இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதை…!

Astral path and way kakana mani

இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதை

 

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் நம் உணர்வின் எண்ணங்களுக்கு விண்ணை எட்டிப் பிடிக்கும் ஆற்றலையும் விண்ணிலே ஊடுருவிச் செல்லகூடிய நிலைக்கும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வலுவின் துணை கொண்டு ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தது என்றால் அதை உந்தி விண் செலுத்தும் ஆற்றலையும் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் எல்லோரும் நன்றாக இருந்தாலும் கூட யாராவது ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் “ஐய்யய்யோ.., இப்படி இறந்துவிட்டாரே…” என்று எண்ண வேண்டியதில்லை.

நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த இந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணித் தியானித்தால்
1.அந்த ஆன்மா “ ஜிர்..ர்ர்…ர்ர்..” என்று
2.(அவர்) மேலே போய்விடலாம்.
3.அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) தேவை.

ஆனால், இதை விட்டுவிட்டு… இந்தச் சரீரத்தை இங்கே புதைக்கலாமா… அல்லது அங்கே எரிக்கலாமா… என்று “அழுகக்கூடிய சரீரத்திற்கு” முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

இறந்தவர் ஞாபகார்த்தமாகச் சமாதியைக் கட்டினேன்… அதற்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் அதை மிகவும் விரும்பிச் செய்து கொண்டிருந்தால் மீண்டும் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் தான் சிக்க வேண்டும்.

1.இந்த நாய் எப்படியோ போகின்றது
2.பூராம் குப்பை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டு
3.அந்த உயிரான்மா அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.
4.அதை நிலைத்த இடத்தில் நிலையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி
5.சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் இந்த உடலிலிருந்துதான் உயிரான்மாவை ஒளியாக மாற்ற வேண்டும்.

இந்த உணர்வின் நிலையை மெய் ஒளியாக்கி இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அனைவருமே அந்த மெய்ஞானிகள் சென்ற இடத்திற்குச் செல்ல வேண்டும்.

1.இந்த உடல் மண்ணிலிருந்து பெற்ற சக்தி தான் இது.
2.மண்ணுடன் கலந்து இந்த உடல் மக்கட்டும்.
3.மண்ணுக்குள் இருந்து சத்தை எடுத்து ஒலி ஒளியாக மாற்றிய பின்
4.ஒளியின் சரீரமாக நாம் பெறவேண்டும்.

மகரிஷிகள் காட்டிய மெய் வழி இது.

மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை… மரண பயம் கொண்டு பயந்து வாழும் நிலை உலகமெங்கும் பரவிவிட்டது…!

Polaris Pole star - sabdharishi

மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை… மரண பயம் கொண்டு பயந்து வாழும் நிலை உலகமெங்கும் பரவிவிட்டது…!

ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்துவிட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில்
1.ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.
2.ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு நாம் ஆடாகப் பிறக்கின்றோம்.

இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம் இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.
1.இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை.
2.ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம்.

தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படித் அதனை நாம் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்கு முன் எதிரிகள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

1.தீமை செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர்
2.“சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில்
3.சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால்
4.வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை இன்று வந்துவிட்டது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

அதிலிருந்து மீண்டிடும் நிலையாக குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அருள் ஞானிகள் கண்ட மெய் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைக் கவரும் நிலையாக
1.உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தச் செய்து
2.அந்தப் பேரருள் உணர்வினை ஈர்க்கும்படிச் செய்கின்றோம்.

வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இன்றைய விஞ்ஞான உலகில் காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து நல்லதை நுகரப் பழக வேண்டும்.

சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி
2.அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம்.
3.நம்மை அறியாது வரும் இருளைப் போக்குவோம்.
4.மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.

அந்த மெய்ஞானிகளின் தொடர்பு கொண்டு முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம்.

முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

ஏனென்றால் இதற்கு முன்
1.நமது முன்னோர்களை நாம் விண் செலுத்தத் தவறிவிட்டோம்.
2.இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

அதன் துணை கொண்டு அந்த அருள் ஒளிகளை நமக்குள் பாய்ச்ச வேண்டும். நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

நாமும் விண்ணின் ஆற்றலைப் பெறும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே சென்றடையலாம். நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

1.மரணமில்லாப் பெருவாழ்வு என்பதும்
2.பிறவியில்லா நிலை என்பதும்
3.பேரின்பப் பெருவாழ்வு என்பதும் அந்தச் சப்தரிஷி மண்டலமே.

ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் தன்மை பெறுவோம்.

நம் முன்னோர்களில் “ஒருவரையாவது” மோட்சம் பெறச் செய்ய வேண்டும்

Consciousness Creates Reality

நம் முன்னோர்களில் “ஒருவரையாவது” மோட்சம் பெறச் செய்ய வேண்டும் 

பௌர்ணமி அன்று உங்கள் குடும்பத்தில் கூட்டுத் தியானம் இருந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதற்குப் பின் உங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு பழகிக் கொண்ட பின் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று வாரத்தில் ஒரு நாளாவது எண்ண வேண்டும்.

காரணம் அவர்களது உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

இன்னொரு உடலில் இருந்து முன்னோர்களின் ஆன்மா வெளி வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்ட வலிமையால் உந்தித் தள்ளினால் அந்த உயிராத்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்ய முடியும்.

உங்கள் குடும்பத்தில் உள்ள மூதாதையர் எவரேனும் விண் சென்றால் தான் நீங்களும் அவர்களைப் பின் தொடர்ந்து விண் செல்ல முடியும்.

இது அல்லாது மார்க்கம் இல்லை.

1.பக்தி மார்க்கத்தில் காட்டிய வழிப்படியோ
2.மதங்கள் காட்டிய முறைப்படியோ
3.தனித்த ஒரு மனிதன் கடும் ஜபம் இருந்தாலும்
4.நிச்சயம் விண்வெளி செல்ல முடியாது.

எடுத்துக் கொண்ட ஜபம் ஓங்கி வளர்ந்திருந்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் எந்த ஜபம் எடுத்தோமோ அதே ஜபத்தை வேறு யாராவது செய்தால் நம் உயிரான்மா அங்கே ஈர்க்கப்பட்டு அவருக்குள் போய்விடுவோம்.

அங்கே சென்றபின் இரண்டு மனிதனாக சக்தி வாய்ந்தவராக ஆகலாம்.  ஆனால் அவ்வாறு சென்றாலும் அதனின் துணை கொண்டு பிறருடைய துயர் துடைக்க உதவும்.

