பலம் பொருந்தியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கூட மரண பயம் உள்ளது – ஈஸ்வரபட்டர்

பலம் பொருந்தியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கூட மரண பயம் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

காற்றலையில் புவி ஈர்ப்பின் பிடியில் வாழும் நாம்… நம் உணர்வில் உணர்வில் உந்தப்படும் எண்ணத்தில் உணர்வின் செயலைக் கொண்டு மட்டும் உடல் சேர்க்கை அமிலக்கூட்டு வளரவில்லை.

எறும்பு கொசு தேள் பாம்பு மூட்டை இதைப் போன்ற உயிரினங்கள் சந்தர்ப்பத்தால் நம்மை அவை கடிக்கும் பொழுது அவை சேமித்த விஷ நிலை கொண்ட அமில உணர்வானது அதன் கடி உணர்வை நாம் அறியும் பொழுது அதன் ஈர்ப்பு குண அமிலம் முழுவதையும் நம் உடல் பிம்ப உணர்வலையின் அமிலத்துடன் எடுத்துக் கொள்கின்றோம்.

வாழ்க்கையில் சில ஜீவராசிகளான இந்தப் பூச்சிகள் நம்மைக் கடிக்காமல் இருக்குமா…?

இவற்றின் ஈர்ப்பலையின் உணர்வின் அச்சம் நம் எண்ணமுடன் மோதும் பொழுது
1.அதனுடைய விஷம் நம் உடலில் ஏறிக் கடிக்கும் பொழுதும்… தாக்கும் பொழுதும்… நசுக்கும் பொழுதும்…
2.அதற்கு ஏற்படும் மரண பயம் நம் உடலிலும் ஏறிவிடுகின்றது.

எவ்வமில குண ஜெந்துவின் கடிபட்டதோ அதனுடைய உணர்வையும் நாம் பெற்று அவற்றின் விஷ உணர்வின் தீய அமிலங்களும் நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.

நம் உடல் அமிலத்துடன் அப்படிச் சேரும் பொழுது அதனுடைய வழித் தொடர் கொண்ட எண்ண குணத்தை இந்த உடலைக் கடிக்கும் சில ஜீவ ஜெந்துக்களின் நிலையை நாம் அடைகின்றோம்.

இதிலிருந்து தப்பும் முறை எப்படி..?

1.ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரி யார்…?
2.ஞானத்தை வளர்க்க விடாமல் இருப்பதும் எல்லா நிலைகளுக்கும் தடை ஏற்படுத்தும் எதிரி யார்,,,?
3.இந்த மனிதனுக்கு நற்குண வழிக்குச் செல்ல வழி காட்டும் நண்பன் யார்…?
4.அன்பான எதிர் அலையின் உணர்வை அடையவல்ல சக்தி நண்பன் யார்…?

எதிரியான நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்பக்கூடுதான்… நற்சக்தியின் ஞான அலையைப் பெறவல்ல தன்மையைச் செயல்படுத்தவல்ல நண்பனும் இந்த உடல் பிம்பக் கூடுதான்…!

ஆகவே தீய குணத்தின் எண்ணத்தை மேற்கொள்ளும் பொழுது தீய சக்தியின் நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்ப வீட்டினுள் வாழும் உணர்வின் எண்ணச் செயல் தான்.

நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வதுவும் இந்த உணர்வின் எண்ணச் சக்தி கொண்ட நல் அலையின் சக்தியினால் தான்.

உணர்வில் எடுக்கும் எண்ணத்தின் செயல் எத்தன்மை கொண்டுள்ளதோ அத்தன்மை கொண்ட ஒவ்வொரு மனிதனையும் அந்தந்த நிலைக்கு உட்படுத்துவது இந்த உடல் என்ற பிம்பக்கூடு தான்.

விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் தற்கொலையின் செயலில் ஈடுபடுவதும் அவற்றின் வளர்ப்புத் தன்மையும் எதனால் ஏற்படுகின்றது…?

மருத்துவர்கள் சந்திக்கும் ஆத்மாக்களின் உணர்வில்…
1.பெரும்பகுதி எண்ணத்தின் வியாதியான “மரண பயம்…” கலந்தே வருவதால்
2.அத்தகையவர்களின் எண்ணத் தொடர்புடனே இவர்களின் வாழ் நாள் செல்ல நேர்கின்றது.
3.இப்படி அந்த அச்ச உணர்வின் பிடிக்கு இவர்களின் உணர்வலையும் செல்வதினால்
4.இதே சுழற்சி வட்டத்தால் இவர்கள் உணர்வுடன் இந்த மரண பயம் உந்தப்பட்டுவிடுகிறது.

அதனால் இவர்களின் உணர்வின் எண்ணமே இந்த மரண பய ஈர்ப்புப் பிடியில் சிக்குண்ட நிலையில் பலரின் செயல் இதே உணர்வுடன் செயல் கொள்கிறது…. தன்னால் அதைத் தாங்க முடியாது போகின்றது.

புற அழகு முக்கியமில்லை… அகத்தின் அழகு தான் மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்

புற அழகு முக்கியமில்லை… அகத்தின் அழகு தான் மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்

 

ஒலி கொண்டு… ஒளி கொண்டு… உருவான உணர்வு சக்தியில் இவ்வொலியின் உணர்வில் தான் உழல்கின்றது… உலகச் சுழற்சியும்… ஜீவ சக்தியும்… உயிர் அணுத் துடிப்புகள் யாவுமே…!

இவ்ஒலி ஈர்ப்பின் தாக்குதலுக்குகந்த உணர்வின் சுழற்சி ஈர்ப்புப் பிடியில் பிடிபட்டுள்ள வளர்ச்சி தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே.

1.இனிமையான இசைக்கு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பு செல்லும் பொழுது
2.இனிமையின் நாத ஒலி ஜீவ சக்தி ஒவ்வொன்றின் அலையிலும் மோதுண்டு
3.அதன் தொடர்பு கொண்ட வளர்ப்பு சக்தி ஒவ்வொன்றிலும் கூடுகின்றது.

அதிர்வு… இடி… மின்னல்… காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேக ஒலி… இந்நிலை மோதும் பொழுது இவ்வுடலே அவ்வுடலின் “அச்ச உணர்வுடன்” செல்வது போன்ற உணர்வின் பயம் ஏற்படுகின்றது.

அருவியில் அமைதியாகச் சலசலப்புடன் அந்நீரின் ஒலி மோதலைக் கேட்கும் பொழுது அவ் இனிமையுடன் கூடி நம் உணர்வின் எண்ணமும் மயங்குகிறது.

மாலை நேரப் பட்சிகளின் அமைதியான ஒலி நம் உணர்வின் இனிமை உணர்வைக் கூட்டுகின்றது.

ஒலியின் ஈர்ப்பு எந்நிலை கொண்டு கால நிலையில் உணர்வின் மோதலில் மோதுகின்றதோ அதற்குகந்த வளர்ச்சி மனித உடலின் உணர்விற்கும் ஜீவராசிகள் தாவரங்கள் கனி வளங்கள் ஒவ்வொன்றின் வளர்ச்சிக்குமே இவ் ஒலியுடன் ஒலி கூடும் ஒலித் தன்மை கொண்டு வளர்ப்பு நிலை கூடுகின்றது.

