மரணம் அடைவதற்கு முன்னாடி சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்…! – நடந்த நிகழ்ச்சி

near death intance

மரணம் அடைவதற்கு முன்னாடி சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்…! – நடந்த நிகழ்ச்சி

 

ஒரு சமயம் என் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது 95. அப்பொழுது எனக்கு (ஞானகுரு) ஏழு வயது இருக்கும்.

எங்கள் வயலுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் ஒரு சுடுகாட்டைத் தாண்டித் தான் போக வேண்டும். குளம் எல்லாம் இருப்பதால் நான் அங்கே எங்கள் வயலுக்குத் தினமும் போய் வருவேன். அப்படி ஒரு பழக்கம் அந்த வயதில் எனக்கு இருந்தது.

என் சொந்தக்காரர் அந்தப் பெரியவர் 95 வயது என்ன செய்தார் தெரியுமா…? எல்லாச் சொந்தக்காரர்களுக்கும் தகவல் சொல்லிக் கூப்பிடுகின்றார்.
1.எனக்காக வேண்டி இனி என்ன செய்யப் போகிறீர்கள்…?
2.நான் சாவதற்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கிறது…! என்று சொல்கிறார். அப்படியே சொல்கிறார்…!

வந்தவர்களிடம் எல்லாம் நான் பத்து நாளில் போய்விடுவேன் டேய்… நீங்கள் எல்லோரும் நன்றாக இருங்கடா..!

ஒரு நாள் போய் விட்டது… இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கிறது. நீங்கள் என்னென்ன ருசியாக வேண்டுமோ சாப்பிடுங்கள். எல்லோருக்கும் சாப்பிடக் கொடுங்கள்…!

ஒவ்வொரு நாளும் இப்படியே சொல்லிக் கொண்டே இருந்தார்.

பத்தாவது நாளும் வந்தது.
1.இனி ஒரு மணி நேரம் இருக்கிறது…. அரை மணி நேரம் இருக்கிறது
2.கால் மணி நேரம் இருக்கிறது… பத்து நிமிடம் இருக்கிறது
3.இன்னும் ஒரு நிமிடம் இருக்கின்றது… சொல்லிக் கொண்டே போகிறது.
4.சொல்லிக் கொண்டே இருந்தார்… அப்படியே உயிர் பிரிந்தது…!

அவர் எந்த வழியில் எப்படி இருந்திருப்பார் பாருங்கள்…!

கடைசியில் அவரைச் சுடுகாட்டில் வைத்துத் தகனம் செய்கின்றார்கள் நான் அன்றைக்குத்தான் சுடுகாட்டில் எரிப்பதைப் பார்க்கின்றேன். அங்கே அவருடைய உடல் எரிந்து கொண்டிருக்கின்றது.

எரிந்து கொண்டிருந்த உடல் என்ன செய்தது…?
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வினுடைய வேக நினைவுகள் எவ்வளவு வலுவாக இருந்ததோ
2.அந்தச் சரீரம் அப்படியே எழுந்து உட்கார்கிறது…!

தொப்….தொப்..! என்று போட்டு அடித்து மறுபடியும் கட்டையைப் போட்டு எரிக்கின்றார்கள். இதைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனது…?

சுடுகாட்டில் அன்றைக்குத் தான் பேயைப் பார்த்த உணர்வு போல் பயந்து போய் விழுந்தடித்து ஓடத் தொடங்கினேன். ஏழு வயதில் எனக்கு அந்தப் பயம் வருகிறது. நடந்த நிகழ்ச்சி நேரிலேயே இதைப் பார்த்தது. ஆனால் செத்தது அவர்.

இந்த உணர்வுகள் அதை எல்லாம் நீக்கினாலும் கூட அந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அந்த மாதிரி இயக்குகிறது. பார்த்த உண்மை நிலை இது…!

பக்தியின் நிலைகள் அன்று காட்டியிருந்தாலும்…
1.தாய் கருவிலே விளைந்த இந்த உணர்வுகள் மெய் ஒளியைப் பெற்று அங்கே அழைத்துச் செல்லும்.
2.அவர்களுக்குத்தான் இந்த மாதிரியான நினைவுகள் வரும்…!

உங்கள் ஒவ்வொருவருக்கும் (இன்னார் இன்னாருக்கு) இதெல்லாம் நான் செய்தேன். நீங்கள் இப்படிச் செய்து கொள்ளுங்கள்…! நான் உடலை விட்டுப் போகிறேன்…! என்று சொல்லிவிட்டே போகிறார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

உடலை விட்டு நாம் செல்லும் பொழுது யாருடன்… எப்படிச் செல்ல வேண்டும்…?

Sapdharishi mandalam.jpg

உடலை விட்டு நாம் செல்லும் பொழுது யாருடன்… எப்படிச் செல்ல வேண்டும்…?

இன்றைய உலகில் நாம் தவறே செய்ய வேண்டாம்…! நாம் தவறு செய்யாமலே அந்தத் தவறுக்கு நாம் ஆளாகும் சந்தர்ப்பங்கள் வந்து விடுகின்றது.

அதற்கு மூலம் எது..?

நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!

அந்த உணர்வை இயக்குவது யார்…?

நம் உயிர் தான்…!

நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் இயக்கப்படும் போது மனிதனை உருவாக்கிய அணுக்கள் எத்தனை பாடுபடுகின்றது..? எத்தனை வேதனைப்படுகின்றது…? இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா…?

மனிதன் வாழ்வது கொஞ்சம் நாள் தான். நூறு வருடம் அல்லது நூற்று இருபது வருடம் அதற்கு மேல் யாரும் வாழ்கிறார்களா…? எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டுப் போய்த் தான் ஆக வேண்டும்…?

அப்பொழுது யாருடன் செல்ல வேண்டும்..? நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிருடன் தான் நாம் இப்பொழுது செல்கின்றோம்.
ஆனால்
1.வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி
2.நுகர்ந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக்கி
3.அந்தத் துருவ நட்சதிரத்தின் ஈர்ப்புக்குள் தான் நாம் சென்றாக வேண்டும்

ஏனென்றால் அன்று ஆண்ட அரசர்களால் இந்த உலகம் அழியும் தருணத்திற்கு வந்துவிட்டது. இன்றும் அதிக மோசமான நிலைகளில் போய்க் கொண்டு இருக்கின்றது

பணத்தைச் சம்பாதித்துக் கொண்டு வந்தாலும் அது வீடு வரைக்கும் வந்து சேருமா…? கையில் பணம் கொண்டு வருவது தெரிந்தாலே தட்டிப் பறிக்க எத்தனையோ வழிகளில் இன்று இருக்கின்றார்கள்.

