“சக்கர வியூகம்…” அமைத்துப் பஞ்சேந்திரியங்களைக் காக்கும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

chakkara viyugam

“சக்கர வியூகம்…” அமைத்துப் பஞ்சேந்திரியங்களைக் காக்கும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் பதிவு செய்கின்றோமோ… அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில் “தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்த சப்த நாத ஒளி வட்டத்தில் எது வீரியமாக இருக்கின்றதோ…!” அதனின் தொடர் செயல் நிகழ்வில்… (அந்த) எண்ணம் உருவாக்கிடும் உருக்கோலமாகத் தான் நாம் ஒவ்வொரு நாளும் உருவாகின்றோம்.

பூமியின் சுவாச நிலை அதாவது பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமிலத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் நிறம்… மணம்… நீரமில மூலத் தொடர் இந்த முக்கூட்டின் ஆதிமூலத்தையே கண்டிடலாம்.

1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய ஈர்ப்பின் பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலகோதய ஈர்ப்பின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செயல் கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் பெறவேண்டும்.

வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற்றிட வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…!” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.

சங்கட உணர்வின் ஈர்ப்பால் அத்தகைய அமிலங்கள் நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் சரீரத்தில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.

ஒரே நிலை கொண்டு செயல்பட வேண்டும் என்றால்
1.எதிர் மோதலாக வரும் உணர்வுகளை
2.அது நமக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…!”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.

“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.

இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகோதய கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனாக நிச்சயம் ஆக்கம் பெறும்.

பரிபூரணத்துவம் பெறச் செய்யும் ஆதிமூல சக்தியின் தொடர் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

gajalksmi

பரிபூரணத்துவம் பெறச் செய்யும் ஆதிமூல சக்தியின் தொடர் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.சுவாசத்தின் வீரியத்தைக் காட்டிட நாசியாக யானைகளையும்
2.சுவாசத்தில் நறுமணத்தைக் காட்டிடத் துதிக்கையில் அமுதக் கலசத்துடன் மலர்களையும்
3.மன எண்ண வீரியத்தின் தூய்மையைக் காட்டிட ஏழு எண்ணங்கள் கலந்த (தூய்மை எண்ணமாக) வெண்மையான யானையின் நிறத்தையும்
4.சுவாச நிலை முக்தி பெறும் தொடருக்கு ஆதி மூல நீர் சக்தியைக் காட்டியும்
5.நீரடி மூல வித்து நீர் மண் தொடர்பில் சித்தன் நிலை பெறும் சித்துக்கள் என்பதைக் காட்டிட நீரின் சுவாசத்தை ஈர்த்துச் சமைத்திடும் ஆகார நியதியைக் கொண்டு முளைத்து நீர் மேல் கிளைத்தெழும் தாமரை இதழ்களைக் காட்டி
6.பரிபூரணத்தைப் பெற்றிடும் வழியாக வண்ண மலரில் அமர்ந்திட்டாள் “கஜ லக்ஷ்மி…!” என்று அன்று உணர்த்தினார்கள் ரிஷிகள்.

மண்டலமாக உருக்கோலம் பூண்ட நம் பூமித் தாய் பெற்று வளர்த்திட்ட… இன்னும் வளர்ச்சியின் வலுக்கொள்ளும் ஈர்ப்பின் செயலில்… தன்னை மேன் மேலும் வளர்த்துக் கொள்கின்றது.

அதைப் போல் பூமித் தாயின் செல்வங்களான ஒவ்வொரு உயிரான்மாவும் ஆதிமூலச் சக்தியின் தொடர் கொண்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திடும் தொடருக்கு “கஜ லக்ஷ்மியாக அமர்ந்திட்டாள் பூமித்தாய்…! என்பதிலும் அதே சூட்சமமே காட்டப்பட்டுள்ளது.

“நக்கீரர் அருந்திய…” வலம்புரிச் சங்கின் நீர் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Valampuri Sangu

“நக்கீரர் அருந்திய…” வலம்புரிச் சங்கின் நீர் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பலவித உயிர் சக்திகள் உருவாகும் செயல் நிலையில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.

1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக…!” கடலிலே உருப்பெறுகின்றது.