பிறருடைய உடலில் உள்ள துயரங்கள் விளைந்த உணர்வுகளை ஈர்த்து அவர்களுக்குப் பதில் சொல்லவும் முடியும்.

எப்படி அந்த உடலுக்குள் போனோமோ
1.பிறருடைய உடலில் விளையும் தீமைகளைக் கவர்ந்து
2.தீமையான உணர்வுகள் இந்த உடலில் விளைந்து
3.இந்த இரண்டு ஆன்மாக்களும் நஞ்சு கொண்ட நிலையில் மீண்டும் வளர்ந்து பின் மடிந்து விடும்.

பக்தியில் காட்டிய ஜபம் என்பது இன்று நமக்கு எளிதாக இருக்கலாம். அந்த வழியில் செய்து அனுபவித்து வந்தவர்களுக்கு ஏதோ நாம் ஜபம் இருக்கிறோம். ஆன்டவனை அடைய முடியும் என்று இருக்கலாம்.

ஆனால் இது அல்ல முறை.

இன்று சக்தி வாய்ந்த அணு குண்டை வீச பல இயந்திரங்களின் துணை கொண்டு விண்ணில் வீசுகின்றான். தனித்து வீசினான் என்றால் அதில் இயக்கச் சக்தியின் கிளைகள் இல்லை என்றால் அது இயங்காது.

சக்தி வாய்ந்த அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலை வலுப் பெறச் செய்து விண்ணில் செலுத்துகின்றான். எத்தனையோ செயற்கைக் கோள்களையும் இராக்கெட் மூலம் விண் செலுத்துகின்றார்கள்.

மனிதனான விஞ்ஞானி இவ்வாறு செய்வது போல
1.மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றலில் கலந்த நஞ்சினைப் பிளந்து
2.உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண்ணுலகம் செல்லும் மார்க்கங்களைச் செயல்படுத்தினார்கள்.

தன் சீடர்களுக்கு இதையெல்லாம் உபதேசித்து இந்த உடலை விட்டுக் கடந்த பின் அந்த உயிரான்மாவை விண் செலுத்தப் பழக்கிக் கொடுத்துச் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

அரசர்கள் பக்தி என்ற முறைகளில் மதங்கள் என்ற நிலையில் பிரித்து அவர்கள் போதித்த தன்மை கொண்டு மீண்டும் மீண்டும் இது மனிதனுக்குள் சிக்குவதும் மற்ற உடலில் தப்புவதும் இப்படி இன்னொரு உடலுக்குள் (மனித உடலுக்குப் பின் விஷமான உடல்) தான் சென்றடைந்தார்கள்.

கடும் தவம் இருப்பவர்கள் நான்கு ஐந்து உடலுக்குள் செல்லலாம்.

1.இந்த அரசனாக இருப்பவன் கடும் தவங்கள் எடுத்திருப்பான்.
2.பல மந்திர ஒலிகளைத் தனக்குள் சேர்த்திருப்பான்.
3.அந்த அரசனை எண்ணி ஏங்கிய மற்ற மக்களுடைய நிலைகளும்
4.அவன் இறந்த பின் அதே ஜபத்தால் அவனைக் கவர்ந்து கொள்வார்கள்.

அதனின் வலுக் கொண்டு கூடு விட்டுக் கூடு பாயும் சாகாக்கலை என்ற நிலைகள் தான் அவர்கள் சென்றார்கள். வேகா நிலைக்குச் செல்லவில்லை.

அரசர்களால் ஏற்படுத்தப்பட்ட மதங்களும் மதத்தின் அடிப்படையில் விண் செல்வோர்கள் சாகாக்கலையாக இங்கே தான் சுழன்று கொண்டுள்ளார்கள்,

தீயிலே குதித்தால் நம் உயிர் வேகுவதில்லை. விண்ணில் வரும் எத்தகைய நஞ்சும் இதை வேக வைக்க முடியாது. இந்த உயிர் வேகுவதில்லை.

ஆனால் எத்தகைய நஞ்சினையும் ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவர்கள் மகரிஷிகள்.
1.வேகா நிலை பெற்றவர்கள் மகரிஷிகள்.
2.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்தோம் என்றால்
3.நாமும் வேகா நிலை அடையலாம்.

நமக்குள் வரும் தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெறுவதே யாம் சொல்லும் இந்தத் தியானம்,

அந்த ஆற்றலைப் பெறவேண்டும் என்றால் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்து
1.நம் மூதாதையர்களை அங்கே இணையச் செய்தே ஆக வேண்டும்.
2.நம் தூதுவர்களாக அவர்களை அங்கே முதலில் செலுத்த வேண்டும்.

அவர்கள் துணையால் அங்கு இருக்கும் உணர்வுடன் எளிதில் நாம் தொடர்பு கொள்ள முடியும். சப்தரிஷி மண்டலங்களில் உள்ள பெரும் சக்திகளை நாமும் கவர்ந்து என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரமாக அந்த இடத்தில் என்றுமே நிலைத்திருக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் “நம் இருப்பிடம்” இனி இந்தப் பூமி அல்ல…!

destination of guru

இன்றைய காலகட்டத்தில் “நம் இருப்பிடம்” இனி இந்தப் பூமி அல்ல…! 

இராமாயணக் காவியத்தை இரவுகளில் பனிக்காலங்களில் (கதாகாலட்சேபம்) சொல்வார்கள். விடிய விடிய உட்கார்ந்து கேட்பார்கள். அதே போன்று மகாபாரதத்தையும் சொல்வார்கள்.

படிப்பே இல்லாதவர்கள் அதைக் கேட்டபின் மனதில் பதிய வைத்துக் கொண்டு அப்படியே திருப்பிச் சொல்வார்கள்.

இராமாயாணக் காவியத்தைப் படித்தவர்கள் அதில் ஒன்றைத் தெரிந்திருந்தாலும் அதைக் கேட்டவர் அதற்குத் தக்கவாறு அக்காலங்களில் இந்த உணர்வைத் தெளிவாக்கும் நிலைகள் கூட வந்துள்ளது.

ஆகையினால் சாமி சொல்வது “புரியவில்லை…” என்று நீங்கள் எண்ணாது
1.”அறிய வேண்டும்…” என்ற ஆசையின் நோக்கத்துடன்
2.உணர்வினைப் பதிவு செய்து கொண்டால்
3.இந்த நினைவாற்றல் உங்களை அறியச் செய்கின்றது.

மனிதனாக எவ்வாறு உருவானோம்…? என்ற உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றது.

