ஞானிகளால் கொடுக்கப்பட்ட காவியங்களில் உள்ள மூலங்கள் சாதாரணமானதல்ல

ஞானிகளால் கொடுக்கப்பட்ட காவியங்களில் உள்ள மூலங்கள் சாதாரணமானதல்ல

 

ஒரு மனிதன் வேதனைப்படும் சொல்லைச் சொன்னான் என்றால்
1.அந்த வேதனையான உணர்வு நம்மைத் தாக்கி…
2.அதே வேதனையான சொல்லைத்தான் நாமும் திருப்பிச் சொல்லுவோம்…

ஒருவரை வேதனைப்படும்படி பேசினால்… அல்லது வேதனையுடன் ஒருவர் பேசினால்… இந்த வேதனை அவர்களைத் தாக்கப்படும் பொழுது அதே தாக்குதல் திரும்பி நம்மையும் தாக்கும்.

அதே சமயத்தில் அன்புடன் பண்புடன் மகிழ்ச்சியுடன் ஒருவர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினால் இந்தச் சொல் அவரைப் அன்புடன் பண்புடன் வாழ்ந்திட வளர்ந்திட உதவும்.
1.அதே உணர்வின் இயக்கமாக நம்மையும் பண்புடன் வாழச் செய்திட
2.அந்த எதிர் பதிலாக அங்கிருந்து வரும்.

ஒருவர் கொடுமைக்காரர் என்று நாம் சொல்கிறோம். அவருடைய செயல் பிறருடைய நிலைகளைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் தன்மையாக வரும் போது அது வலிமை மிக்கது. அந்த வலிமை மிக்க நிலைகள் யார் கேட்டாலும் இந்த வலுவின் தன்மையே அங்கே வரும்

மேலே சொன்னது போன்று தான் அருள் மகரிஷிகளின் உணர்வின் ஆற்றல்களைக் “கல்யாணராமன்” என்று அழைக்கின்றார்கள்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாக ஆன நிலையில்
1.தனது வாழ்க்கையில் வந்த கொடுமைகளையும் கொடூரச் செயல்களையும் கண்டுணர்ந்து
2.அதைத் தனக்குள் வளராது “தன்னுடன் அரவணைத்து” தன்னுடன் இணைந்து இயக்கும் சக்தியாக மாற்றுகின்றான்.
3.ஆக… தீமைகளை விளைவிக்காது நல்லதாக மாற்றிக் கொள்கின்றான்.

இராமன் கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான்…?

வில்லை வளைத்து அதிலே கணைகளை ஏற்றும்போது தான் பிறருக்குத் துன்பங்கள் விளைவிக்கிறது என்பதால் பிறருக்குத் தீமைகளை விளைவிக்கும் அந்த வில்லையே இராமன் ஒடித்துவிடுகின்றான்.

இதைப் போல நீங்களும்…
1.உங்கள் வாழ்க்கையில் பிறருக்குத் தீமைகளை ஏற்படுத்தும் அத்தகைய கொடிய எண்ணங்களை அகற்றி விட்டு
2.அருள் ஞான உணர்வின் தன்மையை அனைவரும் பெற வேண்டுமென்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டால்
3.நீங்களும் கல்யாணராமன் தான்.

நம்முடைய எண்ணம் பிறரை அரவணைக்கும் சக்தியாக மாறும். அந்த அரவணைக்கும் சக்திகளை நாம் எப்பொழுது பெருக்குகின்றோமோ அப்போது நாமும் கல்யாணராமன் ஆகின்றோம்.

ஆகவே கல்யாணராமன் என்றால் யார்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றியவர்களில் அகஸ்தியன் அணுவின் ஆற்றலைத் தனக்குள் அறிந்தான். பூமியின் துருவத்தை நுகர்ந்தறிந்தான். அதனின் இயக்கத்தை அறிந்து மனிதனுக்குள் தீமைகள் எப்படி உருவாகிறது…? என்றும் உணர்ந்து கொண்டான்.

1.அந்தத் தீமையான உணர்வின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒளியின் சுடராக மாற்றி
2.இன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய கடும் விஷமானாலும்
3.அவை அனைத்தையும் ஒளியாக மாற்றித் தனக்குள் அரவணைத்து
4.ஒளியின் சுடராக மாற்றி அங்கேயே (துருவத்திலேயே) வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

உங்களுடைய வாழ்க்கையில் நீங்களும் அந்தத் துருவ மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

யாருடைய தீமைகளை நீங்கள் பார்த்தாலும் அந்தத் தீமைகள் நீங்கி அவர்கள் மகிழ்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். வெறுமனே அல்ல… அருள் சக்திகளைச் சேர்த்து…!

அருள் மகரிஷிகளின் உணர்வை எண்ணத்தால் நீங்கள் எண்ணி வலுவாக்கிக் கொண்ட பின் யார் தீமை செய்கின்றார்களோ அவர்களுக்குள்… அந்தத் தீமை செய்யும் உணர்வுக்குள்… அந்த மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பார்ப்போர் அனைவரும் பெற வேண்டும்… அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால் அவர்களுக்குள் மகிழ்ச்சி பொங்கும் உணர்வாக வரும்.

அந்த மகிழ்ச்சி அங்கிருந்து வெளிப்படும் போது அந்த உணர்வினை நீங்கள் நுகர்ந்தால் அந்த அருள் வழி உங்களுக்குள் கிடைக்கின்றது இருள் நீக்கும் நிலைகள் பெருகுகின்றது. ஒருவருக்கொருவர் அரவணைக்கும் கல்யாணராமனாக நீங்கள் ஆகின்றீர்கள்.

