மாரியம்மனோ காளியம்மனோ “எனக்கு ஆடு கொடு…!” என்று கேட்கிறதா…?

மாரியம்மனோ காளியம்மனோ “எனக்கு ஆடு கொடு…!” என்று கேட்கிறதா…?

 

இவ்வுலகினில் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல், கருவித்தை இப்படிப் பல நிலைகள் உள்ளன. இவற்றில் இருந்து நம் நிலை மீளும் நிலையை அறிந்திடல் வேண்டும்.

பல காலமாய் சூனியம் செய்தவர்களின் நிலையையும் மற்றத் தீய சக்தியின் செயலைத் தன் பிழைப்பிற்காக ஏவியதின் நிலையையும் வரும் பாடங்களில் உணர்த்திடுவேன்.

மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை ஓடுகளை வைத்து பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம் மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து, மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்து, பூஜித்து இம்மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின் நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு, சில நிலைகளை அறிந்திடத் தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.

இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?

மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களைk கூடியவரை கருச் சிசுக்களைத் தான் (இறந்த சிசுக்களை) இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள் இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.

அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் தான் இக்கருவித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில் தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலைப் புதைத்துச் சென்ற பிறகு அதைத் தோண்டி எடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை ஈடுபடுத்துகின்றனர்.

நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசுக் காலமானால் அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித் தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள்.

அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல் கொள்ளும் ஏவலின் நிலைக்கு ஒத்து வராது. இப் பின்னப்பட்ட இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண் பானையில் அச் சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக் கொள்ளும்.

சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச் சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச் சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயவங்களையும் சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும் சேர்த்துப் பூஜிப்பார்கள்.

இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மை போல் மசிய வைத்து பூஜித்து இப் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச் சிசுவின் நிலையை ஏவுவார்கள்.

இக்கருப்பு நிறம் கொண்ட இம் மையையே தன் நெற்றியில் இட்டுக் கொண்டும் தாயத்துகள் செய்து இம்மையை அதனில் வைத்து தன் உடலிலும் அணிந்து கொள்வார்கள்.

இவர்களின் பொருள் ஆசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டி சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவில் இருந்து மட்டும் ஏன் தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக் குட்டிச்சாத்தான்கள் ஆவி உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.

1.மாரியம்மாள், காளியம்மாள் என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப் போலவும்
2.மாரியாத்தா ஆடு கேட்கிறாள், கோழி, முட்டை கேட்கின்றாள் என்றெல்லாம் சொல்லி
3.இக்குட்டி சாத்தான்களின் ஆசைக்கு உகந்த உணவுகளைப் படைத்து இவர்களின் செயலை முடித்துக் கொள்கின்றனர்.

இவர்களிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும்… விடுபடவும் வேண்டும்… நாம் சிக்கி விடக் கூடாது.

வரப் போகும் மாற்றத்திலிருந்து மீளுவதற்கும் வழி உண்டு

வரப் போகும் மாற்றத்திலிருந்து மீளுவதற்கும் வழி உண்டு

 

சக்தியின் சக்தி பெற்று இப்பூமியில் மனித ஆத்மா அறிவு நிலை பெற்று… ஆக்கத்தின் செழிப்பினால் அகிலத்தையும் ஆளும் செழிப்பை இப்பூமியில் பிறப்பெடுத்து வாழ்ந்து வழி பெற்ற சக்தி மட்டுமல்ல… இன்றுள்ள எண்ண வளர்ச்சியின் மனித ஆத்மாவாய் வாழும் பக்குவம் பெற்று… உயிரணுவிற்குத் தொடர்நிலை கொண்ட அமில சக்தி கூடப் “பல கோடி ஆண்டுகள் ஆயிற்று…”

பெரும் பாக்கிய சக்தி மனிதனாய் வாழும் சக்தியே…!

இயற்கையின் செழிப்பில் அன்பு கொண்ட இதயமாய் வாழ்ந்திட்ட நிலையையே அறிவில் மிஞ்சிய நிலை என்ற கணிப்பில் ஒவ்வோர் இடத்தில் வாழ்பவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் ஒருவரைத் தலைவனாக்கி… அரசாளும் நிலைப்படுத்தி, அவ்வட்டத்தின் வழியிலேயே சேர்ந்த இனத்தவரை எல்லாம் தனி ஓர் இனமாய்ப் பிரித்து ஜாதி வெறியூட்டி… ஒருவரின் உயர்வில் ஒருவர் பொறாமை கொண்டு இதன் தொடர்ச்சி நிலையிலேயே இன்றளவும் மனிதனின் எண்ண வளர்ச்சியுடனே இக்கலப்பான சக்தி நிலையை ஊட்டி,
1.இன்றைய மனிதன் ஒவ்வொருவனும் தனக்குள் உள்ள ஆண்டவனை மறந்து
2.தானும் இந்நாட்டின் மன்னன் என்றும் ஒவ்வொருவரின் மனப்பாங்கே இம்மதிப்பின் பேராசை வெறியில் வழி வந்துவிட்டது.

இன்று நம்முடன் வாழ்ந்திடும் மனிதர்களால் ஏற்படவில்லை இன்றைய இந்நிலை.

அன்றாண்ட 2000 ஆண்டுகளுக்கு முதலே ஆட்சி என்னும் வித்திட்டு “அழிவிற்கு மனித எண்ணங்களுக்குப் பாதை வகுத்துத் தந்தவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான்…”

இன்றைய செயற்கையில் இம்மனித எண்ணங்களின் நிலையே இன்று பிறப்பில் வந்திட்ட நிலை அல்ல. நற் சக்தியின் பயனும் சொல்லில் செயலும் மாறிவிட்டது.

இச் செயற்கையில் நம் பூமியின் பொக்கிஷத்தை உறிஞ்சி எடுத்ததல்லாமல் இப்பூமியிலிருந்து ஏவிவிட்ட விஷத்தன்மை கொண்ட ஊசிகளும் (இராக்கெட் – செயற்கைக் கோள்கள்) இன்றல்ல நேற்றல்ல இவ் ஏவுகணை அனுப்பும் நிலையே இப்பூமியில் பல நூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி நம் பூமியின் வட்டத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் அனுப்புவித்த ஏவுகணைகள் எல்லாம் இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தினால் ஒவ்வொரு மண்டலத்திற்கும் இதன் தொடர்பினால் மாற்றம் ஏற்படப் போகின்றது என்பதனை உணர்த்தினேன்.

1.பால்வெளி மண்டலத்தில் ஏவச் செய்த விஷ ஊசிகளும் ஏவுகணைகளின் நிலையில் நிறைந்துள்ள அணுவிசை சக்திகளும்
2.இம்மாற்றத்தினால் அங்கங்கு செயலிழந்து அதனின் சுற்றலுக்குகந்த அருகாமை கொண்ட மண்டலங்களில் மோதி
3.அவற்றின் நிலையிலிருந்தும் பல தீய சக்திகள் ஏற்படப் போகின்றன.

இம்மனித ஆத்மாக்களின் சக்தியினால் இயற்கையின் சக்தியே மாற்றம் கொள்ளும் சீற்றம் கொள்ளும் நிலையெல்லாம் இம்மனித ஆத்மாவினால்தான் நடக்கப் போகின்றன.

