சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம்

சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம்

 

அதீத செயல்பாடுகள் சக்தியின் வளர்ப்பாகக் கண்டு கொண்ட மகரிஷிகள் சரீரத்தினுள் அந்தச் செயல்பாட்டை அறிந்து கொண்டு… (தெய்வ குணங்களை) ஒவ்வொரு நிலையாகச் செயல்பாடுகள் கலைகளாய்… அவைகள் செயலுறும் நாதவிந்துவாக தெய்வீக உருவங்களாகப் பெயர் நாமப்படுத்தி… விநாயகர் சிவன் சக்தி கந்தன் என்று சூட்சுமப்படுத்தி அருளினார்கள்.

நாத விந்துகள் கலைகள் செயல் கொண்டிடும் நிலைகளும் நாவின் அடிப்பாகம் பிரணவம் (உமிழ் நீர் சுரக்கும் இடம்) என்று செப்பிய சூட்சும நிலைகளின் அகழ்வுகள்… நாவின்படி தொடங்கி தொண்டைப் பகுதியினுள் செயல்படும் ஆகாய இருள் மாயை.

1.உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை என்றுமே அணைந்திடாத அக்கினிக் குண்டம் உண்டு (சுவாசம் உள் சென்று வெளி வரும் போது சூடாக இருக்கிறதல்லவா)
2.ஈஸ்வர ஜோதி எனும் சிவத்தை அறிந்து கொண்டிடும் ஜீவன்களுக்கு அந்த நிலை தமக்குள் உணர்த்தும்
3.உயிராத்ம சக்தியின் வலுவாக்கும் செயலுக்கு தெய்வீக வடிவ நீல வண்ணம் காட்டி
4.உயிர் ஆத்மா (உயிரும் அதனுடன் ஒன்றும் ஒளியான உணர்வுகளும்) ஐக்கிய நிலையே “சீதை அக்கினி குண்டத்தில் இறங்கினாள்…” என்று
5.சூட்சும சொல்லால் பொருள் காட்டி உரைத்தாரப்பா வான்மீகி மாமகரிஷி.

தட்டாது ஒதுக்கும் நிலையே நமக்கு வேண்டியது.

வேதாள மாமகரிஷி உலகியல் தன்மையில் “தேகி” எங்ஙனம் செயல் கொள்வார்…? என்றே நயம்பட உரைத்த உரை… கட்புலன்களால் (கண் பார்வை) பௌதீக மாயப் பொருள்கள் அனைத்தையும் ஒளி கொண்டு நோக்கி அறிதலும்… அறிந்ததை அறிந்ததாகப் பொருளின் குறிப்பைத் தெளிவாக உணர்தல் என்றே அறிந்த பின் தெளிந்து உணர்ந்து கொள்கின்றோம்.

அறிந்து கொண்ட செயலை நடைமுறைப்படுத்திடும் வழி வகைக்கே செயல் கொண்டாலும்
1.கட்டுப்படாத தன்மைகளையும் அதே உணர்வின் எண்ணம் உணர்த்தியும் தெளிதல் போல்
2.அந்த நிலையிலும்… ஈர்த்துக் கொண்டிட்ட வாசனைக்கொப்ப அறிந்திடாத் தன்மைகளும் செயல்கொள்ளும் விதத்தை
3.மேலாம் அறிவு உரைத்த நன்மைதனை நாளும் பொருள் விளக்கம் பெறுவது எப்படி…?

கடும் மழைக்காலத்தில் புள்ளினங்கள் (பறவைகள்) மழை நீரால் நனைந்து “குளிர் தன்மையாக விதிர்விதிர்ப்ப” அந்தப் பறவை இனங்கள் சிலிர்த்துச் சிறகினை வீசி அத்தன்மை படாது ஒதுக்கும்.

அதைப் போல்
1.எந்த நிலையாகினும் அந்நிலையின் அலைகள் நம்மைச் சாடிடாத வண்ணம்
2.புள்ளினங்கள் தன் மீது படாது ஒதுக்குவதைப் போல் ஞானச் செல்வங்கள் பிரகாசித்திடும் விழிப்பார்வையின்
3.சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம் மறைபொருளாகக் குளிர்ந்து எழுந்த குளிர்கனல் மேல் நிலை காட்டும்.

அவ்வாறு ஈர்த்துக் கொண்டிடும் உயிர் சக்தி… ஆத்ம நிலைக்கே ஊட்டும்.

துருவ நட்சத்திர முகப்பு எல்லையில் நாம் இருக்கின்றோம்…!

துருவ நட்சத்திர முகப்பு எல்லையில் நாம் இருக்கின்றோம்…!

 

விநாயகர் பக்கம் அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் வைத்துள்ளார்கள். அரச மரம் என்பது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரம் ஆனது… “அது அரசு…”

இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் அனைத்தையும் ஒளிச்சுடராக மாற்றி எத்தகைய இருளையும் வெல்லும் வல்லமை பெற்றது.
1.அதனை எந்த விஷமும் தாக்காது
2.அப்படித் தாக்கினால் அந்த விஷம் அதற்குள் ஒளியாக மாறும்.

விஷத்தின் தாக்குதலால் தான் சூரியனும் ஒளியாகின்றது விஷத்தின் தாக்குதலால் தான் உயிரும் துடிப்பாகின்றது… வெப்பமாகின்றது… உணர்வின் அறிவாக இயக்குகின்றது.

விஷம் இல்லை என்றால் இயக்கம் எதிலும் இல்லை. விஷம் இல்லை என்றால் ஒரு பொருளின் தன்மை உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டாது.

வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால்… விஷம் அதிகரித்தால் மனிதனை நினைவிழக்கச் செய்கின்றது. ஆக… உணர்வின் தன்மை எதைப் பகுந்து எடுக்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாக நமது உயிர் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்கினர் ஞானிகள்.

நீர் நிலை இருக்கும் பக்கம் வட மேற்காக விநாயகரை வைத்து வட கிழக்காக வணங்கும்படி செய்கின்றார்கள் காலையில் நான்கிலிருந்து ஆறுக்குள் உடல் அழுக்கைப் போக்கிவிட்டு
1.ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அந்தச் சக்தியைப் பெறும்படி செய்கின்றார்கள்.
2.துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அதிகாலை உதயமாகும் சூரியன் கவர்கிறது.
3.காரணம் அதனுடைய கதிரியக்கங்கள் அதிலே படுகின்றது
4.அப்போது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக இந்தப் பிரபஞ்சத்திற்குள் சுழலச் செய்கின்றது.
5.நாம் துருவத்தின் அதாவது துருவ நட்சத்திரத்தின் முகப்பு எல்லையில் இருப்பதால்
5.நமது பூமி கவரும் பொழுது துருவத்தின் வழியாக முதலில் நம்மிடம் கவர்ந்து வருகின்றது.
6.மனிதனாகத் தோன்றி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த உணர்வுகள் பூமிக்குள் படர்ந்துள்ளது… பிரபஞ்சத்திலும் பரவி உள்ளது.

அதனை நுகரும் பருவம்… மனிதன் தன் எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்து அந்த உணர்வைப் பெறும் தகுதி ஏற்படுத்தும் நிலையாக… தீவினைகளை அகற்றும் அந்த வினையை நமக்குள் வினைக்கு நாயகனாக “கணங்களுக்கு அதிபதியாக்கும் முறையை” நமக்குத் தெளிவாக்கினார்கள்.

அதனை நாம் பின்பற்றினால் அருள் ஒளி பெறலாம் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றலாம்
1.அகஸ்தியன் கண்ட பாதையில் பேரருள் பேரொளி என்ற நிலையில் இங்கே வாழலாம்… பேரொளியாக மாற்றும் தன்மையும் பெறுகின்றோம்.
2.அதனைப் பெறச் செய்வதற்குத் தான் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதை நுகரும்படி நமக்கு வழிப்படுத்தினார்கள் அன்றைய ஞானிகள்.

“அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே” வழி நடத்திச் செல்கின்றனர் மகரிஷிகள்

“அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே” வழி நடத்திச் செல்கின்றனர் மகரிஷிகள்

 

விஸ்வேஸ்வர மாமகரிஷி அன்னபூரணியின் தாய்மை அருள் நெறியில் மகிழ்ந்து… தன் நிலையில் தான் இயங்கி… வானவியல் மண்டல கோள் அமைவு சூட்சமம்
1.“முக்கண் என்றே காட்டிடும் அக்ஷி நிலை கண்டு…” அனுபவித்து… மகிழ்ச்சியுடன் அளிக்க
2.”பிடரிக் கண்” சூட்சும நிலைதனை திருமூலர் மரபு தென்னாட்டிலே உரைக்க வந்தது.

ஒன்றிலிருந்து ஒன்று வளர்ப்பாக்கும் வளர்ச்சி நிலை பெறுவதைப் போல் உபதேசிக மூலகாரண நிலை ஒன்று (ஓவ்வொன்றுக்கும்) முன்பே உண்டு.

மறைபொருள் தன்மைகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலில்… உன்னுள் செயலுறுகின்ற ஆக்கம் ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் படைப்பின் படைப்பு என உத்வேக ஊர்த்துவம்… (மேல் நோக்கிய) உயர்வெண்ணச் செயலில் “சிருஷ்டியின் எதிர்ச்சொல்லான… முக்தி…” என்ற பேரருள் சூட்சும நிலையைப் பெற்றிடலாம்.

யானை உண்டது விளாங்கனி. விளாங்கனியை உண்ணுகின்ற யானை தீனியின் செரிமானம் பிண்டி (எச்சம்) என்னும் கழிவாக வெளிப்படுத்துதலில்… வெளிப்படும் விளாங்கனியின் ஓட்டை உடைத்துப் பார்… அங்கே ஊண் இருப்பதில்லை.

இச்செயல் எப்படி நடந்தது…?

1.ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் சிருஷ்டியின் காரண மூலம்
2.ஈர்த்துக் கொண்டிடும் நல்லணுக்கள் வலுவின் வலு வீரியம் என்பைத் (எலும்பை) துளைக்கும் ஒளி என்ற காரியம் பற்றியே
3.தன்னுள் உட்கொண்ட விளாங்கனியைச் செரிமானப்படுத்தும் தன்மையில்
4.அந்தக் கனியில் ஓர் சிருஷ்டியே யானை ஈர்த்திடும் வீரியத் தொடர்பாக
5.கனிக்குள் அணுக்கள் தோன்றி அந்தக் கனியை உண்டு விளத்தின் ஓட்டுடன் ஐக்கியப்படுத்துகின்றன.

சிருஷ்டியின் ஓர் நிலை அங்கு செயலுற்று வெளிவரும் அக்கனி சூரியனின் வெப்ப சக்தி கொண்டு “உருவான உயிரணுக்கள்” மண் தன்மையினுள் கலந்து பிருத்வி (பூமிக்குள்) கண்டு அண்டத்தில் நுழைகின்றன.

ஒளிமார்க்கச் செயலில் நாம் செயல்பட வேண்டியது எப்படி…?

மகரிஷிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒளி மண்டல ஒளி அணுக்களாகச் செயல் கொண்டு
1.மனித வித்துக்களை வளர்ப்பின் பயிர் பலனாக்கும் சிருஷ்டியையே
2.ஊர்த்துவ நிலையால் முக்தி என்ற பெயர் நாமத்தில் அழைத்திடும்
3.அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே வழி நடத்திச் செல்கின்றனர்.

அந்த மகரிஷிகள் நடத்துகின்ற செயலில் தேகம் கண்டு கொண்ட தேகி… “தன்னுள்ளேதான் தலைமை எது…?” என்று அறிதல் வேண்டும்.

உயிர் அணுக்களின் தலைமை ஒளி தானப்பா…!

அந்த நிலையை உணர்ந்து செயல்படுகின்ற ஒவ்வொருவரும் சூட்சுமத்தில் வழி நடத்திடும் ஒளி அன்பர்களின்… குரு பரம்பரை வழி வரும் சீடர்களப்பா. அந்தச் சீடர்களே கனகம் (பொன்னான உரையை) உரைப்பவர்கள்.

கார்காலம் மிகுந்து விடுகின்றது. வீட்டின் முற்றத்தில் பாதுகாப்பு என மனிதன் இட்ட மணல் மேட்டினையே மழை நீர் கரைத்து விடுகின்றது. மணல் கரைத்த விசுப்பதன் (வேகமாக வரும்) நீர்… மனைக்குள் உள்ளே வராது இருக்க வழி காணல் வேண்டும் என்று உரைத்தவரப்பா வேதாள மாமகரிஷி.

“முறைகோலுகின்ற வழியது காண்” என்று ஆணையிட்டே உரைத்த உரை பொருள் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி… அதைக் கடைபிடித்திடும் நல் பாக்கியத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

எந்த நிலையிலும் இந்த நிலையை அறுதியிட்டு
1.உறுதியாகக் கடைப்பிடிக்கின்ற ஞானச் செல்வங்கள் மனக்கோளம் உருப்பெறும் கோளமாக அமைவுற்று
2.படைப்பின் படைப்பாக்கும் செயல் திறத்தினை வலுக் கொள்ளுங்கள்.

நன்மை செய்வதை… நாம் நிலையானதாக இருக்கச் செய்ய வேண்டுமல்லவா…!

நன்மை செய்வதை… நாம் நிலையானதாக இருக்கச் செய்ய வேண்டுமல்லவா…!

 

நமது கண்கள் நமக்கு நல்ல முறையில் உதவி செய்கின்றது… நம்மைப் பாதுகாக்கின்றது. அதற்குப் பெயர் இடையன் என்று வைத்துள்ளார்கள்.

ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே எதிர்பாராது ஒரு மாடு மிரண்டு வருகின்றது. கண்ணின் கருவிழி அந்த மாட்டினை நமக்குள் பதிவாக்கி விடுகின்றது ருக்மணி.

மாடு மிரண்டு வரும் வேகத்தினை… அந்த உணர்வு வெளிப்படுவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்கிறது. அதன் உணர்வை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ கவர்கின்றது… நம்மை நுகரச் செய்கின்றது.

இந்த உணர்வுகள் மோதும் பொழுது அதனால் விபத்து ஏற்படும் என்ற உணர்வினைக் கூட்டிப் பாதுகாக்கும் உணர்வுகளைத் தூண்டி அந்த இடத்தை விட்டு நகரும்படி செய்கின்றது.

1.அப்பொழுது நம்மை மேய்ப்பது யார்…? நமது கண்களே…!
2.அந்தத் தீமையில் இருந்து விடுபட உணர்த்துகின்றது.
3.ஆனால் நமது உயிரோ அந்த உணர்வின் வலிமையை நமக்குள் அணுவாக உருவாக்கி விடுகின்றது.
4.அந்த அணுவை நாம் மாற்றும் திறன் வருதல் வேண்டும்.

ஈஸ்வரா…! என்று அடுத்த கணமே அந்தப் பயத்தால் நுகர்ந்த உணர்வு தனக்குள் அதிகரிக்காது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைக் கலந்து… இதை ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

ஆனால் காக்கப்பட்டோம். இருந்தாலும்
1.பயத்தின் உணர்வு அந்த வேகத்தின் தன்மை அணுக்களாக விளைந்தால் உடலில் இருக்கக்கூடிய சாந்த குணங்கள் இதைக் கண்ட பின் நடுங்கும்.
2.உடலிலே அடிக்கடி பதட்ட நிலை வருவதைக் காணலாம். ஏன் பதறுகின்றோம்…? பதட்டம் வருவது ஏன்…? என்ற நிலையே நமக்குத் தெரியாது.
3.நுகர்ந்த உணர்வின் இயக்கம் நம் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. அந்த உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்ற கொடுமையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்தல் வேண்டும். நன்மைகள் பல செய்யத் துணிவானாலும் நன்மை செய்த துணிவின் தன்மை கொண்டு அருள் ஒளி என்ற பேரருளை நமக்குள் கூட்டி… “அந்த நன்மை செய்ததை நிலையானதாக்க வேண்டும்…”

தீமையைக் கண்டுணர்ந்து தான் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றோம். ஆனால்… அப்படிக் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருப்பெறாது தடைப்படுத்த வேண்டும்.

அந்த வழியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அவ்வப்பொழுது எடுக்கும் பழக்கம் வருவதற்காக இங்கே பயிற்சி கொடுக்கின்றேன் (ஞானகுரு).

