கோலமாமகரிஷி தவமிருந்த குகைக்குள் தியானிக்கும் போது குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மைகள்

கோலமாமகரிஷி தவமிருந்த குகைக்குள் தியானிக்கும் போது குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மைகள்

 

நான் கொல்லும் உயிரினங்களின் உயிரான்மாக்கள் மனித உடலுக்குள் வந்த பின் மனிதனின் உணர்வை நுகர்ந்து அது கருப்பைக்குள் செல்லும்போது மனித உருப்பெறும் தன்மைகள் எப்படிப் பெறுகின்றது…?

மனித உருப் பெறும் பொழுது
1.அந்தத் தாய் வேதனை கொண்டவரையோ சலிப்படைந்தவரையோ சங்கடப்படுவோரையோ
2.கால் முடமானவர்களையோ கண் இழந்தவர்களையோ இதைப் போன்று பார்க்கப்படும் பொழுது
3.அந்த உருவத்திலிருந்து வெளிப்படுவதை சூரியனுடைய காந்த சக்தி கவரும் பொழுது
4.கர்ப்பமான தாய் நுகர்ந்து விட்டால் கருவிலே எவ்வாறு அது உறுபெறுகின்றது…?

ஒவ்வொரு நொடிகளிலும் ஒரு உயிரணு ஒரு உடலுக்குள் செல்வதும் மனித உணர்வை நுகர்ந்து மனிதனாகப் பெறும் நிலையும்… தாயின் கருப்பைக்குச் சென்ற பின் கருவிலே வளரும் பொழுது தாய் நுகரும் உணர்வுகள் அதற்குப் பூர்வ புண்ணியமாக எவ்வாறு அமைகிறது…? என்ற நிலையையும் காட்சியாகக் காட்டினார் குருநாதர்.
1.குறைந்தது ஒரு லட்சம் உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக
2.மூன்று வருடம் அதைக் காணும்படி செய்தார்.

அப்போது சரியான ஆகாரம் கிடையாது. குறித்த நேரம் விடுபடும் பொழுது பச்சிலைகளைச் சாப்பிட்டு விட்டு பேரீச்சம்பழத்தையும் சாப்பிட்டுவிட்டு வெறும் தண்ணீரைக் குடித்துக் கொள்ளும்படி சொல்வார்.

அரை மணி நேரம் கொடுப்பார்… அதற்குள் அதைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அமர்ந்து அவர் சொல்வதைக் காணும்படி செய்வார்.

இவை அனைத்தையும் கொல்லூர் என்று சொல்லும் முகாம்பிகை மலைக் காட்டில் தான் காட்டினார். அங்கே மேலே தபோவனம் என்று உண்டு.
1.அங்கே கோலமாமகரிஷி தியானமிருந்த இடம் ஒரு குகையாக இருக்கும்.
2.ஆனால் பெரிய வனமாக இருக்கும்… மலை மீது செல்ல வேண்டும்… கூடு மாதிரி இருக்கும்
3.அதற்குள் அமர்ந்து அவர்கள் பெற்ற உணர்வுகளையும் மற்றதையும் அறியும்படிச் செய்தார்.

மற்ற உயிரினங்களை மனிதன் கொல்வான் என்றால் அவர் உடலுக்குள் செல்வதும் அது எப்படி எந்த நிலை ஆகிறது என்பதை உணர்த்தினார்.

செல்ல பிராணிகளை இன்று நாம் வளர்க்கின்றோம் அல்லவா. அவைகள் இறந்த பின் யார் மீது பற்றுள்ளதோ அந்த வளர்த்தவர் உடலுக்குள் சென்று மனிதனாக எப்படிப் பிறக்கிறது என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் நாம் எத்தனையோ நிலைகள் பட்டு இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம். அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.
1.அவர்கள் எத்தனையோ இன்னல் பட்டு உயர்ந்த உணர்வை வளர்த்துக் கொண்டவர்கள்
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்து ஒளியின் சரீரம் பெற்றவர்கள்.
3.அதை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்தச் சந்தர்ப்பம் நம்மைப் பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும்.

அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.

அருள் வழியில் என்றும் வாழ்ந்திட அத்திரி மாமகரிஷியின் ஆசிகள்

அருள் வழியில் என்றும் வாழ்ந்திட அத்திரி மாமகரிஷியின் ஆசிகள்

 

“காசினி” என்று அழைக்கப்படும் பூமியின் நடு மையத்தில் ஆழ் உறைகின்ற நெருப்பானது… “ஈர்ப்பின் அலைபடுகின்ற பேதத்தினால் எதிர் மோதல் நிலைபெற்றுப் பொங்கிப் பிரவாகித்து (எரிமலை)… காசினியை விட்டு ஆசினி என அழைக்கப்படும் விண்ணை நோக்கி உயர்ந்து எழ.. மலை வாயின் வழி வழிவிட்டு அலைபடுத்தும் பேதத்தை நீக்கித் தன்னுள் சமன்படுகின்றது.

“ஆழ் உறையும் நெருப்பு” மலை வாயின் வழியே சொரிந்து வெளிப்படுத்துகின்ற செயலின் காரணம் “அலைபடுபேதம்…” (எதிர் மோதல் அலைகள்).

மனித மனத்தின் மாண்பு உலகோதய நடைமுறை ஈர்ப்பின் செயல் வசத்தில் வண்ணம் கொண்டு விளங்கிடும் மனக்கடல் அலையை
1.”உலகோதய நாட்டம்” எனும் மிகைப்பட்ட குணங்கள் (TENSION) அலைபடுகின்ற பேதத்தால்… அந்த அலைபடு பேதத்தை நீக்கிடவே…
2.காசினியின் நெருப்பு ஆசினியின் வழி ஓடி மலைவாயின் வழி சொரிதல் போல்
3.தெய்வீக நெறி நின்று வண்ண நிலை கொண்ட மனத்தின் பாங்கையே கேடுறுத்தும்
4.உலகோதயம் என்னும் அலைபடுபேதத்தைப் “பிடர் வழி போக்கிவிடு…”

எப்படி…?

“உந்துவிசை குணங்கள்” (தியானத்தின் மூலம் உந்தி எடுக்கக்கூடிய நல்ல எண்ணங்கள்) எண்ணியது எண்ணி ஆங்கு நிகழ்த்தப் பெறும் செயல்திறத்தால்
1.எடுக்கப்படும் உயர் குணத்தன்மைகள்… கொடுக்கப்பெறும் நற்குணங்களின் பிடர்தல் எனும்… “உந்துவிசையின் வழி”
2.மனதினை அலைக்கழிக்கின்ற அந்தப் பேதங்களைப் போக்கும்… சமன்படுத்தும்.