1.இம்மனித ஆத்மாவினால் மண்டலமாய் உருக்கொண்டு சுழன்றிடவும் முடியும்
2.சுழற்சியின் சக்தியில் பல கோடி மண்டலங்களை வளர்த்திடவும் முடியும்.

ஆக்கத்தின் அறிவு சத்தியாய் ஒளிரும் ஆத்மாவையே அழிவின் சக்திக்கு அடிகோலும் பேராசைப் பேயின் நிலையில் சிக்குண்டு… தன் சக்தியைத் தானே இழந்து… கலியின் மாற்றத்தில் படப்போகும் இன்னலை உணர்ந்து “இங்கே உணர்த்திடும் இச்சக்தி நிலையை உணர்ந்து… உங்கள் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கிடுங்கள்…”

நம் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கினால் எந்நிலை பெறுவோம்…? சந்திரனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி நிறுத்தியுள்ளோம்.

இக்கலியின் மாற்றத்தினால் சந்திரனுக்கு நம் பூமியின் தொடர்பும் ஈர்ப்பு சக்தியும் பழக்கப்பட்டு வந்திட்ட நிலையினால் “இவ்வரப்போகும் சூரிய கிரகண நாளிலிருந்து சந்திரனுக்குச் சில சக்திகள் கூடப்போகின்றன…”

எந்நிலை…? என்ற வினா எழும்பலாம்.

சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையில் நம் பூமிக்குக் கேதுவின் விஷ அணுக்கள் கூடும் தருவாயிலும் நம் பூமி இன்று சுழன்று ஓடும் வட்டத்திலிருந்து கீழ் இறங்கிச் செல்லும் நிலையில்
1.நம் பூமியின் ஈர்ப்பு சக்தி நம் பூமியின் பொக்கிஷ அமில சக்தியின் இயற்கைத் தன்மை
2.சந்திரனின் வட்டத்திற்கு அதிகமாகச் செல்லும் நிலையில்,
3.இவ்வரப்போகும் சிறிய மாற்றத்தின் நாளிலிருந்தே
4.சந்திரனில் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் நீர்நிலைகள் அதிகரிக்கும் தன்மை கூடுகின்றது.

நம் பூமியின் பொக்கிஷ சக்தியே இந் நீர்நிலைகள் தான். சந்திரனும் நம் பூமியின் ஈர்ப்பால், இச்சக்தி நிலை கூடி, அதன் ஈர்ப்பில் அதன் சுவாசத்திற்கும், இதன் ஈர்ப்பின் சக்தியினால் அது ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்து, “ஒவ்வொரு நொடிக்கும் சந்திரனுக்கு வளர்ச்சி சக்தி கூடப்போகின்றது…”

இந்நிலையின் தொடர் வளர்ச்சி நிலை சந்திரனுக்கு உண்டு. மனித ஆத்மாவினால் மாறப் போகும் தன்மை நிலையிலிருந்து மீளுவதற்கும் இயற்கையில் சக்தி உண்டு.

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை

 

இவ்வுலகமே…
1.இக்காற்றுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்தியையும்
2.இப்பூமியின் மேல் மட்டத்தில் இப்பூமி சுழலும் வேகத்தில் அதன் ஈர்ப்பில் சூரியனிலிருந்து வெளிப்படும் அமில சக்தியையும்
3.மற்ற மண்டலங்களின் சக்தியையும் தன் சுவாசமுடன் உணவாய் ஈர்த்து
4.அதன் சக்தியைத் தன் மண்டலத்திற்கு வேண்டிய அமிலத்தைச் சேமித்துத் தான்
5.பூமியின் கழிவான உஷ்ண அலைகள் வெளிப்பட்டுப் பல நிலைகள் ஏற்படுகின்றன.

இம்மனித உடலுக்கு நாம் உண்ணும் உணவு எப்படி அமிலமாய், ஆவி நிலை கொண்டு நம் உடம்பில் உள்ள இரத்த நாளங்களில் அச்சக்தி மோதி இவ் ஆவியான அமில உணவே உதிரமாய் உருப்பெற்று நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களின் செயலுக்கும் அவ் உதிரமே பல அணுக்களாய் அவற்றிலிருந்து எடுக்கும் சக்தியைக் கொண்டுதான் நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் அததற்கு வேண்டிய அமில உணவை உண்டு எலும்பாகவும் மயிர்க்கால்களாகவும் நகங்களாகவும் வளர்ந்து கொண்டே உள்ளன.

எலும்பின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தால் நம் உருவ அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா…? ஆனால் குறிப்பிட்ட கால வயதுக்குப் பிறகு இவ்வளர்ச்சியின் நிலை மாறு கொள்ளுகின்றது.

குழந்தையின் எலும்பின் உறுதித் தன்மைக்கும் வளர வளர முதியோர்களான பிறகு உள்ள எலும்பின் உறுதிக்கும் மாற்றம் உள்ளது.
1.எப்படி யானையின் தந்தம் வயதான பிறகு அதனுடைய உறுதி கூடுகிறதோ
2.அந்நிலை போன்று தான் எலும்பின் வளர்ச்சி நிலையும்.

குறிப்பிட்ட வயது வரம்பிற்குப் பிறகு உடல் வளர்ச்சி மாற்றம் கொள்ளும் நாளிலிருந்து வெளி வளர்ச்சிக்கு மேல் நம் (மனிதனின்) உள் உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டு.

நாம் உண்ணும் உணவிலிருந்து சுரக்கும் “அமில சக்தியின் ஆவி நிலைதான்” நம் உடலிற்கு சக்தி தரும் நிலை.

நம் பழக்க வழக்கப்படி நம் உடலை எந்நிலையின் உணவை உண்டு பழகியுள்ளோமோ அவ்வமில சக்தியின் வளர்ச்சியின் நிலைகொண்ட நிலையைத் தான் நம் உடல் ஏற்கிறது.

பட்டுப்புழு முசுக்கொட்டைத் தளையை மட்டும் உண்டு அதிலிருந்து எடுத்த ஆவியின் அமிலத்தினால் எப்படிப் பட்டை எடுக்கின்றோம்…?
1.அப்பட்டுப்புழுவிற்கே முசுக்கொட்டைத் தளையைத் தவிர வேறு உணவை உண்டால் அதன் நிலையில் இப்பட்டை நாம் எடுத்திட முடிந்திடாது.
2.அதைப்போல் தான் ஒவ்வொன்றின் நிலைக்கும் செயல்நிலை நடக்கின்றது.
3.மனிதனின் நிலையும் அதுவே… மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் அதுவே.

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை.

ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவில் இருந்து மற்றொன்றின் வளர்ச்சி ஏற்படுகின்றது.

இவ் உடல் கோளத்திலேயே பல உயிரணுக்கள் வாழ்கின்றன. அவை அவை உண்டு வெளிப்படுத்தும் அமிலத்தில் இருந்து தான் மற்ற நிலைகள் ஏற்படுகின்றன.

நாம் உண்ணும் உணவு ஆவியாய் அமிலமாய் உதிர சக்தி பெறுகின்றது. அவ்வாவியான பிறகு நாம் உண்ட உணவின் தன்மை அதன் சக்கை மலமாய் வெளிப்படுகின்றது.

