துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் வழி முறை

Bramha - creation

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் வழி முறை 

அகஸ்தியன் தாய்க் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் நஞ்சை வென்றிடும் சக்திகளை அவன் பெற்றான்.

அதன் வழில் நஞ்சை நீக்கும் ஆற்றல்கள் அவன் உடலுக்குள் வளர்கின்றது. அவன் ஒருவரிடம் வளர்ந்தது மட்டுமல்லாதபடி திருமணம் ஆனபின் தன் மனைவியிடமும் அதையெல்லாம் சொல்லுகின்றான்

அவர்கள் இருவரும் அருள் உணர்வுகளை எடுக்கும் போது நஞ்சை வென்றிடும் உணர்வின் அணுக்கள் இருவர் உடலிலும் விளைகின்றது.

நஞ்சை வென்றிடும் உணர்வுகளை இருவரும் வளர்க்கப்படும் போது பேரண்டத்திலிருந்து வரும் எத்தகைய கடும் விஷமாக இருந்தாலும் அதை ஒடுக்கி ஒளியாக மாற்றும் தன்மையாக வருகின்றார்கள்.

ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக ஆகின்றார்கள்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ் நாளில் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றினானோ இதைப்போல நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நினைத்த மாத்திரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கவர கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவர் சண்டை இடுகின்றார் என்றால் உணர்வின் வேகம் அந்த வலிமை வருகின்றது.

எனக்கு இப்படித் “துரோகம் செய்தான் பாவி…! என்றால் அமெரிக்காவில் இருந்தாலும் இந்த உணர்வுகள் புரையோடி உணவு உட்கொள்ளும் போது நிலையை மாற்றிவிடும். நுரையீரலுக்குள் போனால் மரணம் கூட சம்பவிக்கும்.

வாகனம் ஓட்டும் போதோ தொழில் செய்யும் போதோ “துரோகம் செய்தான்…” என்று எண்ணினால் இந்த உணர்வு சிந்திக்கும் தன்மையைச் செயலிழக்கச் செய்து அங்கே எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றது.
1.அப்போது அவர்களுக்கு அங்கே நஷ்டம்.
2.இங்கே நினைக்கும் பொழுது இவருக்கும் நஷ்டம்.

அதே சமயத்தில் “நண்பன் எனக்கு நல்ல சமயத்தில் உதவி செய்தான்…!” என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. இவனுக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது,

அங்கே விக்கல் ஆகும் போது “யாரோ நினைக்கின்றார்கள்…” என்று அங்கேயும் நல்ல செயலை உருவாக்குகின்றது.

நல்ல குழந்தை என்று மெச்சிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் படிக்கப் போன இடத்தில் ஒரு மாதமாக நமக்குத் தகவல் வரவில்லை என்றால் “என்ன ஆகிவிட்டதோ…?” என்று இங்கே வேதனைப்படுகின்றோம்.

யாருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றதோ வேதனைப்பட்டு மீண்டும் நினைவை அவர்கள் பால் பாய்ச்சப்படும் போது அந்த குழந்தையின் உடலிலே விஷத்தின் தன்மை பாய்ந்து அங்கே சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது.

தொழில் செய்து கொண்டிருந்தால் தவறிழைத்துக் குற்றவாளி ஆக்கிவிடும். வெளியிலே நடந்து செல்லும் போது சிந்தனை தவறி மேடு பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுகச் செய்துவிடும் ஆக்ஸிடென்டும் ஆகும்.

இதெல்லாம் எங்கிருந்து வருகின்றது? இயற்கை எப்படி நம்மை மாற்றுகின்றது? என்று அந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்ந்து கொண்டால் அதை நம்மால் மாற்றியமைக்க முடியும். பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.

சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வு வரும் போது உயிர் அதை பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டிக்கின்றது.

ஆனால் ஆறாவது அறிவு கொண்டு வேதனையை நீக்கும் உணர்வைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால் தீமைகளை அகற்றும் உணர்வுகள் நமக்குள் சிருஷ்டியாகும். இது சந்தர்ப்பம்.

இதைப் போன்ற சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரொளியான உணர்வுகளைக் கலந்து கலந்து அடிக்கடி உபதேசிக்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று தியானித்துத் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் கணவன் எண்ண வேண்டும் அதே போல தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் எண்ண வேண்டும்.

கணவன் மனைவி இரு உணர்வும் கருவாக்கி ஒளியின் அறிவாக மாற்றி நஞ்சை வென்றிடும் சக்தியை இப்படிக் கூட்டிக் கொள்ள முடியும்.

