உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…

உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…

 

சில ஜோதிடம் பார்ப்பவர்கள் என்ன செய்வார்கள்…? வருவோரை உற்று நோக்கி நுகர்ந்து நுகர்ந்து பார்ப்பார்கள். ஏதாவது உணர்வு ஒன்றைச் சொல்வார்கள்.

1.சொல்லும்போது நம் தலை அசைவதைப் பார்ப்பார்கள்.
2.“ஓ… இப்படியெல்லாம் இருக்கின்றது…!” என்று (அறிந்து கொண்டு) ஒரு கேள்வியைப் போடுவார்கள்.
3.உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் கஷ்டம் இருக்கின்றது என்று தொடர்வார்கள்.

அதாவது வாஸ்து சாஸ்திரக்காரர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே உங்கள் முகத்தைப் பார்ப்பார்கள். சில மந்திரங்கள் சொல்லி முகத்தைப் பார்த்து வீட்டைப் பார்த்தவுடன் என்ன செய்வார்கள்…?

வீட்டில் பையன் ஏதாவது தொல்லை செய்கிறானா…? என்பார்கள்.

ஆமாம்…! என்று சொன்னால் போதும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அப்படியே வரிசையாக எடுத்துச் சொல்லிவிட்டு கடைசியில் இரண்டு வார்த்தையைச் சொல்லி விட்டுக் காசைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டு உங்கள் வீட்டை மாற்றி அமைப்பீர்கள்…!

ஆனால் வீட்டில் பத்துப் பேர் இருப்பார்கள். அதிலே ஒருவர் இனம் புரியாதபடி ஒரு ஆக்சிடண்ட்டைப் பார்க்கின்றான். அதிர்ச்சியால் புத்தி பேதலித்துப் போகின்றது.

அப்போது அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது இந்த வேதனை எல்லோருக்கும் வந்தால் அவன் சொன்ன வாஸ்து என்ன செய்கின்றது…?

வாஸ்து என்றால் யார்…?

1.உயிர்…! வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
2.நாம் நுகர்வதையெல்லாம்… சுவாசித்ததை எல்லாம்… உருவாக்கக் கூடியது “நம் உயிர் தான்…” என்று இந்த இடத்தில் காட்டுகின்றார்கள்.

தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வு உடலுக்குள் வரப்படும்போது வாசுதேவனுக்கும் தேவதிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான். “பார்க்க வேண்டும்…” என்ற இந்த உணர்வுகள் கொண்டு கண்கள் தோன்றுகின்றது என்று காட்டுகின்றான்.

ஜோதிடக்காரன் சொன்னதைக் கேட்டால் வாசுதேவன் (உயிர்) என்ன செய்கின்றான்…? அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் உருவாக்கிவிடும்.

உங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றதா…? என்றால் ஆமாம் என்று சொல்கின்றோம்.

அடுத்தாற்படி இந்த வீட்டின் வாசலை உடைத்தால்தான் சரியாக இருக்கும் என்பான். வீட்டின் நிலையை இப்படி மாற்றி வை என்பான் அல்லது இந்த ஓரத்தில் ஏதாவது ஒன்றை வை என்பான்.

அவன் சொன்னபடி வைத்துவிட வேண்டும். வைக்கவில்லை என்றால் நான் அன்றைக்கே சொன்னேன் நீ வைக்கவில்லை என்ற நிலையானால்… அந்த வேதனையால் என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ…? என்று இந்த உணர்வின் தன்மை மீண்டும் அதையே வளர்த்துக் கொள்ளும்.

இன்னொன்றும் சொல்வார்கள். நியுமராலஜி…! அம்மா அப்பா வைத்த பெயரெல்லாம் ஒழுங்காக முழுதாக இருக்கும். உங்கள் பெயரில் இந்த எழுத்தை இப்படிப் போட்டீர்கள் என்றால் உங்கள் எதிர்காலம் நியுமராலஜிப்படி நன்றாக இருக்கும் என்பார்கள்.

இந்த எழுத்துக்களை அந்த நம்பர்கள் பிரகாரம் இப்படிப் போட்டால் ராசியாக வரும் என்று அவன் சொன்னதைக் கேட்டுப் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கின்றோம்.

ஏனென்றால் நமக்குள் இருக்கும் வேதனை உணர்வை நீக்க வேண்டும் என்றால் அதை எல்லாம் நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

தப்பாக நினைக்க வேண்டாம்…!
1.இன்றைக்கு இந்த உடலின் இச்சைக்குத் தான் வாழுகின்றோமே தவிர
2.உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் சிந்திக்கவே இல்லை.

எப்படி இருந்தாலும் இந்த உடல் மடிகின்றது. ஆனாலும் உடலிலே வாழ்வதற்குத்தான் இத்தனை செல்வங்களை கோடிக் கோடியாக வைத்துள்ளார்கள்.

