நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்

நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்

 

ஒருவருடைய செயலைப் பார்த்து “மோசமானவர்…” என்று அவரை நினைக்கின்றோம் அந்த மோசமான உணர்வு நமக்குள் வளர்ந்த பின் நாமும் அதை போன்ற செயலைச் செய்ய தொடங்கி விடுகின்றோம்.

நம்மை அறியாமலே அது இயக்கும்…!
1.நாம் தவறு செய்யவில்லை என்று நினைக்கின்றோம்.
2.ஆனால் “தவறு செய்கின்றான்…” என்று எண்ணியவுடன் அந்தத் தவறின் இயக்கம் நம்மை இயக்கி விடுகின்றது.

அதை மாற்றும் சக்தி இருந்தாலும் முடியாத நிலை ஆகி விடுகிறது.

அந்தத் தவறிலிருந்து விடுபடும் முறைக்கே உங்களுக்குள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றோம். எண்ணியவுடனே அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.

நாம் பல விதமான உணர்வுகளைப் பதிவாக்கியுள்ளோம். அதிலே வேதனைப்படும் சொல்களைக் கேட்டவுடன் அந்த உணர்வுகள் உந்திய பின் அதைச் சுவாசித்து நம் உடல் சோர்வடைந்து விடுகின்றது. வேதனையான அணுக்கள் வளர்ந்து விடுகின்றது.
1.இரண்டு நாளைக்கு இந்த உணர்வுகள் சேர்த்தால்
2.இரத்த நாளங்களில் இது கலக்கப்படும் பொழுது மற்ற அணுக்களையும் செயலற்றதாக மாற்றும்.

நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது. காற்று மண்டலத்தில் எப்படிக் கலக்கின்றதோ இதைப் போன்று தான் இரத்தத்தில் கலக்கப்படுகிறது.

இரத்தம் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணவை எடுத்துச் செல்கின்றது. அதில் இருக்கும் உணர்வின் சத்தை எடுத்துத்தான் உடலில் உள்ள அணுக்கள் விளைகின்றது.

நாம் நுகர்ந்தது உயிரிலே ஆவியின் தன்மை அடைந்த பின் நம் உடலில் ரத்தத்தில் கலந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு செயலாகிறது.

நாம் உணவாக உட்கொள்ளும் போது அதிலே நீரைப் பிரித்து விட்டு அதில் இருக்கக்கூடிய சத்தை இரத்தமாக மாற்றுகின்றது நம் உடல் உறுப்புக்கள்.

இரத்தத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது அணுக்களின் ஆகாரம் அதன் வழியில் பெறப்படுகிறது. நல்ல உணவைப் படைத்துச் சாப்பிட்டாலும் நல்ல உணர்வை எண்ணினால் நல்ல அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கிறது.

அதே சமயத்தில் நல்ல உணவை உட்கொண்டாலும்
1.வேதனையான உணர்வைச் சுவாசித்தால் இந்த உணர்வின் தன்மை இதற்குள் ஆன பின்
2.வேதனை உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது நல்ல உணவையே உட்கொள்ள முடியாதபடி ஒதுக்கிவிடும்.

ஏனென்றால்
1.நாம் எண்ணும் உணர்வுகளை உயிர் அதை அணுக்களாக மாற்றுவதும்
2.உணர்வின் செயலாக்கங்களாக நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணிலடங்காத தெய்வ ரூபங்களை ஞானிகள் நமக்குக் காட்டியதன் உட்பொருள்

எண்ணிலடங்காத தெய்வ ரூபங்களை ஞானிகள் நமக்குக் காட்டியதன் உட்பொருள்

 

ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு சக்தி உண்டு. அதைக் காட்டுவதற்குத் தான் காளி மாரி சாமுண்டீஸ்வரி சண்டாளேஸ்வரி என்றார்கள். கொடிய தீமைகளை உருவாக்கும் குணங்களை “சண்டாளேஸ்வரி…” என்று கூட அதற்குக் காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

அதன் இனத்தைப் பெருக்கும் சக்தியைப் பெறுகிறது என்று சிவனுக்குள் சக்தியாக உருவாக்குகின்றது. அதாவது… உடலான சிவத்திற்குள் அணுக்களின் தன்மைகள் கொடூர உணர்வுகளைக் கொடூரம் என்று உணர்ந்து நுகர்ந்தாலும்… நல்ல உணர்வுகள் விலகிச் செல்லக் காட்டினாலும்… அந்த உணர்வு இயக்கி உணர்ச்சியைத் தூண்டி “நம்மை மாற்றும் நிலைக்கு…” உருவாக்கி விடுகிறது.

இப்படி நுகர்ந்த உணர்வுகள் கடினமாக்கப்படும் பொழுது
1.இந்த உடலான சிவத்தையும் நுகர்ந்த அந்தச் சண்டாள உணர்வுகள்… சக்தி சிவனை வீழ்த்தி விடுகின்றது.
2.இதைத்தான் சிவனைத் திரிசூலத்தால் தாக்கிக் கீழே காலில் மிதித்து வைத்திருக்கிறார் என்று கூறுவார்கள்.

நாம் நுகர்ந்த உணர்வே சிவமாகின்றது என்ற நிலையும் செயலற்ற நிலையில் நாம் அதன் கீழ் அடங்கி விடுகின்றோம். அதன் வழி கொண்டு நாம் செயல்பட முடியாதபடி ஒடுங்கப்படும் பொழுது எதன் உணர்வின் தன்மையோ அதனை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஞானிகள் காவியங்களைப் படைத்தாலும் ஒவ்வொரு குணத்திற்கும் உருவத்தைக் கொடுத்து அதற்குண்டான நிறத்தைக் கொடுத்து அதனுடைய செயலாகங்களைக் காவியமாக படைத்து… அதனை உற்று நோக்கப்படும் பொழுது ஒவ்வொன்றையும் நாம் அறியும் வண்ணமாகக் காட்டி உள்ளார்கள்.

1.நம்மை அறியாது நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் விளைந்து விட்டால் என்ன செய்யும்…?
2.அதனுடைய ரூபங்கள் எப்படி மாறும்…?
3.நுகர்ந்த நிறங்கள் எப்படி மாறும்…? என்று அவர்கள் காட்டிய வழிகளில் நாம் நுகர்கின்றோமா…?

பல பல நிறங்கள் சிவப்பு கருப்பு நீலம் மஞ்சள் என்று வந்தாலும் அவைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது அதனுடைய நிறங்கள் மாறுகின்றது. அதிலே உருவாகும் உணர்ச்சிகள் மாறுகின்றது.

வித்தியாசமான நிற ஆடையை அணிந்தால் உடனே சோர்வாகும். நீலக் கலரைப் பார்த்தால் இருட்டடையும் நிலை வருகின்றது. மஞ்சள் நிறத்தைப் பார்த்தால் பளிச் என்று இருக்கும் இளம் மஞ்சளைப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சம் ஆகின்றது. அது ஒளியாகக் காட்டும் போது தெளிவாகின்றது மனம்.

வெள்ளைத்துணி அணிந்து இருப்பவரைப் பார்த்தால் பளிச்சென்று தெளிவாகும். இளம் மஞ்சளைப் போட்டிருந்தால் மகிழ்ச்சியூட்டும் நிலைகள் வரும்.

பளிச் என்று வெள்ளை நிறம் வந்தாலும் கண் கூசும் நிலையும் வருகின்றது.

ஆடையில் கருப்பும் சிவப்பும் வெள்ளையும் கலந்து இருந்தால் உற்றுப் பாருங்கள். அவர் முகத்தையும் பாருங்கள்… இருண்ட நிலை இருக்கும் நுகரும் பொழுது நம் மனமும் இருண்டு விடுகின்றது.

கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்ட பின் திரும்பிப் பார்த்தால் சிந்திக்கும் திறன் இழந்து அந்த உணர்வின் நிலை கொண்டே நம் எண்ணங்களும் செயல்படுவதைப் பார்க்கலாம்.

ஆடைகளின் நிறத்திற்குள் இவைகள் எல்லாம் அடங்கியுள்ளது.

