ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

 

மனித நேயமனம் அன்பினுக்குகந்த அறவழி நடக்கலுற்று… பகுத்தறியும் ஆற்றல் வழி பண்பு கொண்ட தவமயர் இல்லறத்தின் வழி நடந்தே… மகோன்னத முனைப்பாற்றல் சக்தியை நிறைவாகப் பெற்று… அந்த ஆற்றலின் சிறப்பாக வளர்ச்சியில் வளர்ந்திட முடிந்திடும்.

பகல் இரவு என்று எண்ணாத எறும்பு ஊர்ந்து சென்று தன் இனங்களுக்கு ஊட்டும் சேமிப்பாகவே உணவினைத் தேடுகின்றது. அது போல்
1.அகம் ஜெபித்திடும்… (தனக்குத் தானே – உயிருடன்)
2.ஆத்ம பலம் கூட்டிடும்… (தன்னை வளர்ப்பதற்கு)
3.மெய்ப் பொருள் செல்வம் எனும் சேமிப்பின் சூட்சுமம் கொண்டு வளர்ந்திட… (உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அழியாச் சொத்து)
4.வழி நடத்தும் வழி முறைகள் காட்டியதே வல்லார் (மகரிஷிகளின்) தம் ஞான நிலை.
5.தவமாக வாழ்வின் நிறைவு பெற்ற மாமகான்களே அவர்கள்…!

அதை எண்ணி ஈர்த்திடும் பக்குவத்தில் வளரும் நம் ஞான நிலை.

1.நம் ஒளி காந்த சக்தியுடன் அந்த மகரிஷிகள் ஒளி காந்த சக்தியாக ஒன்றிச் செயல்படுகின்ற
2.அந்தத் தவப்பயன் வழியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அகத்தின் அழகு பற்றி வழக்கில் உரைக்கும் உரையைச் செவி வழியாக அறிந்திருப்பாய். எது அகத்தின் அழகு…?
1.அல்லார் எனும் நிலை விடுகின்ற பொழுது அக மலர் மலர்ந்து மணம் வீசுகின்றது.
2.விருப்பு வெறுப்பற்ற தன்மை அக வாழ்வினோடு புற வாழ்க்கைக்கும் அது பொருந்தும்.

அந்த நிலை பெற்ற மனத்தின் மாண்பு செயலுறும் விதம் என்ன…?

அத்தகைய அக அழகு பெற்றவனும் ஏங்குகின்றான்… அது உயர்வு எண்ண ஏக்கமப்பா…!
1.அக அழகின் கண் ஏங்கும் வழிப்பாதை… விழிப்பார்வையில் உண்டு.
2.ஈஸ்வரா…! என்ற எண்ணமுடன் ஈர்ப்பின் நிலை ஏக்கமாகப் பெற்றிருத்தலே “விழிப் பார்வையின் காப்பு…”

இந்த நிலையால் மனத்தின் மாண்பு உயர்ந்து கொண்டிடும்.

வெறும் வாயிலே சொல்லி முன்னோர்களை விண் செலுத்த முடியாது

வெறும் வாயிலே சொல்லி முன்னோர்களை விண் செலுத்த முடியாது

 

குருநாதர் காட்டிய அருள் வழியை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். அதன்படி முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிரான்மக்களை நீங்கள் விண் செலுத்துதல் வேண்டும்.

தற்காலத்தில்… ஒன்றிலிருந்து 48 நாட்களுக்குள் உடலை விட்டு யாராவது பிரிந்து இருந்தால் அந்த ஆன்மாக்களையும் பௌர்ணமி காலங்களில் அவர்கள் பெயரைக் குறித்துச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரையச் செய்து பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
1,நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏகக்காலத்தில் ஒன்று சேர்ந்து
2.அந்த வலிமையை ஏற்றிக் கொண்டு முன்னோர்களை விண் செலுத்துதல் வேண்டும்… சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும்.

அப்படி இல்லாது மோட்சம் அடைய மார்க்கம் வேறு இல்லை. அதை நமக்குள் வளர்த்தால் தான் அந்த வழியிலே நாம் அனுப்ப முடியும்.

ஒரு ராக்கெட் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்றாலும் “உந்து விசையால் தான்” மேலே விண்ணுக்குச் செல்லுகின்றது. உந்திச் சென்ற பின் அதனுடைய எல்லையை அடைகின்றது. பின் அங்கிருக்கும் உணர்வுகளைக் கவர்ந்து தரை மார்க்கத்திற்கு அனுப்புகின்றது.

இதைப் போன்று தான் முன்னோர்களை விண்ணுக்கு அனுப்பி அங்கிருந்து அருள் ஒளியின் சக்தியை நாம் இங்கே எளிதில் பெற முடியும்.

சாதாரணமாக வெறும் வாயில் சொன்னால் அவர்கள் விண் செலுத்த முடியாது.
1.அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் முதலில் போதிக்க வேண்டும்.
2.உங்களுக்குள் அந்த நினைவாற்றலைப் பெருக்குதல் வேண்டும்
3.அதை ஏங்கித் தியானித்தல் வேண்டும்…
4.அந்த வலுவின் துணை கொண்டு முன்னோர்களின் உயிரான்மாக்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

இருந்தாலும் இதற்கு முன் செய்யத் தவறி இன்னொரு மனித உடலில் அவர்கள் இருந்தாலும் பரவாயில்லை. தொடர்ந்து நாம் இந்த வரிசையிலே செய்து வந்தோம் என்றால்
1.அந்த உடலை விட்டு எப்பொழுது வெளி வந்தாலும்
2.அதன் துணை கொண்ட நாம் இதைப் போன்று கூட்டமைப்பாகச் செயல்படுத்தினால் விண் செலுத்த முடியும்… ஒளிச் சரீரம் பெறச் செய்யலாம்.
3.அதன் துணை கொண்டு நாம் அந்தச் சக்திகளை எளிதில் பெறலாம்.

பெற்று… குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு அருள் ஞானிகள் உணர்வு துணை கொண்ட நாம் எந்த நேரம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்மை அங்கே அழைத்துச் செல்லும் உயிர்.

நம் முன்னோர்கள் முதலில் விண் சென்றால் தான் அந்த உணர்வின் வலு கொண்டு நாமும் அந்த வலுப்பெற்று விண் செல்ல முடியும். அதற்குத்தான் மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இதன் துணை கொண்டு எண்ணி ஏங்கி முன்னோர்களின் ஆன்மாக்களை விண் செலுத்துங்கள் அந்த எல்லையை அடையச் செய்யுங்கள் உடல் பெறும் உணர்வை அங்கே கரையச் செய்யுங்கள்.

