கருவித்தை மூலம் கிளி எலி மாடு ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் மந்திர ஒலிகளே…!

HOROSCOPE.jpg

கருவித்தை மூலம் கிளி எலி மாடு ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் மந்திர ஒலிகளே…!

விஞ்ஞான அறிவு வருவதற்கு முன் மந்திர ஒலிகளே அதிகமாக இருந்தது. (இன்றும் உள்ளது).

மந்திர ஒலிகளின் உணர்வின் தன்மை கொண்டுதான் உணர்வின் எண்ணங்கள் எப்படி? என்று நூற்றுக்கணக்கில் அவர்கள் ஓதுவார்கள்.

அப்படித் திரும்பத் திரும்ப ஓதும் போது இந்த பூமியைப் பிளந்து (உணர்வலைகள்) அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மையை தனக்குள் விளையவைத்து விளையவைத்து இந்த உணர்வால் தனக்குள் அறிந்திடும் உணர்வுகள் வருகின்றது.

ஜோதிடம் சொல்வதும் நாடி சாஸ்திரங்கள் எழுதுவதும்  இவையெல்லாம்

1.இவன் கற்பித்த உணர்வும் இதனுடன் இணைத்துக் கொண்ட உணர்வும் எதுவோ
2.எவர் பதிவு செய்து கொண்டாரோ அந்தப் பதிவு செய்தோர் கொண்ட உணர்வு இங்கே இயக்குகின்றது.
3.அதிலே நன்மை என்ற நிலைகள் வராது
4.தீமை என்ற உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டது. தீமையின் நினைவாற்றலைத்தான் கூட்டும்.
5.தீமை செய்யும் உணர்வே தான் வருமே தவிர ஞானிகள் தீமையைப் பிளந்த உணர்வுகள் இங்கே சிறிதளவும் வராது.

நீங்கள் எண்ணுகின்ற நாடி சாஸ்திரமானாலும் சரி சாஸ்திர விதிப்படி ஜாதங்கள் குறித்தாலும் சரி இப்படி உருவாக்கப்பட்ட நிலைதான்.

இயற்கையில் ஒரு மனிதனுக்கு ஜாதகம் இல்லை. ஜாதகம் கணிப்பது “மனிதன் எண்ணத்தில்தான்”.

இவர்கள் சொன்னது மாதிரி
1.எதை எதையோ கூட்டிக் கழித்து
2.எந்த உணர்வின் எண்ணங்களைப் பதிவு செய்தார்களோ
3.அந்தப் பதிவின் நிலைகளை நாம் “தலைவிதியாக” வைத்து
4.அதனை மீண்டும் “விதியாக” மாற்றி அதன் வழிகளிலே தான் நாம் வருகின்றோம்.

நமக்குள் பழக்கப்படுத்திவிட்டால் நீங்கள் ஆயிரம் தான் சொல்லுங்கள். மீண்டும் ஜாதகத்தைத் தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா? கெட்ட நேரம் வருகின்றதா? என்றுதான் தேடிச் செல்ல முடியும்.

நேரத்தை உங்களால் மாற்ற முடியாது. இந்த உடலுக்கு நல்ல நேரம் வேண்டும் என்று தேடி அலைவீர்கள். பதிந்த உணர்வுகளில் ஆசை ஓங்கிக்கொண்டு இருக்கும்.

அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக்கொண்டுதான் இருக்கும். தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும். பின் அதனின் நிலைகள் மனித உருவைச் சீர் குலையச்செய்யும் நிலைதான் வரும்.

1.ஒருவருக்கு மிகவும் உடல் நிலை சீர்கெட்டது என்றால் நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…?
2.விபத்து நடந்த இடத்தில் அடிபட்டவர்களை நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…?
3.மருத்துவமனைக்குச் சென்றபின் நல்ல நேரம் பார்த்து அந்த நல்ல நேரத்தில் தான் நோயாளியையும் அடிபட்டவரையும் மருத்துவர் பார்க்கின்றாரா…?

நமக்குப் பசிக்கும்பொழுது உணவை உட்கொள்கின்றோம். உடலிலிருந்து வெளிப்படும் கழிவுகளையும் உடனே கழிக்கின்றோம். இதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்கின்றோமா…?

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, நாம் எதை நமக்குள் பதிவாக்கியிருக்கின்றோமோ அதுதான் இயக்குகின்றது.

