வரும் வினைக்காக அஞ்சினால் அதிலே தான் சிக்குவோம்… மீளுவோம் என்ற நம்பிக்கை தான் வேண்டும்

வரும் வினைக்காக அஞ்சினால் அதிலே தான் சிக்குவோம்… மீளுவோம் என்ற நம்பிக்கை தான் வேண்டும்

 

வினைக்கு அஞ்சிடுவோர் வலைக்குள் உட்படுவோர் (சிக்கப்படுவோர்) ஆயினர். ஓர் சாதனையின் நிகழ்வே சகாப்தம் காட்டியது எனில்
1.ஆத்ம வலு கூட்டிடும் செயலில்… பெற்றுக் கொண்ட வலு
2.உலகினையே ஆட்டிடும் சித்தனாகச் செயல்படும் காரிய நிகழ்வுக்கு
3.அடிப்படையே “நம்பிக்கை தான்…”

எப்படி என்றால்
1.வெளியில் நிகழ்வுறும் சம்பவங்களால்… “எண்ணத்தின் நிலை கருத்தின் தெளிவை மாறுபடுத்திடும் என்பது” மக்களின் கணிப்பு
2.எண்ணத்தில் விளைந்திடும் செயல்களே… “நம்மைச் சுற்றி நிகழ்ந்திடும் சம்பவங்களாய் நடைபெறுதல் என்பது” மகரிஷிகளின் கணிப்பு.

அரைத்த நெல் மாவை வெளி வாசலில் உலர்த்திடும் பொழுது அந்த மாவைக் கரைக்க மழை வந்துவிட்டால் நம்மை அழைத்து உரைப்பது எது…?

மழை கரைத்திடும் மாவினை எடுப்பாயா…? அன்றே மழை பெய்யும் முன் அதை விரட்டி விடுவாயா…?

வேதாள மகரிஷி அன்று உரைத்த சொல்லில் இன்றைய உலகின் நடைமுறையில் தெளிந்து ஆட்கொண்டவர்கள்… ஆத்ம வலுவின் நம்பிக்கை கொள்பவர்கள்… கொள்ளப்படும் எண்ணங்கள் அரிதாகி வருகின்றது.

சூரசம்ஹார நிலை என்று காட்டியது மனத்தில் எழும் துஷ்ட குண சம்ஹாரம் தானே…!

உடலின் தாவு என்றிடும் செருக்கு மிகுந்து விட்ட கால நிகழ்வு… இடருகின்ற சிறு கல் அடலேறு போன்ற நடையை பிரளச் செய்திடில்
1.இடருகின்ற அந்தக் கல்லை நோவதில் பயன் என்ன…?
2.வலிமையான ஆத்ம வலுப்பெற்றவர் முன் மற்ற குணத்தின் செயல்கள் அனைத்தும் காற்றினிலே சருகு.
3.இடர் வராது இருக்கின்ற வழியைக் காண்பதே உயர்வாம்… “குணம் வளர்க்கும் ஞானத்தின் வலுவில் அன்றோ…!”

முள்முனை முள் எடுப்பதற்கே காப்பான் ஜெபம் வேண்டும் என்கிறோம். பட்ட நிலை சிறிது தான் என்றாலும்… அதனால் உண்டான “வேதனையின் வலிமை பெரிது என எண்ண வேண்டியதில்லை…”

“அகப்பேழையைத் திறந்து பார்…” என்று உரைத்த வேதாள மகரிஷி கூற்று கூற்றுபவன் எனக் கால வெள்ளத்தைத் தேக்கிக் காட்டிய முறையே சித்துக்களின் வளர்ப்பின் பலன்.

நஞ்சை அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே “நீலி…”

நஞ்சை அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே “நீலி…”

 

உணர்வுகள் முன்னறிவிப்பாக அனைத்தும் தெளிவுபட… அறிவில் பொருந்துதல்… அதுவே உயர் ஞான வளர்ப்பின் சித்து.

கனியாகும் முன் காயின் நிலை கண்டு… மனத்தின்கண் நினைப்பது கனிந்து விருந்தாக்கும் என்று நினைப்பதே நன்று.

வாயுள் படும் அந்தப் பொருளை (கனி) அதன் சுவையை முன்னறிதல்… சுவாச செயலாக நின்று…
1.உயிரின் உயர் நிலை கண்டு உண்டு களித்திருத்தல்…
2.ஞானமாகப் பயிர் வளர்த்திடும் வித்தகம் என்று பூரணத்துள் ஞான திருஷ்டி ஏற்பட்டுவிடும் பாங்கு வளர்ப்பின் நிலையின் “ஓர் அனுபவம்…”

இதுவே பிருகு மகரிஷி உண்டு… கண்டே உண்டு… களிப்பு எனும் பேரானந்தப் பெருநிலை அனுபவித்தல் தன்மையாக வேதாள மகரிஷி உரைத்திட்டது.

சரீரத்தின் தன்மைகள் கண்டு காற்றலையில் ஈர்த்திடும் விஷத்தின் குணங்களும் அன்றி… சரீரத்தில் நேரடியாக உட்கொண்டு விடும் விஷ அமிலத்தன்மைகள் எதுவாக இருந்தாலும் “நீலி கொண்டு தான்” சித்தர்கள் சரீர வைத்தியத்தில் அனுபோக முறைகள் கண்டு உரைத்துப் போயினர்.

நீலன் என்று உரைப்பது மனிதன் பெற்ற இந்தச் சரீரத்தையே…!
1.தவசியாய்ச் செயலுறும் பாங்கில்… விஷ அமிலத்தன்மைகளின் ஈர்ப்பில் தாக்குண்டு
2.அதனால் பெற்றிடும் அக்குணத்தன்மைகளை “அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே நீலி…”

மருத்துவக் குறிப்புகள் நீலியைக் காட்டும் அந்தப் பெயர் படைத்திட்டது ஓர் மூலிகை. விஷத்தின் முறிவு சக்தியாக அதனைக் கைக்கொள்வோர் மிக அரிது.