நாம் அனைவருமே…
1.அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்ற உயர்ந்த நிலைகளை எண்ணி இதைப் பெருக்கி
2.ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவர்கள் உயர வேண்டும் என்றும்
3.அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்றும்
4.அவர் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றும்
5.அவர் தொழில்கள் வளம் பெற வேண்டும் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்றும்
6.இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டால் இது கல்யாணராமன் ஆகிவிடுகின்றது

சரியான குருவின் துணை கொண்டு தான் விண்ணின் ஆற்றலைப் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்

சரியான குருவின் துணை கொண்டு தான் விண்ணின் ஆற்றலைப் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகம் தோன்றி உருளும் உணர்வில் ஒவ்வொரு அணுவும் தோன்றி வளரவும் உணர்வின் ஈர்ப்பு அமிலம் கொண்டே உருவாகி உணர்வாகி வந்த நிலையை நம் சித்தர்கள் காட்டிய வழியில் இராமாவதாரத்தில்
1.தந்தையின் குணத்தை உயர்த்தியும்
2.தந்தைக்குப் பின் தான் தாயின் நிலை காட்டப்பட்டுள்ளது.
3.அதே போல் உலகின் தெய்வமான சிவசக்தி என்ற சிவனை முதலிலும்
4.சக்தியின் நிலையைப் பிறகும் தான் உணர்த்தினர்.

ஆனால் நாம் வணங்கும் தெய்வத்தில் தாயை முதலிலும் தந்தையைப் பிறகும் தான் உணர்த்திக் காட்டி வணங்குகிறோம். இதன் உண்மை என்ன…?

எல்லாமே ஆதிசக்தியின் படைப்புத்தான்…!

1.ஆதிசக்தியின் படைப்பில் – “ஆவியான சக்தி நிலை”
2.திடம் பெறும் நிலைக்குச் “சிவன்” என்ற நாமத்தைச் சூட்டி
3.திடப்பட்ட பிம்ப நிலையின் ஈர்ப்புத் துடிப்பிற்குச் “சக்தி” என்ற பெண்ணின் நாமத்தைச் சூட்டினர்.

சிவ பிம்ப ஈர்ப்பு சக்தி நிலையை நம் சித்தர்களினால் ஆவியான அமிலம் திடம் கொள்வதை சிவன் என்ற நாமம் சூட்டி அதன் ஈர்ப்பு நிலைக்குச் சக்தி என்ற பெண்பாலை உணர்த்தினார்கள்.

அவ்வீர்ப்பின் சுழற்சி அலைத் தொடர் வளர்ப்பின் நிலையில் வழி கொண்ட ஜீவ சக்தியின் படைப்பில் “தாய் தந்தை” என்ற உண்மை நிலை உருப்பெறுகின்றது.

1.படைப்பின் படைப்புத் தான் சிவ சக்தியின் படைப்பு.
2.படைக்கப்பட்டவனின் படைப்பு தான் அனைத்து ஜீவாத்மாக்களின் படைப்பெல்லாம்.
3.இந்நிலையில் சக்தி கொண்டு ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று வளர “ஜீவ சக்தி கொண்ட குரு நிலை தேவை…!”

இராமாயண மகாபாரதக் காவியங்களில் எல்லாம் குருவின் நிலையை ஆண்டவனுக்கு முதலில் காட்டிய நிலை என்ன..?

ஞான சக்தி பெற… ஆரம்பத் தொடர் நிலைக்கு நம்மைக் காட்டிலும் சக்தி கொண்ட குரு நிலை தேவை.
1.நீரான சக்தி ஈர்ப்பில் (மனித பிம்ப உடலில்) காந்த மின் அலையின் தொடர் நிலையை
2.நேராக நாம் பெறுவது என்பது கடினமாகின்றது.
3.நம்மை ஒத்த ஜீவ உடல் கொண்ட ஞான சக்தியின் வழி பெற்ற குரு அமைந்தால்
4.நம் எண்ணத்தை அவர்பால் செலுத்த
5.அவர் எடுக்கும் அலையின் நிலையிலிருந்து
6.நம் ஞானத்திற்குகந்த அலையினைத் திருப்பி அனுப்பிட முடியும்.

ஜீவனற்ற சக்தியின் தொடர்பைக் காட்டிலும் ஜீவனுடன் கூடிய குரு நிலை அமைந்து அவர்பால் நாம் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப காந்த மின் அலையின் தொடரை நாம் ஆரம்பக் காலத்தில் எடுப்பதற்கு உதவி நிலை கிட்டுகிறது.

குருவின் உண்மை நிலை 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இந்நிலை தான் இருந்தது. காலப் போக்கில் குருவானவர்களே தன் ஞானத்தின் வழியைப் பிறர்பால் செலுத்தி “அவர்கள் தன்னைக் காட்டிலும் உயர் நிலை கொண்டு விடுவார்கள்…!” என்ற எண்ண ஓட்டத்தினால் எல்லாமே மாறிவிட்டது.

அதுவமல்லாமல் சிலர் எடுத்துச் செயல்படுத்திய வழி நிலையை உணர்ந்தெடுக்கும் ஜீவாத்மாக்களும் செயல்படுத்தவில்லை.

மனித உரு கரு வளர்ந்த காலம் முதல் கொண்டே குரு சிஷ்யன் என்ற வழித்தொடர் இருந்து கொண்டு தான் இருந்தது, இன்றும் உண்டு. ஆனால் பக்தி நிலை கொண்டு பணிந்து வணங்கும் நிலை தான் உண்டே தவிர ஞானத்தின் நிலையின் ஈர்ப்பு வழித் தொடருக்கு குருவின் செயலை எடுப்பாரில்லை.
1.குருவின் தொடர்பால்…
2.தானே கிட்டும் என்ற நிலை தான் இன்றும் உள்ளது.

ஆனால் சக்தி வாய்ந்த சக்தியிலிருந்து தான் பல சக்திகள் உருப்பெறுகின்றன.
1.உருப்பெற்ற நிலையிலிருந்து மாறி மாறி வழித் தொடர் கொண்டு
2.உயர் சக்தியின் படைப்பில் தான் சக்தி வாய்ந்த சக்திக்கு மேல் சக்தி கொள்கின்றது இந்தச் சக்தி.

இது தான் உண்மை…!

