தீமைகள் எது வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

தீமைகள் எது வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

 

தீமையிலிருந்து விடுபடுவதற்கு உபாயம் என்ன…? இந்த ஆறாவது அறிவு தீமை என்று அறிந்து கொள்கின்றது கார்த்திகேயா.
1.தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம்.
2.அதை வழிநடத்தி அதனின் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்களால் ஏங்கி வானை நோக்கி அதன் உணர்வு பெற வேண்டும் என்று ஏக்கத்தால் எண்ணி அதே கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது கண்ணால் பார்த்து உயிரிலே படும் பொழுது தான் உணர்வால் அறிகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வைக் கண்களால் நுகர்ந்தோம் உயிரின் காந்தம் நுகர்ந்து அந்த உணர்வை அறியச் செய்கின்றது கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில வைக்கப்படும் பொழுது அது வலிமையாகி விடுகின்றது.

ஏனென்றால் வேதனைப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்றோம் கேட்டு அறிந்து. ஆனால் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் புருவ மத்தியில எண்ணி அதைப் பெற வேண்டும் என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு கட்டளையிட வேண்டும் சேனாதிபதி.

தீமையான உணர்வை நுகர்ந்திருந்தாலும் முதலிலேயே அது சிறிதளவு போய்விட்டது… அது புகாதபடி தடுக்க வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இணைக்கும் போது உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றது.

தடைப்படுத்துவது மட்டுமல்ல நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துதல் வேண்டும்.

இதை ஆணையிடுகின்றது… ஆறாவது அறிவு சேனாதிபதி கார்த்திகேயா. இந்த உணர்வு கொண்டு உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் செலுத்தப்படும் பொழுது அவை வீரியமடைகின்றது.

நாம் எண்ணியபடி அந்தத் தீமை வராதபடி உஷாராகின்றது.

நுகர்ந்து சிறிதளவு போன நிலையும் இந்த உணர்வுகள் சேர்த்து
1.இது உமிழ் நீராக மாறி உள்ளே சேர்க்கப்படும் பொழுது அந்த விஷத்தை அடக்கும் சக்தியாக
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தீமை நுகராது தடுத்த பின் சிறுத்து விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி உமிழ் நீராக மாறும் பொழுது அது சிறுக்கப்படுகின்றது. இதன் வழி கொண்டு எத்தகைய தீமையின் உணர்வை நுகந்தாலும் நம்மால் மாற்றிக் கொள்ள முடியும்.

அந்தச் சக்தியை எடுத்து நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்கி நினைவாக்கி நீங்கள் தீமையிலிருந்து விடுபட முடியும்.

தீமையில் இருந்து விடுபட முடியாதபடி… நன்மை செய்தோர் அனைவரும் தீமையில் சிக்குண்டு… “நான் எல்லோருக்கும் நல்லது செய்தேனே என்னை இப்படி ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று எண்ணுகின்றார்கள்.

நாம் எண்ணியதை உணர்த்துவதும் உணர்வின் தன்மை உடலாக்குவதும் உடலாக்கிய பின் இதை ஆள்வதும் ஆண்டவனாக இருக்கின்றான் நமது உயிர். எண்ணியதை இயக்குகின்றான். ஆக யாரைப் பழி போடுவது…?
1.எங்கேயோ ஆண்டவன் இல்லை நமக்குள் எண்ணுவதைத் தான் உருவாக்குகின்றான்.
2.அந்த உணர்வு வழி தான் நம்மை வழி நடத்துகின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

மனிதனுடைய ஆறாவது அறிவு சேனாதிபதி. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எடுத்து கண்ணின் நினைவை இங்கே தடைப்படுத்தினால் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
1.அதைச் செலுத்தப்படும் பொழுது அணுக்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து அந்தப் படைகலன் தீமைகளை எதிர்க்கும் சக்தியாக பெறுகின்றது.
2.மனிதன் ஒருவனால் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
3.தீமைகள் எது வந்தாலும் மாற்றிக் கொள்ள முடியும்

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?

தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?

 

உதாரணமாக நாம் ஒரு இரும்புக் கம்பியைக் காய்ச்சுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.. அதைக் கையிலே பிடிக்கிறோம் என்றால் அதன் வழி சூடு வந்துவிடும்.
1.அந்தச் சூடு கைக்கு வராதபடி ஒரு துணியைச் சுற்றினால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளலாம்.
2.மனிதன் தான் அந்தச் சூடு தாக்காதபடி இதைச் செயல்படுத்துகின்றான்.
3.இதே மாதிரி ஒரு வேதனைப்படும் உணர்வு நம்மைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் அல்லவா.

காரணம் அந்த வேதனை மீண்டும் நம்மைக் கீழே கொண்டு செல்கின்றது.

பார்க்கிறோம் அல்லவா எத்தனையோ நல்ல பேரை…! எல்லோருடைய கஷ்டத்தையும் கேட்டு அதனால் வேதனைப்படுகின்றார்கள்.

