கடவுள் தனித்து ஒருவன் இல்லை

கடவுள் தனித்து ஒருவன் இல்லை

 

அடிக்கடி ஞாபகப்படுத்துவது எதை ஆரம்பித்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்று நாம் செயல்படுத்துகின்றோம். காரணம் நமது உயிர் “ஓ…” என்று இயங்கிக் கொண்டே உள்ளது.

இதைத்தான் ஓ என்று ஞானிகளால் காரணப்பெயர் சூட்டப்பட்டது. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகின்றது. ம் என்று நம் உடலாக மாற்றுகின்றது அதனால் தான் ஓம் ஈஸ்வரா குருதேவா.

1.நான் எண்ணியதை உருவாக்குகின்றாய்.
2.என் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் நீயே குருவாக இருக்கின்றாய் என்ற பொருள்படும்படித் தான்
3.இதை நாம் அடிக்கடி பயன்படுத்துவது.

ஈசன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… ஆண்டவன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… கர்த்தர் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்…!

ஆகவே நமக்குள் இந்த உயிர் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை ஆட்சி புரிகின்றது… அதை இயக்குகின்றது… என்ற பொருள் படும்படித் தான் உணர்த்தியுள்ளார்கள்.

ஆண்டவன் என்று சொல்லும் பொழுது உடலுக்குள் இருக்கும் அனைத்தையும் ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்தான். ஆகவே
1.அவனன்றி அணுவும் அசையாது என்பது போன்று
2.நம் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் இந்த உடலில் உள்ள ஒரு அணுவும் அசையாது.
3.அதனால் தான் அவன் இன்றி அணுவும் அசையாது என்று சொல்கின்றோம்.

கடவுள் இல்லை என்றால் எதுவும் அசையாது என்பார்கள்.

நமக்குள் அந்த உயிர் கடவுளாக நின்று இயங்குகின்றது.
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அது எத்தகையதாக எண்ணுகின்றோமோ அவை அனைத்தும் நம் உடலாக இறையாகி…
2.இறையின் உணர்வுகள் நமக்குள் அணுவாகி அணுவின் சக்தியாக நமக்குள் இயங்கப்படும் பொழுது… நம்முள் நின்று இயக்கம் கடவுளாகின்றது.

ஆகவே கடவுள் என்று ஒருவர் தனித்து யாரும் இல்லை.

நமக்குள் பல விதமான குணங்களும் பல விதமான உணர்வுகளும் நம்மை இயக்கிக் கொண்டே தான் உள்ளது… நாம் இயங்கிக் கொண்டுதான் உள்ளோம்.

நாம் கோபமாகப் பேசுகிறோம் என்றால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் உருவாக்கி… அணுவாக்கி உடலாக்கப்படும் பொழுது நமக்குள் அது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் செயலாக இயக்கப்படும் பொழுது… அதற்குத் தெய்வம் என்று பெயர் வைக்கிறார்கள்… காரணப்பெயர்.

அதே சமயத்தில் நமக்குள் நின்று அது இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நாம் நினைக்கின்றோம் அதைப் பதிவாக்கிவிடுகின்றோம்.
1.மறுபடியும் அதை நினைத்தோம் என்றால்
2.அது குருவாக வந்து அந்தத் தெய்வமாக நம்மை இயக்குகிறது என்று பொருள்.

ஆகவே அந்த அணுவின் தன்மை நமக்குள் இங்கே நிலை கொண்டிருந்து அதே உணர்வை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கிறது என்றால் “உருவாக்கிக் கொண்டே இருக்கும்…”

ஒரு வித்தினை மண்ணிலே ஊன்றி விட்டால் அது செடியாகித் தன் இனத்தின் வித்தினை உருவாக்குவது போன்று…
1.நமக்குள் கடவுளாக இருந்து அந்தக் குணத்தின் தன்மையைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் என்று பொருள்.
2.ஆக… கடவுள் தனித்து ஒருவன் இல்லை… இயக்கத்தை ஞானிகள் இவ்வாறுதான் உணர்த்தி உள்ளார்கள்.

உயிரின் இயக்கம்

உயிரின் இயக்கம்

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் நமது உயிரை ஈசனாக மதித்து உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குரு என்ற நிலையில் மதித்தல் வேண்டும்.

ஓம் என்றால்…
1.நமது உயிர் ஓ என்று இயங்கிக் கொண்டே உள்ளது.
2.நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்த்து எல்லாம் நமது உயிரில் மோதும் பொழுது ஓ என்று அந்தக் குணங்கள் இயங்கி
3.அந்தக் குணத்தின் உணர்வுகள் ம் என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

ஆதாவது ஓம் நமச்சிவாய…! நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரைப் போன்று ஜீவ அணுவாக மாற்றி அணுவின் மலம் நம் உடலாக சிவமாக மாறுகின்றது.

.இப்பொழுது நாம் எத்தனை வகை குணங்களை நுகர்ந்து அறிகின்றோமோ அறிய உதவுகின்றது…
1.உணர்வு அந்தந்த நிலைக்கொப்ப குணங்களுக்கொப்ப அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் இயக்கினாலும் அந்த உணர்வின் தன்மை அணுவாக அந்தக் குணத்தை வளர்க்கும் சக்தி பெறுகின்றது..