சேர்த்த பணத்தை வீட்டில் மறைத்து வைத்து விட்டுப் போனால் தப்ப முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. சரி… பாங்க் லாக்கரில் வைத்தால் தப்ப முடிகிறதா..? என்றால் அதுவும் இன்று கேள்விக் குறி தான்…!

அந்த அளவுக்கு நிலைமை மோசமாக ஆகிவிட்டது

ஆக எல்லா ஆசைகளும் இருந்தாலும் செல்வத்தைப் பாதுகாத்து வைப்பதற்குள் போதும்…போதும்..! என்று ஆகி நிம்மதி இல்லாது வேதனைப்பட்டு நமக்குள் நோயாகவே வருகின்றது. இதிலிருந்து தப்ப முடியாத நிலைகள் தான் இன்று இருக்கின்றது.

1.ஆகையினால் செல்வத்தைக் காக்க என்று யாரை எண்ணி ஏங்குகின்றோமோ மீண்டும் இந்தப் பிறவிக்கே வந்துவிடுன்றோம்.
2.பிறரைக் காக்க வேதனைகளை எடுத்தாலும் மீண்டும் பிறவிக்குத் தான் வருகின்றோம்.

ஆனால் விஷத்தை எல்லாம் வென்று ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் ஓங்கி வளர்த்தோம் என்றால் “உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது…!”

அப்பொழுது உயிர் அதை இயக்கி நம்மை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய் நிறுத்தும். நாம் அழியாத ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

ஏனென்றால் நமக்குள் எத்தனையோ “ஊழ்வினை” என்ற வித்துக்கள் உண்டு. முந்தி தெரியாது… இப்பொழுது அது எல்லாம் தெரிய வரும். அந்த வித்துக்களை எல்லாம் நாம் ஒளியாக மாற்றிக் கொண்டே வருதல் வேண்டும்.

இப்பொழுது இருக்கும் இந்த மனித உடலே நமக்குக் “கடைசி உடலாக” இருக்க வேண்டும்…!

Rameswaram, kodikkarai.jpg

இப்பொழுது இருக்கும் இந்த மனித உடலே நமக்குக் “கடைசி உடலாக” இருக்க வேண்டும்…!

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பல தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான உணர்வுகளை எடுத்துத்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

ஒரு முயல் என்ன செய்கிறது…? நாயிடமிருந்து தப்ப எண்ணுகிறது. அதே சமயத்தில் அந்த நாய் நரியிடமிருந்து தப்ப எண்ணுகிறது.
1.அப்பொழுது தப்ப வேண்டும் என்ற அந்த எண்ணங்களைச் சுவாசித்து
2.அந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் பெருக்கிக் கொள்கிறது.
3.இப்படித்தான் எல்லா உயிரினங்களும் வளர்ச்சி அடைந்து வந்தது.

ஒரு மான் சாந்தமானது. புலியோ கொடூரமானது. அந்தப் புலியிடமிருந்து மான் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கின்றது.

இப்படிச் சிறுகச் சிறுக எண்ணி அந்த உணர்வு பெற்ற பின் கடைசியில் என்ன நடக்கின்றது…? அதாவது பல கோடி உடல்களை எடுத்துப் பல தீமைகளிலிருந்து நீக்கிடும் அருள் சக்தி பெற்ற இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

அதைத்தான் தீமைகளிலிருந்து விடுபடும் எண்ணத்தை உருவாக்கி வந்ததை “இராமேஸ்வரம்” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இராமன் என்றால் எந்தச் சுவையை எடுக்கின்றோமோ அந்த எண்ணங்கள் வரும். அது தான் சீதாராமா என்பது. எதன் சுவையோ அதன் அந்த உணர்ச்சிகளின் எண்ணங்கள் வருகிறது,

ஆகவே இதைப் போல தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வுகள் எடுத்துக் “கோடிக்கரை” என்ற நிலையில் இருக்கின்றோம்.
1.அதாவது நாம் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று
2.இன்று நாம் கடைசி உடலாக இருக்கின்றோம்.

கோடிக்கரை என்ற கடைசி உடலில் இருக்கப்படும் பொழுது இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும்..?

தனுசு கோடி…! அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி மனித வாழ்க்கையில் வந்த இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கியவன். நாம் அகஸ்தியன் அடைந்த நிலையை அடைய வேண்டும்.

கோபப்படுவோரைப் பார்த்தவுடன் “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுத்தப்படுத்தி முடிந்தவுடனே என்ன செய்ய வேண்டும்…?

கோபமாகப் பேசிவர்களுக்குள் சாந்தமும் ஞானமும் விவேகமும் வர வேண்டும். நல்லது செய்யக்கூடிய அந்த உணர்வுகள் வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி நாம் எண்ணினால் அவன் கோபித்த உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.நமக்குள் நாம் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

ஒரு குழம்பை வைக்கும் பொழுது அதை எப்படி ருசியாக மாற்றுகின்றோமோ நம் உடலில் அந்தத் தீமைகள் புகாது… தீமைகள் வளர்ந்திடாது தடுத்துக் கொள்கிறோம்.

இல்லை என்றால் அந்தக் கோபப்படுவோரின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் அடுத்தாற்போல் வரப்படும் பொழுது… அவனைப் பார்த்தாலே “அவன் மோசமானவன்…” என்று நம்மைச் சொல்ல வைக்கும்.

யாராவது அவனைப் பற்றிச் சொன்னார்கள் என்றால் அல்லது அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் இதே நிலை வரும். அந்த நேரத்தில் எல்லாம் நமக்குள் பல கெடுதலான நிலைகள் வந்துவிடுகின்றது.

பின் நோயாகின்றது… பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித உடலை வீழ்த்தி விட்டுத் தேய் பிறையாகிக் கீழே செல்ல வைக்கின்றது.

