தீய சக்திகளுடன் நேரடியான மோதலைத் தவிர்க்க நாம் ஏன் விலகிச் செல்ல வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

va;i ugriva.JPG

தீய சக்திகளுடன் நேரடியான மோதலைத் தவிர்க்க நாம் ஏன் விலகிச் செல்ல வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

வாலியின் வீரிய குணத்தின் தன்மையின் ஆணவம் எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித் தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும். வான்மீகி பதம் பார்த்தான். அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.

ஜடாக்கினி மனதிறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான். அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளைப் பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு
1.உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் – அவர்களின் பார்வை அலையை
2.உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலகோதய வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற அனுபவ நிலை என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவம் ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

விஷத்தை வடிகட்டும் நம் உடல் உறுப்புகளின் இயக்கங்களைச் செம்மையாக்கி நோயிலிருந்து விடுபடுங்கள்

human body.jpg

விஷத்தை வடிகட்டும் நம் உடல் உறுப்புகளின் இயக்கங்களைச் செம்மையாக்கி நோயிலிருந்து விடுபடுங்கள்

நாம் நல்ல நறுமணங்கள் கொண்ட உணவுகளை உட்கொண்டாலும் அந்த நறுமணத்தை வீரியமாக இயக்கச் செய்யும் நஞ்சு அதிலே உண்டு. அத்தகைய நஞ்சினை எல்லாம் நம் உடல் பிரிப்பதனால் நம் மலம் நாற்றமான நிலையில் வருகின்றது.

நம்முடைய ஆறாவது நல்ல உணர்வின் சத்தை எல்லாம் நம் உடலாக மாற்றி நஞ்சை நீக்கிடும் நல்ல உணர்ச்சிகளாகத் தூண்டுகின்றது ஆகவே தான் இதைப் பரசுராம் என்று கூறுகின்றார்கள்.

மனிதனாக இருக்கும் நாம் இன்று விஷமான பொருள்களை நாம் உட்கொண்டாலும் அதன் சக்திக்குத் தகுந்தவாறு
1.நம்முடைய கிட்னி (KIDNEY – சிறுநீரகங்கள்) என்ற உறுப்பு இரத்தத்தில் வரும் அந்த நஞ்சினை வடிகட்டி விடுகின்றது.
2.அதைப் போல நம் குடல் உறுப்புகளிலும் சில நஞ்சினைப் பிரிக்கும் தன்மை வருகின்றது.
3.இரத்தத்தில் வரும் நஞ்சினைப் பிரிக்கப்படும் பொழுது விஷ அணுக்கள் உருவாக்காதபடி தடுத்துவிடுகின்றது.

அதே சமயம் நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் நஞ்சு கலந்த உணர்வு வந்தாலும் அது உடலுக்குள் செல்வதற்கு முன் நமது பெரு மூளை வடிகட்டிவிடுகின்றது. அதைச் சளியாக மாற்றிவிடுகின்றது.

நமக்குள் தீமைகளை அகற்றிடும் சக்தி இப்படி விளைந்தாலும் சம அளவாக இருக்கும் பொழுது எல்லாமே சீராக இயங்குகின்றது. ஆனால் விஷத்தின் அளவு அதிகரித்துவிட்டால் நம் கிட்னி சரியாக வேலை செய்யாது.

அது சரியாக வேலை செய்யவில்லை என்றால்
1.விஷத் தன்மை கொண்ட அணுக்கள் அதிகமாகப் பெருகத் தொடங்குகின்றது.
2.நம் உடலில் சர்க்கரைச் சத்து அதிகரித்துவிடுகின்றது
3.வாத நோய் அதிகரித்து விடுகின்றது. உப்புச் சத்தும் அதிகமாகின்றது.

கிட்னி பிரிக்கும் தன்மை இழந்த பின் உப்புச் சத்து அதிமாகி விட்டால் நம் உடலில் உள்ள எலும்புகள் அனைத்திலும் அது ஊடுருவிவிடும். எலும்புகளைப் பலவீனப்படுத்திவிடும்.

சாதாரணமாக உப்பை வெளியிலே ஒரு இடத்தில் வைத்திருந்தால் அது கசியும் தன்மை வரும்.

இதைப் போல் நம் உடலுக்குள் அந்த அதிகப்படியா இருக்கும் உப்பு கசியும் தன்மை வந்துவிட்டால் சுவாசப்பைகளில் மூச்சுத் திணறல் அதிகரித்துவிடும். சுவாசிப்பதே மிகவும் கடினம் ஆகின்றது.

இதைப் போன்று நமக்குள் வந்துவிடுகின்றது. இதை மாற்றுவதற்கு என்ன சக்தி வைத்திருக்கின்றோம்…?

மிருகங்கள் அனைத்துமே நஞ்சின் தன்மை கொண்ட வலுவான உடலாகப் பெற்றிருக்கின்றது. நஞ்சின் தன்மையைத் தன் உடலாக்கும் நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பான நிலைகளாக மாறுகின்றது.
1.ஆனால் மனிதனுக்கோ நஞ்சை நீக்கினால் தான் பாதுகாப்பு.
2.நஞ்சு அதிகரித்து விட்டால் நம் உடலுக்கு பாதுகாப்பற்ற நிலையாக ஆகிறது.

ஆனால் அருள் மகரிஷிகள் அனைவருமே தன் வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுகளை எல்லாம் வென்று உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக்கியவர்கள்.

வைரம் எவ்வாறு நஞ்சினை உள்ளடக்கி ஒளியின் சிகரமாக இருக்கின்றதோ இதைப் போல மகரிஷிகள் தன் உயிரின் நிலைகள் கொண்டு தன் வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியினை தனக்குள் எடுத்துப் பொருள் அறிந்திடும் நிலையும்
2.இருள் நீக்கிடும் நிலையும் தனக்குள் மகிழ்ந்திடும் ஆற்றல் மிக்க ஒளியின் சிகரமாக உணர்வினை மாற்றியமைத்து
3.இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்கள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் துணை கொண்டு அருள் ஞானியின் உணர்வின் சத்தைப் பெறும் வித்தாக உங்கள் எண்ணங்களில் பதிவு செய்து உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அதைப் பருகும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.

இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தினால் உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஊடுருவி நஞ்சான வித்துகளை எல்லாம் வலுவிழக்கச் செய்ய முடியும்.

நோயிலிருந்து விடுபடவும் முடியும்…!