இவ்வொலியின் செயற்கை அதிர்வில் சுற்றுப் புறத் தாவர இன வளர்ச்சிக்கும் நகர்ப்புறத்தைத் தாண்டி வரும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் மாறு கொண்ட வளர்ப்பு விகித நிலை இருக்கும்.

1.இவ் ஒலி உணர்வில் சேமிக்கும் அச்ச உணர்வின் ஈர்ப்பே
2.மனித உணர்வில் ஒவ்வொரு நொடிக்கும் இம்மரண பயம் என்ற பிடி ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் தன்மை
3.இன்றைய நாகரீக செயற்கைப் பிடி வாழ்க்கையில் உள்ளது.

இயற்கைச் சுழற்சியில் இயற்கையிலிருந்து மாறுபட்டு இப்பேராசைப் பிடியில் நாகரீகச் செயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் இந்த மரண பயம் என்ற பிடியுடன் சிக்கித்தான் இன்று வாழும் நிலை உள்ளது ஜீவ சக்தி அனைத்திற்குமே.

உருவத்தில் பெருத்த யானையும் உணர்வில் மரண பயத்தை வளர்த்துக் கொண்டு
1.தன் இரு செவிக்குள்ளும் எறும்பும் பூச்சிகளும் ஏறாத வண்ணம்
2.தன்னைத்தானே செவியை விசிறிக் கொண்டே காத்து வாழுகின்றது.

இந்த எறும்பின் ஊர்தல் அதன் செவி மட்டத்தில் உள்ள ஜவ்வில் பட்டவுடன் ஏற்படும் இரைச்சல் அவ் யானையின் உணர்விற்கு மரண பயத்தின் அச்சத்தை ஏற்படுத்தி அந்த எறும்பின் ஊர்தல் செவிக்குள் பாய்ந்தவுடன் தன்னை அறியாமல் வெறி கொண்டு மிகவும் பதட்டம் ஏற்பட்டு அந்த உணர்வின் பிடியிலேயே சிக்குண்டு மாய்கின்றது, இன்னும் சில யானைகள் அவ்வுணர்வின் மதம் பிடித்துக் கொள்கிறது.

இவ்வுணர்வால் எடுக்கும் அச்சத்தால் விளையும் பயம் தான் இந்த மரண பய உணர்வு.

எண்ணத்தால் இவ்வுணர்வின் பிடியை மாற்றிக் கொண்டு… உயர் ஞான வழி ஈர்ப்பு வளர்ச்சிக்கு எண்ணம் செல்லும் வாழ்க்கை இருந்தால் இப்பிம்ப உடலில் ஏற்படும் அச்ச உணர்வின் நிலை மாறும்.

எச்சக்திக்கும் சக்தி பெற இந்த உடல் பிம்பம் தேவை. ஆனால்
1.இந்த உடல் பிம்ப உணர்வில் ஏற்படும் மாற்றங்களும் நலிவுத் தன்மையும்
2.இந்த உடல் பிம்பத்தைப் பேணி வளர்க்கும் ஈர்ப்பலையும்
3.இந்த உடல் பிம்பத்தின் சுகம் காணும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆவல் உணர்வும்
4.பிம்ப உடலின் அழகின் ஆசையிலும் இவ்வுணர்வின் ஈர்ப்பை எண்ணம் செலுத்தி வாழும் வாழ்க்கையைக் காட்டிலும்
5.உணர்வின் எண்ணம் உயர்ந்த குணத்தின் ஈர்ப்பில் செல்லும் உணர்வால்
6.இந்தப் பிம்ப உணர்வும் ஆரோக்கிய அழகும் தானாக வளரும்.
7.அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பதின் பொருளும் அதுவே.

மரண பயம் என்ற அச்சத்தை விட்டு இந்த உடல் கூட்டின் அழகு ஆரோக்கியம் இவற்றைப் பேணிக் காக்கும் உணர்வு ஈர்ப்பை விட்டு
1.நல்ல ஞான வளர்ச்சி வாழ்க்கையுடன் நாம் வாழ்ந்தால்
2.அமைதி கொண்ட வாழ்க்கையும் ஆரோக்கிய உடல் நிலையும்
3.வாழ்க்கையில் செய்யப்படும் தொழில் நேர்மையும் அதற்குகந்த வருவாயும் இன்பமும் நமக்குக் கிட்டும்.

உணர்வின் சுழற்சி இந்த நிலையில் சுழன்றால் தான்… வளர்ச்சியின் ஆத்ம சொத்தை வளர்க்க முடியும்.

நம் உடலில் உள்ள கணையங்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை

நம் உடலில் உள்ள கணையங்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.
1.கல்லீரல் மண்ணீரல் வீக்கம் இருந்தால் தணிகின்றது
2.அசுத்தங்கள் இருந்தால் அகற்றப்படுகின்றது.

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை ஊட்டும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தவும் உணவாக வரும் நிலையில் அதிலுள்ள அசுத்தங்களை அகற்றி நல்ல உணர்வாக மாற்றும் திறனும் பெறுகின்றது.

கல்லீரல் மண்ணீரலைச் சீராக இயங்கச் செய்யும் அந்த ஆற்றல் நமக்கு இப்பொழுது கிடைக்கும்.

இரத்தத்தைச் சமப்படுத்தும் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் சீரானால்
2.உப்புச் சத்தைக் குறைக்க சர்க்கரைச் சத்தைக் குறைக்க இரத்த கொதிப்பை குறைக்க உதவும்.

எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் போது அத்தகைய குறைபாடுகளைத் தூண்டும் அணுக்களை எல்லாம் வடிகட்டி நமக்குள் சமப்படுத்தும் நிலைகள் பெறும்.

தீமைகளைச் சமப்படுத்தி ஒன்றாக்கி நல்ல உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை நம் கணையங்கள் இப்பொழுது பெறுகின்றது.

சமையல் செய்யும்போது பல சரக்குகளைப் போடுகிறோம். எல்லாம் ஒன்றாகிச் சமமாக இருந்தால் சுவை கூடுகின்றது. குறைந்தால் சுவை குறைகிறது.

ஒரு காப்பியைப் போடுகின்றோம் என்றால் சமமான சூடாக இருந்தால் காப்பித்தூள் இனிப்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து சுவையாக இருக்கும்.

சூட்டின் தன்மை குறைந்தால் போடக்கூடிய காப்பித்தூளையும் பாலையும் இனிப்பின் தன்மையும் ஒன்றாக்காதபடி சுவையைக் குறைத்து விடுகின்றது.

அதைப் போன்று தான் நம் உடலில் உள்ள கணையங்கள் சமமாக்கும் அந்தத் தெளிவான நிலைகள் பெற்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் “அருள் கணையங்களாக” மாற்றிக் கொள்ள முடியும்.

அந்தக் கணையங்கள் சீராக இயங்குவதை இப்பொழுத் நீங்கள் உணர முடியும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் பொழுது
1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் ஒரு புத்துணர்ச்சி பெறும்.
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற குறைபாடுகளை நாம் அகற்ற முடியும்.