இராமயாணத்தில் என்ன செய்கின்றார்கள்…? என்றால் தனுசுகோடி. தனுசு என்றால் இப்பொழுது நான் சொல்லும் உணர்வுகள் உங்களைத் தாக்குகிறது… தனுசு. அதே நேரத்தில் இந்த உபதேசங்கள் உங்களை மகிழச் செய்யும் தனுசு.

தனுசு என்றால் அம்பு சமஸ்கிருதத்தில்…!

கோடிக்கரை என்ற கடைசி எல்லையில் மனிதப் பிறவியில் இப்பொழுது நிற்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் அகற்றினால் தனுசுகோடி.

ஒளி உடல் பெறவேண்டும் என்ற நிலையில் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று அடைய வேண்டும். அது தான் நம் சாஸ்திரங்கள் கூறும் உண்மைகள்.

மனித வாழ்க்கையில் இன்று கேள்விக்குறியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

மனித வாழ்க்கையில் இன்று கேள்விக்குறியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

 

இன்றைய சூழ்நிலையில் காலையிலிருந்து இரவு வரையிலும் பண்பு கொண்ட மனிதன்… அன்பு கொண்ட மனிதன்… பரிவு கொண்ட மனிதன்… ஈகை கொண்ட மனிதன்… பிறருடைய துயர்களைக் கேட்கப்படும்போது அதை நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வுகள் உராய்ந்து அந்த உணர்ச்சிகள் தான் உடல் முழுவதும் சுழல்கின்றது.

அதனால் துயரப்படும் உணர்ச்சிகளே இயக்குகின்றது. ஆக.. மனிதன் தனது வாழ் நாளில் கேள்விக்குறியாகவே இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளோம்.

ஏனென்றால் இன்று உலக நிலைகளில் அரசியல் நிலைகள் பூராமே மனிதனை முழுமையாக அறவே அழிக்கச் செய்து அரக்க உணர்வுகள் பெறும் சக்தியே விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டு விட்டது.

நாம் செல்வத்தைத் தேடினாலும்…
1.அந்தச் செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும்
2.அதற்கு வேண்டிய உத்திரவாதமும் இன்று இல்லை.

அதே சமயத்தில் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் நமது நல்ல பண்புகள் நமக்குள் நிலைத்திருக்குமா…? என்று பார்த்தால் “அதுவும் இல்லை…” என்ற நிலை தான் உள்ளது.

பண்பு கொண்டு வாழ வேண்டும் அன்புடன் வாழ வேண்டும் அரவணைத்து வாழவேண்டும் என்ற எண்ணங்களை மக்கள் எண்ணினாலும் வேதனை வேதனை என்று அதைத்தான் அதிகம் சுவாசிக்க நேருகின்றது.

சீரிய பண்பு கொண்டு வாழவேண்டுமென்று இருப்பினும் இன்று அத்தகைய பண்பு கொண்ட மனிதர்கள் அனைவரும் வேதனை வேதனை வேதனை என்ற உணர்வினையே சுவாசிக்க நேருகின்றது.

அந்தப் பண்பும் பரிவும் பாசமும் தன்னுடன் நிலைத்து இருப்பதில்லை…! அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசுபவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் ஓரளவுக்கு வசதியாக இருப்பவர்கள் தான் அவ்வாறு பேசிக் கொள்வார்கள்.

ஆனாலு அப்படி வசதியாக இருப்பவர்கள் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணத்தில் உதவி செய்தாலும் அவர்கள் படும் வேதனை வேதனை என்ற சொல்லைக் கேட்டுக் கேட்டு அதை நுகர்ந்து அறியக்கூடிய நிலைகள் வருகின்றது.

ஆக… வேதனைப்படுத்துவோரைப் பார்த்து “இப்படி நடக்கின்றதே…!” என்று அந்த வேதனை உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. அதைத்தான் அதிகமாக நேசிக்க முடிகின்றது.

பத்திரிக்கைகளைப் படித்தாலே “உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது…” நாம் எப்படி நாளை இங்கே வாழ முடியும்…? என்ற நிலைகள் வருகின்றது.

1.பத்திரிக்கையைப் பார்த்தாலே மனிதன் வேதனைப்படும் உணர்வே வருகின்றது
1.இந்த சகஜ வாழ்க்கையில் அன்பு கொண்ட உள்ளங்கள் அனைத்தும்
2.அரவணைக்கப்பட வேண்டுமென்ற உள்ளங்கள் அனைத்தும்
3.கடும் வேதனையைத்தான் அவர்கள் நுகர நேருகின்றது.
4.அந்த வேதனையைத்தான் அவர்கள் உடல்களில் உருவாக்க முடிகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டாமா…? என்று சற்று சிந்தியுங்கள்.

இன்றைய பிழைப்புக்கு என்ன வழியோ அது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர்

இன்றைய பிழைப்புக்கு என்ன வழியோ அது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர்

 

இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன் ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.

அதே சமயத்தில் தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு. ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.

இதைப்போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.

அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.

இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு இதை எல்லாம் (ஞானகுருவின் உபதேசங்களை) படிக்கும் போதும் கேட்கும் போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.ஏனென்றால் நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில் சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி… நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின் தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள் அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.

