கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளைக் காணும் பொழுதெல்லாம் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நுகர்ந்து
1.ஒவ்வொரு நொடியிலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் ஆன்மாவை இணையச் செய்யும்
2.அந்த வலுவான நிலைகளை உங்கள் உடலில் உருவாக்குதல் வேண்டும்.

இவ்வாறு உருவாக்கினால் இந்த வாழ்க்கைக்குப் பின் இதே உடலில் உருவான உயிருடன் ஒன்றி கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து அதனுடன் இணைய முடியும்.

கணவன் மனைவியாக இணைந்து குழந்தையை எப்படி உருவாக்குகின்றோமோ… அது போல் இருவரும் துருவ தியானத்தில் கணவனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவனும் இவ்வாறு உணர்வால் ஒன்றிய பின் “இரு உயிரும் ஒன்றாக இணைந்து விடுகின்றது…”

இரு உயிரும் ஒன்றான பின் அருள் ஒளியின் உணர்வை உருவாக்கி ஒளியின் சரீரமாக இயங்கத் தொடங்கும்.
1.உயிருக்குள் வெப்பம் என்ற நிலை இருக்கும் பொழுது அது விஷ்ணு என்றும்
2.அதிலே ஈர்க்கும் காந்தத்தை லட்சுமி என்றும்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை என்றால் இதை உருவாக்க முடியாது.

ஆண் என்ற நிலையில் இயங்கினாலும் பெண் என்ற நிலையில் இணைக்கும் போது எண்ணத்தால் உருவாக்கும் அருள் சக்தியை… “தன்னுடன் இணைத்துப் பெருக்கும் சக்தி பெறுகின்றது…”

காரணம் – அமிலத்தின் தன்மை கொண்டு ஒன்றைத் தனக்குள் வளர்த்திடும்… அதை உருவாக்கும்… உணவாகக் கொடுத்து வளர்த்திடும் திறன் பெற்ற அமிலங்கள் பெண்கள் உடலில் உண்டு.

ஆண்களில் திடப்பொருளின் தன்மையை இறுகச் செய்யும் நிலையில் இருப்பினும் பெண் உணர்வுடன் கலந்து உயிருடன் ஒன்றி உருவாக்கினால்
1.உடலை விட்டு அகன்றால் இரு உயிரும் இணைந்து
2.ஒருவர் பின் ஒருவர் சென்றாலும்… அல்லது
3.இந்தத் தியானத்தில் இணைந்து வாழ்ந்தால் ஒன்று முன் சென்றாலும்
4.பின் வரும் தன் கணவனோ தன் மனைவியோ அவர் உணர்வையும் அரவணைத்து ஒன்றியே அதை அழைத்துச் செல்லும்.
5.எந்த விண்ணை நோக்கி ஏங்கி எடுத்தோமோ அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிலே வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணைய முடியும்.

இந்தப் பிரபஞ்சம் அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை நுகர்ந்தாலும் நமது பூமி நுகரும் தருவாயில் பூமியில் உருப் பெற்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக அமைந்திருப்பதனால் பூமிக்கு வரும் உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலங்கள் அதுவும் ஒளியின் சுடராக வளர்கின்றது.

சூரியன் எப்படிக் கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கிப் பிற மண்டலத்திலிருந்து வருவதைச் சூரியன் கவர்ந்து அனைத்தையும் அரவணைத்து எப்படி வளரச் செய்கின்றதோ இதைப் போல் தான் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் நிலை கொள்ளுதல் வேண்டும்.

இந்த வளர்ச்சிக்கு நாம் செல்ல வாழ்க்கையில் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

மனிதனாகப் பிறந்தோம்… உடல் மடிகிறது…! என்றால் மனித வாழ்க்கையிலே விஷத்தின் தன்மை அளவுகோல் கூடும் பொழுது தான் உடலில் நல்ல அணுக்கள் மடிகின்றது.

மடிந்து உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா எந்த ஆசையை வளர்த்து வாழ்ந்ததோ பேயாசையாக மாறி… எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒன்றை பெறப் வேண்டும் என்ற ஆசையின் உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது இன்னொரு மனித உடலுக்குள் புகுந்து அந்தப் பேயாசையை அங்கே ஊட்டி அந்த விஷத்தன்மையை அந்த உடலிலும் அதிகமாகச் சேர்த்து அந்த உடலை வீழ்த்தி விட்டு வெளிவந்த பின்… மனிதன் அல்லாத நிலைகளைத் தான் பெறச் செய்கின்றது.

1.ஆனால் நம்முடைய ஆசை அருள் மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி
2.அந்த உணர்வினை நமக்குள் எடுத்தால் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாது
3.அருள் ஒளியின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

இந்த வலுவைச் சேர்த்தால் நாம் அங்கே செல்கின்றோம். “மனிதனின் கடைசி எல்லை சப்தரிஷி மண்டலத்தை அடைவது தான்…”

இந்தப் பிள்ளை யார்…?

இந்தப் பிள்ளை யார்…?

 

ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்பதை உணர வேண்டும்.

