“உயிர் வழியாக (புருவ மத்தி) எடுத்துத் தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்

“உயிர் வழியாக (புருவ மத்தி) எடுத்துத் தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்

 

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது அங்கிருக்கக்கூடிய தெய்வச் சிலையை உற்றுப் பார்த்து “அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்…” என்று ஞானிகள் காட்டிய வழியில் எண்ணினால் நாம் தெய்வமாகின்றோம்.

ஆனால் அப்படி நாம் நுகர்வதில்லை. யாரும் நமக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கவும் இல்லை.

தெய்வத்திற்குச் சந்தனத்தை அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் “அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெற வேண்டும்” என்று நினைக்கின்றோமா…? என்றால் இல்லை.

சாமி மேல் பல விதமான மலர்களைப் போட்டிருக்கின்றார்கள். அப்பொழுது “மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?” என்றால் இல்லை.

சாமிக்கு மலரைப் போட்டு அலங்கரித்து அர்ச்சனை செய்யும் பொழுது நமக்குள் இருக்கும் “கஷ்டங்கள் எல்லாம் கிளர்ந்து எழுகின்றது…”

உதாரணமாக ரோஜாப்பூ நறுமணமாக இருக்கப்படும் பொழுது மற்ற தீமையான மணங்களை அதன் அருகிலே விடுவதில்லை. அதே போல தீமையான உணர்வுகள் நம் ஆன்மாவிலே பெருகி இருக்கப்படும் பொழுது நல்ல மணங்களைக் கண்டால் அருகே விடுவதில்லை. கண்களிலே தண்ணீர் தான் வருகின்றது.

சாமி மேல் போட்டிருக்கும் ரோஜாப் பூவைப் பார்த்தாலும் சரி மற்ற அர்ச்சனை அபிஷேகங்களைப் பார்த்தாலும் சரி பார்த்தவுடனே கண்ணிலே தண்ணீர் தான் வருகின்றது.

ஏனென்றால்
1.எதிர்மறையான உணர்வுகள் மோதியவுடன்
2.இப்படி எல்லாம் எனக்குக் கஷ்டம் வந்துவிட்டதே…! என்று தன்னை அறியாமலே கண்ணில் நீர் பெருகும்.

அங்கே தெய்வச் சிலையை பார்க்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வு வருவதில்லை. நமக்கு இடைஞ்சல் செய்தவர்கள் உணர்வுகள் முன்னணியில் வந்துவிடுகிறது.

காரணம் இந்த ஆன்மாவிலே நாம் சுவாசித்த உணர்வுகள் இருக்கப்படும் பொழுது இதுவே கண்களிலும் வருகின்றது.
1.ஆன்மாவிலே பட்டதை நுகரப்படும் போது உயிரிலே பட்டு உணர்வுகள் புலனறிவில்…
2.உடலுக்கும் சரி
2.கண்ணுக்கும் சரி
3.சொல்லுக்கும் சரி
4.வாசனைக்கும் சரி
5.நல்ல வாசனையை அது எடுக்க விடாது.

தெய்வ குணம் பெற வேண்டும்… தெய்வமாக நாம் ஆக வேண்டும்…! என்று ஞானிகள் காட்டிய முறைப்படி ஆலயத்தில் யாரும் நினைப்பதில்லை.

உயர்ந்த சக்திகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எப்படி எப்படியோ ஞானிகள் நமக்கு வழிபடுத்தி உள்ளார்கள்.
1.அந்த ஞானிகள் உணர்வை நமக்குள் பதிவு செய்யப்படும் பொழுது
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காற்றிலிருந்து அந்த அருள் சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்.
3.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
4.புருவ மத்தி வழியாக எண்ணி உடலுக்குள் கொண்டு சென்று தீமைகளைப் பிளத்தல் வேண்டும்.

அப்படிப் பிளந்தால் தான் தீமைகள் அகலும்.

தீமைகளை அகற்றிடும் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கும் முறை என்பதே…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி
2.அதன் வழி கூடி உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்தி எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்.

ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான் சிஷ்யன்”

ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான் சிஷ்யன்”

 

மனிதனின் நெற்றியும்… நெற்றிப்பொட்டில் அறுகோணக் கருவறை குணங்களும்… சிருஷ்டியையே… சிருஷ்டியைப் பிணைத்திடும் செயலும் காட்டப்பட வேண்டும்.
1.இந்த நிலை உணர்ந்து கொண்டால்
2.இவைகள் குவிப்பு “அகஸ்திய போக இடும்ப சூட்சம இரகசியங்கள்…!”

“மகரிஷிகளின் சர்வோதய சக்தி” வலுக்கூட்டும் கூட்டு தியானத்தின் போது கார்மேக வான் எழுந்த ஓசையுடன் விண் நீர் பெய்திடும் சூழலில்… தியானத்தின் ஈர்ப்பலையாக மின் நுண் காந்த சக்தி எனும் பதிவு படுத்திட்ட நிலை நிறைவின் போது… உபதேச உரையாக உரைத்திட்டதன் செயலில் “கர்ம தியாகம்” என்ற சூட்சமம் உள்ளது.

சூரியனை எண்ணி ஈர்த்திடும்… “ஓர் ஜெப மந்திரம் – கர்ண முறை வழி” என்று இரகசியப்படுத்தப்பட்டு உலகினுக்கு உரைத்திடாத் தன்மையாக வந்தது தான்.
1.ஆசான் சிஷ்யனுக்கு வெளியில் நீ இதை உரைத்திட்டால் உரைப்பவன் நரகம் எய்துவான்
2.ஆனால் இந்த வேத மந்திரம் கேட்பவன் சொர்க்கம் பெறுவான்.
3.இருந்தாலும் “இதை வெளியில் உரைத்திடாதே…!” என மொழிந்தார் ஆசான் தன் சிஷ்யனிடம்.

ஆனால் அப்பொழுது மௌனமாக அமர்ந்திருந்த அந்த சீடன் காலைப் பொழுதில் உயர்ந்த ஓர் மதில் மீது நின்று அனைவரையும் அழைத்தான்
1.எல்லோரும் நன்நிலை பெற்றிட வாருங்கள் என்று
2.அவன் ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான்…”

ஆசான் கனன்று எழுந்து… அடா… என்ன காரியம் செய்தாய்…! இரகசியப்படுத்தப்பட்ட நிலையை உரைத்தாயே… ஏன்…? என்று கேட்கின்றார்.

