கடவுள் தனித்து ஒருவன் இல்லை

கடவுள் தனித்து ஒருவன் இல்லை

 

அடிக்கடி ஞாபகப்படுத்துவது எதை ஆரம்பித்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்று நாம் செயல்படுத்துகின்றோம். காரணம் நமது உயிர் “ஓ…” என்று இயங்கிக் கொண்டே உள்ளது.

இதைத்தான் ஓ என்று ஞானிகளால் காரணப்பெயர் சூட்டப்பட்டது. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகின்றது. ம் என்று நம் உடலாக மாற்றுகின்றது அதனால் தான் ஓம் ஈஸ்வரா குருதேவா.

1.நான் எண்ணியதை உருவாக்குகின்றாய்.
2.என் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் நீயே குருவாக இருக்கின்றாய் என்ற பொருள்படும்படித் தான்
3.இதை நாம் அடிக்கடி பயன்படுத்துவது.

ஈசன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… ஆண்டவன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… கர்த்தர் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்…!

ஆகவே நமக்குள் இந்த உயிர் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை ஆட்சி புரிகின்றது… அதை இயக்குகின்றது… என்ற பொருள் படும்படித் தான் உணர்த்தியுள்ளார்கள்.

ஆண்டவன் என்று சொல்லும் பொழுது உடலுக்குள் இருக்கும் அனைத்தையும் ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்தான். ஆகவே
1.அவனன்றி அணுவும் அசையாது என்பது போன்று
2.நம் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் இந்த உடலில் உள்ள ஒரு அணுவும் அசையாது.
3.அதனால் தான் அவன் இன்றி அணுவும் அசையாது என்று சொல்கின்றோம்.

கடவுள் இல்லை என்றால் எதுவும் அசையாது என்பார்கள்.

நமக்குள் அந்த உயிர் கடவுளாக நின்று இயங்குகின்றது.
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அது எத்தகையதாக எண்ணுகின்றோமோ அவை அனைத்தும் நம் உடலாக இறையாகி…
2.இறையின் உணர்வுகள் நமக்குள் அணுவாகி அணுவின் சக்தியாக நமக்குள் இயங்கப்படும் பொழுது… நம்முள் நின்று இயக்கம் கடவுளாகின்றது.

ஆகவே கடவுள் என்று ஒருவர் தனித்து யாரும் இல்லை.

நமக்குள் பல விதமான குணங்களும் பல விதமான உணர்வுகளும் நம்மை இயக்கிக் கொண்டே தான் உள்ளது… நாம் இயங்கிக் கொண்டுதான் உள்ளோம்.

நாம் கோபமாகப் பேசுகிறோம் என்றால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் உருவாக்கி… அணுவாக்கி உடலாக்கப்படும் பொழுது நமக்குள் அது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் செயலாக இயக்கப்படும் பொழுது… அதற்குத் தெய்வம் என்று பெயர் வைக்கிறார்கள்… காரணப்பெயர்.

அதே சமயத்தில் நமக்குள் நின்று அது இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நாம் நினைக்கின்றோம் அதைப் பதிவாக்கிவிடுகின்றோம்.
1.மறுபடியும் அதை நினைத்தோம் என்றால்
2.அது குருவாக வந்து அந்தத் தெய்வமாக நம்மை இயக்குகிறது என்று பொருள்.

ஆகவே அந்த அணுவின் தன்மை நமக்குள் இங்கே நிலை கொண்டிருந்து அதே உணர்வை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கிறது என்றால் “உருவாக்கிக் கொண்டே இருக்கும்…”

ஒரு வித்தினை மண்ணிலே ஊன்றி விட்டால் அது செடியாகித் தன் இனத்தின் வித்தினை உருவாக்குவது போன்று…
1.நமக்குள் கடவுளாக இருந்து அந்தக் குணத்தின் தன்மையைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் என்று பொருள்.
2.ஆக… கடவுள் தனித்து ஒருவன் இல்லை… இயக்கத்தை ஞானிகள் இவ்வாறுதான் உணர்த்தி உள்ளார்கள்.

துருவத்தின் ஆற்றல்

துருவத்தின் ஆற்றல்

 

உயிரணு தோன்றி மனிதனிலிருந்து விடுபட்டு ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குப் பழக்கத்தில் பெறும்படி யாம் செய்தது.

இதை நீங்கள் எளிதில் கவர்ந்து நுகர்ந்து உணர்ந்து தீமைகளை நீக்கிடும் ஞானத்தைப் பெற முடியும். அதைத்தான் இப்பொழுது பெறச் செய்தது.

இதை எடுத்துக் கொண்ட பின்
1.அடுத்து எப்பொழுது வேண்டுமென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கண்களை மூடி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கி
5.ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் தியானித்தால் போதும்.

அதை நம் உடலுக்குள் வலுவாக்கி வேதனைப்பட்டோர் உணர்வைக் கேட்டறிய நேர்ந்தாலும் அது நம் உடலுக்குள் வலுப் பெறாதபடி அதை நீக்கி… நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களைப் பாதுகாப்பாக… நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

இல்லையென்றால் அந்த வேதனை என்று அணுக்கள் வளர்ச்சி அடைய கடுமையான நோய்களும் கடுமையான வேதனைகளும் வரும்.

தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து அதை நீங்கள் பாதுகாத்தாலும் உங்கள் உடலில் இருந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறு ஒரு உடலாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களுக்குள் வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.

ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ அல்லது வேதனைப்படுபவர்களை நுகர்ந்தாலோ உடனே நீங்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்கின்றோம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை புருவ மத்தியில் உயிரின் நிலைகள் இணைக்கப்படும் போது
2.கண் வழி கவர்ந்தாலும் கண்ணின் நினைவினை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும் திறன் வரும் பொழுது
4.மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.

பின் நம்முடைய நினைவாற்றல் நம் உடலில் உள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப்பெற்று நம் உட;லுக்கு முன் முகப்பில் உள்ள விஷத்தன்மைகளை தூர ஒதுங்கிச் செல்லத் தள்ளி விடுகின்றது. நமது ஆன்மா தூய்மை அடைகின்றது.

1.அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா ஒரு வட்டம் உண்டு… அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
2.இந்த உயிரைப் போல உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக அணுக்கள் வளர்ச்சி வரும் சக்தி பெறுகின்றது.

அப்படி ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து… ஒளி என்ற அறிவு எப்படி இருந்ததோ அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் நமது உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.
1.எந்தத் துருவத்தின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
2.அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்

 

எந்த மனிதன் கோபிக்கின்றானோ வெறுப்படைகின்றானோ தற்கொலை செய்து கொள்கின்றானோ குரோதமான நிலைகளில் ஒருவனைத் தாக்குகின்றானோ இவையெல்லாம் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு இந்தக் காற்றிலே அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த மனிதனை நாம் பார்க்கப்படும் பொழுது
1.அந்த மனித உடலிலிருந்து வெளிப்பட்டதை
2.நமது கண் அந்த மனிதனை நெஞ்சு எலும்பில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

அவன் உடலிலிருந்து என்னென்ன நிலைகள் வெளிப்பட்டதோ அவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அல்லது வெறித்தனமாகப் பேசுகிறான் என்றால்
1.அதன் உணர்வுகள் நம் உடலில் பதிவாக்கி
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்த வெறித்தனமான சொல்லும் நமக்குள் அந்த செயலும் வருகின்றது.

அல்லது அவன் வெறித்தனமாகச் செயல்படுத்தும் போது அந்த உணர்வு நமக்கு அது பயமாக இருந்தால் அந்த நேரத்தில் வெறித்தன்மையான உணர்வுகள் நம் உடலில் பயத்தையே ஊட்டும். சிந்திக்கும் ஆற்றலையும் செயலற்றதாக மாற்றிவிடும்.

இப்படி
1.நாம் சந்தர்ப்பத்தால் சந்தித்த உணர்வுகள் எல்லாம்
2.நெஞ்சின் எலும்புக்குள் “எண்ணிலடங்காத வித்துக்களாக” ஊழ் வினையாக அது பதிவாகியுள்ளது.

இவை அனைத்தும் அதனதன் உணர்வுகளைக் கவர்ந்து அதற்கொப்ப நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அத்தகைய அணுக்கள் நம் உடலில் உருவாகத் தொடங்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.

இந்த இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளில் இவையெல்லாம் கலந்து விடுகின்றது ஆனால் உடலில் நல்லவைகளாக இருந்து வளர்ந்த இந்த உணர்வுகளில் நிலைகளில் நாம் படிப்படியாக வேதனைப்பட்டோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் நுகர நுகர நமது உடலில் அத்தகைய அணுக்கள் விளைந்து விடுகின்றது.

மீண்டும் அவர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நமக்கு வெறுப்பு பயம் கோபம் குரோதம் அது எந்தெந்த குணங்களோ… எண்ணும் போதெல்லாம் அந்த உணர்ச்சிகள் முன்னணியில் வந்துவிடுகிறது.

அப்பொழுது அதனால் நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்கும் வெறுப்பான குணங்களுக்கும் இது ஒன்றுக்கொன்று இந்த உணர்வலைகள் பாயப்படும் பொழுது
1.உடலுக்குள் பல விதமான வலிகள் பல கலக்கங்கள் நம்மை அறியாமலேயே ஏன் எதற்குச் சங்கடப்படுகின்றோம்…? என்று தெரியாது.
2.அத்தகைய உணர்வுகள் நம் உடலுக்குள் போர் செய்யத் தொடங்கி விடுகின்றது.

நம் கண்ணால் பார்த்தவுடன் அல்லது நினைத்தவுடன் அந்த அதிர்ச்சி வருகின்றது. அதே சமயத்தில் உடலுக்குள்ளும் அந்த அதிர்ச்சியின் உணர்வு தோன்றுகின்றது அன்றைய நிலைகளில். அப்போது நல்லதை எண்ணுவதோ அல்லது அதைச் செயல்படுத்துவதோ முடியாது.

அந்த வெறித்தனமான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி சிறு குடலுக்கு வரும் பொழுது வெறித்தனமான உணர்ச்சிகள் சிறு குடலை உருவாக்கிய அணுக்களை… (நாம் எப்படிப் பயந்தோமோ) அதனின் இயக்கத்தைத் தணியச் செய்து நாம் சாப்பிட்ட ஆகாரத்தை அஜீரணம் ஆக்கி விடுகிறது அல்லது விஷத்தன்மையான இரத்தமாக மாற்றி விடுகின்றது.

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் பெருங்குடலில் சேர்ந்தாலும் அதே வெறித்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது பயத்தின் உணர்வுகள் வந்து ஆகாரத்தை ரசமாக மாற்றும்போது அதிலேயும் இந்த விஷத்தன்மை கலந்துவிடுகிறது.
1.அவை நம் கணையங்களிலே சேர்க்கப்பட்டு அமிலங்களாக மாற்றும் போது
2.அந்த அமிலங்கள் கல்லீரல் மண்ணீரலிலே படும் பொழுது இதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.அந்தக் கல்லீரல் மண்ணீரலில் நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாக அதையும் சரியாக இயக்க விடாதபடி
4.இரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகப் பரவும் தன்மை வருகின்றது.

இப்படி இந்த விஷத்தின் தன்மை பரவி நுரையீரலுக்குள் சென்றபின் அதையும் சீராக இயக்காத படி அந்த நுரையீரலில் கலந்த பின் விஷத்தின் தன்மை நுகந்து சிந்திக்கும் தன்மையை இழந்து நம்மை அறியாமலே ஏன் எதற்கு என்று வெறி உணர்ச்சிகள் வருவதும் அல்லது சோர்வடைவதும் பயமடைவதும் வரும்.

அனால் நாம் தவறு செய்யவில்லை. இதே போல நமது உடலில் அடிக்கடி நிகழும் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

 

நாம் நண்பர்களாகப் பழகிய அல்லது குடும்பத்தில் பழகியவர்கள் உடலில் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் பதிவாகி இருப்பதால்
1.அதே நினைவு கொண்டு நாம் எண்ணினோம் என்றால்
2.அவர் உடலில் இருந்த உணர்வுகளும் நோய்களும் நினைத்தவர் உடலுக்குள் வருகின்றது.
3.இருள் சூழ்ந்த நிலையாகி விடுகிறது.

ஆனால் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தப்படும் பொழுது ஒளியின் உடலாகின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின்
1.சப்தரிஷி மண்டலம் என்று எண்ணினாலே அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் புகுந்து தீமைகளை அகற்றி
2.நல் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நல்ல குணங்களுக்கு நம் மனம் இடம் கொடுக்கின்றது.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! ஒரு செடியில் எத்தகைய குணம் உண்டோ சுவை உண்டோ அதிலே விளைந்த வித்தினை நிலத்திலே போட்டால் அதைக் கவர்ந்து அதனுடைய சுவை அதனுடைய குணங்களை மீண்டும் காட்டுகின்றது.

இதைப் போல் தான் பிறிதொரு உடலில் விளைந்த நோயின் உணர்வுகள் அது வெளிப்படும் என்றால் “அது வித்து…” நாம் நுகர்ந்து நம் உடலில் பதிவாகி விட்டால் அவரைப் பற்றி எண்ணினால் அந்த நோயின் உணர்வே வரும்.

அதற்கு முன்பு அவர் நல்லதாக இருந்த நிலையை எண்ணும் பொழுது அடுத்து இப்படி ஆகிவிட்டாரே…! என்று தான் வரும். அப்போது அவருடைய முழுமை விஷத்தன்மை அடைவதால் நாம் எண்ணினோம் என்றால் அந்த விஷத்தின் உணர்வே நமக்குள் இயக்கப்பட்டு அவர் எப்படி வருத்தப்பட்டாரோ அதே வருத்தம் நமக்குள்ளும் வருகின்றது.

எத்தனை பேருடன் இப்படி பழகுகின்றோமோ வாழ்நாள் முடிவில் நோயின் தன்மை கொண்டு உடலை விட்டு வெளியேறும் போது அவர்கள் உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.ஆக நோய் என்ற உணர்வுகள் கொண்டு பலவும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது
2.அவர்களுக்குள் விளைந்த தீமைகளை நமக்குள் வந்து சேருகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைக்கப்படும் பொழுது நஞ்சுகள் கரைக்கப்படுகின்றது.
2.அந்த எண்ணத்தை நமக்குள் செலுத்தப்படும் பொழுது நஞ்சை நீக்கும் உணர்வும் நல்ல சிந்திக்கும் தன்மையும் நமக்கு கிடைக்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதில் சாவியைப் (PASSWORD) போட்டோம் என்றால் எந்த அட்டைக்கு எந்தச் சாவி என்று அதைப் பாய்ச்சி விடுகின்றனர்.

அதைச் சரியாகப் போட்டால் தான் திறக்கின்றது… இல்லையென்றால் திறப்பது இல்லை இதைப் போன்று பல விதமான உணர்வின் தன்மைகளை பிளாஸ்டிக் அட்டைகளிலேயே கொடுத்துத் திறக்கும்படி செய்கின்றார்கள்.

இதைப் போல
1.நாம் நமது உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்
2.நமது எண்ணத்தின் திறவுகோலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
3.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு இருளை நீக்கி நல்வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.

ஆகவே நாம் நம் மனதைத் திறக்க வேண்டியது உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு மட்டும் தான்…!

ஞானிகள்… நினைவு நாளைக் கொண்டாடச் சொன்னதன் நோக்கம்

ஞானிகள்… நினைவு நாளைக் கொண்டாடச் சொன்னதன் நோக்கம்

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்களை விண் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால்
1.அவர் உடலில் விளைந்த உணர்வுகள் எப்படி அங்கே கரைந்ததோ
2.உடலில் பெற்ற உணர்வு ஒளியின் உடலாகப் பெற்றதோ அவரை எண்ணி
3.அந்த உணர்வின் தன்மையை ஒளியின் உடலாக பெறச் செய்த இந்த உணர்வுகளை நினைவு கூர்ந்து
4.நாம் அந்த ஆன்மாக்களை விண் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அவர் சார்புடைய நிலைகள் அங்கே இருந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் பெற்று அவர் சம்பந்தப்பட்ட உணர்வுகள்… ஏனென்றால்
1.கண் கூர்ந்து கவனிக்கும் பொழுது கருவிழியால் பதிவான உணர்வுகளை அதே நினைவு கொண்டு
2.அவர் நினைவு நாளில் இதைப் போன்று நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்துவோம் என்றால்
3.அவர் குறை கூறிய உணர்வோ அல்லது குடும்பத்தின் மீது இருந்த வெறுப்புணர்வோ
4.அவர் நோயாக வேதனைப்பட்ட உணர்வோ நமக்குள் பதிவாகி இருந்தாலும் அந்தப் பதிவின் மீது இது வந்து மேலே பதிவாக்கும்.

ஒரு வித்து விளைந்த பின் மற்ற தாவர இனங்களின் வித்துக்களை இதனுடன் கலக்கச் செய்து அதிலே புது விதமான வித்துகளை உருவாக்குவார்கள்.

அதைப் போன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தபின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது போக “அவருடன் உணர்வுகள் ஒளியாக நிற்கும்…”

அந்த நிலையில்…
1.நினைவு நாளில் நாம் அதை எண்ணிக் கொண்டு வந்தோம் என்றால் உடலுக்குள் பதிந்த அவரின் உணர்வை மாற்றி விடலாம்.
2.அதே சமயத்தில் அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள் காற்றலைகளில் இருப்பினும் அதை ஈர்க்கும் சக்தியை இங்கே தடுத்து விட்டால்
3.அவர் உடலில் இருந்த நோயோ அவரைப் பற்றிய பகைமை உணர்வுகளோ நம்மை இயக்காது.

அதற்குத் தான் இந்த நினைவு நாளைக் கொண்டாடச் சொல்வது.

அவரின் உணர்வுகள் நம் உடலில் பதிந்திருப்பதால்
1.அவர் உணர்வுக்கு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாகப் படைத்தால்
2.நமக்குள் தீமை என்ற உணர்வு இல்லாது மறைக்கப்படுகின்றது.
3.நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு அன்று ஞானிகள் இவ்வாறு வழி வகுத்தனர்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவானாலும் அதன் தனித்தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது தான் வருகின்றது.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால்… இந்த வாழ்க்கையிலே வெறுப்பு வேதனை சலிப்பு கோபம் பகைமை என்ற உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது சிறிது நேரமே செயல்படுத்துகின்றோம். ஒரு நாளைக்கு காலையில் எழுந்ததும் செயல்படுத்துகின்றோம்.

அதற்குப் பின்
1.ஏதாவது சிரமம் வந்தால் அந்தச் சிரமத்தை தான் எடுத்துக் கொள்கிறோம்.
2.ஆனால் அவரைப் பற்றிய நினைவு நமக்கு வருவதில்லை.
3.ஆனால் அந்த வேதனைப்படும் உணர்வுகள் தூண்டி அதை வளர்க்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாற்றி அமைக்க… உடலை விட்டுப் பிரிந்து சென்று அந்த ஆன்மாவிற்கு…
1.நம் உடலில் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவான (அவரைப் பற்றியது) நிலைகளுடன் சேர்த்து விட்டால்
2.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் காற்றில் இருப்பதை நாம் நுகராமல்… நமக்குள் அது வளர்ச்சி பெறாமல்… தடுத்து நிறுத்த முடியும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடையும் நெறி

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடையும் நெறி

 

மனிதனின் வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகின்றது
1.நல்ல குணங்கள் அடங்கிய பின் வேதனை அதிகமாகி
2.”இந்த உடலை விட்டு எப்படா செல்வோம்…” என்ற இந்த உணர்வுகள் வந்துவிடும்

ஆனால் யாம் சொல்லும் தியானத்தைக் கடைப்பிடித்த ஒரு அன்பரின் நினைவு என்ன…?

1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற உணர்வுகள் வலுவாக இருப்பதால்
2.அந்த துருவ தியான நேரத்தில் காலை நான்கு மணிக்கு அதனின் வலுக் கொண்டு
3.அந்த ஆன்மா பிரிந்து அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலே சென்றடைகின்றது.

ஆனால் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டவர் அனைவருமே அமாவாசை நாளுக்கு அருகிலே தான் உடலை விட்டுப் பிரிவார்கள். அதாவது விஷ அலைகள் பரவும் நேரத்திலே தான் அந்த ஆன்மாக்கள் பிரியும்.

அப்படிச் சென்றால் வேதனையான உணர்வுகளை அதிகமாக எடுத்து விஷத்தின் தன்மை பெற்று அந்த உணர்வோடு வெளி வரப்படும் பொழுது பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுக்கின்றதோ இந்த விஷம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளும்.
1.அதன் உணர்வு கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கிவிட்டு விஷத்தின் அணுக்களாகப் பெருகி…
2.உயிர் பாம்பின் ஈர்ப்பிற்கு அழைத்துச் சென்று நம்மைப் பாம்பாக உருவாக்கிவிடும்,

ஆடு, மாடு மற்ற உயிரினங்கள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள் உடலாக்கிக் கொள்கின்றது. அதனுடைய கழிவை (சாணத்தை) நல்லதாக வெளிப்படுத்துகின்றது.

இத்தகைய தன்மையிலே இந்த மனித உடலில் வேதனை என்று உணர்வு அதிகமாகி விட்டால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து அந்த வலுவின் தன்மை கொண்ட மாடாகவோ ஆடாகவோ… அதிகமான விஷமானால் விஷத்தைப் பாய்ச்சிப் பாம்பாகும் நிலை வந்துவிடும்.

காரணம்… ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று… “அதைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்” என்றால் நிச்சயம் பாம்பாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.

சந்தர்ப்பத்தால் வேதனைகளின் உணர்வை நுகர்ந்தால்…
1.அந்த வேதனையை மறக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் நாம் சேர்த்துக் கொண்டு வந்தால் அந்த உணர்வு வலுவாகி
2.அந்த அடிப்படையில் உடலை விட்டுச் செல்லும் பொழுது சப்தரிஷி மண்டலத்தின் எல்லையைச் சென்றடைகின்றோம்
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் செயல்படுத்த வேண்டிய நெறி முறை இது.

April 2025 உபதேசம்

கூட்டுத் தியானத்தை யாம் அமைத்ததன் முக்கியமான நோக்கம்

 

ஒவ்வொரு நொடியிலும் நமது வாழ்க்கையில் நாம் நல்லோரைச் சந்தித்தாலும் சரி… அவருடன் உறவாடினாலும் சரி… ஆனால் அவர் உடலிலே அதற்கு முன் அவர் அறியாது வந்த நோய்கள் பல உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்நிலைப் பட்ட அந்த உணர்வின் தன்மைகள் உண்டு. உதாரணமாக இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்
1.ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது.
2.மற்றொரு உணர்வின் தன்மை எதிர் நிலையாகி அது துடிப்பின் இயக்கமாக உயிராக உண்டாகி
3.அதனின் துடிப்பின் இயக்கத்திற்குள் அது எடுத்துக் கொண்ட உணர்வினை ஜீவணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது “ஒவ்வொரு உயிரும்…”

கார்த்திகை நட்சத்திரம் என்பது அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளையும்… ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அலைகளாக அது பெருகினும்… மற்ற மற்ற 27 நட்சத்திரங்களும் ஒவ்வொருவிதமான நிலைகள் கொண்ட்து.

வைரங்களில் எத்தனை விதமான கலர்கள் இருக்கின்றதோ அவை அனைத்துமே ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மை பெற்றது.
1.27 விதமான வைரக் கற்கள் உண்டு.
2.இதைப் போல தான் உணர்வின் இயக்கங்களும் இருக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் இருப்பினும் பிறிதொரு உடலில் விளைய வைத்த கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர்கள் அவர் உடலில் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்கள் வெளிப்படுத்தினும் அவர்கள் நல்லவராகத் தோன்றினும் அதே சமயத்தில் அது எதிர்மறையான நட்சத்திரம் கொண்ட நான் அவருடன் நட்புடன் இருப்பினும் நாம் பேசிடும் உணர்வு கொண்டு அவர் உணவாக உட்கொண்ட மற்ற அந்த நட்சத்திரத்துடன் ஒத்துக் கொண்ட மற்ற உணர்வின் நிலைகள் கொண்டு எதிர்நிலையாக இயக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தால் தான் ஒவ்வொரு உணர்வின் எதிர் நிலையின் மறைகள் உருவாகி அதனின் நிலைகள் கொண்டு தாவர இனங்களும் விளைகின்றது.

அந்தத் தாவர இனச் சத்தை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனின் மணங்கள் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக்கொண்ட நிலைகளும் வரும். ஆனால் அதே சமயம்
1.மற்றவர்களுடைய நிலை வரும் பொழுது எண்ணத்தால் எதிர் நிலைகள் வரும்.
2.அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் அவர் சொல்லால் எனக்குள் வரப்படும் பொழுது
3.என்னை அறியாமலே எனக்குள் தீமையை விளைவிக்கும் நிலையாக வரும்.

இதைப் போல உணர்வுகள் மாறுபட்ட நிலைகள் விண்ணிலே நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாது அதனின் உணர்வின் தன்மை அலைகளாகப் பிரிந்து… “எப்படித் தாவர இனங்கள் இருக்கின்றதோ இதைப் போல தான் நட்சத்திரங்களின் இயக்கமும்…”

1.அதனின் உணர்வுகள் எதிர்மறையாகி ஒன்றுடன் ஒன்று எதிர் நிலையாகும் பொழுது தான் விண்ணுலகில் ஆற்றல் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
2.அதைப் போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் பொழுது எதிர்மறையான உணர்வுகள் வரும் பொழுது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.

இன்று எலக்ட்ரானிக் என்று வரப்படும் பொழுது அது இயக்க வேண்டுமென்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் இயக்கும். அதைப் போல
1.ஒரு உணர்வின் சக்தி உடலுக்குள் ஒத்துக் கொண்ட உணர்வாக இருப்பினும்
2.எதிர்மறையான நிலைகள் இருக்கும் பொழுது தான் அது உந்தி இயக்கும் நிலைகள்.

கரண்ட் ஆக நாம் உபயோகப்படுத்தினாலும் அதனின் நிலைகள் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்று எதிர்மறையான நிலைகள் வரும் பொழுது தான் மின் அணுவின் நிலைகளும்… அதனின் அழுத்தத்தைக் கொண்டு மற்ற மோட்டார்களை இயக்கச் செய்யும் நிலைகள்.

ஆனால் அந்த மின் அழுத்தத்தின் நிலைகள் கொண்டு அதனின் இயக்கத்திற்குத் தக்கவாறு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது அதனுடைய ஒலிப்பேழைகளை மாற்றி அமைப்பதும் அதற்குத் தக்க நிலைகளை அது உருவாக்கவும் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் தொடர… மனிதனின் உணர்வுக்குள் நாம் நண்பர்களாகப் பழகியிருந்தாலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறைகள் உண்டு.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம்… ஒரு குழந்தை ஒத்து வராத நிலை வரும். எதிர்மறையான நிலைகள் வரப்படும் பொழுது எதிர்ப்பு உணர்வுகள் வருகின்றது.

இதைப் போன்று தான் வசிஷ்டாத்வைதம்
1.27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் நவக்கோள்களின் சக்திகளையும் உள்ளடக்கி
2.உணர்வின் சக்தி ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள் சப்தரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
3.அந்த மண்டனல்களிலிருந்து வரும் உணர்வின் சக்தியை நாம் கவரும் திறனாகத்தான் உங்களுக்குக் கூட்டுத் தியானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நாம் பலருடன் பழகினாலும்… எண்ணத்தால் கவர்ந்து நட்பின் நிலைகள் கொண்டு கேட்டுணர்ந்தாலும்… கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாகும்.

சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்… நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் பொழுது இன்னொரு நண்பருடன் நாம் பேசி வரும் பொழுது தன்னை அறியாமலே ஒரு கலக்கமும்… ஒரு வியாபார ரீதியாகச் சென்றாலும் அவருடன் உறவாடி விட்டுச் சென்றால் இனம் புரியாது கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.

இது எல்லாம் நம்மை அறியாது நடக்கும் செயல்கள். நமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய உணர்வின் தன்மை எதிர்நிலையாக மாற்றங்கள் அமைக்கப்பட்டு நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்ற நிலைகள் தான் “வசிஷ்டாத்வைதம்” என்ற தத்துவம்.
1.எதையுமே தனக்குள் கவரச் செய்து – அருந்த்தி…!
1.இணைந்தே வாழும் நிலைகளும்
2.இணைத்து அறிந்திடும் நிலைகளும்
3.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்
4.இந்த உடலிலே இணைத்திடும் நிலைகள் கொண்டு என்று நாம் என்று கொள்ளுகின்றோமோ
5.இதனை இணைந்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பருக வேண்டும்.
6.அப்படிப் பருகும் நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்தக் கூட்டுத் தியானம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது

அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.

1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்தப் படம் ஆடும். அதுவும் பதிவாகும் அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.

இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.

1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்

இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.

இதைத் துடைப்பது யார்…?

இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” – பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!

எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகிவிட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.

முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”

ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சுத்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.

அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”

செய்து பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் வலிமை

 

வராகன் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நல்ல பொருளை எடுத்து அது உணர்வுக்குள் நல்லதாக மாற்றி நாற்றமான உடலைப் பிளந்து மனிதனாகப் பிறக்கச் செய்தது

அதைப் போல் விஞ்ஞான அறிவால் இந்த காற்றுக்குள் இருக்கும் நச்சுத்தன்மைக்குள் மகா ஞானியின் உணர்வலைகள் நமக்கு முன் மிதந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் நுகர வேண்டும்.

1.அந்த மகா ஞானியின் உணர்வலைகளை உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்ய
2.உங்கள் நினைவின் எண்ணங்களைக் கூர்மையாக்க
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த நிலை.

பதிந்தபின் நீங்கள் தியானித்து அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காக…
1.நாம் அனைவரும் சேர்ந்து எண்ணி ஏங்கி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது எளிதில் கிடைக்கும்.

ஒரு நூலால் ஒரு கடினமான பொருளைத் தூக்க முடியாது ஆனால் பல நூல்களை இணைத்துப் பெரும் கடினமான பொருளையும் தூக்க முடியும்.

சாதாரண மனிதன் இந்தப் புவியின் ஆசையுடன் இருக்கப்படும் பொழுது நம் எண்ணத்திற்கு வலு குறைவு. ஞானிகள் பிறவிக் கடனை வென்று இன்னோரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி ஒளியின் சுடராகச் சென்றவர்கள்.

அவர்கள் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளுக்கு அருகிலே நம் உணர்வுகள் செல்ல அருகதையற்றது. அதனை நுகர்வது என்றால் மிகக் கடினமானது.

அந்த ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டி உணர்ந்து உணர்வின் தன்மையை எம்மை ஏங்கிப் பெறச் செய்து
1.அதை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.ஞானிகள் கண்ட உணர்வினை உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி இந்த உணர்வுகளைக் கேட்க வைத்து
3.இந்த உணர்வுகளை நுகரச் செய்து நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து
4.இந்த நினைவின் ஆற்றல் எண்ணும் பொழுது
5.டிவியும் ரேடியோவும் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதை காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் காட்டுவது போல
6.இந்த மகா ஞானிகளின் உணர்வலைகளை நம்மால் எடுக்க முடியும். வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

ஆலயங்களிலே தேரை இழுக்கப்படும் பொழுது பலரும் ஒன்று சேர்த்து அந்தக் கடினமான தேரை இழுப்பது போன்று நாம் அனைவரும் இந்நேரம் வரை கேட்டுணர்ந்த உணர்வை அந்த மகரிஷ்களின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் தியானிக்கப்படும் பொழுது “காற்றுக்குள் மறைந்துள்ள இந்த ஞானிகள் உணர்வலைகளை இங்கே படரச் செய்வதுதான்…”

இங்கே படர்ந்த உணர்வின் சத்தை அவரவர்கள் ஏங்கிய நிலையில் கொண்டு பெற முடியும்.

இந்தத் தியானம் முடிந்த பின் தியானத்தில் அமர்ந்த அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்… எல்லோருக்கும் பெற வேண்டும் என்று உணர்வினை வெளிப்படுத்தும் போது சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து உயர்ந்த எண்ணத்தின் வலுவாக அது கூடி… நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் புற நிலையில் ஈர்த்து உங்களுக்குள் சக்தி வாய்ந்தத உணர்வுகளாகப் பதியச் செய்வதே இந்தக் கூட்டுத் தியானம்.

கூட்டுத் தியானத்தின் மூலம்
1.அனைவரின் எண்ணத்தின் வலு கொண்டு நாம் ஈர்க்கும் திறன் பெற்று
2.இங்கே அணைத்து வந்த உணர்வுகள் நமக்குள் இணைத்திடும் சக்தியாக ஆக்கிய பின்
3.இதற்கடுத்து நாம் தனித்து இருந்தாலும் அந்த உயர்ந்த சக்திகளை “எப்பொழுது வேண்டுமென்றாலும் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனதில் நாம் எதைப் பதிவு செய்கிறோமோ அது தான் இயக்கும்.

உதாரணமாக… உங்களுக்கு முன்னாடியே நல்லது செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.ஆனால் அதை நீங்கள் மோசமாக எண்ணுகின்றீர்கள்
2.அப்போது நல்லது செய்தார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வீர்களா…?
3.அதில் எப்படிக் குறை காணுவது…? என்ற உணர்வு தான் வரும்.
4.அது உங்களுக்கே தெரியாது… உங்களுக்குத் தெரியாமல் அது இயக்குவது தான்.

ஆகையினால் குறையான உணர்வுகள் வந்தபின் நல்லது செய்கிறார்கள் என்றால் அதிலே எப்படியெல்லாம் குறைகளைக் காண வேண்டுமோ அப்படி எல்லாம் அதைத் திருப்பிக் கொண்டு வரும். ஆக நல்லதாக்கும் நிலைகளுக்கு வராது. இது எல்லாம் மனிதனுடைய இயற்கையின் நிலைகள்.

எவ்வளவு பெரிய சக்தி எடுத்தாலும் எல்லாம்… எல்லாம் அனுபவித்தாலும் “நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த ஆதங்கம்”
1.மற்றவருடைய நிலைகளைப் பார்க்கப்படும் போது
2.தன்னை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் நிலை வருகின்றது.

நன்மை செய்வதற்கு நான் பற்று கொண்டுள்ளேன்… ஆனால் மற்றவருக்குப் பற்று இல்லை என்கிற பொழுது இந்த மாதிரிக் குறைகளை வடிவமைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இதனால் எத்தனையோ பிழைகள் வருகின்றது.

இத்தகைய உணர்வுகள் ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றும். நாம் போகும் பாதையை விட்டுவிட்டுத் திசைகளைத் திருப்பும்… ஆனால் சேவை செய்ய வேண்டும் என்ற பற்று இருக்கும்.

எல்லா உணர்விலும் அது சாம்பிள் போட்டுக் கொண்டே இருக்கும் நன்றாக இருக்கின்றது நல்ல ருசியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஸ்ஸ்…ஆ…! காரமாக இருக்கிறது நல்லதைக் காரமாகச் சொல்வது போன்று காண ஆரம்பிக்கும்.

இது எல்லாம் அன்பைக் காட்டுகின்றது ஆனால் பேராசையைக் காட்டுகின்றது ஆனால் கடைசியில் நிராசையாக மாறுகின்றது.
1.இந்தப் பேராசை (நல்லது செய்ய வேண்டும்) என்ன செய்யும்…?
2.நிராசையாக மாற்றிக் கொள்ளும் சக்தி தான் வருகின்றதே தவிர நல்லாக்கும் நிலை இல்லை.

பேராசை என்கின்ற பொழுது எப்படி இருக்க வேண்டும்…?

நீங்கள் (அடுத்தவர்கள்) உயர வேண்டும் என்றால் இது பேராசை.
1.நான் உயர வேண்டும்…
2.நான் உயர்ந்திருக்கின்றேன் என்ற இந்தப் பேராசை வரக்கூடாது.

இதுவும் பேராசை தான்… அதுவும் பேராசை தான்.

மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எப்படியும் தெளிந்த மனம் எல்லோருக்கும் வர வேண்டும் என்ற இந்தப் பேராசை நம்மைக் குறைகளிலிருந்து மீட்கச் செய்யும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறை காணும் இயல்புகள் உண்டு எனக்கும் கூட உண்டு உங்களிடம் எல்லாம் சொல்கின்றேன் அந்த மாதிரி உணர்வு… சில நேரங்களில் எனக்குள்ளும் (ஞானகுரு) வரும்.

இதனால் தான் குருநாதர் என்ன செய்தார்…?

ஒரு சந்தர்ப்பம் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு மரத்தைக் காண்பிக்கின்றார். “தூக்கி வீசுடா…..!” என்றார் அவர் சொன்ன முறைப்படி செய்த பின் மரம் பறந்து போய் அங்கே விழுகின்றது.

1.அடுத்து எனக்குத் திமிரே வருகின்றது
2.யாராவது ஏதாவது செய்யட்டும்… நான் தூக்கிப் பந்தாடுகின்றேன் பார்…! என்று சொல்கின்றேன்.

“இப்போது உனக்குத் திமிர் வந்து விட்டது” என்று குருநாதர் சொல்கின்றார். எதற்காக வேண்டி உன்னை மரத்தைத் தூக்கி எறியச் சொன்னேன் தெரியுமா…?

ஒருவருக்குள் ஆட்டிப் படைக்கும் தீய சக்திகளைத் தூக்கி எறிய வேண்டும்.

சாதாரணமாக ஜீவனுடன் வாழும் அந்த மரத்தைத் தூக்கி எறிந்த உடனே உனக்குத் திமிர் வருகின்றது. அதை வைத்து யாரை வேண்டுமென்றாலும் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணம் தானே உனக்கு வருகின்றது என்று அந்த இடத்தில் அதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அந்தத் திமிர் வருவதனால்… யாராவது கோபித்துச் சொன்னால் அல்லது தவறாகச் செய்தால்
1.இருக்கட்டும்… கொஞ்சம் சுண்டிப் பார்க்கலாம்
2.அப்போதுதான் அவருக்கு அந்த அனுபவம் வரும் என்று நான் இதைச் செய்தால் எப்படி இருக்கும்…?

குறைகள் தான் வரும்.

அதை நிவர்த்திப்பதற்குண்டான வழியைத் தானே நான் சொல்ல வேண்டும்.
1.இன்னென்ன காரணத்தால் குறைகள் ஏற்பட்டது
2.அதனால் அது உங்களை இப்படிப் பாதிக்கின்றது என்று வழி காட்ட வேண்டுமே தவிர
3.அங்கே குறையைக் குற்றமாக ஆக்கி அவரைத் தண்டிக்கும் நிலைகளுக்கு வரக்கூடாது.

குருநாதர் எனக்கு முதலில் இதைத் தான் உணர்த்தினார்.

என்னைப் பெரிய ஆளாகக் காட்டுவதற்கும்… என்னை மெச்சும்படி செய்வதற்கும்… உங்களுக்கும் அந்தச் சக்தியைக் கொடுத்து மரத்தை தூக்கி எறியச் செய்யலாம்.

அப்போது உங்களுக்கும் அதே எண்ணம் தான் வரும். மனிதனுக்குள் இது போன்ற சக்திகள் கிடைத்தால் உடனே… அப்போதே… அந்தத் திமிர் வரும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.நல்லது என்ற எண்ணத்தில் மற்றவருக்குச் சேவை செய்யும் நேரங்களில் இது போன்ற சில உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.
2.நாம் அல்ல… நாம் எடுத்துக் கொண்ட ஆர்வத் துணிவு குற்றத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதில் குற்றத்தைப் பெருக்கத்தான் செய்யும்.

குற்றம் என்ற நிலையில் அவர்கள் தாழ்ந்து போனால் “பேசாமல் போகின்றார்கள் பார்…” என்ற நிலை வந்துவிடும். அதைக் கொண்டு குற்றங்களை எப்பொதுமே மாற்ற முடியாது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆகவே சேவை செய்ய நாம் அணுக வேண்டிய முறைகள் எப்படி இருக்க வேண்டும்…?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று அவர்களை மதித்து
1.அங்கே அமைதி பெறும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.அமைதி பெறச் செய்யும் அந்தச் சக்தியை கொண்டு வந்தால் தான் அது சீராகும்.

அது அல்லாதபடி மற்ற எத்தனையோ பெரிய நிலைகளைச் செய்தாலும்
1.ஞானத்தின் வழியில் தேர்வு பெறுவது கடினம் தான்…
2.ஒரு சிலர் தான் தேற முடியும்.

கூட்டமாக ஒரு பக்கம் வந்து கொண்டே இருந்தாலும் “இதிலே என்னடா இருக்கின்றது…?” என்று களைந்து வெளியில் போய்க் கொண்டு தான் இருப்பார்கள்…. வர முடியாது… இதை வளர்க்கவும் முடியாது.

உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா…!

ஞான வழியில் வளர்வதற்கு மாறாகத் “தன்னுடைய செயல்கள்தான் உண்மை…” என்று அதை நிலை நாட்டும் போது நல்லதை நிலைநாட்ட முடியாது போய் விடுகிறது.

அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகள்

 

அகஸ்தியனின் தாய் தந்தையர் காட்டிலே வாழும் போது அவர்களுடைய புலனறிவால் தன்னைக் காத்துக் கொள்ளும் ஞானத்தின் நிலைகள் வளர்கின்றது. அப்படி வளர்த்த அந்த தாய் தந்தையரின் கருவில் வளர்ந்த நிலைதான் பிற்காலத்தில் அகஸ்தியன் என்ற நிலை வந்தது.