“பதினெட்டாம் பெருக்கு” என்றால் நாம் எதைப் பெருக்க வேண்டும்…?

“பதினெட்டாம் பெருக்கு” என்றால் நாம் எதைப் பெருக்க வேண்டும்…?

 

இந்தப் பூமியில் மனிதனாகத் தோன்றிய நிலைகளில் தீமைகளை வென்ற அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் விண்ணிலே ஒளி வீசிக் கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று விண் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் ஒளியான உணர்வலைள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு நம் பூமியில் பெருகிக் கொண்டே உள்ளது.
1.அதனை யாரெல்லாம் நுகர்ந்து தனக்குள் பெருக்கிக் கொள்கின்றனரோ
2.அந்த அருள் ஞானத்தின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அன்பால் பண்பால் பரிவால் பிறர்படும் துன்பங்களையோ துன்பப்படுத்தும் உணர்வுகளையோ உற்றுப் பார்த்து
1.அந்த உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த நினைவினைத் தனக்குள் கூட்டி விட்டால் அதுவே பெருகி
3.நமக்குள் தீமையின் விளைவுகளாகப் பெருகி… தீமையின் உணர்வாகவே பெருக்கிவிடும்.

ஆகவே அதனின்று தனித்து… அந்த அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் விளைய வைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

பின்… யார் துன்பப்பட்டார்களோ அவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதித்து அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் அந்த உணர்வுகள் அங்கே அருள் ஞானமாகப் பெருகத் தொடங்கும். அதன் மூலம் அவர் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு வாழ்க்கை நடத்தப்படும் போது அதை நமக்குள் அந்த மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இது தான் ஆடி பதினெட்டு… பதினெட்டாம் பெருக்கு…!

ஆகவே… நாம் யாரைச் சந்தித்தாலும் யாருடன் பழகினாலும் சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் அந்த தீமைகளைப் பெருக்காது அதை தடுக்க வேண்டும்.

எந்த ஒரு உணர்வின் தன்மையாக இருந்தாலும் ஒவ்வொன்றும் நகர்ந்து சென்றே இயக்குகின்றது ஒன்றொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த இயற்கையின் சுழற்சி வட்டத்தில் சிக்கி ஒன்றுடன் ஒன்று இணைந்து அது பெருகுகின்றது

புயல் காற்று சுற்றும் பொழுது பல உணர்வின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மற்ற தாவரங்களின் சத்தை தன்னுடன் இணைத்து அந்த உணர்வின் இயக்கமாக அது இயங்குகின்றது என்று பல முறை சொல்லி உள்ளேன் (ஞானகுரு).

ஆற்றிலே நீரோட்டம் இருக்கும்போது அது ஓடும் பாதை அனைத்திலும் அது தன் உணர்வின் சத்தை வளர்த்து செழிப்பை அதிகரிக்கச் செய்கின்றது.

நீர் இல்லை என்றால் தாவர இனங்களைப் பெருக்கும் நிலையும் இல்லை. அதே போல் நமக்குள் ஜீவ நீர் இல்லை என்றால் நமக்குள் உணர்வுகளைப் பெருக்கும் சக்தி இல்லை.

1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் ஜீவ நீராக ஊற்றி
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் அருள் ஞான சக்தியைப் பெருக்கி
3.அருள் ஒளியின் சிகரமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

அதனை நினைவு படுத்தும் நாள்தான் ஆடிப்பெருக்கு. அதைப் பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள்.

பல நிலைகளிலும்… பல எத்தனையோ கோணங்களில் நாம் திசை மாறி… திசை மாற்றி… இப்படிப் பல பல கோணங்களில் நாம் மாறிப் பரிணாம வளர்ச்சி அடைந்து… மனிதர்களாக வந்தவர்கள்தான் நாம்.

இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்று நாம் விண் வழி செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நன்னாளாகப் ஆடி பதினெட்டு என்று கூறுகின்றார்கள்.

பத்தாவது நிலையிலிருக்கும் உயிர் முழுமை அடைய வேண்டுமென்றால்
1.அஷ்டதிக்கு…! எட்டுத் திக்கில் இருந்து… பல முனைகளிலிருந்து வரும் தீமைகளை அகற்றி
2.அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே “பதினெட்டாம் பெருக்கு” என்பது

நாம் இப்படிப் பெருக்கி விட்டால் எந்தத் திக்கிலிருந்து எந்த உணர்வு வந்தாலும் அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு பேரருள் பேரொளியாக மாறும் நிலைகள் வருகின்றது.

ஞானத்தின் உயர்வால் “மனிதன் தெய்வமாக முடியும்…!” – ஈஸ்வரபட்டர்

ஞானத்தின் உயர்வால் “மனிதன் தெய்வமாக முடியும்…!” – ஈஸ்வரபட்டர்

 

பேராசையின் உந்தலில் ஏற்பட்ட எண்ணத்தினால் பேராசைக்குகந்த நிலை பெறச் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு அச்சூழ்ச்சியின் இன்னலில் எற்பட்ட செயல்கள் எல்லாம் “இராமாயணக் காவியத்தில்” வடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இப்பேராசை உணர்வெண்ண ஆசையின் செயல்முறை எப்படி எப்படி எந்தெந்தச் சுற்றலில் இருந்தெல்லாம் சிக்கி… ஒரு மனிதனை… நற்குணம் அடைய வேண்டும் என்ற உணர்வு குணத்தை ஒரு வட்டத்திற்குள் சுழலவிட்டு…
1.மனிதனுக்குகந்த பண்பு பாசம் பக்தி வீரம் அன்பு ஆசை இப்படி ஒவ்வொரு குணத்தையும்
2.தந்தையின் சொல் மந்திர சக்திக்கும்
3.தமையனின் பாசப் பிணைப்பையும்
4.அன்பின் உருவைக் காதலிலும்
5.வீரத்தை வில்லாக்கியும்
6.பண்பைப் பலதிலும் படைத்துப் பிணைக்கப்பட்ட இராமனை அவதாரப் படைப்புக் காவியனாக்கி
7.வழிப்படுத்திக் காட்டிய இராமாவதாரக் காலத்தில் அன்றிருந்த நிலையைக் கொண்டு
8.அக்காலத்திற்குகந்த வாழ்க்கையின் முன்னேற்ற ஞானத்தைக் கொண்டு
9.இராமனாகப் படைக்கப்பட்ட உருவின் நிலையில்
10.ஆண்டவனான வழி நிலை பெறுகின்ற செயலனைத்துமே அன்றே காவியத்தில் வடிக்கப்பட்டன.

