பல உணர்வு மோதல்கள் ஏற்படும் காலத்தில் எல்லாம் நமக்குள் “ஞானம்…” பிறக்க வேண்டும்

பல உணர்வு மோதல்கள் ஏற்படும் காலத்தில் எல்லாம் நமக்குள் “ஞானம்…” பிறக்க வேண்டும்

 

நீந்தத் தெரியாதவன் நீரில் சிக்குண்டு தவிக்கும் பொழுது…
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவியை நாடுவதைப் போன்று தான்
2.வாழ்க்கையின் கர்ம காரியக் கடலில் ஏற்படக்கூடிய இன்னலிலிருந்து தப்ப எண்ணும் நிலையும்….!

நீந்தத் தெரிந்தவன்… ஆயிரம் அடி (ஆழம்) கடல் நீரிலும் தன்னைப் பாதுகாக்கும் சாதனைத் திறன் பெற்ற நீச்சலினால் தத்தளிக்கும் நிலையோ… பாதுகாப்பை நாடும் நிலையோ இன்றி… தன்னைக் காத்து கொள்கிறான்.

அதைப் போன்று தான்..
1.உணர்வின் எண்ணத்தைச் சமமாக்கி… ஆத்ம பலம் பெற்று
2.உடல் என்ற இக்கோளத்தில் உருவாக்கும் உயிரணுவின் வளர்ப்பைக் கொண்டு
3.தன் நிலையைத் தான் உணர்ந்து
4.எந்த நிலையான கர்ம காரிய சஞ்சலங்கள் ஏற்பட்டாலும்
5.தன்னை அது தாக்காமல் தன்னைத்தான் பாதுகாத்துத் தன் வலுவைக் கூட்டி
6.ஆத்ம ஞானத்தால் – இரு விழியால் பார்க்கும் படர் ஒளியின் பார்க்கும் இவ்வுடல் உறுப்பின் பார்வை நிலையையே
7.இவ்வுடலின் ஒவ்வொரு உயிரணுக்களையும் “ஒளி நிலை காணும்… விழி நிலை ஆக்கலாம்…!”

உடல் கோளத்தின் ஜீவ சரீரம் செயல் கொள்ளச் சுவை மிக்க உணவை உண்டு உணர்கின்றோம். உண்ணும் பொழுதும்… சுவைக்கும் பொழுதும்… ஏற்படும் உணர்வு உண்ட பின்… கழிவு நிலையாகச் சென்று விடுகின்றது.

மீண்டும் பசியெடுத்து அதன் சுவை கொண்டு அந்தந்தக் காலத்தின் நிலையில் உணவைச் சுவைப்படுத்தி உண்கின்றோம்.

உண்ணும் பொழுதோ… சுவை உணரும் பொழுதோ… அவ்வின்பத்தின் உணர்வு தவிர உடலைப் பற்றியோ… உண்ணும் உணவு உடலில் செயல்பட்டு உடல் வலுவை வளர்க்க வழி பெறுகின்றது… என்ற எவ்வெண்ணத்தையும் நாம் கூட்டுவதில்லை.

ஆசையின் உந்தலுக்குகந்த சுவையை மட்டும் தான் அந்தந்தத் தருணத்தில் நாடுகின்றோம்.
1.உடலின் தேவை நிலை உந்தலின் செயலை நாம் அறியாமல்
2.எண்ணத்தில் உணர்வு மோதலைக் கொண்டு ஆசை உணர்வால் செயல்படும் இந்நிலை
3.ஜீவ பிம்ப உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் தன்னிச்சையில் செயல் கொள்கின்றது.

ஆக… ஆத்ம உணர்வின் வேட்கை நிலைக்கு எண்ணத்தின் உணர்வை நாம் யாரும் செயலாக்குவதில்லை.

புற உலக வாழ்க்கையில் ஒன்றை ஒத்து… ஒன்று கண்டு… வளர்த்து… வாழ வேண்டும்…! என்று “எதிர்ப்பலன் எண்ண உணர்வுதான்” செயல்படுகின்றது.

ஒவ்வொன்றின் வளர்ப்பிற்கும் உருவாக… மாற்று நிலை ஏற்பட்ட பிறகு தான் பிறிதொரு செயல் நடக்கின்றது.

தருண காலத்திற்கொப்ப உயிரணுத் தோன்றிக் கருவாகி… உருவாகி… வளர்ச்சி பெற்று… உணர்வின் உந்தலின் இரு நிலை மோதலுக்குப் பிறகு உருவாகும் பிறிதொரு நிலை போன்று… வழித் தொடர் ஒவ்வொன்றிலும் உருவாகின்றது அல்லவா…!

அதைப் போன்று தான்
1.இவ்வுடல் பிம்பச் சரீரக் கோளத்தின் ஆத்ம ஞானம் பெற
2.சமமான எண்ண உணர்வுகள் ஏற்படும் காலத்தில்
3.பல உணர்வு மோதல்கள் ஏற்படும் செயலிலிருந்து “ஞானம்…” பிறக்க வேண்டும்.

அறிந்த நிலை…
அறிய வேண்டிய நிலை…
அறியும் நிலை… ஆகிய ஒவ்வொரு ஆத்ம நிலையும்
1.தன்னுள் உள்ள உயர் சக்தியான தன் ஞானகுருவான உயிராத்மாவை உயர்வுபடுத்த
2.எண்ணத்தில் ஏற்படும் மோதலைக் கொண்டு பகுத்தறியும் நல் வழியில் தன் ஞானத்தைக் கூட்டி
3.உயர்வு கொள்ளும் ஒளி நிலையாய்
4.சூரியனின் நேர் நிலை பூமியின் மேல் படும்பொழுது பூமி எப்படி தன்னைத்தானே ஒளிப்படுத்திக் கொள்வது போன்று அறியும் நிலைப்படுத்தி
5.அறிந்தோரின் (மகரிஷிகள்) தொடர்பு கொண்டு
6.மனித ஜீவித வாழ்க்கைக் காலத்திலிருந்தே தான் எடுக்கும் அறிவென்ற ஞான வழித் தொடரினால்
7.இச்சரீர பிம்பக் கோள உயிரணுக்கள் யாவையுமே விழி நிலைகொள்ளும் ஒளி நிலையை
8.எண்ணத்தின் உணர்வால் நிச்சயம் பெற முடியும்.

Leave a Reply