சீடனோ… “கேட்டவர் அனைவரும் சொர்க்கம் புகுவர்” என உரைத்த ஆசானே…!
1.இதோ இத்தனை ஆத்மாக்களும் கடைத்தேறட்டும்…
2.நான் ஒருவன் மட்டும் கேட்பதில் “ஸ்ரீமன் நாராயணன் பதம் பெறுவேன்…” என்ற எண்ணத்தை
3.இதோ…! இங்கே குழுமி இருக்கும் சிரத்தை மிக்க ஆத்ம ஜீவன் ஒவ்வொருவரிலும் நான் அந்தப் பரந்தாமனையே காண்கின்றேன்.
4.இந்தக் “கர்ம தியாகம்” உள்ளன்புடன் உவந்த எனக்கு “என் நிலை செய்வதாகிலும் ஆகுக…! என்றே உரைத்திட்டான்.

அப்படி வெளிப்படுத்திய அந்தப் பெரியோர் இன்றும் ஒளி நிலை பெற்றிருக்கின்றனரப்பா.

அதே சமயத்தில்… மறைமுகப்படுத்துவது வளர்ச்சிக்கே…!

நுணுகி ஆய்வு செய்திடும் சிந்தனையின் வளர்ச்சி… பக்குவம் கொண்டிட்ட நிலையின் அடுத்த வளர்ச்சிக்கு “மகரிஷிகள் உவந்து வழிகாட்டுகின்றார்கள்…”

நீர் பாய்ச்சித் தானியங்கள் விளைச்சல் எனும் மகசூல் பெற்றிடும் ஓர் உழவன் “கேணியில் நீர் நிறைந்திருக்கின்றதே…!” என்று உட்கொண்டிடும் தேவைக்கு மேல் பாய்ச்சிட்டால்… வளர்ப்பின் பலன் செழிப்பைக் காட்டினாலும்… பெற்ற பயனைப் பெற்றுத் தந்திடும் சூட்சும நிலை காட்டிடாது.

1.பக்குவம் கண்டு உபதேசங்கள் அளிப்பதில் தடை ஒன்றுமில்லை.
2.மாமகரிஷிகள் ஆசிகள் என்றும் உனக்குத் துணை நிற்கும்.

புருவ மத்தியில் உயர்ஞான நற்குணங்கள் மோதினால் “மனிதன் சிருஷ்டிக்கும் பிரம்மன்”

புருவ மத்தியில் உயர்ஞான நற்குணங்கள் மோதினால் “மனிதன் சிருஷ்டிக்கும் பிரம்மன்”

 

சிருஷ்டியின் தொடராக மகரிஷிகளால் மறைமுகப்படுத்தப்பட்ட நிலைகள் தெளிவு பெறும். படைப்பாக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொள்ளும் செயலில்
1.சிதாகால மண்டலம் என்றே தன்னுள் கவன ஈர்ப்பு நரம்பு நெற்றி பொட்டினுள் எண்ணங்களும்…
2.எண்ணத்திற்கொப்ப வாசனைகளும் வாசனைக்கொப்ப ஜீவன் கொண்டிடும் அணுக்களின் செயலாக
3.சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிரம்மனே.

உலகோதய நிலை நாடிடும் மனிதன்… நொடிப்பொழுதினுள் அதற்கும் குறைவாக உயிரணுக்கள் எண்ணத்திற்கொப்ப ஈர்த்து… சிருஷ்டியின் செயல் உலகோதய நாட்டமாக மோகத்தின் குணங்கள் முதன்மையாகக் கொண்டிடும் பொழுது… சரீரத்தின் சகல அணுக்களும் சக்தி கொண்ட சூட்சுமம் “ஓம்” பொருள் என்னும்… ஓங்கார ஒலி கொண்டு ஒளி காட்டும் “தன் ஆத்ம வலுவை உணர்வதில்லை…”

வேல் என்ற அறிவு நற்குணங்கள் என்ற முருகன் கைக்கொள்ளும் செயலில்… அகங்காரம் ஆணவம் மோகவலைப்படுத்தும் “சிருஷ்டி என்றிட்ட குணங்களென்னும் பிரம்மன்…” தன் செயல் ஒழித்து நற்குணங்கள் வசம் சிறைப்படுகின்றான்.

பின் துர்க்குணங்கள் தன் செயல் விடுக்க
1.நற்குணங்கள் சிருஷ்டிப்பதே அதுவும் பிரம்ம தத்துவமாக
2.உலகோதயம் எனும் ஈர்ப்பின் நிலை விடுத்து கை கொண்ட அறிவாகக் காட்டுவதே
3.சிருஷ்டியையே முருகன் சிருஷ்டித்தான்… “பிரம்மாவைச் சிறை பிடித்தான்…!” என்று சொல்வதில் ஓர் சூட்சமப் பொருள் உண்டு.

நெற்றிப்பொட்டு எனும் கவனத்தின் ஈர்ப்பில் உள் நுழைந்திடும் ஈர்ப்பினும் எண்ண நினைவலையாம்… அணுக்கள் அறுகோணக் கருவறை என்ற அறிவின் சூட்சமம் செயல் கொண்டிட… அணுக்களின் எந்த வீரிய குண சக்தியோ அந்தச் சக்தியே செயலாக வேல் தோன்றுவதும் தோன்றாதிருத்தலும் துர்க்குண சம்ஹாரச் செயலுக்கு மனிதன் கொண்டிடும் வைராக்கியம் அந்தச் செயலின் வலுக் கூட்டும்.

1.சப்த கன்னிகள் சாப விமோசனம் என்பதுவும் சூட்சமப் பொருள் தான்
2.ஒளி கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் சப்தத்தின் நாத வாகினி “உலகத்தின் ஈர்ப்பில் செயல்படுவது சாபம்…”

அத்தகைய சிருஷ்டி அன்றி “சக்திவேல் எனும் அறிவு செயல் கொண்டிட…” உலகோதயம் மாற்றிட்ட சப்த நாதங்களைத் தன்னுள் மெய் ஒலி ஒளி சக்தியாகச் சப்தரிஷிகளின் படைப்பே “நேர்முகமாகக் கொள்தல் என்பது ஈர்ப்பின் நிலை விடுத்த சாப விமோசனம்…”

1.எண்ணத்தின் உயர்வே அறுகோணக் கருவறை உயர்த்திட்ட பீடம்…!
2.அதனில் உயிராத்ம சக்தியை அளந்திடச் செய்திட “நீல வண்ணம்” காட்டும் குளிர்விப்பு சக்தியாகத் தோற்றம் காட்டும்.

பர வெளியில் உருக்கொள்ளும் உயிரணுக்கள் அதனின் சுழற்சி அறுகோணத் தன்மையதாய் அமில குண ஈர்ப்பின் எண்ணம் கொண்ட ஜீவன் பெறுகின்றது. சிருஷ்டியின் இரகசியங்களை இப்படி பிண்டத்தில் கண்டனர் மகரிஷிகள்.

