நம்மை வளர்ததவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கிறோமா…?

நம்மை வளர்ததவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கிறோமா…?

 

உதாரணமாக நமது குடும்பத்தில் இருப்போர் (மூத்தவர்கள்)) அனைவரும் நமக்கு நன்மை செய்துள்ளார்கள். அந்த நன்மை செய்த பின் நாம் அந்த நன்மை செய்தவரை எண்ணும் பொழுது எப்படி எண்ணுகின்றோம்…?

அவரால் நான் பாதுகாக்கப்பட்டேன்… எனக்கு எல்லாம் நல்ல வழி வகுத்துக் கொடுத்தார் என்று நாம் ஏங்குகின்றோம். ஆனால் அவர் அந்த உடலை விட்டுப் பிரிந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படிச் செலுத்துகின்றோம்…?

1.இப்படி எனக்கு எல்லாம் உதவி செய்தார்.
2.நோயோடு வாடும் பொழுது… “நல்ல மனிதன் இப்படி நோயோடு வாடுகின்றார்…” என்று. இந்த உணர்வைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
3.ஆனால் உடலை விட்டு அவர் பிரியப்படும் பொழுது நல்ல மனிதன் போய் விட்டாரே என்று வேகமாக எண்ணும் பொழுது
4.அவருடைய உணர்வு நமக்குள் வேதனைப்படும் காலத்தில் நமக்குள் இருப்பதனால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது.
5.நல்லது செய்தார்… ஆனால் உடலை விட்டுப் பிரியும் போது அவருடைய பக்குவ நிலையை நாம் இழுக்கப்படும் போது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

ஆனால் அவர் கடைசியில் எந்தக் கஷ்டத்தைப் பட்டாரோ அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளர தொடங்கி விடுகின்றது.

ஆகவே அவரை எங்கே இழுக்கின்றோம்…?

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினாலும்… நமது அறியாமை பண்பும் அன்பும் பரிவுடன் நாம் எண்ணும் பொழுது அவருடைய ஜீவன் பிரியப்படும் பொழுது நம்முடைய வேகமான உணர்வுடன் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

1.ஆனால் நம் உடலுக்குள் வந்த பின் நம் உடலில் அது கவரப்பட்டு நமக்கும் அவரின் நோய் வரத் தொடங்கி விடுகின்றது.
2.நோயின் உணர்வு நமக்குள் வரும் பொழுது அவருடைய ஆன்மா நமக்குள் இருந்து விஷத்தை வளர்த்து
3.நாம் இறந்தபின் மனித உடலுக்குள் செல்லாதபடி விஷத்தின் தன்மை கொண்ட மிருக உடல்களுக்குள் அவரை அழைத்துச் சென்று விடுகிறது.

மாடு ஆடு என்று இவையெல்லாம் தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்கு: அதனதன் விகிதாச்சாரப்படி விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்கின்றது.

மானோ யானையோ மாடோ புலியோ நாயோ நரியோ இவையெல்லாம் அதனதன் உணர்வுக்கொப்ப அதன் விகிதாச்சாரப்படி அந்த உறுப்புகளை எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப அந்த விஷத்தின் இயக்கத்தினால் அதன் ரூபங்கள் உருவாகின்றது.

உயிரால் உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் பொறிகள் உருவாக்கப்பட்டு அதன் வழி அந்த உடல்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது…? என்பதனை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே இவ்வழியில் தெளிந்து கொண்ட பின்னும் இப்பொழுது நமக்கு நன்மை செய்தார்கள் என்றால் நமக்காக நன்மை செய்தார். இனி இவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?

அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது அந்த நோயின் தன்மையால் வேதனைப்படுகின்றாரே…!
1.இதிலிருந்து விடுபட்டு இனி அவர் ஆனந்த நிலை அடைய வேண்டும்.
2.அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக மீண்டும் பிறவிக்கு இழுத்துச் சென்று நமக்குள் அந்த வேதனை உணர்வு உருவாக்கப்பட்டு நாம் இறந்தபின் மனிதனல்லாத உருவை உருவாக்கத்தான் பயன்படுத்த முடிகிறது. அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செயல்படுத்த முடியவில்லை.

மௌனமாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா எல்லோருக்கும் நன்மை செய்திருந்தாலும்
2.அவர் கேட்டறிந்த விஷத்தின் தன்மை அந்த உடலிலிருந்தாலும்…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
5.இனி துயரமே இல்லாத நிலையாக என்றும் ஏகாந்த நிலை அடைய வேண்டும் என்று அவரை உந்தித் தள்ள வேண்டும்.
6.அது தான் ஞானிகள் காட்டிய முறை.

பிறருக்கு உதவி செய்து தன் துயரத்தின் தன்மை தனக்குள் எடுத்து நோயாகிப் பிரிந்து சென்றாலும் இனி அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று யாராவது எண்ணுகின்றோமா…? யாரும் எண்ணுவதில்லை.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பற்றுடன் இருந்தால் “ஐய்யய்யோ இவ்வளவு நாள் எல்லாம் கொடுத்தாயே… இப்படிப் போய்விட்டாயே… இவ்வளவு சொத்தையும் வளர்த்தாயே… என்னைக் கண்காணித்தாயே…!” என்ற நிலையில் அழுகப்படும் பொழுது யார் அதிகமாக எண்ணுகின்றாரோ அவர் உடலில் அந்த ஆன்மா வரும்.

அந்த உடலுக்குள் வந்தால் மீண்டும் அந்த உடலை வீழ்த்திவிட்டு அந்த விஷத்தின் தன்மை ஓங்கி வளர்ந்த பின் மீண்டும் பாவ நிலையான மனிதனல்லாத உடலைப் பெறுகின்றது.

இப்படித்தான் நம்மை அறியாதபடி நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்த வேண்டும். அதற்குத்தான் தெளிவாகச் சொல்வது.

சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் தொடர் வரிசை

சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் தொடர் வரிசை

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றோமோ…
1.உடலை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்று அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால்
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நம்முடன் பழகியதை எண்ணி “ஐயோ… நல்லவராக இருந்தார்… இங்கே எல்லாம் வந்தார்… இப்பொழுது போய்விட்டாரே…!” என்று எண்ணுவதை விடுத்துப் பழக வேண்டும்.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் மனித வாழ்க்கையின் துன்பத்தை அவர் கடந்தார்… இனி பேரின்பப் பெரு வாழ்வு அவர் பெற வேண்டும்…! என்ற இந்தப் பேரின்பத்தைத் தான் எண்ண வேண்டும்.

1.உடலில் வாழ்ந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்தார்
2.உடலை விட்டு அகன்ற பின் இனித் துன்பமில்லா ஏகாந்த நிலையை அவர் அடைய வேண்டும்
3.அவர் அருள் ஒளி பெறுதல் வேண்டும்
4.உலகில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர் அருளானந்தம் பெற வேண்டும்
5.அந்த ஆன்மா ஏகாந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உடலிலே நீடித்த நாள் வாழ்ந்தவர் எவரும் இல்லை. ஆகவே நாம் செயல்படுத்த வேண்டியது துன்பத்தைக் கடந்து அவர் செல்கின்றார்… பேரின்பத்தை அவர் அடைய வேண்டும் என்பது தான்.

அவர் உணர்வு நமக்குள் இருப்பதால் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்துதல் வேண்டும்.
1.நமக்குப் பின்னும் இதே போன்று… “பின் உள்ளோர்” நாம் உடலை விட்டுப் பிரிந்த பின்
2.நாம் செய்வது போன்று அவர்கள் செய்தார்கள் என்றால் நாமும் எளிதில் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.
3.அந்தத் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்

அதற்குத் தான் கூட்டமைப்பாக அமைத்துள்ளோம்.

ஏனென்றால் “ஒரு மனிதன் தனித்த நிலைகள் அங்கே செல்ல முடியாது…!” ஒன்றுபட்ட உணர்வினை இயக்கப்பட்டுத் தான் செயல்படுத்த முடியும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் எப்படி விண் செலுத்துகின்றோமோ… இது போல நம்முடன் தொடர் கொண்டவர்கள்… நம்முடன் இணைந்தவர்கள்… கேள்வியுற்றபின் அங்கே செலுத்த வேண்டும்.
1.இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று விடாது அருள் ஒளி என்ற நிலைகள் உந்தப்பட்டு
2.என்றும் ஏகாந்த நிலை என்ற ஒளியின் சரீரத்தை நாம் பெற இது உதவும்.

ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழ்கின்றது… ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் உணர்வு ஒன்றுதான் நாம் வாழுகின்றோம்…!

ஆகவே இதை வழிப்படுத்தி நாம் செயல்படுத்துதல் வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவருமே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை

கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை

 

கணவனைப் பிரிந்தவர்கள் மனைவியைப் பிரிந்தவர்கள் அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும் என்றும் அவர் இட்ட மாங்கல்யம் உங்களிடம் இருக்கிறது என்ற உறுதி கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும்.
1.அவர் உணர்வுகள் உங்கள் உடலிலே உண்டு
2.அதன் வலுக் கொண்டு அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்,

இப்பொழுது சாங்கியம் சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றார்கள்…?

கணவன் இறந்துவிட்டால் கணவனை மனைவி மறந்துவிட வேண்டும் என்பதை ஆதாரமாகக் காட்டிக் “கணவனை இழந்தவள்” என்று மற்றவர்களை அறியச் செய்வதற்கு மாங்கல்யத்தைப் பறிக்கின்றார்கள். அங்கேதான் தவறு செய்கின்றார்கள்.

தன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு கணவன் பால் அப்படி நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி தவறு செய்ய விடாது.

இந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகள் செயல்படுத்தப்பட்டு “கணவனை இழந்தவள் இழந்தவள்” என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனை உணர்வைக் கொண்டு அந்த வேதனையால் பேய் மணமாக மாற்றி… இந்த உணர்வின் துணைகொண்டு தன் குடும்பத்தின் நிலைகள் கொண்டு அது செயல்படும்.

இறந்த பின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலில் சென்று பேய் உணர்வுகளைத் தான் ஊட்டி… அந்தப் பாசத்தால் அந்தக் குடும்பத்திற்கும் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர ஒளியின் சரீரம் பெற முடியாது… நல்வழி செல்ல முடியாது.

ஞானிகள் காட்டிய நிலைகளில்…
1.வசிஷ்டரும் அருந்ததி போன்று கவர்ந்து கொண்ட உணர்வுகள் என்றும் ஒன்றி மனிதனுக்குள் வாழ்ந்தால்
2.அருள் ஒளி கணவனுக்கு கிடைக்க வேண்டும் என்று அருள் ஒளி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.அப்படிப்பட்ட உணர்வுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் தான் என்றும் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

இந்த உடலில் குறுகிய காலமே இருப்பினும் அது மனைவியின் உணர்வின் துணைகொண்டு வலு கொண்டு சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி அந்த வலுவினைச் சேர்த்து விட்டால் அதை நினைவு… அந்த விண்ணை நோக்கிச் செல்கின்றது மனைவியின் எண்ணம்.
1.அந்த உணர்வு கணவன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ந்திருந்ததோ
2.கனாக்களில் மகிழ்ச்சியின் உணர்வையே தோற்றுவிக்கும்.

அருள் ஒளி பெற வேண்டும் என்று அண்டத்தின் நிலைகளில் மிதந்து கொண்டிருக்கும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விட்டால்… அவர் அருள் ஒளிச் சுடர் பெறும் நிலைகள் கொண்டு… நமக்குள் இந்தப் புவியின் பற்றினை நீக்கிடும் அருள் உணர்வுகளை நமக்குள் தோற்றுவித்து நம்மை அந்த எண்ணத்துடன் வாழச் செய்யும். நம் நினைவில் நம் மக்களை வாழ்த்தச் செய்யும்.

