பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் “இராமேஸ்வரத்தில்” காட்டப்பட்டுள்ளது

பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் “இராமேஸ்வரத்தில்” காட்டப்பட்டுள்ளது

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாம் பெற வேண்டும்…!
1.அதைப் பெற வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் இராமேஸ்வரத்தில் பார்க்கலாம்… பார்த்து அந்தச் சக்திகளை எடுக்க முடியும்.
2.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை இல்லாதபடி ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.

27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர்நிலையானால் அதைத் தன் பாதரசத்தால் மாற்றி அந்த எதிர்நிலை வரும் பொழுது மோதி… வெப்பம் காந்தம் என்ற உணர்வாக்கி… பிரிந்து செல்லும் உணர்வை எது நுகர்கின்றதோ அதை “இயக்க அணுவாக மாற்றும் சக்தி பெறுகின்றது சூரியன்…”

ஆனால் அகஸ்தியனோ
1.இதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாற்றி
2.உயிரைப் போல உணர்வை ஒளியாக மாற்றி இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

சூரியனோ அழியும் தன்மை பெற்றது… இந்த உயிரோ அழிவதில்லை. ஒரு மனிதன் தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகளும் உடலும் தான் கருகுகின்றது.

கருகிய உணர்வு இணைந்த பின் உயிருடன் இணைந்து செல்லப்படும் பொழுது வேதனை என்று உணர்வே வருகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் உடலிலே இல்லை என்றாலும்… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டு நரக வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த உணர்ச்சியைத் தூண்டி வேதனைப்படுத்தும் அந்த வேதனை உணர்வைத்தான் அங்கே வளர்த்துக் கொண்டிருக்கும்.

இதை நாம் தெரிந்து கொள்ள… ஞானிகள் காட்டிய அருள் வழியில் இராமேஸ்வரம் என்று வரப்படும் பொழுது “நேரம் ஆகிவிட்டது…!” ஏனென்றால்
1.இந்த மனிதனுடைய வாழ்க்கையில் சிறிது காலமே வாழுகின்றோம்.
2.அந்த நேரத்திற்குள் நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும் பகைமைகளை மறத்தல் வேண்டும்.

அதற்காக… “எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம்” என்ற இந்த உடலில் ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து… இருள் நீக்கி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும் திறனைப் பெற வேண்டும்.

நாம் வாழும் ஊரிலே விநாயகரைப் பார்த்தாலும்… அருகில் உள்ள மரங்கள் துருவ நட்சத்திரத்தைக் காண முடியாதபடி மறைத்து விடுகின்றது. ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தை இராமேஸ்வரத்தில் மறைப்பில்லாதபடி நாம் காண முடிகின்றது.

பார்த்து அந்தச் சக்தியைப் பெறுவதற்காகக் கடலோரப் பகுதியாக இப்படித் தேர்ந்தெடுத்து அந்த நட்சத்திரத்தின் இயக்கங்களை காணுவதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடலும்
2.எண்ணத்தால் ஒளியின் உடல் பெற்ற நிலையும்
3.அந்த ஒளியின் உணர்வை நமக்குள் பெற்று
4.இருளை நீக்கி அருள் சக்தி பெறும் இடமாக அங்கே மாற்றினார்கள்.

அந்த இடத்திலே ஆலயத்தை அமைத்து குறுகிய காலமே மனிதன் வாழுகின்றான் என்ற நிலையைக் காட்டி எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் என்ற உணர்வைக் காட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

சிறிது காலமே நாம் வாழுகின்றோம்… அதற்குள் மனிதனாகி நாம் வளர்ச்சி அடைந்து எதைப் பெற வேண்டும்…? என்பதற்காக இப்படிக் காட்டினார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் எண்ணப்படும் பொழுது இந்தக் குறுகிய காலத்திற்குள் நம் உடலுக்குள் பகைமைகளை நீக்கி மனதை ஒன்றாக்கும் நிலையை அது உருவாக்குகின்றது.

உடலுக்குள் பகைமைகள் அனைத்தையும் நீக்கி எல்லா மனங்களும் ஒன்றாக்கப்படும் போது…
1.இருளை நீக்கி ஒளி என்ற உணர்வாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று…
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது.

சகலத்திலும் சகலமாய் உள்ள “ஆதி சக்தியுடனே நாம் ஒன்றிவிடலாம்”

சகலத்திலும் சகலமாய் உள்ள “ஆதி சக்தியுடனே நாம் ஒன்றிவிடலாம்”

 

உலக சக்தி என்பதே… தனித்து எதனைச் செப்புவது…?

இன்றைய உலகமே பிம்பத்தைத்தான் உலகமாகக் காண்கின்றது. எப்பிம்பமும் நிலைத்த பிம்பமல்ல; இன்றைய பிம்பம் மாறிவிட்டால் காற்றுத்தான். அன்றைய காற்று இன்றைய காற்றில் தான்‌ அனைத்தும் உள்ளன. நீரும் காற்றுத் தான் நெருப்பும் காற்றுத் தான்.

நீரும் ஆவியாகிக் காற்றுடன் கலக்கின்றது. நெருப்புக் கோளங்களும் எரிந்து ஆவியாகிக் காற்றுடன்தான் கலக்கின்றன. அனைத்து பிம்பமும் காற்றுத்தான்.
1.காற்றேதான் கடவுள்…
2.அக்காற்றிலிருந்து ஜீவன் கொண்ட அனைத்துமே கடவுள்தான்.

பால்வெளி மண்டலத்தைக் காற்றாய்க் காண்கின்றோம். அப்பால்வெளி மண்டலத்தில் இருந்து தான் ஆதவனாய் உள்ள சூரியனும் பிறந்தான். பூமித்தாயும் வளர்ந்தாள். மற்ற அனைத்துக் கோளங்களும்மே பிறந்து வளர்ந்து வாழ்கின்றன.