இதைத்தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.கறுப்பு நிறத்தைப் பார்த்தபின் நம் மனதை இருளடையச் செய்யும் நிலை வருகின்றது. சிந்திக்கும் திறனை இழக்க செய்கின்றது.
2.நுகர்ந்ததை இருள் சூழும் உணர்வின் அணுவின் கருவாக உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

அணுவின் இயக்கம்… அதனின் வளர்ச்சி எவ்வாறு…? என்று ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள். இதை எல்லாம் உங்களிடம் இப்போது சொல்கிறேன் என்றால் “எனது பாக்கியம்… குருநாதரால் நான் அறிய முடிந்தது…”
1.அவர் உணர்த்தியதை உங்களிடம் வெளிப்படுத்தும் போது
2.உங்களுக்குள் இயக்கும் உணர்ச்சியின் நிலைகள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதை உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.

ஆகவே… ஆறாவது அறிவின் துணை கொண்டு இதையெல்லாம் தெளிவாக்கப்படும் பொழுது “இதைப் பெற வேண்டும்…” என்ற ஏக்கம் கொள்வோருக்குள் இது பதிவாகின்றது.

மீண்டும் நினைவு கொண்டால் அதனுடைய ஞானத்தை உங்களுக்குள் பெருக்க முடிகின்றது.

“மகரிஷிகளின் அருள் சக்தி” எங்கும்… எதிலும்… பரவ வேண்டும் என்பதை நாம் சொந்தமாக்க வேண்டும்

“மகரிஷிகளின் அருள் சக்தி” எங்கும்… எதிலும்… பரவ வேண்டும் என்பதை நாம் சொந்தமாக்க வேண்டும்

 

சாமி நன்றாகப் பேசுகின்றார்… உபதேசிக்கிறார்…! என்று கேட்டு விட்டு இதை அப்படியே நீங்கள் விட்டு விடாதீர்கள். அப்படி ஆகிவிடக்கூடாது.
1.காரணம் எல்லோரும் நீங்கள் தயாராக வேண்டும்.
2.அவரவர்கள் இதைப் பெற முயற்சி எடுங்கள்.
3.இந்தக் கருத்துக்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்… அதை நீங்கள் எழுத வேண்டும்.

யாம் சொல்லும் போது பல நிலைகள் தெரிய வரும்.
1.அந்தக் கருத்துக்களை எழுதிப் பதிவு செய்யும் பொழுது ரெக்கார்டு ஆகும்.
2.எதை நீக்க வேண்டும்…? எதைச் செயல்படுத்த வேண்டும்…? என்று எண்ணும் போது அந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
3.இந்த உணர்வின் வளர்ச்சி நம்மைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டே வரும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நோக்கத்தில் தான் இதை எல்லாமே பதிவு செய்கின்றேன். அதை நீங்கள் வளர்த்துப் பழக வேண்டும். இது உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தரும்.

இங்கே கேட்டுவிட்டு… அடுத்தாற்போல் வெளியிலே சென்றால் புற உணர்வுகள் இதை மறைக்கும். அப்படி மறைத்ததை மீண்டும் தெளிவாக்க நேரமாகிறது. “நம்மால் முடியவில்லையே…” என்று ஒரு பலவீனமான… விரக்தியான எண்ணங்கள் வந்துவிடும்.

தலையில் அதிகமான சுமையை ஏற்றி விட்டால் தூக்க முடியாமல் போகிறது அல்லவா. அது போன்று வருவதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே நீங்கள் அருள் உணர்வுகளை வளர்த்து உங்களுக்குள் அதைப் பெருக்கி உயர்ந்த உணவுகளை எடுத்துச் சொல்லி உங்களை அணுகி வருபவரையும் தயார் செய்ய வேண்டும்.

1.எத்தகைய தீமைகள் வந்தாலும் “அதை மாற்றுவதற்குண்டான வழி எதுவோ…”
2.அதை நாம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்… இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…! “இதை நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டே வரவேண்டும்…”

வெறுமனே தியானம் மட்டும் செய்தால் பத்தாது. நாம் தொழில் செய்யும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான சிக்கல்களிலிருந்தும் விடுபட்டுப் பழக வேண்டும்.

காரணம்… ஆர்வத்தில் இங்கே வருவார்கள் குறைகளைக் கண்ட பின் எம்முடைய உபதேசத்தை (தியானத்தை) விட்டு விடுவார்கள். குறைகளை வளர்த்து விடுவார்கள்.

தொடர்ந்து தியானிக்கும் போது “நீங்கள் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவ்வப்பொழுது அதைச் சுட்டிக்காட்டி…” அந்தக் குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும்…? என்ற உணர்வை அது மாற்றிக் கொடுக்கும்.

அதை உருவாக்கினால் தான் அந்த உணர்வின் அனுபவம் உங்களுக்கு எழுத்து வடிவம் கொண்டுவர ஏதுவாக இருக்கும். உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி விளைய வைக்கவும் முடியும்.

விவசாயப் பண்ணைகளில் பல சத்துகளை ஒன்றாக இணைத்து வீரிய செடியாக உருவாக்கினார்களோ மாற்றியமைத்தார்களோ இதைப் போன்று நாம் ஞானிகள் உணர்வை இணைத்து வீரிய சக்தியாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு உடலிலும் வந்த உணர்வுகளை மாற்றி அதற்கொப்ப பரிணாம வளர்ச்சியில் எப்படி உடல்கள் பெற்று வந்தோமோ… நம் உயிர் மாற்றியதோ இதைப் போலத்தான் நம் தொழில் செய்தாலும் வேலை செய்தாலும் அதன் மூலமாக
1.ஒவ்வொரு நொடியிலும் அதற்குள் அருள் உணர்வைப் பெருக்கி அதை மாற்றி அமைத்து
2.வாழ்க்கையே தியானம் என்ற நிலைகளுக்கு நாம் வளர்ச்சியின் பாதையில் கொண்டு வர வேண்டும்.

உடல் வாழ்க்கைக்கு நாம் தொழில் செய்ய வேண்டி இருக்கின்றது. ஆனாலும் தொழிலில் வரக்கூடிய சிக்கல்கள் நாம் போகும் பாதையை அது தடைப்படுத்தி விடக்கூடாது.

ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிடும் நிலையாக நம்முடைய வளர்ச்சி என்றுமே அந்த மகரிஷிகள் காட்டிய வழியில் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் ஞாபகப்படுத்துவது.

குறைகளை வளர்த்தால் நமக்கு நாமே எதிரி ஆகின்றோம்

குறைகளை வளர்த்தால் நமக்கு நாமே எதிரி ஆகின்றோம்

 

1.பிறரிடம் குறை காணும் உணர்வுகளானது அதே குறைகளை நம்மிடத்திலும் உருவாக்கிவிடும்.
2.இந்த வகையில் நமக்கு எதிரி வேறு எங்கும் இல்லை… நாமேதான் நமக்கு எதிரி.

எல்லோரும் நல் நிலை பெற வேண்டும் என்ற உணர்வுகளை நம்மிடத்தில் வளர்க்கும் பொழுது நம்மிடத்திலும், நம்மைச் சார்ந்தவர்களிடத்திலும் நல் உணர்வுகள் விளைந்து நம்மையும் நம்மைச் சார்ந்தவரையும் உயர்ந்த நிலை பெறச் செய்யும்.

நாம் யாரிடமெல்லாம் பழகினோமோ அவர்கள் நம்மிடம் பகைமையாகப் பேசியிருந்தாலும் சரி அல்லது நல்ல நிலைகளில் பழகியிருந்தாலும் சரி அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தின் பொழுது நாம் நமது நினைவிற்குக் கொண்டு வர வேண்டும்.

கொண்டு வந்து
1.அவர்களது குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
2.அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் அவர்களது குடும்பங்களில் கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் போன்று அவர்கள் வாழ்ந்திட வேண்டும் நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்திட வேண்டும் சாவித்திரி போன்று, இரு உணர்வுகளும் ஒன்றிடல் வேண்டும் என்று இது போன்ற உணர்வுகளைக் கலந்தே நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

அதிகாலையில் இவ்வாறு அனைவரும் ஏகோபித்த நிலையில் செயல்படுத்தும் பொழுது
1.அனைவரது உடல்களிலும், பகைமை உணர்வுகளுக்கு இடம் இல்லாது அவை தடைப்பட்டுவிடும்.
2.இந்தப் பரமாத்மாவில் (காற்று மண்டலத்தில்) மகிழ்ந்து வாழும் அருள் உணர்வுகள் பெருகும்.

