எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

 

எம்முடைய அருள் உரைகளைக் கேட்கும் அனைவரும் நீங்கள் இதை ஆழமாகப் பதிவு செய்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து
1.என்றும் அழியா பெருவீடு பெருநிலை என்று ஒளிச்சரீரம் பெற்று
2.நீங்கள் இந்த வாழ்க்கையிலே இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி ஒளி பெறும் உணர்வின் தன்மை உங்கள் உடலிலே வளர்த்து
3.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நூல் வடிவிலே உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.

உபதேச வாயிலாகக் கொடுத்ததை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது சொல் வடிவிற்கும் எழுத்து வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதினால் யாமே இதை எழுத முடியாததால் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவரை வைத்து இதை எழுதுவதினால்
1.சிறிது மாற்றங்கள் குறைகள் இருந்தாலும்
2.அதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் பொழுது இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே அந்தக் குறைகளை எண்ணாது மீண்டும் மீண்டும் இதைப் படிக்கும் பொழுது இடைவெளியில் விடப்பட்ட சிறு குறைகளையும் அதை நீக்கக்கூடிய சக்தியாக உங்கள் உணர்வுக்குள் தோன்றி அதில் நிறைவு செய்யும் நிலையை நீங்கள் அடைகின்றீர்கள்.

1.நீங்கள் படிக்கும் பொழுது எத்தகைய குறை வந்தாலும் மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
3.எழுத்து வடிவில் வரும் குறைபாடுகளை நீக்கிவிட்டு மூலப்பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து
4.உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

இந்த உணர்வோடு நீங்கள் படித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அந்த மகரிஷியின் அருள் சக்தியை சேர்த்துப் பாருங்கள்.

1.எழுத்து வடிவில் மாற்றங்கள் இருந்து உண்மைகள் மறைந்து இருந்தாலும்
2.அந்த உண்மைகளைத் தெளிந்திடும் சக்தியாக உங்களுக்குள் உணர்வதை நீங்கள் பார்க்கலாம்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியா ஒளிச்சரீரமாக அதைப் பெறும் நிலையாக உங்களுக்குள் ஊட்டப்படுவது தான் இந்தத் தியானத்தின் அறவழிகள்.

ஆகவே இதைத் தெளிவாகத் தெரிந்து இதைக் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று அந்த உணர்வின் சக்தி ஒளியாக மாற்றும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று என்றுமே அந்த மகரிஷிகளின்ன் நினைவுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

தபோவனத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட
1.அனைத்துப் புத்தகங்களையும் அனைத்து ஒலி நாடாக்களையும் அதில் வெளிப்பட்டுள்ள உபதேசங்களை நீங்கள் படித்து கேட்டு…
2.மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டும் என்று உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம்.

கூட்டுத் தியானம் இருப்போம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். ஆத்ம சக்தி செய்வோம்… அன்றாட வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்வோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம்.

பொன்னான இந்த மனிதச் சரீரத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்
1.நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று சதா பிரார்த்திப்போம்.
2.நாம் பார்க்கும் எல்லோரும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.தபோவன தியான மண்டபத்தில் நீங்கள் அமர்ந்து தியானித்தால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

 

நாம் நண்பர்களாகப் பழகிய அல்லது குடும்பத்தில் பழகியவர்கள் உடலில் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் பதிவாகி இருப்பதால்
1.அதே நினைவு கொண்டு நாம் எண்ணினோம் என்றால்
2.அவர் உடலில் இருந்த உணர்வுகளும் நோய்களும் நினைத்தவர் உடலுக்குள் வருகின்றது.
3.இருள் சூழ்ந்த நிலையாகி விடுகிறது.

ஆனால் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தப்படும் பொழுது ஒளியின் உடலாகின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின்
1.சப்தரிஷி மண்டலம் என்று எண்ணினாலே அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் புகுந்து தீமைகளை அகற்றி
2.நல் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நல்ல குணங்களுக்கு நம் மனம் இடம் கொடுக்கின்றது.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! ஒரு செடியில் எத்தகைய குணம் உண்டோ சுவை உண்டோ அதிலே விளைந்த வித்தினை நிலத்திலே போட்டால் அதைக் கவர்ந்து அதனுடைய சுவை அதனுடைய குணங்களை மீண்டும் காட்டுகின்றது.

இதைப் போல் தான் பிறிதொரு உடலில் விளைந்த நோயின் உணர்வுகள் அது வெளிப்படும் என்றால் “அது வித்து…” நாம் நுகர்ந்து நம் உடலில் பதிவாகி விட்டால் அவரைப் பற்றி எண்ணினால் அந்த நோயின் உணர்வே வரும்.

அதற்கு முன்பு அவர் நல்லதாக இருந்த நிலையை எண்ணும் பொழுது அடுத்து இப்படி ஆகிவிட்டாரே…! என்று தான் வரும். அப்போது அவருடைய முழுமை விஷத்தன்மை அடைவதால் நாம் எண்ணினோம் என்றால் அந்த விஷத்தின் உணர்வே நமக்குள் இயக்கப்பட்டு அவர் எப்படி வருத்தப்பட்டாரோ அதே வருத்தம் நமக்குள்ளும் வருகின்றது.