இவ்வாவி அமில உதிர சக்திதான் அதில் வளரும் உயிரணுக்களின் நிலையைக் கொண்டு நம் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் வளர்ச்சி பெறுகின்றன.

ஒவ்வொரு முடியும் வளர்வதற்கே அவ் உயிரணுக்களின் நிலையில் இருந்தால்தான் வளர்ந்திடும்.
1.இந்நிலையை வைத்துத் தான் முன் பாடத்தில் நம் ஆத்மாவுடன் நம் உயிர் மட்டுமல்ல
2.பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.

பூமி வலு இழந்ததற்குக் காரணம்

பூமி வலு இழந்ததற்குக் காரணம்

 

நம் பூமி வளர்ந்த தொடர் நிலையின் பாடத்தில் நம் பூமியில் தோன்றிய உயிரணுவின் தாவர வர்க்க நிலையையும் அதிலிருந்து ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தோன்றிய தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன்.

அந்நிலையில் ஓடுகள் கனத்து நத்தை போன்றும் ஆமை போன்றும் தோன்றிய ஜீவ அணுக்களின் வளர்ச்சி நிலை பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனது.

அதன் பிறகு இப்பூமியின் முதல் பிரளய நிலையில் இருந்து ஜீவ உயிரணுக்கள் விட்ட நிலையில் இருந்து தொடர் நிலையாய் அவற்றின் அமில சக்தியிலிருந்து தோன்றிய உயிரணுக்களின் தன்மையையும்… முதல் பிரளய நிலைக்குப் பிறகு தான் நம் பூமிக்கு இன்று பொக்கிஷமாய் உள்ள வட துருவ தென் துருவ நீர்நிலைகள் பெறும் சக்தி கொண்ட நிலையையும் இதன் தொடர் நிலையிலேயே விளக்கிடுவேன்.

இப்பூமி ஒரு மண்டலம். இப்பூமியில் தோன்றி வளர்ந்திடும் உயிரணுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மண்டலம்.

நம் உடலுக்கு நம் பழக்க வழக்கப்படி ஒரே மாதிரியான உணவு நிலைகளை உண்டு வாழ்ந்திடும் பக்குவத்தில்… நாம் உண்ணும் உணவில் மாற்றம் கொண்டால் நம் உடல் என்னும் இம்மண்டலம் ஏற்காமல்… எப்படி வாந்தியாகவோ அல்லது வாயுவாகவோ மற்ற நிலையில் பல இன்னல்களை இம் இண்டலத்தின் மையமான நம் வயிற்றில் வலியும் மற்றத் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

அதிலிருந்து நம் உடல் மண்டலம் சரிப்பட்டுப் பழைய நிலையில் வருவதற்குச் சில நாட்கள் ஆகின்றன… அல்லது அதன் தொடர் நிலையில் ஒவ்வொரு தொந்தரவுகளும் ஏற்பட்டு நம் ஆரோக்கிய நிலையே மாறு கொள்கின்றது.

இந்நிலை போன்றுதான் மண்டலங்களின் ஒவ்வொரு நிலைக்கும் அதன் மாற்ற நிலை வருகின்றது.

பிரளயம் ஏற்படுவதுவும் இச்சுழற்சியின் நம் மண்டலத்துடன் எம் மண்டலத்தின் தாக்குதல் ஏற்படுகின்றதோ அதன் நிலை ஏற்காமல்… அதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்படும்.

1.நம் உடல் மண்டல நிலையில் ஆரோக்கிய நிலை கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் நிலை போலவும்
2.எதைச் சாப்பிட்டாலும் ஜீரணித்து விடும் நிலையும் கொண்ட ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட மண்டல மனிதனாய் உள்ள நிலையில்
3.உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியினால் மற்றத் தீய அணுக்கள் வந்து நம் ஆரோக்கியத்தை தாக்கிடாது.
4.அந்நிலை போல் நம் பூமி மண்டலத்தின் ஆரோக்கிய நிலை இருந்திட்டால் இப்பிரளய நிலையிலும் சக்தி கூடும்.

சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையிலும் நம் பூமியின் நிலை ஆரோக்கியமாய் இருந்திட்டால் அவற்றின் தாக்குதலை நம் பூமி ஏற்காது.

நம் பூமியில்தான் இன்று நம் செயற்கைக்காக பூமியின் பொக்கிஷத்தையே பிரித்தெடுத்து ஆரோக்கியம் குன்றிய பூமியாக நாம் செய்து வைத்துள்ளோமே…!

இந்நிலையில் ஏற்படும் இயற்கைக்கு நாம் தான் பொறுப்பு ஆகின்றோம்.

ஞானிகளின் ஆற்றல்கள் காலத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது…?

ஞானிகளின் ஆற்றல்கள் காலத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது…?

 

காட்டுக்குச் சென்று தவம் இருக்கச் செல்வோரை எல்லாம் வாதாபி என்ற அரக்கனும் அவருடைய சகோதரனும் சேர்ந்து விருந்து கொடுப்பதாகச் சொல்லிக் கொன்று புசித்தவர்கள்.

“விருந்து கொடுப்பது” எங்களுடைய வழக்கம் என்று சொல்வார்கள். அதிலே ஒருவன் ஆடாக மாறி விடுவான். அடுத்தவன் அதை அறுத்துச் சமைத்து இந்த மாமிசத்தைச் சாப்பிட வேண்டும் என்று வந்தவருக்குக் கொடுப்பார்கள்.

சாப்பிட்டு முடிந்த பின் “வாடா வாதாபி” என்றால் வயிற்றைப் பிளந்து வெளி வருவான். இப்படிக் கொன்று… வருவோரை எல்லாம் அவர்கள் சாப்பிட்டுப் பழகியவர்கள்..

அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது இதே முறைப்படி அவர்கள் வரவேற்கிறார்கள். அகஸ்தியனோ, “நான் மாமிசத்தை சாப்பிடுவதில்லை” என்கிறான்.

இல்லை…! எங்கள் முறைப்படி விருந்தில் நீங்கள் அதைஸ் சாப்பிட்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றான்.

நாங்கள் வருபவருக்கு மரியாதை செலுத்துகின்றோம், நீங்கள் சாப்பிடுங்கள்…! என்று கூறி வாதாபி ஆடாகப் போய்விட்டான். அறுத்துச் சமைத்து இவனுக்கு கொடுத்தான்.

அகஸ்தியனும் நன்றாக ருசித்து சாப்பிட்டான்…! அகஸ்தியனுக்குத் தெரியும்… தெரிந்ததனால் சாப்பிட்டான்…!

“வாடா வாதாபி” என்கின்றான் அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிப் போய்விட்டான் என்கின்றான் அகஸ்தியன்.

ஆகா… அப்படி ஆகிவிட்டதா…? பாருடா… உன்னைக் கொன்று நான் விழுங்கப் போகின்றேன் என்றான்.

அப்பொழுது அகஸ்தியன் கண்ணிலே பார்த்தான்… அவனை எரித்து விட்டான்.

ஆனால் அதற்கு முன்னாடி தவ யோகிகள் தவம் செய்தவர்களை எல்லாம் இரையாக்கி ரொம்ப பேரைத் தின்றுவிட்டார்கள்.