“ஊர்த்துவம்” – கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணிலே செலுத்துவது

“ஊர்த்துவம்” – கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணிலே செலுத்துவது

 

மகான்கள் இறை (தன்னை) உணரும்படியாக வழி காட்டியதில் மூன்று உண்டு.
1.உருவம் கொண்டு அறியும்… வழிபடுகின்ற நெறி ஒன்று
2.உயிருதய கமலாயத்தில் ஜெபிக்கின்ற தியான வழி இரண்டு

“ஆரம்ப நிலை” தியான வழி ஞானச் செல்வங்கள் அறிந்து கொண்டது இந்த இரண்டு தான்……

உயர் நிலை என்னும் ஒளி நிலை பெற்ற மாமகரிஷிகள்… தம்மை எண்ணிடும் உருவம் கொண்ட ஜீவன்களை சதாக்கியமாக (சதா சர்வ காலத்திலும்) இயங்கி வழி நடத்துவர். (ஜீவன் என்றால் உயிர்)

அந்த ஒளி நிலையை உணர்ந்து கொண்டிடும் வழியாக அனுபவ ஞான லயமாக… சத்தியத்தின் சக்தியாக இங்கே போதனையாகத் தந்ததை,
1.எது பேருண்மை பொருந்திய நாத விந்துக் கலை என்ற முத்தொடரோ…
2.சூரிய சந்திர ஆத்ம ஒளி நிலையோ (காற்று நூல் – சுவாச நாடிகளின் இயக்கமாக)
3.அதனுள் சிவன் நடிக்கும் நடனம் ஜீவனுள் சிவமாக
4.ஈஸ்வர ஜோதியாக வளர வழிகாட்ட வந்த செயலில்… அதைப் பெற்று வழி காண முயல்வோர் முயலட்டும் (மூன்றாவது வழி)

பஞ்ச பூத ஒளிவண்ண ஈர்ப்பில் தேகம் பெறுகின்றவன் அப்படி மனிதன் எனும் குணச் செயலாக வந்துற்ற ஆத்மாக்கள் அனைவரும் “தேகி” (உயிருடன் ஒன்றுதல்) என்ற பெயர் நாமம் பூண்டு விட இயலாது.

சதா ஒலி அணுக்கள் அசைந்திடும் உராய்வின் ஒலி நாதமாக
1.வான இயல் தத்துவம் அறிந்து கொள்ள முயல்வோருக்கு
2.யாம் சுட்டிக் காட்டும் ஒளி மண்டல தியானமாக
3.சிரசின் உச்சியில் எண்ணி (புருவ மத்தி – பிடர் வழி) எடுத்திடும் ஞான திருஷ்டியின் நோக்கால் தன்னுள்ளே சகலத்தையும் காணலாம்.

ஒளி அணுக்கள் அசைந்திடும் ஒளி நுண் மின்காந்த அலைகள் போல்… தனக்குள்ளும் அசைந்திடும் ஒளி அணுக்களின் செயலைச் செயல் கொள்ள…
1.வான் தொடர்பாகக் கொண்டிடும் நினைவோட்ட ஒளி மார்க்க எண்ண அம்பு வீசிடும் செயலாக (கண்ணின் ஆண்டென்னா சக்தி)
2.குவியும் குவிப்பு ஆகாய ஒளி அணுக்களின் உராய்வில் தன் உயர்வு எண்ண அணுக்களும் உராய்ந்து
3.சகலமும் சகலமாகப் படர்ந்துள்ள பால்வெளியில் நிறைந்ததை… நிறைந்த பொருளை…
4.அறிந்ததை அறிவால் அறிந்துணர்ந்து ஈர்த்தலே “ஞானத்தின் திருஷ்டி நோக்கு…”

தேகம் கொண்டவன் தேகி என்று தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் பஞ்சபூதங்கள் அமைப்புப் பெற்ற தேகத்தில்… அந்தத் தேகத்தையே தாங்கிச் செயல் புரிந்திடும் ஜீவன் – தன்னுள் அமைவு கொண்டிட்ட ஒளியே ஆத்மா என்பது.

தேகத்தை உணர்ந்து கொண்டவருக்கு ஜீவனும் ஒளி தான். ஜீவனால் அமைவு கொண்ட ஆத்மா பேரானந்தப் பிரகாசம் தான்.

அதனுள் சிவ நடனம் காட்டிடும் ஜீவன் சிவன் கலந்த ஜீவஜோதியின் அசைவாம் நடனம் காட்டி அனுபவிக்கச் செய்திடும் செயலை எடுத்துரைக்க முடியுமோ…?

அகம் கனன்ற கனல் சிவ நடனம் கண்ட ஜீவன் தன்னை மாற்று நிலைத் தன்மைகள் நெருங்கிட முடிந்திடாது.

ஏன்…? என்ற வினா எழும்பலாம்

ஜீவன் அந்த மனப்பரியை (கட்டுக்கடங்காத எண்ண ஓட்டங்கள்) அடக்குகின்றதே…! கடினமான ஒரு பாட நிலை தான்.

மனம் கீழ் நிலைக்குச் சென்றிடும் பொழுது… விந்து நீக்கம் பெற்றே ஜீவனைச் சூழ்ந்து கொண்டிடும் துர்க்குணங்கள்… எண்ணத்தின் ஈர்ப்பலையாகத் தன்னைத்தான் கேடுறுத்தும் செயலை… “வேதாள மாமகரிஷி” உரைத்ததன் நிலை என்ன…?

யானைக்கு மதம் பிடிக்கின்றது அது தன் அகன்ற காதுகளை அசைத்து விரைந்து ஓடி வருகின்றது… கடுவாய் கொண்ட சிங்கமானது சீறிச் சினந்து ஓடி வருகின்றது.