அதே மாதிரி எலி ஜோதிடம் கிளி ஜோதிடம் சில பேர் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் மனித உடலிலிருந்து எடுத்துக் கொண்ட மந்திர ஒலி எடுத்து கரு எடுத்து அதற்குக் கொடுப்பார்கள்.

அந்தக் கருவைக் கொடுத்தவுடன் எலியோ கிளியோ இவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஒரு நெல்லைக் கொடுத்து இது பண்ணியவுடனே என்ன செய்வான்? தன் விரலைக் காட்டி அதைக் கண்ணிலே பார்ப்பார்கள்.

1.அந்தக் கிளி இவனை நேராகப் பார்க்கும்.
2.விரலை அசைத்தவுடனே இங்கே பார்க்கும்.
3.பார்த்தவுடனே அந்த சீட்டை விட்டுவிட்டு அடுத்த சீட்டை எடுக்கும்.
4.எடுத்தவுடனே அதைப் படித்துக் காட்டுவார்கள்.

இதே மாதிரி எலியை வைத்தும் சீட்டை எடுக்கச் செய்வார்கள். அவர்கள் கண்ணில் பார்ப்பார்கள். அதே மாதிரி உணர்வுகள் வேலை நடக்கும்.

(நாம் அவர்கள் கண்ணிலேயும் கை விரலிலேயும் இதைப் போல எத்தனையோ நிலைகளில் செய்வதை நாம் கவனிக்க மாட்டோம். அது நமக்குத் தெரியவும் செய்யாது)

இது எல்லாம் உலகம் முழுவதற்கும் மாந்திரீக நிலைகளில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதிலிருந்தெல்லாம் நாம் மாறவேண்டுமா இல்லையா?

ஆக மொத்தம் நம்மை நாம் நம்பாமல் யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் எண்ணிக் கொண்டுள்ளோம்.

அன்று அரசர்கள் காட்டிய வழியில் சரணாகதி என்ற தத்துவத்தில் “எல்லாம் அவன் செயல்” என்று சொல்லி சாங்கிய சாஸ்திரங்களைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

நம் எண்ணத்தால் வந்த தீமைகளை நம் எண்ணத்தாலேயே எடுத்துப் போக்க முடியும். “அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் உண்டு” என்று ஞானிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

ஆகவே, உங்களுக்கு வரும் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். “உங்களால் முடியும்”

மற்றவர்களுடைய ஆசை வார்த்தையில் சிக்கித்தான் எல்லாத் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம் – இல்லை என்று சொல்ல முடியுமா…?

 

Light workers

மற்றவர்களுடைய ஆசை வார்த்தையில் சிக்கித்தான் எல்லாத் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம் – இல்லை என்று சொல்ல முடியுமா…? 

ஒருவர் மிகவும் மோசமானவர். வாயினால் அழகாகப் பேசுவார். அப்படி அழகாக மகிழ்ச்சியான நிலைகளில் அவர் பேசுவதை “நாம் பதிவு செய்து கொள்கின்றோம்”.

அவர் ஏமாற்றுவதை இன்னொருவர் தெரிந்து வைத்திருக்கிறார்.

ஏன் அவர் வலையில் போய் சிக்குகின்றீர்கள்…? உங்களை அவர் “ஏமாற்றிவிடுவார்…!” என்று நம்மிடம் சொல்கின்றார்.

முதலில் சொன்னவர் உணர்வு வந்த பின் இவர் என்ன சொன்னாலும் “ஏமாற்றுவதற்குத்தான் சொல்கின்றார்” என்று எண்ணுகின்றோம். இரண்டாவது சொல்பவர் “அனுபவப்பட்டவர்” நம்மிடம் வந்து சொல்கின்றார் என்று எண்ணுவதில்லை.

அதற்குப் பதில் அவரைக் குற்றவாளியாக்குகின்றோம்.

பார்…, அவரிடம் நட்பாக இருக்கின்றோம். பொறாமையால் பிடிக்காத நிலைகளில் “இப்படிச் சொல்கிறார்…” என்று எண்ணுகின்றோம்.

நம்மைக் காப்பதற்காகச் சொன்னாலும் அவரிடம் உங்களை எப்படியெல்லாம் சொல்லுகின்றார்…! என்று (முதலமாவரிடம்) சொல்லி விடுகின்றோம்.