எல்லோருக்கும் நன்மை செய்தேனே… எனக்கு இப்படி இருக்கிறதே… கடவுள் என்னைச் சோதிக்கின்றானே என்று கடவுளைத்தான் திட்டுகின்றோமே தவிர ஏதாவது நம்மால் மாற்றிக் கொள்ள முடிகின்றதா…?

1.ஆனால் இந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றிக் கொள்ள முடியும். அதற்குச் சக்தி தேவை.
2.ஏனென்றால் இது எல்லாம் உங்கள் அனுபவத்தில் இருக்கும்…
3.ஞாபகப்படுத்தும் போது அந்த உணர்ச்சிகள் வரும்… அப்பொழுது பழைய நினைவுகள் வருகின்றது
4.அதனுடன் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டு வருகின்றேன்.
5.உங்கள் குணங்களில் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை நீங்கள் பிரித்துப் பார்க்கக் கூடிய நிலை வேண்டும் என்பதற்குத்தான்
6.இதைச் சொல்லி கொண்டு வந்து இணைக்கின்றேன்.

அதையும் நினைக்கின்றீர்கள் இதையும் சேர்த்து இணைத்தவுடன் என்ன செய்கின்றது…?

வேதனைகளைக் குறைக்கும். அப்பொழுது வேதனையான உமிழ் நீர் மாறுவது பலம் குறைந்து நல்ல சக்திகள் கூட வந்து நீங்கள் சாப்பிடுகின்ற ஆகாரத்தை நல்ல முறையில் ஜீரணித்து இரைப்பையில் வரப்படும் பொழுது “நமக்குக் கோளாறு செய்யாது…”

அந்த நிலையைத்தான் உங்களுக்கு செய்து கொடுக்கின்றோம்.

ஆனால் இப்பொழுது நமது வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வே வரப்படும் பொழுது… வரிசையில் வந்து…
1.கடைசியில் உடல் உறுப்புகள் குறைந்து உடல் குறைந்து
2.ஆளே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றது.

இத்தகைய நிலையில்… உயிர் சென்றவுடன் என்ன ஆகிறது…? விஷத்தை உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்களுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது இதை மாற்ற வேண்டும் அல்லவா.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் தீமையை நீக்கக்கூடிய அணுக்களை விளைய வைத்திருக்கின்றார்கள் நாம் குழந்தை பிறக்க ஆசைப்படுகின்றோம். அவர்கள் உணர்வின் தன்மை ஒளியின் உடலாக இரண்டு உயிரும் ஒன்றாகக்கூடிய நிலையை ஆசைப்பட்டார்கள்.
1.அவர்கள் உருவாக்கிய குழந்தைதான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது
2.அந்தக் குழந்தையில் ஒன்றை எடுத்துக் கொண்டால் தான் நமக்குச் சரியாக இருக்கும்
3.அதை வளர்த்தோம் என்றால் நமக்கு ஞானத்தை ஊட்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனம் ஒன்றி அந்த பேரருள் பெற்று பேரொளி என்ற நிலையாக அடைகின்றார்கள்.

அந்தச் சக்திகளைத்தான் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

பாவத்தைப் போக்கும் இடம் எது…?

பாவத்தைப் போக்கும் இடம் எது…?

 

கடையில் வேலை செய்கின்றார்கள். வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராது அங்கே ரோட்டிலே சம்பவங்கள் நடக்கிறது. அதாவது கடும் வேதனைப்படுகின்றனர். நம்மால் அல்ல…! வேறு யார் கூடேயோ சண்டை போடுகின்றார்கள். அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை நாம் நுகர்ந்து விடுகின்றோம்.

நுகர்ந்த பின் அதே உணர்வு ஓம் நமச்சிவாய என்று உடலில் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது. அந்த நேரத்தில் பயமும் அதிர்ச்சி வருகின்றது.
1.அந்த அதிர்வான உணர்வு வரப்படும் பொழுது கடையிலே இவன் (சண்டையிட்டதைப் பார்த்து நுகர்ந்தவன்) வேலை பார்க்கின்றான்
2.பயமான உணர்வுடன் வேலை செய்யும் போது சரியான முறையில் வேலை செய்யவில்லை.

முதலாளி பார்த்துக் கேட்கும் போது… “ரோட்டில் சண்டை போடுவதை நீ ஏன் பார்க்கின்றாய்…? அதைப் பார்த்து என் தொழிலை நீ கெடுக்கிறாயா…? உனக்கு இங்கே வேலை இல்லை போடா…!” என்று சொல்லி விடுகின்றார்.

இந்த உணர்வுகள் அதைச் சொன்னாலும் ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…! வேலை செய்பவன் பயப்படும் போது துரத்தி விடுகிறார் முதலாளி. ஆனால் பிழைப்பு போய் விடுகின்றது.
1.இந்தப் பாவத்தைப் போக்குவதற்கு என்ன செய்வது…?
2.வேதனை வந்துவிடுகிறது… அந்த நேரம் இராமேஸ்வரம் போவீர்களா…?