அகஸ்தியன் அங்கே குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே நஞ்சு கொண்ட எதுவுமே வருவதில்லை. மிருகங்கள் கொஞ்சித் திரியும் நிலைகளுக்கு வந்து விட்டது.

1.ஆக தாய் தந்தையர் முலாம் பூசிக் கொண்ட அந்த நஞ்சு கொண்ட மணத்தை நுகர்ந்து கண்டு மற்ற மிருகங்கள் விலகிச் சென்றாலும்
2/ஆனால் அதே சமயம் அந்த நஞ்சு கொண்ட மிருகங்கள் அனைத்தும் அகஸ்தியனைத் தீண்டாமல் பாதுகாக்கும் நிலைக்கே அமைகிறது.

இதைக் கண்ட அன்னை தந்தையர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
1.கடவுளின் அவதாரமாக நம் குழந்தை பிறந்து இருக்கிறது என்று பேரானந்த நிலை பெற்று
2.அன்று சூரியனை வணங்கி வந்த வழக்கப்படி அந்தக் குழந்தைக்கு அவனே தான் இந்த அருள் கொடுத்தது என்று
3.அவர்கள் அறியாது இயங்கிய நிலைகள் கொண்டு அந்த குழந்தையைப் போற்றிக் காத்து வந்தார்கள்.

இருப்பினும் அவர்கள் உடலிலே அதிகமான நஞ்சின் தன்மை பூசியதால் அதனின் உணர்வுகள் உடலில் சிறுகச் சிறுக விளைந்து இந்தக் குழந்தை ஐந்து வயது ஆவதற்கு முன் அந்த உடல்கள் மடிந்து விடுகின்றது.

மடிந்தபின் இவன் தனித்து வாழுகின்றான் அகஸ்தியன். தன் அன்னை தந்தையர் இறந்துவிட்டனர் என்று இந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு காலை கதிரவன் அவன் சுடரை வீசி வரப்படும் போது கதிரவனைப் பார்த்து…
1.என்னை ஈன்ற அன்னை தந்தையர் மடிந்து விட்டனர்
2.அந்த அன்னை தந்தையரின் அருளை நான் பெற வேண்டும்
3.அவருடைய அணைப்பு எனக்கு வேண்டும் என்றும்
4.என் அன்னை தந்தையரை நான் பார்க்க வேண்டும் என்றும் இந்த உணர்வினை விண்ணை நோக்கி ஏங்கி
4.அன்னை தந்தையரைப் பெற வேண்டும் என்ற உணர்வில்… அறியாப் பருவத்தில்
5.ஒளி சுடராக வீசி வரும் அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி அந்தக் கதிரவனின் காந்தப்புலனை எண்ணி ஏங்கி வணங்குகின்றான்.

அப்படி வணங்கப்படும் போதுதான் தான் தாயின் கருவிலே அவன் உடலுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வின் தன்மை… “நஞ்சினைக் காணும் நிலையை” அவனுக்குள் உருவாக்குகின்றது.

இப்படித் தன் தாய் தந்தையரை எண்ணி அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கம் கொண்டு கதிரவனைப் கண்ணால் பார்க்கப்படும் பொழுது கதிரவனிலிருந்து வெளிப்படும் அந்த நஞ்சின் தன்மையை அவன் உணர்கின்றான்.

விஞ்ஞானிகள் அல்ட்ரா வயலட் என்று இன்று சொல்வதை அன்று இவன் உடலில் இருந்த நஞ்சின் ஆற்றலால் அந்தச் சூரியனிலிருந்து வெளிப்படும் அந்த நஞ்சினைக் கண் கொண்டு பார்க்கின்றான்.

ஆக இவன் அறியாத நிலைகளில் இருந்தாலும்
1.இவன் உடலில் விளைந்த இந்த உணர்வின் தன்மைகள் இவன் எதை எடுத்துச் சூரியனை வணங்கினானோ
2.அந்த ஞானத்தின் உணர்வின் தொடராக அந்த காந்தப் புலனின் ஆற்றல் பெருகி
3.இவன் எண்ணத்தின் நிலைகள் வலுப் பெற்று
4.சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வினை உற்று நோக்க அதனின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான்.

அதிலிருந்து வெளிப்படும் நஞ்சும் சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப் புலன்களும் அதைக் கடந்து வரப்படும் பொழுது அந்த அணுவின் இயக்கங்கள் எவ்வாறு மாறுகிறது…? என்று முதல் முதலிலேயே அணுவின் இயக்க உணர்வின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

ஆகையினால் தான் அவன் விண்ணுலக ஆற்றலும்… அதனின் பரிணாம வளர்ச்சியும்… அணுவின் ஆற்றலும்… பிரபஞ்சம் உருப்பெற்றதையும்… அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலே அவன் மெய்யுணர்வைக் காணும் நிலைகள் அங்கே வளர்ந்தது.

ஏனென்றால் தாயின் கருவில் இருந்து வளர்ந்த நிலைகள்
1.அந்த நஞ்சு வலுக்கொண்டதாக… நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் வளர்ந்ததனால்
2.நஞ்சான உணர்வின் தன்மைகளைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை அகஸ்தியன்ன் அறிந்திடும் பருவம் பெற்றான் முதல் நிலைகளில்.

அவன் உடலில் விளைந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் பிரபஞ்சத்தின் இயக்கமும் பிரபஞ்சத்தில் அணுவின் ஆற்றலின் பெருக்கமும் அதனின் நிலைகள் கொண்டு கோள்களானதும் கோள்கள் நட்சத்திரமாவதும் நட்சத்திரங்கள் சூரியன் ஆவதும் என்ற நிலையினை வெளிப்படுத்துகின்றான்.

அந்தச் சூரியன் நட்சத்திரமாகும் போது அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் அது எவ்வாறு கோள்களாக மாறி கோள்கள் நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் அனைத்தும் விண்ணுலக ஆற்றலைப் பெற்று இந்த நட்சத்திரங்கள் நஞ்சினை வென்று நல்ல உணர்வுகளைத் தனக்குள் பாய்ச்சி இந்த பிரபஞ்சத்திற்குள் செலுத்துகிறது என்றும்
1.பிரபஞ்சத்திற்குள் இருக்கும் நிலைகள் அதனைக் கவர்ந்து கோளாக மாறி
2.அது உமிழ்த்தும் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து ஒளியின் சுடராக மாற்றி
3.அதனுடன் கலந்த நஞ்சினைப் பிரித்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெற்றது என்ற உண்மை நிலையை
4.முதன் முதலில் உணர்ந்து பரிணாம வளர்ச்சியும் அணுவின் வளர்ச்சி நிலையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அப்பொழுது பக்கத்திலே ஒருவர் கடுமையாக வேதனைப்படுகின்றார்… பார்க்கின்றோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள்.

இதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் அவரிடம் அதிகமான பழக்கமில்லை. இரயிலில் போகும் பொழுது தான் அவரிடம் நாம் யதார்த்தமாகப் பழகுகின்றோம்.
1.அவர் படும் வேதனையை நாம் மிகுந்த இரக்கத்துடன் பார்க்கின்றோம்.
2.ஆனால் அவருடன் கூட வந்தவர்கள் சலிப்பாக சஞ்சலமாகத் தான் பேசுவார்கள்.
3.ஏனென்றால் அடிக்கடி அவர்களிடம் துயரப்பட்டுப் பழகியதால் அந்த நிலை.

இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இந்த மாதிரி அடிக்கடி அது வேண்டும்… இது வேண்டும்… என்று கேட்கிறாய்…? என்பார்கள்.

ஆனால் நாம் இரக்க மனம் கொண்டு ஏனம்மா…! என்ன செய்கிறது…? உனக்கு என்ன வேண்டும்…? என்று இரக்கத்துடன் கேட்கின்றோம். ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே நாம் பழகியது…!
1.அது அவருக்குள் பதிவாகிறது.
2.அவருக்கு ஆதரவாக நாம் அப்படிப் பேசுகின்றோம்.
3.பண்புடன் நாம் அங்கே சொல்லப்படும் பொழுது அவர்களுக்குக் கொஞ்சம் தணிவாகின்றது.
4.இந்த உணர்வு “அவருடைய உடலில் வலுப்பெற்று விடுகின்றது…”

நாம் என்ன நினைக்கின்றோம்…? அந்த அம்மா இவ்வளவு தூரம் சிரமப்படுகின்றது ஆனால் கூட வந்தவர்கள் கொஞ்சம் கூட இரக்கமில்லாதபடி இப்படிப் பேசுகிறார்கள்… சமுதாயம் இப்படி இருக்கின்றதே…! என்று “அவர்கள் உணர்வை நமக்குள் பதிவு செய்கிறோம்…”

ஆனால் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் அவரை சார்ந்தவர்கள் வரப்படும் பொழுது நோயாளிக்குள் எண்ணங்கள் அதிகமாகிறது.

பார்…! ஆரம்பத்திலிருந்து இவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தோம்… எத்தனை வசதிகள் செய்தோம்… நல்லது செய்தோம்…! நம்மை இவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை…!

ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது அந்த மகாராசி எனக்கு அவ்வளவு ஆதரவாக உதவி செய்தார்… எந்த அளவுக்கு உபசாரம் செய்தார்…! என்று இந்த உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

நாம் அவர்கள் பட்ட வேதனையை வலுப்பெற்று வைத்திருக்கின்றோம்
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…
2.நம்முடைய உணர்வுகள் பதிவானது அங்கே….
3.அவர் வீட்டில் அவரைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பு.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் போது தனக்கு இரயில் பிரயாணத்தில் உதவி செய்த நல்லவர் மீது… அதாவது நம் மீது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது.

விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்…!

அப்படி எண்ணிய உடனே அந்த உயிரான்மா
1.நாம் இங்கே இருந்தாலும் எதனின் வலுப்பெற்றதோ இங்கே இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது.
2.நம் உடலில் புகுந்து விடுகிறது… நமக்குத் தெரியாது… ஒன்றுமே தெரியாது.

ஆனால் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்படைந்த உணர்வைப் பதிவு செய்தது… “எல்லோரும் பாவிகள்” என்று அங்கே அந்த எண்ண அலைகளைப் பரப்புகின்றது.

அந்தச் சாப அலைகள் அந்தக் குடும்பத்தையே சாடுகின்றது. இந்த உடலில் விளைந்தது அங்கே போகின்றது

தன் மீது பற்று கொண்ட உணர்வின் நினைவுடன் “மகராசி எனக்கு உதவி செய்தார்…” என்று அவர் உடலில் விளைந்தது இங்கே வந்து… விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்குமோ அது போன்று அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.

கடைசி நேரத்தில்
1.என்னென்ன வேதனைப்பட்டுப் புலம்பல் ஆனதோ
2.தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாவிகள் என்று வெறுப்புடன் எப்படிப் பேசியதோ
3.அது எல்லாம் இங்கே வந்து அவர் செயல்படுத்தியது போன்றே தன் குடும்பத்தில் வெறுப்பாகப் பேசும்.

குடும்பத்தில் சிலருடைய நடவடிக்கைளைப் பார்க்கலாம்…! நேற்று வரை எல்லாம் செய்தார்… இப்பொழுது என்னமோ தெரியவில்லை “கண்டபடி வெறுத்துப் பேசுகின்றார்…! நல்லது செய்தவர்தான்… ஆனால் வெறுத்துப் பேசுகின்றார் என்று அவருடைய செயலாக்கங்கள் திடீரென்று மாறுவதைப் பார்க்கலாம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே ஏற்படக்கூடிய சில தீங்கான நிலைகள்…!

இதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம்.
1.அறியாமல் வரக்கூடிய தீங்குகளை… அதனின் உண்மையை உணர்ந்து
2.ஞானிகள் காட்டிய வழியில் அதை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

பிறருக்கு நாம் எப்படி உதவி செய்ய வேண்டும்…? உதவி செய்தாலும் அவர் பட்ட துன்பங்களும் வேதனைகளும் நமக்குள் வராதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்…?

1.நம்மையும் காத்து பிறரையும் காக்கும் சக்தியாக
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்பதற்குத்தான்
3.இதை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

 

இப்பொழுது நம் உடலில் வேதனை என்ற உணர்வுகள் அடர்த்தியானால் கேன்சருக்குண்டான அணுவாக உருவாகின்றது. அப்பொழுது விஷத்தைத் தான் அது உணவாக உட்கொள்கின்றது.

அந்த அணுக்கள் உருவானவுடன் விழுதுகளைப் பரப்புகின்றது. எந்தப் பாகத்தில் போகின்றதோ அந்தப் பாகத்தில் எல்லாம் பரப்புகின்றது. அந்த விஷத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.
1.விஷம் இருந்தால் தான் அது இயக்கும்.
2.அப்பொழுது என்ன செய்கின்றது…? நம் உடலில் கேன்சர் வருகின்றது.
3.ஆக வேதனை ஒரு பக்கம் அதிகமாகக் குமியும். நல்ல அணுக்களைச் செயலற்றதாக்கும்.

இப்பொழுது நமக்குள் சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று அதிகமானால் நம் நுரையீரல்களில் அது அதிகமாகச் சேர்கின்றது. அப்பொழுது அது சளி கட்டும் தன்மை வரும்.

இந்த வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் கிட்னி ஃபெயிலியர் ஆகி இரத்த நாளங்களில் இருக்கக்கூடியது நீர்ச்சத்தாக மாறி நெஞ்சுகளில் அதிகமாக ஆகும்.
1.கிட்னி சரியாக இயங்குவதில்லை… நீர்ச்சத்தாக மாறும்.
2.துரித நிலைகள் கொண்டு மனிதனை அழித்துவிடும்.

அடிக்கடி வேதனை என்ற உணர்வு அதிகமானால் பித்த சுரப்பியின் உணர்வுகள் அதிகமாகின்றது. இந்தப் பித்த சுரப்பிகள் அதிகமாகி விஷத்தின் தன்மை கூட்ட நம் இரத்தத்துடன் அது கலக்கப்படும் பொழுது தலை சுற்றும் கிறு… கிறு… என்று வரும்.

ஆகவே இந்த வேதனை என்ற உணர்வுகளை நாம் பார்த்தால் நினைப்பு வேதனை. ஆனால் இங்கே பித்தங்கள் அதிகமாகும். நாம் தவறு செய்யவில்லை. அந்த விஷத்தின் தன்மை பெருகுகின்றது.

அதே மாதிரி இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது நம் உடலில் மேலே தடிப்பாகின்ற மாதிரி கல்லீரலில் அதே மாதிரித் தடிப்பானால் நம் உடலில் இனம் புரியாத வலி ஏற்படும்.

அப்பொழுது அந்தக் கல்லீரல் வீக்கம் ஆகத் தொடங்கி விடும். கல்லீரல் வீக்கமானால் மண்ணீரலிலும் இதைப் போன்று பல வீக்கங்கள் தொடரும். அதைப் பார்த்தோம் என்றால் ஈரல் பக்கம் முழுவதும் பெரிதாகிவிடும். அது நீண்டு வளரத் தொடங்கிவிடும்.
1.ஆக அந்த மாதிரி அணுக்களை உருவாக்கினால் ஈரலைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
2.டாக்டரிடம் சென்றால் ஈரலை குறைத்தால்தான் நல்லது என்று சொல்வார்கள்.
3.ஆனால் அதைக் குறைத்து யாரும் பிழைத்த மாதிரிக் கண்டதில்லை.

ஆகவே இதைப் போல உறுப்புகளை மாற்றி உறுப்புகளை வளர்த்தாலும் சிறிது காலமே இருக்க முடியும்.

தேடிய செல்வம் எல்லாம் கொஞ்ச நாள் வாழ்க்கைக்கு பல லட்சங்கள் இருப்பதைப் போட்டு தப்பித்து வந்து விடுகிறார்கள். அடுத்தாற்படி வாழ்க்கைக்கு இல்லை என்றால் மறுபடியும் அந்த வேதனையைத்தான் உருவாக்கும்.

ஓரளவுக்கு அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் நிம்மதியாக இருக்கும். உதவிக்கு ஆள் இருக்க வேண்டும். காசு போய்விட்டால் கடன்காரனாகி விடுவோம். இருக்கிற வீட்டை விற்றுவிட்டுச் சிறிய வீட்டிற்குச் செல்வார்கள்.
1.ரொம்பச் செல்வந்தர்களாக இருந்தாலும் கடைசியில்
2.இதை எல்லாம் எதற்கு…? போ…! என்று போகின்ற நேரம் தான் வரும்.
3.ஆகவே இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்.

என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வுகள் நாம் பெறுவதற்கு நாம் இப்பொழுது சொல்லும் இந்த ஆயுட்கால மெம்ராகப்படும் பொழுது உங்களுக்கு கொடுத்த இந்தச் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

என் பிள்ளை இப்படி வரவில்லையே அது வரவில்லையே என்று கூறிக் கொண்டு அதாவது இந்த உணர்வின் தன்மைக்கு நீங்கள் செலவழித்தால் இதிலிருந்து நாம் என்றைக்கும் மீள முடியாது.

அப்பொழுது
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வை நீங்கள் பெருக்கி
2.என் பிள்ளைக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும் அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
3.கல்வியிலோ அல்லது வேறு எந்த நிலைகளிலோ தவறானாலும்
4.அவன் செய்யும் அந்தத் தவறான உணர்வு நமக்குள் வளராது காத்துக் கொள்ள வேண்டும்.

அவன் செய்யும் தவறின் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனை ஆகி இந்த உணர்வுகள் வந்த பிற்பாடு நமக்கு நோயாகின்றது. நோயாகி வெளியே வந்த பிற்பாடு யார் உடலுக்குள் செல்வோம்…?

யாரைப் பற்றி எண்ணி இந்த விஷங்கள் உருவானதோ அவர் உடலுக்குள் தான் செல்வோம். அவனும் பாழானான் நாமும் பாழானோம். இது தான் நடக்கும்.

ஆகவே தெரிந்தும் தவறு செய்யக் கூடாது.
1.நீங்கள் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகி
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வளர்ந்து தீமைகளை அகற்ற வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்த்தே வாழ்தல் வேண்டும். கணவன் வெளியில் சென்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும். அவர் செய்யக்கூடிய காரியங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

கணவன் வெளியில் போகும் பொழுது மனைவிக்கு அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும். ஒன்றுபட்ட உணர்வோடு நாங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
1.பண்பு கொண்ட உணர்வுகளை மனதால் நினைத்து அருள் உணர்வைச் சேர்த்து
2.அந்த ரசத்தை… பெண்பாலின் உணர்வைக் கணவன் எடுத்துக் கொண்டால் வெறுப்பு என்ற நிலைகள் மாறும். இருவருக்குமே இது பாதுகாப்பாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும்பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இதுதான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

 

உலகில் பக்தி மார்க்கங்களில் எத்தனையோ தவறுகள் செய்து வருகின்றனர். அகண்ட அண்டமும் இந்தப் பிரபஞ்சமும் இந்த உடலும் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அறியாமையிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும்..

ஒருத்தர் இங்கிருந்து போகிறார் என்றால் அங்கே சாக்கடையாக இருக்கின்றது…! என்று சொல்கின்றோம். அந்தச் சாக்கடையில் அவர் விழுகாமல் இருப்பதற்காகச் சொல்கின்றோம்.

ஒருத்தர் குளிக்கப் போகின்றார். இந்த இடத்தில் மடுகு இருக்கின்றது நீ விழுந்து விடாதே என்று சொல்வதற்கு நாம் தயங்கக் கூடாது. ஏனென்றால் அவன் அங்கே சென்றால் செத்துப் போய்விடுவான் என்று காப்பாற்றுவதற்காகக் கட்டாயப்படுத்தி நாம் இழுக்கின்றோம்.

சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான்… “போகட்டும்…!” என்று விடுவதற்கு மனது வருகின்றதா…?
1.அதே போல் நம்முடைய ஞானத்தால் மற்ற மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
2.அவன் அகராதி பிடித்தவன் என்று சொல்லக்கூடாது‌ அந்த உணர்வு நமக்குள் வந்து நம் நல்லதையே மாற்றிவிடும்.

அதே சமயத்தில் நம் வீட்டிலோ அல்லது மற்றவர்களோ சில சந்தர்ப்பங்களில் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்… குறைபாடுகள் வந்துவிடும்.

அந்த அறியாமை என்னும் இருளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்ற வகையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று அவர்களுக்கு நாம் பாய்ச்ச வேண்டும்.

அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் நமக்குள் முதலில் இயங்கிவிடக் கூடாது. முன்னால் தடுத்துப் பழக வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய தவறு செய்யும் உணர்வு நம்மையும் தவறு செய்பவர்களாக மாற்றுகின்றது.

இப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…?
1.நான் சொல்லிப் பார்த்தேன் முடியவில்லை என்றால்
2.அதைக் காட்டிலும் நாம் கடுமையான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் வரப்படும் பொழுது தேடிய செல்வத்தைக் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை. நல்ல ஒழுக்கங்கள் எல்லாம் போய் என்ன வாழ்க்கை…? என்ற இந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும். இராமேஸ்வரத்தில் என்ன செய்கின்றோம்…? நாம் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. இப்பொழுது மனிதனாக ஆனபின் என்ன செய்கின்றோம்…? தனுஷ்கோடி.

அகஸ்தியன் என்ன செய்கின்றான்…? தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றினான்.
1.ஆக நமது வாழ்க்கையில் தீமையின் நிலைகள் வந்தால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

இப்பொழுது நோயாளியைப் பார்த்து இரக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினால் சிவ தனுசு ஆகின்றது. அந்த உணர்வின் தன்மை நாம் இயக்கப்பட்டு அந்த நிலைக்குப் போனால் நாம் அடுத்த பிறவிக்குப் போகின்றோம். மனிதனல்லாத பிறவிக்குத் தான் போக வேண்டும். அவன் வேதனை எப்படிப் பெறுகின்றானோ அந்த உணர்வாகின்றது.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன பிற்பாடு அந்த துருவ நட்சத்திரம் என்பது விஷ்ணு தனுசு.
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றும்.
2.நமது குருநாதர் காட்டிய வழியில் அதை நமக்குள் பெருக்கி எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் அகஸ்தியரும்… அவரைப் பின்பற்றிய நமது குருவும்… சப்தரிஷிகளின் அருளும் அதன் பின் 4000 ஆண்டுகளுக்குள் வியாசகர் பெற்ற நிலையும் தான்.

1.அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் எடுத்து உணர்வின் ஒளியாகப் பெற்றவர் வியாசகர்
2.அவரிடமிருந்து வெளிப்பட்டதை பிருகு அத்திரி இதைப் போன்ற மகரிஷிகள் அந்த உணர்வை தனக்குள் வளர்த்து
3.அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டு எழுத்து வடிவில் பதிவு செய்தனர்
4.எழுத்து வடிவில் இல்லை என்றாலும் கூட சுருதி வடிவிலே தனக்குள் வளர்த்துக் கொண்டவர்கள்
5.அதன் வழியில் அவர்களுக்குள் விளைந்ததும் பின் அவர்கள் பிறர் பெற வேண்டும் என்று எண்ணியதும்
6.மற்றவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் நன்மை பெற வேண்டும் என்று அவர்கள் செயல்படுத்தினார்கள்.

ஆனால் பின் வந்தோர் அதை மாற்றி விட்டார்கள் இது எல்லாமே உங்களுக்குத் தெரிய வரும். உபதேசத்தின் மூலக்கூறுகளை அந்தந்தக் காலகட்டத்தில் உங்களுக்குள் எல்லாவற்றையும் தெளிவாக்கிக் கொண்டு வரும்.

நீங்கள் வளர… பிறரைத் தெளிவாக்க தெளிந்த பூமியாக தெளியச் செய்யும் உணர்வாக நமக்குள் வளர்க்க… என்றும் பேரானந்தப் பெருநிலை என்று நிலை அடைய இது உதவும். நாம் எல்லோரும் அதைப் பெறுவோம்.

உதாரணமாக பலசரக்குக் கடையிலே பொருள்களை வாங்குகின்றார்கள். பொருள்களை எல்லாம் விற்றால் வியாபாரம் நன்றாக இருக்கும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

அதே மாதிரித் தான்
1.அந்த அருள் ஞானிகளின் சக்திகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தால்
2.அவர்கள் அதைப் பெறும்பொழுது மகிழ்ச்சியின் நிலைகள் உங்களுக்குள் வளரும்.

புறப்பொருளை விற்றுப் பணத்தை வாங்குகின்றீர்கள் ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் எடுத்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று செலுத்தும் போது
2.அதை அவர்கள் பெற்று மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும் போது பேரானந்தச் செல்வமாக நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஆகையினால் “எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்யுங்கள். அந்த மகிழ்ச்சியான அரும்பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் இது பேரானந்தப் பெரும் செல்வம்.

ஆகையினால் அதைப் பெறுவதற்கு முயற்சிப்போம் குரு அருளை நாம் என்றுமே பெறுவோம். அவருடைய அருளால் எல்லா நிலைகளையும் நாம் பெறுவோம் எல்லோரையும் நாம் மகிழ்வடையச் செய்ய முடியும்.

நம்மை மனிதனாக உருவாக்கிய நம் அன்னை தந்தை உயிரைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய நிலையும் மனிதன் நல் ஒழுக்கத்தையும் நல் நிலைகள் பெறுவதற்குக் குருவாக வழிகாட்டிய முதல் குருவின் ஆசியை நாம் பெறுவோம். அவர்கள் துணை கொண்டு
1.மெய் உலகின் உணர்வின் தன்மையை வழிகாட்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளும்
2.அவரின் அருள் துணை கொண்டு மெய் ஞானிகள் அருளும்
3.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வையும்
4.அதிலிருந்து வளர்ச்சி பெற்ற சப்தரிஷிகளின் அருள் உணர்வுகளையும் நாம் பெறுவோம்.

உலக இருளை மாய்ப்போம்… மெய்ப்பொருள் காணும் அந்தப் பாக்கியத்தைப் பெறுவோம்.

அருள் ஞானச்சக்கரம்

 

“அருள் ஞானச்சக்கரம்” பூஜை அறையில் வைக்க வேண்டும். சில சிரமங்களையோ சங்கடங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளையோ உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும் “எந்தக் காரணத்தைக் கொண்டும்…”
1.கணவன் மனைவிக்குள் பேரானந்த நிலையைத் தான் என்றும் உருவாக்க வேண்டும்.
2.கோபங்கள் வரலாம்… ஆத்ம சுத்தி செய்து உடனே அதைத் தடுத்துப் பழக வேண்டும்…
3.நானும் விடுபட வேண்டும்… மனைவியும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று
4.ஆனால் இதை நீங்கள் சீராகச் செய்தால் “நான் செய்வது தான் சரி” என்று வராது.

பால் ருசியாகத் தான் இருக்கின்றது… அதிலே பாதாமைப் போட்டால் ருசியாகத் தான் இருக்கிறது. ஒரு துளி காரம் பட்டு விட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சி தான் வரும்.

ஆது போல் நம் நல்ல மனதில் வெறுப்பை ஊட்டினால் என்ன செய்யும்…? விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைத் தணித்துச் சுவையாக மாற்ற வேண்டும்.

தியானம் செய்தேன் என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என்றால் நீங்கள் எதைச் செய்கின்றீர்கள்…? இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகிறீர்கள்.

1.தியானத்தைக் கூட்டி நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.அந்த உணர்வு பெறுக வேண்டும் என்று மனதிலே பெருக்க வேண்டும்.

வேதனை உணர்வுகளை எடுத்து “எல்லாம் செய்தேன்… இப்படி ஆகிவிட்டது என்னத்தைத் தியானம்…?” என்று கொண்டு போனால் அது நமக்கு அல்ல. கடைசியில் நாம் எதை எடுத்து எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் உருவாக்கும்.

ஆகவே எந்த காரணத்தைக் கொண்டும் தனுசுக்கோடி…! வரக்கூடிய தீமைகளை மாற்றி… கோடி என்று சொன்னால் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்குவது… பிறவில்லா நிலை அடையச் செய்வது.

உணர்வின் எண்ணங்களைப் பற்றி இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். அதை நாம் கடைபிடித்து நம் வாழ்க்கையை இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும்.

என்னதான் ஒழுங்குபடுத்திச் செல்வத்தைத் தேடினாலும் அது நிற்குமா…? இந்த உடலே சொந்தமில்லை என்கிற போது உடலால் தேடிய செல்வம் எப்படி நிலைத்து இருக்கும்…!

1.அந்தப் பேரருளை இந்த உடலிலே கூட்ட வேண்டும்
2.எந்த அளவுக்குக் கூட்டுகின்றமோ இது அழியாச் செல்வமாகின்றது.
3.என்றும் ஏகாந்த நிலை வருகின்றது… அழியா ஒளிச்சரீரம் பெறுகின்றோம்
4.அதைத்தான் ஒவ்வொரு மகரிஷிகளும் பெற்றார்கள்… அதையே நாமும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எத்தனை வகையான உணர்வுகளுடன் இயங்குகின்றோமோ அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பி
2.அந்தந்த உணர்வுகளுடன் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கச் செய்வதற்கும்
3.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வுக்குள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் செய்வதற்கும்
4.நடைமுறையில் இயக்கும் உணர்வுகளையும் உங்களுக்குள் தூண்டச் செய்து மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்வதும் தான்
5.”இயக்கமும்… உணர்வின் சேர்க்கையும்…” என்ற நிலையில் இப்பொழுது உங்களுக்குள் எம்மால் (ஞானகுரு) உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

அதன் வழியில் வளர்க்கப்படும் பொழுது அது உங்களுக்குள் வளர்ச்சி பெறும். எத்தனையோ விதமான குணங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டுள்ளது “அத்தனை குணங்களிலும்” நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

அது மட்டுல்ல…
1.வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம்மை மோதும்
2.அக்காலங்களில் மகரிஷிகள் உணர்வுகளை அதனுடன் இணைத்தல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் சேர்த்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்க்கையில் இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் சிறு பிள்ளையாக நாம் வளர்ந்ததிலிருந்து எத்தனையோ உணர்வுகள் நமக்குள் வித்தாக ஊன்றப்பட்டு இருக்கிறது.

“ஊழ்வினை” என்று அவைகள் இருப்பினும் வினைக்கு அந்த உணர்வின் அணுவாக வளரப்பட்டு அதனின் மலமாக நம் உடலுக்குள் அணுக்களாக உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

1.அப்படி வளர்த்துக் கொண்ட அணுக்கள் அது முதுமை அடைந்து விட்டால் அதனுடைய மலம் குறையும்
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணையும்.
3.இணைந்து கொண்ட உணர்வுகள் உடலை விட்டுச் சென்ற பின் உயிருடன் ஒன்றும்
4.எது உயிருடன் ஒன்றுகிறதோ அது தான் நம்முடைய அடுத்த நிலைக்குக் காரணமாகிறது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நம் ஆத்மாவாகி உடலில் ஜீவாத்மாவாக விளைந்து அதிலே வடித்தது உயிராத்மாவாக மாறுகிறது.

ஏனென்றால் இந்த உடல் பெறும் உணர்வுக்கு அந்த மலம் இல்லை என்றால் அணுவின் தன்மை உடல் குறையும். ஆனால் அந்த உடலின் உணர்வின் தன்மை அணுவின் மலம் (தசைகள் உறுப்புகள்) அது முதுமை அடையப்படும் போது உயிருடன் ஒன்றி நிலைகொள்ளும். அந்த உணர்வின் அணுவே உயிருடன் ஒன்றி வெளி வரும்.
1.மீண்டும் தன் இனத்தைப் பெருக்க அதனின் செயலாக்கத்தை உருவாக்கிவிடும்
2.ஆகையினால் தான் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை எல்லாவற்றிலும் இணைத்தல் வேண்டும் என்று யாம் சொல்வது

வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தர்ப்பங்கள் வரும். அத்தனை சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது
1.அந்த மகரிஷிகளுடன் ஒன்றி நாம் ஒளியின் உணர்வாகவே நாம் வளர்கின்றோம்.
2.ஆகவே எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பேராசை கொள்ளுங்கள்.

சந்தேக உணர்வின் விளைவுகள்

 

தன் கணவன் ஒருவரோடு பழகுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த உடனே.. நேரடியாகப் பார்க்கும் மனைவி அதைச் சந்தேகப்படுகின்றார்.

அந்தச் சந்தேகப்படும் உணர்வுடன் கலந்து மனைவி நுகர்ந்து விட்டால் அதன் உணர்வின் தன்மை திருப்பிப் பாய்ச்சப்படும் போது அந்த உணர்வின் அணுக்கள் இங்கே வருவதும் இதனால் தன் மனதில் “மனக் கலக்கம்” ஆகும் உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

அதே போல் கணவன் மனைவி மேல் வெறுப்படைந்து இதே போல் சந்தேக உணர்வு ஏற்பட்டால் இந்த உணர்வுகள் இதனுடன் கலக்கப்பட்டு இங்கே மனதில் கலக்கத்தின் தன்மை ஏற்படுகின்றது.

இப்படி வெறுப்படையும் உணர்வுகள் இருவருக்குள்ளும் வரும்போது
1.உடலுக்குள் எதிர்நிலைகள் உருவாக்கப்பட்டு
2.நல்ல குணங்களை உருவாக்குவதற்கு மாறாகத் தீமையின் உணர்வுகளைத் தான் அந்த அணுக்கள் மாற்றும்.

இப்படி மாற்றி வரப்படும் போது பகைமை உணர்வுகள் சேரத் தன் உடலுக்குள் மீண்டும் தீமையின் உணர்வுகளை விளைவிக்கும் தன்மையாக வந்துவிடும்.

ஆனால் அதே சமயத்தில் தொழில் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை என்ன செய்யும்…! இப்போது எதற்கடா…? என்று தோன்றும்.

ஆனால் அதே சமயத்தில் எப்படியும் சம்பாரிக்க வேண்டும் நம் குடும்பத்தைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.

பிறகு அந்த நிலைகளில் பலவீனமான நிலைகள் அடையும் பொழுது வளர்த்து வந்த தன்மையும் இழந்து மற்ற உணர்வின் தன்மை தன் உள்ளடக்கும் தன்மை வருகிறது… பகைமை உணர்ச்சிகளே வரும்.

1.அப்போது நம்மை எது இயக்குகின்றது…?
2.நாம் தவறு செய்கின்றோமா…? என்றால் இல்லை…!
3.சந்தர்ப்பம்… இவ்வாறு நுகரப்படும்போது நம் உணர்ச்சிகளை மாற்றி சந்தேகப்படுபவர்களாக இரண்டு பேரையும் மாற்றி விடுகின்றது.

இதனின் விஷத்தன்மை மனித உடலையே அழிக்கச் செய்யும். தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் செல்லும். இல்லையென்றால் ஏன் எதற்கு என்று வாழ்க்கையையே விரயமாக்கச் செய்யும். கணவன் மனைவியைப் பிரித்து வாழச் செய்யும்.

ஆகவே பிரித்து வாழும் போது வேதனையின் தன்மை உருவாகும். இதைப் போல இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்தால் என்ன ஆகும்…?

மனிதனாகப் பிறந்தும்
1.விஷத்தின் தன்மை கொண்டு தனக்குத் தானே எமனாகவும் மனித உருவுக்கு எமனாகவும்
2.இரண்டு பேருமே பெற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.

இப்படி விளையும் உணர்வுகள் எதிர் நிலையாகப்படும் பொழுது நரகலோகத்தையே சந்திக்க நேர்கின்றது…! ஏன் வாழ்கின்றோம்…? எதற்காக வாழ்கின்றோம்…? என்று இந்த உணர்வுகள் இரண்டு பாலருக்கும் இருக்கும்.

இரண்டு பேருக்குள்ளும் இப்படி மனப் போராட்டங்கள் ஏற்படும் பொழுது இந்த உணர்வுகள் பித்த சுரப்பிகளில் வேதனை உணர்வுகள் (விஷம்) அதிகரித்து கடும் நோயாக மாறிவிடுகிறது. அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அகஸ்தியனும் மனைவியும் நஞ்சினை வென்று ஒன்றாக இணைந்தனர். துருவத்தின் எல்லையில் இருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றினர். இன்றும் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

என்னை குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுட்கால மெம்பராக ஆக்கினார். அதே போல்
1.மனித வாழ்க்கையில் இருளை நீக்கித் துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ
2.அதிலே நீங்களும் ஆயுட்கால மெம்பராக இணைந்து என்றும் ஒளியாக நிலை பெற வேண்டும்.
3.இருள் சூழ்ந்த நிலைகள் உங்கள் மனதை மாற்றக்கூடிய நிலைகள் வரக்கூடாது.

தங்க நகை செய்யப் பித்தளை செம்பு போன்ற சில பொருட்களை அதனுடன் இணைக்கின்றோம். அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தால் இதைப் பிரித்து தங்கத்தைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல் நமக்குள் மனப் போராட்டங்கள் பல சந்தர்ப்பத்தில் இணைந்தாலும் திரவகத்தை ஊற்றித் தங்கத்தைத் தெளிவாக்குவது போல
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் இப்படி சந்தேக உணர்வுகளும் மற்ற நிலைகளும் கடும் விஷத்தின் தன்மையை உருவாக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து தனக்குள் இணைத்தோம் என்றால்
3.கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் நிலை ஏற்படும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.குருநாதர் எம்மைத் தொட்டு உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்தார் (பவர் கொடுத்தார்).
2.என் ஒருவனுக்குத் தான் குருநாதர் சக்தி கொடுத்தார் ஆனால் உங்களிடம் யாம் (ஞானகுரு) என்ன செய்கின்றோம்…?
3..அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
4.உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக மதித்து அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்கள் உயிருடன் நினைவை இணைக்கின்றேன்.
5.அந்த அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் உயிர் மேக்னெட்.. கவரும்
6.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு நீங்கள் எல்லோருமே அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

ஒரு பக்கத்திலே கம்ப்யூட்டரை வைத்து இயக்குகின்றார்கள். அதிலிருந்து இணைப்பைக் கொடுத்த பின் “உலகம் முழுவதற்கும் அது இயக்குகின்றது…”

ஒரு இடத்திலே அதை வைத்து ஆணையிட்டாலும் அடுத்த பக்கத்தில் மற்றதை இயக்கும்படி வைத்திருக்கின்றனர். இதே மாதிரித் தான்
1.குருநாதர் கொடுத்த அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
2.இந்த உணர்வை அங்கே எண்ணி உங்களுக்குள் பதிவு செய்து… உங்களை எடுக்கச் சொல்கின்றோம்.
3.(உபதேசத்தின் வாயிலாகப் பல முறை பதிவு செய்திருக்கின்றோம்)
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கினால்… எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த உயர்ந்த நிலைகளை நீங்கள் பெற முடியும்.

இப்படித்தான் உயர்ந்த நிலைகளை யாம் உங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றோம்…!

ஏனென்றால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து இந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஆனால் குருநாதரைப் பார்க்கும் போது ஒரு பைத்தியக்காரராகத் தெரிந்தார்… பைத்தியக்காரராகத் தான் நான் நினைத்தேன்.

ஆனால் நான் சொல்வதை இப்பொழுது நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்…? சாமி சாதாரணமாகச் சொல்கின்றார் என்று…!
1.சொல்லிலே சாதாரணம்…!
2.ஆனால் எம்முடைய வாக்கின் பதிவு “குரு அருளின் சக்தியை அப்படியே உங்களிடம் பதிவு செய்கிறேன்…!”

ஒரு கொலைகாரனைப் பார்த்த பின் அது பதிவாகி அவனை நினைக்கும் போதெல்லாம் நடுக்கமும் பயமும் உண்டாகின்றது.

அதே மாதிரி… தீமைகளை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள் முந்தி ஏற்கனவே பதிவு செய்த தீமையின் விளைவுகள் அதைக் கண்ட பின் நமக்குள் நடுக்கம் உண்டாகும்.
1.நான் நினைத்தேன்… ஒரு நாள் எடுத்தேன்… அடுத்த நாள் என்னால் எடுக்க முடியவில்லை… என் உடல் எல்லாம் நடுங்குகிறது
2.சிறிது நாளைக்கு அந்த நடுக்கம் வரும்.

காரணம்… ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்துப் பதிவு செய்த பின் அவனை நினைக்கும் போதெல்லாம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்கும். அவனை நினைக்கும் போதெல்லாம் நல்ல செயல்களைத் தடைப்படுத்துகின்றது.

