நாம் வளர்ந்து… மற்றவருக்கும் வழி காட்டி… அந்தத் தொடர்பை மகரிஷிகளுக்குத் தர வேண்டும்

நாம் வளர்ந்து… மற்றவருக்கும் வழி காட்டி… அந்தத் தொடர்பை மகரிஷிகளுக்குத் தர வேண்டும்

 

1.ஜீவ சக்தி கொண்ட காந்த ஈர்ப்பு அணு வளர்க்கும்…
2.வளர்ச்சியின் வித்தான சரீரச் செயலின் ஜீவனுக்கு…
3.ஜீவாதார முக்கிய நிலையான “உணர்வு…” இல்லை என்றால் ஞானச் செயல் செயல்படாது.

உணர்வின் சமைப்பினால்தான் எச்செயலுக்கும் எண்ணத்தைச் செலுத்திட முடியும். எண்ணத்துடன் மோதும் அலையின் ஈர்ப்பிற்கு காந்த மின் தொடர் அலைகள் மோதுண்டு… அதன் பதிவு கொண்டு தான்… “ஆத்மா” ஜீவ சக்தியிலிருந்து தனக்கு வேண்டிய வலுவைப் பெறுகின்றது.

ரிஷிகளின் வளர்ப்பலையுடன் வளரும் சக்தியில்… “உயர்ந்த ஆதி சக்தியின் படைப்பு சக்தியைப் பெற்ற…” அவர்கள் படைப்பின் தொடரை நாம் முதலில் பெற்றுப் பழக வேண்டும்.

அடுத்து நாம் பெற்ற அந்தத் தொடர் அலையை நம்முடைய வளர்ப்பைக் கொண்டு வளரும் ஆத்மாக்களுக்கு நல் வழி காட்டிடல் வேண்டும். அவ்வலையின் தொடரை நாம் எடுத்து அந்தத் (நம்) தொடர்பின் அலையை ரிஷித் தொடர்பிற்குத் தந்திட வேண்டும்.

அதன் மூலம்… அந்த ரிஷி வளர்ப்பின் ஆதி சக்தியின் அனைத்து சக்திகளிலிருந்து வளரும் சக்தியை அவர்கள் பெற்றுச் சுழலும் சுழற்சி ஓட்ட அலையில்
1.உயர்ந்த ஒளி வட்டமுடன் கலந்து அந்த ஞான சக்தியைக் கொண்டு
2.தன்னுள் உள்ள இறை சக்தியை… இறை ஆத்மாவாக… ஆத்மலிங்க ஜோதியாக… அடையும் வழியை நாம் பெற வேண்டும்.

அதை அடைய வேண்டும் என்றால் இந்த வாழ்க்கையில் மோதும் எண்ண உணர்வை நாம் எடுக்கும் சமைப்பு பிறரின் ஈர்ப்பில் சிக்காமல் இருத்தல் வேண்டும். ஏனென்றால்
1.பிறர் செய்யும் தவறில் நாம் தண்டனை பெறுவது போன்று நம் உணர்வுகளை மாற்றிடாமல்
2.அவர்கள் செய்த நிலைக்கு நாம் தண்டனை பெற்றுச் செல்லும் நிலையிலிருந்து மீள வேண்டியது மிகவும் அவசியம்.

அத்தகைய நிலை பெற்று… நம் அலைச் சக்தியின் உயர்வலைகளைப் பிறர் மேல் செலுத்தி… மேல் நோக்கிய ஈர்ப்பில் ரிஷிகளின் சக்தியை நாம் வளர்த்தால்… நம் ஒளி ஈர்ப்பிலிருந்தும் சொல் ஆலையிலிருந்தும் வெளிப்படும் உயர்ந்த உணர்வலைகள் அங்கே பதிந்து… அவர்களும் வளர்வார்கள். பிறரின் சங்கட சோர்வும் எத்தன்மை கொண்ட மற்ற வழித் தொடரும் நம்மைப் பாதிக்காது.

எப்படித் திரவகத்தில் போடப்படும் பித்தளை செம்பு போன்ற மற்ற உலோகங்கள் எல்லாமே கரைந்தாலும் தங்கத்தின் நிலை கரைக்கப்படுவதில்லையோ அதைப் போன்று
1.இவ் ஆத்மாவின் வலுவைக் கொண்டு
2.ஞானத்தால் பயம் என்ற அச்ச உணர்வை நீக்கி
3.சாந்தத்தை ஞானம் கொண்டு வீரத்தால் செலுத்தும் எண்ணத்தின் சரீர உணர்வலையின் ஈர்ப்பு வழித் தொடரில்
4.காந்த மின் அலையின் தொடர்பலையை ரிஷிகளின் சத்தலையுடன் செலுத்தி
5.அவர்கள் வளர்க்கும் ஒளி நிலைத் தொடருடன் நாமும் ஐக்கியமாகலாம்.

Leave a Reply