ரோட்டிலே போகின்றோம். திடீரென்று அங்கே விபத்து நடக்கிறது. பார்த்ததும் பாவ நிலைகள் இங்கே வந்து விடுகின்றது. பதட்டம் ஆகின்றது. கடையிலே வந்து வேலை செய்ய முடியவில்லை. வீட்டிற்கு வந்தாலும் சமையல் செய்து சாப்பிட முடியவில்லை…!
1.பயமாக இருக்கின்றது.
2.அதற்காக வேண்டி இங்கிருந்து இராமேஸ்வரம் போவீர்களா…?

தப்பு செய்யவில்லை…! ஆனால் பாவ நிலைகளைப் பார்க்கின்றோம். அவன் வேதனைப்படுகிறான் என்று அந்தப் பாவ நிலையைக் கண்கள் உணர்த்துகின்றது உடல் முழுவதும் பரவச் செய்கிறது… அதனால் நடுக்கம் ஆகிறது.

அப்போது இராமேஸ்வரம் போய் விட்டு வருகின்றீர்களா…? யாராவது அப்படிப் போகின்றோமா…?

இங்கே சோற்றுக்கே வழியில்லை. அப்புறம் இராமேஸ்வரத்திற்குச் சென்று அத்தனை கிணற்றிலும் காசைக் கொடுத்துக் குளித்துவிட்டுச் சுற்றி வந்து முடிந்தால் பாவம் போய்விடுமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும்…? பாவத்தைப் போக்க வேண்டும் என்றால் அதைப் போக்கக்கூடிய சக்தி நம்மிடம் இருக்கின்றது.
1.அந்தச் சக்தியைத் தான் தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
2.உங்களுக்குள் அதைப் பதிவு செய்துவிட்டால் போதும்.

ஒரு விபத்தாகின்றது என்னால்
1.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலே நினைவைக் கொண்டு சென்று
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
4.இதை வலுவாக்கிக் கொண்டால் அந்தப் பாவமான உணர்வுகளை இது மறைத்து விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இப்படிச் சுத்தம் செய்து விட்டோம் என்றால் போதும்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷியின் அருள் சக்தி விபத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா பெற வேண்டும்
1.அவர்களும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.அந்த ஆன்மாவுக்கு நல்ல மோட்சம் கிடைக்க வேண்டும். என்று நாம் இப்படி எண்ண வேண்டும்.

ஆனால் அடிபட்ட வேதனையால் வாடுகின்றார்கள் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திவிட்டு
1.அவர்களுக்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும்.
2.இனி ஒரு நல்ல நிலையை அவர் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? ஆ…ஆ…! என்று பயத்தால் பதட்டமடைந்து விடுகின்றோம். அது பாவ நிலையாக உருவாகி விடுகின்றது.

ஆனால் உடனே நமக்குள் துடைக்கும் விதமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தூய்மைப்படுத்தி விட்டு விபத்தில் சிக்கியவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.“நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் உருவாக்குகின்றது…”
2.இதைப் போன்று நாம் நமக்குள் வரும் பொழுது தீமை வென்றிடும் உணர்வுகள் மன உறுதி கிடைக்கின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வினை நமக்குள் செலுத்தப்படும் பொழுது இருளை அகற்றுகின்றது.

இப்படி ஒவ்வொரு நேரத்திலும் துருவ நட்சத்திரத்த்தின் சக்தியை எடுத்து நமக்குள் நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாவத்தைப் போக்க இதுதான் சுலபமான வழி… ஞானிகள் காட்டியது…!

அசம்பாவிதங்களிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்

அசம்பாவிதங்களிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்

 

நாம் எங்கு சென்றாலும் ஆத்ம சக்தி செய்து விட்டுத் தான் வெளியில் செல்தல் வேண்டும். தீமைகள் புகாது தடுக்கும் நிலையாக நம் வாழ்க்கையையே தியானம் ஆக்குதல் வேண்டும்.

தியானம் மட்டும் செய்து விட்டு
1.அதற்குப் பின் மற்றதை எல்லாம் பார்த்துப் பதிவாக்கிக் கொண்டே சென்றால் தீமைகள் தான் அதிகமாகும்.
2.தியானத்தின் பலன் முழுமையாகக் கிடைக்காது..
3.அப்போதைக்கு நன்றாக இருக்கும்… உடலுக்குள் மற்ற அணுக்கள் பெருகி விட்டால் நம்மையே அது மாற்றிவிடும்.
4.ஆகவே… ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையையே தியானமாக்கிப் பழகுதல் வேண்டும்.

தெளிவாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.

ரோட்டிலே செல்லும் பொழுது முதலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு… என் சொல் செயல் பார்வை அனைத்தும் புனிதமாக வேண்டும் என்று நினைத்துத் தான் நாம் ரோட்டிலே செல்ல வேண்டும்.