இத்தகைய சங்கடத்தை உருவாக்கும் தீமையின் நிலைகளை அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் யாம் பதிவு செய்ததை எண்ணி உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை நம் உடலுக்குள் ஆக்கினை இங்கே இணைத்து விட்டால் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் ஆணையிட வேண்டும். என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

1.மகரிஷிகளின் உணர்வுகளைக் கண் கொண்டு தான் பதிவு செய்கிறோம். (பொட்டில் தொட்டு அதைப் பதிவு செய்ய முடியாது)
2.அதைப் பெற வேண்டும் ஏக்க உணர்வு கொண்டு பதிவு செய்து விடுகின்றோம்.
3.மீண்டும் இதை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… இயக்கம் “அந்த உயிரின் இயக்கமாக வருகின்றது…”

இதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிருடன் இணைத்துக் கொண்டு வர வேண்டும். முதலில் கண் கருவிழி பதிவாக்கி விடுகிறது. பதிவானால் தான் எடுக்க முடியும். ஆன்மாவில் வந்து உயிரிலே பட்டு நாம் தெரிய முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை இங்கே கொண்டு வரச் சொல்கின்றோம்… பதிவாக்கி விடுகிறோம். இது தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

அன்றாட வாழ்க்கையில் உடனுக்குடன் நாம் செய்ய வேண்டியது

 

நாம் எப்போது பிறருடைய உணர்வுகளை எடுக்கின்றோமோ அதன் உணர்வின் தன்மை நமக்குள் வந்து விடுகின்றது. அப்போதே நாம் அதைக் கொன்று விட்டால் தீமை செய்யும் இயக்கமாக வராது.

வேதனையான உணர்வு வரப்படும் பொழுது ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதை அடக்கி விட்டால் நமக்குள் அந்தப் பரம்பரை என்ற நோய்கள் வராது.

தொழிலில் நஷ்டம் ஆகிறது… வேதனைப்படுகின்றோம்.
1.அந்த வேதனை உணர்வு நமக்குள் வளராது
2.நாம் அப்பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொன்று விட்டால்
3.அந்த உணர்வின் தீமைகள் நமக்குள் செயல்படாது.

உணர்வின் உணர்ச்சிகள் நுகர்வது எண்ணங்களாக எப்படி ஆகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

காரணம் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்ம குரு. இப்பொழுது நாம் ஒருத்தர் பேசுவதை நாம் கவர்ந்து கேட்டால் வசிஷ்டர். உணர்வின் தன்மை நுகர்ந்தால் நம் உடலில் அக்குணத்தின் தன்மை நமக்குள் உருவாக்கும் பிரம்மம் ஆகி அணுவாக உருவாகிவிடுகின்றது.

அந்த அணுத்தன்மை ஆகிவிட்டால் வசிஷ்டர் பிரம்மகுரு. பிரம்மகுருவின் மனைவி யார்…? அருந்ததி.

1.எந்தக் குணத்தின் தன்மை கவர்கின்றோமோ அது உணர்வின் தன்மை அணுவாகும் பொழுது
2.அதன் இனத்தின் தன்மையே தான் இயக்கும் அருந்ததி… என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.

ஆக இங்கே விஷ்ணு உயிர். விஷ்ணுவின் மகன் பிரம்மா. சீதாராமன் விஷ்ணுவின் மறு அவதாரம் என்ற நிலைகளைத் தெளிவாக கூறுகின்றனர்.

நாம் எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை பிரம்மம் ஆகும்பொழுது அந்த பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
1.இங்கே அதன் ஞானமாக இயக்கும் என்றும்
2.வசிஷ்டரின் மனைவி அருந்ததி எதைக் கவர்ந்தோமோ அது உருவாக்கப்படும் பொழுது பிரம்மம் ஆனாலும்
3.அது இணைந்தே அந்தச் சக்தியாக இயக்குமென்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றது.
4.எந்த உணர்வின் தன்மையோ அந்த ஞானத்தின் தன்மை இங்கே இயக்கும் என்று கூறுகின்றனர்.

ஆனால் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். எதன் சுவையின் உணர்ச்சிகள் எண்ணங்களாக இயக்குகின்றதோ அப்பொழுது அது அணுவாகப் படும் பொழுது அதனுடைய இயக்கமும் ஈசன்… அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

உயிரின் இயக்கமும் இதே தான். விஷ்ணு என்று இருக்கும் பொழுது இயக்கம் ஈசன் அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

ஆகவே விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். ஆக எந்த உணர்வின் தன்மையோ அதன் உணர்ச்சியின் அணுவாகி அந்த உணர்வின் தன்மை உடலாகி அதன் வழியே இயக்கும் என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே இங்கே இராமாயணத்தில் பரதன் கைகேயிடம் என்ன சொல்கின்றார்…? உன் தாயார் பாட்டன் வீட்டில் எதைச் செய்ததோ… அதையே நீ இங்கேயும் செய்கின்றாய். அதாவது
1.பரம்பரை நோயும் பரம்பரை குணங்களும் நமக்குள் வருகின்றது.
2.ஏனென்றால் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மையே நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது நமக்குள் அது வளராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அதைக் கொன்று பழக வேண்டும்.

சங்கடத்தையோ சலிப்பையோ வேதனையோ வெறுப்பையோ சந்தர்ப்பத்தால் நுகரும்போது ஆசையின் நிமித்தம் வரப்படும் பொழுது அதன் அருகிலே நாம் செல்கின்றோம்.

தொழிலில் நாம் வேலை செய்து வரப்படும் பொழுது எல்லோருக்கும் நன்மையை செய்கின்றோம். அதில் எதிர்பாராத நிலைகளில் ஒருவன் குறை கூறினால் நாம் நல்லது செய்தும் குறை கூறும் போது அவன் நம்முடைய இடத்தைப் பிடிப்பதற்காக அவன் குறை கூறுகின்றான் அந்தக் குறையின் உணர்வை நுகரப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் விளைந்த பின் அது தான் தாய் ஆகின்றது.

அந்த உணர்ச்சியின் தன்மை வெறுப்படைந்து… “என்னை இப்படிச் செய்கின்றானே..” என்று வேதனை உணர்வை நமக்குள் எடுக்கப்படும் பொழுது அவனை நினைக்கும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.

அப்பொழுது நாம் வேதனைப்படும் செயல் வரப்படும் பொழுது நம் சிந்திக்கும் தன்மை எல்லாம் இழக்கின்றது. நமக்குத் தீங்கு செய்தவன் உணர்வு தான் வளர்கின்றதே தவிர நமது நன்மை செய்த உணர்வை நாம் வளர்க்க முடியவில்லை.

1.ஆனால் அந்தத் தீமை செய்யும் உணர்வு நமக்குள் வளராது “அப்போதே அதைக் கொன்று பழகுதல் வேண்டும்…”
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று அந்த இயக்கச் சக்தியை நாம் மாற்றினோம் என்றால்
3.நமக்குள் அந்தத் தீமை என்ற நிலைகள் வராது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் சொன்னது:-
1.உனக்கு இடைஞ்சலாகும் பொழுது நான் சொன்ன உயர்ந்த சக்தியை நீ சேர்த்துக் கொண்டால்
2.உன் கெடுதல் நீங்கும்… உன் துன்பங்கள் விலகும்
3.அந்தத் துன்பத்தை நீக்குவதற்குத் தான் உனக்குள் இதைப் பதிவு செய்கிறேன்…!

இதைக் கடைசியில் சொல்வார். ஆனால் அதற்கு முன்னாடி என்னை உதைப்பார்… எனக்கே தெரியாது.

“ஏன் தான் இப்படித் தொல்லை கொடுக்கின்றாரோ…” என்று அவர் மேல் எனக்கு வெறுப்பு வரும். அவரிடமிருந்து “தப்பித்து ஓடிப் போய் விடலாமா…!” என்று நினைப்பேன்.

எங்கேயடா நீ தப்பப் போகின்றாய்…? என்பார் குருநாதர்.. பல இம்சை…!

வழுக்கலான பாறையாக இருக்கும் அங்கே போகச் சொல்வார். போனால் கீழே விழுந்து பல்லெல்லாம் உடைந்து விடும். அதிலே ஒரு பொருளைக் காட்டி “நீ எடுத்துக் கொண்டு வாடா…” என்பார்

அதே போன்று பனிப்பாறையாக இருக்கும் இமயமலை போன்ற இடங்களுக்குச் செல்லும்படி சொல்வார் ஆனால் மேலே துணி ஏதும் போடக்கூடாது… கோவணத் துணியை மட்டும் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பார்.

பார்த்தால் பாறைகளாக எல்லாம் உருப்படியாகத் தான் தெரியும் ஆனால் மரத்தின் மேலே பனி உறைந்திருக்கும். ஏமாந்து அங்கே கையை வைத்து விட்டால் “டப்…” என்று உள்ளே போய் பாதாளத்திற்கே போய்விடுவோம். ஆனால் அங்கே போடா… என்பார்.

இதையும் காட்டுவார்… எல்லாவற்றையும் சொல்வார்…!
1.ஆனால் இதில் இருந்து எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்குச் சக்தி வேண்டும்… வலு வேண்டும்…
2.அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா…? என்பார்
3.நான் சொன்னதை நினைக்கவில்லை என்றால் நீ உள்ளே சென்று விடுவாய்
4.நான் சொன்ன முறைப்படி எண்ணினால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஏனென்றால் ஆபத்து வரும் நேரங்களில் இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பார் குருநாதர்.

நான் போய்க் கொண்டே இருப்பேன். ஒரு இடத்தில் மரத்தின் மீது பனிக்கட்டியாக உறைந்து இருக்கின்றது. ஆனால் அந்தப் பக்கம் பார்த்தால் திடு…திடு… திடு…திடு… என்று பனிப்பாறைகள் உடைந்து விழுந்து கொண்டிருக்கின்றது.

இங்கே பனி மலையில் காலை வைக்கின்றேன். பொரு..பொரு.. என்று உள்ளே போகின்றது. என்னுடைய ஒரு கால் “டபக்…” என்று உள்ளே இறங்கி விட்டது. இறங்கியவுடன் என்னுடைய எண்ணம் எப்படி வருகின்றது…?

“செத்து விடுவேன்…!” என்ற எண்ணம் தான் எனக்கு வருகின்றது…!

1.நான் உன்னிடம் என்னடா சொன்னேன்…!
2.நீ இப்போது என்னடா செய்கின்றாய்…? என்கிறார் குருநாதர்

ஆக… என்னுடைய உணர்வு ஏன்ன செய்கின்றது…?

1.குருநாதர் கொடுத்த சக்தியை அந்த இடத்திலே என்னால் பயன்படுத்த முடியவில்லை.
2.புவியின் ஈர்ப்பில் இருக்கப்படும் பொழுது இறந்துவிடுவோம்…! என்ற உணர்வு தான் உடனடியாக வருகின்றது
3.நல்லதை நினைக்கவே முடியவில்லை…!

இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து ஈஸ்வரா…! என்று எண்ணித் தியானத்தில் அமர்ந்தவுடன்… எனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை (கான்சன்ட்ரேஷன் பண்ண முடியவில்லை) தியானம் வரவில்லை… என்னால் எண்ணத்தை நிலையாக நிறுத்த முடியவில்லை… சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

நிலையாக அதை நிறுத்த முடியாது… அது பல அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இப்பொழுது யாம் சொல்லும் போது கேட்டுக் கொண்டிருந்தால் அது நல்ல அலைகளாக இருக்கும். ஆக… எப்பொழுதெல்லாம் குணங்கள் கெடுகின்றதோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நல்ல உணர்வு எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்தக்கூடிய நிலையில் ஆத்ம சுத்தியில் தான் இருக்கின்றது.

குருநாதர் காட்டிய வழியில் மிக மிக உயர்ந்த அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி காற்றிலே படர்ந்து இருக்கின்றது.
2.அதை எடுக்கக்கூடிய திறன் உங்களுக்கு வேண்டும் அல்லவா…!
3.நான் பேசுகின்றேன்… நீங்கள் கேட்கின்றீர்கள்… அதற்கு வேண்டிய கரண்ட் தேவை…!
4.இல்லை என்றால் உங்களால் எடுக்க முடியாது… வெறுமனே எண்ணி எடுக்க முடியாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் தொடர்பு கொண்டு அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

தையல் வேலை பழகியவர்கள் துணியை வெட்டி அழகாக நேர்த்தியாகத் தைக்கின்றார்கள். மற்றவரிடம் பேசிக் கொண்டு கூட தைப்பார்கள்.

ஆனால் புதிதாகத் தைக்க வேண்டும் என்று சென்றால் கவனமாகப் பார்த்துத் தைத்தாலும் கூட சரியாக வராது. அந்தப் பழக்கம் வரும் வரை அது சீராக வராது.

அதைப் போன்று தான் அந்தப் பழக்கத்திற்கு வருவதற்குத் தான் உங்களுக்குத் திரும்பத் திரும்ப… பல கோணங்களில் உணர்த்திக் கொண்டு வருவது.

குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று தான்… “முதலிலே சொன்ன மாதிரி பல இம்சைகளைக் கொடுத்து… ஞானிகள் சக்திகளைப் பெறுவதற்குப் பழக்கிக் கொடுத்தார்…!”

இப்பொழுது உங்களிடம் இதை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லித் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். மரம் செடி கொடிகளுக்கு உரத்தைப் போடுவது போன்று
1.இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அவரவர்கள் மன நிலைக்குத் தகுந்த மாதிரி…
2.எத்தனை பேர் எந்தெந்த வகையில் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்ற நிலையில் தான்
3.என்னுடைய இந்த உபதேசமே அமையும்… உங்களுக்குள் அந்தச் சக்தி கூடும்.

ஞானிகள் உணர்வை இப்படி உரமாக உங்களுக்குள் ஏற்றி வைத்த பின் ஈஸ்வரா…! என்று நீங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல குணங்கள் வலுவாகி… அடுத்து நல்லதைச் சிந்திப்பதற்கும் நோய்கள் அகன்று… வேதனைகள் அகன்று உங்கள் சொல்லிலே வலிமையும் செயல்கள் புனிதமும் பெறும்.

என் பையன் சொன்னபடி கேட்கவில்லை; என் வீட்டுக்காரர் என்னை எதிர்த்துக் கொண்டேயிருக்கின்றார்; என் நண்பன் வெறுத்துப் பேசுகின்றான்; என் தொழில் சரியாக நடக்கவில்லை என்று இப்படி எல்லாம் சொல்ல வராது.

என் பையன் தெளிந்த நிலை பெறுவான்… என் வியாபாரம் விருத்தியாகும்… கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்வோம்… நோய்கள் அகலும்… என்று தன்னாலே சொல்ல வைக்கும்.

தீமையாக எண்ண விடாதபடி நல்லதாகவே உங்களை எண்ண வைக்கும்… உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

நல்லது எது…? கெட்டது எது…?

 

குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலையச் செய்து ஒவ்வொரு உணர்வுகளும் நீ நுகரப்படும் போது என்ன செய்கின்றது…? என்று பச்சிலையின் ரூபமாகக் காட்டினார்.

1.ஒரு பச்சிலையை நுகர்ந்த பின் அது உனக்குள் எப்படிப் பேசுகின்றது…? என்று பார் என்கின்றார்.
2.அதை நுகர்ந்த உடனே அந்தப் பச்சிலை பேசுமா…? என்று கேட்கின்றார்.

எப்படி சாமி பேசும்…! என்றேன்.

இப்பொழுது பேச வைக்கின்றேன் பார்…! என்று பச்சிலையை நசுக்கி என்னை நுகரச் செய்தார். நுகர்ந்தவுடனே “ஓ…ய்” என்று பேச ஆரம்பிக்கின்றது… ஐய்யய்ய… என்று ஒரு மாதிரியாக உமட்டலாக வருகின்றது.

1.இப்பொழுது எது பேசுகின்றது…? நீ பேசுகின்றாயா…? இல்லை… அந்தப் பச்சிலையா…?
2.இப்படி ஒவ்வொரு இலைகளையும் நுகரப்படும் பொழுது உணர்த்துகின்றார்.

திடீரென்று என்னை ஓங்கி அடிக்க வருகிறார். அப்பொழுது அடிக்க வந்தவுடன் நுகர்ந்தவுடன் என்ன செய்தது…? யார் அடிக்க வந்தது…? நுகர்ந்த உணர்வு உனக்குள் வந்து உன்னைப் பயப்பட வைக்கிறது.

அப்பொழுது நீ பயந்தாயா…? நான் செய்த செய்கையை நீ நுகர்ந்த பின் உன்னைப் பயமுறுத்தச் செய்கின்றது. அப்பொழுது நீயா…? இல்லை நானா…?

1.இதில் இரண்டையும் சொல்லி இப்படி எல்லாம் வினாக்களைக் கேட்பார்.
2.ஏனென்றால் இதை அனுபவ ரீதியில் ஒவ்வொன்றையும் உணர வைக்கின்றார்.

சில நேரங்களை எடுத்துக் கொண்டோம் என்றால் இதை ஏதாவது ஒன்று சொல்வார். இது நல்லதா… கெட்டதா…? என்பார். நல்லது என்று சொன்னால் எப்படி நல்லது…? என்பார் கெட்டது என்று சொன்னால் எப்படிக் கெட்டது…? என்பார்.

இந்த வினா கொடுப்பதற்கு முன்பே கெட்டது என்று சொன்னாலும் கூட எப்படி கெட்டது என்று…! நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல என்பார்.

இப்பொழுது நீங்கள் நல்ல தேனும் பாலும் சுவையாகச் சாப்பிடுகிறீர்கள்… அது நல்லது தானே…!
1.ஆனால் உடம்புக்கு முடியாத நேரத்தில் இதைச் சாப்பிட்டால் என்ன செய்கின்றது…? எதிர்நிலையாகின்றது.
2.அப்பொழுது இது நல்லதா… கெட்டதா…? என்பார்.

இதைச் சொல்லிவிட்டு இது எல்லாம் நல்லது தானே..! எப்படி நீ நல்லது என்று சொல் பார்ப்போம்…? என்று கேட்பார். உடம்பு முடியாமல் போனால் நல்லதை நீ சாப்பிட்டவுடன் அது நல்லது செய்கின்றதா இல்லை கெட்டது செய்கின்றதா…? என்பார்.

1.எவ்வளவு நாசூக்காக அவருடைய உணர்வுகளை உணர்த்துவதற்காக வேண்டி அனுபவரீதியாகக் கொடுக்கின்றார்.
2.ஆனால் மனிதன் வாழ்க்கையில் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல.

இப்பொழுது நாம் மருந்து சாப்பிடுகின்றோம்… அது கசப்பாக இருக்கின்றது. ஆனால் நோயை நீக்கக்கூடிய தன்மை இருக்கின்றது. மருந்தைச் சாப்பிட்டவுடன் என்ன செய்கின்றது…?
1.நமக்குள் இருக்கக்கூடிய கெட்டதை நீக்கிவிட்டு நல்லது ய்கின்றது.
2.அப்பொழுது அந்த மருந்துக்குள் இருக்கக்கூடிய கசப்பின் உணர்ச்சி என்ன செய்கின்றது…? நமக்கு நல்லது செய்கின்றது அல்லவா…!

ருசியின் தன்மை இருக்கும் போது நீ ருசியாகச் சாப்பிடுகின்றாய். சாப்பிடும் போது உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்கின்றது…? வயிற்று வலி வருகின்றது தலைவலி வந்து விடுகின்றது வாந்தி வந்து விடுகின்றது எல்லாம் வந்து விடுகின்றது. அப்பொழுது இது எப்படி நல்லதாகும்…? என்று கேட்கின்றார்.

ஆக நாம் நுகரும் உணர்வுகளை இயக்குவது யார்…? நமது உயிர். அப்பொழுது நமக்குக் கடவுள் யார்…? நமது உயிர். அந்த உணர்வின் தன்மையை நாம் இயக்கி உடலில் உணர்வின் தன்மை அணுவாகி விட்டால் நம் உள் நின்று குணத்தின் தன்மை உயிரைப் போலவே உள் நின்று கடவுளாக இயக்கும்.

1.அது தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் பிரணவத்திற்குள் பிரணவம்.
2.இயக்கத்தின் தன்மை எப்படி இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

ஆகையினாலே நாம் இந்த ஆயுட்கால மெம்பராக இருப்பதெல்லாம் எப்போது நமக்குத் தீமை என்று தெரிகின்றோமோ அப்போதே அதைக் கொன்று பழக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது நமக்குள் வளராது ஆத்ம சுத்தி செய்து அதை நாம் அடக்கிப் பழக வேண்டும். அதை வளரவிடக் கூடாது.

நாம் மிளகாயை அள்வாகக் குழம்பில் போடும்போது அது ருசியாக வருகின்றது. அதே மிளகாய் அதிகமாகி விட்டால் ருசி கெடச் செய்கிறது. ஆகவே நாம் தீமை என்ற கார உணர்ச்சிகளை நுகரும் போதெல்லாம் கொன்று பழக வேண்டும்.

குழம்பில் அதிகமாக காரம் இருந்தால் இரண்டாவது முறை சாப்பிடத் தோன்றுமா? உஷ்…உஷ்… என்று தள்ளி விட்டுவிடுகிறோம். அப்போது அதைச் சாப்பிடுகின்றோமா…? இல்லை.

இதை போல தான் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒருவர் தீங்கு செய்தான் என்று தெரிகிறது. இப்படித் தீங்கு செய்தானே இப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று நாம் உள்ளுக்குள் போட்டவுடன் என்ன செய்கின்றது…? நமக்குள் இருக்கக் கூடிய நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது. ஆக நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றும்.

அப்பொழுது நாம் எதைக் கொல்ல வேண்டும்…?
1.அவனை எண்ணி அவன் வழியில் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் கொல்வதா…?
2.ஆனால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காக்க… தீமை என்று உணர்வு நமக்குள் வருவதை அதைக் கொல்வதா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

அந்த உயர்ந்த சக்திகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்காக குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராக என்னை இணைத்தாரோ அதே போல் ஆயுட்கால மெம்பராக உங்களையும் இணைக்கின்றேன்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்றானோ கணவன் மனைவி ஒன்றாக இணைந்தனரோ இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமாகப் பெற்றனரோ… அதன் வழிப்படி இந்த ஆயுட்கால மெம்பர்கள் உங்கள் குடும்பத்தில் அன்புடனும் பற்றுடனும் பரிவுடனும் வாழ்தல் வேண்டும்.

தன்னை அறியாது வரும் தீயவினைகளை…
1.இராமாயணத்தில் பரதன் சொன்னது போல அந்தத் தீமை என்ற உணர்வுகளை
2.அப்போதே அதைக் கொன்று அருள் உணர்வினைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

ஆயுட்கால மெம்பராக வந்தவர்கள் நீங்கள் இதனை வழிப்படுத்தி நடத்தி இந்த உடல் தான் கடைசி உடல் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.தாய் தந்தையரை நாம் மறவாது இருக்க வேண்டும்.
2.குரு அருளையும் மகரிஷிகளின் அருளை பெற வேண்டும் என்றால் எப்பொழுதுமே அன்னை தந்தையை வணங்கிப் பழக வேண்டும்.
3.அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

அதன் வழியில் யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாக்கினை உற்று நோக்கி சீராக உங்களுக்குள் பதிவு செய்தால் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாகிறது.

ஞான வித்தினை நீங்கள் வளர்க்க வளர்க்க… தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
1.உங்களால் சிரமங்களைப் போக்க முடியும்… அதற்குண்டான வழியையும் காட்டும்
2.அருள் வழியில் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும்
3.அருள் உணர்வை உடலுக்குள் அணைத்துக் காட்டும்
4.எண்ணிய உணர்வின் ஞானமாக உங்களில் உணர்த்தும்
5.உங்களைக் காத்திடும் சக்தியாக வரும்
6.அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் அருளாசியை நேர்முகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஏக்கத்திலே… எதைப் பெற வேண்டும் என்று வந்தீர்களோ… உங்கள் துன்பங்கள் நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

குரு அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லைக் கேட்பவர் வாழ்க்கையில் இனிமை பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்போருக்கும் எங்களைப் பார்ப்போருக்கும் நல்ல எண்ணம் பெற வேண்டும் என்று
11.இதை எல்லாம் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி இருங்கள்
12.பல பல உணர்வுகள் வரும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இணையும்

யாம் கொடுக்கும் இந்த வாக்குகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… “நூறு முறை… ஆயிரம் முறை…” இது போன்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் நோய் நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும். உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

ஒரு டம்ளரில் நீரை வைத்து இது போன்று தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அதைத் தீர்த்தமாக எடுத்துப் பருகிப் பாருங்கள். நோய் இருந்தால் அதற்குண்டான மருந்தையும் இதிலே வைத்துத் தியானித்த பின் உட்கொள்ளுங்கள்
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்வ வேதனைகளும் விலகும்…
2.அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்

யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை நீங்கள் சீராக வைத்து.. அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்… “நீங்கள் ஏங்கும் பொழுதெல்லாம் இந்தச் சக்தி கிடைக்கும்…”

நம்மைப் பலவீனப்படச் செய்வது எது…?

 

நான் என்னுடைய அனுபவத்தில் சொல்கின்றேன். 20 வருட காலம் குருநாதர் காட்டிய அருள் வழியில் எதை எதை எப்படி எல்லாம் நுகர்கின்றோமோ…? அது எல்லாம் எப்படி என்னை இயக்குகிறது…? என்று அதைக் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டுக்குள் செல்லப்படும் பொழுது ஒரு மோசமான இலை இருக்கின்றது. அதை நசுக்கியவுடன் ரொம்ப நாற்றம் அடிக்கின்றது.
1.நாற்றம் அடிக்கின்றது என்று முகத்தைச் சுளித்தால்
2.இந்த உணர்வின் தன்மை முகத்தைச் சுளிக்க வைப்பது எது…? நீயா… இல்லை அந்தப் பச்சிலையா…? என்று கேட்பார்.

அந்த பச்சிலையின் உணர்வு உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சியின் தன்மை உடலாக்கப்பட்டு
1.அந்த உணர்ச்சிகள் உன்னை எப்படி முகத்தைச் சுளிக்க வைக்கின்றது…?
2.வாந்தி உமட்டல் எப்படி வருகின்றது…?
3.இது எதனுடைய காரணம்…?

நீ நுகர்ந்த உணர்வு தான் அதை இயக்குகின்றது. இயக்குவது யார்…? உயிரே…! ஆக அந்த உயிர் இயக்கும் உணர்வுகளில் இருந்து இது எப்படிச் செயல்படுகின்றது…? என்பதனை இப்படித் தெளிவாக்குகின்றார்.

இதைப்போல் எத்தனையோ வகையான பச்சிலைகளை நுகரும்படி செய்கிறார். சந்தர்ப்பங்களில் என்னை இடக்கு முடக்கான இடங்களில் கொண்டுபோய் ஏற்றி வைத்துவிட்டு நீ இங்கே இரு… நான் வருகின்றேன்…! என்று போய்விடுவார்.

அப்பொழுது அவர் போனவுடனே என்ன நடக்கிறது…? அவர் இருக்கும் பொழுது முதலில் தைரியமாக இருந்தது. ஆனால் அதற்குப் பின் அந்த இடத்திலிருந்து கீழே இறங்க முடியாத நிலையும் பயம் கொள்ளும் உணர்ச்சிகளை எனக்குள் ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் தோன்றிய பின் அதன் பின் நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் என்னென்ன செயல்கள் செயல்படுகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும்…? என்று இவ்வளவும் ஞாபகப்படுத்தினாலும்
1.அந்தப் பயம் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறந்து விடுகின்றோம்.
2.மறந்தவுடன் நடுக்கம் ஆகின்றது… மன உறுதியே இருக்காது. நாக்கு கூட சில நேரங்களில் வறண்டு போகும்.

ஒரு ஆபத்தான இடத்தில் விட்டவுடன் அந்த உணர்ச்சியின் வேகம் வரும்போது இதை உற்றுப் பார்க்கும்போது நாக்கு வறட்சியாகி விட்ட்து. தண்ணீருக்கு எங்கே செல்வது…? அப்பொழுது வறட்சி ஆகும்போது பலவீனமடைகின்றது.

இதையெல்லாம் எது இயக்குகின்றது…?

1.நீ உன்னுடைய எண்ணத்தால் நுகர்ந்த நிலை உன்னைப் பலவீனப்படுத்தச் செய்து
2.அப்பொழுது நீ எடுக்கும் மன பலம் குறைகின்றது.
3.இங்கே வறட்சி ஆகின்றது. உன் உடலில் வேர்வையாகின்றது.

ஆக இதன் உணர்வுகள் உள் நின்று வெப்பமாகி இதன் உணர்வுகள் ஆவி ஆக்கப்படும் போது நீ எந்தப் பொருளைத் தொட்டாலும் அது வழுக்கும் தன்மை வருகிறது. மீண்டும் இங்கே உன் பலவீனம் தான் காட்டப்படுகின்றது.
1.பலவீனம் காட்டுவது எது…?
2.உன்னுடைய எண்ணம் தான்.

உயிரிலே பட்டு இயக்குவது யார்…? அந்த உயிரே தான். அந்த உணர்ச்சியின் தன்மை உன் உடலில் இயக்குவது யார்…? இந்த உயிரே தான் என்ற நிலையில் இப்படி ஒவ்வொரு நிலைகளையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான் ஞானியர்கள் அரங்கநாதன் என்றும் இந்த அரங்கத்திற்குள் உணர்வின் தன்மை மோதும் போது அந்த உணர்ச்சிகள் (ஆண்டாள்) நம்மை ஆளுகின்றது… அது சொல்லைக் கேட்பவரையும் ஆளுகின்றது என்று தெளிவாக்கினார்கள்

இப்பொழுது வேறு ஒன்றும் தேவையில்லை. நாம் கொஞ்சம் தைரியமாக இருப்போம், ஒருத்தர் முடியாத நிலையில் அவர் பலவீனமான உணர்வை நுகர்ந்த பின் அந்த நாதத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு அவருடைய செயலைப் பார்க்கும்போது நாம் வலுவாக இருப்பவர்கள் என்ன செய்வோம்…?

என்னப்பா…? இதற்கெல்லாம் போய் நடுங்கிக் கொண்டிருக்கின்றாய்…! என்று நாம் கேலி செய்வோம். ஆனால் அவருக்கு அங்கே முடியாத நிலை. ஆனால் நாம் கேலி செய்வோம்.

அந்தக் கேலியின் தன்மை சிரிக்கச் சிரிக்க மீண்டும் அவருடைய பலவீனத்தைத் தான் ஊட்ட முடியும். ஆனால் அவருக்குத் தெளிவூட்டுகின்றோமோ…?

ஆனால் அதே சமயத்தில்
1.அவன் முடியாத நிலைகளை நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து இந்த மாதிரிச் சந்தர்ப்பம் வரும்போது நமக்கும் இதே மாதிரி நடுக்கம் வரும்.
2.நடுக்கம் வரும்போது யாராவது சிரித்தால் நமக்கு உடனே கோபம் வரும்.
3.என்னைப் பார்த்து அவன் கிண்டல் செய்கின்றான் பார் என்று கோபம் வரும்… அல்லது பதட்டம் வரும்.

ஆக
1.அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நுகர்ந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக பரவப்பட்டு
2.நம்மை ஆளுவது நாம் எண்ணிய எண்ணங்கள் தான் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொரு நிமிஷமும் எத்தனையோ வகையான ஆயிரக்கணக்கான நிலைகள் வருகின்றது. அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே நெருப்புக்குச் சமமானவர்கள்… தீமையைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய சக்தி பெற்றவர்கள். அந்தச் சக்தி நமக்கு முன் இந்தக் காற்றிலே இருக்கின்றது.

நம்மை அறியாது வரக்கூடிய தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… மெய் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று எடுத்து நமக்குள் அந்தத் தீமைகளைப் பொசுக்கிப் பழகுதல் வேண்டும்.

குருக்ஷேத்திரப் போர்…! குரு…! இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

நான் பேசுகின்றேன்; நீங்கள் திட்டுகிறீர்கள்; மற்றதைப் பார்க்கின்றேன்; எல்லாவற்றையும் சுவாசித்து… உயிரான குருவிடம் சென்றுதான் அது வேலை செய்கின்றது… உயிர் அதை எல்லாம் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

உதாரணமாக… வேதனை வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.வேதனை உருவாக்கக்கூடியதைக் காதிலே கேட்டு…
2.அந்த உணர்ச்சிகளைச் தூண்டி சுவாசித்து… உயிரான குருவிடம் சென்ற பின்… (அப்போது மனப் போராகிறது)
3.ஈஸ்வரா…..…! என்று உயிரை எண்ணி (மனப் போரை நாம் குருக்ஷேத்திரப் போராக்க வேண்டும்)
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
5.குருக்ஷேத்திரப் போரில் அவனிடம் (உயிரிடம்) ஒப்படைத்து விட்டால்
6.மற்றவர்கள் திட்டியது… கேலி பேசியது… வேதனைப்படச் செய்தது… உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகிறது.

அதாவது குருவிடம் (உயிரிடம்) சொல்லி தனக்குள் கெட்டது புகாமல் தடுக்கச் செய்வதற்குத் தான் “குருக்ஷேத்திரப் போர்…” என்று நமக்குக் காண்பித்துள்ளார்கள்.

நம்மை ஒருவன் திட்டிக் கொண்டே இருக்கின்றான் என்று அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். சுவாசித்ததும் ஜிர்.. ஜிர்..ர்ர்.. ஜிர்.. என்று இயக்கிக் கொண்டிருக்கும் (நமக்குள் இரைச்சலாகிறது).

அந்த உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
1.ஈஸ்வரா…….! என்று ஓங்கி (சொல்லி) அந்த ஓங்காரம்… வானை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இங்கே குருவிடம் (புருவ மத்தியில்) வந்து விடுகிறது.
3.அப்போது சாதாரண மனிதன் பேசிய (திட்டியதை) உணர்வைச் சுட்டுப் பொசுக்கி விடுகிறது.

இத்தகைய பேருண்மைகளைக் காட்டிய மெய் ஞானியின் உணர்வை எண்ணி அதைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அவனிடம் வேண்ட வேண்டும்.

ஏனென்றால் அவன் தான் சிருஷ்டிக்கின்றான்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும். என்னைத் திட்டியவர்களுக்கு என் சொல் நல்லதாகப் பட வேண்டும்… என் பார்வை அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… என் சொல் அவர்களுக்கு இனிமை ஊட்ட வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வேண்டும்.

இப்படிச் செய்தால் குருக்ஷேத்திரப் போர்… தீமைகள் நமக்குள் வராதபடி தடுக்கப்படுகின்றது.

.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.

எப்போது…?

ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாகப் பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.

மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

ஆக… திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் – நடராஜா…!

நடராஜா என்றால் நமக்குத் தெரியுமா…? தெரியாது. உருவம் கிடையாது… நடராஜாவை வைத்திருக்கின்றார்கள் நம் பூமி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.

இதற்குள் தோன்றிய நிலைகள் கொண்டு “நடனங்கள் பல…” சுழற்சியின் தன்மை கொண்டு அது நிற்காமல் ஓடுகின்றது.

அதே சமயத்தில் அது மோதும் நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் செயல்களும் “ஒலி ஒளி என்ற நிலைக்கே…”
2.இந்த பூமிக்குள் வளர்ச்சியின் தன்மை மாறி மாறிப் பல ஆயிரம் உடல்களாக எடுத்து
3.ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்கி – புலிக்குக் கோபம் மானுக்குச் சாந்தம் எருமைக்கு அசுர குணங்கள் என்று
4.ஒவ்வொரு குணத்தின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டதை 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 நடனங்களைக் காட்டினார் திருமூலர்.

நடராஜா என்கிற பொழுது பூமி ஓங்கார நடனம்…! அதாவது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் “ஓங்காரக் காளி” தீய சக்திகள் அனைத்தையும் அழித்து விடுகிறது. காலிலே அசுரனைப் போட்டு மிதிப்பதாக அதைக் காட்டுகின்றார்கள்

இங்கே சிவத்தைக் காட்டும் பொழுது நடராஜா…! பூமி சுழலும் போது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி உள்ளே வடிகட்டி வருவதை அசுரனைக் காலிலே மிதித்து அடக்குவதாக இங்கே காட்டப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் தவறான செயலைப் பார்த்துக் கோபப்படுகின்றோம். கோபமான உணர்வைச் சுவாசித்து உயிருக்குள் பட்ட பின் எரிச்சலாகின்றது.

ஆனால் அதே சமயம் இந்த உணர்வின் சக்தி உடலுக்குள் பரவி நல்ல குணங்களுக்குள் கலந்தவுடனே அனைத்தும் எரிச்சலாகிறது. அப்போது இந்த உடலான சிவம் என்ன செய்கிறது…?
1.ஓங்கார நடனம்… இரு உன்னை அழித்து விடுகிறேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.
2.சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் அது கோப உணர்வின் சக்தி உடலை இயக்கும் நிலைகள் – ஒலி ஒளி
3.தாவர இனத்தினுடைய மணம்… குணம்… ஆனால் அதனுடைய உணர்வு… இயக்கம்…!

மிளகாயை வாயிலே போட்டால் என்ன செய்கின்றது…? காரம்… ஸ்…ஆ…! என்று அலறுகின்றோம் கசப்பை வாயிலே போட்டால் ஓய்…! உமட்டல் என்ற நிலை வருகிறது.

இதைப் போன்று தான் இந்தப் பூமி நடராஜா… நிற்காமல் சுழல்வதால் அதனின் ஜீவன் கொண்ட நாம் எப்படி இருக்கின்றோம்…? என்பது தான் அந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.

சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.

தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.

தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்

அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

வெள்ளிக் கோளும் அகஸ்தியன் ஒளியாக ஆனதும்

 

தாய் கருவிலே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்ற இந்த அகஸ்தியன் அவன் வாழ்நாளிலே இது எப்படி செடிகளுக்கு மணம் வந்தது…? எப்படி இயக்குகின்றது…? என்ற வகையில் அறிய ஆரம்பிக்கிறான்.

ஏனென்றால் விஷத்தை முறிக்கும் ஆற்றல் வரப்படும் பொழுது அந்த உண்மையை அறியக்கூடிய சக்தி அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது. அப்பொழுது இவனைக் கண்டால் காட்டில் உள்ள விஷ ஜந்துக்களே மறைகின்றது.

1.மின்னல்கள் வந்தால் எப்படி வெள்ளிக் கோள் அதை எடுத்து அதன் உணர்வின் தன்மை ஒளிக்கற்றையாக மாற்றுகின்றதோ
2.இதே மாதிரி மின்னல்களிலிருந்து வரக்கூடிய உணர்வை இவன் எடுத்து ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றான் அகஸ்தியன்.

அதாவது சூரியன் அருகிலே செல்லப்படும் பொழுது மோதும் உணர்வின் ஒளிகளை வெள்ளிக் கோள் எடுத்து ஒளியாக மாற்றுவது போல இவன் மனிதன் நிலையில்
1.பூமிக்குள் வரும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய உணர்வின் ஒளியைத் தனக்குள் எடுத்து
2.அந்த ஒளியின் அறிவாலே எங்கெங்கெல்லாம் அது மோதுகின்றதோ… அங்கிருக்கும் இருள்கள் எல்லாம் நீங்குகின்றதோ
3.அதன் உணர்வின் இயக்கம் எதுவோ அதை எல்லாம் அறியக்கூடிய சக்தியாகப் பெறுகின்றான் இந்த அகஸ்தியன்.

அப்பொழுது அணுவை அறிந்து அகஸ்தியன் ஆகப்படும் பொழுது அவன் வாழ்க்கையில் தீமையை வெல்லும் சக்தி பெறுகின்றான். அந்தத் தீமையை வெல்லும் சக்தி பெற்ற பின் அவனுக்குப் பருவம் வரும் பொழுது திருமணத்தை முடிக்கின்றார்கள்.

திருமணம் முடிந்த பிறகு அவன் எதையெல்லாம் தெரிந்து கொண்டானோ அவை அனைத்தையும் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான். மனைவிக்கு எடுத்துச் சொல்லும்போது மனைவியும் அதைக் கேட்கிறது.

கேட்டுணர்ந்த பின் கணவன் மேலும் உயர வேண்டும் என்றும் தன் மனைவி ரொம்ப உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும் எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்… இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இரண்டு பேருமே இப்படி எண்ணி வாழ்கின்றார்கள்.

அப்போது இவர்கள் இரண்டு பேர் கண்ட உண்மையின் உணர்வுகள் ரெண்டு பேர் உடலிலும் உருவாக்கி இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் இந்த உடலுக்குப் பின்
1.எந்தத் துருவத்திலிருந்து வரக்கூடிய நிலையினை எதை இவர்கள் நுகர்ந்தார்களோ
2.அந்தத் துருவத்தில் வரக்கூடிய உணர்வை நுகர்ந்த பின் அதையெல்லாம் ஒளியாக மாற்றிய பின்
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் முதல் மனிதர்களில் இந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது.

இந்தப் பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. துருவ நட்சத்திரம் நமது துருவத்தின் நேராகத்தான் அது இருக்கிறது.

ஏனென்றால் இந்தப் பூமியில் வந்து உயிரணு தோன்றி அந்தத் துருவத்தின் எல்லைக்குப் போன பிற்பாடு நம் பூமிக்கு வரக்கூடிய உணர்வெல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

அதிலிருந்து விளைந்த உணர்வுகளைக் காலையில் சூரியன் எடுத்து நமது பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமி துருவ வழியில் கவர்ந்து வந்து நமது பூமிக்குள் பரவச் செய்கிறது.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் இப்பொழுது இந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்த்துவது.

என் குருநாதர் இதையெல்லாம் சொல்லி எனக்குள் பதிவு செய்தார்.
1.உனது வாழ்க்கையில் நீ எதையெல்லாம் நுகர்ந்தாயோ அதனால் உன் உடலில் எப்படி எல்லாம் கெடுதல் உண்டானது…?
2.அந்தக் கெடுதலை நீ எப்படி நீக்க‌ வேண்டும்…? என்று சொல்லி
3.அந்தத் துருவ நட்சத்தித்தினை எண்ணி எடுக்கச் சொந்னார்.

