ஓ…ம் ஓ…ம் என்று சொல்கின்றோம்… ஏன்…? எதற்கு…?

ஓ…ம் ஓ…ம் என்று சொல்கின்றோம்… ஏன்…? எதற்கு…?

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

கோவிலுக்குச் செல்கின்றோம்… ஒவ்வொரு கோவிலிலும்… முன்னாடி “ஓ…ம்” போட்டு வைத்திருக்கின்றார்கள். நாம் கோவிலுக்குச் சென்றால் சாமி கும்பிடுகின்றோம்…! ஏன் கும்பிடுகிறோம்…? எப்படிக் கும்பிடுகின்றோம்…? கும்பிடுவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கின்றது…? இதை யாரும் தெளிவாக நமக்குச் சொல்லவில்லை.

1.கஷ்டம் வந்தது என்றால் “அந்தத் தெய்வத்திடம் உன் குறைகளை எல்லாம் சொல்லிக் கேள்…”
2.மனம் உருகி நீ அழுது முறையிடும் பொழுது “தெய்வம் உனக்கு உதவி செய்யும்…” என்று தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

இப்போது நாம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம் ஈஸ்வரா என்றால் “ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான்…” அங்கிருந்து அவன் சிருஷ்டிக்கின்றான்…! என்று தான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் அந்த ஈஸ்வரன் யார்…?

ஓ…ம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… ஜீவன் உள்ளது…! என்று இப்படித்தான் எல்லோரும் வாதிடுகின்றார்கள்.

உதாரணமாக ரோட்டில் செல்கின்றோம். ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். நாம் பாசமாக இருக்கின்றோம் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது
1.நம் கண் அவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வுகள் அவன் வெளிப்படுத்துவதைக் கண் இழுக்கிறது
3.இழுத்துச் சுவாசித்தவுடன் உயிரிலே பட்டு நமக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… அடிபட்டு அவன் உடலில் வேதனையாகின்றது வேதனை தாங்காது அவன் அழுகின்றான். அவன் வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய “வெப்ப காந்தங்கள்” அது தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

“வேதனைப்படுகின்றானே…” என்று அவனைப் பார்த்தவுடனே அதே உணர்வலைகளை நம் கண் இழுத்து உணர்த்துகிறது.

உதாரணமாக இப்பொழுது நான் (ஞானகுரு) பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால்
1.இந்த மைக் நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுத்துக் கவருகின்றது
2.அதே போன்று தான் அந்த அடிபட்ட பையன் வேதனையான உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.நம் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கிறது… கண் அதைப் பார்க்கின்றது.
4.அந்த அலை பட்டாலும் கண் கருவிழி அதைக் படமாக்குகின்றது.
5.கண்ணில் இருக்கக்கூடிய காந்தம் அதை இழுக்கின்றது… இழுத்தவுடன் நாம் சுவாசிக்கின்றோம்.

நல்ல குணம் கொண்டு ரோட்டில் செல்கின்றோம் அப்பொழுது பையன் கீழே விழுகின்றான் பார்த்ததும் வேதனையான நிகழ்ச்சிகள் தெரிகின்றது.

அந்தச் சப்தத்தைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து நாம் நுகரும்பொழுது நமக்குத் தெரிய வைக்கிறது.
1.சுவாசித்தவுடன் அந்த வேதனையான உணர்வு உயிரில் பட்டு
2.அது ஜீவன் பெறுகின்றது. அதற்குப் பெயர் தான் “ஓ…”

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடியிலே நெருப்பை வைத்தால் கொதித்து… “ததாபுதா…!” என்று சப்தம் இடுகின்றது. தண்ணீர் தான்… ஆனால் அது சப்தம் போடுகின்றது.

காரணம்
1.கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியில் படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் பட்டவுடன்
2.அதை இழுத்து இந்தச் சப்தத்தைப் போடுகின்றது… இது இயற்கை…!

இங்கே எப்படிச் சப்தமிடுகின்றதோ இது போன்றுதான் அந்த உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட உடனே
1.அந்தப் பையன் வேதனைப்பட்டது… காந்த அலைகளால் கவரப்பட்டது
2.இங்கே பிரணவமாகி நமக்குள் ஜீவன் பெறுகின்றது.
3.நமக்கும் உடலில் வேதனையான உணர்ச்சிகளைத் தூண்டி உணர்த்துகின்றது.

அவன் அடிபட்டு வேதனையை “ஆ…!” என்று அலறி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். ஆனால் இந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது

நாம் கண்ணிலே பார்த்தாலும் அதை இழுத்துக் கவர்ந்து உயிரிலே பட்டபின் ஜீவன் பெற்று நமக்கும் அந்த வேதனையைத் தூண்டி “அடிபட்டு விட்டனே…!” என்று அவனைக் காப்பாற்றும்படி செய்கின்றது.

பாச உணர்வால் நாம் காப்பாற்றுவதற்குச் செயல்பட்டாலும் அவன் பட்ட வேதனை உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இது ஓ…!

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெருப்பைக் கூட்டி நீரைப் உற்றி அதில் எந்தச் சரக்கைப் போட்டு வேக வைக்கின்றமோ அது கொதித்து அந்த வாசனைகள் நீருடன் கலக்கிறது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது. பொருளை வேக வைத்தால் கரைந்து மற்றதோடு இணைகின்றது. இது போன்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வுகளைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.அந்த உணர்வுகள் அது பிரிந்து விடுகிறது.
3.வேதனையின் சத்து உமிழ் நீராக மாறி ண்ஹம் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.

இது “ஓ…ம்” அதாவது
1.கண்ணுக்குப் புலப்படாத அந்தச் சக்தி உயிரிலே பட்ட பின் ஜீவனாகி
2.உடலுடன் சேர்த்து இரண்டறக் கலக்கப்படும் பொழுது ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய…
3.அவருடைய வேதனை நமக்குள் வந்த பின் அந்தச் சக்தி… சிவமாக… உடலாக… மாறி விடுகின்றது
4.சக்தியாக நம் உடலில் சேர்ந்து இயக்க ஆரம்பிக்கின்றது.

ஆக நாம் சுவாசித்ததை உயிர் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது… உடலுடன் ஐக்கியமாகி விடுகின்றது. ஓ… என்பது பிரணவம் ம்… உடலுக்குள் சேர்த்து பிரம்மமாகி விடுகின்றது.

வேதனையை உருவாக்கும் சக்தியாக உடலுக்குள் விளைந்து… அது உயிருடன் சேர்ந்து விட்டால் நம்மை அறியாமலே அடுத்து வேதனைப்படும்படி செய்யும்.
1.எதை எடுத்தாலும் வேதனை… எதை எடுத்தாலும் வேதனை… என்று
2.அந்த வேதனையான உணர்வுகள் உடல் முழுவதும் படர்ந்து அதையே பேச வைக்கும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நமக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை… நம்மை நாம் அறிவதற்குத் தான் ஓ…ம் என்று அதைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

நாம் சுவாசிப்பது (சக்தி) உயிரிலே பட்ட பின் அது ஜீவன் பெற்று நம் உடலாக சிவமாக எவ்வாறு மாறுகிறது…? சிவத்திற்குள் சக்தியாக மீண்டும் எப்படி இயக்குகிறது…? அதனதன் செயலாக இயக்குவதை ஓ…ம் ஓ…ம் என்று எல்லா இடங்களிலும் போட்டு உணர்த்தி உள்ளார்கள் ஞானிகள்.

எண்ணத்தின் வலு (ஆன்மாவின் வலு) எதிலே இருக்க வேண்டும்…?

எண்ணத்தின் வலு (ஆன்மாவின் வலு) எதிலே இருக்க வேண்டும்…?

