மெய் ஞான சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ “அந்த அத்தனை பேரின் வலுவும் நமக்குக் கிடைக்கின்றது…!

Image

Group meditation powers

மெய் ஞான சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ “அந்த அத்தனை பேரின் வலுவும் நமக்குக் கிடைக்கின்றது…!

 

மெய் ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் உடலிலே வந்த தீமைகளை நீக்கி உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண்ணுலகில் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு விண் சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைத்தான் உனக்குள் (ஞானகுரு) பதியச் செய்கிறேன் என்றார் குருநாதர்.

அவ்வாறு பதியச் செய்த நிலைகள் கொண்டு
1.மனித வாழ்க்கையில் உன்னை அறியாது சோர்வடையச் செய்யும்
2.இருளான உணர்வுகளுக்குள் மெய் ஞானியின் உணர்வை இணைத்து
3.மெய் ஞானிகளை நினைவுக்குக் கொண்டு வந்து கவருவேயானால்
4.அந்த மெய் உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை நீ பெறுகின்றாய்.

அந்த உணர்வுகள் உனக்குள் விளைய விளைய உன்னிடமிருந்து வெளிப்படும் அந்த எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் அனைவரது உணர்வுகளில் “ஓ…” என்று ஜீவனாகி “ம்…” என்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.

பிறர் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்…! என்ற ஏக்க உணர்வுடன் வரும் போது
1.அனைத்து உணர்வின் சத்தும் உனக்குள் கிடைத்து நீ வலு பெற்றவனாக ஆகின்றாய்.
2.எத்தனை பேருக்கு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகின்றயோ
3.அத்தனை பேருடைய எண்ண வலுவும் உனக்குள் கிடைக்கின்றது.

அவர்களுக்குள் மெய் உணர்வுகள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் போது அந்த உணர்வுகள் அவர் உடலுடன் இரண்டறக் கலந்து அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் அவருக்குள்ளும் விளைகின்றது.

அந்த ஞானிகளின் உணர்வை அவர்கள் பெற்ற பின் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பதை நீ பார்க்கும் போது அந்த உணர்வின் சத்து கொண்டு உனக்குள் ஒளியாக மாற்றும் நிலை பெறுகின்றாய். அந்த அருள் ஞானிகளின் ஒத்த உணர்வாக அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய்.

ஆகவே கூட்டமைப்பாக எல்லோருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற நிலைக்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வுகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

அந்தத் தெளிந்திடும் நிலை பெற்ற மெய் ஞானியின் நிலைகளை ஒவ்வொருவரும் உடலுக்குள் செலுத்தும் போது அவர்கள் ஒளிச் சரீரம் பெற்றது போல அனைவரது உணர்வும் அது ஒளி பெறும் தகுதியாக விளைகின்றது.

என்னைப் “பித்தன்” என்று சொல்பவர்கள் இந்த உலக ஆசைகளில் பித்துப் பிடித்துப் பித்தனாக இருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்…!

Magic

என்னைப் “பித்தன்” என்று சொல்பவர்கள் இந்த உலக ஆசைகளில் பித்துப் பிடித்துப் பித்தனாக இருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அவர் ஒரு பித்தனைப் போன்று தான் வாழ்ந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் போது “ஒன்றும் அறியாத பித்தன்…!” என்று தான் தெரியும்.

ஒரு மாமரத்தில் பிஞ்சாகிக் காயாகும் பொழுது புளிப்பின் தன்மை அடைந்தாலும் அது கனியாகும் பொழுது மற்றவர்கள் அதை ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.

அதைப் போன்று தான் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் நிலையில் எத்தகைய நஞ்சினையும் அவர் நுகராது அவர் இனித்த வாழ்க்கையின் நிலையைத் தனக்குள் எடுத்துக் கொண்டார். அதாவது
1.நஞ்சினை வெறுத்து
2.மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.தன்னிச்சையாக அவர் மகிழ்ந்த உணர்வுடன் இருக்கும் போது
4.பார்ப்போருக்கு அவர் “பித்தனாகவே…” காணப்பட்டார்.

பித்தான உடலுக்குள் நின்று ஒளியான சத்தின் தன்மைகளைத் தனக்குள் வளர்த்தார். அகண்ட அண்டத்தினையும் அறிந்துணர்ந்து அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றினார்.

இந்தப் பூமியில் பற்றற்ற நிலைகள் கொண்டு மெய் ஞானிகளின் உணர்வின் மீது பற்று கொண்டு அதனை அவர் வளர்த்துக் கொண்டு விண்ணுலகம் செல்லும் நிலை பெற்றார்.

ஆகவே அவர் காட்டிய நிலைகள் கொண்டு நமக்குள் எதைப் பற்ற வேண்டும்…? எதைப் பற்றற்றதாக இருக்க வேண்டும்…?

வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையில் பிறரை அழித்திடும் உணர்வுகளை நமக்குள் இணைய விடாது அதை விடுத்துப் பழக வேண்டும். அதைப் பற்றற்றதாக்க வேண்டும்.

அந்த மெய் ஞானியின் உணர்வுடன் பற்று கொண்டு தீமைகள் நம்மைப் பற்றிடாது நம்மைக் காத்திடும் நிலையாக வருதல் வேண்டும். இப்படிச் சொல்லும் பொழுது “என்னைப் பித்தன்…!” என்று மற்றவர்கள் சொல்கின்றனர் என்றார் குருநாதர்.

ஆக மற்றவர்கள் என்னைப் பார்த்துப் பித்தன் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இந்தப் புவியின் ஆசை கொண்டு உடல் பற்று கொண்டு செயல்படும் போது அந்த ஆசையின் நிலைகளில் “அவர்கள் பித்தனாக இருக்கிறார்கள்…!” என்று உணரவில்லை.

நான் பித்தனாகத் தெரிந்தாலும்…
1.இந்த உடலின் தன்மைக்கோ
2.பித்து கொண்ட உடலின் உணர்ச்சிகளுக்கோ அடிமையாகவில்லை.

அதை எல்லாவற்றையும் அடக்கி அந்த மகா ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்ற
1.அந்தப் பித்துப் பிடியாகத்தான் நான் இங்கே இருக்கின்றேனே தவிர
2.மற்றவர்கள் காட்டும் உடலின் பித்துப் பிடியாக நான் இல்லை என்றார்.