போகும் என்பது செயல்வழி போக்கும் என்பதே “முயற்சி வழி…”

ஆனால் சமன்படுத்தாதபடி… அலைபடு பேதத்தின் செயல்வழியாய்ச் சென்றிடுங்கால்… அலை கடலில் துடுப்பற்ற படகு தத்தளிக்கின்ற நிலைக்கு… அந்தந்தக் குணங்களின் ஆவேச உந்துதல் தன் வழியில் பற்றி இழுத்து நல்ல குணங்களைக் கேடுறுத்தும்.

ஆகவே… படகை (வாழ்க்கையை) நீ எங்கு செலுத்திட விரும்புகின்றாயோ அந்த இடத்திற்குச் செலுத்திட
1.“முயற்சி எனும் துடுப்பிட்டு” அலையைத் தணிவாக்கி
2.விரைந்து செலுத்தப்படுகின்ற தன்மையில் நிலை பெற்று நின்று வாழ்ந்திட எமது ஆசிகள்… அத்திரி மாமகரிஷி…!

“பால் கடல் அமுது” எனும் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி

“பால் கடல் அமுது” எனும் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி

 

உஜ்ஜயினி மாகாளியம்மன் கும்பேஸ்வரி பிரதிஷ்டைக்குப் பின் பிருகு மகரிஷி “கதிரி” (மங்களூர்) சென்று செயல் கொள்ளும் முன்…
1.தன்னுடைய படைப்பின் வித்து செயல் கொள்ளப் போகும் காலத்தின் நியதியை ஞான நோக்கால் அறிந்து கொண்டு…
2.தீர்க்கதரிசன வாக்குகள் என்றே மூன்று குறிப்புகள் பதிப்பித்து அவற்றை ஓரிடத்தில் இட்டு… வாய்ப்பாகம் சிலை செய்து
3.உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம் உருக் கொள்ளும் எல்லைக்குள் அந்தப் பெட்டகத்தின் காப்பென பூமியினுள் புதைத்து வைத்து
4.நல் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அது பிற்காலத்தில் பயன்பட வேண்டும் மானசீக ஆசி அருளி
5.தெற்கு திசை நோக்கி நிர்விகல்ப சமாதி எனும் செயல் கொண்டிடும் கதிரி எனும் இடத்தில்
6.செவ்வேள் எனும் சூட்சும ஆன்ம நேய வளர்ப்பு என்றே பக்குவம் கொண்டு
7.மண்டல சூட்சும செயலுக்குத் தன்னைத்தான் தெளிவுபடப் பொருந்திக் கொண்ட இடம் மூடுபத்திரி (கர்நாடகா).

பிருகு மகரிஷியின் அருள் சக்தி பெறுவோம்… பெற்று அவர் பதித்த வாக்குகளை அனைவரையும் பெறச் செய்வோம்.

மூவிரண்டு நிலை (ஆறு குணங்கள்) என்னும் நற்குண செயல்பாட்டையே மனமெனும் ஆழ்கிணறு – அதனுள் சுவை நீர் – தண்ணமாய் (ஒரு பக்கம் உள்ள பறை) ஒலிக்கும் அகப்பொருள் தின்மையாகக் (வலிமை) கொண்டிடும் உறுதி என்பார் வேதாள மாமகரிஷி.

மனக்கிணற்றின் நீர்… “எண்ணத்திற்கொப்ப” சுவை மாறு கொண்டிடும் இயல்பு கொண்டிட்டது. ஆழம் கண்டிட முடியாத அந்த மனக்கிணற்றினுள் “வண்ணமாய்… அழகிய ஒரு பொருளும் உண்டு.
1.அதுவே “பால் கடல் அமுது” எனும் நிலையாம் “ஆத்ம பொக்கிஷம்..”
2.அதனைப் பெற்றிடும் உறுதி… மூவிரண்டு முனை கொண்டிட்ட பொருள் பற்றிக் கொண்டிடல் வேண்டும்… அதுவே நற்குணங்கள்.

அதாவது… நற்குணங்கள் கொண்டு தான் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்க முடியும். கிணற்றில் விழுந்துவிட்ட வாளியைப் “பாதாள குறடு (கரண்டி)” கொண்டு எடுக்கின்றோம் அல்லவா.
1.அதுவே தன்மையாக ஒலிக்கின்ற அகப்பொருள்
2.அகப்பொருளைப் பற்றினால் ஒளி நிலை பெறுவது தன்னுள் சாஸ்வதம்.
3.“தனது உடலின் வால் தனைக் கண்டு மிரண்டு ஓடி” இடம் தேடி அலைகின்ற பூனை போல்
4.நம் மனதின் நிலை செயல் கொள்ளல் தகாது
5.அறிந்துணர்தல் என்ற “ஞானத்தைக் கொண்டு” நிலை நிற்றலே விவேகம்…!

“வேதாள மாமகரிஷி”

“வேதாள மாமகரிஷி”

 

அன்று பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பெற்ற பெருநகரில் செல்வத்தின் அதிபதியாக வாழ்ந்து வந்தவர் திருச்சாடனார்.

வாழ்க்கைத் துணை நலம் நன்கு அமையப் பெற்றும் பன்னெடும் காலமாக மக்கள் செல்வம் அமைந்திடாமல் கணவனும் மனைவியும் குழந்தைப் பாக்கியப் பேறு வேண்டி அன்னதானங்கள் இட்டு… அது மிகப்பெரிய சாமாராதனையாக (இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை) அனுதினமும் நடைபெற்று வந்தது.

ஒரு பெண் மகவை ஈன்ற பின் துணைவியார் இயற்கை நிலை எய்துகின்றார். அந்தக் குழந்தையைப் பேணும் பொறுப்பை திருச்சாடனார் ஒரு தவமாய்ச் செய்து வந்தார்.

குழந்தையின் மங்கைப் பருவத்தில் உபேந்திரன் என்கின்ற தவநெறிச் செல்வனுக்கு மணமுடித்து திருச்சாடனார் முழுமையாகத் தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்.

பூமியில் சில விசேஷ அலைத்தன்மைகள் பாயப்பெறும் காலகட்டம்… இரு சம்பவங்கள் அப்பொழுது நடந்தேறியது.