அப்பொழுது இதற்காக வேண்டி இராமாயணம் மகாபாரதம் எழுதுபவர்கள் சொல்கின்றார்கள், “அகஸ்தியன் கணபதியைத் தொழுது கொண்டு இருந்தான்…” அதனால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று…!

கணபதி என்றால் எது…?
1.இந்த பிரபஞ்சத்தின் உணர்வுகள் அனைத்தையும் கணங்களுக்கு அதிபதி ஆக்கி
2,அவன் எண்ணத்தைக் கொண்டு ஆட்சி செய்து தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்று
3.அதற்குக் “கணபதி” என்று காரணப் பெயரை வைக்கின்றான்.

ராஜாஜி எழுதிய நூலிலும்… கணபதியை வணங்கிக் கொண்டிருப்பதனால், அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.

கண ஹோமம் செய்தோம் என்றால் உங்களுக்கு எல்லாச் சக்தியும் கிடைக்கும். கண ஹோமம் செய்தால் உங்களுக்கு வல்லமை கிடைக்கும் உங்கள் பாவம் அனைத்தும் நீங்கும். யாரும் ஒன்றும் தீங்கு செய்ய முடியாது என்று “இதற்குக் காரணம் காட்டுவதற்காக” இப்படி எழுதுகிறார்கள். ராஜாஜி படித்தவர் அரசியல்வாதி தான் உலக ஞானத்தைப் பெற்றவர் தான்.

ஆனால் அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பல நூல்களில் வடிவமைத்து உலக ஞானத்தைக் கற்றவர் நேரு.

பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் தான் நேரு. அந்த நிலைகளில் வளர்ந்தாலும் இந்த உலக உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன்.
1.இது எல்லாம் பொய்… இப்படிச் செயல்படுத்த கூடியது அனைத்தும் பொய்யானது
2.இவையெல்லாம் தவறான செயல் என்று சுட்டிக்காட்டினார் நேரு.

ஆனால் ராஜாஜி ரொம்ப சாணக்கியமாகச் சொல்கின்றார். ராமாயணத்திற்கும் மகாபாரத்திற்கும் ஜீவன் ஊட்டி மக்கள் இதைப் பின்பற்றினால் இப்படி இருக்கும் என்று ஜீவன் கொடுத்தவர் ராஜாஜி… ஆனால் வக்கீல்… வல்லமை பெற்றவர்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் இயற்கையின் உண்மையின் நிலைகளைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

அறியாமை என்ற நிலையில் தன் இனம் என்ற நிலைகள் கொண்டு…
1.இனத்தை பிரித்து வாழும் தன்மை தான் வந்ததே தவிர தன் உயிரை மதித்து நடக்கும்…
2.அருள் ஞானிகள் கூட்டிய நிலைகள் இங்கே வருவதில்லை.
3.அதைத்தான் அன்று சொன்னான் நேரு.

கடவுள் எப்படி இருக்கின்றான் என்ற நிலைகள் கொண்டு… என்னை யாரும் வணங்கிட வேண்டாம் இறந்த பின் என் சாம்பலைத் தூவி… விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நிலைகளில் விமானத்தில் கொண்டு போய் இதையெல்லாம் தெளிக்கச் சொன்னார்.

ஏன்…?

1.கங்கையில் கொண்டு போய்க் கரைத்தால் அங்கு பாவம் சேர்ந்து விடும்…
2.அங்கே கரைக்க வேண்டாம்..
3.மாணவர் படிக்கக் கூடிய இடங்களில் நீங்கள் தூவினீர்கள் என்றால் இந்த அருள் ஞானமாவது அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை
4.“கற்றுணர்ந்தவன்… தெரிந்து கொண்டவன்…” இதைச் சொன்னான்.

நேரு தன் சாம்பலைக் கங்கையில் கரைக்கச் சொல்லவில்லை. அங்கே கரைத்தால் பாவம் வந்துவிடும் என்று சொன்னார். சாம்பலை வயல் வெளியில் தூவப்படும் போது உரமாகி அந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு ஞானம் வரட்டும்… வயல் வெளியில் தூவுங்கள் என்று கூறுகின்றார்.

நேரு அரசியல் பண்புகளைக் கற்று உணர்ந்தாலும் நாட்டினை மீட்டு தன் சொத்தை இழந்தவன் தான்.
1.கடவுள் என்ற நிலையில் உண்மையை உணர்ந்தான்
2.ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்பு வரவேண்டும் என்றான்.

பஞ்சசீலக் கொள்கையில் கம்யூனிசத்தை மாற்றி அமைத்தார். ஏனென்றால் அதிலே இராஜ தந்திரமாகச் செய்யப்படும் பொழுது “தப்பான நிலைகளில் வருகின்றார்கள்” என்று உணர்ச்சியின் வேகப்பட்டு கை கால் அங்கங்கள் இழக்கப்பட்டான்… மடிந்தான்.

அவனைப் பற்றி சிந்திப்போர் யாருமில்லை. அவன் பெயரையே எடுக்க வேண்டும் என்கின்றார்கள் இன்று.

பண்டிட் மோதிலால் நேரு அவ்வளவு பெரிய சொத்தை வைத்திருந்தார். அப்பா கூடச் சண்டை போட்டான். நீங்கள் செய்வதெல்லாம் அதர்மம் என்று. யார்..? நேரு. நீ கோடி கோடி சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றாய்… இது எல்லாம் ஆகாது என்றார்.

நாட்டிற்கு செய்யக்கூடிய சேவைக்காகத் சகல சொத்தையும் இழந்தார்.

அன்று விவேகானந்தர் சொன்னது போல்
1.கடவுளை நீ எங்கேயும் பார்க்க வேண்டாம்
2.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக மதி
3.அவன் அமர்ந்திருக்கும் அந்த ஆலயம் என்று நீ எண்ணு… ஆகவே நீ அவனை மதி என்று நேரு சொன்னார்.

அவர் சொல்லை யாரும் மதிக்கவில்லை.

விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?

விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?

 

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்களை குருநாதர் காட்டிய அருள் வழியில் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.

இணையச் செய்தாலும் அடுத்து நினைவு நாள் கொண்டாடுகின்றோம். அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒளி நிலை பெற்ற அந்த நினைவு நாள் தான் இன்று என்றால்…!
1.நாம் கூட்டுத் தியானத்திலிருந்து அவருடைய உயிரான்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.
2.அந்த உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து விட்டது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
4.என்றும் அவர்கள் பேரருளாக இருத்தல் வேண்டும்.
5.எங்கள் குடும்பத்தில் இருளை அகற்றும் அருள் சக்தியாகப் படர்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர் ஒளியின் சரீரமான நாள். இன்றைய தினம் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பங்களில் படர்தல் வேண்டும்.

அந்தந்த குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கொண்ட பின் அந்த உணர்வை எடுத்து
1.நம் குடும்பத்தில் எங்களை அறியாத தீய வினைகள் நீங்கிட வேண்டும்.
2.குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்த்திட வேண்டும்.
3.எங்கள் குலதெய்வங்களாக என்றும் நிலைத்திருந்து இருளினை அகற்றி நஞ்சினை வென்று
4.உணர்வினை பேரருளாக மாற்றிடும் அருள் சக்தியாக அது வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் அவர்கள் நம்முடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் பற்று கொண்ட நாம்… அவரின் உணர்வுகள் நமக்குள் பங்கு உண்டு.