ஆனால்… ஆண்டவனாகப் பிறந்தவனின் இன்னல் நிலையை உணர்த்தி… ஆண்டவனின் சக்தியைக் காட்ட வடிக்கப்பட்ட காவியமல்ல இராமனின் காவியம்.

பேராசையின் எதிர் நிலையில் சிக்குண்ட ஆத்மா… “தன் உணர்வின் எண்ணத்தில் தெய்வ சக்தி பெறவேண்டும் என்ற எண்ண சக்தி இருந்தால்…”
1.வாழ்க்கையில் செயல் எதிர் பிம்பம் எதுவானாலும்
2.தன் ஞானத்தின் உயர்வினால் வரும் இன்னலில் இருந்தெல்லாம் மீண்டு
3.”தெய்வமாகலாம்…!” என்று உணர்த்தப்பட்ட காவியம் தான் இராமனின் காவியம்.

பாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…?

பாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…?

 

நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு எடுக்கின்றோமோ இவை அனைத்துமே இராமன் தான்.

இலங்கையைத் தாண்டுவதற்கு “ஒரு அணில் இராமனுக்கு உதவி செய்தது…” என்றும் அதனுடைய கடமையாக சிறு கல்களைப் போட்டுப் அந்தப் பாலத்தைக் கட்ட உதவியதாகக் காவியத்திலே காட்டியிருப்பார்கள்.

அதாவது புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் வந்த நிலையினை அவ்வாறு சூட்சமமாகக் காட்டுகின்றார்கள்.

நாம் ஒரு அணிலாக உருப்பெற்றிருந்த போது… “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியாக” அந்த உடலிலிருக்கும் போது சேர்த்துக் கொண்ட அந்த வினைகள் தான் மனிதனாக வளர்வதற்குக் காரணமாக அமைந்தது.

அதே சமயத்தில்…
1.மெய் உணர்வின் தன்மையை அந்த மெய் ஒளியைப் பெறக்கூடிய தகுதிக்கும்
2.நல்ல சிந்தனையின் நிலைகள் வளர்வதற்கும்
3.அணிலின் உடலாக நாம் இருக்கும் போது பெற்ற நல்ல உணர்வின் சக்தியின் பங்கும்
4.அதிலே உண்டு என்று காட்டுவதற்குத் தான் காவியத்தில் அதைக் காட்டப்பட்டது.

சீதாவை இராவணனிடமிருந்து மீட்க இலங்கைக்குள் இராமன் போவதற்கு அணிலும் சிறு கல்களைப் போட்டுப் பாதை அமைத்துக் கொடுத்து உதவி செய்தது என்று அந்தக் குட்டிக் கதையின் மூலம் நமக்குத் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

இதைக் கவனத்தில் கொண்டால்
1.இராவணனிடமிருந்து சீதாவை மீட்டிக் கொள்ள அணில் உதவி செய்ததென்றால்
2.இந்த உடலான ஆக்கிரமிப்பு சக்திகளிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள
3.அந்த அணிலின் உடலில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து
4.உயிரின் தன்மை கொண்டு அந்த இராமன் என்று சொல்லுக்கு “ஒரு இயக்கப் பொருளுக்குள்…?
5.அந்த உணர்வின் சத்துக்கள் அது எப்படி உதவியது…? என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களை எடுத்து நாம் மனிதனாக வந்தாலும் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் ஆற்றலை வளர்த்துத் தான் அது ஒரு குணமாக ஆனது.

குழம்பை வைக்கும் போது பல பொருள்களைப் போட்டு ஒரு சுவையாக அதை மாற்றிக் கொண்டு வருகின்றோம். அதைப் போன்று இந்த மனித உடல் பெறுவதற்கு 1008 குணங்களின் சக்தி தேவை.

சிந்திக்கும் தன்மை கொண்ட படைக்கும் சக்தியான மனிதனை உருவாக்கச் செய்வதும்… எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு நாம் பேசும் போது அந்த உணர்வின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய நிலைகளையும்… மற்றவர்களுக்குள் அது இயக்கக்கூடிய சக்தியாகப் பெற்றது என்றும் ஞானிகள் காட்டினார்கள்.

1.அதைத் தான் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு – ஊன் உடம்பு ஆலயம் என்ற நிலையில்
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ஊனாக மாறி… உடம்பாக மாறி… இந்த உடம்பு தான் ஆலயம் என்றும்
3.நாம் எடுத்துக் கொண்ட குணங்கள் நமக்குள் சக்தியாக இயங்குவதை
4.ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்து 1008 தெய்வ சக்திகள் என்று வைத்தார்கள்.

இவை அனைத்தையும் உருவாக்கியது யார்…? நம் உயிர் தான். அவன் தான் கடவுள்.

வாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்

வாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்

 

ஒரு சிட்டிகை உப்பெடுத்து நாக்கில் வைத்தவுடன் அதன் உவர்ப்புத் தெரிகிறது. அதே நாக்கு புளிப்பு துவர்ப்பு காரம் இவற்றின் சுவையையும் அறிகின்றது.

சுவையை உணர்வதைப் போல் மணத்தின் மாற்றத்தையும் முகர்ந்து உணர முடிகின்றது. ஒளியின் மாற்றத்தையும் கேட்டறிய முடிகின்றது.