மனமாகிய உலகினில் கண்டு தெளிதல்…
1.நாபியின் நாடிக்குள் பச்சை நிற வண்ணம் காட்டிடும் அமைப்பின் உள் நிலையை நீலி என்று புகழ்வது..
2.பிடரிக்கண்… சக்தி கொண்ட மூலாதாரத்தை நோக்கிடுங்கால்…
3.கிளர்ந்து எழுந்திடும் கந்தன் எனும் ஜோதி நீலியின் உட்பகுந்து சென்றிடும் பொழுதே…
4.எண்ணத்தால் உட்கண்டு தெளிதல் என்பது ஆங்கு செலுத்தப்படும் எண்ணமானது
5.தூய நிலை கொண்டு மாற்று நிலைத் தன்மைகளையும் மாற்றி…
6.உயர் நுண் காந்த அலையின் உயர்வாகச் சேர்க்கும் மனித இனத்தை வழி நடத்திட…
7.வழிகாட்டிடும் அவ்வின மாமகரிஷிகள் உரைத்திட்ட வழி நடத்தலே
8.நீலி கொண்டு நீலன் நஞ்சு முறித்திட்ட “ஸ்தூல… சூட்சம…” இரு நிலையின் “ஒரு பொருள்” காட்டும்.

கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக மாறினாலும் அதை அறிய வேண்டுமல்லவா…!

கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக மாறினாலும் அதை அறிய வேண்டுமல்லவா…!

 

ஜீவன் பெற்று உடல் கொண்டு வாழும் மனிதன்
1.இயற்கையின் கதி குணங்களுக்கொப்ப எண்ணுகின்ற எண்ணத்தின் காந்தப்புல ஈர்ப்பு நிலைகளில்
2.சுவாசம் எனும் காற்று கொண்டு… பிடர்தல் (உந்துதல்) குண எந்த எண்ணமோ
3.அந்த எண்ணத்தின் வலு வீரிய காந்த ஈர்ப்பில் பிடர்தல் குணத்தன்மைகள் போல்
4.காற்றில் உலாவி ஓடிடும் படர்தல் குண கோடானு கோடி விசேஷத் தன்மைகளில்… “ஒத்த நிலையை ஈர்த்துக் கொண்டு”
5.சுவாசக் காற்றாக ஈர்க்கப்பட்ட ஒத்த குணங்களின் வலு வீரியத்தில்… “எக்குணம் பிடர்தல் கொண்டு வலுவாக்கப்பட்டதோ”
6.அந்த வலுவின் வலுவிற்கே வலு கூட்டிக் கொண்டிடும் ஜீவனாக… “அதே குணங்கள் மென்மேலும் ஈர்க்கப்பட்டு”
7.இரத்தத்தில் கருவுற்று அணுக்களாக உருப்பெற்று… அது தசைகளில் சேர்க்கப்பட்டு
8.எண்ணுகின்ற எண்ணம் தெய்வீக குணங்களற்ற… மாற்று நிலை (மீண்டும் பிறவிக்கு வரும்) கொள்ளப்படும் குணங்களாக இருந்திட்டால்
9.அந்தக் குணங்களுக்கொப்ப சேர்க்கப்படும் அமிலங்கள்… தியானம் கொண்டு நல்ல அணுக்களாக மாற்றம் செய்யப்படவில்லை என்றால்
10.உறைதல் குணம் கொண்டிட்டே (உடல் உறுப்புகளில் மாற்றமாகி) சரீரத்தையே நலிவுறச் செய்திடும் கதியாகி
11.பின் வினையாகி… பின் செயலுறும் வினைப் பயனாகி…
12.பின் விதியாக்கிடும் நிலைபெறும் செயல் கூறுகள் கொள்ளுகின்ற
13.கொள்ளப்படுகின்ற (விதிப்படி எடுக்கப்படும்) எண்ணத்தையே செயல் நடத்திடும் உயிர் கடவுளை இயக்கிடும் உணர்வலைகள்
14.உயிராத்மாவாகப் பதிவு பெற்றிடும் ஆத்ம சூட்சுமத்தில்
15.நாம் கூறிடும் இந்த எளிய தியானத்தின் வழியாகப் பெறப்பட வேண்டியது “ஆத்ம பலம் ஒன்றே…”

இயற்கையின் கதியால் சுவாச நாடிகளில் ஓடிடும் காற்று… பரிசுத்தமாக அமையப் பெற்றிட உன் முயற்சி இருந்திட்டால் மாற்று நிலை அமிலக் கூறுகளின் அணுக்கள் உடலுக்குள் உறையும் நிலை தடுக்கப்படும்.

மேல் நோக்கிய சுவாச நிலைகள் மாறு கொண்டிட்டால்… “கனம் கொண்ட” சுவாச அலைகள் (கோபம் பயம் துன்பம் பொறாமை குரோதம்) சரீர நாடிகளில் ஓடிடும் பொழுது அதனால் தடை ஏற்பட்டு… சரீரத்தின் வெப்ப கதியும்… நீர் அமில சக்தியில் கலந்திட்ட மாற்றமில குணத் தன்மையையும் சுவாச நாடிகளில் “நற்சுவாசத் தடங்கல்கள்” ஏற்பட்டுவிடும்.

அத்தகைய காலத்தில்…
1.வெப்பமும்… நீர் சக்தியுடன் கலந்திட்ட அமில குணங்களும் சுவாச நாடிகளில் நற்சுவாசத் தொடர்பின்றி
2.நற்சுவாசக் காற்றின் தொடர்பும் வெப்ப சக்தியில் கலந்துறும் சூரிய சக்தியும் நீர் அமில சக்தியுடன் கலந்து… தீவினைப் பயனுறும் செயலாக மாறி
3.விசேஷ செயல் உறாமல் (நல்லது ஏற்படாது) காற்றின் சூட்சுமம் தடைப்பட்டே… ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கொண்டிட்ட தன்மையாக
4.காற்றின் மூலத்தைத் தாக்கிடும் செயலாக… தசைகளில் வேதனையாகி சுவாச சமைப்பால் அங்கு (உடலில் ஆங்காங்கு ஏற்படும் வலி) அறிந்து கொள்கின்றோம்.

உறையும் நிலை இங்கு அதிமுக்கியம். நற் சுவாச குணங்கள் எடுக்கப்படும் போது அதனால் காக்கப் பெறுவது சரீரம் மாத்திரம் அன்று… ஆத்மாவும் தான் காக்கப்படுகிறது.

வேதனையைச் சரீர உணர்வுகள் காட்டுகின்றன… அதுவே ஆத்மாவின் பதிவாகச் சேரும் நிலையை உணர்ந்தாயா…?

சரீரம் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டிடும் செயல் கூறுகள் இந்த மனிதனுக்கு மாத்திரம் தான் உண்டு என்று எண்ணிடலாகாது. இயற்கையில் ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் இத்தகைய நிலை உண்டு.