ஒரு செடியில் வித்து உருவானால் நிலத்தில் அதை ஊன்றினால் எந்தச் செடியில் அது விளைந்ததோ அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய சத்தை இந்த வித்து நுகர்ந்து செடியில் விளைந்த வித்தைப் போல பல வித்துக்கள் உருவாகி அதன் செடிகளை உருவாக்கும்.

அதைப் போன்று ஒருவன் கோபப்படுகிறான் என்ற உணர்வை உற்றுப் பார்த்தால் நமது கருவிழி ருக்மணி நமது விலா எலும்புகளில் ஊழ் வினை என்ற வித்தாக பதிவாக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ
1.அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நமது ஆன்மாவாக மாற்றி
2.நம் உயிரிலே மோதும் போது அவன் கோப்த்தின் உணர்வு எதுவோ அதே போல அந்தக் கோப உணர்வுகள் நம் உயிரிலே மோதும் போது
3.அந்தக் கோபத்தைச் செயல்படுத்தும் உணர்ச்சிகளாக நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
4.கோபித்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி ம் என்று உடலாக அமையும் சந்தர்ப்பம் வருகின்றது.

காரணம் அது உமிழ் நீராக மாறும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுடன் கலக்கப்படும் பொழுது
1.அவன் எப்படிக் கோபித்தானோ அதே போல நாம் ஆகாரத்திற்குள் கார உணர்ச்சிகளை உருவாக்கி “அதன் உணர்வுகள் இரத்தமாக மாறுகின்றது…”
2.இப்படித்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உயிர் நம் சுவாசித்ததை எல்லாம் இரத்தமாக அணுக்களாக உடலாக மாற்றிக் கொண்டே வருகிறது.

தன் நிலை அறிதல் வேண்டும்

தன் நிலை அறிதல் வேண்டும்

 

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்று நிலை பெறும் பொழுது தான் அது இயக்கச் சக்தி என்று பொருள் வருகிறது.
1.“தனித்து ஒருவன் தான் கடவுள்” என்று சொல்வது பிழை சொல்.
2.ஒன்று என்ற நிலை இல்லை.
3.நமக்குள் உயிர் இருந்து அனைத்தையும் உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றான் உயிர்.
4.ஆனால் ஒருவன் என்று சொல்லும் பொழுது மூன்று நிலை கொண்டு தான் நம்மை இயக்குகின்றது.

நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் பலவாக மாற்றுகின்றது. அது தன்னுடன் இணைத்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் சக்தியாக மாற்றப்படும் பொழுது பலவும் ஒன்றாக்குகின்றது.

அப்படிப் பலவும் ஒன்றாக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் தன்மை அடைந்தவன் அவன்.
1.அவன் எண்ணத்தில் அவன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்
2.உள் நின்று கடவுளாக நின்று அந்த உணர்வின் தன்மை உருவாக்கியது அதை.

இன்றைய உலகம் குறுகிய உலகமாக மனிதனின் சிந்தனையைக் குறுக்கும் உலகத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அதிலிருந்து மீண்டிட அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் சுடர் ஒளியாக மாற்றும் வல்லமை பெற வேண்டும். உபதேசித்த உணர்வினை நுகர்ந்து அதனின் அறிவை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு நினைவைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.இன்னொரு பிறவிக்குச் செல்லாமல் இந்த உடலில் ஆறாம் அறிவு இருக்கும் பொழுதே தடுத்துக் கொள்ளுங்கள்… தப்பித்து விடுங்கள்.

உங்களிடம் இருந்து புகழ் பெறுவதற்காக நான் இதைச் சொல்லவில்லை குரு கொடுத்த அருள் ஒளியினை எனக்குள் சேர்ப்பித்து அதில் விளைந்த உணர்வின் “ஞான வித்தை” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

ஒரு மனிதனுக்குள் வேதனை என்ற உணர்வை விளைய வைத்து வேதனையான சொல்லைச் சொல்லும் பொழுது கேட்டறிந்தால் அந்த வித்து உங்களுக்குள் வேதனையை உருவாக்கும் தீமை செய்யும் உணர்வின் வித்தாக விளைகின்றது.

ஆனால் நமது குருநாதர் காட்டிய வழியில் ஞான வித்தினை உங்களுக்குள் உணர்த்தப்படும் பொழுது அருள் ஒளியின் சுடராக வாழும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி இனி பிறவி இல்லாத நிலை அடையச் செய்தல் வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை இந்த உடலின் உணர்வு கொண்டு நமக்குள் உயிரின் உணர்வு கொண்டு ஒளியின் உணர்வாகச் சொந்தமாக்குவது தான் மனிதனின் ஆறாவது நிலை.

1.இந்தச் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் மீண்டும் தன்னிலை அறிய முடியாத நிலைகள் கொண்டு
2.தன்னைக் காத்திடும் நிலையே வளர்ச்சி வரும்… தன் நிலையை அறியும் தன்மை வராது.

தன்னிலை என்பது மிருகங்களோ மற்றவைகளோ தன்னிலை அறியும் நிலை இல்லை தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகளே வருகின்றது. மற்றொன்று வலிமையான பின் அதனிடம் அடிமையில் சிக்காது தப்பித்து ஓடும் உணர்வுகள் தான் வருகின்றது.
1.ஆனால் வலிமையான அந்த மிருகங்கள் இதனை வென்றே தீரும்
2.அது இதை இரையாக்கியே தீரும்.
3.இரையாகும் போது இது நரக வேதனைப்பட்டு அனுபவித்தே தீர வேண்டி இருக்கும்.

