அகஸ்தியரின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்து “எவ்வளவு தூரத்துக்கு அனுப்ப முடியுமோ” அதைப் பரவச் செய்யுங்கள்

அகஸ்தியரின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்து “எவ்வளவு தூரத்துக்கு அனுப்ப முடியுமோ” அதைப் பரவச் செய்யுங்கள்

 

இந்தக் காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்தி நிறைய இருக்கின்றது
1.நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்குமளவிற்குத் தான் தயார் செய்து கொடுத்துள்ளேன்
3.அதை எடுத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு தான்.

காலையில் கண் விழித்த உடன் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். “கஷ்டம்” என்ற வார்த்தைகளை விட்டுத் தள்ளுங்கள்… அது புகாதபடி தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்காக வேண்டி
1.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
2.உங்கள் தாய் தந்தையரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று குருதேவரை நினைத்து
4.எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
5.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் உள்ளே செலுத்துங்கள்.

உங்களுக்கு அந்த அமைதி கிடைக்கும். அமைதிப்படுத்திய பின் இன்னது தான்… நல்லது தான் நடக்க வேண்டும் என்று நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அதற்குண்டான வழி கிடைக்கும்.

உதாரணமாக உடம்பிலே வலி இருக்கிறது என்றால் அங்கே நினைவைச் செலுத்தி இரண்டு தடவை மூன்று தடவை கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அங்கே பாய்ச்சுங்கள்.

உடலிலே எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று பாய்ச்சுங்கள். அந்த உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சிறிது நேரம் நினைவைச் செலுத்துங்கள்.
1.முதலில் சிறிது வலி அதிகமாகும்
2.சிறிது நேரம் ஆனால் வலி குறையும் அமைதி கிடைக்கும்
3.உடலில் உள்ள வாத நீர் பித்த நீர் எல்லாம் நீங்கி உடல் நன்றாக வேண்டும் என்று தியானித்துக் கொள்ளுங்கள்.
4.இதைச் சுவாசித்தால் அந்த எண்ணங்கள் அங்கே செல்லும்… வேதனை துரிதமாகக் குறையும்.

உங்கள் அனுபவத்தில் அதைக் கொண்டு வரலாம்.

சில பேருக்கு உடலில் ரொம்ப முடியாமல் இருக்கும். அதற்கு மருந்து போட்டு தணித்துக் கொண்டு தியானத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படி அனுபவப்பட்டுத் தெரிந்து கொண்ட பின் “காற்றிலே உயர்ந்த சக்தி இருக்கின்றது” என்று எண்ணி அதை எடுத்து நம் உடலுக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்

குடும்பத்திற்குள் நல்ல ஒற்றுமை ஏற்படும் எல்லாம் சீராக இருக்கும் எதையுமே சிந்தித்து செயல்படக்கூடிய சக்தி அந்த இடத்தில் வருகின்றது.

டாக்டர்கள் எப்படி… நோய்களுக்கு உண்டான மருந்துகளை பக்குவப்படுத்திக் கொடுக்கின்றார்களோ அது போல் “உங்கள் ஆறாவது அறிவை டாக்டராகப் பயன்படுத்தி” அவ்வப்பொழுது இப்படிச் சீராக்கிக் கொள்ள முடியும்.

அதே சமயத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது…
1.இந்த உடல் நமக்கு சொந்தமில்லை… சொந்தமில்லாததை நாம் சொந்தமாக்க் கொண்டாட வேண்டாம்
2.நாம் சொந்தம் கொண்டாட வேண்டியது எல்லாம் உயிரான நல்ல உணர்வு…
3.ஆறாவது அறிவு கார்த்திகேயா அதை நீங்கள் சொந்தம் கொண்டாடுங்கள் வாழ்க்கையில் இதுதான் நிலையானது.

காரணம்… இந்த உடல் மண்ணுக்குத் தான் செல்கின்றது. மண்ணுக்குச் செல்லும் இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றோம். ஆனால் என்றுமே நிலையாக இருக்கும் உயிருக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆகவே உயிரைப் போன்றே உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும் என்ற அந்த ஆசை… எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆசை எல்லாவற்றையும் தெரிந்திடும் அருள் ஒளியாக நாம் கொண்டு வந்தால் என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடியும்.

நாம் ஒவ்வொருவரும்…
1.அகஸ்தியன் எடுத்த அருளை நமக்குள் பதிவு செய்து
2.அந்த அலைகளை உங்களால் எவ்வளவு தூரம் எடுத்து அனுப்ப முடியுமா அனுப்புங்கள்.
3.அது உங்களுக்கும் நல்லது உடலுக்கும் நல்லது இந்த நாட்டுக்கும் நல்லது இந்த உலகிற்கே நல்லது.

இன்றைய உலகம் கடும் விஷத்தன்மையாக இருப்பதால் உங்கள் உடல் உறுப்புகள் அனைத்துக்குமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சச் சொல்கின்றோம்.

காலையில் எழுந்து ஒரு ஆறு மணிக்குள் முடிந்த அளவு அந்த உயர்ந்த சக்தியை எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள் ஒரு அரை மணி நேரமாக உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைப் பாய்ச்சுங்கள்.

ஒரு நல்ல பலனைத் தரும்.

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு

 

இன்றளவும் இப்பூமியின் நியதியையும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையையும் ஆவி உலக ஆத்மாக்களின் செயல் நிலையையும் இப்பூமியுடன் தொடர்பு கொண்ட மற்ற மண்டலங்களின் நிலையின் வழித்தொடரையும் சிறுகச் சிறுக உணர்த்தி வந்துள்ளேன்.

இனி நாம் எந்நிலை கொண்ட ஜெபத்தினால் இக்கலியின் பிடியிலிருந்து மீள முடியும்…? என்ற சக்தித் தொடரைத்தான் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியில் நாம் இம்மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திட நம் ஆத்மாவுடன் பெற்ற சக்தியின் ஜெயத்தினால் தான் இன்று இந்நிலையில் வாழ்ந்திடும் இப்பாக்கியமே.

இப்பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான்…
1.இப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித ஆத்மாவாய்
2.மனித உடல் கொண்ட ஜீவன்கள் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட முடிந்தது.

இவ்வளர்ச்சி கொண்ட இம்மனித ஆத்மாக்களின் எண்ண செயல் நிலையும் இப்பூமியில் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இல்லாமல்… இந்த ஞான வளர்ச்சி ஜீவ ஆத்மாக்களில் வாழ்ந்த ஆத்மாக்களே… இப்பூமியில் ஆயிரத்தில் ஒன்றிரண்டு விகித நிலைகளை விடக் குறைவுதான்.

நாகரீக வளர்ச்சி கொண்ட ஆத்மாக்கள் வாழ்ந்திடும் நிலைகள்தான் நமக்குத் தெரிகின்றது. இவ்வெண்ண நிலைக்கொப்ப ஆயுட்காலமும் இம்மனித ஆத்மாக்களின் நிலையில் ஒத்துள்ளன.