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் வந்து நீ கண்டிருப்பாய். ஆகாய நீர் உரிக்க அறிந்தவனப்பா நீ. புலர் காலைப் பொழுதில் புல் பூண்டு செடி கொடிகளின் மீது பனித்திவலைகள் முத்து முத்துக்களாக உரு கொண்ட நிலையைப் பார்த்திருக்கின்றாய். அது எவ்வாறு உருப்பெறுகின்றது…?

பருவ காலமான பனிக்காலத்தில் பெய்கின்ற பனி அப்படி உருப்பெறுகின்றது என்று நீ நினைக்கின்றாய். ஞான விழிப்பு தந்தாயிற்றே… சொல் பார்க்கலாம்…!

அறிந்ததைத் தெளிவதே ஞானியருக்கு அழகு.

நண்பகலில் சூரியனின் வெப்ப அலைகளைச் சமைத்திடும் பூமி… தன் சமைப்பில் வெளிப்படுத்திடும் வெப்பத்தின் அலைகள்… உணர்வலைகள் கொண்டு வெப்ப கதியாகப் படரும் செயல் பகல் பொழுதிலும்… அதே வெப்ப அலைகளைப் பெற்றிடும் சகல தாவரங்களும் ஜடப் பொருள்களும் ஏன் மனிதனும் கூட உணர்ந்து கொண்டிடும் அச்செயல் சூரிய அஸ்தமன செயலுக்குப்பின் இரவிலே வெப்பத்தின் நிலை என்ன…?

பூமி சமைத்து வெளித்தள்ளும் சுவாசகதியாக
1.அதி வெப்ப நிலைகள் பூமியின் சுவாச உணர்வலைகளால் சமைப்பின் பின் வெளிப்படும் நிலையே
2.மேல் நோக்கித் தள்ளப்படும் வெப்பக் காற்று சென்று…
3.பின் அந்த இடத்தை நோக்கி குவியப் பெறும் பருவ காலத்தின் நீர் அமிலக் காற்று… கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.

தாவரத்தை எடுத்துக் கொள். வெப்பத்தைப் பெற்றிருக்கும் பகல் பொழுதில் பூமியின் சுவாச அதி வெப்பம் தணிவுறும் இரவின் போது… தான் பெற்றுக் கொண்டிட்ட வெப்ப அமில நிலைகளை வெளிப்படுத்திடும் பொழுதே… காற்றில் படர்வு நிலை பெறும் குளிர்வு நிலை நீர் அமில சக்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்திடும் பொழுதே… ஈர்த்திடும் கிரியைகள் மிக மிக நுண் நீர் அமிலக் கூறுகள், ஈர்ப்பில் படர்வு பெற்றே… இரவுக் காலம் முழுவதும் நடைபெறும் அந்தச் செயலால் உருப் பெற்றிடும் திவலையாக… துளிகளாகக் காண முடிகின்றது (VAPORISATION AND CONDENSATION).

இதையே உன் சரீர செயலில் கண்டு கொள்.

ஜடப்பொருளான எத்தனையோ பொருள்கள் மேஜை சுவர்கள் எங்கிலும் நடைபெற்றிடும் செயலில் ஜீவன் கொண்ட தன்மைகளில் அந்த செயல் ஜடப் பொருள்களில் அறியவொண்ணாதது.

உறைபடு செயல்கள்… மறைபடு பொருள்கள்…! அதாவது…
1.கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக உறைந்தாலும்
2.உடலுக்குள் ஆகப்படும் போது அது மறை பொருள் தான்.
3.அதை அறிய வேண்டியது மிகவும் அவசியம் அல்லவா…!

“ஈஸ்வர ஜோதி”

“ஈஸ்வர ஜோதி”

 

பால்வெளி சூட்சுமம் சதா அசைவு பெறும் ஒளி மண்டல சூட்சும அணுக்கள் நிறத்தின் தன்மைக்கொப்ப மணமும்… மணத்தின் வீரிய அடர்வு செயல்பாட்டில் குணமும்… குணத்தின் அமைப்பு எண்ணத்தின் கருவாகும்… கருவின் ஒரு ஆத்ம ஒலி ஒளி விந்து கலைகள் இணைந்து செயல் கொண்டிடும்… ஜீவ பிம்ப சரீர நிலை பெற்றிடும்… ஜீவாத்மாவாகப் பயிர் கொண்ட நிலைகள் வளர்ப்பு ஜீவத் துடிப்பலைகள் வரும்,

அலை வீசாக் கடல் எனும் பால்வெளி சூட்சுமத்தில் உயிர் கொள்ளும் உயிராத்மா…
1.மனிதன் என்ற பிறப்பு எடுத்து மாயத்திரை போர்த்திக் கொண்ட செயலை விலக்கி
2.இச்சரீரம் கொண்ட வினையின் நாயகன் உயிர் சக்தி
3.ஆத்ம நிலை உருவாக்கிடும் செயல் கொள்ளும் அமைவு எப்படி உருவாகின்றது…?

“உன் முயற்சி தான் ஏற்பு… திரை விலக்கிடும் முயற்சியே தியானம்…!” (நல்லதைப் பெற வேண்டும் என்ற முயற்சியுடன்… உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… அதை வைத்து இருளை விலக்கிட வேண்டும். அதுவே தியானம்)

வேதாள மகரிஷி வலியுறுத்தி உரைத்திட்ட ஒலி நாதங்கள் இன்றும் ஒலி அலைகளாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தின் ஆழம் கொண்ட “இந்த உபதேசங்களைப் படிப்பதே மாபெரும் பாக்கியமப்பா…!”

பார்க்காமல் வருகின்றவன் சிந்தனா சக்தியின் துரிதமற்ற நிலையில் ஓர் குளத்தில் வந்து விழுந்து விடுகின்றான். வேரோ அன்றி விழுதோ பிடித்துக்
1.கரையேறுகின்ற முயற்சியையும் நீக்கிவிட்டு
2.குளத்தின் நீர் வற்றிய பிறகு வெளியேறிச் செல்லலாம்…! என்பது என்ன பேதைமை…?

சிந்தனையற்று அந்தக் குளத்தினுள் இறங்கியவன் சிந்திக்கின்றான்… நீர் வற்ற வேண்டும் என்று…! (நீர் வற்றுமா…? மனிதனின் இன்றைய சிந்தனை அப்படித்தான் உள்ளது) அப்படி இருந்தால்
1.மாமகரிஷிகள் மனிதர்களுக்கு உவட்டாமல் (திகட்டாத சுவையாக) ஊட்ட வந்த
2.ஒளி காந்த நிலைபெறும் ஒளி மார்க்க சிந்தனை செயல்படுவது எங்கே…?