சரீரத்தில் கண்ணுற்ற செயல் எண்ண ஜீவித செயல்பாடு “சிரசின் நெற்றிப் பொட்டில் அறுகோணக் கருவறையாக”
1.அதனுள் எண்ண குண வாசனை சுவாச அலை எனும் ஈர்ப்பாகச் செயல் கொண்டிட
2.சிவசக்தி சுழுமுனை நாடிகள் மூலாதாரம் தொடங்கி பிடரிக்கண் பார்வையுடன் இணைந்து கொண்டு
3.அறுகோணக் கருவறையின் உள் நிகழ்வாகச் செயல் கொண்டு எண்ணங்களின் ஜிவித சிருஷ்டியே நடைபெறுகின்றது.

பர வெளியின் உயிரணுக்கள் தன்மையில் உள்நிகழ்வாகச் செயல் கொண்டிடும் சூட்சுமங்களை… சித்தர்கள் மனித சரீரத்தில் செயல் கொண்டிடும் சூட்சுமத்தையே ஒப்பு நோக்கி… உதயம் கொண்டிடும் அணுக்களின் தன்மையை உணர்த்தினர்.

அணுக்களின் செயல்பாட்டைச் சரீர நிகழ்வாகக் கண்ட மாமகான்கள்
1.சிவன் கையில் முத்தலை சூலாயுதம் சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் என்றே
2.”சூல்” என்று அணுக்களின் ஜீவித செயலின் கரு என்றே மறைபொருள் காட்டினர்.

ஏழு பிறவிகள் என்று கூறியவற்றுள் அணுக்களின் உதயம் காட்டிடும் செயலில்… “அறுகோணங்கள்” உலகின் ஜீவித அணுக்கள் கொண்டிடும் “பிறப்பின் இரகசியங்கள்” எனவும்… அந்த உயிரணு தனக்கு ஒத்த அமில குணத்தன்மைகள் ஈர்த்துக் கொண்டிட்டு அறுகோண சூட்சுமத்துள் எந்நிலை வலுக்கொள்கின்றதோ அதுவே அந்த உயிரணுவின் ஜீவித நிலை.
1.அறுகோணத்தின் மையப் பகுதியே
2.தெய்வப்பிறவி எனும் ஏழாம் நிலை.

அறுகோணச் சக்கரம் என்று உரைத்த பின்பு… வாசனையின் குணங்கள் மனிதச் சரீரத்தினுள் கவன ஈர்ப்பெனும் நெற்றிப்பொட்டில்… அறுகோணங்களின் உட்குவிந்த பகுதிகள் நற்குணங்கள் எனவும்… பிறப்பின் சூட்சுமத்தில் தாய்மைப் பேறு குழந்தைக்கு ஊட்டுவது அன்பு பரிவு பாசம் என்ற முத்தொடர்களும்… உயிரணு கருக் கொண்ட நிலைத் தொட்டு ஜீவித சரீரம் பெற்றிடும் எண்ணத்தின் ஈர்ப்பில் தாய்மையால் ஊட்டப்படுகின்றது.

ஞானம் வீரம் சாந்தம் என்றிட்ட குணங்களுக்கே… உள்முகமாக உயிராத்ம சக்தி வலுக் கொண்டிடும் அந்தச் செயலுக்கே
1.அந்த மூன்றின் குணங்களுக்கு வீரிய சக்திகளை
2.ஈர்ப்பினால் ஊட்டப்படல் வேண்டும் “அதுவும் தியானம் கொண்டே…”

சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் “இடப்பக்கம் வளைந்திட்ட நிலை கரு கொண்டிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு… பின்பு அந்த உயிரணுவைப் பேணுகின்ற தன்மை மையப் பகுதியின் கூர்வேல்… முத்தலை சூலாயுதத்தின் வலப்புற வளைவே அந்த ஜீவனை ஈன்றிடும் தாய்மைப் பெறும் என…” – சிருஷ்டியின் இரகசியங்கள் காத்தலாகக் கரங்களில் கொண்ட நிலையும் “சித்தர்களால் கட்டப்பட்டதே…”

ஈஸ்வரரின் கையில் முத்தல சூலாயுதம் உயிரணுக்கள் உதயம் காட்டித் தாய்மைப் பேற்றின் முழுமைக்கு அளித்தலால்… ஈஸ்வரர் கொண்ட முத்தலை சூலாயுதம்
1.சரீர அமைப்பில் சிவசக்தி நாடிகள் சுழுமுனையில் ஒன்றி உயர் ஞானம் வாய்க்கப் பெறின்
2.அங்கு “சோமாஸ் ஸ்கந்தன்” (சிவம்+சக்தி+முருகன்) உதயமாகின்றான்.

சூரிய சந்திர ஒளி பெற்றவன் என்ற பெயர் நாமச் சூட்சுமம் மூலாதாரச் சக்தியாக எழுகின்ற ஊர்த்துவ சக்தி… அருகோணக் கருவறையுள் முத்தலை சூலாயுதம் செயல் கொண்ட நிலை… ஞானவேல் என்ற சக்தியாகக் காட்டுவது…
1.உயர் ஞான நற்குண எண்ணங்கள் நெற்றிப்போட்டில் மோதிடும் செயலாக
2.தெய்வப் பிறவி எனும் மைய நிலையை அறிவால் பொருத்தி… சுடர்தலால் “மனிதனே சிருஷ்டிக்கும் பிரம்மன் ஆகின்றான்…”

“உலகுக்கு வழிகாட்டிகளாக” உங்களை உருவாக்கிடவே இதை உபதேசிக்கின்றோம்

“உலகுக்கு வழிகாட்டிகளாக” உங்களை உருவாக்கிடவே இதை உபதேசிக்கின்றோம்

 

இங்கே யாம் உபதேசமாக உரைத்திட வந்திட்ட… ஒளி நிலை பெறச் செய்யும் ஒளி மண்டல தியானம்… “உணர்வுடன் கூடியதாகும்…”
1.ஈர்ப்பின் நிலை உணர்வுடன் பெறுதலால் புறக்கண் பார்வையை அகக்கண்ணால் அகழ்ந்து நோக்கின்
2.ஊர்த்துவ (மேலான) சக்தியாக மேல் எழும் கந்தன் தோன்றிடுவான் என்கின்ற சூட்சுமம்
3.ஒவ்வொரு மனித ஆத்மாக்களும் பெற்று உயர்ந்திட வேண்டும்.

