மரண பயத்தையும்… பதட்டத்தையும்… அகற்றக்கூடிய உபாயங்கள்

Polaris protection

மரண பயத்தையும்.. பதட்டத்தையும்… அகற்றக்கூடிய உபாயங்கள் 

பாம்போ மற்ற உயிரினங்களோ ஒரு தரம் ஒன்று எதிர்த்துத் தாக்கி விட்டால் அதைக் கண்டு அஞ்சும்.

ஒரு நாய் குரைத்துக் கொண்டு கடிக்க வருகிறதென்றால் ஒரு கல்லை எடுத்து அதை நீங்கள் எறிந்தீர்கள் என்றால் அடுத்த முறை உங்களைக் கண்டாலே அது குரைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விடும்.

ஆனால் அதே சமயத்தில் அந்த நாய் வரும் போது எதிர்த்துத் தாக்குமோ…? என்ற எண்ணத்தில் நீங்கள் ஐய்யய்யோ… ஐய்யய்யோ…! என்று ஓடினால் விரட்டி கொண்டு வரும். நம் உணர்வுக்குத்தக்க நுகர்ந்த பின் அது தாக்கும் நிலைகள் வருகின்றது.

கல்லைக் கொண்டு அடித்தால் இந்த உணர்வு வலியான பின் “நம்மைத் தாக்குபவன்” என்ற உணர்வு கொண்டு அஞ்சி ஓடுகிறது.

இதைப்போன்ற இயற்கையின் நியதிகளை நாம் தெரிந்து கொண்டால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் வலுவான உணர்வை எடுக்கப்படும் போது தீமையான உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

தீமைகள் வரும் சமயம் பயமானால்… “ஈஸ்வரா…!” புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அங்கே புருவ மத்தியில் சேர்த்து அடைத்துப் பழக வேண்டும்.

1.அப்படிச் சேர்த்து விட்டால்
2.உயிரில் பட்டு அந்தப் பய உணர்வு நமக்குள் உள் செல்லாதபடி
3.மன உறுதி கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று
4.சிந்தித்துச் செயல்படும் சக்தி வலுவாக வரும்.

உதாரணமாக காட்டுக்குள் செல்லும்போது வழியில் நரி இருக்கிறது என்று நாம் அதைக் கண்டு பயந்து ஓடினால் துரத்தும். அப்படித் துரத்தும் சமயம் நாம் வேகமாக ஓடி வரும் பொழுது ஒரு மரத்தின் அருகில் வந்து “சடார்…!” என்று விலகி விட்டால் போதும்.

குருநாதர் சொன்ன முறைப்படி நான் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லும் பொழுது இதே போல ஒரு சமயம் யானை என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. மற்றொரு சமயம் புலி என்னை துரத்திக் கொண்டு வருகிறது. இதெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

புலி வேகமாக வந்த பின் “நேராக… மரத்தை நோக்கி ஓடு…” என்றார் குருநாதர். நேராக ஓடிய பின் “டப்…” என்று திரும்பிக் கொள்…! என்றார். அவர் சொன்ன மாதிரி நான் செய்ததும் வந்த வேகத்தில் மரத்தில் முட்டிக் கொண்டது புலி.

அதே மாதிரி இன்னொரு சமயம் யானை எம்மைக் குறி வைத்துத் துரத்துகிறது. நேராக மரத்தை நோக்கி நேராக ஓடி “டபக்..” என்று விலகி நான் அடுத்த மரத்தின் பக்கம் ஓடியவுடனே யானை வந்த வேகத்தில் பிரேக் (BRAKE) போட முடியாதபடி மரத்தில் போய் முட்டுகிறது.

இதே போல பல நிலைகள். இவையெல்லாம் மனிதனால் செய்யக் கூடிய நிலைகள்.

மரத்திலே இரண்டு முறை முட்டிய உடனே யானை சோர்ந்து போகிறது. விரட்டிப் பார்க்கிறது… இரண்டு அடி பட்ட உடனே தன்னாலே விலகி விடுகிறது. இந்த உணர்வின் இயக்கங்கள் மனிதனானவன் தன்னைக் கொன்று விடுவான்…! என்று எண்ணுகிறது.

