ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்லதை உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் “அஷ்டமி நவமி…”

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்லதை உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் “அஷ்டமி நவமி…”

 

1.கண் வழி தான் நாம் பெரும் பகுதி அனைத்தையும் கவருகின்றோம்… அது பதிவாக்குகின்றது
2.கண்ணின் காந்தப் புலனறிவு எதைக் கவர்கின்றதோ அதையே நம் ஆன்மாவாக மாற்றுகின்றது
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவானபின் உயிர் அந்த உணர்வின் தன்மை இழுக்கின்றது.

இப்படி நமக்குள் எத்தனை விதமான அணுக்கள் இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ காற்றிலிருந்து அதைப் பிரித்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

மாற்றிய பின் “இந்த உயிர் தான் அதை இயக்குகின்றது… இது நவமி. அதாவது (உயிர் நுகர்ந்த உணர்வுகள்) எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ “எண்ணம் நவமி…”

1.அஷ்டமி…! கண்கள் வழியாக நாம் ஒன்றை நுகரப்படும் பொழுது அது ஆன்மாவாக மாறினாலும் அது இயக்கச் சக்தி இல்லை…!
2.உணர்வின் தன்மை நுகர்ந்து உயிரிலே பட்டபின் இயக்கமாகிறது… எண்ணங்கள் தோன்றுகிறது நவமி.
3.ஆக… அஷ்டமி என்றாலும் “உயிருடன் ஒன்றி” அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.

ஆகையினால் அஷ்டமி என்றால் இருள் சூழ்ந்த நிலைகள். இருளில் எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.

ஆனால் இப்போது நாம் என்ன செய்கின்றோம்…? நவமியில் எதுவும் நல்லதைச் செய்யக்கூடாது அஷ்டமியிலும் எதையும் செய்யக்கூடாது… என்று இருக்கின்றோம்.

எதன் உணர்வின் தன்மை சேர்த்து உண்மையின் உணர்வை அறிகின்றோமோ அந்த அறிந்து கொண்ட உணர்வாக… அறியச் செய்வது யார்…? இந்தக் கண்கள் தான்.

ஆகவே
1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு எந்த நல்லதை எண்ணுகின்றோமோ அதன் அறிவாக நம் உயிர் இயக்கும்..
2.”அஷ்டமி… நவமி…” என்கிற பொழுது எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ அவ்வாறு இருக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார்… அதை நாம் உற்றுப் பார்க்கும் போது அஷ்டமி என்றாலும் அதன் உணர்வுகள் இருள் சூழ்ந்த நிலைகள் பெற்றது. ஆகவே இருள் சூழச் செய்யும் “அந்தத் தீயதை எண்ணாதே…” என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றதே தவிர இவர்கள் சொன்னது போன்று அல்ல.

வேதனை அந்த இருள் சூழ்ந்த நிலையானால் உயிரில் படும் போது இருள் சூழச் செய்கின்றது. உயிரிலே பட்ட பின் நவமி ஒன்பதாவது நிலைகள் என்றாலும் வேதனை உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த வேதனையை நவமி காலங்களில் எண்ணக்கூடாது

1.அஷ்டமி… இருள் சூழும் உணர்வுகளை கண் கொண்டு அதைத் தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கும் உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிவதற்குத் தான் இந்தக் கண்கள் பற்றி இங்கே உணர்த்தப்படுகிறது.

ஆனால் அந்தக் காலங்களில் நாம் நல்லது செய்ய வேண்டும் நல்லவராக ஆக வேண்டும் நல்ல பலன்களைப் பெற வேண்டும் என்று இந்த அடிப்படையில் எண்ணினால் அதன் உணர்வின் தன்மை நமக்குள் அதனின் அறிவாக அது இயக்குகின்றது

இதனால் தான் வேத நூல்களில் மூலங்களை இப்படிக் கொடுத்தது…

ஆனால் மூலத்தை மற்றவர்கள் யாரும் அறிந்து கொள்ளாதபடி அந்த இரண்டு நாளும் நல்லதை எண்ணாதே… நல்ல காரியத்தைச் செயல்படுத்தாதே…! என்று மாற்றி விட்டார்கள்.

நல்ல காரியத்தை நாம் முழுமையாகச் செய்தால் அது சந்தோஷப்படஸ் செய்யக்கூடியது. காரணம் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக அதை இயக்குகிறது.

அதே போன்று
1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு உற்று நோக்கினாலும்
2.அந்த உணர்வை நுகராதபடி அவன் நல்லவனாக வேண்டும் என்று அந்த உயர்ந்த உணர்வை எடுக்க வேண்டும்.

அஷ்டமி நவமி காலங்களிலே நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்று தான் வேத நூல்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா…!

இருண்ட நிலைகளிலிருந்து நம் கண்தான் அங்கே சரியான வழியைக் காட்டுகின்றது உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நாம் ஒரு தீமை என்ற நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது உயிர் அகக்கண்ணாக இருந்து அதை வெளிப்படுத்துகிறது.

அதனால் தான் நம் கண்களுக்கு கண்ணன் என்று தெளிவாக சாஸ்திரங்கள் கூறுகின்றது

ஆகவே கண் கொண்டு நாம் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர்தல் பெறுதல் வேண்டும். அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் நல்லதை இப்படி உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் அஷ்டமி நவமி…!

Leave a Reply