உயர்ந்த சக்தி பெற நமக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர்கள் யார்…?

உயர்ந்த சக்தி பெற நமக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர்கள் யார்…?

 

அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்ற எண்ணத்துடன் தான் நாம் தியானம் செய்கின்றோம்.

அம்மா அப்பா அருளால் என்கிற பொழுது தாய் தந்தையரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும்.

ஏனென்றால் தாய் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையையே எண்ணி நம்மை வளர்த்தது. குழந்தையாகப் பிறந்த பின் அந்த அறியாப் பருவத்தில்
1.தெரியாமல் அசிங்கமான பொருளை தொடச் சென்றாலோ
2.நெருப்பு என்று அறியாமல் தொடச் சென்றாலோ
3.அதிலிருந்து காப்பாற்றக்கூடிய எண்ணமாக அவர்கள் உணர்வுகளைப் பதிவு செய்து நம்மைக் காக்கின்றார்கள்.

அதே போன்று கல்வியில் நாம் சிறந்து இருக்க வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்குள் பதிவு செய்கின்றார்கள்.

அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் அலைகளாகப் பரவி வைத்துள்ளது. அதே சமயத்தில் அவர்கள் எண்ணிய எண்ணம் நமக்குள் பதிவாகி ஊழ் வினையாகவும் இருக்கின்றது.

நாம் என்ன குறும்புத்தனம் செய்திருந்தாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு
1.என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும்
2.அவன் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணிய
3.இந்த உணர்வுகள் அவர்கள் உடலிலும் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது.
4.அந்த உணர்வலைகள் பூமியிலும் படர்ந்து கொண்டிருக்கின்றது
5.அதே சமயத்தில் நமக்குள்ளும் அது பதிந்து இருக்கின்றது

இப்படிப் பதிந்துள்ளதைத் தான் நாம் அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். இப்படி எண்ணினால் உடனே அந்தச் சக்திகளை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.

எப்படி…?

1.நம் உடலில் இருக்கக்கூடிய விலா எலும்பு பக்கம் இருக்கக்கூடிய காந்த சக்தி (மேக்னட்) அந்த அலைகளைக் குவித்துக் கொடுக்கின்றது.
2.அதைக் குவித்தவுடன் நமது உயிரான மேக்னட் இழுக்கின்றது.

உயிருக்குள் பட்ட உடனே நாம் எதை எண்ணினமோ அந்த உணர்வு ஓ…ம் பிரணவம் ஜீவன் உண்டாகின்றது. அது தான் ஓ… என்பது. அந்த உணர்வின் சத்து நம் உடலாக இணைந்து விடுகின்றது… ஓம் நமச்சிவாய.

நாம் எண்ணக்கூடியது அனைத்தும் நமக்குள் ஜீவனாகி அந்த சக்தி நம் உடலாகின்றது. ஏற்கனவே அம்மா அப்பா பதிவு செய்த இந்த உணர்வுகள் உடலில் இருப்பதால் அது உடலுடன் ஐக்கியமாகச் செய்கிறது.

நலம் பெற வேண்டும் என்று சொன்ன அவர்களின் உணர்வின் சக்தி நமக்குள் வலு கூடுகின்றது. அம்மா அப்பா அருளால் என்று எண்ணி அதைச் சொல்லும் பொழுது அந்தத் தகுதி நமக்குக் கிடைக்கின்றது.

அதே போன்று ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ஓ… என்று பிரணவமாகி ம்… என்று உடலாக மாறுகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து எண்ணங்களுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

1.நம் தாய் தந்தையர் நாம் நலம் பெறுவதற்காக எத்தனை உணர்வுகளை எடுத்தார்களோ
2.ஊழ் வினையாக நமக்குள் பதிவு செய்த அந்த உணர்வுகளை மீண்டும் நாம் எண்ணும் பொழுது
3.அந்த வலுவான சக்தியை நாம் பெறுகின்றோம்.

அதே போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நோக்கத்தில்தான் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகின்றேன்.

அந்த மகரிஷிகளை எண்ணி குரு வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் முதலில் எண்ணுகின்றேன். அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நினைவுடனே பேசுகின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரை எண்ணி… அம்மா அப்பாவை எண்ணி… அவர்கள் நாம் நலம் பெற வேண்டும் என்று சொன்ன அந்த உணர்வின் தன்மையை முன்னணியில் கொண்டு வந்து அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.நாம் நன்மை பெற வேண்டும் என்று உளளப்பூர்வமாக அவர்களுக்குள்
2.இந்த உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து ஜீவனூட்டி
3.அவர்கள் பெற்ற அருள் ஞான நிலை பெற வேண்டும் என்று எண்ணும்போது
4.நம் ஆன்மாவை அது வலுக் கொண்டதாக மாற்றுகின்றது

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வைக் கூட்டும்போதெல்லாம் அதை நாம் பருகுவதற்கு நம் அன்னை தந்தையின் அருள் உறுதுணையாக இருக்கும்.

அதற்கு தான் இதைச் சொல்லிக் கொடுப்பது.

இறக்காமல் இருக்க வரம் வேண்டுமா…? பிறக்காமல் இருக்க வரம் வேண்டுமா…? – ஈஸ்வரபட்டர்

இறக்காமல் இருக்க வரம் வேண்டுமா…? பிறக்காமல் இருக்க வரம் வேண்டுமா…? – ஈஸ்வரபட்டர்

 

“மரண பயம்…!” என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல. ஜீவ பிம்பம் அனைத்திற்குமே உண்டு. பிறப்பில் நாம் எடுக்கும் சுவாச உணர்வின் அலைத் தொடரில் பிறந்த குழந்தைக்கும்… ஏன்… கருவில் இருக்கும் குழந்தைக்குமே… மரண பயம் என்ற அச்ச உணர்வு உண்டு.

பிறந்த குழந்தைக்கு அந்தக் குழந்தையின் உடலில் கடிக்கும் கொசுவினால் வலி ஏற்பட்டாலும்… உலுக்கும் தன்மை கொண்டு உலுக்கி விழுந்து சில குழந்தைகள் வீர்…! என்று அழவும் செய்யும். அதிர்வு நிலை ஏற்பட்டவுடன் இக்குழந்தைகள் அழுகும்.

கருவிலேயே மரண பயம் என்ற அச்ச உணர்வுடனேதான் கருவே உருவாகின்றது. அதன் வழியில் கரு வளர்ச்சியின் நிலை கூடி வருவதினால் இவ்வுணர்வின் அச்சம் மாறி “மரண பயத்தை எப்படி விட முடியும்…?”

1.மரண பயம் என்ற உணர்வின் பிடியில் வாழ்க்கை உள்ளதனால்தான்
2.மனித வாழ்க்கையில் சோர்வும் இன்னலும் கலகங்களும் கோபத் தன்மையும்
3.பொறாமை உணர்வும் போட்டி நிலைகளும் பேராசை நிலையும் புகழ் நிலையும் ஏற்படுகின்றன.