இந்த உடலுக்குள் அது சென்ற பின் எப்படித் தீமையின் வலு குறைகின்றது. அதனை உனக்குள் எப்படி நல்லதாக மாற்றி அமைக்க முடியும்…? என்பதனை உணர்த்தினார்.

ஆகவே
1.உன் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை நீக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீ எடுத்து உன் உடலில் செலுத்திக் கொண்டே வந்தால்
3.இந்த வாழ்க்கையில் அதனுடைய வலு பற்று அதிகமாகின்றது
4.அப்பொழுது உன்னை ஆயுள் காலம் மெம்பராக அதிலே இணைக்கின்றேன் என்றார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.இராவணன் யார்…? அவன் சிவ பக்தன்… (மனித உடல்).
2.இராமனோ விஷ்ணு பக்தன் உயிரின் இயக்கத்தைக் கொண்டவன்.

இராவணன் இந்த உடலின் இச்சைக்குச் சகலத்தையும் கற்று உணர்ந்தவன். சகோதரி சூர்ப்பணகையின் பாசத்தால் “என்னை அவமதித்து விட்டானே…” என்று அந்த சாம்ராஜ்யத்தில் வெறுப்பின் தன்மை வளருகின்றது.

பத்துத் தலை இராவணன் என்று சொல்லும் பொழுது மனிதன் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டு பத்தாவது நிலை அடையக்கூடிய தன்மை வந்தாலும்
1.நான் என்ற அகம் வரப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை இல்லாது போய் விடுகின்றது.
2.நான் என்று அகம் வரப்படும் பொழுது தன் சகோதரனாக இருக்கும் அதாவது இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் தூங்குகின்றது (கும்பகர்ணன்).

இராவணவன் எல்லாவற்றிலும் வல்லமை பெற்றவன் இந்த உடலின் இச்சைக்குச் செயல்படுபவன் என்று தான் அவனைக் காட்டுகின்றார்கள்.

எதனின் சுவையின் தன்மை கொண்டானோ சூர்ப்பணகையினால் வந்த வினையை… தன் சகோதரி மேல் இருக்கும் பாசம் என்ற அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது… தனக்கென்று அகம் கொண்ட செயலின் தன்மை வரப்படும் போதுதான் அங்கே அழிவின் தன்மை வருகின்றது.

1.இங்கே இராவணனைக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உணர்ச்சி வசப்படும்போது சிந்தனை (கும்பகர்ணன்) இல்லை
2.அங்கே அவமதிக்கும் தன்மை வரும் பொழுது இதே உணர்வுகள் எதிரியின் தன்மையாக (இலட்சுமணன் – சூர்ப்பணகை) வாழ்க்கையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத்தான்
3.இந்த உடலுக்குள் எண்ணிய சக்திகள் இயக்கமும்
4.அதே சமயத்தில் தசரதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிர் சக்கரவர்த்தியாக இயக்குகின்றது என்ற நிலையும்
5.இந்த இரண்டு பிரிவையும் காட்டியுள்ளார்கள்.

குருநாதர் இதை மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார்…!

இராவணன் எங்கே இருக்கின்றான்…? என்றால்
1.எல்லாவற்றிலும் முன்னேற வேண்டும் என்ற இச்சை கொண்ட நம் உடல் தான்.
2.முடிவின் தன்மையில் இருக்கப்படும் போது அகம் என்ற நிலையில் தேய்பிறையாகி விடுகின்றது.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்தச் சக்திக்கு எது அருவமோ அதனின் உணர்வின் தன்மை கொண்டு இங்கே சக்கரவர்த்தியாக இருந்தாலும் இது அதற்குள் இயங்கி (உயிர் உடலுக்குள்) எவ்வாறு வருகிறது…? என்று காவியத் தொகுப்புகள் தெளிவாகக் காட்டுகின்றது.

இதற்காக வேண்டி இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று கூட நினைத்தேன் (ஞானகுரு). ஆனால் நேரமில்லை…!

1.பலரும் பல விதமாக எழுதி இருக்கின்றார்கள்
2.அதற்குள் நீ எதற்காகப் போகின்றாய்…? நான் சொல்வதை மட்டும் புரிந்து கொள்…! என்று சொன்னார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதை நுகர்வதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகச் சொல்லி உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
1.சும்மா இல்லை…
2.நீங்கள் நினைத்த உடனே… யாரும் சொன்னவுடனே…
3.இப்படி எடுங்கள்…! என்றால் எடுக்க முடியாது…!

நீங்கள் அதைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி இந்த நினைவுக்குள் உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு),

1.திட்டியவனை எண்ணிய உடனே எப்படி ஜிர்..ர்ர்ர்… என்று வேகம் வருகின்றதோ
2.திட்டியவனைப் பத்து வருடம் கழித்துப் பார்க்கப்படும் போது… துரோகம் செய்தான் பாவி…! டட்டட்…டட்ட… என்று கோபம் வருகின்றது…”
3.பல்லை எல்லாம் நற…நற… தன்னை அறியாமலே கடிக்க வைக்கும்.
4.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற நிலை வரும்.

அதைப் போன்று தான்
1.உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அந்த நேரத்தில்
2.ஈஸ்வரா…….! என்று “வேகமாக எண்ணுங்கள்…”

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… என் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு அடுத்து எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்..

துன்பத்தைப் போக்கச் செய்து உங்கள் காரியத்தை நல்லதாக ஆக்கிவிடும்.

சில உடல்களிலே ஆவிகள் இருக்கும்… என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் சதா திட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் நமக்கு வேதனை அதிகமாகும்.

அதைக் கேட்கக் கேட்க நமக்குக் கை கால் குடைச்சல் வந்துவிடும்
1.பேசுபவர்களுக்குக் கொஞ்சம் குடைச்சலாகும்…
2.ஆனால் அதைக் கேட்பவர்களுக்கு அதிகமான கைகால் குடைச்சல் வரும்.

சண்டை போடுபவர்களை… திட்டுபவர்களை எல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அடுத்த நாள் பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்பார்கள்.

முதுகுத் தண்டில் மூன்றாவது எலும்பு… இடுப்பில் இருக்கும் மூன்றாவது எலும்பு… கழுத்தில் இருக்கும் எட்டாவது எலும்பு… தன்னாலே அங்கே வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.

டாக்டரிடம் சென்றால் “எலும்பு தேய்மானம்” ஆகிவிட்டது என்பார்கள் அல்லது இடுப்புக்குப் பெல்ட் போட வேண்டும் என்று சொல்வார்கள். இது தான் நடக்கும்.

அடிக்கடி கவலை… வீட்டிலே சண்டை போடுவது போன்ற எரிச்சலான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இது இரண்டும் ஒன்றாகக் குவியும்
2.விரிந்து கொடுக்கும் நிலை வரப்படும் பொழுது அந்த இரண்டு எலும்புகளுக்குள் நீர் புகுந்து விடும்
3.புகுந்த பின் தாங்க முடியாதபடி வலிக்க ஆரம்பிக்கும்
4.நரம்பு செயலற்றதாகி வேதனையாகி (நரம்பு) பிடித்துக் கொள்ளும்.

மூன்றாவது எலும்பு விரிந்து கொண்டே இருக்கும்… எக்ஸ்ரேயில் பார்த்து உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள். இப்படி எல்லாம் வரும்.

இது போன்ற நிலையில் இருந்து நீங்கள் உங்களை மீட்டிக் கொள்வதற்கு ஆத்ம சுத்தியை அவசியம் செய்து கொள்ளுங்கள். இருளை நீக்கி மெய் ஒளியின் தன்மையை பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

தீமையை நீக்கும் சக்தியைப் பற்றி குருநாதர் எனக்கு உணர்த்திய விதம்

 

மனிதனான பின் நாம் என்ன செய்கின்றோம்…? மனிதன் ஆன பின் பண்பு பரிவு பாசம் என்ற நிலை வருகின்றது பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனைகளையும் பங்கு கொள்கின்றோம்… கேட்கின்றோம்.

நம்மிடம் சம்பாத்தியம் இருந்தால் உதவி செய்கின்றோம். சம்பாத்தியம் இல்லை என்றால் கூட உடலால் சிறிது உதவி செய்கின்றோம். ஆனால் அவர் கஷ்டத்தை நுகர்கின்றோம்.

நாம் நுகர்ந்த அந்த உணர்வைச் சுத்தப்படுத்துகின்றோமா…? இல்லையே…! அதற்கு என்ன வழி…?

அதற்குத்தான் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று
1.அந்தப் பழங்கால நிலைகளில் வாழ்ந்த அந்தப் புலஸ்தியர்கள்
2.தங்களுக்கு வரும் தீமையிலிருந்து எப்படித் தப்பித்துக் கொண்டார்கள்…? என்பதைச் சொண்னார்.

காட்டிற்குள் கூட்டிக் கொண்டு போனவுடனே ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கச் சொல்கின்றார்.

யானைகள்… கூட்டமாக வரும் நேரத்தில் கொண்டு போன உடனே அந்தப் பச்சிலையை நசுக்கச் சொன்னார்/

யானை மனிதனைப் பார்த்த உடனே சும்மா விடுமா…? அது என்ன செய்கின்றது. அது தனக்குள் காதை விடைத்துத் தலையைத் தூக்குகின்றது.

அப்பொழுது
1.கையில் பச்சிலையை நசுக்கி “ஃபூ…” என்று ஊது என்கின்றார்..
2.ஊதியவுடன் அந்த விஷத்தினால் அந்த யானையிக்கு ஒரு மயக்கம் வரச் செய்கின்றது.
3,அப்பொழுது அதற்குப் பெயர் யானை மிரட்டி.. அந்தப் பச்சிலையைப் பார்த்தவுடன் யானை மிரண்டு ஓடுகின்றது.

இதே மாதிரி புலி வருகின்றது. அந்த புலியின் தன்மைக்கு என்ன செய்கின்றார்…? அதே மாதிரி ஓரு பச்சிலையை எடுத்து நசுக்கி இதே மாதிரி “ஃபூ…” என்று ஊது என்கிறார்.

அப்பொழுது அந்தப் பச்சிலையின் மணத்தை நுகர்ந்தவுடனே விஷம் ஒடுங்குகின்றது… புலி விலகிச் செல்கிறது.

அப்போது இன்னொரு பச்சிலை எடுக்கின்றார். ஒரு தேன்கூடு இருக்கின்றது. நீ பச்சிலையைத் தேய்த்து விட்டுக் கையைக் கொண்டு போய்க் கூட்டிற்குள் விடு என்கின்றார்.
1.தேனீ என்னைக் கொட்டவில்லை.
2.அதுபாட்டிற்கு விலகிச் சென்று விட்டது. அப்பொழுது அந்த பச்சிலையைப் பார்த்தவுடன் அதனின் விஷங்கள் ஒடுங்குகின்றது.

அப்புறம் ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொள்ளச் சொன்னார்/ தேளைப் பிடித்து என் மீது விடுகின்றார். சாமி…சாமி…! என்கின்றேன்.

அட நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா. தேள் உன்னை என்ன செய்யும் என்கிறார்…? பச்சிலையை கையில் கொடுத்து விட்டு தேளை விடுகின்றார். தேள் என்னை ஒன்றும் செய்யவில்லை.

பச்சிலையைக் கீழே போடு என்கின்றார். கீழே போட்டவுடன் பட்டீர்… என்று அடித்தது. கீழே போட்ட உடன் பொட்டென்று அடித்தது.

ஏன்டா இப்பொழுது கொட்டுகின்றது என்றார்…? எனக்கென்ன சாமி தெரியும்…! என்றேன்.

1.உன் உடலில் இருந்த அந்தப் பச்சிலையின் மணத்தினால் தேளின் விஷத் தன்மை ஒடுங்குகிறது.
2.பச்சிலைகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரியுமா…?
3.பச்சிலை நம்மைக் காக்கவும் செய்கின்றது… மருந்தாகவும் பயன்படுகின்றது
4.பல விஷ ஜந்துகளிடமிருந்து நம்மைக் காக்கவும் செய்கின்றது.

இந்தப் பச்சிலைகளைத் தான்… உயிரணு புழுவில் இருந்து எல்லா உயிரினமும் எல்லாவற்றையும் சாப்பிட்டு வந்தது. இத்தகைய நிலைகள் கொண்டு தான் மனிதனாக இருக்கிறோம்.

மனிதனான பிற்பாடு என்ன செய்கின்றோம்…? இதையெல்லாம் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்த பிற்பாடு கெட்டது வராதபடி தடுக்கின்றோம்.

இப்படித்தான் புலஸ்தியர் என்று சொல்பவர்கள்… காட்டு விலங்குகளுடன் விலங்குகளாய் வாழ்ந்து வந்த அந்தக் காலத்து மனிதர்கள் இந்த மாதிரி விஷங்களை ஒடுக்கக்கூடிய பச்சிளைகளை எல்லாம் சந்தர்ப்பத்தால் தெரிந்து கொள்கின்றார்கள் என்று என்னைத் தெளிவாக்கினார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்… கண்ணன் வழிகாட்டிச் செல்கின்றான்… என்றால் நம் கண்கள் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றது என்று காட்டுகிறார்கள்.

இங்கே மாடு வருகின்றது… மனிதன் வருகின்றான்… அவன் தவறாகப் பேசுகிறான்… என்றும் ஒரு காரை ஓட்டிச் செல்லும் பொழுது
1.ஒருவன் குறுக்கே வருகின்றான் வந்தால் மோதிவிடும் என்று கண்கள் தான் உபதேசிக்கின்றது.
2.வண்டியை நீ இப்படி ஓட்டு என்று அந்த உணர்வுடைய நிலைகளை அங்கங்களை கைகளை இயக்கச் செய்வது கண்கள் தான்…!

அதாவது…
1.நம் கண் பார்க்கின்றது… அந்த உணர்வினை இழுக்கின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு “அங்கங்களை இயங்குகிறது…”

எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நாம் இயங்கினாலும் “இந்த உணர்வுகள் வடிகட்டப்படுகிறது…”

இதைப் போன்று அவன் (கண்கள்) கொடுக்கும் உபதேசத்தின் தன்மை தன்னைக் காக்கும் உணர்வாக எடுக்கப்படும் பொழுது… தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அதே சமயம்… ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்தத் தாக்கும் உணர்வு அவனைத் தாக்கும் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்கின்றது.

அவனை அழிக்க வேண்டும் என்ற நிலையில் சிந்திக்காது செயல்படும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.

கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டுகிறார்கள். விநாயகர் தத்துவத்தில் நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவே உனக்கு வாகனமாக அமைந்து நீ அதுவாக ஆகின்றாய் என்று காட்டுகிறார்கள். இதை ருத்ர தாண்டவம் என்று திருமூலர் காட்டியுள்ளார்.

1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் எப்படித் துடிக்கின்றதோ
2.நாம் எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அந்த அங்கங்களைப் பாசமாக அணைக்கின்றதோ
3.நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படியோ
4.அதை எல்லாம் நடனங்களாகக் காட்டி… அபிநயங்கள்…!
5.அதாவது… தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
6.அந்த நரம்பியல்கள் எப்படி நாதத்தின் நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத்தான் (ஏனென்றால் அங்கங்களை இயக்குவது நரம்புகள் தான்) ஒலி ஒளி என்ற நிலையில்
7.நாதத்தைப் பற்றி… அந்த நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் தெளிவாகக் காட்டியுள்ளார்.
8.ஒலி ஒளி அதற்குள் எத்தனையோ உட்பொருள்கள் அடங்கியுள்ளது.
9.ஒலியைப் பற்றி எத்தனையோ வியாக்கியானங்கள் செய்யலாம்…
10.ஆனால் நம் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று அந்த மெய் ஒலி(ளி)யைக் காட்டியது சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்.

விண்ணிலே தோன்றிய அந்த உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது ஓங்காரமாகிப் (ஓ…ம்ம்ம்ம்) பல நிலைகள் ஆகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்குகிறது.

ஒவ்வொரு தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்ட உடனே அந்த இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்…
1.சுவாசிக்கும் உணர்வின் தன்மை கொண்டு உயிரணுக்களின் இயக்கமும்
2.அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
3.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருமாற்றமும்
4.அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்… ஒலியின் தன்மை கொண்டு “ஒளியாக நீ எவ்வாறு ஆவது…? என்று வெளிப்படுத்திய ஸ்தலம் தான் இது.

அந்த உட்பொருளை நாம் இன்னும் காண முடியாது தேடிக் கொண்டிருக்கின்றோம். புரியவில்லை என்று எண்ண வேண்டாம்…! நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு)

ரோட்டிலே செல்லும் பொழுது எத்தனையோ உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. காரணம் நமக்குள் 1008 குணங்கள் இருக்கின்றது பார்க்கப்படும் பொழுது இரக்க மனம் கொண்டு “ஐயோ இப்படி ஆகிவிட்டதே…!” என்று எத்தனையோ எண்ணுகின்றோம்.

மனிதரை உருவாக்கிய அந்த 1008 நல்ல குணங்களை வைத்துத் தான் அடுத்தவர்களிடம் நாம் என்ன ஏது என்று கேட்டறிகின்றோம். அப்போது
1.நல்ல குணத்துடன் அது சேர்ந்து வடித்து அந்த நல்ல குணமும் ரிப்பேர் ஆகிவிடுகின்றது.
2.அந்த நல்ல குணத்தை எண்ணும் போது அந்த வேதனை பயம் ஆத்திரம் கோபம் எல்லாமே வருகின்றது.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை.

பிறருடைய குறைகளையோ அவர்கள் படும் துன்பங்களையோ தவறான செய்திகளையோ பார்க்கின்றோம். பத்திரிகை டிவிகளைப் பார்க்கின்றோம் உலகம் இப்படி இருக்கிறது…? நாளைக்கு என்ன ஆகுமோ…! என்று வர்ணனை செய்திருப்பார்கள்.

இங்கே திருடி விட்டார்கள் அங்கே கொன்று விட்டார்கள் அடித்து நொறுக்கி விட்டார்கள் என்று எத்தனையோ சம்பவங்களை நாம் பார்க்க… படிக்க… கேட்க நேருகிறது. அந்த நேரத்தில் நல்ல குணங்கள் அனைத்தும் பதறுகின்றது… பதட்டமாகின்றது. நல்ல குணங்கள் எல்லாமே ரிப்பேர் ஆகி விடுகின்றது.

உதாரணமாக… ரேடியோ கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு மின்னல் தாக்குகின்றது. ஏரியில் வழி எடுக்கப்படும் பொழுது எர்த் ஆனவுடன் கரகரப்பாகி… கொர…கொர… என்று சத்தம் போடுகின்றது.

ஒலியை இழுத்துக் கொடுப்பது அங்கே ஓட்டையைப் போட்டு விடுகிறது அப்போது எதையுமே தெளிவாகக் கேட்க முடிவதில்லை.

1.ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்து எடுத்து வடிகட்டி கொடுக்கக்கூடிய…
2.நுண்ணிய அலைகளில் பாய்ந்து வரக்கூடிய
3.அந்த அலைவரிசைகளைப் பிரித்து எடுத்துக் கொடுப்பதில் உள்ள இணைப்புகள் சூடாகி
4.அந்த இணைப்பு (பற்ற வைப்பு – SOLDERING) கழன்று விடும்… அதற்குப் பின் இது எடுத்துக் கொடுக்காது.

இதைப் போன்றுதான்
1.மனிதனுடைய உடலில் நுகர்ந்த உணர்வுகள்… மூளைக்குள் இந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.குறையான உணர்வுகள் பட்டவுடனே பொறிகளை இழுக்கும் அந்த நிலைகள் நின்றுவிடும்.
3.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நம் உடலுக்குள் நல்லதை இயக்கக்கூடிய குணங்கள் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

உங்களால் அதைச் சரி செய்ய முடியவில்லை…! அப்போது
1.ரிப்பேரான குரலில் தான் பேச முடியும்
2.ரிப்பேர் ஆன நிலைகளைத் தான் சுவாசிக்க முடியும்
3.ரிப்பேரான நிலைகளைத் தான் எடுக்க முடியும்…!

அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தான் ஞானிகள் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். அதாவது வாழ்க்கையின் இடைவெளியில் ரிப்பேரானால் அதில் மீட்டுவதற்கு அங்கே வழி காட்டுகின்றார்கள்.

உன் உடலில் இன்னென்னது இப்படி மறைந்திருக்கின்றது. ஆகையினால் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணு… மகரிஷிகளின் அருள் சக்தியை அதிலே போடு அபிஷேக ஆராதனைகளைப் போடு சுவையான இனிமையான மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணு. இதை உணர்த்திய அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணு…!
1.பொருளைக் காட்டி… அதைக் கண்ணில் உற்றுப் பார்க்கும்படி செய்து…
2.உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி சொல்கின்றார்கள்… காவியத்தையும் படைத்துள்ளார்கள்.

மந்திரம் தந்திரம் தெரிந்தவர்களிடம் பழக்கம் வைப்பது நல்லதல்ல

 

இன்றும் நமது நாட்டில் பல நிலைகள் இருக்கின்றது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் திருநெல்வேலியில் டாக்டர் இருக்கின்றார் அவர் பல நிலைகளில் சென்று வந்தவர். இருந்தாலும் குட்டிச் சாத்தான் என்ற நிலைகளை வைத்து மந்திரவாதிகளிடம் பழக்கம் உள்ளவர்.

ஆனால் அந்தக் குட்டிச் சாத்தான் இவர் வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்துக் கொண்டு போகிறது. இங்கே தபோவனத்திற்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்தார்கள்.

இங்கே தங்கி இருக்கும் பொழுது நகைகள் போகவில்லை. மறுபடியும் அங்கே வீட்டிற்குப் போனவுடன் நகைகள் போகின்றது.

நான்கு பவுன் செயின் கழுத்தில் இருந்தால் எடுக்க முடியாது. இவர் கழுத்தில் உள்ளதைக் கழட்டி என்ன செய்கின்றார்…? தலையணைக்கு அடியில் வைத்தார். எடுத்துக் கொண்டு போய் விட்டது. இரவு எனக்குப் ஃபோன் செய்கின்றார்.

இது வரை பத்தாயிரம் நோட்டு… கட்டாக அப்படியே எடுத்துக் கொண்டு போய்விட்டது. குட்டிச்சாத்தான் ஏவல் தான் அது.

இந்த மந்திரவாதிகள் ஜீ…பூம்பா… வரும் என்று சொல்கிறார்கள் அல்லவா.
1.நமக்குச் சொத்து கிடைக்கும் சுகம் கிடைக்கும் என்று அவர்களிடம் ஜாஸ்தி பழகியவர்.
2.இப்பொழுது பழகியவுடன் என்ன ஆகிவிட்டது…? இங்கே இருக்கும் காசு எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகின்றது.

சிலருக்கெல்லாம் இந்த நோட்டைக் காட்டுகிறார்கள் அல்லவா. சில தாயத்துகளை எடுத்துக் காட்டுவார்கள். வீட்டில் வைத்துவிட்டு அதை அப்படியே எடுத்து வரும்.

அதே மாதிரி நீங்கள் வீட்டில் நோட்டை வைத்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும். இன்னொரு வீட்டில் லட்டு வைத்திருந்தால் அதை எடுத்துக் கொடுக்கும். ஆனால் அந்த மந்திரவாதியை லட்டைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டான்.

இந்த மாதிரி ஒரு குட்டிச்சாத்தான் ஒரு மனித உணர்வின் தன்மையை இப்படி முச்சந்தி மண்ணை எடுத்துக் கொண்டு போய் அதுவும் அமாவாசை காலம் கூப்பிட்டோம் என்றால் அது குட்டிச்சாத்தான் என்றால்… கரு கலைந்த சிதைந்த அதற்கு மேல் இதை வைத்து… அதற்காக வேண்டி சில மந்திரங்களைச் செய்து இந்த உணர்வை எடுத்து அந்த ஆவியை அழைத்துக் குட்டிச்சாத்தான் ஆக வைத்துக் கொள்வார்கள்.

அதை மற்ற பக்கம் ஏவல் செய்யும் பொழுது அது இவன் சொல்லும் வேலையை எல்லாம் செய்யும்.
1.நகையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னால் எடுத்து வரும்.
2.ஒரு பொருளைத் தொட்டுக் கரைத்து விடு என்றால் கரைத்து விடும்… ஆவியாக மாறும் அவன் கைக்கு வந்துவிடும்.

இந்த மாதிரி எல்லாம் இன்றைக்கு மனிதனைப் பயன்படுத்துகிறார்கள். அரசர் காலங்களில் செய்த கொடுமை. ஆனால் இனி விஞ்ஞான உலகம் வந்த பின் நாம் அறிந்து கொண்டோம். இனி நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.ஆக நாம் அதைத்தான் அதிகமாக விரும்ப வேண்டும்.

எத்தகைய நிலைகள் இருந்தாலும் ஆயுள் கால மெம்பராகச் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து என்றும் பிறவியில்லா நிலையை அடைவது தான் நம்முடைய முழு நோக்கம்.

ஆக அந்த அருளைப் பெற்றால் இருளை நீக்க முடியும். கையில் விளக்கை எடுத்துக் கொண்டால் என்ன செய்யும்…? அங்கிருக்கும் பொருள் தெரியும்.
1.அவ்வப்போது ஆத்மசுத்தி செய்து கொண்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கும் பொழுது
2.நாம் எப்படிச் செயல்படுவது…? என்கிற சிந்தனை வரும்.
3.அதற்குத் தக்க உபாயமும் கிடைக்கும். ஆக நாம் நல்வழிப்படுத்தி நம்மை வழி நடத்திக் கொள்ள அந்தச் சக்தி கிடைக்கும்.

இல்லை என்றால் நாம் கோயிலுக்குப் போய் எல்லாம் செய்து மந்திரம் செய்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கி விடுவோம் என்றால் அது நடவாது.

இடைஞ்சல் வந்தது என்றால் வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்து… “இந்த வீட்டு வாசல்படியை இப்படி இடித்துப் போடு… அப்படி இடித்துப் போடு… இதை மாற்று…!” என்றால் சம்பாதித்த காசைஸ் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஆசையின் நிமித்தம் இன்னொருத்தர் செய்தால் இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்பான் இன்னொரு வாஸ்து சாஸ்திரக்காரன். அப்பொழுது எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்ப்பது…?

ஜாதகத்தை பார்த்தாலே இன்றைக்கு எடுத்துக் கொண்டால் இன்றைக்கு ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் ஒன்று போல எல்லாம் இருக்கின்றதா…? என்றால் இல்லை.

கௌரி பஞ்சாங்கத்தில் ஒரு விதமாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஒரு விதமாய் இருக்கின்றது இந்த மாதிரி பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் மூன்றையும் பார்த்தால் மூன்றும் மூன்று விதமாக இருக்கின்றது.

நீங்கள் எதை நம்புவீர்கள்…?

அவரவர்கள் எடுத்துக் கொண்ட்து இதுதான் சரி என்கின்றார்கள். அவர்கள் அதைத் தான் சரி என்கின்றார்கள் ஆனால் அவன் சொன்னது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்து இது தான் பதிவாகி இருக்கின்றது இதுதான் எனக்குச் சரியாக இருக்கும் என்பான்.

அந்த உணர்வை எடுத்து வழிபடும் பொழுது இப்படி ஆகின்றது. அடுத்தவன் சொன்னால் இதை மோசம் என்போம்

ஆக இதன் வழி தான் உலகம் முழுவதற்கும் பஞ்சாங்கங்களைப் பார்த்து நடப்பதும்… நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் பார்ப்பதா…? என்று ஆகிவிடும்.

நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் உருவாக்கியவன் மனிதன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்.

1.மனிதனால் நல்ல நேரங்களை நல்ல காலங்களை உருவாக்க முடியும்.
2.நல்ல காலங்களை உருவாக்கக்கூடிய திறனை உங்களுக்கு கொடுத்து
3.ஆயுட் கால மெம்பராக இருப்பவர் எல்லாம் அடுத்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூட்டுத் தியானத்தினுடைய முக்கியத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் மட்டும் தனித்து ஒன்றும் செய்து விட முடியாது. பலரின் அலைககளைக் குவிக்கச் செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டுதான்
1.விஞ்ஞான உலகின் நச்சுத்தன்மைகளிலிருந்து மீட்கும் சக்தியாக
2.எத்தகைய விஷமும் நம்மை அணுகாத நிலையாகக் கூட்டுக் குடும்ப தியானம் செய்து
3.மகரிஷிகளின் அலைகளைப் பரப்பி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

பூமி தனக்குப் பாதுகாப்பாக ஓசோன் திரையை அமைத்துக் கொள்வது போன்று… எத்தகைய நிலைகள் வந்தாலும் ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்கள் ஆன்மாவிலே வலுகொண்டதாகப் பெருக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம்.. உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஏதோ
1.சாதாரணமாகக் கிடைக்கின்றது
2.சாதாரணமாகக் குருநாதர் சொல்கின்றார்
3.சாதாரணமான நிலையில் விளக்கம் சொல்கின்றார்
4.சாதாரண நிலைகள் இருக்கின்றதே… என்று
5.சாதாரணமாக விட்டு விடாதீர்கள்…!

எவ்வளவோ பணத்தைச் செலவழித்து… அலைந்து திரிந்தாலும் பெற முடியாது… அப்படி எல்லாம் இருக்கும் போது சாமி சாதாரணமாகச் சொல்கிறார்…! நாம் பெற முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நீங்கள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இதைக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானம் இருந்து பழகுங்கள். நாள் முழுவதும் உழைக்கின்றோம் ஒரு பத்து நிமிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தினமும் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தால் அது காக்கக் கூடிய சக்தியாக உங்கள் எண்ணம் வரும்.

ஒவ்வொரு சமயமும் சொன்னதையே சாமி சொல்கின்றார் என்று தெரிந்தாலும்… அப்படிச் சொல்வதற்குள் “சில நுண்ணிய உணர்வுகளைக் கலந்து” சொல்வேன்.

மரங்களுக்கு உரம் கொடுப்பது போன்று… வெயில் காலத்திற்குத் தகுந்த மாதிரி… மழை காலத்திற்குத் தகுந்த மாதிரி… அந்தந்தக் காலங்களுக்குத் தகுந்த மாதிரி… சூழ்நிலைக்குத் (உங்களுடைய) தகுந்த மாதிரி
1.ஞானிகள் உணர்வுகளை உரமாக உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குச் செருகேற்றி
2.அதன் மூலம் காற்றில் இருக்கக்கூடிய அரும் பெரும் சக்திகளை எடுத்துக் கொண்டு வந்து மெய் ஒளி பெறச் செய்கிறோம்.

ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள்… உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்துப் பழகுங்கள்… உடலில் வரக்கூடிய விஷத்தை நீக்கிப் பழகுங்கள்… ஒளியின் சுடராக நீங்கள் பெற வேண்டும்.

எந்த நேரத்தில் எல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.

“திட்டியவனை எண்ணியவுடன்” நம் உடல் எப்படிப் பதறுகின்றதோ… “இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது எப்படி மனம் சோர்வடைகின்றதோ…
1.அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணுங்கள்.
2.சாமி சொன்னார்… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்தீர்கள் என்றால்
3.அந்த நடுக்கமோ சோர்வோ இவைகள் நீங்கி உங்கள் எண்ணம் சொல் வலுவாகி
4.உங்களுக்குள் அனைத்தும் வலுகொண்டதாக ஆற்றல்மிக்கதாகச் செயல்படக்கூடிய சக்தி கிடைக்கும்.

உங்களுக்கு ஒருவர் தீமை செய்கின்றார்… குறையாகச் சொல்கிறார்… திட்டுகின்றார் என்றால் உங்கள் நல்ல குணங்கள் வலு குறைந்து… இனிமை குறைந்து… மயக்கப்படும் நிலையாக… எதிர்மறையான உணர்வுகளை எப்படித் தூண்டுகிறதோ… அதைப் போன்று தான்
1.அந்த மாதிரி நேரங்களில் சாமி சொன்னார்…!
2.அவர் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
3.என் உடல் முழுவதும் அது படர வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
5.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
6.அந்தக் கணமே இப்படி எண்ணி எடுக்கப் பழகிக் கொன்டீர்கள் என்றால் “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்…!”

அதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்வது

யாம் சொன்னதைச் சிறிது காலத்திற்குச் செய்யப் பழகிக் கொண்டால் போதும்
1.எத்தகைய சந்தர்ப்பங்களிலும் சமாளிக்க கூடிய ஆற்றல்
2.உங்களுக்குக் கிடைக்கும்… செய்து பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் இருந்து முடிந்த பின் உடலை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று… வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து “உந்தித் தள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்…”

1.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் விண்ணை எட்டி அங்கிருந்து உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு
2.பௌர்ணமி அன்று சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

காரணம்… அன்று சூரியனுடைய காந்த சக்தி சந்திரனில் முழுமையாகப் படுகின்றது
1.உங்கள் எண்ணங்களை மேல் நோக்கிச் செலுத்தச் செய்து
2.சந்திரனையும் பார்க்கச் செய்து… அந்தக் காந்தப் புலனுடன் இழுக்கச் செய்து
அதைத் தாண்டி இருக்கும் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கும்படி செய்கிறோம்
4.உங்கள் உணர்வின் எண்ண அலைகளை அங்கே பதியச் செய்கின்றோம்.

உங்கள் குடும்பத்தில் உடலைப் விட்டு பிரிந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி… “குலதெய்வங்களாக அவர்களை எண்ணி” அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

விஞ்ஞானிகள் இராக்கெட்டை உருவாக்கி அது நூறு டன் எடையாக இருந்தாலும் கூட விண்ணிலே செலுத்துகிறார்கள்.

அங்கேயும் ரேடார் (RADAR) வைக்கின்றனர் பூமியிலும் ரேடாரை வைக்கின்றார்கள். விண்ணில் இருப்பதையும் இங்கு இருப்பதையும் இழுத்து அதே சமயத்தில் லேசரையும் (LASER) கலந்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.

லேசர் என்றால் எதிலேயும் ஊடுருவி மற்றொன்றுடன் மோதி… அந்த அலை நிற்காமல் ஊடுருவிச் செல்லும் நிலைகள் பெற்றது.

இப்படிச் செய்து எல்லாம் இணைத்துக் கொண்ட பின் மனிதனுடைய பேச்சைச் சொல்லாலே… இடத்தைக் குறித்து… ஒலிகள் மூலமாகக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து… அந்த நாடாவிலே போட்ட பின் (COMMANDS) ரேடார் கவனித்துக் கொள்கிறது.

இராக்கெட்டைத் திசை திருப்ப வேண்டும் என்றால் இங்கிருந்து ஆணையிடுகின்றனர்.
1.மனிதனுடைய எண்ண ஒலிகளால் பதியச் செய்த நுண்ணிய அலைகள்
2.இயந்திரத்தில் பதிவு செய்ததன் துணை கொண்டு தொலைதூரத்தில் செல்லும் இராக்கெட்டைத் திசை திருப்புகின்றது.

கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மனிதனுடைய எண்ண ஒலியைப் பதிவு செய்து இயந்திரத்திற்குள் அதை அலை வரிசையை வைத்து இராக்கெட்டில் இணைக்கச் செய்து இயக்குகின்றார்.

அதே போன்று…
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் முன்னோரின் உணர்வுகளின் துணை கொண்டு
2.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்திச் செலுத்தப்படும் பொழுது
3.சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலக்கச் செய்கின்றது.

அந்த அலைகளுக்குள் (ஒளி கங்கையிலே – ஒளிக் கடல்)) இந்த ஆன்மாக்கள் பட்டவுடன்… புவியிலே மனித வாழ்க்கையில் “வாழ வேண்டும்” என்று எடுத்துக் கொண்ட வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை எல்லாம் கருக்கிப் பஸ்பமாக்கி விடுகிறது.

அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக ஒளியாக… ஞானிகளால் படைக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து… ஒளி உடலாக முன்னோர்கள் பெறுகின்றார்கள்.

அனைவருமே ஒருவருக்கொருவர் நாம் பேசிப் பழகி இருக்கின்றோம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை கூட்டுக் குடும்ப தியானமிருந்து மேலே சொன்ன முறைப்படி விண் செலுத்த வேண்டும்.

அப்படி இல்லாதபடி அவர்களை எண்ணி ஏங்கி
1.எல்லாம் சம்பாதித்து வைத்தார்… போய்விட்டாரே…! என்று அழுவதும்
2.மிகவும் நல்லவராக இருந்தார்… போய்விட்டார்…! என்று ஏங்கி இழுத்து விட்டால் போதும்.
3.யார் அதிகமாக எண்ணி ஏங்கினாரோ அந்த உடலுக்குள் புகுந்துவிடும்

எந்த அளவுக்கு அவர் மேல் பாசம் கொண்டு பற்று கொண்டு எண்ணி எடுக்கின்றார்களோ… அந்த உடலில் புகுந்து “நான் வந்து விட்டேன்…” என்ற நிலையில்… உடலை விட்டுப் பிரியும் பொழுது கடைசிக் காலத்தில் அவர் உடலில்பட்ட வேதனை… நோய்… எல்லாவற்றையும் இங்கே உருவாக்கிவிடும்.

ஆகவே… அப்படி அழுக வேண்டும் என்றால் அழுது “இழுத்துக் கொள்ளுங்கள்…” இல்லை… நமது குருநாதர் சொன்ன முறைப்படி மோட்சத்திற்கு – சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் “உந்தித் தள்ளுங்கள்…”

முன்னோர்கள் விண் சென்ற பிற்பாடு அவர்களின் துணை கொண்டு இந்த மனித வாழ்க்கையில் முழுமை பெற்றுப் பிறவியில்லா நிலை அடையலாம்.

ஆன்மாவைத் தூய்மை செய்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுப்பது

 

ஒருத்தர் என்னைத் திட்டினார் என்று எண்ணப்படும் பொழுது அவன் நினைவே நமக்குள் வருகின்றது. அவன் நினைவு வரப்படும் பொழுது அவன் உணர்வைத் தான் நமக்குள் வளர்க்கின்றோமே தவிர நல்ல குணங்களை நாம் பாதுகாக்கின்றோமா என்றால் இல்லை.

பையன் மேல் பிரியமாக இருக்கின்றோம். அவன் நஷ்டம் ஆகிவிட்டான் என்று எண்ணப்படும் பொழுது அவன் நஷ்டத்தைப் பற்றித் தான் சிந்தித்து
1.“இப்படியே ஆகிக் கொண்டிருக்கின்றதே…” என்று நஷ்டத்தை நமக்குள் வளர்த்து நமக்குள் நோய் ஆக்குகின்றோம்.
2.நமக்குள் விளைந்ததை நம் பையனைப் பற்றித் திரும்ப “இப்படியே செய்து கொண்டிருக்கின்றானே…” என்று எண்ணும் போது
3.அவனும் கஷ்டமும் நஷ்டமும் தான் படுவானே தவிர அவனை மீட்டவும் வழியில்லை… நமக்குள் மீளவும் வழியில்லை.

இப்படித்தான் நமக்குள் அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது. நாம் இதைப் போக்க வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதற்கு உங்களுக்குள் பதிவாக்குவது. இதை நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.

அதற்குத்தான் உங்களை ஆயுட்கால மெம்பராகச் சேரச் சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் எடுத்து இந்த ஆயுள் முழுவதற்கும்
2.இந்த வாழ்க்கையில் எப்போது துயரங்கள் வருகின்றதோ சங்கடங்கள் வருதோ சலிப்புகள் வருதோ படிக்க முடியாமல் ஞாபக சக்தி குறைகின்றதோ
3.அப்பொழுதெல்லாம் அதை மாற்றிக் கொள்ள முடியும்.

பிறருடைய நிலைகளில் தவறு செய்பவரைப் பார்த்தவுடனே அந்த வேதனை என்ற உணர்வாகப் படும்பொழுது பாலில் விஷம் பட்டால் பாதாமிற்குச் சக்தி இல்லாதது போல நாம் நுகர்ந்த வேதனை என்ற உணர்வு நம்மைச் சிந்தனையற்ற நிலைகளும் மறதிகளும் வந்து விடுகின்றது. படிக்கிற குழந்தைகளுக்குப். பிறர் செய்யும் தவறுகளை நுகரப்படும் பொழுது அந்த வழியில் சென்றவுடன் அவர்கள் ஞாபக சக்தி இழக்கப்படுகிறது.

இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுது மீண்டும் அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம். இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாமோ எப்படி ரேடியோ டிவிகளில் ஒலிபரப்பாகும் பொழுது எங்கிருந்து ஒலிபரப்பாகின்றதோ எந்த ஸ்டேஷனோ அந்த ஸ்டேஷனில் வைக்கின்றோம். அப்பொழுது அந்த அலைவரிசையில் நாம் பார்க்கின்றோம்.

இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் நமக்கு எப்போது துன்பங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் நமக்குள் தாக்கி இயக்குகின்றதோ அப்பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
2.அதன் உணர்வலைகள் நமக்குள் சென்று நமக்குள் தீமையின் நிலைகளை மாற்றிவிடும்..