எத்தனை பேருடன் இப்படி பழகுகின்றோமோ வாழ்நாள் முடிவில் நோயின் தன்மை கொண்டு உடலை விட்டு வெளியேறும் போது அவர்கள் உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.ஆக நோய் என்ற உணர்வுகள் கொண்டு பலவும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது
2.அவர்களுக்குள் விளைந்த தீமைகளை நமக்குள் வந்து சேருகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைக்கப்படும் பொழுது நஞ்சுகள் கரைக்கப்படுகின்றது.
2.அந்த எண்ணத்தை நமக்குள் செலுத்தப்படும் பொழுது நஞ்சை நீக்கும் உணர்வும் நல்ல சிந்திக்கும் தன்மையும் நமக்கு கிடைக்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதில் சாவியைப் (PASSWORD) போட்டோம் என்றால் எந்த அட்டைக்கு எந்தச் சாவி என்று அதைப் பாய்ச்சி விடுகின்றனர்.

அதைச் சரியாகப் போட்டால் தான் திறக்கின்றது… இல்லையென்றால் திறப்பது இல்லை இதைப் போன்று பல விதமான உணர்வின் தன்மைகளை பிளாஸ்டிக் அட்டைகளிலேயே கொடுத்துத் திறக்கும்படி செய்கின்றார்கள்.

இதைப் போல
1.நாம் நமது உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்
2.நமது எண்ணத்தின் திறவுகோலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
3.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு இருளை நீக்கி நல்வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.

ஆகவே நாம் நம் மனதைத் திறக்க வேண்டியது உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு மட்டும் தான்…!

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

 

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தையும்
1.நமது உயிர் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று அந்தக் குணங்களில் இயக்கும் அணுவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
2.இவ்வாறு காலையிலிருந்து இரவு வரையிலும் சதாசிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.

நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ வேதனைகள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவணுவாக மாற்றி “ம்” என்று நமது உடலாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… செடி கொடியினில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றுகின்றோம். ஆனால் (முதலில் உருவான) அந்தச் செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

நிலத்தில் ஊன்றப்பட்ட அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு… சூரியனால் கவர்ந்து வைக்கப்பட்டுள்ள தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே செடியாக விளைந்து அதன் வித்தை மீண்டும் உருவாக்குகின்றது.

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் பயம் அவசரம் ஆத்திரம் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால்
1.எந்தெந்த மனிதனின் உடலிலிருந்து அந்த வேதனை உருவாகி வெளி வந்ததோ அதனை நாம் நுகரப்படும் பொழுது
2.அதே வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது.

இப்பொழுது ஒரு செடியில் விளைந்த வித்து எவ்வாறு தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது தனது வித்தை உருவாக்குகின்றதோ… தன் இனத்தை உருவாக்குகின்றதோ அதே போல்
1.நம் உடலுக்குள் பிறர்படும் வேதனையோ அல்லது மற்றதையோ வேடிக்கை பார்த்தால்
2.அல்லது சாபமிடுவதைப் பார்த்தால் ஒருவர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்தால்
3.அந்த உணர்வை நாம் நுகர்ந்து வேதனைப்படுகின்றார் என்று அறிகின்றோம்.

ஆனாலும் அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் உயிர் அறியச் செய்கின்றது. அவை நம் இரத்தங்களில் கலந்து…
1.எந்த உடலில் அது உருவானதோ அதே அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு இரை தேவை.
2.எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ அது காற்றில் உண்டு.
3.அப்பொழுது நம் உடலுக்குள் இருந்து அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது அதே உணர்வை நாம் நுகர்வோமென்றால்
4.நமக்குள் இதே போல் வேதனைப்படுவதும் வெறுப்படைவதும் சங்கடப்படுவதும் போன்ற நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

இவ்வாறு நமக்குள் வருவதிலிருந்து நாம் மீள்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்றால் யாம் கொடுக்கும் உபதேச உணர்வினைப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரமோ இப்புவியில் துருவ மகரிஷி அல்லது அகஸ்தியராக இருக்கும் பொழுது தீமைகளை வென்று வானை நோக்கி உணர்வுகளை நுகர்ந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

அதனின்று வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமியோ அதைத் துருவப் பகுதியில் கவர்ந்து நமது பூமிக்குள் கொண்டு வருகின்றது.

1.அதனை நீங்கள் நினைவு கூர்ந்து உங்களில் பதிவாக்கி நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற முடியும்.
2.அப்போது நாம் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமையின் அணுக்களை நமக்குள் வளராது தடுக்க உதவும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வுகளை நமக்குள் அந்த அணுக்களைப் பெருக்கவே நாம் தியானமிருக்கின்றோம்….
3.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யவும் சொல்கிறோம்.