மனிதனான பின் இன்று உணர்வின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் எப்படி இயங்குகிறது…? என்ற நிலையை அறிய வல்லமை பெறுகின்றது.

1.அந்த உணர்வை நுகர்ந்தால் நமக்குள் உருமாற்றத்தையும்
2.பிறவியில்லா நிலைகள் அடையும் மார்க்கத்தையும் நீங்கள் தெரிந்து
3.சப்தரிஷி மண்டல எல்லையை அடையவேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்

பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும். இந்த உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றுமே நிலைத்திடல் வேண்டும் என்பதற்கே இதை உங்களுக்குள் சொல்லுகின்றேன்.

1.நமக்குள் (உயிர், உடல்) எப்படி உருவானது? என்ற நிலையையும்
2.ஆதியில் எப்படி உருவானது? என்ற நிலையும்
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளை எப்படி? என்ற நிலைகளை அறிந்து கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.

ஏனென்றால் இன்று விஞ்ஞான உலகில் உலகமே மனிதனின் சிந்தனை அனைத்தும் சிந்திக்கும் திறன் இழக்கும் தருணம் வந்துவிட்டது. சிந்தனையற்ற செயல்களைச் செயல்படும் வல்லமை அதிகரித்து விட்டது.

ஒரு மனிதன் ஆயிரம் சிந்தனை கொண்டாலும் ஒரு விஷம் தாக்கிவிட்டால் அந்தச் சிந்தனை அனைத்தையும் அழித்துவிட்டு ஐய்..யய்…யோ…, என்ற இருள் சூழ்ந்த நிலைக்கே செல்லச் செய்துவிடும்.

இந்த உடலைக் காக்கும் உணர்ச்சியின் தன்மை கூட வராது.

“எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று அதனுடன் ஒன்றி அது மடியும் தருணமே வருகின்றது. மனிதனின் நல்ல உணர்வுகள் முழுமையும் மடிந்து விடுகின்றது.

இதைப் போல உலகக் காற்று மண்டலமும் நச்சுத்தன்மை அடையும் தன்மை ஆகிவிட்டது. மனிதனால் ஏற்படுத்திய விஞ்ஞான அறிவால் நமது சூரியக் குடும்பத்திற்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளும் அகண்ட பிரபஞ்சத்திற்குள்ளும் விஷத்தன்மை பரவிவிட்டது.

பிரபஞ்சத்திற்குள் விஷத்தின் தன்மை பரவிச் சுழன்று கொண்டிருப்பதால்
1.சூரியன் கவரும் காந்தப் புலனறிவிலும் விஷத்தன்மைகள் பரவி
2.அதிலிருந்து வெளிப்படுவதை நமது பூமி கவர்ந்து பூமிக்குள் கவரப்படும்போது
3.இங்கே பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிகின்றது.

தாவர இனங்களிலும் மாற்றங்கள் ஆகிக் கொண்டுள்ளது. முந்தி வளர்ச்சியடைந்த தாவர இனங்கள் எல்லாம் உரு மாறுகின்றது. சரியான வெள்ளாமை இல்லாது போகின்றது.

1.மனிதனுடைய சிந்தனையும் சீர் குலைந்து வருகின்றது.
2.இனம் புரியாத புதுப் புது நோயை உருவாக்கும் அணுக்கள் உருவாகி மனித உடலில் புதுப் புது நோய்களும் உருவாகின்றது.

இதைப் போன்று மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு மீண்டும் புழுவாகப் பூச்சியாகப் பறவையாகப் பிறக்கும் நிலை வந்துவிடும்.

இதிலிருந்து நம்மைக் காத்திடும் நிலையாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.மகரிஷிகள் நுகர்ந்த விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து
2.நமக்குள்  அதை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற
3.இந்த நம்பிக்கை உங்களுக்கு வரவேண்டும்.

நம் இருப்பிடம் “சப்தரிஷி மண்டலம்…” தான்.

என் தாய் தந்தைரை விண் செலுத்திய நிகழ்ச்சி

ursa-major-big-dipper-polaris

என் தாய் தந்தைரை விண் செலுத்திய நிகழ்ச்சி

நம் முன்னோர்கள் மூதாதையர்களை (குலதெய்வங்களை) விண் செலுத்தாதபடி சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றலைப் பெற முடியாது. அது நடக்காத காரியம்.

1.எவ்வளவு தான் நல்ல சக்திகள் பெற்றிருந்தாலும்
2.நமக்கு என்று ஒரு தூதுவர் அங்கே போயிருக்க வேண்டும்.
3.அது இல்லை என்றால் நாம் பெற முடியாது.

முந்தி மகரிஷிகள் அங்கே சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட நிலையை நம் குருநாதர் பெற்றார். அவர் காட்டிய வழியில் என் அம்மா அப்பாவையும் விண் செலுத்தும்படிச் சொன்னார். அதைச் செய்தேன்.

அதைச் செய்யாத வரைக்கும் எனக்கு அந்தச் சக்தி கிடைக்கவில்லை. என் அம்மா அப்பா இறந்த பிற்பாடு அந்த உடலின் நிலைகளை நீ எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்னைப் பக்குவப்படுத்தினார்.

என் அப்பா இராஜபாளையத்தில் இருந்தார். நான் அங்கே அவரைச் சந்திக்கப் போனவுடனே “நீ… சீக்கிரம் வீட்டை விட்டுப் புறப்படு…” என்றார்.

ஏன் இப்படிக் குருநாதர் சொல்கிறார் என்று எனக்கு அர்த்தமாகவில்லை. ஏனென்றால் என் அப்பா நன்றாக உடல் நலத்துடன் தான் இருந்தார்.

“நீ சீக்கிரம் புறப்படு…” என்றே சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர். நீ ஊருக்கெல்லாம் ஞானத்தைச் சொல்ல வேண்டும் வீட்டில் வந்து நீ சொந்தமாக இருக்க வரவில்லை “நீ நட…” என்கிறார் குருநாதர்.

கிளம்பி வந்துவிட்டேன்.

நீ அங்கே இருந்தாய் என்றால் உன் அப்பா உன் மேல் பாசமாக இருந்தார். வெளியில் வந்தால் அந்த உயிரான்மா உடனடியாக உன்னிடம் தான் வரும்.

நான் வீட்டை விட்டுப் புறப்பட்டவுடன் என் அப்பா.., எங்கடா.. அந்தச் “சாமியார் பயலை…?” என்று தான் என்னைக் கேட்டிருக்கின்றார்.