ஆக இப்படி நமது வாழ்க்கை முழுவதுமே கஷ்டம் சங்கடம் நோய் இதைப்போல எத்தகைய விதமான உணர்வுகள் தாக்கினாலும் அது நமக்குள் இயங்காது தடுக்கும் வேண்டும்.

இப்பொழுது நமக்கு ஒருவர் தொல்லை கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்காவில் இருக்கின்றார். அவரை நினைக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் அவனெல்லாம் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது நம் காரியம் இங்கேயும் கெடுகின்றது… அங்கேயும் தாக்கப்படுகின்றது.

அவனுடைய நிலைகளில் சாப்பிடும் பொழுது பேசினால் புரை ஓடுகின்றது. இதைப்போல பல நிலைகளில் நம்மைத் தொடர்ந்து இயக்கும் இந்த நிலைகளில் இருந்து மீட்டிக் கொள்ளத் தான் உங்களை ஆயுள் காலம் மெம்பராக சேர்த்தது.

1.என்னை குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராகச் சேர்த்தாரோ
2.அவர் பெற்று உணர்ந்த உணர்வுகள் கொண்டு அகண்ட அண்டத்தை அறியச் செய்தாரோ
3.அதையெல்லாம் உங்களுக்குள் ஒவ்வொரு உபதேச காலங்களில் பதிவாக்குகின்றோம்.
4.அதை வளர்க்க உங்கள் நினைவு தான் முக்கியமாகத் தேவை.

ஆக ஒவ்வொரு நிமிடமும் துயரமான உணர்வைக் கேட்டறியும் பொழுது அதை மறக்கச் செய்ய ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இதைச் சேர்த்து அதைத் தூய்மையாக்கப்படும் பொழுது அந்த இரத்த நாளங்களிலே கலந்த பின்… எப்படி தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகின்றதோ… இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏங்கி நம் இரத்த நாளங்களில் அதிகமாகக் கலக்கச் செய்யும் பொழுது இப்பொழுது நமது அணுக்களில் அதைக் குறைக்க உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் என்னிடம் சொன்னது:-
1.உடலை விட்டுச் செல்லும் பொழுது நீ எங்கே இருக்க வேண்டும்…? என்று சொன்னார்
2.அந்த உணர்வுக்குள் என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்…
3.வெளியில் வந்த பிற்பாடு “நான் எவ்வாறு செல்கிறேன் பார்,..!” என்றார்.

குருநாதர் இங்கே உடலுடன் இருக்கும்போது வெறும் துண்டு மட்டும்தான் கட்டி இருப்பார். அசூசையான (சாக்கடை) இடங்களில் தான் அவர் படுத்திருப்பார்.

குளிர்காலம்…! நல்ல வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள் என்று கொடுத்தால் அதை எல்லாம் கிழித்துக் கைகளிலும் கால்களிலும் கட்டிக் கொள்வார்.

பார்… யாரோ வந்து இவ்வாறு கிழித்து விட்டான்…! என்று சொல்வார் எவனோ கிழித்து விட்டுப் போய்விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…? என்று கேட்பேன்.

கிழித்து விட்டுச் சென்று விட்டான்… நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன் அவன் கிழித்து விட்டான்…!

ஏனென்றால் அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித்தான் சிந்தித்தார். அவர் பைத்தியக்காரத்தனமாகக் காண்பிக்கும் போதெல்லாம்…
1.ஐயோ… இவரோடு ஒரே தொல்லையாகி விட்டதே… வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டோமே என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.அவர் பேசுவது… செய்வது… எல்லாம் பார்க்கும் பொழுது இப்படித்தான் தோன்றியது.

ஆனால் அவர் “உடலை விட்டுச் செல்லும் பொழுது…” எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது “பளீர்… பளீர்ர்…” என்று தள்ளிக் கொண்டு போகின்றது.

அப்படிச் சென்றாலும் இந்த பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிரான்மா என்ன செய்கிறது…? பார்…! முன்னாடியே எனக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.

அன்றைய ஞானிகளும் மகரிஷிகளும் பூமியில் வாழும் காலத்தில் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியே சென்றாலும் மீண்டும் பூமிக்குள் வராதபடி தடுப்பதற்கு எவ்வாறு செயல்பட்டார்கள்…? என்று குருநாதர் காட்டுகிறார்.

அந்த உணர்வுக்கொத்த (ஞானிகளின்) விழுது “பூமியிலிருந்து உந்தித் தள்ள வேண்டும்…!” இதற்காக வேண்டித்தான் எவ்வளவு பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனைத் தேடி அந்த ஞானிகள் வருகின்றார்கள்.

அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு அங்கே மகிழ்ச்சியை ஊட்டி அவனிடமிருந்து வரக்கூடிய மகிழ்ச்சியான மூச்சுலைகளைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு… ஏகாந்தமாக விண் சென்றார்கள்.

ஒருவன் துன்பப்படுகிறான் என்றால் பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷமான சில நிலைகளையும் தான் கஷ்டப்பட்டு எடுத்து… அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று அவர்கள் துன்பத்தை நீக்கினார்கள்

ஆனால் அன்றைக்கு அவர்கள் காசு எதுவும் வாங்கவில்லை…!

துன்பப்படுகிறான் என்றால் உடனே அவனுக்குள் நிவாரணத்தை ஏற்படுத்தித் துன்பத்தை நீக்கிவிட்டு மெய் ஒளியின் சுடராக மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து… மருந்து கொடுத்து நோயை நீக்கி அங்கே சந்தோஷத்தை உருவாக்கினார்கள்.

1.”எனக்கு நல்லது செய்தார்…” என்ற அந்த எண்ணத்தை ஏங்க வைத்து
2.அதை ரசித்துத் தனக்குள் எடுத்து அவன் பேரானந்த நிலை பெற்றான்.

சகஜ வாழ்க்கையில் பார்த்தோம் என்றால்…
1.பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள்… ஒருவன் துன்பப்படுகிறார் என்றால் வேதனை வருகின்றது
2.அசுர உணர்வு கொண்டு துன்பப்பட்டவனைப் பார்த்து… “கிடக்கட்டும் அவனுக்கெல்லாம் அப்படித்தான் வேண்டும்…” என்று எண்ணினால் முரட்டுத்தனமான நிலைகளில் சிக்கி அவன் அடிபடுகின்றான்

ஆனால் ஞானிகளோ
1.துன்பப்படுபவனுக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை நீக்கி
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

விஷத்தைத் தனக்குள் இயங்காத வண்ணம் அதை அடக்கினான்…! எந்த விஷமாக இருந்தாலும் அவனுக்குள் அது ஒடுங்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன் என்றால் “குருநாதர் கொடுத்த அந்த நிலைகள் தான்…!”

வாழ்க்கையில் உங்களை அறியாது இருள் சூழ்ந்த நிலைகள் வந்தாலும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்று யாம் உபதேசிக்கும்போது இதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்தவுடன் உங்கள் துன்பத்தைப் போக்கச் செய்து நோயைப் போக்கச் செய்கிறது. அத்தகைய மெய் ஒளியினைப் நீங்கள் பெற வேண்டும் என்ற அந்த ஆசையில் தான் சொல்கிறேன்.

ஆனால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல இம்சைகளைக் கொடுத்தார்.. பல தொல்லைகளைக் கொடுத்தார்.

யானைக்குப் பலமா…! எனக்குப் பலமா…? என்று கேட்பார்.

இவருக்குப் பலம் என்று சொன்னால் எப்படி…? என்று கேட்பார் யானைக்குத் தான் பலம் என்று சொன்னாலும் வம்பு தான்…! அது எப்படி…? என்று கேட்பார்.

என்ன சொன்னாலும் இரண்டு உதை கிடைக்கும்…!

எப்படி என்று நீ சொல்லுடா என்பார்… எப்படிடா நீ சொல்கின்றாய் என்று கேட்பார் நான் சுவாசிக்கின்றேன்… யானை இப்போது என்ன செய்கிறது என்று பார்…!

சுவாசித்து உணர்வலைகளை அவர் வெளிப்படுத்தும் போது யானை பயப்படுகின்றது. இப்போது யாருடா பயப்படுகிறது…? என்று கேட்பார்.

நான் எப்படிச் சொன்னாலும்… நான் எதைச் சொன்னாலும்
1.ஏறுக்கு மாறாகவே சொல்லிச் சொல்லிச் சொல்லி
2.இந்த உணர்வின் மோதல் எப்படி ஆகின்றது… உனக்குள் எப்படி உருவாகின்றது…?
2.நான் சொல்வது உனக்குள் எப்படி ஆகின்றது…?
3.இந்த உணர்வின் தன்மை காற்றிலிருந்து எவ்வாறு வருகின்றது…?
4.கவர்ந்து கொண்ட பின் எண்ணத்தின் நிலைகள் என்ன ஆகிறது…?
5.உடலுக்குள் பதிவாகும் பொழுது என்ன ஆகின்றது…? என்று இப்படித்தான் பாடம் கொடுத்தார்

நான் எந்தப் புத்தகத்தையும் படித்து உங்களுக்கு உபதேசிக்கவில்லை.

குருநாதருடைய உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எவ்வாறு எதன் நிலையில் கொண்டு நான் என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் தான் வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று தெளிவாகக் காட்டினார்

அவர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை “நீங்களும் பெற வேண்டும்…” என்பதற்குத் தான் உங்களுக்குள் செல்களாகப் பதிவு செய்கின்றேன்.

பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷங்கள் வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியாக மாற்றி… உணர்வின் தன்மையை மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்… “சப்தரிஷி மண்டலங்களாக அந்த ஞானிகள்…”

அந்த நிலையை நீங்களும் அடைய வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

கோவிலுக்குச் செல்கின்றோம்… ஒவ்வொரு கோவிலிலும்… முன்னாடி “ஓ…ம்” போட்டு வைத்திருக்கின்றார்கள். நாம் கோவிலுக்குச் சென்றால் சாமி கும்பிடுகின்றோம்…! ஏன் கும்பிடுகிறோம்…? எப்படிக் கும்பிடுகின்றோம்…? கும்பிடுவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கின்றது…? இதை யாரும் தெளிவாக நமக்குச் சொல்லவில்லை.

1.கஷ்டம் வந்தது என்றால் “அந்தத் தெய்வத்திடம் உன் குறைகளை எல்லாம் சொல்லிக் கேள்…”
2.மனம் உருகி நீ அழுது முறையிடும் பொழுது “தெய்வம் உனக்கு உதவி செய்யும்…” என்று தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

இப்போது நாம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம் ஈஸ்வரா என்றால் “ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான்…” அங்கிருந்து அவன் சிருஷ்டிக்கின்றான்…! என்று தான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் அந்த ஈஸ்வரன் யார்…?

ஓ…ம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… ஜீவன் உள்ளது…! என்று இப்படித்தான் எல்லோரும் வாதிடுகின்றார்கள்.

உதாரணமாக ரோட்டில் செல்கின்றோம். ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். நாம் பாசமாக இருக்கின்றோம் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது
1.நம் கண் அவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வுகள் அவன் வெளிப்படுத்துவதைக் கண் இழுக்கிறது
3.இழுத்துச் சுவாசித்தவுடன் உயிரிலே பட்டு நமக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… அடிபட்டு அவன் உடலில் வேதனையாகின்றது வேதனை தாங்காது அவன் அழுகின்றான். அவன் வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய “வெப்ப காந்தங்கள்” அது தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

“வேதனைப்படுகின்றானே…” என்று அவனைப் பார்த்தவுடனே அதே உணர்வலைகளை நம் கண் இழுத்து உணர்த்துகிறது.

உதாரணமாக இப்பொழுது நான் (ஞானகுரு) பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால்
1.இந்த மைக் நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுத்துக் கவருகின்றது
2.அதே போன்று தான் அந்த அடிபட்ட பையன் வேதனையான உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.நம் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கிறது… கண் அதைப் பார்க்கின்றது.
4.அந்த அலை பட்டாலும் கண் கருவிழி அதைக் படமாக்குகின்றது.
5.கண்ணில் இருக்கக்கூடிய காந்தம் அதை இழுக்கின்றது… இழுத்தவுடன் நாம் சுவாசிக்கின்றோம்.

நல்ல குணம் கொண்டு ரோட்டில் செல்கின்றோம் அப்பொழுது பையன் கீழே விழுகின்றான் பார்த்ததும் வேதனையான நிகழ்ச்சிகள் தெரிகின்றது.

அந்தச் சப்தத்தைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து நாம் நுகரும்பொழுது நமக்குத் தெரிய வைக்கிறது.
1.சுவாசித்தவுடன் அந்த வேதனையான உணர்வு உயிரில் பட்டு
2.அது ஜீவன் பெறுகின்றது. அதற்குப் பெயர் தான் “ஓ…”

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடியிலே நெருப்பை வைத்தால் கொதித்து… “ததாபுதா…!” என்று சப்தம் இடுகின்றது. தண்ணீர் தான்… ஆனால் அது சப்தம் போடுகின்றது.

காரணம்
1.கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியில் படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் பட்டவுடன்
2.அதை இழுத்து இந்தச் சப்தத்தைப் போடுகின்றது… இது இயற்கை…!

இங்கே எப்படிச் சப்தமிடுகின்றதோ இது போன்றுதான் அந்த உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட உடனே
1.அந்தப் பையன் வேதனைப்பட்டது… காந்த அலைகளால் கவரப்பட்டது
2.இங்கே பிரணவமாகி நமக்குள் ஜீவன் பெறுகின்றது.
3.நமக்கும் உடலில் வேதனையான உணர்ச்சிகளைத் தூண்டி உணர்த்துகின்றது.

அவன் அடிபட்டு வேதனையை “ஆ…!” என்று அலறி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். ஆனால் இந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது

நாம் கண்ணிலே பார்த்தாலும் அதை இழுத்துக் கவர்ந்து உயிரிலே பட்டபின் ஜீவன் பெற்று நமக்கும் அந்த வேதனையைத் தூண்டி “அடிபட்டு விட்டனே…!” என்று அவனைக் காப்பாற்றும்படி செய்கின்றது.

பாச உணர்வால் நாம் காப்பாற்றுவதற்குச் செயல்பட்டாலும் அவன் பட்ட வேதனை உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இது ஓ…!

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெருப்பைக் கூட்டி நீரைப் உற்றி அதில் எந்தச் சரக்கைப் போட்டு வேக வைக்கின்றமோ அது கொதித்து அந்த வாசனைகள் நீருடன் கலக்கிறது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது. பொருளை வேக வைத்தால் கரைந்து மற்றதோடு இணைகின்றது. இது போன்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வுகளைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.அந்த உணர்வுகள் அது பிரிந்து விடுகிறது.
3.வேதனையின் சத்து உமிழ் நீராக மாறி நம் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.

இது “ஓ…ம்” அதாவது
1.கண்ணுக்குப் புலப்படாத அந்தச் சக்தி உயிரிலே பட்ட பின் ஜீவனாகி
2.உடலுடன் சேர்த்து இரண்டறக் கலக்கப்படும் பொழுது ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய…
3.அவருடைய வேதனை நமக்குள் வந்த பின் அந்தச் சக்தி… சிவமாக… உடலாக… மாறி விடுகின்றது
4.சக்தியாக நம் உடலில் சேர்ந்து இயக்க ஆரம்பிக்கின்றது.

ஆக நாம் சுவாசித்ததை உயிர் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது… உடலுடன் ஐக்கியமாகி விடுகின்றது. ஓ… என்பது பிரணவம் ம்… உடலுக்குள் சேர்த்து பிரம்மமாகி விடுகின்றது.

வேதனையை உருவாக்கும் சக்தியாக உடலுக்குள் விளைந்து… அது உயிருடன் சேர்ந்து விட்டால் நம்மை அறியாமலே அடுத்து வேதனைப்படும்படி செய்யும்.
1.எதை எடுத்தாலும் வேதனை… எதை எடுத்தாலும் வேதனை… என்று
2.அந்த வேதனையான உணர்வுகள் உடல் முழுவதும் படர்ந்து அதையே பேச வைக்கும்.

ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?

 

நாம் எல்லாம் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்திருக்கிறோம் என்றால்… குருநாதர் என்னை ஆயுட்கால மெம்பராகச் சேர்ப்பதற்கு முன்னாடி இதையெல்லாம் வரிசைப்படுத்தி எனக்குள் உபதேசித்தருளினார். அதாவது
1.நாம் எப்படி வாழ்கின்றோம்…?
2.நம் வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பம் நம்மை எப்படி எல்லாம் பல இன்னல்களைக் கொடுக்கிறது…?
3.இதிலிருந்து எல்லாம் நாம் எப்படித் தப்ப வேண்டும்…? என்பதை உணர்த்தினார்.

அதன் வழிப்படி துருவ நட்சத்திரம் என்பது அகஸ்தியன் துருவனாகி அவர்கள் திருமணமான பின் அவர்கள் இரு மனமும் ஒன்றாகித் துருவத்தின் நிலையை எண்ணி ஏங்கி அந்த ஆற்றலைப் பெற்று… அவர்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி அவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று…
1.எந்தத் துருவத்தின் எல்லையை அது குறியாக வைத்து
2.அதனின்று வரும் உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கின்றனரோ
3.இந்த மனித உடலுக்குப் பின் கடைசி நிலை அது பிறவியில்லா நிலை.
4.தங்கள் உடலில் உள்ள நஞ்சுகளைக் கரைத்து விட்டு
5.எத்தகைய நஞ்சினையும் கரைத்து ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் ஆனார்கள்.

அதிலே தான் நாம் அங்கத்தினராகச் சேர்ந்திருக்கிறோம். இனி பிறவியில்லா நிலை என்ற நிலை அடைவதற்குத் தான் ஆயுட்கால மெம்பராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றதோ அதே போல் நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை நீக்கி இந்த வாழ்க்கையிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று நமது உடலில் தீமைகள் புகாது பாதுகாத்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த அந்த அருளை நமக்குள் பெருக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது நாம் தியானிக்கும் முறைகள்.
3.குரு வழி வகுத்த இந்த முறைப்படி நாம் நடந்தோம் என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.

ஆகவே நாம் இதை முழுமையாகக் கடைப்பிடித்தல் வேண்டும். ஆக ஆயுள் கால மெம்பராக எதிலே சேர்த்திருக்கின்றோம்…?

இப்பொழுது இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் நாம் இந்தத் தியானத்தில் கொடுத்த சக்தியின் துணை கொண்டு தீமைகளை வராதபடி அதை மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தனக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் நாம் அதை கடைப்பிடித்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமையைக் கண்டுணர்ந்தால் அடுத்த நிமிடமே ஆத்ம சக்தி செய்து கொண்டால் இதற்குப் பெயர் “நரசிம்ம அவதாரம்…” அந்த ஞானிகள் உணர்வுகளை இவ்வாறு சேர்த்துக் கொண்டே வந்தால் தான்
1.உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றாலும்
2.வேறு எந்த ஒரு உடலின் ஈர்ப்பிற்கும் செல்லாதபடி உயிரான்மா ஒளியின் சரீரம் பெறும்… இது உறுதி.

இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு நஞ்சு கலக்காது நாம் செயல்படுவதே யாம் சொல்லும் ஆத்ம சுத்தியின் நோக்கம்.

வாழ்க்கையில் வேதனை தாக்கப்படும் பொழுதெல்லாம்… ஆத்ம சுத்தியைக் கூடக் கொஞ்ச நேரம் செய்து அதைச் சுத்தப்படுத்திக் கொண்டால் நஞ்சினைப் பிளந்து அருள் உணர்வினை வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் உணர்வுகள் விளைந்து உடலில் இருந்து வெளியேறும் போது
1.அது ஒளியின் உணர்வுகளாகக் கல்கியின் அவதாரமாக உயிர் பெறுகின்றது
2.நம் உடலின் உணர்வுகள் அதனுடன் இணைகின்றது
3.என்றும் அழியாத சரீரமாக மகிழ்ச்சி கொண்ட உணர்வுகள் உயிருடன் ஒன்றிப் பெரு வீடு பெரு நிலை அடைய முடியும்.

இது தான் “சகஜ மார்க்கம்” என்று ஞானிகள் சொன்னார்கள்.

சகஜ மார்க்கம் என்றால் வாழ்க்கையில் எப்பொழுது துன்பங்கள் வருகின்றதோ… அந்த நேரத்தில் எல்லாம் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் நிலையாக “உன்னை நீ தகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான்…!”

அதற்குத் தான் “விநாயகர் தத்துவம்” என்று கொடுத்தார்கள். அந்த ஞானி காட்டிய உணர்வைத் தனக்குள் வளர்த்து ஒவ்வொரு நிமிடமும் சதுர்த்தி…! தீய வினைகளை தனக்குள் வளராது அதை நிறுத்தி மெய் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்ப்பிக்கும் நிலையே “விநாயகர் சதுர்த்தி” என்பது.

இதையெல்லாம் நீங்கள் அவசியம் பழகிக் கொள்ள வேண்டும்.

மெய் ஞானிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் வளர்ந்து… உலகில் படர்ந்துள்ள இருள் சூழ்ந்த நஞ்சான உணர்வுகளை நீக்கிட உங்கள் மூச்சலைகள் பயன்பட வேண்டும்.

ஆகவே அந்த ஆற்றல்கள் உங்களில் விளைய வேண்டும்… உங்களுக்கு அது கிடைக்க வேண்டும்… என்று சதா நான் தியானிக்கின்றேன். நீங்களும் இதே போன்று
1.மகரிஷிகளின் அருள் ஒளியை நான் பெறுவேன்
2.என்னை அறியாத வந்த இருளை நீக்குவேன்
3.மெய்ப் பொருளைக் காணுவேன்… மெய் வழியில் செல்வேன்
4.மெய் உணர்வுடன் என் வாழ்க்கையை வழி நடத்துவேன்
5.வாழ்க்கையில் வரும் இருள்கள் நீங்கி நோயற்ற வாழ்க்கையாகவும் மெய் உணர்வினைப் பெறும் பாக்கியமாகவும் அடைவேன்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறுவேன் என்று இதனைச் சபதம் ஏற்று
7.இதன் அடிப்படையில் உணர்வுகளைச் செயல்படுத்தி நினைவினை இயக்கிப் பாருங்கள்..!

ஒரு வீடு கட்ட நாம் பிளான் செய்து அதை நினைவில் கொண்டு அதே வேலையாக இருந்து அந்த வீட்டை எப்படிக் கட்டி முடிக்கின்றோமோ… புதிதாக வேலைக்குச் சேர வேண்டும் என்றால் பல இடங்களுக்குச் சென்று பல பேரை நாம் சந்தித்து அந்த வேலையை வாங்கி நாம் அங்கே சென்று எப்படி அமர்கின்றமோ… அதே போன்றுதான்
1.இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெறுவேன்
2ஒவ்வொரு நொடியிலும் மகரிஷியின் அருள் சக்திகளைப் பெற்று அறியாது வரும் இருளை நீக்குவேன்
3.மெய் உணர்வுகளை வளர்த்து ஒளியின் சரீரமாக இந்தச் சரீரத்தை ஆக்குவேன் என்ற உறுதி கொள்ளுங்கள்

அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு). குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானி அணுவைப் பிளந்து அந்த ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அதனை அடக்கி வெடிக்கச் செய்யும் பொழுது உலகை அழித்திடும் நிலையாக அணு குண்டாக வருகின்றது.

ஆனால் நம் ஆறாவது அறிவு கொண்டு
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை எடுத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இருள் சூழ்ந்த நிலையைப் பிளந்து உடலுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
3.என்றும் ஒளிச் சுடராகத் தன்னுடன் அணைத்துச் செல்லும்.

இரும்போ மற்ற உலோகங்களோ மரமோ கல்லோ மண்ணோ இவை அனைத்துமே கதிரியக்கச் சக்தியின் துணை கொண்டு தான் வீரிய உணர்வைத் தனக்குள் கவர்ந்து அது வளரச் செய்கின்றது.

ஆனால் விஞ்ஞான அறிவால் அணு குண்டை உருவாக்கும் போது அணுவைப் பிளந்து… “ஹைட்ரஜன்” நீருக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து அதனின் (ஹைட்ரஜன்) துணை கொண்டு இதனை அடக்கி அதனுடன் ஒருக்கிணைந்து வெடிக்கச் செய்யும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வேகமாக எல்லாவற்றிலும் ஊடுருவுகிறது.

சக்தி வாய்ந்ததாக உள்ள இரும்பாக இருந்தாலும் சரி… மற்ற உலோகங்களாக இருந்தாலும் சரி… அதற்குள் ஊடுருவி அந்த உலோகத்திற்குள் இருக்கும் கதிரியக்கங்களுடன் ஒன்றிணைந்து கொள்கின்றது.

இணைந்த பின்
1.அதே இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அந்த உலோகங்கள் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.
2.கதிரியக்கத்தால் ஈர்க்கப்பட்டு விளையச் செய்த கல்லும் மண்ணும் அதுவும் ஆவியாக மறைந்து விடுகிறது.

அதே போல்
1.எதனின் உணர்வால் கல்லின் மண்ணின் சத்தைத் தாவர இனங்கள் கவர்ந்ததோ
2.அந்தக் கதிரியக்கச் சக்தியின் காந்த செல்கள் வெடித்தவுடன் தன் இனத்துடன் கலந்து
3.அதனால் கவரப்பட்ட அனைத்துமே தரைமட்டமாகி விடுகின்றது.

வெடித்த பின் அந்த கதிரியக்க செல்கள் மனித உடலுக்குள் பட்ட பின் நெகட்டிவ் பாசிட்டிவ் (-/+) என்ற நிலைகள் கொண்டு “தசைகள் அனைத்தும் கருகி…” காந்தப் புலனின் செயல்கள் ஒன்றிணைந்து விடுகின்றது.

ஆனால்
1.இது அனைத்தும் நம் உயிரைத் தொட முடியாது
2.உடலுக்குள்… உணர்வுக்குள் இருப்பதைத் தொடலாம்
3.உயிரின் நிலைகள் தொடும் ஆற்றல் அணுக் கதிரியக்கத்திற்கு இல்லை.

எந்த அணு குண்டு வெடிப்பால் கதிரியக்கங்கள் நம் தசைகளுக்குள் பாய்ந்ததோ தசைகள் வெந்து வேதனைப்படும் உணர்வுகளாக வருகிறது. தசைகளில் விளைந்த வேதனை உயிருடன் சேர்த்த பின் எப்பொழுதும் வேதனையாகவே இருக்கும்.

உயிரிலே இயக்கப்படும் இந்த வேதனை அடுத்து வேதனைப்படும் சரீரங்களாக விஷம் கொண்ட உயிரினமாக… விஷத்தை உணவாக எடுக்கும் அத்தகைய உடல்களிலே புகுந்தால் தான் இது அடங்கும்.

இல்லையென்றால் அந்த அணுக்கதிரியக்கத்தின் வேகம் வீசிய பின் இறந்த பின் உயிரின் தன்மைகள் சதா வேதனையிலேயே இருக்கும்.
1.வேதனை வென்றிட்ட அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்தால் ஒழிய அதை நீக்கவே முடியாது
2.ஆகவே மனிதனாகப் பிறந்த நாம் மெய் ஞானிகள் உணர்வை நாம் பருக வேண்டும்
3.உங்களை அறியாது வந்த தீயவினைகள் நீக்கிட வேண்டும்
4.மெய்ப்பொருளின் உணர்வுகள் உங்களுக்குள் வளம் பெற வேண்டும்

அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றல் மிக்க நிலைகளை கண்டு கொண்ட விஞ்ஞானியைப் போன்று மெய் ஞானிகள் அணுவைப் பிளந்து… மனித உடலுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து… அந்த அணுவின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி…
1.அணுவால் ஈர்க்கப்பட்ட தசைகளுக்குள் சேர்ந்த நஞ்சினை வென்று
2.உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவர்களே அருள் ஞானிகள்

அத்தகைய மெய் ஞானிகளின் ஆற்றலை எனது குருநாதர்… நமது குருநாதர்… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் புகுத்திக் கொண்டிருக்கின்றேன்.

அந்த மெய் ஞானிகளைப் போன்று நீங்களும் ஆக வேண்டும் என்று இச்சைப்படுகின்றேன். அந்த இச்சைகளை நான் கவர்ந்தால் எனக்குள் அது வளர்கின்றது.

அதனால்தான் மணிக்கணக்கில் இடைவிடாது தொடர்ந்து உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றேன். எதை உங்களுக்கு உபதேசித்தேனோ அந்த உணர்வினை எனக்குள் கவர்ந்து கொள்கின்றேன்.

அதே சமயத்தில் இந்த உபதேசத்தினைக் கூர்ந்து நீங்கள் கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் இருக்கும் உயிரின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் கவரப்பட்டு… உங்கள் உடலுக்குள் ஈர்க்க்கும்படி செய்து ஊழ்வினை என்ற வித்தாகவும் பதிவு செய்கிறேன்.

இந்தப் பதிவை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் இருக்கும் தீய வினைகளைப் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும் என்ற “இந்த நம்பிக்கையில் தான் உங்களுக்குள் சொல்கிறேன்… நீங்கள் இதை எடுத்துப் பாருங்கள்.

மனித வாழ்க்கை என்பது உடல் நமக்குச் சதம் அல்ல
1.நமக்குச் சதமான உயிரைப் பிடித்துக் கொள்ளுங்கள்…
2.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று உங்கள் உயிரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள்
3.உங்களை ஆள்வதும் அவனே…
4.எண்ணியதை இயக்குவதும் உயிரே…
5.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே…
6.எண்ணியதை எல்லாம் உடலிலே விளையச் செய்வதும் உயிரே…
7.விளைந்ததின் உணர்வைத் தனக்குள் எடுத்துச் செல்வதும் உயிரே…
8.எடுத்துக் கொண்ட உணர்வுக்கு ஒப்ப உடலாக்குவதும் உயிரே…!
9.நம்மை ஆள்பவனும் இந்த உயிரே…!

இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எண்ணும் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததோ…
1.எந்த ஞானியின் உணர்வை நமக்குள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ
2.அதை ஜீவனாக்கி.. அந்த உணர்வின் தன்மை உடலாக்கி… ஒளியான அணுக்களாக உருவாக்கி
3.அதனின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக நம்மை ஆக்கக் கடமைப்பட்டிருக்கின்றான்… உயிர்…!

நாம் எண்ணியதைத்தான் உருவாக்கிக் கொடுக்கின்றான் காரணம் உயிரின் வேலை கொடுப்பதைச் சமைத்து உருவாக்குவது தான்.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்த ஞானிகள் உணர்வைக் கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத்தான் நம்மை அடுத்த நிலைக்கு அவன் உயர்த்துவான்…!

நம்மை வளர்ததவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கிறோமா…?

 

உதாரணமாக நமது குடும்பத்தில் இருப்போர் (மூத்தவர்கள்)) அனைவரும் நமக்கு நன்மை செய்துள்ளார்கள். அந்த நன்மை செய்த பின் நாம் அந்த நன்மை செய்தவரை எண்ணும் பொழுது எப்படி எண்ணுகின்றோம்…?

அவரால் நான் பாதுகாக்கப்பட்டேன்… எனக்கு எல்லாம் நல்ல வழி வகுத்துக் கொடுத்தார் என்று நாம் ஏங்குகின்றோம். ஆனால் அவர் அந்த உடலை விட்டுப் பிரிந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படிச் செலுத்துகின்றோம்…?

1.இப்படி எனக்கு எல்லாம் உதவி செய்தார்.
2.நோயோடு வாடும் பொழுது… “நல்ல மனிதன் இப்படி நோயோடு வாடுகின்றார்…” என்று. இந்த உணர்வைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
3.ஆனால் உடலை விட்டு அவர் பிரியப்படும் பொழுது நல்ல மனிதன் போய் விட்டாரே என்று வேகமாக எண்ணும் பொழுது
4.அவருடைய உணர்வு நமக்குள் வேதனைப்படும் காலத்தில் நமக்குள் இருப்பதனால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது.
5.நல்லது செய்தார்… ஆனால் உடலை விட்டுப் பிரியும் போது அவருடைய பக்குவ நிலையை நாம் இழுக்கப்படும் போது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

ஆனால் அவர் கடைசியில் எந்தக் கஷ்டத்தைப் பட்டாரோ அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளர தொடங்கி விடுகின்றது.

ஆகவே அவரை எங்கே இழுக்கின்றோம்…?

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினாலும்… நமது அறியாமை பண்பும் அன்பும் பரிவுடன் நாம் எண்ணும் பொழுது அவருடைய ஜீவன் பிரியப்படும் பொழுது நம்முடைய வேகமான உணர்வுடன் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

1.ஆனால் நம் உடலுக்குள் வந்த பின் நம் உடலில் அது கவரப்பட்டு நமக்கும் அவரின் நோய் வரத் தொடங்கி விடுகின்றது.
2.நோயின் உணர்வு நமக்குள் வரும் பொழுது அவருடைய ஆன்மா நமக்குள் இருந்து விஷத்தை வளர்த்து
3.நாம் இறந்தபின் மனித உடலுக்குள் செல்லாதபடி விஷத்தின் தன்மை கொண்ட மிருக உடல்களுக்குள் அவரை அழைத்துச் சென்று விடுகிறது.

மாடு ஆடு என்று இவையெல்லாம் தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்கு: அதனதன் விகிதாச்சாரப்படி விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்கின்றது.

மானோ யானையோ மாடோ புலியோ நாயோ நரியோ இவையெல்லாம் அதனதன் உணர்வுக்கொப்ப அதன் விகிதாச்சாரப்படி அந்த உறுப்புகளை எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப அந்த விஷத்தின் இயக்கத்தினால் அதன் ரூபங்கள் உருவாகின்றது.

உயிரால் உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் பொறிகள் உருவாக்கப்பட்டு அதன் வழி அந்த உடல்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது…? என்பதனை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே இவ்வழியில் தெளிந்து கொண்ட பின்னும் இப்பொழுது நமக்கு நன்மை செய்தார்கள் என்றால் நமக்காக நன்மை செய்தார். இனி இவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?

அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது அந்த நோயின் தன்மையால் வேதனைப்படுகின்றாரே…!
1.இதிலிருந்து விடுபட்டு இனி அவர் ஆனந்த நிலை அடைய வேண்டும்.
2.அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக மீண்டும் பிறவிக்கு இழுத்துச் சென்று நமக்குள் அந்த வேதனை உணர்வு உருவாக்கப்பட்டு நாம் இறந்தபின் மனிதனல்லாத உருவை உருவாக்கத்தான் பயன்படுத்த முடிகிறது. அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செயல்படுத்த முடியவில்லை.

மௌனமாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா எல்லோருக்கும் நன்மை செய்திருந்தாலும்
2.அவர் கேட்டறிந்த விஷத்தின் தன்மை அந்த உடலிலிருந்தாலும்…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
5.இனி துயரமே இல்லாத நிலையாக என்றும் ஏகாந்த நிலை அடைய வேண்டும் என்று அவரை உந்தித் தள்ள வேண்டும்.
6.அது தான் ஞானிகள் காட்டிய முறை.

பிறருக்கு உதவி செய்து தன் துயரத்தின் தன்மை தனக்குள் எடுத்து நோயாகிப் பிரிந்து சென்றாலும் இனி அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று யாராவது எண்ணுகின்றோமா…? யாரும் எண்ணுவதில்லை.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பற்றுடன் இருந்தால் “ஐய்யய்யோ இவ்வளவு நாள் எல்லாம் கொடுத்தாயே… இப்படிப் போய்விட்டாயே… இவ்வளவு சொத்தையும் வளர்த்தாயே… என்னைக் கண்காணித்தாயே…!” என்ற நிலையில் அழுகப்படும் பொழுது யார் அதிகமாக எண்ணுகின்றாரோ அவர் உடலில் அந்த ஆன்மா வரும்.

அந்த உடலுக்குள் வந்தால் மீண்டும் அந்த உடலை வீழ்த்திவிட்டு அந்த விஷத்தின் தன்மை ஓங்கி வளர்ந்த பின் மீண்டும் பாவ நிலையான மனிதனல்லாத உடலைப் பெறுகின்றது.

இப்படித்தான் நம்மை அறியாதபடி நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்த வேண்டும். அதற்குத்தான் தெளிவாகச் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே… அகஸ்திய மாமகரிஷி விண்ணுலக ஆற்றலைத் துருவத்தின் வழியாக நுகர்ந்து தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி அவர் எவ்வாறு விண் சென்றார்…? என்பதை குருநாதர் எனக்கு உபதேசித்தார்.

1.அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.

இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்.

ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று
2.நேரடியாகக் காட்டி அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.

அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

அதனைப் பெறும் தகுதியாக…
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.

27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்” நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.

எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.

அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.

அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.

தன் எண்ணத்தின் வலு என்றால்… உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அமைத்துக் கொள்கின்றது.

அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் “மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதையும் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைத்து தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்று
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஒளி சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் இணைக்கச் செய்கின்றோம்.

அதற்காக வேண்டி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உபதேசித்து
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்து
5.நல்வினைகளை ஓங்கச் செய்து அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் உங்களை இணையச் செய்து கொண்டுள்ளோம்,

புத்தாடை

 

ஒருவன் தீமை செய்வதைக் கண்களால் பார்க்கின்றோம் தீமை செய்பவனைப் பார்க்கப்படும் பொழுது கண்கள் கூர்மையாகப் பார்க்கின்றது. அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றது. அவன் செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல குணங்களைக் கொல்கிறது.

நமது வாழ்க்கையில் அறிந்து கொள்ள நம் எண்ணங்களைச் செலுத்துகின்றோம். நோயோடு வாடுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம். கேட்டு உதவி செய்கின்றோம்… இதே கண்களால் தான்…!

1.கண்கள் கொண்டு பார்த்து உதவி செய்தாலும் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தே விடுகின்றது.
2.நம் உடலுக்குள் சேர்ந்த பின் பூராம் நரகாசுரனாக மாறி விடுகின்றது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று பார்த்து உணர்ந்து நுகர்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் “திருடனைப் போன்று” அந்த வலிமை புகுந்து நம் நல்ல குணங்களைக் கொன்று குவிக்கின்றது.

நரகாசுரனைக் கொன்ற நாள் எது…? தீபாவளி.

தீமை என்ற உணர்வைத் தெரிந்து தீமையை நுகர்ந்ததனால் நமக்குள் இத்தனை நோய்கள் வந்தது… அதைக் கண்களால் பார்த்தோம்.
1.அதே கண்களால் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
2.அந்தக் காலையில் 4 மணிக்கு எண்ணப்படும் பொழுது
3.கண்ணுற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து
4.நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் ஜீவணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பாய்ச்ச வேண்டும்.

யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் தொழில்கள் வளம் வர வேண்டும் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அன்றைக்கு முழுவதுமே இப்படிச் சொல்ல வேண்டும்.

இப்படி நமக்குள் தீமைகளை மறந்து செயல்பட்டால்
1.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை காலை 6 மணிக்கெல்ல்லாம் சூரியன் அதை எடுத்துச் சென்று விடுகின்றது.
2.பரமாத்மாவில் உள்ள அசுர குணங்களும் மாற்றப்படுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட அருள் உணர்வுகள்… எல்லோரும் அன்புடன் பண்புடன் இருக்கப்படும் பொழுது நம் ஆன்மாவிலே அன்பு கொண்ட புத்தாடையாகின்றது.

தீமைகளை நீக்கி நல்ல உணர்வு கொண்டு நமது வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்று தான் இந்த புத்தாடை அணியும் நிலையைக் காட்டுகின்றார்கள்.

நாம் துணிகளைப் புதிதாக அணிவதல்ல…!

தீமைகளை நீக்கும் துருவ நட்சத்திரத்திண் உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி… நமக்கு அது புத்தாடையாகி பகைமை உணர்வு வராதபடி நம்மை எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும்…? நாம் எப்படி மற்றவர்களைப் பார்க்க வேண்டும்…? என்பதற்காகத்தான் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.

நாம் அதை எல்லாம் மறந்திருக்கின்றோம் விஞ்ஞான உலகால் உலகம் அழியும் தருணத்தில் நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் காட்டிய நெறிகளைப் பின்பற்றினால் வரும் விஷத் தன்மைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ளலாம்.

வருடம்தோறும் ஒவ்வொரு மாதத்திலும் விழாக் காலங்களில் அருள் உணர்வுகளைப் பெருக்கிப் பாருங்கள்.
1.உடலுக்குள் இருக்கும் பகைமைகள் மாறுகின்றது.
2.இந்த காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய தீமையான உணர்வுகளும் தூய்மையாக்கப்படுகின்றது
3.எல்லோரும் இதை செயல்படுத்தும் பொழுது பரமாத்மா பரிசுத்தம் அடைகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எல்லோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) பூரண ஆசீர்வாதம் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலமாக வேண்டும் பிள்ளைக்குத் திருமணமாக வேண்டும் தொழில் சீராக வேண்டும் என்று
1.உங்களுக்கு எது நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை மனதில் எண்ணி ஆசி பெறுங்கள்.
2.சிந்தனைகளைச் சிதற விட்டுப் பல பல கோரிக்கைகளை வைக்காதீர்கள்.