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள். அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.

அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும்.

நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையா சிறப்பு ஒன்று தான்.

1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு – நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.

நக்கீரனைக் கேட்டால் சொல்வார்…! சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன…?

வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி… ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி… நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட… சங்கு நீர் அமிலக் குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்…! சூட்சமப் பொருளை மனதில் கொள்க…!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

எலும்புக்கூடு(ம்) சூட்சமம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Bone herb

எலும்புக்கூடு(ம்) சூட்சமம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பெண்கள் அணியும் கால் சிலம்பு ஆடவர் கற்பு நெறி காக்கும் கவசம். பெண்கள் பூப்படையும் பிராயத்தில் கால் சிலம்பை அணிவித்துப் பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு வளையமிட்ட செயல் எல்லாம் பண்டைய காலம் முதல் வழி வந்த நற் குண நிலைகள். ஆண்களின் கற்புக்குப் பாதுகாப்பு அரண் அது தான்.

1.பூப்படைந்த பெண்மணிகள் வீதி வழி செல்லும் பொழுது – எதிர்படும் வீரமகன்
2.சிலம்பொலியைக் கேட்டதுமே விலக்கிடுவான் வழிப்பாதை.
3.அங்கே கற்பு நெறி காக்கின்றது.
4.(ஆனால் வீரத்தில் விவேகத்தைக் கலந்து வாழ்ந்த மக்கள் மனம் இன்று அனைத்துமே மாறிவிட்டது)

திருமணம் முடிவுற்று நல்லறத்தின் நல்வழியில் கால் சிலம்பு கழன்றுவிடும். பூப்படைந்த பெண்கள் அணியும் நகை கணவனால் காவலனாகக் காக்கும் நிலை வந்துவிட்டால் விலக்கிடுவான் சிலம்பணிய.

கண்ணகின் வாழ்க்கையில் சிலம்பை அணிவித்தான் மாசாத்துவான். பெண்களுக்கு அணிவிப்பதோ பொன்.. வெள்ளி நகை தானே. காலத்தின் செயல் இன்று போல் இருந்திடுமோ…? என்றெல்லாம் எண்ணிட்ட மாசாத்துவான் மாணிக்கமாக அளித்துவிட்டான்.

இல்லறத்தில் இரு மனங்கள் கலக்கும் வைபோகமாக கோவலனும் கண்ணகியும் நறுமணங்கள் கலந்தது போல் வாழ்வாங்கு அங்கே வாழ்ந்து சிறப்பித்தனர்.

ஆனால் அதன் பின் ஊர் விட்டு ஊர் மாறிப் பெயர் மாற்றிச் செல்லும் பொழுது “தலை போகும்…!” என்றெல்லாம் மெய்யறிவு பெற்றிருந்தால் கோவலன் விதி வழி செல்வானா…?

உடல் வேறு தலை வேறு ஆன நிலையைக் கண்டதுமே எலும்புக்கூடு மூலிகை அகப்பட்டால் எலும்பின் குணம் கூடிவிடுமே. கண்ணகிதான் அதைப் பெற்றாளா..?
1.கண்ணகியின் கற்பு நிலை கொதித்தெழுந்த செயற்திறத்தால் எலும்புக்கூடு கிடைத்ததா…?
2.சூட்சமப் பொருள் பல உண்டு…!

கண்ணகியின் சாபமுண்டு எலும்புக்கூட்டு மூலிகைக்கு…! எலும்புக்கூட்டின் சாறுபட்டவுடன் அறுபட்ட உடல் கூடிவிடும். அந்த மூலிகை கிடைக்குமா…?

பாறை மேல் படர்ந்து வரும். நீரில்லாமல் உயிர் வாழும். தண்டு அதன் நிறம் சிவந்து கணுவிலோர் இலையும் பசுமை காட்டும். அந்த எலும்புக்கூடு கிடைத்து விட்டால் எண்ணிடுவார்கள் பணம் காசை…!
1.எலும்புக்கூடு எதற்கு என்ற சூட்சமம் பின் சொல்கிறேன். (ஈஸ்வரபட்டர்)
2.எலும்புக்கூடு கிடைக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்…!

