நோய் நீக்கும் மருந்தையே இன்று “உணவு போன்று உட்கொள்ளும் தேவை வந்துவிட்டது…!

நோய் நீக்கும் மருந்தையே இன்று “உணவு போன்று உட்கொள்ளும் தேவை வந்துவிட்டது…

 

ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய வியாதியின் தன்மை குணநிலையை ஒத்துத்தான் இருக்கும்.
1.குண நிலைக்கு ஒத்த வியாதி தான் மனிதனுக்கு வருகின்றது.
2.மனிதனுக்குத் தான் பலவிதமான புதுப்புது வியாதிகள் வளர்ந்து கொண்டே உள்ளன
3.மற்ற மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் அந்த அளவுக்கு இல்லை
4.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியாதிகள்.

தாவரங்களுக்கு ஒன்றை ஒத்த நிலையில் தான் அதனதன் வியாதி அணுப்பூச்சிகள் அவைகளைத் தாக்குகின்றன. மிருகங்களின் நிலையிலே மனித நிலைக்கு முற்றிலும் மாறு கொண்ட நிலையுள்ளது.

மிருகத்தின் உணர்வின் எண்ணம் ஒலியின் ஈர்ப்பைக் கொண்டு பழக்கப்பட்ட ஒன்றின் செயலில் செல்வதனால் ஏறக்குறைய தாவரங்களின் நிலைக்கொத்த
1.பருவக் காலங்களில் தாக்கக்கூடிய விஷ அணுக்களின் நோய்த் தன்மை
2.ஒன்றுக்கொன்று தொடர் கொண்ட “ஒட்டும் நிலையில்”
3.ஒன்றை ஒத்த வியாதியில் தான் மிருக இனம் தாக்கப்படுகின்றது.

மனிதனுக்கும் சில காலகட்டத்தில் சீதோஷ்ண நிலைக்கொப்பவும் பூமி இழுத்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் வெக்கைக்குகந்த நிலை கொண்டு அந்தந்தக் காலங்களில் வளரக்கூடிய விஷக்கிருமிகளின் நிலையினாலும் காற்றிலும் நீரிலும் தொக்கியுள்ள விஷக் கிருமியினால் சில நோய்கள் வருகின்றன.

ஜுரம் வாந்தி பேதி கண்களைக் தாக்ககூடிய சில நோய்க் கிருமிகளும் கால நிலையில் இயற்கைக்கொப்ப ஒன்றின் தொடர் கொண்டு ஒருவரைப் படர்ந்த நிலையில் ஒன்றைப் போல் பலருக்கும் (தொற்று நோய்) சில வியாதிகள் தாக்கப்படுவதுண்டு.

கால நிலைகள் மாறி… இயற்கையின் மாற்றத்தால்…
1.அவ்வணுக்களின் ஈர்ப்பு குண விஷங்களும் மாறும் தருவாயில்
2.விஷக் காய்ச்சல்கள் தொற்றிப் பலருக்கு ஒரே சமயத்தில் இந்த வியாதி வந்தாலும்
3.இவ்விஷக் கிருமியினால் தாக்கக்கூடிய வியாதிகள் தொடர் கொண்டு வளராமல்
4.சிறிது காலத்தில் அதன் குணம் மாறிவிடுகின்றது.

ஆனால்… “உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு ஏற்படும் வியாதிகள்…!” அவரவர்களின் எண்ண நிலைக்கொப்ப உடலின் அணுவின் அணுவாக ஒன்றி வளர்ந்து இந்த உடல் அழியும் வரை அதன் குணப்பிடிப்பிலேயே தான் மனிதன் சிக்கி அந்த நோயினாலேயே மாளுகின்றான்.

அம்மை வியாதிகள் மலேரியா டைபாய்டு வாந்தி பேதி போன்றும் இன்னும் புதிய புதிய விஷத் தன்மை கொண்ட வியாதிகளும் அந்தந்தக் காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண நிலைக்கொப்பப் படரக்கூடிய விஷத் தன்மையின் பாதிப்பு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தைப் போலவே அந்தப் பாதிப்பின் தன்மை வருகிறது.

இந்தப் பூமியின் ஈர்ப்பில் வெளிப்படும் உஷ்ணத்தின் விஷ அணுக்கள் இந்தப் பூமியில் வாழும் ஜீவ ஜெந்துக்களின் நிலையிலும் அதன் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடன் ஒன்றிய ஜீவன்களுக்கும் சாடுகின்றது.

அவ்வலையின் விஷத்தின் தாக்குதல்… காற்றலையில் கிருமிகளாகப் படர்ந்துள்ள அந்த நிலையில்
1.தன் சுவாசத்தில் ஈர்ப்புடன் எடுப்பவர்க்கெல்லாம்
2.குறிப்பிட்ட காலத்தில் ஒரே தன்மை கொண்ட வியாதி தான் பலரைத் தாக்கும்.

அதன் பின் கால நிலையில் அதன் சக்தியின் வலுக் குன்றி மாற்றமும் கொண்டு விடுகின்றது.

இத்தன்மையான தாக்குதல்…
1.நீருடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட
2.உணர்வின் துடிப்பு கொண்ட எவரையும் தாக்கத்தான் செய்யும்.

தன் சக்தியையே தெய்வ சக்தியாக்கிச் சப்தரிஷியின் நிலையில் ஜீவன் கொண்டு உள்ளவனாக இருந்தாலும்… “கால நிலையின் மாற்றத்தில் ஏற்படும் சில விஷ அணுக் கிருமிகளின் தாக்குதல்…” சுவாசமுடனும்… நீருடனும்… தாக்கத்தான் செய்யும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது…!

பூமியின் நிலையுடன் கூடிய கால மாற்றமாகும் பொழுது இவ்வணுவின் தன்மையும் மாறிவிடும். இவை இயற்கையின் உண்மையுடன் உருண்டுள்ள செயல் தொடர்பான குண நிலைகள் தாம்.

தாவரங்கள்… மிருகம்.. மனிதன்…! என்று இனம் பார்த்துத் தாக்காமல்
1.காற்றுடன் கலந்துள்ள நச்சுத் தன்மையின் செயல் வடிவங்கள் உண்டு
2.இதன் நிலையை மாற்றவோ அழிக்கவோ தப்பவோ முடியாதப்பா..!

ஏனென்றால் அதற்காக வேண்டி இயற்கைக்கு மாறாக நாம் சென்று செயற்கை வழியில் விஷமான மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது மற்ற நல்ல உறுப்புகளின் சீரான இயக்கத்தை அது பாதித்து விடுகிறது.

மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக மருந்தே வாழ்க்கையாகி விடுகிறது… மருந்தையே உணவாக உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றோம்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நல்லது.

Leave a Reply