செல்வச் சீமான் திருச்சாடனார் உள்ளத்தால் துறவறத்தை மேற்கொண்டார். காட்டு வழிப் பயணம் செல்கின்ற காலத்தில் செல்வ நிலையைக் குறிக்கோளாக வைத்த ஊரின் எல்லையில் வாழ்ந்து வந்த மந்திரவாதி ஒருவன் திருச்சாடனாரை அழித்திடும் நோக்கம் கொண்டு வேதை (தாக்குபவன்) என்பவனை ஏவி விடுகின்றான்.

வேதையும் ஓர் அம்பை ஏவியது.

1.பகலை இரவாக்கிட்ட கடும் மழைக்காலம் ஞானத்தின் சூட்சுமத்தில் “மகரிஷிகளால் ஆட்கொள்ளப்படுகின்ற செயலும் உண்டு…”
2.“நில் என்றால் உடனே நிற்கும்…” ஞானக்காவலுடன் சூட்சும மகரிஷிகள் உடன் இருக்க
3.அச்செயல் தடுக்க… முதலில் எய்த அம்பு திருச்சாடனாரின் மார்பைத் துளைத்தது.
4.பின் மீண்டும் தொடுத்த அம்பு பாயும் முன் திருச்சாடனார் வாயிலிருந்து “நில்…” என்றே ஒலித்த ஒலியின் தொனியினால்
5.வினை… சுவரில் எறியப்பட்ட பந்து போல் எய்த இடமே திரும்பச் சென்றது.

“நில்” என்ற வெளிப்பட்ட தொனியின் அதிர்ச்சியினால் வேதை என்பவன் மயங்கி உயிர் துறந்தான்.

“சூரிய மண்டல தேவன் அங்கே சூட்சமமாக திருச்சாடனார் சரீர நிலையில் செயல் கொண்டு” முன்னிலும் பிரகாசமான தேஜசுடன் சரீர துன்பங்கள் நீக்கம் பெற்று…
1.“வேதம்” என்ற மறைபொருளை ஒலியின் தன்மைகளை ஆளுகின்ற செயலினால்
2.”வேதாள மாமகரிஷியாக” அவர் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

வேதாள மகரிஷி உரைப்பான்…! மனமாகிய கிணற்றில் குறுக்கே சுவரெடுத்தால் நீர் இறைத்திடும் செயல் தடைப்படுகிறது. ஆனால் மனக்கிணறோ பழுதுராத் தன்மையில் நலம் பெற விழைகின்றது.

ஜெப நீர் (தியானத்தில் எடுக்கும் சக்தி) பெற்றுத் உயிராத்ம சக்தியைக் காத்திட முனைவோர்… மனக்கிணற்றின் ஜெப நீர் பெற்றிட குறுக்கே எழுந்திட்ட தடைகள் அது சூட்சமமாக இருந்தால் “அதைத் தகர்த்து விடவேண்டும்…” என்ற மன எண்ணத்தின் உயர்வைக் கூட்டிடல் வேண்டும்.

பின் ஜெபநீர் அருந்திடத் தடை ஏது…? இந்நிலையின் பொருள்கள் விளக்கி
1.எது தீமை தந்திட விளைந்ததோ அதையே நன்மையாக்கிடும் நல் நிலைகள் காட்டி
2.அஷ்டமாசித்துக்கள் பெற வைத்துக் காத்திட்ட வேதாள மகரிஷியின் செயல்கள் பல உண்டு.

புறக்கண்ணால் நோக்கிடும் செயல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பிற்கே தவிர்க்கப்பட்டாலும்… கொண்ட சேமிப்பைக் குறைவாக்குவது
1.உலகோதய வாழ்க்கையில் வந்திடும் மோதல் காலங்களில்
2.உற்று உறுத்துக் கேட்டல்… அதிசயித்து எச்செயலையும் விழிப்பார்வை கொண்டு பார்த்தல்…
3.இந்த இரண்டு வகையான காரியங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.

திருச்சாடனார் சூட்சும அவதார நிலையின் நோக்கமே… மனித சரீரத்தின் உயிர்களுக்கு ஊறு விளைவித்திடும் கபாலிகர்கள் வசம் இருந்து அவைகளைக் காத்திடத் தான்.

அதற்காக… தனது உருவை விகார வடிவம் அமைத்து… வேதாளம் என்ற பெயரும் படைத்திட்டுப் புனித பூமியை மாசு படுத்திடும் அவர்களை விரட்டிட வேதாள வடிவம் தாங்கித் தன்னை அச்சுறுத்தும் தோற்றமாகக் காட்டினார்.

மகரிஷிகள் மீது பற்று கொண்டு அவர்கள் வழியினைப் பின்பற்றுவோம்

மகரிஷிகள் மீது பற்று கொண்டு அவர்கள் வழியினைப் பின்பற்றுவோம்

 

1.நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் அதை இயக்குகின்றது
2.எதை எண்ணுகின்றீர்களோ அதை உடலாக்குகின்றது உயிர்
3.எதனை எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வின் தன்மை வளர்க்கின்றது.
4.வளர்ந்த உணர்வின் தன்மையை தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.
5.இந்த உடலை விட்டு நாம் அகன்றால் நாம் எதை எண்ணினோமோ அந்த உணர்வின் செயலாக அடுத்த உடலாக நம்மை உருவாக்குகின்றது.
6.ஞானிகள் உணர்வை நமக்குள் இணைப்போம் என்றால் அவர் ஒளியின் சரீரம் ஆனது போன்று நமது உயிர் நம் உடலில் இதை உருவாக்கும்.

நமக்குள் இருக்கும் உயிரை ஈசனாக மதித்து… ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலைச் சிவம் என்று உணர்ந்து… நமக்குள் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய நிலைகள் காந்தம் மகாலட்சுமி சர்வ நிலைகளை வளர்த்து நமக்குள் உருவாக்கிய நிலைகள் மகாலட்சுமி உண்டு என்பதை உணர்தல் வேண்டும்.

அது கவர்ந்த உணர்வின் மணங்கள் மகா ஞானம் சரஸ்வதி அனைத்தையும் அறிந்திடும் ஞானமாக நம் உடலில் உண்டு. ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இணைந்த உணர்வின் நிலைகள் ஒருக்கிணைந்து அனைத்தையும் உருவாக்கும் வெப்பத்தின் நிலைகள் பராசக்தியாக நமக்குள் உண்டு… அனைத்தையும் உருவாக்கிடும் ஆற்றல் நமக்குள் உண்டு.