தனி ஒரு யானையாக இருந்தால் மனிதனை விரட்டுகிறது. யானை கூட்டமாக இருந்தால் மனிதனை விரட்டாது. ஆனால் அது பயமில்லை. பயத்தால் தாக்குவது தான் யானை.

அதிலிருந்து வந்தவர்கள் தான் நாம். ஆகையினால் “மனிதன் அனைத்தும் அறிந்தவன்…!” என்று உணர்வின் அலையால் மற்ற உயிரினங்கள் அறிந்து கொள்ளும் சக்தி வருகின்றது.

1.ஒரு உயிரினம் மற்றதை எப்படித் துரத்துகிறது…?
2.நாம் எப்படி அஞ்சி ஓடுகின்றோம்…?
3.நுகர்ந்து விட்டால் அந்தப் பயமான அதிர்ச்சியான உணர்வுகள் நம் உடலுக்குள் என்ன செய்கிறது…?
4.இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன…? என்று
அதையெல்லாம் அனுபவத்தில் அறிந்து கொள்வதற்காகத்தான் நமது குருநாதர் காடு மேடு மலைகளிலெல்லாம் அலையச் செய்து இயற்கையின் உணர்வுகளை அறிந்துணரும்படி செய்தார்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?

1.இவையெல்லாம் அறிவால் அறிந்து…
2.உணர்வால் பதிவாக்கி…
3.அந்த உணர்வின் தன்மையை மீண்டும் எண்ணும்போது அந்த உணர்ச்சிள் கிளர்ந்து
4.நம்மைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்க நம்மைச் செயல்படுத்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

 

நமக்குள் பொங்கச் செய்ய வேண்டிய சக்தி

Pongalo pongal

நமக்குள் பொங்கச் செய்ய வேண்டிய சக்தி…!

தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்தால் தண்ணீர் அந்த நிறத்தின் தன்மையாக முழுமையாக இருக்கிறது. அதற்குள் சிறிதளவு (நல்ல) தண்ணீரை மீண்டும் ஊற்றும் போது அதே நிறமாகத் தான் தெரிகிறது.

ஆனால் அதிகமாக நல்ல நீரை ஊற்ற ஊற்ற அந்த நிறம் மாறுகிறது.

அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. அதிலே இந்த நன்னீரை விட விட அழுக்கு தண்ணீர் பொங்கி வெளியே வருகிறது. நல்ல நீர் சேரச் சேர,,, சேர… அழுக்கின் தன்மை குறைந்து முழுவதும் நல்ல நீராக வருகின்றது.

இதைப் போலத் தான் நுகர்ந்தது (சுவாசிப்பது) உயிரிலே படும் போது உணர்வாகின்றது. உடலுக்குள் செல்லும் போது உடலில் உள்ள எதிர் அணுக்கள் அதை மாற்றப்படும் போது அது எப்படி ஆகிறது…?

ஏனென்றால் அதனுடைய வலு அது.

அதைக் குறைக்க வலுவான உணர்வுகளை அதிகமாகச் சுவாசிக்கும் போது அது எப்படி அடங்குகின்றது…?
1.சுவாசித்ததை முதலில் எதிர்க்கிறது.
2.ஆனால் அதைக் காட்டிலும் வலிமையானதை அதிகமாக்கி விட்டால் குறைகிறது.

“சொல்வது புரியவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உன்னுடைய உடலில் எப்படி உரு மாறுகிறது என்பதனை அனுபவ ரீதியாகக் கொடுத்தார்.

நாம் நல்லவர்களாக இருப்பினும் மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த குறையான உணர்வுகள் நல்ல குணங்களுக்குள் கலந்து விடுகின்றது.

அதைக் குறைக்க வேண்டும் என்றால் நமக்குள் பொங்க வேண்டியது எது…?
1.நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பொங்கச் செய்து (அதிகமான அளவில் கூட்டி)
2.நமக்குள் வந்த இருளைத் தணியச் செய்ய வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் உணர்வின் அறிவைக் கூட்ட வேண்டும்

அப்பொழுது வெகு தொலைவிலிருந்து வரும் இருள்களையும் அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுகின்றோம். அந்தத் துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கிறது.