1.நாம் அறிந்திடாமல் “நமக்கும் மேல் நீடித்த ஆயுள் காலங்கள் கொண்ட” ஆத்ம உடல் கொண்ட மனிதர்கள் இப்பூமியில் பலர் உள்ளனர்.
2.ஆயிரம் காலங்களும் மாற்றுடல் ஏறாமல், ஒரே உடம்பில் வாழ்ந்திடும், எண்ண வளர்ச்சி நிலையில்லாத
3.ஒரே நிலை கொண்ட குறுகிய எண்ணத் தொடரில் ஆத்ம உடல் பிம்பங்கள் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
4.இந்நாகரீக வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் உடல் நிலையின் வளர்ச்சி நிலை அங்கில்லை.

இவ்வெண்ண வளர்ச்சியின் நிலையினால்தான் இம்மனித ஆத்மாக்களின் பெருக்கமே கூடிவிட்டது.

ஆனால் நாம் அறிந்திடாமல் இப் பூமியில் வாழ்ந்திடும் நாகரீக அறிவு வளர்ச்சியற்ற ஆத்ம உடல் கொண்ட மனிதர்களின் நிலை
1.நம் நிலைக்கு மாறுகொண்டதாக உள்ளது… மிருகங்களின் நிலைக்கொப்ப
2.ஆனால் அவ்வுடல்களில் எவ்விஷத்தன்மையும் பாய்ந்திடாது.

காடுகளில் பாம்பு, நரி இப்படி உள்ள மிருக இனங்கள் எப்படி வாழ்கின்றனவோ அப்படியே தன் இன வர்க்கத்தை “இவ்வெளியுலக பிடிக்குச் சிக்கா வண்ணம்” அவ்வுடல் ஆத்மாக்கள் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் இவ்வெண்ணத் தொடரின் வழித்தொடரில் வந்த நம் மனித உடல்கள்தான் இக்கலியின் மாற்றத்தில் எண்ணச் சிதறல் பட்டும்… இவ்வியற்கையின் சீற்றத்திற்கு அடிபட்டும் மாளப்போகின்றன.

இவ்வெளி உலகப் பார்வையில் சிக்காமல் இப்பூமியில் மனித ஆத்மாவாய் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள மனித இன வர்க்கம் எல்லாம்… இக்கலியிலும் ஜீவன் பிரியாமல் வரப்போகும் கல்கியிலும் வழித்தொடர் பிடித்தேதான் வாழப் போகின்றனர்.
1.அவர்களின் எண்ணத்தில் இம்மாற்றமும் இவ்வியற்கையின் சீற்றத்தின் பயமும் எதுவும் தாக்கிடாது.
2.இன்றைய செயற்கையினால் ஏற்படுத்திய வெடிகுண்டுகளைப் பாய்ச்சினாலும் அவ் உடல்களை பாதிக்காது.

எண்ண நிலையேயில்லாமல் குறுகிய நோக்கில் தன்னைக் காத்து வழிவந்த ஆத்மாக்களுக்கு நம்மைக் காட்டிலும் வீரிய சக்தி பெற்றுள்ளபோது ஞான சக்தியின் செயலாக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நாம்… நம் ஆத்மாவை விஷக்காற்றிலிருந்தும் விஷமாய் இவ்வுலக நிலையையே மாற்றம் கொள்ளும் இவ்வெண்ண நிலையின் தாக்குதலில் இருந்தும்…
1.எவ் அணு வெடிகள் நம் மேல் பாய்ந்தாலும் நம் உடலில் உள்ள அத்தீய சக்தியை ஏற்கா வண்ணமும்
2.நம்மை நாம் இவ்வொளி ஒளியாய் ஒளிர்ந்திடும் சக்தியில் நம் உடல் பிம்பத்தையும் நம் ஆத்மாவையும் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியிலே நம்மைப் போன்ற ஆத்ம உடல் கொண்டு வாழ்ந்து வாழ்க்கையின் உன்னத சக்தி உணர்ந்து சூட்சும நிலை கொண்ட பல கோடி நற்பெரியோர்களின் ஆசையின் தொடர் நிலையை நம் ஆத்மாவின் சக்தியில் செயலாக்கிட… “அவர்களின் வழித்தொடர் நமக்கும் கிட்டும்…”

1.இவ்வுலகில் தோன்றிய ஆசை நிலையினால் இவ்வுலகைக் காத்திடும் ஆசையிள்
2.பல ஆத்மாக்களை இப்பக்தியின் ஈர்ப்பில் பல சித்தர்களும் பல ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர்.

நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இவ் ஓங்கார நாதம் கொண்ட ஒலியுடனே கலந்து… ஒளிபெறும் சக்தி நிலையை நாம் அடைந்திடும் வழித்தொடர் நிலையை அறிந்தே வாழ்ந்திடுவோம்.

“விஞ்ஞான முறைப்படி” யாம் கொடுக்கும் தியானப் பயிற்சி

“விஞ்ஞான முறைப்படி” யாம் கொடுக்கும் தியானப் பயிற்சி

 

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்குத் தான் இந்தத் தியானமே.

உங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்ய வேண்டும்.
1.இதை நீங்கள் வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் கூடுமானவரையிலும் உடலில் வரக்கூடிய சங்கடங்களை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்
2.அந்த ஞானத்தை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்வதைப் போன்று நீங்கள் ஆசைப்பட வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
3.எங்கள் சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற
4.அந்த ஆசையோடு ஏங்கி நீங்கள் எடுக்க வேண்டும்.
5.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வர வேண்டும்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும்…?

நம் இரத்தத்தில் இருக்கக்கூடிய நீரையும் விஷத்தன்மையையும் பிரித்து எடுக்கும் கிட்னிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

பாலைக் காய்ச்சி எடுத்துத் தான் நாம் வெண்ணெயைப் பிரித்து எடுப்போம். ஆனால் இப்போது மிஷினை வைத்து என்ன செய்கின்றார்கள்…? மிஷினைச் சுற்றவிட்டு இந்த வெண்ணெயை பிரித்து எடுத்து வைத்து விடுகின்றார்கள்.

இது மாதிரி நம் உடலுக்குள் அறியாது புகும் விஷத்தன்மையை நீக்குவதற்கு…
1.மிஷின் மூலம் வெண்ணையைப் பிரிக்கும் சக்தியைக் கொண்டு வருகிற மாதிரி
2.நாம் அந்த சக்தியை நம் இரத்தத்தில் கலக்கச் செய்து நமது சிறுகுடல் பெருங்குடலிற்கு உருவாக்கிய அந்த அணுக்களுக்கு இதைப் பெறச் செய்து
3.எல்லாம் வரிசையில் வரப்படும் போது சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் வலுவாகிவிட்டால் விஷத்தைச் சுத்தமாக பிரிக்கும்.
4.அப்படிப் பிரித்தால் (சிறுநீராக வடித்து விட்டு) நல்ல இரத்தம் இருதயத்திற்கு வருகின்றது
5.இருதயம் நன்றாக சுத்திகரிக்கப்பட்ட அந்த இரத்தத்தைத் தான் நம் உடல் முழுவதற்கும் பரப்புகின்றது… நமது சிறுமூளைக்குப் போவது முதற்கொண்டு.

உதாரணமாக வேதனையோ விஷமோ ஏதாவது வந்தால்… மேலே சென்றவுடன் தலையில் நீர் கோர்த்து விட்டது… “தலை கிண்” என்று இருக்கின்றது… விஷமான நிலையைப் பார்த்தால் நல்ல சிந்தனை வருவதில்லை.

