நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்

நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்

 

இந்த வாழ்க்கையில் அடிக்கடி நம்மை அறியாமல் வேதனைப்பட்டோம்… பயந்தோம்… என்றால் அத்தகைய உணர்வுகளினால் உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள் சுரக்கும் சுரப்பும்” அதிகரித்துவிடும்.

பாம்பு கடுமையான தன் விஷத்தின் தன்மை கொண்டு அதனுடைய தலை சிறிதாக இருப்பினும் பெரிய உயிரினங்களைக் கூட விழுங்க முயற்சிக்கும். அந்த உயிரினத்தைப் பிடித்து விட்டால் தன் உடலில் உருவான விஷத்தின் தன்மைய கொண்டு அந்த உயிரினத்திலே பாய்ச்சி அதைப் பலவீனப்படுத்தி… உடலுக்குள் செல்லச் செல்ல அந்த உயிரினம் கரையும் தன்மை அடைகின்றது.

அதைப்போல மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் நாம் உணவாக உட்கொண்டாலும் நமக்குள் இருக்கும் பித்த சுரபி அதுவும் நஞ்சு தான்.
1.பித்த சுரப்பி எந்த அளவிற்கு உமிழ்த்துகின்றதோ
2.அது உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவைக் கரைத்து விடுகின்றது.

அடிக்கடி நாம் கடினமான உணவுப் பொருளை உட்கொள்கிறோம் என்றால் “பித்த சுரப்பிகள் அதிகமாக இயக்கப்பட்டு” அந்தக் கடினப் பொருளைச் சீக்கிரமே அது கரைத்து விடச் செய்யும்.

ஆனால் அடுத்த சமயங்களில் இந்த கடின பொருளை நாம் உட்கொள்ளவில்லை என்றால்
1.பித்த சுரப்பி உமிழ்த்திய வேகத்தில் நஞ்சு அதிகமாகி குடலுக்குள் அரிப்பும்
2.பசி கொடூரமாக இருந்தாலும் உணவு உட்கொள்ள முடியாதபடி தடைப்படுத்தும்.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது உடலின் உணர்வின் செல்கள் சீராக இயங்காது.
4.அப்போது உணவாக உட்கொள்வதில் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படுகின்றது.
5.சுவை அறியவில்லை என்றால் உணவை உள்ளே ஈர்க்கும் திறன் அது தடைப்படுகின்றது.
6.பித்தத்தில் கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உணவை உள்ளே செல்ல விடாதபடி வெளிப்படுத்தும் சக்தியாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… ஒருவர் பலகாரம் சுடுகிறார் என்றால் தண்ணீரைத் தெளிப்பார்… எண்ணெய் எந்த அளவுக்குக் காய்ந்திருக்கிறது…? என்று பரீட்சித்துப் பார்ப்பார். வடையைத் தட்டிப் போடும் பொழுது அதில் எழும் நாதத்தின் ஒலி கொண்டு வெப்பத்தின் தணனலைக் கண்டு கொள்கிறார்.

வெப்பம் சரியாக இருந்தால் வடை நன்றாக வேகின்றது… சுவையாகவும் இருக்கின்றது. ஆனால் வெப்பம் சரியாக இல்லை என்றால் வடையைத் தட்டிப் போட்டால் அது லேசாக இருக்கும் பொழுது எண்ணெய் ஊடுருவி விடும்… வடை சுவை அற்றுப் போய்விடும்.

ஆக
1.வெப்பத்திற்குத் தக்கவாறு வடையில் அந்த மாவின் சத்தைச் சுவை கொண்டதாக மாற்றுவது போன்று
2.நமது உணர்வின் இயக்கச் சக்தி எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதைப் போன்றே ஜீரணிக்கும் சக்தி பித்த சுரபிகளுக்கு வருகின்றது.
3.பித்தம் அதிகரித்து விட்டால் மற்ற உறுப்புகளை இயக்கும் தன்மையும் குறைந்து விடுகின்றது உணவாக உட்கொள்ளும் நிலையும் மறைகின்றது.

ஏனென்றால் சாதாரணமாகத் தான் நாம் எண்ணினோம் கோபப்பட்டோம் வேதனைப்பட்டோம் எல்லாம் வேடிக்கை தானே பார்த்தோம் என்று நாம் இருக்கலாம்.

அந்தக் கோபித்த உணர்வின் செயல்கள் நம் உடலில் எவ்வாறு விளைந்து மாறுகிறது என்ற நிலையை தத்துவ ஞானிகள் இப்படித் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
1.ஆகவே நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் இயக்கும் மனித உணர்வுகள் அனைத்தையும்
2.தெரிந்திடும் நிலையும் தெளிந்து செயல்படும் நிலையும் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

வழி நடத்த நான் இருக்கின்றேன்… சங்கடத்தை விட்டிடப்பா…!

வழி நடத்த நான் இருக்கின்றேன்… சங்கடத்தை விட்டிடப்பா…!

 

கடலில் சதா சர்வ காலமும் கரைதனில் அலை வீசி மீண்டும் அதன் செயல் நடைபெறுதல் போலவே… சூட்சும நுண் அலைகள் நீல வண்ணம் காட்டிடும் அன்பாகக் கருணை என்னும் நிலையில்… நீ அன்பு என்னும் அலைக்கரத்தை நீட்டியே மெய் வழி அறிவாய்…!

யாம் சொல்லும் தியானத்தின் மூலம் எடுக்கும் நுண் மின் காந்த அலைகளால் இருளான இந்த உடலுக்குள் “ஒளி பெற்றிடும் உயிரணுக்கள் தோன்றிடும்…”
1.அப்படி ஒளி மண்டலமாகும் ஆக்கத்தில் திகழும் மூலக்கனல் பெறும் கந்தன்
2.தாய் மூச்சு நாடியின் (குறுதெலும்பு பாகம்) துணையுடன் மேல் எழுந்தே ஆறு ஆதார நிலைகளில்
3.நன்மை என்னும் உறுதி மலை மேல் ஏறி… ஆகாயக் கூறு என்றே அழைக்கப் பெற்றிடும் சிரசின் உச்சியில்
4.ஒளி பொருந்திய வேல் போல் தோற்றம் தந்திடும் அமைப்பினில் கிளர்ந்து எழுகின்ற பொழுது…
5.தாய் மூச்சு நாடியின்… சக்தி ஒளி மண்டல சுவாச அலைகளை
6.கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கரைதனையில் வந்து மோதுவதைப் போல்
7.சிரசினில் மோதிடும் இடைவிடா காந்தப்புலன் மெய் ஒலி/ஒளி காட்டித் தடைப்படாத ஆனந்தத்தை உமக்கு அளித்திட… இனி தடை ஏது…?