வெகு தொலைவில் வரும் உணர்வுகளைப் பலவீனப்படுத்தி உணர்வின் ஒளியாக மாற்றி ஒளியின் உடலாக இருந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வினை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.உயிர் ஒளியாக இருக்கிறது
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாம் பெறுகின்றோம்.

 

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்
1.அந்தத் துருவ தியான நேரத்தில்
2..பொங்கும் மங்கல உணர்வின் தன்மையை நினைவு படுத்தி
3..நீங்கள் எங்கே இருந்தாலும்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்று
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிரார்த்தனை செய்து கொண்டேயிருக்கின்றேன்

அந்த நேரத்தில் நீங்களும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தப் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று சிறிது எண்ணினாலும் அந்த நறுமணங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துத் தீமையை விளைவிக்கும் நிலைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக உருவாக்கும் போது கல்கி.

1.உயிர் ஒளியாக இருக்கிறது
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் வழி முறை

Bramha - creation

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் வழி முறை 

அகஸ்தியன் தாய்க் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் நஞ்சை வென்றிடும் சக்திகளை அவன் பெற்றான்.

அதன் வழில் நஞ்சை நீக்கும் ஆற்றல்கள் அவன் உடலுக்குள் வளர்கின்றது. அவன் ஒருவரிடம் வளர்ந்தது மட்டுமல்லாதபடி திருமணம் ஆனபின் தன் மனைவியிடமும் அதையெல்லாம் சொல்லுகின்றான்

அவர்கள் இருவரும் அருள் உணர்வுகளை எடுக்கும் போது நஞ்சை வென்றிடும் உணர்வின் அணுக்கள் இருவர் உடலிலும் விளைகின்றது.

நஞ்சை வென்றிடும் உணர்வுகளை இருவரும் வளர்க்கப்படும் போது பேரண்டத்திலிருந்து வரும் எத்தகைய கடும் விஷமாக இருந்தாலும் அதை ஒடுக்கி ஒளியாக மாற்றும் தன்மையாக வருகின்றார்கள்.

ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக ஆகின்றார்கள்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ் நாளில் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றினானோ இதைப்போல நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நினைத்த மாத்திரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கவர கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவர் சண்டை இடுகின்றார் என்றால் உணர்வின் வேகம் அந்த வலிமை வருகின்றது.

எனக்கு இப்படித் “துரோகம் செய்தான் பாவி…! என்றால் அமெரிக்காவில் இருந்தாலும் இந்த உணர்வுகள் புரையோடி உணவு உட்கொள்ளும் போது நிலையை மாற்றிவிடும். நுரையீரலுக்குள் போனால் மரணம் கூட சம்பவிக்கும்.

வாகனம் ஓட்டும் போதோ தொழில் செய்யும் போதோ “துரோகம் செய்தான்…” என்று எண்ணினால் இந்த உணர்வு சிந்திக்கும் தன்மையைச் செயலிழக்கச் செய்து அங்கே எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றது.
1.அப்போது அவர்களுக்கு அங்கே நஷ்டம்.
2.இங்கே நினைக்கும் பொழுது இவருக்கும் நஷ்டம்.

அதே சமயத்தில் “நண்பன் எனக்கு நல்ல சமயத்தில் உதவி செய்தான்…!” என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. இவனுக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது,

அங்கே விக்கல் ஆகும் போது “யாரோ நினைக்கின்றார்கள்…” என்று அங்கேயும் நல்ல செயலை உருவாக்குகின்றது.

நல்ல குழந்தை என்று மெச்சிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் படிக்கப் போன இடத்தில் ஒரு மாதமாக நமக்குத் தகவல் வரவில்லை என்றால் “என்ன ஆகிவிட்டதோ…?” என்று இங்கே வேதனைப்படுகின்றோம்.

யாருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றதோ வேதனைப்பட்டு மீண்டும் நினைவை அவர்கள் பால் பாய்ச்சப்படும் போது அந்த குழந்தையின் உடலிலே விஷத்தின் தன்மை பாய்ந்து அங்கே சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது.