இதன்படி செய்தால் பேரின்ப வாழ்க்கையாக வளரும்… அப்படி நீங்கள் வளர வேண்டும்… அதை நீங்கள் பெற வேண்டும் மூதாதையர்கள் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிப்பது.

கூட்டமைப்பாகத் தியானிக்கும் வழிகளில்
1.மெய் ஞானிகளின் உணர்வுகள் அனைத்தும் உங்கள் இரத்த நாளங்களிலே அந்த உணர்வின் அணுக்கருக்களாகப் பெருக்கச் செய்கின்றோம்.
2.அப்படி அணு கருக்களாக உருவாக்கி அந்த நினைவாற்றலை மீண்டும் வளர்த்து விட்டால்
3.அந்த அணுக்கள் விளைந்து உங்களுக்குள் பேரின்ப பெரு வாழ்வாக வாழச் செய்யும்.

மனித வாழ்க்கையில் என்றும் பிறவியில்லா நிலையை அடைய உங்களுக்கு இது உதவும்.

“உயிரிடமிருந்து” நற்றேன் பருகிடல் வேண்டும்

“உயிரிடமிருந்து” நற்றேன் பருகிடல் வேண்டும்

 

நரலாகும் பொருள் உணவாகும் பொழுது அதைச் சுவைக்கின்றோம். எப்படி…?

மனிதன் எண்ணுகின்ற எண்ண ஓட்டத்தில் உலகோதய நடைமுறைச் செயலுக்கு கவனத்தைச் செலுத்தி உணவை உட்கொண்டிடும் பொழுது அது சுவைபட அருந்தும் நிலையன்றி இப்பரு உடலினுள் அமைவு பெற்றிருக்கின்ற பை “இரைப்பை…!”

அந்தப் பையினுள் எரிகின்ற நெருப்பு தன்னில் இடப்படுகின்ற எரியைச் செரித்திடும் முன்பாக
1.நாசியில்… சுவாச ஓட்ட கதியில்… எண்ண ஓட்ட வாசனைக்கொப்ப சமைப்பின் சமைப்பு தொடங்கப் பெற்றே
2.இரசமாகிய சக்தி நரம்புகளின் சுவாச ஓட்டச் செயலில் ஈர்த்துக் கொண்டிடும் துடிப்பு அலைகளாக ஓடி
3.இரைப்பையில் இடப்பட்ட எரிவைப் பயனுறும் செயலாக்கி
4.கழிவையும் நீக்குகின்ற உடல் தொழில் சூட்சுமத்தில் “ஆத்ம பலம் கூட்டுமப் பொருள் காண வேண்டும்…”

நரல் என்று தேனை உரைத்தோம். முதல் பண்ணவன் (உயிர் – குரு)) இடத்தில் நற்றேன் பருகிடல் வேண்டும். நேற்றைய பாடத்தின் தொகுப்பில் மறைபொருளாகக் காட்டியதையே விண்டு உரைக்கின்றோம்.

நாத நாதாந்தம் காட்டிடும் எண்ணக் குவிப்பாக உயிரான்ம சக்தியை ஜெபிக்கின்ற வழிதனில்
1.உயிரே குரு என அழைத்திடும் முதல் பண்ணவன்
2.”உயிரை எண்ணி,,,: அகம் விடாது ஜெபித்திடும் ஜெப நிலையில்
3.நாதவாகினி அமுதமாகப் பெருகிடும் ஜெபத்தின் சக்தியே “நாம் கூற வந்த நரல்…” (உயிருடன் ஒன்றும் நாதம்)

புற உடல் பயனுறச் செயல் கொள்ளும் நிலை போல் அக உடல் அருந்தும் ஞானத்தேன் எந்த நிலை பெறும்…?

அனைத்துமே அவரவர்களின் எண்ணத்தின் செயல்பாட்டில் இயங்குகின்றதப்பா…!

காட்சி:- வெற்றிடமான இடம்… பின்பு தென்னங்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து தோப்பாகின்றது. தன் இனத்தைக் கூவி அழைத்து உணவு உண்ணும் காக்கை. உணவினை எடுத்துச் செல்கின்ற சிற்றெறும்புகளும்.

இதன் பொருளைக் கூறும் முன் தெரிய வேண்டியது… எரிகின்ற அக்கினியில் போடப்படுகின்ற பொருள்கள் எல்லாமே ஒரு நிலை பெற்று “கனன்று…” உருமாறி பொருள் தன்மையே மாறி விடுகின்றது.

ஆனால் பரு உடலில் இயங்கிடும் மறைமுக அக்கினி பொருளின் ரசத்தினைப் பிரித்து உடல் செயல் கொண்டிடச் சேமிப்பாக்குகின்றது.

சேமிப்பின் நிலையைப் பற்றிக் காட்டிடவே காட்சியின் விளக்கம்…!

நீர் நிலை கொண்ட இடமாகத் தேர்வு செய்து பயிர் வளர்த்து வளர்ந்த பின் அது தோப்பாகின்றது. அதையே தனக்கு உகந்த இடம் எனத் தேர்வு செய்து கூடு கட்டுகின்றது காகம்.

தன் இனத்திற்கு உணவை ஊட்ட… அரற்றியே கரைகின்றது… உணவை உண்கின்றது… தன் குஞ்சுகளுக்கும் ஊட்டுகின்றது. உணவாம் சேமிப்பு செயல் கொண்டிட அது கொண்டிட்ட உணர்வால் சேமிப்பின் வழிமுறைகள் இன்றி உலவுகின்றது.

ஆனால் எறும்போ ஊர்ந்து கொண்டிருக்கும். தன் தொழிலின் நிலையில் தன் இனத்திற்கு ஊட்டும் சேமிப்பையும் பெற்று விடுகின்றது.

அப்படி என்றால் நமக்கு இனமூட்டும் சேமிப்பு எது…?

ஜீவ ஆதார சக்தி வலு கொண்டிடும் ஜெபமாக…
1.சரீர உயிரணுக்கள் அனைத்திலும் ஒளியை ஊட்டமாகப் பெற்று
2.அதை வழி நடத்தும் தன்மையாக தொழில் படவே இனமூட்டும் சேமிப்பை உரைத்தோம்.

உயிரின் வேலை

உயிரின் வேலை

 

சூரியன் மரம் செடி கொடியில் விளையும் சத்தைத் தனக்குள் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதிலே விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது
1.எந்த மரத்தின் வித்தோ அந்த உணர்வின் துணை கொண்டு காற்றில் கலந்திருப்பதைக் கவர்ந்து
2.பூமியின் துணைகொண்டு அந்த மரமாகவும் அந்தச் செடியாகவும் விளைகின்றது.

உதாரணமாக வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் நம் உயிர் அதை ஜீவ அணுவாக மாற்றி மனித உடலின் இனத்திற்குள் சேர்த்து அதைக் கருவாக உருவாக்கி விடுகின்றது.