இவ்வுலக சுழற்சி வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ்வின் அன்றாடச் செயலாக இவ்வுணர்வின் வட்ட ஈர்ப்பில் உழன்று வாழும் நாம் இவற்றை உணர… உருவ நிலை கொண்ட ஆரம்பச் செயலுக்கு நம் ஈர்ப்பைச் செலுத்திப் பார்த்தோம் என்றால்
1.ஒவ்வொரு உயிர்த் துடிப்பு நிலை கொண்ட உயிரணுக்கள் தோன்றிய நாள் தொட்டே
2.அவற்றின் வழி அலைத் தொடரினால் உருவாகிய உணர்வின் சேமிப்புக் காலத்தில்
3.பல கோடிக் காலங்களாக ஒவ்வொன்றின் தொடரும் சிறுகச் சிறுக ஒவ்வொரு வளர்ச்சி நிலை மாறி மாறி
4.இவ்வுணரும் பக்குவ நிலை அமிலக்கூட்டு உருவ மனிதனாக உருப்பெறும் காலத்தில்
5.பன்னிரெண்டு குண அமிலத்தைச் சேமித்ததன் மூலம்
6.மனித பிம்பச் சேமிப்பிற்குத் தேவையான வளர்ச்சி நிலை மனிதனாக ஆன பிறகு
7.சேமித்ததன் சக்தி இவ்வேழு பிம்ப உடல்களுக்கு ஜென்மம் எடுக்கக்கூடிய அமிலக் கூட்டு நிறைந்த பிறகுதான்
8.மனித பிம்ப உடலையே பெறுகிறது.

இவ்வாறு உருப் பெற்ற அனைத்தையும் உணரும் (SELF REALIZATION) உணர்வு… மனிதனின் உணர்வுடன் கூடிய எண்ண ஞானத்தைச் செலுத்தும் நிலைக்கொப்பத்தான் அமிலக்கூட்டை நிறைத்து (உடலிலே விளைய வைத்து)… மனித பிம்ப உடல் கொண்டவனின் அவரவரின் செயல் திறன் அமைகின்றது.

1.பிம்ப உடலின் பிறப்பிலேயே பிறப்பெடுத்து வளர்ந்து
2.வயது நிலையின் நிலைக்கொப்ப உருவ வளர்ச்சியின் மாற்றங்களும்
3.ஞான சக்தியின் உணர்வாற்றலும் செயல்படுகின்றன.

“உருவ வளர்ச்சி நிலை” குறிப்பிட்ட காலத்துடன் நின்று விடுகின்றது. ஆனால் உணர்வின் எண்ண ஈர்ப்பு ஞானத்திற்கு…
1.உடலின் வளர்ச்சிப் பருவம் எய்திய காலத்தில் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்
2.ஒவ்வொரு மனிதனின் குண நிலை செயல்படுகிறது.

பருவ வளர்ச்சிக் காலத்தில் (ADOLESCENT AGE) மனித பிம்பத்தின் ஈர்ப்பின் அமில குணமே
1.மிகவும் வீரிய காந்த மின் அலையின் சக்தியை
2.மின்சாரத்தின் ஈர்ப்புப் பாய்ச்சலைப் போன்று பாயும்
3.அமில வளர்ச்சியின் சேமித குணமான அடிப்படை அமைகின்றது.

“அத்தருணத்தில் வெளிப்படுத்தும் முறை கொண்ட மனிதனாகத்தான்” மனித ஜென்ம காலம் வரை ஒவ்வொருவனின் குண நிலையும் அமைகின்றது.

இவ்வுணர்வலையின் ஈர்ப்பு சக்தி “துரித ஓட்டத்தில்… ஓடும் காலமிது…!”

அதனைச் செலுத்தும் முறை கொண்ட… மனித வாழ்க்கை முறை பெறும் காலத்தை… எச்சக்தியில் செயல்படுத்துகின்றனரோ…!
1.அதன் உணர்வு ஈர்ப்பு அமிலத்தின் சேமிப்பை – அத்தருணத்தில் தான்
2.குணத்தின் அடிப்படை உணர்வு சேமிதம் உள்ளது.

பல துறைகளில் முன்னேறுபவர்களுக்கும் “அக்காலத் தருணம் தான்” ஏற்றதாக அமைகின்றது. அதி உல்லாச காமுக வழித் தொடரில் செல்பவனும் இப்பருவ கால ஈர்ப்பில் எடுக்கும் எண்ணத்தின் வழித் தொடர் மனிதனாகத்தான் ஒவ்வொருவனும் வாழ்கின்றான்.

1.இதனை மாற்றி அமைக்கும் செயலாக
2.எச்சக்தியைக் கொண்டு செயல்படுத்துவது…! என்பதும் கடினம் தான்.

உணர்வின் எண்ணத்தின் வழித் தொடர் அமிலமுடன் வழி கொண்ட நாம் அவரவர்களின் நிலைக்குகந்த செயல் வழியை “நினைத்த மாத்திரத்தில் மாற்றிக் கொள்வது…!” என்பது கடினமாகிறது.

பிறரால்…
1.அவர்களின் நற்சக்தியைச் செயலாக்கித் தீயவர்களை நன்மை ஆக்குவது என்பதும்
2.தீயவன் நல்லவனைத் தீமைப்படுத்துவதற்கும்
3.அந்தந்தக் குண அமிலத்தின் நிலையிலிருந்து மாற்றுவது கடினம்.

உணர்வினால் எடுத்த அமிலத்தின் வளர்ச்சியின் குண மனிதன் அவன் அலைத் தொடரில்தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றான்.

இந்நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்…?

1.மிகவும் சக்தி வாய்ந்த காந்த மின் அலையின் ஈர்ப்பை எடுத்து
2.அவர்களின் எண்ணமும் – நல்லுணர்வின் பால் சக்தி அலையின் ஈர்ப்புடன் “கலக்கப் பெற்றால் தான்…!”
3.எச்சக்தியின் அலையும் அவர்கள் உடலில் பாய்ந்து
4.அவர்களின் குண நிலையின் வழித் தொடரையே மாற்றியமைக்க முடியும்.