ஒரு புழு ஒரு விஷச் செடியைத் தனது உணவாக உட்கொண்டால் அதனின் உணர்வின் எண்ணங்கள் புழுவினுள் உருவாகிக் கொண்டிருக்கும்.

அந்தப் புழுவை ஒரு குருவி உணவாக உட்கொண்டிருந்தால் அதை உணவாக உட்கொள்ளும் அந்தக் குணத்தின் தன்மை கொண்டு அதை ஜீரணிக்கும் சக்தி அதனிடத்தில் இருக்கும்.

ஆனால் அதே புழுவின் உயிர் இந்த குருவியின் தன்மைக்கு வந்திருக்கும். இதைப் போன்று பல கலவைகள் கலந்தே நாம் வந்துள்ளோம்.

ஒன்றைக் கொல்கிறது… ஒன்றை வளர்க்கின்றது. ஒன்றுக்கு அது விஷத்தன்மையாக இருந்தாலும் விஷத்தை விஷத்தாலே தனக்குள் உணவாக எடுத்து, உட்கொள்கின்றது.

விஷச் செடியில் புழுக்கள் உருவாகின்றது, அதைக் குருவிகள் கொத்திச் சாப்பிடுகின்றன. புழுவின் உயிரான்மா குருவியின் உடலுக்குள் சென்று குருவியின் ரூபத்தை அடைகின்றது.

ஆனால் அந்த உணர்வின் தன்மை விஷத்தின் தன்மையை ஒடுக்கும் அணுவாக வருகின்றது பரிணாம வளர்ச்சியில்.

இன்று பிறிதொருவரிடம் எனக்குத் தொடர்பு இல்லை என்று ஒருவரும் இருக்க முடியாது.
1.யாரும் பிரிந்து தனியாக இல்லை.
2.ஒருவன் உங்களைச் சபித்து அதை உங்களிடம் பதிவாக்கி விட்டான் என்றால் அவனிடமிருந்து நீங்கள் விலக முடியாது.
3.நீங்கள் பிறிதொருவரைச் சபித்தால், நீங்களும் அவரிடம் இருந்து விலக முடியாது.

இதைப் போன்று நாம் ஒருவரோடு ஒருவர் பேசினாலும் அவர்களின் உணர்வுகளும் நமக்குள் உண்டு. இந்த உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகி உங்களை இணைத்துக் கொண்டிருக்கும். “பாவிப்பயல்… இப்படிச் செய்து விட்டான்…!” என்று உங்களை அவரிடத்தில் இணைத்துக் கொண்டே இருக்கும்.

நண்பர்களாக இருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பொழுதும் இதனின் உணர்வுகள் பதிவாகி இருக்கும். இரண்டு பேரும் இணைந்துதான் இருக்கிறீர்கள்.

ஆக நன்மையின் நிலை வரும் பொழுது இரண்டு பேருக்குமே நன்மையாகி விடுகின்றது. இரண்டு பேரும் தீமை என்ற உணர்வை பதிவாக்கப்படும் பொழுதும் கூட இரண்டு பேர்களுடைய நிலையும் பிரிந்திருப்பதில்லை.

உங்கள் நண்பரின் நிலைகளில் எதை அதிகமாக உங்களில் பதிவாக்கி இருக்கின்றீர்களோ அதன் உணர்வுகள் உங்களிடத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

ஆக நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ பேசினோமோ அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தில் எண்ணி
1.“அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்,
3.அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்” என்று எண்ணி இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

மேலும் அவர்கள் குடும்பத்தில் கணவனும் மனைவியும் வசிஷ்டர் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும். நளாயினி போன்று ஒருவரை ஒருவர் உயர்வாக மதித்து வாழ்ந்திட வேண்டும். சாவித்திரி போன்று இரு உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்திடல் வேண்டும்… என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

அவர்களுடைய குழந்தைகள் உலக ஞானம் பெற வேண்டும் அவர்களுடைய தொழில்களும் நன்றாக இருக்க வேண்டும்…” என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி தியானித்து இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

1.“அவர்கள் வளர்ச்சி பெற வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் விளையும் பொழுது
2.நமக்குள் அந்த நிலைகள் தானாகவே வளரும் தன்மை பெற்று வளர்ச்சி அடைகின்றது.

நாம் சந்தித்தவர்களின் உணர்வுகளும் நண்பர்களின் உணர்வுகளும் நமக்குள் பதிவாகிய நிலையில் “அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்…” என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
1.நம்மிடத்தில் உள்ள தீமை என்ற உணர்வுகள் மறைந்து விடுகின்றன.
2.அதே சமயத்தில் அவர்களும் அவ்வண்ணமே உயர்ந்த நிலைகளைப் பெறுகின்றார்கள்.

யாம் உபதேசித்து, உங்களிடம் பதிவாக்கிய, அருள் வாக்கினை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும். அது உங்களில் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ப்பொருளை அறிந்திடும் நிலையைப் பெறச் செய்யும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் உங்களில் பெருகித் தீய உணர்வுகளுக்கு உங்களிடத்தில் இடமில்லாது “உங்களில் எப்பொழுதும் மகிழ்ச்சியான உணர்வுகளும் நல்மனமும் பெருகி வளர்வதற்கு எமது அருளாசிகள்…”

இன்றைய உலக நடப்பு

இன்றைய உலக நடப்பு

 

மனிதன் எவ்வளவு சிந்தனை கொண்டு விஞ்ஞானத்தின் அறிவினால் இன்று எலக்ட்ரானிக் கருவிகளைக் கண்டுபிடித்துச் செயல்பட்டாலும் இது எல்லாம் இன்று எதற்கு உதவுகின்றது…? தன் நாட்டைப் போற்றிடும் நிலையாக மற்றவனை அழித்திடத் தான் உதவுகின்றது.

எலக்ட்ரானிக் வளர்ச்சியையும் அதன் பயன்பாடுகளைப் பற்றியும் நாம் ஆச்சரியப்படலாம். உலக நடப்புகளை அடுத்த கணமே தெரிந்து கொள்ளலாம்.
1.அறிந்துணர்ந்து அதை இயக்கப்படும் பொழுது அழித்திடும் சக்திகள் தான் வளர்கின்றது
2.அழித்திடும் எண்ணங்கள் தான் ஓங்கி வளர்கின்றது.

அதை வளர்த்து விட்டால் பின் எங்கே செல்வோம்…? என்று சற்று சிந்தியுங்கள்.

நாம் வளர்த்த அந்த அழித்திடும் உணர்வுகள் அனைத்துமே சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு நமக்கு முன்பு தான் பரவிக் கொண்டுள்ளது.
1.திடீரென்று உணர்ச்சிவசப்பட்டால் அந்த உணர்வு இயக்கி… மீண்டும் தன் எதிரிகளை அழித்திடும் எண்ணங்களே நமக்குள் தோன்றி
2.அந்த சிந்தனைகளே ஓங்கி வளர்த்து… நம்மை அழித்திடும் நோயாக மாறி “வைத்தியமே இல்லாத நிலையாகிவிடுகிறது…”

அது மட்டுமல்ல…! இதைக் கேட்போர் உணர்வுகளிலும் இயக்கப்பட்டு அவர்களையும் அழித்திடும் நிலையாகவே வளர்ந்து கொண்டே வருகின்றது.

இன்று குழந்தைகளைக் காணோம் முதியவர்களைக் காணோம் என்றெல்லாம் செய்திகள் வருகின்றது. அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் விற்றுக் கண்களைப் பிடுங்கி… உடல் உறுப்புகளைப் பிடுங்கி… வியாபாரம் செய்கின்றார்கள்.

காசே இல்லை என்றாலும் ஒன்றும் கவலை இல்லை. குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய் அதற்கென்று கூட்டங்களில் ஒப்படைத்து விட்டு விட்டால் இவனுக்குக் காசு கிடைக்கின்றது.

