத்து சக்தியுமே இன்று இயங்குகின்றன.

அதன் தொடரில் இருந்துதான் இன்றைய மனிதனால் செயலாக்கிய பல மின் அணுக்கதிர்களின் செயல் எல்லாமே.

1.இக்காற்றுடன் கலந்துள்ள சூரியனின் அணு சக்தியை
2.இன்று மனிதன் தன் செயற்கையின் நிலைக்காகப் பல அணுக்கதிர்களைப் பிரித்து எடுப்பதினால்
3.இக்காற்று மண்டலமே கடும் விஷமாகச் சுற்றிக் கொண்டுள்ளது.

மின்சாரம் எடுப்பதற்காக இக்காற்றில் கலந்துள்ள காந்த சக்திகளை ஈர்த்து எடுக்கின்றான். அதைப் போல் பல நிலைகளுக்காக இவ்வணு சக்திகளை காற்றிலிருந்து ஈர்த்து எடுக்கின்றார்கள்.

இன்றைய மனிதன் வாழ்வதற்குத் தானாகச் சூரியனில் இருந்து வரும் அணுப் பிளம்புகளைத் தன்னுள்ளேயே அச்சக்திதனைப் பெறும் வாய்ப்பினை இன்று வாழும் மனிதனே அதனைச் செயற்கை நிலைப்படுத்தி வாழப் பழகிக் கொண்டான்.

இனியும் அச்சூரியனின் சக்தியிலிருந்து மேன்மேலும் பல செயற்கை நிலைக்காக ஈர்த்தெடுத்து விஞ்ஞானம் கண்டே வாழ்ந்திட்டால் விஞ்ஞானத்தைத் தாங்கும் நிலை மெய் ஞானம் கொண்ட இப்பூமியினால் முடிந்திடாதப்பா.

காற்றையே கடும் விஷமாக்கி விட்டான் சக்தியின் சக்தி பெற்ற இன்று வாழும் இம்மனிதன்.

1.இவன் செய்த இவ்வினையினால் வருவதுதான் புதிய புதிய வியாதிகள்
2.இப்புதிய புதிய வியாதிகளுக்கு அதன் சக்திக்கும் மேம்பட்ட சக்தியைக் கொண்ட மருந்தையும்
3.இவன் சக்தி கொண்டு புதிய புதிய நிலைப்படுத்தித்தான் இவன் மருத்துவத்தில் இவனே கொண்டுவர வேண்டும்.

இன்று நாம் பெறும் சுவாசமே விஷ நிலைக்கொண்ட காற்றாக உள்ள பொழுது புதிய புதிய வியாதிகள் நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

மனிதனை மனிதனே அழித்து வாழும் நிலையில்தான் இன்றுள்ளார்கள் மனிதர்கள் எல்லாருமே.

ஆனால் இயற்கையுடன் கலந்து இயற்கையையே தெய்வமாகப் போற்றி இயற்கை அன்னைக்குச் சக்தி தந்த அச்சூரியனை தேவனாக்கி தெய்வமாக வாழ்ந்தார்கள் அன்று பல மக்கள்.

இன்று வாழும் நிலை எல்லாமே எப்படி இருக்கிறது என்றால்…
1.செயற்கைக்கு ஏங்கும்…
2.செயற்கையான மனமுடைய…
3.செயற்கையுடன் ஒன்றிய
4.செல்வந்த வாழ்க்கைதான் செழித்த வாழ்க்கை என்ற மன நிலையிலேயே
5.இவ்வுலகமே தன்னைத்தானே விஷமாக்கி
6.இவ்வுலகையும் விஷமாக்கிச் சுழன்று கொண்டே உள்ளார்கள்

இச்சுழற்சியிலிருந்து தப்புவதற்கு எந்நிலையும் யாரும் நாடவில்லை. காலத்துடன் வழிப்படுத்தி வந்த வினை இன்றுள்ள வினை.

இதிலிருந்து மீளும் நிலையை ஏற்க வருபவர்க்கு நம் தியான நிலையின் மகத்துவ நிலை புரியும். இவ்வுலகில் படர்ந்துள்ள பல உண்மை சக்தியினையும் புரிந்துணர்ந்து வாழ்ந்திட முடியும்.

1.நல்லுணர்வைப் புகட்டுகின்றோம்
2.புகட்டத்தான் நம் சக்தியில் சக்தியுண்டு.

அவரவர்கள் ஏற்கும் நிலைகொண்டு தான் அவரவர்களுக்கும் அச்சக்தி நிலை பெறும் பாக்கியமும் உண்டு.

1.அச்சக்தியினை ஏற்போர்க்கும் வழி நடத்தி வந்திடுவோம்
2.எண்ண நிலையை மாற்றுவோருக்கு நல்நிலை பெற்றிட நமக்குச் சக்தி தந்த அச்சக்தி தேவனையே வணங்கி
3.அவர்கள் நிலையை நல் சக்தியாக்கிட நாமும் வணங்கிடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் “கோடி…கோடி கோடி…கோடி கோடி…” என்றார்.

ஏன் சாமி கோடி கோடி கோடி… கோடி ஏட உந்தி…? என்று (தெலுங்கிலே) கேட்பேன். கோடி என்றால் தெலுங்கிலே கோழி என்று நான் சொல்வேன்.

“டேய்… கோடி கோடி… காரம் கோடி… புளிப்பு கோடி… கசப்பு கோடி… அந்தக் கோடி… இந்தக் கோடி…” என்று அவர் சொல்லிக் கொண்டிருப்பார்.
1.வான்வீதியில் பல கோடி உணர்வுகள் சேர்த்து
2.ஒரு உணர்வின் தன்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை அப்படிச் சொல்கிறார்.

இப்படி அங்கே சேரும் உணர்வுகள் பல கோடி கோடி… கோடி கோடியாக… நமக்குள் உணர்வுகள் சேர்க்கப்பட்டு
1.ஒரு உணர்வின் தன்மை அணுவின் இயக்க நிலையாக
2.இந்த உணர்வுகள் “இயக்கும் தன்மை எவ்வாறு பிறக்கிறது…?” என்று உணர்த்துகின்றார்.

கோடி கோடி கோடி கோடி என்று சொல்லிவிட்டு “டம்..ம்ம்..” என்று எம்மை அடிப்பார்.

அடித்தவுடன் என்னுடைய நினைவெல்லாம்… வான் வீதியில் செல்லும்.

ஒவ்வொரு கோள்களும் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி எப்படிக் கலவையாகின்றது…? அணுக்களின் தன்மை மாற்றமாகி மற்ற கோள்களுக்குப் போகும் பொழுது இந்த உணர்வின் நிலைகள் மாறுகிறது.

இவை எல்லாம் கடந்து நம் பூமிக்குள் வந்த பின் கல் மண் மற்ற உலோகங்களையும் எப்படி உருவாக்குகிறது…? என்பதைத் தெளிவாக்குகின்றார்.

இப்படி… புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளிலிருந்து நாம் விடுபடும் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து எத்தனையோ உடல்களைப் பெற்றோம்.

நம்மைக் காட்டிலும் வலிமையான உடல்களைப் பார்க்கின்றோம். அதிலிருந்து தப்பிக்கும் உணர்வைக் கூட்டுகின்றோம். தப்பமுடியவில்லை எனும் பொழுது அது நம்மைக் கொல்கிறது என்ற அறிவின் தன்மை அந்த உயிர் உருவாக்குகின்றது.

அந்த உணர்வின் தன்மை அடைந்த பின் கொன்று அதற்குள் இரையானாலும் அந்த உணர்வின் தன்மை இந்த (நம்) உயிரிலே கலந்துதான் செல்லும்.

இப்படிப் பலவற்றிலும் உயிர் “ஓ…” என்று இயங்கினாலும் “ஓமுக்குள் ஓ…ம்… “ஓமுக்குள் ஓ…ம்…”
1. நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அணுவிலும்
2.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அடுக்கடுக்காக அடுக்கடுக்காக
3.ஒன்றுக்குள் ஒன்று… ஒன்றுக்குள் ஒன்று… ஒன்றுக்குள் ஒன்றாக… கலவையாகி
4.அதாவது ஒரு குழம்பு வைக்கும் போது எப்படிச் சுவைகள் மாற்றமாகின்றதோ அதைப் போல
5.நமக்குள் உணர்வுகள் மாற்றமாகி மாற்றமாகி உணர்வின் ஒலிகளை அமைத்து
6.அந்த உணர்வின் தன்மை ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.

அதைத்தான் “ஓமுக்குள் ஓ…ம்…” “ஓமுக்குள் ஓ…ம்” என்று தெளிவான நிலைகளைக் குருநாதர் காட்டுகின்றார்.

நம் உடலிலுள்ள அணுக்கள் நாம் எத்தனை வகையான உடல்களில் சேர்த்தோமோ அவை எல்லாம் நம் சந்தர்ப்பத்தால் எடுத்தால் “ஓமுக்குள் ஓ…ம்…, என்று அந்த உணர்வின் இயக்கமாகி அதனதன் உணர்வைப் பிரித்து எடுத்துக் கொள்ளும்.

வேம்பும் ரோஜாப்பூவும் விஷச் செடியும் மூன்றும் கலந்து கருவேப்பிலையாக மாறுகிறது என்றால் அந்த உணர்வின் மணத்திற்கொப்ப இதிலே கசப்பும் இருக்கின்றது… துவர்ப்பும் இருக்கின்றது… நறுமணமும் இருக்கின்றது… அரிப்பும் இருக்கின்றது.

அதனின் உணர்வுகள் மாறுவது போல சுவைகள் மாறுவது போல் நம் உடலில் உள்ள அணுக்களும் இதே போல ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு ஒவ்வொரு அணுக்களும் நாம் எத்தனை கோடிச் சரீரங்களைப் பெற்றோமோ இதெல்லாம் உள்ளடங்கிவிடும்.

பிறகு மேலெழுந்தவாரியாக மாற்றும் நிலைகள் கொண்டு இதைக் கணங்களுக்கு அதிபதியாகி அடக்கி அதன் உணர்வின் தன்மை கொண்டு நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. இதே போல
1.நாம் எடுத்துக் கொண்ட இந்தக் கணக்கின் தன்மை கூடியபின்
2.உடல்களை மாற்றும்.
3.உணர்வுகளை மாற்றும்
4.எண்ணங்களை மாற்றும்
5.ஒலிகளை மாற்றும் நிலைகளும் மாறுகின்றது.

இவை எல்லாம் இந்த இயற்கையின் சில நியதிகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குருபீடம்

 

உங்கள் உயிரைத்தான் எண்ண வேண்டுமே தவிர சாமியின் (ஞானகுரு) உயிரை எண்ணுவதால் பலனில்லை.

சாமி உயிரால் உருவாக்கப்பட்ட அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை இங்கே பரவியிருக்கப் படும்போது நீங்கள் நுகர்ந்தால் அது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வைத் தான்
2.அவர் வழியில் எல்லோரும் ஏகமாக எண்ணி
3.அவரின் அருள் உணர்வுகளை இங்கே தபோவனத்தில் பரப்பச் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் சில சிக்கல்கள் வந்தால் அதை நிவர்த்திக்க உங்களுக்கு வழிகாட்டியான முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்.

ஞானகுரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தபோவனத்தை எண்ண வேண்டும்.

காரணம்…
1.நாம் எல்லோரும் தவம் இருந்த அந்த உணர்வலைகள் அங்கே உண்டு…!
2.அது மிகவும் வலிமை மிக்கது… சக்தி வாய்ந்தது.

தபோவனத்தை எண்ணி குரு அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை எளிதில் பெற முடியும். அதைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.

ஆனால் நமது ஆசை…
1.நல்ல உணர்வைக் கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்
2.நல்லது செயல்படுத்தக்கூடிய அந்த இச்சையை நாம் பெற வேண்டும்.

அதன் வழியில் நாம் பெற்று இயங்கினோம் என்றால் உங்களுக்குக் கிடைக்கும்.

எந்தத் திசையில் நீங்கள் எங்கே இருந்தாலும் தபோவனத்தை எண்ணி…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கினால்
2.மிகவும் எளிதாகக் கிடைக்கும்… வலிமை மிக்க சக்தியாகவும் இருக்கும்.

அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய எண்ணங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதாக இருக்க வேண்டும்.

தபோவனத்தில் எல்லோருடைய அருள் உணர்வுகளும் பரப்பப்பட்டுள்ளது. குரு அருள் துணை கொண்டு தான் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது பூமி முழுவதும் அந்தச் சக்தி பரவுகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எங்கிருந்து நீங்கள் எண்ணினாலும் அந்த அருள் உணர்வுகளைப் பெற முடியும்
1.ஏனென்றால் அவர் உணர்வைப் பெற்றுத் தான் நான் (ஞானகுரு) ஆனது.
2.அவர் உணர்வை எடுத்துத்தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றோம்.
3.ஒளியின் உடலாக இருக்கும் குருவின் உணர்வை எளிதில் பெற முடியும்.

ஆகவே அவர் காட்டிய அருள் வழியில் குரு பெயரை வைத்துத்தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்…” என்று வைத்தது. அவர் உணர்வுகளை எனக்குள் விளைய வைத்து விளைந்த அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

1.ஞானகுரு கூறிய உணர்வுப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவேன் என்றால்
3.அந்த முறைப்படி… அந்த நெறிப்படி… அந்தச் சக்திகளை நாம் பெறுகின்றோம்.

குருநாதர் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியாக இருக்கின்றார். அவர் உடலோடு இருக்கக்கூடிய காலங்களில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் பதிவானதால்… அதை உங்கள் எல்லோர் உணர்வுகளிலும் பதியச் செய்து… ஒருக்கிணைந்த அந்த உணர்வின் தன்மைகளை அலைகளாக இங்கே தபோவனத்தில் பரப்பி வைத்திருப்பதால் எளிதில் பெற முடியும்.

சாமி செய்து கொடுப்பார் என்றால்…
1.அந்தக் குருவின் (ஈஸ்வராய குருதேவர்) அருளை நமக்கு வழிகாட்டினார் என்று
2.இந்த ஞானத்தின் வழியில் உங்களுக்குள் பதிவாக்கப்படும்போது
3.இதுவே உங்களுக்குள் அந்தக் குருவாக இருந்து
4.ஞான வழியாக அந்த உணர்வின் தன்மை உங்களை வழிநடத்தும்.
5.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியையும் ஊட்டும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களைக் கலிக்கு முன் வெளிப்படுத்தும் சித்தன் – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமி சுற்றுவதைக் காட்டிலும் சூரியன் சுழலும் வேகம் அதிகப்படுகிறது. இன்று இப்பூமியின் ஈர்ப்புத் தன்மைக்கு மேல் சூரியனின் ஈர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகமாக உள்ளது. அது ஈர்த்து வெளியிடும் நிலையும் அதே நிலைக்குகந்த துரித நிலையில் உள்ளது.

பல சூரியன்களின் தொடர்பு கொண்ட நம் சூரியன் நாம் காணும் சூரியனின் சக்தி மிகவும் வலுப்பெற்ற சக்தி. சூரியனின் பூமி நிலை குளிர்ந்த நிலை. இப்பூமியில் பிறவி எடுத்து இப்பூமியிலிருந்து சூட்சும நிலைக்கு சென்ற பலர் இருந்து செயல்படுத்தும் கோயில்தான் நம் சூரியன்.

இப்பூமியில் உதித்த உயிரணுக்கள் மற்ற மண்டலங்களில் வாழ்ந்திட முடியாது. சுவாச நிலை மாறுபடும் பொழுது அம்மண்டலத்தின் உந்தலினால் இம்மண்டலத்திற்கே உந்தப்பட்டு வருவார்கள் என்று உணர்த்தினேன்.

சூட்சும நிலைக்குச் செல்பவர்கள் பல மண்டலங்களிலும் இருந்து செயல்படுத்துகிறார்கள். இப்பூமியிலும் பிற மண்டலத்தில் உதித்து வாழ்ந்தவர்கள் சூட்சும நிலை பெற்றே இம்மண்டலத்திலும் (பூமி) சில நிலைகளைச் செய்கிறார்கள்.

வான சாஸ்திரம் என்று அறியப் பல நிலைகளைச் செய்கிறார்கள்.
1.அன்றே இப்பூமியும் மற்ற பூமிகளின் நிலையையும் என்றாவது ஒரு நாள் வெளிப்படுத்தும் நிலையில்
2.பல சித்தர்கள் ஒன்றுபட்டு இப்பூமியிலேயே அக்காலப் பெட்டகத்தைப் பதித்து வைத்துள்ளார்கள்.
3.இக்கலி மாறுவதற்குள் அந்நிலை வெளிப்படும்.
4.அந்நிலையை வெளிப்படுத்திட இக்கலியில் வந்து பல சித்தர்களினால் உருவப்படுத்தி ஜீவன் தந்த ஓர் உயிரணு
4.ஒரு தாயின் வயிற்றியிலேயே பிறந்து வந்துள்ளது
5.அவன் வெளிப்படுத்துவான் சூட்சும நிலையில் உள்ள பல சித்தர்களை என்றேன்…
6.சூட்சும நிலைக்குச் சென்ற பெரியோர்கள் என்றும் உணர்த்துகிறேன்.

அச் சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் தனித்த நிலையில் யாரும் இயங்குவதில்லை. அவர்களின் சக்தியை எல்லாம் ஒன்றாக்கி அச்சப்தரிஷிகளின் நிலையிலிருந்து செயல்படும் தன்மைக்கு வருகிறார்கள்.

மனிதர்களின் குண நிலை மாறுபட்ட குண நிலைகள். சூட்சுமத்தில் உள்ளோரின் குண நிலைகளோ ஒன்றுப்பட்ட நிலை.

இன்று சிறு தேவதைகள்… பெரும் தேவதைகள் என்று மாறுபட்டுப் பிரித்துச் சொல்கிறார்கள் புராணக் கதைகள் மூலமாக. இச்சிறு தேவதைகளின் நிலை துர் ஆவிகளின் நிலையில் இருந்து மாறுபட்ட அன்பு கொண்ட ஆத்மாக்கள்.

இவ்வுலகின் ஆசையுடன் இவ்வுலகில் உள்ளோரின் எண்ணமுடன் கலந்து தன்னையே ஆண்டவனாக ஏற்கும் நிலைப்படுத்திச் செய்து வரும் நிலை.

சூட்சுமத்திற்குச் சென்று அச்சகல தேவர்களின் தேவனாக இயங்கும் அச்சூரிய தேவனிடம் செல்லும் நிலைக்குப் பக்குவப்படாத நிலையிலேயே உள்ள நிலைதான் சித்து நிலையுடன் கலந்து உறவாடும் நிலை.

சூரிய தேவன் என்றேனல்லவா…? அனைத்துச் சித்தர்களும் முனிவர்கள் ரிஷிகள் சப்தரிஷிகள் அனைவரும் ஒன்றுபட்டு அச்சக்தியின் சக்தியான அச்சூரியனில் ஒன்று கலந்து அச்சூரியனின் நிலையிலிருந்துதான் எல்லாச் செயல்களுமே இன்று செயல்படுத்துகின்றனர்.

இன்று அச்சூரிய தேவன் இல்லா விட்டால் எவ்வுலகமும் இல்லை. நம் சூரியனைப்போல் சக்தி கொண்ட பல சூரியன்கள் இருந்தாலும் அனைத்து சூட்சும சக்தியிலுள்ள தேவர்கள் கலக்கும் நிலை நம் சூரியன் தான்.

1.இவ்வுடலில் உள்ள போதே அனைத்து நிலையையும் அறியும் பக்குவத்திற்கு உங்களைச் செயல்படுத்திடத்தான்
2.பல சக்திகளைக் கொண்ட சூட்சும நிலையில் உள்ளவர்களின் நிலையை ஒன்றுபடுத்தியே
3.இந்நிலையை இங்கு வெளிப்படுத்துகின்றோம்

சக்தியின் சக்தி பெற்ற இம் மனித ஜென்மத்தில் வாழும் பாக்கியத்தைப் பெற்ற சக்திகளே…!
1.உங்களின் சக்தியை அனைத்து சக்திகளுடன் ஒன்றுபட்டு
2.அனைத்து மண்டலங்களின் நிலையையும் உம் சக்திகளில் இருந்தே ஈர்த்து அறியும் பக்குவத்திற்கு
3.உம் சக்தியின் செல்வத்தைச் சக்தியாக்கி வாழுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதங்கள் என்றாலே “நாதங்கள்…” என்று பொருள். உணர்வின் ஒலிகள் – அந்த ஒலிகளின் உணர்வுக்கொப்ப ரூபங்கள் அடைந்தது என்பதைத் தான் அங்கே காட்டுகின்றார்கள்.

அது தான் சைவ சித்தாந்தம்.

1.சைவம் என்பது தாவர இனங்கள்.
2.அசைவில்லாத நிலைகள் கொண்டது.
3.அதை உயிரணு நுகரப்படும் பொழுது வேதாந்தம் என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

இயக்க உணர்வின் தன்மை கொண்டு
1.ஒலிகளால் உணர்வுகள் வளர்வதும்
2.உணர்ச்சிக்கொப்ப அந்த ஒலிகள் எழுப்புவதும்
3.உணர்வுக்கொப்ப உடலானது என்றும் “சைவ சித்தாந்தம்” தெளிவாகக் கூறுகின்றது.

வியாசகரால் உருவாக்கப்பட்ட வேதங்கள் என்ற நிலைகளில் இருந்தாலும் அந்த ஒலியின் “ஓசைகளைத்தான் இன்று ஓதுகின்றனர்” பலர்.

ஆனால் ஓதும் (ஒலியின்) உணர்வின் தன்மையை நாம் அறிய முடியாத நிலைகளில் சாங்கிய சாஸ்திரங்களில் இணைக்கப்பட்டு அதன் உணர்வு கொண்டு வளர்க்கப்பட்டுவிட்டது.

சாங்கிய சாஸ்திரங்கள் செய்வதைக் கண்ணுற்றுப் பார்த்து எந்த உணர்வின் ஒலிகளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோமோ அதனின் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகின்றது.

வளர்ச்சி அடைந்த பின் இதைப் போல் இன்னொரு மனிதன் உணர்வின் ஒலிகளை எழுப்பினால் இந்த உணர்வின் வலு கொண்டு இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா
1.அவன் ஈர்ப்புக்குள் தான் செல்லும்
2.அந்த எல்லைக்குள் தான் சுழற்சியாகும்.

பின் அந்த உடலுக்குள் சென்றபின் அந்த உடலிலே கலந்த நஞ்சின் உணர்வுகள் அதிகரித்து அந்த உடலை வீழ்த்திவிட்டு உடலை விட்டு வெளி வந்த பின் “தேய்பிறையாக” இதனின் உணர்வுகள் மாறுபடும்.

சாங்கிய சாஸ்திரங்களின் வழியில் இன்று வாழும் மக்கள் தன் எல்லையை அடைய முடியாது “மனித உடலே எல்லை…” என்ற நிலைகளில் சுழன்று கொண்டுள்ளனர்.

இத்தகைய சாங்கிய சாஸ்திரங்களால் வியாசகர் வெளிப்படுத்திய உண்மையின் உணர்வுகள் காலத்தால் மறைக்கப்பட்டுவிட்டது.

இயற்கையின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அந்த உணர்வுகள் விளைந்ததைத்தான் அன்று ஞானிகள் கூறினார்கள்.
1.உருவம்… திடப் பொருள் என்பது “ரிக்”
2.அந்தப் பொருளிலிருந்து மணங்கள் வரும்போது “சாம”
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது “அதர்வண”
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது “யஜூர்”

ஆகவே மனித உடல் பெற்று விண்ணின் ஆற்றலை உணர்ந்த அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை உயிருடன் சேர்த்து ஒளியாக்கித் தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குப் பாய்ச்சி கணவன் மனைவியாக இணைந்து உருப்பெற்றது தான் “துருவ நட்சத்திரம்”

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்தோர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான உணர்வைச் சந்தர்ப்பத்தால் பெற்றுத்தான் மீணவனான வியாசகனும் ஒளியின் தன்மை பெற்றான்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை நாம் பெறுவதற்காக வியாசகர் உணர்த்தியிருந்தாலும் பிற்காலத்தில் வந்த மக்கள் அரசன் என்ற போர்வையில் “ஆண்டவனின் உணர்வுகள் எனக்கே சொந்தம்…” என்று வந்துவிட்டனர்.

அதனின் வழிகளில் மக்களைத் தன் பக்கம் ஈர்க்க மந்திர ஒலிகளாக மாற்றி அதன் அடிப்படையில் ஞானிகள் கொடுத்த காவியப் படைப்புகளை மாற்றி உருவமாக்கி விட்டனர்.

அவ்வாறு இவர்கள் உருவமாக்கியபின் அதற்கு ஜீவனூட்ட பல சத்துகள் இடப்பட்டு அதன் வழி மந்திரங்களை ஓதி அந்த மந்திரங்களை ஓதும் பொழுது அந்த “மந்திரத்தால் உருவாகும் சக்தியைத்தான்” இவர்களால் நுகர முடிந்தது.

வியாசகர் கொடுத்த வேதங்களில் உள்ள மூலங்களும் அதனின் உண்மைகளையும் நுகர முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள் அரசர்கள்.

இன்றும் அதன் வழியில் தான் நாமும் விடாப்பிடியாக கடவுள் எங்கேயோ இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான் என்று நமக்குள் உள் நின்று இயக்கும் சக்தியை மறந்து தேடிக் கொண்டேயுள்ளோம்.

பிரம்ம முகூர்த்தம்

 

2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து எப்படி வாழ்கிறதோ ஒவ்வொரு உடலும் ஒரு பிரபஞ்சத்தைப் போன்றது தான்.

அகண்ட அண்டத்தில் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நம் பூமியைப் போன்று உயிரினங்கள் வாழக்கூடிய பூமி உண்டு.

அதில் வடிகட்டிய உணர்வு கொண்டு தாவர இனங்களும் உண்டு… உயிரணுக்களின் வளர்ச்சியும் உண்டு. அதனதன் உணர்வுக்கொப்பத்தான் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரனங்களின் வளர்ச்சிகள் உண்டு. மற்ற பிரபஞ்சத்தில்
1.நம் பூமியைக் காட்டிலும் வளர்ச்சி பெற்ற மனிதர்களும் உண்டு.
2.நம்மைக் காட்டிலும் கூழையான மனிதர்களும் உண்டு.
3.கூழையான நிலையில் சிந்தனை வலுவானவர்களும் உண்டு.

இப்படி இந்த 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

முதலில் ஒரு சூரியன் உருவாகி 27 நட்சத்திரங்கள் உருவாகி அதன் வழிகளிலே வளர்ச்சியாகிப் பெரிய அகண்ட அண்டமானது. அந்த அண்டத்திற்குள் இது ஒரு பிரபஞ்சம்.

இப்படி 2000 சூரியக் குடும்பங்கள் உருவானது ஒரு அகண்ட அண்டம் என்றால் இதைப் போன்று எத்தனையோ அண்டங்கள் உண்டு.
1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் நாம் வாழ்கின்றோமே தவிர
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளாது வாழ முடியாது… வாழவில்லை.

அதைப் போன்று தான் மனிதனுக்கு மனிதன் இன்று தொடர்பில்லாது யாரும் இருக்க முடியாது. யாரைச் சந்தித்தாலும் நம் சந்தர்ப்பம் அவர் படும் வேதனைகளை நுகர்ந்தால் நமக்கும் வேதனை வருகின்றது… அந்தச் சந்தர்ப்பத்தின் மூலம்…!

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தைத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் சேர்ப்பிக்கும் நல்ல சந்தர்ப்பமாக உருவாக்க வேண்டும். தீமையை நீக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கினால் நமக்குள் தீமை என்ற உணர்வு வராதபடி தடுக்கலாம்.

அதற்குத்தான் உங்களுக்கு இப்போது இந்தப் பயிற்சி.

1.”பிரம்ம முகூர்த்தம்…” என்று சொல்வார்கள்
2.உயிர் ஒவ்வொன்றையும் பிரம்மம் ஆக்குகின்றது…
3.இந்த உயிரைப் போன்றே உணர்வை ஒளியாகப் பிரம்மமாக்கும் நேரம் இது.

ஆகவே இருளை அகற்றி ஒளி பெறும் அந்த நேரம்தான பிரம்ம முகூர்த்தம் என்பது.

இருளை அகற்றி அறிவென்ற தெளிவாகத் தெரியும் இந்த நேரத்தில் உங்கள் கவனம் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டும்,

1.உங்கள் உறுப்புகளை இயக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்யும் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதுதான் துருவ தியானம்.

விஞ்ஞானத்தால் காண முடியாததை மெய் ஞானத்தால் அறிய முடியும் – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானம் கொண்டு இன்று பல ஏவுகணையின் மூலமாகப் பல மண்டலங்களின் உண்மை நிலையறியத் தன் சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறியப் பார்க்கின்றான் இன்றைய மனிதன்.

1.ஒவ்வொரு மண்டலத்திலும் மாறுபட்டதன் நிலையை அறியும் ஆவலில்
2.தன் எண்ண சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறிந்திட எண்ணுகின்றான்.

அனைவருக்கும் பொதுவான அச்சக்தியை ஒவ்வொருவரும் உணர்ந்தே தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தினால் ஜெபம் கொண்ட நிலையில் எம் மண்டலத்திற்கும் அவரவர்களின் ஆத்மாவுடன் இவ்வுடலின் சக்தியையும் சேர்த்தே பல மண்டலங்களுக்குச் சென்று அம் மண்டலங்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து வரலாம்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு உதித்து வாழ்ந்ததுவோ அந்த மண்டலத்தை விட்டுப் பிற மண்டலத்தில் வாழ்வதற்கு அதற்குச் சக்தியில்லை.

1.சுவாச நிலை மாறுபடும் பொழுது வாழும் தன்மையும் அற்று விடுகிறது.
2.எம் மண்டலத்தில் இவ்வுயிரணு ஜீவன் பெற்றதோ
3.அந்நிலையிலிருந்து மாறுபட்டால் எந்த உயிரணுவினாலும் வாழ்ந்திட முடியாது.

நம் பாடத்தில் இவ்வாத்மா அழிவதே இல்லை இவ்வுடல்தான் மாறுகிறது என்றேன். அப்பொழுது இவ்வழியாத ஆத்மா பிற மண்டலத்துக்குச் சென்றால் மட்டும் அழிந்துவிடுமா…? என்பீர்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு தோன்றியதோ அவ்வுயிரணு என்ற ஆத்மாவானது அதன் சுவாசம் கொண்டு உயிர் என்னும் ஜீவனைப் பெற்ற இக்காற்று மண்டலத்திற்கு மேல் செல்லும் சக்தி அவ்வுயிரணுவிற்கு இல்லை.

இன்று விஞ்ஞானம் கொண்டு பிற மண்டலத்திற்கு எடுத்துச் செல்லும் ஜீவாத்மாக்களும் அந்நிலையில் இவர்கள் விட்டு வந்தாலும் (நாய், பூனை, குரங்கு) அந்நிலையின் சுவாச நிலைக்கும் இஜ்ஜீவாத்மாவின் சுவாச நிலைக்கும் ஏற்காத தன்மையில் அவ்வாத்மாவை எம்மண்டலத்தில் இருந்து வந்ததோ அம்மண்டலத்தின் நிலைக்கு ஏற்காத தன்மையில் உந்தித் தள்ளிவிடும். இனம் இனத்துடன்தான் சேரும்.

ஆனால் இங்கிருந்து பல உயிரணுக்களை.. உயிரினங்களை… எடுத்துச் சென்று மற்ற மண்டலத்தில் அங்கே வாழ்ந்திட முடியுமா…? என்பதனை அறியப் பல சக்திகளைச் செயலாக்குகிறார்கள்.

எந்த மண்டலத்திலும் உள்ள உயிரணு பிற மண்டலத்திற்குச் சென்று வாழ்ந்திட முடியாது. ஆனால் நம்முள் உள்ள சக்தியை அவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி ஜெபம் கொண்டால் சகல நிலையையும் அறிந்திடலாம்.

சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் எந்த மண்டலத்திலும் வாழும் நிலைக்கு வந்திட முடிந்திடும். இன்று நம்மில் இருந்து சென்ற பல சூட்சும நிலை பெற்றவர்கள் எம்மண்டலத்திலும் செல்லும் பாக்கியத்தைப் பெற்றவராய் இருக்கின்றார்கள்.

இன்று சூரியனில் சென்று வாழலாமா…? பெரும் நெருப்பு கோளமான அந்நிலைக்கு எப்படிச் செல்வது…? என்று விஞ்ஞானம் கொண்டு ஏவுகணை அனுப்புபவனும் சூரியனின் நிலையைக் கண்டு அஞ்சுகின்றான்.

சூரியனின் நிலை குளிர்ந்த நிலை. நம் பூமியைப் போல் காலை மாலை இரவு என்று மாறுபட்ட நிலை அங்கில்லை. இங்கு எப்படி நம் நிழலைக் காணுகின்றோமோ அந்நிலையும் அங்கில்லை.

அதி சுவையான நீரும்… ஆனந்த மயமான மணமும்… உள்ள பூமி அது. இந்நிலையில் உள்ளது போல் மழை நிலையும் மாறுபட்ட நிலையில் அங்கு உள்ளது. மழை உண்டு ஆனால் மாறுபட்ட நிலை. பனியான மழை. எப்பொழுதும் அந்நிலை இருந்து கொண்டே உள்ளன.

காட்சி:
அந்நிலையில் ஜீவன் பெற்று பல உயிரணுக்கள் வாழ்கின்றன. நாம் இவையெல்லாம் கதைக்குச் சொல்வதைப் போல் சொன்னதின் நிலையல்ல. உள்ளதின் உண்மையைத்தான் ஜெபம் கொண்டு அறிந்ததில் வெளியிடுகின்றோம்.

ஒவ்வொருவரின் சக்தியிலும் அறிந்திடும் தன்மையுண்டு. இப்பூமியைப்போல் பல நூறு மடங்கு பெரியவையான அச்சூரியன் சுழலும் வேகத்திலேயே அதன் ஈர்ப்புத் தன்மையும் பல மடங்கு அதிகமாகப் பெறுகிறது.

இச்சூரியனைச் சுற்றி எப்படி 48 மண்டலங்கள் அதன் ஈர்ப்பு நிலைகொண்டு வாழ்கின்றனவோ அதைப்போல் சூரியனும் பல சூரியன்களின் சக்தியின் உதவியால் வாழ்கிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நன்மைகள் செய்ய வேண்டும் என்றால் “துணிவு” வேண்டும்.

அங்கே பாருங்கள்… நான் அவனுக்கு எவ்வளவோ உதவி செய்தேன்… “என்னை இப்படியெல்லாம் பேசுகின்றான்…!” என்று சொன்னால்
1.நாம் செய்தது எல்லாம் போய்விட்டது
2.வேதனையைத் தான் விலைக்கு வாங்குகின்றோம்…! என்று அர்த்தம்.

நமக்குப் பிடிக்காதவர்கள் இருந்தார்கள் என்றால் இவனுக்கெல்லாம் எப்படி உதவி செய்வது என்று வரும்…!

ஆனால் துணிவுடன் நாம் நன்மை செய்தோம் என்றால் அவனுக்குள் என்ன ஆகிறது…?
1.நாம் அவனை அன்று திட்டினோம்
2.இன்றைக்குப் பாருங்கள் நமக்கு உதவி செய்து விட்டார் என்று
3.இத்தகைய பண்பினை மாற்ற உதவும்.

அதனால் தான் இந்தத் துணிவு.., நன்மைகள் பல செய்யத் துணிவோம் என்று சொல்வது.

நமக்கு வேண்டியவர்களுக்கு நாம் தாரளமாக எல்லாமே செய்வோம்.

ஆனால் ஏமாற்றுபவர்கள் என்ன செய்வார்கள்…? போற்றித் துதிப்பார்கள்.
1.நாம் கொடுத்துவிடுவோம்.
2.நம்மை ஏமாற்றி நமக்கு நன்மைகள் வருவதற்குப் பதில் தீமைகளையே செய்வார்கள்.

ஆகவே நாம் ஏமாற்றுபவர் கையில் சிக்கக்கூடாது.

வியாசகர் பல உயிர்களைக் கொன்றாலும் எந்த மீனைக் கொன்று இவன் வாழ்ந்தானோ அதே மீன் புயலால் சிக்கிய இவனைக் காக்கப்படும் பொழுதுதான் தான் செய்த தவறை உணர்கின்றான்.

நாம் எந்த மீனைக் கொன்றோமோ… அது தன்னை மீட்டியதே…! என்று எண்ணும் பொழுது தான் அவன் தன்னைக் காத்திட்ட உணர்வு கொண்டு அகண்ட அண்டத்தையும் அறிந்த அகஸ்தியர் உணர்வைக் கவர நேர்ந்தது.

நம் உடலின் இயக்கமும் உயிரின் மாற்றங்களும் என்ற நிலைகளை அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வை வியாசகன் தெளிவுபடுத்துகின்றான்.

வியாசகர் கல்வி கற்றவர் அல்ல. அவருடைய சந்தர்ப்பம் அதை நுகரச் செய்கின்றது.

ஆகவே ஒருவர் பகைமை கொண்ட உணர்வு கொண்டு இருப்பினும் “அவனுக்கு நன்மை செய்தால்… அந்த நன்மையின் தன்மை… “நமக்குப் பதில்” வரும்.

விஷம் என்ற உணர்வுகள் இருந்தால் விஷத்திற்குள் பட்டுவிடும். இந்த நன்மை பயன் தராது.

இதைத்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து நாம் செயல்படுதல் வேண்டும் என்று “விநாயகர் தத்துவத்தில்” தெளிவாகக் கூறப்படுகின்றது.

ஆகவே நாம் நன்மைகள் பல செய்யத் துணிவோம்.

தீமைகள் நமக்குள் புகும் வழியும்… அதைத் தடைப்படுத்தும் வழியும்…

 

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… சொல்வதைக் கேட்காமல் இருக்க முடியாது… அதை நுகராமல் இருக்க முடியாது… எல்லாம் தெரிந்த பின் உதவி செய்யாமலும் இருக்க முடியாது.

ஆனால் அப்படிக் கேட்டு உணர்ந்தாலும் இந்த உணர்வுகள் நம் உடலிலே இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

முதலிலே உணர்ந்தோம்… மேலும் அதிகமாகப் போகாதபடி தடுத்தல் வேண்டும். தடுக்க வேண்டும் என்றால் எப்படிச் செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று நமது கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கரு விழி அங்கிருந்து வரும் சக்தியைக் கவர்கின்றது.
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் உடனே அந்த வீரிய சக்தியை உண்டாக்குகிறது.
3.கரு விழியுடன் சேர்ந்த காந்தப் புலன் இந்தப் பூமியில் படர்ந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து
4.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

டி.வி.க்கு எப்படி ஆண்டனா முக்கியமோ இதே மாதிரி நம் உடலுக்கு கண் ஆண்டனாவாக இருக்கிறது. அதிலே (கருமணிகளில்) ரெக்கார்ட் செய்தாலும் அதை ஆண்டெனா வழி அறியக்கூடிய சக்தியும் கிடைக்கிறது.

நமக்கு நமது கண் ஆண்டெனா. அதிலே எந்த உணர்வினை நினைவினைச் செலுத்துகின்றோமோ நம் உடல் உறுப்புகள் அனைத்திலும் வீரிய உணர்வைச் செலுத்தியபின் இந்தக் காற்றிலிருந்து இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

அதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை நாம் உள் முகமாக உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் அது வலுப்பெறத் தொடங்குகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் நம் உயிரை எண்ணப்படும் பொழுது நமக்குள் தீமைகள் புகாது தடுக்கபப்டுகின்றது.

காரணம்… இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட முந்திய தீய வினைகளுக்கு இந்த மூக்கு வழிதான் அந்த உயிர் வழி தான் உணர்ச்சிகள் சென்று ஆகாரமாகப் போகிறது.

ஏற்கனவே எடுத்த உணர்வு அதிலே சென்ற இயக்க அணு அதை வளர்ப்பதற்கு உதவும். அதைப் போன்ற தீமைகளை உட்புகாது முதலிலே தடைப்படுத்த வேண்டும்.
1.அதாவது அந்த இயக்க அணுக்கள் நம் இரத்தத்திலே ஜீவ அணுவாகப் போவதற்கு முன்
2.அதைத் தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும் (இது முக்கியம்).
3.அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.உடலுக்குள் புகாது முகப்பிலே தடைப்படுத்துகின்றோம் (உயிர் வழி எடுக்கும் போது முக்கு வழி தடைப்படுத்தப்படுகிறது).

விஷத்தை அகற்றி… அந்த விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுவோம் என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி… என்றும் பிறவியில்லா நிலை என்ற… ஒளி உடலைப் பெற முடியும்.

ஆறறிவு படைத்த இன்றைய மனிதன் வளர்ச்சி என்ற பெயரிலே எல்லாவற்றையும் அழிவிற்குக் கொண்டு வந்துவிட்டான் – ஈஸ்வரபட்டர்

 

அனைத்துமே ஆவிதான்… ஆவியிலிருந்து வந்தது தான் அனைத்து உலோகங்களும்… ஜீவராசிகளும்…! அந்நிலையிலிருந்து பிரித்தெடுத்து அதனதன் தன்மையில் அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்

இப்பூமியில் இயற்கையிலிருந்து எடுத்த நிலைகளிலிருந்து அணுகுண்டு செய்து இப்பூமியில் புதைத்து வைத்துள்ளார்கள். சகல பாதுகாப்புடனும் அவர்கள் பாதுகாத்து வைத்த உலோகத்தினாலான துருப்பிடிக்காத இரும்பைக் கொண்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

பலர் பதப்படுத்தும் நிலையில் பதப்படுத்தி வைத்துள்ளார்கள். இப்பூமியிலிருந்து எடுத்த உலோகத்திலே தன் அறிவினால் விஞ்ஞானம் கொண்டு இவ்வணுகுண்டைச் செய்து வைத்துள்ளார்கள்.

அனைத்துமே ஆவி நிலை ஆகக்கூடியதுதான். உதாரணத்திற்கு தங்கத்தினால் ஓர் ஆபரணத்தைச் செய்து இன்று நீ பார்க்கும் எடைக்கும் பத்தாண்டிற்குப் பிறகு அவ்வாபரணத்தை உபயோகிக்காத நிலையிலேயே நிறுத்திப் பார்த்தால் அதன் நிறையில் ஒரே நிலை இல்லாமல் குறைந்துதான் இருக்கும்.

1.தேய்மானம் என்பார்கள்…!
2.பிற வஸ்துவில் பட்டுத் தேய்வதல்லை
3.இக்காற்றில் கலந்துள்ள ஆவித் தன்மையினால் இப்பூமிக்குள்ள காந்த சக்தியைக் கொண்டு ஈர்ப்பதினால் அதுவும் ஆவியாகிறது.

அனைத்து உலோகங்களின் நிலையும் இதுதான். இவ்வுலக நிலையும் இதுதான். இவ்வுலகம் ஆவியை ஈர்த்து அவ்வாவியையே வெளிப்படுத்துகிறது.

அதனால்தான் இன்று விஞ்ஞானம் கொண்டு செய்திடும் அணுகுண்டைப் பாதுகாக்கும் நிலை கொண்ட அவ்விரும்புக் கவசமே இவ்வுலகம் ஈர்த்து ஆவியை வெளிப்படுத்தும் தன்மையில் அதன் நிலையும் ஆவியாகி… “அதில் ஏற்படும் சிறு துவாரத்தினால் வரப்போகின்றது இவ்வுலக மாற்றமே…!”

இன்று விஞ்ஞானம் கொண்டு சூரியனிலிருந்து வரும் சக்தியினால் பல நிலைகளைச் செய்திடலாம் என்று விஞ்ஞானப் படுத்துகிறான். சூரியனிலிருந்து வந்த அணுக்கதிரினால் பூமியில் ஏற்பட்ட கனி வளங்களையும் பல திரவ வஸ்துக்களையும் தன்னிலைக்கு ஈர்த்து எடுத்து விட்டான்.

இன்று இவன் செயற்கைக்காகச் சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிரை ஈர்த்து (SOLAR POWER) அதிலிருந்து பல சாதனை செய்து காட்டுகின்றானாம். இக்காற்றையே கரியாக்கி வாழ்கின்றான்.

1.வரும் சக்தியையே ஒவ்வோர் இடத்திற்கும் தன்னிலைக்குகந்த விஞ்ஞானமாக்கி ஈர்த்து எடுத்து விட்டான்
2.வாழும் மனிதர்கள் இக்காற்றிலிருந்து பிரித்தெடுத்து நல் சுவாசம் எடுப்பதற்குண்டான சக்தியை அழித்து வருகிறான்.
3.இன்றைய விஞ்ஞானத்தினால் வந்த வினைதான் இது…!
4.மனிதனுக்கு ஆறறிவு என்று அவன் பெற்ற அறிவினாலேயே உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான்.

இதனால் இவ்வுலகம் மட்டும் மாறப்போகிறதா…? உலகுடன் தொடர்பு கொண்ட எல்லா மண்டலங்களுமே மாறத்தான் போகின்றன.

இன்று இவ்வுலகில் வாழும் மக்களினால் வந்த வினை தான் அது.

1.ஆத்மீக வழியை வழியமைத்தால் ஏற்பதற்கும் ஆளில்லை.
2.இதன் நிலை அறிந்துதான் பல சித்தர்கள் பல உண்மைகளையே மறைத்தார்கள்.

இன்று குழந்தை பெறுவதற்கே செயற்கை முறைப்படுத்திப் பேழையில் கரு வளர்த்து அக்கருவை தாய்க்குச் செலுத்திக் குழந்தையை வளர விடுகின்றானாம்.

இன்று ஒரு சித்தனால் தாயும் தந்தையும் இல்லாமல் இக்காற்றில் உள்ள சகல சக்தியிலும் கலந்துள்ள இம்மனித ஜீவ அணுவிற்கு வேண்டிய ஜீவ அணுவையே பிரித்தெடுத்து அப்பிரித்ததின் ஜீவ அணுவை வளரவிட்டுக் குழந்தையாக்கிக் காட்ட முடியும்.

புராணக் கதைகளில் படித்திருப்பீர்… ஆறுமுகனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள் என்று.

அந்த அறுமுகன் எந்தத் தாயின் கர்ப்பத்தில் இருந்தான் என்பதனைச் சூட்சுமத்தில் மறைத்தார்கள். அனைத்தையுமே இந்நிலையில் வெளியிட்டு நான் என்ற ஆணவத்தை ஏற்படுத்திடவும் விரும்பவில்லை.

நம் சக்தியை நல்வழிக்குச் செலுத்திவிட்டால் அந்நிலையில் என்றுமே நிலைத்திருக்கலாம். சக்தியையே… “நமக்குத் தெரிந்தது…! என்று ஆணவத்தால் செய்து காட்டி என்ன பயன்…? என்றுணர்ந்துதான் அன்றே பல சித்தர்களினால் பலவும் மறைக்கப்பட்டன.

1.எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்தினால்
2.சகல நிலையையும் சகலரும் அறிந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தவயோகிகள் அனைவரும் காட்டுக்குள் சென்று தான் தவம் செய்தார்கள். அதனால் காட்டிற்குள் போய்த் தவமிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

காடு எங்கே இருக்கின்றது…? அதில் தவம் என்பது என்ன…?

நம்மிடம் பல காடுகள் இருக்கின்றது ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை. காட்டிற்குள்ளே என்றால் இந்த உடலான காட்டிற்குள் போய்த்தான் எல்லா எண்ணங்களையும் எண்ணுகின்றோம்.

இந்த மனித உடல் எப்படி உருவானது…?

காட்டில் இருக்கின்ற தாவர இனங்கள் எல்லாம் புழுக்களாகப் பூச்சிகளாக ஆடாக மாடாக இருந்து எல்லாம் தின்று விட்டு அதில் விளைந்த அத்தனை குணங்களும் உணர்வுகளும் நம் உடலில் காடாக இருக்கின்றது.

உடலான இந்தக் காட்டிற்குள்ளே புலி இருக்கின்றது பாம்பு இருக்கின்றது தேளும் இருக்கிறது நரியும் இருக்கிறது நாயும் இருக்கிறது எல்லா நிலையும் இருக்கின்றது.

அது மட்டுமா…?

ஆக்ரோஷமான நிலைகளில் ஒருவனை அழித்து விடுவேன்… கொலை செய்து விடுவேன்…! இந்த உணர்வுகள் உடலில் சேர்த்துப் பேயாகவும் இருக்கிறது பிசாசாகவும் இருக்கிறது பூதமாகவும் நமக்குள் இருக்கின்றது.

பேய் என்றால் எப்படி வருகிறது…? நாம் ரோட்டில் போய்க் கொண்டே இருப்போம். ஒரு மனிதன் ரோட்டில் அடிபட்டுப் போனால் “ஆ… இப்படி ஆகிவிட்டதே…!” என்கின்றோம்.

அவன் ஆசையில் இறந்திருப்பான். அதே ஆசையில் “என்ன ஆனதோ..!” என்று நாம் நினைக்கும் போது அந்த ஆத்மா நம்மிடம் வந்து விடுகின்றது.

இந்த உடலான காட்டில் பேய் குடி கொண்டு விடுகின்றது. நம்மை இல்லாதபடி செய்து உடலுக்குள் ஆட்டிப் படைக்கின்றது.

காடு எங்கேயோ இருக்கின்றது என்று நினைக்கின்றோம். காட்டில் இருக்கும் சக்தி முழுவதும் நம்மிடம் (உடலுக்குள்) இங்கேயே இருக்கின்றது. நம் உடல் இது ஒரு பெரிய காடு.

அதைக் காட்டுவதற்குத்தான் ஐயப்பன் கோயிலைக் காட்டியது. அந்தக் காட்டிற்குள் போகும் போது புலியையும் சிங்கத்தையும் யானையும் யாரும் நினைக்கின்றது இல்லை.
1.அங்கே மிருகங்களை எப்படி எண்ணுவதில்லையோ
2.அதே மாதிரி உன் வாழ்க்கையில் மற்றவர்கள் திட்டியது பேசினவர்களை எல்லாம் விட்டு விடு.
3.உன் உடலுக்குள் இந்த மிருகங்கள் எல்லாம் இருக்கின்றது… அந்த மிருகமான உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதபடி
4.ஞானிகளுடைய நிலைகள் நீ எண்ணு. நீ இப்படிப் போ…! என்று காண்பிக்கின்றார்கள்.

இதை யாரும் சொல்வதற்கு இல்லை.

ஆனால் தீமைகளை ஜீவன் பெற விட்டு விட்டோம் என்றால் நம் நல்ல குணங்கள் எல்லாம் பம்மி ஒடுங்குகின்றது. அப்பொழுது நல்லதை செய்வதற்கே முடியவில்லை…. என்ன செய்வது…? என்று
1.வேதனையை அதிகமாகக் கூட்டிவிடுகின்றீர்கள்.
2.உடலான காட்டில் தேளும் பாம்பும் ஜீவன் பெறுகின்றது.
3.அதைக் கண்டு நாம் பயந்து நடுங்குகின்றோம்.

இவ்வாறு ஆன பின் இந்த உயிராத்மா அது தாங்காதபடி என்ன செய்கின்றது…? இந்த மனித உடலை விட்டே ஓடிப் போய்விடுகின்றது.

நான் சாகிறேன். என்ன விடுடா… நான் போகிறேன்…! என்று உயிர் வெளியில் போய்விடுகின்றது.

ஏனென்றால் விஷத்தைக் கொஞ்சம் அதிகமாக நினைத்தாய் அல்லவா. அதை நீ இதிலிருந்து பார்…! என்று அதற்குத்தக்க உடலைக் கொடுக்கின்றது.

1.பயந்து நடுங்கிய இந்த உணர்வுகளுக்குத் தக்க
2.இந்த விஷத்தின் தன்மை கொண்டு உயிர் அடுத்த உடலை உண்டாக்குகின்றது.
3.நாம் எங்கே தப்பிப் போக முடிகின்றது…? எதிலே தப்புகின்றோம்…?

அம்மா அப்பா எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கின்றார்கள். அம்மா அப்பாவை நாம் மதிக்காமல் இருந்தோம் என்றால் அந்த கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை நாம் என்ன செய்கின்றோம்…?

நமக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது என்றால் அவை எல்லாம் அம்மா அப்பா கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது என்ற நினைப்பே வருவது இல்லை.

அடுத்தவர்கள் நம்மைப் பார்த்தவுடனே என்ன சொல்வார்…? அட.. உனக்கென்னப்பா சீமான் வீட்டுப்பிள்ளை…!” என்று சொன்னால் நமக்கு மிகுந்த கௌரவம் வந்து விடுகிறது.

காசுக்காக வேண்டித்தான் நம்மை இப்படிப் புகழ் பாடுகின்றார்கள். புகழ் பாடப் போகும் போது அதை ரசித்துக் கேட்டுக் கொள்கின்றோம்.

வீட்டில் அப்பாவோ அம்மாவோ…! ஏனப்பா… பணத்தைக் கொஞ்சம் பார்த்துச் செலவழித்துக் கொள்ளப்பா..! என்று சொல்வார்கள்.

அதைக் கேட்ட பின் பையன் என்ன சொல்வான்…?

உங்களுக்கு எப்போது பார்த்தாலும் நச்… நச்… என்று இப்படிச் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். இது தான் உங்கள் பிழைப்பு… “போங்கள்…!” என்று இப்படிச் சொல்லச் சொல்கின்றது.

ஏனென்றால் மற்றவர்களுடைய உணர்வு அவர்களுடைய ஆசை நம்மிடமிருந்து காசைப் பறிக்க வேண்டும் என்று புகழ்ந்து பேசி எப்படியோ பையனிடமிருந்து வாங்கி விட்டு போய் விடுகின்றார்கள்.

ஆனால் அவர்கள் விஷத் தன்மையை இங்கே (பையனுக்குள்) விட்டு விடுகின்றார்கள். அதனால் பையன் குடும்பத்துடன் இணைந்து அம்மா அப்பா சொல்லும் உண்மையை உணர விடாமல் போய்விடுகின்றது.

இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…?

காட்டிற்குள்ளே மிருகத்திடம் சிக்க வைத்த மாதிரி நாம் இந்த உடலில் அந்தக் காடான நிலையில் மிருகத்திடம் சிக்கிக் கொண்டு தவிக்கின்றோம்.

ஆகவே நமக்குள் காடும் இருக்கின்றது வனமும் இருக்கின்றது நல்ல பூஞ்சோலையும் இருக்கின்றது,

தாவர இனத்திலிருந்து வந்த பூஞ்சோலையின் உணர்வுகள் நாம் நுகர்ந்தது நல்ல எண்ணங்களாக வருவதும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது.

இந்தக் காட்டிற்குள்ளே தான் அந்தத் தவத்தை எடுக்கச் சொல்கின்றோம்.

யாரை..? எதை…?

காட்டுக்குள் இருக்கக்கூடிய இந்த மிருகங்கள் தேள்கள் பாம்புகள் பேய்கள் நம்மை ஒன்றும் செய்யாதபடி அந்த மகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

தியானத்தின் மூலம் பெற வேண்டிய உறுதியான எண்ணம்

 

கேள்வி:-
சில நாள்களில் காலை துருவ தியானம் செய்ய முடியாதபடி உடல் கனமாகவும் சோர்வாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன…?

ஞானகுரு:-
உதாரணமாக… வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் இருந்தால் நம் செயலில் வேதனை அதிகமாக இருக்கும். நாம் எடுக்கும் இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மை உண்மையை உணரச் செய்யும்… உணர்வின் ஆர்வத்தைக் கூட்டும்… அதை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.விஷத்தால் இயங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் சோர்வடையப்படும் பொழுது
2.நம்மைப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க விடுவதில்லை… அது சோர்வடைந்து விடுகிறது.
3.அந்த விஷத்தின் ஊக்கமே நமக்குள் வலிமை கொடுக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் தியானத்தை எடுத்து உடல் உறுப்புகளில் செலுத்தப்படும் போது… “ஏற்கனவே இருந்த விஷங்கள் தணியப்படும் பொழுது…” நம்மால் முடியாது போய்விடுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று செலுத்திப் பழகுதல் வேண்டும்.

பின் சிறிது நேரத்தில் அது தெளிவாவதைப் பார்க்கலாம்.

1.இந்த மாதிரி வரும்… காரணம் எல்லோருக்குள்ளும் இந்த வேதனையான உணர்வுகள் உண்டு.
2.நாம் இந்தச் சக்தி எடுத்தவுடன் அது சோர்வடையும்
2.என்னடா நாம் தியானம் செய்து இந்த மாதிரி ஆகிவிட்டதே… என்று கூட நினைப்போம்..

விஷத்தின் இயக்கத்திற்கு ஆக்கபூர்வமான நிலைகளைக் கொடுக்கவில்லையென்றால் அதனுடைய நிலை இந்த மாதிரி வந்துவிடும்.
அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில்…
1.படுக்கையில் இருந்தபடியே சிறிது நேரம் கண்ணின் நினைவை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது அதிலிருந்து விடுபடுவதை உணரலாம்.

கேள்வி:-
தியானம் செய்து கொண்டிருக்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் காட்சியாகத் தெரிந்தது. அதனுடைய துடிப்பும் தெரிந்தது. ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பயமும் நடுக்கமும் வந்து விட்டது. ஏன்…?

அந்த மாதிரி பயம் வராதபடி எனக்கு மன பலம் வேண்டும்.

ஞானகுரு:-
பணம் வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். திடீரென்று “ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்து விட்டது…!” என்று கேள்விப்பட்டால் உங்கள் மனது எப்படி இருக்கும்…?

பயத்தைக் காட்டிலும் படபட… படபட… என்று நெஞ்சிலே துடிப்பு அதிகமாக இருக்கும். பணம் வந்துவிட்டது என்று கேட்டதுமே அதனால் மூச்சு நின்று போனவர்களும் உண்டு. இல்லையா…!

இதைப் போன்று தான் உயர்ந்த சக்திகள் நமக்குள் வரப்படும் போது..
1.ஆக அதைப் பெறுகின்றோம் என்ற நிலையில்
2.அந்த அருளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற ஆனந்தத்தைச் சேர்த்தால் அது வலுவாகும்.

ஆனால் பயத்தைக் கொடுத்தோம் என்றால் பய அலைகள் தான் வரும். வேகமாக இயக்கப்படும் போது இதனுடன் கொஞ்சம் விஷத்தைக் கலந்து விட்டால் எப்படி இருக்கும்…? பலவீனம் தான் ஆகும்.

ஆகவே… நாம் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம் இந்த ஆசையில்
1.நல்ல நிலைகளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்துடன் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்
3.அந்த உணர்வு நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இது எல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய சரியான நெறி முறைகள்.

உலக மாற்றத்தின் உண்மைகளை அதிவிரைவில் அனைவருக்குமே வெளியிடுவோம்…! – ஈஸ்வரபட்டர்

 

இங்கே சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றோம் என்பதின் பொருளே
1.இக்கலியின் மாற்றத்திலிருந்து மக்களை நல்வழியில் கல்கிக்கு அழைத்துச் செல்வதற்காக
2.பல சித்தர்களினாலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை இன்று இந்நிலையில் அச்சித்தர்களுடன் கலந்தே
3.இவ்வுலக மக்கள் இதிலிருந்து மீண்டு உண்மையை உணர்ந்து ஏற்று நடப்பதற்காகத்தான்…!

இந்தச் சக்தி அனைவருக்கும் பொதுவானதே.

அச்சக்தியின் நிலையை ஏற்கும் தன்மை மட்டுமல்ல… ஏற்றதனை வழி நடப்பதிலும் அச்சக்தியின் தன்மையுள்ளது.

அனைத்தையும் அறிந்து விட்டோம் என்ற நிலையில் நம் சக்தியை விரையமாக்கினாலும் அச்சக்தி நிலைத்திடாது. அச்சக்திகளை நிலைநிறுத்தி வாழும் தன்மையிலே வழி வந்திட வேண்டும் நாம் அனைவருமே.

சூரியனிலிருந்து நாம் அணுக்கதிர்களைப் பெற்று வாழ்கின்றோம். அவ்வாவியான அணுவேதான் இவ்வுலகும் அனைத்து உலகுமே.

ஆவியான அணுவை ஆக்கும் வழியில் செயல்படுத்திடாமல் அழிக்கும் நிலைக்குச் செயல்படுத்திடும் வினையை இவ்வுலக மக்கள் கூடிய விரைவில் உணரும் காலம் மிகவும் நெருங்கிக் கொண்டே வருகிறது.

எந்நிலையில் என்று கேட்பீர்கள்…?

இவ்வுலகில் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைக் கொண்டேதான் பல நிலை பெற்ற செயல்களை இம் மனிதனின் எண்ணம் கொண்டு உருவாக்கியுள்ளான்.

இவன் உருவாக்கிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாக்கும் நிலையில் பூமியின் அடியில் புதைத்துப் பல இரும்புக் கவசங்களைக் கொண்டு சிறு அணுவும் வெளிப்படாத நிலையில் தன் அறிவை எல்லாம் சக்தியையெல்லாம் செயல்படுத்தி விஞ்ஞானக் குண்டுகளைப் பல நாடுகளில் புதைத்து வைத்துள்ளான்.

“இன்று வெடிக்கப் போகின்றேன்… நாளை வெடிப்பேன்…!” என்று பயமுறுத்தலுடன் பயமுறுத்தலுக்காக வைத்துள்ள குண்டுகளை இவனும் வெடிக்கப் போவதில்லை… மற்றவனும் வெடிக்கப் போவதில்லை.

ஆனால் இவ்வுலகம் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் சூரியனின் அணுக்கதிர்களைப் பெற்றுக் கொண்டே உள்ளது. இவ்வுலகமும் ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

ஆவியில் வந்த அணுக்கதிர்கள்தான் அனைத்துமே. இவ்வுலகம் ஈர்த்த நிலையில் அது வெளிப்படுத்தும் நிலை கொண்டு இவ்வுலகத்தின் பாதுகாப்பினால் ஆன அணுகுண்டுகள் வைத்துள்ள நிலையெல்லாம் இப்பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியை ஈர்த்துக் கொண்டே உள்ளன.

இந்நிலையிலேயே இன்னும் சில காலங்களில் அதன் சக்தி இழந்து இவ்வுலக சக்தி தன்னுள் ஈர்த்த சக்தியை வெளிப்படுத்தும் நிலையில் கக்கும் நிலையில் அதன் மேல்பட்டு ஓர் இடத்தில் வெடிக்கும் நிலையில் அணுக்களின் சிதறலினால் அனைத்து அணுகுண்டுகளுக்கும் அதனதன் ஈர்க்கும் நிலையில் அனைத்தும் வெடிக்கும் நிலை மிகக் குறுகிய காலத்தில் உள்ளது.

இப்பூமியில் அணுகுண்டுகள் வெடிக்கும் நிலையில் இப்பூமியே அதிரும் நிலையில்தான் சிறு அதிர்வினால் இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வரப்போகின்றது.

இந்நிலையை அறிந்து நல்வழி பெற்று வாழ்வதுதான் நம்மால் இன்று செய்திட முடியும்.

இன்று இந்நிலையை வெளிபடுத்துபவர் ஏன் அந்நிலையிலிருந்து காப்பாற்றலாமே…? என்ற வினாவும் எழலாம்.

1.அனைத்தையும் அறிந்து சூட்சும நிலைகொண்டு நல்வழி புகட்டிடலாமே தவிர
2.அனைத்தும் அறிந்த ஆண்டவன் என்ற அச்சக்தியின் சக்தியே நான் என்ற சக்தி எனக்கில்லையப்பா.

யானறிந்த சக்தியை என்னுடன் கலந்துள்ள பல ரிஷிகளின் நிலை கொண்டே இந்நிலையை வெளியிடுகின்றேன். அதி விரைவில் அனைவருக்குமே வெளியிடவும் காலம் சொல்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எவ்வளவு தான் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் ஒரு நொடிக்கு நொடி ஒவ்வொன்றையும் பார்க்கின்றோம்.
1.நல்லதை நினைத்துப் பார்க்கின்றோம்.
2.கொஞ்சம் குறை ஏற்பட்டு விட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்கிற அத்தனையும் விஷம். நம் உடலில் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிப் போனதென்றால் உடல் முழுவதும் நஞ்சாக மாறி நோயாகி விடுகின்றது.

வேதனைப்படக்கூடிய சமாச்சாரங்களைக் கேட்கும் போது எல்லாம் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அனு தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எல்லாருக்கும் இந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று துருவ மகரிஷியை எண்ணித் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தத் தியானம் செய்கின்றேன் (ஞானகுரு).

அப்போது அந்த உணர்வலைகள் வரப்போகும் போது அதிகாலை நான்கு மணி மேலே போனதென்றால் இந்த உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டவர்களைத் தன்னாலயே எழுப்பிக் கொண்டே இருக்கும். கொஞ்சம் அந்த விழிப்பு நிலை வரும்.

சில நேரங்களில் அந்த உணர்ச்சிகள் தென்படும். சில நேரங்களில் நல்ல வாசனைகள் வரும்.

அந்த நேரத்தில் “ஒரு செகண்ட் ஆவது…”
1.துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.எங்கள் உடலில் பெற வேண்டும் என்று நினைத்து விட்டுப் படுத்துக் கொள்ளுங்கள்.

நேரடியாக துருவ நட்சத்திரத்தையோ துருவ மகரிஷியையோ எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அது தாங்கக் கூடிய சக்தி கிடையாது.
1.அது மிகவும் வீரியமான உணர்வுகள் கொண்டது.
2.அது எடுத்தீர்கள் என்றால் உங்கள் உடலில் சூடாகும்.
3.சில நேரங்களில் பல தொல்லைகள் கொடுக்கும்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணும்போது உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது
1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்.
3.நாங்கள் பார்ப்பவர் எல்லாம் நலம் பெற வேண்டும்.
4.எங்களைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
5.ஒரு செகண்ட்டில் அது எண்ணி முடித்துக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் 4.30 மணிக்கு இது போல எண்ண வேண்டும். அதற்கப்புறம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணி எண்ணுங்கள். இப்படிச் செய்யும் பொழுது 4.30 மணிக்கு ஒரு வழி காட்டியாக உங்களுக்கு அமையும்.

இதைக் கேட்டவர்கள் அத்தனை பேருமே எந்தக் கஷ்டமான வார்த்தைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு எங்கள் பார்வை நல்லதாக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவதற்கு இது தான் வழி.

குருத்தெலும்புக்குள் (MONITOR) நாம் பாய்ச்ச வேண்டிய அருள் சக்தி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புகளில் படர்ந்து அதற்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

செல்ஃபோன்களில் நாம் அழுத்திய பின் எங்கிருந்து ஃபோன் செய்கின்றனரோ… அவருடைய பதிவை நாம் பார்க்கின்றோம். அதே போல
1.ஒரு வேதனைப்படுவர் உணர்வைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த வேதனைப்படுவதை மீண்டும் எண்ணினால்
3.காற்றிலிருந்து அந்த வேதனைப்படும் உணர்ச்சிகளை நாமும் நுகர நேருகின்றது

அதே சமயத்தில் வேதனைப்படுவரைப் பார்த்தபின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அடுத்த கணமே… அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.வேதனையைத் தணித்த அந்த உணர்வின் சக்தி அதன் அருகிலே படும்பொழுது
2.வேதனையான உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் வலு இழக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை இப்படி அங்கே பெருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து ஊனை உருவாக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இந்த உணர்வைப் பதிவாக்குங்கள்.

நம் நெஞ்சுக்கு மத்தியில் இருக்கும் குருத்தெலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கப் படும்பொழுது
1.அங்கே ஒரு விதமான உணர்ச்சிகள் வந்து
2.இந்தக் காற்றிலே படர்ந்துள்ள அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமது உடல் அருகிலே ஈர்த்துக் கவரும்படி செய்யும்.

அபப்டி ஈர்க்கும் பொழுது… நாம் எந்த அளவிற்கு எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க அந்தத் துடிப்பின் தன்மை குருத்தெலும்பிலே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் விலா எலும்புகளில் படர்ந்து அங்கே ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மறுபடியும் ஏங்கித் தியானியுங்கள்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…!
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எந்த அளவிற்கு நெஞ்சின் விலா எலும்புகளில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ
2.அந்தக் கணக்கு கூடக் கூடக் கூட நம் உடலில் வந்த இருளை நீக்கவும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் தகுதியும் நாம் பெறுகின்றோம்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் தன்மை அதிகரித்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் சென்று விடுகின்றோம்.

ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால் இந்தக் கணக்கு கூடினால் விஷத் தன்மை கொண்ட உடல் எதுவோ அதன் ஈர்ப்புக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.

ஆகவே நமது பற்றெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும். அதிலிருந்து வரும் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் எண்ணுவோம் என்றால்
1.இந்த உணர்வின் வளர்ச்சிகள் நம் உடலில் உள்ள குறைபாடுகளை குறைத்து நோய்களைக் குறைத்து
2.சிந்திக்கும் ஆற்றலை வலிமை பெறச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருகச் செய்து
4.என்றும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைய இது உதவும்.

தியானம் என்பது தனித்துச் செய்ய வேண்டிய ஒன்றல்ல… அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் அது…! – ஈஸ்வரபட்டர்

 

கேள்வி:
நாம் ஏதாவது ஒரு காரியத்தைப் பற்றி முடிவு எடுக்க முடியாமல் இருந்தால் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டு இருக்காமல் அந்த விஷயத்தை ஆராய்ந்து கூறுமாறு அந்தராத்மாவிடம் ஒப்பித்து விட்டு நமது வேறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அந்த அந்தராத்மா அந்தக் காரியத்தை அலசிப் பார்த்து சரியான விடையைக் கண்டு பிடித்து நம் வெளி மனதிற்குத் தெரியப்படுத்தும் என்று எண்ணுகின்றேன்.

ஈஸ்வரபட்டர்:
இந்நிலைதான் ஜெப நிலை (தியானம்) என்று நான் உணர்த்தும் நிலை.

ஒரு நிலைக்கு நம்முள் தீர்வு கண்டிட…
1.நம்முள் சுற்றியுள்ள எண்ணச் சிதறல்களை ஒரு நிலைப்படுத்தி
2.அந்நிலையிலேயே நம் மனதை அமைதியுறச் செய்து
3.அந்நிலையில் நம் மனது தெளிவு பெறும் நிலைதான்
4.நீங்கள் சொல்லும் அந்தராத்மா முடிவெடுக்கும் நிலை என்பது.

அந்நிலைதான் ஜெப நிலையும். ஜெபம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் நிலைதான்.

இன்று நம்மில் கலந்துள்ள பல பெரியோர்களின் வழியில் அவர்கள் வழிப்படுத்திச் சென்ற நிலை வாழ்க்கை நிலைக்கும் ஜெப நிலைக்கும் வேறுபாடில்லை.

வாழ்க்கை நிலையில் வரும் நிலைகளுக்குத் தெளிவு பெற வழியமைத்த நிலைதான் இஜ்ஜெபநிலை. இந்நிலையையே ஞானிகளும் சித்தர்களும் வழியமைத்து வந்ததுதான் அவர்களின் உயர்ந்த நிலை.

இவ்வெண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிலைகளில் செயல் படுத்துகிறது.
1.உள் மனம் வெளி மனம் மட்டுமல்ல
2.முதல் பாடத்தில் சொல்லியுள்ளேன் அகக்கண் புறக்கண் என்பதையே ஞானக்கண்ணால் வென்று வா…! என்று.

சாதாரண மனிதர்களின் நிலைக்கும் சித்தர்களின் நிலைக்கும் எந்நிலையில் மாற்றம் உள்ளது…?

நாம் சாதாரண மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணும் பொழுது பிற நிலை தாக்கினால் நம் எண்ணம் ஒன்றையே தான் சுற்றிக் கொண்டிருக்கும். அந்நிலையில் தாக்கும் மற்றதின் நிலையை இந்நிலைபோல் செயல்படுத்திட முடிந்திடாது.

1.எண்ணத்தின் சிதறலைத் தாங்கும் சக்தியை இழந்து
2.அந்நிலையில் மனச் சோர்வு கொண்டு நம்மை அறியாமல் பல சொற்களை வெளியிடுவோம்.
3.நம் நிலைக்கும் பதட்டம் வரும்
4.அப்பதட்டத்திலிருந்து வருவது தான் கோபமும்.

இப்படி நாமே வளர்த்துக் கொள்வதுதான் நம்மில் இந்நிலையெல்லாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தான் பல நிலையின் மோதல்களைத் தாங்கும் நிலை ஏற்படுத்திட “ஜெபம்” என்ற நிலையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள்.

ஜெப நிலையை நம்முள் ஏற்படுத்திக் கொண்டால் எந்நிலையிலும் அது தாக்கும் நிலையிலேயே அந்நிலைக்குத் தீர்வு கண்டிட நம்மைப் பக்குவப்படுத்திடும் நிலையாக வரும்.
1.நம்மை நாமே அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து
2.அத்தகைய ஜெப நிலையைப் பெற்றிட வேண்டும்.

இதை நமக்குப் புரியச் செய்வதற்காகப் பல இதிகாச நூல்களில் ஆண்டவன் என்று ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல தலைகள்… பல கைகள்… இருப்பதாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆண்டவன் ஒரே சமயத்தில் பலருக்கும் எந்நிலையில் அருள் புரிகின்றார் என்பதைப்போல் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தும் வகையில் உணர்த்திய வழிகள் தான் ஆண்டவனுக்குப் பல தலைகளும் பல கைகளும் காட்டப்பட்டது.

சூட்சும நிலையில் உள்ளவர்கள் (ஞானிகள்) ஒரே சமயத்தில் பல நிலைகளில் தன் செயலைச் செயலாக்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவரவரின் எண்ணத்தின் சிதறலினால்தான் பல நிலைகள் பதட்ட நிலை பெற்றுத் தன்னுள் தன்னையே கைதியாக்கி வாழ்கின்றான்.

உள் மனம் வெளி மனம் என்பதல்ல இவ்வெண்ண மனம். பல நிலைகளுக்குச் சென்றாலும் ஒரு நிலைப்படுத்திடும் பக்குவம் பெற்றாலே ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிற்கு நல் சொத்தைச் சேர்த்த நிலை பெறுகின்றான்.

1.இன்று மக்களுக்குப் போதனை நிலையும் குறைவு
2.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் குறைவு
3.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் (தாய் தந்தை) உபதேசிக்கும் நிலையற்றதினால் வந்த நிலை இவ்வுலகின் நிலை இன்று.

முந்தைய காலத்தில் பல நீதி நிலைகளைக் கதையாக்கி தாத்தா பாட்டி கதை என்ற ரூபத்திலும் அரிச்சந்திரனின் கதையாகவும் விக்கிரமாதித்தனின் கதையாகவும் மக்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்காகப் பல நீதி நூல்களை வெளியிட்டார்கள்.

இன்று அனைத்து நீதி நூல்களையுமே ஆராயும் தன்மையில் வைத்துள்ளார்கள். அந்நிலையையும் மாற்றி அன்று சித்தர்கள் வெளியிட்டதின் வழியிலேதான் இன்று இருக்கும் விஞ்ஞான உலகத்தின் அறிந்த நிலையெல்லாம்.

“முள்ளை முள்ளால் எடு…” “வைரத்தை வைரத்தால் அறு…” என்பதைப் போல் ஒவ்வொரு நோய்க்கும் அந்நோயின் தன்மை கொண்ட எந்நிலை கொண்ட நோய் வருகிறதோ அதன் தன்மைக்குகந்த மருந்தை அதன் விஷத் தன்மையிலேயே அதற்கு மேல் இதை ஏற்றி இதை வெளிப்படுத்தும் நிலையை உணர்த்தியவர்களே நம் சித்தர்கள் தான்.

இவ்வுலகில் வந்து குவியும் அமிலத் தன்மையிலிருந்து பல நிலைகளைத் தன்னுள் ஈர்த்து ஒவ்வொன்றையும் செயல்படுத்திக் காட்டிய பல ரிஷிகள் உள்ளார்கள்.

போகரின் நிலையும் போகரை ஒத்த நிலைகளில் உள்ள பல ரிஷிகளின் நிலையும் இன்று அழியாத உடலை எந்நிலையில் பாதுகாத்து வைத்துள்ளார்கள்…?

இக்காற்றில்தான் அனைத்து நிலைகளுமே கலந்துள்ளன. தன் நிலையையும் தன் உடலையும் அழியாத நிலைப்படுத்திப் பாதுகாக்கும் பக்குவத்தை இன்றும் ஈர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.

இவ்வுடலையே கல்லாகவும் எந்நிலை கொண்ட உலோகம் போலவும் காத்து வைத்திட முடியும். இக்காற்றில் உள்ள அமிலத்தை தனக்குகந்ததை ஈர்த்துக் காத்து வருகின்றார்கள்.

வைரமாகவும் இவ்வுடலை ஆக்கிட முடியும். மண்ணுடன் மண்ணாக மக்கும் நிலையிலும் ஆக்கிடுகின்றோம்.

அனைத்துமே இவ்வெண்ணத்தினால் வந்ததுதான்…!

உலக சக்தியும்… சக்தியாக சக்தியுடனே நம் எண்ணத்தைக் கலக்கவிட்டு நல்சக்தி பெற்று விட்டால் “அனைத்துச் சக்திகளையுமே நம்முள்ளே கண்டிடலாம்…!”

இவ்வெண்ண சக்தியினால் வளர்வதுதான்… வளர்வது மட்டுமல்ல வாழ்வதுதான்… இவ்வுலகமும் பிற உலகங்களுமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அழியாப் பேரின்பச் செல்வத்தைத் தேடுவதற்குத்தான் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் நாம் நுகர்ந்த உணர்வே நமக்குள் அந்த உணர்ச்சியை ஊட்டி அதைச் செயலாக்குகின்றது.
1.இது தான் அரங்கநாதன் – நம் உடல் ஒரு அரங்கம்
2.நாம் நுகரும் உணர்வு எதுவோ அது உயிரிலே பட்டு நாதங்களாக அந்த உணர்வாகின்றது.
3.ஆண்டாள்.. அந்த உணர்ச்சிகள் நம்மை ஆளத் தொடங்குகின்றது.

பேரருள் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வு அரங்கநாதமாகித் தீமைகளை அகற்றும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்.

தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தி நாம் பெறுகின்றோம் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் உபதேசத்தைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டீர்கள். உங்கள் உடல் நோயாக இருந்தால் அடுத்து நீங்கள் எண்ண வேண்டியது
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் நலம் ஆக வேண்டும் என்ற இதை நீங்கள் மனதில் எண்ணினால் போதும்.

இப்படி எண்ணும் உணர்வுகள் உடல் என்ற அரங்கத்தில் நாதங்கள் ஆகின்றது. இதை ஏங்கிப் பெறும் போது நாம் அருள் உணர்வு பெறுகின்றோம். இதே உணர்வுகள் வந்தால் உங்கள் நோய்கள் நிச்சயம் குறையும்.

உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற நிலையில் சதா உணர்த்தி வருகின்றேன். வாக்காக வித்தாகப் பதியச் செய்கின்றேன்.

இருக்கும் இடத்திலிருந்து நீங்கள் அந்தச் சக்திகளைப் பெற்று உங்கள் நோயை நீக்க முடியும்.

மகரிஷிகள் உணர்வை வாக்கால் பதிவு செய்யப்போகும் பொழுது அந்தப் பதிவை மீண்டும் எண்ணப்போகும் போது அது தான் உங்களுக்கு நல்லதாகின்றது.

மருந்து கொடுத்து அல்ல. (நான் கொடுப்பது மருந்து அல்ல) மருந்தைச் சாப்பிடுவதற்கு முன் யாம் கொடுக்கும் வாக்கு என்ன செய்யும்…? யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.

மகரிஷிகளின் உணர்வின் தன்மை பதிவாக்கப்படும்போது
1.நோய் நீக்கும் வலிமையான சக்தி பெறுகின்றீர்கள்
2.அந்த வலிமை கொண்டு பல தீமைகளைப் போக்கும் சக்தியும் பெறுகின்றீர்கள்.

குடும்பத்திற்குள் சிக்கல்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்…?
1.என் பையனுக்கு அந்த நோயெல்லாம் நீங்க வேண்டும்.
2.அந்த அருள் கிடைக்க வேண்டும்.
3.அவன் நல்லவனாக வேண்டும் என்று நீங்கள் கேட்டால்
4.அதன்படியே நடக்கும் என்று இந்த வாக்கினைப் பதிவு செய்தால் உடனடியாக வேலை செய்யும்.

என்னிடம் கஷ்டம்… கஷ்டம்… கஷ்டம் நஷ்டம்… நஷ்டம் என்று இதைச் சொல்லிக் கொண்டே வந்தால் அதை என் காதில் கேட்டால் அதை நுகர்ந்தால் என் அரங்கத்தில் என்ன நடக்கும்…?

நீங்கள் ஆயிரம் பேர் சேர்ந்து சொல்லும் போது எனக்குள் அது தான் ஆட்சி புரியும். இந்த உணர்வு எனக்குள் ஆளுகின்றது ஆண்டாள். நானும் கஷ்டத்தை எடுத்துக் கொண்டு வாழ வேண்டியது தான்.

பிறகு உங்கள் கஷ்டத்தை நான் நிவர்த்தி செய்வது எங்கே…?

பல தடவை ஞாபகப்படுத்துகின்றேன். அதை நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியால் குடும்பம் நலமாக வேண்டும்.
2.என் குழந்தைக்கு நலமாக வேண்டும்.
3.என் உடல் வலி நீங்கி நலமாக வேண்டும்.
4.அதற்குண்டான அருள் சக்திகள் எனக்கு வேண்டும் என்று கேட்டால்
5.”அதன்படியே நடக்கும்… நீங்கள் எண்ணியது நடக்கும்…!” என்று இந்த வாக்கினைப் பதிவு செய்தால் உடனடியாக வேலை செய்யும்.

இந்த உணர்வை நீங்கள் பதிவு செய்யும் போது உங்கள் எண்ணம் இணைந்து வாழ்ந்து அந்த உணர்வினை இயக்கும் உங்களுக்கு நல்லதாகும் என்று நான் பல முறை சொல்கிறேன்.

ஏனென்றால்
1.நீங்கள் எண்ணியது எதுவோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது.
2.அந்த உணர்வு தான் உங்கள் உடலுக்குள்ளே படர்கின்றது.
3.அது தான் உங்களை ஆட்சி புரிகின்றது என்று பல முறை சொல்லுகின்றேன்.