1.அவர்கள் விண்ணுலகம் சென்ற உணர்வை நாமும் நுகர்ந்து
2.வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி
3.அருள் மகரிஷிகள் உணர்வுகளை அரும்பெரும் சக்தியாக மாற்றச் செய்வது தான் விநாயகர் தத்துவம்.

இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியிட்டு அங்கே காட்டியிருப்பார்கள்.

புழுவிலிருந்து மனிதனாக வந்த நிலையில் மனிதனாக ஆனபின் மற்ற தீமைகளை அடக்கி விட்டு உயர்ந்த ஒளியின் உணர்வாக தனக்குள் அரசாட்சி பரிந்து அதையே ஒளியாக மாற்றி
1.விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.அவனுடன் ஒன்றிய அவனாக நாம் மாறுகின்றோம்.

நாம் எண்ணிய உணர்வு அனைத்தும் “நான்” என்றாலும் உயிரின் தன்மை கொண்டு தனித்த நிலையில் உயிரே இயக்குகின்றது. அதிலே நாம் எண்ணிய உணர்வு எதுவோ அதனுடன் இணைந்து செயல்படும் போது “தான்” ஆகின்றது.

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது… அதாவது நான் தானாகி… தான் நானாகின்றது.

உயிரின் தன்மை தனக்குள் ஒளியின் சிகரமாக மாறினாலும்… உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி இது மறைத்தாலும்
1.தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதை
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாறிய பின்… ஒளிச் சரீரமாக மாறிய பின் “நான் ஆகின்றது…”

நான் தானாகி… தான் நானாகிறது என்பதைத் தான் இந்தப் பிள்ளை யார்…? என்ற நிலையை நிலைப்படுத்தி அதை அறிந்திடும் நிலையாக இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைக் கார்த்திகேயா என்று அழைக்கின்றார்கள்.

அந்த ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி “மகரிஷிகளுடன் என்றும் ஒன்றியே வாழ்வோம்…”

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்

 

ஒருவன் தீமையைச் செய்கிறான் என்றால் அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில் தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார் நமது குருநாதர்.

தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும் மனிதன் அவைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன். இன்றைய விஞ்ஞானம் அதை நிரூபிக்கின்றது.

அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்து விட்டால் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்தும் நிலை பெற வேண்டும்.

1.மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கித் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி
2.அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றித் தம்முள் நல்லுணர்வினை வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.

அவர்களைப் போன்று நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது ஒருவன் நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும் அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.

மகரிஷிகளின் அருளுணர்வுகள் நமது உடலில் கலக்கப்படும் பொழுது
1.நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும்
2.அவைகளை நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாக… உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச்சக்தியாக மாறுகின்றது.

எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ அந்த விஷம் ஊடுருவி இந்த நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச் செலுத்தும் பொழுது மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை எடுத்துச் சென்று உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி வேதனையை உருவாக்கும் அணுக்களை வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது மருந்துடன் கலந்துள்ள விஷம்.

இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில் அருள் ஞானியின் உணர்வை நம் எண்ணத்துடன் கலந்து கொண்டே வர வேண்டும். அதனால்
1.நாம் எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ அதனுடன்
2.மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தி நாம் பெற வேண்டும் எனும் உணர்வினை இணைத்து நம் உடலுக்குள் செலுத்தி விட்டால்
3.அருள் ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு நமக்குள் வலு கொண்ட நிலையாக மாறுகின்றது.

இந்த உண்மைகளை எமது குருநாதர் எமக்கு உணர்த்தி எம்முள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து எமக்குள் இதனின் நினைவின் ஆற்றலை பதியச் செய்து “துருவ மகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு…” என்றார்.

யாம் காட்டினுள் இருந்த பொழுது பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும் மற்றவைகள் அஞ்சி ஓடுவதும் சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும் போன்றவைகளைக் கண்டு யாம் அச்சப்படும் நிலை உண்டானது.

அவைகள் செய்த துயர நிலைகளால்
1.துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது…? என்றும்
2.இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்றும் எமக்கு குருநாதர் உபதேசித்தார்.

மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வை உன்னிடத்தில் வளர்த்துக் கொண்டால் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள் உன்னைப் பார்த்தாலும் உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு அது அஞ்சி ஓடும்.

அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும் அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.

1.எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும் பொழுது
2.வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல் மற்ற உயிரினங்களுக்கு உண்டு.
3.இதனை நுகரும் உயிரினம் இவன் நம்மை அடக்கி விடுவான் என்ற உணர்வு கொண்டு
4.அது அஞ்சி ஓடும்…! என்ற நிலைப்படுத்தி அதை நிதர்சனமாகக் காண்பித்தார் குருநாதர்.

ஆகவே “மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நமக்குள் இருக்கும் துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன் மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது அது நம்முள் தீமைகளைக் கவர்ந்திடும் நிலைகளை மாற்றி அருள் மகரிஷிகளின் இனங்களைக் கவர்ந்திடும் நிலை வருகின்றது.