ஒரு வாகனமே ஓட்டுகின்றோம் என்றால் என் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்று நாம் எண்ணிவிட்டுச் செல்தல் வேண்டும்… ஒரு புனிதத் தன்மையாக வரும்.
1.அதன்படி நாம் ரோட்டில் செல்லும் பொழுது நல்ல சிந்தனைகள் வரும்
2.வித்தியாசமான நிலைகள் வந்தால் நம்மை ஒதுங்கிப் போகச் சொல்லும்.
3.அருள் உணர்வுகள் அதிகமாகி விட்டால் நமக்குப் பின்னாடி வாகனத்தில் வந்தாலும் கூட அதையும் ரிமோட் பண்ணி நம்மைக் காக்கும்.
4.நம்முடைய உணர்வுகளை அவர்கள் நுகர்வார்கள்… அப்போது தன்னாலேயே விலக்கி விட்டு விடும்.

சில விபத்துகள் நடக்கும் பொழுது பார்த்தோம் என்றால் எல்லோரும் அதிலே சிக்கி விடுவார்கள். ஆனால் அங்கிருக்கக்கூடிய ஒரு கைக் குழந்தை எந்தப் பின்னமும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.

1.காரணம் அது பயப்படுவதில்லை… விபத்து என்றால் குழந்தை அது பயப்படுமா…? அடிபட்ட பிற்பாடு தான் பயப்படும்.
2.ஆனால் நாம் அடிபடப் போகும் போது பயந்து விடுகின்றோம்.

குழந்தையின் உணர்வுகள் ரிமோட் செய்து எந்த விதமான ஆபத்தும் இல்லாதபடி தப்பித்துக் கொள்கிறது. நிறைய விபத்துகளைப் பார்த்தால் அங்கே கைக் குழந்தைகள் மட்டும் தப்பியிருப்பதைப் பார்க்கலாம்.
1.குழந்தையின் உள்ளங்கள் வித்தியாசமான எண்ணங்கள் இல்லாது இருக்கின்றது…
2.அந்த உணர்வே அதைப் பாதுகாக்கின்றது.

பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்…! ட்ரெயின் ஒன்று விபத்தானது. அதிலே ஒரு பெட்டியில் உள்ள அனைவரும் இறந்து விட்டார்கள். ஆனால் ஒரு குழந்தை மட்டும் அடித்த பின் ஒரு பலகை மீது அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றது சிறிதளவு கூட அதற்குப் பின்னமில்லை.

ஒரு சமயம் நான் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ட்ரெயினுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு தாய் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து வருகின்றது. திடீரென்று ட்ரேயினுக்குக் குறுக்கே சென்றுவிட்டது. தாய் சுக்கு நூறு ஆகிவிட்டது.

ஆனால் குழந்தை அதனின் சந்தர்ப்பம் தண்டவாளத்திற்கு மத்தியிலே அப்படியே எந்த விதமான பாதிப்பில்லாமல் இருக்கிறது. தண்டவாளத்திலிருந்த கல்லில் கூட அடிபடவில்லை. அந்த அளவுக்குப் பாதுகாப்பாகத் தாயின் கையில் அப்படியே படுத்திருக்கின்றது.

நான் கண்ணில் நேரடியாகப் பார்த்த நிகழ்ச்சி.

குருநாதர் இதை என்னிடம் சொல்லி…
1.அந்தக் குழந்தையின் உணர்வுகள் அதன் (அடிபடும் என்ற) மீது அச்சமில்லை
2.இந்த சந்தர்ப்பம் எப்படி அது காக்கப்பட்டது…? என்று காட்டுகின்றார்.

ஆனால் அதே குழந்தை ஆ…! என்று பயந்திருந்தால் அதனுடைய கதியும் பாதிப்பாகி இருக்கும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள். அந்தப் பரிசுத்தமான குணமாக இருக்கின்றது. ஆகையினால் அதற்கு அந்த விபத்துகள் கூடுமானவரை வருவதில்லை.

ஆகவே நீங்கள் வெளியில எங்கே சென்றாலும் சரி அல்லது அங்கிருந்து வீட்டுக்குத் திரும்ப வந்தாலும் சரி
1.ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு வந்து விட வேண்டும்.
2.அப்போது தான் நம்மை அறியாது நடக்கும் தீமைகளிலிருந்து காக்கப்பட முடியும்.

தீமை வருகின்றதே…! என்று சங்கடப்படக் கூடாது

தீமை வருகின்றதே…! என்று சங்கடப்படக் கூடாது

 

1.உன்னைக் கண்டு திகைப்பின் வசம் ஆழ்த்திடக்கூடாது
2.இது வலைபடு பாசமாக உட்கிடந்த நிலை…! அந்நிலை நீக்கிடவே தவத்தின் கடுமை காட்டினோம் (அத்திரி மாமகரிஷி சொன்னது)

அஞ்சற்க…! யாரும் காண முடிந்திடாத நிலையே உமக்குக் காணும் வாய்ப்பு கிடைத்தது. “அதிபாசம்” கொண்டு செயல்படுகின்ற உலகோதய வாழ்க்கை முறை வலையினைப் போன்றது. அவ்வலை பாசமாக உட்கிடந்த நிலை.