ஆகவே… எத்தகைய சங்கட அலைகளையும் எண்ணியே ஈர்த்துக் கொண்டிடுதல் “இனி உன் நிலைக்குத் தகாதப்பா…”

சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு இயற்கையில் பூத்திடும் புஷ்பங்கள் அனைத்துமா விரிந்து மனம் வீசுகின்றது…? பக்குவப்பட்ட மலர்களையே கதிரவனின் கதிர் ஒளி அரவணைத்துப் பூக்கச் செய்கின்ற அன்பினை உணர்ந்து கொண்டாயா…?

1.ஓர் முறை வழி நடந்த என் பயணத்தில் என் தலைச்சுமையை இறக்கி வைத்து… இளைப்பாற்றி…
2.மேல் உத்தரியத்தினால் காற்றினை வீசி அரவணைத்த உனது உள்ளம் தான் இன்னும் உன்னை நாடியே வந்தடையச் செய்கின்றது.
3.சிவத்தின் தன்மை சிவாயத்துள் உன் மனநிலையை அறிந்து கொண்டிடவே தொடங்கிய பயணம் தொடர்கின்றது.

சகடம் போல் சுற்றுகின்ற வாழ்க்கைதான்… எண்ணத் தேர் மனமாம் மனதில்… அசைந்து அசைந்து ஏறுகின்ற செயலிலும் சகடம் சுழல்கின்றது.

தேரின் மையம் எது தெரியுமா…?

“தனித்துவ சக்தி” செயலுறுகின்ற மூகமோ (மௌனம்) அன்றி நிதானமோ…
1.சுழலுகின்ற சகடத்தையும் அந்தச் சுழற்சியின் ஓட்டத்தில் சுழலச் செய்யும் நிலை பெற்ற தேரின் அமைப்பை
2.அந்நிலையில் நிலைக்கச் செய்து… சாஸ்வதக் காட்சியாக வெளித் தோன்றாது.

சிறு பாகமான “அச்சாணி” விசை சேர்த்துக் கொள்கின்ற மையமாம் தனி சக்தி விசையாக்கும்.
1.வாழ்வினுக்கும் வழித் துணை என்றாலும்
2.செலுத்துபவனாய் நாமிருக்க… பஞ்சபூதங்கள் அமைவு பெறும் அனைத்தும் ஆகாயம் என்ற பால் வெளி.

வேதாள மாமகரிஷி அன்று உரைத்த “இந்த உரையில்” மறைபொருள் இரகசியங்கள் பல உண்டு.

கோபம் அதிகமானால் விளையும் தீமைகள்

கோபம் அதிகமானால் விளையும் தீமைகள்

 

சந்தர்ப்பவசத்தால் “கோப உணர்வுகளை” அதிகமாக… தொடர்ச்சியாக நுகர நேர்ந்தால் இந்தக் கார உணர்ச்சிகள் நம் இரத்தங்களிலே உந்தப்படும் போது இரத்தத்தில் இருக்கும் நீரின் சக்தியை வடிக்கப்பட்டு அது காணாது போய் விடுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்பு உள்ளோருக்கு அடிக்கடி ஆவேச உணர்வுகளும் தாகமும் வரும். இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த உணர்ச்சியின் வேகங்களாகும் பொழுது சிறு மூளையின் இயக்கத்திற்குச் சென்ற உடனே அதன் உணர்வைத் தாங்காது அது அதிகரித்துவிட்டால் கைகால் நரம்புகளை வேகமாக இறுக்கி மடக்கிவிடும்.

1.நாம் எவ்வாறு “ஆ…!” என்று அலறப்படும் பொழுது வாயின் தன்மை தன்னிச்சையாக அந்த உணர்ச்சிகள் இயக்கச் செய்கின்றதோ
2.இதைப்போன்று தான் இந்தக் கார உணர்வின் சத்து நமக்குள் இப்படி இயக்கமாக மாறிவிடுகிறது.
3.“ஆ…!” என்று அலறுவது போல நம் இரத்தத்திற்குள் இருக்கும் நீர் சத்து நிலைகள் மடிந்து விடுகின்றது அல்லது வேர்வையாகக் கொட்டி விடுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்பு உள்ளவருக்கு நடக்கும் பொழுது தலைசுற்றல் கிறுகிறுப்பு இத்தனையும் வரும். அடுத்து ஒரு காரியத்தை எண்ணினார்கள் என்றால் அதைச் செயல்படுத்தும் போது உணர்ச்சியின் வேகங்கள் உந்தப்பட்டு
1.உடனே மயக்கத்தின் நிலைகள் “ஹோமா ஸ்டேஜிக்கும்” சென்றுவிடும்.
2.சிந்தனையற்ற நிலைகளும் நரம்பியல்களை இயக்காதபடி இருதய வால்வுகளைச் சரியாக இயக்காத நிலைகள் ஆகி விடுகின்றது.

காரணம் இந்த உணர்வின் வேகம் அதிகரித்து விட்டால் இரத்தத்தில் கார உணர்ச்சிகள் அதிகரிக்கும் பொழுது இரத்த வால்வுகளிலே கார உணர்ச்சிகள் ஆனபின் அந்த வால்வின் நுழைவாயிலில் அதிக வீக்கம் ஆகிவிடுகிறது.

உற்பத்தியான இரத்தத்தை உள்ளுக்குள் இழுத்து வடிகட்டும் நிலையாக ஈர்க்கப்படும் பொழுது வராது. அப்பொழுது கடினமாக இழுக்கப்படும் பொழுது அந்த ஒரு பாகத்தில் எரிச்சலும் அடுத்த பாகம் இழுக்கும் நிலைகள் மின் அதிர்வைப் போன்று பளீர்….ர்ர்… என்று மின்னிவிடும்.

இப்படி மின்னினாலும் இதன் தொடர் வரிசை தனக்குள் வரவில்லை என்றால் ஆவேச உணர்வு கொண்டு பதட்டமும் பயமும் நடுக்கமும் ஏற்பட்டு விடுகின்றது.

நடுக்கமும் பயமும் உருவானால் அது அதி துரிதமாக இயங்கப்படும் பொழுது… நம் எண்ணங்கள் அப்பொழுது எதுவாகின்றதோ…
1.நாளை இந்தக் குடும்பம்… தன் குழந்தைகள் என்ன ஆவார்கள்…?
2.தொழில் என்னவாகும்…? பணம் கொடுக்கல் வாங்கல் என்ன ஆகும்…? என்று அதனால் பலவாறு சோர்வடையும் நிலைகளும்
3.உணர்ச்சியின் வேகம் பயம் அதிகரித்து நடுக்கத்தில் கொண்டு போய் விடுகின்றது.
4.இவ்வாறு ஒரு சமயம் இரண்டு சமயம் ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி “ஹார்ட் ஃபெயிலியர்…!”