முந்தைய இராமாவதார கிருஷ்ணாவதாரக் காலங்களில் காவியங்களில் காட்டப்பட்ட போர்களில்… ஒருவருக்கொருவர் போர் செய்யும் பொழுது…
1.ஒருவர் வில்லிலிருந்து வரும் அம்புடன் எதிர்த்து வரும் அம்பும் மோதுண்ட பொழுது
2.ஒளி நிலை பெற்று ஒன்றுடன் ஒன்று ஊடுருவி எதிர்நிலை கொண்டு
3.அதனதன் நிலைக்கே திரும்பிச் சென்றதாகக் காவியக் கதைகளில் படித்திருப்பீர்கள்.
4.உண்மையைக் கதைப்படுத்தி மறைக்கப்பட்ட தத்துவங்கள் பல உண்டு அவற்றில்…!

வான்மீகி மகரிஷியால் இராமாயணக் காவியத்தில் எழுதப்பட்ட அந்த உண்மையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல கருத்துக்கள் உண்டு. “இன்று வரை அதன் உண்மைப் பொருளை உணர்ந்தாரில்லை…!”

ஞானிகள் கொடுத்த காவியங்களில் உள்ள மூலங்களை அறிந்திட முற்படுங்கள்..! அருள் வழியில் நடந்திட அதிலே தக்க உபாயங்கள் உண்டு.

ஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…?

ஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…?

 

பால் சத்தானது தான்… அதிலே விஷத்தைக் கலந்தால் என்ன செய்யும்…? குடிப்போரை மாய்த்துவிடும்.

இதைப் போல எவ்வளவு அழகான நிலைகளில் எவ்வளவு பரிமாணம் எடுத்துக் கொண்டாலும் வேதனை வேதனை என்ற நிலைகள் வந்தாலே அந்த அழகே போய்விடுகிறது.

பெரிய குடும்பமாக இருக்கின்றது… தொழில் செய்கின்றோம்… எல்லாச் செல்வங்களும் வந்துவிட்டது. பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்.

ஆனால் அவன் ஏதாவது தவறு செய்தாலோ… “இப்படிச் செய்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று எண்ணும் பொழுது வேதனை.

வேதனை என்றாலே விஷம்…!

1.தொழில் செய்கின்றோம்… அதில் நஷ்டம் வந்தால் வேதனை.
2.ஒருவருக்கு உதவி செய்கின்றோம்… கேட்கவில்லை என்றால் வேதனை.

இப்படி இந்த விஷமான சத்துக்கள் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்குள் பட்டு விட்டது என்றால் நம் உடலிலே அது நோயாக மாறிவிடுகிறது.

எவ்வளவு உயர்ந்ததற்குக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணினோமோ அங்கே போகாதபடி
1.வேதனை என்ற நிலையைக் கொண்டு வந்து சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
2.மனித உடலை இழக்கச் செய்து இழிநிலையான சரீரத்திற்குக் கொண்டு விட்டு விடுகின்றது.

அப்படி வந்தாலும் மீண்டும் அந்தக் கெட்டதை நீக்கி விட்டு நல்லதைப் பெறும் நிலைகள் வந்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற நிலைகளை வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்கும்படி ஞானிகள் அதைச் சாஸ்திரத்தில் காட்டுகிறார்கள்.

“விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தன்மை என்ன…?

ஒரு சூரியனின் தன்மையே என்றுமே விழித்த (பிரகாசமான) நிலை கொண்டது. அதைப் போன்று சப்தரிஷி மண்டலம் தனக்குள் என்றுமே அது ஒளி கொண்டது.

1.என்றைக்குமே விழித்த உணர்வு கொண்டு தான் பெற வேண்டுமென்று
2.விழித்திருந்தே பொருளறிந்து தனக்குள் செயல்படும் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
3.பரமபதத்தின் தத்துவத்தை “வைகுண்ட ஏகாதசி – சொர்க்கம்…” என்று காட்டி
4.உடலை விட்டுச் சென்றபின் நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று என்ற தெளிவைக் காட்டுகின்றார்கள்.

நம்மை அறியாது வரக்கூடிய விஷத்தை நீக்கக்கூடிய வழியையும் ஒவ்வொரு செயலைச் செய்யும் போது நாம் எப்படி விழித்திருக்க வேண்டும் என்றும்…?
1.இதை உணர்த்துவதற்கு ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருந்து
2.அந்த நல்ல நிலைகளைப் பெறச் சொன்னார்கள்.

ஆனால் இன்றோ விடிய விடிய விழித்திருந்து காலையில் வந்தபின் அதைச் செய்வோமா…? இதைச் செய்வோமா…? என்று அந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

ஐயோ பாவம்…! என்று இரக்கப்படலாமா…? – ஈஸ்வரபட்டர்

ஐயோ பாவம்…! என்று இரக்கப்படலாமா…? – ஈஸ்வரபட்டர்

 

1.உணர்வின் எண்ணத்தை எந்த ஒரு செயலின் எண்ணத்திலும்… நம் எண்ண ஈர்ப்பிலும் செல்லாமல்
2.இவ்வுடலின் அமில குணத்தை நற்குணங்களின் அமில வளர்ச்சியுடன் வளரவிட்டாலும்
3.நம் எண்ணத்தின் உணர்வைச் சங்கடமும்… பரிதாபமும்… பச்சாதாபமும்… காட்டும் உணர்வலைக்குச் செலுத்திடலாகாது.

பரிதாபப்பட்டுப் பிறரின் எண்ணமுடனே நம் உணர்வின் எண்ணத்தையும் அவர்களின் உள்ள நிலைக்கு இரங்கி நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் நம் உணர்வும் அதே சுழற்சியில் சென்று விடுகிறது.

அப்பொழுது அவர்களின் உடல் அமிலக் கூட்டின் எண்ண அலையை நம் ஈர்ப்புக்குள்… “அவர்கள் பால் செலுத்தும் எண்ணத்தால்” எடுத்துக் கொள்கிறோம்.