 

மனித எண்ண ஓட்டங்கள்… உணர்வின் எண்ணம் கொண்டும் எண்ணத்தின் உணர்வு கொண்டும் பலவாக ஓடிக் கொண்டே உள்ளது. உறக்கத் தன்மையிலும் மயக்க நிலையிலும் கூட ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் அவயங்கள் சோர்வுபட்டு உறங்கும் தருவாயில்
1.எண்ணத்தின் அலை உறக்க நிலையில் சரீரமுடன் சுவாசத்தில் மோதப் பெறும் காற்றலையின் அலைத் தன்மை
2.சுவாசம் எடுத்துக் கவன நரம்பில் மோதும் பொழுது
3.காற்றலையில் ஏற்கனவே பதிவு பெற்ற அலைத் தொடர்பின் தொடர் தன்மை
4.உடல் கூறின் அமில சமைப்பு வலுத் தன்மையின் ஈர்ப்புடன் மோதும் பொழுது உணர்வுடன் ஒத்த தன்மையும் மோதுகின்றது.

இந்த உடலிலிருந்து வெளிக் கக்கும் அமிலத் தொடர்பின் ஈர்ப்புக்கு வரும்… “காற்றலையின் சந்திப்பும்” இச்சுவாசத்தில் மோதும் பொழுது… உறக்க நிலையில் காணப்படும் கனவுகள்… வாழ்க்கைத் தொடரில் விழிப்புடன் உள்ள செயலுக்கொத்த தொடர் போன்றே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே காணுகின்றோம்.

இப்படிக் காணக்கூடிய கனவின் செயலும்… இஜ்ஜீவ காந்தச் சரீரத் தொடருடன் எடுக்கப்படும் அலையினால் “வலுவான சில கனவுகள்” தம் எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவிலும் பதிவாகி விடுகின்றது.

நினைவின் உணர்வுடன் உள்ள பொழுது… மீண்டும் கனவில் நடந்த அந்த நிலை நம் நினைவிற்கு வருகின்றது.

ஆத்மாவின் “பதிவு” தான் எண்ணத்தின் ஓட்டம்…!

ஆத்ம இயக்கம் இச்சரீர வாழ்க்கையில் வலுக் கொள்ளும் தன்மையும்… சரீரமுடன் கூடிய ஜீவ காந்த மின் அலையின் வலுக் கொண்டுதான்… ஆத்மாவை மீண்டும் வலுவாக்க முடியும்.

முந்தைய பாடங்களில் சொன்னபடி உயிர் ஆத்மா உடல் பிம்ப சரீரத்தின் தொடரை உணர்த்தியுள்ள முறையில் “ஆத்மாவின் செயலை” உணர்ந்திருப்பீர்.

இச்சரீரக் கூறில் சேர்க்கப்பட்ட சுவையின் அமிலத்தின் வார்ப்பு ஜீவ சரீரச் செயலுக்கொப்ப…
1.ஆத்மாவின் செயல் எண்ண அலையின் மோதலைக் கொண்டு
2.எண்ணத்தின் உணர்வும்… உணர்வின் எண்ணமும்… செயல் கொள்கின்றன.
3.பலவாக ஓடும் எண்ணத்தின் ஆத்மாவின் பதிவில் உள் மனம் வெளி மனம் என்று
4.இப்படி ஒரே சமயத்தில் பல நினைவு கொண்ட செயலில் எண்ண ஓட்டம் செயல் கொள்கின்றது.

பூமி சமைப்பில் சரீரத் தொடர் வாழ்க்கையில் சாதாரணத் தொடர்பு கொண்டு நாம் பெற்ற ஒலித் தன்மைக்குகந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழும் போது என்ன நடக்கின்றது…?

நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் பெற்று வளர்ந்து வந்த வளர்ச்சிக்கு உரம் செலுத்தாமல்… பெற்ற வலுவைச் சரீர எண்ண ஓட்ட சமுதாய எண்ணப் பிடியுடன் செயல்படுத்தும் உணர்வினால்…
1.மீண்டும் மீண்டும் இப்பிடிப்பலையில் சிக்கி
2.வலுப் பெற்ற ஆத்ம ஒளியை மங்கவிடும் இழி நிலை தான் ஏற்படும்.

ஆகவே வாழ்க்கையில் உணர்வின் எண்ணத்தில் மோதப்படும் குண நிலையில் நாம் சிக்கக் கூடாது. மேலும் எண்ணத்தில் செயல்படும் பல நிலை கொண்ட நினைவு எண்ண ஓட்டத்திலும் சிக்கிடக் கூடாது.

சந்தர்ப்பத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு சஞ்சலப்படும் காலங்களில் எல்லாம்
1.நம் உணர்வின் எண்ணத்தை வலுவாக்கும் முறையான
2.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு மின் காந்த ஒளி சக்தியின் உரத்தை
3.அந்த மாமகரிஷிகளின் ஒளி காந்த சக்தியை நுகர்ந்து.. சுவாசித்து.. உடலுக்குள் செலுத்தும் பொழுது
4.பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கலாம்.

ஒளி நிலை பெற்ற அந்த ஒளி சக்தியை… இச்சரீர உணர்வில் எடுக்கும் பொழுது நம் எண்ணத்தின் வலுக் கூடும். ஆத்மாவின் வலுவையும் வலுவாக்க முடியும். மெய் ஞானத்தில் தொடர் வளர்ச்சி காண முடியும்…!

விஞ்ஞான உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

விஞ்ஞான உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

 

இன்றைய விஞ்ஞான உலகில்… உலகெங்கிலும் பார்த்தோம் என்றாலும் சிறிய குழந்தைகள் தப்பித்தவறி ஏமாந்து விட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.

வயது முதுமையாக இருப்பவர்களில் மிகவும் பண வசதி உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

விஞ்ஞான அறிவு கொண்டு சிறிய குழந்தைகளுடைய மூளையை எடுத்து ஆசிடாக மாற்றுகின்றார்கள். இந்த அமிலத்தை மருந்தாக ஊசியில் ஏற்றி… வயதாகி இறக்கும் தருவாயில் இருக்கக்கூடிய மனிதனுக்கு இதைப் போட்டு அவன் முதுமையை இளமையாக்குகின்றான்.

மீண்டும் இளமையாக வாழ்வதற்கு முயற்சிக்கின்றான். விஞ்ஞானம் அந்த அளவிற்கு இன்று வளர்ந்து விட்டது.

இளம் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் வளர வேண்டும் என்ற தாய் தந்தையர் பாடுபடுகின்றனர். பணம் வசதி வைத்திருப்பவன் விஞ்ஞான அறிவு கொண்டு அவனுக்குச் சாதகமாக்கிச் செயல்படுத்துகின்றான்.

குழந்தைகளைக் கடத்திச் சென்று விடுகின்றார்கள். பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று செயல்பட்டாலும் இப்படி மாற்றி மாற்றி குழந்தைகளை இரக்கமற்றுக் கொன்றிடும் நிலைகள் வந்து விட்டது.

விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் மனிதன் இன்று இவ்வாறு தான் “அசுர குணம் கொண்டு” சென்று கொண்டிருக்கின்றான்.

கொஞ்ச வயசுப் பிள்ளைகள் வெளியிலே சென்றால் போதும்…! அப்பா யார்…? அம்மா யார்…? என்று கேட்டுவிட்டு… “உன் அப்பா தான் இங்கே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்…” என்று ஒரு பொருளைக் கொடுத்து ஏமாற்றி அவனைச் சாப்பிடும்படி செய்து மயங்க வைத்து அலுங்காமல் கூட்டிச் சென்று விடுகின்றார்கள்.

படித்த டாக்டர்கள் நிறைய இருக்கின்றார்கள். மக்களைக் காக்கும் டாக்டர் தொழிலுக்கும் படித்துவிட்டு காசுக்காக வேண்டி இந்தப் பழக்கத்திற்கு என்ன செய்கின்றார்கள்…?

மயக்கிக் கூட்டிக் கொண்டு வந்தவர்களின் கண்களை எடுத்து ஒரு நாட்டிற்கு அனுப்புகின்றார்கள். எலும்பை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… எலும்புக்குள் இருக்கும் ஊனை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… மண்டையில் இருக்கக்கூடிய மூளையை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… இருதயத்தை ஒரு இடத்திற்கு அனுப்புவது கல்லீரலை ஒரு பக்கம் அனுப்புவது கிட்னியை அனுப்புவது என்று விலை பேசி வியாபாரம் செய்கின்றார்கள்.