இருப்பினும் கோழியோ தன் இனப்பெருக்கத்தில் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலையில்… அதனதன் நிறங்கள் அங்கே குஞ்சுகளாக வருகின்றது.

ஆனால் மனிதர்கள் நாம் நுகர்ந்த அணுவின் தன்மையோ (வேதனை) விஷத்தின் தன்மை கொண்ட அணு முட்டைகளாக விளைந்து விடுகின்றது. இரத்தங்களிலே அது சுழன்று வந்தாலும் குறித்த காலங்களில்…
1.கோழி அடைகாத்த முட்டை குஞ்சான பின்… குஞ்சு முட்டையிலிருந்து வெளி வந்து அது தன் உணவை எப்படித் தேடச் செல்கின்றதோ
2.இதைப் போல நம் இரத்தத்தில் உருவான அந்த அணுக்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
3.உடலில் உள்ள அணுக்களுக்கு உணவாக எடுத்துச் செல்கின்றது.

அணுக்களுக்கு இரத்தம் உணவானாலும் அதன் உணர்வின் சத்து கலந்து நம் உடலுக்குள் அணுவின் தன்மை முழுமை அடைகின்றது.
1.எந்த விஷத்தின் தன்மை கொண்டு அது உருவானதோ எந்த உடலில் இருந்து அது உருவானதோ
2.அதனின் உணர்ச்சியைத் தூண்டிய பின் அந்த உணர்வுகள் கண்ணின் நினைவலைகளுக்கு வரும் உயிருக்கும் வரும்
3.இந்த உணர்வுகள் உணர்த்தியபின் கண்ணின் நினைவாற்றல் வேதனைப்பட்டோரை நினைக்கச் சொல்லும்.
4.அந்த உணர்வினை நுகரும்… உடலுக்குள் அந்த அணுக்களுக்கு இதை உணவாக கொடுக்கும்.

உயிரின் வேலை இது…!

இந்த உணர்ச்சிகள் கிளர்ந்த பின் எந்தக் கண்ணால் பார்த்துப் பதிவானதோ அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு அந்த உண்மையான உணர்வை எடுத்து அது உணவாகக் கொடுக்கும்.

வேதனைப்படுகின்றான் என்று உணர்த்தினாலும் வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்த பின் வேதனை உணர்ச்சியைத் தூண்டும் பொழுது
1.உயிரின் உணர்ச்சிகள் கண்ணின் அலையில் அனுப்புகின்றது. அந்த உணர்வை ஈர்க்கச் செய்கின்றது.
2.அந்த உண்மையான உணர்வைச் சுவாசிக்கச் செய்கின்றது. நமது இரத்த நாளங்களிலே கலக்கச் செய்கின்றது.
3.இப்படி அந்த வேதனைப்படுத்தும் அணுவிற்கு உணவாகக் கொடுக்கின்றது.

இயற்கையின் நியதிகள் இது.

ஆகையினால் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.
1.உடலை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சத்தை உணவாகக் கொடுத்து
2.ஒளியான அணுக்களாக உருவாக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும்படி சொல்கிறோம்.

“உறுதி மலை” மேல் நின்று… தொடர் ஜெபத்தால் விண்ணின் ஆற்றல் பெற்று உயர்ந்திட எமது ஆசிகள்

“உறுதி மலை” மேல் நின்று… தொடர் ஜெபத்தால் விண்ணின் ஆற்றல் பெற்று உயர்ந்திட எமது ஆசிகள்

 

இன்றைய மனித வாழ்க்கை புற வாழ்க்கைச் செயலில் அதி ஆவல் எனும் பற்று கொண்டு… பிறப்பு எனும் சுழற்சி வட்டத்தில் உழல்கின்ற தன்மையாக உழன்று கொண்டுள்ளது.

ஆனாலும்… “உயிர் துடிப்பு எனும் ஜீவன்…” வலுக்கொண்டிடும் வளர்ப்பைச் செயலாக்கிடும் அக வாழ்வு இன்பத்தின் சுரப்பாகப் பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திட… வானியலாக வழி அறிந்து உயர்ந்திடும் செயலாக்கம் தான் என்ன…?

உடல் கடந்து… அகம் ஜெபிக்கும் உணர்வெண்ணத் தியானத்தில்… மேலும் ஓர் படி அறிந்ததைத் தெளிதலே சிறப்பு.

காட்சி:- மதகு நீர் வற்றிய வண்டல் மண்ணும்… கோடையின் வெப்பத்தில் ஆற்றின் மணல் ஊற்றில் சுரக்கின்ற நீரை மக்கள் கொண்டு செல்லுதல்.

இது ஆத்ம பலம் அறிவுறுத்தும் பாடம்…!

மதகு நீரடி மண் கோடையின் வெப்பத்தில் மண்ணின் உள்ளிட்ட நீரும் வரும் வழியாகக் காய்ந்து அந்த மண்ணில் நீ சுரந்திடாத தன்மையாக வெடிப்பு ஓடிக் காணப்படுகின்றது அல்லவா.

இதுவே இந்தக் கலியில் வாழும் மனிதன் கொண்ட மன எண்ண நிலையப்பா…!

கோடையிலும் மேன்மை சிறப்பு உருவாய் என்று உரைத்திட வந்ததே…
1.வாழும் வாழ்க்கையில் கோடையின் அதி வெப்பம் போல் எண்ணத்தின் மோதல்கள் இருந்திட்டாலும்
2.நாம் கொண்ட அன்பு எனும் ஊற்று மனத்தின் நிறைவாகத் தன்னுள் ஆத்ம பலம் கூட்டிடும் தேவையின் பூர்த்தியைச் சிறக்கச் செய்வதோடு
3.அது மற்றவருக்கும் அமுத நீராகிய ஞானத்தைப் போதனையாக வழங்கிடும் ஆசான் என்று அழைக்கப் பெறும் போதினியாக
4.தன்னை உயர்த்திக் கொள்தலே மெய்ஞான விழிப்பின் பலனாகப் பெற்றுச் சுடர்ந்திடும் ஞானத்தின் அமுத ஊற்று.

இந்த நிலையின் வழியறிந்து பெறுகின்ற மனத்தின் திறன் எத்தன்மையாக விளங்கிடல் வேண்டுமோ… அதுவே எரியடி தண்டம்…!

மனத்தின் சஞ்சலம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். எண்ண ஓட்டத்தின் வேகம் நிலை பேர் அறியாத செயலாகக் கொள்கின்ற வழித்தொடர் ஈர்ப்பின் நிலை கொண்டு நாம் அளித்திட முடியும்.

கரவுகின்ற (வஞ்சனை கொண்ட) மனம் எண்ணத்தின் செயலால் அன்பின் சிறப்பு அற்றுப்போய்விடும்.