அத்தகைய நன்நெறி நன்நோக்கத்தால் உங்களைப் போதினியாக (உலகுக்கு வழிகாட்டிகளாக) உருவாக்கிடவே இதை உரைக்கின்றோம்.

போதனைப் படுத்திடும் உயர் வழி நெறியைக் கற்றே… கற்றதைத் தன் வழி நின்று… கொண்ட கொள்கையை தகமைசால் (தெய்வீகப் பண்பு) நன்றே…! என அறிந்து… பின்பற்ற விரும்புவோர் இதை முயலட்டும்.

போதனை பெற்றிடும் இந்தச் சூட்சும வழியினைக் கடைப்பிடிக்கும் எளிமையும்… உணர்ந்து கொண்டால் அருமையும்… அத்தகைய இனிமை உணர்வு கூட்ட… உன்னுள்ளே கந்தன் (முருகன்) தோன்றுவது எப்படி…?

1.தியானத்தில் மகரிஷிகளின் ஒளியான நுண் மின்காந்த அலைகளை ஈர்க்கின்றாய்
2.ஈர்க்கின்ற செயல் உனது புருவ மத்தியில் கார்த்திகை (வெளிச்சம்) விளங்கிடும் சுடருள் பாய்ச்சி
3.ஈர்க்கப்படுகின்ற நிலை எங்கெல்லாம் செல்கின்றது தெரியுமா…?

சரீரத்தில் ஓடிடும் சகல சுவாச நாடிகளையும் அறிந்து கொண்டவனப்பா நீ. நீ ஈர்த்துக் கொண்டிட்ட ஒளி நுண் மின்காந்த அலைகள் சுவாச கதியின் சமைப்பின் சமைப்பாக சிரசைக் கடந்து கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதார அக்கினியில் அது செலுத்தப்படுகின்றது.

கந்தன் சிவன் நெற்றிக்கண்ணில் தோன்றினார் என்று புராணம் உரைக்கின்றது…!

மூலாதாரத்தில் பாய்ந்த நெற்றிக்கண்ணின் ஒளி சக்தி…
1.ஆங்கே கனல் விளைந்த ஒளியாக சுழுமுனை நாடியில் எழும்பொழுது (உயிர் வழி சுவாசம்)
2.புருவ மத்தியில் ஆறு ஆதார நிலைகள் அதே நிலை கொண்ட ஜோதி ஸ்வரூபமாக எழுந்து
3.மீண்டும் ஆகாயக்கூறு எனும் சிரசின் உச்சியில் சிவசக்தி நாடிகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட சிரசைக் கடந்து
4.எழுந்து நிற்கின்ற அந்த வடிவே கந்தன்,

பேரின்ப நிலை கிடைக்கப் பெறுகின்றது என அனு தினமும் பகர்கின்றாய். அந்தப் பேரின்ப லயத்தை நாடிட்ட மனம் வேறொன்றையும் நாடிடாது.

இத்தகைய பேரின்ப நிலை உனக்கு உரைத்த போதனையை நீயே வளர்ப்பாக்கி நீயே வளர்த்து… கண்டு கொண்டிட்டது தான்…!
1.இங்கே பயிலும் மெய்ஞானச் சுடர் ஆக்கும் தியானத்தின் வழி நின்றிடும் உன் மன உறுதியின் செயலை
2.அனைவரும் பெற்றிட வேண்டும் என்றே எண்ணத்தால் ஆசிர்வதித்து மென்மேலும் வளர்ச்சிப்படுத்திட்டு
3.வளர்நிலையின் ஜொலிப்பை எமக்குக் காட்டு.

வேதிக்கும் நிலையே (மெய்யை அறியும் குணம்) இடைவிடாத உன் மன உறுதி…! வாதிக்கும் நிலையே நம் உணர்வில் உந்துதலால் செயல் கொள்ளும் புறக்காரியங்கள்.

மெய்ஞானச் சுடராக்கும் வழிப் பயணத்தைக் காட்டிவிட்டோம். அறிவின் ஒளி இயல்பாக மஞ்சள் வண்ணம் எனில் தெய்வ வடிவைப் பெற்றிடும் குணம்… அன்பின் வழி வண்ணம் நீலம்…!
1.சாற்றும் வழி போற்றுவான் (மெய்யை உணர்ந்தவன்)
2.கடைப்பிடிப்பவன் மெய்ஞானி ஆகின்றான்

காட்சி:-
மிகப்பெரிய வட்டம் தோன்றுதல் ஒளி நுண் மின் அலைகள் காந்தத்தின் புலனாக அசைதல் சிரசின் உச்சியில் குவிதல்
நெற்றிக்கண் திறந்திடும் சூட்சுமம் மெய்ஞான விழிப்பு
நெற்றிக்கண் திறந்த பின்பு ஜீவன் சிவனாகத் தான் விளங்க
நெற்றிக்கண் ஒலி மூல ஆதாரத்தைத் தான் நோக்க…
கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதாரக் கனல் கிளம்பி முதுகுத்தண்டு வழி ஓடி
சுழுமுனை நாடியுள் அக்கினிப் பிரவாகம் பெருக்கெடுத்து சிரசின் உச்சியில் எழுந்து நிற்றல்…!

சந்திர கலைகள் செயல்படுங்கால்… ஆறு ஆதாரங்களும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட… “கந்தன் என்ற ஞானவேல் தோன்றுவான்…!”

அகக்கண் என்ற முக்கண்

அகக்கண் என்ற முக்கண்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நட்சத்திரத்தின் பால் இணைந்து… அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.முக்கண் என்ற உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது புருவ மத்தியில் பேரருள் பேரொளியாக மாறும்
3.உயிருடன் ஒன்றி அதை நீங்கள் காணலாம்… அகக்கண் கொண்டு…!
4.துருவ நட்சத்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வை நீங்கள் இப்போது அகக்கண்ணால் பார்க்கலாம்.
5.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அகக்கண்ணால் நீங்கள் இப்பொழுது பார்க்கலாம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் பாய்ச்சி… அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது
1.துருவ நட்சத்திரத்தினுடைய அருள் மணம் வெளி வரும் போது உங்கள் உடல் முழுவதும்
2.“ஒரு பாதுகாப்புக் கவசம்” போன்று பேரருளின் ஒளி வட்டம் காணும்.
3.தீமைகள் உங்கள் ஆன்மாவிலே புகாது பாதுகாக்கும் உணர்வின் சக்தியாக இது அமையும்.
4.உங்கள் உடல் முழுவதும் ஒரு ஒளி வட்டம் தெரிவதை அகக்கண்ணால் நீங்கள் உணரலாம் பார்க்கலாம்.
5.இப்பொழுது உங்கள் உடலே ஒளிமயமாகக் காட்சி தரும்.

துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி கணவன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கணவன் மனைவி இவ்வாறு ஒருவருக்கொருவர் பாய்ச்சி இரு மனமும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக இணைந்து பேரருள் என்ற உணர்வுகளை உங்களுக்குள் உருவாக்குங்கள்.

உங்கள் இருவரது உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் பேரொளி பெறும் அணுக்களாக… கருக்களாக… உருவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் பெற்று… எங்களுக்கு அவர்கள் அந்த அருளைப் பாய்ச்சி… எங்கள் வாழ்க்கையில் நாங்கள் அனைவரும் பொருளறியும் திறன் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்பொழுது “சப்தரிஷி மண்டலங்களின் காட்சி உங்களுக்குக் கிடைக்கும்… மனக்கண்ணால்…!”

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை விண்ணிலே செலுத்தி சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை ஊட்டுங்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்பு வட்டதில் இணையச் செய்வோம்… உந்திச் செலுத்துவோம்.

இப்பொழுது
1.அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருப்பதை அகக்கண்ணால் உணர முடியும்.
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் ஒளி வட்டத்தில் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை அகக்கண்ணால் பார்க்கலாம்.

அன்னபூரணி அஷ்டலட்சுமி வாக்குதேவி

அன்னபூரணி அஷ்டலட்சுமி வாக்குதேவி

 

காசியம்பதியில் விறகு சுமந்த வேண்மா சந்தர்ப்பத்தில் மயக்கமுற்றுச் சாய்ந்து… அந்தச் சரீரத்திலிருந்து ஜீவன் நீங்கிடும் தருவாயில் ஆங்கு வட்டமிட்ட “விஸ்வேஸ்வர மாமகரிஷி” (காசி விஸ்வநாதன்)… வேண்மாவின் உடலில் சூட்சும செயல் கொண்டு “கல்லால சித்தன்” என்ற நாமம் பூண்டு மௌனித்து எடுத்த சக்தி நிலை பெரிது.

1.மௌனமே சக்தி பெறச் சம்மதம் எனப் பொருள்பட
2.வானியல் தொடர்பாக வாக்கு தேவி அன்னபூரணி… அஷ்டலட்சுமி… என்ற மண்டலங்களாகப் பெயர் நாமப்படுத்தி
3.அதைச் சிரசினுள் காட்ட வந்ததே
4.அன்னபூரணியை வலக்கண்ணும்
5.அஷ்டலட்சுமியை இடக்கண்ணும்
6.வாக்கு தேவியைப் பிடரிக் கண்ணும் என்று காட்டி
7.மனக்கண் குறிப்பாக உள் முகம் நோக்கி… அகப்பார்வை ஒளிமார்க்கம் காட்டும் விதம்… – அதுவே “அக்ஷி…”

இத்தன்மையை அறியும் போது அறிய வேண்டியது ஒன்று உண்டு.

கிணற்றில் நீர் இருக்கின்றது. கிணற்றில் இருக்கின்ற நீரை நீர் இறைக்கின்ற உபாயமாகக் கைக்கொள்ள வேண்டிய முறை உண்டு.

அதாவது யாம் சொல்ல வருவது “அறிவை அறிவால் அறிதல்” என்பது.

சிறு குழந்தைகள் ஓரு மண் கலயத்தைக் கயிற்றினால் கட்டி அதைக் கிணற்றிற்குள் விட்டு நீர் இறைக்கின்ற செயலில் அது பக்குவமற்ற தன்மை என்றாலும்… “கவனத்தின் குறைபாடு தான்…”

சிறு பிள்ளை விளையாட்டு என்றபடி நீர் மொண்ட அந்தச் சிறு மண்பாண்டம் நீர் இறைக்கும் தருவாயில் கிணற்றுச் சுவரில் பட்டு உடைந்து விடுகிறது. அந்தக் குழந்தைகள் தாங்கள் கைக் கொண்ட செயலுக்கு நாணமுறுகின்றனர். அதைப் போல் இல்லாதபடி
1.இந்த ஞான வழியினை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறை என்பது… சிந்தனையில் சிரத்தையோடு
2.சூட்சும மாமகரிஷிகள் காட்டுகின்ற வழித்தன்மையைக் கையாள்வதில் கொள்கின்ற தனித்துவ செயல்பாடு “உறுதியாக” இருத்தல் வேண்டும்.

அந்த உறுதியை எப்படிச் செயல்படுத்துவது…?

கிணற்றில் நீரை இறைக்க வேண்டும் என்றால் உடையாத ஓர் கலம் வேண்டும். நீர் இறைக்கும் தருவாயில் நீர் இறைக்கின்ற கலம் நீர் மொள்கின்ற சத்தத்தைப் புலனறிவால் அறிந்து கொண்டு… கலத்தில் நீர் நிறைந்து விட்ட தன்மையை உணர்ந்தே… பக்குவமாக வெளிக்கொணர்ந்து பயனுறக் கைக்கொள்ளல் வேண்டும்

அது போல்
1.விஸ்வேஸ்வர மாமகரிஷி காட்டிய அந்த உயரிய வழித்தன்மை
2.அவராலும் அவருடைய சீடர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த அந்த முறையை
3.இன்று அறியப்பட வேண்டிய இரகசிய உண்மைகளை நீங்கள் அறிந்து தெளிந்து… ஆக்கச் செயலுக்காக உயர்ந்து
4.பால்வெளியின் பூதியில் ஓர் மண்டலமாக உருக் கொள்கின்ற திறனுக்கே
5.உயர்வெண்ணம் செலுத்தப்படல் வேண்டும்

அரை குறையாக அறிந்ததை… அறிந்து விட்டதாக எண்ணி இரகசிய உண்மைகளைச் செல்வம் சேர்த்திடும் எண்ணத்திற்குச் செயல்படுத்திட எண்ணிய இந்தத் தேசத்தில்… அக்ஷி முறை செயலுறுவாகச் செயல் கொண்டு “இயங்கிடாத நிலையே” இன்று திபெத்தில் இரகசிய முறையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

1.ஆத்மாவும் ஜீவனாடி நாத விந்துவும்
2.மேலது கீழாய் கீழது மேலாய்
3.சிருஷ்டி எனப்படுவது கீழ் இறங்கல்
4.ஞானம் எனப்படுவது மேலுயர்தல்
5.சிருஷ்டி… சிருஷ்டிக்கும் சக்தி… என்று ஆதி சக்தியின் தன்மையையே அவ்வாறு குறிப்பிட்டோம்.