கொள்ளையடிப்பதற்கு எதுவும் சிக்கவில்லை என்றால் பிள்ளைகளை இவ்வாறு கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்கள்.

மெக்கானிக் வேலை தெரிந்து கொண்டவர்கள் காரை ஒர்க்ஷாப்பில் வைத்து பார்ட் பார்ட்டாகக் கழட்டி விற்பது போன்று மனித உடல்களைக் கவர்ந்து சென்று பார்ட்ஸ் பார்ட்ஸ் ஆகக் கழட்டி விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

விஞ்ஞானம் அந்த அளவில் இருக்கின்றது. அது மட்டுமல்ல…!

டிவி ரேடியோ அனைத்தும் நாம் கேட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அதை வைத்து என்ன செய்கின்றார்கள்…?

கடும் நஞ்சு கொண்ட அலைகளைத் தயார் செய்கின்றனர். டிவி ஸ்டேசனிலிருந்து எந்த அலை வரிசையில் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்களோ அந்தக் காந்த அலைகளோடு இந்த விஷத்தைக் கலந்து விடுகின்றார்கள்.

அதன் மூலம் டிவி பார்ப்பவர்களைப் புத்தி இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றது விஞ்ஞான அறிவு. கடைசியில் பைத்தியம் பிடித்தது போல் சிந்தனை இல்லாது போகிறது. இதிலே வளர்ச்சி பெற்று இருக்கின்றது

இதிலிருந்தெல்லாம் காப்பாற்றுவதற்கு யார் இருக்கின்றார்கள்…?

இப்படிப்பட்ட உலகில் தான் இன்று நாம் வாழுகின்றோம் சாமியோ சாமியாரோ ஜோசியமோ வேள்வியோ யாகமோ யாரும் காப்பாற்றப் போவதில்லை.

அதே சமயத்தில் ஆயுள் ஹோமம் செய்கின்றனர் ஹோமம் செய்பவர் வயது ஐம்பது வயது ஐம்பத்தைந்து வயது இருக்கும்.

ஹோமத்தைச் செய்து மந்திரங்களைச் சொல்லி அறுபதாம் கல்யாணம் ஏழுபதாம் கல்யாணம் என்பதாம் கல்யாணம் என்று எல்லாமே செய்கின்றனர்.
1.ஹோமத்தைச் செய்து அவரை ஒரு 200 வயது வரைக்கும் வாழ வைத்தால் பரவாயில்லை
2.ஹோமத்தைச் செய்துவிட்டு அடுத்துப் பணம் இல்லை என்றால் “எங்கே செல்கிறார்…” என்று சொல்ல முடியாது
3.காசைக் கொடுத்துவிட்டு ஏமாற வேண்டியதுதான்.

மந்திரத்தைச் சொல்லி மனித உடலில் விளைய வைத்து உணர்வுகளைப் பிரித்த பின் மந்திரத்தைத் தட்டி விட்டான் என்றால் அலுங்காமல் அவன் பிடித்துக் கொண்டு செல்வான்.

மூளையை எடுத்து அதைப் பார்சல் செய்து முதுமையானவனுக்குள் பாய்ச்சி இளமையாக ஆக்குவது போன்று
1.மந்திரக்காரர்கள் இது போன்ற உணர்வுகளை எடுத்து
2.ஒன்றுமறியாத குழந்தை கருவில் இறந்ததை எடுத்து இழுத்துச் சுற்றித் தட்டினான் என்றால் இதிலே வந்து ஒட்டிக் கொள்ளும்.
3.தன் எண்ணத்தின் அலையைப் பாய்ச்சினான் என்றால் “ரேடியோ கதிரியக்கங்கள்” போன்று பாய்ந்து கொண்டிருக்கும்
4.அப்படிப் பாய்ச்சச் செய்து நல்லது… கெட்டது… மற்ற என்னென்ன புத்தி வேண்டுமா அடுத்தவனை அவ்வாறு ஆக்குவதற்கு இதைச் செய்கின்றனர்.
5.அரச காலங்களில் தவறான வழியில் செயல்படுத்தப்பட்ட நிலை… இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.

மனிதன் இறந்து வெளியே சென்ற பின் அந்த உணர்வைக் கவர்ந்து மந்திரத்தினால் நான் சக்தி பெற்றுள்ளேன்…!
1.உடனடியாக அவனை நான் நிறுத்திக் காட்டுகின்றேன்… கை கால் வராமல் செய்கின்றேன் பார்…!
2.பொருளை வரவழைக்கின்றேன் பார்… விபூதியை வரவழைக்கிறேன் பார்…! என்பார்கள்.

அந்த விபூதியை வாங்கிய பின் நாம் அவரைப் “பெரிய மகான்” என்று போற்றுவோம்.

ஆனால் நாம் உடல் விட்டுச் சென்றால் அவன் கையில் சிக்கிக் கொண்டு “விபூதியாகப் போவோம்…” நீ சொல்கிறதை எல்லாம் நான் கேட்கிறேன்…! என்று அவனுக்கு அடிமையாகப் போக வேண்டியது தான்.

இன்று அவனிடம் விபூதி வாங்கினால் நாளை அவன் என்ன சொல்கிறானோ உடலை விட்டுச் சென்ற பின் “நான் உன்னிடம் வருகிறேன் நீ சொல்வதை நான் கேட்கிறேன்…” என்று போக வேண்டியது தான்.
1.உடல் வெளியிலே போகிறது…
2.ஆனால் உணர்வுகள் அங்கே பேசும்.

இப்படி நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

இது எல்லாம் குருநாதர் காட்டிய பேருண்மைகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

எண்ணத்தால் கூர்மையாக எடுக்கும் தியானத்தைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த உயர் நிலை அடையலாம்

எண்ணத்தால் கூர்மையாக எடுக்கும் தியானத்தைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த உயர் நிலை அடையலாம்

 

அண்டத்தின் தன்மையை நாம் அறிய முடியும். ஆனால் அண்ட கோளங்கள் நம்மை அறியாது.

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு மனிதனின் பகுத்தறிவு உணரும் பக்குவத்தில்…
1.ஆதிசக்தியின் படைப்பான உயிர் காந்தத்தில் வளர்க்கப்பட்ட
2.ஆத்ம சரீர உயிர் அணுக்களின் வலுவைக் கொண்டுதான்…
3.சரீர ஆத்ம உயிரின் வலுவின் பரிமாணத்தை
4.மங்காச் செயல் நிலைக்குச் செயல் கொள்ள முடியும்

அதாவது எண்ணத்தின் உணர்வைச் சமம் கொண்டு நாமெடுக்கும் சுவாச உணர்வின் ஜெப அலையில் சேர்க்கப்படும் மகரிஷிகளின் மின் காந்த அலையின் தொடர்பினால் “அது சாத்தியமாகும்…”

தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது அங்கங்கள் உருப்பெறும் காலத்தில் அதற்குகந்த உஷ்ண அலையின் இயக்க உருவக அமைப்பாய் நுரையீரலும் இதயமும் சதையும் மயிர்க்கால்களும் நகமும் பல்லும் உருவாக ஊன் தன்மையின் அலை சக்தியில் ஆவியாகி எலும்பின் வளர்ச்சியைக் கொண்டு உருப்பெற்று அங்கத்தின் கூட்டு இயக்கங்களாய் உயிர் அணுக்களின் வளர்ச்சி பெற்று பிறப்பு நிலை பெற்றோம் அல்லவா…!

அதைப் போன்று… சரீர இயக்கத்தில் மனித உணர்வின் எண்ண வளர்ச்சியில்… ஆத்ம உயிர் இயக்கத்தின் வலு நிலை கூடக் கூட… அங்கங்களின் உயிர் அணுக்கள் வீரியத் தன்மை பரிமாணம் பெறும்.

