இன்று நல்ல நினைவு இருக்கும் போதே அருள் உணர்வை வளர்க்கும் பருவத்திற்கு நாம் வர வேண்டும்

இன்று நல்ல நினைவு இருக்கும் போதே அருள் உணர்வை வளர்க்கும் பருவத்திற்கு நாம் வர வேண்டும்

 

இந்த மனித உடலில் நாம் வாழும் இந்தச் சிறிது காலத்திற்குள்ளேயே நாம் ஒளியான நிலைகள் பெற வேண்டும். ஏனென்றால் இந்த உடலில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது தெரிகின்றது.

அதற்குள் எத்தனையோ நிலைகளில் நாம் ஆசை வைக்கிறோம். எல்லாவற்றையும் செலவழிக்கின்றோம்… ஆடம்பரத்திற்கும் செலவழிக்கின்றோம்.
1.ஆனால் எதுவும் நிற்கின்றதா…?
2.செல்வத்தைச் சம்பாரித்து அழகாக வீட்டைக் கட்டி உடலையும் அழகு படுத்தினாலும்
3.நோய் என்ற நிலை வந்து விட்டால் அது எல்லாவற்றையும் தூக்கி எறி…! என்று சொல்கின்றோம்.
4.அந்த நேரத்தில் நல்லதை எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறோம் அல்லவா.

இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். யாராவது ஒரு சொல் தவறாகக் கேவலமாக சொல்லிவிட்டால் உடனே மனது சோர்வடைந்து விடுகின்றது.

என்னைக் கேவலமாகப் பேசினார்கள்… கேவலமாகப் பேசினார்கள்…! என்று வேதனை வருகின்றது. இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் அவர் மீது வெறுப்பும்… அவர் என்னென்ன சொன்னார்களோ அதை எல்லாம் எடுத்து இந்த உடலில் விளைய வைக்கத் தொடங்குகின்றோம்.

அதாவது… கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்பது போல் அவர்கள் உணர்வு இங்கே உருவாகிறது.

1.அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகின்றார்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று சொன்னால் அந்த உணர்வு நம்மை இயக்காது.

இப்படிப்பட்ட உணர்வை எடுத்து நாம் அதைத் தடுத்துப் பழக வேண்டும். அதனால்தான் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்று சொல்கின்றோம்.

அதைத் தடுக்கக்கூடிய வல்லமை எப்படிப் பெற வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்திகளை… அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அது பாதுகாப்பாக வரும்.
1.அந்த மகரிஷியின் உணர்வுகளைப் புருவ மத்தியில் நம் உயிருடன் இணைக்கப் பழக வேண்டும்.
2.அங்கே உருவாக்கும் திறனாக அது அமையும்… அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.
3.அருள் ஒளியின் உணர்வை அணுக்களாக நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கின்றது.

வேதனையான உணர்வை நுகர்ந்து விட்டாலோ தீமையின் விளைவாகவே நம்மை மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருள் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிப் பெருக்கிக் கொண்டு பெரிய தத்துவ ஞானியாக வளர வேண்டும். எல்லோரையும் காத்திடும் சக்திகளாக நாம் வரவேண்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குள் இந்த உணர்வைப் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். படித்துக் கொண்டிருப்பவர்கள் ஆழமாகப் பதிவாக்கி இந்த ஆற்றலை நீங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் பார்வை இருளை அகற்றும் உயர்ந்த சக்தியாக வளரட்டும்.
1.அருள் ஞானத்தைப் பெறும் கருவின் தன்மை உருவாக்க வேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

 

மற்ற சூரியக் குடும்பத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்.
1.நம்மைக் காட்டிலும் வளர்ச்சி இல்லாத மனிதர்களும் உண்டு… வளர்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
2.இங்கே நமக்கு முடி உண்டு… முடி இல்லாது மொட்டைத் தலையாக உள்ளவர்களும் சூரியக் குடும்பங்களில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் ஒரு பூமி இருக்கிறது என்றால் இரண்டு பூமி இருக்கக்கூடிய குடும்பங்களும் உண்டு. ஒன்று வளர்ச்சி உள்ளதாகவும் உண்டு… சிலது வளர்ச்சி இல்லாததும் உண்டு. இரட்டைக் குழந்தை என்று சொல்கிறோம் அல்லவா அது போல…!

இதையெல்லாம் விரிவாக்கமாக குருநாதர் ஒரு நாள் காட்டுகின்றார்.

சூரியக் குடும்பத்திற்குள் எல்லா இடத்திற்கும் பயணம் செய்வது வருடக் கணக்காகும் என்று சொல்கின்றார்கள். அகண்ட நிலையில் 2000 சூரியக் குடும்பத்திற்கும் போக வேண்டுமென்றால் எப்படி இருக்கும்…?

2000 சூரியக் குடும்பம் என்பது அகண்ட அண்டமாக இருக்கிறது, இதைக் காட்டிலும் எத்தனையோ அண்டங்கள் இருக்கின்றது.

அதனுடைய விரிவடைந்த நிலைகளை நீங்கள் பார்க்கப் போனால் மனிதனுக்கு ஆயுள் பத்தாது. ஆயுள் பத்தாது என்று மட்டுமல்ல… போகவும் முடியாது.
1.ஆனால் போக வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில்
2.இந்த அருள் உணர்வுகளைப் பெற்றால் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கும்.

வான்வெளியில் நட்சத்திரங்களாக நம் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பில் உள்ளது தான்.

நம் சூரியனைக் காட்டிலும் வலுவடைந்த பெரிய அளவில் உள்ள சூரியனும் சில பிரபஞ்சத்தில் இருக்கின்றது. ஒரே அளவாக இல்லை.