இருதய வால்வுகள் சீராக இயங்காது ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகச் செல்லாது. அப்போது ரத்தத்தின் அழுத்தம் உள்ளே அதிகமாகி விட்டால் கை கால்களைச் சுண்டிவிடும்.

பயமும் நடுக்கமும் அதிகரிக்கப்படும் பொழுது இருதயம் வேகமாகத் துடிக்கும் நிலை வரும் பொழுது அதற்கு வேண்டிய இரத்தம் சரியாக வரவில்லை என்றால் பட்…! என்று நின்று விடும்.

ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் இதைச் சொல்வார்கள்.

சதிபதி

சதிபதி

 

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்றால் வாழ்க்கை நடைமுறையில் புறச்செயல்படும் காரியங்கள் குறிக்கின்ற கலைகள் என்றே எண்ணமிடுகின்றாய்.

வீரம் விவேகம் நளினம் முதற்கொண்டு நாம் காரியங்கள் நிகழ்த்தும் கலைகளும் உண்டு. மகரிஷிகள் உணர்த்திச் செயலுற வந்த மெய்ஞ்ஞானச் சுடராக்கும் கலைகள் அறுபத்தி நான்கினையே இங்கே உரைத்திட வந்தோம்.

எண்ணத்தின் தெளிவு…
1.இக்கணம் நீ என்ன “எண்ண நினைவில் இருக்கின்றாய்…?” என்று வினவினால்
2.“நான் இதை நினைத்தேன்…” என்று கூறுமளவிற்கு மனத்தின் தூய்மை வலுப்பெற்றிருத்தல் வேண்டும்.
3.அந்நிலை வலு கொண்டு விட்டால் கலைகள் தொடக்கம் அச்சரம் ஐம்பதில் தொடங்கும்.

ஓங்காரப் பொருள் காட்டும்
1.“பிரணவம்” என்றே அழைக்கப் பெறும் ஓம்…!
2.அதனுள் மூன்று நிலைகளாக கலைகள் (1)ஈர்த்து (2)சமைத்து (3)அமைதல் என்கின்ற விதமாக கலைகள் ஐம்பது.
3.அதாவது உயிரிலே ஈர்க்கப்பட்டு சமைத்து – ஓ; உடலாக அமைவது – ம்

ஈர்ப்பின் அகரம் பத்தாக… ஈர்த்த பின் செயல் வரும் உகரமாக பதினான்கு செயல் கொண்டு… அமைவு பெறும் மகரம் இருபத்தி ஆறாக ஓம் என்ற பிரணவ கலைகள் ஐம்பது நாற்பூத செயல்பாடலாய் விந்து கலைகள் நான்கு… நாதக்கலைகள் பத்தாக ஆக “அந்த அறுபத்தி நான்கு கலைகளையே சரீரத்தில் கண்டனர் மகரிஷிகள்…!”

இதற்கும் மேல் ஒளியாகும் நிலை ஒன்று சிரசின் உச்சியில் ஈஸ்வர ஜோதி…! ஒளி நிலை பெற மகரிஷிகள் காட்டிட்ட அனிமாது சித்துகளை (அஷ்டமாசித்து) அடைந்து விட்டாலும்
1.அடக்கத்தின் திரு உருவாக ஒளி மண்டலத்தில் உறையும் மனமாகக் காரியமாற்றி… காரணத்துடன் வாழ்வான்
2.அதனின் நிலைக்கு வேறு எந்த நிலையும் நாம் எண்ணிடல் ஆகாது.

இச்சரீர வாழ்க்கையிலும் சிவசக்தி (சதி+பதி) சமேதராகச் சக்தி நிலை பெற்றிடவே உணர்ந்து கொண்டிட வேண்டிய பயன் தரும் நிலை காணுவோம். தாகம் எடுக்கின்றது தாகத்தைத் தணிக்க நீர் அருந்த வேண்டும் என்று மனம் நாடுகின்றது.

இது “சதியானவள்…” (வேகா நிலை) கொள்கின்ற செயலுறும் எண்ணத்தின் நிலையே கோபுரம் போல் உயர்ந்து விளங்குகின்றது. அதுவும் மலையின் மீது அமைந்த கோபுரம்.

“பதியானவன்…” மோகத்தின் வழிப்பாதை பயணமுற்று… அந்த வழிப் பாதையின் தொடரில் பன்மாடங்கள் இளைப்பாரி… நீக்கமுறாத் துயில் வசம் ஆட்படுகின்றான் (பல பிறவி எடுத்த நிலை).

அறிவின் சுடர்தல் தொடங்கி மெய்ஞான விழிப்பு ஏற்படுத்தும் கருத்தினுள் ஒன்றியவுடன் பதியானவன் விழித்துக் கொள்கின்றான்.

விழிப்பு நிலை பெற்றவுடன் வழித்தடங்கல் நிலையினை எண்ணியே செல்லும்
1.வேகத்திற்கு மேல் வேகமாக எண்ணத்தைச் செலுத்தி
2.கோபுரம் வாழ்கின்ற தன் பாகமாம் “சதியின் துணை நாடி…”
3.சதிபதி சிவசக்தி கூடும் நிலைகாட்டி…
4.இரு புறத்தூய்மையும் அகத்தின் வசம் எழ…
5.ஒளிநிலைப் பிரவாக மெய்ஞானச் சுடராக நிலை பெற்றிருக்கும் சூட்சுமம் செயல் கொள்கிறது.

மோகத்தின் நிலை மாற்றும் “இரகசியக் குறிப்புகளை” இங்கே காட்டி விட்டோம். சித்துக்களைப் பற்றியும் கூறி விட்டோம். கலைகளின் வகை இரு நிலைப்படும் நிலையைக் காட்டி “ஆய்வை” உனக்குள்ளே தூண்டி இருக்கின்றோம்.

செயலில் “வேகம்” வேண்டும்.. வேகத்தின் பிரதானம் “நிதானமும்” வேண்டும். எண்ணத்தில் ஆட்டுகின்ற கருத்தே சொல்லியவன் சுருதி கணபதியாக வரல் வேண்டும்.

சகல நிலைகளையும் உணர்த்தி ஏற்றுக் கொண்டிடும் பக்குவத்திற்காகப் பண்படுத்தி விதைத்திருக்கின்றோம்.