1.உடலின் பசிக்கு உணவும் உணர்வின் உந்தலுக்குகந்த செயலும் கொள்ளும் தன்மை தான் மனிதச் சரீர இயக்கம் உள்ளது.
2.பல கோடிச் சரீரங்களில் இந்த உயிராத்மா பெற்ற வலுத் தொடரை
3.சரீர வாழ்க்கைத் தொடர்பு காலங்களில் சேர்க்கப்படும் சலிப்பு சஞ்சலத் தொடர்புடன் சரீர வாழ்க்கை முடிவுற்று
4.உயிராத்மாவின் ஒளியைச் சரீர இயக்கமுடன் முடிவுற்று மங்கச் செய்யாமல்
5.ஆதியிலே எந்த ஒலி கொண்டு ஒளி பெற்று ஆத்ம உயிரின் உயிர் அணுக்கள் வளர்ந்து…
6.ஒலி… ஒளி… சுவை… உணர்வு… மணம்… குணம்… ஆகியவற்றை இச்சரீரம் பெற்றதோ
7.அத்தன்மையில் வளர்ச்சியின் வலுத் தொடரை மனித வாழ்க்கையில்
8.அடுத்த நிலைக்கு உணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு வலுவாக்கினால்
9.மனிதத் தன்மையின் சித்துத் தன்மையைச் செயலில் ஒவ்வொருவரும் காண முடியும்.

சாதாரண வாழ்க்கை நிலையில் கிடைக்கும் ஞான வளர்ச்சி… ஆரோக்கிய நிலை… அங்கங்களின் செயல் தன்மை… இவற்றின் நிலையைக் காட்டிலும்
1.ஜெப சக்தியின் உயிர் அணுவின் வீரிய வளர்ச்சியின் செயலைக் கொண்டு – “ஒளி பாய்ச்சி”
2.நினைத்ததை மனிதன் செயலாக்கக் கூடிய வலு வீரியத் தன்மை செயல் கொள்கின்றது.

ஆங்காங்கு உள்ள சிற்றாறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் கடலாகச் செயல்படுகிறது. அதைப் போன்று நம் செயலின் தன்மையில் வேகத்தைக் கூட்டும் பொழுது “துரிதத் தன்மை” ஒவ்வொன்றிலும் ஏற்படுகிரது.

ஆக… இச்சரீர இயக்கத்தின் உயிர் அணுக்களை வீரியப்படுத்த வேண்டும் என்றால்
1.ஒலி நாதத்தைக் கொண்டு ஒளி பாய்ச்சி
2.எண்ணத்தின் கூர்மையால் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் வீரியப்படுத்தி
3.“உயிரின் பரிமாணத்தின் வளர்ச்சி கொள்ள…” எண்ணத்தால் எடுக்கும் தியானத்தைக் கொண்டு
4.மங்கா ஒளித் தன்மையைப் பெற முடியும்.

கஷ்டத்தையோ துன்பத்தையோ “எம்மிடம் சொல்லக் கூடாது…” என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

கஷ்டத்தையோ துன்பத்தையோ “எம்மிடம் சொல்லக் கூடாது…” என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

 

நீங்கள் குறையை நினைக்க வேண்டாம்
1.அது நிறைவு பெற வேண்டும் என்று எம்மிடம் கேளுங்கள்.
2.அருள் சக்திகள் உங்களுக்குக் கிடைக்கும் என்று நான் (ஞானகுரு) பதிவு செய்யும் பொழுது
3.அதன் வழி நீங்கள் நினைவுபடுத்தினால் உங்கள் எண்ணம் அவ்வப்பொழுது உங்களுக்கு அதை நிறைவேற்றிக் கொடுக்கும்.

பல முறை நான் இதைச் சொல்லிவிட்டேன்.

உதாரணமாக கஷ்டமாக ஒருவர் வந்து சொல்கின்றார்… அதைப் பார்த்தால் உங்களுக்குள் பதிவாகின்றது. உங்களுக்கும் அப்போது கஷ்டமாக இருக்கின்றது.

அது போல்…
1.ஆயிரம் பேர் என்னிடம் வந்து கஷ்டமாகச் சொன்னால் அத்தனையும் நான் கேட்க வேண்டி இருக்கின்றது.
2.கஷ்டம் நஷ்டம் என்று சொல்வதை நான் மாற்றிக் கொள்வதற்குக் குறைந்தது நான்கு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரை ஆகின்றது
3.அந்த அருள் சக்திகளை எடுத்துத் தான் நானும் துடைக்க வேண்டும்.

உயர்ந்த சக்திகளை நான் எடுத்தாலும் கூட என்ன ஆகிறது…?

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாலைக் குடித்தால் மயக்கம் வருகின்றது அல்லது மரணம் அடைய நேருகின்றது.

அந்த ஒரு துளி விஷத்தை மாற்ற ஆயிரம் குடம் நல்ல பாலை அதிலே ஊற்ற வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பாலுக்கே அது வீரிய சத்து கிடைக்கின்றது.

அதே மாதிரித் தான் உங்களுக்கு வாக்கினைக் கொடுக்கின்றேன். அது நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று சொன்னாலும் அது சமயம் நீங்கள் கஷ்டத்தைச் சொல்லிக் கேட்கக் கூடாது… கஷ்டத்தையே சொல்லக் கூடாது.

தயவு செய்து இதை எல்லாம் சிறுகச் சிறுக மாற்றிக் கொண்டே வாருங்கள்…!

எனக்கு நல்லது நடக்க வேண்டும்; குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்; குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும்; என்னைப் பார்ப்பவர்களுக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இப்படித்தான் நினைக்க வேண்டும்.

அப்படி நினைக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.அந்த அலைகளைத் தியானத்தில் யாம் அனுப்பும் பொழுது
2.உங்களுக்கு அது கிடைக்கின்றது… நிச்சயம்…!

ஆனால் கஷ்டம் என்று சொல்லி விட்டீர்கள் என்றால் அது தான் எனக்குள் பதிவாகிறது. அந்தக் கஷ்டத்தை நான் துடைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதற்கப்புறம் நான் நல்ல வாக்கை அனுப்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்…?

ஆக…
1.சுத்தமாக அதைத் துடைத்து என்னைப் பாதுகாப்பதற்குத் தான் நான் தியானம் செய்ய வேண்டி இருக்கும்
2.அப்புறம்தான் உங்களுக்கு நல்ல வாக்கினைக் கொடுக்க வேண்டி வரும்.

ஏனென்றால் நீங்கள் கஷ்டத்தைச் சொல்கிறீர்கள்… அதை எல்லாம் கேட்டுக் கொண்டு உங்களுக்கு உடனடியாக நான் வாக்கு சொல்ல முடியாது கஷ்டத்தைத் தூய்மைப்படுத்திய பின்பு தான் வாக்குக் கொடுக்க முடியும்…!

நீங்கள் சொல்லும் கஷ்டமெல்லாம் இந்த உணர்வோடு கலந்து விட்டால் அந்த உணர்வோடு வாக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்…?
1.முதலில் என்னைச் சுத்தப்படுத்த வேண்டி இருக்கின்றது
2.அது தூய்மையான பின்பு தெளிந்த மனதுடன் தான் வாக்கு கொடுக்க முடியும்… அப்பொழுது அது வேலை செய்யும்.

ஏனென்றால் வாக்குக் கொடுக்கிறோம் என்றால் அது சாதாரணமானது அல்ல…! எத்தனையோ சிரமங்கள் பட்டு நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் அதைக் கொடுக்கின்றோம்… உபதேசத்தையும் கேட்க வைக்கின்றோம்

ஆனால் நீங்கள் நன்றாக வேண்டும் என்று தான் கேட்க வேண்டும் நல்லதைக் கேட்டுப் பழகுங்கள். குடும்பத்தில் அனைவருக்கும் ஞானம் கிடைக்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்று கேளுங்கள்.

ஆனால் பக்தி மார்க்கத்தில் தெய்வத்திடம் முறையிடுவது போன்று அல்லது கோவில் பூசாரியிடம் சொல்வது போன்று “எல்லாவற்றையும் சாமி (ஞானகுரு) பார்த்துக் கொள்வார்…! என்றால் அப்படி அல்ல…”

உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை நீங்கள் தான் எண்ணி எடுத்து அந்த நல்லதை வளர்த்துக் கொள்ள வேண்டும்…!