இப்பால்வெளி மண்டலத்தில் உள்ள காற்றில் கலந்துள்ள அமிலமே நீராயும் நெருப்பாயும் ஒன்றை ஒன்று பற்றியே சுழன்று கொண்டு உள்ளது.
1.இவ்வமிலமே திடமாகி அத்திடத்தில் இக்காற்றுப்பட்டு அதை ஈர்த்து அது வெளிப்படுத்தி அந்நிலையிலேயே வளர்ந்து
2.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றின் அமிலம் மற்றொன்றில் கலந்து அது ஈர்த்து சமைத்து வெளிக் கக்கும் அமிலம்
3.மற்றொரு கலவையுடன் சேர்ந்து அவை எடுத்து அவை வெளிப்படுத்தி இப்படியே மோதுண்டு மோதுண்டு
4.ஒன்று உண்டு அதன் கழிவு வெளிப்பட்டு அக்கழிவு அதன் இனமுடன் சேர்ந்து அவை உண்டு அவை சமைத்து வெளிப்படுத்தும் அமிலம் படர்ந்தே
5.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஜீவன் கொண்டு ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டு மண்டலமாய் உருப்பெற்று
6.அம்மண்டலம் எடுக்கும் உணவு (சுவாசத்தை) கொண்டு அதன் சக்தி நிலை வளர்ந்து அது வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்து பல நிலை பெற்று,
7.பால்வெளி மண்டலத்தை இக்காற்று மண்டலத்தை மையமாய்க் கொண்டு சுழலுவதுதான் அனைத்து மண்டலங்களும் நாமும் எல்லாமுமே.
ஆவிதானப்பா அனைத்துமே…!

ஆவியான இக்காற்றில் நிறைந்துள்ள அமில சக்தியைக் கொண்டு
1.“நம் ஆத்மாவிற்கு உகந்த அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து…”
2.உயர்ந்த ஞான நிலைபெறும் பக்குவ அமிலத்தை உணரும் சக்தி பெறல் வேண்டும்.

இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்களெல்லாம் தனக்குகந்த அமிலத்தையே ஈர்த்து வளரும் பக்குவ நிலை உள்ள பொழுது நாமும் அனைத்துமே ஆவிதான்.

நாமும் ஆவிதான் நம் உடலில் உள்ள அனைத்துமே ஆவிதான் என்பதனை உணர்ந்து நமக்குகந்த ஆவி அமிலத்தை எண்ணத்திலேயே ஒரு நிலை கொண்டிடும் பக்குவ நிலைப்படுத்தி ஞானத்தின் வழித்தொடர் பெற்றிட வேண்டும்.

ஆவியாய்ப் பிரியப் போகும் பிம்பத்தைப் பேராசைப் பொருளாய் எண்ணிடாமல் அனைத்தும் ஆவிதான் என்பதனை உணர்ந்து ஒவ்வோர் உடல் கொண்டு வாழ்ந்து பல எண்ணத்தை ஈர்த்து பல கோடி ஆண்டுகளுக்கு ஜீவன் கொண்ட பல பிம்ப உடல்களை ஏற்று ஏற்று வந்த நம் ஆத்மாவைப் பெரும் இன்னல் படுத்திடலாகாது.

1.உயர்ஞானம் பெறும் நல் உபதேசம் பெற்று
2.இக்காற்றில் தான் கலந்துள்ளார்கள் சித்தாதி சித்தர்களும் சத்திய ஞானம் பெற்ற சப்தரிஷிகளும் என்ற எண்ணம் கொண்டு இவ்வுண்மையை உணர்ந்து
3.ஆண்டவனுக்கு மத வேறுபாடு இல்லை… “எவ்வாண்டவனை வணங்கினாலும் ஒன்றே” என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு
4.உம்மின் அன்பை ஆண்டவனாய் ஒருநிலைப்படுத்தி
5.உம் எண்ணத்தில் ஆண்டவனாய் வரித்து உள்ளவரையே ஆண்டவனாக்கி
6.உம் எண்ணத்தில் செயல்படுத்தி நீர் எடுக்கும் சுவாசம் எல்லாம்
7.உம் உயிர் ஆத்மாவின் அமில வட்டத்தில் ஞானத்தின் சக்தித் தொடரை ஈர்க்கும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

ஞானத்தின் வழித்தொடர் பெற்று விட்டால் நம் எண்ணமும் செயலும் ஞானமாகி அதன் தொடர்பிலேயே பல நிலைகளை நாமும் உணர்த்திடலாம். இத்தொடரின் வழியினால் நம் ஆத்மா நம் நிலையில் அக்காற்றுடன் காற்றாய்ச் செயல் கொள்ளும் பக்குவத்தை நம் எண்ணத்தினால்தான் செயல்படுத்திட முடியும்.

உயிரணுவாய்த் தோன்றிய நிலையிலே ஈர்க்கும் நிலைப்படுத்தி அவ்வுயிரணு தோன்றிச் சேமித்துச் சேமித்துப் பழக்கப்படுத்திப் பல நிலைகளை ஈர்த்த பின்னும்… மனித ஆத்மாவாய்ப் பல நாள் சேமிப்பின் அமிலத்தை வளர்த்துக் கொண்டுள்ள மனித ஆத்மாக்களை…
1.தன் ஆத்மாவைக் காற்றுடன் கலக்கவிடும் பக்குவத்தை உணர்ந்து செயல்படுத்தினால்
2.ஞானம் என்ன…? சித்தென்ன…? சப்தரிஷிதான் என்ன…? சகலத்திலும் சகலமாய் உள்ள ஆதி சக்தியுடனே ஒன்றிவிடலாம்.

பேரானந்த நிலை… தெய்வீக நிலை… என்பதெல்லாம் இன்று வாழ்க்கையில் நாம் காணும் “இம் மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை” என்பதனை நாம் உணரல் வேண்டும்.