அதைத் தடுப்பதற்காகத்தான் இதை எல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கிறோம்.

யாம் (ஞானகுரு) உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் எப்பொழுது எண்ணினாலும் அந்தச் சக்தி கிடைக்கும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது
1.உங்கள் உடலில் உள்ல பல கோடி உணர்வுகளுக்குள்ளும் அது ஒன்றாகித் தனுசு கோடி ஆகின்றது.
2.அழியா ஒளிச் சரீரம் பெற ஏதுவாகின்றது.

முன்னோர்களின் ஆன்மாக்களுக்குச் சாப்பாடு செய்து வைத்துக் கூப்பிடுவதால் வரும் விளைவுகள்

auspicious day

முன்னோர்களின் ஆன்மாக்களுக்குச் சாப்பாடு செய்து வைத்துக் கூப்பிடுவதால் வரும் விளைவுகள்

 

சாதாரணமாக நாம் எல்லோருமே மந்திரங்களைச் சொல்லி பழக்கப்பட்டவர்கள் தான். இறந்த பிற்பாடு என்ன செய்கிறோம்…? சுட்ட சாம்பலை எடுத்துப் பாவத்தைப் போக்குவதற்காகக் வேண்டிக் கொண்டு போகிறோம்.

எங்கே…?

கங்கையில் கொண்டு பாவத்தைக் கரைத்து விட்டால் போய்விடும் என்று கரைப்போம். அடுத்து அந்த மந்திரத்தைச் சொல்லி மோட்சத்துக்கு அனுப்பிவிட்டதாக அங்கே சொல்வார்கள்.

வீட்டுக்கு வந்தவுடனே நாம் என்ன செய்கிறோம்…? எல்லோரும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகி அப்புறம் புத்தாடைகளை உடுத்தி விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கு வைத்து நெய் தீபம் இட்டு தீபாரதனை காட்டுவோம். அப்படிக் காட்டினால் மோட்ச தீபம்.

அங்கே அப்படிச் செய்த பின் அமாவாசை அன்றைக்கு என்ன செய்கிறோம்…? அம்மா அப்பா உணர்வுகள் எல்லாம் நம் உடலில் இருக்கும். அவர்களை நாம் எண்ணுவோம். எப்படி…?

அவர்கள் பிரியமாகச் சாப்பிட்ட உணவுகளை எல்லாம் வைத்து நாம் கூப்பிடுவோம். எங்களுடன் இருந்தீர்கள். இதை எல்லாம் சாப்பிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்த துணிமணிகளை எலலம் வைத்திருக்கின்றோம் என்று சொல்லுவோம்.

இந்தச் சாப்பாடு வைத்த உடனே அவர்கள் உணர்வு நம்மிடம் இருப்பதால் இந்த உணர்வு ஆன்மா (மணம்) ஆனபின்.. அது இங்கே வரும். நாம் இங்கே இதைச் செய்வோம். ஆனால் குடுகுடுப்புக்காரன் என்ன செய்வான்…?

நம் வீட்டு வாசல் படியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு போவான். தலை முடியையும் எடுத்துக் கொள்வான்.

நமக்கு ஆகியவர்கள் ஆகாதவர்கள் என்று எந்தத் தெய்வத்தை எண்ணி மந்திரங்கள எல்லாம் சொன்னோமோ அதை எடுத்துக் கொள்வான்.

இது எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். எந்த இடத்தில் அவர்களைப் (நம் முன்னோர்களை) புதைத்தார்களோ அல்லது எரித்தார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு போவார்கள்.

நம் பாதம் பட்ட மண்… தலை முடி… துணி… (இதில் எல்லாம் நம் உணர்வின் எண்ணங்கள் உண்டு) இந்த மூன்றையும் வைத்து அந்த இடத்தில் சில மந்திரத்தைச் சொல்வார்கள்.

மந்திரங்களை ஜெபித்த பின் அந்த மண்னை எடுத்துக் கெடுதலான நிலைகளுக்கு அதை தூவி விடுவார்கள். ஆனால் நமக்குத் தெரியாது. மண்ணிலே பாதம் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எந்த ஆவியோ அது இங்கே வந்து குவியும்.

அடுத்தாற்போல் என்ன செய்வான்…? நல்ல காலம் வருகிறது என்று குடுகுடுப்புகாரன் சொல்லுவான்.
1.இந்த உணர்வின் ஒலி/ஒளி கொண்டு நம் உணர்வின் அறிவை எடுத்து
2.நம் குடும்பத்திலே உள்ள நிலைகள் எல்லாம் எப்படி எப்படி இருக்கிறது…? என்று கட கட என்று சொல்லிக் கொண்டே வருவான்.
3.இது ஒரு வகை.

இது எல்லாம் அன்றைய அரசர்களுக்குத் தூது சென்ற நிலைகள். ஒரு குடும்பத்திலே இன்னென்ன நடக்கிறது என்ற உணர்வின் செயலாக்கங்களை இருந்த இடத்தில் இருந்து அரசனுக்குத் தூது செல்லும் முறை. அரசனால் உருவாக்கபட்ட “ஐந்தாம்படை” என்று அக்காலங்களில் வந்த நிலை.

நாடி சாஸ்திரமும் இதே நிலை தான். ஒரு அரசன் ஆன பின் மந்திரங்களை உருவாக்கித் தன் குடிமக்களுக்குத் தெய்வ பக்தி என்ற நிலையில் பதிவாக்கி விடுவார்கள்.

அத்தகைய மந்திரங்களை மக்கள் தங்களுக்குள் கவர நேர்கின்றது. இப்படிப் பல மந்திரங்களைத் தனக்குள் சேர்த்த பின் அந்தக் குடிமகன் அரச பக்தி என்ற நிலையில் இருப்பான்.

அரசன் சாகாக்கலையாக நாடி சாஸ்திரம் என்ற பெயரில் செயல்பட்டு மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அவனுக்குள் போகும். குடிமகனுக்குச் சொன்ன நிலையெல்லாம் சொல்லும். உருவாக்கும் சக்தியை எல்லாம் சொல்லும்.