திட்டியவனை மீண்டும் எண்ணும் பொழுது அவன் மீது எப்படிக் கோபம் வருகின்றதோ… இடைஞ்சல் செய்தவனைப் பதிவு செய்து விட்டால் அவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எப்படி எரிச்சல் ஆகின்றதோ… அதே போல்
1.குருநாதர் கொடுத்த மிக மிகச் சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்
3.அதை வைத்துத் தீமைகளை நீங்கள் அடக்கிப் பழக வேண்டும்

அந்த ஞானிகளுடைய உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். உங்கள் பேச்சால் மூச்சால் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடிய சக்தி பெற்றவர்களாக நீங்கள் மாற வேண்டும்.

மெய் ஞான உணர்வுகள் வளர வேண்டும்.. அருள் ஞானம் நீங்கள் பெற வேண்டும்… அந்த அறிவு உங்களுக்குள் வளர வேண்டும்.
1.இந்த வாழ்க்கை என்ற கடலில் இருந்து இருள்கள் மறைந்து
2.அந்த மெய்ப்பொருளுடன் ஒன்றி வாழும் நிலைகள் நீங்கள் பெற வேண்டும்.

எமது ஆசிகள்…!

மண்ணிலே விளையும் கற்களே ஒளியாக மின்னும் போது நம் உயிராத்மா ஒளியாக முடியாதா…?

மண்ணிலே விளையும் கற்களே ஒளியாக மின்னும் போது நம் உயிராத்மா ஒளியாக முடியாதா…?

 

காட்சி:
எண்ணெயை ஊற்றி விளக்கு எரிகின்றது… மெழுகுவர்த்தி எரிகின்றது… தீவட்டி எரிகின்றது… மின்சார ஒளி பல்புகளும் எரிகின்றன. இதைப் போன்றே காட்சியில் ஒவ்வொரு எரிக்கப்பட்டு ஒளி தரும் சாதனமும் தெரிகின்றது.

சூரியனும் நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் ஒளியும்… வைரக் கற்களின் ஒளித் தன்மையும்… மாணிக்கக் கல்லின் ஒளியும்… சிறு மின் மினிப் பூச்சியின் ஒளியும்… வரிசையாக இன்னும் பலவும் காட்சியில் தெரிகின்றன.

விளக்கம்:
செயற்கையில் எரிக்கப்படும் பொருள் ஒவ்வொன்றுமே நம் தேவையின் பலனுக்குகந்த ஒளித் தன்மை பெற அதற்குகந்த பொருளைச் செலுத்தித் தொடர்ந்து ஒளியைக் காண்கின்றோம்.

பூமியும் சூரியனும் மற்றக் கோளங்கள் யாவையும் தன்னைத் தானே சுழன்று ஓடும் ஓட்டத்தில் மற்றக் கோளங்களின் தொடர்பைக் கொண்டு தன் சுழற்சி ஓட்டத்தில் ஒளியை வெளிப்படுத்துகின்றது. தன்னையும் ஒளியாக்கி பிறவற்றையும் ஒளிப்படுத்துகின்றது.

பூமிக்கு… பூமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூரியனின் வளர்ச்சித் தன்மையின் குழந்தையாய்… சூரிய ஈர்ப்புப் பிடியில் தொடர் கொள்ளும் ஓட்டத்தில் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.

சம நிலை வெளிச்சமும் சம நிலை இருளும் கொண்டு பூமி சுழன்று கொண்டே ஓடினாலும் சூரியனின் சந்திப்பு ஏற்படும் இடத்தில் மட்டும் வெளிச்சம் கொண்டு பூமியின் இயக்கம் உள்ளது.

வளர்ச்சியின் வளர் நிலை கொண்ட பூமியைப் போன்றுதான் சூரியக் குடும்பங்களில் ஒவ்வொரு மண்டலமுமே ஒளி நிலை கொள்ளுகின்றது. ஆனால் சூரியனுக்குப் பகல் இரவு என்ற இருள் தன்மை குறைவாக உள்ளது சூரிய பூமியில்.

சூரியனுக்கு அதன் வளர்ப்பு மண்டலங்களின் (மற்ற பிரபஞ்சங்கள்) அமைப்புத் தன்மையினால்… வளர்ந்த பெரிய கோளமாய் வளர்ச்சியுற்றுச் செயலுறும் ஈர்ப்புத் தொடரில்…
1.சூரியனுக்கு மேல் வளர்ந்த சூரியக் குடும்பமில்லா இரண்டு கோளங்களின் எதிர் எதிர் தன்மையினால்
2.மற்றக் கோளங்களுக்கில்லா ஒளித் தன்மையும் உயர் வளர்ப்பு செயல் தன்மையும் நம்மை வளர்த்த சூரியனுக்கு உண்டு.
3.அண்ட சராசரங்களில் சூரியனை ஒத்த பெரிய கோளங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்
4.நம் சூரிய வளர்ப்பின் வளர் ஞான எண்ணச் செயல் பகுத்தறியும் சரீர உருநிலை பெற்ற
5.ஜீவத்தன்மை கொண்ட வளர்ச கதியின் சூரிய சக்தியின் நிலை ஒத்தவை சில தான்.

இப்பூமியில் மண் வளத்தில் வளரும் வைரத்தின் ஜொலிப்பும்… மாணிக்கமும்… இன்னும் ஒளி நிலை பெற்ற கற்கள் எத்தனையோ…
1.மண்ணின் சத்தை எடுத்து ஒளியின் மங்காத நிலை பெற்று
2.ஒளி வீசும் அத்தன்மையின் முதிர்வைப் பூமியின் வளர்ப்பே வளர்க்கும் பொழுது
3.எண்ணத்தின் பகுத்தறிவைக் கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி நிலை கண்டு உண்மை உணரும் வழி நிலையில்
4.எதிர்படும் பிம்பத்தைப் படமாக்கிக் காணும் நாம்
5.எண்ணத்தின் பகுத்தறிவின் ஞானத்தால் ஞான ஒளியின் கூர்மையைக் கொண்டு
6.அனைத்தையும் அறிந்து பார்த்து செயல்படுத்தும் ஒளி ஞானம் கொண்டு
7.ஒளியின் ஒளி வித்தின் வளர் ஞானத்தின் சித்து நிலை பெற்று
8.சிவசக்தி என்ற வளர்ப்பின் வளர்ப்பை என்றுமே மங்கா ஒளி நிலைத் தன்மையால் வளர்ச்சிப்படுத்தலாம்.

ஏறுக்கு மாறாகச் சொல்லிச் சொல்லித் தான் எனக்கு உபதேசித்தார்

ஏறுக்கு மாறாகச் சொல்லிச் சொல்லித் தான் எனக்கு உபதேசித்தார்

 

குருநாதர் என்னிடம் சொன்னது:-
1.உடலை விட்டுச் செல்லும் பொழுது நீ எங்கே இருக்க வேண்டும்…? என்று சொன்னார்
2.அந்த உணர்வுக்குள் என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்…
3.வெளியில் வந்த பிற்பாடு “நான் எவ்வாறு செல்கிறேன் பார்,..!” என்றார்.

குருநாதர் இங்கே உடலுடன் இருக்கும்போது வெறும் துண்டு மட்டும்தான் கட்டி இருப்பார். அசூசையான (சாக்கடை) இடங்களில் தான் அவர் படுத்திருப்பார்.

குளிர்காலம்…! நல்ல வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள் என்று கொடுத்தால் அதை எல்லாம் கிழித்துக் கைகளிலும் கால்களிலும் கட்டிக் கொள்வார்.

பார்… யாரோ வந்து இவ்வாறு கிழித்து விட்டான்…! என்று சொல்வார் எவனோ கிழித்து விட்டுப் போய்விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…? என்று கேட்பேன்.

கிழித்து விட்டுச் சென்று விட்டான்… நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன் அவன் கிழித்து விட்டான்…!