ஒளிச் சரீரம் பெறும் மார்க்கம்

ஒளிச் சரீரம் பெறும் மார்க்கம்

 

மெய் ஞானிகள் சொன்னதை இன்று இழந்தே தான் நாம் வாழுகின்றோம். ஆனால் அகஸ்தியன் உண்மையை வளர்த்து… மனித உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைந்திருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.
1.அவன் வளர்த்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.
2.அதை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவன் ஈர்ப்புக்குள் சென்று பிறவியில்லா நிலை அடைந்திட முடியும்.

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த உணர்வைப் பெறக்கூடிய தகுதிக்கு அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆனான்.

அவன் கண்டுணர்ந்த நிலைகள்… எல்லா நட்சத்திரங்களின் இயல்புகளைத் தனக்குள் எடுத்து ஒளியாக மாற்றுகின்றான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று சொல்லும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்
1.இயற்கையின் உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவன்.
2.அவன் தெரிந்து அவனுக்குள் உணர்ந்து உணர்வின் அலைகளைப் பெருக்கியதை நாமும் நுகரலாம்.

ஒரு செடியில் வளர்ந்த உணர்வின் தன்மை அதனின் கசப்பை நுகர்ந்தால் ஓய் என்று வாந்தி வருகின்றது. ஒரு கோபக்காரன் உணர்வினை நுகர்ந்தால் நமக்கும் அந்த உணர்ச்சியின் வீரியங்கள் வருகின்றது.

ஒரு வேதனைப்பட்ட மனித உடலில் இருந்து வெளி வரும் உணர்வைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அதை நாம் நுகரப்படும் பொழுது நமக்கும் வேதனையான உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

இதைப் போல் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அகஸ்தியன்…
1.தனக்குள் வளர்த்து கொண்ட உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது
2.அதை நாம் நுகர்ந்தால் அவன் எப்படி விஷத்தை வென்றானோ அதைப்போல
3.நமக்குள் விஷத்தின் தன்மையை மாற்றிப் பேரொளி ஆக முடியும்.
4.உயிர் எப்படி ஒளியானதோ ஒரு நட்சத்திரத்தின் இயக்கமாக இயக்கியதோ அதைப் போல நாம் ஒளியாக முடியும்.

நம் உடலிலே பல விதமான நட்சத்திரங்களின் தன்மை கொண்டுதான் அணுக்கள் ஆனது.

ஆனால் அதை ஒன்று சேர்த்து இணைத்து
1.27 நட்சத்திரங்களைத் தனக்குள் உணர்வாக்கி
2.27 நட்சத்திரத்தினையும் துருவ நட்சத்திரம் எடுத்து இணைத்து ஒளியாக மாற்றிய அந்த உணர்வும்
2.பிரபஞ்சத்தில் பரவும் மற்ற உணர்வையும் இணைத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

ஆகவே… உயிரை ஒளியாக மாற்ற முடியும் என்று மாற்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.

அதனை நீங்கள் பெறும்படி தான் இங்கே உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

பேரருள் பேரொளி

பேரருள் பேரொளி

 

மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை என்று வரப்படும் பொழுது மனிதனையே சீர்குலையச் செய்யும் உணர்வுகளாக அது வளர்ந்து விடுகின்றது இதிலிருந்து நம்மைப் பாதுகாத்தல் வேண்டும்.

ஆனால் அதிகமாக வளர்த்து விட்டால் உடலைப் விட்டு பிரிந்து சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இந்த விஷத்தை உருவாக்கி… அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலைத் தான் உயிர் உருவாக்கி விடும்… தப்பவே முடியாது.
1,இந்த உடலில் வேதனைகளை வளர்த்து விட்டோம் என்றால்
2.இந்த உடலுக்குப் பின் மீண்டும் நரக வேதனைப்படும் உடலைத்தான் நாம் பார்க்க முடியும்.

உயிரான ஈசன் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக உருவாக்கி இருக்கின்றான். அத்தகைய நிலையில் பிறவியில்லா நிலையைத்தான் நாம் அடைதல் வேண்டும்.

1.ஆனால் மனிதன் தீயிலே குதித்தால் உயிர் வேகுகின்றதா…? இல்லை.
2.இதே மாதிரி இந்தப் பிரபஞ்சத்தில் எந்த விஷத்தின் தன்மையோ அது நம்மை ஆட்சி புரியாதபடி தடுத்தல் வேண்டும்.

விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் ஆகின்றது. ஆனால் வெப்பம் அதிகமான பின் விஷத்தைப் பிரித்து விடுகிறது.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைத் தான் ஆதாரமாக வைத்து உடலை வளர்த்து வந்தது. பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உடலை வளர்க்கின்றது. மாட்டு இனங்களோ விஷத்தின் வலிமை கொண்டு தான் இயக்கத்தின் சக்தியாகி அதைக் கொண்டு தான் தன் உணவைக் கரைக்கின்றது.

இப்படி மனிதனாக வளர்ந்த நிலையில் பல விஷத்தன்மைகளை மாற்றி மாற்றி மாற்றி மாற்றி… இந்த உடல் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றிவிடுகிறது.
1.நஞ்சினை நீக்கிடும் அருள் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கின்றது
2.இந்த எண்ணத்தை நாம் சீராக்கவில்லை என்றால் மீண்டும் விஷத் தன்மைகள் கூடிவிடும்.
3.கூடிவிட்டால் எத்தகைய விஷத்தின் தன்மை கூடுகின்றதோ அதற்குத் தக்க மனிதனல்லாத உடலை உருவாக்கி விடும்.

மீண்டும் பிறவிக் கடனுக்கே வருகின்றோம்

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும் என்பதற்குத்தான் பரமபதத்தை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அருள் சக்தியைக் கூட்ட முடியும். வைகுண்ட ஏகாதசி என்று நம்மை நாம் எப்படிப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.

