மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்

மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்

 

உதாரணமாக கோழி விஷமான உணவுகளை (ஜெந்துக்களை) உணவாக உட்கொண்டாலும் அந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கி தன் தசையாக மாற்றித் தன்னிலை அடைகின்றது. அதே போல் மயில் போன்ற பெரும்பகுதி பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி கொண்டவைகள்.

இதைப் போலத்தான் மனித வாழ்க்கையில் வந்த கடும் தீமையினுடைய நிலைகளையும் அதனுடைய செயலாக்கங்களை ஒடுக்கித் தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.

அப்படி செயல்பட்டவர்கள்… தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட பேரருள் உணர்வுகளை அதன் பின் வந்த மனிதர்கள் கவர்ந்து தன் உடலில் அது ஒவ்வொன்றிலும் இணைக்கப்படும்போது மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாற்றி அமைத்தனர்.

அவ்வாறு உயிருடன் ஒன்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலம் என்பது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே சுழன்று கொண்டுள்ளார்கள்.

அதாவது உணர்வின் தன்மை ஏழாவது நிலை அடைவதுதான் சப்தரிஷி என்பது. மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளைத் தனக்குள் செயலாக்காது தடுத்து ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் அடக்கி ஒளியின் உணர்வாகத் தன் உடலிலே வளர்த்துக் கொண்டால்
1.இந்த உடலைவிட்டுச் சென்ற பின்
2.எந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
3.அதன் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறப்பட்டு
4.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாகி வளர்ந்து கொண்டுள்ளோரோ
5.அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றி விடுகின்றது. அதன்பின் நமக்குப் பிறவி இல்லை.

விண்ணுலகில் உருவாகும் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பெரும் கூட்டமைப்பாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர். அதைத் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பார்கள்.

1.அந்தக் கூட்டமைப்புக்குள் மனிதனாகச் சென்றவர்கள் அனைத்தும்
2.சாதாரண கண்ணுக்குப் புலப்படாத அளவுகளுக்கு ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக
3.வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டு உள்ளார்கள்… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்…!

ஆகாய கங்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆகாய கங்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குண்டு ஓடும் நிலையில் ஒவ்வொன்றும் அதற்குகந்த ஈர்ப்புத் தன்மையுடன் ஓடுகின்றது.

சூரியனை மையம் கொண்டு ஏழு பெரிய கோளங்கள் உள்ளன. இவ் ஏழின் ஈர்ப்பில் இவ் ஏழிற்கும் தாண்டிய நிலையில் இவ் ஏழிற்கும் சிறிய கோளங்கள் 48 மண்டலத்தில் சூரியனும் நம் பூமியைச் சேர்த்து ஏழு கோளமும் இவ் எட்டும் போக பாக்கி நாற்பது கோளங்களும் இவ் ஏழின் ஈர்ப்புடனே சுழலுகின்றன.

ஒவ்வொன்றின் அமில சக்தியும் மாறு கொண்டுள்ளது. சூரியனை மையப்படுத்தி அதன் ஈர்ப்பின் வட்டத்துக்குள் வந்துள்ள மண்டலங்கள்தான் இந்த நாற்பத்தி ஏழும்.

அவற்றில் சிறிய கோளங்களுக்கு இன்றைய விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டவில்லை. தெய்வீக அருள் நெறியில் சித்தர்களினால் உணரப் பெற்று அவர்கள் இட்ட நாமகரணங்கள் இவற்றுக்கு உண்டு.

ராகுவும் கேதுவும் சுக்கிரனும் சனியும் குருவும் இவர்கள் பிடியில் சிக்குண்ட மண்டலங்கள். மற்ற மண்டலங்களை நட்சத்திர மண்டலமாக்கி அதன் நாமகரணத்தைச் சூட்டினார்கள்.

1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்…
2.நம் சித்தர்களால் இயற்றப்பட்ட எண்ணத்தில் பதிவு செய்த இக்கோளங்களின் நிலையே அற்றுவிட்டது.
3.ஏனென்றால் அக்காலத்தில் எழுத்து வடிவங்களோ கற்பாறையில் ஓலைகளில் உணர்த்தச் செய்யும் வழி முறையோ இல்லை.

சித்தர்களால் மனித ஆத்மாவுக்கு வளர்ச்சியூட்டி அவ்வளர்ச்சியின் தொடரில் இவ்வுலக மனித ஆத்மாக்கள் வளர்ந்த நிலையில் சிறுகச் சிறுகத்தான் இவ்வாத்மாக்களின் அறிவு வளர்ச்சியைப் பெருகச் செய்து அதன் வழித்தொடரில் எண்ணத்தைப் பதித்திடும் நிலை வந்தது.

அதற்குப் பிற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் “பதிவு செய்யும் எழுத்து நிலையே…” உதயம் பெற்றுச் செயலாக்கிட முடிந்தது.

இந்த நிலை வளர்வதற்குள் மனித ஆத்மாவின் அறிவு நிலை வளர்வதற்குள் மண்டலங்களின் வளர்ச்சி நிலை பெருகிவிட்டது.
1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றுணர்த்திய சித்தர்களின் சக்தி நிலைக்கும்
2.இன்றைய இயற்கையின் சக்தி நிலைக்குமே பெரும் மாற்றம் உள்ளது.

ஒவ்வொரு கோளமுமே அதன் ஈர்ப்பில் பல சக்திகளைச் சேர்த்துக் கொள்கின்றது.

சில நாட்களில் சந்திர மண்டலத்திற்கு அருகாமையில் நட்சத்திர மண்டலங்களைக் காண்பீர்கள். ஒரு நாள் காணும் நிலை மற்றொரு நாளில் காண முடிந்திடாது.
1.அதன் ஈர்ப்பில் சிக்குண்டு அதன் செயலுடன் ஆவியான அமிலமாய்ச் செயல் கொண்டாலும்
2.செயல் கொண்டிடும் இதன் ஓட்டத்தினால்… இதன் வேக நிலை கொண்டு
3.சந்திரனின் ஈர்ப்பில் சிக்காமலும் தப்பிவிடும்.