சாமியார் பயல் எல்லாவற்றையும் இந்த மாதிரிச் செய்துவிட்டு எங்கே போனான்…? பைத்தியத்துடன் சேர்ந்து அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்லி வேகமாகக் கேட்டுள்ளார்.

அவர் அருகில் இருந்தோம் என்றால் உடனடியாக என் உடலுக்குள் வந்துவிடுவார் என்பதற்காகத்தான் குருநாதர் எம்மை வீட்டை விட்டு “உடனடியாகப் புறப்படு” என்று சொல்லியுள்ளார்.

நடந்து போகப்படும் பொழுது இதற்கு மத்தியிலே என் அப்பாவின் ஆன்மா வெளியில் வருகின்றது.

அப்பொழுது அது தெரிந்தவுடனே அதற்கு வேண்டியதுகளைச் செய்து அந்த உயிரான்மாவை அங்கேயே உட்கார்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இணைக்கச் செய்தேன்.

உன் ஊருக்குச் சென்று போய்ப் பார் என்று குருநாதர் சொன்னார். அப்புறம் அப்பா இறந்தார் என்று சொன்னேன்.

உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்றார்கள்.

ஆன்மா வெளியில் வந்தது தெரிந்தது என்றேன்.

பழனிக்கு வந்து என் பையன் தண்டபானியைக் கூப்பிட்டு இராஜபாளையம் சென்றேன். என் மனைவி முதலில் அங்கே சென்றது.

உன் அப்பாவின் ஆன்மா உடலை விட்டுப் பிரியும் நேரம் அங்கே இருக்கக்கூடாது. ஏனென்றால் நீ அந்த அளவிற்கு மனப் பக்குவம் பெறவில்லை. ஆகையினால் “நீ விலகி இருப்பது தான் நல்லது” என்றார் குருநாதர்.

இதே மாதிரித்தான் “என் அம்மா உடலை விட்டுப் பிரியும் சமயமும்” நான் அருகில் இல்லை.

என் அம்மா உடல் நலிவுற்றதைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

அப்பொழுது என் மனைவியிடம் என் அம்மா இரண்டு கோழி முட்டைய வறுத்து வேக வைத்துக் கொஞ்சம் மிளாகய்த் தூளும் உப்பும் வைத்து எனக்குக் கொடு என்று கேட்டது.

அந்த நேரத்தில் என் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனாலும் அந்த உணவின் மேல் இருந்த ஆசை விடவில்லை.

குருநாதர் சொன்னார். உங்கள் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனால் கோழி முட்டையைப் பிரியமாகச் சாப்பிட்டிருக்கின்றார்கள். இந்தச் சமயத்தில் ஆன்மா பிரிந்தது என்றால் வேறு எங்கும் போகாது.

அதே சமயத்தில் உன் மீது பிரியமாக எண்ணியது. உன்னைக் “கடவுளின் அவதாரம்” என்று எண்ணுகிறது என்று சொல்கிறார் குருநாதர். ஆனாலும் அந்தக் கடைசி ஆசை கோழி முட்டை மீது செல்கிறது. அவர்களை அங்கே விட்டு விடக்கூடாது என்று சொல்கிறார்.

அன்றைக்கு தாரமங்கலத்தில் கூட்டுத் தியான நிகழ்ச்சி என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் கலந்து கொள்வதாகவும் எல்லோருக்கும் தகவல் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார்கள்.

அதன்படி நான் அங்கே சென்றுவிட்டேன். அங்கே தியானமிருக்கும்போது என் தாயின் ஆன்மா வெளி வருகின்றது. அங்கே இருந்த பலரும் அதைப் பார்த்தார்கள். அந்த ஆன்மாவின் உருவம் தெரிந்தது.

அப்பொழுதே அதற்குண்டான நிலைகளைச் செய்து என் தாயின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை என்ற பெரு நிலை பெறவேண்டும் என்று உந்திச் செலுத்தினேன்.

சேலத்தில் சொல்லி வைத்திருந்தேன். ஏதாவது தந்தி வந்தால் உடனடியாகத் தாரமங்கலத்திற்குத் தகவல் கொடுக்கும்படி சொல்லியிருந்தேன்.

இப்படி என் தாய் தந்தை இரண்டு பேரும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பிற்பாடு தான்
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சில நுண்ணிய அலைகளை நான் பெற முடிந்தது.
2.அதை எடுத்து எல்லோருக்கும் என்னால் கொடுக்க முடிந்தது.
3.இல்லாமல் போனால் இந்த அளவிற்குத் தைரியமாக நான் உங்களிடம் சொல்ல முடியாது.

என் தாய் கடவுளாக தெய்வமாக இருந்து என்னைக் காத்தது. குருவாகவும் இருந்து நல் வழி காட்டியது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் தெளிவாக எடுத்து உரைத்ததால் அதன் வழியில் தாய் தந்தையின் உயிரான்மாக்களை விண் செலுத்த முடிந்தது.

1.அவர்களை விண்ணுக்குச் செலுத்திய பின்பு தான்
2.நான் அந்தச் சக்திகளை அதிகமாகப் பெற முடிந்தது.

நீங்களும் உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்ய வேண்டும். செலுத்தினீர்கள் என்றால் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற முடியும்.

சாதாரண ஆத்மாக்கள் புவிக்குள் சுழல்வதையும் ஒளிச் சரீரம் பெற்ற ஆத்மாக்கள் “சப்தரிஷி மண்டலங்களில்” வாழ்வதையும் காட்டினார் குருநாதர்

Image

Polaris and sabdharisi mandalam

சாதாரண ஆத்மாக்கள் புவிக்குள் சுழல்வதையும் ஒளிச் சரீரம் பெற்ற ஆத்மாக்கள் “சப்தரிஷி மண்டலங்களில்” வாழ்வதையும் காட்டினார் குருநாதர்

உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் தெய்வங்களைப் பற்றிய உண்மைகளைக் காட்டுகின்றன.

அந்தந்த மதங்கள் காட்டிய வழி முறைப்படி வணங்கி வரும் தெய்வ வழிபாட்டில் உபதேசித்த அறநெறிகளையும் பல நற்பண்புகளையும் கடைப்பிடித்து உலக மக்கள் வாழ்கின்றார்கள்,

ஒவ்வொரு மனிதனும் தான் வணங்கி வரும் தெய்வங்கள் தங்களைக் காத்து வரும் என்ற நம்பிக்கையில்
1.எல்லா வழிகளிலும் நல்லதைச் செய்யவே
2.உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் எண்ணுகின்றார்கள்.