“மகரிஷிகள் வாழும் இடத்திற்கு” நாம் செல்ல வேண்டும்

“மகரிஷிகள் வாழும் இடத்திற்கு” நாம் செல்ல வேண்டும்

 

பிறர் படும் துயரத்தைத் துடைக்க உற்று நோக்கி அவர் உணர்வை நுகர்ந்தறிந்த நிலைகள் கொண்டு அவர்கள் தீமைகளை அகற்றப் பொருள் உதவியோ உடல் உதவியோ மற்றதைச் செய்கின்றோம்.

அப்படிச் செய்தாலும்
1.நாம் கண்டுணர்ந்த கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்த உணர்வின் செயல் நமக்குள் வந்திடாது அது இணைந்திடாது
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பற்றி நமக்குள் செலுத்தி
3.தீமையை தனக்குள் பற்றிடாது பற்றற்றதாக்கி
4,யார் உடலில் அந்த தீமைகள் பற்றிக் கொண்டதோ அதைப் பற்றற்றாக்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் நமக்குள் அது வராது துடைத்து அந்தத் தீமைகள் பட்டோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அங்கே நஞ்சுகள் நீங்க வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியால் தீமைகளை அகற்றி மெய் ஒளி காணும் நிலை அவர்கள் பெற வேண்டும் என்று
2.இப்படி நாம் எண்ண வேண்டும். இதனைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

வேதனையை நாம் கண் கொண்டு நினைக்கப்படும் பொழுது அந்தக் கண் அவர்கள் படும் வேதனையை உணர்த்துகின்றது. இந்த வேதனை உணர்வுடன் நாமும் அவருடன் ஒன்றி விட்டால் நாம் அதுவாகத்தான் ஆகின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வினை விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்களுக்குள் படர வேண்டும் என்று
1.மகரிஷிகளுடன் ஒன்றி அந்த உணர்வின் சக்தியை வலுவாக்கி அதைப் பற்றிக் கொண்டு
2.தனக்குள் கேட்டறிந்ததைப் பற்றற்றதாக நீக்கிவிட்டு அது நமக்குள் பற்றிடாது பற்றற்றதாக மாற்ற வேண்டும்.

பின்… அவர்களை அறியாது இயக்கிய அந்த உணர்வுகளில் இருந்து தீமைகள் பற்றிடாது பற்றற்றதாக ஆக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலிலே படர்ந்து தீமைகள் அங்கே அகன்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவருடைய நினைவலைகள் பற்றிட வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுவோம் என்றால்
1.நாம் எண்ணியதை நம் உயிர் வலுவாக ஏற்று
2.மகரிஷிகள் வாழும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

எப்படி எளிமையான உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுகொண்ட மிருகங்களின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அதனிடமிருந்து காத்திடும் உணர்வுகள் விளைந்து விளைந்து அதனின் துணை கொண்டு அதனின் வலு கொண்டு அந்த உடலுக்குள் சென்று அதநின் உருவாகப் பெற்றதோ இதைப் போன்று
1.ஞானிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணுலகில் ஒளிச் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்
2.அவர்களின் உணர்வை நாம் பற்றுதல் வேண்டும்.

அதை அடிக்கடி நாம் பற்றி நமது வாழ்க்கையில் கண்டறிந்த கோபமோ விரோதமோ வேதனையோ அவசரமோ ஆத்திரமோ போன்ற உணர்வுகள் தனக்குள் பற்றிடாது அருள் ஞானிகள் உணர்வைப் பற்றிக் கொண்டு… கேட்டறிந்த பார்த்துணர்ந்த உணர்வு தனக்குள் பற்றிடாது செய்தல் வேண்டும்.

அதே சமயத்தில் யார் உடலில் பற்றியிருந்தாலும் மகரிஷிகள் உணர்வை அவர்கள் பெற வேண்டும் என்று “அவர்களையும் அங்கே பற்ற வைத்தல் வேண்டும்…”

அந்தப் பற்றுடன் அவர்கள் வளர்ந்திடும் நிலைகள் நம் எண்ணத்தால் நாம் செயல்படும் பொழுது அந்த உணர்வின் வலுவாக நமது ஆன்மா வளர்கின்றது. நமது பிறவிக் கடனை நீக்கிட நாம் எண்ணிய நிலைகளை இந்த உயிரே தனக்குள் சமைக்கின்றது… அதை வளர்க்கின்றது.

மனிதன் முழுமை பெற வேண்டிய மார்க்கங்கள் இவை…!

“உலகுக்கு வழிகாட்டிகளாக” உங்களை உருவாக்கிடவே இதை உபதேசிக்கின்றோம்

“உலகுக்கு வழிகாட்டிகளாக” உங்களை உருவாக்கிடவே இதை உபதேசிக்கின்றோம்

 

இங்கே யாம் உபதேசமாக உரைத்திட வந்திட்ட… ஒளி நிலை பெறச் செய்யும் ஒளி மண்டல தியானம்… “உணர்வுடன் கூடியதாகும்…”
1.ஈர்ப்பின் நிலை உணர்வுடன் பெறுதலால் புறக்கண் பார்வையை அகக்கண்ணால் அகழ்ந்து நோக்கின்
2.ஊர்த்துவ (மேலான) சக்தியாக மேல் எழும் கந்தன் தோன்றிடுவான் என்கின்ற சூட்சுமம்
3.ஒவ்வொரு மனித ஆத்மாக்களும் பெற்று உயர்ந்திட வேண்டும்.

அத்தகைய நன்நெறி நன்நோக்கத்தால் உங்களைப் போதினியாக (உலகுக்கு வழிகாட்டிகளாக) உருவாக்கிடவே இதை உரைக்கின்றோம்.

போதனைப் படுத்திடும் உயர் வழி நெறியைக் கற்றே… கற்றதைத் தன் வழி நின்று… கொண்ட கொள்கையை தகமைசால் (தெய்வீகப் பண்பு) நன்றே…! என அறிந்து… பின்பற்ற விரும்புவோர் இதை முயலட்டும்.

போதனை பெற்றிடும் இந்தச் சூட்சும வழியினைக் கடைப்பிடிக்கும் எளிமையும்… உணர்ந்து கொண்டால் அருமையும்… அத்தகைய இனிமை உணர்வு கூட்ட… உன்னுள்ளே கந்தன் (முருகன்) தோன்றுவது எப்படி…?

1.தியானத்தில் மகரிஷிகளின் ஒளியான நுண் மின்காந்த அலைகளை ஈர்க்கின்றாய்
2.ஈர்க்கின்ற செயல் உனது புருவ மத்தியில் கார்த்திகை (வெளிச்சம்) விளங்கிடும் சுடருள் பாய்ச்சி
3.ஈர்க்கப்படுகின்ற நிலை எங்கெல்லாம் செல்கின்றது தெரியுமா…?