எம்மிடம் வருகின்றீர்கள் என்றால்… என் பிள்ளைக்குத் திருமணம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று மனதில் எண்ணி இப்படிக் கேளுங்கள். “அதைக் கொடுத்து விடலாம்…”

அடுத்த முறை வரும் பொழுது இன்னொன்றை நீங்கள் கேட்கலாம்…!

ஆனால் ஒன்றைக் கொடுத்த பின் மொத்தமாக எல்லாத்தையும் கேட்க ஆரம்பித்துச் சொல்ல ஆரம்பித்தால்
1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது
3.சம்பாதிக்கிற பணம் செலவழிந்து கொண்டிருக்கின்றது
4.வியாபாரம் நஷ்டமாகிக் கொண்டே வருகின்றது என்று இப்படி வரிசையில் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

நான் எதற்கு ஆசி கொடுப்பது… எதற்குப் பதில் சொல்வது…?

எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஆசி கேளுங்கள் அதே போல் எங்கள் தொழில் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். அதற்கு நல்ல ஆசி வேண்டும் என்று கேளுங்கள்.

இது எல்லாம் வாக்கு தான்…!

திட்டியவர்களைப் பதிவு செய்கின்றோம் திருப்பி எண்ணும் பொழுது “திட்டினான்… திட்டினான்…” என்று வருகிறது.

நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாக்காகப் பதிவு செய்கின்றேன்.
1.அதைத் திரும்ப நீங்கள் எண்ணினீர்கள் என்றால்
2.அதே மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் வேலை செய்யும்
3.ஏனென்றால் நான் சதா தியானம் இருந்து கொண்டே இருக்கின்றேன்

ஒருவர் ஒரு தரம் திட்டிவிட்டார் என்றாலும் அடுத்து அதை யாரிடம் சொன்னாலும் மீண்டும் மீண்டும் சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார். அந்த அலைகளை அவர் பரப்பிக் கொண்டே இருப்பார்.

பதிலுக்கு நீங்களும் அவர்களை அடிக்கடி நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்பீர்கள். நீங்களும் இந்த எண்ணத்தை பரப்பிக் கொண்டே இருப்பீர்கள்
1.அவருடைய நினைப்பு உங்களிடம் வளர்கின்றது
2.இரண்டும் கலந்து பேசிக் கொண்டே இருக்கும்.

இதே போன்றுதான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “எந்தெந்த வகையிலோ தந்திரமாக உங்களுக்குள் நுழைய வைக்கின்றேன்…”

அதைப் பெற வேண்டும் என்று திரும்ப எண்ணி விட்டீர்கள் என்றால் அதை நீங்கள் பெருக்கிக் கொள்கின்றீர்கள் உங்களிடம் கோபப்படச் செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதை அது கொஞ்சம் அடக்குகிறது.

உங்கள் சொல்லே உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.

1.எந்த எந்த வகையிலோ உங்களுக்குத் தெரியாமலே கஷ்டம் எப்படி வருகின்றதோ அதே போலத்தான்
2.உங்களுக்குத் தெரியாமலேயே கஷ்டத்தை நீக்க கூடிய சக்தியை கொடுக்கின்றோம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் யாரைப் பார்த்தாலும் “உங்கள் பார்வையால் அவர்கள் கஷ்டம் விலக வேண்டும்…” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

அந்தச் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்… பரப்புகின்றேன்…!

ஆகையினால் கூடுமான வரையில் அடுத்தவருடைய கஷ்டங்களையோ குறைகளையோ எடுத்துப் பேசாதீர்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பழகுங்கள்.

எங்கேயாவது ஏதாவது குறை நடந்தது என்றால் அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணுங்கள். ஏனென்றால்
1.முந்திப் பதிவு செய்த குறையான உணர்வுகள் இருக்கும்
2.அது எல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் மனது நிறைவு பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.இதைத்தான் நாம் சொல்ல வேண்டும்… பெருக்க வேண்டும்.

குறையைக் கண்டு… பார்த்து… பேசி… அதையே வளர்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படியே விட்டு விட்டால் அந்தக் குறை நமக்குள் வளர்ந்து கொண்டே வரும் குறையை இயக்குவதற்குண்டான தூண்டுதலாக நமக்குள் வளர்ந்துவிடும்.

இது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி என்று வளர்த்துக் கொண்டே வர வேண்டும் நீங்கள் அனைவரும் அதைப் பெறுவீர்கள் என்று பிரார்த்தனை செய்கின்றேன் (ஞானகுரு).

உயிரின் இயக்கம்

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் நமது உயிரை ஈசனாக மதித்து உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குரு என்ற நிலையில் மதித்தல் வேண்டும்.

ஓம் என்றால்…
1.நமது உயிர் ஓ என்று இயங்கிக் கொண்டே உள்ளது.
2.நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்த்து எல்லாம் நமது உயிரில் மோதும் பொழுது ஓ என்று அந்தக் குணங்கள் இயங்கி
3.அந்தக் குணத்தின் உணர்வுகள் ம் என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

ஆதாவது ஓம் நமச்சிவாய…! நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரைப் போன்று ஜீவ அணுவாக மாற்றி அணுவின் மலம் நம் உடலாக சிவமாக மாறுகின்றது.

.இப்பொழுது நாம் எத்தனை வகை குணங்களை நுகர்ந்து அறிகின்றோமோ அறிய உதவுகின்றது…
1.உணர்வு அந்தந்த நிலைக்கொப்ப குணங்களுக்கொப்ப அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் இயக்கினாலும் அந்த உணர்வின் தன்மை அணுவாக அந்தக் குணத்தை வளர்க்கும் சக்தி பெறுகின்றது..

ஒரு செடியில் வித்து உருவானால் நிலத்தில் அதை ஊன்றினால் எந்தச் செடியில் அது விளைந்ததோ அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய சத்தை இந்த வித்து நுகர்ந்து செடியில் விளைந்த வித்தைப் போல பல வித்துக்கள் உருவாகி அதன் செடிகளை உருவாக்கும்.

அதைப் போன்று ஒருவன் கோபப்படுகிறான் என்ற உணர்வை உற்றுப் பார்த்தால் நமது கருவிழி ருக்மணி நமது விலா எலும்புகளில் ஊழ் வினை என்ற வித்தாக பதிவாக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ
1.அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நமது ஆன்மாவாக மாற்றி
2.நம் உயிரிலே மோதும் போது அவன் கோப்த்தின் உணர்வு எதுவோ அதே போல அந்தக் கோப உணர்வுகள் நம் உயிரிலே மோதும் போது
3.அந்தக் கோபத்தைச் செயல்படுத்தும் உணர்ச்சிகளாக நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
4.கோபித்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி ம் என்று உடலாக அமையும் சந்தர்ப்பம் வருகின்றது.

காரணம் அது உமிழ் நீராக மாறும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுடன் கலக்கப்படும் பொழுது
1.அவன் எப்படிக் கோபித்தானோ அதே போல நாம் ஆகாரத்திற்குள் கார உணர்ச்சிகளை உருவாக்கி “அதன் உணர்வுகள் இரத்தமாக மாறுகின்றது…”
2.இப்படித்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உயிர் நம் சுவாசித்ததை எல்லாம் இரத்தமாக அணுக்களாக உடலாக மாற்றிக் கொண்டே வருகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் முதல் நாள் கடைகளுக்குச் சென்று சாம்பில் (SAMPLE) காண்பித்து அதை வைத்து “ஆர்டர்” எடுக்கின்றோம்.

சரக்கு நன்றாக இருக்கிறது. ஆகவே காண்பித்த சாம்பில் பிரகாரம் இத்தனை பண்டல் சரக்கைக் கொண்டு வந்து கொடுங்கள்…! என்று கேட்கின்றார்கள்.

ஆர்டர் பிரகாரம் மறு நாள் நாம் சரக்கைக் கொண்டு செல்கிறோம். ஆனால் நம் நினைவுகள் எங்கே இருக்கின்றது…?
1.ஆர்டர் கொடுத்த கடைக்காரரிடம் இருக்கின்றது.
2.இவ்வளவு விற்றால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று அந்த மகிழ்ச்சியான சிந்தனையிலே சென்று கொண்டிருக்கின்றோம்.

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது… ரோட்டிலே நாம் கடந்து செல்லும் பாதையிலே… ஒரு கண்ணாடி பாட்டில் உடைந்து எண்ணை எல்லாம் சிதறிக் கிடக்கிறது… அதைப் பார்த்து விடுகிறோம்.

பார்த்தவுடன்… “காலில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்…! என்று நமக்குள் பதட்டமாகி… அறிவு கெட்ட நாய்கள்…! இப்படி நடுரோட்டில் பாட்டிலை உடைத்து போட்டுவிட்டுச் சென்று விட்டார்களே…” என்று பேச ஆரம்பிக்கின்றோம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் பார்த்தவுடன் அந்த உணர்வு என்ன செய்கிறது…? காலில் குத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும்…! என்று அந்த வேகம் வருகிறது.

ஆனால் தாண்டி விட்டோம்… காலில் அடிபடவில்லை…! இருந்தாலும் அதைப் பார்த்த மாத்திரத்தில் “உலகமே கெட்டு விட்டது…! நடு ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்திருக்கின்றான் பார்…!” என்று சொல்ல ஆரம்பிக்கின்றோம்.

1.அந்த இடத்தில் நம் கண்கள் “இது கெட்டது…!” என்று உணர்த்துகின்றது.
2.அதைத் தான் கண்கள் (கண்ணன்) உபதேசம் செய்கிறான் என்று காட்டுகிறார்கள் (கீதா உபதேசம்).

எண்னணெய் சிந்தியிருக்கிறது… கண்ணாடி காலில் குத்திவிடும். அதனால் அதை ஒதுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு யார் அவ்வாறு செய்தார்களோ அவர்களுக்குப் பரிகாரமாக நல்லது வர வேண்டும் என்று எண்ணினால் “இது நல்ல சிந்தனை…”

ஆனால் அதற்குப் பதிலாக “அறிவு கெட்டதனமாகப் போட்டிருக்கின்றார்கள் பார்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?
1.கெட்டதை நீக்கச் சொல்லித் தான் கண்ணன் (கண்கள்) வழிகாட்டுகிறது.
2.ஆனால் கெட்டதைத் தான் (அறிவு கெட்டதனமாகச் செய்தார்கள் என்று) நாம் எடுத்துக் கொள்கின்றோம்.
3.வியாபாரத்தை எண்ணி மகிழ்ச்சியாகச் செல்லும் பொழுது “காலில் குத்தியிருந்தால் நம் காரியம் தடைப்பட்டிருக்குமே…” என்று இதைத்தான் நினைக்கின்றோம்.

ஆனால் அந்தக் கெட்டதை நீக்குவதற்கு மனது வருகின்றதா…! கீதையிலே கண்ணன் இதை எல்லாம் தெளிவாகச் சொல்கிறான்.

எப்படி…?

அவன் (பாட்டிலைப் போட்டவன்) அயோக்கியத்தனம் செய்தான் என்ற எண்ணத்தை நாம் எடுக்கும் போது உதைக்க ஆரம்பிக்கின்றான். அரச தண்டனையாக நமக்குள் மாறுகின்றது (உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சி).

பொதுவாக நாம் எடுத்துக் கொண்ட குணத்தின் தன்மை நல்ல குணமாக இருந்து ஆட்சி செய்கின்றது. இருந்தாலும்…
1.இந்தச் சந்தர்ப்பம் எடுத்துக் கொண்ட எண்ணம் நீ இப்படியா செய்கின்றாய்…? என்று
2.“அது நோயாக மாறுவதற்கு” “அரச தண்டனையாக” அமைந்து விடுகிறது.

எடுத்த எண்ணம் அரசனாக ஆனாலும் அதை இயக்கக்கூடியது குரு… “குருக்ஷேத்திரம்” என்று காட்டுகின்றார்கள். இங்கே அந்தக் கேட்டதை நினைக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை என்னை இயக்குகிறது என்றால் ஈஸ்வரா…! குருக்ஷேத்திரத்தில் உயிரை எண்ணி அவனிடம் (நல்லதை) கேட்க வேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…?
1.உனக்குள் அனைத்தையும் இயக்கும் உயிர் குருவாக இருக்கின்றான்
2.அவனிடத்தில் நீ முறையிடு…!

கண்ணின் உணர்வின் இயக்க நிலைகளை அன்று வியாசகர் இப்படித் தெளிவாக உணர்த்தி உள்ளான்.

குருக்ஷேத்திரப் போரில் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகின்றது. ஈசன் அதைத் தடைப்படுத்துகின்றான்.

நாளைக்கு இந்தத் தவறு நடக்காதபடி
1.அவனுக்கு (பாட்டிலை உடைத்தவன்) நல்ல சிந்தனைகள் வரவேண்டும் என்று இங்கே நிலை நிறுத்தினால்
2.குருக்ஷேத்திரப் போரில் இது அரசனாக வந்து விடுகிறது.
3.அப்போது தீமைகள் உள்ளே புகாதபடி அந்தத் தீமைக்குத் தண்டனை கொடுத்து விடுகின்றான்.

ஆனால் அதற்குப் பதிலாக நாம் இங்கிருந்து “அறிவு கெட்டதனமாகச் செய்கிறான்…!” என்று சாபமிட்டு அவனை எண்ணும் பொழுது இந்த உணர்வு அரசாட்சியாகி நல்லதைக் கெடுக்கின்றது.

1.நான் சொல்கிறேன்… நீ அயோக்கியத்தனம் செய்து விட்டாய்…! என்று
2.உடலுக்குள் அது நோயாக மாற்றி விடுகின்றது… தண்டனை ஆகிவிடுகிறது.
3.நம் நல்ல குணங்கள் என்ன ஆகிறது…? வெறுப்பின் தன்மையாக மாறும் போது “நல்லது எல்லாம் அழிகின்றது…”
3.ஆகவே அந்தத் தீமைகளை வடிகட்டுவதற்கு மெய் ஞானிகள் உணர்வைச் சேர்க்க வேண்டும் என்று தான் கீதாச்சாரத்தில் சொன்னது.

நம் கண் எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது…! என்று அதனுடைய உணர்வின் இயக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எண்ணியதை (கண்கள்) அலைகளாக மாற்றுகின்றான்… அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்க்கின்றான். இந்த உணர்வின் இயக்கமே அது.

ஆனால் எண்ணியதை உயிர் பிரம்மமாக இருக்கின்றான் உருவான ஒவ்வொன்றுக்கும் அவனே வழி காட்டுகின்றான். உணர்வின் தன்மையை அவனே பிரம்மனாக இருந்து சிருஷ்டிக்கின்றான். எடுத்துக் கொண்ட மணம் ஞானமாக இருந்து இயக்குகின்றது சரஸ்வதி…!

எடுத்துக் கொண்ட உணர்வின் நாதம்… எந்தக் குணத்தின் தன்மை உணர்வானதோ இயல்பான அந்த நாதம்…
1.அது இனிமையான நாதங்களாக இருந்தால் ஆனந்தமாகத் தலையை அசைக்கச் செய்கிறது.
2.ஆனால் படபடா…! கடபுடா…! என்று ஒரே சத்தமாக இருந்தால் என்ன ஏது என்று அதிர்வாகி எரிச்சலாகி முறைக்கின்றோம்.
3.எந்த வேகத்தின் உணர்வு நாதமானதோ அந்த உணர்வு நம்மை இயக்குகின்றது… வீணையின் நாதம்.

அதனால் தான் சரஸ்வதிக்கு இங்கே வீணையைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். நாம் எந்த உணர்வின் தன்மை சுவாசித்து உராயச் செய்கின்றோமோ அந்த நாதத்தின் சுருதியே நம்மை இயக்கும்.

ஏனென்றால்
1.குருவின் ஆணைப்படி தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்
2.நீங்கள் தெளிவானால் உங்களுடைய மூச்சு மற்றவர்களின் கெட்டதை எல்லாம் நீக்கும்.
3.நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சு உங்கள் நோயைப் போக்க வேண்டும். அதற்காக வேண்டித் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

விஞ்ஞான உலகில் நாளை வரக்கூடிய விஷமான உணர்வுகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்க முடியும். “அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்” (ஞானகுரு).

பாட்டில் உடைந்ததைப் பார்த்துத் திட்டி விட்டு அதை ஓரமாகவும் ஒதுக்கிப் போடாதபடி அப்படியே அந்த உணர்வுடன் நாம் கடைக்குச் செல்கிறோம்.

கொண்டு போன சரக்கை அவரிடம் சிரித்துக் கொண்டே காட்டுகின்றோம். ஆனால் எந்த வேகத்தை வரும் வழியில் எடுத்தேனோ எனக்கு முன்னாடி அது (ஆன்மாவிலே) இருக்கின்றது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…!

இங்கே பாட்டில் உடைத்தவனை “அயோக்கியன்…” என்று சொல்லித் திட்டிய உணர்வு ஆன்மாவில் முன்னணியில் இருப்பதால்… துணியை எடுத்து அந்த உணர்வுடன் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது…?

என் உணர்வு பட்டவுடனே… கடைக்காரர் துணியைப் பார்க்கின்றார் பார்க்கப்படும் பொழுது
1.இங்கே ரோட்டில் எப்படி நாம் வெறுத்து பேசினோமோ
2.அவருடைய கண் இந்த வெளிப்படும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
3.அந்த அலைகள் இயக்கி நான் சொன்ன நல்ல உணர்வுடன் கலந்து அவரை இயக்குகின்றது.
4.என்னங்க…? நேற்று ஒரு சரக்கைக் காண்பித்தீர்கள். இன்று வேறு சரக்காகக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று கேட்க ஆரம்பிப்பார்.

ஆனால் சாம்பிள் காண்பித்ததும் கொண்டு போன துணியும் இரண்டும் ஒரே துணி தான்…!

அது தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. மணி ஓசையைக் கேட்டவுடன் யானை வருகிறது என்ற உணர்வு இயக்கி நாம் ஒதுங்கிக் கொள்கிறோம்.

அது போல்
1.நம்முடைய எண்ணம் அவருக்குள் முன்னாடியே பாய்ந்து
2.அந்தக் கெடுதலான எண்ணம் நம் சரக்கை அவருக்கு மட்டமாகக் காண்பித்து விடுகிறது… வியாபாரம் போய்விடுகிறது.

நாம் என்ன நினைப்போம்…? நேற்று சரக்கைக் கொண்டு வரச் சொன்னான்.. கொண்டு வந்த பின் இந்த மனுஷன் வேண்டாம் என்று இன்றைக்குச் சொல்கிறான்…!
1.ஆக என்னுடைய உணர்வு தான் அங்கே அவனை அவ்வாறு பேச வைக்கின்றது என்பதை
2.நாம் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

இது எல்லாம் இயற்கை…!

குருக்ஷேத்திரப் போர்…! என்ற நிலையில் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து அதைத் துடைத்து விட்டு… “அவர்களுக்கு நாளை நல்லது நடக்கட்டும்…” என்று அங்கே சொல்லிவிட்டு தீமையை அப்புறப்படுத்தி விட்டு நாம் செல்ல வேண்டும்…!

ஆகவே… ஒன்பதாவது அவதாரத்தில் இப்போது இருக்கின்றோம். அடுத்து “கல்கி அவதாரம்…” என்றால் உயிரின் தன்மை ஒளி கொண்டு விஷத்தின் தன்மையை நீக்கி… நிலையாக நின்று ஒளியின் சரீரமாகப் பறந்து செல்வது (குதிரை மீது) கல்கி…!
1.உணர்வின் தன்மை வேகத்தின் துடிப்பு கொண்டு எதிலே இருக்கின்றதோ
2.வாளை வைத்துக் குதிரையைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
3.ஒளியின் சரீரமாகச் செல்லும் “கல்கி அவதாரத்தின் வேகங்கள் வேறு…”

பத்தாவது நிலை அடையப்படும் பொழுது ஒளியின் தன்மையாகக் கல்கி அவதாரமாகப் போகின்றோம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாரதர் சிவனிடம் வருகின்றார்… கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். உலகை யார் முதலில் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கனி.

முருகனின் வாகனம் மயில் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஏறி உட்கார்ந்தால் ஒரு நொடியில் உலகை சுற்றிச் வரலாம் என்று அவருடைய உணர்வு வேகம் செல்கின்றது.

ஆனால் விநாயகன் இருந்த இடத்திலிருந்தே… அதாவது
1.புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில்
2.பல உணர்வின் சத்துக்களை எடுத்துச் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக
3.மனித உடல் பெற்ற இந்த உடல் அது இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

இருந்தாலும்… இந்த உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள் அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது (முருகன்).

விநாயகன் இருந்த இடத்திலிருந்து உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து வினையின் ரூபமாகச் சேர்க்கப்பட்டது.

உடல் பெற்ற நிலையில் தாய் தந்தையருடைய நிலைகள் என்பது பேரண்டமும் பேருலகமும்… என்று (அதனின் சக்தியைத்) தனக்குள் எடுத்துக் கொண்டது. இருந்த இடத்திலிருந்து தன் உணர்வின் சக்தியை எடுத்துக் கருவாக எடுத்துச் சிசுவாக விளைய வைத்தது.

ஆகவே
1.ஒரு மரம்…! அது பல அலைகளின் தொடர் கொண்டு
2.தனக்குள் எடுத்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு இந்த சத்துக்குள் விளைந்தது கனி (மாங்கனி)
3.அது போல் அன்னை தந்தையருக்குள் விளைந்ததே இந்த உணர்வின் வித்து… (மனித உடல்)
4.இந்த வித்தின் தன்மையே “உயிரான அந்தச் சத்து…!”

இந்த உடலிள் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலையான நிலைகள் கொண்டு… இந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாக
1.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல உயிரின் (ஒளியின்) தன்மை தனக்குள் எடுப்பது.

மாங்கனி அது வித்தாகி மரமாகி மீண்டும் தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்ப்பது போன்று
1.தன் இனத்தின் சத்தின் தன்மையை
2.ஒளியின் சுடராக வளரும் பக்குவ நிலைகள் பெறுகின்றது.
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா)

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத் தான் (நாரதன் கொடுப்பதாக) கனியைக் காட்டி
1.தாய் தந்தையருடைய பாசத்தால் தான் நாம் வளர்கின்றோம்
2.பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது… அந்த ஞானி காட்டிய உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
3.அவன் வழியில் நீ செல்…!

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றான்…! துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அணு தான் நாரதன். ஆகவே அந்த உணர்வின் தன்மை தான் வான்மீகிக்குள் ஈர்க்கப்பட்டது என்பதை “நாரதன் வான்மீகிக்கு ஓதினான் என்றார்கள்…”

ஏனென்றால் அது “விளைந்து முதிர்ந்த கனி…!” கனியிலிருந்து வரும் மணம் சுவையானது… இனிமை கொண்டது. நாரதனிடம் இருப்பது சுருதி ஏழு… சரஸ்வதியிடம் இருப்பது சுருதி ஏழு..! என்று இவ்வளவையும் படத்தைப் போட்டுப் பல உணர்வின் தன்மை அறிவதற்குக் காட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

தாய் தந்தை இறந்த பின் பாசத்தினால் இங்கு (பிள்ளைகளின் ஈர்ப்புக்குள்) வந்தாலும்
1.மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து
2.எண்ணத்தாலே தாய் எப்படி நம்மைக் (தன் பிள்ளைகளை) கருவாகக் கூட்டியதோ
3.அதே போல பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான்… அதற்குள் இருந்து தான் நீ ஜெனித்தாய்…! என்ற
4.இந்தப் பேருண்மையைக் காட்டி அது தான் உன்னை முதல் தெய்வமாக உருவாக்கியது
5.அதனுடன் நேசித்து நீ வளர வேண்டும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் மரத்துடன் ஒன்றிய காய் “அது கனியாகும்…!”

காயாக (மரத்திலிருந்து) விழுந்து விட்டால் சுவை இருக்காது… இயக்கம் புளிப்பாகும். அதை எல்லாம் அன்று அந்த அகத்தின் இயக்கத்தின் தன்மையைத் தெளிவுற உணர்த்தப்பட்டது.

தாய் எப்பொழுதுமே தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாழ்கிறது. அதே வழியில் நாமும் நம் தாய் தந்தை உயர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி… அந்தப் பாசத்துடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் செயல்படுத்தி… அந்தச் சக்தியை வளர்த்திட வேண்டும்.

1.இப்படி இதன் வழியிலே வளர்ந்தவர்கள் தான் விண் சென்றார்கள்… கனியாக ஆனார்கள்…! என்று கனியைக் கொடுத்து (நாரதன் கொடுக்கும் கனி)
2.மக்களுக்கு விளக்கம் சொல்வதற்கு இப்படிக் கதையாகக் காட்டிப் பேருண்மையை உணர்த்திச் சென்றார்கள்.

தீமைகள் எது வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

 

தீமையிலிருந்து விடுபடுவதற்கு உபாயம் என்ன…? இந்த ஆறாவது அறிவு தீமை என்று அறிந்து கொள்கின்றது கார்த்திகேயா.
1.தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம்.
2.அதை வழிநடத்தி அதனின் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்களால் ஏங்கி வானை நோக்கி அதன் உணர்வு பெற வேண்டும் என்று ஏக்கத்தால் எண்ணி அதே கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது கண்ணால் பார்த்து உயிரிலே படும் பொழுது தான் உணர்வால் அறிகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வைக் கண்களால் நுகர்ந்தோம் உயிரின் காந்தம் நுகர்ந்து அந்த உணர்வை அறியச் செய்கின்றது கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில வைக்கப்படும் பொழுது அது வலிமையாகி விடுகின்றது.

ஏனென்றால் வேதனைப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்றோம் கேட்டு அறிந்து. ஆனால் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் புருவ மத்தியில எண்ணி அதைப் பெற வேண்டும் என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு கட்டளையிட வேண்டும் சேனாதிபதி.

தீமையான உணர்வை நுகர்ந்திருந்தாலும் முதலிலேயே அது சிறிதளவு போய்விட்டது… அது புகாதபடி தடுக்க வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இணைக்கும் போது உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றது.

தடைப்படுத்துவது மட்டுமல்ல நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துதல் வேண்டும்.

இதை ஆணையிடுகின்றது… ஆறாவது அறிவு சேனாதிபதி கார்த்திகேயா. இந்த உணர்வு கொண்டு உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் செலுத்தப்படும் பொழுது அவை வீரியமடைகின்றது.

நாம் எண்ணியபடி அந்தத் தீமை வராதபடி உஷாராகின்றது.

நுகர்ந்து சிறிதளவு போன நிலையும் இந்த உணர்வுகள் சேர்த்து
1.இது உமிழ் நீராக மாறி உள்ளே சேர்க்கப்படும் பொழுது அந்த விஷத்தை அடக்கும் சக்தியாக
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தீமை நுகராது தடுத்த பின் சிறுத்து விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி உமிழ் நீராக மாறும் பொழுது அது சிறுக்கப்படுகின்றது. இதன் வழி கொண்டு எத்தகைய தீமையின் உணர்வை நுகந்தாலும் நம்மால் மாற்றிக் கொள்ள முடியும்.

அந்தச் சக்தியை எடுத்து நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்கி நினைவாக்கி நீங்கள் தீமையிலிருந்து விடுபட முடியும்.

தீமையில் இருந்து விடுபட முடியாதபடி… நன்மை செய்தோர் அனைவரும் தீமையில் சிக்குண்டு… “நான் எல்லோருக்கும் நல்லது செய்தேனே என்னை இப்படி ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று எண்ணுகின்றார்கள்.

நாம் எண்ணியதை உணர்த்துவதும் உணர்வின் தன்மை உடலாக்குவதும் உடலாக்கிய பின் இதை ஆள்வதும் ஆண்டவனாக இருக்கின்றான் நமது உயிர். எண்ணியதை இயக்குகின்றான். ஆக யாரைப் பழி போடுவது…?
1.எங்கேயோ ஆண்டவன் இல்லை நமக்குள் எண்ணுவதைத் தான் உருவாக்குகின்றான்.
2.அந்த உணர்வு வழி தான் நம்மை வழி நடத்துகின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

மனிதனுடைய ஆறாவது அறிவு சேனாதிபதி. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எடுத்து கண்ணின் நினைவை இங்கே தடைப்படுத்தினால் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
1.அதைச் செலுத்தப்படும் பொழுது அணுக்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து அந்தப் படைகலன் தீமைகளை எதிர்க்கும் சக்தியாக பெறுகின்றது.
2.மனிதன் ஒருவனால் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
3.தீமைகள் எது வந்தாலும் மாற்றிக் கொள்ள முடியும்

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

உடனுக்குடன் தீமைகளை நீக்குவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும் ஏனென்றால் முந்தி ஆரம்பத்திலே யாம் (ஞானகுரு) போட்ட வித்து அது…!

உதாரணமாக வயலிலே களைகள் முளைக்கிறது என்று அவைகள் எல்லாவற்றையும் பிடுங்கிச் சுத்தம் செய்கிறோம். ஆனால் மீண்டும் அவைகள் முளைத்து விடுகின்றது. மற்றதை விளைய விடுவதில்லை.

இது போன்று தான்
1.நம் உடலுக்குள் முந்தி விளைந்ததெல்லாம் இருக்கின்றது.
2.இருந்தாலும் அவைகள் மீண்டும் முளைத்து விடாமல் நாம் கொஞ்சம் தடுத்துக் கொண்டே வர வேண்டும்.
3.அருள் ஞான உணர்வை எடுத்து நல்ல பயிரை நாம் வளர்ப்பதற்கு முற்பட வேண்டும்
4.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அந்தத் துன்பங்களை மறைப்பதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும்..

ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்திக் கொண்டே வாருங்கள்

“என்னத்தை… ஆத்ம சுத்தி செய்து…?” என்று சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கின்றோம். புல்லை நோண்டி அப்புறப்படுத்துவதற்கு அதைக் கொடுத்திருக்கின்றோம்.

கையிலே தான் புடுங்க முடியவில்லை. இந்த ஆத்ம சக்தி என்று ஆயுதத்தை வைத்து அதை எடுத்து விடலாம் அல்லவா. வாக்கால் தான் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

1.நான் (ஞானகுரு) பேசுவது அனைத்துமே வெறும் பேச்சு அல்ல
2.எல்லாவற்றையும் வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன்
3.பதிவு செய்து எப்படியும் நீங்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீள வேண்டும்
4.உங்கள் மூச்சு உங்கள் துன்பத்தை நீக்க வேண்டும்
5.உங்கள் பேச்சு மூச்சும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அவ்வாறு செய்கின்றேன்

இதைத்தான் அன்று கந்த புராணத்தில் நாரதன் சொல்வதாக அன்னை தந்தையின் உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.

தாய் உன்னைக் கருவில் வைத்து வளர்த்தது. அந்தத் தாய் தந்தையரின் ஆன்மாக்கள் பிரிந்த பிற்பாடு அதற்கு நல்ல ஆகாரமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நாம் அதன்படி செய்கிறோமா…?

தாய் தந்தையர் இறந்து விட்டார்கள் என்பதற்காக சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கவும் கடலில் கரைக்கவும் எங்கெங்கோ இடத்தைத் தேடிச் செல்கிறோம். இது சாங்கிய சாஸ்திரம்.

தண்ணீரே ஓடவில்லை என்றாலும் ஒரு குழியைத் தோண்டி அதில் தண்ணீரை ஊற்றிக் கரைக்க வேண்டும் என்று எத்தனை வழியில் செயல்படுத்துகின்றார்கள்.

ஏனென்றால் மழை பெய்து நாளைக்கு வெள்ளம் வந்தால் அது கடலில் சேர்த்துவிடும் என்று இப்படி ஒரு நம்பிக்கை. ஆனால்
1.தாய் தந்தையருடைய ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக்கடலிலே
2.உந்தித் தள்ளி இணைக்க வேண்டும் என்று தான் அன்று சொன்னார்கள்
3.அதை யாரும் செய்யத் தயாராக இல்லை.

பணத்தைச் செலவழித்துச் சாங்கியத்தைச் செய்து உணவு படைப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். காரணம் பாவ நிலைகளை நீக்குவதற்கு இப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

அதே சமயத்தில் துணிமணிகளை எடுத்து மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தால் ஒட்டி இருக்கும் பாவங்கள் போய்விடும்… தோஷங்கள் போய்விடும் என்று
1.அப்பா பேரைச் சொல்லித் தானம் செய்வதும்
2.அம்மா பேரைச் சொல்லித் தானம் செய்வதும் என்று இப்படித்தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தானம் செய்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
1.நாம் அங்கே ஒன்றி இருத்தல் வேண்டும்.
2.அவ்வாறு செய்தால் தான் அந்த ஒளிகள் நம்முடன் இணையும்
3.இல்லையென்றால் அந்த ஒளிகள் ஒன்றும் செய்யாது.

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்

 

நாம் நமது வாழ்க்கையில் இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம். எத்தனையோ ஆண்டு வாழ்கிறோம் என்று இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தைப் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது.
2.வேதனை என்ற உணர்வு வளர்ந்தால் தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் சக்தியும் இழக்கப்படுகிறது.
3.பாதுக்க்கும் தன்மை இழந்து விட்டால் நம் உடலில் நோய் உருவாகின்றது.
4.நோய் உருவானால் இதுவே நாம் தேடிய செல்வமாக மாறிவிடுகின்றது.
5.நோயின் உணர்வுகள் விளைந்தால் அந்தச் செல்வத்தின் வழியே உயிர் அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்த உடலை உருவாக்கி விடுகின்றது.

ஆகவே தேடிய செல்வங்கள் நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. வேதனை வெறுப்பு என்ற உணர்வைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடும். கோபம் குரோதம் என்ற நிலையானால் அதன் வழி அடுத்த உடலை உருவாக்கி விடுகிறது.

ஒரு நிலம் சரி இல்லை என்றால் அதைப் பண்படுத்துகின்றோம். ஒரு வீடு கட்டினால் அது சரியில்லை என்றால் அதைக் காட்டிலும் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகின்றோம்.

இதைப் போல தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது உயிர். ஆனால் அதைப் போன்ற உடலின் தன்மை வரும் பொழுது அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது.

1.அத்தகைய வேதனைகளை உருவாக்குவதற்கு மாறாக
2.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றைக்கும் நிலையான சரீரமாக வாழும் நிலையை
3.பேரருள் பெற்ற உணர்வினைச் செல்வமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கிப் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

அதைத் தான் இராமேஸ்வரத்தில் ராமன் நேரமாகிவிட்டது என்று உணர்வின் தன்மை கூட்டி பூஜிக்கத் தொடங்கினான் என்று காட்டியுள்ளார்கள்.

இதைப் போலத் தான்
1.அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் பகைமையற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் உணர்வினை ஒன்று சேர்த்துக் கூட்டி
2.அந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாகி ஒன்றாகி ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வுகளைப் பெருக்கி நீங்கள் எண்ணும் பொழுது
3.அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஒளியாக மாறி அருள் ஒளி என்ற நிலைகள் பெறும் தன்மை வரும்.

ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றேன்.

இந்த உடலின் நிலைகள் நாளடைவில் கரையும் தன்மை தான் வளரும். அதாவது வளரும் தன்மையில் உடல் கரையும்… ஆனால் உணர்வுகள் வளரும்.

1.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… ஆக அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்
2.அந்த அருள் ஒளியை நாம் பெறுவதற்கே நாம் முயற்சிப்போம்.

செல்வமும் இந்த உடலும் நம்முடன் வருவதில்லை. அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளரும் பருவத்தினை ஏற்படுத்தி வளர்த்திடும் நிலையும்… இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியில் நாம் செல்வோம் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) சித்தாவதற்கு முன் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையிலும் நான் நல்லதைச் செய்யப்படும் போது அதிலே எத்தனையோ சிக்கல்கள் வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் வந்தது.

நல்லதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பி இன்றும் எத்தனையோ பேர் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றார்கள். நல்ல உணர்வுடன் செய்யும் போது தீய உணர்வுகளில் சிக்கி அதிலிருந்து தப்ப முடியாதபடி இருக்கின்றார்கள்.

அதை எல்லாம் மாற்றிடும் சக்தி பெற வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? எங்கே பெற வேண்டும்…? என்ற இந்த உணர்வு கொண்டுதான்
1.ஒவ்வொரு நிலையிலும் குருநாதர் காட்டிய நெறிகள் கொண்டு
2.அது எத்தனையோ சிரமங்கள் எல்லை கடந்து சந்தர்ப்பங்கள் செல்லும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு
3.அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது…? என்று அவர் கொடுத்த சக்திகளைத் தான்
4.உங்களுக்குள் சொல்லாக… வாக்காக… இப்பொழுது கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆனால் ஆரம்பத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் போல் வேகமாக உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தேன்… அர்த்தத்தைக் காண முடியாத அளவிற்கு…! ஏனென்றால் இங்கே அதைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு செய்தது.

முதலிலே இந்தச் சக்திகள் காற்றிலே இல்லை. ஆகவே அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் இந்தக் காற்று மண்டலத்திலே பரப்பி வைப்பதற்காக வேகமாக உபதேசித்தேன்.

1.யாரெல்லாம் அதை ஏங்கிப் பெறுகின்றார்களோ… எண்ணும் போது அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும்
2.காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறச் செய்வதற்கும்
3.எண்ணியவுடன் அந்த உணர்வுகள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் வேகமாக உபதேசித்து வந்தது.

ஆரம்ப நிலைகளில் சஷ்டிச் கவசத்தைக் கூட நான் பாடி இருக்கின்றேன். சில அன்பருடைய வீடுகளில் குருநாதர் எனக்குக் காட்டிய உண்மைகளை இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

உதாரணமாக மங்களூர் நாராயணசாமி வீட்டுக்குச் சென்றால் எல்லாக் கோவில்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்தது தான். கர்நாடகாவில் உள்ள பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தது தான்.

குருநாதர் காட்டிய வழியில் அனுபவங்கள் பெறுவதற்காக எல்லா இடங்களிலும் இவ்வாறு சுழன்று வந்தது. காரணம்…
1.எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு நான் உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
2.குருநாதர் கொடுத்த சக்திகளை எல்லாம் எனக்குள் விளைய வைத்தேன்
3.அதிலே விளைந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

ஆகவே இதை எல்லாம் பதிவு செய்யும் நீங்கள் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ
2.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெற்று
3.அதை நீக்கக்கூடிய அளவிற்கு முதலில் “பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…”

கோபமோ வெறுப்போ வேதனையோ மற்ற இன்னல்கள் வரும் பொழுதெல்லாம் அருள் உணர்வுகளைச் சேர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் தீமைகளை நீக்கிய பின் அது யாரால் எவரால் அந்தத் தீமைகள் வந்ததோ…
1.நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் அந்த உயர்ந்த உணர்வு கிடைக்கச் செய்யும் விதமாக
2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

யாரிடத்தில் நாம் பேசினாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்தே நாம் வெளிப்படுத்த வேண்டும். அப்போது நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகிக் கொண்டே வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனித வாழ்க்கை என்று இருந்தாலும் இந்த உடலை விட்டு நமது ஆன்மா ஒரு நாள் பிரியத் தான் செய்யும். அது சமயம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி தியானம் இருக்கும் போதெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து உந்தி விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகள் இந்த உயிரான்மாவில் பட்டபின்
2.இன்னொரு உடல் பெறும் உணர்வின் சத்தை அது பஸ்பமாக்கிவிட்டு உணர்வின் ஒளி சுடராக அந்த உயிரான்மா வளரும்

எத்தனையோ மனிதர்களை விஞ்ஞான அறிவு கொண்டு இராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அந்த இராக்கெட் விபத்தாகி வெடித்து விட்டால் இறந்த ஆன்மா அங்கே விண்ணிலே தான் மிதந்து கொண்டிருக்கும்.

அப்படி மிதந்தாலும் அங்கிருக்கக்கூடிய மற்ற கதிரியக்க சக்திகள் அதிலே படப்படும் பொழுது
1.அந்த உயிராத்மா அது உயர்ந்த நிலை பெற முடியாது ஒளிச் சரீரமும் பெற முடியாது
2.வானில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மிதந்தாலும் அது செயலற்றதாகத் தான் மாறும்.

ஆனால் இங்கே ஒரு அமைப்பை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் இங்கிருந்து சப்தரிஷி மண்டலத்திற்குக் கூட்டமைப்பாக விண் செலுத்தும்படி செய்கின்றோம்.

அப்போது அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வலைகள் இந்த உயிர் ஆத்மாவிலே கலக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒளியாகச் செயல்படுகிறது.

விஞ்ஞான முறைப்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தாலும் விபத்தாகி இறந்தால் நச்சுத்தன்மை கொண்ட உயிரான்மாவாகத் தான் விளைகின்றது.