இப்படிப் பல கோடி நரக வேதனையில் இருந்து மீண்டு வந்தவர்கள் தான் நாம்… நம்மை அப்படி மனிதனாக உருவாக்கியது நமது உயிர்.

1.நமக்குள் உருவாக்கிய ஈசனை மறந்து விட்டு
2.எவனோ செய்வான் என்று அவன் உணர்வை நமக்குள் சேர்த்தால்
3.அவனுக்கு நாம் அடிமை ஆகி அவனுக்கு கீழ் தான் நாம் வர வேண்டுமே தவிர அவர் இச்சைக்கே அடிமையாக முடியும்.

ஆனால் அருள் ஒளியின் சுடரை நமக்குள் சேர்த்தால் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் தன்மை உங்களுக்குள் கடவுளாக நின்று உங்களுக்கு வழிகாட்டும்… மறந்திட வேண்டாம்…!

“ஓம்காரத்தின்” சூட்சம இரகசியம்

“ஓம்காரத்தின்” சூட்சம இரகசியம்

 

1.”சூட்சும இரகசியங்கள்” செயல்படுகின்ற காரியத்தன்மைகள் அகம் புறம் இரு நிலைகளிலும்
2.நாவின் சூட்சமம்… ஒலி நாத செயலாகச் சிரசின் உச்சியில் நடிக்கின்ற (இயக்கம்) சிவ நடனம் காட்டுவதன் மறைபொருள் என்ன…?

அஷ்டமம் என்பது எட்டாம் இடத்தின் நிலை. எட்டு என்பதே பூரண சந்திரனைக் குறிக்கும். சந்திரன் வியாபகமாக “நீல வண்ண ஒளித்தன்மை நிலைபெற்றிடும் வாழ்வு…”

இதையே இன்றைய காலகட்டத்தில் ஜோதிட விற்பனர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அஷ்டமத்தில் சனி என்றும்… செவ்வாய் என்றும்… சித்தன் காட்டிய பேருண்மைகளை வேறு பொருள் காட்டிவிட்டனரப்பா.

“சரீரத்தின் ஆதிக்க நிலை” – சூரிய சக்தியின் ஒளி பெறும் சந்திரன்… தன் சுயப்பிரகாச நிலையை அதனுள் உள்ளிட்டு (தனக்குள் எடுத்து) வெளிப்படுத்துதல் போல்… அனிமாது (அஷ்டமாசித்து) சித்துக்கள் கொண்டு உயர் நிலை வளர்ச்சி பெறுதல் என்பதில் கடைப்பிடிக்க வேண்டிய காரிய நிகழ்வுகளும் உண்டு.

அறிந்து தெளிந்திட… சிந்தனையை அதன் ஓட்டத்தைச் செலுத்திடத் தான் வேண்டும். பிரம்மத்தின் நின்று சித்து கிளைத்த விந்தையாம் “விந்தை அடக்கு…” என்பார் வேதாள மகரிஷி.

ஓர் கனியினைச் சுவைக்கின்றோம். சுவைத்து அந்தக் கனியின் சுவையின் பொருள் அறிகின்றோம். அந்தக் கனியின் சுவை உண்டான முறையை உணர்தல் என்பதே சூட்சுமம்.

கனிவு என்பது நாம் உரையாடும் வார்த்தைகளினால் வெளிப்போந்து வந்து… உள்ளத்தின் தன்மைகளை உணர்த்துகின்றோம்.
1.இந்நிலை உருவாகின்றதே… உள்ளத்தில் அங்கு இருக்கின்றது சூட்சமம்.
2.உயர் ஞான சக்தியை உணர்ந்து கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பக்குவங்கள் அதனில் அடங்கும்.

“விந்தையாம் விந்தை அடக்கு” என உரைத்ததில் பொருள் உண்டு. சித்துக்களின் செயல்பாடு ஒவ்வொரு நிலையைக் காட்டும்.

ஓசை என ஓர் கலை உண்டு.
1.ஓங்காரப் பொருள் காட்டும் அதன் தத்துவம் “நாவின் அடி சூட்சுமம்…” இந்நிலை பிரம்மம் என உரைப்பர்.
2.அதனைச் செயல்படுத்துகின்ற சக்தியானது கண்டத்தின் சூட்சுமத்தில் உள்ளது.
3.நாபிக் கமலத்திலிருந்து மேல் எழுகின்ற பிரம்ம இலய நாதம்
4.கண்டத்தின் சக்தியைத் தூண்டி நாவின் பிரம்ம நிலையில் வியாபித்து
5.ஆக்ஞா சக்கரம் என்ற அறுகோணக் கருவறை நெற்றியினுள் எண்ண சிவம் நடிக்கும் (இயக்கும்).
(6. ஓ…ம்.. என்று நாதத்தை நாம் எழுப்பினால் இதனை (Sl.No.1-5) முழுமையாக உணரலாம்)

உயிரே கடவுள்

உயிரே கடவுள்

 

காலயிலிருந்து இரவு வரை
1.நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ எதையெல்லாம் கேட்கின்றோமா எதையெல்லாம் நுகர்கின்றோமோ
2.இவை அனைத்தையும் நமது உயிர் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று
3.நாம் எண்ணிய உணர்வுகளை அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.