இல்லை என்றால் மாங்கல்யத்தைப் பறித்து விட்டால் இழந்து விட்டோம் இழந்து விட்டோம் என்று சர்வத்தையும் இழந்திடும் நிலைகள் கொண்டு வேதனை கொண்டு தான் வாழும் நிலை வரும்.

கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் இனி தவறு செய்யாது
1.உங்களுடன் அவர் வாழ்கின்றார் என்ற நினைவு கொண்டு
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக உங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது.

அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் இதை ஒவ்வொருவரும் தலையாயக் கடமையாக வைத்து
1.என்று அவர் உங்களுடன் ஒன்றினாரோ அந்த நினைவுகள் வந்து கொண்டே இருக்கும்
2.அந்த அணுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.

அவர் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணி இதை போன்ற காலங்களில் சப்தரிஷி மண்டலங்களுடன் ஆன்மாக்களை இணைத்து விட்டால் இந்த நினைவு அங்கே செல்லும்.

நம் உணர்வுகள் இங்கே வளரும். அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும். அருள் ஒளிச் சுடராக மாற்ற நமது எண்ணங்கள் அந்த ஞானிகள் காட்டிய வழியில் செல்ல முடியும்.

ஆகவே கணவனை இழந்துள்ளோம் என்று எண்ண வேண்டாம். அவருடைய உணர்வுகள் உங்களுக்குள் உண்டு.

இதைப் போன்று இந்த உணர்வின் வலுக் கொண்டு இன்னொரு உடலுக்குள் அந்த ஆன்மா சென்று இருந்தாலும் அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் இந்த ஆன்மாக்களைத் தொடர்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
1.காலை துருவ தியானங்களில் செயல்படுத்துவீர்கள் என்றால் அந்த உணர்வுகள் ஒளியாகப் பெறுகின்றது.
2.அவர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகின்றது
3.அவர் அருள் வழி பெறுகின்றார் ஒளியின் சரீரம் பெறுகின்றார்
4.அந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும் நிலையும் ஒன்றி வாழும் உணர்வினை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.

இதைப் போல மனைவியை இழந்தவர்களும் மாற்று மனைவி பெற்றாலும் தவறில்லை. ஆனாலும் முந்திய மனைவியின் உணர்வுகள் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி சரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த ஆன்மா முன் சென்றால் அந்த அருள் ஒளி கொண்டு இணைந்து வாழும் மற்ற மனைவிக்கும் அருள் கொடுக்கும்.
2.அதனால் மக்களும் அருள் ஒளி பெறும் தகுதியும் இந்த வாழ்க்கையில் இருள் சூழா நிலையும் உருவாகும்.

சாப விமோசனம்

சாப விமோசனம்

 

ஒன்றினுள் இயங்குகின்ற இயக்கம்… அந்த இயக்கமாகச் செயலுறும் சக்தி… உயிர்த் தொகைகள் எதுவாயினும்… பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட மனிதனாகினும் சரி… “சந்தர்ப்பவசம் என்பது”
1.உயிரணுக்கள் உதித்திட
2.இணைந்து கொண்டிடும் உருவாக்கச் செயல் நிகழ்வுகள் ஒன்றினுள் மற்றொன்று ஒன்றி…
3.தத்தமது குண இயல்பு நீங்கப் பெற்றுப் புதிதென உருக்கொள்ளும் செயல் கூறுகள்.

வான் தொடர்பின் சூட்சமங்களை… ஞானம் பெற விழையும் ஞானச் செல்வங்கள் தாம் பெற்று உயர்ந்து கொண்டிட… தம்முள் விளங்கிக் கொள்வதே சந்தர்ப்பவசம்.

உலகோதய நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களின் “வித்தியாசங்களைக் காட்டவல்லவையப்பா சந்தர்ப்பவசம்…!”

பால்வெளியில் கலந்து இயங்கும் இயக்க கதிகள்… செயல்படுநிலையை படைப்பின் படைப்பாக வளர்ச்சியுறும் ஆக்கமும்… அந்த ஆக்கமே மறைபொருளாகின் இவ்வாழ்க்கை சாகரத்தில் ஜீவன் கொண்ட உயிர் நிலைகள்…
1.சரீர நிலை விடுத்த இயக்கத்தில் ஓடி (இறப்பு)
2.தமக்கொத்த எண்ணத் தொடர்பு கொண்டிட்ட சரீர இயக்க கதி ஜீவனுடன் ஒன்றி விடுவது
3.புவி ஈர்ப்பில் செயலுறும் உயிர்த்தொகைகளின் மறைபொருள் இயக்க சந்தர்ப்பவசம்.

வான் இயக்கம் புவி இயக்கம் இந்த இரண்டு தொடர்களில்… புவி ஈர்ப்பின் இயக்க வான் தொடர்பு… சந்தர்ப்பவசம் ஆக்கும் உயிர் நிலைகாட்டும்.

மாமகரிஷிகள் இந்நிலையை விளக்குவதே “சாப விமோசனம்…”

தாய்மை என்ற அன்பு குணம் வளர்க்கும் மனத்தின் திறன் கொள்ளும் ஜெபம் எதுவோ “அதுவே மந்திரம்…” சகலத்திற்கும் மனத்தின் திறன் விளக்கிக் கொள்ளவே அனுபவ ஞான உதய மெய்ஞான விழிப்பால் வளர்வது.. சுடர்தல் எனும் ஆத்ம பலம் பெற்றிடும் ஒளி நிலையப்பா.

இராம காவியத்தில் நடைமுறை சந்தர்ப்பவச சாபங்கள் என்று
1.இராவணன் பெற்றுக் கொண்டிட்ட சாபம்
2.தசரதன் பெற்றிட்ட சாபம்
3.வாலி பெற்றிட்ட சாபம்
4.கந்தர்வன் பெற்றிட்ட சாபம் என்று
5.பல இடங்கள் சந்தர்ப்பவசம் நிகழ்த்தும் முன் வினைத் தொடர் என்று உணர்த்தினாலும்
6.விமோசனம் என்பதன் பொருள் காண வேண்டுமப்பா.