அனைத்தையும் அறிந்திடும் உணர்ந்திடும் நிலையும்… தீமையை நீக்கிடும் உணர்வின் சக்தியாக ஆறாவது அறிவு முருகா என்ற நிலையும் நமக்குள் உண்டு. அதனின் துணை கொண்டே நாம் செயல்படுத்த முடியும்.

எண்ணியதை வழிகாட்டும் கண்ணின் நிலைகள் இருந்தாலும் எண்ணியதைத்தான் அது வழி காட்டுகின்றது. எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது.

ஆனால் இவை அனைத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை முருகன் என்று பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்றும் நமக்குள் ஆறாவது அறிவு உருப் பெறும் சக்தியாக நமக்குள் அடக்கி அதனின் நிலைகள் இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.அவர்கள் உணர்வை நாம் பின்பற்றி
2.அவர்கள் மீது பற்று கொண்டு
3.அதன் வழிகளில் நாம் பெற வேண்டும்.

இந்த உடலைச் சிவனாக மதித்து சர்வத்தையும் அறிந்திடும் ஞானம் நமக்குள் உண்டு மகா சரஸ்வதியாக. சர்வத்தையும் கவர்ந்திடும் சக்தி மகாலட்சுமி உண்டு சர்வத்தையும் உருவாக்கிடும் அந்த வேகத் துடிப்பான பராசக்தி நமக்குள் உண்டு.

நமது கண்கள் கண்ணனாக இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. நமக்குள் விளைந்த உணர்வின் எண்ணங்கள் அர்ஜுனனாக இருக்கின்றது. எதனின் வலிமையைக் கொண்டோமோ அதனின் வலிமையின் தன்மையாக நாம் எண்ணியது சாரதியாக நின்று கண் வழிகாட்டுகின்றது.

1.ஞானிகள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அதுவே சாரதியாக அமைந்து
2.ஞானிகள் சென்ற பாதையில் நம்மை அழைத்துச் செல்லும்.

அது தான் கண்ணின் நிலைகள் நமக்குள் இவ்வாறு இருக்கிறது…? என்று கீதையில் தத்துவங்களைக் கூறியுள்ளார்கள். அந்த அருள் ஞானிகள் சொன்ன நிலைகளை நாம் பின்பற்றுவோம்.

நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் மனிதனை உருவாக்கியது விநாயகா. உயிரின் தன்மை நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த வினைக்கு நாயகனாக உணர்வின் செயலாக இயக்கப்பட்டு அந்த உணர்வின் தசைகளாக அங்கங்கள் அமைக்கப்பட்டது.

ஆக நமக்குள் அனைத்துத் தத்துவங்களும் உண்டு..!

பேரண்டம் இந்த பிண்டத்திற்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்றும்… பேரண்டத்தில் தனித்து இயக்கம் மற்ற கோள்கள் தன் தன் உணர்வின் சக்தி கொண்டு இயக்கினாலும்… அதனில் இணைந்த உணர்வு கொண்டு தாவர இனங்களாக மாற்றினாலும்
1.அதனின் தன்மை கொண்டு உயிர் தனக்குள் இணைத்து
2.ஒருக்கிணைந்த நிலையாக உணர்வின் சக்தியாக ஒருக்கிணைந்து நமக்குள் எவ்வாறு இயக்குகிறது…? என்பதை
3.அண்டம் பிண்டத்திற்குள் எவ்வாறு உணவின் செயலாக ஒன்றி வாழுகின்றது…?
4.ஒன்றிய வலுவின் துணை கொண்டு நம்மை எவ்வாறு இயக்குகின்றது என்ற தத்துவ ஞானிகள் கொடுத்த
5.அருள் மகரிஷிகளின் அருளாற்றலை நாம் பின்பற்றுவோம்
6.அவர்களின் வழியிலே நாம் செல்வோம்
7.மனிதன் என்ற நிலைகள் புனிதம் பெறுவோம் முழுமையின் நிலைகள் பெறுவோம்.
8.நமது உணர்வுகள் உயிருடன் ஒன்றிய ஒளியாக நிலைத்திருப்போம்.
9.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் அதைப் பெறுவோம்
10.அருள் ஞானம் பெறுவோம்… ஒளியின் உணர்வாக வளர்வோம்
11.இருளைப் போக்கும் நிலையை நாம் பெறுவோம்… ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றியே நிலைத்திருப்போம்.

நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் “அன்பு சித்தர்கள் முனிவர்கள் மாமகரிஷிகள்”

நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் “அன்பு சித்தர்கள் முனிவர்கள் மாமகரிஷிகள்”

 

கரிய நிழல் மாயை கால் சதங்கைதான் அசைக்க
அறியப்பெறும் எண்ணம் அசைத்த ஒலியின் கண் நின்றசைய
மாமுதல்வன் ஆர் அறிய வந்திட்ட உயிரணுவே
ஆவெனும் மாயப்பசு இயல் குணத்தின் சுவை மாற்றும்
வாரணன் கோடி வாதிட்ட வன்மை நிலை போலும்

இது ஒரு சிருஷ்டி… உலக நடைமுறையின் இயக்கம், வந்த வினை கண்ட உயிரின் பரிணாம வளர்ச்சியின் “தாத்பரியம்…”

திசை யானைகள் இழுக்கும் சிவமாக (பூமி) நீ அமைந்தாய். சுவை குணம் விளக்க… மாயை தன் நிலையில் எண்ணத்திற்கொப்ப செயலுறுத்தும் நிலையை விளங்கிக் கொள்.

1.வினையால்… பசுக்களாகிய உயிரணுக்கள் (உடலில் உருவான அணுக்கள்) தன் நிலையில் தான் ஏக…
2.அந்த வினையின் தொடர் வலுப்பெற
3.எண்ணம் கதியாகி… கதியுறும் எண்ணம் வினையாகி
4.வினையின் தொடர் நீண்டு விதி செயலுற
5.கொண்டிட்ட எண்ணங்களே சகலத்திலும் வழி நடத்திடும் இயக்கமப்பா.

மறுவினைப் பயன் காட்டும் ஜெபமாம் ஆகுதி (நெருப்பு – வெப்பம்) கொண்ட எண்ணத்தின் உயர்வைக் கூட்டி (தியானத்தில் எடுக்கும் சக்தி)… மனிதன் தெய்வநிலை பெற்றிட சகலத்தையும் தம்முள் உணர்த்தும்… சகலமும் காந்தமாகச் செயல்படும் நிலை அறிவாய்.