மீண்டும் புழுவாக பூச்சியாக பாம்பாக தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.

இன்று மனிதனாக இருக்கின்றோம் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

புற்று நோய் வரக் காரணம்

புற்று நோய் வரக் காரணம்

 

இன்று நாம் விவசாயம் செய்யும் போது பயிரினங்களைத் தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்க பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம்.

பூச்சி மருந்தைத் தூவிய பின் பூச்சிகள் இறந்து விடுகின்றது. அனால் அந்தப் பூச்சிகள் இடும் முட்டைகளிலும் இந்த மருந்து ஊடுருவுகின்றது. முட்டையில் இருக்கும் அந்த மேல் ஓடு அந்த விஷத்தைக் கவர்கின்றது.

1.மேல் பகுதியிலிருந்து இந்த விஷம் அந்த முட்டைக்குள் ஊடுருவி
2.இதிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மை… உருவாகும் அந்தப் பூச்சிக்குள் இணைந்து
3.இதற்குச் சமமாக ஏற்றுக் கொள்ளும் நிலை வருகின்றது..!
4.அதாவது முட்டைக்குள் இருக்கும் இதே பூச்சியை உருவாக்கும் அந்த உயிரணுவிற்கு விஷம் கூடி
4.அதன் வழி புதிதாக பூச்சி உருவாகிறது வலு கொண்டதாக…!

இதைப் போல் நாம் தூவும் பூச்சி மருந்துகள் தாவர இனத்துடன் கலந்து நெல்லிலோ கத்தரிக்காயிலோ திராட்சையிலோ மாம்பழத்திலோ எல்லாவற்றிலும் இது இருக்கத் தான் செய்கிறது.

இப்படிக் கலந்து வரும் உணவைத்தான் நாம் தினமும் உட்கொள்கிறோம். அப்போது விஷம் கொண்ட அணுவாக நமக்குள் மாற்றுகின்றது.

பின் அது ஜீவ அணுவாக மாற்றிய பின் அதனுடைய மலம் வெளிப்படும் போது நம்முடைய தசைகளுக்குள்ளும் விஷம் ஊடுருவுகின்றது.

உடல் எல்லாம் நன்றாக இருக்கிற மாதிரித்தான் தெரியும்.
1.ஆனாலும் கை கால் கடு கடு என்று இருக்கிறது…
2.கண் வலிக்கிறது தலை வலிக்கிறது நெஞ்சு வலிக்கிறது பிடரி வலிக்கிறது என்றெல்லாம் நாம் சொல்வோம்.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே நம் உணர்வுக்குள் இது கலந்து விடுகின்றது. மனிதனின் சிந்தனைகளையும் குறைக்கச் செய்கிறது.
1.அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது
2.நம் உடலில் இந்த வேதனையையே அனுபவிக்கும் நிலை வருகிறது “இந்தப் பூச்சிகளைக் கொல்லும் நஞ்சால்…”

அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்து அது சிறுகச் சிறுகக் “கேன்சராக” முளைக்கத் தொடங்கிவிடுகின்றது.

நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணு இதைப் போல் அதிகமான விஷத்தின் தன்மையை நுகர்ந்து விட்டால் அந்த விஷத்தையே வளர்த்துக் கொள்ளும் நிலை வரும் பொழுது தன் அருகிலே இருக்கும் தசைகளில் இருக்கும் அணுக்களும் மடியத் தொடங்குகின்றது.

பின் இதனின் இனப் பெருக்கமாகி வந்து விட்டால் இதைப் புற்று நோய் என்று சொல்வார்கள். தன் இனத்தின் தன்மை பெருகிப் பெருகி மற்றதுக்கு இடமில்லாது கலைத்துக் கொண்டே போகும்.

“புற்று” தனக்குள் எப்படிப் பல கண்களாக விளைகின்றதோ… அதைப் போல் தன் இன அணுக்கள் பெருகிப் பெருகி… நம் உடல் தசைகளில் இருக்கும் அணுக்களைக் கொன்று கொன்று… இது உணவாக உட்கொண்டு தன் பெருக்கமாக நல்ல தசைகளிலும் இதனின் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டே போகும்.

இப்படிக் கொடூரத் தன்மைகள் விளைகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆக… விஞ்ஞான அறிவால் மனிதனுக்காக எத்தனையோ வசதிகள் செய்து
1.உணவுக்கு என்று அந்தப் பூச்சிகளைக் கொன்றால் தான் உணவும் பற்றாக்குறை இல்லாது கிடைக்கின்றது.
2.ஆனால் மனிதனுக்குள் இந்த நஞ்சின் முடிவு இப்படி எல்லாம் மனிதனுக்குப் பாதகமாக வருகின்றது.

மனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…?

மனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…?

 

மிருகங்களெல்லாம் என்ன செய்கின்றது…? தன் உடல் வலுவைத் தான் காட்டுகிறது.