அதாவது அசுத்த இரத்தம் சிரசு பாகம் போய்விட்டது என்றால் மூளை பாகங்கள் செயலிழந்து விடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை. ஆனால் இப்படி எல்லாம் போய்விடுகின்றது.

ஆகவே…
1.இருதயத்திற்கு நல்ல ரத்தத்தைக் கொண்டுவர வேண்டும்… அது உங்களால் முடியும்.
2.யாம் சொன்னபடி அந்தந்த உறுப்புகளைத் தைரியப்படுத்த வேண்டும்.
3.அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை சேர்த்து பழக வேண்டும்.

இது எல்லாம் உங்களுக்கு கஷ்டமான காரியம் இல்லை.

திட்டுபவர்களைத் திருப்பி எண்ணுகின்றீர்கள். அவனுடைய உணர்வு உள்ளே வராமல் தடுப்பதற்குத் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் போதும். இது வலுவாகி உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வரும்.

அதற்குத்தான் இப்பொழுது கண்ணின் கருமணிகள்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள்… எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள்… எலும்புக்குள் உள்ள ஊன்… இது எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரெக்கார்ட் செய்வது.

தசை மண்டலங்களுக்குள்ளும் அதைப் படி படியாக்க் கொண்டு வந்து தோல் மண்டலத்தில் உள்ள அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவேற்றிக் கொண்டால்
1.இந்தக் காற்றில் தீமைகள் இருந்தாலும் கூட நம் பக்கத்தில் வராது கொஞ்சம் தள்ளிவிட்டு கொண்டே இருக்கும்.
2.நம் சிந்தனைகள் நன்றாக இருக்கும்.

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்

 

உயிரணுவாய் உதித்திட்ட இவ்வுயிர் அணுக்களே வளர்ச்சியின் வழி சக்தி நிலைகொண்ட உயிராத்மாவால் இம் மனித உடல் பெற்று, எண்ண நிலையின் வளர்ச்சித் தொடர் கொண்டு, அவ்வெண்ணத்தின் ஞான சக்தியினால் பல நிலைகளைக் கண்டுணர்ந்து, ஆத்ம சக்தியை எண்ண சக்தியுடனே வளர்ச்சி கொண்டு வந்த நிலையில், இக்கலியின் முற்பட்ட அவதார காலங்களில் எல்லாம் வந்த ஞானத்தின் வழித்தொடர் சக்தி நிலையை கிருஷ்ணாவதார கால முதற்கொண்டு, இக்கலியின் காலத்திலும் நாகரிக வளர்ச்சி என்ற வளர்ச்சி நிலை பெற்று, வழி வந்திடும் நிலையில் “ஞான வளர்ச்சி நிலை குன்றிவிட்டது…”
1.நல்லொழுக்கம், நல் ஞானம், சத்தியம், தர்மம், நியாயம் என்ற நற்சக்திகளின் வழித்தொடரில் சென்றிட…
2.இன்று இக்கலியில் பிறப்பெய்தி வாழும் இம்மனித ஆத்ம சக்தியிலேயே தொடர் நிலை இல்லை.

இக்கலியில் மனிதர்களாய் இன்று வாழ்பவர் எல்லோருடைய நிலையிலும், இக்கலிக்கும் முற்பட்ட காலத்திலேயே வாழ்ந்தவரின் எண்ண சக்தி நிலையில் வந்திட்ட ஆத்மாக்களாய்… இக்கலியில் பிறப்பெடுத்து வாழ்வதினால்… இன்று வாழும் அனைத்து ஆத்மாக்களின் எண்ண சக்தியே… அன்று வாழ்ந்தவரின் தொடர் நிலையினால் வந்த வினைதான்.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களின் எண்ணம் முன் ஜென்மத் தொடருடன் செயல்பட்டு வழி வந்த வினை இன்றைய இக்கலியின் பேராசை நிலை.
1.நாமாய் இந்நிலையை வளரவிடவில்லை… வளர்ச்சியின் தொடர்நிலை தான் இந்நிலை.
2.ஒவ்வோர் உடலுக்குள்ளும் அவ்வுடலுக்குகந்த ஆத்மா ஒன்றுதான்.
3.ஆனால் ஒவ்வோர் உடலுக்குள்ளும் இருந்து செயல்படும் மற்ற அணுக்களின் நிலை அதிகம்.

தோன்றிக் கொண்டே உள்ள உயிரணுக்கள் இப்பூமியில் உதித்து வளர்ச்சி கொண்ட எல்லா உயிர்த் துடிப்புக் கொண்ட கோளத்திலும் அன்றன்று உயிர் பெற்றுக் கொண்டே வளர்ந்து வருகிறது.

தாவரங்களில் எப்படி அதன் சுவாசத்துடன் கூடிய புழுக்கள், பூச்சிகள், வண்டுகள் வளர்கின்றனவோ அந்நிலை போன்றே இப்பூமியில் கழிவிடங்களில், நிலத்தில், நீரில் இப்பால்வெளி மண்டலத்தில் மற்றப் பிராணிகள், பட்சிகள், மனிதர்கள் எல்லாவற்றிலுமே இவ்வுயிர் அணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

அந்நிலையில் நம் உடலுடன் சூரியனின் ஒளிக்கதிரிலிருந்து வந்திடும் உயிரணுக்களின் நிலை பல வளர்ந்து கொண்டே ஒவ்வொரு நாளும் உள்ளன. ஒவ்வொரு நாள் என்பது மட்டுமல்ல… நம் சுவாச நிலை செயல் கொண்டிடும் நிலையிலெல்லாம் “பல உயிரணுக்களின் நிலை நம் உடம்பிலும் ஏறுகின்றது…”

இப்புதிய உயிரணுக்கள் மட்டுமல்லாமல் இக்காற்றினில் படர்ந்துள்ள ஏற்கனவே பல நிலைகளில் வாழ்ந்து பல உடல் நிலைகளை மாற்றிக் கொண்ட “பல எண்ணக் கலப்புக் கொண்ட உயிரணுக்களும்” நம் சுவாசத்துடன் நம் உடலுடன் ஏறுகின்றன.

நம் உயிராத்மாவும் உயிரணுவாய்த் தோன்றிப் பல நிலைகள் பெற்று…
1.பெற்ற பிறகு இம்மனித ஆத்மாவாய் உடல் கொண்ட எண்ணக் கலப்பு கொண்ட
2.வாழ்க்கையின் ஏழு ஜென்ம நிலை கொண்ட சக்தி நிலை தொடர்பும் கொண்டு
3.இன்று வாழ்ந்திடும் இவ்வுடலுடன் கூடிய ஆத்மாவை
4.இவ்வெண்ணச் சிதறலில் இருந்தும் இன்றைய வாழ்க்கை நெறி முறையில் இருந்தும் தப்பி ஞான சக்தியின் வழித்தொடரை அறிய
5.நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய இப்பிடியிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்.

இன்றுள்ள இவ்வளர்ச்சியின் தொடரிலேயே மனித ஆத்மாக்கள் சென்றிட்டால் இச்செயற்கையின் ஆசையினாலும் இவ்விஞ்ஞான எண்ண வளர்ச்சியினாலும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையை “சூனிய நிலை போல் சக்தியிழந்து” செயலற்ற நிலையில் செல்லும் நிலைக்குத்தான்… இக்கலியின் பிடியில் நம் ஆத்மாக்கள் சிக்குண்டுள்ளன.