1.உலகில் உள்ள அனைவருக்கும் பேரொளி கிடைக்க வேண்டும் பேரருள் கிடைக்க வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்
3.உலகில் உள்ள அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும்
4.என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும்
5.நான் பார்க்கும் குடும்பம் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
6.எல்லோரும் பேரொளி ஆக வேண்டும் என்று உணர்வினை எடுத்தால் பகைமைகளை நாம் மாற்றியமைக்கின்றோம்.

இவைகள் எல்லாம் நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது ஆகவே இந்த உடலுக்குப் பின் முழுமையடைதல் வேண்டும்.

மரத்தில் பூ பூத்துக் காய் காய்த்துக் கனியாகின்றது. கனியாகி விட்டால் மூடி மறைத்து (விதையை) விடுகின்றது. திறந்து விட்டால் வித்து தன் இனத்தை உருவாக்குகின்றது.

ஆக எப்படிக் கனியாகின்றதோ இதைப் போன்று
1.நமது உயிரின் தன்மையை இந்த உடலுக்குப் பின் வாழ்க்கையில் வந்த இருள் சூழும் தீமையான உணர்வுகளை மாற்றி விட்டு
2.”பேரொளி என்ற உணர்வாகும்” பௌர்ணமி போன்று
3.தீமைகளை நீக்கி உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பேரொளி என்ற நிலை உருவாகி
4.பேரருள் என்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் நமது சாஸ்திரங்கள் காட்டியுள்ளது.

அந்த நிலையை ஒவ்வொருவரும் நாம் பெறுதல் வேண்டும்.

உத்தராயணம்

உத்தராயணம்

 

உயிரணுவாகத் தோன்றிய பின்… ஒரு உணர்வின் சத்து உயிருடன் ஒன்றிச் சிவம் ஆகின்றது. இவ்வாறு பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது.

பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டது… இருந்தாலும் அதனுடைய தசைகளை மற்றொன்று கொன்று புசிக்கிறது. அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் உணர்வின் தன்மை வருகின்றது.
1.தன்னைத் தெளிந்து கொள்ளும்… தன்னைக் காத்திடும் உணர்வின் அறிவின் தன்மை அதற்குள் வந்து
2.இவ்வாறு தான் ஒவ்வொரு உடலிலும் இணைத்து இணைத்து
3.நமது உயிர் மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலைகளில் மகா சிவன் ராத்திரி…!

உடலில் இருந்து வரக்கூடியதை ஆறாவது அறிவின் தன்மை ஒன்றிலிருந்து ஒன்றை மீட்டிடும் நிலைகள் கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெற்றது கார்த்திகேயா.

ஒரு வெளிச்சத்தைப் போட்ட பின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் தெரிகின்றது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காணும் நிலைகள் வரும் பொழுது “கார்த்திகேயா” என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

1.முதலிலே வரக்கூடியது அனைத்தும் தட்சிணாயணம்
2.இந்த உடலின் நிலைகளிலிருந்து அறியும் ஆற்றல் வரப்படும் பொழுது மகா சிவன் ராத்திரி என்றும்
3.பங்குனி மாதம் வரப்படும் பொழுது உத்தராயணம்.
4.இதற்கு முன் மாசி மாதம் வரையிலும் தட்சிணாயணம் நடக்கின்றது… உடலுக்குள் இருள்
5.ஆறாவது அறிவு கொண்டு தட்சிணாயணம் திசை மாறி வெளிச்சம் அதிகமாகின்றது – அது உத்தராயணம்

அறிவின் ஆற்றல் அறிந்திடும் உணர்வு கொண்டு ஆறாவது அறிவால் உத்தராயணம் தேரை வைத்து இழுப்பார்கள்… பல ஆயிரம் பேர் சேர்ந்து முருகனை வலம் வரும்படி செய்வார்கள்.

நாம் அனைவரும் எண்ணி
1.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்
2.உத்தராயணம் இன்னொரு பிறவிக்கு வந்து விடக்கூடாது என்ற நிலைகளும்
3.எதை எடுத்தாலும் உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாக அவனுடன் இணைய வேண்டும் மாற வேண்டும் என்பதற்குத்தான்
4.நமது சாஸ்திர விதிகள் இப்படிக் காட்டுகின்றது.

பங்குனி உத்திரம் அன்று உத்தராயணம் என்ற நிலைகளை வைத்து ஆறாவது அறிவை வளர்த்துப் “பிறவா நிலை பெறும்” வழியைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

போகாப்புனல்

போகாப்புனல்

 

நாம் எடுக்கும் தியானத்தின் வலுகொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் அனைத்தையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடலில் பெற்ற நஞ்சினை கரைக்கச் செய்து பிறவில்லா நிலையை அடையச் செய்வோம்.

உடலை விட்டுச் சென்ற அந்த ஆன்மாக்கள் துயர்படும் உணர்வினைக் கரைத்து விட்டு துயரற்ற உணர்வாக என்றும் ஏகாந்த நிலை வாழ முடியும். இது மனிதனின் கடைசி நிலை பிறவி இல்லா நிலை.

1.எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவித்தோம்… மனிதனான பின் துன்பத்தை அகற்றிடும் அருள் சக்தி பெற்றோம்
2.துன்பத்தை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினைப் பேரருளாக மாற்றிய
3.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருளை நாம் பெற்று நமக்குள் உருவாக்கிக் கொண்டால் ஏகாந்த நிலை அடையலாம்…
4.இருளை மாற்றி ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்குதலே மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை.

அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான்.

தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை நுகந்து பகைமை என்ற உணர்வோ நஞ்சு என்ற உணர்வோ இருள் என்ற உணர்வோ அறியாமை போன்ற நிலைகளையோ மாற்றிப் பேரருள் உணர்வுகளை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

வாழ்க்கையில் நமது ஆசைகள் எவ்வாறு பக்தி கொண்டோ மற்றவர் அன்பு கொண்டோ நமக்குள் வளர்த்தாலும் பக்தியின் நிலைகள் கொண்டு வேதனை என்ற உணர்வுகள் கலந்தால் அன்பு கொண்டு அந்த உணர்வின் தன்மை அரவணைத்தாலும் அதனுடன் இணைந்து அந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக வரப்படும் பொழுது சாகாக் கலை.