ஆனால்
1.”பிறவா வரம் வேண்டும் இறைவா…!” என்று இறை சக்தியை இறைஞ்சி
2.இன்னமுதுடன் இனிதிசை கொண்ட இல்லற இன்ப இல்வாழ்க்கை என்ற இனிய வழித் தொடரில்
3.ஈன்றெடுக்கும் இறைச் செல்வ மக்களுடன் இயற்கை வழி இனிய ஒளி இன்பம் பெற
4.பிறவா வரம் பெறும் இறை ஞானம் நிலையுடன்தான்…
5.வாழ்க்கை நிறைவு செல்வது “பிறவா வரம் பெறும் நிலை…!”

பிறவா வரம் பெறும் உணர்வு கொண்டு சேமிக்கும் உணர்வின் எண்ணத்தில் கூடும் அமிலச் சாற்றில்
1.மரண பயம் என்ற உணர்வுடன் வளரும் பருவக் காலமும் வளர்ந்த வாழ்க்கைக் காலமும்
2.மனிதனின் உணர்வில் இவ் அச்ச உணர்வினால் தான் இப்பேராசை புகழ் போட்டி பொறாமை எல்லாமே வருகிறது.

ஆறிலும் சாவு… நூறிலும் சாவு…! என்ற பயத்தையும் ஊட்டி… பின் பிறவா வரம் என்ற இயற்கை உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் இல்லறம் இன்பம் கொள்ளுமா…! இயற்கை வாழ்க்கையும் நமக்குக் கூடுமா…? நாளை… நாளை…! என்ற உணர்வே மனிதனுக்கு உழன்று கொண்டு உள்ளது.

தாவரங்களைப் போன்றும் பூமிக்கடியில் வளரும் கனி வளங்களைப் போன்றும்…
1.பூமியின் ஈர்ப்புப் பிடியுடன் வளராமல்
2.எங்கும் சென்று எதனையும் செயலாற்றக்கூடிய நிலையில் நடந்தோடும் செயலைக் கொண்ட ஜீவ பிம்ப மனிதனுக்கு
3.இன்றைய நாகரீகச் சுழற்சிப் பிடிப்பு வாழ்க்கையில்
4.தன் ஜீவனுக்குப் பிறகு சேமிக்கும் பேராசை பொருள் செல்வச் செயலினால் தான்
5.இன்றைய ஜீவ சக்திகளின் மரண பய உணர்வு ஒவ்வொரு நொடிக்கும் அதிகப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் தான் உண்ணும்… உடுக்கும்… வசிக்கும்… வாழ்க்கைப் பிடியில் சிக்கி… தேவைக்கு மேல் அடையும் பேராசை குணத்தினால் தன் வாழ்க்கையையே மரண பயத்திற்கு அடகு வைத்து விட்டான் இன்றைய கலி மனிதன்.

அதிலிருந்து இஜ்ஜீவ பிம்ப உடலை மீட்டத் தெரியாத அச்ச உணர்வில் இருக்கும் வரை
1.உண்ணும் உணவையும் உணரும் காம இச்சையின் இன்பத்திலும்
2.செயற்கை வாழ்க்கை முறையிலும் தான் இன்பம் உள்ளது என்று ஏங்கியே வாழ்ந்து
3.இதன் தொடர் நிலையிலேயே நீடிக்க அதற்கு வேண்டிய பொருளை ஈட்டவும்
4.அதிலே தவறு ஏற்படும் பொழுது செய்த தவறை மறைக்கப் பிறிதொரு தவறின் நிலைக்குச் சென்று
5.பொருள் (சொத்து செல்வம்) என்ற சேர்க்கை இருந்தால் தான் எந்த இன்பத்தையும் அடையலாம்
6.எந்தச் செயலையும் செய்யக்கூடிய “வல்லுனரையும்” பணத்தால் சேவகம் (அடிமையாக்க) செய்ய வைக்க முடியும்..! என்ற குணமும்
7.முன்னேறிய இன்றைய அரசியல் ரீதியிலும் பொருள் என்ற பிடியில் புகழ் என்ற இன்பம் காணவும்… சென்று விட்டதால்
8.உயர்ந்த ஞான சக்தி கொண்ட ஞான வித்தகர்களின் ஞான போதனையே இவ்வாயிரம் ஆண்டு காலத்தில் அற்றுப்போய் விட்டது.

ஒவ்வொரு மனிதனும் தன் ஜீவ சக்திக்குத் தகுந்த தேவையின் செயல் கொண்டு வாழாமல்
1.உடல் குன்றி விட்டால்… நாளை என்ன செய்வோம்…?
2.செய்யும் தொழில் நசிந்து விட்டால்… நாளை என்ன செய்வோம்…? என்ற எண்ணத்துடனே வாழும் நிலை உள்ளது.

இன்று வாழும் சுக வாழ்க்கைக்காக வேண்டி “அன்றன்று சேமிக்கும் பொருளே பிரதானம்…!: என்ற எண்ணத்தின் பேராசைப்பிடியில் மரண பயம் என்ற அச்ச உணர்வுடனே உள்ளார்கள்.

ஆகவே…
1.பக்தி என்ற முறையில் ஆண்டவனை வணங்குவதிலிருந்தும்
2.எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பொருளின் சேர்க்கையிலிருந்தும்
3.மரண பயத்தைத் தன்னுள் ஏற்றிக் கொண்ட மனிதனுக்கு
4.எப்படியப்பா மரண பயத்தை விட்டு விட்டு
5.ஞான வளர்ச்சியையோ தெய்வ சக்தியையோ வளர்த்துக் கொள்ள முடியும்…? அல்லது பெற முடியும்…!

விஞ்ஞானத் துறையில் எடுத்துக் கொண்டாலும் அதிலே பல செயல்களை ஆராயும் மனிதர்கள் எல்லாம் தற்கொலை என்ற தன்னை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு ஏன் செல்கிறார்கள்…?

பிறவா வரம் பெறும் இனிய சக்தி கொண்ட ஞானிகள்… தன் உடலைப் பாதுகாக்க இந்த வாழ்க்கையில் உள்ள பொழுதே உடல் என்ற கூட்டின் முதுமை உணர்ந்து.. பிறவா சக்தி கொண்ட நிலையில் உடலைச் சமாதி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு இந்த உணர்வின் மரண பயம் என்ற அச்ச உணர்வு இருப்பதில்லை. ஆனால் நமக்கு…?

செல்வத்தை நாடாதீர்கள்… அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றும் ஞானம் பெறுங்கள்

செல்வத்தை நாடாதீர்கள்… அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றும் ஞானம் பெறுங்கள்

 

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுக்கிறார் என்றால் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றோம். திருப்பி எண்ணும் பொழுது அந்த வேதனை நமக்கும் வருகின்றது.

வேதனை வந்த பின் நம் தொழிலைச் சீராக செய்ய முடியவில்லை. வேதனையுடன் நடந்து சென்றால் பாதையில் உள்ள மேடு பள்ளம் தெரிவதில்லை.