இதை எடுத்துக் கொள்வது இல்லை. ஏனென்றால் யாரோ செய்கிறார்… எவரோ செய்கிறார்…! என்று தான் எண்ணுகின்றீர்கள்.

சாதாரணமாக நாம் ரோட்டில் போய்க்கொண்டே இருக்கின்றோம். ஒரு மாடு அழகான நிலையில் இருக்கின்றது என்றால் பார்த்து ரசிக்கின்றோம்.

அது திடீரென இப்படித் திரும்பியது என்றால் “ஆ…” என்று அலறுகின்றோம். அந்த உணர்வின் தன்மை பயமான பிற்பாடு என்ன செய்கின்றது…? நம்மை ஒதுங்கி ஓடச் செய்கின்றது.

பயமான உணர்வு கொஞ்ச நேரத்திற்கு அந்தப் பதட்டம் நிற்பது இல்லை. அப்போது எது இயக்குகிறது…? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை ஆட்சி புரிகின்றது.

ஆகவே இதைப்போல
1.மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும்
2.இருளை அகற்றும் அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை ஏங்கினால்
3.இருளைப் போக்கும் அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் இயக்கும்.
4.சிந்தித்துச் செயல்படும் திறன் உங்களுக்குள் வரும்.

நீங்கள் எளிதில் பெறச் செய்வதற்குத்தான் இதைச் சொல்கின்றேன். சாமி செய்து தருவார்… சாமி செய்வார்… என்று என்னைத் தான் நம்புகின்றீர்களே தவிர உங்களை நீங்கள் நம்புவதே இல்லை.

காற்றில் ஞானிகள் உணர்வு படர்ந்துள்ளது. அந்த ஞானிகள் எண்ணத்தைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். நீங்கள் இதை எடுக்க முடியும்.

காது – அதிர்வு… கண் – ஆண்டெனா… இழுத்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வே நம்மை இயக்குகிறது

 

இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக இருக்கப்படும் போது பிறருடைய செயலையும் உலகம் இயக்கும் இயக்கங்களையும் உற்று நோக்கும் போது நம்மை அறியாமலே தீமைகள் வரத் தொடங்குகிறது.

காரணம்… அரக்கத்தனமாகத் தானும் தற்கொலை செய்து பல ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்ற இந்த உணர்வு வரப்படும் போது அதே உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உணர்வின் இயக்கமும் மாறிவிடும்.

இன்றைய உலகம் போகும் போக்கிலே…
1,எத்தகைய அசம்பாவிதங்களைக் காதில் கேட்டாலும்
2.அதற்கு அடுத்த கணம் நம் கண்ணிற்கே தான் வருகின்றது – ஆண்டனா.
3.காதிலே “உணர்வின் அதிர்வுகள்… பட்டதும் எலக்ட்ரானிக்…!”
4.கண் அந்த அதிர்வுகளை நுகர்ந்து உயிரிலே பட்டு உணரச் செய்கின்றது
5.அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலந்து விடுகின்றது.
6.அங்கே அந்த இயக்க அணுவாக நமக்குள் மாறி நம்மையும் அதனின் நிலைக்கே மாற்றி விடுகின்றது… விஷத்தின் தன்மை அதிகரித்து விடுகின்றது.

ஆகவே அதைப் போன்ற கொடுமைகளைக் காதில் கேட்டாலும் உடனே ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

1.கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படும்பொழுது
2.அதைச் சுத்திகரிக்க இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களை கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

அப்போது கேட்டறிந்த தீமையான உணர்வை இது தள்ளி விடுகின்றது.

அதற்குப்பின் நாளை நடப்பதெல்லாம்… நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இங்கே படர வேண்டும்
2.உலகம் அறியாத இருளிலிருந்து விடுபட்டு
3.தன்னைத் தான் அறிந்து அருள் உணர்வு பெறும் அந்த அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உலக மக்கள் அனைவரது உணர்வுகளும் நமக்குள் உண்டு. பத்திரிகையோ டிவியோ பார்க்கப்படும் பொழுது அதனின் உணர்வின் இயக்கம் நமக்குள் உண்டு. அதை மாற்றி இதனுடைய நிலைகளைச் சீராக்க வேண்டும்.

ஆக மொத்தம்… பிறருடைய பகைமை உணர்வை நமக்குள் வராதபடி அந்த உணர்வு நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட அணுக்களுக்கு ஆகாரமாகப் போகாதபடி தடுப்பதும்… நமது நல்ல அணுக்களுக்கு அருள் சக்தியைக் கொடுப்பதும் தான் “விரதம்…” என்று சொல்வது.

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து வளர்ப்பது தான் ஏகாதசி விரதம் என்று சொல்வது.
1.இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியான நேரத்தில் செய்து பழகுதல் வேண்டும்.
2.நம் ஆத்மாவைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
3.ஒரு பதினைந்து நிமிடமாவது அதை வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

இதைப் போன்று செய்யும் ஒரு பழக்கம் வந்து விட்டால் வாழ்க்கையில் குறைபாடுகள் வரும் போது அதை ஈர்க்காதபடி சிந்தித்து செயல்படும் வலிமையும் வரும்… ஞானமும் பெருகும்.

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆவியின் பிம்பமான அனைத்து பிம்பமுமே ஆண்டவன் தான்…! – ஈஸ்வரபட்டர்

 

உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்கு மட்டும் மற்ற உடலில் ஏறினால் வெளி வரும் சக்தியில்லேயே…! மற்ற முனிவர்களும் சித்தர்களும் ரிஷிகள் மட்டும் தன் சக்தியை எந்நிலையில் செயல்படுத்துகிறார்கள்…? என்று இதைப் படிப்பவர்கள் எண்ணலாம்.

இந்நிலையை அறிவதற்கு முன் இவ்வுலகின் நிலையை முதலில் அறிந்திடுவோம். நேற்றைய பாடத்தில் “அனைத்துமே ஆவி தான்…” என்று உணர்த்தினேன்.

எந்நிலை என்று அறிந்திட எண்ணுவீர்.

இவ்வுலகம் எப்படித் தோன்றியது…? மற்ற மண்டலங்கள் எப்படித் தோன்றின…? இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதே அளவுடன் தான் உள்ளனவா…? இவ்வுலகின் நிலையென்ன…? என்று அறிந்திட எண்ணுவீர்.

ஆவியான உலகங்கள் தான் அனைத்து உலகங்களுமே. உலக ஆரம்ப காலத்தில் உலகம் எப்படி தோன்றியது…? இக்காற்றுடன் இக்காற்றே ஆவிதான்.

காற்றுடன் கலந்துள்ள நீரும்… சகல சக்திகளும்… கலந்துள்ள இவ்வாவி
1.காற்றில் கலந்துள்ள அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து திடப்பொருளாகி
2.அத்திடப் பொருளில் உள்ள காந்த சக்தியினால் பல அமிலத் தன்மைகள் உள்ள திட பிம்பங்களைத் தன்னுள் ஈர்த்து
3.அதுவே சுழலும் வேகத்தில் இக்காற்றினில் கலந்துள்ள சகல அமில சத்தையும் தன்னுள் ஈர்த்து
4.ஒரே கோளமாக ஆனது தான் இப்பூமியின் நிலையும்.
5.இதைப்போலத்தான் மற்ற பூமிகளின் நிலையும்.
6.சிறுகச் சிறுக ஈர்த்துத்தான் இவ்வுலகமே ஆனதப்பா…!

இக்காற்று மண்டல ஆவியில் கலந்துள்ள அமிலத் தன்மையினால் வளர்ந்தது தான் இப்பூமி.

எந்த நிலைகொண்ட அமிலத்தை ஈர்த்து இப்பூமி வளர்ச்சி பெற்றதோ அதே நிலைகொண்ட அமிலத்தைத்தான் இன்றும் ஈர்த்து வளர்கிறது.

இவ்வளரும் நிலை இந்நிலை கொண்டேதான் வளர்ந்து கொண்டே உள்ளனவா…? வளர்வதற்கு சக்தியான அமிலம் எங்கிருந்து வந்து கொண்டே உள்ளது என்றும் எண்ணுவீர்.

இவ்வுலகம் எந்நிலை கொண்டு வளர்ந்ததோ அந்த நிலை கொண்ட சுவாச நிலைகொண்ட உயிர் அணுக்கள்தான் இன்று இவ்வுலகிலுள்ள உயிரணுக்களின் தன்மையெல்லாம்.

இவ்வுயிரணுக்களின் சுவாச நிலையும் இவ்வுலக சுவாச நிலையும் ஒன்று போல்தான் இருந்திடும். இவ்வுலகின் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்க்கின்றன.

இவ்வுலகம் எப்படி ஆவியான அமிலத்தைத் தன்னுள் ஈர்த்து வளர்த்து கொண்டதுவோ அதைப்போல் இவ்வுலகம் வெளிப்படுத்தும் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்த்து அதற்குகந்த நிலையில் அதன் தன்மை உள்ளது.

இவ்வுலகத்தின் சுவாச நிலை ஈர்த்து எடுக்கும் அளவு அதன் ஆவியையும் வெளிப்படுத்துகிறது. அதனால் இவ்வுலகம் வளர்ந்து கொண்டே உள்ளதுவா…? குறைந்து உள்ளதுவா…? என்று எண்ணுவீர்.

இவ்வுலகின் காலங்கள் மாறுபடும் பொழுது இவ்வுலகின் தன்மையிலும் மாறுபாடு நடக்கின்றது. அந்நிலையில் அதன் ஈர்ப்புத் தன்மையில் மாறும் நிலையில் உள்ளது. அந்நிலையில்தான் இவ்வுலகத்தின் அளவு நிலையும் மாறுபடும் தன்மை பெறுகிறது.

இவ்வுலகம் மாறுபடும் நாளில் தான் எல்லா மண்டலங்களுமே மாறுபடும் தன்மை பெறுகின்றது. அந்நிலையில் ஏற்படும் ஆவியின் சக்தி நிலைகொண்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் மாறுபடும் தன்மைகள் வருகின்றன.

அந்நிலையை சூட்சுமத்தில் வருபவர்கள் அறிந்திடலாம்.

1.இவ்வுலகம் யாரும் கண்டு எடுத்து வாழ்வதற்கு வந்த உலகமல்ல.
2.ஆவியினால் அவதரித்த உலகம்.
3.ஆவியின் உயிரணுக்களை ஈன்றெடுத்த உலகம்.
4.ஆவியின் ஆவியான அனைத்துமே கலந்துள்ள உலகம்.
5.நீ அருந்தும் நீரும் ஆவிதான் நெருப்பும் ஆவிதான்.
6.நீ இன்று செல்வமாக்கக் கருதும் இப்பூமியின் பொக்கிஷங்கள் அனைத்துமே ஆவிதான்.
7.ஆவியின் ஆவிதானப்பா அவ்வாண்டவனே.

ஆவி உலகம் என்பதனை நாம் இன்று பேய் பிசாசு ரூபத்தில் இனி எண்ணிலடாகாதப்பா.

இம்மனித உடலில் இருந்து பிரிந்த ஆத்மாக்கள் தன் ஆசையை செயல்படுத்திடத்தான் இவ்வுலகையே இவ்வுலக மக்களின் எண்ணத்தையே மாசுபடுத்தி இருக்கிறது.

ஆசையின் நிலையிலிருந்து உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் வழிவழியாய் வந்ததின் கொடுமையின் கொடுமைதானப்பா இன்று உடலுடன் வாழ்பவர்களின் நிலையெல்லாம்…!

இதிலிருந்து மீள்வதற்காக முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் இவர்களின் நிலையை விளக்கிடுவேன்.

ஆண்டவா… ஆண்டவா…
ஆண்டவா…. ஆண்டவா…!

ஆண்டவன் எங்குள்ளான்…?
ஆண்டவன் எங்குள்ளான்…?
என்றே அறிந்திட… “ஆண்டவனை”
எங்கும் எதிலும் காண்பதற்கே
என்னையே நான் ஆண்டவனாக்க…
என்னில் அவ் ஆண்டவனை
என்றும் கண்டிடவே….!

என்னுள்ளே அன்பையும்
சத்தியத்தையும் தர்மத்தையும்
அஹிம்சையையும் ஏற்றிடவே

ஏற்றிய வழியினிலே
ஆண்டவனைக் கண்டிடவே
ஆண்டவா… ஆண்டவா…!
என்றே நம் ஆத்ம
ஜோதியை வணங்கிடுவோம்

அகிலத்திலே அகிலமாக
ஆவியின் ஆவியாக
ஆவியின் சக்தியே
ஆவியே ஆண்டவனே…!

ஆவியின் பிம்பமான
அனைத்து பிம்பமுமே
ஆண்டவன் என்று கண்டு
ஆண்டவா ஆண்டவா…!
என்றே வணங்கிடுவோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் கண்ணைக் கண்ணணாக மதியுங்கள்.

நம் கண்கள் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. கெட்டது என்று பார்க்கும் பொழுது அந்தக் கெட்டதை நீக்குகின்றோம்.

கண்களால் பார்த்துத்தான் புறப்பொருள்களில் உள்ள கெட்டதை அறிந்து பின் அதை அகற்றுகின்றோம்.
1.புறப்பொருளில் கெட்டதை அகற்றுவது போல
2.நம் ஆன்மாவிலும் உடலிலும் சேர்ந்த தீமையான உணர்வுகளை
3.மகரிஷிகளின் அருள் ஒளியால் துடைத்துப் பழகுங்கள்.

உடலான சிவத்திற்குள் தீமையான உணர்வுகள் சேர்ந்ததும் நோயாக வளருகின்றது. உடலான சிவத்திற்குள் கெட்ட சக்திகள் வராதபடி அதைத் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.யாருடைய உடலோ…! என்று எண்ண வேண்டாம்.
2.உங்களுடைய உடல்…! என்று எண்ண வேண்டாம்.
3.உயிரான நிலைகள் இத்தனையும் உடலாகப் படைத்து
4.நமக்குள் செயலாக்கும் நிலைகள் கொண்டு இயக்குகின்ற அந்தச் சக்தியே “உயிர் தான்…” என்று உணர்ந்து
5.இந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டால் நாம் புனிதத் தன்மை பெறலாம்.

அதைத் தெரிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் நான் யார்…? தான் யார்…? இந்தப் பிள்ளை யார்…? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டுகின்றார்கள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைக்களுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைக் கொடுத்தது உயிர். நமக்குள் இருக்கக்கூடிய கணங்களுக்கு எல்லாம் ஈசனாக இயக்குவது உயிர்.

மூஷிகவாகனா… நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசித்தோமோ அந்த உணர்வுகலே வாகனமாக நேற்றைய செயல் இன்றைய சரீரமாக உருவாக்கி வைத்திருக்கின்றது. ஈசன்.

கணங்களுக்கு அதிபதியாக கணபதியாக இருப்பதும் உயிர் தான். எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கி மற்ற உணர்வுகளை ஒடுக்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான் உயிர்.

இவை எல்லாம் யார்…? இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…!

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு உடலானது. உடலின் நிலைகளிலிருந்து நமக்குள் உள் நின்று அவன் இயக்குகின்றான்.

நுகர்ந்த உணர்வுகள் உடலாக ஆனாலும் அது அது தன் தன் உணர்வைக் காக்கும் நிலையாக (உடலைக் காக்கும் உணர்வுகள்) அதனின் வழிக்குச் செல்லாது
1.உயிரான ஈசனின் அருளைப் பெறுவோம்
2.உயிருடன் ஒன்றி நாம் என்றும் நிலையான சரீரம் பெறுவோம்
3.இருளை வென்று பேரொளியாக ஆன மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்
4.நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக நாம் பெறுவோம் என்று சபதம் எடுப்போம்.

ஆகவே நம் எண்ணத்துக்குள் தான் அனைத்தும் உள்ளது. எந்த நிலையைப் பெற வேண்டும் என்று நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதுவாக ஆகின்றீர்கள்.

வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவீர்கள். தன்னுள் அறியாது வந்த இருளை நீக்குவீர்கள்; மெய் ஒளி காண்பீர்கள்; மெய் வழி செல்வீர்கள்; மெய் ஒளி பெறுவீர்கள்

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலையாக அனைவரும் பெற வேண்டும் என்று பிரார்த்தித்திக்கின்றேன்.

“எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும்…” என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்

 

1.தன் உடலில் எது இயக்குகின்றது…? என்று தனக்குத் தானே சிந்தித்து
2.தீமைகள் நம்மை இயக்கவிடாது தடுத்து அருள் உணர்வைப் பெருக்கி
3.இருளை அகற்றி வாழ்க்கையில் செவ்வென வாழ்ந்து
4.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறும் தகுதி பெறும் சந்தர்ப்பம்தான்
5.இங்கே தியானத்தில் யாம் கொடுக்கக்கூடிய பயிற்சி.

ஆனால் சிலருடைய ஆசைகள் எப்படி இருக்கிறதெனறால் உடலைப் பார்ப்பதற்குத் தான் தியானம் செய்கின்றார்களே தவிர… உடலுக்குப்பின் நாம் எப்படி நிலையாக இருக்க வேண்டும்…? என்று எண்ணவில்லை.

அழியாத நிலைகள் கொண்டு உயிர் என்றுமே நிலையாக இருக்கின்றது. அதை நாம் தியானித்து அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இல்லை.

1.தியானம் இருந்தேன் நல்லதானது…
2.காப்பாற்றினார் கடவுள் ஆகிவிட்டது…! என்ற இந்த உணர்வுக்கு நாம் சென்றால்
3.மீண்டும் புவியின் ஈர்ப்புக்குள் தான் வருகின்றோம்.

அப்படி இல்லாதபடி எல்லோரும் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த நிலையை நாம் கொண்டு வர வேண்டும்.

வாழ்க்கையின் நிமித்தம் எத்தனையோ நினைக்கின்றோம்… எண்ணியபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் உடனே வருத்தம் வருகின்றது… அப்பொழுது வேதனை வருகின்றது.

அப்போது எந்தப் பற்று வருகிறது…? வேதனை என்ற பற்று தான் அதிகமாக வருகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்குண்டான நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.

எப்பொழுதுமே… எதிலுமே… உடல் பற்று இல்லாதபடி… உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதே போன்று எல்லோருக்கும் அந்த அருள் பெற வேண்டுமென்ற அந்தப் பற்றினை நாம் வளர்க்க வேண்டும்.

அதைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் இருள் என்ற நிலையைப் பற்றற்றதாக மாற்றி விட வேண்டும். “இது தான் தியானம்…”

1.தியானம் இருந்தேன் கல்யாணம் நடந்தது…
2.தியானம் செய்தேன் சொத்து வந்தது… அது வந்தது… இது வந்தது… என்று வெறுமனே சொல்லிக் கொள்ளலாம்.
3.ஆனால் இதற்கு ஆசையைக் கூட்டக் கூடாது.

நலமாக வேண்டும் என்று ஆசைப்படலாம்… அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற அந்த இச்சை வரவேண்டும். இச்சாசக்தி… கிரியாசக்தி…!

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற இச்சைப் படும்பொழுது உயிரிலே பட்டுக் கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம்மை வழிநடத்தும்.

உடலுக்கு என்று நாம் இச்சைப்பட்டு அதைக் கிரியை ஆக்கினால் இந்த வாழ்க்கையின் நிலைக்குத்தான் வரும்.
1.சிறு குறையானால் தடைப்பட்டால் ஞானத்தை இழக்க வேண்டி வரும்.
2.இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருளைப் பெறுக்க வழி காட்டுகின்றோம்.

வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கி “எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்…”

அன்று ஒரு நாள் முழுவதும்… அந்த மாதம் முழுவதற்கும் அதில் வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்… அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டுமென்ற ஏகாந்த நிலை வரப்படும் பொழுது நமக்குள் ஏகாதசி ஆகிறது.

உடலை விட்டுப் பிரியும் சமயம் யாரிடமும் பகைமை இல்லாது சென்றால் பிறவியில்லாத நிலை அடைகிறோம்… பத்தாவது நிலை அடைகின்றோம்…. ஏகாதசி விரதம் என்ற முழுமைக்கு வருகின்றது.

ஆகவே 12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் அந்த ராசிகள் மாறப்படும் பொழுது அதை எப்படி மாற்றவேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

1.வைகுண்ட ஏகாதசி…! – எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து
2.ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுளை இழுக்காதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.

வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெலலாம் மனித உடலுக்குள் வராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அப்படி ஆனாதையாக்கினால் காலையில் ஆறு மணிக்கெல்லாம் அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து மேலே சென்று கொண்டு விடுகிறது.

சூரியன் கவர்ந்து சென்று விட்டால் நம் ஆன்மா தூய்மை அடைகிறது… ஜீவாத்மா தூய்மை அடைகிறது… உயிராத்மா ஒளியாகிறது.. இந்தப் பரமாத்மாவும் (காற்று மண்டலம்) புனிதமாகிறது.

இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை வளர்த்து எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை கொண்டு இதையே நாம் கடைபிடித்தால்
1.ஒளி என்ற உடலும்
2.ஒளியான அறிவும்
3.இருளை நீக்கும் ஞானமும்
4.மெய்ப்பொருள் காணும் சக்தியும் நமக்குக் கிடைக்கும்.

உடலுக்குள் புகுந்த ஆன்மாவைப் புனிதப்படுத்தத் தான் வேண்டும்… வெளியேற்ற முடியாது – ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் சக்திகள்தான் சகலருமே. பாகுபாடு வந்ததெல்லாம் மனிதரின் எண்ணத்தில் தான்…!

அனைத்து உலகமுமே எந்த நிலையில் அமைந்தன…?

அனைத்து உலகத் தன்மையுமே ஆவிதானப்பா. அவ்வாவியே “சக்தி தானப்பா…” அவ்வாவியை எவ்வுலகத்திலும் காணலாம்.
1.நீ காணும் சூரியனும் ஆவிதான் (VAPOR)
2.சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களும் ஆவிதான்
3.நட்சத்திர மண்டலமாகக் காணும் பல கோடி மண்டலங்களும் ஆவிதான்
4.இவ்வுலகமும் நீர் நெருப்பு மாடு மனை நீயும்தான் அனைத்துமே ஆவிதான்.
5.ஏன் சகலமும் ஆவிதான்.
6.சகலத்தில் வந்த ஆவியின் பிம்பம் தான் இன்று நாம் காணும் அனைத்துமே.

ஆவி என்றாலே பேய்… பிசாசு… என்று மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி விட்டார்கள். இப்பீதியை ஏற்படுத்தி யாவரும் அவ்வெண்ணத்தில் கலந்த பயத்தினால் வந்ததுதான்.

இவ்வாவி என்றாலே…
1.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாவையே ஆவி உலகம் என்ற உலகமாக்கி
2.எல்லோர் நினைவிலும் ஆவி என்றாலே அரண்டு நினைக்கும் நிலையில் தான் காலம் காலமாக பழக்கத்தில் வந்துவிட்டது.

ஆவியுடனே ஆவியாக வாழும் நாம் நம்மைப் போல் வாழ்ந்த உடலை விட்டுச் சென்ற ஆவிகள் தன் எண்ணத்தின் நிலை கொண்டு அது அது எடுத்த சுவாச நிலையின்படி சுற்றிக் கொண்டுள்ளது.

வாழ்ந்த காலத்தில் நல்லவனாகவும் தீய நினைவு கொண்ட விஷம் படைத்தவனாகவும் வாழ்ந்ததை நிலைப்படுத்தி தன் குரோதத்திலும் நல் நிலையில் உள்ள நல் ஆவியும் சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்வுலகினிலே தன் எண்ணத்தை முதலில் செயல்படுத்தி
2.அதன் பிறகு பிறவி எடுக்கலாம் என்ற நிலையில் பல ஆவிகள்
3.அதாவது உடலை விட்டுச் சென்ற ஆவிகள் உடலுடன் உள்ள மனிதர்களின் எண்ணத்துடன் கலந்து செயல்படுத்திட
4.இரண்டு எண்ணமும் ஒரு நிலைப்படும் பொழுது
5.உடலுடன் உள்ளவர்களின் உடலில் உடல் கூடு இல்லாத ஆவிகள் அதன் நிலையைச் செயல்ப்படுத்திட இவ்வுடலில் ஏறுகின்றது.

இவ்வுடலில் வந்து ஏறிய ஆவிகள் அவ்வுடலில் இருந்து கொண்டே தன் எண்ணப்படியெல்லாம் உடலுடன் உள்ள வரை செயல்படுத்துகிறது.

பல துர் ஆவிகளின் நிலைக்கு ஆளாகும் உடலுடன் உள்ளவர்களுக்கு அவர்களின் எண்ணத்தை நல்ல நிலைப்படுத்திட அவ்வாவிகள் அவர்களை விடுவதில்லை.

நாம்… அவர் செய்யும் பாவங்கள் என்று எண்ணுகின்றோம். பாவத்தை அவன் மட்டும் செய்யவில்லை. அவனை ஆட்டுவிப்பது அத் துர் ஆவியின் நிலைதான்.

1.அறியாமல் தன் எண்ணத்தில் களங்கம் வைத்திருப்பவனுக்கு
2.துர் ஆவிகளின் செயலுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்று உணர்ந்து வாழ்ந்தால்
3.தன் எண்ணத்தைச் சுத்தப்படுத்தி புனித வாழ்க்கை வாழ்ந்து
4.இத் துர் ஆவியின் நிலையிலிருந்து தன் நிலையை உயர்த்தி வாழ முடியும்.

பேய் பிடித்துள்ளது… பிசாசு பிடித்துள்ளது… ஆவியை ஓட்ட வேண்டும்… என்றெல்லாம் ஆவியை ஓட்ட வேப்பிலை தட்டிப் பல வித ஒலிகளை எழுப்பும் வாத்திய இசையை இசைத்து அவ்வாவியை ஓட்டுவதாகச் சொல்கிறார்கள்.

எவ்வாவியை யார் ஓட்ட முடியும்…?

அவ்வாவிக்குப் பிற உடலில் ஏறித் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத்தான் முடிந்திடுமே தவிர உடலில் இருந்து வெளி வந்திட அவ்வாவிக்குச் சக்தியும் திறமையும் இல்லை.

அவ்வுடல் என்று மாறுபடுகிறதோ அதனுடன் தான் இவ்வாவியும் வெளிப்படுகின்றது. பிற உடலில் ஏறிய இவ்வாவியினால் மனித ஜென்மத்திற்கு ஜெனனத்திற்கு வர முடிந்திடாது.

ஆண்டவன் சக்தியில் அருளிய ஏழு ஜென்மங்களையே பல ஆவிகள் பயன்படுத்திடாமல் ஆவி உலகிலும் தன் ஆசையை செயல்படுத்திட மற்ற உடலில் ஏறி தன் ஆத்மாவுக்கு அடங்காத இன்னலைத்தானே தேடிக் கொடுக்கின்றது.

ஒருவர் உடலில் இருந்து அவர் ஆவி பிரிந்து செல்லும் பொழுது அவ்வுடலுக்குச் சொந்தமான ஓர் ஆவி மட்டுமா பிரிந்து செல்கிறது…?

அவ்வுடலுடன் இருந்த பொழுது அவன் ஏற்றிக் கொண்ட பல ஆவிகளுமே பிரிந்து செல்கின்றன.

அவன் உடலில் ஏறிய ஆவிகளின் சுவாச நிலை மாறுபட்டு பல பல புதிய புதிய இன வர்க்கங்கள் வருவதுவும் இம்மனித மனங்கள் எடுத்த சுவாசத்தின் நிலையிலிருந்துதான்.

துர் ஆவியைப் போலவே…
1.நல் நிலையில் நம் சுவாசம் கொண்டு பல நிலைகளைத் தன்னுள் காணும் ஒவ்வொருவருக்கும்
2.அந்நிலையில் அவர் உடலில் ஏறிய ஆவிகளும்
3.அவர் எடுத்த அவ்வுடலுடன் உள்ளவரின் சுவாச நிலை கொண்டு
4.அவ்வுடலில் ஏறிய நல் நிலை பெற்ற ஆவிகளும்
5.இவ்வுடலுடன் இருந்தவனின் ஆத்மா பெறும் பாக்கியத்தையே அவையும் பெறுகின்றன.

அதாவது தன் ஆத்மா மட்டும் சாந்தி பெறுவதில்லை. பல ஆத்மாக்களுக்கும் விமோசனம் கிடைக்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஜய தசமி என்பது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளும் நிலை தான். என்னை நான் (ஞானகுரு) அறிந்து கொள்ளும் நிலை தான்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த நிலைகள் கொண்டு என்னை நான் அறிந்து கொண்டேன். என்னை நான் அறிந்து கொண்ட நிலைகளை உங்களுக்கும் சொல்லுகின்றேன்.

அதே மாதிரி நீங்களும் அறிந்து கொண்டு வளர வேண்டும்.

அறியாது சேர்ந்த தீமைகளை நீக்கும் மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கெல்லாம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற குருவின் ஆணைப்படி இதை உபதேசிக்கின்றோம்.

அதை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களுக்குக் கிடைக்கின்றது… எனக்குள்ளும் வளர்கின்றது.

உதாரணமாக இங்கு ரோட்டில் இருக்கக்கூடிய குப்பைகளை அப்புறப்படுத்திச் சுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் தான் அங்கு சுத்தப்படுத்தும் நிலைகள் வருகின்றது.

குப்பையாக இருக்கின்றது…! சுத்தப்படுத்த வேண்டும்… சுத்தப்படுத்த வேண்டும்… என்று “வெறும் வார்த்தையால்…” சொல்லிக் கொண்டே இருந்தால் அது சுத்தமாகாது.

1.எப்பொருளானாலும் செயல்படுத்தும் எண்ணம் முதலில் உருவானாலும்
2.அந்தச் செயல்படுத்தும் உணர்வின் தன்மை நமக்குள் செயல்படும் பொழுது
3.அந்த உணர்வுகள் விளைந்தே அந்த உணர்வின் தன்மை செயலாக
4.நம்மைச் செயல்படுத்துகின்றது.

மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை எல்லோருக்கும் பெறச் செய் என்று குருநாதர் எனக்குச் சொன்னார். அதைக் கூர்ந்து கவனித்தேன்.
1.இந்த உணர்வு எனக்குள் “வித்தாகப் பதிந்தது…”
2.குருநாதர் சொன்னதை மீண்டும் மீண்டும் நினைக்கின்றேன்.
3.இந்த உணர்வின் அலைகள் எனக்குள் பெருகுகின்றது.
4.பெருகிய நிலைகள் கொண்டு “அந்த வித்து” எனக்குள் விளைகின்றது.

ஞானமாக எனக்குள் விளைந்த வழியைத்தான் நான் உங்களுக்குள் சொல்லுகின்றேன்.

ஏனென்றால் இந்த ஞான வித்து குருநாதர் கொடுத்தது. அந்த வித்து பலவாறு பல நிலைகள் விளைந்தது. அதிலே அருள் ஞான வித்தின் நிலையைத் தான் உங்களுக்குள் ஆழமாக பதியச் செய்கின்றோம்.

பதிந்த வித்தின் நிலைகளை செடிக்கு நீர் ஊற்றுவது போல் வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது.

நஞ்சை வடிகட்டும் வலுவான உறுப்புகளாக… நம் உடல் உறுப்புகளை உருவாக்க வேண்டும்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடம் யாம் பெற்ற அனுபவங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அனைத்தையும் யாம் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.குருநாதர் கொடுத்த அந்த அருளை ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.கண்ணின் நினைவை அதிலே செலுத்தப்படும் பொழுது கெட்டது போகாமல் உங்களுக்குள் தடுக்கப்படுகின்றது.

அதே நினைவு கொண்டு உள்முகமாக உங்கள் உடலுக்குள் இரத்த நாளங்களில் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று செலுத்தினால் வீரியமடைகின்றது. உடலுக்குள்ளே வலுவான பின் தீமைகளைத் தள்ளிவிட்டு விடுகின்றது

உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம். மீண்டும் அவரை நினைக்கும் பொழுது அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்ச்சி வரப்படும்போது
1.ஒரு பலகாரத்தைச் சுட்டுக் கொண்டிருந்தால் சரியாகச் செயல்பட முடியாது.
2.ஒரு இயந்திரத்தில் வேலை செய்தாலும் அதைச் சீராக இயக்க முடியாது
3.ஒருவர் சந்தோஷமான வார்த்தையைச் சொன்னால் காது கொடுத்துக் கேட்க முடியாது.

இப்படி ஒரு சமயம் பதிவானது மறுபடியும் இந்த உணர்வு கலக்கப்படும் பொழுது நம்மால் சரியான பதிலும் சொல்ல முடியாது போய்விடுகிறது. அதனால் இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி பழகுதல் வேண்டும்.

சூரியன் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து விஷமான நிலையைக் கொண்டு வரப்படும் பொழுது இது மோதி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது.

அதிலே…
1.கேது விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.இராகு கருகிய புகைகளை எடுத்துக் கொள்கின்றது
3.ஓடும்போது மின் கதிர்களை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது.
4.மோதலில் வரக்கூடிய சப்தத்தைச் செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது
5.மோதி ஆவியாகப் பிரிந்து செல்வதை சனிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

இப்படி அதனதன் வலு கொண்டு அதனதன் நிலைகளில் எடுக்கின்றது.

சூரியனுக்கு எப்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் இருக்கின்றதோ அதே போன்றுதான் நமக்குள் சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்த உணர்வுகள் உடலில் உள்ள உறுப்புகளில் இயங்குகின்றது.

கல்லீரல் ஓரளவுக்கு விஷத்தைப் பிரித்து வடிகட்டி அனுப்புகின்றது.
1.அங்கு அதிகமான விஷத்தன்மையானால் முடியாது போகிறது… விட்டு விடுகிறது.
2.மண்ணீரலுக்குப் போனாலும் இதே நிலைதான்.
3.அதை இழுத்து நுரையீரலுக்கு வரும் பொழுது அங்கே தேங்கினால் நுரையீரலும் கெட்டு விடுகின்றது.
4.நுரையீரல் கெட்டு அந்த விஷத்தின் தன்மை அனுப்பப்படும் போது சிறுநீரகம் இரத்தத்தில் இருக்கக்கூடிய மாசுகளை பிரிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

உப்புச் சத்தையோ சர்க்கரைச் சத்தையோ பிரிக்க முடியவில்லை என்றால் அந்தச் சத்துக்கள் எல்லாம் அளவு கூடி விடுகின்றது… வாத நீர்களை உண்டாக்கிவிடுகிறது…. பலவீனமாகி விடுகிறது.

அத்தகைய பலவீனத்தை மாற்ற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சிறுகச் சிறுக… சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் வளர்ச்சி அதிகமானால் சர்க்கரை சத்தையும் உப்புச் சத்தையும் குறைக்க முடியும். ஆகவே…
1.உடல் உறுப்புக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்து விட்டால்
2.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

மனிதன் ஒருவனால் தான் இது முடியும்.

கோலமாமகரிஷி ஆட்கொண்ட ஆதிசங்கரரின் அருளாற்றலை எடுத்தால் ஆவிகளிடமிருந்து மீளலாம் – ஈஸ்வரபட்டர்

 

அன்றாட வாழ்க்கையில் ஆவியின் தொடர்பில்லாமல் வாழ்வது மிகவும் கடினமான நிலை. தன் எண்ணத்தைச் செயல்படுத்திட எந்த ரூபத்திலும் அவ்வாவி செயல்படுத்திடும்.

அவ்வாவியின் எண்ணமெல்லாம்…
1.தான் முன் ஜென்மத்தில் விட்டு வந்த குறையை
2.எந்தெந்த நிலையில் யார் யார் மேல் அன்பு பாசம் ஆசை குரோதம் வெறுப்பு விருப்பு கொண்டு வளர்ந்ததோ
3.இவை எல்லாவற்றையுமே எந்த ரூபத்திலும் அந்த எண்ணத்திற்குகந்தவர்கள் கிடைத்தவுடன்
4.அவர்களின் உடலில் எப்பாகத்திலும் ஏறி அவர்கள் எண்ணத்துடனே கலந்து தன் நிலையைச் செயல்படுத்திக் கொள்ளும்.

நம் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற ஆவிகள் மட்டும் நம்மை வந்து காத்துச் செயல்படுத்தும் என்பதல்ல. இவ்வுலகில் சுற்றியுள்ள எந்த ஆவியும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத் தனக்குகந்த உடலை எடுத்துக் கொள்கின்றது.

ஆவியின் நிலை இந்நிலையில் உள்ளதினால் இதை உணர்ந்த ஜெபம் கண்ட நம் முன்னோர் பலர் இந்நிலையிலிருந்து மக்களை மீட்கத்தான் பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.

இவ்வுலகம் முழுவதுமே ஆண்டவன் என்றால் யார் என்று சொல்கிறார்கள்…?

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நிலைப்படுத்தித் தான் வணங்கும் பக்தியைக் கொண்டே அவர்களுக்கு உகந்த நிலையை ஆண்டவனாக்கி வணங்குகின்றார்கள்.

அனைத்து உலகிலுமே இவ் ஆவி என்னும் பயந்த கிலி நிலை பரவித்தான் உள்ளது. பலரின் கண்களுக்கு ஆவியின் நிலை புலப்படுவதையும் கேட்டிருப்பீர்.

சில நிலைகளில் ஆவியின் நிலையையே ஆண்டவனாக வணங்குகின்றார்கள். சக்தி நிலையறிந்து சக்தியான அவ்வாண்டவனைக் கண்டவர்கள் யார் உள்ளார்கள்…?

நம் ரிஷிகள் எல்லாரும் நம்மை இவ்வாவியின் நிலையில் இருந்து தப்ப பல ஜெப வழிகளை நமக்குணர்த்தி அச்சக்தியிலிருந்து தான் பெற்ற பல நல் உணர்வுகளை நமக்கு ஊட்டினார்கள்.

அந்த நிலையில்தான் கோலமாமகரிஷி அவர்கள்…
1.தன் ஜெபத்தை… தான் பெற்ற அருள் செல்வத்தை…
2.அனைவரும் உணர்ந்து நல் வழிக்கு மக்களைச் சீர்படுத்த ஆதிசங்கரரின் உடலில் அவர் நிலையை ஏற்றி
3.ஆதிசங்கரரையே அனைவரும் தெய்வமாகக் காணும் நிலைக்கு
4.அவர் உடலில் இவர் இருந்து பல செயல்களைச் செய்து வந்தார் ஆதிசங்கரரின் ரூபத்திலேயே.

அவர் சொல்லி வந்த உபதேசங்களை வழி நடத்திட பல இடங்களில் பல மடாலயங்கள் அமைத்தார்கள். அந்நிலையையே வழி வழியாய் இன்று மக்களுக்கு உணர்த்துவதற்காக சங்கராச்சாரியார்கள் என்று மத வழியை அவ்வழியில் புகட்டி வழி நடத்தி வருகின்றார்கள்.

நல்வழியில் வந்த நிலைதான் ஆதிசங்கரரின் நிலை. ஆனால் அனைவரையும் ஒன்று போல் எண்ணும் நிலைக்கு இல்லாமல் மாறியதின் நிலை இன்றுள்ள நிலை.

1.பக்தி மணம் உள்ளது
2.பக்தி மணத்தில் எல்லா மணமும் ஒன்றே என்னும் ஒரே மணத்தைப் பரப்பிவிடாமல்
3.அம்மணத்துடன் சிறு விஷமான மணமும் கலக்கவிட்டு விட்டார்கள்.

இந்நிலையில் சிறிதளவு மாற்றும் தன்மை இன்று வந்தாலும் அவர்கள் வழியிலேயே உலகத்தையே தெய்வ மணமாக்கிடலாம்.

இவ் ஈஸ்வரபட்டனாகிய நான் இக்கலியின் ஆரம்பத்தில் ஓர் உடலை ஏற்று இப்பக்தி மணத்தைப் பரப்பியதுவும் ஜாதி நிலையில் இருந்துதான். ஜாதியின் மதத்தின் நாமத்தைச் செப்பிட விரும்பாததினால் இந்நிலையில் செப்பவில்லை நான்.

வழி வழியாய் வந்த வினைதான் இவ்வினை. நாமாக ஏற்ற நிலையல்ல. நாமாக மீளும் நிலையைத்தான் இனி அனைவரும் எண்ணத்தில் கொண்டு செயல்படுத்திட வேண்டும்.

ஆதிசங்கரராய் வணங்கிடும் கோலமாமகரிஷி அவர்கள் இன்றும் உள்ளார். என்றும் இருப்பார்…!

இன்று அவர் நடத்திச் சென்ற வழியில் வந்த சங்கரர் வழியில் இருந்திடும் பல ஜெபங்கள் செய்து பூஜிப்பவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்…
1.அவரிடத்திலுள்ள சிறு கறையையும் நிறைவாக்கி ஜெபம் பெறும் பொழுது
2.அந்த ரிஷிகளின் தொடர்பு பெற்று… இன்று மகான் என்ற இன்றுள்ள மனிதர்களால் நாமம் பெற்றவர்கள்
3.சப்தரிஷிகளின் சொல் நாமத்தை ஏற்றிடலாம்.

மாமகான் என்ற நாமத்துடனே பல ரிஷிகளுடனும் கலந்திடலாம் இப்பாக்கியத்தை எண்ணி வழியமைத்து வந்திட்டாலே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பக்தி நிலைகளில் நாம் போகும் போது கோயில்களுக்குப் போகிற இடத்திலே சிலர் “ஆண்டவன் எனக்கு நேரிடையாகச் சொல்கிறான்…” என்று சொல்வார்கள்.

இந்த மாதிரிச் சொல்லிக் கொண்டு பழனியில் ஒருவர் இருந்தார். நான் மிலிட்டரிக்குப் போய் விட்டு வந்தேன். அது… இது… என்று சொல்கிறார்.

ஜோசியங்களைச் சொல்லிக் கொண்டு அது இப்படி நடக்கிறது… அப்படி நடக்கிறது… என்றெல்லாம் சொல்வார்.

உங்கள் வீட்டில் இந்தச் சக்கரத்தை வைத்திருந்தால் மிகவும் நல்லது என்று சொல்வார். அதைக் கொடுத்துக் காசுகளை வாங்குவார்.

கோயில்களுக்கு வருபவர்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டு அவர்களை எப்படி மடக்குவது…? என்று சில வேலைகளைச் செய்வார்.

நான் (ஞானகுரு) சித்து ஆகியிருக்கும் நிலையில் அவரைச் சந்திக்கும் போது சொன்னேன்.

உன்னுடைய மந்திர வித்தை சிறிது காலம் செல்லும். ஆனால் இது உன்னையே வீழ்த்தும். நீ முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை. காசைக் கொடுத்து நீ வாடகைக்கு வாங்கி இந்த வேலையைச் செய்கிறாய்.
1.அற்பக் காசுக்காக இதைச் செய்கிறாய்.
2.அந்த வினைகளை எப்படி நீ தெரிந்து கொள்ளப் போகின்றாய் பார்…! என்றேன்.

அதெல்லாம்… என்னால் எதை வேண்டும் என்றாலும்… செய்ய முடியும்…! என்றார். கடைசியில என்ன செய்தார்…?

ஒருவரைக் கொல்வதற்காக வேறொருவரிடம் சக்தியை வாங்கி வைத்துப் பழனி வையாபுரி குளத்தில் வைத்துச் செய்தார். அவர் அங்கேயே செத்து மடிந்தார்.

இதே மாதிரி பழநி பஸ் ஸ்டாண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி. கோவிலுக்குப் போவோரை ஒருவர் மடக்கிக் காசுக்காகச் செய்து கொண்டிருந்தார்.

ஒருவர் அவர் இரண்டு சம்சாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சார்…! இங்கே வாருங்கள்…! என்றார். நீங்கள் உங்கள் பாக்கெட்டில் வைத்திருந்த காசெல்லாம் காணாமல் போய்விட்டது…! என்றார்.

அதெல்லாம்… “ஒன்றும் இல்லை…!” என்றார்கள் அவர்கள்.

“இல்லை இல்லை… நீங்கள் பாருங்கள்…!” என்றார்.

உங்கள் பாக்கெட்டில் இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது… பாருங்கள்…! என்றார்.

“பணம் காணாமல் போய்விட்டது…!” என்று சொல்லிவிட்டு இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது என்று சொல்லி அதை அவர்கள் பார்த்தவுடனே இவர் மீது முழு நம்பிக்கை வந்துவிடுகிறது.

அப்புறம் “போனது வந்தது… சண்டை போட்டது… அவர் வாழ்க்கையில் நடந்தது…” எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்.

எல்லாம் அவர்கள் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் முருகன் உங்களுக்கு நிறைய இந்த மாதிரி அருள் கொடுத்திருக்கின்றார். சரி…! நீங்கள் மலைக்குப் போய் முருகனைத் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

முதலில் “வெறும் ஒரு ரூபாய் தான்… அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம்…!” என்று சொல்லிக் கவர்ச்சி செய்து கொள்கிறார்கள்.

அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்…?

உங்களை மடக்குவதற்காக எதிரிகள் இருக்கின்றார்கள். அதைச் சரி செய்ய வேண்டும்…! எதற்கும் ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்கள். அப்புறம் நல்லதான பிற்பாடு மிச்சத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்கிறார்.

“அதற்காக உங்களுக்குச் சக்தி தருகிறேன்…! என்று சொல்லிக் கோவிலுக்கு வருபவர்களிடம் சொல்லி ஒவ்வொரு நாளும் இப்படித் தட்டிப் பறிக்கின்றார்கள்.

இந்த மாதிரி ஜோதிடங்கள் நிறைய உண்டு. ஏனென்றால் கரு வித்தைகளை வைத்து அந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி இப்படிச் செய்வார்கள்.

சமுதாயத்தின் மத்தியில் “இப்படி எத்தனையோ பேர்…” மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள்.

கோவில்கள் இருக்கும் பக்கம் போனால்… ஜோசியம் ஜாதகம் மந்திரம் தந்திரம் ஏவல் பில்லி சூனியம் என்று “ஏகப்பட்டது…” இருக்கின்றது. ஏனென்றால் அங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள் அல்லவா…!

இதை வைத்து ஏமாற்றி “இது தான் கடவுள்” என்ற நிலைகளில் முருகனே சொல்வதாகச் சொல்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு இடத்தில் என்ன செய்கிறார்கள்…?

எல்லாம் உட்கார்ந்திருக்கின்றார்கள்.

முருகா…! வாடா…! என்று அங்கிருப்பவன் சொல்கிறான். தீபத்தைப் பொருத்துடா…! என்கிறான். “டக்…” என்று அந்தக் கற்பூரம் எரிகிறது.

ஆகா..! உனக்கு முருகன் ஆசி கொடுத்திருக்கின்றார். உனக்கு எல்லாம் நன்றாக இருக்கிறது.. அது… இது…! என்று இந்த மாதிரி இரண்டு பேரிடம் சொல்லிக் காசை வாங்குகிறான்.

நல்ல பண்பு உள்ள ஆலயங்களில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

பக்தி கொண்ட மக்களும் அதில் ஏமாற்றம் அடைந்து உண்மையின் உணர்வை அறிய முடியாதபடி
1.இந்த உடலின் ஆசைக்கு இதற்குள் சிக்கப்பட்டு…
2.தனது பண்புகளை இழந்த நிலையில் இருக்கிறார்கள்.

பெரும் பகுதி பாருங்கள்…! திருவண்ணாமலை ஆனாலும் சரி… பழனி ஆனாலும் சரி… திருப்பதி ஆனாலும் சரி… இப்படிப் பல பேர் அங்கிருந்து இந்த வேலைகளைச் செய்கிறார்கள்.

நாடி சாஸ்திரம் என்று எடுத்துக் கொண்டால் யட்சினி நாடி – அரசர்கள் தனக்குள் அனுபவித்த இப்படி நாடி சாஸ்திரங்கள் உண்டு.

எதன் வழிகளில் அரசர்கள் செய்தார்களோ விஸ்வாமித்திரர் நாடி கௌசிகர் நாடி என்று அன்று சிலதுகளை வைத்து நாடிகளைப் பார்த்து நடந்தவைகளைச் சொல்லும். நடக்கப் போவதைச் சொல்லாது.

இதைப் போன்று சில தவறான நிலைகளை செயல்படுத்தப்பட்டுத் தவறின் பாதைக்கே அழைத்துச் செல்கின்றனர். எல்லா மதத்திலும் சரி இதே தான்.

1.உடலிலிருந்து பிரிக்கப்பட்ட ஆன்மாக்களை வைத்து சில மந்திர ஜாலங்களைச் செய்து
2.இது தான் ஆண்டவன் செயல் என்ற நிலையில் செய்கின்றார்கள்.

உண்மையின் இயக்கத்தைப் பெறுவதற்கு மாறாக உடலின் இச்சைகள் கொண்டு பல தவறுகள் நடக்கின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

நாம் ஞானிகள் காட்டிய மெய் வழியில் அந்த அருள் ஞானத்தைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுதல் வேண்டும்.

1.உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து
2.அந்த ஆலயத்தின் பண்புகளைத் தெளிவாகத் தெரிந்து
3.ஆலயத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும்.

நாம் எந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று அந்த ஆலயத்தில் ஞானிகள் சிலையை வைத்தார்களோ அந்தக் குணத்தை நாம் பெறுவதற்குண்டான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

தியானத்தில் வளர்ச்சி மிக மிக முக்கியமானது

 

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானம் செய்வதற்கு முன் இருந்த அனுபவமும் தியான வழிக்கு வந்த பின் பெற்ற சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

அதனை நீங்கள் கூர்ந்து கவனித்து
1.அந்த உணர்வின் இயக்கம் நாம் இயங்குகின்றோமா…?
2.நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா…?
3.அவ்வாறு இயக்கிய உணர்வுகளுக்குத் தக்க நாம் செல்கின்றோமா…? என்று
4.நன்றாக நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றுகிறது. ஆகவே தீமை என்ற உணர்வின் தன்மையை மாற்றியமைக்கக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்பதை உணர்ந்து… மாற்றி அமைப்பதற்குண்டான சக்தியை நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமையிலிருந்து தப்புவதற்கு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை குருநாதர் எனக்குள் பெறச் செய்தாரோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீய வினைகள் இருந்தாலும் குறையும்.
2.புதிதாக தீயவினைகள் நமக்குள் வளராதபடி தடுக்க முடியும்.

இந்த இரண்டும் இல்லை என்று சொன்னால் நான் தியானம் செய்தேன்.. அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்…! என்று சொன்னால் அர்த்தமற்றது.

செடிக்கு அது சரியான பருவத்தில் நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால்தான் அது முளைத்து வளரும்.
1.செடியை வைத்து விட்டேன்… நீரையும் ஊற்றி விட்டேன்…
2.அது வளர்ந்து விளைந்துவிடும்… என்று சொன்னால் அது எப்படி விளையும்…?

எத்தனையோ கோடி உடல்களில் சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு தான் மனித ரூபத்தைக் கொடுத்தது நம் உயிர்.

பல விஷத் தன்மைகளை அடக்கினான்… உணர்வின் தன்மை மாற்றி அமைத்தான்… அகஸ்தியன் ஒளியின் உடல் பெற்றான்… துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும். அந்தத் தகுதியை நாம் பெற வேண்டும்.

அகஸ்தியன் ஒளியாக ஆனது போல
1.நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
2.முந்திய வினைகள் இருந்தால் அதைத் தணித்து… புதிதாக வினைகள் சேராதபடி தடுத்து
3.நம் உணர்வினை வலுவாக்கி ஒளியாக்க முடியும்.

அத்தகைய வலு பெறச் செய்வதற்குத் தான் இங்கே உபதேசம் கொடுப்பது.

சாமியிடம் உபதேசங்களைக் கேட்டதும்… அதன்படி உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டதும்…
1.உங்களை எது இயக்கியது…?
2.வெறுப்பு வந்து குடும்பத்தில் பகைமை எப்படி வந்தது…?
3.தொழில் எதனால் நஷ்டம் அடைந்தது…? என்பதை நீங்கள் உணர்ந்து
4.தியானத்தின் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற தீமையை நீக்கக்கூடிய அந்த உணர்வுகளை
5.நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

அதற்குத் தான் உங்கள் அனுபவங்களைச் சொல்லச் சொல்வது.

புகழுக்கும் பேராசைக்கும் அடிமைப்பட்டுத் தான் இன்றைய உலகம் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

அன்றாண்ட அரசர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் புகழ் ஓங்க… கோயில்கள் மூலமாகத் தன் பெயரை நிலைநாட்டினார்கள்.

கோயில்களைச் ஸ்தாபிதம் செய்து அந்நிலையில் பல கல்வெட்டுகளில் தன் பெயர் நிலைக்கத் தன் புகழின் ஆசைக்காக தன்னால் எழுப்பிய கோயிலிலேயே தன் பெயரையும் கல்வெட்டில் செதுக்கி வைத்து அவர்கள் பெயர் என்றுமே அழியாமல் இருக்க வேண்டுமென்றே புகழ் ஆசையினால் பல கோயில்களைக் கட்டினார்கள்.

புகழின் ஆசையில் வந்ததுதான் இன்று நாம் சென்று வணங்கும் பல கோயில்களின் நிலை. அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த அவ்வரசர்களின் ஆவிகளும் அந்நிலையிலேயே தான் சுற்றிக்கொண்டுள்ளன.

1.இன்று நாம் வாழ்ந்திடும் இந்நாட்டில்… ஆண்டவனின் பெயரையே
2.தன் புகழுக்காகத்தான் அன்றாண்ட அரசன் முதல் இன்று வாழ்ந்திடுபவர் வரை எண்ணி வணங்குகின்றோம்.

ஆண்டவன் என்பது எந்நிலையில் உள்ளது பார்த்தாயா…?

அன்று இருந்தவர்களின் குண நிலையைப் பொறுத்துத்தான் இன்று வாழும் மக்களின் நிலையும் உள்ளது. வழி வழியாய் வந்த மக்களின் “சுவாச நிலை” மாறுபடவே இல்லை.

மனித உடலை விட்டு ஆவி உலகுக்குச் சென்றாலும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட அவ்வாவிகளுக்கு ஆசையும் அடங்கவில்லை.

அவ்வெண்ணத்தின் தொடர்ச்சியில் வரும் எண்ணம்தான் இப்பொழுது உள்ளவர்களின் நிலையும்.
1.புகழ் ஆசையினால் வந்த வினைதான் இன்று இவ் உலகம் உள்ள நிலையும்
2.புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது.

இன்றிருப்பவரின் மன நிலை அவர்கள் செய்த நிலை மட்டுமல்ல தொடர்ந்து கொண்டே வரும் “பல ஆவிகளின் தொடர்தான்…”

“புகழ்…” என்னும் பேராசைக்கு அடிமைப்பட்டதினால் இன்றுள்ள எல்லோரின் மனமும் புகழ் ஒன்றுக்கே எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது.

காலத்தையே விஷமாக்கியவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான். மனிதர்களின் மனதையெல்லாம் பேராசைக்கு உட்படுத்தியவர்களும் அவ்வரசர்கள்தான். அவ்வெண்ண நிலை இன்றும் இங்கு மாறவில்லை.

பல கோயில்களில் ஆண்டவனின் விக்ரகங்கள் களவாடும் நிலை எப்படி வந்தது…? கயவனை அவ்வாண்டவன் பிடித்துத் தரக்கூடாதா…? அவனுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்றெல்லாம் ஆண்டவனை நாம் பல வினாக்களைக் கேட்கின்றோம்.

கல்லான விக்ரகம்தான் ஆண்டவன் என்பது. எடுத்துச் செல்பவன்… தான் அவனின் எண்ணத்தின் பேராசையினால் களவாடிச் செல்கின்றான். கல் என்ன செய்யும்…?

ஆனால் சில கோயில்களில் களவாடிச் செல்லும் விக்ரகங்கள் எடுத்துச் செல்பவன் உதிரம் கொட்டி இறப்பது எந்நிலையில்…?

அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த ஆவி வந்து அவனை அடித்துக் கொன்று விடுகிறது. ஆவியின் நிலையும் தொடர்பில்லாத சில கோயில்களில்தான் அவ்விக்கிரகங்கள் களவு போகும் நிலையில் உள்ளன.

ஆவி நிலையில் உள்ள எந்தக் கோயிலின் விக்ரகமும் களவாடிச் செல்பவனின் நிலையைப் பார்த்து அவனை விட்டு வைத்திடாது. பல கோயில்களின் நிலையும் இந்நிலையில்தான் இன்றுள்ளது.

ஆண்டவன் என்னும் ஆண்டவனையே இந்நிலைக்கு வந்ததின் நிலையெல்லாம் அரசர்களினால் வந்த வினைதான்…!

தெய்வ பக்தியும் நல்லொழுக்கமும் நற்போதனையும் மக்களின் எண்ணத்தில் பதியச் செய்து ஆத்மீக வழியில் அன்புடன் வாழ்வதற்கு வழியமைத்துச் சென்றிடாமல் இக்கலியின் காலத்தையே விஷமாக்கி இவ்விஷத்தின் தொடர்புடனே வாழ்கின்றான் ஒவ்வொரு மனிதனும்.

இந்நிலையில் ஜாதி மதம் என்ற வேலி வேறு. இதைப் படித்திடும் ஒவ்வொருவரும்
1.தன் எண்ணத்தைத் தூய்மைப்படுத்துங்கள்
2.சத்தியத்தை உம்முள் ஐக்கியப்படுத்துங்கள்
3.அன்பையே ஆண்டவனுக்கி வணங்கிடுங்கள்.

தெய்வத்தைக் கண்ட பேரானந்தப் பொக்கிஷத்தை நம் ஆத்மா என்ற ஆண்டவனுக்கு அர்ப்பணித்தே வாழ்ந்திடலாம். ஒவ்வொருவரும் இன்று சூழ்ந்துள்ள விஷத் தன்மையில் இருந்து மீண்டு தன்னைத் தானே உணர்ந்து வாழ்வதற்கே இப்பாட நிலையும் ஜெப நிலையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சிலர் குடும்பத்தில் அவர்கள் தாய் தந்தையரின் கடைசிக் காலங்களில் சரியாகக் கவனிக்காது விட்டுவிடுகின்றார்கள். பின்னாடி அவர்களும் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

என்ன காரணம்…?

தாய் தந்தையைப் பற்றி நினைவு கொள்ளாமல் விட்ட நிலைகளில் அவர்கள்
1.”என் வயதான காலத்தில் இப்படிக் கவனிக்காது விட்டு விட்டானே…” என்று எண்ணும் பொழுது
2.இந்தத் தாய் தந்தையின் வேதனை உணர்வுகள்
3.அங்கே அவருக்குள் வேலை செய்யத் தொடங்கி விடுகிறது.
4.என்னென்ன நிலைகளில் அவஸ்தைப் பட்டார்களோ அதே உணர்வு இங்கே இவர்கள் உடலில் வேலை செய்கின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஏற்கெனவே யாம் சொல்லி வந்த முறைப்படி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விண் செலுத்தினால் இத்தகைய துன்பங்கள் வராது மாற்றலாம்.

நோயான பின் டாக்டரிடம் போய்ப் பணம் செலவு செய்கின்றார்கள். அந்த பூஜை… இந்த பூஜை… லெட்சுமி நாராயணன் பூஜை… என்று அதைச் செய்தால் தான் சரியாகும்…! என்று செய்கிறார்கள்.

அம்மா அப்பா உடலை விட்டுப் பிரிந்தால் அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இதைச் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

நாங்கள் எங்கள் அம்மா அப்பாவிற்கு வருடத்திற்கு ஒரு முறை எல்லாம் செய்கின்றோம். அவர்கள் சாப்பிடுகிற ஆகாரம் எல்லாம் வைத்து அவர்கள் ஞாபகார்த்தமாகப் படைக்கின்றோம் என்ற இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.

சாதாரண வாழ்க்கையில் இதைச் செய்கின்றார்களே தவிர ஞானிகள் சொன்ன வழியில் செய்யவில்லை.

அவர்களுடைய ஞாபகார்த்தம் என்ன…?
1.தாய் தந்தையர் அவர்கள் துன்பப்பட்டதையும் நோய்வாய்ப்பட்டதையும்
2.மீண்டும் மீண்டும் எண்ணி அதை நுகரும் பொழுது அந்தத் துன்பங்கள் இங்கேயும் நோயாக மாறுகின்றது.

எங்கள் தாய் தந்தையர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்களை வளர்ப்பதற்காகப் பட்ட தீயவினைகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.

எங்கள் தாய் தந்தையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாகள் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அவர்கள் துன்பப்பட்டது வெறுப்படைந்தது எல்லாம் குறையும்.

நமக்குள் துன்பமாகவோ நோயாகவோ அது மாறாது.

இந்த முறைப்படி செய்யுங்கள் என்று சொல்கிறோம். இது எல்லாம் வியாசகர் கொடுத்த தத்துவத்தில் இருக்கின்றது. அதை யாருமே எடுத்துக் கொள்வதில்லை.

தனக்குள் படித்ததை மட்டுமே எடுத்துக் கொள்கின்றார்களே தவிர அவர்கள் உள் உணர்வுகளைப் பற்றிச் சொன்னால் யாரும் கேட்டுக் கொள்வதில்லை.

தாய் தந்தையத் துன்பப்பட்டதை நினைக்கிறவர்கள் ஞானிகள் சொன்ன முறைப்படி நினைப்பதற்கு என்ன…?
1.காற்றிலே மகரிஷிகளின் உணர்வுகள் பரவியுள்ளது.
2.அதை எடுத்து அந்த மகரிஷிகளின் உணர்வால் முன்னோர்களை விண் செலுத்த முடியும்.

எந்த மகான் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும் எவ்வளவு பெரிய அரசனாக இருந்து நாட்டையே ஆட்சி புரிந்தாலும் உலகையே அவர்கள் கீழ் கொண்டு வந்தாலும் கடைசியில் அவருடைய உடல்கள் என்ன ஆனது…?

அவர்கள் எடுத்துக் கொண்ட வேகத்தின் நிலையில் அதிகமான எண்ண உணர்வுகள் அவர்கள் சீக்கிரமாக உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த அரசர்களும் இருந்ததில்லை. மகான்களும் இருந்ததில்லை.

மகான்கள் என்ன செய்கிறார்கள்…? உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டு விண்ணுலகம் போகின்றார்கள்.

1.நாம் இந்தப் புவி ஈர்ப்பின் பற்றோடு வாழ்ந்து
2.உடலுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுகளை வைத்து
3.மீண்டும் இந்த மனிதக் கூட்டுக்குள்ளே தான் வருகின்றோம்.

நாம் இதிலிருந்து மீண்டிடல் வேண்டும்.

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று கண்களை மூடிப் புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியனியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சி.

வேதனை… வேதனை… என்று எண்ணும்போது அதை நுகர்ந்தறிந்தால் உடல் உறுப்புகளில் உள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.

எந்த உறுப்பில் விஷத்தன்மை (வேதனை) அதிகமாகின்றதோ அங்கே விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.
1.அதை மாற்றி அமைப்பதற்கு விஷத்தின் தன்மையை முறித்த
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுதல் வேண்டும்.

ஒளி உடல் பெற்ற துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது,
1.அதை நாம் கவர்ந்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து
2.எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்தப்படும் பொழுது
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று வலிமை பெறுகின்றது.

தினமும் இதைச் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் வெறுப்புகளையும் மாற்றிவிடுகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இருதயத்தில் செலுத்தப்படும் போது
2.இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் வீரியமடைகிறது
3.மன உறுதி கொண்டு சிந்தித்து செயல்படும் சக்தியும் நமக்குள் வருகின்றது.

வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் கொண்டு வாழ இது உதவும். அதிகாலையில் இதைப் போன்று தியானத்தின் மூலம் சக்தி ஏற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக தொழில் நஷ்டம் என்று வைத்துக் கொள்வோம். அதனால் மனம் சோர்வாக இருக்கும்போது அந்த வேதனை இரண்டும் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை கூட்டிவிடுகிறது.

சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது… தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகிறது. கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஐந்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானித்தால் சிந்திக்கும் வலிமை பெற்று
1.அடுத்து நம் காரியங்களை எப்படிச் செய்யலாம் என்று உறுதியான எண்ணம் தோன்றும்.
2.நாம் பிறரிடத்தில் உதவியோ மற்றதோ கேட்கப்படும் பொழுது அவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
3.குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் கொண்டு பரிவு கொண்டு வாழ இது உதவும்.

பிற ஆத்மாக்களின் உணர்வின் உந்துதல் இல்லாமல் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன…?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப்போலதான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா…?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா…?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா…?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை…?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழிவழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை…!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே…! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல் இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…?

மனித ஜென்மத்திலுருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவையை நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்…?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு செய்பவரைப் பார்த்தால் அந்த உணர்வுகளை நாம் நுகர நேருகின்றது. “தவறு செய்கின்றான்…” என்று அறிகின்றோம்.

நம் உயிர் அதை அணுவாக மாற்றிவிடும். அந்த அணுவின் தன்மை வரும் போது அது பிரம்மம் ஆகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. எக் குணத்தின் தன்மையோ அந்த ஞானத்தின் தன்மை கொண்டு அந்த அணுவை இயக்கும்.

இதைப் போன்று இயற்கையில் நாம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் எதனை எவ்வாறு எவ்வழியில் பெற வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் நினைவுபடுத்துவது.

நமது காற்று மண்டலத்தில் TV Radio Computer போன்ற கெமிக்கல் கலந்த காந்தப் புலனறிவில் வீரியம் கொண்ட விஷத் தன்மை இணைத்து ஒரு நாடாவைப் பதிவு செய்து அதில் பதிவாக்குகின்றனர்.

இப்பொழுது நாம் பேசுவதையோ மனிதனையோ படமாக்குகின்றனர். படமாக்கி மீண்டும் இயந்திரத்தின் தன்மை கொண்டு ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றனர்.

அவ்வாறு பரப்பப்படும் போது அதையெல்லாம் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி விடுகின்றது.

விஞ்ஞான அறிவுப்படி எந்த அலை வரிசையில் (FREQUENCY) வைத்தால் இது வரும் என்று நினைவுபடுத்துகின்றனர்.

டெல்லியில் ஒரு ஒலிபரப்பு செய்கின்றனர். மெட்ராஸில் ஒரு ஒலிபரப்பு செய்கின்றனர். உலகம் முழுவதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஒலிபரப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

எதை எங்கிருந்து ஒலிபரப்பு செய்கின்றனரோ அது இன்ன அலை வரிசை (frequency) என்று வைக்கின்றார்கள். அலை வரிசை என்றால்
1.காந்தத்தின் ஈர்ப்பு அழுத்தம் அதிகம்
2.ஈர்ப்பு அழுத்தம் குறைவாக இருப்பது – உணர்வுகளில் மாற்றம்.

காரம் ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது. புளிப்பு ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது. துவர்ப்பு ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது.

அதைப் போல காந்தப் புலனறிவில் எதன் உணர்வு கொண்டு அலை வரிசையில் எடுத்து ஒலி அலைகளைப் பாய்ச்சுகின்றானோ அதன் அலைவரிசையில் காரம் என்ற அலை வரிசையில் வைத்தால் அந்தக் காரத்தின் உணர்வின் தன்மை பெற்ற அந்த ஸ்டேசனிலிருந்து ஒலிபரப்பு செய்தால் அதை மட்டும் காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளும்.

இதே போல,
1.ஒருவன் கோபப்படும் உணர்வை நாம் கண்களால் உற்று நோக்கி
2.நம் உடலிலே பதிவாக்கி
3.மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால்
4.அந்தக் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

நமக்குள் பதிவான உணர்வை மீண்டும் “இப்படி அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

நுகர்ந்த உணர்வோ நம் இரத்த நாளங்களில் பெருகத் தொடங்கி விடுகின்றது.

ஒரு நெல்லை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல் மணிகளை இணைத்தால் தான் சாதமாகிறது. அது போல கோப உணர்வை நுகர்ந்தாலும்
1.அது பல அணுக்களின் தன்மை அடையப்படும் போது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது.
3.ஒரு அணு மற்ற உணர்வுகளோடு கலக்கப்படும் போது இரத்தக் கொதிப்பு வராது.
4.அது உணர்ச்சி ஊட்டும் உணர்வு என்று தான் பெயர் வரும்.
5.மற்ற குணங்களுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் குறைவாக இருக்கும்.

நாம் அடிக்கடி அடிக்கடி வேதனைப்படுபவரைப் பார்த்து வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு நமக்குள் அதிகரித்து விடுகின்றது.

இதைத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை என்று காட்டினார்கள் ஞானிகள்.
1.நாம் எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றோமோ (நந்தி)
2.அது நமக்குள் உள் சென்று
3.அந்தக் குணம் உடலுக்குள் உருவாகும் என்பதைக் காட்டுவதற்கு
4.நந்தீஸ்வரன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

உருவான குணமோ அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

ஒரு அணுவின் தன்மையாக உருப் பெற்ற பின்
1.அந்த உணர்ச்சியைத் தூண்டி
2.நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி
3.அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து
4.நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
5.அந்த உணர்வின் தன்மையைத் தனக்கு உணவாக எடுத்து விளைகிறது.

ஒரு நெல்லை ஊன்றியபின் எப்படிப் பல நெல்லாக விளைந்து வருகின்றதோ அது போல ஒரு வித்தின் தன்மை அதற்குத் தக்கவாறு பல எண்ணங்கள் உணர்வுகள் வருகின்றது. அந்த வித்தின் தன்மையே விளைகின்றது.

சிவன் ஆலயத்தில் சிவனின் கணக்குப்பிள்ளை யார்…?

நாம் சுவாசித்த உணர்வுகளே – நந்தீஸ்வரன். அதாவது நாம் நுகரும் உணர்வுகளைத்தான் நந்தீஸ்வரன் என்று காட்டுகின்றார்கள்.

நம் உடலுக்குள் (சிவம்) எந்தக் குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதனின் கணக்குகளுக்கொப்பத் தான் நம் எண்ணம் சொல் செயல் இயக்கம் இருக்கும்.

எதனின் கணக்கை உடலுக்குள் கூட்ட வேண்டும் என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

நல்ல அணுக்கள் வலு குறையும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை வைத்துச் சார்ஜ் செய்து வலுவாக்க வேண்டும்

 

சாதாரணமாக… ஒரு பேட்டரி இயங்கிக் கொண்டே உள்ளது. அதிலே சார்ஜ் குறைந்து விட்டால் செல்கள் எதுவும் இயங்காது. மீண்டும் ஏற்றினால் தான் இயக்கம் இருக்கும்.

இதைப் போன்று
1.நம் உயிரின் உணர்வு கொண்டு உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமை கிடைக்கும்.

மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பெற்று
2.நமக்குள் வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பேட்டரி சரியாக இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட எல்லா இயந்திரங்களும் சீராக இயக்கும்… அதிலே இருக்கும் சார்ஜ் உறுதுணையாக இருக்கும்.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு வீரிய சக்தி ஊட்டித் தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்… இதனால் உங்கள் வாழ்க்கையே தியானமாகும்…!

வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி… அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

நம் உறவினர்களையும் நண்பர்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைப் பற்றும்படி செய்து
1.அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை ஊட்டினால்
2.அவர்களும் நலமாகின்றார்கள்… நாமும் நலமாகின்றோம்.
3.நம் உடலும் நலமாகும்… நம் வாழ்க்கையும் நலமாகின்றது… தொழிலும் நலமாகிறது.

இந்த முறையை ஒவ்வொரு குடும்பத்திலும் பழகிக் கொள்ளுங்கள்.

சங்கடம் சலிப்பு வேதனை வெறுப்பு பகைமை வந்தால் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்… அவர் உடல் உறுப்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும்… தெய்வீக அருளைப் பெற வேண்டும்… தெய்வீக சக்தி பெற வேண்டும்… தெய்வீக வழியில் நடக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

பண்பும் பரிவும் அன்பும் பாசமும் எங்கள் குடும்பத்தில் வளர வேண்டும்… அரவணைத்து வாழும் அருள் ஞானம் பெற வேண்டும். நாங்கள் அனைவரும் மகரிஷி வட்டத்தில் இணைந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு சமயமும் அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்

1.இது போன்று நாம் செயல்படுத்தினால் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நாம் செயல்படுத்த முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை இந்த முறைப்படி செய்து பெற்றால் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுவீர்கள்.

இல்லை… வெறுப்பு வேதனை என்ற உணர்வு வந்தால் வேதனையான உணர்வுக்கொப்ப உங்கள் சொல்லும் உங்கள் செயலும் அமைந்து
1.பிறிதொருவர் நல்லது சொன்னால் ஈர்க்காதபடி அந்த நியாயத்தைத் தான் பேசுவீர்கள்.
2.பண்பை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ… பண்பை நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலையோ
3.வரும் தீமைகளை அகற்றிடும் நிலையோ வருவது மிகவும் சிரமம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி குருநாதர் காட்டிய வழிப்படி நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

உடலை விட்டுப் பிரிந்த பின் நம் நிலை… – ஈஸ்வரபட்டர்

 

மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது. எண்ணம் நல்வழியில் சென்று தெய்வ பக்தி கொண்ட மனிதர்களுக்கெல்லாம் அவர்கள் செல்லும் வழிக்குத் தெய்வமாக அருள் புரிகிறார்கள்… நாம் இப்போது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களுமே.

நல் வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அந்நிலையிலெல்லாம் ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே அவ்வாவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்தே வாழ்வதற்காகத்தான் இந்நிலையில் உணர்த்தி வருகின்றேன்.

1.காலம் காலமாக இவ்வாவிகளின் நிலையெல்லாம்
2.நல் நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவி சூட்சும நிலை கொண்டு…
3.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாய்
4.தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக பல நல்ல நிலை கொண்ட சக்தியை
5.தான் வாழ்ந்த குடும்பத்திற்கு தன் இரத்தத் தொடர்புடைய பிள்ளைகள் காலம் வரை தெய்வமாக
5.அக்குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளையும் பூர்த்தி செய்யும் நாள் வரை
6.அக்குடும்பத்திற்குப் பல உதவிகளை அக்குடும்பத்திலுள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி
7.அக்குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழலவிட்டு அவ்வாவியின் நிலை இருக்கிறது.

அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகுதான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று வாழ்க்கைக்கே வருகிறது.

ஆனால் குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும்…
1.எந்த நிலையில் அவ்வாவி பிரிந்ததோ அதே குரோத நிலையில்தான்
2.அவ்வாவி அக்குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ அதனின் தொடர் நிலையாக குரோதம் கொண்டவர்கள் மூலமாக
3.தான் வாழ்ந்த நாளில் பெற்ற நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்தினவோ
4.அதே போல் தான் இத்துர் ஆவிகளும் வந்து தீமைகளைச் செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளினால் அதன் சுவாச நிலைகொண்டு மற்ற மிருக உடலுக்கு எந்நிலையில் சென்று மனிதன் மிருகமாகும் மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டுதான் மறு ஜென்மம் நமக்கு அமைவதுவும்.

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலையெல்லாம் தெரிந்திடும். ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்துச் செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால் தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன.

மனிதன் அம்மிருகத்தைத் தன் நிலைக்கு அரும் பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அம் மிருகத்திற்குத் தெரிகின்றது.

அம்மிருக உணவை பறவைகளின் உணவை நாம் புசிப்பதினால் நம்முள்ளேயே நாம் அவற்றின் அவ்வுடல்களில் எந்த எந்த அணுக்களின் தாக்கல்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இவ்வுலகில் பல நிலைகொண்ட ஆவித்தன்மை உள்ள பொழுது
1.அவ்வாவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கி
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல்
4.இந்நிலையையெல்லாம் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாவிகளின் நிலையே பல நிலையில் உள்ளன. இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் என்னும் ஆவியின் நிலையென்ன…?

அவ்வாவி இன்னும் அத் தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக்கொண்டுள்ளது. எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அவ்விரண்டு ஆவிகளுமே… ஷாஜஹான் என்னும் ஆவியும்…!

அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை… மறு ஜென்மத்திற்கும் வரவில்லை. சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அவ்விரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில்தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையிலேதான் இருந்திடும், ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன அவ்விரண்டு ஆவிகளுமே அம்மாளிகையில்.

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராய் இன்றும் வாழ்கின்றார்கள் அவ்விரண்டு ஆவிகளுமே…!

இந்நிலைபோல் இவ்வாவி உலகில் பல நிலைகள் உள்ளன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தர்மபுரியில் பவானி என்ற ஊரில் ஒருவன் (அக்காவின் மகன்) தன் சின்னம்மாவிடம் தன் செலவுக்காகக் காசு கேட்டு வந்திருக்கின்றான்.

அவன் ஊர் சுற்றித் திரிவதால் பணம் கேட்டதும் அவர்கள் “இல்லை…” என்று சொல்லி உள்ளார்கள்.

நீ என்ன கொடுப்பது…! நானே எடுத்துக் கொள்கிறேன்…! உன்னைக் கொன்று விட்டு நான் எடுத்துக் கொள்வேன்…! என்று தன் சின்னம்மாவைக் கொன்று விட்டான்.

பணத்தையும் எடுத்துக் கொண்டு ஜாலியாக ஐயாயிரம் ரூபாய் செலவு அளித்து விட்டான்.

சின்னம்மாவைக் கொன்ற பின்னர் சேலத்தில் அவர்கள் அக்கா வீட்டுக்குப் போயிருக்கின்றான். அங்கே போய் “இப்படி ஆகிவிட்டது…! ஆனால் யார்… எவர்…! என்று தெரியவில்லை…” என்று சொல்லி இருக்கின்றான்.

ஏனென்றால் சின்னம்மாவைக் கொன்றவன் இவர்களைக் கொலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்…? இந்த உணர்வுகள் அவர்களுக்குச் சந்தேகம் ஆனவுடன் அவனைப் போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.

இன்று இந்த மாதிரி நிறைய நடக்கின்றது. நீங்கள் யாரை நம்பி வாழப் போகின்றீர்கள்…?

1.எத்தனையோ கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குகின்றோம்.
2.ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் கல்யாணத்தைச் செய்கின்றோம்.
3.அக்கா மகன் இப்படிச் செய்வான்…! என்று ஜோதிடத்தில் கூறினார்களா…?
4.கல்யாணம் முடிக்கப்படும் போது ஜாதகத்தில் எழுதி இருந்ததா…?
5.ஜாதகம் சொன்னவன் ஏன் தவற விட்டான்…? சொல்லி இருக்க வேண்டும் அல்லவா…!

அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்வது எப்படி என்று ஞானிகள் மக்களை ஒழுங்குபடுத்தி ஒரு சீரான பாதையில் செல்வதற்காக வானவியல் புவியியல் உயிரியலைக் காட்டினார்கள்.

27 நட்சத்திரங்களும் பல விதமான விஷத் தன்மைகள் கொண்டது. அதை அதிகமாகக் கவர்ந்து கொண்ட கோள்களிலும் விஷத் தன்மைகள் பரவி இருக்கும்.

அவைகள் வெளிபடுத்தியதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்புத் தன்மைக்குள் வந்து விட்டால் இங்கே விஷத் தன்மைகள் பூமியிலே பரவுகின்றது.

அது எந்தப் பகுதியில் பரவுகின்றதோ அந்தப் பகுதியில் விஷத் தன்மைகள் பரவி வருகின்றது.

இன்றுள்ள ஜாதகப்படி இன்ன நிலையில் இன்ன நட்சத்திரத்தில் வருகின்றது. அப்போது இன்ன கோள்கள் இன்ன திசையில் சேர்க்கப்பட்டு இந்தக் கோள்கள் இப்படி இயங்குகிறது… என்று குறிப்பிட்ட கோள்களின் உணர்வுகளைத்தான் எழுத முடிகின்றது.

இப்படி (நட்சத்திரங்கள் கோள்கள்) கலவையாகி வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் எடுத்துத் தன் உணவாக எடுத்துக் கொள்ளும் நிலைக்குச் செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது வந்தவுடனே இழுத்து இங்கே காற்றழுத்த மண்டலத்தில் மோதியவுடனே நெருப்பாகவும் புகையாகவும் ஆவியாகவும் மாற்றி விடுகின்றது.

அப்போது இவர் ஜாதகத்தை இன்னது நல்லது இன்னது கேட்டது என்று இப்படி எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். வானவியலைப் பற்றி ஜாதகத்தில் எழுதியிருந்தாலும் (அந்தக் குறிப்பிட்ட) ஜாதகத்தில் எல்லாம் நல்லதாகும் என்று எண்ணியிருந்தாலும் இந்த விஷத்தன்மையான நிலைகளில் பட்டபின் பல விதமான நோய்கள் வந்து மடிகின்றார்கள்.

பிறகு ஜாதகம் நிஜமாகுமா பொய்யாகுமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

ஜாதகத்தைப் பார்த்து “ஏழரை நாட்டுச் சனியன் வந்துவிட்டான்…” அதனால் என் தொழில் சரி இருக்காது…! என்று மனதில் பதிவு செய்து கொண்டால் அதற்கு என்ன அர்த்தம்…?

அந்த ஜோசியக்காரன் நமக்குள் இதை ஆழமாகப் பதிய வைத்து விட்டான் என்று அர்த்தம்.
1.அப்படிப் பதிந்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் போது
2.”காரியம் தோல்வியாகுமே…” இந்த ஏழரை வருஷம் நாம் எப்படி இருப்பது..? என்று
3.அவன் கூறிய உணர்வுகளை நமக்குள் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துக் கொள்கிறோம்.
4.நாம் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தையும் மன உறுதி கொள்ளும் நிலையும் இழந்துவிடுகின்றோம்.

நமது வாழ்க்கையில் நல்லதை உறுதிபடுத்தும் நிலையையே மாற்றி ஒவ்வொரு கேட்டது நடக்கும் போதும்
1.ஏழரை நாட்டுச் சனி நடப்பதால் இப்படித்தான் இருக்கும்…! என்று
2.நல்லதைப் பெறும் தகுதியையும் நல்லதாக்கும் பண்புகளையும் சுத்தமாகவே இழக்கச் செய்துவிடுகின்றது.

நம் நாட்டைக் காட்டிலும் ஜப்பானில் மத நம்பிக்கை உண்டு. ஜாதக நம்பிக்கை அதிகமாக உண்டு.