விண்ணிலே சுழன்று கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திலே மற்ற கோளின் ஈர்ப்புக்குள் வந்தால்
1.உடல் பெறும் தன்மையற்று விஷத்தின் ஆற்றல் கொண்ட குறுகிய உடல்களால
2.புழு போன்ற உயிரினங்களாகத் தான் உடல் பெற முடியும்.
3.அல்லது அப்படியே மனித உணர்வு கொண்ட உடல் பெற்றாலும் கூட
4.சிந்தனை இழந்து வேதனைப்பட்டு விஷத்தின் தன்மையைத் தான் வளர்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லப்படும் பொழுது சுலப நிலைகளில் விண் செல்ல முடியும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.விண் செல்லும் பாதையை “எந்த மகரிஷி நமக்குக் காட்டினாரோ”
2.அவரின் உணர்வின் ஆற்றலை இங்கே தொடர்புகளாக உங்களுக்கு ஏற்படுத்தி
3.அதைத் தொடர் வரிசையாக உங்களுக்குள் பதிவு செய்து
4.அந்த ஆற்றலை ஓங்கி வளர்க்கும்படி செய்து இந்த உணர்வின் புலனறிவை
5.சப்தரிஷி மண்டலத்துடன் (உங்களை) இணைக்கச் செய்யப்படுகின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்டோமானால் உடலை விட்டுப் பிரியும் போது அனைவரும் சேர்ந்து ஏக காலத்தில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “உந்தி அங்கே செலுத்தப்படும் பொழுது…” சுலப நிலைகள் அங்கே இணையச் செய்ய முடியும்… நாமும் அங்கே இணைய முடியும்.

இதைப் போல் உந்தச் செய்வதற்குத் தான் அன்று ஒவ்வொரு ஞானியும் சாதாரண மனிதனைத் தேடி வந்தார்கள்.

அந்த ஞானிகள் பூமியிலே வாழும் காலத்தில்… எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க சக்திகளை அவர்கள் பெற்றிருந்தாலும்
1.மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய துன்பத்தைப் போக்க செய்து
2.அந்தப் பாச உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து… நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து
3.தன் மீது அந்த எண்ணத்தை வளர்க்கும்படி செய்து
4.தன் சிஷ்யர்கள் சிலரிடம் சொல்லி… இன்ன உணர்வு கொண்டு என்னை விண்ணிலே உந்திச் செலுத்து என்று
5.உந்திச் செலுத்தும்படி செய்து அவ்வாறு விண் சென்றவர்களே பலர்…!

அதனால் தான் ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.அவர்களை விண் செலுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.சப்தரிஷி மண்டல நினைவுகள் உங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

அதைத் தான் பயிற்சியாக யாம் (ஞானகுரு- கொடுக்கின்றோம்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரிந்த… எடையற்ற அந்த உயிரான்மாவை இயக்க வல்ல உணர்வின் ஆற்றலை
2.மனித உடலுக்குள் இருந்த நினைவின் அலைகளைக் கூட்டி… அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு
3.சப்தரிஷி மண்டலத்திலே அங்கே செலுத்த முடியும்.

அத்தகைய விண் செல்லும் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்தினால்… நாமும் சரி… நமக்குப் பின் செல்பவர்களுக்கும் அதே நிலை இயக்கப்படுகின்றது

ஆனால் இதை அறியாதவர்கள் அல்லது இந்த முறைப்படி தியானம் செய்யாதவர்களை அங்கே விண் செலுத்த வேண்டும் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவர்கள் தாய் தந்தையருடன் ஒன்று சேர்த்து
2.அந்த உணர்வுடன் இயக்கச் செய்து அவருடைய துணை கொண்டு அங்கே அனுப்ப முடியும்.
3.இந்த வழி தெரியாதவர்களை அப்படித் தான் விண் செலுத்த முடியும்.

நீங்கள் வெளிவிடும் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்தும் சக்தியாகப் படர வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உடலில் பதிவாக்கி அதை நினைவு கொண்டு வளர்த்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் அசுத்த உணர்வுகளை நீக்கி அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் இருளை அகற்றிடும் வல்லமையும் பெறுவீர்கள்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போல அவ்வப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்குள் கலந்த விஷத்தை அகற்றி நல் உணர்வினைப் பெருக்கி இப்பிறவியில் பிறவி இல்லா நிலை என்னும் அருளுணர்வைப் பெருக்கி நாம் வாழ முடியும்.

அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருளை பதிவாக்கி கொண்டே வருகின்றேன்.

திட்டியவரை மீண்டும் எண்ணப்படும் பொழுது தீமையின் உணர்வு எப்படி வருகின்றதோ… வேதனைப்படுபவரைப் பார்த்து அந்த உணர்வு பதிவானால் அவரை எண்ணும் பொழுது வேதனை உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றதோ… இதைப் போல
1.வேதனைகளை அகற்றிய இருளை அகற்றிய அருளைப் பெருக்கும் தன்மையை நுகர்ந்து உங்களுக்குள் பதிவாக்கச் செய்கின்றேன்
2.எமது குருநாதர் எமக்குள் பதிவாக்கியது போன்று…!
3.அதன் வழியில் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.
4.உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை இருளில் இருந்து மீட்டிடும் திறன் பெற வேண்டும்.
5.உங்கள் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தையே நஞ்சினை அகற்றிடும் தன்மை பெறுதல் வேண்டும்
6.உங்கள் மூச்சால் உணவாக உட்கொண்ட உணவு தாவர இனங்களில் அது பட்டபின் நல்ல அணுக்களாக உருவாகி
7.அதனுடைய மலங்கள் தாவர இனங்களைச் செழித்து வளரச் செய்யும் தன்மை வர வேண்டும்.
8.உங்கள் மூச்சால் கேட்போர் உணர்வில் இருளகற்றி நல் அணுக்களாக உருவாக்கி நற்பயனை அடையும் மக்களாக நீங்கள் மாறுதல் வேண்டும்.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றேன்.

என் ஒருவனால் இது முடியாது. ஒரு உயர்ந்த வித்தினை அது பலவாக உருவாக்கி பல வளர்ச்சிகளைப் பெறச் செய்து அனைவரது உடல்களிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கினால் உலக இருளை அகற்றலாம்… அருள் ஒளியைப் பெருக்கலாம்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும் என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைத் தனக்குள் வளர்த்து விட்டால் அது தன் இனத்தை வளர்க்கச் செய்யும்… அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

1.ஆகவே பேரருளை நமக்குள் பதிவாக்குவோம்
2.இருளை அகற்றுவோம் பேரொளியை வளர்ப்போம் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம். அகஸ்திய மாமகரிஷி கண்டுணர்ந்த உணர்வுகளையும் இதில் கலந்தே உங்களுக்குள் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்..

யாம் (ஞானகுரு) உபதேசித்ததை எண்ணித் தியானிக்கும் போது
1.மகரிஷிகள் கண்டதை எல்லாம் உணரும் பருவம் நீங்கள் பெறலாம்…
2.அதைக் காட்சியாகவும் தெரியலாம்… நறுமணங்களாகவும் உங்களுக்குள் வரும்…!
3.அவரவர்கள் இந்த உபதேசத்தைக் கேட்டுப் பதிவு செய்த நிலைகள் கொண்டு நிச்சயம் உணர முடியும்… மணத்தால் உணர முடியும்
4.கடந்த காலக் காட்சிகளை குருநாதர் எனக்கு எந்தெந்த இடத்திலே வைத்து எப்படிக் காட்டினாரோ
5.அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளையும் உணர முடியும்… புது உணர்வுகளாக உங்களுக்குத் தோன்றும்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகள் நமக்கு முன் இந்தக் காற்றிலே படர்ந்து இருந்தாலும் அதைக் கவரக்கூடிய வலிமை நமக்கு வேண்டும்.

ஆயிரம் பேர் சேர்ந்து தான் ஆலயத்தில் இருக்கும் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனால் அந்தத் தேரை இழுக்க முடியாது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.மகரிஷிகள் அனைவரும் இந்தப் புவியின் ஈர்ப்பின் பிடிப்பை அறுத்து
2.அந்த அறுத்த உணர்வுகளை அவர்களுக்குள் விளைய வைத்து
3.எந்த மனிதனுடைய ஈர்ப்பிற்குள்ளும் தான் சிக்காதபடி
4.இன்னொரு உடல் பெறாதபடி சப்தரிஷி மண்டலங்களாக விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இருந்தாலும்…
1.புவியின் ஈர்ப்பின் பற்று கொண்ட நாம்
2.உடலின் உணர்ச்சிகளுக்கு அடிமையான நாம்…
3.எண்ணத்தால் அந்த மகா ஞானிகளின் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்
4.நமக்கு அந்தத் திறன் நிச்சயம் தேவை.

அந்தத் திறனைப் பெறுவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அருள் வழிப்படி மகா ஞானிகளின் ஆற்றல்மிக்க உணர்வின் எண்ணங்களை
1.உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்து
2.அந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து
3.அனைவரும் சேர்ந்து ஏங்கிப் பெறும்படி செய்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏகமாக நீங்கள் ஏங்கினால் ஆயிரம் பேர் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுப்பது போன்று அந்த மாமகரிஷிகளின் சக்திகளை நமக்கு முன் கொண்டு வர முடியும்

1.அவரவர்கள் எந்தெந்த விகிதாச்சாரப்படி எண்ண வலு கொண்டு
2.எண்ணி ஏங்குகின்றீர்களோ அவரின் ஆன்மாக்களிலே அது கவரப்படும்.
3.ஆன்மாவில் கலந்து சுவாசித்து அந்த அருள் ஞான சக்தியைப் பெறும் தகுதி பெற்று
4.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக அதை விளைய வைக்க முடியும்

அதைத்தான் இப்பொழுது குரு வழியிலே யாம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

தியானிக்கும் போது அவரவர்கள் எண்ண வலுவுக்கு ஏற்றார் போல் மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் ஆன்மாவில் கலப்பதை உணரலாம். எந்த அளவுக்கு உயர்த்தி எண்ணுகின்றீர்களோ நிச்சயம் உணரலாம்… அதை நுகர முடியும்.

அந்த அறிவின் தன்மை தான் உங்களுக்குள் இப்போது படைக்கப்படுகின்றது. யாம் உபதேசிப்பதை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் உங்களில் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும். அறியாது வந்த சாப நிலைகளை பாவ நிலைகளை மாற்ற முடியும்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளைக் கூட்டமைப்பாக இழுத்துக் கவர்ந்து…
1.எல்லோரும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்கே யாம் சொல்லும் இந்தத் தியானம்.
2.ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வலுக் கொண்டு தியானித்து நாம் அனைவரும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்திகள் இருக்கின்றது. அந்த அருள் ஞான வித்துக்களை நீங்கள் பெறுவதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

உதாரணமாக பலகாரம் சுட வேண்டும்… அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அது கரண்டியை எடுத்துக் காய வைத்துக் கொள்கின்றார்கள் அதற்குப்பின் அதிலே மாவை ஒட்ட வைத்துச் சுடுகின்றார்கள்.

ஆனால் அந்த கரண்டியை காய வைக்காதபடி அதைச் செயல்படுத்த முடியுமா…?

அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அந்த இரும்பு கரண்டியை முதலிலேயே அது சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
1.அது சூடான பிற்பாடு மாவிலே முக்கினால் சொய்ங்… என்று ஓட்டிக் கொள்கிறது
2.அதற்குப் பின் எண்ணைய்ச் சட்டியிலே அதைச் சுட்டால் முறுக்கு சீராக வரும்… கரண்டியிலிருந்து அச்சு முருக்கு அழகாக விழுகும்.

பக்குவம் தெரிந்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள்…!.

அச்சு முறுக்கு அவர்கள் சுடுகிறார்கள் என்று நாம் கரண்டியைக் “காய வைக்காதபடி… பச்சையாக வைத்தால்” என்ன ஆகும்…? மாவு ஒட்ட மாட்டேன் என்கிறது கரண்டி சரியில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமா…?
1.அந்தக் கரண்டி சூடாகி
2.மாவை இழுக்கக்கூடிய அந்தப் பவர் (சக்தி) வேண்டும்.

அதே போன்றுதான் நம்மிடம் எத்தனையோ குணங்கள் இருக்கின்றது சொன்ன முறைப்படி தான் நான் தியானம் செய்கின்றேன் என்று “காந்த சக்தியை எடுக்காதபடி…” தியானம் செய்தால் எப்படிச் சரியாக வரும்…?

1.காந்த சக்தியை எடுத்து நமக்குள் சூட்டை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
2.ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் பரிபூரணமாக
2.அந்த உணர்வோடு புருவ மத்தியில் எண்ண வேண்டும்… இது முக்கியம்…!

(“ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…” என்று சும்மா வெறுமனே சொல்வதனால் பயன் இல்லை)

1.ஓ…ம் ஈஸ்வரா என்கிற போது நாம் எண்ணியது பிரணவமாகின்றது
2.உணர்வுடன் நினைவை அங்கே செலுத்தப்படும் பொழுது காந்த சக்தி ஓடுகின்றது… இழுக்கக்கூடிய திறனும் கூடுகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது பிரணவமாகின்றது. எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டு ஜீவன் பெறும் போது பிரணவம். அதற்குப் பெயர் தான் ஓ…!

ஓ…! என்று சப்தமாகி ம்… உடலுக்குள் சென்று அந்த உணர்வின் சத்து அடங்குகின்றது. ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது நம் உடலாக மாறுகின்றது ஆகையினால் ஈஸ்வரா என்று எண்ணும் போது அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் “அயோக்கியப் பயல்…!” என்று ஒருவனை எண்ணும் பொழுது அவனை நினைத்தாலே எரிச்சல் ஆகின்றது.

அதை மாற்றி அமைக்க… “ஈஸ்வரா…!” என் சொல் பேச்சு அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம்மைக் கெடுதலாக நினைத்தார்கள் என்றால் என் பேச்சு அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இந்த எண்ணத்தை நாம் எண்ணினாலே போதுமானது.
1.காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது
2.இந்த நல்ல உணர்வின் சக்தி நமக்குள் கூடுகின்றது.

யாருடனாவது சண்டை போட்ட பின்பு பாருங்கள் உங்கள் நெஞ்சுப் பகுதியில் படபட… படபட… என்று துடிப்பலைகள் வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் யாராவது வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்லட்டும். இந்த நேரத்திற்கு வந்து சொல்கின்றான் பார்…! என்று வெறுப்பு தான் வரும். நல்லதைச் சொன்னாலும் கூட சனியன் எப்படியோ போகுது போ…! என்ற எண்ணம் தான் வரும்.

வீட்டிலே பையன் நம்மிடம் சண்டை போட்டு விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் தொழிலில் வேலை செய்வோர் நம்மிடம் வந்து பத்தாயிரம் ரூபாய் லாபம் வருகிறது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம்…?

சந்தோஷமான செய்தியாக அவர் சொன்னாலும் கூட என்னத்தைச் சம்பாரித்து வைத்து என்னத்தைப் பண்ணப் போகின்றோம்…? போய்யா நீ…! என்ற சொல் தான் வரும்.

பத்தாயிரம் ரூபாய் பணம் லாபம் வருகிறது என்று அந்த நேரத்தில் சந்தோஷப்பட முடியுமா…? முடியாது.

ஏனென்றால் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட பையன் மீது வெறுப்பாக இருக்கின்றோம் காரணம் நாம் சொன்னபடி அவன் கேட்கவில்லை… நம்மை எதிர்க்கின்றான்… முறைக்கின்றான்…! என்றால் உடனே வெறுப்பாகி விடுகிறது.

அப்போது இங்கே வியாபாரத்தில்
1.லாபம் அதிகமாக வருகிறது சரக்கு எல்லாம் நன்றாக விற்பனையாகிறது என்று சொன்னாலும் கூட
2.இந்த அளவுக்குப் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுச் சொன்னாலும் கூட
3.எனக்கு இந்த அளவுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்தால் கூட போதும் என்று அவர் நம்மிடம் விவரங்களை எல்லாம் சொன்னாலும் கூட
4.எனக்கு எல்லாம் தெரியும்… நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்யா…! என்று
5.பணம் அதிகமாகக் கிடைக்கிறது என்று சந்தோஷப்பட முடியாதபடி உதறித் தள்ளும் உணர்வு தான் வரும்.

ஏனென்றால் பையன் மீது இருக்கும் வெறுப்பு நம்மை இவ்வாறு இயக்கி விடுகின்றது. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தையும் அடுத்து மாற்றுகிறது.

இது எல்லாம் நடைமுறையில் ஒவ்வொருவரும் செய்வதைத் தான் சொல்கின்றேன்.. நான் புதிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை. இதைத் தான் அனுபவம் என்று சொல்வது.

உங்களுக்கும் இப்போது தெரிகின்றது இதை மற்றவர்களுக்கும் சொல்லத் தெரிய வேண்டும்.

இதிலிருக்கும் உண்மைகள் இன்னென்ன மாதிரி இருக்கின்றது என்று பிறருக்குச் சொல்லிச் சொல்லி… ஞானிகள் காட்டிய வழியில் திரும்பத் திரும்ப நாம் செயல்படுத்தினோம் என்றால் “அந்த ஞானம் நமக்குள் தன்னிச்சையாக வரும்…”

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துக் கொண்டே வந்தால்
1.அந்த ஞானிகள் உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சியில் தூண்டப்பட்டு அந்த ஞானத்தின் தொடராக அது வரும்
3.மற்றவர்களுக்கு தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையாக வரும்.

தொடர்ந்து இதைச் செய்தால் உயர்ந்த சத்தாகவும் உங்களுக்குக் கிடைக்கின்றது உங்கள் சொல் அனைவரையும் காக்க கூடிய சக்தியாகவும் வரும்…!

எங்கள் சாமி (ஞானகுரு) பிரமாதமாகப் பேசுகிறார் என்று சொல்வதை விடுத்து விட்டு சாந்தமான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்து… எல்லோரையும் பெறச் செய்யும் அந்தப் பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் கண்ட அகண்ட பேரண்டம்

 

அகண்ட அண்டமும் பிரபஞ்சமும் அண்டத்துடன் அகண்டு அதன் நிலைகள் வந்த பின் இதிலே தோன்றிய உயிரணுக்கள் ஒவ்வொன்றும் ஆற்றல்களை நுகர்ந்து நுகர்ந்து… இந்தப் பிரபஞ்சத்தின் நிலையையும் அகண்ட அண்டத்தினையும் அறிந்திடும் உணர்வு பெற்ற மனிதன் “ஆறாவது அறிவு பெற்றவன்” என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

அதன் வழி பெற்றாலும்
1.அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைப் பெறுகின்றான்.
2.அகண்ட அண்டத்தையும் அறிகின்றான்
3.பிரபஞ்சம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான்
4.பேரண்டம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான் அகஸ்தியன்.

அவன் அறிந்த உணர்வுகள் தான் இன்று உலகம் எங்கிலும் வானவியல் தன்மைகளும் உருப் பெற்றது. இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை மட்டும் தான் இன்று காண முடிந்தது.

அகண்ட அண்டத்தையும் அதற்கு முந்திய நிலைகள் இருண்ட உலகையும் அறிந்துணர்ந்தான் அகஸ்தியன். அணுவின் இயக்கப் பொருளை உணர்ந்தவன் அகஸ்தியன்.

அவனால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகள் அவன் உடலில் விளைந்தது.
1.2000 சூரியக் குடும்பமாக இருந்தாலும் அதைக் காட்டிலும் எத்தனையோ 2000 குடும்பங்கள்
2.அகண்ட பேரண்டமாக இருக்கும் அதன் உணர்வுகளில் ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான்
3.ஒவ்வொன்றும் வாழ்கிறது என்ற நிலையை உணர்ந்தான்.

இவை அனைத்தும் கலந்த உணர்வு கொண்டு தான் மனித உடலுக்குள் அனைத்தையும் அறியும் தன்மை வருகின்றது. சகல பிரபஞ்சங்களையும் சகல அண்டங்களின் இயக்கங்களிலிருந்தும்… அத்தகைய அகண்ட அண்டத்துடன் தொடர்பு கொண்டு தான் நமது பிரபஞ்சமும் இயங்குகின்றது.
1.இதன் உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன் அகஸ்தியன்.
2.இந்த உண்மைகளை நமது குருநாதர் என்னிடம் தெளிவாக எடுத்துக் காட்டிநார்.

இந்தப் பூமியில் மனிதனான பின் நஞ்சினை வென்றிடும் முதல் மனிதனாக அகஸ்தியன் பிறக்கின்றான். தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நஞ்சினை மாற்றியமைக்கும் நிலையைப் பெறுகின்றான்.

அவ்வாறு பெற்றவன் தான் பிறந்தபின் அவன் உடலுக்குள் இயக்கும் உணர்வின் தன்மையை அறிகின்றான். அறிந்து கொண்ட பின் உணர்வின் தன்மையை பிரபஞ்சத்தையும் பிரபஞ்சம் அகண்ட அண்டத்துடன் இயக்குவதையும் நமது பிரபஞ்சத்தில் கவரும் உணர்வுகளை நமது பூமி கவர்ந்து துருவத்தின் வழி கவர்வதையும் அறிந்துணருகின்றான்.

அவன் உணர்ந்த உணர்வுகள்
1.அவனுக்குள் உலகை அறியும் தன்மையும் உடலுக்குள் இயக்கும் உணர்வையும் அறிகின்றான்.
2.அகஸ்தியன் துருவன் ஆனான்… துருவ மகரிஷியானான்.

திருமணமான பின் தன் மனைவிக்குச் சொல்லி மனைவியும் ஏற்றுக் கொண்டு… கணவன் பெற்ற உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கி… தான் ஓதிய உணர்வுகள் மனைவி ஏற்றுக் கொண்டு இரு மணமும் ஒன்றானது.

அவர்கள் இருவரும் ஒன்றான பின் தான் அண்டத்தை உணர்ந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்து… அண்டத்தின் ஆற்றலையும் அருள் ஒளியாக அது மாறிய நிலைகளை… கணவன் மனைவி ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கினார்கள்.

அவ்வாறு உருவாக்கித் துருவத்தை எல்லையாக வைத்து அதை நுகர்ந்தறிந்து துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வருகின்றார்கள்
1.அகஸ்தியன் கண்ட பேரண்டத்தையும் அந்த ஆதியின் நிலையையும் நீங்கள் அறிய முடியும்
2.அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இது எல்லாம் இமயமலையில் வைத்து குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மை நிலைகள்.

ஒருவர் பெரும் செல்வந்தராக இருக்கின்றார். ஆனால் கடைசியிலே வாத நோய் வந்து துடித்துக் கொண்டிருக்கிறார்… பேச முடியவில்லை. அவர் உடலில் இயற்கைக் கழிவு வெளியே வருகின்றது. அதை அவரால் சொல்ல முடியவில்லை. ஓ… என்று சத்தம் போடுகின்றார்.

ஆனால் கிரகம்…! இப்படிச் செய்கின்றாரே…! என்று அவரை கவனிப்பவர்கள் ஏசிப் பேசுகின்றார்கள். இதை எல்லாம் அப்படியே கண்ணில் காண்பிக்கின்றார் குருநாதர்.

“பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!”

1.சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலும்… எல்லாம் மறைந்து போய் அவர் எந்த ஏக்கத்தில் இருக்கிறார்…?
2.ஆனால் இவர் விரும்பிய நிலைகளை அங்கே செயல்படுத்த முடியவில்லை…! என்று குருநாதர் காண்பிக்கின்றார்.

இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையிலும் நல்லதாக நடந்தால் “சாமி செய்து கொடுத்தார்…!” என்று சந்தோசப்படுவீர்கள். கஷ்டம் வந்து விட்டாலோ
1.கஷ்டத்தை எண்ணிய பின் “சாமி என்னத்தைச் செய்தார்…? என்று எண்ணம் வந்துவிடும்.
2.ஆக… பத்து தடவை உங்களுக்கு நல்லதாக நடந்து இருந்தாலும் கூட
3.மற்ற எண்ணங்கள் உங்களிடம் புகுந்து விட்டால் இது ஓங்கி வளர்ந்து அந்த நல்லதை மறந்து
4.“சாமி என்ன செய்தார்…?” என்று உணர்வுகளை மாற்றி உண்மையைப் பெற முடியாது தடைப்படுத்தி விடுகின்றது.

இதிலிருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் மனிதனுக்குள் விளைந்த 1008 உணர்வின் இயக்கங்களை உணர்த்தினார் குருநாதர். ஒரு மனிதப் பிறப்பில் இருக்கப்படும் பொழுது அவனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடக்கிறது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

குடும்பத்தில் சம்பாதித்த சொத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றது… கூட்டுக் குடும்பமாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பபேதத்தால் ஒருவருக்கொருவர் பகைமை ஆகின்றது… சாபமிடுகின்றார்கள்.

சாபமிட்ட உணர்வுகள் உடலுக்குள் விளையப்படும் பொழுது இறந்த பின் சாபமிட்ட ஆன்மா யார் மேல் சாபம் இட்டதோ அந்த உடலுக்குள் சென்று
1.தீய விளைவுகளை அந்தக் குடும்பத்தில் எவ்வாறு பரப்புகின்றது…?
2.அந்தக் குடும்பங்கள் எப்படி அல்லல்படுகின்றது…?
3.செல்வங்கள் இருந்தாலும் எல்லாமே எப்படிச் சிதறிப் போகின்றது…?
4.இப்படி 1008 விதமான (மனிதனுடைய) எண்ணங்கள் உருவாகும் நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்

இப்படித் தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார் குருநாதர் அதிலே 1008 குணங்களாக இருந்தாலும்
1.மனிதப் பிறப்பின் தன்மை ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பங்கள் எவ்வாறு உருவாகின்றது…?
2.செல்வங்கள் சம்பாதித்தாலும் அதில் என்ன பாடுபட்டார்கள்…?
3.சம்பாதிக்கும் போது அதில் எத்தனை வேதனைப்படுகின்றார்கள்…?
4.சம்பாதித்த பின் தான் எண்ணியபடி குடும்பத்தார் நடக்கவில்லை என்றால் வேதனைகள் எவ்வாறு உருவாகின்றது…?
5.வேதனை வளர்ந்து நோயாக ஆனபின் எப்படி மரணமடையும் நிலை வருகிறது…?
6.இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கின்றோமே… இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்…? என்ற எண்ணத்திலே உயிர் பிரியும் போது
7.யார் மீது நினைவுகள் அதிகமாகின்றதோ இந்த உயிரான்மா அங்கே அவருக்குள் சென்றுவிடுகிறது.
8.ஆன்மா அந்த உடலுக்குள் சென்ற பின் சம்பாதித்து வைத்த காசையே அது நிலைத்து இருக்காதபடி அந்தக் குடும்பங்கள் எப்படி இன்னல் படுகின்றது…?
9.பணமோ சேர்த்து வைத்த சொத்துகளோ இவர்களுக்கு உதவி செய்கிறதா…?

இல்லை.

அதே சமயத்தில் எத்தனையோ வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டினாலும் அவருடைய சந்ததிகள் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவருடைய சாப அலைகள் பின் தொடர்ந்து அவர்களை எவ்வாறு மடியச் செய்கின்றது…? என்று இதை எல்லாம் குருநாதர் காணும்படி செய்கின்றார்.

அதே சமயத்தில் ஒரு சிலர் போக்கிரித்தனங்கள் செய்து அந்த வலுவைக் கொண்டு செல்வங்களைச் சம்பாதிக்கின்றனர். அப்படிச் சம்பாதித்தாலும் போக்கிரித்தனமாகச் சேமித்த சொத்தை எல்லாம் அவருடைய சந்ததிகள் அழித்து விடுகின்றார்கள்.

போக்கிரியாகச் செயல்பட்டுச் சமுதாயத்தில் பிறரை வேதனைப்படுத்திய உணர்வுகள் நோயாக விளைந்து அந்த உடலில் தன் எண்ணத்தால் கவர்ந்த அந்த உணர்வுகள் அவன் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

1.இவன் செய்த நிலையால் குடும்பத்தார் வேதனை அனுபவிப்பதும்
2.மற்றவரை ஏசிச் பேசி வேதனைப்படுத்திய உணர்வுகள் உடலில் விளைந்து
3.அவனுடைய மறு பிறவி எங்கே எப்படிச் செல்கின்றது…?
4.மீண்டும் வேதனைகளை அனுபவிக்கும் சரீரமாக அடுத்து அது எப்படி உருவாக்குகின்றது…?

உடனடியாக எந்த உடலுக்குள்ளும் செல்வதில்லை…! இருந்தாலும் பிறரை எப்படி எல்லாம் வேதனைப்படுத்தியதோ அதிலே விளைந்தது உயிருடன் ஒன்றி அது எவ்வாறு இயங்குகின்றது…? என்று காணும்படிச் செய்தார் குருநாதர்.

இதைத்தான்
1.அன்றைய பெரியவர்கள் உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…!
2.என்று தெளிவாக நமக்கு உணர்த்தி உள்ளார்கள்.

இன்று ஒருவரை நாம் வேதனைப்படச் செய்தாலும் அதை ரசித்துக் கொண்டிருந்தால் அதை உயிர் அணுக்களாக உருவாக்கி உடலில் விளைய வைத்த உணர்வுகள் உயிருடன் இணைந்து அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்கும்படிச் செய்யும்.

மறு உடல் பெறும் வரை அதை அனுபவித்துக் கொண்டிருப்பதும் வேதனைக்குண்டான சரீரம் கிடைத்தபின் நஞ்சு கொண்ட சரீரமாக உயிர் உருவாக்கி விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று “நீ சென்று பார்…!” குருநாதர் எனக்கு இட்ட ஆணைப்படி உலகம் முழுவதும் நகர் பகுதிகளிலும் சிறு ஊர்களிலும் மற்ற கிராமத்துப் பகுதிகளிலும் எல்லா இடங்களுக்கும் யாம் (ஞானகுரு) சென்று வந்தது தான்.

ஒரு இடத்தில் மூலையிலே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் என்னென்ன நடக்கின்றதோ அதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்… பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பத்தில் இதற்கு முன்னாடி இறந்தவருடைய உணர்வுகள்
2.அந்த வீடுகளில் எப்படிப் படர்ந்திருக்கின்றது…? என்று குருநாதர் காட்டுவார்.

அதை எல்லாம் அறிந்து இப்படி 1008 பேரின் உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின் என்னை இமயமலைக்குச் செல்லும்படி சொன்னார். அங்கிருந்து கொண்டே உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் எந்த நிலை அடைகின்றது…? என்பதையும் அறியும்படி செய்தார்.

இமயமலையில் அமர்ந்து
1.விண்ணின் ஆற்றலை எவ்வளவு சுலப நிலையில் பெற வேண்டும்…?
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி தியானிக்கும் போது உயர்ந்த சக்திகளை அப்பொழுது நான் பெற முடிந்தது… நுகர முடிந்தது.

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலக அனுபவங்களைப் பெறுவதற்காக பல இன்னல்களை என்னை அனுபவிக்கச் செய்தார்.
1.நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயலாக்குகின்றது…?
2.இதிலிருந்து மாற்றியமைக்கும் தன்மை எப்படிக் கொண்டு வர வேண்டும்…? என்று உணர்த்தினார்.

எறும்புக் குழியில் அமர்ந்து தவம் இருக்கும்படி செய்கின்றார். அமைதியாக நான் இருக்கும் பொழுது ஒன்றும் நடக்கவில்லை ஒரு எறும்பு என் காதிற்குள் சென்றது. அது உள் செல்லாதபடி விரலை வைத்துத் தள்ளினேன். அது துடித்து விட்டது.. மடிந்து விட்டது.

அந்த உணர்வின் அலைகளை மற்ற எறும்புகள் நுகர்ந்து துரித கதியில் இயங்கத் தொடங்குகிறது. புற்றிலிருந்து வரக்கூடிய எறும்புகள் அனைத்தும் இந்த உணர்வின் ஒலியை எப்படி அறிந்ததோ மணத்தின் தன்மை எப்படி அறிந்ததோ தெரியவில்லை.

என்றாலும் அதன் உணர்வின் தன்மையை வேகமாக அறிந்து கொண்டு என் உடலில் பல நிலைகள் கொண்டு கடிக்கின்றது. கடி தாங்காது அதையெல்லாம் நான் தேய்க்கத் தொடங்கினேன்.

1.நீ தேய்த்து நசுக்கிய எறும்புகள் அனைத்தும் உன்னுடைய ஈர்ப்புக்குள் வந்து விடுகிறது.
2.உனது உணர்வைக் கவர்ந்து கருவாக மாறுகின்றது.
3.ஆனால் எறும்பின் உடலில் உள்ள விஷமும் அது நசுக்கப்படும்போது அதனின் வேதனையையும் நுகர்ந்து நீ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாய்.
4.அந்த உணர்வுகள் உன் உடலுக்குள் செல்லும்போது உன் இரத்த நாளங்களில் விஷ அணுக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.

நீ எத்தனை எறும்பை நசுக்கினாயோ உன் உடலில் 48 நாட்களுக்குள் இது ஒரு கூட்டமைப்பான உணர்வுகள் விளையப்பட்டு
1.உன் உடலில் கை கால் குடைச்சல் என்றும்
2.அந்த எறும்புகள் சாகும்போது எந்தத் துடிப்பு அவைகளுக்கு இருந்ததோ
3,பளீர் பளீர் என்று ஊசி குத்துவது போல் அதை நீ உணரலாம் என்று உணர்த்தினார்.
4.அதனுடைய இயக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனான பின் ஒன்றைக் கொன்றோம் என்றாலும் அல்லது மனிதனாகப் பிறந்தாலும் கொல்லும் பொழுது பட்ட வேதனையின் உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது.

கொல்லவில்லை என்றாலும் விஷம் தாக்கப்பட்டு அதன் உணர்வின் நினைவானால் உடலுக்குள் செல்கின்றது. இதிலிருந்து மீளும் மார்க்கம் என்ன…? என்று இந்த வினாவை எழுப்புகின்றார்.

ஆக மொத்தம் எறும்பு தான் வாழ அது செயல்படுகிறது. அதனைக் காக்க அதன் உணர்வால் நம்மைத் தீண்டுகின்றது. நம்மைத் தீண்டும் போது அதன் உணர்வு நமக்குள் பட்டால் நாம் அதுவாக மாறிவிடுகின்றோம். இது இயற்கையின் நியதிகள்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் நாம் அதைக் கொன்றால் உடலுக்குள் வந்தாலும் அதனின் வேதனையை நாம் துடைக்க வேண்டும் அல்லவா அதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்கின்றார் குருநாதர்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீ நுகர்ந்தால் அது உனக்குள் பதிவாகி இருந்தால் அந்தச் சக்தியை நீ பெற முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் உடலில் படர வேண்டும்.
2.கொன்ற உயிரான்மாக்கள் என் உடலுக்குள் வந்தாலும் “அருள் உணர்வு பெற வேண்டும் அருள் ஒளி என்ற உணர்வைப் பெறுதல் வேண்டும்…”
3.அருள் ஞானம் பெறும் உயர்ந்த உணர்வாக எனக்குள் வளர வேண்டும் என்று உடனுக்குடன் அதை மாற்றப்படும் பொழுது
4.அதைக் கொன்றாலும் நமக்குள் வந்து “அருள் ஞான உணர்வை வளர்த்திடும்” கருத்தன்மை அதிலே இணைந்து வளரும் தன்மை வருகின்றது.

இவ்வாறு இந்த உணர்வின் தன்மை இணைத்து விட்டால் உடனடியாக நமக்குள் அந்த அணுக்கள் ஈரத்தத்தில் வளரப்படும் பொழுது தீமையை மாற்றி நன்மையின் உணர்வை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இது அனைத்தும் நம் இரத்த நாளங்களில் வந்த பின் தான் உடலை உருவாக்கும் கரு விந்து என்ற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அதனின் வலுக் கொண்டு தான் மனிதனை உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

1.அப்படிக் கருத்தன்மை அடைவதற்கு முன் இந்த உணர்வினை மாற்றி விட்டால்
2.நாம் ஏங்கிய அருள் உணர்வுகள் கரு அறைகளுக்கு செல்லப்படும் பொழுது
3.அதை மாற்றி அமைத்து விடுகின்றது என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மந்திரவாதி அவன் இறந்து விட்டால் அவனுடைய மந்திரத்தை இன்னொருவன் கேட்டுணர்ந்து அதன் துணை கொண்டு செயல்பட்டால்
1.அந்த மந்திரவாதி உடலில் விளைந்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்த பின்
2.அதே ஆவியின் தன்மை இங்கே வந்து பல பல நிலைகளைச் செயல்படுத்தும் “அவனை அறியாமலே…!”
(இது எல்லாம் படித்துத் தெரிந்து கற்று வருவதல்ல – மனிதனுக்குள் விளைந்தது)

மந்திரவாதி எந்தெந்தச் சக்திகளைச் செய்தானோ இந்த உணர்வின் தன்மை அவனுடன் பற்று கொண்டு அவன் செயலாக்கும் தன்மையை இங்கே உருவாக்கும்.

ஆனால் அதனால் விளைந்த உணர்வின் வினைகள் அங்கே விளையும் பின் இவனின் (உடலுடன் உள்ளவன்) காலத்தில் இவனின் இச்சைகள் கூடி நஞ்சின் தன்மை கொண்டு அது மறையும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்Rறைய மெய் ஞானியான அகஸ்தியனுக்கு எப்படிப் பேராற்றல் கிடைத்தது…? அவன் எவ்வாறு வளர்ச்சி பெற்றான்…? என்ற உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குத் தான்.

அன்று அவன் பெற்றாலும்
1.இன்றைய நிலைகளில் நடைமுறை சாத்தியத்திற்கு… நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
2.விண்ணுலக ஆற்றலை அன்று அகஸ்தியன் ஐந்து வயதில் அந்தப் பிஞ்சு உள்ளத்திலே எப்படிக் கற்றுணர்ந்தான்…? என்ற நிலைகளை
3.உங்களுக்குள் நினைவு கொள்ள இது உதவும்…!

குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகளை நீங்களும் தெளிந்திடும் உணர்வாகத் தெரிந்திட வேண்டும்.
1அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற உண்மையின் சக்தியை
2.இன்றைய நடைமுறைக்கு நீங்கள் உணர இது உதவும்… அது உணர்ந்தால் தான் வரும்.

ஏனென்றால்…
1.சாமி சொல்கிறார் நிஜமாக இருக்குமோ…! அல்லது பொய்யாக இருக்குமோ…? என்று எண்ணினால் அங்கே வீழ்ந்து விட்டது
2.சந்தேக உணர்வு கொண்டால் மெய் உணர்வின் தன்மை பெறும் தகுதியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

ஒரு இயந்திரத்தைக் கட்டுப்படுத்த கம்ப்யூட்டரில் ஆணையிட்டு வைக்கின்றனர். வெப்பத்தின் நிலைகள் வரும் போது அந்த அலைகளைக் கொண்டு அளந்தறிந்து (SENSOR)
1.இத்தனை டிகிரியில் அது இயங்க வேண்டும் என்று வைத்து விட்டால்
2.அதே டிகிரி வெப்பம் வந்தபின் அந்தக் கம்ப்யூட்டர் சமநிலைப்படுத்தி இயந்திரத்தை இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்று தான் அருள் ஞானியின் உணர்வை நீங்கள் எண்ணி வரப்படும் பொழுது
1.உங்கள் டிகிரியை சந்தேக உணர்வு கொண்டு வந்து விட்டால் கீழே இழுத்து விடும்.
2.நான் கொடுக்கும் பதிவின் தன்மையை மாற்றிவிடும்.
3.மாறாது இருப்பதற்கே இடைமறித்து இடைமறித்து உங்களுக்குள் ஒவ்வொரு ஞானத்தின் நிலைகளையும் உபதேசிக்கின்றோம்.

ஒவ்வொரு உணர்வின் இயக்கங்களும் அது எவ்வாறு இயங்குகின்றது…? என்பதைத் தெளிந்து கொண்டால் இந்த மனித வாழ்க்கையில் விஞ்ஞான உலகில் உடலை விட்டு நாம் அகன்றாலும் மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளிச் சரீரத்தைப் பெற முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இப்பொழுது இழந்து விட்டால் மீண்டும் தேய்பிறையாக விஞ்ஞான அறிவினால் நஞ்சுக்குள் சிக்கப்பட்டு வேதனை கொண்ட சரீரங்களுக்கே நம்மை உயிர் கொண்டு சென்றுவிடும்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனுக்குள் விளைந்த சக்தி வாய்ந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் படர்ந்து கொண்டுள்ளது. அதை நாமும் பெற முடியும்.

ஆரம்பத்திலே குருநாதர் என்னைப் பழனியிலே மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறுவதற்கு விண்ணை நோக்கி ஏங்கும்படி செய்து இந்த உயர்ந்த உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வுகளை எனக்குள் தூண்டச் செய்து அதை நான் நுகர்ந்தறியும் பொழுது அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை இன்று நாம் டிவிக்களில் பார்ப்பது போன்று உருவமாகக் காண முடிந்தது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு சேட்டிலைட்டை (செயற்கைக் கோள்) பூமிக்கு வெளியியே அனுப்பி ஒளி/ஒலியலைகளைப் பதிவு செய்து
1.பூமிக்குள் நடக்கும் பூகம்பமும்
2.பூமிக்கு அடியில் இருக்கும் நீர் நிலைகளையும்
3.பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணை வளங்களையும்
4.பூமிக்கு அடியில் இருக்கும் உலோகத் தன்மைகளையும் எப்படி அறிகின்றார்களோ
5.அதைப் போன்று தான் என்னுடைய எண்ணத்தை ஊடுருவச் செய்து
6.“நினைவை அண்டத்திலே பாய்ச்சிப்பார்…! என்ற குருவின் வாக்குப்படி அவரின் துணை கொண்டு
7.அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

அகஸ்தியன் கண்டதை நீயும் காண முடியும். அவனுடைய அறிவின் தன்மையை நீ உனக்குள் பெற்று அதை முழுமையாக அறிய முடியும் என்று எனக்குள் ஆழமாகப் பதிவாகும்படி உபதேசித்தார் குருநாதர்.