ஆனால் சொல்லி ஏற்றுக் கொண்டு சிந்தித்துப் பார்க்கின்றோமா? என்றால் இல்லை. அந்த உணர்வை உடனே வெளிப்படுத்துகின்றோம்.

அவர்களுக்குள் தீமை செய்யும் உணர்வுகளே விளைந்து இருக்கின்றது. (நாம் தவறு செய்யவில்லை).

ஆனால் அவரின் இனிமை நமக்குள் விளைந்து விட்டால், பின்னாடிதான்… “அதிலே சிக்கிவிட்டோம் போல் இருக்கிறது…,” என்று தெரிகின்றது.

இதை நாம் எப்படி மாற்றுவது? ஏமாற்றுபவர்களிடம் சிக்காமல் இருக்க வழி வேண்டுமல்லவா…!

உதாரணமாக ஒரு புலி ஒரு மானைப் பார்க்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த மானைப் பார்த்தவுடன் அமைதி கொண்டதாகவே இருக்கின்றது. தன்னருகிலே இருப்பதை உற்றுப் பார்ப்பதில்லை.

வெகு தூரத்தில் இருக்கும் மானைப் புலி குறி வைக்கிறது. அதைப் பதிவு செய்துவிட்டதென்றால் அதன் மேல் எண்ணம் வருகின்றது.

பக்கத்திலிருப்பதை நின்று வேடிக்கை பார்க்கின்றது. ஆனால், தூரத்தில் இருப்பதை உற்றுப் பார்க்கும் பொழுது அந்த மான் ஓட ஆரம்பிக்கின்றது.

மானிற்கு இந்த உணர்வின் ஒலி பட்டபின் உணர்வின் அறிவு உன்னைக் குறி வைக்கின்றது என்று உணர்த்துகின்றது. உடனே அது ஓட ஆரம்பிக்கின்றது.

 

1.புலியோ பக்கத்தில் இருக்கின்றதைப் பிடிக்காதபடி
2.தூரத்தில் இருப்பதைத் துரத்திச் செல்கின்றது.
3.அந்த உணர்வின் வலு எதுவோ அதனைத்தான் துரத்துகின்றது.
4.இதைப் போலத்தான் நாம் எதனைப் பதிவு செய்கின்றோமோ
5.அந்த உணர்வின் “நினைவாற்றல்தான்” நம்மை இயக்குகின்றது.

ஆகையினால் நாம் பக்கத்தில் இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு, அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் இது நம்மை ஒன்றும் பாதிக்காது.

அகஸ்திய மாமகரிஷி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை தன் தாய் கருவிலேயே பெற்றார். அவர் மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கி உயிருடன் ஒன்றச் செய்த அலைகள் இன்றும் உண்டு.

அவைகளை நாம் நுகர்ந்தால் அந்த எண்ணம் வரப்படும்போது நம் உடலிலே நுகர்ந்த தீயவைகளுக்கு எமனாக ஆகின்றது. தீயவைகளைக் கொல்லக்கூடிய நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து அதை நாம் அறிந்து கொண்டாலும் தீமை என்று அறிந்தபின் மகரிஷிகளின் அருள் சக்தியை இந்த முறைப்படி உள்ளே நுகர்ந்து அதைப் பிளத்தல் வேண்டும்.

ஆனால் இதைப் பிளப்பதற்கு, “நுகரும் ஆற்றல்” அந்தச் சக்தி வேண்டும். அந்த சக்தி இல்லையென்றால் நாம்  நுகர முடியாது.

அந்த உணர்வின் சத்தை நுகர்வதற்கு என்ன வழியோ அதைத்தான் உங்களிடம் யாம் “பதிவு செய்து” கொண்டிருக்கின்றோம்.

1.குருநாதர் எமக்கு அப்படித்தான் சொன்னார்.
2.சொல்லி அதைப் பதிவு செய்தார்.
3.அது மாதிரிதான் உங்களிடம் பதிவு செய்கின்றேன்.
4.யாம் பதிவு செய்வதை நீங்கள் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.