ஆனால் நான் உனக்குக் காட்டி உணர்த்திய படி
1.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் “தீய உணர்வலைகள்”
2.அவர்களை அறியாமல் அவர்கள் உடல்களில் எவ்வாறு சேர்கின்றன? என்பதனை உணர்த்தினேன் என்றார் குருநாதர்.

அதிலே நீயும் ஒருவன்.

தீய உணர்வுகளில் இருந்து உன்னை நீ எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளப் போகின்றாய்…! என்ற கேள்விக் குறியுடன் அவர் சொல்வதை நிறுத்திக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து என்னை விண்ணை நோக்கிப் பார்க்கும்படி சொன்னார்.

1.பல நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் ஒளி அலைகளைக் காண்பித்தார்
2.அதன் உண்மை நிலைகளையும் உணர்த்தினார்
3.பின்பு சப்தரிஷி மண்டலங்களைக் காண்பித்தார்

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்புக்குள் சிறு சிறு புள்ளிகளாக வலம் வந்து கொண்டு கோலிக் குண்டுகளைப் போன்று பல வண்ணங்களில் இருந்தன.

“அவை எல்லாம் என்ன…?” என்று என்னைக் கேட்டார்.

“நான் தெரியவில்லை…”என்று சொல்லியதும் மற்றவர்களிடம் பைத்தியம் பேசுவது போன்று பேசுவதைப் போல எனக்குப் புரியாத நிலையில் பேசிக் கொண்டே என்னை ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.

நான் திகைத்துப் போனேன் பிறகு அதன் நிலையை உணர வைத்தார்.

அதெல்லாம் சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்திய ஒளி சக்தியைப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் அவர்கள் தவத்தின் வலிமையால் புலன்களின் உணர்வால் அந்த ஒளி சக்தியை தங்களின் சுவாசங்களில் ஈர்த்துக் கொண்டனர்.

சுவாசித்த உணர்வுகளை இரத்த நாளங்களில் சேர்த்துக் கொண்டு, அவர்களின் அவர்களின் உடல்களில் சேர்த்துக் கொண்டதினால் மனிதனை மிருகமாக மாற்றவல்ல தீய உணர்வுகளை மாய்த்தனர்.

1.அதனின் வளர்ச்சியில் தங்களையே அறியும் ஞானிகளாக
2.ஞானத்தின் வழித் தொடரில் மெய்ஞானிகளாகி
3.அவர்களின் உயிரில் ஆத்மாவாக இயங்கிய அணு சிசுக்கள் ஒளியாக மாறி உயிருடன் உயிராகச் சேர்ந்து
4.ஒளியின் உணர்வு கொண்ட ஜடமாக மின்னும் நட்சத்திரங்களைத் தான் நீ பார்த்தது என்றார் குருநாதர்.

உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக இருக்கும் அணு சிசுக்கள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்ப அணு சிசுக்கள் மாறிக் கொண்டே இருக்கும்,

“மாறிய அணு சிசுக்களுக்கு ஒப்பத்தான்” அடுத்த உடலை அந்த உயிர் உருவாக்கும் என்று உணர்த்தினார் குருநாதர்.

சிறிது நேரம் மலைகளையும், காடுகளையும் சமவெளிகளையும் திரும்பிப் பார்க்கச் சொன்னார்.

திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பொழுது இளம் கருப்பு அடர்த்திக்கொப்ப இலேசான ஒளி பிரகாசமான ஒளி, இவ்வாறு பல வகையான வண்ணங்களில் சிறு புள்ளிகளாகத் தெரிந்தன.

அதன் விவரங்களை விளக்கி உபதேசித்துக் கொண்டிருந்தார் குருநாதர். “மின்னல் பாயும் பொழுது… கண்களை மூடிவிடாதே…!” என்றார்.

எனக்குப் பயம்… வந்துவிட்டது. கண்களை மூடவில்லை என்றால் பார்வை இழந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டேன்?

அவ்வளவுதான்… பைத்தியம் பிடித்தவர் போன்று எனக்குப் புரியாத பாஷையில் பேசிவிட்டுப் பிறகு என் உணர்வுகளில் “புரியும்படி” உணர்த்தினார்

நான் சொன்னதைச் செய்கிறேன் என்றாய் இப்பொழுது ஏன் தயக்கம்? என்று கேட்டுவிட்டு
1.“நீயாகவா பார்க்கிறாய்…!
2.நான் அல்லவா… பார்க்கச் சொல்லுகிறேன்…! என்றார்.

சிறிது நேரம் சமவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த மனிதர்களின் உடல்களிலிருந்து பிரிந்து வந்த உயிராத்மாக்கள்தான் சிறு சிறு புள்ளிகளாகத் தெரிவது என்று காட்டினார்.

அதில் பிரகாசமாகத் தெரிந்த புள்ளிகளைச் சுட்டிக் காட்டி சில கூடு விட்டுக் கூடு பாய்ந்து பல செயல்களைச் செய்து வந்து கடைசியில், கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி இழந்த உயிராத்மாக்கள் கரும் புள்ளிகளாக இருக்கின்றன என்றார்.

பல மந்திர தந்திரங்களைச் செய்து காட்டி வந்த உயிராத்மாக்களும், கரும் புள்ளியாக இருக்கின்றன. இவை அனைத்திலும் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக உள்ள அணுசிசுக்கள் தெரிகின்றன.

இன்னும் சிலர் ஒன்றையும் எதிர்பார்ப்பில்லாது பல துன்பங்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு நல்ல செயல்களைச் செய்து வந்து தெய்வமே துணை என்ற நிலையிலும் வளர்ந்து வந்த உயிராத்மாக்கள் இளம் சிவப்புப் புள்ளியாகத் தெரிந்தன.

இதையெல்லாம் சொல்லிவிட்டுச் சமவெளியைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொன்னார்.

அச்சமயம் எதிர்பாராது “பளீர்…பளீர்…ர்ர்” என்று மின்னல் பாய்ந்து கொண்டேயிருந்தது. அந்த மின்னலில் சிக்கிய பல வண்ணம் கொண்ட உயிராத்மாக்களின் அணுசிசுக்கள் செயல் இழந்து விட்டன.

ஆனால் உயிர்கள் அழியவில்லை அவை அழிவதில்லை.

“ஒளியாக இருந்த உயிராத்மாக்கள்” மின்னலின் கதிர்வீச்சில் சிக்கினாலும் எவ்விதப் பாதிப்புமில்லாது மின்னிக் கொண்டேயிருந்தன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்கள் மறு பிறப்பிற்கு வராமல் பூமியின் ஈர்ப்பில் சுழன்று கொண்டே தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவைகளாகின்றன.