இதைப் போல் ஒருவர் கோபிக்கின்றார். அதையும் பதிவு செய்கின்றோம். அப்போது கார உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அந்த உணர்ச்சிகள் நம்மைக் கோபக்காரனாக ஆக்கிவிடுகிறது. ஆகவே
1.நமது வாழ்க்கையில் எது எல்லாம் பதிவாகின்றதோ
2.அவையெல்லாம் மீண்டும் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்றுதான்
1.அகஸ்தியன் எவ்வாறு இருளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனானோ
2.அதன் உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவாக்கி
3.அதை நினைவு கொண்டு நீங்கள் பெறுவதற்குண்டான தகுதிகளை ஏற்படுத்துகின்றோம்.

இந்தத் தகுதியை ஏற்படுத்திய பின் எப்பொழுது உங்கள் வாழ்க்கையில் தொழிலில் நஷ்டமோ கஷ்டமோ நோயோ மற்ற எதுவாக இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்திக் கொள்ள முடியும்.

உங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தி விட்டால் அந்த அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் “நாளுக்கு நாள்” வளர்ந்து கொண்டே வரும்.

இப்படி நம்முடைய வளர்ச்சியின் தன்மை அடைந்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைய முடியும். “அதற்குத்தான் இந்த தியானமும் உபதேசம்…”

செல்வத்தை நாம் தேட வேண்டும் என்று சென்றால் இந்த வாழ்க்கைக்கு உதவும்.
1.ஆனால் அதையே பெற வேண்டும் என்று ஏக்கத்தைப் பெற்றால்…
2.செல்வத்தை தேடி நாம் சென்றால்
3.அது தவறு பிழை என்ற நிலைக்கே அழைத்துச் சென்றுவிடும்.

ஆனால் உயிர் வழி அருள் ஞானிகளின் உணர்வை வலுவாக்கி அவர்கள் பெற்ற உயர்ந்த உணர்வைப் பெற்றால் செல்வம் தன்னாலே தேடி வரும்

நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை அந்த அருள் செல்வம் உங்களை தேடி வரும். ஆகவே செல்வம் தான் நம்மைத் தேடி வர வேண்டும்.

ஆகவ இங்கே கொடுக்கப்படும் உபதேசத்தின் நிலையிலிருந்து செல்வத்தை நாடாதீர்கள். அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றி அருள் ஞானச் செல்வத்தை ஊட்டுங்கள்.

1.என்றும் அந்த அருள் செல்வம் நமக்குள் இருந்து
2.அகச்செல்வம் அருளாகி இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் உணர்வாக
3.ஒளி உடலாக மாற்றும் அந்தத் தகுதி பெற வேண்டும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெற வேண்டும் என்று எப்பொழுது எண்ணினாலும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டு வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளும் தன்மை வருகின்றது.

தீமையை நீக்கும் ஆற்றல் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அமைதி கிடைக்கின்றது… சாந்தம் கிடைக்கின்றது… விவேகம் கிடைக்கின்றது.

நான் சொல்லி உங்களுக்குள் இதை எல்லாம் பதிவு செய்தாலும் “உங்கள் உணர்வுக்குள் விளைந்தால் தான் அது ஞானம் ஆகும்…”

காரணம் சொல்லும் உணர்வை வைத்து நினைவு கொண்டு எடுத்தாலும் அது கடினமாகும்.
1.நினைவைப் பதிவாக்கிப் பழக்கப்படுத்தி இந்த உணர்வை எடுத்துக் கொண்டால்
2.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் உருவாக்கும்.
3.இருளை அகற்றி மெய்ப்பொருள் கண்டு பிறவியில்லா நிலையை அடையும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.
4.எனக்குக் குருநாதர் எப்படிச் செய்தாரோ அதைத் தான் நான் செய்து காட்டுகின்றேன்.

உங்கள் உயிர் கடவுள்… உடல் ஒரு கோவில்… மனிதனை உருவாக்கிய அரும்பெரும் சக்தியான தெய்வங்கள் உங்களுக்குள் கொலு வீற்றிருக்கின்றது.

அந்தத் தெய்வங்களைக் காக்க வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.

செயற்கரிய செயலைச் செய்யக்கூடிய சக்தி பெற்றவன் தான் மனிதன் – ஈஸ்வரபட்டர்

செயற்கரிய செயலைச் செய்யக்கூடிய சக்தி பெற்றவன் தான் மனிதன் – ஈஸ்வரபட்டர்

 

பாலில் சேர்க்கப்படும் பொருளைக் கொண்டு அதன் சுவையும் மணமும் நிறமும் எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று தான்
1.இந்த மனிதப் பிம்ப உடலில் சேர்க்கப்படும் உணர்வின் எண்ண சுவாச அமிலத்தால்
2.பிம்பக் கூட்டின் உருவ நிலையும்… குண நிலையும்… சொல் வடிவமும்… அமைகின்றதப்பா…!

நல் உணர்வு சுவாச முறையால்… நாம் எடுக்கும் ஜெப சக்தி காந்த மின் அலைச் சுவாசத்தால்…
1.உடல் பிம்பக் கூட்டில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
2.சக்திவாய்ந்த ஒளியில் வளப்படுத்த முடியும்.

இந்த உடல் பிம்ப ஜீவக் கூட்டிலிருந்து… ஜீவ சக்தியுடன் கூடிய இவ்வலை ஈர்ப்பின் குணத்தின் சக்தி கொண்டு தான்..
1.சகல சக்தியையும் அறியவல்ல ஆற்றலையும் செயல் முறையும்
2.என்றுமே அழியா வண்ணம் பல படைப்பைப் படைக்கவல்ல படைப்பின் சக்தியும்
3.இந்தப் பிம்பக் கூட்டிற்கு உண்டு

இந்தப் பிம்பக் கூட்டில் எடுக்கும் இச்சக்தியினால் எச்சக்தியையும் அடையலாம் என்று உணர்த்துகின்றீரே…! அப்படியானால் நீரிலும் நெருப்பிலும் குதிக்க முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

கடும் உஷ்ண அலையைக் கக்கும் நெருப்புக் குண்டத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலுடன் அமர்ந்திருக்க முடியுமா..? என்றால் முடியுமப்பா…!

1.தான் எடுக்கும் உயர் சக்தி அலையின்… “ஒளியுடன் ஒளியாகும் ஒளி சக்தி பெற்றால்…”
2.தணல் விட்டு எரியும் நெருப்பில் அமர்ந்தாலும்
3.இந்த உடல் பிம்ப ஈர்ப்புச் சக்தியிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி அலையைப் பாய்ச்சினால்
4.அந்த நெருப்புக் கோளம் தான் அணையுமே தவிர இந்தப் பிம்ப உடலைப் பாதிக்காது.

இயற்கையின் சீற்றமுடன் விளையாடுவதற்கல்ல உயர் ஞான சக்தி. ஆனால் உள்ள சக்தியை உணர்த்துவதற்காக இதைச் சொல்கிறோம்.

ஆழ் கடலாக இருந்தாலும்… பூகம்பமோ… சூறாவளியாகவோ.. இருந்தாலும் ஒலியின் சக்தியுடன் ஒளிரும் சக்தி கொண்டு எந்த வகையான இயற்கையின் சீற்றத்திலிருந்தும் பிம்ப உடலையும் தப்ப வைக்க முடியும்.