அந்த நாடி சாஸ்திரத்தை வாசித்த பின் இவன் இன்னொரு கூட்டுக்குள் போவான். ஆசைப் பட்டு விடுவான் என்று அந்த நாடியில் எழுதி இருக்கும்.

இந்த உணர்வின் தொடர்பு கொண்டவன் இதை எத்தனை காலம் வைத்திருக்கலாம் என்ற இந்த நிலை எல்லாம் அதிலே வரும். அடுத்து இன்னாரிடம் கொடுத்து விடு…! என்று போட்டிருக்கும். ஆனால் அந்த மாதிரிக் கொடுக்க இன்று யாரும் இல்லை.

எனக்கு… அது தெரியும் இது தெரியும்..! என்று குடும்பச் சொத்தாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட இவனுடைய ஆசை நிலை கலக்கப்படும் பொழுது அந்த அரசனும் வீழ்ச்சி அடைகின்றான்.

கூடு விட்டுக் கூடு பாயும் தன்மை இவனுக்குள் எடுத்துக் கடும் பேயாக மாறுகின்றான். ஆக மொத்தம் இந்த நாடி நாஸ்திரம் பார்த்த குடும்பம் எல்லாம் பாருங்கள். தொலைந்து போய்விடும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?

1.அந்த அரசனுடைய நிலையில் அவன் சொன்ன மாதிரி மந்திர ஒலிகளைச் செலுத்தப்படும் போது
2.அரசனுக்கு வந்த ஆசைகள் எல்லாம் நம் உடலுக்குள்ளும் வரும்.. தப்ப முடியாது…!

ஆகவே இது சாகாக்கலை.

ஆனால் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டால் அது வேகா நிலை. இந்த அண்டத்தில் உள்ள எதுவுமே நம்மை வேக வைக்க முடியாது.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கு தான் துருவ நட்சத்திரத்தைப் பற்றியும் சப்தரிஷி மண்டலங்களைப் பற்றியும் அந்த மாமகரிஷிகளைப் பற்றியும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

எந்தக் காரணம் கொண்டு நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியதே இல்லை. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

இரண்டாவது காண்டத்தின் இயல்பு…!

ramalingam rameswaram

இரண்டாவது காண்டத்தின் இயல்பு…!

 

உயிரணுவாகத் தோன்றி பல உடல்கள் பெற்று மனித உடல் பெறுவதை முதல் காண்டமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த பின் அடுத்துப் பல உணர்வுகள் எடுத்து அறுபது வயது ஆகும் பொழுது அது இரண்டாவது காண்டம்.

1.இரண்டாவது காண்டத்திற்குள் நாம் எடுத்து நுகர்ந்து கொண்ட உணர்வுகள் மாற்றம்…!
2.ஆக இரண்டு காண்டங்கள் கவர்வதே மனிதனுக்கு மிகவும் சிரமம்.
3.இடைப்பட்ட நேரங்களில் (அறுபது வருடத்தில்) நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு மாறுகிறது..? என்ற இந்த நிலையைக் காவியங்களில் உணர்த்துகின்றனர்.

இராமாயணத்தில் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்ற தசரதன்
1.தனக்குள் எடுத்துக் கொண்ட ஆசை தன் மகனுக்குக் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும்
2.அந்த நல்லவனுக்குச் (இராமனுக்கு) செயல்படுத்த முடியவில்லை என்று வேதனை உணர்வுகள் ஆன பின் அவன் மடிகின்றான்.

இதை எல்லாம் மனிதன் தெளிந்து… அறிந்துணர்ந்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காகத்தான் காவியப் படைப்புகளை இப்படிக் கொடுத்துள்ளார்கள்.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் மாற்றங்கள் ஏற்படும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரண்டறக் கலந்து மனதைக் குவித்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றென இணைந்து (இராமலிங்கமாக) அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

நம் சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாது வாழும் சக்தி பெறுகின்றது

இயற்கையின் உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையை உணர்ந்து… தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

அதாவது மூன்றாவது காண்டமாக…
1.அந்த அருள் மகரிஷிகளின் அருளுணர்வைத் தனக்குள் சேர்த்து
2.உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அடுத்துப் பிறவியில்லா நிலையை அடைய வேண்டும் என்று
3.ஞானிகள் தெளிவாக மூன்று காண்டங்களையும் காண்பித்துள்ளார்கள்.

2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கடுமையான விஷத் தன்மைகள்

End of the world

2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கடுமையான விஷத் தன்மைகள்

 

இன்று நாம் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் இருக்கும் பொழுது சீராக இயங்குகின்றது.
1.ஆனால் அதற்குள் மாறுபட்ட உணர்வுகள் கலந்து விட்டால்
2.அந்த எலெக்ட்ரானிக் கருவியே முழுவதும் செயலிழந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் இன்றைய நிலைகளில் சூரியனின் மாற்றம் எலெக்ட்ரிக் அதிகமாக உருவாகும் சக்தியாக வளர்ந்து விட்டது.

காரணம் மனிதன் அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி வான் வீதியில் பரீட்சித்துப் பார்த்த இந்த உணர்வுகள் மற்ற கோள்களுக்குள்ளும் சென்று அதன் உணர்வுகள் இன்று உமிழ்த்திச் சூரியனுக்கு அருகே வரும் நிலைகள் வந்துவிட்டது.

அதிலே மோதல் ஏற்பட்டால் என்ன ஆகும்…?

உதாரணமாக மின்சாரம் இரு மடங்காக வந்தால் பல்புகள் ப்யூசாகிவிடும் (FUSE)… மோட்டார்கள் எல்லாம் எரிந்து விடும். அதைப் போல சூரியனுள் உருவாகும் அதீத மின்சாரம் இரு மடங்காகப்படும் பொழுது (SUN FLARE EMISSION)
1.நம் உயிரின் தன்மை துடிப்பு அதிகமாகும்.
2.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அதே நிலையாகும்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த கம்ப்யூட்டர் நிலைகள் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர் நிலையின் மோதல்களால் கம்ப்யூட்டர் செயல் இழந்துவிடும். கன்ட்ரோல் (CONTROL) இல்லாது போகும்.