ஏனென்றால் நமது உயிர் நம் உடலில் இயக்கச் சக்தியாக இருக்கின்றது நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் அணுத்தன்மை பெறும் இயக்கமாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.

நாம் எண்ணும் எண்ணங்கள் எதுவோ அது ஈசனாக இருந்து உருவாக்குவதும் நாம் எண்ணும் குணங்களை இரையாக்குவதும் இறையின் உணர்வுகள் செயலாக்குவதும் என்ற நிலையில் நமது உயிரின் இயக்கங்கள் உண்டு.

நம்மை ஆள்வது யார்…?
1.நமது உயிரே ஆண்டவனாக இருந்து ஆளுகின்றது.
2.ஈசனாக இருந்து எண்ணியதை உருவாக்குகின்றது.
3.எண்ணியதை இயக்குவதும் உருவாக்குவதும் அதை ஆள்வதும் ஆண்டவனாக இருப்பதும் நமது உயிரே.
4.ஈசன் என்பதும் உயிரே
5.ஆண்டவன் என்பதும் உயிரே
6.இறைவன் என்பது நாம் எண்ணும் உணர்வுகளை இறையாக்குவதும் உயிரே.

இறை என்றால் எதன் குணத்தை எடுக்கின்றோமோ அதை இறையாக்கி உணர்வின் செயல் ஆகும் பொழுது அக்குணமே தெய்வமாகின்றது என்பதனை ஞானிகள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்று காரணப் பெயர் வைத்து நாமெல்லாம் அறிந்து கொள்வதற்கு இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள் ஞானிகள்.

இருந்தாலும் இன்று விஞ்ஞான உலகில் வாழுகின்றோம் ஆனாலும் அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம் பக்தி என்ற நல்ல ஒழுக்கத்தில் வாழுகின்றோம் ஆனால் பக்தி என்றால் எதுவென்று அறியாத நிலையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

இயற்கை நியதிகள் எதுவோ அதன் வழி தான் என்று நாம் வாழுகின்றோம். இயற்கையின் சீற்றத்தில் இருந்து காக்கும் உணர்வுகள் பெற்ற மனிதன் ஆறாவது அறிவை நாம் சீராகச் செயல்படுத்தாது மீண்டும் தேய்பிறை என்ற நிலையில் வாழ்கின்றோம்.

அதை எல்லாம் மாற்றிடும் நிலையாக
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசித்து
2.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அழியாத நிலை பெற வேண்டும்.

“வேதனையை நீக்க வேண்டும்” என்று யாராவது கேட்கின்றீர்களா…?

“வேதனையை நீக்க வேண்டும்” என்று யாராவது கேட்கின்றீர்களா…?

 

1.மனிதனாகப் பிறந்த நாம் “பிறர் மகிழ்ந்து வாழ வேண்டும்” என்று எண்ணினால்
2.அந்த மன மகிழ்ச்சியால் செல்வம் அதுபாட்டுக்குத் தன்னிச்சையாக நமக்குள் பெருகும். செல்வம் குமியும்… செல்வாக்குடன் இருக்கலாம்…!

எல்லாச் செல்வத்தையும் வைத்துக் கொண்டு மனதில் நிம்மதி இல்ளாமல் என்னை இப்படி பேசுகின்றார்களே…! என்று வேதனையை எடுத்தால் நோய் தான் அதிகமாகும்.

வைத்தியரிடம் சென்று பணத்தைக் கொடுக்க வேண்டியது வரும். சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கும் நிலை அற்றுப் போய் விடுகின்றது. வேதனையினால் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இழக்கப்படுகின்றது.

இதை விடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்…?

மனிதனாகப் பிறந்தோம் என்றால்
1.அருள் ஞானிகள் காட்டிய வழியிலே நடக்க வேண்டும். நம்மை அறியாது வரும் இருள்களிலிருந்து நாம் மீள வேண்டும்.
2.மெய்ஞானிகள் உணர்வு நமக்குள் வளர்க்கப்பட வேண்டும். அதைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்
3.எல்லோரையும் அந்த ஞானத்தின் வழியைப் பற்றிடச் செய்தல் வேண்டும்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது.

தயவு செய்து என்னை யாரும் கோபித்து விடாதீர்கள் ஞானிகள் சொன்னதைச் சொல்கின்றேன் குருநாதர் என்னைச் சாக்கடை அருகே அமர வைத்து தான் இந்த உபதேசத்தை எல்லாம் கொடுத்தார்.

நாம் என்ன செய்கின்றோம்…?

சங்கடம் சலிப்புடன் உட்கார்ந்திருக்கிறோம். என் குடும்பத்தில் இப்படி இருக்கின்றது அப்படி இருக்கின்றது… என்று சாமியிடம் சென்று துன்பத்தையும் வேதனையும் எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி அதைத்தான் கேட்கின்றீர்களே தவிர “வேதனையை நீக்க வேண்டும்” என்று யாராவது கேட்கின்றீர்களா…?

அப்படி நினைப்பது இல்லை.