ஒரு செருப்பு வைத்தாலும் கூட எந்தத் திசையில் வைத்தால் வைக்க வேண்டும்…? என்று பார்ப்பார்கள். இன்ன வீட்டிற்குப் போனால் இன்ன திசையில் வைக்க வேண்டும்…! என்றெல்லாம் பார்த்து வைக்கக்கூடிய அந்த அளவிற்குச் சாங்கியங்கள் உண்டு.

ஆனால் அதே ஹிரோஷிமாவில் அணுகுண்டுகள் வெடித்தபின் இவர்கள் சாஸ்திரமோ மதமோ அல்லது கடவுளின் அடிப்படையில் சாங்கியங்கள் செய்த நிலைகளோ அவர்களைக் காப்பாற்றியதா…? அவர்களால் தப்ப முடிந்ததா…? இல்லையே.

எல்லா இடமும் கட்டிடங்களும் கருகியது. அவர்கள் எண்ணமும் கருகியது.

அதே சமயத்தில் ஹிரோஷிமாவில் அந்தக் காற்றலையில் பரவிக் கொண்டிருந்த விஷக் கதிரியக்கங்கள் எங்கெங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் கருவில் உள்ள குழந்தைகள் தாக்கப்பட்டது.

இன்றும் அங்கே கருச் சிதைவாகின்றது. ஊனமாகின்றது. கண்கள் இழக்கப்படுகின்றது. உறுப்புகள் சிதைகின்றது. அந்தக் கதிரியக்கம் கருவில் இருக்கக்கூடிய குழந்தையைச் சிதையச் செய்கின்றது.

புத்தர் காட்டிய அருள் வழியில் அவர்கள் கடைப்பிடித்துச் சென்றாலும் அவர்கள் எழுதிய சாஸ்திரங்கள் இன்று விஞ்ஞான உலகில் நிலைத்து இருக்கின்றதா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

“இது நிலையற்றது…” என்ற நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக மிளகாயைத் தூவுகின்றனர். அல்லது சமையலுக்காக வேண்டி மிளகாயை வறுக்கின்றார்கள். அது கருகிக் காற்றில் வருகிறது.

இங்கே நாம் இருக்கும் பக்கம் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். நுகர்ந்தால் உங்களுக்கு இருமல் வருகின்றது.

அப்பொழுது நான் சொல்வதைக் கேட்பீர்களா…? அல்லது மிளகாய் நெடியைச் சுவாசித்ததும் இருமுவீர்களா…?

இந்தத் திசைப் பக்கம் வருகின்றது என்றால் அதை நீங்கள் நுகர்கின்றீர்கள்.
1.அது உங்களை இப்படித் திருப்புகின்றது.
2.ஆனால் நெடி எங்கேயோ இருந்து வருகின்றது.

இதைப் போன்று நமது வாழ்க்கையின் நிலையில் எத்தகைய கொடிய தன்மைகள் வந்தாலும் அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தாது அதிலிருந்து நாம் பிரிந்திருத்தல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.

இருபத்தி ஏழு நட்சத்திரங்களின் சக்தியை ஒன்றாக்கியது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது. அதை நுகர்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து நல்லதை நமக்குச் சாதகமாக ஆக்கிட முடியும்.

நம்முடைய பசி எதிலே இருக்க வேண்டும்…?

 

சிவன் ராத்திரி அன்று நீ விழித்திரு… பசித்திரு… தனித்திரு… என்று சொல்வார்கள்.

வேதனை என்ற உணர்வுகள் தனக்குள் புகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தனித்திரு… விழித்திரு. ஆனால் அதைப் பெற வேண்டும் என்று பசித்திரு

அதாவது…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் பசித்திரு
2.தீமைகள் உன்னைப் பற்றிடாது தனித்திரு…!
3.தீமைகள் புகாது விழித்திரு…!

கஷ்டம் என்று வந்தால்… விழித்திருந்து நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும். ஆக… அதைப் பெற வேண்டுமென்று பசித்திருக்கும் போது தீமைகளைப் பற்றிடாது தனித்திருக்க முடியும்.

அதை எல்லாம் உங்களால் பெற முடியும்.

தனித்திரு என்றால் வீட்டில் இருக்கும் மனைவி பிள்ளைகளை விட்டு விட்டுச் சாமியாராகப் போவதல்ல… அது எல்லாம் அறியாமை…!

ஆகவே… மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும் பெற்று… தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழும் நிலையும் உடலில் அமைதியும் சாந்தமும் விவேகத்துடன் வாழ்ந்து இந்த உடலுக்குப்பின் பிறவியில்லை என்ற நிலையை அடையுங்கள்.
1.இந்த மனித உடலில் இப்போது இதை பெறத் தவறினால்
2.இனி அடுத்து மனித உடல் துரிதமாகக் கிடைக்குமா… என்பது சந்தேகமே…!

காரணம் உலகம் விஞ்ஞான அறிவால் மாசுபடும் நிலை வந்துவிட்டது.

கடவுளின் அவதாரத்தில் வராகன்… சாக்கடையிலிருந்து எப்படி நல்லதை நுகர்ந்ததோ… இந்தச் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து அதற்குள் மறைந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுக்கப் பழக வேண்டும்.

கண்ணின் நினைவைத் துரித நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வருவதை உயிர் வழி கவர்ந்து உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்யுங்கள்.

காலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடலில் ஒவ்வொரு அணுக்களுக்கும் அந்த வீரியத் தன்மையைச் செருகேற்றிக் கொள்ள வேண்டும்.

இருளை நீக்கி… சிந்தித்து செயல்படும் ஆற்றல் பெற்று அமைதியான வாழ்க்கையும் அருள் ஞானத்துடன் வாழ்ந்தும் சாந்தமும் விவேகத்துடன் இந்த வாழ்க்கை வாழும் அருள் சக்தி பெறுங்கள்.

இதைப் படிப்போர் அனைவரும் இந்த உடலுக்குப்பின் ஏகாந்த நிலை பெற்று… எதிர்ப்பே இல்லாது ஒளியின் உணர்வாக மாறி… என்றும் ஏகாந்த நிலை பெற எனது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
1.அருள் வழியில் இருளை அகற்றி… மெய் ஞான உலகுடன் நீங்கள் ஒன்றி நீங்களும் வளர்ந்து உலக இருளை நீக்கி…
2.அனைவரையும் மெய் ஞான வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞான அன்பர்களாக நீங்கள் அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

“பூதம் காத்த புதையல்” – ஈஸ்வரபட்டர்

 

அன்றாட அரசர்கள் முதல் இன்று வரை நாம் எந்த நிலை கொண்டு வாழ்கின்றோம்…? ஒவ்வொரு உயிரினங்களும் எப்படி எப்படி வாழ்கின்றன…? என்பதனை முன் பாடத்தில் சிறுகச் சிறுக அளித்து வந்த பாடத்தினையே விவரித்தே அளிக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).

“பூதம் புதையல் காத்த கதை…” என்று கதையாகக் கேட்டிருப்பீர். பூதம் எங்குள்ளது…? பேய் பிசாசு என்பது என்ன…? என்பதனை அறிந்து வாழ்ந்திடவே இந்நிலையில் சொல்லி வருகின்றேன்.

பல நூறாயிரம் வருடங்களுக்கு முன் அன்றாண்ட அரசர்களின் நிலையெல்லாம் என்ன…?

தன் நாட்டைக் காக்க தன் நாட்டு மக்கள் வாழ்வதற்கு மேலும் மேலும் பொருள் சேர்க்க ஒரு நாட்டுடன் ஒரு நாடு சண்டையிட்டே பல நாட்டைப் பிடித்து பேரரசர் ஆக வேண்டும் என்ற வெறி நிலை கொண்டு அவ்வரசனின் மன நிலையில் ஒரு அரசுடன் மற்ற அரசு சண்டை இடும் நிலையில் பல உயிர்ப் பலிகள் நடந்தது.

அவ்வுயிர்ப் பலி நடந்த இடத்தில் அவ்வாத்மாக்களின் நிலையென்ன…?

குரோத நிலையில் வெறியுணர்வுடன் பல ஆத்மாக்கள் சென்றன. இன்னும் பல… அன்று வாழ்ந்த மக்களிலேயே ஒவ்வொரு நாட்டிற்கும் நடக்கும் சண்டையில் தனக்குகந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குக் கடத்திச் சென்ற பல பொக்கிஷங்களெல்லாம் மறைத்து வைத்த நிலையில் அந்நிலையில் அதை மறைத்து வைத்த மக்களின் ஆவிகளும் எவ்வரசனின் பொக்கிஷத்தை யார் யார் களவாடி எங்கெங்கு எடுத்துச் சென்றனரோ அந்நிலையில் அன்றாண்ட அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆவி அவர்களின் பொருளைக் களவாடிச் சென்றதின் நிலையையறிந்து களவாடிச் சென்றவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அதை எடுத்திடாமல் அவ்வாவிகள் அதைப் பூதமாகக் காக்கின்றன.

அரசனின் வம்சத்தார் எடுக்கவும் முடிந்திடாமல் களவாடிச் சென்றவனின் ஆவி அந்நிலையில் இருந்தே காக்கின்றது. இப்பூமியில் பல நிலைகொண்ட பொன் பொருள் ஆபரணங்கள் விக்ரகங்கள் இன்றும் பூமியில் “பூதங்கள் காக்கும் நிலையில் தான் உள்ளன…”

சில இடங்களிலிருந்து புதையல் எடுப்பதின் நிலை அந்நிலையில் காத்து வந்த ஆவிகளின் சக்தியிழந்து அது மனச்சலிப்புப்பட்டு விரக்தி நிலையில் மறு ஜென்மம் எடுத்த பிறகுதான் இப்பொழுது சில புதையல்கள் கிடைப்பதுவும்.

அதுவும் அதன் தொடர்புடைய வம்ச வழிக்கு வம்ச வழி என்பது அச்சொத்தை அடைய வேண்டுமென்ற உரிமை பெற்றவருக்குத்தான் அதை அடையும் தன்மையும் வருகிறது.

அன்று ஆண்ட அரசர்களில் பலரின் நிலையும் இன்னும் இதே நிலையில் தான் உள்ளது. சகல சம்பத்துடன் சக்கரவர்த்தியாய் வாழ்ந்தேன் என்பவனின் நிலையும் இன்றும் பூதத்தின் நிலையில்தான் உள்ளது.

1.பல நாடுகளைப் பிடித்தான்
2.பல பொக்கிஷங்களைச் சேர்த்தான்
3.ஆனாலும் தன் உயிராத்மாவிற்கு என்ன சேமித்தான்…?

பேராசையை “வீர முரசு” என்று முழங்கிட்டே வாழ்ந்திட சக்கரவர்த்திகளின் நிலையெல்லாம் என்னப்பா…? வீழ்ச்சி பெற்று வந்திட முடியாது.

கலியில் இவ் உலகப் பிரளயம் மாறி புத்துயிர் பெற்று இவ்வாவிகளெல்லாம் ஆரம்ப நிலை கொண்டு அடுத்த பிறவியின் சுற்றலில் ஆத்மாவிற்கு ஆத்மீக வழியை எடுத்து வாழும் நாள் வரை பூதமாகவும் பேயாகவும் அலையும் ஆவிகளுக்கு முடிவே இல்லாமல் உள்ளது.

இப்பொழுது வாழ்ந்திடும் மக்களெல்லாம் இவ்வாவிகளின் பிடியில் சிக்கியுள்ளோம். இப்பிடியிலிருந்து மீள்வதற்கே இதை உணர்த்துகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனக் கவலையில் இருந்து விடுபடுவதற்காக வேண்டித் தண்ணீ போடுவார்கள். குடித்தபின் எல்லாக் கவலையையும் மறந்து விடுவார்கள்.

தண்ணீ போடுகிறவர்கள் மாமிசமும் அதிகமாகச் சாப்பிடுவார்கள்.

கடைசியில் இந்த உணர்வெல்லாம் சேர்த்துச் சேர்த்து இவர்களுக்குள் இந்த நிலை நிறுத்த முடியாதபடி வந்துவிடும். உயிரான்மாவில் அந்த வாசனை அதிகமாகிவிடும்

இவர்கள் இறந்த பிற்பாடு எங்கே போவார்கள்…?

மந்திரக்காரர்கள் தண்ணீ… கறி… இரண்டையும் வைத்து என்ன செய்வார்கள்…?

ஆரம்பத்தில் இந்த மந்திரங்கள் உற்பத்தி செய்வது எல்லாமே அந்தச் சோமபானம் வைத்துத்தான். அதனால் சில மயக்க நிலைகளை ஏற்படுத்தித்தான் வசியப்படுத்துவார்கள். மது இல்லாத மந்திரம் கிடையாது.

மந்திரத்தை எப்படி உருவாக்கினார்கள் என்ற நிலையில் முழுமையாக இப்போது நான் (ஞானகுரு) சொல்லத் தயாராக இல்லை. அது நமக்கு ஆகாத வேலை.

சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்று சொன்னால் மாமிசத்தையும் தண்ணீயையும் வைத்து அதற்கென்று சில மந்திரங்கள் இருக்கின்றது. ஜெபித்து இந்த ஆத்மாக்களைப் பிடித்து இழுத்துக் கொள்வார்கள்.

ஏனென்றால் தண்ணீ போடும் பழக்கம் ஏற்படுவதன் காரணமே
1.பெண்டு பிள்ளைகள் மீது கவலை அதனால் அவஸ்தைப்படுவது,..
2.பிறிதொருவர் அவமரியாதையாகப் பேசினார் என்னால் தாங்க முடியவில்லை…
3.வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தேன்… அந்தக் கவலையை மறக்க முடியவில்லை..
4.இந்த மாதிரி இருப்பவர்கள் கதி எல்லாம் இறந்த பிறகு மந்திரக்காரன் கையில் போய்ச் சிக்கும்.
5.இந்தக் கறியும் தண்ணியைச் சாப்பிட்டு இருப்பவர்கள் மந்திரக்காரனுடைய பிடியில் ரொம்ப சீக்கிரம் போய்ச் சிக்கிவிடும்.

அப்புறம் சிக்கிய பின் என்ன கத்தினாலும் முடியாது. அது அங்கே போய்ச் சிக்கிக் கொண்டதும் அவர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா இல்லையா…!

காசைக் கொடுத்து அடுத்தவர்களைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தகைய மந்திரக்காரர்களை நாடுகின்றனர்.

காசை வாங்கிக் கொண்டு ஆகாதவர்கள் உடலில் இந்த ஆவிகளை ஏவி விடுவார்கள். அங்கே போய் எல்லாக் கெடுதலையும் செய்து அது சாப்பிடும். அங்கே நிர்மூடத்தனமான வேலைகளைச் செய்யும்.

ஏற்கனவே வாழ்ந்த உடலில் பல வேதனைகள் ஆன்மாவில் இருக்கிறது. அடுத்து மந்திரக்காரன் கையில் சிக்கி அடுத்த உடலில் போய் அங்கே இன்னும் அதிகமான விஷத்தையெல்லாம் இழுத்துக் கொண்டு இந்த ஆவி வரும்,

விஷங்கள் அதிகமான பின் மீண்டும் அதை எடுத்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த வேதனையான உணர்வு இன்னொரு உடலில் போய் என்ன செய்யும்…?

அவனைத் திருப்பி அடித்துக் கொல்லும்.

எதிலெல்லாம் ஏவினானோ கொன்று விட்டு மீண்டும் பிறவிக்கு வரப்போகும் போது விஷமான உயிரினமாகத்தான் உருவாகும்.

உருவான பின் அந்த உடலில் உடல் உறுப்புகள் என்ன செய்யும்…? சாப்பிடும் பொழுது மிகவும் அவஸ்தைப்பட்டுத் தான் சாப்பிட வேண்டும். சில உயிரினங்களைப் பார்க்கின்றோம்.

பாம்பு தேள் சில விஷப் பிராணிகள் மற்றதைத் தன் விஷத்தால் கொன்றுவிடும். ஆனால் அதைச் சாப்பிடும் பொழுது நரக வேதனைப்படும். அது எத்தனை அவஸ்தை எல்லாம் படுகின்றது.

1.பல உடல்களுக்குள் சென்று எல்லாவற்றையும் வேதனைப்படச் செய்தாய்
2.முழுவதும் நஞ்சாக நீ உருவாக்கினாய்.
3.இப்பொழுது நீ அவஸ்தைப் படு…! என்று இந்த உயிர் செய்யும்

டிரெயினில் உட்கார்ந்து கூட்டத்திற்குள் இருந்து வந்தால் “நகையைக் கழற்றிக் கொடு…!” என்று வாங்கிக் கொண்டு போகக்கூடிய நிலைமை வந்து விட்டது.

ஏனென்றால் விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இன்றைக்கு மந்திரங்கள் நிறைய வந்துவிட்டது. இந்த விஞ்ஞான உலகில் சில
1.விஞ்ஞானச் செயல்களை அழிப்பதற்கும் கூடச்
2.சில வேலைகளைச் செய்கின்றனர்.

ஏனென்றால் வாழ்வதற்கு எவ்வளவு பெரிய வசதி இருந்தும் சிறு விஷயங்கள் நடந்ததென்றால் அந்த விஷத்தன்மையில் இருந்து மீளாத நிலைகளில் இருக்கின்றோம்.

கடைசியில் எங்கே கொண்டு போய் விடும்…?
1.மந்திரக்காரனிடம் போய்
2.ஆகாத உடலுக்குள் சென்று பேயாகப் போய் ஆட்டிப் படைத்து கொண்டே இருக்கும்.
3.அங்கே அத்தனை வேலையும் செய்யும்.

இதைப்போல நிலைகள் நம்மை அறியாமலே இயக்கிக் கொண்டு இருக்கக்கூடிய நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும்.

“நான் தவறாகச் சொல்கின்றேன்…!” என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையில்
1.மந்திரக்காரர்களின் செயல்களையும்
2.உடலை விட்டுப் போகும் உயிரான்மாக்களை எப்படிக் கவர்கிறார்கள் என்ற நிலையும்
3.அது என்னென்ன அல்லல்படுகிறது என்றும்
4.நேரடியாகவே இழுத்துக் காண்பித்தார்.

1.இன்னென்ன நிலைகளை நீ சொல்லு என்றார்
2.இந்த ஆவிகள் என்ன செய்கிறது என்று பார்…!
3.தண்ணீ போட்டவர்களை இறந்தவுடனே சுலபமாக வந்து அழைத்துக் கொள்ளலாம்…! என்று காட்டினார்
4.என்னென்ன வேலைக்கு நீ பயன்படுத்திக் கொள்கிறாயோ நீ வைத்துக்கொள்…! என்றார் குருநாதர்.

மந்திரத்தை சொல்லி அவர்களை இழுத்துக் கெட்ட வேலைக்குப் பயன்படுத்தினால் அப்புறம் இந்தப் புத்தியெல்லாம் உன்னிடம் வந்து அவர்கள் பின்னால் “நீ போக வேண்டியதுதான்…! என்று அதையும் சொல்லி விட்டார் குருநாதர்.

இப்படிச் செய்தாய் என்று சொன்னால் கடைகியில் உன் கதியும் அப்படித்தான் வந்து விடும்…! என்று காட்டினார்.

ஆனால் அவர்கள் அந்தத் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும் என்று எண்ணினால் நீக்கும் உணர்வுகள் உனக்குள் வருகின்றது என்று இதைச் சொல்லிக் காண்பித்தும் நேரடி அனுபவமாக செய்து காட்டி உணர்த்தவும் செய்தார்.

தயவு செய்து லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துபவர்கள் இதை மாற்றுவதற்கு நீங்கள் அந்த மகரிஷிகள் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணி எண்ணி இந்தத் தியான முறைப்படி நீங்கள் எடுத்துக் கொண்டால் நிச்சயம் இது குறையும்.

இந்த மனித வாழ்க்கை கிடைப்பது ரொம்ப ரொம்ப அபூர்வம். மனித உடலுக்குப் பின் நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அது தான் மனிதனின் கடைசி எல்லை.

உபதேசத்தைப் பதிவாக்கி நினைவாக்கினால் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகள் தன்னிச்சையாகச் செல்லும்…

 

நாம் எந்தக் காரியத்தை எண்ணினாலும் தாய் தந்தையை நினைத்து “அவர்களை முன்னிலையில் வைத்துச் செயல்பட்டால்…” நம் உயர்வுக்கு அது என்றுமே வழி காட்டும்.

நம் அன்னை தந்தையர் எப்போதுமே நாம் உயர வேண்டும்… நாம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நாம் அன்பாக இருக்க வேண்டும்… பண்பாக இருக்க வேண்டும்… ஆரோக்கியமாக இருக்க வேண்டும்… செல்வச் செழிப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டே இருப்பார்கள்.
1.வேறு யாரும் அவ்வாறு எண்ண மாட்டார்கள்…
2.தந்தைக்குக் கூட சில நேரம் வெறுப்பும் கோபம் வந்துவிடும்.
3.தாயின் மனதை எப்பொழுதும் நாம் எண்ணி இருக்க வேண்டும்.

தாய் கருவில் இருக்கும் பொழுது பத்து மாதம் நம்மைச் சுமந்தது. பிறந்த பின் நம்மை வளர்ப்பதற்கு எத்தனையோ கஷ்டப்பட்டது.
1.என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று
2.தாய் ஒன்று தான் நம்மை எவ்வாறு எண்ணும்.
3.அவருடைய ஆசை “நாம் உயர வேண்டும்…” என்பது தான்.

அந்தத் தாயின் ஆசையின் துணை கொண்டு தான் தியானத்தில் நாம் சக்தி எடுக்கப் பழக வேண்டும்.

அம்மா அப்பா அருளால்… அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்துங்கள்… கண்களை திறந்தே…!

யாம் (ஞானகுரு) உபதேசிப்பதைக் கேட்டு நீங்கள் பதிவாக்கி விட்டீர்கள். இந்தப் பதிவின் நினைவினை உங்கள் கண்ணிற்குக் கொண்டு வாருங்கள்.

கண்னின் நினைவுகள்…
1.எதைத் துருவ நட்சத்திரம் என்று சொன்னேனோ
2.அங்கே அழைத்துச் செல்கின்றது உங்களுடைய உணர்வுகளை.
3.இந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை கவரும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள், கண்ணின் கருமணியில் இப்பொழுது ஈர்க்கும் சக்தி வரும். கண் கனமாக இருக்கும்.

மெதுவாகக் கண்களை மூடுங்கள். புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள் கண்ணின் நினைவினை…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவனைப் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் சக்தியைப் பெறுங்கள். அவ்வாறு ஈர்க்கும் ஆற்றல் பெற்றால்
1.புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு அதிகரிக்க… அதிகரிக்க
2.உடலுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் தீய உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி தடைபடுத்தும்.

உயிரின் ஈர்ப்பில் கண்களில் எப்படி முதலில் கனமாக இருந்ததோ புருவ மத்தி வழியாக ஈர்க்கும் சக்தி வரும் போது அங்கேயும் கனமாக இருக்கும். உயிரிலே மோதும் பொழுது வெளிச்சங்கள் வரும்.

உடல் முழுவதும் அந்த ஒளி சக்தி பரவும். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாகும் சக்தி இப்பொழுது பெறுகின்றது.

மெய் உலகிற்கு வாருங்கள் – ஈஸ்வரபட்டர்

 

இக்கலி மாறி கல்கிக்கு வரும் பொழுது இவ்வுலகம் சுழலும் தன்மையில் சிறு அசைவின் மாறுதல் பட்டு மறுபடியும் அதே நிலைகொண்டு சுழற்சி சுற்றிக்கொண்டு இவ்வுலகம் இருக்கும் என்கின்றோம்.

இவ்வுலகின் நிலை மாறுவதைப்போல் இவ்வுலகுடன் தொடர்புடைய ஒவ்வொரு மண்டலங்களின் நிலையும் மாறுபடுகிறது.

அந்நிலையில் மாறுபடும் பொழுது இப்பொழுது இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகொண்ட சக்திகளெல்லாம் இப்பூமி ஈர்த்ததோ அதைப் போல் இப்பூமியிலிருந்து இப்பூமி வெளியிட்ட சக்தியை மற்ற மண்டலங்களின் நிலையுமே அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மாறுபடுகின்றது.

இப்பொழுதுள்ள இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளின் நிலையுமே அதை ஈர்த்து வெளியிட்ட தன்மையில்… பிறகும் சுழலும் சுழற்சியில் இதே நிலையில் அதன் நிலை வந்திடாமல் அதன் சக்தி நிலையுமே மாறுபட்ட தன்மையில்தான் சுற்றிக்கொண்டு வரும் அடுத்த சுற்றலின்போது இருந்திடும்.

இப்பொழுது வாழும் ஜீவராசிகளுக்கு மட்டும்தான் இந்நிலையா…? ஆவி உலகில் உள்ளவர்களின் நிலையெல்லாம் என்ன என்பீர். அடுத்த சுழற்சியில் அவ்வாவி நிலையில் உள்ளவர்கள் எந்நிலையில் வந்து பிறப்பார்கள் என்பீர்.

அவர்கள் இப்பூமியில் வாழும் காலத்தில் எவ்வெண்ணத்தில் எந்நிலைகொண்ட சுவாசம் எடுத்தார்களோ அந்நிலையிலே தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

1.இவ்வுலகம் இக்கலி முடிந்து கல்கியில் மாறுபடும் பொழுது
2.மற்ற மண்டலங்களில் இருந்து இப்பொழுது நாம் பெறும் சக்தி நிலையும் மாறுபடுவதினால்
3.ஆவி நிலையில் உள்ளவர்களின் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த தன்மை இப்பூமியில் கிடைக்காததினால்
4.அடுத்த சுழற்சியில் பல ஆயிரம் காலங்கள் ஆனாலும் ஆகலாம்.
5.அவர்களுக்கு உகந்த பிறப்பிடம் பெற்றுப் பிறவி எடுத்திட…!

இப்பொழுது மனிதர்களாக வாழ்பவர்களுக்காவது சூட்சும நிலை பெற்று எம்மண்டலத்திலும் எவ்வுடலையும் ஏற்கும் தன்மை வருகின்றது.

ஆகவே.. இப்பொழுது நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை “பாக்கியம் பெற்ற வாழ்க்கை…” என்று கருத்தில் கொண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை உன்னத வாழ்க்கை…!

1.இவ்வாழ்க்கையை நிலைக்கச் செய்து ஒவ்வொருவரும் வந்திடுவீர் சூட்சும நிலைக்கே.
2.ஆவி உலகின் சிக்கலில் எவரும் சிக்கிக் கொள்ளாதீர்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நெற் பயிரை வயலில் விளைய வைத்து அதைக் குவியலாக்கும்போது எல்லோரும் உணவாக உட்கொள்ள முடிகின்றது.

அதே போலத் தான் ஞானிகளின் உணர்வுகளைக் குவியலாகக் குவித்தால் தான் எல்லோரும் நாம் அவரவர்களுக்குத் தேவையான பங்கை எடுத்துக் கொள்ள முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானிகளின் ஞான வித்தை எனக்கு (ஞானகுரு) ஒரு நெல்லாகக் கொடுத்தார் குருநாதர்.

அதைப் பல நெல்லாக விளையச் செய்து கொண்டிருக்கின்றோம்.

யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கேட்டுணர்ந்தவர்கள் எல்லாருடைய உணர்வுகளிலும் அந்த வித்தைப் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றோம்.

பதிய வைத்தை ஞானிகளின் உணர்வுகளை நாம் எல்லாம் சேர்த்து விளைய வைத்தால் தான் ஒரு குவியலாக வரும்.

ஏனென்றால் ஒரு நெல் யாருக்கும் பசியை தீர்க்காது. என் ஒருவனால் அது செய்ய முடியாது.

எல்லோரும் சேர்த்து ஞானிகளின் அருளாற்றல்களை விளைய வைத்துப் பெரிய குவியலாக வரப்படும் பொழுது தான் அதை மொத்தமாகப் போட்டுச் சமைத்து எல்லாருடைய பசியையும் தீர்க்க முடியும்.

இதைக் கேட்டுணர்ந்தவர்கள் அனைவரும் தீமையை நீக்கும் “கல்கி…” என்ற நிலையில் பத்தாவது நிலையான ஒளியின் சரீரம் பெறும் அந்த நிலையை அடைவீர்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து
2.உங்கள் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு துன்ப நிலைகளிலிருந்தும்
3.உங்களை மீட்கச் செய்வதற்கே இந்த உபதேசம்.
4.மெய் ஒளியை வளர்த்து தீமைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளுங்கள்.

இந்த மெய் உணர்வுகளைக் கேட்டு வளர்த்துக் கொண்டவர்கள் உங்கள் ஊர்களில் உள்ள மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி அவர்களையும் மீட்கச் செய்ய வேண்டும்.

ஞானிகளின் ஆற்றலைப் பெறும் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அவர்கள் அறியாது வந்த இருளை நீக்கும் நிலைகளை நாம் பெறச் செய்ய வேண்டும்.

நாம் வாழும் ஒவ்வொரு இடங்களிலும் ஞானிகளின் உணர்வுகளை நம் மூச்சலைகள் மூலமாக அதைப் படரச் செய்ய வேண்டும்.

அப்படிப் படர்ந்தால் தான் நச்சுத் தன்மைகளிலிருந்து மனிதன் ஒவ்வொரு மனிதரும் விடுபடும் நிலைகளைப் பெருகச் செய்ய முடியும்.

கடல் பெரிதாக இருக்கின்றது.
1.அதில் எது கலந்தாலும் கடைசியில் “உப்பு நீராக” மாற்றிவிடுகின்றது.
2.அதாவது நல்ல தண்ணீரோ அசுத்த நீரோ சாக்கடைத் தண்ணீரோ எதுவாக இருந்தாலும்
3.அந்தக் கடலுக்குள் சேர்ந்த பின் உப்பின் நிலைக்கே அதை மாற்றி விடுகின்றது.

இதை போல தான் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வுகளும் அந்த மெய் உணர்வின் கடலிலே ஒளிக்கடலான அந்த ஞானிகளின் உணர்வுடன் தான் சங்கமமாக வேண்டும்.

1.வாழ்க்கையில் வரக்கூடிய அசுத்தங்களோ
2.தவறான நிலைகளைக் கேட்டுணரந்தாலோ
3.உலகில் எங்கெங்கோ நடக்கும் தவறுகளைக் கேட்டு நுகர்ந்தாலோ
4.அதைப் பார்த்தாலோ அதைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலோ
5.இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் போய்
6.நம் உடல் என்ற பெரும் கடலுக்குள் உப்பாக மாற்றி
7.அதனின் செயலுக்கே நம்மை மாற்றிவிடுகிறது

ஆனால் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நாம் அனைவரும் சேர்ந்து
1.மீண்டும் மீண்டும் குவியலாகக் கவரப்படும் பொழுது
2.நமக்குள் அது பெருகி நம்மை ஞானியாக மாற்றி
3.மெய் ஒளிக்குள் – மகரிஷிகளின் அருள் வட்டமான அந்த எல்லைக்குள் நம்மை அழைத்துச் சென்று விடும்.
4.அந்தப் பெரும் கடலான ஒளிக் கடலில் கலக்கும் நிலையை
5.நாம் இன்றிலிருந்தே இப்பொழுதிலிருந்தே செய்ய வேண்டும்.

விஷத்தை வென்றிடும் நுண்ணிய உணர்வுகள் தான் இன்று நமக்குத் தேவை

 

இந்த உலகில் நடக்கும் சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் “ஆ… இப்படி ஆகிவிட்டதா…?” என்று எண்ணாதீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் அந்தத் தீமையின் உணர்வுகள் இங்கே வருவதில்லை.

சிவன் ராத்திரி அன்று “நீ விழித்திரு…” என்றால்
1.வாழ்க்கையில் எப்பொழுது பிறருடைய துயரங்களைக் கேட்டறிகின்றோமோ
2.அந்த நேரத்தில் எல்லாம் விழித்திருக்க வேண்டும்.

எப்படி…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை வலுப்படுத்தி உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் பார்க்கும் அனைத்துக் குடும்பங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் உணர்வுகள் அவர்கள் குடும்பத்தில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணினால்… “அவருடைய தீமைகள் நமக்குள் புகுவது இல்லை…”

1.இந்தச் சொல்லின் தன்மையை அங்கே சொல்லி
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருப்பீர்கள்…! என்று சொல்லப்படும் பொழுது
3.இந்த உதவியை அவருக்குச் செய்கின்றோம்… அவருக்குள் தீமைகள் புகாது தடுக்கின்றோம்
4.அவர்களும் அவ்வாறு எண்ணினால் அவர்களுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது
5.நமக்குள்ளும் தீமைகள் வருவதில்லை… நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

சிவன்ராத்திரி… விழித்திரு…! அன்றைய தினம் முழுவதும் இவ்வாறு நாம் தூய்மைப்படுத்தும் உணர்வாக இருந்தோமென்றால் நம் ஆன்மாவில் உள்ள கெட்ட உணர்வுகள் அப்புறப்படுத்தப்படுகின்றது.

எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏகோபித்துச் சொல்லும் பொழுது… தீமை செய்யும் உணர்வுகளுக்குப் பூமியில் ஈர்ப்புத் தன்மை இல்லை என்றால்… சூரியன் அவைகளை இழுத்துச் சென்று அதன் உணர்வின் தன்மையைக் கருக்கி… மற்ற பிரபஞ்சத்தில் பரவச் செய்து அந்த விஷத்தின் தன்மையை மாற்றி விடுகின்றது.

அதாவது (பொதுவாக)…
1.தான் கவரும் விஷத்தைச் சூரியன் பாதரசத்தால் மோதி வெப்பத்தையும் காந்தத்தையும் உருவாக்குகிறது
2.விஷத்தைப் பலவீனப்படுத்தி அதை அகற்றி விடுகின்றது.
3.நல் உணர்வாக பரவச் செய்து விஷத்தினைக் குறைக்கச் செய்கின்றது.
4.இப்படி மற்றதுடன் கலந்து இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

உதாரணமாக… ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தவர்களுக்கு எல்லாம் மயக்கம் வருகின்றது.

ஆனால்
1.ஆயிரம் குடம் பால் அந்த விஷத்தின் தன்மையில் பட்டால்
2.இந்தப் பாலைக் குடித்தோருக்கெல்லாம் “வீரியத்தன்மை…” கிடைக்கின்றது.

இதைப் போன்றுதான் கடல் அலைகள் போலப் பரவப்படும் பொழுது விஷத்தின் தன்மை அங்கே சேர்க்கப்படும்போது அது பிரபஞ்சத்தில் மற்றதன் நிலைகளை “தீமைகளை நீக்கும்… நல்ல உணர்ச்சிகளை உருவாக்கும் சக்தியாக…” அங்கே மாற்றுகின்றது.

ஆகவே எதனின் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதனின் உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.
1.அருள் ஞானிகளின் உணர்வை ஆயிரம் குடம் பாலைப் போன்று ஊற்றினால்
2.விஷத்தை வென்றிடும் ஆற்றலைப் பெற்று நாமும் மகரிஷிகளைப் போன்று ஆக முடியும்.

ஒவ்வொரு உயிராத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் மெய் ஞானியாகுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தின் மூலமாக உணர்வின் எண்ண அலையை இங்கே சுட்டிக் காட்டிய வழிமுறைப்படி எண்ணத்தில் ஓடக்கூடிய உணர்வுகளை மின்காந்த வீரியத் தன்மை உயிராத்மாவில் எடுக்கும் பொழுது சூரியனுடன் மற்றக் கோள்களின் சந்திப்பின் அமில ஈர்ப்பு மோதும் பொழுது சூரியன் அதை எடுத்துச் சமைத்துத் தன் ஒளியைக் கக்குவதைப் போன்று இவ்வாத்மாவில் உணர்வின் எண்ணத்தை அமைதிப்படுத்தும் தியானத்தில் ஒலியை மனித ஞானத்தில் வளர வளர மெய் ஞான உண்மைகளைச் சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் செயல் ஒன்றினால்தான் ஆத்மாவின் ஒளித் தன்மையை மெய் ஞானத்தின் ஒளியறியும் ஆத்மாவாக செயலாக்கும் நிலை பெற முடியும்.

வாழ்க்கையில் எண்ணத்தின் சிந்தனை குடும்பம் உடல் ஆரோக்கியம் தொழில் மற்ற எதுவாயினும் அதே தொடரில் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வளர்ந்த வாழ்க்கை ஓட்டத்தில்… இவ்வுடல் உள்ள வரை வாழ்ந்தாலும்
1.இஜ்ஜீவித உடலில் எண்ணத்தின் செயல் வேட்கைக்குத்தான் ஆத்மாவின் பிடிப்பு செயல்படும் இறுக்கத்தால்
2.ஆத்மா முன்னேறாத .நிலை ஆகி
3.எல்லா நிலைகளையும் அறியத்தக்க எண்ணம் கொண்ட மனிதனின் செயல்
4.மிருக நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடனே சிக்கிவிடும்.

யானை காட்டில் பிறப்பெடுத்து வாழ்ந்தாலும் அதனுடைய செயலுக்கொப்ப வாழ்ந்து மடியும் யானையும்… அதே யானையை அரசர்கள் பட்டத்து யானையாக உபயோகப்படுத்தும் பொழுது அரசனுக்கொப்ப அவ் யானைக்கு மரியாதையும்… வித்தகனிடம் சிக்கும் யானை வித்தகன் பழக்கப்படுத்தும் (சர்க்கஸ்) வித்தையை அறிந்து வித்தை காட்டும் யானையாகவும்… பல வேலைகளைச் செய்ய யானைகளைப் பழக்கப்படுத்தும் யானை எதைப் பழக்கப்படுத்தி செய்விக்கும் செயலறிந்து உழைப்பைத் தருகின்றதோ அந்நிலைக்கு யானையின் செயலை உபயோகப்படுத்திக் கொள்கின்றான் மனிதன் தன் செயலுக்காக.

இதைப் போன்று சில மிருகங்கள் மனிதன் பழக்கப்படுத்தக் கூடிய வளர்ப்பு நிலை கொண்டு செயல்படுகின்றதல்லவா…?

அதைப் போன்றே மனிதனும்…
1.இவ்வுடல் என்ற பிம்பத்தின் வாழ்க்கைக்காக மட்டும் தன் தேவை அனைத்தையும் செயல்படுத்தி வாழும் போது…
2.உடலுடன் மடியும் நிலை ஆகி முழுமை இல்லாது போகிறது.

ஆகவே ஆன்மாவின் மெய்யறிய வேண்டும் என்றால்
1.மனித உணர்வின் அலையை வாழ்க்கையின் ஈர்ப்பின் எண்ணத்தின் பதிவாய் மட்டும் வாழாமல்
2.உணர்வின் எண்ணத்தில் பகுத்தறிவு – வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று
3.எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்.

புதிய கண்டுபிடிப்புகளை அறியக் கூடிய விஞ்ஞானிகளையும் வான சாஸ்திரத்தைக் கணிக்கும் சாஸ்திரங்கள் அறிந்தவர்களையும் ஊன்றிப் பார்த்தால் அவர்களின் எண்ண சிந்தனை அமைதியான ஓட்டத்தில்தான் செயல்படுவதைக் காணலாம்.

எண்ணத்தின் சிந்தனையை ஓர் தொடரில் செலுத்தி “அமைதிப்படுத்தும் ஞானி…” மெய் ஞானியாகலாம். எண்ணத்தின் உணர்வை அமைதியாக்கும் தியானமே முதலில் செயலாக்கிடல் வேண்டும்.

மனித உணர்வில் இருக்கக்கூடிய ஒலியின் தொடர் மனித ஒலியின் எதிர்ப்பில் மோதும் பொழுது எடுக்கும் ஒலியின் மின் காந்தத்தின் வீரியத்தை ஞானத்தின் மெய்யறிய முதலில் பக்குவப்படுத்தல் வேண்டும்.

மெய் ஞானத்தின் ஒலி பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் சத்தியமே ஆத்மாவின் அழிவில்லா வளர்ச்சி ஒளி நிலை.

வாழ்க்கையில் எதிர் மோதல் யாவையுமே… உணர்வின் வீரியத்தின் விபரீதமாய் எண்ணத்தைக் காரமாக்கும் செயல்படுத்தும் ஒலியால்..
1.மனித உணர்விலிருந்து பெற்ற மெய்யொலி விரயமான விபரீதச் செயலே
2.மனித வாழ்க்கையிலும் ஞானியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்ததனால்தான்
3.இப்பூமியில் பல கோடி ஞானிகளும் தத்துவச் செயலுக்காகச் சக்தியை வளர்க்க முடியாமல்
4.விரக்தியையும் சலிப்பையும் வளர்த்து… இன்று இப்பூமியில் மனிதச் செயல் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது.

மனித உணர்வில் எடுக்கக்கூடிய மெய் ஒலியை இங்கே கொடுக்கும் போதனை வழியில் உணர்வை ஒட்டி இதன் தொடர்பலையின் உண்மைத் தத்துவத்தை… ஆத்ம ஞானமாய்… ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும் வழியறிந்து… வழி தந்த முறைப்படி ஒவ்வொருவருமே இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிலிருந்து இப்பூமிக்கோளின் முதிர்வின் ஒலியாய்… பல கோடி தேவரிஷிகளின் ஒளி சக்தியுடன் ஒளிரும் ஒளி ஆத்மாவாகும்… மெய் ஒளி மெய் ஞானியாய் வளர முடியும்.

வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களின் உண்மையை தியானத்தின் சூட்சுமத்தில் முன் கூட்டி அறியக்கூடிய பக்குவங்களை இச்சரீர பிம்பச் சொந்த பந்தச் செயல்பாட்டுக்கு விரயமாக்காதீர்கள்.

பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் நிலைக்கும்… உணர்வுடன் உடல் சொந்தம்… மற்றச் சொந்தங்களுக்கும் செயலாக்கும் முறையையும்… சூட்சுமத்தில் நம் அகத்தில் அறிந்து மகிழும் ஆத்மாவின் சொத்தாய்ப் பக்குவப்படுத்தும் ஞான ஒளியை… ஒவ்வொருவரும் உண்மைத் தன்மையில் பயன்படுத்துங்கள்.

1.வெறும் புகழுக்காகவும் பாசத்திற்காகவும் சக்தியை விரயப்படுத்தாமல் “ஆத்மாவின் சொத்தாக”
2.மெய் ஞானத்தின் ஒளியைக் குற்றம் குறைகளைக் குணத்தில் நீக்கி
3.உயர்ந்த மெய் ஞானியின் ஒளியை அகத்தில் ஏற்று
4.ஞானத்தின் ஒளியை மெய் ஞானத்தின் தத்துவத்தின் மூச்சின் மூச்சாய்
5.மூவுலகின் சக்தியையும் உடல் கோளத்தில் ஆக்கப்பெறும் ஆத்மாவின் ஒளிக் கோளத்தை
6.ரிஷிகளுக்குச் சொந்தமாக்கும் செயலாகப் பொதுத் தன்மைக்கு
7.ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் புனித ஆத்ம ஒளியை மெய் ஞானியாய் ஆக்குங்கள்.

மெய ஞானமாய்த் தரும் சகல ரிஷிகளின் சக்தி ஒளியாய் ஒளி பெறுவீர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் சாமியிடம் (ஞானகுரு) உபதேசங்கள் எல்லாம் கேட்டு அறிந்து கொண்டீர்கள்.

1.இந்த மெய் ஞான நிலைகளை நீங்கள் வளர்க்கிறதோடு மட்டும் இல்லாமல்
2.எல்லா இடத்திலும்… உலகம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இது மிகவும் முக்கியம்.

நாம் வெளிப்படுத்தும் அந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமி முழுவதும் படர வைத்துவிடும். அந்த மெய் உணர்வின் தன்மை நாம் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குப் பாதுகாப்பாக அமையும்.

விஞ்ஞானத்தால் ஏற்படுத்தப்பட்ட விஷத் தன்மைகளால் நம் பூமி முதுமை அடைந்து விட்டது. பூமி முதுமை அடைந்து அது பாட்டுக்கு அது போய்க் கொண்டே இருக்கும்.

அதனுடைய கால நிலைகள் இயற்கையின் நிலையில் வளர்ச்சியாகும் போகும். பூமி முதுமை அடைந்தாலும் நாம் நம்மை ஞானிகள் காட்டிய வழியில் மாற்றிக் கொள்ளலாம்.

இயற்கையே மாற்றியமைத்துக் கொண்டு தனக்குள் இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொள்ளும் சக்தி இந்த மனிதனுக்குத்தான் உண்டு.
1.நாம் எந்த மெய் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ…
2.அதனின் நிலைகளில் நாம் வளர்ந்து விடலாம்.
3.நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் வளருகின்றேன்.
4.நீங்களும் இதைப் போன்று எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்
5.நீங்கள் நிச்சயம் வளர்கிறீர்கள்.

இந்தத் தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வுகளை எல்லோருக்கும் பாய்ச்சப்படும் பொழுது நிச்சயம் நாம் அந்த நிலைகளைப் பெறுகின்றோம்.

1.நான் இப்படி நினைத்தேனே…!
2.ஆனால் இன்று இப்படித் துன்பங்கள் வந்துவிட்டதே…! என்று
3.இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை.

நமக்கு உடல் முக்கியமாக வேண்டும். ஆனால் இந்த உடலுக்குள் இருக்கப்படும் பொழுதே
1.நாம் எதைச் செய்ய வேண்டும்…?
2.எதை நாம் கழிக்க வேண்டும்…?
3.எதை நாம் கூட்டவேண்டும்…? என்பது தான் முறை.

இந்த உடல் நமக்கு என்றும் சதமில்லை.

இந்த உடலை விட்டு உயிராத்மா சென்று விட்டால் இந்த உடலில் நாம் எந்த வினையைச் சேர்த்து கொண்டோமோ இந்த வினையின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி அதை இயக்கியே தீரும்.

உடல் மீது பற்று கொண்டால் வேதனையை உருவாக்கும். இந்த நிலையில் இருந்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பத்தாவது நிலையான “கல்கி..” என்ற நிலையை அடைய வேண்டும்.

பூமி… “முதுமை அடைந்து” அடுத்த நிலைக்குப் போயக் கொண்டிருக்கின்றது… நாம் மகரிஷிகளுடன் ஒன்றுபடுவோம்.

பிரணவ மந்திரத்தைத் தகப்பனுக்கே ஓதினான் என்பதன் சூட்சமப் பொருள் என்ன…?

 

மனிதனான பின் அடுத்தவர்கள் செயலைப் பார்த்து… இது தீமை இது பகைமை என்ற நிலைகளை அறிகின்றோம். அறிந்தாலும் மீண்டும் தவறைச் செய்து அவன் கோபிக்கின்றான் என்றால் அந்தக் கோப உணர்வு நமக்குள் வரக்கூடாது.

கோப உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அங்கே அவன் உடலில் படர வேண்டும். அந்த அறிவின் தெளிவு அங்கே வர வேண்டும் என்று நாம் எண்ணினால் அவனின் கோப உணர்வுகள் நமக்குள் வராது.

அதைத் தான் விழித்திரு என்று சொல்வது…!

ரோட்டிலே சும்மா போய்க்கொண்டே இருக்கிறோம். ஒரு பக்கத்திலே ஏதாவது ஒரு புகையைப் போட்டுவிடுகிறார்கள். நாம் போகும் பாதையில் அது வருகிறது.
1.சுவாசித்தவுடனே தலை சுற்றுகிற மாதிரி இருக்கின்றது…
2.எதனால் என்று நமக்குத் தெரிவதில்லை.
3.இருந்தாலும் தலை சுற்றுகிறது என்று மீண்டும் அப்படியே நடந்து செல்வோமா…?

இல்லை…!

1.உடனே மூக்கை பொத்திக் கொள்கின்றோம்
2.எப்படியோ ஒரு ஓரத்திலிருந்து அதைச் சமப்படுத்த நிற்கிறோம்.
3.ஒதுங்கிய பின் நம் மனது ஒரு தெளிவாகின்றது.

அதைப் போன்று தான் வாழ்க்கையில் வெறுப்பு என்ற நிலைகள் வந்து நம்மைக் கோப உணர்வு இயக்கிவிட்டால் அடுத்த கணமே…
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியிலே உயிரை எண்ணி அந்த உணர்வைக் கொண்டு கோபத்தைத் தடைப்படுத்துதல் வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வினைக் கலந்து நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்

இதைத்தான் விழித்திரு என்று சொல்வது.

மனிதனின் ஆறாவது அறிவைக் “கார்த்திகேயா… தகப்பன்சாமி…! என்று சொல்வார்கள்.
1.இந்த உடலிலிருந்து உருவானதுதான் இந்த ஒளியின் அறிவு.
2.ஓ…ம் என்ற பிரணவத்தைச் சிவனுக்கு ஓதினான் முருகன்… தகப்பன்சாமி.

இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் ஒளியின் உணர்வை இங்கே ஜீவனாக்க (உடலுக்குள்) வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

உடலிலிருந்து வந்த நிலையை
1.செவி வழியில் உணர்வுகளை உந்திக் கண்களின் வழி நினைவாற்றலைப் பெருக்கி
2.உணர்வின் தன்மையை இழுத்துக் கண் வழி கொண்டு தனக்குள் இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிவம் என்பது உடல்… ஆனால் தகப்பன்சாமி…! இந்த உடலிலிருந்து விளைந்தாலும் தகப்பனுக்கே சொல்கின்றான்… மந்திரத்தை ஓதினான் பிரணவத்தை… அதாவது ஜீவன் பெறுவதை…!

1.நாம் எண்ணுவது எதுவோ அதுதான் ஜீவன் ஆகின்றது என்பதை
2.இந்த ஆறாவது அறிவு தான் சுட்டிக் காட்டுகின்றது

நான் (ஞானகுரு) இப்போது பேசுவது எல்லாம் என்னுடன் சிவம் ஆகின்றது.. இத்தனை (உபதேசிப்பதை) அறிவையும் எனக்குள் சொல்வது சிவனுக்குத் தான்.

சிவனுக்குள் ஜீவன் என்ற நிலையில் இருக்கும் பொழுது… சிவனுக்குள் ஜீவ அணுவின் தன்மை இது எப்படி வாழ வேண்டும்…? எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இத்தனை தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

மகா சிவன்ராத்திரி…! பல கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதற்குள் இருள் சூழா நிலைகள் கொண்டு ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஒளியின் உணர்வினைக் கூட்டுதல் வேண்டும்.

உடலான நிலத்தைப் பயன்படுத்தி மெய் ஞானப் பயிரை அதிலே விளைய வைக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இயற்கையின் சக்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறிக் கொண்டேதான் உள்ளது. பச்சைப் பசேலென்று மழைக் காலத்தில் புல் பூண்டு படர்ந்துள்ள பூமியில் அது வளர்ந்து பழுப்பாகி காய்ந்து சருகாகி… மீண்டும் மழையில்லாக் காலங்களில் அவ்விடத்தில் வெடிப்பு விழுந்து… அங்குள்ள மண் இறுக்கம் கொள்ள… மீண்டும் மழை வர… பிறகு அதே இடத்தில் வளரக்கூடிய புல் பூண்டுகளின் வளர்ச்சி நிலை மாற மாற… இயற்கையின் தொடர்பிலேயே பல மாற்றங்கள் நொடிக்கு நொடி மாறுகின்றது.

இதைப் போன்றே மனித உணர்வின் எண்ணம் எடுக்கும் அலை ஒலியின் பதிவு நிலையைக் கொண்டு… ஆத்மா வளர்க்கும் ஒளித் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

பூமியில் இன்றைய மனித ஞானத்தைக் கொண்டு தனக்கொத்ததை வளர்த்துப் பக்குவப்படுத்தி ஆகாரத்தையும் மற்றெல்லாச் செயற்கைத் தன்மைகளையும் பூமியின் வளத்திலிருந்து மனித வாழ்க்கைக்கு வளர்த்துப் பயன்படுத்தினாலும்…
1.எந்த மண்ணிலிருந்து தனக்கொத்ததை எடுத்து மனிதன் பயன்படுத்தினாலும்
2.அதை வெறும் மண்…! என்று தான் ஒதுக்கி விடுகின்றான்.

மண்ணிலிருந்துதான் உணவுப் பொருட்களை விளைவித்து உட்கொள்கின்றோம். ஆனால் அம்மண்ணை அவ்வுணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை.

இப்பூமியின் மண் வளத்தைக் கொண்டு வாழும் மனிதன் அம்மண்ணிலிருந்து சரீர ஜீவனை வளர்க்க தனக்கொத்ததைப் பயன்படுத்துவது போல் இச்சரீரத்தைப் பூமியின் கோளைப் போன்று இவ்வுயிராத்மா வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்.

1.ஜீவ வாழ்க்கையில் இச்சரீர உடலை ஓர் கோளாக எண்ணி…
2.இச்சரீரம் மண்ணாக… நாமெடுக்கும் உணர்வு ஜீவனாகி…
3.அஜ்ஜீவனின் பலனே ஆத்மாவின் ஒளியாக சத்தாகும் அமைப்பாய்…
4.இச்சரீரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்தும் மற்றக் கோள்களிலிருந்தும் நம் பூமியின் சுழற்சியால் அந்தந்த இடத்திற்கொப்ப ஈர்ப்பின் அமில செயல் வளர்ந்து… பல கோடித் தன்மைகள் பல உன்னத சக்திகளை பூமி வளர்த்துக் கொண்டு சுழற்சியின் கதியில் எண்ணமில்லா நிலையிலும்… பல கனி வளங்களிலும்… அபூர்வ இயற்கைத் தன்மைகளும்… இயற்கை சக்திகளும் வளருகின்றது.

இருந்த பொழுதும்
1.எல்லா நிலைகளையும் உணரவல்ல மனித உணர்வின் எண்ண ஞானம்…
2.மெய் ஞானத்தின் இயற்கை சக்தியை
3.மெய் ஞானிகள் மெய்யுணர்வில் மெய்யறிந்து மெய்யாக்கிய மேன்மையை
4.மெய் ஞானியாய் ஒவ்வொருவருமே தன் பகுத்தறிவின் உண்மை உணர்ந்து வளர்ந்திட வேண்டும்.

நம் ஜீவ உடல் உண்மையல்ல…! இயற்கையின் கதியில் ஒரு நாள் பிறப்பெடுக்கும் பூச்சியும்… ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் நாகமும்… சரீர உணர்வில் மெய்யறிய மனித நிலையின் உணர்வலையில் மோதிடும் ஞானத்தின் பகுத்தறிவால்தான் உயர் ஞானத்திற்கு செயலாக்கக்கூடிய செயல் தன்மைக்கேற்ற கோளமிது.

ஜீவ உடல் கொண்ட உயிராத்மாவிற்கு “உடல்” ஒரு இயக்கக் கோளம். ஆகவே இத்தகைய உண்மையை உணர்ந்து உய்யும் ஆத்மாக்களே….
1.மெய் ஞானிகளின் மெய்யறிய மெய் ஞானிகளின் தொடர்பைப் பெறுங்கள்.
2.வானக்கோள்களில் மறைந்துள்ள எண்ணிலடங்கா உண்மை சக்தியில்…
3.என்றுமே மங்கா ஒளித் தன்மையை வளர்க்கும் சப்தரிஷிகளின் தேவ ரிஷியாகச் செயலாக்கும் செயலுக்கு…
4.மனித உணர்வின் எண்ண உடல் கோளத்தைப் பக்குவப்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்போது வாழ்க்கையில் எனக்கு இடைஞ்சல் செய்தவனை எண்ணுகின்றேன். “என் பிள்ளை படிக்கவில்லையே… நாளைக்கு எதிர்காலம் என்ன ஆகுமோ…!” என்று நான் எண்ணிச் சிந்திக்கின்றேன்.

அப்பொழுது இந்தச் சிந்தனைகள் எல்லாம் எங்கே போகின்றது…?

என் பிள்ளை படிக்கவில்லை என்றால் நாளை அவன் எதிர் காலம் என்னவாகும் என்று நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் என்றால் போதும்…! (ஒரு நல்ல பையனைப் பற்றிக் கூடச் சிந்திக்க மாட்டோம். நல்லது… எண்ணத்திற்கே வராது.)

இவன் சொன்னபடி கேட்கவில்லை…. படிப்பு சரியாக இல்லை… என்ற இந்த நிலையில் இருந்தால்
1.அவனைப் பற்றியே எண்ணி
2.அவன் உயர்ந்தவனாக வர வேண்டும் ஆனால் வரவில்லையே என்று எண்ணிக் கொண்டே இருக்கின்றேன் என்றால்
3.நான் இறந்த பிற்பாடு இந்த உயிராத்மா அவன் உடலுக்குள் தான் போகும்.

அவனை எண்ணியே வேதனைப்பட்டேன். அந்த வேதனையான நிலைகள் எனக்குள் நோயாக வந்தது. நோயாக உருவான இந்த உயிராத்மா நான் இறந்த பிற்பாடு என் பையன் உடலில் தான் போகும்.

அங்கே போய் அங்கே நல்லதை விளைய வைக்கின்றதா…? என்றால் இல்லை. அவனை வீழ்த்தச் செய்வேன்.

மந்திரங்கள் தந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள்
1.மனித உடலில் விளைந்த உணர்வு எண்ணங்களைத் தனக்குள் கவர்ந்து கொண்டவர்கள்
2.வாமன அவதாரம் என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மந்திரத்தாலே அப்போதைக்கு அப்போது அந்தந்தக் காரியங்களை ஜெயித்துக் கொண்டு வந்தவர்கள்.

அதை எல்லாம் “தெய்வப் பண்புகளிலே பார்க்கப்பட்டு…” அந்த உணர்வின் தன்மை திசை திருப்பி அன்றைய வாழ்க்கையை எப்படியோ பொழுது போக்க வேண்டும் என்று செய்வார்கள்.

வீட்டில் மாடி கட்டுவதற்கு பொய்ப் பந்தலைக் கட்டி அதன் மேலே தளம் சுவர் எழுப்பிக் கட்டுவோம். செய்து முடித்தபின் பொய்ப் பந்தலை உடனுக்குடனே எடுத்து விடுவது போல் தான் “மந்திரம் சொல்வதை அது நிரந்தரமாகக் கட்டி விட்டார்கள்…”

1.மனித உடலிலே விளைய வைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள
2.இந்த மனித வாழ்க்கையிலே தன்னுடைய பேருக்கும் புகழுக்கும்
3.தன் சுகபோகங்களுக்கும் எண்ணி எடுத்துக் கொண்டது தான் இந்த மந்திர ஒலிகள்.

அந்த மந்திர ஒலிகள் எங்கிருந்து வந்தது…?

ஒரு மனித உடலில் விளைய வைத்த அந்த எண்ணங்களைக் கவர்ந்து தனக்குள் அது உருவாக்கித் தன்னுடன் இயக்கச் செய்யும் நிலையே அது.

சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் குணம் கொண்டு ஒரு ஆன்மா நம் உடலில் எப்படி நுழைந்து விடுகின்றதோ இதைப்போல
1.செயற்கையில் ஒரு மனிதன் மந்திர ஒலிகளைப் பரப்பச் செய்து
2.அந்த மந்திரத்தை எவன் உருவாக்கினானோ
3.அந்த மந்திர ஒலி கொண்டே மீண்டும் தனக்குள் கவர்ந்து
4.இன்னொரு ஆத்மாவினுடைய செயலைத் தனக்குள் கவர்ந்து கொள்வது
5.இது தான் மந்திரம்.

கவர்ந்து கொண்ட நிலைகள் கொண்டு சில காலம் இன்னொரு உடலுக்குள் போய்ப் பேயாகவும் அருளாகவும் தெய்வமாகவும் செயல்படுத்தி மாற்றிக் காட்டலாம்.

பல வித்தைகளைச் செய்து காட்டலாம். ஆனால் பயன் ஒன்றுமே இல்லை.

அப்படிச் செய்தவர்கள் அனைத்தும் மீண்டும் விஷத்தின் தன்மை கொண்டு பாம்பாகவோ தேளாகவோப் பிறந்து தான் மீண்டும் மனிதனாக வரவேண்டும்.

இதைப்போல நாம் மந்திரம் என்ற இந்த நிலைகளில் இருந்து விடுபட்டு பத்தாவது நிலையான கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.

ஏனென்றால் நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நம்மை அறியாமல் நமக்குள் சென்ற இந்த அழுக்கினைத் துடைக்கத்தான் இந்தத் தியானம்.

செய்து பாருங்கள்.

எந்த நிமிடத்தில் இனி எது வந்தாலும் நம் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்

 

பூமிக்குள் விஷக்கதிரியக்கங்கள் அதிகமாகி விட்டது… அதனால் பூமி கரையக்கூடிய நிலைகளும் அதிகமாகி விட்டது.

துருவத்தின் வழியாக விஷத்தின் தன்மைகள் பரவப் பரவ… பூமிக்குள் குழம்பின் நிலைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அந்த இயக்கத்தினால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் கரைந்து கடல்கள் பெருகுகின்றது.

கதிரியக்கங்கள் பூமிக்குள் சென்று கூழாக மாற்றும் தன்மை அதிகரிக்கிறது.
1.கடல் இருக்கும் பக்கங்களில் விஷக் கதிரியக்கங்கள் பாய்ந்தால்
2.கடல் அலைகள் பொங்கி (சுனாமி) நகரங்களை அழிக்கும் தன்மை வருகின்றது.

இயற்கையின் சீற்றங்கள் இப்படி எத்தனையோ வருகின்றது.

ஆனால் மனிதராக வாழும் நாம் எந்த உணர்வின் தன்மையைப் பெற்றோமோ… உடலை விட்டுப் போகும் போது எந்த ஆசையை முன்னணியிலே வைத்திருந்தோமோ
2.உயிரிலே கடைசி நிமிடத்தில் அது தூண்டப்படும்போது
2.இதைக் கவர்ந்து அடுத்த உடலாகப் பெறுகின்றது.

ஆகவே நாம் இப்போதிருந்தே தயாராகிக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கிப் பெருக்கி
1.எந்த நிமிடத்தில் எது வந்தாலும்
2.நம்முடைய நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்ற உணர்வானால்
3.அதன் உணர்வு வலுவானால் நம் உயிர் அங்கே செல்கிறது…
4.எத்தகைய நிலையானாலும் உயிருடன் ஒன்றி நாம் அங்கே செல்கிறோம்.

இன்று நடக்கும் எத்தனையோ நிகழ்வுகளைக் கண்டு “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…!” என்று பொருளின் பற்று வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு கருகிடும் நிலை வருகின்றது. மீண்டும் உடலின் பற்று கொண்டு பிறவிக்கே வருகின்றது.

ஆனால் கருகிய உணர்வானாலும்…
1.துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கும் போது கருகும் தன்மை இழக்கப்படுகிறது
2.உணர்வின் தன்மை ஒளியாகி அங்கே செல்கின்றது.

உங்களுக்குள் இதையெல்லாம் பதிவாக்கி விட்டேன் (ஞானகுரு).

1.உங்கள் நினைவு தான் உங்களைக் காக்க வேண்டும்…
2.வேறு எவரும் காக்க மாட்டார்கள்…!

நீங்கள் எண்ணிய உணர்வை வைத்துத் தான் உங்கள் உயிர் இந்த வாழ்க்கையை நடத்துகின்றது… உணர்வின் தன்மை உடலாக மாற்றுகின்றது… அதன் வழியே உங்களை ஆளுகின்றது.

இதை எல்லாம் மனித உடலில் இருக்கும் போது தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மனிதன் இந்த நிலையைச் செயல்படுத்தவில்லை என்றால் “பின் யாரும் நம்மைக் காக்க மாட்டார்கள்…”
1.உடல்கள் மாறும்… உயிர் அழிவதில்லை.
2.அழியாத உயிருடன் உணர்வை அழியாத நிலைகள் கொண்டு செல்வதுதான் நம் குருநாதர் காட்டிய மெய் வழி.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் வளர்த்தால் கல்கி என்ற பிறவியில்லா நிலை அடைகின்றோம். அதை அடைதல் வேண்டும்…!

அழியும் வாழ்க்கைதான் நிஜமாகத் தெரிகிறது.. அழிவில்லா வாழ்க்கை வேண்டுவோர் இல்லை…! – ஈஸ்வரபட்டர்

 

1.வாழ்க்கையுடன் இச்சரீரத்தைச் சொந்தப்படுத்தாதீர்கள்
2.ஆத்மாவிற்கு இந்தச் சரீரத்தைச் சொந்தப்படுத்துங்கள்.

மனித உணர்வின் எண்ணம் சுய கௌரவத்தைக் கொண்டு தன் ஆத்ம உடலையே அடகு வைத்துள்ள நிலைதான் வாழ்க்கையின் நிலை.

உற்றார்… உறவினர்… எதிரி… நண்பன்… தன் சொந்தத்தின் ஈர்ப்புப் பிடிப்பு… என்ற தொடரில் எல்லாம்
1.தன் ஆத்ம உணர்வின் எண்ணத்தை அடகு வைக்கும் வாழ்க்கையிலிருந்து
2.இச்சரீரத்தை ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும்
3.பிறவா நிலை பெறும் ஒளி சக்தியைப் பெறல் வேண்டும்.

கௌரவத்தின் சுயநிலை என்பது எப்படி இருந்தாலும் இந்த உடலுடன் மறையக்கூடிய நிலை தான். ஆனால் இந்த உடலுடன் எடுக்கும் தன் ஞானத்தின் மெய் ஞானம் என்றுமே வளரும் நிலை பெற்றது.

வாழ்க்கையின் நிலையே நிலையில்லா நிலைதான்…! ஆனாலும் இந்த வாழ்க்கை என்ற நிலையிலிருந்து தான் நிலைபெறும் நிலையாக இச்சரீரத்தைக் கொண்டே சகல நிலையையும் நாம் பெற முடியும்.

உணவு உண்ணும் பொழுது உண்ணக்கூடிய உணவு காரமெடுத்தவுடன் நீரைக் குடித்துச் சமப்படுத்துகின்றோம். அதிகமான இனிப்பை உட்கொள்ளும் பொழுதும் திகட்டல் எடுத்தவுடன் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்துகின்றோம். கடினமான பொருளை உட்கொள்ளும் பொழுது விக்கல் ஏற்பட்டவுடனும் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்திக் கொள்கின்றோம்.

அதைப் போன்று…
1.இச்சரீர உணர்வில் மோதும் உணர்வின் எதிர் அலைகள் தாக்கக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும்
2.உணர்வின் எண்ணத்திற்கு – ஞானிகளின் எண்ணமுடன்
3.சமமான சாந்தம் என்ற நல் நீரைச் செலுத்த வேண்டும்.

சரீர உணர்வில் எல்லா நிலைகளும் மோதத்தான் செய்யும். நாம் உணவு உட்கொள்ளும்பொழுது அறு சுவையையும் சமப்படுத்திச் சமைத்து உட்கொள்கின்றோம். அது போல் உணர்வில் மோதக்கூடிய எண்ணத்தை நாம் சமப்படுத்தி ஆத்மாவிற்குச் சத்தாக்க வேண்டும்.

1.உணவின் சத்தெடுத்து உடல் வாழ்கின்றது
2.உணர்வின் சத்தெடுத்து ஆத்மா வாழ்கின்றது
3ஆத்மாவின் வாழ்க்கை தான் அழிவில்லா வாழ்க்கை
4.உடலின் வாழ்க்கை நிஜமற்ற வாழ்க்கை…!

சூரியனும் மற்றக் கோள்களும் அது அது எடுக்கும் தொடர்பு கொண்டு ஓடும் கதியில் சூரியன் எப்படி ஆறு வண்ணத்தின் வளர்ச்சியில் ஏழாம் நிலையான ஒளி நிலை பெறுகின்றதோ அதைப் போன்று
1.நாம் எடுக்கும் தியான சக்தியின் மூலம்
2.இச்சரீர உணர்வில் மோதக்கூடிய குணங்களை
3.குணத்திற்கொத்த வீரிய நிலையை “நம் உயிராத்மா சமைக்க வேண்டும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காரமோ புளிப்போ மற்ற நிலைகள் அனைத்தும் அதனதன் வீரிய நிலைகள் கொண்டிருந்தாலும் சமையல் செய்யும் பொழுது நாம் அவையெல்லாவற்றையும் இணைத்துச் சுவை மிக்கதாக மாற்றுகின்றோம்.

அது எதனுடைய செயலாக இருந்தாலும் அதை அடக்கும் திறன் இங்கே மனிதனுக்கு வருகிறது. தனக்குகந்தாக மாற்றிக் கொள்கிறான் மனிதன்.

மற்ற உயிரினங்களோ அதனதன் நிலைகள் கொண்டு சுவையை உணவாக உட்கொள்கிறது. தனக்கு வேண்டும் என்றால் சாப்பிடுகிறது. வேண்டாம் என்றால் நுகர்ந்து பார்த்துவிட்டு விட்டு விடுகிறது.

ஆனால் மனிதனாக இருக்கக்கூடிய நாம் அதை அப்படி விடுவதில்லை. எதுவாக இருந்தாலும் அதனின் ஆற்றலைக் குறைத்துச் சுவையாக்கி உட்கொள்கிறோம்.

மனித உடல் நாம் உணவாக உட்கொண்டதில் மறைந்துள்ள விஷத்தின் தன்மையை மலமாக மாற்றி அதற்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்தை ஆற்றல் மிக்கதாக உடலாக மாற்றிவிடுகிறது. இதைப் போலத் தான்
1.நம் எண்ணத்தின் நிலைகள் செயல்படும் போது
2.இந்த உணர்வின் நிலைகள் கொண்டு கெட்டதை நீக்கி
3.நல்லதை உருவாக்கும் உணர்வுகள் வருகின்றது.

அல்லது
1.கெட்டதின் தன்மையாக இருந்தாலும்
2.நமக்கு வேண்டிய நிலைகளாக அதை இயக்கச் சக்தியாக ஆக்கித்
3.தனக்குள் அடிமையாக்கும் நிலை வருகிறது.

எதுவானாலும் அதை நாம் சமப்படுத்தி தன்னுடைய இயக்கத்திற்குக் கொண்டு வரும் நிலைகள்.

இப்படி ஏழாவது அறிவு அதுதான் “சப்தரிஷி” என்பது.

“பரசுராம்” என்ற நிலை ஏழாவது வரப்படும் பொழுது ஒவ்வொரு உணர்வின் எண்ணங்கள் கொண்டு சிருஷ்டிக்கும் தன்மை வரப்படும் பொழுது “சப்தரிஷி” என்பது.

மனிதனின் ஏழாவது அறிவு தான் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது.

அதில் எதனதன் குணங்களை எடுக்கிறோமோ அதைத்தான் சப்தரிஷி என்று வைத்தார்களே தவிர இவர்கள் கூறுவது போல இராமாயணத்துக்கு ஏழு ரிஷிகளும் மகாபாரதத்திற்கு ஏழு ரிஷிகளும் என்று இல்லை.

ஞானிகளின் தத்துவங்களை மந்திர ஒலிகளாக மாற்றிய திறன் படைத்தவர்கள் தான் அன்று ஆண்ட அரசர்களின் செயல்கள்.

இராமாயணத்தில் ஏழு ரிஷிகள் என்பது
1.மனித உடலில் விளைவித்த இந்த உணர்வின் எண்ணங்களை
2.அதை பதியச் செய்து மீண்டும் பிரித்தெடுத்து
3.அதை இயக்கச் சக்தியாக மந்திர ஒலிகளாகப் பயன்படுத்துவது.

வாமன அவதாரம் என்று சொல்வார்கள். குடையை மழைக்கு நாம் பயன்படுத்துகிறோம், வெயிலுக்கு நாம் பயன்படுத்துகிறோம்.

அதே போல
1.மனிதனுக்குள் அவ்வப்போது வரும் துன்பங்களுக்கு இந்த மந்திர ஒலிகள் கொண்டு சமத்துவப் படுத்திக் கொள்ளலாம்.
2.அதைத் தவிர அதனால் ஒன்றும் செய்ய முடியாது
3.இதை வாமன அவதாரம் என்று பிற்காலத்தில் சொல்லி இருப்பார்கள்.

யுத்தங்களைப் பற்றிய செய்திகள் நம்மை எப்படிப் பாதிக்கின்றது…?

 

இன்று நடக்கக்கூடிய யுத்தங்கள் அனைத்தும் எனக்கா… உனக்கா…? என்று போர் முறை வருகின்றது. போர் முறை வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு நாடும் விஷமான குண்டுகளைக் கையில வைத்துள்ளது.
2.எந்த நிமிடமும் அது வெடிக்கலாம்…!

அதனால் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறி அதைச் சுவாசித்தவர் அனைவரது உடலுக்குள்ளும் அது அணுக்களாகும் பொழுது இன்று மனிதனாக இருக்கும் நாம் அடுத்து எங்கே போகின்றோம்…?

விஷத் தன்மை அதிகரித்தால் பாம்பினங்களாகத் தான் பிறக்க நேரும்.

மதத்தின் பால்… இனத்தின் பால்… தெய்வீக பண்பு என்ற நிலைகள் கொண்டு இருந்தாலும்
1.இந்த இடம் எங்களுக்குத்தான்… இது எங்கள் புண்ணிய பூமி…! என்ற உணர்வு கொண்டு
2.விஷத்தின் தன்மை உலகமெங்கும் பரவப்பட்டு தீமையின் விளைவுகள் உலகம் முழுவதும் இன்று பரவிக் கொண்டுள்ளது.

மற்ற நாடுகளை அடக்குவதற்காகப் பல அணு ஆயுதங்களைத் தயார் செய்து அத்தகைய விஷ குண்டுகளின் வீரியத்தைக் கண்டுணர்வதற்காக அடிக்கடி பரீட்சித்துப் பார்க்கின்றார்கள். அதன் மூலம் விஷ அலைகள் பூமியிலே பரவுகின்றது… பரவிக் கொண்டே உள்ளது.

யுத்தத்தைப் பற்றிய செய்திகளைப் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். டி.வி. வாயிலாகவும் நேரடியாகக் காணுகின்றோம். அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவான பின் அதே ஆவேச எண்ணங்களைத் தூண்டுகின்றது… அங்கிருந்து பரவும் உணர்வின் தன்மைகளை நேரடியாக நுகர நேருகின்றது.

1.அப்போது நம்மை அறியாதபடியே சிறுகச் சிறுக அந்த விஷத்தன்மை உடலுக்குள் செல்கிறது
2.நம் நல்ல குணங்களை அது மாற்றிக் கொண்டு இருக்கின்றது.

இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

எத்தகைய விஷத்தன்மைகள் வருகிறதோ உடலுக்குள் பரவி விளைந்த பின் உயிரிலே அது இணைந்து விடுகிறது. உயிரான்மாவில் இணைந்த மணத்திற்கொப்பத் தான் உயிர் அடுத்த உடலை உருவாக்கும் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில் அகஸ்தியன் சென்ற பாதையினைக் கைப்பற்ற வேண்டும்.

1.அவன் தாய் கருவிலே எத்தகைய நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்றானோ
2.அகண்ட அண்டத்தை எப்படி அறிந்தானோ
3.அறிந்த உணர்வைத் தனக்குள் பெற்றானோ
4.இருண்ட உலகை எப்படி அகற்றினானோ
5.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றானோ
6.முதல் மனிதன் துருவ நட்சத்திரமாக ஆன அதிலிருந்து வரும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கின்றது.

அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத் தான் இதைப் பதிவாக்குகிறேன் (ஞானகுரு). துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் எத்தகைய நஞ்சினையும் வெல்ல முடியும். உணர்வுகளை ஒளியாக மாற்றவும் முடியும்.

இன்றைய கடுமையான சூழ்நிலையிலிருந்து தப்ப முடியும்…!

அழிவில்லா மகத்துவம் எது…? – ஈஸ்வரபட்டர்

 

கோபம் என்ற கார நெடி உணர்வில் மோதியவுடன் நம் சரீர உணர்வில் இயக்கம் தாங்காமல் துரித கதியாகிறது. அப்பொழுது… “சாந்தம்…” என்ற நல் ஒலியை நாம் எடுக்கும் பொழுது அக்காரத்தின் நெடி வீரமாகின்றது

1.அந்த வீரத்தை முலாம்படுத்தும்
2.ஆத்மாவின் ஆத்ம வளர்ச்சிக்கு… வீரியத் தன்மையை வளர்த்துக் கொள்ளும் ஆயுதம் தான்
3.நமக்கு ஏற்படும் எதிர்நிலையின் “கோப நிலையின் காரம்…”
4.வீரம் என்ற வீரிய சக்திக்கு “முலாம்”.

இதைப் போன்றே சலிப்பு சோர்வு என்ற ஒவ்வொரு குண நிலைகளுக்கும் உணர்வின் எண்ணத்தை உப்பு புளிப்பு காரத்தை எதில் எத்தன்மை கொண்டு சேர்த்துச் சுவையாக்கிச் சமைத்து… சரீரத்திற்கு உட்கொள்ளும் உணவைப் போன்று இந்த ஆத்மாவிற்கு வாழ்க்கையை ஒட்டிய எதிர்நிலைகளைச் சமைக்கக்கூடிய நல் குணங்களாக்கிச் சத்தாக்க வேண்டும்.

தனி உப்பையும் தனிக் காரத்தையும் தனிப் புளிப்பையும் உடல் ஏற்பதில்லை. அறுசுவையும் உண்டு பழகிய உடலுக்கு எப்படி அவ்வெண்ணத்தில் தன் சுவைக்கொப்ப ஆகாரத்தைச் சரீர உணர்வு நாடுகின்றதோ அதைப் போன்று
1.நாம் மனிதனிலிருந்து மகானாகும் சக்தி எடுக்க
2.ஆத்மாவைப் புனிதப்படுத்தும் சுவையான நற்குணத்தைச் சமைக்கும் ஆலயமாக
3.இந்த உடலை உயிர் என்ற தெய்வம் குடி கொண்ட நிலையில்
4.நாம் எண்ணத்தை உயர்த்தி நம் ஆத்மாவை ஒளியாக்கிக் கொள்ள வேண்டும்.

பல கோடி ஆண்டுகளாகப் பிறப்பின் தொடரில் பிறப்பெடுத்த நம் உயிர் ஆண்டவனை ”ஒளி ஆண்டவனாகச் செயல்படுத்துவது – இவ்வெண்ணம் தான்…!”

எண்ணம் என்ற பகுத்தறிவின் நிலையைப் படைப்பின் உயர்வில் பெற்ற இத்தருணத்தைத் தவறவிடாமல்… சேவை என்பதன் பொருளே உயர் தன்மையை வளர்க்ககூடிய சேவை தான் என்பதை இயற்கையின் உண்மையில் உணர்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால்
1.சரீர கௌரவம் அழியக் கூடியது
2.ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்.

இதன் தொடரில் சூரியனைப் போன்ற ஒளி ஈர்ப்பாக உயிராத்மாவை வைரமாக்குங்கள்.. என்றுமே அழிவில்லா “ஜொலிப்பாக…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் வீட்டை விட்டு வெளியிலே எந்தக் காரியத்திற்குப் போனாலும்
1.ஓம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ண வேண்டும்.
2.அடுத்து அம்மா அப்பாவை எண்ண வேண்டும்.
3.அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
என்று வானத்தை நோக்கி ஏங்கி எண்ண வேண்டும்.

அடுத்துக் கண்ணை மூடி உங்கள் உடலுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் நினைவு முழுவதையும் உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் இந்த நினைவை உங்கள் உடலில் சேர்த்துச் சேர்த்துப் பழக வேண்டும். இது தான் “ஆத்ம சுத்தி” என்பது.

நான் கடை வைத்திருக்கின்றேன். கடையைத் திறக்கப் போகின்றேன் என்று சொன்னால் வீட்டில் இந்த மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டுக் கடையை நினைக்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி கடையில் படர வேண்டும். நம் கடையில் இருக்கும் சரக்குகளை வாங்குபவர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே
1.மகரிஷிகள் அருள் சக்தியால் உடல் நலம் மனபலம் பெற வேண்டும்.
2.எங்கள் பார்வை சொல் அவர்களுக்கு நல்லதாக்க வேண்டும்.
3.எங்களப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல மனம் வர வேண்டும் என்று
4.கடைக்குப் போகும் போது இப்படிச் செய்து விட்டுச் செல்லுங்கள்.

ஆனால் கடைக்குப் போனவுடனே இதே மாதிரி இரண்டாவது தரம் செய்ய வேண்டும்.
1.எங்களிடம் சரக்குகளை வாங்கிப் பயன்படுத்துகின்றவர்கள் குடும்பத்தில் அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும்.
2..அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்
3.எங்களைப் பார்ப்பவர்கள் மலரைப் போல மணம் பெற வேண்டும் என்று
4.கடையில் உட்கார்ந்து மீண்டும் அதை எண்ணுதல் வேண்டும்.

இது தான் “செய்யும் தொழிலே தெய்வம்” என்பது. இதை எண்ணி நம் உயிரிலே சேர்க்கப்படும் போது நம் உடலில் அந்த வாசனை வரும்.

ஒவ்வொருவருக்கும் இந்தச் சரக்கு எடுத்துக் கொடுக்கும் போதெல்லாம்
1.மகரிஷிகள் அருள் சக்தி வாடிக்கையாளர்கள் பெற வேண்டும்.
2.சாமான்கள் வாங்கிக் கொண்டு போனவர்கள் நன்றாக இருக்க வேண்டும் “ஈஸ்வரா…” என்று
3.உயிரை நினைத்து… நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று மனதில் நினைத்துக் கொடுங்கள்…!
4.”செய்யும் தொழிலே தெய்வம்” – அந்த இடத்தில் நம் எண்ணம் செயல் எல்லாமே தெய்வமாக மாறுகின்றது.
5.உங்கள் வியாபாரம் நன்றாகப் பெருகும். அதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அவர்கள் சாமான் வாங்க வரும்போது இடைவெளியில் எத்தனையோ இடையூறுகளைப் பார்த்து விட்டு வருகின்றனர். அல்லது அவகள் குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும் நேரத்தில் நம்மிடம் சரக்கு வாங்குகிறார்கள் என்றால் அந்தக் “கஷ்டமான உணர்வு” அவர்கள் உடலில் இருக்கும்.

சரக்கு வாங்கப்போகும் போது “கஷ்டமான உணர்வுடன்… அந்தச் சொல்…” வெளியே வருகின்றது. அவர்கள் சொல்வதைக் காதில் கேட்கின்றோம். சரக்கு எடுத்துக் கொடுக்கின்றோம்.

அவர்கள் உடலில் விளைந்து அந்த உணர்வான சத்து அந்த சொல்லுக்குள் கலந்து வரும் போது அந்த உணர்ச்சியைத் தூண்டி அவர்கள் உடலிலிருந்து வரும் “சங்கடமான மணத்தை…” நாம் சுவாசிக்கின்றோம்.