“எனது நிலை (எல்லை)” பிறவி இல்லா நிலை அடைவது தான்

“எனது நிலை (எல்லை)” பிறவி இல்லா நிலை அடைவது தான்

 

1.கோடிச் செல்வம் சேர்த்தாலும் அவர்கள் வாழ்க்கையில் மன அமைதி என்பது இல்லை.
2.அழியாச் செல்வம் (அருள் செல்வம்) என்ற நிலையை எடுத்துக் கொண்டால் எச்செல்வம் இருந்தாலும் அதைக் காக்க முடியும்.
3.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது. செல்வத்தைக் காக்க அருள் ஞானம் நமக்குத் தேவை.

இதையெல்லாம் மனதில் வைத்து இந்த வாழ்க்கையில் குறை கூறும் வழக்கத்தை விடுத்து விட்டு குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உணர்வினை வளர்த்துக் கொள்வோம்.

எங்கிருந்து எதனுடைய நிலைகள் வந்தாலும் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் குறைகள் ஏற்படுவது சகஜம்.
1.அந்தக் குறையை உற்று நோக்கி அதையே திரும்பத் திரும்ப எண்ணுவோம் என்றால்
2.நம்மை அறியாமலேயே அந்தக் குறையான செயல்களைச் செயல்படுத்தும் நிலையும்
3.நம்மை அறியாமலே தவறுகள் செய்யும் உணர்வுகளே வளர்ந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாறுதல் வேண்டும்.

குறையின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் இந்திரலோகத்திற்குள் இரண்யன் சென்று நம்மை நல்வழியில் செயல்படுத்தாத நிலையை உருவாக்குகின்றான் என்று சொல்வார்கள்.

சொர்க்கத்தை அடையும் உணர்வின் தன்மை நமக்குள் இருக்கும் பொழுது பிறருடைய குறைகளை நுகர்ந்து விட்டால் நம் காரியமே செயலற்றதாக ஆகி… நமக்குள் குழப்ப நிலைகள் உருவாகி சிந்தித்துச் செயல்படும் சக்தியும் இழந்து “துருவத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்…!”

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் இதன் வழி கொண்டு அந்த வித்தினை குரு காட்டி அருள் வழியில் நாம் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் இனி பிறவி இல்லாத நிலை அடைவேன்.
2.அரும்பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்.
3.இந்த வாழ்க்கையை அருள் வழியில் நான் வாழ்வேன்
4.இந்த நிலையே எனது கடைசி எல்லை பிறவி இல்லா நிலை என்ற இந்த உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

செல்வங்கள் நிலைப்பதில்லை… செல்வம் இருப்பினும் இந்த உடலின் உபாதைக் காலங்களில் கூட செலவழிப்பதற்கு அது பத்துவதில்லை. செல்வம் அதிகமாக இருப்பினும் உபாதைகள் அதிகரிக்கப்படும் பொழுது “நல்ல உணவை உட்கொள்ள முடிவதில்லை…”

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு இந்த பிறவிக் கடனை அகற்றி… இனி பிறவியில்லா நிலையை அடையும் நிலையினைச் செயல்படுத்துதல் வேண்டும்.

அது தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. நமது வாழ்க்கையில் அருள் ஒளியின் சக்தியை பெற வேண்டும் என்று நினைத்தால் “அருள் ஒளியே நமக்குள் வளர்கின்றது…”

இல்லை இவன் இப்படி அவன் அப்படி அவன் இப்படி என்று குறை கூறிக் கொண்டே இருந்தால் குறையின் உணர்வு வளர்ச்சியாகி… நோயாகி… நமக்குள் அதுவாகவே நாம் ஆகி விடுகின்றோம்.

நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும்பொழுது நம் தொழிலே குந்தகமாகி… வாழ்க்கையிலே எதிர்ப்பின் உணர்வுகளாக நமக்குள்ளேயே எதிரிகளை உருவாக்கி… மனிதனல்லாத நிலையை உருவாக்கும் நிலை வந்து விடுகிறது.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.

அதற்குத் தகுதியான நேரம் இந்தக் காலை துருவ தியான நேரமே. நான்கிலிருந்து ஆறரைக்குள் விழித்த நேரத்திலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யத் தவறி விடாதீர்கள்.

1.அருள் ஒளியைப் பரப்புங்கள்… அருள் வழியில் வாழ்க்கை வாழுங்கள்.
2.அருள் சொல்லையே சொல்லுங்கள்… உங்கள் சொல்லைக் கேட்போர் தீமைகள் அகலட்டும்.
3.அருள் ஞான வழியில் நாம் வளருவோம்
4.நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம் நம்மைப் பார்ப்போர் அனைவரது தீமைகளும் அகலட்டும்.
5.அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம் வளர்வோம்…!

உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்… தியானிக்கின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் போது உணர்வுகள் ஒளியாகிறது… ஆனால் உடல் நலியத் தான் செய்யும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் போது உணர்வுகள் ஒளியாகிறது… ஆனால் உடல் நலியத் தான் செய்யும்

 

மனிதனான பின் ஆரம்ப நிலைகள் எப்படி உயிரணு நுகர்ந்து… நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல்களை மாற்றுகின்றதோ இதைப் போல நாமும்
1.இந்த உடலில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் சக்தியை துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்தோம் என்றால்
2.உடலில் அதிகமாகச் சேர்த்தோம் என்றால் இரத்தங்களில் கலந்து கலந்து
3.நம் உடலில் அடுத்த உடல் பெறும் உணர்வுகளோ அல்லது நாம் நுகர்ந்த உணர்வால் வந்த நோய்களையோ அது வராதபடி தடுக்கலாம்.

அப்படி நோய்கள் வந்தாலும்
1.இந்த உணர்வுகள் ஆனபின் புது விதமான அதற்கு எதிர் நிலையாக ஆகும்பொழுது இதுவும் நோய்தான்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பெறும் பொழுது அதற்கு எதிர் நிலையாகின்றது.
3.இந்த உணர்வுகளைக் கவரப்படும் பொழுது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.