இவன் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றால்… அவன் உடல் உறுப்புகளைப் பல லட்சக்கணக்கில் விற்று வியாபாரம் செய்கின்ற அந்த அளவிற்கு விஞ்ஞானமும் சரி… பக்தி என்ற நிலையிலும் சரி… மதத்தின் சார்புடைய நிலைகளும் சரி… இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

தன் மதத்தாரைப் பிடிக்க மாட்டார்கள். அடுத்த மதத்தாரைக் கடத்திக் கொண்டு வந்தால் அது பாவம் இல்லை. இப்படித் திருடிக் கொண்டு போய் மிருக நிலைகள் கொண்டு அரக்கத்தனமான செயலாகப் போய்க் கொண்டுள்ளது.

ஆனால் இதனுடைய முடிவு எப்படி எங்கே சென்றடையும்…? என்பது சிலருக்குத் தெரியாது.

உடலில் இருக்கும் பொழுது உணர முடிகின்றது. இந்த உடலில் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் ஒலிகள் “உயிருடன் சேர்க்கப்படும் பொழுது…”
1.அந்த அணு செல்கள் ஒவ்வொரு நொடியிலும் வேதனையுடனே தான் துடித்துக் கொண்டிருக்கும்.
2.இதை மாற்றுவதற்கு எவராலும் முடியாது.

ஏனென்றால் மனிதனாக உருப்பெற்ற பின் அது வளர்ச்சி பெற்றது. உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இந்தத் துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும். யாரும் காப்பாற்ற முடியாது…!

இந்த மனித உடலில் இருக்கும் போது தான் துன்பத்தை நீக்க முடியும். அதை நீக்குவதற்குண்டான எண்ணங்களை எடுத்துச் செயல்படுத்தவும் முடியும்.

ஆனால் மனித உடலை விட்டுச் சென்றால் இந்த உடலில் எந்தத் தீய வினைகளைச் சேர்த்தோமோ அது இன்னொரு உடலுக்குள் சென்று “இதே உணர்வைத் தான்…” அங்கேயும் செயல்படுத்தும்.

உதாரணமாக ஹார்ட் அட்டாக்கில் இறந்திருந்தால் இன்னொரு உடலுக்குள் சென்று அங்கே குழந்தையாக அது பிறப்பதில்லை. மனிதன் இறந்தாலும் இன்னொரு உடலுக்குள் சென்று தான் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும்.

ஆனால் ஹார்ட் அட்டாக்கில் இறந்திருந்தால் அடுத்த உடலுக்குள் சென்ற பின் இதே உணர்ச்சியைத் தூண்டி அங்கேயும் அதே நோயை உருவாக்கி அதையும் சீக்கிரம் கொல்லத்தான் செய்யும்.

பின் எப்படி அங்கே குழந்தையாகப் பிறப்பது…?

பக்தியின் நிலைகளில் வாழ்ந்தாலும் கடைசியில் வேதனைப்பட்டு ஏங்கிக் கொண்டிருந்தால் எந்தெந்த மதத்தின் அடிப்படையில் பக்தி கொண்டு வந்தாலும் இறந்து விட்டால் அதே பக்தி கொண்ட ஒரு மனிதன் ஈர்ப்பு இருந்தால் அங்கே சென்று இந்த வியாதியைத்தான் அங்கே உருவாக்க முடியும்.

அங்கேயும் குழந்தையாகப் பிறப்பதில்லை. அதையும் நசுக்கச் செய்கின்றது.

தற்கொலை செய்து கொண்டாலும் இதே போன்று தான். அடுத்த உடலுக்குள் சென்று அதையும் வீழ்த்தத்தான் செய்யும்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகளைச் சொல்கின்றோம்…! “இதிலிருந்து மீள வேண்டும்…” என்பதற்குச் சொல்கின்றோம். காலங்கள் மிகவும் குறுகியிருக்கின்றது.

விஷத்தின் தன்மைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆக இந்தப் பூமிக்குள் நமக்கு முன் சாக்கடையாகத்தான் அது இருக்கின்றது. இங்கே தான் வாழுகின்றோம்.

1.ஆனால் இதே காற்று மண்டலத்தில் தான் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்திய அருள் உணர்வுகளும் மறைந்துள்ளது.
2.நம் குருநாதர் காட்டிய வழியில் அதை நாம் நுகர்ந்து எடுத்து நமக்குள் வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
3.நம்மை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து அப்பொழுது நாம் விடுபட முடியும்.
4.இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய முடியும்… அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

எல்லோரையும் காக்க வேண்டும் என்ற நிலை மாறி… “அழிக்க வேண்டும்” என்ற உணர்வே வளர்ந்து விட்டது

எல்லோரையும் காக்க வேண்டும் என்ற நிலை மாறி… “அழிக்க வேண்டும்” என்ற உணர்வே வளர்ந்து விட்டது

 

இந்த மனித வாழ்க்கையில் இந்த ஆசை அந்த ஆசை என்று இருந்தாலும் அதனின் வளர்ச்சியில் உலகெங்கிலும் எத்தனையோ வகைகளில் எத்தனையோ நிலைகளில் போர்க்களங்கள் ஆகிக் கொண்டுள்ளது.

அதனால் ஆங்காங்கு வாழும் மக்களின் நிலை என்ன ஆவது…?

ஒவ்வொருவரும் தன்னைக் காக்க எத்தனையோ விஷமான குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்து
1.தன் நாட்டைக் காக்கப் போகின்றேன்… அதை வைத்து எதிரியை வீழ்த்தப் போகின்றேன் என்ற இந்த உணர்வை ஓங்கி வளர்த்து
2.அதேபோல மற்ற நாட்டவரும் எதிரிகளிடம் இருந்து காக்க அவனை அழிக்க வேண்டும் என்று அதை நுகர்ந்து
3.தன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்து விடுகின்றான்.

இவன் உடலில் இருக்கக்கூடிய நல்ல எண்ணத்தை இவன் அழித்தும்… பதிலுக்கு எதிரியை அழிக்க வேண்டும் என்ற உணர்வுகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் நல்ல குணங்களை அவன் அழித்திடும் நிலையாகவும் தான் செயல்படுகின்றனர்.

1.ஆக… யாரைக் காக்க வேண்டும் என்று இப்படி எண்ணினார்களோ அவர்கள் யாரையுமே காக்க முடியாது
2.அனைவருமே நல்ல குணங்களை இழந்து மண்ணுடன் மண்ணாக மடியும் நிலைதான் வருகின்றது.
3.மடிந்தாலும் விஷ பூச்சிகளாகப் பிறக்கும் நிலை தான் உருவாகிக் கொண்டுள்ளது.

எப்படி… எதனால்…?

விஷமான ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துள்ளார்கள் அதை வெடிக்கும் போது சுட்டுப் பொசுக்கிப் பாதிப்பாகும் பொழுது அதனால் ஏற்படும் வேதனையான உணர்வுகள்
1.எந்தெந்த விஷத்தின் தன்மையைப் பாய்ச்சுகின்றனரோ அதற்கொப்ப இறந்து விடுவோமே என்ற வேகத்தில் அதை எல்லாம் சுவாசிக்கப்படும் பொழுது
2.குண்டுகளாக் நம்மை அழித்து விடுவான் சுக்குநூறாக ஆக்கி விடுவான் என்ற இந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு
3.அதனின் பய உணர்வுகள் கொண்டு அதனால் தாக்கப்படும் பொழுது இந்த உடலை அழித்து
4.அந்த உணர்வு தாங்கிய தன்மையாக மனிதன் இறந்த பின் விஷப் பூச்சிகளாகத் தான் இனி பிறக்க வேண்டி வரும்.

“யுத்தங்கள் நடக்கும் பகுதிகள் அனைத்திலும்” மனிதர்களாக இருப்பவர்கள் அங்கே இறந்து விட்டால் விஷப் பூச்சிகளாகப் பிறக்கும் நிலையைத் தான் அடைகின்றார்கள். யாராக இருந்தாலும் சரி…!