பூணூல்

பூணூல்

 

ஒருவன் நம்மைப் பழித்துப் பேசுகின்றான் என்றால் அந்தச் சமயத்தில் நம் உடலில் உள்ள குணங்களைக் காத்திட நாம் ஆவேச நிலைகள் கொண்டு தான் செயல்படுவோம்.

அப்போது… “நாம் எண்ணிய நிலைகள் கொண்டு தான் உயிரே இயக்குகின்றது” என்ற இந்த நிலையின் தத்துவத்தைத் தெளிந்து உணர்த்துவதற்கே வசிஷ்டாத்வைதம் என்ற நிலைகளை வியாசகன் பிரித்து உடலின் உறுப்புக்குள் இயக்கும் நிலைகளை உணர்த்தினான்.

1.மகரிஷிகளால் உணர்ந்து ஒளியின் சரீரம் பெற்றதை… வியாசகன் கண்டுணர்ந்த இந்தத் தத்துவத்தைத் தான்
2.தனக்குள் அதை ஆதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில்
3.“ஆவணி அவிட்டம்” என்றும் அந்த நாளில் “பூணூல் போடுவது” என்று காட்டினார்.

நமக்குள் எத்தனை நிலைகள் வந்தாலும் அதிலிருந்து தன்னைக் காத்திடல் வேண்டும். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இதை உணர்த்திய மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று தான் “வசிஷ்டாத்வைதத்தை” வியாசகன் காட்டிணார்.

நம் உடலுக்குள் அனைத்து நிலைகளும் இருப்பினும்
1.அந்த ரிஷிகளுக்குள் தீமைகள் அடங்கியது போல…
2.அத்தகைய அடக்கி ஆட்சி புரியும் நிலைகளைப் பெறும் நன்னாளாக எண்ணுவது தான் “பூணூல் பூட்டும் நாள்…”

சாஸ்திர விதிப்படி பூணூலை அணிந்து கொண்டு என் மதம் என் இனம் என்ற நிலைகளில் எங்கள் இனத்திற்காக நாங்கள் அதை அணிந்து அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சாரார் அவரவர்கள் விதிப் பிரகாரம் அதைச் செயல்படுத்துகின்றார்கள். அன்று இதைச் செய்து சாஸ்திரீகம் சாங்கியம் என்பதைப் பின்பற்றுகின்றனர்.

1.வசிஷ்டாத்வைதம் என்ற நிலையினை நமக்குள் ஆதாரமாக அமைத்து
2.எப்படி இந்த இரு நூலின் தன்மை வலுக்கொண்டதாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் இணைந்திருக்கும் நிலைகள் கொண்டு
3.ரிஷியின் தன்மையாக உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும் இணைக்கும் தன்மையாக
4.நமக்குள் புறநிலைகளிலே ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் நிலையைத் தான் உணர்த்தப்பட்டது.

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன்னை அறியாது தன் சந்தர்ப்பத்தால் மெய் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளைத் தனக்குள் கண்டுணர்ந்து அவனின் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றான்.
1.அவனைப் பின்பற்றி அவன் ஒளியான நிலைகளை வெளிப்படுத்தியதுதான்
2.இந்த 4000 ஆண்டுகளுக்குள் வியாசகரால் சந்தர்ப்பத்தால் விண்ணுலக ஆற்றலை அறியும் ஆற்றல் வருகின்றது.

காரணம் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அறிந்தாலும் அதைச் சந்தர்ப்பத்தால் அறிந்துணர்ந்த வியாசகரால் சாதாரண மக்களும் எட்டும் அளவிற்கு அவன் கண்டறிந்த நிலைகளை வெளிப்படுத்தினான்.

வெளிப்படுத்தினாலும் அரும்பெரும் சக்திகளைத் தனக்குள் எவ்வாறு பருக வேண்டும் என்ற நிலைகளை மறந்து ஐதீகம் என்ற நிலையில் மாற்றப்பட்டதே தவிர ஐதீகம் என்று சாஸ்திர விதிகளைத் தான் பின்பற்றும் நிலை வந்தது. ஐதீகத்தை எடுத்துக் கொண்டால் சாங்கியம் சடங்குகள் என்று புறநிலைகளுக்குத் தான் வருகின்றது.

அகநிலைகளைக் கூட்டும் நிலைகள் இல்லை.

1.அந்த ஆற்றல்மிக்க அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை நமக்குள் உள் செலுத்தி அதனைப் பூணூல் ஆக அதனின் நிலையே நமக்குள் அடக்கி
2.வசிஷ்டாத்வைதத்தை நமக்குள் நம்முடைய நிலைகளுக்குள் அடங்கி நடக்க வேண்டும் என்ற நிலையும்
3.அதனை ராஜரிஷி என்ற நிலைகள் மற்றவர்கள் ஒடுங்குவது போல அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்து
4.நமக்குள் அகங்காரமோ பாசமோ மற்ற நிலைகள் தீமையை விளைவிக்கும் நிலைகளில் இருந்து மீட்டி
5.உயிருடன் ஒன்றிய இந்த ராஜ நீதியை அன்று உணர்த்தினான் வியாசகன்.