ஞானகுரு உபதேசித்த அருள் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றால் நம் தீமைகள் போக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வர வேண்டும். ஆனால்
1.குருநாதர் செய்வார்…,
2.”அவர் தான் செய்து தர முடியும்…!” என்று எண்ணினால் இது பிழையாகும்.

ஒரு செடியின் தன்மையை உருவாக்கிக் கொடுத்து நீரை ஊற்றி அதை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கொடுக்கின்றோம்.

1.குருநாதரே செடியையும் வளர்த்துக் கொடுப்பார் என்று சொன்னால்
2.அது எப்படி இருக்கும்…!

ஏனென்றால் குழந்தை மீது உள்ள பாசத்தால் “உணர்வுகள் ஒன்றாகும்போது…” நீங்கள் எண்ணி எடுக்கும் வேதனை உணர்வுகள் அது குழந்தையைத் தாக்கி அங்கே தீமையை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் உங்கள் உடலிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருக்கின்றேன்.

நான் எண்ணுகின்ற மாதிரி நீங்களும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் இது உங்களுக்குள் அரும் பெரும் சக்தியாக உருவாகும்.

1.உங்கள் எண்ணத்தால் தான் உங்களைக் காக்க முடியும்.
2.நான் காப்பாற்றுவேன் என்று சொன்னால் நான் கடவுள் அல்ல.
3.உங்கள் உயிர் தான் கடவுள்.

ஆகவே குருநாதர் சொன்னபடி  “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும்” என்று எண்ணி அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்

குப்பைக்குள் மறைந்த மாணிக்கத்தை எடுப்பது போல் இந்த மனிதச் சரீரத்திலிருந்து தான் “உயர்ந்த குணத்தை விளைய வைக்க வேண்டும்…!” என்றார் குருநாதர்

Image

குப்பைக்குள் மறைந்த மாணிக்கத்தை எடுப்பது போல் இந்த மனிதச் சரீரத்திலிருந்து தான் “உயர்ந்த குணத்தை விளைய வைக்க வேண்டும்…!” என்றார் குருநாதர்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஏழ்மையாக இருந்து ஒரு பித்தரைப் போன்று இருந்து தான் உலகம் இப்படி இருக்கிறது என்று எல்லா நிலைகளையும் எமக்குச் (ஞானகுரு) சுட்டிக் காட்டினார்.

குப்பையிலிருந்துதான் மரம் சத்து எடுக்கிறது, ஆகவே குப்பையான இந்தச் சரீரத்திலிருந்து தான் சத்தான எண்ணங்களைக் கூட்ட வேண்டும் என்றார்.

1.சரீரத்தைக் குப்பையாக எண்ணினாலும்

2.உனக்குள் இருக்கக் கூடிய நல்ல எண்ணத்தை – அந்த “வைரத்தை…!”

3.குப்பையான சரீரத்திலிருந்து விளையச் செய்..! உனக்கு அதுதான்… “சொந்தம்” என்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் எத்தனையோ வகையான துன்பங்கள் இருக்கிறது. துன்பங்களையும் துயரங்களையும் விளைவிக்கக் கூடிய பல எண்ணங்கள் இருக்கிறது.

அத்தகைய துன்பத்தையும் துயரத்தையும் விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து மக்களை மீட்க வேண்டும். அவர்களிடமிருந்து மகிழ்ச்சியை எதிர்பார்க்க வேண்டும்.

“அந்த மகிழ்ச்சியே… உனக்குச் சொர்க்கம்…!” என்றார் குருநாதர்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிக்கும் நாம் திடீரென்று யாரையுமே முதலில் பழித்துப் பேசிவிடக் கூடாது. குறைபாடுகள் இருந்தாலும் அணுகி அதை நிவர்த்தி பண்ணுவதற்கு என்ன வழியோ அதற்காக வேண்டி நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

1.சொல்லிப் பார்ப்போம்.

2.அவரால் முடியவில்லை என்றால் அது அவருடைய சந்தர்ப்பம்.

3.அதற்காக வேண்டி “முடியவில்லையே…! அவர் தவறு செய்கிறாரே…!” என்ற உணர்வை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

“தவறுகள் செய்கிறார்களே…!” என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களுடைய தவறான உணர்வைத்தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நாம் செய்ய வேண்டியது…,

1.யார் எதைப் பேசினாலும் குறைத்துப் பேசினாலும்

2.வாழ்க்கையிலே அவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும்

3.அவர்கள் அறியாது அவர்களுக்குள் துன்பத்தைத் தோற்றுவிக்கும் உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் “ஈஸ்வரா” என்று

4.ஒவ்வொரு உயிரும் கடவுள் என்ற நிலையில் “நேசிக்கும் உணர்வாக…”

5.உயிரான ஈசனிடம் வேண்டி நாம் சுவாசிக்கும் பொழுது இந்த உணர்வு நமக்குள் விளைகின்றது.