நான் (ஞானகுரு) வேட்டைக்குப் போயிருக்கின்றேன். புலி கடினமானது அதை ஈட்டி வைத்துக் குத்த முடியுமோ… முடியாது…!

நல்ல கூர்மையான ஈட்டி வைத்துக் கொண்டு புலி அப்படி வருகின்றதென்றால் ஒரு பக்கமாகப் பம்பும். பம்பியவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் பார்வைக்குத் தாக்க வரும்போது இப்படி நேராக வைத்தால் சீறித் தாக்கும்.

ஆனால் இலேசாகச் சாய்த்து வைத்தால் போதும். மேலே வந்தவுடன் அது லபக்… என்று ஊடுருவிவிடும். விட்டுவிட்டோம் என்றால் தய்யா… தக்கா… என்று குதிக்கும்.
1.மனிதன் தன் எண்ண வலு கொண்டு… உறுதி கொண்டு
2.அந்த ஈட்டியை வைத்தான் என்றால் புலியைக் கொன்று விடலாம்.

புலி உடல் வலு கொண்டு தான் தாக்கும். மனிதனை ஒரு அடி அடித்தால் குடல் எல்லாம் பிய்த்துக் கொண்டு போட்டுவிடும்.

தெரிந்தோ தெரியாமலோ நான் வேட்டைக்குப் போகும்போது எனக்கு இந்த மாதிரி யுக்தி வரும். ஈட்டியைக் கையில் வைத்துக் கொண்டு புலி வருகின்றது என்று இப்படித் தாக்கினால் பிரண்டு ஓடும். ஈட்டி குத்தியிருந்தால் இன்னும் ஆவேசமாகத் துடிக்கும். கொஞ்ச நேரத்தில் இரத்தமெல்லாம் வெளியில் போய் விட்டது என்றால் சுணங்கி விடும்.

ஒரு கரடிக் கூட்டத்திற்குள் போகும் போதும் இதே யுக்தி கொண்டு ஈட்டியை வைத்தால் போதும்.

அது என்ன செய்யும்…? எதாவது கொடுத்தால் கையில் பிடித்து கொள்ளும். நாம் வலுக்கொண்டு நன்றாகப் பிடித்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பொசுக்கென்று கையை உருவிவிடும்.

நாம் வலுவாக இரண்டு கைப்பிடியை வைத்துக் கொண்டு பிடித்திருந்தால் மண்டி போடும் இப்படியே இழுக்கும். மண்டி போட்டு இழுக்கும் உட்கார்ந்து. நன்றாக இழுத்து வலுவாக விட்டு லபக் என்று விட்டோம் வயிற்றில் ஈட்டி குத்தும்.

மனிதனுடைய எண்ணங்கள் எப்படி இருக்கின்றது…? என்ற வகையிலே குருநாதர் ஒவ்வொரு செயல்களிலும் செய்து காட்டுகின்றார். எது…?

மனிதனின் எண்ண வலுக் கொண்டு எப்படி மிருகங்களைக் கொல்கின்றான்…? என்பதைக் காட்டுகின்றார்.

உணர்வுக்கொப்ப இசை கொண்டு ஊதும் போது பாம்பு மகுடியில் ஆடுகின்றது. அவன் கையில் “விழுது…” (பாம்பு மிரட்டி) வைத்திருப்பான். அந்த விழுதைக் கையில் வைத்தவுடன் பையிலிருந்து பாம்பை எடுத்துக் கொண்டால் படம் எடுப்பதைத் தாழ்த்திவிடும்.

1.மனிதன் எண்ண உணர்வினால் எதையும் அடக்கக் கூடிய வல்லமை பெற்றவன்.
2.நாம் அதிலிருந்து பிறந்து வந்தவர்கள் தான்
3.பல சரீரங்களில் ஒன்றுக்கொன்று இரையாகி வந்தவர்கள் தான்.
4.எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட நிலையில் அதை அடக்கக்கூடிய சக்தி மனித உணர்விற்கு உண்டு.

இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு போய் குருநாதர் கொடுக்கின்றார்.

குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்கள் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்கள் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக வாலிப பருவத்தில் காதலிக்கின்றனர். ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர்.

ஆனால் குடும்பத்தில் பற்றுடன் இருப்போர் (தாய் தந்தையர்) இது எதற்கு…? இது நமக்கு ஆகாத நிலைகள்…! என்று உணர்த்துகின்றனர்.

இதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இதன்படி என்ன வாழ்க்கை…? என்று இருவருமே மடிந்துவிடுவோம்…! என்று தற்கொலை செய்கின்றனர்.