உன் முயற்சி தான் ஏற்பு.

1.உலகோதய நிலை வாழ்க்கை என்பது தான் “குளம்”
2.ஜீவன் கரையேற முயற்சிக்கும் முயற்சி “அறிவின் தூண்டுதலால் ஈஸ்வர அனுபூதி”
3.கரையேறாத நிலையில் உள் உடைந்து கிடத்தல் – “தொடர் பிறப்பின் சூட்சுமத்தில் சுழன்று கொண்டே இருக்கின்ற” மனிதனின் சிந்தனையின் செயல்பாடு
4.வேரும் விழுதுகளும் “வழிகாட்டிடும் மார்க்கங்கள்”
5.அன்றி சுயத்தின் முயற்சியாக நின்று வெளி போதல் சுயசக்தியின் வளர்ப்பாக்கும் “ஒளிகாந்த ஒளி மண்டல சிந்தனாலயம்…”

கரையேறும் நிலையாகத் தன் முயற்சி கொண்டிடும் நிலைக்கே
1.அக்ஷி என்ற நிலைகாட்டி அகக்கண்ணால் உள்நோக்கின்
2.பிடரிக்கண் என்று உரைத்திட்ட பார்வையின் தன்மை “மூலாதார அக்கினியை உற்று நோக்கும்…”
3.அகக்கண்ணின் சிந்தனா சக்தி அங்கு செலுத்தப்பட்டால்
4.சரீர செயல்பாட்டில் உணர்ந்து அறியத்தக்க ஒளி அலைகள் பாய்ந்து
5.ஒளி கலந்த புலமாக்கும் ஈஸ்வர ஜோதி சிரசில் தோன்றுவதே
6.சிவம் என்றிட்ட ஈஸ்வரனும்… சக்தியின் நிலையும்
7.ஒன்று கலந்த பேரின்பப் புணர்ச்சி… எண்ணத்தால் ஆட்டி உதயத்தில் காட்டும்…!
8..பிறவி என்ற இன்னலிலிருந்து விடுபட்டு… என்றுமே ஏகாந்தமாக… பேரானந்த நிலை கொண்டு வாழச் செய்யும்.

மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில் “அன்பே” முதன்மையாகும்

மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில் “அன்பே” முதன்மையாகும்

மனித மனம் சமுத்திரத்திற்கே (கடல்) ஒப்புவமை காட்டப்பட்டது. அமைதியாகத் தோற்றமளிக்கும் அந்தக் கடல் நீர்
1.பரப்பளவிலே உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிடும் உண்மை நிலையே “நம் மனத்தின் அலைபாயும் எண்ணங்கள்…”
2.இடையறாது சதா வீசிக்கொண்டே இருக்கும் அலைகள் போல் குணங்களின் தன்மைகள்
3.பல பல குணங்களாக ஆர்ப்பரிக்கும் மனத்தின் எழுச்சி எண்ண அலைகளானது…
4.நாம் கொள்ளப்படுகின்ற (முடிவெடுக்கும் நிலைகள்) கருத்தின் வாசனையாக… “பருவ கால மாற்றம் போல்…”
5.அதனால் ஏற்படுகின்ற கடலின் சூறாவளி போல்… கொண்ட குணத்தின் தன்மை காட்டும்.

மனத்தினுள் மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில்… “அன்பே முதன்மையாக” அந்த குணங்களே வீசிடும் அலைகளாகப் பரவி… புறத்தின் பொய்மை நிலைகள் அகன்று… சாஸ்வதமான மெய் ஒலியால் ஒளி காட்டும் மெய் ஞான நிலை கூட்டி… மெய் ஞானச் சுடராக விளங்கும்.

அதீத நோய்வாய்ப்பட்டவன் நறுமலர் தேனின் சுவையை அறிந்து கொண்டிட முடியாத் தன்மை போல் மெளடீகத்தின் (மூடத்தனம்) வலையில் உட்படும் மனிதர்கள் அதிகரிக்க…
1.மெய் ஞான மணம் காட்டி… சுவை கூட்டும் எளிய தியானத்தைக் காட்டினாலும்
2.கடைப்பிடிக்க முன் வருபவர்கள் அரிதிலும் அரிதாகிக் கொண்டே வருகின்றார்கள்.

அதீத சுகவாசம்… சோம்பேறித்தனம்… இவை எல்லாம் அருள் செல்வத்தைப் பேணிக் காத்திடும் கடமையைக் குறைத்துவிடும்.

அருள் செல்வத்தைப் பேணுகின்ற பொறுப்பு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதனுக்கே உரியது…. அந்தப் பொறுப்பும் அதைக் காக்கின்ற கடமையும் அவனையே சார்ந்தது.

வாசல் வழி திறந்திருந்தால் திருடன் புக ஏதுவாகும். தீய குணங்களையே அவ்வாறு கூறுகின்றோம். ஆத்ம பலம் கூட்டிடும் கடமையை ஏற்றுக் கொண்ட மனிதன்
1.திருடனாலும்… அதாவது தீய குணங்கள் அருள் செல்வத்தை அபகரிக்க…
2.”தனக்கு அதிலே எதுவும் பொறுப்பில்லை…” எனத் தட்டிக் கழித்திட முடிந்திடுமோ…?
3.பொருளைக் காக்கின்றவன் காக்கின்ற கடமையைத் தவறிவிட்டால் அதனுடைய முழுப் பொறுப்பும் அவனுக்கே உரியது.

விழுப்பொருளாம் (உயிருடன் ஒன்றி விண் செல்லும் ஆற்றல்) அந்தப் பொருளை முன் நிலை போல் சமன்படுத்த… மனித மனத்தின் செயலுக்கே அது உரியது.

உவப்பு (மகிழ்ச்சி) மனத்தினுள் நிலைபெற்றுப் பேரானந்த லயமாகக் கலந்திடவே… மனத்தின் பாங்கு அன்று மலர்ந்த மலர் போல் மணம் வீசும் செயலை உணர்ந்து கொண்டிடும் மகிழ்வால்… நாதமாக ஈர்த்திட்டு பேரொளி பெற்றிடவே இங்கே உரைப்பதெல்லாம்.