நம் உணர்வுகள் “பாவம்…!” என்ற பரிதாபச் சுழற்சி வட்ட உணர்வு அமிலத்தை ஏற்பதினால்… நம்முள் உள்ள உயர் குண அமில சக்தியினைப் பிறர்பால் செலுத்தும் உணர்வின் எண்ணத்தால்
1.நம் நிலைக்கும்
2.நாம் செல்ல வேண்டிய வழிக்கும் தடை ஏற்படுத்துகிறது.

நற்சக்தியை… ஆண்டவன் என்ற நிலை அடைய… ஆண்டவன் பால் செல்ல எல்லா உயிர் ஆத்மாக்களிடமும் அன்பைச் செலுத்துங்கள்..! என்று இன்றைய கலியில் பல மகான்களாக ஞானத்தின் வழித் தொடரில் வந்த நாம் அறிந்த பலரும் கூறியுள்ளார்கள்.

இருப்பினும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பிம்ப உடலில் பல இன்னல்களைப் பெற்று அதே செயலில் உடல் பிம்ப வலுக் குன்றியதனால் அவர்களின் வாழ்நாட்களில் பல சக்திகளைப் பெற்றிருந்தும் இவ்வுணர்வின் எண்ண செயல்முறை செலுத்தும் வழி முறை அறியாமல் பிறரின் எண்ண உணர்வு நிலையின் சுழற்சியில் சிக்கி விட்டனர்.

இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ரமண மகரிஷியாகப் பலர் போற்ற இருந்தவரின் நிலையும் இன்னும் இவர்களைப் போல் ஞானத்தின் ஈர்ப்பில் வந்தவர்களும்
1.எண்ணத்தின் உணர்வைப் பிறர்பால் “பரிதாபம்” கொண்டு செலுத்தி
2.இவர்கள் செலுத்திய அன்பின் பரிதாப நிலையினாலேயே
3.அவர்களின் உணர்வு எண்ண அலையின் ஈர்ப்பு இவர்கள் உடலிலும் “சாடியது…”
4.அதனால் தான் ஞானத்தின் வழி பெற்றிருந்தும் உடல் பிம்பக் கூட்டைக் காக்க முடியவில்லை.
5.உடல் பிம்பக் கூட்டிற்கு மட்டுமல்ல… நாம் எடுக்கும் உணர்வின் எண்ண உயர் ஞானச் செயலுக்கும் “இவை எல்லாம் தடைக்கற்கள் தான்…!”

இம்மனித பிம்ப உடல் “உணர்வு எண்ண ஈர்ப்பிற்கு” மிகவும் சக்திவாய்ந்த நிலையுண்டு…!

எண்ணமுடன் எடுக்கும் சுவாச அலையில் காந்த மின் ஈர்ப்பு குண உயிரணுக்களாக இவ்வுடல் முழுமைக்கும் ஈர்த்தெடுத்து வெளிக் கக்கும் இவ்வலையின் ஈர்ப்பு நாம் எடுக்கும் எண்ணத்தில் ஈர்ப்புடன் மோதுகிறது.

இங்கு இப்பொழுது உணர்த்தும் முறை கொண்டு
1.பிறர்பால் அன்பு செலுத்திடலாகாதா..?
2.பிறரிடம் இரக்கம் காட்டிடலாகாதா..?
3.பிறருக்கு நம்மால் முடிந்த தான தர்மங்கள் அளித்திடலாகாதா..? என்று கேட்கலாம்…!

பிறர்பால் அன்பைச் செலுத்தாதீர்…!

“பிறருக்கு அன்பான குண நிலை பெறவேண்டும்…” என்ற
2.அன்பலையை அவர்கள் வளர்க்க
3.அவர்களுக்கு “நம் எண்ணத்தால் நல் நிலை பெறட்டும்…” என்று
4.இந்த உணர்வைச் செலுத்துங்கள் “அன்பாக்கி..!”

நம்மைச் சார்ந்தவரும் சரி… நாம் கண்டுணர்பவரும் சரி… அவர்கள் படும் துயரமுடன் நம் உணர்வையும் பரிதாபமாக்கி… நம்மையும் பரிதாபப்படுத்திக் கொண்டு..
1.அவர்கள் அலையுடன் நாம் ஒன்றாமல் – நம் சக்தி அலையைக் கொண்டு
2.அவர்களுக்கு நல் நிலை நடக்கட்டும்..! என்ற ஒளி அலையைப் பாய்ச்சுங்கள்.

அவர்கள் உயரவும்… உடல் நலம் பெறவும்.. நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
1.”நல் நிலை” அவர்கள் பெற நம் உணர்வின் எண்ணம் செல்ல வேண்டுமேயன்றி
2.நம் உணர்வையும் எண்ணத்தையும் அவ்வுணர்வின்பால் செலுத்திடலாகாது.

அதே போல் தர்ம நிலைக்கும்… இரக்கத்தின் உணர்வால் ஒன்றி தர்மம் செய்யாமல் “பல துயரங்களில் அவர்கள் உள்ளார்கள்…” என்ற இரங்கிய தர்மம் தராமல்
1.நாம் தரும் தர்ம ஈகையினால் அவர்கள் பெற்று உயர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி
2.நாம் தரும் தர்மம்… பெறுபவரையும் உயரும் எண்ணத்திற்குச் செல்லும் முறையில்
3.நம் தர்ம முறையும் இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நம் ஞானத்திற்கு…
1.பிறரின் ஈர்ப்பால்
2.அவர்களின் குண ஈர்ப்பின் எண்ணமுடன் நாம் ஒன்றியவுடன்
3.நம் நிலையும் மாறும். (இது முக்கியம்)

நாம் அறிந்த பல ஞானிகளும் அவர்கள் இரங்கிப் “பிறர்பால் செலுத்திய அன்பினாலேயே..” அவர்கள் ஞானமும் குறைந்தது.