ஏனென்றால் அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித்தான் சிந்தித்தார். அவர் பைத்தியக்காரத்தனமாகக் காண்பிக்கும் போதெல்லாம்…
1.ஐயோ… இவரோடு ஒரே தொல்லையாகி விட்டதே… வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டோமே என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.அவர் பேசுவது… செய்வது… எல்லாம் பார்க்கும் பொழுது இப்படித்தான் தோன்றியது.

ஆனால் அவர் “உடலை விட்டுச் செல்லும் பொழுது…” எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது “பளீர்… பளீர்ர்…” என்று தள்ளிக் கொண்டு போகின்றது.

அப்படிச் சென்றாலும் இந்த பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிரான்மா என்ன செய்கிறது…? பார்…! முன்னாடியே எனக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.

அன்றைய ஞானிகளும் மகரிஷிகளும் பூமியில் வாழும் காலத்தில் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியே சென்றாலும் மீண்டும் பூமிக்குள் வராதபடி தடுப்பதற்கு எவ்வாறு செயல்பட்டார்கள்…? என்று குருநாதர் காட்டுகிறார்.

அந்த உணர்வுக்கொத்த (ஞானிகளின்) விழுது “பூமியிலிருந்து உந்தித் தள்ள வேண்டும்…!” இதற்காக வேண்டித்தான் எவ்வளவு பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனைத் தேடி அந்த ஞானிகள் வருகின்றார்கள்.

அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு அங்கே மகிழ்ச்சியை ஊட்டி அவனிடமிருந்து வரக்கூடிய மகிழ்ச்சியான மூச்சுலைகளைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு… ஏகாந்தமாக விண் சென்றார்கள்.

ஒருவன் துன்பப்படுகிறான் என்றால் பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷமான சில நிலைகளையும் தான் கஷ்டப்பட்டு எடுத்து… அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று அவர்கள் துன்பத்தை நீக்கினார்கள்

ஆனால் அன்றைக்கு அவர்கள் காசு எதுவும் வாங்கவில்லை…!

துன்பப்படுகிறான் என்றால் உடனே அவனுக்குள் நிவாரணத்தை ஏற்படுத்தித் துன்பத்தை நீக்கிவிட்டு மெய் ஒளியின் சுடராக மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து… மருந்து கொடுத்து நோயை நீக்கி அங்கே சந்தோஷத்தை உருவாக்கினார்கள்.

1.”எனக்கு நல்லது செய்தார்…” என்ற அந்த எண்ணத்தை ஏங்க வைத்து
2.அதை ரசித்துத் தனக்குள் எடுத்து அவன் பேரானந்த நிலை பெற்றான்.

சகஜ வாழ்க்கையில் பார்த்தோம் என்றால்…
1.பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள்… ஒருவன் துன்பப்படுகிறார் என்றால் வேதனை வருகின்றது
2.அசுர உணர்வு கொண்டு துன்பப்பட்டவனைப் பார்த்து… “கிடக்கட்டும் அவனுக்கெல்லாம் அப்படித்தான் வேண்டும்…” என்று எண்ணினால் முரட்டுத்தனமான நிலைகளில் சிக்கி அவ அடிபடுகின்றான்

ஆனால் ஞானிகளோ
1.துன்பப்படுபவனுக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை நீக்கி
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

விஷத்தைத் தனக்குள் இயங்காத வண்ணம் அதை அடக்கினான்…! எந்த விஷமாக இருந்தாலும் அவனுக்குள் அது ஒடுங்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன் என்றால் “குருநாதர் கொடுத்த அந்த நிலைகள் தான்…!”

வாழ்க்கையில் உங்களை அறியாது இருள் சூழ்ந்த நிலைகள் வந்தாலும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்று யாம் உபதேசிக்கும்போது இதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்தவுடன் உங்கள் துன்பத்தைப் போக்கச் செய்து நோயைப் போக்கச் செய்கிறது. அத்தகைய மெய் ஒளியினைப் நீங்கள் பெற வேண்டும் என்ற அந்த ஆசையில் தான் சொல்கிறேன்.

ஆனால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல இம்சைகளைக் கொடுத்தார்.. பல தொல்லைகளைக் கொடுத்தார்.

யானைக்குப் பலமா…! எனக்குப் பலமா…? என்று கேட்பார்.

இவருக்குப் பலம் என்று சொன்னால் எப்படி…? என்று கேட்பார் யானைக்குத் தான் பலம் என்று சொன்னாலும் வம்பு தான்…! அது எப்படி…? என்று கேட்பார்.

என்ன சொன்னாலும் இரண்டு உதை கிடைக்கும்…!

எப்படி என்று நீ சொல்லுடா என்பார்… எப்படிடா நீ சொல்கின்றாய் என்று கேட்பார் நான் சுவாசிக்கின்றேன்… யானை இப்போது என்ன செய்கிறது என்று பார்…!

சுவாசித்து உணர்வலைகளை அவர் வெளிப்படுத்தும் போது யானை பயப்படுகின்றது. இப்போது யாருடா பயப்படுகிறது…? என்று கேட்பார்.

நான் எப்படிச் சொன்னாலும்… நான் எதைச் சொன்னாலும்
1.ஏறுக்கு மாறாகவே சொல்லிச் சொல்லிச் சொல்லி
2.இந்த உணர்வின் மோதல் எப்படி ஆகின்றது… உனக்குள் எப்படி உருவாகின்றது…?
2.நான் சொல்வது உனக்குள் எப்படி ஆகின்றது…?
3.இந்த உணர்வின் தன்மை காற்றிலிருந்து எவ்வாறு வருகின்றது…?
4.கவர்ந்து கொண்ட பின் எண்ணத்தின் நிலைகள் என்ன ஆகிறது…?
5.உடலுக்குள் பதிவாகும் பொழுது என்ன ஆகின்றது…? என்று இப்படித்தான் பாடம் கொடுத்தார்

நான் எந்தப் புத்தகத்தையும் படித்து உங்களுக்கு உபதேசிக்கவில்லை.

குருநாதருடைய உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எவ்வாறு எதன் நிலையில் கொண்டு நான் என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் தான் வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று தெளிவாகக் காட்டினார்

அவர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை “நீங்களும் பெற வேண்டும்…” என்பதற்குத் தான் உங்களுக்குள் செல்களாகப் பதிவு செய்கின்றேன்.

பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷங்கள் வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியாக மாற்றி… உணர்வின் தன்மையை மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்… “சப்தரிஷி மண்டலங்களாக அந்த ஞானிகள்…”

அந்த நிலையை நீங்களும் அடைய வேண்டும்…!

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…!

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…!

 

இச்சரீரக் கோளம் ஆணாயும் பெண்ணாயும் சிவசக்தித் தன்மை கொண்டது.

எத்தன்மையின் செயல் உடல் உருவம் பெறவும்… அதிலே சேர்க்கையின் அமில அணுக்கள் ஜீவன் பெற்று… உருவ உருப்பெறும் தன்மையில் எதன் நிலை அதிகமாக உருநிலை கொள்கின்றதோ…. அத்தன்மையின் உருவக ஜெனிப்பு ஆணாகவும்… பெண்ணாகவும்… உரு நிலை கொள்கின்றது.

ஆண் இன அமிலச் சேர்க்கையும்… பெண் இன அமிலச் சேர்க்கையும்…
1.வார்ப்பகத்தில் இரண்டு நிலை கொண்ட மோதல் நிலை கூடும் பொழுதுதான்
2.ஜீவ சக்தி சேர்ந்தவுடன் “உருவ நிலை” ஒன்று உருவாகின்றது.

ஆண் உடலிலும் பெண் இன அணுக்கள் உண்டு. பெண் இன அணுத் தன்மை இல்லா விட்டால் உயிர் ஜீவத் துடிப்பணுக்கள் உருநிலை பெறாது.

பெண் சரீரத்தில் ஆணின் அமிலத் தன்மையின் செயல் கொண்டுதான் பெண் உருவ உடலும் சுவாசத்தின் அமில மோதலின் ஜீவத்தன்மை பெண்ணாகி… செயல்நிலை கொள்ளும் சிவ சக்தியாய் ஒவ்வொரு உடல் தன்மையும் உருவ நிலை ஜீவிதம் பெறுகின்றது.