ஆனால் தற்கொலை செய்யும் இந்த உணர்வுகள் யாரால் இது ஏற்பட்டதோ… இந்த உணர்வின் தன்மை உடலை விட்டு சென்ற அந்த ஆன்மா அவர்கள் உடலில் சேர்ந்து இது உயிரின் தன்மையை அதனை வேதனைப்படச் செய்து இந்த உடலை வீழ்த்திவிட்டு மீண்டும் மனிதனல்லாத உருவுக்கு அழைத்துச் செல்கிறது.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்தாலும்… தற்கொலை செய்யும் உணர்வு வரப்படும்போது.. “இதிலிருந்து விடுபடலாம்…” என்று எண்ணுகின்றனர்

ஆனால் வெளிவந்தபின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் தான் செல்ல முடிகிறது. அந்த உடலையும் வீழ்த்தி விட்டு மிகவும் நஞ்சான நிலையில் வெளி வருகிறது.

தாய் தந்தையர் பற்றாக இருந்து பிளைகளை வளர்த்து ஆதரித்துப் பண்புள்ளவராக மாற்றினர். இவ்வளவு செய்தும் கடைசியில் தன் குழந்தை இப்படிச் செய்துவிட்டதே என்று அவ்ர்களும் கடும் வேதனைப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட வேதனையுடன் குழந்தையை எண்ணும் போது தற்கொலை செய்த அந்த ஆன்மா தாயின் உடலுக்குள் வருகின்றது.

தற்கொலை செய்யும் உணர்வுகளை அங்கே ஊட்டுகின்றது. அதுவும் பலவீனமாகின்றது. அந்த உடலையும் அதில் உள்ள நல்ல அணுக்களையும் மடியும் தன்மை செய்கிறது

இதன் வழி அந்த உயிரான்மா சென்றால் தான் எந்த நிலை பெற்றதோ அந்தத் தாயின் உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து அதன் வழி செயல்பட்டுத் தாயைக் கொல்லவும் செய்கின்றது… நரகலோகத்திற்குத்தான் அனுப்புகிறது. தானும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றது…!

1.ஆக சிறிது நேரம் சந்தோஷத்தை ஊட்டும் இந்த உணர்வுகளில் சிக்குண்ட நிலையில் (தற்கொலை)
2.அடுத்து மனிதன் அல்லாத உருவாகப் பாம்பாக… தேளாகத் தான் உருப்பெற முடியும்.

தாய் தந்தையரை வேதனைப்படச் செய்வோர் இதைப் போல் விஷத் தன்மையைக் கலந்தால் சிந்தனையற்ற நிலை கொண்டு விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுக்கும் உயிரினங்களாக நம்மை உயிர் மாற்றிவிடும் என்பதை மறந்திடலாகாது.

அதைக் காட்டுவதற்குத் தான் “சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…!” என்று உணர்த்தினார்கள்.

1.நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலிலே பதிவாகி
2.அதன் உணர்வைத் தொடர் வரிசையில் எண்ணும் போது அதனின் உணர்வின் அணுக்களாகி
3.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்குகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு தந்தையரின் அருள் துணை கொண்டு மகரிஷிகளின் அருளைப் பெற்று… “மெய் ஞானிகள் காட்டிய நெறியில் வாழ்வதே மிகவும் நல்லது…!”

நல்ல மணமகன் நல்ல மணமகளைத் தேர்ந்தெடுக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறை

நல்ல மணமகன் நல்ல மணமகளைத் தேர்ந்தெடுக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறை

 

தன் மகன் திருமணத்திற்குத் தகுந்த மணப்பெண் வேண்டுமென்றால் “மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண் நமக்குக் கிடைக்கும்…” என்று இந்த உணர்வினை எண்ணிச் செயல்படுத்திப் பாருங்கள்.

இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும்போது அதற்குத்தக்க நல்ல இடத்தை அழைத்துக் சென்று நல்ல மணமகளைப் பார்க்க முடியும். அதே போல் நல்ல மணமகனையும் தேர்ந்தெடுக்கும் சக்தி உங்களிலே பெருகும்.

ஆனால் ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால்… அது உங்களைத் தான் அடிமையாக்குமே தவிர மெய் உணர்வை உங்களை அறியச் செய்யாது.

1.ஜாதகம் ஜோதிடம் பார்க்காது மனம் ஒத்துச் சென்றால்
2.உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஜாதகம் பார்த்துப் பார்த்து எதுவும் ஒன்றி வரவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி… கடைசியில் சோர்வின் தன்மை அடையப்படும்போது அதற்குத் தகுந்த “சோர்வான மாப்பிள்ளையையோ சோர்வான பெண்ணையோ தான்” பார்க்கும்படி வரும்.

அப்படி வந்த பின் கீரியும் பாம்பும் போல தான் அவர்கள் வாழ்க்கை அமையுமே தவிர மகிழ்ச்சி பெறும் தன்மை இல்லை.

ஜாதகம் ஜோதிடம் பார்த்து ஆயுட்காலத்தை நிர்ணயித்துத் தான் திருமணத்தைச் செய்கின்றார்கள். எல்லாப் பொருத்தமும் இருந்தால் அவர்களுக்கு நோய் வராது…! என்பார்கள். அதன் பிரகாரம் வாழ்கின்றனரா…? நோயில்லாமல் வாழ்கின்றனரா…?