ஒரு விஷம் கொண்ட உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது அந்த உடலும் நலியத்தான் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலந்து அந்த அணுக்கள் பெறத் தொடங்கினால்
1.அதையே ஏங்கி துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து
2.உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை வருகின்றது.

இந்த உடலிலேயே துருவ தியானமும் மற்ற தியானங்களும் நாம் எடுத்து அந்த உணர்வினை வலுப்பெறச் செய்து கொண்டால்… எப்படிப் பட்டுப் பூச்சி தன் உணர்வின் வளர்ச்சியில் இறக்கைகள் முளைத்து வெளிவந்த பின் மற்ற செடியின் உணர்வை எடுத்துக் கொண்ட பின் வண்டாக எப்படி உருமாறுகின்றதோ… இதைப் போல நாம் அந்த அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையை மனிதன் இயற்கையின் உணர்வின் தன்மை மாற்றி ஒளி நிலை அடையலாம்.

அப்படி வளர்ச்சி அடைந்த… நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் இந்த உணர்வுகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து வருகின்றது. பூமி துருவத்தின் வழி அதைக் கவர்ந்து பூமிக்குள் கொண்டு வருகிறது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்த்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்ற உணர்வை…
2.இப்போது சொல்லும் பொழுது செவி வழி கேட்கப்படும் பொழுது எண்ணங்கள் கண் வழி கவர்ந்து மூக்கு வழி நுகர்ந்து
3.உயிரிலே பட்டு இந்த உணர்வுகளை உடலில் உள்ள இரத்தநாளங்களில் கலக்கச் செய்கின்றது.

அவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் இரத்த நாளங்களில் பெருகப் பெருக பெருக அதன் உணர்வை உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

ஏற்கனவே பலவிதமான உணர்வுகளை எடுத்து உடலை மகிழச் செய்திருக்கலாம். அல்லது வேதனையின் உணர்வு நோயாகவும் உருவாகி இருக்கலாம்.
1.வேதனை உணர்வுகளை எடுத்தாலும் நோயாக மாற்றுகின்றது
2.அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுக்கப்படும் பொழுது
3.விஷத்தின் தன்மை குறையும் பொழுது விஷமற்ற உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.
4.இருப்பினும் இதைப் போன்று இந்த உடலில் இருந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகச் சென்றது துருவ நட்சத்திரம்.
5.இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு நமக்குள் அருள் ஒளியை உருவாக்க முடியும்.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பேரருள் பேரொளியாக மாற்றி “இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை…” என்ற நிலையை நாம் அடைதல் வேண்டும்.

“உயிரான ஈசனுடன் ஒன்றி” அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்

“உயிரான ஈசனுடன் ஒன்றி” அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்

 

உலகெங்கிலும் கடும் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா போன்ற பல நாடுகளில் “சூறாவளிகள்” அதிகமாக உருவாகின்றது. பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து… ஊரைக் கடந்தே செல்கிறார்கள். எத்தனையோ நகரங்களில்… மக்கள் வாழும் இடங்களை அழித்து விடுகின்றது.

ஆக சூறாவளி எங்கிருந்து வருகின்றது…?

விஞ்ஞான அறிவால் அணு குண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் செய்யும் போது
1.அதில் கசிவான உணர்வுகளைச் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது
2.சூரியன் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கும் அதனுடைய உணர்வுகளுக்கும் எதிர்மறையாகும் பொழுது சூறாவளி உருவாகின்றது.
3.இந்த வீரியத் தன்மைகள் கட்டிடங்களுக்குள் ஊடுருவுகின்றது.
4.எவ்வளவு பெரிய காங்கிரீட் ஆக இருந்தாலும் சுழற்றி வளைத்து நொறுக்கி விடுகின்றது.

இப்படிப்பட்ட உலக நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பூமிக்குள் இத்தகைய குழம்புகள் அதிகமாகி எங்கே மொத்தமாகச் சேருகின்றதோ அங்கே திடீரென்று இந்த ஆவிகள் வெளியே கிளம்பி நிலநடுக்கமாகிக் கட்டிடங்களையும் மற்றவைகளையும் நொறுக்குகின்றது.

நாம் வாழும் பகுதிகளில் மிகக் குறைவு தான். வட இந்தியாவில் கூட அதிகமாக உண்டு. காரணம்
1.நம் நாட்டில் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று
2.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் வாழ்ந்த நாட்டில் கூடுமானவரையில் உயர்ந்த சக்திகள் பரவி உள்ளது.

பாருங்கள்…! தமிழ்நாட்டிலே பொதுவாகச் சேதங்கள் அதிகமாக ஆவதில்லை. அருள் மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே இருப்பதால் ஓரளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றது.
1.மீண்டும் அந்த மகரிஷிகளின் அருள் மணங்களை நாம் வலுவாகப் பெருக்கி
2.தமிழ்நாட்டையும் காத்து உலக நிலையை காப்பதற்காக வேண்டி நாம் தியானிக்க வேண்டும்.

நான் சொல்வது சாதாரணமானதல்ல…!

நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து இங்கே பரப்பினோம் என்றால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கின்றது.

பூமிக்குள்ளே எந்தெந்த இடங்களில் குழம்புகள் அதிகமாகின்றதோ அந்த இடத்தில் வெடிக்கின்றது. ஒரு செகண்டிலே மேலே இருப்பது கீழேயும் கீழே இருப்பது மேலேயும் மாறி எல்லாமே குலுங்கி விடுகின்றது.

அணு உலைகள் எங்கெங்கெல்லாம் உருவாக்கி வைத்துள்ளார்களோ அங்கெல்லாம் நிலநடுக்கம் அதிகமாக உண்டு. இங்கேயும் அணு உலைகளை வைத்துள்ளார்கள்.

நாம் எல்லாம் சேர்ந்து பிரார்த்தனை செய்து நிலநடுக்கம் இங்கே வராதபடி பாதுகாக்க வேண்டும்.