அப்படிப்பட்ட நிலையானால் விஞ்ஞானத்தால் உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பாய்ந்து பரவும் நிலை இருக்கின்றது. விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கண்டுபிடித்த உணர்வுகள் உடலுக்கு நல்லது என்றாலும்
1.அடுத்த நாட்டை அழிக்க விஷத் தன்மைகளை உருவாக்கித் தன்னைப் பாதுகாக்கச் செய்த நிலையில் பரவச் செய்த அலைகள்
2.சூரியனால் அந்த விஷத் தன்மைகள் பூமிக்குள் பரவி பிரபஞ்சத்திலும் பரவி
3.மீண்டும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லப்படும் பொழுது இரு மடங்கு மின்சாரம் அதிகமாக உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது.

அப்பொழுது காட்டுகளில் இருக்கும் விலங்குகள் போல் மனிதனின் சிந்தனைகள் தவறிவிடும்.
1.உயிரின் துடிப்பு அதிகமாகும் பொழுது ஈர்க்கும் சக்தி அதிகமாகி
2.நரம்பு மண்டலங்கள் எல்லாம் இயக்கங்கள் மாறி
3.பித்துப் பிடித்தவன் போல் சிந்திக்கும் தன்மை இல்லாது பைத்தியம் பிடிக்கும்.

இதைப் போன்ற இந்த உணர்வின் வலுவாகிவிட்டால் மனிதனுக்கு மனிதன் தாக்கும் நிலைகளும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.

மற்ற உயிரினங்கள் எதுவோ பூமிக்குள் வங்கிட்டுக் குடி கொண்டுள்ள மற்ற உயிரினங்கள் நில நடுக்கம் வரும் பொழுது அதை அறிந்து கொள்கிறது. உடனே வெளியேறுகின்றது. (மனிதனுக்கு அது தெரிவதில்லை).

இதைப் போன்ற இயற்கையின் உண்மைகளை அறிந்து இயக்கம் பரிணாம வளர்ச்சியில் வருவதை உணர்வின் அதிர்வுகளைக் கண்டு மற்ற உயிரினங்க தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்கின்றது.
1.மனிதனுக்கு அப்படி இல்லை…!
2.வந்து தாக்கும் பொழுது தான் தெரிந்து கொள்கின்றான்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் 2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் சென்றால் மிகக் கடினமான காலங்களாக வருகின்றது.

இப்பொழுது பத்திரிக்கை டி.வி.யில் பார்க்கின்றோம். மதம் இனம் என்று மனிதனுக்கு மனிதன் வெறி கொண்டு தாக்குவதைப் பார்க்கின்றோம். இவன் அவனைத் தாக்க… அவன் இவனைத் தாக்க… என்ற இந்த நிலைகள் தான் வருகின்றது.

மனித இனமே அழித்திடும் உணர்வுகளாக இன்று விளைந்து அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு
1.மதத்தின் அடிப்படையிலும் சரி
2.இனத்தின் அடிப்படையிலும் சரி
3.தெய்வ பக்தியின் அடிப்படையாக இருந்தாலும் சரி
4.விஞ்ஞான அறிவிலும் சரி
5.இதுகள் எல்லாம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
6.மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் நிலைகளாக விஷத் தன்மைகள் கூடி
7.அதற்குள்ளேயே நாம் வாழும் தருணம் வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் தெளிவாகக் கூறி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.

அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்கள் எண்ணம் நிச்சயம் காக்கும்…!

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்

Om Eswara - OM ESWARA

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்

 

இன்று எடுத்துக் கொண்டால் விஷத் தன்மையால் பெரும் சூறாவளிகள் கிளறப்பட்டுக் கட்டிடங்கள் எல்லாம் தூசிகளைப் போலப் பறக்கும் நிலையும் அதே சூறாவளி கடலில் தாக்கப்படும் பொழுது அது நீர் நிலைகள் அனைத்தும் ஊருக்குள் கொண்டு வருவதும் இப்படிப் பேரழிவுகள் வந்து கொண்டிருக்கின்றது.

எந்த விஞ்ஞானத்தைச் செயல்படுத்தினார்களோ அந்த விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத்தின் தன்மைகள் அடர்த்தி அடைந்து அது வலுவாகிய நிலையில் அதை எல்லாம் சூரியன் கவர்வதனால்
1.ஒன்றுக்கொன்று எதிர்நிலை கொண்டு மோதி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையும்
2.நாம் தேடிய செல்வங்களும் இந்த உடல்களும் எப்பொழுது எந்த நிமிடத்தில் அழியும் என்ற நிலைகளை
3.நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலைகள் கொண்டு உலகையே அழிக்கும் நிலைக்கு வந்து விட்டது.

இதற்குள் நம் உணர்வின் தன்மை எதிலும் அழியாத உணர்வு கொண்ட ஒளியின் உணர்வாக ஒளியாக மாற்றச் செய்வதே இந்தத் துருவ தியானத்தின் நோக்கம்.

இந்த உலகில் வரும் விஷத் தன்மைகள் நம்மைப் பாதிக்காது… “விஷத்தின் தன்மை தாக்குதலால் ஏற்பட்ட உயிர் ஒளியாக மாறுவது போல்…” எத்தகைய விஷத் தன்மை தாக்கினாலும் அந்த உணர்வுகள் ஒளியாக மாறி நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த விஷத்தை அடக்கி ஆட்சி புரியும் தன்மைக்கு வர வேண்டும்.

நமது உடலில் நஞ்சு கலந்த உணர்வுகள் இருப்பினும் உடல் அதை மலமாக மாற்றுகின்றது. ஆனால் அதிகமான நஞ்சுகள் உடலில் கலந்தால் அது மனிதனையே வீழ்த்துகின்றது.

சூரியனோ இத்தகைய விஷத் தன்மை கொண்ட எல்லாவற்றையும் மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகின்றது. அதைப் போல நஞ்சான உணர்வு வருவதைப் பிரித்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் இதைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.