சரீரத்தில் ஓடிடும் சகல சுவாச நாடிகளையும் அறிந்து கொண்டவனப்பா நீ. நீ ஈர்த்துக் கொண்டிட்ட ஒளி நுண் மின்காந்த அலைகள் சுவாச கதியின் சமைப்பின் சமைப்பாக சிரசைக் கடந்து கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதார அக்கினியில் அது செலுத்தப்படுகின்றது.

கந்தன் சிவன் நெற்றிக்கண்ணில் தோன்றினார் என்று புராணம் உரைக்கின்றது…!

மூலாதாரத்தில் பாய்ந்த நெற்றிக்கண்ணின் ஒளி சக்தி…
1.ஆங்கே கனல் விளைந்த ஒளியாக சுழுமுனை நாடியில் எழும்பொழுது (உயிர் வழி சுவாசம்)
2.புருவ மத்தியில் ஆறு ஆதார நிலைகள் அதே நிலை கொண்ட ஜோதி ஸ்வரூபமாக எழுந்து
3.மீண்டும் ஆகாயக்கூறு எனும் சிரசின் உச்சியில் சிவசக்தி நாடிகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட சிரசைக் கடந்து
4.எழுந்து நிற்கின்ற அந்த வடிவே கந்தன்,

பேரின்ப நிலை கிடைக்கப் பெறுகின்றது என அனு தினமும் பகர்கின்றாய். அந்தப் பேரின்ப லயத்தை நாடிட்ட மனம் வேறொன்றையும் நாடிடாது.

இத்தகைய பேரின்ப நிலை உனக்கு உரைத்த போதனையை நீயே வளர்ப்பாக்கி நீயே வளர்த்து… கண்டு கொண்டிட்டது தான்…!
1.இங்கே பயிலும் மெய்ஞானச் சுடர் ஆக்கும் தியானத்தின் வழி நின்றிடும் உன் மன உறுதியின் செயலை
2.அனைவரும் பெற்றிட வேண்டும் என்றே எண்ணத்தால் ஆசிர்வதித்து மென்மேலும் வளர்ச்சிப்படுத்திட்டு
3.வளர்நிலையின் ஜொலிப்பை எமக்குக் காட்டு.

வேதிக்கும் நிலையே (மெய்யை அறியும் குணம்) இடைவிடாத உன் மன உறுதி…! வாதிக்கும் நிலையே நம் உணர்வில் உந்துதலால் செயல் கொள்ளும் புறக்காரியங்கள்.

மெய்ஞானச் சுடராக்கும் வழிப் பயணத்தைக் காட்டிவிட்டோம். அறிவின் ஒளி இயல்பாக மஞ்சள் வண்ணம் எனில் தெய்வ வடிவைப் பெற்றிடும் குணம்… அன்பின் வழி வண்ணம் நீலம்…!
1.சாற்றும் வழி போற்றுவான் (மெய்யை உணர்ந்தவன்)
2.கடைப்பிடிப்பவன் மெய்ஞானி ஆகின்றான்

காட்சி:-
மிகப்பெரிய வட்டம் தோன்றுதல் ஒளி நுண் மின் அலைகள் காந்தத்தின் புலனாக அசைதல் சிரசின் உச்சியில் குவிதல்
நெற்றிக்கண் திறந்திடும் சூட்சுமம் மெய்ஞான விழிப்பு
நெற்றிக்கண் திறந்த பின்பு ஜீவன் சிவனாகத் தான் விளங்க
நெற்றிக்கண் ஒலி மூல ஆதாரத்தைத் தான் நோக்க…
கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதாரக் கனல் கிளம்பி முதுகுத்தண்டு வழி ஓடி
சுழுமுனை நாடியுள் அக்கினிப் பிரவாகம் பெருக்கெடுத்து சிரசின் உச்சியில் எழுந்து நிற்றல்…!

சந்திர கலைகள் செயல்படுங்கால்… ஆறு ஆதாரங்களும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட… “கந்தன் என்ற ஞானவேல் தோன்றுவான்…!”

உடலின் கடைசி முடிவு

உடலின் கடைசி முடிவு

 

மகாபாரதத்தில் திரௌபதி என்பது உயிர் (உணர்வின் உணர்ச்சி) பஞ்ச பாண்டவர்கள் (புலனறிவு ஐந்து) நுகரப்படும் பொழுது இந்த ஐந்து பேருடைய உணர்வுகள் கொண்டு அதை இயக்குகின்றனர்.

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் நுகரும் சத்தும் அதன் உணர்வின் தன்மை மணமும் சேர்த்துப் புலனறிவு ஐந்து என்று
1.இந்த உணர்வின் தன்மை நாம் எக்குணத்தை நுகர்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்குகின்றது.
2.கண்ணனின் சகோதரி திரௌபதி. தன்னுடன் இணைந்து உணர்வினைக் கண் காட்டுகின்றது உடலிலே.
3.சகோதரியாக உடலுக்குள் தன் உணர்வின் நிலையாக உணர்த்துகின்றது… கண்ணன்.
4.ஆக எதை எண்ணுகின்றானோ அந்த உணர்வின் தன்மை அது உள்முகமாக எவ்வாறு ஊட்டுகின்றது என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

ஆனால் பிறரை அடிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வதைக் ”கௌரவர்கள்” என்று காட்டுகின்றார்கள்.
1.உண்மையின் உணர்வை நுகர்ந்தால் பஞ்ச பாண்டவர்களை சூதின் நிலைகள் கொண்டு திசை திருப்புகின்றனர்.
2.தன் உணர்வின் வலிமை கொண்டு உள் புகாது நன்மையினைப் பெறாது கௌரவர்கள் தடைப்படுத்துகின்றார்கள்.

ஆக… கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருக்கும் போர் முறை என்று காட்டுகின்றார்கள்.

உணர்வின் வலுவைக் காட்டப்படும் போது நாம் எண்ணும் உணர்வுகள் அர்ஜுனன் என்றும்… அவன் உணர்வின் தன்மை கொண்டே நம்மை மாற்றுகின்றான் என்றும் இதே உணர்வின் செயலாக அதனின் செயலாக்கங்களும்… “அதுவே வலுவாகிறது என்றும்”
1.உணர்வின் உணர்வுகள் நமக்குள் எடுக்கும் போது – ஆன்மா எதனின் உணர்வோ அது…!
2.அதாவது கெடுமதியோ அல்லது கெடுமதியை நீக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது “பீமன்” அது வலுக் கொண்ட உணர்வின் ஆன்மாவாகின்றது.

ஆன்மாவிற்குள் அதனின் வலிமை பெறுகின்றது என்ற உண்மையைக் காட்டுகின்றனர்.