இப்படி மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது.
1.நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது.
2.தெளிந்த மனதின் தன்மை நம்மில் உருவாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்

 

பூமிக்குள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது… கொதிக்கும் தருணத்தில் இருப்பதால் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறையப் போகின்றது.

மனிதனுடைய உணர்வுகள் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக… நஞ்சு கொண்ட பிராணிகள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று
1.இரக்கமற்ற உணர்வுகள் நஞ்சின் தன்மையாக மனித உணர்வுக்குள் கலந்து
2.மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய நஞ்சினை நாம் பிளக்க வேண்டும்.

ஞானிகள் உணர்வை நுகர்ந்து விண் செல்லும் மார்க்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அழியாச் சக்தியான அந்த ஞானிகள் உணர்வைச் சேர்த்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளை இந்த வாழ்க்கையிலே பெற வேண்டும்… பெற முடியும்.

அகஸ்தியன் எல்லாவற்றையும் தெரிந்து சக்தி பெறவில்லை வியாசகன் அறிந்து பெறவில்லை. எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
1.இதைப்போன்று தான் சந்தர்ப்பத்தால் நீங்கள் இந்த உபதேசத்தைக் கேட்டறிகின்றீர்கள்.
2.உங்களுக்குள் பதிவாந பின் அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அந்த ஞானிகள் உணர்வை நிச்சயம் பெற முடியும்.

உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.

ஏனென்றால் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றான்… உணர்வினை ஜீவனாக்குகின்றான்… அணுவாக மாற்றுகின்றான்… அணுவின் மலமாக உடல் ஆக்குகின்றான்.

அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெறும் பொழுது அதையே அணுவாக மாற்றுகின்றான். அணுவின் தன்மை ஒளியாக உருப்பெறுகின்றது. ஆகவே நாம் ஒளியாக வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து நாம் இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அகற்றும் உணர்வாக விஞ்ஞானத்தினால் வரக்கூடிய எத்தகைய நஞ்சுகளை மாற்ற முடியும்.

சூரியன் தான் சுழலும் பொழுது தன் மீது மோதும் நஞ்சினைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிச் சுடராக ஆக்குவது போன்று உலகையே காத்து இரட்சிப்பது போன்று… இனி வரக்கூடிய எத்தகைய நஞ்சினைப் பிளந்திடல் வேண்டும்.

ஞானிகள் உணர்வை உள் புகுத்தி அதைப் பிளக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
1.ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று
3.திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் சென்று
4.கேட்டறிந்த பார்த்துணர்ந்த காற்றுக்குள் மறைந்து வரும் தீய உணர்வுகளை “நம்முடன் இரண்டறக் கலக்காது…” அதைப் பிரித்து விடுகின்றது.

அது ஓங்கி வளரும் பொழுது பிறிதொரு உணர்வு ஆன்மாவாக இருப்பதைப் பிளந்து விடுகின்றது. இதைத்தான் மடி மீது வைத்து நாராயணன் வாசல்படி மீது அமர்ந்து இரண்யனைப் பிளந்தான் என்று நரசிம்ம அவதாரமாகக் காட்டியுள்ளார்கள்.

அத்தகைய நரசிம்ம அவதாரமாக ஒவ்வொருவரும் மாறினால் தான் இனி வரும் இருளான நிலைகளிலிருந்து நம்மை மீட்க முடியும்… மற்றவர்களையும் மீட்கும் சக்தியாக நாம் வளர முடியும்.

ஆகவே
1.உயிருடன் ஒன்றி ஒளியாக என்றுமே நிலைத்திருப்போம்
2.அந்த ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம்… அனைவரும் செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.

எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்

எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்

 

டாக்டருக்குப் படிக்கச் செல்கிறார்கள் என்றால் “படிக்க வேண்டும்…” என்ற அக்கறை உள்ளவர்கள் படித்து முன்னுக்கு வந்து விடுகின்றார்கள். ஏதோ நான் படித்துக் கொண்டேன் என்று போகிறவர்களுக்குப் படிப்பு ஏறுவதில்லை… சரியான நிலையில் மருத்துவமும் பார்க்க முடிவதில்லை.

அதே மாதிரித் தான் உங்கள் குடும்பத்தில் எத்தனையோ நடக்கின்றது. நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பார்த்து அதற்குத் தக்க காலங்களை நிர்ணயித்துக் காரியங்களைச் செயல்படுத்துகின்றீர்கள்.

1.உங்கள் உடலுக்குள் எதை வலுவாக எடுத்துக் காரியத்தைச் செய்ய முயற்சிக்கின்றீர்களோ அது நல்ல நேரம்.
2.ஜோதிடம் பார்ப்பவர்களோ அல்லது மற்றவர்களோ… “என்ன இந்த நேரத்தில் போய் உன் காரியத்தைச் செய்யப் போகின்றாயா…?” என்று
3.அவர்கள் உணர்வை உள்ளே விட்டு விட்டால் அவர்கள் எண்ணிய உணர்வுப்படி அது கெட்ட நேரமாகி விடுகின்றது.

நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாமே நம் எண்ணத்திற்குள் தான் இருக்கின்றதே தவிர வேறு எதுவும் இல்லை.