ஏனென்றால் இந்த மாதிரி உணர்வுகள் தான் (நமக்குள் இருக்கும் சங்கட உணவுகள்) நல்ல குணங்கள் இருந்தாலும் அந்த நல்லதைப் பேசவிடாது தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

நாம் தவறு செய்யவில்லை. இந்த உணர்வுகள் நம்மை எவ்வாறு இயக்கி விடுகின்றது.
1.அதை நீக்குவதற்குத் தான் அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கும்படி சொல்கின்றோம்.
2.அதன் வழியில் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
3.உங்கள் உயிர் அவ்வாறு இயக்குகின்றதா இல்லையா…? என்று பாருங்கள்.
4.அதன் வழிப்படி உயிர் இயக்கப்படும் பொழுது கண் அதே வழியைக் காட்டும்… உடலை மகிழச் செய்யும்.

இதைக் கேட்டுணர்ந்தோர் இதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

கோவிலுக்கு போகும் பொழுது அந்தத் தெய்வ குணங்களைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்த ஆலயத்திலே தனக்கு முன் நிற்பவருக்கெல்லாம் அந்தத் தெய்வ குணம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த எண்ணத்தோடு செய்தால் யாரையும் நீங்கள் முண்டியடித்துத் தள்ள மாட்டீர்கள்.
1.நீங்கள் அந்த உயர்ந்த குணமாக அதுவாக ஆகின்றீர்கள்
2.உங்கள் சொல் அவர்களை நல்லதாக்குகின்றது.
3.கோவிலில் எந்தத் தெய்வத்தை வைத்திருக்கிறார்களோ அந்தத் தெய்வமாக நீங்கள் ஆகின்றீர்கள்.

உங்களிடம் இருக்கும் நல்ல குணத்தைத் தெய்வமாக மாற்றுவதற்குத் தான் இதையெல்லாம் சொன்னார்கள். மற்றவர்களைத் தள்ளிவிட்டு சாமியின் சக்தியைப் பெற வேண்டும் என்று சொன்னால் தள்ளும் குணம் தான் வரும். நல்ல குணங்களை நம்மிடமிருந்து தள்ளி விட்டு விடும்.

இதை எல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத் தான் ஆலயத்தை கட்டி அதில் தெய்வத்தை வைத்து நம் மனதைத் தூய்மைப்படுத்தும் வழிகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

உயிருடன் ஒன்றுபவனுக்கு “எந்த நிலையிலும்… எதிலும் பாதிப்பு ஏற்படாது”

உயிருடன் ஒன்றுபவனுக்கு “எந்த நிலையிலும்… எதிலும் பாதிப்பு ஏற்படாது”

 

ஆதி சக்தியின் செயல்:-
1.ஒன்றுடன் ஒன்று மோதிடும் எதிர் மோதல் குணங்கள் தன் குணத்தின் சுவைக்கொப்ப
2.ஆகர்ஷன சக்தியால் வான்வெளியில் பூதி என்று அழைக்கப்படும் பெருவெளியில் கலந்து
3.எதிர் மோதல் தன்மைகளில் “எந்தக் குணம் அமிலம் வீரிய நிலை பெறுகின்றதோ”
4.அவைகளில் கலந்திடும் அணுக்களின் குணங்களுக்கு ஒப்ப வீரிய நிலை பெற்றிடும் அந்த அமிலத்தன்மைகள்
5.தனக்கொத்த நிலைகளை எல்லாம் “உயர் மின் நுண்காந்த சக்தியாக வளர்க்க”
6.எதிர் மோதல் குணத்தன்மையாக “எரிபொருள் சக்தி அக்கினி என்ற வெப்ப சக்தியாக” செயல் உருவாக உருக்கோலம் கொண்டு
7.தன் சக்தியின் பரிமாணத்தை வளர்ச்சி நிலை கொள்ளும் செயலாக மென்மேலும் ஈர்த்துக் கொண்டு
8.சுழற்சியின் வேகத்தால் “ஓங்கார நாதத்தைக் கூட்டி” பால் வெளியில் சுழன்று ஓடிக்கொண்டே அமைவு பெறும் தன்மையாக
9.தனது செயலின் வீரியம் வலுக்கொண்ட சக்தியாக கன பரிமாணம் கொண்ட திடமாய் உருவாகும் முன் தன்னுள்ளே பூதியை உருவாக்கி
10.எப்படி அக்கினியால் எரிக்கப்பட்ட பொருள்கள் காற்றில் கலந்து செயல்படும் தன்மையைப் பெறுகின்றதோ அவைகள் போன்றே
11.தூசு படலங்களும்… படர்வு நிலையில் மறைபொருளாகும் அத்தன்மைகள் ஜீவன் கொண்டிட்டு
12.”தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும்” நிலை பெறுகின்ற செயல் ஒன்று
13.ஜீவ அணுக்களாகப் பின் வளர்ச்சியில் எண்ணிறந்த கோளங்களாக நட்சத்திரங்களாக சூரியன்களாக வளர்ச்சி நிலை பெற்று
14.ஈர்த்துக் கொண்டிடும் ஈர்ப்பு நிலைக்கொப்ப விசேஷ தனித்துவ சக்தியாக வளர்க்க
15.உறை பொருள் சிவமாக… இயங்கும் இயக்கச் செயல் ஈர்ப்பு சக்தியாக இணைந்து கொண்டிடும் “சிவ சக்தியாக”
16.ஆதி சக்தியின் செயல் உருவாய்… ஓடிக்கொண்டே உள்ளது.