நீங்கள் ஒரு சமயம் இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால்
1.இரவிலே படுத்திருக்கும் பொழுது உங்களை மேலே அழைத்துச் செல்லும்.
2.எந்த உணர்வு பதிவானதோ ஆன்மாவிலே கலக்கும். பறப்பது போல் இருக்கும்.

ஒரு சிலர் பயந்து போய் எங்கேயோ போய் விடுவோமோ என்று எண்ணிப் பிடித்துக் கொண்டவர்களும் உண்டு. இதெல்லாம் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் இயக்கப்படும் போது
1.உங்கள் ஆன்மா அதனுடன் தொடர்பு கொண்டு வட்டமிடும்.
2.அதனுடைய உணர்வுகள் அறிவாக இங்கே உங்களுக்குள் வளரும்.
3.ஒரு விழுது பாய்ந்து தான் தாவர இனங்களுக்குள் வளர்ச்சி அடைகிறது…
4.அது போல் அகண்ட அண்ட்த்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்

நீங்கள் இரவிலே கனவு காண்கிறீர்கள் என்றாலும் மற்ற மனிதர்கள் உடலிலிருந்து வரக்கூடியது… மற்றவர் சொல்லும் பொழுது அதைக் கேட்டிருந்தால் இரவில் உயிரிலே படும்.

இந்த உணர்வு அங்கே அழைத்துச் செல்லும். எங்கேயோ இருக்கின்ற மாதிரி இருக்கும்… பள்ளத்திலேயோ மேட்டிலேயோ மலை மீதோ எங்கெங்கோ செல்வதாகத் தெரியும்.

அந்தந்த பகுதியில் எந்தெந்த மனிதனுடைய உணர்வு விளைந்து அந்த நினைவாற்றல் இருந்ததோ அப்படி இயக்கப்பட்டு கனவுகளாக வருவதும் உண்டு.

இது எப்படியோ அப்படித்தான்…
1.அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையப்படும் போது
2.அது உங்களை அங்கே அவர்கள் வாழும் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லும்…!

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

 

“அருட்பெரும் ஜோதி நீ… தனிப்பெரும் கருணை நீ…” என்று உயிருடன் ஒன்றினார் இராமலிங்க அடிகள். அருள் ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய ஆன்மா பல அற்புதங்களைச் செய்கிறது… அவருக்கே தெரியாமல் தான் இயங்குகிறது. அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது ஒளியாகின்றது.

1.”அன்பே சிவம்…” என்ற அரவணைக்கும் உணர்வுகள் எனக்குள் அன்பாகி உடலில் சிவமாக வேண்டும்.
2.எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டால் அந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை
3.தனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை ஒளியாக மாறும்.

அது தான் அருட்பெருஞ்ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ.

பிறர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சந்தோஷத்தை எனக்குள் உருவாக்கி விட்டால் இருள் இங்கே வருமோ…? ஆக… இருண்ட நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்ற நிலையைத் தான் அவர் உணர்த்துகின்றார்.

அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ. எண்ணியதைத் தான் உருவாக்குகின்றாய் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! யார்…? நம் உயிர் தான்.

பல விதமான உணர்வு அமைந்துள்ள கோட்டை இது. வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்துத் தான் இந்த உடல் உருவானது… கந்தக்கோட்டம்.
2.உயிருடன் எண்ணப்படும் பொழுது கூர்மையின் நிலைகளில் அதை உணர்த்துகின்றது.
3.அருட்பெரும் ஜோதி நீ தனி பெரும் கருணை அங்கே அமர்ந்து துடிப்பாகி உயிரின் துடிப்பாகி
4.கூர்மையாக உணர்வின் தன்மை அறியச் செய்து ஒவ்வொன்றையும் ஒளியாக எனக்குள் உணர்த்துகின்றாய்
5.அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய் என்றார்.

உயிர் தான் அங்கே இருந்து இவ்வாறு செயலாக்குகின்றது.

இராமலிங்க அடிகள் உயிருடன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக ஜோதியாக… விண்ணிலே இருக்கின்றார். உடல் பற்றை அவர் வைக்கவில்லை. இந்த உடலுடன் வந்தது உடலுடனே போகட்டும் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி அவர் விண் சென்று விட்டார்.

தனக்குள் தீமை வராது தடுக்கும் சேனாதிபதி… ஆறாவது அறிவு கார்த்திகேயா. பல கோடிச் சரீரங்களில் தீமைகளை உணர்ந்து உணர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.தீமையிலிருந்து விடுபடச் செய்து அனைத்தையும் அறிந்திடும் அறிவாக மனித உடலில் உள்ளது.
2.அது தான் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…! எப்பொழுதுமே ஜோதியாக இருக்கின்றாய் தனிப்பெரும் கருணையாக இருந்து என்னை இயக்குகின்றாய். ஆக எண்ணியதைத் தான் அது உருவாக்குகின்றது.

1.யாரிடமும் நான் யாசிக்கக் கூடாது… யாருக்கும் இல்லை என்றும் சொல்லக்கூடாது,
2.அருள் தாகத்துடன் வருபவருக்கு அந்த அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும்
3.இருளை அகற்ற வேண்டும் என்பது தான் அவருடைய தத்துவம்…!

யாம் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதெல்லாம் அந்த அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான்…! ஏங்கி வரக்கூடியவர்களுக்கு அந்த அணுக்களுக்கு அந்த ஞானத்தை ஊட்டுகின்றோம். ஏங்கி வருவோர் தான் இங்கே வருவார்கள்.