அடிக்கடி இப்படிச் செய்து எண்ணத் தொடங்கினால் அவர்களுக்கு நல்லது உண்டாகும். அதனால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

குருநாதர் எண்ணத்தை வைத்து குருநாதர் எண்ணங்களை எடுத்து மெய் ஞானியாக ஆனேன் – ஞானகுரு

Image

 

Astral path and way

“குருநாதர் எண்ணத்தை வைத்து குருநாதர் எண்ணங்களை எடுத்து…” மெய் ஞானியாக ஆனேன் – ஞானகுரு

 

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிற்குள் அழைத்துச் சென்று குளவியைக் காட்டுகின்றார். குளவி புழுவைத் தூக்கி வந்து விஷத்தைப் பாய்ச்சி அதைத் தன் இனமாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றது.

உயிரினங்களில் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில் இனச் சேர்க்கை வேறு.

1.இனத்தை உருவாக்க வேண்டும்

2.தன் இனமாக ஆக்க வேண்டும் என்ற உந்துதல் வேறு.

குளவி தனக்குள் எண்ணிய உணர்வின் தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூடாகக் கடி அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது தன் உணர்வின் இயக்கங்களை அதன் மேல் தாக்குகின்றது.

இதற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை தாங்காது புழுவுக்கு, அந்தக் குளவியின் நினைவே வருகின்றது. புழுவின் உடலில் அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அதிலே பதிந்துவிடுகின்றது.

குளவி தன் விஷத்தால் புழுவைத் தாக்கும்போது புழுவின் நினைவலைகள் குளவியால் தாக்கப்பட்ட உணர்வு கொண்டு எவ்வாறு இணைக்கின்றது.

அந்த உணர்வுகள் அதற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு எவ்வாறு இயக்குகின்றது எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது என்பதை உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் எம்மை ஓங்கி அடிக்கின்றார். அடித்தவுடன் அவரைத் திடீரென்று பார்க்கின்றேன். குருநாதர் மேல் திருப்பம் வருகின்றது.

திடீரென்று திரும்பியவுடன் அவர் உணர்த்தும் உணர்வின் அலையை அந்த மெய்ஞான உணர்வை எடுத்து

1.எம் எண்ணத்தில் கவரச் செய்கின்றார் இழுக்கச் செய்கின்றார்.

2.அவர் உணர்த்தும் மெய் உணர்வைக் கவர்ந்து இழுத்தவுடன் சிரிக்கின்றார் குருநாதர்.

அதாவது…, குருநாதர் அடித்தவுடன் திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள் அவர் எண்ணத்தால் வெளியிடுவதை உடனே உற்றுப் பார்த்தவுடன் அந்த உணர்வுகள் வருகின்றது.

அப்பொழுது அவரை எண்ணியபின் அவர் அடித்ததை மறந்து குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின் அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டு குளைவியையே எண்ணுகின்றதோ அதே மாதிரி குருநாதரையே எண்ணுகின்றேன்.

1.குருநாதருடைய எண்ணத்தை வைத்து

2.குருநாதருடைய நிலைகளை எண்ணப்படும் பொழுது

3.அவர் கண்டுணர்ந்த மூலத்தின் உணர்வுகளை

4.அவருக்குள் இணைத்ததை எனக்குள் (ஞானகுரு) இணைக்கின்றார்.

5.இப்படித்தான் குருநாதர் மெய் உணர்வின் தன்மையை எம்மைப் பெறச் செய்தார்.

ஆதிசங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன் “நிரூபித்துக் காட்டிய அத்வைதத்தின் (சூட்சமத்தின்) பேருண்மைகள்”

Adi Sankara Advaitam

ஆதிசங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன் “நிரூபித்துக் காட்டிய அத்வைதத்தின் (சூட்சமத்தின்) பேருண்மைகள்”

காசியில் இருக்கும் விநாயகருக்கு நீ யாகங்கள் செய்து வந்தால்தான் நல்லது என்று ஆதிசங்கரரிடம் சொல்கிறார்கள் துவைதவாதிகள்.

ஆதிசங்கரர் நாம் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றார். இந்த உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் உண்டு. அதை எண்ணத்தாலே எடுத்துச் சுவாசிக்கும்போது எண்ணிய சக்திகளைப் பெற முடியும் என்றார்.

