அணுகுண்டின் விஷத்தையும் நாம் மாய்க்க முடியும்

அணுகுண்டின் விஷத்தையும் நாம் மாய்க்க முடியும்

 

அந்த மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத்தான் யாம் இப்போது உபதேசிப்பது. இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றோம்.
1.நீங்கள் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தால் போதும்… தெரிந்து ஒன்றும் எடுக்கப் போவதில்லை.
2.இந்த வித்து உங்களுக்குள் வளர்ந்து விட்டால் ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணினால்
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள்ளே வளரத் தொடங்கும்.

உங்களைக் காக்க அந்த உணர்வுகள் வளரும். அதற்குத்தான் உபதேசிப்பது.

நீங்கள் என்னைப் போல் காட்டுக்குள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் மிருகங்களுக்குள்ளேயும் சேற்றுக்குள்ளேயும் கடும் மழையிலேயும் அட்டைக்குள்ளேயும் என்றைக்குப் போய் இதை நீங்கள் கற்றுக் கொள்வது…? என்றைக்கு நீங்கள் தெரிந்து கொள்வது…? இந்தச் சத்தை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்வது…?

அதற்கு நேரமும் இல்லை… காலமும் இல்லை. நீங்கள் சாப்பாட்டிற்குப் பார்ப்பீர்களா…? சக்தியை வளர்ப்பீர்களா…?

1.குருநாதர் எம்மை (ஒருவரை) உருவாக்கினார்… குருநாதர் சொன்னதைச் செய்தோம்.
2.குருநாதர் எமக்கு எப்படிச் சொல்லிக் கொடுத்தாரோ அதே மாதிரி உங்களை நீங்கள் காத்துக் கொள்வதற்காக இதைச் சொல்கின்றோம்.

ஆகையினாலே இதை அலட்சியப்படுத்தி விடாதபடி என்னமோ சாமி விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்கிறார் இதைப் பற்றிச் சொல்கிறார் என்று எண்ணிவிட்டுக் கொஞ்சம் விபூதி வாங்கிச் சென்றால் தலைவலி போனால் போதும் உடல் வலி போனால் போதும் என்ற நினைப்பிலே சிலர் இருப்பார்கள்.

யாம் சொல்லும் இந்நிலைகளை எடுத்தால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீங்கள் உங்கள் மூச்சினாலேயே தடுக்க முடியும்.
1.உங்கள் மூச்சின் ஆற்றலை உணர்ந்து கொண்டால்
2.நாளைக்கு வரக்கூடிய எத்தகைய அணுகுண்டின் விஷத் தன்மையையும் உங்களாலே தடுக்க முடியும்.

இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் உங்களுக்குக் கெடுதல் செய்து கொண்டே இருக்கிறார் என்றால் யாம் சொல்கின்ற மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்கள் எண்ணத்தைப் பாய்ச்சி நாளை அவர் எனக்கு நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணினால் அவரின் எண்ணங்கள் மாறிவிடும்.

இதே மாதிரி எனக்குக் குழந்தை இல்லை… அது இல்லை… இது இல்லை…! நீங்கள் நினைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள். அதையெல்லாம் நீங்கள் அறவே விட்டுவிடுங்கள்.

1.யாம் சொல்கின்றபடி ஆத்ம சுத்தி தியானம் செய்து “எனக்குக் குழந்தை உண்டு…!” என்று யாரொருவர் எண்ணினாலும்
2.கண்டிப்பாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கும்.

நாளைக்கு அது ஞானக் குழந்தையாக வரும். அது எடுக்கும் மூச்சு உங்களைக் காக்க உதவும். அதே சமயத்தில் அந்தக் குழந்தை வளரும் நிலைகள் கொண்டு நீங்கள் எடுத்துக் கொண்டது விஞ்ஞானத்தில் வரக்கூடிய தீய அலைகளை நம்மை மயக்கும் நிலையை அந்தத் துடிப்பின் நிலையைத் தடுக்கவும் முடியும்.

1.இது உங்களுக்குப் பரீட்சை… உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்த ஆற்றலைக் கொடுக்கிறோம்.
2.உங்களைக் காக்க வேண்டுமென்ற நிலையில் பேரண்டத்தின் சில சத்துகளை எடுத்துத் தியானித்து உங்களுக்குப் பாய்ச்சுகின்றோம்.

கஷ்டத்தை மாற்றியமைக்கக் கூடிய சத்து உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம். வீட்டிலிருந்து கொண்டே உங்கள் கஷ்டத்தையெல்லாம் போக்க இதைப் போன்று யாம் சொல்லும் நிலையை எண்ணுவதற்குச் சிரமமா…?

விபூதி வாங்கிச் சென்றால் போதும்… “உட்கார்ந்து தியானிக்க நேரமில்லை…!” எனறு விட்டுவீடாதீர்கள்.

சமையல் பண்ணும் பொழுது “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று உயிரை எண்ணிக் கொண்டு நாங்கள் சமைப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எல்லோரும் பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

வாழ்க்கையில் வரும் இன்னல்களை எல்லாம் நீங்கள் மாற்றி அமைப்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

நாம் செய்யும் தியானம் சரி இல்லையோ…? என்ற எண்ணமே வரக்கூடாது

நாம் செய்யும் தியானம் சரி இல்லையோ…? என்ற எண்ணமே வரக்கூடாது

 

நமது அன்பர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது. ஆனால் தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும் போது பிரேக் போட்டவுடன் சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால் கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார்… வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம் நமது உணர்வுகளில் வேகம் எதுவோ அதில் மகிழ்ச்சியைத் தூண்டும்.
1.அதனின் வேகச் செயலாக வேலை செய்யும்.
2.இதன் விளைவு நமக்குள் எப்படி ஊட்டும்…? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.