வெகு தொலைவில் இருக்கக்கூடிய அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் இங்கே இந்தப் பூமியில் உள்ள உணர்வுகளின் ஈர்ப்புக்குள் நாம் சிக்க மாட்டோம். அந்த உணர்வுகள் நம்மிடம் மோதினால் நமக்குள் வராது விலகிச் செல்லும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்கக் கூடாது…! நன்மைகள் செய்யத் துணிவு கொடுக்கின்றோம்…!

Confidence.png

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்கக் கூடாது…! நன்மைகள் செய்யத் துணிவு கொடுக்கின்றோம்…!

நமக்குள் நாம் வளர்த்துக் கொண்ட ஒவ்வொரு குணமும் அது அது தன்னை வளர்த்துக் கொள்ள முந்துகின்றது. முந்தும் பொழுது
1.தீமையை அகற்றும் சக்தியாக எடுத்தால் தீமைகளை அகற்றும்.
2.நஞ்சான உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் நஞ்சின் தன்மை நமக்குள் நல்ல குணங்களை அழிக்கும்.

இந்தப் பேருண்மையை அறிந்து கொள்வதற்குத்தான் கோலமாமகரிஷி தவமிருந்த இடமான கொல்லூருக்குப் போகச் சொன்னார் குருநாதர்.

அங்கே கொல்லூரில் கோலமாமகரிஷி எதை எதை எடுத்தார்? எதை வெறுத்தார்? அதை அறிந்தார்? எதையெல்லாம் ஞானத்தால் உணர்ந்தார்? என்ற நிலையை அறிவதற்குத்தான் யாம் பல காலம் அங்கே தங்கியிருந்து ஜெபமிருந்தோம்.

அங்கே தண்ணீர் கிடையாது உணவு கிடையாது ஒன்றும் கிடையாது. எம்மை இங்கே விட்டுவிட்டுச் சென்று விட்டார் குருநாதர். இங்கே பல நாட்கள் தங்கிவிட்டு பின்புதான் வெளியே வந்தோம். யாருக்கும் தெரியாது.

இவ்வாறு அறிந்து கொண்ட நிலைகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமென்றால்…
1.“எமது வார்த்தையைக் கேட்பது பெரிதல்ல
2.எம்மைப் பின்பற்றுவதும் பெரிதல்ல”.
3.நாம் “முந்தைய நிலைகளில்” பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு…, அதை நாம் அடக்க வேண்டும்.

அன்பர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது.

தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும்போது.., பிரேக் போட்டவுடன் சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால் கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார். வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம் நமது உணர்வுகளில் வேகம் எதுவோ அதில் மகிழ்ச்சியைத் தூண்டும். அதனின் வேகச் செயலாக வேலை செய்யும்.

“இதன் விளைவை…” நமக்குள் எப்படி ஊட்டும்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.

இதே மாதிரிதான் நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஆர்வமாக இருக்கும்போது முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும்போது..,
1.என்னத்தை எடுத்தோம்…! இப்படி வருகிறதே…!
2.நாம் ஜெயிக்கவில்லை…,
3.நம்மால் முடியவில்லை போலும் என்று விரக்தி அடைந்துவிடுவார்கள்.

யாம் நீங்கள் பெறவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.

ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் குறுக்கே குறுக்கே வருகிறது.

நாம் செய்யும் தியானம்…, “சரியாக இல்லையோ…!” என்று எண்ணத் தூண்டும்.

இப்படி முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு. அதை நாம் “நிறுத்த…” வேண்டும்.

இந்த ஆறாவது அறிவிற்குள் அந்த மெய்ஞானிகளின் உணர்வைக் கவரும் திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.

இது தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன். இந்த ஆறாவது அறிவால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும். அப்படி அதை ஞானமாக்க வேண்டும்.

இதை நமக்குள் படைக்கும் பொழுதுதான் அந்த உணர்வின் இயக்கம் நமக்குள் வரும் என்ற உண்மையை இங்கே கொல்லூரிலிருந்து யாம் உணர்ந்தோம்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

இதைத்தான் உங்களுக்கு அடிக்கடி யாம் பதிவு செய்கிறோம். நம்மையறியாது சேர்ந்த தீமைகளை “நாம் எப்படி நீக்கிப் பழகவேண்டும்” என்று உபதேசிக்கிறோம்.

இருக்கும் இடத்திலிருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறமுடியும்… உங்களால் முடியும்…!

Trust your will

இருக்கும் இடத்திலிருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறமுடியும்… உங்களால் முடியும்…! 