விண் செலுத்தத் தவறினால் அவரின் நோய் இங்கே வளர்கின்றது. அப்படி நமக்குள் வளராது தடுக்க இம்முறைப்படி தான் அந்த நினைவு நாளைக் கொண்டாட வேண்டும். இதை
1.அவர்கள் பேரொளி பெற்ற நாள்
2.என்றும் இருளை அகற்றிய நாள்.
3.சப்தரிஷிகளாக ஆன நந்நாள்.
4.சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்று சேர்த்த அந்த உணர்வின் தன்மை எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
5.குடும்பத்தில் தெளிவான நிலைகளை எங்களுக்கு ஊட்ட வேண்டும்.

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அவர்கள் வீட்டில் வாழ்ந்த உணர்வலைகள் நம் உடலில் அது பதிவாகி இருப்பினும் ஆக நாம் குடியிருக்கும் வீட்டில் பதிவாகி இருப்பினும் மேலே சொன்னபடி நாம் செய்தோம் என்றால் அந்த்த் தீமைகள் மறைகின்றது.
1.அருள் ஒளி என்ற நிலைகள் நமக்குள் பெருக்கப்படுகின்றது.
2.நாம் நினைவு நாள் இப்படித் தான் கொண்டாட வேண்டும்.

மாறாக… அமாவாசையன்று அவர்களுக்கு உணவுகள் கொடுத்து அவர்களை அழைத்தோம் என்றால் ஆவியின் நிலை அடைந்து விடும். பின் இது சில தீமையின் நிலைகளுக்குத் தான் செல்லும். மீண்டும் பிறவிக்கே நாம் அழைக்கின்றோம் என்று பொருள்.

ஆகவே… உடலை விட்டுப் பிரிந்டு சென்றவர்களை நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பேரொளி என்ற உணர்வினை ஆக்கிய பின்
1.அவர் விண் சென்ற அந்த அருள் ஒளி என்ற நிலைகள் நம் வீட்டிலே படர்ந்து
2.அறியாத இருளை அகற்றிடல் வேண்டும் என்ற உணர்வினில் தான் நாம் வாழ்ந்திட வேண்டும்.

என்றுமே ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை அடைந்த அந்த அருள் உணர்வுகள்…
1.குடும்பத்தில் இருளை அகற்றி அனைவருக்கும் தெளிந்த மனம் கொண்டு வாழும் அருள் சக்தியை எங்களில் என்றும் பரப்புதல் வேண்டும்.
2.நம் குடும்பத்தை நீங்கள் காத்திடல் வேண்டும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்தியாக எங்களில் வளர்த்திட வேண்டும்.
4.உங்கள் அருள் என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று
5.அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் இத்தகைய நிலைகள் எண்ணுதல் வேண்டும்.

இதனை எண்ணினால் அவர் உடலில் வாழ்ந்த காலத்தில் நாம் கேட்டறிந்த நோயின் தன்மை வராதபடி மாற்ற முடிகின்றது. ஆகவே நமக்குள் அருள் ஒளியாக மாற்றியமைத்தல் வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நமது மூதாதையர்களை இந்த முறைப்படி பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்… பேரின்பம் பெறச் செய்வோம்.

பூமியில் ஏற்படும் பகல் இரவு… நான்கு பருவ கால மாற்றங்கள்

பூமியில் ஏற்படும் பகல் இரவு… நான்கு பருவ கால மாற்றங்கள்

 

இப்பூமியும் இப்பூமியைப் போன்ற இப்பூமியைச் சார்ந்த 48 மண்டலங்களும் நம் சூரியனின் குழந்தைகளான நம் மண்டலங்கள் சுற்றி ஓடும் விகித நிலைப்படுத்தி ஒரு வருடம் என்ற நிலையில் 365 நாள் விகிதக் கணக்குப்படுத்தியும் நான்கு வருடத்திற்கு ஒரு நாள் அதிகப்படுத்தி லீஃப் வருஷம் என்றும் சூரியனைச் சுற்றி ஓடும் நிலை உணர்ந்து இவ்வான சாஸ்திரத்தில் வருடம், நாள், வாரம் இப்படி நிலையுணர்ந்திடப் பல நிலைகளை இவ்வுலகின் நிலையில் உணர்த்தியுள்ளார்கள்.

இப்பூமிக்கும் நம் சூரியனுக்கும் உள்ள தொடர்பு நிலை எந்நிலை கொண்டுள்ளது…? காலங்களில் நான்கு வகைக் காலங்களும் ஒரு நாளில் காலை, பகல், இரவு என்ற மூன்று நிலைகளும் ஒவ்வொரு நொடியும் ஒரு நொடியைப் போலில்லாமல் இவ்வுலக ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் சுழன்று கொண்டே உள்ளன.

உதய காலத்தில் நாம் காணும் சூரியனின் விகித நிலை உருவமே பெரிதாகவும், பகல் ஏற ஏற நம் பூமிக்கு நேர் மையத்தில் சூரியனின் நிலையைக் காணும் பொழுது உதய காலத்தில் கண்டிட்ட சூரியனின் உருவ அமைப்பைவிட உச்சிக் காலத்தில் சிறிய கோளமாகவும் பகல் மாறி மாலை சூரியனின் அஸ்தமத்தில் உதய காலத்தில் கண்ட நிலைப்படி உருவ அமைப்புப் பெரிதாகவும் காண்கின்றோம்.

எந்நிலை கொண்டு…?

உதய காலத்தில் சூரியனின் நிலை நம் பூமியின் நிலைக்கும் இடைப்பட்ட தூரம் குறைவு. நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை உள்ளது.

ஒவ்வொரு நொடியும் உச்சிப்பகல் வருவதற்குள்
1.நம் பூமியின் ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் ஓடும் நிலையில்
2.“நாம் உள்ள இடத்தில்…” சூரியனின் நிலை நமக்கும் நேர் மேலே வரும் பொழுது
3.உதய காலத்திற்கும் பகல் உச்சி நேரத்திற்கும் “நம் பூமிக்குச் சூரியனின் தூர விகிதம் மிகவும் அதிகமாகி விடுகிறது…”

உதய கால தூர விகிதப்படி உச்சிக் காலத்தில் இருந்திட்டால்… நம் பூமி சுழற்சி வேகமும் சூரியனின் சுழற்சி வேகமும் சூரியனிலிருந்து வந்திடும் ஒளிக்கதிர்களின் வெப்பநிலை நம் பூமியின் நேர் மையத்தில் பட்டுப் “பூமியே வெடிப்பு நிலையில் சிதறுண்டிருக்கும்…”

உச்சி நிலையில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் அதிகப்படுவதினால் சூரியக் கோளின் உருவ அமைப்பைச் சிறிதாகக் காண்கின்றோம்.

பகல் மாறி மாலை வர வர நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை வருவதினால் மாலையிலும் இந்நிலை போன்ற சூரியனின் உருவ நிலையைப் பெரிதாகக் காண்கின்றோம்.

ஆனால் உதய காலத்தில் நமக்கு அருகாமையில் உள்ள சூரியனின் வெப்பநிலை நமக்குக் குறைந்தும் பகல் நேரத்தில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் நீண்டுள்ள நிலையில் வெப்பத்தை அதிகமாக எடுக்கின்றோம்/ எந்நிலை கொண்டு…?