பசியைத் தீர்க்கும் போது அருள் ஒளியாக அங்கே வளர்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்காக…” இந்த உணர்வுகளை உங்களுக்குப் போதிப்பது.
1.மற்ற எண்ணங்களைத் திருப்பாதபடி மற்ற உணர்வுகளை எல்லாம் ஒடுங்கச் செய்து சொர்க்கலோகத்திற்கே அழைத்துச் செல்வது.
2.மற்ற உணர்வை மறக்கச் செய்வதற்குத் தான் அப்படிப் பேசுவது.

எனக்குள்ளும் அந்த அருள் வளர்கின்றது… இந்த உணர்வை நீங்கள் கேட்கப்படும் பொழுது அருளானந்தம் உங்களுக்குக் கிடைக்கிறது. தீமையிலிருந்து நீங்கள் நிச்சயம் விடுபடுகின்றீர்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்

 

நீங்கள் ஏதேனும் வேலையாக வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள் அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால்… அது சமயம்
1.அகஸ்திய மாமகரிஷிகளையும்
2.அவர் துருவ மகரிஷியான நிலையையும்
3.துருவ நட்சத்திரமான நிலையையும் இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.

அதனின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணியபின் உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.

இந்த முறையில் நீங்கள் பதிவு செய்யும் ஞான வித்துக்கள் உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று… நீங்கள் எதை எண்ணிப் பதிவு செய்தீர்களோ அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை… அத்தகைய உணர்வின் அணுக்களை இரத்த நாளங்களில் பெருக்குகின்றது.

1.முதலில் கரு முட்டையாகின்றது.
2.பின் அதனின் உணர்வின் தன்மையை எண்ண எண்ண அவைகள் அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.

உதாரணமாக… கோழி முட்டையிட்ட பின் அதை அடைகாத்து அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின் அந்த வெப்பத்தின் துடிப்பு கொண்டு கருவின் துணை கொண்டு குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக வெளி வந்த பின் தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.

இதைப் போன்று
1.இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களை நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும் உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது.
2.அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களில் நினைவுபடுத்தும் பொழுது அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.

அதாவது… நீங்கள் இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… அது உங்களுக்குள் “அடைகாக்கப்படுவது…” போன்றதாகி விடுகின்றது.

கோழி தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து அடைகாக்கின்றது.

அதைப் போன்று நீங்கள் எந்தத் தொழிலுக்குப் போவதாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்
1.அடிக்கடி நினைவுபடுத்தி அந்தச் சக்தியை நீங்கள் பெறும் போது அடைகாப்பது போன்று ஆகி
2. மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்க்கும் திறந் பெறுகின்றீர்கள்.

கோழி தான் இரை தேடும் பொழுது தன் குஞ்சுகளைக் கூவி அழைத்துத்தான் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கிறது.

அதைப் போன்று நமக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் அணுக் கருவாகி விட்டால்
1.இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது
2.நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
3.கண்கள் வழியும் காதுகள் வழியும் உடல் வழியும் நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் கவர்ந்து
4.நமது உடலுக்குள் பரவச் செய்து அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.

நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால் அது நமக்குள் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் “மாமகரிஷி அகஸ்தியன்…” சென்ற பாதையில் செல்லும்.

நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு வெறுப்புகளை நுகர்கின்றோமோ அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம்.

ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில் “ஊழ்வினை…” என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கருவாக உருப்பெற்றுவிடுகின்றது. இப்படிப் பதிவாகி… பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால் அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம்.

அப்படி நுகரும் சக்தி பெற்றபின் அந்த உணர்வுகளை நமது உயிர் உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.

அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு வீரியம் ஊட்டுகின்றது.

1.வேதனைப்படுவோர் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் முதலில் சில காலம் தெரியாது.
2.இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நுகர்ந்தது அடைகாப்பது போன்று அந்த அணுக்கருக்கள் வளர்ந்து விட்டால்
3.குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது தாய் கோழி கூற்று பரப்பித் தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று
4.நமது உயிர் உணர்வின் ஒலி அலைகளை எழுப்பிச் நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு கண்களுக்கும் செவிகளுக்கும் மூக்கிற்கும் உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி அதன் வழி சுவாசிக்கச் செய்து அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.

காலையில் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுதோ தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால் அதை அடைகாத்தது போன்றதாகின்றது.

அவ்வாறு அடைகாத்து அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது
1.நம்மையறியாமலே நமக்குள் அந்த மகரிஷிகள் பால் எண்ணங்கள் செல்லும்.
2.இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் நாம் எண்ணுவதற்கு முன்பே அந்த உணர்வைக் கூட்டி
3.அருள் உணர்வுகளைப் பெறும் அந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ண எண்ண அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து (திரும்பத் திரும்ப நுகரும் உணர்வுகள்) அந்தக் கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் நம்முள் குஞ்சுகளானாலும்
1.அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் போது இவைகளெல்லாம் கருக்களாகின்றன.
2.பின் நினைவாக்கப்படும் பொழுது அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.

இப்படி நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்… ஒவ்வொரு குணத்திலும்… ஒவ்வொரு உணர்விலும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும் (இது முக்கியமானது).

அந்த மகரிஷிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த அரும் பெரும் சக்திகளை நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத்தான் இதை உபதேசிப்பது
2.அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்கு எமது அருளாசிகள்.

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்

 

பல நிலைகள் நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிறர் நம்முடன் சண்டை போட்ட நினைவுகளை நாம் கொண்டு வந்தவுடன் அன்று நமக்கு அஜீரணமாகின்றது… அல்லது சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாகச் செயல்படுத்துவதில்லை.