அவைகள் கொண்டிட்ட வீரியத் தன்மைகள்… குணங்களில் கொடூரமும்… உணர்வையே மறக்கச் செய்திடும் ஆவேசமும்… எந்த நிலையாகினும்…
1.எரிகின்ற நெருப்பினைத் தன் அருகே கண்டு விட்டால்
2.உணர்வையே மறக்கச் செய்த தன் நிலையில்
3.உணர்வின் மாறுதல் கொண்டு அந்த இடத்தை நெருங்கிடாது.

நமக்கும் இதைப் போன்ற தீய குணங்களிலிருந்து மீண்டு பயணம் செய்திட ஒரு வாகனம் உண்டு.
1.அது “ஊர்த்துவம்” (மேல் நோக்கிய… அதாவது கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி விண்ணிலே செலுத்துவது) என்ற பெயர் நாமத்தில்
2.விந்து ஒளி நிலையாக மேலெழும் செயலாக… சிரசினுள் நாத விந்துவாக விளங்கிட
3.மனப்புரவி (கல்கியின் உருவம்) என்றும் நீக்கமற உண்டு.

தான் தணலாக (நெருப்பாக) ஆகுங்கால் மாற்றொத்த நிலைத் தன்மைகள் (நஞ்சுகள்) நெருங்கிடாத் தன்மையாக… ஜீவன் சிவ நடனம் (பேரானந்தப் பெரு நிலை) காணும்.

ஞான வித்து

ஞான வித்து

 

பிறரின் நோயைப் பற்றி நாம் அறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் அணுக்கள் நம் நல்ல குணத்துடன் இணைந்து அதைப் பாழாக்கிடாதபடி நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதைத் தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து உன் செயலை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…?” என்று காட்டுகின்றது தத்துவங்கள்.

நோயின் தன்மை உயிரான மூலாதாரத்தில் மோதுகின்றது. அந்த உணர்வினை அறிகின்றோம்.
1.அப்போது நாம் எதைச் செய்ய வேண்டும்…? நாம் நுகர வேண்டியது எது…?
2.அந்த தீமையைக் கண்டு நுகர்ந்த பின் நாம் செய்ய வேண்டிய பக்குவம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதைத்தான் இங்கே காட்டுகின்றார்கள்.

இதை வென்றவன் அருள் மகரிஷி துருவ நட்சத்திரம் என்பதை உணர்ந்து இருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்
1.ஏனென்றால் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது
2.இந்த விஷத்தின் தன்மை உடல் முழுவதும் பரவுகின்றது இரத்தத்தின் துணை கொண்டு.
3.இந்த உடலில் வளரும் நல்ல அணுக்கள் விஷத்தைக் கண்டபின் தன் உணர்வு கிடைக்காததனால் சோர்வடைகின்றது… நல்லதாக உருப் பெறுவதில்லை.

அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று வேதனை உணர்வு அந்த நல்ல அணுக்களுக்குள் சேர்வதற்கு முன் அதனைத் தடுக்க வேண்டும்.

கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்.
1.தீமை என்ற உணர்வு இங்கே வருகின்றது
2.அது வருவதற்கு முன் நீ உன்னை காத்துக் கொள்ளும் நினைவினைக் கண்ணின் நினைவு கொண்டு
3.உடலில் இருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கினால்
4.இதன் அருகிலே வரப்படும் பொழுது அந்த உணர்வினை அகற்றிவிடும் அல்லது மாய்த்துவிடும்.

அதனால் தான் கண்ணுக்குப் பெயர் இடையன் என்று வைத்தார்கள்.

கண்ணின் கருவிழி நோயாளியை உற்று நோக்குகின்றது. அவன் வேதனைப்படுகிறான் என்று உயிரோடு உணர்த்துகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்று ஆறாவது அறிவு கொண்டு நாம் செயல்படுகின்றோம்.

ஆனால் அந்த உணர்வு நமக்குள் வந்தபின் நம் உடலுக்குள் தீமை புகாது அந்த அணுக்கள் உட்கொள்ளாது அருள் மகரிஷியின் உணர்வுகளை இங்கே கண் கொண்டு உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்தி கண்ணின் நினைவினை அந்த அணுக்களுக்கு உபதேசித்தல் வேண்டும்.

1.இந்த உணர்வின் தன்மை உருப் பெற்றபின் இதன் வலுகொண்ட பின் அதன் அருகிலே ரத்தங்களில் வந்தாலும் ஏற்றுக் கொள்ளாது
2.இதனின் உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் வரும் பொழுது கிட்னி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது… வெளியேற்றி விடுகின்றது
3.ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரும்பொழுது இது பிரித்து விடுகின்றது.

ஆகவே நாம் எண்ணும் அருள் உணர்வுகள் உடல் உறுப்புகளில் வலுப் பெறும் போது அந்தக் கிட்னியை அந்த விஷத்தன்மை செயலற்றதாக மாற்றுவதற்கு முன்… கிட்னியை உருவாக்கிய அணுக்களுக்கும் அருள் ஒளி படர்கின்றது.

பின் அந்த விஷத்தின் தன்மையை வடிக்கும் தன்மையாக வெளியேற்றி விடுகின்றது.

ஆனால் நாம் மாற்றத் தவறினால் என்ன நடக்கிறது…?

வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அது அணுக்களாக மாறப்படும் பொழுது கிட்னிக்கு சிறுநீரகத்தின் மூலம் அதைச் சீராகப் பிரிக்காதபடி விட்டுவிடுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் விஷத்தின் தன்மை மற்றொன்றுக்குச் சேர்கின்றது. வடிக்கத் தவறினால் உடலுக்குள் கடும் நோய் உருவாகி மடியும் தன்மை வருகின்றது.