தீவினையாகிய உயிரணுக்கள் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டால் தாக்குறும் நிலையே “மாயப்பசு” (தீமை செய்யும் அணுக்கள்). அந்நிலையை மாற்ற வேண்டும் என்றால்
1.ஈஸ்வர தியானமே ஆகுதியாக… நல்ல நிலை உணர்த்தும் யாகமாக
2.தன்னைத்தான் உயர்த்தி… நற்சுவாசத்தால் நல்ல அணுக்களைக் கூட்டி,
3.உயிரான்மாவின் பரிமாணத்தைக் காத்துக் கொண்டு எது நல்நிலையோ அந்நிலைக்கு உயர்த்துவது
4.சகலத்திற்கும் சகலமாய்க் கலந்துள்ள “ஈஸ்வரர் அருள் (வேகா நிலை பெற்ற மகரிஷிகளின் சக்தி) என்ற பேரருள் சூட்சுமம்…”

“கல்ஆல்” என்பதே உலகோதய நிலையைக் குறிக்கின்றதப்பா. அதன் கீழ் வாழும் நாம்
1.அந்த உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம்
2.தியானத்தின் வழியாக சதா சர்வ காலமும் நின்று நிலை பெற்றிருக்கும் அது “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்…”
3.அதுவே ஊன்றி உயர வேண்டிய நல் நிலைகள்.

மனிதன் என்ற ஜீவிதத்தின் தொடக்கமே பரமார்த்த நிலை (மனிதப் பிறவி தான் முழுமுதல் கடவுள்). அன்றி வேறு எந்தப் பிறவியாலும் மெய்யை அறியப்படுகின்ற செயல் கூறுகள்… எந்த விதத்திலும் சாத்தியமில்லை…! என்பதே மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை.

கரும்பின் சாறு சிதறி விடாமல் காக்கின்ற “கரும்பின் கணுக்கள் போல்…” நாம் கூட்டிக் கொள்ளும் ஆத்ம பலத்தின் நிறைவுகளைக் காக்கின்றவர்கள் யார்…?
1.அன்பு சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் மாமகரிஷிகள் சப்தரிஷிகள் சூட்சுமமாகச் செயல்பட்டு
2.ஆதி சக்தியின் சூட்சும மூலத்தின் மூலமாக… நம் மீது அருள் ஒளிபாய்ச்சி
3.நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் அவர்கள் தான்.

மனிதன் பெற வேண்டிய பேறு என்னப்பா…? திசை யானைகளாகக் காட்டிய கல் யானைகள் கரும்பு அருந்தியதாகத் திருவிளையாடல் புராணம் விளக்கம் கேட்கின்றாய்.

கல் யானை… “கரும்பு அருந்தியது” என்பதன் மெய்ப்பொருள் என்னப்பா..? “பேரருள் செல்வம்” தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பேரானந்த நிலையைச் சித்தரிக்கும் ஆனந்த நிலையப்பா அது.

கரும்பின் இயல்பான குணத்தன்மைகள் தன் சுவையை… சுவையின் குணத்தை ஈர்த்திட்டே வளர்ச்சியின் வளர்ப்பாகப் பலன் என்று உருவாவதைப் போல்… ஞானத்தின் பங்கு அந்த நிலை பெற… காத்திடும் மகரிஷிகள் செயல் கொண்டிட… சூட்சுமமாய் ஜோதியில் கலந்திடவே அந்த நிலைகள் கூறப்பட்டன.

சிவலிங்கம் என்பது இந்த உலகம் தான். பால்வெளி சூட்சுமத்தில் செயல்படும் நிலைகள் பேரண்ட இருளாக அனைத்திலும் காந்தத்தின் புலமாய் எங்கும் பரவிப் படர்ந்ததைப் “பராசக்தி” என்று கூறிய உண்மை நிலை என்ன…?

சகலமும் ஆவி தான்…! ஆவியின் அமில நிலைகள் தான். எரிகின்ற நெருப்பு அதனுள் இருந்து வெளிப்படுத்தும் புகைத்தன்மை போன்ற மெல்லிய படலங்கள் கண பரிமாணம் கொண்டு… தன் குண நிலைகளுக்கொப்ப “திடக்கோளம்” கொள்கின்ற சூட்சுமத்தின் உண்மைகளை உணர்ந்து பார்.

மறைபொருள் எப்படி உறை பொருள் ஆகிறது…?

1.அனைத்திலும் ஆவியான அமில குணத்தன்மைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி
2.தத்தமக்குரிய குணங்கள், அதனுடன் இணையும் அமில குணங்களுடன் இணைந்து கொண்டிட்டு
3.ஒவ்வொன்றின் குணத்தன்மைகளுக்கொப்ப மேகங்களாக மாறி
4.அந்த அமில மேகங்கள் மூலத்தின் மூலங்களின் தன்மைகளைத் திரவநிலை கொண்டிடும் அமில நிலைகளாகவும்
5.உருவாக்கும் செயல் தன்மைகள் பிறிதொன்றில் மோதி தன் நிலை மாற்றி மற்றொன்றாக உருவாக்கிடும் செயலில் செயல்பட்டு
6.அதன் செயல்பாட்டில் தன் குண நிலைகளை மாற்றிக் கொண்டு செயலுக்குச் செயல்படும் குணங்கள் கொண்டும்
7.அவைகள் உயிரணுக்கள் செயலுக்கு நிறம் மணம் குணம் என்றே கோடான கோடியாகப் பல்கி பெருகி
8.உதிக்கின்ற உயிரணுக்கள் பூதியின் தூசுப்படலம் என்கின்ற தன்மையாக நெருங்கிச் சேர்ந்து
9.ஒவ்வொன்றின் ஈர்ப்பில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகும் நிலையே உறை பொருள் தன்மை (ஆவியாக இருப்பது நீராகி பொருளாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகி பிரபஞ்சமாகும் நிலை).

கோடான கோடி நிறங்கள் மணங்கள் குணங்கள் என்றே பால்வெளியில் படர்ந்து… காந்தத்தின் புலமாக… உறை பொருளில் உருவாகும் நீரமில சக்தியில் ஒன்றுடன் ஒன்று கலந்து… செயலுறும் தன்மைகள் எத்தனை எத்தனையோ நடைபெற்றுக் கொண்டிருக்கும் “இயற்கையின் சக்தியே பேரானந்தப் பெருநிலை…”

சதிபதி

சதிபதி

 

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்றால் வாழ்க்கை நடைமுறையில் புறச்செயல்படும் காரியங்கள் குறிக்கின்ற கலைகள் என்றே எண்ணமிடுகின்றாய்.