துறவறம் பூண்டு ஒளி நிலை பெற வேண்டும் என்றே கூறுகின்றார்கள். நாம் கூறிடும் நிலையோ “இல்லறத்தின் வழியாக… ஒலி கொண்டு ஒளி பெறுதல் தான்…”

நாதத்தைக் கூட்டி நாத நாதாந்தம் ஆகுதல்… பேரொளியாகுதல்…” என்பதெல்லாம் நல்லறம் ஆக்கிடும் இல்லறத்தில் பயனுறப் “படைப்பின் படைப்பாதல்…” என்பதனையே உணரல் வேண்டும்.

ஔவையின் உரை… வறுமை கொடியது…! பசியை நோய் என்றே பகர்ந்த உரை. பசி நோயானது தொடர்ந்து பீடிக்கப்படுங்கால்… சரீரம் பசி நோய்த் தாக்குதலில்… உணர்வின் உந்துதல் கொண்டு உயர் நிலையை எண்ணிடாது.

புசித்தால் அந்த நோய் அகலும். ஆனால் தொடர்ந்து வருத்தும் அந்தப் பசி நோயிற்கு “வறுமையில் உழல்பவன்… வளமாக வாழ்பவன்…” என்றெல்லாம் பேதங்கள் ஏது…?

ஜீவ பிம்ப சரீரம் பெற்ற அனைத்து உயிர்களையும் தான் பசி நோயானது வருத்துகின்றது. புசிக்க வழி காணும் ஆக்கத்தின் செயல் இன்றி பசி அகன்றிடுமா…?

வாழும் வாழ்க்கையின் செயலில் முயற்சி அன்றோ திருவினை தருகின்ற உசித மனம் வேண்டும். உசித மனம் கொண்டவன் உரப்ப தானேகும் பசி நிலை (கட்டுக்குள் அடக்க முடியும்).

இந்தத் தியானத்தின் வழியில் செயலுறும் வழியாகக் காற்றமில சக்தியை (உயிர் வழி சுவாசம்) ஈர்த்துக் கொண்டிடும் பக்குவத்தில்… மூல அமில சக்தியாக ஆகாரத்தை (பசிக்கு உட்கொள்ளும் உணவு) இந்தச் சரீரத்திற்கே பெற்றுக் கொள்ள முடிந்திடும். அதாவது
1.தொடர்ந்துற்ற பசிக்குத் தொடர்ந்தே உணவு அருந்திடும் தன்மை போல்
2.தொடர்ந்தே காற்றமில சக்தியைச் சரீரத்தினுள் ஈர்த்துக் கொள்ளும் செயலில்
3.”நிலை நிற்கும் பேறு அதுவே…” என மாமகரிஷிகளால் அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டிடலாம்.

பிறருக்கு நன்மை செய்தாலும்… தீமை நமக்குள் ஏன் வருகிறது…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

பிறருக்கு நன்மை செய்தாலும்… தீமை நமக்குள் ஏன் வருகிறது…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் உரைகளைத் தான் உங்களுக்குப் போதித்து வருகின்றோம் அதை நீங்கள் தெளிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் செம்மையான பாதையினை அமைத்துக் கொள்ள அதற்குண்டான பக்குவங்கள் வரும்.

இது தீமை இது நன்மை என்று சொல்லும் பொழுது
1.தீமை என்ற நிலைகளை விலக்கி விட்டுச் சென்றால் தீமை வருவதில்லை.
2.நன்மை பயக்கும் இடங்களுக்குச் சென்றால் அந்த நன்மையே வலிமையாக அது உங்களை அழைத்துச் செல்லுகின்றது.

இதைப் போன்று தீமை நன்மை என்றும் உணரும் நிலைகளில் நீங்கள் எதனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று சற்று சிந்தியுங்கள் உங்கள் சிந்தனைக்குரியதாக இதை விட்டு விடுகின்றேன்.

இன்று நமக்கு ஞானத்தைப் போதிப்பவர்களில் புகழ்வதற்கும் போற்றுவதற்கும் தான் ஆசீர்வதிக்கின்றார்கள். புகழுக்காக ஏங்குகின்றார்கள்… போற்றுவதற்கு ஏங்குகின்றார்கள்.

நாம் போற்றித் துதிக்கவில்லை என்றால் இவன் ஏதோ பழித்துப் பேசுகின்றான்…! நம்முடைய தெய்வங்களுக்கும் கொள்கைகளுக்கும் விரோதமானவன்…! என்று குறை கூறி மாயக்காரன் என்றும் மாயா ஜாலக்காரன் என்றும்… மதிக்கக் கூடியவன் அல்ல என்றும் அசுர குணங்கள் கொண்டவன் என்றும்…
1.உண்மையின் உணர்வுகளை அறியாது உண்மையின் உணர்வை அறியச் செய்தாலும் அதைப் போதிக்கும் வன்மைகள் இழக்கப்பட்டு
2.மனிதனின் வாழ்க்கை ஞானிகள் உணர்வைத் தனக்குள் பெருக்கும் நிலையை இழக்கச் செய்துவிட்டார்கள்.

ஆக யாரையும் நான் குறை கூறவில்லை… அவர்கள் அறிந்தார்களோ இல்லையோ…! மெய் உணர்வுகளைத் தான் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

பிறருக்குத் தர்மம் செய்ய விரும்புவோர்
1.வேதனைப்படுவோர் உணர்வை நுகர… அந்த வேதனையான அணுக்கள் உடலுக்குள் புக
2.இந்த இந்திரலோகத்திற்குள் (இரத்த நாளங்கள்) நன்மை செய்யக்கூடிய நிலைகள் இழக்கப்படுகின்றது…
3.எம்மா… எப்பா…! என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.

அப்பொழுது தன்னுடைய திசைகள் எங்கே செல்கின்றது…? அதற்குப்பின் தர்மம் செய்யப் போகின்றாரா…?

எல்லோருக்கும் நன்மை செய்தேன்… என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் பேசுகின்றார்கள் தவிர
1.எதனால் இது வந்தது என்று அறிய வாய்ப்பினைக் கொடுத்தாலும் அதை அறியாத வண்ணம் காலத்தால் மறைந்தே சென்று விட்டது.
2.அதைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
3.அருள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றேன்… நினைவு கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.

தீமைகள் எப்படிப் புகுகிறது…? உங்களுக்குள் அறியாது புகும் அந்தத் தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்… அதை மாற்றும் வல்லமை உங்கள் ஆறாவது அறிவுக்கு உண்டு என்று தான் உணர்த்துகின்றேன்.