ஏனென்றால் பாலிற்குள் விஷத்தை ஊட்டினோம் என்றால் அதைக் குடித்தால் நம்மை நினைவை இழந்து மடியச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மனிதனுடைய ஆசை அலைகள் அனைத்துமே அழிந்து இனி எந்த நிலை ஆகப்போகின்றோமோ என்ற நிலையில் எதிரிகளின் பால் நினைவைச் செலுத்தி அவர்கள் வீசும் குண்டுகளினால் தன்னை அழித்து விடுவான் என்ற நிலையில் நல்ல உணர்வுக்குள் இத்தகைய விஷமான உணர்வு இணையப்படும் பொழுது அதன் அறிவுகள் உடலுக்குள் இது ஊடுருவித் தாக்கப்பட்டுச் சுக்குநூறாக்கிவிடுகிறது.

இந்தக் குறுகிய காலத்திலே விளைந்த இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தின் ஆற்றல் கொண்ட ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டு அதன் வழி உடலாகப் பெறப்படும் பொழுது
1.அடுத்து நல்ல உடல் பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
2.இந்தப் பூமி விஷமான நிலையிலிருந்து நல்ல நிலை பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
3.அப்படி நல்ல நிலை பெற்று அதிலே மீண்டும் மனிதர்களாக வரக்கூடிய எக்காலம்…? என்றும் சொல்ல முடியாது.

இப்பொழுது இருக்கக்கூடிய காலத்திலே எத்தனை சுகபோகங்களை அழித்தோமோ எத்தனை வேதனைகளை அனுபவித்தோமோ எந்த வேதனையை வளர்த்துக் கொண்டோமோ வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மைகள் இந்த உயிரிலே ஒன்றிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும் “வேதனைப்பட்ட நிலையிலிருந்து நாம் மீளவே முடியாது…”
1.உயிருடன் இந்த வேதனை துடித்துக் கொண்டு தான் இருக்கும்.
2.அந்த வேதனையின் உணர்வின் இயக்கங்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கும்.

இப்பொழுது உடலில் இருக்கும் பொழுது உணர முடிகின்றது உடலின் துணை கொண்டு. சந்தர்ப்பத்தால் அதை மாற்றி அமைக்கவும் முடிகின்றது மனிதனாக இருக்கும் பொழுது தான் மாற்றவும் முடியும்.

ஆனால் மனித உடலில் நீக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த வேதனையான விஷம் உயிராத்மாவிலே சேர்க்கப்படும் பொழுது எப்பொழுதுமே விஷத்தன்மை கலந்ததாக இயக்கி “நம்மை வேதனையால் துடிக்கும்படி செய்து விடும்…”

அப்படிப்பட்ட உலக சூழ்நிலையில் தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து
1.நல்ல நினைவிருக்கும் பொழுதே மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று விஷத்தன்மைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
2.அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வது.

உயிரினங்கள் எல்லாம் “நாங்கள் சாப்பிடுவதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்பார்கள்

உயிரினங்கள் எல்லாம் “நாங்கள் சாப்பிடுவதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்பார்கள்

 

மலேசியா போன்ற சில நாடுகளில் போதைப் பொருள்களை அவர்கள் உபயோகித்தாலும் “அதிக போதை வேண்டும் என்பதற்காக” நல்ல பாம்பை வைத்து அதன் நாக்கை நீட்டச் சொல்லி நாக்கிலே கொட்டச் செய்து இதைப் போன்று விஷத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் மனிதர்களும் உண்டு.

இங்கே குரங்கை நாம் வணங்குகின்றோம். ஆனால் சில நாடுகளில் உயிருடன் இருக்கும் குரங்கை அதன் மேலே இருக்கும் ஓட்டைத் தட்டி விட்டு மூளையைக் குழப்பி சில பொடிகளைப் அதற்குள் போட்டு “ஸ்ட்ராவை வைத்துச் சர்பத் சாப்பிடுவது போன்று உறிஞ்சிச் சாப்பிடுகிறார்கள்…”

மனிதனாகப் பிறந்தும் மிருக உணர்வு கொண்டு இப்படி இருக்கும் நிலைகள் உண்டு.

ஜப்பானை எடுத்துக் கொண்டால் விஞ்ஞான அறிவில் அவர்கள் வளர்ந்தவர்கள் தான். அங்கே “கரப்பான் பூச்சிகளைப் பிடித்து அதை எண்ணெயில் போட்டு வறுத்து ரசித்துச் சாப்பிடுபவரும் உண்டு…”

இது போன்ற உணவுகளை உட்கொள்வோர் எல்லாம் உடலுக்குப் பின் எங்கே செல்வார்கள்…?

அவர்கள் வணங்கும் ஆண்டவனை எந்த மதத்தின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் ஆண்டவனுக்காகச் சில உயிர்களைப் பலி கொடுத்து அவைகளை எங்களுக்காகப் படைத்தான் என்ற நிலையில்…
1.உனக்கு (ஆண்டவனுக்கு) அதைக் கொடுத்துவிட்டு “உன் பெயரைச் சொல்லி நான் உட்கொள்கிறேன்” என்று சாப்பிடுகின்றார்கள்.
2.ஆனால் அப்படிச் சாப்பிட்ட உணர்வு கொண்டு அந்த மணம் இவர்கள் உடலில் சேருகின்றது.

மிருகங்கள் அனைத்துமே விஷத்தின் தன்மையைத் தன் உடலாக ஏற்றுக் கொண்டது. அப்படிப்பட்ட உயிரினங்களை உட்கொள்ளும் பொழுது இந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவிவிடும்.

அந்த மிருகங்கள் செய்யும் கொடூரத் தன்மையை அது மற்ற விஷமானவற்றை எப்படி உட்கொள்கின்றதோ இதைப் போன்ற உணர்வின் சத்து உடலுக்குள் வரும் பொழுது “அந்த உணர்ச்சிகளைத் தூண்டி”
1.நம்மைக் கேட்காமலேயே காற்றிலிருந்து அதே உணர்வுகளை நுகர்ந்து அது வளர்ச்சியாகி
2.அந்த விஷத்தின் தன்மை கொண்ட செயலை உருவாக்கி அதையே ரசித்து உட்கொள்ளும் நிலை வருகின்றது.

இதைப் போன்ற இரக்கமற்ற நிலைகள் கொண்டு எந்தெந்தக் கடவுள்களை மதத்தின் அடிப்படையில் வணங்கினாலும் அதைப் போல எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலுக்குள் சேர்ந்து… விஷமான உயிரினங்களை உட்கொண்டோர் அனைவரும் உடலை விட்டுச் சென்ற பின் அது போன்ற உயிரினமாகத் தான் பிறப்பார்கள்.

விஷப் பூச்சிகள் விஷத்தைக் கொட்டித் தன் உணவை உட்கொண்டு அதனால் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றதோ இதைப் போன்று மனித வாழ்க்கையில் பிறிதொருவர் வேதனைப்படுவதைக் கண்டு ரசித்து அதைச் சுவாசிப்போம் என்றால் அந்த விஷத்தின் தன்மை நல்ல உணர்வுகள் அனைத்தையும் அழிந்துவிடும்.

விஷத்தின் ஈர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும் நிலையில் மனிதனில் விளைய வைத்த இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி அது மணமாகச் சேரும்.

உயிராத்மாவில் எந்த மணத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ உடலை விட்டுப் பிரிந்த பின்… அந்த மணத்தின் நிலைகள் கொண்டு இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருந்தாலும்
1.அதற்கு ஒத்த விஷ ஜந்துக்களின் உயிரும் இந்த உயிரின் தன்மையும் அந்த உணர்வுகள் ஓங்கி வளரப்படும் பொழுது
2.அதனுடைய ஈர்ப்புக்குள் சென்று அந்த உடலின் தன்மையை அதனுடைய சத்தைக் கவர்ந்து கருவாகி முட்டையாகி
3.முட்டைக்குள் அதனின் சத்தை எடுத்து இந்த உயிர் அதனின் உடலாக இது உருவாக்கி மனிதனைப் பாம்பாக ஆக்கிவிடும்.