நம் பூமிக்கு உள்ள நான்கு திசைகளில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்ற நிலையில்
1.வட துருவத்திலும் தென் துருவத்திலும் நம் பூமியின் அச்சாய் நிறைந்துள்ள
2.நம் பூமியின் பொக்கிஷக் கடல்களான அந் நீர்நிலைகளின் மேல் இவ்வுதய கால சூரிய அலைகளின் வெப்பம் பட்டு
3.அவ்வொளிக் கதிர்களின் எதிர் வீச்சின் சக்தி தான் காலையும் மாலையும் உள்ள கால நிலைகள்.

நம் பூமியின் இவ்வட துருவ தென் துருவ நிலைகளில் அமைந்துள்ள இக் கடல்களின் சக்தியினால்தான் நம் பூமியின் சக்தியே இந்நிலையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒவ்வொரு தன்மை கொண்ட சக்தி நிலையில் உருப்பெற்ற மண்டலமாய்ச் சுழல்கின்றது.

நம் பூமியின் இயற்கை தந்த பொக்கிஷ நிலைதான் இன்று நான்கு வகைக் காலங்களை அடைந்த நிலை.

சூரியனின் விகித தூரத்திற்கும் மற்ற மண்டலங்களில் இருந்தும் நம் பூமிக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் நிலைக்கொப்பத்தான் கோடை காலம், வசந்த காலம், இளவேனிற் காலம், குளிர் காலம் இப்படி நிலை பிரித்து நாமமிட்டு நாம் அழைக்கும் இக்காலங்கள்.

நம் பூமியின் வட துருவ தென் துருவ நீர்நிலைகளின் மேல் சூரியனின் தூர விகிதமும் நம் பூமிக்கு அருகாமையில் உள்ள சந்திரனின் தூர விகிதமும் உள்ள நிலையில் வட துருவ, தென் துருவ நீர்நிலைகளின் மேல் அம்மண்டலங்களில் இருந்து தாக்கிடும் அணு சக்திகளின் நிலை கொண்டுதான் இப்பூமிக்கு ஏற்படும் காற்று மண்டலங்களின் சக்தி நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறு கொள்ளுகின்றன.

ஒவ்வொரு நொடியும், இப்பூமி தோன்றிய நாள் தொட்டே மாற்றம் கொண்டேதான் சுழன்று கொண்டுள்ளது.

1.நொடிக்கும் குறைவான நிலையிலேயே ஒவ்வொரு நிலையும் மாறி மாறியேதான் இன்றளவும்
2.இனி நடந்திடும் பல ஆயிரம் கோடி ஆண்டுகளும்
3.இப்பூமியின் நிலையும் மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் சுழன்றே ஓடிடும்.

நம்முடைய மோப்பம் எதிலே இருக்கிறது…?

நம்முடைய மோப்பம் எதிலே இருக்கிறது…?

 

அதை யாராவது நாம் சிந்திக்கின்றோமா என்றால் இல்லை. நன்றாக யோசனை செய்து பாருங்கள். கோவில் என்பது எவ்வளவு பெரிய புனிதமான இடம் அதே சமயத்தில்

கருப்பணசாமியைக் காட்டி அதன் பக்கத்தில் மோப்ப நாயை வைத்துள்ளார்கள். மோப்ப நாயை வைத்ததன் பொருள் என்ன…?

“எனக்கு இப்படி தவறு செய்தார்…” என்று மோப்பத்தைப் பிடிக்கின்றோம். அப்பொழுது தவறு செய்தான் என்று சொன்னவுடனே…
1.உதாரணமாக நாய் என்ன செய்கின்றது…? யார் வளர்க்கின்றார்களோ அவர்களைத் தான் பாதுகாக்கின்றது,
2.நாம் மோப்பம் பிடிப்பதே… “எனக்குத் தீங்கு செய்வார்கள்” என்று நினைத்து நுகர்ந்தவுடன் என்ன செய்கின்றது…?
3.நம் நல்ல குணங்கள் இருண்டு போகின்றது.

அந்த நேரத்தில் அவனுக்கு எப்படியும் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். தீங்கு செய்யக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது..
1.அவன் நன்றாக இருந்தால் நமக்கு எப்படியும் கெடுதல் செய்வான் என்ற வகையில் நாம் நினைக்கின்றோம்… ஆயுதத்தை கையிலே கொடுக்கின்றார்கள்.
2.எதை…? அரிவாளைக் காட்டுகின்றார்கள்.
3.எங்கே…? எப்படியும் அவனிடம் இருந்து தப்புவதற்குத் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று அரிவாளை எடுக்கின்றான்.

ஆனால் அவன் செய்த தீங்கான உணர்வை நுகர்ந்து கொண்ட பின் என்ன செய்கின்றது…? எதை மோப்பம் பிடித்தோமோ அது நம் உடலுக்குள் வந்து அவன் செய்த தீங்கான எண்ணங்கள் நமக்குள் விளைகிறது. அது நம் நல்ல குணங்களைக் கொல்கின்றது.

நாம் நுகர்ந்தது நம் உடலுக்குள் சென்று நமக்குள் என்ன செய்கின்றது? அதற்கு நீ எப்படி நுகர வேண்டும்…? என்பதற்காக வேண்டி இப்படிப்பட்ட உருவங்களை வைத்துக் காட்டுகின்றார்கள்… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றது என்று…!

ஏனென்றால் நாம் சுவாசித்த அந்த விஷமான உணர்வுகள் நம் நல்ல குணங்களைக் கொல்கிறது. அந்த இடத்தில் நாம் எதை எண்ண வேண்டும்…?

துருவ நட்சத்திரம் இந்த விஷத்தை நீக்கியது. இப்பொழுது உங்களிடம் அதைத்தான் பதிவு செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர வேண்டும்
2.அதை ஆசைப்பட்டு நுகர்ந்தவுடன் உயிரிலே படுகின்றதுல்… அருள் உணர்வுகள் தோன்றுகின்றது.
3.இரத்தத்தில் கலந்த பின் தீங்கு செய்வதை அது குறைக்கின்றது.
(தங்கத்தில் திரவகத்தை ஊற்றியவுடன் இரண்டற இணைந்திருக்கும் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுவது போல்).

நாம் இதற்கு முன்னாடி வேதனை என்ற உணர்வுகள் இரத்தத்தில் கலந்திருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அது வீரியத் தன்மையைக் குறைத்து நல்லதாக மாற்றக்கூடிய சக்தி பெறுகின்றது. இதை உருவம் அமைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.

கருப்பணசாமி கோவிலுக்குப் போய்… விவசாயத்தில் நல்ல வெள்ளாமை வந்தால் நான் உனக்கு ஆட்டைக் கொடுக்கின்றேன் கோழியைக் கொடுக்கின்றேன் என்று நேர்த்திக்கடன் வைத்து அதை வைத்துக் கும்பிட்டவுடன் ஜெயித்து விட்டால் கொடுக்கின்றார்கள்

ஜெயிக்கவில்லை என்றால் நேர்த்திக் கடனை மனதில் ஏற்றுக் கொண்டாய். ஆனால் நீ செய்யவில்லை அதனால் சாமி உனக்குத் தண்டனை கொடுக்கின்றது. என்று சொல்வார்கள்.