ஏனென்றால் நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகி இருக்கின்றது.
1.நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ
2.அந்த உணர்வான செல்கள் அனைத்துமே ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது
3.அதற்குத் தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும் நம் சுவாசம் இயங்குவதும் குடல் இயங்குவதும் நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.

இப்பொழுது கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால் உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும். பயம் கலந்த கோபத்தை உண்டாக்கப்படும் போதும்… சில்… என்ற நிலை ஏற்படும்படி எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும் நம் தலைமுடி கிர்… என்று மேலே எழுந்துவிடும்.

1.இவையெல்லாம் இந்த உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான்.
2.நாம் அல்ல… நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

இப்படித்தான் இயற்கையிலேயே நம்மை அறியாமலேயே பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும்.

அதற்கு என்ன செய்வது…?

மெய் ஞானிகள் அவர்கள் இங்கே வாழ்ந்த காலங்களில் விண்ணுலகச் சக்தியைப் பெற்று வளர்த்து… அவர்கள் உடலில் அத்தகைய ஆற்றல்களைப் பெற்றுத் தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.

1.நமக்குக் கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் துடிப்போம்.
2.ஆனால் ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால் அது அவர்களுக்குள் அடங்கி அதற்குண்டான ஞானத்தை ஊட்டி
3.எந்தச் செயல் வேண்டுமோ… அந்தச் செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.

காரமான உணர்வுகள் தூண்டப்பட்டால் அந்தக் காரமான நிலைகளிலேயே நம்மைப் பேசும்படிச் செய்து பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால் அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
1.அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்
2.அது அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை.

எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும் அந்த உணர்ச்சிகள் தூண்டா வண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி
1.அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வை பட்டவுடன்
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால் ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். நம் மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார் என்றால் “அந்தச் சொல் வெறும் வார்த்தை தான்…”

அதை நமக்குச் சொன்னவுடன் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அதை அடக்க முடியவில்லை. “இவ்வாறு சொல்கிறானே…!” என்று பதட்டமும் பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கித் தவறு செய்யும் நிலைகளுக்கு… “எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது…”

“இல்லாததைச் சொல்கிறான்…!” என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ் நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி இழந்து அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி நம் தசைகளாக மாறி நாளடைவில் வலியாகவோ வேதனையாகவோ வந்து விடுகின்றது.

1.மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளையும் அடக்க
2.விண்ணின் ஆற்றல்களைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.
அவர்கள் எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும் பேச்சாலும், சொல்லாலும் அவர்கள் வெளிப்படுத்தினார்களோ அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம் ஆற்றல் மிக்க உணர்வின் சக்தி கொண்ட வெப்பகாந்தங்கள் தாக்கியவுடன் அது அழிந்துவிடும்.
அந்த உணர்வுகள் இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்து காரமாக உருப்பெற்று மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.

ஆனால் மெய் ஞானியின் சக்திகளை அதை மற்ற சாதாரணமான ஒரு அணுவின் தன்மை புவிக்குள் வருவதை அதைச் செயலிழக்கச் செய்ய முடியாது.

ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை மனிதன் சாதாரணமாக எடுக்க முடியாது.

நினைத்தவுடன் நீங்கள் எடுக்கும் ஆத்ம சுத்திக்கு
1.‘’ஓ…ம் ஈஸ்வரா’…’ என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.அந்த அருள் சக்தியை நீங்கள் உடனே பெற முடியும் என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.

காரணம்… அவர்கள் எடுத்துக் கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ அதை…
1.அவருடைய நிலைகளை உபதேசித்து உங்கள் உணர்வுக்குள் பதியச் செய்யும் போது
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.

அந்த வித்திற்கு நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்த வித்திற்குச் சக்தி கூடும். அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள் காந்தத்தின் பவர் கூடினால்தான் அந்த ஞானியருடைய எண்ண அலைகளுக்குச் சக்தி கூடுகின்றது.

‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணி நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்த முடியும்.
1.அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்திச் சர்வ தீமைகளையும் நீக்கி
2.அனைத்தையும் ஒளியாக மாற்றி நாம் மகிழ்ந்து வாழ முடியும்,

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவருமே பெற முடியும்.

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

 

தியானத்தின் சக்தி கொண்டு இந்த உடலை நலமாக்கி நலமாக்கி நாம் வாழ்ந்து வந்தாலும் “எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

உடல் நலத்திற்காக நாம் எண்ணினாலும்
1.என்றும் நீடித்த ஆயுளாக இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.உடல் வேதனைகளை நீக்கிவிட்டு சிறிது காலமாவது மகிழ்ந்து வாழ முடியும்.
3.அந்தக் குறுகிய காலத்திலே உயர்ந்த சக்தியினைப் பெற்று வெளிவரும் பொழுது
4.எதைப் பற்றுடன் பற்றி நாம் அந்தச் சக்தியை எடுத்து வளர்த்தோமோ அங்கே செல்ல முடியும்.

அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால்… தன் வாழ்க்கைக்கு இந்த உடலுக்கு யார் உதவி செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தினால் அந்த உடலுக்குள் தான் ஆன்மா செல்லும்.

சொத்தைச் சம்பாதித்து வைத்தேன்… என் பிள்ளை எப்படிச் சமாளிக்க போகின்றானோ…? என்று தன் பையன் மீது குறை கூறி எண்ணத்தைச் செலுத்தினால் அங்கே தான் செல்லும்.

இப்படிப் பல நிலைகள் கொண்டு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்கி விடுகிறது. அங்கே சென்றாலும் நோயைத்தான் உருவாக்குவோம்… அடுத்து மனிதனல்லாத உருவை உயிர் உருவாக்கும்.