நம் பூமியே ஒவ்வொரு நாளும் பல நட்சத்திர மண்டலத்தைத் தன்னுள் ஈர்த்தே சுழன்று ஓடுகின்றது. அதை எல்லாம் சில நாட்களில் வானத்தில் எரிநட்சத்திரமாய் எரிந்து விழுவதைப்போல் காண்பீர்கள்.

சுழற்சியில் சிக்கி ஆவியான அமிலமாய் நம் பூமியின் ஈர்ப்பில் பல நட்சத்திர மண்டலங்கள் கலப்பதைப் போல் ஒவ்வொரு மண்டலத்திலும் அதற்குகந்த அமில சக்தியுடைய மண்டலங்கள் கலக்கின்றன. வளர்ச்சியும் பல கொள்கின்றன…!

1.சில நாளில் வான மண்டலத்தில் பார்வைக்கு மிக அதிகமான நட்சத்திர மண்டலங்கள் தெரிவதைக் காண்பீர்கள்
2.சில நாட்களில் ஒன்றிரண்டு காண்பது கூட அரிதாக இருந்திடும்.

இம் மண்டலங்களின் ஈர்ப்பிலும்… நம் பூமி ஓடும் நிலையில் நாம் சந்திக்கும் நிலை கொண்டு நிகழ்பவைதான் இவையெல்லாம்.
1.எந்த மண்டலமும் ஓர் இடத்தில் இருந்து சுழல்வதில்லை.
2.ஓடிக் கொண்டே உள்ள நிலையில் நம் பூமி காணும் நிலை கொண்டு தெரிபவைதான் இந்த நட்சத்திர மண்டலங்களெல்லாம்.

நம் பூமி ஓடும் நிலையில் நம் பூமியின் ஈர்ப்புடனும் பூமியில் சிக்காமலும் நம் பூமியுடனே ஓடி வரும் நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.

அங்கங்கு நம் பூமியின் ஓட்டத் துரித நிலையுடன் ஓட முடியாத… குறுகிய ஓட்ட நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.

1.அந்த எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட
2.அவ்வாதி சக்தியின் சக்திக்குத் தானப்பா செயல் சக்தியுண்டு.
3.சக்தியின் செயல் வேண்டியே… நாம் அறிந்தே… இங்கே எழுத்தின் வடிவிற்கு வருவோம்…!

உயிரின் துடிப்பால் உடலில் உண்டாகும் உஷ்ண நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உயிரின் துடிப்பால் உடலில் உண்டாகும் உஷ்ண நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

வான் வீதியில் வட்டமிட்டுக் கொண்டே உள்ள மண்டலங்களும் நட்சத்திர மண்டலங்களும் இந்தப் பால்வெளி மண்டலத்தில் வளர்ச்சி கொண்டுள்ள சில நிலைகளும் ஒன்றைத் தாண்டி ஒன்று ஓடும் நிலைக்கும் ஜீவன் வேண்டும்.

உஷ்ண அலைகளைக் கொண்ட நிலையில்தான் அததற்கு உயிர்த் துடிப்பே வருகின்றது.
1.அதி உஷ்ணத்தை எதுவும் ஏற்பதில்லை.
2.அதி குளிர்ச்சி பனிக்கட்டியாக உறைந்த நிலையிலும் தாவர இன வளர்ச்சி வளர்வதில்லை.

இன்று நம் பூமியின் நிலை எந்த நிலையில் அது சுழலும் தன்மை கொண்டு காற்று மண்டல வட்டத்திற்கு மேல் உஷ்ண அலைகளை நம் பூமி வெளிப்படுத்துகின்றதோ அந்த நிலையில்தான் ஒவ்வொரு கோளங்களுக்கும் அதன் சுழற்சியில் காற்று மண்டலமும் அம்மண்டலம் கக்கும் உஷ்ண நிலையும் செயல் கொள்கின்றது.

மனித உடலுக்கும் சரி ஒவ்வொரு ஜீவனுக்கும் சரி…
1.அதனைச் சுற்றி சப்த அலை உண்டு
2.சப்த அலைக்குச் சிறிது தள்ளி உஷ்ண அலை உண்டு.
3.இந்த மனிதனின் உடல் வெப்ப நிலையும் அம்மனிதனைச் சப்த அலையின் வெப்பக் காற்றும் ஒன்றாய்த்தான் இருந்திடும்.

தாவரங்களுக்கும் இந்த நிலையுண்டு. இதைப் போல் இவ்வுலகம் மற்ற எல்லா மண்டலங்களுக்குமே இப்படிப்பட்ட உஷ்ண அலைகள் உண்டு.

சந்திரனின் நிலை குளிர்ந்த நிலை என்று முன்னர் உணர்த்தினேன். ஒவ்வொன்றிற்கும் அதனதன் சுழலும் வேகம் கொண்டு இவ்வுஷ்ண அலைகள் மாறுபடுகின்றன.

இவ்வுஷ்ண அலை கக்கும் நிலையே எந்த மண்டலத்திற்கும் ஓர் இடத்தில் இருக்கும் நிலை மற்றொரு இடத்தில் இருந்திடாது. எல்லா ஜீவராசிகள் தாவரங்களின் நிலைக்கும் இத்தகைய நிலை உண்டு.

அது போல் சூரிய மண்டலத்திற்குச் சென்றிட முடியாது… “அது உஷ்ணமான கோளம்…” என்று விஞ்ஞானத்தில் உணர்த்துகின்றனர். ஆனால் அங்கே அப்படி இல்லை…!