தொழில் செய்து கொண்டிருந்தால் தவறிழைத்துக் குற்றவாளி ஆக்கிவிடும். வெளியிலே நடந்து செல்லும் போது சிந்தனை தவறி மேடு பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுகச் செய்துவிடும் ஆக்ஸிடென்டும் ஆகும்.

இதெல்லாம் எங்கிருந்து வருகின்றது? இயற்கை எப்படி நம்மை மாற்றுகின்றது? என்று அந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்ந்து கொண்டால் அதை நம்மால் மாற்றியமைக்க முடியும். பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.

சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வு வரும் போது உயிர் அதை பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டிக்கின்றது.

ஆனால் ஆறாவது அறிவு கொண்டு வேதனையை நீக்கும் உணர்வைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால் தீமைகளை அகற்றும் உணர்வுகள் நமக்குள் சிருஷ்டியாகும். இது சந்தர்ப்பம்.

இதைப் போன்ற சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரொளியான உணர்வுகளைக் கலந்து கலந்து அடிக்கடி உபதேசிக்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று தியானித்துத் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் கணவன் எண்ண வேண்டும் அதே போல தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் எண்ண வேண்டும்.

கணவன் மனைவி இரு உணர்வும் கருவாக்கி ஒளியின் அறிவாக மாற்றி நஞ்சை வென்றிடும் சக்தியை இப்படிக் கூட்டிக் கொள்ள முடியும்.

ஞானகுரு உபதேசித்த அருள் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றால் நம் தீமைகள் போக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வர வேண்டும். ஆனால்
1.குருநாதர் செய்வார்…,
2.”அவர் தான் செய்து தர முடியும்…!” என்று எண்ணினால் இது பிழையாகும்.

ஒரு செடியின் தன்மையை உருவாக்கிக் கொடுத்து நீரை ஊற்றி அதை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கொடுக்கின்றோம்.

1.குருநாதரே செடியையும் வளர்த்துக் கொடுப்பார் என்று சொன்னால்
2.அது எப்படி இருக்கும்…!

ஏனென்றால் குழந்தை மீது உள்ள பாசத்தால் “உணர்வுகள் ஒன்றாகும்போது…” நீங்கள் எண்ணி எடுக்கும் வேதனை உணர்வுகள் அது குழந்தையைத் தாக்கி அங்கே தீமையை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் உங்கள் உடலிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருக்கின்றேன்.

நான் எண்ணுகின்ற மாதிரி நீங்களும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் இது உங்களுக்குள் அரும் பெரும் சக்தியாக உருவாகும்.

1.உங்கள் எண்ணத்தால் தான் உங்களைக் காக்க முடியும்.
2.நான் காப்பாற்றுவேன் என்று சொன்னால் நான் கடவுள் அல்ல.
3.உங்கள் உயிர் தான் கடவுள்.

ஆகவே குருநாதர் சொன்னபடி  “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும்” என்று எண்ணி அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குக் கொடுக்கும் அளவு – “DOSAGE”

Dhuruva star - Polaris

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குக் கொடுக்கும் அளவு – “DOSAGE”

நாம் தியானத்தின் மூலம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடல் முழுவதும் படர்ந்து நம் உடலிலுள்ள ஜீவ அணுக்களில் இந்த உணர்வின் ஆற்றல் பெருகுகின்றது.

அதன் மூலம் விண்ணில் பரவிக் கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெறும் தகுதியும் இந்த மனித வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் காணும் நிலைகளும் பெறும் தகுதியினைப் பெறுகின்றோம்.

1.உங்கள் நினைவலைகளை விண்ணில் செலுத்தப்பட்டு
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் கதிர் பொறிகளை உங்கள் உடலுக்குள் பரவச் செய்து
3,உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் பெறும்படி செய்வது தான்
4.குருநாதர் காட்டிய வழியில் எமது வேலை.

இந்த முறைப்படி செய்தால் துருவ தியான நேரத்தில் உங்களுக்குள் புதுப் புது உணர்வுகள் பரவி இருக்கும்.
1.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் அந்த ஒளிக் கதிர்கள்
2.அலைகளைப் போன்று சுழன்று கொண்டிருப்பதையும் உங்களால் காணமுடியும்.