இவ்வணுக்கதிர்களை ஆராயும் நிலைக்காக இப்பூமியில் இருந்தும் வான மண்டலத்திலிருந்தும் பல அணுக்கதிர்கள் ஒன்றுபடுத்தி இவ்விஞ்ஞானத்தில் செயல்படுத்திடும் நிலையினால்
1.இவ்வணுவின் வெடிப்பு (விஷமான குண்டுகள்) அடிக்கடி ஏற்படுத்துவதினாலும் இக்காற்று மண்டலமே செயலற்றதாகி
2.மனித ஆத்மாக்களின் சுவாச நிலையும் மாறு கொண்டு இவ்வெண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு
3.சூனிய நிலைகொண்ட பைத்தியங்களாய்த் தான் இம்மனித ஆத்மாக்களின் நிலையும் செயல்படப் போகின்றது.

அறிவு நிலை கொண்ட ஆத்மாக்களுக்கே இந்நிலை என்றால் இம்மனிதனிலிருந்து மாறு கொண்ட மிருகங்கள் பட்சிகள் இவற்றின் நிலை எப்படி இருந்திடும்…?
1.எண்ண வளர்ச்சியை ஞானத்தின் சக்தி நிலை தொடர்பு படுத்தி
2.சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தினால் அன்றி இக்கலியின் பிடியிலிருந்து தப்புவது கடினம்தான்.

யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியின் முக்கியத்துவம்

யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியின் முக்கியத்துவம்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செயல்பட்டால் நம்முடைய சிந்தனைகள் தெளிவாக இருக்கும்
1.அதன் வழி நல்ல சுவாசத்தை நாம் கொண்டு வர வேண்டும்.
2.அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்… சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் (ஞானகுரு).

இதெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் பல நிலைகளைப் பார்த்துத் தான் மற்றவர்கள் கொடுப்பார்கள்.

யாம் சாதாரணமாகக் கொடுத்த பின்… ஆரம்பத்தில் ஒரு சிலர் நிறையத் தவறு செய்து விட்டார்கள். ஆனால் அதே சமயத்தில் அப்படிப்பட்ட ஒருத்தர் இருவருக்காக நான் எல்லாவற்றையும் சொல்லாமலும் இருக்க முடியாது.

சில இடங்களில் மிகவும் கட்டுப்பாடாக இருப்பார்கள் ஆனால் இங்கே வருபவர்கள் எல்லோருக்கும் அது கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.

இவ்வளவு பெரிய விஷயங்களை யாரும் பப்ளிக்காகச் சொல்ல மாட்டார்கள்…!

நான் சொல்வதை எல்லாம் கேட்கின்றாயா…? அல்லது என்ன செய்கின்றாய் ஏது செய்கின்றாய்…? என்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்பு அவரை அனுமதித்து அதற்குபின் அங்கே வர முடியும்.

எல்லோருக்கும் தாராளமாக கிடைக்க வேண்டும் என்று தான் நான் செய்கின்றேன்.
1.ஏதோ நூறு பேர் வருகின்றார்கள் என்றால் அதிலே நான்கு பேராவது தேர்ந்தெடுத்து
2.இது போன்று அந்த நான்கு பேர் நான்கு நான்காகச் சேர்த்து நூறு பேருக்கு மாற்ற முடியும் என்ற
3.அந்த நம்பிக்கையில் தான் நான் இதை சொல்லிக் கொண்டு வருகிறேன்

ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் கோவில். கடவுள் வீற்றிருக்கக்கூடிய அந்த இடம் பரிசுத்தமாக வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

ஆகையினால் அதற்குண்டான பயிற்சியாக உங்களுக்குள் இதை கிடைக்கச் செய்வதற்கு தான் செய்கின்றேன் இல்லையென்றால் எனக்கு வேண்டிய ஆட்களுக்கு… “நான் சொன்னபடி கேட்பவர்களுக்கு” மட்டும் செய்யலாம்.

தெரிந்தவர்களும் இருக்கின்றார்கள்… தெரியாதவர்களும் இருக்கின்றார்கள்
1.என்னவென்ற விபரமே தெரியாது…
2.ஆனால் நீங்கள் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்
3.நீங்கள் எல்லோரும் பெற்றால் தான் எல்லோருடைய தீமைகளை அகற்ற முடியும்

வீட்டில் ஒருத்தர் இதைச் சீராகக் கடைப்பிடித்தால் கூட நல்ல காற்றலை வரப்படும் பொழுது வீட்டில் உள்ள மற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்.

எல்லோருக்கும் இந்த சக்தி பெற வேண்டும் என்ற இந்த ஆசையில் தான் நான் செய்கின்றேன்…
1.இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடாதீர்கள்
2.சாமி (ஞானகுரு) லேசாகச் சொல்கின்றார் என்று…!

இங்கு சாமியை வந்து பார்க்க வேண்டும் என்றால் வாசலுக்கு முன்னாடி யார்…? எந்த ஊர்…? என்று கேட்டு… பிறகு அங்கு உட்காந்து “எப்பொழுது சந்திக்கலாம்…?” என்று மணியைக் கேட்டு… ஆர்வத்தை எல்லாம் தூண்டி இங்கே கொஞ்ச நேரம் உட்காருங்கள் என்று சொந்னோம் என்றால்… இத்தனை தடைகள் வரும் பொழுது “ஏதோ பெரிதாக என்று நினைக்கின்றார்கள்…”

ஆனால் நான் அப்படி எதுவுமே செய்யவில்லை. தாராளமாக இங்கே வரலாம். அதே போல் இங்கே வெளிப்படுத்தியுள்ள புத்தகங்கள் நிறைய இருக்கின்றது என்று வாங்குவார்கள்.
1.கடைசியில் கிழித்துப் போட்டுப் போய்விடுவார்கள்
2.படிக்கக்கூட மாட்டார்கள்… அலட்சியமாகப் போட்டு விடுவார்கள்
3.அதனால் தான் இப்பொழுது ஓசியாக புத்தகம் கூட ஜாஸ்தி கொடுப்பதில்லை
4.கொடுத்தோம் என்றால் வாங்கி படிக்க மாட்டார்கள்… கீழே போட்டு விடுவார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உங்களை மனிதனாகப் பிறக்கச் செய்த ஆறாவது அறிவு கார்த்திகேயா…! அந்த அறிவைத் தெளிவாக்க வேண்டும்.

1.உயிர் அறிவாக்கிய அந்த அறிவைத் தெளிவாக்கி உயிரோடு சேர்த்து ஒளி ஆக்க வேண்டும்… இதுதான் இப்பொழுது நமது குருநாதர் காட்டிய அருள் வழி.
2.அதை நாம் செய்தோம் என்றால் நமது வாழ்க்கையிலே இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற முழுமை அடையலாம்.

ஆனால் இந்த உடலுக்காக இச்சைப்பட்டோம் என்றால் அடுத்த உடல் நிச்சயம் உண்டு. அதிலிருந்து தப்ப முடியாது. நாம் எந்த குணமோ அதற்குத்தக்க இந்த உயிர் ரூபத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்.