நாம் தவறு செய்யவில்லை. நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் இப்படி வந்து சேர்ந்து விடுகின்றது. அப்போது இதை நிவர்த்திக்க வேண்டும்.

அந்த மாதிரிச் சமயங்களில் உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு நம் உடலில் நல்லதை நுகர்ந்து அந்த வாசனையை இங்கே பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்கள் நம்மைப் பார்த்து எண்ணும் போது இந்த உணர்வு என்ன செய்யும்…? அவர்களிடம் கொஞ்சம் போய்ச் சேர்கின்றது. அவர்கள் அழுக்கைப் போக்குகின்றது.

நம் உடலில் இந்த மணம்/மனம் என்ன செய்யும்…? அவர்கள் தீமை நமக்குள் வரவிடாமல் தடுக்கும். இது தான் நரசிம்ம அவதாரம் என்பது.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்ற நினைவினை வானை நோக்கிச் செலுத்தித் தியானித்து அதை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது நம் உடலில் இருந்து அந்த வாசனை வரும்.

சண்டை போடுகின்றவர்களை நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்தால் உங்கள் உடலில் ஒரு விதமான எரிச்சல் வரும்.

அதைப்போல அந்த ஞானியினுடைய அருள் சக்தி உங்கள் உடலுக்குள் செலுத்திக் கொண்டால் அந்த ஞானியர் உணர்வு நறுமணம் உங்கள் உடலிலிருந்து வரும்.

வாடிக்கையாளர்கள் சரக்கை உங்களிடம் வாங்க வரும்போது
1.உங்களைப் பார்த்துக் கேட்கும் பொழுது உங்கள் வாசனை அவர்கள் நுகருகின்றனர்.
2.அப்போது அவர்களுக்கு நன்மை கிடைக்கின்றது.
3.உடலில் இருந்து வரும் ஞானியரின் நறுமணம் தெய்வமாக இருந்து அவர்களுக்கு நன்மை செய்கின்றது.
4.அதே சமயத்தில் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராமல் தடுக்கின்றது.

இடைப்பட்ட நேரத்தில் ஆத்மசுத்தி செய்து கொண்டு மறுபடியும் நம் வாடிக்கையாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சுத்தம் செய்து கொண்டு வர வேண்டும்.

ஒரு வேலை செய்து முடித்த பின் அடுத்துத் தண்ணீர் விட்டுக் கையைக் கழுவி விட்டுச் சாப்பிடுகின்றோம். அதற்குப் பின் அடுத்த வேலையைத் தொடுகின்றோம்.

இதே மாதிரி வாழ்க்கையில் நம்மிடம் கெடுதல் வராதபடி தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

அப்படி இல்லாமல் இந்தச் சாமியார் செய்வார் அந்தச் சாமியார் செய்வார் அந்த ஜோசியம் செய்யும் இந்த யாகம் செய்யும். இந்த வேள்வி செய்யும் அந்தக் கடவுள் காக்கும் என்றால் எந்தக் கடவுளும் காப்பாற்ற மாட்டார்கள்.
1.உங்கள் உயிர் தான் கடவுளாக இருக்கும்.
2.உங்களை ஆள்வதும் உங்கள் உயிர் தான் எண்ணிக் கொடுப்பதைப் படைக்கின்றான்.
3.நீங்கள் எண்ணிக் கொடுப்பதைச் செயலாக்குகின்றான்.
4.நீங்கள் எண்ணியதை விளைய வைக்கின்றான்.
5.நீங்கள் எண்ணியதைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றான்.

இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு நாம் எதை எல்லாம் இந்த உடலில் சேர்த்தோமோ அதற்குத் தகுந்த மாதிரி இந்த உடலை உருவாக்கிக் கொடுத்து விடுகின்றான். உயிரினுடைய வேலை அது தான்.

நம் கண் என்ன செய்கின்றது…?
1.எண்ணியதெல்லாம் நமக்குக் காட்டுகின்றது.
2.நல்லது கெட்டதைக் காட்டுகின்றது

நம் உடல் என்ன செய்கின்றது…?
1.எதை எடுத்துக் கொடுத்தாலும்
2.நம் உடல் அது ஐக்கியம் ஆக்கிக் கொள்கின்றது.

நம் உயிர் என்ன செய்கின்றது…?
1.நாம் எண்ணியதெல்லாம் படைத்து அதை இயக்கிக் காட்டுகின்றது.
2.உடலுடன் சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இப்போது மனித உடலைக் கொடுத்திருக்கின்றது.

இப்பொழுது நாம் சேர்த்துக் கொண்ட உணர்வெல்லாம் வினையாகச் சேர்த்துக் கொண்டே இருக்கின்றது. இந்த வினைக்கு நாயகனாக அடுத்த உடலை உண்டாக்கி விடுகின்றது.

இன்று மனித உடலில் இருக்கும் நாம் எந்த வினையைச் சேர்க்க வேண்டும்…? எதைச் செய்ய வேண்டும்…?

இந்த ஆறாவது அறிவை வைத்துச் சுத்தப்படுத்துகின்ற நிலை இருக்கின்றது. இதை வைத்து நாம் சுத்தப்படுத்தத் தவறினோம் என்றால் மனிதனல்லாத உருவுக்குள் தான் போவோம்.

உடைகளைக் கட்டுகிறோம். அழுக்காகிவிட்டால் சும்மா துவைத்தாலே அழுக்குப் போகின்றது என்று விட்டு விட்டோம் என்றால் அழுக்குப் போவதில்லை.

இரண்டாவது தரம் துவைக்கும் போது துணியில் நூல் எல்லாம் அப்படியே பிய்த்துக் கொண்டு போய்விடும். அழுக்குப் போகாது.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடனே அதில் கலந்துள்ள பித்தளை வெள்ளி செம்பு ஆவியாகப் போய்விடுகின்றதோ அதைப் போல் தீமைகளைப் பிரித்துப் பழகியவர்கள் மகரிஷிகள்.

மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்து நம் உடலில் அடிக்கடி சேர்த்தவுடனே நம்மை அறியாது வரும் தீமைகளை இது பிரித்து நீக்கிடும். ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக சிருஷ்டிக்கக்கூடிய ஒளியாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.
1.நம் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்.
2.பிறருடைய துன்பமான உணர்வு நம்மை வந்து பாதிக்காது.
3.”செய்யும் தொழிலே தெய்வம்” என்றால் கடையில் இப்படி இருக்க வேண்டும்.

எந்தத் தொழிலுக்குப் போனாலும் அல்லது வேலை பார்த்தாலும் இதே போல் செய்ய வேண்டும். இது ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஒளிச் சரீரம் பெற்றால் அகண்ட அண்டத்தில் “எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்…”

 

மனிதனாக ஆன நிலையில் பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி வளர்ந்து வந்தோம்…? இந்தச் சரீரத்தில் தீமைகள் நமக்குள் வராதபடி எப்படிப் பாதுகாக்க வேண்டும்…? என்று சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிகிறது என்றால்…
1.பெரும்பகுதி பற்று கொண்ட உடலின் ஈர்ப்புக்குள் தான் செல்கிறது.
2.காரணம்… அந்த உடலில் நோயான பின் அவரைச் சார்ந்தோர் பாசமாக எண்ணும் போது
3.இறந்த பின் அந்த உடலுக்குள் அந்த ஆன்மா போகின்றது.
4.அங்கே போய் அதே நோயை அங்கே உருவாக்கி அந்த உடலையும் பலவீனப்படுத்தித் தேய்பிறை ஆகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்பதற்குத் தான் சிவன் இராத்திரி என்று நீ தனித்திரு… நீ விழித்திரு…! என்று சொன்னது.

இதை எல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியன் தன் இன மக்கள் அனைவரும் தான் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும் என்று தான் இதை அவன் வெளிப்படுத்தினான்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றான பின் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றனர் பத்தாவது நிலையாக.
1.எந்தத் துருவத்தை உற்று நோக்கினரோ அதே எல்லையில்…
2.துருவ நட்சத்திரமாக உருப்பெற்று இன்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் சூரியன் ஒன்பதாவது நிலைதான். மனிதனாக உருவான பிற்பாடு தான் பத்தாவது நிலை அடைகின்றது. ஒளியின் சரீரமாக என்றும் நிலையான பிறவியில்லா நிலை அடைகின்றது.

அப்படிப்பட்ட நிலை பெற்றால்
1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகி
2.இந்த அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் அவர்களுக்கு அழிவில்லை. ஏனென்றால்
1.இந்தப் பிரபஞ்சம் மற்ற பிரபஞ்சத்திலிருந்து எடுத்துக் கொண்ட சக்தி இங்கே உண்டு
2.அதன் துணை கொண்டு இது அழிந்தால் அடுத்த நிலைக்குச் செல்லும்.
3.அதன் உணர்வை எடுத்துக் கொண்டு ஒளியாக மாற்றும்
4.இப்படித்தான் பிறவி இல்லாப் பெரு வாழ்வு என்று மனிதனான பின் ஒளியின் தன்மை பெற்றது.

ஒரு வெப்பத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வினை ஒளியாக மாற்றும் சூரியனாக ஆன பின் இதற்குள் உயிரணு தோன்றுகிறது.

தோன்றியபின் நஞ்சினை வடிகட்டும் உணர்வின் தன்மை பெற்றுப் பெற்று… பரிணாம வளர்ச்சியில் மனிதனாகிறது. மனிதனான பின்…
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை வென்றிடும் உணர்வை
2.கணவன் மனைவி இரண்டு பேரும் எடுக்கப்படும் போது அவனைப் போன்றே ஒளியின் தன்மை பெற முடியும்.

மனைவி கணவனை எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் என் கணவர் பெற வேண்டும். அவர் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தி கலக்க வேண்டும். அவருடைய பார்வை எங்களை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அதையே கணவன் மனைவிக்கு எண்ண வேண்டும்.

அந்த அருள் ஒளியின் சுடரை எடுத்து யாரெல்லாம் வளர்த்துக் கொள்கின்றனரோ
1.அவர்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் பிளக்கின்றது…
2.இரு உயிரும் ஒன்றாகி சிவசக்தியாக ஒளி நிலை பெறுகின்றனர்.

ஆகவே… இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்று இவ்வாறு வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும். சிவன் ராத்திரி என்று அதனால்தான் விழித்திரு என்று சொல்வது…!

பிறவா நிலை – ஈஸ்வரபட்டர்

 

இயற்கையின் கதியை இறைசக்தியின் இறைத்தன்மையை வளர்க்கும் நிலைதான் பிறவா நிலை பெறும் நிலை.

உணர்வின் எண்ணமற்ற இயற்கையின் செயலில் சில மரங்கள் அம்மரத்தின் வீரியத்தில் வைரத்தின் ஒளி பாய்ந்து அவ்வைர ஒளியின் முதிர்வின் மூலம் தானப்பா “மண்டலங்களின் ஜீவ நாடி…!”

ஜீவராசிகளில் பாம்பு தன்னுடைய ஒளி சக்தியின் மாணிக்கத்தைப் பெறுகின்றது. வயது முதிர்ந்த ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யானைகளுக்கு அதனுடைய உடலில் “யானை முத்து” என்ற முதிர்வின் அபூர்வப் பொருள் வளர்கின்றது.

பூமியின் இயற்கையில் முதிர்வின் நிலை பல நிகழும் பொழுது உணர்வின் எண்ணம் கொண்ட மனித நிலையில்… பிறவா நிலை பெறும் வழியை நாம் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். ஏனென்றால் வாழக்கூடிய காலம் குறுகியது.

யானையும் சிங்கங்களும் மனிதனைக் காட்டிலும் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றன. ஆனால் மனிதனின் தேவையின் குணம் அதிகப்பட்டு மனிதன் வாழக்கூடிய காலத்தையே குறுக்கக்கூடிய வளர்ச்சி நிலைதான் இன்றைய நிலை.

இக்குறுகிய மனித ஜீவித வாழ்க்கை நிலையில் தத்துவ ஞானிகள் பிறவாநிலை பெற அறிந்துணர்ந்தனர்.

மிருகங்களில் சில இனங்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும் மனிதனைப் போன்று பிறவாநிலை பெறும் நிலை அதற்கில்லை. ஆகவே மனிதன் தன்னுடைய இஜ்ஜீவ சரீரத்தின் உண்மை நிலையை உணரல் வேண்டும்.

நல்லொழுக்கத்தில் உயர் நிலை அடைய வேண்டும் என்பவர்கள் முதலில் இவ்வுடலின் சொந்தமான நிலை யாது…? என்பதை அறிந்திடல் வேண்டும்.

இச்சரீரத்தில் எடுக்கக்கூடிய உணர்வின் ஓட்டத்தை…
1.எம்மகானாலும் வாழ்க்கைத் தொடரில் உணர்வின் ஓட்டத்தை
2.சம நிலையில் வாழ்க்கைத் தொடரில் செயல்படுத்த முடியாது.
3அதைச் செயல்படுத்தக் கூடிய நிலை பிறவாநிலை
4.அது இவ்வுடலில் இருந்துதான் செயலாக்கக் கூடிய நிலை,.. இயற்கையின் நிலை.

வாழ்க்கையில் நிகழக்கூடிய உணர்வின் மோதல் ஒவ்வொரு நொடியிலும் மாறிக் கொண்டேதான் இருக்கும். மாறக்கூடிய உணர்வின் சமைப்பை இவ்வுயிரின் செயல் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஜோதி நிலையான ஒளித்தன்மை பெறுவதுதான்…!

ஜீவகாந்த சரீரத்தில் விண்ணிலிருந்து எடுக்கக் கூடிய ஒளி சக்தியை… மின் காந்த ஒளியாய் நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வால் ஆத்மாவின் ஒளிசக்தி வலு கூடக் கூட
1.வாழ்க்கையில் மோதக் கூடிய எதிரொலியின் ஈர்ப்பிற்கு உணர்வின் எண்ணத்தை அடகு வைக்காமல்
2.ஆத்மாவின் செயலாய் உணர்வின் எண்ணத்தை ஈர்ப்புப்படுத்தும் பக்குவத்தில்
3.மனித குணம் ஞானம் செயல்படல் வேண்டும்.

விருப்பு வெறுப்பு வாழ்க்கையில் தான் நடக்கும். தியானத்தில் மின் காந்த ஒளியை எக்குணத்தில் நாம் முலாமாக்குகின்றோமோ… அதற்கொத்த இப்பூமியின் சமைப்பான ஏழு வண்ணத்தில்… ஒளியில்… இச்சரீர குணத்திற்கொப்ப நாம் எடுக்கும் தியானத்தால் ஆத்மாவின் ஒளித்தன்மையின் வண்ண நிலை வலுக்கொள்ளும்.

பாம்பின் மாணிக்கக்கல் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு காலங்களுக்குப் பிறகு பாம்பு கக்கும் மாணிக்கம் ஒளி வீசுகின்றது. உயிராத்மாவை திடப்பொருளாக ஆக்குவதில்லை ஆத்மாவை வலுப்படுத்தும் நிலை என்பது…!

இஜ்ஜீவ சரீர ஆத்மாவை சூட்சும ஆத்மாவாய் ஒளியாக்கும் வழியை இத்தியான வழியில் மனித குணத்திலிருந்து… சம குணத்தில் சரீரத்தில் ஓடக் கூடிய எண்ண நிலை ஆத்மாவின் உந்தலில் எண்ணம் செயலாகும் பொழுதுதான்… சரீர உணர்வில் பிறவாநிலையை இவ்வாத்மா பெற முடியும்.

1.தன் சரீரத்தை எந்த நிலைக்கும் பிரித்துக் கூட்டும் ஆத்ம ஒளி சக்தி பெற்ற ரிஷி சக்தியின் வலுவாய்
2.நம் சரீரத்தில் எடுக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு தான்
3.பிறவாநிலைப் படுத்த முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கம்ப்யூட்டர் பிழைகளைத் திருத்துவது போல் உங்கள் இரத்தத்தில் சேரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றுங்கள் – “உங்களால் முடியும்”

விஞ்ஞானி விஞ்ஞான அறிவைக் கொண்டு ஒரு கம்ப்யூட்டரைத் தயார் செய்கின்றான். அதிலே எழுத்துக்களை அடிக்கும் பொழுது பிழைகள் வந்து விடுகின்றது.

அவன் அதைக் கண்டுணர்ந்து அந்தப் பிழைகள் வராமல் இருக்க அதற்குகந்த சக்தி வாய்ந்த நிலைகளைச் செயல்படுத்துகின்றான். பிழைகள் நீங்கிச் சீரான நிலையில் இயங்கச் செய்கின்றான்.

கம்ப்யூட்டரில் அதிர்வின் தன்மை கொண்டு கெமிக்கல் கலந்த காந்தப் புலனை வைத்துக் கொண்டால் இந்த ஒலியின் அதிர்வுகளைக் காட்டப்படும் பொழுது அது எழுத்தோ படமோ சப்தமோ இயக்கிக் காட்டுகின்றது.

உதாரணமாக பேட்டரிக்குள் வைத்திருக்கும் பல பொருள்கள் எதிர் நிலையாகும் பொழுது வெளிச்சமாக வருகின்றது.

இதே போல கெமிக்கல் கலந்த உணர்வுகளின் அதிர்வுகளை எடுக்கப்படும் பொழுது இது உராய்ந்து அதற்குத்தக்க ஒளிக் கற்றைகளை வீசுகின்றது.

அதன் வழி கொண்டு மனித ரூபங்களையும் கம்ப்யூட்டரில் போட்டுக் காட்டுகின்றான் விஞ்ஞானி.

ஒரு மனிதனின் கை ரேகையை எடுத்து அந்த மனிதனின் உணர்வின் தன்மையைக் கம்ப்யூட்டரில் இந்த உணர்வின் அதிர்வுகளைப் பதிவாக்கி அதில் மீண்டும் அதிர்ச்சிகளைச் செயல்படுத்தும் பொழுது “இந்த மனிதன் தான்… என்று அவன் ரூபத்தையே…” காட்டுகின்றது.

இதே போல தான் நமது வாழ்க்கையில் பிறிதொருவரின் செயல்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது
1.அவன் மோசமானவன்…!
2.கோபக்காரன்… கெட்டவன்… தவறு செய்பவன்…. முரண்டு பிடிப்பவன்… பிறருக்குத் தீங்கு செய்பவன்… என்று
5.இந்த உணர்வெல்லாம் கண் பதிவாக்குகின்றது
4.பின் நமது எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாற்றி விடுகின்றது.

நாம் பிறிதொருவரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம் உயிரில் பட்டு இந்த உணர்வின் அதிர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.

1.இரத்தங்களில் எதனின் உணர்வுகள் கலக்கின்றதோ
2.உடலிலுள்ள அணுக்களில் இது சிதறப்பட்டு
3.அந்தந்த உணர்வுக்கொப்ப ரூபங்களை மாற்றி அமைக்கின்றது.

இன்று மனிதனாக இருக்கின்றோம். மிருக குணங்களை கொண்ட உணர்ச்சிகளை நாம் அடிக்கடி நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலந்து விட்டால் இதன் உணர்ச்சியின் இயக்கங்கள்
1.நம் உடலில் உள்ள அணுக்களில் கலக்கப்பட்டு
2.அதற்குத்தக்கவாறு நம் உடல் உறுப்புகள் மாற்றமடைகின்றது.
3.உறுப்புகள் மாறும் பொழுது இதனின் மலங்கள் கொண்டு
4.நம் சிந்திக்கும் தன்மையும் மாறுகின்றது.

சகஜ வாழ்க்கையில் கோபப்படுவது வெறுப்படைவது வேதனைப்படுவது போன்ற உணர்ச்சிகளைத்தான் அடிக்கடி நம்மால் பார்க்க முடிகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் என்ன மாற்று வழி வைத்திருக்கின்றோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கின்றது. நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.

மனிதன் ஒரு எந்திரத்தை உருவாக்கி அதில் பிழைகள் வந்து விட்டால் கம்ப்யூட்டரின் இயக்கத்தால் கண்டு பிடித்துச் சரி செய்து “சூப்பர்..” என்ற நிலையில் அதை மாற்றியமைத்து எந்திரத்தைச் சீராக்கி விடுகின்றான்.

வெறுப்படைபவர்கள் கோபப்படுவோர்கள் வேதனைபடுவோர்கள் வேதனைப்படுத்துவோர்கள் போன்ற பலரின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதை நுகர்கின்றோம்.

அந்தந்த உணர்வுகளுக்குத் தக்கவாறு இயக்கம் ஆகின்றது. உதாரணமாக
1.வேதனைப்படுவோரைப் பார்த்து அவர் மீது அன்பு கொண்டால்
2அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுகின்றோம்.
3.அவர் மீது அன்பு இல்லாதபடி வெறுப்பாக இருந்தால்
4.அவர் செய்த நிலைகளுக்கு அப்படி வேதனைப்பட்டுதான் ஆகவேண்டும் என்ற உணர்வு நமக்குள் வருகின்றது

வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தாலும் வெறுப்படைந்தால் அவர் மீது வெறுப்பின் நிலையே நமக்குள் அதிகமாக வந்து விடுகின்றது.

ஆனால் எப்படிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தாலும் அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.

இத்தகைய தீமையான இயக்கங்கள் நமக்குள் வளர்ந்திடாது மாற்றி அமைக்க வேண்டும். தீமையான இயங்களை மாற்றியமைக்கும் சக்தியாகத்தான் உங்களுக்குள் தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

உயிருடன் ஒன்றி இருளை மாய்த்து என்றும் ஒளியாக இருப்பது தான் அந்தத் துருவ நட்சத்திரம். அதற்கு “விஷ்ணு தனுசு” என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வப் பொழுது நமக்குள் ஏற்றி வைத்துக் கொண்டால் விஞ்ஞானிகள் “SUPER COMPUTER…” என்று செயல்படுத்துவது போல் நம்முடைய வாழ்க்கையில் தீமைகளை உடனுக்குடன் மாற்றியமைக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழ முடியும்.

February 2022 உபதேசம்

வால் நட்சத்திரம்

 

இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் ஒதுங்கிய (கழிவு) தூசி மண்டலங்களை “வால் நட்சத்திரம்…” (COMET) என்று சொல்வார்கள். வால் நட்சத்திரம் என்பது கடும் விஷத் தன்மை கொண்டது.

அது போகும் பாதைக்கு நேராக எந்தச் சூரியக் குடும்பம் வருகின்றதோ அதற்குள் அது கவரப்படுகின்றது. சூரியன் அதைக் கவர்ந்தால் பரிசுத்தப்படுத்தி பிரபஞ்சத்திற்குக் கொடுக்கின்றது.

ஆனால் பிரபஞ்சத்தில் அதைப் பரிசுத்தப்படுத்துவதற்கு முன் கோள்கள் ஊடுருவினால் பூமிக்குள் வந்து விடுகின்றது.

மற்ற கோள்களில் ஊடுருவினால் அந்தக் கோள்களில் திசை மாற்றம் ஆகின்றது. கோள்களுக்குள்ளும் மாற்றங்கள் ஆகின்றது. விஷத் தன்மைகள் பரவி விட்டால் அதன் ஓட்டத்தின் திசையும் மாறுகின்றது.

உதாரணமாக செவ்வாய்க் கோள் நாதகாரகன் என்றால் அதிலே இந்த விஷத் தன்மைகள் கவரப்பட்டால் அதே விஷத் தன்மைகளை அதுவும் கலந்து வெளிப்படுத்துகின்றது.

செவ்வாய்க் கோளிலிருந்து வருவதைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்டும் பொழுது அதனின் உணர்வு நம் பூமியின் ஈர்ப்பிற்குள்ளும் வருகிறது.

1.செவ்வாய்க் கோளில் உருவான விஷத்தன்மை கலந்த அந்த நாதம் நம் பூமிக்குள் கவரப்படும் பொழுது
2.தீமையின் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாகப் பரவுகிறது.
3.செவ்வாய்க் கோளில் மாற்றம் ஆவதைத் தாவர இனங்கள் எடுத்துக் கொண்ட பின் எதிர் நிலையான உணர்வின் நாதங்களாக மாறி
4.தாவர இனங்கள் கடும் நோயாகி அது விளையும் தன்மையும் மாறுகிறது.

இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார். சாப்பாடு ஞாபகத்திற்குப் போகாதபடி இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக யாம் தெரிந்து கொள்ளும் வரையில் பட்டினியாக இருக்கச் செய்தார்.

எதை…?

பட்டினி என்றால்
1.இந்த உடலில் இருக்கக்கூடிய மனித உணர்வு கொண்ட நிலைகளைப் பட்டினியாகப் போட்டு
2.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட உணர்வினை நீ பெறு என்றார்.
3.அகஸ்தியன் தெரிந்து கொண்ட உணர்வினை நீ உணவாக உட்கொண்டால்
4.இருளை நீக்கும் அந்த அருள் சக்தி கிடைக்கும் என்ற நிலையை இப்படிக் கொண்டு வந்தார்.

சிவன் இராத்திரி என்று விரதம் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் “நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை…!”

கஷ்டம் துன்பம் துயரம் என்ற தீமையான உணர்வுகளை உனக்குள் எடுக்காதபடி அந்த ஞானி கண்ட அருள் உணர்வை உனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்…! என்று குருநாதர் தெளிவாக்கினார்.

ஒரு கம்ப்யூட்டரை எலக்ட்ரிக் வைத்து இயக்கப்படும் போது உணர்வின் அதிர்வுகளை வைத்து நமக்கு வேண்டியதை எல்லாம் அதிலே பதிவாக்கித் தெரிந்து கொள்கிறோம்.

அதே போல நமது உயிரும் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டுள்ளது.
1.இங்கே யாம் உபதேசிக்கும் போது கூர்ந்து கவனித்தால் உங்கள் கண்…
2.எலும்புக்குள் உள்ள ஊன்களில் அதைப் பதிவாக்கி அதன் உணர்வை இணைத்துக் கொண்டே உள்ளது.

உங்கள் கவனங்கள் யாம் உபதேசிப்பதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இருந்தால் அது பதிவாகின்றது. மீண்டும் நீங்கள் நினைவாக்கப்படும் பொழுது அந்த மாமகரிஷி அகஸ்தியன் கண்டறிந்த உண்மையின் உணர்வுகளை… காற்றிலிருப்பதைக் கவரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

எமது குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப் போல உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் போது நீங்கள் எளிதில் அதைப் பெற முடியும்… நிச்சயம் பெறுவீர்கள்.

இன்று… இந்தக் காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மைகள் பரவி மனிதனின் சிந்தனை இழந்து… மனிதனுக்கு மனிதனே கொன்று குவித்து அதை ரசிக்கும் தன்மையாக வந்து விட்டது.
1.ஆனால்… நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டவர்கள் தான்
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிந்தனை இழந்த உணர்வுகள்
3.நம்மைத் தாக்காது இருக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

மனிதனுடைய கதியை நிர்ணயிப்பது எது…? – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
ஒரு கடிகாரம் தெரிகின்றது. கடிகாரத்தின் முட்கள் நகர்வதுவும் தெரிகின்றது.

விளக்கம்:
நேரத்தைக் குறிப்பிடுகின்ற கடிகாரத்தின் முள் ஒன்று பெரியதாகவும் ஒன்று சிறியதாகவும் உள்ளது. சிறிய முள் மணியையும் பெரிய முள் நிமிடங்களையும் காட்டுகின்றன.

பெரிய முள் ஓர் சுற்றுச் சுற்றிவர சிறிய முள் அடுத்த எண்ணுக்கு நகருகின்றது. அதைப் போன்று உணர்வின் எண்ணத்தின் வேகம் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போன்று இச்சரீர ஒலியால் சுழலுகின்றது.
1.ஆத்மாவின் பதிவானது பெரிய முள்ளின் சுழற்சி வேகத்தைப் போன்றும்
2.உணர்வின் எண்ணத்தின் வேகம் ஆத்மாவின் செயல் பதிப்புகளானபின்
3.அது விளைந்து… இச்சரீரத்தின் வாசனையாக “இச்சரீரம் அடுத்து அடையும் கதியை…” சிறிய முள்ளின் குறிப்பு உணர்த்துகின்றது.

மனித உணர்வின் எண்ண ஓட்டத்திற்கு ஓப்ப செயலாக்கும் விந்தையின் விளைவுதான் “மனிதனின் கதி…”
1.மனிதனின் கதியில் செயலாக்கும் உயிரே “ஆண்டவனாய்…”
2.ஆண்டவனின் இயக்க ஆத்மாவில் எது பதிவாகின்றதோ அதுவே இறைவனாய் உள்ள நிலையில்
3.மனிதனின் மெய் ஞானம் தன் உணர்வின் எண்ணத்தின் வேகத்தை எக்கதி கொண்டு எடுக்கின்றானோ
4.அக்கதியின் ஈர்ப்பிற்குத்தான் சரீரத்தின் செயல் செயலாகும்.

இயற்கையின் கதியில்… பூமி சுழன்று ஓடும் பொழுது பூமியின் வட்டத்தில் அதன் ஓட்ட கதியில் எது எதையெல்லாம் சந்திக்கின்றதோ அச்சந்திப்பின் அமிலத்தைத் தன் வளர்ச்சியின் வித்தாக்கி… இயற்கையின் கதியாய் பூமி வளர்க்கும் வளர்ப்புகளும்… பூமியின் கால நிலையில் காற்றும் மழையும் உஷ்ணமும்… சுழற்சியின் கதியின் ஓட்டத்திற்கொப்ப பூமியின் செயல் வளர்ச்சி சுழலுகின்றது.

பூமியில் வளரக்கூடிய தாவரங்களின் வளர்ச்சியில் மரங்களையோ கொடிகளையோ வெட்டும் பொழுது… மீண்டும் அடிமரத்தின் தண்டு
1.”ஒரே கதியின் உணர்வில்” தாவரங்கள் இயற்கையின் அமிலத்தை எடுத்து ஒன்றின் தொடர்பில் வளர்வதினால்
2.வெட்டிய பிறகும்… துளிர் விட்டு மீண்டும் அம்மரங்கள் வளர்கின்றன.

ஆனால் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு… அதற்கடுத்த நிலை கொண்ட ஜீவ அணு வளர்ச்சி கொண்ட ஜீவ ஜெந்துக்களின் நிலையில் அதனுடைய உறுப்புக்கள் வெட்டுப்பட்டதென்றால் மீண்டும் வளர்வதில்லை.

அதே சமயத்தில் மனிதனின் நிலையில் பல உணர்வுகளை அறியக்கூடிய செயல் தன்மை எண்ணத்தின் உணர்வின் வேகம் கொண்ட செயல்பாட்டுத் திறமை உள்ளது.

ஆகையினால் மனிதன் தன் எண்ணத்தைக் கொண்டே தனக்கொத்ததைப் படைக்கவல்ல ஆற்றல் திறன் கொண்டவன் ஆகின்றான். மேலும்…
1.செயல் தன்மையின் உருவக நிலைக்கு
2.மனிதனின் நிலைதான் இப்பூமியின் வளர்ச்சியின் கடைசி நிலை. (உயர்ந்த படைப்பு)

தாவரங்களின் நிலையில் தனக்கொத்ததை ஈர்த்து ஒரே செயலில் வளரும் நிலையினால் அவைகளுக்கு எண்ணத்தின் ஓட்டமில்லை. மற்ற ஜீவ ராசிகளின் நிலையில் மனிதனை ஒத்த செயல் தன்மையில்லை.

1.எல்லா நிலையும் உணரக்கூடிய மனிதன்
2.தன் உணர்வின் எண்ணத்தில் எதை எடுக்க வேண்டும்..? என்பதனை
3.மனிதனின் ஞானத்தால் அறிதல் வேண்டும்.

ஆகவே… இப்பூமியில் பல நிலைகளுடன் ஒன்றிய வாழ்க்கையில் நாம் எதை எண்ணுகின்றோமோ அவ்வெண்ணத்தின் பல நிலைகள் வளர்ந்தாலும்
1.தனக்கொத்ததைப் பண்படுத்தி தன் ஜீவிதத்தை வளர்க்கும் மனிதன்
2.தனக்கொத்த நற்குணத்தின் நல் ஒலியை
3.தன் ஆத்மாவின் கதியில் பதிவாக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வியாழன் கோளுக்குப் பெயர் “குரு” என்று சொல்கிறோம்? குரு என்று ஞானிகள் ஏன் சொன்னார்கள் என்று அறிந்திருக்கின்றோமா…!

இந்தப் பூமியே சீக்கிரம் அழியப் போகின்றது. ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞான உலகில் அணுக் கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவிவிட்டது.

அவைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விட்டது. இந்தப் பூமியின் நடு விட்டத்திற்குள் அணுக்கதிரியக்கங்கள் ஊடுருவிப் போய்விட்டது.

அந்த அணுக் கதிரியக்கங்கள் சூரியனின் வெப்ப காந்தங்களுடன் கலந்தவுடனே
1.இந்த உணர்வுகள் அதில் இருக்கக்கூடிய காந்தமும்
2.பூமியில் இருக்கக்கூடிய காந்தமும்
3.ஒரு உலோகத்திற்குள் இருக்கக்கூடிய காந்தங்களுக்குள் மோதியவுடனே
4.புயல் அடித்த மாதிரி இரும்பே உருகுகின்றது.
5.அந்தக் கதிரியக்கங்கள் மீண்டும் அது வளர்ச்சி அடைகின்றது.

அது ஓங்கிய நிலைகள் கொண்டு சுழிக் காற்று போன்று எல்லாவற்றையும் பிளந்து அதனின் வீரிய சக்தி அடங்குகின்ற வரையிலும் இங்கிருக்கக்கூடிய செடி கொடி கல் மரம் கட்டிடங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டுப் போய்க்கொண்டே இருக்கும்.

ஏனென்றால் இந்தப் பூமியில் இருக்கக்கூடிய இந்த அணுவின் விஷத்தை எடுத்துப் பிளந்து (NUCLEAR REACTION) அது செய்து கொண்ட நிலை இது.

வேறு வேறு வேலைகளுக்குக் கரண்ட் உற்பத்தி செய்வதற்காக அதைச் செய்கிறோம் என்று விஞ்ஞானிகள் சொல்லலாம். ஆனாலும் இதனுடைய தணிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

பூமிக்குள் அணுவைப் பிளந்தால் விபத்து என்று தெரிந்த பின் பூமியைக் கடந்து வான வீதியிலே இந்த அணுக்களைப் பரீசீலனை செய்து வெடிக்கச் செய்தார்கள்.

வான்வீதியிலும் இந்த அணுக்களுடைய தன்மை படர்ந்து விட்டது. மற்ற கோள்களுக்குள்ளும் சூரியனுக்குள்ளும் அது சென்று விட்டது.

அதே சமயத்தில் வான்வீதியில் படர்ந்த அந்த அலைகள் பூமியின் ஈர்ப்புக்குள் வந்து நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய திரையையும் (OZONE LAYER) பிளந்து மீண்டும் இந்த விஷத்தின் தன்மை பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் வந்து கொண்டு இருக்கின்றது.
1.இவை அனைத்தும் பூமியின் நடு விட்டம் அடைந்து விட்டது.
2.வெப்பத்தின் தணல் கூடிவிட்டது… பனிப் பாறைகள் உருகத் தொடங்கிவிட்டது.
3.உருகிய நீர்கள் பூமியில் இருக்கக்கூடிய நிலத்தை ஒடுக்கச் செய்து கொண்டிருக்கின்றது.

மீண்டும் மீண்டும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் கரைய அந்த நீரின் தன்மை அதிகமாகப் படரும் தன்மை வரப்போகும் போது சூரியனை விட்டு பூமி நகர்ந்து சென்று விடுகின்றது.

விலகிச் சென்று மீண்டும் இது குறைந்தவுடனே (பூமி) பனிப்பாறையாக உறைந்துவிடும். நம் உயிர் எல்லாம் அந்த பனிப் பாறைக்குள் சிக்கிவிடும்.

இன்று கோழி முட்டைகளை ஐஸ் பெட்டியில் வைத்துவிட்டு அடுத்துத் தேவைப்படும் பொழுது மிஷினில் சூடு செய்து குஞ்சு பொரிப்பார்கள்.

இதே மாதிரி முந்தி வியாழன் கோளில் நம் உயிர் எல்லாம் சிக்கப்பட்டு மீண்டும் அதிலிருந்து தெறிக்கப்பட்டு வான வீதிக்கு வந்து இந்தப் பூமிக்குள் வந்து தான் நாம் மனிதனாகப் பிறந்திருக்கின்றோம்.

அதனால் தான் வியாழன் கோளை… “குரு…” என்று சொல்வது.

அதிலே மனிதர்கள் வாழ்ந்து அதிலேயும் விஞ்ஞான வளர்ச்சியாகி இத்தகைய தவறு செய்து பயன்படுத்திய அந்த ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றது.

அதே உணர்வு வளரப்படும்போது அது வளர வளர இந்தப் பூமியும் குறையப் போகின்றது.

பூமியில் இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செய்து வைத்திருக்கின்ற ஆயுதங்களைக் காட்டிலும் பன் மடங்கு சக்தி வாய்ந்த நுட்பமான ஆயுதங்கள் எல்லாம் அங்கே வியாழன் கோளில் புதைந்து கிடகின்றது.

இதைக் குருநாதர் காட்டியிருக்கின்றார்.

வியாழன் முழுவதும் பனிப்பாறைகளாகி அதற்குள் சிக்கிய உயிர்கள் அதிலே வந்த அந்த ஒவ்வொரு உயிரணுவினுடைய தன்மையினுடைய நிலைகள்தான் மீண்டும் இது ஜீவன் பெற்றுப் பல நிலைகள் வந்தது.

மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகி… சிந்தனை இழந்து தவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை…

 

விஞ்ஞான அறிவு கொண்டு அணுவைப் பிளந்து அணுகுண்டைத் தயார் செய்து இங்கே பூமி முழுவதும் கலக்கச் செய்து விட்டார்கள். அது படர்ந்த இடங்களில் எல்லாம் துரித நிலைகள் கொண்டு விஷ அணுக்கள் உருவாகின்றது.

அதுவே மனிதனுக்குள் கடும் நோயாக… டி.பி. போன்ற நிலைகளும் இதனின் உணர்வின் அதிர்வுகள் அதிகமான பின் கேன்சர் போன்ற கடும் நோய்களும் உருவாகிக் கொண்டுள்ளது.
1.அணுக் கதிரியக்கப் பொறிகளால் ஏற்பட்ட விளைவுகளால்
2.”இன்ன நோய் தான்…” என்று காண முடியாத நிலைகளில் ஏராளமாக வந்து கொண்டுள்ளது.

இருப்பினும் வான் வீதியில் வீசப்பட்ட கதிரியக்கங்கள் அதனுடைய நிலைகள் சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்திளும் பரவியது. ஒவ்வொரு கோளும் அதை நுகர்ந்து மற்ற கலவையுடன் சேர்த்து சூரியனுக்குள்ளும் புகும் தருணம் வந்துவிட்டது.

சூரியனுக்குள் இயற்கையாக உருவாகும் ஆற்றலும் மனிதனால் பரப்பட்ட விஷக் கதிரியக்கமும் இது இரண்டும் மோதும் நிலைகள் அதிகமாகி விட்டது.

எலக்ட்ரிக்கில் மின்சாரம் செல்லும் இரண்டு வயரை ஒன்றாகச் சேர்த்தால்
1.எப்படிக் கரண்ட் அதிகமாகி அனைத்தும் ஃபீஸ் ஆகுமோ அது போன்று தான்
2.இந்த எலெக்ட்ரானிக்கால் இயக்கப்படும் அனைத்துக் கம்ப்யூட்டர்களும் செயலிழக்கப் போகின்றது.

உலகெங்க்லும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று சீராகப் பயன்படுத்தும் நிலைகள் கொண்டு எத்தனையோ ஆயுதங்களைத் தயார் செய்துள்ளார்கள்.

அந்த ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய இடத்தில் மின்னலோ மற்றதோ தாக்கி விடாதபடி திசை திருப்பும் நிலைகள் கொண்ட கம்ப்யூட்டர்களை வைத்துள்ளார்கள். பாதுகாப்பாக இருப்பினும் அந்தக் கம்ப்யூட்டர்கள் செயலிழக்கப் போகின்றது.

தன் நாட்டைக் காக்க என்று சொன்னாலும் இராக்கெட்டுகளை ஏவி மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற நிலையில் பொருதி வைத்திருக்கின்றார்கள்.

வேறு நாட்டில் இருந்து ஆயுதங்களை இங்கே எப்போது ஏவினாலும்…
1.அடுத்த கணமே அந்த ஏவலின் ஒலி அதிர்வைக் கண்ட பின்
2.இங்கிருந்து அந்த கம்ப்யூட்டர் உடனே இயக்கி சீறிப்பாயும் அலையாக
3.இதனுடைய ஆணைகள் இடப்பட்டு எதிர்த்துத் தாக்கி வானிலேயே அதைச் சிதறடிக்கும்படியாக
4.இராக்கெட்டுகளை வைத்துள்ளார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

கம்ப்யூட்டர் மூலமாகத் தான் அதை வைத்துள்ளார்கள். அணு விசைகளின் தன்மைகளையும் வைத்துள்ளார்கள்.

அக்காலத்தில் நடந்த போர் முறைகள் வேறாக இருந்தது. ஆனால் இன்று கதிரியக்கப் பொறிகளை அதிக இயக்கமாக வைத்துள்ளார்கள். சமீபத்தில் நடந்த போர்களில் இதைப் பார்த்திருப்போம்.

இராக்கெட்டை வைத்து வான் வீதியிலே மோதும் பல நிலைகளை அது எப்படியெல்லாம் உருவாகிறது…? என்ற நிலையை அறிந்து கொண்டோம்.

இந்த வான் வீதியிலே பரவிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் அனைத்தும் விஷத்தன்மையாகப் பாய்ச்சப்பட்டு சூரியனுக்குள் வரப்படும் பொழுது அதனுடைய இயக்கம் எதிர்மறையாகி “அதிகமான எலக்ட்ரிக்கை உருவாக்கப் போகின்றது…!”

1.நம் உயிரும் எலக்ட்ரிக்கைத் தான் உருவாக்கிக் கொண்டுள்ளது.
2.சூரியனுக்குள் மாறப் போகும் தன்மை கொண்டு நம் உயிரின் துடிப்பு அதிகமாகி விட்டால்
3.நம் உடலில் உள்ள அணு செல்கள் இயக்கம் அதிகமாகிவிடும்.
4.மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகப் போகின்றான்.
5.சிந்தனை இழந்து தவிக்கும் நேரம் வெகு தூரத்தில் இல்லை… குறுகிய காலத்திற்குள்ளேயே உண்டு.

இதனுடைய அடர்த்தி அதிகமான நிலைகள் கொண்டு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓசோன் திரையும் கிழிந்து விட்டது. துருவப் பகுதி வழியாக கதிரியக்கங்கள் அதிகமாக வரப்படும் பொழுது துருவப் பகுதியில் பனிகள் கரைந்து கடல்களும் பெருகுகின்றது.

கடல் நீருடன் கலந்த அந்தக் கதிரியக்கப் பொறிகள் விஷத்தன்மையான உணர்ச்சிகளை ஊட்டும் நிலைகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியையே… மனிதன் அழிக்கும் தருணத்திற்குக் கொண்டு வந்துவிட்டான்.

இதையெல்லாம் வென்ற அருள் மகரிஷிகள் உணர்வை நாம் சேமித்தால் தீமைகள் புகாது நம்மைக் காக்க முடியும். அதனால்தான் விழித்திரு…! என்று சொல்வது.

ஒவ்வொரு நொடியிலேயும் உலகில் நடக்கும் அதிர்ச்சிகளைக் கேட்டுணர்ந்தால்
1.அடுத்த கணமே நாம் விழித்திருந்து “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி
2.அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.
3.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து நாம் தப்பித்து விண் செல்ல வேண்டும்.

நுண்ணிய நிலைகளை நுகரும் ஆற்றல் பெற்றால் தான் மெய் ஞானத்தை வளர்க்க முடியும் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
ஒருவர் காப்பியை ஆற்றிப் பருகுவதைப் போன்று தெரிகின்றது.

விளக்கம்:
நீரைக் கொதிக்க வைத்து… அதில் காப்பித் தூளைப் போட்டு பாலைத் தனியாகக் கொதிக்க வைத்து… காப்பியில் எடுத்த நீரையும் பாலையும் சேர்த்து அதற்குகந்த பக்குவத்தில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து… “நம் உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய சூட்டிற்கு” அதை நாம் பருகுகின்றோம்.

பாலையும் நீரையும் காப்பித் தூளையும் சர்க்கரையையும் அதற்குகந்த உஷ்ணத்தைக் கொடுத்து காய்ச்சிச் சுவைப்படுத்திப் பிறகு அந்தச் சுவைக்குகந்த உஷ்ணத்தில்…
1.நம் உடல் ஏற்கக்கூடிய பக்குவத்திற்குக் காப்பியை ஆற்றிய பிறகுதான்
2.நாம் அதனைப் பருக முடிகின்றது.

அதைப் போன்று நம் உணர்வின் எண்ணமுடன் பல விதமான செயலுக்குகந்த எண்ண ஓட்டங்கள் கலக்கப் பெறும் பொழுது… உணர்வின் சமைப்பாய் உயிர் சமைக்கும் உஷ்ணத்தைக் கொண்டு… ஆத்மாவினைச் சுவைப்படுத்தி… ஆத்மாவின் சுவையை மீண்டும் செயலாக்க…
1.உணர்விலிருந்து வெளிப்படும் “நம் சொல்லின் ஒலி”
2.பக்குவப்படுத்தப்பட்ட பருகக்கூடிய தன்மைக்கு
3.ஆற்றிய காப்பியைப் போல் வெளிவரல் வேண்டும்.

பலவற்றையும் நாம் சமைக்கும் பொழுது… அதற்குகந்த உஷ்ணத்தைத் தந்து சமைத்த பிறகுதான் பிறிதொரு பக்குவத்திற்குச் செயல் கொள்ள முடியும்.

ஆரம்ப நிலை இயற்கையின் தொடர்பில்… வளர்ச்சியின் செயல் யாவையுமே விஷத் தன்மை கொண்ட வளர்ப்புத்தான்.

ஜீவ ஜெந்துக்கள் அதனுடைய சுவையின் உணர்விற்கொப்ப அதனதன் உடல் நிலைக்குகந்த உணவை மட்டும்தான் உட்கொள்ளும். மாற்று நிலை… சமைப்பு நிலை… ஏற்படுத்திக் கொள்ளாநிலை தான் ஜீவஜெந்துக்களின் நிலை.

இப்பூமியின் தொடர்பில் இப்பூமி எடுக்கும் அமிலத்தின் தொடர்பில் நாம் வாழ்ந்தாலும்…
1.நாம் உண்ணக்கூடிய உணவு எது…? எது மனிதனுக்கு ஏற்றது…? என்பதை
2.நம் முன்னோர்கள் நமக்கு தொடர்புப்படுத்திய உணவு முறையைப் பக்குவப்படுத்தி நாம் உண்ணுகின்றோம்.

மிருகங்களைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற மனித நிலையில் இயற்கையில் வளர்ந்துள்ள பல நிலைத் தாவரங்களை வழிப்படுத்திய நிலைத் தொடரில்தான் நாம் சமைத்து உண்டு வாழ்கின்றோம்.

நம்மைக் காட்டிலும் அறிவில்… செயல் திறனில் ‘செயலற்ற மிருகங்கள்…” நம்மைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் “தன் உணர்வின் சுவாசத்தால்” பல உண்மைகளை முன் கூட்டி அறியக்கூடிய நிலைக்குச் செயலாக்கும் பொழுது அறிவில் உயர்ந்த மனித ஞானம் ஏன் உயர்வில் செயலாக்க முடியாது…?

உருவத்தில் சிறிய எறும்பு… மழைக் காலத்தில் தன் ஆகாரத்தை உண்ணுவதற்காக மழை வருவதற்கு முதலிலேயே அறிந்து சேமித்துக் கொள்கின்றது.

நாம் பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ள பொருளைத் தனக்கு ஒத்த உணவு என்று முன் கூட்டி அறிந்து தன் இனத்தின் கூட்டில் தனக்குகந்த உணர்வின் சுவாசத்தால் எறும்பு எடுத்து விடுகின்றது.

ஆனால்… மனிதன்
1.மூடி வைத்துள்ள பாத்திரத்திலுள்ள பொருளை அதன் மூடியை எடுத்தால் தான்
2.உள்ளே என்ன இருக்கின்றது…? என்பதை அறிய முடிகின்றது.

நம்மைக் காட்டிலும் சிறு எறும்பு அதை அறியும் பொழுது “மனித ஞானம் எங்குள்ளதப்பா இன்று…?”

மழை வருவதற்கு முன்னும்… எதிரி தன்னைத் தாக்க வருவதற்கு முன்னும்.. பல மைல்களுக்கு அப்பாலுள்ள நீர் நிலைகளைத் தன் சுவாசத்திலேயே அறியும் நிலையும் மிருக ஜெந்துக்களினால் அறிய முடிகின்றது.

இதனை எல்லாம் நாம் அதனுடைய இயற்கையின் செயல் என்கின்றோம்.

ஒவ்வொரு உருவக நிலையும்… அது அது எடுத்த சூரிய ஒளியில் உதித்த உயிரணுக்களின்… மண்டல ஈர்ப்பின் சுவைக்கொப்ப உருவாகும் உருவகத் தொடர் தன்மையில்… பூமியின் சமைப்பின் தொடர் உருவக உரு பெற்றிருந்தாலும்…
1.உருப்பெற்ற தன்மையின் உடல் அமைப்பின் செயல் நிலையை
2.மிருக ஜெந்துக்களினால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.

மனித நிலையில் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு இயற்கையின் உண்மையை உணர்ந்து எண்ணத்தின் மெய் ஞானத்தால் எதனையும் மாற்றி அமைக்கக் கூடிய செயல் தன்மைக்கு “மனிதனால் தான் முடியும்…”

மெய் ஞானத்தின் உண்மையை இயற்கையின் தொடர்பு கொண்டு வானக்கோள்களின் நட்சத்திர ஒளியை இச்சரீர உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் அமிலத்தின் ஒலியை உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சமைக்கப்படும் நிலையே ஆத்மாவின் பதிவு ஆகிறது.

இதே தொடரில் இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரக்கோள்கள் நவக்கோள்கள் ஒவ்வொன்றையும் எண்ணி நாம் தியானிக்கும்பொழுது எண்ணத்தின் உணர்வில் அக்கோளின் அமிலத்தின் அலையை இச்சரீரம் சமைத்து ஆத்மாவில் பதிவாக்கிக் கொள்கின்றது.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து மனித நிலை உயர வேண்டும் என்றால்…
1.இப்பூமிக்கு வளர்ச்சி கொடுக்கும் செயலாய் சுழலும் பிற கோள்கள் நட்சத்திரங்களின் தொடர்பில்
2.நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும்
3.அந்த அமிலத்தின் அலையைக் கொண்டுதான்
4.மனித நிலைக்கு அடுத்த நிலையான “ஆத்ம ஜோதி” என்ற ஒளியான வளர்ச்சி நிலை வலுக்கொள்ளும்.

இப்பூமியின் தொடர்பில் இருந்து… விஞ்ஞானி பல ஒலி ஆண்டுகளையும்… ஒளி ஆண்டுகளையும் கணக்கெடுத்து வான்கோளிலுள்ள உண்மைகளை எல்லாம் அறிந்தாலும்… அப்படி அறியக்கூடிய விஞ்ஞானியின் வாழ்க்கைக் காலம் “சரீரம் உள்ள வரைதான்…!”

1.ஆனால் மெய் ஞானத்தில் அறியக்கூடிய காலம் என்பது
2.வழி வழியாய் வளரக்கூடிய காலமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உண்மை நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் (ஞானகுரு) காட்டினார். இந்த உண்மை நிலைகளை நான் எளிதில் தெரிந்து கொள்ளவில்லை.

பட்டினியாக இருந்து மிகவும் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன். பல வகைகளிலும் இன்னல்படச் செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்… அனுபவங்களைக் கொடுத்தார்.

தீமைகளினுடைய உணர்வுகளை எப்படி அகற்ற வேண்டும்…? அதை ஒளியாக எப்படி மாற்ற வேண்டும்…? என்று குருநாதர் காட்டிய வழியில் இதைப் போதிக்கும் பொழுது அதையெல்லாம் உங்கள் அனுபவத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் வாழ்க்கையில் உங்களுடைய அனுபவம் பேசும்.

மற்றவர்கள் தவறுகள் செய்து கொண்டேயிருக்கின்றார்கள் என்று உணர்ச்சி வசப்படாமல் அந்த உணர்வுகளை எப்படித் திருத்த வேண்டும் என்ற அனுபவம் வரும்.
1.தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும்
2.அத்தகைய அனுபவங்கள் பெற வேண்டும்.

நான் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்ட சக்தியை உங்களிடம் கொடுக்கின்றேன். உங்களை மீட்டிக் கொள்ள அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் தியானத்தால் எடுத்துப் பெற்றுக் கொள்ள முடியும்.

1.உங்களுக்கு நீங்கள் தான் காக்க முடியுமே தவிர…
2.“நான் வந்து காப்பேன்…” என்று சொன்னால்
3.எனக்குக் கீழ் நீங்கள் அடிமையாகத் தான் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

ஏனென்றால்
1.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் இயக்குகின்றது
2.அந்த உணர்வுப்படி உங்கள் உயிர் தான் உங்களைக் காக்கின்றது;
3.உங்களை வளர்க்கின்றது.. அதன் வழி உங்களை இயக்குகின்றது.
4.இதை நீங்கள் மறந்திடாமல் செயல்படுத்துங்கள்.

என்னைச் சாமி தான் காப்பாற்றினார்… அவர் தான் காரணம்…! என்று என்னை எண்ணக் கூடாது. “சாமி செய்தார்…” என்று என்னை எண்ணினீர்கள் என்றால் என்னிடம் எத்தனையோ ஆசைகள் இருந்தது.
1.அப்போது சாமியினுடைய ஆசைகள் உங்களுக்குக்குள் வர வேண்டுமா..?
2.இதையெல்லாம் வென்றவனின் அந்த அருள் ஆசைகள் வேண்டுமா…?

அருள் ஞானிகள் பெற்ற நஞ்சினை வென்ற உணர்வுகளைச் சொன்னால் அதை நான் பெறுகின்றேன். எனக்குள் இருக்கக்கூடிய அந்த இருளை நீக்கக் கூடிய பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைக்கின்றேன்.

குருநாதர் எனக்குக் கொடுத்தார். இதே மாதிரி நீங்கள் இதைப் பெறுங்கள். இந்த உண்மையெல்லாம் உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதைப் பற்றுங்கள்.

சாமி என்னை அப்படிக் காப்பாற்றினார்.. இப்படிக் காப்பாற்றினார்.. என்று சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் உங்களுடைய எண்ணத்தால் தான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டீர்கள்.

உதாரணமாக… கடையில் சரக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்றால் அதிலே இருப்பது நல்ல சரக்குதானா…! என்று பார்க்கின்றோம். அதில் சரக்கைத் தேர்ந்தெடுத்துச் சமைத்துச் சாப்பிடும்போது அதில் ருசி வருகின்றது… இல்லையா…?

அப்படியானால்,
1.அப்பொழுது அந்தக்கடைக்காரர் உங்களைக் காப்பாற்றினாரா…?
2.இல்லை… ருசியைக் கொடுத்தாரா…?

கடையில் பல பொருள்களை வைத்திருக்கின்றர்கள். அதை வாங்கி ருசியாகச் சமைப்பது உங்களிடம் தான் இருக்கின்றது.

அதனால் தான் இந்த உண்மையின் இயக்கங்களை உணர்ந்து நான் உயர்ந்த சொற்களைச் சொல்கின்றேன்.
1.இதை நீங்கள் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர்.
2.அந்த உணர்வின் தன்மையை அறிந்தால் பிரம்மகுரு
3.அது அருந்ததி… அதன் நிலைகள் அந்த உணர்வின் சக்தியாக அது உங்களை இயக்கும் என்பதை
4.உணர்வின் இயக்கங்களைப் பற்றி இராமயாணத்திலே இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

நாம் இதை அறிந்து கொண்டோமா…?

சில பேர் என்ன சொல்வார்கள்…? “ஒரு மந்திரத்தைச் சொல்லி… தொட்டுக் கொடுத்து விடுகின்றேன்…!” என்று சொல்கின்றார்கள். அவர்கள் எண்ணம் தான் உங்களுக்குள் பதிவாகும்.

குருநாதர் அப்படிச் சொல்லச் சொல்லவில்லை.

சாமி உபதேசித்த வழியில் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்து உங்களுக்குள் பதிவாக்கினீர்கள் என்றால் இதை நுகரப்படும் போது இந்த நிலை வரும்.

சாமி சொன்னார்…! என்று ”சாமியிடம் இருந்து இந்தச் சக்திகள் பெற வேண்டும்” என்று சொல்லிவிட்டு என்னைத் தியானம் செய்தால் நிச்சயம் நான் சிறு வயதில் எத்தனையோ குறும்புத்தனம் செய்திருப்பேன்… எத்தனையோ செய்திருப்பேன். இந்த உணர்வு கலந்து வந்தால் உங்களுக்குள் எது வரும்…? இந்த மனிதனின் உணர்வு தான் அங்கே வரும். இதையெல்லாம் முதலில் மாற்றியமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்று யாரோ செய்வார்…! எவரோ செய்வார்…! என்று இந்த நிலையில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
1.உங்களை நீங்கள் நம்ப மறுக்கின்றீர்கள்.
2.உங்களை நீங்கள் நம்புங்கள்.
3.நம் உயிர் நாம் எண்ணியதை உருவாக்குகின்றது.

எதனையும் வெல்லக் கூடிய வல்லமை இந்த மனித உடலிலே உண்டு. அதே சமயத்தில் நமக்குள் பதிவாக்கும் சக்தியும் உண்டு. ஆகவே தான்
1.அருள் ஒளியை ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.இதை நீங்கள் கவர்ந்து கொள்ளுங்கள்.
3.அந்த அருளை மீண்டும் மீண்டும் நினையுங்கள்.
4.அந்த அரும் சக்தியை உங்களுக்குள் உருவாக்குங்கள்.

ஒருவன் நம்மைத் திட்டினால் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதே உணர்வுகள் நமக்குள் பகைமையை வளர்க்கின்றது. இதே போலத்தான் பல நிலைகள் வருகின்றது.

அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்க்கப்படும் பொழுது அந்தப் பேரின்பப் பெரு வாழ்வு என்று ஞானிகள் அடைந்த அந்த உணர்வுகள் உங்களுக்குள் பேரின்பம் பெறக்கூடிய வாழ்க்கையாக அமையும்.

உடலை விட்டு வெளியே வரும் பொழுது மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.

பல இலட்சம் ஆண்டுக்கு முன் அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட அருள் மணங்கள்

 

காட்டிலே வாழும் மிருகங்கள் உணவுக்காகத் தன்னுடைய எண்ணத்தைப் பாய்ச்சி எங்கே உணவு இருக்கிறது…? என்று அறிய எண்ணுகிறது.

மனிதன் இருக்கிறான் என்றால் அந்தத் தசைகள் இருக்கிறது என்றால் உணவாக உட்கொள்ளும் மணத்தால் அதை அறிந்து கொள்கிறது. உடலிலிருந்து வெளி வரும் மணத்தை அறிந்து மனிதன் இருக்கும் பக்கம் அந்த உடலை அழைத்து வருகிறது.

இதைத் தடைப்படுத்த அதற்கு எதிர் நிலையான மணங்கள் கொண்ட பச்சிலைகளையும் மூலிகைளையும் தான் படுத்திருக்கும் குகைப் பக்கம் பரப்பிக் கொள்கிறார்கள் அன்று வாழ்ந்த மக்கள்.

தன் உணவுக்காக வரும் மிருகங்களோ விஷ ஜெந்துக்களோ
1.இத்தகைய மூலிகை மணங்களை நுகர்ந்து கொண்ட பின் அதனுடைய விஷத்தின் வலிமை குறைகிறது
2.அதனால் இவர்கள் இருக்கும் திசைப் பக்கமே வருவதில்லை.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்… மனிதன் சந்தர்ப்பத்தால் அறிந்த அறிவால் அவன் கண்ட உண்மையால் இப்படிப்பட்ட பச்சிலை மூலிகைகளின் துணை கொண்டு அக்கால முதியவர்கள் முன் வாழ்ந்தார்கள்.

ஆனாலும் அந்தக் காலத்தில் வாழ்ந்த கணவன் மனைவி கருவிலே விளைந்த குழந்தைக்கு… இவர்கள் பரப்பி வைத்த அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் கிடைக்கிறது.

1.தாயின் இரத்தத்தின் வழி வரும் மணங்களை அந்தச் சிசு நுகரப்படும் பொழுது
2.விஷத்தை அடக்கும் ஆற்றல் கருவில் வளரும் குழந்தைக்கு வருகின்றது
3.அப்படி உருவானவன் தான் அகஸ்தியன்.

பிறந்த பின் அவன் உடலிலிருந்து வெளி வரக்கூடிய மணத்தை விஷம் கொண்ட ஜந்துக்கள் நுகர்ந்தால் அவைகள் ஒடுங்கி விடுகின்றது. குழந்தைப் பருவமாக அவன் இருப்பினும் அவனைத் தாக்குவதில்லை.

இப்பொழுது நாம் படுத்தால் கொசு நம்மைக் கடிக்கின்றது. ஆனால் கருவிலே விஷத்தை முறிக்கும் தன்மை பெற்ற அந்தக் குழந்தையை எந்தக் கொசுவும் தாக்குவதில்லை… விஷ ஜந்துக்களும் தாக்குவதில்லை.

தாய் கருவிலே இருக்கும் போது பெற்ற அந்தச் சக்திகள் தான்
1.அவன் உடல் உறுப்புகள் அனைத்தையும் விஷத்தின் ஓட்டத்தை தணிக்கக்கூடிய வல்லமையாகின்றது.
2.உலகில் எத்தகைய விஷம் இருப்பினும் இவன் மணத்தை நுகர்ந்த பின் அவை அனைத்தும் ஒடுங்கி விடுகின்றது
3.இவன் (அகஸ்தியன்) அச்சமின்றி வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் பெறுவதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

“அறிந்து விட்டோம்…” என்ற எண்ணத்தை விட்டு விட்டு அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம் – ஈஸ்வரபட்டர்

 

நட்சத்திரமாய் உயர்ந்த வளர் சக்தி கொண்ட கோள்களாய்… பல கோடி உயர்ந்த உருளக் கூடிய மண்டலக் கோள்கள் இருந்தாலும்… உணர்வின் உண்மை அறியும் “ஞான மனித நிலை” எல்லாக் கோள்களிலும் இல்லை.

உணர்வின் எண்ணத்தில்… அறியும் ஆற்றல் செயல் தன்மை செயலாகும்…
1.இயற்கையின் ஒளி சூட்சுமத்தை வளர்க்கும் வலிமை கொண்ட தொடர்நிலை வளர்ந்தால்தான்
2.இயற்கையின் சுழற்சி ஓட்டத்திலிருந்து சமைக்கும் குண தத்துவத்தைச் செயலாக்க முடியும்.

ஆகவே பல கோடி நிலைகள் செயல்படும் அண்டக் கோள்களில் அறிவின் ஆற்றலும் அறியும் திறனும் மனிதனுக்குத்தான் உண்டு.

தனக்கொத்ததை மனிதனின் எண்ணம் ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்றத்தில்…
1.மனித உணர்வின் செயல் வீரியம்… “தான்…!” என்ற முதிர்வு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
2.தன் அடுத்த வளர்ச்சி நிலை இயற்கையின் தொடர்பு ஒலியை எடுக்க முடியா தேக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறிந்த சித்தன் “தனக்கு மேல் ஒருவன் உண்டு…” என்ற தெய்வத்தின் குணங்களை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டத் தான் கோவில்களையும் சிலைகளையும் தத்துவ ஞானத்தில் ஸ்தாபித்தான்.

மனிதனின் உணர்வின் வேகம் “தான் உயர்ந்து விட்டேன்…!” என்ற எண்ணத்தைக் கூட்டிக் கொள்ளும் பொழுது தன்னை ஒத்த ஜீவாத்மாக்களை உயர்த்தக் கூடிய உணர்வுகள் மங்கிவிடுகின்றன.

1.தனக்கு மேல் ஒருவன்…
2.“தன்னை உயர்த்தச் செயல்படுகின்றான்…” என்ற எண்ணத்தின் வேகம் செலுத்தும் பக்தியினால் தான்
3.மனிதர்களின் உணர்வில் “தான்…” என்ற எண்ணத்தை அகற்ற முடியும்.

இதை உணர்த்திய பக்குவம் நம் ஞான பூமியில் பல உண்டு.

மனிதன் தெய்வத்தின்பால் செலுத்தப்பட்ட எண்ணத்தின் வேகம் கோயில்களில் தீ மிதித்து விரதங்கள் அனுஷ்டித்து பல செயல்கள் பக்தியில் செயல்படுவதை எல்லாம் பார்க்கின்றோம்.

பக்தியின் உந்தலின் வேகம் அவ் உணர்வின் வீரியத்திற்கொப்ப “அவன் எடுக்கும் சுவாசத்தின் வேகத்தால்” இன்றும் தீக்குண்டங்கள் நடப்பதைக் காண்கின்றோம்.

மனிதனின் உணர்வின் எண்ண வேகம் “எதனையும் ஈர்க்கவல்ல செயல் குணத் தன்மை கொண்டது…” இதனை…
1.தான் அறிந்து விட்டோம்… என்ற எண்ணத்தை விட்டு விட்டு
2.அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம்.

மனித உணர்வில் சலிப்பு சோர்வு வெறுப்பு கோபம் என்ற நிலைகளைக் கூட்டிக் கொள்ளாமல்… நற்குணத்தின் நறுமணமாய் இச்சரீர உணர்வின் ஒலி சுவாசமெடுத்து…. சம குணத்தின் ஒலியால் இயற்கையின் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் ஒளியால்… நட்சத்திர மண்டலங்களின் ஒலி அலைகளையும் ஜீவ உணர்வுடன் இழுக்கும் பொழுது… இஜ்ஜீவ உணர்வின் எண்ணத்தில் மோதும் பொழுது… ஒளியாக… மின்காந்த ஒளியாக ஆத்மா ஒளிர்கின்றது.

ஆத்மாவின் ஒளிகள் மண்டலக் கோள்களின் எண்ண உணர்வுடன் ஈர்க்கும் பொழுது எப்படி இன்று நீரைக் கொண்டு இக்காற்றலையில் இருக்கும் மின் காந்த ஒளி சக்தியை மின்சாரமாக விஞ்ஞானத்தில் காண்பதைப் போன்று…
1.இச்சரீர எண்ணத்தின் உணர்வின் வேகத்தால்
2.நட்சத்திரங்களில் இருந்து வருவதையும் சூரியன் சந்திரன் மற்றக் கோள்களிலிருந்து வரும் சக்திகளையும்
3.நாம் எண்ணி எடுக்கும் ஒலி அலையில் அவ்வொலியின் உணர்வுடன் எண்ணத்தை எக்கோளுடன் செலுத்துகின்றோமோ
4.அந்த மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட அமிலம் இச்சரீர உணர்வின் எண்ணமுடன் மோதும் பொழுது
5.உடலில் உள்ள உயிர் அணுக்கள் யாவும் ஒளி நிலையைப் பெறும் தன்மையை இச்சரீர ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

இப்பூமியின் உணர்வுடன் சுழலும் வாழ்க்கை நிலையில்… மீண்டும் மீண்டும் இப்பூமி சமைத்து வெளிப்படுத்திய உணர்வின் ஒளியைத் தான் ஆத்மா வளர்த்துக் கொள்கிறது.

அத்தகைய தொடரில் நம் ஆத்மா இப்பூமிப் பிடிப்பில் சிக்கிவிடும் தன்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு
1.உயிரின் உயர்வை உய்யும் செயலாய்
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் காலத்தை விரயப்படுத்தாமல்
3.உயரும் தன்மையில் நாம் அனைவரும் உய்வோமாக..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மற்றவர்களை ஞானிகளாக வளர்த்தால் தான் “நாம் ஞானியாக” முடியும்

குருநாதர் காட்டிய அருள் வழியில் “உயிரே கடவுள்…” என்று நாம் சொன்னால் “கடவுள் தான்… உயிர்..” என்று எழுதி வைத்து விடுகின்றார்கள்.

காப்பி அடித்தாலும் உயிரே கடவுள் என்றால் அந்த உண்மைப் பொருளைத் தெரிவதற்கு இல்லை. ஆனால் “கடவுள் தான் உயிர்…” என்ற நிலைக்கு மாற்றிச் சில நிலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

உட்பொருளைக் கண்டு தனக்குள் அறிந்தோ தன் உணர்வின் தன்மையை அந்தக் குரு மூலமாகவோ அறிந்தோ அதைச் சொல்வதில்லை.

ஏனென்றால அதை
1.முதலில் தனக்குள் படைத்துப் பார்க்க வேண்டும்.
2.அதனின் இயக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
3.பின் அது சொல்லாக வர வேண்டும்.

இதையேல்லாம் பனிரெண்டு வருடங்கள் யாம் அனுபவித்தபின் தான்
1.புற நிலைகள் இருப்பது அக நிலைகளுக்குள் எப்படி இயக்குகின்றது என்றும்
2.இந்த உடலுக்குள் எப்படி விளைகின்றது என்றும்
3.அதை எப்படி மாற்ற வேண்டும் என்றும் குருநாதர் உணர்த்தினார்.

ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) உங்களை மாதிரி நன்றாகச் சாப்பிட்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டு இருந்தவன் தான்.

பின்னாடி இதை எடுத்துக் கஷ்டப்படச் செய்து எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் எனக்குள் விளைந்த அந்த மெய் உணர்வுகளை இப்போது நான் உங்களிடம் சொல்வது.

அதே சமயத்தில்
1,இதை எல்லாம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்தான்
2.”எனக்கே சத்து…!” என்று குருநாதர் சொல்லி விட்டார்.

எதை…?

நீங்கள் எல்லாம் அந்த மெய் ஞானிகள் பெற்றது போல ஆற்றல்கள் பெற்றால் தான் “எனக்குச் சத்து…” என்றார் குருநாதர்.

உன்னைச் சந்திப்போர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்கி மெய் ஒளிகள் பெற வேண்டும் என்று
1.இதை நீ ஜெபித்துக் கொண்டிரு – அவர்களைப் பிரார்த்தனை செய்
2.அவர்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணு
3.அப்போது “அந்த உணர்வு தான்… உனக்குள் விளையும்…!” என்று குருநாதர் சொன்னார்.

அதையே தான் யாம் உங்களிடமும் சொல்வது.

விண் செல்ல வேண்டும் என்றால் உயிரான்மாவின் முகப்பில் வைக்க வேண்டிய சக்தி எது…?

 

ஞானிகள் காட்டிய வழியில் நாம் விழித்திருக்க வேண்டும். அப்போது தான் மனிதனான நிலயில் பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளி நிலையை அடைய முடியும். உயிரணு தோன்றி மனிதனாக ஆனபின் தான் பத்தாவது நிலை அடைய முடியும்.

ஆதியில் ஒரு வெப்பத்தின் தன்மை அடைந்து கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகும் போது இது ஒன்பதாவது நிலைதான் வருகிறது.
1.இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் இயக்கலாம்
2.ஆனாலும் அது அழியக் கூடிய தன்மை பெற்றது.

ஆனால் இதிலே உருவான மனிதன் தான் இன்று மின்னலையும் அடக்குகின்றான்… மின்னலைக் காட்டிலும் மின்னணு தாக்கும் நிலைகளையும் விஞ்ஞான அறிவால் ஊடுருவுகின்றான்.

மண்ணிற்குள் படிந்துள்ள பொருளைக் கண்களால் காண முடியவில்லை என்றாலும்
1.இயந்திரத்தின் துணை கொண்டு உணர்வின் அதிர்வுகளைக் கூட்டி
2.இங்கே தங்கம் உள்ளது… இங்கே வெள்ளி உள்ளது… இங்கே நீர் உள்ளது… இங்கே எண்ணை உள்ளது… என்று
3.மேலே பறக்கும் நிலையிலிருந்தே பல ஆயிரம் அடிகளுக்கு அப்பால் ராக்கெட்டுகளைச் செலுத்தி
4.பூமியின் சுழற்சியில் பூமிக்குள் இருக்கும் நிலைகளை இங்கிருந்து காணுகின்றான் விஞ்ஞானி.

காந்தப் புலனறிவு கொண்ட (POWERFUL TELESCOPE) கண்ணாடிகளைக் கொண்டு… ஒவ்வொரு கோளும் எதை எதை உருவாக்குகின்றது…? அதனின் உணர்வுகள் எவ்வாறு வெளியில் பரவுகிறது…? என்றும் காணுகின்றனர்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மாற்றும் உணர்வின் அறிவு கொண்டு கண்ணாடிகளில் எடுத்த அந்தப் பதிவின் துணை கொண்டு இவன் ஏவும் இராக்கெட் அந்தக் கோளின் திசையை நோக்கிச் சரியான நிலையில் சென்றடைகிறது.

இராக்கெட் அங்கே செல்வதற்குண்டான அளவுகோலை அறிந்து கொள்ள தரையிலிருந்தே காந்தப் புலனறிவு கொண்ட கண்ணாடியை வைத்து வெகு தூரத்தில் இருப்பதையும் தனக்குள் இழுத்து உணர்த்தும் நிலைகளை உருவாக்குகின்றான் மனிதன்.

கம்ப்யூட்டர் மூலமாக அதைப் பதிவாக்கி அதிலிருந்து அழுத்தத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி நுண்ணிய நிலைகளில் ஒளியின் அதிர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் ஆற்றலை அதிகமாகச் சேர்த்து உந்து விசையாகச் செல்லும் இராக்கெட்டின் முகப்பில் அதை வைக்கின்றார்கள்.

பிரபஞ்சத்தில் கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றாலும்
1.அதில் வரும் நுண்ணிய அதிர்வின் வலு கொண்டு தன் இனத்துடன் அது மோதி
2.அந்தக் கோள் எங்கே இருக்கிறதோ அங்கே இந்த இராக்கெட்டை அழைத்துச் செல்கின்றது.

இதைப் போன்றுதான் இந்த மனிதனின் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் நாம் எண்ணி எடுக்கும் பொழுது அது நமக்குள் முதலிலே பதிவாகிறது.

பதிந்தது வளர்ச்சி அடைந்து அதை வலுவாக்கிக் கொண்ட பின் மனித உடலை விட்டுச் செல்லும் போது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் எண்ணி எடுத்தானோ
2.அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் நிலைகள் புவியின் ஈர்ப்பைக் கடந்து அங்கே அழைத்துச் செல்கிறது.
3.அங்கே உடல் பெரும் உணர்வினைக் கரைத்து விடுகின்றது.
4.உயிரான்மா ஒளியாக மாறுகிறது.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் குடும்பத் தியானங்கள் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை துருவ நட்சத்திரத்தின் சக்தி வெளிப்படும் காலங்களில் உந்திச் செலுத்தினால் (இராக்கெட் போன்று) அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்.

உடல் பெறும் உணர்வைக் கரைத்துப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும். இது மனிதன் செயல்படுத்த வேண்டிய நிலைகள்.

மனிதனின் ஞானம் விஞ்ஞானத்திற்கு அடிமை ஆகிவிட்டது – ஈஸ்வரபட்டர்

 

ஆத்திச்சூடியில் ஔவையாரின் அரிச்சுவடியில் “இளமையில் கல்” என்பதன் பொருள் யாது…?

வளரக்கூடிய எண்ண உணர்வில் எதனை அறிவின் வளர்ச்சிக்குப் போதனையாக எதை வளர்க்கின்றோமோ அவ்வினையின் செயலே விதியாகும்.

நற்கதியைப் போதிக்கும் சுருக்கத்தை முன்னோர்கள் ஆறில் வளையாதது அறுபதில் வளையுமா…? என்று பல உண்மைதனை நமக்குப் போதித்தனர்.

காலையிலிருந்து இரவு வரை உணர்வின் எண்ணத்தின் வேகத்தை மனிதனின் செயல் அவரவர்களின் நிலைக்கொப்ப தொழிலாளர்களும் வியாபாரிகளும் மருத்துவம் விஞ்ஞானம் பலதரப்பட்ட செயல் முறை ஒவ்வொன்றிலுமே ஒன்றில் பழக்கப்பட்ட உணர்வின் எண்ண ஓட்ட செயல் முறையின் செயல் வளர்ச்சியே வலுவாக்கும் தன்மையாக உள்ளது.

அந்தந்தத் தொழிலின் வினைகளின் செயல் விதி என்ற தொடரில்தான் வாழ்க்கை அமைப்பின் ஆத்மாவாகி அவ்வாத்மாவின் மணமே செயலாகும் கதியில் மனித நிலை செயல் கொள்கின்றது.

இச்செயலின் நிலை யாவையுமே மனிதன் இன்று வரை
1.தன் விதியின் செயலைத் தெய்வத்தின் செயலாக
2.தனக்குத் தெய்வம் விதித்த விதி என்று தான் வாழுகின்றானே அன்றி
3.தான் எடுக்கும் எண்ணத்தின் வினைதான் விதியாக அமைகிறது என்றும்
4.எடுத்துக் கொண்டதற்கொப்ப அந்த விதியின் கதியே
5.நற்கதியாகவும் துர்கதியாகவும் வாழும் நிலை அமைகிறது என்பதனை உணரல் வேண்டும்.

இளமைக்கால அறிவின் வளர்ச்சியில் எண்ணத்தின் வினையை எவ்வினையின் செயலுக்குப் பக்குவப்படுத்தி… நம் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோமோ அந்த விதியின் கதியின் தொடரில் தான் உணர்வெடுக்கும் எண்ணப்படி செயலாக்கும் முறையையும் வலுவாக்குகின்றோம்.

ஒவ்வொரு சிசுவின் ஆரம்பக்கால ஆத்மத் தொடர் முந்தைய ஜென்மத்தில் அவ்வுயிராத்மா எத்தொடரின் வலுக்கொண்ட ஆத்ம உயிரில் இருந்திருந்தாலும்
1.தாய் கர்ப்பத்தில் ஜீவிதம் கொள்ளும் காலத்தில்
2.உடல் கூறின் அமைப்பு பெறும் வளர்ச்சி நிலையில்
3.தாய் உணர்வின் எண்ண கதியின் ஜீவ ஓட்டத் தொடரில் ஜீவகாந்த சரீர ஒலி எடுக்கும் பொழுது
4.முந்தைய ஜென்ம நிலை யாவும் மறக்கும் நிலை ஆகின்றது.

தாய் எடுக்கும் உணர்வின் ஒலித்தொடர்பின் பிறப்பால்… பிறப்பின் செயலுக்கு எண்ணத்தின் உணர்வின் ஒலியின் அறிவை வளர்க்கும் பக்குவத்தால்… இஜ்ஜென்மத்தின் கதி மாறுகின்றது.

1.தெய்வத்தின் தொடர்பால் தொடர்பட்ட விதியல்ல மனிதனின் நிலை
2.தன் உணர்வின் எண்ணத்தால் ஏற்படுத்திக் கொண்ட செயலின் கதியின் ஓட்டம் தான்
3.இது நாள் வரை நாம் வாழும் வாழ்க்கை நிலை.

இவ்விதியை மதி கொண்ட நற்கதியில் சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலக்கும் நிலையாக நம் உணர்வின் எண்ண ஜீவகாந்த ஒளி கொண்டு உணர்ந்து பெறும் தொடர்பால் பல உண்மைகளை அறியலாம்… உணரலாம்.

அத்தகைய ஒளி கொண்ட உயர் சக்திகளின் செயலுடன் நம் செயலின் எண்ண ஓட்டம் அமைந்தால் விதியின் கதியே நற்கதியாய் நல் ஒளி பெறும் தன்மையாக அமையும்.

இதைப் பெறவல்ல நிலை… எண்ணத்தின் உணர்வு கொண்ட மனிதச் செயலுக்குத்தான் உண்டு.

அதே போல் மண்டலக் கோள்களையும் தாவரங்களையும் ஜீவராசிகளையும் எதனையுமே…
1.தன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒலி அலையின் முலாமின் தொடர்
2.இவ்வாத்மாவில் பதிவாக்கிக் கொள்ளும் செயல் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் மனிதச் செயலின் வீரிய உண்மை விஞ்ஞானத்திற்கு இன்று அடிமை ஆகிவிட்டது.

1.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மையோ…
2.அதைச் செயலாக்கும் மாமகரிஷிகளின் வளர்ச்சியால்
3.நாம் ஒவ்வொருவரும் செழுமை அடையலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உலகெங்க்லும் எத்தனையோ தீமையான உணர்வுகள் பரவிக் கொண்டு வருகிறது. இந்தக் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையாக ஆகிக் கொண்டே வருகிறது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமல்லவா…?

எப்படி மீட்பது..?

ஆயிரம் தான் யாம் சொன்னாலும் கேட்கும் போது…, சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார் என்கிறார்கள். நன்றாக இருந்தது என்று தான் சொல்கிறார்கள்.

அடுத்தாற் போல் வாழ்க்கையில் சந்திக்கும் போது யாராவது வெறுப்பாகப் பேசினால் போதும்.
1.பார்… சாமி நல்லதைச் சொல்கிறார்… ஆனால் இவனைப் பார்..!
2.நான் ஒன்றுமே செய்யவில்லை…! என்னை எப்படித் திட்டுகிறான்…! என்று
3.நல்லதை விட்டு விட்டு அதைப் பிடித்துக் கொள்வார்கள்.

கடையில் கடனுக்காகச் சரக்கைக் கேட்பார். அவர் கொடுக்கவில்லை என்றால் உடனே அவர் அந்தச் சரக்கெல்லாம் “மோசம்…” என்பார்…!

“கடன் இல்லை…” என்று சொன்னதற்காக இப்படி எல்லாம் நடக்கிறது.

இதைப் போன்று எத்தனையோ நடக்கின்றது. பிறர் செய்யும் தீமையை நுகரும் போது தீமையான நினைவுகளே நமக்குள் வருகிறது.