பாண்டவர்கள் வலுக் கொண்டாலும் உள் நின்று புகாது தடுக்கும் நிலையே கௌரவர்கள். பல நிலைகள் கொண்டு மகாபாரதப் போர் நடந்தாலும் தீமை என்ற உணர்வுகள் வளரப்படும் பொழுது இவர்கள் (பாண்டவர்கள்) ஜெயித்தாலும் கண்ணன் மடிகின்றான். அதற்கு முன் பலராமன் மடிகின்றான்… “கடைசி முடிவு…”

1.நாம் நுகரும் உணர்வுகள் எண்ணம்…
2.எண்ணத்தின் நிலை கொண்டே கண்.
3.கண்ணின் நிலை கொண்டே பல உணர்வுகள் அதிலிருந்து பல எண்ணங்கள்
4.அதன் வழி கொண்டே உணர்கின்றோம் வளர்கின்றோம் என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

கண்ணனின் சகோதரன் பலராமன் மூத்தவன் என்று கொண்டு வருகின்றார்கள். பலராமன் மடியப்படும் போது கண்ணனுக்கும் செயலில்லை… அவனும் மடிகின்றான். பின் ஈர்க்கும் வலுவின் தன்மை இல்லை என்றால் பீமனும் மடிகின்றான்

நகுலன் சகாதேவன்… உணர்வைக் கவர்ந்தால் தான் நகுலனும் இயக்க முடியும் நன்மை தீமை என்பதை அறியும் நிலை அவர்களால் தான் அங்கே இருக்கின்றது… அப்போது அவர்களும் செயலை இழந்து விடுகின்றார்கள்.

அனைத்து வலிமை கொண்டு தீமைகள் புகாது தடுக்கும் அர்ஜுனனும் வலுவை இழக்கின்றான்,,, மடிகின்றான். வீரிய உணர்வுகளை இழந்த பின் அவன் கண்ணுக்கு முன்னாடியே திருடர்கள் திருடுகின்றார்கள் மாடுகளை ஓட்டிச் செல்கின்றார்கள்.

காண்டீபத்தை எடுத்து மந்திரத்தைச் சொல்லி ஏவுகின்றான்… ஆனால்.
1.மற்ற சகோதரகள் செயல் இழந்த பின் அது ஒன்று சேர முடியவில்லை.
2.இவனுடைய ஆயுதங்கள் அங்கே பாய முடியவில்லை. திருடர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
3.தான் வீழ்ந்து விட்டோமே என்ற உணர்வுகள் வருகின்றது.

ஏனென்றால் கண்களால் கவர்ந்த உணர்வுகள் வலுவை இங்கே ஊட்டித்தான் “அந்த வலுவால் இயக்குகின்றது” என்பதை இங்கே காட்டுகின்றார்கள்.

உடலுக்குள் உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது கண்ணன் மடிந்த பின் மற்ற நிலைகள் மடிந்த பின் எப்படி உடலுக்குள் செயல்கள் மடிகின்றது என்பதை மகாபாரதத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் நுகரும் உணர்வுகள் எண்ணங்கள் வேதனை என்று நுகர்ந்தால் வாலி… கோபம் என்றால் காளி…!

நாம் நுகரும் உணர்வு உயிரில் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்திடல் வேண்டும்.

1.நமக்குள் புகுந்த பிறிதொரு உணர்வுகள் நல்லதைப் புகவிடாமல் தடுக்கும் நிலையினை எவ்வாறு தடுக்க வேண்டும்…?
2.மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழி வகைகளை ஞானிகள் காட்டுகின்றார்கள் மகாபாரதத்தில்.

“ஈஸ்வர ஜோதி”

“ஈஸ்வர ஜோதி”

 

பால்வெளி சூட்சுமம் சதா அசைவு பெறும் ஒளி மண்டல சூட்சும அணுக்கள் நிறத்தின் தன்மைக்கொப்ப மணமும்… மணத்தின் வீரிய அடர்வு செயல்பாட்டில் குணமும்… குணத்தின் அமைப்பு எண்ணத்தின் கருவாகும்… கருவின் ஒரு ஆத்ம ஒலி ஒளி விந்து கலைகள் இணைந்து செயல் கொண்டிடும்… ஜீவ பிம்ப சரீர நிலை பெற்றிடும்… ஜீவாத்மாவாகப் பயிர் கொண்ட நிலைகள் வளர்ப்பு ஜீவத் துடிப்பலைகள் வரும்,

அலை வீசாக் கடல் எனும் பால்வெளி சூட்சுமத்தில் உயிர் கொள்ளும் உயிராத்மா…
1.மனிதன் என்ற பிறப்பு எடுத்து மாயத்திரை போர்த்திக் கொண்ட செயலை விலக்கி
2.இச்சரீரம் கொண்ட வினையின் நாயகன் உயிர் சக்தி
3.ஆத்ம நிலை உருவாக்கிடும் செயல் கொள்ளும் அமைவு எப்படி உருவாகின்றது…?

“உன் முயற்சி தான் ஏற்பு… திரை விலக்கிடும் முயற்சியே தியானம்…!” (நல்லதைப் பெற வேண்டும் என்ற முயற்சியுடன்… உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… அதை வைத்து இருளை விலக்கிட வேண்டும். அதுவே தியானம்)

வேதாள மகரிஷி வலியுறுத்தி உரைத்திட்ட ஒலி நாதங்கள் இன்றும் ஒலி அலைகளாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தின் ஆழம் கொண்ட “இந்த உபதேசங்களைப் படிப்பதே மாபெரும் பாக்கியமப்பா…!”

பார்க்காமல் வருகின்றவன் சிந்தனா சக்தியின் துரிதமற்ற நிலையில் ஓர் குளத்தில் வந்து விழுந்து விடுகின்றான். வேரோ அன்றி விழுதோ பிடித்துக்
1.கரையேறுகின்ற முயற்சியையும் நீக்கிவிட்டு
2.குளத்தின் நீர் வற்றிய பிறகு வெளியேறிச் செல்லலாம்…! என்பது என்ன பேதைமை…?

சிந்தனையற்று அந்தக் குளத்தினுள் இறங்கியவன் சிந்திக்கின்றான்… நீர் வற்ற வேண்டும் என்று…! (நீர் வற்றுமா…? மனிதனின் இன்றைய சிந்தனை அப்படித்தான் உள்ளது) அப்படி இருந்தால்
1.மாமகரிஷிகள் மனிதர்களுக்கு உவட்டாமல் (திகட்டாத சுவையாக) ஊட்ட வந்த
2.ஒளி காந்த நிலைபெறும் ஒளி மார்க்க சிந்தனை செயல்படுவது எங்கே…?

உன் முயற்சி தான் ஏற்பு.