ஆகவே ஆறாவது அறிவின் துணைனை கொண்டு அருள் ஞானிகள் உணர்வுகளை நுகருங்கள். அதை உங்களுக்குள் சிருஷ்டி ஆக்குங்கள். உங்கள் இரத்த நாளங்களில் பெருக்குங்கள். தீமைகள் வராது தடுக்க இது உதவும்.

உயிர் இயக்கினாலும்… ஆணையிடும் சாதனம் சிறு மூளை

உயிர் இயக்கினாலும்… ஆணையிடும் சாதனம் சிறு மூளை

 

உதாரணமாக ஒரு விஷம் கொண்ட தேளினை நாம் அடித்துக் கொன்று விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் உற்றுப் பார்த்துத் தான் அதை அடித்தோம் இருந்தாலும் அது எப்படி வேதனைப்பட்டதோ சூரியன் காந்த சக்தி கவர்ந்த அந்த விஷமான உணர்வலைகள் கரு முட்டைகளாக நம் இரத்த நாளங்களில் பரவிச் சுழலத் தொடங்கி விடுகின்றது.

நம் இரத்தம் போகும் பாதை எல்லாம் சுழன்று செல்லும் காற்று மண்டலத்தில் தூசிகள் எப்படிச் சுழல்கின்றதோ இரத்த நாளங்களில் அது ஊடுருவி மிதக்கும்.

அதாவது…
1.தரையிலே சக்கரம் வைத்து வாகனங்களை ஓட்டுகிறோம்
2.கடலிலே துடுப்பை வைத்துப் படகினைத் தள்ளுகின்றோம்
3.நீருக்குள் ஓடுவது போன்று இங்கே காற்றலைகள் படர்கின்றது… இரத்த நாளங்களில் அந்த அணுக்கள் சுழல்கின்றது.
4.இப்படிச் சுழன்று வந்தாலும் சுழற்சியின் தன்மையில் எந்த உறுப்புகளின் மீது மோதி அங்கே தேங்கி நிற்கின்றதோ அதற்குள் ஒட்டுகின்றது.

முட்டையைக் கோழி அடைகாக்கும் பொழுது அதனின் பருவமான பின் ஓடை விட்டு குஞ்சு எப்படி வெளி வருகின்றதோ அதைப் போன்று
1.இரத்த்த்தில் கருமுட்டையாக இருக்கும் விஷத்தை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
2.அந்த அணுவின் தன்மை நம் உடல் உறுப்பின் பாகத்தில் ஒட்டிக் கொள்கின்றது
3.பின் அந்த விஷத்தின் தன்மை நுகர்ந்து தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

தேள் கொட்டினால் எவ்வளவு விஷமோ எப்படிக் கடுகடுக்கின்றதோ இதைப் போல கடுகடுக்கச் செய்யும் அணுக்களாக அது உருப் பெற்று விடுகின்றது.

அப்படி அணுவாக விளைந்து விட்டால் அது தன் உணவுக்காகப் பசிக்கு ஏங்கும். அப்படி ஏங்கப்படும் பொழுது அதே உணர்வை நம் உடலுக்குள் இருக்கும் உயிர் அந்த உணர்ச்சியை உள் நின்று இயக்கப்படும் பொழுது அது ஆணையிடுகின்றது.

கண்ணின் புலனறிவுக்கும் உடலின் நிலைகளுக்கும் சுவாசிக்கும் மூக்கிற்கும் இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின்
1.கண் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.சுவாசித்த உணர்வோ உயிருக்குள் சென்று இந்த உணர்வலைகளை உடலுக்குள் பரவச் செய்து
3.உருவான அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றது இந்த உயிர்.

செடி கொடிகளை வளர்த்த பின் சூரியன் அதிலிருந்து வெளிப்படும் சத்தைக் கவர்ந்து வைத்து அதில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே உணர்வின் கிளர்ச்சி எழுந்து அதே செடியாக விளைந்து அதன் வித்துக்களை மீண்டும் உருவாக்குவது போன்று
1.நாம் நுகர்ந்தறிந்த அந்த விஷமான உணர்வுகள் கருவாகி உடலுக்குள் தேங்கிய பின் அணுவாக மாறிவிட்டால்
2.அந்த உணர்ச்சியைத் தூண்டி இந்த உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது நம் உயிர் மற்ற உறுப்புகளுக்கு ஆணையிடுகின்றது.
3.அந்த ஆணையிடும் சாதனம் சிறுமூளை.
4.இந்த உணர்வுகள் பட்டபின் ஆணையிட்டு உணர்வினை கவர்ந்து நுகரச் செய்து உயிருடன் இணைக்கச் செய்து உடல் உறுப்புகளில் பரப்பச் செய்கின்றது.

இரத்த நாளங்களில் இப்படிப் பரவி வருவது விஷத்தின் அணுக்களாகப் பெருக்கமாகின்றது. அது உணவாக எடுத்து விஷத்தின் அணுக்களாகத் தன் இனமாகப் பெருகத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

தேள் நம்மைக் கொட்டி விடுமே என்று நம்மைக் காக்கத் தான் அதை அடித்தோம். ஆனால் அது வேதனைப்பட்டுத் துடித்த உணர்வலைகள் நம் இரத்தங்களில் இப்படி விஷமான அணுக்களாகப் பெருகுகிறது.

தேளின் உயிரானமா மனிதனாகப் பிறக்கின்றது ஆனால்
1.தேளின் விஷத்தன்மை நம் இரத்த நாளங்களில் அணுக்களாகப் பெருகும் பொழுது மூட்டுக்கு மூட்டு அது பளீர்ர்ர்… என்று மின்னும்.
2.உறுப்புகளின் சில பாகங்களுக்குள் சென்றால் ஊசி தைப்பது போல் பளீர் என்று மின்னும்.
3.அந்த உணர்வலைகள் அங்கே பரவி நம் உடலில் வேதனை உருவாக்கும் அணுக்களாகப் பெருகி விடுகின்றது.

இதைத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சாஸ்திரம் கூறுகின்றது.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உயிர் அந்த உணர்வின் அணுவாக உருவாக்கி விட்டால் அந்த அணு தன் இனத்தைப் பெருக்கி விடும். அது தன் இனமாக எந்த அளவிற்குப் பெருக்குகின்றதோ அதன் உணர்வின் தன்மை கொண்டு அது வளர்ச்சிக்கு வருகின்றது.

இந்தப் பேருண்மைகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

வான் திறப்பின் திறவுகோல்

வான் திறப்பின் திறவுகோல்

 

நதி ஜீவ நதி – புதுப்புனல் பெருகிடும் மகா நதியின் மூலம் – சிறு துளி பெருவெள்ளம்.