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

விஷத்தின் தன்மை எதிலே ஊடுருகின்றதோ அதன் நிலையாகத் தான் அது மாற்றும். ஆனால்
1.விஷத்தை வென்றவன் அருள் ஞானி.
2.அந்த உணர்வினை எடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் பாய்ச்சப்படும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.

பாம்பினங்கள் தனக்குள் இருக்கும் விஷத்தினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதில் உள்ள விஷத்தினையும் தனக்குள் எடுத்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போலத் தான் எத்தகைய நஞ்சையும் அடக்க வல்லமை பெற்றவன்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவன் சப்தரிஷி.

“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று நம் எண்ணத்தைக் கூட்ட வேண்டும்.

எத்தகைய துயரைக் கேட்டறிந்தாலும் சலிப்படைந்தாலும் சங்கடப்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அங்கிருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று நாம் சொல்லி விட வேண்டும்.

நாம் சொல்வதை யார் எண்ணி எடுக்கின்றார்களோ அவர்களுடைய கஷ்டங்களும் நிச்சயம் நீங்குகின்றது. அப்போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.
1.உங்களுடைய வாக்கு அங்கே செயலாகும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ முடியும்… உணர்வுகள் ஒளியாக மாறுகிறது.

ஆனால் நாம் சொல்லியும் கேட்கவில்லையே என்று அவர்கள் உணர்வை நுகர்ந்து மனதை இருளச் செய்து விடக்கூடாது.
1.எப்படியும் அந்த அருள் உணர்வைப் பெறுவார்கள்…
2.வாழ்க்கையில் தெளிந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

 

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நாம் எடுத்து வளர்க்கின்றோம். அதே சமயத்தில் குல வழிகளில் தான் (முன்னோர்கள்) நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

கூட்டுத் தியானங்களின் மூலமாக எல்லோருடைய எண்ணங்களும் பதிந்து இருப்பதால் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்கின்றோம்.

1.இந்த வலுவைச் சேர்த்துக் கொண்ட பின் முன்னோர்கள் ஆன்மாக்களின் முகப்பில் இந்தச் சக்தியை இணைக்கின்றோம்.
2.காரணம் அவருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றது… அவரின் எண்ணங்கள் கலந்தே உறவாடுகின்றோம்.
3.அதன் துணை கொண்டு அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் அலைவரிசையை வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் இன்று கண்டுணர்கின்றார்கள்… அதைக் கவர்கின்றார்கள்.

வெறும் ராக்கெட்டை முதலிலே விண்ணுக்கு அனுப்பி ஒவ்வொரு கோளுடைய சுழற்சிகளையும் அதனுடைய திசைகளையும் எடுத்துக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றார்கள்.

அப்படிப் பதிவு செய்து கொண்ட பின் அதை வைத்துக் கொண்டு அடுத்து அந்தக் கோளுக்கு ராக்கெட்டை அனுப்புகின்றார்கள். கோளின் உணர்வை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.
1.ராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின்… கம்ப்யூட்டர் பதிவு செய்த உணர்வின் மோதலில் திசை திருப்பி அந்தக் கோளுக்கே அழைத்துச் செல்கிறது.

அங்கே சென்றாலும் உள்ளே விழுந்து விடாதபடி அந்தக் கோளின் வட்டப்பாதையை நிர்ணயிக்கின்றார்கள். அந்த ஈர்ப்பின் தன்மை கொண்டு வட்டப் பாதையில் சுழலும்படிச் செய்கின்றார்கள்… தரையில் இருந்து கொண்டே…!

அதே போல்…
1.மெய் ஞானிகள் உணர்வை எடுத்து நமக்குள் அதைப் பெருக்கி
2.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களில் அதை இணைத்து
3.அங்கே செல்ல வேண்டும் என்று உந்தித் தள்ளும் பொழுது அந்த இடம் போய்ச் சேருகின்றது.

உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றது… சுட்டுப் பொசுக்குகின்றது. ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி அமைத்தவர்கள்.

உயிருடன் ஒன்றியிருக்கும் உடல் பெறும் உணர்வுகள் கறுக்கப்படுகிறது. நமக்குள் அறிவு என்ற ஒளி இருக்கின்றது. அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் சுழலத் தொடங்குகின்றனர்.

கணவனோ மனைவியோ முதலிலே யார் பிரிந்தாலும் அங்கே அனுப்புகின்றோம். உதாரணமாக மனைவி அங்கே செல்கிறது. உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மா அங்கே அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று கணவன் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

அங்கே மனைவி இணைந்து கொண்ட நிலையில்
1.இவர் அடிக்கடி இதை எண்ண எண்ண உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் சென்றடைவார்கள்.
2.இந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக அங்கே இழுத்துச் செல்லும்.

அதைப் பெருக்குவதற்காகத் தான் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் அங்கே அனுப்ப முடியாது… விண் செல்ல முடியாது.

மனைவி முன் சென்ற நிலையில் கணவன் அதை எண்ண எண்ண எப்பொழுது பிரிந்தாலும் அங்கே சென்று இணைந்து விடுகின்றார்கள்.

முதலில் அவர்களை அனுப்பி விடுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கின்றது. அங்கே இணைந்த பின் அவர் உணர்வு இங்கே இருக்கின்றது…
1.அந்த ஒளியின் உணர்வை இங்கே பெருக்குகின்றோம்.
2.அடுத்து வேறு ஒன்றும் தேவையில்லை…. உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் கணவன் ஆன்மா சென்றடையும்.