மதகு நீர் குறைந்து விட்டால் நீர் வற்றிய பின் ஆங்கு படிந்துள்ள வண்டல் மண்… சூரியனின் வெப்பத்தால் இறுகி வெடிப்பு ஓடிக் கெட்டிப்பட்ட தன்மையாக ஆன பின்… அந்த மண்ணைத் தோண்டினால் நீர் சுரந்திடும் ஊற்று நிலை காணுவது அரிது.

அதுவே கரவுகின்ற மனம் மதகின் நீரடி மண்ணாக அன்பின் சிறப்பு அற்றுவிடும் என உரைத்திட வந்தோம்.

கோடை எனும் வாழ்க்கையாக ஆற்றின் நீரடி மணலாகத் தோண்ட சுரந்திடும் ஊற்று நீர் போல் “அன்பின் சிறப்பு” கொள்கின்றாய். அத்தகைய மனத்தின் பாங்கையே மேன்மை சுரப்பு உருவாய் என்று அழைக்கின்றோம்.
1.உயர் ஞானத்தின் வழி உயர்வெண்ண செயல் வான் தொடர்பாகப் பெற்றால்
2.அந்த அன்பின் சிறப்பு… எரியடி தண்டமாக்கும் உன்னை.

அக்கினியை அக்கினியால் அணைத்திட முடியாது…! எரிகின்ற அக்கினியை எரிகின்ற கைப்பந்தம் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக வீசிப்பார்.
1.மேலும் அக்கினியின் சுடர்தான் பிரகாசிக்குமே தவிர அது குறைவு படாது.
2.அந்த நிலையே உடல் கடந்து அகம் ஜபித்திடும் சூட்சும நிலை…!

இன்னும் விளங்கக் கூற வேண்டும் என்றால் இயேசுநாதரை சிலுவையில் அறையப்பட்ட பொழுது… உடல் துன்பம் உணர்ந்திடாத நிலையில் புற உடல் தவிர்த்து… அவர் உடல் வாழ்ந்த விதம் என்ன…?

அக்கினியில் போடப்படும் பொருள்கள் எல்லாமே சருகாகி அக்கினியை மேலும் அது வளர்க்கும். அது போல் தான் எத்தகைய துன்பங்களும் ஆத்ம ஞானிகளைத் தாக்கிடாது.
1.அவர்கள் கொண்ட எண்ணத்தின் வலு வீரியம் உடல் கடந்து…
2.அக உடல் வாழ்வாங்கு வாழ்ந்ததைப் போல் அன்பு கொண்டே உங்களையும் அழைக்கின்றோம்.

சுவரினை நோக்கி வீசப்படும் பந்து சுவற்றில் மோதுண்டு… எய்தப்பட்ட செயல் எய்த இடத்திற்கே திரும்புகின்ற செயல் போல்… அழுக்காறு எனும் பொறாமை குணமும்… சினம் என்று உரைக்கின்ற கோபத்தின் குணமும் கொண்ட உலகோதய நடைமுறை வாழ்க்கையில் உள்ள மக்கள் வெளிப்படுத்தும் அத்தகைய உணர்வுகள்… உண்மையான உயர் ஆத்ம ஞானத்தை வளர்த்திடல் வேண்டும் என்று செயலுறும் ஆத்ம ஞானிகளை அது நெருங்கிடாது.

உறுதியாக உரைக்கின்ற வாசகம் இது.

இன்றைய மனிதர்களின் மனோபாவனை… நடைமுறை வாழ்க்கை எவ்வாறு இருக்கின்றது…?

பாலைவனத்தில் மணல் குன்றைப் பார்த்து இருக்கின்றாய் அல்லவா…! இன்று ஓர் இடத்தில் இருக்கும் அந்த மணல் குன்று மறுநாள் வேறொரு இடத்தில் தோன்றுகின்றதே அது எப்படி…?

காற்றால் இடம் மாறும் மணல் குன்று போல் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை.

ஆனால் நாம் உரைத்திட வந்திட்ட உயர் ஞானம் கடைபிடிக்கும் மனித மனத்தின் நிலை அதுவே உறுதி மலை.
1.மனத்தின் திடத்தைத் தான் உரைக்கின்றோம்
2.உறுதி மலை மேல் நின்று அகன்றிடாத் தொடர் ஜெபத்தால்
3.வானியலாகச் சக்தி பெற்று உயர்ந்திட எமது ஆசிகள்.

“மாமகரிஷி ஈஸ்வரர்” தன இன மக்கள் பால் கொண்டுள்ள ஆசை

“மாமகரிஷி ஈஸ்வரர்” தன இன மக்கள் பால் கொண்டுள்ள ஆசை

 

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம் அதிலே அஞ்ஞான வாழ்க்கையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்தின் துணை கொண்டு வாழ்ந்தாலும் அஞ்ஞானத்தின் வளர்ச்சியே அதிகரிக்கிறது… மெய்ஞானத்தின் நிலைகள் மறைகின்றது…!

இதைப் போன்ற நிலையில் இருந்து மனிதர்கள் மீள வேண்டும் என்பதற்கே
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரர் தனது வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மைகளை
2.மனிதனான தன் இன மக்கள் அறிதல் வேண்டும்… அருள் ஞானம் பெறுதல் வேண்டும்
3.தன்னை அறியாது வரும் இருளை நீக்கிடும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்ற இந்த ஆசையில்
4.தனக்குள் பெற்ற அருள் சக்தியை மக்கள் பெற வேண்டும் என்று அதற்கு வேண்டிய உணர்வுகளை வழி நடத்தினார்.
5.அதற்காக எம்மை அனுப்பினார்.. அவருடைய உணர்வுகளுடன் என்னை ஒன்றாக இணையச் செய்தார்.
6.உணர்வுகளை ஆழமாகப் பதியச் செய்தார்… அவர் கண்ட பேருண்மைகளை எம்மையும் அறியும் படி செய்தார்.
7.அறிந்த உணர்வின் தன்மையை மக்களுக்கு நீ எடுத்துக்காட்டு என்று சொன்னார்.

அந்த உணர்வினை மக்களுக்கு எடுத்துக்காட்டு என்று சொன்னாலும் “ஊழ்வினை என்ற வித்துக்களாக” முதலிலே அவர்களுக்குள் பதியச் செய். அவர்கள் மீண்டும் அதை எண்ணும் பொழுது அந்த அருள் வழியில் அந்த எண்ணமே அவர்களை மீட்ட உதவ வேண்டும்.
1.உன்னை நீ நம்புகின்றாய்…!
2.அதைப் போன்று அவர்கள்… “அவர்களை நம்ப வேண்டும்…”

அருள் உணர்வின் சக்தி எதையெல்லாம் உன்னிடமிருந்து அவர்கள் கேட்டு உணர்கின்றார்களோ… “நல்லது என்று உணர்ந்த பின்” அந்த நல்லதையே கவரும் உணர்வுகளை நீ ஊட்ட வேண்டும்.