ஆகவே… எத்தகைய நிலைகளைச் செய்தாலும் மற்றவர்களிடம் மறைத்து விடலாம். ஆனால்
1.உடலுக்குள் உயிராக இருக்கும் ஈசனிடம் எதை நாம் எடுக்கின்றோமோ அதை நமக்குள் விளைய வைத்து
2.அந்த உணர்வின் மணத்தைத் தாங்கி அதையே அடுத்த உடலாக்கி அப்படிப்பட்ட நிலையாக உருவாக்கிவிடும் உயிர்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்… நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ விஷங்களை நீக்கி வந்த நிலையில்… மனித உடலில் விஷத்தை முழுமையாக அடக்கி ஒளியின் சிகரமாக மாற்றும் திறன் பெற்றவர்கள் மகரிஷிகள்.

விண்ணிலே படர்ந்து வரும் விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து அதை அடக்கி நிலையான ஒளிச் சரீரமாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
1.நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து கொண்டே இருக்கின்றது அது நிறைந்து கொண்டே இருக்கின்றது.
2.ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளால் அதை நுகர்ந்தால் நாமும் அந்த மகரிஷிகள் அடைந்த எல்லையை அடையலாம்.

சாமி எதை எதையோ சொல்கிறார்… இது எல்லாம் தனக்குத் தேவையா…? என்று சிலர் எண்ணுவார்கள்

சாமி எதை எதையோ சொல்கிறார்… இது எல்லாம் தனக்குத் தேவையா…? என்று சிலர் எண்ணுவார்கள்

 

வாழ்க்கையில் நாம் நல்லதே எண்ணி இருந்தாலும் பிறிதொரு தவறான உணர்வுகளை… அல்லது பிறர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அவர் உடலிலே விளையும் உணர்வை நாம் நுகர நேருகின்றது.

நுகர்ந்த உணர்வுகளை உயிர் உணர்த்திக் காட்டினாலும் அந்த உணர்வின் சத்து நமக்குள் பதிவாகி விடுகின்றது. இதைப் போன்று தான்
1.இப்பொழுது நாம் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையை நுகர நேருகின்றது.
2.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் படர்கின்றது… அப்படிப் பரவிய உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி விடுகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் தவறு செய்யாமலேயே உங்கள் உணர்வு இயக்கும் நிலையில்… அதாவது பிறிதொரு உணர்வுகள் உங்கள் உடலுக்குள் புகுந்து அது இயக்கும் நிலையில் “நீங்கள் அதைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு அதை வழிகோல் செய்வதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்…”

ஏனென்றால்…
1.இதையெல்லாம் சொல்லி நாம் கேட்டறிந்து என்ன செய்யப் போகின்றோம்…?
2.சாமி சுருக்கமாகச் சொன்னால் போதுமே என்று சிலர் எண்ணுவார்கள்.
3.நான் சுருக்கமாகச் சொல்வதற்கில்லை…!

நீங்கள் விரிவாகத் தெரிந்து கொண்டாலும் பாட நிலையாகத் தான் கற்றுக் கொள்ள முடியும்… உட்பொருளைக் காண முடியாது.

உதாரணமாக… கல்வியில் படிக்கும் பாட நிலையை எந்த மனது கொண்டு படிக்கின்றீர்களோ அந்த மனதைக் கொண்டுதான் அது முழுமையாக வரும். ஆக… தன் வீட்டில் எந்த அளவிற்கு மன நிம்மதி இருக்கின்றதோ அந்த உணர்வு முன்னணியில் இருக்கும்… நன்கு படிக்க முடியும்.

ஆனால் வீட்டிலே சிறிது சஞ்சலப்பட்டு அந்த உணர்வுகள் வந்து கொண்டேயிருந்தால்… இன்ஜினியரிங் படிக்கக் கூடியவர்கள் தன் படிப்பை அங்கே படித்தால்
1.எதைக் கூர்மையாகக் கவனித்தாலும் இந்தச் சஞ்சல அலைகள் கலந்து தான் பதிவாகும்.
2.மீண்டும் நினைக்கப்படும் பொழுது இது சரியா…! தவறா…? என்று அதைச் சரியாக நிர்ணயம் செய்ய முடியாதபடி சஞ்சல நிலைகளையே உண்டாக்கும்.

சஞ்சல நிலைகள் உண்டான பின் தேர்விலே கேள்விகள் கேட்கப்படும் பொழுது அதனின் விடையை அறிந்து கொள்வதற்காகச் சிந்தித்தாலும்…
1.அந்தக் கேள்வியைக் கண்டாலே ஒரு திகைப்பான நிலையும்
2.அதனால் பரீட்சையில் தேறாத நிலைகளாக வந்துவிடும்.

ஆனால் பரீட்சை எதற்காக வைக்கின்றார்கள்…?

தான் படித்ததை அந்தந்த நேரங்களில் (திடீரென்று) அதைச் சிந்தித்து “இது இப்படித்தான்” என்று நாம் அறிந்து கொள்வதற்காக… படித்த நிலையை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ பரீட்சை வைக்கப்படும் பொழுது… நமக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மூலமாக நாம் படித்ததை அறிந்து தேறுவதற்காக அதை வைக்கின்றார்கள்.

ஆனால் இந்த வாழ்க்கையில் வீட்டிலே அமைதி கொண்டிருந்தாலும் வெளியிலே வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

நண்பர்கள் பால் உள்ள பற்றால் ஆர்வ உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் வழியில் சென்று விட்டால்… படிப்புக்கு என்று செல்லப்படும் பொழுது கல்வி கற்கும் இட்த்தில்
1.நுண்ணிய உறுப்புகளின் செயலை… இதை இப்படி இதில் பொருத்தினால் இன்னது தான் நடக்கும் என்று சொல்லிக் கொடுக்கும் போது
2.அங்கே அதைக் கூர்மையாகக் கவனிக்கும் நிலைகள் வரும் பொழுது
3.ஆர்வ உணர்ச்சிகள் தூண்டப்பட்ட நண்பர்களிடமிருந்து வந்த உணர்வு முன்னணியில் வந்து
4.அதை எண்ணிய உடனே ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது “மனதிற்குச் சிக்கலாக வரும்…”

“தனக்குள் இது சரியாக வரவில்லையே…” என்ற உணர்வு இயக்கப்படும் பொழுது
1.தன் நினைவலைகள் வரப்படும் பொழுது கண்ணின் ஈர்ப்பு சக்தி சோர்வடையும்… கண் கனமாகும்… தன்னை அறியாமலேயே தூக்கம் வரும்.
2.நான் படிக்கச் சென்றேன்… ஆனால் எனக்குத் தூக்கம் வருகிறது… என்னால் முடியவில்லை…! என்று சொல்வார்கள்.

ஏனென்றால் நுண்ணிய கருத்த்துக்கள் பாடநிலையாக வரும் பொழுது அதை எடுத்து எண்ணத்துடன் பிணைத்து அதனைத் தெரிந்து கொள்ளும் நினைவலைகளை ஊட்டப்படும் பொழுது நண்பரின் ஆர்வத்தின் உணர்வுகளைக் கொண்டு வந்த உடனே அது முடியாத நிலைகள் கொண்டு “படிக்க வேண்டியதை மறைத்துக் கொண்டே இருக்கும்…”

நண்பன் அங்கேல்லாம் சென்றார்… அழகான இடங்களைக் கண்டார் அந்த மகிழ்ச்சியூட்டும் நிலைகளைப் பார்த்தார் என்று இந்த நினைவலைகளை எண்ணப்படும் பொழுது… காரணம்
1.தொழிலிலே மிகவும் லாபமாகச் சம்பாதிக்கின்றார்கள்… அதனால் இப்படி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் என்று
2.இப்படிப்பட்ட ஆர்வங்கள் உந்தப்படும் பொழுது இது முன்னணியில் வரும் பொழுது கல்வியைச் சீராகக் கற்க விடாது…
3.அது பதிவானாலும் நினைவுபடுத்திச் சரியாகச் செயல்படுத்த முடியாது.

இதுகள் எல்லாம்… இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் மாறுபாடான செயல்கள் எத்தனையோ நடக்கின்றது.

ஒரு கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே தெரிந்தவர்கள் வந்துவிட்டால் அந்தக் கடைக்காரர் அவர்களைத்தான் முதலிலே கவனித்துச் சரக்கை எடுத்துக் கொடுப்பார்.