அணு உலைகளை என்று உருவாக்க முற்பட்டார்களோ சூரியனால் அந்தக் கசிவுகள் கவரப்படுகின்றது. மின்னல்கள் வரும் போது ஊடுருவுகின்றது பூமிக்குள் நடு மையம் புகுந்த பின் எந்த இடத்தில் அதிகமாகின்றதோ குழம்பாக மாறுகின்றது… ஆவிகள் உருவாகி வெளிப்படுகின்றது… வெடிக்கின்றது.

மேலே இருப்பது தாங்காது சிறிது கீழே இறங்கி விடுகின்றது. இந்த மாதிரி நிலைகள் இருப்பதால்0 “இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும்…?” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உடலுக்குப் பின் என்ன…? பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…! என்று நாம் தெரிந்து கொண்டோம்.

1.எவ்வளவுதான் இந்த உடலை அழகுபடுத்திப் பாதுகாக்க முற்பட்டாலும் கடைசிலே மண்ணிலே தான் இதை விட்டுச் செல்ல வேண்டி வருகின்றது
2.உயிரான ஈசன் இங்கே இருக்கும் வரை தான் எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்… நன்றாக இருக்கின்றோம்.
3.ஈசன் சென்று விட்டால் சிவம் சவமாகி விடுகின்றது.

உயிரால் தான் உடலாக்குகின்றது சிவம். ஈசன் போய்விட்டால் சவமாகி விடுகிறது. பின் அதற்கு ஏன் நாம் இவ்வளவு பாடுபட வேண்டும்…?

1.உயிரான ஈசனுடன் ஒன்றி அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்.
2.ஆகவே அந்த அருள் சக்தி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம்… அதை வலுப்படுத்துவோம் பேரருள் பேரொளியாக நாம் மாறுவோம்.

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை… மேல் நோக்கியது – தெய்வீக நிலை

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை… மேல் நோக்கியது – தெய்வீக நிலை

 

இயற்கையின் படைப்பில்… ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் உலகோதய நடைமுறை நிகழ்த்த பெரும் காரியங்கள் வினைக்கீடாய் (புவி ஈர்ப்பில் சுழலும் நிலை) வினைக்கு ஈடான செயல் கொள்கின்றான்.

புவி ஈர்ப்பு நிலை
1.சரீரமும்…
2.மூச்சு – ஈர்த்திடும் தன்மையாக மனிதனுக்குக் கீழ்நோக்கிப் பாய்தல்
3.வாய் – உண்டிடும் உண்டி… அருந்திடும் நீர்… சரீர கதியில் கீழ்நோக்கிப் பாய்தல்
4.அதுவே ஜீவநோத்பவம் பெற்ற பின்பு மலவாய் வழி கீழ்நோக்கிச் செல்கின்றது
5.சிறுநீர் வெளியேறும் வழியும் அத்தகையதே.

தெய்வீக நிலை
பூமியின் ஈர்ப்பில் செயல்படும் காரியங்கள் எதுவாக இருந்தாலும்
1.ஒளி நெறியாம் உயர்வெண்ண தியானத்தின் வலுவாகச் செயல்படும் காலத்தே
2. மேல் நோக்கிய சுவாசம் கொண்டு மற்ற புற காரிய செயல் நிகழ்வுகள் உயர்வெண்ண உந்துதல்
3.அதுவே தெய்வீக நிலையாகத் தொழில்படும்.

இதையே வேதாள மகரிஷி அலகினால் உணவைக் காட்டிடும் கோழி என்பார். குஞ்சுகளைப் பேணுகின்ற கோழியானது உணவின் தானியங்கள் இருக்கின்ற இடமாகக் கண்டு… தனது அலகினால் தானியத்தைக் கொத்திப் பேணுகின்ற செயலாக… தன் குஞ்சுகளுக்கும் அந்த ஆகாரத்தைப் பெற்றிடும் வழி காட்டுவதைப் போல்…
1.நெறிப்பயிர் ஞான உணவு எடுத்தல் – உயிராத்மா சக்தி பெற்றிடும் செயலில்
2.சரீர உயிரணுக்கள் அனைத்தும் பெற்றுக் கொண்டிடும் – போஜனம் (உணவு கொடுக்கும் நிலை) என்று பேணுதல்.

இந்நிலை பெறுகின்றவர்… நெறிப்பயிர் விளைவாக்கும் “கிழார்” என்றதில் பெற்றுக் கொண்டிட்டதின் முழுமை விளங்கும்.

எண்ணம் கொண்டே மாமகரிஷிகள் காட்டிடும் சூட்சும உணவு பெற்றுக் கொண்டிடும் நியதியில்… சுவாசக் காற்று என்பதின் தொடர்பு… “தூங்காமல் தூங்கி அரிதுயில்” எனும் அறிவியல் தத்துவமாக விளக்குவது எது…?

பிராண வாயு சுவாசமாக உள் நுழைவதும் கரியமில வாயு வெளியேறிடும் செயலும்…
1.இச்சூட்சுமத்தில் பளுவாக இயங்கிடும் இதய கேந்திரங்கள் இலகுவாக…
2.உள் நுழைந்திடும் சுவாசம் குறைவு கொண்டு
3.வெளியேற்றிடும் கரியமில வாயு குறைவு கொண்டு
4.மூப்பு அற்ற நிலையைக் காட்டி
5.அரிதுயில் அழகன் எனும் மால்… (“திருமால்”) எனும் தெய்வ வடிவு தாங்கிடும் பேறு பெறுகின்றான்.

“உயிராத்ம சக்தியை இணைத்துக் கொண்டிடு…!” என உரைப்பதெல்லாம் வேதாள மகரிஷியின் கூற்றாக “இணைப்பறவையின் உறும் (பொருந்தும்) கருத்து” என்பார்.

அதாவது… மகரிஷிகள் உரைத்திடும் இத்தகைய மறைபொருள் தன்மையில் “அநேக விளக்கங்கள்” உண்டு.