1.நம் உயிரின் துடிப்பைக் கூட்டி
2.எண்ணத்தின் வலு கொண்டு
3.மெய் ஞானியின் அருள் உணர்வைச் சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்.

அன்றிருக்கக்கூடிய துவைதவாதிகள் அரசர்கள் இவருக்கு எதிர்ப்பு நிலை ஆகின்றனர். ஜைன மதம் ஒரு பக்கம் தாக்குகிறது. இந்து மதம் ஒரு பக்கம் தாக்குகிறது.

இவர் போகும் பக்கமெல்லாம் எதிர்ப்பு. இந்த உண்மையை எடுத்துச் சொல்லும்போது எதிர்ப்பு தான் அதிகமாகிறது.

அந்தத் துவைதவாதிகள் அனைவருமே மனித உடலில் விளைந்த அந்த மந்திரத்தை எடுத்து வேலை செய்கின்றார்கள்.

ஒருவனுக்கு வயிற்று வலி வரவேண்டுமா…! வயிற்று வலியுடன் இறந்தவன் எந்த மந்திரத்தாலே இறந்தானோ அந்த உணர்வின் தன்மையை மந்திரத்தால் எடுத்து அடுத்தவர் உடலில் செருகினால் போதும். அவனுக்கும் வயிற்று வலி வரும்.

வாத நோயால் இறந்தவனுடைய உடலில் இருந்து பிரித்து மற்றொருவனுக்கு அந்த மந்திரத்தைச் செருகினால் அவனுக்கு வாத நோய் வந்துவிடும். “இதுதான் ஏவல்…!”

தெய்வத்திற்கு சக்தி இருக்கிறது என்ற நிலையில் இங்கே சிலைகள் செய்து உருவங்களாக அமைத்து கதைகளாகச் சொல்லி அவர்கள் எடுத்துக் கொண்ட நிலைகளுக்குச் செயல்படுத்தினார்கள்.

(நாம் இன்றும் இன்னென்ன செயல்களுக்கு இன்னென்ன மந்திரத்தை ஜெபித்தால்தான் நல்லது என்று தவறான பாதையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்)

அன்று அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் வெளிப்படுத்தி அதை ஸ்தாபித்துக் காட்டினார்.

ஆனால் அன்றைய துவைதவாதிகள் நீ வேள்விகள் செய்யாவிட்டால் அவஸ்தைப்படுவாய் என்று ஆதிசங்கரரிட்ம் சொன்னார்கள். சொன்னதோடு மட்டுமல்லாது ஏவல் செய்து இவருக்கும் வயிற்றுவலி வர வைத்துவிட்டார்கள்.

வயிற்று வலி வந்தபின் ஆதிசங்கரர் கடும் நிலைகளில் சுவாசித்து அத்வைத நிலைகளில் தன் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து அந்தத் தத்துவத்தைத் தன் நிலையை நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

வேதியர்கள் அன்று துவைதத்தின் தத்துவத்தை இவரிடத்தில் வாதிட்டு பல எத்தனையோ வேலைகளைச் செய்தார்கள். அதையெல்லாம் மாற்றித் தன் நிலைகளை அங்கே வெளிப்படுத்தினார் ஆதிங்கரர்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 2000 ஆண்டுகளுக்கு முன் அன்று நடந்த அந்த உணர்வின் அலைகளை எடுத்து எமக்குக் (ஞானகுரு) நேரடியாகவே காட்டினார்.

இப்படி ஆதிசங்கரர் அதைச் செயல்படுத்தும்போது அன்று அரசர்கள் சிலைகளுக்கு முன்னால் யாகங்கள் வளர்ப்பதும் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும் பால் ஊற்றிப் பிற நிலைகள் செய்வதும் தான் உண்மையான பக்தி என்ற நிலைகளில் அவர்கள் வாதிட்டனர்.

ஆனால் ஆதிசங்கரர் சொன்னது நம் உயிர் தான் நெருப்பு. நாம் எண்ணும் எண்ணங்கள் சுவாசமாகி உயிரான ஈசனிடத்தில் (நெருப்பில்) அந்த சுவாசங்கள் பட்டு அது உடலாக உறைகின்றது.

நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகிறோமோ அந்தக் குணமே நம் உயிரில் பட்டு அந்த அபிஷேகங்கள் நடக்கின்றது. அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது நம் உடலிலுள்ள நல்ல குணங்களுக்குப் போய் சேருகின்றது. நல்ல குணங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

ஆலயங்களின் தத்துவமே அது தான் என்று தெளிவாகக் காட்டினார்.