ஒரு துளி விஷம் பாலில் பட்டால் அதைக் குடித்தால் என்ன ஆகின்றது? நம்மை மயங்கச் செய்கின்றது. சிறிது விஷம் அதிகமானால் மரணமடையும் நிலையே வந்துவிடுகின்றது.

இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். வேதனை என்பதே விஷம்.

வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்ததென்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இது பட்டபின் நம்மை “மயங்கச் செய்துவிடுகின்றது”.

அப்பொழுது சிந்தனை என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்கின்றது. தன்னை அறியாமலே வெறுப்பும் வேதனைப்படும் நிலைகளைச் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன உபாயம் இருக்கின்றது…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்த அந்த வழிப்படி உங்களுக்குள் விஷத்தை அடக்கிடும் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.

பின் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று “உள்முகமாகப் பாய்ச்சுதல் வேண்டும்”.

இப்படி எண்ணினால் அந்தத் தீமைகளை மறைத்துவிடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை என்ற உணர்வுகள் “இழுக்காது.., தடைப்படுத்தப்படுகின்றது”.

இது வலுப் பெறும் பொழுது நம் ஆன்மா மீது சுருண்டு கிடக்கும் வேதனைப்படச் செய்யும் தீமைகள் நீக்கப்படுகின்றது.

எத்தகையை நிலைகள் வந்தாலும் இதைப் போல நம்மைப் பாதுகாக்கும் வலுவான உணர்வுகள் வருதல் வேண்டும்.

இன்று இருக்கும் இந்த விஷமான உலகில் “நம்முடைய சிந்தனைகள் சிதறாது” அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக்குவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை உங்களுக்குள் அடிக்கடி உந்தச் செய்கின்றோம். உங்கள் “மனம் மாறும் நிலைகளில்” எல்லா உணர்வுகளுடன் இதைக் கலக்கச் செய்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு நீங்கள் மீண்டும் ஏங்கினால்  தீமைகளை அகற்றிட முடியும். அந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.., உங்களை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படித் “தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சி… அதைச் செய்தாரோ…!” அதே போல உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றோம்.

பல இன்னல்களைச் செயற்கையாக ஊட்டினார். அதன் செயலாக்கங்களையும் அதிலிருந்து விடுபடும் மார்க்கங்களையும் தெளிவாகக் காட்டினார்.
1.என்னைக் காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று அத்தகைய நிலைகளைக் காட்டினார்.
2.நீங்கள் வீட்டிற்குள் இருந்தே இதைப் பெறமுடியும்.

தீமையை வென்ற உணர்வின் தன்மை “உணர்ச்சிகளாகக் கொடுத்து” நீங்கள் எல்லோரும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இது உலகைச் சுற்றி ஊரைச் சுற்றிக் காட்டைச் சுற்றி உணவில்லாதபடி நான் அலைந்தேன். அகண்ட அண்டத்தின் நிலைகளையும் உலக அனுபவத்தையும் குருநாதர் கொடுத்தார்.

நீங்கள் உங்கள் வீட்டிற்குள் இருந்தே அந்த அனுபவத்தைப் பெற முடியும்.

அதைப் பெற.., “உங்கள் நினைவு ஒன்றுதான்” தேவை.

தீமை என்று நீங்கள் காணும் பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.தீமையிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.
3.தீமை செய்வோர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சினால்
4.“தீமையை நுகரும் சக்திகள்” அங்கே மாறிவிடுகின்றது.

இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்திலேயும் கணவனும் மனைவியும் இதைச் செய்தே ஆக வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர்ந்து வரும் நிலையில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்த உயிர் எதை வலுவாக எடுத்ததோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

நாம் “பிறவியில்லா நிலை” அடைகின்றோம்.

ஏமாற்றுபவர்கள் ஆசை வார்த்தைகளில் சிக்காதீர்கள்…!

LightWorkerKryonAbstract

ஏமாற்றுபவர்கள் ஆசை வார்த்தைகளில் சிக்காதீர்கள்…!

இன்றைய உலகில் நிறையப் பேர் ஆசையில் சிக்கி ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ளார்கள். ஆக, ஆசைகளை ஊட்டி மயங்கச் செய்து வாய் பேசாது மூடும்படி ஆக்கிவிடுகின்றனர்.