இந்த உடலில் எதனை வளர்த்தோமோ இந்த உணர்வின் தன்மை மற்ற மனிதனின் உடலுக்குள் சென்று சாகாக்கலையாக இதையே உருவாக்கும்.

ஒரு மனிதன் நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகின்றது உயிர் வேகுவதில்லை. ஆகவே
1.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் வலுவாகத்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் நாம் ஒன்றிவிட்டால் வேகாநிலை அடைகின்றது.
3.பிரபஞ்சத்திலும் அகண்ட அண்டத்திலும் வரும் நஞ்சு இதை அழித்து விட முடியாது.

இதைத் தான் சாகாக்கலை வேகாநிலை போகாப்புனல் என்று அன்று வள்ளலார் பாடியது.

இந்த வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சாகாக் கலையாக மாறுகின்றது அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றினால் வேகாநிலை என்ற நிலை பெறுகின்றது.

போகாப்புனல்…! பேரருள் என்ற உணர்வின் தன்மை நமக்குள் பெருக்கிக் கொண்டால் இன்னொரு உடலுக்குள் புகுவதில்லை நாம் பிறவியிலா நிலை அடைய முடியும்.

இந்த வாழ்க்கையில் சாகாக்கலை என்ற நிலையிலிருந்து
1.உணர்வுகளை உயிருடன் ஒன்றி வேகாநிலை அடைந்தால்
2.இன்னொரு உடலுக்குள் போக முடியாது என்று அன்று வள்ளலார் தெளிவாகப் பாடியுள்ளார்.

அவர் சொன்ன மூலக்கூறை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அருள் பெறும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை… நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த அருளைப் பெறுகின்றது உயிர். அது தனிப் பெரும் கருணையாக வளர்கின்றது

நாம் எண்ணியது எதுவோ அதன் உணர்வின் அறிவாக நம்மை இயக்குகின்றது என்ற நிலையினை தெளிவாக அவர் கூறியுள்ளார் இராமலிங்க அடிகள்.

1.அவர் பெற்ற உண்மையின் உணர்வுகளும் அவர் வெளிப்படுத்திய நிலைகளும் இங்கே உண்டு
2.அவர்கள் பெற்ற அருள் ஞானத்தைப் உணர்வினை நாமும் நுகர்ந்தறிய முடியும்.
3.வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும் என்றும் பேரானந்த நிலை கொண்டு வாழ முடியும்.

அந்த நிலையை நாம் அனைவரும் பெறுவோம்.

சித்தன் எப்படி வெளிப்படுவான்…?

சித்தன் எப்படி வெளிப்படுவான்…?

 

பல காலங்களாக மக்கள் மனதில் எல்லாம் உலகம் அழியப் போகின்றது என்ற ஒரு பீதி நிலை உள்ளது.
1.உலகம் எப்படி அழியப் போகிறது…?
2.மனிதர்கள் எல்லாம் எந்த நிலையில் தப்புவார்கள் என்ற கேள்விக்குறியும் உள்ளது.
3.ஜெப நிலையில் உள்ளவன் தப்புவான் என்றும் நல்லோர்கள் நிலைத்து இருப்பார்கள் என்றும்
4.தர்மம் ஜெயிக்கும் தெய்வப் பற்றுடையவன் நிலைப்பான் என்னும் நம்பிக்கை ஒரு சாராருக்கும் உள்ளது.

இப்படிப் பல நிலைகளில் எண்ணத்தைச் சிதற விட்டுள்ள இவ்வுலகின் சுழற்சியில் மாறுபட்ட நிலை என்ன…? என்பதனை நாமும் நம் ஜெப நிலையில் உணர்ந்ததை உணர விடுகின்றோம்.

இவ்வுலகம் எப்படிக் கால நிலையை மாற்றிக் கொள்ளப் போகின்றது…? இப்பொழுதே சில நிலைகளில் நடந்து விட்டது… நடக்கின்றது பல மாறுதல்கள்.

இவ்வுலகம் ஒரு நொடியில் அசைவினால் பெரும் மாறுதல்கள் நடக்கப் போகின்றன என்று உணர்த்தினேன் அல்லவா. ஒரு ஊரில் உள்ள ஜனத்தொகையில் அங்கு வரும் வெள்ளத்தில்… வெள்ளம் வரும் பொழுது நல்லவர் கெட்டவர் என்று பாகுபடுத்தி ஆள் பார்த்து அடித்துச் செல்வதில்லை அவ்வெள்ளம்.

1.இயற்கை பார்த்து நல்லவன் கெட்டவன் என்று எப்படிப் பிரித்து எனது ஜெனனத்திற்கு அனுப்பவில்லையோ
2.அதைப் போலவே இயற்கை பார்த்து நல்லவன் கெட்டவன் என்று அது நம்மை நிலை நிறுத்தப் போவதில்லை.

சாமி சொன்னபடி சில பாகங்கள் நிலை மாறப்போகிறது சில பாகங்கள் நிலைத்து நிற்கும் என்றும் கேட்டிருப்பாய். சில பாகங்கள் என்னும் பொழுது அப்பாகத்தில் ஒரு சிலராவது நல்லவர்கள் இருக்க மாட்டார்களா…? எல்லோருமே கெட்டவராக அழியத்தான் போகிறார்களா…?
1.சித்தன் வெளிப்படுவான் சித்தன் வெளிப்படுவான் என்றெல்லாம் உணர்த்தி உள்ளேன்
2.எப்படி அச்சித்தன் வெளிப்படுகின்றான்…?