நண்பன் மீது பாசமாக இருக்கின்றோம். நன்மை செய்தேன்… இப்பொழுது விட்டு விட்டுச் செல்கின்றேனே…! என்று எண்ணினால் உடலுடன் இருக்கும் நண்பர் உடலுக்குள் தான் ஈந்த ஆன்மா புகும்.

முந்தி நாம் யாரையும் விண் செலுத்தப் பழகவில்லை. இப்பொழுது அந்த ஞானிகள் காட்டிய வழியிலே உடலை விட்டுப் பிரிந்தவர்களை அங்கே இணைக்கச் சொல்கிறோம்.

சப்தரிஷிகள் என்பவர்கள் பிறவா நிலை அடைந்தவர்கள். ஆக அந்தக் காலத்தில் விண் சென்றவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது.
1.சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாது கோடிக்கணக்கானோர் அங்கே மின்னிக் கொண்டுள்ளார்கள்.
2.அவர்கள் எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கே சென்று அடைந்தவர்கள்… என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்கின்றார்கள்.

இந்தச் சூரிய குடும்பம் அழிந்தாலும் பிற மண்டலங்களிலிருந்து அவர்கள் சக்தி பெற்றதால்… எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்ற நிலையில்… என்றும் பதினாறு என்று அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடியவர்கள்.

இந்த எல்லையில் இருந்து அந்த ஆற்றலை வளர்த்தவர்கள். இப்பொழுது எப்படி இங்கே இந்தச் சூரிய குடும்பத்தில் அவர்கள் வட திசையில் சுழன்று கொண்டு வருகின்றார்களோ அந்த வட்டத்தில் இருந்தே அதையெல்லாம் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

ஆக மனிதனாக பிறந்து தனித்தன்மை வாய்ந்ததாக அந்த நிலை அடைகின்றார்கள்.

அகண்ட பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது தான். பல கோடி ஆண்டுகளாகச் சுழல்வது தான். முதலில் அணுவாகிக் கோளாகி நட்சத்திரமாகி சூரியன் ஆகின்றது. பின் நட்சத்திரமாகி கோளாக வளர்ந்த நிலைகள் பல.

1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும்…
2.அந்தச் சப்தரிஷிகள் வேறு சூரியக் குடும்பங்களுக்குச் சென்று அழியாத நிலைகள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு சூரியக் குடும்பமே எத்தனையோ கோடி மையில் பரப்பளவு கொண்டது. இது போல 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்தே துணை கொண்டே அவை வாழ்கின்றது.

இந்த 2000 சூரியக் குடும்பங்களும் வேறு 2000 சூரியக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு வாழ்கின்றது. இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனாக உருவானவன் ஒளியாக மாற்றிய பின் தனித்தன்மையாகப் பிரிகின்றது. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் போகின்றது.

ஆனால் இந்த எல்லையில் இருக்கின்றார்கள். என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அனைவரும் அடைய வேண்டும். அப்படி அடையவில்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

1.நம் முன்னோர்கள் பலரை இப்பொழுது அங்கே அனுப்பியிருக்கின்றோம்.
2.அந்த நிலையில் நாம் உடலை விட்டு பிரிந்து சென்றால் யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை… நாமும் அங்கே சென்றடைய முடியும்.

அடிக்கடி காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தியை ஏற்றிக் கொண்டு மூதாதையரின் ஆன்மாக்கள் அங்கே அழியா ஒளிச்சரீரரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அந்த உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக அங்கே தான் நம்மையும் அழைத்துச் செல்லுமே தவிர இங்கே இருக்க விடாது.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்…! ஆக முதலில் அந்தத் தொடர்பு வேண்டும். அதற்குத்தான் கூட்டுத் தியானங்களில் ஒன்று சேர்ந்து அந்த ஆன்மாக்களை அங்கே விண்ணுக்குச் செலுத்தச் சொல்கின்றோம்.
1.இங்கே எப்படி ஐக்கியமாகச் செயல்படுகின்றோமோ
2.அதே போல் அங்கே சப்தரிஷி மண்டலத்திலும் ஐக்கியமாகின்றது.

நகையைத் திருட வந்தவனுக்கு ஏற்பட்ட கதி

நகையைத் திருட வந்தவனுக்கு ஏற்பட்ட கதி

 

பெண்கள் நகையைப் போட்டுக் கொண்டு செல்கின்றார்கள். திருடன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அபகரிக்கும் நோக்கத்தில் அங்கே வரும் சந்தர்ப்பமாக உருவாகிறது.

இது நடந்த நிகழ்ச்சி…! என் காலோ ஆணிக்கால். ஆனால் திருச்சியில் கால்நடையாக நான் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தேன்.

ரோட்டிலே ஒருவன் ஒரு பெண்ணை “அடி…அடி…” என்று அடித்துக் கொண்டிருக்கின்றான்… போக்கிரி அவன்…!

என்ன…? ஏன் இந்தப் பெண்ணை அடிக்கிறாய்…? என்று கேட்டேன்.

அந்தப் பெண் சப்தம் போடுகிறது.
1.நான் பித்தளை நகையைப் போட்டிருக்கின்றேன்.
2.ஏன் தங்க நகையை போட்டுக் கொண்டு வரவில்லை…? என்று இவன் அடிக்கின்றான் என்று சொல்கிறது.

தங்க நகையைப் போடாது நீ எப்படி ரோட்டில் வரலாம் என்று சொல்லி அவன் உதைக்கின்றான்.

நான் என்ன நினைத்தேன்…? என்றால் வீட்டிலே நகைகளப் போட்டு இருக்கின்றார்கள். செலவுக்காக அடகு வைத்து விட்டது… அதனால் உதைக்கின்றான் என்று.