என்னங்க…! எனக்குச் சரக்கு கொடுங்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்போம். நாம் சொல்லச் சொல்ல நேரம் ஆக ஆக நம்மை அறியாமலே கடைக்காரர் மீது நமக்குக் கோபம் வரும்.

அந்தக் கோபத்துடன் பார்க்கப் பார்க்க நம்மைக் கடைக்காரர் பார்த்தவுடன்… “இவர் என்ன…? கொடுப்பதற்கு முன் ஆத்திரப்படுகிறார்…?” என்று இன்னும் கொஞ்சம் நம்மை நிறுத்தி விடுவார்.

நாம் பொறுமை இழந்து “ஏய்யா… ரொம்ப நேரமாக நான் நின்று கொண்டிருக்கின்றேன்…! நீ சரக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறாய்…!” என்று ஸொல்வோம்.

வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு செயல்களிலும் இத்தகைய உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினாலும்…
1.நல்ல குணங்களுக்குள் இது எல்லாம் கலந்த பின் எதை எண்ணினாலும் கலக்கமுடன்தான் இருக்க முடிகின்றதே தவிர
2.நிம்மதியான நிலைகள் கொண்டு எந்தச் சொல்லையும் நல்லது என்று வலு கொண்டு நிலைத்திருக்க முடியவில்லை.
3.எதை எடுத்தாலும் கவலையும் சஞ்சலமும் ஏற்பட்டு எல்லா குணங்களிலும் கலக்கச் செய்து அந்த உணர்வை நுகரப்படும் பொழுது
4.எதன் எதன் அளவைக் கூட்டிக் குறைத்துச் சுவாசித்தோமோ அதற்குத் தக்கவாறு உடல் உறுப்புகளில் நோய்கள் உருப்பெறுகின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன சக்தி வைத்திருக்கின்றோம்…?

“தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுள்ளது போல் தான்” இன்றைய மனிதனின் வாழ்க்கை இந்த உலகிலே உள்ளது

“தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுள்ளது போல் தான்” இன்றைய மனிதனின் வாழ்க்கை இந்த உலகிலே உள்ளது

 

பூமிக்கு வெளியிலே அணுகுண்டுகளை வெடித்துப் பரீட்சித்துப் பார்த்ததும்… இராக்கெட்டுகளை அதிகமாக விண்ணிலே செலுத்திக் கொண்டிருப்பதும்… அதன் மூலம் கதிரியக்கங்கள் எல்லாக் கோள்களுக்குள்ளும் அதிகமாகப் பரவி விட்டது.

நட்சத்திரத்திலிருந்து இயற்கையாக வெளிப்படக்கூடிய கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக வரும் பொழுது
1.விஞ்ஞானத்தினால் பரவச் செய்துள்ள கதிரியக்கங்களில் இது பட்ட பின் இரு மடங்காகிவிடும்… கோள்களிலும் இது அதிகமாகிவிடும்.
2.இப்படிப்பட்ட அலைகள் இந்தப் பிரபஞ்சத்திற்குள் இப்பொழுது சுழன்று கொண்டுள்ளது… சூரியனுக்கு அருகிலும் வந்துவிட்டது.

உதாரணமாக… இரண்டு மின்சார வயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இரண்டு மடங்கு கரண்டுகள் அதிகமாகி அதனுடன் சேர்ந்த பல்புகள்… மற்ற சாதனங்கள் அனைத்தும் ஃப்யூசாகி விடுகின்றது.

சூரியனின் சுழற்சியில் இப்பொழுது மின்சாரம் (இயக்கம்) சீராக இருக்கின்றது. ஆனால் இயற்கையால் உருவாகும் கதிரியக்கமும் மனிதனால் பரவச் செய்த கதிரியக்கமும் மோதிய பின் இரு மடங்கு இயக்கமாகி சூரியனுக்குள் அப்படிச் செல்லும் போது அங்கே இரு மடங்கு மின்சாரம் உற்பத்தி ஆகும்.

அப்போது நம் உயிரின் துடிப்பும் அதிகரிக்கப் போகின்றது. அதனால் நம் உடலில் உள்ள அணுக்களும் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கும். இப்படி வேகமானால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுவோம்.

ஒரு நொடிக்குள் இப்படி நடந்து விட்டால்…
1.மனிதனுக்கு மனிதன் அடித்துக் கொல்லும் நிலை வந்துவிடும்.
2.இந்த உணர்வலைகள் பாய்ந்து காட்டிற்குள் இருக்கக்கூடிய மிருகங்களும் நகரத்திற்குள் வரும் வாய்ப்புகள் உண்டு.
3.ஒரு நாள் முழுவதற்கும் இதனுடைய பாதிப்பு இருந்தால் உலகில் முக்கால்வாசி மக்கள் தன் நினைவை இழந்து… இறந்து விடுவார்கள்.

விஞ்ஞான ரீதியில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று எத்தனையோ கம்ப்யூட்டர்களை உலகெங்கிலும் வைத்துள்ளார்கள். எலக்ட்ரிக்கின் சக்தி இரு மடங்காகும் பொழுது அதனுடன் தொடர்பு கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் கருகிவிடும். அதில் இவர்கள் வைத்திருக்கின்ற அளவுகோலும் மாறிவிடும்.

அடுத்த நாட்டை அழிப்பதற்காக பூமிக்குள் எத்தனையோ குண்டுகளைச் சேமித்து வைத்துள்ளார்கள். அதிலே மற்ற மின்னலோ இயற்கையின் சீற்றங்களோ பாதித்து விடாதபடி அதற்குண்டான பாதுகாப்புக் கவசமாகக் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைத்து வைத்துள்ளார்கள்.

ஒரு மின்னல் பாய்ந்து அந்தக் குண்டுகள் அனைத்தும் வெடித்தால் அருகில் இருக்கக்கூடிய இடமே முழுமையாக அழிந்துவிடும். அதனால் தான் எல்லா இடங்களிலும் அதைக் காப்பதற்காக வேண்டி கம்ப்யூட்டர் மூலம் நுண்ணிய நிலைகளில் இயக்கிச் சீராக வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் இரு மடங்கு மின்சாரம் உற்பத்தியானால் என்ன ஆகும்…? இவைகள் அனைத்துமே செயல் இழந்துவிடும். கம்ப்யூட்டர்கள் ஃப்யூஸ் ஆகிவிடும்.

ஏனென்றால் இயக்கத் தொடர் அதிகமானவுடன் அதற்குள் இருக்கும் காந்தம் அதிகமாகி… அனைத்தையுமே வேகமாக இயக்கும்படி செய்து கருக்கி விடுகின்றது. அந்தப் பாதுகாப்பு இழந்தால் புதைத்து வைத்த குண்டுகள் வெடிக்கத் தொடங்கும்.

1.நாடு… நகரம்… மக்கள்… நீ… நான்… உன் சொத்து… என் சொத்து… என்று சொன்னாலும் எல்லாமே சிதைவுண்டு போய்விடும்.
2.அந்த அளவிற்குத் தலைக்கு மேல் கத்தியைத் தொங்கவிட்டு கீழே அமர்ந்திருப்பது போன்று
3.”எப்பொழுது கயிறு அறுந்து விழும்…?” என்று சொல்ல முடியாத நிலையில் இப்படிப்பட்ட போர் முறையில்தான் இருக்கின்றோம்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரம் உயிரின் துடிப்பாகிப் பல உணர்வுகளை மாற்றி அமைத்து உணர்வின் தன்மை எதனையுமே பக்குவப்படுத்தும் மனித நிலை பெற்ற பின் தான் விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து தனக்குள் அதை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றான் மனிதன்.

ஆனால் அது எல்லாம் அரசர்கள் காலத்தில் அஞ்ஞான வாழ்க்கையாகி… இன்று உடலின் இச்சைக்கு என்று வளர்த்துக் கொண்டார்கள் விஞ்ஞானிகள்.