ஆகவே நமது ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் சொல்வது உங்களுக்கு எளிதாக இருக்கலாம்.
1.இதை எல்லாம் கண்டுணர்வதற்கு எவ்வளவோ சிரமப்பட்டேன்… கடும் வேதனைகளை அனுபவித்தேன்.
2.வேதனை எப்படி வருகின்றது என்று உணரும்படி செய்தார் குருநாதர்.
3.வேதனை உன்னைத் தாக்கப்படும் பொழுது அதை நீ எவ்வாறு மாற்ற வேண்டும்…?
4.என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும்…? என்று என்னைத் தெளிவாக்கினார்.
5.அதனின் உணர்வினைத் தான் ஞான வித்தாக உருவாக்கி உங்களுக்குள் பதிவாக்குகிறேன்.

காரணம்… தீமை வரும் பொழுது உங்கள் எண்ணத்தால் அதை அகற்றிடும் வலிமை நீங்கள் பெற வேண்டும் என்று தான் தொடர்ந்து இங்கே உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.

ஒளிச் சரீரம் பெறச் செய்யும் ஆகார சக்தியான அன்னபூரணி

ஒளிச் சரீரம் பெறச் செய்யும் ஆகார சக்தியான அன்னபூரணி

 

காரண காரியமாக விளங்கும் இந்த உடல் கொண்ட ஜீவாத்மா… சிருஷ்டி எனப்படும் பிறவிக்குத் தனக்குகந்த தன்மைக்கே… கொண்ட குணங்களின் தன்மைக்கொப்ப பிறப்பினுக்கே வந்தாலும்… சகலமும் மறைக்கப்படுகின்ற சூட்சமம்… ஒளி நிலை பெற்றிட மேலெழும்பும் சக்தியின் தன்மையாக எடுத்துக் கொண்டால் ஆத்மா ஒளி பெற்றே திகழ்கின்றது.
1.”காரணம்” என்பது ஆகாய சூட்சுமமாக சகலமும் மூலத்தின் தன்மையாக விளங்கி
2.சிருஷ்டியின் செயலாக… கொண்ட எண்ணம் செயலுற்று… “காரியமாகின்ற” சரீரத்தைப் பெறுகின்றது.

காரண காரியம்… காரிய காரணமாக மனிதன் செயல்பட்டு… பெற்று… வளர்த்து (தன்னை) உயர்த்திக் கொண்டிட்டால் ஒளிமார்க்க நிலை…!

“அன்னபூரணி காட்டும் ஆகாரக் குறிப்பு” வியாபித்திருக்கின்ற மூலப்பிரகிருதி… (இயற்கையின் படைப்பு) சகலமும் ஈஸ்வர சொரூபம் தான் என்றாலும் மூலத்தின் குணத்திற்கு வண்ணங்கள் உண்டு.
1.பிருதிவி (பூமி – நிலம்) தத்துவத்தில் மண்ணாகக் காண்பதே செந்நிறம்
2.அக்கினியாகக் காண்பது கருமை நிறம்
3.நீரின் தன்மையில் அடங்குவது வெண்ணிறம்
4.காற்றின் புலப்படாத் தன்மையுள் பச்சை நிறம்
5.ஆகாய நிலையின் புகைவண்ணம் வெளிர் நீலம்.

இந்த ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) ஜீவன் புசித்திட ஈஸ்வர சக்தியாக… அன்னபூரணி – விஸ்வேஸ்வரர் மாமகரிஷியின்… தாய் சக்தி எனும் பஞ்ச காரண காரணியாக… ஒளிமார்க்க (ஓளிச்சரீரம் பெறுவது) நிலை உபதேசிக்கப்பட்டதப்பா.

மூல காரணியை… மனிதன் செயல் கொள்ளும் விதத்தில் “வேதாள மாமகரிஷி” உரைத்திட்ட நிலையும் உண்டு.

பெரும் நெருப்பாக இருந்தாலும் அதுவும் நீருக்குள் அடங்குகின்றது. பெரும் நீரானது இழுத்து இயங்கும் செயலாக… காரண சக்தி இயற்கையின் சீற்றம் காட்ட… காரியம் ஏற்படும் நீர் அடங்காது.

சூரியக்கதிர் அம்பு பாய்ந்து… அகநிலையால் புறமும்… காத்திடுகின்ற செயலாக
1.இப்பரு உடலைக் கொண்டு ஆத்ம சக்தியை வளர்த்துக் கொண்டாலும்…
2.இவ்வுடலையே சூழ்ந்து காத்துக் கொள்ளும் வலு வீரிய “காரண மூல சக்தி ஆத்மாவிற்கு உண்டு…”

காட்டையே பற்றி எரித்து உரத்து ஆடும் பெரும் நெருப்பானது நாணல் புல்லைப் பற்றி அதையும் தீய்ப்பினும்… கடும் மழை நீருள் அந்தக் காட்டுத் தீயானது அணைகின்றது.

அது போல் மனித மனத்தின் நிலை அகம் புறம் இரண்டு செயல் தன்மைகளில்
1.உலகோதய நிலை நாட்டத்திலும்… நாம் எடுக்கும் ஜீவ ஆதார சக்தி…
2.காட்டுத் தீயை அடக்கிய நீர் சக்தியானது
3.பூமியின் மேற்பரப்பில் காற்று நெருப்பால் ஒவ்வாத நிலைகளற்று… (கருகிய நிலைகள்)
4.பூமிக்குள் மறைந்திருக்கும் கிளைத்தெழும் ஜீவசக்திகள் அந்த நீரின் சக்தி கொண்டே (கருகியது) தழைத்து எழுவது போல்…
5.மன எண்ணக் கரு அவ்வண்ணமே ஜீவ ஆதார சுருதியாக “அகக் கனலாகக் கனன்று எழும்…”

இதிலே காட்டிட்ட தன்மைகள் பண்டு (பண்டைய – பழைய) வழியாக இருந்தாலும் அதை விண்டு அறிந்திடுதல் வேண்டும்.