நம் பூமியின் சுழற்சியின் வேகத்தில் பௌர்ணமி காலங்களிலும் அமாவாசை காலங்களிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிட்ட கோள்களின் ஈர்ப்பின் தொடர்பினால் நீர் சக்தியின் மாறுதல்களை… இந்நிலையிலும் உயர் நாதத்தை ஈர்த்துக் கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் “மறைபொருளை விளக்குவார்கள்…”

சப்த மாதர்கள் என்று வணங்குகின்றாய். ஒருவர் குரல் போல் மற்றவருக்கு இருப்பதில்லை. கோடான கோடி சப்தஸ்வர நாதங்கள் “கண்டத்தில் (தொண்டையில்) எழும் ஆகாயக் கூறு” காட்டும் நிலை தான் என்ன…?

சப்த நாதங்களில் செயல்படும் சப்தரிஷிகள்
1.ஆதி சக்தியின் அம்சமாக வழி நடத்தும் அரிய உண்மைகளை
2.தியானத்தைக் கூட்டுவதன் மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.

சப்தரிஷி மண்டலங்கள் இயக்கிடும் நவக் கோள்கள்… வான் இயல் மையக் கோள் என்ற பால் வெளியின் உண்மை நிலைகளை அறிந்து வளர வேண்டுமப்பா.

பஞ்சபூதங்களான… ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் பரவெளியில் ஜீவ மின் நுண்காந்த சக்தியாக அனைத்திலும் பரவிப் படர்ந்துள்ளதை “பராசக்தி… என்றும் பரமார்த்த சக்தி…” என்றும் பெயரிட்டு மகரிஷிகளால் அழைக்கப்படுகின்றது.

பால்வெளியில் உதித்திடும் உயிரணுக்கள் கோடான கோடி நிறம் மணம் குணம் என்ற முத்தொடர் சூட்சுமத்தின்
1.நீரமில சக்தியுடன் கலந்து உதிக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொண்ட சுழற்சியாய்
2.எண்ணம் கொண்ட உயிரணுக்கள் எண்ணம் கொண்ட ஆத்மாவாக ஜீவன் பெற்றே பிறப்பிற்கு வருகின்றது.

மனிதன் கூறுகின்றான் வயதான காலத்தில் அவன் ஞானம் பெற வேண்டும் என்று. எப்படிப்பா இருக்கின்றது இது…? காலம் கடந்து ஞானம் வருவது எங்கே…?

நாம் கூற முற்படுவதில் தேகம் கொண்டே…
1.”தேகம் கடந்த ஞானம் பெற்றிடல் வேண்டும்”
2.பெற்று உயர்ந்து வளர்ந்திடல் வேண்டும்… என்று உணர்த்தியும் வந்துள்ளோம்.

எமது சித்தின் நிலையை வெளிப்படையாக உரைத்து விட்டால் மாத்திரம் நீ சக்தியைப் பெற்றிட முடிந்திடுமா…?
1.தன் நிலையைத் தான் வளர்க்க
2.அந்நிலையில் நன்நிலையாக வளர்த்துக் காட்டிட வேண்டுமப்பா.

உலோதய வாழ்க்கை நடைமுறையில் ஞானத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு… உண்மை நிலையை உரைக்க வந்ததாகப் பாஷாண்டகமிடும் செயலை… உண்மை நிலையை “நான்” என்றிட்ட அகங்கார ஆணவ மாயை என்றிட்ட அனைத்துக் காரியார்த்த செயல்களை “யார் தான் வென்றிடுவார்கள்…?”

1.சகலத்திலும் சகலமாக ஈஸ்வரரின் அருள் நிறைந்திருக்க…
2.தனித்துவ காரண காரியங்களுக்குச் செயல் கொண்டு – சகலத்திலும் ஈஸ்வரரின் அருள் என்ற பேரின்ப சாயுஜ்ய (உயிருடன் ஒன்றும் நிலை) லயத்தைக் கொள்பவனுக்கு
3.எந்த நிலையிலும் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டுவிடாது… “சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை உண்டு…”

சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம்

சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம்

 

அதீத செயல்பாடுகள் சக்தியின் வளர்ப்பாகக் கண்டு கொண்ட மகரிஷிகள் சரீரத்தினுள் அந்தச் செயல்பாட்டை அறிந்து கொண்டு… (தெய்வ குணங்களை) ஒவ்வொரு நிலையாகச் செயல்பாடுகள் கலைகளாய்… அவைகள் செயலுறும் நாதவிந்துவாக தெய்வீக உருவங்களாகப் பெயர் நாமப்படுத்தி… விநாயகர் சிவன் சக்தி கந்தன் என்று சூட்சுமப்படுத்தி அருளினார்கள்.

நாத விந்துகள் கலைகள் செயல் கொண்டிடும் நிலைகளும் நாவின் அடிப்பாகம் பிரணவம் (உமிழ் நீர் சுரக்கும் இடம்) என்று செப்பிய சூட்சும நிலைகளின் அகழ்வுகள்… நாவின்படி தொடங்கி தொண்டைப் பகுதியினுள் செயல்படும் ஆகாய இருள் மாயை.