உலகப் பிடிப்பினில் அகப்பட்டே விடுபடாத் தன்மையாக இருந்திட்டாலும்
1.பாசத்தின் வலையையே பாதுகாவல் எனப் போர்த்திக் கொண்டிட்டவன்
2.அவனுள் கிளர்ந்து எழுகின்ற அதி ஆவேச உணர்வுகள் நச்சு அரவம் (நஞ்சு கொண்ட பாம்பு) போல் தோற்றம் காட்டி…
3.தான் எங்கு வளர்ந்து… அந்த வளர்ச்சியின் முதிர்வை அடைந்ததோ…
4.சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதைப் போல் அந்தக் குண நிலைகள் அவனையே தீண்டிட வருகின்றது.

ஆகவே…
1.வலைக்குள் விழிப்புடன் இருப்பது வேறு…
2.அதுவே (வலை) சாஸ்வதம்…! என எண்ணிப் பாதுகாவல் எனக்கொண்டு கிடந்து உறங்குகின்ற செயல் வேறு.

உலக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கி அகப்பட்ட தன்மையையே உறங்குகின்ற செயல் என்று உரைக்கின்றோம்.

உலகோதய நிலையாக… அதன் பிடிப்பில் அகப்பட்டுவிட்ட மனது என்ன செய்யும்…?
1.தீதெண்ண குணங்கள் என்னும் நச்சரவம் தீண்டிட வருகின்றதே என்று
2.சங்கட உணர்வுகளை மேன்மேலும் வளர்க்கும் நிலை… அந்த நச்சரவத்திற்கே பால் வார்த்திடும் செயலினை ஒத்தது.

அந்தத் தீதெண்ண நச்சரவத்தை வளர்த்த செயலில்… அது மீண்டும் தீண்டிட வருங்கால்… பாசமெனும் பிடிப்பின் நிலையை மனிதன் “உலகோதய நாட்டம்” என்று எங்ஙனம் பலப்படுத்துகின்றான் தெரியுமா…?

அதிபாசம் எனும் உணர்வுகளின் தன்மையை…
1.ஒளியும் காற்றும் உள் சென்றிடாத் தன்மைக்குப் பலப்படுத்திடும் சுவர் எடுத்து…
2.அதையே சுகம் என அதனுள் கடந்து உறங்கிட்டாலும்…
3.நச்சரவம் வாழ்ந்திடும் புற்று… “எது தனக்குப் பாதுகாவல்” என எண்ணி மனிதன் உலகோதய நாட்டத்தில் செயல் கொண்டிட்டானோ…
4.அந்த இடமே புற்றாகக் கிளைத்து… “நச்சுப்புற்றாக வளர்ந்து விடுகிறது…!”

ஆகவே… அதனுள் எழுகின்ற நச்சரவம் உன்னைத் தீண்டிடும் முன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்.
1.அந்த நிலையை விட்டு வெளிவந்து பார்
2.தெய்வத்தன்மை பெற்றிடும் சிறப்பு ஒன்று கிட்டிடும்.

நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் மண்ணினுள் வாசம் செய்யும் பிராணியான எலி போன்று (காம விகார குணங்கள்) அதி பாசம் உட் சென்றிடவே வழி அமைக்கும்….!

இதனை உணர்ந்து நீ நட…!

பாதுகாப்புக் கவசம்

பாதுகாப்புக் கவசம்

 

அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை…
1.இயற்கை எப்படி விளைந்தது…? என்றும்
2.இயற்கையில் இருந்து ஞானிகள் எவ்வாறு மீண்டனர்…? என்பதையும்
3.இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கப்படும் பொழுது நீங்கள் செவி வழி அதைக் கேட்டுக் கூர்ந்து கவனித்து
4.அந்த உணர்வினை நுகர்ந்தது அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலாக உருவாக்கி விடுகின்றது உயிர்.

ஆக இவை அனைத்தும் உங்கள் எதிர்காலத்தில் வரும் பகைமை உணர்வுகள் தாக்காது அதனின்று விடுபடும் அருள் ஒளியின் உணர்வினைச் சேர்த்தால் இது உங்களைப் பாதுகாக்கும் சேனாதிபதி என்ற நிலை பெறுகின்றது.

அத்தகைய நிலைகள்
1.உங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக உணர்வின் அணுக்களைப் பெறச் செய்ய
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கலந்து அதனை உருவாக்கினால் இந்த உணர்வின் எண்ணம் உங்களைக் காக்கும்.

அதுவே சேனாதிபதி.

எண்ணத்தின் தன்மை கொண்டு விண்ணின் நிலையை நீங்கள் நுகர்ந்தறிந்தால் உங்கள் உயிர் அதை உருவாக்கி விடுகின்றது. மனிதன் தான் இதைச் செய்ய முடியும்… பிரம்மாவைச் சிறை பிடித்தான்.

அருள் ஒளி பெறும் உணர்வை நாம் நுகர்ந்தால் உணர்வின் அறிவாக ஒளியின் சரீரமாக மாற்றும்… ஒளிச் சுடராக உருவாக்கும்.

ஆகவே காலத்தால் விளைந்த விஷத் தன்மைகளை மாற்றிச் சுவை கொண்டதாக… இருளற்ற ஒளியான நிலைகளை உருவாக்கும் உணர்வுகள் பெறுகின்றது. இதனை நாம் பெறும் மார்க்கம் இதுதான்.