இன்றைய பிழைப்புக்கு என்ன வழியோ அது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர்

இன்றைய பிழைப்புக்கு என்ன வழியோ அது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர்

 

இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன் ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.

அதே சமயத்தில் தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு. ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.

இதைப்போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.

அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.

இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு இதை எல்லாம் (ஞானகுருவின் உபதேசங்களை) படிக்கும் போதும் கேட்கும் போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.ஏனென்றால் நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில் சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி… நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின் தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள் அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.

மீண்டும் புழுவாக பூச்சியாக பாம்பாக தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.

இன்று மனிதனாக இருக்கின்றோம் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்திலும் (அறிவிலும்) மகரிஷிகளின் உணர்வை இணைத்து நல்லதைக் காக்கும் கவசமாக்க வேண்டும்

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்திலும் (அறிவிலும்) மகரிஷிகளின் உணர்வை இணைத்து நல்லதைக் காக்கும் கவசமாக்க வேண்டும்

 

நாம் பிறருடைய தீமைகளைப் பார்க்கும்போது நம் நல்ல உணர்வுகளை அந்த விஷத் தன்மையான உணர்வுகள் மறைத்து விடுகின்றது. (ஒரு திரை போல்)

அப்படி மறைத்ததைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்து
2.அவ்வப்போது நம்மை மறைக்கும் அந்தச் சிறு சிறு திரைகளை அகற்றிட வேண்டும்.
3.அன்றன்று அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

எதன் துணை கொண்டு…?

அதற்குத்தான் இப்போது இடை மறித்து இடைமறித்து உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்ப உபதேசிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்றால் உங்களுடைய உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுடன் இணைக்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஒவ்வொரு அறிவிலும் (உணர்விலும்) இணைத்த பின்
2.தீமைகளைக் கவராது “அந்தந்த அறிவு” அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.

அத்தகைய நிலைகளை உருவாக்கினால்தான்… இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளும் காற்று மண்டலத்தில் இருக்கும் நச்சுத் தன்மைகளும்… பிற மனிதன் செய்யும் தவறான உணர்வும்… விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளும் நமக்குள் புகாது… நம்மை இயக்காது… தடுக்க முடியும்.

பகுத்தறிவு கொண்டு படித்திடும் விஞ்ஞான அறிவை எழுத்து வடிவில் உற்றுப் பார்த்து அதன் உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் பதிவு செய்து கொண்டாலும்… இங்கே பூமியிலே பரவிக் கொண்டிருக்கும் உணர்வுகளை நாம் கவர்ந்தாலும்… அது எல்லாம் நம் ஆன்மாவில் இணைந்து கொண்டே உள்ளது.

அதாவது… எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் தீமைகள் படர்ந்துள்ளதோ அது நம் பூமியான இந்த பரமாத்மாவில் (காற்றிலே) வளர்ந்துள்ளதோ இதைப் போல நம் ஆன்மாவிலும் இது உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் எண்ணிலடங்காத அணுக்கள் ஜீவான்மாக்களாக வாழுகின்றது. ஆகவே இந்தப் பூமியில் எந்த அளவுக்குத் தீமைகள் பரவி உள்ளதோ அந்தத் தீமையின் உணர்வுகளை நம் எண்ணத்தால் (நம் சந்தர்ப்பம்) பதிவாக்கி இருந்தால் அந்தத் தீமையின் அணுக்கள் உடலுக்குள்ளும் விளையும். அந்த அணுக்கள் தீமைகளைத் தான் விளைவித்துக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எலும்புக்குள் ஊனாக இருக்கின்றது. அந்த எலும்புக்குள் ஊனாக இருக்கப்படும் பொழுது அதனின் வளர்ச்சி
1.ஒரு மனிதனைக் கண் கொண்டு பார்க்கும்போது அவர் தவறு செய்கின்றார் என்று பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் அதே நினைவு கொண்டு கண்ணுக்கு வரப்படும்போது
3.எந்த மனித உடலிலிருந்து தவறு செய்யும் உணர்வுகள் அலைகள் வந்ததோ
4.அந்த உருவத்தை நமக்குள் நுகரச் செய்து அதே கோபத்தின் உணர்வுகளையோ அல்லது
5.அவனைக் கண்டு அஞ்சியிருந்தால் அந்த அச்சத்தையோ நமக்குள் செயலாக்குகின்றது.
நமக்குள் பதிவு செய்த இந்த வித்து… “ஊழ்வினை” என்ற நிலையில் வினைக்கு நாயகனாக அந்த உணர்வின் இயக்கமாக்கி நம்மை அதன் வழிகளில் வளர்த்துக் கொண்டுள்ளது.

அதைப் போன்ற தீமைகளை (வினைகளை) மாற்றுவதற்குத்தான் திரும்ப திரும்பச் சொல்லி உங்கள் உணர்வின் ஈர்ப்புகளை ஞானிகளின் பால் கொண்டு வரச் செய்கிறோம்.

எந்த அளவுக்குக் கூர்ந்து பதிவாக்கி அந்த அருள் சக்திகளை எண்ணி உங்களுக்குள் எடுக்கின்றீர்களோ முந்தைய நிலையில் உங்களுக்குள் சேர்ந்த தீய விளைவுகளையும் இதன் மூலம் மாற்றி அமைக்க முடியும்

உபதேசத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் நோக்கமே அதற்குத் தான்…!

என்ன கிரகமோ… என்ன சனியனோ…! நம்மைப் பிடித்து ஆட்டுகிறது என்று பேச்சு வழக்கில் சொல்வதன் இயற்கை நிலை என்ன…?

என்ன கிரகமோ… என்ன சனியனோ…! நம்மைப் பிடித்து ஆட்டுகிறது என்று பேச்சு வழக்கில் சொல்வதன் இயற்கை நிலை என்ன…?