வீரம் விவேகம் நளினம் முதற்கொண்டு நாம் காரியங்கள் நிகழ்த்தும் கலைகளும் உண்டு. மகரிஷிகள் உணர்த்திச் செயலுற வந்த மெய்ஞ்ஞானச் சுடராக்கும் கலைகள் அறுபத்தி நான்கினையே இங்கே உரைத்திட வந்தோம்.

எண்ணத்தின் தெளிவு…
1.இக்கணம் நீ என்ன “எண்ண நினைவில் இருக்கின்றாய்…?” என்று வினவினால்
2.“நான் இதை நினைத்தேன்…” என்று கூறுமளவிற்கு மனத்தின் தூய்மை வலுப்பெற்றிருத்தல் வேண்டும்.
3.அந்நிலை வலு கொண்டு விட்டால் கலைகள் தொடக்கம் அச்சரம் ஐம்பதில் தொடங்கும்.

ஓங்காரப் பொருள் காட்டும்
1.“பிரணவம்” என்றே அழைக்கப் பெறும் ஓம்…!
2.அதனுள் மூன்று நிலைகளாக கலைகள் (1)ஈர்த்து (2)சமைத்து (3)அமைதல் என்கின்ற விதமாக கலைகள் ஐம்பது.
3.அதாவது உயிரிலே ஈர்க்கப்பட்டு சமைத்து – ஓ; உடலாக அமைவது – ம்

ஈர்ப்பின் அகரம் பத்தாக… ஈர்த்த பின் செயல் வரும் உகரமாக பதினான்கு செயல் கொண்டு… அமைவு பெறும் மகரம் இருபத்தி ஆறாக ஓம் என்ற பிரணவ கலைகள் ஐம்பது நாற்பூத செயல்பாடலாய் விந்து கலைகள் நான்கு… நாதக்கலைகள் பத்தாக ஆக “அந்த அறுபத்தி நான்கு கலைகளையே சரீரத்தில் கண்டனர் மகரிஷிகள்…!”

இதற்கும் மேல் ஒளியாகும் நிலை ஒன்று சிரசின் உச்சியில் ஈஸ்வர ஜோதி…! ஒளி நிலை பெற மகரிஷிகள் காட்டிட்ட அனிமாது சித்துகளை (அஷ்டமாசித்து) அடைந்து விட்டாலும்
1.அடக்கத்தின் திரு உருவாக ஒளி மண்டலத்தில் உறையும் மனமாகக் காரியமாற்றி… காரணத்துடன் வாழ்வான்
2.அதனின் நிலைக்கு வேறு எந்த நிலையும் நாம் எண்ணிடல் ஆகாது.

இச்சரீர வாழ்க்கையிலும் சிவசக்தி (சதி+பதி) சமேதராகச் சக்தி நிலை பெற்றிடவே உணர்ந்து கொண்டிட வேண்டிய பயன் தரும் நிலை காணுவோம். தாகம் எடுக்கின்றது தாகத்தைத் தணிக்க நீர் அருந்த வேண்டும் என்று மனம் நாடுகின்றது.

இது “சதியானவள்…” (வேகா நிலை) கொள்கின்ற செயலுறும் எண்ணத்தின் நிலையே கோபுரம் போல் உயர்ந்து விளங்குகின்றது. அதுவும் மலையின் மீது அமைந்த கோபுரம்.

“பதியானவன்…” மோகத்தின் வழிப்பாதை பயணமுற்று… அந்த வழிப் பாதையின் தொடரில் பன்மாடங்கள் இளைப்பாரி… நீக்கமுறாத் துயில் வசம் ஆட்படுகின்றான் (பல பிறவி எடுத்த நிலை).

அறிவின் சுடர்தல் தொடங்கி மெய்ஞான விழிப்பு ஏற்படுத்தும் கருத்தினுள் ஒன்றியவுடன் பதியானவன் விழித்துக் கொள்கின்றான்.

விழிப்பு நிலை பெற்றவுடன் வழித்தடங்கல் நிலையினை எண்ணியே செல்லும்
1.வேகத்திற்கு மேல் வேகமாக எண்ணத்தைச் செலுத்தி
2.கோபுரம் வாழ்கின்ற தன் பாகமாம் “சதியின் துணை நாடி…”
3.சதிபதி சிவசக்தி கூடும் நிலைகாட்டி…
4.இரு புறத்தூய்மையும் அகத்தின் வசம் எழ…
5.ஒளிநிலைப் பிரவாக மெய்ஞானச் சுடராக நிலை பெற்றிருக்கும் சூட்சுமம் செயல் கொள்கிறது.

மோகத்தின் நிலை மாற்றும் “இரகசியக் குறிப்புகளை” இங்கே காட்டி விட்டோம். சித்துக்களைப் பற்றியும் கூறி விட்டோம். கலைகளின் வகை இரு நிலைப்படும் நிலையைக் காட்டி “ஆய்வை” உனக்குள்ளே தூண்டி இருக்கின்றோம்.

செயலில் “வேகம்” வேண்டும்.. வேகத்தின் பிரதானம் “நிதானமும்” வேண்டும். எண்ணத்தில் ஆட்டுகின்ற கருத்தே சொல்லியவன் சுருதி கணபதியாக வரல் வேண்டும்.

சகல நிலைகளையும் உணர்த்தி ஏற்றுக் கொண்டிடும் பக்குவத்திற்காகப் பண்படுத்தி விதைத்திருக்கின்றோம்.

“மகரிஷிகள் வாழும் இடத்திற்கு” நாம் செல்ல வேண்டும்

“மகரிஷிகள் வாழும் இடத்திற்கு” நாம் செல்ல வேண்டும்

 

பிறர் படும் துயரத்தைத் துடைக்க உற்று நோக்கி அவர் உணர்வை நுகர்ந்தறிந்த நிலைகள் கொண்டு அவர்கள் தீமைகளை அகற்றப் பொருள் உதவியோ உடல் உதவியோ மற்றதைச் செய்கின்றோம்.