வியாபாரம் ஆரம்பித்தேன்… அவன் எனக்குத் தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறான். நான் கடன் கொடுத்தேன் அவன் கொடுக்காமல் என்னை ஏமாற்றிக் கொண்டுள்ளான்…! என்று இந்த உணர்வுகளை எல்லாம் சாமியை நினைத்து என்ன செய்கின்றோம்…? நான் உனக்கு காணிக்கை கொடுக்கின்றேன், எனக்குப் பணம் வர வேண்டும் என்று.
1.பணம் வரவில்லை என்றால் கடைசியில் வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.
2.அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்…? நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றோம்.

ஆனால் நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும், அவர்கள் சொல் வைரத்தைப் போன்று சொல் ஜொலிக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும். நல்ல தெய்வப் பண்பும் தெய்வீக குணமும் அவர்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் இந்த நல்ல சக்திகள் உங்கள் உடலில் விளைகிறது.

பிறரின் செயலைப் பார்க்கும் போது தீயது என்று காட்டுகின்றது இங்கே கோவிலுக்கு வந்தால் இந்த தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டுகின்றார்கள்.
1.எனவே அந்த நல்லதை எண்ணி நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.தெய்வ குணமும் நல்ல செயலும் நாம் பெற வேண்டும் என்று கோவிலில் எண்ணி எடுக்கச் சொல்கின்றார்கள்.

அதாவது கெட்டது வருவதையும் அதை நல்லதாக்க வேண்டிய வழியையும் காட்டி நமக்கு உண்மையை உணர்த்துகின்றார்கள்.

முதல் பாதம் இரண்டாம் பாதம்

முதல் பாதம் இரண்டாம் பாதம்

ஆதியில் இருந்து இன்றளவும் நமக்குக் கதைகளாகவும் பாடல்களாகவும் போதனை நிலைகளாகவும் இத்தெய்வீக நிலைகளை நமக்கு உணர்த்தியவர்கள் எல்லாம், சூட்சுமப்படுத்தி மறைக்கப்பட்டு அதிலுள்ள ஜீவநிலையை மக்களுக்குப் புரியும் நிலையில் கதைகள் ரூபத்திற்காக அன்று வெளியிட்ட முனிவர்களின் ரிஷிகளின் நிலையையே காலப்போக்கில் பல வடிவங்களைச் சேர்த்து “இன்றைய நிலைக்கு நம்பா நிலைப்படுத்தி விட்டார்கள்…”

அவரவர்கள் வாழும் நிலைப்படுத்தி அவரவர்களின் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதமுண்டு.

முதல் பாதம் இரண்டாம் பாதம் இப்படி வரிசைப்படுத்தி எல்லாவற்றிற்கும் மேல்பாதம் சென்ற பிறகுதான் அவ் ஆண்டவனுடன் ஐக்கியப்பட்டிடலாம் என்ற நிலையில் உணர்த்தி வருகின்றனர்.

இப்பாத நிலைபெறும் நிலையென்ன…?

ஒவ்வொரு பாதத்தில் இருந்தும் முதல் படி, இரண்டாம் படி, மூன்றாம் படி இப்படிப் பள்ளியில் படித்திடும் நிலைக்கொப்ப கடைசிப் படியில் பட்டம் வாங்குவதைப் போலல்ல அவ்வாண்டவனிடம் ஐக்கியப்படும் நிலை.

எங்கும் நிறைந்துள்ள நம்முள்ளும் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனின் சக்தியை நமக்கு அளித்த இவ்வேழு பிறவியில் நாம் வாழ்ந்த நிலை கொண்டுதான்… நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு நமக்குகந்த அபிலாஷைப்படி இவ் ஏழு பிறப்புகளை நம் எண்ண நிலையில் நாம் மேம்படுத்திடாவிட்டால்… நம் ஆத்மாவிற்கு இம்மனித உடலை ஏற்கும் சக்தியிழந்து விடுகிறோம்.

இவ்வேழு பிறப்பிலும் நம் எண்ண நிலைக்கொப்ப நாம் சேமித்துச் செயல்படுத்திட்ட பல தீய சக்திகளின் அமில சக்தியின் நிலை, இவ் ஏழாம் பிறப்பில் அதன் துரித சக்தியினால் இவ் ஏழு பிறப்பில் சேமித்த நற்சக்திகளையும் இத்துரிதம் கொண்ட தீய சக்தியின் நிலையுடன் கலந்து, இவ் ஏழாம் பிறப்பில் நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு,
1.நம் எண்ண சக்தியை தீய சக்திக்கு அடிபணிந்திட்ட நிலையில் நாம் ஆவி உலகில் பல காலம் சஞ்சரிப்பதினால்
2.அந்நிலையில், அந்நிலையின் குண நிலைக்கொப்ப மிருகங்கள் உடலில் ஏறியும் அங்ககீனமுற்ற குண நிலையிலும் பிறப்பிற்கு வருகின்றோம்.

நாமாய்ச் சேமித்து வழி சென்றிடும் நிலைதான் இந்நிலை. முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பது எல்லாம் ஒவ்வோர் உடலை ஏற்று அவ் உடல்களில் நாம் ஏற்படுத்திடும் சக்தி நிலைக்கொப்பத்தான் பிறவி நிலை பெறுகின்றோம்.

சூட்சும நிலைக்குச் சென்ற நிலையில் இந்த ஞான சக்தியின் தொடர்பு நிலை கொண்டு
1/இவ்வுலக நிலையில் “பற்றற்ற நிலைப்படுத்தி…
2.பக்தி நிலையின் சித்து நிலை பெற்ற பிறகுதான்” சூட்சம நிலைக்கே சென்றிட முடியும்.

இவ்வாத்மாவுடன் கூடிய இவ்வுடலில் வாழும் காலத்திலேயே நம் எண்ணத்தில் தீய அணுக்களின் சக்தி நிலையை நாம் அடக்கிப் பழகிடல் வேண்டும்.

கோபத்தையும் குரோதத்தையும் சஞ்சலத்தையும் சலிப்பையும் நம் எண்ணத்தில் வளர விட்டு ஜெபம் கொண்டால் அப்பக்தியில் எப்பலனும் நம் ஆத்மாவிற்குக் கூடுவதில்லை.

நம் ஆத்மாவுடன் அன்பு கொண்ட நல்லுணர்வையே வளரவிட்டால் அன்றி ஞான சக்தியின் தொடர் அறிவதும் கடினமே.
1.முதலில் நம்மையே நாம் உணர்ந்து நற்சக்திகளின் வழித்தொடர் பெற்று
2.ஞான வழியின் தொடரினால் அத்தொடர் நிலை கொண்டோரின் தொடர் சக்தியையும் பெற்று
3.இவ்வழியிலேயே இவ்வழித் தொடரினை அறிந்து சப்தரிஷியின் நிலை பெற்று
4.ஒளியின் ஒளியாய்க் கலந்து செயல்படும் நிலைதான் அவ் ஆண்டவன் நிலை பெறுவது.