இல்லை என்றால் நம் வாழ் நாளில் மீண்டும் கீழான உடலுக்குள் தான் போக வேண்டியதிருக்கும.
1.இந்தப் பூமி இருக்கத்தான் செய்யும்… ஆனால் மாற்றங்கள் இருக்கும்…!
2.இந்த மனித உடலில் உணர்வுகள் மாறும் பொழுது மனித உடல்கள் மாறும்.
3.இன்று மனித உடலாக இருந்தாலும் அடுத்து மனித உடல் அல்லாத நிலைகள் தான் உருவாக்க முடியும்.
4.வேதனை என்ற உணர்வுகளிலிருந்து மீள முடியாத துயர் நிலையே தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த மனித உடலில் “கோடிக்கரை…” என்ற நிலைகளில் கடைசி நிலையில் நாம் இருக்கின்றோம். இந்த உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை என்ற முழுமையைப் பெற நாம் முயற்சிப்போம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.சதா அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வருவோம்.

நமது வாழ்க்கையில் எதிர் வரும் தீமைகளை
1.நமக்குள் சாராது
2.நமக்குள் அதை வளர்ந்திடாது
3.நமமக்குள் அதைப் பெருக்கிடாது தடுத்துப் பழகுவோம்.

இந்த உடலான கோடிக்கரையிலிருந்து “தனுஷ்கோடி…!” எல்லாவற்றையும் அடக்கிடும் அந்த ஒளியின் தன்மையை நாம் பெறுதல் வேண்டும். நம்மால் நிச்சயம் முடியும்.

நம் குடும்பத்தில் இறந்தவர்களைப் பற்றி நாம் எண்ண வேண்டிய முறை எது…?

big-dipper-kalki

நம் குடும்பத்தில் இறந்தவர்களைப் பற்றி நாம் எண்ண வேண்டிய முறை எது…?

 

நம் குடும்பத்திலோ உறவினர்களின் குடும்பத்திலோ அல்லது நண்பர்களின் குடும்பத்திலோ யாராவது உடலை விட்டுப் பிரிந்தர்கள் என்றால் அதற்குப் பின் வருடா வருடம் அவர்களை நினைத்து “நினைவு நாள்…!” என்று வைத்துக் கும்பிடுகின்றோம்.

நினைவு நாள் அன்று எதை எல்லாம் நினைக்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

யாருடைய நினைவு நாளோ அவரின் நினைவு வரப்படும் போதெல்லாம்
1.நல்ல மனிதர்… இப்படி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாரே..! என்று எண்ணும் போது
2.அவர் உடலிலே இருந்த நோயின் உணர்வுகள் நமக்குள் அது பெருகத் தொடங்கும்.
3.அவருக்கு ஆகாரம் வைத்து நினைவு நாளில் கும்பிட்டால்
4.அவர் உணர்வுடன் பங்கு கொண்ட அந்த ஆன்மா நமக்குள் வந்து விடுகின்றது.

இதுபோன்ற நிலைகளை நாம் தடைபடுத்த நினைவு நாளில் எப்படி எண்ண வேண்டும்..?

கூட்டுத் தியானங்கள் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளி உடல் பெறச் செய்து விடுகின்றோம்.

அந்த ஒளியின் உடல் பெற்ற அவரின் உணர்வுகள் நமக்குள் இருக்கும் பொழுது
1.அந்தப் பேரருள் நம் உடலுக்குள்ளும் பரவி
2.நஞ்சினை நீக்கிடும் அருள் சக்தியை நாம் பெற்று
3.நம் உடலில் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.
4.இது தான் நினைவு நாள் என்பது.

ஆகவே ஒளியின் உடல் பெற்ற உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் போது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நம் உடலிலே படர வேண்டும் என்று எண்ணினாலே போதும்.

நினைவு நாள் அன்று இவ்வாறு எண்ணினால் அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்ததனால் அவரின் உணர்வுகள் நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து இருப்பினும் நம் உடல்களிலும் இருளை நீக்குகிறது. அதாவது
1.அவருடன் வாழ்ந்த காலத்தில் நம் உடலில் இருந்த உணர்வுகளுக்கு
2.அருள் உணர்வைக் கொடுத்து இருளை நீக்கும் நிலை பெறுகின்றது.

ஏனென்றால் அவர் ஒளியின் உடல் பெற்று விட்டார்…!
1.நமக்குள் இருக்கும் அவரைப் பற்றிய அணுவின் தன்மையும்
2.இருளை அகற்றிடும் அருள் ஒளி பெறும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்பது தான் இதன் உட்பொருள்.

இப்படிச் செய்யாமல் இன்று சாதாரண வழக்கத்தில் உள்ளது போல இறந்தவரின் நினைவு நாளில் அமாவாசை அன்று அந்த இருள் சூழ்ந்த நாளில் அவர் உணவாக உட்கொள்ளும் உணவினைப் படைத்து விட்டு அவரைப் பற்றி எண்ணி…
1.என்னுடன் எப்படி எல்லாம் வாழ்ந்தார்…! என்று
2.அதையெல்லாம் நாம் நினைவு படுத்தும் போது
3.அவர் வாழ்ந்த காலத்தில் அவர் உடலில் பட்ட அந்தக் கஷ்ட நஷ்டம் எல்லாமே
4.நம் உடல்களில் அதிகமாகப் புகுந்து பரம்பரை நோய் என்றோ பரம்பரை குணங்கள் என்றோ
5.அவர் அடைந்த வெறுப்பின் தன்மை அனைத்தும் இங்கே நமக்குள் விளைந்தே தான் தீரும். (யாரும் இதிலிருந்து தப்ப முடியாது)

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குத் தான் நமது தியானத்தின் வலிமையால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை ஒவ்வொரு நாளுமே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் சொல்கிறோம்.

அவ்வாறு செய்யும் போது இந்த உடல் பெற்ற விஷத்தின் தன்மைகள் அனைத்தும் அங்கே கரைந்து விடுகின்றது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை அவர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.
2.ஒளியின் உடலாக இருக்கின்றனர்.
3.ஆகவே இதற்கு அப்புறம் அவர்களுக்குப் பிறவி இல்லை.

நினைவு நாள் கொண்டாடும் பொழுதெல்லாம் இப்படி எண்ணினோம் என்றால் நமது உணர்வுகளும் வலுப் பெற்று இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மை நம் உயிர் எளிதில் அழைத்துச் செல்லும்.

நினைவு நாளை நாம் இப்படித்தான் நினைவுபடுத்தும்படி ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

விஞ்ஞானியாக இருந்தாலும்… சாமியார்களாக இருந்தாலும் உடலுக்குப் பின் எங்கே செல்கிறார்கள்…!