இதே மாதிரித் தான் நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். ஆர்வமாக இருக்கும் போது முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும் போது “என்னத்தை எடுத்தோம்…? இப்படி வருகிறதே…! நாம் ஜெயிக்கவில்லை… நம்மால் முடியவில்லை போலும்…!” என்று விரக்தி அடைந்து விடுவார்கள்.

யாம் நீங்கள் அனைவரும் உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.

1.ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் குறுக்கே குறுக்கே வருகிறது.
2.நாம் செய்யும் தியானம் சரியாக இல்லையோ…? என்று எண்ணத் தூண்டும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு… அதை நாம் அடக்க வேண்டும். இந்த ஆறாவது அறிவிற்குள் அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் கவரும் திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.

இது தான் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்.
1.இந்த ஆறாவது அறிவால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற வேண்டும்… அதை ஞானமாக்க வேண்டும்.
2.இதைத் தான் உங்களுக்குள் அடிக்கடி பதிவு செய்கிறோம்.

அறியாது வரும் தீங்குகளை எப்படி நீக்கிப் பழக வேண்டும்…? என்று பல வழிகளிலும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

தியானமிருப்பதைக் காட்டிலும் உபதேசத்தில் ஞான வித்துக்களை ஊன்றுகிறேன்

தியானமிருப்பதைக் காட்டிலும் உபதேசத்தில் ஞான வித்துக்களை ஊன்றுகிறேன்

 

வீட்டில் உள்ள கஷ்டம் நீங்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்த மூச்சலைகளை நீங்கள் எடுக்க வேண்டும்

ஆனால் எம்மிடம் (குருவிடம்) கேட்கும் பொழுது, என் வீட்டில் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேங்கிறது…! என்று தான் கேட்பார்கள். ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை அதைப் பேச வைக்கும்.

யாம் இதை நீக்குவதற்குத்தான்… அதாவது இந்த உணர்வின் எண்ணத்தை
1.உங்கள் உடலில் இருந்து “கஷ்டம்” என்ற சொல்லை நீக்குவதற்குத்தான் இத்தனை உபதேசங்களையும் கொடுக்கின்றோம்.
2.நீங்கள் சுவாசிக்கும் அந்த விஷமான உணர்வை நீக்குவதற்குத்தான் உபதேசமே கொடுக்கின்றோம்.

நாம் இனி என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க வேண்டும் என்ற இந்த உணர்வுக்கு ஊக்கம் கொடுக்கும்போது உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை அது நீக்குகின்றது.

அருள் உணர்வின் தன்மையைச் சுவாசிக்கும் போது இருண்ட நிலைகளில் இருந்து அந்த உணர்வின் தன்மையை மாய்த்து நஞ்சை மாய்க்கச் செய்கிறது.

கருணைக்கிழங்கை வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை நீக்கிப் போசாக்கான நிலைகள் சத்தாக நமக்குள் எப்படி உட்கொள்ளுகிறோமோ அதைப் போன்று ஒவ்வொரு நிலைகளிலும் நன்மை பெறும் சத்தாக நமக்குள் உருவாக்குவதற்கே இந்த நிலைகளைச் செய்கின்றோம்.

ஏனென்றால்
1.நீங்கள் தியானமிருப்பதைக் காட்டிலும்
2.இந்த உபதேசத்திற்குள் உங்களுக்குள் நல்ல வித்துக்களை ஊன்றுகின்றேன்.

மறவாது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அடுத்து வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து கணவன் மனைவி இம்முறைப்படி செய்தால் இந்த வாழ்க்கையிலே மனிதனுடைய கடமையைப் பூரணமாக நீங்கள் ஏற்றுக் கொண்டவர்கள் ஆகிறீர்கள்.

விஞ்ஞான உலகத்தில் வரக்கூடிய எத்தகைய நச்சுத்தன்மை இருந்தாலும் அதை மாய்த்துவிட்டு உங்களுக்குள் ஒளியின் சுடராக நீங்கள் பெற முடியும்.

1.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய உயிரை ஈசனாக மதிக்க வேண்டும்.
3.எதை எண்ணி நீங்கள் வலுக் கொண்டு கொடுக்கின்றீர்களோ அதை நிச்சயம் அவன் (நமது உயிர்) சமைத்துவிடுவான்.
4.அதுவாக நம்மை உருவாக்குவான்…!

தீமையை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நமக்குள் உருவாக்கும் நேரமே பிரம்ம முகூர்த்தம்

தீமையை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நமக்குள் உருவாக்கும் நேரமே பிரம்ம முகூர்த்தம்

 

ரத்தத்தை உறிஞ்சும் சில கொடிகள் காட்டுக்குள் இருக்கின்றது. அந்தக் கொடியின் அருகில் ரத்தம் உள்ள உயிரினங்கள் வந்தால் அழுங்காமல் அதை எடுத்துக் கொள்ளும். ரத்தத்தை உறிஞ்சிய பின் “சொத்…” என்று கீழே விழுந்து இறந்து விடும்.