அதனின் வழிகளை நாம் பின்பற்றிச் செல்வோம்.

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

 

உலகில் பக்தி மார்க்கங்களில் எத்தனையோ தவறுகள் செய்து வருகின்றனர். அகண்ட அண்டமும் இந்தப் பிரபஞ்சமும் இந்த உடலும் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அறியாமையிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும்..

ஒருத்தர் இங்கிருந்து போகிறார் என்றால் அங்கே சாக்கடையாக இருக்கின்றது…! என்று சொல்கின்றோம். அந்தச் சாக்கடையில் அவர் விழுகாமல் இருப்பதற்காகச் சொல்கின்றோம்.

ஒருத்தர் குளிக்கப் போகின்றார். இந்த இடத்தில் மடுகு இருக்கின்றது நீ விழுந்து விடாதே என்று சொல்வதற்கு நாம் தயங்கக் கூடாது. ஏனென்றால் அவன் அங்கே சென்றால் செத்துப் போய்விடுவான் என்று காப்பாற்றுவதற்காகக் கட்டாயப்படுத்தி நாம் இழுக்கின்றோம்.

சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான்… “போகட்டும்…!” என்று விடுவதற்கு மனது வருகின்றதா…?
1.அதே போல் நம்முடைய ஞானத்தால் மற்ற மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
2.அவன் அகராதி பிடித்தவன் என்று சொல்லக்கூடாது‌ அந்த உணர்வு நமக்குள் வந்து நம் நல்லதையே மாற்றிவிடும்.

அதே சமயத்தில் நம் வீட்டிலோ அல்லது மற்றவர்களோ சில சந்தர்ப்பங்களில் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்… குறைபாடுகள் வந்துவிடும்.

அந்த அறியாமை என்னும் இருளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்ற வகையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று அவர்களுக்கு நாம் பாய்ச்ச வேண்டும்.

அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் நமக்குள் முதலில் இயங்கிவிடக் கூடாது. முன்னால் தடுத்துப் பழக வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய தவறு செய்யும் உணர்வு நம்மையும் தவறு செய்பவர்களாக மாற்றுகின்றது.

இப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…?
1.நான் சொல்லிப் பார்த்தேன் முடியவில்லை என்றால்
2.அதைக் காட்டிலும் நாம் கடுமையான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் வரப்படும் பொழுது தேடிய செல்வத்தைக் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை. நல்ல ஒழுக்கங்கள் எல்லாம் போய் என்ன வாழ்க்கை…? என்ற இந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும். இராமேஸ்வரத்தில் என்ன செய்கின்றோம்…? நாம் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. இப்பொழுது மனிதனாக ஆனபின் என்ன செய்கின்றோம்…? தனுஷ்கோடி.

அகஸ்தியன் என்ன செய்கின்றான்…? தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றினான்.
1.ஆக நமது வாழ்க்கையில் தீமையின் நிலைகள் வந்தால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

இப்பொழுது நோயாளியைப் பார்த்து இரக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினால் சிவ தனுசு ஆகின்றது. அந்த உணர்வின் தன்மை நாம் இயக்கப்பட்டு அந்த நிலைக்குப் போனால் நாம் அடுத்த பிறவிக்குப் போகின்றோம். மனிதனல்லாத பிறவிக்குத் தான் போக வேண்டும். அவன் வேதனை எப்படிப் பெறுகின்றானோ அந்த உணர்வாகின்றது.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன பிற்பாடு அந்த துருவ நட்சத்திரம் என்பது விஷ்ணு தனுசு.
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றும்.
2.நமது குருநாதர் காட்டிய வழியில் அதை நமக்குள் பெருக்கி எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

அருள் ஞானச்சக்கரம்

அருள் ஞானச்சக்கரம்

 

“அருள் ஞானச்சக்கரம்” பூஜை அறையில் வைக்க வேண்டும். சில சிரமங்களையோ சங்கடங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளையோ உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும் “எந்தக் காரணத்தைக் கொண்டும்…”
1.கணவன் மனைவிக்குள் பேரானந்த நிலையைத் தான் என்றும் உருவாக்க வேண்டும்.
2.கோபங்கள் வரலாம்… ஆத்ம சுத்தி செய்து உடனே அதைத் தடுத்துப் பழக வேண்டும்…
3.நானும் விடுபட வேண்டும்… மனைவியும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று
4.ஆனால் இதை நீங்கள் சீராகச் செய்தால் “நான் செய்வது தான் சரி” என்று வராது.

பால் ருசியாகத் தான் இருக்கின்றது… அதிலே பாதாமைப் போட்டால் ருசியாகத் தான் இருக்கிறது. ஒரு துளி காரம் பட்டு விட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சி தான் வரும்.

ஆது போல் நம் நல்ல மனதில் வெறுப்பை ஊட்டினால் என்ன செய்யும்…? விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைத் தணித்துச் சுவையாக மாற்ற வேண்டும்.

தியானம் செய்தேன் என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என்றால் நீங்கள் எதைச் செய்கின்றீர்கள்…? இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகிறீர்கள்.