மூலத் தத்துவங்களைப் பற்றித் தெளிவாக உணர்த்தும் காவியங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Valmiki ramayana

மூலத் தத்துவங்களைப் பற்றித் தெளிவாக உணர்த்தும் காவியங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதனின் வாழ்க்கையில் வரும் சங்கட குணங்களை விலக்கி மனப் பக்குவம் பெற அறிய வேண்டிய ஞானத்தின் செயல் திறத்தைத் தான் இராமாயணக் காவியத்தின் மூலம் வான்மீகியார் காட்டினார்.

இதைக் கம்பனும் அறிந்தாலும் மூலத்தின் பொருள் விளக்கக் கம்பரசம் (கம்பராமாயணம்) செய்தாலும் அதிலே நவரசத்தின் பொருளைக் காட்டி நர்த்தனமாக விளையாடிய கவிச் சொல்லின் சிறப்பில் இன்றைய மனிதன் சுவைத்திட்ட சுவை என்ன..?
1.வெறும் சிருங்கார ரசத்தைத்தான் சுவைத்தான்…!
2.சிறப்பின் ரசம் அறிந்தானா…?
3.காரணத்தில் காரியத்தை அறிய வைத்த கம்பனும் அறியவொண்ணா மறை பொருள் உண்டு.

அனுபவம் என்ற பாதையிலே வான்மீகி மகரிஷி அறிந்து சொன்ன சொல் ஒளி காந்தம். உருவாக்கிய காவியம் தான் அந்த இராமாயணம்.

எண்ணங்களின் எதிர் மோதல்களிலிருந்து எப்படித் துன்பமுறா மனப்பாங்கு கொண்டு நிகழப் பெற்ற “அனுபவ ஔஷத நெறியின் செயல் விளக்கம் தான் அது…!”
1.மனிதன் பெறும் பெறவேண்டிய உயர் நிலை என்ன…? என்பது பற்றி
2.அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சலிக்கும் (அலசி)
3.ஓர் சல்லடையாகச் சலித்துப் பெற வேண்டிய வழி வகைகளை அறிந்திடச் செய்யும் “சூட்சம காவியமே இராமாயணம்…!”
4.எண்ணங்களின் அலை ஈர்ப்புச் சமைப்பில் காந்தமாகிக் காத்திட்ட சக்தியில் வான்மீகி அதைக் கொடுத்ததிலும் ஓர் பக்குவம் உண்டு.
5.அந்த வான்மீகி மாமகரிஷி கண்டுணர்ந்த வான இயல் வான் இயல் சூட்சமத்தின் தெளிவை நாமும் கண்டுணர்ந்து நம் மனம் தெளிதல் வேண்டும்.

காமதேனுவிடமிருந்து சக்தி பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Kamadhenu Nandhini

காமதேனுவிடமிருந்து சக்தி பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மகரிஷிகளின் ஒளி காந்த சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்ம சக்தியை வலுக் கொள்ள அந்த வீரிய எண்ணச் செயல் மூலம் வளர்வதற்கே வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை என்று ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிராத்ம சக்தியுடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம்
1.அதாவது காமதேனு என்று சூட்சமமாக மகரிஷிகள் உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொண்டிட வேண்டும் என்றால் பரவெளியில் உலவிடும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலை (ஆகாரமாகப்) பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய ரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும் என்றும் காட்டினார்கள்.

இதையே தான் “உலக வழக்கப்படி” நாம் நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்ற சித்தின் செயல்பாட்டினுள் சித்தனே மறைந்துள்ளான்.

விசுவாத்திர மாமகரிஷிக்கு “
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.

தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.

1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம் என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் என சித்தர்களால் காட்டப்பட்டது.

சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?

1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்திடும் தொடர்பில்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
4.அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!

கஜலக்ஷ்மி தத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Gajalakshmi

கஜலக்ஷ்மி தத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.

1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.முன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.

(வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பலவிதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்)

அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது. அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.

அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானுகோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.

அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது. (இந்தத் தொடர் காலம் காலமாக நடக்கின்றது)

நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.

அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூலம் சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.

நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.

சரீரம் என்ற குகைக்குள்… உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம் சக்தியாகச் செயல் கொள்வது என்பது சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.

அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.

பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…? சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.

ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும் பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும் பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”

தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.

அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.

இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் (நிறம் குணம் அமிலம்) நறுமணமாக அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

“வான இயல் சூத்திரதாரி…!” வராகிமிகிரர் என்ற வராகிமிகி மகரிஷி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Varahamihra

“வான இயல் சூத்திரதாரி…!” வராகிமிகிரர் என்ற வராகிமிகி மகரிஷி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

வான இயலின் தத்துவத்தை “முத்தொழில்” (ஆக்கல் காத்தல் அழித்தல்) என்ற வகையில் அவர் அறிந்து கொண்டவர் வராகிமிகிரர். பேரண்டங்களின் சூட்சமச் செயல் நிகழ்வாக ஒவ்வொரு சூரியக் குடும்பங்களின் வளர்ச்சியின் ஆக்கத்தையும் அவர் உணர்ந்தார்.

ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற குடும்பத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே வளர்ச்சியின் சக்திப் பிரவாகமாகச் சுழன்று கொண்டிருப்பது அனைத்தையும் தன் உயிராத்ம வலு கொண்டு ஞானதிருஷ்டி கொண்டு அறிந்து உணர்ந்து தெளிந்தவர் வராகிமிக மகரிஷி…!

நம் சூரியக் குடும்பத்தில் பூமித் தாய் ஈர்த்து அளித்திடும் சக்தியின் தொடருக்கு தன் வினையின் செயலுக்கு நாற்பத்தி எட்டு கோளங்களே முக்கிய காரணமாகின்றது.

அந்த ஆற்றல்களை ஒவ்வொரு உயிராத்மாவும் ஜீவ சரீரம் கொண்டு வலு பெற்று வளர்த்திடவும் நல் வினையின் ஆக்கம் அறிந்து தெளிவு பெற்றிடவும் “மண்டலம்…” என்ற வகைப்படுத்திக் கர்ம வினைச் செயலாகக் காட்டினார்.

1.சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நவக் கோள்களும்
2.வியாழனைப் பிரகாசப்படுத்திடும் எட்டு உப சந்திரக் கோள்களும்
3.புதனைச் சுற்றி ஓடும் ஐந்து சந்திரக் கோள்களில் நான்கு ஜீவன் கோள்களும்
4.பூமித் தாய் ஈர்ப்பின் தொடர்பு கொண்ட மாமகரிஷிகளின் அருள் பார்வை கொண்ட இருபத்தியேழு ஜீவ நட்சத்திரத் தொகுதியும்
5.நாள் கணக்கு வைத்து 48 என்ற வகையே மண்டலம் என்ற வகைப்படுத்தி
6.ஒவ்வொரு நாளும் பரவெளியில் நடக்கும் கோடிக்கணக்கான சூட்சமச் செயல்களில்
7.நிறம் மணம் குணம் என்ற அமிலக் கூறுகள் நீர் காந்த சக்தியுடன் கலந்து சிறப்புறும் அந்த விளையாடல் செயலை
8.யாரும் எடுத்துரைக்க இயலுமோ..?

பொதுவான பால்வெளி மண்டலமாகிய சூட்சமப் பேரண்டத்திற்குள் இருளினுள் ஊடே உலவி இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களும் சுற்றிச் சுழன்றோடுகிறது. இதைப் போல எத்தனையோ சூரியக் குடும்பங்கள் ஆயிரமாகவும் இரண்டாயிரமாகவும் ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் சுழன்று வருகிறது.

அப்படிப்பட்ட சுழல் கதியில் ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற சூரியக் குடும்பங்களைச் சுற்றி வரும் நிலையில் நீர் சக்தியின் தொடர் மூலம் காந்த சக்தியின் ஈர்ப்பால் உள் நிகழ்வுகள் எத்தனையோ நடைபெறுகிறது.

சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்லும் சுழல் ஓட்டக் கதியில் ஒரு சூரியன் மற்ற சூரியனைச் சந்திக்கும் பொழுது அந்தச் சந்திப்பினால் ஒளிக் கதிர்வீச்சு எதிர் மோதல்களும் ஏற்படுகின்றது.

அவ்வாறு நடைபெறும் காலகட்டத்தில் அந்தந்தச் சூரியனைச் சார்ந்த மண்டலங்கள் அந்தக் கதிர்வீச்சின் ஈர்ப்பில் இயற்கையாக ஈர்ப்பின் தொடரில்
1.தனக்குத் தானே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு
2.சுழன்று ஓடிக் கொண்டே இருக்கின்றன.

மூன்று சூரியக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வால் அதிலிருந்து வெளிப்படும் கழிவுகள் வால் நட்சத்திரமாக உருவாகின்றது. அதே போல பஞ்சமுக சந்திப்பு…! என்ற வட்டப்பகுதி ஏற்படும் கால நிகழ்வு ஒன்றும் உண்டு.

பஞ்சமுக சந்திப்பின் கதிர்வீச்சு ஏற்படும் கால கட்டத்தில்
1.சக்தி இழந்து வரும் கோளங்கள் அந்த வெப்பக் கதிர்வீச்சில் ஆவியாக மாறுவதும்
2.பிரளயம் ஆகிச் சக்தி குறைவுபட்ட மண்டலங்கள் மீண்டும் தன் சக்தியின் வலுவைக் கூட்டுவதும் போன்ற நிகழ்வுகள்
3.சூரிய மண்டலங்களின் தொடர்பில் நடைபெறும் செயல் வருகின்ற காலத் தொடரில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள கோளங்களில் சூரியன் முதற் கொண்டு அனைத்துக் கோளங்களும் தங்களைச் சுற்றி வளையமிட்டுக் காத்திடும் தொடர்களும் உண்டு.

இவ்வாறு மனித குல வளர்ச்சியின் மேம்பாட்டிற்கான தியான வழித் தொடரைக் காட்டி ஆதி சக்தியுடன் கலந்து வாழும் சூட்சமம் பற்றிக் கூறிய சுத்திரதாரியே வராகமிகி.

அவருடைய அருள் சக்தி பெற்று அனைத்து மண்டலங்களிலும் செயல் கொண்டிடும் பூரணத்துவம் அறிய நாமும் தியானிப்போம்.

இன்று “மதம்” என்று சொல்லும் அந்த மதத்தின் முந்தைய நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Risaba devar

இன்று “மதம்” என்று சொல்லும் அந்த மதத்தின் முந்தைய நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“மதம்…” என்ற சொல்லின் முந்தைய நிலை மனித இனம் வாழ ஏற்படுத்தப்பட்ட “சமூக அமைப்பு” என்ற உலக வாழ்க்கை நிலை. ஆனால் இன்றோ மதம் என்ற சமூக அமைப்பே… “கடவுள்” என்ற பெயரால் ஒன்றுக்கொன்று ஏற்காது போர் முறையாகி ஆகிவிட்டது.

1.மனிதர்கள் உலகோதய ஆசைப் பிடிப்பில் சிக்குண்டு
2.இந்த உடல் வாழ்க்கையையே பிரதானமாகக் கருதி
3.ஆன்மாவை உயர்த்தும் அறிவின் ஆற்றல் குறைவுபட்டு
4.மனிதனின் எண்ணமே மீளாப் பிடிக்குள் ஆட்பட்டு
5.மீளும் வழி அறியும் செயலையே அறிய முடியாத காலங்களில்
6.மனித குலம் காக்கப்பட அவதார புருஷர்கள் அவதரித்த பூமி தான் நாம் வாழும் இந்தப் பூமி.

அன்று காட்டப்பட்ட நெறி முறைகளில் மனிதன் தன்னிலை உயர்த்த சுட்டிக் காட்டப்பட்ட அறிவின் ஆற்றல் அந்த மகான்களுக்குப் பின் வழி வந்த சீடர்களால் மதம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு விட்டார்கள்.