ரோட்டில செல்லும்போது ரெண்டு பேர் கோபமாகப் பேசித் தாக்கிக் கொள்கிறார்கள். அதைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது… பார்த்து விடுகின்றோம். அந்த உணர்வினை நுகர்ந்தால் வெறுப்பான உணர்வு நமக்குள் வருகின்றது. அது கெட்ட நேரம்.

ஆனால் அடுத்த கணமே யாம் உங்களிடம் கொடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி என்று நினைவை அங்கே செலுத்த வேண்டும்.
1.ஏனென்றால் இந்த கண் கருவிழி கருமணி துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்குகின்றது…
2.சண்டை போட்ட உணர்வைத் தள்ளிவிட்டு விடுகிறது… இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சண்டை போடுபவர்களையும் வேதனைப்படுபவர்களையும் பார்த்து அதைப் பதிவாக்குகின்றோம். அது நம்மை இயக்கத் தொடங்குகிறது.

செல்ஃபோனில் முந்திரி பருப்பு அளவு தான் உள்ளே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான பதிவுகளை ஏற்றும்படி வைக்கின்றார்கள்.

அந்தப் பதிவுகளை வைத்து எத்தனையோ வேலைகளை இன்று மிகவும் எளிதாகச் செய்யும்படி வைத்துள்ளார்கள். யார் பேசுகின்றார்கள்…? என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது… அவர்களுக்கும் காட்டுகிறது.

பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டுள்ளோம். விஞ்ஞான அறிவில் இதைச் செய்கிறார்கள்.

1.இதே போன்றுதான் நம் கண்ணின் கருவிழி விலா எலும்புகளுக்குள் உள்ள ஊனுக்குள் பதிவாக்கி விடுகின்றது.
2.அதை வைத்துத் தான் நாம் பேசுவதும் எண்ணுவதும் இயக்குவதும் எல்லாமே நடக்கிறது.
3.இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால் அவ்வப்போது வரும் தீமைகளை நீங்கள் உடனுக்குடன் நீக்க முடியும்.

அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

ஆனால் மற்ற ஸ்தாபன்ங்களில் இதை எல்லாம் எப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள் தெரியுமா…?

தன்னுடன் சீடர்களாக வந்து… தான் சொன்னதை எல்லாம் கேட்பவர்களுக்கு… ஒழுக்கமாக வருகின்றார்களா…? இல்லையா…! என்று பார்த்து அதற்கு அப்புறம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இப்படி எல்லாம் வரம்புகளை விதித்து… கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றார்களா…? இல்லையா…! என்பதை எல்லாம் பார்த்துச் சரியானபடி நடப்பார்களா மாட்டார்களா…? என்று பல தடவை இழுத்தடித்து
1.அதற்குப் பின் மெம்பர் ஆக்கி சத்தியம் வாங்கி…
2.இனிமேல் இதிலிருந்து மாற மாட்டேன் என்று சொல்லிக் கடைப்பிடித்து வருபவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஒரு ஸ்தாபனத்திற்குள் சென்றால் அவர் சொல்வதெல்லாம் கேட்டுப் பதிவாக்கி சத்தியம் செய்ய வேண்டும்… முதலில் இதைத் தான் வாங்குவார்கள். அதற்குப் பின் சொல்லிக் கொடுப்பார்கள்.

1.உங்களிடம் இது எதையுமே நான் வாங்கவில்லை.
2.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உடலை ஆலயமாக மதிக்கின்றேன்.
3.ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதமாக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.

இயற்கையின் இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன். குருநாதர் கொடுத்தார். அதை அப்படியே உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

துன்பத்தை நீக்கும் அருள் ஞான வித்துக்கள்

துன்பத்தை நீக்கும் அருள் ஞான வித்துக்கள்

 

நாம் தவறு செய்யவில்லை… ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கின்றோம்… கேட்டுணர்கின்றோம், அவர்களுடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம்..

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் போது அடிக்கடி நம்மையறியாமலே வேதனையும் துயரமும் பயமும் நமக்குள் வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

இதை எப்படிப் போக்கிக் கொள்வது…? எதாவது வழி இருக்கிறதா…?

அதற்குத்தான் அந்த ஞானிகள் சொன்ன உண்மையின் சக்தியை உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றோம்.

யாம் மட்டுமல்ல… கூட்டுத் தியானத்தில் எல்லோருடைய அருள் வாக்கும் உங்கள் அருள் வாக்கும் சேர்க்கப்படும் போது தான் வலு கூடுகிறது என்று குருநாதர் கூறினார்.

‘உன்னிடம் எவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்தாலும் அதை வளர்க்க வேண்டிய முறை தெரிய வேண்டும் என்றார்.

காரணம்…
1.ஒரு விதையைக் கொண்டு போய் விதைத்து அது பல விதைகளாக விளைந்தால் தான் சாப்பாட்டிற்கு உதவும்.
2.இல்லையென்றால் “ஒரு விதை ஒன்றுக்குமே உதவாது’’ என்று குருநாதர் எம்மிடம் கூறினார்.