 

1.பால்வெளி மண்டலத்தில் ஓடிக்கொண்டே உள்ள மண்டலங்களின்
2.ஒன்றின் ஈர்ப்பும் அதன் அமில சக்தியும் மற்றொன்றின் நிலைக்கு மோதுவதால்
3.ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அந்த ஈர்ப்பின் சக்தி நிலை கூடுகின்றது.

அனைத்து மண்டலங்களுமே சுழன்றே ஓடிக்கொண்டுள்ளன. ஒன்றுக்கு உகந்த சக்தி மற்றொன்றுக்கு இல்லை. சூரியனை மையப்படுத்தி சுழன்றோடும் இந்த 48 மண்டலங்களுக்கும் தனித்தனி தன்மை உண்டு.

நம் பூமியில் இன்றுள்ள சப்த அலைகளும் சுவையும் மற்ற இயற்கையில் தோன்றிடும் தாவரம் கனிவளம் இப்படிப் பல நிலைகள் வேறு மண்டலங்களில் மாற்றம் கொண்டுள்ளன.

நம் பூமியின் சக்தி நிலை போன்ற அதிக சக்தி கொண்ட மண்டலம் சூரியனை மையப்படுத்திச் சுழன்றிடும் இந்த 48 மண்டலங்களுக்குமே இல்லை.

நம் பூமிக்கு வியாழனிலிருந்து இன்று எப்படி நீர்நிலைகள் வந்திடும் சக்தி கிடைத்தது…? வியாழனிலிருந்து அதன் சுழலும் வேகமும் சூரியனின் சுழலும் வேகத்திற்கும் இரண்டின் ஈர்ப்பில் ஏற்படும் நிலை அதன் நேர் நிலை கொண்ட நம் பூமிக்குக் கிடைக்கின்றது.

வியாழனின் நிலை இல்லாவிட்டால் “நம் பூமிக்கு நீரில்லை…” இதே போல் செவ்வாயின் சக்தி நம் பூமிக்கு எந்த நிலையில் பாய்கின்றது…?

நம் பூமியிலிருந்து செவ்வாய் மண்டலமும் வியாழன் மண்டலமும் காணுவதற்கு நட்சத்திர மண்டலம் போல் இன்றும் தெரிந்து கொண்டுள்ளன.

பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாய்க் காண்கின்றோம். செவ்வாயில் நிறைந்துள்ள சக்தி “நம் பூமிக்குச் சப்த அலைகளைப் பாய்ச்சும் சக்தி…”

உம் சப்தமே வெளி வராத நிலைக்கான காற்றில்லா அடைப்பில் இருந்தால் கேட்டிடுமா…? அதைப் போல் பூமிக்கும் மையமான சூரியனுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள செவ்வாயின் நிலையினால் செவ்வாயின் சக்தியையும் மோதுண்டு அதன் ஒளி அலையையும் நாம் பெறுகின்றோம்.

1.செவ்வாயின் சுழலும் தன்மை கொண்டு அதன் அமிலத் தன்மையும்
2.சூரியன் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத்தன்மையும்
3.கலவை பெறும் இடத்திலிருந்து தான் “சப்த ஒலி” பிறக்கின்றது.

இதே நிலை கொண்டு நம் பூமிக்குத் தொடர்பு கொண்ட சந்திரனின் ஈர்ப்பு நிலை அமில நிலை வேறு. சந்திரனின் நிலை இல்லாவிட்டால் நாம் காணும் இவ்வண்ணங்களே இல்லை.

பல சக்தியை நம் பூமி ஈர்த்து நம் பூமியின் சக்தியை சந்திரன் பெறுவதினால் சந்திரனுக்கும் நம் பூமிக்கும் அதிகத் தொடர்பு உள்ளதினால் நம் பூமியின் நிலையைக் காட்டிலும் சந்திர மண்டலம் உருவில் சிறிதாகவும் அதே நிலையில் பல சக்திகளைத் தன்னுள் அடக்கிய வளரும் தருவாயில் உள்ள மண்டலம்.

நடக்க இருக்கும் மாற்ற நிலையினால் சந்திரனுக்குச் சப்த அலையும் இன்று ஒரே நிலையில் இரவு பகல் என்ற மாறுபட்ட குண நிலை பெறாமல் சுழன்றிடும் சந்திர மண்டலத்தில் நீர் நிலை சப்த ஒலியின் நிலையும் ஏற்படப் போகிறது.

அந்த வளர்ச்சி நிலை ஏற்பட்டு அதற்குப் பின் பல நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியையும் சந்திரன் பெற்ற பிறகுதான் அதன் வளர்ச்சியில் ஊரும் உயிரினங்கள் உருப்பெற்று ஜீவ உடல் கொண்ட உயிராத்மாக்கள் தோன்றிடும் காலம் வரும்.

1980ல் நடந்த அந்தக் கிரகண கால நிலைக்குப் பிறகு நம் சூரிய கிரகமுடன் பல நிலைகள் மாற்றம் ஆகிக் கொண்டுள்ளது.

இப்படிக் கிரகணம் பிடிக்கின்றது ஒவ்வொரு கோளும் சூரியனை…!

இதனால் சூரியனுக்கும் சூரியனை நேர் கொண்ட மண்டலத்தை எந்தக் கிரகம் தாண்டிச் செல்கின்றதோ அந்த மண்டலத்திற்கும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. (நாம் சந்திப்போர் குணங்களுக்குத்தக்க நம்மை நன்மை தீமை என்று எப்படிப் பாதிக்கிறதோ அது போல்…!)

ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை மூலமாக அண்டத்தையே அளந்தறியும் சக்தியை எடுக்கச் சொன்னார்கள் ஞானிகள்.. எடுக்கின்றோமா…?

ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை மூலமாக அண்டத்தையே அளந்தறியும் சக்தியை எடுக்கச் சொன்னார்கள் ஞானிகள்.. எடுக்கின்றோமா…?