1.நாபிமனு முதல் வர்த்தமான மகாவீரர் வரை என்று சொல்லும் வரைமுறைகள் (பாரம்பரியம்) எல்லாம் எதற்கப்பா..?
2.வரையறையின்றிக் காட்டுவதே மதங்களின் பிடியில் அகப்படச் செய்வதற்குத்தானா…?
3.அந்த வரைமுறையை இன்று காட்டுபவன் அன்றைய நிலையைச் சிந்தித்தானா..?
மனித வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று சிந்தித்த நாபிமனு அதைச் செயல்படுத்த முனைந்து
1.ஞானப் பாதையை காட்டிய ரிஷப தேவர் (ஆதிநாதர்) வழியில் வந்த எத்தனையோ மகான்கள்
2.(தம் ஆன்மாவைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்கள்)
3.ஜீவ காருண்யம் நல்லொழுக்கம் நற்செயல் என்று போதித்த வழி முறைகள் எல்லாம் “மதம் கொண்ட…!” மதத்தினை வளர்க்கத்தானா…?

“ஜீன தீர்த்தங்கரர்கள் இத்தனை பேர் தான்…!” என்ற பட்டியல் கொடுத்து விட்டால் அதைக் கண்டு என்ன செய்யப் போகிறான்..? மீண்டும் மதத்தின் பிடியில் அகப்பட்டுத் தத்தளிக்கப் போகின்றான்.

வர்த்தமானர் பெற்றதும் ஓர் நல் நிலை தான்…! அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட கடமை.. விதி… சரீரம் தொட்டுச் செயல்படுத்த முனையும் வாய்ப்பு இன்றைய பரபரப்பான உலகியல் வாழ்க்கை நெறியில் இல்லையப்பா…!

1.சன்னியாசிக்கு என்று ஒரு வழி முறையும்
2.சம்சாரிக்கு என்று ஒரு வழி முறையும் அன்று காட்டியவற்றில்
3.உணர்ந்து கொண்டார்களா அனைத்தையும்…? அவைகளிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.

வர்த்தமானன் கடவுளையா சொன்னான்..? இல்லையே…! மதம் என்ற பெயர்படுத்த மனித ஆத்மாவின் வளர்ச்சியை அல்லவோ கூறினான்.

நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியானத்தின் வழி முறையில் காக்கப்பட வேண்டியது ஆன்மா தான் என்று கூறிட்டாலும் காக்கப்பட வேண்டியது சரீரமும் தான்,

அன்று சமுதாய அமைப்பில் மனித இனத்தின் எண்ணிக்கை குறைவு பட்ட காலச் சூழலில் மகான்கள் நடைமுறைக்குக் காட்டிய செயல்களைச் செயல்முறைக்குக் கொண்டு வரும் வழி வகைகள் இருந்தன.

ஆனால் இந்தக் கலியில் உடலை வருத்திடும் செயல்கள் தேவை தானா…?

உன் கண்ணிலிருந்து நீர் வழிகின்றது. மனம் வேதனைச் சூழலில் ஆட்படுகின்றது, மனம் சங்கட அலைகளில் சிக்குண்டிருக்கும் பொழுது ஆத்மா வேதனையுறாவிட்டால் உடல் வருந்திட நீர் வரக் காரணம் என்ன..? துக்கம் சந்தோஷம் அனைத்துமே ஆன்மாவில் பதிவு நிலைகள் தான்.

1.மனித மன நடை முறைச் செயலுக்கு
2.நல் வாழ்வு நற்கதிக்கு இதை விட வேறு ஆக்கமில்லை என்ற நிலையில்
3.இந்தத் தியான வழி கொண்டு உண்மையை உன்னுள்ளே ஊன்றிப் பார்.

வாழ்க்கையில் நேரும் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதற்காகப் பயன்படுத்தப்படும் பொழுது அதிலே நிறைவு காணும் மனம் பெற்று விட்டால் தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்.

“ஜீனதீர்த்தங்கரின் போதனைகள்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

MAHAVIR

“ஜீனதீர்த்தங்கரின் போதனைகள்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.

மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.

ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?

உலகோதய வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணித் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?

1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.

அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அளித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?

நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வுண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.

மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.

மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?

உலகோதயப் பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.

ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.

மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
4.ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான்.
5.ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.

“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!