“ஸ்ரீ பாதங்கள்…” என்று உரைப்பதே “நாத விந்து” எனப்படுகின்ற ஒலி ஒளி சக்திகளையே.

விஸ்வேஸ்வரர் உபதேசித்த அக்ஷி

விஸ்வேஸ்வரர் உபதேசித்த அக்ஷி

 

முன்பு ஒரு காலத்தில் காசியம்பதியில் விறகு சுமந்து விற்று ஜீவனம் செய்து வந்தவர் வேண்மா என்ற பெயர் கொண்டவர். காசி நகர் சக்தியாகச் செயல்படும் அன்னபூரணியை மானசீகமாகப் பூஜித்த அன்பன் அவன்.

“விஸ்வேஸ்வரர்” வேண்மாவில் செயல் கொண்டு “அக்ஷி முறை” வகுத்துத் தந்த வழி இன்று “குண்டலினி” யோகப் பயிற்சியாக…
1.அந்த முறையும் இந்த முறையும் ஒன்றெனக் கூறி
2.பொருள் ஈட்டும் செயலாகப் பேராசை வலையில் சிக்கித் திகழ்கின்றனர்.

விஸ்வேஸ்வரர் சூட்சுமமாய் வேண்மாவில் செயல் கொண்டு அன்றைய காலகட்டத்தில் “சம்பூத் தீவாக” வழங்கி வந்த அத்தீபகற்பத்தில் அக்ஷியை உபதேசித்தார்.

அவர் “கல்லால சித்தன்” எனப் பெயர் பூண்டு காட்டிய வழி இன்றும் திபெத்திய பீடபூமியில் சீடர்கள் வழி கூற வந்த “லாமாக்கள்” என்று பெயரிட்டே அவர்கள் தம் வசம் இன்றும் செயல் கொண்டு செயல்படுத்தி… மறைக்கப்பட்டு… பேரின்ப லயத்தை தியானத்தின் வழியாகச் சித்தன் நிலை கைகொள்கின்றனர்.

சரீரத்தில் ஓடிடும் சுவாச நாடிகள் (காற்று நூல்) மகரிஷிகளால் காட்டப்பட்டதை ஏற்கனவே உணர்த்தி உள்ளோம். சுவாசங்கள் ஓடிடும் அந்தந்தக் காலகட்டத்தில் “அந்நாடிகளின் வழி எண்ணிடல் வேண்டும்” என்று எத்தனை பேர்களுக்குச் சொல்கின்றாய்…?

எண்ணல் வேண்டும் என்கிறாயே அது என்ன…?
1.நீ கூறுகின்ற வழியே தான் இன்னும் ஒரு படி மேலாக “அகக் கண்ணால் கண்டு”
2.அந்தந்த இடங்களின் சக்தியை… சக்தியின் செயல்பாட்டையும்
3.சிரசின் உச்சிக்கே அகக்கண் கொண்டு நகர்த்தி
4.மேலெழும்ப வைத்திடும் செயலில் கிடைத்திடும் பேரானந்தம்
5.நீங்காமல் நின்று நிலை பெற்றிருக்க அனுபவித்தலே “அக்ஷி…”

அதற்கும் மேலாக ஆத்ம பலம் கூட்டிடும் தத்துவார்த்த உபதேசமாக
1.“யக்ஞம் வேதாள மாமகரிஷி” அன்று முன் மொழிந்ததை
2.இந்த உலகினுக்கு இக்கலியில் மொழிய வந்திருக்கின்றோம்.

அவைகள் முற்றுப் பெறவில்லை. நீங்கள் அருந்த வேண்டிய ஞானச் சுடர் விளக்கம் எத்தனையோ உண்டு.

1.மூலாதாரம் முதல் கொண்டு உச்சி வரை ஒவ்வொரு இடமாக ஒளித்தன்மையைச் சித்தித்தே
2.விழிப்பார்வை கொண்டு எண்ணிப் பிறக்கும் அக்ஷி ஜோதியை… ஆகாய லிங்கத்தைக் காண்பதே சித்தன் நிலை…!

சரீரம் முழுக்க காந்தத்தின் புலன் உணர்வுகளால் தாக்க (உடல் உறுப்புகள் தியானம்) ஆத்ம பலம் கூட்ட அறிந்து கொள். அறிந்ததைத் தெரிந்ததே மெய்ஞானச் சுடராகும் வழி.

மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே

மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே

 

ஆண் பெண் ஆத்மக் கூட்டு ஐக்கியத் தொடருடன் பிறக்கும்… ஒளியின் உயர்வு வட்ட வளர் தொடர் சக்தியான “ஆதிமூலம்” என்று உணர்த்தும் மூலத்தையே
1.ரிஷி பத்தினி மூலத்தால் உருவாகும் வழியில் செல்லும் வழி முறைகளையும்
2.மனித ஆத்மாவின் உணர்வு எண்ண மோதலைக் கொண்டு தெய்வ குண சக்திகளைப் பெறும் நிலைக்கு
3.மனிதனின் எண்ண ஓட்டச் சமைப்பினால் செல்லும் வளர் முறைகளை இது நாள் வரை வழிப்படுத்தி வந்துள்ளேன்.

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இங்கே காட்டியதைச் செயல் முறைப்படுத்தி வளர்ந்து வரும் தொடரில் தங்களுக்கு ஏற்படும் வினாக்களைத் தெளிவு முறை பெறும் மார்க்கத்திற்கு வழி உண்டு.

அதாவது இதைப் படிக்கும் போது ஏற்படக்கூடிய எண்ண மாற்ற நிலைகளைத் தெளிவு காணும் அறியும் நிலைக்கு… நீங்கள் எதை அறிய விரும்புகின்றீர்களோ
1.அறியும் எண்ணத்துடன் புருவ மத்தியில் நினைவைக் கூர் பாய்ச்சிச் செலுத்துங்கள்..
2.பின் மேல் நோக்கிய சுவாசத் தொடர்பினால் உயர்ந்தோரின் நிலையுடன் எண்ணத்தைச் செலுத்துங்கள்…
3.வளர்ந்த ரிஷிகளுடன் நம் அறியும் எண்ண ஞானத்தைச் செலுத்துங்கள்.

அறிந்து கொள்ளும் உயர் ஞான அறிவாற்றலினால் இவ் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
1.உயர் ஞானம் பெற்ற அலை சக்தியின் தொடர் நமக்குக் கிடைத்து
2.நம் உடலின் காந்த நுண் அலை ஈர்ப்பில்
3.நமக்கு அறிய விரும்பிய அனைத்திற்கும் விடைகள் அனைத்தும் கிடைக்கும்.