1.தியானத்தைக் கூட்டி நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.அந்த உணர்வு பெறுக வேண்டும் என்று மனதிலே பெருக்க வேண்டும்.

வேதனை உணர்வுகளை எடுத்து “எல்லாம் செய்தேன்… இப்படி ஆகிவிட்டது என்னத்தைத் தியானம்…?” என்று கொண்டு போனால் அது நமக்கு அல்ல. கடைசியில் நாம் எதை எடுத்து எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் உருவாக்கும்.

ஆகவே எந்த காரணத்தைக் கொண்டும் தனுசுக்கோடி…! வரக்கூடிய தீமைகளை மாற்றி… கோடி என்று சொன்னால் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்குவது… பிறவில்லா நிலை அடையச் செய்வது.

உணர்வின் எண்ணங்களைப் பற்றி இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். அதை நாம் கடைபிடித்து நம் வாழ்க்கையை இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும்.

என்னதான் ஒழுங்குபடுத்திச் செல்வத்தைத் தேடினாலும் அது நிற்குமா…? இந்த உடலே சொந்தமில்லை என்கிற போது உடலால் தேடிய செல்வம் எப்படி நிலைத்து இருக்கும்…!

1.அந்தப் பேரருளை இந்த உடலிலே கூட்ட வேண்டும்
2.எந்த அளவுக்குக் கூட்டுகின்றமோ இது அழியாச் செல்வமாகின்றது.
3.என்றும் ஏகாந்த நிலை வருகின்றது… அழியா ஒளிச்சரீரம் பெறுகின்றோம்
4.அதைத்தான் ஒவ்வொரு மகரிஷிகளும் பெற்றார்கள்… அதையே நாமும் பெறுவோம்.

தீமையை நீக்கும் சக்தியைப் பற்றி குருநாதர் எனக்கு உணர்த்திய விதம்

தீமையை நீக்கும் சக்தியைப் பற்றி குருநாதர் எனக்கு உணர்த்திய விதம்

 

மனிதனான பின் நாம் என்ன செய்கின்றோம்…? மனிதன் ஆன பின் பண்பு பரிவு பாசம் என்ற நிலை வருகின்றது பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனைகளையும் பங்கு கொள்கின்றோம்… கேட்கின்றோம்.

நம்மிடம் சம்பாத்தியம் இருந்தால் உதவி செய்கின்றோம். சம்பாத்தியம் இல்லை என்றால் கூட உடலால் சிறிது உதவி செய்கின்றோம். ஆனால் அவர் கஷ்டத்தை நுகர்கின்றோம்.

நாம் நுகர்ந்த அந்த உணர்வைச் சுத்தப்படுத்துகின்றோமா…? இல்லையே…! அதற்கு என்ன வழி…?

அதற்குத்தான் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று
1.அந்தப் பழங்கால நிலைகளில் வாழ்ந்த அந்தப் புலஸ்தியர்கள்
2.தங்களுக்கு வரும் தீமையிலிருந்து எப்படித் தப்பித்துக் கொண்டார்கள்…? என்பதைச் சொண்னார்.

காட்டிற்குள் கூட்டிக் கொண்டு போனவுடனே ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கச் சொல்கின்றார்.

யானைகள்… கூட்டமாக வரும் நேரத்தில் கொண்டு போன உடனே அந்தப் பச்சிலையை நசுக்கச் சொன்னார்/

யானை மனிதனைப் பார்த்த உடனே சும்மா விடுமா…? அது என்ன செய்கின்றது. அது தனக்குள் காதை விடைத்துத் தலையைத் தூக்குகின்றது.

அப்பொழுது
1.கையில் பச்சிலையை நசுக்கி “ஃபூ…” என்று ஊது என்கின்றார்..
2.ஊதியவுடன் அந்த விஷத்தினால் அந்த யானையிக்கு ஒரு மயக்கம் வரச் செய்கின்றது.
3,அப்பொழுது அதற்குப் பெயர் யானை மிரட்டி.. அந்தப் பச்சிலையைப் பார்த்தவுடன் யானை மிரண்டு ஓடுகின்றது.

இதே மாதிரி புலி வருகின்றது. அந்த புலியின் தன்மைக்கு என்ன செய்கின்றார்…? அதே மாதிரி ஓரு பச்சிலையை எடுத்து நசுக்கி இதே மாதிரி “ஃபூ…” என்று ஊது என்கிறார்.

அப்பொழுது அந்தப் பச்சிலையின் மணத்தை நுகர்ந்தவுடனே விஷம் ஒடுங்குகின்றது… புலி விலகிச் செல்கிறது.

அப்போது இன்னொரு பச்சிலை எடுக்கின்றார். ஒரு தேன்கூடு இருக்கின்றது. நீ பச்சிலையைத் தேய்த்து விட்டுக் கையைக் கொண்டு போய்க் கூட்டிற்குள் விடு என்கின்றார்.
1.தேனீ என்னைக் கொட்டவில்லை.
2.அதுபாட்டிற்கு விலகிச் சென்று விட்டது. அப்பொழுது அந்த பச்சிலையைப் பார்த்தவுடன் அதனின் விஷங்கள் ஒடுங்குகின்றது.