சுரந்திடும் நீர்த்திவலைகள்… ஒன்று ஆயிரமாகப் பல்கிப் பெருகி ஓடிடும் சிற்றாறாக… ஓடி அதனுடன் இணைந்து கொண்டிடும் பல சிற்றோடை நீர் நிலைகள் மாநதியாக உருவெடுத்துக் கடலுக்குள் சங்கமிக்கின்றது.

ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் செயலும் அதே நிலைதான்…!

ஞான ஆற்றல் கொண்டிடும் அறிவின் கருவூலம் ஆத்ம பலம் எனும் சேமிப்பு நிலையைக் காட்டிடவே… மனித அறிவின் விஞ்ஞானம் பகுத்தறிவின் ஆற்றலின் வளர்ப்பால் இயற்கையை வென்று காட்டிடும் மதிநுட்பம்… நதி ஓட்டத்தின் குறுக்கே அணையை நிறுவி நீரின் சேமிப்பால் பயிர்களை வளர்க்கும் முறைகள் கண்டது.

மெய்ஞானத்தின் நெறிப்பயிர் வளர்க்கும் பக்குவம் உயிராத்மா பலம் பெற்றிடும் அமில முலாமை ஜீவகாந்த ஒளி சக்தியின் வலுவை உலகோதய உணர்வுகள் மோதிடும் எந்த நிலையிலும் விழிப்பாற்றல் குறைவுபடும் செயலுக்கே செயல் கொண்டிடும் மன எண்ணத்தின் நிலையை விளக்கிடவே முன்பு காட்டிய நிலைகள். ஆனால்
1.வானியல் தன்மைக்கே செயலுறுருங்கால்
2.மெய்ஞான விழிப்பாக வளர்த்திடும் சேமிப்பே “அதி உன்னதமான பொக்கிஷமாகும்…”

மலருக்குள் தேன் இருக்கும் வரை அது மது. தேனீக்கள் அதனை உண்டு உமிழ்கின்ற செயலில் அதுவே மருந்து. அது செயல்படும் தொழிலோ இயற்கை… அதன் செயல்பாட்டின் பொருளை நடத்திடும் மாற்று குண நிலைகள் செயற்கை.

மரத்தின் உச்சியில் தேன் கூட்டின் அடையில் சேமிப்பாகிடும் மருந்து போல் நாம் செயல் கொள்ளும் “மெய் ஞான விழிப்பாக்கும் ஈஸ்வர தியானத்தால் பெற்றிடும் உயர் நுண் மின்காந்த ஒலி அலைகள்…” சமைப்பின் ஒளியாக ஆத்ம முலாமின் சேமிப்பாகச் செயல்படுவதே ஆக்கம்.

1.நற்குணங்களும் அசுர குணங்களும் கொள்ளப்படும் செயலில்
2.அறிவை அறிவுறுத்தும் ஞானம் உலக நடைமுறையில்
3.சராசரி மனிதனுக்குப் பிடர்தலின் குணங்களாக அவன் வலுக் கொண்டிடும் எந்தக் குணங்களோ
4.அவன் சிந்தனை வசமாகும் வரை சுவைகள் வெளித் தோன்றாது.

ஆனால் ஆத்ம பலம் பெற்றிட எண்ணி ஏங்கிடும் ஆத்ம ஞானிகளுக்கு அறிவின் விவேகம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் தெய்வீக குணங்களால் தன் உயர்வைத் தானே கூட்டிக் கொள்ள… “அல்லாதவைகள் (தீமைகள்) தானே விலகும் என்பதே மாண்பு….”

உணர்வுகள் கூட்டிக் கொள்ளும் செயலுக்கு ஒரு உவமானம்.

மது வண்டின் தேன் ஒரு துளி பாறை மேல் சந்தர்ப்பத்தில் படர்ந்திட… மலையில் வாழ்ந்து வரும் ஓர் கரடி அதனைச் சுவைத்துவிட… மேலும் துளித்திடும் தேனால் கவரப்பட்டுக் கரடி அந்தத் தேன் கூட்டையே கேடாக்கத் துணிந்த செயலுக்கு இருவித நிலைகளை உரைத்தோம்.

1.தீதெண்ண குணங்கள் நற்குண சேமிப்பின் சக்தியைச் சுவைத்திட்டால்
2.நாம் வளர்த்துக் கொள்ளும் அந்த குணங்களுக்கே வலு வீரியமாகச் செயல் கொண்டு
3.மனித ஞானம் வளர்ப்பில் தேக்கத்தைப் பெறும்.

ஆனால் தீதெண்ண உணர்வுகள் மோதிட்டாலும்… ஜெபித்திடும் தியான வழியில் நற்குணங்களின் வலு வீரியம் செயல் கொண்டு தீதெண்ண நிலைகள் நீக்கிட…
1.கூட்டையே சிதைத்திடும் கரடியை… தான் கொண்ட வீரியத்தால் தேனீ கொட்டி வீழ்த்திட்ட நிலை போல்
2.அல்லாதென அமில நிலைகள் அகல… நல்லவை பெருகிடும் அமுதமாக
3.சேமிப்பின் ஆற்றல் பெருகி வழிகாட்டிடும் உபாயமாக அதுவே “வான் திறப்பின் திறவுகோலாகின்றது…”

நன்மை தீமைகளை உணருவதைக் காட்டிலும்… உயர்ந்த சம நிலையை உணர்த்துகின்றேனப்பா

நன்மை தீமைகளை உணருவதைக் காட்டிலும்… உயர்ந்த சம நிலையை உணர்த்துகின்றேனப்பா

 

1.மனதில் கொள்ளப்படும் குண நலன்களால்
2.நான் எனும் உயர் நிலையைச் சிறக்கச் செய்திடும் மனிதன்
3.கனிவுறும் ஞான தேசிகனாகின்றான்.

உலகத்தின் இயக்கம் போல் உடலின் இயக்கம்… சமைப்பின் குணம் காட்டும் உணர்வின் அலைகள்… எங்கிலும் ஜீவன் கொண்டே இயங்குகிறது. காலத்தின் இயக்க கதி ஓட்டத்திலிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக் காணல் என்பது ஒவ்வாத செயல்…!