இதை யாரெல்லாம் பெறுகின்றனரோ அவை அனைத்தும் உங்கள் வாழ்வில் இந்த மனித வாழ்க்கையில் சேரும் தீமைகளை அகற்றி உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கச் செய்யும்.

நீங்கள் சுவாசிக்கும் உணர்வுகள் தெளிந்த மனதுடன் வாழ்ந்திடவும் இந்த வாழ்க்கையில் எத்தகைய எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் நுகர்ந்தறியும் உணர்வுக்குள் தீமைகளைப் பிளந்திடவும் முடியும்.

அந்தத் தீமையற்ற உணர்வின் தன்மை அறியும் ஆற்றலும் உங்கள் நினைவிற்குள் வரப்பட்டு உடலில் உள்ள அணுக்களை ஒவ்வொரு நொடிகளிலும் இந்த விண்ணின் ஆற்றலை ஒளிக்கதிர்களாக மாற்றும் திறன் பெறுவீர்கள்.

இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் மறவாது இதைச் செய்யுங்கள்.

அதைப் பெறும் தகுதியை துருவ நட்சத்திரத்திலிருந்து விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம். இதே நினைவினை
1.விண்ணிலே நீங்கள் எண்ணி ஏங்கும் போதெல்லாம்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாகி
3.உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்கே செல்லும்.

விண்ணுலகில் அதாவது வானவியலில் விளைந்த உணர்வுகள் புவியில் ஈர்க்கப்பட்டு தாவர இனங்களாக வளர்க்கப்பட்டு தாவர இனங்களில் உணர்வின் செயலாக உயிரினங்களில் எண்ணங்கள் உருவாக்கப்பட்டு அது பல கோடிச் சரீரங்களை நாம் கடந்து வந்து இன்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.

எத்தனையோ வகையான இன்னல்களிலிருந்து விடுபடும் எண்ணங்கள் நமக்குள் உருவாகி அதனின் உணர்வின் வலுவாக உணர்வுகள் வலுப்பெற்று உடல்கள் பரிணாம வளர்ச்சியாகி வந்துள்ளோம்.

நம்மை மனிதனாக உருவாக்கிய இந்த உயிரால் இந்த உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை தான் கார்த்திகேயா என்று நாம் எதனையும் அறிந்திடும் ஆற்றலும் தெளிந்திடும் மனமும் கொண்டவர்கள் நாம்.

இருளைப் பிளந்து அங்கிருக்கும் பொருளைக் காணும் நிலைகள் பெற்றது நமது ஆறாவது அறிவு. ஒரு தீபத்தை ஏற்றினோம் என்றால் அங்கே இருளை மாய்த்து விட்டுப் பொருள் இருக்கும் நிலைகளை நாம் காணுகின்றோம்.

இதைப்போன்றுதான் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கதிர்களை உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில்
1.சிறுகச் சிறுகச் சேர்க்கச் செய்கின்றோம்.
2அதிகமாகச் சேர்த்தால் உங்களால் தாங்க முடியாது.
3.அது உடலிலே சூடாகி விடும்.
4.அதே சமயத்தில் அதனுடைய வேகத் துடிப்புகளை நாம் தாங்கும் சக்தி இல்லை.

அதனால் தான் ஒவ்வொரு நொடிக்கும் இந்தத் துருவ தியான நேரங்களில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் ஈர்ப்புக்குள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

சிறுகச் சிறுக உங்கள் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் பரவச் செய்து ஒவ்வொரு அணுக்களிலும் இதை இணைக்கும்படிச் செய்கின்றோம்.

அணுக்கள் என்றால் நம் உடலில் எத்தனையோ விதமான குணங்களை எண்ணியுள்ளோம். வளர்த்துள்ளோம். அதன் உணர்வின் தன்மை கொண்டு அணுக்கள் விளைகின்றது.

அந்த அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிர்களை இணைக்கப்படும் போது அந்த அணுக்களில் விளைந்துள்ள தீமைகள் சிறுகச் சிறுகக் குறையும்.

உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்கே செல்லும். அந்த விண்ணின் ஆற்றலைப் பருகும் தகுதியைப் பெறுவீர்கள்.

எந்த விண்ணில் இது உரு பெற்றதோ அந்த விண்ணில் உரு பெற்ற உணர்வின் தன்மையை நுகர்ந்து ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றான் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான நிலைகள்.

அதைப் பின்பற்றியவர்கள் அனைவரும் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக என்றும் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் பெரு நிலையாக என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.அதன் வழி நாம் சென்றால்
2.அந்த எல்லையை அடைய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக உங்களை எல்லாம் இணைக்கின்றோம்

 

Polaris - star.jpg

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக உங்களை எல்லாம் இணைக்கின்றோம் 

பிறருக்குத் தர்மம் செய்கின்றேன் என்று சொல்வார்கள். அவர்கள் வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றப் போகின்றேன் என்று சொல்வார்கள்.

அந்த வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து அந்த வேதனைகள் எல்லாம் இவருக்குள் விளைந்து யார் மேல் பற்று கொண்டாரோ அவரின் உடலுக்குள் செல்வார். அந்த உடலுக்குள் சென்று அந்த ஆயுள் மெம்பராகிவிடுவார்.

“தர்மம் செய்வது தப்பா…?” என்று கேள்வி கேட்காதீர்கள். தர்மம் செய்யவேண்டும். அதே சமயத்தில்
1.தீமை நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பர்களின் கூட்டத்துடன் இருக்க வேண்டும்.

நீங்கள் காசு கொடுத்து தர்மம் செய்தாலும் அவனுக்கு நல்ல ஒழுக்கம் இல்லையென்றால் அவன் சாப்பிட்டுவிட்டுக் குறும்புத்தனம் செய்வான்.

பார்த்தால் நமக்கு வேதனை வரும்.

நல்லது செய்தாலும்… அதில் ஒருவர் தவறு செய்யும் பொழுது “இப்படிச் செய்கின்றார்களே…” என்று இரண்டு மடங்கு நாம் வேதனைப்படுவோம்.

அப்பொழுது வேதனையின் உணர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆயுள் மெம்பராகச் சேர்கின்றார்கள். ஆகவே எந்தத் தர்மத்தைச் செய்தாலும் “வேதனை என்ற உணர்வுகளைச் சுத்தப்படுத்தும் உணர்வுகள்” நமக்குள் வரவேண்டும்.

1.நாம் பரிவும் பண்பும் கொண்டு
2.பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும்
3.வெறுப்படையும் வேதனைப்படும் உணர்வுகளை எடுத்து
4.நம்மைப் படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையிலிருந்து விடுபடவேண்டும்.

அதற்காகத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் நினைவைச் செலுத்திப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்தோம் என்றால் யாரால் நமக்குக் கோபம் வந்ததோ அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மை வரும்.

நாங்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறவேண்டும், எங்கள் பார்வை எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால்
1.நமக்குள் வரும் வேதனை கோபம், ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளைத் தடைப்படுத்தி
2.நோய் வராது நம்மைக் காக்கும்.

விஞ்ஞான அறிவு கொண்டு T.V. ரேடியோ அலைகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். எந்த அலைவரிசையில் ஒளிபரப்பு செய்கின்றார்களோ அதே அலைவரிசையை வைத்து நம் வீட்டில் பார்க்கின்றோம்.

அதே மாதிரி நீங்கள் கோபமாக இருக்கக்கூடிய நிலையை எடுத்துக் கொண்டால் நாம் அமைதியாக அமர்ந்திருந்தாலும்,
1.நாம் சோர்வுடன் இருக்கும்பொழுது
2,இந்தக் கார உணர்ச்சிகள் முன் வந்தவுடன்
3.”நமக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்கள்…” என்ற எண்ணம் வரும்.

நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கோ இருப்பான். அதை எண்ணும்பொழுது நமது பல் கடு கடுப்பாகிவிடும். இது மாதிரி நேரங்களில் நாம் தியானத்தில் அமர்ந்தால் அந்த எண்ணம் தான் வரும். தியானம் வராது.