அதைக் கவர்ந்தால் அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெறுகின்றார்கள்.
1.அதனை நீ செய்வாயாக…! என்று அருள் வாக்கினை வாங்கிக் கொண்டுதான்
2.எமக்குப் பல உண்மையின் உணர்வுகளை உபதேசித்தார்… உணர்வின் ஆற்றலைப் பெறும்படி செய்தார்.

உலக மக்கள் அனைவரும் நல்லவரே…! இன்று உலகெங்கிலும் மதம் இனம் என்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலையில் இருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்பதற்காக இதைச் சொன்னார் குருநாதர்.

அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

வான் திறப்பின் திறவுகோல்

வான் திறப்பின் திறவுகோல்

 

நதி ஜீவ நதி – புதுப்புனல் பெருகிடும் மகா நதியின் மூலம் – சிறு துளி பெருவெள்ளம்.

சுரந்திடும் நீர்த்திவலைகள்… ஒன்று ஆயிரமாகப் பல்கிப் பெருகி ஓடிடும் சிற்றாறாக… ஓடி அதனுடன் இணைந்து கொண்டிடும் பல சிற்றோடை நீர் நிலைகள் மாநதியாக உருவெடுத்துக் கடலுக்குள் சங்கமிக்கின்றது.

ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் செயலும் அதே நிலைதான்…!

ஞான ஆற்றல் கொண்டிடும் அறிவின் கருவூலம் ஆத்ம பலம் எனும் சேமிப்பு நிலையைக் காட்டிடவே… மனித அறிவின் விஞ்ஞானம் பகுத்தறிவின் ஆற்றலின் வளர்ப்பால் இயற்கையை வென்று காட்டிடும் மதிநுட்பம்… நதி ஓட்டத்தின் குறுக்கே அணையை நிறுவி நீரின் சேமிப்பால் பயிர்களை வளர்க்கும் முறைகள் கண்டது.

மெய்ஞானத்தின் நெறிப்பயிர் வளர்க்கும் பக்குவம் உயிராத்மா பலம் பெற்றிடும் அமில முலாமை ஜீவகாந்த ஒளி சக்தியின் வலுவை உலகோதய உணர்வுகள் மோதிடும் எந்த நிலையிலும் விழிப்பாற்றல் குறைவுபடும் செயலுக்கே செயல் கொண்டிடும் மன எண்ணத்தின் நிலையை விளக்கிடவே முன்பு காட்டிய நிலைகள். ஆனால்
1.வானியல் தன்மைக்கே செயலுறுருங்கால்
2.மெய்ஞான விழிப்பாக வளர்த்திடும் சேமிப்பே “அதி உன்னதமான பொக்கிஷமாகும்…”

மலருக்குள் தேன் இருக்கும் வரை அது மது. தேனீக்கள் அதனை உண்டு உமிழ்கின்ற செயலில் அதுவே மருந்து. அது செயல்படும் தொழிலோ இயற்கை… அதன் செயல்பாட்டின் பொருளை நடத்திடும் மாற்று குண நிலைகள் செயற்கை.

மரத்தின் உச்சியில் தேன் கூட்டின் அடையில் சேமிப்பாகிடும் மருந்து போல் நாம் செயல் கொள்ளும் “மெய் ஞான விழிப்பாக்கும் ஈஸ்வர தியானத்தால் பெற்றிடும் உயர் நுண் மின்காந்த ஒலி அலைகள்…” சமைப்பின் ஒளியாக ஆத்ம முலாமின் சேமிப்பாகச் செயல்படுவதே ஆக்கம்.

1.நற்குணங்களும் அசுர குணங்களும் கொள்ளப்படும் செயலில்
2.அறிவை அறிவுறுத்தும் ஞானம் உலக நடைமுறையில்
3.சராசரி மனிதனுக்குப் பிடர்தலின் குணங்களாக அவன் வலுக் கொண்டிடும் எந்தக் குணங்களோ
4.அவன் சிந்தனை வசமாகும் வரை சுவைகள் வெளித் தோன்றாது.

ஆனால் ஆத்ம பலம் பெற்றிட எண்ணி ஏங்கிடும் ஆத்ம ஞானிகளுக்கு அறிவின் விவேகம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் தெய்வீக குணங்களால் தன் உயர்வைத் தானே கூட்டிக் கொள்ள… “அல்லாதவைகள் (தீமைகள்) தானே விலகும் என்பதே மாண்பு….”

உணர்வுகள் கூட்டிக் கொள்ளும் செயலுக்கு ஒரு உவமானம்.

மது வண்டின் தேன் ஒரு துளி பாறை மேல் சந்தர்ப்பத்தில் படர்ந்திட… மலையில் வாழ்ந்து வரும் ஓர் கரடி அதனைச் சுவைத்துவிட… மேலும் துளித்திடும் தேனால் கவரப்பட்டுக் கரடி அந்தத் தேன் கூட்டையே கேடாக்கத் துணிந்த செயலுக்கு இருவித நிலைகளை உரைத்தோம்.

1.தீதெண்ண குணங்கள் நற்குண சேமிப்பின் சக்தியைச் சுவைத்திட்டால்
2.நாம் வளர்த்துக் கொள்ளும் அந்த குணங்களுக்கே வலு வீரியமாகச் செயல் கொண்டு
3.மனித ஞானம் வளர்ப்பில் தேக்கத்தைப் பெறும்.

ஆனால் தீதெண்ண உணர்வுகள் மோதிட்டாலும்… ஜெபித்திடும் தியான வழியில் நற்குணங்களின் வலு வீரியம் செயல் கொண்டு தீதெண்ண நிலைகள் நீக்கிட…
1.கூட்டையே சிதைத்திடும் கரடியை… தான் கொண்ட வீரியத்தால் தேனீ கொட்டி வீழ்த்திட்ட நிலை போல்
2.அல்லாதென அமில நிலைகள் அகல… நல்லவை பெருகிடும் அமுதமாக
3.சேமிப்பின் ஆற்றல் பெருகி வழிகாட்டிடும் உபாயமாக அதுவே “வான் திறப்பின் திறவுகோலாகின்றது…”

துருவ நட்சத்திர அணுக்களின் பெருக்கம்

துருவ நட்சத்திர அணுக்களின் பெருக்கம்

 

நமது வாழ்க்கையில் அன்புடன் பண்புடன் பரிவுடன் பாசத்துடன் பிறருடைய கஷ்டங்களையும் துயர்களையும் வேதனைகளையும் கோபங்களையும் குரோதங்களையும் கேட்டறிகின்றோம்… சந்தர்ப்பத்திலே.