இக்கலியின் கடைசியிலிருந்து கல்கிக்கு எந்நிலைக்குச் செல்லலாம்…? என்பதனை உணர்ந்து
1.இங்கு மட்டுமல்ல… இதை உணரும்…
2.இதை உணர்ந்தவர்களின் சொல்லைக் கேட்பவரும்…
3.இதை உணராமலே நல்நிலையில் உள்ளவர்களும்… கல்கியில் கலக்கப்போவது எந்நிலையில்…?

இவ்வுடலுடன் உள்ள எல்லா ஆத்மாக்களுமே காலம் காலமாக நம்மில் தோன்றிய பல ஞானிகள் ரிஷிகள் முனிவர்களின் நற்சொற்கள் எல்லாம் தெய்வீகத் தன்மையைத் தன்னுள் வளர்த்து… அன்பு கொண்ட தெய்வமாக வாழுங்கள் என்ற உபதேச போதனை பெற்று அவ்வுபதேசப்படி நடந்து…
1.தன் எண்ணத்திலும் செயலிலும் பயத்தை அண்ட விடாமல் அழியும் காலத்தை எண்ணாமல்
2.ஒவ்வொரு நாளும் புத்துயிர் கொண்டே நல் உபதேசத்தை ஏற்று ஜெபம் பெற்று
3.ஜெபத்தின் வழி நடந்து உணர்ந்த நிலை கொண்டு வாழும் தன்மையில் – இக்கலி முடிந்து கல்கி வரும்.

இவ்வுலகச் சுற்றலில் ஏற்படும் சிறு அசைவு நிலை கொண்டு காலம் மாறுதலின் நிலையில்… எப்படி இந்நிலையில் உள்ளவர்கள் எல்லாம் தப்புகிறார்கள் என்றால்…
1.அவரவர்கள் செய்த ஜென்மப் பலனினால்
2.அவர்களுக்குப் புதிய சக்தியான பறக்கும் சக்தியை ஏற்படுத்தத் தான்
3.நமக்கு முன் தோன்றிய நமக்கு இப்பொழுது ஆண்டவனாக அருள் புரியும் பல ரிஷிகளின் ஜெபநிலையின் சக்தி எல்லாம் நம்மைப் பறக்கச் செய்து
4.இப்பொழுது சூட்சம உலகத்தில் வாழ்ந்திடும் நல்லோருடன் கலப்பது தானே தவிர ஒரு குடும்பத்தில் அறுவர் இருந்து ஒருவர் தப்பும் நிலை அல்ல.

இவ்வுலக அனைத்துக்குமே இந்நிலை தான்…! இவ்வுலக மாறுதலின் போது அனைத்து ஜீவராசிகளுமே ஆரம்ப அணுவின் நிலைக்கே வந்து விடுகின்றன.

அதிலிருந்து தப்புபவர்கள் தான் பறக்கும் நிலை கொண்டு… பிறகு வாழும் நிலைக்குப் புதிய வாழ்க்கைக்கு வந்து புதிய உலகம் படைக்கிறார்கள் கல்கியிலே.

இதற்கு முன் தோன்றிய கல்கிக்கும் கலிக்கும் கொண்ட சுற்றலின் நடந்த நிலைகளுக்கும் இனிச் சுற்றப் போகும் கல்கிக்கும் கலிக்கும் உள்ள சுற்று… தப்பிய அனைத்து உயிரினங்களுமே “உன்னதமாக இருந்திடும்…”

ஆரம்ப நிலை பெற்று இனியும் சுற்றத்தான் வேண்டும். உலகமே சிறு அசைவினால் ஏற்படும் மாறுதலைக் கொண்டு ஒவ்வொரு மண்டலத்தின் தன்மையும் மாறும் தன்மையில் உள்ளது என்றால் இவ்வுலகின் உயிர்நிலைகள் இப்பொழுது உள்ளது போல் உள்ளன என்பதுமல்ல.

சூட்சும உலகத்திற்குச் சென்றவர்கள் எல்லோரும் இவ்வுலகத்திலேயே வருகிறோம் என்பது அல்ல.
1.பறக்கும் சக்தி கொண்டு விட்டால்
2.நாம் ஏற்கும் நிலையே அன்றுதான் நமக்குப் புரியும்.

இந்நிலையை இதற்கு மேல் உணர்த்துவது உத்தமுமல்ல. ஒவ்வொருவரும் புரிந்து வாழ்ந்திடவே இப்பாட நிலை. அவரவர்கள் செய்த நற்பலனை அவரவர்கள் எடுக்கலாம்.

நம் முன்னோர்கள் சொல்லியபடி தன் நிழல் தன் கூடத்தான் வரும் என்றதன் உள்ள அர்த்தத்தைப் புரிந்தால் வாழ்ந்திடலாம் கல்கியில்.

பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்டது தான் பத்தாவது நிலை அடையும் உடல்

பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்டது தான் பத்தாவது நிலை அடையும் உடல்

 

இந்த மனித உடலில் நம்மை அறியாது தீமை என்ற உணர்வுகளை வளர்த்து விட்டால் அந்த அசுர குணங்கள் கொண்டு மற்றவர்களைத் தாக்கும் நிலையே வருகின்றது

1.இந்த உடலின் இச்சை கொண்டு
2.பாசத்தால் தனக்குள் வளர்க்கும் பல தீமைகளை உணர்ந்து அதிலிருந்து விடுபடும் நிலைகள் வந்தாலும்
3.அசுர உணர்வு கொண்டு அது விளைந்த பின் மற்றவர்களை அழித்திடும் உணர்வுகள் இங்கே வருகின்றது.
4.இதை இராமாயணத்தில் (பத்தாவது நிலை) அடையும் இராவணனாகக் காட்டுகின்றார்கள்.

தான் கற்றுணர்ந்தோம் என்ற நிலையில் சர்வத்தையும் அறியும் நிலையும்… சர்வ இசைகளையும் கண்டுணர்ந்த அவன் அதன் வழி அவன் வளர்ச்சி வரும் பொழுது… சர்வ கலா சக்திகளையும் பெற்றவன் இராவணன் பத்தாவது நிலை அடையக் கூடியவன்…!