ஆகவே பேரருள் பேரொளி பெற்ற அருள் உணர்வினை நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களில் இணைத்தால் பேரொளி என்று உருவாக்கி விடுகின்றது… உடலை ஒளியாக மாற்றி விடுகின்றது.

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்து அந்த அரும்பெரும் சக்தியை ஏங்கிப் பெற்று
2.நம் உடலில் பரப்பி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் பெறச் செய்வோம்.
3.பேரருள் பெறும் தன்மையாக… ஏகாந்த நிலையை அடைவோம்.

உயிரின் வேலை

உயிரின் வேலை

 

சூரியன் மரம் செடி கொடியில் விளையும் சத்தைத் தனக்குள் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதிலே விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது
1.எந்த மரத்தின் வித்தோ அந்த உணர்வின் துணை கொண்டு காற்றில் கலந்திருப்பதைக் கவர்ந்து
2.பூமியின் துணைகொண்டு அந்த மரமாகவும் அந்தச் செடியாகவும் விளைகின்றது.

உதாரணமாக வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் நம் உயிர் அதை ஜீவ அணுவாக மாற்றி மனித உடலின் இனத்திற்குள் சேர்த்து அதைக் கருவாக உருவாக்கி விடுகின்றது.

இருப்பினும் கோழியோ தன் இனப்பெருக்கத்தில் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலையில்… அதனதன் நிறங்கள் அங்கே குஞ்சுகளாக வருகின்றது.

ஆனால் மனிதர்கள் நாம் நுகர்ந்த அணுவின் தன்மையோ (வேதனை) விஷத்தின் தன்மை கொண்ட அணு முட்டைகளாக விளைந்து விடுகின்றது. இரத்தங்களிலே அது சுழன்று வந்தாலும் குறித்த காலங்களில்…
1.கோழி அடைகாத்த முட்டை குஞ்சான பின்… குஞ்சு முட்டையிலிருந்து வெளி வந்து அது தன் உணவை எப்படித் தேடச் செல்கின்றதோ
2.இதைப் போல நம் இரத்தத்தில் உருவான அந்த அணுக்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
3.உடலில் உள்ள அணுக்களுக்கு உணவாக எடுத்துச் செல்கின்றது.

அணுக்களுக்கு இரத்தம் உணவானாலும் அதன் உணர்வின் சத்து கலந்து நம் உடலுக்குள் அணுவின் தன்மை முழுமை அடைகின்றது.
1.எந்த விஷத்தின் தன்மை கொண்டு அது உருவானதோ எந்த உடலில் இருந்து அது உருவானதோ
2.அதனின் உணர்ச்சியைத் தூண்டிய பின் அந்த உணர்வுகள் கண்ணின் நினைவலைகளுக்கு வரும் உயிருக்கும் வரும்
3.இந்த உணர்வுகள் உணர்த்தியபின் கண்ணின் நினைவாற்றல் வேதனைப்பட்டோரை நினைக்கச் சொல்லும்.
4.அந்த உணர்வினை நுகரும்… உடலுக்குள் அந்த அணுக்களுக்கு இதை உணவாக கொடுக்கும்.

உயிரின் வேலை இது…!

இந்த உணர்ச்சிகள் கிளர்ந்த பின் எந்தக் கண்ணால் பார்த்துப் பதிவானதோ அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு அந்த உண்மையான உணர்வை எடுத்து அது உணவாகக் கொடுக்கும்.

வேதனைப்படுகின்றான் என்று உணர்த்தினாலும் வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்த பின் வேதனை உணர்ச்சியைத் தூண்டும் பொழுது
1.உயிரின் உணர்ச்சிகள் கண்ணின் அலையில் அனுப்புகின்றது. அந்த உணர்வை ஈர்க்கச் செய்கின்றது.
2.அந்த உண்மையான உணர்வைச் சுவாசிக்கச் செய்கின்றது. நமது இரத்த நாளங்களிலே கலக்கச் செய்கின்றது.
3.இப்படி அந்த வேதனைப்படுத்தும் அணுவிற்கு உணவாகக் கொடுக்கின்றது.

இயற்கையின் நியதிகள் இது.

ஆகையினால் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.
1.உடலை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சத்தை உணவாகக் கொடுத்து
2.ஒளியான அணுக்களாக உருவாக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும்படி சொல்கிறோம்.

ஞானிகள் காட்டிய நெறி

ஞானிகள் காட்டிய நெறி

 

நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் வெறுப்பு வேதனை சலிப்பு, சஞ்சலம் நம் உடலுக்குள் நுகர்ந்த இவை அனைத்தும் வினையாகச் சேர்த்து அந்த உணர்வுகள் மாற்றமடைகின்றது. அப்படி மாறாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.

அதற்குத்தான் விநாயகருக்கு அருகிலே வேம்பையும் அரசையும் வைத்தது. நாம் காலையிலிருந்து நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று சதாசிவமாகிக் கொண்டே உள்ளது.

ஆனால் நல்லதைத் தான் எண்ணுகின்றோம்.
1.ஒருவன் தவறு செய்கின்றான் என்றால்
2.அதை நுகர்ந்து நாம் வேதனைப்படுகின்றோம்.