திராவகத்தில் போடப்படும் மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கத்தின் குணம் எப்படிக் கரைவதில்லையோ அதைப் போன்று
1.இந்த உணர்வால் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால்
2.ஒலி கொண்டு ஒளி பெற்றோமானால்
3.உயர் ஞான சக்தியை வழி கொண்ட எச்சக்தியாகவும் நாம் ஆக முடியும்.

பூமியின் ஜீவ சக்தியைக் கொண்டு வளர்த்த சக்தியின் தாதுப் பொருள்களில் பிரிந்த திரவக சக்தியிலிருந்து (பூமிக்கடியில் இருக்கும் எண்ணை – CRUDE OIL) ஒன்றைக் கொண்டு பலவாகப் பெட்ரோலியப் பொருள்களைப் பல வகையிலும் பிரித்து பல சாதனைகளைப் புரிகின்றோம் அல்லவா…!

அதைப் போன்று..
1.இந்த உணர்வின் சுவாசத்தால் எடுக்கும் இஜ்ஜீவ சக்தியைக் கொண்டு
2.இப்பேரண்டப் பெருநிலையின் வளரத் தக்க முறைதனையும்
3.ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றோன்று உருவாகும் முறைதனையும்
4.அணுவுக்குள் அணுவாக ஊன்றி அணுச் செயல் தொடர்பனைத்தையும்
5.ஒலியையும் ஒளிக் காட்சிகளையும் மணத்தையும் சுவை குணத்தையும் அவை மாறும் செயற்கை வடிவையும்
6.இவ்வெண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால் எடுக்கவும் உணரவும் நமக்குள் வளர்த்திடவும் முடியும்.

இந்த நிலையெல்லாம் பெறுவதற்கு மனித உணர்வில் ஊன்று கோலாக நிலைத்துள்ள “மரண பயம்” என்ற இந்த வித்தை முதலில் அகற்ற வேண்டும்.

சீரற்றுச் சென்று கொண்டிருக்கும் பூமியைத் “தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியனின் அருளால்” நிச்சயம் நாம் சமப்படுத்துவோம்

சீரற்றுச் சென்று கொண்டிருக்கும் பூமியைத் “தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியனின் அருளால்” நிச்சயம் நாம் சமப்படுத்துவோம்

 

பண்டைய காலத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியிலே விளைந்த மகரிஷிகள் இந்தப் பூமி சூரியனை விட்டு மாறிச் செல்லும் பொழுது அந்தச் சூரியனையே குறிக்கோளாகக் கொண்டு தன் பார்வையின் நிலைகளை நேரே செலுத்திப் பூமியைத் திருப்பி விட்டுள்ளார்கள்.

இந்தப் பூமி வட துருவமாக இருந்து அதன் வழியில் விண்வெளியின் ஆற்றலை இது கவர்ந்து பூமி வளர்ச்சி அடைந்து வந்தது.

அப்படி வந்தாலும் அதிகமாக இந்தத் துருவ நிலைகளில் அது தனக்குள் கவர்ந்து கொள்ளும் பொழுது
1.துருவத்தின் நிலைகள் எடை கூடி குடை சாயும் நிலைகளில்
2.இப்படிக் கவிழும் தன்மை வரும் பொழுது
3.துருவ மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.
4.இத்தகைய மாற்றங்கள் வரப்படும் பொழுது பூமியும் திசை திருப்பி வரும்.

இதனைத் தன் வலுவான எண்ணங்கள் கொண்டு பண்டைய கால மகரிஷிகள் இந்தப் பூமியைச் சீர்படுத்தி வந்தனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும் இந்த அகஸ்தியன் தனக்குள் எடுத்து கொண்ட வலுவின் திறமை கொண்டு இந்தப் பூமியினைச் சமப்படுத்தி சீராக ஓடச் செய்து தன் நினைவின் அலைகளை மாற்றிச் சென்றவன்.

இதைப் போன்று ஒவ்வொரு காலத்திலேயும் மகரிஷிகள் தோன்றி இதைச் சீர்படும் நிலைகளுக்குச் செய்தார்கள்.

இன்று விஞ்ஞான அறிவால் அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும் நாம் செயல்படுத்தும் நிலைகளிலிருந்து அது வெடித்து கதிரியக்கச் சக்தி பூமியின் நடுமையம் சென்றுவிட்டது.

அதனால் வெப்பங்கள் அதிகமாகி துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் கரைந்து நீர் நிலைகள் பெருகி நிலம் குறையும் நிலைக்கு வந்துவிட்டது விஞ்ஞான அறிவால்.

அன்று மெய்ஞானிகள் தன் உணர்வின் எண்ணம் கொண்டு பூமியைச் சீரான பாதையில் செலுத்தச் செய்து இந்தப் பூமியை மக்கள் வாழும் நிலைக்கு உருவாக்கினார்கள்.

பூமியில் பனிப்புயல்கள் அதிகமாகப் போகும் பொழுது அந்தப் பனிப்புயலை மாற்றுவதற்காகச் சூரியனின் வெப்பத் தணலை அதற்கு நேர் திசையாக மாற்றியமைத்தான். இந்த நாட்டின் நிலைகளை ஒழுங்குபடுத்தும் நிலையாக வந்தவன் அகஸ்தியன்.

அதனால் தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவனை நாம் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தனது ஆற்றல்மிக்க இச்சக்தியைத் தான் கூர்மையான நிலைகள் கொண்டு சூரியனை நேர் பார்வையில் வைத்துத் தன் வலுவின் நிலைகள் கொண்டு பூமியைத் திசை மாற்றிச் சம நிலைப்படுத்தி இங்கே வாழும் மக்களைச் சீர்படுத்தும் நிலைகளுக்கு அவனின் ஆற்றலைப் பயன்படுத்தினான்.

இந்த வெப்பத்தின் தணல் அதிகமாகப்படும்பொழுது அதனின் வழியில் பூமியின் திசையைத் திருப்பும் பொழுது இந்தப் பூமி கவிழாதபடி அது சீரான நிலைகள் இயங்கி மக்கள் வாழும் நிலைகள் அடைகின்றது.

இவ்வாறு செய்தான் அன்று அகஸ்தியன்.

இன்றைய விஞ்ஞான உலகமோ ஒரு பகுதியில் நேர் வரிசையில் அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தால் இது சூரியனிலிருந்து வரக்கூடிய காந்தப் புயலின் தன்மையைத் தடுத்துப் பூமியைத் திசை மாற்றிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்,

நாட்டுக்கு நாடு எதிர் நிலைகள் ஏற்படும் நிலைகள் இதனை மாற்றிடும் நிலையாகவும் இன்று உள்ளனர்.