அந்த மாதிரிக் கொடிகள் வளர்ந்திருக்கும் இடத்திற்குக் குருநாதர் எம்மை அழைத்துச் சென்றார். அந்தக் கொடி நம் மீது பட்டால் சுரீர் என்று மின்சாரம் தாக்கியது போல் இருக்கும். உடலிலிருக்கும் ரத்தத்தை உறியும். மயக்கம் வந்துவிடும்.
1.ஆனால் குருநாதர் எம்மிடம் ஒரு கத்தியைக் கொடுத்திருந்தார்.
2.முதலில் எனக்கு அந்தக் கொடியே தெரியவில்லை.
3.என்னைத் தொட்டவுடன் தான் தெரிந்தது… உடனே அதை வெட்டினேன்.

இப்படி எல்லாம் காட்டிற்குள் பல நிலைகளைத் தெரிந்து கொண்ட பின்பு தான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி வருகின்றேன். என்னை இப்படித்தான் பல வகைகளிலும் பழக்கினார்.

எம்மிடம் வருபவர்கள்… எம்மைச் சந்தித்த உடனே தலைவலி போக வேண்டும் என்ற எண்ணத்தில் வருகிறார்கள். தலைவலி போய் விடுகின்றது.

தலை வலி போனாலும் எதனால் வந்தது…? என்று அறிந்து அந்தத் தப்பை மட்டும் திருத்த மாட்டார்கள்.
1.ஏனென்றால் அறியாமல் தவறு செய்யும் நிலைகளை நீக்குவதற்குத் தான் தியானம் செய்யுங்கள்
2.எது உங்களை இயக்குகிறது…? தவறு செய்ய வைக்கிறது என்பதைத் தெரியச் செய்கிறோம்.
3.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் நீங்களே மாற்றி அமைக்க முடியும் என்றும் சொல்கிறோம்.

அதன்படி நன்றாகிறது…!

ஆனால் இதை வீட்டில் உள்ளவர்கள் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று என்னிடம் வந்து சொல்வார்கள்… திட்டுவார்கள்.
1.இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…?
2.நம்மை அறியாமல் நாம் எடுத்துக் கொண்ட அந்தக் குறை உணர்வுகள் தான் மீண்டும் இயக்குகின்றது.

அதனால் உருவாகும் நோயை நீக்க மருத்துவர்களிடம் சென்று மருந்தை உட்கொண்டாலும் அந்த மருந்தின் விஷத்தன்மைகள் ரத்தத்தில் கலந்து வீரியத் தன்மை காட்டப்படும் பொழுது… இதைச் சுத்தப்படுத்தும் கிட்னி பெயிலியர் ஆகி விடுகிறது.

அடுத்து… உப்புச் சத்து வந்து விட்டது சர்க்கரைச் சத்து வந்து விட்டது என்று சொல்வார்கள். சர்க்கரையைப் பிரிக்கும் நிலை இழந்து அந்த உணர்வின் இயக்கமாகி விட்டால் ரத்தத்தில் சர்க்கரை கலந்து விடுகின்றது… நீரிலும் பிரிகின்றது.

அவர்கள் சிறுநீர் கழித்தால் ஈயோ எறும்போ மொய்க்கத் தொடங்கும், அதைச் சீர்படுத்தும் உறுப்புகள் பலவீனம் அடைகின்றது. வேதனை அதிகமாகி பித்த சுரப்பிகள் அதிகமாகி விட்டால்… அந்த நஞ்சு அதிகமாக ரத்தத்தில் கலந்து விடுகிறது. அதனால் தலைசுற்றல் வரும்.

1.அந்தத் தலை சுற்றலுக்கு என்று மீண்டும் மருந்துகளை உட்கொள்ளும் பொழுது உடலில் விஷத்தன்மை தான் அதிகமாகின்றது.
2.தலை சுற்றல் குறையவில்லை என்பார்கள்.
3.ஏனென்றால் மீண்டும் விஷ அணுக்களாக உடலுக்குள் மாறும்.
4.அந்த நிலையில் அரிப்பு வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகமாகும். சிந்திக்கும் தன்மை இழக்கப்படும்.

காரணம்… இது எல்லாமே நாம் நுகரக்கூடிய உணர்வுகளினால் வரும் விளைவுகள் தான். இதை மாற்ற வேண்டும் அல்லவா.

இதைப் போன்ற உணர்வுகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வெளிப்படும் அலைகள் மிகவும் சக்தி வாய்ந்தது.

1.துருவ நட்சத்திரம் பூமியின் அச்சுக்கு நேராக இருப்பதால்
2.மற்றது வருவதற்கு முன்பாக அதிகாலையில் நம் பூமி துருவத்தின் வழி அதைக் கவர்கின்றது… நமக்கு முன் பரவச் செய்கின்றது.
3.அந்த நேரத்தில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் பிரம்ம முகூர்த்தம்
4.அதாவது நமக்குள் புதிதாக அந்த உயர்ந்த சக்தியை உருவாக்க முடியும் என்று ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

பிரம்மம் என்றால் மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் அரும்பெரும் சக்தியை நமக்குள் பிரம்மாக்குகிறோம் என்று இப்படி அதை மறைமுகமாகச் சொல்கிறார்கள்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து வாழ்க்கையில் வரும் தீமைகளை உங்களால் நீக்க முடியும். அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது அந்த உயர்ந்த சக்தியை எடுத்து உடலுக்குள் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

1.எல்லா ஆலயங்களிலும் அந்த அதிகாலையில் வணங்கும் முறைகளை ஞானிகள் கொடுத்தது இந்த அடிப்படையில் தான்.
2.நல்ல குணங்களை வளர்ப்பதற்கும் தெய்வீகப் பண்புகளை நாம் வளர்ப்பதற்கும் ஞானிகள் அன்றே காட்டியுள்ளார்கள்.