இரு பறவைகள் இருந்ததாம். ஆண் பெண் என்ற அவைகள்… கருத்து வேற்றுநிலை பெற்றதாம். உறும் கருத்து வேறுபடின் – மனத்தின் பிரிவு கொண்டதாம்.

இருந்தாலும்… எந்த நிலை ஆயினும் சக்தியாகிய அந்தப் பெண் பறவை… சிவத்தின் நினைவே பிரிவுறா நிலை நினைவால் கொண்டு தான் இருக்கும்.

இறை தேடி இயங்குகின்ற அவைகளின் செயலில்
1.ஒன்றினில் ஒன்றாக மனத்தின் பேதம் நீக்கிட சிவத்துவ நிலை கண்டது தான் உயிராத்ம சக்தியையே பறவைகளாகக் காட்டி
2.உலகோதய நாட்டம் காட்டிடுவதை மனத்தின் பேதம் என்றும்
3.இறை தேடும் செயலுக்கு இணைகின்ற சூட்சுமம்… ஒன்று கலந்திடும் தன்மையாக
4.பேரருள் செல்வத்தைப் பெற்று உயரும் வழிதனை உரைத்திட்ட செயலே அது.

சூட்சுமப் பொருள் காட்டி சித்தின் தொடர்புக்கு… எண்ணம் சொல் செயல் மூன்றும் அனுபவ ஞான விசேஷ குணத்தன்மையாகப் பெற்றிட… அதற்குண்டான பக்குவத்தைக் கனிந்திடச் செய்ய… எல்லோருக்கும் வேதாள மகரிஷி ஆசி வழங்குகின்றார்.

தன்னிடத்தில் ஞானத்தை உரைத்திடும் குழந்தை மற்றவரிடம் அதே ஞான வழியாக நடக்கின்றதா…? அன்பு கொண்டு செல்கின்றதா…? மாயையின் வசம் ஆட்பட்டு… கோபத்தின் குணமாகப் பெற்றுக் கொண்ட சக்திகளை விரயம் செய்கின்றதா…? என்று ஞானிகள் பரிசோதிப்பார்கள்

முகம் காட்டிடும் கண்ணாடி… தான் கொண்டிடும் உயர்வெண்ணத்தைக் காட்டுவது எப்படி…?

1.சாந்தம் என்ற குணத்தால் அமைவு பெற ஆத்ம ஞானி கொண்ட உயர்வைக் காட்டுவது “கண்கள்…”
2.சுவாசத்தின் செயல் சிந்தையைச் சீர்படுத்த உரைப்பது “கனிவு…”
3.கேட்கின்ற ஒலிகள் நாராசமாயினும் ஞானி அதனை சங்கீதமாகக் கொள்வான் “ஓங்காரமாக…”
4.இல்லத்தில் வீசுகின்ற பாசம் மெய் ஞானிக்கு அன்பின் வசமாக “அகில உலகும் பின் தொடரும்…” ஆத்ம பதிவை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
5.கணவன் மனைவி தொடங்கி… தன்னைச் சார்ந்தவர் தொடங்கி எல்லோரையும் அரவணைத்திடும் அன்பு
6.அகண்ட வியாபகமாய் (எங்கும் நிறைந்திருக்கும்) பேரருள் செல்வத்தைக் கொணரும்.
7.அத்தகைய ஞானவான்… பிரம்மத்தை அறிந்திடும் பிராமணன் ஆகின்றான்.

பக்குவங்களை எல்லாம் மகரிஷிகள் வழிகாட்டிட… குழந்தை தவழ்ந்து தளிர் நடை பயின்று… ஓடியாடி வளர்ந்து… இசைவாக எண்ணம் கொண்டு… உறுதியின் நிலை நிற்றலை…
1.ஞானச் செல்வங்கள் குருதேவருடன் மனம் ஒன்றி வாழ்ந்திடும் அந்த வளர்ப்பு
2.சாஸ்வதம் கொண்டு அனைவருக்கும் அது வழி காட்டும்.
3.இந்தக் குறுகிய கலியில் பிறவியின் தளை விடுத்துப் பேரருள் செல்வத்தில் கலந்திடவே “அனைவரையும் அழைக்கின்றோம்…”

நம் குலதெய்வங்கள் “சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து விட்டார்களா…?” என்று சந்தேகப்பட வேண்டியதில்லை

நம் குலதெய்வங்கள் “சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து விட்டார்களா…?” என்று சந்தேகப்பட வேண்டியதில்லை

 

கூட்டுத் தியானத்தின் மூலம் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த குலதெய்வங்களை உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை இன்று விண் செலுத்தினோம்…
1.அவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆனால் இணைந்து விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டாம்.

துருவ தியானம் முடிந்தபின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்திட வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
1.அந்த ஆன்மாக்கள் ஒளியின் சரீரமாக “சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்ததை” நீங்களும் காணலாம்.
2.ஒரு 48 நாட்களுக்குத் தொடர்ந்து இதைச் சீராகச் செய்து வாருங்கள்.
3.சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.

அவர்கள் முன் செல்ல அந்த உணர்வின் தன்மை நமக்குள் இணைந்து வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. கரைந்து விட்டால் சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து மாற்றிவிடும்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவுகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைந்ததால்
1.அதிலிருந்து வரும் உணர்வினை உணவாக உட்கொண்டு
2.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் வாழத் தொடங்குகின்றனர் நம் முன்னோர்கள்.

ஆகவே நாம் இதை முழுமைப்படுத்தி உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும். நம்முடைய முன்னோர்களை இப்படி அனுப்பினால் நமக்கும் நலம் பெறும் சக்தி கிடைக்கும்.

நண்பர்கள் உடலைப் விட்டுப் பிரிந்திருந்தால் துருவ தியானத்தில் இருந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அவர் உடலில் நோயோ மற்ற துன்பங்கள் இருப்பினும் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் அது நமக்குள் வளராது தடுக்கக் காலை துருவ தியானங்களில் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட வேண்டும் என்று எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது அவர்களும் சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றனர்.
3.அவர்களும் பிறவி இல்லாத நிலை அடைகின்றனர்.