1.உலகோதய நிலை வாழ்க்கை என்பது தான் “குளம்”
2.ஜீவன் கரையேற முயற்சிக்கும் முயற்சி “அறிவின் தூண்டுதலால் ஈஸ்வர அனுபூதி”
3.கரையேறாத நிலையில் உள் உடைந்து கிடத்தல் – “தொடர் பிறப்பின் சூட்சுமத்தில் சுழன்று கொண்டே இருக்கின்ற” மனிதனின் சிந்தனையின் செயல்பாடு
4.வேரும் விழுதுகளும் “வழிகாட்டிடும் மார்க்கங்கள்”
5.அன்றி சுயத்தின் முயற்சியாக நின்று வெளி போதல் சுயசக்தியின் வளர்ப்பாக்கும் “ஒளிகாந்த ஒளி மண்டல சிந்தனாலயம்…”

கரையேறும் நிலையாகத் தன் முயற்சி கொண்டிடும் நிலைக்கே
1.அக்ஷி என்ற நிலைகாட்டி அகக்கண்ணால் உள்நோக்கின்
2.பிடரிக்கண் என்று உரைத்திட்ட பார்வையின் தன்மை “மூலாதார அக்கினியை உற்று நோக்கும்…”
3.அகக்கண்ணின் சிந்தனா சக்தி அங்கு செலுத்தப்பட்டால்
4.சரீர செயல்பாட்டில் உணர்ந்து அறியத்தக்க ஒளி அலைகள் பாய்ந்து
5.ஒளி கலந்த புலமாக்கும் ஈஸ்வர ஜோதி சிரசில் தோன்றுவதே
6.சிவம் என்றிட்ட ஈஸ்வரனும்… சக்தியின் நிலையும்
7.ஒன்று கலந்த பேரின்பப் புணர்ச்சி… எண்ணத்தால் ஆட்டி உதயத்தில் காட்டும்…!
8..பிறவி என்ற இன்னலிலிருந்து விடுபட்டு… என்றுமே ஏகாந்தமாக… பேரானந்த நிலை கொண்டு வாழச் செய்யும்.

கூர்படு சிந்தை கொள்

கூர்படு சிந்தை கொள்

 

அன்பு அறிவாக நிலைகொள் என்றால் என்ன…?

“அன்பின் வடிவாக நிலை பெற்றிருப்பாய்…! என்று ஆசி வழங்கிடும் முதியோர் சொல்…” அறிவு மனம் குணம் மூன்றும் எண்ணத்தின் செயல் வழி என்றாலும் தான் எடுத்துக் கொள்ளும் குணங்கள் நிலைக்கொப்பத்தான் வாசனையால் ஆளப்படும்.

வான்மீகி கூறிய நீல வண்ணராமன்… தெய்வீக வடிவு…! என்பதெல்லாம் அறிந்த சொல்… ஆனால் அது மறைக்கப்பட்ட பொருள்.

அன்பு என்ற சொல்லின் கொள்ளப்படும் நிலை குணம் அக்குணங்களின் வாசனையாகிய மணம் அது வெளிக்காட்டும் ஒளியாக (நிறம்).

அன்பின் நிறம் என்ன தெரியுமா…?

அன்பின் அறிவு நீக்கமற நிலை கொள்ளும் செயலுறும் இயக்க சூட்சுமம். அன்பு தான் வான்மீகி மாமகரிஷி காட்டிய “நீல வண்ணம்…”
1.வீரம் விளைவித்த சாந்தமாக கண்ணின் ஒளி நீல வண்ணம் காட்டி
2.ஆத்ம சுடர் பிரகாசித்து… காண்பவரையும் உயர் ஞான வழி வரும் செயலாக ஆக்கும்.

சூரிய கிரகண கால நிகழ்வில்… கதிரவன் ஒளி கிரகணங்கள் பூமியில் பாய்ந்திடாத குறுகிய அந்தக் கால நேரத்தில் நீரில் நிறைந்திடும் நுண்ணிய விஷ அணுக்கள்… சூட்சும செயல் மென்மேலும் பல்கிப் பெருகி… நீர் சம்பந்தமான கடுமையான நோயாக… இந்த உலகம் எதிர் கொள்ளத்தான் போகின்றது.

கடுமையான விஷ மணத்தின் செயலில் உயிரையே உண்டுவிடும் நடைமுறை சாத்தியமும் உண்டு, அதற்காக அஞ்சிட வேண்டாம்…!

சூரியப் பிரகாசத்தினை எண்ணி ஈர்த்திடும் பக்குவ நிலை பெற்றிருக்கும் சரீரத்தில் எலும்பையே ஊடுருவி ஒளி அருளால் உள் செலுத்திப் பாதுகாப்புக் கவசமாக…
1.சகலமான ஒளி மண்டலவாசிகள் எனும் மகரிஷிகள் வழி வழியாக வந்திடும் ஞானச் செல்வங்கள்…
2.இந்த உலகத்தையே இரட்சித்துக் காத்திடும் செயலுக்கு “மாமருந்தாய்” அளித்துள்ளனரப்பா.

“சிவ சக்தியான ஒலி ஒளி” நீக்கமறச் செயல் கொண்டிடும் திறத்தில்… ஒலி கொண்ட சக்தி ஒளியுறும் சிவமாகக் கலந்திடும் கலப்பு… சிவ சக்தியின் இணையான நிலை விளக்க முறை செயல்படுத்திடும் நடைமுறையில் ஒலி கொண்ட சக்தி ஒளியாம் நிலை சிவத்துள் ஐக்கியமாகச் செயல்படும் தொழிலில்… “அறிவு சிவமாக அதனுள் இட்ட ஒளி சக்தியாகப் பரிணமிக்கிறது…”

மெய்ஞானச் சுடர்தல் வேதாள மாமகரிஷி அருளிச் செய்த சுடர் விளக்கமாக…
1.நீரை இறைப்பது ஏற்றம்
2.நீண்ட நெடு வயல்கள் என்பதே உலகம்
3.வயலில் விளைகின்ற பயிர்கள் அவைகளே ஞானம்… ஞானப்பயிர்.

கிணற்றில் நீர் நிறைந்திருக்கின்றது… அதுவே மனத்தின் பாங்கு அருள்.
1.ஜீவன் தந்திடும் ஒளிக் கதிர்கள் “நீர் ஒன்று இல்லாவிடில்…”
2.ஜீவன் என்றாலும் செயல் கொள்ளா நிலையில் உருவாக்கிடும் சக்தியின் பாங்கில்
3.அநித்தியமான சூடு மறைபொருளாக விளங்கி… பிரம்மம் (சிருஷ்டி) என்ற நிலை காட்டாது.