‘ஒரு நெல்லை வைத்துக் கொண்டு பசியைப் போக்கிவிடுவேன் என்று சொன்னால் முடியுமோ முடியாது. ஒரு நெல்லை வைத்துச் சாப்பிட முடியாது. அந்த நெல்லை விளைய வைத்து அது பல நெல்லான பின் தான் சாப்பிட முடியும்.

அதே மாதிரித் தான் உங்களிடமுள்ள துன்பத்தையெல்லாம் போக்க வைக்கிறோம்.
1.‘நன்றாக இருக்கிறேன்… நன்றாக இருக்கிறேன்… நன்றாக இருக்கிறேன்…” என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
2.அவ்வாறான சொல் வரவேண்டும்.
3.உங்கள் பேச்சைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்களுக்கெல்லாம் நல்லது விளைய வேண்டும்.
4.அப்படித்தான் அங்கே நல்லதை விளைவிக்க முடியும்.

இதைத்தான் நமது குருநாதர் சொன்னார். ஆக ‘’அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்’’ என்ற எண்ணத்தை உனக்குள் வளர்த்து நல்ல வித்தினை அவர்களுக்குள் பதியச் செய்து அந்த வித்தினை நீ எப்படி வளர்க்க வேண்டும் என்று குருநாதர் சொன்னார்.

ஆகையினாலேதான்
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும்
2.உங்களுக்குள் மெய்வழி வளர வேண்டும்
3.உங்கள் பேச்சும், மூச்சும் பிறருக்கு நன்மை பயக்கும் சக்தியாகப் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டியபடி யாம் தியானிக்கின்றோம்.

அவ்வாறு தியானித்து அந்த சக்தியின் நிலைகளை உங்களுக்கு உபதேசித்து உங்களுக்கு வித்தாகக் கொடுத்து அந்த எண்ணத்தை உங்களுக்குள் தூண்டச் செய்யும்போது நீங்கள் எல்லோ\ரும் பெற வேண்டும் என்று எண்ணும்போது முதலில் நான் பெறுகின்றேன்.

நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது அந்த எண்ணத்தின் நிலைகள் அங்கே வளர்கின்றது. இது தான் எமது குருநாதர் காட்டிய அந்த நிலை.

ஆகவே இதை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். அந்த ஞானியரின் அருள் சக்தியை உங்களுக்குள் கிடைக்கச் செய்வதற்குத் தான் யாம் உங்களுக்கு இதைச் செய்தது.

நாம் அத்தனை பேரும் சேர்ந்து
1.தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்களது வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது
3.அனைவருக்கும் அந்தப் பேராற்றல் எளிதாகக் கிடைக்கின்றது.

இவ்வாறு எல்லோரும் சேர்ந்து செயல்படும் பொழுது உலகில் உள்ள மக்கள் அனைவரும் மெய் ஒளி பெறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இந்தப் பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் அதைப் பின்பற்றினால்
1.பிறர் வாழ வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து
2.உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் நிலைகள் அது ஒடுங்கும்.

தீமைகள் அவ்வாறு ஒடுங்கி மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும் மூச்சும் வெளிப்பட்டு இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று இந்தப் பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றி அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழ முடியும்.

இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச்சரீரம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”

 

சூரியனின் காந்த சக்தி எதனைத் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொண்டதோ அதனின் உணர்வின் இயக்கமாக இயங்குவது காயத்ரி. அன்று ஏழு ரிஷிகள் இந்த உணர்வின் இயக்கங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

அதற்குப் பின் வந்த வேதாந்தத்தின் நிலைகள் கொண்டு வேதத்தின் தன்மைகள் தாவர இனத்தின் உணர்வுகள் இயங்குவதை ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் என்று பிரித்தார்கள்.

அதிலே ஒரு தாவர இனம் மற்றொன்றைப் புசிக்கும் பொழுது இந்த உணர்வின் மாற்றங்கள் ஆகும்பொழுது அது அதர்வண வேதம்.

அதையே உயிரினம் மற்றொன்றைக் கொன்று பூசிக்குமே என்றால் உதாரணமாக மானின் உணர்வுக்குள் புலியின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… புலி கொன்று அதைச் செயலற்றதாக ஆக்குகின்றது. இது அதர்வண வேதம்.

வியாசகருக்கு அன்று எழுத்தறிவு இல்லை என்றாலும் வெளிப்படுத்திய உணர்வுகள் அது விரிவாக இல்லை.

1.வேதங்கள் என்பது சுருதியின் இயக்கங்களைக் கண்டுணர்ந்து எழுத்து வடிவில் கொண்டு வந்து
2.மீண்டும் அந்த உணர்வின் ஆற்றலாக இயக்கச் செய்வது தான் அது.