யாம் சொல்லும் இத்தகையை பரிபக்குவ உணர்வைக் கொண்ட எண்ண ஜெபத்தில் எடுக்கும் நிலையைக் கொண்டுதான்
1.நம்முள் சேர்ந்துள்ள அமில குணத்தின் வளர்ச்சியினால்
2.சக்திவாய்ந்த ஒளி அலையின் காந்த மின் அலையின் ஈர்ப்பை
3.அந்த மெய் ஞானிகளிடமிருந்து பெற முடியும்.

நஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…?

நஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நான் (ஞானகுரு) அனுபவம் பெறுவதற்காக வேண்டி
1.பல கஷ்டங்களையும் கொடுத்தார்.. கடுமையாகத் திட்டுவார்…!
2.கொச்சையாகப் பேசுவார். பொறுத்துக் கொள்ள முடியாது
3.காதிலேயே கேட்க முடியாது. அவ்வளவு மோசமாகப் பேசுவார்.
4.என்னை ஒவ்வொரு நொடியிலும் உதைப்பார்; இம்சிப்பார்; திட்டுவார்..! இத்தனையும் செய்வார்.

நன்றாக பேசிக் கொண்டே இருப்பார். திடீரென்று என்ன செய்கிறார் என்று எனக்கே தெரியாது. போய்க் கொண்டு இருக்கும் போதே இல்லாத கஷ்டத்தை எல்லாம் எனக்கு ஏற்படுத்தி வைப்பார்.

“இப்படிச் செய்து விட்டார்… பார்…!” என்று நான் திகைத்து நிற்பேன்.

அப்பறம் என்ன செய்வார்…?

இதை எடுத்து நீ பாருடா…! என்று சொல்வார்.
1.உன் உடலில் இப்போது என்ன செய்கின்றது…?
2.நான் இப்போது உன்னை என்ன செய்தேன்…?
3.நீ ஏன் அதைச் சுவாசித்தாய்?
4.அதை நீ “தடைப்படுத்து…!” என்று சொல்வார்.

எப்படி சாமி தடைபடுத்துவது…? என்றேன் நான்.

இதற்குத் தான் “குரு பலம்…!” வேண்டும் என்பது. ஆகவே “குரு” எது?

கோபமான எண்ணங்களை நீ பதிவு செய்து வைத்துக் கொள்கிறாய். அதைத் திருப்பி எண்ணும் போது குருவாக வந்து உன்னைக் கோபமாகச் சண்டை போட வைக்கின்றது. இது குரு பலம் தான்.

அதே மாதிரி உன்னைத் திட்டி வேதனைப்படுத்துகின்றார்கள். அதைப் பிடியாக வைத்துக் கொள்கிறாய். திருப்பி எண்ணியவுடனே அது குருவாக வருகின்றது.

உன்னை வேதனைப்படச் செய்து வேதனைப்படும் செயல்களைச் செய்ய வைக்கின்றது. உடலுக்குள்ளும் வேதனையாகின்றது. அது குருவாக நிற்கின்றது.

அப்படியென்றால் “நீ எதைக் குருவாக்க வேண்டும்…?” என்று வினா எழுப்புகிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இந்த வேதனைகளையெல்லாம் நீக்கியவர்கள் அந்த “மகாமகரிஷிகள்…!”
1.அதை எடுத்து உனக்குள் குருவாக ஆக்கு.
2.அந்தக் குருவை நீ மதி
3.அந்தக் குரு உனக்குச் சகல நிலைகளையும் செய்யும்.

நான் இப்போது உன்னைக் கடுமையாகத் திட்டுகின்றேன். அதை நீ குருவாக எடுத்துக் கொண்டால்
1.என்னைப் “போடா சாமி…!” என்பாய்
2.என்னைப் “பைத்தியக்காரப் பயலே…!” என்று சொல்வாய்

“இப்படியே” குருநாதர் சொல்கின்றார்.

நான் உன்னைத் திட்டுகின்றேன் என்கிற போது “நான் திட்டியதைத்தான்” நீ எடுத்துக் கொள்கிறாய்.

ஆனால் உன்னிடம் இருக்கிற “கெட்டதெல்லாம் போக வேண்டும்…!” என்று நான் திட்டுகின்றேன்.
1.அதை நீ எடுத்து கொள்ள மாட்டாய்…!
2.பாவி…! என்னைப் பைத்தியக்காரத்தனமாகத் திட்டுகின்றார்… “இந்த மனிதன்..” என்று தான் நீ எண்ணுவாய்.

உனக்குள் மறைந்து சில நிலைகளைச் செய்கிறது அதை நீ நீக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!

என்னைத் திட்டுகின்றான் என்பதை மட்டும் வெளியில் வருவதை… உன் செவிப்புலன் இயக்குகின்றது. இந்த உணர்வு இயக்குகிறது.

ஆனால் அதே சமயத்தில் என் மீது இருக்கக்கூடிய பிரியத்தின் படி “என்னைப் பைத்தியக்காரன்” என்று நீ திட்டுகிறாய்… அது இயக்குகின்றது. உன் வெறுப்பைக் காட்டுகின்றாய்.
1.”இவ்வளவையும்…” என் அனுபவத்திற்குக் கொண்டு வருகின்றார்.
2.ஆனால் குருநாதர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார்.

இந்த உணர்வுகள் உனக்குள் வினையாக எப்படிச் சேர்கின்றது? அதை நீ எப்படி நிறுத்த வேண்டும்? இதற்காக வேண்டித்தானப்பா…! இதைச் சொல்கிறேன் என்பார் குருநாதர். அனுபவரீதியாகத்தான் எல்லாமே கொடுத்தார்.

எனக்கு குருநாதர் இப்படிக் கொடுத்தார். உங்களுக்கு அனுபவம் எதில் கொடுக்கின்றேன் என்றால்
1.ஒரு கஷ்டம் வரும் போது இதைப் பயன்படுத்திப் பாருங்கள்
2.உங்கள் “கஷ்டம் போகும்” என்று சொல்கிறேன்
3.இதை அனுபவரீதியில் நீங்கள் பார்க்க வேண்டும்…!