அதே வழியில் இப்பொழுது உங்களுக்கும் அகஸ்தியனின் ஆற்றல்களைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் பழனியில் இருந்த என்னை (ஞானகுரு) திடீரென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மலைப்பகுதியில் வெறும் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய ஒரு இடத்திலே குருநாதர் கொண்டு போய் நிறுத்தி வைத்து விட்டார்.

இதற்கு முன் அவர் எத்தனையோ உபதேசங்களை எனக்குக் கொடுத்திருந்தாலும்
1.அந்த இடத்திற்கு வந்த பின் எல்லாவற்றையும் காற்றிலே விட்டுவிட்டேன்.
2.அவர் போதித்ததையெல்லாம் விட்டுவிட்டுச் சிந்தனை இல்லாது இருக்கின்றேன்
3.கீழே பார்த்தால் கிறு கிறு என்று வருகின்றது… இந்தப் பக்கம் காலை வைப்பதற்கு இடமில்லை
4.நிமிர்ந்து பார்த்தால் கீழே சாய்ந்து விழுந்து விடுமோ என்ற எண்ணம் வருகின்றது.
5.குருநாதர் சொன்ன தத்துவங்களை நினைத்துப் பார்க்க நேரமில்லை…
6.குருவை மறந்து என் உடலைப் பற்றிய இச்சைக்கு வந்து விட்டேன்… என் குடும்பத்தை எண்ண ஆரம்பிக்கின்றேன்.

என் குழந்தை என்னுடைய மனைவி அவர்களுடைய சிந்தனை வந்தது. ஏனென்றால் என் மனைவியை நோயிலிருந்து குருநாதர் அப்போது தான் எழுப்பி வைத்தார்.

அது மீண்டும் இறந்து விட்டால் யார் காப்பது…? பிள்ளைகள் அனைத்தும் சிறியவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு யார் நல்லதைச் சொல்லிப் பாதுகாப்பது…? என்று இந்தப் புத்தி எனக்குள் வர ஆரம்பித்துவிட்டது

ஏனென்றால் அவர்கள் மீது வளர்த்துக் கொண்ட பாசம் உடலின் இச்சை வரப்படும் பொழுது தன் இனத்தை வளர்க்கும் நிலைக்காக எனக்குள் வந்துவிட்டது.

பதட்டம் ஆகின்றது… உடலில் வேர்வை அதிகமாகின்றது…! மேலே ஒரு குடம் நீரை ஊற்றிக் குளித்தால் எப்படி நீர் ஓடுமோ அப்படி வேர்வை வருகின்றது.

நான் இருந்த இடம் வழுக்குப் பாறை… செங்குத்தாக இருக்கின்றது அதில் தான் இரண்டு பாதம் மட்டும் இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன். கால் வழுக்கும் நிலையும் வருகின்றது.

எதையாவது பிடிக்க வேண்டும் என்றாலும்… வழுக்கி விட்டால் என்ன செய்வது…? நான் தொங்கத்தான் வேண்டும். தப்பித்துக் கீழே இறங்கும் பாதையும் இல்லை… குதித்தால்தான் இறங்க முடியும்…! என்று இப்படி என்னுடைய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

என் வீட்டை நான் எப்பொழுது பார்ப்பது…? என் மனைவி பிள்ளைகளை எப்படிப் பார்ப்பது…? என்று இந்த சந்தேகம் வந்துவிட்டது. தவித்துக் கொண்டிருக்கிறேன்…!

இனி எத்தனை நாள் இப்படி வேதனைப்படப் போகின்றோமோ…? என்று உயிர் பிரியுமோ…? அது வரை இந்த வேதனையை அனுபவிக்கத் தான் வேண்டும் வெயில் அடிக்கின்றது… தண்ணீர் தாகமாக இருக்கிறது… உணவு இல்லை… இதிலே தான் இருக்கிறேன்…!

1.இப்படிப்பட்ட இம்சையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று தான்
2.பல உபதேசங்களையும் உண்மைகளையும் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

இந்த இடத்தில் இப்படி நிற்பதற்கு முன் மந்திரம் செய்வதைப் பற்றியும் மந்திரவாதிகளைப் பற்றியும் அப்பொழுது நிறைய சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

மந்திரவாதி எப்படியெல்லாம் ஆள்களை இன்னொரு பக்கம் மாற்றுவான்… பெரும் கல்களையும் பாறைகளையும் தூக்கி எறிவான்… எத்தனையோ அமானுஷ்யமான வேலைகளைச் செய்வான்…! என்பதை நேரடியாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

இதை எல்லாம் முதலில் சொல்லி இருந்ததால்
1.எவனோ ஒரு சக்தி வாய்ந்த மந்திரவாதி தான் நம்மை இப்படிச் சிக்க வைத்து விட்டான்
2.மந்திரவாதியிடம் சிக்கி விட்டோம் இது தெரியாமல் போய்விட்டதே.
3.மந்திரவாதிகளிடம் சிக்கினால் எப்படித் தப்புவது…? என்ன செய்ய வேண்டும்…! என்று
4.குருவிடம் கேட்க மறந்து விட்டோமே…! என்று அப்பொழுதுதான் குருவைப் பற்றி எண்ணமே வருகின்றது.

உடலில் கடும் அவஸ்தைகளைக் கண்ட பின் குருவிடம் கேட்காமல் விட்டு விட்டோமே…! என்று அப்பொழுதுதான் அந்த நினைவாற்றல் வருகின்றது

அப்பொழுதுதான் ஒரு பாடலும் வருகின்றது… குருவையும் நான் காண முடிகின்றது…!

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதை பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு வருகின்றார்.

குருநாதரின் குரலைக் கேட்டு அவரை உற்றுப் பார்க்கும் போது என் முன்னே அலையாக வந்து நிற்கின்றார்… அப்போது சிரிக்கின்றார்…!
1.என்னை நீ நினைக்க மறந்து விட்டாய்…
2.நான் உபதேசித்ததை எல்லாம் தெருவிலே விட்டுவிட்டாய் காற்றிலே விட்டாய்.

இத்தகைய சந்தர்ப்பங்கள் வந்தால் உன்னை நீ காக்க முடியாது…
1.பிறரைக் காக்க வேண்டும் என்று நான் சொன்னேனே…!
2.அதை உன்னால் காக்க முடியுமா…? என்று இப்படி வினாக்களை எழுப்புகின்றார்.

குருநாதரிடம் விளைந்த அந்த உயர்ந்த சக்தியை வேண்டி ஏங்கிப் பெறுவோம் என்றால்
1.பதிந்த உணர்வுகளுக்கு ஊக்கமாகி உணர்வின் அலையாக அதைப் பருகி
2.தன்னைக் காத்திடும் நிலையும் பிறரைக் காத்திடும் உணர்வுகளும் அது வரும்…! என்று அங்கே வைத்துத்தான் உபதேசித்தார்.

துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்

 

ஆசையின் வாலிப பருவத்தின் உணர்வில் ஆணைக் கண்ட பின் அந்த உணர்வின் தோற்றமானால் அந்த உணர்வுக்கு நாம் அடிமையாகி விட்டால் அதன் உணவின் வளர்ச்சியாகி நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு நாம் இழுக்கு தேடும் நிலையே வருகின்றது.

தாய் வேதனைப்படுகிறது என்பதனை உணர்வதில்லை. நம் இச்சைகள் இப்படி வளரப்படும் போது இப்பொழுது உலக மாற்றங்கள் ஏற்படும் போது இதனுடைய விளைவுகள் எத்தனையோ ஆகிறது.

1.தாய் தந்தையை மறுத்து வெளியே சென்று தனித்து வாழும் உணர்வுகள் அனைத்தும்
2.துயர்படும் நிலைகள் தான் வாழ நேருகின்றது.
3.அது தவிர தாயையும் தந்தையையும் துயரத்தில் ஆழ்த்துகின்றோம்.

தேடிய செல்வங்கள் இருப்பினும் அதைக் கொண்டு தன்னைக் காத்திடும் நிலை இல்லாதபடி வேதனை என்ற உணர்வுகளை உருவாக்கித் தன் தந்தைக்குள் விஷத்தன்மை ஊட்டப்பட்டு
1.பாம்பாய் இருந்தேன்… என்னை அடித்து உன்னிடம் வளர்த்து மனிதனாக்கினாய்
2.நீ பாம்பாகப் போ என்று வேதனை உணர்வைத் தன் தாய் தந்தைக்கு ஊட்டி
3.அந்தப் பாம்பினத்தில் சேர்க்கும் தன்மை தான் இன்றைய குழந்தைகளுக்கு உள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுதல் வேண்டும்.

மனிதனான பின் உணர்வின் தன்மை எல்லாவற்றையும் கடந்து உணர்வின் ஒளியானது நட்சத்திரம். தீமையை நீக்கும் ஆறாம் அறிவின் தன்மை கொண்டு அவன் தெளிந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரம் ஆனான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வை
1.ஆறாவது அறிவின் வலிமையின் துணை கொண்டு காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்வோமென்றால்
2.நுகர்ந்த உணர்வுகள் வலிமைமிக்கதாக மாறி அந்த உணர்வுகள் தெய்வ ஆணையாகி
4.தீமைகளை வெளியேற்றும் உணர்வின் வலிமையாகி நமக்குள் தீமை புகாது உணர்வின் வலிமை பெறச் செய்யும்.

இவ்வாறு வலிமை பெற்ற உணர்வுகள் எதன் வலிமையைப் பெற்றோமோ நாம் இந்த உடலை விட்டுக் கடந்த பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை இணைத்து… ஆறாவது அறிவை ஏழாவது நிலையான இனி பிறவி இல்லா நிலை நிலையும்… உடல் மாற்றம் இல்லாது இந்த உடலிலேயே ஒளியின் உணர்வாக நாம் மாறிடும் நிலை வருகின்றது.

எப்பொழுது துயரம் என்ற நிலைகளைச் சந்தர்ப்பத்தால் நுகர்கின்றோமோ அதை உடனே மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் வலிமையை
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய நிலைகள்…
1.நான் சொன்ன முறைப்படி நீ அருள் ஞானிகள் உணர்வுகளை உனக்குள் எடுத்து அதை விளைய வைத்து
2அந்த உணர்வின் வித்தை மற்றவர்களுக்குள் நீ பதிவு செய்ய வேண்டும்.
3.யாரெல்லாம் கவர்ந்து அதைப் பதிவாக்குகின்றார்களோ… விளையும் பருவத்தை அவர்களுக்குள் ஊட்டி
4.ஞானியின் வித்து அங்கே விளையும்படி என்று நீ உருவாக்குகின்றாயோ
5.அந்த உணர்வின் துணை கொண்டே அவர்களுக்குள் “என்னை நீ காண முடியும்…!” என்றார்.

உங்களை எப்போது எங்கே பார்ப்பது…? என்று நான் (ஞானகுரு) வினா அவரிடம் எழுப்பும் போதெல்லாம்
1.எங்கும் எதிலும் என்னை நீ பார்க்கலாம்…
2.நான் கொடுத்த அருள் உணர்வின் தன்மை பிறரில் இயக்கச் செய்து
3.அதன் வழி தீமைகள் அகன்று எங்கெல்லாம் அது மகிழ்ந்த உணர்வாக வருகின்றதோ
4.அங்கே நான் வருவேன்…! என்றார் குருநாதர்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உபதேசிப்பதை நினைவு கொண்டு யாரெல்லாம் அதன் படி செயல்படுத்துகின்றீர்களோ
1.உங்கள் பார்வையால் பிறருடைய கஷ்டங்களும் நோய்களும் என்று அது நீங்குகின்றதோ
2.நான் பார்த்தேன்… சொன்னேன்… அதன் வழி கடைப்பிடித்தார்கள்…
3.இப்போது நாங்கள் நலமாக இருக்கின்றோம் என்று மற்றவர் எப்பொழுது சொல்லுகின்றனரோ
4.அதிலே தான் என் குருவை உங்களில் நான் காண முடியும்.

மணிக்கணக்காக உங்களிடம் நான் பேசினாலும் உங்களில்… குருவைக் காணும் நிலையாக… உங்கள் மகிழ்ச்சியால் பேரானந்த நிலை பெறும் பாக்கியசாலியாக நான் ஆகின்றேன்.

1.உங்களிடம் இருந்து தான் அவரின் சக்தியை என்னைப் பெறும்படி செய்தாரே தவிர
2.தனித்து “நான் மகான் என்று காண்பித்து… மற்றதை அடக்கு…!” என்று அவர் சொல்லவில்லை.

ஆகவே குருநாதர் உணர்த்தியபடி ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம் என்றால்… உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு மனிதனில் முழுமை அடைந்து… உயிருடன் ஒன்றி என்றும் நிலையான ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… தெரிந்து கொள்ளுங்கள்… அறிந்து கொள்ளுங்கள்…!
1.பல காலம் இதை மறைத்து வைத்திருந்தேன்.
2.விஞ்ஞான அழிவுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த உண்மையினுடைய நிலைகளை வெளிப்படுத்துகின்றேன்.

இதைக் கேட்டு உணர்ந்தோர் உங்களை அறியாத வந்த தீமைகள் நீங்க வேண்டும். தீமை உங்களை அணுகாது தடுக்கும் சக்தி பெற வேண்டும்.

1.தீமையை நீக்கிட்ட உங்கள் சொல்லின் உணர்வுகள் பிறரின் செவிகளில் உந்தப்பட்டு
2.உங்களை அவர்கள் உற்றுப் பார்க்கும் போது தீமையை அகற்றும் உணர்வுகள் அவர்களுக்குள் புகுந்து
3.அவரில் அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்…
4.அந்தச் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதை உபதேசிக்கின்றேன்.

உபதேசிக்கும் பொழுதெல்லாம் குருவின் நினைவு எனக்குள் வருகின்றது… அவரின் ஆற்றல் எனக்குள் பெருகுகின்றது… அவர் உணர்வின் அலைகள் இங்கே படர்கின்றது… கேட்டுணர்ந்தோர் உங்கள் உடலிலும் பதிவாகின்றது.

பதிந்த குருவின் ஆற்றல் உங்களுக்குள் நிச்சயம் செயல்படும்…! என்ற நம்பிக்கையிலே உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… மெய் உணர்வின் ஆற்றல் உங்களில் விளைய வேண்டும் என்ற ஆசையில் இதைச் செயல்படுத்துகின்றேன்.

அதன் வழி உங்களுக்குள் மகிழ்ச்சி பெருக வேண்டும். அதுவே எனக்குள் பேரானந்தப் பெரு நிலையை உருவாக்கும்.

தீமை அகற்றிடும் சக்தி பெற்றவரை நான் (ஞானகுரு) காணும் பொழுதெல்லாம்
1.எனக்குள் தீமை அகற்றிடும் சக்தியாக அது விளைந்து
2.குருவின் அருள் எனக்குள் விளைந்து அவருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.என்றும் நிலையான பிறவா நிலை வேகாநிலை என்ற நிலையை நான் உங்களிடமிருந்து பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் அனுபவம் பெறுவதற்காக யாம் (ஞானகுரு) கன்னியாகுமரியில் இருந்து வடக்கே சைனா பார்டர் வரை சென்று வந்தது தான்.

என் கால்களிலே எத்தனையோ ஆணிகள் உண்டு. இமயமலையின் மீது செல்ல வேண்டுமென்றால் வெறும் கோவணத் துணியுடன் தான் செல்ல வேண்டும்.
1.குருநாதர் சொன்ன முறைப்படி அவர் எதை எண்ணும்படி சொன்னாரோ
2.அதை எண்ணிக் கொண்டுதான் அங்கே செல்ல வேண்டும்.

நடந்து செல்லும் வழியில் ஒரு சுடு தண்ணீர் குளம் இருந்தது. அங்கே சூடு கதகதப்பாக இருந்ததால் அந்த இடத்திலே அமர்ந்து குருநாதர் சொன்னதைச் செய்யலாம்…! என்று நினைக்கின்றேன்.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார். நீ இங்கே குளிர் காய வரவில்லை… குளிர் அடிக்கும் இடத்திலே போய் உட்கார்…! என்றார்.

விண்ணுலக ஆற்றல் அனைத்தையும் நினைவு கொண்டு எடுத்துக் கொண்டிருந்தேன்.
1.ஒரு முக்கியமான ஒன்றைச் சொன்னார்…
2.அதை நீ எண்ணும் போது இன்ன நிலை இருக்கும். உனக்குக் குளிர் வராது உன்னைப் பாதிக்காது
3.அதே சமயத்தில் உன் நினைவுகள் அனைத்தும் விண்ணை நோக்கிச் செல்லும்… துருவ நட்சத்திரத்துடன் உன்னை இணைக்கும்
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை ஒடுக்கினானோ அந்த சக்தி உனக்குள் பெருகும்
5.உன் உணர்வின் தன்மை உயர்த்த இது உதவும் என்று சில முறைகளைச் சொன்னார்.

அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்..!

ஆனால் முதலில் நடந்து செல்லும்போது அது சைனா பார்டராக இருப்பதால் அங்கு இருப்பவர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்னென்னமோ சொல்கிறார்கள்…! எனக்கு ஒன்றும் புரியவில்லை… கண்களை இறுக்கி மூடி விட்டேன்.

நடந்து செல்லும் போது காலை வைத்தால் முழங்கால் வரை உள்ளே செல்கின்றது. பனி முழுமையாக உறையாமல் இறுகலாக இல்லாதபடி கால் உள்ளே செல்லும்படியாக பொல பொல என்று இருக்கின்றது. கால் எல்லாம் கடு..கடு.. என்று இருக்கின்றது.

1.அத்தகைய பனிக்குள் கால் அதிக நேரம் இருந்தால் உணர்ச்சியற்றுப் போகும்
2.உன் கால் அழுகிப் போய்விடும் என்று ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார்.

அங்கே எப்படிச் சென்றாலும் என் உணர்வு குரு கொடுத்த சக்தியை மறந்து செயல்படும் பொழுது கடுகடுப்பு அதிகம் ஆகிவிட்டது. கடுகடுப்பு அதிகமான பின் என் நினைவுகள் எப்படி வருகிறது…?

இப்படி ஆகிவிட்டதே… ஊரை விட்டு இங்கு வந்து விட்டோமே… என் பையன் அவன் என்ன செய்கிறானோ…? என்று நினைவு வந்து விட்டது. உடனே என் இருதயம் குளிரினால் கிர்… என்று இறைய ஆரம்பிக்கின்றது. சரி… இதோடு எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கின்றது என்ற எண்ணம் தான் வருகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது அந்த இடத்தில் இத்தனை இம்சைகளும் வருகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து காக்கப்பட வேண்டும் என்றால்
1.குரு சொன்ன நினைவை எடுக்க வேண்டும்
2.உன்னைக் காக்க வேண்டும் என்றால் நீ அந்த உயர்ந்த சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
3.உயர்ந்த சக்தியைப் பெற்றால் தான் உன் குழந்தையைக் காக்க முடியும்
4.உடலில் காக்கும் உணர்வு இருக்கின்றது… அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் உயர்ந்த சக்தி எடுக்க
5.இந்த உடல் தேவை…! என்று இப்படி உபதேசிக்கின்றார்.

குருவை எண்ணி அவர் கொடுத்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

உலக மக்கள் அனைவரும் எத்தனையோ வகையில் சிக்குண்டுள்ளனர்.. வேதனையில் உழன்று கொண்டுள்ளனர். அதிலிருந்து மீட்ட “அந்த அருள் ஞானிகள் உணர்வை எல்லோரும் பெற வேண்டும்…” என்று எண்ணும்படி சொன்னார்.

விண்ணை நோக்கி ஏங்கி அந்தச் சப்தரிஷி மண்டலங்களை உற்றுப் பார்த்து… இருளை மாய்த்து உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வை நுகரும் பொழுது இங்கே இருள் மறைகின்றது.

இந்த இடத்திலே
1.எல்லோருக்கும் சேர்த்து வேதனைப்படுவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணு.
2.உன் பிள்ளைக்கு மட்டும் என்று தனித்துக் கேட்காதே…! என்று குருநாதர் சொன்னார்.

பாச உணர்வுகள் என்னை எப்படி இயக்குகிறது என்பதை உணர்த்துகின்றார். பழனியில் அங்கே காட்சி தெரிகின்றது வீட்டில் என் பையன் ரோட்டின் முச்சந்தியில் உட்கார்ந்து நானா… நானா… (நைனா) என்று என்னைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவனுக்கு மூலம்…! இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது இமயமலையில் இருந்து பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்…? குரு அனைத்தையும் குரு காண்பிக்கின்றார்.

ஆக அவன் வேதனைப்படுவதை எண்ணும் பொழுது தான் எனக்குள் இருள் சூழச் செய்கிறது… இருதயம் இறைய ஆரம்பித்தது. அப்போது என் பையனைக் காக்கும் எண்ணமே எனக்கு வரவில்லை.

அவனை எண்ணி வேதனைப்படும் நிலையில் அந்த வேதனை என்ற நஞ்சு உன்னை எப்படிச் செயலற்றதாக மாற்றுகின்றது…? ஆதை மாற்ற நீ என்ன செய்ய வேண்டும்…? இந்த உணர்வின் இயக்கங்களில் இருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்ற உண்மையை இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

உங்களிடம் இப்போது லேசாகச் சொல்லுகிறேன்… நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்கின்றீர்கள்.
1.ஆனால் இதைக் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்ற பின் மறந்து விடுகின்றீர்கள்
2.சாமி என்ன சொன்னார் தெரியவில்லையே…! என்று விட்டு விடுகின்றீர்கள்.

குருநாதர் என்னைக் கடுமையான கஷ்டங்களுக்கு உள்ளாக்கித் தான் இந்தப் பேருண்மைகளை உணர்த்தினார்.
1.என்னால் மறக்காது…
2.குரு காண்பித்த அந்த உயர்ந்த சக்தியை எடுக்க முடிகின்றது.

கஷ்டப்பட்டுப் பெற்ற அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன். ஆனாலும் சாமி பிரமாதமாகப் பேசுகிறார்… இதை என்ன என்று சொல்வது…! என்று பெருமை பேசி விட்டுச் சென்று விடுகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றால் அங்கிருக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் இவ்வாறு செய்கின்றார் என் அப்பா இப்படிச் சொல்கிறார்… என் பிள்ளை இப்படிச் செய்கின்றான்… எனக்கு ஒரே கஷ்டமாக இருக்கிறது என்ற உணர்வுகள் தான் உங்களுக்குள் வருகின்றது.

அதை எல்லாம் மாற்றுவதற்குத் தான் இந்த உண்மைகளை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். நீங்கள் எங்கு சென்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் யாம் சொல்லிக் கொடுத்த பக்குவம் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.பார்க்கும் அனைவரையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வேன்
3.எங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
4.என்னைப் பார்க்கும் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ வேண்டும்
5.அவர்கள் குடும்பங்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
6.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினைக்கும் பொழுதும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
7.இப்படித்தான் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அந்த பனிப்பாறைகளுக்கு மத்தியிலே எனக்கு குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

நீங்கள் இங்கிருந்தே அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும். குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களை அறியாத இருங்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று
1.ஏகோபித்து நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.
2.குரு இட்ட ஆணைப்படி இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

அதைப் போன்று நீங்களும்… பிறருடைய தீமைகளைக் கண்டபின் அதை அவர்கள் நீக்கிடும் நிலையாக நீங்கள் செயல்பட்டு… அவர்கள் தீமைகளை நீக்கி மகிழும் போது… நீங்கள் அதைக் கண்டு பேரானந்த நிலை பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய இந்த வழியில் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதற்கே இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

கலகப்பிரியன் நாரதன்

 

ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். அதில் ஒருவர் நல்ல மனுஷன்…! இவன் இப்படிப் பேசுகின்றானே…! என்று நினைக்கின்றோம்.

திட்டப் போகும்போது நம்முடைய மனது கேட்கிறதோ…? ஏம்பா இந்த மாதிரி எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றாய் என்கிறோம்.

உனக்கென்ன ஐயா…? என்று கேட்டால் இல்லாத வம்பெல்லாம் வரும். திருப்பி அதைத் திருத்த முடிகின்றதா என்றால் முடியவில்லை.

உங்களால் சொல்ல முடியுமா…?

1.அதே உணர்வு நமக்கு வந்தால் விட்டுவிடுவோமா. நான் சொல்கின்றேன் கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.இரு நான் பார்க்கிறேன் என்று வம்பு தான் பேசுவோம்.

தெரியுது… ஆனால் சொன்னாலும் வம்பு தான். அப்பொழுது அந்தக் கலகம் வருகிறது.

ஆனால்
1.அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோம் என்றால் உயிருக்கு வருகின்றது
2.அந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரம் இதையெல்லாம் கரைத்தது. உள்ளுக்கே சென்று பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கும்படி செய்கிறது.

வாயிலே சொன்னால் அந்த சமயத்தில் கேட்காது. நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணிச் செலுத்துதல் வேண்டும்.

1.அப்பொழுது முன்னாடி பாதுகாப்பு வருகின்றது.
2.அதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
3.அதைச் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சேர்த்து விட்டால் நாம் எடுத்த உணர்வுகள் உமிழ் நீராகி சிறுகுடல் பெருங்குடலுக்குச் செல்லுகின்றது. இரத்தமாக மாறுகின்றது.

உடல் முழுவதற்கும் ஒரு நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.

வேதனைப்படுபவரைப் பார்க்கின்றீர்கள். அந்த உமிழ் நீர் வருகின்றது இந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கம் சென்று வேதனைப்படுத்துகின்றது.

ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் கலகப் பிரியன். இந்த பிடிவாத குணங்களை விடுத்து விட்டு இருவரும் சமாதானமாகச் செல்லுங்கள் என்று விளக்கத்தைச் சொல்ல முடியும்.

நம் உடலிலும் அதைச் சமாதானப்படுத்த வேண்டும்

இந்த மனிதன் சும்மா இருந்தாலும் இவன் இப்படிப் பேசுகின்றான் பார்…!
1.அதை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
2.ஆனால் அவர்கள் செய்த தவறை நாமும் செய்கின்றோம்..
நாம் தவறு செய்யவில்லை ஆனால் இந்த உணர்வு வருகின்றது.

அது தான் நாரதன் கலகப் பிரியன் கலகமோ நன்மையில் முடியும். நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ “அதை எல்லாம் மாற்றி விடுகின்றது…”

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

 

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தையும்
1.நமது உயிர் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று அந்தக் குணங்களில் இயக்கும் அணுவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
2.இவ்வாறு காலையிலிருந்து இரவு வரையிலும் சதாசிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.

நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ வேதனைகள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவணுவாக மாற்றி “ம்” என்று நமது உடலாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… செடி கொடியினில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றுகின்றோம். ஆனால் (முதலில் உருவான) அந்தச் செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

நிலத்தில் ஊன்றப்பட்ட அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு… சூரியனால் கவர்ந்து வைக்கப்பட்டுள்ள தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே செடியாக விளைந்து அதன் வித்தை மீண்டும் உருவாக்குகின்றது.

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் பயம் அவசரம் ஆத்திரம் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால்
1.எந்தெந்த மனிதனின் உடலிலிருந்து அந்த வேதனை உருவாகி வெளி வந்ததோ அதனை நாம் நுகரப்படும் பொழுது
2.அதே வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது.

இப்பொழுது ஒரு செடியில் விளைந்த வித்து எவ்வாறு தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது தனது வித்தை உருவாக்குகின்றதோ… தன் இனத்தை உருவாக்குகின்றதோ அதே போல்
1.நம் உடலுக்குள் பிறர்படும் வேதனையோ அல்லது மற்றதையோ வேடிக்கை பார்த்தால்
2.அல்லது சாபமிடுவதைப் பார்த்தால் ஒருவர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்தால்
3.அந்த உணர்வை நாம் நுகர்ந்து வேதனைப்படுகின்றார் என்று அறிகின்றோம்.

ஆனாலும் அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் உயிர் அறியச் செய்கின்றது. அவை நம் இரத்தங்களில் கலந்து…
1.எந்த உடலில் அது உருவானதோ அதே அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு இரை தேவை.
2.எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ அது காற்றில் உண்டு.
3.அப்பொழுது நம் உடலுக்குள் இருந்து அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது அதே உணர்வை நாம் நுகர்வோமென்றால்
4.நமக்குள் இதே போல் வேதனைப்படுவதும் வெறுப்படைவதும் சங்கடப்படுவதும் போன்ற நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

இவ்வாறு நமக்குள் வருவதிலிருந்து நாம் மீள்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்றால் யாம் கொடுக்கும் உபதேச உணர்வினைப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரமோ இப்புவியில் துருவ மகரிஷி அல்லது அகஸ்தியராக இருக்கும் பொழுது தீமைகளை வென்று வானை நோக்கி உணர்வுகளை நுகர்ந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

அதனின்று வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமியோ அதைத் துருவப் பகுதியில் கவர்ந்து நமது பூமிக்குள் கொண்டு வருகின்றது.

1.அதனை நீங்கள் நினைவு கூர்ந்து உங்களில் பதிவாக்கி நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற முடியும்.
2.அப்போது நாம் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமையின் அணுக்களை நமக்குள் வளராது தடுக்க உதவும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வுகளை நமக்குள் அந்த அணுக்களைப் பெருக்கவே நாம் தியானமிருக்கின்றோம்….
3.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யவும் சொல்கிறோம்.

இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும்

இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும்

 

கர்ப்பிணியாக இருக்கும் அனைவரும்
1.வியாசகன் அகஸ்தியன் போகர் என்று பெரும் தத்துவ ஞானிகளுடைய பெரும் மகரிஷிகளின் உணர்வுகளை எண்ணி எண்ணி ஏங்குங்கள்.
2.கருவிலிருக்கக்கூடிய குழந்தை அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இவ்வாறு பெரும் மகரிஷிகளை நீங்கள் சிருஷ்டிக்க வேண்டும்.

எதிர்காலக் குழந்தைகள் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பரப்பினால் தான் விஞ்ஞான அறிவால் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்து இந்த உலகை மீட்ட முடியும்.

காரணம்… மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலையில் உருப்பெற்றுக் கொண்டிருக்கும்… அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும்… மனிதனை மனிதன் என்று இல்லாது அசுரத் தன்மை கொண்டு அழித்திடும் உணர்வுகள்… ஒவ்வொரு மனிதனின் நிலைகளிலும் இது ஊடுருவி உள்ளது.

அத்தகைய அசுர உணர்வுகளிலிருந்து மீட்டிட அந்தச் சப்தரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உருப்பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கிப் பெறுவீர்கள் என்றால்
1.அந்தக் குழந்தை உங்களையும் காக்கும் உங்கள் குடும்பத்தையும் காக்கும்.
2.எந்த ஊரிலே பிறந்ததோ அந்த ஊரையும் காத்திடும்.
3.அதனின்று உலகைக் காத்திடும் நிலை வரும்.

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவை அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைகள் அது வளர வளர வளர இந்த உலகில் உள்ள தீமைகளை மாற்றி அமைத்திடும் திறன் பெறும்.

இனி இந்த உலகம் பெரும் மாற்றங்களைச் சந்திக்கப் போகின்றது. எவ்வளவு கோடிப் பணம் வைத்திருந்தாலும் அவை நமக்கு உதவப் போவதில்லை.

1.இன்று காஷ்மீரிலோ அல்லது இந்தியாவின் சில பகுதிகளை எடுத்துக் கொண்டாலோ
2.அல்லது மற்ற பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் உள்ளோர் அனைவருமே தன் பிள்ளை எது…? தன் குழந்தைகள் எது…? என்று
3.செல்வங்கள் அழிந்து… அனாதைகளாக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
4.இது போன்று உலக நிலைகள் அனைத்திலும் ஆப்பிரிக்காவிலும் இன பேதங்களால் பேரழிவுகள் வந்து கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் இது போன்று ஏற்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில்… அகஸ்தியனால் தீமைகளை அழித்திடும் ஆற்றல் அவனில் பெற்று தீமையற்ற உடலாகத் தான் வளர்த்து… இன்றும் துருவ நட்சத்திரமாக… ஒரு பேரண்டமாக சப்தரிஷி மண்டலமாக வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அகஸ்தியன் காட்டிய அறநெறியைப் பின்பற்றி எத்தனையோ தத்துவ ஞானிகளும் மகான்களும் தோன்றியுள்ளார்கள். ஆகவே… இன்று கர்ப்பிணியாக இருப்பவர் அனைவரும் அந்த அகஸ்தியன் வியாசகன் போகர் போன்ற அந்த மகரிஷிகளுடைய உணர்வுகளைக் கருவிலிருக்கும் குழந்தைக்கு இணைத்துப் பழகுதல் வேண்டும்.

பிருகு அத்திரி போன்றவர்கள் ஆரம்பத்தில் அரசர்களாக இருந்தாலும் பின்பு பெரும் கொண்ட சக்திகளை தங்களுக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டார்கள். அத்தகைய மகரிஷிகளின் உணர்வுகளைக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைகள் பெற வேண்டும் என்று சதா அதை உருப் பெறச் செய்யுங்கள்.
1.உலகில் இருக்கும் அசுர சக்திகளை மாற்றிடும் திறன் அந்த எதிர்காலக் குழந்தைகளுக்கு வளர்கின்றது.
2.தீமைகளில் இருந்து உலகைக் காத்திட இந்தத் தென்னாடு பயன்படப் போகின்றது.

உலகில் பேரழிவு வரும் இந்த நேரங்களில்… இந்த உபதேசத்தைக் கேட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள சகோதரிகள் கர்ப்பிணிகளாக இருந்தால் இதை உபதேசியுங்கள்.

அவ்வாறு நாம் செய்தோம் என்றால்
1.இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்கலாம்.
2.அவர்களின் மறைவில் நாமும் பிறவா நிலையை அடையலாம். இதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்.

இந்த உடலில் நேரமாகி விட்டது

 

இந்த உடலில் நேரமாகி விட்டது

 

நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றைப் பார்த்து, அதனிடமிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகொண்டு அதற்கு இரையாகி அதனின் உணர்வைக் கவர்ந்து… கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப சரீரம் பெற்று, இப்படி பல கோடிச் சரீரங்களைப் பெற்றுப் பல கோடி சரீரங்களைப் பெற்றதன் பின்
1.இன்று எல்லாவற்றையும் அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
2.நம்மை மனிதனாக உருவாக்கியது… இதுதான் “கோடிக்கரை”.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிர் அதை உருவாக்குகின்றது. உணர்வின் தன்மையை நமது உடலாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக, அன்று ஞானிகள் இராமேஸ்வரம் என்று பெயரை வைத்து, ஸ்தல புராணங்களை வடித்து வைத்தார்கள்.

1.உலகில் எங்கிருந்து சுழன்று வந்தாலும் எத்தனை ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும் எத்தனை தெய்வங்களை வணங்கினாலும்
2.கடைசியாக மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும் என்று கூறுகின்றனர்.

ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு குணமும் நுகரப்படும்போது, அந்த குணங்களுக்கெல்லாம் அந்தந்த உடலைக் காக்கும் நிலை வருகின்றது. காத்திடும் உணர்வுகள் அந்தந்த உடலில் வரப்படும்போது, அந்த குணங்கள் அனைத்தும் தெய்வமாகின்றது.

நுகர்ந்த உணர்வின் எண்ணங்களை உயிர் உடலாக உருவாக்குகின்றது. அதாவது, எதை நுகர்கின்றோமோ அதை “ஓம் நமச் சிவாய” என்று நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி, உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை நாம் ஏசும் பொழுது “ஏசுகின்றார்” என்ற உணர்வை எடுத்து, அந்த உணர்வுகள் அவரிடத்தில் உடலாகி விட்டால் அவருடைய உடலுக்குள் சேரும் அனைத்தும் “சிவதனுசு”.

நம் உடலுக்குள் அதே ஏசிய உணர்வின் தன்மை பதியும்போது, அதனின் எண்ணங்கள் கொண்டு நமது செயலாக்கங்கள் இருக்கும் என்பதைத்தான் நமக்குக் காவியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

நமது உடலில் சேர்த்த உணர்வு கொண்டு “ஒருவன் என்னைக் கோபித்தான்” என்று தன் நண்பன் ஒருவரிடம் சொல்லி,
1.“என்னை இது மாதிரியெல்லாம் பேசுகிறான் அவனை விடுவேனா பார்” என்று அங்கு சொல்லப்படும்போது,
2.நமது உடலில் விளைந்த இந்த உணர்வுகள் தனுசாக மாறி கோபமான சொல்லின் உணர்வுகள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அதற்குத்தான் “தனுசு” என்று பெயர் சூட்டுகின்றனர்.

ஓருவர் நமக்கு தீங்கு செய்தார் எனும்போது, அதனின் உணர்வின் தன்மை “ஓம் நமச்சிவாய” என்று
1.நமது உடலாகும் பொழுது சிவம் ஆகின்றது.
2.அதனின் உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படும் போது சிவதனுசு ஆக மாறுகின்றது.

ஆனால் ஒருவர் நம்மைத் திட்டியதை நமது நண்பரிடம் சொல்லுகின்றோம். நண்பரிடத்தில் சொல்லப்படும் பொழுது, இந்த உடலில் திட்டிய உணர்வுகள் வந்ததனால்“அவனை நான் விடுவேனா பார் அவனைத் தொலைத்துக் கட்டுகிறேன் பார்” என்று நாம் சொல்லுகிறோம்.

ஆனால் நம்முடைய நண்பர் அவருக்கும் (திட்டியவர்) நண்பராக இருக்கும் பட்சத்தில் நம்மைப் பற்றி அவர் (திட்டியவர்), நமது நண்பரிடத்தில் கூறியதை நண்பர் நம்மிடம் வந்து “அவர் உன்னை இந்த மாதிரிப் பேசுகிறார்…” என்று சொல்லும்போது என்ன ஆகின்றது…?

நாம் “ஆ…. அப்படி ஆகிவிட்டதா…! அவனை அடிக்கிறேன் அவனைக் கொல்கிறேன்” என்று இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது, சுவாசித்த உணர்வுகள் என்ணங்களாக மாறுகின்றது,

1.அதனின் உணர்ச்சிகளை உடலாக மாற்றுகின்றது
2.சொற்கள் தனுசாக மாறி, எவரைச் சொல்கின்றோமோ
3.அவரிடத்தில், இதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.அதனால்தான், நமது உடலிலே விளைந்த உணர்வுகளை “சிவதனுசு” என்று காவியங்கள் தெளிவாக கூறுகின்றன.

ஆகவே நாம் உயிரால் நுகரப்படும் உணர்வுகள் உடல் பற்றுடன் இருக்கப்படும்போது, பற்றின் உணர்வுகள் இந்த உடலைக் காப்பதற்குத்தான் இந்த தனுசு உதவும்.

உடல் பற்றின் தன்மை கொண்டுதான் பல கோடிச் சரீரங்களைப் பெற்று, இன்று “கோடிக்கரையாக” மனித உடலைப் பெற்றோம் என்பதனை இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

இராமாயணத்தில் “இராமேஸ்வரம்”, எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது, என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின் பூஜைக்கு நேரமாகிவிட்டது என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

ஏனென்றால்
1.“நேரமாகிவிட்டது” என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர்.
2.ஆனால் “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது” என்பதுதான் அதனுடைய பொருள்.
3.நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு, இராமர் மணலைக் குவித்து (மனதைக் குவித்து)
4.சிவபூஜை செய்தார்… சிவலிங்கத்தை பூஜித்தார்… சிவலிங்கமாக மாற்றினார் என்று காண்பித்தார்கள்.
5.எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

அனைத்துத் தீமைகளையும் விஷத்தையும் வென்றது, துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, காலையில் சூரியன் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. அதை நமது பூமி, துருவப் பகுதி வழியாகக் கவர்கின்றது.

இப்படி நம் பூமியில் படரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை, மனிதர்களான நாம், நமது எண்ணம் கொண்டு நம்முள் பெற முடியும். ஆகவே
1.இதிலிருந்து நாம் இராமேஸ்வரம்… நமது எண்ணத்தால்… துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
2.“தனுசுகோடி”, நம் என்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகரும்போது,
3.அதனின் உணர்வுகள் நமது உயிருடன் ஒன்றி கடைசி நிலையாகப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது என்ற நிலையை அறிந்து தியானித்து, இதனின் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்க்க வேண்டும்.

இதனை நமது எண்ணங்கள் கொண்டு, எப்படி வளர்க்க வேண்டும்…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், தன்னைக் காத்திடும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து நுகர்ந்தறிந்த உணர்வுகளுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆகவே, எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட உணர்வுகள் மனிதராகப் பிறக்கின்றது.
1.தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து
2.தீமையிலிருந்து விடுபடும் மனிதரின் உடலை நமது உயிர் உருவாக்கியுள்ளது.
3.ஆகவே மனிதர்களான நாம் தான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைகளை எண்ண முடியும்.

ஆனால் தனுசுகோடி என்பது உயிர் பல கோடித் தீமைகளை வென்று தீமைகளையும் விஷங்களையும் வெல்லக்கூடிய சக்தி பெற்று உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

நாம் அனைவரும் உயிரோடு ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் எமது அருளாசிகள்.