மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டால் எதையுமே சீராக்க முடியும்

மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டால் எதையுமே சீராக்க முடியும்

 

நம் பூமி இல்லாவிட்டால் நாம் ஏது…? நம் பூமியையே வளர்க்கும் சூரியனின் சக்தி இல்லாவிட்டால் நம் பூமி தான் ஏது…?

சூரியனுக்குச் சக்தி தருவது சூரியனைச் சுற்றியுள்ள 47 மண்டங்கள் தாம். 47 மண்டலங்களின் துணையுடன் இயங்கும் சூரியன் தன் அலையைக் கொண்டு பிற மண்டலங்களின் அலையை எடுத்துத் தான் வளர்ந்து பிற மண்டலங்களையும் வாழ வைக்கின்றது.

சூரிய அலையை ஈர்க்கும் மண்டலமாக நம் பூமியின் ஜீவன் உள்ளது.
1.சூரிய மண்டலத்திலிருந்து வெளிப்படும் அலையைக் கொண்டு
2.நம் பூமி வெளிப்படுத்தும் அலையின் மோதலில் உருவான ஓ…ம் என்ற ஒலியின் சுழற்சி கொண்டு
3.உருண்டோடும் இவ்வுலக சுழற்சி ஓட்டத்தில் உருவான உயிர் ஜீவன்கள்
4.ஓமுக்குள் ஓமாய் ஓ…ம் என்ற நாதத்துடன் உருண்டோடும் பூமியில்
5.அந்நாதத்தால் உருவான ஜீவ நீரும் காற்றும் ஒளியும் கொண்டு ஜீவத் துடிப்பு பெற்று
5.இந்தப் பூமியின் ஈர்ப்பு ஜீவ உடல் கொண்ட உயிர் பிம்பங்களின் சுவாசத்தில் எடுக்கும் ஒலி தான் “ஓமுக்குள் ஓமாய் உள்ள ஒலி…!”

ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தனித்தொரு நிலையில் எதுவும் இல்லாமல் இரண்டு ஒன்றாகி அவ்வொன்றுடன் பிறிதொன்று சேர்ந்து ஒன்றாகி உருளுகின்ற உயிர் ஜீவ சக்திக்குத் தனித்த சக்தி நிலை எது..?
1.தனித்த ஒன்றான நான் என்ற சக்திக்கு ஜீவனே இல்லை.
2.ஜீவனற்ற சக்தி தான் “நான்” என்ற சக்தி.

இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுடல் பிம்பத்தில் ஏற்படும் எந்த ஒரு பிணியையும் உணர்வால் எடுக்கும் எண்ணத்தின் சக்தியை மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு நீக்கிட முடியும்.

“மேல் நோக்கிய சுவாசமாக…” இவ்வுடல் பிம்ப உணர்வு எண்ணம் கொண்டு உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள பன்னிரெண்டு வகையான குண அமிலத்தையும்… ஆறு வகை குண அமிலத்தையும்… நற்சக்திப்படுத்தும் நிலை கொண்டு செயல்படுத்திடல் வேண்டும்.

1.சலிப்பைச் சாந்தமாக்கி… கோபத்தை வீரமாக்கி… சங்கடத்தை அன்பாக்கி…
2.இப்படி உணர்வின் குணத்தால் உந்தப்பட்டு அவற்றினால் உடல் பிம்பத்தில் ஏற்கனவே ஏற்றிக் கொண்டுள்ள வியாதியின் தன்மையை மாற்றிட
3.நம் குண நலத்தை ஞான வழி பூண்டு மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
4.நம் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் உடல் பிம்ப ஆரோக்கியத்திற்கு அதை நம் உடலில் பாய வைத்துக் கொண்டு
5.உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் வழித் தொடர் ஜெபத்தையும் பெற்றிடலாம்.

இப்படி இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டல சுழற்சியுடன் சிக்குண்டு வாழ் நாட்களை சலிப்பு சங்கடம் கோபம் வஞ்சனை குரோதம் காமம் வெறி என்ற உணர்வுகளிலிருந்து மாற்றிடும்
1.நற்குணத்தின் அமிலத்தின் வளர்ப்பின் ஞானத்தின் வளர்ச்சியால்
2.எந்த மண்டலத்திலும் செயல் கொள்ளும் நிலை பெற்ற உயிராத்மாவாக
3.நம் உயிராத்மாவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உடல் பிணியின் வேதனைப்பிடியிலிருந்து உணர்வின் எண்ணத்தைச் சுயநலம் மிக்க தன்னலம் கொண்டு செயல்பட்டால் தன்னலத்தின் வளர்ப்பால் பிற நலத்தை வளர்க்கலாம்.

1.உடல் என்ற பிம்பத்தை வைத்துத்தான் எந்த ஞானத்தையும் வளர்க்க முடியும்.
2.உடல் பிணிக்கு ஏற்ற மருந்து தேவை.
3.உணர்வின் பிடிக்கு உணர்வின் எண்ண நிலைக்கொப்ப சுழல விடாமல்
4.உணர்வின் எண்ணத்திற்கு ஞானம் தேவை.

Leave a Reply