காலத்தால் விண்ணைச் சென்றடைந்து விடுகின்றன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்களிலிருந்து வெளிப்படும் ஒளி அணுக்கள் சந்தர்ப்பவசத்தால் பிறிதொரு மனிதனின் உணர்வின் ஈர்ப்பில் சேர்ந்தால்
1.அந்த மனிதனின் ஆற்றல் பெருகி
2.ஞானத்தின் வழித்தொடரில் தன்னை அறியக்கூடிய மெய் ஞானியாகின்றான்.

இவ்வாறு நிகழ்வது எங்கோ ஒருவருக்குத்தான் என்று உணர்த்திவிட்டு மின்னலில் செயலிழந்த உயிராத்மாக்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

மின்னலின் தாக்குதலுக்குள்ளான உயிராத்மாவின் அணுசிசுக்களின் செயலிழந்த சத்துக்கள் உயிரில் இணைந்த ஆத்மாவாக இருக்கின்றன. அது மீண்டும் மனிதனாக உடல் பெறத் தகுதியற்றதாகிறது.

இத்தகைய உயிராத்மாக்கள் பூமியில் உள்ள தாவரங்கள் மீது படும் பொழுது உயிரின் துடிப்பினால் செயலிழந்த ஆத்மாக்கள் மீண்டும் அணுக்கருக்களாக உருவாகி “புது விதமான பூச்சிகளாக” உருப்பெறுகின்றது என்பதை உணர்த்தினார்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

“பிடிக்காதவர்கள்… எப்படா இறப்பார்கள்…?” என்று நினைக்கலாமா…!

Astral life

“பிடிக்காதவர்கள்… எப்படா இறப்பார்கள்” என்று நினைக்கலாமா…! 

குருநாதர் இட்ட கட்டளைப்படி யாம் திருத்தணியில் மலைக்குச் செல்லும் பொழுது ஒருவர் எம்மைச் சந்தித்தார்.

நான் ஒரு விவசாயி, இங்கிருந்து பத்தாவது மைலில் எங்கள் கிராமம் இருக்கிறது. என் மனைவிக்கு ஒன்றரை வருட காலமாக எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியவில்லை.

என்ன நோய் என்று தெரியவில்லை? எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை என்று கூறினார்.

சாமி.., நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து “என் மனைவியின் நோயைப் போக்கி நடக்க வைக்க வேண்டும்” என்று கண்களில் நீர் ததும்ப எம்மை ஊருக்குக் கூப்பிட்டார்.

யாம் இங்கு தியானத்திலிருந்துவிட்டு அதன் பிறகுதான் எங்கும் வர முடியும் என்றோம்.

தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அதுவரைக்கும் இங்கேயே இருந்து தங்களை அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார் அவர்.

விவசாயியைக் கூட்டிக்கொண்டு திருத்தணி மலைமீது ஏறிச் சென்றேன். குருதேவர் கூறிய இடத்தை அடைந்தவுடன் அவரை நான்கு நாள் கழித்து வரும்படிச் சொல்லிவிட்டு குருதேவர் குறிப்பிட்ட இடத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டேன்.

யாம் இங்கிருக்கிறோம் என்று ஊரில் யாரிடமும் தெரியப்படுத்தக்கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டோம்.

யாம் தியானத்தில் இருந்த 4 நாள்களிலும், பல நிலைகள் காட்சிகளாகத் தெரிந்து கொண்டிருந்தன. யாம் காட்சிகளாகப் பார்த்த பல நிலைகளுக்கும், குருதேவர் விளக்கி உபதேசித்து அருளிவிட்டு நாளை வரும் விவசாயியின் ஊருக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.

நான்காம் நாள் யாம் இருக்கும் இடத்திற்கு விவசாயி வந்து என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

விவசாயின் மனைவி வாத நோயால் கை கால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.

அன்று இரவு தியானத்தில் அமர்ந்தேன். அது சமயம் காட்சியாக விவசாயியின் “தாயார்..,” வாத நோயுடன் கை கால் வராமல் படுக்கையிலிருந்து கொண்டு வேதனையுடன் பல முறை மருமகளைக் (விவசாயின் “மனைவியை”) கூப்பிட்டார்கள்.

அப்பொழுது மருமகள்.., “சனியன் தொலைய மாட்டேனென்கிறதே”, என்று முனங்கிக் கொண்டே மாமியாரைப் பார்க்க அருகில் வந்தார்.

“ஒரு பக்கமாக எனக்குக் கைகால்கள் வலிக்கின்றது, என்னை அந்தப் பக்கம் கொஞ்சம் புரட்டிவிடு” என்றார்கள்.

மருமகளோ “நீ செத்தால்தான்… எனக்கு விடிவு காலம் வரும்” என்று சொல்லிக் கொண்டே வேண்டா வெறுப்புடன் மாமியாரை ஒரு பக்கமாகப் புரட்டிவிட்டார்.

இதைக் கண்டு மாமியார் வேதனையுடன் இப்படியெல்லாம் ஏசுகிறாயே.., “முருகா…!” என்று சொல்லி வேதனையுடன் பெருமூச்சு விட்டார்கள்.

மருமகளுக்குக் கோபம் வந்து என்ன…! இப்படியெல்லாம் பேசுகிறாய்…! என்று ஏச மாமியாரும் வேதனையுடன் பேசினார்கள்.

1.மருமகள் கோபத்துடன் ஏசிய உணர்வலைகள்
2.மாமியாரின் இரத்தத்தில் கலப்பது காட்சியாகத் தெரிந்தது.
3.இதைப் போன்று மாமியார் சாபமிட்டு ஏசிய உணர்வலைகள் மருமகளின் உணர்வுகளில் உந்தப்பட்டு
4.மருமகளின் இரத்தத்தில் கலப்பதும் காட்சியாகத் தெரிந்தது.

மேற்கூறியவாறு ஒருவருக்கொருவர் பல மாதங்களாக நினைத்தும் ஏசியும் பேசிக் கொண்ட உணர்வலைகள் ஒருவருக்கொருவர் படர்கின்றது.

அதாவது
1.மருமகள் மாமியாரை நினைத்து ஏசிய உணர்வலைகள்
2.மாமியாரின் உடலில் வினைகளாக விளைகின்றன.
3.மாமியார் மருமகளை நினைத்துச் சாபமிட்டுப் பேசிய உணர்வலைகள்
4.மருமகளின் உடலில் வினைகளாக விளைகின்றன.

வேதனை உணர்வுடன் “மருமகளை எண்ணியவாறே…” மாமியாரின் உயிராத்மா உடலைவிட்டுப் பிரிந்து சென்றது.