அப்படிச் செய்தாலும்
1.நாம் கண்டுணர்ந்த கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்த உணர்வின் செயல் நமக்குள் வந்திடாது அது இணைந்திடாது
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பற்றி நமக்குள் செலுத்தி
3.தீமையை தனக்குள் பற்றிடாது பற்றற்றதாக்கி
4,யார் உடலில் அந்த தீமைகள் பற்றிக் கொண்டதோ அதைப் பற்றற்றாக்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் நமக்குள் அது வராது துடைத்து அந்தத் தீமைகள் பட்டோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அங்கே நஞ்சுகள் நீங்க வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியால் தீமைகளை அகற்றி மெய் ஒளி காணும் நிலை அவர்கள் பெற வேண்டும் என்று
2.இப்படி நாம் எண்ண வேண்டும். இதனைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

வேதனையை நாம் கண் கொண்டு நினைக்கப்படும் பொழுது அந்தக் கண் அவர்கள் படும் வேதனையை உணர்த்துகின்றது. இந்த வேதனை உணர்வுடன் நாமும் அவருடன் ஒன்றி விட்டால் நாம் அதுவாகத்தான் ஆகின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வினை விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்களுக்குள் படர வேண்டும் என்று
1.மகரிஷிகளுடன் ஒன்றி அந்த உணர்வின் சக்தியை வலுவாக்கி அதைப் பற்றிக் கொண்டு
2.தனக்குள் கேட்டறிந்ததைப் பற்றற்றதாக நீக்கிவிட்டு அது நமக்குள் பற்றிடாது பற்றற்றதாக மாற்ற வேண்டும்.

பின்… அவர்களை அறியாது இயக்கிய அந்த உணர்வுகளில் இருந்து தீமைகள் பற்றிடாது பற்றற்றதாக ஆக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலிலே படர்ந்து தீமைகள் அங்கே அகன்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவருடைய நினைவலைகள் பற்றிட வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுவோம் என்றால்
1.நாம் எண்ணியதை நம் உயிர் வலுவாக ஏற்று
2.மகரிஷிகள் வாழும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

எப்படி எளிமையான உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுகொண்ட மிருகங்களின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அதனிடமிருந்து காத்திடும் உணர்வுகள் விளைந்து விளைந்து அதனின் துணை கொண்டு அதனின் வலு கொண்டு அந்த உடலுக்குள் சென்று அதநின் உருவாகப் பெற்றதோ இதைப் போன்று
1.ஞானிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணுலகில் ஒளிச் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்
2.அவர்களின் உணர்வை நாம் பற்றுதல் வேண்டும்.

அதை அடிக்கடி நாம் பற்றி நமது வாழ்க்கையில் கண்டறிந்த கோபமோ விரோதமோ வேதனையோ அவசரமோ ஆத்திரமோ போன்ற உணர்வுகள் தனக்குள் பற்றிடாது அருள் ஞானிகள் உணர்வைப் பற்றிக் கொண்டு… கேட்டறிந்த பார்த்துணர்ந்த உணர்வு தனக்குள் பற்றிடாது செய்தல் வேண்டும்.

அதே சமயத்தில் யார் உடலில் பற்றியிருந்தாலும் மகரிஷிகள் உணர்வை அவர்கள் பெற வேண்டும் என்று “அவர்களையும் அங்கே பற்ற வைத்தல் வேண்டும்…”

அந்தப் பற்றுடன் அவர்கள் வளர்ந்திடும் நிலைகள் நம் எண்ணத்தால் நாம் செயல்படும் பொழுது அந்த உணர்வின் வலுவாக நமது ஆன்மா வளர்கின்றது. நமது பிறவிக் கடனை நீக்கிட நாம் எண்ணிய நிலைகளை இந்த உயிரே தனக்குள் சமைக்கின்றது… அதை வளர்க்கின்றது.

மனிதன் முழுமை பெற வேண்டிய மார்க்கங்கள் இவை…!

“நிற உலகு…” ஒன்று இருப்பதை மனிதன் அறியவா போகின்றான்…?

“நிற உலகு…” ஒன்று இருப்பதை மனிதன் அறியவா போகின்றான்…?

 

காலம் குறுகியது என்று பல முறைகள் உரைத்திட்டோம்… அதை எத்தனை பேர் அறிவில் தெளிந்து கொண்டனர்…?

பேரண்ட சூட்சும இரகசியத்திற்குள்… காலத்தின் நிலையால்
1.இதுவரை கடந்து சென்றிட்ட வெகு நீண்ட கால நிகழ்வுகள்…
2.எதிர் கொள்ள இருக்கின்ற வெகு நீண்ட காலத்தின் நியதிகள்…
3.இதிலே உன்னுடைய பங்கு எவ்வளவு என்று கூற முடியுமா…?

பேரண்டத்தின் அளவீட்டில் மானிடப் பிறப்பு என்பது அணுவிற்குள் அணுவே. ஈர்த்து உயர்த்திக் கொண்டிடும் செயல் வேகம் கண்டாயா…?

மனிதன் என்ற ஜீவ பிம்ப வாழ்க்கையின் குறுகிய காலத்தினை அறிந்து கொண்டு காலச்சக்கரத்தில் அனைத்தும் மறைந்துவிடும் மாயை…! அதுவே புனிதமாகத் தோன்றும் செயலின் சித்து. சித்து என்பது எதுவப்பா…?

ஜடப்பொருளாகப் புறப்பொருள் காட்டுவது சித்து விளையாட்டு.

சிருஷ்டியின் சித்து சகலமாய்ச் சகலமும் தோன்றிடும்… ஜீவ பிம்பம் காட்டிடும் அனைத்து பொருட்களும்… மற்றும் அதனுள் அடங்குவது ஜடப்பொருள்களும் தான்.

சித்தன் நிலை பெற்றால் சித்து நிலை விளங்கும்.

சகலமும் பொருள்கள் என்றே உரைத்திட்டோம். காலம் குறுகியது என்பதை உணர்ந்து விட்டால் நாம் உரைத்த சகல பொருட்களின் தன்மையும் விளங்கும்.

தோன்றி மறையும் அனைத்தும் வேகம் வேகம் வேகம் தான்…! நிலை பெற்றிடும் பொருள் எது…?