உலகமும் ஜீவஜோதியும் வரைந்திடும் பொழுது அந்தப் படத்தினால் அஷ்டலட்சுமி அன்னபூரணி வாக்கு தேவி மண்டல அமைப்பு காட்டப்பட வேண்டும்.

அகக்கண் என்ற முக்கண்

அகக்கண் என்ற முக்கண்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நட்சத்திரத்தின் பால் இணைந்து… அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.முக்கண் என்ற உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது புருவ மத்தியில் பேரருள் பேரொளியாக மாறும்
3.உயிருடன் ஒன்றி அதை நீங்கள் காணலாம்… அகக்கண் கொண்டு…!
4.துருவ நட்சத்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வை நீங்கள் இப்போது அகக்கண்ணால் பார்க்கலாம்.
5.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அகக்கண்ணால் நீங்கள் இப்பொழுது பார்க்கலாம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் பாய்ச்சி… அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது
1.துருவ நட்சத்திரத்தினுடைய அருள் மணம் வெளி வரும் போது உங்கள் உடல் முழுவதும்
2.“ஒரு பாதுகாப்புக் கவசம்” போன்று பேரருளின் ஒளி வட்டம் காணும்.
3.தீமைகள் உங்கள் ஆன்மாவிலே புகாது பாதுகாக்கும் உணர்வின் சக்தியாக இது அமையும்.
4.உங்கள் உடல் முழுவதும் ஒரு ஒளி வட்டம் தெரிவதை அகக்கண்ணால் நீங்கள் உணரலாம் பார்க்கலாம்.
5.இப்பொழுது உங்கள் உடலே ஒளிமயமாகக் காட்சி தரும்.

துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி கணவன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கணவன் மனைவி இவ்வாறு ஒருவருக்கொருவர் பாய்ச்சி இரு மனமும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக இணைந்து பேரருள் என்ற உணர்வுகளை உங்களுக்குள் உருவாக்குங்கள்.

உங்கள் இருவரது உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் பேரொளி பெறும் அணுக்களாக… கருக்களாக… உருவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் பெற்று… எங்களுக்கு அவர்கள் அந்த அருளைப் பாய்ச்சி… எங்கள் வாழ்க்கையில் நாங்கள் அனைவரும் பொருளறியும் திறன் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்பொழுது “சப்தரிஷி மண்டலங்களின் காட்சி உங்களுக்குக் கிடைக்கும்… மனக்கண்ணால்…!”

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை விண்ணிலே செலுத்தி சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை ஊட்டுங்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்பு வட்டதில் இணையச் செய்வோம்… உந்திச் செலுத்துவோம்.

இப்பொழுது
1.அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருப்பதை அகக்கண்ணால் உணர முடியும்.
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் ஒளி வட்டத்தில் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை அகக்கண்ணால் பார்க்கலாம்.

அன்னபூரணி அஷ்டலட்சுமி வாக்குதேவி

அன்னபூரணி அஷ்டலட்சுமி வாக்குதேவி

 

காசியம்பதியில் விறகு சுமந்த வேண்மா சந்தர்ப்பத்தில் மயக்கமுற்றுச் சாய்ந்து… அந்தச் சரீரத்திலிருந்து ஜீவன் நீங்கிடும் தருவாயில் ஆங்கு வட்டமிட்ட “விஸ்வேஸ்வர மாமகரிஷி” (காசி விஸ்வநாதன்)… வேண்மாவின் உடலில் சூட்சும செயல் கொண்டு “கல்லால சித்தன்” என்ற நாமம் பூண்டு மௌனித்து எடுத்த சக்தி நிலை பெரிது.

1.மௌனமே சக்தி பெறச் சம்மதம் எனப் பொருள்பட
2.வானியல் தொடர்பாக வாக்கு தேவி அன்னபூரணி… அஷ்டலட்சுமி… என்ற மண்டலங்களாகப் பெயர் நாமப்படுத்தி
3.அதைச் சிரசினுள் காட்ட வந்ததே
4.அன்னபூரணியை வலக்கண்ணும்
5.அஷ்டலட்சுமியை இடக்கண்ணும்
6.வாக்கு தேவியைப் பிடரிக் கண்ணும் என்று காட்டி
7.மனக்கண் குறிப்பாக உள் முகம் நோக்கி… அகப்பார்வை ஒளிமார்க்கம் காட்டும் விதம்… – அதுவே “அக்ஷி…”

இத்தன்மையை அறியும் போது அறிய வேண்டியது ஒன்று உண்டு.

கிணற்றில் நீர் இருக்கின்றது. கிணற்றில் இருக்கின்ற நீரை நீர் இறைக்கின்ற உபாயமாகக் கைக்கொள்ள வேண்டிய முறை உண்டு.

அதாவது யாம் சொல்ல வருவது “அறிவை அறிவால் அறிதல்” என்பது.