1.எந்தச் சாமியைப் பார்த்து… நாம் என்ன செய்வது…?
2.என்ன தியானம் பண்ணி… என்ன செய்வது…?
3.எந்தக் கடவுளைப் பார்த்து… என்ன பண்ணுவது…? என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அதனால் தான் கோவிலில் (மனித உடலைப் போல்) சிலைகளை வைத்து அந்தத் தெய்வத்திற்கு…
1.பாலாபிஷேகம் செய்கிறார்கள்
2.தேனாபிஷேகம் செய்கிறார்கள்
3.சந்தன அபிஷேகம் செய்கிறார்கள்
4.நன்னீர் விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
5.பன்னீரை விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்

எதற்காக அந்தச் சிலைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்…?

பாலாபிஷேகம் செய்கிறர்கள். நாம் அதை வேடிக்கை பார்க்கிறோம் அவ்வளவுதான். ஏன்… ஏதற்கு…! என்று எண்ணுவதில்லை.

பாலபிஷேகம் தேனாபிஷேகம் செய்து நல்ல ஒழுக்கத்தை நமக்குள் சுவாசிக்கச் செய்வதற்காக அவ்வாறு வைத்துள்ளார்கள் ஞானிகள். கோவிலுக்குச் சென்றால் இவ்வாறு நாம் நினைக்கிறோமா…?

நம்மைப் பண்படுத்துவதற்குச் சிலையை வைத்துள்ளார்கள். இது “துவைதம்…” அங்கு ஊற்றும் பாலைப் பார்க்கும் போது அதிலிருந்து வரும் மணம் “அத்வைதம்…”

நாம் நுகர்ந்தறியப் போகும்போது உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சிகளை எண்ணி ஏங்கும்போது அது வருகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை வரும் போது விசிஷ்டாத்வைதம்.

அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகிறது. அந்த உணர்வின் தன்மை உடலாகும் போது
1.தீமைகளை நீக்கி நல்ல மணமுள்ள அணுக்களை
2.நீ உன் உடலில் உருவாக்கக் கற்றுக் கொள் என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

ஏனென்றால் அது கல் சிலை தான். அதிலே ஊற்றிய உணர்வின் தன்மையை மனிதனான நாம் நுகரப்படும் போது
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் எப்படி வளர்க்க வேண்டும்…? என்று
3.அதைக் கண்டுணர்ந்த ஞானிகள் இதைச் செய்திருக்கிறார்கள்.

எம்முடைய (ஞானகுரு) நோக்கம் என்ன…?

 

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் சிலருக்கு வித்தியாசமாக இருக்கும்.

ஆனால் முன்ன்னாடி உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு அல்லது பல முறை உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு
1.அந்த உபதேசத்தின் வாயிலாக உடலிலே உருவான அணுக்களுக்கு
2.இப்பொழுது கொடுக்கும் உபதேச உணர்வுகள் மூலம் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உணவாகக் கிடைக்கும்.

பல முறைகளில் பல கோணங்களில் அந்த உணர்வின் சத்தை உங்கள் உடலில் விளைந்த அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுப்பதற்குத் தான் இந்த உபதேசங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் புதிதாகக் கேட்பவர்களுக்கு அருள் ஞான வித்தாக உருவாக்கப்படுகின்றது. வித்தாக ஊன்றிய பின்
1.இதை நீங்கள் மீண்டும் தொடர்ந்து எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அது கருவாகி உருவாகி அந்த அருள் ஞானத்தைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

சிலர் எண்ணலாம்… ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே என்று. உங்களுக்கு அர்த்தமாகாது…!
1.ஆனால் பேசிய உணர்வு பின்னர் கருவாகும்… பின் அது உருவாகும்.
2.பின் அதனின் உணர்வுகள் உங்களுக்குள் தெளிவாகும்

அதனால் தான்
கருவாய்…
உருவாய்…
வருவாய்…
முருகா…
குருவாய்…! என்று
1.எதனை நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை கருவாகி உருவாகி உங்களுக்குள் குருவாக வரும்.
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நமக்குள் அது தெளிவாக உருவாக்கும் என்பது அது தான்.

நாடாக்களில் படமோ பாடலோ பதிவு செய்துவிட்டால் திருப்பி அதைப் போட்டுப் பார்க்கும் பொழுது மீண்டும் அந்தப் பாடலைக் கேட்க முடிகின்றது.
1..இதைப் போல் தான் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிவிடும்
2.உடலில் அணுவாகவும் உருவாகிவிடும்.

அந்த அணுக்களுக்குச் சிறிது காலம் உணவைக் கொடுத்தால் அது மீண்டும் வளர்ச்சியாகித் “தன்னிச்சையாக…” அதனின் உணவை எடுத்துக் கொள்ள அந்த வளர்ச்சிகள் பெறும்.

முந்திய நிலையில் உபதேசங்களைக் கேட்டவர்களுக்கு… உடலில் விளைந்த அணுக்களுக்கு உயர்ந்த ஞான உணவாக இப்பொழுது கொடுக்கப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி பெற இது உதவும்.

அதே சமயத்தில் புதிதாகக் கேட்பவர்களுக்கு ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்கப்படுகிறது. ஊன்றிய வித்து உருவாகிக் கருவாக வேண்டுமென்றால்
1.உங்கள் நினைவினைக் கூட்டினால் அது உருவாகும்
2.அந்த உணர்வின் தன்மை அது உருவாகும் பொழுது குருவாகும்
3.நல்வழியையும் காட்டும்…. அதே உணர்வை உணவாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்.
4.இந்த உணர்வை ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுது அருள் ஞானம் தன்னிச்சையாக வளரும்.

அதனால் தான் சாமி சொல்வது எனக்குப் புரியவில்லையே என்று எண்ண வேண்டாம் என்று திரும்பத் திரும்பச் சொல்வது.

குருநாதர் எனக்குள் எப்படி ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கச் செய்து… இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரச் செய்தாரோ… உங்களிடம் அதைப் பெறச் செய்து… உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடும் நிலைக்கே இது உருவாக்கப்படுகின்றது.

அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் வலுப்பெற… உணவாகக் கிடைக்கச் செய்வதற்கே தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

பொதுவாக உபதேசம் சொல்லும் போது
1.முதலிலே மெதுவாக சொல்ல முற்பட்டேன்
2.இரண்டாவது சிறிது வேகமாகச் சொன்னேன்
3.மூன்றாவது அதை காட்டிலும் வேகமாகச் சொல்லும் நிலை வந்தது.
4.(எம்முடைய உபதேச ஒலிகளைக் கேட்டவர்களுக்கு இது தெரியும்)

காரணம்… இந்த உணர்வின் ஈர்ப்புகள் உங்களுக்குள் பதிய வேண்டும் என்பதற்குத் தான்.

அந்த உணர்வின் ஆற்றல் ஆழமாகப் பதிந்தால்…
1.அப்போதுதான் சாமி என்ன சொன்னார்…? என்று ஏக்கமாக இருப்பீர்கள்.
2.அப்போது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.
3
பின் அதனுடைய நிலைகள் உருவாக இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவும். – இது புதிதாக வந்தவர்களுக்கு.

ஏற்கனவே கேட்டவர்களுக்கு அந்த அருள் உணர்வின் சக்தி உணவாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
1.அருள் ஞானம் பெருகிக் கொண்டே இருக்கும்
2.மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெறும் வலிமையும் பெருகிக் கொண்டே வரும்.

உணர்வுகளை ஒளியாக மாற்றும் முறை – ஈஸ்வரபட்டர்

 

கடிகாரத்தை (MECHANICAL WATCH) நாம் சாவி கொடுக்கும் பொழுது எந்த அளவிற்குச் சுற்றுகின்றோமோ… அதற்கொத்த அமைப்பு முறை கொண்டு அதனுடைய ஓட்ட முறை செயல்பாடு உள்ளது. செயல்படுத்தும் பொருள் நிலை செயலாக்கப்பட்ட நிலை கடிகாரத்தின் நிலை.

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் நாம் எடுக்கும் எண்ண உணர்வின் செயல்…
1.காலையிலிருந்து இரவு வரை நம்முடைய செயல்பாடு அனைத்தும் நம் புலன் அடங்கி உறங்கும் வரை
2.நம் எண்ணத்தில் எடுத்த உணர்வலைகள் யாவும் வினையாகச் சரீர உணர்வில் செயல்படுகின்றது
3.செயலடங்கிப் புலன் அமைதியுற்று உறங்கும் பொழுது நம் ஊனுடன் பதிவாகி விடுகின்றது.

இதே தொடரின் அலையை ஒன்றின் தொடரில் ஆவேச உணர்வில் எந்த அலையின் வீரியத்தைச் செலுத்துகின்றோமோ… பயத்துடனோ கோபத்துடனோ அச்சத்துடனோ குரோதம் வஞ்சனை என்ற எவ்வுணர்வின் வேகத்தையாவது அதிகமாக எடுத்தால்
1.அதே உணர்வின் அலையை திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கும் வேகத்தால் அதுவே வினையாகி
2.வினையின் பயன் எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாகி
3.அதன் தொடர் அலையைச் சில காலங்கள் எண்ணி எடுக்கும் தொடரில்
4.நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் “விதியாகி” விடுகின்றது.

அவ்வாறு உருவாகும் விதியின் தொடரை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று தெரியாத செயலுடன் தான் நாம் வாழுகின்றோம்.

ஏனென்றால் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் உணர்வின் வேகம் பல ரூபத்தில் நமக்கு நடந்து கொண்டுதான் இருக்கும். அத்தொடரின் ஈர்ப்புகளை எல்லாம் வினையாக நமக்குள் பதிவு செய்து கொள்ளாமல் நம் உயிரின் வலுவின் ஆத்ம ஒளியைக் கூட்ட வேண்டும்.

உயிரான நெருப்பில் நாம் அதில் செலுத்தும் எண்ணத்தின் உணர்வின் வாசனையைத் தான் அது சமைக்கும். அதுவாகத் தான் நம்மை மாற்றும்.

நம் பூமியின் சுவைத் தன்மை எப்படி ஆறு குணங்களைக் கொண்டு ஆறு சுவைகளை வளர்த்துக் கொண்டதோ அதைப் போன்றுதான்
1.உணர்வில் சலிப்பை வளர்க்கும் பொழுது புளிப்பும்
2,உணர்வில் கோபத்தை வளர்க்கும் பொழுது காரமும்
3.உணர்வில் இனிமையை வளர்க்கும்பொழுது இனிப்பும்
4.உணர்வில் விரக்தியை வளர்க்கும் பொழுது துவர்ப்பும்
5.உணர்வில் வெறுப்பை வளர்க்கும் பொழுது கசப்பும்
5.இப்படியாக குணத்திற்கொப்பச் சுவையில் நம்முடைய உயிர் காந்த ஜீவ சரீரம் பதிவு கொண்டு விடுகின்றது.

இத்தகைய வினையின் செயல் விதியாகும் வளர்ச்சியை நாம் மேல் நோக்கி எடுக்கக்கூடிய உணர்வின் தியானத்தால் நற்குண ஒலி கொண்டு உயர் மின் காந்த அலையை அதிகாலையிலிருந்தே நாம் எடுக்கும் பக்குவ முறையினால்
1.அந்தந்த வினையின் செயலுக்கு அடிமையாகாமல்
2.நற்குண ஒலியின் செயல்பாட்டில்
3.எண்ணத்தின் வேகத்தை எதிர்கொள்ளும் எதுவாகிலும் (தீய நிலைகள்) சுட்டுப் பொசுக்கும் ஆயுதமாக
4.நம் உயிராத்மாவின் சமைப்பில் உயர் ஞானிகளின் மகரிஷிகளின் மணங்களை எடுத்துத் தியானிக்க வேண்டும்.

இதன் வழி செய்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நமக்குள் விதைக்கும் வளர்ப்பாக உயிராத்மாவின் வீரிய ஒளித் தன்மையின் செயலை நாம் பெற முடியும்.

ஆகவே ஒளியான எண்ணத்தின் உணர்வை உயிராக்குங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஆத்திரம் தாங்காமலோ பிறருடைய கடும் சொல்லை ஏற்க முடியாமலோ கடுமையான சூழலில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்கின்றனர்…. சிலர் தூக்குப் போட்டு இறக்கின்றனர்.

அப்பொழுது மனிதனின் எண்ணங்கள் மறைந்து (மறந்து) போய்விடுகின்றது… உடலை அழித்து விடுகின்றது.

விஷத்தைக் குடிப்பவர்கள் உயிரை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் எங்கே செல்லும் தெரியுமா…?

எந்த விஷத்தைக் குடித்தார்களோ அதன் நிலை கொண்டு பாம்பாகவோ தேளாகவோ இதைப் போன்ற விஷம் கொண்ட சரீரமாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.

வேறு எங்கும் போகமாட்டார்கள்.

இந்த மனித உடலை விட்டுப் போன பின்
1.வேறு உடலுக்குள் போனாலும்
2.அவர்களையும் இதே போன்று விஷத்தைக் குடித்துச் சாக வைப்பார்கள்.

இதில் விளைந்த விஷம் அந்த உயிருடன் – அவனுடன் ஒன்றிக் கொண்டே தான் இருக்கும். வேறு எங்கும் போகாது. நாம் இந்த உடலில் இம்சைப்பட்டிருந்தால் அடுத்த உடலில் அதுவும் அதே இம்சையைத்தான் படும்.

1.விஷத்தைச் சாப்பிட்டுவிட்டு எத்தனை துடி துடித்தாரோ
2.அது உயிரிலே கலந்து கொண்டு
3.அதே துடிப்பு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும்.

இந்தத் துடிப்பான உணர்வுகள் உடலுக்குள் போனவுடனே அது வேலை செய்யத் தொடங்கி விடுகின்றது.

சில பேர் தற்கொலை செய்து கொண்டு… “இந்த உலகத்தை விட்டே நான் போய் விடுகிறேன் என்பார்கள்..!

எங்கே போவது…?

அவனிடமிருந்து (உயிரிடமிருந்து) தப்பிக்கவே முடியாது.
1.தப்பு செய்தால் தப்பு தான்.
2.சரியாகச் செய்தால் சரி தான்.
3.மார்க் (மதிப்பெண்) போட்டுக் கொண்டே இருக்கும் நமது உயிர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கீதையிலே வியாசகர் சொன்னது “நீ எதை எண்ணுகிறாயோ.. நீ அதுவாகின்றாய்…!

ஒருவரைக் கோபத்துடன் சண்டையிட்டு நான் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்… பார்…! என்று நினைக்கலாம்.
1.சுட்டுப் பொசுக்கும் எண்ணம் முதலில் என்னிடம் தான் வருகின்றது எனக்குள் வளர்கின்றது.
2.சுடப்பட்ட பின் அவன் துடித்த உணர்வு அதே எண்ணத்தை நாம் எண்ணிக் கொண்டிருந்தால் நேராக என்னிடம் வந்துடுவான்.

என் உடலுக்குள் வந்த பின்னாடி
1.நான் சுட்டுப் பொசுக்கிய உணர்வின் தன்மை என்ன செய்யும்…?
2.என்னைச் சுட்டு பொசுக்கிக் கொண்டேயிருக்கும்.
3.இந்த உயிருடன் ஒன்றி அந்த இம்சைப் படுத்திக்கொண்டே இருக்கச் செய்யும்.

உயிரிடம் இருந்து யாரும் தப்ப முடியாது.

உயிரோடு ஒன்றிய அந்த நிலைகள் நீ தவறு செய்தாய்… அதனால் வேதனைப்படு…! என்று இந்த உயிர் செய்யும். ஏனென்றால் அவன் கடவுள்.

ஆகவே… வாழ்க்கையில் கடுமையான இன்னல்கள் ஏற்படும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணத்தைச் செலுத்தி.
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவைச் செலுத்த வேண்டும்
3.என்னை அறியாது வந்த தீமைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று
4.அந்த மெய் உணர்வுகளை நம் உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும். அதை நம் உடலாக ஆக்க வேண்டும்
5.இதை நாம் சிருஷ்டித்தால் மெய் உணர்வைத்தான் உயிர் நமக்குள் கொடுக்கும்.

அடுத்து உடலைவிட்டு போய் விட்டால் உயிர் நம்மை எதுவாகப் படைக்கும்…? நம்மை அந்த மெய் ஞானியாகப் படைத்துவிடும். ஏனென்றால் முழு முதற் கடவுள் – நாம் சிருஷ்டிக்கும் உடல் பெற்றவர்கள்.

ஆனால் இந்த மனிதப் பிறவியில் இதை இழந்து விட்டால் அடுத்து மீண்டும் தேய் பிறை என்ற நிலைக்கே நம்மை உயிர் அழைத்துச் செல்லும்.

ஆகவே
1.விஜயதசமி – பத்தாவது நிலை பெறும் அந்தப் பாதையிலே
2.ஞானிகள் சென்ற பாதையிலேயே நாம் செல்வோம்.
3.நம்மை அறியாது வந்த எத்தகைய இருளையும் போக்குவோம்.
4.”கல்கி…” என்ற அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.

நஞ்சு என்று தெரிந்தாலே… அதனால் வீரியம் பெறுபவன் தான் முதல் மனிதனான அகஸ்தியன்

 

அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இளம் பருவத்தில் விளைந்த பின்
1.ஒவ்வொன்றும் அறிந்திடும் நிலையாகவும்
2.மிகவும் வலுக் கொண்ட உணர்வாகவும் வருகின்றது.

எந்த மிருகத்தின் அருகில் இவன் சென்றாலும் இவனைக் கண்டு அது அஞ்சி ஒடுங்குகின்றது.

தாவர இனங்களில் இருக்கும் சத்துகளை இவன் உணவாக உட்கொண்ட நிலையில் அதனின் உணர்வின் தன்மை வரும் போது
1.அந்தத் தாவர இனங்கள் ஒடுங்குவதையும் காண்கின்றான்
2.அதன் இயக்கத்தையும் அவன் இளமைப் பருவத்திலேயே உணர்கின்றான்.

நாம் பார்க்கிறோம்… ஒரு குளவி கூட்டினைக் கட்டி அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைத்து வைக்கிறது. சிறிது நாள்களில் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.

மாறிய பின் அதுவும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல் ஒரு கூட்டினைக் கட்டிப் புழுவைக் கொண்டு வந்து அடைத்துத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது.

ஆக… எப்படி குளவி சொல்லிக் கொடுக்காத நிலையில் புழு குளவியாக மாறிய பின் செயல்பட்டதோ அதே போல் அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் அந்த இயக்கங்கள் ஆன பின் “அவன் அறியாமலேயே…” சில செயல்களைச் செயல்படுத்துகின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் பொழுது
1.விஷத்தை நுகர்ந்தாலே மற்றவர்களுக்கு (நமக்கு) மயக்கம் வருகின்றது
2.ஆனால் விஷச் செடியின் அருகில் சென்றால் அகஸ்தியன் மீண்டும் வீரியம் அடைகின்றான்… வலுவடைகிறான்.

காரணம்…
1.விஷத்தின் தன்மை ஒடுக்கும் வல்லமை கொண்டதனால்
2.அவன் தெளிந்த மனமும் வலுவான உணர்வு கொண்டவனாகவும் மாறுகின்றான்.

ஐந்தாவது வயது வரப்படும் பொழுது புவியின் ஈர்ப்பின் தன்மைகளை அறிகின்றான். நமது பூமி தனக்குள் ஆகாரம் எப்படி எடுக்கிறது…? என்பதை உற்று நோக்கினான்.

வான இயலை இளம் பருவத்திலேயே கண்டுணர்கின்றான். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பூமி துருவப் பகுதி வழியாக எப்படி விண்ணின் ஆற்றலைக் கவர்கிறது…? என்பதை உணர்கிறான்.

உணர்ந்தாலும் “விஷத்தின் தன்மையே…” விண்ணிலிருந்து வருகின்றது… தாவரங்களும் இந்த விஷத்தின் உணர்வின் செயலாகவே வளர்கின்றது…! என்றும் அறிகிறான்.

இருப்பினும்…
1.தாவர இனங்களுக்குச் செல்லும் சக்திகளை நேரடியாக அகஸ்தியன் உட்கொள்கின்றான்
2.தன் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றும் திறனும் பெறுகின்றான்.

துருவத்தை உற்று நோக்கும் பொழுது பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் அறிகின்றான். அவன் ஆதியிலே கூறியது தான்… இருண்ட நிலையிலிருந்து அகண்ட அண்டங்கள் எப்படி உருவானத் என்ற உண்மைகள் அனைத்துமே…!

விஷத்தின் ஆற்றல் உருவாகும்போது விஷத்தின் அளவுகோலையும் அந்த விஷம் எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும் முதல் மனிதன் உடலில் இவன் உணர்கின்றான்.

இதை வைத்துத்தான் அகண்ட அண்டம் எப்படி இருந்தது…? அதனின் நிலைகள் கொண்டு எப்படி வளர்ந்தது…? என்று துருவத்தை உற்று நோக்கும் போது இவனுக்குள் கண்டறிகிறான்.

விளைந்த உணர்வுகள் இவனின்று வெளிப்படுவதை சூரிய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதன் வழி சென்ற… பின் வந்த மக்கள் இதை அறிவாக அறிகின்றனர். அறிவின் வளர்ச்சியாகத் தெளிந்த நிலை பெறுகின்றனர்.

இருளை வெல்லும் திறன் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியனே…! அவனுடைய ஆற்றலைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே உணர்த்தி அதனைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

விண்ணுலக ஆற்றலைப் பெற்றால் தான் வளர்ச்சி – ஈஸ்வரபட்டர்

 

மனிதனின் செயலில் பல விநோத உண்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளான். “மனித விஞ்ஞானம்” பல உண்மை நிலைகளைச் செயல்படுத்தும் நிலையில்… இன்று நாம் பல நிலைகளைக் காண்கின்றோம்.

தனக்கு மேல் வீரியத் தன்மை கொண்ட பல உண்மைகளை அதற்குகந்த பாதுகாப்பு செயல் திறமையுடன்… இன்றைய மனிதனின் விஞ்ஞானம் எப்படி முன்னேற்றம் கண்டுள்ளது…?

வீரிய சக்தி கொண்ட மின்சாரத்தைத் தன் செயலுக்கு மனிதன் உபயோகப்படுத்துகின்றான். அதைச் செயல்படுத்துவதற்கு அதற்குகந்த பாதுகாப்பு நிலையில்
1.எது எதில் அந்த மின்சாரம் பாயும் தன்மை கொண்டுள்ளது என்று கண்டறிந்து…
2.அதனுடைய வீரியத் தன்மையைத் தன்னுடைய செயல் தன்மைக்கு
3.அதையே பக்குவப்படுத்திப் பலன் காணுகின்றான்.

இது எல்லாமே இவ்வுடலின் வாழ்நாளைக் கருதி வளர்த்துக் கொண்ட வழிமுறைகள் தாம்.

மனித உணர்வின்… எண்ண வீரியத்தின் ஒலியை இன்றைய மனிதன் உணர்ந்தானானால்… தன் உணர்வின் ஒலி கொண்டு ஒளிரும் நிலையைத் தன் வலுவில் வளர்க்கும் வளர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியும்.

நம் பூமியின் ஓட்டத்தில் பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனின் ஒளியை நம் பூமி “தன்னுடைய சுழற்சியின் ஜீவ ஓட்ட ஈர்ப்பின் ஒளியால்” ஒளி பெறுகின்றது.

அதைப் போன்றே தன் ஓட்ட கதியில் நட்சத்திர ஒளிகளையும் சந்திரனின் ஒளி அலையையும் தன் ஓட்டத்தில் தொடர்பு கொள்ளும் மற்றக் கோள்களின் சந்திப்பில் அந்தந்தக் காலங்களில் அவ்வொளியின் ஒலியை நம் பூமி சந்தித்துக் கொண்டே ஓடுகின்றதல்லவா…?

நாம் இன்று காணும் நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் பூமி தன் ஜீவகாந்த ஒளியின் சுழற்சியில் ஒளி பெற்று தன்னுடைய சுழற்சியின் ஈர்ப்பில் சந்திக்கும் அவைகளின் தொடர்பலையின் அமிலத்தின் ஒளித் தன்மையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று பெற்று வளர்கிறது.

மனிதப் பிறப்பிற்கு ஜாதகத்தில் நட்சத்திர ராசிகளை அந்தந்த நேரத்திற்கொப்ப பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிக் கணிக்கின்றார்களோ அதைப் போன்றுதான் இன்று நம் பூமியில் பல நிலைகள் (அது சந்திக்கும் நிலையில்) வளர்ந்துள்ள வளர்ச்சியின் தன்மையும்.

ஆனால் இதை எல்லாமே பூமியின் சுழற்சி ஓட்ட கதியில் சந்திப்பின் தொடரில் வளர்ந்த “இயற்கையின் வளர்ச்சி” என்கின்றோம். ஆனாலும் அதே இயற்கையை… மனிதன் தன் செயலுக்குப் பல நிலைகளை வகுத்துக் கொள்கின்றான்.

ஆகவே பூமியில் ஜெனித்த மனிதன் இயற்கையைத் தன் செயலின் தொடரில் செயலாக்கும் “விந்தைதனை” தன் உணர்வின் எண்ணத்தால் “மெய்ஞானத் தொடர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்…”

ஏனென்றால் இப்பூமியின் ஜெனிப்புத் தொடர் அலை ஈர்ப்பு… இப்பூமியில் வாழும் காலத்திற்குத்தான் பயன்படும். உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் தேய் பிறை தான்.

உணர்வின் எண்ணத்தின் ஓட்டத்தை மற்றக் கோள்களின் தொடர்புடன் எண்ணி எடுக்கும் ஒலி அலையால்… இஜ்ஜீவ காந்த சரீர ஓட்டத்தில் எண்ணி எடுக்கும் அலையின் தொடர் அமில குணத்தை…
1.இச்சரீர உணர்வின் தொடரில் வளரும் உயிர் காந்த ஒளி அலையின் தொடர்பால்
2.இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம ஒளி ஒளிரும் தன்மையை
3.இவ்வெண்ணத்தில் எடுக்கும் தொடர்புபடுத்தி வலுப்படுத்திக் கொள்ளலாம்.

நம் பூமியின் ஓட்டத்தினால்தான் சூரியனின் ஒளியையும் மற்றக் கோள்களின் ஒளியையும் பூமி பெறுகின்றது.

அதைப் போன்று ஜீவகாந்த சரீர உயிர் எண்ண ஓட்டத்தால்… நாம் எண்ணி எடுக்கும் எக்கோள்களின் ஒளி அமிலத்தையும்… இச்சரீர உணர்வில் பதிவாக்கும் வலுவினால்…
1.இது வரை ஆத்மாவின் ஒளி வட்டம் வளர்ந்த நிலையை வலுவாக்கும் வழிமுறையில்
2.தியானம் கொள்ளும் வலுவால் இச்சரீரத்தின் ஆத்ம உயிர் வலுவாகும் ஒளியை நாம் காணலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வியாசக பகவான் கொடுத்த “வராக அவதாரத்தின் முக்கியத்துவத்தை…” அறிந்து கொள்ள வேண்டும். வராகன் என்றால் “மிகவும் வலிமையானது…” என்று பொருள்

பன்றி தன் உடலின் வலிமை கொண்டு சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளக்கிறது. சாக்கடைக்குள் இருக்கும் நல்ல மணத்தைப் பிரித்து (அதில் மறைந்துள்ள உணவு பொருளை) எடுத்துச் சந்தோஷமாகச் சாப்பிடுகிறது.

சாக்கடையில் ஒரு பருப்பைப் போட்டு விட்டு நீங்கள் முகர்ந்து பாருங்கள். என்ன வாசனை வருகிறது…? அந்த நல்ல பருப்பின் வாசனை வருகிறதா…? அல்லது மேலே இருக்கும் வாசனை வருகிறதா…?

“நல்ல வாசனையைப் பிரிக்க முடியுமோ…? பிரிக்க முடியாது…” அதைக் காட்டுகிறார் குருநாதர்.

பல உடல்களிலே தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பெற்று பன்றியான உடல் அமைப்பைப் பெற்றது.

குருநாதர் சொல்கிறார்… நீ (ஞானகுரு) முதலில் பன்றியாகவும் இருந்தாய்.

இதைக் காட்டுவதற்காக சாக்கடைப் பக்கத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு போனார். சாக்கடையிலிருந்த குப்பையெல்லாம் அள்ளிப் போட்டு வைத்துள்ளார்கள்.

FLUSH OUT – கழிப்பறைகள் இல்லாத காலம் அது. கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தும் சாக்கடை அது. சாக்கடையில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது.

பழனியில் என் வீட்டிற்கு அருகில் தான் இது நடக்கிறது.

நான் தெலுங்கு பேசுவதால் “வாடா தெலுங்கு இராஜ்ஜியம்…!” என்று குருநாதர் என்னைக் கூப்பிடுகிறார்.

திருப்பதி வெங்கடாஜலபதி மிகப் பெரிய செல்வந்தர். நீ வெங்கடாஜலபதியை தோஸ்து (நண்பனாக்கி) பண்ணிக் கொள்…! என்பார்.

இல்லை நான் முருகனைத் தான் வணங்குகிறேன்…! என்பேன்.

டேய்… நீ தெலுங்கு இராஜ்ஜியம்டா, அங்கே போடா..! என்றெல்லாம் சொல்வார்.

சாக்கடைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு “காப்பி வாங்கிக் கொண்டு வாடா…” என்றார். எனக்குக் காப்பி.. அவருக்கு டீ.. அவர் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்தேன்.

நான் வாங்கி வந்த டீயில் சாக்கடையில் இருந்து அள்ளிப் போட்டிருந்த குப்பைகள் இரண்டைப் போட்டார். என் காப்பியிலும் இரண்டைப் போட்டு சர்…ர்ர். என்று ஆற்றிவிட்டுச் “சாப்பிடுடா…!” என்றார்.

சாக்கடையை அள்ளிப் போட்டுவிட்டுக் காப்பியைச் சாப்பிடு என்றால்… “எப்படி இருக்கும்…?”

நைனாவிற்கு ரொம்பப் (எனக்கு) பைத்தியம் பிடித்து விட்டது…! என்று எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

இங்கேயும் அங்கேயும் நான் பார்க்கிறேன். சாமி…! இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகிறது…! என்கிறேன்.

“நான் சொல்வதைச் செய்கிறேன்… என்று சொன்னாய் அல்லவா…! நீ செய்டா…” என்கிறார். “நான் சாப்பிடுகிறேன் பார்…” என்று சொல்லி அவர் சாப்பிடுகிறார்.

அவர் சாப்பிடுவதைப் பார்த்தாலே “எனக்கு” வாந்தி வருகிறது

அப்பொழுது கடவுளின் அவதாரத்தில்… “வராக அவதாரத்தைப்” பற்றி அந்த இடத்தில் காட்டுகிறார்.

என்னால் காபி சாப்பிட முடியவில்லை. காபியைக் கொட்டி விட்டு வட்டைக் கப்பைக் கொண்டு போய் டீ கடையில் திரும்பக் கொடுக்கிறேன்.

என் வீட்டுப் பக்கத்தில் டீக்கடை வைத்திருக்கும் “பாய்” அவர் அந்த வட்டக்கப்பை வாங்க மறுக்கிறார்.

“நைனா…! இந்த வட்டைக்கப்பை உங்கள் வீட்டில் வைத்துச் சாப்பிடுங்கள்… சாக்கடையில் இருப்பதைப் போட்டதால் இதில் யாரும் காப்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் இதை உங்கள் வீட்டிற்கே கொண்டு போங்கள் என்கிறார்.

வேறு வழியில்லாமல் அதற்கான காசைக் கொடுத்தேன்.

வட்டகப்பை கடை வாசல் முன்னாடி கூட வைக்க வேண்டாம் என்கிறார்.

பக்கத்தில் இப்ராஹிம் சைக்கிள் கடை வைத்துள்ளார். அங்கே வைத்தேன். “கொஞ்ச நேரம் கழித்து எடுத்துக் கொள்கிறேன்…” என்று சொன்னால் கூட அவர் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.

உங்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போங்கள். பன்றி முகர்ந்து பார்த்துள்ளது. யாராவது பார்த்தால் நானும் அதைச் சாப்பிடுகிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்கிறார்.

பன்றி முகர்ந்து பார்த்துள்ளது என்று அங்கு வைக்கக்கூட விட மாட்டேன் என்கிறார். நான் என் வீட்டிற்கே கொண்டு போய் வாசற்படி அருகில் வைத்துவிட்டேன்.

முறுக்கு நிலக் கடலை பொட்டுக் கடலை… வாங்கிக் கொண்டு வாடா என்றார் குருநாதர். ஒரு குச்சி எடுத்து வாடா… என்றார். சாக்கடைக்குள் மூன்று கோடுகளைப் போடச் சொன்னார்.

போட்டேன்.

நிலக் கடலைப் பருப்பை முதலிலும் அடுத்து பொட்டுக் கடலையையும் அதற்குப் பிறகு முறுக்கையும் போடச் சொன்னார்.

பன்றி அந்தப் பக்கம் மேய்ந்து கொண்டு வருகிறது. கடலைப் பருப்பின் வாசனை… எண்ணையில் பொறித்தெடுத்த முறுக்கின் வாசனை.. வருகிறது.
1.நேராக கடலைப் பருப்பை முகர்ந்து எடுக்கிறது.
2.அடுத்து முறுக்கை எடுத்துச் சாப்பிடுகிறது.
3.மூன்றாவதாக பொட்டுக் கடலையைச் சாப்பிடுகிறது.

“பார்த்தாயாடா., பன்றி எப்படி எடுக்கிறது என்று…?” அந்த இடத்தில் காட்டுகிறார். நீயும் இதற்கு முன்னால் பன்றியாக இருந்தவன் தான்டா. இந்த உயிர் தான் பன்றியாகவும் ஆக்கியது என்கிறார்.

தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பன்றி உடலிலிருந்து பெற்ற பிறகு மனிதனாக்கிக் கொண்டு வந்தது இதே உயிர் தான் என்று காட்டுகிறார். இங்கே விளக்கம் கொடுக்கிறார் குருநாதர்.

பன்றி எவ்வாறு பல உடல்களிலிருந்து தீமையை நீக்கி… நீக்கி… வந்தது. பன்று உடலில் வலுவானதால் அதற்குத்தகுந்த உறுப்பாகி நாற்றத்தைப் பிளந்து அதில் உள்ள நல்ல மணத்தைப் பிரித்து எடுத்துச் சாப்பிடுகிறது என்று நிதர்சனமாய்க் காட்டுகிறார்.

எனக்கு ஒரு பக்கம் பயம் இருந்தது. முறுக்கையும் கடலைப் பருப்பையும் இதில் துவட்டி எடுத்து சாப்பிடச் சொல்லப் போகிறார் என்று.

1.பல உடல்களில் தீமையை நீக்கி
2.அதற்குத் தக்க உடல்கள் மாறி மாறி
3.இதே உயிர் தான் பன்றியாக உருவாக்கியது.

தீமைகளையெல்லாம் நீக்கும் உடல் உறுப்புகளைப் பன்றி பெற்றதனால் சாக்கடையில் வரக் கூடிய நாற்றத்தை எண்ணாது அதிலுள்ள நல்லதை நுகர்கிறது என்று குருநாதர் விளக்கம் சென்ன பிறகு மனது தெளிவாகி விட்டது.

நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுக்கும் வலு வளர்ச்சியான பின் பன்றி மனிதனாகப் பிறக்கின்றது.

மனிதனான பின் நஞ்சைப் பிரித்து விட்டு நல்ல உடலாக உன்னை மாற்றுகிறது. எது ஆனதோ எல்லாமே சந்தர்ப்பம் தான்.

சாக்கடை என்று எண்ணுகிறாய்.
1.நீ சுவாசிக்கும் நாற்றம் வலுவாகிறது
2.இதைச் சுவாசித்து உயிரில் பட்டபின் நாற்றமாகிறது
3.உன்னால் நல்லதைப் பிரிக்க முடியவில்லை என்கிறார்.
4.எண்ணியவுடனே நாற்றம் வந்தது.
5.எண்ணாமல் இருந்தால் நாற்றம் வந்ததா…? என்று கேட்டார்.

வீட்டுக்கு முன்னாடி தான் சாக்கடை இருக்கிறது. ஆனால் நாற்றம் தெரிகிறதா…? அந்த வீட்டுக்காரருக்கு நாற்றம் தெரிவதில்லை.

ஆனால் நாம் போனால் உடனே “அச்சச்சோ….” என்று மூக்கைப் பிடிக்கிறோம்.

ஒரு சமயம் திடீரென்று குருநாதர் வருகிறார். இங்கே வாடா… என்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போகிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு எனக்கு நாற்றம் வருகிறது. என்ன…? என்று பார்க்கிறேன். பார்த்த பின்.. சாமி…! இங்கே அசூசை இருக்கிறது பாருங்கள்… என்றேன்.

கூப்பிட்டு வரும் பொழுது முதலிலே நினைத்தாயா…? நினைக்கவிலை, அதனால் வாசனை வரவில்லை. ஆனால் கண்ணில் பார்த்தவுடன் அசூசை இருக்கிறது தெரிகிறது. வாந்தி வருகிறது.

எதனால் இப்படி வருகிறது…?
1.“நம் எண்ணத்தில் எண்ணுவதால் தான் அது வருகிறது…” என்று
2.இவ்வளவு தெளிவாகக் கொடுக்கிறார்.

உடலாக இருப்பதெல்லாம் சிவம் தான். எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ அதற்குத்தக்க உடலை உருவாக்குகிறது.

நம் உயிரணு பூமிக்குள் வரும் போது
1.எந்தச் சத்தை முதலில் நுகர்ந்ததோ அதற்குத்தக்க உடலாகிறது.
2.உடலான பின் மூஷிக வாகனா – அந்த மணத்தைச் சுவாசித்து
3.அதற்குத்தக்க வாழ்க்கை ஆகின்றது என்று
4.சாக்கடைக்கு அருகில் என்னை அமர வைத்து வியாசக பகவான் கண்டுணர்ந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

இன்று இந்தக் காற்று மண்டலம் நச்சாக இருந்தாலும் அதில் மறைந்துள்ள மெய் ஞானிகளின் உணர்வை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் ஒட்டிக் கொள்ள நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதி

 

உதாரணமாக நாகன் (பாம்பு) தன் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சுகின்றது. விஷத்தைப் பாய்ச்சி மயங்கச் செய்த பின் அதை உணவாக எடுத்து உட்கொள்கின்றது.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் உண்டு. எதனின் விஷமோ இதனில் கலந்து அதற்குள் இணைந்த பின்
1.பாம்பின் விஷம் அதை மடியச் செய்கின்றது… அந்த விஷத்தின் வலுவைக் குறைக்கின்றது
2.குறைத்த பின் அதன் உடலின் தன்மை உணவாக உட்கொள்கின்றது.
3.உட்கொண்ட பின் அந்த விஷத்தை ஒடுக்கித் தனக்குள் எடுத்துக் கொள்ளும் போது
4.இப்படிப் பல உணர்வுகள் சேர்ந்து இந்த விஷத்தின் தன்மை அடைந்த பின்
5.அதுவே ஒளியின் தன்மையாக நாகரத்தினமாக விளைகின்றது.

இதைப் போன்று தான் ஆதியிலே அகஸ்தியன் துருவனாகும் போது உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்.

வேதனைப்படுவோரை அடிக்கடி நாம் எண்ணினால் நம் இரத்த நாளங்களில் அந்த வேதனை கலந்து மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் தாக்கிய பின் அது சோர்வடைகிறது.

வேதனை என்பது விஷம். அந்த வீரிய உணர்வு கொண்டு அனைத்தையுமே மாற்றுகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். அந்த அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரப்படும் போது நம் இரத்தத்தில் கலக்கின்றது. இதை அதிகமாக உடலுக்குள் செலுத்திய பின் இரத்தங்கள் மூலம் எல்லா உறுப்புகளுக்குள்ளும் சுழன்று வருகிறது.

நாம் நுகர்ந்த வேதனை என்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் உருவாகிறது. நஞ்சினை வென்றிடும் அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகும் பொழுது அந்த நஞ்சினை மாற்றிவிடுகிறது… விஷம் பிரிந்து செல்கின்றது.

இது போன்று இப்படிப் பெருகிய உணர்வுகள் தான்
1.அணுவின் துடிப்பால் ஏற்பட்ட உணர்வுகள் அகஸ்தியனுக்குள் “மின் அணுவின் தன்மையாக” உருவானது.
2.அந்த அகஸ்தியனுக்குள் விஷம் ஒடுங்கி எப்படி மின் (பேரொளி) அணுவாக உருவானதோ
3.அதே போல நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.

இதை எல்லாம் சற்றுக் கவனமாகக் கேட்க வேண்டும். இதை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் நினைவுகள் அந்தப் பேரருளைப் பெற்ற அருள் ஞானிகளின் அருகிலேயே அழைத்துச் செல்லும்.

தீமை செய்கிறான் என்று எண்ணினால் நம்முடைய நினைவுகள் தீமை செய்பவனிடமே அழைத்துச் செல்கின்றது… அங்கேயும் இயக்குகின்றது.

அதைப் போல் நண்பன் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணினால் நினைவலைகள் அங்கே சென்று விக்கலாக நல்ல உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஒளியின் உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த ஞானியின் வட்டத்திற்குள் நாம் செல்கிறோம்.

1.மகரிஷிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்கள் வெளிப்பட்டதை குரு எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.
2.அந்த உணர்வின் வித்தினை வளர்த்தேன்
3.அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள்ளும் விளைய வைக்கின்றேன்.
4.இதன் தொடர் கொண்டு நீங்கள் எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் ஓட்டலாம்.

அதன் உணர்வின் தன்மையை நீங்களும் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யலாம். உங்களில் தீமை செய்யும் உணர்வுகளுக்கு இந்த அருள் உணர்வினை இணைத்து அதைக் குறைக்கலாம்.

இது சிறுகச் சிறுக வளர்ச்சியாக நஞ்சின் தன்மையும் குறையும். உணர்வின் மணமும் குறையும்.
1.உங்கள் உணர்வின நினைவும் விண்ணிலே செல்லும்
2.பிறவி இல்லை என்ற அழியா ஒளி நிலை பெறலாம்.

நாத விந்துவின் நாராயணா… நானும் அது தான் நாராயணா…! – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
நாராயணன் உருவமும் அவர் வீணையை வாசித்துக் கொண்டு நடப்பதுவும் தெரிகின்றது.

விளக்கம்:
மனித உணர்வில் மோதக்கூடிய எண்ணத்திற்கு இரண்டு விதமான “சரியா… தவறா…” என்ற குணம் ஓடுகின்றது. அதைப் பகுத்தறியக் கூடிய ஒலியைத்தான் நாராயணனாய் நமக்குச் சுட்டிக் காட்டிய தத்துவமே….!

தன் உணர்வின் பொக்கிஷமாய் எடுக்கும் ஒலி மனித ஞானத்திற்குத்தான் உண்டு.

சூரியனும் மற்றக் கோள்களும் செயல்படும் ஓட்டமெல்லாம்… அது அது ஓடக்கூடிய ஓட்டப் பாதையில் எக்கோள்களை எத்தொடரில் சந்திக்கின்றதோ… அதன் இயக்கத் தொடரில் தான் சூரியனானாலும் சந்திரனானாலும் வளர்ந்த எக்கோள்களும் அதனதன் இயற்கை நியதிக்கொப்பச் செயல் கொள்ள முடியும்.

ஆனால் மனித ஞானத்தின் பகுத்தறிவின் எண்ணம் தான்
1.எல்லாவற்றிற்கும் மேல் எண்ணத்தைச் செலுத்தும்
2.பல உணர்வைப் பெறத்தக்க எண்ண ஓட்டச் செயல் கொண்டது.

மனித குணத்தின் உணர்வின் செயலை… ஜீவகாந்த ஒளியை வலுவாக்கும் வளர்ச்சி… மனித உணர்விற்குத்தான் உண்டு.

மனித உணர்வின் எண்ண ஓட்டத்தில்… எண்ணும் வலுத்தன்மை கொண்ட நாம்
1.எண்ணத்தின் வலு பகுத்தறிவை எதில் செலுத்துகின்றோமோ…
2.அதற்கொத்த ஆத்ம வலுவைத்தான் இன்று நாம் பெறும் நியதி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெற்று ஒளியின் சரீரம் பெறக்கூடிய தகுதி பெறவேண்டும்.
1.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போது
2.நம்மிடம் ஒளியான உணர்வுகள் வளர்கின்றது.
3.நாமும் ஒளியாகின்றோம்.
4.அப்பொழுது மற்றவர்கள் செய்கின்ற தவறு நமக்குள் வராது.

ஆனால் தவறு செய்பவர்களையும் குற்றம் செய்பவர்களையும் திரும்பத் திரும்பப் பதிவாக்கினோம் என்றால் “இரு நான் பார்க்கின்றேன்.. உதைக்கின்றேன் உன்னை..” என்ற இந்த எண்ணங்கள் தான் வரும்.

அந்த உணர்வு இரு நான் பார்க்கின்றேன் என்ற நிலையில் நமக்குள் வந்து என்ன செய்யும்…? நம்மிடம் உள்ள நல்ல குணங்களை இருளச் செய்யும்.

இதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான் அன்று விஜயதசமி வைத்தார்களே தவிர சுண்டலையும் பருப்பையும் கொடுத்துவிட்டு… இவ்வளவு செலவு செய்தேன்…! அவ்வளவு செலவு சேய்தேன்…! என்ற நிலைக்கு அல்ல.

ஏன் என்று கேட்டால் கடையில் எடை போடும் தராசு நிறையச் சம்பாதித்துக் கொடுத்தது அதற்காக வேண்டி அந்தத் தராசுக்கு ஒரு பூஜை.

கணக்குப் போட்டதை எல்லாம் திருத்தி எழுதினேன். அரசாங்கத்தை ஏமாற்றினேன்… மற்றவர்களையும் ஏமாற்றினேன்… அதனால் பணம் வருமானம் நிறைய வந்தது என்பதற்காகக் கணக்குப் புத்தகங்கள் பணம் எல்லாவற்றையும் வைத்து இலட்சுமிக்கு பூஜை.

அதனால் உன்னை நான் வணங்குகிறேன் என்று இப்படித்தான் நாம் வணங்குகின்றோம் எப்படியென்றாலும் சரி… பணம் தேவை. ஆகையினால் உனக்குப் பணத்தை வைத்து இலட்சுமி பூஜை செய்கின்றேன்.

இலட்சுமிக்குப் பணத்தை வைப்பது; படைக்கிற சக்திக்குப் பொங்கலை வைப்பது; ஞானத்தைக் கொடுக்கும் சரஸ்வதிக்கு ஆயுதங்களை வைப்பது – இப்படித்தான் நாம் பூஜை செய்கிறோம்.

ஏனென்றால் நான் சொல்லக்கூடிய இந்த மெய் ஞானம் தான் ஆயுதமாக உங்களைத் தாக்குகின்றது.

ஆயுத பூஜை என்பது இந்த சரஸ்வதி பூஜை தான். நாம் எந்தெந்த குணங்களை எண்ணி எடுக்கின்றோமோ அது தான் ஆயுதமாக வந்து உங்களைப் பேச வைக்கின்றது.

நான் பேசுவது என் உடலை இயக்குகின்றது. நான் சொல்லக் கூடியதை நீங்கள் கேட்கின்றீர்கள். அது உங்களை இயக்குகின்றது. இது தான் ஆயுத பூஜை.
1.உணர்வு..
2.மணம்…
இது தான் அந்த ஆயுதங்கள்.

நாம் எதை ஆயுதமாக எடுக்க வேண்டும்…?

ஒரு பென்சிலை எடுத்துச் சீவினால் எழுதுவதற்கு உதவும். அந்தப் பென்சிலைச் சீவுவதற்குப் பதில் கையைச் சீவினால் அல்லது விரலைச் சீவினால் எழுதுவதற்கு உதவுமோ…?

இதைப் போல
1அருள் ஞானத்தை நாம் எடுத்து
2.எதைக் கொண்டு… எதைச் சீவ வேண்டும்…? என்ற நிலை இருக்கின்றது.
3.அது தான் ஆயுத பூஜை.

அதை நாம் பக்குவப்படுத்துவதற்காக வேண்டி அன்றைக்கு ஞானிகள் நம் உணர்வுகளில் கலக்கும் அழுக்கை எப்படித் துடைக்க வேண்டும்…? என்று ஆயுத பூஜையாகக் காட்டினார்கள்.

உணர்வுகளைத் தூய்மைப்படுத்தும் அந்த அருள் ஞானங்களை எடுக்கும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் எனக்குள் சுத்தப்படுத்தும் நிலையாக வருகின்றது.

வீடு கடையை மட்டும் சுத்தப்படுத்தினால் பத்தாது. இதைச் சுத்தப்படுத்தும் போது ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் எண்ணம் வருகின்றது.

வியாபாரம் செய்யும்போது எப்படி எண்ண வேண்டும்…?
மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்தெந்த நிலைகளில் எந்தெந்தத் தெய்வங்கள் நல்லது செய்கின்றது என்று எண்ணுகின்றோமோ
1.அந்தத் தெய்வ குணங்கள் எல்லாம் நாங்கள் பெற வேண்டும்.
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்.
3.எங்கள் உடலில் நல்ல நறுமணங்கள் வர வேண்டும்.
4.எங்களைப் பார்ப்பவர்களுக்கு நல்ல மணங்கள் தோன்ற வேண்டும்.
5.நறுமணங்கள் அவர்களுக்கு வளர வேண்டும்.
6.எங்கள் வாடிக்கையாளர் நலம் பெற வேண்டும்.
7.எங்கள் சொல்லிற்குள் இனிமை பெற வேண்டும்.
8.நாங்கள் பார்ப்பது எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எல்லாரும் ஏகோபித்துச் சொன்னால் எப்படி இருக்கும்…?

அனைவரும் இதைப் போல சொல்லும் போது மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை நாமும் பெறுகின்றோம் மற்றவர்களையும் பெறச் செய்கிறோம்.

இதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் விழாக்களை வைத்தார்கள் ஞானிகள்.

எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!

 

மனிதனுடைய வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும் இன்று நாம் அறிந்து கொள்கின்றோம்… பலராமன்…! அதே சமயத்தில் தீமையின் நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நாக்கு இருப்பதனால் நரசிம்மா…!

1.எதனையும் உட்புகாதபடி வாசல்படி (சுவாசம் உட்புகும் இடம்) மீது அமர்ந்து…
2.தீமைகள் வராதபடி ஒவ்வொன்றையும் தீமையை இங்கேயே பிளந்து விடுகின்றான்…
3.உள்ளுக்குள் சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.

ஆகவே அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் ஒவ்வொரு நிமிடமும் நாம் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆனால் தீமை செய்வான் என்று முதலிலேயே பதிவு செய்து கொண்டால்
1.அந்த தீமையை அடக்க மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்.
3.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை
4.நமக்குள் நாம் ஆழமாகப் பதித்து விட்டால்…
5.அவர்கள் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் பதிவாகாது… அதை ஈர்க்கும் தன்மையும் வராது.

காரணம்… ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் வலுப் பெறச் செய்யும் பொழுது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது பிறருடடைய தீமையின் உணர்வுகளை இது அடக்கும்.

இதைத்தான் “நீ விழித்திரு…” என்று சொல்வது.

1.எந்த நேரத்திலும்… எதனின் நிலைகள் கொண்டாலும்… நாம் ஒவ்வொரு நிமிடமும்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கே வேண்ட வேண்டும்.
4.இந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று பரப்ப வேண்டும்.

“அப்பொழுது அவன் (உயிரான ஈசன்) பார்த்துக் கொள்வான்…!”

அதை விடுத்துவிட்டு…
1.எனக்கு இது தேவை… அது தேவை…! என்றும்
2.இன்னாருக்கு நல்லதைச் செய்தேன். அவன் எனக்குத் தீமைதான் செய்கிறான் என்று எண்ணினால்
3.நம்மை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.

ஆகையினால் நாம் எந்த நல்லதைச் செய்கின்றோமோ அந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைதல் வேண்டும். அப்படி நல்லது விளைய வேண்டும் என்றால் “அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…!” என்ற இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டால் நமக்குள் தீமை விளையாது.

நம்மைப் பார்க்கும் பொழுதே அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே ஒடுங்கும். இது தான் நரசிம்மா…!

வாசல்படி மீது. நமக்குள் நுகரும் சக்தி இங்கே வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமை விளைவிக்கும் எண்ணங்கள் வராது
2.தீமையை விளைவிக்கும் அருள் வித்து இங்கே உருவாகாது
3.அந்த வினையாக வராது… வினைக்கு நாயகனாக இயக்காது…!

அது தான் கோதண்டத்தை முறித்தபின் “சீதா…” என்ற மகிழ்ச்சியைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா…!

தீமைகளை அடக்கிடும் அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.அந்த அரவணைக்கும் சக்தியை நுகர்ந்து… அருள் ஞானிகளுடன் சேர்ந்து…
2.என்றுமே மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து… மெய் ஞானிகளுடன் ஒன்றி
3.பிறவியில்லாப் பெரு நிலையை நாம் அடைய முடியும்.

நிதானத்தைக் கடைப்பிடித்தால் தான் நல்லதைக் காக்க முடியும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனித வாழ்க்கையில் நாம் பலதரப்பட்டோருடன் ஜீவிதம் நடத்த உறவாட வேண்டியுள்ளது. அப்படிப் பழகுபவர்களின் குணங்களில் தீயகுணம் நற்குணம் என்ற நிலையை அறியக் கூடிய தன்மையை நாம் எப்படிப் பெற முடியும்…?

சாதாரண நிலையில் எல்லாத் தீய குணங்களையும் தீய பழக்கங்களையும் கொண்ட கயவனின் உணர்வின் எண்ணம்
1.தன்னுடைய அதிகப்படியான சிந்தனையின் செயலை
2.எண்ணத்தில் தீயதிற்கு செயல்படுத்தியவனின்
3.சரீர உணர்வின் ஆரோக்கியத்தில் கூட அதிக பாதிப்பு இருக்காது.

ஒரு பித்தளைப் பாத்திரம் அது எப்படி உறுதி கொண்டதாக உள்ளதோ அதைப் போன்று திருடனின் குணத்தில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு அவன் செயல் உறுதி கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் சமுதாயத்தில் அவன் நல்லவனாகக் காட்டிட
1.அவனுடைய செயல் எல்லாவற்றையும் அவன் பூசிக் கொள்ளும் முலாமாக
2.எதனையும் தன்னுள் கலக்கச் செய்யும் செயலாக
3.அந்தத் தீயவனின் நிலை தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் நிலையாக
4.இன்றைய கலியின் உணர்வு நிலை செயலாகின்றது.

உதாரணமாக… மண் பாண்டத்தில் எதனையும் எந்த முலாமும் பூசாமல் அதிலே சமைத்துச் சாப்பிட முடியும்.
1.எந்தத் தீயநிலையும் மண்பாண்டத்திற்கு இருப்பதில்லை
2.ஆனால் சிறிது கவனப் பிசகு ஏற்பட்டாலும் உடைந்துவிடும் அந்த மண்பாண்டம்.

அதே போல் தான்..
1.நல்லவர்களைத் தீயவர்கள் ஏமாற்றுவது மிகவும் சுலபம்
2.தீயவனை நல்லவனாக்கவோ நல்வழிப்படுத்தவோ மிக மிகக் கடினம்.

சமுதாயத்தில் நல் உணர்வு கொண்டோர் தன் உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொருவரும் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தைச் செலுத்தி எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டுமென்ற உணர்வில் அவர்களின் செயல் செல்கிறது.

இருந்தாலும்…
1.தீய நிலைகள் மோதும் பொழுது அவர்களுடைய உணர்வெடுக்கும் அலையால்
2.பதட்டத்தின் சிதறல் மண்பாண்டத்தைப் போன்று உடைந்து விடுகின்றது.

ஆனால் நயவஞ்சகத்திலேயே எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள தீயவர்களின் குணம் எந்த நிலைகள் வந்து மோதினாலும் உடைவதில்லை. அவரின் உணர்வின் அலை பித்தளைப் பாத்திரத்தைப் போன்று…!

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் மனித ஆத்மாக்கள் எப்படி மீள முடியும்…?

நல் உணர்வு பெறும் பொழுதும் மீண்டும் மீண்டும் எண்ணத்தின் சிதறல்கள் வாழ்க்கையில் மோதும் பொழுதும் எல்லாவற்றையும் துறந்து சந்நியாசம் வாங்கியவர்கள் இந்தப் பூமியில் பலருண்டு.

இந்த நிலையில் மீளும் நிலைதான் சிந்தனையில் சீர்படுத்தும் சிகரமான ஆத்ம ஒளி பெறும் நிலை. அதாவது…
1.பதட்டமான காலங்களில் உணர்வின் எண்ணத்தை அவசர வேகத்தில் சொல் ஆற்றலை வெளிப்படுத்தாமல்
2.ஒவ்வொரு கால தருணத்திலும் எண்ணத்தின் சிந்தனையை நிதானப்படுத்தி
3.அத்தருணத்தில் மோதக்கூடிய எந்தச் செயலாக இருந்தாலும்
4.ஒரு நிமிட சிந்தனையால் உண்மையை அறியக்கூடிய நிதானத்தால்
5.மண்பானையை உபயோகிப்பதைப் போன்று உணர்வின் வேகத்தைப் பாதுகாத்தல் அவசியம்.

ஆகவே… நல்நிலையில் “ஏமாற்றும் தன்மையை..” சிந்தனையில் உணர்ந்துவிட்டோம் என்றால்
1.உணர்வை வேகமாகச் செலுத்தி தீய உணர்வலையுடன் நல்லதை மோதவிடாமல்
2.சிந்தனையில் நிதானப்படுத்தும் சொல் செயலால்
3.நல்வளர்ப்பின் நல் ஆத்மாவுடன் தீயதிலிருந்து விடுபட்டு
4.தன் ஆத்மா சிகரத்திற்கு செல்லும் சீர்படும் சிந்தனையால் ஒவ்வொருவருமே சித்தனாகலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் கொடுத்த ஞான வித்து எங்களுக்குள் நல்ல முறையில் விளைந்திருக்கின்றது என்று நீங்கள் சொல்ல வேண்டும்

நீங்கள் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்கின்றீர்கள் ஆராதனை செய்கின்றீர்கள். பழம் கனிகளை வைத்துச் செய்கின்றீர்கள்.

இதே போன்று தான் குரு காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரான ஈசனுக்கு அருள் ஞானிகள் கொடுத்த அந்த ஞானக் கனியை அபிஷேகம் செய்கின்றோம்.

மனிதர்களில் சுவை மிக்கதாக வாழ்ந்து உணர்வை ஒளியின் சிகரமாக மாற்றிக் கனியின் தன்மை அடைந்தவர்கள் மெய் ஞானிகள். அவர்கள் உணர்வுகள் தான் அந்த ஞானக் கனி.

வாழை மா பலா சேர்ந்து முக்கனி… அருள் கனி என்றெல்லாம் சொல்வார்கள். முக்கனியின் சுவை என்று சொல்வார்கள். அதைப் போல
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு சுவையின் தன்மையாகப்
2.பஞ்சமிர்தம் என்ற நிலையில் ஐந்து புலன் அறிவு கொண்டு
3.மகிழ்ந்திடும் உணர்வாகச் சமைத்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை
4.நம்மில் நாம் வளர்த்திட முடியும்.

ஆறாவது அறிவால் தெளிந்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அவருக்குள் பல கோடிக் குணங்கள் (பல கோடிக் கனிகள் போன்று) இருப்பினும்
1.இனிமை கொண்டு மகிழ்ந்திடும் உணர்வாக
2.தனக்குள் ஒருக்கிணைந்த உணர்வின் ஒளியாக இருக்கும் அந்தக் கனியை
3.ஐந்து புலனால் கேட்டுணர்ந்து உங்களுக்குள் விளையச் செய்ய முடியும்.

அத்தகைய அருள் ஞான வித்தை உங்களில் பதிவு செய்து இந்தக் கனியை அறுவடை செய்து உங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ வேண்டும்.

நண்பராக என்று இருந்தாலும் சிறிது பிழைகள் ஏற்பட்டால் அவரை நினைத்தால் கொதித்தெழும் நிலைகளும் நமக்குள் தீமை விளைவிக்கும் நிலைகளும் வரும்.

இதைப் போல நம்மை அறியாதபடி நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் பேதங்கள் உருவாகிவிடுகின்றது.

அந்தப் பேத உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து விட்டால் அந்த நண்பரை உற்று நோக்கும் போதெல்லாம் நம்மை அறியாது பேத உணர்வுகள் வந்து நமக்குள் நல்ல உணர்வுகளை மறைத்துக் கொண்டே போகின்றது.

நாம் எப்படி ஒரு குழம்பில் காரம் புளிப்பு இனிப்பு உப்பு இவை அனைத்தும் சேர்த்துச் சுவை மிக்கதாக உருவாக்குகின்றோமோ இதைப்போல நம் வாழ்க்கையில் தீமைகள் வந்தாலும் அதைக் கேட்டுணர்ந்தாலும் அருள் ஞானி உணர்வை நமக்குள் நுகர்ந்து அதைச் சமப்படுத்தி மகிழ்ந்த நிலையாக ஆக்க வேண்டும்.

எத்தகைய தீமையின் நிலைகளைக் கேட்டறிந்தாலும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் ஞானி உணர்வுகளை உயிருடன் கலந்து சுவை மிக்கதாகப் படைத்திட முடியும்.

1.பாம்பினம் எவ்வாறு அது நஞ்சினைத் தனக்குள் உணவாக எடுத்து மகிழ்கின்றதோ
2.சூரியன் நஞ்சால் அது உருவாகி நெருப்பானாலும் நெருப்பின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கி ஒளியின் சுடராக மாறுகின்றதோ
3.நஞ்சினைத் தன்னுடன் இணைத்து வைரம் எவ்வாறு ஜொலித்திடுகின்றதோ
4.நஞ்சின் இயக்கமாக நம் உயிரின் துடிப்பு இருப்பினும்
5.ஒவ்வொரு நஞ்சான உணர்வலைகள் நம்மை இயக்கினாலும்
6.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பளிச்சிடும் நிலைகள் கொண்டு
7.நஞ்சே நஞ்சற்ற நிலையாகத் தனக்குள் ஒளியின் சிகரமாக ஆகி
8.எத்தகைய நஞ்சு மோதினாலும் நம் உணர்வுகள் பேரொளியாக மாறும்.

ஏனென்றால் நஞ்சின் தாக்குதல் தாங்காதுதான் சூரியன் ஒளியின் தன்மை அடைகின்றது. ஒரு அணுவின் தன்மை தனக்குள் நஞ்சின் தன்மை தாக்கும்போது தான் அமைதி கொண்ட உணர்வின் தன்மை – நெருப்பாக மாறியது.

நெருப்பின் தன்மை அதிகமான பின் நஞ்சின் தன்மை அங்கே ஒடுங்குகின்றது. இதைப் போலத் தான்
1.நஞ்சால் உருவான நிலைகள் கொண்டு
2.நஞ்சினை அடக்கி ஒளியின் சிகரமாக மாற்றுகின்றது.

அதைப் போன்றுதான் நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வின் தன்மை நமது ஆறாவது அறிவிற்கு உண்டு. நஞ்சினை ஒளியாக மாற்றிடும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் தீமைகள் நம்மை அணுகாது காத்திட வேண்டும்.

ஒளியின் சிகரமாக வாழ்ந்திடும் அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் நாமும் இணைந்து வாழ்ந்திடல் வேண்டும்.

யாம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர்”

 

விஞ்ஞான அறிவால் பரீட்சாந்திரமாகப் பிற ஆன்மாக்கள் மீது நஞ்சு கொண்ட விஷமான உணர்வுகளைப் பாய்ச்சும் பொழுது அந்த ஆன்மாக்கள் எவ்வாறு பதை பதைக்கின்றது…?

எதை அழிக்க நஞ்சான உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தில் கண்டு கொண்டானோ அதனால் வெளி வந்த அந்த விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள் அனைத்தும் உலகில் சுழன்று கொண்டுள்ளது.
1.துன்புறுத்தும் நஞ்சு கொண்ட உணர்வின் ஆன்மாக்களாக எவ்வாறு படர்ந்து கொண்டிருக்கின்றது.
2.அதனுடைய விளைவுகள் என்ன…? என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு
3.குருநாதர் உலகம் முழுவதும் என்னைச் சுற்றுப் பயணம் செல்லச் செய்தார்கள்.
4.பன்னிரண்டு வருடம் இதையெல்லாம் அனுபவித்த பின் தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

விஞ்ஞான அறிவால் தன் ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல கடுமையான விஷம் கொண்ட இதைப் போன்ற நிலைகள் இந்தக் காற்றிலே சுழன்று கொண்டுள்ளது.

இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன…?

ஒரு உணர்வைப் பிளந்து உடல் பெறும் தன்மையை மறைத்து தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்ற முதல் மனிதன் அந்த அகஸ்தியன்.

அகஸ்தியனின் உணர்வுகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை எடுத்துச் சுவாசித்துத் தன் உணர்வுகளை ஒளியாக்கி விண் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் நமது பூமி சுழன்று கொண்டிருக்கின்றது.

அதே போல இந்தப் பூமிக்குள் உயிரணுவாகத் தோன்றி ஒளியின் சரீரமான அந்த அகஸ்தியனின் உணர்வைக் கண்டுணர்ந்து அதை நுகர்ந்து ஒளியாக மாற்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
1.“முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள்…” என்று சொல்வார்கள்.
2.சப்தரிஷி மண்டலங்களாக நமது பூமியின் சுழல் வட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படரச் செய்கின்றது.

இன்று வெகு தொலைவில் இருந்து ஒலி/ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்து தொலைக் காட்சியின் மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.

செயற்கைக் கோள்களை ஏவி விண்ணிலிருந்து ஒளி பரப்பச் செய்யும் விண்ணின் ஆற்றல்களையும் அந்த அலைகள் வெளியில் படர்ந்திருந்தாலும் அதற்குத் தகுந்த ஆண்டெனா பவரை வைத்து தரையிலிருந்து இங்கே கவர்கின்றார்கள்.

அதை விஞ்ஞானத்தின் மூலம் திரைகளிலும் டி.வி.யிலும் அந்தப் படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடிகிறது. இதைப் போல
1.மெய் ஞானிகள் கண்ட விண்ணின் ஆற்றல்களையும்
2.நாம் பார்க்க முடியும்… நுகர முடியும்… அறிய முடியும்.

அந்த மெய் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள் பெறும் வண்ணம் யாம் உபதேசிக்கும் போது
1.எந்த அளவிற்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களோ
2.உங்கள் கண் இதை ஈர்த்து உடலுக்குள் ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.
3.சாதாரணமாக உங்கள் கண் ஈர்க்கும் நிலைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆண்டெனா போன்று
4.உங்கள் கண்களுக்கு ஈர்க்கும் சக்தியைக் கூட்டும் நிலைகளுக்கே இதை உபதேசிக்கின்றோம்.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் பொழுது நான் (ஞானகுரு) கூர்ந்து அவர் சொல்லும் உணர்வைக் கேட்டு என் நினைவைச் செலுத்தி அவர் உணர்வின் ஆற்றலை நான் நுகர்ந்தேன்.

அதனின் நினைவு கொண்டு என் கண்ணின் புலனறிவுகள் ஆற்றல் மிக்கதாக மாறியது. அவர் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் எனக்குள் ஊழ்வினையாகப் பதிவானது.

அதை நான் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார். நீங்களும் அவ்வாறு பெற வேண்டும் என்ற நிலைக்குத்தான் சொல்கின்றோம்.

1.இந்த உபதேசங்களை யாரெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்கின்றனரோ
2.அவர்கள் கண்ணுக்கு (உரம் ஊட்டுவது போல) ஆற்றல் மிக்க சக்தியாக அந்த ஆண்டெனா பவர் கூடுகின்றது.

சாதாரண ஆண்டெனாவை வைத்து டி.வி.யைத் திருப்பி வைத்தால் அது பக்கத்தில் வரக்கூடிய ஸ்டேசன்களை இயக்கிக் காட்டுகின்றது.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி வெகு தொலைவில் இருக்கும் கோள்களின் செய்திகளை அறிய சக்தி வாய்ந்த ஆண்டெனாவைத் தரையிலே வைத்துக் கவரும் பொழுது அது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போலத்தான் விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகரும் ஆற்றலை உங்களைப் பெறச் செய்கிறோம்.

உங்கள் கண்ணின் ஈர்ப்பு சக்தியை அந்த ஆண்டெனா பவரைக் கூட்டுவதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

1.கண்களுக்குக் கொடுக்கும் அதீத ஈர்க்கும் சக்தியை வைத்து
2.நீங்கள் விண்ணை நோக்கி எண்ணி ஏங்கும் பொழுது
3.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.

அதை உங்கள் உடலில் வினையாகச் சேர்த்து அறியாது வந்த தீமைகளைத் துடைப்பதற்காக இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு).

ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து… ஆத்மாவை வளர்க்கக்கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

நம் சூரியக் குடும்பத்தின் மனித உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஜீவகாந்த ஒளித் தன்மையின் ரிஷி சக்தியைக் கொண்டு மண்டலக் கோள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஓடுகின்றது.

நாற்பத்தி எட்டுக் கோள்களும் சூரியனை மையமாக வைத்துச் சுழன்று… ஒன்றொன்றின் சுழற்சி வளர்ப்பின் தொடர்பலையில் செயலின் சக்தியைச் செயலாக்கும் தன்மையில்தான் ரிஷி சக்திகளின் செயலே… செயல் கொள்கின்றது.

அந்த ரிஷி சக்திகளின் செயல்… சக்தி பெற மனித உணர்வின் எண்ண ஜீவ அலைத்தொடர் பிம்பமுடன் செயல்பட்டால்தான்… உணர்வின் எண்ணத்தைச் செலுத்தக்கூடிய… அந்த ஜீவகாந்த ஒளியைத் தன் செயலுக்கு உணவாகப் பெற்று இயங்கிட முடியும்.

நம் சூரியக் குடும்பத் தொடரைப் போன்றே பல ஆயிரம் சூரியக் குடும்பங்களும் “எண்ணத்தின் உணர்வைக் கொண்டுதான்” செயல் கொள்கின்றன.

பூமியில் உயிரணுக்களாய் ஜீவன் கொண்ட மனிதனல்லாத உயிரினங்கள் பல வளர்ந்து மடிந்தாலும் எல்லாமே பூமியில் வளர்ந்த இயற்கையில் தன் உணவை… உள்ளதை உண்டு மடிகின்றன.

தன் தேவைக்கொத்த உணவுகளைத் தானே உற்பத்தி செய்து உண்ணக் கூடிய நிலை மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்கும் இல்லை. தன் உடல் அமைப்புக்கு ஒத்த பாதுகாப்புடன் பிறவியில் வளர்ந்த நிலைதொட்டு அத்தொடரின் சுழற்சியுடனே இறந்து விடுகின்றது.

ஆனால் மனிதன் தன் உணர்வின் எண்ணத்தில் உடல் உபாதையை மாற்றி அமைக்கப் பல செயல்களுக்கு பக்குவத்தைச் செயல்படுத்திக் கொள்கின்றான்.

மனிதச் செயலின் ஞானத்தைக் கொண்டு… இவ் உடல் தேவையின் இன்பத்தைப் பெறப் பல நிலைகளை அறிந்து… அதன் தொடரில் செயலின் வழித் தொடரைச் செயற்கையில் செய்விக்கும் நிலை… “மனிதனுக்கு மட்டும் தான் உண்டு…”

தெய்வ சக்தியை உணரும் பக்குவமும்… செயலும் கொண்டு… அன்றைய சித்தர்கள் தன் ஞானத்தை இயற்கையின் சக்தியில் பல உண்மைகளை இந்த மனிதச் சரீரத்தில் எடுக்கக்கூடிய உயர் ஞானமாகப் பெற்று வளர்த்தார்க்ள்.

உடல் தேவையின் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வாழும் வழித் தொடரை…
1.ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து
2.ஆத்மாவை வளர்க்கக்கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும்.

அதைப் பெற்றால் இவ் உடல் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பத்தைக் காட்டிலும் நம் உயிர் ஆத்மாவின் உண்மைச் செயலை நாம் அறியக்கூடிய தன்மையில் ஆத்மாவில் பெறப்படும் இன்பத்தின் சூட்சுமத்தை உணரலாம்.

ஆகவே நம் எண்ணத்தை ரிஷிகளின் தொடர்புடன் செயல்படும் செயல் கொள்ளும் பக்குவத்திற்கு நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் இன்றைய சமுதாய உணர்வு… செயற்கையின் பிடியில் உண்மை நிலையை அறியாத நிலையில் உள்ளதனால்
1.ஜீவனுடன் கூடிய பல ஆத்மாக்கள் பல இடங்களில் உடலுடன் சமாதி நிலை கொண்டு
2.மகரிஷிகளின் தொடர்புக்காகத் தன் உணர்வின் ஜீவனை அழியா நிலை கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

மனிதனுக்குள் உள்ள பகுத்தறியக்கூடிய உணர்வின் எண்ண ஞானத்தை உடலின் செயற்கை வாழ்க்கை இன்பத்திற்கு மட்டும் செயல்படாமல்
1.உயிராத்மாவின் உண்மை அறிந்து சகல மாமகரிஷிகளின் சக்தியை உணர்ந்து
2.இஜ்ஜீவ காந்த சரீரத்திலிருந்தே ஒளிகாந்த நிலையைப் பெறக்கூடிய பக்குவத்திற்கு
3.மெய் ஞானத்தின் சக்தி நிலையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆண்டவன் என்ற நிலையில் “அவன் நம்மைக் காப்பான்…” என்று தான் எண்ணுகின்றோமே தவிர நமக்குள் இருக்கும் “உயிர்… அவன் தான் காப்பான்…” என்ற நிலையை மறந்து விட்டோம்.

1.நாம் எண்ணியதை இயக்குவதும் உயிரே.
2.எண்ணியதை உருவாக்குவதும் உயிரே.
3.நமது நினைவாற்றலை இயக்குவதும் உயிரே.

இவையெல்லாம் நம் உயிரான ஈசனின் வேலை தான்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதை உணர்தல் வேண்டும்.

நம்மை அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும். தீமைகளை அகற்றும் பழக்கம் (பயிற்சி) வரவேண்டும்.

இன்று ஒவ்வொரு இயந்திரங்களுக்குள்ளும்/சாதனங்களுக்குள்ளும் அதற்குள் உள்ள உறுப்புகளின் இயக்கங்கள் (TECHNICAL) எவ்வாறு இயங்குகின்றது…? என்பதை விஞ்ஞான அறிவை வைத்து இஞ்சினியர் கண்டு கொள்கின்றார்.
“விஞ்ஞானி…” புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் போது அதைச் செயலுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியோ அல்லது இயந்திரமோ தேவைப்படுகிறது.

அப்பொழுது அதற்குத் தகுந்த (DESIGN AND FABRICATION) பொருள்களை உருவாக்கிக் கொடுப்பதும் அதைப் பிரிப்பதும் இயந்திரத்தை முழுமையாக உருவாக்குவதும் இன்ஜினியரின் வேலை.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த இன்ஜினியரின் நிலை போன்று
2.மெய் ஞானிகள் கண்ட வானுலகின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்தார்
3.தான் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மை கொண்டு
4.உங்கள் உடலான உறுப்புகளுக்குள் அவரவர்களுக்குத் தக்க
5.மெய் ஞானியின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் சீர்படுத்தச் செய்து
6.உடல் உறுப்புகளில் வரும் நோய்களை அகற்றிடும் உணர்வின் தன்மையை நீங்கள் பெறும்படி செய்தார்.

விஞ்ஞானி கண்டுபிடித்த உணர்வின் தன்மைக்கொப்ப இஞ்சினியரால் உருவாக்கப்பட்ட இயந்திரத்தின் உறுப்புகள் சரியாக இருந்தால் தான் அது செயலாக்கும்.
1.அப்பொழுது தான் விஞ்ஞானி கண்டுபிடிப்பும் செயலுக்கு வரும்…
2.அது வேலையும் செய்யும்.

அதே போல மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் தீமையை அகற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.

இயந்திரம் சீராக இருந்தால் தான் மற்ற உறுப்புகளும் சீராக இயக்க முடிகின்றது.

உங்கள் உடலில் நோய் இருந்தாலும் எந்த இடத்தில் வலி வருகின்றதோ ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நுகரும்படி செய்கின்றோம்.

உங்களுக்குள் அதைப் பதிவாக்குகின்றோம். இந்தப் பதிவை நினைவாக்கினால் காற்றுக்குள் இருக்கும் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் எளிதில் நுகர முடிகின்றது.

உடலில் எந்த உறுப்புகளில் வேதனை வருகின்றதோ “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிருடன் ஒன்றி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று உடல் முழுவதும் சுழலச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் உறுப்புகளான – சிறு குடல் பெரும் குடல்; கணையங்கள்; கல்லீரல் மண்ணீரல்; நுரையீரல்; இருதயம்; கண்களில் உள்ள கருமணிகள்; நரம்பு மண்டலம்; எலும்பு மண்டலம்; விலா எலும்பு; குறுத்தெலும்பு; எலும்புகளுக்குள் உறைந்துள்ள் ஊன்கள்; தசை மண்டலம்; தோல் மண்டலம் அனைத்திலும் படர வேண்டும் என்று தலையிலிருந்து கால் வரை படரச் செய்ய வேண்டும்.

1.மகரிஷிகளின் உணர்வலைகள் உடல் உறுப்புகளில் சுழன்று வரும் சமயம்
2.நோயாக இருக்கும் இடங்களில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.இந்த உணர்வின் தன்மை சீக்கிரம் இழுத்து
4.நோயான அணுக்களை அது தணியச் செய்கின்றது
5.உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்கின்றது

ஏனென்றால் விஞ்ஞான அறிவுப்படி உங்களுக்குள் மெய் ஞானத்தின் உணர்வை ஊட்டி உடலுக்குள் செலுத்தும்படிப் பழக்கப்படுத்துகின்றோம்.

விஞ்ஞான வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இந்த அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அருள் வாழ்க்கை வாழ முடியும்.

ஏனென்றால் மெய் ஞானிகள் கண்ட மெய் ஞானத்தின் உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது “உயிர்..” நமக்கு மெய் ஒளியைக் காட்டுகின்றது.

அந்த மெய் வழி கண்டு உயிருடன் ஒன்றும் அனைத்து உணர்வுகளையும் ஒளியாக்கி விட்டால் ஞானிகளைப் போன்று ஒளியின் சரீரமாகும் தகுதியை நாம் பெறுகின்றோம்.
1.உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்வோம்.

தனித்திருந்து… “விழித்திருத்தல் வேண்டும்…”

 

விழித்திரு… விழித்திரு… விழித்திரு… “தனித்திரு…!” என்ற நிலைகளைச் சொல்வார்கள். ஆனால் “விழித்திரு… தனித்திரு…” என்றால் எப்போதுமே
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் கலக்காது
2.பிறருடைய உணர்வுகள் நமக்குள் கலந்துவிடாது
3.தனித்த அந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
4.அந்த மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி நாம் தனித்து வாழ முடியும்.

இல்லை என்றால் பிறருடைய தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்கிவிடும். அதனால்தான் நீ விழித்திரு… நீ தனித்திரு… என்று காரணங்களைச் சொல்லி ஞானிகள் ஒவ்வொரு நிலைகளிலும் கூறுகின்றார்கள்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் விழித்திருந்து அந்த உணர்வின் தன்மையை தனக்குள் வளர்த்துக் கொண்டால் பிறிதொரு தீமை செய்வோருடைய உணர்வுகள் நம்மை இயக்காது.

இந்த உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் தனித்தே… தனித்தன்மையில் வாழ்கின்றோம்.

துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக மற்றொன்று இதை இயக்கிடாது அது தனக்குள் இயக்கப்பட்டு ஒளியின் தன்மையாக “தனித்தன்மையாக…” வளர்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எவரொருவர் விழித்திருந்து… தீமை தனக்குள் வளராது அது தனித்துத் தன் ஒளியின் சுடராக மாற்றினார்களோ…
1.அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சுடராக ஆகி
2.அவரவர்கள் நிலைகளுக்கேற்ப தனித்தே வாழ்கின்றார்கள் “தனித்தன்மை கொண்டு…”

ஆகவே நாம் இந்த மனிதனின் வாழ்க்கையில் நாம் எதனின் தன்மை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அடுத்தவருடைய தொடர்பு கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஒருவருக்கொருவர் இணை சேர்த்து ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ்கின்றோம்.

கோள்களும் அதே போன்று தான் அதனதன் நிலையில் வளர்ந்து அதனதன் தனித்தன்மையில் வளர்ந்தாலும் அதனில் விஷத்தன்மைகள் வளர்கின்றது. ஆனாலும்
1.சூரியன் “தனித்தன்மை கொண்டு…” வரும் நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக அது மாற்றுகின்றது
2.இதைப் போன்றுதான் நாம் தனித்திருந்து விழித்திருத்தல் வேண்டும்.

சூரியன் எப்படி நஞ்சினைப் பிரித்து அதனுடைய தனித்தன்மையைக் காட்டுகின்றதோ… தனித்த நிலைகள் அதனுடைய ஒளியின் தன்மையாக அது செயல்படுகின்றதோ… இதைப் போன்றுதான் தீமையின் உணர்வுகள் ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் சேராது நமக்குள் தனித்திருத்தல் வேண்டும்… அதே போல விழித்திருத்தல் வேண்டும்…!

ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு நல்லவருடைய உணர்வுகளையும் அறிந்தாலும் அதிலே அவர்களுடைய உணர்வுகளில் சிக்கி…
1.அவருடைய உணர்வுகளுக்கு அடிமையாகி விடாது “தனித்திருப்பது நல்லது…”
2.தனித்திருப்பது என்றால் நாம் விழித்திருப்பது நல்லது.

தீமைகள் எப்பொழுதும் நமக்குள் ஊடுருவாது அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து… அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கித் தீமைகள் தன்னை நாடாது தனித்தன்மையாக நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளிலிருந்து அகன்று… நாம் தீமையற்றவர்களாக வாழும் நிலை பெற வேண்டும்.

1.மகரிஷிகள் தனித்திருந்து… அவர்கள் விழித்திருந்ததனால் தனித்திருக்கும் நிலை பெற்றார்கள்
2.அதனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.நமது வாழ்க்கையில் விழித்திருக்கும் உணர்வும்
4.நமது வாழ்க்கையில் தனித்து வாழும் நிலைகளும் .
5.நமது வாழ்க்கையில் தீமையற்ற நிலைகளும் வளர்ந்திடும் நிலைகள் பெறுகின்றோம்.