 

விஞ்ஞானிகள் எந்தக் கோள் எங்கே… எந்தத் திசையில் செல்கின்றது…? என்ற உணர்வினை தொலைநோக்கிகள் மூலம் கவர்ந்து பதிவாக்குகின்றார்கள் ஒரு கம்ப்யூட்டரில். பின் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றார்கள்.

பெருக்கிய பின் என்ன செய்கின்றனர்…?

இந்த உணர்வின் அதிர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டபின் எந்த கோளின் உணர்ச்சிகள் (FREQUENCY WAVES) வருகின்றதோ அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.

1.நாடாக்களில் பதிவு செய்து
2.இராக்கெட்டை உந்து விசையால் விண்ணிலே உந்தச் செய்து அதனின் முகப்பில் வைக்கின்றான்
3.திசை… எல்லை… பாதை… எதுவுமே அமையாமல் இருக்கும்போது
4.எந்த கோளின் உணர்வலைகள் அங்கே பரவிக் கொண்டுள்ளதோ
5.அந்த திசைப் பக்கம் வந்தபின் அழுத்தமானபின் இராக்கெட் அதனுடன் சேர்ந்து செல்கின்றது
6.அதன் உணர்வின் ஒலி அதிர்வுகள் ஆனபின் தரை மார்க்கத்தில் இருந்து எடுக்கின்றான்.

இதைப் போலத்தான் அன்று மெய் ஞானி தனது மனிதனின் வாழ்க்கையில் நாம் எதை எப்படிப் பெற வேண்டும்… என்று உணர்ந்து மனிதன் இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவாக்கினான்.

இந்த உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனை எப்படி உருவாக்கியது…? என்ற நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்க்கும்படி செய்து நீர் நிலைகள் இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தான்.

விநாயகருக்கு முன்னாடி எலியை வைத்தான்… மூஷிகவாகனா..! (சுவாசநிலை).
1.நாம் சுவாசித்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் நடந்து வந்த ஒவ்வொரு நிலைகளும்
2.கணங்களுக்கு அதிபதியாகி இன்று பரிணாம வளர்ச்சியாகி நாம் மனிதனாக வந்தோம்
3.நாம் உணவுகளை எப்படி உட்கொள்கின்றோம்…? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
4.இந்தப் பிள்ளையார் (பிள்ளை யார்…?) என்று கேள்விக்குறி வைத்து நம்மைச் சிந்திக்கச் செய்கின்றனர்.

காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஆற்றிலே குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம்… துணி அழுக்கைப் போக்குகின்றோம். அன்றைய கால நிலையில்…!

கரையேறி வந்தபின் விநாயகரை உற்றுப் பார்த்து… ஆதிமூலம் என்ற (நம்) உயிர் பல பல உணர்வின் தன்மைகளை இந்த உயிர் ஈசனாக இருந்து மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? என்ற உண்மையை அறிவதற்காக இந்த கணங்களுக்கு எல்லாம் ஈசா “கணேசா…” என்று உயிரை வணங்கச் செய்கின்றனர்.

பின்… இந்த உலக உண்மைகளை எல்லாம் உணர்ந்த அன்று வாழ்ந்த அகஸ்தியன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியுமாக இரண்டறக் கலந்து விண்ணுலகை உணர்வினை ஒளியாக மாற்றி…
1இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதை நினைவாக்கிப் பதிவாக்கிக் கொள்ள
2.நம் நினைவினை விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார்.

இந்த உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கி அந்த அகஸ்தியன் நஞ்சினை எப்படி வென்றானோ அதே வழியில் நாம் வெல்லும் சக்திக்காக விநாயகரை இங்கே வைத்தான்.

அதாவது… டி.வி. ரேடியோவில்…
1.எப்படி எந்த ஸ்டேஷன் வேண்டுமோ அந்த அலைவரிசையில் நாம் அதைத் திருப்பி வைக்கின்றோமோ
2.அதைப் போல் பதிவின் எண்ணமாக்கி நஞ்சை வென்றிடும் சக்திகளை நாம் நுகரும்படி வைத்தான் ஞானி.

ஆகவே காலை எழுந்தவுடனே அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று அவனிடம் வேண்டி அந்தச் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

ஏனென்றால் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வை நம் கண்டிருப்போம். அதன் வழி தொடர்ந்து நம் உறுப்புகளில் இந்த அணுக்கள் சேர்ந்திருக்கும். ஏனென்றால் நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து தான் உணர்வின் தன்மையை மற்ற அணுக்கள் பகிர்ந்து கொள்கின்றது.

நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த விஷத்தின் தன்மை இங்கே வராதபடி நமக்குள் நட்பின் தன்மை வர வேண்டும் என்பதற்குத்தான் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நேரடியாகச் சேர்க்கச் சொல்கிறோம்.

ஆக இராமன் காட்டிற்குள் செல்லும்போது எப்படிக் குகனை நண்பனாக்கிக் கொண்டானோ அது போல்
1.அருள் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது
2.நமக்குள் பகைமை உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு
3.உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.

இத்தகைய சுவையின் உணர்வுகளை ஒளியின் தன்மையை மனிதன் தனக்குள் எப்படி உருவாக்க வேண்டும் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரம்.

அந்த இராமாயணத்தில் உள்ள மூலங்களை இது போல் தெரிந்து கொண்டால் மனிதன் தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்ற உண்மையை உணர முடியும்.

இவ்வாறு மனிதர்களான நாம் இனி எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைப்படுத்திக் காட்டினான் அருள் ஞானி.

சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கேள்வி:
விஞ்ஞானத்தில் அவர்கள் கண்டுபிடிப்பிலிருந்து சந்திர மண்டலத்தில் உயிரணு இல்லை… நீர் நிலையும் இல்லை…! இந்தச் சூழ்நிலையில் உயிரினங்கள் எப்படி எப்படி வாழ முடியும்…?