அப்புறம் ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொள்ளச் சொன்னார்/ தேளைப் பிடித்து என் மீது விடுகின்றார். சாமி…சாமி…! என்கின்றேன்.

அட நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா. தேள் உன்னை என்ன செய்யும் என்கிறார்…? பச்சிலையை கையில் கொடுத்து விட்டு தேளை விடுகின்றார். தேள் என்னை ஒன்றும் செய்யவில்லை.

பச்சிலையைக் கீழே போடு என்கின்றார். கீழே போட்டவுடன் பட்டீர்… என்று அடித்தது. கீழே போட்ட உடன் பொட்டென்று அடித்தது.

ஏன்டா இப்பொழுது கொட்டுகின்றது என்றார்…? எனக்கென்ன சாமி தெரியும்…! என்றேன்.

1.உன் உடலில் இருந்த அந்தப் பச்சிலையின் மணத்தினால் தேளின் விஷத் தன்மை ஒடுங்குகிறது.
2.பச்சிலைகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரியுமா…?
3.பச்சிலை நம்மைக் காக்கவும் செய்கின்றது… மருந்தாகவும் பயன்படுகின்றது
4.பல விஷ ஜந்துகளிடமிருந்து நம்மைக் காக்கவும் செய்கின்றது.

இந்தப் பச்சிலைகளைத் தான்… உயிரணு புழுவில் இருந்து எல்லா உயிரினமும் எல்லாவற்றையும் சாப்பிட்டு வந்தது. இத்தகைய நிலைகள் கொண்டு தான் மனிதனாக இருக்கிறோம்.

மனிதனான பிற்பாடு என்ன செய்கின்றோம்…? இதையெல்லாம் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்த பிற்பாடு கெட்டது வராதபடி தடுக்கின்றோம்.

இப்படித்தான் புலஸ்தியர் என்று சொல்பவர்கள்… காட்டு விலங்குகளுடன் விலங்குகளாய் வாழ்ந்து வந்த அந்தக் காலத்து மனிதர்கள் இந்த மாதிரி விஷங்களை ஒடுக்கக்கூடிய பச்சிளைகளை எல்லாம் சந்தர்ப்பத்தால் தெரிந்து கொள்கின்றார்கள் என்று என்னைத் தெளிவாக்கினார் குருநாதர்.

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்

 

நாம் நமது வாழ்க்கையில் இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம். எத்தனையோ ஆண்டு வாழ்கிறோம் என்று இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தைப் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது.
2.வேதனை என்ற உணர்வு வளர்ந்தால் தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் சக்தியும் இழக்கப்படுகிறது.
3.பாதுக்க்கும் தன்மை இழந்து விட்டால் நம் உடலில் நோய் உருவாகின்றது.
4.நோய் உருவானால் இதுவே நாம் தேடிய செல்வமாக மாறிவிடுகின்றது.
5.நோயின் உணர்வுகள் விளைந்தால் அந்தச் செல்வத்தின் வழியே உயிர் அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்த உடலை உருவாக்கி விடுகின்றது.

ஆகவே தேடிய செல்வங்கள் நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. வேதனை வெறுப்பு என்ற உணர்வைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடும். கோபம் குரோதம் என்ற நிலையானால் அதன் வழி அடுத்த உடலை உருவாக்கி விடுகிறது.

ஒரு நிலம் சரி இல்லை என்றால் அதைப் பண்படுத்துகின்றோம். ஒரு வீடு கட்டினால் அது சரியில்லை என்றால் அதைக் காட்டிலும் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகின்றோம்.

இதைப் போல தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது உயிர். ஆனால் அதைப் போன்ற உடலின் தன்மை வரும் பொழுது அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது.

1.அத்தகைய வேதனைகளை உருவாக்குவதற்கு மாறாக
2.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றைக்கும் நிலையான சரீரமாக வாழும் நிலையை
3.பேரருள் பெற்ற உணர்வினைச் செல்வமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கிப் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

அதைத் தான் இராமேஸ்வரத்தில் ராமன் நேரமாகிவிட்டது என்று உணர்வின் தன்மை கூட்டி பூஜிக்கத் தொடங்கினான் என்று காட்டியுள்ளார்கள்.

இதைப் போலத் தான்
1.அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் பகைமையற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் உணர்வினை ஒன்று சேர்த்துக் கூட்டி
2.அந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாகி ஒன்றாகி ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வுகளைப் பெருக்கி நீங்கள் எண்ணும் பொழுது
3.அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஒளியாக மாறி அருள் ஒளி என்ற நிலைகள் பெறும் தன்மை வரும்.

ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றேன்.

இந்த உடலின் நிலைகள் நாளடைவில் கரையும் தன்மை தான் வளரும். அதாவது வளரும் தன்மையில் உடல் கரையும்… ஆனால் உணர்வுகள் வளரும்.