அகஸ்தியனோ நஞ்சினை வென்று உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடைந்து (அந்த உயிர்) என்றுமே ஒளியாக இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

அவனைப் பின்பற்றிச் சென்றவர் அனைவரும்… மனிதனின் ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்று ஒளியின் சரீரம் பெற்றது சப்தரிஷி மண்டலம்.

அது தான் சிருஷ்டித்துக் கொண்ட மண்டலம். ஆறவது அறிவைத் தனக்குள் நுகர்ந்து உணர்வினைச் சிருஷ்டித்துக் கொண்டது… சப்தரிஷி… சிருஷ்டி…! காரணப்பெயராக இவ்வாறு வைத்து நாம் தெரிந்து கொள்ளக் காட்டினார்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.நடக்கப் போகும் அந்தத் தீமையிலிருந்து நாம் மீள முடியும்.
3.நம் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய பின்
4.அகண்ட அண்டத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றி மீண்டும் நிலையான சரீரமாக வளர முடியும்.

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி அத்தகைய நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் உள்ளார்கள்.

ஆனால் தனித்த நிலையில் வளர்ச்சி பெற்றால் முனி…! மற்றொன்றை வீழ்த்திடும் சக்தி கொண்டது. பின் அதுவும் மடிந்து விடும். வளரும் சக்தி இல்லை.. இதற்கு முனி என்று பெயர். தன் வலிமையைக் காட்டும்… மற்றொன்றை முறியடிக்கும்… பின் அதுவும் மடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை எடுத்து…
1.இரு உணர்வும் ஒன்றாக இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைத்து உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே வந்தால்
2.உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றடைய முடியும்.
3.விஞ்ஞானத்தினால் வரக்கூடிய தீமைகளிலிருந்து தப்பி விண் செல்ல முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்

 

அகஸ்தியன் தன் வாழ்க்கையில் நஞ்சினைப் பிளந்து… கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

1.இந்தக் காற்றிற்குள் எத்தனையோ உணர்வுகள் இருந்தாலும் அதையெல்லாம் பிளந்து விட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

உயிரணு பூமிக்குள் வந்த பின் பல கோடிச் சரீரங்களில் தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைப் பெற்று பன்றியின் உடலை அமைத்து அதனின் வலுவின் துணை கொண்டு நாற்றத்தைப் பிளந்து வராக அவதாரமாக… நல்ல உணர்வுகளை நுகர்ந்து… அடுத்து பரசுராம்…! தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் மனிதனாக உருப்பெற்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் எது இருந்தாலும் சமப்படுத்தி… அதைத் தனக்குகந்ததாக உருவாக்கும் சக்தி பெற்றவன் மனிதன். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வினை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எத்தகைய விஷத்தையும் ஒடுக்கக்கூடிய சக்தி பெற்றதுதான் துருவ நட்சத்திரம்.

அவ்வாறு வரக்கூடிய அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளை நம் பூமி துருவத்தின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்து கொண்டுள்ளது.

அதை நாம் எடுக்கக்கூடிய நேரம் எது…?
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி பிரபஞ்சத்தில் பரவி வருவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி
2.அதை நம் பூமியின் துருவப் பகுதி வழியாகக் கவரும் அந்த அதிகாலை நேரம் தான்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்த வேண்டும்

இதை உறுதிப்படுத்த… உருவாக்க… உணர்வினை வலுவாக்க… உடலுக்குள் அந்த வலிமையைச் சேர்க்க… தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவருடைய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… அருள் ஒளி அவருக்குள் படர வேண்டும். அந்த அருள் ஒளி எனக்குப் பாய்ச்ச வேண்டும் என்று
1.இரு மனமும் ஒன்றுபட வேண்டும்… இரண்டு பேருமே இவ்வாறு எண்ணிக் கலந்து உருவாக்குதல் வேண்டும்.
2.இது தான் ரிஷி… சிருஷ்டிப்பது…! ரிஷி பத்தினி என்று அன்று சொல்வார்கள்.
3.இருவருமே ஒன்றாகச் சேர்த்து அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் முழுமை பெறுகின்றோம்.

இதைத் தான் காவியமாகப் படைத்து நமக்குக் கொடுத்துள்ளார்கள் அன்று ஞானிகள்.

காலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சேர்த்துக் கொண்ட பின்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என் பார்வை அவர்கள் தீமையை அகற்றிடும் சக்தியாக வர வேண்டும் என்று நாம் நினைவுகளைச் செலுத்த வேண்டும்.

அதே சமயத்தில் இன்று விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். காற்று மண்டலத்தில் ஏராளமான நச்சுத் தன்மைகள் பரவி உள்ளது. அது நமக்குள் புகாது தடுத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவை
2.மீண்டும் மீண்டும் நாம் சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உலகப் போர் என்ற நிலைகளில் அணுகுண்டுகள் வெடிக்கப்பட்டு அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் பரவி எல்லாக் கோள்களும் எடுத்து சூரியன் அருகிலே சென்றால் அதற்குள் மோதலாகி “இரு மடங்கு காந்தத்தை” சூரியன் உற்பத்தி செய்யப் போகிறது.

அத்தகைய இயக்கச் சக்தி வரும் போது
1.நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்
2.அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.
3.உணர்வின் தன்மை மடியும் நிலைகள் வந்து விடும்.

அது போன்ற நிலை நம்மைப் பாதிக்காது தடுக்க வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்லதை மட்டும் எப்படிக் கூர்மையாக நுகர்ந்ததோ… அது போல் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

இதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்… இதனுடைய அர்த்தங்களைப் புரிந்து செயல்பட வேண்டுமென்றால் ஆயுள் பத்தாது. குருநாதர் எமக்கு கொடுத்த அருள் உணர்வுகளை…
1.பாக மண்டலத்தில் (கர்நாடகா அகஸ்தியன் அமர்ந்த இடம்) பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்று
2.அகஸ்தியன் கண்ட உணர்வுகளை நானும் எடுத்து அதைக் கண்டு கொண்டதனால்
3.அந்த உணர்வின் அறிவு எனக்குள்ளும் வந்து குருவின் துணையால் இந்த உண்மைகளை அறிய முடிந்த்து.
4.அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் அறிவுதான் எனக்குள்ளும் புகுந்து அதையெல்லாம் அறிய முடிகின்றது.

இதைப் போலத் தான் நீங்களும் அறிந்து உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… “அகண்ட அண்டத்தில் நடப்பதை அறிந்துணர்ந்து” அந்த அருள் ஒளியை உங்களுக்குள் விளையை வைத்துப் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பச் சொல்வது.

முதலிலே சொன்னது போன்று சூரியனுக்குள் இருந்து இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கும் சந்தர்ப்பமாக அதிக சக்தி வாய்ந்ததாக இனி வரப்போகின்றது.

நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் பொழுது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது. அந்தத் துடிப்பாகும் பொழுது நமக்குள் உணர்வின் தன்மை அதிகரித்து… நம் நல்ல எண்ணங்கள் அனைத்தும் ஃப்யூஸ் ஆகிவிடும். சிந்திக்கும் தன்மை இழந்து விடுவோம்.

பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போன்று தான் ஒரு நொடிக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து விடும். எலெக்ட்ரிக் இரு மடங்காகி சிந்தனைகள் இழந்து விட்டால்…
1.மறுபடியும் நல்ல சிந்தனைகளைக் கொண்டு வருவது மிகவும் கடினம்.
2.ஆகவே இப்பொழுது இருந்தே நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அதன் உணர்வின் வலிமை கொண்டு எந்த நொடியிலே அந்த விஷத்தன்மையான இரு மடங்கு துடிப்பு அதிகமானாலும் அதைப் பிளந்து உங்கள் இயக்கத்தைச் சமப்படுத்தி கொள்ள இது உதவும்.

ஒரு நொடியானாலும் ஒரு மணி நேரம் ஆனாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து சிந்தனை சிதறாது வைத்திருக்கலாம். உங்களையும் காக்கலாம் எதிர்கால மக்களையும் காக்கலாம்.

இயற்கையின் சீற்றங்கள் வரப்படும் பொழுது…
1.அந்த நேரத்தில் ஞானிகள் எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்களோ
3.அந்த உணர்வை நமக்குள் செலுத்தினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.