ஈஸ்வரபட்டரின் பதில்:
காற்றுடன் நீர் இல்லா விட்டால் அந்த மண்டலத்தின் சுழற்சியில் ஒளி ஏது…? உயிரணு இல்லா விட்டால் மண்டலத்திற்கு வளர்ச்சி ஏது…?

அந்த மண்டலமே உருப்பெற உயிரணுக்களை உண்டல்லவா அதன் கழிவை உஷ்ண அலையாய் வெளிப்படுத்தி அதன் வழியில் தொடர் கொண்டு வளர்ச்சி கொண்டு வளர்கின்றது.

பால்வெளி மண்டலத்தில் காற்றும் உண்டு நீரும் உண்டு உயிரணுக்களும் உண்டு.

வானமாகப் பரந்து விரிந்துள்ள பால்வெளி மண்டலத்திற்கே ஜீவன் உண்டு என்ற நிலையில் சந்திரனுக்கு ஏனப்பா நீரும் உயிரணுவும் இல்லையென்று விஞ்ஞானத்தில் செப்புகின்றனர்…?

1.காற்றுடன் கலந்துள்ள ஜீவனான நீர் இல்லா விட்டால்
2.அந்த மண்டலத்திற்குச் சுழற்சி ஏது…?
3.அதிலிருந்து பௌர்ணமி நிலவாகக் காண்கின்றோமே அந்த ஒளியும் ஏது…?

நம் பூமியைப் போல் அடர்ந்த கடல் நிலைகள் நிறைந்த நீர் நிலை அங்கே இல்லை. நீர் நிலையிலிருந்து வெளிப்படும் அமில சக்தியினால் நம் பூமி முழுவதுமே செயல் கொண்டு ஆங்காங்கு பெய்திடும் பருவ மழையினால் உண்டான நீர் நிலைகள் ஆறு ஏரி குளம் குட்டைகள் இப்படி சந்திரனில் இல்லை.

சந்திரனில் கண்டுபிடித்த நிலை போல் நம் சூரியனிலும் எந்த நிலையில் நீர்நிலை உள்ளது…? என்று உணர்த்தினார்களா…?

ஆனால் வரப்போகும் மாற்றத்திலிருந்து அடர்ந்த நீர் நிலைச் சக்தி சந்திரனுக்குக் கூடப் போகின்றது. நம் பூமியைப் போல் பருவ மழைகளைக் காணாத மண்டலம் அது. சந்திரனில் இன்றளவும் மழை பெய்ததில்லை.

சந்திரனில் நீர் இல்லாவிட்டால் சந்திரனிலிருந்து தோண்டி எடுத்து வந்தார்களே அந்தக் கல் எப்படி வளர்ந்தது…?

1.பனியான நிலை என்றுமே சந்திரனுக்கு உண்டு
2.குளிர்ந்த மண்டலம் அது…!
3.அதன் சுற்றலில் பனித்துளி போன்ற நீர் நிலைகள் படிந்து அதன் கசிவில்
4.நசநசப்புத் தன்மையில் சுழன்று கொண்டுள்ள குளிர்ந்த மண்டலம்தான் சந்திரனின் இன்றைய நிலை…!

நம் பூமியில் கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதைப் போல் சந்திரனுக்கு அந்தச் சக்தி நிலையில்லை. நீர் நிலை அடர்ந்து உள்ள மண்டலத்திலத்தில்தான் அந்த மண்டலத்துடன் கூடிய எந்த இடத்திலும் நீரைக் கண்டிட முடியும்.

1.நம் பூமியிலிருந்து விண்கலத்தை அங்கே ஏவி இந்த மனித சுவாசத்தை அங்கு விட்டு வந்துள்ளானே
2.அச்சுவாச நிலையின் வெக்கையில் தோன்றிடும் உயிரணுவிற்கு
3.இப்பூமியில் இருந்து சென்ற சக்தி நிலைதானே வேண்டும்…!

அன்று வியாழனிலிருந்து பூமிக்கு உயிரினங்கள் வந்தது போல் தான் இதனின் நிலையும் இருந்திடும்…

தீப ஒளித் திருநாள் – “கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்…” என்றால் ஞானிகள் கொடுத்த உண்மைகளை நாம் அறிதல் வேண்டும்

தீப ஒளித் திருநாள் – “கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்…” என்றால் ஞானிகள் கொடுத்த உண்மைகளை நாம் அறிதல் வேண்டும்

 

கண்ணின் நினைவு கொண்டு பிறர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் நமக்குள் அணுவானால் நரகாசுரனாகி விடுகின்றது.

இருவர் சண்டை இடுகின்றனர்… அதிலே ஒருவன் கொலை செய்கின்றான்…! என்பதை நாம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாக மாறி நம் நல்ல குணங்களைக் கொன்று தின்று கொண்டே இருக்கும்.

1.கண்களால் பார்த்துத் தான்
2.நமக்குள் நுகர்ந்தறிந்து அதைத் தீமை என்று உணர்கின்றோம்.
3.இருந்தாலும் நம் உயிர் நுகர்ந்த உணர்வினை உடலுக்குள் அணுவாக மாற்றி விடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரம் அருள் ஒளி பெற்று உணர்வின் ஒளியாக இருக்கின்றது. சூரியனின் காந்தப் புலனறிவு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தாங்கி அலைகளாகப் பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது.

நம் பூமியோ துருவத்தின் நிலைகள் கொண்டு அந்த அலைகளைக் கவருகின்றது. நமக்கு முன் பரவி வருகிறது.

தீப ஒளித் திருநாள் அன்று அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு ஒன்று கூடி அந்த அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் அனைவரது உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று அந்த வலுவைக் கூட்ட வேண்டும்.