1.மனப்பொருத்தத்தைப் பார்த்து அருள் ஒளி பெற வேண்டுமென்று ஏங்கிப் பெற்றால்
2.ஒன்றி வாழும் நிலை பெற்று அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறுகின்றனர்.

ஆகவே அருள் ஞானி காட்டிய அருள் வழிகள் அவர்கள் பெற வேண்டும் அதன் வழி எங்கள் குடும்பங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலைகளை ஒழித்துத் தள்ளுங்கள். அருள் வழி பெற வேண்டுமென்ற நிலைகளில் நம் குடும்பம் ஒத்து வாழ வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணுங்கள்.

பொண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவர்கள் வாழ்க்கையில் நோயின் தன்மையை விசாரியுங்கள். குணத்தின் தன்மையை விசாரியுங்கள். நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றாரா…? என்று பாருங்கள்.

இப்படித்தான் பொருத்தங்களைப் பார்க்க வேண்டும். நல்லொழுக்கத்துடன் செயல்பட்டால் இந்த முறைப்படி நாம் தியானித்தால் இந்த நல்லொழுக்கம் மீண்டும் வளர்கின்றது. தவறுகள் வராது.

ஆனால் தவறு செய்வோர் ஆசையின் உணர்வுகளை ஊட்டுவார். அதை ஏற்றுக் கொண்டு ஏமாந்து விட்டால் “நான் ஏமாந்துவிட்டனே…” என்று ஆன பின் திருமணமான பின் தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளே வருகின்றது.

ஆகவே துருவ தியானங்கள் இருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நம் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்
2.நம் பெண் எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் தொழில் வளம் பெருக வேண்டும்
3.அதன் பார்வை அந்தக் குடும்பத்திற்கு நலம் பெறும் சக்தியாக அமைய வேண்டும்
4.அதே போல வீட்டிற்கு வரும் மருமகளும் மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்
5.மகிழ்ச்சி அடையச் செய்யும் அந்த உணர்வுகள் பெற வேண்டும்
6.அத்தகைய மணப்பெண் நம் வீட்டிற்கு வர வேண்டுமென்ற எண்ணத்தைத் தொடருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைகள் நிச்சயம் வரும்.

அணுக்கதிரியக்க வெடிப்பு நிலைகளைப் பற்றி படிக்காதவன் சொல்கிறேன் – ஞானகுரு

Radioactive power

அணுக்கதிரியக்க வெடிப்பு நிலைகளைப் பற்றி படிக்காதவன் சொல்கிறேன் – ஞானகுரு

 

சாதாரணமாக ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் துகள்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது மின்னலாக மாறுகின்றது.

அதே மின்னலின் தன்மை புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும்போது எந்த மரமோ எந்த நட்சத்திரத்திலிருந்து வருகின்றதோ
1.அந்த இனம் இந்த மரத்திலிருந்தால் பக்கத்தில் உள்ள மரம் அப்படியே இருக்கும்..
2.ஆனால் இந்த மரம் பொசுங்கிவிடும்.
3.தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவிவிடும்.

அது பூமிக்குள் சென்ற பின் வெப்பத்தின் நிலை அதிகமாகி அது கொதிகலனாகும். இதனுடைய சேமிப்பு அதிகமானால் அது நாளடைவில் நிலநடுக்கமாகும்.

அதாவது அந்த வாயுவின் தன்மை அதிகரித்து வெடிக்கும் தன்மை வரும். அந்த இடம் நேராகக் கீழே இறங்கும். அந்த இடத்தில் மட்டும் தான் நிலநடுக்கமாகும். ஒரு சில நிமிடங்களில் அடங்கிவிடும்.

ஆனால் அதே போல் அந்த நட்சத்திரத்தின் மின் அழுத்தங்களின் நிலைகள் கடலில் படும் போது அங்கே உப்புச் சத்து இருக்கிறது. இந்த பூமிக்குள் ஊடுருவாதபடி கடலிலே அந்த உணர்வின் சத்து பட்டபின் அது யுரேனியமாக மாறுகின்றது.

1.எந்தந்தெந்தப் பகுதியில் எந்தெந்த நட்சத்திரத்தின் தன்மை படருகின்றதோ
2.அதற்குத் தகுந்த மாதிரி எத்தனையோ வகையான யுரேனியத் தனிமங்களாக
3.அதனின் வலுவுக்குத் தக்கவாறு அங்கே உறைந்து மணலாக மாறுகிறது
4.அதற்குப் பல பெயர்களையும் (தோரியம் புலுட்டோனியம்) வைக்கின்றனர்.

பின் என்ன செய்கின்றான்…? அதைப் பிரித்து எடுத்து அந்த அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.

கடல் நீரில் உள்ள ஹைட்ரஜன் (கண நீர்) அந்த உணர்வின் தன்மை கொண்டு அழுத்தத்தின் தன்மை கொண்டு அதை வெடிக்காத மாதிரிப் பாதுகாக்கின்றான்.