1.நம் பூமியும் செயலிழக்கும் தன்மை வந்துவிட்டது.
2.விஞ்ஞானிகள் இந்தப் பூமியை மனிதர்கள் வாழ முடியாத நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அன்று அகஸ்தியனோ இந்தப் பூமி குடை சாயும் நிலைகளிலிருந்து மக்களைக் காத்திடும் நிலையாகத் தன் உணர்வின் அலைகளைச் சூரியனை எதிர் நோக்கித் தன் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு பூமியைத் திசை மாற்றினான்.
1.நிலப்பரப்பை அதிகமாக்கினான்
2.பஞ்சமற்ற நிலைகள் தாவர இனங்கள் உருப்பெறச் செய்தான்
3.தாவர இனங்களை வளர்த்திடும் நிலங்களை அவன் பெருக்கச் செய்தான்.

இந்தப் பூமியில் வாழும் நாம் ஒவ்வொருவரும் அந்த மெய்ஞானியான அகஸ்தியனைப் போன்று விஞ்ஞான விளைவுகளிலிருந்து மீட்டு மனிதர்கள் வாழக் கூடிய பூமியாக மாற்ற வேண்டும் என்று உறுதி கொள்வோம்.

நம்மால் நிச்சயம் முடியும்.

உடலில் புழு உருவாவதும் தலையில் பேன்கள் உருவாவதும் எதனால்…? ஈஸ்வரபட்டர்

உடலில் புழு உருவாவதும் தலையில் பேன்கள் உருவாவதும் எதனால்…? ஈஸ்வரபட்டர்

 

1.அணுவுக்குள் அணு வளர்க்கும் வளர் தன்மை எத்தகையது…?
2.அணு வளர்ப்பின் இயற்கைக் குணம் ஜீவ சக்தியுடன் எப்படி மாற்றம் கொள்கிறது…?

இயற்கை வளர்ப்பில் வளர்ந்த கனிகளில் சாதாரணமாக வாழைப்பழத்தின் பழுத்த நிலைக்குப் பிறகு அக்கனியைப் பூமியின் ஈர்ப்பில் அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகின்றது…?

1.அந்தக் கனியானது அழுகிய தருவாயில்
2.பூமியின் வெக்கை அதன் மேல் பட்டு பூமி மீண்டும் ஈர்த்து
3.அக்கனியின் சுவை அமிலமுடன் இந்த உஷ்ண அலை ஈர்ப்புப்பட்டு வெளி வரும் பொழுது
4.அதன் அழுகிய தன்மையில் பல அணுக்கள் தோன்றுகின்றன.

தோன்றிய உயிரணுக்கள் எவ் அமிலத்தில் எச்சுவை கொண்டு அவ்வணு வளர்ந்ததோ அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி உருவத் தொடர்கள் “புழுக்களாக…” வளர்கின்றன.

இதன் நிலையை உணர்த்துவது எதற்கு…?

மனித பிம்ப உடலுடன் இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வாழும் நாம் இந்தப் பிம்பக் கூட்டின் சுவாச அலையில்
1.எப்படி வாழைக் கனியிலிருந்து அதன் வெக்கையில் பட்ட உயிரணு தோன்றியதோ அதைப் போன்று தான்
2.ஒவ்வொரு ஜீவ சக்தியிலும் உணர்வின் சுவாசம் எடுக்கும் நிலையில் ஏற்படும்
3.வெக்கை உயிரணுக்கள் தான் உடல் பிம்பக் கூட்டிலும் வளர்கின்றது.
4.எடுத்து வெளியிடும் சுவாசத்திலும் அதன் தொடர்பு கொண்ட அணுக்களின் வளர்ச்சி தான் வளர்கின்றது.

ஒவ்வொரு ஜீவ சக்தியின் தொடர்பிலும் அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் அந்தந்த இனக் கலவை உயிரணுக்கள் வளர்வதுடன் பிறிதொரு அமில உயிரணுக்களின் செயல் எப்படிக் கூடுகின்றது..?

மனிதனின் உடலில் வளரும் புழுக்களும் தலையில் வரும் பேன்களும் எப்படி உருவாகின்றன…?

அமைதியுடன் ஆரோக்கியமான சந்தோஷ வாழ்க்கையில் உள்ள மனிதர்களுக்கு அது அதிகம் வருவதில்லை.

ஆனால் சலிப்புப்பட்டு சோர்வுப்பட்டு சங்கடம் போன்ற வறுமையில் வாழும் இன்னல்படும் ஆத்மாக்களின் உணர்வில்
1.அவர்கள் எடுக்கும் இச்சுவாச அலையின் வெக்கையானது
2.ரோமக் கால்களில் வெளிப்படும் அமிலக் கசிவில்
3.உடல் வெக்கையின் உஷ்ண அலையின் விகிதத்தைக் கொண்டு
4.இச்சஞ்சலமான நிலையில் உள்ளவர்களின் அலைகளில் இந்தப் பேன் வளரும்.

உடல் உறுப்புகளில் இவ் உணர்வின் கசிவில் வெளியில் உள்ள தூசிகளோ சில அழுக்குகளோ படும் பொழுது என்ன மாதிரியான பாதிப்பு வருகின்றது…?

1.உடலில் ஏற்படும் வெக்கையினால் வெளிப்படும் வியர்வையின் அமிலத்தின் மேல்
2.காற்றலையில் உள்ள சில உயிரணுக்கள் படும் பொழுது
3.அவற்றின் வளர்ப்பாக அணுவுக்குள் அணு வளர்ந்து
4.அவை பெருகி ஏற்படுவது தான் உடல் உறுப்புகளில் ஏற்படும் சில கட்டிகளும் புண்களும்.

அவற்றின் கசிவு வளர்ப்பு அணுக்களினால் படரும் தொடர் நிலையை அவற்றை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட சில மருந்துகளால் வைத்தியத்தின் மூலம் மாற்றுகின்றார்கள்.

அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் இன்று விஞ்ஞான ரீதியில் தாவரங்களையும் மிருக இனங்களையும் சில கலப்புகளைச் சேர்த்து மாற்றி அமைக்கின்றார்கள்.

நாய் நரி இவற்றை மாற்றியதைப் போல் மனிதனுக்குச் சேவை செய்யக் கொரில்லாக்கள் போன்ற இன விருத்தியை குரங்கின் இனத்துடன் மனித அமிலத்தைச் சேர்த்து வளர்த்த மனிதர்களே இன்று அவை வளராவண்ணம் தடுத்தும் விட்டனர்.

இதை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு…?

உடல் என்ற பிம்ப உணர்வு அமிலக்கூட்டில்…
1.பல கோடி ஆண்டுகளாக அணுவுக்குள் அணு தோன்றி உரு மாறி மாறி
2.ஒவ்வொன்றின் உருவச் சேமிப்பின் முலாமுடன்
3.இன்று வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழ்ந்து கொண்டுள்ள நாம்
4.எச்சக்தியும் செயலாக்கக்கூடிய எண்ண ஆற்றலின் ஞான வளர்ச்சிக்கு
5.எண்ணத்தால் எடுக்கும் உணர்வலையின் நற்சுவாசத்தால்
6.இந்த உடல் அமிலத்தில் ஏற்கனவே உரு மாறி மாறி ஒவ்வொரு தொடர்பிலும் சேமித்த அமிலக்கூட்டில்
7.நற்சக்தியுடன் கூடி வந்த தீய குண அமிலத்தையும் உயர்ந்த சக்தியாகவும் ஆக்கிட முடியும்.