நீர் இறைத்து நெடுவயல் நீர் பாய்ச்சிச் செயல்படுத்திட ஓர் உபகரணம் தேவை. அதுவே “தியானம்” என்ற பெயர் பெறும் ஏற்றம்.

முயற்சி செயல் கொள்ளும் பொழுது ஏற்றத்தில் நீர் இறைக்கின்றாய். அந்தச் செயலின்றி நெற் பயிர் எப்படி விளையும்…?

தென்னை ஊன்றினாய் என்றால் தென்னை தான் விளைவாகும். அது போல் ஞானப் பயிர் வளர்த்திடும் கருவின் வலுவிற்கு வீரிய நல்வித்துக்களை ஊன்றிட வேண்டும்.

அந்தச் செயலுக்கே மாற்று அலை நிலைகள் திசை மாறிச் செலுத்திடத் துடிதுடிக்கும் எண்ணத்தின் பாங்குகள் வந்தாலும்…
1.ஞானியற்கு மேலாம் உயர்வெண்ண செயலில் செயல் கொண்டு
2.திட நிலை சங்கல்பம் பெற வைத்திட்டது எது…?

சிந்தை என்ற சொல் பெரும் பொருள் அறிவுறுத்தும் நிலையன்று… “கூர்படு சிந்தை கொள்” என்றே உரைத்திட்டோம்.

உறை பொருள்… மறைபொருள்… உட்பொருள்.

உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கி ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்

உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கி ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்

 

மனிதன் தன் எண்ணத்தின் வலிமை கொண்டு ஆயிரம் டன் எடையுள்ள இராக்கெட்டை விண்ணிலே அனுப்புகின்றான். எண்ணத்தின் வலிமை கொண்டு அண்டத்தை அறிகின்றான்… அதன் உணர்வின் இயக்கத்தை அறிகின்றான் விஞ்ஞான அறிவு கொண்டு.

ஆனால்
1.அன்று மெய் ஞானி அலஸ்தியன் தன் உணர்வின் தன்மை பதிவாகி அகண்ட அண்டத்தில் எண்ணத்தை வீசினான்.
2.அதன் உணர்வைத் தன் உடலுக்குள் கவர்ந்தான். அதன் உணர்வின் அறிவினைக் கண்டான்
3.தீமைகளை அகற்றும் வழியும் கண்டான் அகஸ்தியன்.

அவன் பெற்ற உணர்வின் தன்மை அவனில் விளைந்த உணர்வுகள் இன்றும் நம் பூமியில் கலந்தே உள்ளது. அதை நாம் எளிதில் பெற முடியும்.

1.இப்போது உங்களுக்குள் செவி வழி இந்த உணர்ச்சிகளைத் தூண்டும் படி செய்து
2.சொல்லும் உணர்வைக் கண் வழி ஈர்த்து மூக்கு வழி சுவாசித்து
3.உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
4.உணர்ச்சியின் தன்மை அமைதி கொண்டு பார்த்துத் தனக்குள் சேர்க்கச் செய்கின்றது.

ஆனால் உபதேசிக்கும் பொழுது வீட்டுக்குப் போக வேண்டும்… தொழிலுக்கு நேரமாகிவிட்டது அங்கே சொல்லாமல் வந்து விட்டேன்… என்று நினைவினைக் கூட்டினால் இங்கே உபதேசிக்கும் உணர்வுகள் அவர்களுக்கு உபயோகமாகாது.

உணர்வின் நிலை எதுவோ அங்கே அழைத்துச் சென்று அந்த வாழ்க்கையின் நிலையையே ஊட்டும். “வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் ஆற்றலைப் பெறுவது மிகவும் கடினம்…”

உற்று நோக்கிய உணர்வின் தன்மை எதைப் பெறுகின்றோமோ அதன் நிலையே பெறுகின்றது. ஆகவே
1.யாம் உபதேசிக்கும் போது கண்களால் உற்று நோக்கி
2.உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

அதற்குப் பின்… கண்ணின் நினைவை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்த அருள் சக்திகளைப் பெருக்கி இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைக் கண் வழி கலக்கச் செய்து ஜீவான்மா ஜீவணுக்களைப் பெறச் செய்தல் வேண்டும்.

கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!

1.கண்கள் ஊடுருவி அந்த உணர்வலைகளைக் கொண்டு வருகின்றது.
2.கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தப்படும் பொழுது எட்டா தூரத்தில் இருந்தாலும்
3.அதிலிருந்து வரும் உணர்வை நம்மை நுகரும்படி செய்கின்றது.

அந்த உணர்வலைகளை உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது உணர்வுகளை அதற்குள் செலுத்துகின்றது.

நோயாளியை உற்றுப் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்தால் இரத்த நாளங்களிலே அது கலந்து சுழன்று அணுக்கள் பெறாது தடைப்படுத்த
1.இந்த வழியில் அருள் ஒளியை நாம் நுகர்ந்து
2.நேரடியாகக் கண்ணின் நினைவு கொண்டு உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை உந்தி விட்டால்
3.இந்த வலிமை கொண்ட பின் தீமை என்ற உணர்வை நுகராது தடுக்கும்.

அதே சமயத்தில் கிட்னி ரத்தத்தைச் சுத்திகரிக்கும் சக்தி பெற்றது விஷத்தன்மைகள் அதிலே பட்டால் கிட்னி சீராக இயங்கவில்லை என்றால் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலை இழந்து விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் வலிமை பெறுகின்றது.
1.தீமை என்ற நிலை வராது உடனடியாக தடுத்து நிறுத்தப்படுகின்றது.
2.கிட்னி சீராக இயங்குகின்றது.

அதே சமயத்தில்… கல்லீரல் நுரையீரல் உணர்ச்சியின் வேகத்துடிப்பானால் விஷத்தின் உணர்வுகளை உந்தினால் உறுப்புகள் சுருங்கி வேதனைப்படும் நிலை வரும்.

அத்தகைய வேதனையை உருவாக்கும் முன் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அருள் ஒளி என்ற உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைந்து அந்த உறுப்புகளைத் தாக்காதபடி இந்த உணர்வுகள் பாதுகாத்துக் கொள்ளும்.

இந்த உணர்வை உடலுக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால் பேர்ருள் பேரொளியின் அலைகளாக மாறுகின்றது. தீமை வரும் பொழுது அந்த இருளை மாய்க்கின்றது.

இந்த வழியில் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று தான்
1.இயற்கையின் உண்மை நிலைகளைக் கண்டுணர்ந்த அகஸ்தியர் தன் இனத்தை வளர்க்கும் முறையை நமக்கு வகுத்துக் கொடுத்தார்.
2.அதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.