ஆரம்பத்திலிருந்து பார்க்கின்றோம் அல்லவா…? எத்தனையோ இம்சைப் பட்டு இந்த இம்சையிலிருந்து தப்பிக் கொள்ள முடியும் என்று இந்த உடல் பெற்ற பிற்பாடு மீண்டும் அதே உணர்வை எடுத்தோம் என்றால் இது சாகாக்கலையாக போகின்றது.

இப்பொழுது நம் குருநாதரைப் பார்த்தால் வேகாநிலை…! தீயில் குதித்தால் உயிர் வேகாது. உயிரைப் போல் ஒளியாகிக் விட்டால் இந்த அகண்ட அண்டத்தில் எதிலும் வேகாது அப்பொழுது ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும். “அந்தச் சக்தியை நாம் பெற வேண்டும்…”

இதையெல்லாம் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தித் தயாராகிக் கொள்ள வேண்டும். காற்று மண்டலம் விஷத்தன்மையாக இருக்கின்றது.

இப்பொழுதே சில பேருடைய நிலைகள் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு செல்கின்றது. இனி வரும் காலம் ரொம்ப மோசமான காலமாக இருக்கின்றது.
1.அதற்குள் நீங்கள் தயாராகி நல்ல சக்திகளைப் பெருக்கி உங்களையும் காத்து
2.உங்கள் ஊரையும் வீட்டையும் இந்த உலகையும் காத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு நீங்கள் தயாராக வேண்டும்.

ஒருத்தர் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தி இருந்தாலும் ஒரு அரிசியைப் போட்டு சாப்பாடு செய்து எல்லாத்தையும் சாப்பிடு என்று சொன்னால் முடியுமா…?
1.நாமெல்லாம் அந்த அரிசியாக மாற வேண்டும்.
2.ஒன்று சேர்த்து விளைந்து வந்தால் எல்லாருடைய பசியும் தீரும்.., அது தான் முக்கியம்.

ஒன்று என்பது எதுவுமே இருந்து… என்றுமே ஒன்றும் செய்வதில்லை.

இந்த உயிர் ஒன்றுதான் அப்படி இருந்தாலும் மூன்று நிலைகளில் (வெப்பம் காந்தம் விஷம்) வேலை செய்கின்றது. ஆனால் இந்த உடலுக்கு எத்தனை வகையான உணர்வுகள் வந்து உடலை உருவாக்குகின்றது…?

ஆனால் நல்ல உணர்வுகள் குறையக் குறைய இந்த உடலைச் சிறுக்கின்றது, இப்பொழுது நாம் வேதனையை வெறுப்பை நுகரும் பொழுது இந்த அழகான உடலும் சிறுத்துப் போகின்றது.

அப்போது இந்த உடலைச் சிறுக்கச் செய்த உணர்வுகள் என்ன செய்கின்றது…? இந்த உயிர் அதற்குத் தகுந்த உடலைத் தான் உருவாக்குகின்றது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1.நமக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்…
2.குருநாதர் காட்டிய வழியில் நாம் இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியும்
3.பிறவியில்லா நிலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பமாக நாம் இப்பொழுது உட்கார்ந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?

பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?

 

கிறிஸ்து பிறந்தநாளில் வான மண்டலத்திலிருந்து “புதிய நட்சத்திரங்கள் தோன்றிப் பிரகாசமான ஒளி தந்ததை” அன்று வாழ்ந்து வந்தவர்களில் பலர் பார்த்ததாகவும் செப்புகின்றனர்.

வான மண்டலத்தில் தோன்றிய அந்நட்சத்திரத்தின் பிரகாசமான ஒளி எந்நிலையில் வந்தது…? அவற்றின் நிலை இப்பூமியின் மேல் எப்படிப் படிந்தது…? என்ற நிலையென்ன…?

இப்பூமி சுழலும் வேகத்தில், பால்வெளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள எண்ணிலடங்கா பல நட்சத்திரங்களை இப்பூமி ஓடும் ஓட்டத்தில் காண்கின்றது.

இப்பூமி சுழன்று ஓடும் வேகத்தில் அங்கங்குள்ள அமில நிலையினால் உருப்பெற்ற இந்நட்சத்திர மண்டலங்கள் இப்பூமியின் ஈர்ப்பில் சிக்கி இப்பூமியுடன் வந்து சேருகின்றது.

நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் கரையும் தன்மை கொண்ட அமில சக்தியினால் மின்னுவதுதான்.

1.நட்சத்திர மண்டலத்திற்கும், பால்வெளி மண்டலத்திற்கும், நம் பூமியின் சக்திக்கும்
2.நம் பூமி தொடர்புபடுத்தி நம் பூமி சுழன்று ஓடும் வேகத்தில் பால்வெளி மண்டலத்தில் நம் பூமியின் சக்தி மோதும் ஈர்ப்புத் தன்மை கொண்டு,
3.இப்பூமிக்குகந்த அமில சக்தியுடைய நட்சத்திர மண்டலமாய் இருந்திட்டால்
4.இப்பூமியின் பிடிப்புடன், அந்நட்சத்திர மண்டலத்தை இப்பால்வெளி மண்டலத்திலுள்ள காற்று மண்டலம் அதன் மேல் மோதி
5.இவ் ஈர்ப்பு சக்தியில் அந்நட்சத்திர மண்டலம், இச் சூழலும் வேகத்தில் பட்டு,
6.ஒன்றுக்கொன்று திடமாய் உறைந்த அமில சக்தியைக் கொண்ட அந்நட்சத்திர மண்டலமே
7.இப் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்கியவுடன், கரைந்த அமிலமாய், இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றது.

இந்நிலைப்போல்தான் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்‌.

இப்பெரிய கோளங்கள் சுழன்று ஓடும் ஈர்ப்பில் அதனதன் அமில சக்தியின் தொடர் நிலைகொண்ட நட்சத்திர மண்டலங்களெல்லாம்… அது ஈர்த்து, செயல் கொண்ட சக்தியிழந்து, அந்நட்சத்திர மண்டலத்தின் ஆத்மாவும் பிரிந்து அதன் சக்தி அமிலம் மற்றப் பெரிய மண்டலங்களின் அமிலமுடன் அமிலமாய்க் கலந்து விடுகின்றது.

இப்பெரிய மண்டலங்களின் ஈர்ப்பில் சிக்காமல் இம் மண்டலத்துடன் தொடர்பு கொண்டே பல நட்சத்திர மண்டலங்கள் சுழன்று கொண்டே ஓடி வருகின்றன.

இன்னும் சில நட்சத்திர மண்டலங்கள்…
1.இப்பெரிய மண்டலங்கள் ஓடும் நிலையில் இவ்வமிலத்திற்கும்
2.நட்சத்திர மண்டலத்தின் அமிலத்திற்கும் சத்ரு மித்ரு நிலையாய் இருந்தால்
3.இம்மோதுண்ட நிலையில் எரி நட்சத்திரமாய் எரிந்து அந்நிலையிலேயே கருகிய நிலையில் செயலற்றதாகி விடுகின்றன.

இவ்வான மண்டலத்தில் இப்பால்வெளி மண்டலத்தில் நடந்திடும் சக்தி நிலை எண்ணிலடங்கா நிலை கொண்டவைகளாக உள்ளன.