இதை நினைவுபடுத்தும் நன்னாள் தான் சிவன்இராத்திரி.

சித்தம் தெளிவானால் வெற்றி நிச்சயம் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
அழகான தடாகத்தில் அன்னப்பட்சி நீரில் நீந்துவதைப் போன்றும்… படகில் மனிதர்கள் அமர்ந்து செல்வதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
மனிதனுடைய ஞானம் “ஒன்றைப் பார்த்தவுடன்…” அதனைத் தன்னுடைய செயலுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தனையில் அதைச் செயலாக்குகின்றான்.

நீரில் மிதக்கக்கூடிய அன்னப்பட்சியின் நிலையைப் பார்த்துத் தானும் அதைப் போன்று செயல்படுத்திக் கொள்ளும் அமைப்பாக (படகை) உருவாக்குகின்றான்.
1.இப்படிப்பட்ட சிந்தனையின் செயலுக்கு வலுப்படுத்தும் மனிதர்கள்
2.வாழ்க்கைத் தொடரில் வெற்றி பெறுகின்றார்கள்.

ஆனால் கற்பனையில் எண்ணக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை
1.சஞ்சலம்… சோர்வு… பிணி… என்று
2.தன் ஞானத்தின் வலுவைத் தான் எண்ணிய கற்பனை உணர்வுடன்
3.வாழ்க்கையை ஒப்பிடும் சிந்தனையற்ற செயலாக்கம் இல்லாத நிலையினால் அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.

கற்பனையின் உணர்வில் தான் எண்ணியதை… கவுரவத்தின் உணர்வாகச் செயலாக்குபவன் வாழ்க்கையில் தான் முன்னேறுவதில்லை.

ஆக்கத்தின் ஆக்கமாய் உணர்வின் எண்ணத்தைச் சிந்தனையில் சீர்படுத்தும் மனிதனின் குணம்… வாழ்க்கையின் செயல்பாட்டில் வெற்றி காணும் நிலை ஏற்படுகிறது

ஒவ்வொரு பொருளிலுமே அப்பொருளின் மாற்றம் எப்படி ஏற்படுகின்றது…? அதனுடைய “உஷ்ண அலையின் மாறுபாடு நிலை… சமைப்பு நிலை… ஏற்படும் தன்மை கொண்டுதான்…” ஒவ்வொரு கருவின் உருவும் வளர்கின்றது.

வளர்ச்சியில் வெளி கக்கும் கழிவு நிலை கொண்டு தான்… அதனின் சத்து நிலையை ஒவ்வொரு செயலிலும் அச்செயல் நிலையின் “உன்னத நிலை” உருவாகின்றது.

பூமியின் ஈர்ப்பில்… உயர்ந்த ஒவ்வொரு கனி வளங்களும் வளரக்கூடிய நிலையில் அவ்வளர்ச்சியின் உயர்ந்த தன்மையான உலோகங்களை நாம் பிரித்து எடுக்கின்றோம்

சாதாரணமாகத் தங்கப் படிவங்கள் வளர்ந்துள்ள மண்ணில் உள்ள தங்கப் பாளங்களை வெட்டி எடுத்து… அதைப் புடம் போட்டுத் தங்கமாக்குகின்றோம். இதைப் போன்றே பூமியில் உள்ள கனி வளங்களை நமக்கு வேண்டிய பக்குவத்திற்கு பல நிலைகளைச் செய்வித்துச் செயல்படுத்துகின்றோம்.

இதைப்போன்று இச்சரீரத்தின் உண்மை நிலையையும் நாம் உணரல் வேண்டும்.

நாம் எடுக்கக் கூடிய எண்ணத்தின் உணர்வின் உஷ்ண ஓட்டத்தால் நாசி எடுக்கும் சுவாசம் கொண்டு
1.நாசியில் (மூக்கில்) சளியும்
2.பார்க்கும் பார்வையின் ஒளி ஈர்ப்பைக் கொண்டு கண்ணெடுக்கும் ஒளி ஈர்ப்பால் கண்ணின் பீழையும்
3.செவி கேட்கும் ஒலி ஈர்ப்பால் காதில் அழுக்கும்
4.வாய் பேசும் ஒலி அலையால் வாயில் உமிழ் நீரும்
5;உண்ணும் உணவால் மலமும் சிறு நீரும்
6.பால் உணர்வின் உஷ்ண அலையின் தொடர்பால் பெண்ணிற்கு மாதவிடாயும் ஆணிற்கு விந்து நிலையும்
7.உடல் உறுப்பின் செயலில் வேர்வையும்
8.அந்தந்த உறுப்பின் அவயவங்களின் செயலுக்கொப்ப வெளிப்படும் கழிவுகள் நம் உடல் உறுப்பிலேயே செயல் கொள்கின்றதல்லவா…!

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் எண்ணத்தின் உணர்வில் மோதப் பெறும்… நடந்தது… நடக்க வேண்டியது… நடப்பது எதுவாகிலும்… உணர்வின் ஜீவித எண்ணமுடன் ஓடக் கூடிய எல்லாமே இவ்வுயிர் ஆத்மாவின் சரீர வாழ்க்கையில் எலும்பில் ஊனாகப் பதிந்து விடுகின்றது.

ஊன் நிலைக்கொப்பத்தான் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும்… இருக்கும்.

1.எதை அதிகமாக எடுத்து மனித உணர்வின் எண்ணம் பேசிச் செயல்படுகின்றதோ
2.அந்த நிலைக்கொப்ப ஊனின் பதிவு வினையாக வாழ்க்கையில் வெளிப்படுகின்றது.

கண் பார்த்துப் பொருளறியும் நிலையால் கண்ணில் எப்படிப் பீழை ஏற்படுகின்றதோ அதைப் போன்று
1.உணர்வெடுத்து நாம் பேசியது.. பேசப் போவது என்ற எண்ண உணர்வே ஊனாகி…
2.ஊனே வினையாகி… வினையே வாழ்க்கையாக… அந்த வாழும் நிலையை மாற்றுவது என்றால்
3.இச்சரீர உணர்வின் விதியால் மதி கொண்ட உயர் ஞானத்தால் மெய் ஞானம் பெறும் ஏழாம் நிலையில்
4.இது நாள் வரை இங்கே சொன்ன வழி முறைக்கொப்ப விண்ணிலிருந்து பெறும் மின் காந்த ஒளி சக்தியைக் கவர்ந்து
5.சரீர உணர்வுடன் இவ் ஊனில் பதிவாகி உள்ள பதிவு நிலையை மாற்றக்கூடிய அந்தச் செயல் தன்மைக்கு
6.ஐம்புலனின் செயலின் வீரியத்தைக் கண் காது மூக்கு வாய் உணர்வு என்ற
7.ஐம்புலனின் செயலையும் ஒரு நிலையாக்கி… மதி கொண்டு மெய் ஞானம் பெற வேண்டும்.

மெய் உணரும் உண்மையால் பரந்து கிடக்கின்ற இயற்கையில் உண்மையின் உணர்வைச் சித்தத்தின் செயலாகச் சீர்படுத்துதல் வேண்டும்.

கற்பனைக் கோலம்… கலங்கிடும் காலம்…
அனுபவ ஆற்றல்… ஆக்கத்தின் ஆக்கம்…!

 

சஞ்சலத்தில் சச்சரவை… சங்கடத்தில் சிக்கலின்றி… சிந்தனையில் சீர்தூக்கினால்…
சிந்தைதனில் சீர்படுத்த… சிந்தையின் செயலே… சீர்படும் சிகரமாகுமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கார்த்திகை மாதம் கார்த்திகை ஜோதி என்று காட்டுவார்கள்.

துவைதம் – உருவ வழியில் காட்டப்படும் போது முருகனுக்கு எப்படிக் காட்டுகின்றனர்…? (துவைதம் என்றால் கண்ணுக்குப் புலப்படக்கூடியது)
1.பல தீபங்களாகிய எல்லாவற்றையும் ஒன்றாக்கி
2.ஒரு சுடராகக் காட்டுகின்றனர்.

அதே சமயத்தில் சிவனுக்கு எப்படிக் காட்டுகின்றனர்..?
1.ஒரு ஒளி சுடராகி
2.மறுபடியும் வளர்த்து வளர்த்து ஒன்றாகி வருவதை…
3.பல தீபங்களைக் காட்டுகின்றனர்.

மனிதன் நாம் எந்தெந்த உணர்வுகளை எல்லாம் எடுத்தோமோ பல தீமைகளிலிருந்து அறிந்திடும் அறிவாக நாம் உடலாகச் சிவமாக அமைக்கின்றோம்.

ஆனால் சிவத்திற்குள் “கார்த்திகேயா…” என்று காட்டுகின்றார்கள்.

தீமைகளை நீக்கிடும் உணர்வை ஆறாவது அறிவு கொண்டு செலுத்தி
1.எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து
2.ஒரு சுடராக ஒளியின் உணர்வாக ஒன்றாக்க வேண்டும் என்று தான்
3.துவைத வழிப்படி ஆலய வழிகளில் இப்படிக் காட்டுகின்றனர்.

சிவன் ஆலயத்தில் என்ன காட்டுகின்றனர்…? பல தீபங்கள் இருக்கிறது. சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சொல்லி அதை இங்கே இலட்ச தீபத்தைக் காட்டி
1.அது ஒவ்வொன்றாகக் கூட்டிச்
2.சிவன் ஆலயத்தில் பெரிதாகக் காட்டுவார்கள்.

முருகன் ஆலயத்தில் அது எல்லாவற்றையும் காட்டி
1.ஒவ்வொன்றாகக் குறைத்து
2.ஒரு ஒளியின் சுடராகக் காட்டுவார்கள்.

சாதாரண மனிதனும் இதில் உள்ள சூட்சமங்களைப் புரிந்து கொள்வதற்குக் காட்டுகின்றனர்.

இன்று அங்கே பூஜை செய்யும் பூசாரியிடம் ஏன் அங்கே இப்படிக் காட்டுகிறார்…? என்று கேட்டால் தெரியாது.

சிவனுக்கு இப்படித் தான் காட்ட வேண்டும்… முருகனுக்கு இப்படித் தான் காட்ட வேண்டும்… என்று சொல்வார்கள்.

இது தத்துவ ஞானிகள் காட்டிய பேருண்மைகள் காலத்தால் மறைந்துவிட்டது.

சிவமாகும்போது ஒவ்வொன்றாக ஒவ்வொரு அறிவாகச் சேர்த்து இந்த உணர்வின் தன்மை மனித உடலானது. இது சிவமானது.

எல்லாவற்றையும் அறிந்திடும் தன்மை பெற்றது கார்த்திகேயா. ஆறாவது அறிவைக் கொண்டு வருகின்றார்கள். தெளிந்திடும் தெளிவான அறிவு கொண்டு வருகின்றனர்.

தெளிந்து கொண்டபின் ஒவ்வொரு நிலைகளிலேயும் அது மாற்றி ஒளியின் சுடராக ஒன்றாகி ஒரு ஒளியின் நிலை அடைகின்றது.

நான்…! என்று இல்லாது “நாம்…” என்ற கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று குருநாதர் எச்சரிக்கை செய்தார்

 

மெய் ஞானிகள் அனைவரும் இயற்கையின் பேருண்மைகளைக் கண்டுணர்ந்தவர்கள். தங்கள் உடலில் வந்த தீமைகளை அகற்றி மெய் உணர்வுகளை அவர்களுக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள்.

அவர்களின் நினைவுகளைத் தான் எனக்குள் (ஞானகுரு) பதியச் செய்து எமக்கு உபதேசித்து அருளினார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

1.மனித வாழ்க்கையில் தன்னை அறியாது வந்த சோர்வடைந்த உணர்வுக்குள்
2.அந்த மெய்ஞானிகளின் உணர்வை இணைத்து அவர்களின் நினைவு கொண்டு நீ கவர்ந்தாயானால்
3.அந்த மெய் உணர்வைப் பெறும் தகுதியை நீ பெறுகிறாய்.

அதனின் உணர்வு உனக்குள் விளைய… விளைய… உன்னிடமிருந்து வெளிப்படும் எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் உணர்வுகளில் ஓ… என்று ஜீவன் பெற்று ம்… இன்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.

இவ்வாறு நீ எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை… நீ பிறர் நலமாக இருக்க வேண்டும் என்றும்… அவர்கள் மெய் ஞானிகளின் அருள் ஆற்றல் பெற வேண்டும் என்றும்… ஏக்க உணர்வுடன் வரும் பொழுது அனைத்து உணர்வின் சத்தைப் பெற்று நீ வலுப்பெற்றவன் ஆகிறாய்.
1.அந்த உயர்ந்த சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ
2.அத்தனை பேருடைய எண்ணம் உனக்குள் வலுவாகக் கிடைக்கின்றது.

மெய் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது… இந்த உணர்வுகள் அவர்கள் உடலுடன் இரண்டறக் கலந்து… சக்தி வாய்ந்த நிலைகளாக அங்கேயும் விளைகின்றது.

விளைந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது “அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சி பெறுகின்றார்கள்…?” என்று நீ எண்ணிப் பார்க்கும் பொழுது இந்த உணர்வின் சக்தியை உனக்குள் ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றாய் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

“நாம்…” என்ற நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலு கொண்ட நிலையாக அடைகின்றோம்.

1.நான்…! என்ற நிலையில் சென்றோம் என்றால்
2.அது தனித்து நின்று மற்றவரின் உணர்வின் வலு இழக்கப்படுகின்றது… வலு கிடைக்காது.
3.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது.

குரு என்னிடம் இதை எச்சரித்தார்.

மகரிஷிகளும் ஞானிகளும் உயர்ந்த ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டார்களோ… எப்படிக் கலந்து உறவாடினார்களோ அந்த உணர்வின் சக்தியை நீ பெற வேண்டும் என்று தான் உனக்குள் அதை இணைக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகின்றேன்… ஆக “நாம்… ஆகின்றேன்…”

இதைப்போல அனைவருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அவர்களுடன் இணைந்த நீயும்… அவர்கள் ஆகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்து… அவர்கள் ஆகின்றார்கள்

இதைப் போன்றுதான் “நாம்…” என்ற நிலைகளில் அந்த அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலிருந்து பல பல தீமைகள் (நஞ்சுகள்) வந்தாலும் அந்தப் பலவும் ஒன்றாக இணைந்து சூரியன் ஒளியின் சுடராக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக இயக்குகிறது.

அதைப் போல நீயும் மெய் ஞானிகளின் உணர்வைப் பருக வேண்டும். அதைப் பருகிடும் சக்தியைப் பெற வேண்டும் என்றால் அனைவருக்கும் நீ அதைப் பெறச் செய்ய வேண்டும்.

அதனின்றுதான் நீ அதைப் பெறுகின்றாய்…! என்ற நிலையைக் குரு தெளிவாக எனக்கு வழிகாட்டினார். அவர் எனக்குக் காட்டிய அதே அருள் வழியைத் தான் உங்களுக்கும் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.குருநாதர் காட்டிய வழியில் நாம் சென்று
2.ஒளியின் சரீரமாக அனைவரும் ஆக முடியும்…! என்ற நிலைக்குத் தான் இந்த உபதேசம்…!

மனிதன் இன்பமாக இருக்க…வேண்டும் என்றால்… அதை மெய் ஞானத்தால் தான் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்

 

இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை… மனிதன் பெற வேண்டிய உண்மைச் சக்தியின் வளர்ச்சி நிலையை… ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்…!

இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய… சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.

1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி ஒளி நீரைக் கொண்டு
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி… உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி… தாழ்த்தி… வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது…? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.

அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்… மருத்துவம்… யாவையுமே உண்ண… உடுக்க… இருக்க… உடலின் தேவைக்கு சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.

1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய…
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா…?

இந்த உடலுக்கு என்று சுகம் காண… மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு… அதனால் விபரீத சுகமாக அல்லவா… இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை…!

உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்… இன்ப வாழ்க்கை இனிது நடக்க… மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது…” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.

எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ… அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.

உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை… மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்… தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான… “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!

மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க… இன்பமாய் இருக்க…வேண்டும் என்றால் அது… மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.

1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ரோட்டிலே இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கடுமையாகப் பேசுகின்றார்கள்.

இந்த மாதிரிச் சாபம் விடுவதைக் கர்ப்பமான தாய் மூன்று மாதத்திற்குள்ளே பார்த்து விட்டார்கள் என்றால் பார்த்த உணர்வுகள் கருவிலே ஆழமாகப் பதிந்து விடும்.

மூன்று மாதங்களுக்கு மேலே போனால் உருவமாகிவிடும்.

ஆனால் கருவுற்றது உரு பெறும் நிலைகளாக இந்த மூன்று மாதங்களுக்குள் இது பதிவு செய்து கொள்ளும்.

இந்த மூன்று மாதத்திற்குள் எதையெல்லாம் அந்தத் தாய் கூர்மையாகப் பதிவாக்குகின்றதோ அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடும்.

இன்று புதிதாக ஒரு செடியை எப்படி உருவாக்குகின்றார்கள்?

1.ஒரு செடியின் வித்துக்களை வைத்து முளை வரும் போது
2.மற்ற செடியுடன் இரண்டறச் சேர்த்து இழுக்க வைத்து
3.ஒரு புதிய செடியாக – இரண்டு செடியின் சத்தும் சேர்ந்ததாக உருவாக்குகின்றார்கள்

இதே மாதிரி ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் போதும்.

அந்தச் சாப வினைகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு என்ன செய்கின்றது என்று சொன்னால்
1.தாய் கண்ணுற்றுப் பார்க்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நுகருகின்றது.

சாபமிடுபவர்களைப் பார்த்து “இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அந்தத் தாய் தனக்குத் தெரிந்த நியாயத்திற்குப் பேசுகிறது. ஆனால் இது நல்ல குணங்களுக்கு எதிர் மாறானது.

அப்போது அதைப் பார்த்தவுடனே தாய் என்ன செய்கிறது…? இப்படிப் பேசுகிறார்களே… என்று ஏங்குகின்றது. இந்த உணர்வின் தன்மை கேட்கும் பொழுது “ஸ்..ஸ்ஸ்…, அப்பா…! என்று களைப்பு வருகிறது.

ஏனென்றால் கர்ப்பமாக இருக்கப்படும்போது அந்த ஆரம்பக் காலங்களில் உமட்டலாக அந்தச் சோர்வான நிலைகள் இருக்கும். அப்போது இதைத் தாங்காதபடி… “அப்பா…!” என்று எண்ணும்போது
1.இந்தச் சாபமிட்ட உணர்வுகள் நேராகக் குழந்தைக்குள் இணைந்து
2.நல்ல உணர்வைக் கொன்று
3.இந்த வித்தாக அது இணைத்து விடும்.

உனக்கு கண் தெரியாது… உன் கால் முடமாகும்… உன் குடும்பம் நாசமாகப் போகும்…! என்று சொல்லிச் சாபமிடுவார்கள்.

இதைக் கேட்டவுடனே இந்த உணர்வு அதில் விளைந்த வித்து இந்தக் குழந்தையுடன் இணைந்து விடுகின்றது.

குழந்தையுடன் விளைந்த பிற்பாடு என்னவாகின்றது…?

குழந்தை பிறக்கப் போகும் போது இவர்கள் தன்னை அறியாமலே உலகம் கெட்டுப் போய்விட்டது….! அங்கே இப்படிப் போய்விட்டது…! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

சாபமிட்டவர்கள் “உனக்குக் கண் தெரியாது…!” என்று ஒரு நான்கு தரம் பேசியிருந்தால் அந்தத் தாய் அதை நுகர்ந்திருந்தால் கருவில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின்
1.கருவிழிக்கு வரும் நல்ல உணர்வின் தன்மையை இது தடுக்கும்.
2.குழந்தை பிறந்த பின்னாடி பார்த்தோம் என்றால் குழந்தைக்கு “மாறு கண்ணாக…” இருக்கும்.

சாபமிட்டவர்கள் “உன் குடும்பம் தொலைந்து போகும்…!” என்று பேசியிருந்தார்கள் என்றால் கருவில் பதிவாகி அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து “இப்படி ஆகிப் போய்விட்டதே… இப்படி ஆகிப் போய்விட்டதே…” என்று நினைத்தார்கள் என்றால்
1.இந்தச் சோர்வின் தன்மையால் தொழில் கெடும்
2.சோர்வடையும் போது வீட்டில் சண்டை வரும்.
3.சம்பாதித்து வைத்த காசு இது தன்னாலே ஓடும்.
4.சாபத்தை – சும்மா வேடிக்கையாகப் பார்த்த கர்ப்பிணிக்கு இத்தனை நிலை ஆகிறது.

இதுவெல்லாம் நாம் தவறு செய்யவில்லை. ஆனால் சந்தர்ப்பத்தால் இப்படிப் பதிவாகி நமக்குள் விளைந்துவிடுகிறது.

இதை எல்லாம் நாம் எப்படித் துடைப்பது…? நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றைய ஞானிகள் எதைச் சொன்னார்கள்…?

1.நமக்குள் கெட்டது எப்படிச் சூழுகின்றது…?
2.அறியாமலே தீமை நமக்குள் எப்படி விளைகிறது…?
3.தீமைகளை எப்படி விலக்குவது…? என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை அமைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

ஒரு ஊர் இருந்தாலும் ஒரு கிராமம் இருந்தாலும் பத்து வீடு இருந்தாலும் கோவில் கட்டி வைத்திருக்கின்றோம். விநாயகரைப் பார்க்கிறோம். தினசரி எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

தேங்காய் பழம் வைத்து வணங்குகிறோம். பிள்ளையாரைச் சுற்றி வந்தால் பிள்ளை வரம் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்து அந்தக் கோவிலைச் சுற்றுகின்றோம்.

ஆனால் நம் வாழ்க்கையில் எதை வினையாகச் சேர்க்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றோமா…! ஞானிகள் சொன்ன அந்த நிலையைப் பற்றி ஏதாவது நினைக்கின்றோமா…?

ஞானிகள் சொன்ன நிலையை நாம் உணர்வால் எண்ணத்தால் எடுத்துத் தீமையை நீக்க வேண்டும். ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீய வினைகள் அகற்றிடும் சக்தியாக… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக “சரஹணபவா.. குகா..”
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக விண்ணிலே இருக்கின்றான்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் தீய வினைகள் சாப வினைகள் அனைத்தையும் அகற்ற முடியும். கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த அகஸ்தியனின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் கருவிலேயே ஞானியாவான்.

நம்மை அறியாமல் வரும் தீய வினைகளை அகற்றி நல் வினைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரை எங்கே பார்த்தாலும் வைத்திருக்கின்றார்கள்.

ஒரு நல்ல வித்தின் தன்மையை நாம் மாற்றி விட்டால் கனியின் தன்மை பலன் கொடுக்குமோ…? கொடுக்காது.

ஆகவே நம் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும்
1.தீமைகளிலிருந்து மனிதர்கள் அகல வேண்டும் என்பதற்காகத் தான்
2.குருநாதர் சொன்ன அருள் வழிகளை இங்கே உணர்த்துகின்றோம்.

நோய் உருவாகாதபடி நாம் விழித்திருக்க வேண்டியதன் அவசியம்

 

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி நாம் வேதனைப்படும் உணர்வுகளை எடுப்போம் என்றால்
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகளில் அது சுரக்கும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
2.வேதனை உணர்வுகள் உறையப்பட்டு அது மோதப்பட்டு அதனின் உணர்வுகள் கற்களாக உருபெறுகிறது.

அவ்வாறு உருப்பெற்று விட்டால் இந்தப் பித்தத்தையே விஷம் கொண்ட கற்களாக அது மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்று சிறுநீர்ப் பைகளிலும்… இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னியில் மணலைப் போன்று அது தேங்கி விட்டால் அந்த விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து விஷத்தையே தனக்குள் எடுத்து இரத்தத்தில் வரும் மாசுகளைச் சுத்திகரிக்கும் தன்மை இழந்துவிடுகிறது

கிட்னி பழுதடைந்து விடுகின்றது. அதனின் உணர்வின் தன்மை உடல் முழுவதும் தீமையை உருவாக்கும் நிலையாக உருவாகி விடுகின்றது.

பின் உடல் முழுவதும் விஷத் தன்மைகள் பரவி அடுத்து மாற்று உறுப்புகளை மாற்றித்தான் விஞ்ஞான அறிவு கொண்டு வாழ வேண்டி உள்ளது. அப்படிச் செயல்பட்டாலும் அதிலிருந்து முழுமையாக மீள்வது என்பது மிகவும் கடினமாகி விடுகிறது.

இதைப் போன்றுதான் நாம் சுத்திகரிக்கும் உறுப்பான கல்லீரல் போன்ற உறுப்புகளில் விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகரித்து விட்டால் அங்கே உணர்வின் தன்மை வளர்ச்சி பெறப்படும் போது அதுவும் பாழடைகிறது.

ஏனென்றால்…
1.சில கடுமையான நிலைகளை உருமாற்றும் அல்லது கரைத்திடும் திறன் கொண்ட
2.அமிலத்தை உருவாக்கும் திறனை நம் கல்லீரல் இழந்து விட்டால்
3.மற்ற கடின பொருள்களைக் கரைக்கச் செய்யும் தன்மையும் அது செயல் இழந்துவிடுகிறது.

இதைப் போன்று வாழ்க்கையில் நாம் எடுக்கும் விஷத் தன்மையான உணர்வுகளால் நஞ்சான அணுக்கள் விளையத் தொடங்கி விட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாழடையும் தன்மையே அடைகிறது.

இயற்கையிலே ஒவ்வொரு இனப் பறவைகளும் தன் தன் குஞ்சுகளுக்கு என்று அது உணவைத் தேடிச் சென்று அதை வாயிலே ஊட்டுகின்றது.

எப்போது…?

அந்தக் குஞ்சுகள் இரைக்காக ஏங்கி இருக்கும் பொழுது அதனதன் இனம் அதனதன் வழியில் உணவாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது. இதைப் போன்றுதான்
1.நம் உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் நம் உயிரே தாயாகின்றது.
2.அதனால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு அது எதனின் வழியில் வேதனையின் நிலைகள் உருவானதோ
3.அந்த வேதனையான உணர்வு தான் அதற்கு உணவாகத் தேவை.
4.அதே வேதனை உணர்வைத்தான் உயிர் உணவாகக் கொடுக்கும்.
5.வேதனையால் உருவான அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டி ஏங்கப்படும் போது
6.உயிர் (தாய்) காற்றிலிருந்து கவர்ந்து அந்த வேதனையான அணுக்களுக்கு உணவைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றது.

நல்ல குணங்கள் கொண்டும் நாம் வாழ்ந்திருப்பினும் வேதனை என்ற குணங்கள் வரும் பொழுது அதனின் ஆற்றல் பெருகி விடுகின்றது. அதனின் மலங்கள் உடலில் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல குணங்களுக்குக் கிடைக்கும் உணவு தடையாகி… அதனின் வலு இழக்கப்படுகின்றது.
1.சரியான வளர்ச்சி பெறுவதில்லை
2.நாம் நல்லதை எண்ணினாலும் நம்மால் முடியாது போகிறது.

அது காலத்தால் தடைப்படும் போது அந்த விஷத்தை உருவாக்கும் விஷ அணுக்களின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகப் பெருகி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.ஒரு புளியங்கொட்டை அது மண்ணில் செடியாக முளைக்கும் போதே
2.அதைக் கிள்ளி எறிந்து விட்டால் ஒன்றும் சிரமமில்லை
3.அதைப் பிடுங்க கோடாரியோ மற்ற ஆயுதமோ தேவையில்லை.

ஆனால் பெரிய மரமாக வளர்ந்த பின் அதை வெட்டக் கோடாரி அவசியம் தேவை. ஏனென்றால் மரங்களைக் கோடாரி போன்ற போன்ற ஆயுதத்தை வைத்துத் தான் வெட்ட முடியும்.

ஆனால் செடி சிறியதாக இருக்கும் பொழுது தெரிந்து கொண்டால் எளிதாக நீக்க முடியும். அதனால் தான் விழித்திரு…! என்று சொல்வது

மரம் பெரிதாக வளர்ந்த பின் அதனுடைய விழுதுகளைப் பாய்ச்சி விட்டால் கட்டிடத்தையே பலவீனமாக்கிவிடும்… நடந்து போகும் பாதையும் தடுத்துவிடும்.

ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டால் பாதையும் மறைக்காது… கட்டிடத்தையும் இடிக்காது. ஆகவேதான் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.நமது வாழ்க்கையில் எந்த வழியில் தீமை என்ற உணர்வை நாம் நுகர்ந்தாலும்
2.அடுத்த கணம் அது நம் உடலுக்குள் வளராது விழித்திருத்தல் வேண்டும்.

தீமைகளைக் கேட்டுணர்ந்த பின்… அல்லது பார்த்துணர்ந்த பின்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தச் சக்திகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த வேதனையை உருவாக்கிய உணர்வுக்குள் மகரிஷிகளின் உணர்வை இவ்வாறு பாய்ச்சப்படும் போது அதை அடக்கி அதன் தன்மையை மாற்றிவிடும்.

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…” ஈஸ்வரபட்டர்

 

ஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.

1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்
2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.

உணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல…” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.

ஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.
1.அதனையே சமைக்கும் பொழுது
2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.

சமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.

செயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை…” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது…?

இக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிச் செயலாகின்றது. அதைப் போன்று…
1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி
2.அதைத்தான் உண்மை…! என்று நாம் உணர்ந்து
3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.

உணர்வலையாக எண்ணுவதை… காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை… தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்…”

திடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.

சித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி… தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக… என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.

1.ஏகாந்த நிலைக்கும்…
2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்… தொடர்புண்டு.

ஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்… சலிப்புடன்… மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.

தெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து… மெய் உணரும் வழியை அறிய… தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.

சித்து நிலையின் அஷ்டமாசித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.

இரு மனத்தின் திருமணமே
இல்லறத்தின் நறு மணமே
இறையுணர்வின் வழியறிந்தே
இவ்வுலகின் காவியத்தில்
இருளகற்றும் ஒளிச்சுடராய்
இனியதொரு வாழ்வமைப்போம்

இடும்பனான குணமகற்றி
இறையருளின் நற்குணத்தில்
ஈன்றெடுக்கும் கனியமுதே
ஈசனருள் பொக்கிஷமே…!

இல்லத்தில் இனிய வித்திட்டு
இனிய குண வளர்ப்பாக
இல்லறத்தில் நீர் ஊற்றி
இன்பத்தின் இனிமை பெற்றிடவே

ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாய்
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவால் பரீட்சாந்திரமாகப் பிற ஆன்மாக்கள் மீது நஞ்சு கொண்ட விஷமான உணர்வுகளைப் பாய்ச்சும் பொழுது அந்த ஆன்மாக்கள் எவ்வாறு பதை பதைக்கின்றது…?

எதை அழிக்க நஞ்சான உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தில் கண்டு கொண்டானோ அதனால் வெளி வந்த அந்த விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள் அனைத்தும் உலகில் சுழன்று கொண்டுள்ளது.
1.துன்புறுத்தும் நஞ்சு கொண்ட உணர்வின் ஆன்மாக்களாக எவ்வாறு படர்ந்து கொண்டிருக்கின்றது.
2.அதனுடைய விளைவுகள் என்ன…? என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு
3.குருநாதர் உலகம் முழுவதும் என்னைச் சுற்றுப் பயணம் செல்லச் செய்தார்கள்.
4.பன்னிரண்டு வருடம் இதையெல்லாம் அனுபவித்த பின் தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

விஞ்ஞான அறிவால் தன் ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல கடுமையான விஷம் கொண்ட இதைப் போன்ற நிலைகள் இந்தக் காற்றிலே சுழன்று கொண்டுள்ளது.

இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன…?

ஒரு உணர்வைப் பிளந்து உடல் பெறும் தன்மையை மறைத்து தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்ற முதல் மனிதன் அந்த அகஸ்தியன்.

அகஸ்தியனின் உணர்வுகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை எடுத்துச் சுவாசித்துத் தன் உணர்வுகளை ஒளியாக்கி விண் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் நமது பூமி சுழன்று கொண்டிருக்கின்றது.

அதே போல இந்தப் பூமிக்குள் உயிரணுவாகத் தோன்றி ஒளியின் சரீரமான அந்த அகஸ்தியனின் உணர்வைக் கண்டுணர்ந்து அதை நுகர்ந்து ஒளியாக மாற்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
1.“முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள்…” என்று சொல்வார்கள்.
2.சப்தரிஷி மண்டலங்களாக நமது பூமியின் சுழல் வட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படரச் செய்கின்றது.

இன்று வெகு தொலைவில் இருந்து ஒலி/ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்து தொலைக் காட்சியின் மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.

செயற்கைக் கோள்களை ஏவி விண்ணிலிருந்து ஒளி பரப்பச் செய்யும் விண்ணின் ஆற்றல்களையும் அந்த அலைகள் வெளியில் படர்ந்திருந்தாலும் அதற்குத் தகுந்த ஆண்டெனா பவரை வைத்து தரையிலிருந்து இங்கே கவர்கின்றார்கள்.

அதை விஞ்ஞானத்தின் மூலம் திரைகளிலும் டி.வி.யிலும் அந்தப் படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடிகிறது.

இதைப் போல மெய் ஞானிகள் கண்ட விண்ணின் ஆற்றல்களையும் நாம் பார்க்க முடியும்… நுகர முடியும்… அறிய முடியும்.

அந்த மெய் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள் பெறும் வண்ணம் யாம் உபதேசிக்கும் போது
1.எந்த அளவிற்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களோ
2.உங்கள் கண் இதை ஈர்த்து உடலுக்குள் ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.

சாதாரணமாக உங்கள் கண் ஈர்க்கும் நிலைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆண்டெனா போன்று
1.உங்கள் கண்களுக்கு ஈர்க்கும் சக்தியைக் கூட்டும் நிலைகளுக்கே
2.இதை உபதேசிக்கின்றோம்.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் பொழுது நான் (ஞானகுரு) கூர்ந்து அவர் சொல்லும் உணர்வைக் கேட்டு என் நினைவைச் செலுத்தி அவர் உணர்வின் ஆற்றலை நான் நுகர்ந்தேன்.

அதனின் நினைவு கொண்டு என் கண்ணின் புலனறிவுகள் ஆற்றல் மிக்கதாக மாறியது. அவர் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் எனக்குள் ஊழ்வினையாகப் பதிவானது.

அதை நான் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.

நீங்களும் அவ்வாறு பெற வேண்டும் என்ற நிலைக்குத்தான் சொல்கின்றோம். இந்த உபதேசங்களை யாரெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்கின்றனரோ அவர்கள் கண்ணுக்கு (உரம் ஊட்டுவது போல) ஆற்றல் மிக்க சக்தியாக அந்த ஆண்டெனா பவர் கூடுகின்றது.

சாதாரண ஆண்டெனாவை வைத்து டி.வி.யைத் திருப்பி வைத்தால் அது பக்கத்தில் வரக்கூடிய ஸ்டேசன்களை இயக்கிக் காட்டுகின்றது.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி வெகு தொலைவில் இருக்கும் கோள்களின் செய்திகளை அறிய சக்தி வாய்ந்த ஆண்டெனாவைத் தரையிலே வைத்துக் கவரும் பொழுது அது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போலத்தான் விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகரும் ஆற்றலை உங்களைப் பெறச் செய்கிறோம்.

உங்கள் கண்ணின் ஈர்ப்பு சக்தியை அந்த ஆண்டெனா பவரைக் கூட்டுவதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

கண்களுக்குக் கொடுக்கும் அதீத ஈர்க்கும் சக்தியை வைத்து நீங்கள் விண்ணை நோக்கி எண்ணி ஏங்கும் பொழுது சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.

அதை உங்கள் உடலில் வினையாகச் சேர்த்து அறியாது வந்த தீமைகளைத் துடைப்பதற்காக இதைச் சொல்கின்றோம்.

மனிதர்களுக்குள் நாம் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிகை வாயிலாக எங்கோ ஆக்ஸிடன்ட் ஆன நிலைகளைப் படிக்கும் பொழுது எண்ணத்தைக் கூர்ந்து செலுத்தி விட்டால் அதிர்ச்சி வேதனை பயம் போன்ற தீமைகளை நமக்குள் விளைவிக்கின்றது.

நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் வந்து இயக்கி விடுகின்றது.

பத்திரிக்கை வாயிலாக நாம் படித்துணர்ந்த அந்த எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.

அதை மீண்டும் எண்ணும் பொழுது பதிவான அதே எண்ண அலைகளைக் குவித்து நம்மை உணரச் செய்கின்றது. அதன் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
1.எப்படியெல்லாம் அவர்கள் வேதனைப்பட்டார்களோ
2.அதே வேதனை நமக்குள் விளையும் தருணமும் வந்து விடுகின்றது.

இதே போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துத் தான் தடுத்து நிறுத்த முடியும்.

சலிப்பு சோர்வு கோபம் வேதனை வெறுப்பு ஆத்திரம் இத்தகைய உணர்வுகள் எல்லாம் சாதாரண ஆண்டெனாவில் கவருவது போல நமக்குள் வந்து விடுகின்றது.

அவைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த மெய் ஞானிகளின் உணர்வு தேவை. அதைக் கவர நமக்கு அந்த அதீத ஈர்க்கும் சக்தியும் தேவை.

சக்தி பெறும் நிலைக்குத் தான் குருநாதர் ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறுத்தும் உணர்வுகளை செயற்கையாக எனக்குள் பாய்ச்சி
1.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக
2.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருகப் போகின்றாய் என்று கேள்வி எழுப்பினார்.

பின் அந்த விண்ணின் ஆற்றலை எனக்குள் எடுக்க வேண்டிய முறைகளை உபதேசித்து செய்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை அவர் ஊட்டினார். அவர் ஊட்டிய பக்குவ நிலைகளை நான் எடுத்துக் கொண்டேன்.

மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவர்கள் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது என்று இருபது வருட காலம் அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

குருநாதர் எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகினேன். அவரைக் கூர்ந்து நான் கவனிக்கும் பொழுது அதனின் தன்மை ஊழ்வினையாகப் பதிவாகியது.

மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து எனக்குள் பெருக்கி அறியாது சேர்ந்த தீமைகளையும் துன்பங்களையும் நீக்கினேன்.

குருநாதர் காட்டிய வழியில் அதைக் கடைப்பிடித்தேன். தீமைகளை நீக்கிய அந்த அருள் உணர்வுகளைச் சொல்லால் சொல்லி உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிய வைக்கின்றேன்.

இதை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணிணீர்கள் என்றால் அந்த மெய் ஞான உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்கள் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கச் செய்யும்.

மற்றவருடன் பேச்சுத் தொடரானாலும்… நம் நினைவுகள் உயிருடன் ஒன்றும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

 

இராமன் எப்பொழுது கல்யாணராமன் ஆகின்றான்…?

தீமைகளை விளைவிக்கும் வில்லை… அந்த அம்பினை ஒடித்து விடுகின்றான். தீமைகள் செய்யாத உணர்வினை எப்பொழுது தனக்குள் விளைவிக்கின்றானோ அப்போதுதான் மற்றவரை அரவணைக்கும் தன்மை வருகிறது… சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்… கல்யாணராமா.

அரவணைக்கும் உணர்வைத் தனக்குள் சேர்த்து… பேரன்பு கொண்ட உணர்வினை வளர்த்து ஒன்றிய நிலைகள் கொண்டு இயக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் “கல்யாணராமா…!” என்று காவிய காப்பியங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

எத்தகைய தீமையின் உணர்வுகள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அதை எண்ணி தீமை நமக்குள் விளைந்து விடாது அதை ஒழித்தல் வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தீமை செய்யும் உணர்வே நமக்குள்ளும் வரும். நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்திடும் எண்ணங்களையே அது உருவாக்கும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று என்ற உணர்வினை நமக்குள் இணைத்தால்
1.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாதபடி
2.அருள் உணர்வின் தன்மையை அரவணைப்பதாகக் கல்யாணராமனாக மாற முடியும்.

நம் உடலில் இதனின் வலிமை ஆகிவிட்டால்
1.யார் நமக்குத் தீமை செய்தனரோ அதை அடக்கும் நிலைகள் வரப்படும் பொழுது
2.இதே உணர்வின் எண்ணங்கள் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்கள் உணர்வுகளை அடக்கும் தன்மை வருகின்றது.
3.அவருடைய செயலாக்கங்கள் அவர்களையே ஒடுக்கிவிடும்
4.யார் ஒருவர் தீமை எண்ணுகின்றனரோ அவருள்ளே நின்று அவர் அதற்குள்ளேயே மடிவர்.

ஆகவே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் விளையும் தீமையை அடக்கி வலிமை மிக்கதாக மாற்றிக் கொள்ளலாம்.

இதைத்தான் விழித்திரு…! என்ற நிலைகளில் மகா சிவன்ராத்திரி என்று காட்டுகின்றார்கள்.

இந்த உலகில் ஒவ்வொரு நாளும் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் பார்த்தாலும் அந்தத் தீமை நமக்குள் விளையாதபடி ஒவ்வொரு நொடியிலும் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

பத்திரிகையைப் பார்த்துப் படித்தபின் அல்லது டி.வியைப் பார்த்தபின் அவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் இதைச் செய்தார்கள்… கெடுதல் செய்தார்கள்…! என்று
1.மற்றவர்கள் பார்த்தவர்கள் பதிவு செய்ததை எண்ணத்தால் எண்ணி நாம் பேசும் பொழுது
2.அதே உணர்வு நமக்குள் பதிவாகி எந்த நிலையை அவர்கள் செய்தார்களோ அதையே நுகர்ந்து
3.மோசமான ஆள்…! என்று நாமும் அந்தக் கெடுதலையே பேசத் தொடங்குவோம்.

அப்போது அவர்கள் எத்தகைய மோசம் செய்தார்களோ அதே மோசத்தின் தன்மை நமக்குள்ளும் விளைகின்றது இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் உடனடியாக மாற்றுதல் வேண்டும்.

இதற்குத் தான் நீ விழித்திரு என்று சொல்வது…! ஏனென்றால் இதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

நாம் மறந்து இருந்தாலும்… அடுத்த கணமே…
1.மற்றவருடன் பேச்சுத் தொடரான பின் நம் நினைவின் ஆற்றலை உயிருடன் புருவ மத்தியில் ஒன்ற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
4.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்
5.எங்களைப் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும்
6.நாங்கள் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று இந்த உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

பகைமையான உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் அதே உணர்வுக்கு அது இரை தேடும்… அதற்கு உணவு கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் இணைத்து
2.அந்தத் தீமைகளை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

சிந்தனைச் சிலையைச் சீர்படுத்தத் தான் தெய்வச்சிலையை வைத்தார்கள் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்

 

நம் முன்னோர்கள் ஒலியின் நாதம் கொண்டு ஒளித் தன்மை வளரும் உண்மையைத் தன் சித்தத்தில் அறிந்து கொண்டனர்.

சூரியனும் சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கும்… பூமியின் தொடர்பு பெற்ற இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும்… சனிக் கோளில் உருவாகிக் கரையும் பன்னிரண்டு கோள்களுக்கும் தொடர்பு கொண்டு… பன்னிரண்டு மாதங்களின் நாமகரணத்தை ஒலியின் ஒளியால் சூட்டினார்கள்.

இயற்கையின் தொடர்களை…
1.கோள்களின் ஈர்ப்பில் விகித கணிதத்தை வான சாஸ்திரத்தில் அறிந்த தொடரில்
2.ஒவ்வொரு ஜீவ உயிரின் வீரியமுமே… மூன்று நட்சத்திர ஒலி ஒளி பெற்ற பின் தான்
3.ஜீவ உயிரணு உயிர் பெறுகின்றது.

மனித நிலை பெற்ற பின் அடுத்த நிலை பெற மனித உணர்வின் எண்ண அலையின் ஜீவகாந்த ஈர்ப்பு வலுப் பெறுவதினால்… வலுவின் தொடர் இப்பூமி இழுக்கும் ஒலி அலைகளைக் காட்டிலும் மனித ஜீவ உணர்வின் வீரியம் பெற்று விடுகின்றது.

பூமியின் தொடரிலேயே… நடைமுறை வழக்கத்திற்கொப்ப மனிதன் வாழ்ந்தான் என்றால்
1.இப்பூமி எதன் தொடரில் சக்தி பெற்று… சமைத்து பூமியின் வளர்ப்பின் வளர்ச்சி சுழற்சி வளர்கின்றதோ
2.அதன் அதன் ஈர்ப்புப் பிடிப்பில் தான் இப்பூமியில் பிறந்த நாம்
3.இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சியுடன் சுழன்று கொண்டிருக்க முடியும்.

ஜீவகாந்த பகுத்தறியும் எண்ண உணர்வைக் கோள்களின் தொடர்புடன் மனிதன் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மனிதனின் உண்மை நிலையை சிவரூபத்தில் உணர்த்தினார்கள் நம் முன்னோர்களாகிய அன்றைய ரிஷிகள்.

சிக்கலைத் தீர்க்க சிலை வைத்தான்
சிந்தனைச் சிலையை (மனித உடல்) உணர்ந்தானா…?

சிறுமையின் உருவாய் சிலையென்று
சந்தியில் நிற்கும் நிலையென்ன…?

சஞ்சலத்தில் சச்சரவை
சங்கடத்தில் சிக்கலின்றி
சிந்தனையில் சீர்தூக்கி
சிந்தைதனில் சீர்படுத்து…!
(சிவன் படமும் விளக்கமும்)

இதன் தொடரை மனிதன் பெற்றால் மனித நிலை தெய்வ நிலை பெறக்கூடிய தொடர்பிற்கு வளர முடியும். ஒளி கொண்டு ஒளி பெறும் ஆத்ம பலத்தின் தொடர்பைப் பெறலாம். ஆகவே இயற்கையின் தொடர்புடன் உயரும் நிலை தான் தெய்வ நிலை.

இப்புவியின் ஈர்ப்பில் வளரும் கனிவளங்களும் மற்றத் தாவரங்களும் சத்தெடுத்து அதனதன் மாற்றுத் தன்மை சிலவற்றில் வீரியமாக இருப்பது போன்று
1.இயற்கையின் ஒலித்தன்மையில் மனித ஜீவாத்மாவில் சிலருக்கு
2.சரீர உணர்வின் ஜீவ நிலையே ஒளித் தன்மை கூடியிருக்கும்.

அத்தொடரில் இயற்கையை ஒன்றி… கோள்களின் தொடர்புடன் எண்ணத்தில் ஒளிரும் ஆத்மா… நட்சத்திர நிலை போன்று என்றுமே மாறாத நிலையில்… இப்பால்வெளி மண்டலத்திலுள்ள எண்ணிலடங்கா அமிலத்தின் சமைப்பை எடுக்கவல்ல “ஜோதி நிலை பெற்று… வளர்ச்சியின் வளரும் நிலை பெறலாம்…”

ஆனால்… மனித நிலையிலேயே பிற ஆத்மாவின் ஈர்ப்பின் ஒலி அலைகள் சாடும் நிலைக்குத் தன் ஆத்மாவை அடகு வைக்கும் நிலை தான் “மந்திர தந்திர மாய நிலை…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்தில் நான்கு பையன்கள் இருப்பார்கள். திருமணம் எல்லாம் ஆன பிற்பாடு அதில் ஒருவர் மிகவும் செல்வச் செழிப்பாக இருப்பார். வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அதே சமயம் இன்னொரு பையன் குடும்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். தொழில் மற்றவைகளில் சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்.

வசதியாக இருப்பவரிடம் சென்று பண உதவி கேட்கும் பொழுதெல்லாம் அவரும் உதவி செய்கின்றார். பணம் வாங்கினாலும் சிரமப்படுபவரோ அதிலிருந்து மீள முடியவில்லை.

பண உதவி செய்தவர் எடுக்கும் எண்ணம் எப்படி வருகின்றது…?

நாம் எத்தனையோ தடவை உதவி செய்தோம்…! ஆக அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கொடுத்துத் தவித்துப் போய்விட்டது என்று வேதனைப்படுவார்கள்.

வேதனைப்பட்டாலும்… எப்படியோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சரி… என்று மீண்டும் பணம் கொடுப்பார்கள்.

அந்தப் பணத்தை வாங்கும் பொழுது “ஊ..ஹ்ம்..,” இவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது…! ஏன்…? எனக்குக் கொஞ்சம் கூடப் பணம் கொடுக்கக் கூடாதா…! என்று இந்த வேதனையை எடுத்து பண உதவி செய்பவர்களைச் சாடுவார்கள்.

உதவி செய்யும் நோக்கத்தில் பணம் கொடுத்தாலும் பின்னாடியே இந்தச் சாபமும் வருகிறது.
1.நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.
2.மனிதன் ஆறாவது அறிவு மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று செய்தாலும்
3.அது் சித்திரை – சிறு திரையாக அந்தத் தீமைகள் மறைக்கின்றது.

சிரமப்படுவோர் குடும்பத்திலே அவர் அறியாது சேர்த்த நஞ்சின் தன்மையால் வாழ்வில் கஷ்டப்படுகின்றார்கள்.

பாலில் பாதாமைப் போட்டாலும் நஞ்சு விழுந்து விட்டால் அதைக் குடித்தால் எப்படி இருக்கும்…? நம்மை மயக்கப்படச் செய்யும்.

இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த நஞ்சு அவர்களை அறியாது அவ்வாறு செயல்படுத்தி விடுகின்றது. என்ன செய்வார்கள்…?
1.அதிலிருந்து மீள முடியாது.
2.சிந்திக்க முடியாது. மறைத்து விட்டது… இது சித்திரை.

இதைப் போன்று வரும் தீமைகளை நீக்க வேண்டுமல்லவா…?

ஒருவருடைய தீமையினுடைய நிலைகளை அகற்ற இரக்கம் கொண்டு பாவம் கஷ்டப்படுகின்றார் என்று எண்ணி அவர் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக “இந்தாப்பா… என்று ஒரு ஐம்பது அல்லது நூறு ரூபாயைக் கொடுக்கின்றோம்.

நூறு ரூபாய் கொடுத்ததும் அவர் என்ன நினைப்பார்…? இந்த நூறு ரூபாய் எந்த மூலைக்குக் காணும். பத்தவே பத்தாது…!

இவ்வளவு வசதி படைத்தவர் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாதா? வசதியாக இருக்கின்றவர் வெறும் நூறு ரூபாய் கொடுக்கிறார். ஏன்…., ஆயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாதா…! என்று இந்த எண்ணம் வரும்.
1.ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும்
2.இவருடைய நிலைக்கு எந்த வியாபாரமும் சரியாக வராது.

ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வியாபாரத்தைச் சரி செய்து விடலாம் என்பது ”பணம் வாங்க வேண்டும்…” என்று விரும்புபவருடைய எண்ணம்.

1.மனம் சீர்படவில்லை என்றால்
2.இந்த ஆயிரம் ரூபாயும் கரையத்தான் செய்யும்… வளர முடியாது.
3.மனம் சோர்வடைந்து விட்டாலும் வேதனைப்பட்டாலும் இந்த ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும்
4.இந்த உணர்வு… தன்னுடைய மனமே தனக்கு எதிரியாகி விடும்.

என் குடும்பம் இப்படி இருக்கின்றதே என்று வேதனை எடுக்கும் போது அந்தக் கஷ்டமான நேரத்தில் என்னென்ன எண்ணங்கள் வரும்…?
1.அவன் அப்படிப் பேசுகின்றான்.. இவன் இப்படிப் பேசுகின்றான்…
2.என்னை ரொம்பக் கேவலமாகப் பேசுகின்றான்
3.காசு இருந்தால் தான் என்னை மதிக்கின்றார்கள்
4.என்னை யாருமே இப்போது மதிக்கவில்லை என்ற இந்த உணர்வுகள் தான் வரும்.

இதை இப்படி எடுத்துக் கொண்டபின் இது அடுத்துப் பேசும் போது சொல்களும் அதுவாகத் தான் வரும்.

சில பேர் என்ன செய்வார்கள்…? மிகவும் கஷ்டமாக இருக்கும் போது அவர்களிடம் ஒரு நூறு ரூபாய் கேட்டுப் பாருங்கள். அவர்கள் விடும் “பெரு மூச்சையும்… பார்வையையும்… அந்தச் சொல்லையும்… பாருங்கள்.
1.அவர்கள் நல்லதாகத் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
2.ஆனால் அந்த உணர்வு விடவில்லை.

இசைக் கருவியில் உதாரணமாக வீணையில் ஒரு நரம்பு சுருதி தளர்ந்து விட்டால் என்ன செய்யும்…? நாதங்கள் மாறி விடும்.

ஏழு சுருதி இருக்கின்றது. அந்த நரம்புகள் இறுக்கமாகச் சரியான முறையில் பொருத்தப்பட்டிருந்தால் சுருதி சமமாக இருக்கும். வெளிப்படும் நாதங்கள் இனிமையாக வரும்.

அந்த நரம்புகள் கொஞ்சம் தளர்ந்து விட்டால்
1.எப்படி நாதங்கள் மாறுகின்றதோ இதைப்போல
2.மனிதனின் உணர்வுகள் மாறும் பொழுது
3.வெளிப்படும் நாதங்கள் அந்தச் சொல்கள் மாறும்.

அவனுக்குள் இயக்கும் நிலைகள் அப்பொழுது அந்த இனிமை வராது. சொல்லில் இனிமை வராது. தன்னுடைய மனமே ஆன்மாவே எதிரியாகும்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நம்மைத் தூய்மையாக்குவது எப்படி…?

நமக்குள் தீமையான உணர்வுகள் வித்தாகி வளர்ந்து பின் விளைந்து அது கனியாக விடாதபடி தடுக்க வேண்டும்.

நுகர்ந்த உணர்வின் தன்மை அந்தக் குணத்தை இயக்குவது ஒலி. ஒலி ஒன்று தான். அந்த ஒலியின் தன்மை கொண்டு உள்ளிருந்து ஒளியாக அந்த மணத்தை நம் மனதை மாற்றுகின்றது.

ஒலி ஒளி என்று இருந்தாலும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுக்கும் பொழுது
1.உயிரின் தன்மையால் தான் அது இயக்குகின்றது.
2.உயிரால் அறியும் ஆற்றல் வரும் போது
3.மெய் ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் எடுத்தால்
4.அந்த அறிவின் தன்மை கொண்டு நம் வாழ்க்கையில் வரும்
5.சிறு சிறு திரைகளாக – தீமைகள் மறைப்பதை மாற்றிட முடியும்.
6.ஒளியின் தன்மை நமக்குள் பெருகும்.

ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று அதை எடுத்துத் துடைக்க வேண்டும்.

எந்த மகரிஷியின் உணர்வை வலுப்படுத்துகிறோமோ அவருடன் நாம் இணைய முடியும்

 

ஒரு வேதனைப்படுவர் உணர்வை நாம் நுகரப்படும் பொழுது அது வாலி ஆகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. நம் வலிமை இழககப்படுகின்றது

இதனை மாற்றுவதற்குத் தான் வாலியை இராமன் “மறைந்திருந்து தாக்கினான்..” இந்த நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

மறைந்திருந்து என்றால் இத்தகைய தீமைகளை வென்றவன் மகரிஷி. அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் வலிமை நமக்குள் கவரப்படும் பொழுது வாலி என்ற அந்த நஞ்சினை ஒடுக்க முடியும்…!

அதுதான் பரசுராம். அதனுடைய வலிமை எதுவாக இருப்பினும் தனக்குள் அடக்கித் தன் செயலாக மாற்றிக் கொள்ளும். அந்த நஞ்சினை இயக்குவதற்குப் பதில் தனக்குள் வலிமை கொண்டதாக மாற்றிவிடும்.

உதாரணமாக… விஞ்ஞான அறிவுப்படி செய்தாலும் சரி மெய்ஞான அறிவுப்படி செய்தாலும்
1.ஒரு நல்ல மருந்திற்குள் விஷத்தைச் சிறிதளவு கலந்து விட்டால்
2.அந்த மருந்திற்கு வீரிய சக்தி உண்டாகின்றது.

இந்த விஷத்தின் துடிப்பின் வேகத்தால் நல்ல மருந்து உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது. நல்ல மருந்திற்குள் இந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் உடலுக்குள் ஊடுருவி
1.வேதனைப்படும் இடங்களில் நல்லவைகளைக் கொண்டு குவிக்கின்றது.
2.நல்லவைகளை அங்கு அதிகமாக குவிக்கப்படும் போது
3.வேதனையை (நோய்) உருவாக்கும் அணுக்களுக்கு இரை இல்லாது தடைப்படுத்தி அந்த அணுக்களை மடியச் செய்கின்றது.
4.பின் அந்த நல்ல உணர்வின் சத்தை நல்லவைகளாக மாற்றி நோய்களை அகற்றுகின்றது.

வேதனையான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது வேதனையின் அணுக்கள் உருவாகி நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களால் உருவான உடலின் தன்மை நலியத் தொடங்கிவிடுகிறது.

ஆகவே… நாம் எப்போதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம்
1.இந்தத் தீமைகளை வென்றிடும்… வென்றிட்ட… அருள் ஞானிகளின் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை
3.அதனுடன் இணைத்துப் பழகினால்… தீமை நமக்குள் வளராது அதை அடக்கித் தனக்குச் சாதகமாக்கிவிடும்.

ஒரு விஷத்தின் தன்மை… தீமை என்று இருப்பினும் நல்ல மருந்துடன் அது இணைக்கப்படும் பொழுது அதை நல்லவையாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் உணர்வுகளை இந்த வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் அந்த துருவ மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

நாம் நுகர்வது எதுவாக இருந்தாலும் முதலில் நம் உயிரிலே பட்டுத் தான் உணர்வுகள் கலக்கின்றது. அத்தகைய கலக்கும் இடத்தில்…
1.எப்போது தீமையைப் பார்த்தோமோ தீமையைக் கேட்டோமோ அந்த நேரங்களில் எல்லாம்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்தல் வேண்டும்.

அப்போது இரண்டும் இணைக்கப்படும் பொழுது தீமையை விளைவிக்கும் அணுக்கள் விளையாது தடுக்கப்படுகின்றது.

ஆனால் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் விளையும். இது சமப்படுத்தும் உணர்வாக நம் உடலில் உருவாகி
1.எந்த ஞானியின் உணர்வை நாம் வலுப்பெறுகின்றோமோ
2.அங்கே அவனிடம் நம்மை அழைத்துச் செல்லும்.

நீங்கள் மகானாக முடியும் – ஈஸ்வரபட்டர்

 

மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்… மனித குணங்களை உருவாக்க முடியும்…! மதி கொண்ட உயர் ஞானத்தால் மனித உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்திக் கொண்ட மனித உணர்வில்… மனிதன் முதலில் வாழ்க்கையில் “எளிமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்…”

வாழ்க்கையில் எளிமையும்… ஆத்மாவில் சுகத்தையும்… அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன் மனிதனாக்கும் முதல் நிலை.

இம்முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு… உயர் ஞானத்தின் மெய் ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை… மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும்.

1.ஆகவே மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகக்கூடிய நிலை என்பது.
2.“உயர்ந்து விட்டோம்…” என்பதை விட்டு
3.“உயர்ந்திடுவோம்…” என்ற எண்ணம் வர வேண்டும்.

பிற ஆத்மாக்கள் மனிதனின் (தன்) உயர்வைக் கண்டு… நாடி வந்து வணங்க வேண்டும்… என்ற எண்ணத்தில் இருளைக் கூட்டிக் கொள்ளும் பொழுது “எம்மனிதனும் மகானாக முடியாது…”

தன் உயர்வை உயர்த்திக் காண வேண்டும் என்றால்…
1.பிறரை உயர்த்தும் பொழுதுதான் தான் உயர முடியும்
2.தன் உயர்வை நாடி எல்லாம் வர வேண்டும் என்று எண்ணுவதல்ல உயரும் நிலை…!

சூரியன் எப்படி மற்றக் கோள்களின் அலையைத் தான் பெற்று… தன்னில் அதைச் சமைத்து மீண்டும் ஒளியைத் தந்து உருளுகின்ற உண்மையில்… சூரியத் தொடர்பில் சுழலக் கூடிய கோள்கள் தானும் ஓர் நாள் வளர்ந்து… தன்னுடைய ஈர்ப்பின் சுழற்சியில் குடும்பம் அமைத்து… அதுவும் சூரியனாக வளர்ச்சி அடையக்கூடிய நிலையை அது அது பெறுகிறது.

அண்ட கோள்களில் உருள்பவை யாவும்… மண்டலக் கோள்களின் ஈர்ப்பில் மோதப் பெறும் சமைப்பு நிலையால்தான் “மறு நிலை… உரு நிலை…” பெறுகின்றது.

இத்தொடரின் சூட்சுமமே ஜீவகாந்த ஒளித் தன்மை உயிர்ப்பு நிலை வந்த பிறகு தான். ஜீவ ஆதி நிலை கொண்டு
1.ஆரம்ப நிலை – புழு நிலை
2.முதிர்வு நிலை ஜீவனின் தொடர் – மனித நிலை
3.மனித நிலையில் மகானாகி – ஒளி பெறும் நிலை
4.என்றென்றும் வளரும் நிலை – வளர்ச்சியின் ஒளி நிலை.
5.மனிதனின் நிலை தான் – தெய்வமாகும் நிலை.

இதை அறிந்து… மனிதனிடம் இருக்கும் “எண்ணத்தின் பகுத்தறிவு தான் உண்மையான சொத்து…” என்பதை உணர்ந்து
1.ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லுணர்வைத் தந்து
2.நல்லொழுக்கத்தை ஆத்ம பலத்தில் வளர்க்கும் உரமிடுபவன் நிச்சயம் மகானாக முடியும்.

“மனிதருக்குள் தெய்வம்” என்று மகான்களைக் சொல்வதைப் போல்… தன் உணர்வின் எண்ணத்தில் சுகத்தைக் காணும் “ஆத்ம பலத்தின் ஒளித் தன்மை பெற” சரீர வாழ்க்கையில் எளிமையைக் காணுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மருந்தே இல்லாத நோய்களையும் கூட நீக்கக்கூடிய மிக மிக எளிதான பயிற்சி – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டியது

மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷியின் அருள் சக்தியால் ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சொல்லி ஒரு ஐம்பது தரமாவது எண்ணிச் சுவாசியுங்கள்.

இதே போல் கேன்சரோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் சரி… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் கேன்சர் நோய் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் என்று முந்நூறு தரமாவது முதலில் சொன்ன மாதிரிச் சுவாசித்து அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
1.இந்த நோய் தன்னாலேயே போய்விடும்.
2.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் சரி இந்த மாதிரிச் செய்யுங்கள்.
3.மருந்து சாப்பிடுவதற்கு முன்பும் இதே மாதிரிச் செய்யுங்கள்.

ஏனென்றால் இன்றைய வேகமான விஞ்ஞான உலகில் மருந்து சாப்பிட்டுப் பழக்கமாகிப் போய்விட்டது. அதைச் சாப்பிடும் போது மகரிஷிகளின் உணர்வை எண்ணிக் கொண்டு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தச் கேன்சருக்கெல்லாம் இன்று மருந்தே இல்லை என்று கூடச் சொல்லலாம். இந்தத் தியானத்தின் மூலம் அதை நீக்க முடியும். நீங்கள் எண்ணும் எண்ணங்கள் உங்கள் உடலுக்குள் சென்று அந்தக் கேன்சரை நீக்கி விடும்.

இதைப் பழக்கப்படுத்தினால் உங்கள் எண்ணங்களுக்கு மிக மிக வலிமையான ஆற்றல்கள் கூடும். அத்தகைய நிலை பெறச் செய்வதற்கே இந்தத் தியானப் பயிற்சி.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதைக் கடைப்பிடிக்க… நோய் நீக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

இதைப் போல நீங்கள் தியானித்து உங்கள் நோய்களைப் போக்கி அதனால் மகிழ்ந்திடும் நிலை வரும் போதுதான் என் குருவை உங்களில் நான் காண்கிறேன்.

சாதாரணமாகச் சொல்கின்றேன்…! என்று எண்ண வேண்டாம். உங்களுக்குள் அந்தச் சக்தி பெருகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இதை வாக்கின் மூலம் பதிவாக்குகின்றேன்.

ஒவ்வொரு மனிதனும் தன் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்.

நண்பனுக்கு ஒரு நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சுவாசித்து விட்டு
1.உன் நோய் நீங்கி விடும்
2.நலமாக இருப்பாய் என்று சொல்லுங்கள்.
3.இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

அவர் நோயால் அவதிப்படுகிறார் என்பதைக் கேட்டுணர்ந்தாலும் சோர்வடையாது மீண்டும் நூறு தரம்
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்
4.மகரிஷியின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
5.அவர் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
6.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

நீங்கள் இந்த உணர்வை எண்ணினால் கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.மற்றவர்கள் நலமாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது
2.நலமடையும் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.

தீமைகளை அகற்றும் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்க்கப்படும்போது தீமையை அகற்றிடும் சக்திகள் நமக்குள் விளைகின்றது.

அந்தத் தீமையை அகற்றும் ஆற்றல்களை நாம் பெற்றால் தான் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் பிறிதொரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி மகரிஷியின் அருள் வட்டத்திற்குள் செல்ல முடியும்.

அங்கே சென்று உடல் பெறும் நிலையைக் கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிச்சயம் பெற முடியும்.

ஏதோ… எளிதில் சொல்கின்றேன். எளிதில் கிடைக்கச் செய்கிறேன் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

நீங்கள் பெற வேண்டும் என்று நான் சதா தியானிக்கின்றேன். எனது குரு அருள் உங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.

குரு அருளால் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் தீய வினைகள் நீங்க வேண்டும் என்றும் உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது சேர்ந்த தீமைகளை நோய்களை நீங்களே நீக்க முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் செயல்படுங்கள்.

உணவை உட்கொள்ளும் போதும் உணவில் கை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு பின் உட்கொள்ளுங்கள்.

அந்த அலைகள் அந்த உணவுக்குள் பாயும். சிறிது நேரம் ஆகாரத்தில் கையை வைத்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று குறைந்த பட்சம் பத்து தரமாவது எண்ணுங்கள்.

நான் உணவாக உட்கொள்ளும் இந்த உணவு அனைத்தும்
1.என் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும்.
2.மன பலம் மன வளம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் உணவை உட்கொள்ளுங்கள்.
3.இந்த உணர்வின் உமிழ் நீர் சுரக்க சுரக்க
4.இந்த உணர்வுகள் சத்துள்ளதாகக் கூடி
5.உங்களுக்குள் நல்ல சக்தியாக நலம் பெறச் செய்யும் சக்தியாக வளர இது உதவும்.

இதை நீங்கள் பயிற்சியாகச் செய்து உங்கள் அனுபவத்தில் நல்ல முன்னேற்றங்களைப் பார்க்கலாம்.

எவ்வளவு தைரியசாலியாக உடல் வலுவுள்ளவராக இருந்தாலும்… சோர்வு வந்து விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய விடாது

 

இன்று ஒன்றுமே செய்ய வேண்டாம்…! பத்திரிக்கையைப் படித்தாலே போதும்… அல்லது டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.

இந்த வீட்டில் கொள்ளை அடித்தார்கள்… அந்த வீட்டில் திருடினார்கள்… இப்படி ஏமாற்றினார்கள்… பல கொடுமைகள் நடக்கிறது… என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. நமக்குள் அது எல்லாம் பதிவாகிக் கொண்டே வரும்.

இன்றைய உலகில் வலு உள்ளவன் என்ன செய்கிறான்…?

காட்டில் உள்ள மிருகங்கள் தன் வலுவைக் கொண்டு தான் மற்றதை அடித்துப் புசிக்கின்றது. அதைப் போன்றுதான் இன்று பத்து நூறு பேர் சேர்ந்து வலுவாகி விட்டால் அவர்கள் தான் ராஜா.

அடுத்தவர்களிடம் ஒரு இடத்தை நான் கேட்கிறேன் கொடு…! என்பார்கள். கொடுக்கவில்லை என்றால்… “பார்க்கலாம்…!” என்பார்கள்.

பின் தன்னுடைய அதிகாரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு “எனக்குத் தான் அது சொந்தம்…” என்பான். எந்த வகையில் நீ வருவாய்…? பார்ப்போம்…! என்பார்கள்.

இன்று இந்த அளவிற்கு மனிதனுடைய ஆக்கிரமிப்பு உணர்வுகள் அதிகமாகி விட்டது. நாம் தவறு செய்யவில்லை விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் இன்று பத்திரிகையிலே பார்க்கின்றோம்… படிக்கின்றோம்.

இப்படி எல்லாம் நடந்தது…! என்று உடனுக்குடன் நாம் அறிகின்றோம் ஆனால் அதை என்ன… ஏது…? என்று எண்ணும் போது இந்த அறிவின் தன்மை நமக்குள் பதிவாகி அங்கே உருவான உணர்வின் ஒலியை நாம் நுகர்ந்து அதையே உடலில் அணுவாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
1.முதலில் படிக்கும் போது ஒன்றும் தெரியாது
2.அணுக்கள் விளைந்து விட்டால் அடிக்கடி இந்த நினைவு வரும்.

பத்திரிக்கையைப் படித்தோம் டி.வியில் பார்த்தோம் என்று அடுத்தவரிடம் பேசுகிறோம் அல்லவா.
1.இங்கே இப்படி நடந்தது அங்கே இப்படி நடந்தது என்று (இரண்டாவது தரம்) சொல்லும் பொழுது
2.இந்த உணர்வுகள் உடலில் உருவான அணுவிற்கு மீண்டும் சாப்பாடாகப் போய்க் கொண்டே இருக்கின்றது.
3.தன் இனத்தை அது பெருக்க ஆரம்பித்து விடுகின்றது.

நம் உடலில் நல்ல உணர்வுகளைப் பெருக்குவதற்கு… நல்லதைக் கொஞ்ச நேரமாவது பேசுகிறோமா என்றால் இல்லை. பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது.
1.என்னதான் நல்லது செய்தாலும்
2.இப்படி ஆகிவிட்டதே…! என்ற நிலையில் தான் இருக்கின்றோம்.

இதைத்தான் “விழித்திரு…” என்ற நிலைகளில் அந்தத் தீமை வரப்படும் போதெல்லாம் அதை இடைமறித்தல் வேண்டும்… விழித்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… என்ற உணர்வினை எடுத்துவிட்டு
1.எந்தக் காரியம் நடைபெற வேண்டுமோ…
2.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
3.என்னை நினைக்கும் போதெல்லாம் அவர் நல்லவராகும் நிலைகள் வர வேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கலந்து வெளிப்படுத்த வேண்டும்.

இத்தகைய நிலைகளை இந்த வாழ்க்கையில் நாம் அதை விழித்திருந்து செயல்படுதல் வேண்டும்.

தொழிலில் முதலில் லாபம் வரும் பொழுது… எல்லாம் சந்தோசமாக இருப்போம். சிறிதளவு நஷ்டம் ஆகி விட்டால் போதும். அங்கே கொடுத்தேன் காசு வரவில்லை… இங்கே கொடுத்தேன் காசு வரவில்லை… இப்படி ஏமாந்து போய்விட்டேன்…! என்று என்ற எண்ணங்கள் தான் வரும்.

அத்தகைய எண்ணங்கள் உருவாகி விட்டால் அதனால் உருவான அணுக்கள் அதே நினைவினைச் சுவாசிக்கும்போது பலவீனமான எண்ணங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.

அதே உணர்வுகள் இதற்கு உணவாகப்படும் பொழுது இந்த நல்ல உடலில் அந்தத் தீமையின் செயலாக நம்மைச் சோர்வடையச் செய்துவிடும். சோர்வான எண்ணங்கள் அது உணவாக ஆனபின் என்ன ஆகும்…?

நாம் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் கூட…
1.உடல் வலுவாக இருக்கும்
2.சோர்வின் தன்மை வரும் பொழுது எந்த வேலையையும் செய்ய முடியாது
3.சிந்திக்கும் தன்மையைyum இழக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நீ விழித்திரு…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் தீமை புகாது தடுக்க வேண்டும்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதன் அடிப்படைக் காரணமாக வருகின்றதோ… உடனடியாக விழித்து… அதைத் தனக்குள் அடக்க வேண்டும்

ஆகவே…
1.தீமையின் உணர்வுகள் உருவாக்கப்படும்போதெல்லாம்
2.அருள் ஞானியின் உணர்வை நாம் எடுத்து உடலுக்குள் இணைத்து
3.அந்தத் தீமைகளை அடக்குதல் வேண்டும்.

ஆறைக் கடந்தால்… நிலை ஏழு… “சப்தரிஷி” – ஈஸ்வரபட்டர்

 

1.அறுசுவையின் முதிர்வு உணரும் நிலை ஏழு…
2.வண்ணத்தில் ஏழும்… இப்பூமியின் சுழற்சியில் இப்பூமிக்கு ஏழு நாட்களின் வாரத் தொடர்பும்…
3.“சப்தரிஷிகளின்…” ஏழு நிலையின் உண்மைத் தத்துவ நிலையும் தான் இப்பூமியின் உண்மை நிலை.

ஐம்புலனைப் பகுத்தறியக் கூடிய நிலை கொண்டது தான் “ஆறறிவு பெற்ற மனித நிலை…” மிருகங்கள் ஐந்து நிலையைப் பெற்றிருந்தாலும் இயற்கையின் தொடர்புடன் புல்லையும் பூண்டையும் நீரையும் இயற்கையுடன் ஒட்டித்தான் அதனுடைய ஜீவ வாழ்க்கை வளருகின்றது… வாழுகின்றது.

உண்ணவும் உடுக்கவும் இருக்கவும்… தன் ஆறாம் அறிவை மனித ஞானம் பயன்படுத்திக் கொண்டது.

ஏழாம் நிலையான உயர் ஞானத்தால் இச்சரீர உணர்வின் அறுகுணத்தின் அறியும் நிலை கொண்டு அடையும் நிலையை மாற்றி… ஞானத்தால் உணரும் மெய் ஞானம் கொள்ளும்… “ஏழான நிலையை” மனிதன் பெற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான்… இப்பூமியின் சுழற்சியின் மூல அமில ஒலியின் சப்தரிஷி ஒளி செயலினால்… ஏழு தன்மையின் வளர்ப்பின் செயல் சக்தி ரிஷித் தொடர்பினால்… இப்பூமியில் வளரக் கூடிய மூலத்தின் கருவின் வித்தில் வளர்ந்த பலன்கள் தான் அறு குணம் பெற்ற நிலை.

1.இந்தப் பூமியின் முதிர்வு நிலை மனித நிலை ஆறறிவு நிலை…! அதற்கு அடுத்த நிலை மெய் ஞான நிலை
2.மெய் ஞானம் பெற்ற மனித நிலையும் இந்தப் பூமியின் சுழற்சியில் முதிர்வு நிலை
3.இவ் ஏழைக் கடக்கும் மெய் ஞானி தன் சித்தத்தை உணர்ந்த சித்தனாகி விட்டால்
4.அது எட்டாம் நிலையான அஷ்டமாசித்து நிலையை அடையும் நிலை.

இயற்கையின் மெய் உணர்ந்து மெய் ஞானத்தால் ஒளி பெற்றுத் தன் சித்தத்தின் வலுவாகும் சித்து நிலையே ரிஷியாகும் வழி நிலை.

இப்பூமியின் உணர்வுடன் இப்பூமியின் சுழற்சியில் எடுக்கக்கூடிய ஒலி அலைகள் யாவையும்… தன் ஒளியாய் எடுத்து இவ்வாத்மாவின் ஒளி ஒளிரக் கூடிய தன்மை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்தத் தகுதி உண்டு.

வளர்ச்சியின் தொடர் வளர… மனித உணர்வில் தன் சரீர உணர்வால் மனிதன் பெறக்கூடிய கண்டு… கேட்டு… நுகர்ந்து… சுவைத்து… உணரும்.. இந்த ஐந்து நிலையும் அடையும் நிலை மனிதனுக்கே உண்டு.

இந்த ஐந்து நிலையில் இனிமை நிலை கூட்டுவது… மனித நிலையில் இரு நிலையான ஒவ்வொரு இயற்கை நிலையிலும் தன்னுடன் மோதக்கூடிய
1.ஜீவ நிலையான பெண்மை நிலை… வளர்ச்சி நிலை…
2.அறுநிலை கொண்ட முதிர்வு நிலை… சிவசக்தி நிலை…
3.பெண் சக்தியின் வளர்ச்சியின் தொடர் கொண்டு வளரக்கூடிய நிலைக்குத்தான்
4.சப்தரிஷியின் சக்தித் தொடர்பை உணர்ந்த ரிஷிகள்… சக்தியைப் பெண்ணாகக் காட்டினார்கள்.

மனித உணர்வில் அடையக் கூடிய இவ் அறு நிலைக்கும் முதிர்வு நிலையான… மெய் ஞானத்தை உணரும் ஜீவ நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும்.

ஏழான ஜீவ நிலையுடன் எட்டாகும் சித்தனால் ஒவ்வொரு கோள்களாய் உருவாகும் தன்மை எடுக்கும் இவ்வுணர்வின் எண்ணம் கொண்டு தான் உயர முடியும்.

பிற ஒலி அலைகளை இச்சரீர உணர்வுடன் எடுக்கும் சித்து என்பது..
1.இப்பூமியின் சுழற்சியுடனே…
2.இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்தவுடன் (ஆவிகள்)
3.எந்தெந்த ஒலியெல்லாம் எடுத்து இச்சரீரத்தைச் சித்தாக்கி வளர்த்துக் கொள்கின்றோமோ
4.அதன் ஈர்ப்புப் பிடிப்பினால் ஆத்மாவைச் சிதற அடிக்கும் நிலைதான் சித்து விளையாட்டு நிலை. (இதிலே நாம் சிக்கக் கூடாது)

மனிதன் எத்தாய் தந்தை தந்த இஜ்ஜீவ உடலைப் பெற்றானோ அதைப் போன்றே தாய் தந்தையென்ற ஆத்மாவில் மனித ஜீவனை மனிதன் பெற்ற தொடரைப் போன்று இரண்டு ஆத்மாவின் ஒரு நிலையான எண்ணத்தின் ஒற்றுமையால்
1.உணர்வின் இன்பம் (உடலின் இன்பமல்ல) உணர்வின் இனிமையை… ஆத்மாவின் இனிமையாய்…
2.ஆத்மாவின் ஜீவ இனிமை நிலையை மனித உணர்வுடன் உள்ள பொழுதே
3.குணத்தின் அன்பால் உணரக்கூடிய சம குணமுடன்
4.விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒலியை இருபாலரும் எடுத்து ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆகவே இச்சரீர வாழ்க்கையில்… மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம் தான் இது..! இரு குணத்தை ஒரு குணமாக்கி அன்பென்னும் ஆலயத்தைச் சிவசக்தியாக்கச் செய்யும் ஒவ்வொருவரையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று உங்கள் உயிரை எண்ண வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா… என்றால்
2.எனக்குள் “ஜீவனாக இருந்து…” உருவாக்கிக் கொண்டிருக்கின்றாய்… என்று பொருள்.

ஓம் ஈஸ்வரா என்று எண்ணும் போது உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்.

ஆகவே… ஈசன் என்றாலே உங்கள் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை.

குரு என்றால் உங்கள் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். அந்தக் குருவை மதிக்க வேண்டும்.

ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் தான் குருவை மதிக்கின்றோம் என்று பொருள்.

குருவாக… நம் உயிரை நினைக்கும் போது
1.அது ஒளியாக நின்று நமக்குள் எவ்வாறு தெளிவுபடுத்துகின்றதோ
2.அதைப் போல நாம் அந்த குருவை மதித்துப் பழக வேண்டும்.
3.உயிரை ஈசனாக மதித்துப் பழக வேண்டும்.

இல்லை என்றால் மனிதன் என்ற நிலைகள் ஆறாவது அறிவு படைத்தும் நாம் பரிணாம வளர்ச்சியின் நிலைகள் தேய்பிறையாக இருக்க முடியுமே தவிர வளர்பிறை என்ற நிலைகளில் உயிரின் உணர்வின் தன்மை கொண்டு நிலை கொண்ட சரீரமான அருள் ஞானி உணர்வைப் பெற வேண்டும் என்றால்
1.நாம் உயிரை மதித்துப் பழக வேண்டும்.
2.ஞானிகள் உணர்த்திய அதை நாம் பின்பற்ற வேண்டும்.

ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும்… ஒருவன் நம்மை அவமதிக்கின்றான் என்றால் அதிலிருந்து விலகத் தெரிய வேண்டும்

 

விண்ணிலே உருவான உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின்… ஆரம்பத்திலே (உதாரணமாக) அந்த உயிர் ஒரு பருத்திச் செடியின் மீது விழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த உணர்வை நுகரும் பொழுது அது ஊழ்… ஆகி அது வினைக்கு நாயகனாக இயக்கத் தொடங்கி விடுகின்றது… புழுவாக உருப்பெறுகிறது
2.உயிருடன் அது முதலிலே ஒன்றுகின்றது… அந்த உணர்வின் சத்தை நுகர்கின்றது
3.நகர்ந்து சென்று மீண்டும் அது தன் இரையைத் தேடுகின்றது.

முதலில் பரிணாம வளர்ச்சியில் வரும் பொழுது இந்த நிலை…!

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சி ஆகி இன்று மனிதனாக வளர்ந்தபின் ஒருவர் நம்மைக் கோபிக்கின்றார்… தன் வாழ்க்கைக்காக பல தவறுகளைச் செய்து நாம் தவறு செய்யாமலேயே நம் மீது அபாண்டமான நிலைகளில் பொய்யைச் சொல்கிறார்… வேதனைப்படும் செயலைச் செயல்படுத்துகின்றார்.

1.நமது கண் அந்த மனிதனைப் படம் எடுக்கின்றது…
2.எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கி விடுகின்றது. அதுதான் ஊழ்வினை என்பது.

பின் அவன் எத்தகைய தீமைகளை நமக்குச் செய்தானோ அந்த மனித உடலில் இருந்து வந்த உணர்வின் அலையை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு கவர்ந்து நம் ஆன்மாவாக முதலில் மாற்றுகின்றது.