டெலிபதி என்பது உண்மைதான்

டெலிபதி என்பது உண்மைதான்

 

இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களைத் தியான நிலைக்கே அழைத்துச் செல்கின்றோம்.
1.வாழ்க்கையில் வந்ததை எல்லாம் மறந்து விட்டு
2.உங்களை எல்லாம் நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்திற்குத் தான் கொண்டு செல்கின்றோம்.
3.இந்த உணர்வுகள் சேரச் சேர உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எல்லாம் ஒளியாக மாறும்.

யாம் உபதேசம் கொடுக்கும் பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…? வீட்டில் பொருட்களை எல்லாம் அப்படியே வைத்து விட்டு வந்திருக்கின்றோம்…! கதவு திறந்திருக்கிறது…! ஒருவேளை திருடன் வந்து விடுவானா…! என்று நினைத்தால்… திருடன் நிச்சயம் அங்கே போவான்.

அதே போன்று வீட்டை விட்டு விட்டு வந்து விட்டோம்… நம் பிள்ளைகள் எல்லாம் அங்கே என்ன செய்கின்றதோ…? ஏது செய்கின்றதோ என்று எண்ணினால் அங்கே ஏதாவது அவர்கள் நிச்சயம் குறும்புத்தனம் செய்வார்கள்.

நான் நினைத்தேன்… நினைத்த மாதிரி நடந்து விட்டதே என்று சொல்வீர்கள்.

ஆனால் வீட்டில் எல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எப்படி எண்ண வேண்டும்…?
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
2.அங்கிருப்பவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கிருந்து எண்ணி அதை அங்கே அனுப்ப முடியும்.
3.டெலிபதி போன்று இது வேலை செய்யும்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் அதை நிச்சயம் உணர முடியும்.

துரோகம் செய்தான் பாவி… அவன் உருப்படுவானா…? என்று பகைமை கொண்டவனை நாம் எண்ணினால் “அவன் அமெரிக்காவில் இருந்தாலும்…” அவனைச் சென்று இந்த உணர்வு ஆட்டிப் படைக்கிறது எல்லவா…!

அது போன்று தான் நம் குடும்பத்தில் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு என்றோ… நாம் செய்யும் தொழிலுக்கு நல்லதோ என்று இருந்தாலும்…
1.நாம் பாய்ச்சும் அந்த உயர்ந்த சக்தி அங்கே சென்று நல்லதாக அது இயக்கும்.
2.அருள் உணர்வு கொண்டு அங்கே நாம் இணைத்து விட்டால் எதையும் நாம் சீராக்க முடியும்.

ஏனென்றால் குருநாதர் எம்மைத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைத்தார். யாம் உங்களை எல்லாம் இந்த உபதேசத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்ளுங்கள்.
1.சூரியன் எடுத்து வைத்துக் கொள்கிறது… அதை இந்தக் காற்று மண்டலத்தில் பரவச் செய்கிறது.
2.அதே போல் உங்கள் வீட்டிலேயும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகமாகப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்… குடும்பத்தில் சந்தோஷம் வரும்.

அதே போன்று நாங்கள் வசிக்கும் எங்கள் தெருவெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று பரப்புங்கள். உங்கள் தெருவிலும் அமைதி வரும்.

ஒரு சிலர் தவறான நிலைகள் கொண்டு செயல்பட்டாலும் அவர்களுக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பாய்ச்சி அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்தால்… தீமைகளை நீக்கக் கூடிய அரும்பெரும் சக்திகளாக நாம் வளருவோம்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் வளர்த்து குடும்பத்தில் பெருக்கி ஊரிலும் உலகிலும் பெருக்கி
2.தீமைகளை அகற்றிடும் சக்தி வாய்ந்த நிலைகளாக நாம் உருவாக்க வேண்டும்.

அது தான் கூட்டுத் தியானத்தின் நோக்கம்.

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”

 

இராமன் மனதைக் குவித்து எப்படிச் சிவலிங்கமாகப் பூஜித்தானோ இதே போன்று நாம் எண்ணம் கொண்டு உணர்வின் தன்மைகளை ஒன்று சேர்க்கும் போது “இராமலிங்கம்…” என்று உயிரின் தன்மை எண்ணத்தால் உணர்வை ஒளியாக மாற்றியது என்று சொல்வார்கள்.

ஏனென்றால் எல்லாவற்றிற்கும் காரணப் பெயர் வைத்துத் தான் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
1.இராமலிங்கம் என்று சொன்னாலே நம் எண்ணங்கள் ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற “இந்த எண்ணம் தான் இராமன்…”
2.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மை நாம் பெறும் பொழுது தான் இராமன்.