குழந்தைகளை நல்ல முறையிலே வளர்க்க வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்… வேண்டிய உபகாரத்தையும் செய்கின்றோம்.
1.ஆனால் சொன்னபடி அவன் கேட்கவில்லை என்றால் வேதனையைத் தான் நுகர்கின்றோம்.
2..நம் நல்ல குணங்கள் அனைத்தும் வேதனை கலந்து விடுகின்றது

ஒருவருக்குக் கடனைக் கொடுத்து உதவி செய்கின்றோம் குறித்த காலத்திற்குள்
1.கொடுத்த பணம் வரவில்லை என்றால்
2.“நான் கொடுத்தேன் அவர் திரும்பத் தரவில்லையே…” என்று வேதனைப்படுகின்றோம்.

வியாபாரம் நன்றாகச் செழித்து வளரும் என்று எண்ணுகின்றோம். புதிதாகக் கடை வைக்கும் பொழுது செழித்து வருகின்றது. அடுத்து அது குறைந்தால் நாம் வாங்கியவர்களுக்கு பணத்தைக் கொடுக்க முடியவில்லை மற்ற நிலைகளைச் செயல்படுத்த முடியவில்லை வட்டி கட்ட முடியவில்லை என்றெல்லாம் எத்தனையோ எண்ணி வேதனைப்படுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் எந்த நல்லது பெற வேண்டும் என்றாலும் இந்த வேதனைகளைச் சுவாசிக்கும் போது அது அனைத்தும் விஷம். ஆக இந்த உணர்வுகள் வினையாக வளர்கின்றது.

இப்படி வளர்ந்து விட்டால் வேதனை வேதனை என்ற உணர்வு வரும் பொழுது கை கால் குடைச்சல் மூட்டு வலி இதைப் போன்ற உணர்வு நம் உறுப்புகளில் விளையத் தொடங்கி விடுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் இப்படி வருகிறது. இதை நாம் துடைக்க முடிகின்றதா…? துடைக்க வேண்டுமா இல்லையா…?

துணியில் அழுக்குப்பட்டால் துவைத்து விடுகின்றோம் கையிலே அழுக்குப் பட்டால் கழுவி விட்டுச் சாப்பிடுகிறோம். ஆனால் நம் ஆன்மாவில் பட்ட அழுக்கினைத் துடைக்க வேண்டுமா இல்லையா…!

1.அதை நாம் எப்படிச் செய்ய வேண்டும்…?
2.எதன் வழி செயல்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான்
3.வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் விநாயகர் அருகே வைத்தது.

மனிதனின் வாழ்க்கையில் நல்லதைச் செய்தாலும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு கசந்த வாழ்க்கையாக மாற்றி விடுகின்றது. அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.

ஒருவருக்கு நாம் பணத்தைக் கொடுத்திருக்கின்றோம்… பணம் வரவில்லை அப்பொழுது வேதனைப்படுகின்றோம். அந்த வேதனையை எண்ணும் பொழுது அது நம் உடல் முழுவதும் பரவுகின்றது.

நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டேனே… பணத்தை அவர் கொடுக்கவில்லையே என்று சோர்வடைகின்றோம். அதே சமயத்தில் “என்னால் முடியவில்லையே நாளைக்கு என்ன செய்யப் போகின்றேன்…?” என்று எண்ணும் பொழுது கோபப்பட்டு விடுகின்றோம்.

வேதனையும் கோபமும் வரும் பொழுது அதனின் உணர்ச்சியின் அணுக்கள் விளைந்து விட்டால் அணுத்தன்மை ஆன பின் உடலிலே மூட்டுக்கு மூட்டு குத்தலும் குடைச்சலும் வந்துவிடுகிறது.

கார உணர்வுகளும் வேதனை உணர்வுகளும் அந்த விஷமான உணர்வுகள் சாடப்படும் பொழுது நம்மை அறியாமலே அது இயக்கத் தொடங்கி விடுகின்றது. நாம் தவறு செய்தோமா…? இல்லை.

இத்தகைய நிலை வராது தடுக்க “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பருகுதல் வேண்டும்.

அதை அதிகாலையில் நாம் பெறுவதற்குத் தான் வட மேற்கில் விநாயகரை வைத்து வட கிழக்காக நம்மைப் பார்க்கும்படி செய்து அருள் உணர்வுகளை அதிகாலையிலேயே நம்மைப் பருகும்படி செய்தார்கள்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரழிவு பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படித் தீமையிலிருந்து நாம் விடுபட்டு அருள் வழி வாழும் நிலையை நெறிப்படுத்திச் சென்றார்கள் ஞானிகள்.

விஷ்ணு தனுசு

விஷ்ணு தனுசு

 

பரசுராம்… மனித உடலைப் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றினாலும்… ஒருவன் தீமையான இடைஞ்சல்களைச் செயல்படுத்தும் போது அதை நுகர்ந்த பின்… அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அது அணுத் தன்மையாக ஆகி விட்டால் இதில் விளைந்த உணர்வுகள் என்ன செய்யும்…?