ஆண் பெண் அமிலச் சேர்க்கையின் ஜீவ சக்தியில் சேர்க்கப்படும் அமிலக் கூட்டின் விகிதத்தன்மையில் கூடப் பெறும்
1.ஆண் அமில… பெண் அமிலச் சேர்க்கை… விகிதத்தின் வீரியத் தன்மை கொண்டு
2.கூடும் தன்மையில் எது அதிகமாக உள்ளதோ அதற்குகந்த உருவ உடல் தன்மை கொள்கின்றது.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்று உணர்த்திய உண்மை நிலை தான் இது.

மூலத்தின்… ஆதி மூல ஆதிசக்தியின் படைப்பு அனைத்தும்… மூலம் சிவனாகி… உருவாகும் உருநிலை சக்தியாகி… ஜெனிப்புத் தொடர் உருவாகும் திட உருவத் தொடரில்… ஆவியாகி… அமிலமாகி… தொடர் பெறும் தொடரில்
1.ஆண் பெண் இனச் சேர்க்கை மாற்றச் செயலில்
2.ஆண் பெண் எல்லாமே ஒன்றுதான்..!.

இரண்டு தன்மையின் அமிலம்… ஈர்ப்பு வளர்ப்பின் உயிரணு… இவற்றில் ஆண் பெண் சேர்க்கையின் உயிரணு “ஆதி சக்தியின் தெய்வமாகின்றது…” உயிரணு யாவையுமே படைப்பின் படைப்புத் தெய்வம் தான்.

படைப்பின் படைக்கப் பெற்ற தொடர் நிலை… அது அது சேர்க்கப்படும் செயல் தன்மை தான் அவரவர்களுக்குச் சொந்தமாகின்றது.

உயிரின உயிரணுத் தன்மையில் ஆண் பெண் இன “வேறுபாடில்லை…”

சேர்க்கப்படும் அமிலக் கூறின் ஆத்ம பிம்பம் தான் இனத் தன்மையின் (அமிலத் தன்மை) சேர்க்கப்படும் விகித நிலைக்கொப்ப ஆண் பெண் திடச் சரீர உரு நிலை அமைகின்றது.

மனிதனுக்கு மட்டுமல்லாமல் உருவாகும் உருவ நிலை அனைத்திற்குமே… இதன் தொடர்ச்சி செயலில்தான் அண்ட சராசர கோளங்களும் அவற்றின் வளர்ப்பு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே… இத் தொடரில் வடிவம் பெறுகிறது.

அவ்வாறு வடிவம் பெற்று வளரும் தன்மையில்…
1.ஆதிசக்தியின் பொதுத் தன்மை கொண்ட உயிரணுவின்…
2.வலுத் தன்மையின்… ஒளித் தன்மை மங்காத் தன்மை கொண்டு
3.ஒளியின் ஒளி வீரியம் கொண்ட பிரகாசத்தின் வளர்ச்சியை…
4.மனித எண்ணத்தின் வளர்ச்சியின் பகுத்தறிவால் (தான்) வளர்க்க முடியும்.

உயிராத்மா ஒளியாகப் பிரகாசிக்க என்ன செய்ய வேண்டும்…?

உயிராத்மா ஒளியாகப் பிரகாசிக்க என்ன செய்ய வேண்டும்…?

 

இப்பூமியில் வளர்ப்பு கனிவளத்தில் எப்படி தங்கத்தின் நிலை மங்காத ஜொலிப்புடன் வளருகின்றது…? வைரத்தின் நிலை ஒளித் தன்மை கொண்டு எப்படிப் பிரகாசிக்கின்றது…?

பூமியின் மார்பகச் சத்து வளர்ச்சியில் உயர் நிலை பெற்ற உலோகங்கள் பல நிலைக் கற்களாக… பல நிலைகளில் வளர்கின்றன.

அந்தந்த இடங்களில் வளரக்கூடிய வளர்ச்சி நிலை கொண்டு… காலத் தன்மைகளுக்கு மங்காத் தன்மையில் வெளிக் காக்கும் அமிலத்தின் தொடர் பாயப் பெறும் தருவாயில்… பூமியின் வளரும் உலோகங்களிலேயே இத்தன்மை கொண்ட “மங்காத் தன்மையும்… ஒளிக் கற்களும்” வளர்வதைப் போன்று… சில தாவரங்கள் பல காலங்கள் வளர்ந்து முற்றிய நிலை ஏற்பட்ட பிறகு அம்மரத்தின் வலுவில் வைரம் பாய்ந்த வைரத்தின் வளர்ப்பு நிலை வளர்கின்றதல்லவா…!

அம்மரத்தின் வளர்ப்புக் காலத்தின் வலுக்கூடிய வளர்ச்சி முற்றலினால்…
1.மண்டலங்களின் சந்திப்புக் காலங்களில்
2.இம்மரங்களின் ஈர்ப்பிற்கு அவ்வொளித் தன்மை பாய்ந்தவுடன்
3.வைரம் பாய்ந்த மரமாகி வளர ஆரம்பிக்கின்றது.

பூமியின் நிலத் தன்மையில் ஒளித் தன்மையும் தாவரங்கள் பெற்ற ஒளித் தன்மையும்
1.சில நிலைகளில் எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்றும்
2.மாணிக்கத்தை ஒளியாய் வளர்த்துக் காக்கும் ஜீவ இனப் பாம்பின் ஒளித்தன்மை போன்றும்
3.பூமி தாவர ஜீவராசிகள் இவற்றிக்கில்லா பகுத்தறியும் எண்ணத்தை மனிதன் உணரும் பக்குவத்தால்
4இவ்வுயிராத்மா ஒளியைத் தங்கத்தின் மங்காத் தன்மை போன்றும்
5.வைரத்தின் ஒளி கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் போன்றும் பிரகாசிக்கச் செய்ய முடியும்…!

எப்படி…?

உணர்வின் எண்ணத்தைச் சமம் கொண்டு ஓ…ம் என்ற நாதத்தின் ஜெப நிலை கொண்டு புருவ மத்தியில் நினைவச் செலுத்தி மகரிஷிகளின் காந்தமின் அலைத் தொடர்பைப் பெற்றிடல் வேண்டும்.

அந்த எண்ண சுவாசத் தொடரினால் உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே அந்தக் காந்த மின் சக்தியின் வலுவை வளர்க்கவல்ல வளர்ச்சியில் செயலைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை உருவாக்க முடியும்.

பாம்பு தான் எடுத்த அமிலக் கூட்டின் வளர்ப்பு வலுவைக் கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் பெறுவது போன்று… மரத்தின் அமிலக் கூட்டிற்கொப்ப அம்மரம் பெற்ற ஜீவ ஒளித் தன்மையை வலுவைக் கொண்டு அதன் ஈர்ப்பை வைரம் பாய்வது போன்று… பூமியின் சில இடங்களில் சில உயர்ந்த தாதுப் பொருள்கள் அந்தந்த இடங்களில் அமில வளர்ப்பு உயிர் வலுவின் தன்மைக்குகந்த வளர்ப்புகள் வளர்வதைப் போன்று…
1.இஜ்ஜீவ சரீரத்தின் (மனித) உயிராத்ம வலுவின் காந்த சக்தியின் ஆத்ம வலு கூடிய தன்மையில்
2..பூமி சந்திப்பு ஓட்டத்தில் செல்கின்ற மண்டலங்களின் உயிர் ஒளித்தன்மை
3.இச்சரீரத்திற்கு நேராகவே பாயும் தன்மை ஏற்படும்.

சரீர ஜீவனில் அப்படி மோதப் பெறும் ஒளித் தன்மையைக் கொண்டு உயிராத்மாவின் ஒளி வட்டம் பிரகாசிக்கும்… ஜொலிப்புத் தன்மை பெறும்….!

இப்படி ஆனவர்கள் தான் மாமகரிஷிகள்…!