1.உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை என்றுமே அணைந்திடாத அக்கினிக் குண்டம் உண்டு (சுவாசம் உள் சென்று வெளி வரும் போது சூடாக இருக்கிறதல்லவா)
2.ஈஸ்வர ஜோதி எனும் சிவத்தை அறிந்து கொண்டிடும் ஜீவன்களுக்கு அந்த நிலை தமக்குள் உணர்த்தும்
3.உயிராத்ம சக்தியின் வலுவாக்கும் செயலுக்கு தெய்வீக வடிவ நீல வண்ணம் காட்டி
4.உயிர் ஆத்மா (உயிரும் அதனுடன் ஒன்றும் ஒளியான உணர்வுகளும்) ஐக்கிய நிலையே “சீதை அக்கினி குண்டத்தில் இறங்கினாள்…” என்று
5.சூட்சும சொல்லால் பொருள் காட்டி உரைத்தாரப்பா வான்மீகி மாமகரிஷி.

தட்டாது ஒதுக்கும் நிலையே நமக்கு வேண்டியது.

வேதாள மாமகரிஷி உலகியல் தன்மையில் “தேகி” எங்ஙனம் செயல் கொள்வார்…? என்றே நயம்பட உரைத்த உரை… கட்புலன்களால் (கண் பார்வை) பௌதீக மாயப் பொருள்கள் அனைத்தையும் ஒளி கொண்டு நோக்கி அறிதலும்… அறிந்ததை அறிந்ததாகப் பொருளின் குறிப்பைத் தெளிவாக உணர்தல் என்றே அறிந்த பின் தெளிந்து உணர்ந்து கொள்கின்றோம்.

அறிந்து கொண்ட செயலை நடைமுறைப்படுத்திடும் வழி வகைக்கே செயல் கொண்டாலும்
1.கட்டுப்படாத தன்மைகளையும் அதே உணர்வின் எண்ணம் உணர்த்தியும் தெளிதல் போல்
2.அந்த நிலையிலும்… ஈர்த்துக் கொண்டிட்ட வாசனைக்கொப்ப அறிந்திடாத் தன்மைகளும் செயல்கொள்ளும் விதத்தை
3.மேலாம் அறிவு உரைத்த நன்மைதனை நாளும் பொருள் விளக்கம் பெறுவது எப்படி…?

கடும் மழைக்காலத்தில் புள்ளினங்கள் (பறவைகள்) மழை நீரால் நனைந்து “குளிர் தன்மையாக விதிர்விதிர்ப்ப” அந்தப் பறவை இனங்கள் சிலிர்த்துச் சிறகினை வீசி அத்தன்மை படாது ஒதுக்கும்.

அதைப் போல்
1.எந்த நிலையாகினும் அந்நிலையின் அலைகள் நம்மைச் சாடிடாத வண்ணம்
2.புள்ளினங்கள் தன் மீது படாது ஒதுக்குவதைப் போல் ஞானச் செல்வங்கள் பிரகாசித்திடும் விழிப்பார்வையின்
3.சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம் மறைபொருளாகக் குளிர்ந்து எழுந்த குளிர்கனல் மேல் நிலை காட்டும்.

அவ்வாறு ஈர்த்துக் கொண்டிடும் உயிர் சக்தி… ஆத்ம நிலைக்கே ஊட்டும்.

வராமல் வந்துற்ற மாமணியை… (உயிராத்மாவை) அறிந்து கொண்ட பின் அதைச் சாராமல் போவாயா…!

வராமல் வந்துற்ற மாமணியை… (உயிராத்மாவை) அறிந்து கொண்ட பின் அதைச் சாராமல் போவாயா…!

 

குணங்களை உள் அடக்கும் மறை பேராம்
1.மனித ஆற்றலின் மகோன்னத சக்தியாக வழியறிந்து கொண்டவன்
2.அவன் வழிப்பயணாமாகும் செயலில் தடை எதுவும் கிடையாது.

ஆசையும் மோகமும் வாழ்க்கை அனுபவத்திற்குள் அடங்கும். அவைகளைக் காட்டிலும் சினத்தின் குணமே வலிமை உடையது. மனிதன் சினத்தின் வசம் ஆட்படும் போதெல்லாம் உலக சிருஷ்டியை பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.நாம் ஏனையோரை வழி நடத்த வந்துள்ளோம் அல்லவா…?
2.நாமே கோபப்பட்டால் தகுமா…? என எண்ணிடல் வேண்டும்.

யானைக் கூட்டங்களை வழி நடத்தும் வலிமை கொண்ட மன்மத யானை பக்குவமாக மேய்ச்சல் இடம் காட்டி… அருந்துவதற்கு நீர் நிலையையும் காட்டித் தன் குழுவைப் பாதுகாப்பது போல்… நல் நிலையில் செயல்படுவோம்… உயர்வோம்…! என்ற சிந்தனை கொள்ளல் வேண்டும்.

சகல சிருஷ்டிகளும் அணுத் திறளால் ஆனது. மனிதனும் ஓர் பொருள். “வளர்ந்து கொண்டிருக்கும் உயிராத்ம சக்தியால்…” மனிதன் உயர் நிலை பெறுகின்றான்.

1.மரணத்தை வென்றிடும் மனோதிடம் கொள்ளுதல் தான்
2.சித்தனாகும் உயர்வுக்குப் படிக்கட்டு.

மனத்தினை மெய்ஞானத்தின் பால் செலுத்திவிட்டால்… அது மீண்டும் மாற்று நிலை பெற்றிடா வலிமை கொண்டு விடும்… “பஞ்சு திரி ஆவதைப் போல்…!”