இந்நிலையை உணர்ந்திடத்தான் முதல் பாதம் இரண்டாம் பாதம் என்றெல்லாம் வழிப்படுத்தி உணர்த்தி உள்ளனர்.
1.ஆண்டவனேதான் நாம்; அவனே தான் மற்ற எல்லாமுமே.
2.யாரும் நமக்கு அப்பதவி நிலையை அளிப்பதல்ல.
3.நாமேதான் நம் பதவியை அடைந்திடல் வேண்டும்.

ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களினால்… தன் அறிவு நிலையை வளர்ச்சியில் செயல்படுத்திட முடிந்திடாது. ஆசை நிலை நல்லுணர்வுக்குத் தோன்றினாலும் பிறப்பெடுத்து இவ்வுடல் கொண்ட ஆத்ம வழியில் தான் எச்சக்தியின் தொடரையும் நாம் அறிந்திடல் முடிந்திடும்.

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு

 

இன்றளவும் இப்பூமியின் நியதியையும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையையும் ஆவி உலக ஆத்மாக்களின் செயல் நிலையையும் இப்பூமியுடன் தொடர்பு கொண்ட மற்ற மண்டலங்களின் நிலையின் வழித்தொடரையும் சிறுகச் சிறுக உணர்த்தி வந்துள்ளேன்.

இனி நாம் எந்நிலை கொண்ட ஜெபத்தினால் இக்கலியின் பிடியிலிருந்து மீள முடியும்…? என்ற சக்தித் தொடரைத்தான் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியில் நாம் இம்மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திட நம் ஆத்மாவுடன் பெற்ற சக்தியின் ஜெயத்தினால் தான் இன்று இந்நிலையில் வாழ்ந்திடும் இப்பாக்கியமே.

இப்பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான்…
1.இப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித ஆத்மாவாய்
2.மனித உடல் கொண்ட ஜீவன்கள் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட முடிந்தது.

இவ்வளர்ச்சி கொண்ட இம்மனித ஆத்மாக்களின் எண்ண செயல் நிலையும் இப்பூமியில் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இல்லாமல்… இந்த ஞான வளர்ச்சி ஜீவ ஆத்மாக்களில் வாழ்ந்த ஆத்மாக்களே… இப்பூமியில் ஆயிரத்தில் ஒன்றிரண்டு விகித நிலைகளை விடக் குறைவுதான்.

நாகரீக வளர்ச்சி கொண்ட ஆத்மாக்கள் வாழ்ந்திடும் நிலைகள்தான் நமக்குத் தெரிகின்றது. இவ்வெண்ண நிலைக்கொப்ப ஆயுட்காலமும் இம்மனித ஆத்மாக்களின் நிலையில் ஒத்துள்ளன.

1.நாம் அறிந்திடாமல் “நமக்கும் மேல் நீடித்த ஆயுள் காலங்கள் கொண்ட” ஆத்ம உடல் கொண்ட மனிதர்கள் இப்பூமியில் பலர் உள்ளனர்.
2.ஆயிரம் காலங்களும் மாற்றுடல் ஏறாமல், ஒரே உடம்பில் வாழ்ந்திடும், எண்ண வளர்ச்சி நிலையில்லாத
3.ஒரே நிலை கொண்ட குறுகிய எண்ணத் தொடரில் ஆத்ம உடல் பிம்பங்கள் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
4.இந்நாகரீக வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் உடல் நிலையின் வளர்ச்சி நிலை அங்கில்லை.

இவ்வெண்ண வளர்ச்சியின் நிலையினால்தான் இம்மனித ஆத்மாக்களின் பெருக்கமே கூடிவிட்டது.

ஆனால் நாம் அறிந்திடாமல் இப் பூமியில் வாழ்ந்திடும் நாகரீக அறிவு வளர்ச்சியற்ற ஆத்ம உடல் கொண்ட மனிதர்களின் நிலை
1.நம் நிலைக்கு மாறுகொண்டதாக உள்ளது… மிருகங்களின் நிலைக்கொப்ப
2.ஆனால் அவ்வுடல்களில் எவ்விஷத்தன்மையும் பாய்ந்திடாது.

காடுகளில் பாம்பு, நரி இப்படி உள்ள மிருக இனங்கள் எப்படி வாழ்கின்றனவோ அப்படியே தன் இன வர்க்கத்தை “இவ்வெளியுலக பிடிக்குச் சிக்கா வண்ணம்” அவ்வுடல் ஆத்மாக்கள் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் இவ்வெண்ணத் தொடரின் வழித்தொடரில் வந்த நம் மனித உடல்கள்தான் இக்கலியின் மாற்றத்தில் எண்ணச் சிதறல் பட்டும்… இவ்வியற்கையின் சீற்றத்திற்கு அடிபட்டும் மாளப்போகின்றன.

இவ்வெளி உலகப் பார்வையில் சிக்காமல் இப்பூமியில் மனித ஆத்மாவாய் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள மனித இன வர்க்கம் எல்லாம்… இக்கலியிலும் ஜீவன் பிரியாமல் வரப்போகும் கல்கியிலும் வழித்தொடர் பிடித்தேதான் வாழப் போகின்றனர்.
1.அவர்களின் எண்ணத்தில் இம்மாற்றமும் இவ்வியற்கையின் சீற்றத்தின் பயமும் எதுவும் தாக்கிடாது.
2.இன்றைய செயற்கையினால் ஏற்படுத்திய வெடிகுண்டுகளைப் பாய்ச்சினாலும் அவ் உடல்களை பாதிக்காது.

எண்ண நிலையேயில்லாமல் குறுகிய நோக்கில் தன்னைக் காத்து வழிவந்த ஆத்மாக்களுக்கு நம்மைக் காட்டிலும் வீரிய சக்தி பெற்றுள்ளபோது ஞான சக்தியின் செயலாக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நாம்… நம் ஆத்மாவை விஷக்காற்றிலிருந்தும் விஷமாய் இவ்வுலக நிலையையே மாற்றம் கொள்ளும் இவ்வெண்ண நிலையின் தாக்குதலில் இருந்தும்…
1.எவ் அணு வெடிகள் நம் மேல் பாய்ந்தாலும் நம் உடலில் உள்ள அத்தீய சக்தியை ஏற்கா வண்ணமும்
2.நம்மை நாம் இவ்வொளி ஒளியாய் ஒளிர்ந்திடும் சக்தியில் நம் உடல் பிம்பத்தையும் நம் ஆத்மாவையும் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியிலே நம்மைப் போன்ற ஆத்ம உடல் கொண்டு வாழ்ந்து வாழ்க்கையின் உன்னத சக்தி உணர்ந்து சூட்சும நிலை கொண்ட பல கோடி நற்பெரியோர்களின் ஆசையின் தொடர் நிலையை நம் ஆத்மாவின் சக்தியில் செயலாக்கிட… “அவர்களின் வழித்தொடர் நமக்கும் கிட்டும்…”

1.இவ்வுலகில் தோன்றிய ஆசை நிலையினால் இவ்வுலகைக் காத்திடும் ஆசையிள்
2.பல ஆத்மாக்களை இப்பக்தியின் ஈர்ப்பில் பல சித்தர்களும் பல ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர்.

நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இவ் ஓங்கார நாதம் கொண்ட ஒலியுடனே கலந்து… ஒளிபெறும் சக்தி நிலையை நாம் அடைந்திடும் வழித்தொடர் நிலையை அறிந்தே வாழ்ந்திடுவோம்.