வாழ்க்கை, சொந்த பந்த தொழில், சுற்றுப்புற, விஞ்ஞான, வியாபார, மருத்துவ எத்தொடரில் நம் வாழ்க்கை அமைந்திருந்தாலும், வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நாம் தொடர்பு கொண்ட சுழற்சிக்கு நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு வாழ்க்கைப் பிடிப்பலைதான் மனிதனின் முற்றிய நிலையென்று இன்பத்தைக் கொள்ளாமல்
1.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி இங்கே உணர்த்திய இத்தொடரில் பல நிலைகளை
2.அந்தந்த இடங்களில் அதைப் படித்துச் செயலாக்கி அதில் விட்டுள்ள… நூலில் உணர்த்தப்படா பல உண்மைகளும்
3.ஞானத்தைப் படிப்பவர்களின் ஞானத்தைக் கொண்டு உணர்த்திய முறையை
4.செயலாக்கிச் செயல்வழிக்கு உயரக்கூடிய சில நிலைகளை இப்பாடத்திலும் “ஆங்காங்கு விட்டுள்ளது…”

வரப்போகும் கால நிலையில் துர்மார்க்க அச்சம் கொள்ளும் அலை உணர்வுதான் காற்றலையின் நச்சுத்தன்மை வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.

மனிதன் தன்னைத் தான் உணர்ந்து தன் வலுவைக் கூட்டி பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்… உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு… வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களும் செயலில் சக்தியாய் செயல் கொள்ளும் சப்தரிஷிகளின் சகல சக்தியையும் சமைக்கவல்ல ஆற்றல் கொண்ட உயர்ந்தோரின் உயர்வுடன்… பூமிப்பிடிப்பில் பிறப்பெடுத்து வாழும் மனித ஞான உணர்வெண்ணத்தைச் செலுத்தி
1.உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும்
2.உயர்ந்தே செல்லும் வழிமுறையாய் இங்கே வழிகாட்டிய வழிமுறையின் உண்மையை ஏற்று…
3.ஞானத்தைப் போதனையாக்கி வழிகாட்டிய ஞானகுரு ‘வேணுகோபால சுவாமிகளின் போதனைப் பெற்றும்
4.ஆத்ம ஐக்கியக் கூட்டு வழிமுறை தியானச் செயலில் ஞானவிளக்கப் போதனை நிலைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
5.மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே…!

துருவத்தின் வழி… புருவத்தின் வழி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர வேண்டும்

துருவத்தின் வழி… புருவத்தின் வழி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர வேண்டும்

 

அகஸ்தியன் துருவனாகி பின் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து துருவ மகரிஷி ஆகித் தனக்குள் சிருஷ்டித்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக ஒன்றி வாழ்ந்து ஒளியின் சரீரமாகி எந்த துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

அகஸ்தியனும் அவன் மனைவிவும் பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினின்று வெளிப்படும் ஒளி அலைகளைச் சூரியன் கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.நமது பூமி துருவத்தின் வழியாக இழுக்கின்றது. இங்கே படர்கின்றது.
2.அதிகமாகப் பாயும் இந்த அதிகாலை நேரத்தில் துருவத்தை உற்று நோக்கி
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதை நாம் நுகர நேர்கின்றது
4.நம் உடலுக்குள் அது பரவுகின்றது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது.

அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்துக் கொண்டு வந்தால் இந்த உணர்வுகள் சிறுக சிறுக நல்ல அணுக்களின் பெருக்கமாகி தீமையான அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவினைச் செலுத்தி அதனுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்களை மூடி ஏங்கித் தியானியுங்கள்.

ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். “ஈஸ்வரன் என்றாலே உயிர் தான்…” அவனிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் இப்பொழுது செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி திரும்பத் திரும்ப நுகரும் பொழுது
1.புருவ மத்தி வழிதான் உடலுக்குள் அந்த அலைகள் செல்கின்றது.
2.புருவ மத்தியின் வழி வரும் பொழுது “குறு…குறுப்பும்… சிலருக்கு ஒளியும் நல்ல உணர்ச்சிகளும்” தெரிய வரும்.
3.சிலருக்கு அந்தக் “குறு…குறு…” என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் கூட இருக்கும்.
4.காரணம் நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும் அந்த அரும்பெரும் சக்தி அங்கே படரும் பொழுது
5.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.

ஆகவே உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள் “திரும்பத் திரும்ப…”

அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும். ஏங்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசிக்க நேர்கின்றது “புருவ வழியில்…”

1.நமது உணர்வுகள் நுகரும் அல்லது செல்லும் பாதை அந்தப் புருவம் தான்
2.இரண்டு கண்களுக்கு இடையில் புருவ மத்தியில் உயிரின் இயக்கம்…
3.நம் உயிரின் துணை கொண்டு துருவத்தில் இருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
4.புருவத்தின் வழி நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்கு அந்த உயர்ந்த சக்தியினை நாம் ஊட்டுகின்றோம்.
5.நம் இரத்த நாளங்களில் அதைப் பெருக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உங்கள் உணர்வலைகள் இரத்த நாளங்களில் கலப்பதும்… “உங்கள் உடலில் உள்ள அணுக்களில் பெருகும் அந்த உணர்ச்சிகளை அறியலாம்…”

கவன ஈர்ப்பு நரம்பு

கவன ஈர்ப்பு நரம்பு

 

ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் அதன் சக்தியை ஈர்க்கும் நிலை எங்குள்ளது…?

மனித ஆத்மாவிற்கு
1.நம் நெற்றியின் மையத்தில் நாம் மஞ்சளும் குங்குமமும் தரித்து “ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்த இடமாக எண்ணி”
2.நம் நெற்றியில் திலகமோ திருநீறோ இட்டுக் கொள்கின்றோமே…
3.அங்குதான் உள்ளது மனிதனை இயக்கும் ஜீவத் துடிப்புள்ள கவன நரம்பு.
4.மனிதனின் எண்ணத்தைச் செயல்படுத்தும் முக்கிய இடம் அக்கவன நரம்பு தான்.
5.இக்கவன நரம்பு செய்யும் வேலை செயல் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனின் உடல் நிலையும் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

இக்கவன நரம்பிலுள்ள ஈர்க்கும் பணி… நாமெடுக்கும் சுவாசமுடன் நம் உயிர் சக்திக்கு ஈர்த்து அவ்வுயிர்த் துடிப்புடன் இக் கவன நரம்பு அதனை ஈர்த்து எந்த வழியில் இக்கவன நரம்பானது எதன் தொடர்பில் இவ்வுடலில் உள்ள உறுப்புகளுக்கு நம் மண்டையின் பின்பாகத்தில் உள்ள சிறு மூளையில் மோதச் செய்து அதன் வழித்தொடரில் இருந்து தான் உடல் உறுப்புகள் அனைத்திற்குமே செயல் நிலை ஏற்படுகின்றது.