இன்றைய விஞ்ஞான உலகில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் “ஏமாற்றம் தான் வருகின்றது”. கஷ்டம் அதிகமாகின்றது.., ஆனால் ஏமாறிக் கொண்டேயிருக்கின்றோம்.

நீங்கள் வயலில் விதையை விதைத்துவிட்டுப் போய் ஜோதிடரிடம் கேட்கிறீர்கள். அவர்.., நிறைய வெள்ளாமை “கொட்டும்” என்று சொல்கிறார்.

கேட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டால்.., “என்ன கொட்டும்?” தரித்திரத்தைத்தான் கொட்டும். செடிகள் அனைத்தும் பட்டுப் போகும்.

ஏனென்றால், தன் பிழைப்பிற்காக ஆசை வார்த்தைகளைச் சொல்லி நமக்குள் ஆசையை ஊட்டி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றனர்.

ஜாதகமோ, மந்திர தந்திரம் செய்பவர்களையோ, மற்றவைகளையோ பார்த்தபின் உங்களுக்கு இந்தத் தடவை “அமோகமான விளைச்சல்.., அது அப்படி வரும்.., இப்படி வரும்” என்று சொல்லியபின்.., அப்படியே வந்து பேசாமல் இருங்கள்.

வெள்ளாமை வருமா.., பார்க்கலாம்..!

இதுவெல்லாம் என்ன என்றால்.., நம்முடைய ஆசை கொண்டு நம்மைத் திரை மறைவாக்கி உண்மையை மறைக்கச் செய்யும் நிலைகள் தான்.

ஆக, அந்த ஆசையிலேயே தவழ்ந்து கடைசியில் “ஒன்றும் கிடைக்கவில்லையே..,” என்று வேதனை தான் வரும்.

வேதனைகள் அதிகமாகிவிட்டால் இந்த உடலிலே கடும் விளைவுகளாகி இந்த மனித உடலையே இழக்கச் செய்து அடுத்து விஷமான ஜெந்துக்களாகப் பிறக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான்.., “அவ்வளவு பெரிய சக்தியை” உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாக ஊட்டுகின்றோம்.

நீங்கள் இதை வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் “உங்களைக் காக்க.., உங்கள் எண்ணம்” அது உதவும்.

நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை…, “மெய்ஞானிகளின் ஞான வித்துக்களை” உங்களிடம் ரிக்கார்டு செய்கின்றோம்.., அவ்வளவு தான்…!

ஒரு விதையைக் கொண்டு பூமியில் விதைத்துவிட்டால் அது என்ன செய்கின்றது?

அந்த வித்தின் தன்மை எதுவோ பூமியின் துணை கொண்டு “தன் தாய்ச் செடியின் சத்தை எடுத்து நுகர்ந்து.., மள.., மள..,” என்று வளரத் தொடங்குகின்றது.

அதிலே எந்தெந்த நேரத்தில் என்ன பருவமோ அதிலே உரமோ, மருந்தோ மற்றதோ அதைப் போட வேண்டும் என்றால் அதைச் சரியாகப் போட்டுவிட்டால் நிச்சயம் நன்றாக விளைகின்றது. அந்தப் பலனைக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான், உங்களுக்குப் பருவம் யாம் என்ன சொல்கிறோம்?

“கஷ்டம் வரும் பொழுது.., அந்தக் கஷ்டத்தை விட்டுவிடுங்கள்”. அந்த அருள் ஒளியைப் பெறவேண்டும் என்ற இந்த உணர்வை எடுங்கள்.

பல வகைகளிலும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் அந்த மெய்ஞானிகளின் வித்துக்களை ஊன்றிக் கொண்டேயிருக்கின்றோம் அல்லவா.

அப்படி ஊன்றி இருக்கும் பொழுது.., “அதற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இந்த உரத்தைக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்.

அது போதும்.

இப்படிச் செய்து கொண்டே வந்தோம் என்றால் உங்கள் உடலில் “ஊழ்வினை என்ற வித்து” வளர்ச்சி அடைந்து கொண்டே வரும். உங்களுக்குள் அந்தப் பலன் கிடைக்கும்.

வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடக்கூடிய ஞானம் தன்னாலே வரும். மன பலமும் மன தைரியமும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகையை இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்தும் விடுபட்டு மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.