ஆகவே ஹைட்ரஜன் என்ற நிலைகள் வந்தாலும்… அடர்த்தியின் தன்மை கொண்டு ஒளிக்கதிர்களைச் சேர்த்து மீண்டும் வெடிக்கப்படும்போது (ஹைட்ரஜன் வெடிக்கப்படும் போது) என்ன நடக்கிறது…?

சனிக் கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் (நீர் சத்து) ஒவ்வொரு அணுக்களிலும் கலந்துள்ளது. அந்தச் சனிக்கோளிலிருந்து வடிக்கப்படுவது தான் கடலாக மாறுகின்றது.

அந்த உணர்வின் தன்மையுடன் ஹைட்ரஜன் வரப்படும்போது வான்வீதியிலே இது வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கின்றது.

1.இங்கே வளரும் தாவர இனங்களுக்குள் ஊடுருவி
2.அதற்குள்ளும் கதிரியக்கப் பொறிகள் வெகு தூரம் பரவப்பட்டு
3.அதிலிருக்கும் ஜீவ சக்தியையே எடுக்கச் செய்து விடுகின்றது
4.இதெல்லாம் இந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதைக் கண்டு கொண்டார்கள்.

மூன்றாம் வகுப்பு முழுவதும் படிக்காதவன் (ஞானகுரு) இதை எல்லாம் உங்களிடம் சொல்கிறேன். நான் பார்த்து இதைச் சொல்கிறேன். நீங்களும் பார்க்க முடியும். “தன்னம்பிக்கை வேண்டும்…!”

எனென்றால் இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ளதையும் அதில் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கொண்டு அதனின் உருவத்தையே விஞ்ஞானி படமாக இன்று வரைகின்றான்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் உணர்வுகள் பாயப்படும் போது உணர்வுகள் எப்படி இயக்கின்றது என்பதை விஞ்ஞானி இப்படிக் காணுகின்றான்.

அதைப் போன்று தான் அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்க உணர்ச்சியின் தூண்டுதலைப் பார்த்தான். எண்ணங்கள் கொண்டு எப்படி உருவானது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தது தான் பேரண்டத்தின் உண்மை நிலைகள் அனைத்தும்.

அவனுக்குப் பின் வான்மீகி கண்டான். பின் வியாசகன் கண்டான். அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகள எடுத்தார்கள் பின் வந்த ஞானிகள் அனைவருமே…!

நாம் இயக்குகின்றோமா…? அல்லது நாம் சுவாசிப்பது நம்மை இயக்குகிறதா…?

Breathing states

நாம் இயக்குகின்றோமா…? அல்லது நாம் சுவாசிப்பது நம்மை இயக்குகிறதா…?

ஒரு செடியிலிருந்து அதன் (மணம்) சத்தை வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் பரவச் செய்கின்றது. அதே செடியை நாம் கண் கொண்டு பார்த்து அது பற்றித் தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் அந்த மணம் நம் உயிரிலே படுகிறது.

தெரியவில்லை என்றாலும் அதை நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
1.இதனுடைய குணம் என்ன…?
2.இதனுடைய மணம் என்ன…? இது என்ன செய்யும்…?
3.நம்மை வேதனைப்படுத்துமா…? உடம்புக்கு நல்லதாகுமா…? என்று சிந்திக்கின்றோம்.

செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருந்தாலும் அந்தச் செடியின் வாசனையை நுகர வேண்டுமென்றால் நமது கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நாம் இயங்குகின்றோமா…? நம்மை மற்றது இயக்குகின்றதா…?
2.அல்லது நாம் ஒன்றைத் தவறு செய்கின்றோமா…?
3.அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?
4.அப்படி தவறு செய்ய வைக்கின்றது நமது உயிரா…? நாம் நுகர்ந்த உணர்வா…? நமது உடலா…? என்பதனை எல்லாம்
5.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகள்.

உதாரணமாக வேப்ப இலை என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செடியின் சத்தை நுகர்ந்த பின் ஒரு கசப்பென்ற நிலைகள் வருகின்றது

அந்த உணர்வின் மணங்கள் நம் உயிரிலே பட்டுக் கசப்பின் உணர்ச்சிகளாக நம் உடலிலே படரும். அப்பொழுது என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகள் பட்டதும் அந்த உணர்ச்சிகளாக நம்மைத் தூண்டும்
2.ஓய்ய்…ய்ய்ய்…! கசப்பை நுகர்ந்தால் ஓ…ய் என்று உமட்டலாக வரும்
3.அப்போது இயக்குவது யார்..? நாம் நுகர்ந்த உணர்வு இயக்குகின்றது
4.ஆனால் அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்..? உயிர்
5.அந்த உணர்ச்சிகள் நம் உடலுடன் சேர்த்தவுடனே அதுதான் நம்மை இயக்குகின்றது… ஆண்டாள்…! (காரணப் பெயர்)

வேப்ப மரத்தைக் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் அதைப் பதிவாக்குகின்றது நம் கண்ணின் கருவிழி.

அந்த மரத்திலிருந்து வரக்கூடிய உணர்வு என்ன…? என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அது கவரும் சக்தி பெறுகின்றது.