அணு தோன்றி… அணு வளர்ப்பின் வளர் தொடர் வள்ர்ப்பின் அணுக்கள் தான்… தொடர் அணு வளர்ச்சி நிலை…!
1.ஆகவே அணுவுக்குள் அணுவாக மகரிஷிகளின் உணர்வலைகளை ஊன்றி
2.உயர் உணர்வின் ஞானத்தில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜாதகத்தில் சொல்லப்படும் நல்ல நேரம் கெட்ட நேரம் மனிதனுக்கு உகந்ததல்ல… அதிலே உண்மையும் இல்லை

ஜாதகத்தில் சொல்லப்படும் நல்ல நேரம் கெட்ட நேரம் மனிதனுக்கு உகந்ததல்ல… அதிலே உண்மையும் இல்லை

 

துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
1.துருவத்தின் ஆற்றலைப் பெற்று ஒளியின் சரீரமாக இருப்பவன் அகஸ்தியன்.
2.இருளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை எடுத்து ஒளியாக மாறிவன் தான் அவன்.

அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வுகளை உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கப்படும் போது உங்களுக்குள் என்னென்ன வாசனைகள் எல்லாம் வருகிறது…? என்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி
1.பச்சிலை வாசனைகள் வரும்… ரோஜாப்பூ மணம் வரும்
2.தீமை நீக்கிய… விஷத்தை நீக்கிய… மூலிகைகள் வாசனைகள் வரும்.

ஏனென்றால் அந்த அகஸ்தியனைப் பற்றிச் சொல்லப்படும் போது உங்கள் நினைவாற்றல் அவன்பால் செல்லும் போது காற்றிலிருக்கக்கூடிய பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த உணர்வலைகள் உங்களுக்குள் வந்து சேரும்.

சிலரால் அந்த மணத்தை அறிய முடியவில்லை என்றாலும் கூட அதை நுகரும்போது உணர்ச்சிகளால் அறிய முடியும். புது விதமான உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலப்பதும் உடலில் ஊடுருவுவதையும் காணலாம்.

1.சிலர் மணத்தால் அறியலாம்
2.சிலர் உணர்வால் அறியலாம்
3.சிலர் உணர்ச்சிகளால் அறியலாம்

இது போன்ற அகஸ்தியனின் உணர்ச்சிகளை நம் உடலில் உள்ள இரத்தத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது அது இயக்கச் சக்தியாக மாறும். அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளும் மீண்டும் மீண்டும் வரும்.

உதாரணமாக ஜாதகக்காரனோ ஜோசியம் பார்ப்பவன் சொல்வதையோ நாம் கேட்டுப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அது தான் இயக்குகின்றது.

அதே போல் தீமையை நீக்கிய அந்த மெய் ஞானி தன் உணர்வை ஒளியாக மாற்றிய அந்த உணர்வுகளை நாம் பதிவாக்கி ஒவ்வொரு நிமிடமும் அதை மீண்டும் மீண்டும் எண்ணினால் அது நமக்குள் இயக்கத் தொடங்கும்.

கஷ்டத்தையோ நஷ்டத்தையோ பார்க்கும்போதெல்லாம் இது போல் எண்ணும் பழக்கம் வந்துவிட வேண்டும்.
1.கஷ்டத்தைக் கேட்டு முடிந்ததும் ஈஸ்வரா… என்று
2.நம் புருவ மத்தியில் எண்ணி உடனே அதை நிறுத்திவிட வேண்டும்.

மற்றவர்களிடம் “என்னிடம் கஷ்டத்தைச் சொல்லாதே…” என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அப்படி வேகமாகச் சொல்லி விட்டால் இந்த உணர்வுகள் அவருக்குள் இயக்கப்பட்டு நமக்கு எதிர்மறையாக வரும்.

இவர் எதையோ செய்து கொண்டிருக்கின்றார்… ஏதாவது சொன்னால் கேட்க மாட்டார்…! இவருக்கு மட்டும் என்ன…? ஒரு காலத்தில் அவருக்குக் கஷ்டம் எதுவும் வராதா…? என்று நம்மைப் பற்றிக் கூடிப் பேசுவார்கள்.

இப்படி நான்கு பேர் கூடிப் பேசினால் அது நமக்குள் பகைமை ஊட்டும் உணர்வாக ஊடுருவி நம் நல்ல உணர்வுகளை மாற்றிவிடும். ஆகவே மற்றவர் கஷ்டத்தைச் சொன்னாலும் நம் செவியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலிமையாக்கி உடலுக்குள் போகாமல் தடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.

பின்… அவர்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
1.துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியால் நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.உங்கள் வியாபாரம் செழிக்கும் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நலமும் வளமும் பெறுவீர்கள் என்று
3.அவர்கள் உணர்வு நமக்குள் வராதபடி மாற்றியமைத்துச் சொல்லாகச் சொல்லப்படும் போது
4.அவர் கஷ்டத்தை நீக்கும் நிலை ஆகிவிடுகின்றது.

ஜோதிடம் சொல்பவன் உங்களுக்கு ஏழரை நாட்டான் பிடித்திருக்கின்றான் என்று சொன்னால் அதைப் பிடித்துக் கொள்கிறீர்கள்.

அதன் பின் நீங்கள் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் “போகும் போதே இந்தச் சந்தேகம் வரும்…” வியாபாரம் செய்தால் நஷ்டம் ஆகி விடுமே…! என்ன செய்வது…? பணத்தை பேசாமல் வைத்துக் கொள்வோம்.

மாமன் மச்சானைப் பார்க்கக் கூடாது… நல்ல நண்பர்களாக இருந்தாலும் கூட ஏமாற்றி விடுவார்கள்… ஏழரை நாட்டான் பிடித்திருப்பதால் ஒதுங்கி நில்…! என்று இப்படிப்பட்ட பதிவு தான் நம்மை இயக்குகிறது.

தக்க நேரத்தில் உதவிக்கு வரக்கூடிய நல்ல நண்பனாக இருந்தாலும் கூட அதைப் பார்க்க விடாதபடி இப்படித் தடையாகி விடும்.

ஆக மொத்தம் ஜாதகக்காரர்கள் சொல்வதைப் பதிவாக்கி அந்த பதிவின் நிலைகளிலேயே தான் இயங்கி நாம் வாழ்கின்றோம். இது போன்ற சாஸ்திர நிலைகள் மனிதனுக்கு இல்லை.

1.ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை நமக்குள் பெறும் பொழுது தான் இருளை நாம் போக்க முடியும்.
2.வெறும் வான இயல் சாஸ்திரத்தைப் (ஜாதகம்) பார்த்து என்ன பலன்…?

மனிதனில் உயர்ந்த அந்த அகஸ்தியன் இருளை நீக்கி ஒளியாக இருக்கின்றான். பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தான்… ஒளியாகப் பெருக்கும் உணர்வுகளை வளர்த்தான். பேரருளைப் பெற்றுப் பேரொளியாக மாறி இன்றும் ஒளியாக இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வானிலிருந்து பருகினால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும் அடக்க முடியும்… ஒளியாக ஆக்கவும் முடியும்.