அவர்கள் உடலில் விளைவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து விடுகின்றது. அவர்களை உற்றுப் பார்த்தால்
1.நம் கண்ணின் கருவிழி ருக்மணி நம் உடலிலே பதிவாகி விடுகின்றது… எலும்புக்குள்.
2.கண்ணோடு சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உணர்வலைகளை நுகர்ந்து அறியச் செய்கின்றது உயிருடன் ஒன்றி.
3.நுகர்ந்தறியப்படும் பொழுது அவை அனைத்தும் இரத்தத்திலே கருக்களாக முட்டைகளாக உருப் பெறத் தொடங்குகிறது.

உயிரினங்கள் பலவும் முட்டைகளை இடுகின்றது. முட்டையை அடைகாத்துக் குஞ்சுகளாகப் பொரிக்கச் செய்கின்றது. கருமுட்டை என்றால் கருவில் இருந்து தான் குஞ்சின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளி வருகின்றது.

மாடு ஆடு இவைகள் அனைத்தும் அது நுகர்ந்த உணர்வுகள் அணுக்கருக்களாக உருவாகி அதன் துணை கொண்டு கருப்பையில் உருவாகி குட்டிகளாக ஈன்று அதன் இனத்தை அது வளர்க்கின்றது.

இதைப் போன்று தான் நாமும் அதன் வழியில் வளர்ந்தவர்கள் கருமுட்டையின் தன்மை கொண்டு தன் இனத்தை வளர்க்கும் சக்தி பெற்றது.

ஆனாலும் நம் உடலுக்குள் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அனைத்தும்… உதாரணமாக ஆத்மா நோயுற்றவரைப் பார்த்தோம் என்றால் அவரைப் பரிவுடன் அணுகுகின்றோம்… நோயினைக் கட்டறிந்து அதை நுகர்ந்தே அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றோம்.

அப்போது அந்த உணர்வுகள் அணுக்கரு முட்டையாக நம் உடலில் இரத்தங்களில் கருவுறத் தொடங்கி விடுகின்றது… முட்டையாகி விடுகிறது. நாம் கண் கொண்டு பார்த்த கரு விழி எலும்புக்குள் பதிவாக்கி விடுகின்றது.

அதன் தொடர் வரிசையில் கவரும் தன்மை நமக்கு “அந்த வலு (நோயின் பாதிப்பு) ஏற்படுகின்றது…”

இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடனும் நம் நினைவாற்றலை அங்கே செலுத்தி
2.அதனைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வினை உந்தி அதன் உணர்வின் தன்மை நுகரச் செய்தால்
3.”அத்தகைய கருக்களை” – துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை
4.ஒளியின் சக்தியாக வளர்க்கும் கருமுட்டைகளை உங்களுக்குள் உருவாக்க முடியும்.

அதற்குத் தான் உங்களுக்குத் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம். அதனை அடிக்கடி வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

அப்பொழுதுதான் ஒளியான உணர்வுகளாக நமக்குள் பெருகும்… ஒளியின் அணுக்களும் விளையும்… உயிரோடு ஒன்று உணர்வுகளும் ஒளியாக மாறும் நாம் ஒளியின் சரீரமும் பெற முடியும்
1.இரத்தங்களிலே அடிக்கடி துருவ நட்சத்திர உணர்வைப் பெருக்கிக் கருக்களாக்கி முட்டையாக்கி ஒளியான அணுக்களாகப் பெருக்கச் செய்யத்தான்
2.ஆத்ம சுத்தியைச் செய்யச் சொல்லி வாழ்க்கையை தியானமாக்கும்படி அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

யாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் “மெய் வித்துக்களே” இந்தக் கலியில் தேவையப்பா

யாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் “மெய் வித்துக்களே” இந்தக் கலியில் தேவையப்பா

 

மனிதன் என்றே பெயர் பெறும் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற உயிராத்மா… தான் தன் சுய வளர்ப்பால் வளர்ந்து… உயர் ஞானத்தின் தொடரில் தன்னைத்தான் உணரும் பக்குவ கதியால்… தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலில் உணரும் அனுபவ உயர் ஞானமாகத் தன்னுள் தெளிந்து… மனித குலச் சமுதாய நன்மைக்குத் தான் கண்ட பேரின்ப அனுபவ லயத்தை உவப்புடன் உலகினுக்கு ஈந்து… மனித மனத்தின் திறன் எண்ண வலுவால் உயர்ந்திட… உயர்வெண்ண மனித குலத்தின் நலன் நாடும் அன்பு இராஜ்ஜியமாக இக்கலியில் மனிதன் வாழ்ந்து காட்டிவிட்டால்… “சப்தரிஷிகளின் செயல்களுக்கே சக்தி அளித்திடும் மெய்ஞான விழிப்பு ஏற்பட்டு விடுமப்பா…!”

1.”உற்றுறுத்துக் கேட்டலும் அதிசயத்து நோக்கலும்…” எப்படி எல்லாம் நம் ஆத்மாவை கேடுறுத்தும்…! என்று ஏற்கனவே படிப்படியாகக் கூறி வந்துள்ளேன்
2.நாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் மெய் வித்துக்களே இந்தக் கலியில் தேவையப்பா.

இதை அறிவுரை என்றே எடுத்துக் கொள்தல் வேண்டும்.

அனுபவங்கள் கொண்டே அறிவுறுத்தும் தன்மைகளில் மெய்ப்பொருளை உணரல் வேண்டும் (இது மிகவும் முக்கியம்). குருதேவரின் விளையாட்டு…! என்ற எண்ணம் கொண்டால் அங்கே நடந்த அனுபவத்தைப் பார்த்தாய் அல்லவா.

தாய் தன் நகையைக் கழற்றி மகனிடம் கொடுக்கின்றாள். மகன் அதைத் தரையில் வைத்து விட்டுத் தியானத்தில் ஈடுபடுகின்றான். ஒரு சிறு எலி ஆனது அதைத் தன் வளைக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.

திரும்பி வந்த தாய் நகை எங்கே…? என்று கேட்கிறாள். மகன் தேடுகிறான்… தாயும் தேடுகிறது…! தியானத்தின் சக்தியில் வலுக்கொண்ட குடும்பம்… தாய் தன் மகனைச் சந்தேகிப்பாளா…?

மகன் சிரித்துவிட்டு “இது குருதேவரின் விளையாட்டு…” என்று கூறுகின்றான். தியானத்தின் மூலம் காட்சியில் எலி வளையில் நகை இருப்பதை இருவரும் பார்க்கின்றார்கள்.