இராமனின் பக்தன் யார்…? ஆஞ்சநேயன். எதனை நாம் எண்ணுகின்றோமோ இந்தச் சொல்லைச் சொல்லும் பொழுது அதை நீங்கள் நுகர்ந்தால் உங்களுக்குள் வாயுவாகப் புகுகின்றது.

இராமனின் பக்தன் வாயு புத்திரன்… அவன் ஒரு மந்திரி என்ற நிலைகளில் இந்த உணர்வின் தன்மை நீங்கள் சொல்லும் பொழுது பிறருடைய உடலில் இதைப் புகச் செய்தால் அவருடைய அறியாமையைச் நீக்கச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.

1.இவ்வாறு நம் சொல்லுக்குள் தியானம் எடுத்த உணர்வுகள் கேட்போர் செவிகளில் பட்டபின்
2.கண் கவர்கின்றது… அவருடைய ஆன்மாவாக மாற்றுகின்றது
3.உயிரில் உள்ள காந்தம் கவர்கின்றது. இந்த உணர்ச்சி உடல் முழுவதும் படர்கின்றது.

ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் தீமையை நீக்கும் உணர்வுகளைப் பரவச் செய்யும் பொழுது… இந்த உணர்வின் தன்மை நமக்குள் ஞானமாக அந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்த எண்ணமும் சரி… நமக்குள் எடுத்துக் கொண்ட அணுக்களும் சரி… நம் உடலும் சரி… அந்த உணர்வுக்கொப்பத் தான் நம்முடைய செயல்களாகும்… சொல்லும் வரும்.

ஆகையினால்
1.இந்த வழியில் நாம் அனைவரும் உலகுக்கே வழிகாட்டியாக
2.குரு வழியில் அகஸ்தியன் சென்ற பாதையில் நாம் சென்று இருளை அகற்றி
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்கி நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாற வேண்டும்.

நமது பேச்சும் மூச்சும் பார்வையும் பிறருடைய தீமைகளை அகற்றச் செய்ய வேண்டும். நம் பேச்சும் மூச்சும் பிறரை நல்ல சிந்தனைகளைச் சிந்திக்கும்படி… நல்ல உணர்வுகள் வளரும்படிச் செய்ய வேண்டும்.

நாம் பார்க்கும் பார்வை அவர்களை நலம் பெறச் செய்யும் சக்தியாக வர வேண்டும். அவர் வாழ்க்கையில் வளம் பெறும் நிலையாகச் செயல்பட வேண்டும்.

நமது பார்வை பிறருடைய தீமைகளையும் நோய்களையும் போக்கும் சக்தியாகப் பெற வேண்டும்.
1.அவருடைய நோயின் உணர்வு சங்கடத்தின் உணர்வு நமக்குள் புகாது
2.”தடுத்து நிறுத்தும்…” அந்த அருள் சக்தியாக நீங்கள் மாற வேண்டும்.

எனக்கு குரு கொடுத்த அருள் சக்தியை உங்களுக்கும் பெறச் செய்கின்றேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு வளர்ந்து என்றென்றும் ஏகாந்தமாக எந்த எதிர்ப்பும் இல்லாது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளிய அருள் வழிப்படி
1.எனக்குள் அந்த ஞான வித்தை வளர்த்து
2.அந்த ஞானத்தின் வித்தைத் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்தது.
3.நாம் அனைவரும் அதன் வழி நாம் செல்லும் போது பேரருளாக மாறுகின்றோம்.
4.பேரருளாக மாறும் பொழுது பேரொளியாக மாறுகின்றது.
5.பேரொளி என்ற நிலை வரும் போது பேரிருளையும் மாற்றும் சக்தி வருகிறது.

இதை நாம் தொடர்ந்து வழிப்படுவோம்… அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… அருள் வழி வாழ்வோம் என்ற இந்தப் “பிரதிக்ஞையை…” நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி பெறச் செய்யக்கூடிய உணர்வுகளை நாம் பெருக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு தெருவிலும் அமைதி பெறச் செய்ய வேண்டும்… சொல்லால் அல்ல…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
3.அந்த உணர்வலைகளை நாம் மூச்சலைகளாகப் பரப்ப வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அபரிதமாக எடுக்கும் போது கொட்டாவி வருவது ஏன்…?

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அபரிதமாக எடுக்கும் போது கொட்டாவி வருவது ஏன்…?

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நமக்குள் வலு சேர்த்துத் தீமைகளை மாற்றி நமது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

ஈஸ்வரா என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே நிலை நிறுத்துகின்றோம்.
1.அப்பொழுது என்ன நடக்கிறது…?
2.பிற உணர்வுகள் உள்ளே புகாது அங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றது.

அங்கே நிறுத்திய பின்பு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று உயர்ந்த உணர்வுகளை ரத்தம் முழுவதும் பரவச் செய்கின்றோம்.

அப்போது உடலில் உள்ள மற்ற அணுக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்கிற பொழுது
1.அது எல்லாம் வருத்தத்தில் இருக்கும்.
2.துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தி உள்ளே சென்ற பின் சிலருக்குக் கொட்டாவியாக வெளியே வரும்…
3.அதைக் கரைத்து ஆவியாக மாற்றும்.

தியானமிருக்கும் பொழுது கொட்டாவியாக வருகின்றது… எங்களால் உட்கார முடியவில்லை நிற்க முடியவில்லை என்று சொல்வீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்த பின்பு உடலிலிருக்கும் அந்த விஷமான உணர்வுகள் காலியாகி வெளியேறும். அய்யய்யோ… தியானத்தில் எனக்குக் கொட்டாவி வருகின்றது என்று நீங்கள் சொல்வீர்கள்.