யாராலும்… எதனாலும்… அழிக்க முடியாத சக்தி உயிர் தான்… அவனுடன் இணைந்தால் அந்த நிலையை நாம் பெறலாம்

 

யாராலும்… எதனாலும்… அழிக்க முடியாத சக்தி உயிர் தான்… அவனுடன் இணைந்தால் அந்த நிலையை நாம் பெறலாம்

 

விஞ்ஞானி அணுவைப் பிளந்து அந்த ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அதனை அடக்கி வெடிக்கச் செய்யும்பொழுது உலகை அழித்திடும் நிலையாக அணு குண்டாக வருகின்றது.

ஆனால் நம் ஆறாவது அறிவு கொண்டு
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை எடுத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இருள் சூழ்ந்த நிலையைப் பிளந்து உடலுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
3.என்றும் ஒளிச் சுடராகத் தன்னுடன் அணைத்துச் செல்லும்.

இரும்போ மற்ற உலோகங்களோ மரமோ கல்லோ மண்ணோ இவை அனைத்துமே கதிரியக்கச் சக்தியின் துணை கொண்டு தான் வீரிய உணர்வைத் தனக்குள் கவர்ந்து அது வளரச் செய்கின்றது.

ஆனால் விஞ்ஞான அறிவால் அணு குண்டை உருவாக்கும் போது அணுவைப் பிளந்து… “ஹைட்ரஜன்” நீருக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து அதனின் (ஹைட்ரஜன்) துணை கொண்டு இதனை அடக்கி அதனுடன் ஒருக்கிணைந்து வெடிக்கச் செய்யும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வேகமாக எல்லாவற்றிலும் ஊடுருவுகிறது.

சக்தி வாய்ந்ததாக உள்ள இரும்பாக இருந்தாலும் சரி… மற்ற உலோகங்களாக இருந்தாலும் சரி… அதற்குள் ஊடுருவி அந்த உலோகத்திற்குள் இருக்கும் கதிரியக்கங்களுடன் ஒன்றிணைந்து கொள்கின்றது.

இணைந்த பின்
1.அதே இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அந்த உலோகங்கள் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.
2.கதிரியக்கத்தால் ஈர்க்கப்பட்டு விளையச் செய்த கல்லும் மண்ணும் அதுவும் ஆவியாக மறைந்து விடுகிறது.

அதே போல்
1.எதனின் உணர்வால் கல்லின் மண்ணின் சத்தைத் தாவர இனங்கள் கவர்ந்ததோ
2.அந்தக் கதிரியக்கச் சக்தியின் காந்த செல்கள் வெடித்தவுடன் தன் இனத்துடன் கலந்து
3.அதனால் கவரப்பட்ட அனைத்துமே தரைமட்டமாகி விடுகின்றது.

வெடித்த பின் அந்த கதிரியக்க செல்கள் மனித உடலுக்குள் பட்ட பின் நெகட்டிவ் பாசிட்டிவ் (-/+) என்ற நிலைகள் கொண்டு “தசைகள் அனைத்தும் கருகி…” காந்தப் புலனின் செயல்கள் ஒன்றிணைந்து விடுகின்றது.

ஆனால்
1.இது அனைத்தும் நம் உயிரைத் தொட முடியாது
2.உடலுக்குள்… உணர்வுக்குள் இருப்பதைத் தொடலாம்
3.உயிரின் நிலைகள் தொடும் ஆற்றல் அணுக் கதிரியக்கத்திற்கு இல்லை.

எந்த அணு குண்டு வெடிப்பால் கதிரியக்கங்கள் நம் தசைகளுக்குள் பாய்ந்ததோ தசைகள் வெந்து வேதனைப்படும் உணர்வுகளாக வருகிறது. தசைகளில் விளைந்த வேதனை உயிருடன் சேர்த்த பின் எப்பொழுதும் வேதனையாகவே இருக்கும்.

உயிரிலே இயக்கப்படும் இந்த வேதனை அடுத்து வேதனைப்படும் சரீரங்களாக விஷம் கொண்ட உயிரினமாக… விஷத்தை உணவாக எடுக்கும் அத்தகைய உடல்களிலே புகுந்தால் தான் இது அடங்கும்.

இல்லையென்றால் அந்த அணுக்கதிரியக்கத்தின் வேகம் வீசிய பின் இறந்த பின் உயிரின் தன்மைகள் சதா வேதனையிலேயே இருக்கும்.
1.வேதனை வென்றிட்ட அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்தால் ஒழிய அதை நீக்கவே முடியாத
2.ஆகவே மனிதனாக பிறந்த நாம் மெய் ஞானிகள் உணர்வை நாம் பருக வேண்டும்
3.உங்களை அறியாது வந்த தீயவினைகள் நீக்கிட வேண்டும்
4.மெய்ப்பொருளின் உணர்வுகள் உங்களுக்குள் வளம் பெற வேண்டும்

அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றல் மிக்க நிலைகளை கண்டு கொண்ட விஞ்ஞானியைப் போன்று மெய் ஞானிகள் அணுவைப் பிளந்து… மனித உடலுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து… அந்த அணுவின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி…
1.அணுவால் ஈர்க்கப்பட்ட தசைகளுக்குள் சேர்ந்த நஞ்சினை வென்று
2.உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவர்களே அருள் ஞானிகள்

அத்தகைய மெய் ஞானிகளின் ஆற்றலை எனது குருநாதர்… நமது குருநாதர்… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் புகுத்திக் கொண்டிருக்கின்றேன்.

அந்த மெய் ஞானிகளைப் போன்று நீங்களும் ஆக வேண்டும் என்று இச்சைப்படுகின்றேன். அந்த இச்சைகளை நான் கவர்ந்தால் எனக்குள் அது வளர்கின்றது.

அதனால்தான் மணிக்கணக்கில் இடைவிடாது தொடர்ந்து உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றேன். எதை உங்களுக்கு உபதேசித்தேனோ அந்த உணர்வினை எனக்குள் கவர்ந்து கொள்கின்றேன்.

அதே சமயத்தில் இந்த உபதேசத்தினைக் கூர்ந்து நீங்கள் கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் இருக்கும் உயிரின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் கவரப்பட்டு… உங்கள் உடலுக்குள் ஈர்க்க்கும்படி செய்து ஊழ்வினை என்ற வித்தாகவும் பதிவு செய்கிறேன்.

இந்தப் பதிவை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் இருக்கும் தீய வினைகளைப் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும் என்ற “இந்த நம்பிக்கையில் தான் உங்களுக்குள் சொல்கிறேன்… நீங்கள் இதை எடுத்துப் பாருங்கள்.

மனித வாழ்க்கை என்பது உடல் நமக்குச் சதம் அல்ல
1.நமக்கு சதமான உயிரைப் பிடித்துக் கொள்ளுங்கள்…
2.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று உங்கள் உயிரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள்
3.உங்களை ஆள்வதும் அவனே…
4.எண்ணியதை இயக்குவதும் உயிரே…
5.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே…
6.எண்ணியதை எல்லாம் உடலிலே விளையச் செய்வதும் உயிரே…
7.விளைந்ததின் உணர்வைத் தனக்குள் எடுத்துச் செல்வதும் உயிரே…
8.எடுத்துக் கொண்ட உணர்வுக்கு ஒப்ப உடலாக்குவதும் உயிரே…!
9.நம்மை ஆள்பவனும் இந்த உயிரே…!

இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எண்ணும் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததோ…
1.எந்த ஞானியின் உணர்வை நமக்குள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ
2.அதை ஜீவனாக்கி.. அந்த உணர்வின் தன்மை உடலாக்கி… ஒளியான அணுக்களாக உருவாக்கி
3.அதனின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக நம்மை ஆக்கக் கடமைப்பட்டிருக்கின்றான்… உயிர்…!

நாம் எண்ணியதைத்தான் உருவாக்கிக் கொடுக்கின்றான் காரணம் உயிரின் வேலை கொடுப்பதைச் சமைத்து உருவாக்குவது தான்.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்த ஞானிகள் உணர்வைக் கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத்தான் நம்மை அடுத்த நிலைக்கு அவன் உயர்த்துவான்…!