ஒருவர் மீது எதிரியாகி விட்டால் எப்படியும் தாக்க வேண்டும் என்று தான் எண்ணம் வரும் அவரை வீழ்த்த வேண்டும்… தன்னைக் காக்க வேண்டும் என்று சமப்படுத்தும் நிலை வரும் பொழுது பரசுராமனுக்கும் ராமனுக்கும் போர் முறை வருகின்றது.

ஆனாலும் அதிலே ராமன் தான் ஜெயிக்கின்றான்.

1.காரணம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நாம் நுகர்ந்து
2.இந்த உணர்வினைத் தனக்குள் எடுத்து உருவாக்கி அதைத் தனுசாகத் தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அந்த வேதனையான உணர்வுகளைத் தாக்கி அதை அழிக்கின்றது.

அதைத் தான் ராமன் விஷ்ணு தனுசை எடுக்கின்றான்
1.உயிரின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தினை எண்ணித்
2.தன் உடலுக்குள் இருக்கும் தீமைகளை மாற்றும் சக்தி பெறுகின்றது என்று காட்டுகின்றார்கள்.

தீமையை அப்படியே விட்டுவிட்டால் அந்த உணர்வின் தன்மை ஆக்கிரமிப்பு “வாலி என்ற உனர்வு நமக்குள் வந்து” தீமை என்ற நிலைகள் அந்த வீரிய உணர்வு கொண்டு தனுசாக மாறி நமக்குள் தீங்கு செய்யும் எண்ணங்களையே உருவாக்குகின்றது.

அதனால் தான் அதைச் சிவ தனுசு என்று காரணப்பெயர் வைத்து சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள
1.தனது வாழ்க்கையில் எவ்வாறு அது நம்மை இயக்குகின்றது எப்படி இயக்குகின்றது…?
2.நாம் இயங்குகின்றோமா…? அல்லது நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா…? என்று உணர்த்துகிறார்கள்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் கார்த்திகேயா…! தீமை என்று தெரிந்து கொண்டாலும் அது உடலுக்குள் புகாது சேனாதிபதியாக… பாதுகாப்பாக இருக்கும் இந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

தீமைகளை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து “அதை உயிரிலே சேர்க்கப்படும் போது தான்” விஷ்ணு தனுசாக மாறுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் வலிமை கொண்டு வரும் பொழுது
1.நம் உடலில் தீங்கு செய்யும் இந்த அணுக்களுக்குள் ஊடுருவி
2.தீங்கான உணர்வைக் கவராதபடி அதை அடக்குகின்றது.

விஷ்ணு தனுசு கொண்டே தீமை என்ற உணர்வினை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும் என்பதைத் தான் இராமாயணக் காவியங்கள் உணர்த்துகின்றது.

அதாவது வாலி (தீமைகளை) என்ற நிலையைக் குகையிலிருந்து வெளி வராதபடி அடைத்து “அதனின் செயலைத் தடுக்க வேண்டும்” என்று காட்டுகின்றனர்.

வட துருவம் – ஈஸ்வரன் – புருவ மத்தி

வட துருவம் – ஈஸ்வரன் – புருவ மத்தி

 

1.தெய்வ சக்தி பெறுவதும் மனிதன் தான்.
2.பேயாக… புழுவாகச் செல்லுபவனும் மனிதன் தான்.
3.மனித எண்ணத்தில் இருந்து தான் மனிதக் கருவின் வளர்ச்சி வாழ்க்கை மண்டலங்களில் வேரூன்றுகின்றது.

நம் பூமியின் ஈர்ப்புக் குணமும் வளர்ச்சி நிலையும் மனித குணத்தின் எண்ணச் செயலுக்குகந்ததாக உள்ளதினால்தான் மனிதன் இங்கு வாழ்கின்றான்.

மனிதன் காணாத அறியாத பல உயிரினங்கள் இப்பூமியில் வாழ்கின்றதென்றாலும் மனிதனின் தொடரிலிருந்து சென்ற வகைகள்தான் அவைகளும்.

இயற்கையில் பல மாற்றங்கள் இருந்தாலும் ஒன்றை ஒட்டி ஒன்று வளர்ந்து பலவாகிச் செயல்படும் நம் பூமியிலே பூமியின் இயற்கைத் தன்மை பலவாக உள்ளதற்கு இப்பூமி ஈர்க்கும் நிலை கொண்டு மனிதனின் தாவரங்களின் எண்ண சுவாச ஈர்ப்பின் நிலை வளர்ச்சி எப்படி மனிதனுக்கு உட்பட்டு வெளிப்படுகின்றதோ அதைப் போன்றுதான் பூமியின் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அந்தந்த இடங்களில் ஏற்படும் குண சீதோஷ்ண-தட்ப வெட்ப-நிலை என்று பல தடவை முந்தைய நூல்களில் உணர்த்தியுள்ளேன்.

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால்
1.கதையாகப் படைக்கப்பட்ட்தன் உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால்
2.“அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வட திசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல் புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்து விட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்…?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

1.மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால்
2.வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.