தேடும் பொழுது நகையை வளையில் கண்டு எடுக்க மீண்டும் “இது குரு தேவரின் விளையாட்டு…” என்றே கூறுகின்றான்.

ஆக விவேக உணர்வு கொண்டு நிதானத்தைக் கூட்ட வேண்டுமப்பா. அவனும் மெய்ப்பொருள் நாடும் நன்னிலை பெற்றவன்தான்.
1.எதையும் அலட்சியப்படுத்தி விடாமல்
2.சிறு பிராணியின் செயலை “எமது விளையாட்டு” என்று உரைத்திடாதே…! (புகழ்ந்து விடாதே)
3.”நாம் உரைக்கும் கருத்தின் வழி நிற்றல் தான்” உலகத் தேரில் பவனி வரும் ஆரம்ப அனுபவமப்பா.

மறு சமைப்பைப் பற்றி வினா எழுப்புகின்றாய்

ஒலிப்பதிவை (செயற்கைத் தன்மை) மீண்டும் அதே ஒலி நாதத்தைக் கேட்டிடும் சமைப்புத் தன்மைகள் பற்றி அறிய நினைக்கின்றாய். ஒலி நாத வேறுபாட்டில் கருப்பொருள்தான் முதன்மையப்பா (இயற்கைத் தன்மை).

கண்டத்தில் எழுப்பும் ஒலி… ஒலி அலைகளாக மாறுவதை உணர்ந்துள்ளாய். எண்ணுகின்ற அத்தனை எண்ணங்களும் ஒலி அலைகளாகச் சமைக்கப்படும் சமைப்பை… அவைகள் ஓடிக்கொண்டே இருக்கும் ஓட்ட கதியை உணர்ந்து கொண்டாயா…? உணர்ந்து கொள்…! மன எண்ணத்தின் அசைவு தெளிவுபடும்.

கண்ணாடிக் குடுவையில் காய்ச்சப்படும் நீர் வெப்ப சக்தி கொண்டு நீராவி அமில நிலை பெற்றுப் பின் குளிர்ச்சி நிலை பெறும் பொழுது… மாற்றுக் குடுவையில் சேமிக்கும் நீராக ஏற்கப்படுகின்றது.

பரிணாம தத்துவப்படி… கொள்ளப்படும் பொருளும் ஏற்றுக்கொண்டிடும் மன நிலையும் தான் முக்கியம். கருத்துக்களில் தீய உணர்வுகளை ஏற்றிடும் அமில அணுக்களின் தன்மைகள் ஜீவ ஆதாரம் அற்ற தன்மையாக சமைப்பின் சமைப்பில் உராய்வு கொண்டு… கருத்தின் தன்மையும் ஜீவனற்று ஆத்ம பயிர் வளர்ச்சி உறாத செயலுக்கே செயல் கொண்டிடும்.

1.உயிரணுக்களை மாய்த்திடும் விஷப்பொருளில் விஷத்தையே உண்டு வாழும் உயிரணுக்கள் வாழ்வதைப் போல்
2.ஒலிபெருக்கியில் ஒலி நாதத்தைக் கேட்டிடும் செயல் எல்லாம் நோய் உண்டவன் வாழ்வதைப் போல்
3.ஒலி நாத வேறுபாட்டால் தாக்குண்ட இந்தக் காலகட்டத்திலும்
4.அமுதம் கொண்டிட்ட உயர் ஞான கருத்துக்களின் தன்மைகள் எந்த ஒலி சமைப்பின் மறு சமைப்பிலும்
5.உயர்நிலை அணுக்கள் “தன் சுவாசத்தைக் கொண்டு… தன்னைத்தான் காத்துக் கொள்ளும்…”

அறிந்ததைத் தெளிவதே உயர் ஞானத்தின் வழி பெற்றே உயர்ந்திட ஆசிகள்.

பஞ்ச அபிஷேகம் பஞ்ச அமிர்தம்

பஞ்ச அபிஷேகம் பஞ்ச அமிர்தம்

 

முருகனுக்குப் பஞ்சாபிஷேகம்…! பல பழங்களைப் போட்டு அபிஷேகம் செய்தால் முருகன் நமக்கு நல்லது செய்வான் என்று எண்ணுகின்றோம். ஐந்து கனிகளின் உணர்வுகள் வரப்படும் பொழுது… வெப்பம் காந்தம் விஷம் இதனால் தான் அந்தக் கனியின் தன்மை அடைந்தது.

எதன் பொருளை எடுத்துக் கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது. ஆறாவது அறிவின் துணை கொண்டு அங்கே பஞ்ச அபிஷேகம் நடக்கிறது என்றால்
1.அதைப் போன்ற மணம் நான் பெற வேண்டும் அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி நம் உயிரிலே அபிஷேகித்தால்
2.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ஊட்டி உயர்ந்த உணர்வினை ஊட்டியதோ – பஞ்சாமிர்தம்
3.அந்த ஐந்து விதமான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவில் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் “பஞ்ச அமிர்தம்” என்ற நிலை நமக்குள் வருகின்றது.

அது தான் காயத்ரி…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர். அந்த உணர்வு உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
1.உடலுக்குள் செல்லப்படும் பொழுது அவன் எப்படித் தீமைகளை வென்றானோ அந்த உணர்வின் தன்மை நம் உடலிலே வருகின்றது.
2.அது தான் வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்மகுரு.

அப்போது நம் உடலிலே தீமையை வெல்லும் உணர்வுகள் எப்படிப் பிரம்மம் ஆகின்றதோ அந்தச் சக்திக்கு பெயர் அருந்ததி காரணப்பெயர் வைக்கின்றார்கள் நாம் தெரிந்து கொள்வதற்கு…!

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி ஆகின்றது…? என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையக்கூடிய சக்கரவர்த்தியின் மனைவி “அதனுடன் இணைந்து வாழும் சக்தி” என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு” மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். கருணைக்கிழங்கில் என்று விஷம் இருக்கிறது என்றால் அதை வேக வைத்து விஷத்தை நீக்குகின்றோம். தொக்கி உள்ள நிலைகளைப் புளியைக் கரைத்து விட்டு விஷத்தைத் தணிக்கின்றோம்.

மிளகாயைத் தனியாகச் சாப்பிட்டால் ஆ…! என்று அலறச் செய்கின்றது. ஆனால் புளியுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை பெறுகின்றோம். உப்பையும் மற்ற சரக்குகளையும் சேர்த்துச் சுவையாந குழம்பாக மாற்றுகின்றோம். முருகு… மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்.

கார்த்திகேயா என்ற நிலையில் சகலத்தையும் அறிந்து… பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி கருணைக்கிழங்குக் குழம்பை உட்கொள்ளும் பொழுது
1.அந்த உணர்வுகள் உணர்ச்சிகள் பஞ்ச அபிஷேகமாக நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டு அத்தகைய உணர்வின் அமிலங்களாக உருவாக்கப்படுகின்றது… எச்சில் நீராக அது மாறுகின்றது.