காரணம் அது கரைத்து வெளியே கொண்டு செல்கின்றது. துருவ நட்சத்திரத்தின் சக்தி இரத்தத்தில் கலந்த பின் கெட்ட அணுக்களுக்கு வேண்டிய ஆகாரம் கிடைப்பதில்லை.

1.அப்பொழுது வீரியமாக இருக்கும்… விஷத்தன்மையாக இருந்தால் வலு ஜாஸ்தியாக இருக்கும்.
2.ஆனால் விஷத்தன்மைக்குண்டான சக்தி கிடைக்கவில்லை என்றால் அது சோர்வடையும்.
3.அப்பொழுது வேகமாகப் பேசிக் கோபமாகப் பேசுபவருடன் இணைந்தால் தணியும்.

மற்றவர்களுடன் பார்த்துப் பார்த்துப் பேசி மற்ற உணர்வுகளை எடுத்திருந்தாலும் தியானம் எடுத்த பின் அது குறையும். அதற்குச் சாப்பாடு இல்லை என்கிற பொழுது மயக்கமடைகிறது.

ஆனால் அதே சமயத்தில்
1.உங்கள் உடலில் ஊழ்வினை என்ற வித்துக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து விடுகின்றோம்.

அக்ரிகல்ச்சரில் வித்துக்களில் விஷ பூச்சிகள் தாக்காதபடி அந்த வித்துக்களை ஊறவைத்து அதற்குண்டான நிலைகளை இணைக்கப்படும் பொழுது அந்தச் செடிகளில் விஷப் பூச்சிகள் தாக்காது. அதிலே பூச்சிகள் வருவதில்லை…!

ஆனால் வரவில்லை என்றாலும் கூட வளர்ந்து வரும் பொழுது பூச்சிகள் இதைச் சாப்பிடுவதில்லை ஆனாலும் அதிலே முட்டை இடுகின்றது. முட்டையிட்டால் என்ன செய்யும்…?

விஷத்தன்மை அந்த முட்டைக்குள் வளர்ந்து விடும். அது வெடித்து வெளிவந்த பின் மீண்டும் அந்தச் செடிகளையே உணவாக உட்கொள்ளும்.

இதையெல்லாம் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவிற்குள் கொண்டு வர வேண்டிய சக்தி

நம் ஆன்மாவிற்குள் கொண்டு வர வேண்டிய சக்தி

 

வீட்டில் பெண்கள் கோலமிடுகின்றார்கள். கோலமிடும் போது புள்ளிகளை வைத்து இணைக்கப்படும் போது
1.எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…
2.இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தில் உற்றுப் பார்த்து
3.இந்த உணர்வுகளை அந்தக் கோலத்திலே பதிவாக்க முடியும்.
4.ஏனென்றால் அந்தக் கோலப் பொடியிலும் மேக்னெட் உண்டு.

ஆகவே குடும்ப ஒற்றுமைக்காக உயர்ந்த எண்ணங்களை எண்ணி அருள் ஞானம் பெருக வேண்டும் நல் வாழ்க்கை வாழ வேண்டும். குடும்பத்தில் எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை எல்லாம் எண்ணிக் கோலமிடலாம்.

நமக்குள் இது பதிவாகிறது… நல்ல இயக்கச் சக்தியாக மாற்றுகிறோம். நீங்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள். இங்கே வந்து அவருடைய கஷ்ட நஷ்டங்களை எல்லாம் சொல்ல ஆரம்பிப்பார்கள். நாம் “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம்.

எந்த இடத்தில் நின்று பேசினோமோ அந்த இடத்திலே பதிவாகிவிடும்… இருவர் உடலிலும் பதிவாகிவிடும்.
1.அடுத்தாற்போல் அந்த இடத்திற்கு மீண்டும் வந்தாலே அந்த வாசனை இயக்கி
2.உங்களை அறியாமலே “ஏதோ சங்கடமாக இருக்கின்றது…” என்ற நிலையில்
3.அந்த கவலையாகப் பேசிய அதே இடத்திலே அமர்ந்து மீண்டும் எண்ணி அதை வளர்க்கும்படி செய்யும் (பதிவு அப்படி இயக்கும்).

அதே போல ஊரிலிருக்கும் குறைகளைப் பற்றிப் பேசியிருந்தால் வேறு பாதையில் செல்ல மாட்டார்கள். ஒற்றைக்காலில் நிற்கக்கூடிய இடமாக இருந்தாலும் கூட அங்கே தான் செல்லும்படி அதை எல்லாம் கவரும்படி இந்த உணர்வு இயக்கும்.

இந்த நினைவுகள் அவ்வாறு தான் இயக்கும். அதே எண்ணத்துடன் வீட்டிற்குள் வந்தால் வீட்டிற்குள்ளும் இது வரும்.

அதாவது…
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மனிதனுக்குள் இருக்கக்கூடிய நிலைகள் எப்படி உருமாறுகிறது…?
2.நம்மை அறியாத செயல்கள் சூட்சுமத்தில் எப்படி நடக்கிறது…?
3.இதையெல்லாம் எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.
4.எல்லாம் நேரடியாக அனுபவித்துச் சொல்கின்றேன்… புத்தகத்தைப் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.