உயிரோ தசரத சக்கரவர்த்தி…! பத்தாவது நிலை அடையும் இந்த உயிர் சக்கரவர்த்தியாக மாறுகின்றது என்ற நிலையும்
1.இந்தப் பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்ட்து தான் பத்தாவது நிலை அடையும் உடல்.
2.இந்த உடலுக்கும் இந்த உயிருக்கும் உண்டான வித்தியாசத்தைத் தெளிவாக வான்மீகி காட்டுகின்றார் “நம்மை நாம் அறிவதற்காக..”

நமது உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்கள் நடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு சரீரத்திலும் புல்லைத் தின்றோம் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம் மனிதனான பின் சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் “இந்த மனித உடலைப் பெற்றோம்…! இந்தப் பிள்ளை யார்…?” என்று தன்னைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில்
1.உயிரால் வளர்க்கப்பட்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன் உணர்வுக்கொப்ப உடலை அமைத்து
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து
3.அதிலே வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.

அவன் நிலைகளை நாம் எண்ணிப் பார்ப்பதற்குக் காவியத்தை அப்படிப் படைத்துக் காட்டுகின்றனர். அதாவது…
1.நஞ்சை வென்று விண்ணுலகம் சென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்
2.அகஸ்தியன் துருவனாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அருள் ஒளி பெற்று அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து
3.இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி ஒளியாக இன்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும்
4.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நம்மை எண்ணி ஏங்கும்படிச் செய்கின்றார்கள்.

அதை யாராவது நாம் இப்பொழுது எண்ணுகிறோமா…? என்றால் இல்லை.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்

 

ஒரு செடியில் விளைந்த வித்தை நிலத்திலே ஊன்றினால் நிலத்தின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தினைக் கவர்ந்து செடியாக அது வளர்கின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உடலில் பதிவாகும் பொழுது வேதனை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகிவிடுகிறது.

எந்த மனிதன் அந்த வேதனையை நமக்குள் உருவாக்கினானோ அவன் மடிந்தால் அவன் உயிரான்மா நமக்குள் வந்து வேதனைப்படும் அணுக்களாக நமக்குள் நோயாக மாற்றிவிடும்.

பின் வேதனைப்படும் புழுக்களாக பூச்சிகளாக பாம்பாக உயிர் உருவாக்கி விடும்.
1.இதைப் போன்ற நிலையில் இருந்து ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.
2.காரணம் கடும் தீமைகளை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… அந்த உணர்வை நாம் பருக வேண்டும்,

ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டுங்கள்.

அவன் தான் எண்ணியைதை உருவாக்குகின்றான் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அதைப் பெறுவதற்கு
1.எம்முடைய உபதேசங்களை இப்போது கூர்மையாகப் பதிவாக்குவதும்…
2.செவிப்புலனிலே இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டதும்… அந்த உணர்ச்சிகளை நீங்கள் நுகர்ந்ததும்
3.அது அனைத்தையுமே உயிர் அணுவாக உங்களுக்குள் மாற்றியதும்
4,மெய்ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் அணுக்களாக அதிகமாகப் பெருக்குவதற்கும் தான்
5.இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

இதை நீங்கள் பெற்ற பின் நினைவு கொண்டு வந்து மீண்டும் எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

அந்த தகுதியைப் பெறும் சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்… உபதேச வாயிலாகப் போதித்தது.

நீங்கள் இதை நுகர நுகர உங்களுக்குள் அணுத் தன்மையாக அது விளைகின்றது. விஞ்ஞான உலகில் வாழ்ந்தாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அருள் உணர்வை நீங்கள் சேர்த்துக் கொண்டே வந்தால்
2.அதைப் பற்றுடன் பற்றும் நிலை உங்களுக்குள் வருகின்றது.
3.இந்த உடலை விட்டுச் சென்றால் “நம் பற்று அங்கே இருப்பதால்” உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்று விடுகிறது.

ஆனால் அதற்கு மாறாக “நான் நன்மை செய்தேனே… எனக்கு இவன் தீமை செய்கிறானே…” என்று இங்கே பற்றிக் கொண்டால் இங்கே தான் மீண்டும் சுழல வேண்டி வரும்.

பழி தீர்க்கும் உணர்வுடன் அவன் உடலுக்குள் தான் செல்ல வேண்டும் அல்லது அந்த உணர்வு நம்மை அழித்துப் பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாக கீழான நிலைகளுக்குச் சென்று விடுவோம்.

இது போன்ற நிலைகளில் இருந்து மீள்தல் வேண்டும்
1.அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும்
2.எமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக எப்பொழுதும் இருக்க வேண்டும்.
3.அவர் கற்றுணர்ந்த உணர்வின் அலைகள் இங்கே பரவிப் படர்ந்துள்ளது.
4.குருநாதர் மெய் ஒளி பெற்ற அந்த அருள் உணர்வுகளும் இங்கே படர்ந்துள்ளது…!
5.அதை நீங்கள் பெற வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடல் வேண்டும். இருவரும் ஒன்றாக அருள் ஒளியைத் தனக்குள் அணுக்களாகப் பெருக்குதல் வேண்டும். அந்த எண்ணத்தைக் கொண்டு நல்வினைகளாக மாற்ற வேண்டும்

ஒவ்வொருவரும் நீங்கள் அதை பெற வேண்டும்

இதன் வழிகொண்டு உங்கள் வாழ்க்கையில் வந்த இருளை மாய்த்துக் கொள்ளுங்கள்… மெய்ப் பொருள் காணுங்கள்… “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்…! என்று எல்லா மகரிஷிகளையும் நான் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு)”

மனிதனாகப் பிறந்ததைப் பெரும் பாக்கியமாக எண்ணி இதற்கடுத்த நிலை அடைய முயற்சிக்க வேண்டும்

மனிதனாகப் பிறந்ததைப் பெரும் பாக்கியமாக எண்ணி இதற்கடுத்த நிலை அடைய முயற்சிக்க வேண்டும்

 

பல நிலைகளில் பல உயிரணுக்கள் காற்றிலும் பூமியிலும் பூமி மட்டத்திற்குக் கீழ் நிலையிலும் உள்ளன. ஜீவன் பெற்றும் உள்ளன.