அதாவது உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது நம் இரத்தத்தில் கலந்து… அந்த அணுக்களின் மலமாகி “நம் உடலை நல்லதாக்கி உடலை ஆரோக்கிய நிலை பெறச் செய்கின்றது….”

ஆனால் விஷத்தை அடக்குகின்றது. ஆறாவது அறிவு மகிழ்வாகனா மயில் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவதை அங்கே காட்டி நம்மைத் தெளிவாக்கும்கின்றனர்.

காரணம்… மயில் நஞ்சினை விழுங்குகின்றது அதனின் உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.

விஷத்தைக் காலடியில் வைத்து அடிமைப்படுத்தி இருக்கின்றது என்று காட்டுவதற்குத் தான் உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி
1.அதனுடைய இயபஞ்ச அபிஷேகம் பஞ்ச அமிர்தம்

முருகனுக்குப் பஞ்சாபிஷேகம்…! பல பழங்களைப் போட்டு அபிஷேகம் செய்தால் முருகன் நமக்கு நல்லது செய்வான் என்று எண்ணுகின்றோம். ஐந்து கனிகளின் உணர்வுகள் வரப்படும் பொழுது… வெப்பம் காந்தம் விஷம் இதனால் தான் அந்தக் கனியின் தன்மை அடைந்தது.

எதன் பொருளை எடுத்துக் கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது. ஆறாவது அறிவின் துணை கொண்டு அங்கே பஞ்ச அபிஷேகம் நடக்கிறது என்றால்
1.அதைப் போன்ற மணம் நான் பெற வேண்டும் அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி நம் உயிரிலே அபிஷேகித்தால்
2.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ஊட்டி உயர்ந்த உணர்வினை ஊட்டியதோ – பஞ்சாமிர்தம்
3.அந்த ஐந்து விதமான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவில் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் “பஞ்ச அமிர்தம்” என்ற நிலை நமக்குள் வருகின்றது.

அது தான் காயத்ரி…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர். அந்த உணர்வு உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
1.உடலுக்குள் செல்லப்படும் பொழுது அவன் எப்படித் தீமைகளை வென்றானோ அந்த உணர்வின் தன்மை நம் உடலிலே வருகின்றது.
2.அது தான் வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்மகுரு.

அப்போது நம் உடலிலே தீமையை வெல்லும் உணர்வுகள் எப்படிப் பிரம்மம் ஆகின்றதோ அந்தச் சக்திக்கு பெயர் அருந்ததி காரணப்பெயர் வைக்கின்றார்கள் நாம் தெரிந்து கொள்வதற்கு…!

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி ஆகின்றது…? என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையக்கூடிய சக்கரவர்த்தியின் மனைவி “அதனுடன் இணைந்து வாழும் சக்தி” என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு” மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். கருணைக்கிழங்கில் என்று விஷம் இருக்கிறது என்றால் அதை வேக வைத்து விஷத்தை நீக்குகின்றோம். தொக்கி உள்ள நிலைகளைப் புளியைக் கரைத்து விட்டு விஷத்தைத் தணிக்கின்றோம்.

மிளகாயைத் தனியாகச் சாப்பிட்டால் ஆ…! என்று அலறச் செய்கின்றது. ஆனால் புளியுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை பெறுகின்றோம். உப்பையும் மற்ற சரக்குகளையும் சேர்த்துச் சுவையாந குழம்பாக மாற்றுகின்றோம். முருகு… மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்.

கார்த்திகேயா என்ற நிலையில் சகலத்தையும் அறிந்து… பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி கருணைக்கிழங்குக் குழம்பை உட்கொள்ளும் பொழுது
1.அந்த உணர்வுகள் உணர்ச்சிகள் பஞ்ச அபிஷேகமாக நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டு அத்தகைய உணர்வின் அமிலங்களாக உருவாக்கப்படுகின்றது… எச்சில் நீராக அது மாறுகின்றது.

அதாவது உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது நம் இரத்தத்தில் கலந்து… அந்த அணுக்களின் மலமாகி “நம் உடலை நல்லதாக்கி உடலை ஆரோக்கிய நிலை பெறச் செய்கின்றது….”

ஆனால் விஷத்தை அடக்குகின்றது. ஆறாவது அறிவு மகிழ்வாகனா மயில் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவதை அங்கே காட்டி நம்மைத் தெளிவாக்கும்கின்றனர்.

காரணம்… மயில் நஞ்சினை விழுங்குகின்றது அதனின் உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.

விஷத்தைக் காலடியில் வைத்து அடிமைப்படுத்தி இருக்கின்றது என்று காட்டுவதற்குத் தான் உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி
1.அதனுடைய இயக்கத் தொடர் நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கப்படும் பொழுது எப்படி எல்லாம் வளர்ந்து மனிதனாக வந்தோம்…?
2.தீமைகள் அகற்றிடும் சக்திகளை நாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றார்கள்.

மனிதனாக வருவதற்கு இத்தனை சக்திகளும் காரணமாக இருந்தது என்பதனை மயிலை காட்டி அதன் காலடியில் பாம்பையும் வைத்து நமக்கு காட்டுகின்றார்கள் இந்த உண்மையை கண்டுணர்ந்த ஞானிகள்.

புற நிலையில் செய்வதை அகநிலைகளுக்குக் காட்டி
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தீமைகளை அடக்கிச் சுவை மிக்கதாக
2.பஞ்ச அமிர்தமாக நமக்குள் உருவாக்க முடியும் என்று உருவத்தை காட்டி உள் பொருளை அறியும் படி செய்கின்றார்கள்.
க்கத் தொடர் நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கப்படும் பொழுது எப்படி எல்லாம் வளர்ந்து மனிதனாக வந்தோம்…?
2.தீமைகள் அகற்றிடும் சக்திகளை நாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றார்கள்.

மனிதனாக வருவதற்கு இத்தனை சக்திகளும் காரணமாக இருந்தது என்பதனை மயிலை காட்டி அதன் காலடியில் பாம்பையும் வைத்து நமக்கு காட்டுகின்றார்கள் இந்த உண்மையை கண்டுணர்ந்த ஞானிகள்.

புற நிலையில் செய்வதை அகநிலைகளுக்குக் காட்டி
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தீமைகளை அடக்கிச் சுவை மிக்கதாக
2.பஞ்ச அமிர்தமாக நமக்குள் உருவாக்க முடியும் என்று உருவத்தை காட்டி உள் பொருளை அறியும் படி செய்கின்றார்கள்.