குருநாதர் காட்டிய வழிப்படி இந்தியா முழுவதற்கும் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலும் சுற்றித் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இதை எல்லாம் சொல்கின்றோம்.

ஒரு மனிதன் அவன் தெரிந்து தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அவனைக் குற்றவாளியாக்குகின்றது. அதே சந்தர்ப்பம் சூழ்நிலை அவனை நோயாளியாக மாற்றுகின்றது… அதே சந்தர்ப்பம் சூழ்நிலையால் தான் குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்களும் வருகின்றது…!

1.இதிலிருந்து மீளும் வழி என்ன…? என்பதைத்தான் கோவிலில் வைத்து ஞானிகள் காட்டியிருக்கின்றார்கள்.
2.ஆனால் காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைகளுக்கு இன்று அது மாறிப் போய்விட்டது.

இயற்கையின் உண்மை நிலைகளை நாம் நுகர்ந்தால் நமது உயிர் என்ன செய்யும்…? நாம் எண்ணியதை நமது உயிர் உருவாக்கிக் கொடுக்கும். அதற்குத் தான் அதிகாலையில் அந்த பிரார்த்தனையைச் செய்யும்படி எல்லோருமே சொல்கின்றார்கள்.

ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் தான் இருக்கின்றது.
1.அந்த அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்… குளிக்க வேண்டாம்…!

ஆனால் குளித்துவிட்டு மறுபடியும் நீங்கள் ஆடைகளை அணிந்து பாருங்கள். குளித்த வியர்வை வெளியில் வரும். ஆடையை இரண்டவது தரம் நுகர்ந்து பாருங்கள். ஆடையில் நாற்றம் வரும்.

ஆனால் அதிகாலை விழித்தவுடன்… படுக்கையிலே எழுந்து அமர்ந்து
1.அல்லது படுக்கையிலேயே துருவ நட்சத்திரத்தை எண்ணி நினைவுகளை அங்கே செலுத்தித் தியானித்த பின்
2.ஐந்து நிமிடம் கழித்து உங்கள் ஆடையை நுகர்ந்து பாருங்கள்.

நல்ல வாசனையாக இருக்கும். அந்த அருள் மணங்கள் தீமைகளை அகற்றும். ஆக… ஆடையில் படிகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து
1.நம் எண்ணத்தால் உயர்ந்த சக்திகளை நம் ஆன்மாவிற்குள் கொண்டு வரக்கூடிய பழக்கத்தை அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்…
2.நம் ஆன்மாவை வலுவாக்க வேண்டும்… தீமைகள் புகாது தடுக்க வேண்டும்.

நாம் உருவாக்க வேண்டிய கூட்டமைப்பு

நாம் உருவாக்க வேண்டிய கூட்டமைப்பு

 

விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்களைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்திருக்கின்றது. எந்தெந்த நாடுகளில் இதைச் செய்து கொண்டார்களோ
1.இந்த உணர்வு “நியூட்ரான் என்ற விஷத்தன்மைகளின் அழுத்தம்” கதிரியக்க உணர்வினைக் கண்ட பின் அது அஞ்சி ஓடுவதும்
2.மற்றொன்றுடன் மோதிச் சுழல் காற்று போலப் புயலாக மாறுகின்றது அல்லது சூறாவளியாக மாறுகின்றது.

அணுகுண்டை வெடித்தால் கட்டிடங்களுக்குள் ஊடுருவித் தன் இனமாக மாற்றி அது புகை மண்டலங்களாக மாறுகின்றது. ஆனால் அதே சமயத்தில் இந்த நியூட்ரான் என்ற உணர்வுகள் பூமியிலே கலந்தால் விஷத் தன்மை கொண்டு மடியச் செய்யும்.

ஆனாலும் விஷத்தின் தன்மை கொண்டு கதிரியக்கப் பொறிகள் அஞ்சி ஓடும் பொழுது மற்றொன்றுடன் மோதியவுடன் சூறாவளியாக மாறி கடலிலே பட்டால் அதையும் அள்ளி எடுத்துக் கொண்டு புயல் போல் மாறும்.

இது கட்டிடங்களிலே படர்ந்தால் பலவீனப்படுத்தித் தரைமட்டமாக்கிவிடும்… மனிதனாக இருந்தாலும் தூக்கிச் சென்று விடும்.

கடலில் பட்டால் அலைகளாக மாறுகிறது. சனிக் கோளின் உணர்வு படடால் நீரை ஆவியாக மாற்றி மேகங்களாகக் கூடி மழை பெய்ய வைக்கின்றது.

ஆனால் விஷத்தன்மையான உணர்வுகள் மாறி கடலோரம் உள்ள நகரம் எல்லாம் அழியும் தன்மை வருகின்றது விஞ்ஞான அறிவால். இதைப் போன்ற பாதிப்புகளில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

1.கூட்டு ஐக்கியமாகத் தியானங்களைச் செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் வாழும் இடங்களிலே பரவச் செய்து
2.அந்த உணர்வலைகளை மோதும்படிச் செய்து அதைப் பெருக்கச் செய்யப்படும் பொழுது நம்மையும் காக்கலாம்… நாம் வாழும் ஊரையும் காக்கலாம்.

துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வு அழுத்தமாகும் பொழுது அந்தத் தீமைகளை விலக்கிவிடும். நம் நாட்டிலே அத்தகைய சூறாவளியோ புயலோ வராதபடி காக்கலாம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை… காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்.