1.இக்கவன நரம்பு பாதிக்கப்பட்டாலோ பின்னப்பட்டாலோ
2.உடல் உறுப்புகளின் நிலையும் சரி, நம் உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானாலும் சரி அதன் வழித்தொடர் நிலையைச் செயல்படுத்திட முடியாது.

இதயத்தில்தான் இவ்வுடலுக்குகந்த நிலை உள்ளது என்று இவ்வளவு காலங்கள் நம்முடன் கலந்த ஆத்மாக்கள் நம்பி வந்தனர். இன்று மாற்று இதயம் இணைக்கப் பெற்று வாழும் மனிதர்கள் பெறப்பட்ட இதய எண்ணமுடனா வாழ்கின்றனர்…?

இதயத்தையே இயக்கும் செயல் கவன நரம்பின் மூலமாய் ஈர்க்கப் பெற்று சிறு மூளையின் வழித்தொடரினால் செயல்படுகின்றது.

இவ்வுடலில் உள்ள எந்தப் பாகத்தையும் இவர்களினால் மாற்று உறுப்புகளைப் பொருத்தி உயிர் வாழ வைத்திட முடிந்திடும். ஆனால்
1.இந்நெற்றியில் உள்ள கவன நரம்பிற்கு மேல் ஏற்படும் பின்னத்திலிருந்து பைத்தியம் பிடித்த ஆத்மாவையோ
2.கவன நரம்பில் அடிபட்டு அதனால் தன் நினைவிழந்த ஆத்மாவையோ சரிப்படுத்துவது முடியாத காரியம்.

நம் தலையில் உள்ள பெரு மூளையை மாற்றி அமைத்தாலும் கூட நம் எண்ணமும் மாறாது செயலும் அதே நிலையில் தான் இருந்திடும். ஆனால் இக் கவன நரம்போ இக்கவன நரம்பை ஈர்த்து சிறு மூளையின் உதவி கொண்டு இவ்வுடலையும் ஆத்மாவையும் வளர்க்கும் இதில் பின்னப்பட்டால் “தன் நிலையில் எவ்வாத்மாவும் வாழ்ந்திட முடியாது…”

உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தின் துரித நிலை அதிகப்பட்ட ஆத்மா இக் கவன நரம்பின் தொடர் கொண்ட சிறு மூளைக்குச் செல்லும் நிலையில் வெடித்து விட்டால்தான் நாம் இதய வலியினால் இறந்து விட்டதாகச் சொல்லுகின்றோம்.

இதயத்தில் உள்ள எந்த நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் இன்றைய அறிவியல் மருத்துவரால் குணப்படுத்திடலாம் இதயத்திற்கும் இரத்த அழுத்த விகிதத்திற்கும் தொடர்பு கொண்டது இக்கவன நரம்புகள் சிறுமூளையும் தான்.

முதலில் செப்பியப்படி இவ்வுடலில் உள்ள எந்த உறுப்பையும் இன்றைய அறிவியல் மருத்துவ ஞானத்தினால் செய்விக்கும் செயல் திறமையுண்டு.
1.இக்கவன நரம்பை மட்டும் படைக்கப் பெற்றவன்
2.இவ்வாத்ம சக்தியைத் தந்த “ஆதிசத்தியின் செயல் சக்தியின் செயல்தான்…”

இவ்வுடலில் எப்பாகங்கள் பின்னப்பட்டு ஆத்மா பிரிந்திருந்தால் கூட அவ்வுடலை ஏற்கச் சில சித்தர்கள் செயல்பட்டாலும் “கவன நிரம்பும் சிறு மூளையும் பின்னப்படாமல் இருந்தால்தான்” அவ்வுடலையும் சித்தர்கள் ஏற்பார்கள்.

ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்ததாகவும் நெற்றிக்கண்ணை வைத்துத் தான் உலகை ஆண்டதாகவும் புராணம் கூறுகின்றது.
1.ஒவ்வோர் ஆத்மாவிற்குமே அந்நெற்றிக்கண் உண்டு.
2.நெற்றிக்கண்ணினால்தான் நம் விழிக்கு ஒளியைக் காணும் நிலை பெற முடிகின்றது.

கவன நரம்பைத் தான் நெற்றிக்கண்ணாகவும் ஞானக் கண்ணாகவும் நம் முன்னோர்கள் புராணக் காலங்களில் இதனை உணர்ந்து… அதற்கு உருவம் தந்து சிவனாக்கி… சிவனுக்கு நெற்றிக்கண்ணைப் படைத்து, அன்றைய கால மனித ஆத்மாக்கள் புரிந்திடும் பக்குவத்தை ஊட்டினார்கள்.

புராணக் கதைகளில் அன்றே பல நிலைகளை புரியாத நிலையில் சூட்சுமமாக ஆண்டவன் வாழ்ந்ததாகவும்… அதற்குகந்த நிலைகளை உணர்த்த ஆண்டவனையே கதையின் நாயகனாக்கி பல நிலைகள் சித்தர்களினால் கதைப்படுத்தி வழங்கப்பட்டன.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள உண்மை நிலைகள் மறைக்கப்படாமல் அதனை அவரவர்கள் எண்ணத்திற்குகந்து திரிக்கப்பட்டு சில நிலைகளை ஏற்றி இராவிட்டால் உண்மைக் காவியமான இராமாயணமும் மகாபாரதக் கதையும் உயர்ந்த பொக்கிஷமாய் அதிலுள்ள கருத்தாற்றலைக் கொண்டு பல நடைமுறை பொக்கிஷ நிலையெல்லாம் இன்று நாம் தவறவிட்டு இருக்கும் நிலையை எய்திருக்க வேண்டியதில்லை.

அன்று போதிக்கப்பட்ட அரும்பெரும் பொக்கிஷம் எல்லாம் இன்று கேலிக்குரிய நடைமுறைச் செயலுக்குப் பொருள் என்ற வியாபார நிலைக்கு வந்துவிட்டது.

1.ஒவ்வோர் ஆத்மாவுக்கும் உகந்த உயர்ந்த ஞான சக்தியையும் அதன் தொடர் சக்தியையும்
2.நமக்குள்ள இக்கவன நரம்பு நல்ல நிலையில் செயல்படுங்கால்
3.நம்மை நாம் இக்கவன நரம்பின் துணையினாலேயே ஒளியின் ஞானத்துடன் செல்லும் பேற்றை அடையலாம்.