மாமியார் “எப்பொழுது… இறக்குமோ…?” என்ற வேதனையுடன் ஏங்கி இருக்கும் நிலையில் மாமியார் இறந்ததைப் பார்த்தவுடன் மாமியாரின் உயிராத்மா “மருமகளின் சுவாசத்தின் ஈர்ப்புக்குச் சென்று” இரத்தத்தில் கலந்துவிடுகின்றது.

1.சில நாட்களில் மருமகளின் உடலில் மாமியாரின் உயிராத்மா இயங்கத் தொடங்கி
2.மாமியார் எந்த நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ,
3.அதே வேதனையை மருமகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலைகள்
4.இவை எனக்குக் காட்சியாகத் தெரிந்து கொண்டிருந்தது.

அது சமயம் குருதேவர் காட்சி கொடுத்து இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டுவிட்டு அதற்குச் சில வழிமுறைகளை உணர்த்தி உபதேசித்தார்கள். பிறகு தியானத்தைக் கலைத்துவிட்டேன்.

விவசாயின் மனைவியிடம் நீங்களும் உங்கள் மாமியாரும் அடிக்கடிக் கோபித்துக் கொள்வீர்களா? என்று கேட்டேன்.

“ஆம்..,” என்று ஒப்புக் கொண்டார்கள்.

யாம் சொல்கிறபடி செய்தால் நோய் தீரும் என்றேன்.

தாங்கள் எப்படிச் செய்யச் சொல்கின்றீர்களோ அதன்படி நாங்கள் செய்கிறோம் என்றார்கள்.

விவசாயின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தியானத்தில் அமரச் செய்தேன்.

தியானமிருந்து கண்களைத் திறந்தவுடன்
1.விவசாயின் தாயாரின் பெயரைச் சொல்லி
2.அவர் உயிராத்மா மகரிஷிகளின் அருள் ஒளியால் புனிதம் பெற வேண்டும் என்று
3.குடும்பத்தில் உள்ள அனைவரையும் குருதேவர் உணர்த்திய வழியில், சொல்ல வைத்தோம்.

இவ்வாறு பத்து நாள்கள் தியானமிருந்து சொல்ல வைத்ததனால், விவசாயின் மனைவி 10 நாள்களில் மெள்ள மெள்ள எழுந்து நடக்கலானார்.

விவசாயின் குடும்பத்தில் அனைவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயின் மனைவி இனி நான் “யாரையும் மனம் நோகும்படிப் பேச மாட்டேன்…” என்று வேண்டிக் கொண்டார்.

தொடர்ந்து நீங்கள் தியானம் செய்தால் உங்களை அறியாது வரும், கோபம் குரோதம் பயம் நீங்கி உங்கள் குடும்பத்தில் நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள் என்று யாம் ஆசீர்வதித்தோம்.

இது நடந்த நிகழ்ச்சி.

 

மனிதனுடைய கடைசி எல்லை

Polaris, North star, Big dipper.png

மனிதனுடைய கடைசி எல்லை – உத்தராயணம்

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.

1.அதிலே கருவாகி உருவாக்கிய
2.அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான்
3.எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார்.

நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ஞானிகள் உணர்வை நீங்கள் வளர்த்து அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால் உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம்.

ஏனென்றால்,
1.இந்த உடல் பற்றை அகற்றி
2.உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
3.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழவேண்டும்.

அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

தியானமே நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும். பிறவியில்லா நிலை பெறுவதே நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதே நம்முடைய  வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

1.இந்த உலகில் நாம் எந்தப் பொருளைத் தேடிப் பெற்றாலும்
2.அந்தப் பொருள் நமக்குச் சொந்தமாகப் போவதில்லை.
3.நாம் நம்மிடத்தில் சொந்தமாக்க வேண்டியது அழியா ஒளிச் சரீரம் பெறும் உணர்வைத்தான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் சேர்த்து என்றைக்குமே ஒளியின் உடலாகவும் நாம் எந்தத் துயரம் இல்லாத நிலையை அடைவதும் தான் “நமது கடைசி எல்லை”.

இறக்கும் போது எந்த நினைவு கொண்டு உடலை விட்டுப் பிரிய வேண்டும்…?

Bhisma

இறக்கும் போது எந்த நினைவு கொண்டு” உத்தராயணத்தில் தான் உடலை விட்டுப் பிரிய வேண்டும்…?

  1. பீஷ்மர் – உயிர்

பீஷ்மர் தனக்குத் திருமணம் வேண்டாம் தன் தந்தைக்குச் சுகமான நிலைகள் வரட்டும் என்று சத்தியம் செய்து அதைக் கடைசி வரையிலும் காத்தவர்.

சகல வல்லமை பெற்ற.., “அவனும் தப்ப முடியவில்லை” என்று எவ்வளவு தெளிவாக ஞானத்தின் நிலைகளைப் போதிக்கின்றனர்.

இந்த உயிரான குரு மனிதனின் நிலைகளில் எத்தனையோ பகைமைகளைக் கொண்டு வந்தது.

“நான்.., எனது..,” என்ற அகந்தை கொள்ளும் போது பிறரைத் துன்பப்படுத்தித் துன்பத்தின் நிலைகளை நுகர நேருகின்றது.

கௌரவர்களுடைய நிலைகள் அவர்களுடைய தன்மையை இயக்குவதற்குச் சகலகலா வித்தைகளைக் கற்றுக் கொண்டவர்கள்.

இந்தக் கௌரவம் பிறர் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கும் தன்மை வரப்படும் பொழுது இந்த உடலை அமைத்த உயிரான குருவிற்கு “நம்மை அறியாமலேயே.., தீங்கு செய்கின்றோம்”.

இதன் தன்மை கொண்டுதான் “உத்தராயணம் வரும் வரை..,” இதை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறார் பீஷ்மர். அந்தக் காலம் வரும்போது தான் ஜீவன் போகவேண்டும்.

அது வரையிலும், நான் செய்த தன்மைக்கு எவருடன் உறுதுணையாக இருந்தேனோ அந்த உறுதுணையால் விளைந்த வேதனையை என்னில் நீக்குவதற்கு அர்ச்சுனனுக்குத் தெரியும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு எனக்கு நோவில்லாமல் செய்பவன் அவனே. “அவனைப்பற்றி நான் எண்ணும்பொழுது.., தீமைகள் அகலும் நிலை கிடைக்கும்” என்கிறார் பீஷ்மர்.