1.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… ஆக அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்
2.அந்த அருள் ஒளியை நாம் பெறுவதற்கே நாம் முயற்சிப்போம்.

செல்வமும் இந்த உடலும் நம்முடன் வருவதில்லை. அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளரும் பருவத்தினை ஏற்படுத்தி வளர்த்திடும் நிலையும்… இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியில் நாம் செல்வோம் என்று பிரார்த்திக்கின்றேன்.

நீங்கள் வெளிவிடும் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்தும் சக்தியாகப் படர வேண்டும்

நீங்கள் வெளிவிடும் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்தும் சக்தியாகப் படர வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உடலில் பதிவாக்கி அதை நினைவு கொண்டு வளர்த்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் அசுத்த உணர்வுகளை நீக்கி அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் இருளை அகற்றிடும் வல்லமையும் பெறுவீர்கள்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போல அவ்வப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்குள் கலந்த விஷத்தை அகற்றி நல் உணர்வினைப் பெருக்கி இப்பிறவியில் பிறவி இல்லா நிலை என்னும் அருளுணர்வைப் பெருக்கி நாம் வாழ முடியும்.

அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருளை பதிவாக்கி கொண்டே வருகின்றேன்.

திட்டியவரை மீண்டும் எண்ணப்படும் பொழுது தீமையின் உணர்வு எப்படி வருகின்றதோ… வேதனைப்படுபவரைப் பார்த்து அந்த உணர்வு பதிவானால் அவரை எண்ணும் பொழுது வேதனை உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றதோ… இதைப் போல
1.வேதனைகளை அகற்றிய இருளை அகற்றிய அருளைப் பெருக்கும் தன்மையை நுகர்ந்து உங்களுக்குள் பதிவாக்கச் செய்கின்றேன்
2.எமது குருநாதர் எமக்குள் பதிவாக்கியது போன்று…!
3.அதன் வழியில் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.
4.உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை இருளில் இருந்து மீட்டிடும் திறன் பெற வேண்டும்.
5.உங்கள் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தையே நஞ்சினை அகற்றிடும் தன்மை பெறுதல் வேண்டும்
6.உங்கள் மூச்சால் உணவாக உட்கொண்ட உணவு தாவர இனங்களில் அது பட்டபின் நல்ல அணுக்களாக உருவாகி
7.அதனுடைய மலங்கள் தாவர இனங்களைச் செழித்து வளரச் செய்யும் தன்மை வர வேண்டும்.
8.உங்கள் மூச்சால் கேட்போர் உணர்வில் இருளகற்றி நல் அணுக்களாக உருவாக்கி நற்பயனை அடையும் மக்களாக நீங்கள் மாறுதல் வேண்டும்.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றேன்.

என் ஒருவனால் இது முடியாது. ஒரு உயர்ந்த வித்தினை அது பலவாக உருவாக்கி பல வளர்ச்சிகளைப் பெறச் செய்து அனைவரது உடல்களிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கினால் உலக இருளை அகற்றலாம்… அருள் ஒளியைப் பெருக்கலாம்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும் என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைத் தனக்குள் வளர்த்து விட்டால் அது தன் இனத்தை வளர்க்கச் செய்யும்… அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

1.ஆகவே பேரருளை நமக்குள் பதிவாக்குவோம்
2.இருளை அகற்றுவோம் பேரொளியை வளர்ப்போம் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

நாம் பற்ற வேண்டிய முக்கியமானது எது…? இந்த உடல் சீராக இயங்க வேண்டும். உடல் சீராக இயங்கவில்லை என்றால் என்ன ஆகும்.

குருநாதர் இமயமலைக்கு என்னை அழைத்துச் செல்கின்றார் நடந்து போய்க் கொண்டிருக்கின்றேன் மலை மாதிரி தெரிந்தது நடந்து சென்றேன் திடீரென்று திரும்பிப் பார்த்தால் திடு…திடு… என்று பனிப் பாறைகள் இடிந்து விழுகின்றது.

அதைப் பார்த்தவுடன்… “திரும்ப எப்படிச் செல்லப் போகின்றேன்…?” என்ற பயம் வருகின்றது.
1.பயம் வந்தவுடன் பலவீனமான எண்ணங்கள் வருகின்றது
2.குடும்பத்தில் பையன் என்ன செய்வான்…?
3.நாம் போய் விட்டோம் என்றால் என்ன செய்வார்கள்…? என்ற எண்ணம் வருகின்றது.
4.போய்விட்டால் என்ன செய்வது…? என்ற மனம் வரப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.

வெறும் துண்டும் வேஷ்டியும் தான் கட்டி இருக்கின்றேன். அதைத் தவிர வேறு இல்லை.

ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி சக்திகளை அணுக்களில் சேர்த்துக் கொண்டிருந்த பொழுது குளிர் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பாதை இடிந்து விழுந்தவுடன் என்ன நடக்கின்றது…?