உயிர் அவ்வாறு தன் ஆன்மாவாக மாறியதை இழுத்து நம் உயிருடன் ஒன்றி நமக்குள் உணரச் செய்கின்றது. உணர்ந்தாலும் அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

1.முதலில் நாம் எதை எண்ணுகின்றோமோ… அது ஊழ்வினை என்ற வித்தாக ஆன பின்
2.அந்த உணர்வின் சத்து கருவாகி உடலுக்குள் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

அவன் எத்தகைய வேதனையை உருவாக்கினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுவாக உருவாக்கி விட்டால் அது தான் அதற்கு உணவு.

காரணம்… அணுவாக உருவாகிய பின் அது மீண்டும் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும். இதை உருவாக்கியது யார்…?

உயிர்.

அந்த உயிரின் தன்மை கொண்டு நாம் நுகர்ந்தபின்… அது தாயல்லவா…!
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படும்படி சொன்னானோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது
2.அவனின் நினைவாற்றல் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகிறது.
3.நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணிய அந்த உணர்வலைகளை அனுப்புகின்றான்.
4.அதே உணர்வின் சத்தை நம் உடலில் உருவான அணுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது.

இதை நன்றாகக் கவனமாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

நாம் ஆயிரம் நன்மைகள் செய்தாலும் ஒருவன் நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னான் என்றால் ஆழமாக அதை பதிவு செய்து விட்டால் அந்த எண்ணம் அந்த எண்ணம் உங்களைக் கெட்டுப் போகவே வைக்கும்.

அதிலிருந்து தப்புவதற்கு வழி வேண்டும் அல்லவா… அதுதான் விழித்திரு…!

1.“விழித்திரு…” என்றால் ஒருவர் நமக்குத் தீமை செய்கிறார் என்று உற்று நோக்கினால்
2.அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த… அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.

தாய் தந்தையரை எண்ணி ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த உணர்வுகளை ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து… நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.மெய் ஞானிகளால் நமக்குக் காட்டப் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை எடுத்து…
2.நம்மைக் காத்திடும் உணர்வாக என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உணர்வை நம் நல்ல குணங்களுடனும்… சோர்வடைந்த மற்ற உணர்வுகளுடனும் இணைத்து அதை நாம் தியானித்து வருவோம் என்றால் நம்மிடமிருக்கும் இருள்கள் அகல்கின்றது.
1.பொருளறிந்து செயல்படும் உணர்வாக
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நம்மிடத்தில் இயக்கம் பெறுகின்றன.

நாம் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுகிறோம்.

நாம் பெறும் உயர் ஞானம் மற்றவருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

பசு மடியில் சுரக்கும் பால்… தன் கன்று குடித்து அதன் பின் மீண்டும் பலரும் பருக அது பயன்படுகின்றது.
1.அந்தப் பசு மடி சுரக்கும் பால் போல்
2.நாமெடுக்கும் உயர் ஞானத்தின் தன்மை
3.பலருக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

நாமெடுக்கும் உயர் ஞானம் நம் உயிரானது… நம் உயிராத்மா கன்று போல் பருகி… பலரும் பருகக்கூடிய பலனாய் ஞானியின் சக்தியாகச் செயல்படல் வேண்டும்.

ஒவ்வொருவருக்குமே… தன் உணர்வில்… தன் எண்ணத்தால்… தன் ஆத்மாவில் பதியப்பட்டது தான் நியாயமாகவும்… உண்மை என்றும்… புலப்படும். ஆகவே
1.தன் உண்மைக்கு ஒத்த கருத்துக்கள் கொண்டு உறவாடுவதை தனக்கு உகந்ததாயும்
2.மாறுபட்ட எண்ணங்கள் யாவையுமே எதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிக்கும் எதிர் நிலைகளைத்தான் உண்டு பண்ணும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறியக்கூடிய உயர் தன்மைக்காகத்தான் அன்றைய மாமகரிஷிகள் மனிதனுக்குள் இறைத் தன்மையை வளர்க்கும் நிலையை நெறிப்படுத்தினார்கள்.

மனிதனுக்கு மேல்… மேல் நிலையாக தெய்வ குணங்களையும்… தெய்வச் சிலைகளையும்… ஆலயங்களையும்… நல்லொழுக்க நடைமுறைக்குக் கொண்டு வந்து… உண்மையின் சித்தத்தை மனிதன் அறியச் சீரிய வழிகளையும் வழிப்படுத்திச் சென்றனர்.

இதை உணர்ந்து…
1.நாம் ஒவ்வொருவருமே தெய்வ குணங்களைப் பெற்று
2.தெய்வ சக்தியை வளர்த்துத் தெய்வங்களாகும் தன்மை பெறல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் தமக்குள் மெய் ஞானத்தை விளைய வைத்தார். அவருக்குள் விளைவித்ததை எமக்குள் பதியச் செய்தார்.

பதியச் செய்த ஞான வித்தை எனக்குள் (ஞானகுரு) வளர்த்துக் கொண்டேன். அவர் காட்டிய அதே அருள் நெறி கொண்டு அந்த ஞான வித்தை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதியச் செய்கின்றோம்.

அந்த ஞான வித்தை வளரச் செய்வதற்குக் கூட்டுத் தியானப் பயிற்சியையும் கொடுத்துள்ளோம்.

ஒருவர் தீமையை விளைவிக்கும் உணர்வைக் கேட்டறிந்த பின் அதே தீமையைச் செயல்படுத்தும் உணர்வாக நம்மையும் அது இயக்குகின்றது.

இதைப் போன்று தான் இந்த அருள் ஞான உபதேசங்களைக் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மையை
1.உங்கள் உயிர் ஜீவனாக்குகின்றது.
2.உங்கள் உடலுக்குள் உள்ள எலும்புக்குள்
3.ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவு செய்கிறது.

அதை மீண்டும் நினைவு கூறும்போது வினைக்கு நாயகனாக அதனுடைய இயக்கமாக உங்களைச் செயல்படுத்தும்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்
1.அவர் விண்ணின் ஆற்றலைக் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை
2.அதை “வித்தாக உருவாக்கி…” என்னில் அதைப் பதியச் செய்தார்
3.அந்த வித்தினைப் பலவாறாக.. “நீ பெருக்கு…” என்றார்.

தீமையை அகற்றிடும் அருள் ஞான வித்தாக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். உங்கள் எண்ணத்தால்
1.இதைப் படித்துனர்ந்தாலும் கேட்டுணர்ந்தாலும்
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை ஈர்க்கும் நிலைக்கு வர வேண்டும்
3.பதிவாக்கியதை நுகர்ந்து… கவர்ந்து… சுவாசித்து… இழுத்து… உங்கள் உடலுக்குள் சேர்க்க வேண்டும். (இது மிகவும் முக்கியம்)

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் பெற்று இன்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இன்னொரு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்காது உணர்வை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள்.

அத்தகைய எண்ணத்தை நாம் கவர வேண்டுமானால் அதற்குச் சமமான வலு நமக்குள் வேண்டும். ஒரு நூலை வைத்து எடை கூடிய பொருளைத் தூக்கினால் அந்த நூல் அறுந்துவிடும். ஆனால் பல நூல்களை இணைத்துக் கயிறாக்கித் திரித்துத் தூக்கினால் எடை கூடிய பொருளை எளிதில் தூக்க முடியும்.

பல பேர் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டமைப்பாக எண்ணும்போது அந்த மெய் ஞானிகளின் அருளை எளிதில் பெற முடியும்.

இப்போது கேட்டுணர்ந்தோம்… இது சிறு துளி தான். சிறு துளி பெரு வெள்ளமாகப் பெருக வேண்டும்.

மழை காலங்களில் சிறு துளியானாலும் பெரு வெள்ளமாக எப்படித் திரண்டு ஓடுகின்றதோ
1.அவ்வாறு ஆயிரக்கணக்கானோர் இதை எண்ணி
2.மகரிஷிகளை உணர்வின் எண்ணத்தால் எண்ணும் போது,
3.அவருக்குச் சமமாக இந்த எண்ணம் வலுப் பெறுகிறது.
4.அப்பொழுது இலகுவில் அதைப் பருகும் தன்மை வருகிறது.

அதைப் பருகிய பின் அந்த அருள் ஞானத்தை ஊழ் வினையாக உங்களுக்குள் விளையச் செய்து அதை வினைக்கு நாயகனாக ஆக்கும்போது அதன் நாயகனாக இயக்கி
1.உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்றி,
2..தீமைகளை அகற்றும் சக்தியாக விளைந்து,
3.அருள் ஞானி உணர்வுடன் ஒன்றி
4.என்றும் பிறவா நிலை என்னும் பெருநிலையை நீங்கள் அனைவரும் அடைய முடியும்.

பெற்ற சக்திகளின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை நீங்களாகத் தான் நீக்க வேண்டுமே தவிர சாமியார் செய்வார்… சாமி செய்யும்… ஜோசியம் செய்யும்… ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும் என்று எண்ண வேண்டாம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்… உங்களால் முடியும்.

உத்தராயணம் என்பதன் முக்கியத்துவம்

 

மகா சிவன் ராத்திரி என்ற நிலைகளில் விநாயகர் தத்துவத்தைப் பார்க்கப்படும் போது… விண்ணுலகில் விளைந்த அனைத்தும் மண்ணுலகில் விளைந்துள்ளது. அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு தாவர இனங்களில் மணமும் குணமும் அறிவும் ஞானமுமாக இணைந்துள்ளது.

அதிலிருந்து வந்த அந்த உணர்வுகளைத் தான்
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப உடல்களுக்குள் அதை வினையாகச் சேர்த்து
2.மகா என்ற நிலைகள் அடைந்து.. மகா சிவன்… மகா சிவமாக… இந்த மனித உடலை உருவாக்கியுள்ளது… மகா சிவன் இராத்திரி.

அன்றைய தினம் இதை எல்லாம் முழுமையாக அறிந்துணர்ந்த மகரிஷிகளின் உணர்வை உற்று நோக்கி… விண்ணை நோக்கி ஏக வேண்டும். காரணம்… “இருளான இந்தச் சரீரத்தைக் கடந்து… வெளியே சென்று…” உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள் அந்த மகரிஷிகள்.

“முருகு…” மாற்றியமைக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று விழித்திருக்க வேண்டும்…!

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.உணர்வுக்குள் இருக்கும் உயிரை உடல் மறைத்தது…
2.அதே சமயத்தில் உணர்வின் நல்ல எண்ணங்களை வேதனை என்ற நஞ்சின் தன்மை மறைக்கின்றது.
3.கோபம் என்ற கார உணர்ச்சிகள் நல்ல உணர்வுகளை அது மறைக்கின்றது

இதைப் போன்று
1.இருளுக்குள் இருளாக மறையச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை
2.இருளுக்குள் ஒளியாக மாற்றிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் இணைத்து
3.நல்ல உணர்வின் ஞானத்தை மறைத்திடும் அந்த இருளைப் போக்கி அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி
4.வாழ்க்கையில் தெளிந்திடும் நிலைகள் கொண்டு அந்த ஞானியின் உணர்வுகளை நமக்குள் பொங்கச் செய்து
5.நம்மையும் மகிழச் செய்து.. நம்மைப் பார்ப்போர் நிலைகளையும் மகிழச் செய்ய வேண்டும்… மகிழ்வாகனா…!

ஆகவே வாழ்க்கையில் இது வரையிலும் வந்த தீமைகளை நீக்கிவிட்டு மெய் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து
1.ஆறாவது அறிவால் “உத்தராயணம்” என்று ஞானிகள் பால் திசை மாற்றி
2.மெய் ஞானியுடன் நம் வாழ்க்கையை இணைத்து
3.எத்தகைய இருள் ஆனாலும் அதைப் பிளந்திடும் நிலை பெற வேண்டும் கார்த்திகேயா…!
4.ஒளி பட்டபின் அங்கிருக்கும் பொருள்களை எல்லாம் காணுவது போல நாம் ஒளியாக மாற வேண்டும்.

வாழ்க்கையில் கண்டுணர்ந்த தீமைகள் உங்களை இயக்கினாலும் அந்தத் தீமையை இயக்கும் தன்மையைப் பிளந்து… மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து… மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து… ஒளியின் சரீரமாக ஆன அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியாக நீங்கள் மலர வேண்டும் என்பதற்குத் தான் மகா சிவன் இராத்திரி என்று இதை உபதேசிப்பது (ஞானகுரு).

காரணம் நாம் பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் நமக்குள் மகா சிவனாக நம் உடலின் தன்மை அமைந்துள்ளது.

அந்த இருளுக்குள்… (நம் உடலுக்குள்)
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் செயலாக நமக்குள் உணர்த்திக் கொண்டு
2.உணர்வின் இயக்கமாக அறிந்து கொண்டு அதனின் அறிவாக நமக்குள் தெளிந்திடும் நிலையாக
3.புற நிலையைக் கண்டுணரச் செய்யும் ஆறாவது அறிவாக நமக்கு முன் இருப்பதை
4.தீமைகளை விலக்கி மெய்ப்பொருளைக் காணும் உணர்வின் ஆற்றலாகப் பெற்றால் “அது தான் கார்த்திகேயா…!”

ஆறாவது அறிவால் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது போல மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து நமக்குள் இருள் சூழ்ந்திருக்கும் உணர்வின் குணங்களைப் பிளந்து மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து மெய்ப்பொருள் கண்டுணர்ந்த உயிருடன் ஒன்றுவோம்.
1.மெய்ப்பொருள் என்பது உயிரே மெய்ப்பொருள்
2.உயிரின் இயக்கமாக உணர்வின் தன்மைதான் அதனுடன் இணைந்த பொருள். (உயிர் என்பது மெய்… நுகரும் போது உணர்வு… பொருள்)

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் உணர்ந்திடும் உணர்வை ஒளியின் சரீரமாக மெய்ப்பொருளாக… மெய்யுடன் மெய்யாக… என்றும் ஒளியின் சிகரமாக அடைந்திட முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் இதை உபதேசிக்கின்றேன்.

உத்தராயணம்…! நாம் திசை மாற்றி மெய் ஞானியின் உணர்வை நாம் பெற்றிடுவோம்.
1.உடல் பெறும் உணர்வை மாற்றிவிட்டு
2.மீண்டும் மீண்டும் உடல் பெறும் அந்தத் திசையை மாற்றிவிட்டு
3.உயிருடன் ஒன்றிய அழியா ஒளியின் சரீரமாக மாற்றுவோம்.

கனவு வாழ்க்கை வாழாமல் நிலையாக வாழும் மகரிஷிகளுடன் சங்கமமாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது… வேகக்கூடிய உஷ்ணமும்… அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்… “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்…” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.

அதைப் போன்றே… இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ… செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது… நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.

ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்… பூக்களானாலும் சரி… காய் கனிகளானாலும் சரி… ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து… தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை… இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.

சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப… பிறப்பின் நிலை… ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.

அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்… உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்… ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.

செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.

எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ… அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை…
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது… மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ்எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.

எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா…!

அதைப் போன்று…
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.

ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு… உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு…
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.

உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய… நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்…
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்… தீயவை எதுவாகிலும்…
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்கு கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாலையில் போகும் போது குளித்துச் சுத்தமாக வெண்மையான உடையைப் போட்டுக் கொண்டு போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த நேரம் நாம் போகும் பாதையில் பன்றியோ அல்லது மாடோ எதுவோ சாக்கடையில் இருக்கிறது. அது தன் வாலை வீசுகின்றது. அந்தச் சேறு ஒரு துளி நம் மீது பட்டுவிடுகிறது.

எறும்பு கடிக்கிறது என்றோ அல்லது ஈ வந்து உட்காருகிறது என்றோ அல்லது கொசு கடிக்கிறது என்றோ தன் வாலை வீசியது. கொசுக் கடி தாங்காதபடி அதனுடைய அறிவிற்குத் தக்கவாறு அது இயங்குகிறது.

பன்றிக்குக் கொழுப்புச் சத்து ஜாஸ்தி. அதிகமான வெப்பங்கள் வரும் போது வெப்பம் தாக்கினால் கொழுப்பு உருகும் நிலை வரும்.

பன்றிக்கு வலு இருந்தாலும் இந்த வெயிலின் தன்மை வரப்போகும் போது அதனுடைய ஞானம் சாக்கடையில் போட்டுச் சகதியில் போட்டு தன் உடலைப் பிரண்டு வைத்துக் கொள்கின்றது. அதனால் வெப்பம் உடலில் தாக்குவது இல்லை.

எருமைக்கும் வலு அதிகமாக இருந்தாலும் இந்த வெயில் அடிக்கும் போது அதைத் தாங்கும் உணர்வு வலு இல்லை. அதுவும் சாக்கடையிலோ சகதியிலோ தன் உடலைப் பிரண்டு தான் வரும்.

சகதிக்குள் பிரண்டு வந்த பிற்பாடு என்ன செய்கிறது…? அது தன் வாலை வீசுகின்றது. அதனின் சந்தர்ப்பம் அது.

நாம் சுத்தமாகத்தான் போகின்றோம். அப்பொழுது நம் மேலே பட்டு விடுகிறது? பட்டவுடனே “ஐய்ய..ய்ய…, சே…” அந்தச் சகதி பட்டுவிட்டது…!” என்று நம்மை அறியாமலே சொல்வோம். அதைத் துடைக்கப் போகிறோம்.

அடுத்து அந்த மாட்டையோ ஏச ஆரம்பித்து விடுகின்றோம்.

வெறுப்புடன் “சீ… சனியன்…! எவன் வளர்த்தானோ…!” நடு ரோட்டில் போகும் போது இந்த மாதிரிச் செய்துவிட்டது என்று சப்தம் போடுகின்றோம்.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் அந்த உணர்வை நாம் நுகர்ந்து அறிகின்றோம்.
1.இந்தத் தீய வினைகள் சித்திரை – சிறு திரைகளாக
2.நம்முடைய அறிவின் தன்மையை மறைக்கின்றது.

அது மாடு. அதற்கு அறிவு இல்லை. அது வாலை வீசியது. சரி… சேறு நம் மீது பட்டுவிட்டது. அதைத் துடைத்துக் கொள்வோம் என்று போனால் பரவாயில்லை.

ஆனால் அந்த மாட்டை வளர்த்தவர்களைத் திட்டுவோம். அல்லது மாட்டைப் பேசுவோம். இயற்கையிலே நம் உணர்வுகள் இப்படித்தான் செயல்படுகிறது.

நான் இதைச் சொல்கிறேன் என்றால் எனக்கும் அந்தப் புத்தி தான் வரும். சாலையில் போகும் போது பன்றியோ மாடோ இப்படிச் செய்தால்.. “சீ… கிரகம்..,” என்று இப்படித் தான் சொல்வோம்.

பார்…! மாட்டைச் சாலையில் விட்டு விட்டு இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான். அந்த மாடு இப்படிச் செய்து கொண்டிருக்கின்றது என்று அந்த உணர்வுகள் இயக்கி நம்மை அப்படிப் பேச வைக்கத்தான் செய்யும்.

ஆனாலும் இந்த உணர்வுகள் நமக்குள் நல்ல அறிவை மறைக்கிறது. இதைத் துடைக்க வழி வேண்டுமா… இல்லையா…?

ஏனென்றால் இது இயற்கை. இது போன்ற நிலைகள் வந்தாலும் நம்மை அறியாமலே நம் நல்ல குணங்களை அந்தச் சந்தர்ப்பத்தில் மறைத்து விடுகின்றது.

மறைத்தபின் நாம் நல்ல செயல் இழந்து கோபம் வெறுப்பு வேதனை அந்த மூன்றையும் நாம் எடுக்கப்படும் போது வேதனைப்படுவோம்.

1.வேலைக்குப் போவதற்கு நேரமாகிப் போனதே…!
2.நான் கடைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன்…!
3.இதோடு நான் எப்படிப் போவது…? என்ற இந்த வேதனை வருகின்றது.

வேதனை என்பது விஷம். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இந்த உணர்வுகள் எனக்குள் பட்டுவிட்டது. இது சந்தர்ப்பம்.

சந்தர்ப்பத்தால் ஏற்படும் வேதனை நிலைகளிலிருந்து அது நமக்குள் தீமை எப்படி ஏற்படுகின்றது…? என்பதைக் காட்டுவதற்காத்தான்
1.ஞானிகள் கருப்பண சாமியைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.
2.அருகிலே மோப்ப நாயையும் காண்பித்திருப்பார்கள்.

ஏனென்றால் அன்றைய தினம் நடந்த இந்தச் செயல் தீமையானதாக நமக்குள் மோப்பமாகப் போகும் போது இருள் சூழ்ந்து விடுகின்றது.

இந்த நிலையைப் பார்த்து இதே வெறுப்பான நிலையுடன் அடுத்து நீங்கள் அலுவலகத்தில் போய் உட்கார்ந்து பாருங்கள்.

அங்கே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி…
1.கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது நடந்து போனாலோ
2.என்ன…! எருமை மாடு மாதிரி இருக்கின்றான்…?
3.நம்மை அறியாமலே “இந்த வார்த்தை” வரும்.

தவறு நாம் செய்யவில்லை. நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் வேகத்தின் தன்மை நமக்குள் சித்திரையாகி (சிறு திரையாக) நம் நல்ல குணத்தை மறைத்து விடுகின்றது.

அவ்வாறு மறைக்கும் தீமைகளை அகற்ற மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறுவதற்காக ஆலயங்களை அமைத்து தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதையும் காட்டினார்கள்.

அருள் மணங்களை நம் உயிருக்குள் அபிஷேகம் செய்து நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும் என்பதற்காக அந்தத் தெய்வச் சிலைகளை வைத்து தெய்வ குணங்களைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

அந்தத் தெய்வ குணத்தை நாம் பெறுவோம். தெய்வ சக்தியை வளர்ப்போம். அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபடுவோம்.

பெருமாள்… பெருமான்… முருகப் பெருமான்…!

 

நம் உயிரின் தன்மை இயக்கும்…
1.அந்த உயிரான குணத்தை நமக்குள் சேர்க்கும் போது
2.தீமையை விளைவிக்கும் உணர்வின் தன்மையை அது அடக்கி
3.அதிபதியாக நின்று செயல்படுகிறது “பெருமாள்…!”

அதனின் (உயிரின்) உணர்வின் தன்மை கொண்டு பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக உருவாக்கி… அறிந்திடும் ஆற்றல் கொண்ட அதிபதியாக… ஆறாவது அறிவின் தன்மையை வினையாகச் சேர்த்துக் கொண்டது.

ஆக.. தீமையை அகற்றிடும் மகிழ்வாகனா…! தீமைகளை அகற்றி மகிழ்ந்திடும் வாகனமாக நமக்குள் அதிபதியாக வீற்றிருப்பது அந்த ஆறாவது ஆறறிவு – முருகப் பெருமானே..!

1.நமக்குள் ஆண்டிடும் உயிர் பெருமாளாக இருப்பினும்
2.எல்லாவற்றிற்கும் “ஆறாவது அறிவின் தன்மை – முருகப் பெருமான்…”
3.மாற்றியமைத்திடும் பெருமானாக அமைகின்றான்.

பெருமாள் கோவிலுக்குப் போகிறோம் என்று சொல்கிறோம்
1.அந்தப் பெருமாள் யார்…? நம் உயிர் தான்
2.முருகப் பெருமான் யார்…? நம் ஆறாவது அறிவு.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் பெருமாளாக இருப்பது உயிரே. ஆனால் இந்த ஆறாவது அறிவின் தன்மை வரப்படும் பொழுது
1.முருகு…! மாற்றி அமைக்கும் அந்தச் சக்தி கொண்டு
2.எல்லாவற்றையும் சீர்படுத்தும் நிலைகளாக முருகப் பெருமான்…!
3.மாற்றிடும் பெருமாளாக நமக்குள் ஆன்மாவாக அமைந்துள்ளது.

மகா சிவன்ராத்திரி என்றாலும்…
1.உடலுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்த உணர்வின் குணங்களை…
2.சீர்படுத்தும் அந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் சிலையாக வடித்து..
3.நற்குணத்தின் செயல்களை எல்லாம் காவியமாகத் தீட்டி
4.ஞானிகள் வெளிப்படுத்திக் காட்டினார்கள் ஆலயங்களிலே…!

நம் வாழ்க்கையில் தீமையான உணர்வுகள் வந்தாலும் முருகப் பெருமான்… ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்தத் தீமைகளைப் பிளந்து நீக்கிவிட்டு நம்மை ஆளும் ஆண்டவனான பெருமாளுக்கு அது எவ்வாறு…? என்று ஞாபகப்படுத்துவது.

இதைப் பிரித்து அவன் ஆளும் ஆட்சியாக சீரான உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது ஆட்சிபுரியும் நல்ல குணங்களை…
1அது தடையின்றி நமக்குள் நல்லொழுக்கத்தையும்
2.நல் செயலையும் நமக்குள் நயம்படும் உணர்வின் உறுப்புகளையும் அது உருவாக்கும் தன்மையாக
3.உடலிலே நல்ல நிலைகள் வருவது அது தான் மகிழ்வாகனா…!

மகிழச் செய்யும் வாகனமாக இருந்து… முருகு…! மாற்றியமைக்கும் பெருமானாக அது நமக்குள் அமைந்து அவனின் உணர்வை நினைவு கொண்டு மகிழச் செய்யும் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைத்திடல் வேண்டும்.

மாற்றி அமைத்திடும் அந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆண்டிடும் பெருமானாக அந்த உயிருடன் ஒன்றி நமக்குள் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் காத்திடல் வேண்டும்.

ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெற வேண்டும்… மலரின் மணம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.. மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணைந்து வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் அருள் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.

வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல் ஒளியாகும் எண்ணங்களை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.

மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்… முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.

ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்…” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.

இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.

அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்…
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறித் தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.

இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது…? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது…?

அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”

மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.

முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி… காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது…!

அதைப் போன்று… நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி… வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின்… மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் தீங்கு செய்கிறார் தீங்கு செய்கிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்தால் நமக்குள் தீங்கு செய்யும் உணர்வுகள் வந்து நம்மையும் தீமை செய்ய வைத்துவிடும். ஆகவே
1.தீமைகளை நுகர்ந்தால் தீமை செய்யத்தான் முடியுமே தவிர
2.நன்மை பயக்க முடியுமா…? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

நன்மை பயக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறுங்கள். அந்த உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வு நுகர்ந்ததைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

1.ஒருவன் தீமை செய்தான் என்று தெரிந்து கொண்டாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று
3.அந்தத் தீமையில் இருந்து அவர்கள் விடுபடவேண்டும் ஈஸ்வரா… என்று
4.உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
5.மற்றவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
6.அப்போது அது நமக்கும் பாதுகாப்பாகின்றது.

இப்படிச் செய்தால் நீங்கள் ஆலயங்களிலே போய் அங்கிருக்கும் தெய்வத்திற்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்வது போன்று உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகளை அபிஷேகிக்கின்றீர்கள்.

அப்பொழுது உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல அமுது கிடைக்கின்றது என்பதனை ஒவ்வொரு நொடியிலும் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர்.

குருநாதர் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியான சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி ஏகாதசி ஏகாந்தமாக வாழுகின்றார்.

வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நமது குருநாதர் ஒளியின் சரீரம் ஆனார். நமது குரு காட்டிய அருள் வழிகளைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

தீமைகளிலிருந்து விடுபடும் நிலையாக அருள் ஒளியை எப்படிப் பெற வேண்டும்…? பெற முடியும்…? என்று உணர்த்திய உணர்வு கொண்டு
1.அந்தத் துருவ நட்சத்திரத்தைத் தான் எனக்குக் காட்டினார்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை எடுத்து நீ பெற்றுக் கொள்.
3.இருளை அகற்ற அது உதவும்.
4.மெய்ப் பொருளைக் காணவும் உதவும்.
5.உன்னை அறியாது சேர்ந்த தீங்கை அகற்றிடவும் உதவும் என்று கூறினார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார்.

அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் நான் எத்தனையோ மோசமானவன்தான்…! சிகரெட் நிறையக் குடிப்பேன்… என்னென்னவோ எல்லாம் குடிப்பேன். உதவி செய்யும் தன்மை வந்தாலும் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உதைக்கும் பண்புள்ளவன்.

ஆனால் குருநாதர் என்னைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தார்.

ஏனென்றால் ஆரம்பத்தில் உடற் பயிற்சி எல்லாம் செய்து அப்பொழுது “கொஞ்சம் பயில்வான்…!” என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். உதவி செய்ய முடியவில்லை… சொல்வதைக் கேட்கவில்லை… என்றால் இரண்டு தட்டுத் தட்டுவது. இப்படிப்பட்ட உணர்வுகள் எனக்குள் உண்டு.

அப்போது அந்த உதைக்கின்ற உணர்வு வந்தால் கெட்ட உணர்வு தான் உனக்குள் வரும் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

ஏனென்றால் எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலேயும் கஷ்டங்களையும் சிரமங்களையும் பட்டு அதன் மூலமாகக் குருநாதர் காட்டிய அருள் வழியில் பல அனுபவங்களைப் பெற்ற பின் தான் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம்

சில நேரங்களில் ரோடுகளில் நான் நடந்து போனேன் என்றால் நாய்கள் என்னைத் துரத்தி வரும்.

நாய்கள் துரத்தி வந்தால் குருநாதர் என்ன செய்வார்..? விரலை இப்படிக் காட்டுவார். விரலைக் காட்டியவுடனே குரைக்காமல் நின்று போய்விடும்.

ஆனால் அவரை மாதிரியே நான் செய்யப் போனேன்.

நீ இந்த மாதிரி உணர்வு வரப்போகும் போது அது புத்தியை மாற்ற வேண்டுமே தவிர அதனுடைய வலிமையைக் குறைக்கக் கூடாது என்று அதிலேயும் அனுபவங்களைக் கொடுக்கின்றார்.

1.மற்றவர்களை வீழ்த்திடும் சக்திகளை எடுப்பதற்குப் பதில்
2.அவர்களைத் தெளிவாக்கும் நிலையாக அருள் உணர்வுகளை அவர்களுக்குள் பாய்ச்சி
3.அவர்கள் தீமை செய்யும் நிலைகள மாற்றியமைத்து
4.அவர்களை நல் வழியில் உயர்த்த வேண்டும் என்று உணர்த்துகின்றார்.

இருளைப் போக்கி எல்லோரையும் காத்திடும் செயலாக “நம்முடைய செயல்… என்றுமே இருந்திடல் வேண்டும்…” என்று காட்டுகின்றார் குருநாதர்.

விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்

 

உயிரின் (கதிரியக்கம்) துடிப்பு ஒலிகள் விண்ணிலே தோன்றியது தான். இதை முதலில் உணர்தல் வேண்டும்.

அதே சமயத்தில் மற்ற அணுக்களும் விண்ணிலே தோன்றியதுதான். ஆனாலும் பூமிக்குள் வந்தபின் பூமிக்குள் மண்ணாக மறைந்து மற்றதுடன் கலந்து விடுகிறது.

இதிலே உருவாகும் உணர்வின் ஆவியின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் நிலைகளுக்கொப்ப அணுக்களாக மாறுகிறது.

அத்தகைய அணுக்களின் துணை கொண்டு தாவர இனங்களாக உருவாக்கினாலும்
1.அதிலே தோன்றிய உயிரினமும் அதை உணவாக உட்கொண்டால் இந்த புவியின் ஈர்ப்பிலேயே நிலைத்திருக்கும்.
2.இதனின்று கடந்து செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆதியிலே
1.பேராற்றல் மிக்க பேரண்டங்களிலிருந்து அவை உமிழ்த்தும் துகள்களை
2.பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் வீழ்த்தி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றவாறு சக்திகளாக மாற்றி.. கோள்களாக உருவாக்கி
3.கோள்களில் இருந்து வருவதை வடித்து அந்த நஞ்சினைப் பிரித்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சிகரமாகத் திகழ்ந்ததோ
4.அதைப் போன்று விண்ணின் நிலைகளைக் கொண்டு
5.ஒரு நட்சத்திரத்தின் மின் கதிரியக்கப் பொறி மற்றொரு கதிரியக்கப் பொறியுடன் மோதும் பொழுது
6.அதனால் துடிப்பின் நிலைகள் ஏற்பட்டு தன் அருகில் இருக்கக்கூடிய கோளின் சக்தியைக் கவர்ந்து
7.அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் ஒரு உயிரணுவின் தோற்றம் (மின்னிக் கொண்டிருக்கும் நிலை) உருவாகிறது.

உயிரின் முன்னணி எதுவோ அதனின் நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களின் பொறிகளால் உருவாக்கப்பட்ட அணுவின் தன்மை எதிர் நிலையாகும் போதுதான் ஒரு இயக்கச் சக்தியாக மாறுகிறது.

அதன் வழியில் உடலின் உறுப்புகள் உருமாறி… உணர்வின் சத்து தசைகளாக மாறி… உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மாறி வந்தது தான் இயக்கச் சக்தி. பல சரீரங்களைக் கடந்து இதன் வழியில் தான் மனிதனாக இன்று நாம் வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் தெளிந்து தெரிந்து முழுமையாக உணர்ந்தவர்கள் மாமகரிஷிகள்.
1.தனது உயிரணு எந்த நட்சத்திரத்தின நிலைகள் கொண்டதோ
2.அந்த நட்சத்திரத்தின் உணர்வின் மின் அணுவின் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்துப் பேரொளியாக மாற்றிக் கொண்டார்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் இத்தனையும் பேசுகின்றேன். காரணம்… குருநாதர் இதையெல்லாம் எனக்குள் பதிவு செய்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கின்றார்.

சாமி சொல்வது அர்த்தம் புரியவில்லையே… ஏதோ ஒரு உலகத்தில் பெரிதாகச் சொல்கிறார்…! என்று விட்டுவிட்டால் அதைத் தள்ளி விட்டுவிடும்.

உதாரணமாக… திட்டுபவர்களையோ கேலி செய்பவர்களையோ உற்றுப் பார்த்து என்னை மோசம் பண்ணினார்… கேவலமாகப் பேசினார்…! என்று பதிவு செய்தால் அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாக விளையத் தொடங்குகிறது அல்லவா…! அதைப் போல்
1.சாமி சொல்லும் சக்தியை நான் பெற வேண்டும் என்று
2.இறுக்கிப் பிடித்துக் கொண்டால் இதை வளர்க்க முடியும்.

ஆதியிலே உருவான அகஸ்தியனுக்கு அவன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற விண்ணின் ஆற்றல் கொண்ட நஞ்சின் இயக்கமான உணர்வுகள் “பூர்வ புண்ணியமாக” அமைந்தது.

இந்த உணர்வின் சத்து கொண்டு அவன் விண்ணை நோக்கி ஏகும் போது…
1.அவனின் உயிரின் ஆற்றல் எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அதனின் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் ஆற்றலை ஒளியாக மாற்றி
3.தன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகளைப் பிரித்துப் பிரித்து
4.உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.

துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தை…
1.அங்கே துருவத்திலே நிலைகொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து
2.நஞ்சினைப் பிரித்து விட்டு தன் உயிரான ஒளியின் சிகரத்தை அடைந்து
3.எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு
4.இன்றும் மின்னிக் கொண்டு உள்ளான்… துருவ நட்சத்திரமாக…!

அதைப் போன்றே நம் உயிரணுவின் தோற்றம் அது எந்த நட்சத்திரத்தின் கதிரியக்கத்தால் உருவானதோ அந்த உணர்வின் சத்து கொண்டு
1.சிவன் இராத்திரி… உடலான இருளுக்குள் இருப்பதை அந்த மறைந்த நிலையை
2.தன் உணர்வின் நிலையால் (உயிரின் நட்சத்திர ஆற்றல்)… ஒலி அலைகளாக எண்ணங்களாக எப்படி மாற்றியதோ
3.அகஸ்தியனின் உணர்வினை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இணைத்து
4.இந்த வாழ்க்கையில் வரும் எத்தனையோ எதிர் நிலையான இயக்கங்கள் இருப்பினும்
5. ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் அகஸ்தியனைப் போன்று ஒளியாக மாற்ற முடியும்.

ஆக… உடலான இருளுக்குள் இருந்து தான் அந்த இருளைப் பிளந்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற வேண்டும்.

அறம் எது…? பொருள் எது..? இன்பம் எது…? – ஈஸ்வரபட்டர்

 

பருத்தி என்றால் அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன் வளர்ச்சிக்கொப்ப… “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்…” என்பது மனித ஞானம் அறிந்த உண்மை.

மேலும்… இன்று மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின் வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன் தான்.

ஆனால் அதே மனிதன் தான்…
1.தன் உயிராத்மாவின் ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில் நடப்பவை யாவும் ஊழ்வினை – “விதி” என்ற
5.வினைப் பயனை விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.

இயற்கையையும் செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின் உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.

அறம்… பொருள்… இன்பம்…
1.அறம் – நல்லொழுக்கத்தைச் சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் – அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் – என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.

இக்கலியிலும் புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள தத்துவங்கள் யாவும்… மனித உணர்வின் எண்ணம் “நல்லொழுக்கம் பெற்று… அகத்தின் பொருளறிந்து… அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின…”

ஆகவே நம் உயிராத்மாவின் உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்… எண்ணத்தில் நற்குணத்தை ஒவ்வொருவரும் பெற்று… விதியை மதி கொண்டு… ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.

1.முதலில்… தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின் சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின் இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

சரீர ஏக்கத்தின் இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.

அதன் இச்சையின் செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து வினைப் பயன் என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளும் நிலைதான்…”

உடல் உபாதையையும்… உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு… இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள் உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.

இச்சரீரம் எத்தனை கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.

எவ்விதை ஊன்றப் பெற்றதோ… அச்செடியாக அது வளர்ந்தாலும்…
1.அதை மாற்றி அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின் உயர் ஞானத்தால்
3.அறம் பொருள் இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.

இச்சரீரம் உறங்கும் பொழுது “உறக்கம்” என்றும்… செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின் செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை விழிப்பு நிலை பெறுகின்றது.

வாழ்க்கை நடைமுறையில் இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான் உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில் பதிவாகி விடுகின்றது.

எப்பதிவை எண்ணத்தின் உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.

அவ்வலையைத்தான் நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது. நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின் பிடிப்பில் உறங்க வைத்த நிலை.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது…
1.தன்னைத்தானே தான் உணர்ந்து…
2.இச்சரீர உணர்வின் வாசனையை… இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை…
3.உயர்ஞானத்தைக் கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு நல் ஒலிகளை… நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை…
5.அறம் பொருள் இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப்போகக் கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா – உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில் வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையிலே நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு செய்பவர்கள் நிறையப் பேரைப் பார்க்கின்றோம். அவர்கள் சந்தர்ப்பத்தால் தவறுகள் செய்தாலும்
1.அவர்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வந்து
2.நம் நல்ல குணத்தை மறைத்து விடுகிறது.
3.நமக்குள் சாப வினைகள் சாடுகிறது.

ஆனால் அதே சமயத்தில் நமக்குள் இருக்கும் பாவ வினைகள் என்ன செய்யும்…?
1.ஒவ்வொருவரையும் சாபமிடச் செய்யும்.
2.பாவங்கள் செய்யச் சொல்லும்.
3.நம் குழந்தையைக் கூட இரக்கமற்றுக் கொடூரமாகத் தாக்கச் செய்யும்.

பிறர் நன்றாக வளர்ந்து கொண்டு இருப்பார்கள். “அவர்கள் மட்டும் நன்றாக இருக்கின்றார்களே…!” என்பதைப் பார்த்ததும் பொறாமையில் என்ன செய்வோம்…?

அது… அவன் இப்படிச் செய்கிறான்… அப்படிச் செய்கின்றான்… என்ற நிலையில் பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டேயிருப்போம். தன்னை அறியாமலே அது செய்ய வைக்கும்.

நமக்கும் அவர்களுக்கும் ஒன்றுமே சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் நம் உணர்வின் தன்மை மாறுபடப் போகும் போது…
1.பார்…! அவர்களெல்லாம் என்னத்தைப் பெரிதாகச் செய்தார்கள்…? என்று
2.இது போன்ற பாவ வினைகளைச் சேர்க்கச் செய்கிறது.

ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடிய நிலையும் அவர்களை வேதனைப்படச் செய்து அதைக் கண்டு ரசிக்கும் நிலையாகத்தான் வரும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

நம் உயிருடைய வேலை என்ன…? அதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா…!

நாம் எதை எண்ணினாலும் “ஓ..” என்று ஜீவனாக்கி “ம்…” என்று நம் உடலாக ஆக்கும். பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தையும்
1.ஓ..ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம் என்று
2.நம் உயிர் இயக்கி உடலாக ஆக்கி விடுகின்றது

உயிரின் வேலை அது.

நெருப்பில் பாத்திரத்தை வைத்து அதிலே பல பொருள்களை இட்டால் எதைச் செய்யுமோ அதைப் போல் நம் உயிரான நெருப்பில் போடும் உணர்வுகளை அதற்குத்தக்க இயக்கி அதனுடைய வேலைகளைச் செய்யும்.

நாம் எந்தக் குணத்தை எடுக்கின்றோமோ அதனின் மணத்தின் தன்மை கொண்டு அறிவாகவும் அதனுடைய இயற்கையின் தன்மை (அந்த மணத்தின் இயல்பாக) கொண்டு உணர்வாகும்.

உயிர் நம்மை… “உணர்வால் தான்” இயக்குகின்றது.

நாம் அடுத்தவர்களிடம்
1.உனக்கு உணர்ச்சி இருக்கின்றதா..? என்று கேட்கின்றோம்.
2.கொஞ்சமாவது அறிவு இருக்கின்றதா…! என்று கேட்கிறோம்.
(அறியக்கூடிய திறன் இருக்கின்றதா.. என்கிறோம்)

ஒன்றைச் சொல்லப்படும் போது தான் உணர்ச்சிகள் வருகிறது. நான் கோபமாகச் சொல்கின்றேன். அப்பொழுது அந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…?

உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும். நீ இப்படிச் சொல்லி விட்டாயா…? இரு… நான் பார்க்கிறேன் என்போம்.

எனக்குள் கோபமான உணர்வின் தன்மை விளைகின்றது. அந்தக் கோப உணர்வின் சொல் கேட்போர் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

1.இயற்கையின் நிலைகள் எவ்வாறு வருகிறது…?
2.அது நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற தீமைகள் நம்மை அணுகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து பல பல அனுபவங்களைக் கொடுத்தார்.

இருபது வருட காலம் பல இடங்களைச் சுற்றினேன். ஒவ்வொருவரும் அவர்கள் தவறு செய்யாமலே
1.அவருக்குள் துயர நிலைகள் எப்படி விளைகின்றது…?
2.அவர்களைத் தவறுள்ளவர்களாக எப்படி மாற்றுகின்றது…?
3.பாவ வினைகளாக எப்படிச் செய்கின்றனர்…?
4.சாப வினைகளாக எப்படி வெளியிடுகின்றனர்…?
5.தீய வினைகளாக எப்படி உருவாக்குகின்றனர்…?
6.அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்ய நீ என்ன செய்யப் போகின்றாய்…?

இது தான் குருநாதர் எம்மிடம் கேட்ட கேள்வி. அதன் வழியில் விடைகளாகp பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

அவருடைய கேள்விக்குத் தான் மெய் ஞானிகள் காட்டிய உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையை எனக்குள் உபதேசித்து அதை அறியும் ஆற்றலாக என்னைப் பெறச் செய்தார்.

குருநாதர் எனக்கு உபதேசித்ததை அவர் பெற்ற மெய் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த உபதேசம். பதிவு செய்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அறியாது வரும் தீமைகளை நீங்களே அகற்ற முடியும்.

தீமைகளை அகற்ற வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டு வரும் போது
1.குரு வழியில் உங்கள் உயிரை இயக்க முடியும்.
2.மெய் ஞானிகளின் உணர்வுகளை ஜீவனாக்க முடியும்.
3.அந்த ஞானிகளின் சக்திகளை உங்கள் உடலாக ஆக்க முடியும்.

குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். காரணம் குருவை உங்களிடம் நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

ஒவ்வொருவரையும் அவர்களை அறியாது தீமைகள் சாடுகின்றன. அந்தத் தீமைகளிலிருந்து ஒவ்வொருவரும் அகல வேண்டும் என்ற எண்ணத்தை “நீ அங்கே பாய்ச்சு…” என்றார் குருநாதர்.

நான் எனக்குள் விளைய வைத்த ஞான வித்தினை உனக்குள் விளைய வைக்கின்றேன். அதை நீ உனக்குள் விளையச் செய்.

இந்த உணர்வின் வித்தினை யார் யார் விரும்புகின்றனரோ… தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று யாரெல்லாம் ஏங்கி இருக்கின்றார்களோ… அவர்களுக்குள் அதைப் பதியச் செய்.
1.அங்கே விளைந்து வரும் நிலைகளில்
2.அதில்.. “என்னை நீ அங்கே காண்பாய்…” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஈஸ்வரபட்டர் கொடுக்கும் “ரிமோட் கண்ட்ரோல் சக்தி”

 

குருநாதர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடை அருகே அமர வைத்து உபதேசமாகக் கொடுத்தார். பன்றி சாக்கடையின் நாற்றத்தை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக வளர்ந்து வந்தது.

நாற்றமான உணர்வுகளை நீக்கப்பட்டு நாற்றத்தை நீக்கிடும் உணர்வின் எண்ணங்களாக மனிதனாக எப்படி வளர்ந்து வந்துள்ளோம்…? என்பதை உணர்த்தவே அங்கே உபதேசித்தார் குருநாதர்.

சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே. சாக்கடையற்ற நிலையாக
1.நாற்றத்தை நீக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வை நீ இங்கிருந்து பெறு.
2.அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நீ பெற்றால் அந்த நாற்றத்தை நுகரவிடாது
3.அதை அறியத் தான் உதவும்… அந்தத் தீமை உனக்குள் விளையாது.

அதைப் போன்று இந்தச் சாக்கடையான வாழ்க்கையில் இருக்கும் அந்த உணர்வினை நீக்கி மெய்ப்பொருளைக் கண்டுணரும் அந்த சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் உன்னை இங்கே அழைத்தேன்.

காரணம் இன்று இந்தக் காற்று மண்டலமே சாக்கடையாக இருக்கின்றது. இதை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நுகரும் தன்மையைத் தான் அடைந்துள்ளோம்.

விருப்பு வெறுப்பு வேதனை என்று
1.பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர
2.குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவில்லை.

ஆகவே நாற்றத்தைப் பிளந்த பன்றியைப் போன்று குறைகளை நீக்கி நல்லதை நுகரும் ஆற்றல் பெற வேண்டும்.

பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அவர்கள் குறைகள் அகல வேண்டும்… தெளிந்துணர்ந்து செயல்படும் தன்மை நமக்குள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அவ்வாறு எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கும் சக்திகளாக அங்கே தோன்றுகின்றது.

தீமைகளை அகற்றிடும் நிலையையும் தீமைகள் உனக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இங்கே சாக்கடை அருகே உன்னை அமரச் செய்து உனக்கு உணர்த்தியது.

ஆனால் சாக்கடையை நுகர்ந்து அய்யய்யே… என்று எண்ணினால் அதை நினைக்கும் பொழுதெல்லாம் உனக்குள் சாக்கடையை நுகரும் உணர்வே அதிகமாக வருகின்றது.

அந்தச் சாக்கடை நீக்க வேண்டும்… அதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வருகின்றது.

அதைப் போன்று தான்…
1.நீ யாரைக் கண்டாலும்… எவரைக் கண்டாலும்… அங்கே காணும் குறைகள் எதுவாக இருப்பினும்
2.அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினை உனக்குள் ஏற்றுக் கொண்டு
3.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று நீ இதை எண்ணுவாய் என்றால்
5.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் மெய்ப்பொருள் காணும் நிலையாக உனக்குள் வள்ரும்.

இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இருந்தாலும் குறை என்று அது அறிவிக்கச் செய்கின்றது.
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்த வேண்டும்
2.அதற்கடுத்து அதைப் பயன்படுத்தக்கூடாது.

ஆனால் அறிவிக்கச் செய்யும் நிலையையே திரும்பத் திரும்ப எண்ணி
1.இப்படிச் செய்தான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்தால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா…?
2.அவனை விடக்கூடாது…! என்று எண்ணும் பொழுது
3.நமக்குள் அறிவித்த அந்த நிலை… நமக்குள் எது தவறு…? என்று காட்டியதோ
4.அந்தத் தவறை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாகவே வளர்த்துவிடும்.

ஆக தவறை நீக்கும் நிலைகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனித வாழ்க்கையில் குறை இல்லாது நடந்தவர் யாருமில்லை. ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வு வரும் பொழுது குறையான உணர்வாக அதை ஈர்க்கப்படும் பொழுது…
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.,குறைகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று நாம் எண்ண வேண்டும்.

அது தான் முக்கியம்.

அந்தக் குறைகளை நீக்க அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வலுவாக ஏற்றுக் கொண்டால்… நாம் எடுத்துக் கொண்ட அந்த ரிமோட் கண்ட்ரோல் சக்தி யாருடன் பழகினாலும்… பேசினாலும்… அவர்களை அறியாது இயக்கும் தீமைகளை நீக்கிடும் சக்தியாகவும்… அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகவும் அங்கே இயக்கச் செய்யும்.

இதை நாம் செய்து பழக வேண்டும்.

இன்று நாம் உபயோகப்படுத்தும் டி.வி. மற்ற எலெக்ட்ரானிக் சாதனகளில் மூடி மறைத்து இருப்பதை “ரிமோட் கண்ட்ரோல்…” என்ற அந்த பட்டனைப் போடும் பொழுது சீராக இயக்குகிறது.. படமோ பாடலோ அல்லது எந்த இயக்கமாக இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே அதைக் கவர்ந்து இயக்க முடிகின்றது

இதைப் போன்றுதான் மெய் ஞானிகளின் ஆற்றலை நாம் எடுத்து
1.அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும் பொழுது
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலையாக ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) ஆக
3.நம்மை அந்த ஞானிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் அங்கிருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும். நமக்குள்ளும் அது வராதபடி நல்ல உணர்வுகளைத் தெளிந்து கொள்ளும் நிலையாக வரும்.

இதைத்தான் மகா சிவராத்திரி என்று இருளுக்குள் மறைந்த பொருளைக் கண்டுணர்ந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பெறும் நிலையாக மகா…! அனைத்தும் நமக்குள் உண்டு என்று காட்டியுள்ளார்கள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் தெரிந்திடும் நிலையாக சிவன்ராத்திரி என்று விழித்திருப்போம்.
1.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக
2.விழித்திருக்கும் அந்த உணர்வின் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

மந்திர ஒலியில் நாம் சிக்கிவிடக்கூடாது – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானத்தால் இன்றைய மனிதன் தன் ஞானத்தால் வெகு வேகமாகச் செயல்படுத்தும் இத்தருணத்தில்…
1.மந்திர ஒலியின் யாகத்தால் தன் ஆத்மாவை
2.இப்பூமியின் பிடிப்பலையிலுள்ள ஆவி ஆத்மாக்களின் ஈர்ப்பு சுழற்சியில் சிக்க விட்டுவிடக் கூடாது.

ஆலயத்தில் ஆண்டவனை வணங்கும் வழிமுறையறிந்து வணங்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமுண்டு…!

1.யாகத்தின் தொடர்பில் மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆலய வழிபாட்டின் உண்மை நிலை என்ன…?
2.தெய்வத்திற்கு ஓதப்படும் மந்திர ஒலியினால் மனிதன் வணங்கும் தெய்வத்திற்கு என்ன பலன்…?
3.மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆத்மாக்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…?

ஒலியின் நாதம் கொண்டு தான் தன்னுடைய இயக்கத்தின் தொடர்புக்கு ஜீவன் பெற வருகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலில்..
1.மனிதன் தான் வணங்கும் தெய்வ நிலைக்கு ஜீவன் ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்
2.மனிதனின் முதல் நிலையான “புகழ்…” என்ற
3.பேராசைக் குணம் ஏற்பட்ட காலத்தில் வளர்ந்ததுதான் மந்திரமும் யாகமும்.

இயற்கையின் தொடர்பில் ஜீவ சரீரத்திற்கு வலு ஏற்படுத்திக் கொள்ள இம்மனிதனின் உடலிலுள்ள மின் காந்த ஒலி அலைக்கு மீண்டும் வலுத் தன்மை கூட்டிக் கொள்ளக் கூடிய வளர்ச்சிக்காக மந்திர தந்திரங்களை வடித்துக் கொண்டார்கள் அரசர்கள்.

மாய உருக்களைக் கொண்டு… தன் ஈர்ப்பு வட்டத்திற்கு இவ் ஒலியையும் ஒளியையும்… ஜீவனற்ற ஆத்ம உயிர் அலைகளைத் தன் சரீர ஆத்ம அலையுடன் ஈர்ப்புப்படுத்தி… மந்திரத்தால் அரசர்கள் மாய வித்தைகள் நடத்தினர்.

அத்தகைய சூட்சுமத்தின் முதல் வித்து தான்… யாகங்களை நடத்தி யாகங்களில் பலியிடும் நிலைகள்…!

யாகத் தீயிலே பலியிடக் கூடிய உயிர் ஜீவனின் ஆத்ம ஒலியைத் தன் சரீரத்தின் ஈர்ப்பு வட்டத்துடன் வளர்த்துக் கொண்ட வழித் தொடரில்தான் யாகங்களும் மந்திர ஜெபங்களும் அரசர்கள் ஆண்ட காலம் தொட்டு வளர்ந்து வந்தது.

அரசன் அதற்கென்று குருமார்களை நியமித்த பின்…
1.குருவிற்கு அரசன் அடிமையா…?
2.அரசனுக்குக் குரு அடிமையா..! என்ற தொடரில்
3.இயற்கையின் உண்மைத் தத்துவத்தை ஆரம்பத்தில் சித்தர்கள் காட்டிய இயற்கைத் தொடரில் வளர்க்காமல்
4.இறைவன் என்ற உருவத்தைக் காட்டி…!
5.மனிதன் தன்னைத் தானே அடகு வைத்திடும் நிலைதான்
6.மந்திரமும் தந்திரமும் யாகங்களும் வேள்விகளும் ஆசார அனுஷ்டானங்களும்.

எவ்வொலியின் ஈர்ப்பில் உணர்வின் எண்ணம் செல்கின்றதோ அதற்கொத்துத் தான் ஆத்ம உயிர் ஜீவன் பெறுகின்றது. அவ்வொலியின் தொடர்பு கொண்டுதான் ஈர்ப்பின் தொடர் வலுக் கொள்கின்றது.

இறைத் தன்மை என்பது எங்குள்ளது..? இறைவன் யார்…? மனிதன் யார்…?

1.மனிதனுக்குள் உள்ள உயிர்த் தெய்வம் பிரிந்ததென்றால் இவ்வுடல் அழியக் கூடியதுதான்…!
2.இந்தத் தத்துவத்தைத் தன்னுள் அறிந்த மனிதன் “தான் யார்…?” என்பதை உணராமல்…
3.கலியின் செயலில் தெய்வமென்ற உணர்வில் ஆத்மாவை அடகு வைக்கும் வழித்தொடரிலேயே
4.மனிதனின் அறியக் கூடிய உயர் ஞானத்தை வளர்க்கவிடாது இன்று உலகம் செல்கின்றதப்பா…!

ஆனால்…
1.மெய் ஞானத்தின் உண்மையின் தத்துவத்தை உணரக்கூடிய பக்குவம்
2.இஜ்ஜீவ சரீரத்தில் இவ் உயிராத்மா இயங்கக்கூடிய காலம்தான் என்பதை உணர்ந்து
3.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு எலெக்ட்ரிக் லைட்டை மனிதன் தான் உருவாக்குகின்றான்.

இருளான இடங்களில் ஸ்விட்சைத் தட்டிய பின் அந்த விளக்கு வெளிச்சத்தை உமிழ்ந்து இருளை விலக்குகின்றது. விளக்கின் வெளிச்சத்தால் அங்கிருக்கும் பொருள்களைக் காணும் நிலை வருகின்றது.

இதைப்போல தான் அந்த மெய்ஞானிகள் தனக்குள் உணர்வின் தன்மையை ஆற்றல் மிக்கதாக மாற்றி இருள் சூழ்ந்த நஞ்சினை ஒளியாக மாற்றியவர்கள்.

நஞ்சின் தன்மை அதிகமாகும் பொழுது இருள் சூழும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிடுகின்றது. ஆனாலும்
1.நஞ்சு ஒரு பொருளுக்குள் தாக்கிய பின் வெப்பமாகின்றது.
2.வெப்பம் அதிகமாகும் பொழுது நெருப்பாகி ஒளியாக மாறுகின்றது.
3.மனிதனின் ஆறாவது அறிவு இத்தன்மை கொண்டதே.

இருளின் தன்மை வரும் பொழுது ஒளியைப் பாய்ச்சி அந்த இருளை மாய்த்து இருளுக்குள் ஒளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது மனிதனின் ஆறாவது அறிவு.

ஆதியிலே எல்லையே இல்லாத பேரண்டத்தில் நஞ்சின் தன்மையே பரவி எங்கும் இருண்ட நிலையாக இருந்தது. எல்லை என்றால் இதைப் போன்ற கோள்களோ நட்சத்திரங்களோ சூரியனோ இல்லாது சூனியப் பிரதேசமாக இருந்தது.

சூனியப் பிரதேசத்தில் ஆவியாகப் படர்ந்து இருக்கும் அக்காலத்தில் ஆவிகளிலே மிகவும் சக்தி வாய்ந்தது அந்த விஷம் தான்.

ஆதியிலே அந்த விஷத்தின் தன்மை மற்ற அமைதி கொண்ட நிலைகளைத் தாக்கும்போது தான் வெப்பம் உருவாகின்றது. வெப்பத்தின் தன்மை பெருகி ஒளியாக அதாவது வெளிச்சமாகின்றது.

வெப்பத்தினால் வெளிச்சத்தின் நிலைகள் வரப்போகும் போது
1.ஈர்க்கும் நிலை உருவாகி… “காந்தம்”
2.தன்னுடன் அணைத்துக் கொண்டு வளரும் தன்மையாக
3.மீண்டும் மீண்டும் ஜீவனாக்கும் சக்தியாக அது விளைகின்றது.

எதனுடன் சேர்த்து ஒரு அணுவின் தன்மை விளைந்ததோ இந்த நஞ்சு “உலகை ஒளியாக்கும் நிலை…” வருகின்றது.

அது கடந்து வரப்படும் போது ஒவ்வொரு நிலைகள் பெற்று இவ்வாறு தான் “பிரபஞ்சம் இயக்கச் சக்தியாக…” மாறியது.

இயக்கச் சக்தி மாறினாலும் மீண்டும் நஞ்சின் தன்மை மற்றொன்றுடன் மோதி மோதி நெருப்பாகின்றது. பின் அந்த நெருப்பிலே நஞ்சைப் போட்ட பின் அந்த நஞ்சினுடைய சக்தி இழக்கப்படுகின்றது.

நஞ்சால்தான் வெப்பம் உருவாகின்றது. ஆனால் அந்த வெப்பத்தால் நஞ்சை அடக்க முடிகின்றது. இவ்வாறு உருவாகும் உணர்வின் சக்தியை அந்தப் பேருண்மைகளை மெய்ஞானிகள் தனக்குள் கண்டுணர்ந்தனர்.

பேரண்டத்தின் இயல்பின் நிலைகளயும் மனிதனான பின் ஆறாவது அறிவின் தன்மை எப்படிச் செயல்படுகிறது…? என்ற நிலைகளையும் அறிந்துணர்ந்தவர்கள் மகரிஷிகள்.

நெருப்பில் நஞ்சினைப் போட்டால் அந்த நெருப்பின் தன்மை நஞ்சினை எப்படி வீழ்த்தி விடுகின்றதோ இதைப் போல நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சிகரமாக மாற்றிடும் நிலைகள் பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு” என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு நஞ்சினை வென்று
1.ஏழாவது நிலையாக ஒளியாக மாறுவதைத்தான் சப்தரிஷி என்று சொல்வது.
2.அந்த நிலை பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்கள்.

இதைச் சீராகச் செயல்படுத்தவில்லை என்றால் உயிருடன் ஒன்றிய நிலை அற்று மனித உரு இல்லாது நஞ்சு கொண்ட உடல்களைத்தான் பெற முடியும்.

உதாரணமாக நாம் மாட்டிற்கு ஆகாரம் போடுகிறோம் என்றால் கடும் நஞ்சாக இருக்கும் நாற்றமாக இருக்கும் அந்த நீரை ஊற்றுகின்றோம்.

மாடு அதை உணவாக உட்கொண்டு அதிலே கலந்த நஞ்சினைத் தன் உடலாக மாற்றிக் கொண்டு அந்த நஞ்சின் வலிமை கொண்டு ஒரு இயக்கச் சக்தியாக மாற்றி உடலின் வலிமையை அது பெறுகின்றது.
1.அதாவது நஞ்சைத் தன் உடலாக மாற்றிவிட்டு
2.அதனுடைய மலத்தை நஞ்சற்றதாக மாற்றுகின்றது.

மனிதனான நாமோ உணவாக உட்கொள்ளும் அதற்குள் இருக்கும் நஞ்சினை நீக்கிவிட்டு நமது உடலை நல்லதாக (அதாவது) ஆறாவது அறிவாக அடைகின்றது.

நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வின் தன்மை உடலிலிருந்து வரக்கூடிய அந்த மணத்தைத்தான் ஆறாவது அறிவாக உணர்த்துகின்றனர்.

எதையும் சரணமடையச் செய்யும் சக்தியான நம் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்.

அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி இருளை நீக்கிப் மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

மனிதனின் நிலைகள் முழுமை அடைந்து விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன்.
1.தான் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கி
2.தனி மண்டலமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அந்த அகஸ்தியன் உமிழ்த்திய உணர்வின் தன்மையை எவரெவர் கவர்ந்தனரோ அவர்கள் ஆறாவது அறிவின் தன்மையை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றவர்கள் அனைவருக்குமே
1.தீமைகளை அகற்றிடும் நிலையும்
2.நஞ்சினைத் தனக்குள் அடக்கிடும் ஆற்றலும்
3.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சிகரமாக மாற்றும் நிலைகள் வருகின்றது.

பேரண்டத்தின் உண்மைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்தியைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகின்றோம். அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் நானும் இதைக் கண்டேன் என்று குருநாதர் எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.

பித்துப் பிள்ளையான (பித்துக்குளி) ஈஸ்வரபட்டர்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் பொழுது ஒன்றுமறியாத பித்தன் என்றே எண்ணினோம். ஆனால்
1.பித்தான உடலுக்குள் நின்று
2.ஒளியான சத்தை தனக்குள் வளர்த்து உலகின் தன்மை அறிந்துணர்ந்து
3.அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்.

மாமரத்தில் உருவாகும் காய் முதலில் புளிப்பின் தன்மை அடைந்தாலும் முதிர்வில் கனியாகி மற்றவர்கள் ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

அதைப் போன்று நம் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை நுகராது இனித்த வாழ்க்கை என்ற நிலையைத் தனக்குள் எடுத்து
2.நஞ்சினை வெறுத்து மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.”தன்னிச்சையாக…” மகிழ்ந்திடும் உணர்வுடன் செயல்பட்டார்.
4.அப்படி இருக்கும் நிலையை… அவரைப் பார்ப்போருக்கு பித்தனைப் போன்று காணப்பட்டார்.

பிற்காலங்களில் அவர் உணர்த்திய உணர்வின் ஒலிகள் கொண்டு தான் அதை அறிய முடிந்தது.

இந்தப் பூமியில் வாழ்ந்த உடல் பற்றை அவர் அகற்றிவிட்டு அந்த மெய் ஞானிகள் மீது பற்று கொண்டு அந்த அருள் உணர்வுகளை அவர் வளர்த்துக் கொண்டு ஒளியின் தன்மை பெற்றார்.

நமக்குள் எதைப் பற்ற வேண்டும் எதைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக உணர்த்தினார்.

வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையும் பிறரை வெறுத்திடும் நிலையும் பிறரை அழித்திடும் உணர்வுகளையும் நமக்குள் இணையவிடாது அதை வெறுத்து அந்தத் தீமைகளைப் பற்றிடாது அருள் ஞானியுடன் பற்று கொண்ட உணர்வுகளை வளர்த்து அதைக் காத்திடும் நிலையாக நீ எவ்வாறு இருக்க வேண்டும்…? என்றும் உணர்த்தினார்.

என்னைப் பிறர் காணும் பொழுது நான் பித்தனாக இருக்கின்றேன். காரணம்
1.இந்தப் புவியின் ஆசை கொண்ட நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கும் பொழுது
2.என்னைப் பித்தன் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்
3.ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு அவர்கள் தான் பித்தராக இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை.

பித்தனாகி… இந்த உடலின் தன்மைக்கோ பித்தைப் போன்ற உடலின் உணர்ச்சிகளுக்கோ… நான் அடிமையாவதில்லை. உணர்ச்சிகளை அடக்கி
1.அந்த மெய் ஞானிகளின் உணர்வை நான் பெற வேண்டும் என்று
2.அந்தப் பித்துப் பிள்ளையாகத்தான் (பித்துக்குளி) நான் இருக்கிறேனே தவிர
3.இவர்களைப் போன்று உடலின் பித்துப் பிள்ளையாக நான் இல்லை…! என்று எம்மைத் தெளிவாக்கினார் குருதேவர்.

மனித வித்தின் பலன் உயர் ஞானம் தான் – ஈஸ்வரபட்டர்

 

இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.

அவை வளர்க்கக்கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”

எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.

அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.

இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.

ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.

அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.

அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!

கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.

அப்படித் தந்ததை விரயமாக்காமல் வளர்க்கும் வளர்த் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.

மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.

தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பழனியில் முருகன் சிலைக்குப் பக்கத்தில் போகர் சமாதி வைத்திருக்கின்றார்கள்.

முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்து விட்டுப் போகர் சமாதிக்கு வந்து “உனக்கு ஒரு கும்பிடு..! என்று கும்பிட்ட பின் காணிக்கையும் கொடுத்து விட்டுத் தன் பிள்ளைகளுக்கு ஏதாவது அர்ச்சனை செய்து கொண்டால் போதும் என்று அதைத்தானே நாம் செய்கிறோம்.

முருகன் கோயிலில் போகரை சமாதியாக வைத்திருக்கின்றார்கள். ஆனால் “அவர் யார்…?” என்பது தெரியாது.

முருகனைப் பார்த்த பின்… இந்தத் தெய்வ குணத்தை உணர்த்திய அந்தப் போகமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று இப்படி எண்ண வேண்டும்

முருகன் சிலையைச் சிருஷ்டித்துக் கொடுத்தவன் போகன். சிலையை ஏன் அமைத்தான்…? எப்படி அமைத்தான்…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆறாவது அறிவின் தன்மையாக இந்தப் பிரபஞ்சம் மனிதனாக எப்படி உருவாக்கியது…? என்பதை அறிந்து கொண்டவர் போகர்.
1.பிரபஞ்சத்தில் விளைந்தவை நவக்கோள் அது தான் “நவபாஷாணம்…”
2.இருபத்தேழு நட்சத்திரங்கள் இது “வைரம்…”
3.இருபத்தேழு நட்சத்திரங்களின் சத்தை இணைத்து சூரியனிலிருந்து உமிழ்த்தும் காந்தப்புலன் அறிவு “பாதரசம்…”

கோள்களின் சத்தையும் நட்சத்திரங்களின் ஆற்றல்களையும் சூரியன் தனக்குள் எதைக் கவர்ந்து கொண்டதோ அதனின் உணர்வின் செயலாக உலகை மாற்றுகின்றது என்ற நிலையை அவன் உணர்ந்து அதைப் போன்றே உணர்வின் செயலாக முருகன் சிலையை உருவாக்கினான்.

எந்தக் கோள் உமிழ்த்துகிறதோ அது பூமிக்குள் பரவி வந்தாலும் தன் இனத்தைக் கவர்ந்து அது பாஷாணமாக உருவாக்கும்.

இதே போல் இருபத்தேழு நட்சத்திரம் அது ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து உமிழ்த்தும் உணர்வுகள் புவிக்குள் பரவி ஒவ்வொரு வைரமும் ஒவ்வொரு கலராக இருக்கும்.

நட்சத்திரத்திலிருந்து வரும் மின் அணுக்கள் புவியின் ஈர்ப்புக்குள் வந்து தனித்து எதிலும் சிக்காது வீரிய உணர்வு கொண்டு சந்தர்ப்பவசத்தால் பூமியிலே பதிந்து விடுகின்றது.

அப்படிப் பதிந்து விட்டால்
1.எந்த நட்சத்திரம்… எந்தக் கல்… எந்த மண்… எந்தச் செடியிலே…
2.இது அதிகமாகக் கலந்து இருக்கின்றதோ அதனின் சத்து வந்த பின்
3.இதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் மண்ணிற்குள் மறைந்து கருவாகி
4.தன் சத்தை மட்டும் அது உறிஞ்சி
5.ஒளியின் சிகரமாக அந்த வைரம் விளைகின்றது.

இதை எல்லாம் போகன் கண்டுணர்ந்தான்.

இந்தச் சத்துகள் எல்லாத் தாவர இனங்களிலும் எல்லா மண்ணுகளிலும் கலந்து இந்த உணர்வின் இயக்கமாகச் சூரியன் எவ்வாறு ஒளிச் சுடராக இருக்கின்றதோ இதைப் போல ஒளியின் சிகரமாக அறிந்திடும் அறிவின் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்று போகன் கண்டுணர்ந்தான்.

அவ்வாறு தான் அறிந்துணர்ந்த நிலைகள் கொண்டு இந்தப் பிரபஞ்சம் உருவானதையே மனித உரு போல அந்த உருவத்தை உருவாக்கினான் போகன். அது தான் முருகன் சிலை.

மனிதனுக்கு வேண்டிய ஜீவாதாரமான அறிவின் தன்மையும் தீமைகளை அகற்றும் உணர்வையும் கொடுக்கும் தாவர இனங்கள் அது எவ்வாறு உருவானதென்ற நிலையையும் அறிந்து கொண்டான் போகன்.

சிலையை உருவாக்கும் பொழுது மனிதனுக்கு ஜீவாதாரமாகவும் தீமைகள் அகற்றிடும் உணர்வின் தன்மை எண்ணங்கள் வடித்த அந்தத் தாவரங்களின் உணர்வுகளை அவன் கவர்ந்து அதைச் சாரணையாகக் கொடுக்கின்றான்.

உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக வரும்போது பல வகையான தாவர இனங்களை உணவாக உட்கொண்டது.

அந்தச் தாவர இனச் சத்தின் மூலமாக வளர்ந்து தன்னைக் காத்திட அந்த ஞானத்தின் நிலைகள் எப்படிச் செயல்பட்டதோ அந்தத் தாவர இனச் சத்தை எல்லாம் இந்தச் சிலைக்குள் சாரணையாகக் கொடுக்கின்றான்.

மனிதனான நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நல்லதை நம் உடலாக்கிக் கொள்கின்றோம்.

இதைப்போல இதற்கு நேர் எதிரிடையாக இந்த மனிதனின் சிலையை உருவாக்கித் தன்னை அறியாது வந்த தீமைகளை அகற்றும் நிலையாக ஆறாவது அறிவை முருகா என்று காட்டினார் அந்தப் போகர்.

மண்ணுலகில் தன்னுடன் வாழ்ந்த மக்கள்…
1.அவர்களுக்குள் அறியாது வந்த நஞ்சை நீக்கி மகிழ்ந்திடும் உணர்வின் தன்மையைப் பெருக்க வேண்டும்…
2.விண்ணுலக ஆற்றல் பெற வேண்டும் என்ற அந்த ஆசையுடன் தான் முருகன் சிலையைப் படைத்தார் போகர்.
3.முருகன் சிலையைப் பார்க்கும் மனிதர்கள் தனக்குள் வரும் இருளை நீக்கி
4.மெய் ஒளி காணும் உணர்வுகளைப் பெறச் செய்தார் போகர்.

அப்பொழுது அவர்கள் மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த மகிழ்ச்சியான உணர்வின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து ஒளியின் சுடராக மாற்றிச் சென்றவன் போகன்.

இதைத் தெளிவாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அன்றைய நிலைகளில் இந்தச் சிலையைப் போகர் உருவாக்கி அதன் மீது நீரைச் சொட்டச் செய்தார். நீரின் நிலைகள் படும் போது வெப்பத்தால் சிலையிலிருந்து ஆவியாக அலைகளாகப் படர்கின்றது.

சிலையை உற்றுப் பார்க்கும்போது அதிலிருந்து வரும் அலைகளை அனைவரும் நுகர வேண்டும் என்பதற்கே அவ்வாறு வைத்தார் போகர்.

சிலையைப் பார்க்கும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…? எதை நுகர வேண்டும்…?

1.முருக குணத்தைக் காட்டிய அந்தப் போக மாமகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மனிதனான ஆறாவது அறிவின் தன்மை முழுமை பெற வேண்டும்.
3.எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
4.மெய்ப் பொருள் காணும் திறன் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்தச் சிலையைப் பார்த்து நுகர வேண்டும்

அதிலிருந்து வெளி வரும் மணத்தை நுகர்ந்தால் நம் வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் தீமைகளை மாற்றி நன்மையின் சக்தியாக அந்த ஒளியான நிலையை நாம் பெற முடியும்.

இன்று அந்தப் போகமாமகரிஷியை யாராவது எண்ணுகின்றனரா…? அவர் காட்டிய அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றனரா…?

உனக்கு நான் அர்ச்சனை செய்தேன்… அதனால் என்னை நீ காப்பாற்று…! என்ற நிலைகளில்தான் செல்லுகின்றோம்.

அந்தப் போக மாமகரிஷி
1.மெய் உணர்வின் தன்மையை அறிந்தான்
2.தன் இன மக்கள் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணினான்
3.மகிழ்ந்த உணர்வின் அலைகளாகப் பரப்பும் நிலையைச் செய்தான்
4.மனிதர் அனைவரின் உயிரைக் கடவுளாக மதித்தான்.
5.அனைவரும் தெளிந்த நிலைகள் கவர வேண்டும் என்று ஏங்கினான்.

முருகன் கோயிலுக்குப் போனால் அர்ச்சனையும் இரண்டு பழத்தைப் படைத்து விட்டு “என்னை நீ பார்த்துக் கொள்…” இதைத்தான் சொல்கின்றோம்.

மனிதனின் ஆறாவது அறிவைக் காத்திடும் நிலையாக அவன் தெளிந்த உணர்வு கொண்டு விண்ணுலகம் சென்றான் போகன். ஒளியின் சுடராக இருக்கின்றான்.

மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கினான். நஞ்சினை அடக்கிடும் உணர்வை மனித உடலிலே பெற்றான் அந்தப் போகமாமகரிஷி.

அந்தப் போகமாமகரிஷியை நாம் யாரும் நினைக்கின்றோமா…!

ஜீவன்களை ஜீவிக்கச் செய்யும் சக்திகள் பூமியில் எப்படி வருகிறது…?

 

பாறைக்குள் இருந்து மலை மீது சில இடங்களில் உச்சியில் நீர் வடிவதைப் பார்க்கலாம். காரணம்…
1.அங்கே அந்தப் பாறை ஆவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைப் பருகி
2.அதன் அடியில் எந்த மலை இருக்கின்றதோ அதற்குள் ஊடுருவிச் செல்லும் திறன் பெற்றது.

இப்படிப்பட்ட சில பகுதிகள் மலைகளில் உண்டு…!

மேகங்கள் மேலே பறந்து சென்றாலும் உச்சிமலையாக இருப்பது தனது காந்தப் புலனால் மேகங்களைக் கவர்ந்து நீராகச் சுரக்கச் செய்கின்றது. மலை உச்சிகளில் நாம் பார்க்கும் நீர்கள் எல்லாம் இப்படித்தான்.

இவைகள் எல்லாம் அந்தப் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும் அதனுள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டுதான் அந்தப் பாறையே அதை வளர்க்கின்றது.

1.இந்தப் பாறைகளிலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையும்
2.அந்தப் பாறைக்குள் நீராகக் கலந்து அதனின் தன்மை ஆவியாகப் படர்ந்து வரப்படும் பொழுது
3.அதிலே உருப் பெற்ற பல செடிகளின் சத்துக்களும் இது எல்லாம் ஒருக்கிணைந்து
4.அதனின் தன்மை ஒரு செடியாக ஒரு வித்தாக… கருவாக உருவானால்
5.அத்தகைய செடியையோ அல்லது மரத்தையோ வேறு எங்காவது நாம் ஊன்றினோம் என்றால்
6.அந்த மரத்திலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
7.விண்ணிலிருந்து நுண் அணுக்களாகத் துருவப் பகுதியில் கலந்து கொண்டிருப்பதையோ
8.அல்லது கடல் நீரிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்திருந்தால் அதனின் சக்தியையோ
9.அந்தத் தாவர இனம் தனக்குள் குவித்து… மேகங்களாகக் கூடச் செய்து நீராக வடியச் செய்கிறது
10.அந்த நீரின் சத்தை அது வளர்த்துக் கொள்கின்றது.

இப்படியும் பல நிலைகள் உண்டு…! இது எல்லாம் இயற்கையில் உள்ள சில நிலைகள்.

பல பல செடிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயல்பால் புதுப் புது தாவர இனங்களாகப் பூமியிலே விரிவடைந்து வளர்ந்திருந்தாலும் அவை அனைத்தும் வெளிப்படுத்தும் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது.

அவ்வாறு கலந்தவைகளில் உதாரணமாக ஒரு கடலைச் செடியிலே ஒரு உயிரணு விழுந்தால் அந்தச் சத்தினை அது கவர்ந்து உடல் பெற்று சிவமாக மாறுகின்றது.

சிவமாகும் பொழுது அந்தக் கடலைச் செடியின் சத்தை இந்த உயிரணு சுவாசித்து அதிலிருந்து வெளியிடும் நிலைகள் புழுக்களாகத் தோன்றுகிறது. இப்படி எண்ணிலடங்காத செடிகளிலிருந்து வெளி வருகிறது.
1.அவை இடும் மூச்சலைகளிலிருந்து வருவதுதான்
2.மனிதனாக உருப் பெறுவதற்குத் தேவையான ஜீவனுள்ள “பிராணவாயு…” என்று சொல்வார்கள்.
3.தனக்குள் மற்ற நஞ்சின் தன்மையை (கரியமில வாயுவை) மாற்றி இயற்கையின் ஜீவித சக்தியை வளர்க்கும் சக்தி அங்கே பெறுகின்றது.

ஏனென்றால் ஆரம்ப நிலையில் தோன்றிய செடிகள் வேறு. இப்பொழுது உருவாகும் செடிகளின் இனங்கள் வேறு.

அத்தகைய செடியின் சத்தைத் தான் நுகர்ந்து இந்த உணர்வின் துணை கொண்டு அது விளைந்த இது இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாகப் படர்கிறது.

ஆகவே ஜீவணுக்கள் உயிரணுக்களில் இருந்து வரக்கூடிய உணர்வினைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை ஒரு உடலுக்குள் ஜீவிக்கும் தன்மையாக… பிராணவாயுவாகக் கிடைக்கின்றது.

இது எல்லாம் மெய்ஞானப் பாடம்…!

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கத் தான் உபதேசிக்கின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

மனித உணர்வின் சூட்சுமத்தை… “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்…” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.

மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.

ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை… இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது…!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.

மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.

அவைகளுக்குக் கழிவும் உணவும்… ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு… நாணம்… முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.

மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.

தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.

இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு… உடை… இருப்பிடம்… ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை… இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்… இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்…
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.

ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று… ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்…”

மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்…
1.மூவுலக சக்தியான “ஆக்கல்… காத்தல்… மாற்றல்…” என்ற வழித் தன்மையில்…
2.வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்… பால்வெளி மண்டலத்தில்
3.எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்…
4.ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்…
5.அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை…
6.ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி…
7.உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி…
8.அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்…
9.படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்…
10.“அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி – உருப்பெறும் நிலை…!”

இச்சரீரத்தின் உணர்வை… “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.

இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை…!

ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை… ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்… ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.

தான் உண்ணும் உணவிற்கு…
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது…?

தன்னில் உள்ள இறைத் தன்மையை… தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பேட்டரியைச் சார்ஜ் செய்து அதன் மூலம் மற்ற கருவிகளைத் தொடர்ந்து இயக்குவது போல “துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவேற்றிக் கொண்டு… மற்ற எல்லா உணர்வுகளையும் இயக்குங்கள்”

நமக்குள் தெளிந்த சக்தியான நல்ல குணங்கள் இருப்பினும் நமது வாழ்க்கையில் பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன ஆகின்றது…?

பாலில் பாதாமைப் போட்டு வைத்திருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாதாமிற்கே சக்தி இழந்தது போல வேதனையை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சக்தி இழந்து விடுகின்றது.

ஒரு விஷம் பட்டால் எப்படி நம் தலை சுற்றுகின்றதோ விஷம் பட்டால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றதோ அதைப் போல
1.எதை எடுத்தாலும் பெரும் பாரம் போலத் தோன்றும்.
2.நம் காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால் “கோபம்…” என்ற உணர்ச்சிகள் வரும்.
3.நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகள் உருவாகும்.
4.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து விடுபடுவதற்கு அதிகாலையில் துருவ தியானத்தை எடுத்து “வாழ்க்கையே தியானம்…” என்ற நிலைகள் கொண்டு வாருங்கள்.

எப்பொழுதும் உங்கள் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே இருக்கட்டும். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள யாம் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை எண்ணினால் இந்தக் காற்றில் உள்ளதை அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் தீமைகளை நீக்கச் செய்யும்.

சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெருகி வாழ்க்கையை நல் வழியில் வழி நடத்தும் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கும்.

உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறச் செய்வதே நமது குரு காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம்

உதாரணமாக ஒரு பேட்டரியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியிலேயும் அது இயங்கி கொண்டே உள்ளது.

அதில் சார்ஜ் குறைவாகி விட்டால் மறுபடியும் பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் செய்யவில்லை என்றால் அதிலுள்ள மற்ற செல்கள் எதுவும் இயங்காது. இதைப் போல
1.உயிரிலும்
2.உயிர் வழியாக உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் வீரியத்தை ஊட்டினால்
4.சிந்திக்கும் வலிமையான ஆற்றல்கள் கிடைக்கும்.