காற்றினால் உந்தப்படும் பஞ்சு அலைக்கழிந்து ஓடுகிறது. அந்தப் பஞ்சானது நீரினை உண்டு விட்டால் விழும் நிலையும்… அதே பஞ்சு நெருப்பினை உண்டு விட்டால்… தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
1.இதை அழியும் நிலை பாடம் என்று எண்ண வேண்டாம்
2.வானுறப் பறக்கும் பருந்துக்கும் பாடமுண்டு
3.சுட்டிக் காட்டுதல் எல்லாமே மனத்தின் பக்குவத்திற்கே.

“வராமல் வந்துற்ற மாமணியை… உயிராத்ம சக்தியை… மெய் உணர்வால் அறிந்து கொண்டிட்ட பின்… அதைச் சாராமல் நீ போவாயோ…?”

இரு வித செயல்நிலைகள் ஒவ்வொரு குணத்தின் செயல்படு நிலையில் சாந்த குணத்தை வளர்க்க… சமமான நிலை நிலைக்க… யாம் சுட்டிக் காட்டிடும்
1.மனத்தின் கரு விழித்து விட்டால்
2.சித்தன் நிலை (உன்) கை வசமே…!

ஆற்றெடுத்த மன வாழ்வில் இரு நிலை தவிர்த்திருத்தல் (நன்மை/ தீமை… இன்பம்/துன்பம்) என்பது
1.ஞானத்தின் பால் திருப்பப்படும் மனமே திரியான பஞ்சு.
2.எண்ணத்தை மறைந்திருக்கும் மாயை எனும் மூட மேக இருள் நீக்கப்படும் போது தான் மனிதன் உயர்கின்றான்.

சூரியனை மறைத்திடும் மேகக்கூட்டம் விலகிடும் செயலில்
1.முன்பாகவே ஒளிக்கதிர்கள் காட்டிடும் அவ்வாதவனின் நிலையை
2.மனத்தின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்.

மேக இருள் விலக்குதல் என்பதே முயற்சி…!

ஞானச்சுடராம் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சூட்சமப் பொருளைச் சுவாசித்திடும் பொழுதே “உணர்ந்து கொள்வீர்கள்…”

“அன்பு” தானப்பா கடவுள்

“அன்பு” தானப்பா கடவுள்

 

அன்பு வழி காட்டிட்டு… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாய் செயற்படுபவன்…
1.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
2.பிற உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிக்கும் செயற்பாடு உடையவனாய் இருத்தல்
3.தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாய் வெளிப்படும் பொழுதே போதனையை ஏற்று
4.தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு உபதேசத்தை ஏற்றவன் அந்த நன்நெறியில் பிறழாமல்
5.அவ்வன்பையே பற்றுக் கோடாய்க் கொண்டிட்ட எண்ண செயலினால்
6.நல் வழிவகைச் செயலைக் கைக் கொள்வோன் மனிதன் என்ற முழுமை பெறுகிறான்.
7.அன்பும் பரி பூரணத்துவம் பெறுகின்றது.

இயேசு காட்டிட்ட அன்பு வழி… “மதம்” என்ற ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. ஆனால் எம்மதத்தினரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம் வழி.

மனித எண்ணத்தையும் அன்பு சாம்ராஜ்யத்தையும் ஆள வந்த அம்மகானுக்கே தந்திட்ட பரிசு “சிலுவை ஏற்றுதல்…” இன்றும் உண்மையைப் புகட்டினாலும் மத வழிச் செயலில் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா…!

அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?

1.குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
2.உலக மக்கள் படும் இன்னல்களுக்காக தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு தாய்மையின் உணர்வு கொண்டே
3.ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி உயர் நிலை பெறவே ஊட்டிட்டார்… ஊட்டிட்டார்… அன்பு கொண்டே ஊட்டிட்டார்.

தாய் முகம் கண்ட குழந்தை தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களை செவிமடுத்தினர் என்றால்… அன்றைய கால கட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயற்படாதொழிந்த குழப்ப சூழ்நிலையில் உண்மையை உணர்த்தி அளித்திட்ட போதனைகள் மக்களுக்கு தெளிந்த சிந்தனை அளித்து ஈர்த்தது என்றால் அன்பின் திறத்தை என்னவென்பது…?

அன்புதானப்பா கடவுள்.

சத்திய நிலை கடைப்பிடித்த மகான்களுக்கே அவச்சொல் என்றால்
1.சிந்தனா சக்தி செல்லும் வழிதான் என்ன…?
2.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா கூட்டங்கள் கூட்டினார்….!

இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகிறது.

ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுவோர் அம்மத வழிதனில் எண்ணிக்கையில் பலர் இருப்பினும்… அவர்களும் வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத வெறி உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.

உண்மை வழியறிந்து அம்மகான் காட்டிட்ட வழிதனை கடைப்பிடிக்க முயலுவோர் முயலட்டும்.

அன்பு கொண்டு குணங்களின் செயலை தன்னுள் கண்ட இயேசுபிரான்
1.’சைத்தான்’ என்று காட்டியது தீய குணங்களைத் தான்.
2.சைத்தானின் குணங்களுக்கு ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி
3.அவைகளைப் பக்குவமாய் விலக்கிடவே தியானத்தின் வழி காட்டியதே “அப்பமும் மீனும்…”