1.நான் தியானமிருந்தேன்
2.”எனக்கு வரவே மாட்டேன் என்கிறது…” என்பீர்கள்.
3.காரணம் அந்த உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது.

நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கிருந்தாலும், அவன் உணர்வு வந்தவுடன் அவன் உருவம் நமக்கு நிழற் படமாகத் தெரியும். T.V ஐ எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்தப் படம் தெரியும். அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் எண்ணமாக வரும்.

இதே மாதிரி அருள்சக்தி உங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
1.நீங்கள் நினைத்தவுடன் அதை எடுத்து இந்த உணர்வுகளை மாற்றமுடியும்.
2.அந்த மாதிரி மாற்றுவதற்குண்டான சக்தி நீங்கள் பெறுவதற்குத்தான்
3.துருவ நட்சத்திரத்தை உங்களுக்குள் பதிவு செய்வது.

நம் குருநாதர் துருவ நட்சத்திரத்தை எடுத்தார். அவரை எண்ணி எடுக்கும்பொழுது அந்த அருளை நான் பெற முடிகின்றது.

அதே சமயத்தில் அவர் குரு வழியில் ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதன் உணர்வை எடுத்து ஆயுள் மெம்பராகச் சேருகின்றீர்கள்.

1.தீமைகளை நீக்கக்கூடிய ஆயுள் மெம்பராகச் சேருகின்றீர்களேயொழிய
2.தீமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக அல்ல.

ஆகவே நாம் எந்த ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தால் தீமையை நீக்கிவிடும்.

துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நமக்குள் மோதச் செய்ய வேண்டும்

தியானிக்கும் முறை

நல்ல சக்திகளை நமக்குள் சேர்க்கும் முறையும், தீமைகளை அப்புறப்படுத்தும் முறையும்

1. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நமக்குள் மோதச் செய்யவேண்டும்

எப்படி நாம் காற்றடிக்கும் பம்பை வைத்துக் காற்றடிக்கின்றோமோ.., பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது.., “அதிலுள்ள பிஸ்டன்” இழுத்துத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றதோ.., இதைப் போல நம் உயிரின் ஈர்ப்பு அது துடிக்கும் பொழுது.., அதனின் “ஈர்ப்பின் சக்தி” அதிகமாகின்றது.

நாம் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் அழுத்தமாக எண்ணி உயிரின் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.

அப்பொழுது, பூமியின் வடக்குத் திசையில் துருவப் பகுதியில் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்த துருவ நட்சத்திரத்தை எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருக்க வேண்டும்.

நம் நினைவுகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி நினைவுகளை அதிலே நிலை நிறுத்தி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியைப் புருவ மத்தி வழியாக நுகர வேண்டும்,

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் இளம் நீல ஒளி அலைகளை உயிர் வழியாக

  1. நாம் நுகர்ந்து.., சுவாசித்து
  2. கவர்ந்து..,
  3. இழுத்து..,
  4. புருவ மத்தியில் (நமக்குள்) மோதச் செய்ய வேண்டும்.

“இப்படி மோதச் செய்யும் பொழுது” ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும் அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது.

அப்பொழுது நம் உடலிலே “காந்த சக்தி” கூடுகின்றது. இந்த வேகத்துடிப்புடன் நம் சுவாசத்தை மேல் நோக்கி எண்ண வேண்டும்.

  1. சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்

அவ்வாறு இழுத்துச் சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் “நம் உயிருடன் சுழற்சியாகி” அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன் உயிரின் காந்தத் துடிப்புக்குள் மோதியவுடன்.., “அதனுடைய நுண்ணிய அணுக்கள்” அந்த உணர்வினுடைய நிலைகளைக் கவரச் செய்கின்றது.

புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை “ஈஸ்வரா.., என்று புருவ மத்தியில் எண்ணி.., உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது” எந்த பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ அங்கே அந்த உணர்வின் நிலைகள் “ஊடுருவிச் செல்லும்” நிலைகள் இருக்கின்றது.