அப்பொழுது அந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அது என்ன செடி…? நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா…? என்று நாம் ஆராய்ச்சி செய்வோம்.

வாந்தி வரும்… என்று சொன்னால் அதை நீக்கி விடுகின்றோம்.

ஒருவருக்கு அம்மை வார்த்திருந்தது என்றால் இது விஷத் தாக்குதல். அதற்கு இந்த வேப்பிலையை முழுதாகப் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டுக் கலக்கித் தெளித்தால் உடலில் அம்மை என்ற அந்த விஷக் கிருமிகளை மாற்றுகின்றது.

ஆனால் அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வருகின்றது… வாந்தியாகி வெளியே தள்ளுகின்றது.

இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை நீக்குகின்றது.

1.அதனதன் சந்தர்ப்பத்திற்கு அது வேலை செய்கின்றது
2.இவை எல்லாம் இயற்கையின் நியதிகள்…!

மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் காலத்தால் மறைந்ததன் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்

soul-is-sole-god

மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் காலத்தால் மறைந்ததன் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்

 

பக்தி எது என்று முழுமையாக உணராது அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம். ஆன்மீக வாழ்க்கை என்றாலும் இன்று அந்த ஆன்மீகமும் அரசியல் வாழ்க்கையாகவே மாறிக் கொண்டு வருகின்றது.

ஒருவன் ஒரு ஆன்மீகத்தைப் பற்றிப் பேசினால் மற்றவர் ஒன்னொன்றைச் சொல்ல அதற்கும் இதற்கும் கலக்கம் உண்டாகின்றது.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிகளைக் காலத்தால் அரசர்கள் கைப்பற்றிக் கொண்டு அதை எல்லாம் அவர்களுக்குகந்ததாக மாற்றி விட்டனர்.

உதாரணமாக நம் ஊரிலே ஒரு நல்ல பேச்சாளி இருக்கின்றார். அதே போல் ஒரு போக்கிரியும் இங்கே இருக்கிறான் என்றால் திறமைசாலியான பேச்சாளியாக இருப்பினும் இந்தப் போக்கிரியைக் கண்டு அஞ்சித் தான் இருக்க வேண்டும்… அவனுக்கு ஒடுங்கித் தான் பேச முடியும்.

1.இதைப் போன்ற போக்கிரியாக இருந்தவர்கள் தான் அன்றைய அரசர்கள்…
2.இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது
3.அவனை எதிர்ப்போரை வீழ்த்துவதுதான் நியாயம் தர்மம் என்ற நிலைகள் அரசனுடைய வாழ்க்கை.

அன்றைய அரசன்… தான் வாழ தனக்கென்ற ஒரு மதத்தை உருவாக்குகின்றான். அவன் இயற்றும் சட்டத்தை அவனை அணுகிய மக்கள் அதை அதைப் பதிவாக்கினால் அந்தப் பதிவே கடவுளாகின்றது.

1.அவர்கள் இட்ட சட்டத்திற்கு மாறாக நடந்தால்
2.இது தெய்வத்தின் குற்றம் அல்லது ஆண்டவனின் குற்றம் என்று சட்டங்களை இயற்றப்பட்டு
3.அரசன் காட்டிய நெறிகளுக்கு மாறாக நடந்தால் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தனர்.

இப்படித் தான் ஞானிகள் அல்லது மகரிஷிகள் அவர்கள் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை மக்களுக்குக் கிடைக்காது தடைப்படுத்தித் தன் சுயநலங்களுக்குக் கொண்டு சென்று விட்டனர்.

இன்றைக்கும் பார்க்கலாம்.. “வள்ளுவன் குறள் வையகமெல்லாம் ஓங்கி வளர வேண்டும்…” என்று சொல்வார்கள்.

ஆனால் திருவள்ளுவர் செய்த காரியம்…
1.அரசர்கள் தன்னாட்சியாக செயல்படும் நிலைகளில் இருந்து மீட்டிட
2.மனிதன் மனிதனை எப்படி மதிக்க வேண்டுமென்ற நிலையைத் தெளிவாக்கினார்.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு…” என்ற பாடலைப் பாடியுள்ளார்.

ஏனென்றால் அனைத்திற்கும் மூலமாக… முதலாக உள்ளது… இவ்வுயிரே தான் காரணம்…! என்ற நிலைகளில் அவர் அந்தப் பாடலின் மூலம் பதிவாக்கினார்.

இதை எல்லாம் அவர் அன்றே சொல்லியிருந்தாலும் அன்றைய அரசர்கள் சட்டப்படி இப்படிச் சொல்வோரைக் குற்றவாளி என்றே பறைசாற்றும் நிலைகள் வருகின்றது.

ஞானிகள் கொடுத்தது எல்லாம் இப்படித்தான் மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட நிலைகள் கொண்டு தான் நாம் இன்று நல்லதைத் தேடிக் கொண்டே உள்ளோம்.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய உண்மைகளை உணர்த்துகின்றோம்.