ஆதி சக்தியின் சக்திக்கே சக்தி அளித்திடும் இணக்க இயக்கமாக… ஆத்ம பயிர் வளர்த்தல் என்பதே…
நற்குண…
நன்னெறி கொள்ளும்…
மனத்தின் திட சங்கல்ப…
“உறுதி நிலை…”

மோகம்… கோபம்… அதி ஆசை… என்கின்ற குணங்களின் வளர்ப்பு மனிதனை இயற்கையின் இயக்கத்தில் இருந்து தனிமைப்படுத்திக் காட்டும்.

குணங்களின் முற்றுதல் என்பது
1.நெருப்பைத் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற விறகு போல்
2.”அதிக ஆசையே – வீசும் காற்றாக…” வளர்த்துக் கொண்ட குணங்களின் உராய்வால்
3.மனம் ஆகிய பெருங்காட்டில் அதுவே பற்றிக் கொள்ளும் அக்கினியாகிவிடும்.

நல்ல நிலை வளர்ப்பாக்கும் செயல் இரு நிலை தவிர்த்திருத்தல் என்பது சூட்சுமம். உலகின் கண் உற்பாதங்கள் பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில் உரையின் பொருள் மறைத்து உரைப்பதில் பொருள் கிடையாது என்றே மெய்ஞானச் சுடர் ஆக்கும் பக்குவத்தின் பாகமாய் உரைக்கின்றோம்.

ஞானம் என்பது எது…?

பகுத்தறியும் அறிவு பெற்ற மனிதன் அந்த அறிவின் முதிர்வின் பக்குவத்தில் நன்மை தீமைகளை உணர்கின்றான்.
1.நாம் கூறிடும் பக்குவம்…
2.இதற்கும் மேலாக “சமமான நிலை…”

உயிராத்ம சக்தியின் தெய்வீக நிலையை உணர்ந்தே “அதைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று செயல்படுவதில் இருக்கின்றதப்பா ஞானம்…” தீய குணங்கள் விலக்கி நற்குணத் தன்மைகளை கடைப்பிடிக்கும் போது தான் ஞானம் வெளிப்படுகிறது.

1.தன் மனத்தின் உறுதியால்
2.பிறருக்கு நாம் செய்திடும் சேவையாக விளங்கி
3.பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவிர்த்திடுதல் எதுவோ… அதுவே மெய் ஞானத்தின் முதிர்ச்சி…!

ஞான முறுவல்

ஞான முறுவல்

 

மனிதன் ஏடறிவால் கற்கின்ற கல்வி…
1.புவியியல் எனப்படுகின்ற உன்னதத் தன்மைகள்
2.உயிரியல் எனப்படுகின்ற சூட்சும நிலைகள்
3.வானியல் என்கின்ற மூலபிரக்ருதி ஆதியின் அந்தம் உணர்ந்து கொள்கின்ற செயல் தன்மைகள் அனைத்தும்
4.மெய்ஞானத்தைக் கூட்டி போதனையின் வழி அறிந்ததைத் தன்னுள் தான் தெளிந்து
5.பெற வேண்டிய உண்மை நிலை எதுவோ அந்நிலையாய் விளங்கிடவே
6.அன்று சித்தர்கள் காட்டிய சீரிய உண்மைகளை இன்றைய புத்தக அறிவால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியுமா…?

கற்கின்ற கல்வியின் சாரங்கள் எந்நிலையாயினும் தொடருமா…? கற்பவை கற்ற நிலையில் வராது.

1.செவி வழியாக அறிந்து கொண்டிடும் காரிய உண்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு உரைத்திட…
2.சொல்லின் கோர்வைகள் மாறுபடா நிலையாக உரைத்திட இயலாத கல்வியின் தன்மை…
3.அறிந்து கொண்டதை… கொண்ட வழியிலே உரைத்திட வழி உண்டு.

மெய்ஞானத்தின் வழி உற்றவைகள் (உகந்தவைகள்) நற்குணங்களாகப் பரிணமிக்க நன்னெறி வளர்ப்பில் திட மனது கொள்கின்ற நிலையும்… அற்றவைகள் (ஆகாதவைகள்) என்று உரைக்கின்ற மனிதனின் நடைமுறை வாழ்க்கை செயலில் அதை எண்ணிச் செயல்படும் பொழுது உற்ற பயனே வரும் என்ற எண்ணிடாத் தன்மையாக… அற்றவைகளின் செயலில் அந்நிலையையே மீண்டும் எண்ணி ஏக்கமாகச் செயல்படும் பொழுது அந்த வினையின் தொடரே “விதி…” என யார் தான் உணர்கின்றனர்…?

மெய்ஞானத்தின் சுடராக நீக்கமற விளங்கும் மெய்ஞானச் செல்வங்களே…!
1.”முக்தி…!” என்று பக்தி வழியாக அதை உரைத்திட்டால் உரைக்கின்ற உரையின் முழுமை (உங்களுக்கு) விளங்கிடாது.
2.குழந்தைக்கு மருந்து புகட்டிடும் தாய் சுவையான பதார்த்தங்களைக் காட்டி நோய் அகலக்கூடிய அந்த மருந்தை அளிப்பதை போல்
3.இன்றைய மனித குலத்தையே மனித குணத்தையே பீடித்துள்ள எண்ணத்தில் செயல்படுகின்ற வினைகள் அகல
4.மாமகரிஷிகள் உவந்து (மகிழ்ந்து) ஊட்டுகின்றனர்… இவை அனைத்துமே பாட நிலை தான்.

ஆத்ம பலம் பெற்று… உயிர் ஆத்மக் கலப்பாக… ஆதிசக்தி எனும் “ஜோதித்துவ சங்கமத்தின் சங்கமேஸ்வரனாய்” சிறப்புற விளங்குதலே… சித்தன் சூட்டிய சொல்… அகம் காட்டிடும் அழகு… என்றும் அகலா “ஞான முறுவலாகப் (மகிழ்ச்சிக் குறி) பூத்திட வேண்டுமப்பா…!”

ஞான முறுவல் காட்டிடும் முகம்… அகம் வாழ் ஜெபமாய் சித்தி நிலை பெற்றிருக்கும்…! என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.

1.ஞான முறுவல் கொள்கின்ற மனத்திற்குள் கோபம் ஏது…?
2.கோப குணம் தவிர்த்திட நந்தி ஞான முறுவல் கொள் என்பார்கள் சித்தர்கள்
3.உள்ளன்போடு உவந்து… “சினம் தவிர்க்கும் உபாயம்” விருப்பமோடு செயல் நிலை ஆக்கிடவே இதை உரைக்கின்றோம்.