இந்த அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி உடல் முழுவதற்கும் செல்கின்றது. அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்கின்றது.

இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்.

தீமைகளைக் கண்ட அடுத்த கணம் மேலே சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்தால் உடனடியாக அந்தத் தீமையான உணர்வலைகள் நம் ஈர்ப்பை விட்டுக் கடந்து செல்லும்.

ஒரு மேக்னட் ஈர்க்கும் நிலையை மாற்றிவிட்டால் எப்படி விலக்கிச் செல்கின்றதோ அதைப் போல நமக்குள் தீமை புகும் நிலையை தீமை புகாது தடுக்கும் பாதுகாப்பு அரணாக அமையும்.

இவ்வாறு நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும். “நம் ஆன்மா நலமானால்..,” உயிர், உடல், எண்ணம், உணர்வு, சொல், செயல் அனைத்துமே நலமாகும்.

செய்து பாருங்கள்.

engine

துருவ நட்சத்திரத்துடன் நம்மை இணைத்துக் கொண்டால், தீமைகள் புகாது (REMOTE) தடுத்துவிடலாம்

1. அருள் உணர்வுகளை நமக்குள் இயக்கமாக்கி,

தீமைகளை எப்படித் தடுக்க வேண்டும்?

யாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

அருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்? தீமைகளை எப்படித் தடுக்க வேண்டும்? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.

“சாமி சொன்னார்கள், மறந்துவிட்டது” என்று இருக்கக்கூடாது. அருள் உணர்வுகளை உங்களுக்குள் “ஆழமாகப் பதிவு” செய்து கொள்ள வேண்டும்.

இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ, அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது, அதை நாம் உற்றுக் கேட்கும் பொழுது அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.

ஆனால் பிறர், தான் சொல்லும் கஷ்டத்தைக் கேட்கவில்லை என்றால், “என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார், நாம் சொல்லுகிறோம், காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறது” என்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

ஆகையினால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, வேதனையின் உணர்வுகளைக் கேட்டால்,அதனைச் செவியுடன் நிறுத்திக் கொண்டு, உள்ளுக்கே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது.

நம்முடைய எண்ணங்கள் துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது, பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளை தன்னுள்ளே கவராது.

இப்பொழுது, யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம், நீங்கள் “நம்முடைய வீட்டில் செய்யவேண்டிய வேலை என்ன, வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ, ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால் யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

2. துருவ நட்சத்திரத்துடன் நம்மை இணைத்துக் கொண்டால் தீமைகள் நம்மைப் பாதிக்காது

ஆகையால் ஒருவர் நம்மிடம், தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம், துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போம் என்றால், அந்த தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.

அவர்கள்சொல்லும்உணர்வுகள்செவிகளில்கேட்கும்,

ஆனால் ஈர்க்காது. இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

இன்று, எத்தனையோபேர்எம்மிடம்கஷ்டங்களைநிவர்த்திக்கவருகின்றார்கள், அவர்களுடையவேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம்அதைஈர்ப்பதில்லை.

யாம், எம்மைத் துருவ நட்சத்திரத்தின்உணர்வுகளுக்குள் இணைத்துக்கொள்வதால் அவர்கள் என்னசொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.

அதன் பிறகு, யாம் கோபமாக என்ன சொல்வோம். “போங்கள்…, உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…,”  என்று சொல்வோம்.

அப்படி யாம் சொன்னால், “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே” என்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால்,

அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை

உடனே தாங்கி, மடக்கிஅனுப்புகின்றோம்.

நீங்கள்சாமிநம்மைக் கோபித்துக்கொண்டார்என்றுசொன்னால், யாம்என்னபண்ணுவது. அப்படியானால், அவர்கள்சொல்லும்கஷ்டத்தையாம்ஈர்க்கவேண்டுமா?

யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.

மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம், நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும்.

ஆகையால், இந்த தீயஉணர்வுகள் உங்களிடத்தில்வராதுதடைப்படுத்தக் கற்றுக்கொள்ளவெண்டும்.

இவ்வாறு, தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்த தியானத்தை சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும், எமது அருளாசிகள்.