Ultimate destination - ursa major

விஞ்ஞானியாக இருந்தாலும்… சாமியார்களாக இருந்தாலும் உடலுக்குப் பின் எங்கே செல்கிறார்கள்…!

 

இப்போது விஞ்ஞானி ஒருவன் பல பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றான்… செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனுக்குள் கண்டுபிடிக்கும் உணர்வுகள் ஓங்கி வளர்ந்திருந்தாலும் அவன் இறந்த பின் எதன் ஆசை கொண்டு உடலை விட்டுப் பிரிகின்றானோ அந்த இச்சை சிவ தனுசாகத் தான் மாறுகிறது.

விஞ்ஞானி குடும்பத்தின் மேல் பற்று கொண்டு இறந்திருப்பான். அல்லது விஞ்ஞான அறிவில் இன்னும் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இறந்திருப்பான்.

இப்படிப்பட்ட ஆசையுடன் இறக்கப்படும் பொழுது அந்த விஞ்ஞானி மேல் அபிமானம் கொண்ட சீடனாக இருப்பவன் விஞ்ஞான அறிவில் தேர்ந்தான் என்றால் அவன் கூறிய உணர்வை இவன் பெற்றால் அந்த விஞ்ஞானியின் உயிரான்மா அந்த சீடன் உடலுக்குள் தான் போகும்.

அதே போல மந்திரங்களைச் சொல்லி மாயங்களைச் சொல்லி வாழ்வோரும் அதே தத்துவத்தைக் கடைசி நேரத்தில்
1.உதாரணமாக இன்றைய மதகுருக்களாக இருப்பவர்கள் சொன்னார்கள் என்றால் (அவர்கள் குரு காட்டிய மந்திரம்)
2.அதே உணர்வுடன் தான் அந்த உயிரான்மாவும் வெளி வருகின்றது.

முதலில் சொன்ன குருவும் சரி… இப்பொழுது இருப்பவரும் சரி…! அந்தப் பற்று கொண்ட நிலையில் யாரொருவர் அந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜெபிக்கின்றார்களோ குருவின் ஆன்மா இவர் உடலுக்குள் தாவும். ஆக கூடுவிட்டுக் கூடு பாயும்.

அவர் பெற்ற உணர்வுகளை மீண்டும் இங்கே இவர் உடலுக்குள்ளும் இயக்கப்பட்டு சாகாக்கலை என்ற உணர்வுகளைத் தான் உணர உணர்த்த முடியும். ஆனால் சாகாக்கலை என்றாலும்
1.அடுத்தவர் உடலில் வரப்போகும் போது அங்கே விஷத்தின் தன்மையை நுகர்ந்து விட்டால்
2.அந்த இச்சையைச் சாகாக்கலையாக மாற்றி விஷத்தின் உணர்வு கொண்ட உடலாக அடுத்து மாற்றிக் கொண்டே இருக்கும்.
3.இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

“குரு வழி…!” என்று சொல்லிக் கொண்டு இப்படி வந்தாலும் உடலின் இச்சைக்குச் சிவ தனுசைத் தான் இன்று ஆலயங்கள் தோறும் காட்டுகின்றனரே தவிர அருள் ஒளி பெற்று இருளை நீக்கி வேகா நிலை பெற வேண்டும் என்று எவரும் காட்டவில்லை.

மனிதனைப் பண்படும் நிலைகளுக்கு அகஸ்தியன் கூறிய உணர்வுகளைக் கடைபிடித்து அந்த உணர்வின் வழிப்படி ஒழுங்குபடுத்த ஞானிகள் (அகஸ்தியனுக்குப் பின் வந்தவர்கள்) நினைத்தாலும் காலத்தால் உடலின் இச்சை கொண்டு மதப் பற்று கொண்டு மக்களின் நிலைகளில் வெறுப்பு கொண்டு தன் மதம் வேறு தன் இனம் வேறு என்ற இனப்பிரிவு பாகுபாடாகி விட்டது.

அன்றைய அரசர்களால் செய்யப்பட்ட நிலைகள் எல்லாவற்றையும் சீர் குலைத்து
1.உணர்வின் தன்மை மதி கெடும் நிலைகளாக ஆகி
2.மதி கெட்ட உணர்வைச் சேர்த்து
3.மதி இழந்து செயல்படும் மிருக உடல்களைப் பெறும் நிலைகள் தான் இன்று உருவாகின்றது.
4.இதைப்போன்ற நிலைகளெல்லாம் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

வேகா நிலை பெற என்ன செய்ய வேண்டும்…?

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் “ஈஸ்வரா…!” என்று உயிரை வேண்டி அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்றும் அதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.இந்த ஆலயம் வரும் குடும்பங்கள் அனைத்தும் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்
2.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் இங்கு வருவோர் பெற வேண்டும்
3.இருளை நீக்கும் அருள் சக்தி ஒவ்வொருவரும் பெற வேண்டும்
4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பேரருள் பேரொளியாக மாற வேண்டும் என்று
5.ஒவ்வொருவரும் இதை இணைத்துத் தனக்குள் அந்த உணர்வை உருவாக்கிடல் வேண்டும்.

இது தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி. அவர் காட்டிய வழியில் பேரருளை நமக்குள் பெறுவோம். உலக இருளை நீக்குவோம் என்ற உணர்வுடன் நாம் உறுதி கொள்வோம்.

பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளியின் சரீரம் பெறுவோம். ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

கடைசி உடலாக இருக்கும் மனித உடலில் உணர்வுகளை எல்லாம் ஒன்றாக்கி உயிருடன் (இராமேஸ்வரத்தில்) ஒன்றச் செய்தால் இராமலிங்கம்…!

ramalingam rameswaram

கடைசி உடலாக இருக்கும் மனித உடலில் உணர்வுகளை எல்லாம் ஒன்றாக்கி உயிருடன் (இராமேஸ்வரத்தில்) ஒன்றச் செய்தால் இராமலிங்கம்…!

 

மனித உடல் பெற்ற நிலையில் நமக்குள் கோடிக்கணக்கான உணர்வுகள் உண்டு.
1.நம் உணர்வுகள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து
2.அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை வளர்க்கப்படும் போது
3.”இந்தத் தனுசு…!” எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நிலைகள் ஆகின்றது.