இப்படிப் பிரித்துக் கொடுத்த உணர்வின் இயக்கங்கள் தான் வேதங்கள். ஆக “சைவ சித்தாந்தம்…!” தாவர இனங்கள் எவ்வாறு வளர்ந்தது…? என்றும் உணர்வின் ஆற்றலால் எவ்வாறு நிலை கொண்டது…? என்பதை அகஸ்தியன் அன்று காட்டினான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவன் காட்டிய உணர்வை எல்லோரும் அறிந்திடும் அறிவானாலும்
1.தன்னுடன் இணைந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மகிழ்ந்திடும் உணர்ச்சியைக் கூட்டி
2.அந்த உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் நிலைகள் தான் சைவ சித்தாந்தம்.
3.தீமைகள் வரும் பொழுது அதிலிருந்து அகன்றிடும் முறைகளைத் தெளிந்த நிலைகள் கொண்டு சைவ சித்தாந்தம் காட்டியது.

ஆனால் இதையெல்லாம் அன்றைய அரசர்கள் தான் ஆட்சி புரியும் காலத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு… இந்த சித்தாந்தத்தில் உண்மை நிலைகளை வேதங்களாக மாற்றப்பட்டு… சுருதியின் தன்மைகளை எழுத்தின் நாதங்களை மாற்றப்பட்டு மாற்றிய நிலைகளைத் தான் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம்.

அன்றைய அரசர்கள் ராமன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் ஈசன் என்றும் காளி என்றும் மாரி என்றும் மாற்றி
1.அதைத் தனது குலதெய்வங்கள் என்று சித்தாந்தங்கள் பிரிக்கப்பட்டு
2.அரசன் தன்னுடைய ஆட்சிக்காக குலதெய்வங்களாக உருவாக்கப்பட்டு அதனின் நிலையில் தான் ஆட்சி பீடங்கள் வழி நடத்தி வந்தது.

அரசனுக்குக் கீழ் குடிமக்கள் அவன் காட்டியதைப் பதிவு செய்து அந்த உணர்வின் இயக்கங்கள் தான் மதங்களாக அதற்குப் பின் இனங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்படிப் பிரித்த நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் கொன்றும் ரசிக்கும் உணர்வின் தன்மை வந்து விட்டது

அதாவது…
1.அதர்வண வேதத்தின் அடிப்படையில் எது பரவப்பட்டதோ எவ்வாறெல்லாம் அதைப் பெற முடியும்…?
2.தீமைகளை எவ்வாறு உருவாக்க முடியும்…? என்ற அடிப்படையில்
3.நாட்டு மக்களை எல்லாம் அழிவின் வழிக்குக் கொண்டு சென்றது தான்.

வேதங்கள் உலகம் முழுவதற்கும் உண்டு. அது இல்லாத மதம் இல்லை. மதத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் நாதங்களும் அந்த சுருதிகளும் எவ்வாறு நமக்குள் இயக்குகின்றதோ…? அதன் செயலாக்கங்கள் தான் இன்றும் வழி தொடர்ந்து கொண்டுள்ளது.

இதையெல்லாம் உங்களுக்குத் தொட்டுக் காட்டியுள்ளேன். “சிலவற்றைச் சொல்லக்கூடாது…” என்பதற்குத் தான் அதை மறைத்து வெளிப்படுத்துகின்றேன்.

ஆனால்
1.உண்மைகளை உணர்ந்திட வேண்டும்… தெளிந்த நிலையில் மெய் வழியினைப் பெற வேண்டும் என்று எவர் எண்ணுகின்றார்களோ
2.அவர்களுக்கு இது கிடைக்கப் பெற்று… இருளைப் போக்கிப் பொருள் காணும் சக்தியாக விளையும்.

காரணம்… அதர்வண வேதத்தைப் பற்றிய உண்மைகளைச் சுட்டிக் காட்டி விட்டால் மற்றொன்றை அழித்துச் சுகபோகத்தின் அடிப்படைக்கே கொண்டு செல்லும்.

அன்று அரசர்கள் செய்த நிலைகள் தான் “இன்றும் உலகில் போர் முறையாக நடக்கின்றது…!” அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.அகஸ்தியன் காட்டிய பேருண்மையின் நிலைகளை
2.அந்த மூலத்தின் இயக்கங்கள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை அறிந்து கொண்டால் “அதுவே போதுமானது…”

தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை

தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை

 

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகர் உருவத்தைக் களிமண்ணால் செய்து பூஜித்துப் பின் கடலில் கரைக்கின்றோம்.

இதைப் போன்றுதான் சந்தர்ப்பத்தால், நமக்குள் சேர்ந்த தீய உணர்வுகளை வளராது தடுத்து
1.“அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
2.எல்லாக் குடும்பங்களும் நலம் பெற வேண்டும்
`3.எங்கள் பகைமைகள் அழிய வேண்டும்”என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது
4.நம் உடலிலும் நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.

ஒரு மரம் எந்த நறுமணத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றதோ அதனின் உணர்வின் சக்தியைக் காற்றில் இருந்து ஈர்க்கின்றது.

ஆனால் “அதனுடைய வேரை அறுத்து விட்டால்…” அது நீரைக் கவரும் திறனை இழந்து தன் ஜீவ சக்தியை இழந்து தன் இனத்தைக் கவரும் தன்மையையும் அது இழந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான் நமக்குள் மற்றவரின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்து
1.அதனின் நினைவாற்றல் வராதபடி தடுத்து நிறுத்தும் நிலையாக
2.மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது தீய உணர்வுகளின் விழுதுகள் தடைப்படுகின்றன.