பல உயிரணுக்கள் அச்சூரியனின் சக்தி பெற்று இவ்வுலகைச் சுற்றிப் பறந்த நிலையிலும் பறந்து கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடுபடுத்தும் நிலை பெற ஆவல் கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.

இவ்வுலகில் இப்புண்ணிய பூமியில் மனிதர்களாக வாழும் நாம்… நாம் பெற்ற பாக்கியமாக இதைக் கருதி நல்லுணர்வு பெற்று நாம் பெற்ற பாக்கியத்தைப் போற்றி வாழ்ந்திட வேண்டும்.

இம்மனித சக்திக்கு…
1.இவ்வுலகம் இவ்வுலகைப் போல் உள்ள மற்ற உலகங்கள் மற்ற மண்டலங்கள்
2.எல்லாவற்றையுமே அறிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ளார்கள்.

தான் பெற்ற பாக்கியத்தை அறிந்து வாழ்ந்திடாமல் ஆண்டவன் என்பவனையே பல வழிகளில் எண்ணி ஏற்கின்றார்கள். எவ்வழி எண்ணி ஏற்றாலும் நல்வழியில் நம் வழியைத் தவறுக்கு அடிபணிய வைத்திடாமல் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் பெற வேண்டும்.

மந்திரம் மாயம் பில்லி சூனியம் ஏவல் வித்தைகள் ஜாதகம் ஜோதிடம் ஆருடம் இப்படிப் பல வழிகளை நம்பி தன்னையே அதற்கு அடிமையாக்கி தன்னுள் பல ஆசை நிலைகளை வளர்த்துக் கொண்டு பல அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்ந்து என்ன பயன்…?

1.பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை ஏன் நமக்கு…?
2.அச்சக்தி நம்முள் இல்லையா…? என்ற எண்ணம் கொண்டு நம்மை நாமே பிறருக்கு அடிமைப்படுத்திடாமல்
3.பயம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்திடாமல் நம் எண்ணத்தை நாம் சுத்தமாக்கிக் கொண்டு
4.மகரிஷிகளின் சக்தியை நாம் பெற்று வாழும் வாழ்க்கையை விட்டு
5.ஏன் பல நிலைகளை எண்ணி நம்மை நாமே அடிமைப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்…?

மனித சக்திக்கு எல்லா உயிரினங்களையும் அறிந்து வாழும் நிலை உள்ளது. அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு நன்மையும் தீமையும்… நன்மை தீமை என்பன நல்ல அணுக்களையும் தீய அணுக்களையும் நம்முள் ஈர்த்து எடுக்க முடியும்…. பல ஆவிகளின் தொடர்பையும் நாம் பெற முடியும்.

நல்ல ஆவிகளும் துர் ஆவிகளும் சுற்றிக்கொண்டே உள்ள இந்த உலகில் நாம் எடுக்கும் நினைவைக் கொண்டு… எந்த ஆவியினுடைய தொடர்பையும் நம்மில் ஈர்த்து அவ்வாவியின் நிலை அறிந்து அவ்வாவிக்கு உகந்த மணங்களை அதற்கு நாம் அளித்து… அவைகளை நம் ஏவலுக்கு நாம் கட்டுப்படுத்திப் பல நிலைகளை அறிந்து கொள்ள அதனுடைய தொடர்பை நாம் வைத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் நாம் வைத்துக் கொண்டால் அதனுடைய செயல் திறன் நாம் அதை ஏற்கும் நிலை கொண்டு… அவை நமக்கு எல்லா நிலைகளையும் உணர்த்திக் கொண்டே வரும்.

அதன் நிலைக்கும் நம் நிலைக்கும் சிறு மாற்றம் கண்டால் அதன் நிலை மாறுபட்டு அது நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்ததோ அந்த நிலை கொண்டே தீங்கும் செய்து விடும்.

பில்லி சூனியம் ஏவல் இப்படிப் பல நிலைகள் எல்லாம் பல ஆவிகளின் வசியத்தால் வருபவைகள் தாம்.
1.இந்த நிலையில் அடிமைப்பட்டு வாழ்பவர்களுக்குத் தன் ஆத்மாவிற்கு உகந்த நிலையைச் சேமிக்கும் தன்மை அற்றுப் போகின்றது.
2.தான் செய்யும் வினையே தன்னை வந்து தாக்கும் என்று அறியாமல் செய்யும் நிலை தான் இவைகள் எல்லாம்.

ஒவ்வொரு மனிதரும் இவ்வுலகில் வந்து பிறக்கவே பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.

காரணம்… ஆவி உலகில் பல நாட்கள் பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடேற்ற எத்தனையோ காலங்கள் தவம் பெற்று இவ்வுலகில் பிறக்க ஆவல் கொண்டு விட்ட குறையை முடிக்க வந்து பிறக்கும் தாம்… தாம் பிறந்த பயனையே எண்ணிப் பார்க்காமல் பிறகும் பல இன்னல்களுடன் பல ஆசை நிலையில் இப்பிறவியில் தான் பெற்ற பாக்கியத்தை எண்ணி…
1.இப்புவியில் தான் பிறக்க இப்புவியாளும் ஈசனின் சக்தியைப் பெற்றுப் பிறந்துள்ளோம் என்று உணர்ந்து
2.தாம் எடுத்த பிறவியை எந்த நிலை கொண்டு நாம் போற்றி வணங்கிட வேண்டும் என்று உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.