மனிதர்கள் நாம் தான் இதைச் செயல்படுத்த வேண்டும்.

குலதெய்வங்களை வழிபடும் முறை

குலதெய்வங்களை வழிபடும் முறை

 

மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் நிலை பெறுவதற்குத் தான் அருள் ஞானிகளின் உணர்வுகளை அடிக்கடி உங்களைச் சேர்க்கும்படி சொல்கின்றோம்.
1.அப்படிச் சேர்த்துக் கொண்டால் வினைக்கு நாயகனாக ஆகி இயக்கி கணங்களுக்கு அதிபதியாகி
2.நஞ்சினை வென்றிட்ட அருள் உணர்வுகள் அவ்வழியில் கணங்களுக்கு அதிபதியாகும் (உடலுக்குள்).

அதிகாலையில் இத்தகைய ஆற்றலைப் பெறும்படி… அந்த உணர்வை நுகரும்படி… அந்த எண்ணங்களை நமக்குள் ஊட்டும்படி… “ஒரு பழக்கம்” வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் உருவ நிலைகளை ஆலயங்களிலே அமைத்து அருவ நிலையில் உயர்ந்த சக்திகளைப் பெற வழி காட்டினார்கள் ஞானிகள்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய அந்த வழியினை நாம் எடுத்தால் அந்த உணர்வுகள் ஓ என்று ஜீவணுவாக உருவாகி நம் உடலுக்குள் அதுவே தெய்வமாகின்றது.
1.அந்த உயர்ந்த குணங்கள் நமக்குள் கடவுளாக நின்று பகைமை உணர்வுகளை மாற்றுகின்றது.
2.தெளிந்திடும் மனமும் மகிழ்ந்திடும் உணர்வையும் ஊட்டுகின்றது.

ஒவ்வொரு நொடியிலும் வரும் தீமைகளை நாம் இந்த வாழ்க்கையில் அதை அகற்றிக் கொண்டே வருதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அடிக்கடி வலு சேர்க்க வேண்டும்.

அதிகாலையில் இருந்தே இது போன்ற உணர்வுகளை வரிசையாக எடுத்து எங்கள் தாய் தந்தையருக்கும் முன்னோர்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

1.எனக்காகப் பட்ட துன்பங்களிலிருந்து என் தாய் தந்தையர் விடுபட வேண்டும்.
2.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்
3.அவர்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவ வேண்டும்
4.நஞ்சினை வென்றிடும் ஆற்றல் என் தாய் தந்தையர் பெற வேண்டும்.
5.மகரிஷிகளின் அருள் வட்டத்திலே என் தாய் தந்தை இணைந்து வாழ வேண்டும்
6.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் மனமும் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று அவரவர்கள் இதை எண்ணிப் பழகுதல் வேண்டும்.

அதற்குப்பின் நம் மூதாதையர்களுக்கு நாம் உயர்ந்த சக்திகளைப் பாய்ச்சுதல் வேண்டும். ஏனென்றல் அவர்கள் குல வழியில் தான் நாம் உருவாகி இருக்கின்றோம். மனிதனாக உருவாகியதற்கு காரணமே அவர்கள் தான்.

வீட்டில் பாட்டன் பாட்டி இருந்தால் அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்.
1.எங்கள் அன்னை தந்தையையும் எங்களையும் காத்திட எத்தனையோ துன்பங்கள் பட்ட அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களிடமிருந்து நீங்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என் பாட்டன் பாட்டி வாழ வேண்டும்
3.உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்துதல் வேண்டும்.

அவருடைய உணர்வுகள் குல வழியில் நமக்குள் இருக்கப்படும் பொழுது சந்தர்ப்பத்திலே உடலை விட்டு அவர்கள் பிரிய நேர்ந்தால்… அடுத்த கணமே எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்தோமோ அதனின் வலுக் கொண்டு… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலங்களின் தெய்வங்களான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று அந்த சூட்சும சரீரம் பெற்ற உயிரான்மாக்களை அங்கே அனுப்புதல் வேண்டும்.

நஞ்சு கலந்த உடலை குறுக்கச் செய்து வேதனை என்ற உணர்வுகள் கலந்து அந்த ஆன்மாக்கள் வெளியே சென்றால்… இன்னொரு உடலுக்குள் புகுந்து அந்த உணர்வுக்குத் தக்க உடலாக உருவாக்கிவிடும் உயிர்.

இதைப் போன்ற நிலையில் இருந்து அவர்களை மீட்டிட உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்தால்
1.உடல் பெறும் நஞ்சினைக் கரைத்து விடுகின்றது.
2.நம்மை வாழ வைத்த அந்த உயர்ந்த சக்திகள்… அந்த உயிர்கள் அங்கே நிலைத்திருக்கின்றது.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திடமிருந்து வெளிப்படும் உணர்வைக் கொண்டு அந்த ஆன்மாக்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்த பின் அந்த உணர்வின் துணை கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விடுகின்றது. மூதாதையர்களை அங்கே சேர்த்தல் வேண்டும்.

அவர்கள் முன் சென்றால்… ஒளியின் சரீரமாக ஆன பிற்பாடு அவர் அருளை எளிதில் பெறலாம். நமக்குள் வரும் இருளை அகற்றி ஒளியின் சரீரம் பெறுவது மிகவும் எளிது.
1.அகஸ்தியன் கண்ட அந்த உண்மையின் வழியிலே நாமும் சென்றோம் என்றால்
2.அந்த அருள் வழியைப் பெற்று பேரருளைப் பேரொளியாக மாற்றிவிடும். உடலில் இருக்கும் அனைத்து அணுக்களையும் பேரொளியாக மாற்றிவிடும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஒளியின் தன்மை அடைகின்றது. உயிருடன் ஒன்றி நிலையான ஒளிச்சரீரம் அடைகின்றது.

மனிதன் தான் இதை எல்லாம் செயல்படுத்த முடியும்.