இராமயாணத்தில் எண்ணங்களை ஒன்று சேர்த்து இராமன் கடைசி நிலையில் இராமேஸ்வரத்தில் இராமலிங்கத்தைப் பூஜித்தான் என்ற நிலை போல் நாம் ஒவ்வொரு நாள் எடுக்கும் தியானத்திலும் இதைச் சேர்த்துச் சேர்த்து ஒன்றாக்க வேண்டும்,

1.“தனுசு…” அதாவது – எண்ணத்தால் உருவாக்கிய இடங்கள் என்ற நிலையைக் காட்டுவது தான் இராமேஸ்வரம்.
2.எதை எதை எண்ணங்கள் எண்ணி எடுத்துக் கொண்டோமோ
3.அது உருவாக்கிய உணர்வின் தன்மை ஈசனாகி
4.இருளை நீக்கி மெய்ப் பொருளை காணும் உணர்வை உருவாக்கும் நிலைகள் தான் அது.

அதாவது இன்று நாம் கோடிக்கரையில் இருக்கின்றோம். மனித உடல் பெற்ற பின் தான் இந்தப் பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு நாம் விண் செல்ல முடியும். மற்ற எந்த உயிரினங்களாலும் அது முடியாது.

ஆகவே இந்தத் கோடிக்கரையான (கடைசி) உடலிலிருந்து அந்த தனுசு கோடி என்ற உணர்வை
1.எல்லாவற்றையும் அரவணைத்து ஒன்றென்ற நிலைகள் இணைத்து
2.ஒளி என்ற நிலைகள் ஆக்கும் அந்த உணர்வின் நிலையை நாம் பெறத் தயங்கக் கூடாது.

ஏனென்றால் இயற்கையின் பேருண்மையின் உணர்வுகள் அனைத்தையும் அறியக் கூடிய நாம் இந்தக் கடைசி நிலையில் இருக்கின்றோம்.

இந்த மனிதனுக்கு அடுத்த நிலைகள் எங்கே செல்வது…? என்ற நிலையில் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி விஷ்ணு தனுசு என்ற உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிடல் வேண்டும். இது தான் விஷ்ணு தனுசு என்பது.

ஆனால் சிவ தனுசு என்றால் என்ன…?

நம் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் அடைந்து அதே போல் பிறரையும் வேதனைப்படுத்தி அந்த உணர்வை ரசிப்பதும் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கூட்டுக்குள் கூடு மாறிக் கொண்டே வருவது… மீண்டும் மீண்டும் உடல் பெறுவதே சிவ தனுசாகும்.
1.இன்று நாம் மனிதனாக இருந்தாலும் எடுத்துக் கொண்ட வெறுப்பு வேதனைக்கொப்ப
2.நாளை மிருகமாக அந்த உணர்வுகள் மாற்றிவிடும்.

நாம் வலு பெற்ற உணர்வு கொண்டு ஒருவனைத் தாக்கிக் கொல்ல வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் கொன்று அந்த உணர்வு சிவதனுசாக நம்மை இயக்கும்.
1.அந்த முரட்டுத்தனத்திற்கொப்ப வலு கொண்ட மாடாகவும்
2.மற்ற கொடூரமான மிருகங்களாவும் நம் உயிர் உருவாக்கும்.

சிவ தனுசு என்ற நிலைகள் வரப்போகும் போது இந்தப் பூமிக்குள் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே வரும். ஆனால் விஷ்ணு தனுசு கொண்டு இருளை அகற்றிப் பொருளை அறியச் செய்யும் உணர்வாக ஒளியாக நாம் மாறுவதே கடைசி தனுசு கோடி என்பது.

இராமயாணக் காவியங்களில் இத்தகைய பேருண்மைகள் ஏராளமாக உண்டு. அந்த உண்மைகளை நாம் உணர்ந்து கொண்டால் மனிதனுக்குப் பின் உலகையே சிருஷ்டிக்கும் வல்லமையை நாம் பெறலாம்,

ஏனென்றால் ஆதிமூலம் என்ற நம் உயிர் பரிணாம வளர்ச்சியின் பல கோடிச் சரீரங்களைப் பெற்றது. உடல் வலு பெற்ற நிலைகள் கொண்டு இன்று மனிதனாக உருவாகியுள்ளது,

பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது என்பதைக் காட்டுவதற்காகத்தான் யானையின் சிரசைப் போட்டு மனித உடலைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

உடலுக்குள் இருக்கும் கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து நம்மை இயக்குகின்றது உயிர் என்பதைத் தெரியப்படுத்துவதற்காகக் “கணேசா…!” என்று காரணப் பெயர் சூட்டினார்கள் ஞானிகள்.
1.அதே சமயத்தில் சிந்திக்கும் தன்மை கொண்டு – அங்குசபாசவா…!
2.தீமையான உணர்வுகளை அடக்க வல்லமை பெற்றவர் என்பதையும் ஞானிகளால் கொடுக்கப்பட்ட சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகிறது.

ஆதிமூலம் என்ற உயிர் மிருக நிலையில் இருந்து மனிதனாகப் பிறந்தாலும் அவன் முழு முதற் கடவுள் ஆகின்றான். எப்படி…?

பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் வலுவைச் சேர்த்துச் சேர்த்து விநாயகா…! மனித உடல் பெற்ற பின் வினைக்கு நாயகனாக
1.வாழ்க்கையில் வரும் ஒவ்வொன்றிலும் இருளை நீக்கிப் பொருளைக் காணும்
2.ஒளி என்ற அந்த உணர்வின் தன்மை பெறும் பொழுது முழு முதற் கடவுள் ஆகின்றான்.

இப்படி ஒளியாக்கப்படும் போது நாராயணன் சூரியனாக இருந்தாலும் அதன் உணர்வு நம் உயிருக்குள் விஷ்ணுவின் தன்மையாக வரப்போகும் போது உணர்வின் அணுக்களை மாற்றி ஒளியின் சிகரமாக மாற்றும் தகுதி பெற்றது.

இருளை அகற்றி ஒளியாக மாறி உலகையே படைக்கும் தன்மை கொண்டதால் “முழு முதற் கடவுள்…!” என்று தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.