உதாரணமாக நம் பிள்ளை சேட்டை செய்திருப்பான். அவனை வெறுத்துப் பேசுவதற்கு மாறாக அவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவனுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அவன் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அன்னை தந்தையருடன் ஒன்றுப்ட்டு வாழ வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுதல் வேண்டும்,

அதே போல் மற்றவர்களிடம் முதலில் நண்பராகப் பழகி இருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் பகைமை உணர்வு வந்து ஒருவருக்கொருவர் வெறுப்படைந்திருப்போம்.

அதை எல்லாம் தடுப்பதற்காக நாம் பார்த்த நண்பர்கள் குடும்பங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும். அவர் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் சாப அலைகள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அவர் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இப்படி எல்லோரும் ஏகோபித்த நிலைகள் எண்ணுதல் வேண்டும்.

பிறிதொருவர் என்று சொன்னாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் உண்டு…! உதாரணமாக
1.ஒருவர் நம்மைத் திட்டினார் என்றால் அவர் உணர்வு நமக்குள் வந்து
2.நாமும் பதிலுக்குத் திட்டும்போது அவரின் உணர்வு உடலில் வந்துவிடுகின்றது.
3.(அவர் உணர்வு இயக்கித் தான் நாமும் பதிலுக்குத் திட்டுகிறோம்).

அவன் திட்டிய உணர்வுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. அது நமக்குள் வந்து விடுகிறது. ஏனென்றால் உற்றுப் பார்க்கின்றோம்… பதிவாகிறது. பதிவானதை மீண்டும் எண்ணும் போது அந்த அலைகள் நமக்குள் வரத் தொடங்குகிறது.

ஒரு செடியில் வளர்ந்த சத்தினைச் சூரியன் எடுத்து வைத்துக் கொண்டால் அதிலே விளைந்த வித்தினை மீண்டும் நிலத்தில் ஊன்றும் போது நிலத்தின் துணை கொண்டு சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்தச் சத்தினை எடுத்துத் தான் அது செடியாக அது வளர்கின்றது. அந்தச் செடியின் இனப்பெருக்கங்கள் அதிகமாகின்றது.

இதே போல் தான் நமக்குள்ளும் பிறர் திட்டியது வேதனைப்பட்டது போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால்… உடலுக்குள் வந்து அந்த அணுவின் தன்மையாக அடைந்து விட்டால் அது அது தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

நம்மைக் காக்க அல்லது மற்றவருக்கு உதவி செய்ய என்று நாம் பரிவுடன் கேட்டறிந்தாலும் பிறர்படும் வேதனை உணர்வுகள் நமக்குள் அணுவாகின்றது.

1.ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை எல்லாம் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது.
2.அது நமக்குள் புகாதபடி தடுக்கவில்லை என்றால் அதே வேதனை அதே கோபம் நமக்குள்ளும் விளைந்து
3.அசுர குணங்களாக நமக்குள் மாறத் தொடங்கும்.

ஆகவே நாம் கண்களால் பார்த்து நுகர்ந்து இது போன்ற அசுர உணர்வுகளாக வளர்வதைத் தடுக்க வேண்டும்.

அதற்குத் தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்.

அப்பொழுது அந்த வேதனையான உணர்வைத் தணிக்கச் செய்கிறது. அதே சமயத்தில் அது போன்ற தீமைகளை நீக்கக்கூடிய சக்தியும் நாம் பெறுகின்றோம்.

இப்படி எல்லோரும் எண்ணும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வுகளை (அலைகளை) காலை ஆறு மணிக்கெல்லாம் சூரிய உதயம் வரும் பொழுது அது கவர்ந்து பூமியின் காற்று மண்டலத்தைக் கடந்து லேலே பிரபஞ்சத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது…. அங்கே கரைத்து விடுகின்றது.

அதனால் பகைமை ஊட்டும் உணர்வுகள் நம் பூமியில் தணிகின்றது இப்படி நம்மை நாம் காத்துக் கொள்ளும் வழிகளைத்தான் அன்று ஞானிகள் தெளிவாகக் கூறி உள்ளார்கள்.

இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சக்தியின் சக்தி பெற்று… பூமியில் மனித ஆத்மாவாய் அறிவு நிலை பெற்று… ஆக்கத்தின் செழிப்பினால் அகிலத்தையும் ஆளும் செழிப்பைப் பெறத் தகுதி பெற்ற மனிதனே படைப்பில் முதிர்ந்த படைப்பு. முழுமுதல் கடவுள் மனிதன் தான்.

அத்தகைய எண்ண வளர்ச்சியாக இந்தப் பூமியில் மனித ஆத்மாவாய் வாழும் பக்குவம் பெற்று அந்த உயிரணுவிற்குத் தொடர் நிலை கொண்ட அமில சக்தி கூடப் பல கோடி ஆண்டுகள் ஆயிற்று.

ஆகவே பெரும் பாக்கிய சக்தி என்பது இன்று மனிதனாக வாழும் சக்தியே…!

இருந்தாலும்… இயற்கையின் செழிப்பில் அன்பு கொண்ட இதயமாய் வாழ்ந்து வந்திட்ட நிலையையே
1.அறிவில் மிஞ்சியே நிலை என்ற கணிப்பில்
2.ஒவ்வோர் இடத்தில் வாழ்பவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
3.அவர்களில் ஒருவரைத் தலைவனாக்கி அரசாளும் நிலைப்படுத்தி விட்டனர் இந்தப் பூமியில்.

அந்த வட்டத்தின் வழியிலேயே அவர்களைச் சார்ந்த இனத்தவரை எல்லாம் தனி ஓர் இனமாய்ப் பிரித்து ஜாதி வெறியூட்டி ஒருவரின் உயர்வில் ஒருவர் பொறாமை கொண்டனர்.