இப்பூமியில் இருந்து வாழ்ந்து சாதாரண நிலையில் ஆயுள் பிரிந்த ஆத்மாக்கள் அனைத்துமே… இப்பூமியிலிருந்து இப்பூமியைச் சுற்றி படர்ந்துள்ள இக்காற்று மண்டலத்தில் ஒட்டிய நிலையிலேயே தான் இவ்வனைத்து ஆவி ஆத்மாக்களும் சுற்றிக்கொண்டே உள்ளன.

இப்பூமியில் சுவாசித்து வாழ்ந்ததின் நிலைக்கொப்ப உள்ள காற்று மண்டலத்துடனே தான் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் சுவாச நிலையும் கலந்துள்ளது.

மற்ற மண்டலத்திற்குச் செல்லவோ… இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள இயற்கை நிலையுடனோ.. இப்பூமியில் உயிரணுவாய் உருப்பெற்று வாழ்ந்து ஆவி உலகிற்கு வந்த உயிரணு உயிராத்மா எல்லாம் இவற்றின் நிலையில் படர்ந்தே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாய் மின்னும் சக்திக்குக்கூட இப்பூமியில் உதித்த உயிரணுக்களினால் சுவாச நிலை மாறி வளர்ச்சி நிலை பெறும் நட்சத்திரமாய் மின்ன முடியாது.
ஆனால் இப்பூமியிலேயே பிறப்பில் வந்து இப்பிறப்பின் பயனைப் பெற்று சூட்சம நிலைகொண்ட ஆத்மாக்கள் பல இன்று நட்சத்திர மண்டலமாய் ஒளிர்ந்து வாழ்கின்றன.

இன்று இப்பூமியில் உள்ள நிலைபோல் மனித ஆத்மாக்களாய் வாழும் நிலை கொண்ட ஆத்மாக்கள் இப்பூமியைச் சார்ந்த இந்த 48 மண்டலங்களிலும் இல்லை என்று உணர்த்தினேன்.

இதுவே
1.இன்னும் இருபது முப்பது ஆண்டிற்குள் இப்பூமியில் உடலுடன் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களே
2.இன்று செயற்கையுடன் ஆசை கொண்டு சந்திர மண்டலத்திற்குக் குடியேறும் நிலைக்காக ஆராயும் மனிதர்களே
3.வரப்போகும் இக்கலியின் மாற்றத்தினால்
4.இன்று இப்பூமியிலுள்ள சக்தியின் தொடர் சக்தியின் வளர்ச்சி நிலை பெற்ற சந்திரனில் வாழத்தான் போகின்றான்.

இன்று நாம் வாழும் இப்பூமியின் சக்தி நிலையின் வளர்ச்சி நிலையினால் வரப்போகும் கல்கியில் பெரும் மாற்றம் கொண்டதாக இயற்கை சக்தியே செயல் கொள்ளப் போகின்றது.

இம்மாற்றத்தின் அசைவினால் இப்பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களின் குவிப்பு சக்தி சேரப் போகின்றது.

1.மனித ஆத்மாக்களினால் இக்கலியின் கொடுமையினால் “இவ்வியற்கையின் சக்தி கொண்ட இப்பூமியின் ஆத்மாவே”
2.இம்மனித ஆத்மாக்களின் அழிக்கும் எண்ண சக்தி கொண்ட ஆத்மாக்களைச் சீற்றம் கொண்டே மாற்றி
3.இன்னும் சக்தி கொண்ட பூமியாகத் தான் நம் பூமி சுழலப் போகின்றது.

இப்பூமியில் உதித்த மனித ஆத்மாவினால் தான் இக்கலியின் நிலையும் மாற்றம் கொள்ளப் போகின்றது.

குறை (கூறும்) காணும் உணர்வு நம்மை இயக்கவிடாது தடைப்படுத்தியே ஆக வேண்டும்

குறை (கூறும்) காணும் உணர்வு நம்மை இயக்கவிடாது தடைப்படுத்தியே ஆக வேண்டும்

 

வீட்டில் பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்… அவன் நல்லவனாக வேண்டும் என்று விரும்புகின்றோம் ஆனால் மற்ற பையன்களோடு சேர்ந்து (வேகமான உணர்வு கொண்டு) விளையாடிக் கொண்டிருக்கின்றான்… அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றான்.

அவன் நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அவனோ விளையாட்டுப் புத்தியில் இருக்கின்றான்.

அப்பொழுது அதைப் பார்த்த பின்…
1.“இந்த மாதிரி அவன் சுற்றிக் கொண்டிருக்கிறானே…” என்று சிறிதளவு வேதனைப்படுகின்றீர்கள். அந்த வேதனை என்பது விஷம்.
2.விஷத்தன்மையான பின் சிந்திக்க இடமில்லாது போய் விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. பிள்ளை நல்ல முறையில் வளர வேண்டும் என்று தான் நாம் விரும்புகின்றோம். அவன் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டு இந்த மாதிரி இருக்கின்றானே என்று வேதனைப்பட்டால் என்ன ஆகும்…?

விஷம் (வேதனை) முதலிலே கண்ணுக்குத் தான் வருகின்றது. அதே உணர்வு உமிழ் நீராக மாறுகின்றது ஆகாரத்துடன் சேருகின்றது

நம்முடைய ஆசை நல்ல ஆசை தான். ஆனால்
1.மற்றவருடன் சேர்ந்து விளையாடுகின்றான் என்று எண்ணினால் வேதனை கூடுகின்றது
2.அந்த வேதனையோடு அவனிடம் திரும்பச் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது.

அவனுக்கு அவன் செய்யும் தவறு தெரியாது. ஆனால் அவன் உணர்வை நுகர்ந்து ஏண்டா இப்படிச் செய்கின்றாய்…? உன் எதிர்காலம் என்ன ஆகும்…? என்று நாம் பேசுவோம்.

அவன் கண்ணிலே நம்மைக் கூர்ந்து கவனிப்பான்.

ஏனென்றால்
1.”அவன் செய்த தவறை நாம் எடுத்து” இரண்டாவது சமைத்து அவனிடம் சொல்லப்படும் பொழுது
2.நம் உடலிலிருந்து வருவதைப் பார்த்தவுடனே
3.என் அப்பா இப்படித்தான் பேசுவார்…! என்று அவனுக்குப் பார்த்தவுடனே கோபம் வந்துவிடும்.

நாம் சொன்னால் அவன் காது கொடுத்துக் கேட்க மாட்டான். ஆனால் மற்றவர்கள் சொன்னால் காது கொடுத்துக் கேட்பான்.

அடுத்தவர் சொன்னால் கேட்கின்றான் நாம் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்று நாம் சொல்வோம்.

காரணம்… “சொன்னபடி கேட்கவில்லை” என்ற அந்த வெறுப்பான உணர்வு கொண்டு நாம் சொல்வது… அவனைக் கேட்க விடாது அது தடுத்து விடுகின்றது. அடுத்து நாம் எதைச் சொன்னாலும் இவன் இப்படித்தான் இருப்பான் என்று சொல்வோம்.

1.மற்றவர் வெறுப்பாக எண்ணுவதில்லை… அந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அங்கே ஒன்றும் இல்லை.
2.ஆனால் நான் பாசத்தோடு சேர்த்து இப்படிப் பண்ணுகின்றானே என்று எண்ணி எடுத்து வேகமான சொல்லைச் சொல்லும் பொழுது
3.நமக்குள்ளே அதை விளைய வைத்துச் சமைத்து அவன் காதிலே இதைக் கேட்கப்படும் பொழுது
4.அவன் பதிவாக்கி நாம் பேசிய உணர்வை நுகர்ந்து அவன் உயிரிலே பட்டபின் “நம் மீது அவனுக்கு வெறுப்பு தான் வருகின்றது…”.