தியானத்தைக் கடைபிடிக்கும் குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் அந்த அருள் சக்தியைப் பெற்று
1,தியானமிருக்கும் அனைத்துக் குடும்பங்களில் இது படர வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும்
3.மகிழ்ச்சியான நிலைகள் பெற வேண்டும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்
4.நாம் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடத்திலும் இதைப் படரச் செய்ய வேண்டும்.

அது தான் கோடிக்கரை… இராமன் என்ன செய்தான்…? மணலைக் குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள். காரணம்… மனிதனின் கடைசி எல்லையில் இருக்கின்றோம்.

மனதைக் குவித்து ஒன்றுபட்டு வாழும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை ஒன்றாகக் கூட்டி
2.ஒருங்கிணைந்த நிலையில் கூட்டமைப்பாக வலுவான நிலைகள் கொண்டு
3.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை விலக்கித் தள்ளி ஊரையும் நாட்டையும் காக்கும் நிலைக்கு வர வேண்டும்.

எங்கிருந்தாலும் சரி…! விஞ்ஞானப் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள
1.கூட்டமைப்பாகத் துருவ தியானத்தை மேற்கொண்டு அருள் உணர்வுகளைக் கவர்ந்து நாம் வாழும் இடங்களில் இந்த உணர்வுகளைப் பரவச் செய்வோம்.
2.ஒவ்வொரு நாளும் நாம் இதை வலுப்படுத்திக் கொண்டே வருவோம்.
3.உலகைக் காக்கும் சத்தியாக நாம் செயல்படுவோம்.

“சாமி சொல்லும் வழியில் நடந்தால்” நம்மை நாம் காக்க முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்

“சாமி சொல்லும் வழியில் நடந்தால்” நம்மை நாம் காக்க முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்

 

மற்றவர்களைக் காக்க நாம் உதவி செய்தாலும்… அவருடைய துயரத்தை வேதனையை நுகர்ந்த நிலையில் அது விஷமான உணர்வாக நம் உடலுக்குள் சென்று… நம்மை ஆபத்தான நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

ஏனென்றால் நன்மை செய்தாலும் அதைத் தடுக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குத் தான்
1.உங்கள் வாழ்க்கையில் எந்த நிமிடமும் எந்த நேரத்திலும் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும்படி தகுதியை ஏற்படுத்துகின்றோம்… அடிக்கடி நினைவு படுத்துகின்றோம்.
3.அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.24 மணி நேரமும் நான் சதா தியானத்தின் மூலம் எடுத்துப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாலே உங்கள் தலை வலி மேல் வலி குறையும்… இடுப்பு வலி இருந்தால் அதுவும் குறையும். ஏனென்றால் இதைக் கேட்கப்படும் பொழுது அந்த நஞ்சுகள் அகல்கின்றது.

ஆனாலும்… சாமி உபதேசிக்கின்றார்…! அதைக் கேட்க விடாது “மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்களே…” என்று அதன் பால் நினைவச் செலுத்தி விட்டால் அடுத்த நிமிடம் மேல் வலி தலை வலி… வெறுப்பு எரிச்சல் கை கால் குடைச்சல் நிச்சயம் வரும்.

காரணம்… “நாம் நுகர்வதைத் தான் நமது உயிர் இயக்குகிறது…” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்தாலும் அதை மாற்றும் வழி வேண்டும்.

அதை மாற்றுவதற்குண்டான சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வுகளைப் பதிவு செய்வதும்.

உபதேசக் கருத்துக்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும் சக்தியாக அது வரும். ஆனால் அதற்குப் பதில் சாமி தான் செய்து கொடுப்பார் என்று நம்பினால்… “அது மிகவும் பிழையானது…”

1.சாமி சொன்ன உணர்வைப் பதிவாக்கி கொள்ள வேண்டும்.
2.”அதன் வழி நடந்தால் நம்மை நாம் காக்க முடியும்… ” என்ற அந்த நம்பிக்கை வர வேண்டும்.

ஏனென்றால் சாமியார் செய்வார் கோவிலில் இருக்கும் தெய்வம் செய்யும் என்ற இந்த நம்பிக்கையில் தான் வாழ்கின்றோம்.

அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். அந்தத் தெய்வ நிலை பெற வேண்டும்… அந்தத் தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த உணர்வு நமக்குள் அத்தகைய செயலாக உருவாக்குகின்றது.
2.ஆக நாம் எண்ணியதைத் தெய்வமாக்குகின்றது.

அனைவரும் நல்லவராக வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் தெய்வீகப் பண்புகள் பெற வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாக ஆகின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் சொல்லி வருகின்றோம். ஆனாலும் நான் படிக்காதவன் தான்.

1.அனைத்துச் சக்திகளும் காற்றில் இருக்கின்றது… குரு காட்டிய வழியில் அதை நான் நுகர முடிகின்றது.
2.வியாசகன் எப்படி அகஸ்தியன் உணர்வை நுகர்ந்து உண்மைகளைக் கண்டறிந்தானோ அதைப் போன்று தான் குருநாதர் எம்மை நுகரும்படி செய்தார்.
3.அதைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று எண்ணினால் எந்தத் தீமையும் உங்களை சாடாது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உங்களை நீங்கள் நம்புங்கள.