மனித மனத்தின் சிந்தனை ஓட்டம் செயல்படுவதை ஊன்றிப் பார்த்திருப்பாய். இந்தப் புற உலகத்தில் வாழும் வாழ்க்கைக்கே பொருள் தேடுகின்ற மனிதனின் ஆசைக்கு எல்லை உண்டா…?
1.பொருள் தேடும் சிந்தனையில் பேராசை வயப்படுகின்றான்… அந்தப் பொருளுக்காக உலகினை நேசிக்கின்றான்.
2.பொசுக்… என பொருள் மறைந்தால்…? உலகின் கண் பகைமை காட்டுகின்றான்.
3.மனித மனத்தின் முரண்பாடே ஒரு பொருளாக இரு செயல் நிகழ்வுற்று
4.அந்த இரண்டிலும் பாதிப்புக்கு உள்ளாவது பகைதான்… “மனது தானப்பா பகை…!”

இவைகளில் உழலுகின்ற மனிதன் “நிற உலகு…” ஒன்று இருப்பதை அறியவா போகின்றான்…? அந்த வட்டச் சுழற்சியில் இருந்து விடுபட்டு உயரவே இவ்வளவு “கடுமையாக உரைக்கின்றோம்…”

நிற உலகு என்பது “ஒளிதானப்பா…”

இகழ்ந்துரைக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். உலகம் பழிக்கின்ற செயல் இது என வழிகளாக நெறிமுறைகள் வகுத்துத் தந்த மாமகான்கள்… நன்நெறியில் வளர்ப்பாக்கும் செயலில் மனிதன் தெய்வநிலை பெற்றிட மெய்ஞானச் சுடராக விளங்கிட போதனைகள் உரைத்திட்டனர்.

இகழ்ந்துரைக்கும் நிலை மாற்றுகின்ற மனம் வேண்டி உறுதியாக நிலை நின்று மனிதன் செயல் கொண்டால் “உட்பொருள்… தன் பகை நீக்கும்…”

பாடநிலையின் ஆரம்பத்தில் கொடுத்த வினாவிற்கே வருகின்றோம்.

1.மனிதன் புறப்பொருளைப் பிரிந்த ஏக்கத்தால் பேராசையின் அதிர்வு கொண்டிட்ட ஆவேசம்
2.வெறுப்பின் சிந்தனையில்… புற உலகினைப் பகைப்பதாக எண்ணித் தன் மனதையே தான் பகையாக்கி
3.வாசம் செய்திடும் இறை சக்தியை… உட்பொருளை… அகத்தின் அருட் சிந்தனையை… பகை உணர்வு கொண்டுவிடுகின்றான்.

அப்படிப் பகை கொள்கின்ற (தனக்குள்… தனக்குத் தானே) செயலின் வீரியம் எந்த நிலை பயக்கும்…? என உணர்ந்திருப்பாய்.

1.”உட்பொருள்…” தன் பகை நீக்கும் வழி வகைதனைக் காட்டி விட்டோம்
2.தியானத்தின் மேன்மையை அக உணர்வால் உண்ணல் வேண்டும்

சித்து… சடம்… இரண்டிலும் “ஈஸ்வர ரூபம்…” மனித மனத்தின் அகலவொண்ணா பொருள் அதுவே. அதைப் பெற்று உயர்ந்திட எனது ஆசிகள்.

மெய் ஞானிகளுக்கு ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது

மெய் ஞானிகளுக்கு ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது

 

பூமியின் இயக்கச் சுழற்சி அது கதியுறும் ஓட்ட அமைப்பு தொடர்பு கொண்ட கோளங்களாக சூரியக் குடும்ப அமைப்பில் அவை அவை ஈர்த்திடும் நிலைக்கொப்ப வளர்க்கும் வளர்ப்பாக்கி… காலத்தின் சுழற்சியாக இயற்கையின் நிகழ்வில் பூமியில் நடைபெறும் மாற்றங்களை… மனிதன் “விதி” என்று உரைக்கின்றான்.

உடல் நலக் குறைவுபடும் காலத்தை நோய் என்று பெயரிட்டு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையுடன் நோயின் குணம் நாடிப் பத்தியமும் இருக்கின்றோம்.
1.மருத்துவர் அளித்திடும் மருந்தினைக் “கசப்பு” என்று விலக்கிடுவோமா…?
2.இங்கு நோயைப் போக்க வேண்டும் என்ற கருத்தே முதன்மையாகின்றது.

மனிதச் சரீரமும் பூமியும் ஒன்றே. கருத்தொன்றும் செயல் என விலக்கிடுவோமா…? ஆனால் கருத்தொன்றும் செயல் என்பான் மெய் ஞானி.

பூமியின் இயற்கை மாறுதல்களில் பூமித்தாயின் நலன் கருதி…
1.அதை ஏற்றுக் கொண்டிடும் பக்குவ மனது வேண்டும்
2.இவை அனைத்தும் மன வலிமை கொண்டு ஈர்த்திடும் செயலாக…
3.ஜெபத்தின் வளர்ப்பில் வளர்ப்பாக்கவே உரைப்பதெல்லாம்.

கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் வண்ணம் கலந்த நீர் அது எந்த வண்ணமோ அந்த வண்ணத்தையே குடுவையில் காண்கின்றோம். இது மனித மனத்தின் நிலை.

ஆனால் மெய் ஞானிகளுக்கோ ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது.

இந்தக் கலியின் மனித மனத்தின் நிலை உயிர் ஆத்ம சக்தியைக் கேடுறுத்தும் செயலுக்கே செயல்படுகிறது என்று பல முறை கூறிவந்துள்ளேன்.

சாயம் ஏறிய நூல் போல் இன்றைய மனிதன் தான் கொண்டிட்ட தீய எண்ணத்தின் வலுவால் தன் ஆத்மாவையே கொடுமைக்கு உள்ளாக்குகின்றான்.

இதை எந்த வார்த்தையில் உரைப்பது…?

தனக்கு உகந்த இரையை நாடிச் செல்லும் நாரையானது செல்கின்ற தூரம் எவ்வளவு இருப்பினும் அந்தத் தூரத்தைப் பறந்தே கடந்து செல்கின்றது.
1.பறந்தே ஏகுகின்ற அதன் வலிமையை மனதில் கொள்…!
2.”பார்வையின் கூர்மை… அது இரையை நாடுகின்ற நாட்டம்…”

மனிதனுக்கு நரை திரை நாட்டம் ஏற்படுகின்றது பார்வையின் ஒளியும் குன்றுகின்றது. நரை திரை நாட்டத்தின் செயலே உலகோதயம்.
1.அத்தகைய குறைவு நிலைகளை… “போ…!” என்றால் போகும்படி செய்வார்களா…! மெய் ஞானியர்… இல்லை…!
2.”ஆத்ம பலம் நாடும்… சிந்தனா சக்தி அன்றோ இங்கே முதன்மை வழி…”