சில குடும்பங்களில் ஆசையோடு பாசத்தோடு குழந்தைகளை வளர்ப்பார்கள் பையன் நல்லவன் தான் ஆனால் அந்த இடத்தில் இப்படி ஆகிவிடுகிறது.

அதற்குத்தான் ஆலயத்திலே தெய்வத்திற்குத் தங்கத்திலே ஆபரணங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
2.பையன் சேட்டை செய்வதைப் பார்த்தாலும் நம் மனது மங்காதபடி இருக்க வேண்டும்…
3.அதற்கு உபாயத்தைக் காட்டுகின்றார்கள்.

அப்படி என்றால் அவனுக்கு நாம் எப்படி எண்ண வேண்டும்…?

1.இன்னன்ன வழிகளில் அவன் இப்படி இப்படி இருக்க வேண்டும்
2.அவன் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
3.பார்ப்பவர்களை மதிக்கும் பண்புகள் வளர வேண்டும்
4.தெளிவானவனாக அவன் வரவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணிய பின் நம் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் உமிழ் நீராக ஆகிவிடுகிறது.
1.அவன் செய்த தப்பைப் பார்த்து அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.அவனுடைய உணர்வுகளும் நம்மை இயக்குவது இல்லை.

அதற்குப் பின் அவனிடம் திருப்பிச் சொல்லப்படும் பொழுது… “தம்பி நீ இந்த மாதிரிச் செய்கின்றாய்… அதனால் உன்னுடைய உடையெல்லாம் அழுக்காகின்றது நோய் வரக் காரணமாகின்றது… அதனால் நீ பார்த்து நடந்து கொள்…!” என்று விபரத்தைச் சொன்னமென்றால்… அவன் அதைத் தெரிந்து கொள்வதற்கு வழி இருக்கின்றது.

ஆனால் முதலில் நாம் ஆசைப்பட்டோம் வழிகாட்டத் தெரியவில்லை. ஆனால் ஆலயத்திலே ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்தினோம் என்றால் நமக்குள்ளும் வேதனை வருவதில்லை… அவனையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முடிகின்றது.

பள்ளிகளிலே பார்த்தோம் என்றால் ஆசிரியர்களும் பாடத்தை சொல்லிக் கொடுப்பதில் குறியாக இருப்பார்கள். ஆனால் தன்னிடம் படிப்பவன் சிறிதளவு தவறு செய்து விட்டான் என்றாலும் அவனை மிரட்டுவார்கள்.

அந்த மிரட்டல் பதிவான பின் வாத்தியாரை நினைக்கும்போது அவனுக்கு ஞாபக சக்தி குறைந்துவிடும்
1.ஒரு சிறு தவறுக்கு ஒரு தடவை மிரட்டி இருந்தால்
2.அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் மறதி வரும்… சொல்லிக் கொடுப்பது எல்லாம் மறந்து விடும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் விளைந்து மறுபடியும் இப்படி மாறிக் கொண்டே போகும் இதையெல்லாம் நாம் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா

நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் உணர்வை உடனுக்குடன் எடுத்துத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும் அதற்குத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப பல வகைகளிலும் சொல்லி உண்மைகளை எல்லாம் உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).

மண்டலங்களுக்கு “உயிர் நாடியே” பால்வெளி மண்டலம் தான்

மண்டலங்களுக்கு “உயிர் நாடியே” பால்வெளி மண்டலம் தான்

 

பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின்… அமில சக்தி மட்டுமல்ல “ஜீவசக்தியினால் உராயும் நிலை கொண்டு தான்” ஒவ்வொரு கோளங்களுமே செல்கின்றது.

ஒவ்வொரு கோளமும்…
1.தான் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலை இப்பால்வெளி மண்டலத்துடன் மோதுண்டவுடன் தான் ஒலி பிறக்கின்றது
2.இவ் ஒலியினால் தான் ஒவ்வொரு மண்டலமும் சுழல்கின்றது.

பால்வெளி மண்டலமாக ஜீவனுடன் உள்ள வான மண்டலத்தையே நாம் பரந்த வெளியாகக் காணுகின்றோம். இப்பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள இவ்வமில சக்தியே அனைத்து மண்டலங்களுக்கும் “உயிர் நாடி…”

இப் பூமியிலிருந்து நாம் காணும் பால்வெளி மண்டலமான இவ்வாண மண்டலத்தில்
1.படர்ந்த மேகக் கூட்டங்கள் ஓடுவதைப் போல் காண்கின்றோம்.
2.மேகக் கூட்டங்கள் மட்டும் ஓடவில்லை… நாமும் தான் ஓடுகின்றோம்
3.அனைத்து மண்டலங்களும்தான் ஒரு நிலையில் நிலைத்து நில்லாமல் ஓடிக்கொண்டே உள்ளன.

இப்பூமி சுழலும் வேகத்தைப் பொறுத்து பூமியில் நடக்கும் சீதோஷ்ண நிலைகள் உள்ளன. பூமியிலேயே பல பாகங்களில் பல சீதோஷ்ண நிலை கலந்துள்ளது.

இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களில் உள்ள நிலை அறிய நம் சக்தியைச் செயலாற்றுகின்றோம். இப்பூமியிலேயே பூமியின் பூமத்திய ரேகையான மையப் பகுதியில் உள்ள நிலை என்ன…?

இப் பூமியில் பூமி சுழலும் 24 மணி நேரக் கணக்கு விகிதப்படி ஒரு நாளையும் இரவு பகல் நிலை ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் நிலை எல்லாம் இப் பூமி சுழலும் வேகத்தையும் அங்கங்கு உள்ள நிலையையும் அறிகின்றோம்.

ஆனால் இப்பூமியின் மையப் பகுதியில் என்றுமே சூரியனின் நேர் ஒளிக் கதிர்கள் தாக்குவதில்லை என்பதனை அறிந்துள்ளோமா…?

இப்பூமத்திய ரேகையின் மையத்திற்கு சற்றுத் தள்ளிய இடத்தில் தான் பகலும் இரவும் சில காலங்கள் மாறி மாறி வருகின்றன. மையப் பகுதி என்றுமே இருண்ட நிலை தான்.

1.ஆனால் அம்மையத்தினால் தான் இப் பூமியில் நிறைந்துள்ள கடலின் நீர் நிலைகள் எல்லாம் உள்ளது.
2.இப்பூமி சுழலும் வேகத்தில் மற்ற இடத்தில் படும் இவ்வொளிக் கதிரின் அமில சக்தியின் நிலையை
3.இம்மையப் பகுதி ஈர்த்துப் படிவங்களாக பாறையைப் போன்று அடர்ந்து பதிந்துள்ளன.

இச்சூழலும் நிலையிலேயே மென்மேலும் ஈர்த்து அப்படிவங்களுடன் அவ்வமில நிலை வளர்ந்து கொண்டே உள்ளன.