பயங்கரமான ஓசையாக வருகின்றது பயம் வராமல் இருக்குமா…? நான் நிற்கும் இடமும் விழுந்து விடுமோ…! என்ற பயம் வருகின்றது. வீட்டின் ஞாபகம் வருகிறது. கிர்ர்… என்று இருதயம் இறைய ஆரம்பித்துவிட்டது.
1.அப்புறம் வீட்டைக் கவனிப்பதா…? பையனை காப்பாற்றுவதா…?
2.சொத்து… இந்த உடலையே காக்க முடியவில்லை என்றால் பின் எதை வைத்துச் செய்வது…?

குடும்பத்தில் எல்லாம் தைரியமாகச் செய்கின்றோம். அடிக்கடி கோபமும் வேதனையும் அதிகமாகப் பட்டால் வாத நோய் வருகின்றது கை கால் இழுத்து விடுகின்றது நாம் எதைச் செய்ய முடியும்…?

பனிப் பாறையில் வைத்து இருத\யம் இறைத்தவுடன் நினைவுகள் மாறுகின்றது… அப்படி ஒரு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.

அப்பொழுதுதான் குருநாதர் காட்சி கொடுத்து மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே என்ற பாடலைப் பாடி வருகின்றார். பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? இப்பொழுது நீ போய்விட்டால் நீ எதை காக்கப் போகின்றாய்…!

1.கொஞ்ச நேரத்தில் நீ ஆசைப்பட்டதெல்லாம் சென்றுவிடுமே
2.மின்னலைப் போல மறைவதைப் பாராய் உன் ஆசை எல்லாம் மறைந்து விடுகின்றது.
3.எதிலே மடிந்தாயோ அங்கே தான் செல்வாய்.
4.ஆக நீ எண்ண வேண்டியது எது…?
5.அவர்களுக்கு அந்த அருள் பெற வேண்டும் இருள் நீக்கிப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அங்கே வலுவாகும்.

ஆனால்… நான் சொல்லிக் கொடுத்த உயர்ந்த குணங்களை எடுக்கத் தவறினால் நீ எங்கே செல்கின்றாய்…? ஏனென்றால் அந்த இடத்தில் மன உறுதி கொண்டு வருவதற்காக இப்படி அனுபவத்தைக் கொடுக்கின்றார்.

அனுபவித்துப் பெற்ற அந்த உயர்ந்த சக்திகளை நீங்களும் பெற முடியும். குருநாதரிடம் கஷ்டப்பட்டு அனுபவித்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நிவர்த்திப்பதற்குச் சக்தி கொடுக்கின்றேன். வீட்டிலிருந்தே அதைப் பெற முடியும்..

ஆனால் நான் காடு மேடெல்லாம் அலைந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது வீட்டில் இருந்தே அதை நீக்குவதற்கு வழியைச் சொல்லிக் கொடுக்கின்றேன்.

கொடுத்தாலும் கூட… நானும் தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றேன்
1,எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது என்று
2.இதையே சொல்லிக் கொண்டிருந்தால் எது வரும்…? அதுதான் ரிமோட் பண்ணிக் கொண்டே இருக்கும்.

சிக்னல் கொடுக்கின்றார்கள்… கரெக்டாக மாற்றிக் கொடுக்கின்றது. அந்த சிக்னலை நிறுத்தி விட்டால் மறுபடியும் சிவப்பு என்றால் சிவப்பைத்தானே கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
1.அப்போது நமக்கு அந்த உணர்வு டேஞ்சரான… சோர்வான உணர்வைத் தான் ஊட்டும்.
2.இது எல்லாம் நன்றாகத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

மலை மீது வைத்து எனக்கு அனுபவத்தைக் கொடுத்து அதைத் தெளிவாக்குகின்றார்.
1.எப்படி இருக்கின்றது…?
2.அப்போது எடுக்க வேண்டிய முறை எது…?
3.அவர் கொடுத்த சக்தியை ஏன் எடுக்க முடியாமல் போனது…?
4.ஏன் அந்த மாதிரியானது…? என்று காண்பிக்கின்றார்.

இதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறைகள் வந்தால் நீங்கள் அதை நீங்கள் மாற்றப் பழக வேண்டும் அல்லவா உங்களுக்கு இந்தப் பவரை எடுப்பதற்குச் சக்தியைக் கொடுத்திருக்கின்றோம்.

அந்தக் கண் கருமணிகளில் பதிவாகி விடுகின்றது. அதன் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சக்திகளைச் செலுத்தும்படி சொல்லுகின்றோம்.

ஆனால்
1.சோர்வான எண்ணங்கள் எடுக்கப்படும் பொழுது
2.அந்தச் சோர்வுக்குத் தக்கவாறு சோர்வடைந்து கொண்டே செல்கின்றோம்.

பையனுக்குக் குறைபாடு என்றால் அவனுக்கு நல்ல நிலை வரவேண்டும் எண்ணினால் அவனுக்கும் உற்சாகம் வருகின்றது நமக்கும் தெளிவாகின்றது நன்றாக இருக்கின்றோம்.

ஆக நமக்குள் காப்பாற்றப்பட வேண்டியது எது…?
1.உங்களுக்கு அந்தப் பவரைக் கொடுக்கின்றோம்.
2.அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.