இதன் தொடர்ச்சி நிலையிலேயே இன்றளவும் மனிதனின் எண்ண வளர்ச்சி வளர்ந்து இக்கலப்பான சக்தி நிலையை ஊட்டி ஊட்டி…
1.இன்றைய மனிதன் ஒவ்வொருவனும் தனக்குள் உள்ள ஆண்டவனை மறந்தே உள்ளார்கள்.
2.தானும் இந்த நாட்டின் மன்னன் என்ற நிலையில்
3.ஒவ்வொருவரின் மனப்பாங்கும் “இம்மதிப்பின் பேராசை வெறியில்” வழி வந்துவிட்டது.

இன்று நம்முடன் வாழ்ந்திடும் மனிதர்களால் மட்டும் ஏற்படவில்லை இன்றைய இந்தக் கலியின் இழி நிலை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முதலே “ஆட்சி என்னும் வித்திட்டு” அழிவதற்கு… மனித எண்ணங்களுக்குப் பாதை வகுத்துத் தந்தவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான்.

இன்றைய செயற்கையில் இம்மனித எண்ணங்களின் நிலை இன்று பிறப்பில் மட்டும் வந்திட்ட நிலையில்ல. நற் சக்தியின் பயனும்… சொல்லில் செயலும் மாறிவிட்டது.

செயற்கையில் இந்தப் பூமியின் பொக்கிஷத்தை உறிஞ்சி எடுத்ததல்லாமல் இப்பூமியிலிருந்து ஏவிவிட்ட விஷத் தன்மை கொண்ட ஊசிகளும் (இராக்கெட்) காற்று மண்டலத்தையும் பிரபஞ்சத்தையும் நஞ்சாக்கி விட்டது.

இன்றல்ல நேற்றல்ல இவ் ஏவுகணை அனுப்பும் நிலையே இப்பூமியில் பல நூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வந்த நிலையினை…
1.நம் பூமியின் வட்டத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் அனுப்பிவித்த ஏவுகணைகளெல்லாம்
2.இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தினால்
3.ஒவ்வொரு மண்டலத்திற்கும் இதன் தொடர்பினால் மாற்றம் ஏற்படப் போகின்றது…! என்பதனை உணர்த்தினேன்.

பால்வெளி மண்டலத்தில் ஏவச் செய்த விஷ ஊசிகளும்… ஏவுகணைகளின் நிலையில் நிறைந்துள்ள அணுவிசை சக்திகளும்… இனி நடக்கப் போகும் மாற்றத்தினால் அங்கங்கு செயலிழந்து அதனின் சுற்றலுக்குகந்த அருகாமை கொண்ட மண்டலங்களில் மோதி அவற்றின் நிலையிலிருந்தும் பல தீய சக்திகள் ஏற்படத்தான் போகின்றன…!

1.இயற்கையின் சக்தியே மாற்றம் கொள்ளும் சீற்றம் கொள்ளும் நிலையெல்லாம்
2. இம்மனித ஆத்மாவினால்தான் நடக்கப் போகின்றன.

இம்மனித ஆத்மாவினால் மண்டலமாய் உருக்கொண்டு சுழன்றிடவும் முடியும். சுழற்சியின் சக்தியில் பல கோடி மண்டலங்களை வளர்த்திடவும் முடியும்.

1.ஆக்கத்தின் அறிவு சத்தியாக ஒளிரும் ஆத்மாவையே
2.அழிவின் சக்திக்கு அடிகோலும் பேராசை பேயின் நிலையில் சிக்குண்டு
3.தன் சக்தியைத் தானே நீங்கள் இழந்து விடாதீர்கள்.

கலியின் மாற்றத்தில் படப்போகும் இன்னலை உணர்ந்து கொள்ளுங்கள். இங்கே உணர்த்திடும் இச்சக்தி நிலையை உணர்ந்து ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கிடுங்கள்.

இக்கலியின் மாற்றத்தினால் சந்திரனுக்கு நம் பூமியின் தொடர்பும் ஈர்ப்பு சக்தியும் பழக்கப்பட்டு வந்திட்ட நிலையில் 1980ல் நடந்த சூரிய கிரகணத்திற்குப் பின் சந்திரனுக்குச் சில சக்திகள் கூடியது.

சூரியனைத் தாண்டிக் கேது சென்றதால் பூமிக்குக் கேதுவின் விஷ அணுக்கள் கூடி நம் பூமி இன்று சுழன்று ஓடும் வட்டத்திலிருந்து சிறிது கீழ் இறங்கிச் செல்லும் நிலை உருவானது.

அதே சமயத்தில் பூமியின் ஈர்ப்பு சக்தி… நம் பூமியின் பொக்கிஷ அமில சக்தியின் இயற்கைத் தன்மை… சந்திரனின் வட்டத்திற்கு அதிகமாகச் சேரத் தொடங்கியது.

நடந்த அன்றைய மாற்றத்தின் நாளிலிருந்தே சந்திரனில் நீர் நிலைகள் அதிகரிக்கும் தன்மை உருவானது. (விஞ்ஞானிகள் சமீப காலமாகத் தான் சந்திரனில் நீரைக் கண்டறிந்துள்ளனர்).

நம் பூமியின் பொக்கிஷ சக்தியே இந்த நீர் நிலைகள்தான். சந்திரனும் நம் பூமியின் ஈர்ப்பால் அந்தச் சக்தி நிலை கூடிக் கூடி வளர்ச்சி ஆகிக் கொண்டே உள்ளது.

இந்நிலையின் தொடர் வளர்ச்சி நிலை சந்திரனுக்கு உண்டு. மனித ஆத்மாவினால் மாறப்போகும் தன்மை நிலையிலிருந்து மீளுவதற்கும் இயற்கையில் சக்தியுண்டு. அதைத் தான் இங்கே தொடர்ந்து காட்டிக் கொண்டு வருகின்றேன்.