எந்நிலையில் உப்பு அமில சக்திப் படிவங்கள் வளர்ச்சி கொண்டுள்ளனவோ அந்நிலை போன்ற விகிதத்திலேயே இப்பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலங்களில் நிறைந்துள்ள அமில சக்தி மோதுண்டு உருகும் நிலையில்
1.ஆவியான உப்புக் கலந்த நீராக வடிகொண்டு தான்
2.இன்று கடலாக வற்றாத நிலையில் பொங்கிக் கொண்டுள்ளது.

இப்பூமத்திய ரேகையின் சிறிது தள்ளி உள்ள நிலையில் சில காலம் ஒளியும் இருட்டும் உள்ள நிலைப்படுத்தித் தான் அந்நிலையின் தொடர்பு நிலை கொண்ட பூமிகளில் உள்ள கடலில் நீர்நிலை பொங்கி வருவதைக் கண்டிடுவீர்.

இவ்வுப்புக் கலந்த அமிலத்தின் படிவத்தில் இருந்து உற்பத்தியாகி வருவதுவே கடல் நீர் உப்புக் கரிக்கும் நிலை.

ஆனால் கடற்கரை ஓரங்களில் மற்ற கிணறுகளில் உள்ள நீரெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியுடன் இப் பூமியின் நிலைக்கொப்ப சுவை தருகின்றது.

இன்று கடலாகப் பொங்கி உள்ள இடத்திலேயே இக்கடல் நீரின் மட்டத்திற்கு கீழ் அப்பூமியின் நிலையில் இருந்து தோண்டி எடுக்கும் நீரின் சுவை இக்கடல் நீரின் சுவைக்கு மாறு கொண்டதாகத்தான் இருந்திடும்.

நம் பூமியின் இயற்கைச் சக்தியின் தெய்வமான சூரியனின் சக்தியிலிருந்து பல சக்தியை நாம் நேராகவும் மற்ற மண்டலத்தில் மோதி அம் மண்டலத்திலிருந்தும் ஒன்றின் துணையுடன் ஒன்றாகச் செயல்படவே “இப்பால்வெளி மண்டலத்தின் சக்தியின் துணையினால் செயல் கொண்டுள்ளோம்…”

இவ்இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உணர்ந்திட்டால்
1.அவ்வாண்டவனின் சக்தி நிலை ஒன்றுடன் ஒன்று செயல்படும் நிலையை அறிந்திட்டால்
2.அவ்வாண்டவன் என்ற சக்தியே தனித்து இல்லாமல் செயல்படுவதாக உணர்கின்றோம்.
3.அனைத்து சக்தியுமே ஒன்றுடன் ஒன்று கலந்து சக்தியாகத்தான் அவ்வாண்டவனின் சக்தி உள்ளது

ஒரே சக்தியான நிறைந்த தனித்த சக்தி… அச்சக்தியின் கலந்த சக்தி தான் “நம் அனைத்து சக்தியுமே…”

எல்லாவற்றுக்கும் காரணம் சந்தர்ப்பம் தான் (“தலைவிதி” அல்ல)

எல்லாவற்றுக்கும் காரணம் சந்தர்ப்பம் தான் (“தலைவிதி” அல்ல)

 

உதாரணமாக “ஒரு வேலையின் காரணமாக” நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது…
1.அதே உணர்வை எடுத்துச் செல்லப்படும் போது
2.அதிகமான நேரத்தைச் செலுத்திச் சென்றால் போகும் பாதையில் கீழே போகும் வாய்க்கால் தெரிவதில்லை.

காரணம்…
1.உங்கள் நினைவு அங்கிருக்கிறது… பரந்த மனதுடன் பார்ப்பதில்லை.
2.குறி ஒன்றாகச் செல்லப்படும் பொழுது தவறி அந்த பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுந்து விடுகின்றோம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை சந்தர்ப்பம் அந்தச் சூழ்நிலையை நமக்கு உருவாக்கி விடுகின்றது. அதைத் “தலைவிதி” என்று சொல்வதற்கு இல்லை.

சந்தர்ப்பம் சூழ்நிலையை அது இப்படி மாற்றுகின்றது
1.இதனால் தோஷம் வந்தது அதனால் தோஷம் வந்தது என்று இல்லாதபடி
2.நாம் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் (அது தான் தோஷம்) இப்படி ஆகிவிடுகிறது.

இதை விடுத்து விட்டு தோஷத்தை நிவர்த்தி செய்ய எதை எதையோ செய்ய வேண்டும் என்பது இல்லை. “எல்லாம் சந்தர்ப்பம் தான்…”

ஒரு சமயம் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் பதிவாகி விடுகின்றது.
1.அப்புறம் எங்கே சென்றாலும் அதற்குப் பின் கீழே பார்த்துத் தான் நடக்கச் சொல்லும்.
2.ஏனென்றால் அந்த அதிர்ச்சி அந்த உணர்ச்சிகளை ஊட்டும்.

அதே சமயத்தில் வீடுகளில் உள்ள தரைகள் எல்லாம் டைல்ஸ் போட்டு பாலிஷ் செய்து வைத்திருக்கின்றோம். கொஞ்சம் போல் ஈரமான காலாக இருந்தால் சறுக்… என்று வழுக்கி விடுகின்றது.

காரணம்… குளித்து விட்டு வரும் போது வேறு எண்ணத்துடன் தான் வருகின்றோம். வழுக்கும் பொழுது சுதாரித்துக் கொண்டால் கீழே அடிபடாது தப்பிக்கலாம் வழுக்கிய பின் அப்படியே உட்கார்ந்து பழகி விட்டால் ஒன்றும் இல்லை.

வழுக்கும் போது அதைக் கண்ட்ரோல் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் “டப்…” என்று கீழே விழுந்து பின்னாடி அல்லது தலையில் அடிபட்டு விடுகின்றது. முடியாதவர்களாக இருந்தால் எலும்பு கூட நொறுங்கி விடுகின்றது.

இதுவும் சந்தர்ப்பம் தான்… எல்லாமே சந்தர்ப்பத்தால் நிகழக் கூடியது தான்.

இந்த மாதிரி ஒருவர் கீழே விழுகிறார் என்று பார்த்து விட்டோம் என்றால்… நம்மை அறியாமலே அடுத்து அது வேலை செய்யும். உங்கள் உணர்வுகள் ஒன்றைப் பார்த்து விட்டால் அது பதிவாகி அதன் நிலையிலேயே நம்மை இயக்கும்.

ஆகவே…
1.எல்லாமே சந்தர்ப்பத்தால் தான் என்ற நிலையை நாம் உணர்தல் வேண்டும்.
2.உலகம் உருவானதும் சந்தர்ப்பம் தான்… உலகம் மாற்றமடைவதும் சந்தர்ப்பம் தான்
3.மனிதனாவதும் மனிதன் மீண்டும் அடுத்த ரூபமாக உடல் மாறுவதும் எல்லாம் உயிரால் தான் நடக்கிறது என்பதை
4.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

இது மெய் ஞானம்…!

“ஞான மகசூலாக நீங்கள் இருக்கின்றீர்கள்” என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

“ஞான மகசூலாக நீங்கள் இருக்கின்றீர்கள்” என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

 

இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொல்கிறது.

ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.

காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.

இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.

வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.

சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.

ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.

இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.

அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.

எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!

விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?

அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.

1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.

இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!