உயிர் மீது ஏன் பற்று வைக்க வேண்டும்…?
ஈஸ்வரபட்டர் சாதாரணமாக எம்மை (ஞானகுரு) விடவில்லை.
1.ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…?
2.அதிலிருந்து நீ எப்படி தப்புவது…? என்று தெளிவாகச் சொன்னார்.
ஒருவர் கடலில் ஒரு தீவைக் குறி வைத்துப் படகைத் துடுப்பின் உதவி கொண்டு செலுத்துகின்றார், கடலில் எதிர் அலைகள் வந்து கொண்டிருந்தாலும் அவர் எதிர் அலைகளை சமாளித்துப் படகைச் செலுத்துகின்றார்.
இதில் “தீவு…! என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்” என்று நாம் கருதிக் கொண்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் துடுப்பாகப் பயன்படுத்திக் கொண்டு
2.இந்த உலக வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் வென்று
3.நமது நல் ஞானப் பயணத்தை நடத்தி வரவேண்டும்.
நாம் உடல் மீது பற்று வைத்தால் மீண்டும் இன்னொரு பிறவியைத் தான் அடைவோம்.
ஆனால் நாம் உயிர் மீது பற்று வைத்தால் பிறவி இல்லாத நிலையை அடைவோம்.