இவ்வாறு தடைப்பட்டபின் நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் எல்லோரும் நம் நண்பர்கள் என்று வளரப்படும்போது நம் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருந்த காற்றில் கலந்துள்ள தீய உணர்வுகள் நகர்ந்து கடலின் ஈர்ப்புக்குள் சென்று மறைந்து விடுகின்றன.

அப்பொழுதுதான் இந்தப் பூமியில் பரிசுத்த நிலைகள் பெருகி அதே சிந்தனை மக்களின் மத்தியிலும் தோன்றுகின்றது.

1.ஏனென்றால் உலக மக்கள் அனைவரும் ஓரினம்.
2.நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்.
3.நாம் ஈசனின் இயக்கத்தால்தான் இயங்குகின்றோம்.
4.நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு மதத்தின் பெயராலோ இனத்தின் பெயராலோ
5.வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.

ஆக… நமது உயிரான ஈசனுக்கு செய்யக் கூடிய கடமைகள் எதுவென்று உணர்ந்து நமது வாழ்க்கையில் நல்ல குணங்களைச் சுதந்திரமாக்க அருள் ஞானிகளின் உணர்வைக் கவசமாக மாற்றிட வேண்டும்.

அரசியல் மத இன மொழி பேதங்களால் விளைந்த தீய உணர்வுகள் இந்தப் பூமியில் படர்ந்து இருக்கின்றது. இவைகளில் இருந்து நாம் விடுபட்டு நமது நல்ல உணர்வுகளைச் சுதந்திரமாகச் செயல்படச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செயல்பட்டுத் தீமையற்ற உலகைப் படைப்போம். தீமையற்ற உலகத்தை முதலில் நம்மிடத்தில் உருவாக்க வேண்டும். இதைச் செய்தோமானால் பேருலகத்தையும் படைக்க முடியும்.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதைப் படைக்கும் திறன் பெற்றது நமது உயிர்.
2.ஆகவே உயிரை ஈசனாக மதித்து உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக்குவோம்.

நம் முன் படர்ந்து கொண்டிருக்கும் தீய உணர்வுகள் நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அதனைக் கடலுக்குத் துரத்தியடிக்க வேண்டும்.

ஏனென்றால் தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு இடமில்லையென்றால் அது வேறு வழி இல்லாது இறுதியில் கடலின் ஈர்ப்பிற்குச் சென்று மறைந்துவிடும்.

1.இவ்வாறு இனி தீய உணர்வுகளுக்கு இங்கு இடமில்லை என்று செய்வோம்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இவ்வுலகமெங்கும் படரச் செய்வோம்.
3.அனைவரிடத்திலும் பகைமையை நீக்குவோம்… மத இன மொழி அரசியல் பேதங்களை அகற்றுவோம்.
4.அனைவரும் ஒன்றுபட்டு வாழ எல்லா மகரிஷிகளின் அருளை வேண்டிப் பிரார்த்திப்போம்.
5.இவ்வுலகில் அமைதி படர்ந்து அனைவரும் “பிறவா நிலை எனும் நிலை”எய்த வேண்டும் என்று எண்ணி நாம் தவமிருப்போம்.

இதன் வழியில் மகரிஷிகளின் அருள் வழியைப் பின்பற்றிச் செயலாக்கி வரும் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்

 

தியானம் என்றாலே சாமியாராகப் போய்விடுவோம்… சாமி கும்பிடுவோர் நாங்கள் எப்படித் தியானம் செய்வது…? என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள்.

தியானம் என்பதே உயர்ந்த எண்ணங்களைப் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுவது தான்.

நம்மிடம் யாராவது சண்டையிடுகிறார்கள் அல்லது திட்டுகின்றார்கள்… என்றால்
1.அப்பொழுது என்ன நினைக்கின்றோம்…?
2.என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்று எண்ணுவது இது தியானம் தான்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் இது தியானம்தான்.

காரணம்…
1.நாம் எண்ணியது நமக்குள் உடலாகின்றது
2.எண்ணியதை உயிர் இயக்குகின்றது
3.எண்ணியதை உடலாக்குகின்றது உயிர்.
4.எண்ணியதை உடலுக்குள் விளைய வைக்கின்றது
5.விளைந்ததைத் தான் உடலை விட்டுப் பிரியும் சமயம் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது
6.நமக்குள் இருக்கும் எண்ணங்களை… உயிரே அதைப் படைக்கின்றது
7.நம்மை ஆளும் ஆண்டவனும் உயிரே
8.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
9.எண்ணியதை இயக்கி இறை ஆக்குவதும் இறைவன் ஆக்குவதும் உயிரே
10.எண்ணியதை ஓ என்று ஜீவன் ஆக்குவதும் உயிரே
11.எண்ணி உடலுக்குள் பதிவு செய்தாலும்… அது அனைத்திற்கும் குருவாக இருப்பதும் உயிரே.

நாம் எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதைத் திரும்ப எண்ணி அதற்குக் குருவாக நின்று நல்வழி காட்டுவதும் உயிரே.