அப்போது திருடன் சொல்கின்றான் நாங்கள் திருட வந்தால் பித்தளை நகையைப் போட்டு ஏமாற்றுகிறாயா…? என்று சொல்லி உதைக்கின்றான்.

நான் போய் அவன் கையைப் பிடித்தேன். ஆளைப் பார்…! உன்னைக் கத்தியால் குத்தி விடுவேன்…! என்றான். ஆமாம் குத்தி விடுவாய் என்றேன் நான்.

பின்… இழுத்து சொத்… என்று கீழே விழுந்தான். கத்தியை எடுக்க முயற்சி செய்தான். கையும் வரவில்லை… காலும் வரவில்லை… கீழே விழுந்து கிடக்கின்றான்.

அங்கிருப்பவர்கள் எல்லாம் அவன் பெரிய ரவுடி. ரோட்டில் போய்க் கொண்டிருக்கும் நீ அவனை என்ன செய்ய முடியும்…? அவன் உன்னைத் தீர்த்து விடுவான் என்று சொல்கின்றார்கள்.

1.அவன் தீர்க்கட்டும்…! அவன் எண்ணம் தீர்ந்து போகும் என்று சொன்னேன்.
2.தவறான எண்ணம் கொண்டால் அவனுக்கு இது தான் கதி.
3.அவன் என்றைக்குத் திருந்துகின்றானோ அன்று அவன் கை வரும் என்று சொன்னேன்.

அந்தப் பெண் சொல்கிறது. ஐயா நீங்கள் இன்று இவனை அடித்து விட்டீர்கள்…! நாளைக்கு என் வீட்டிற்கே வந்து அவன் உதைப்பான் போல் தெரிகிறது. எழுந்து வந்து அடிப்பான்.

ஐயா அந்தக் கூட்டமே பெரிய கூட்டம் பல தடவை இப்படி வந்து திருடுகின்றார்கள். ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் உதைக்கின்றார்கள் என்று அந்தப் பெண் சொன்னது.

அவன் உன்னை அடிக்க மாட்டான்… கையும் வராது காலும் வராது கெட்டது இத்துடன் போய் விட்டது. நல்லதை நினைத்தால் தான் எழுந்து வருவான். உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான்… உன்னை உதைக்க மாட்டான் என்று சொன்னேன்.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று “இந்த மாதிரி இருக்கின்றதே… நீங்கள் என்ன செய்கிறீர்கள்…? என்று கேட்டேன். நாங்கள் என்ன செய்வது…? புகார் அளித்தால் தானே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்கள்.

ஆக மொத்தம்
1.நகையைப் போட்டுக் கொண்டு ரோட்டிலே சென்றால் திருடனுக்கு வழி காட்டியது போல் ஆகிவிடுகிறது
2.உலக நடப்பு இவ்வாறு இருக்கின்றது.

நடந்த நிகழ்ச்சி இது.

உடலை மதிக்க வேண்டும்… ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது

உடலை மதிக்க வேண்டும்… ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது

 

நான் ஏதோ சொல்கின்றேன் என்றும் நான் கல்வி அறிவு இல்லாதவன் என்றும் எண்ண வேண்டாம். விண்ணுலக ஆற்றல் அனைத்தும் மனிதனின் உடலுக்குள் உண்டு என்று குருநாதர் காட்டினார்.

அதன் வழி வழி கொண்டு
1.அந்த (உணர்வின்) புலனறிவின் ஆற்றலை விண்ணிலே வீசி உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து அறி
2.அந்த உணர்வின் தன்மையை உனக்குள் வளர்த்துக்கொள்,
3.இதுவே தீமையற்ற நிலைகளாக ஆக்கு
4.அது தீமைகள் இருக்கும் மனிதனுக்குத் “தீமைகளை நீக்க உதவட்டும்…!” என்று குருநாதர் எமக்குக் கட்டளையிட்டார்.

அவர் இட்ட கட்டளைப்படிதான் இதைச் செய்கிறேன். உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ பொருள் தேவைக்கோ அல்ல. எனக்குப் பொருள் ஒன்றும் தேவையில்லை… புகழும் தேவையில்லை.

நீங்கள் மகிழ்ந்திருக்க வேண்டும், உங்களையறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், உங்களின் மகிழ்ச்சியான உணர்வு மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக மலர வேண்டும்.

அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். இது எமது குரு இட்ட கட்டளை.

இந்த உடல் சதமற்றது. நிலையாக இருப்பது உயிர்.
1.“சாமி…” என்று என்னைப் பல பேர் கூப்பிட்டாலும் உயிர் சென்று விட்டால் என்னவென்று அழைப்பார்கள்…?
2.சவத்தை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…? என்று தான் கேட்பார்கள்.
3.எனக்குள் இருக்கும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.
4.எல்லோருடைய நிலையும்… உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.

இப்பொழுது உங்கள் உடலில் இருக்கும் உயிரை மதித்து நடந்து பாருங்கள். அந்த ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பாருங்கள். இந்த உடலின் தன்மை தூசியாகும்.

இந்த உடலுக்குள் நின்று தான் மெய் ஞானியின் உணர்வை வளர்க்க முடியும். இதில் வளர்த்துத் தான் உயிருடன் ஒன்றச் செய்ய முடியும்.
1.உடலை மதிக்க வேண்டும்
2.ஆனால் உடல் மீது பற்று வைக்கக் கூடாது.

உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து “என்னைக் கேவலமாகப் பேசிவிட்டானே… இரு உன்னைப் பார்க்கின்றேன்…!” என்று சொன்னால் போதும். உடலுக்கு முக்கியத்துவம் வந்து விடுகின்றது.

அவனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றீர்கள், அவர்கள் சொன்ன வழியில் சென்று இந்தச் சரீரத்தைக் காக்கும் திறன் இழந்து விடுகின்றீர்கள்.

இதிலிருந்து விடுபட அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறத் தியானித்து அந்தத் தீய வினைகளை நீக்கி மெய் ஒளி பெறும் தகுதி நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்… தியானிக்கின்றேன்… வேண்டுகின்றேன், பிரார்த்திக்கின்றேன்.
1.உங்களை அறியாது சேர்ந்த இருள் நிலையைப் போக்கிடுவீர்.
2.அருள் ஞானியின் அருள் ஒளியைப் பெற்றிடுவீர்,
3.ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையினைப் பெற்றிடுவீர்,
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திடுவீர்
5.உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாகிடுவீர்
6.என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற்றிடுவீர்.

“முருகு…” மாற்றி அமைக்கும் சக்தி

“முருகு…” மாற்றி அமைக்கும் சக்தி

 

மனிதனான பின் அன்பால் பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம். வெளியில் நடக்கும் பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும் உடலுக்குள் வலிமையாகின்றது. நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும் இதற்கும் போர் நடக்கின்றது.

இதைத்தான் சாஸ்திரங்களில் பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது என்று காட்டினார்கள். சீதாராமனோ விஷ்ணு தனுசை எடுத்துப் பரசுராமனை வீழ்த்துகின்றான்.

பரசுராமனோ சிவ தனுசை எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டி இருக்கின்றார்கள்.

வராகனுக்குப்பின் (பன்றி) பரசுராமன் மனிதன் என்ற நிலைகள் ஆன பிறகு
1.எல்லோரும் பேரன்போடு வாழ வேண்டும் என்ற ஆசை வருகின்றது.
2.ஆனால் நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத் தெரியவில்லை.
3.நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ அதன் வழிதான் செல்கின்றோம்.

ஒரு குழம்பு வைக்க வேண்டுமென்றால் மிளகாய் உப்பு புளி அனைத்தையும் சமமாகச் சேர்த்துச் சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம்.

இதைப் போல வேதனை என்ற உணர்வை நமக்குள் எடுத்துத் தெரிந்து கொண்டாலும் அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குள் வேண்டும். அந்தச் சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத்தான் இதை உபதேசிப்பது.
1.இதன் மூலம் உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
2.இந்த உயிரின் இயக்கத்தையும் மனிதனான நிலையையும் உங்களால் அறிய முடிகின்றது.

கோபிப்பது நாமல்ல; வேதனைப்படுவதும் நாமல்ல; வெறுப்படைவதும் நாமல்ல; தற்கொலை செய்யச் சொல்வதும் நாமல்ல, தவறு செய்யச் சொல்வதும் நாமல்ல.

நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால் அந்தப் பொருளின் மணம் தான் நுகர்ந்தவரை இயக்குகின்றது. இதைப் போல நம்முடைய எண்ணம் தான் நம்மை இயக்குகின்றது.

வேதனைப்படுவோரையோ கோபப்படுவோரையோ எண்ணினால் அது வாலி. நமது நல்ல குணங்களை அது அடக்கி நமக்குள் வலிமையானதாக மாறி நம்மை அதன் வழிகளில் இயக்குகின்றது.

இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால் நமது ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை வென்று ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இது வலுவானபின்
1.நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
3.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும் தெய்வீக அருளைப் பெற வேண்டும்
4.தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெற வேண்டும்
5.மலரைப் போல மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரம் நரசிம்ம அவதாரம்… நாராயணன் வாசற்படியில் அமர்ந்து மடி மீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று காட்டப்பட்டுள்ளது.

சூரியனான நாராயணன் 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்துவதை… பால்வெளி மண்டலங்களிலிருந்து… தான் கவர்வதைத் தனது உடலில் உள்ள பாதரசத்தால் மோதிப் பிளக்கின்றது. இது அதன் சந்தர்ப்பம்.

ஆனால் மனிதனோ வேதனைப்படும் மனிதனைச் சந்திக்கும்போது வேதனைப்பட வைக்கின்றது. நமது அந்தச் சந்தர்ப்பம் உடல்களில் உள்ள உணர்வுகளைப் பலவீனமடையச் செய்கின்றது.

ஆனால்…
1,பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும் சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.
2.அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நமது கண்களின் நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.

பின் புருவ மத்திக்குக் கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும். நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாக கண் வழி கவர்ந்து இதை இணைக்க வேண்டும்.

1.இது வலிமையானபின் உணர்வின் பிராணயாமம்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம்.
3.இது தான் “முருகு…!” மாற்றி அமைக்கும் சக்தி.

தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உயிரிலே இணைத்தபின் தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது உடலைச் சுற்றியே நிற்கும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று வலுவெற்ற வேண்டும்.

அந்தச் சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும் போது உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள் நம்மை விட்டு அகலும்.

துணியில் அழுக்குப்பட்டால் எப்படிச் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ அதைப் போல
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி அதை வலுவாக்கித்
2.தீமைகளை நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அகன்று செல்லச் செய்கின்றோம்.

அதற்குப்பின் ஒரு நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்று உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால் அவரும் நலம் பெறுவார்.

சுவைக்கொப்ப எண்ணங்கள் சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்… அது சீதாராம். இராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன் சுக்கிரீவனின் மந்திரி.

சுக்கிரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்) நமக்குள் வலுப் பெற்று எல்லோரும் பெற வேண்டும் என்று சொல்லும் போது அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்) வாயுவாகச் சென்று மற்றவர்களையும் பெறச் செய்யும்.