சிறு குழந்தைகள் ஓரு மண் கலயத்தைக் கயிற்றினால் கட்டி அதைக் கிணற்றிற்குள் விட்டு நீர் இறைக்கின்ற செயலில் அது பக்குவமற்ற தன்மை என்றாலும்… “கவனத்தின் குறைபாடு தான்…”

சிறு பிள்ளை விளையாட்டு என்றபடி நீர் மொண்ட அந்தச் சிறு மண்பாண்டம் நீர் இறைக்கும் தருவாயில் கிணற்றுச் சுவரில் பட்டு உடைந்து விடுகிறது. அந்தக் குழந்தைகள் தாங்கள் கைக் கொண்ட செயலுக்கு நாணமுறுகின்றனர். அதைப் போல் இல்லாதபடி
1.இந்த ஞான வழியினை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறை என்பது… சிந்தனையில் சிரத்தையோடு
2.சூட்சும மாமகரிஷிகள் காட்டுகின்ற வழித்தன்மையைக் கையாள்வதில் கொள்கின்ற தனித்துவ செயல்பாடு “உறுதியாக” இருத்தல் வேண்டும்.

அந்த உறுதியை எப்படிச் செயல்படுத்துவது…?

கிணற்றில் நீரை இறைக்க வேண்டும் என்றால் உடையாத ஓர் கலம் வேண்டும். நீர் இறைக்கும் தருவாயில் நீர் இறைக்கின்ற கலம் நீர் மொள்கின்ற சத்தத்தைப் புலனறிவால் அறிந்து கொண்டு… கலத்தில் நீர் நிறைந்து விட்ட தன்மையை உணர்ந்தே… பக்குவமாக வெளிக்கொணர்ந்து பயனுறக் கைக்கொள்ளல் வேண்டும்

அது போல்
1.விஸ்வேஸ்வர மாமகரிஷி காட்டிய அந்த உயரிய வழித்தன்மை
2.அவராலும் அவருடைய சீடர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த அந்த முறையை
3.இன்று அறியப்பட வேண்டிய இரகசிய உண்மைகளை நீங்கள் அறிந்து தெளிந்து… ஆக்கச் செயலுக்காக உயர்ந்து
4.பால்வெளியின் பூதியில் ஓர் மண்டலமாக உருக் கொள்கின்ற திறனுக்கே
5.உயர்வெண்ணம் செலுத்தப்படல் வேண்டும்

அரை குறையாக அறிந்ததை… அறிந்து விட்டதாக எண்ணி இரகசிய உண்மைகளைச் செல்வம் சேர்த்திடும் எண்ணத்திற்குச் செயல்படுத்திட எண்ணிய இந்தத் தேசத்தில்… அக்ஷி முறை செயலுறுவாகச் செயல் கொண்டு “இயங்கிடாத நிலையே” இன்று திபெத்தில் இரகசிய முறையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

1.ஆத்மாவும் ஜீவனாடி நாத விந்துவும்
2.மேலது கீழாய் கீழது மேலாய்
3.சிருஷ்டி எனப்படுவது கீழ் இறங்கல்
4.ஞானம் எனப்படுவது மேலுயர்தல்
5.சிருஷ்டி… சிருஷ்டிக்கும் சக்தி… என்று ஆதி சக்தியின் தன்மையையே அவ்வாறு குறிப்பிட்டோம்.

“ஸ்ரீ பாதங்கள்…” என்று உரைப்பதே “நாத விந்து” எனப்படுகின்ற ஒலி ஒளி சக்திகளையே.

பாதுகாப்புக் கவசம்

பாதுகாப்புக் கவசம்

 

அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை…
1.இயற்கை எப்படி விளைந்தது…? என்றும்
2.இயற்கையில் இருந்து ஞானிகள் எவ்வாறு மீண்டனர்…? என்பதையும்
3.இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கப்படும் பொழுது நீங்கள் செவி வழி அதைக் கேட்டுக் கூர்ந்து கவனித்து
4.அந்த உணர்வினை நுகர்ந்தது அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலாக உருவாக்கி விடுகின்றது உயிர்.

ஆக இவை அனைத்தும் உங்கள் எதிர்காலத்தில் வரும் பகைமை உணர்வுகள் தாக்காது அதனின்று விடுபடும் அருள் ஒளியின் உணர்வினைச் சேர்த்தால் இது உங்களைப் பாதுகாக்கும் சேனாதிபதி என்ற நிலை பெறுகின்றது.

அத்தகைய நிலைகள்
1.உங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக உணர்வின் அணுக்களைப் பெறச் செய்ய
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கலந்து அதனை உருவாக்கினால் இந்த உணர்வின் எண்ணம் உங்களைக் காக்கும்.

அதுவே சேனாதிபதி.

எண்ணத்தின் தன்மை கொண்டு விண்ணின் நிலையை நீங்கள் நுகர்ந்தறிந்தால் உங்கள் உயிர் அதை உருவாக்கி விடுகின்றது. மனிதன் தான் இதைச் செய்ய முடியும்… பிரம்மாவைச் சிறை பிடித்தான்.

அருள் ஒளி பெறும் உணர்வை நாம் நுகர்ந்தால் உணர்வின் அறிவாக ஒளியின் சரீரமாக மாற்றும்… ஒளிச் சுடராக உருவாக்கும்.

ஆகவே காலத்தால் விளைந்த விஷத் தன்மைகளை மாற்றிச் சுவை கொண்டதாக… இருளற்ற ஒளியான நிலைகளை உருவாக்கும் உணர்வுகள் பெறுகின்றது. இதனை நாம் பெறும் மார்க்கம் இதுதான்.

ஆகவே பேரருள் பேரொளி பெற்ற அருள் உணர்வினை நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களில் இணைத்தால் பேரொளி என்று உருவாக்கி விடுகின்றது… உடலை ஒளியாக மாற்றி விடுகின்றது.

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்து அந்த அரும்பெரும் சக்தியை ஏங்கிப் பெற்று
2.நம் உடலில் பரப்பி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் பெறச் செய்வோம்.
3.பேரருள் பெறும் தன்மையாக… ஏகாந்த நிலையை அடைவோம்.