  1. பேடியால்தான் பீஷ்மர் வீழ்ச்சி அடைகின்றார் – விளக்கம்

சத்தியத்திற்காக வாழ்ந்த தன் தாத்தாவை.., “நான் எப்படிக் கொல்வது…!” என்று அர்ச்சுனன் எண்ணுகின்றான்.

அதே சமயத்தில் அவரை விட்டுவிட்டால் உன்னுடைய நல்ல குணங்கள் மடிந்துவிடுமே என்று கண்ணன் சொல்கின்றார். பீஷ்மரைக் கொல்வதற்குண்டான உபாயத்தையும் கண்ணன் சொல்கின்றார்.

“பேடி” என்ற நிலைகளை அவர் என்றைக்கும் தாக்குவதில்லை.  பேடி என்ற நிலை வந்தால் தன்னைத் தாழ்த்திக் கொள்வார்.

அதை மறைமுகமாக வைத்துக் கொள். ஆனால், “உன் வலிமையைப் பற்றி” அவர் சிந்திப்பார். உன்னைத் தாக்கமாட்டார்.

போர்க்களத்தில் அப்படிப் பேடியை பீஷ்மருக்கு முன் கொண்டு வந்ததும் எதிர்ப்பு இல்லை என்கின்ற பொழுது அர்ச்சுனன் தாக்கிவிடுகின்றார்.

பீஷ்மர் திருப்பப்படும் பொழுதுதான் அவர் விழ்ச்சி அடைகின்றார். வீழ்ச்சி அடைந்தபின் தன் உணர்வுக்குத் தக்கவாறு வேதனை (அம்புப் படுக்கையில்) அனுபவிக்கின்றார்.

சாதாரணமாக ஒருவர் நம்மைக் காட்டிலும் வலுவானவர் என்ற நிலைகள் இருக்கும்போது.., “நம்மை அவர் தாக்கி விடுவார்..,” என்று உஷாராக இருப்போம்.

1.ஒருவன் பேடியாக (இரண்டுங்கெட்டானாக) இருக்கும்போது2.“அவன் பயத்தால் நம்முடன் வந்தால்..,3.இவன் என்ன செய்துவிடுவான்..,?4.“இவன் நம்மை ஒன்றும் செய்யமாட்டான்…!” என்று அசட்டையாக இருந்தால்5அவன் (தான்) எளிதில் நம்மைத் தாக்கிவிடுவான்.6.இந்த உணர்வைத் தெளிவாகக் காட்டுகின்றது மகாபாரதம்.

பேடியைப் போன்று நடிப்பவர் உணர்வுகளில் சூட்சுமத் தன்மைகளும் உண்டு. “அவனுள் தாக்கும் உணர்வுகளே இருக்கும்..,” என்றும் மனித வாழ்க்கையில் “பேடி.., என்று ஒதுக்கப்பட்டால்.., அதன் உணர்வுகள் என்ன செய்யும்?” என்றும் காட்டப்பட்டது.

ஒருவன் ஒன்றும் செய்ய மாட்டான். இவனிடம்.., என்ன சக்தி இருக்கின்றது? என்று நினைத்தால் அவன்தான் எளிதில் தாக்கும் நிலையாக வரும்.

வல்லமை கொண்டவன் பேடியை எதிர்க்க மாட்டான். “இவனுக்கென்ன..,?” என்ற நிலைகளில் ஒதுக்கப்படும் பொழுது இந்த உணர்வு வருகின்றது.

அப்பொழுதுதான் “குருவை மதிக்கின்றான்”.

பேடியால் தாக்கப்பட்ட உணர்வும் தான் தீமையின் சார்புடைய நிலைகளில் இருக்கப்படும் பொழுது “அதிலிருந்து” அர்ச்சுனன் எவ்வாறு காத்தான்? என்று மகாபாரதத்தில் காட்டப்பட்டது,

  1. துருவத்தின் நினைவு கொண்டுதான் (துருவ நட்சத்திரம்) உடலைவிட்டுப் பிரியவேண்டும்

அர்ச்சுனன் அவனுடைய உணர்வுகள் நீதியின் தன்மை வரப்படும் பொழுது.., “நீதிக்குள்.., எத்தனை சிக்கல் சிக்குகின்றான்..,?” என்று காட்டுகின்றனர்.

உணர்வுகள் இயக்கத்தால் அவன் உயிரின் தன்மையில் அவன் உணர்வுகள் எப்படி மாறுகின்றது என்ற நிலையையும் மகாபாரதத்தில் தெளிவாக்குகின்றனர்.

“உத்தராயணத்தில் நான் உடலை விட்டு போகவேண்டும்” என்று பீஷ்மர் கேட்டது போல் அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வின் நினைவு கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றபின் “பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை” என்று வியாசர் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் கூறிய கூற்றை அவரவர் சுயநலங்களுக்காகக் காட்டப்பட்டு தங்கள் சுயநலங்களுக்கு ஒப்பத்தான் நூல்களை வடிவமைத்துவிட்டார்கள். அதைப் படித்தவர்கள் எல்லாம் இந்த வாழ்க்கைக்குத் தவறு செய்தே வாழ்கின்றனர்.

இந்தத் தவறிலிருந்து அனைவரும் உண்மையின் உணர்வை உணர்ந்து துருவனின் நிலையை நாம் நுகர்ந்து துருவ மகரிஷியின் உணர்வை நாம் நுகர்ந்து இந்த மனித உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை அடைவோம்.

விஞ்ஞானத்தில் வரும் பேரழிவால் எந்த நிமிடத்திலும் நாம் உடலை விட்டுப் பிரியலாம்.

ஆனால் அந்த உத்தராயணம் அந்த துருவத்தின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் நினைவு கொண்டு இந்த உடலை விட்டுப் பிரிந்தால் “அந்த அகஸ்தியனுடன் ஏகாந்த நிலைகளில் வாழலாம்”.

இதைத்தான்.., மகாபாரதத்தில் “தான் செய்த தவறுகள் இருப்பினும்.., என்னுடைய நிலைகள் அர்ச்சுனனுக்குத் தெரியும்..,” என்று கூறப்பட்டது.

  1. அர்ச்சுனனுக்குக் கண்ணால் காட்டப்பட்டு
  2. தீமையினுடைய உணர்வுகளை அகற்றும் வலிமையான நிலைகள்
  3. தன்னைக் காக்கும் உணர்வுகள் அவனுக்குத் தெரியும்
  4. அதன்வழி கொண்டு என்னுடைய ஆன்மா எப்படி இருக்க வேண்டும்? என்று அவனுக்குத் தெரியும் என்று மகாபாரதத்தில் வியாசரால் கூறப்பட்டது.