இவ்வாறு செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையே…. “தியானம்” ஆகும்.

உங்கள் வாழ்க்கையில் அந்தத் துருவ நட்சத்திர உணர்வைப் பற்றுடன் பற்றுங்கள். தீமைகளைப் பற்றற்றதாக்கிக் கொள்ளுங்கள்.

நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று அவர்களையும் அதைப் பற்றச் செய்யுங்கள்.

அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் உணர்வை ஊட்டினால்,
1.நண்பர்களும் நலமாவார்கள்
2.நாமும் நலமாவோம்
3.நம் உடலும் நலமாகும்
4.நம் வாழ்க்கையும் நலமாகும்
5.நம் தொழிலும் நலமாகும்

இந்த முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் செய்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எதிர்படும் சந்தேகங்களைப் போக்குவதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

 

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை நீங்கள் கேட்டு அதைக் கடைப்பிடித்து வழி நடந்து கொண்டிருந்தாலும் உங்கள் உடலுக்குள் எத்தனையோ குணங்கள் எதிர்ப்பு உணர்வுகளைக் காட்டும்.

1.உங்களுக்குள் அவ்வாறு எழும் நிலைகளை மாற்றி
2.அந்தச் சந்தேக உணர்வுகளை நீக்கும் நிலைக்காகத்தான்
3.திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பது.

அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அந்த மெய் ஞானிகள் பெற்ற உணர்வுகளை மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிவு செய்யும் பொழுது
1.இதுவே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய உள் பொருளைக் காண முடியும்.
3.உங்களுக்குள் நல்லதைப் பெற முடியும்.

அந்த நம்பிக்கையில்தான் இதை உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி “என்னை விழித்திருக்கச் செய்த அந்த நிலையை…” நீங்களும் என்றும் விழித்திருந்து… தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்துப் பழக வேண்டும்.

காரணம்… உங்களுக்குள் தீமைகளை அறிவிக்கச் செய்யும் நிலையில் “தீமை இது தான்…” என்று அது காட்டினாலும் அந்தத் தீமைகள் உங்களுக்குள் விளையாது நல்ல உணர்வின் தன்மையை வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் விளைய வேண்டும்.

ஆகவே… தீமையை அகற்றிட்ட இருளைப் போக்கிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் பொருள் கண்டுணர்ந்திடும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்களுக்குள் வளர வேண்டும் என்றுதான் எமது குரு அருளாசிப்படி
1.நீங்கள் அனைவரும் அதை அவசியம் பெற வேண்டும்…
2.நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்ற தன்னம்பிக்கையில்
3.காலமானாலும்… கால நேரம் பார்க்காது உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
4.உங்கள் நல்ல உணர்வுடன் அருள் ஞானிகளின் உணர்வை இணைத்து இணைத்து
5.ஈஸ்வரப்பட்டர் அருள் ஆசைப்படி உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

உடலைச் சக்கையாக்கி… “உயிரை மணியாக்கும்” பக்குவத்திற்கு நாம் வளர வேண்டும்

 

1.என்னுள்ளே நான்… என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள் உள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள்ளுள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி… உயிரை மணியாக்க…
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.

ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.

நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே… “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில்

இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.

இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.

“மனிதனின் எண்ணம் தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.

மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.

விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!

அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.

எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர… “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.

ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும்… “உயிராத்மாவை வித்தாக்கி”
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்…!

தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
1.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவப்படுத்தி
2.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
3.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
4.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.

தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அதனின் உட்பொருளை அறிந்துள்ளோமா…?

கோயிலில் போய் நம் கஷ்டத்தை எல்லாம் சொல்லிவிட்டால் அந்தத் தெய்வம் நிவர்த்தி செய்து தரும்…! என்று தான் நாம் நினைக்கின்றோம்.

வாழ்க்கையில் கஷ்டம் வேதனை என் தொழில் நடக்கவில்லை… அது நடக்கவில்லை… இது நடக்கவில்லை… என்று வேதனையை எடுத்துக் கொள்கின்றோம்.

பிறருடைய கஷ்டங்களை நாம் கேட்கின்றோம்… அறிகின்றோம்.. நுகர்கின்றோம்… பின் உதவி செய்கின்றோம்.

பிறருடைய உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கின்றது. பிறருடைய உடலில் கோபம் இருக்கின்றது. பிறருடைய உடலில் வேதனை இருக்கின்றது.

இதையெல்லாம் நாம் பார்த்து “பாவம்… அவர்கள் குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.

நல்லவர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பத்தில் அவர்கள் குழந்தை தான் அத்தனை அட்டகாசம் செய்கின்றான். அவனைப் பார்த்தால் அவர்களுக்குத் தொல்லையாகின்றது என்று நாம் அதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.

பிறர் சிரமப்படுவதைப் பார்க்கின்றோம்.. உணர்கின்றோம்.. அவன் திருந்தி வாழவேண்டும் என்றும் நினைக்கின்றோம். ஆனால் அதையெல்லாம் கூர்ந்து கவனித்து நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வந்தவுடனே
1.பிறருடைய அந்தத் தோஷம்
2.”தோஷமாக…” நமக்குள் வந்து விடுகின்றது.

எது…?

பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வருகின்றது. இது தான் பிரதோஷம். சிவன் கோயில்களில் இதைத்தான் “பிரதோஷம்…” என்று தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வந்தவுடனே நாமும் புலம்பத் தொடங்குவோம்.

காசு கொடுத்தவன் கொடுக்கவில்லை… என் பையன் சொன்னபடி கேட்கவில்லை… என்றால் நம் வீட்டிலும் “அந்தத் தோஷம்” இங்கே வந்து விடுகின்றது

நம் வீட்டில் இருப்பவர்கள் நன்றாக உயர்வாக இருந்தாலும் உடலில் நோய் வந்து விட்டது என்றால் உற்றுப் பார்க்கின்றோம். “அவர்கள் உடலில் விளைந்த தோஷம்” நம்மிடம் வந்து விடுகின்றது.

நான்கு பேர் நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். அவர்கள் உடலில் சந்தர்ப்பவசத்தால் நோய்கள் வருகின்றது. அதை நாம் கேட்டறிகின்றோம். “நண்பருடைய தோஷம்…” நமக்குள் வந்து விடுகின்றது.

1.இந்த வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை.
2.வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டறிந்து
3.இதை எல்லாம் நமக்குள் சேர்த்ததும்
4.நமக்குள்ளும் தோஷமாகின்றது.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள். நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாக நேசித்தோமோ இந்தக் கணக்கின் பிரகாரம் நம் உடலுக்குள் மாற்றங்களாகின்றது.

கோபம்… கோபம்… என்று ஆத்திரப்பட்டால் இரத்தக் கொதிப்பு வருகின்றது.

கோபமும் வேதனையும் சலிப்பும், சஞ்சலம் வந்து சரவாங்கி நோயாகிக் கை கால் எல்லாம் முடக்குகின்றது. கோபம் வந்தால் “பளீர்..” என்று வந்து வெட்டி “வெடுக்…”கென்று இழுத்துக் கொள்கின்றது.

விஷம் என்ற நிலைகள் வந்துவிட்டால் பாம்பு போல “தொளக்..” என்று போட்டு விடுகிறது. விஷம் பாய்ந்தவுடனே என்ன செய்யும்…? கை இல்லாமல் போகும்.

நம் வாழ்க்கையில் நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாகச் சுவாசித்தோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலில் அதற்குத்தக்க மாற்றம் வருகின்றது.

1.நாம் சுவாசித்த நந்தி… “ஈஸ்வரர்”
2.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரான ஈஸ்வரனிடம் படுகின்றது.
3.நாம் சுவாசித்தது நம் உடலுக்குள் போய்
4.எந்தக் குணமோ உயிரைப் போலவே ஜீவ அணுவாக உருவாகி
5.அந்தக் கணக்குகள் நமக்குக் கூடும்.

உயிரைப் போலவே ஜீவனாகின்றது. உயிருக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஆக…
1.விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.
2.எதன் சுவையோ அந்த உணர்வுக்கொப்ப எண்ணங்கள் வரும்.
3.வேதனை என்ற சுவை இருந்தால் வேதனை என்ற உணர்ச்சி வரும்.

அது தான் உயிரைப் போலவே அந்த அணுக்கள் அந்த உடலில் உருவாகும் – விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.

எவ்வளவு அழகாகக் கொடுக்கின்றார்கள்…? நாம் எந்தக் குணத்தை அதிமாக எடுத்தோமோ அதன் ரூபமாக நம்மை மாற்றும்.

நந்தீஸ்வரன் – நாம் சுவாசித்த உணர்வெல்லாம் உடலில் சிவமாக மாறிவிடுகின்றது.

ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய… என்றால் அது எப்படி…?

நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தவுடனே பார்வதி பஜே அரஹரா சம்போ மகாதேவா.

1.பார்வையில் பார்க்கின்றோம் – பார்வதி பஜே
2.வேதனைப்படுபவரின் உணர்வுகள் நமக்குள் வந்து நம்மை இயக்கி – அரஹரா
3.சந்தித்த சந்தர்ப்பம் இணைந்து – சம்போ
4.நம் உயிர் மகாதேவன் அதை உருவாக்கி விடுகின்றான் – மகாதேவா

கோபப்படுபவர்களைப் பார்த்தாலே பார்வதி பஜே… அந்தப் பார்வையில் படுகின்றது நுகர்கின்றோம். பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா… கோபமான உணர்ச்சிகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

அதாவது… பிறருடைய தோஷங்களை நாம் அறிந்து உதவி செய்தாலும் இந்தத் தோஷங்களைச் சந்தித்த சந்தர்ப்பம் நமக்குள் என்ன நடக்கின்றது…? எந்தக் கணக்கு கூடுகின்றது…?

“சம்போ மஹாதேவா…” – நான் சந்தித்ததை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றான். மஹா தேவனாக இருக்கின்றான்,

யார்…?

நம் உயிர்…!

நமக்கு இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்களே…! நாம் யாராவது நினைக்கின்றோமா…?

பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருந்து நல்ல குணங்களுக்குச் சாப்பாடு கொடுக்காமல் “நீ இரு…” என்று இருக்கச் செய்து விடுகிறோம்.

நான்கு மணி வரையிலும் பட்டினியாக இருந்துவிட்டுச் சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். விளக்கைக் கொண்டு போய் வைக்கின்றோம் – இது கார்த்திகேயா.

கார்த்திகை என்றால் விளக்கை முன்னாடி வைத்துக் காட்டுகின்றார்கள். ஆறாவது அறிவு முன்னாடி இருக்கிறது,

விளக்கில் எல்லாப் பொருளும் தெரிகின்றது.

ஆறாவது அறிவால் இதைத் தெரிந்து கொள்…! என்று விளக்கை வைத்துக் காட்டுகின்றான். அந்த விளக்கு எது…?

துருவ நட்சத்திரத்தின் விளக்கு. துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இப்படித் தூய்மைப்படுத்து. தன்னுடைய மனதை விளக்கு…! என்று தான் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

இதற்குப் பதில் புறத்தீயின் நிலைகளை வைத்து தீபத்தை வைத்துக் காண்பிக்கின்றனர்.

ஆக… சாப்பிடவில்லை என்றால் நல்ல அணுக்கள் கெட்டுப் போகும். இந்த ஆறாவது அறிவால் தெரிந்தும் கூட பட்டினியாக இருந்து விரதம் இருக்கின்றோம்.

ஆனால் எது விரதம்…?

வேதனை, வெறுப்பு, சஞ்சலம் அவன் அப்படிச் செய்கின்றான் என் பையன் என்னை எதிர்க்கின்றான் – இதைப் போன்ற உணர்வுகள் எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும் போது அந்தத் தீமைகள் நமக்குள்ளே போகாமல் தடுக்க வேண்டும்.

அது தான் உண்மையான விரதம்.

நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுத்தால் வீரியமாகும். அதற்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் சோர்வடையும். சோர்வோடு இருக்கும் போது எப்படி இருப்போம்?

இன்றைக்கு விரதம் என்றால் உற்சாகமாகவா இருக்கின்றீர்கள்…! முகம் அப்படியே வாடிப்போகும்… இல்லையா…! அந்த முகம் மாறினவுடனே என்ன செய்கின்றது,

சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்தப் பிரசாதத்தை எடுத்து நந்தீஸ்வரனுக்குக் கொண்டு வந்து முன்னாடி கொடுத்து “இந்தாப்பா சாப்பாடு….! என்று கொடுக்கின்றோம்.

1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்.
2.என் மாமியார் திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.
3.என் மாமனார் சொல்வதைக் கேட்டுக் கொண்டு என் வீட்டுக்காரர் திட்டிக்கொண்டே இருக்கின்றார்.
4.கடன் கொடுத்தது அவன் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கின்றான்.
5.சாப்பாட்டைக் கொடுத்து இதையெல்லாம் நந்தீஸ்வரன் காதில் மிகவும் வேதனையோடு சொல்வார்கள்.

அதே சமயத்தில்
1.என் வீட்டுக்காரர் மாமனார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.
2.மாமனார் சொல்வது மாமியார் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
3.இவர்கள் பேச்சைகளைத்தான் என் பிள்ளைகள் கேட்கிறது.
4.எங்கள் வீட்டிலேயும் அவர்கள் பேச்சைத்தான் கேட்கிறார்கள்
5.இந்தக் குறைகளை நீ போய் ஈஸ்வரனிடம் சொல்லப்பா என்று தோஷங்களை நீக்குவதற்குப் பதில் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் இதெல்லாம் குருநாதர் சொன்ன பிற்பாடு தான் பிரதோஷம் என்றால் என்ன…? என்று எனக்குத் (ஞானகுரு) தெரியும். இல்லை என்றால் எனக்கும் தெரியாது.

பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருப்பார்கள். அன்றைக்கு நமக்கும் கொஞ்சம் பசி எடுக்கும். நாம் சாப்பாடு வேண்டும் என்று கேட்டால் “இப்போது என்ன அவசரம்…?” என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்,

நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். எனக்குச் சாப்பாடு கொடு என்று கேட்டால் “சாமிக்குக் கொடுத்த பின் தான் சாப்பிட வேண்டும்..” என்று அவர்களுக்குக் கோபம் வரும்.

விரதம் இருக்கும் அன்றைக்கு இது போல நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு எப்படிக் கோபம் வரும் என்று பாருங்கள்…! பிறருடைய தோஷங்களை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்கின்றோம்.

ஆனால் சங்கடம், சலிப்பு, சஞ்சலம், வேதனை, வெறுப்பு இதைப் போன்ற தீமையான உணர்வுகளைச் சுவாசிக்காமல் இருப்பதற்காகவும் தீமைகளை நாம் நினைக்கக்கூடாது என்பதைத்தான் விரதம் என்றார்கள் ஞானிகள்.

ஒளியைத் தான் நாம் உருவாக்க வேண்டுமே தவிர இருளை அல்ல…!

 

விஷம் எதிலுமே ஊடுருவி இயக்கும் சக்தி பெற்றது. எதனையுமே இயக்கக் கூடியது. விஷத்திற்குள் அடங்கி விட்டால் இருள் சூழ்ந்த நிலையே கடைசியில் வருகின்றது.

விஷத்தை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்த்தால் ஒளியின் தன்மை அடைகின்றோம்.

ஆனால் மனித உடலில் விஷம் அதிகரித்தால் கலி… மீண்டும் பாம்பினங்களுக்குச் செல்லும் நிலையாகின்றது.

சூரியன் பாதரசத்தால் இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை எப்படிப் பெற்றதோ அது போல் ஆறாவது அறிவின் தன்மை கொண்ட மனிதன் ஏழாவது நிலையாக உருவாக்கப்படும் போது
1.உயிருடன் ஒன்றி உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
2.அதன் வழி நாம் கல்கி ஆகின்றோம்… பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

சூரியன் ஒரு காலம் மடியலாம். ஆனால் அதே சமயத்தில் உயிரணுவாகத் தோன்றி மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் என்றும் ஒளியின் சுடராகப் பொங்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
1.எல்லோரையும் மகிழச் செய்யும் அந்த உயர்ந்த நிலையை மனித உடலில் இருந்து தான் பெற முடியும்
2.ஆறாவது அறிவால் தான் அதை உருவாக்க முடியும்.
3.அதைச் சீராகப் பயன்படுத்தினால் நாம் இந்த உடலுக்குப்பின் ஏகாதசி…!
4.எதிர்ப்பே இல்லாத நிலையாக பத்தாவது நிலையான ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

அதை அடையத் தான் ஒவ்வொரு ஞானிகளும் முயற்சித்தனர்.

இப்பொழுது இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் இந்த உணர்வினை நீங்கள் நுகரும்போது
1.ஞானத்தை உங்களுக்குள் உருவாக்கி… அருள் உணர்வைக் கருவாக்கி
2.கலி என்ற நிலையை மாற்றி… கல்கியைப் பொங்கச் செய்ய வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில் உங்கள் வாழ்க்கையை அமைத்து இருளை மாற்றி இந்த உடலுக்குப்பின் கல்கி என்ற நிலைக்கு வர வேண்டும். ஒளி உடலாக உருவாக்க வேண்டும் ஒளி உடலாக மாற்ற வேண்டும்.

இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை என்ற உணர்வானால் மனிதனல்லாத உருவாகின்றது… கலி. கலியுகத்தில் தான் வாழ்கின்றோம். நாம் கல்கியுகத்திற்குச் செல்ல வேண்டும்.

கலியில் தான்…
1.ஒன்றை நல்லதாகவும் உருவாக்க முடியும்
2.தீமையையும் உருவாக்க முடிகின்றது.
3.கலி கெட்டதும் அல்ல…!

நாம் பல வகைகளில் உருவாக்கினாலும் இந்தக் கலியில் நல்லதை உருவாக்கப்படும் போது கல்கி ஆகின்றோம். ஆகவே உருவாக்குவது என்ற நிலையானால் கல்கியைத் தான் உருவாக்க வேண்டுமே தவிர கலியை அல்ல…!

ஒன்பதாவது நிலையில் இருக்கும் நாம் தீமை புக விடாது தடுப்பது தான் கடவுளின் அவதாரம் “நரசிம்ம அவதாரம்…” அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம்.

உடலைப் பயன்படுத்தி உயிராத்மாவின் தரத்தை உயர்த்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா… அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா…? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.

முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.

அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.

காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்

அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.

உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை… ஆத்ம உணர்வை அறியாமல்… எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.

தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.

அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்…
1.இவர்களுக்கே இந்த நிலை…
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்… நாம் என்ன செய்ய முடியும்…! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு… மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்… தனது…” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு… பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து… அதைத் தன் சக்திக்குகந்தாக்கி… மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.

அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று…
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் சாந்தம் என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.

நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… தொழிலில் நஷ்டம் ஆகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது மனச் சோர்வு அல்லது வேதனை இரண்டும் நமக்கு வரப்போகும் போது
1.இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி
2.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை ஊட்டி விடுகின்றது.
3.சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது.
4.தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகின்றது.
5.கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.

இதனால் குடும்பத்தில் உள்ள மற்றவரும் அந்த வேதனையை நுகரப்படும்போது அவர்கள் உடலுக்குள்ளும் அவருக்குத் தக்கவாறு சில நோய்கள் வரத் தொடங்கி விடுகின்றது.

நாம் வேதனை வேதனை என்று எண்ணும் போது அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்தால் நம் உடல் உறுப்புகளிலுள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.

விஷத்தின் தன்மை பெற்றால் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் கலந்து எந்த உறுப்புகளில் விஷத்தன்மை அதிகமாகின்றதோ அந்த உறுப்புகளில் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நோயாகின்றது.

விஷத்தின் தன்மைகளை முறித்து ஒளியின் உடல் பெற்றது அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன நிலைகள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வினைச் சூரியன் கவர்வதனால் அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி நம் இரத்தத்தில் கலந்து எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்துதல் வேண்டும்.

அப்பொழுது நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று அதன் வலிமை பெறுகின்றது.

இப்படி நாம் தினமும் அதைச் சேர்த்துக் கொண்டு வந்தால்
1.நம் உடலிலுள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் மாற்றும்.
2.சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.

நம் இருதயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்தால்
1.இருதய வால்வுகள் சீராக இயங்கி
2.இருதயத்தை இயக்கும் அணுக்கள் வீரியமடைந்து
3.நாம் மன உறுதி பெற்று மன பல கொண்டு
4.சிந்தித்துச் செயல்படும் சக்தியும் வருகின்றது.
5.அமைதியும் சாந்தமும் கொண்டு இந்த வாழ்க்கை வாழ முடியும்.

இவ்வாறு வேதனை என்ற நிலையை நீக்கிச் சிந்திக்கும் வலிமை பெறும்போது
1.ஒவ்வொரு செயலையும் நாம் எப்படிச் செய்யலாம்…? என்ற உறுதியான எண்ணமும்
2.பிறரிடத்தில் உதவியோ அல்லது நல்ல சொல்களைச் சொல்லப்படும் போது
3.அதனால் மற்றவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
4.அமைதியும் சாந்தமும் கொண்டு பண்பும் பரிவும் கொண்டு வாழ இது உதவும்.
5.குடும்பத்திற்குள் பெரு மகிழ்ச்சி ஏற்படும்.

ஆகையினால் தினசரி அதிகாலையில் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அந்தச் சக்தியை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

புது வைரஸ்கள் (MUTATED) உருவாகிறதா…? அல்லது உருவாக்கப்படுகிறதா…! என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

இயற்கையின் உண்மையின் உணர்வின் தன்மையை அகஸ்தியன் தனக்குள் வளர்த்துக் கொண்டவன். நஞ்சைத் தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டவன்.

அவன் கண்ட உண்மையின் உணர்வை நமக்குள் பெற்று “கல்கி…” என்ற நிலையில் ஒரு தெளிவான உணர்வை உருவாக்கத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பது (ஞானகுரு).

ஒருவன் நமக்குச் செய்யக்கூடிய தவறை நாம் கூர்ந்து கவனிக்கின்றோம். பார்த்துப் பதிவான பின் “அவனை விடுவேனா பார்…!” என்ற அசுர உணர்வு வருகிறது.

ஆனால் அவன் நம்மைத் தாக்கவில்லை.. இருந்தாலும் தாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றான்… என்று வைத்துக் கொள்வோம்.
1.செவி வழி கேட்கின்றோம்
2.மூக்கு வழியாக நுகர்கின்றோம்
3.உயிரிலே பட்டதும் உணர்ச்சிகள் தூண்டுகின்றது
4.அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படருகின்றது.

அப்பொழுது தீமையை உருவாக்கக் கூடியதாக மாறி விடுகின்றது. அதாவது நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்லக்கூடிய சக்தியாக மாறுகின்றது. அதுவே “கலி…” என்ற நிலையாக வந்துவிடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப்படும் போது
1.அது அந்த நஞ்சினை அடக்குகின்றது
2.உணர்வின் அறிவாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை ஒளியாக மாறிக் கல்கி ஆகின்றது.

ஆகவே…
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாகி நாம் கல்கி ஆக மாறுவதா…?
2.அல்லது கலி என்ற நிலைகளில் தீமைகளை உருவாக்கி தீமையாக மாற்றுவதா…? என்று சற்று சிந்தியுங்கள்.

விஞ்ஞான உலகில் இன்று எத்தனையோ வகையான புது மிருக இனங்களை (கண்டுபிடிப்பு) உருவாக்குகின்றார்கள். ஆனாலும் அந்த மிருகங்களை உருவாக்க
1.எத்தனையோ உயிரணுக்களைக் கொல்கின்றார்கள்
2.பல விஷத்தின் தன்மைகளைக் கலக்கின்றார்கள்
3.புது உணர்வின் அணுக்களாக உருவாக்குகின்றார்கள்.

அத்தகைய அணுக்களின் சத்தை எல்லாம் சூரியன் கவர்கின்றது. விஞ்ஞான அறிவால் செயற்கை முறையில் மாற்றப்பட்ட உணர்வின் அணுக்கள் சூரியனால் கவரப்படும் பொழுது காற்றுடன் காற்றாக அவை கலந்து
1.மனித உடலில் பட்டால் கடும் நோயாக மாறிவிடுகிறது
2.மனிதன் உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களில் புது விதமான விஷக் கிருமிகளாக (VIRUS) உருவாகின்றது

தாவர இனங்களை உட்கொண்டு மடிந்தால் மீண்டும் மனிதனுக்குள்ளே வருகின்றது. மனித உடலிலே புதிய வியாதிகளாகத் தோன்றுகிறது.

தீமைகளை நீக்க… பூச்சியைக் கொல்ல மனிதன் கலியாகவே மாறி விடுகின்றான். அதைக் கொன்ற பின் அந்த விஷத்தின் தன்மை (MUTATION) உணவு வகைகளில் நமக்குள் வருகின்றது… கலி…!

தீமைகளை வளர்க்கும் தன்மையே வருகின்றது. நாளுக்கு நாள் கலி என்ற நிலையையே உருவாக்கும் நிலைக்கு மனிதன் வருகின்றான். மனிதனை மனிதன் அழித்திடும் உணர்வு வருகின்றது.

விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது சிந்தனை இழக்கப்படுகின்றது.
1.மனிதனை உருக்குலைக்கும் உணர்வுகள் வருகின்றது
2.மனிதனை உருக்குலைத்தாலும்… உணர்வை உருக்குலையச் செய்யும் கலி என்ற தன்மைகள் வருகின்றது.

இதிலிருந்து மீள்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே ஞாபகப்படுத்துகின்றோம். சூரியன் விஷத்தை நீக்கி இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குவது போல
1.அதிலே உயிரணு தோன்றி இத்தனையும் வடிகட்டியதோ
2.வடிகட்டிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமானதோ
3.அதனின்று வரும் உணர்வினை நாம் நுகர்ந்தால் கல்கி ஆகலாம்

ஆனால் அதை மறுத்தால் நாம் கலி ஆகலாம்…!

ஆகவே இதில் எதைப் பெற வேண்டும்…? என்ற நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். அருளைப் பெருக்கினால் இருளைப் போக்கலாம்.

உயர் ஞான ஜோதிகளாக நாம் ஆக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு மனிதனுக்கும்…
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை… உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.

இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு… இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.

சேவை என்பது… தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.

உடலின் சுகத்திற்குச் சேவையும்… புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல…!

மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும்… பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.

இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் “ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை…” ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திரவக எண்ணை வித்து நிலை.

1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.

ஆவியாகி… குளிர்ந்து நீராகி… நீரின் தொடர்பு கொண்டு… தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.

சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.

மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.

அதாவது… நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக்கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா…!

இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துக் கொண்டு போகின்றார். அப்போது என் கையில் ஒரு வேரைக் கொடுக்கின்றார். அந்த வேரைக் கொடுத்துக் கையில் கட்டிக் கொள்ளச் சொல்கின்றார்.

கட்டிக் கொண்டேன்.

ஒரு இடத்தைக் காண்பித்து அங்கே ஒரு பெரிய “புதையல்…” இருக்கின்றது. அதை எடுத்துக் கொண்டு வாடா… என்கின்றார்.

என்ன புதையல் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் “நீ போ…!” என்றார்.

பார்த்தால் ஒரு மலைப் பாம்பைப் போலக் கரு நாகம் – ஒரு காளிங்கராயன் பாம்பு அங்கே அது படுத்திருக்கின்றது.

பார்த்தவுடனே… … …! எனக்குப் பயமாகி விட்டது.

எனக்குப் பயம் வந்தாலும் என்னைக் கண்டவுடனே அந்தப் பாம்பு ஒன்றும் சீறவில்லை. ஏன்…!

குருநாதர் என்னிடம் கொடுத்த வேர் என்ன செய்கின்றது…?

அந்தப் அப்படியே பதும்பச் செய்கின்றது. அங்கே போனவுடனே குருநாதர் அதைத் தூக்கிக் கொண்டு வாடா…! என்று என்னிடம் சொல்கிறார்.

எனக்குப் பயமாக இருக்கின்றது. ஆனால் தூக்கினால் அது வரவில்லை. அந்தப் பாம்பைத் தூக்கிச் சுமக்க நான்கு பேர் வேண்டும் போல் இருந்தது.

என் ஒருவனால் தூக்க முடியவில்லை. சரி விட்டு விட்டு… வாடா… என்றார்.

இது எதனால் அந்தப் பாம்பு பதும்புகிறது…?

இயற்கையில் விளைந்த உணர்வுகள் இந்த விஷத்தின் தன்மையாக்கப்படும் போது அதனுடைய செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்று
1.விஷத்தை ஒடுக்கும் சக்தி அந்த வேரிலே இருப்பதால்
2.அந்தப் பாம்பு அமைதியாக இருக்கின்றது…! என்று காட்டுகின்றார்
3.காட்டிற்குள் அனுபவரீதியிலே கொண்டு வருகின்றார் குருநாதர்.

காட்டிற்குள் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றார்.

அங்கே பார்த்தால் ஒரு புலி செத்துக் கிடக்கின்றது. உயிர் போனவுடனே புலியினுடைய உடல் அழுகிக் கிடக்கின்றது. புழுக்களாக அரிந்து கொண்டிருக்கின்றது.

அழுகிய அந்தப் புலியின் உடலுக்குப் பக்கத்திலே போய் “உட்காருடா…! என்றார். நாற்றமோ சகிக்க முடியவில்லை.

சாமி… ஒரே நாற்றமாக இருக்கின்றது…! என்று சொன்னேன்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! அதனாலே “உட்கார்ந்து பார்…!” என்று சொல்கிறார்.

உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். எத்தனை நாள்…? ஒரு நாளா… இரண்டு நாட்களா…! ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் உட்கார்ந்து பார்த்தேன்.

பத்து பதினைந்து நாட்கள் வேறு எதுவும் சாப்பிடவே முடியவில்லை. இரண்டு பச்சிலையைக் கொடுத்தார். அதை மென்று சாப்பிட்டுக் கொள் என்றார்.

அதையெல்லாம் எனக்கு விபரமாகக் கணக்குச் சொல்ல வேண்டும் என்கிறார். நான் எந்தக் கணக்கைச் சொல்லட்டும்….?

புலியின் உடலில் உள்ள புழுக்கள் அந்த உடல் முழுவதையும் சாப்பிட்டு விடுகின்றது. கடைசியில் எலும்பும் தோலாகவும் தான் இருக்கிறது.

புலி உயிருடன் இருக்கும்போது எத்தனை வகையான உயிரினங்களைக் கொன்றதோ அந்த உணர்வெல்லாம் உடலுக்குள் அணுக்களாக இது புலியாக உருவாகின்றது.

இந்தப் புலியின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் முதலில் ஜீவ அணுக்களாக இருந்தது. புலியின் உயிர் வெளியே சென்ற பின் ஜீவஅணுக்கள் உயிரணுக்களாக மாறுகின்றது. புழுக்களாக ஆகின்றது.

புழுக்களாக இருந்ததெல்லாம் புலி உடலைத் தின்றவுடன் அடுத்து ஆகாரம் இல்லை என்றால் மடிந்து விடுகின்றது. அந்தப் புழுக்களின் உயிர்களும் வெளி வருகின்றது.

புலி தன் பசிக்காக மாட்டையோ மற்ற எதை எதை அடித்துச் சாப்பிட்டதோ அதன் உடலுக்குள் இந்தப் புழுவின் உயிர்கள் உயிரணுக்களாக விளைகின்றது.

அதாவது உயிரணுக்கள் என்றால் புலியின் உடலில் முதலில் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. பின் உயிரணுக்களாக மாறுகின்றது.

உயிரணுக்களாக மாறியவுடனே மாடு ஆடு மற்ற உயிரினங்களில் பட்டபின் “உன்னி… ஈ…” போன்ற நிலைகளில் உருவாக்கி அந்த உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மை வருகின்றது.

இரத்தத்தை உறிஞ்சி உடல் வளர்த்த அந்தப் புலியின் உணர்வுகள் உயிர் சென்ற பின் அதே அணுக்கள் உயிரணுவாக மாறி மீண்டும் மற்ற உடல்களில் என்னென்ன செய்கின்றது…? என்பதனை உற்றுப் பார்க்கச் சொல்கின்றார்.

புலியின் ஒரு உயிர் போனது. உயிர் போனபின் அந்த உடலில் பல உயிர்களின் தன்மை வளர்க்கப்பட்டு ஆடு மாடுகளில் உன்னியாகவும் ஈ ஆகவும் செல்லுகின்றது.

அதே சமயத்தில் புலி ஒரு உயிரினத்தைக் கடித்துக் குதறும் போது இரத்தங்கள் சிந்துகின்றது. இரத்தங்கள் சிந்தியபின் இரத்தத்திலே மின்னல்கள் தாக்கப்படும் போது இதில் ஜீவக்கருக்கள் உருவாகி அதன் நிலைகள் “அட்டைகளாக…” வளர்கின்றது.

நாம் நடந்து போனால் போதும். அந்த அட்டை தவ்வி நம் உடலிலே அமர்ந்து நம் இரத்தத்தைக் குடிக்கின்றது.

இதைப்போல ஒரு உடலிலிருந்து எத்தனை வகையான நிலைகள் அது உருவாகிறதென்று குருநாதர் காட்டுகின்றார்.

அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிப்படும் அழுகிய ஆவிகள் காற்றிலே போகின்றது. இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்ளுகின்றது. அது அலைகளாக மாறுகின்றது.

அதே சமயத்தில் விஷச் செடியில் இருந்தும் பல மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்தையும் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிப் பரமாத்வில் சுற்றிக் கொண்டிருக்கின்றது.

அழுகிய புலியின் உணர்வைக் கவர்ந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளின் சத்துக்களை கவர்ந்து கொண்ட அலைகள் ஓடுகின்றது.

இவ்வாறு அது ஓடும் பாதையில் இன்னொரு பக்கம் பிற விஷச் செடியில் இருந்து உமிழ்த்தும் உணர்வுகள் மோதிய பின் “கிறு..கிறு..” என்று சுற்றுகின்றது.

அது சுற்றி ஒன்றோடொன்று மோதி அந்த மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மூன்றும் இரண்டறக் கலந்த உணர்வுகள் பூமியில் படர்கின்றது.

1.புலி ரிக். அழுகிய புலி உடலில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. இந்த நாற்றம் நமக்கு வருகின்றது.
2.செடி கொடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை.
3.ஒரு விஷச் செடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணங்கள் சாம இசை.
4.இது மூன்றும் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்ட பின் மோதலில் ஒன்றாகக் கலக்கப்படும் போது அதர்வண.
5.ஒன்றோடொன்று மோதி அதன் உணர்வுகள் ஒன்றாக இணைந்த பின் யஜூர். ஒரு வித்தாகி விடுகின்றது.

பல விதமான உணர்வுகளைச் சேர்த்து நாம் ஒரு பலகாரத்தை வேக வைத்தால் அது ஒன்றாகி சுவையாக மாறுகின்றது.

இதைப் போல பல உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒன்றாக அமைகின்றது. மோதியதால் ஏற்படும் ஆவியாக மேலே செல்லுகின்றது.

இரண்டறக் கலந்தது தரையிலே படுகின்றது. தரையிலே பட்டபின் எதிர் நிலையான நட்சத்திரங்களிலிருந்து துகள்கள் நம் பூமிக்குள் மின்னலாகத் தாக்கப்படும் போது
1.இதில் கலந்த நிலைக்கு எதிர் நிலையாக வரும் போது
2.அதிலே தாக்கப்பட்டு இழுக்கும் சக்தியாக வருகின்றது
3.அப்போது அது செடியாக வளர்கின்றது.
4.அவ்வாறு அது செடியாக வெளியில் வரையிலும் என்னைக் குருநாதர் அங்கே உட்கார வைத்துக்கொண்டு இருந்தார்.

பக்கத்திலேயே இருக்கச் சொல்கிறார். வெளியில் போய்ச் சாப்பிடக் கூட விடவில்லை. பட்டினியாகத்தான் உட்கார வேண்டும். பச்சிலையை மெல்ல வேண்டியது அதைச் சாப்பிட வேண்டியது புலியைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது.

இந்த இயற்கை எப்படி மாறுபடுகின்றது என்பதனைத் தெரியச் செய்கின்றார். பின் அந்தச் செடி முளைத்து வந்தது. அந்தச் செடியின் அருகில் அடையாளம் தெரிவதற்காகக் கோடு போடச் சொல்கின்றார்.

அந்த இடத்தை விட்டுப் போய் விட்டு ஒரு இரண்டு மாதம் கழித்து வருகிறோம். அந்தச் செடி கொடியாக வளர்ந்திருக்கிறது.

கையில் நீ் கத்தியை எடுத்துக் கொண்டு போடா என்றார்.

கத்தி எதற்கு சாமி…? என்றேன்.

கத்தியைக் கொண்டு போ என்றார்.

அங்கே ஒரு மரம் அருகில் அந்தக் கொடி விளைந்திருக்கிறது. அத்ற்கு எதிரிலே உட்கார் என்றார். நான் உட்கார்ந்தவுடனே என்னை நோக்கி அந்தக் கொடி நைசாக நகர்ந்து வருகின்றது.

அந்தக் கொடி நகர்ந்து வந்து உன்னைத் தொட்டுவிட்டது என்றால் எப்படிக் கரண்ட் பாய்கின்றதோ அதே மாதிரி பாய்ந்து புத்தியில்லாமல் போய்விடும். உன் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்றார் குருநாதர்.

கொடி உன்னைத் தொடும் பொழுது “சுரீர்…” என்று வரும். உடனே கத்தியால் அதை “வெட்டுடா…” என்றார்.

நான்கைந்து தரம் வெட்டிய பிற்பாடு அப்புறமும் நீண்டு வருகிறது. வெட்டியபின் அது எட்டாத நிலை ஆகும் போது அடுத்து ஒன்றும் செய்யவில்லை.

பார்த்தயா…! அன்றைக்கு அந்தப் புலி எந்தெந்த உயிரினங்களின் இரத்தத்தை உறிஞ்சியதோ அதனின் உணர்வு செடியுடன் கலந்தது. கொடியாக விளைந்தது.

இப்பொழுது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை அந்தக் கொடிக்கு வந்துவிட்டது என்று காட்டுகிறார்.

நம் மனித வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின் உடலில் விஷமான அணுக்கள் பெருகியபின் நல்ல அணுக்களைக் கொன்றுவிடும்.

விஷமான அந்த அணுக்கள் பெருகி விட்டால் அதைத்தான் கேன்சர் நோய் என்று சொல்கிறோம். மற்ற அணுக்களுக்குள் இருக்கும் இயக்கச் சக்தியையும் அது கவர்ந்து கொள்ளும்.

உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்காது. இந்தக் கேன்சர் என்ற நிலை வந்துவிட்டால் எதுவுமே செயல்படுத்த முடியாது போய்விடும்.

அதைக் கொல்ல வேண்டும் என்றால் இதற்கு மருந்து இல்லை.
ஏனெனில் அதைக் கொல்ல வேண்டும் என்றால் வீரியத் தன்மை மருந்தை ஊட்ட வேண்டும்.

வீரியமான மருந்தை ஊட்டினால் நம் உடலிலுள்ள சாந்தமாக இருக்கக்கூடிய அணுக்களெல்லாம் மடிந்துவிடும். மருந்து கொடுத்தும் பயன் இல்லை.

கேன்சர் போன்ற நிலைகளுக்கு இந்தக் கொடியை எடுத்து அதில் வேறு சில பச்சிலைகளை இணைத்துப் பக்குவப்படுத்திக் கொடுத்தால் அந்தக் கேன்சர் விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிவிடும்.

கேன்சர் நோயை இந்தக் கொடியை வைத்து நீக்கி விடலாம் என்று காட்டுகிறார் குருநாதர்.

காடுகளில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக மடிந்த பின் மடிந்த உடலிலிருந்து வரக்கூடிய ஆவிகளும் மற்ற தாவர இனத்தில் ஒன்றோடொன்று மோதும் போதும் புதுப் புது செடிகள் எப்படி உருவாகின்றது…?

செடிகளைத் தின்று ஒன்று வளர்ந்தாலும் அந்த உயிரினங்களைக் கொன்று வாழ்ந்த இந்த உடல்கள் அது மடிந்து விட்டால் அந்த உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…?

மீண்டும் ஜீவ அணுக்களாக மாற்றி அது மனிதனுக்கு மருந்தாக உபயோகப்படுத்தும் தன்மை எப்படி வருகின்றது…?

ஏனென்றால் பல உயிரினங்களின் தன்மையானால் இதே மருந்தைச் சேர்க்கப்படும்போது
1.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை அது மாற்றி
2.நம் உடலை எப்படி நலமாக்குகின்றது…? என்பதனைக் குருநாதர் அங்கே காட்டுகின்றார்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் கவரப் பழகிக் கொண்டால் சுகக் கேடுகளை மாற்ற முடியும்

 

இந்த மனித வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நாம் வெறுப்படையும் போது மகிழ்ச்சி இழக்கப்படுகின்றது. அதே சமயத்தில் வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை உணர்வுகள் நமக்கு மகிழ்ச்சி கொடுப்பதில்லை.

அது போல் எத்தனையோ பேர் எத்தனையோ விதமான ரண வேதனைகளைப் படுகின்றனர்.. அதனை நாம் நுகரும் பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை.

1.ஆனால் நுகர்ந்து… அதை எல்லாம் அறிந்து கொண்டாலும் நம் இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
2.இது எல்லாம் உடலில் சுகக் கேடான விளைவுகளாகின்றது.

ஆகவே நமது சுகங்களைக் கேடாக்கும் இத்தகைய தீய உணர்வின் தன்மைகளை நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும். அந்தச் சுகக் கேடுகளை மாற்றுவதற்கு அருள் உணர்வினைப் பெற்றால் ஒளியின் உணர்வாக மாற்ற முடியும்… அறியாது வந்த நோயிலிருந்து விடுபட முடியும்.

1.மனித உடலிலிருந்து சுகக் கேடுகளை மாற்றியவன் தான் அகஸ்தியன்
2.அவன் பேச்சை மற்றவர் கேட்டாலும் அல்லது அவன் பார்வை மற்றவர் மீது பட்டாலும்
3.அவர்களின் சுகக் கேடுகளை மாற்றி… அறிவின் தெளிவாக மாற்றிடும் திறனாக வருகிறது.

அவன் வாழ்ந்த காலத்தில் இத்தகைய சுகக் கேடுகளை மாற்றிய உணர்வுகள் அனைத்தும் அவன் உடலிலிருந்து வெளிப்பட்டுள்ளது. அதைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமக்கு முன் இங்கே அது பரவிக் கொண்டும் இருக்கின்றது.
2.அதை நீங்கள் பெறுவதற்குத் தான் இப்போது பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

சுகக் கேடு என்பது மனிதனுக்கு இருள் சூழும் நிலையே. வேதனையோ வெறுப்போ கோபமோ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகள் வந்தால் இருள் சூழும் நிலையாகிச் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

செயல் குன்றி… வலிமை இழந்து… நல்லதைப் பெற முடியாத நிலையிலும்… மகிழ முடியாத நிலையிலும் வந்து விடுகின்றது.

இதிலிருந்து விடுபடும் ஆற்றலை நாம் பெறுவதற்கே ஞானிகள் “தை பிறந்தால் வழி பிறக்கும்…” என்று தெளிவாக்கியுள்ளார்கள். சூரியனால் வளர்க்கப்பட்டதை எடுத்து அதைச் சுவையாகப் (சமைத்து) படைத்து சூரியனுக்கு அர்ப்பணிப்பதாகக் காட்டினார்கள்.

சூரியனுக்குப் படைக்கச் சொன்னதன் காரணம் என்ன…?

சூரியனின் வெப்ப காந்தங்கள் தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வு எதுவோ… அதனின் உணர்வு வலு கொண்டு அவை அவை கவர்ந்து அதைக் கொண்டு தான் தாவர இனங்கள் எல்லாமே உருவாகின்றது.

அதைப் போன்று…
1.மனிதனான பின் நாம் பலவற்றையும் சேர்த்து சுவைமிக்க உணர்வை… உணவை (பொங்கலை) உருவாக்குகிறோம்
2.அதை ஆவியாக… கலவைகளாக அனுப்பப்படும் பொழுது அதைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகிறது.
3.ஆனாலும் அதில் உள்ள சத்தை நாம் உணவாக உட்கொள்கிறோம்… மகிழ்ச்சி தோன்றுகிறது.

பலசரக்குகளைப் போட்டுச் சமையல் செய்யும் பொழுது வெளிப்படும் நல்ல மணங்களை.. அனைத்தும் கலந்த அந்தச் சக்தியின் தன்மைகளச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

இது மனிதனால் உருவாக்கப்பட்ட நிலை தான்… இருந்தாலும் சூரியன் கவர்ந்து கொள்கிறது. நாம் உணவாகச் சமைத்து நமக்கு வேண்டிய சுவையாக்கி நல்ல உணவாக உட்கொள்ளும் பொழுது அந்தச் சுவையின் உணர்ச்சி (மகிழ்ச்சி) வெளி வருகிறது… சூரியன் அதையும் கவர்கிறது.

1.சூரியன் கவர்ந்த அந்த மகிழ்ச்சியான உணர்வை மீண்டும் நமது ஆன்மாவாக மாற்றி
2.நாம் சுவாசித்து உயிரிலே படும் பொழுது மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்ச்சிகளை ஊட்டி
3.எல்லோருக்கும் அந்தச் சந்தோசத்தை ஊட்டுகின்றது.

அத்தகைய மகிழ்ச்சியைப் பெறுவதற்குத் தான் சூரியனுக்குப் படைக்கச் சொன்னார்கள் ஞானிகள்.

மகரிஷிகளின் வம்சமாக நாம் உருவாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
ஓர் மனிதன் முயற்சியால் செயற்கையில் “பல இயந்திர உறுப்புகளைக் கொண்டு ஓர் வாகனத்தை உருவாக்கி…” பின் அதை ஓட்டுவதைப் போன்று தெரிகின்றது.

இன்னொரு மனிதன் “தன் உடலையே” இயந்திரத்தின் நிலைக்கொப்ப சர்க்கஸ் விளையாடுவதைப் போன்று உடலைப் பல கோணங்களில் வளைத்து வித்தைகள் செய்யும் காட்சி தெரிகின்றது.

சூரியனும்… சூரியக் குடும்பத்தின் நாற்பத்தி ஏழு மண்டலங்களும்… சனிக் குடும்பத்தின் பன்னிரண்டும்… பூமியைச் சுற்றியுள்ள இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் அதி தொடர்பு கொண்ட அருகிலுள்ள சில மண்டலங்களின் காட்சிகளும்… பூமியும்… பூமியின் வளர்ச்சியும்… பூமியின் எண்ணத்தின் உணர்வின் எண்ணம் கொண்ட மனிதச் செயலும் காட்சியாகத் தெரிகின்றன.

விளக்கம்:
(முதலில் தெரிந்த) வாகனத்தின் நிலை… மனிதனால் ஜடப் பொருள்களைக் கொண்டு மனிதனின் செயலின் தேவைக்கொப்ப உருவாக்கியது.

மனிதன் தன் எண்ணத்தைச் செலுத்தி எண்ணத்தின் உணர்வைக் கொண்டு தனக்கு இசைவுபட்ட வாகனத்தை உருவாக்க… ஜடப்பொருளைத் தன் எண்ணத்திற்கொப்ப உருவாக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றான்.

தன் தேவையின் உணர்வுக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தும் பொழுது தன் ஞானத்தை வளர்ச்சிப்படுத்தி தனக்குகந்த உருவாக்கும் செயல் தான் அது.

1.அத்தகைய வளர்ச்சியின் செயல் திறமை கொண்டு
2.சரீர உணர்வில் உடலில் ஓடக்கூடிய உயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே தன்னிச்சைக்குச் செயல்படுத்தி
3.ஓர் காரியத்தைக் கூர்மையாகத் தன் ஞானத்தின் வலுவில் பழக்கப்படுத்தும் செயல்படுத்தும் வழிமுறையினால்
4.மனிதனுடைய ஆத்மா குறுகிய நிலைக்கோ வலுவிழந்த தன்மைக்கோ செல்வதில்லை.

(இரண்டாது) அதே சமயம் மனிதனுடைய உடலையே வித்தையாக்கித் தன் உடலைப் பல நிலைகளில் அவ்வுறுப்புக்களைச் செயல்படுத்தும் பொழுது மனிதனுடைய உடலிலும் இயந்திர நிலைக்கொப்பத்தான் அந்தச் செயல் நிலை செல்கின்றது.

ஆகவே…
1.பிறிதொரு பொருளை உருவாக்குகின்ற இயந்திர நிலைக்கும்
2.உடலை இயந்திரம் போன்று சாகசம் புரிந்து… வித்தை காட்டும் வழி முறைக்கும் மாறுபாடு ஏதுமில்லை.

ஆனால் மனிதனின் உணர்வின் எண்ண ஓட்டமானது… இச்சரீர உயிராத்மா ஜீவன் பெற… இப்பூமியின் உணர்வின் எண்ணத்தில் செயல் புரிகிறது என்றால் அச்செயலுக்கு மூலத்தின் வழி முறை சூரியனும் சந்திரனும் சூரியக் குடும்பத்தின் நட்சத்திரக் கோள்களும் தான்…!

அப்படிப்பட்ட வழித் தொடரில்… பல உணர்வின் அமில வழி ஒளி சக்தியின் தொடர்பு கொண்டு இச்சரீரத்தின் உணர்வின் எண்ண ஓட்டம் எப்படிக் கிடைத்தது…? என்பதை மனிதன் தன்னைத் தானே உணர்ந்து… சிந்தனையில் உணரல் வேண்டும்.

ராகு கேது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி என்ற நவக் கோள்களை எல்லாம் நவக்கிரகமாக அன்றே சித்தன் பூமிக்கும் நவக்கோள்களுக்கும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் காட்டினான்.

பூமியின் சுழற்சியில் பூமிக்கு அருகிலுள்ள சந்திரனின் தொடர்பைக் கொண்டு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பூமியில் ஏற்படக் கூடிய தொடர் போன்றே நவக்கோள்களின் தொடர்பில் இருபத்தியேழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டு நவக்கோளையும் அதனின் இயக்கங்களையும் காட்டினான்.

1.அதே சமயத்தில் நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்பில் வரும் அமிலத் தன்மைகளையும்
2.அதனால் இப்பூமியின் தொடர்புடன் சுழலுகின்ற காந்த ஒளி அலையில் உருவாகக்கூடிய உயர் சக்திகளின் குண நிலையையும்
3.மனிதப் பிறப்பும் தாவரங்களின் குணம் மணம் சுவை ஜீவன் யாவையுமே உருவாகக்கூடிய தன்மையையும்
4.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று ஈர்ப்பு கொண்டு சுழலக்கூடிய கால மாற்றத்தில் வளரக்கூடிய உண்மைகளை
5.பல ஆயிரம் காலங்களுக்கு முதலிலேயே மகரிஷிகளினால் பூமியின் ஜாதகங்கள் குறிக்கப்பட்டன.

அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பின் தொடர்புக்கு ஒத்த கால மாற்றங்களினால் நம் பூமியின் செயலில் செயல்படும் வழி முறைதனை “இந்த நாளில்… இந்த நேரத்தில் மழை வரும்…! என்பதையும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற கிரகணங்களின் சந்திப்பின் காலத்தையும்…” குறித்தனர்.

அன்றைய மகரிஷிகளால் வானசாஸ்திர உண்மை ஞானத்தில் அறியப்பட்ட வழித் தொடரைத்தான் இன்றைய விஞ்ஞானமும் பேசுகின்றது. ஆனால்… மெய் வழி அறிந்து வந்த அந்த வளர்ச்சி விஞ்ஞான சாஸ்திரத்தால் “தன் ஞானம்” இன்று மறைக்கப்பட்டு விட்டது.

1.உணர்வின் எண்ண ஓட்டத்துடன் கூடிய தன் ஞானத்தின் உயர் ஞானத்தை
2.இப்பூமியில் உணர்வின் எண்ணத்தில் மனித ஆத்மாக்கள் வாழ்ந்த விதத்தை வளர்த்த
3.ரிஷிகளின் வம்சத்தின் தொடரின் ஜீவ நிலை வளரும் சக்தி நிலை வளர்ந்தால்தான்
4.மீண்டும் உணர்வின் எண்ணத்தின் செயல் வளர்ச்சி மனிதச் செயலின்
5.உயர் ஞானம் வளரக்கூடிய ஜீவ உருக்களை உருவாக்க முடியும்.

மனிதன் உருவாக்கிய இயந்திரங்களோ மற்ற தாவரங்களோ எல்லாமே தன் தன் தேவைக்குகந்த… தன் தேவையினால் அழியக் கூடியவை தான். அதனால் இப்பூமியின் சக்திக்கு வலுகூட்டக் கூடிய பலனோ பயனோ இல்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் துருவனாகி அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
1.இரு உயிரும் ஒன்றாக இணைந்து
2,இரு மனமும் ஒரு மனமாகி
3.இரு உணர்வுகளும் ஒன்றாக இணைந்து துருவ மகரிஷியாகத் தனக்குள் சிருஷ்டித்து
4.இருளினை அகற்றி ஒளி என்ற உணர்வில் ஒன்றி வாழ்ந்து கொன்டுள்ளார்கள்.

ஒளியின் சரீரமானபின் எந்தத் துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கிப் பிறவியில்லா நிலைகள் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.

நமது பூமி அதைத் துருவத்தின் வழியாகக் கவர்ந்து நம் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது.

அதிகாலை 4.30 – 6.00 மணிக்குள் அந்த உணர்வலைகள் அதிக வேகமாக நம் பூமிக்குள் வருவதனால்
1.அந்த நேரத்தில் நம் எண்ணங்களைத் துருவத்தை நோக்கிச் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.நம் உயிருடன் ஒன்றி ஏங்கினால் எளிதில் நாம் நுகர முடிகின்றது.
4.உடலில் அது பரவுகின்றது… நல்ல உணர்வாக நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்கின்றது.

அடிக்கடி இந்த உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் சிறுகச் சிறுக நல்ல அணுக்களை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருக்கும். ஆக தீய அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களின் தன்மைகளை நமக்குள் உருவாக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது
2.புருவ மத்தியில் உள்ள உயிரை நினைவு கொள்ளுங்கள்.
3.ஈஸ்வரா என்றாலே உங்கள் உயிர் தான்.

உங்கள் உயிரிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் செலுத்துங்கள். அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இப்படி அதை நுகரும் பொழுது உங்கள் புருவ மத்தி (உயிர்) வழி தான் உங்கள் உடலுக்குள் செல்லுகின்றது.
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அலைகள் வந்து மோதும் போது குறு குறுப்பு ஏற்படும்.
2.ஒளியும் நல்ல உணர்ச்சிகளும் தெரியும்.

குறு.. குறு… என்று இருக்கும் பொழுது சிலருக்குச் சிறிது வலியும் இருக்கும். காரணம்…
1.நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும்
2.அந்த அரும் பெரும் சக்தி அங்கே சுழன்று வரும் பொழுது
3.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.

உங்கள் நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் மீது செலுத்தி அந்தப் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…..
2.உங்கள் நினைவுகள் துருவ நட்சத்திரத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெற வேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும்.
4.நீங்கள் ஏங்கும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.
5.புருவ மத்தி வழிதான் நமது உணர்வுகள் நுகர்ந்து செல்லும் பாதை.

இரண்டு கண்களுக்கு இடையில் தான் புருவ மத்தியில் உயிரின் இயக்கம் உள்ளது. அதன் வழியாக உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை உடலில் உள்ள அணுக்களுக்கு உயர்ந்த சக்தியை ஊட்டுகின்றோம்.

நமது இரத்த நாளங்களில் பெருக்குகின்றோம்.

உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

பொங்கும் மங்கலம் பெறுவீர்கள்…!

 

கலி…! நாம் தீமையின் உணர்வை வளர்த்தால் தீமையின் செயலாகவே நம்மை மாற்றும். ஒளியின் உடலாகப் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தால் தீமையை நீக்கி ஒளி என்று உருவாக்கும் பொழுது கல்கி…!
1.உயிர் ஒளியாக இருக்கின்றது…
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.

நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் அருள் உணர்வை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உடலில் எப்படி உருமாறுகிறது…? என்பதை அனுபவரீதியாக எனக்குக் கொடுத்தார்.

1.நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் வேறு
2.அதே சமயத்தில் உடலில் உள்ள எதிர் அணுக்கள் மாற்றப்படும் போது அது எப்படி ஆகின்றது
3.அப்படி அது தன்னுடைய வலுவாக இயக்கினாலும் அதைக் குறைக்க…
4.நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் வலுவான உணர்வுகளை நீ அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
5.ஆக… சுவாசிக்கும் பொழுது முதலில் எதிர்க்கின்றது. அதிகமாகி விட்டால் ஒடுங்கி விடுகின்றது என்று தெளிவாக்கினார்.

உதாரணமாக… தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்து விட்டால் அந்த நிறமே முழுமையாக ஆகிறது.
1.அதில் சிறிதளவு நல்ல நீரை விட்டால் அதுவும் அதே நிறமாகத் தான் தெரியும்.
2.ஆனால் நல்ல நீரை ஊற்ற… ஊற்ற… ஊற்ற… அந்த நிறம் மாறத் தொடங்குகிறது.

அதே போல் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்
1.அதில் நன்னீரை விட… விட… அழுக்குத் தண்ணீர் பொங்கி வெளியே வருகின்றது
2.நல்ல நீர் சேரச் சேரச் சேர அழுக்கின் தன்மை குறைந்து நன்மையின் உணர்வுகள் வருகின்றது

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பொங்கச் செய்ய வேண்டியது எது…? என்ற நிலையில் அருளைப் பொங்கச் செய்து இருளைத் தணியச் செய்ய வேண்டும்… அது தான் தைப் பொங்கல்…!

ஆகவே… பொருளைக் காணும் உணர்வின் அறிவைக் கூட்டுங்கள். வெகு தொலைவிலிருந்து வரும் இருளை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கின்றது.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. வெகு தொலைவிலிருந்து வரும் எத்தகைய உணர்வையும் அது பலவீனப்படுத்தி ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தை எண்ணி… பேரருள் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் அதிகாலையில் கவரப் பழக வேண்டும்.

1.பொங்கும் மங்கலமாக அதை நினைவுபடுத்தி
2.உங்கள் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.நானும் (ஞானகுரு) பிரார்த்தனை செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று தினமும் அதிகாலையில் நீங்கள் விரும்பினால் “அந்த நறுமணங்கள்…” நிச்சயம் உங்களுக்குள் வரும். பேரானந்த நிலை பெறுவீர்கள்.

ஒரு ஆடு முன்னாடி போனால் பின்னாடியே மற்ற ஆடுகள் செல்வது போல் தான் இன்றைய அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியின் காற்று மண்டலமே விஷமாகிக் கொண்டுள்ள இக்கலியின் கடைசியில் மனிதனின் உணர்வுகளெல்லாம்…
1.மனிதன் உண்ணக் கூடிய உணவு முறையாலும்
2.வாழ்க்கை நெறியில் நாகரீகத்தின் வளர்ச்சியாலும்
3.மிருகங்களின் நிலையில் எப்படி ஆடு மாடுகள் ஒன்றைப் போன்றே பிறிதொன்றும் செய்கின்றதுவோ (ஒரு ஆடு போனால் அதற்குப் பின்னாடி எல்லா ஆடுகளுமே செல்வது போல்)
4.அதைப் போன்று மனிதனின் வீரியத் தன்மை தன்னைத்தானே தான் உணராமல்
5.மிருகத்தின் நிலைக்கொப்பத் தான் மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது.

அந்தந்தச் சரீரத்திற்குகந்த அமிலத்தின் வீரிய குணத்தைக் கொண்டு அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்கித் “தன் அறிவால் உயர் தன்மை பெறக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு…!” என்பதை அறியவில்லை… உணரவும் இல்லை.

இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரங்களின் தொடர்பில் உயிர் பெற்ற ஜீவ ஆத்மாக்கள் அனைத்துமே ஒன்று போல இருப்பதில்லை.

எந்தெந்த நட்சத்திரத்தின் வலுவுடன் எந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு நிலையுடன் தொடர்பு கொண்டு இப்பூமி சுழல்கின்றதோ அத்தருணத்தில் உயிர் பெற்ற ஜீவாத்மாக்கள்
குணங்களிலும்…
செயல்களிலும்…
உருவ மாற்றத்திலும்…
வண்ணத்திலும்…
ஒருவரை ஒத்து ஒருவரில்லாமல் தான் இருக்கும்.

இதை முதலில் உணர்ந்து கொண்டு… மனிதனுக்குண்டான “உயிர்த் தன்மையின் உயர்வு நிலையை…” உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

சூரியன் எப்படி நாற்பத்தி ஏழு கோள்களின் தொடர்புடன் தன்னையும் வளர்த்து… தன் குடும்பக் கோள்களின் தொடர்பிலும் வளர்ச்சி பெற்றுச் சுழலும் செயல் நடக்கின்றதோ… அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சி தொடர் நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

நம் பூமியின் தொடர் நட்சத்திரம் இருபத்தி ஏழும் பூமியுடன் இருபத்து எட்டாகச் சுழலும் தொடர்ச்சியில் பூமியின் ஈர்ப்பு வளர்ச்சிக்குத் துணைக் கோள்களாக இந்நட்சத்திரங்களின் வலுவைக் கொண்டுதான் “ஜீவ ஞான சரீரங்கள் (மனிதர்கள்)” இந்தப் பூமியில் மட்டுமே உருப்பெற்று உள்ளது.

அதாவது ஜீவ அலையின் ஞான ஒளி உணர்வின் எண்ணத்தின் மையக் கருவின் செயல் வலுப் பெற்று வாழக்கூடிய தகுதி நாற்பத்தி எட்டுக் கோள்களில் இப்பூமிக்கு மட்டும் உண்டு என்றால் இப்பூமியைச் சுற்றியுள்ள வலுக் கொண்ட இவ் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் “ஜீவன் கொடுக்கும் ஜீவ நட்சத்திரங்கள் தான்…!”

ஜீவனை வளர்க்கவல்ல அத்தகைய ஜீவ நட்சத்திரங்களும் நட்சத்திரங்களிலேயே பல மாற்றுச் செயலை நிலைக்கத்தக்க பல கோடி தன்மைகள் கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.

இப்பூமியின் வடிவ நிலையையும் இப்பூமியின் தன்மையையும் ஆதிகாலத்தில் ஒலி ஒளி தொடர்பு நிலை விஞ்ஞான ரீதியில் பெறாத காலத்தில்…
1.வான சாஸ்திரத்தின் பல உண்மைகளையும்
2.பூமியின் இயற்கை மாற்றத்தின் நிலைகளையும்
3.இப்பூமிக்கும் மற்றக் கோள்களின் சந்திப்பு நிலைகளையும்
4.இவ் இருபத்தி ஏழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டுதான் மனிதன்
5.விஞ்ஞானம் வளராத காலத்தில் தன் ஞானத்தால் அன்றே அறிந்தான்.

பல ஆயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்பு ஆழ்கடலில் பயணம் செய்தவர்களெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தையும் விடிவெள்ளி போன்ற சில நட்சத்திரங்களையும்
2.இப்பூமியின் ஈர்ப்புத் தொடர்பில் பூமியின் ஈர்ப்புடனே சுழலக்கூடிய நிலையை அறிந்த ஞானத்தால்
3.இயற்கை நிலைகளை மனிதர்கள் அன்றே அறிந்தார்கள்.

அவர்கள் அறிந்த வழியிலேயே நம் அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து அந்த ஞானிகள் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

ஏனென்றால் மனிதனுடைய உணர்வின் எண்ண ஜீவ சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளியை “எந்நிலை கொண்டு அதிலே வீரியத் தன்மையைப் பெற வேண்டும்…?” என்ற பக்குவத்தைத்தான் பல வழிகளில் இது நாள் வரை போதித்துள்ளோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறக்கின்றது. பெண் குழந்தைகள் பிறந்த பிற்பாடு இன்றைக்கு இருக்கின்ற காலத்தில் தாய் தகப்பனுக்கு நிம்மதி இல்லை.

தாய் தகப்பனுக்கு நாம் என்ன கடமை செய்ய வேண்டும்…? அது தெரியவில்லை. தாயினுடைய உண்மையை உணர முடியவில்லை.

இன்றைக்குப் பெண்கள் பிறந்த குடும்பங்கள் எல்லாம் மிகவும் அல்லல்படுகின்றார்கள்.

கடவுளாக இருந்து நம்மை உருவாக்கிய தாய் நம் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார்கள்…? நாம் அதை மதிக்கின்றோமா…!

அவர் நம் மீது அந்தப் பாசத்திற்குத் தகுந்தபடி
1.நாம் எண்ணியது நமக்குள் நடக்க வேண்டும்
2.நம் தாய் எண்ணியது எனக்குள் நடக்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த சக்தி நமக்குள் உருவாகும்.

நாம் யாராவது இப்படி எண்ணுகின்றோமா…?

தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “நான்… வாழ வேண்டும்” என்று
1.தாயை அதன் வழியே கொண்டு வர வேண்டும் என்று
2.நினைத்தோம் என்றால் அது தவறான வழி ஆகும்.
3.இப்படி நிறையப் பேர் உண்டு (மகனும் சரி மகளும் சரி)

தன் உணர்வின் ஆசைக்கு அந்த இணக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக
1.நம்மை ஈன்று மனிதனாக உருவாக்கிய அந்தக் கடவுளையே
2.நம்மைக் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தையே
3.நமக்கு நல்லது சொன்ன குருவையே
4.மனதை நோகும்படிச் செய்கின்றோம்.

இதையெல்லாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய உலகில் ஒவ்வொரு வீட்டிலும் அமைதி இருக்கின்றதா…? சந்தோஷமாக வாழ்கிறேன் என்று சொல்ல முடிகிறதா…!

ஆகவே இப்படிப் பல வகைகளிலும் வரும் தோஷங்களெல்லாம் நமக்குள் சேர்ந்த பிற்பாடு உடலில் நோய் வந்துவிடுகின்றது, நம் நல்ல அணுக்களை எல்லாம் அது கொன்று சாப்பிடுகின்றது.

இதை யார் மாற்றுவது…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

அதே சமயத்தில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்து முடிப்பதற்கு முன்னால் அந்தத் தாய் படுகின்ற அவஸ்தையோ
1.வயதாகிப் போகின்றதே… வயதாகிப் போகின்றதே… என்று எண்ணுவார்கள்
2.இன்ன வயதாகிப் போனால் அந்த வயதிற்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமே…! என்று
3.தாய் எண்ணி எண்ணி எண்ணிப் பிள்ளைகளை நினைத்து நினைத்து வேதனைப்படுகிறது,

பிள்ளையைப் பார்க்கும் போதேல்லாம் இந்த வேதனை உண்டாகின்றது.

ஆனால் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை வர வேண்டும். நல்லது வர வேண்டும் என்று நினைக்கின்றதா…? என்றால் தாய் நினைக்கவில்லை.

ஆசை இருக்கிறது…
1.ஆனால் வேதனையை எடுத்து அதைத் தனக்குள் எடுத்து வேதனையான உணர்ச்சியைச் சொல்லி
2.அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வேதனை வருகின்றது.

இவ்வாறு அந்த வேதனை விஷம் என்ற நிலைகள் பட்டால் நினைவென்ற நிலைகள் இழக்கப்பட்டு
1.தாயை நினைத்து அந்த வேதனையை எடுக்கின்றோம்
2.அது அறியாமையாக வந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

குழந்தையை மட்டும் சொல்வதற்கு இல்லை.

தாயின் ஆசைகள்… “இப்படி நடக்கின்றதே… நாளைக்கு என்ன ஆகப் போகின்றதோ…!” என்ற இந்த வேதனையைச் சுவாசிக்கின்றது,

குழந்தையை எண்ணி வேதனையை உருவாக்குகின்றது. இந்த உள் உணர்வின் தன்மை சொல்லாகப் போகும் போது என்ன செய்கின்றது…?

ஏனென்றால் ஒரு நெருப்பில் பாத்திரத்தை வைத்து பதார்த்தத்தைப் போடுகின்றோம். பல பொருட்களைச் சேர்த்து வேக வைக்கின்றோம். நாம் போடுகின்ற பொருளுக்குத் தக்கவாறு தான் அதிலே ருசி வருகின்றது.

ஏனென்றால் நம் உயிர் ஒரு நெருப்பு. நம் குழந்தை மேலே ஆசையாக இருக்கின்றோம். ஆனால் “சீக்கிரம் திருமணம் ஆகவில்லையே…” என்கிறபோது அது வேதனை.

அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சரக்குகளைச் சேர்த்து இந்த வேதனை உணர்வை உருவாக்கி இந்த உணர்வின் தன்மை உமிழ் நீராக்கி நம் உடலுக்குள் வளர்த்து இந்த உணர்வைச் சொல்லாக்கி வெளியில் சொல்லப் போகும் போது என்ன செய்கின்றது…?

இந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொழுது எல்லாம் அந்த வெறுப்பு வருகிறது. “இப்படி ஆகின்றதே….” அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்வு வரப்போகும் பொழுது குழந்தைகளுக்கு என்னவாகும்…?

தாய் பார்க்கும் பொழுது இந்த மாதிரி இருக்கின்றதே என்று அவர்கள் வாயிலேயே தன் பிள்ளையிடம் சொல்லுகின்றது. அதை வாங்கி அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் மோசமாகின்றது.

நமது அறியாத நிலைகள் நமக்குள் எந்த நிலையைச் செய்கின்றது? “இதெல்லாம் ஒரு தோஷம் தான்”.

இந்தத் தோஷங்களை நீக்கும் வழி என்ன…? என்பதைத்தான் சிவன் ஆலயத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர். சிவன் ஆலயத்தில் சிவனுக்கு முன்பு நந்தியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. வாழ்க்கையில் பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்கும் பொழுதெல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற “இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்”.

சூரியனுக்கும்… உயிருக்கும்… துருவ நட்சத்திரத்திற்கும் உண்டான தனித் தனி செயலாக்கங்கள்

 

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தையே பொங்கச் செய்கின்றது அதனதன் வாழ்விற்கு அதனதன் நிலையைக் கொடுக்கின்றது. ஆனால் மனிதன் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் செலுத்தி வாழ்க்கையில் வரும் இருளை நீக்குதல் வேண்டும்.

1.சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குகின்றது
2.நமது உயிரோ மற்ற அணுக்களின் தன்மையை அறிவாக இயக்கச் செய்கின்றது
3.துருவ நட்சத்திரமோ இருளை வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

நம் உடலில் தெரிந்தோ தெரியாமலோ தீமையான அணுக்கள் உருவானால் அந்த அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தி அதனின் வீரிய உணர்வு பெற வேண்டும் என்று செலுத்தினால் அது ஒளியின் தன்மை பெறும்.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நல்ல மருந்தினை உருவாக்கி நோயுற்ற உடலில் செலுத்தப்படும் பொழுது அது இரத்த நாளங்களில் கலந்து மற்றவையுடன் சேர்த்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது.

இதைப் போன்றுதான் நாம் நுகரும் உணர்வுகள் நம் சிரசு பாகம் இருக்கும் உயிருடன் கலந்தால் அது ஈஸ்வரலோகம். உயர்ந்த குணத்தை உருவாக்கி அந்த அணுவின் கருவாக நம் இரத்த நாளங்களில் சேர்க்கின்றது… இந்திரலோகமாக மாறுகிறது.

அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் சென்று இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளில் இணையப்படும் போது பிரம்மலோகமாக மாறுகிறது. எக்குணத்தின் தன்மை பெற்றோமோ இந்த உணர்வின் இயக்கமாக அது இயக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே அதன் வழி கொண்டு நமது வாழ்க்கையில் தெளிந்த மனதையும் உயர்ந்த உணர்வுகளையும் உருவாக்கி பேரின்பப்பெரு வாழ்வு வாழச் செய்யும் அருள் உணர்வுகளை நாம் உருவாக்குதல் வேண்டும்.

1.உலகில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

காரணம் உலக மக்கள் உணர்வுகள் நமக்குள்ளும் உண்டு.

எல்லோருடைய உணர்வுகள் நமக்குள் இருந்தாலும்… கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்பது போல்
1.எல்லோரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருளொளி நமக்குள் பெற வேண்டும் என்றும் நாம் எண்ணும் பொழுது
3.நமக்குள் இருக்கும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றுகின்றது.

அரிசியையும் பருப்பையும் சர்க்கரையும் பாதாமையும் முந்திரியையும் போட்டுச் சுவையாகப் பொங்கலை உருவாக்குவது போன்று நமக்குள் பல சரக்குகள் இருந்தாலும்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு எல்லோரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நுகர்ந்தால்
2.அதுவே நமக்குள் சுவையாக உருவாகின்றது… பொங்கல்…!
3.இது தான் தை… “இணைத்தல்” என்று நமக்குள் சேர்க்கின்றது.

ஆகவே… எந்த உணர்வின் தன்மையை இணைக்கின்றோமோ அதன் உணர்வுக்கொப்ப நம்மை இயக்குகிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்ட நிலையில்… உலக மக்கள் அருள் ஞானம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளை நீக்கி மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற தியானிப்போம்… நம் உடலுக்குள் அதை உருவாக்குவோம்
2.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… மகிழ்ந்து வாழும் சக்தியை நம் உடலில் உருவாக்குவோம்
3.நம் சொல்லும் செயலும் பிறரை மகிழச் செய்யும் நிலையாக நமக்குள் உருவாக்குவோம்.
4.உலக மக்கள் அனைவரும் தெளிந்த மனம் கொண்டு வளர “குரு அருளை” நமக்குள் பெருக்குவோம்
5.குரு அருளைத் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம்
6.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறத் தியானிப்போம்… தவம் இருப்போம்.
7.அந்தத் தவத்தின் பலனாக அனைத்து மக்களும் உடல் நலம் பெற… நம் உடலில் உள்ள அணுக்களும் நலம் பெற
8.நம் சொல் கேட்போர் உணர்வுகளை நலம் பெறச் செய்யக்கூடிய சக்தியாக ஒவ்வொரு நாளும் நாம் செயல்படுத்துவோம்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

கருகும் நிலையில் உள்ள கலியை மாற்றிடவே மகரிஷிகளின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

அன்றைய மெய் ஞானிகளின் செயலால்… மனித ஞானத்தை உயர் ஞானத்தில் மெய் ஞானப்படுத்தச் செயல்படுத்திய சக்தியின் தொடர் இப்பூமியில் உள்ளதனால்தான் மனித அறிவே வளரக் கூடிய வளர்ச்சியாக இன்றும் உள்ளது.

இருந்தாலும் இன்று… இப்பூமியில் உள்ள பல கோடி ஆத்மாக்களின் உணர்வின் எண்ண சுவாச அலையின் வீரியத் தன்மை…
1.விஞ்ஞான வளர்ச்சித் தொடரில் செயல்படச் செயல்பட
2.மனித உணர்வின் வீரிய காந்த சுவாச அலையின் தொடர் அதிகப்பட
3.அதற்குகந்த உணவான தாவர இன வளர்ச்சி நிலை குறைவுபட்டு விட்டது.
4.அதனால் மெய் ஞானிகளின் செயல் தன்மைக்கு வேண்டிய ஞான வளர்ச்சிக்கு
5.அந்த ஞானிகள் செயல் நிலை யாவும் இப்பூமியின் அடுத்த பிரளயத்தில் கல்கியின் செயலுக்குச் செயலாகப் போகின்றது.

பொருளைச் சமைக்கவல்ல பக்குவமான உஷ்ணத்தைத் தந்தால் அந்தப் பக்குவப்பட்ட பதத்தில் அதைச் சமைத்து உணவாக உட்கொள்ளலாம்.

ஆனால் அதி உஷ்ணம் ஏறும் பொழுது எல்லாமே கருகும் நிலை ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட உஷ்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய காலமாகத் தான் இன்றைய “கலியின் மாற்று நிலை…!”

ஏனென்றால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.மனித ஜீவாத்மாக்களின் காந்த உணர்வின் ஒளியின் வலுவிற்கு வலுக்கூட்டும் தாவர இனங்களின் வளர்ச்சி குறைந்து விட்டது.
2.இப்பூமிக்குள் இருக்கும் கனி வளங்களையும் செயற்கைக்காக மனிதன் பிரித்தெடுத்து விட்டான்.. அதனுடைய வளர்ச்சியும் குறைந்து விட்டது
3.அதே சமயத்தில் செயற்கை மின் காந்த ஒலி/ஒளி சக்திகளையும் இக்காற்றலையில் அதிகமாக கலக்க விட்டுள்ளனர்

இத்தனை விபரீத பாதிப்புகளால்… மனித எண்ண உணர்வுகள் தன் ஞானத்தை உயர் ஞானமாக்கி… மெய் ஞானத்தால் மனித சக்தியின் வளர்ச்சி நிலை வளரும்… அறிவின் உருவில் உயரும் நிலையைக் காட்டிலும்… குறுகிய நிலை கொண்டு மனிதனின் வீரியத் தன்மை விஷம் கொண்ட நிலைக்கே சென்று கொண்டுள்ளது.

இத்தகைய தருணத்தில்…
1.யாம் சொன்ன தியான முறையால் இக்கலியின் மாற்றத்திற்குள்..
2.தன்னைத்தானே மனிதன் உணரும் பக்குவச் செயலில் பதமாக வேண்டும்.

நற்குணத்தை வளர்க்கும் அந்தத் தியானத்தையும் சகல மாமகரிஷிகளின் தொடர்பு எண்ணத்தையும் தியானத்தால் கூட்டிக் கொள்ளும் வழிக்கு வர வேண்டும்.

இந்தச் சரீரத்தில் இருக்கக்கூடிய காலத்திலேயே இச்சரீரத்தையே மெய் ஞான உணர்வு பெறக்கூடிய ஒளித் தன்மையைச் செயல்படுத்திக் கொண்டோமானால் இச்சரீரத்தையே ஒளிச் சரீரமாக ஒளிரும் நிலையை நாம் நடைமுறையில் காண முடியும்.

1.உணர்வில் முன் கூட்டி அறியக் கூடிய சூட்சுமத்தைப் பெறக் கூடிய செயலினால்
2.ரிஷி சக்திகளின் தொடர்பை இச்சரீரமே ஏற்கும் செயலுக்கு
3.இச்சரீரமே ஆத்மாவின் ஒளியை ஒளிர வைக்கும் இயந்திரமாகவும் செயலாக்க முடியும்.

இந்த உடலுடன் வாழும் நிலையில்… உயர் காந்த மெய் ஞான உணர்வுடன் நாம் எடுக்கக் கூடிய மூச்சலையின் சுவாசக் காற்று இப்பூமியில் பதியும் பொழுது
1.ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு…
2.ரிஷி சக்தியின் செயலுக்காக இச்சரீர உணர்வின் மெய் ஞான மூச்சலையைப் பரவச் செய்தால்
3.இப்பூமி எத்தனை ஆண்டு காலங்கள் செயல்பட்டாலும் ஜீவ உடலுடன் எடுக்கக் கூடிய மூச்சலையில்
4.அந்த மெய் ஞானிகளின் மூச்சலைகள்… அது என்றுமே வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் வித்தாக
5.ஜீவித உணர்வுகளுக்கு ஜீவ உணர்வு செயலாய்ச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கஷ்டம் என்ற நிலைகளிலிருந்து அது நமக்குள் புகாமல் “விழித்திருந்து…” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று நாம் “பசித்திருந்து…” போது தீமைகள் நம்மைப் பற்றிடாது “தனித்திருக்க…” வேண்டும்.

இதைத்தான் ஞானிகள் விழித்திரு பசித்திரு தனித்திரு என்றார்கள்,

ஞானிகள் சொன்ன அந்த நிலையை நம் எல்லோராலும் பெற முடியும்.

தனித்திரு… என்றால் சில சாமியார்கள் என்ன செய்வார்கள்…?

“குடும்பம்… பெண்டு பிள்ளைகள்… இதெல்லாம் வேண்டாம்…” என்று நினைத்துக் கொண்டு “தனித்து” இருப்பார்கள். இதெல்லாம் அறியாமை.

நாம் நம்மை அறிந்து இந்த உயிரின் உணர்வை அறிந்து நாம் இனிப் பிறவியில்லா நிலை அடையும் நிலையில் விழித்திருந்து தீமைகள் புகாது நமக்குள் உயிரைப் போலவே உணர்வை ஒளியாக்கிட வேண்டும்… “கார்த்திகேயா”. கார்த்தி என்றால் வெளிச்சம்.

சிவன் ராத்திரி அன்று இதை எடுத்துக் கொண்டோம். பன்னிரண்டு இராசிகளில் இது ஒரு இராசி. அடுத்த மாதம் வரப்படும் போது இதையே மாற்றி வரப்படும் போது சித்திரை.

சித்திரை என்பது நமக்குள் எடுத்துக் கொண்ட சிறு திரைகளை மாற்றி அமைக்கின்றோம்.

வைகாசி – தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியைக் கொண்டு “தனக்குள் தெளிவாக்கு…” என்பது.

ஒவ்வொரு மாதமும் இப்படித் தெரிந்து தெளிந்து கொள்வதற்காகத்தான் பன்னிரெண்டு மாதங்களிலும் விழாக்களை அமைத்தார்கள் ஞானிகள், “விநாயகர் சதுர்த்தி…” இப்படி ஒவ்வொரு நிலைகளுக்கும் காரணப் பெயர் வைத்தார்கள்.

பன்னிரண்டு இராசிகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டிப் போகும் போது இந்த இராசியைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த இராசிக்குச் செல்லும் பொழுது மீண்டும் குறைகள் வந்தால் அந்த இராசியைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படிப் பன்னிரண்டு மாதங்களிலேயும்
1.ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்தி
2.நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப்
3.பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் இதை அறிந்துக் கொள்ளச் சொன்னார்கள்.

ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?

ஜோசியம் பார்த்து இந்த மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதும் இந்த மாதத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யச் கூடாது என்றும் ஞானிகள் சொன்ன நிலைகளை மாற்றி ஆசைக்கு வகுத்துக் கொண்ட நிலைகள் தான்.

ஞானிகள் நமக்கு உணர்த்திய அந்த மெய் வழிப்படி நடந்தால் அவைகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் அவர்கள் அடைந்த எல்லையை அடைவது சுலபம்.

பேரின்பப் பெருவாழ்வு வாழலாம்.