1.ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் பொழுது
2.மீண்டும் அதை எண்ணுவீர்கள் என்றால் குருவாக நின்று உங்களுக்கு அது நல்வழி காட்டும்.

தீமை செய்த உணர்வுகளை எண்ணினால் அது “ஓ” என்று ஜீவனாக்கி உடலுக்குள் “ம்” என்று பதிவு செய்தால்… திரும்ப எண்ணினால் தீமை செய்யும் எண்ணமாகக் குருவாக நின்று தீமையை விளைவிக்கும் நிலைக்கே அது உங்களை அழைத்துச் செல்கின்றது.

நோய் என்ற நிலைகள் பதிவானால் அந்த நோயைப் பற்றிப் பேசினாலும் அந்த நோயே ஜீவனாகி அதுவே குருவாகி நோயாக உடலுக்குள் உருவாக்கி விடும்.

ஆனால் நோயை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதனை உங்கள் உயிர் ஜீவனாக்கி இந்த உணர்வின் தன்மை நோயற்றவனாக ஆக்கி
2.ஞானத்தின் தன்மை கொண்டு பொருளறிந்து செயல்படும் திறனாக நமக்குள் அதை வளர்க்க
3.அந்த உணர்வின் எண்ணம் குருவாக நின்று இந்த வாழ்க்கையை தீமை அற்றவனாக்கி
4.தீமைகளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் அது விளையும்.
5.அப்படி விளையச் செய்யும் சக்தி இதைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் பெற முடியும்.

உங்களுக்குள் ஊழ்வினையாக அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் ஆழமாகப் பதிய வேண்டும். உங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும். நீங்கள் நன்மை செய்த நிலைகள் அந்தத் தெய்வ குணங்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்திட வேண்டும்… உங்கள் மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக மலர்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை யாம் உபதேசித்தது.

கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும் இது பதிவாகி இதன் வழி கொண்டு உங்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும். அந்தச் சிறந்த எண்ணங்கள் உங்களுக்குள் பதிவாகி ஞானத்தின் வழித்தொடராக வளர வேண்டும்.

1.எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்.
2.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து மக்களை மீட்டிடும் சக்தியாக விளைந்து
3.உங்கள் மூச்சும் பேச்சும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

குழந்தைகளுக்கு நாம் எப்படித் தியானிக்க வேண்டும்…?

குழந்தைகளுக்கு நாம் எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

நமது குடும்பத்தில் குழந்தைகள் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சந்தர்ப்ப பேதத்தால் படிப்பு குறைந்து போனால் “ஐயோ நன்றாகப் படித்துக் கொண்டிருந்த குழந்தை இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனைப்பட்டுக் குழந்தைகளை எண்ணவே கூடாது.

அந்த மாதிரிச் சொற்கள் வந்தாலே “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்குப் பின்… குழந்தையை நினைத்து அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தியும் என் குழந்தை பெற வேண்டும்,
1.நல்ல மன வலிமை பெற வேண்டும்,
2.கல்வியில் சிறந்த ஞானம் பெறக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.நமது உடலில் இதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் குழந்தைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம்… கல்வியில் சிறந்த மாணவனாக மாணவியாக வர வேண்டும் என்று இந்த உணர்வோடு பார்த்து “நீ வெற்றி பெறுவாய்… தேர்வில் முன்னணியில் வருவாய்…!” என்று மனதில் எண்ணிப் பார்த்தால் போதும்.

பள்ளிக்குப் போகும் பொழுது ஆசீர்வாதம் கேட்டால் இதே போன்று சொல்லால் சொல்லி… அந்த உணர்வைப் பாய்ச்சி அனுப்ப வேண்டும்.

அதே சமயத்தில் குழந்தைகள் மற்ற நேரங்களில் அவர்கள் உணர்வுக்குத்தக்க “சில குறைபாடுகள்” வருகிறது என்றால் அந்த உணர்வு நமக்குள் வந்துவிடும்.

அந்த உணர்வு நமக்குள் வராதபடி “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் பையனை எண்ணி
1.அவன் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் மலரைப் போன்ற மணமும்
2.மகிழ்ந்து வாழும் சக்தியும் மகிழச் செய்யும் உணர்வுகளும் அவனுக்குள் வளர வேண்டும்.
3.தெளிந்த மணமும் தெளிவான நிலை அவன் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
4.நமக்குள் மாற்றி உருவாக்கி விட்டால் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த எண்ணங்கள் தான் வரும்.

இல்லாவிடில் குறை வந்து விட்டால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் கோபம் வரும். நம் உணர்வு அவன் மேல் பாயும்.

அப்பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் அவன் மீது “இப்படியே பண்ணிக் கொண்டிருக்கிறானே… என்ன ஆகப்போகிறானோ…?” என்று எண்ணும் போது அவன் சிந்தனை பூராவுமே குறைக்கப்பட்டு அவன் சிந்திக்கும் தன்மையையே இழந்து விடுகிறான்.

அப்படி ஆகாதபடி… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு நொடியிலேயும் எடுத்து அதை நம் உடலுக்குள்ளும் குழந்தைக்குள்ளும் சேர்த்துப் பழக வேண்டும்.